Powered By Blogger

Sunday, May 03, 2020

ஓவரோ ஓவர் - 2

நண்பர்களே,

வணக்கம். நாளைய பொழுது back to work என்பதால் அதற்கான முஸ்தீபுகளில் பிசியாக இருப்பீர்களென்று நினைக்கிறேன் ! அச்சகங்களை  முழுமையாய் இயக்கவுமே அரசு அனுமதி தந்திருப்பதால் - தொடரும் நாட்களில் எஞ்சியிருக்கும் இதழ்களை ஜல்தியாய் அச்சிட வேண்டியது தான் ! ரைட்டு....நேற்றைக்குத் துவக்கிய மாஸ்கோ மொக்கையின் இறுதிப் படலத்தை இயன்றமட்டுக்கு நீட்டி முளக்காமல் இனி விவரித்திட முயற்சிக்கிறேன் ! 'மதியமே ஆஜராகிறேன்' என்று வாக்குத் தந்திருந்தாலும் back to back தினங்களில் back to back ஆஞ்சநேய வால் நீளத் பதிவுகளை டைப்படிக்க ரொம்பவே சிரமப்பட்டது !! தவிர, நாளை முதல் வேலைகள் ஆரம்பம் எனும் போது மண்டையின் ஒரு பகுதி அதனில் லயித்துக் கிடந்தது ! So ரொம்பவே லேட் !!  Sorry people !

மாஸ்கோ ஏர்போர்ட்டின் வெளியே எட்டிப் பார்த்த போது என்னை வரவேற்ற கட்சி பகீரென்று வயிற்றைக் கலக்கியது ! பொதுவாய் ஒரு தலைநகரின் பன்னாட்டு விமான நிலையத்துடன் நாம் தொடர்பு படுத்திடக்கூடிய பரபரப்பான  சமாச்சாரங்கள் எவையுமே கண்ணில்படவில்லை !  நகருக்குள் செல்ல பஸ் வசதி இருப்பதாகவோ, புதுசாய் வருபவர்களுக்கு ஒத்தாசை செய்திடக்கூடிய டூரிஸ்ட் ஆபீஸ்களோ மருந்துக்கும் காணோம் ! மாறாக WWF மல்யுத்தப் போட்டிக்குத் தயாராய் இருக்கும் லகட பாண்டியர்களைப் போல ஒரு கும்பலாய் டாக்சி டிரைவர்கள் முறைப்பாய் நின்று கொண்டிருந்ததைத் தான் பார்க்க முடிந்தது ! வரவேற்க யாருமின்றி,  'ஊருக்குப் புதுசு ' என்ற அடையாளத்தோடு வந்து சேரும் பயணிகளை சுற்றி வளைத்துக் கொண்டு தத்தம் வண்டிகளில் ஏறிடச் சொல்லி மிரட்டாத குறையாய் அங்கே ஒரு கூத்து அரங்கேறிக்கொண்டிருந்தது ! ஏற்கனவே இது பற்றி நெட்டில் கொஞ்சம் வாசித்திருந்தேன் என்பதால், இவர்களிடம் சிக்கி மேற்கொண்டும் சட்னியாகிடக்கூடாதே என்ற பயம் உள்ளுக்குள் ! ஆனால் எந்த நொடியும் தூங்கப் போய்விடுவேன் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த நோஞ்சான் ரஷ்யக் கதிரவன் எனக்கு நிறைய options தந்திடவில்லை ! நின்று கொண்டு கூவிக்கொண்டிருந்த லகடுகளை லேசாய்ப் பார்வையிட்டேன் ; அத்தினி பேருமே அரை டஜன் பிரியாணிகளை at a time சாத்தக்கூடியோர் போலவே தென்பட, ஒரேயொரு மனுஷன்  மட்டும் கொஞ்சம் குட்டியாய்க் கண்ணில் பட்டார் ! வயசும் கொஞ்சம் கூடுதல் போலவே தோன்றியது ! ரைட்டு... வழியில் ஏதேனும் சிக்கல் ஆனால் கூட இந்த மனுஷனை நாம் சாத்தி விட முடியும் என்று தோன்றியதால்  விறு விறுவென்று அவரது வண்டியை நோக்கி நடந்தேன் - இடைமறித்த கிங் காங்களை ஏறெடுத்தும் பார்க்காமல் !  எக்மோரிலும், சென்ட்ரலிலும் வெளிப்படும் போதெல்லாம்  சூழ்ந்திடும் ஆட்டோ டிரைவர்களை எண்ணற்ற தடவைகள் சமாளித்த அனுபவம் என்றால் சும்மாவா ? ஒரு மாதிரியாய் அவர்களைக் கடந்து சென்று அவரது டாக்சியைப் பார்த்த போது, சத்தியமாய் நம்ப முடியவில்லை - இன்னமுமே இது போன்ற புராதனங்களை எல்லாம் இத்தனை பெரியதொரு தேசத்தின் சாலைகளில் ஓட அனுமதிக்கின்றனரா என்று !! பெட்டியை டிக்கியில் போட சைகை காட்டினேன் ; அவரும் மொக்கை போட்டு டிக்கியைத் திறந்தார் ! சரியென்று உள்ளே ஏற எத்தனித்தால் கதவின்  கைப்பிடி  சண்டித்தனம் செய்தது ! உள்ளுக்குள் அமர்ந்தால் சிகரெட் நாற்றம் குடலைப் பிடுங்கியது & சீட்களில் ஏழேழு ஜென்மங்களது தூசும், அழுக்கும், கறையும் அப்பிக்கிடந்தது ! ஏழெட்டு ஆண்டுகளுக்கு   முன்பாய் கிழக்கு பெர்லினிலும், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரங்களிலும் தான் இத்தனை ஹைதர் அலி டேக்சிக்களைப் பார்த்திருந்தேன் ; ஆனால் 2005 -ல் கூட இவை சாத்தியமே என்பதை நம்பச் சிரமமாக இருந்தது ! நான் போக வேண்டிய ஹோட்டலின் விலாசத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்திருந்தேன் ; அதைக் காட்டிய பின்னே மனுஷன் லேசாய் மண்டையை ஆட்டியபடிக்கே வண்டியைக் கிளப்பினார் !

சாலைகள் முழுவதுமே பனியை அங்கியாக்கி வெள்ளை வெளேரென்று நிசப்தமாய்க் காட்சி தர,  மேற்கொண்டும் பனி விழத் துவங்கியிருந்தது ! அவ்வப்போது சர் சர்ரென்று தாண்டிச் சென்ற சில நவீனரகக் கார்களையும், முரட்டு டிரக்குகளையும் தவிர்த்து ரோட்டில் யாரையும் பார்க்க முடியவில்லை ! டிரைவருக்கு சுட்டுப் போட்டாலும் இங்கிலீஷ் தெரியாது ; எனக்கோ இது மாஸ்கோ போகும் சாலை தானா ? அல்லது மனுஷன் எங்கேனும் என்னைக் கடத்திப் போகிறானா ? என்று தெரிந்து கொள்ள வழிகள் கூட லேது ; 'டொர டொர' வென்ற அந்த வண்டியின் ஓசை மட்டுமே கேட்க,  இஞ்சி தின்ற குரங்காட்டம் இருளினுள் பயணித்துக் கொண்டிருந்தேன் ! அரை மணி நேரம் ; ஊஹூம் - முக்கால் மணி நேரமாகியும் தலைநகரின் வெளிச்சங்களோ ; வீடு, பேக்டரி போன்ற சமாச்சாரங்களோ தென்படவே இல்லை என்ற போது இந்தப் பெருசு நமக்கு ஊரைச் சுத்திக் காட்டுதுடோய் என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தேன் ! மீட்டர் மட்டும் உசைன் போல்ட் வேகத்தில் ஓட்டமெடுத்துக் கொண்டிருக்க, கொஞ்சம் கடுப்பு கலந்த குரலில் 'இன்னும் எத்தினி நேரம் போகணும் ?' என்று கேட்டேன் ! அந்தாளோ உறுமல் போல் ஏதோவொன்றை ரஷ்ய மொழியில் பதிலாகச் சொல்லி விட்டு, மாமியாரிடம் கோபித்துக்கொண்ட மருமகளை போல 'விசுக்'கென்று கழுத்தைத் திருப்பிக் கொண்டார் ! ஒரு மாதிரியாய் ஒரு மணி நேரத்தைத் தொட்டிருந்த பொழுதில் மாஸ்கோ நகரின் மினுமினுப்பு கண்ணில்பட ஆரம்பித்த பொழுது என்னுளிருந்த இறுக்கம் லேசாய்த் தளர்ந்தது ! சரி...சரி...கொஞ்சம் போல மீட்டர் ஜாஸ்தியானாலும், ரூமுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தால் சரி தானென்று சமாதானம் கண்டது மனசு ! ஆனால் வலிது வலிது - வழுக்கையரைப் பின்தொடரும் விதி வலிது என்பதை நீண்டு கொண்டே சென்ற அந்தப்பயணம் நிரூபித்தது !

விமான நிலையத்திலிருந்து மாஸ்கோ நகர் முப்பத்தைந்து கிலோமீட்டர் தூரமெனில், நான் தேடிப் பிடித்திருந்த ஹோட்டலோ ஊரின் மறு கோடியில் இருந்து தொலைத்திருக்கிறது ! So இம்முறை மாஸ்கோவின் வெளிச்ச வீதிகளில் ஊர்வலம் போனோம் அடுத்த 40 நிமிடங்களுக்கு ! லொடக் லொடக்கென்று மீட்டர் விழும் நாராச ஓசை மட்டும் சீரான இடைவெளிகளில் ஒலித்துக் கொண்டேயிருக்க, அந்தப் புது நகரத்தையோ, அதன் எழில்களையோ ரசிக்கும் நிலையில் நானில்லை !  'ஓடினான்.. ஓடினான்.. வாழ்க்கையின் ஒரத்துக்கே ஓடினான்' என்ற  பராசக்தி பட வசனம் தான் நினைவுக்கு வந்தது அந்த நொடியில் ! கொஞ்ச நேரத்தில் நகரத்தின் பரபரத்த சாலைகள் மறையத் துவங்க, ஊருக்கு ஒதுக்குபுறமென்று நெற்றியில் எழுதிக்கொண்டிருந்த ஆளரவமற்ற பகுதியில் மறுக்கா 'டொர  டொர' பயணம் தொடர்ந்தது ! ஒரு மாதிரியாய் ஏழேகால் மணிக்கு ஹோட்டலுக்குள் வண்டி நுழைந்த போது  - கர்ப்பப்பையிலிருந்து வெளிப்படும் பிள்ளையின் நிம்மதியோடு வெளியே இறங்கி, மீட்டருக்கான காசை எண்ணித் தந்த நொடியில் என் தொந்தியின் மீது நாலு ரொமாலி ரொட்டிகளைச் சுட்டிருக்கலாம் - அத்தனை எரிந்து கொண்டிருந்தது உள்ளுக்குள் !

சூப்பராய் தென்பட்ட அந்த ஹோட்டலை ஏன் இப்படிப் பாடாவதியானதொரு ஊர்க்கோடியில் கட்டியிருக்கிறார்களோ  ? என்ற கேள்விக்கு கொஞ்ச நேரத்திலேயே விடை கிடைத்தது எனக்கு ! மாஸ்கோ நகரின் மிகப் பிரபலமான கண் ஆஸ்பத்திரி அந்தப் பிராந்தியம் தானாம் ; அங்கே சிகிச்சைக்கு வருவோர் தங்கிடும் பொருட்டு இந்த 4 நட்சத்திர ஹோட்டலை கட்டியது மட்டுமில்லாது, மொத்த பில்டிங்கையுமே  ஒரு   கண்ணின் அமைப்பில் உருவாக்கி , அதற்கு  HOTEL IRIS என்று பெயரிட்டிருப்பதை  ரூமிலிருந்த கேட்லாக் சொல்லியது ! ஆஸ்பத்திரிக்கு அருகாமை என்பதைத் தாண்டி, அதுவொரு அத்துவானமே என்பதை உணர்ந்த போது - இத்தனை சொகுசான ஹோட்டல் ஏன் இத்தனை சல்லிசாய் இருந்தது என்பது புரிந்தது ! 'சர்தான் ;எப்போதுமே ரேட் குறைவா ?' என்று மட்டுமே பார்க்கும் புத்திக்கு இப்படி குட்டு தேவை தான் என்று நினைத்துக் கொண்டே, ஆக வேண்டிய வேலையைப் பார்ப்போமென்று எனது செல்லிலிருந்து லாத்வியா நாட்டின் ஆசாமிக்கு போன் அடித்தேன் ! கோயில் மணி போல போன் அடித்துக் கொண்டேயிருக்க, யாரும் எடுக்கக்காணோம் ! சரி, இந்நேரத்துக்கு எங்கேயேனும் குடித்துவிட்டு மட்டையாகிக் கிடப்பான் என்றபடிக்கே, voicemail-ல் நான் மாஸ்கோ வந்துவிட்ட தகவலையும், ரூம் நம்பரையும் பதிவு செய்து விட்டு கீழேயிருந்த ஹோட்டலுக்குப் போனேன் பசியாற !

மருந்துக்குக் கூட ரஷ்யர்கள் அல்லாதோர் எவருமில்லை அங்கே ! இந்தக் கோழிமுட்டைக் கண்ணனுக்கு இங்கென்ன ஜோலியோ ? என்பது போல அங்கிருந்தோர் என்னைப் பார்க்க - நானோ  வயிற்றுக்குள் இறங்கக்கூடிய சமாச்சாரமாய் ஏதேனும் உள்ளதா ? என்று மெனுவை பார்த்தேன் ! வராட்டி போல எதையோ தின்று வைத்து விட்டு ரூமுக்குப் போன போது உறக்கம்  சுழற்றியடித்தது ! காலையில் எழுந்து மறுபடியும் கொஞ்சம் வராட்டியை உள்ளுக்குள் தள்ளிவிட்டு அறைக்குத் திரும்பி வந்து ஜன்னல் வழியே பார்த்தால், கண்ணுக்கு எட்டிய மட்டுக்கு பனியும், சூன்யமும் மட்டுமே தெரிந்தது ! சரி, நம்மாளுக்கு போன் பேசலாம் என்றபடியே அதே லாத்வியா செல் நம்பருக்கு போன் அடித்தால் - ஊஹூம் ; பதில் இல்லை ! பத்தாண்டுகளுக்கு முன்பான 'கொரிய மண்டைமழிப்பு நாட்கள்' லேசாக மனதில் இழையோட, படபடக்கத் துவங்கியது மனசு ! அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு அவனது வீட்டு லேண்ட்லைன் நம்பர் + செல் நம்பருக்கு 5 நிமிட இடைவெளிகளில் விரல் நோகும் வரைக்கும் போன் செய்து கொண்டேயிருக்க - கிணற்றில் கடாசிய கல் தான் ! எவ்வித ரெஸ்பான்ஸும் இல்லை ! என்ன செய்வதென்றே தெரியலை ; ஊருக்கு போன் செய்து என் தம்பியிடம் பேசினால் அவனும் பதறுவானே என்பதால் மூச் காட்டவில்லை ! ஒற்றை செல் நம்பரையும், முகமறியா ஒரு ஆசாமி மீதான நம்பிக்கையையும் மட்டுமே ஆதாரமாய்க் கொண்டு இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பதை நினைத்துப் பார்க்கும் போது, லோகத்திலேயே முதல் பேமானி நானாகத் தானிருக்க முடியுமென்று தோன்றியது !

மதியம் சாப்பிடவே தோணலை ! அவர்களது  சாப்பாடு ஒரு கொடூரமெனில், 'இப்போ கொட்டிக்கிட்டு என்னத்த கிழிக்கப் போறியாம் ?' என்று உள்ளுக்குள் உலுக்கிக் கொண்டிருந்த கேள்வியும் பசியின் மீது ஈரத்துணியைப் போர்த்தியிருந்தது ! மாலை புலர்ந்த போது - 'போச்சு ; மொத்தமாய்க் காசும் போச்சு ; இந்தக் குளிருக்குள்ளே அல்லாடறதுக்கும் அர்த்தம் இல்லாமல் போச்சு !' என்று தீர்மானித்திருந்தேன் ! இழப்பின் வலியை விடவும், பொய்த்த நம்பிக்கையின் வலியும், ஏமாந்து போவதன் வலியுமே பிய்த்துத் தின்று கொண்டிருந்தன ! மாலையும் புலர்ந்த போது - பொது பொதுவென்ற பனிப்பொழிவும் துவங்கியிருந்தது ! முழு நாளுமே பத்து பைசாவுக்குப் பிரயோஜனமின்றி வீண் போய்விட்டதே என்ற எரிச்சல் ஒரு பக்கம் ; உள்ளேயே அடைந்து கிடக்காமல், எங்கேனும் கடைவீதிகளில் சுற்றுவதற்கும் வழியில்லையே என்ற கடுப்பு இன்னொரு பக்கம் ஓடிக்கொண்டிருந்தன உள்ளுக்குள்  ! இன்றைக்குப் போல கூப்பிட்ட குரலுக்கு தேடி வர ஓலா ; யூபெர் என்றெல்லாம்  அந்நாட்களில் டாக்சிக்களும் கிடையாது ; இருந்திருப்பினும் அவற்றின் மீது காசைச் செலவிட மனசும் வந்திராது எனக்கு ! இது போன்ற இக்கட்டுகளின் போது, தனிமை எத்தனை கண்றாவியான துணைவன் என்பதில் எனக்கு ஏற்கனவே பரிச்சயம் உண்டு !

இருந்தாலும்  ஒப்பாரி வைத்து ஆகப்போவது ஏதுமில்லை என்பதால் ஒரேயடியாய் நிலைகுலைந்து போகவில்லை ! செல்லில் ISD பேசினால் அத்துக்கொண்டு போய்விடும்  என்பது தெரியும் தான்  ; ஆனால் நிமிஷத்துக்கு முப்பது / நாற்பது  ரூபாய்க்கு மேலாகவா  கட்டணம் இருந்துவிடுமென்ற அசட்டு நம்பிக்கையில் - போன் போட்டு வீட்டுக்குப் பேசினேன் ; குட்டியாயிருந்த ஜூனியர் எடிட்டரிடம் கதைத்தேன் ; செல்லில் இருந்த கொத்தனார், ஆசாரி, எலெக்ட்ரீஷியன் நம்பர்களுக்குமே போன் போட்டு குசலம் விசாரித்து பொழுதை ஓட்டினேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ! எனது டயரியை எடுத்து, எனக்குத் தெரிந்த ஸ்லோகங்களை எல்லாம் கட கடவென்று எழுதினேன் - இடையிடையே லாத்வியாவுக்கு போன் முயற்சித்தபடிக்கே ! சுகமோ, துக்கமோ - யாருக்கு என்ன நேர்ந்தாலும், சில பல இயற்கை நியதிகள் தான் மாற்றம் கண்டிடாதே ! So இரவும் புலர்ந்தது ; உறக்கமும் வந்தது ; அதனுள் ஆழ்ந்தும் போனேன் ! நள்ளிரவுக்கு கொஞ்சம் முன்னே எனது செல் கிணுகிணுக்க - பார்த்தால் லைனில் லாத்வியாக்காரன் !! அடித்துப் புரண்டு எழுந்து, நான் 'ஹல்லோவ் ' என்று போட்ட கூச்சல், போன் ஒயர்களின்றியே லாத்வியாவை எட்டியிருக்கும் ! 'என்னாச்சுப்பா சாமீ ? என்னை வரச்சொல்லிட்டு எங்கே தொலைஞ்சு போனியோ ?' என்று ஆதங்கத்தோடு கேட்க, அவனோ 'கொஞ்சம் பிஸியாகிட்டேன் ; நாளான்னிக்கு காலையிலே வாரேன் !' என்று காஷுவலாய்ச் சொல்லிவிட்டு போனைக் கட் பண்ணி விட்டான் ! கிணற்றில் விழுந்த கல் மேலெழும்பி வந்ததை நினைத்து குஷியாவதா ? அல்லது 'நாளான்னிக்கு வாரேன்' என்று சாவகாசமாய் சொல்லும் கோமாளியை நினைத்துக் கவலைப்படுவதா ? என்று புரியவில்லை !

போனை கட் பண்ணிய மறு நிமிடமே நான் முயற்சித்தால் - முதலில் போல அடித்துக் கொண்டேயிருக்க, தூங்கவும் முடியாமல் உருண்டு புரண்டு கொண்டேயிருந்தேன் ! 'சரி..அவனா தான் நாளான்னிக்கு வரேன்னு சொல்லியிருக்கான்லே ! பொறுமையா காத்திருக்கலாம் !' என்று சமாதானம் சொல்லிக்கொண்டேன் ! கிடைத்துள்ள நம்பிக்கையெனும் சிறு நூலிழையை ஓவராய் அலசி ஆராய்ந்து பிய்த்திடப் பயமாக இருந்ததால், காத்திருப்பே இனி மார்க்கம் என்ற தீர்மானத்தில் காலையில் ப்ரேக்பாஸ்ட சாப்பிட கிளம்பினேன் ! ஒவ்வொரு தினத்தின் குளிர் நிலவரத்தினையும், மறு தினத்துக்கான forecast சகிதம் லிப்ட்டில் ஒட்டியிருப்பார்கள் ! வந்தது முதலாய் வெளியே போகவேயில்லை என்பதால் பெருசாய் அது பற்றி நான் அலட்டிக்கொண்டிருக்கவில்லை ! ஆனால் மறு நாள் லாத்வியாக்காரனுடன் வெளியில் போக வேண்டியிருக்கும் என்பதால் காஷுவலாய் அந்த சீதோஷ்ண நிலவரத்தை வாசித்த போது குடல் வாய்க்கு வந்து விட்டது ! அன்றைய பொழுதின் டெம்பெரேச்சர் -18 டிக்ரீ என்றும் மறு நாளைய டெம்பெரேச்சர் -27 டிக்ரீயாக இருக்குமென்றும் எழுதி ஒட்டியிருந்தார்கள் !! விபரம் தெரிந்த பிற்பாடு - மெய்யாகவே உயிருக்கு பயந்த முதல் தருணம் அதுவே என்பேன் ! ஊசியால் சுருக் சுருக்கென்று குத்துவது போலான மைனஸ் 14 டிக்ரீ குளிரை சிகாகோவில் அதற்கு முன் அனுபவித்திருந்தேன் தான் ; ஆனால் மைனஸ் 27 என்பது எனது கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது ! என்னிடம் இருந்ததோ நார்மலான winter jacket தான் ! அதையெல்லாம் மாட்டிக்கொண்டு இந்த குளிர் நரகத்தை சந்திப்பதென்பது எம தர்மருக்கு வரவேற்புரை வாசிப்பதற்கு சமானம் என்பது அந்தப் பீதியினில் உறைத்தது !! அந்தக் கொலைகாரக் குளிரைச் சமாளிக்கும் Polar fleece எனப்படும் செம தடிமனான கோட்டை வாங்கியே தீர வேண்டும் & அதற்க்கோசரமாவது இன்றைக்கு வெளியே போயே தீர வேண்டுமென்பதும் புரிந்தது ! பேஸ்தடித்த முகரையோடு, கையில் இருந்த சட்டை ; ஸ்வெட்டர் ; ஜெர்கின் என அத்தனையையும் ஒன்றன் மேல் ஒன்றாய் மாட்டிக் கொண்டு ஹோட்டலிலிருந்து 2 மணி நேரத்துக்கொருமுறை ஏதோவொரு சதுக்கம் வரைக் கொண்டு போய் டிராப் செய்திடும் shuttle bus -ல் தொற்றிக் கொண்டேன் ! அங்கிருந்து மறுக்கா ஒரு பஸ்ஸைப் பிடித்தால் மாஸ்கோவின் மையத்துக்குப் போய் விடலாம் என்று ரிசப்ஷனில் சொல்லியிருந்தார்கள் ! அந்தச் சதுக்கமும் வந்தது ; பஸ்ஸில் நானும், இன்னொரு 3 ரஷ்யர்களுமே இருந்தோம் ; மட மடவென இறங்கியவர்கள் நொடியில் ஏதோ ஒரு திக்கில் மாயமாகிவிட்டார்கள் ! தயங்கித்தயங்கி நானும் இறங்கிட , சிலீரென்று சாத்தும் குளிர் காற்றில் கண்ணிலிருந்து தண்ணி ஓடுது தாரை தாரையாய் ! கையில் gloves ; உள்ளாற thermal vest ;  தலையில் பனிக்குல்லா என்றெல்லாம் போட்டிருந்தேன் தான் ; ஆனால்  சுழற்றியடிக்கும் அந்தக் குளிரின் முன்னே அவை பத்து காசுக்குக் கூடப் பிரயோஜனப்படவில்லை ! வெயில் தகித்தால் கூட ஒரு மாதிரியாய் சமாளித்து விடுகிறோம் - ஆனால் குளிரில் முறையான பாதுகாப்பில்லாது போனால் என்ன மாதிரியான ரண அவஸ்தைகள் பலனாகிடுகின்றன என்பதை தொடர்ந்த 10 நிமிடங்களுக்கு அனுபவித்தேன் ! சுத்தமாய் மூளை மழுங்கிப் போகிறது ; முகமெங்கும் அப்பியிருக்கும் cold cream நொடியில் உள்வாங்கப்பட்டு, சருமம் முழுக்க உலர்ந்து போய் காந்த ஆரம்பிக்கிறது ; பேண்ட் பாக்கெட்டின் அதல பாதாளத்துக்குள் கையை நுழைத்துக் கொண்டாலும் எலும்பு வரை ஊடுருவும் குளிரானது  உள்ளூர் சாவுக்குத்திலிருந்து ; அசலூர் பிரேக் டான்ஸ் வரைக்கும் ஆடச் செய்கிறது ! அந்தப் 10 நிமிடங்கள் நரகத்திலொரு ஆயுட்காலமாய்த் தொடர்ந்திட, ஒரு மாதிரியாய் வந்த பஸ்ஸில் ஏறிக்கொண்டேன் ! அது மாஸ்கோ நகரின் மையத்தினில் 25 நிமிடப்பயணத்தின் பின்னே கொண்டு போய் விட்ட போது பளீரென்று கதிரவன் வெளிப்பட்டிருந்தது கண்டு உள்ளுக்குள் தெம்பாகியிருந்தேன் ! ஆனால் திருவாளர் குளிராரும், பனியாரும் அவரவர் பணிகளைத் தொய்வின்றிச் செய்து கொண்டேயிருந்தனர் ; Mr Sun அவர்பாட்டுக்கு வெளிச்சத்தை மாத்திரமே உமிழ்ந்து கொண்டிருக்க, குளிர் கொடூரம் துளியும் மட்டுப்பட்ட பாடில்லை !! ஆனால் அந்தக் கூத்திலும் என் கண்முன்னே கொஞ்சம் தொலைவில் தென்பட்ட  காட்சியின் கம்பீரத்தை கண்டு எனக்கு மூச்சடைக்காத குறை தான் ! உலக வரலாற்றில் ஒரு அழியா இடம் பெற்ற செஞ்சதுக்கம் அந்தச் சூரிய ஒளியில் அசாத்திய கம்பீரத்துடன் நின்று கொண்டிருந்தது ! உலகின் சர்வ வல்லமை படைத்த அத்தனை தலைவர்களும் ஏதேனும் ஒரு தருணத்தில் கால்பதித்திருந்த அந்தச் சதுக்கத்தைப் பார்த்த மறுநொடியில் எனக்கு நினைவுக்கு வந்ததோ நமது CID லாரன்ஸ் & டேவிட் சாகசங்களுள் ஒன்றே !! (அது எதுவென்று guess செய்ய முடிகிறதா folks ?) ஓட்டமும், நடையாய் செஞ்சதுக்கத்தின் அருகினில் நீண்டு செல்லும் வீதிகளிலிருந்த கடைகளுக்குள் புகுந்தேன் ! நான் தேடிய அந்த polar jacket அங்கே குமித்துக் கிடந்ததைப் பார்த்த போது -  'ரைட்டு...இனி இந்த ஊரில் போனால் பணம் மட்டும் தான் போகும் ; உசிர் போகாது !' என்ற நிம்மதி பிறந்தது ! அங்கேயும் நம்ம கணக்குப் பார்க்கும் புத்தியானது  எட்டிப்பார்த்து, இதில் சல்லிசானது எதுவென்று பார்க்கும் சபலத்தை தலைகாட்டச் செய்தது ! ஆனால் 'மரண பயத்தைக் காட்டிப்புட்ட ' குளிர் பரமன் அந்தச் சபலத்தை நசுக்கி விட்டு, இருப்பதில் நல்ல கிடா மாடு மாதிரியான jacket ஐத் தேர்வு செய்யச் செய்தது ! சுத்தமாய் இரண்டரைக்கிலோ எடை இருக்கும் அந்த ஜாக்கெட் ! பில்லை போட்டு, பணத்தைக் கொடுத்த மறுகணமே அதை மாட்டிக் கொண்டு திரும்பவும் வீதியில் கால்வைத்தால் நம்பவே இயலா ஆச்சர்யமாய் - குளிரின் நடுக்கம் முற்றிலுமாய்க் காணாது போயிருந்தது ! Yes of course - மறைப்பு இல்லாத முகம் மட்டும் சென்குரங்காய்ச் சிவந்து வலித்துக் கொண்டிருந்தது ; ஆனால் உடல் முழுக்க வியாபித்துக் கிடந்த அந்த chills போயே போயிருந்தது ! 'அட...மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நிற்கிறேன் ; நாளைக்கு லாத்வியாக்காரன் வந்துட்டா, மிஷின்களை எல்லாம் பாத்துப்புடலாம் ; அப்புறம் ஊருக்கு 'ஜாலிலோ-ஜிம்கானா என்று பாடிக்கினே திரும்பிடலாம் ' என்ற நினைப்பு குளிர் ஆக்கிரமித்திருந்த இடங்கள் அனைத்தையும்  வியாபிக்கத் தொடங்கிய கணமே குஞ்சாகோபன் நாயராகிப் போனேன் ! ஒற்றை நொடியில் singgggg in the rainnnnnn என்று பாடணும் போலிருக்க, செஞ்சதுக்கத்தை புதுசாய் நடக்கப் படிக்கும் குழந்தையின் உற்சாகத்தோடு ரவுண்ட் அடித்தேன் ! ஒரு சிறு கூட்டமாய் ஜனம் நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருக்க, நம்மூர் மாதிரி இங்கே என்ன வித்தை கித்தை காட்டுறானுங்களோ ? என்றபடிக்கே எட்டிப் பார்த்தால் - ஒரு முரட்டு மலைப்பாம்பை ஒரு ரஷ்யன் வைத்துக் கொண்டிருந்தான் ! அதைத் தோளில் மாலை போல் போட்டாலும் அது பாட்டுக்கு க்வாட்டரடித்த கோவிந்தன் போல அமைதியாய் இருக்கிறது ; polaroid காமெராவில் படம்பிடித்துக் கையில் தந்து கொண்டிருந்தார்கள் ! என்னைப் பார்த்தவுடன் அந்த ஆளுக்கு குஷி கிளம்பி விட்டது ; 'India mister !! Take photo ! Take photo ' என்று கூவினான் ! நாமெல்லாம் பல்லியைப் பார்த்தாலே பட்டாளத்தைக் கூப்பிடும் சுத்தமான வீரர்கள் என்பதை அவனுக்கு எங்கே சொல்லிப் புரிய வைப்பது ? ஆளை விட்றா சாமி என்றபடிக்கே ஓட்டமெடுத்தேன் ! அந்தக் குளிரிலும் உள்ளூர் ஜனம் குட்டிப் பிள்ளைகளை stroller -ல் உருட்டிக் கொண்டே ஜாலியாய் ரொமான்ஸ் செய்து கொண்டே  காத்திருந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஷாப்பிங்கில் பிசியாக இருந்ததை பார்த்த போது உள்ளுக்குள் இனம்புரியா சந்தோஷம் குடிபுகுந்தது ! அடுத்த ஒரு மணி நேரத்தை அங்கே உற்சாகமாய்க் கழித்து விட்டு, ரூமுக்குத் திரும்ப பஸ்ஸைப் பிடித்த போது, என் முன்சீட்டில் ஹிட்லரே குந்தியிருந்தால் கூட  'சரி...சரி..இனிமே யுத்தம்லாம் பண்ணக்கூடாதென்று' சொல்லி,  முத்தம் கொடுத்து அனுப்பியிருப்பேன் - கன்னத்தில் !! ஹோட்டல் ரெஸ்டாரண்டில் தந்த வராட்டியாய் வாஞ்சையாய் விழுங்கிவிட்டு தூங்கிப் போனேன் நிம்மதியாய் !

காலையும் புலர்ந்தது ; ஐந்தரைக்கே எழுந்து குளித்துக் கிளம்பி, ஒன்பது மணிக்கெல்லாம் ரிசெப்ஷனில் கொட்டாங் கொட்டாங் எனக் காத்திருந்தேன் - எவனாச்சும் நம்ம முழியைப் பார்த்து கைகாட்டி விட்டு நெருங்கி வருகிறானா என்று ! ஊஹூம்..மணி பத்தும் ஆச்சு ; பதினொன்றும் ஆச்சு ; பன்னிரெண்டாம் ஆச்சு ! விரல் தேய போன் செய்தது தான் மிச்சம் ; ஒற்றை பதில் இல்லை ! 'ரைட்டு..குஞ்சாகோபன் நாயருக்கு கண்டம் விட்டு கண்டம் போனாலும் கூவம் தான் கதி போலும்' என்ற நினைத்துக் கொண்டேன் ! நம்பிக்கை சுத்தமாய்ச் செத்துப் போயிருந்ததொரு பிற்பகல் வேளையில், நல்ல உருளைக்கலையம் சைசுக்கு ஒரு ஆசாமி வாயெல்லாம் பல்லாய் நேராக என்னை நோக்கி வந்தான்! மாறி மாறி என்னை அம்பியாகவும், ரெமோவாகவும், அந்நியனாகவும் அவதாரெடுக்கச் செய்யும் பயபுள்ளை இது தானா ? என்றபடிக்கே கையைக் குலுக்க எழுந்தேன் ! மணி அப்போதே இரண்டரை ஆகியிருந்தது ! 'வா..வா..போகும் வழியிலேயே பேசிக்கொள்ளலாம் !' என்ற உடன் பரபரப்பாய் புறப்பட்டேன் ! பின்சீட்டில் ஒரு முனிசிபல் குப்பை லாரியில் அள்ளிடும் அளவுக்கான குப்பைகளையும், என்றைக்கோ விழுங்கியிருந்த பீட்சா டப்பாக்களையும், கோக் டின்களையும் குவித்து வைத்திருந்தான் மனுஷன் !  'நான் இன்னும் சாப்பிடலை ; போகும் வழியில் சாப்பிட்டுவிட்டுப் போவோம் !' என்றவன் நேராக ஒரு ஜப்பானிய ஹோட்டலுக்கு விட்டான் ! அதுவொரு Sushi ரெஸ்டாரண்ட் ; பச்சை மீன்கறியை ஏதேதோ வகைச் சாதங்களோடு சேர்த்து பால்கோவா போல ஜோடித்து வைத்திருப்பார்கள் ! இந்த ஆட்டத்துக்கே நான் வரலைடா சாமி ; என்றபடிக்கு ஒரு கோக்கை மட்டும் குடித்து வைக்க அவன் கட்டு கட்டென்று கட்டித் தள்ளினான் ! 'அவுக்..அவுக்..' என விழுங்கும் வாடிக்கைகளின் மத்தியில் நான் மிஷின்களைப் பற்றி பேச முனைந்தேன் ! எல்லாத்துக்குமே ஒரு மந்தகாசப் புன்னகையும், yes ..yes என்ற தலையாட்டலுமே பதிலாகிட எனக்கு ஓங்கி அறைந்து விடலாமா என்றிருந்தது ! கொஞ்சம் எரிச்சலோடு - நமக்கு வந்திட வேண்டிய மிஷின்கள் எங்குள்ளன ? அவற்றைப் போய்ப் பார்க்கலாமா ? என்று நான் குரலை உசத்திய போது தான் தீனியைக் குறைத்து விட்டுப் பேச ஆரம்பித்தான் ! அடுத்த 10 நிமிடங்களுக்கு அவன் பேசியதைக் கேட்ட போது நிஜமான நிலவரம் முழுசுமாய்ப் புரிந்தது !!

*நாம் அனுப்பியிருந்த முதல் மிஷினின் பணத்தை மட்டுமன்றி, இரண்டாவது மிஷினின் அட்வான்ஸ் தொகையையும் எதில் எதிலோ போட்டு முடக்கித் தொலைத்திருக்கிறான் ! So உடனடியாய் அவற்றை நமக்கு அனுப்பிட சாத்தியமில்லை !

*புதுசாய் நிறைய மிஷின்கள் மார்க்கெட்டுக்கு வந்துள்ளன ; அவற்றை வாங்குவதானால் போய்ப் பார்க்கலாம் !

எனக்கு இரத்தம் தலைக்கேறியிருந்தது ; அவனோ, இதெல்லாம் தினப்படிச் சமாச்சாரம் தானே - என்பது போல் ஜாலியாய்த் தின்று கொண்டேயிருந்தான் ! இவனிடம் குத்துப் பிடிப்பதில் ஆகப்போவது ஏதுமில்லை ; பணத்தை மீட்கவே வழி தேடணும் என்று தலைக்குள் ஒலிக்க, பொங்கி வந்த கோபத்தையும், அழுகையையும் அடக்கிக் கொண்டு பேச ஆரம்பித்தேன் ! 'பழசை முடிக்கும் வரைக்கும் புதுசாய் ஏதும் வாங்க கையில் தம்புடி கிடையாது ; அப்புறம் ஏற்கனவே கொடுத்த பணத்துக்கு ஈடாய் வேறு ஏதாச்சும் இல்லாங்காட்டி நான் தீர்ந்தேன் !' என்று கொட்டிதீர்த்தேன் ! அங்கிருந்தபடிக்கே அடுத்த 30 நிமிடங்களுக்கு எங்கெங்கோ போன் அடித்தான் ! மணி நாலரை ஆகியிருந்த போது ஒரு பேப்பரையும், பேனாவையும் எடுத்துக் கொண்டு என்னவோ எழுத ஆரம்பித்தான் ! அப்புறமாய் எனக்குப் புரிந்தது இதுவே : அங்கே இங்கே என விசாரித்து யாரிடமாவது நமக்கு ஆகக்கூடிய மாதிரி மிஷின்கள் ஏதேனும் சல்லிசாக உள்ளனவா ? என்று தேடியிருக்கிறான் ! இறுதியில் மோஸ்க்கோவிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலிருந்த ரோஸ்தோவ் எனும் நகரில் அத்தகைய மிஷின்கள் இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்க, அவற்றைப் பார்க்க ரயிலைப் பிடித்துப் போகலாமா ? என்று கேட்டான் ! நானிருந்த நிலைமையில் அதை மறுக்கவா முடியும் ? ஓகே என்று தலையாட்ட, நேராக அங்கிருந்து மாஸ்கோ ரயில் நிலையத்துக்குப் போனோம் - டிக்கெட் வாங்கிட ! பிரம்மாண்டமானதொரு கட்டிடத்தில், கொஞ்சமாய் ஜனமும், கணிசமான இருளும் அப்பிக் கிடக்க, 'ரொம்பவே ஜாக்கிரதையாக இரு ; வெறும் பத்து டாலரோ, ஒரு சிகரெட் டப்பியோ கிடைத்தால் கூட கழுத்தை அறுக்கத் தயங்காத மொள்ளமாறிகள் புழங்கும் இடமிது' என்று என் காதில் சொல்லி விட்டு டிக்கெட் கவுண்டருக்குப் போன போது எனக்கு கவிதை தான் தோன்றியது உள்ளுக்குள் :

ஒரு மொள்ளமாறியே ......
மொள்ளமாறிகள் உஷார் .....என்கிறது ! 
அடடே..... !!

ஆனாலும் ஓவராய்த் தான் பீலா விடுறானோ ? என்று தான் முதலில் நினைத்திருந்தேன் ! ஆனால் தோளில் பையோடும், முகரையில் அசலூரான் என்ற அடையாளத்தோடும் நின்று கொண்டிருந்த என்னைச் சுற்றி திடீரென நாலைந்து ஆட்கள் சம்பந்தமேயின்றி வலம் வந்த போது பகீரென்றிருந்தது ! இன்றைய நிலவரம் என்னவென்று தெரியாது - ஆனால் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ரஷ்யாவில் crime rate செம அதிகம்  என்பது ஒரு நெருடலான வரலாறு ! பையை இறுக்கப்பற்றிக் கொண்டே போனில் பேசுவதாய் பாவ்லா பண்ணிக்கொண்டே ஓரிடத்தில் நில்லாது, இங்கும் அங்குமாய் நடை போட்டேன் ! அதற்குள் அங்கே டிக்கெட் கவுண்டரில் நின்ற சிங்கிள் மொள்ளமாறி என்னை நோக்கிக் கையசைக்க அந்தப் பக்கம் போனேன் ! ராத்திரி 11 மணிக்குப் போகுமொரு மிதவேக ரயில் மட்டுமே உள்ளதென்றும் ; அது எனக்கு ஓகே வா ? என்றும் கேட்டான் ! தேவைப்பட்டால் கழுதையில் ஏறிக் கூட பயணம் போக சம்மதம் சொல்லியிருப்பேன் நான் அன்றைக்கு ! டிக்கெட்டை எடுப்பா என்று சொன்னேன் !  கிருஸ்துமஸ், புது வருஷப்பிறப்பு போன்ற நல்ல நாட்களுக்கு மட்டுமே சுத்தம் செய்வதை அங்குள்ள ரயில்வேயினர் பின்பற்றுவர் போலும் ; பரிதாபமாய்க் கட்சி தந்த இரவு ரயிலில் கிளம்பினோம் ! காலையில் ரோஸ்தோவ் சென்றடைந்தது ; அது வரையிலும் பகாசுரனாய்த் தூங்கிக் கிடந்த லாத்வியாக்காரனை தட்டி எழுப்பி, அங்கே ஒரு தொழில்பேட்டை போலான இடத்தின் ஒரு மாட்டுக்காடி போலான கிட்டங்கியில் 'தேமே' என்று நின்று கிடந்த சில மிஷின்களைப் பார்வையிட்டது என எல்லாமே fast forward -ல் நடந்தேறியது ! ஐஸ்வர்யா ராயை மணப்பெண்ணாய் நினைத்து ஊரிலிருந்து கிளம்பியவனுக்கு - காந்திமதியே கதி என்ற நிலைமையை ஜீரணிக்க ரொம்பவே கஷ்டமாக இருந்தது ! ஆனால் முழுசாய் காசு கோவிந்தாவா  ; அல்லது ஒரு பாதியாச்சும் தேறினால் தேவலாமா ? என்ற கேள்வி எழுந்த போது அழகு அகத்தில் இருந்தாலே பொதுங்கண்ணா ; இளமை இன்னிக்கு இருக்கும், நாளைக்குப் போய்டுமே என்று மனசு சொல்லியது ! வேண்டா வெறுப்பாய் அங்கே பார்த்ததில் 2 மிஷின்களைத் தருவிக்கச் சம்மதித்தது ; மீண்டும் ரயிலைப் பிடித்து மாஸ்கோ திரும்பியது ; அப்புறமாய்ப் பையைத் தூக்கிக் கொண்டு ஊருக்குத் திரும்பியது ; முழுசுமாய் மூழ்கிடாது, நஷ்டத்தை குறைக்கவாவது வழி பிறந்ததே என்ற நிம்மதியில் குஞ்சாகோபன் நாயர் பேப்பரிலொரு படகைச் செய்து கொண்டு சவாரி செய்தது என்று எல்லாமே நடந்தேறின ! ஒரு மாதிரியாய் ஊர் திரும்பியவனுக்கு சமநிலை திரும்பிட நிறையவே நேரம் பிடித்தது ! Thus ends the moscow பல்ப் படலம் !

எல்லாம் சரி தான் - ஆனால் இத்தினி இன்னல்களைத் தந்த ஊருக்கு ; இத்தினி பணத்தைத் தொலைத்த தேசத்துக்கே மறுக்கா போக நினைப்பானேன் ? என்று கேட்கிறீர்களா ? இந்தப் பதிவின் நேற்றைய துவக்கப்பத்தியில் எழுதியதைக் கொஞ்சமாய் நினைவுபடுத்திப் பாருங்களேன் - கோலிவுட் நம்முள் எத்தனை cliche-களை பதித்துள்ளது என்பது பற்றி ? 'தொலைத்த இடத்தில தானே தேடணும் ?' என்று எத்தனை படங்களில் கேட்டிருப்போம் ? அந்தப் பொன்மொழியைப் பின்பற்றுவதாயின் நான் தென் கொரியாவுக்கு அல்லது ரஷ்யாவுக்குத் தான் போயிட விரும்பிடணும் ! ஆனால் ரஷ்யாவின் அந்த பிரம்மாண்டம் ; அதன் வரலாற்றுச் சிறப்புகள் ; அதன் கம்பீரம் என்பனவெல்லாமே என்றேனும் ஒரு நாள் நிதானமாய் ஆராய வேண்டுமென்ற அவாவை என்னுள் விட்டுச் சென்ற பூமி ! தவிர, அந்த நாட்டினைச் சூழ்ந்து எப்போதுமே நிலவிடும் ஒரு மர்மப்போர்வை ஏதோவொரு விதத்தில் என் ஆர்வத்தைத் தூண்டி வந்துள்ளது ரொம்ப காலமாகவே ! So மொக்கையே போட்ட மண்ணே ஆயினும், அங்கே மறுக்கா செல்ல உள்ளுக்குள் ஒரு ஆசை !! தவிர எனது செஸ் பைத்திய நாட்களிலிருந்தே இந்த தேசத்தின் மீதொரு அசாத்திய மோகமுண்டு எனக்கு ! அந்நாட்களில் ரஷ்ய நாய்க்குட்டிகள் கூட செஸ்ஸில் பின்னிப் பெடல் எடுக்காத குறை தான் எனும் போது, ஆண்டாண்டு காலமாய் உலக சாம்பியன்களாய் இருந்த ரஷ்ய வீரர்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா - என்ன ? என்றேனும் ஒரு நாள் அங்குள்ள பிரசித்தி பெற்ற செஸ் அகாடெமியில் எட்டிப் பார்த்து அவர்களது பயிற்சி முறைகளை வாய் திறந்து ரசிக்க வேண்டுமென்பதும் அந்த நாட்டுக்குப் போகத்தூண்டும் இன்னொரு காரணி !

Thanks for reading through folks !! நாளை முதல் கொஞ்சமேனும் நார்மலுக்குத் திரும்பும் முயற்சிகளைத் துவக்கவுள்ள உங்கள் அனைவருக்கும் நமது wishes !! And do stay safe please !!

170 comments:

 1. Hyderabad express platform லூ ஒசேசின்தி

  ReplyDelete
 2. இளவரசி வாழ்க!
  இளவரசி வாழ்க!

  உடல் துணிமணிக்கு!
  உயிர் இளவரசிக்கு!

  ReplyDelete
  Replies
  1. இளவரசிக்குத் துணிமணி

   Delete
 3. நள்ளிரவுப் பதிவு!

  ReplyDelete
 4. எடிட்டர் சார் செம்ம பதிவு. வெடித்து சிரிக்க வைத்த இடங்கள் பலப்பல. உங்கள் எழுத்துக்கு இந்த பாண்டிய நாடே அடிமை ஐயா.

  ReplyDelete
  Replies
  1. சோழ நாட்டையும் அடிமைகள் லிஸ்டில் சேர்த்துகோங்கோ.

   Delete
  2. சேர நாட்டை மட்டும் விட்டு வைப்பானேன்???

   Delete
  3. நா பாண்டியநாட்லயும்,,,சேரநாட்லயும் வருவன்ல

   Delete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. /// ஒரு மொள்ளமாறியே ......
  மொள்ளமாறிகள் உஷார் .....என்கிறது !
  அடடே....///

  Situationallyrics.

  ReplyDelete
 7. சார் வணக்கம்🙏

  ReplyDelete
 8. சினிமாவில் மட்டுமே பார்த்திருந்த காட்சிகளை, நீங்கள் நேரில் அனுபவித்து இருக்கிறீர்கள் என்று நினைக்கும் போதே மனம் பதறுகிறது..

  அனுபவங்களே அசானாகி, உங்களை ஆசானாக செதுக்கி இருக்கிறது என்றால் மிகையாகாது..

  தங்களது அடுத்த அனுபவ பதிவுக்கு காத்திருக்கிறேன்..

  ReplyDelete
 9. படிச்சிட்டு வந்துடறேன்

  ReplyDelete
 10. நான் சர்மா ஸ்ரீலங்காவிலிருந்து
  முத்து லயனின் தீவிரவாசகன்

  ReplyDelete
  Replies
  1. வருக நண்பரே...தொடர்ந்து வாருங்கள்...:-)

   Delete
  2. வாங்க சகோதரரே

   Delete
  3. யாழ்ப்பாணம் நல்லூர் தற்போது கண்டியில்........
   காமிக்ஸ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்🙏

   Delete
 11. ஹைய்யா புதிய பதிவு.......

  ReplyDelete
 12. //ஒரேயொரு மனுஷன் மட்டும் கொஞ்சம் குட்டியாய்க் கண்ணில் பட்டார் ! வயசும் கொஞ்சம் கூடுதல் போலவே தோன்றியது ! ரைட்டு... வழியில் ஏதேனும் சிக்கல் ஆனால் கூட இந்த மனுஷனை நாம் சாத்தி விட முடியும் என்று தோன்றியதால் விறு விறுவென்று அவரது வண்டியை நோக்கி நடந்தேன்//

  ஒரு ஜாக்கி ஜான் அவதாரத்தை மிஸ் பண்ணிட்டோமே

  ReplyDelete
 13. போன பதிவில் //போங்கய்யா சாமிகளா - இதுக்கு என் மாமனார் தலை தீபாவளிக்கு வரவேற்ற லட்சணமே தேவலாம் !' என்று நினைத்துக் கொண்டே //
  இந்த பதிவில் ஐஸ்வர்யா ராயை மணப்பெண்ணாய் நினைத்து ஊரிலிருந்து கிளம்பியவனுக்கு - காந்திமதியே கதி என்ற நிலைமையை ஜீரணிக்க ரொம்பவே கஷ்டமாக இருந்தது !
  எனக்கு ஏனோ சந்தேகம் வலுத்துள்ளது. பெண் பார்க்கும் படலத்தில் கோந்து அல்வா அல்லது கெழ கெழ உப்புமா செய்து கொடுத்திறுக்கிறார்கள். ஏடி சார், பிளாக் பக்கம் உங்கள் வீட்டம்மா வராமல் பார்த்துக் கொள்ளவும். மணைமாட்சியில் பல பெரிய சைஸ் கற்களுக்கு வாய்ப்பு உள்ளது.

  ReplyDelete
 14. அடேங்கப்பா ஒரே நாளில் இரண்டு நீளமான பதிவுகள்! நன்றி விஜயன் சார்!!

  ReplyDelete
 15. இதுபோல பெரிய பதிவை சுவாரசியமாக எழுதுவது தங்களுக்கு ஆண்டவன் கொடுத்த ஸ்பெஷல் பவர் என்று நினைக்கிறேன் ஆசிரியரே

  ReplyDelete
 16. கொழ கொழ இல்லை கெழ கெழ. வயதாகிவிட்டதால் கெழ.

  ReplyDelete
 17. உங்கள் அனுபவங்களை எங்களுக்கு பகிர்ந்து வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 18. அப்பப்பா... இப்பதான் நிம்மதியாக இருக்கு.. எடி சார் வாழ்த்துக்கள் இயல்பு நிலையாய் நிலைக்க...

  ReplyDelete
 19. //போங்கய்யா சாமிகளா - இதுக்கு என் மாமனார் தலை தீபாவளிக்கு வரவேற்ற லட்சணமே தேவலாம் !'

  நீங்கள் எவ்வளவோ பரவாயில்லை ஆசிரியரே நான் பொண்ணு பாக்க போன போது கேசரி என்று எதையோ கொடுத்தார் என் மனைவி அதை சாப்பிட்ட அன்றிலிருந்து இன்றுவரை வாயை திறப்பதற்க்கு மிகவும் சிரமமாக உள்ளது நாங்கள் வெள்ளியன்று பொண்ணு பாக்க வர்றேன் என்று திங்களன்று நாங்கள் தகவல் தந்த நொடியே செய்த கேசரி என்று நினைக்கிறேன் வெள்ளியன்று அதை வாயில் வைக்கும் போது நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே அது எதிரிக்கும் வரக்கூடாது கடவுளே

  ReplyDelete
 20. ஓவரோ ஓவர் ஓவர் ஆனது வருத்தம் தான்

  ReplyDelete
 21. அப்பா...ஒரே மூச்சில் உங்கள் அனுபவத்தை படித்தாயிற்று சார்..

  திரும்ப அந்த நல்ல்ல்ல மனிதனிடம் தொடர்பில் இருத்தீர்களா என்பதையும் அறய ஆவல்..:-))))

  ReplyDelete
  Replies
  1. கேக்க நெனச்சேன்,,,மறந்துட்டேன் தலீவரே,,,
   அந்த துணிச்சல் வருமா என்ன

   Delete
 22. காமிக்ஸ் அல்லா பயணக்கட்டுரையும் இவ்வளவு சுவையாக ,ஆர்வமாக படிக்க வைக்கும் உங்கள் எழுத்துக்கள் தாங்கள் இன்னொரு லேனா தமிழ்வாணன் என்பதையும் உணர்த்தி விட்டது சார்..:-)

  ReplyDelete
 23. நாமெல்லாம் புது மாவட்டத்துக்கே போனாவே ஏதும் தெரியாம டர்ர்ர் ஆகுது..தாங்களோ மொழி தெரியா ,வழி தெரியா புது நாட்டிலியே அதுவும் அந்த வயதிலியே ..


  ம்ஹீம் சொல்ல தெரில...சூப்பர் சார் நீங்க...

  ReplyDelete
  Replies
  1. ஸ்பைடரத் தந்தவரல்லவா,,,செம சூப்பர்

   Delete
 24. Nice and funny narration!!!

  Experience is not what happens to you ; what you learn from what happened to you என்பதற்கான உதாரண பதிவு.

  Intelligent people learn from their mistakes while wise people learn from others' mistakes..

  In that perspective editor has become intelligent and by sharing this he makes us all wise..:-)

  ReplyDelete
  Replies
  1. //
   Experience is not what happens to you ; what you learn from what happened to you என்பதற்கான உதாரண பதிவு.// அழகாக சொன்னீர்கள் சார்.

   Delete
 25. எடிட்டர் சார்..
  கடந்த பதிவைப் படித்தபோது ஏற்பட்ட அதே பரபரப்பு இந்தப் பதிவைப் படிக்கும்போதும் - துளியும் தொய்வின்றி!!
  பதிவின் இறுதிப்பகுதி மட்டும் கொஞ்சம் fast forward செய்ததைப் போல இருந்தது!! 'இதற்கு மேலும் நீட்டி முழக்க வேண்டாமே' என்று நீங்கள் கருதியிருக்கக் கூடும்!

  செனாஅனா சொன்னது போல் உங்கள் அனுபவங்கள் எங்களுக்கும் ஒரு பாடமாய் அமைந்திருக்கிறது!!
  கஷ்டப்பட்டு எழுதி, கை வலிக்க டைப் செய்து உங்கள் அனுபவங்களை சுவையான முறையில் எங்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கு நன்றிகள் பல!!

  இதுபோல பயணக்கட்டுரைகள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து! வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் எழுதி எங்களை மகிழ்ச்சிபடுத்துங்கள்!!

  ReplyDelete
  Replies
  1. // இதுபோல பயணக்கட்டுரைகள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து // அதே செயலரே

   Delete
  2. வழிமொழிகிறேன்...!

   Delete
  3. நானும் பரணி

   Delete
 26. எடிட்டர் சார்,

  பதிவு முழுவதும் திக் திக் என்று படப்பப்போடு இருந்தது. ஆனால் கடைசியில் டக் என்று முடிந்துவிட்டது.
  எனக்கும் சென்ற ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யா செல்லும் வாய்ப்பு வந்தது. ஆனால் மாஸ்கோ அல்ல, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்.
  உங்களை மாதிரியே கொஞ்சம் உதறலோடுதான் அந்த ஊரை சுற்றிப்பார்க்க சென்றேன். ஆனால் என்ன ஆச்சர்யம்! உள்ளூர்க்காரர்கள் மிகவும் நட்புணர்வோடு பழகினர். தெரியாத இடத்திற்க்கு போகவேண்டி அட்ரஸ் கேட்டபோது, மிகவும் வாஞ்சையோடு உதவினர். ரஷ்யாவில் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.

  அதேபோல் அந்த ஊர் மெட்ரோ, இதுவரை நான் பார்த்த வெளிநாடுகளில் அப்படி ஒரு அழகான, சுத்தமான மெட்ரோவை பார்த்ததில்லை. மேலும் பனியில் உறைந்த கடல், ஆறுகள், எல்லாமே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

  Some of my photos of St Petersburg

  ReplyDelete
  Replies
  1. Radja Sir அருமையான பகிர்வு. ஆனால் ஃபோட்டோ பார்க்க முடியவில்லையே. 404 error என்று வருகிறது.

   Delete
  2. ஆம்...புகைப்படங்கள் எதுவும் பார்க்க முடியவில்லை ராட்ஜா தி பாஸ் சார்...:-)/:-(

   Delete
  3. @Radja

   கண்ணைப் பறிக்கும் அழகு! நதி முழுக்க பனியால் உறைந்துபோய் - யப்பா!!
   ஒரு செலுப்பி கிலுப்பி போட்டிருக்கலாமே?!!

   Delete
  4. வாவ்...சூப்பர்..

   Delete
  5. அசத்தலான புகைப்படங்கள்........

   Delete
  6. அழகான இடங்கள்...அருமை...:-)

   Delete
  7. Super!! Nice photos!! But you are not there in the photo :-)

   Delete
  8. மேலும் சில படங்களை Radja இணைத்துள்ளார். அதில் அவரும் உள்ளார். அருமையான ஃபோட்டோக்ள்.

   Delete
 27. விண்ணில் மறைந்த விமானங்கள்.

  ReplyDelete
  Replies
  1. அது மஞ்சள் பூ மர்மம் தம்பி

   Delete
  2. புலவரே : தேம்ஸ் நதியை மாஸ்கோ நகருக்கு எப்போ மாத்துனாங்க ?

   Delete
  3. சார் உலகெங்கும் பரவுமே குடிநீர்பஞ்சம்...அப்ப தேம்ஸ் நதி உலகெங்கும் ஓடி பஞ்சத்த சேக்குமே...அப்ப ரஷ்யாவுல தண்ணிய கொடுக்க தடமிலாம ...மாயதடத்ல பஞ்சத்த தருமே பாருங்க புக்ல

   Delete
 28. அனு மேடம் அந்த அப்பிராணி வேலைக்கு சென்று விட்டாரா?

  ReplyDelete
  Replies
  1. அவரும் சென்று, எனக்கும் tight work. மாலையில் வருகிறேன். Pls excuse குமார்.

   Delete
  2. அச்சச்சோ பாஸ் நீங்கள் excuse எல்லாம் கேட்க வேண்டுமா. எப்போது முடியுமோ அப்போது வாருங்கள் சகோதரி.

   Delete
 29. ரொம்ப நாள் கழித்து அலுவலகம் செல்லும் நண்பர்கள் முகமூடி மற்றும் hand sanitizer உடன் செல்லவும், யாருடனும் உணர்ச்சி வசப்பட்டு கை குலுக்க வேண்டாம், கைகளை கூப்பி வணக்கம் சொல்லுங்கள்; அதே போல் தங்கள் அலுவலகம் இருக்கும் இடம் மறந்து போய் இருக்கலாம் :-) எனவே கூகிள் மேப் உதவியுடன் அலுவலகம் செல்ல கேட்டு கொள்ளப்படுகிறார்கள் :-)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா!! நல்ல அறிவுரை PfB! :)))

   Delete
  2. எல தம்பி நீ வேலைல சேந்தாச்சா!

   Delete
  3. // அதே போல் தங்கள் அலுவலகம் இருக்கும் இடம் மறந்து போய் இருக்கலாம் :-) எனவே கூகிள் மேப் உதவியுடன் அலுவலகம் செல்ல கேட்டு கொள்ளப்படுகிறார்கள் :-) //
   பரணி கூகுள்கிட்ட கேட்டா அப்படி ஒரு இடமே இல்லைன்னு சொல்லுது, ஹி,ஹி,ஹி........

   Delete
  4. ஏலே மக்கா இன்னும் இரண்டு மாதம் வீட்டு வேலைதான் சாரி வீட்டில் இருந்துதான் ஆபீஸ் வேலைய பார்க்கனும்ல :-)

   Delete
  5. அறிவு @ பாவம் லாக்டவுனில் இருந்து கூகுள் இன்னும் வெளிவரவில்லை போல :-) அப்ப மே 13 தேதி பிறகு முயற்சி செய்யுங்கள் :-)

   Delete
 30. சார்.. புத்தகங்களை அனுப்பிவிட்டீர்களா?
  (ஹிஹி! நம்ம பங்குக்கு கொஞ்சம் பிரஷர் ஏத்தி விடுவோம்!)

  ReplyDelete
  Replies
  1. EV எதற்காக இந்த கொலை வெறி? உங்களுக்கு தான் பரிசு கிடைத்து விட்டதே?

   Delete
  2. அப்படீன்னா பரிசு கிடைக்காதங்கல்லாம் கொலை வெறியில இருந்தா தப்பில்லைன்றீங்களா KS?!! :D
   நல்லவேளையா உங்களுக்கும் பரிசு கிடைச்சுடுச்சு! இல்லேன்னா பலப்பல கொலைகளை அசால்ட்டா செஞ்சு முடிச்சு 'தமிழ்நாட்டின் டயபாலிக்'னு பேர் வாங்கியிருப்பீங்க! :)

   Delete
  3. எனக்கு தெரிந்தது எல்லாம் கொலை கொலையா முந்திரிக்கா தான் விஜய்

   Delete
  4. ////எனக்கு தெரிந்தது எல்லாம் கொலை கொலையா முந்திரிக்கா தான் விஜய்///

   விளையாட்டில் கூட 'கொலை' இருக்கணும்னு எதிர்பார்க்கறீங்க!! யய்யாடி.. என்னவொரு குரூரம்!!

   Delete
  5. ரெடின்னு பட்சி பறக்கு ஈவி

   Delete
 31. டியர் எடி அங்கே புத்தகங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனவா ஓவர் !!

  எடிட்டர்: இப்போதுதான் ஆபிஸ் மேசைகள் எல்லாம் சுத்தப் படுத்திக் கொண்டிருக்கிறோம் ஓவர் ஓவர் !!

  ReplyDelete
  Replies
  1. அவரு இன்னும் ஆபீஸ் போய் சேரவில்லை.. வழி மாறி வேற ஊருக்கு போய்விட்டாராம் :-)

   Delete
  2. அடப்பாவமே, அப்போ தன் ஆபிஸ் என்று நினைத்து வேறு யார் ஆபிஸில் குழம்பி போய் இருக்கிறாரோ தெரியலையே! :-)

   Delete
  3. வந்ரும்,,,நம்புங்க ஓவர்

   Delete
  4. ஹி ஹி நம்ப ஆசிரியராவது குழம்புவதாவது அந்த ஆபீஸில் உள்ளவர்களை நம்ப ஆசிரியர் குடலை உருவி எடுப்பதை பார்த்து அந்த ஆபீஸில் உள்ளவங்க குழம்பிப் போய் இருக்கிறார்கள் :-)

   Delete
  5. பரணி சூப்பர் சூப்பர் குடல் உருவும் படலம் :)))))))))

   Delete
 32. அங்கே எப்படி, இங்கு செம்ம டிராஃபிக். புதிய இதழ்கள் சீக்கிரமே போடுங்க.

  ReplyDelete
  Replies
  1. இங்கு டிராபிக் இல்லை... ஆமாம் நம்புங்கள்... வீட்டுக்குள் இருக்கிறோம்ல :-)

   Delete
 33. This comment has been removed by the author.

  ReplyDelete
 34. சார் அட்டபாசமான தங்கள் பதிவுகளில் டாப் இதுவேங்குதே பட்சி,,,,
  படிக்க படிக்க செந்தூரா காப்பாத்துன்னு வேண்டியது இப்பதிவில்தான்னாலுமே,
  மனசுக்குள்ள தப்பிச்சிருவீங்க எனும் எண்ணம் மேலோங்கியது,,,,ஒரே கேள்வி
  நட்டமில்லாம சமாளிச்சீங்களா?

  2000 தளர்ச்சிகளுக்கு இதுவும் காரணமா?

  ReplyDelete
  Replies
  1. அந்த செஞ்சதுக்க இதழ் மஞ்சள் பூ மர்மம் சார்

   Delete
  2. // அந்த செஞ்சதுக்க இதழ் மஞ்சள் பூ மர்மம் சார் // அருமையான பதில் ஸ்டீல்.

   Delete
  3. அருமையான தப்பான பதில் !

   Delete
  4. ///அருமையான தப்பான பதில் !///

   ஹிஹி! ஸ்டீலு - ஃபெயிலு!

   Delete
  5. விண்ணில் மறைந்த விமானங்கள்

   Delete
  6. சார் உலகெங்கும் நீர் தட்டுப்பாடு ஏற்படும்...அப்ப ரஷ்யாவ காட்டயில செஞ்சதுக்கமருகே தண்ணீருக்காக தவிப்பத பாத்த ஞாபகம்.....

   Delete
 35. சார் ஒட்டு மொத்த அஞ்சு புத்தக அட்டயும்,,,ஒரு பக்கத்தயும் அஞ்சு புக்லயும் காட்டலாமே,,,ஓவர்

  ReplyDelete
 36. // இவனிடம் குத்துப் பிடிப்பதில் ஆகப்போவது ஏதுமில்லை ; பணத்தை மீட்கவே வழி தேடணும் என்று தலைக்குள் ஒலிக்க, பொங்கி வந்த கோபத்தையும், அழுகையையும் அடக்கிக் கொண்டு பேச ஆரம்பித்தேன் ! //
  ஆனாலும் உங்கள் நிலைமை ரொம்ப கஷ்டம்தான் சார்........

  ReplyDelete
 37. // ஐஸ்வர்யா ராயை மணப்பெண்ணாய் நினைத்து ஊரிலிருந்து கிளம்பியவனுக்கு - காந்திமதியே கதி என்ற நிலைமையை ஜீரணிக்க ரொம்பவே கஷ்டமாக இருந்தது ! //
  கவுண்டமணி ஸ்ரீதேவி போட்டோவை வெச்சிகிட்டு அழகுமணியை பார்த்தா மாதிரியா சார்........

  ReplyDelete
 38. 7ஆம் தேதி முதல் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது..

  ReplyDelete
 39. I am always fan of your sense of humour sir, simply super ,

  ReplyDelete
 40. எடிட்டர் சார் ஏப்ரல் மற்றும் மே மாத புத்தகங்கள் அனைத்தும் ஒன்றாக ஒரே பெட்டியில் போட்டு அனுப்பி வைப்பீர்களா? ஐ ஆம் வெயிட்டிங், ஓவர்

  ReplyDelete
  Replies
  1. என்ன சரவணன் இப்படி பொருப்பில்லாமல் பேசுகிறீர்கள். ஒரே பெட்டியில் போட்டால் எப்படி social distancing maintain பண்ணுவது?

   Delete
  2. ஒத்தை மாசத்தை உருப்படியாய்க் கடத்தும் வழி தேடுவோம் சார் முதலில் !

   Delete
 41. Good one sir - though bit of long !

  BTW Govt is planning to open TASMAC in 3 days :-( It will result in lack of social distancing and another full lockdown soon !

  ReplyDelete
  Replies
  1. // full lockdown soon // that's what I'm waiting for

   Delete
  2. Well...the Koyambedu factor seems to be a bulldozer for now !! :-(

   Delete
 42. விஜயன் சார், சுமார் 42 நாட்களுக்கு பிறகு காமிக்ஸ் அலுவலகம் சென்ற உங்கள் அனுபவத்தை முடிந்தால் share செய்யுங்கள் :-) இதனை தள்ளிப்போடாமல் உடனே எழுதினால் நன்று :-)

  ReplyDelete
 43. @ ALL : தமிழ்நாட்டுப் பாடநூல் அச்சிடுவோர் தவிர்த்த பாக்கி அச்சகங்கள் எல்லாமே லைனா ; ஓரமா நில்லுங்க ! என்று மாவட்ட ஆட்சியர் சொல்லியிருக்கிறார் !

  நாளை மேற்கொண்டு தீர்மானித்துச் சொல்வார்களாம் ! So waitinggg !

  பைண்டிங் ஓடிக்கொண்டுள்ளது !

  ReplyDelete
  Replies
  1. ஆஹா....ஹூம்...


   இப்ப எனக்கு புடிச்ச பாட்டு இதுதான் சார்...


   காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி...

   பூத்திருந்து பூத்திருந்து...   இதற்கு மேல் செயலர் வருவார....:-(

   Delete
  2. சார்...

   /////நாளை மேற்கொண்டு தீர்மானித்துச் சொல்வார்களாம் ! So waitinggg !////

   இப்படி சொல்றீங்க..

   ////பைண்டிங் ஓடிக்கொண்டுள்ளது !/////

   இப்படியும் சொல்றீங்க!

   குழப்புதே..!!!

   இல்லே நான்தான் அக்னி வெயிலின் தாக்கத்தால் இப்படி ஆகிட்டேனா?!!

   தலீவர்வேற பாட்டுப்போடுறாரு.. அது ஏன்னு புரியல! என்னையவேற கன்ட்டினியூ பண்ணச் சொல்றாரு.. அதுவும் ஏன்னு புரியல!!

   ஒரே குழப்ப மயம்!!

   Delete
  3. அச்சகங்கள் - இயந்திரங்களுடனான தொழில் கூடங்கள் ! விதிமுறைகளுக்கு ரெம்போவே உட்பட்டவை !

   பைண்டிங் - சொற்ப இயந்திரங்களுடன் செய்திடும் குறுந்தொழில் - ரெம்போ கெடுபிடிகள் கிடையாது !

   So ஊரடங்குக் முன்னமே அச்சான 3 இதழ்களை பைண்டிங் செய்து வருகிறார்கள் ! அப்பாலிக்கா questions ?

   Delete
  4. ஆங்! இப்போ தெளிவாய்ட்டுதுங்க சார்!!

   ப்பூஊஊவ்.. ப்பூஊஊஊவ்.. க்ரா..
   நா..நான் எந்த அச்சு இயந்திரத்தைப் பார்த்தேன்.. எந்த பைன்டிங் பட்டறையைப் பார்த்தேன்.. ஏதோ உங்கள மாதிரி பெரியவங்க நாலு விசயம் சொன்னாத்தான் இதிலே இருக்கற சமாச்சாரம்லாம் தக்கணூண்டாவது புரியுது!!

   ப்பூஊஊவ்...

   Delete
  5. இதுக்கு தான் இசைத் தோழிகளைத் தேடிக்கிட்டு திரியும் நேரத்துக்கு சில பல பதுங்குகுழி அறிஞர்கள் கிட்டே தீட்சிதை பெறணும்ங்கிறது !

   Delete
  6. அந்த அறிஞர்ட்ட தீட்சிதை வாங்கறதுக்குப் பதிலா பேசாம நான் தீயிலயோ, சிதையிலயோ விழுந்து செத்திடலாம் சார்!

   Delete
  7. விஜய் @ அறிஞர் என்று வார்த்தையை கேட்டதும் நீங்கள் ரொம்ப குழம்பி போய் விட்ட மாதிரி தெரிகிறது :-)

   Delete
  8. உண்மையை சொன்னாவே இப்படித்தான் பரணி சார்..:-)

   Delete
 44. சிங்கம் ஒன்று புறப்பட்டதே .....
  இது தா எனக்கு பிடிச்ச பாட்டு இப்போதைக்கு

  ReplyDelete
 45. விஜயன் சார்,
  சுமார் 2004 யிலிருந்து 2008 வரை அதாவது XI 11- முழு தொகுப்பு வரும் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்ற கேள்வி இருந்தது. நம்பர் X 111 மாதிரி நீங்கள் அப்பொழுது ரஷ்யா-வில் சாகஸம் புரிந்து கொண்டிருந்திருக்கீர்கள் என்பது தெளிவாக தெரிந்து கொள்ள முடிந்தது.
  எனக்கென்னவோ உங்களது ஒவ்வொரு பயண அனுபவத்தையும் நம் .x11 1-வுடன் ஒப்பிடத் தோன்றியது. X 111-யில் அனைத்து பாகங்களும் ஒவ்வொன்றும் ஒரு விதம். _ கொஞ்சம் ஜெரிக்க சிரமமான பாகம் ஓநில் -சாகஸம் தான். உங்களது ரஷ்ய அனுபவத்திற்கு இந்த பாகம்தான் பொறுந் தி வருகிறது. முதல் பாகத்திற்கு இணை - லக்கி லூக் _ கை தமிழில் வெளியிட எடுத்துக் கொண்ட முயற்சி ஒத்து வருகிறது. சூப்பர்.சார்.
  >

  ReplyDelete
 46. நமக்கெல்லாம் நினைவு மறதி இப்பொழுது எல்லாம் ஜாஸ்தியோ ஜாஸ்தி..நேற்று தளத்தில் என்ன ,என்ன கமெண்ட் இட்டேன் என்பது கூட இன்று நினைவில் தங்காது. அதனாலேயே பல சமயம் வரிசையாக கடைசியில் வரும் பதிவுகளுக்கு கருத்தில் கலந்து கொள்ளும் நான் பல சமயம் நடுவில் சில நாட் களுக்கு பிறகு ஏதாவது கமெண்ட் வந்தால் கருத்து சொல்ல கூட நினைவில் இருப்பதில்லை.. இதுவே வரிசையாக தொடர்ந்து கீழ்வருமாறு கருத்துக்கள் இருப்பின் நண்பர்களின் புது கருத்துகளை படிப்பதும் ,கருத்துகளில் கலந்து கொள்ளவும் தவறுவது இல்லை .ஆனால் அதுவே மேலே ,மேலே போனால் ...ம்ஹீம். தளத்தில் தான் இப்படி எனில் வாட்ஸ் அப் குழுக்களில் கேட்கவே வேண்டாம்.நண்பர்களின் பதிவுகளோ,நானே இடும் பதிவுகளோ பதிந்தவுடன் உடனே அழித்துவிடும் பழக்கம் என்பதால் காலை என்ன பதிவிட்டேன் என்பது மாலை நேரத்திலியே மறந்து விடும் .பல சமயம் எனது பதிவுகளுக்கு பதில் கமெண்ட்களும் ,சந்தேகங்களும் நண்பர்கள் வினவினால் ஆமாம்..நான் என்ன கருத்தை பதிவிட்டேன்...மீண்டும் அனுப்புங்கள் விளக்கம் சொல்கிறேன் என்று கேட்பது வழக்கமான நடைமுறை தான் .நமது நினைவுதிறன் அப்படி ...

  இப்பொழுது இதை கூறுவதன் காரணம் தான் என்ன என்கிறீர்களா..காரணம் உண்டு..நிறைய்ய முறை காமிக்ஸ் நண்பர்களுடன் இருப்பது போல கனவு ,ஆசிரியருடன் பேசுவது போன்ற கனவு என்பது அடிக்கடி என்னுள் நிகழும் நிகழ்வே..( ஆனால் அனைவருக்கும் பொதுவான சிறுவயதில் அப்பொழுது வந்த பழைய புத்தக கடைகளில் கொட்டிக் கிடக்கும் காமிக்ஸ் ,கடைகளில் வரிசை ,வரிசையாக லயன் ,முத்து ,திகில் கட்டு கட்டாக வாங்குவது போன்ற கனவுகள் எல்லாம் இப்பொழுது வருவதில்லை .மாதந்தோறும் காமிக்ஸ் இதழ்கள் இப்பொழுது கிடைப்பதினாலோ ,பழைய புத்தக கடைகளை பார்ப்பதே அரிதாகி போனதாலோ அந்த கனவுகள் மாயமாகி இருக்கலாம்.)

  இப்படி சுவையான கனவுகள் வரும் சமயம் காலையில் நினைவு இருப்பின் நண்பர்களோடு பகிர்வது உண்டு. அன்றே அதை மறந்து போவதும் உண்டு.நேற்று பதிவிட்ட பதிவே இன்று எனக்கு தெரியாத பொழுது ...

  சில நாட்களுக்கு முன்னர் அல்ல..


  சில மாதங்களுக்கு முன்னர் அல்ல...


  சில ,சில வருடங்களுக்கு முன்னர் வந்த எனது கனவை நண்பர் ஒருவர் ( ஒருவர் என்ன ஒருவர் ...காமிக்ஸ்ற்காக இரத்தம் சிந்திய எங்கள் சேலத்து கொம்பர் தான் ) அனுப்பி இருந்தார்..நான் கூட என்னை ஒட்டி அவரே எழுதி அனுப்பி உள்ளார் போல சிரித்து கொண்டே அப்படியே நான் எழுதியது போலவே உள்ளது என்று பதில் சொன்னால் மாலை அலைபேசியில் வந்து . எழுதிய மாதிரி அல்ல..அது எழுதியதே நீதாய்யா என்று சொன்னவுடன் தான் எனக்கே தெரிந்தது. அந்த பலவருடங்களுக்கு முன் வந்த அந்த கனவை இப்பொழுதும் நினைவிலும் ,பதிவிலும் வைத்திருக்கிறார்களே என ஆச்சர்யமோ ஆச்சர்யம்...அதுவும் பல வருடங்களுக்கு முன் வந்த அந்த கனவு இந்த கொரானா காலத்திலும் ஒத்து வருகிறது. இந்த சமயத்தில் இதழ்கள் மறுபதிப்பு போல கனவும் மறுபதிப்பு ஆகலாம் போல..இந்த சமயத்திலும் ஒத்து போகும் பல வருடங்களுக்கு முன் வந்த அந்த சாதாரண சின்ன கனவை சொல்லத்தான் இவ்ளோ பெரிய்ய முன்னோட்டம்..:-)

  அந்த கனவு...  நேத்து ஒரு சூப்பரான கனவு காலையிலேயே சொல்லலாம்னு பாத்தேன்.பிஸியாயிட்டேன்..

  என்ன காரணத்தினாலோ இரு மாதங்களாக காமிக்ஸ் இதழ்கள் சந்தாவில் காணவில்லை. பதற்றமும் ,கவலையுமாகவே திரிகிறேன்.இதற்கு மேல் தாங்காது என படிக்க காமிக்ஸ் இல்லாமல் போக என்னோட டிவிஎஸ் 50 யை எடுத்துகிட்டு நேரா சிவகாசி நோக்கி செல்கிறேன் பல தடைகளை தாண்டி....நேராக ஆசிரியர் இல்லத்திற்கு செல்கிறேன் ( இல்லத்தின் முகவரி எல்லாம் எப்படி தெரிந்தது என்பது எல்லாம் கனவில் காட்டவில்லை) ஆசிரியரின் வீட்டு கதவை சார்..சார்...என கூப்பிட்டு தட்டுகிறேன் .சில நொடிகளில் ஆசிரியரும் ,ஜூ எடிட்டர்ம் அவர்களும் வெளியே வர...திகைத்து போய் என்னை பார்க்க ...சார் படிக்க இப்ப காமிக்ஸே இல்ல..ரொம்ப போரடிக்கது அதான் புக்கு வாங்கிட்டு போலாம்னு வந்தேன் என சொல்ல உள்ளே சென்ற ஆசிரியர் ..

  இந்தாங்க தலீவரே உங்களுக்கு இல்லாத புக்கா இந்த புக்கு எல்லாம் அடுத்த மாசம் தான் வெளிவருது ..இது நான் செக் பண்ண வச்சுருந்த புக்கு ..இதை எடுத்துட்டு போய் படிங்க ..ஆனா விமர்சனத்தை உடனே போட்றாதீங்க வம்பாயிரும்...என சிரித்துக் கொண்டே கைகளில் கொடுக்க . ரொம்ப ரொம்ப நன்றிங்க சார் என பெருமகிழ்ச்சியுடன் நன்றி சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் டிவிஎஸை தாரமங்கலத்துக்கு திருப்புகிறேன்😊🤷🏻‍♂

  ReplyDelete
  Replies
  1. நீங்க ஒரு தீர்க்கதரிசிங்க தலீவரே! உங்க பதுங்குகுழி பாசறையில பெருச்சாலிகளோடு கூடவே ஒரு தெய்வீக சக்தியும் நிறைஞ்சிருக்கு போல!

   ////இந்தாங்க தலீவரே உங்களுக்கு இல்லாத புக்கா இந்த புக்கு எல்லாம் அடுத்த மாசம் தான் வெளிவருது ..இது நான் செக் பண்ண வச்சுருந்த புக்கு ..இதை எடுத்துட்டு போய் படிங்க ..ஆனா விமர்சனத்தை உடனே போட்றாதீங்க வம்பாயிரும்.../////

   ஓஹோ!!

   இதெல்லாம் சரியில்லைங்க எடிட்டர் சார்! வண்டியை உருட்டிக்கிட்டு வந்து யாராவது கதவைத் தட்டினா உடனே புத்தகங்களைத் தூக்கிக் கொடுத்துடுவீங்களா?!! குறைந்தபட்சம் "இந்தாங்க தலீவரே.. இந்த இன்னொரு செட் புத்தகங்களை செயலருக்கு கொடுத்திடுங்க"ன்னாவது சொல்லியிருக்கணுமா இல்லியா?

   நீங்க இப்படி நடந்துக்குவீங்கன்னு நான் (தலீவரின்) கனவில் கூட நினைக்கலைங்க எடிட்டர் சார்!!

   Delete
  2. தலீவரே! உமக்கு ஞாபகமறதி அதிகமாயிருக்குன்னு சொல்றதெல்லாம் உண்மைதான்னு ஒத்துக்குறேன். ஆனா அதுக்காக சிவகாசிக்குபோய் ஆசிரியரிடம் பொஸ்தகம் வாங்கி வந்தது கனவுல என்கிறதெல்லாம் கொஞ்சம் ஓவர் தலீவரே! நீங்கள் சிவகாசி போனதும் நெசம். நான் உங்க வண்டி பின்னால தொத்திக்குனு வந்ததும் நெசம் தலீவரே! ஆசிரியரிடம் வாங்கிய பொஸ்தகத்தையெல்லாம் படிச்சுட்டு தாரேன்னு சொன்னீங்களே. சந்தடிசாக்குல(சந்தடிசாக்குன்னா இன்னா அர்த்தம்னு யாருக்காச்சும் தெரியுமா?) அத்த மறந்துடாதீங்க! எப்ப பொஸ்தகத்த அனுப்பிவக்கிறீங்க தலீவரே?

   Delete
  3. க்கும்...ஏடிஆர்..சார்..இப்பவும் அதே டிவிஎஸ் தான்...அதுல நிசமாவே சிவகாசி வரைக்கும் போயிட்டா ...

   அவ்ளோத்தான்...:-)

   Delete
  4. அப்ப நாம சிவகாசி போனத உண்மயிலேயே மறந்துட்டீங்களா தலீவரே!
   அப்ப எனக்கு பொஸ்தகம் கெடைக்காதா?
   வட போச்சே!!

   Delete
  5. பரணிதரன் @ உங்கள் கனவு மெய்ப்படட்டும் :-)

   Delete
 47. Rummi XIII 4 May 2020 at 20:21:00 GMT+5:30
  /// 7ஆம் தேதி முதல் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது..///

  /// Ganeshkumar 4 May at 20:43:00 GMT+5:30
  I am always fan of your sense of humour sir, simply super ,///

  ...மே 7 முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு. தமிழக அரசு அறிவிப்பு...

  கணேஷ். நீங்க சொன்னது ஆசிரியருக்கா இல்லே, ரம்மிக்கா?


  ReplyDelete
  Replies
  1. ஒரு கமெண்ட் நன்றாக இருந்தால் ரசிக்கனு அல்லது பாராட்டனும் ஆராய்ச்சி எல்லாம் பண்ண கூடாது பத்மநாபன் :-)

   Delete
  2. ஆசிரியருக்குதான் சார் Comments போட்டேன், ( டிக்கெட் கவுண்டரில் நின்ற Sungle மொள்ளமாறி கையசைக்க ) இந்த நகைச்சுவை உணர்வுக்காகவே

   Delete
 48. நண்பர்களே @ யாரெல்லாம் வேலைக்கு செல்ல ஆரம்பித்து உள்ளீர்கள் என சொல்ல முடியுமா? சும்மா தெரிந்து கொள்ளவே (ஜெனரல் knowledge காகத்தான்) :-)

  ReplyDelete
 49. ஆசிரியர் கொடுத்த இத்தாலிமொழி டெக்ஸ் புத்தகத்தைசந்தோசமாக படம் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த தலைவர் சில நாட்கள் கழித்து தனக்கு இத்தாலி மொழி தெரியும் என்பது ஞாபகம் வந்த பிறகேபடிக்க ஆரம்பித்துள்ளார். எனவே வரும்ஞாயிறு அன்று விமர்சன பதிவை எதிர் பார்க்கலாம் கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 50. இன்று யதேச்சையாக ஆன் லைனில் லக்கி லூக்கின்
  Lee Van Cleef 
  தான் அது.
  (இருவரும் இணைந்து நடித்த மற்றொரு படம்
  A Few Dollars More. )
  இவர் நடித்த அநேக.
  படங்கள் Spaghetti Western படங்களே. சரி மோரிஸ் தான் இவரை calicature செய்து தான் பணியாற்றிய The Bounty Hunter கதையில் நுழைத்தாரென்றால், அப்படியே கொஞ்சம் தாவி இத்தாலி பக்கம் சென்றால் நாம் சமீபத்தில் பார்த்த ஒரு டெக்ஸ் கதையில் (any guesses..?) கூட ஒரு வில்லன் பாத்திரத்தில் Lee Van Cleef-யை ஓவியர்
  Giovanni TICCI 
  அப்படியே வரைந்து அட்டகாசம் செய்திருப்பார். எனக்கு இதில் ஆச்சரியம் அண்ட் புரியாத விஷயமென்றால் எப்படி இரண்டு வெவ்வேறு ஓவியர்கள் ஒரு நடிகரை தன் காமிக்ஸ் கதாபாத்திரமாக நுழைந்தார்கள் என்பது தான். இப்படி இரண்டு வெவ்வேறு ஓவியர்கள் தன் காமிக்ஸ் ல் Lee Van Cleef-யை நுழைக்க காரணம் என்னவாக இருக்க முடியம் ..? Do You..?

  MH MOHIDEEN

  ReplyDelete
  Replies
  1. இன்று யதேச்சையாக ஆன் லைனில் லக்கி லூக்கின்

   Lee Van Cleef 
   தான் அது.

   (இருவரும் இணைந்து நடித்த மற்றொரு படம்
   A Few Dollars More...)
   இவர் நடித்த அநேக படங்கள் Spaghetti Western படங்களே. சரி மோரிஸ் தான் இவரை calicature செய்து தான் பணியாற்றிய The Bounty Hunter கதையில் நுழைத்தாரென்றால், அப்படியே கொஞ்சம் தாவி இத்தாலி பக்கம் சென்றால் நாம் சமீபத்தில் பார்த்த ஒரு டெக்ஸ் கதையில் (any guesses..?) கூட ஒரு வில்லன் பாத்திரத்தில் Lee Van Cleef-யை ஓவியர்

   Giovanni TICCI 
   அப்படியே வரைந்து அட்டகாசம் செய்திருப்பார். எனக்கு இதில் ஆச்சரியம் அண்ட் புரியாத விஷயமென்றால் எப்படி இரண்டு வெவ்வேறு ஓவியர்கள் ஒரு நடிகரை தன் காமிக்ஸ் கதாபாத்திரமாக நுழைந்தார்கள் என்பது தான். இப்படி இரண்டு வெவ்வேறு ஓவியர்கள் தன் காமிக்ஸ் ல் Lee Van Cleef-யை நுழைக்க காரணம் என்னவாக இருக்க முடியம் ..? Do You..?
   M H MOHIDEEN

   Delete
  2. இன்று யதேச்சையாக ஆன் லைனில் லக்கி லூக்கின்

   Lee Van Cleef 
   தான் அது.

   (இருவரும் இணைந்து நடித்த மற்றொரு படம்
   A Few Dollars More...)
   இவர் நடித்த அநேக படங்கள் Spaghetti Western படங்களே. சரி மோரிஸ் தான் இவரை calicature செய்து தான் பணியாற்றிய The Bounty Hunter கதையில் நுழைத்தாரென்றால், அப்படியே கொஞ்சம் தாவி இத்தாலி பக்கம் சென்றால் நாம் சமீபத்தில் பார்த்த ஒரு டெக்ஸ் கதையில் (any guesses..?) கூட ஒரு வில்லன் பாத்திரத்தில் Lee Van Cleef-யை ஓவியர்

   Giovanni TICCI 
   அப்படியே வரைந்து அட்டகாசம் செய்திருப்பார். எனக்கு இதில் ஆச்சரியம் அண்ட் புரியாத விஷயமென்றால் எப்படி இரண்டு வெவ்வேறு ஓவியர்கள் ஒரு நடிகரை தன் காமிக்ஸ் கதாபாத்திரமாக நுழைந்தார்கள் என்பது தான். இப்படி இரண்டு வெவ்வேறு ஓவியர்கள் தன் காமிக்ஸ் ல் Lee Van Cleef-யை நுழைக்க காரணம் என்னவாக இருக்க முடியம் ..? Do You..?

   Delete
  3. Tried several times but unable to post completely. When posting first para disappeared!!! Don't know why? Delete option is also not available. Sorry guys....

   Delete
 51. ரஷ்ய படலம் மிக சுவையாக இருந்தது.

  ReplyDelete
 52. மாஸ்கோவில் மாஸ்டர்- படலங்கள் இருண்டும் அருமை சார். படங்களில் பார்த்த மாஸ்கோவில் உங்களோடு உலா போன திருப்தி!

  மாதம் ஒன்று அல்லது இரு மாதங்களில் ஒன்று என பயணக்கட்டுரை போடுங்க சார். 2018 வேல்டுகப்ல டிவில பார்த்த நகரங்களில் டாக்ஸில சுற்றி காட்டி விட்டீங்க தங்களது செலவில்....! நன்றிகள் பல!

  வட பாரீஸ்ல ஒரு குரங்கன் போல இங்கே ஒரு ஆறரை அடி உயர குரங்கியிடம் சிக்கப்பார்த்த நழுவி வந்திருப்பீர்களோ என எதிர்பார்த்து இருந்தேன்(தோம்)....ஹி...ஹி....!!!

  ReplyDelete
 53. லயன் தீபாவளி மலர் ஓடிக்கிட்டு இருக்கு

  ReplyDelete
  Replies
  1. இது கோடைகாலம்.. கோடைமலர்கள்ல ஒரு ரவுண்ட் வாங்க!

   Delete
 54. நண்பர்களே @@@

  இந்த லாக்டவுன் நாட்களை சமாளித்து கடக்க உதவும் வலிமையான மீடியமாக நமது காமிக்ஸ்கள்& அதுசார்ந்த விசயங்கள் உள்ளன.

  நண்பர்கள் குவிந்துள்ள காமிக்ஸ் வாட்ஸ்ஆப் குரூப்புகள்ல சுவாரசியமான போட்டிகள் நடந்து வருகின்றன. அதில் ஸ்பைடர் படை என்ற குரூப்பில் சமீபத்தில் ஒரு சவாலான போட்டி நடந்தது.

  "அந்நாளைய லயன் காமிக்ஸ் டாப் ஹீரோ ஸ்பைடர்/ஆர்ச்சிக்கு "தல" டெக்ஸ் வில்லர் கடிதம் எழுதுவது.....!!!"போல போட்டியில் கலந்து கொள்ளும் ரசிகர்கள் எழுதனும் .

  கடுமையான போட்டி நிலவிய களத்தில் பைனல் வரை என் பதிவு வந்துள்ளது. முதல் இடம் பெற்றது நம்ம தம்பி ப்ளைசி பாபு! கவிதை&கேப்சன்ல கலக்கும் நம்ம மருத்துவ நண்பர் பார்த்தீபன் 2ம் இடம் பிடித்துள்ளார்.

  நானும் பாபுவும், எங்கள் இருவரது படைப்பை எப்போதும் நண்பர்களை உற்சாகப்படுத்தும் "காமிக்ஸ் எனும் கனவுலகம்" குரூப்ல , நண்பர்களது கருத்து+ விமர்சனம் கேட்கும் பொருட்டு பகிர்ந்து இருந்தோம்.

  கருத்தை சொல்வது மட்டுமல்லாது ஒரு படி முன்னே சென்று எங்கள் இருவருக்கும் 2020ஆகஸ்ட் ஈரோடு விழா சிறப்பிதழ்களை பரிசாக அளித்து நெகிழச் செய்து விட்டனர்.

  காமிக்ஸ் நேசத்தின் எல்லைகள் விரிவடைந்து கொண்டே உள்ளன. இருவரும் நெகிழ்ச்சியில் திகைத்துப் போய் உள்ளோம்.

  ReplyDelete
 55. பிளைசி பாபுவின் முதலிடம் பிடித்த கடிதம்:-_

  *நண்பனே நலமா?*_
  _*தற்போது நீ தமிழில் வருவதில்லை.*_
  _*நானோ தமிழில் வரத் தவறுவதில்லை.*_
  _*நீயோ, நானோ நமது ரசிகர்கள் பற்றி அக்கறை கொண்டதில்லை.*_
  _*நமது ரசிகர்களோ நம்மை பற்றி பேசாத நாட்களில்லை.*_
  _*நமது ரசிகர்கள் எண்ணிக்கை பற்றி நம்மை பதிப்பிப்பவர்களுக்கே கணக்கிட முடியவில்லை.*_
  _*நான் தமிழில் அறிமுகம் ஆனபோது நீ தமிழில் அரியணையே ஏறிவிட்டிருந்தாய்.*_
  _*நான் அவ்வப்போது*_
  _*தலைகாட்டியபோது*_
  _*நீ அரியணையிலேயே*_
  _*அசைக்க முடியா இடத்தை பெற்றிருந்தாய்!*_
  _*தற்போது நான் அரியணையில் இருக்கும்போது நீ என் அருகில் இல்லை.*_

  _*களத்தில் இல்லாத நபர்களை காலம் மறக்கச் செய்துவிடும்.*_
  _*ஆனால் நீ அந்த காலத்தையே மக்கள் மனதிலிருந்து மறக்கச் செய்தவன்.*_

  _*களத்தில் இறங்கி கலக்குவது ஒரு சாதனை என்றால், களத்தில் இறங்காமலேயே இவன் களத்திற்கு வந்தால் நம் கதி என்ன ஆகுமோ என மற்றவர்களை கலங்கச் செய்வது பெரிய சாதனை!*_

  _*அன்றிலிருந்து இன்றுவரை நமது ரசிகர்களுடையே ஒரு போட்டி மனப்பான்மை இருந்து வந்திருக்கலாம்.*_
  _*அந்த ஆரோக்கியமான போட்டியே நம் போன்ற நாயகர்களின் ஆணிவேர்களுக்கு பலம் சேர்ப்பவை!*_

  _*அட்டைப்படத்தில் நான் இருந்தால் இன்றைய இதழ்கள் உடனே விற்றுத் தீர்ந்து விடுகிறதாம். தனிநபர் பொருளாதாரம் ஓரளவு நன்றாய் உள்ள தற்போதைய*_ _*காலகட்டத்தில் இது சாதனை என்றால்,*_
  _*அன்றைய காலகட்டத்தில் ஆசைப்பட்டதை வாங்கி சாப்பிடாமல் அந்த குழந்தைப்பருவ சின்ன சின்ன ஆசைகளை தியாகம் செய்ய வைத்து வாசகர்களை வாங்கத்தூண்டிய உனது படம்போட்ட அட்டைப்பட இதழ்கள் அதிக அளவில் விற்றுத்தீர்ந்தது அசுர சாதனை!*_

  _*அந்த காலகட்டத்தில் எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்ள கஷ்டப்பட்டபோது, நீ எங்களையும் சேர்த்து காப்பாற்றியதை மறந்து விடுவேனா நான்?*_

  _*இன்று ஒரு மாபெரும் மாளிகை பிரம்மாண்டமாய் வீற்றிருக்கிறது. அந்த மாளிகையைக் கட்டிட நட்டு வைக்கப்பட்ட முதல் அஸ்திவாரக்கல் நீ!*_
  _*ஒரு மாபெரும் மாளிகையைக் கட்டிட தேவைப்பட்ட அஸ்திவார கற்களில் முதன்மையானவன் நீ!*_
  _*அதன்பின்பு எண்ணற்ற பளிங்கு கற்கள் சேர்ந்து மாளிகையின் உயரத்தை அதிகரித்தபோதிலும் அதன் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்த அஸ்திவாரக் கற்கள் நீ!*_

  _*மாளிகையின் உச்சியில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும் கொடி நான்!*_
  _*ஒவ்வொரு நாளும் காற்று ஓய்வெடுக்கும் தருணங்களில் அந்த கொடியானது சிரம் தாழ்ந்து தரையைப் பார்த்து அஸ்திவாரக் கற்களுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருக்கும்.*_
  _*நன்றி நண்பா!*_
  _*என்றாவது ஒருநாள்*_
  _*மீண்டும் இணைந்து*_
  _*பயணிப்போம்*_
  _*என்ற நம்பிக்கையில்!*_

  _*-இவண்*_
  _*என்றும் உனது நண்பன்*_
  _*டெக்ஸ் வில்லர்.*_

  ReplyDelete
 56. வெற்றிக்கு அருகே வந்த என்னுடைய கடிதம்:-(தோற்று போனதை எப்படிலாம் சமாளிக்க வேண்டிதாக இருக்கு...)

  அன்பு தம்பிகள் ஸ்பைடர் & ஆர்ச்சி இருவருக்கும் ஒரு மனம் திறந்த மடல்.......!!!

  வலைமன்னா ஸ்பைடர் & இரும்பு மனிதன் ஆர்ச்சி நீங்கள் இருவரும் காமிக்ஸ் உலகில் என்னுடைய தம்பிகள் என்பதை வெகு சிலரே அறிவர்.!!!

  1952ல் அவதரித்த அன்பு ஆர்ச்சி & 1965 முதலே வலைவீசும் ஸ்பைடர் உங்கள் இருவரை விட 1948லயே காமிக்ஸ் உலகில் சஞ்சரித்தவன் இந்த டெக்ஸ்!

  1984ல் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட லயன் காமிக்ஸ் முதல் இதழ் ஓரளவு வரவேற்பை பெற்று இருந்தாலும் 2வது இதழ் அதள பாதாளத்தில் விழுந்தது.

  என்ன செய்வது என புரியாமல் எடிட்டர் கையை பிசைந்து கொண்டு இருந்த போது கை கொடுத்தவன் தான் நீ ஸ்பைடர்!

  எத்தனுக்கு எத்தனாய் பாக்கெட் சைசில் ஜனித்த நீ லயன் காமிக்ஸ்க்கு புத்துயிர் புகட்டினாய்.

  பாக்கெட் சைஸ் உன்னால் புகழ்பெற்றதா? நீ பாக்கெட் சைஸால் புகழ் பெற்றாயா? என்பது இன்றளவும் பல காமிக்ஸ் பட்டி மன்றங்களுக்கு பரபரப்பான விவாதப்பொருள்!!!

  ஸ்பைடர் நீயோ எதிர் கொள்ள வேண்டி இருந்தது புகழின் உச்சியில் இருந்த இரும்புக்கையாரையும், மும்மூர்த்திகளையும்.....!!!

  துணிச்சலுன் அவர்களை எதிர் கொண்டு எதிர் நீச்சல் அடித்து தமிழ் காமிக்ஸ் உலகில் உனக்கென ஒரு இடத்தை சாஸ்வதமாக்கினாய்!

  முத்துவின் ஜாம்பவான் இரும்புக்கையார் என்றால் லயனின் அடையாளம் நீயன்றோ ஸ்பைடர்!

  எத்தனை எத்தனை ஹிட்கள் தொடர்ச்சியாக! அத்தனையும் சொல்ல ஒரு கட்டுரை போதுமா????

  லயன் அட்டைபடத்தில் நீ இருந்தால் விற்பனை இருபதாயிரம் நிச்சயமன்றோ!!!

  நீல வணணத்தில் அறிமுகமானவனே நீலவானம் இருக்கும் வரை உன் புகழ் நிலவுலகில் நிலைக்குமன்றோ!!!

  கோடைமலர், தீபாவளிமலர் என்றால் முதல்மரியாதை உனக்குத்தானே தானை தாலைவனே!!!

  தமிழ் காமிக்ஸ் உலகின் நெ.1 இதழ் லயன் சூப்பர் ஸபெசலில் இந்த டெக்ஸின் இருப்பு தேவைபடாத அளவு உன் புகழ் கொடி கட்டி பறந்ததடா தம்பி!!!

  கோடைமலர்1986, தீபாவளிமலர் 1986, கோடைமலர்1987 என லயனின் மற்ற 3 மகா பாக்கெட் இதழ்களையும் முன்னின்று வெற்றியாக்கியவன் நீயே வலைமன்னா!!!

  லயன் 50வது இதழ் ட்ராகன் நகரம் பெருவெற்றியை எனக்கு தந்தாலும் ஓரமாக ஓர் இடத்தில் நீயும் வெற்றியில் பங்கு வகித்தாயே அன்பு தம்பி!!!

  புகழின் ஏணியில் நான் ஏறத்தொடங்கிய போதிலும் மீண்டும் ஸபைடராக வந்து உனது வெற்றி இலச்சினையை உலகுக்கு உரைத்தவனடா நீ!!!

  இன்று லயன் காமிக்ஸ் எனும் தேருக்கு அச்சாக நான் இருந்தாலும் அடையாளமாக இருந்தவன் நீயல்லவா!!!

  இத்தனை ஆண்டுகள் கழிந்தபோதும் 2018 சனவரியில் ஒரே மாதத்தில் விற்றுபோய் "விசித்திர சவால்" விட்டவன் நீயடா!!!

  ஆர்ச்சி நீயோ ஆரம்பமே பிரமாண்டமானவன். 2ரூவாக்கு இதழ் விற்குமா என யோசிக்கும் வேளையில் ரூ4க்கு வந்த இரும்புமனிதனல்லவா???

  எத்தனையோ ஹீரோக்கள் லயனில் இருந்தபோதும் உன் வரவு பாலைவனச்சோலை போல இளைப்பாறும் நிழல் எப்போதும் எல்லோருக்கும்!!!

  போக்கர் விமானங்களை விடவும் நீ செய்த போக்கிரித்தனங்களை தானே ரசித்தோம் ரசிகர்களோடு ரசிகராய் நாமும்!!!

  உன் நீண்ட டெலிஸ்கோபிக் கரங்கள் கட்டிப்போட்டது பகைவரை மட்டமல்ல ரசிகர்கள் மனங்களையும் தான் !!!

  புய்பக்கூடைகளை ரசித்தகாலம் மலையேறிப்போயாச்சு! இருப்பினும், காலத்தை வென்றவர்கள் நீங்கள் இருவரும் என்பதே "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸபெசல்" உரைக்கும் பாடம்!!!

  உங்கள் இருவரோடு மீண்டும் காமிக்ஸ் கனவுலகில் துயலவிரும்பும்........,

  உங்கள் டெக்ஸ்!!!

  ReplyDelete
  Replies
  1. அந்த காலம் ஆடுதே மனக்கண்ணில்
   ஆர்ச்சியும் ஸ்பைடரும்ஆடுவரே
   நாளை விழிக்கண்ணில்

   Delete
  2. டெக்ஸ் மா துஜே சலாம். அட அட. அனு கொஞ்சம் அப்சென்ட் ஆனதில் எவளோ விஷயம் நடந்திருக்கு. கடிதம் இல்லை கவிதை.

   Delete
  3. க்ளா, பரணி, அனு@ நன்றிகள் நண்பர்களே! இன்னும் மனதிற்குள் பாராட்டிய நண்பர்களுக்கும் இருவரின் சார்பில் நன்றிகள்!

   Delete
  4. ///கடிதம் இல்லை கவிதை/// அனு @ சகோ... . கவிதை வித்தகர்கள் J ji, பார்த்தீபன், க்ளா, KOK, பாபு & கவிதைகளின் "ஊற்று கண்" எடிட்டர் சார்- இவங்களாம் கவிதை படிக்கைல வியந்து போவேன். என்னுடைய உரைநடை ரைட்டிங்ஸ்ஸை கவிதைனு ஏற்று கொண்ட உங்களுக்கு ஒரு ஸ்பெசல் தேங்ஸ்!

   Delete
  5. டெக்ஸ் அண்ணா, யாப்பு இலக்கணம் ஞாபகம் இருக்கிறதா? உரைநடையும் கவிதையே...

   Delete
  6. அடடே... அப்படியென்றால் சில பதிவுகளுக்கு முன் இங்கு நடந்த கவிதை மொழிபெயர்ப்பில் எனது கவிதை தான் முதலிடம் பெற்றிருக்கக் கூடியதென்று நினைக்கிறேன்.

   Delete
 57. அருமை நண்பர்களே....!
  நீங்க சேர்க்காத விசயம் சூப்பர்ஹீரோ ஸ்பெசல் தற்போதய வருகையின் போது கூட உடனடியா விற்றுத் தீர்ந்தது இவக வலிமையன்றோ !
  நம்ம ஆசிரியர் நெகிழ்ந்து அந்த குண்டு ஸ்பைடரின் ஐநூறு பக்கங்களயும் ,ஒரு ஆர்ச்சியும் இணைத்து பாக்கட் சைசுல கொரனா கொடை மலரயும்...
  அந்த மெபிஸ்டோவ பெரிய சைசுலயும் கோடைமலராய் விடத் தீர்மானித்திருப்பதாய் கூவி பட்சி பறப்பது உண்மைதானோ என சந்தேகிக்கத் தூண்டுதே !

  ReplyDelete
 58. ஓடிப் போன காலமோ
  கனவாக
  ஓடிவரத் துடிக்கும் இருவரோ
  நெனவாக
  ஸ்பைடரும் ஆர்ச்சியும்
  சகாப்தமாக
  விலையென்ன
  லலை மன்ன !

  ReplyDelete
 59. இன்று பதிவு கிழமை அன்றோ??????

  ReplyDelete
 60. எடிட்டரின் புதிய பதிவு எப்பவோ ரெடி நண்பர்களே! :)

  ReplyDelete