நண்பர்களே,
வணக்கம். கூரியர் பார்சல்கள் இன்றும், அடுத்த சில நாட்களிலுமாவது உங்களை எட்டிடும் என்ற நம்பிக்கையில் வண்டி ஓடுகிறது ! சூழல்கள் தினம்தினம் மாறிடுவதால் சற்றே பொறுமை காத்திட வேண்டி வரலாம் ! So சற்றே பொறுமை ப்ளீஸ் !
எதிர்பார்த்திருந்த அதிகாரியின் அதிரடி ; முகமூடிக்காரரின் மினி-வெடி ; ஜம்போவின் யானை வெடி ; டிரெண்டின் குயில் வெடி என்பனவோடு ஒரு குட்டிப் பாப்பாவை அட்டைப்படத்தில் தாங்கி நிற்குமொரு பொம்மை புக்கும் இம்மாதத்தில் அறிவிப்பின்றி இடம் பிடித்திருப்பதைக் காணவிருக்கிறீர்கள் ! அட்டவணையில் அறிவிக்கப்பட இந்த இதழ் ஒரு கி.நா. என்பதை நம்பச் சிரமமாக இருக்கலாம் தான் ; ஆனால் நிஜம் அதுவே ! 'பனியில் ஒரு குருதிப்புனல்' ஆல்பத்தின் பணிகளில் பிஸியாய் இருந்ததொரு மதியப்பொழுதில் அகஸ்மாத்தாய்க் கண்ணில்பட்ட ஆல்பம் தான் இன்றைக்கு திடு திப்பென வரிசைக்குள் முண்டியடித்துப் புகுந்துள்ளது ! இது என்ன மாதிரியான கதையென்பதையோ ; இது கதை தானா ? என்பதையோ பற்றி முன்கூட்டியே சொல்லி வைத்து, வாசிப்பின் மெருகினைக் குறைத்திட மனசு வரவில்லை ! அதனால் தான் பின்னட்டையைக் கூட கண்ணில் காட்டாது, கல்லுளி மங்கனாய் வாயே திறக்க முனையவில்லை ! இந்த புக்கை அதன் சித்திரங்களைக் கொண்டோ / சித்திர பாணிகளைக் கொண்டோ எடை போடாது, ஒரு நிசப்த வேளையினில், சரியாய் 5 நிமிடங்களை மட்டும் செலவிட்டுப் படித்திட முயற்சியுங்களேன் - ப்ளீஸ் ?! அந்த 5 நிமிடங்களுக்குப் பிற்பாடு உங்களின் ரியாக்ஷன்ஸ் கீழ்க்கண்ட ஏதேனுமொரு ரகத்தில் இருந்தாலும் புரிந்து கொள்வேன் நான் !!
எதிர்பார்த்திருந்த அதிகாரியின் அதிரடி ; முகமூடிக்காரரின் மினி-வெடி ; ஜம்போவின் யானை வெடி ; டிரெண்டின் குயில் வெடி என்பனவோடு ஒரு குட்டிப் பாப்பாவை அட்டைப்படத்தில் தாங்கி நிற்குமொரு பொம்மை புக்கும் இம்மாதத்தில் அறிவிப்பின்றி இடம் பிடித்திருப்பதைக் காணவிருக்கிறீர்கள் ! அட்டவணையில் அறிவிக்கப்பட இந்த இதழ் ஒரு கி.நா. என்பதை நம்பச் சிரமமாக இருக்கலாம் தான் ; ஆனால் நிஜம் அதுவே ! 'பனியில் ஒரு குருதிப்புனல்' ஆல்பத்தின் பணிகளில் பிஸியாய் இருந்ததொரு மதியப்பொழுதில் அகஸ்மாத்தாய்க் கண்ணில்பட்ட ஆல்பம் தான் இன்றைக்கு திடு திப்பென வரிசைக்குள் முண்டியடித்துப் புகுந்துள்ளது ! இது என்ன மாதிரியான கதையென்பதையோ ; இது கதை தானா ? என்பதையோ பற்றி முன்கூட்டியே சொல்லி வைத்து, வாசிப்பின் மெருகினைக் குறைத்திட மனசு வரவில்லை ! அதனால் தான் பின்னட்டையைக் கூட கண்ணில் காட்டாது, கல்லுளி மங்கனாய் வாயே திறக்க முனையவில்லை ! இந்த புக்கை அதன் சித்திரங்களைக் கொண்டோ / சித்திர பாணிகளைக் கொண்டோ எடை போடாது, ஒரு நிசப்த வேளையினில், சரியாய் 5 நிமிடங்களை மட்டும் செலவிட்டுப் படித்திட முயற்சியுங்களேன் - ப்ளீஸ் ?! அந்த 5 நிமிடங்களுக்குப் பிற்பாடு உங்களின் ரியாக்ஷன்ஸ் கீழ்க்கண்ட ஏதேனுமொரு ரகத்தில் இருந்தாலும் புரிந்து கொள்வேன் நான் !!
இன்னும் கன்னத்தில் மரு ஓட்றது மட்டும் தான் பாக்கி ! அப்பாலிக்கா I going ஜார்க்கண்ட் !! |
முழியங்கண்ணனை ஓங்கி ஒரு குத்து குத்தணும் போலிருக்கே..பஸ் வேற ஓடலே ..? |
ஐயோ ..அக்னி நட்சத்திரம் சிவகாசிலே சித்தே உக்கிரம் போலும் ! |
இஸ்பைடர் சார் புக்கெல்லாமே இனி தவறாம படிப்பேன் ! இது ஆர்ச்சி மேல் ஆணை ! மிடிலே ! |
5 நிமிஷ புக்குன்னு சொன்னியே - நாலரை நிமிஷத்திலேயே முடிஞ்சுடுத்தே !!! |
இதை படிச்ச கையோட எடிக்கொரு கடுதாசி போட்டே தீரணுமே !! ஜெய் தாரைத் தலீவர் !! |
இன்னா சொல்ல வர்றாங்க..? இன்னொருவாட்டி படிச்சிட்டு வர்றேன் - கச்சேரிக்கு ! |
யே ..சூப்பரப்பு..சூப்பரப்பு..! |
No Comments.... |
துடைப்பக்கட்டை சாத்துக்களும் இந்த இதழுக்கு சாத்தியமே ; இதனைத் தேர்வு செய்தமைக்கு என் ரசனைகளை சர்ப் எக்ஸெல் போட்டுக் கும்மியெடுக்கவும் வாய்ப்புகளுண்டு தான் என்பதெல்லாம் சந்தேகமின்றிப் புரிகிறது ! இருந்துமே இதனை வெளியிட வேண்டுமென்றதொரு உந்துதலைத் தவிர்க்கத் தோன்றவில்லை ! Maybe..just maybe இது ஒட்டு மொத்தமாய் யாருக்குமே பிடிக்காதே போயினும் no big deal என்பேன் ; அறிவித்தபடியே இன்னொரு கி.நா.வை வெளியிட்டு இந்த இதழை எனது புத்திக்கொள்முதல் கணக்கில் எழுதிட்டால் போச்சு !
And இன்று காலை சீனியர் எடிட்டர் எனக்கு அனுப்பிய இந்த வாட்சப் சேதியை இக்கட பதிவிட்ட கையோடு நடையைக் கட்டுகிறேனே :
----------------------------------------------------------------------------------------------------------
ஓரு தவிர்க்க இயலாத இடைவெளிக்குப்பின் காமிக்ஸ் இதழ்களை எதிர்பார்த்து காத்திருக்கும் வாசகர்களே : நேற்று பிற்பகல் வழக்கம்போல் இம்மாதப் பிரதிகள் வந்தன.
நான்கு புத்தகங்களை படித்து முடித்தபின் கடைசியாக "கண்ணான கண்ணே" இதழ் வாண்டுகளுக்கான ஒன்று என்ற எண்ணத்தில் படிக்க ஆரம்பித்தேன். இங்கே இதழின் விமர்சனத்தை இப்போது உங்களிடம் நான் பகிர்ந்திடப்போவதில்லை !
இதுவரை படித்த பல காமிக்ஸ் இதழ்களில் நான் முற்றிலும் சந்தித்திராத ஓரு கதைக்களம் !
வாசகர்களுக்கு ஓரு வேண்டுகோள் :
ஓரு அமைதியான சூழலில் இந்த இதழை படித்து விட்டு எல்லோருக்கும் இதழ்கள் கிடைக்க அவகாசம் கொடுத்து உங்கள் உணர்வுகளை பதிவிட வேண்டுகிறேன்.
M. சௌந்திரபாண்டியன்
------------------------------------------------------------------------------------------------------------
Bye folks...See you around !!
P.S : இதுவொரு 'க.க.' மாதம் போலும் ! ஒன்றுக்கு இரண்டாய் "க.க." தலைப்புகள் !! கவனித்தீர்களா ?
P.S : இதுவொரு 'க.க.' மாதம் போலும் ! ஒன்றுக்கு இரண்டாய் "க.க." தலைப்புகள் !! கவனித்தீர்களா ?
1 st
ReplyDelete2 Nd.
ReplyDeleteI'm I'm I'm.........
ReplyDelete@ ALL : யாருக்கேனும் கூரியர் கிடைத்துள்ளதா நண்பர்களே ?
ReplyDeleteஇன்னும் காதில் தேன் பாயலை சார்......
Deleteஇன்னும் புதையல் கிடைக்கலை ஆசிரியரே
Deleteஎனக்கும் பாயவில்லை சார்
Deleteஎன க் கு
Deleteஇல்லீங் சார்!
Deleteவியாழன் அன்று 12 மணிக்கே கிடைத்து விட்டன..
Deleteசார் டீ இன்னும் வர்ல
ReplyDeleteப்ப்பூபூபூவூவூவூ
சிங்காரச் சென்னைக்கு பாலே இன்னும் கறக்கலியாம் சார் ! கறந்து, அப்புறமாய் பாய்லரை போட்டு, டிகாக்ஷன் இறக்கி, டீ போட்டு...ufff !!
Deleteஹா..ஹா...ஹா...
Deleteஇப்ப தா 6 வது
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteவந்திட்டேன் சார்
ReplyDeleteகொரியர் வந்திடும் சார் 🙏🏼😇
.
இளவரசி வாழ்க!
ReplyDeleteஅவர் வாழறதுலாம் இருக்கட்டும் பாபு ; உங்க முகவரியைக் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலை ஆபீசுக்கு அனுப்புங்களேன் ! கவிதைக்குப் பரிசு பட்டியலில் சேர்க்கணுமில்லியா ?
Deleteஅதே போல பத்து & புத்தகப்பிரியன் சார்ஸ் too ! அட்ரஸ் ப்ளீஜ் !
DTDC யிலிருந்து எந்த அழைப்பும் வரவில்லை சார்.
ReplyDeleteடெக்ஸ் வாழ்க!
ReplyDelete+10000
Delete///இதுவரை படித்த பல காமிக்ஸ் இதழ்களில் நான் முற்றிலும் சந்தித்திராத ஓரு கதைக்களம் !////----இவ்வாறு, சீனியர் எடிட்டர் சாரே விமர்சனம் பண்ணி இருக்கார்னா.... இதழ் வேற லெவல்ல இருக்கனும் என தெரிகிறது!
ReplyDelete+1
Deleteஎன்னதான் வருதுன்னு பார்த்துருவமே..............!
ReplyDeleteமார்ச் முதலே காமிக்ஸ் வாங்கவில்லை. மே மாத கலெக்ஷன் மட்டுமே லிஸ்டிங்கில் உள்ளது. ஏப்ரல் மாதம் இதழ்கள் வந்ததா
ReplyDeleteவரவில்லை பிரசாந்த். கடைசியாக வந்தது மார்ச் மாத இதழ்கள் தான்.
Deleteஹைய்யா புதிய பதிவு.......
ReplyDeleteஷானியா வாழ்க.!
ReplyDeleteபுதுஸ்ஸ்ஸா இருக்கே.
Deleteகலாய்க்கிறாராம்...
DeleteDTDC இன்னும் வரல்லே. எந்த வேளைல 'நாளை நாளை என்றிருந்தேன்'னு கமெண்ட் போட்டேனோ.நெசமாவே நாளை தான் போலிருக்கு.
ReplyDeleteஇன்னைக்கு நாளை
Deleteநேத்தைய பொழுதை கணக்கிடயிலே,,,
பதிவு அஞ்சல் பார்சல்கள் அனுப்பப்பட்டு விட்டதா சார்??
ReplyDeleteஎனது முகவரியை மெயிலிட்டேன் சார். just now.
ReplyDeleteசார் கூரியர் இன்னும் வரல.
ReplyDeleteமழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசா
ReplyDeleteமண்ணை நம்பி ஏலேலோ மரம்இருக்க ஐலசா
மரத்தை நம்பி ஏலேலோ கிளைஇருக்க ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ இலைஇருக்க ஐலசா
இலையைநம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா
பூவைநம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா
பிஞ்சைநம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா
காயைநம்பி ஏலேலோ பழம்இருக்க ஐலசா
பழத்தைநம்பி ஏலேலோ மகன்இருக்க ஐலசா
மகனை நம்பி ஏலேலோ நீஇருக்க ஐலசா
உன்னைநம்பி ஏலேலோ நான்இருக்க ஐலசா
என்னைநம்பி ஏலேலோ எமன்இருக்க ஐலசா
எமனைநம்பி ஏலேலோ காடிருக்க ஐலசா
காட்டைநம்பி ஏலேலோ நாடிருக்க ஐலசா
DTDC ய நம்பி ஏலேலோ நாமிருக்க ஐலசா
நம் விமர்சனத்த நம்பி ஏலேலோ நம்ம எடிட்டர் இருக்க ஐலசா....
ஐலசா...ஐலசா....!!
ஐல சா... கெ டச் சா ச் சு... ஆ னா கெ டை க் கல
Deleteஅது ஐலசா'வா..?!!
Deleteஒரு வேகத்துல ஜல்சா ஜல்சா'னு படிச்சுத் தொலைச்சுட்டேன்!
உங்கள் வீட்டம்மா எதிரே உட்கார்ந்து ஜல்சா ஜல்சான்னு சத்தம் போட்டு படிச்சுதான் பாருங்களேன். அப்புறம் கமென்ட் பண்ண கையிருக்காது! பாட்டுப்பாட வாயிருக்காது ஆ...ம்மா!
Deleteநான் 26. ரொம்ப வருடங்களுக்கு பிறகு என் வீட்டுக்கு புக் கூரியர் வரப் போகுது. அட்ரஸ் குறித்து லயன் அலுவலகத்தினர்
ReplyDeleteபோன் செய்தது மிக்க மகிழ்ச்சி.
மகிழ்ச்சி
Deleteஅடடே!! வாழ்த்துகள் சகோ!
Deleteஇந்த தடவையாவது உள்ளே பணம் இருக்கான்னு பெட்டியை கிழித்து பார்க்காமல் அப்படியே முழுசாக புத்தகங்கள் பத்திரமாய் உங்களை வந்தடைய என்னுடைய வாழ்த்துக்கள்.
DeleteATR சார்,என் மைண்ட் வாய்சை
Deleteநல்லாவே கேட்ச் பண்றீங்க. புக்
முழுசா வந்தா போதும். பெர்சனல் ரவுடி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார். I'm waiting.
ஹி...ஹி...எனக்கு இந்த புகழ்ச்சியெல்லாம் புடிக்காது சகோ.
Deleteகண்ணான கண்ணே! மிகவும் ஆவலை கிளப்புகிறது.அட்டைப்படமும் சம்திங் ஸ்பெஷல்னு சொல்கிறது.
ReplyDeleteSomething something...
Deleteஐயா பதிவு பா த் தா பி ன் னி பெ ட லெ டு க் கு ம் போ ல
கண்டிப்பாக ஸ்டீல். இது வரை வந்த கிராஃபிக் நாவலில் இதுதான் பெஸ்ட்டுன்னு நீங்க பதிவு போடப்போறீங்கன்னு பட்சி சொல்லுது. பட்சி...பட்சி..!( சத்யராஜ்போல)
DeleteATR சார் சும்மா கிழி.
Deleteஊர் திரும்பியதும்தான் பாக்க ஏலும்
Delete3 1st
ReplyDeleteSteel
Deleteஅண்ணா நலமா ?
DeleteAppears irukken thambi... Neenga nalama
DeleteSupperaa /appears
Deleteநலமாக உள்ளேன் அண்ணா.
Deleteகொரனா வாழ்க்கை அங்கே எப்படி தம்பி
Deleteஇதுவரை 932 பேருக்குத் தொற்றியுள்ளது. வரும் நாட்களிலும் ஊரடங்கு தொடரும் போல. நமது பகுதிகளில் இல்லாவிடினும் தலைநகரில் அதிகம் பரவலிலுள்ளது. நாம் பாதுகாப்பாக உள்ளோம். நீங்களும் அவ்வாறிருக்க இங்கிருந்தபடியே திருச்செந்தூர் வேலனின் திசையில் வணங்குகிறேன் அண்ணா.
Deleteமகிழ்ச்சி தம்பி
Deleteஅனைவரின் நலத்துக்காகவும் செந்தூரான் அருள உுங்களோடு நானும் வேண்டுகிறேன்,,,
விஜயன் சார், அப்படியென்றால் பனியிலொரு குருதிப்புனல் வராதா ?
ReplyDeleteவெயிட் அண்ட் வாட்ச்.
DeleteNext month
Deleteஇரும்பு தெய்வமே. இந்தக் கிளிஜோசியங்களை என்னிடம் விட்டு விடுங்களேன் ! 'எடிட்டர் குல்லாய் ஒரு நாளைக்கி ' என்று சும்மனாங்காச்சி தான் சொல்லி வைத்தேன் !
Delete////இரும்பு தெய்வமே. ////
Deleteஹா ஹா ஹா! :)))))
விட்டால் அடுத்த ஆண்டுக்கும் அட்டவணை ரெடி பண்ணி சந்தா வசூல்
Deleteபண்ண ஆரம்பிச்சுடுவாங்க போலிருக்கே...!(எடிட்டர் மைண்ட் வாய்ஸ்)
சார் முடியும்,,,உங்க மேல வச்ச நம்பிக்கைதான வாழ்க்கயே
Delete// இரும்பு தெய்வமே. இந்தக் கிளிஜோசியங்களை என்னிடம் விட்டு விடுங்களேன் ! //
Deleteஹா ஹா ஹா! :)))))
இரும்பு தெய்வமே...
Delete:-)))))
This comment has been removed by the author.
ReplyDeleteசார் பார்சல வீட்ல வாங் கி யா ச் சா ம்steel
ReplyDeleteகண்ணான கண்ணே! - எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிற வைக்கிறது!
ReplyDeleteசீனியர் எடிட்டரின் குறுஞ்செய்தி மகிழ்ச்சியளிக்கிறது!!
கண்டிப்பா இந்தக் கதையில ஏதோ இருக்கு!!
// கண்ணான கண்ணே! - எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிற வைக்கிறது!
Deleteசீனியர் எடிட்டரின் குறுஞ்செய்தி மகிழ்ச்சியளிக்கிறது!! //
+1
ஆசிரியரே,
ReplyDeleteக்ளாராவை திடீரென்று களத்திலிறக்கி அதிர்ச்சிவைத்தியம் கொடுத்திருக்கிறீர்களே? நம் நாட்டுப்பக்கமாக க்ளாரா கரையேற எத்தனை மாதமோ? சோல்ட் அவுட் போர்டைப் போட்டுடாதீர்கள். இன்னமும் உண்டியல் காலியாகவே உள்ளது!
நாங்கள்லாம் உண்டியலில் இப்போ பல்பம் ; லப்பர் ; குண்டூசின்னு போட்டு வைச்சிருக்கோமே ! காலியால்லாம் இல்லியே !
Deleteஅட, இந்த ரோசனை நமக்கு வராமப் போச்சே...
Deleteபுது பதிவு ,புது தகவல் ,புது புத்தகம்...ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்...
ReplyDeleteஆனால் இன்னும் கொரியர் கைகளுக்கு வரவில்லை...
சார்! கோபியில் DTDC இல்லைனு நெனைக்கிறேன்!
ReplyDeleteபுக் வருமா??
DTDC இல்லாத ஊர்களுக்கு ST சார் !
Deleteகண்ணான கண்ணே...
ReplyDeleteஅட்டைப்படமும் ,அந்த அட்டைப்பட சித்திரமும் ,தலைப்பும் வித்தியாசமாக உள்ளது ..
ஆனால் படிக்க ஐந்து நிமிடம் கூட ஆகாது என்பது தான் குழப்புகிறது...
ஒரு வேளை வசனமே இல்லாத காமிக்ஸா ...ஒண்ணுமே புரியலையே...கொரியர் சாமீகளா சீக்கிரம் வாங்க....
தலீவரே! என் கமெண்ட்டைப் போட்டுட்டுத்தான் இப்ப உங்க கமெண்டைப் பார்த்தேன்! ரெண்டு பேரும் ஒரே குழப்பத்தில் இருக்கோம்ன்றது கன்ஃபார்முடு!
Deleteதோழியா ? பட்டாப்பட்டி தலீவரா ? என்ற கேள்வி எழுந்தப்போ இன்னா பதில் வந்ததென்று ஞாபகப்படுத்தறேன் தலீவரே !
Deleteஏமாந்தது போதும் ! ஏகாந்தமாய்ப் பதுங்கு குழி !
பதில் கிடைக்க காத்திருக்கிறேன் ....:-)
Deleteதோழியா ? பட்டாப்பட்டி தலீவரா ? என்ற கேள்வி எழுந்தப்போ இன்னா பதில் வந்ததென்று ஞாபகப்படுத்தறேன் தலீவரே !
Delete#####
ஙே...அதானே....:-(
தலீவரே.. எதிரணித் தலைவர் இப்பவே இப்படி கோள்மூட்டறாரே.. நம்மை மாதிரி சின்னவயசுல எப்படியெல்லாம் கோள்மூட்டியிருப்பார்?!!
DeleteEV இதெல்லாம் வேற லெவல்
Delete////இந்த புக்கை அதன் சித்திரங்களைக் கொண்டோ / சித்திர பாணிகளைக் கொண்டோ எடை போடாது, ஒரு நிசப்த வேளையினில், சரியாய் 5 நிமிடங்களை மட்டும் செலவிட்டுப் படித்திட முயற்சியுங்களேன் - ப்ளீஸ் ?!////
ReplyDeleteபுத்தகத்தின் விலை 80 ரூபாய்! எப்படியும் 50 பக்கங்களை எட்டிப்பிடிக்கும் அளவிற்கு இருக்குமென்பது உறுதி! அப்படியிருக்க 5 நிமிடத்தில் படிப்பது எங்ஙனமோ எடிட்டர் சார்?!!
ஒருவேளை, வசனங்களே இல்லாமல் படம் மட்டுமே பக்கங்களை நகர்த்திச் செல்கிறதோ?!!
ஆனா அப்படிப் பார்த்தாக்கூட எனக்கெல்லாம் அரை மணி நேரம் ஆகுமே?!!
என்னதான் உங்க கணக்கு?!!
பக்கத்துக்கு ஒரு எழுத்து!
Deleteஇதுதான் ஆசிரியர் கணக்கு!
சந்தேகம் தீர்ந்ததா ஈவி. ரவுண்டு பன்னு பத்து பார்சேல்....
E = mc2 என்ற ஐன்ஸ்ட்டின் கணக்கில்லை என்ற மட்டுக்கு நிச்சயம் !
Deleteஎனக்கு இரண்டு பக்க கதை படிக்கவே 5 நிமிடம் ஆகுமே. சத்திய சோதனை
DeleteE = mc2 என்ற தனது சமன்பாட்டின் மூலம் மிகச் சிறிய துகள்களால் கூட மிகப் பெரிய அளவில் சக்தியை வெளியிட முடியும் என்பதை ஐன்ஸ்டீன் உணர்த்தினார்.
Deleteஅதுபோலத்தான் கண்ணே கலைமானே என்ற சிறிய அளவு நேரத்தை விழுங்கும் கதைக்களன் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல வருகிறீர்கள் இல்லையா சார்?
அம்மாடி!! என்னாவொரு விளக்கம் திரு.ATR சார்!!!
Deleteநீங்கள் ஐன்ஸ்டீனின் கணக்கில்லை என்று சொன்னாலும் இறுதியில் உள்ள ஆச்சர்யக்குறி அந்தக் கணக்குதான் என்று சொல்லாமல் சொல்லுகிறது சார்.
Deleteவிடியட்டும் விடை கிடைக்கும்!
ஈ.வி.நானும் யூத்துதான். இந்த திரு என்னை திருதிருவென முழிக்க வைக்கிறது. எதற்கு தேவையில்லாத லக்கேஜ் எல்லாம்.
DeleteE = mc2 நித்தி சொன்னாரே அதுவா?
Delete// E = mc2 நித்தி சொன்னாரே அதுவா?
Delete// நெற்றி அடி
//E = mc2 நித்தி சொன்னாரே அதுவா?//
DeleteEmmmm.... c2!!!
//ஆற்றலையும், நிறையையும் அசைவம் சாப்பிடும் மோசமான மூளை கொண்ட நபரால் ஒன்றாக கொண்டிருக்க முடியாது. ஆனால் சைவம் சாப்பிடும் நபரின் மூளை இது இரண்டையும் ஒன்றாக கொண்டு இருக்கும்//
Deleteஎன்று சொன்னாரே. அதை சொல்கிறீர்களா சகோ? நீங்க வேற.வடிவேலுவைவிட நான்தான் பெரிய காமெடியன்னுகாட்ட இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டு இருப்பார். கேட்டவுடன் அதை மறந்துடனும்.
This comment has been removed by the author.
Deleteசார், நான் குறிப்பிட்டது நித்தியின்
Deleteusual காமெடி உளறலைத் தான். நீங்க வேற ஏன் அதை முழுசா போறீங்க? சைவமாவது, வைணவமாவது நமக்கு கூரியர் வந்தா போதும் ✋.
நிச்சயம் நல்ல நிலமையில் வரும். கவலை வேண்டாம் சகோ.
Deleteசாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டாரென்பது இதுதானோ?
ReplyDeleteநாளைக்கு DTDC யை ஒரு வழி பண்ணிப்புடறேன்.
நானும் ரௌடிதான்...நானும் ரௌடிதான்...!
சிம்பிளா ஒரு பூட்டைப் போட்டு DTDC கதையை முடிச்சிடாத வரைக்கும் ஷேமமே !
Deleteகவலைபடாதீர்கள் சார். நம்ம பசங்க சுத்தமா தொடச்சி எடுத்திடுவாங்க. உள்ளே ஏதாவது இருந்தாதானே பூட்டு போட்டு மூட..!
Deleteஎனக்கு எஸ்டியா டிடிடிசியா ன்னு முதல்ல நாளைக்கு விசாரிக்கனும்...:-)
ReplyDelete////இது என்ன மாதிரியான கதையென்பதையோ ; இது கதை தானா ? என்பதையோ////
ReplyDeleteஒருவேளை கவிதையாய் இருக்குமோ?!!
அச்சச்சோ.. நம்ம சிவகாசி கவிஞர் செம குஷில இருப்பாரே?!!
எனக்கு இப்பவே வயித்துல புளியக் கரைக்கிறாப்ல இருக்கே!!
///அதனால் தான் பின்னட்டையைக் கூட கண்ணில் காட்டாது, கல்லுளி மங்கனாய் வாயே திறக்க முனையவில்லை///
ReplyDeleteஅப்படீன்னா பின்னட்டையில் ஏதோ சூட்சுமம் ஒளிச்சிருக்குன்னு அர்த்தமாகுது!
புக்கு கிடைச்சதுமே எல்லா பின்னட்டைகளையும் அலசி ஆராய்சிடணும்!
// இங்கே இதழின் விமர்சனத்தை இப்போது உங்களிடம் நான் பகிர்ந்திடப்போவதில்லை ! // எப்போது சீனியர் விமர்சனத்தை பகிர்ந்தா லும் நன்றே.
ReplyDeleteஆஹா புத்தகம் வந்தது எனக்கு மட்டுந்தானா,,,
ReplyDeleteநிஜமா வந்துச்சு???????
Deleteநெசமாத்தான் நண்பரே...நேத்து 3மணி சுமாருக்கு குமார்
Deleteகண்ணான கண்ணே... எதிர்பார்க்க வைக்கிறது... சீனியர் எடிட்டர் குறுந்செய்தி ஒரு surprise... அவர் கூற்றுப்படியே 5 நிமிடங்களை ஒதுக்கினால் போதும் போல இந்த கதையில் முழ்கிட... நாடோடி ரெமி போல ஒன்றாக இருக்குமா? அல்லது அதீத கற்பனை கதையா? ஏதோ செய்தி சொல்லும் அட்டைப்படம் மிக அருமை... புத்தகத்தை ஆவலாய் எதிர்பார்க்கின்றேன்... உங்கள் உள்ளணர்வுக்கு நன்றி சார்.
ReplyDelete//நாடோடி ரெமி //
Deleteஊஹூம்...அது உசிலம்பட்டின்னா இது கும்முடிப்பூண்டி உதய் ! எதிர் எதிர் துருவங்கள் !
நிச்சயம் எனக்கு பிடிக்கும் கதையாகத்தான் இருக்கும் என நம்புகிறேன், சார். நன்றி உங்கள் பதிலிற்கு...
Deleteஆமா உதய் நுழய ஐந்து நிமிடம்
Deleteஇன்று பிறந்தநாள் காணும் அன்பும் பண்பும் நிறைந்த எங்கள் அருமைத் தலீவரை வாழ்த்த வயதும் தகுதியும் பற்றாததால்..
ReplyDeleteகுப்புறக்கா வுழுந்து கும்பிட்டுக்கிறேன்..!
வாழிய பல்லாண்டு தலீவரே.!!💐💐💐💐💐
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே
Deleteதலீவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
Deleteஒரேயொரு தலீவராம் எங்கள் தங்கத்தலீவருக்கு தங்கள் உண்மையுள்ள செயலரின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!💐💐💐💐🎂🎂🎂🍫🍫🍫🍫🍫🍫🍨🍨🍨🍧🍧🍧🍧🍧🍧🍧
Deleteபண்போடும் நற் பணிவோடும்
Deleteதலை குனியாமல் தன்
தரம் குன்றாமல் எந்நாளும்
இடர் வாராது காத்து நிற்கும் நம் தலீவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
ஒரேயொரு நிரந்தரத் தலீவருக்கு எக்கச்சக்கப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! சில பல இசைக் கலைஞர்களை நம்பாது, சீரும் சிறப்புமாய் , வாழ வாழ்த்துக்கள் !
Deleteபி.கு. நிறைய சாக்லேட் ; ஐஸ் க்ரீமெல்லாம் அள்ளி விட சிலர் முன்வருவர் ! கண்ட்ரோல் தலீவரே ! கண்ட்ரோல் !!!
Deleteதலீவரே... எனக்கென்னமோ நீங்க சீக்கிரமே "சி.சி.வ வெளியாவதை எதிர்த்துப் போராட்டகளத்தில் குதிப்போம்"னு அறிக்கை விடப்போறீங்களோன்னு தோனுது!!
Deleteபார்த்து.. சூதானமா இருந்துக்கோங்க தலீவரே!
This comment has been removed by the author.
Delete🎈🎈🎈🎈🎈💐💐💐💐💐இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தலைவரே! 🎂🎂🎂🎂🎂🎂🍫🍫🍫🍫🍫🍫
Deleteதலைவரே குப்புறக்கா வுழுந்து கும்பிட்டுக்கிறேன் என யாராவது வந்தால் இரண்டு அடி தள்ளி நின்று விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்க சொல்லுங்கள். :-)
Deleteயாருப்பா அது தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுகிறேன் என்று குச்சி மிட்டாய் குருவி ரொட்டி படத்தை போடுறது :-) அவரு படாபட்டியில் இருந்து jockeyக்கும், கிராபிக் நாவலில் phd பண்ணுகிற அளவுக்கு வளர்ந்து பல வருடங்கள் ஆகிறது :-) எனவே வேற ஏதாவது பெரியதாக தலைவர் பிறந்தநாளுக்கு கொடுங்கப்பா :-) [தலைவரே இத நீங்க எழுத சொன்னதாக நான் யார்கிட்டேயும் சொல்லவில்லை]
Deleteவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஆசிரியர் சார்...
Deleteஉங்கள் கருத்துகளை கண்டிப்பாக கவனத்தில் கொள்வேன்...:-)
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அளித்த அனைத்து நண்பர்களுக்கு மனம் கனிந்த நன்றிகள் நண்பரே...
Deleteவாழ்த்துக்கள் பரணி.
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Deleteதலீவரே.
இது என்ன மாதிரியான கதையென்பதையோ ; இது கதை தானா ? என்பதையோ பற்றி முன்கூட்டியே சொல்லி வைத்து, வாசிப்பின் மெருகினைக் குறைத்திட மனசு வரவில்லை ! அதனால் தான் பின்னட்டையைக் கூட கண்ணில் காட்டாது, கல்லுளி மங்கனாய் வாயே திறக்க முனையவில்லை !
ReplyDeleteராஜ தந்திரம் அமைச்சரே😅😂
// ராஜ தந்திரம் அமைச்சரே😅😂 //
Delete+1
இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் தாரை தலிவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சொல்ல வயது பற்றாததால் வணங்குகிறேன்🙏🏼
ReplyDeleteஇன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼
🎂🎂🎂🎂🎂
🍧🍧🍧🍧🍧
🍫🍫🍫🍫🍫
🍭🍭🍭🍭🍭
💐💐💐💐💐
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...
Deleteவாழ்க பல்லாண்டு🌟🍫
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவரே 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
Deleteவாழ்க பல்லாண்டு...
Deleteவாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள் நண்பரே...
Deleteசார் என் கூரியர் ஈரோடு வந்து சேர்ந்து விட்டது
ReplyDeleteஆனால் எங்கள் door delivery இல்லை என்று சொல்லிவிட்டார்கள்...
இவுளோ கஷ்டப்பட்டு வந்து டையபாலிக் இன்னும் கையிலே எடுக்க முடியாது போனது
மிகவும் வருத்துகிறது...🥴
டியர் விஜயன் சார்,
ReplyDelete2020-க்கான சந்தா இதழ்களை DTDC மூலம் பெறுவதற்காக தேர்வு செய்திருந்தாலும், Speedpost மூலமாகவே புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இம்மாதமும் அப்படியே! இது குறித்து உங்கள் அலுவலகத்திற்கு ஜனவரியில் தகவல் அனுப்பியதோடு அப்படியே விட்டுவிட்டேன் - DTDC யை விட Speedpost-ன் சேவை நன்றாகத் தோன்றியதால். தற்போதைய சூழலில் தாமதங்கள் நேரலாம் என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்கள். மெதுவாகவே வரட்டும், அவசரமில்லை, சும்மா ஒரு தகவலுக்கு மட்டும் :)
அட ..நம்மாள்களுக்கு இவ்வளவு பொறுப்பு வந்து விட்டுள்ளதா ? பரவாயில்லையே !! Anyways once all this is over - DTDC க்கு மாற்றிடச் சொல்லி விடுகிறேன் கார்த்திக் !
Deleteதாரைத் தங்கம், எங்கள் சிங்கம், நிகரில்லாத தலீவர் அவர்களுக்கு எங்கள் இனிய பொன்னான பிறந்த நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஷெரீப்..
Deleteஇன்று பிறந்தநாள் காணும் ,என்றென்றும் மார்கெண்டேயரான தலீவரை வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன்.
ReplyDeleteவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே...:-)
Deleteவிஜயன் சார், கண்ணான கண்ணே.. படிக்க ஆர்வமுடன் உள்ளேன்.
ReplyDeleteஉங்களின் இந்த செலக்சன் அனைவர் மனதையும் கவரும் என்ற நம்பிக்கை உள்ளது.
உங்களின் இந்த செலக்சன் அனைவர் மனதையும் கவரும் என்ற நம்பிக்கை உள்ளது.
Delete+1 🔥🔥🔥
Vijayan sir on fire
விஜயன் சாரை அடுப்பின் மீது அமர்த்தாத வரைக்கும் ஓ.கே. தான் அகில் !!
Deleteஏற்கனவே அடுப்பை பற்ற வைத்துவிட்டது போல் தெரிவது எனக்கு மட்டும்தானா? தூக்கி அமர்த்த வேண்டியதுதான் பாக்கியிருக்கும் வேலை என்றும்கூட தோன்றுவது எனக்கு மட்டும்தானா?
Deleteசாரே எங்களை அடுப்பில் வைத்தால் எப்படி இருக்குமோ அது புது புது + சர்பிரைஸ் எல்லாம் திறக்க உங்களுக்கு அந்த நிலைமை எப்பவும் வராது சார்...
Deleteகா டூ கா:
ReplyDeleteநேரில் பார்த்தறியா கார்வினுக்கு...,
வணக்கம்.
நான் கிட் கார்சன்,
டெக்சாசிலிருந்து...
நான் இங்கு பலம்.நீ அங்கு பலமா?
பளபளக்கும் நகரங்களின் தளதளக்கும் மங்கைகளை மட்டுமே நீ நன்கு அறிந்தவன் ஆதலால் யார் இவன் என்று விழிக்கக்கூடும்...
சுட்டெரிக்கும் பாலைவனங்களில், கால்தடங்களின் பாதையில்,எதிரிகளை ஓய்வின்றி தேடியலையும் டெக்ஸ் வில்லரின் நண்பன் நான்.
எதிரிகளுக்கு மட்டும் டேஞ்சரான ரேஞ்சர்கள் நாங்கள்.
வெயிலால் சற்றே சுருங்கிய தோல்களும்,
ஆங்காங்கே பித்த நரைகளும், சரியான ஊட்டச்சத்து இல்லாததால் வயதான தோற்றமும் என் அடையாளங்கள்...
ஆனால் சிலர் பொறாமையால் "குறுந்தடி கிழவன்" என்றும் கூட என்னை விழிக்கக்கூடும்.
அது குறுந்தடி அல்ல அழகான "குறுந்தாடி" எனவும் இக்கணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்மையில் நான் சற்றே வயது கூடிய இளைஞன் அவ்வளவே.
என் பெயரிலேயே நான் எப்போதும் குழந்தைதான் என உணர்த்தும் "கிட்" என்ற சொல் இருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளேன்.
இன்னமும் என்னை யாரென தெரியாவிடில் தயவுசெய்து இன்றே சந்தா கட்டிவிடு நண்பா.
மாதந்தோறும் டெக்சுடன் என்னையும் சேர்த்து பார்க்கலாம்.
கொரோனா கொடுத்த பீதியால் பாதி வாழ்க்கை வீட்டிற்குள்ளேயே கழியும் இந்த காலங்களில்தான் பழமையையும் நினைத்து பார்க்க நமக்கு நேரம் கிடைக்கிறது.
துப்பாக்கி சத்தங்கள் போல தாய கட்டைகள் உருளும் சத்தங்களும் கூட சங்கீதம்தான் என உணரும் இந்த நேரத்தில் உண்டானதே உன் நினைப்பு.
ஓராயிரம் நாயகர்கள் நம்மை போல் இருக்க என் நினைவு ஏன் வந்தது எனவும் நீ யோசிக்கக்கூடும்.
வறுத்தக்கறியும் பீன்சுமே வரமாய் பெற்று,முடிவுறா குதிரை பயணங்களில், துப்பாக்கி சகிதம் இரவுப் பொழுதுகளை எல்லாம் வெட்டவெளியின்
நட்சத்திர பார்வையில் நிகழ்த்தும் நாடோடி வாழ்வை கொண்டவன் நான்.
விமானங்களில் விரைந்து, இரவிலும் ஔிரும் நகரங்களின் நட்சத்திர விடுதிகளில்,எதிரிகளின் மேல் கணப்பொழுதில் கத்தி எறியும் திறமையுடன், பற்பல காரணங்களால் தூங்கா இரவுகளைக் கொண்டவன் நீ...
ஒரு நாணயத்தின் இருவேறு பக்கங்களாயினும் நாம் இணைந்து இருப்பது ஒரே நாணயத்தில்தான் என உணர்ந்ததால் உனக்கே வரைந்தேன் இக்கடிதம்.
ஓய்வின்றி பிரச்சனைகளிலேயே உழல்பவன் நான் என்றால்
ஓய்வெடுக்க போகுமிடங்களில் கூட பிரச்சனைகளை சந்திப்பவன் நீ...
பாதைகள் வேறுவேறாயினும் பயண நோக்கம் தீமைகள் அழிக்கப்படுவதே என்பதால் நீயுமென் தோழனே...
உன்னில் என்னை நான் கண்டறிந்த புள்ளிகளில் முதன்மையானது என்னைப் போலவே நீயும் கொண்டிருக்கும் ஆழமான நட்பே.
வாழ்க்கையெனும் பயணத்தில் நன்மையோ தீமையோ எதுவாயினும் டெக்சுடன் தோள் சேர்ந்து முழு நம்பிக்கையுடன் பயணிப்பதே என் நட்பு.
உலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆண்களின் நட்பில் ஆச்சர்யம் என பெரிதாய் ஏதும் இல்லைதான்.
இதே நட்பை, நம்பிக்கையை உன் நட்பிலும் நான் பார்க்கிறேன்.
நட்பென வந்தபின் பால் பேதம் பார்க்க கூடாது.
ஆயினும் இதைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் சற்றே குறைவான சமுதாயத்தில் நாம் இருக்கையில் இங்கு மாடஸ்டியுடனான உன் நட்பே கூட ஒரு ஆச்சர்ய சங்கதிதான்...
பல தொழிலதிபர்களின் தோழியாய் இருந்தாலும், நட்பாய் மாடஸ்டியின் கரம் கோர்க்கும் உன் கண்ணியத்திற்கு ரசிகன் நான்.
ஆபத்து காலங்களில் நீ வருவாய் என உள்ளுணர்வால் அவள் உணர தவறாமல் அங்கு நீ வருவாய்..
நீ அது போல் உணருகையில் அவளும் வருவாள்..
இது நட்புக்கு நீங்கள் தரும் மரியாதை.
காதலைப் போல நட்புக்கும் கூட கெமிஸ்ட்ரி உண்டென வரலாறு மாற்றினாய்.
இரண்டுக்கும் ஒரு நூழிலை தான் இடைவெளி எனும்போதும் எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் அந்த நூழிலையில் விழாது நடந்து நட்பை சரியாக நகர்த்த தெரிந்திருக்கிறாய்.
நட்பில் முக்கியம் நம்பிக்கையும் சொல்லாமலே நண்பனின் மனதை அறிவதும்தானே.
இது உங்கள் நட்பில் சரியாக நடந்து அதற்கு பலம் கூட்டுகிறது.
(லிவிங் டூகெதர ஆரம்பிச்சு வச்சதே இவிங்கதானோ...)
(தொடர்ச்சி..)
ReplyDeleteநட்பிற்கு அடுத்ததாய் பிளைசிக்கு நீ தரும் உனக்கு நிகரான மதிப்பும் அவளைப் பற்றிய உன் புரிதலும் மிக அழகு.
"இளவரசி" என நீ அழைக்கும் ஒற்றைச் சொல்லுக்கே ஓரு கோடி ஜென்மங்கள் உன் தோழியாய் அவள் இருப்பாள்.
அவளுக்கு நீ தரும் சுதந்திரமும், முடிவெடுக்கும் உரிமையும்,
உணர்வால் ஒன்றியிருந்தாலும் அவளின் மறுபக்கத்தை கிளறாத கண்ணியமும், இன்றுவரை மொத்த பெண்ணினத்தின் நிறைவேறாத நீண்ட நாள் கனவுகள் என்பதே நிதர்சன உண்மை...
உன் தோழியாய் உன்னுடன் வந்தாலும் உனக்கு மட்டுமேயான உடைமை என அவளை நீ ஒருபோதும் சிறைப்படுத்தியதில்லை....
அதுபோல் அவளும் உன்னை கட்டிப்போட்டதில்லை....
பட்டாம்பூச்சியை பிடித்து ரசிக்கும் எனக்கே உன்னை இவ்வளவு பிடிக்கையில் அதை சுதந்தரமாய் சிறகடிக்க விடும் உன்னை இளவரசிக்கு எப்படி பிடிக்காமல் போகும்..
பெண்ணியத்திற்கு தரும் மதிப்பே வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சி என உணர்த்தியிருக்கிறாய்.
இதை அறியாத இப்பூவுலகம் மகிழ்ச்சியை எங்கெல்லாமோ தேடுகிறது.
உண்மையில் சந்தோசம் என்பது நிறைய நேரங்களில் நம் கூடவே நம் பக்கத்திலேயே தான் இருக்கிறது.
நாம் தான் அதை எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டே இருக்கிறோம் போல...
பெண்களை சமமாய் நடத்துவதால் தான் உன்னை சுற்றி ஓராயிரம் தோழிகள் சுற்றுகிறார்கள்.
கட்டை பிரம்மச்சாரிக்கு காதலைப் பற்றி என்ன தெரியுமென யோசிக்காதே...
என் கடந்த காலங்களில் காதல் எனும் வசந்தம் வந்து போன ஒன்றுதான்.
"மெல்லத் தீண்டுதே பனிக்காற்று" என பாடியபடி அந்த ஒற்றைக் காதலை இப்பவும் சுமந்து சுற்றுவதே என் மிச்ச வாழ்க்கைக்கு போதும்...
(வேற யாரும் கிடைக்கலங்கறத இப்படியும் சமாளிப்போம்ல..)
நட்பைப் போல அழிவில்லா வாழ்வுதான் காமிக்ஸ் நாயகர்களான நமக்கும்.
நீதியே ஜெயிக்குமென என் கதை சொல்வதை பாேலத்தான் உன் கதையும் சொல்கிறது.
இது நாம் இணைந்த இன்னொரு புள்ளி..
நல்லன வாழ்வதையும் அல்லன வீழ்வதையும் கதைகளில் கற்றுக் கொடுத்திருக்கிறோம்.
காமிக்ஸ் கற்று வளர்ந்த தலைமுறையில் குற்றங்கள் குறைந்திருக்கும் என்பதும் நாம் யாவரும் அறிந்ததுதான்..
(சில குடுமிப்பிடி சண்டைகளை தவிர)
உண்மையில் வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களையும் உயிர்ப்புடன் வைத்திருக்க காமிக்ஸ்கள் தவிர்த்து வேறு எவற்றால் முடியும்?
நீளும் நம் காலப் பயணங்களில் வாய்ப்பிருந்தால் என்றேனும் ஒருநாள் நான் என் நண்பனோடும் நீ உன் தோழியோடும் நேரில் சந்திப்போம்..
என் நட்பைப் போலவே உன் நட்பும் என்றும் சிறக்கட்டும்.
(மாடஸ்டியை விட்டுட்டு என்னை பார்க்க வந்திடக்கூடாதுல்ல...நாங்களாம் தெளிவுப்பா)
மற்றபடி எல்லா சூப்பர் ஹீரோக்களையும் போல பொறுமையும் ஒரு வீரம்தானென உணர்ந்து தனித்திருத்தலை பதுங்குகுழிகளிலோ உல்லாச மாளிகைகளிலோ பாதுகாப்பாய் தொடர்வாய் என நம்புகிறேன்...
நன்றி,
நட்புடன்...
கார்சன்.
பிகு1:நம் கடிதத் தொடர்பை "காகா" கடிதமென நையாண்டி பண்ணி வெளியிட்ட ஆசிரியரின் விலாசம் இத்துடன் அனுப்பியுள்ளேன்.
ஊரடங்கு முடியும் வரை பொறு நண்பா...
பிகு2:அந்த முகவரியை மாடஸ்டியிடம் தெரியாமல் கூட காட்டி விடாதே...
ஏதேனும் குளறுபடி நேரிடின் உண்டாகும்
பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.
((பிகு:இது எனது தனிப்பட்ட பின்குறிப்பு))
கொரோனா குளறுபடியால் பாதிக்கப்பட்ட கடிதப் போக்குவரத்தால் இக்கடிதம் கார்வினை சென்றடையவில்லை...
அதனால் பதில் கடிதமும் வரவில்லை...
மாடஸ்டியும் வரவில்லை...
கடைசியாக கிடைத்த தகவல்களின்படி
காமிக்ஸ் அது இதுனு முகவரியில் எழுதப்பட்டிருந்ததால்,கடிதம் எங்கோ சிவகாசி பக்கம் சென்றடைந்ததாய் ஒரு தகவல்.
நன்றி...
ஆஹா்.....:-)
Delete///இது கதை தானா ?///
ReplyDeleteSurely C---a is a beautiful Story <3
எடிட்டர் சார்...
ReplyDeleteமார்க்கெட்ல வஞ்சர மீன் இருக்கு, நெய்மீன் இருக்கு, வவ்வால் மீன் இருக்கு...ஆனா ஜாமீன் மட்டும் இல்ல சார்...!
எங்க ஊர்ல S.T. Courier இருக்கு...Professional Courier இருக்கு..ஆனா DTDC மட்டும் மூடிக்கிடக்கு சார். ஐந்து முறை படையெடுத்தபின் ஆபீஸ் திறந்திருப்பதை பார்த்து சந்தோஷமாக போனால் அங்கு வேலை செய்பவர் ஒருவர்( மட்டும்)மேஜைமேல் தலை சாய்த்து படுத்துக்கிடக்கிறார். அங்கு தபால்கள் எதுவும் இல்லாமல் வெறிச்சோடிக்கிடக்கிறது.அவரிடம் டெலிவரி பண்ணுபவரின் நம்பரை வாங்கி டயல் பண்ணினால் வாரம் ஒருமுறைதான் வேன் லோடு ஏற்றிக்கொண்டு வரும். அடுத்தவாரம் திங்கள் செவ்வாயில் கால் பண்ணி பாருங்க என்று கூறிவிட்டார். தவறு என்மேல்தான். அன்று நீங்கள் சொன்னபோதே அலுவலகத்துக்கு போன் பண்ணி எனக்கு S.T.கூரியரிலேயே அனுப்பச் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கணும்.
இந்த மாதம் அனுசரணை மாதமாகவே இருந்திடல் அவசியம் போலும் சார் !
Deleteகொரோனா பீதியில் இவ்வளவு நாள் காத்திருந்தோம். இன்னும் சில நாட்கள் காத்திருக்கமாட்டோமா? பரவாயில்லை சார். நம் காமிக்ஸூக்காக காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது!
Deleteவிஜயன் சார் டீ வந்துவிட்டது.
Deleteஹிஹிஹி
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவரே,வாழ்வில் என்றும் வளமும்,நலமும் பெற்று வாழ வாழ்த்துகள்.......
ReplyDelete🎊🎊🎊🎊🎊🎊🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎉🎉🎉🎊🎊
நன்றி இரவி அவர்களே...:-)
Deleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தலைவரே!
Delete🎂🎁💐🌹🎊🎆🎉🌈💥🍰
ஒரு வழியாக பொக்கிஷத்தை கைப்பற்றியாச்சி......
ReplyDeleteமுதல் புரட்டலில் அனைத்தும் நன்று,கண்ணான கண்ணே சர்ப்ரைஸ் இதழ் போல.......
எதை முதலில் வாசிக்க???
ஆஹா....நமக்கு முன்னாடியேவா...
Deleteகண்ணான கண்ணே - மெல்லிய சோகம் கதையோடு இணைந்து செல்கிறது.. கி.நா என்றாலே சோகம்தானா?? நம்ம மைன்டும் சோகமாயிருச்சே தலைவா??!! 7/10
ReplyDeleteதொண்டரே...."பராகுடா" சோகமில்லையே ..? "தனியே..தன்னந்தனியே" சோகம் கிடையாதே.? "வஞ்சம் மறப்பதில்லை " யில் ஏது சோகம் ? So பொத்தாம் பொதுவான statement வேண்டாமே - ப்ளீஸ் ?
Deleteதவிர, சோகம் எனும் ஒரே காரணத்தின் பொருட்டு - வித்தியாசமாய்த் தென்படும் ஆல்பங்களைத் தவிர்ப்பதன் லாஜிக் புரியவில்லையே ? அப்புறம் 'கண்ணான கண்ணே' மென்சோகம் மட்டுமே தானா ? மறுபடியும் ஒருவாட்டி புரட்டிடுங்களேன் ?
//சோகம் எனும் ஒரே காரணத்தின் பொருட்டு - வித்தியாசமாய்த் தென்படும் ஆல்பங்களைத் தவிர்ப்பதன் லாஜிக் புரியவில்லையே//
Delete+100
விஜயன் சார், இப்படியான சில விமர்சனங்களைப் பார்த்துவிட்டு சோகமிழையோடும் கதைகளைக் ஒதுக்கி விடாதீர்கள். மென்சோகமிழையோடும் கதைகளை வாசிப்பது ஒரு பிரத்தியேக இரசனை.
In the broader picture - சோகம் ஏன் வேண்டாம் ? என்பது குறித்து நண்பர்கள் நிறையவே பகிர்ந்துள்ளனர் ! So நண்பர் கோவை சந்தோஷின் எண்ணவோட்டம் புரிகிறது & அதனில் பிழையுமில்லை தான் ! ஆனால் இந்த இதழினில் மென்சோகம் என்பதையும் தாண்டியொரு விஷயமிருப்பதாக எனக்குத் தோன்றியது ! Hence the selection !
Deleteநிச்சயமாக சார்.
Deleteஉங்கள் தாத்தாவின் வரலாற்றை பதிவாகப் படித்து நெகிழ்ந்தவர்கள் இந்தக் கதையை தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டாமா? ஒருவேளை காசு கொடுத்து வாங்குவதானால் முழுக்க முழுக்க சந்தோசமே இழையோட வேண்டு மென நினைக்கிறார்களோ? அப்படிப்பார்த்தால் கார்சனின் கடந்த காலமுமே நெஞ்சுவெடிக்கும் சோகக் காவியமாகவே இவர்களுக்கு தெரியவேண்டுமே?
இந்தக் கதையில் நீங்கள் குறிப்பிடுவதுபோல சோகத்தைத் தாண்டிய விடயமுள்ளது. அதேபோல சோகத்தைத் தாண்டும் வழியுமுள்ளது...
, xபொறுமை காத்த தங்கம் பொங்கி எழுந்த சிங்கம் எங்கள் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கரூர்ராஜ சேகரன்
ReplyDeleteநன்றி நண்பரே...:-)
Deleteபரணி சார் தரணி ஆள அகில உலக உப்புமா சங்கம் சார்பில் வாழ்த்துகிறேன். (இனிமேல் வாழ்த்தும் பொழுது பெயர் போடுங்க சகோஸ், நம் தளத்தில் பல தலைவர்கள் இருப்பதால், புது வரவான எனக்கு கொஞ்சம் குழப்பம் ஆகிவிட்டது).
ReplyDelete///நம் தளத்தில் பல தலைவர்கள் இருப்பதால்///
Deleteமன்னிக்கவேண்டும்..
(எங்களைப் பொறுத்தவரை)
இங்கே ஒரே ஒரு "தலீவர்தான்" இருக்கிறார்.!அந்த வெள்ளை உள்ளத்திற்கான அங்கீகாரம் அது.! :-)
இல்லையே ஒரே தலிவர் பரணிதரன் நிரந்தர செயலாளர் ஈரோடு விஜய் பொருளாலர் செல்வம் அபிராமி ஜி
Deleteஓகே. நமக்கு ஒரே தலைவர், ஒரே கொள்கை. Point duly noted KOK.
Deleteஆஹா....
Deleteவாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே...
அய்யா நான் எப்பவுமே தொண்டர்தாங்க...:-))
அந்த ஆடு...அந்த அருவா...
Deleteஇந்த மனுஷன்...இந்தப் பதவி....
ரெண்டுக்கும் மத்தியிலே லேசா ஏதோவொரு தொடர்பு இருக்கா மேரியே தெரிறது எனக்கு மட்டும் தானா ?
க. க. க. போங்கள் சார்..!!
Delete(எங்களைப் பொறுத்தவரை)
Deleteஇங்கே ஒரே ஒரு "தலீவர்தான்" இருக்கிறார்.!அந்த வெள்ளை உள்ளத்திற்கான அங்கீகாரம் அது.! :-) //
கண்ணனின் கருத்தை 1000% வழிமொழிகிறேன்.......
தளத்தை பல ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருப்பதாக அனு அவர்கள் சொன்னதாக நினைவு, அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரே ஒரு தலைவர் பற்றி தெரியாமல் இருப்பது உண்மையில் வியப்பிற்குரிய செய்தி.......
Deleteசங்கத்தின் சீக்ரெட்ஸ் சத்தமாக சொல்லாதீங்க சார். எல்லார் காதிலும் விழுந்து விடும்.
DeleteArivarasu @ Ravi சார்.
Deleteஅனு நம் தளத்தை பார்த்துக் கொண்டு இருந்தேன் என்றுதானே சொன்னார்கள். படித்து கொண்டு இருந்தேன் என்று சொல்லவில்லையல்லவா? அதனால் வியப்படைய வேண்டாம்! அவர்கள் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்கள்!
கொஞ்சம் வேலை இருக்கு என்று அந்த பக்கம் போனால், என் தலையை உருட்டுவதா??? Too much. உங்களுக்கு ஒரு கேள்வி. நான் 2020 க்கு முன்னால் இரண்டு தடவை கமன்ட் செய்திருக்கிறேன். நீங்கள் ஏன் பதில் சொல்லவல்லை? ஒரு நீளமான பெயர் பட்டியலை மனப்பாடம் செய்வது அவசியமா? அல்லது அந்த பட்டியலில் இருக்கும் நபர்களை தெரிந்து கொள்ள முயற்சி செய்வது அவசியமா? I have mentioned what happened in our blog in my graphic novel preferences. There is no need for me to gain attention by telling I'm following this blog since 2013. சீரியஸ் ஆகிடுச்ச இல்ல? பரவாயில்லை அனுவிற்கு இன்னொரு பெயர் இருக்கு, அது உப..... 🤣
Deleteகொரோனா கூட வந்திடும் போல கொரியர் வரலையே DTDC சரியான குப்பை
ReplyDeleteஇன்று எனக்கு எஸ்டி கொரியரில் அனுப்பியதாக லயன் அலுவலகத்தில் தகவல்...நாளை இல்லத்தில் தான் இருப்பேன் என்பதால்
ReplyDeleteஐயம் வெரி ஹேப்பி ...:-)
167
ReplyDeleteசென்னைக்கு அனுப்பி இருக்கீங்களா சார்...
ReplyDeleteநார்மல் ஆனந்துக்கு அப்புறம் 18ந் தேதிக்கு மேல் அனுப்பி ராவ் போதும் சொல்லி இருந்தேன்...
175வது
ReplyDeleteசகோதரர் பரணிதரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார்
ReplyDeleteபொட்டி வந்துருச்சு!!! பொட்டி வந்துருச்சு!!!
ReplyDeleteகண்ணான கண்ணேவும் படித்தாயிற்று. லைட்டான ஓவியத்தில் ஒளிந்திருக்கும் வெய்ட்டான கதை
கொரியர் வரல கோவிந்தா கோவிந்தா DTDC செம்ம சர்வீஸ்
ReplyDeleteஇன்றும் கொரியர் வரவில்லை..
ReplyDeleteஆத்தா இப்போது டூட்டியில் இல்லை..
கண்ணான கண்ணே'வை படிக்க முடியாத தொல்லை...
நானே நானாக இல்லை..
கோடையிலும் வாடாத முல்லை!
இந்தக் கவிதை (ஆமா கவிதைதான்.. என்னான்றீங்க இப்ப?) தலீவரின் பிறந்தநாளுக்கு அர்ப்பணம்!
பட்டாப்பட்டி இன்னும் காயவில்லை.. !
Deleteசங்கத்துக் கல்லாவில் காசுமில்லை.. !
குருவி ரொட்டிக்குக் குச்சி முட்டாய் செட்டாகவில்லை !
லாக்கடவுனால் இக்கட இசைத்தோழியுமில்லை !
நேற்றைய பல்புதனை மறக்கத் தலீவரோ தயாரில்லை... !
அப்பாலிக்கா இது கவிதையுமில்லை ...!
இதுக்காக நீங்க வருத்தப்படப்போவது உறுதி எடிட்டர் சார்..
Deleteசீக்கிரமே, உலகின் மிகச் சிறந்த கவிஞருக்கான விருதை என் கையில் கொடுத்தபடியே 'உங்க இன்ஸ்பிரேஷன் யாரு?'ன்னு பேட்டி எடுப்பாங்க.. அப்போ நான் சொல்லுவேன் "நிச்சயமா எங்க எடிட்டர் தான்.. வல்லவர்கள் வீழ்வதில்லை கதையில் அவர் எழுதின கவிதைகள் தான் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி என்னை இந்த அளவுக்கு கொண்டுவந்து விட்டிருக்கு!"ன்னு சொல்லுவேன்! உலகமே எழுந்து நின்று கை தட்டும்!
அப்போ வருத்தப்படுவீங்க!
உலகமே எழுந்து நிற்குமா ? ஏதாச்சும் ஹோல்சேல் பைல்ஸ் பிரச்னையா இருக்குமோ ?
DeleteEV , Editor சார் செம்ம counter kku counter semma semma
Deleteஎனக்கு கொரியர் இன்றும் வரவில்லை.
ReplyDeleteமனதுக்குள் கடுப்போ குறையவில்லை.
இது முழுக்க லாக்டவுனால் வந்த தொல்லை.
இது என்று தீரும் என உரைப்பாகுமில்லை
எனவே இந்த ஆட்டத்துக்கு நான் வரவில்லை
ஆக மொத்தத்தில் எதுவும் இல்லை இல்லை இல்லை.
/// உலகமே எழுந்து நிற்குமா ? ஏதாச்சும் ஹோல்சேல் பைல்ஸ் பிரச்னையா இருக்குமோ ?///
ReplyDeleteMaybe your honour!
பின் குறிப்பு.( போட மறந்துட்டேன்) என்னோட கவித??? செயலருக்கு dedicate.
ReplyDeleteme 200
ReplyDeleteஎனக்கும் இன்றுவரை புத்தகங்கள் வந்து சேரவில்லை. வெயிட்டிங் வெயிட்டிங் வெயிட்டிங்
ReplyDelete