Powered By Blogger

Saturday, June 05, 2021

நீண்டிடுமா நீலம் ?

 நண்பர்களே,

வணக்கம். திங்கள் முதலாய் back to business என்றிருக்குமென்ற நம்பிக்கை லேசாக எட்டிப் பார்ப்பதால், "ஒரு மாச லீவு முடிஞ்சிடுத்து புள்ளீங்களா ; திங்கள் முதல் 50% strength-ல் வேலைகளுக்குள் ஐக்கியமாகிடப் பார்ப்போமென்று " சொல்லி வைக்கணும் நாளைக்கு ! So 'அடுத்த வருஷத்து ஆண்டுமலர்கள் ; அப்பாலிக்காவுக்கான நாயக / நாயகியர்' என்ற லாக்டௌன் அலசல்களுக்கும் டாட்டா காட்டி விட்டு யதார்த்தங்களுக்குத் திரும்பிடும் நேரமிது ! And இதோ - ஜூன் இதழ்கள் குறித்த பிரிவியூக்களில் விடுபட்டுப் போன கார்ட்டூன் இதழின் மீதான பார்வை :

"இனியெல்லாம் ரணமே" ! ஒரு மினி மீள்துவக்கத்தின் வேளையினில் இந்தத் தலைப்பு சற்றே முகாரி ராகமாய்த் தோன்றிடலாம் தான் ; ஆனால் இதன் அட்டைப்படமெல்லாம் கொஞ்ச காலம் முன்னமே அச்சானது என்பதால், லைட்டான ஜெர்க்கோடே தொடர்கிறேன் !! ப்ளூகோட் பட்டாளம் ! குள்ள வாத்துக் கார்பொரேல் + மொக்கை மூக்கு சார்ஜெண்ட் என்ற ஒரு வித்தியாசக் கூட்டணியோடு, போர்க்களத்தைப் பின்னணியாகக் கொண்டு நகன்றிடும் கதைத் தொடர் ! கடந்த ஆறேழு ஆண்டுகளாய் நம் அட்டவணைகளில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்தபடிக்கே பயணிக்கும் இந்தத் தொடர் - உலகை உலுக்கும் வெற்றிகளை நம் மத்தியினில் பார்த்திடவில்லை தான் ; அதே சமயம் 'பப்பரக்காவென' கால்களை விரித்துக் கிடந்து மண்ணைக் கவ்வவும் இல்லை தான் ! So சக நீல நிறக் காமெடி பார்ட்டிகளை விடவும் இவர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகமே என்று தான் சொல்லியாகணும் ! மூன்றோ, நான்கோ  ஆண்டுகளில் மொத்தமாய் மூட்டை கட்டப்பட்ட smurfs களின் கதி  ப்ளூகோட் அணிக்கு இல்லை தானே ?! ஆனால் இந்த லாக்டௌனின் ஏகப்பட்ட பதிவுகளின், ஏகப்பட்ட வினவல்களைக் கொண்டு பார்க்கும் போது இந்த அதிர்ஷ்டம் ரொம்ப காலம் நீடிக்குமா ? என்ற கேள்வி எழாதில்லை ! Quite frankly - "லக்கி லூக்கும், சிக் பில்லும் மட்டுமே போதும் - சிரிப்புப் பணிகளை சிறப்பாய்ச் செய்வதற்கு " என்று நீங்கள் அழுந்தச் சொன்ன பின்னே - இப்போதுக்கான இந்த வாய்ப்பே டீம் ப்ளூ கோட்டுக்கு last chance என்பதாகத் தோன்றுகிறது ! So வரவுள்ள இம்மாதத்து இதழினை நீங்கள் அலசிடவுள்ளதைப் பொறுத்தே இவர்களின் எதிர்காலம் பற்றிய தீர்மானம் இருந்திடும் ! ஏற்கனவே என் தலையிலுள்ள கேச அடர்த்திக்குப் போட்டியிட்டு வரும் கார்ட்டூன் அணியானது சீக்கிரமே தலீவரின் புஷ்டிக்கு சவால் விட நேரிட்டால் - "ஐயகோ" தான் ! So அபசகுனமாய் ஒலிக்கும் அந்தப் பெயரினை ஒரு ஸ்டிக்கர் கொண்டு  - "இனியெல்லாம் சுகமே" என்று மாற்றி விட்டு, இதழ்களை அனுப்பிய கையோடு காத்திருப்பேன் - இந்த அணிக்கு முட்டுச் சந்து treatment-ஆ ? இல்லையா ? என்று அறிந்திட !! இதோ - ஒரிஜினல் அட்டைப்படமே நமக்கும் அட்டையாகிடும் இதழின் முதற்பார்வை : 


இந்த இடைவெளிக்குப் பின்பாய் நமது முகவர்களெல்லாம் என்ன மாதிரியான ஆரோக்கியங்களில் உள்ளனர் ? என்பதை தொடரும் நாட்களில் அவதானிக்க வேண்டி வரும் ! போன வருஷத்து தடுமாற்றங்களிலிருந்து மெள்ள மெள்ளச் சுதாரித்திருந்தவர்கள் இந்த இரண்டாம் சம்மட்டி அடியை எவ்விதம் தாக்குப் பிடித்திடவுள்ளனர் ? என்ற கவலை ரொம்பவே உள்ளுக்குள் வாட்டுகிறது ! தவிர, ஒரு மாத பிரேக்குக்குப் பின்பாய் பைண்டிங் பணியாட்கள் வேலைக்குத் திரும்புவதில் எப்போதுமே ஒருவிதத் தொய்வும் இருப்பதுண்டு ! So மேற்படி 2 சிக்கல்களையும் கவனத்தில் கொண்ட பிற்பாடே ஜூன் இதழ்களாய் வரவுள்ளவை 4 இதழ்களா ? அல்லது 3 மட்டுமா ? என்று தீர்மானிக்க வேண்டி வரும் ! Phewww !

Before I sign out - சற்றே சந்தோஷச் சேதி ! ஒட்டுமொத்த ஏஜெண்ட்களின் சுக-துக்க நிலவரங்களைப் பற்றித் தெரியலை தான் ; ஆனால் நமது முகவர்களுள் மேற்கொண்டு 3 பேர் - சின்னச் சின்ன "இரத்தப் படலம்" ஆர்டர்களுக்குப் பணம் அனுப்பியுள்ளனர் ! So அவற்றையும் இணைத்துக் கொண்டு - இந்த வாரத்தினில் ஜூன் பணிகளை முடித்த கையோடு "இ.ப" அச்சுக்குத் தயாராகிட வேண்டி வரும் ஜூன் 15 to 20 வாக்கில் ! இடைப்பட்டுள்ள இந்த அவகாசத்தினில் -  "இ.ப" இதழ்களில் இருக்கக்கூடிய எழுத்துப் பிழைகளைப் பட்டியலிட இயன்ற மட்டுக்கு முயற்சித்தால் சூப்பர் guys ! ஏற்கனவே நண்பர் ATR ; அப்புறம் இன்னொரு நண்பர் அனுப்பியிருந்த திருத்தங்களைச் செய்தாச்சு தான் ; ஆனால் நூறு பேர் பார்த்தாலும், நூற்றியோறாவது ஆளுக்குமே இங்கே வேலையிராது போகாது என்பதால் - ஒரு 19 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை (!!!!) அமைத்து, அந்தப் பாவப்பட்ட XIII மனுஷனோடு, ஆளுக்கொரு பாகத்தில் பயணிக்க முயற்சியுங்களேன் guys ? Good luck & thanks in advance too !!

அப்புறம் எனக்குமே கணிசமாய் good luck அவசியப்படக்கூடும் !! திங்கட்கிழமை கடைகள் திறந்த பிற்பாடு தற்போதைய ஆர்ட்பேப்பர் விலைகளை விசாரிக்கணும் - "இ.பா'வுக்காக !!  திருமலைநாயக்கர் மஹாலின் தூண் மாதிரியான ஏதோவொரு நல்ல திடப் பொருளை இறுக்கமாய்ப் பிடித்தபடிக்கே தான் விசாரிக்க முற்படணும் ; விலைகளைக் கேட்டு கிறுகிறுக்கும் போது மொத்தென்று கீழே விழுந்து கிடக்கக் கூடாதில்லையா ?  So எனக்குமே ஒரு  லோடு luck ஆர்டர்ர்ர்ர் !!

Bye all...have a safe weekend ! And safe days ahead too ! 

And இதோ - இன்றைய மீம்ஸ் கோட்டா !! 

Dr .பார்த்தீபன். கரூர் :




நண்பர் MKS Ram : 





இது - 
நண்பர் ஈரோடு மாரிமுத்து விஷால் :


207 comments:

  1. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் திரு

    ReplyDelete
  3. மீம்ஸிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. அட்டகாசமான மீம்ஸ். அசத்துங்கள் நண்பர்களே.

    ReplyDelete
  5. உள்ளேன் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  6. நத்த பூமிக்குள்ளார காலை வைக்கலாமா...வேண்டாமா ?!

    ReplyDelete
    Replies
    1. வரவேற்கின்றேன்.

      Delete
    2. வெல்கம் மாரிமுத்து சார்🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐

      Delete
  7. ஹா ஹா ஹா!!🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 மீம்ஸ் எல்லாம் உ.பு.சி ரகம்!! 🤣🤣🤣🤣 அசத்தறீங்க நண்பர்களே!

    ReplyDelete
  8. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  9. சத்தியமா சொல்றேன் நண்பர்களே..


    அனைத்து மீம்ஸ்களையும் பார்த்து,படித்தவுடன் வாய்விட்டு சிரிக்க சிரிக்க இல்லத்தில் இருப்பவர்கள் முறைத்து ,முறைத்து பார்க்க...



    கலக்குங்க நண்பர்களே...



    சார் இனி பதிவோடு எப்பொழுதும் மீம்ஸ் ம் உண்டுதானே :-)))

    ReplyDelete
    Replies
    1. அண்ணா memes பார்த்து சிரிச்சா போதாது .. அதுல இருக்கற மாதிரி எடிட்டர் சார அசரடிச்சோ இல்ல அலறடிச்சோ சி்.சி முழு தொகுப்பு வாங்கறீங்க ..

      Delete
  10. நகைச்சுவை நாயகர்களில் ப்ளூகோட் பட்டாளம் எனக்கு எப்பொழுதும் பிடித்தமானவர்களே...

    எனவே ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்...

    ReplyDelete
    Replies
    1. எந்த Cartoon ஆக இருந்தாலும் எனது ஆதரவு உண்டு. நமது ப்ளூ கோட் பட்டாளம் இந்த முறையும் கலக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

      Delete
  11. இனி எல்லாம் சுகமே


    என்ற நம்பிக்கையோடு யார் பயணிக்கிறார்களோ இல்லையோ காமிக்ஸ் வாசகர்கள் பயணிப்பார்கள் சார்...

    ReplyDelete
  12. அடடா.. இ.ப பிழைகளை முன்னமேயே குறித்து வைத்திருக்க வேண்டும். கொஞ்ச நாளாய் கலாட்டா பீல்டில் கவனம் செலுத்த அவகாசமில்லாமலேயே போய் விட்டது.. இனி லீவ் கிடைக்கையில் செக் செய்து விட ஆவல்தான் சார். ப்ளூ கோட்ஸ்க்கு இதுவே அதிகப்படி. சிக்பில், லக்கியே எனது விருப்பம்.. விரைவில் பதிப்பகத்துறை மீண்டு வர வேண்டும். எல்லா மாந்தரும் ஆரோக்கியத்துடன் அவரவர் வாழ்வை இயல்போடு தொடர இறையருள் உதவ வேண்டும்.. நம்பிக்கையுடன் நாம்..

    ReplyDelete
    Replies
    1. இயல்பு நிலை திரும்பியே ஆகவேண்டும் சகோ... All is well என்று மீண்டும் மக்கள் வாழ்வாதாரம் திரும்பிட வேண்டும்....

      Delete
  13. இரத்தப்படலம் பதிவு செய்தவர்கள் பட்டியல் வெளியிடுங்கள் தயவு செய்து

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். ஊக்கமாக மீதப்பேர் முன்வர உதவும்.

      Delete
    2. சமீபமாக வந்துள்ளவை எல்லாமே ஏஜெண்ட்களின் புக்கிங்ஸ் மட்டுமே ! பழைய பட்டியலுக்கு அப்புறமாய் வந்துள்ள வாசக புக்கிங்ஸ் பத்தோ பன்னிரெண்டோ இருக்கும் !

      Delete
  14. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  15. பரோட்டா சூரி காமெடி பார்த்து சிரித்தேன் சிரித்தேன் சிரித்துக் கொண்டே இருந்தேன். அதே போல நமது கார்ட்டூனில் வயிறு குலுங்க சிரித்து படித்த கதை ஆகாயத்தில் அட்டகாசம்.. லக்கிலுக் கோ சிக்பில்லோ கூட அந்த அளவிற்கு நகைச்சுவை தந்ததே இல்லை.
    எனக்கு மிகவும் பிடித்த கார்ட்டூன் ஹீரோ ப்ளூ கோட் பட்டாளமே. ❤❤❤❤❤

    ReplyDelete
  16. ///So வரவுள்ள இம்மாதத்து இதழினை நீங்கள் அலசிடவுள்ளதைப் பொறுத்தே இவர்களின் எதிர்காலம் பற்றிய தீர்மானம் இருந்திடும் ! ///

    😔😞😔😞😔

    ReplyDelete
  17. எடிட்டர் சார்!
    ஏஜன்ட்களுக்கு எந்த தகவலும் தனியாகச் சொல்லப்படவில்லை.
    அண்ணாச்சிக்கேட்டா அவருக்கே விவம் தெரியலை.பலமுறை கேட்டும் அவரரால சரியா சொல்ல முடியலை.ப்புறம்.நானாக பணம் அனுப்பினேனன். இந் இடைவெளியை களையுங்கள். ஏஜன்ட்களுக்கும் பழைய முறையில் சுற்றறிக்கை வாட்சப்பில் விவரம் அனுப்பச்செய்யுங்ள்.
    மாத மாதம் எத்தனைப்புத்தகம் வருது அதுக்கு விலை எவ்வளவு என்று நான் கேட்ட பின்பே விவரம் கிடைக்கிறது. இதை மாற்றுங்கள் ....

    ReplyDelete
    Replies
    1. சரிங்க சார் ; ஆனாக்கா "நட்புக்காக " என்ற பெயரில் ஏஜெண்ட்கள் யாருமே இருந்ததா நான் கவனிக்கலியே ?

      Delete
    2. Sorry sir!..!
      நான் தேனி மாவட்டம் சின்னமனூர் ஏஜன்ட்.V M R... M.ஜெகநாதன்...சார்...!

      Delete
    3. அட டே.... நம்ம ஜெகன் சாரா... வெல்கம் சார்💐💐💐💐💐💐💐

      Delete
    4. விஜய் சார்... வணக்கம்...!

      Delete
    5. வரவேற்கின்றேன் ஜெகன் அண்ணாவை.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. சரவணன்...வணக்கம் ..!...
      வரவேற்புக்கு நன்றி!...

      Delete
    8. அதே பிரச்சினைதான் எனக்கும். என்ன நாம் வாசகராகவும் இருப்பதால் நமக்கு விவரம் தெரிகிறது..

      Delete
    9. ஆமாம்... பழனி.. எடிட்டர்ட்ட இப்பயாவது சொல்வோம்னே நான் சொன்னேன்.
      இனியாவது மாறினால் நல்லதுதான்.

      Delete
  18. ஆல் மீம்ஸ் கலக்கல்ஸ்…

    ReplyDelete
    Replies
    1. மஹி மாப்பு நமக்கும் மீம்ல இடம் கொடுத்து இருக்காங்க.... கண்ணெல்லாம் வேர்க்குது மகிழ்ச்சியில....😍😍😍


      Delete
    2. ஆனா நீரும், KOK மாமாவும் தானே மாடஸ்தியை "கையை" புடிச்சி இழுத்தீங்க...!!!!🤔🤔🤔🤔

      என்னைய கோர்த்து விட்டுருக்காங்க...???

      Delete
    3. ராஜ்கிரணுக்கு பின்னே குப்புறக்க விழுந்துருக்கறது யாரு. அது KOK தான். எங்க ரெண்டு பேருக்கு அடி விழும் போது குறுக்கே பூந்து நீயும் வாங்கறது சகஜந்தானே. அதான் உன்னையும் சேத்திட்டாங்க போல.

      Delete
    4. அட ஆமா மாப்பு!!!! கண்ணாடியை நல்லா தொடச்சி போட்டுகிட்டு பார்த்தா தான் தெரியுது.... ஆல்ரெடி KOK மாமா பின்னாடி உயுந்து கெடக்காரு...
      அப்ப சரிதான்....ஹி..ஹி...!!!


      Delete
  19. // ஜூன் இதழ்களாய் வரவுள்ளவை 4 இதழ்களா ? அல்லது 3 மட்டுமா ? என்று தீர்மானிக்க வேண்டி வரும் ! Phewww ! //

    அப்ப ஜூனில் ஜூன் உண்டு...!!!

    ReplyDelete
  20. ஒரு மாச லீவு முடிஞ்சிடுத்து புள்ளீங்களா ; // திங்கள் முதல் 50% strength-ல் வேலைகளுக்குள் ஐக்கியமாகிடப் பார்ப்போமென்று " சொல்லி வைக்கணும் நாளைக்கு //
    இப்போதைக்கு செகண்ட் ரவுண்ட் ஓவர்...ஹி,ஹி,ஹி...!!!

    ReplyDelete
  21. // ஒரு 19 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை (!!!!) அமைத்து, அந்தப் பாவப்பட்ட XIII மனுஷனோடு, ஆளுக்கொரு பாகத்தில் பயணிக்க முயற்சியுங்களேன் guys ? //
    சீக்கிரம் இந்த சீனப்பெருஞ்சுவரை கடந்துடுங்க சார்...முடியலை...!!!

    ReplyDelete
    Replies
    1. ரவி@ இந்த இக்கட்டான நேரத்தில் கிட்டத்தட்ட 350 இ.ப. புக்கிங் வந்துள்ளது.

      எடிட்டர் சாரின் கையை பலப்படுத்தும் முயற்சியாகவே இதை பார்க்கலாம்... ப்ளீஸ்...🙏🙏🙏🙏🙏

      தல டெக்ஸ் வில்லரால் கூட இந்த சமயத்தில் இத்தனை உபகாரமாக இருக்கு இயலாது.

      எடிட்டர் சாருக்கு உபயோகமாக இருக்கும் ஒவ்வொரு புத்தகமும் வரட்டும்.

      நமக்கு பிடிக்கலனா அதை கடந்து செல்வோம். அதை பரிகசிக்க வேணாம்.
      அதை கொண்டாட நம்ம அன்பர்கள் குழுமம் ஆவலுடன் காத்துள்ளது.
      அவர்களது ரசனையை மதிப்போம்.

      Delete
    2. ஹா,ஹா,ஹா...
      இதில் எங்கே பரிகாசம் உள்ளது டெ.வி...
      எனது இந்த கருத்து சாதாரணமான கருத்து மட்டுமே...
      ஆசிரியருக்கு இந்த நேரத்தில் இப்பணி பயனளிக்கும் என்பதை பெரும்பாலானோர் அறிவர்,அதில் யாமும் உண்டு,இது மிக மகிழ்ச்சியான விஷயமே...
      அதே நேரத்தில் எனது கருத்திலும் மாற்றமில்லை,ஆசிரியர் இதை சரியாகவே புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்...
      ஒரு சாதாரண கருத்தை பரிகாசம் என்று மடைமாற்றம் செய்ய வேண்டாமே...!!!

      Delete
    3. இரசிப்பது அதை கொண்டாடுவது அவரவர்களுடைய சொந்த விருப்பம் தான்,இதை நாம் பரிகாசம் செய்ய என்ன உள்ளது...!!!

      Delete
    4. ரவி@ மடைமாற்றமா??? நானா?? ஹா..ஹா... வாய்ப்பு இருக்கா என்ன...!!

      நம்ம பக்கம் மடை மாறாமல் இருந்தா போதாதா??

      "முடியலை"--- என்பதில் உள்ள ஆயாசம் நாம எல்லோரும் ஃபீல் பண்ணுவதே... எடிட்டர் சாருக்கும் சமயத்தில் இந்த ஆயாசம் வரும்தான், இந்த விவகாரத்தில்...

      Delete
  22. Dear Vijayan sir and office team @ Happy to hear that we are back to business. Good luck and be safe.

    ReplyDelete
  23. // ஒரு 19 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை (!!!!) அமைத்து, அந்தப் பாவப்பட்ட XIII மனுஷனோடு, ஆளுக்கொரு பாகத்தில் பயணிக்க முயற்சியுங்களேன் guys ? //

    முதல் பாகம் மட்டும் நான் பிழை திருத்தம் செய்ய தயார்.

    ReplyDelete
  24. பதிவில் முதலில் மீம்ஸைத்தான் இப்பலாம் பார்க்க கண்கள் தேடுது....
    கலக்குறீங்க நண்பர்களே...
    வாழ்த்துகள்& பாராட்டுகள்👌👌👌👌🌹🌹🌹🌹🌹

    ReplyDelete
  25. மாதம் ஒரு கார்டூன்.
    மாதம் ஒரு டெக்ஸ்.
    மாதம் ஒரு கிராபிக் நாவல்.

    இதனுடன் சந்தா A வில் Action, Adventure, Crime, Thriller, Horror, Detective, Fantasy என்று கலவையாக கலந்து கொடுக்கலாம்.

    + ஜம்போ தனித்தடம்

    இதுவே என் கனவு சந்தா. மாத மாதம் வித விதமான கதைகள். நம் விரிவான ரசனைக்கு சரியான தீனியாக இருக்கும்.

    Cartoon - Most wanted

    ReplyDelete
    Replies
    1. எனது கனவு சந்தாவும் இதுவே. மாதம் ஒரு டெக்ஸ் தவிர்த்து.

      Delete
    2. இப்படி தாங்க திரு இருந்துச்சு. ஆனா வரவேற்பு நெம்ப குறைவாயிருந்ததால் கார்ட்டூன் குறைஞ்சிடுச்சு.

      Delete
    3. எப்பவும் விற்பனைக்கு வாய்ப்பு வேகம்...அதிரடிகளே...டெக்சின் வெற்றிக்கு காரணம் இதுவே...மேலும் விற்பனைப் புள்ளி விவரங்கள் சொல்வத கணக்கில் கொண்டு ஆசிரியர் டைட்டாக முடிவெடுக்கனும்...கடக்க உள்ள இந்த நிச்சயமற்ற இரண்டு வருடங்களுக்காவது....நீங்க சொல்ற கார்ட்டூன்...டிடெக்டிவ் ...இது போல் வரிசைகள் ஒருத்தருக்கு பிடிக்கலாம் இன்னொருவருக்கு பிடிக்காம போகலாம்...ஆனா அதிரடி விறுவிறுப்ப பிடிக்காத ஆளுக ஆயிரத்தில் இருவரா இருக்கலாம்...இரத்தப்படலம் அந்த நம்பிக்கை தருது...இனி வரும் காலம் இயல்பு நிலைக்கு மீளும் வரை தயவு தாட்சன்யமில்லாம அதிகபட்ச கேரண்டி உள்ள கதைகளுக்கே முன்னுரிமை தரனும்.

      Delete
  26. லக்கி, ஹெர்லாக்கை அடுத்து என் வரிசையில் வருவது புளூகோட் பட்டாளத்தினர் தான், தொடர்ந்து வரட்டும் சார், ஏற்கனவே கார்ட்டூன் வறட்சி இதுல ஒன்னொன்னா குறைச்சுகிட்டே வந்தால் கடைசியில் ஒன்றுமே இருக்காது சார்.

    ReplyDelete
  27. Memes ஆரம்பித்தது ஒரு மாஸ்டர் stroke.
    நண்பர்கள் நகைச்சுவை வெளிப்பாடு பட்டையை கிளப்புகிறது.

    2027 ரத்தப்படலம் குண்டு புக் கேட்பது மரண மாஸ்

    ReplyDelete
  28. மிக்க நன்றி நண்பர்களே

    ReplyDelete
  29. Lady S

    1,2.விடை கொடு ஷானியா!
    3.சுடும் பனி!
    4. பூமிக்கொரு போலீஸ்காரன்!

    வெகு நாட்களுக்குப் பிறகு நான்கு பாகக் கதைகளையும் ஒரே மூச்சில் படிக்க வைத்த அற்புதமான ஆக்ஷன் தொடர்!

    முதல் முறையாக லார்கோ வின்ச் படிக்கும் போது இருந்த அதே விருவிருப்பு ; அதே பரபரப்பு ; ஓவியங்கள் கண்களை விட்டு அகலவே இல்லை ; கதைகளிலும் சுவாரஸ்யத்துக்கு குறைவேயில்லை!

    2021ல் Lady S கதை ஏதும் வருகிறதா?

    ReplyDelete
    Replies
    1. நன்றி!

      அவருடைய slot யாருக்கு வழங்கப்பட்டது என்று தெரியுமா நண்பரே?!

      Delete
    2. கிட்டங்கியின் காவலருக்கு நண்பரே !

      ஒவ்வொரு டைட்டிலிலும் 500-கும் குறையாத கையிருப்பு இருக்கும் போது காவலுக்கு ஆள் அவசியம் தானே ?

      Delete
    3. மிகவும் வருத்தமான செய்தி தான் சார்!

      இவ்வளவு சூப்பரான கதைகள் கூட விற்பனையில் தேக்கம் காணும்போது நாம் செய்வதறியாது திகைக்க தான் முடியும்!

      Delete
    4. சார் ...சகலத்துக்கும் சிகரம் Smurfs நம்மிடையே கண்ட நிராகரிப்பே !

      உலகின் கிட்டத்தட்ட 40 நாடுகளில் கொண்டாடப்படும் நீலப் பொடியர்களின் பாச்சா இங்கே இம்மி கூடப் பலிக்கவில்லையே ! பெர்சனலாக என்னை ரொம்பவே பாதித்த தோல்வி அது !

      Delete
    5. நாலாவது முறையாக வெளியாகவுள்ள சமாச்சாரத்தை மூணாயிரம் தந்து வாங்க ஆள் உள்ள நிலையில் , அறுபது ரூபாய் smurfs புக்கை 40% டிஸ்கவுண்ட் கழித்து 36 ரூபாய்க்கு வாங்கக் கூட nobody around !

      Facts of life !

      Delete
    6. உண்மைதான் சார்! வாசகர்களாகிய நாங்கள் எங்கேயோ சில விஷயங்களைத் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம்!
      அது எங்கே என்று தான் புரியவில்லை!

      ஒரு வாசகருக்கு புரிந்த விஷயம், இன்னொரு வாசகருக்கு முரணாகத் தெரிகிறது ; ஒருவருக்கு சரியாகத் தெரிந்த விஷயம் இன்னொருவருக்கு தவறாகத் தெரிகிறது! இவை எல்லாமே சேர்ந்து விற்பனையில் பிரதிபலிக்கிறது!

      எடிட்டர் ஆகிய நீங்கள் தேடலில் ; புதிய கதைக்களங்களில் எந்த குறையும் வைக்கவில்லை என்பது அப்பட்டமான உண்மை, அப்படியிருந்தும் விற்பனை கை கொடுக்காமல் இருப்பது புரியாத புதிர்தான்!

      நிச்சயம் காலம் மாறும் ; உங்கள் அருமையும் விரைவில் புரியும் !

      Delete
    7. //கிட்டங்கியின் காவலருக்கு நண்பரே !

      ஒவ்வொரு டைட்டிலிலும் 500-கும் குறையாத கையிருப்பு இருக்கும் போது காவலுக்கு ஆள் அவசியம் தானே ?//

      இந்த மாதிரி timing எல்லாம் extreme sir. மாதம் ஒரு கார்டூனை ரொம்பவே miss பண்றோம். அதுவும் மதியில்லா மந்திரியை தாங்கள் மொழி பெயர்த்த விதம், அடேங்கப்பா. நன்றிகள் பல.

      Delete
    8. விடை கொடு ஷானியா நல்ல விமர்சனங்களையே பெற்றது அதற்கு பிறகு வந்த பூமிக்கொரு போலீஸ்காரன்.சுடும் பனி இரண்டும் சறுக்கியதால் Lady s க்கு ஓய்வு தரப்பட்டு விட்டது

      Delete
    9. என் அருமை பெருமையெல்லாம் புரிவதோ, புரியாது போவதோ ஒரு விஷயமே ஆகாது சார் ; நான் சற்றே glorified ஆனதொரு போஸ்ட்மேன் மட்டும் தானே !

      வியர்வை சிந்தி உருவாக்கப்படும் தரமான ஆக்கங்களின் அருமைகள் ஆராதிக்கப்பட்டால் போதுமே !!

      Delete
    10. மதியில்லா மந்திரியாருமே எனது பெர்சனல் favorite சார் ! அதனில் பணியாற்றுவது ரொம்பவே செமத்தியான அனுபவம் !

      சித்திரங்களும் சரி , மந்திரியாரின் முக பாவனைகளும் சரி , ஒரிஜினலின் வார்த்தை விளையாட்டுக்களும் சரி, கதாசிரியர் + ஓவியர் கூட்டணியின் ஜாலங்கள் ! அவற்றை இயன்றமட்டுக்கு சேதமின்றி தமிழுக்குக் கொண்டு வருவது பெண்டு நிமிர்த்தும் பணி ; ஆனால் ஒரு மாதிரியாய் பொருத்தமாய் வார்த்தைகளை போட நமக்கு சாத்தியப்பட்டால் - செம திருப்தி தந்திடவல்லது ! Pity that we no longer fancy Manthiri !

      Delete
    11. ஹஹஹஹ...காவலுக்கு என்பது வலிதான் சார்...ஆனா பல கதைகள் ஓய்வில் படித்தா படு அட்டகாசமா தெரியுது...அன்று சிறு வயதில் நேரம் பிரச்சனையே இல்லை...இன்று அப்படி இல்லயே...பாய்கிற பாய்ச்சல்ல வேகமான கதைகள் படிக்கவும் நேரமில்லை...ஆதலால் விற்பனைய கணக்கில் கொண்டே முடிவெடுங்க...குடோன் காவலர்கள் மெல்ல மெல்ல காலியானதும் ரசனைகள கொண்டு வருவோம்...ரசன அது இதுன்னு பாஞ்ச கமல் கீழ...அதிக ரசிகர்களின் எதிர் பார்ப்ப பூர்த்தி செஞ்ச ரஜினி மேல...இதான் நிதர்சனம் சார்...இப்ப ஒவ்வொருவர் செலவும் யோசித்தே இருக்கும்

      Delete
  30. நீண்டிடவேண்டும் நீலம் .!!!!

    ReplyDelete
  31. Thirunavukkarasu Vazzukkupparai5 June 2021 at 19:12:00 GMT+5:30

    //
    விடை கொடு ஷானியா

    Lady s ன் இந்த கதையில் multilayered screen play முறை கையாளப்பட்டிருக்கும். பிரமாதமாக கதையமைப்பு. ஒரு அட்டகாசமான வாசிப்புக்கு உத்திரவாதம். சித்திரம் மற்றும் கலரிங் வேற லெவலில் இருக்கும். "சுடும் பனி" கதையும் சற்றும் சளைத்ததள்ள.

    ஒருமுறை படித்து பிடிக்காதவர்கள், மீள் வாசிப்பில் இக்கதைகளை தேர்ந்தெடுத்தால் நிச்சயம் கவராமல் போகாது. இந்த மாதிரி தரமான கதைகள் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

    நமது அணியில் மகளிர்க்கு இடம் வேண்டும் என்று நினைத்தால் lady S தான் அல்டிமேட் சாய்ஸ் ஆக இருக்க வேண்டும். நல்ல கதைகள் ஜெயிக்க வேண்டும்.

    கண்டிப்பாக கண்முன்னே தெரியும் நிஜத்தை ரொம்ப நாள் மூடி மறைக்க முடியாது. தரம் தான் நிரந்தரம்.
    # Come back lady S #
    //

    ReplyDelete
    Replies
    1. நீங்க 2 வருஷம் லேட் சார் ; தொண்டை வற்றக் கூவியாச்சு - ஸெல்ப் எடுக்கவே இல்லை ஷானியாவுக்கு !

      #Rest up Sania#

      Delete
    2. படம் நல்லா இருக்கு, ஆனா collection இல்லை. இது போன்ற சிறு சிறு விமர்சனங்கள் விற்பனைக்கு உதவினால் மகிழ்ச்சியே சார்.

      Delete
    3. +1 ;@after madesti lady s is best female lead

      Delete
    4. நிச்சயமா மறுவாசிப்பில் எந்தக் கதையும் ஈர்க்காம போனதில்லை என்னளவில்...நேரம்தா எல்லாமே

      Delete
  32. ஒரு 19 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை (!!!!) //

    பாகம் 2,3 ஐ நான் முடித்துத்தருகிறேன் ஆசானே...

    ReplyDelete
    Replies
    1. தயாராக உள்ளது நாளை மெயில் அனுப்புகிறேன் ஆசானே...

      Delete
  33. இரத்தப்படல மீம்ஸ் அட்டகாசம் எனக்கு இப்பவே தெரியுதே...

    ReplyDelete
  34. கார்ட்டூன் என்றால் மெயின் வேலையே சிரிக்க செய்ய வேண்டும் மனம் விட்டு. அதில்லாமல் சுரத்தே இல்லாமல் படித்தோம் புத்தகத்தை rack இல் அடுக்கி வைத்தோம் என்று நிகழ்வது வீணே.

    ReplyDelete
  35. ப்ளூகோட் நீண்ட நாட்களுக்கு பிறகு. மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தவர்கள். நம்ப ஊரு கவுண்டமணி செந்தில் ஜோடி போல் சீரியஸான ஒரு கதை கருவை வைத்து கொண்டு நகைச்சுவையில் அதகளம் செய்பவர்கள். சார்ர்ர்ர்ஜ் :-)

    ReplyDelete
  36. ப்ளுகோட் பட்டாளத்துக்கு இன்னும் நிறையவே வாய்ப்புகள் தரலாம் சார். அடுத்த தலைமுறை வாசகர்களை கவர்வது லக்கி (especially Jolly Jumper), கிட் ஆர்டின் அடுத்து இரு நீலங்களே ( Both smurfs and Blue coat).
    வீட்டில் இருக்கும் சுட்டிகளுக்காகவும் கொஞ்சம் ஸ்லாட்டை ஒதுக்குங்கள் ப்ளீஸ்...

    ReplyDelete
  37. ///ஒரு 19 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை (!!!!) ////

    ----பாகம் 4&5 நான் பார்த்து தருகிறேன் சார்.

    ReplyDelete
  38. பழனிவேல்@ "இரத்தப்படலம் பிழைதிருத்தம்2021 "-னு ஒரு வாட்ஸ்ஆப் குரூப் கிரியேட் பண்ணி இங்கே லிங் போடுங்க... பிழை திருத்தி தர முன்வரும் நண்பர்கள் இணையட்டும்..

    பிறகு பாகம் பாகமாக ஒதுக்கீடு செய்து சேர்ந்து பண்ணிடலாம்...!!!

    ReplyDelete
    Replies
    1. அப்படியே செய்யலாம் நண்பர்களே...

      Delete
    2. XIII பிழைத்திருத்த வரும் நண்பர்கள் 9789214198 எனது வாட்ஸ் ஆப் நம்பருக்கு ஒரு ஹாய் ப்ளீஸ்...

      Delete
    3. https://chat.whatsapp.com/KkMZIpuqtaKJmy4yPTT2lX.

      Delete
  39. ஹாஹாஹாஹா

    பெஸ்ட் meme ரஜினி - xiii மறு பதிப்பு meme தான்.....

    ReplyDelete
  40. Lady S slot yarukku kodukapattathu?
    >>கிட்டங்கியின் காவலருக்கு நண்பரே !

    >>ஒவ்வொரு டைட்டிலிலும் 500-கும் குறையாத கையிருப்பு இருக்கும் போது காவலுக்கு ஆள் அவசியம் தானே ?

    second best meme ithu

    ReplyDelete
  41. இக்கருத்தினை சொல்வதற்கு மன்னிக்கவும்,

    ஒரு சில நல்ல தொடர்கள் ( ஸ்மர்ப், கமான்சே போல) வெற்றியடையாமல் போகக் காரணம் சில நண்பர்கள் அவர்கள் ரசனைக்கு ஒத்து வரவில்லை என்பதால் கடுமையாக பொது வெளியில் விமர்சனம் செய்வதே, இதனால் கதையே படிக்காமல் சிலர் நிராகரித்து விடுகின்றனர்.

    என்னைப் பொறுத்தவரை எனக்கு தேவையான கதைகளை கேட்கிறேன்,பாராட்டுகிறேன், எனது ரசனைக்கு பிடிக்காத கதைகள் பிறருக்கு பிடிக்கலாம் என்பதால் கடுமையாக விமர்ப்பதோ, கிண்டல் செய்வதோ இல்லை.

    ReplyDelete
    Replies
    1. அதுவே சரியானதும் கூட சகோ. புத்தக விற்பனை குழுக்களில் ஸ்டாக்கில் உள்ள சில கதைகளை விற்பனை போடுகின்றனர்... ஒருமுறை அது சூப்பர்வண்ண மறுபதிப்பு என்று நான் சொல்லவும் உடனே ஜானியின். அந்த தலைமுறை எதிரி sold ஆகிவிட்டது... நண்பர்கள் விமர்சனம் செய்யலாம் தான். அதில் தவறில்லை, அச்சாகிய பிரதிகளை யாரும் வாங்கிட கூடாதவாறு விமர்சனம் செய்வது அது விற்பனையை பாதிக்கும் என்ற உணர்வோடு இடம், பொருள், ஏவல் முறையில் private ஆக மட்டும் விமர்சனம் செய்யலாம்...

      Delete
    2. உண்மைதான் கணேஷ் குமார் ஜி விற்பனையை பாதிக்காமல் விமர்சனம் செய்தால் நலம்

      Delete
    3. நிறைய நேரங்களில் இது ஆகச் சின்ன வட்டமென்பதை நண்பர்கள் மறந்து விடுகின்றனர் ! ஒரு சமுத்திரத்தில் ஒரு பாட்டில் நீலத்தைக் கரைத்தாலுமே எதுவும் தோணாது ; ஆனால் ஒரு கோப்பை அளவு தான் நமது ஆடுகளமே எனும் போது, இங்கு சிந்திடும் ஒற்றைச் சொட்டு நீலத்துக்குக் கூட வீரியம் அதிகம் !

      And ஒரு படைப்பை விமர்சிக்கும் முனைப்பினை விட, என் மூக்கில் குத்தவொரு வாய்ப்பாய் சிலருக்கு தோன்றுவதுமே நடைமுறை ! Phew !!

      Delete
    4. ////ஒரு சில நல்ல தொடர்கள் ( ஸ்மர்ப், கமான்சே போல) வெற்றியடையாமல் போகக் காரணம் சில நண்பர்கள் அவர்கள் ரசனைக்கு ஒத்து வரவில்லை என்பதால் கடுமையாக பொது வெளியில் விமர்சனம் செய்வதே, இதனால் கதையே படிக்காமல் சிலர் நிராகரித்து விடுகின்றனர்.///

      +1


      ////என்னைப் பொறுத்தவரை எனக்கு தேவையான கதைகளை கேட்கிறேன்,பாராட்டுகிறேன், எனது ரசனைக்கு பிடிக்காத கதைகள் பிறருக்கு பிடிக்கலாம் என்பதால் கடுமையாக விமர்ப்பதோ, கிண்டல் செய்வதோ இல்லை.///

      அருமை!

      Delete
    5. உண்மை...பிடிக்கலன்னா அத ஆசிரியருக்கு தனியா மெயில் பன்னலாம்...பிடிச்சா இங்க விமர்சிக்கலாம்...

      Delete
  42. இனியெல்லாம் ரணமே மட்டுமல்லாது, மேலும் பல இதழ்களிலும் ப்ளூகோட்கள் தலைகாட்டட்டும். நல்ல கதைத்தொடர் அது!

    ஒரே ஒரு வேண்டுகோள்: இந்த மாத கதையின் பெயரான "இனியெல்லாம் ரணமே" ஏதோ கட்சிக் கொடியின் பெயர் போன்ற வண்ணத்தில் உள்ளது. மாற்ற இயலுமா?

    ReplyDelete
    Replies
    1. கழுகின் கண்களய்யா உமக்கு....

      Delete
    2. சாரே....அது UNION JACK கொடியின் வர்ணங்கள் - சிகப்பு + அடர் நீலம் ! ப்ளூகோட் பட்டாளம் யுத்தமிடுவதே அந்தக் கொடியினை பறக்கச் செய்யவே !

      Delete
    3. ஆமாம் சார். பார்க்கும் பார்வையில் தான் அந்த கொடி பூபதிக்கு கட்சி கொடியாக தோன்றியுள்ளது, போலும்... ஆனால் ஒரு விஷயம் இதில் தெளிவாகிறது... இவர் உற்று பார்க்கும் ஒரு பயங்கர proof reader, இவருக்கும் இரண்டு இரத்தப்படலம் 2 பாகங்கள் proofing assign பண்ணிடுங்க சார். என்ன பூபதி, okay தானே

      Delete
  43. மீம்ஸ்களின் தரம் கூடிக்கொண்டே போகிறது. பார்த்திபன் சகோவும், MKS ராமும் பட்டையை கிளப்புகின்றனர்... வாரந்தோறும் மீம்ஸ் வந்தால் கூட நன்று தான்

    ReplyDelete
  44. ப்ளூகோட் பட்டாளம் ! ஏமாற்றிடாத தரமான கார்ட்டூன் தொடர்... அவை விற்பனையில் மோசமில்லை தானே, சார்.

    ReplyDelete
    Replies
    1. வெளிப்படையாக சொல்கிறேன் சகோ.. என்னிடம் புத்தகம் வாங்கும் நண்பர்கள்.. லக்கி சிக்பில் என்றால் கண்ணை மூடிக்கொண்டு வாங்குகிறார்கள் ஆனால் மற்ற கார்ட்டூன் கதைகளின் பாடு சற்று சிரமமே.. தரத்தில் நன்றாக இருந்தாலும் ஏதோ ஒன்று குறைவாக படுகிறது நண்பர்களுக்கு...

      Delete
    2. இதுவே விற்பனை முனையின் யதார்த்தம் ! Sad...but true !

      Delete
    3. ////லக்கி சிக்பில் என்றால் கண்ணை மூடிக்கொண்டு வாங்குகிறார்கள் ஆனால் மற்ற கார்ட்டூன் கதைகளின் பாடு சற்று சிரமமே..///

      ---ஹூம்... கார்டூன் என்றாலே இவர்கள் இருவரும் என்ற நிலை கவலை கொள்ள செய்கிறது...!!

      Delete
    4. ஆமாம் நண்பரே.. ஜில் ஜோர்டன் க்ளிப்டன் மதிமந்திரிகூட தடுமாறுகிறார்..

      Delete
    5. So sad... நல்ல ப்ளூகோட் கதைகள் ஏன் take off ஆகவில்லை..? பிறகு கிளிப்டன், மதிமந்திரி கூட சாதிக்கவில்லையானால் ஏதோ தவறு இருப்பது போல தெரிகிறது சார். பிறகு ஜில் ஜோர்டான் கதைகளும் எனக்கு பிடித்தமானவைவே...

      Delete
    6. சிம்பிள் ! உருண்டு புரண்டு சிரிக்கச் செய்யும் லக்கி லூக்கின் சூப்பர் ஹிட் கதைகளோடும், சிக் பில் அணியின் ஜாலியான சாகசங்களோடுமே ஒரு 25 ஆண்டுகளைக் கடந்திருக்கிறோம் ! So புதிதாய் முன்னிறுத்தப்படும் ஒவ்வொரு சிரிப்புப் பார்ட்டிக்குமே நம்மவர்களின் மனங்கள் நிறுவிடும் அளவுகோல்கள் செம உசரமானவை ! அவற்றில் புதியவர்கள் தடுக்கிடும் முதல் தருணத்தில், "you are unselected !!" என்று endcard போட்டு விடுகிறோம் !

      Delete
    7. மெய் தான்... புதியவர்களுக்கு கூடுதல் விளம்பரம் தேவைப்படலாமில்லையா, சார்?

      Delete
    8. நல்லதொரு விளக்கம் எடிட்டர் சார்!

      Delete
  45. கமான்சே , ஷானியா . ஸ்மர்ப் , பென்னி , ஜெராமியா போன்ற கதைகளின் ரசிகன் நான்.இத் தொடர்கள் விற்பனையில் சோபிக்காததால் நிறுத்தப்பட்டன.என்றாவது வெளிவரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.பார்ப்போம். நம்பிக்கை தானே வாழ்க்கை.

    ReplyDelete
    Replies
    1. கமான்சே நண்பர்களுக்கு பிடிக்காமல் போனதுதான் எனக்குமே வருத்தம் நண்பரே...

      Delete
    2. ஷானியா, ஸ்மர்ப், பென்னி மிகவும் தர மான தொடர்கள். இனியாவது வர வேண்டும். மறு வாய்ப்பு கொடுக்லாமே ஐயா?

      Delete
    3. வாய்ப்பு கொடுக்கலாம் தான் நண்பரே ; ஆனால் என்ன மாறியுள்ளது என்ற நம்பிக்கையினில் தருவதோ ?

      படைப்புகள் அவையே...!!

      வாசிப்போரும் மாற்றங்களின்றி அதே சிறுவட்டமே !!

      Result மட்டும் மாறியிருக்குமென்று நம்ப முகந்திரங்கள் ஏது சார் ?

      Delete
    4. நான் கார்ட்டூன் அணி என்பதில் ரகசியங்கள் கிடையாது தான் ; இதோ இன்றயதொரு நிகழ்வு கூட அதற்கு கட்டியம் கூறுகிறது ! காலையிலிருந்து இப்போது வரை லக்கி லூக்கின் "வால் முளைத்த வாரிசு" தமிழாக்கத்தில் தான் ஈடுபட்டு வருகிறேன் ! நடு நடுவே பதிவு போட, பதில் போட என்று உலா வந்துமே இதுவரைக்கும் 32 பக்கங்களை பூர்த்தி செய்திட முடிந்துள்ளது - அலுப்பே தெரியாமல் ! டெக்ஸ் வில்லர் கதைகளில் கூட ஒரு சிட்டிங்கில் இத்தனை பக்கங்களை எழுத வராது எனக்கு !

      மனசு இலகுவாய் உணரும் போது பேனாவுமே இறகாய் பயணிக்கிறது ! ஒவ்வொரு கார்டூனின் பணியிலும் இதை நான் உணரத் தவறியதில்லை ! ஆனால் காமிக்ஸ் என்றால் இப்படித்தான் இருந்தாக வேண்டுமென்ற சில எழுதப்படா விதிகளை உள்ளுக்குள் செதுக்கி வைத்துக் கொண்டே கார்ட்டூன்களை பெருசாயொரு அபிமானமின்றி அணுகும் சமயம் எதுவும் பெரிதாய் ரசிக்கச் செய்ய மாட்டேன்கிறது !

      Nobody's at fault though...ரசனைகள் மாறுபட்டவை என்று ஏற்றுக் கொள்ளணும் ; அவ்வளவே !

      Delete
    5. "வால் முளைத்த வாரிசு" செம்ம தலைப்பு சார்

      Delete
  46. சிரிப்பு என்பது நமக்கு உள்ளே இருக்கவேண்டும்.! நம் மனதில் சிரிப்பு இல்லாத போது எப்பேர்பட்ட புறகாரணிகளாலும் அதைத் தூண்ட முடியாது.!

    உதாரணத்திற்கு..
    அரதப்பழசான ஜோக்குகளுக்கு கூட ஆனந்தமாய் சிரிக்கும் அன்பர்களையும் பார்த்திருக்கிறேன்..!
    வைகைப்புயலின் அட்டகாசமான காமெடிக்கு கூட அடித்துவைத்தாற்போல் உட்கார்ந்திருக்கும் ஆசாமிகளையும் பார்த்திருக்கிறேன்..!
    இரண்டுமே அவரவர் எடுத்துக்கொள்ளும் விதத்தைப் பொறுத்தவை..!

    எல்லாவற்றிலும் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் தேடிரசிப்பது ஒரு ரகம்.. எல்லாவற்றிலும் விறைப்பையும் முறைப்பையும் தேடிரசிப்பது இன்னொரு ரகம்..
    துரதிர்ஷ்டவசமாக முன்னது வெகு குறைவாக இருக்கிறது.!

    பகுலில் கிச்சு கிச்சு மூட்டினாலும் வராத சிரிப்பு.. ப்ளூகோட்ஸ் மாத்திரமல்ல, லாரலௌ ஹார்டியை பார்த்தாலும் வரப்போவதில்லை.!

    இது யாரையும் குறைகூறும் நோக்கில் எழுதப்பட்டதல்ல நண்பர்களே..!

    "இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி..
    எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே..
    அவர்.. ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே"

    என்ற வரிகள் மனநிம்மதியை குறித்து எழுதப்பட்டவை.. அவை சிரிப்புக்கும் பொருந்தும்..!!

    மனம் சிரித்தால் காணும் காட்சிகள் அனைத்தும் மகிழ்வானதாக இருக்கும்..
    மாறாக....!?!?!?

    ReplyDelete
    Replies
    1. இப்போதெல்லாம் கதைத் தேடல்களில் கார்ட்டூன்களுக்கு அவ்வளவாய் நேரங்களை செலவிடுவதேயில்லை நான் ! புதிதாயொரு கார்ட்டூன் தொடர் சமீபத்தில் கூடக் கண்ணில் பட்டது தான் ; ஆனால் அது 6 பக்க / 8 பக்க சிறுகதைகளின் தொகுப்பு ! சும்மாவே பந்தாடுபவர்கள், முழுநீளக் கதைகளல்ல என்றால் பின்னி விடுவார்களே என்று அரவமின்றி அதைக் கிடத்திப் போட்டு விட்டேன் !

      Delete
    2. மிகவும் சரி கண்ணா.

      Delete
    3. // மனம் சிரித்தால் காணும் காட்சிகள் அனைத்தும் மகிழ்வானதாக இருக்கும்..//

      Well said.

      Delete
    4. ///எல்லாவற்றிலும் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் தேடிரசிப்பது ஒரு ரகம்.. எல்லாவற்றிலும் விறைப்பையும் முறைப்பையும் தேடிரசிப்பது இன்னொரு ரகம்..
      துரதிர்ஷ்டவசமாக முன்னது வெகு குறைவாக இருக்கிறது.!///

      உண்ம!😟😟😟

      Delete
    5. கண்ணன் நீங்கள் சொன்னவை அனைத்தும் முத்துக்கள்.மனதில் மகிழ்ச்சி இருந்தால் மட்டுமே எதையும் ரசிக்க முடியும்.நன்றி கண்ணன்.

      Delete
  47. Would definitely rate bluecoats over chick bill... The background sadness about the toils of war makes it great.

    ReplyDelete
    Replies
    1. But unfortunately that goes against them too sir....

      Delete
  48. நீள வேண்டும் நீளம் ஆசிரியரே... ஒவ்வொரு ஆண்டும்... மாடஸ்டி போல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  49. இரத்தப்படலம் சந்தோசச் செய்திகள் கூடிக்கிட்டே போகுது...இனியெல்லாம் சுகமே ....அட்டைப் படம் ரணகளத்தில் அதகளம்...நண்பர்களின் அனைத்து மீம்ஸ்களும் அருமை

    ReplyDelete
  50. விஜயன் சார், இனியெல்லாம் ரணமே என்ற தலைப்பை மாற்றுவது நல்ல முடிவு வரவேற்கிறேன். சமீபத்தில் வந்த என்று மார்ட்டின் அல்லது டயலன் கதைக்கு னஇனியெல்லாம் சுகமே என்று இருந்ததாக ஞாபகம். Kindly check.

    ReplyDelete
    Replies
    1. நீங்க நினைப்பது சரிதான் PfT! அது மார்டினின் 'இனியெல்லாம் மரணமே'!

      Delete
    2. நீங்க நினைப்பது சரிதான் PfT! அது மார்டினின் 'இனியெல்லாம் மரணமே'

      அட ஆமால்ல

      Delete
  51. புளூ கோட் பட்டாளத்தின் அட்டை படம் சூப்பர். நானும் கார்ட்டூன் ரசிகனே. மனதை இலகுவாக்குபவை கார்டூன்தான். இப்போது வெளிவருபவை குறைவு. அதில் மேலும் கைவைத்து என்னை அழுகாச்சி ஆக்கிவிடாதீர்கள் சார். ஆமாம் சொல்லிவிட்டேன்.
    “இரத்தப்படலம்” வெளிவருவது ஆனந்தம்

    மீம்ஸ்கள் செம
    அதிலும் முதலாவது - வடிவேல் கேட்பதும் விஜய் காட்டும் ரியெக்‌ஷன் கிச்சுகிச்சு ரகம்

    சிங்கத்தின் சிறுவயதில் முழுத் தொகுப்பு கேட்டு, தலைவரின் கடித கணைகள் தாளாமல எடிட்டர் சார் மயங்கி சரிவது
    ஜெய்- நயன்தாரா மீம்ஸ்- கொடுத்து வச்சவர் எடிட்டர் சார். மீன் பிடிக்க போய்த்தான் பாருங்களேன் சார்.

    ரஜனி ரசிகர்களிடம் வினாவ ரத்த படலம் குண்டூ புக் இனை மறுபதிப்பாகா வெளியிட கோருவதும் அழகு.

    ReplyDelete
  52. சிம்பிள் ! உருண்டு புரண்டு சிரிக்கச் செய்யும் லக்கி லூக்கின் சூப்பர் ஹிட் கதைகளோடும், சிக் பில் அணியின் ஜாலியான சாகசங்களோடுமே ஒரு 25 ஆண்டுகளைக் கடந்திருக்கிறோம் ! So புதிதாய் முன்னிறுத்தப்படும் ஒவ்வொரு சிரிப்புப் பார்ட்டிக்குமே நம்மவர்களின் மனங்கள் நிறுவிடும் அளவுகோல்கள் செம உசரமானவை


    #####

    வெகு உண்மை சார்..( நானுமே அப்படித்தானே எதிர்பார்க்கிறேன்)

    ReplyDelete
  53. கார்ட்டூன்களில் லக்கி, சிக்பில் போக மந்திரி, பென்னி, ரின்டின்கேன் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்தமான கதைகள். தாத்தா கூட பிடிச்சிருந்தது. ஸ்மர்ப் மட்டும் படிக்க ஒரு வித மூட் செய்து கொண்டு படிக்க நேரிடும். இவையெல்லாம் இழந்தது ஒரு விதத்தில் வருத்தமே. ஆனால் மெஜாரிட்டிக்கு பிடித்த வகையான கதைகள் இருப்பதே சந்தா எண்ணிக்கைக்கு நலம் என்பதால் மனதை தேத்திக்க வேண்டியது தான்.

    ReplyDelete
    Replies
    1. அதைத்தான் மச்சான் செஞ்சிகிட்டு இருக்கோம்.!

      ஒரு டிடெக்டி தொடர் போனா இன்னொன்னு வரும்..
      ஒரு கௌபாய் தொடர் போனா இன்னொன்னு வரும்..


      அப்படி ஒரு கார்ட்டூன் தொடர் போயி இன்னொன்னு வரமாதிரி இருந்தா பரவாயில்லையே.. ஆனா ஒவ்வொன்னா சோலி முடிஞ்சிக்கிட்டே வருதே.. என்பதே வருத்தம்..!

      அதாவது.. இது ஒரு ஹீரோ அல்லது ஹீரோயினுக்கான வருத்தம் இல்லை.. ஒரு ஜானருக்கான வருத்தம்..!

      இந்த சூழ்நிலையை புரிஞ்சிக்காமலோ ஏத்துக்காமலோ நான் புலம்பவில்லை.. கண்ணுமுன்னாடியே ஒரு காதல் உலகம் கொஞ்சங்கொஞ்சமா காணாமப் போயிட்டிருக்கேன்னுதான் கலங்கிட்டு இருக்கேன்..!

      😭😭😭😭😭

      Delete
    2. மாப்ள நீ அழுவாத , நீ அழுதா எனக்கு


















      .









      . சிரிப்பு வரும்

      Delete
    3. உன்னைத் தெரியும்டே மக்கா.! :-)





      Delete
    4. ////அப்படி ஒரு கார்ட்டூன் தொடர் போயி இன்னொன்னு வரமாதிரி இருந்தா பரவாயில்லையே.. ஆனா ஒவ்வொன்னா சோலி முடிஞ்சிக்கிட்டே வருதே.. என்பதே வருத்தம்..!
      /////

      😭😭😭😭😭

      Delete
  54. லக்கி லூக்கிற்கு சற்றும் குறைவில்லாத தொடர் தான் "ஸ்மர்ப்ஸ்" அது ஏன் ஈர்க்கவில்லை என இன்றுவரை எனக்கு புரியவே இல்லை!

    தனிப்பட்ட முறையில் புளூகோட் எனக்கு அவ்வளவாக ஈர்ப்பில்லாமல் போக காரணம் ஒரே கதைக்கரு! அதை எப்படி மாற்றி மாற்றி சொன்னாலும் ஒரு கட்டத்தில் போரடிப்பதை தவிர்க்க இயலவில்லை!

    ReplyDelete
    Replies
    1. இதே எண்ணம் தான் பெரும்பாலான ரசிகர்கள் இடையே பொடியர்களை பற்றி...

      கொயந்த பிள்ளைக சமாச்சாரம்...ஒரே மாதிரி ஓடியாடிட்டு இருக்கானுக.. இதில் என்ன காமெடி இருக்கு, போரடிக்கிறார்கள்..என அவர்களும் முடிவு செய்வார்கள் தானே!!!!அதை மறுக்க இயலாது தானே!!

      அதான் பொடியர்கள் ஊத்திக்க காரணம்.... உங்க பார்வையில் ப்ளூகோட், அவர்கள் பார்வையில் பொடியர்கள்...!!

      இன்னும் சிலருக்கு மற்ற காமெடிகள்...

      மொத்தத்தில் அனைவரும் காமெடிகளை பார்க்க வேண்டிய பார்வையை மாற்றி கொள்ளதவரை...,,,,

      நமக்கு லக்கியும் சிக்பில்லும்தான்!!!

      ..........

      Delete
  55. கார்டூன் என்றாலே frame by frame சிரிப்பைக் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில் படித்தால் ஏமாற்றமே மிஞ்சும். உண்மையில் கார்டூன் என்பது நிஜ உலகில் நமக்கு சாத்தியப்படாததை, ஆசைப்படுவதை வெளிக்கொணரும் ஒரு ஜானர். இங்கே அடி, உதை இருக்கும் ஆனால் வலி இருக்காது. துப்பாக்கிகள் வெடிக்கும் ஆனால் உயிர்பலிகள் கிடையாது. மற்ற ஜானர்களில் இவைகளை காண முடியாது. Fantasy கதைகளுக்கு ஒரளவு பொருந்தும்.

    ஆகையால் கதையின் போக்கில் ஆங்காங்கே காமெடியை எதிர்பார்த்து பயணித்தால் நிச்சயம் ருசிக்காது போகாது. அவ்வாறாக படைக்கப்பட்டதே சிக்பில், ப்ளுகோட்ஸ், மேக் & ஜாக், கிளிப்டன், ரின்டின் கேன், ஹெர்லக் மற்றும் சுட்டி பென். இதில் சிக்பில் & கோ வை அங்கீகரித்த நம்மால் மற்றவர்களையும் அரவணைக்க முடியும். மந்திரியும், ஸ்மர்ப்பும் இவர்களுக்கு ஒரு படி மேல் என்னளவில் காரணம் இக்கதைகளின் டெம்பிலேட்டே தனி. டைலாக்குகள் இங்கே தெறி ரகம். உச்சானியில் இருக்கும் லக்கியின் கதைகளில் வருவது போல் குபீர் சிரிப்பு பக்கத்துக்கு பக்கம் கிடைத்தால் போனஸ் என்று எண்ணிக்கொள்ளுங்கள். எப்படி டெக்ஸ் & டைகர் cow boy உலகில் நம்மை மெய் மறக்க செய்கிறார்களோ, அதே போல் இங்கே லக்கி லூக்.

    ஆனால் நாம் கூடவே டியுராங்கோவையும் இன்ன பல கதைகளையும் ரசித்து கொண்டு தானே இருக்கிறோம். ஓரங்கட்டிவிடவில்லையே. ஆசிரியர் தான் நமது முதல் முதன்மை ரசிகர். நம்மில் ஒருவராக இருந்து கொண்டு தான் ஒவ்வொரு படைப்பையும் நமக்கு வழங்குகிறார். அவருக்கு/நமக்கு சுகப்படாததை பரீசலனையீலேயே வைப்பதில்லை. அவர் இவ்வளவு தூரம் ஒவ்வொரு முறையும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதில் காரணம் யாதோ. நமது ரசனையை இவ்வளவு தூரம் கொண்டு சென்றவரே அவர் தான். மேலும் அடுத்தகட்டத்திற்கு உயர்த்த முயற்சிக்கிறார் அவ்வளவே.

    ReplyDelete
    Replies
    1. ///மந்திரியும், ஸ்மர்ப்பும் இவர்களுக்கு ஒரு படி மேல் என்னளவில் காரணம் இக்கதைகளின் டெம்பிலேட்டே தனி.///

      +111

      Delete
    2. /// உண்மையில் கார்டூன் என்பது நிஜ உலகில் நமக்கு சாத்தியப்படாததை, ஆசைப்படுவதை வெளிக்கொணரும் ஒரு ஜானர். இங்கே அடி, உதை இருக்கும் ஆனால் வலி இருக்காது. துப்பாக்கிகள் வெடிக்கும் ஆனால் உயிர்பலிகள் கிடையாது. மற்ற ஜானர்களில் இவைகளை காண முடியாது. ///

      எக்ஸாட்லீ...!!!

      Delete
    3. உண்மை நண்பர்களே.

      Delete
  56. இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?! 2022

    காமிக்ஸ் எனும் கனவுலகம் ® (©)

    என்னடா இது தலைப்பே இவ்வளவு மொக்கையாக இருக்கிறது என்று பார்க்கிறீர்களா?!

    "நான் எப்போதாவது இங்கு படிக்க வருவேன், கமெண்ட்டுகள் அனைத்தும் செம காமெடியாக இருக்கும், படித்து விட்டு சிரிப்பேன் ஆனால் இப்போதெல்லாம் கிராபிக் நாவல் படிப்பது போன்ற எண்ணத்தை கமெண்ட்டுகள் ஏற்படுத்துகிறது" - பல பதிவுகளுக்கு முன்னால் ஒரு நண்பர் இங்கு பதிவிட்டது!

    சிரிக்கலாம் தப்பில்லை ஆனால் ஒவ்வொரு நாளும் காமெடி செய்யவா இந்த காமிக்ஸ் வளைதளம்?! ஓகே, அப்படி இருந்தால் தான் இங்கே கலகலப்பாக இருக்கிறது அல்லது கமெண்டுகள் வருகிறது என்றால் சரிதான்! அதனால்தான் நானும் அப்படி இப்படி என்று தலைப்பை வைத்துள்ளேன் :) (இதற்கு சிரிப்பு வராவிட்டால் கம்பேனி பொறுப்பல்ல)

    சரி விஷயத்துக்கு வருகிறேன். எடிட்டரை கட்டாயப்படுத்த நமக்கு எந்த உரிமையும் இல்லை ஆனால் நமக்குத் தோன்றும் சில எண்ணங்களையாவது பதிவிடவே இந்த வலைதளம் என்ற சீரிய கண்டுபிடிப்பில் சில பின்னூட்டங்ளைப் பதிவிடலாம் என்று நினைக்கிறேன்‌ !

    சீரியஸாக எதுவுமில்லை மக்கா... ஒருநாள் எடிட்டர் போன்று யோசிக்க முடிகிறதா என்று பார்க்கிறேன் :)


    தொடரும் but ரொம்ப லேட்டா...

    ReplyDelete
    Replies
    1. ///காமிக்ஸ் எனும் கனவுலகம் ® (©)

      என்னடா இது தலைப்பே இவ்வளவு மொக்கையாக இருக்கிறது என்று பார்க்கிறீர்களா?!///

      @ உதயகுமார்.

      இது எங்களது வாட்ஸ்அப் மற்றும் முகநூல் குழுவின் பெயர்..
      அதை மொக்கை என்று சொல்லி உங்களது வேலையை தொடங்கப்பார்க்கிறீர்கள் போலும்..

      எங்களை கையைப்பிடித்து இழுப்பது உங்கள் நோக்கமென்றால்........


      Delete
    2. KiD ஆர்டின் KannaN :

      நண்பரே தலைப்பு அது அல்ல, அதற்கும் மேலே உள்ளது மட்டுமே !

      இது சும்மா பகடிக்காக பதிவிட்டது. அதனால்தான் ரிஜிஸ்டர் சிம்பலும் காபிரைட் சிம்பலும் போட்டுள்ளேன்.

      அதாவது நீங்கள் பதிவு செய்ய வில்லை, நான் பதிவு செய்து விட்டேன் என்பதாக :)

      சும்மா ஜாலிக்காக பாஸ் :)

      Delete
    3. முதல் ஓவர், முதல் பால் - அதை தலையில் அடிப்பது மாதிரி வீசப்பட்டதால் - நான் இந்த பதிவை கைவிட்டு விடுவதாக முடிவெடுத்து விட்டேன் !

      retired hurt :(

      Delete
    4. ///அதாவது நீங்கள் பதிவு செய்ய வில்லை, நான் பதிவு செய்து விட்டேன் என்பதாக :)///

      வாட்ஸ்அப் குரூப் பேரையெல்லாம் பதிவு செய்யும் ஒரு நாடா என்னோடு ரொம்ப பழக்கப்பட்ட நாடா நண்பரே..!

      வெளையாடுங்க.. வேடிக்கை பார்க்கிறோம்.!

      Delete
    5. ///காமிக்ஸ் எனும் கனவுலகம் ® (©)

      என்னடா இது தலைப்பே இவ்வளவு மொக்கையாக இருக்கிறது என்று பார்க்கிறீர்களா?!///

      இந்த தலைப்பு மொக்கை எல்லாம் இல்லை நண்பரே..சிறப்பாகவே உள்ளது ..


      மற்றபடி நீங்கள் நினைத்ததை தொடரலம்...:-)

      Delete
    6. // காமிக்ஸ் எனும் கனவுலகம் //

      மிகவும் அருமையான தலைப்பு.

      Delete
    7. /)மற்றபடி நீங்கள் நினைத்ததை தொடரலம்//

      Paranitharan.k சார், பர்மிஷன் கொடுத்தமைக்கு மிக்க நன்றி!

      To Whom So Ever It May Concern!

      என்னுடைய பதிவின் தலைப்பு..

      "இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?! 2022"

      அதனால்தான் மெனக்கெட்டு தலைப்பை போல்டாக காட்டியிருக்கிறேன்! இன்னும் புரியும் படியாக சொல்ல வேண்டுமானால் தலைக்கு மேலே உள்ளதுதான் தலைப்பு!

      பல வருடங்களாக இந்த பிலாகை படிக்காததால் இங்கு உள்ளவர்களின் கெமிஸ்ட்ரியைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் அவர்களுக்குப் புரியும்படி எப்படி எழுத வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை ! இந்த ஸ்டைலில் தான் மற்ற வலைதளங்களில் கமெண்டு போடுகிறேன் பக்.ஷே அங்கெல்லாம் எந்த ப்ராபளமும் இல்லை!

      ஓகே, லாக்டவுன் காலமிது என்பதால் இட்லிக்கு மாவு அரைக்க வேண்டும் - கடைகள் அனைத்தும் நாளை தான் திறக்கப்படும்!

      Bye guys 🤝👍

      Delete
    8. இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?! 2022

      👆 இது தாம்பா தலைப்பு !

      Delete
  57. இன்னிக்கு நடக்கப்போற நீர் இன்றி அமையாது உலகு காமிக்ஸ் போட்டிக்கு நெம்ப உக்கிரமா கேள்வி எடுக்கோணும்.. அதனால..

    ப்ளீஸ் கிராண்ட் மீ லீவ் ஃபார் டுடே...!

    ReplyDelete
  58. கார்டூனை திறந்த மனதுடன் படிக்க ஆரம்பித்தால் அதில் உள்ள நகைச்சுவை புரியும் அதேபோல் அந்த அந்த பேனலில் உள்ள படங்களை ஒருமுறை நன்றாக கவனித்து விட்டு படியுங்கள் இன்னும் ரசித்து சிரிக்க முடியும். கார்டூன் கதைகளில் வரும் படங்களும் சிரிக்கும் வகையில் இருக்கும் அவைகளை ரசிக்க கொஞ்சம் டைம் ஒதுக்குங்கள். கார்டூன் கதைகள் எல்லாம் பக்கத்துக்கு பக்கம் சிரிப்பை கொடுக்க வேண்டும் என நினைத்து படிக்காமல் படித்து முடித்த உடன் மனது எளிதாக்கி முகத்தில் புன்னகையை தருகிறதா என மட்டும் பாருங்கள்.

    ஒரு அமைதியான சூழலில் நிதானமாக படித்தால் எல்லா கார்டூன் கதைகளையும் நாம் ரசிக்கலாம்.

    இதுவரை நமது காமிக்ஸில் வந்த எல்லா நாயகர்களும் ஒரு வகையில் சிரிப்பை கொண்டு வந்தவர்களே. நம்மிடம் உள்ள பிடிவாத குணத்தை தூக்கி போட்டால் கண்டிப்பாக கார்டூனை அனைவராலும் ரசிக்க முடியும் நண்பர்களே.

    ReplyDelete
  59. டியர் எடிட்டர் 

    ரெண்டு விஷயம் :

    1) இனி வரும் சில மாதங்களுக்கு கொஞ்சம் நேர்மறை பெயர்களாக வைக்கவும் - கதைகளுக்கு. எவ்விதமான கதையாக இருந்தாலும் ஒரு சொல் கிடைக்கும் - நெஞ்சே எழு - என்பதைப்போல. திரும்பிய பக்கமெல்லாம் ரணகளமான headlines ஆக இருப்பதால் இந்த கோரிக்கை.

    2) ப்ளூகோட்ஸ்க்கும் நோட்டீஸ் period -ஆஆ ?? ஏற்கனவே இருக்கும் கார்ட்டூன் வறட்சியில் இது வேறு. (நம்மவர்களுக்கு காமெடி செய்யணும்னாலும் குருதை டிண்குல (My தமிழ் is sometimes bad, sorry !!) சுட்டுகிட்டே பண்ணனும் போலும் :-p :-) :-(

    பேசாமல் மீதமிருக்கும் லக்கி மற்றும் சிக் பில் கதைகளை வருடத்துக்கு 6 ஆல்பங்கள் என்று வெளியிடுங்கள் சார் - அதையாவது படிப்போம் !!

    ReplyDelete
    Replies
    1. ////பேசாமல் மீதமிருக்கும் லக்கி மற்றும் சிக் பில் கதைகளை வருடத்துக்கு 6 ஆல்பங்கள் என்று வெளியிடுங்கள் சார் - அதையாவது படிப்போம் !!///

      +10000

      Delete
    2. போகின்ற போக்கில் அது தான் நடக்கப் போகுது சார் !

      Delete
  60. This comment has been removed by the author.

    ReplyDelete
  61. இன்றைக்கும் என்னை காமிக்ஸ் படிக்க தூண்டுவது மறுபதிப்புகளும், கார்டூன்களும் (அது ஏனோ smurf மட்டும் தொட முடிவதில்லை 😢), கிராபிக் நாவல்களும் தான்... சமீபத்தில் "ars மேக்னா" படித்தேன்.... அடேங்கப்பா எப்பேர்ப்பட்ட கதை... நூற்றாண்டுகள் பயணித்த கதை கடைசியில் யுத்தத்தில் வந்து முடியப்பண்ணின் அற்புதமான நிஜமும், நிழலும் கொண்ட ஒரு ஒப்பற்ற கதை. இன்னமமும் சொல்ல வேண்டுமானால், "கோழைகளின் தேசம்"(தலைப்பு சரிதானே) எத்தனை வாழ்க்கை பாடங்களை நமக்கு சொல்லி தருகிறது?

    "கண்ணான கண்ணே" பெற்றோரில் ஒருவரையோ, இல்லை இருவரையோ இழந்து தவிக்கும் ஆதரவற்ற சிறுப் பிள்ளைகள் தெருவுக்கு தெரு எத்தனை பேர்களை நாம் பார்க்கிறோம்...? நாம் நம் வட்டத்தை தாண்டி பார்த்தால் அவர்களின் அவல நிலை நமக்கும்.கொஞ்சமாவது புரியும்.... போன மாதத்தில் என் நண்பர் திடீரென்று மாரடைப்பினால் அலுவலகத்திலேயே மாண்டு போனார். என்ன ஆறுதல் தான் அவர் குடும்பத்திற்கு செய்திட, அவர்களுக்கு நண்பர்கள் சார்பில் ஒரு தொகையும் கலெக்ட் செய்து அளிக்கப்பட்டது, ஆனால் அது அந்த 7ம் வகுப்பு போகும் நண்பரின் மகனை எவ்வகையில் தேற்றிட இயலும்? நான் அந்த குடும்பத்தாரை சந்திக்க போகும்போது, அந்த மகனுக்கு கொண்டு போய் சில புத்தகங்களை கொடுக்க நினைத்துள்ளேன்... "கண்ணான கண்ணே" அதில் நிச்சயம் இடம்பெறும்.. கொஞ்சம் நம் பார்வையை யதார்த்த பக்கமும் திருப்பிட்டால் நாமும் கேப்டன் டைகர் போல, டெக்ஸ் போல யாரோ ஒருவருக்கு ஹீரோவாக செயல்படலாம்... என்னைப் பொறுத்தவரை க்ராபிக் நாவல்கள் நம் வாசிப்பு தேர்ச்சி பெற அவசியம் தேவையே

    ReplyDelete
    Replies
    1. ///நான் அந்த குடும்பத்தாரை சந்திக்க போகும்போது, அந்த மகனுக்கு கொண்டு போய் சில புத்தகங்களை கொடுக்க நினைத்துள்ளேன்... "கண்ணான கண்ணே" அதில் நிச்சயம் இடம்பெறும்.. ///


      சூப்பர்!

      Delete
    2. அருமை சகோ...எனக்கும் கிராபிக் நாவல்கள் விருப்பமானவையே

      Delete
    3. //என்னைப் பொறுத்தவரை க்ராபிக் நாவல்கள் நம் வாசிப்பு தேர்ச்சி பெற அவசியம் தேவையே//

      +1

      Delete
  62. நன்றிகள் சகோஸ்.

    ReplyDelete
  63. கார்ட்டூன் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உங்களால் அடுத்த generation க்கு இந்த காமிக்ஸ் வளர்ச்சியை கொண்டு செல்ல இயலாது. உலகத்தின் மிகப்பெரிய ஜாம்பவான் Disney cartoons மூலமாகத்தான் பெரும் வெற்றியை பெருகிறது. நீங்கள் cartoons books சரியாக விற்பனை ஆகவில்லை என்றீர்கள். அது சரியல்ல.நீங்கள் அதை சரியாக promote பண்ணவில்லை என்பதுதான் உண்மை.

    ReplyDelete
    Replies
    1. சரிங்க சார் !

      Delete
    2. ///நீங்கள் அதை சரியாக promote பண்ணவில்லை என்பதுதான் உண்மை.///

      உங்களிடம் ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்களேன் நண்பரே?

      தமிழ்நாட்டிலும் ஒரு கார்ட்டூன் புரட்சி ஏற்படுமெனில் எந்தவொரு ஐடியாவும் வரவேற்கக் கூடியதே!

      Delete
  64. பல book festival ல் நமது book stall ல் .Tex tiger என்று பல flex வைத்துள்ளீர்கள் . Ok. அங்கு வரும் குட்டி குழந்தைகளுக்கு சிறுவர்களுக்கு இவர்கள் யாரென்றே தெரியாது.regular comics ரசிகர்கள் க்கு தெரியும் அவர்கள் வாங்கி கொள்வார்கள்.ஆனால் குழந்தைகள் சிறுவர்கள் நமது Lucky, Smurfs , இது போன்று cartoons பொம்மைகள் flex வைத்து குழந்தைகள் கவனத்தை பெற வேண்டும். இன்றைய small generation தான் நமது comicsஐ next stepக்கு.அழைத்து செல்வார்கள்.நமது future comic's victory இன்றைய குழந்தைகள் மற்றும் பொடியர்கள் கையில் உள்ளது . So cartoons are very very important fuel for our comics and important life water for comic's tree 🌲🌲 and family.

    ReplyDelete
    Replies
    1. லக்கி லூக் பேனர்களை கவனிக்க தவறி விட்டீர்கள் போலும் சார் ; கார்ட்டூன்களுக்கென்றே தனியாய் 3 ரேக் ஒதுக்கியதையும், அவற்றின் மேலே மொக்கை சைசில் பேனர்கள் போட்டிருந்ததுமே உங்கள் கவனங்களை ஈர்க்கலை போலும் !

      Delete
    2. மரம், தண்ணி, உரம், பதியம் என்ற சகலத்தோடு உழைப்பு , நம்பிக்கை , முதலீடு என்றுமே போட்ட ஒருத்தன் கூட அங்கே ஸ்டாலில் இருந்திருப்பான் சார் ; கவனித்திருக்க மாட்டீர்கள் !

      Delete
  65. இப்போது நாம் படிக்கும் கார்ட்டூன் கதைகள் எல்லாம் ப்ளாக் ஹியூமர் எனும் (கதையினூடே லேசான புன்சிரிப்பை வரவழைக்கும்) காமெடி வகையிலே உருவாக்கப்படுகின்றன.ப்ளூகோட்ஸ்,கிளிப்டன் போன்றோரின் கதைகளில் பூம்பூம் படலங்களின் வெடிச்சிரிப்பை எதிர்பார்க்க முடியாது.ஆகையால் அதிக எதிர்பார்ப்பில்லாமல் படித்தால் இவர்களை தொடரச்செய்யலாம்.

    ReplyDelete
  66. So please don't think stop cartoons and think how to promote cartoons and increase sales.

    ReplyDelete
    Replies
    1. ரைட்டுங்க சார் ! இனி சிறப்பாய் செயல்பட முயற்சித்திடுவோம் !

      Delete