நண்பர்களே,
வணக்கம். காதில் தக்காளிச் சட்னி பீறிடும் அளவுக்கு இம்மாதத்துக் கி.நா. பற்றிய அலசல்களைப் போட்டுத் தாக்கி விட்டிருப்பதால் - time to move on என்பேன் ! And ஒன்றுக்கு இரண்டாய் ஆக்ஷன் ஜாம்பவான்கள் ரகளை செய்திருக்கும் மாதமிது எனும் போது ஒளிவட்டத்தின் பாய்ச்சல் XIII மீதும், ஜேம்ஸ் பாண்ட் மீதும் இனி லயித்திடட்டுமே folks ?
XIII-ன் ஆல்பத்துப் பெயரைப் பார்த்த போதே நம் அனைவருக்கும் ஒரே வித curiosity மேலோங்கியிருக்குமென்பது நிச்சயம் - "அது என்ன 2132 மீட்டர்ன்னு ???" நண்பர் செல்வம் அபிராமி தந்த long distance sniper shot புள்ளி விபரங்கள் + வாஷிங்க்டன் நகர் சார்ந்த சில குறிப்புகளைப் படித்த போது - கதாசிரியர் Yves Sente செய்திருக்கக்கூடிய ஆராய்ச்சிகளின் ஆழமும், ரயிலின் ரூட் நம்பர் மாதிரியான அந்தத் தலைப்பின் பின்னணியும் புரிந்தது ! எது எப்படியோ - நேற்றைக்கு இதன் தொடர்ச்சியாகிடவுள்ள அடுத்த ஆல்பத்தின் ஒரு முன்னோட்டக் குறிப்பினை படைப்பாளிகள் அனுப்பியிருந்தனர் ! அவற்றைப் படித்த போது 2132 மீட்டர் ஆல்பத்தின் முடிச்சுகளின் மிச்சம் மீதிகள் அனைத்துமே அடுத்ததில் அவிழ்க்கப்படுவது புலனாகிறது ! And ..and ...and ...சரி....அதைப் பற்றி இப்போது வேண்டாமே ; கதை வெளிவரும் வரைக்கும் மௌனமே தேவலாம் !! இதோ அந்த ஆல்பத்தின் அட்டைப்பட முன்னோட்டம் + உட்பக்க சித்திர ஜாலங்களின் preview :
காத்திருக்கும் "புது" XIII ஒருபக்கமெனில், முன்பதிவில் தரை தட்டி நிற்கும் "பழைய" XIII இன்னொரு பக்கம் ! முதல் 30 நாட்களின் வேகம் தொடர்ந்த நாட்களில் போயிண்டே...its gone !! முதல் மாதத்தினில் 90 முன்பதிவுகள் என்று கெத்து காட்டிய புக்கிங்ஸ் - அடுத்த மாதத்தினில் ஆறோ / ஏழோ என்று நண்டு பிடிக்கத் துவங்கியுள்ளது ! 'இதை ஒரே புக்கா போட்டுப்புட்டா கொரோனா வைரஸிலிருந்து, புக்கிங்களின் வேகம் வரைக்கும் எல்லாமே சரியாகிப்புடும் !" என்று XIII அதிதீவிர அணியினர் அவ்வப்போது கருத்துக் சொல்லி வருவது ஒரு பக்கம் நிகழ்ந்து கொண்டே தானுள்ளது ! ஆனால் ஒரு புக்கா ? பற்பல புக்குகளா ? என்பதையெல்லாம் நிர்ணயிக்க வேண்டியது, நடைமுறை சாத்தியங்களேயன்றி ; காமிக்ஸ் ஆர்வங்கள் மாத்திரமே அல்ல என்பதை ஏற்கனவே நான் சொல்லிவிட்டிருக்கிறேன் நண்பர்களே ! And I repeat - ஆர்ட்பேப்பரில் ஆயிரம் பக்கங்கள் கொண்டதொரு இதழை ஒற்றை புக்காய் பைண்டிங் செய்வதென்பது - கழுத்தில் கற்களை அழகாய்க் கட்டிக்கொண்டு, செம மொட்டைக் கிணறாய்த் தேடிக்குதிப்பதற்குச் சமானமானது ! மொத்த எடையினையும் தாங்கி நிற்கப்போகும் அட்டைப்படமானது, ஐந்தாறுவாட்டி புரட்டிய பின்னேயே வெடிப்பு விட்டபடிக்கே, சிறுகச் சிறுக பைண்டிங்கிலிருந்து பிய்த்துக் கொண்டு வருவதும், துடைப்பங்களோடு மக்கள் எங்களைத் தேடிடுவதுமே பின்விளைவாகிடும் என்பதை நமது பைண்டிங் நண்பரும் உறுதி செய்துவிட்டிருக்கிறார் ! எங்கேனும் நூலகங்களில் உங்கள் கண்களில் இது போல தடிமனான புக்குகள் பட்டிருக்கக்கூடும் தான் ; "அதுலாம் நல்லாத்தான் இருந்துச்சு" என்றும் தோன்றிடலாம் தான் ! ஆனால் அவையெல்லாம் பைண்ட் செய்யப்படுவது சில பல கோடிகள் விலைகளிலான hardcover binding இயந்திரங்களினால் ! அதில் அவர்கள் பயன்படுத்துவது ரொம்பவே உயர் grade கோந்து & அது மிஷினில், சூட்டில் இளகிய பிற்பாடு தான் ஒட்டிடவே செய்யும். நாம் கையால் பைண்ட் செய்யும் போது பயன்படுத்திடும் பெவிக்காலின் grade முற்றிலும் வேறானது ! (எங்கள் ஊரிலிருந்து பல ஆண்டுகளாய் வெளிவந்து கொண்டிருக்கும் Nightingale brand டயரிக்களை பைண்ட் செய்வதற்கென 12 கோடிக்கு அவர்கள் ஒரு புது மிஷினை 15 வருஷங்களுக்கு முன்னேயே வாங்கினர் !!) நாமோ கையால் தான் இது சார்ந்த பணிகளை எப்போதுமே செய்து வருகிறோம் எனும் போது - அந்த இயந்திரத்து துல்லியமா, வலுவோ சாத்தியமே ஆகிடாது ! So "XIII மறுபதிப்பு --- ஒற்றை புக்" என்ற போகா ஊருக்கு பஸ் ரூட்டைத் தேடிடும் நேரத்துக்கு - 2 தொகுப்புகளாக வரவுள்ளதை இன்னமும் அறிந்திருக்கா நண்பர்கள் இருப்பின், அவர்களின் காதுகளில் போட்டு வைத்திட முயற்சித்தால், இந்த புக்கிங்குகளை அடுத்த வருஷம் ஏப்ரலுக்குத் தள்ளிப்போட வேண்டிய அவசியங்கள் இல்லாது போகலாம் ! October இறுதிவரையிலும் முன்பதிவுகளின் Phase 1 தொடர்ந்திடும் என்பதால், இன்னமும் நிறையவே அவகாசமுள்ளது தான் ; so பார்ப்போமே !
In the meantime - JSK Special - ஸ்பைடரின் "சர்ப்பத்தின் சவால்" ஜாலியாய் புக்கிங் ஆகி வருகிறது ! And முகவர்கள் கூட இப்போதே அதன் பொருட்டு துண்டை விரித்து வைத்துள்ளனர் !
மீண்டும் சந்திப்போம் folks ...இப்போதைக்கு bye !! And ஜேம்ஸ் பாண்ட் 007 + டயபாலிக்காரையுமே அலசிட மறக்க வேணாமே ப்ளீஸ் ?
1 st
ReplyDeleteஇரட்டை இதழ் நல்லதொரு முடிவு சார். வரவேற்கிறேன்..
Deleteஅட செம
ReplyDeleteமுழுமையாக படித்து விட்டு வருகிறேன்
Delete4....நன்றில
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteஅட சார் இப்போ தான்
ReplyDeleteபோன பதிவில் விமர்சனம் கொடுத்தேன்😕
//மொத்த எடையினையும் தாங்கி நிற்கப்போகும் அட்டைப்படமானது, ஐந்தாறுவாட்டி புரட்டிய பின்னேயே வெடிப்பு விட்டபடிக்கே, சிறுகச் சிறுக பைண்டிங்கிலிருந்து பிய்த்துக் கொண்டு வருவதும், துடைப்பங்களோடு மக்கள் எங்களைத் தேடிடுவதுமே பின்விளைவாகிடும் என்பதை நமது பைண்டிங் நண்பரும் உறுதி செய்துவிட்டிருக்கிறார் //
ReplyDeleteஒற்றை காமிக்ஸ் படிப்பதற்கு இல்லை. வியப்பதற்கு.
அதை பத்திரமாக பொக்கிஷம் போல பாதுக்கவே ஒற்றை காமிக்ஸ்.
ஏற்கனவே இரண்டு விதமான காமிக்ஸ் இருக்கும் போது முன்றாவதாக வாங்குவதற்கு ஏதாவது வித்தியாசம் எதிர்பார்க்கிறேன்.
வாங்கும் அத்தனை பேருமே அழகு மட்டுமே பார்க்கப்போகிறார்களெனில் இதனில் இத்தனை பணத்தையும் உழைப்பையும் முதலீடு செய்யத் தான் வேணுமா சார் ?
Deleteசார் ஆஸ்திக்கு ஒன்னு அந்தஸ்துக்கு ஒன்று....அந்த பைண்டிங் சேத்தா வரும் கூடுதல் தொகைய சொல்லலாமே...பார்த்தால் நன்று...வாய்க்காட்டா பார்ப்போம் நின்று...அதுவா வரட்டும் மனதை வென்று
Deleteவாய்த்தால்/பார்த்தால்
Deleteதெய்வமே... 300 புக் பைண்டிங் பண்ணித் தர்றியாளா அண்ணாச்சி? ன்னு 12 கோடிக்கு மிஷின் போட்ருக்கவர்கிட்டே கேட்கணுமா ? அல்லங்காட்டி அந்த மிஷினை வாங்குறதுக்கோசரம் ஏதாச்சும் பேங்க்கிலே ஓட்டைப் பிரிக்கச் சொல்றியளா ?
Delete12கோடி மிஷின் வைத்திருக்கிறவர் கிட்ட கேட்கச் சொல்கின்றார் நம்ம ஸ்டீலு.சரியா ஸ்டீலு?!.
Deleteகேட்டுத் தான் பாருங்களேன் ஆசானே ?
ஏன் சார்...முட்டுச் சந்துகளில் வாங்குவதை AC ரூமிலும் வாங்கிப் பார்க்கணுமா ? அந்த மிஷினை ஒரு நாள் இயக்கினால் லட்சங்களில் பில் போடுவார்கள் ; நம்ம 300 புக்குக்கு வேலை செய்து தரக்கேட்டால் வாசல் அப்டிக்கா இருக்குது தம்பின்னு வழி அனுப்பி வைப்பாங்க - அன்போட !
Deleteஆமா சரவணன்...பரவால்ல சார் எப்டி வந்தாலுஞ் சரிதா
DeleteHateful eight...
ReplyDeleteHatefull ஆ.. எண்கள் எழுதுவதில் எட்டு மட்டுமே மேல் நோக்கி எழுதும் சிறப்புமிக்கது..
Deletewow !
Deleteதகவலுக்கு நன்றி. Hateful eight ஒரு Quentin Tarantino படம் bro. Chill.
Deleteஅடடா திசைகளும் எட்டு
Deleteகிரகங்கள் (கோள்களும் ) எட்டாமே...
Deleteவணக்கம் ஆசானே...
ReplyDeleteவணக்கம் நண்பர்களே..
ஆகா கைக்கு எட்டியது வாய்க்கு வாய்கலயே.... பதிமூன்று அதகளம்....ஸ்பைடர் படை
ReplyDeleteஇரத்தப்படலம் இரண்டு தொகுப்புகளாக வருவதை வரவேற்கின்றேன்.படிக்க பாதுகாக்க ஏதுவாக இருக்கும்.கட்டாயம் இரத்தப் படலம் தொகுப்பு ஜெயிக்கப் போவது வெகு நிச்சயம் ஆசிரியரே.நம்பிக்கை இருக்கிறது.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete// ஒரு புக்கா ? பற்பல புக்குகளா ? என்பதையெல்லாம் நிர்ணயிக்க வேண்டியது, நடைமுறை சாத்தியங்களேயன்றி ; காமிக்ஸ் ஆர்வங்கள் மாத்திரமே அல்ல //
ReplyDeleteசார், உங்களுக்கு எது சரியாக வரும் என நினைக்கிறீர்களோ அதனை செய்யுங்கள்.
ஏற்கனவே எந்த மாதிரி வித்தியாசங்கள் செய்யலாம் என நீங்கள் கோடிட்டு காட்டிவிடீர்கள் நண்பர்களை கவர.
ஒன்றை புத்தகமாக வந்தால் புக்கிங் எகிறும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
நீங்கள் இதன் புக்கிங் காலத்தை நீடித்ததால் நண்பர்கள் சிலர் நிலவரம் (தங்கள் பொருளாதார நிலை) சரியான பின்னர் புக்கிங் செய்து கொள்ளலாம் என இருக்கலாம் என நினைக்கிறன். எனவே நண்பர்கள் தங்கள் பொருளாதார நிலை சரியான பின்னர் புக்கிங் செய்ய ஆரம்பிப்பார்கள் என நம்புகிறேன்!
XIII மறுபதிப்பு --- ஒற்றை புக்" என்ற போகா ஊருக்கு பஸ் ரூட்டைத் தேடிடும் நேரத்துக்கு - 2 தொகுப்புகளாக வரவுள்ளதை இன்னமும் அறிந்திருக்கா நண்பர்கள் இருப்பின், அவர்களின் காதுகளில் போட்டு வைத்திட முயற்சித்தால், இந்த புக்கிங்குகளை அடுத்த வருஷம் ஏப்ரலுக்குத் தள்ளிப்போட வேண்டிய அவசியங்கள் இல்லாது போகலாம்//
ReplyDeleteநடைமுறை சிக்கல்கள் தரம் குறித்த தெளிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி சார்...மீதமிருக்கும் 70 நாட்களில் சுமார் 200 முன்பதிவுகள் தேவை so 70 ball 200 run... அடித்து ஆட வேண்டிய தருணமிது...இனியும் தாமதம் கூடாது நண்பர்களே....!!
This comment has been removed by the author.
Delete// நடைமுறை சிக்கல்கள் தரம் குறித்த தெளிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி சார் //
Deleteகடந்த ரத்த படலம் மறுபதிப்பில் இது போன்ற சிரமங்களை பலமுறை ஆசிரியர் சொல்லி இருக்கிறார்! ஆனால் பல நண்பர்கள் அதனை புரிந்து கொள்ளவில்லை அவர்களின் குண்டு புத்தக காதலால்! இனியாவது நடைமுறையில் எது சாத்தியம் என ஆசிரியர் சொல்வதற்கு உடன்படுவோமே!
And ..and ...and ...சரி....அதைப் பற்றி இப்போது வேண்டாமே ; கதை வெளிவரும் வரைக்கும் மௌனமே தேவலாம்///
ReplyDeleteஹிஹி எனக்கு புரிஞ்சு போச்சு சார்...மிக்க நன்றி....💐💐💐
சத்தியமாய்ப் புரிந்திருக்க வாய்ப்பு லேது சாமீ ! So இஸ்திரி வரப்போகுது ; spin-offs வரப்போகுதுன்னு கற்பனைகள் வேண்டாமே !
Deleteசார்130 பாகங்கள் வரும்ங்ராப்ல ரம்மி...விம்மி
Delete👍🙏
ReplyDeleteநில் கவனி கொல்....
ReplyDeleteஒரு ஹைடெக் திரைப்படத்தை புத்தகத்தில் காண முடியுமா ...? முடியும் இம்மாத 007 ஜேம்ஸ்பாண்ட்டின் நில் கவனி கொல் மூலம்..
கதையும் சரி சித்திரங்களும் சரி அடேங்கப்பா ரகம்... கதையில் வரும் சித்திரங்கள் அனைத்தும் அசத்துகிறது எனில் ஒரு முழு பக்க சித்திரங்கள் வரும் கட்டங்கள் இன்னும் அசுரடிக்கிறது .சித்திரங்கள் மட்டுமல்ல கதையுமே அசத்தல் ரகம்..ஓர் எதிர்பாரா திருப்பமாக வரும் க்ளைமேக்ஸ் பக்கங்களும் அட்டகாசம்.கதை படிக்க ஆரம்பித்தது தான் தெரிகிறது 137 பக்கங்களும் எப்படி போனது என்றே தெரியவில்லை...007 ன் வாகனம் போலவே ஜெட் வேகத்தில் பறந்து சென்றது.அன்றைய 007 ம் சரி இன்றைய 007 ம் சரி ஒரே விதமாகவே அசத்துகிறார்கள். இந்த கதையில் நாயகனை விட கதை நாயகி இன்னுமே அசத்துகிறார் எல்லா விதத்திலும் ...
சார் இதுவரை XIII முன்பதிவு நிலவரம் சார்...??
ReplyDeleteதட்டுத் தடுமாறி 98...
Deleten the meantime - JSK Special - ஸ்பைடரின் "சர்ப்பத்தின் சவால்" ஜாலியாய் புக்கிங் ஆகி வருகிறது ! And முகவர்கள் கூட இப்போதே அதன் பொருட்டு துண்டை விரித்து வைத்துள்ளனர் !
ReplyDelete#₹#₹#₹
சந்தா புத்தகம் என்ற நினைப்பிலியே அசால்ட் ஆறுமுகமாக இருந்து வருகிறேனே...விரைவில் இணைந்து விடுகிறேன் சார்...!
நானுமே
DeleteHai 13
ReplyDeleteவணக்கம் விஜயன் சார்
ReplyDeleteவேண்டுகோளுக்கு உடன் பதில் அளித்தமைக்கு நன்றி.
இப இரண்டு தொகுதியாக வரஇருப்பதும்
மகிழ்ச்சியே.
குறைந்த பட்சம் 50-100 பிரதிகள்
மட்டுமாவது சில நூறு அதிகவிலையில்
ஒரேகுண்டாக கிடைக்கும் வாய்ப்பு
உள்ளதா.3000விலை கொடுத்து வாங்கும்
புத்தகத்துக்கு கூடுதலாக 300 செலவழிப்பது
ஒரே புத்தகமாக பார்க்கும் ஆசையில்
மட்டுமே.இது ஒரிஜினல் கலெக்டர் எடிஷனாக ஏன் இருக்கக்கூடாது???.
மேலேயுள்ள பதிவை மறுக்கா படித்து அதையே பதிலாக எடுத்துக் கொள்ளுங்கள் சார் !
Deleteசில நூறு அதிகம் என்று வைத்துக் கொண்டு 100 புக்ஸ் பைண்டிங் செய்தால் எவ்வளவு தேறும் சார் - கூடுதலாக ரூ .முப்பதாயிரம் ? 12 கோடி மிஷினை ஒரு நாள் இயக்கிட முப்பதாயிரம் தர முன்வருவதும் , நம்ம ஈரோட்டு சந்திப்புக்கு தனிப்பட்ட ஒரு ரயில் விட்டாலென்ன ? என்று ரெயில்வே அமைச்சகத்துக்கு கேட்பதும் ஒன்றாகவே இருந்திடும் !
DeleteAnd அவர்களெல்லாம் ஏற்றுமதிக்கென இயங்கிடும் பிரத்யேக நிறுவனங்கள் ; நம்மையெல்லாம் அந்தத் தெருவுக்குள்ளேயே சேர்த்துக்கக் கூட மாட்டார்கள் ! அவர்களிடம் போய் 100 புக் பைண்டிங் ஆர்டர் சார் என்றால் XIII விட ஜாஸ்தி முழிப்பார்கள் !
Deleteஇல்லே..கையாலே செஞ்சே இருந்தாலும் பரால்லே ; அது கிழிஞ்சாலும் கவலையில்லே ' என்பது உங்கள் நிலைப்பாடாக இருந்தாலுமே எனது நிலைப்பாட்டில் மாற்றமே இராது ! கல்லைக் கட்டிக்க வேண்டியவனும் கிணற்றில் குதிக்கவேண்டியவனும் நானே தான் எனும் போது அது சார்ந்த தீர்மானத்தை மட்டும் உங்கள் கையில் ஒப்படைக்க முடியாதே சார் ! கனவு கண்டு விட்டீர்கள் என்ற ஒற்றைக் காரணத்தினால் அதன் பாதகங்களை மறக்க நீங்கள் தயாராக இருக்கலாம் ; நானுமே அவ்விதம் இருந்திட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு சரி தானா ?
இது குறித்த வினாக்களுக்கு இதுவே முற்றுப்புள்ளி வைத்திடும் தருணம் ! So the debate ends right here sir !
// கல்லைக் கட்டிக்க வேண்டியவனும் கிணற்றில் குதிக்கவேண்டியவனும் நானே தான் எனும் போது அது சார்ந்த தீர்மானத்தை மட்டும் உங்கள் கையில் ஒப்படைக்க முடியாதே சார் ! கனவு கண்டு விட்டீர்கள் என்ற ஒற்றைக் காரணத்தினால் அதன் பாதகங்களை மறக்க நீங்கள் தயாராக இருக்கலாம் ; நானுமே அவ்விதம் இருந்திட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு சரி தானா ? //
Delete+1 Agreed with your point.
/// And அவர்களெல்லாம் ஏற்றுமதிக்கென இயங்கிடும் பிரத்யேக நிறுவனங்கள் ; நம்மையெல்லாம் அந்தத் தெருவுக்குள்ளேயே சேர்த்துக்கக் கூட மாட்டார்கள்.///
Deleteதம்பி, இங்கல்லாம் வரப்படாது.அப்டி ஒரமாப் போயி விளையாடுன்னு அனுப்பிடுவாங்களா சாரே?
தடி தடியா நாய் வளக்கறாங்க சார் !
Deleteதடி தடியா நாய் வளக்கறாங்க சார்//
Delete🤣🤣🤣
நம்ம உப்புமாவிக்கு பயப்படாத நாய் இ லோகத்தில் உண்டோ? நான் வரேன் துணைக்கு.
Deleteஎடிட்டர் சார், அனு ROFL.....
Deleteகிராக்ஜாக் போடுவோம்
Deleteகவர்மென்ட்டே எதையெதையோ தனியார் மயமாக்கும்போது ஒரு தபா இ.ப. ஒரே புக்கா பைண்டிங் செய்ய outsourcing எதுவும் சாத்தியப்படுமா சார்? காண்டாகாதீங்க... தோணிச்சு. கேட்டுப்புட்டேன். :-) 🙄
ReplyDeleteநான் ரெண்டு புக்கா தர்றதை பிரிச்சு இஸ்கூல் புக்ஸை பைண்டிங் பண்ற மாதிரி ஒரே புக்கா நீங்க பண்ணிக்கோங்க - சிக்கல் தீர்ந்தது !
Delete// நான் ரெண்டு புக்கா தர்றதை பிரிச்சு இஸ்கூல் புக்ஸை பைண்டிங் பண்ற மாதிரி ஒரே புக்கா நீங்க பண்ணிக்கோங்க - சிக்கல் தீர்ந்தது ! //
Delete:-) :-)
கொரியர் பெட்டியில கோந்து ஒரு பாக்கட் ஃப்ரீ.
Deleteஇ.ப. புக்க பிரிக்கிறதா... தப்பு. தப்பு.. சாமி கண்ணை குத்திடும்.
Deleteநல்லா நூலால் தச்சி...ஒட்டலாமோ
Delete//மேலேயுள்ள பதிவை மறுக்கா படித்து அதையே பதிலாக எடுத்துக் கொள்ளுங்கள் சார் !//
ReplyDeleteரைட்டு.
இரத்தப் படலம் என்றாலே காமிக்ஸ் காதலர்கள் மத்தியில் ஸ்பீடா முள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சுழலும் போலும்.
ReplyDeleteபதிவுக்குத் தலைப்பு வைப்பதில் உங்களை வெல்ல யாரும் கிடையாது ஆசிரியர் சார்.
ReplyDeleteஒரு சிறப்பு வெளியீடு புத்தகத்தை அதுவும் ஏற்கனவே நீங்கள் சிறப்பாக வெளியிட்ட புத்தகத்தை எவ்வாறு பைண்டிங் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதை இத்தொழிலில் பழுத்த அனுபவம் வாய்ந்த நீங்கள் தீர்மானிப்பதே சரியாகவும், வாசகர்களுக்கு நன்மையாகவும் இருக்கும் Sir,
ReplyDeleteவாசகர்களாகிய நாம் Editor டம் உள்ள உரிமை மற்றும் சுதந்திரத்துடன் கூடிய அன்பின் காரணமாக பைண்டிங் விசயத்தில் எல்லாம் நமது விருப்பத்தை திணிப்பது என்பது சரியல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து, மற்றபடி பல நண்பர்கள் அவகாசம் உள்ள காரணத்தால் பொறுத்திருக்கிறார்கள்,கடைசி நேர Booking விறுவிறுப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
தங்களை வழிமொழிகின்றேன் சார்.
Deleteநூற்றிலொரு நல் வார்த்தைகள் ஜி.
+007.
// வாசகர்களாகிய நாம் Editor டம் உள்ள உரிமை மற்றும் சுதந்திரத்துடன் கூடிய அன்பின் காரணமாக பைண்டிங் விசயத்தில் எல்லாம் நமது விருப்பத்தை திணிப்பது என்பது சரியல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து //
Delete+1
நில்...கவனி...கொல் சத்தியமாக நான் நினைத்தே பார்க்கவில்லை,இவ்வளவு அட்டகாசமாக இருக்கும் என்று.
ReplyDeleteப்ரேம் பை ப்ரேம் ரசித்து ,பார்த்து ,படித்து மகிழ்ந்தேன்.படிக்கும் போதே மனதில் ஹாலிவுட் படமாய்ப் பார்க்கும் உணர்வைத் தந்தன சித்திரங்கள். கதை ,சித்திரங்கள் ,வண்ண நேர்த்தி மற்றும் இதழ் மேக்கிங் என்று அனைத்திலும் நிறைவைத் தந்த இதழ்.
மார்க் 10/10 .
இந்த மாத இதழ்களின் முதல் இடம் MY NAME IS BOND ,JAMES BOND அவர்களுக்கே.
This comment has been removed by the author.
ReplyDelete
ReplyDeleteDear Editor Sir,
ஒரே குண்டு இல்லை என்பதால் இது ‘ஸ்பெஷல் ரூட்டு இல்லை’ என்றாகிவிட்டது!
இரத்தப்படலம் மறுபதிப்பு என்பது 2தொகுப்பு.....13தொகுப்பு......10+3தொகுப்பு......17-4தொகுப்பு.........என்று கண்டிப்பாக வரவேண்டுமா என்ன?
போகாத ஊருக்கு ‘தப்பான ரூட்டு நம்பர் 13’ என்பது நன்றாக தெரிந்ததே! இந்த ரூட்டு இன்னும் எத்தனை தொகுப்பாக மறுக்காமறுக்கா வர வேண்டும்?
ஏனென்றால் ‘ரூட்டு நம்பர் 13’ கதை, தினத்தந்தியில் வரும் கன்னித்தீவு சிந்துபாத் கதைக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல என்று எப்போது 14ஆம் பாகம் வந்ததோ அப்போதே தெரிந்துவிட்டது!
‘மெட்ராஸ்’ பட வசனம் தான் நியாபகத்திற்கு வருகிறது!
‘இந்த சுவரு இன்னும் எத்தன பேரு உசுர காவு வாங்கப்போகுதே?????’
இப்போது நான் நீ என்று போட்டி போட்டு அடிதடியாக செய்யப்படும் முன்பதிவுகளை (அவ்வ்வ்வ்!!!!!!!!) வைத்து இரத்தப்படலம் மறுக்காமறுக்கா தேவை இல்லாத மறுபதிப்பு தேவையா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
நன்றி,
சாதாரண காமிக்ஸ் ரசிகன்.
(யாருக்கும் வெறியன் கிடையாது)
முன்பதிவில் இலக்கைத் தொட சாத்தியமாயின் இதழ் வர போகிறது ; சாத்தியமாகாது போயின் அவரவர் பணம் வாபசாகப் போகிறது ! இதில் குழப்பிக்க என்ன உள்ளது சார் ?
DeleteThis comment has been removed by the author.
Deleteபதிலுக்கு மிக்க நன்றி சார்.
Delete// ஸ்பைடரின் "சர்ப்பத்தின் சவால்" ஜாலியாய் புக்கிங் ஆகி வருகிறது ! And முகவர்கள் கூட இப்போதே அதன் பொருட்டு துண்டை விரித்து வைத்துள்ளனர் ! //
ReplyDeleteHappy to hear this news!!
முன்பதிவில் இலக்கைத் தொட சாத்தியமாயின் இதழ் வர போகிறது ; சாத்தியமாகாது போயின் அவரவர் பணம் வாபசாகப் போகிறது//
ReplyDeleteஇதுக்கு மேலயூம் டவுட்டு கேட்டா அவுங்க தெரிஞ்சு கேக்குறாங்களா தெரியாம கேக்குறாங்களான்னு புரியல..
70 நாள் 202 முன்பதிவு அவ்வளவே நம்மோட குறிக்கோளா இருக்கனும்.ஸ்டீலு அங்க எப்புடி 299 தான்னு உறுதியாலே....
// 70 நாள் 202 முன்பதிவு அவ்வளவே நம்மோட குறிக்கோளா இருக்கனும் //
Delete+1
கல்பூரம் அடிச்சு சத்தியம் பன்னுறல மக்கா
Deleteநான் ரெண்டு புக்கா தர்றதை பிரிச்சு இஸ்கூல் புக்ஸை பைண்டிங் பண்ற மாதிரி ஒரே புக்கா நீங்க பண்ணிக்கோங்க - சிக்கல் தீர்ந்தது !//
ReplyDeleteஏகற்கனவே அப்படித்தான் பண்ணியிருக்கேன் சார்.. உடுங்க இதையும் பண்ணியர்ல்லாம்...
62 டூ late
ReplyDeleteமேலே பதிவில் 3வதாக இருக்கும் அந்தப் பென்சில் ஓவியத்தின் நேர்த்தி மலைக்கச் செய்கிறது! குறிப்பாக அந்த விழிகளில் தெரியும் கூர்மையான, ஸ்திரமான பார்வையைக் கவனியுங்களேன்!!! ஆத்தாடிக்காத்தாடியோவ்!!!!
ReplyDeleteஅதெல்லாம் சரி 2வது புக் பண்ணியாச்சா தலைவரே...
Deleteநான் புக்க சொன்னேன் ஈவி அவர்களே... வேறு எதுவும் நினைப்பு வேண்டாம்....
Delete2வதுக்கு நான் புக் பண்ணலாம்னு நினைச்சிட்டிருந்த நேரத்தில் எனக்காக அதை இன்னொரு நண்பர் புக் பண்ணிட்டார் பழனிவேல் அவர்களே..! நானும் புக்கைதான் சொன்னேன்! ;)
Delete///And ..and ...and ...சரி....அதைப் பற்றி இப்போது வேண்டாமே ; கதை வெளிவரும் வரைக்கும் மௌனமே தேவலாம்/////
ReplyDelete--- புரிஞ்சி போச்சிங் சார்...!!
இரத்தப்படலம் கேம் ஓவர்..!!!
கட்ட கடேசி பாகம், சற்று 2 அல்லது 3 எல்லாமே ஓவர், ஒன்ஸ் ஃபார் ஆல்!
நாமும் வெளியிடப்போகும் கடேசி இரத்தப்படல இதழும் அதுவே!!!!
(ஏற்கெனவே இந்த ஆண்டு வெளிவருவது தான், நாம வெளியிடும் கடைசி ஸ்பின் ஆப் என தாங்கள் அறிவித்து இருந்ததாக ஞாபகம்)
அதே அதே....
Delete
Deleteநாமும் வெளியிடப்போகும் கடேசி இரத்தப்படல இதழும் அதுவே!!!!///
அப்படியெல்லாம் சொல்லமுடியாது தலைவரே... காலம் மாறும் Spinoff ம் நாம் வெளியிடும் வாய்ப்பு உண்டு...
காலம் மாறினா மகிழ்ச்சி தானே😉😍😍😍😍
Deleteவந்ரும்ல மக்கா....ஆசிரியர பாத்துக்குவம்
Deleteகடேசி ஓவியத்தை பார்த்தா ஜேசனுக்கு பைனலாக ஒரு சோடி கெடைச்சிட்டது போல படுதே....!!!!
ReplyDeleteஇந்த மாத 2132ல..ஜேசனும் ஜேனட்டும் கணவன் மனைவியாக இருப்பதை ஏற்க இயலவில்லை...;
ஜேசனை கவுக்க ஜேனட்டும்,
ஜேனட்டை கவுக்க ஜேசனும் டைம் பார்த்துட்டு இருப்பது நாம் அறிந்ததே...!!
இந்த மாத 2132ல..ஜேசனும் ஜேனட்டும் கணவன் மனைவியாக இருப்பதை ஏற்க இயலவில்லை...; // இல்லையே நண்பரே .. ஜேனட்டின் கணவராக வரும் நபர் வேறு....
ReplyDeleteபக்கம் 7ல் பிரசிடெண்ட் தாமஸ் அல்லெர்டினிடம் பேசுவது 13 தானே???
Deleteசாயல் அது போல் உள்ளது ஆனால் தலையில் வெள்ளைத்தழும்பு அடையாளம் கிடையாது.. மேலும் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் வந்திருப்பதாக கூறுகிறார்கள்...
Deleteஐந்தாறு நாட்களாக மண்டையை உருட்டிக் கொண்டிருந்த ப.ஒ.கு.பு கி.நா'க்கு ஒருவழியாக நேற்றிரவு எடிட்டராலும், நண்பர்களாலும் சுபம் போடப்பட்டதையடுத்து, இன்று மாலையில் ஜேம்சு பாண்டை கையிலெடுக்கப்போகும் குஷியில் இருக்கிறேன்!
ReplyDeleteகனமான கி.நா'க்கள் வெளியாகிடும் தருணங்களில், கூடவே ஒரு லைட்-வெயிட் கார்ட்டூன் அதகளமும் வெளியாகியிருந்திருந்தால் ஆசுவாசப் படுத்திக்கொள்ள ஏதுவாக இருந்திருக்கும்!!
ப்ளீஸ் நோட் திஸ் போயிண்ட், யுவர் ஆனர்!!
// ஒரு லைட்-வெயிட் கார்ட்டூன் அதகளமும் வெளியாகியிருந்திருந்தால் ஆசுவாசப் படுத்திக்கொள்ள ஏதுவாக இருந்திருக்கும்!! //
Delete+1
\\ப்ளீஸ் நோட் திஸ் போயிண்ட், யுவர் ஆனர்!!\\\
Delete+11112
இந்த மாத இதழ்களை முடித்தாயிற்று,
ReplyDelete1.நில் கவனி கொல்-இதுவரையில் வந்த பாண்ட் சாகஸத்தில் சிறந்த ஓவியபாணிகள்,விறுவிறுப்பான கதைக்களம்,தெறிக்கும் வேகம்-10/10.
2.கி.நா-கணிக்க முடியாத கதையோட்டம்,வித்தியாசமான வாசிப்பனுவத்தையும்,உணர்வையும் ஏற்படுத்தியது,எல்லோரும் துவைத்து விட்டதால் சொல்ல ஒன்றுமில்லை,ஓவியங்களை விட கதைக்களம்,பாணி சுவராஸ்யத்தை ஏற்படுத்தியது,மொழியாக்கம் மிகச் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது,மிகச் சிறப்பான வசனங்கள்,நிறைய வசனங்களை உதாரணமாக சொல்லலாம்...
எக்ரியனின் விவரிப்பு பாணியே நம்மை கதையுடன் இன்னும் கூடுதலாக பிணைக்கிறது,உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஏதேனும் மர்மங்கள் வாசம் செய்து கொண்டுதான் உள்ளன,அவற்றை சுற்றிலும் பல்வேறு கதைகள் உலா வந்து கொண்டுதான் உள்ளன,அவ்வப்போதான வித்தியாசமான இதுபோன்ற முயற்சிகள் வரவேற்புக்குரியவையே,படக்கதைகளில் இதுபோன்ற முயற்சிகள் வியப்பூட்டுபவை.-10/10.
3.2132 மீட்டர் எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் சாகஸம்,அடுத்த சாகஸத்தை எதிர்பார்க்குமாறு முடித்துள்ளது எதிர்பார்த்ததே,ஓவிய பாணிகள் சிறப்பாக அமைந்துள்ளன-09/10.
4.டயபாலிக்-முந்தைய சாகஸத்திற்கு இது எவ்வளவோ தேவலாம்....
4 in 1 விமர்சனம் சூப்பர்! 10/10 ;)
Deleteரவி அண்ணா அருமையான விமர்சனம். சூப்பர் இந்த மாதம் மற்றும் ஒரு ஹிட் மாதம்.
Deleteஅதே,அதே குமார்...
Deleteஒரே பதிவு நான்கு விமர்சனம்...:-)
Deleteபோன பதிவுக்கு வந்த கமெண்டுகளை எல்லலாம்ஸ்கிப் பண்ணணிட்டேன். வருசக் கடைசில புக்கெல்லாம் வரும் போது ப. ஒ. கு. பு. படிச்சிட்டு அப்பாலிக்கா படிச்சுக்கலாம்.
ReplyDeleteடேஞ்சர் டயபாலிக் “துரோகம் ஒரு தொடர்கதை”....
ReplyDeleteடயபாலிக்கின் மீள் வருகையின் இரண்டாம் இதழ் பற்றி பெரிய எதிர்பார்ப்பின்றிதான் புத்தகத்திற்குள் நுழைந்தேன்... ஆனால் எதிர் பார்த்ததை விட நன்றாகவே இருந்தது...
Plusகள்...
•அற்புதமான கண்கவர் அட்டை
•தெளிவான அழகிய சித்திரங்கள்
•இலகுவாக படிக்க பெரிய சைஸ்
•பல திருப்பங்கள் கொண்ட சுவாரஸ்யமான கதையோட்டம்
•குறைந்த விலையிலான் புத்தகம்
Minusகள்...
•எப்பொழுதும் போல் காரணமின்றி கொலைகள்.. நல்லவேளை பாட்டிகள் யாரும் டயபாலிக் கண்ணில் சிக்கவில்லை
இப்படிப்பட்ட கதைகளை தேர்ந்தெடுத்தால்.. டேஞ்சர் டயபாலிக்... தனது Second Inningsல் பல centuryகளைப் போடுவார் என்பதில் ஐயமி்ல்லை...
கொரானா புண்ணியத்தில் டொய்ங்க் டொய்ங்க்னு தேதியானா அக்கவுண்ட்ல சம்பளம் விழுந்து ஆறு மாசமாகிடுச்சு!
ReplyDeleteஒருவழியாக சம்பளகாரனை தொழிலதிபர் ஆக்கிய கொரோனா வாழ்க! (ஹிஹி! ஒரு ரூபாய் முதலீடாய் இருந்தாலும் நாமே ராஜா, நாமே மந்திரிங்கறது தனி கெத்து தானே!)
ஒரு ரூபாய் தொழிலதிபர் என்ற முறையில் நாயாபேயா வேலை பார்க்க வேண்டியிருப்பதால், ...
அட இதெல்லாம் ஏன் சொல்ல வர்றேன்னா இந்த கி.நா. அலசலில் கலந்துக்கும் முன்பே பஞ்சாயத்த கலைச்சுட்டீங்களேனு தான்!
நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க மிதுன் உங்க அலசலுக்கு பலர் வெயிட்டிங். அதில் நானும் ஒருவன்
Deleteசொந்த பிஸினஸில் அது ஒரு வசதி. முடிவுகள் எல்லாமே நம் கையில். அது ஒரு சுகமான அனுபவம். கொஞ்சம் வளர்ச்சி அடைந்தால் நம் கீழும் நாலு பேர் வேலை செய்வார்கள்.நம்மாலும் நாலு குடும்பம் வளரும் என்பது மனதிற்கு திருப்தி தரும் விஷயம். நீங்கள் மேலும், மேலும் வளர மனப்பூர்வமான வாழ்த்துக்கள் மிதுன் சார்.
Deleteஇது கொரோனாவின் பாஸிட்டிவ்வான பக்கம்.
நீங்கள் மேலும், மேலும் வளர மனப்பூர்வமான வாழ்த்துக்கள் மிதுன்!
Deleteஎன் வாழ்த்துகளும் மிதுன்!
Deleteவாழ்த்துக்கள் நண்பரே..
Deleteநில்..கவனி..கொல்.
ReplyDeleteஇப்போதுதான் முடித்தேன். வசனங்கள் குறைவு. ஆக்க்ஷன் அதிகம். அது சரி. 007க்கு வசனம் எதற்கு? தலைப்பே அதைச் சொல்லி விடுகிறதே.
சிம்பிளாக சொல்வதானால், வில்லன் சாகா கென்ஜியின் (சாகா கென்ஜி என்று பெயர் வைத்துக் கொண்டு கடைசியில் செத்துவிடுகிறார்.) Virtual reality கண்ணாடியை நாம் மாட்டிக்கொண்டு ஜேம்ஸ்பாண்ட் படம் பார்க்கிற feeling.
பக்கத்துக்கு பக்கம், frame by frame தெறிக்க விடும் மிரட்டலான சித்திரங்கள். வேற லெவல்.
ஆரம்பத்தில் வரும் ஆல்ப்ஸ் மலைப் பிரதேச சேஸிங், ரோஜர் மூரின் for your eyes only படத்தில் வரும் சேஸிங்கை நினைவூட்டுகிறது.
மொத்தத்தில் பாண்ட் 2.0 மீண்டும் ஒரு முறை தனது பாணியில்அதகளத்துடன் ஸ்கோர் செய்கிறார்.
பத்து சார்! நாங்கள் நினைத்ததைக் காட்டிலும் பெரிய ரவுடிதான் நீங்கள்!! ;) அட்டகாசமான விமர்சனம்!! வாழ்த்துகள்!! :)
Deleteஅடேங்கப்பா விமர்சனம். ஆல்ப்ஸ் மலை துரத்தல் செம்ம செம்ம.
Deleteகமெண்ட் தப்போன்னு தோணிச்சு. அது தான் delete பண்ணிட்டேன். அதுக்குள்ள பாத்துட்டீங்க போல. செம fast ஆ இருக்கிங்க. நன்றி ஈவி.
Delete:-)
Deleteபத்து சார் செயலரின் ஸ்பீடு எப்படிப்பட்டதுன்னு எனக்கு தான் தெரியும்...ஆசரியரின் பதிவு இங்கே பப்ளிஷ் ஆகிறதுக்கு முன்னாடியே ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே என பப்ளீஷ் ஆகும் அளவிற்கு அவர் ஸ்பீடு இருக்கும்...:-)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம்!
ReplyDeleteசார்!இரத்தப்படலம் மறுபதிப்பு செய்வது என்று வாசகர்களுக்காக முடிவெடுத்து விட்டீர்கள்.ஆனால் ஒரே குண்டு புக்காக வெளியிட இயலாது என்று தெளிவுபடுத்தி விட்டீர்கள்.ஒரே குண்டு புக்கோ அல்லது இரண்டு என்றாலோ ஏற்கெனவே வாங்கியவர்கள் வாங்க யோசிப்பார்கல்.இதுவே மேக்சி சைஸ் என்று அறிவித்திருந்தால் இந்நேரம் இலக்கை எட்டியிருக்கும்.டெக்ஸ் வில்லர் மறுபதிப்பெல்லாம் நார்மல் சைசே நல்லாயிருக்கும்.ஆனால் அவை மேக்சியில் வருகிறது.சரி மேக்சியும் இல்லை.19 பாகத்தையும் தனித்தனி இதழாக கொடுங்கள்.அவரவர் விருப்பப்படி பைண்டிங் செய்து கொள்ளட்டும்.பட்ஜெட் கட்டுபடியானால் பாக்ஸ் இல்லையெனில் புத்தகங்கள் மட்டும்!இது தங்களின் வாசகனாக எனது விருப்பம் மட்டுமே!நீங்கள் இது குறித்து தெளிவுபடுத்தி இருந்தாலும் எனது எண்ணத்தை வெளிப்படுத்தாமல் இருக்க இயலவில்லை.
ReplyDelete****** நில்.. கவனி.. கொல்..! *****
ReplyDeleteஉலக நாடுகளிலுள்ள முக்கியஸ்தர்களின் ரகசியங்களை டிஜிட்டல் வடிவில் திருடி ஒரு கருப்புப் பெட்டியில் சேமித்து வைக்கிறான் சர்வதேச ஹைடெக் திருடனொருவன்! அதை மீட்கப் பல்வேறு நாடுகளின் உளவுத்துறை ஆட்களும் அந்தத் திருடனை வலைவீசித் தேட, இங்கிலாந்து சார்பில் நம் 007ம் கோதாவில் இறங்குகிறார்! 007க்கு உதவியாக இங்கிலாந்து ராணுவத்தின் ரகசியப் பிரிவொன்றில் முன்பு பணியாற்றிய இளம் பெண்ணொருவளும் சேர்ந்துகொள்ள, அளவான ரொமான்ஸுடனும், அளவில்லாத ஆக்ஸன் களேபரங்களோடும் ஒரு புல்லட் ரயிலின் வேகத்தில் இறுதிவரை தடதடக்கிறது மீதக் கதை!! இறுதியில் அந்தக் கருப்புப் பெட்டிக்கு நேரும் கதி - அட்டகாசமான ட்விஸ்ட்!!
சித்திரங்கள் வர்ண ஜாலம்!! முழுப்பக்க, பெரிய்ய்ய பேனல்களில் மிரட்டுகிறது!! எத்தனை வண்டி மசியை கொட்டி அச்சடித்தார்களோ.. எடிட்டருக்கே வெளிச்சம்!!
அளவான, நறுக் சுறுக் வசனங்கள் எல்லாம் - வேற லெவல்!!
இரண்டு ஆக்ஸன் காட்சிகளில் பேனல்கள் தவறுதலாக swap ஆகியிருப்பது இக்ளியூண்டு குறை! (எப்படி கவனிக்காம விட்டீங்க எடிட்டர் சார்?)
மற்றபடி, கோவிட்-19ஆல் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில், வீட்டிலேயே ஒரு ஹைடெக் 007 சினிமாவைப் பார்த்த அனுபவத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது இந்தப் படைப்பு!!
எனது ரேட்டிங் : 9.75/10
பின்னுறீங்க விஜய்! வர வர நீங்கள் ரொம்ப நன்றாக விமர்சனம் எழுதுறீங்க. நீங்கள் பேசாம ஹாலிவுட் படங்களுக்கு விமர்சனம் எழுத போகலாம்!
Deleteஅவ்வ்வ்வ்... _/\_
Deleteஅருமை EV ரசிகர் ஐயா நீவிர்.....
Deleteசெம செயலரே...
Deleteப.ஓ. கு.புனல் ஒரே மூச்சில் படித்துவிட்டேன். படித்தவுடன் எனக்கு தோன்றியது சுஜாதாவின் 'நரகம்' என்ற விஞ்ஞானக் கதையின் முடிவுதான்.அதிலும் இப்படித்தான். எல்லாவற்றையும் சொல்லி முடித்த பின் அமர்த்திருப்பவர் எழுந்து "சரி ,வாருங்கள் போகலாம்" என்பார். கதை சொல்பவர் "இது எந்த இடம்" என்று கேட்பார். 'நரகம்' என்ற ஒற்றை வரியுடன் கதை முடியும். இந்தக் கதையின் முடிவும் எனக்கு அதை நினைவூட்டியது.
ReplyDeleteவசனங்கள் கூர்மையான இடங்கள்.
" கோடானுகோடி காலைகளில் உதயமான சூரியன் இன்று மல்லாக்க வீழ்ந்துவிட்டதோ?"
"மனுஷனாய் பிறந்தவனுக்கு முறையான கல்லறைக்கு கூட ஒரு வரம் தேவை போலும்"
"வாழ்க்கை ரொம்பவே முரணானது மட்டுமல்ல.
ரொம்ப மோசமான கதை சொல்லியும் கூட. அது உருவாக்கும் ஒவ்வொரு கதையும் மரணம் என்ற முற்றுப்புள்ளியிலேயே முடிவுறுகிறது."
கிராபிக் காவல் என்னும் தொப்பியில் மற்றும் (மீண்டும்) ஒரு இறகு சிறப்பாக பொருந்தி இருக்கிறது.
இரு வண்ணத்தில் வித்தியாசமான சித்திர தாண்டவம்.
உங்களின் வித்தியாசமான கதைத்தேடல்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்கள் ஆசிரியரே. வாழ்த்துக்கள்.
பத்மநாபன் @ கடந்த பதிவில் தான் சொன்னோம் நீங்களும் விமர்சனம் எழுதுங்கள் என்று, எங்கள் ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள்! நன்றாக உள்ளது! தொடர்ந்து எழுதுங்கள்!
Deleteபத்து சார் சும்மா சொல்லக்கூடாது. நல்லாவே விமர்சனம் எழுதுகிறீர்கள்.
Deleteஅருமையான விமர்சனம்.
Deleteசூப்பர் விமர்சனம்! தொடர்ந்து கலக்குங்க பத்து சார்!
Deleteபத்து சார் அழகான விமர்சனம் தொடருங்கள் அனைத்து இதழ்களுக்கும்...
DeleteMohabbat Tujhe Alvida latest Episode 10 Full HD - Mohabbat Tujhe Alvida is a latest drama serial by M AS tve and M AS tve Dramas are well-known for its quality in Pakistani Drama & Entertainment production. Today Hum TV is broadcasting the Episode 10 of Mohabbat Tujhe Alvida. Mohabbat Tujhe Alvida Episode 10 Full in HD Quality 19 August 2020 at Hum TV official YouTube channel. Enjoy official M AS tve Drama with best dramatic scene, sound and surprise.
ReplyDeleteதெரியாமல் வந்துவிட்டாரோ?
Deleteஇது காமிக்ஸ் தளம் சாமியோவ்.!!
சார்.. எங்களுக்கு காமிக்ஸ் படிக்கவே டைம் கிடைக்க மாட்டேங்குது.. இதுல உங்க ட்ராமாவையெல்லாம் எங்கே பாக்குறது?
Deleteசரி.. சரி.. உங்க ட்ராமால ஏதாச்சும் கெஸ்ட் ரோல் இருந்தாச் சொல்லுங்க.. வந்து தலையக் காட்டிட்டுப் போறேன்!! அப்புறம் பாருங்க உங்க TRP ரேட்டிங் எப்படி எகிறுதுன்னு!!
நீங்க வேணா கெஸ்ட் ரோலா போங்க செயலரே..
Deleteநான் நடிச்சா ஹீரோதான்..:-)
ஆமா எனக்கு ஒரு டவுட் மேல அந்த படத்தில் scarllet johanson XIII உடன் என்ன செய்து கொண்டு இருக்கிறார்.
ReplyDelete@ K.S.
Deleteஹாலிவுட் தன் பங்கிற்கு XIII பற்றி படம் எடுத்துத் தாக்கியாச்சு. அதற்கு இப்போது சரி கட்ட காமிக்ஸல, தற்போது ஹாலிவுட்டில் அவென்ஜர்ஸ், லூசி போன்றப் படத்தில் நடித்து முன்னணியில் இருக்கும் Scarlett Johansson-னின் கையைப் பிடித்து காமிக்ஸ்குள்ள இழுத்துடாங்கப் போலிருக்கிறது....?
மொய்தீன் சார் valid point.
Deleteதவறுக்கு மன்னிக்கவும். கிராபிக் நாவல் என்பது காவல் என்று டைப்பிட்டது.
ReplyDeleteஅது நீங்கள் சொல்லாமலேயே புரிந்து கொண்டோம். கவலை வேண்டாம்.
Delete124வது
ReplyDelete
ReplyDeleteநில் - கவனி- கொல்..
ரொம்ப கரண்ட் சப்ஜெக்ட் கதையா போச்சு..
கதை:
ஒரு சின்ன ஊரில் கோர்ட் கேஸ் நடக்குது . அந்த ஊர்லயே வயசான ஒரு கிழவியை சாட்சியா விசாரிச்சுக்கிட்டிருக்காங்க .
வக்கீல் : பாட்டி உங்கள பத்தி சுருக்கமா சொல்லுங்க .
பாட்டி : என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ? உன்னைப்பத்தி சொல்லவா ? நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப பய . சின்ன சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே . அப்புறம் ஒரு நாள் நம்ம ஊரு கோவில் உண்டியலை உடைச்சு நகை பணம் எல்லாம் திருடிட்டே . ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான் . இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற ?
அதிர்ந்து போனார் வக்கீல் . மெல்ல சமாளிச்சிகிட்டு "சரி பாட்டி இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார்.
பாட்டி : தெரியுமாவா - இந்த மொள்ளமாரி சின்ன வயசுல ஊர் பொண்ணுங்க ஒண்ணை கூட விட்டு வைக்க மாட்டான் . சரியான பொம்பளை பொறுக்கி . பஞ்சாயத்து இவனை ஊற விட்டு ஒதுக்கி வச்சுருச்சு . இப்போ என்னமோ கோட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான்
ஜட்ஜ் : மேஜையை தட்டி : " அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடும் " ன்னு உத்தரவிட்டுட்டு வக்கீல்கள் இருவரையும் தன அறைக்கு அழைத்தார் .
ஜட்ஜ் : கோர்ட் மறுபடியும் தொடங்கியதும் நீங்க ரெண்டு பேரும் " இந்த ஜட்ஜ் அய்யாவை தெரியுமா "ன்னு அந்த கிழவி கிட்ட கேட்டீங்கன்னா செருப்பு பிஞ்சுடும் " ன்னு வார்னிங் குடுத்தார் .
நீதி: இன்பர்மேஷன் ஈஸ் பவர்..
பாண்ட் கதையும் இதேதான்..
நம்ம நாட்டுல 59 ஆப்களுக்கு தடை விதிச்சதெல்லாம் இந்த தகவல் திருட்டு விஷயத்தை வச்சுதான்..
அமெரிக்கா ஒரு பெரிய சர்வதேச நிறுவனத்தை முடக்குனதே இதே விஷயத்துக்குதான்...
சரியான நேரத்துக்குதான் இந்த கதை வந்திருக்கு...
நம்ம காமிக்ஸ்ல கூட அறிமுகமாகியிருக்கும் ஜே. எட்கர் ஹூவர் அமெரிக்க FBI ஐக்கு முதல் டைரக்டரா இருந்தப்போ Hoover's files ரொம்ப பிரசித்தம்..
கால்வின் கூலிட்ஜ் - ல ஆரம்பிச்சு ரிச்சர்ட் நிக்ஸன் வரைக்கும் இருந்த பல அமெரிக்க ஜனாதிபதிகளை ஆட்டி வச்சாரு..
காரணம் அவர் கைவசம் இருந்த தகவல்கள்...
19 வயசுல ஈவி என்னவெல்லாம் பண்ணாருன்னு ஆதாரத்தோட தகவல் நம்ம கிட்ட இருந்தா அவர் கிட்ட இருக்கிற பாதி பழைய காமிக்ஸ புடுங்கி புடலாம்- ங்கறது ஒரு உதாரணம்...
பாண்ட் டோட இந்த கதை எப்ப வந்ததுன்னு தெரியல...
ஆனா இப்பத்திய சூழலுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு.........
மேக்கிங் ,தரம் எல்லாம் பத்தி யாரும் மூச்சு விட முடியாது..
விஜயகுமாரி மாதிரி பொண்டாட்டி வேணும்னு ஒருத்தன் நினச்சுருக்கையில வைஜயந்திமாலா மாதிரி பொண்டாட்டி கிடைச்சு வாயடைச்சு நின்ன கதைதான்
( பத்து சாருக்கும் போய் சேரணும்னுதான் இந்த உதாரணம் சொன்னேன்...மத்தபடி அப்டி ஒண்ணும் வயசாயிடல)
அபடி ஒரு மேக்கிங்
9.5/ 10
இள முறுவல் வரவழைக்க வச்சது ஒரு விஷயம்..
Deleteபாண்ட் ஆரம்பத்துல பஸ்ல ஏறதுக்கு முன்னாடி ஒரு டயலாக் சொல்லுவாரு..
தவளையோட தொப்புள் மாதிரின்னு பாதாளத்தில இங்கிலாந்து பொருளாதாரம்
இருக்கறதா...
பாலூட்டிகளுக்கு மட்டும்தான் navel உண்டு..இதுல கூட ஒரு சில பாலூட்டிகளுக்கு பெல்லி பட்டன் அப்டிங்கற தொப்புள் கிடையாது..
தவளை ஒரு ஆம்பிபியன்..முட்டை போடறது..
அப்பறம் ஏது நேவல்?
மனுஷங்கள்ள ஆதாம்,ஏவாள் தவிர எல்லாத்துக்கும் நேவல் உண்டு..
தவளைக்கு தொப்புள் இருந்தா என்ன?
இல்லாட்டி என்னா ?
அப்டிங்கறீங்களா?
கதையில வர்ற சிலாவையும் சாளரம் ( நன்றி எடிட்டர்) வழியா தெரியற நிலாவையும் பத்தி நினச்சிட்டே தூங்க போறேன்...
ஹா ஹா ஹா உங்களது பாணியில் ஒரு அட்டகாசமான விமர்சனம். நீண்ட நாட்களுக்கு பிறகு.
Deleteநீங்கள் பத்து சாருக்காக கொடுத்த உதாரணம் செம்ம.
அதுவும் அந்த ending செம்ம செம்ம.
வாய் விட்டு சிரித்து விட்டேன் சார். நன்றி
@ செனா அனா
Deleteகர்ர்ர்ர்க்.. கர்ர்ர்ர்க்
காலையில் கண் விழிச்சதுமே உங்க விமர்சனத்தைப் படிச்சேன்..
அப்புறமென்ன.. ஒரு பத்து நிமிஷத்துக்கு கட்டில் குலுங்கிக்கிட்டிருந்துச்சு!
???????
Deleteதவளை + தொப்புள் சமாச்சாரம் நண்பர்களின் அலசல்களில் முன்னமே இடம்பிடிக்குமென்று எதிர்பார்த்திருந்தேன் ! இப்போதாச்சும் டாக்டரின் பெயரைச் சொல்லி அலசியாச்சூ !
Deleteபத்து சார் கேள்விக்குறியாய்ப் போட்டுள்ளதைப் பார்த்தால் பயமாக உள்ளது.
DeleteEV சிரித்த சிரிப்பில் கட்டில் குலுங்கியது சரி தானே EV சார்.
@சின்னமனூர் சரவணன்
Deleteஹிஹி!! அதையே ஞான் கி.நா பாணியில் சொல்லியிருந்தேன் நண்பரே! ;)
செனா அனாஜீ...
Deleteஹாஹாஹா...விமர்சனம்...:-)))
டியர் விஜயன் சார்,
ReplyDeleteஇரத்தப் படலம் - மறு மறு வண்ணப் பதிப்பை வாங்க விரும்புவர்களை மூன்றாகப் பிரிக்கலாம்.
1. B/w_யில் நீங்கள் வெளியிட்ட முழு தொகுப்பை கைவசம் வைத்திருந்து, கலரில் வெளியிடும் போது அவ்வளவு விலையா என்று மலைத்து - வாங்காமல் தவறவிட்டு - வான்ஸ் ஓவியத்தை கலரில் பார்க்கும் வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்று விரும்பி புக்கிங் செய்பவர்கள் - கண்டிப்பாக புக்கிங் செய்வார்கள்.
2. "குண்டு புக்"காதலர்கள் -இவர்களுக்கு அதில் அப்படி என்ன மோகமோ - தெரியவில்லை. தானும் அதை வைத்துப் படிக்கப் போவதில்லை. மற்றவர்கருக்கும் படிக்கக் கொடுக்க மனம் வராது.(மற்றவர்களும் இவ்வளவு தடி புக்கா- என்று கொட்டாவி விட்டு விட்டு விலகிச் சென்று விடுவார்கள்). இருந்தும் அவர்கள் காமிக்ஸ் கலெக்ஷனில் அப்படி ஒரு புக்கை விரும்புகிறார்கள்.
3. என்னைப் போல் சிலர் இருக்கலாம்?i
என்னிடம் " இரத்தப் படலம் " - B | W - முழு தொகுப்பும் உள்ளது.
வண்ணத்தில் மூன்று தொகுதிகளாக வெளிவந்த இதழும் உள்ளது.
எனவே எனது .. தேவை பூர்த்தி ஆகி விட்டது.
ஆனால் எனக்கு மற்றவர்களுக்கு படிக்க கொடுக்கத்தான் இதழ் வேண்டும். அதற்கு எனது பொக்கிஷத்தை கொடுக்க இயலாது.
அவர்கள் கதை புத்தகம் படிப்பவர்கள் மட்டும் தான். உடனே சந்தா செலுத்தி மெம்பர் ஆகி விடவும் போவதில்லை. தடி புக்காக கொடுத்தால் .சுவராஸ்யம் இல்லாமல்- வைச்சிருக்கேன் மெதுவா படிக்கனும் என்று சொல்வார்கள்.
எனவே, என்க்கு பிறருக்கு படிக்க கொடுக்கத்தான் புத்தகம் வேண்டும்.
நான் பல முறை கேட்டது தான். நீங்கள் இரண்டு விதமாக முயற்சி செய்யுங்களேன்.
ஒன்று - ஒரே இதழாக - ஹார்டு பவுண்ட் அட்டையிலும் விருப்பமுள்ளவர்களுக்கு தயார் செய்யுங்கள் - இது காமிக்ஸ் காதலர்களுக்கு.
இரண்டு - இரண்டிரண்டு பாகங்களாக இணைந்து - 9 இதழ்களாக சாதா (தற்போது வெளியிடுவது போல்) அட்டையில் ெவளியிடுங்கள். இது முதலாவது - மூன்றாவது நபர்களை திருப்தி Uடுத்தி விடும்.
இது பற்றி ரசிகர்கள் கருத்து கேளுங்களேன்.
(இது சாத்தியம் இல்லை என்று கருதினால் B | Wஇதழைத் தான் கைமா - பண்ண தீர்மானித்திருக்கிறேன். இரண்டிரண்டு இதழ்களாக நானே தயார். செய்யப் போகிறேன். எனக்கு 9- விளம்பர நோட்டிஸ் மட்டும் அனுப்பி விடுங்கள் - முன் பக்கம் ஒட்ட) நன்றி._
#இரத்தப் படலம் - மறு மறு வண்ணப் பதிப்பை வாங்க விரும்புவர்களை மூன்றாகப் பிரிக்கலாம்#
Deleteநான் 4ஆவது ரகம் சார்!என்னிடமும் " இரத்தப் படலம் " - B | W - முழு தொகுப்பும் உள்ளது.
வண்ணத்தில் மூன்று தொகுதிகளாக வெளிவந்த இதழும் உள்ளது.எனவே,நான் மேலே கேட்டுள்ளது போல, ஓன்று மேக்சி சைஸ் அல்லது இதே சைஸ் என்றால் 19 தனி இதழ்கள்!
இப்டி பண்ணிட்டா சுளுவா முடிஞ்சிடும் சார் - அல்லாரோட பிரச்னைங்களும் !
Deleteதுண்டு தாளா 1000 பக்கங்களை அச்சடிச்சு ; ஒரு நாலைஞ்சு ராப்பரோட பொட்டலம் போட்டு அனுப்சிட்டாக்கா ஜனம் எப்படி பைண்டிங் பண்ணிக்க நினைக்கிறாங்களோ அப்டியே பண்ணிக்கலாமில்லே ?
ஒரே நாடு ; ஒரு புக்குனா ரைட்டு..!!
இல்லீங்கோ.. இது கோவிட் 19 காலம் சொல்லோ 19 பாகமா பைண்டிங் பண்ணணும்னாலும் ஜூட் !
அக்காங்.. முன்னே வந்தா மேரியே மூணே ப்பாக்கம் தான் வோணும்னாக்கா அத்தும் செரி தான் !
All பிரச்னை ஓவர் !
// துண்டு தாளா 1000 பக்கங்களை அச்சடிச்சு ; ஒரு நாலைஞ்சு ராப்பரோட பொட்டலம் போட்டு அனுப்சிட்டாக்கா ஜனம் எப்படி பைண்டிங் பண்ணிக்க நினைக்கிறாங்களோ அப்டியே பண்ணிக்கலாமில்லே ? //
Delete:-) :-)
:-))))
Delete///துண்டு தாளா 1000 பக்கங்களை அச்சடிச்சு ; ஒரு நாலைஞ்சு ராப்பரோட பொட்டலம் போட்டு அனுப்சிட்டாக்கா ஜனம் எப்படி பைண்டிங் பண்ணிக்க நினைக்கிறாங்களோ அப்டியே பண்ணிக்கலாமில்லே ?///
Deleteசூப்பர் ஐடியாங் சார்!! ஸ்பைரல் பைண்டிங் பண்ணி வச்சுக்குவேன்.. இருபதே ரூபால வேலை முடிஞ்சிடும்!! :)
துண்டு தாளா 1000 பக்கங்களை அச்சடிச்சு ; ஒரு நாலைஞ்சு ராப்பரோட பொட்டலம் போட்டு அனுப்சிட்டாக்கா ஜனம் எப்படி பைண்டிங் பண்ணிக்க நினைக்கிறாங்களோ அப்டியே பண்ணிக்கலாமில்லே ?
Deleteசார் முக்கியமான ‘பஞ்ச்’ மிஸ்சிங்!!!
‘ஒலக காமிக்ஸ் வரலாற்றில் மொதல் மொறையாக!’
நாலைஞ்சு ராப்பரா?
Delete‘1000 ராப்பர்’ கேட்டு ஒரு கூட்டம் கிளம்புமே சார!!!!!
/// விஜயகுமாரி மாதிரி பொண்டாட்டி வேணும்னு ஒருத்தன் நினச்சுருக்கையில வைஜயந்திமாலா மாதிரி பொண்டாட்டி கிடைச்சு வாயடைச்சு நின்ன கதைதான்
ReplyDelete( பத்து சாருக்கும் போய் சேரணும்னுதான் இந்த உதாரணம் சொன்னேன்...மத்தபடி அப்டி ஒண்ணும் வயசாயிடல)///
ரொம்ப ரொம்ப நன்றிகள் செனா அனாஜி. நன்றி எதுக்குன்றீங்களா? TP ராஜலஷ்மி,TV குமுதினி ரேன்ஜு க்கு என்னை கொண்டு போகாம வைஜயந்திமாலாவோட நிறுத்திக்கிட்டீங்களே. அதுக்கு.
பின்னே நம்ம (என்னிய மட்டும்) வயசுக்கு சாய் பல்லவியையும், கீர்த்தி சுரேஷையுமா உதாரணம் காட்ட முடியும்.
அப்புறம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவலுங்கோ.
என்னோட சின்ன (பிஞ்சிலே பழுத்த) வயசுல மஞ்சுளா, லதா தானுங்கோ Top ஈரோயின்ஸ்.
விடலைப்பருவத்துல (டீன் ஏஜ்,+2) ஸ்ரீதேவி, ராதா, அம்பிகா, இவியள்ளாம் நின்னு ஆடினாவ.
ஒரு தலை ராகம், அலைகள் ஓய்வதில்லை படங்கள் எல்லாம் நம்ம வயசுல ஃபேவரிட் படங்கள்ங்கோ.
அது ஒரு அழகிய நிலாக் காலம்.
கனவுகள் தினம்தினம் உலாப்போகும்.
(பழைய நெனப்புடா, பேராண்டி. பழைய நெனப்புடா.)
ஹிஹிஹி பத்து சார் nice reply....
Deleteபத்து சார் ...வயசுலாம் சும்மானாச்சும் ஒரு நம்பர் தான் !
Deleteபெயரிலேயே நம்பரை வைச்சுக்கிட்டு ரவுண்ட் அடிக்கிற நம்ம ஜேசனைப் பாருங்களேன் - 1983 லே அறிமுகம் ஆனார் -கடலோரத்தில் குற்றுயிரும் குலையுயிருமாய் ! அன்னிக்கு அவருக்கு ஒரு 30 வயசுன்னு வைச்சுகிட்டா கூட இன்னிக்கு பார்ட்டிக்கு 67 வயசாகணும் ! இன்னும் ஆப் டிராயர் போட்ட பாப்பாக்கள் புடை சூழ சுத்தி வரார் பாருங்களேன் !
அந்தக் கணக்குப்படி பார்த்தா நாமளும் யூத்து தான் சார் !
@ பத்து சார்!
Delete:-)))
/// அந்த கணக்குப்படி பார்த்தா நாமளும் யூத்து தான் சார் !///
Deleteஇதை நீங்களும், நானும் (!?) ஒத்துக்கலாம். வூட்டாண்ட ஒத்துக்கணுமே. பேரன், பேத்தி எடுக்கிற வயசுல பேச்சைப் பாரு பேச்சை, அப்புடின்னு தாவாங்கட்டையில பூரிக்கட்டையால இடிக்குறாவுகளே. இத்தனைக்கும் 57 வயசு தான் ஆகுது. நான் எந்தா செய்யூ சாரே?
இந்த 57 வயசுல எங்க தலைவர் டூயட் பாடிக்கிட்டு இருந்தார். ஹும்ம்...
Deleteஎன்னாது - தலீவருக்கு 57 வயசா ? இதிலே டான்ஸ் வேறேயா ? சொல்லவேயில்லை ?!!
Delete57 வயசா இருந்தாலும் அதை திருப்பி போட்டு 75 வயசா இருந்தாலும் நோ ப்ராப்ளம் சார்.டூயட் ஆட ஆள் வந்தா சரி...:-)
Deleteஜெனெரல் காரிங்க்டனின் சகோதரி தான் இப்போதைக்கு டான்ஸ் ஆட ரெடியாம் ! ஓ.கே சொல்லிடலாமா ?
Deleteஅமாலியா கூட ஆடினா, அப்புறம் சோமாலியா தான் போகோணும்
Deleteஇல்ல சார்....செயலர் ஆட நான் ரசிக்க ..
Deleteஅதான் சரியா இருக்கும்...
அவ்வ்வ்...:-((
பனியில் ஒரு குருதிப்புனல்
ReplyDeleteஇந்த மாதம் வெளியான கிராபிக் நாவல் “பனியில் ஒரு குருதிப்புனல்” அவ்வளவு மோசமில்லை. விறுவிறுப்பாகவே இருந்தது. பிரச்சனை என்னவென்றால், இதை எந்த ஜானரில் சேர்க்க வேண்டும் என்பதில்தான். சில பக்கங்கள் ஹாரர், இன்னும் சில பக்கங்கள் ஃபாண்டஸி கதை போல கடத்தி இருப்பார்கள். இன்னும் சில பக்கங்கள் இந்த கதையை எதில் அடைப்பது என்ற குழப்பத்திலேயே படித்து முடித்து விடுவோம். கதாசிரியரே குழம்பிட்டாரா, இல்லை வேண்டும்மென்றே வாசகர்களை குழப்பத்தில் ஆட்படுத்துகிறாரா என்பது புரியவில்லை. கதையின் முடிவை சற்றே மாற்றி இருந்தால் இது ஒரு ‘கதையாக’ முழுமை அடைந்திருக்கும். நல்ல ஹாரர் கதையாக வர வேண்டியது இப்படி ஒரு கிளைமாக்ஸ் வைத்து கெடுத்துவிட்டார்கள். மேலும் ஒரு சந்தேகம். கிராபிக் நாவல் என்றால் இப்படித்தான் சித்திரங்கள் இருக்க வேண்டுமா என்ன?! சத்தியமாக புரியவில்லை.
ஆனால், உண்மையிலேயே இக்கதையின் தமிழ் மொழிபெயர்ப்பு அருமை. எடிட்டரின் கஷ்டம், உழைப்பு கண்கூடாக தெரிகிறது. நிறைய வார்த்தை ஜாலங்களை அள்ளி தெளித்திருக்கிறார். ’என்னடா கதையிது’ என்று எடிட்டர் கொஞ்சம் சுனங்கியிருந்தாலும், இந்த இதழ் ஒட்டுமொத்தமாக சொதப்பலாகி போயிருக்கும். பொதுவாகவே, நான் ஒரு புத்தகத்தை படித்துவிட்டு மண்டையை உடைத்து அவ்வளவாக ஆராய்ச்சி எல்லாம் செய்யும் பழக்கமில்லை. ஆனால், இங்கே லயன் தளத்தில் கதையை கஷ்டப்பட்டு ஆராய்ச்சி செய்து நண்பர்கள் இடும் பின்னூட்டங்களை நோகாமல் ரசித்து படித்துவிடுவேனாக்கும். :))
மொத்தத்தில் ப.ஒ.கு ஆஹா ஓஹோ என்றில்லாவிட்டாலும், ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்திற்க்கு நிச்சயம் பரிந்துரைக்கலாம்.
பி.கு. : இதுவரை எடிட்டர் வெளியிட்ட கிராபிக் நாவல்களில் ”எமனின் திசை மேற்கு” இதழை இதுவரைக்கும் எந்த கி.நா இதழும் முந்தவில்லை என்பதே உண்மை. அதை முந்தும் வகையில் ஒரு கிராபிக் நாவல் வராதா என்பதே என்னை பொருத்தவரையில் ஒரு எதிர்பார்ப்பு.
அட அதுவுமே கணிசமா சர்ப் எக்ஸெல் வாங்குன கதை தான் சார் ! அந்நாளைய பின்னூட்டங்களைப் பார்த்தாக்கா தெரியும் !
Delete”எமனின் திசை மேற்கு”
Deleteஅந்த கதை எனது ஆல் தடவை பிடித்த கதை! அதுவும் ஒருகட்டத்தில் கையை வெட்டப்பட்ட விஷயத்தை சொன்ன வசனம் மனதை என்னவோ செய்தது! அந்த கதையில் வசனம் செம ஷார்ப். அதே போல் கதையின் தலைப்பின் காரணம் கதையின் சில இறுதி பக்கங்களை படிக்கும் போதுதான் புரிந்தது, செம கதை கதைக்கு ஏற்ற சரியான தலைப்பு.
///பிரச்சனை என்னவென்றால், இதை எந்த ஜானரில் சேர்க்க வேண்டும் என்பதில்தான். சில பக்கங்கள் ஹாரர், இன்னும் சில பக்கங்கள் ஃபாண்டஸி கதை போல கடத்தி இருப்பார்கள். இன்னும் சில பக்கங்கள் இந்த கதையை எதில் அடைப்பது என்ற குழப்பத்திலேயே படித்து முடித்து விடுவோம்.///
Deleteகி.நா'ன்னா அப்படித்தானுங்க இருக்கும்!
கி.நா'ன்னாலே எந்தக் கட்டுக்கும் அடங்காத காளை'ன்னு தானே அர்த்தம்!!
ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம், கி.நா கதைகளுக்கான அர்த்தத்தை (படைப்பாளிகளையும் விட அதிகமாக) பலப்பல கோணங்களில் சிந்திப்பது தமிழ்நாட்டு காமிக்ஸ் கண்மணிகளான நாமாத்தான் இருக்கும்! :)
//பிரச்சனை என்னவென்றால், இதை எந்த ஜானரில் சேர்க்க வேண்டும் என்பதில்தான். சில பக்கங்கள் ஹாரர், இன்னும் சில பக்கங்கள் ஃபாண்டஸி கதை போல கடத்தி இருப்பார்கள். இன்னும் சில பக்கங்கள் இந்த கதையை எதில் அடைப்பது என்ற குழப்பத்திலேயே படித்து முடித்து விடுவோம்.///
Delete#####
எஸ் இதனால் தான் எனக்கு கிராபிக் நாவல் என்றாலே ஸ் என ஊதி தள்ளும் அளவிற்கு வளரவைத்து விட்டது...ஹீஹீ...:-)
சார் மாசம் ஒரு டெக்ஸ் மாதிரி மாசம் ஒரு கிராபிக் உண்டா...ஐயம் ஆல்வேஸ் ரெடி...:-)
தலீவரே.. ஒரு காலத்துல கி.நா'ன்னா வேணான்னு அடம்பிடிச்சு ஆர்ப்பாட்டம் பண்ணிய ஆள் நீங்கன்றதை மறந்துடக்கூடாது!
Delete//ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம், கி.நா கதைகளுக்கான அர்த்தத்தை (படைப்பாளிகளையும் விட அதிகமாக) பலப்பல கோணங்களில் சிந்திப்பது தமிழ்நாட்டு காமிக்ஸ் கண்மணிகளான நாமாத்தான் இருக்கும்//
Deleteஹாஹாஹா... உண்மைதானுங்க :)
//சார் மாசம் ஒரு டெக்ஸ் மாதிரி மாசம் ஒரு கிராபிக் உண்டா...ஐயம் ஆல்வேஸ் ரெடி//
நானும் ரெடிதான். எதையும் தாங்கும் அளவுக்கு எடிட்டர் நம் அனைவரையும்தான் வளர்த்து விட்டிருக்காரே.. :))
// ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்திற்க்கு நிச்சயம் பரிந்துரைக்கலாம். //
Deleteஉண்மைதான்....
Thala @
Delete// சார் மாசம் ஒரு டெக்ஸ் மாதிரி மாசம் ஒரு கிராபிக் உண்டா...ஐயம் ஆல்வேஸ் ரெடி //
Rocking :-)
தலீவரே. நேத்திக்குத் தான் கோடு போட்ட பேப்பர் நாலு குயரும் ; ஒரு டஜன் கவர்களும் வாங்கிட்டுப் போனதாக் கேள்விப்பட்டேனே ..
Deleteசார்...அது அடுத்த மாசம் எத்தனை கிராபிக் நாவல்ன்னு கேக்குறதுக்கு...:-)
Deleteஎமனின் திசை மேற்கு, பிரளயத்தின் பிள்ளைகள், சிப்பாயின் சுவடுகளில் மூன்றுமே மனம் கனக்கச் செய்யும் கி. நா.க்கள்.நான் மிகவும் விரும்பிப் படித்தவை.
ReplyDeleteஇரத்தப்படலம் இரகரகமா பாகங்கள பிரிச்சுக்கிட்டே போகலாம் இப்படியே போனா 2030 வரைக்கும் கூட போகலாம் நண்பர்களே... ஆசிரியரின் கருத்துக்கு மதிப்பளித்து இரண்டுபாகங்கள் ஓகே என்ற எண்ணத்தோடு முன்பதிவை வெற்றியடைய செய்வோம் நண்பர்களே... திரும்ப திருப்ப ஆசிரியரை அயர்ச்சியடைய வைக்கவேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறேன்...இப்போதைய நேரத்தில் நமது குறிக்கோள் 70 நாள் 202 முன்பதிவு என்ற ஒரே பாதையில் செல்வது அனைவருக்கும் சுபமாக முடியும்.. இப்படியே நீண்டு கொண்டு போனால் நிச்சயம் ஆகஸ்ட் 2021,2022 என தள்ளிப்போக நேரிடலாம்.. அதற்க்குள் ஏதாவது இடையூரு வந்தால் இந்த இதழ் வராமலே கூட போகலாம் ...எனவே நண்பர்களிடம் அன்புடன் கேட்டுங்கொள்கிறேன் முன்பதிவில் கவனம் செலுத்துவோம்.. நமது வசதிக்காக இரண்டுதவணை ஒருமாதம் நீடிப்பு என நமது அனைத்து கோரிக்கைக்கும் ஆசிரியர் செவிசாய்த்துள்ளார்.. கிடைத்த வாய்ப்பை பயன் படுத்திக்கொள்வோம் நண்பர்களே....நன்றி....
ReplyDeleteஇன்றைய மாலைப் பொழுது 2132 மீட்டருக்காண்டி!
ReplyDeleteஆனால் அதற்கு முன், மாலை 6 மணிக்கு பாடகர் SPB நலம்பெற வேண்டி உலகம் முழுக்க நடத்தப்படும் mass prayerல் பங்கேற்க வேண்டும்!!
அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள் நண்பர்களே.. நம் வாழ்க்கையில் அங்கமாகிவிட்ட ஒரு குரலை நாம் பிரிய அனுமதிக்கக் கூடாது! _/\_
எனது பிரார்தனைகளும்..
Delete// நம் வாழ்க்கையில் அங்கமாகிவிட்ட ஒரு குரலை நாம் பிரிய அனுமதிக்கக் கூடாது! //
Delete+9
நம்பிக்கையுடன் பிரார்த்திப்போம்...
சத்தியமா இப்படி எழுதப் போறேன்னு நினைக்கவேயில்லைங்க...
ReplyDeleteஇந்த ஹீரோ கதைங்கள்ள முதமுதல்ல இம்ப்ரஸ் பண்ண கதை இதாங்க..
ஒரு சின்ன குழப்பம் இருந்தாலும் கதை செமயா இருக்குங்க..
8.5/ 10
டயபாலிக் - துரோகம் ஒரு தொடர்கதை..
அடடே!!
Deleteஅடடோ!!
அடடூ!!
அடேடேடேடேடே !!
Deleteபனியில் ஒரு குருதிப்புனல்:
ReplyDeleteவசனங்கள் எனது பார்வையில்,
ஒரு எழுத்தாளரின் பார்வையில் கதை நகர்வதாலோ என்னவோ வசனங்கள் ஈர்ப்பாய் அமைந்து விட்டன போலும்,
"மரணம் ! தொடும் நெருக்கத்தில் உலவிடும் போதுமே தூரமாய் இருப்பது போலவே தென்படுவது வாழ்க்கையின் புதிர்களுள் ஒன்றோ?"
"சகலத்துக்கும் முடிவில் எங்களுக்குக் காத்திருப்பது என்னவோ ? ஒன்றுமேயில்லைதான்."
"வெறுமை... பூஜ்யம்...சூன்யம் தான் காத்திருக்கிறது."
"கோடானு கோடி காலைகளில் உதயமாகிச் சலித்துப் போன சூரியன் இன்றைக்கு மல்லாக்க விழுந்து விட்டதோ?"
"யுத்தம் எனும் பெரும் பைத்தியக்காரத்தனத்தில் நாங்கள் எல்லோருமே சிறு அங்கங்கள் தான்."
"எங்களைச் சுற்றிலும் வியாபித்து நின்ற பனியின் நிசப்தத்தில் எங்களுக்குள் அலைமோதிய கேள்விகள் அனைத்துமே உறைந்து போயினவோ என்னவோ"
"பனியில் சிக்கிக் கிடக்கும் ஒரு அசுர விலங்கின் தண்டுவடத்தை மிதித்து நடப்பது போலிருந்தது அந்த நடை அனுபவம்."
"எங்கள் முன்னே தென்பட்ட மரக்கிளைகள் சூன்யக்காரியின் கரங்களைப் போல நீண்டு தெரிய,மையப் பகுதியோ எங்களை விழுங்கக் காத்திருந்தது போலிருந்தது !"
"மரணமும்,ஜீவிதமும் ஒரே புள்ளியில் சங்கமிப்பது சாத்தியமாகுமோ?"
"வாழ்க்கை ரொம்பவே முரணானது மட்டுமல்ல,ரொம்பவே மோசமான கதை சொல்லியுமே !"
"எக்காளமிடுவது எங்கள் மிரட்சியினைப் பார்த்து,எங்களது கரைந்து போகும் நம்பிக்கைகளைப் பார்த்து,எங்கள் பயங்களைப் பார்த்து,எங்களது விதிகளைப் பார்த்து என்பதாகப்பட்டது."
"ஞாபகப் பேழையினுள் ஆழ்ந்து அந்த நாட்களை மறுபடியும் வாழ்ந்து பார்ப்பது வேதனையான அனுபவமாக இருந்தாலும் கூட,உங்கள் பொருட்டு அதைச் செய்ய முன்வந்தேன்."
-எழுத்தாளனின் பார்வையிலும்,அதே கணத்தில் வாசகனின் எண்ணவோட்டத்திலும் ஊடுருவி கதையை நகர்த்தியிருப்பது சிறந்த உத்திதான்,
ஒரு சிறந்த வாசகன் எழுத்தாளன் ஆனால் இது சாத்தியமோ?!
-வசனங்களை கூர்தீட்ட மிகவும் மெனகெட்டீர்களோ சார்?!
-ஏனோ வசனங்கள் என்னை மிகவும் ஈர்த்து விட்டன...
அருமை அண்ணா அத்தனை வசனங்களையும் எடுத்து அழகாக தொகுத்து கொடுத்து விட்டீர்களே. Nice job
Deleteஅருமை அறிவரசுண்ணா! அத்தனை வசனங்களையும் எடுத்து அழகாக தொகுத்து கொடுத்து விட்டீர்களே. Nice job!
Delete///ஒரு சிறந்த வாசகன் எழுத்தாளன் ஆனால் இது சாத்தியமோ?!///
சாத்தியமே! மேலும் விவரங்களுக்கு அனுகவும் : பிரகாஷ் பப்ளிஷர்ஸ், சிவகாசி.
///வசனங்களை கூர்தீட்ட மிகவும் மெனகெட்டீர்களோ சார்?!
-ஏனோ வசனங்கள் என்னை மிகவும் ஈர்த்து விட்டன...//
அதிக மெனக்கெடல் அவசியப்பட்டிருக்காது! பிறவிக் கவிஞர்களுக்கு இது சுளுவான சமாச்சாரம் தான்!
அருமை!! 👌
DeleteSuper !
Deleteஒரிஜினல் ஸ்கிரிப்ட் எனும் ஆறு வழிச் சாலையில் வண்டியை சீராய் விடும் வேலை மட்டுமே எனக்கிருந்தது சார் ! மொத்தக் கூத்துக்களுமே அரங்கேறியது இரண்டே நாட்களின் அவகாசத்தில் எனும் போது றெக்கை கட்டிக் கொண்டே தான் பணியாற்றிட வேண்டிப் போனது ! சொல்லப் போனால் கதையின் வரிகளை இங்கு கொணர நீங்கள் எடுத்துள்ள மெனெக்கெடல் படலம் தான் மலைக்கச் செய்கிறது !
DeleteAnd அவசரத்தில் அரக்கப் பரக்க எடிட் செய்த போது தென்பட்டதை விட நீங்கள் தொகுத்து வழங்கியிருப்பதைப் படித்துப் பார்க்கும் போது 'அட.. நல்லா தான் இருக்கோ ? என்று படுகிறது சார் ! அதற்காகவொரு நன்றி !
Deleteசொல்லப் போனால் கதையை வாசித்தது முதல் வசனங்கள் பல ஓயாது அடிக்கும் கடலின் அலை போல மனதை சலசலக்க வைத்ததே நிஜம் சார்,அதனால் கடந்து செல்ல மனம் வரவில்லை...
Deleteகதைக் களத்தில் வார்த்தைகளில் ஜாலம் செய்வது ஒரு வித்தை சார்,அதை வாசிக்கும் நல்லதொரு வாசகனின் மனம் அடையும் குதூகலத்திற்கு இணைதான் ஏது சார்....
உண்மை...
Delete180th
ReplyDeleteது.ஒ.தொடர்கதை. ok ரகம். விறுவிறுப்பாகவே இருந்தது. டயபாலிக்கோட மாஸ்க்குக்கு அதிக வேலை இல்லை. டயபாலிக், ஈவா, ஜின்கோ மூவரைத் தவிர மீதி அனைவரும் துரோகிக்கிறார்கள். one shot ஆல்பம் என்பதால் என் வரையில் து.ஒ.சிறுகதை.
ReplyDelete******** 2132 மீட்டர் ******
ReplyDelete1984ல் வாஷிங்டனில் கெய்ரோ என்ற ஹோட்டல் 50 மீ உயரத்தில் எழுப்பப்பட்டபோது 'யாரைக் கேட்டு இம்புட்டு ஒசரமா கட்டினே?'ன்னு செம காண்டாகிப் போனாங்க அப்போதிருந்த அந்நகர கமிஷனர்கள்! உடனே ஏற்படுத்தப்பட்டதுதான் 'கட்டிடங்களுக்கான உயரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள்'! வீடு கட்டினால் 27 மீட்டர்க்கு மேலேயும், ஆபீஸு கட்டினால் 34 மீட்டர்க்கு மேலேயும் கட்டிடம் எழும்பக் கூடாது! ஒருவேளை அது குறுகலான தெருவா இருந்தா அதுக்கேத்தா மாதிரி கட்டிடத்தின் உயரத்தை இன்னும் குறைச்சுக்கிடணும்! இந்த விதிமுறைகளை 1989ல காங்கிரஸ்காரங்க ஒரு சட்டமாவே கொண்டு வந்தாங்க - ஆபீஸு கட்டிடங்களை மட்டும் 49மீட்டர் உயரத்துக்கு எழுப்பிக்கிடலாம்ன்ற சின்ன திருத்தத்தோட!!
அதுக்கப்புறம் சின்னச் சின்னதா திருத்த மசோதாக்கள் வந்தாலுமே, நூற்றாண்டுகளுக்கு மேலாக அந்த விதிமுறைகள் பெரிய அளவுல மாற்றமில்லாம இப்பவரைக்கும் அதையே கடைபிடிச்சுட்டுவராங்க! (சமீபத்துல நம்ம ட்ரம்ப் எதையாவது மாத்தி வச்சுருக்காரான்னு தெரியல!)
சரி இந்தத் தகவல் எல்லாம் எதுக்குன்னு கேட்கறீங்களா?!!
ஹீ..ஹீ..ஹீ!! '2132 மீட்டர்' கதையப் படிச்சுட்டு நம்ம செனா அனா யூஸ் பண்ண (பிரிட்டன் ஸ்நைப்பர் க்ரெய்க்கின் தலீபான் தீவிரவாதிகள் வேட்டை) அதே டெக்னிக் தான்!! ;)
கதை செமயா இருக்கு.. அருமையா செதுக்கி, அம்சமா நகர்த்தியிருக்காங்கன்னு நல்லாவே புரியுது! ஆனால் எடிட்டர் தன் ஹாட்-லைனில் 'மறதிக்காரவுக எல்லாரும் ஒரு தபா முந்தைய இதழ்களை புரட்டிட்டு அப்புறமா இந்த கதைய படிங்க கண்ணுகளா'ன்னு சொல்லியிருந்ததை 'ப்பூ! எங்களுக்கு இல்லாத மெமரி பவரா?'ன்னு அலட்சியம் பண்ணதால வந்த வினை - மொத்தக் கதையையுமே கொஞ்சம் மசமசன்னுதான் படிக்க முடிஞ்சது!
இதை முழுசா புரிஞ்சுக்கிட்டு படைப்பாளிகள் கதையை செதுக்கியிருக்கும் விதத்தை பார்த்து ஆச்சரியப்படணும்னா, முந்தைய பாகங்களை ஒரு ரவுண்டு படிச்சாத்தான் தேவலாம் போலிருக்கு! நேரம் கிடைக்கும் போது அதையும் படிச்சுட்டு வந்து அப்பாலிக்கா போடறேன் மார்க்கு!
மத்தபடி (சரியாப் புரியலேன்னாலும்) கதை நகரும் விதமும், 'ஃபோட்டோக்களோ?!' என்று ஆச்சரியப்படும்படியான சித்திரங்களும், வண்ணக்கலவைகளும் - யம்மாடிக்கம்மாடிக்கம்மாடியோவ்!!
அதே அதே சேம் பீலிங்...
Deleteஅடையாறுஆனந்தபவனில் 100gmமிக்சர் குடுங்கன்னு லைன்லேநிற்க்கும் சங்கடம் வரத்தான் செய்யும். அந்த உணர்வைஆசிரியருக்குஏற்ப்படுத்தாமல் கொஞ்சம் இரண்டு புக்காக படிக்க முயற்ச்சிக்கலாமே நண்பர்களே. ஒரு பத்தகம் வெளிவந்துஒரு மாதம் கழித்து அடுத்த புத்தகம் வரும்போதுகுண்டுபுக்லாஜிக்ஓக்கே. ஒரேகவரில் இரண்டுபுக்படிப்பதற்க்கும் சுலபமாக இருக்குமல்லவா. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteவெள்ளி காலை வணக்கம் நண்பர்களே...
ReplyDeleteதலையில்லாப் போராளி சைஸ்ல கருப்பு வெள்ளையில் இரத்தப்படலம் இரண்டு புத்தகங்களாக வந்தால் எப்படி இருக்கும் காமிக்ஸ் காதலர்களே?!!
ReplyDeleteகென்யா ,ஒற்றை நொடி ஒன்பது தோட்டா,போன்ற புதிய இதழ்களையே என் மனம் விரும்புகிறது.புதுசுகள் கடலளவு இருக்கும் போது அதில் ஒரு கையளவாவது படித்திடவே விரும்புகின்றேன்.
ReplyDelete201...
ReplyDeleteகூர்மண்டையனின் சர்ப்பத்தின் சவால் வெகு வேகமாக புக்கிங்காகி வருவது சந்தோஷம் தருகிறது.
ReplyDelete007 - பல இடங்களில் ஜேம்ஸ் கார்ட்டூன் கேரக்டர் மாதிரி தோற்றம் அளிக்கிறார்.. 110,111 பக்கங்களில் படங்கள் மாறி இருக்கிறது.. அப்படின்னு நினைக்கிறேன்.. ஏன்னா ஸ்டன்ட் சீன் ஒரு கோர்வையா இல்லை.. மத்தபடி கதை ஓகே.. 7/10
ReplyDelete