நண்பர்களே,
வணக்கம். இன்றைக்கு இரவோடு வோட்டிங் (!!) முடிவுறுகிறதென்றாலும் -
வெற்றியாளர் யாரென்று யூகிப்பதில் சிரமங்கள் இராது தானே folks ?! By a distance -
ARS MAGNA வே தொடர் முன்னணியில் உள்ளதெனும் போது, அதுவே நமது தீர்மானமாகவும்
இருந்திடும் ! So தொடரும் மாதங்களில் 2 x வாண்டு ஸ்பெஷல்ஸ் இதழ்களுக்குப் பதிலாக, இந்த
ஆக்ஷன் த்ரில்லரே ரெகுலர் சைசில் இடம்பிடித்திடும் ! I repeat - இது மாக்ஸி சைசில் இராது ! And மாக்ஸி லயனுக்குமே நீங்கள் சந்தா செலுத்தியிருக்கும் பட்சத்தில், இது உங்கள் இல்லம் தேடி வந்திடும் ! ஏற்கனவே TEX தீபாவளி மலர் ; தோர்கல் போன்ற "வெயிட் பார்ட்டிகள்" வெயிட்டிங் இருப்பதால், அநேகமாய் 2021 தான் இந்த இதழுக்கான வேளையாக அமைந்திடும் என்று அனுமானிக்கிறேன் ! வோட்டெடுப்பை அறிவித்த கையோடு - நான் போட்ட
வோட்டு வேறொரு அணிக்கே என்பதால், பெருமூச்சு ஒன்றை இந்தத் தருணத்தில் விட்டுக்
கொள்கிறேனே !! Phewwwwwww !! என்ன ஒரே ஆறுதல் - அந்த அணி கட்டக்கடேசியாய் வராததை எண்ணி சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன் ! 😇😇
இந்த 3 பாக ஆக்ஷன் அதகளத்துக்குப் பேனா பிடிக்க நண்பர்கள் ஆர்வமாயிருப்பின், முயற்சிப்போமா guys ? Worth a try ?
And here you go, அந்த இதழின் டிரெய்லருமே !!
சிறப்பு....👌👌👌
ReplyDeleteசூப்பர்.. முதல் பரிசை வென்றமைக்கு பாராட்டுக்கள்..குண்டு புக்குன்னாலே பாய்ந்து வாரீகளே பழனி... அர்ஸ்மேக்னா நல்லதொரு சாய்ஸ்..
Deleteவாழ்த்துக்கள் பழனி
Deleteஎன்னுடைய வாழ்த்துக்களும் பழனி
Deleteதலைவரே என்ன நடக்குது... ☺️☺️☺️
DeleteMe two
ReplyDeleteரொம்ப நாளைக்கப்புறம் 1st....
ReplyDeleteMaxi sizeக்கு பதிலாக ஹார்டுகவர்.அட்டகாசம் ஒண்ணும் பிரச்சினையில்லை அருமை சார் தொடரட்டும்... ஆனா 2021 தான் இடிக்குது... பரவாயில்லை சார்.. உங்களுக்கு எது சரியோ அது எங்களுக்கும் சரி....
ReplyDeleteஹார்ட் கவர் மட்டுமே போதுமானது. மிக ஆவலுடன் எதிர் பார்க்கும் புத்தகங்களில் ஒன்று.
Delete5 வது இடம்
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteபத்து சார் கமென்ட் போட்டு delete எல்லாம் பண்ண வேண்டாம் சார். ஃப்ரீயா விடுங்க. உங்கள் கமெண்டை எப்போதுமே தப்பாக எடுத்து கொள்ள மாட்டேன். நன்றி
Deletedelete பண்ணினது டெக்ஸ்க்காக. நம்ம தல ய நாமளே கிண்டலடிக்கக்கூடாதுங்கறதுக்காக.
Deleteசிறப்பு பத்து சார்.
Deleteஆரோக்கியமான முன்னுதாரணமாக விளங்குகிறீர்கள்.
3
ReplyDelete10 க்கு உள்ள.
ReplyDeleteமகிழ்ச்சி சார் 🙏🏼
ReplyDelete.
// ! வோட்டெடுப்பை அறிவித்த கையோடு - நான் போட்ட வோட்டு வேறொரு அணிக்கே என்பதால், பெருமூச்சு ஒன்றை இந்தத் தருணத்தில் விட்டுக் கொள்கிறேனே !! Phewwwwwww !! என்ன ஒரே ஆறுதல் - அந்த அணி கட்டக்கடேசியாய் வராததை எண்ணி சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன் ! 😇😇 //
ReplyDeleteஅதையும் நாம் ஏன் முயற்சிக்க கூடாது சார் 🤷🏻♂️
.
// அதையும் நாம் ஏன் முயற்சிக்க கூடாது சார் 🤷🏻♂️ //
Delete// வாண்டு Spl //
+1
முயற்சிக்கிறோம் அடுத்த வருடம் சந்தாவிலா?? இல்லை முன்பதிவா என்பது தான் 300ரூபாய் கேள்வி???
Deleteவாண்டு ஸ்பெசல் தேவைதான்...
Deleteஆனாக்கா சந்தாவில் என்பது இனிமே,இந்த சூழலில் திணிப்பு போல ஆகிடும்.
முன்பதிவுல வர என்னுடைய ஆதரவும் உண்டு.
####நான் போட்ட வோட்டு வேறொரு அணிக்கே என்பதால்,####
ReplyDeleteகண்டு பிடிக்கவே முடியல சார்..
வாண்டு Spl
Deleteடெக்ஸ் ரீபிரிண்ட்க்குதான் வாக்களித்து இருப்பார்.
Deleteஉஷ்ஷ்ஷ்.. அப்பாடா... தேங்க் காட்..
ReplyDeleteஅண்டாவுக்கு வேலையில்லாமல் போச்சே என நீங்கள் நினைப்பது புரிகிறது ரம்மி :-)
Deleteபழைய கஞ்சிக்கு எதுக்கு புதிய பாயாசம் வைக்கனும்....!!
Deleteஹாஹாஹா அய்யோ பாவம் டெக்ஸ். மஞச சட்டைக்கு இது தேவையா....
ReplyDeleteமஞ்சள் சட்டை மேல் இங்கே ஏகமா விருப்பம் ஜி! தங்களுக்கு மஞ்சள் பிடிக்கலான,உங்களிடம் இருக்கும் எல்லா மஞ்சள் அட்டை புக்ஸ்களை எனக்கு அனுப்பி வைத்து விடுங்கள்....! ஏக சந்தோசத்தோடு வாங்கி கொள்கிறேன்.
DeleteNice to hear.... அட்டை படம் நல்லா இருக்கு
ReplyDelete+1
DeleteArs Magna ஆக்ஷன் த்ரில்லர்க்காக காத்திருக்கிறோம்.
ReplyDeleteஅ...அது வந்துங் தோர்கல் சாகசம் எப்ப வருங்.
January 2021...
DeleteJanuary 2021. :-( :-)
Deleteதோர் கல் க்கும் ஜனவரி மாத திற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது... அடுத்த வருடம் ஆரம்பமே அமோகமாக இருக்கப் போகிறது.
Deleteதோர்கல் தொடர் ஆரம்பித்த பிறகு இது இரண்டாவது முறையாக தோர்கல் இல்லாத வருடம் என்று நினைக்கிறேன்.
Delete////January 2021...//.---super..
DeleteI repeat - இது மாக்ஸி சைசில் இராது//// என்ன சைஸ் புக் சார் இது???
ReplyDeleteRegular size & Color & Hard Cover
Deleteவந்துட்டேன் ஐயா
ReplyDeleteதேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தது தான்.எங்களை மூன்றாமிடத்திற்குத் தேர்ந்தெடுத்த (தள்ளிய) வாக்காளர்களுக்கு நன்றி கூறிக்கொள்ளுகின்றோம்.சேச்சே வாண்டுப் பயல்கள் கூட நம்மை முந்திவிட்டார்களே, வெட்கக்கேடு.
ReplyDeleteசை இந்த வாண்டுகள்னாலே எனக்குப் பிடிக்காது.
// வாண்டுப் பயல்கள் கூட நம்மை முந்திவிட்டார்களே, வெட்கக்கேடு.
Deleteசை இந்த வாண்டுகள்னாலே எனக்குப் பிடிக்காது. //
:-(
🤣🤣🤣. ப்ரீயா விடுங்க பாசு. எனக்கு கூட டெக்ஸ் தான் ரொம்ப பிடிக்கும். மறுபதிப்பா இல்லாம இருந்திருந்தா அதுக்கு ஓட்டு போட்டிருப்பேன். இப்ப புத்தகங்களே குறைவா வரும்போது புதுக்கதைகள் வர வழி விடனும் அல்லவா?
Delete+1
Deleteநான் போட்ட பின்னூட்டம் சும்மா ஜாலிக்காகத் தான் நண்பர்களே.
Deleteநன்றி.வணக்கம்.
சரவணன் சார் நாங்களும் ஜாலி யா தான் எடுத்துக் கொள்வோம். நீங்க பயப்படாம ஜாலி யா கமெண்ட் பண்ணுங்க.
Deleteஜனவரி 2021 முத்து காமிக்ஸ் ஆண்டு மலராக தோர்கல் வெளிவரும் என்ற செய்தி அறிந்து மகிழ்ந்தேன்.
ReplyDeleteஜனவரி 2022ல முத்து 50வது ஆண்டுமலர் வருது ஜி!
Deleteநினைத்தாலே இனிக்கும்...
இறைவன் கருணையால் முத்து காமிக்ஸ் 50வது ஆண்டை முன்னிட்டு ஒரு மிகப் பெரிய புத்தகத்தை கேட்டு வாங்கிப் போடனும் விஜி. ஆசிரியர் பொன்விழா மலர் கண்டிப்பா தந்தேயாகனும்.ஆமா.
Deleteஏற்கெனவே ஆசிரியர் ஒப்புமை தந்துள்ளார் ஜி!
Deleteஈவியும் நண்பர்கள் சரா்பில் பெரிய விழா எடுக்க முன்மொழிந்து உள்ளார்.
கொண்டாட்டம் உறுதி. நாம எல்லாம் என்சாய் பண்ண போகும் பெரிய விழாவாக இருக்கும் என்பது திண்ணம்.
வெளிநாட்டு மாப்பிள்ளைகள்லாம் இப்பமே ப்ளானிங் பண்ணிக்கிடுவாங்க!
கண்டிப்பா...
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஅர்ஸ் மேக்னா வெளிவருவதில் மகிழ்ச்சி சார்! அமெரிக்க ஜனாதிபதிக்கு அடுத்த வருடம் இரண்டு வண்ண ஸ்லாட் ஒதுக்குங்க சார் ஒன்னு மறுபதிப்பு (கழுகு வேட்டை) இரண்டாவது புதுக்கதை வண்ணத்தில் தெறிக்க விடுகிற மாதிரி பார்த்து பண்ணுங்கள் 😄
ReplyDeleteNice ஐடியா
Deleteசூப்பர் ஐடியா கலீல் ஜி!!!
Deleteநன்றி நண்பர்களே 😊
Delete// Phewwwwwww !! என்ன ஒரே ஆறுதல் - அந்த அணி கட்டக்கடேசியாய் வராததை எண்ணி சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன் ! //
ReplyDeleteஆனாக்கா கடைசி வரைக்கும் நீங்க எதுக்கு ஓட்டு போட்டிங்கன்னு கணிக்கவே முடியாத அளவுக்கு இம்புட்டு கஷ்டமா பதிலை சொல்லியிருக்கக் கூடாது சார்....!!! ஹி,ஹி,ஹி....
கண்டே புடிக்க முடியாதுன்னு திடமா நம்பிட்டு இருந்தேனே சார் ! ச்சே !
Deleteஅது ஒண்ணாம் இடத்துக்கும்,மூணாம் இடத்துக்கும் நடுவுல போய் ஒளிஞ்சுக்கிட்டுதுங்களா, அதான் கண்டுபிடிக்க வே முடில. ரொம்பக் கஷ்ட்டமப்பா..
Delete// அநேகமாய் 2021 தான் இந்த இதழுக்கான வேளையாக அமைந்திடும் என்று அனுமானிக்கிறேன் //
ReplyDeleteஅடடா...எப்படியோ வந்தா சரி....
மன்ஞ்சா சட்டைக்கு டெபாசிட் போய்டுச்சு. ஐ அம் வெரி ஹப்பி...
ReplyDeleteஅய்யோ அய்யோ !!!
Deleteஹா...ஹா..., கணேஷா@
Deleteஎல்லோரையும் மகிழ்விக்கும் டெக்ஸ், உங்களையும் கடைசியில் மகிழ்வித்துட்டார் பாருங்க...அதான் டெக்ஸின் பலம்....!!!
நீங்க ஹேப்பினா, டெக்ஸ் கட்சிக்கு டெபாஷிட் போனது பெரிய விசயமே இல்லன்னேன்...!!
ரீப்பிரிண்ட்ஸ் இப்போது இருக்கும் சொற்ப ஸ்லாட்களில் தேவையற்ற ஒன்று, (அது டெக்ஸாகவே இருப்பினும்...) என்பதே சபையோரின் விருப்பம்.
நீட் ஆஃப் த ஹார் டூ...!!!
வெயிட்டிங் ஃபார் அர்ஸ்!்
ஆக்ஷன் கதைகளின் மவுசு என்றென்றும் குறைந்திடாது என்பதாகவே இந்த வோட்டெடுப்பின் முடிவினை பார்க்கிறேன் guys !
Deleteடெக்சின் தோல்வி ; கார்ட்டூன்களின் தோல்வி என்பதெல்லாம் நாமாய் போட்டுக்கும் கோஷங்கள் தானே !
35th
ReplyDeleteஅர்ஸ் மேக்னா 'வருகிறது' விளம்பரத்தின் ரணகள காட்சிகள் - பார்க்கும்போதே பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன! இப்போதே படிக்கும் ஆவலைத் தூண்டுகின்றன!
ReplyDeleteஇப்போதே படிக்கலாம் விளம்பரத்தை......
Deleteரவி அண்ணா அற்புதமான டைமிங்
DeleteI like it.
'காட்டுப் பூனை பின்புறம் பிறாண்டியதில் சேலத்துச் சகோதர்கள் படுகாயம் - சேலத்தில் பரபரப்பு' - நாளைய தினத்தந்தியில்!
Deleteபுண்ணாக்கிய பூனையை பன் போட்டு மடக்க வனத்துறை தனிப்படை அமைப்பு !
Deleteதினப்பன் பிரேக்கிங் நியூஸ் !!
EV , எடிட்டர் சார் இது trolling லயே வேற லெவல் ஹிஹிஹி
Deleteதினப்பன் பிரேக்கிங் நியூஸ் !//.---ஹா..ஹா...ஹா...செம ட்ரோலிங்..; வெயிட்டிங் பார் த ரிப்ளை!
Deleteபுனுகுப்பூனை கேள்விப்பட்டிருக்கேன்.அது என்ன சார் புண்ணாக்கு பூனை? புதுசா இருக்கு.
Deleteபத்து சார். 🤣🤣🤣🤣. செம.
Deleteகள்ள ஓட்டுப் போடமுடியாத தேர்தலும் ஒரு தேர்தலா ?
ReplyDeleteஎனவே தேர்தல் நடைமுறைகளை மாற்றி அமைக்குமாறு தேர்தல் அதிகாரி (ஆசிரியர்) அவர்களை வணங்கிக் கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி.
நண்பர்களே இதெல்லாம் சும்மா ஜாலிக்காண்டி.தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.
அது ஜெர்மன்காரவுக இயக்கும் தளம் சார் ; கள்ள வோட்டு போட்டாக்கா கண்ண குத்தற மாரி ஏற்பாடு பண்ணி இருப்பாங்க !
DeleteMy vote wins.
ReplyDeleteTex fail because of reprint only.
Yes....!
Deleteஅட்டகாசமான title சார். யுகம் தாண்டியொரு யுத்தம் சும்மா கிழி..... டிரெய்லர் சும்மா தட்டி தூக்குகிறது. மிகுந்த ஆவலுடன் நான்.
ReplyDelete'தலைப்பு வைப்பதில் தன்னிகரில்லா தல' என்ற பட்டத்தை தங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். யுகம் தாண்டியொரு யுத்தத்தில், பங்குகொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
ReplyDelete'த த த ' என்று நீங்கள் தேர்வு செய்திருக்கும் பெயர் கூட கெத்து சார் !
Deleteஉண்மைங்க பத்து சார்! செம தலைப்பு!!
Deleteத த த வா ?
DeleteNOOOOOOOOOOOOOOOOOOOOO !!!
ReplyDeleteNo qualms really about ARS MAGNA coming but definitely peeved at VAANDU SPECIAL not coming :-(
Just about so much that I can do sir ; no cartoon hero apart from LL gets a decent look-in by the non subscribing fraternity !
DeleteEven agents are selective in their purchases these days ! Any cartoon book other than LL & the orders drop dramatically 😓
முதலில் கறுப்பு வெள்ளை, பின்பு கலரில், அதன் பின்பு கலரில் maxi size என்று டெக்ஸ் பழைய கதைகளுக்கு பதில் இனி வரும் காலங்களில் வண்ணத்தில் தெறிக்கவிடும் புதிய டெக்ஸ் கதைகளை வெளியிடலாம்.
ReplyDeleteதெறிக்க விடும் பட்ஜெட் இருந்தால் எல்லாம் சாத்தியமே சார் !
Deleteஅர்ஸ்மேக்னா வெற்றிக்கு வாழ்த்துகள் நண்பர்களே!
ReplyDelete💐💐💐💐
மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்று கொள்கிறேன்.
🙏🙏🙏🙏
டெக்ஸின் பயணத்தில் இது ஒன்றும் தோல்வி அல்ல!
ஒரு சுயமதிப்பீடு அவ்வளவே!
ரீபிரிண்ட் என்பதால் தோல்வி என்பதே அப்பட்டம்...!!
அர்ஸ்மேக்னாவிற்கு வெயிட்டிங்!😍
"""" யுகம் தாண்டியதொரு யுத்தம் """"
ReplyDeleteசெம டைட்டில் எடிட்டர் சார்....
சும்மா தெறிக்க விடுது...!!!
எழுந்து நின்று கைதட்டும் படங்கள் பலப்பல....!!!
பி.பி.வி....மாதிரி பிரமாண்டமான வென்ற பெற முன்கூட்டிய வாழ்த்துகள சார்.💐💐💐💐💐💐
இந்த இதழில் இதுவரையிலும் நாம் முயற்சித்திருக்கா சமாச்சாரம் ஒன்றினை நிஜமாக்கிடும் திட்டம் உள்ளது ! பார்ப்போமே அந்நேரம் !
Deleteஆஹா இப்போதே எனக்கு ஆர்வம் கட்டுக்கு அடங்காத காளை போல துள்ளி குதி க்கிறதே ....
Delete///இந்த இதழில் இதுவரையிலும் நாம் முயற்சித்திருக்கா சமாச்சாரம் ஒன்றினை நிஜமாக்கிடும் திட்டம் உள்ளது ! பார்ப்போமே அந்நேரம் !///
Delete----வாவ்..வாவ்...ஆர்வத்தை ஏற்றி விட்டுட்டீங்க சார்...!!!
வெயிட்டிங்...
""" ஹார்டு கவர்"""--ஐசிங் ஆன் த கேக்....!!
ReplyDeleteஉப்புமா தட்டில் இருக்கும் கெட்டி சட்னி...!!!
அனு Sis. நோட் தட் பாயிண்ட்.
Delete******* துரோகம் ஒரு தொடர்கதை ******
ReplyDeleteகதைக்கேற்ற மிகப் பொருத்தமான தலைப்பை வைத்ததற்காக ஒரு முறை எழுந்துநின்று கைதட்டலாம்!
விறுவிறுப்பான கதையமைப்பு! ஓவியங்கள் - ஒவ்வொரு ஃபிரேமையும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போன்ற அழகு, நேர்த்தி, துள்ளியம்!! குறிப்பாக, இதில் முக்கிய கதாபாத்திரமான கோரா என்ற பெண்ணை உச்சபட்ச ரசணையுடன் செதுக்கியிருக்கிறார் ஓவியர்!! (ரசிகரய்யா நீர்!!)
'அட! இந்தக் கதையில் நம்ம டயபாலிக் அனாவசியக் கொலைகள் எதையும் பண்ணக் காணோமே!!!' என்று ஆச்சரியப்பட்டபடிக்கே க்ளைமாக்ஸை எட்டிப் பிடித்தால்.. அங்கே வச்சிருக்கான்யா ஆப்பு!! (நீ திருந்தவே மாட்டே டயபாலிக்!!)
நிறைய ட்விஸ்ட்டுகளுடன் - நிறைய நிறைய ரசிக்கச் செய்கிறது 'துரோகம் ஒரு தொடர்கதை!'
என்னுடைய ரேட்டிங் : 9.5/10
Sir, pls கொஞ்ச நேரம் ஒதுக்கி, ரிசல்ட்டை பாருங்க... வாண்டு ஸ்பெஷல் தான் number 1....
ReplyDeleteஅடக்கடவுளே! ஆமாம்!!!
Delete193 வோட்டுகளுடன் முன்னணியிலிருப்பது வாண்டூஸ் ஸ்பெஷலே!!
இது எப்படி சாத்தியம்?!! என்ன நடக்குது இங்கே?!!
மனது வைத்தால் எதுவும் சாத்தியமே சார்🤝😍
DeleteIt seems this straw poll was manipulated...
DeleteHow?
An expert with single IP address can create multiple proxy IP addresses to cast multiple votes..
Or can create multiple temporary email addresses that can be used once..
But what editor displayed was the original scenario... Everybody knows that...
Who would be so much interested to ruin a poll?
எடிட்டர் சார்..
Deleteஅப்படீன்னா அர்ஸ் மேக்னாவோடு 'வாண்டூஸ் ஸ்பெஷலும்' வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது!
சட்டுபுட்டுனு ஒரு அறிவிப்பை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்!!
அப்புறம்.. நாங்க சொல்லாமலேயே இந்நேரத்துக்கு உங்களுக்கே புரிஞ்சிருக்கும்! ஆங்.. அதுவேதான்!! அந்த 'மரணமுள்' அறிவிப்பையும்... ஹிஹி!
//Who would be so much interested to ruin a poll?//
DeleteOur "well wishers" sir 😎...no shortage of them !
Poll முடிஞ்ச பிறகு நீங்க தலைப்பு அறிவித்து இருந்து இருக்கலாம்...நம் நண்பர்களும் கருத்தை பதிவிட்டு விட்டார்கள்... 😀😀😀
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇந்த இதழில் இதுவரையிலும் நாம் முயற்சித்திருக்கா சமாச்சாரம் ஒன்றினை நிஜமாக்கிடும் திட்டம் உள்ளது ! பார்ப்போமே அந்நேரம் !//
ReplyDeleteஅதுதான் சார் நீங்க.. சிறப்பா இன்னும் சிறப்பா ஏதாவது செய்யனும்னு நினைக்கும் எண்ணம்...👌👌👌💐💐💐
This comment has been removed by the author.
ReplyDeleteவாண்டு ஸ்பெஷல் தானே 196ல லீடிங்ல இருக்காரு... அப்புறம் எப்படி அர்ஸ்..? வாண்டு ஸ்பெஷல் தான் வேணும்... இந்த பன் குடுக்குற வேலையெல்லாம் வேண்டாம்.
ReplyDeleteயாரோ திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த எத்தனிக்கின்றனர்...
Deleteயாருக்கு ஒரு தேர்தலின் நம்பகத்தன்மையை சீர்குலைக்க இவ்வளவு மெனக்கெட முடியுமென்று தெரியவில்லை..
///யாருக்கு ஒரு தேர்தலின் நம்பகத்தன்மையை சீர்குலைக்க இவ்வளவு மெனக்கெட முடியுமென்று தெரியவில்லை..///
Deleteயாரா இருந்தாலும் இந்தத்தபா ஏதோ நல்லது பண்ணியிருக்காப்லதான் தெரியுது! :D
பிரச்சினை- யின் தன்மை சற்று தீவிரமானது..ஈவி..
Delete1. இனி இத்தகைய தேர்தலை நடத்த இயலாது..
2. தன்னை வெளிப்படுத்தி கொள்ள வேண்டி இதனை செய்த -poll flooding- நபர் சிறிது சிறிதாக செய்திருந்தால் வெற்றி பெற முடியாத இதழை எடிட்டரை வெளியிட வைத்திருக்க முடியும்..
நபரின் நோக்கம் தேர்தல் முறையின் குறைபாடுகளை எள்ளி நகையாடுவதே..
ஆசிரியர் முடிவு எடுக்கும் வரை யாரோ காத்திருந்து பின்னர் அந்த pollingல் புகுந்து விளையாடி இருக்கிறார்கள். அவரின் நோக்கம் மிகவும் தெளிவு, ஆசிரியர் ஓட்டெடுப்பில் வெற்றி பெறும் கதையை வெளியிடுவதாக கடந்த பதிவில் கூறினார் ஆனால் அவர் இஷ்டம் போல் முடிவெடுத்து இருக்கிறார் pollingல் அதிக வாக்குகள் பெற்ற கதையை தேர்வு செய்யாமல் என அவபெயரை உருவாக்க முயல்கிறார்.
Deleteஆனால் ஆசிரியர் இந்த பதிவை போடும் போது அந்த pollingன் screen shotஐ இணைத்து மிகவும் சிறப்பு,இது பலருக்கு சூழ்நிலையை புரியவைத்திருக்கும் ஆசிரியரின் முடிவுக்கு காரணம் என்ன என்று.
ஆசிரியர் இது போன்ற விஷயங்களில் தற்போது மிகுந்த விழிப்புணர்வடன் இருப்பதால் அந்த நபரின் எண்ணம் ஈடேறவில்லை.
//மனது வைத்தால் எதுவும் சாத்தியமே சார்🤝😍//
Delete//
//காத்திருந்து பின்னர் அந்த pollingல் புகுந்து விளையாடி இருக்கிறார்கள். அவரின் நோக்கம் மிகவும் தெளிவு, ஆசிரியர் ஓட்டெடுப்பில் வெற்றி பெறும் கதையை வெளியிடுவதாக கடந்த பதிவில் கூறினார் ஆனால் அவர் இஷ்டம் போல் முடிவெடுத்து இருக்கிறார் pollingல் அதிக வாக்குகள் பெற்ற கதையை தேர்வு செய்யாமல் என அவபெயரை உருவாக்க முயல்கிறார்.//
மேலே உள்ள பதிலை பார்த்தால் எடிட்டருக்கு அவப்பெயரை உருவாக்க முயலவில்லை...
அவர் ஏற்கனவே எடிட்டரின் ஸ்கிரீன் ஷாட்டை பார்த்தபின்புதான் இதை செய்திருக்கிறார்...
He wants to tease the method of ballot.
He wants to prove this online poll can be manipulated with such an ease and may be a warning too..
He wanted to prove a point and accomplished it..
// He wants to tease the method of ballot //
DeleteIf that is case he could have told about this can be hacked and its not safe while editor announced this polling system during the first time or atleast in the last blog post.
//If that is case he could have told about this can be hacked and its not safe while editor announced this polling system during the first time or atleast in the last blog post.//
DeleteA normal person and a welwisher of editor and this blog would certainty have chosen that path..
But obviously this person is not normal and he finds pleasure by bringing embarrassment to editor and to this blog..
அட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் இந்தப் பதிவுப் பக்கம் பிரயோஜனப்படுகிறதே என்று எடுத்துக் கொள்வோமே சார் !
Deleteநம் பெயரைச் சொல்லி நேத்திக்கு அவருக்கு சூப்பராய்ப் பொழுது போயிருக்குமில்லையா ? And இன்னிக்கும் சும்மா வீறு நடை போட்டுத் திரிவாரில்லையா - சீப்பை எப்புடி ஒளிச்சு வைச்சுப்புட்டேன் பாத்தீங்களான்னு ?! Why deny him his pleasure !!
And இதில் கொடுமையே இத்தினி மெனெக்கெடலுக்கு அவசியமே லேது என்பது தான் !திரைப்படமாக வெளிவந்த கதையே காமிக்ஸ்சாகவும் வெளிவந்துள்ளது என்பதால் அந்த to be வாண்டு ஸ்பெஷல் இதழுக்கென நாம் வாங்கியுள்ள கதைக்கு ராயல்டி மாமூலை விடவும் ரொம்பவே அதிகம். And அதனை 2021-ன் இறுதிக்குள் நாம் வெளியிட வேண்டுமென்பதே ஒப்பந்தமும் !
DeleteSo at any cost,that album needs to see light of the day sometime in 2021. அர்ஸ் மேக்னா மார்ச் 21 எனில் இந்த வா.ஸ்பெ சில மாத இடைவெளியினில் தொடர்ந்தே தீரும் ! யதார்த்தம் இதுவே !
இந்த வோட்டிங் தளம் நோண்டலுக்கு உட்பட்டதே என்பதே பரோபகாரியார் நிரூபிக்க விரும்பிய விஷயமென்றாலும் - no issues whatsoever ! அது ஓசியிலான தளமே & நமக்கு அதன் பொருட்டு செலவுகள் நஹி !
DeleteAnd இருக்கவே இருக்குது இங்கே பதிவினில் உங்கள் அபிப்பிராயங்களைக் கேட்டறியும் சாத்தியங்கள் ! பதிவின் முடிவில் எது - எத்தனை வாக்குகள் பெற்றுள்ளது என்பதை எண்ணிட மெனெக்கெட்டால் வேலை முடிஞ்சது !
எல்லாவற்றிற்கும் மேலாய் இருக்கவே இருக்குது எனது gut feel ! ஏதேனும் சரியாக இல்லை எனப்பட்டால் override செய்திட தயங்க மாட்டேன் தான் !
Delete///எல்லாவற்றிற்கும் மேலாய் இருக்கவே இருக்குது எனது gut feel ! ஏதேனும் சரியாக இல்லை எனப்பட்டால் override செய்திட தயங்க மாட்டேன் தான் !//
DeleteClap! Clap! Clap!
அப்படி போடுங்க சார்!
opinions may be sought from different sectors but the decision is always made by the King
In his haste to spoil the party,குத்தடி சைலக்கா நண்பர் ஒரு சின்ன விஷயத்தைக் கவனிக்கத் தவறி விட்டார் சார் !
Deleteகேட்கப்பட்ட மூன்று options க்குமே உரிமைகள் வாங்கிய பின்னரே பொதுவெளிக்கு கொணர்ந்திருக்கிறேன்
- merely to sort out the order of releases !
So மூன்றுமே வெளிவரத்தான் போகின்றன - maybe இது முன்னே - அது பின்னே என்று !
இவற்றை வெளியிடலாமா ? வேண்டாமா ? வாங்கலாமா ? வேண்டாமா ? என்ற கேள்விகளை அலசலுக்கு உட்படுத்திடவில்லை ! So the poll was for the timings ; rather than the policies !
// எல்லாவற்றிற்கும் மேலாய் இருக்கவே இருக்குது எனது gut feel ! ஏதேனும் சரியாக இல்லை எனப்பட்டால் override செய்திட தயங்க மாட்டேன் தான் ! //
Deleteஅதுதுது... அசால்ட் சார்!
// So at any cost,that album needs to see light of the day sometime in 2021. அர்ஸ் மேக்னா மார்ச் 21 எனில் இந்த வா.ஸ்பெ சில மாத இடைவெளியினில் தொடர்ந்தே தீரும் ! யதார்த்தம் இதுவே //
Deleteஆகா ஆகா வாண்டு ஸ்பெஷல் அடுத்த வருடம் கண்டிப்பாக வரும் என்பது மகிழ்ச்சியான விஷயம்! கனவு மெய்ப்பட போகிறது அடுத்த வருடம்! மகிழ்ச்சி!
தங்களது ஒவ்வொரு வரியும் இந்த பதில்களில் ரசிக்கும் படி இருக்கின்றன சார்.
Deleteதங்களது override வாக்கியத்தில் உள்ள அத்தாரிட்டியை மிகவும் ரசித்தேன்.
ஐ லைக் த ஸ்லாங்.
கழுகு வேட்டை வரப்போகுதா....கலரில்...மேக்ஸி சைசில்...
யாஹீ...ஹீ...ஹீ...ஹீ....யா..யா...!!
வாண்டு ஸ்பெசல் விரும்பிய பரணி பெங்களூரு & KS வாழ்த்துகள்....!!!!🌹🌹🌹🌹
Delete//எல்லாவற்றிற்கும் மேலாய் இருக்கவே இருக்குது எனது gut feel ! ஏதேனும் சரியாக இல்லை எனப்பட்டால் override செய்திட தயங்க மாட்டேன் தான் !//
Deleteஇன்னுமா அந்த மான்ஸ்தன் தளத்துல இருக்கான்
Dear sir, VAANDU SPECIAL vazhga
ReplyDeleteReady to pen the Ars magna sir...
ReplyDeleteசூப்பர் அண்ணா. வாழ்த்துக்கள்
DeleteJ சார் வாழ்த்துகள்.
Deleteவாழ்த்துக்கள் ஜனா.
DeleteSuper J ji...
DeleteCongrats..
அடேடே...வாழ்த்துக்கள் நண்பரே
Delete//ரிப்போர்ட்டர் ஜானி : ஒரு டைட்டான போட்டி நிலவிடும், குறுகலான வாய்ப்புகளுடனான அட்டவணையில் இவரும் ஓ.கே. தானா ? //
ReplyDeleteஎன்று கடந்த பதிவினில் கேட்டிருந்தீர்கள் சார். ரிப்போர்டர் ஜானியின் கதைகளை உருவாக்கி எமக்கு தந்த அந்த அற்புதப் படைப்பாளி André-Paul Duchâteau இன்று காலமானார் என்ற வருத்தமான செய்தி கிட்டியுள்ளது. அவருக்காகவாவது அடுத்த ஆண்டிலும் ஜானி தொடரவேண்டும்!
தனது 95 வது வயதில் காலமாகியுள்ளார் ! அவருக்கான அஞ்சலிகளை நம் அனைவரின் சார்பிலும் நேற்றைக்கே படைப்பாளிகளுக்கு அனுப்பியுள்ளோம் ! RIP !
Deleteயாரோ பெரிய அளவில் சதி பண்ணி ஹாக் செய்து தல டெக்ஸை காலி செய்து விட்டார்கள். கிட்டதட்ட இவிஎம் பிராடு வேலை மாதிரி. ஆனாலும் தல டெக்ஸ் பீனிக்ஸ் பறவையாக வலம் வருவார் கூடிய விரைவில்.
ReplyDeleteபோஸ்ட் கார்டில் தேர்தல் வெகு காலம் முன்பு எடிட்டர் நடத்தியபோது ஸ்பைடர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Deleteபின்பு ஸ்பைடர் ரசிகர் ஒருவர் -ஒருவரே- நூறுக்கு மேற்பட்ட கார்டுகளை அனுப்பியது அறியப்பட்டு அப்போட்டியே விலக்கப்பட்டது..
இம்முறை ஆன்லைன் போலின் ரெஸ்ட்ரிக்ஸன்ஸை உடைத்தெரிய முடியும் என நிரூபிப்பதே இதனை செய்த நண்பரின் அபிலாஷையாக தெரிகிறது..
உண்மை சார்.யாரோ விளையாடியிருக்கின்றார்கள்.தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நிருபித்திருக்கின்றார்கள்.பார்த்தவுடனே போலி என்று தெரிந்துவிட்டது.
Deleteஅவர்களின் அறியாமையை நினைத்து வேதனைப்படுகின்றேன்.
ஏகப்பட்ட நேரங்களில் 2 விஷயங்கள் நிரூபணமாகி வருகின்றன நண்பர்களே !
Deleteவிஷயம் # 1 : பல தருணங்களில் என்னையே நான் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை ! அந்த நொடியின் flow உடன் பயணிப்பதே எனது பாணி ! ஆனால் நான் எழுதுவதையும் ; பேசுவதையும் அட்சர சுத்தமாய் உள்வாங்கிக்கொள்ள நண்பர்கள் நிறையப் பேர் அதிதீவிரமாய் உள்ளதை பற்பல முறைகள் பார்த்து விட்டேன் ! அவற்றைக் கொண்டு சென்று தங்களுக்குள் பகடி செய்து கொண்டாலுமே - செம ஆர்வமாய் இங்கு நம் பதிவுகளின் ஒவ்வொரு புள்ளி ;கமாவுமே கவனிக்கப்படுகிறது என்பது கண்கூடு ! இந்த நேற்றைய குத்தடி குத்தடி சைலக்கா படலமும் அதன் தொடர்ச்சியாகவே பார்த்திடுகிறேன் ! நிஜத்தைச் சொல்வதானால் நமக்கென நண்பர்கள் தந்திட விழையும் நேரத்தை எண்ணி - we ought to be flattered !!
விஷயம் # 2 : ஆளாளுக்கு எதன் பொருட்டோ பிசியாக ஓடிக்கொண்டே இருந்தாலுமே இந்த 'சீப்பை ஒளிச்சு வைச்சுப்ப்புட்டா கண்ணாலம் நின்னுப்புடுமே ' ரக மெனெக்கெடல்களுக்கு நண்பர்கள் வசம் திவ்யமாய் நேரம் உபரியாய் உள்ளது ! யோகக்காரர்கள் தான் !
Dear sir, vaandu special kidaikanumgura aarvathil vottu pottaa, thappa sir? .appadinaa, antha option aye eduthirukalme sir.
Deleteயோசியுங்கள் நண்பரே ; இந்த அலசல் எதன் பொருட்டென்று ! யதார்த்தங்களை புரிந்து கொள்ள ஆற்றல் இல்லாதவராக இங்கு யாரும் இருக்க வாய்ப்பில்லை !
Deleteஅப்படி மெய்யாலுமே புரிந்து கொள்ள இயலவில்லையெனில் இங்கும் அருகாமையிலும் சிதறிக்கிடக்கும் எனது பின்னூட்டங்களைத் தெளிவாய் வாசிக்க முயற்சியுங்கள் - பதில் கிடைக்கும் உங்களுக்கு !
Deleteவாண்டு ஸ்பெஷல் கதைக்கான உரிமைகளில் பல்லாயிரங்களை இறைத்த பின்னே நான் முன் வைத்த கேள்வி :
Delete* வாண்டு ஸ்பெஷல் வெளியீட்டுக்கு இது சரியான தருணமா ? இல்லை கொஞ்சம் பின்னே வெளியிடலாமா ? என்றே !
* வேணுமா - வேண்டாமா ? என்றல்ல !
Editor sir,& 'normal' aana சில அதிர்ஷ்டசாலி நபர்கள், முதலில் ஒரு விசயத்தை தெரிந்து கொள்ளுங்கள்..."இந்த poll ai, கெடுக்க வேண்டும், உங்கள் party ai தடுக்க வேண்டும்" இது எல்லாம் எங்கள் நோக்கம் கிடையாது... வாண்டு ஸ்பெஷல் இப்போது வந்தால் நல்லா இருக்குமே என்று நினைத்து தான் ஓட்டு போட்டோம்... இதற்க்கு ஒரு அறிவாளி நண்பர் சொல்வது போல் fake IP address create செய்வது, fake email ID create செய்வது இது போன்ற மேதாவி வழிகள் தேவை இல்லை... இது போன்ற வழிகள் எங்களுக்கு தெரியாது, idea sonna அந்த அறிவாளிக்கு தான் தெரியும் போல... 25 பேர் ( வாசக நண்பர்கள், உறவினர்கள்,சகோதரர்கள் ) ஆளுக்கு 3 ஓட்டு போட்டாலே 75 ஓட்டு வந்து விடும் என்ற சிறு விஷயம் கூட தெரியாதது ஆச்சர்யம் தான்...வாண்டு ஸ்பெஷல் வேண்டும் என்பதற்காக மட்டுமே ஓட்டு போட்டோம்... நீங்களாகவே கற்பனை குதிரையை தட்டி விட வேண்டாம்... Poll முடிவதற்கு முன்பு ரிசல்ட்டை guess பண்ணி முடிவு எடுத்தது எங்கள் தவறு அல்ல... எனவே சீப்பை யாரும் ஒளிய வைக்கவும் இல்லை, கல்யாணத்தை நிறுத்தவும் இல்லை... அதற்கான அவசியமும் எங்களுக்கு இல்லை... பரோபகாரி, குத்தடி சைலக்கா நபர் இது போன்ற பட்டங்களை நீங்களே தாராளமாக வைத்து கொள்ளுங்கள்... எங்களுக்கு வேண்டாம்... எந்த புத்தகம் வந்தாலும் படித்துக் கொண்டு எங்கள் வேலையை பார்த்துக் கொண்டு போகிறோம்...மிக்க நன்றி...🙏
Deleteஅந்த 'நாங்க' - 'நாங்க' ஜனத்துக்கு 25 கருத்துக்களை 75 ஆக்குவது சரியென்று பட்டால் - 4 day poll -ல் மூன்றரை நாட்களின் எண்ணப்போக்கினையே இறுதிக்கருத்தாய் எடுத்துக் கொள்ளும் எனது அனுமானத்திலும் தப்பிருப்பதாய்த் தோணலைங்க சார் !
Deleteஅர்ஸ் maganavirgu ஒவ்வொருத்தரும் ' ஒரு ஓட்டு ' மட்டுமே போட்டு இருப்பார்கள் என்பதால், நீங்கள் சொல்வது சரி தானுங்க அய்யா...
Deleteரைட்டு ; அங்கேயும் குடும்பத்தோட குத்தி இருக்கக்கூடும்னு வைச்சுக்குவோமுங்களே ; இங்கே பின்னூட்டங்களில் ஆளுக்கு ஒரேயொரு அபிப்பிராயம் தானுங்களே ?
DeleteSo அன்றைய பதிவில் பதிவான பின்னூட்டங்களில், டுபாக்கூர் ஐடிக்கள் இருந்தனவா - இல்லியா ? என்ற ஆராய்ச்சியினை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதானாலும் ஓ.கே தான் !
திவ்யமான நேரம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் தாராளமாக ஆராய்ச்சி செய்யலாமுங்க அய்யா👍...
Deleteபேஷாய்ப் பண்ணிப்புடுவோமே !
Delete👍👍👍
DeleteDear sir, thangal pathilukku nanri. Ennoda request adutha thadavai thaguntha nerathil meendum arivikkumpothu, votteduppai mattum vaithu vidatheergal sir. Enna, nanbargalil 8/10 peruku cartoon nale allergy nu ungalukke theriyum. Ungal mudivai anaivarume mathikirom sir.
Delete//25 பேர் ( வாசக நண்பர்கள், உறவினர்கள்,சகோதரர்கள் ) ஆளுக்கு 3 ஓட்டு போட்டாலே 75 ஓட்டு வந்து விடும் என்ற சிறு விஷயம் கூட தெரியாதது///
Deleteஹா...ஹா...ஹா..ROFL..:-)))))
ஒரே விஷயத்தை 3 மாதிரி விளம்பியிருக்கிறேன்...
அது உங்களுக்கு புரியாது பாஸ்... Because u r too much to be normal...,👌
DeleteEnd of the day எனது பர்சனல் தேர்வு முந்தியிருக்கவில்லை என்பதில் எனக்கும் வருத்தமே ! ஆனால் இன்றைய நிலவரங்களில் எனது விருப்பு வெறுப்புகளை பின்தள்ளுவதே way forward எனில் அதனை ஏற்றிட வேண்டும் தானே !
DeleteIngu thalathilulla anaithu nanbargalukkum oru vendugol. Intha thalathirku mouna paarvaiyalargale athugam. Ennaiyum serthu. Inge 100 per pathividugireergal enraal, kurainthathu 500 per amaithiyaga padithu vittu , amaithiyaga selkinranar. Athaiyum manathil vaithu kollungal. Ungal 100 perin karuthu than ongi Olivia vendum enru ennaatheergal. Neengal editor sir Mel evvalavu mariyathai vaithirukireergalo, comics meethu anbu vaithirukireergalo, athe anbai than mouna paarvaiyalgal naangalum vaithirukirom enbathai unarungal.
Deleteஅவர்கள் தம் அபிப்பிராயங்களை பகிர்வதில் தப்பு ஏது சார் ? மௌனமே போதுமென்று நீங்கள் எண்ணிடுவதற்கு அவர்கள் எவ்விதத்தில் பொறுப்பாகிடுவார்கள் ? And உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உங்களைத் தடுப்பதும் அவர்களில்லையே ?
Deleteஒவ்வொருவாட்டியும் உங்களை போன்ற மௌன நண்பர்களை பதிவிடக் கோரி நான் பிச்சையெடுக்காத குறையாய் கெஞ்சுவதிலும் தான் இரகசியமேது ?
//அது உங்களுக்கு புரியாது பாஸ்... Because u r too much to be normal...,👌//
DeleteI have been lingering in this blog for too long to take anything personal..
//fake IP address create செய்வது, fake email ID create செய்வது இது போன்ற மேதாவி வழிகள் தேவை இல்லை... இது போன்ற வழிகள் எங்களுக்கு தெரியாது, //
Fake ID என எங்கும் நான் குறிப்பிடவில்லை..
Proxy ,temporary என மட்டுமே குறிப்பிட்டேன்..
ஸ்பைடரின் தீவிர வாசகர் -அவரின் ஸ்பைடர் மீதான மாளாத காதலால்- செய்கையை குறிப்பிட்டதன் காரணம் அதுவே!
அச்செயலால் ஒரு போட்டியின் முடிவு கைவிடப்பட்டது..
25 பேர் தலா 3 ஓட்டு போட்டதும் இதனை ஒத்ததே...
நான் temporary email address ,proxy IP address என குறிப்பிட்டதற்கு காரணம் உண்டு..
இவை பல சந்தர்ப்பங்களில் அவசியமானவை..
அறிமுகமில்லா தளங்களில் அவசியம் கருதி நுழையும்போது நமது தகவல் பாதுகாப்பு கருதி proxy IP address -ல் ஆப்பரேட் செய்வது ந்ல்லது..
அவ்வளவு ஏன்...ஸ்டிரா போல்களிலேயே temporary email address -ல் தான் பதிலளிக்க வேண்டும்..
இதனை நடத்துபவர் பற்றி நமக்கு தெரியாது என்பதால்...பெரும்பாலும்
இங்கு
நடத்துபவர் நமது எடிட்டர் என்பதால் இங்கு
Temporary email address தேவையில்லை
ஒருவர் ஒரு வோட்டுதான் போட முடியும் ஒரு ஈமெயில் அட்ரஸ் உபயோகித்து என்பது ஸ்டிரா போலின் எடிட்டர் நியதி..
நீங்களே சொல்கிறீர்கள் ஒருவர் 3 மூன்று ஓட்டு போட்டதாக..
எப்படி போட்டிருக்க முடியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி..
அர்ஸ் மேக்னாவுக்கு போட்ட ஓட்டுகள் அனைத்தும் நியாயமான ஓட்டுகளா என கேட்டீர்கள்..
Deleteஅங்கு யாரும் பத்து பேர் 30 ஓட்டு போட்டோம் ,25 பேர் 75 ஓட்டு போட்டோம் என மார்தட்டி கொள்ளவில்லை..
உங்கள் செயலால் ஸ்டிரா போலின் நம்பகத்தன்மை போய்விட்டது...
கெடுதி என பார்த்தால் இதுதான்..
ஏனெனில் மேலே எடிட்டர் ஜெர்மானிய இயக்குபொருள் எனவும் கண்ணை குத்திவிடும் என ஜாலியாகவும் குறிப்பிட்டு இருந்தார்...
அவருக்கு தர்மசங்கடத்தை இச்செயல் ஏற்படுத்தும்
மற்றபடி வாண்டு ஸ்பெஷலுக்காக செய்வது பெரிய குற்றமில்லைதான் என நினைப்பது உங்கள் பக்கம்தான் உள்ளது.
Oruvar kudumbathil 3 per.3 phone. 25 per x 3 = 75per.75 phone. Ithu than sir kanakku. Neenga nenaikura maathiri illa.
Delete25 பேர் ( வாசக நண்பர்கள், உறவினர்கள்,சகோதரர்கள் ) ஆளுக்கு 3 ஓட்டு போட்டாலே 75 ஓட்டு வந்து விடும் என்ற சிறு விஷயம் கூட தெரியாதது//
Delete//Oruvar kudumbathil 3 per.3 phone. 25 per x 3 = 75per.75 phone. Ithu than sir kanakku. Neenga nenaikura maathiri illa.//
ஆளுக்கு 3 வோட்டு எழுதினால் தமிழில் அப்படித்தான் அர்த்தம் வருகிறது..
கைய புடிச்சி இழுக்கலன்னா தூக்கமே வராது போல
Deleteஇங்கே எல்லோரும் கேட்டது ஏஆர்எஸ்ஸே... வார்டு மலர் வரனுங்றத விட ....வாசகர்களால் ஏகமாய் தேர்வு செய்த கதய கெடுக்க எண்ணமோ...பார் என் மூளய என பீற்ற அந்த நண்பர விட்டா வேறாரு வருவா
Deleteஅச்சச்சோ... இங்கேயும் சதியா? என்ன தான் கடைசி முடிவு?
ReplyDeleteஆசிரியர் இந்த பதிவில் சொன்னது போல் ARS MAGNA தான்.
Delete116வது
ReplyDeleteடியர் எடி,
ReplyDeleteஅர்ஸ் மேக்னா முடிவாவதில் சந்தோஷமே. நண்பர்கள் சிலர் மூலம் முன்பு தமிழ் ஸ்கான்லேஷனாக பார்த்த ஞாபகம். இம்முறை அவர்களுக்கு ஸ்பாட்லைட் அடித்து அதிகாரபூர்வமான இதழ்களின் உழைப்பில் அவர்களையும் வழிபடுத்தலாமே?
கூடவே சில கேள்விகள்:
1. யங் ப்ளூபெர்ரி அடுத்த வருடத்திற்கு உறுதிதானே? இல்லை அதற்கான முன்பதிவு பணம் வேறு சிறப்பு இதழ்களுக்கு திருப்படுமா ?
2. லாயல்டி போனஸ் கணக்குகளுக்கு சிறப்பு அறிவிப்பு உண்டா? இல்லை முன்பு அறிவித்த சிங்கத்தின் சிறு வயதில் இந்த வருடம் வருமா?
3. XIII மறுக்கா ரீபிரிண்டில் 26வது பாகமாக சமீபத்தில் வெளியான The History இணைக்க வாய்ப்புண்டா? அது இரண்டாம் சுற்றை பூர்த்தி செயவதாக படித்தேன். 'வாய்ப்பில்லை ராசா' என்றாலும் 40+ பக்கம் கொண்ட அந்த புத்தகத்தை தனியாக வெளியிட திட்டம் இருந்தால் போதும்.
//அவர்களுக்கு ஸ்பாட்லைட் அடித்து அதிகாரபூர்வமான இதழ்களின் உழைப்பில் அவர்களையும் வழிபடுத்தலாமே?//
Deleteஇதற்குப் பதில் சொல்வதாக இருப்பின், ஒரு படைப்பின் உரிமைகளைப் பெற்றிடும் licensee க்கு உள்ள லீகல் obligations பற்றியும் விளக்க வேண்டி வரும் ! And அதற்குள் புகுந்தால் படைப்பாளிகளுக்கும் எங்களுக்குமிடையே உள்ள சமாச்சாரங்களை பொதுவெளியில் விவாதப் பொருளாக்கியதே மிச்சமாக இருக்கும் ! And end of the day - ஒன்னரையணாவுக்கு விஷயம் இல்லாத SODA விவகாரத்தில் சப்பாத்தி தப்பியது போலான FB பரிகாசங்களே மிஞ்சிடக்கூடும் ! So விளக்குகிறேன் பேர்வழி என்று மெனெக்கெடுவதற்குப் பதிலாய் I would opt not to sir !
அது தான் பொதுவாய் வாசகர்களுக்கு மொழிபெயர்ப்பு வாய்ப்பினை தர முன்வந்திருக்கிறேனே - யாராய் இருப்பினும் முயற்சிக்க தாராளமாய் முன்வரலாமே ! இதனை இதற்கு முன்பாய் ஸ்கேன்லேஷனில் முயற்சித்தது யாரென்பது எனக்குத் தெரியாது & தெரிந்திட ஆர்வங்களும் நஹி ! But அது மாத்திரமே இந்தப்பணியினை மேற்கொள்ளும் முன்னுரிமையினை வழங்கிடாதே சார் !
Answering your other questions :
Delete1.Young Blueberry on hold for 2021. We have just 11 bookings on it and they will either be refunded or adjusted. The next year is going to be an austere one.
2.Yes.
3.Sorry, no.
இளம் டைகர் தொகுப்புக்கான விலை என நீங்கள் எதுவும் குறிப்பிட்டு அறிவித்ததாக நினைவில்லையே சார்.
DeleteThanks for the answers, Edi.
Deleteஸ்கான்லேஷன் தொடர்பான கேள்விக்கு இதை விட தெளிவாக விளக்கம் கொடுக்கமுடியாது. அனைவருக்குமான வாய்ப்பு என்பதால் அவர்களாகவே, பங்கெடுக்க முன்வருவார்கள் என்று நம்புவோம். SoDa குழப்பமே போதும் :)
அர்ஸ் மேக்னா தமிழில் வருவதே, என்னளவில் திருப்தியான தகவல்.
இளம் டைகரும், XIII History வர வாய்ப்பு அமையாதது வருத்தமே என்றாலும் ஹிட்டிக்கும் வேறு இதழ்கள் அந்த இடத்தை பிடிக்க வாய்ப்பு தான்.
நம்ப முடியவில்லை. நம்ப முடியவில்லை வில்லை வில்லை வில்லை லை லை லை அவராதோற்றார் இருக்காது அப்படி எதுவும் நடக்காது. நம்பமுடியவில்லை.
ReplyDeleteதோல்விகள் ; வெற்றிகள் நம் கண்ணோட்டங்களில் மட்டும் தானே சார் !
DeleteArs மேக்னா. ஜேஸன் ப்ரைஸ் ஓவியரா. ஓவியங்கள் அதேபோல உள்ளதே கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஅவரே தான் சார்.
Deleteஅதே கூட்டணி சார் ! Same கதாசிரியர் & ஓவியர் !
Deleteஅட டே... சூப்பர் ராஜசேகரன் சார்... அந்த ஓவியத்தை எங்கயோ பார்த்து இருக்கமேனு தோணிச்சி. ஆனாக்கா ஸ்ட்ரைக் ஆகல..
Deleteநச்சுனு பிடிச்சிட்டீங்க...!!!
பிரைஸ் கூட்டணி எனும் போது எதிர்பார்ப்பு இன்னும் ஒரு மிடறு கூடச் செய்கிறது.
வண்ணமும் அதே போல் சிறப்பு மையா
Deleteஐ நான்சரியாயிட்டேன்போல.கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteநீங்கள் எப்போதும் சரியாகவே இருக்கீங்க ராஜசேகர்!
DeleteTittle Also pakka fitting.
ReplyDeleteபஞ்சாயத்துகள் முடிவதில்லை!
ReplyDeleteகாமிக்ஸ்கள் நிற்பதில்லை!!
ஆலமரமும் ; ஜமுக்காளமும் போல ; பஞ்சாயத்துக்களும் , காமிக்ஸ்களுக்கும் ஒரு நேசம் சார் !
Deleteஎடிட்டரின் புதிய பதிவு ரெடி priyatels!
ReplyDelete178
ReplyDeleteஇந்த தேர்தல் Matter ல வடிவேலு மாதிரி " அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாத்தான் இருக்கும் போல " னு நினைச்சிட்டு போகனும்னு நினைக்கிறேன்
ReplyDeleteFor any types of tamil english or hindi comics magazine like rani lion muthu tamil indrajaal Dc marval ack ambulimama tulsi manoj diamond or any types of comics magazine once contact whatsapp 7870475981
ReplyDelete