நண்பர்களே,
வணக்கம். இப்போதெல்லாம் எனக்கொரு சந்தேகம் அடிக்கடி எழுகிறது ! நமது மறு வருகைக்குப் பின்பான முதலிரண்டு வருடங்களுக்கு, 'மாசத்துக்கு இரண்டே புக்ஸ்' என்ற சிக்கன அட்டவணையில் வண்டி ஓடிய வண்ணமிருந்தது ! And அவற்றைக் கொண்டே மாதத்தின் முழுமையையும் ஒட்டி வந்தோம் ; பற்றாக்குறைக்கு இந்தப் பதிவுப் பக்கத்தினையும் சமாளித்து வந்தோம் ! ஆனால் இன்றைக்கோ மாதம் 4 புக்ஸ் வெளி வந்தாலுமே பத்தே நாட்களுக்குள் சகலத்தையும் படித்து ; முடித்து ; அலசி ; ஆராய்ந்து தொங்கப்போட்டு முடித்து விடுகிறீர்கள் எனும் போது, படிக்கவும் சரி, பதிவிடவும் சரி, ஒரு பஞ்சம் நிலவுவது போலொரு பீலிங்கு ! இதோ இந்த ஆகஸ்டின் 4 இதழ்களையும் கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாய்த் தட்டி முடித்து விட்டிருக்கிறீர்கள் எனும் போது, செப்டெம்பர் இதழ்களின் பக்கமாய்ப் பார்வையை நகற்றும் சபலம் தலைதூக்குகிறது ! ஆனால் அதற்கு இத்தருணம் ரொம்பவே ரொம்பவே too early என்பதால், சம்முவதை வண்டியை வேறெங்கே விடச் செய்யலாமென்ற யோசனை ஓடுகிறது தலைக்குள் ! கனகச்சிதமாய் இந்த நொடியினில், ஒரு மாதத்துக்கு முன்பாய் கண்ணில் பட்டிருந்த சில பல சுவாரஸ்யத் துக்கடாத் தகவல்கள் நினைவுக்கு வந்திட, அதனைப் பகிர்ந்திடத் தீர்மானித்தேன் ! அந்தத் தகவல்களோடு ஒரு வைராக்கியமும் என்னுள் குடியேறியுள்ளதால் - all the more reasons to share ! So இந்த வாரத்துக்கு பிள்ளையார் சுழி போடுவது some comics trivia !!
கொரோனாவின் புண்ணியத்தினில் கேன்சல் ஆகியுள்ளவை உள்ளூர் புத்தகத் திருவிழாக்கள் மாத்திரமன்றி, சர்வதேசத் திருவிழாக்களுமே ! மார்ச்சில் நடைபெற்றிருக்க வேண்டிய பாரிஸ் ; இலண்டன் ; லெய்ப்சிக் (ஜெர்மனி) விழாக்கள் ; ஏப்ரலின் போலோனியா (இத்தாலி) ; மே மாதத்தின் வார்சா (போலந்து) விழா ; ஜூலையின் சான் டியேகோ (அமெரிக்க) காமிக் கான் ; அக்டொபரின் நியூயார்க் காமிக் கான் என ஏகப்பட்ட சேதாரம் இந்தாண்டு ! நிலவரம் இவ்விதமிருக்க - உலகின் பதிப்பகத் தொழில் நிச்சயமாய்த் தடுமாறித் தானிருக்கும் என்ற யூகத்தோடு - நமது ஆதர்ஷ காமிக்ஸ் பதிப்பகங்கள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் எவ்விதம் தாக்குப் பிடித்து வருகிறார்களோ ? என்ற மண்டைக்குடைச்சலில் நெட்டை உருட்டிக் கொண்டிருந்தேன் ! அப்போது கண்ணில் பட்ட 2019 சார்ந்த விற்பனைத் தகவல்கள் மெய்யாலுமே மெர்செலாக்கின !
- வட அமெரிக்கா + கனடா என்ற தேசங்களின் கூட்டணியினில் - 2019-ல் ஒட்டுமொத்தமாய் விற்றுள்ள காமிக்ஸின் மதிப்பு சுமார் 1.21 பில்லியன் டாலர்கள் !! இந்தியப் பணத்தில் ரூ.90,66,44,53,000 - அதாச்சும் 9000 கோடிகள் ! முந்தைய ஆண்டை விட, இது 11 சதவிகிதம் ஜாஸ்தியாம் !
- அவர்கள் 'கி.நா.க்கள்' எனப் பொதுப்படையாய்க் குறிப்பிடும் முழுநீள ஆல்பங்களின் விற்பனை 765 மில்லியன் டாலராகவும், வாராந்திர / மாதாந்திரத் தொடர் இதழ்களின் விற்பனை 355 டாலராகவும், டிஜிட்டல் காமிக்ஸின் விற்பனை 90 மில்லியன் டாலராகவும் உள்ளது !
- ரைட்டு....விற்பனையின் உச்சத்தில் நிற்கப் போவது சூப்பர்மேனோ ; பேட்மேனோ ; ஸ்பைடர்மேனோ ; X- மெனோ என்று நினைத்துக் கொண்டிருந்தீர்களெனில் நல்லதொரு ரப்பரைக் கொண்டு அந்த நினைப்பை அழித்து விடுங்களேன் folks ! ஏனெனில் தற்சமயம் அதகளம் செய்து நிற்கும் "மேன்" ரொம்பவே வித்தியாசமானவர் ! அண்ணாச்சியின் பெயர் DOG MAN & ஒட்டு மொத்த அமெரிக்க முழுநீளக் கதைகள் aka கி.நா.க்கள் மார்க்கெட்டில் சிக்ஸர்கள் அடித்து வருபவர் இவரே !! குட்டியூண்டு வாசகர்களை மனதில் கொண்டு டேவ் பில்கி உருவாக்கியுள்ள இந்தத் தொடரின் நாயகர் - காலங்காலமாய்ப் பழம் தின்னு கொட்டை போட்டிருக்கும் ஜாம்பவான் சூப்பர் ஹீரோக்கள் அத்தனை பேரையும் ஓரம் கட்டிவிட்டு தனியாய் ராஜ்ஜியம் நடத்தி வருகிறார் !
- 2016-ல் உருவாக்கப்பட்ட இந்தத் தொடரினில் இதுவரையிலும் உள்ளது 8 ஆல்பங்களே ! And இது வரையிலும் அவை இங்கிலீஷ் பேசும் முக்கிய மார்க்கெட்களில் (USA ; Canada ; UK ; Australia & New Zealand) சுமார் மூன்றரைக் கோடி புக்ஸ் விற்பனையாகியுள்ளன !! And இதன் படைப்பாளி அமெரிக்காவின் பெருநகரங்களில் தனது குட்டி வாசகர்களை சந்திக்க மேற்கொள்ளும் டூர்களானது - நம்மூர்களில் IPL மேட்ச்களுக்குக் கூடும் கூட்டத்தைப் போல பின்னியெடுக்கின்றன !
- ஒவ்வொரு ஆல்பத்தின் இறுதியிலுமே, குட்டீஸ்களுக்கு அதே பாணியில் படம் வரையும் யுக்திகளையும் டேவ் விவரிக்கிறார் என்பதால், வீட்டுக்கு வீடு துக்கனூண்டுப் படைப்பாளிகள் உருவாகி பெற்றோர்களையும் நெக்குருக வைக்கின்றனர் ! "காமிக்ஸ் படிக்க இன்னிக்குப் புள்ளீங்க இல்லை ; இந்தத் தலைமுறையோடு காமிக்ஸ் கோவிந்தா ....!!" என்றெல்லாம் நாம் நினைத்திருப்பின், நமக்கு அவசரமாய் ஏர்வாடிக்கு டிக்கெட்கள் தேவை போலும் !! கூடும் கூட்டங்களைக் கொஞ்சம் பாருங்களேன் ! எத்தனை நேரமானாலும், தன்னைப் பார்த்திட விரும்பும் ஒவ்வொரு குழந்தையையும் பொறுமையாய்ச் சந்தித்துப் பேசி, கலக்கிடுகிறார் வரம் வாங்கி வந்துள்ள இந்தப் படைப்பாளி !
- மொத்த விற்பனையின் புள்ளி விபரங்களை பார்த்திடும் போது ஜாம்பவான்கள் மார்வெல் காமிக்ஸ் & DC காமிக்ஸ் கோலோச்சுவதும் ஒரு தொடர்கதையாய்த் தொடரவே செய்கிறது ! அமெரிக்காவின் காமிக்ஸ் விற்பனை எண்ணிக்கையில் மார்வெல் 44.7 சதவிகிதத்தையும் ; DC 30.7 சதவிகிதத்தையும் கையில் வைத்திருக்க, பாக்கி 24 சதவிகிதத்தை பாக்கிப் பதிப்பகங்கள் பகிர்ந்து கொள்கின்றன ! நமது ஜேம்ஸ் பாண்ட் 2.0 வெளியிடும் டைனமைட் காமிக்ஸ் வைத்திருப்பது 2 சதவிகிதத்துக்குக் கொஞ்சூண்டு குறைவாய் !
- மாதாந்திர பத்திரிகைகள் எனும் பிரிவினில் மார்ச் 2019-ல் DC காமிக்ஸின் டிடெக்டிவ் காமிக்ஸ் # 1000 வெளியாகி - விற்பனையில் தொட்டுள்ள உச்சம் சுமார் 6 லட்சம் பிரதிகள் எனும் sales !! (அயல்நாடுகளிலும் சேர்த்து) BATMAN தோன்றுமொரு landmark இதழிது !
- பிராங்கோ-பெல்ஜிய காமிக்ஸ் சமுத்திரத்தின் பக்கமாய்ப் பார்வைகளைத் திருப்பினால், முத்லிடத்தைப் பிடித்து நிற்போர் - நமக்கு இன்னமும் தூரத்துக் கனவாய்த் தொடர்ந்திடும் ஆஸ்டெரிக்ஸ் & ஒபெலிக்ஸ் ஜோடியினரே !! ஒவ்வொரு புது ஆல்பமும் தோராயமாய் 60 இலட்சம் பிரதிகள் முதலாண்டினில் விற்கிறதாம் !! பிரெஞ்சு காமிக்ஸ் மார்க்கெட்டின் சகல விற்பனை ரெக்கார்டுகளையும் ஆக்ரமித்து வருவது இந்த ஒற்றைத் தொடரின் படைப்புகளே ! And இந்த உச்ச ஸ்தானத்தை அவர்கள் தக்க வைத்துக் கொண்டிருப்பது எண்ணற்ற ஆண்டுகளாய் !! So சந்தேகங்களே இன்றி ஐரோப்பிய உச்சம் இந்த சிரிப்பு சாகச ஜோடியே !!
- நம்ம XIII-ன் ஆல்பங்கள் இந்த இரண்டாம் சுற்றில் தோராயமாய் 1.75 லட்சம் இதழ்கள் விற்கின்றனவாம் ! தோர்கல் இரண்டு லட்சம் அச்சாகிறது ! நமது ஒல்லிக் கௌபாய் அரை மில்லியன் (5 லட்சம் ) அச்சாகிறார் !
- கொரோனா தாக்கத்தில் மார்ச் முதல் சுருண்டு கிடந்த பிரான்ஸ் தேசம் ஜூன் முதலே சுதாரிக்கத் துவங்கி விட்டதால் - காமிக்ஸ் உருவாக்கம் ; அச்சு & விற்பனை - எப்போதும் போலவே பரபரப்பாய் நடந்தேறி வருகிறதென்கின்றனர் நமது படைப்பாளிகள் அத்தனை பேருமே !! ஆண்டுக்கு 5000+ ஆல்பங்கள் வெளியீடு என்ற நம்பரில் கொஞ்சமே கொஞ்சமாய் அடி இருக்கலாமென்றாலும், இங்கே நாம் பார்த்து வரும் தர்ம அடிகள் நிச்சயம் அங்கில்லை என்கிறார்கள் !
- சமீபமாய் காமிக்ஸ் படிக்கும் மத்திய வயதினரிடம் எடுக்கப்பட்டுள்ளதொரு சர்வேயில் கிட்டியுள்ள முடிவுகளும் செம interesting !! அவர்களது டாப் 10 காமிக்ஸ் பட்டியலில் 9 தொடர்கள் கார்டூன்களே ! முதலிடத்தில் ஆஸ்டெரிக்ஸ் & ஒபெலிக்ஸ் ; இரண்டாமிடத்தில் ஆக்ஷன் + காமெடி என்று கலக்கிடும் டின்டின் & மூன்றாமிடத்தில் நமது லக்கி லூக் இடம்பிடிக்கின்றனர் ! நீலப் பொடியர்களுக்கோ இடம் # 7 ! Phewww !!
- இத்தாலியில் கொரோனா வாங்கிய காவுகள் ; நடத்திய கோர தாண்டவம் இப்போதெல்லாம் ஒரு தூரத்துக் கனவாகவே தெரிகிறதென்கிறார்கள் - சகஜ வாழ்க்கைகளுக்குத் திரும்பிய கையோடு, கோடை விடுமுறைகளையும் ரசித்து வரும் நமது படைப்பாளிகள் ! நோய்த் தாக்கத்தின் உச்சத்தினில் கூட பதிப்புகளை நிறுத்தியிருக்கா போனெல்லி - பழைய வேகத்தோடு டெக்ஸ் & டைலன் டாக் ஆல்பங்களை வெளியிடுகிறார்களாம் ! மார்ச் & ஏப்ரல் மாதங்களில் விழத் துவங்கியிருந்த புத்தகக்கடை விற்பனைகள் - இப்போது back with a bang என்கிறார்கள் !!
- SODA : என் மட்டிற்கு நிச்சயம் இடம்பிடித்திட வேண்டியவர் ! உங்கள் தரப்பிலும் ஒரு ஏகோபித்த YES-ஆ ?
- ரிப்போர்ட்டர் ஜானி : ஒரு டைட்டான போட்டி நிலவிடும், குறுகலான வாய்ப்புகளுடனான அட்டவணையில் இவரும் ஓ.கே. தானா ?
- CID ராபின் ?
- கேரட் மீசை க்ளிப்டன் ?
- 'இம்முறை கொஞ்சம் தேவலாம்' என்ற remarks ஈட்டியுள்ள டேஞ்சர் டயபாலிக் - worth one more go என்பீர்களா ? Maybe இதே போல ஒரு சமீபத்தைய கதையாய்த் தேர்வு செய்தால் சித்திரங்களும், கதையும் புராதன நெடியின்றி லயிக்கச் செய்யுமா ?
- அ-அது வந்து....இந்த அவங்க இருப்பாங்களே....நம்ம இளவரசிங்க ....அது தானுங்க நம்ம மாடஸ்டிங்க !அவுகளுக்கும் ஸ்லாட் ஒன்று ஓ.கே. தானா ?
- மாறுவேஷ மன்னன் ஹெர்லாக் ஷோம்ஸ் ?
Me 1st
ReplyDelete2
ReplyDeleteபதிவை படிப்போம் பின்னே!
ReplyDeleteகமெண்ட் போடுவோம் முன்னே!
மாடஸ்டி வாழ்க!
மாடஸ்டி வாழ்க!
மடஸ்டியையும் டப்பாபாலிக்கையும் நினைச்சாலே மயக்கமா வருது.
ReplyDeleteக்யாரே??
Deleteசெட்டிங்கா??
சோடா குடிங்க :-)
Deleteஅடிங்க
Deleteபுதையல் வேட்டை. அர்ஸ் மேக்னா ப்ளீஸ்.
ReplyDeleteலட்சியம் நிச்சயம் போல
Deleteஎனது கருத்தும் இதுவே
Deleteகழுகு வேட்டை இதழை மறுபதிப்பு செய்ய வேண்டும். Please No colour. No Maxi. Only black and white.
ReplyDeleteஅப்படி இல்லைன்னா கலரில் ரெகுலர் சைஸ் .But அதே அட்டைப்படங்கள். Please.
தேர்வுகளை நீங்கள் செய்யுங்கள் நண்பரே ; திட்டமிடல்களை நான் செய்கிறேனே !
Deleteஎனது தேர்வு கழுகு வேட்டையை பொறுத்தவரையில் ஒன்றே ஒன்றுதான். அந்த பழைய இதழை கையில் ஏந்திப் படிக்கும் அதே இன்பம் மறுபதிப்பு இதழில் கதையை முதன்முதலில் படிக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே.
DeletePlease முடிந்தால் அதே சைஸில் அதே வடிவமைப்பில் அந்த இதழை கண்ணில் காட்ட முடிந்தால் நிரம்ப சந்தோசமே Please.
வணக்கம் சார் எங்க தலைவருக்கு ஒரு இடம் உண்டுதானே....???
ReplyDeleteஇதென்ன கேள்வி
Deleteகனத்த மனதுடன் இளவரசிக்கு இதயத்தில் மட்டும் இடம் ஒதுக்க போகிறேன் அடுத்த ஆண்டு..
ReplyDeleteநமது தியாகம் வீண் போவாது
Deleteஅர்ஸ் மேக்னாவுக்கு என் ஓட்டு..
ReplyDelete9th
ReplyDeleteTex willer for maxi.
ReplyDelete11th
ReplyDeletePEOPLE : இதோ - அதற்கான வோட்டெடுப்பினில் பங்கேற்கும் உங்களின் வாக்குச் சீட்டு : https://strawpoll.com/qdsx4cduc
ReplyDeleteகழுகு வேட்டை அருமையான தேர்வு சார்.. பாபு சொல்வது போல் No Maxi...வழக்கமான சைசிலே ஹார்டு பவுண்ட் டிராகன் நகரம் போல....மேக்ஸி புக் சைஸ்தான் பெரிசே தவிர படங்கள் வழக்கமான சைசிலேயே இருப்பதும் நெருக்கிக்கொண்டு உள்ளது போல் ஒரு ferfeel sir...அதனால ரெகுலர் சைஸ் கலர் ஹார்டுபவுண்ட் எனது விருப்பம்....
ReplyDelete+1111
Deleteஆல் மைனஸ்
Deleteகேள்வி 1,2,3 ஆதரிக்கிறேன்..
ReplyDeleteஅடுத்த ஆண்டு நிலவரம் கலவரமில்லாமல் இருந்தால் 4,5,6,7 பற்றி யோசிக்கலாம்.
அடுத்த வருஷம் எவ்விதமிருந்தாலும், அது சார்ந்த தீர்மானம் இந்த வருடமே இருந்தாக வேண்டும் என்பது தானே சிக்கலே !
Deleteகழுகு வேட்டை இதழை அன்றைய நாளில் வந்தமாதிரியே அதே மாதிரி மறுபதிப்பு செய்து எங்களை அந்த நாட்களுக்கே அழைத்துச் செல்லுங்களேன் Please.
Deleteபின்குறிப்பு :- கடைசியாக நான் கடுப்பான மறுபதிப்பின் அட்டைப்படம் சைத்தான் சாம்ராஜ்யம் மறுபதிப்பு. சமீபத்திய வேதனை இருளின் மைந்தர்கள் Size.
அந்த நாட்களுக்கே என்றால் எப்படி பாபு - டைட்ஸ் பேன்ட் ; பொடி பெல்ட் ; உடம்பை ஓட்டிப் பிடிச்ச சட்டை என்று போட்டுக்கொண்டா ?
Deleteபுத்தகத்தை மட்டும் அதே மாதிரி மறுபதிப்பில் தாருங்கள் மற்ற அனைத்தும் தானாகவே கிடைக்கப் பெறுவோம். புதுமை என்ற பெயரில் அந்த கதைக்கான நன்மதிப்பை குறைத்துவிடவேண்டாமே Please.
Deleteசார் அடுத்த வருடம் தூள் கிளப்பும்னு பட்சி சொல்து
Deleteஎனது ஓட்டு ரெகுலர் சைஸ் கலர் கழுகு வேட்டை...
ReplyDelete+1
Delete+10000000000
Delete+111
Deleteஏப்பா ஓட்டு போட்டியா ??
ஆமாங்கன்னா..
(ARS MAGNA) அங்கிட்டு ஒரு குத்து..
(TEX) இங்கிட்டு ஒரு குத்து..
மேக்சி வாணாமா மக்கா....சோதனை
Deleteகழுகு வேட்டை நல்ல தேர்வு
ReplyDeleteஅடுத்த தேர்வு கார்சனின் கடந்த காலம் மேக்ஸி சைசில் படிக்க ஆசை
அடடா அருமை பின்னிட்டீங்க...பதிமூன்று மட்டும் மறுமறுபதிப்பா...காககா மறுமறுபதிப்பில்லயா...கொடுமையின் உச்சம்
Deleteபுதையல் கிடைத்தால் மகிழ்ச்சி
ReplyDeleteதல தாண்டவம் ஆடினாலும் சந்தோஷம்
வாண்டு ஸ்பெஷல் வந்தாலும் சரி.
ஆனா சீக்கிரமா கால்வின் வாக்ஸை
கண்ணில் காட்டுங்க சார்.
அடுத்தமாதமே வந்தாலும் முன்பதிவுக்கு
கொஞ்சம் துணையாய் இருப்பார்.
2132 வந்தே தேர் அசையலை ! கா.வா. வந்து காத்து வாங்காது இருந்தாக்கா சரி தான் சார் !
Deleteகால்வின் வாக்ஸை வெளியிடுங்கள். அதற்கே மறுபதிப்பு கேட்க வைக்குமளவுக்கு வரவேற்பு இருக்கும்.
Deleteஆ-வூன்னா கொடி புடிச்சிட்டு ஆரவாரமா கிளம்பிடறாங்க moment#
Deleteஇப்போ
Deleteஇல்லாட்டி எப்போ?
moment#
1. SODA : என் மட்டிற்கு நிச்சயம் இடம்பிடித்திட வேண்டியவர் ! உங்கள் தரப்பிலும் ஒரு ஏகோபித்த YES-ஆ ?
ReplyDeleteYes. Yes.... Please இரண்டு கதைகள் கொண்ட ஒரே புத்தகமாக வேண்டும்.
2. ரிப்போர்ட்டர் ஜானி : ஒரு டைட்டான போட்டி நிலவிடும், குறுகலான வாய்ப்புகளுடனான அட்டவணையில் இவரும் ஓ.கே. தானா ?
பழைய ஜானி ஸ்டைல் கதை ஒன்று மட்டும் தரலாம். ஓரே ஸ்லாட் என்பதால் ஜானி 2.0 அடுத்த வருடத்திற்கு மட்டும் வேண்டாம்.
3. CID ராபின் ? யோசிக்க வேண்டும்.
4. கேரட் மீசை க்ளிப்டன் ?
பேஷ் பேஷ்.
5. 'இம்முறை கொஞ்சம் தேவலாம்' என்ற remarks ஈட்டியுள்ள டேஞ்சர் டயபாலிக் - worth one more go என்பீர்களா ? Maybe இதே போல ஒரு சமீபத்தைய கதையாய்த் தேர்வு செய்தால் சித்திரங்களும், கதையும் புராதன நெடியின்றி லயிக்கச் செய்யுமா ?
இந்த மாத கதை ஒகே ரகம். இது போன்ற கதை ஒன்று மட்டும் முடிந்தால் அடுத்த வருடம் கொடுங்கள். அதற்கு முன்னர் இந்த வருடத்தில் வந்த கதை சுமார்.
6. அ-அது வந்து....இந்த அவங்க இருப்பாங்களே....நம்ம இளவரசிங்க ....அது தானுங்க நம்ம மாடஸ்டிங்க !அவுகளுக்கும் ஸ்லாட் ஒன்று ஓ.கே. தானா ?
அடுத்த வருடம் sure hit என்று முடிவு செய்தால் இளவரசி மற்றும் டயபாலிக் இருவருக்கும் ஒரு வருடம் பிரேக் கொடுக்கலாம்.
7. மாறுவேஷ மன்னன் ஹெர்லாக் ஷோம்ஸ் ?
தாராளமாக வரட்டுமே.
இந்த வருடம் மிகவும் நான் எதிர்பார்த்த ஒரு ஸ்பெஷல் வாண்டு ஸ்பெஷல் அது அடுத்த வருடம் தள்ளி போவதில் வருத்தம் அதிகம் தான் எனக்கு. உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள் சார்; என்றும் உங்களுடன். நன்றி.
ReplyDeleteவோட்டளியுங்கள் சார் - உங்களின் ஆதர்ஷ இதழுக்கு ! அங்கு கிட்டும் முடிவு என்னவோ - அதுவே நமது முடிவாகவும் இருந்திடும் !
Deleteஏற்கனவே கார்டூன் என்றாலே பலர் தெறிக்க ஓடுகிறார்கள். :-(
DeleteMaxi-க்கு நான் எதிரி...
ReplyDeleteஎதிரிக்கு நானெதிரி
Deleteரூ.300 கழுகு வேட்டை ஒரே இதழாக என்றால் ஓகே சார்.. தயவுசெய்து இருளின் மைந்தர்கள் போல் இரண்டாக வேண்டாம்....சார்..அதே நேரத்தில் ARS MAGNA ஒரே புக் ஹார்ட் பவுண்ட் என்றால் டபுள் ஓகே சார்...
ReplyDeleteநானுமே
Deleteஅதே மாதிரி ஹார்டு பவுண்ட் வேண்டாம் சார்...
Deleteஅமெரிக்காவிலும், இத்தாலியிலும் அரங்கேறி வரும் காமிக்ஸ் ரணகள புள்ளிவிவரங்கள் வாயைப் பிளக்கச் செய்கின்றன! 'அப்படியென்ன அந்த Dog manல் இருக்கு?' என்ற ஆவல் எழுகிறது!
ReplyDeleteகருத்துக்கணிப்பில் கார்ட்டூன்களே அதிக இடம் பிடித்திருப்பது உற்சாகமான தகவல்!!
நம் நாட்டிலும் என்றாவது ஒருநாள் இதுபோன்ற அதிசயங்கள் நிகழாதா என்று ஏங்க வைத்திடுகிறது இந்தப் பதிவு!
DOGMAN உலக அதிசயங்களின் பட்டியலில் இடம் பெற வேண்டிய சமாச்சாரம் ! நாய் மண்டை ; மனுஷ உடம்பு என்றான போல்ஸ்கார்பற்றிய கதை ; செம freaky சித்திர பாணிகளோடு ! ஒரு கதையைப் படித்துப் பார்க்கணும் போலும் - அதன் மாயமென்னவென்று புரிந்து கொள்ள !!
Deleteபுத்தக விழால ஒரு புக்க கொட்டி வைப்போம் ஒரு லோடா...
Deleteஅடுத்த ஆண்டுக்கு...
ReplyDelete1.XIII
2.Old ரிப்போர்ட்டர் ஜானி
3.cid ராபின்
4.மார்டீன்
5.சிக்பில்
6.லக்கிலூக்
7.ரிப்கெர்பி
8.காரிகன்
9.சிஸ்கோ
மேலும் ஏற்கனவே வாங்கிவைத்த கருப்பு வெள்ளை எவர்கிரீன் ஹீரோக்களை களமிரக்குங்க சார்..
மிடிலே...!!
Deleteஉனக்கு கேக்கவே தெரியல மக்கா...
Delete1.xiii spinoff
2.xiii spinoff
3.xiii spinoff
4.xiii spinoff
5xiii spinoff
6.xiii spinoff
7.xiii spinoff
8.xiii spinoffஇதுல ஏதாவது ஒன்னு
இல்லன்னா 13 ம்
Deleteவாண்டு ஸ்பெஷலுக்கு பதில் புதையல் வேட்டை தாருங்கள். ஒரு கதைக்கு பதில் மாற்று என முடிவு செய்யும் போது புதிய கதையான புதையல் வேட்ட்டையை கொடுங்கள். மறுபதிப்பு கதைகள் வேண்டாம். ப்ளீஸ் சார்.
ReplyDeleteரிப்போர்ட்டர் ஜானி
ReplyDeleteசோடா
இளவரசி
ராபின்
டயபாலிக் ஓகே சார்
கார்ட்டூன் பார்ட்டிகள் காணோம் ....ம்ம்ம்ம்ம்ம்ம் !!
Delete1.SODA - yes yes yes yes!!!
ReplyDelete2.ரிப்போர்ட்டர் ஜானி : வந்தாலும் ஓகே.. வரலேன்னாலும் ஓகே!
3. CID ராபின் : yes - நல்லதொரு கதையம்சத்தோடு!
4. கிளிப்டன் - yes yes yes yes!!
5. DD - வரலேன்னாலும் வருத்தமில்லே!
6. இளவரசி - yes.. வரட்டும் - நல்ல சித்திரத் தரத்தோடு!
7. ஹெர்லாக் ஷோம்ஸ் ? - why not?!!
//ரிப்போர்ட்டர் ஜானி : வந்தாலும் ஓகே.. வரலேன்னாலும் ஓகே!//
Deleteகி.நா.பதில் சிலபஸிலேயே கிடையாதுங்கோ !
உலக அளவில் காமிக்ஸ் விற்பனை மற்றும் அச்சாகும் புத்தகங்கள் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது. விரைவிலேயே நாமும் விற்பனையில் சில புதிய உயரங்களை தொடுவோம் என நம்பிக்கை உள்ளது.
ReplyDeleteஇன்னமும் ஜப்பானின் விற்பனை நம்பர்கள் ; சீனாவில் ரகளை செய்து வரும் காமிக்ஸ் விற்பனை பற்றியெல்லாம் எழுத ஆரம்பித்தால் ரமணாவுக்கு சித்தப்பூ ஆகிடுவோம் என்று அடக்கி வாசித்திருக்கிறேன் சார் !
Deleteஉங்கள் அடக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சார் :-)
Deleteபெருமூச்சு தான் வருகிறது சார்...:-(
DeleteARS MAGNA க்கு ஓட்டு போட்டாச்சேய்..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇப்போது மீண்டும் முயற்சித்துப் பாருங்களேன் சார் !
Deletehttps://strawpoll.com/qdsx4cduc
Deleteஇத ஓப்பன் பண்ணி உள்ளே போங்க பரணி ஜி..
https://strawpoll.com/qdsx4cduc வேலை செய்கிறது என்ற காரணத்தால் எனது முந்தைய பின்னூட்டத்தை உங்கள் பதிலை பார்க்காமல் நீங்கி விட்டேன்.சாரி சார்.
Deleteவேலை செய்கிறது யுவா.
Deleteபதிவில் உள்ள லிங்க்கை கிளிக் பண்ணிய போது வேலை செய்ய வில்லை. ஆசிரியர் பின்னூட்டத்தில் உள்ள லிங்க்கை copy & paste பண்ணினேன், அது வேலை பார்க்கிறது.நன்றி.
ஓகே ஜி...
Deleteசோடா.
ReplyDeleteரிப்போர்ட்டர் (பழைய ) ஜானி
டேஞ்சர் டயபாலிக்
ராபின்
+1
Deleteசார் அந்த டெக்ஸ் vs மெபிஷ்டோ ப்ளீஸ் சார்..
ReplyDeleteவிடா முயற்சி ; என்னிக்காச்சும் வெற்றி !! பொறுத்திருங்க யுவா !
Deleteஇந்த ஒரு வார்த்தை போதும் சார்....
Deleteவிஸ்வரூப வெற்றி விரைவில் காண வாழ்த்துக்கள் யுவா...:-)
Deleteஅப்படின்னா டெக்ஸ் 75 கொண்டாடும
Deleteபோது வந்துடும்னு நம்பலாம்.
+111
Deleteபுத்தகத் திருவிழாக்கள் பழையபடி கலைகட்ட இன்னும் ஒருவருச காலமாவது ஆகிடும் என்பதன் அடிப்படையில் வாண்டூஸ் ஸ்பெஷல் தள்ளிப்போவது ஒருவகையில் நல்லதே!
ReplyDeleteஅதற்குப் பதிலாக 'அர்ஸ் மேக்னா'வே என் முதல் தேர்வு என்ற போதிலும், கொரோனாவால் தற்போது ஏற்பட்டுள்ள விற்பனைச் சுணக்கங்களை கணக்கில் கொண்டால் வசூல் மன்னன் டெக்ஸுக்கே என் ஆதரவு!
புதையல் வேட்டை விற்பனையில் கண்டிப்பாக சாதிக்க வாய்ப்புகள் அதிகம். டெக்ஸ் புதிய கதை என்றால் நீங்கள் சொல்வது சரி. மறுபதிப்பு கதை என்பதால் எனது சாய்ஸ் புதையல் வேட்டை. எனவே புதையல் வேட்டையை ஆதரியுங்கள்.
Deleteஅட E V நம்ம கட்சி.வசூல் மன்னன் டெக்ஸ் அவர்களுக்கு வாக்களித்த செயலாளர் அவர்களுக்கு ஒரு ரவுண்டு பன்னு பார்சல்..!!
Deleteஇம்முறையும் வோட்டெடுப்பின் முடிவுகளே நமது முடிவாக அமைந்திடும் என்பதால் - the decision isn't in my hands !
DeleteThis comment has been removed by the author.
Delete@ பரணி ஜி..என்னுடைய கருத்தும் இதுவே.....+12345
Deleteஆமா புதையல் வேட்டை தான் லீடிங்கில் இருக்கிறது எனவே இருக்கும் மேடையிலேயே இருக்கும் கட்சியிலேயே இருந்து உடனடியாக புதையல் கட்சிக்கு இடம் பெயர்கிறேன்..:-)
Deleteஅதே போல் மீண்டும் டெக்ஸ் முதலிடத்தில் வந்தோலே வாண்டு முதலிடத்தில் வந்தாலோ அப்பொழுதும் இருக்கும் மேடையில் இருந்து இருக்கும் கட்சியில் இருந்து தைரியமாக அணி மாறுவேன் என்பதையும் உறுதிபடக் கூறி கொள்கிறேன்...:-)
Deleteடெக்ஸ்தான் ஏற்கப்பட்டது கிடைக்குதே...மேக்னா வெல்லட்டும்
Deleteஎந்த நாயகரையும் வேண்டாம் என்று ஒதுக்க எனக்கு மனம் வராததால் ஏழு நாயகர்களுமே வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொண்டு அமர்கின்றேன்.நன்றி.வணக்கம்.
ReplyDeleteதலீவரின் விழுது மாரியே பதிவிடறீங்க சார் !
Deleteஹா ஹா!! உண்மை தான் சார்! அப்படியே (தங்கத்) தலீவரின் சாயல்!!
Delete('தங்க' போடலைன்னா கோவிச்சுக்கிடுவாரு!)
"தங்கத்த' போட்டுப்புட்டு அப்புறமா தலீவரையே மார்வாடி கடைக்குத் தூக்கிட்டுப் போயிடாதீங்க !!
Delete:-(
Deleteஎந்த நாயகரையும் வேண்டாம் என்று ஒதுக்க எனக்கு மனம் வராததால் ஏழு நாயகர்களுமே வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொண்டு அமர்கின்றேன்.நன்றி.வணக்கம்
Delete₹##
:-)
ஓட்டுப் போட்டுவிட்டேன் ஆசானே.
ReplyDeleteஆனால் நான் ஓட்டுப் போட்ட கட்சி ஜெயிக்காது போல்த் தெரிகின்றதே?
என்னமோ போடா மாதவா ?!
டெக்ஸ் வில்லருக்கு முதல் ஓட்டு எனதுதான் நண்பரே நான் ஓட்டு போடும்போது வாண்டு ஒன்றும் அர்ஸ் மேக்னா இரண்டும் வாங்கியிருந்தன டெக்ஸீக்கு முதல் ஓட்டு எனதே விற்பனை முனையில் சாதிப்பார் என்பதால் வில்லருக்கு எனது ஓட்டு
Deleteகண்ண மூடிட்டு கைய விட்டுத் துளாவுனா கிட்டுவதெல்லாமே டெக்சே...புதையல் அபூர்வம்...கிடைக்கனுமே...ஏக்கத்த போக்க வந்ததே மேக்னா
DeleteSoda,reporter Johnny ,danger diabolic ok! வாண்டு ஸ்பெஷல் அடுத்த ஆண்டு ஒத்திவைதல் நலம்பயகும்
ReplyDeleteAre magnavirke என் வோட்!
ReplyDeleteம்ம்ம்... எப்படியிருந்த சந்தா இப்படியாயிடிச்சு? ok, அடுத்தா ஆண்டு ஒவ்வொரு Slotம் சும்மா hot Seatக்கு இனணயானது. ஒவ்வெரு Slotம் நச்சென்றுயிருக்க வேண்டும்.
ReplyDelete1. Soda - Ok.
2. ரி. ஜானி - ok
3-7 ஆவேரேஜ் நாயகர்கள் எனும் போது கண்ணை மூடிக்கிட்டு ரிஜெக்ட் பண்ணலாம். இந்த நிலைமையிலும், டயபாலிக் & மாடஸ்டி வேணுமா...? என கேட்பதெல்லாம் ரொம்ப, ரொம்ப டூ மச்...!
//டயபாலிக் & மாடஸ்டி வேணுமா...? என கேட்பதெல்லாம் ரொம்ப, ரொம்ப டூ மச்...!//
Deleteஇவர்களையும் கேள்வி லிஸ்டில் வைக்கிறது டூ மச்ன்னு சொல்றீங்களா ? இல்லாங்காட்டி, இவங்களுக்கோசரம் கேள்வி கேக்றதே வேஸ்ட்ன்னு சொல்ல வர்றீங்களா ? பிரிலியே சார் !
அடுத்தாண்டு இவர்களை SKIP பண்ணலாம் என்று சொல்ல வந்தேன்.
Delete// இவர்களையும் கேள்வி லிஸ்டில் வைக்கிறது டூ மச்ன்னு சொல்றீங்களா ? இல்லாங்காட்டி, இவங்களுக்கோசரம் கேள்வி கேக்றதே வேஸ்ட்ன்னு சொல்ல வர்றீங்களா ? பிரிலியே சார் ! //
DeleteLOL
இளவரசி ,சிஐடி robin ok
ReplyDeleteSODA : என் மட்டிற்கு நிச்சயம் இடம்பிடித்திட வேண்டியவர் ! உங்கள் தரப்பிலும் ஒரு ஏகோபித்த YES-ஆ ?
யெஸ்!!!!
ரிப்போர்ட்டர் ஜானி : ஒரு டைட்டான போட்டி நிலவிடும், குறுகலான வாய்ப்புகளுடனான அட்டவணையில் இவரும் ஓ.கே. தானா ?
ஓகே!!!!
CID ராபின் ?
நோ....
கேரட் மீசை க்ளிப்டன் ?
யெஸ்..யெஸ்..
'இம்முறை கொஞ்சம் தேவலாம்' என்ற remarks ஈட்டியுள்ள டேஞ்சர் டயபாலிக் - worth one more go என்பீர்களா ? Maybe இதே போல ஒரு சமீபத்தைய கதையாய்த் தேர்வு செய்தால் சித்திரங்களும், கதையும் புராதன நெடியின்றி லயிக்கச் செய்யுமா ?
யெஸ்...து.ஒ.தொ .மாதிரி நல்ல கதை
அ-அது வந்து....இந்த அவங்க இருப்பாங்களே....நம்ம இளவரசிங்க ....அது தானுங்க நம்ம மாடஸ்டிங்க !அவுகளுக்கும் ஸ்லாட் ஒன்று ஓ.கே. தானா ?
நோ...நோ..இந்த வருஷம் வேணாம்..
மாறுவேஷ மன்னன் ஹெர்லாக் ஷோம்ஸ் ?
வரலாம்!!!
////நோ...நோ..இந்த வருஷம் வேணாம்..////
Deleteஹிக்! ஏனுங்க செனாஅனா.. இளவரசி கூட எதனாச்சும் குடும்பச் சண்டையா?!!
நானும் வந்துட்டேன். என்ன கொஞ்சம் late அவ்வளவு தான்.
ReplyDeleteYes, Dog Man is very popular in US. My seven year old son awaits for next title in Amazon, this series success is because the author was able to match the kids imagination. Very ordinary story and drawing but kids were laughing non stop.
ReplyDelete///this series success is because the author was able to match the kids imagination. Very ordinary story and drawing but kids were laughing non stop.//
Deleteஅடடே!! அப்படி அதுல என்னதான் இருக்குன்னு பார்த்துப்புடற ஆவல் இன்னும் அதிகமாகுதே?!!
ஈவி எனக்குமே
Deleteநம்ம லயனில் Dog man வெளிவர ஏதும் வாய்ப்புண்டா ஆசானே?
ReplyDeleteThis is strictly for kids, adults 4 page kudda thaanda mateenga ;)
DeleteIf we are releasing have to market it and it can make it big with kids.
பரிட்சித்து பாக்கலாம்...தமது குழந்தைகள் கிறுக்கிப் பார்ப்பதை ரசிக்காதோர் உண்டோ...ஓவியர்களா மாற விரும்பலாம் கிறுக்கல் தெய்வங்கள்...ஒரு வாய்ப்பு ஒரே வாய்ப்பு தந்து பார்க்லாமே...நமது இதழின்...ஏன் நமது மழலைகளின் எதிர்காலமும் கலக்கலாக லாம் வென்றால்
Deleteவாண்டு ஸ்பெஷலுக்கு ஓட்டு போட்டாச்சு
ReplyDelete🙂
Deleteகார்ட்டூன் கதைகள் நிறைய வரட்டும் சார்.
ReplyDeleteMind voice: விஜயன் சாருக்கும் கார்ட்டூன் பிடிச்சிருக்கு, எனக்கும் பிடிச்சிருக்கு... ஆனால்... ஹும்... பெருமூச்சு விடும் படங்கள் பத்து...
1. Soda haven’t read it so no comments
ReplyDelete2. Reporter Johnny - YES YES YES
3. CID Robin - Absolutely YES
4. Clifton - Normally yes but given the circumstances NO
5. Diabolick - it’s a one time read hard to read second time so NO
6. Modesty - mudiyalla NO
7. Herlock shomes - yes if we have a slot.
மாடஸ்டியும் , டயபாலிக்கும் வேணும் ஆசிரியரே.
ReplyDelete+1
Delete93வது.
ReplyDeleteடியர் எடி,
ReplyDeleteஅடுத்த வருட சாய்ஸ்:
Double OK: SoDa, Reporter Jonny, CID Robin, Holmes
Thumbs Down: Modesty, Diabolik, Clifton
இந்த வருட சாய்ஸ்: அர்ஸ் மேக்னா
ஓட்டும் போட்டாச்சு.
ஹா்..நிறைய்ய கேள்வி பதில் இருக்கே...இதோ பதில் சொல்ல பேனாவும் பேப்பரும் ரெடி ...
ReplyDeleteசோடா டபுள் ஓகே சார்...
ReplyDeleteரீப்போர்ட்டர் ஜானீ ஓகே சார்...( பழைய பாணி ஜானியா இருந்தா டவுள் ஓகே சார்..)
ராபின் ..எனக்கு பிடீத்தவர் ஆனால் விற்பனைக்கு பிடித்தவரா என்பது தாங்களே அறிவீர்கள் எனவே எதுவாகினும் ஓகே சார்..
க்ளிப்டன்...ம்ம்...அது வந்து சார்...ம்ம்..இந்த முறை இதயத்தில் தான் வைத்து இருக்கலாமே சார்..( கார்ட்டூன் காதலர்கள் ஆசிரியர் உட்பட மன்னிக்க்.)
டயபாலிக் மாடஸ்தி ...மாடஸ்தியை மறுக்க மனமில்லை என்றாலும் மாடஸ்தி உங்கள் சாய்ஸ் சார்..டயபாலிக் இந்த முறை பரவாயில்லை ரகம்..ஆனால் எல்லா முறையும் அப்படி இருக்குமா எனவும் தெரியவில்லை...எனவே இவரும் உங்கள் சாய்ஸ் எதுவாகினும் எனக்கு ஓகே சார்...
மாறுவேச ஷெர்லக்....ஓகே ஓகே சார்...
விற்பனை முக்கியம் என்பதால் டெக்ஸ் அவர்களுக்கு எனது ஓட்டை பதிய செல்கிறேன்...அதே சமயம் நண்பர் பாபு சொன்னது போல பழைய பாணியில் வருகை தந்தால் சைஸ் ,ஒரே இதழ் என வருகை தந்தால் இன்னும் அருமை தான்...
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஐய்யையோ இது என்ன டெக்ஸ் லாஸ்ட் பெஞ்சுல உக்காந்துட்டு இருக்காரு...:-(
ReplyDeleteசரி விடு பரணி யார் வந்தாலும் ஆட்சியை சரிவர செய்தால் போதுமானது ...எனவே ...எனவே நோ ப்ராப்ளம்...யார் வந்தாலும் ,எவர் முந்தினாலும் ஓகே ஓகே...:-)
அ-அது வந்து....இந்த அவங்க இருப்பாங்களே....நம்ம இளவரசிங்க ....அது தானுங்க நம்ம மாடஸ்டிங்க !அவுகளுக்கும் ஸ்லாட் ஒன்று ஓ.கே. தானா ? We will remain ungrateful if we ignore our very first heroine.
ReplyDelete+111
Deleteஅர்ஸ் மேக்னாவுக்கு ஒட்டு போட்டாச்சு. புதையல் வேட்டை 55 சதவீத ஓட்டுகளோடு முதல் இதுவரை. டெக்ஸ் மூன்றாமிடத்தில். ஆச்சரியமே.
ReplyDeleteSoda சுக்கு ok. (அப்படியே பெப்சி, கோலா..ஏதாச்சும்..?)
ஜானி, ராபின், ஹெர்லக் வரலாம்.
க்ளிப்டன் இப்போது வேண்டாம்.
டயபாலிக். இன்னும் விறுவிறுப்பான கதைக்களம் வேண்டும்.(சட்டியில் உள்ளதுதானுங்களே..ங்கறீங்க. புரியது).
டெக்ஸ் அதிகம் என்பதால் அபூர்வமான புதையல் வெளிப்பட்டுள்ளது...விறுவிறுப்பான கதைகள் சோடை போனதாய் சரித்திரம் உண்டா என்ன
Delete"Soda சுக்கு ok."
DeleteSodaவுக்கு ok.ங்கிறது சுக்கு ஆயிடுச்சி. Sorry.
(கமெண்டு போடறதுக்கு முன்னாடி கரீக்டா செக்பண்ணுடா பயலே.)
சோடாசுக்குன்னா நெறயன்னுல்ல நெனச்சேன்...பிழையாய் கவிதை
Delete109
ReplyDelete1 சோடா 2.ராபின் 3.கிளிப்டன் 4.ஹெர்லக் ஷோம்ஸ் 5.மாடஸ்டி 6.ரிப்போர்ட்டர் ஜானி 7.கமான்சே அல்லது ரிப் கிர்பி . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஇடமில்லயா
Deleteபுதிய பாதை,அர்ஸ் மாக்னாவிற்கு என் ஓட்டு
ReplyDeleteSODA. ஓ.கே.
ReplyDeleteராபின், ரிப்போர்ட்டர் ஜானி, க்ளிப்டன், டயபாலிக் இப்போ வேண்டாம்.
ஹேர்லக் ஷோம்ஸ் ஓ.கே.மாடஸ்டியும் ஓ.கே.
புதையலுக்கே ஓட்டு போட்டேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete110
ReplyDeleteஅன்றும்...
ReplyDeleteஇன்றும்...
என்றும்...
Tex is Comics,
Comics is Tex!
Tex game continues..........
சார் வீட்டுல உக்காந்து படிக்க....நேரம் போக்க காமிக்சே அவர்களுக்கு உதவி இருக்கலாம்....வருமான சேகரிப்பு அப்படி அங்கே என இருக்கலாம்....நாமளும் விடுவோம்...பட்டய கெளப்புறோம் வரும் காலங்களில்....சோடா வரட்டும்...மாடஸ்டி ஜானி க்ளிப்டன் இவியள எல்லாம் சிறிது காலம் ஓய்வெடுக்கும் சொல்லிட்டு...அந்த மேக்னா...அமெரிக்கா...ஆப்ரிக்கா...கென்யா போன்ற சிறப்பிதழ்கள அளவா இவிய இடத்ல விடலாமோ...களமோ பெரிது...அடித்து ஆடுவோமே....
ReplyDeleteவார்டு மலர் பரீட்சிக்கும் நேரம் இதுவல்ல என்பதால் டெக்சோ மேக்னாவோ வரட்டுமே
வார்டு/வாண்டு
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete1. SODA : என் மட்டிற்கு நிச்சயம் இடம்பிடித்திட வேண்டியவர் ! உங்கள் தரப்பிலும் ஒரு ஏகோபித்த YES-ஆ ?
ReplyDeleteYes...
சோடா டபிள் ஓகே
Delete2. ரிப்போர்ட்டர் ஜானி : ஒரு டைட்டான போட்டி நிலவிடும், குறுகலான வாய்ப்புகளுடனான அட்டவணையில் இவரும் ஓ.கே. தானா ?
ReplyDeleteNo...
ஜானி ஓகே ஓகே
Deleteஅது... சன்னமான ஷெட்யூலில் 50:50 வாய்ப்பு உள்ளவர்களை ரிஸ்க் எடுக்க வேணாமே என்று தான் KS. ரெகுலராக 48இதழ்கள் எனில் ஜானிக்கு இடம் அவசியம்.
Deleteஅவரது கேர்ள்பிரண்ட் நாட்டின் கண்களுக்கே அந்த ஸ்லாட் டபுள் ஓகே.
நாடின் மிரளும் போது கண்கள் அசத்தும் அழகு!
3. CID ராபின் ? யோசிக்க வேண்டும்.
ReplyDeleteயோசிக்கவே வேணாமே... கல்தா!
ராபின் yes
Delete1 Soda( சா.டே): வேண்டும்
ReplyDeleteஇந்த நிலையிலும் பொதுப்பணி செய்யும் காவல் வீரர்களை மரியாதை செய்வதற்கு.
2. ஜானி ஜானி நோ பாப்பா
3. CID ராபின்: கதையை படித்து முடிவு செய்யுங்கள்,RACல வச்சுக்கோங்க
4. கேரட் மீசை தாத்தா: வயசானவர தொந்தரவு செய்ய வேண்டாம். No
5. டயபாலிக்: லேட்டஸ்ட் கதை என்றால் RAC சார், எப்படி இருந்தாலும் கடைசி பக்கத்துல ஜிங்கா பல்பு வாங்க போறார்
6. மாடஸ்டி : கடைசியாக வந்த கதை சூப்பர், yes
7. ஹெர்லாக் ஷோம்ஸ்: வண்டிப்பாக கேண்டும்
மேக்னாவும் வேணும் தலயின் வண்ணத்ல வண்ணத்தால கழுகு வேட்டை மரண முள்ளும் வேனும்
ReplyDelete
ReplyDelete4. கேரட் மீசை க்ளிப்டன் ?
டபுள் ஆம்லெட்!
பெரிய மீசையா வெச்சி வுடுங்க!!!!!
(நமக்குத்தான் மீசை இல்லை, அவருக்காச்சும் இருக்கட்டும்)
எனக்கும் ஓகே
Deleteமீசை ஒட்டுமா நம்மோட
Delete5. 'இம்முறை கொஞ்சம் தேவலாம்' என்ற remarks ஈட்டியுள்ள டேஞ்சர் டயபாலிக் - worth one more go என்பீர்களா ? Maybe இதே போல ஒரு சமீபத்தைய கதையாய்த் தேர்வு செய்தால் சித்திரங்களும், கதையும் புராதன நெடியின்றி லயிக்கச் செய்யுமா ?
ReplyDeleteSkip...!
No for me too
Delete6. அ-அது வந்து....இந்த அவங்க இருப்பாங்களே....நம்ம இளவரசிங்க ....அது தானுங்க நம்ம மாடஸ்டிங்க !அவுகளுக்கும் ஸ்லாட் ஒன்று ஓ.கே. தானா ?
ReplyDeleteமனசுல வெச்சிருக்கேன் அம்புட்டு ஆசை....!!!
இளவரசி எல்லாம் 2022ல பார்க்கலாம்
Delete7. மாறுவேஷ மன்னன் ஹெர்லாக் ஷோம்ஸ் ?
ReplyDeleteவேசப்பார்டியா வெளையாட வுடுங்க சார்.
எனது டாப் லிஸ்ட்டில் இருக்கும் ஹீரோ. எப்போதுமே எஸ்
DeleteSchool எல்லாம் வீட்டில் இருக்கும் இந்த நேரம்
ReplyDeleteவாண்டு ஸ்பெஷல் கதைகளை தனி டிராக்கில் தனி தனியாக மாதாந்திர இதழாக try செய்யலாம்.
கலர் புக்காக, கடைசி பக்கங்களில் கலர் அடிக்க சில படங்கள் என...
If we spend lot of efforts on marketing, சாதிக்க முடியும்.
வாய்ப்பாத் தெரிது...வாகாகலாம்
Deleteபுதையலுக்கே ஓட்டு போட்டேன்
ReplyDelete1. Soda சுவை நல்லா இருக்கு இருங்கு.
ReplyDelete2. Reporter Johnny - அவரோட ரிப்போர்ட் காக எப்போதும் வெயிடிங்.
3. CID Robin - வேனாம்.
4. Clifton - கேரட் கண்ணுக்கு நல்லது.
5. Diabolick - வேனாம்.
6. Modesty - வேனும்.
7. Herlock shomes - yes if we have a slot
Bangalore Ganesh kumar.
கேரட் புக்குக்குநல்லதில்லயா
Deleteபுக்குக்கும் நல்லது.
Deleteடெக்ஸ்ஸின் பழிக்கு பழி?
ReplyDeleteஇந்த எலெக்ஷனிலே நம்மாள் துணை ஜனாதிபதி தான் போலிருக்கே சார் !
Deleteமொத விழல...இப்ப மேக்னாவுல குத்தியாச்சு
ReplyDeleteஎன்னோட ஓட்டு Ars Magna.
ReplyDelete1. Soda- Yes for next issue in sequence
ReplyDelete2. Reporter Johnny - Yes
3. CID Robin - Yes
4. Clifton - No
5. Diabolick - No, he kills innocent people
6. Modesty - Yes
7. Herlock shomes - Yes
//Diabolick - No, he kills innocent people//.
Deleteமேலே கூறிய ஒரே காரணத்திற்காக தான் நானும் டயபாலிக் வேண்டாம் என்கிறேன்.
அட .க்ளிப்டனும் நோ பட்டியலிலா சார் ?!
Delete7 க்கும் பெரிய நோ சார்!
ReplyDeleteகிளிப்டன், ஷெர்லாக் உள்பட!!
கார்ட்டூன் என்றாலே ஓகே சொல்லும் ரகமல்ல நான்!
எனக்கு பிடித்த கார்ட்டூன்ஸ்
1. லக்கி
2. சிக்பில்
3. ஸ்மர்ப்
4. மதியில்லா மந்திரி
5. ரின்டின்கேன்
6. புளூகோட்
லக்கிக்கு பிறகு "ஸ்மர்ப்ஸ்" தான் நம்ம ஃபேவரிட்!
வாண்டு ஸ்பெஷல் ஜெயிக்காத குதிரைக்கு ஓட்டு போட்டா, கடேசில கூடுதலா ஒரு அதிகாரி புக்கையே பார்க்க வேண்டி வரும்கிற பயத்துலயே எனது ஓட்டு "ARS Magna"வுக்கே!
///7 க்கும் பெரிய நோ சார்!///
Deleteஏழுமே சுமார் ரகம் தான்!
இந்த இடத்தில் எப்படியும் நீங்கள் சிறப்பான கதைகளை வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் நோ சொன்னேன்!
// கடேசில கூடுதலா ஒரு அதிகாரி புக்கையே பார்க்க வேண்டி வரும்கிற பயத்துலயே எனது ஓட்டு "ARS Magna"வுக்கே! // Same reason
Delete/ கடேசில கூடுதலா ஒரு அதிகாரி புக்கையே பார்க்க வேண்டி வரும்கிற பயத்துலயே எனது ஓட்டு "ARS Magna"வுக்கே! // Same reason
Deleteசுயநலத்திலும் ஒரு பொதுநலம்.
இன்னா ஒரு பயம் !!
Deleteஆஹான்....நீங்களாம் நல்லா வருவீங்கப்பா....!!!
Delete1 Soda : YES ..
ReplyDelete2. ஜானி .. NO TO 2.0 .. YES TO OLD JOHNNY ..
3. CID ராபின் .. இருக்குற ஒரே டிடெக்ட்டிவ் APART FROM JOHNNY .. SO ONE SLOT ..
4. கேரட் மீசை தாத்தா .. UR CHOICE ..
5. டயபாலிக் .. YES .. இம்மாத வந்த கதை மாறி இருந்தால் ஒன்று ஓகே சார் ..
6. மாடஸ்டி .. UR CHOICE SIR ..
7. ஹெர்லாக் ஷோம்ஸ் .. வேண்டாம் ..
//வாண்டு ஸ்பெஷலா ? புதையல் வேட்டையா ? தல தாண்டவமா// ..
ARS MAGNA ..
வோட்டாய்ப் போட்டு விடுங்களேன் சார் !
Deleteதாங்கள் அறிவித்துள்ள ஏழு நாயகர்களின் விற்பனையை பொறுத்து நீங்களே முடிவெடுத்து போடுங்கள் சார். எது வந்தாலும் வாங்கிப் படிக்கத்தான் போகிறோம்! வாண்டு ஸ்பெஷல் இம்மாதிரியான தருணத்தில் போடாமல் முடிவெடுத்திருப்பது நல்ல முடிவே! அதற்கு பதில் அர்ஸ் மேக்னா வெளிவந்தால் மகிழ்ச்சியே (நீண்ட நாட்களாக படிக்க காத்திருக்கும் இதழ்! எனது ஓட்டும் இதற்கே 😃)
ReplyDeleteவோட்டெடுப்பில் செம லீடிங்கில் உள்ளதே நமது தீர்மானமாகவும் இருந்திடும் சார் !
Deleteஎடிட்டரின் அடுத்த ஆண்டு 9 மாதங்களுக்கான திட்டமிடல் இப்படி இருக்குமோ
ReplyDelete9 x 3 = 27 இதழ்கள்
&
3 ஸ்பெசல் or குண்டுபுக்
மொத்தம் 30 புக்ஸ்
17 x ₹100 = ₹1700
10 x ₹150 = ₹1500
3 x ₹500 = ₹1500
மொத்தம் சந்தா தொகை ₹4700
ஆப்ஷன் or ஸ்பெசல் சந்தா ₹1000
ஆக 2021 க்கான நம்ம வாழ்வோடு இணைந்த மொம்மை பொஸ்தகங்களுக்கு மொத்த செலவு ₹5700 இருக்கலாம்.
பொறுத்திருந்து பார்ப்போம் எடிட்டரின் திட்டமிடலுடன் ஒரு 50 சதவீதமாவது ஒத்துப் போகிறேனா என்று. :))
நமக்கு எதுக்கு அதிக பிரசங்கித்தனம். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டு அப்படிக்கா ஓரமா போயிடுவோம் :-))
Deleteஎன்னோட ஓட்டு Ars Magna வுக்கே.
// மொத்தம் சந்தா தொகை ₹4700 //
Delete9 மாதம் மட்டுமே என்பதால் 3500 ஐ தாண்டினாலே பெரிய விஷயம் தான்,எனினும் நீங்கள் சொல்லும் சந்தா தொகை வந்தாலும் மகிழ்ச்சியே...
வாய்ப்பு இல்லே ராஜாஆஆ !!!
DeleteHi..
ReplyDelete// "வாண்டு ஸ்பெஷல்" முயற்சியினை அடுத்தாண்டினில் அல்லது முன்பதிவினில் களமிறக்கத் தயாராகி விட்டு, //
ReplyDeleteஇதை முன்பதிவில் முயற்சிக்கலாம்...
// புதையல் வேட்டையா ? தல தாண்டவமா ? //
ReplyDeleteபரிட்சையில் இதுபோல் கடினமான கேள்விகளை கேட்டால் நாங்கள் எந்து செய்யும் சார்...
நிங்கள் இன்க்கி பின்க்கி போடும் !
Delete1. SODA : என் மட்டிற்கு நிச்சயம் இடம்பிடித்திட வேண்டியவர் ! உங்கள் தரப்பிலும் ஒரு ஏகோபித்த YES-ஆ ?
ReplyDeleteதாரளமாக இடம் பிடிக்கலாம்...
2. ரிப்போர்ட்டர் ஜானி : ஒரு டைட்டான போட்டி நிலவிடும், குறுகலான வாய்ப்புகளுடனான அட்டவணையில் இவரும் ஓ.கே. தானா ?
உறுதியாக இடம்பிடிக்க வேண்டும்...
புதியதோ அல்லது பழையதோ ஒன்றே ஒன்றுதான் எனில் மறுபதிப்பு பட்டியலில் இரண்டு நல்ல கதைகளை தேர்வு செய்து முடிந்தால் கெட்டி அட்டையில் வெளியிட்டால் நலம்,கெட்டி அட்டை கட்டுபடியாகாது எனில் இரண்டு கதைகள் கொண்ட தொகுப்பை தேர்வு செய்தால் மகிழ்ச்சி...
3. CID ராபின் ?
ராபின் ஓகே தான்...
4.கேரட் மீசை க்ளிப்டன் ?
இடமிருந்தால் கர்னலும்தான் ஓரமா குந்திகட்டுமே...
5.'இம்முறை கொஞ்சம் தேவலாம்' என்ற remarks ஈட்டியுள்ள டேஞ்சர் டயபாலிக் - worth one more go என்பீர்களா ? Maybe இதே போல ஒரு சமீபத்தைய கதையாய்த் தேர்வு செய்தால் சித்திரங்களும், கதையும் புராதன நெடியின்றி லயிக்கச் செய்யுமா ?
ஹவுஸ்புல் போர்டு போட்டு இவரை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லுங்க,அப்பாலிக்கா பார்த்துக்கலாம்...
6.அ-அது வந்து....இந்த அவங்க இருப்பாங்களே....நம்ம இளவரசிங்க ....அது தானுங்க நம்ம மாடஸ்டிங்க !அவுகளுக்கும் ஸ்லாட் ஒன்று ஓ.கே. தானா ?
இளவரசிக்கு தற்போதைக்கு ஓய்வு தேவை...
7.மாறுவேஷ மன்னன் ஹெர்லாக் ஷோம்ஸ் ?
தாரளமாக இடம்பிடிக்கலாம்....
கார்ட்டூன் வறட்சியை நீக்க இவர் அவசியம்...
// மேற்படி 7 பேர் சார்ந்து என்னளவிற்கு நானொரு தீர்மானம் எடுத்துள்ளேன் தான் //
ReplyDeleteஅப்ப முடிவு எடுத்துட்டிங்க போல...!!!ஹி,ஹி...
// எடுத்துக் கொள்ளவே இல்லை ! மாறாக, :வாண்டு ஸ்பெஷல்" என்ற தலைப்புக்கு மெய்யாகவே நியாயம் செய்திடும் விதமாயொரு கதையினை இனம்கண்டு வைத்துள்ளேன் & அதற்கான உரிமைகளும் நம்மதாகி விட்டன இந்த வாரத்தில் ! திரைப்படமாக வெளிவந்து செம succesful ஆக ஓடவும் செய்ததொரு படைப்பு இது //
ReplyDeleteஆகா அருமையான செய்தி. போட்டுத் தாக்குங்கள் சார்.