நண்பர்களே,
வணக்கம். எழு கழுதை வயசாச்சு ; 36 வருஷங்களாய் ; சுமார் 900 இதழ்களைப் பார்த்தாச்சு ; எக்கச்சக்கமோ எக்கச்சக்கத் தொடர்களைப் புரட்டியாச்சு ; வாசித்தும் பார்த்தாச்சு.....ஆனால் இனி இதில் புதுசாய்ப் பார்த்திட என்ன இருக்கக்கூடுமோ ? என்ற நினைப்பு மட்டும் ஒரு நாளும் தலைகாட்டியதில்லை ! 'அடடே...தம்பியாபுள்ளை அவையடக்கத்தில் ஓவரா குழையுதே ' என்று தோன்றுகிறதா ? தப்பில்லை தான் guys - ஆனால் எந்தவிதமான அடக்கமும் இந்த statement-ன் பின்னணிக் காரணமகிடாது !! மாறாக கற்பனையெனும் ஊற்று ஒருக்காலும் வற்றிடா ஒரு வண்டி ஜாம்பவான்கள் இந்த காமிக்ஸ் லோகமெங்கும் கோலோச்சுவதால், எந்த நொடியில் எந்தத் திக்கிலிருந்து திகைக்கச் செய்யும் எந்தப் புதுப் படைப்பு எட்டிப்பார்க்குமோ ? என்று யூகிக்கக்கூட இயலாத வேகத்தில் படைப்புலகம் சுழன்று வருகிறது ! So நான்பாட்டுக்கு 'அல்லாத்தையும் கரைச்சாச்சு ; குடிச்சாச்சு !!' என்ற மிதப்பில் திரிந்தால் - அழகான குண்டு பல்புகள் அடிக்கடி பட்டுவாடா ஆகிடும் ! And அதை நூற்றிஎட்டாவது தபாவாக உணர்ந்திடும் வாய்ப்பு கடந்த 3 நாட்களில் வாய்த்துள்ளது !
புதனன்று இரவு டயபாலிக்குடனான கண்ணாமூச்சி ஆட்டம் நிறைவுற ; ஏற்கனவே XIII & ஜேம்ஸ் பாண்ட் கலர் இதழ்களும் அச்சாகியிருக்க - மாதத்தின் 3 இதழ்களில் என்மட்டுக்கான பணிகளில் கையைத் தட்டியிருந்தேன் ! எஞ்சியிருந்தது ஏற்கனவே 2 மாதங்கள் தள்ளிப் போக நேரிட்டிருந்த கி.நா. - "பனியில் ஒரு குருதிப்புனல்" மட்டுமே !! இந்த 110 பக்க இத்தாலிய கி.நா.வினில் - லாக்டவுன் படலங்களெல்லாம் துவங்கிடுவதற்கு முன்பான மார்ச்சிலேயே முப்பது பக்கங்களை எழுதியிருந்தேன் ! திடுமென மொத்தமாய் நாட்டுக்கே திண்டுக்கல் பூட்டுப் போடும் அவசியம் எழுந்த போது, பணிகளில் focus குன்றியதும், சோம்பல் முளைத்ததும் ஒருங்கே நடந்தன ! பற்றாக்குறைக்கு 30 பக்கங்கள் பயணித்திருந்த போதிலும், இது என்ன மாதிரியான கதையோட்டம் என்பதை யூகிக்க முடிந்திருக்கவில்லை & இதன் இத்தாலிய மொழிபெயர்ப்புமே சீடையுருண்டையை root canal செய்த பற்களோடு கடிப்பது போலிருக்க - 'அப்பாலிக்கா பாத்துக்கலாம் !' என்று மூட்டை கட்டிவிட்டிருந்தேன் ! So காரணங்களும் வாகாய் அமைந்த போது இந்த இதழைத் தள்ளிப்போடுவது சுலப option ஆகப் பட்டது ! But இம்முறை தள்ளிப்போட சாத்தியங்களில்லை என்ற போது மார்ச்சில் எழுதிய ஸ்கிரிப்ட் + பாக்கியிருந்த 80 பக்கங்களை தூசி தட்டியெடுத்து மறுக்கா பேனா பிடிக்க முயன்றேன் !
Timeline : புதனிரவு 10-30 p.m :
கொட்டாவிகளோடு மல்லுக்கட்டுவதே பெரும்பாடாகிட, 'அவசரம்' என்ற அலாரம் ஒரு மூலையில் விடாப்பிடியாய் ஒலித்துக்கொண்டிருந்ததால் 'தம்' கட்டி 25 பக்கங்களை நிறைவுசெய்துவிட்டு படுக்கக் கிளம்பினேன் ! 'ரைட்டு...பாதிக் கிணறைத் தாண்டியாச்சு ; மீதத்தை நாளைக்குத் தாண்டிப்புடலாம் !" என்ற நிறைவு இருந்திருக்க வேண்டிய இடத்தினில் எனக்குள் இருந்ததோ கொஞ்சமாய்க் குழப்பமே ! 'சரியாய் கதையின் நடுவினில் நிற்கிறேன் ; ஆனால் இன்னமும் இது என்ன மாதிரியான கதையென்பது கிஞ்சித்தும் புலனாகவில்லையே ?!!' என்ற நெருடலின் பலனே அது ! பேனா பிடிக்கும் போது எப்போதுமே எனக்கொரு கெட்ட பழக்கமுண்டு ; கதையினை முன்கூட்டி முழுசாய்ப் படிக்கும் பொறுமை எனக்கு வாய்த்திடுவதே கிடையாது - unless it's a cartoon in English ! So 'படிச்சுக்கினே எழுதிக்கலாம் ; எழுதிக்கினே படிச்சுக்கலாம் !' என்ற ஒருவித துடுக்குத்தனத்தோடே தான் பிரெஞ்சுக் கதைகளையும் சரி ; இத்தாலியக் கதைகளையும் சரி - நான் அணுகிடுவது வாடிக்கை ! Maybe கதையினை முன்கூட்டியே முழுசாய் வாசித்து விட்டால், நடு நடுவே இன்னும் கொஞ்சம் பெட்டராக கையாள சாத்தியமாகிடுமோ ? என்று அவ்வப்போது தோன்றும் தான் ; ஆனால் எப்போதுமே கடிகாரத்தோடும், காலெண்டரோடும் ; deadlines-களோடும் போட்டியியிட்டுக் கொண்டே தான் நம் வண்டி ஓடிடும் எனும் போது, அந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடிவதில்லை ! தவிர, ஒரு கதையை முன்கூட்டியே படித்து அசை போட்டுவிட்டால், எழுதும் போது சுவாரஸ்யம் கொஞ்சம் குறைந்து போகுமோ ? என்ற நினைப்புமே எட்டிப்பார்த்திடும் தான் ! So இந்த கி.நா.வையும் - take it as it comes என்று எடுத்தபடிக்கே பயணித்து வந்ததால் - கதாசிரியர் எப்டிக்கா வண்டியைத் திருப்பவுள்ளார் என்பதை எனக்குத் துளியும் யூகிக்கவே முடியவில்லை ! 'சரி, பாத்துக்கலாம் ; அசாத்தியமான உச்ச reviews பெற்றிருந்த கதை தானே...நிச்சயமாய் சோடை போகாது !' என்றபடிக்கே நித்திரையுலகினுள் புகுந்தேன் !
Timeline : வியாழன் அதிகாலை 2 -00 a.m.
நெருடலோடே படுக்கும் போது தூக்கம் ரசிக்காது தானே ? சத்தமில்லாது எழுந்து அமர்ந்தவனுக்கு - 'இனியும் கதை என்னவென்று தெரிந்து கொள்ளாவிட்டால் இன்னிக்கு சிவராத்திரி தான் ! என்பது புரிந்தது ! கதையின் க்ளைமாக்ஸை பர பரவெனப் புரட்டி படங்களையும் எடுத்து வைத்துக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன் ! எனது நல்ல காலம், இதுவொரு சித்திர அதகளம் என்பதால் வசனங்கள் வண்டி வண்டியாய்க் கிடையாது ! So ரொம்பச் சீக்கிரமே கதையின் ஜீவநாடியைத் தொட்டிட முடிந்தது ! அதனைக் கடந்து முடித்தவனுக்கு அடுத்த கால் மணி நேரத்துக்கு மலங்க மலங்க முழிக்க மட்டுமே முடிந்தது ! பாதித்தூக்கத்தில் சண்டித்தனம் செய்து வந்த மூளையோ - பேஸ்தடித்துப் போய் எங்கெங்கோ தறி கேட்டு ஓடத் துவங்கியிருந்தது ! 'தெய்வமே.....இந்த ஆல்பத்தை என்னவென்று நான் தேற்றி வெளியிடுவது ? ஏற்கனவே ஒரு வைரஸின் புண்ணியத்தில் ஆளாளுக்கு சட்டையைக் கிழிக்காத குறையாய்த் திரிந்து வரும் நிலையில் - இது வேறா ?" என்ற பதட்டம் குடிகொள்ள, ரொம்ப நேரம் அந்தப் படங்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு வழியாய் லைட்டை அணைத்துவிட்டுப் படுக்கையில் விழுந்த போது மணி 2-45 என்றது கடிகாரம் ! சரி..'இந்த மாசமும் வாஸ்து சரியில்லை ; சகுனம் சரியில்லை' என்று எதையாச்சும் சப்பைக் கட்டு கட்டிவிட்டு ஒத்திப் போட வேண்டியது தான் ; அப்புறமாய்ப் பார்த்துக்கலாம் ' என்று தீர்மானித்திருந்தேன் ! 'ரைட்டு.... நாளைக்கு மீத 55 பக்கங்களை எழுதாமல் அல்வா கொடுத்திடலாம் !' என்பது மட்டுமே அந்நேரத்து ஆறுதலாய்த் தோன்றியது !
Timeline : வியாழன் அதிகாலை 3-15 a.m.
கழுதை போல புரண்டு புரண்டு படுத்தவனுக்குத் திடீரென மண்டைக்குள் flashlight அடித்தது போலொரு வேகம் துளிர்விட்டது ! 'ஆஹா....கருணையானந்தம் அங்கிளிடம் XIII spin-off - "சதியின் மதி" கதை எழுதி ரெடியாய்க் கிடக்குது ; காலையில் முதல் வேலையாய் அதை வரவழைக்கிறோம் ; ஒரே நாளில் டைப்செட்டிங் செய்து, ராவோடு ராவாய் எடிட் செய்து சனிக்கிழமைக்கு அச்சிடுகிறோம் !' என்று சொல்லிக்கொண்டேன் ! 'பனியில் ஒரு குருதிப்புனல்' இதழுக்கான ராப்பரோ "வெளியீடு நம்பர் 13" என்ற விபரத்தோடு பிப்ரவரியிலேயே அச்சிடப்பட்டுக் கிடக்க - அதை பின்னெப்போதாவது பார்த்துக் கொள்ளலாம் ; இருக்கவே இருக்கின்றன நமக்கு ஸ்டிக்கர்கள் - என்றும் தீர்மானித்துக் கொண்டேன் ! 'ஆனாலும் சமர்த்துப் புள்ளைடா நீ ; இதையும் சமாளிக்க வழி கண்டுபுடிச்சிட்டே பாரேன் !' என்று எனக்கு நானே உச்சி மோர்ந்து கொண்ட போது தூக்கம் சௌஜன்ய சகாவாய்த் தோன்றியது !
Timeline : வியாழன் அதிகாலை 5-45 a.m.
'இப்போதைக்காவது சிக்கலைத் தீர்த்தாச்சு !' என்ற நிம்மதியில் முரட்டுத் தூக்கம் பிடிக்குமென்று நினைத்திருக்க - அது பொய்த்துப் போனது, வீட்டுக்கு வெளியே பால்காரர்களின் ஓசைகளோடு கண்விழித்த போது !! 'சிக்கலை இனம் கண்டாச்சு ; தீர்வையும் தேடிப்பிடித்தாச்சு !' என்ற போதிலும் மனசு மட்டும் அந்தப் பனிபடர்ந்த ரஷ்ய வனாந்திரத்திலேயே இன்னமும் உலாற்றி வருவது போலிருந்தது உள்ளுக்குள் ! 1812 !! நடுக்கும் குளிருக்கு மத்தியில், மாமன்னர் நெப்போலியனின் படைவீரர்களுள் ஒரு சிற்றணி சந்திக்கும் ஒரு வித்தியாச அனுபவமே இந்த கிராபிக் நாவல் ! ரொம்பவே வித்தியாசமான backdrop என்பது ஒருபுறமிருக்க, சித்திரங்களும், கதை நகர்ந்திடும் விதமும் மனசுக்குள் ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை ஸ்பஷ்டமாய் உணர்ந்திட முடிந்தது ! 7 பேர் கொண்ட அந்த அணி ஏதோவொரு விதத்தில் மனசுக்கு நெருக்கமாகி விட்டது போலவும், அவர்களைக் கைகழுவிடுவது நியாயமாகாது ! என்பது போலவும் ஒரு பீலிங்கு ! கதையினில் என்னை நெருடிய க்ளைமாக்ஸ் பற்றி அசை போட்டபடிக்கே நெட்டில் கொஞ்சம் உருட்டிட முனைந்த போது கண்ணில்பட்ட சில தகவல்கள் ; வரலாற்று நிஜங்கள் என் ஆந்தை விழிகளை XLL சைஸாக்கின ! அவற்றைப் படித்தபடிக்கே கதையை மனசுக்குள் மறுபடியும் ஓடவிட்டு போது - கலவையாய் சிந்தனைகள் பெருக்கெடுத்தன ! And போன வருஷம் இதே வேளையினில் கதைத்தேர்வுகளின் போது, இந்த ஆல்பத்தின் review-களை ரொம்பவே பொறுமையாய் வாசித்திருந்தது நினைவுக்கு வர, வேக வேகமாய் அவற்றை இணையத்தில் மறுபடியும் தேடிப்பிடித்து வாசிக்கத் துவங்கினேன் ! கதையைப் போட்டுடைத்து வாசிப்பு அனுபவத்தை குன்றிட அனுமதிக்காது - வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு critics செய்திருந்த அனைத்து அலசல்களும் இந்த ஆல்பத்தை அசாத்தியமாய்க் கொண்டாடியிருப்பதை மறுக்கா தரிசிக்க முடிந்தது ! பற்றாக்குறைக்கு இந்த ஆல்பத்தை, போனெலியினில் இருக்கும் நண்பரொருவர் ரொம்பவே உயர்வாய்ப் பரிந்துரை செய்திருந்தார் என்பதும் நினைவுக்கு வர, அந்த மின்னஞ்சலையும் தேடிப்பிடித்து வாசித்த போது புலர்ந்திருந்தது புதுப் பொழுது மாத்திரமல்ல - எனக்குள் ஒரு தீர்மானமுமே ! 'Come what may - இந்த இதழை ரெடி பண்றோம் ; ஊருக்குள் உள்ள சகல முட்டுச் சந்துகளுக்குள்ளும், கட்டி வைத்து நமது போராளிகள் குமுறினாலுமே, புன்சிரிப்பையே பதிலாக்குகிறோம் ! This album will see daylight for sure !! ' என்ற தெளிவு பிறந்திருந்தது !
Timeline : வியாழன் பகல் :
மறுக்கா படுத்து, எப்போதோ எழுந்து, கிளம்பி, ஆபீசில் ஒரு attendance போட்ட போது வேறு ஏதேதோ பணிகள் மொய்யென்று தொற்றிக் கொள்ள, பாக்கி பக்கங்களின் மொழிபெயர்ப்புக்கு நேரம் ஒதுக்கவே இயலவில்லை ! In any case - எழுதிட ராத்திரிகளே வசதிப்படும் என்பதால் ரொம்ப அலுத்துக் கொள்ளவும் தோன்றவில்லை ! அந்தக் கதைக் களமும், கதாசிரியரின் தகிரியமும் மட்டுமே நாள் முழுக்க மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தன !
Timeline : வியாழன் இரவு 10-45 p.m. :
நேரடியாய் க்ளைமாக்ஸை மட்டுமே படித்திருந்தவனுக்கு - கதையை அங்கு வரை கதாசிரியர் எவ்விதம் இட்டுச் செல்கிறாரென்ற குறுகுறுப்பு மேலோங்கிட, மொங்கு மொங்கென்று எழுத ஆரம்பித்தேன் ! வசனங்கள் மிகுந்தில்லை என்பது ஒருபக்கம் ; ஒரு செம கோக்குமாக்கோ மாக்கு ஆல்பத்தின் மத்தியினில் இருக்கிறோமென்ற புரிதல் மறுபக்கம் - பக்கங்கள் பறந்தன !
Timeline : வெள்ளி அதிகாலை 12-45 a.m :
மொத்தமாய்ப் பக்கங்களை ஸ்டேப்ளர் பின்னடித்த போது ஒவ்வொரு கதையினிலும் பணிமுடிக்கும் நொடியில் தோன்றிடும் மாமூலான அந்த "சுபமங்களம் " என்ற உணர்வு எழவில்லை ! மாறாய் ஒருவித பரபரப்பு ; ஒருவித எதிர்பார்ப்பு ; ஒருவித மருகல் என்று கலந்து கட்டியடித்தது !
- நானெடுத்திருக்கும் தீர்மானத்தில் லாஜிக் உள்ளதா ? என்று கேட்டால் - 'இல்லீங்க எசமான் !' என்பதே எனது பதிலாய் இருக்கும் !
- "சரி, தொலையுது ....'இதை வாசகர்கள் எவ்விதம் அணுகுவார்களென்றாச்சும் யூகிக்க முடியுதா ?" என்பது அடுத்த கேள்வியாக இருந்திடும் பட்சத்தில் - "முடியுதுங்க சாமீ ; 2 நாளுக்கு முன்னே ராவிலே நான் குந்தியிருந்தா மேரியே நிறைய பேர் குந்தப் போறது வாஸ்தவம்னு யூகிக்க முடியுது !" என்று சொல்லி வைப்பேன் !
- "சும்மாவே முதுகிலே தோசை சுட செம ஆர்வமாய் ஒரு அணி காத்திருக்கிறச்சே - நீயே மாவையும் ஆட்டி, தோசைக்கரண்டியையும் தேடிப்பிடிச்சு கையிலே தருவானேன்டா தம்பி ? "வச்சு செஞ்சுப்புட்டான்" என்று வாருவார்களே ?" என்பது கேள்வி # 3 ஆக இருந்திட்டால் - "என்றைக்கோ ஒரு யுகத்தில் - பாற்கடலையே கிண்டி திவ்யமாய் எதையேனும் கொணரும் வரத்தைப் பெரும் தேவன் மனிடோ வழங்கினாலும் கூட - "வேர்க்கடலைக்கு உப்பு குறைச்சல் !" என்று தோசை ஊத்தும் படலங்கள் தப்பாது நடைபெறவே போகிறது எனும் போது, அதனைக் காரணமாக்கி ஒரு offbeat அனுபவத்தை மறுப்பானேன் ?' என்பதே எனது பதிலாகிடும் !
- 'சரி...தோசை ஊற்றுவோர் சங்கம் ஒருபக்கமிருக்கட்டும்டா அம்பி....on merits ரசிக்கவோ, விமர்சிக்கவோ செய்திடும் வாசகர்கள் கூட மண்டையைப் பிய்க்க நேரிடும் - என்பதாச்சும் புரியுதா - இல்லியா ?" என்ற இறுதிக் கேள்விக்குமே பதில் இருந்தது என்னுள் ! இந்த ஆக்கத்தினில் எழக்கூடிய கேள்விகள் சகலத்துக்குமான பதிலை கதாசிரியர் Tito Faraci கதையினூடே ஒரு கட்டத்தில் பதித்தும் உள்ளார் என்பதால் - என் கடன் பணிசெய்து நகர்வதே என்று தோன்றுகிறது folks ! தவிர, கதையின் பின்பகுதியில் கதாசிரியர் உருவாக்கித் தந்திருந்த இடங்களில் இட்டு நிரப்ப முடிந்த வரிகள் - இத்தனை variables இருக்கும் போதிலும் இந்த ஆல்பத்தை வெளியிட உனக்குத் தோன்றுவதேனோ ? என்ற கேள்விக்கு பதிலாகிடுவதாய்த் தோன்றியது !
கற்பனைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அந்த ஆற்றலாளரோடு நாம் இணங்கிப் போக வேண்டுமென்ற அடிபிடிக் கட்டாயங்களெல்லாம் ஒருபோதும் கிடையாது தான் ; ஆனால் குறைந்தபட்சமாக அதனை நுகர்ந்தாவது பார்த்திடுவோமே - போற்றவோ, தூற்றவோ தீர்மானிக்கும் முன்பாய் என்ற அவா உந்தித் தள்ள I decided to say Aye !! மண்டைக்குள் இப்படி ஏதேதோ எண்ணங்கள் குறுக்கும் நெடுக்குமாய்ச் சாலடிக்க - கோழி கிறுக்கியது போலிருந்த முழு ஸ்கிரிப்டையும் கொஞ்ச நேரத்துக்கு உற்றுப் பார்த்துவிட்டு - பெருமூச்சோடு தூங்கக் கிளம்பினேன் !
Timeline : வெள்ளி பகல் :
திருமணமாகி பணியிலிருந்து விடைபெற்றிருந்த கோகிலா ஆடிக்கு ஊர் திரும்பியிருக்க, காலையிலேயே கதவைத் தட்டி விட்டோம் - இந்த பாக்கி 80 பக்கங்களை டைப்செட் செய்திட ! பற்றாக்குறைக்கு இந்த இதழின் குறிப்பிட்ட சில பக்கங்கள் மட்டும் 2 வண்ணத்தில் என்றிருக்க, அதற்கான பிராசசிங் பணிகளிலும் நிறைய வேலைப்பாடுகள் அவசியப்பட்டது ! வெள்ளி பகலில் முழுசும் டைப்செட் செய்யப்பட்டு, மாலையே என் கைக்கு வந்திட, அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் திருத்தங்கள் போட்டு, மறுக்கா ஒரு பிரிண்ட் போடக் கேட்டேன் !
Timeline : வெள்ளியிரவு :
ஒன்பது மணிக்கு அதுவும் வந்து சேர, மறுபடியும் முழுசையும் வாசிக்கும் போது கோர்வையில் நிறையவே வித்தியாசம் தட்டுப்பட்டது ! முதல் 30 பக்கங்கள் எழுதப்பட்டது 5 மாதங்களுக்கு முன்னே எனும் போது - அவை மட்டும் ஊரோடு அன்னம் தண்ணி புளங்காத, தள்ளிவைக்கப்பட்ட பக்கங்களாய்த் தென்பட்டன ! 'ஆஹா...சும்மாவே தெறிக்க விடுற கி.நா.....!! இதிலே நீ உன்பங்குக்கு சொதப்பினேனா .... நிச்சயமடியோவ் டண்டணக்கா..! என்று மண்டை சொல்லிட, மறுக்கா பேனா ; pad என்று தூக்கிக்கொண்டு முதல் 30 பக்கங்களை மாற்றியமைக்க முனைந்தேன் ! நனைத்துச் சுமப்பது எப்போதுமே எரிச்சலூட்டும் அனுபவமே என்றாலும், இம்முறை அது அவ்வளவாய் நோகச்செய்யவில்லை ! சனி அதிகாலை 1 மணிக்கு தூங்கப்போன போது - 'ரைட்டு...இனி பெ.தே.ம. விட்ட வழி !!' என்ற அமைதி துளிர்விட்டிருந்தது !
Timeline : சனிக்கிழமை :
பரபரப்பாய் பணிகள் முடிந்து, மறுக்கா அந்த முதல் 30 பக்கங்களில் திருத்தங்கள் பார்த்து - அச்சுக்கு இவற்றைத் தயார் செய்யும் போது அந்தி சாய்ந்திருந்தது ! ஒரு முன்னுரை எழுதினால் தேவலாமென்று நடுவாக்கில் தோன்றிட, 'கிராபிக் டைம்' பகுதியினில் அவசரமாய் எழுதித் தந்தேன் ; and அதன் பொருட்டும் கொஞ்ச நேரம் ஓடிப்போயிருந்தது ! இங்கு மாலை 7 மணி ஊரடங்கு என்பதால் - 6 மணிக்கெல்லாம் ஆபீஸையும், அச்சகத்தையும் பூட்டிட வேண்டியிருந்ததால், இவற்றின் அச்சுப் பணிகள் திங்களன்றே நிறைவுறும் ! அதற்குள்ளாக - கதையின் இறுதியில் ஒரு Post Script போல எழுதினால் தேவலாம் என்றும் தோன்றிட, விளம்பரப்பக்கத்தைக் கடாசி விட்டு அங்கும் கதையின் பின்புலத்தினைப் பற்றி எழுதியுள்ளேன் ! இந்தக் கூத்துக்களையெல்லாம் அடித்து விட்ட கையோடு பதிவை டைப்ப முனைந்த போது சனியிரவு 11 !
And here is the preview of this album :
Tito Faraci கதாசிரியர் |
வணக்கம் எடிட்டர் சார்.
ReplyDelete1
ReplyDeleteடியர் எடிட்டர் சார் 2012 இல் நீங்கள் விளம்பர படுத்தி இருந்த பணியில் ஒரு அசுரன் என்ன ஆயிற்று .
ReplyDelete+ 1 sir. Those stories were hit even without any introduction, built up... information about author, artist or any. Those oldies were just published and became hit. But nowadays who realises the fact?. Though 0% logic is there, Meendum king Cobra is still entertaining.
DeleteThis comment has been removed by the author.
Deleteஆமா கிங் கோப்ரா நீண்ட நாள் கழித்து....காணாமல் போன கடலுக்குப் பின்னே அப்படியே தேறிய லாரன்சயும் டேவிட்டயும் தொடர்ச்சியாக பாத்தாற் போல....அருமை....பாக்கியமும் மத தேடிப் ப/பிடிப்போம்
Deleteஅதிகாலை வணக்கம் நண்பர்களே...
ReplyDeleteஊய்....ஊய்...ஊய்...
Deleteதல கலக்குறார் நண்பரே! செம!
நன்றி விஜி.
Delete5
ReplyDeleteதலையோட அட்டைப்பங்கள் அருமை... படிச்சுட்டு வாரேன் ...
ReplyDeleteநம்மாளை ஒரு மார்க்கத்தோடு தான் படைப்பாளிகள் முன்னெடுத்துச் செல்கிறார்கள் போலும் !! பாருங்களேன் : ////
ReplyDeleteஆகா அருமையான தகவல் சார்....
XIII spin-off - "சதியின் மதி" கதை எழுதி ரெடியாய்க் கிடக்குது ; காலையில் முதல் வேலையாய் அதை வரவழைக்கிறோம் ; ஒரே நாளில் டைப்செட்டிங் செய்து, ராவோடு ராவாய் எடிட் செய்து சனிக்கிழமைக்கு அச்சிடுகிறோம் !' என்று சொல்லிக்கொண்டேன்//
ReplyDeleteஅடடா ஜெஸ்ட் மிஸ்... இன்னொரு லட்டு சாப்டுருக்கலாம்... பரவாயில்லை சார்.. அடுத்தமாதமே வரட்டும். ....
தேறிட்டல....ஆசிரியர் வைத்த பரிட்சயில
Deleteஎன்ன மக்கா சொல்லுதே...!!
Deleteபதிமூன மீறி வந்த கிநா ஆசதா
Delete9th
ReplyDeleteகாலை வணக்கம் ஆசிரியரே
ReplyDeleteகாலை வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்!
ReplyDeleteஇது கள்ளாட்டம்.போங்கு
ReplyDelete....போங்கு...
XIII vs 007....
ReplyDeleteரகளையான போட்டியாக இருக்கும் போல....!!!
XIII---உயிர் நண்பன்!
007---பால்யத்தின் உயிர்!
எதை கையில் எடுக்க...????
அரைமணிநேரம் மட்டுமே வித்தியாசம் நண்பரே... விடுங்க போட்டுதாக்கியர்ல்லாம்....எனது சாய்ஸ்...ஹிஹி ஜேஸனே துணை...
Deleteமுருகன் வேறு ஜேசன் வேறு அல்லவே...அதனால் ஜேசனே துணை
Deleteநமக்கு எப்பவுமே ஜேஸன் தான் முதலில் மக்கா...
Deleteஇருந்துட்டு போவட்டுமே
Deleteஜேனட் Vs ஜேசன்....???
ReplyDeleteஅல்லது ஜேசன் Vs ஜேம்ஸா...???
ஙே...ஙே...ஙே...!!!!
எது எப்படியோ இந்தமாதம் ஜெஜெஜே னு போகப்போகுது... ட்ரிபிள் JJJ நல்லாருக்கே.....!!
ReplyDeleteஜேசன் நிஜப்பெயர் ஜேசன்தானா ???
Deleteஜேஸன் மக்லேன் தான் சார்....
Deleteநில் கவனி கொல்...! தலைப்பே இதழின் வெற்றியை சொல்லுதே...!!
ReplyDeleteநில் கவனி சுடு...!!
நில் கவனி வேட்டையாடு..!!
கிநா.. படங்கள் அருமை அதில் ஏதோ ஒரு விஷயம் உள்ளது இல்லையெனில் நம்ம ஆசிரியர் இவ்வளவு மெனக்கெடமாட்டார்...அதனாலே..எனது இரண்டாவது சாய்ஸ் கிநா...அடுத்து நம்ம பாண்ட்...!!
எல் அந்த சதில இருந்து மீள முடிதா...நெசமாத்தா சொல்றியா...அப்ப வெற்றிதான்... வெற்றி வேல் வீர வேல்
Deleteநெசமாவே வெற்றிவேல் வீரவேல் தாம்ல....
Deleteஞாபகம் வந்துடுச்சு...ஆசையில் ஓடி வந்தேன்...
ReplyDeleteகி.நா sneak peak. & 007 அட்டை படம் இரண்டிலூமே யாரோ கயிற்றில் தொடங்குகிறார்கள்...
ReplyDeleteஎன்னாது ...
ReplyDelete13...
அமெரிக்க அதிபரா...
முடியல....
ஏனுங்க ஆகக் கூடாது. ரியாலிட்டி டிவி ஷோ ஹோஸ்ட்டெல்லாம் ஆகும் போது எங்க 13 ஏன் ஆகக்கூடாது?
Deleteகதாசியர்கள் முடிவு பண்ணா ரின்டின் கூட அமெரிக்க அதிபர் ஆகலாம் தலைவரே....
Delete///கதாசியர்கள் முடிவு பண்ணா ரின்டின் கூட அமெரிக்க அதிபர் ஆகலாம் தலைவரே....///
Deleteஹாஹாஹா!
J ji@
DeleteXX ன் சதித்திட்டத்தின் பின்னணியில் பவுண்டேசன் இருப்பது "அம்பின் பாதையில்" சுற்றில் விவிரிக்கப்பட்டுள்ளது.
மே பிளவர்- முன்னோடிகளின் நோக்கம் தூய்மை! அரசிலும் தூயவம்சாவளியின் செல்வாக்கை நிலைநிறுத்தி தங்களது தூய்மையான கொள்கையை நாடுமுழுவதும் செயல்படுத்த முனைகிறார்கள்.
ஜேசனும் ஒரு கிளையின் வாரிசு என்பதால் அவரை பிரசிடெண்ட் ஆக்குவதன் மூலம் தங்களது காரியத்தை சாதிப்பது எளிதல்லவா???
ஜேசனை பற்றி தமக்கு தெரியும். பிரசிடெண்ட் பதிவிக்கு வந்தாத்தான், ஜேசனால் "பவுண்டேசன் "- தலைவி ஜேனட்& அவரது அசாத்திய பலத்தை எதிர்க்க முடியும்.
நாட்டில் ஸ்திரதன்மை& சமநிலையை உறுதி படுத்த ஜேசனுக்கு இதானே வாய்ப்பு!
அப்படி போடுல பழனி உங்காட்ல மழைதான்...அதனால் எங்காட்லயும்தா
DeleteJஎழுதித் தரவா நீங்க முதல்வர்ன்னு....நீங்க வாசிக்கத் தயாரா...நம்பிக்கைதான வாழ்க்கை...இங்ன இல்லியே வெறுங்கை
Deleteஅதென்னவே உங்காடு நம்மகாடுவே. பிரிச்சுபாக்காதலே மக்கா....!!
DeleteSTV செம ஜி...
Deleteஇன்றைய பதிவு blog இல்லை, இது ஒரு பெரிய Disclaimer. எங்களைவிட பல நூறு கதைகளை அதிகம் படித்த உங்களுக்கே இவ்வளவு தாக்கம் ஏற்படுத்தி இருப்பின் அது அந்த கி.நா.வின் வெற்றியே. இவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்திய கி.நா.க்களே நமது best என்றும் விவாதித்துள்ளோம்.
ReplyDeleteஆகையால் எனக்கு ரூ.80 வேண்டாம், அந்த புக்குதான் வேண்டும் 'dot'
அந்த புக்கே...கேக்கும் போது எனக்கும் கிக்கே
DeleteHi..
ReplyDeleteநானும் வந்துட்டேன். நீங்கள் கொடுத்த கி நா அறிமுகம் அருமை. இந்த கதை ஏற்கனவே 2 முறை தள்ளி போனது எனவே இந்த முறை இந்த புத்தகத்தை படித்தே தீருவேன். எனக்கு பாய்ண்ட் to பாய்ண்ட் பஸ் எல்லாம் வேண்டாம் சார்.
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteGoodmorning sir..
ReplyDeleteபெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும். அதாவதாகப்பட்டதாவதுநெப்போலியன் தான் வேணும். எந்தப்படைப்பையும் தவறவிட மனமில்லையாதலால். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteகாலங்கள் கடந்து பெட்ரோமாக்ஸ் ஒளியிழந்தாலுமே...ஒளி கொண்டு பா/பூக்கும் என் கண்களுமே
Deleteஐ 32
ReplyDeleteமாடஸ்டி வாழ்க!
ReplyDeleteமாடஸ்டி வாழ்க!
அனைத்து புதிய முயற்சிகளும் வாழ்க!
உள்ளேன் ஐயா..!!
ReplyDeleteஒவ்வொருவர் பார்வையிலும் கதை மாறுபட வாய்ப்புள்ளது சார்! அதனால் பனியில் ஒரு குருதிப்புனலை வெளியிடுங்கள்! முக்கியமாக இருவண்ணக் கலரை பார்க்க ஆவலாக உள்ளேன்!
ReplyDelete+உங்களோடொருவர்
Deleteஎடி சார், அது என்ன XLL சைஸ 🤣. கி. நா. பற்றி இவ்வளவு மண்டகப்படி தேவை இல்லை என்பதுதான் உண்மை. Coz it sounds great. வர வர உங்க பதிவு மார்வெல் காமிக்ஸ் படிக்கிற மாதிரி இருக்கு. டைம்லைன் எல்லாம் போட்டு கலக்குறீங்க. நேற்று இரவு alien covenant படத்தின் screenplay கி. நா. வரிசையாக வருவதை அறிந்து முதல் issue படித்தேன். டீப் ஸ்பேஸில் எல்லா சம்பவங்களும் டைம்லைன் போட்டு தான் ஆரம்பம். நம்ம சிவகாசியும் இப்போ ஸ்பேஸில் அடக்கம். And one more thing. எடிட்டர் சாரிடம் கூகிள் மீட் மூலம் பேசியதை நினைக்கும் ரொம்ப ஆனந்தமாக இருக்கிறது. எடிக்கும், இந்த சந்திப்பை சாத்தியமாக்கிய ஜி, மற்றும் அனைவருக்கும் என் நன்றிகள் பல.
ReplyDeleteவிஜயன் சார், இதுவரை நீங்கள் வெளியிட்டு வெற்றி பெற்றுள்ள இத்தாலியக் கி. நாவல்களான முடியா இரவு, என் சித்தம் சாத்தானுக்கு, கனவுகளின் கதை, முடிவிலா மூடுபனி, நி. ம. நியூயார்க், கதை சொல்லும் கானகம் என்ற வரிசையிற் "பனியிலொரு குருதிப்புனலும்" அடங்குமென்ற நம்பிக்கையுள்ளது. இதுபோன்ற படைப்புக்களைத் தவறாது வெளியிடுங்கள். தங்கள் மொழிபெயர்ப்பு ஒன்றே போதும் கி. நாவல்களை இரசிப்பதற்கு... ❤
ReplyDelete+1
Delete/// 'எனக்கு point to point பஸ் மட்டும் தான் புடிக்கும் ; இக்கட போயி, அக்கட போயி, மூக்கை தேடுற ஆட்டத்துக்கே ஞான் வரில்லா !!' என்பதே உங்களின் நிலைப்பாடாக இருப்பின் -///
ReplyDeleteஎன் வரையில் லயன் - முத்து லோகோவில் எந்த வெளியீடு வந்தாலும் நான் வாங்குவேன். பாரதியின் வரிகளில்..
"சாம்பல் நிறமொரு குட்டி.
கருஞ்சாந்து நிறமொரு குட்டி.
பாம்பின் நிறமொரு குட்டி.
வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி.
எந்த நிறமாயினும் அவை
யாவும் ஒரே தரமன்றோ."
இது இங்கு பொருந்தி வரும். கதையின் சுவாரஸ்யங்களில் மாறுபாடு வரலாம். இருப்பினும் வாங்குவதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.
இல்லத்தரசியின் சமையலில் சுவை ஒரு நாள் கூடும். ஒரு நாள் குறையும். அதற்காக சாப்பிடாமலா இருப்போம். (பூரிக்கட்டை தனி விஷயம்). அதுபோன்றதே நமது காமிக்ஸும். ஜானதன் கார்ட்லேண்ட் வந்தாலும் வாங்குவோம்.(அப்புறம் கழுவி ஊத்துவோம்) ஜேஸன் மக்லேன் வந்தாலும் வாங்குவோம். So, go ahead sir.
// கதையின் சுவாரஸ்யங்களில் மாறுபாடு வரலாம். இருப்பினும் வாங்குவதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. //
Deleteசரியான கருத்து...
பத்தானாலும் வரிகளில் சத்தானதே....
Deleteகார்ட்லேண்ட் பிடிக்கும் காலமும் வரும்...படிக்காம வாங்கி வைத்த கதைகள தேடிப் பிடிக்கும் ....பிடிக்கும் காலமும் வரும்...மாற்றமே மாறாததே...அதில் எம்மாற்றமுமின்றி ஏமாற்றமுமே...வாங்கி வைப்போம் வண்ணமிழக்கும் வசந்தம் தனக்கு வண்ணமீட்ட
பனியில் ஒரு குருதிப்புனல்
ReplyDelete...
பெயரே சும்மா தூக்கி போடுது...
//எனக்கு point to point பஸ் மட்டும் தான் புடிக்கும் ; இக்கட போயி, அக்கட போயி, மூக்கை தேடுற ஆட்டத்துக்கே ஞான் வரில்லா//
என்னை இந்த லிஸ்டில் சேர்கதிர்கள்...
இந்த மாதிரி கிடுக்கு பிடியான கதைளை படித்து மண்டையை சோறிந்து கொள்வதே ஒரு சுகம் தான்😋😁😌...
கி.ந வாழ்க
எடிட்டர் சார் வாழ்க
டையபாலிக் வாழ்க😂😁
42nd
ReplyDelete//XIII spin-off - "சதியின் மதி" கதை எழுதி ரெடியாய்க் கிடக்குது ; காலையில் முதல் வேலையாய் அதை வரவழைக்கிறோம் ; ஒரே நாளில் டைப்செட்டிங் செய்து, ராவோடு ராவாய் எடிட் செய்து சனிக்கிழமைக்கு அச்சிடுகிறோம் !' என்று சொல்லிக்கொண்டேன்//
ReplyDeleteஎடுத்த முடிவுவை செயல்படுத்தினால் விதிவசத்தால் பனி உருகி விட்டாலும் , (சதியின்) மதி கொண்டு சமாளித்து விடலாமே சார்!!
( எனக்கு கி.நா பிடிக்கும். எக்ஸ்ட்ரா புக் ஒன்னு கிடைக்க இந்த பிட்டை போட்டு வைப்போமே!! ஹிஹி!!)
ஆசை காட்டிய ஆசிரியப் பெருந்தகை மோசம் செய்திடாது கூடவே ஆலனின் கதையோ ஹாரிங்டனின் கதையோ...மூன்றுமோ தரனும்...பதிமூன்றில்
DeleteWaiting For 'Paniyeil oru Kuruthipunal'
ReplyDeleteWarm welcome.
Deleteஅன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். கி.நா க்கள் என்றாலே எனக்கும் அதுக்கும் பல ஒளி வருடங்கள் தூரம்.சிலவற்றை படிக்காமலே விட்டு விட்டேன். எடிட்டரின் டைம் லைனே படித்தே எனக்கு தலை சுற்றும் போது கி.நா பற்றி கேட்கவே வேண்டாம் .ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.படிக்காமல் விட இன்னொரு புத்தகம் அவ்வளவுதான். ஆனால் வாங்காமல் தவிர்க்கமாட்டேன். கி.நா புரிதலுக்கு ஏதேனும் ட்யூஷன் இருந்தால் சொல்லுங்கள், உடனே சேர்ந்து கொள்கிறேன்.தேங்காய், பழம், பூ ஒரு ரூபாய் காணிக்கை எல்லாம் ரெடி.என்னை மாணாக்கனாய் சேர்த்துக்கொள்ளும் ஒரு உபாத்தியாயருக்கு காத்திருக்கும் அன்பு மாணவன் சு.செந்தில்மாதேஷ்
ReplyDeleteஅதுக்கு ஒரு சுலபமான வழி இருக்கு ப்ரோ. நம்ம ஸ்டீல் சாரோட கவித ,கமெண்ட்டுகளை தேடிப் புடிச்சி ரெண்டு மூணு தடவை நிதானமா (ஹி) தெளிவா (ஹி ஹி) படிச்சிங்கன்னா(??!!?) அப்புறம் எப்பேர்ப்பட்ட கிராபிக் நாவலாயிருந்தாலும் ஈஸியா புரிஞ்சுடும்.
Deleteஅப்புறம் , உங்களோட காணிக்கைகளை மறக்காம அவருக்கு சேர்த்திருங்க. குருதட்சணை முக்கியம்.
Deleteஎதுவுமே தவறு இல்லை படைப்பினிலே...நிச்சயம் புரியும் அதற்க்கான...அந்த கால கட்டத்தில் படிக்கயிலே...வாங்கி வைத்து காத்திருங்க வீண் போகாது....இதற்க்கு தன் துணை ஆசிரியரின் வரிகளே...பதில் நல்லா மீண்டும் படிங்க ...மீண்டு வாங்க...மகிழ்வாய் வாங்குவீங்க...சந்தோசம் ஓங்க
Deleteபத்து நண்பரே...எங்க உங்க குருதட்சணை....பத்து வெறும் பத்தல்ல...லட்சங்களில்...நம் லட்சியங்களில்
Deleteஸ்டீல் கவிதைகளை புரிந்து கொள்வது ஆவுற காரியமா?.ஸ்டீலின் உரை நடையே புரியாத போது.நானெல்லாம் அதுக்கு சரிபட மாட்டேன் ( சாரி ஸ்டீல்).வேணும்னா கோவை வந்த பிறகு சொல்லுங்கள் ட்யூசன் வந்துடறேன்
Delete//படிக்காமல் விட இன்னொரு புத்தகம் அவ்வளவுதான். //
Deleteஅப்டிலாம் அல்வா தர இந்த இதழ் அனுமதிக்காது சார் ; பாருங்களேன் நீங்களே இதனுள் லயிக்கிறீர்களா - இல்லையா என்று !
ததாஸ்து ...எடிட்டர் சார்
Deleteஅப்ப தெறிக்கும் போல...நண்பரே புரிவது புரியாம போவாது....தெரியாதது தெரிந்து போவாது
Delete// இவற்றின் அச்சுப் பணிகள் திங்களன்றே நிறைவுறும் ! //
ReplyDeleteஎனில் செவ்வாய்க்கிழமைதான் இதழ்கள் புறப்படும் போல...
வாய்க்கு சர்க்கரை...வாய்க்குது
Deleteசெவ்வாய் இலட்சியம் ; புதன் நிச்சயம் !
Deleteஆகா...புதனே வாராயோ பதமாய்த் தாராயோ
Delete// And சந்தாவினில் நீங்கள் இருந்தாலுமே, இந்த இதழை skip செய்திட நினைக்கும் பட்சத்தினில் ஒரேயொரு மின்னஞ்சல் அல்லது போன் அடித்துச் சொன்னால் போதும் //
ReplyDeleteகம்பி மேல் நடக்கும் வித்தைதான் போல,நான் இதழை வாசிக்க ஆவலாக உள்ளேன் சார்,அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாததே வாழ்வின் சுவராஸ்யம்,அது போல எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இதழை வாசிக்க ஆவலாக உள்ளேன்...
ஒருவேளை நல்லதொரு வாசிப்பனுபவம் கிட்டினால் மகிழ்ச்சியே...
+1
Deleteவழிமொழிகிறேன்..:-)
Deleteசார் கூடவே நானும் பேனா பிடிப்பதப் போல உணர்வு....அட்டகாசப் பதிவு....அந்தப் பதிமூன போடலாமா என்று தாங்கள் யோசிக்கும் போது மனதுக்குள் சந்தோசம் சுழன்றாலுமே ...அதுவும் வேணும் இதுவும் வேணும் என ஓலமிட்டு....ஒன்றுதானே வரும் நெப்போலியனே வரட்டும் என ஏகமனதாய் தீர்மானமாக...என் முன்னே விரிந்த அட்டைப்படம் வழக்கம் போல இது வர வந்ததுல நிச்சயமா நான்தான டாப்பு...இது வர வந்ததெல்லாம் சாமி சத்தியமா டூப்பு என கண்ணடித்து ...டாலடித்து அதன் குரல என் கை வழியே டைப்படிக்க...அந்த ஒரு பக்கம் இருளின் பீதியை பாதிரி கொலையும் தோள் மீது கை போட்ட படியே துணையாய் கூட வந்து காட்ட நடுங்கிய படி ....படியேறும் போதும்....எங்க அவ்விருவண்ணம் எனும் கேள்வி சத்தமிலாது அமிழுது...நேர்ல பார் என தாங்கள் சொல்லாமல் சொல்லி எழுதாமல் எழுதிய வரிகளத் தட்டுத் தடுமாறி வாசித்த படி படியில் நகர...பாண்ட் அட்டைப்படமும் வித்தியாசமா ஜொலிக்க...மனசு மாறிடாத என மேல பாக்கயில வசீகரித்து எச்சரித்த நெப்போலியன் படைகள் குளிரின் நடுக்கத்த மீறி கூப்பாடு வைத்து வசீகரித்து எச்சரிக்க....அது எப்படி முடியுமென சத்தியமா குளிரின் நடுக்கத்தால் மட்டுமே ஓர் பயப்பார்வையோடு ...பயணப் பார்வையும் பார்க்கிறேன் கடந்து வர உள்ள பயண நாட்கள் தாண்டி வரும் நாட்களில் தவழ உள்ள இப்புத்தகத்திற்க்காக...பதிமூன்று பதிமூனுமட்டும்தானல்லவே...இன்னும் நூறு கதைகள் வரட்டும் வான்ஹாம்மேக்கு நிகரான இப்புதிய ஆசிரியரின் உதவியோடு சிறப்பாய்....நான் சாகும் வரை இக்கதை வரணும் என்று வேண்ட கந்தன் சிரிக்கிறான் உனக்கு சாவே கிடையாதுடா மடப்பயலே என்று சாகாவரம் பெற்ற பதிமூனின் கதைகள கைக்கொண்டு
ReplyDeleteசெந்தில் மாதேஷ்.. உங்களுக்காகவே ஸ்டீல் உடனே கமெண்ட் போட்டுட்டார். கி.நா. புரிதலுக்கு உடனே படிக்கவும்.
ReplyDeleteஉங்களுக்கு
Delete@பத்மனாபன் ,ஆறு நூறானாலும் சரி அய்யர் வீடு பாலா(ழா)னாலும் சரி இன்னிக்கு இந்த கம்ப சூத்திரத்தை புரிஞ்சுக்காம விடரதில்லை.
Delete@ஸ்டீல் உபாத்தியாயரே i am waiting
அருமை
Deleteகி.நா எதிர்பார்பபை எகிற வைக்கிறது.We will wait and see!
ReplyDeleteவருங்கால ஜனாதிபதி XIII வாழ்க!
ReplyDeleteஆஹா செம நண்பரே.....!!!
Deleteவருங்கால "அமெரிக்க" ஜனாதிபதி... இப்பிடி குலோத்துங்குவை விட்டுவிட்டீரே...
Deleteஆக்கியே தீருவோம் கதாசிரியர் துணை கொண்டு
Deleteராஜ கம்பீர ; ராஜாதி ராஜ - கூட குறையுறே மாதிரித் தெரியுதே !
Deleteநீங்க புத்தகத்தை வெளியிடுங்க.. வாங்க வேண்டான்னு நீங்க எப்பிடி சொல்லலாம்?? நாங்க அப்பிடி தான் வாங்குவோம்.. படிப்போம்.. சட்டிய அடுப்பிலே ஏத்துறதா இறக்குறதான்னு அப்பத் தானே முடிவு பண்ண முடியும்.... ஆகாத காயத்துக்கு கட்டு போடச் சொல்றீங்களே...
ReplyDeleteசெம ரம்மி.
Deleteகரீட்டா சொன்னீங்க..
Deleteரம்மி@ வெல்செட்!
Deleteஎழுத்துக்கு எழுத்து வழிமொழிகிறேன்!
வவுச்சர் ஐடியாவுக்கு சன்னமான மறுப்பை பதிவு செய்கிறேன் சார்.
ஒவ்வொரு கதை பிடிக்காதவுங்களுக்கும் வவுச்சர் போட்டா கடைசில வெள்ளை பேப்பர் தான் பைண்டிங் கிற்கு தேறும்!
சகலத்துக்கும் வவுச்சர் தர முனைந்தால் கதை மட்டுமல்ல பிழைப்பும் கந்தலாகிப் போகுமென்பதில் ஏது ரகசியம் ? புக் வரும் போது எனது முன்மொழிவின் காரணம் புரிந்திடும் நண்பர்களே !
Delete//திருமணமாகி பணியிலிருந்து விடைபெற்றிருந்த கோகிலா ஆடிக்கு ஊர் திரும்பியிருக்க,//
ReplyDeleteசார், ஒரு flow-ல படிச்சிட்டு இருக்கும் போது ஏதோ உவமையைத்தான் சொல்லுறீங்கன்னு நினைத்தேன். கடைசிலே, அது Staff-ஆ. ஹா....ஹா...!!
M H MOHIDEEN
ப. ஒ. கு. அட்டைப்படம் & சித்திங்கள் சூப்பர். வரலாறுக் கதை எனும் பேnது எதிர்ப் பார்ப்புக்கள், ஆவல்கள் இன்னும் அதிகமாக்குகின்றன! சட்டையை கிழிக்கவும் தெரியும், கேசத்தை பிச்சிக்கவும் தெரியும். எல்லாத்துக்கும் தயாராவேயிருக்கிறேன்.
ReplyDelete007 பாண்ட் அட்டைப்படம் கலக்கல்.
வரலாற்றுக் களமே சார் ; ஆனால் வரலாறெல்லாம் நஹி ! யூகிக்கவே இயலா கதையோட்டம் இது !
Deleteஇரு வண்ணத்தில் வழியும் ரத்தமும் ஒரு வண்ணமோ
ReplyDeleteபனியில் ஒரு குருதிப்புனல் - சார் சமீபத்தில் படித்த உங்களின் பதிவில் மிகச்சிறந்தது இதுவே. இந்த கி.நா மொழிபெயர்ப்பு மற்றும் அதனை போடுவோமா வேண்டாமா என லெஃப்ட் ரைட் என இன்டிக்கேட்டர் போட்டு நீங்கள் எழுதிய விதம் செம... ஒரு கட்டத்தில் பதிவின் இறுதிக்குள் சென்று முடிவு என்ன என்று தெரிந்து கொள்ளலாமா என மண்டைக்குள் சொய்ங் என சத்தம் கேட்டதை மண்டைக்குள் மீண்டும் தினித்து விட்டு ஒரே மூச்சில் படித்து முடித்தேன். ஒரு பர பர வென்று ஒடும் கதையை படித்த உணர்வைத் தந்தது உங்கள் எழுத்துக்கள். நன்றி.
ReplyDeleteஈரைப் பேனாக்கி ; பேனைப் பெருமாள் ஆக்குவதெல்லாம் நமக்கு கைவந்த கலை எனும் போது , இத்தகைய வாய்ப்பு கிட்டும் சமயம் சும்மா இருப்போமா சார் ?
Deleteபனியில் ஒரு குருதிப்புனல் - அட்டைப்படம் அருமை. அதனை விட நான் மிகவும் ரசித்தது உட்பக்க சித்திரங்கள், பென்சில் shadingல் வரைந்தது போல் அட்டகாசம்.
ReplyDeleteநீங்கள் கொடுத்த LIC பில்டப் இந்த கதையை படிக்கும் எனது ஆர்வத்தை பண்ம மடங்காக்கி விட்டது.
This comment has been removed by the author.
Deleteகாலை வணக்கம் சார்🙏🏼🙏🏼🙏🏼
ReplyDeleteமற்றும் நண்பர்களே 🙏🏼🙏🏼🙏🏼
கண்டிப்பாக எனக்கு வேண்டும் 🙋🏻♂️
.
ரவுண்ட் பன்னா சார்...:-)
DeleteCloudy good morning friends
ReplyDeleteஜேம்ஸ் பாண்ட் 2.0: இதுவரை வந்த அனைத்து கதைகளும் டாப், குறைந்த வசனங்கள் பர பர வென்ற ஆக்சன் அட்டகாசமான சித்திரங்கள் மற்றும் கதைக்களம். ஷெல்டன் மற்றும் லார்கோவை விட எனக்கு இந்த ஜேம்ஸ் பாண்ட் 2.0 மிகவும் பிடித்துள்ளது.
ReplyDelete12:30 kku லேட்டா வருங்குற செய்தியை பார்த்துட்டு போனா 12.40க்கு வந்துருக்கா...
ReplyDelete:-)
Deleteதெய்வமே.. அது 2-40 !!
Delete///தெய்வமே.. அது 2-40 !!///
Deleteஹா ஹா!:))))))))
texkitக்கும் நம்பர்களுக்கும் ஏதோ பூர்வஜென்ம தொடர்பிருக்கு போல! :)))
எடிட்டர் சார்..
ReplyDelete'பனியில் ஒரு கு.பு' பற்றிய உங்களது இந்தப் பதிவைப் படிக்கும்போது இது நிச்சயம் எங்களது கி.நா பசிக்கு ஒரு பெருந்தீனியாக அமையப்போவதாக உள்ளுணர்வு சொல்லுகிறது! ஒரு கதை உங்களை இந்த அளவுக்கு எழுதத் தூண்டியிருக்கிறதென்றால் நிச்சயம் அதில் நிறைய சமாச்சாரங்கள் இல்லாது போகாது! கதையைப் படிக்க ஆவலோ ஆவலுடன் வெயிட்டிங்!! போதாக்குறைக்கு அந்த அட்டைப்படமும், உள்பக்க டீசரும் ஆவலை இன்னும் எகிறச் செய்கின்றன!
இந்த கி.நா வேண்டாம் என்பவர்கள் வவுச்சர் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு நல்ல யுக்தி! ஆனால் நீங்கள் வேண்டுமானால் பாருங்களேன்.. வவுச்சரைப் பெற்றுக்கொள்ளப்போவோரின் எண்ணிக்கை மிகக்குறைச்சலாகவே இருக்கப்போகிறது! காரணம், 'நேர்கோட்டுக் கதைகளை மட்டுமே படிப்பேனாக்கும்' என்று கங்கனம் கட்டிக்கொண்டிருந்த நண்பர்கள் பலரும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கி.நா'களை ரசிக்க ஆரம்பித்திருப்பதாகவே தோன்றுகிறது! மற்றொரு காரணம் - 80 ரூபாய் என்ற குறைச்சலான விலை! ஒருவேளை பிடிக்காமல்போனாலுமே பெரியதொரு நஷ்டமாகிவிடாதில்லையா!!
நிஜம் தான் சார் ; ஆனாலும் 'உன் மப்புக்கு எங்க காசிலே ஊறுகாயா ? என்று அன்பொழுகக் குரலெழுப்ப சின்னதொரு அணி ஆர்வமாய்க் காத்திருக்குமல்லவா ? அவர்களின் வசதிக்கு இந்த வவுச்சர் உதவிடின் ஓ.கே தானே !
Deleteஎப்பொழுதும் முன்னோட்டம் எகிற வைக்கும்...இந்த முறை அடக்கமாக இருக்க வைக்கிறது..
ReplyDeleteஎதுவேண்டுமானாலும் என் அளவில் படித்து விட்டே கருத்துகளை கூற முடியும் என்பதால் இதழை தவிர்க்க போவதில்லை...
படித்து விட்டு உண்மையை மறைக்க போவதுதும் இல்லை ..
வெயிட்டிங் சார்..:-)
ஆனாலும் உங்க நேர்மை ரொம்பப் புடிச்சிருக்கு தலீவரே !
Deleteநானுமே
Deleteஇரு இதழ்களின் அட்டைப்படமும் கலக்கலாக அமைந்துள்ளது சார்..கிராபிக் நாவலின் உட்பக்க சித்திரங்களும் செம கலக்கலாக அமைந்துள்ளது..
ReplyDeleteவெயிட்டிங் சார்..
புத்தகம் எப்பொழுது கிளம்பும் என்ற தகவலையும் இணைத்து இருந்தால் "வெயிட்டிங்" இன்னும் ஆவலாக இருக்கக்கூடும் சார்..:-)
ReplyDeleteநான் விட்டிருக்கும் பில்டப்புக்கு இந்த ஆல்பம் ஒரு spectacular ஹிட்டாகிடவும் சாத்தியமே ; ஒரு இமாலய சொதப்பலாகிடவும் சாத்தியமே என்பது புரிகிறது ! ரிசல்ட் எதுவாயினும் அதனை இயல்பாய் எடுத்துக் கொள்வோமென்ற நம்பிக்கை எனக்குள்ளது !
ReplyDelete######
வெற்றி தோல்வி வீரனுக்கு ஜகஜம் சார்...:-)
பற்றாக்குறைக்கு இந்த இதழின் குறிப்பிட்ட சில பக்கங்கள் மட்டும் 2 வண்ணத்தில் என்றிருக்க
ReplyDelete######
ஐ..)
வவுச்சர்ல்லாம் வேணாம் சார்.. அதுக்குபதிலா இரத்தப்படல மறுமறுபதிப்புக்கு அட்டகாசமான வண்ண விளம்பரத்த இணைச்சுடுங்க போதும்...
ReplyDeleteநொண்டியடிக்குது மாதம் # 2 ல் ! முதல் முப்பது நாட்களில் தொண்ணூறைத் தொட்ட முன்பதிவானது அடுத்த முப்பதில் இன்னமும் நூறைத் தொட்ட பாடில்லை சாமீ !
Deleteஆண்டவனே அறிவார் - இது தேறுமா என்பதை !
This comment has been removed by the author.
Delete300 சார்....
Deleteபுத்தகம் எந்த அமைப்பில் வருகிறது என எதிர்பார்ப்பில் உள்ளோம் சார்... ஒரே புத்தகமாகவா அல்லது இரண்டாகவா எப்படி சாத்தியம் என உங்களின் பதிலுக்காக waiting sir...நிச்சயமாக 300 எட்டுவோம் சார்.. இன்னும் நிறைய நண்பர்கள் தங்களது பதிலுக்காக காத்திருக்கலாம் என்பது எனது எண்ணம் சார்....
Deleteஎத்தனையாய் வந்தாலும் சட்டியில் இருக்கப் போவது ஒரே பொங்கல் தானே ? அது ஒரு போதும் மாறப் போவதில்லை எனும் போது - சுணக்கங்களுக்கு அந்தத் திக்கில் விரல் நீட்டுவது விடையாகாது !
Delete300 பேர் உள்ளனரா இதைத் தேடிக்கொண்டு - என்பதே கேள்வி !
போன மாதமே இணைச்சாச்சே பரணி....இம்மாதம் ஸ்பைடர் விளம்பரம்லா
DeleteDear Sir,
Deleteஎன்னைப் பொறுத்தவரை சுணக்கங்களுக்கு அந்தத் திக்கும் ஒரு விடையே சார். ஒரே குண்டு புத்தகம் என்றால் இன்றே 3 புத்தகம் முன்பதிவு செய்ய நான் தயார். ஏற்கனவே B&W 4 புத்தகம் மற்றும் கலர் 3 புத்தகம் கையில் இருப்பதாலே இந்த தயக்கம்.
பழைய பானையில் "அதே பழைய கள்ளோ",
Deleteஇல்லை புது பானையில் "அதே பழைய கள்ளோ"................
பானை சைஸ் தெரிந்தால் நான்றாக இருக்கும்!
பொங்கல் அதே தான்..ஆனால் அதை செய்வது தாயா,மனைவியா என்பது தானே.செய்தி....
Deleteசொல்ல வருவது ஒரே குண்டா இல்லாயா என்பது தானே கேள்வி இங்கே...
அச்சச்சோ இவர் வேற ஆர்வத்த கெளப்பி விட்டுட்டாரே, புத்தகம் கைக்கு வந்த உடனே கி நா படிச்சி ஆராய்ந்து விடனும்.
ReplyDeleteஐயாம் வெயிட்டிங் !!!
Deleteஎதிரிகள் ஓராயிரம் :
ReplyDeleteஇந்த கதையில் டெக்ஸ் வில்லர் அறிமுகம் ஆவது 19வது பக்கத்தில். அதுவரையிலும் மனுசனை பொறி வைத்து பிடிக்க நினைக்கும் ஷெரீப்பும் அவரது கும்பலுமே வார்த்தையால் சொல்கிறார்கள். டெக்ஸ் அறிமுகமாகும் ப்ரேமில் வரும் வசனம் - தமிழ் சினிமாவின் பஞ்ச் டயலாக்குகளுக்கு சரியான போட்டி...
குதிரைத் திருடனின் உயிரை காப்பாற்றுதல், கோசைஸினால் காப்பாற்றப்படுதல், மீண்டும் ஆற்றுக்குள் விழுந்து உயிர்தெழுதல், தங்க வேட்டையரை காப்பாற்றுதல் என மாறுபட்ட பரிமாணங்களை வெளிப்படுத்துகிறார் டெக்ஸ். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் புதையல் வேட்டையும், பொறியிலிருந்து விடுபட்டு சகோதரி தேஷாவுடன் சேர்ந்து பழிவாங்குவதும்.
டெக்ஸ் என்ற மாமனிதரின் நியாயத்தை நிலைநாட்டும் குணத்தையும், அனுபவமில்லாமல் மாட்டிக் கொண்டாலும் தப்பி விட செய்யும் விடா முயற்சியையும், எல்லாவற்றுக்கும் மேலாக தேஷாவையும், தங்க வேட்டையரின் மகளையும் சகோதரிகளாக பாவிக்கும் கண்ணியத்தையும் ஒருங்கே காட்டியுள்ளது இந்த கதை.
என்னுடைய மார்க் 10/10
நடப்பாண்டின் நிறைவான இதழ்களில் இளம் டெக்ஸுக்கு நிச்சயம் ஒரு உசத்தியான இடம் உண்டென்பது புரிகிறது சார் !
Deleteபனியில் ஒரு குருதிப் புனல் கிராபிக் நாவலுக்கு ஆசான் தரும் பில்டப்பைப் பார்த்தால் பட்டையக் கிளப்பும் போல் உள்ளதே?
ReplyDeleteஅட்டைப்படம் செம மாஸ்.இருவண்ணம் என்று சொன்னீர்கள்.கருப்பு வெள்ளைப் பக்கங்களை மட்டும் சாம்பிள் தந்தீர்களோ?
எதிர்ப்பார்ப்பைத் தூண்டும் இதழ் இது.
ஓவியரின் கலரிங் யுக்தி கதையோடு இழையோடும் ரகம் நண்பரே ; புக்கில் பார்க்கும் போது தான் புரிந்திடும் !
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete// கதாசியர்கள் முடிவு பண்ணா ரின்டின் கூட அமெரிக்க அதிபர் ஆகலாம் தலைவரே....//
ReplyDeleteஆனால் நாமளும் ரின் டின் கேனை வரவிட்டால் தானே அமெரிக்க அதிபராக அவர் எப்படி செயல் படுகிறார் என தெரியும். எங்கள் குடும்பம் விரும்பும் இந்த ரின் டின் என்ற நாலுகால் ஞான சூன்யத்திற்கு நண்பர்கள் ஆதரவு கொடுத்தால் மகிழ்வோம்.
ஹாஹாஹா இப்படி சிரிப்போம்.
எடிட்டரின் இப்பதிவு ஒரு விறுவிறுப்பான குறுநாவலை படித்ததை போன்ற உணர்வை தோற்றுவித்தது..
ReplyDeleteப.ஒ.கு.பு - பற்றி வாசகர்கள் மத்தியில் எழப்போகும் எண்ணங்கள் பற்றிய எடிட்டரின் ஹேஷ்யங்கள் ஆவலை கிளர்ந்தெழச் செய்கின்றன...
கி.நா தடத்தை காகங்களின் கூடு என கருதி வருவோரும் கூட அதனின்று குயில் குஞ்சுகள் சில சமயம் வெளிப்படுவது கண்டு ஆச்சர்யமுற்று இருக்கின்றனர்..
ப.ஒ.கு.பு கி.நா - வின் விழுமியம் சார்ந்து வெளிவரினும் பெருவாரியான மனங்களை வெல்ல வாய்ப்புண்டு என எடிட்டரின் வரிகளை பார்த்தவுடன் தோன்றுகிறது...
வரட்டும்!!! வெல்லட்டும்.!!!
// வரட்டும்!!! வெல்லட்டும்.!!! //
Deleteஅதே அதே சபாதே.
Just a word of caution : 'எனக்கு point to point பஸ் மட்டும் தான் புடிக்கும் ; இக்கட போயி, அக்கட போயி, மூக்கை தேடுற ஆட்டத்துக்கே ஞான் வரில்லா !!' என்பதே உங்களின் நிலைப்பாடாக இருப்பின் - இந்த ஆல்பம் உங்களுக்கு சுகப்படாது ! And சந்தாவினில் நீங்கள் இருந்தாலுமே, இந்த இதழை skip செய்திட நினைக்கும் பட்சத்தினில் ஒரேயொரு மின்னஞ்சல் அல்லது போன் அடித்துச் சொன்னால் போதும் - உங்களின் கூரியர் டப்பியில் இது இடம்பிடித்திடாது ! And உங்களின் பணம் ரூ.80 -க்கு ஈடாய் ஒரு voucher உங்களுக்கு வழங்கப்படும் ; அடுத்தாண்டின் சந்தாவிலோ - வேறு ஏதேனும் புக்குகளின் கொள்முதல்களிலோ கழித்துக் கொள்ள ஏதுவாய் ! So என் தலைக்குள் தோன்றிய குறுகுறுப்பு உங்கள் பணத்துக்கு வேட்டு வைத்திடாது !
ReplyDeleteநீங்க இப்படி சொன்னதுனாலயே வாங்கனும்னு தோணுது Sir,
( மெல்லத் திறந்தது கதவு விமர்சனத்திற்குப் பிறகே நிறைய பேர் தேடினார்கள் )
பி.கு : நம்மாளை ஒரு மார்க்கத்தோடு தான் படைப்பாளிகள் முன்னெடுத்துச் செல்கிறார்கள் போலும் !! பாருங்களேன் : நாக்கில் ஜல மழையையே வரவைத்தன படங்கள்.எங்கள் மறதிக்கார நண்பர் மீண்டும் எங்களை அசத்த அதிரடியாய் வருகின்றார் போலிருக்கிறது.
ReplyDeleteவரட்டும் :வெல்லட்டும் காமிக்ஸ் உள்ளங்களை.
அருமை நண்பர் மேச்சேரி இரவிக்கண்ணரின் தந்தையார் இன்று மறைந்தார்.
ReplyDeleteஅவர் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம் நண்பர்களே...
ஆழ்ந்த இரங்கல்.
Deleteஅன்னாரின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்.
ஆழ்ந்த இரங்கல்கள் சார் !
Deleteஆழ்ந்த இரங்கல் மற்றும் பிரார்த்தனைகள்.
Deleteஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் பிரார்த்தனைகள் நண்பரின் குடும்பத்திற்கு.
Deleteஆழ்ந்த இரங்கல் மற்றும் பிரார்த்தனைகள்.
Deleteஆழ்ந்த இரங்கல்கள் நண்பரே!
Deleteஆழ்ந்த இரங்கல்கள் !
Deleteகார்ட்டூன் காதலர் விரைவில் இறைவனின் துணையோடு மீண்டெழுந்து வாழ்வில் கலந்துய்ய வேண்டுதல்கள் !
அன்பு நண்பரின் தந்தையார் மறைவு செய்தி அறிந்து உள்ளம் வருந்துகிறது..
Deleteநண்பருக்கு எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்...
தந்தையின் ஆன்மா இறையடியில் இளைப்பாற வேண்டுகிறேன்..
ஆழ்ந்த இரங்கல்கள்
Deleteஆழ்ந்த இரங்கல்கள் நண்பரே
Deleteஆழ்ந்த இரங்கல்கள் நண்பரே.
Deleteஆழ்ந்த இரங்கல்கள் கண்ணன்
Deleteஅன்னாரின் பிரிவினால் துயருறும் நண்பருக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
ReplyDeleteகிரீன் பேனர் போயிட்டிருக்கு!
ReplyDeleteசாரி! கிரீன் மேனர்!!
Deleteநண்பருக்கும், குடும்பத்தினருக்கும், ஆழ்ந்த இரங்கல்
ReplyDeleteஆழ்ந்த இரங்கல் மற்றும் பிரார்த்தனைகள்.
ReplyDeleteஆழ்ந்த அனுதாபங்கள் மாமா...
ReplyDeleteXIii முன்பதிவு செய்ய காத்திருக்கும் ஒரு வாசகனாக எழுதுகிறேன்
ReplyDeleteஇரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் என்றால் படிப்பது எளிதாக இருக்கும் ( நான் இதுவரை படிக்கவில்லை)
ஒரே புத்தகமாக வந்தால் எந்த அளவிற்கு படிக்க எளிதாக இருக்கும் என தெரியவில்லை
முன்பதிவுகள் தேறுகின்றனவா என்பதை முதலில் பார்த்து விடுவோம் சார் ! And ஒரே புக்காய் வெளிவரும் சாத்தியம் ரொம்ப ரொம்பக் குறைச்சலே !
Deleteஅப்போ ஒரே புக்கா வாய்ப்பு கம்மி...மூனுபுக்கா வராது...நாலுபுக்கா சரிப்படாது.... என்ன நண்பர்களே விடைகிடைத்துவிட்டதே..இன்னும் ஏன் பொறுமை. பொறுத்தது போதும்...இன்றே முந்துங்கள் உங்கள் முன்பதிவிற்க்கு...!
Deleteஒரே புக்கா வந்தா உடனடியாக கூடலாம்
Deleteவிடுங்க சார் இதையும் படிச்சு பாப்போம். அனுப்பிவிடுங்க 😀
ReplyDeleteகிளாடியோ நிஸ்ஸி எழுதிய டெக்ஸ் வில்லர் கதைகளை வெளியிடலாமே ஆசானே?
ReplyDeleteஅவர் எழுதிய ""நில் கவனி சுடு""மற்றும் ""இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல் "" போன்ற பல கதைகள் சிவகாசிப் பட்டாசாய்ப் பொறி பறக்குமே!!!.
நில்.. கவனி.. சுடு..
Deleteமௌரொ போசெல்லியின் படைப்பு சின்னமணூர்காரரே.!
அப்படியா சார்.திருத்திக் கொள்கின்றேன் சார்.சிகப்பாய் ஒரு சொப்பனம் தான் நான் எழுத வந்தது.மன்னிக்கவும் ஜி.
Deleteசார் லட்சியம் வெல்லுமா.... நிச்சயம் வெல்லுமா
ReplyDeleteசார்...இப்போது வரை முன்பதிவு செய்தவர்கள் எப்படிவந்தாலும் வாங்கக்கூடியவர்கள்... இன்னும் காத்திருக்கும் நண்பர்கள் எப்படிவருகிறது என அறிந்து அதற்கேற்றதுபோல் பதிவு செய்யகாத்திருப்பவர்கள்...அடுத்து கடைசிவரை என்னதான் நடக்குது என பார்த்துவிட்டு இறுதியில் பதிவுசெய்பவர்கள்...எனவே இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி...புத்தக அமைப்பு எப்படி என ஆசிரியரின் முடிவை எதிர்நோக்கியே முன்பதிவு அடுத்தகட்டத்தை நோக்கிசெல்லும்...நம்ம செந்தில் சார் சொன்னதுபோல ஒரே குண்டு என்றால் 3 இல்லையென்றால் 1 நிச்சயம்... அதே போல்தான் பல நண்பர்கள் புத்தக அமைப்பை...? அது புதிய எண்ணில் வருகிறதா...? என எதிர்நோக்கிகாத்திருப்பதே இந்த சுனக்கம்... அதனால் உடனடி தேவை புத்தக அமைப்பு.. காலக்கெடு உறுதி செய்யவேண்டும்..செப்டம்பர் அல்லது தேவைப்பட்டால் நீட்டிக்கலாம் என்பதுவும் சுனக்கத்திற்க்கு ஒரு காரணமே...சார்...
ReplyDeleteஏம்பா கூர்க்கா பழனி நீ... இப்படி சொன்னவுடனே நான் அறிவிச்சா உடனே 300 முன்பதிவு முடிஞ்சுடுமா என நீங்க கேட்டால் எனக்கு என்ன பதில் சொலறதுனு உண்மையா தெரியல சார்... இவ்வளவு நாள் உங்க முன்பதிவு அறிவிப்புக்கு காத்திருந்தோம்... இப்போ புத்தக அமைப்புக்கு குறித்த அறிவிப்புக்கு காத்திருப்பேன்....காத்திருப்போம் சார்..உங்களுடைய நல்ல முடிவுக்காக...!!😊😊
ReplyDeleteகண்டிப்பாக என் சார்பில் 3 முன்பதிவு உடனே செய்யப்படும்!
Deleteஎன் சார்பில் மூன்றல்லவே ஆனா ஒன்றே லட்சியம் ....ஒன்றே நிச்சயம்....இதன் மூலமா உண்மையா தேடுறவிய நூறு பேருக்கு கிடைக்க வாய்ப்பு....மேலும் வாங்கிய நண்பர்களும் கைகோர்க்க சிறிய வாய்ப்பு....பக்கத்து இலைக்கும் பாயாசமே
Deleteஇதன் மூலம் பல்லாயிரங்களுக்குதான் கிடைக்குமென ஏங்குவோர் எண்ணத்தை தொடைக்க வாய்ப்பு
Deleteபணியோடு மல்லுகட்டும் படலங்கள் பாவபுண்ணியம் பார்க்காமல் புரட்டியெடுக்கிறது. சொந்தப் பிரச்சனையொன்று நடுவீட்டில் கால் நீட்டி படுத்திருக்கிறது.இரண்டுக்குமிடையில் எப்போதாவது தளத்தை எட்டிப் பார்ப்பதோடு சரி.!போன மாத புக்கை இன்னும் பார்க்கக்கூட இல்லை.அதற்குள்..இதோ இந்த மாசம் புக்கே வந்துவிடும் போலுள்ளது.
ReplyDeleteம்...பார்க்கலாம்..நம்பிக்கையோடு பொழுதுகள் நகர்கின்றன.!
கி.நாவின் Behind the scenes சம்திங் ஸ்பெஷல் என்றே பறைசாற்றுகிறது.அட்டைப்படமும் ஒருவாறாக மனதை கொள்ளை கொள்கிறது.
ReplyDeleteகி.நா அட்டைப்படங்களெல்லாம் ஒருவித க்ரே ஷேடில் தெரிவது தற்செயலா சார்.
முடியா இரவு..,
என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்..!
நித்திரை மறந்த ந்யூயார்க்..!
இதெல்லாம் ஏறக்குறைய இதே பாணியில் தென்பட்டதால் உண்டான டவுட் சார்.
ஜேம்ஸ் பாண்ட் எப்போதும் போல பரபரக்க வைக்கிறார்.முன்னட்டையை விட பின்னட்டை பர்பெக்ட்.
ReplyDeleteஇரத்தபடல மந்திர எண். 300 ஐ கடந்திடும் இறுதி ஓவரில். கொரோனாவின் தாக்குததலால் பணசுழற்சி வெகுவாக குறைந்து விட்டது வியாபாரங்களும் படுத்து விட்டது. மறுபதிப்பு கதையை வாங்க வேண்டுமா ??? என்ற யோசனையும், கொரோனா கஷ்டகாலத்தில் கிட்டதட்ட ₹3000 கொடுத்து புத்தகம் கண்டிப்பாக வாங்க வேண்டுமா?? என்ற முன்னெச்சரிக்கையும் அட்வான்ஸ் புக்கிங்கை அதிகரிக்காமல் தடுத்து விட்டது இன்றளவில். ஆனாலும் மேஜீக் நம்பர் 300ஐ தாண்டி விடுவோம் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உள்ளது. ஆல் இஸ் வெல்
ReplyDeleteஸ்பின் ஆஃப் கதைகளையும் சேர்த்து போடலாம் என்ற அறிவிப்பு வந்தால் முன்பதிவுகள் களை கட்டலாம்.
ஆழ்ந்த இரங்கல்கள் கண்ணரே.
ReplyDeleteலட்சியத் தேதிங்களா? நிச்சயத் தேதிங்களா எடிட்டர் சார்?
ReplyDeleteசத்தியமா ஏதாவது ஒரு தேதியில்...!!!
Deleteஒரு கை பார்த்திடுவோம்...கி நா வை....
ReplyDeleteபாத்து மந்திரியாரே..!
Deleteகி.நா. மாறு கை மாறு கால் வாங்கப் போவதாகக் கேள்வி.:-)
Dear editor sir
ReplyDeleteThe www.lioncomics.in look and feel changed now and not able to login with my email id. Getting error as Unknown email address. Check again or try your username.
Please check and do the needful.
Thanks.
Sir, the site has been totally revamped and a different Payment gateway integrated too, to make this much more user friendly. You will just need to take the trouble to register afresh !
DeleteSir, Register option is not available.
DeletePlease check again sir...
Deleteசார் கெளம்பியாச்சா புத்தகங்க
ReplyDeleteபதிவின் கடேசியாக உள்ள போட்டோவுல இருப்பது 2வது சுற்றில் வரும் பில்லியனர் செனட்டர் அல்லெர்ட்டின் போலவே உள்ளதே???
ReplyDeleteஅம்பின் பாதையில் புத்தகத்தின் கடைசி பேணலில் அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கப்போவதாக பேட்டி தருவார், அல்லெர்டின்.
பவுண்டேசன் சார்பில் காரியமாற்றும் அல்லெர்டின்& ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் பவுண்டேசன்! 2யும் இணைத்து பார்த்தால்.......!!!!
பியூச்சர் பிரசிடெண்ட் அல்லெர்டினோடு ஜேசன் உரையாடுவதாக எடுத்து கொள்ளலாமோ???
நிச்சயந்தானுங்களே
ReplyDeleteயானை கல்லறை சிறுத்தை சாம்ராஜ்யம் கலரில் எப்போ வரும்
ReplyDeleteஇதுக்குத்தான் பதிவுக்கொரு tex ஜி வரணும்கிறது. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteநில் கவனி கொல் -007 அட்டைப்படம் செம அசத்தல்.மீண்டும் ஒரு விறுவிறுப்பான திரைப்படம் காண மிக ஆவலாக உள்ளோம்.
ReplyDelete