Powered By Blogger

Saturday, July 25, 2020

ஒரு ஜூலையின் பின்னே....!

நண்பர்களே,

வணக்கம்.  நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா ? என்று தெரியவில்லை ! ஆனால் காலெண்டரைப் பார்க்கும் போது வருஷத்தின் ஏழாவது மாதமும் வரலாற்றுக்குள் ஐக்கியமாகிட அதிகத் தொலைவில்லை என்பது புரியும் போது maybe எனது பிரமை நிஜம் தானோ ? என்று தோன்றுகிறது ! ஒற்றை ஞாயிறின் ஊரடங்கும், பால்கனிகளிலிருந்து அடித்த கொட்டுக்களும் மெய்யாலுமே வேறொரு யுகத்து சமாச்சாரங்களாய்த் தென்பட்டிட, நடப்பாண்டின் இதழ்களுமே தூரத்து நினைவுகளாய் உள்ளுக்குள் நீச்சலடிப்பதில் (என்மட்டிற்கு) வியப்பில்லையோ ? And ஜுலையின் புது இதழ்களை உங்களிடம் ஒப்படைத்தது ; உங்கள் அலசல்களை ஆராய்ந்தது ; அக்கடாவென ஒரு சில நாட்களைக் கடத்தியதுமே பத்து நாட்களுக்கு முன்பான சமாச்சாரங்களாகியிருக்க – அடுத்த கத்தை இதழ்களின் பணிகள் எங்கள் பொழுதுகளை மும்முரமாக்கி வருகின்றன ! But அத்தனை சீக்கிரமாய் நடப்பு இதழ்களிலிருந்து பார்வைகளை அகற்றிட இயலாதென்பதால் ஆகஸ்ட் previews will have to wait !

As always – இம்மாதத்து இதழ்களின் making பின்னணிகள் பற்றிய மொக்கைகளே இவ்வாரத்தின் பதிவு ! துவக்கப் புள்ளியாய் நமது லக்கி’s லயன் ஆண்டு மலர் அமைவதில் ஆச்சர்யங்களிராது தான் ! கடந்த சில வருஷங்களாகவே ஆண்டுமலருக்கு நமது பென்சில் ஒல்லி நாயகரையே முதல் தேர்வாக்கிடுவதைக் கவனித்திருப்பீர்கள் ! If I am not mistaken – இது மூன்றாவது லக்கி ஆண்டுமலர் ! எல்லோருக்குமே பிடித்தமான இந்த ஜாலி ஹீரோவை நமது ஆண்டுமலர் நாயகராக இருத்திக் கொள்ள நேர்ந்ததற்கு ஒரு அம்மணிக்கு நன்றிகள் சொல்ல வேண்டுமென்பேன் ! 2016-ன் ஆண்டுமலருக்கென XIII Spin-off தொடரின் பெட்டி பார்னோவ்ஸ்கி & கேப்டன் ப்ரின்ஸின் துவக்க நாட்களின் துக்கடா நீள சாகஸங்களையும் ஒருங்கிணைத்திருந்தது நினைவிருக்கலாம் ! மெய்யாலுமே இந்தக் கூட்டணியை அட்டவணைக்குள் பதித்த சமயம் எனக்குள் ஏகப்பட்ட கற்பனைகள் இருந்தன – இந்த இதழ் ரகளையான வரவேற்பு பெற்றிடுமென்று ! ஆனால் அந்த மே இறுதியில் இந்த 2 ஆல்பங்களுமே எடிட்டிங்கிற்கு என் மேஜையை எட்டிய போதே எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் துவங்கி விட்டது ! பாதி கட்டிங்கில் சலூனிலிருந்து ஓட்டமெடுத்தவர் போல கேப்டன் ப்ரின்ஸ் அந்தத் துவக்க நாட்களது சாகஸங்களில் தோற்றம் தருவதில் எனக்கு ஆச்சர்யங்கள் இருக்கவில்லை தான் ; துவக்க நாட்களின் அந்த ஓவிய பாணியை ஏற்கனவே நிதானமாய் பார்த்திருந்தேன் தான் ! அதே போல கதைகள் எல்லாமுமே ஜோ டால்டனின் சைசுக்கே இருப்பதும் நானறிந்ததே ! So no surprises there either....ஆனால் நமது சாகஸ நாயகர் இன்டர்போலில் பணியாற்றிய நாட்களைச் சித்தரிக்கும் கதைகளானவை நிச்சயமாய் ‘வெயிட்‘டாக இருக்குமென்று எண்ணியிருந்தேன் ! ஆனால்... ஆனால்... பின்நாட்களின் பிரின்ஸ் கதைகளுக்கு ஏணி வைத்தாலும் எட்டாத ரகத்தில் அவை இருந்து வைக்க, பயங்கர ஏமாற்றம் எனக்கு ! சரி, சித்தப்பூ தான் காலை வாரிப்புட்டாரென்று பெட்டி அத்தாச்சி பக்கமாய்த் திருப்பினால் அவரோ கண்ணீரே வரச் செய்து விட்டார் ! இந்த இதழ் வெளியான நாட்களில் எனது அந்த ஏமாற்றங்கள் பொதுவுடைமை ஆகிப் போயின ! ஜெய் ப்ரின்ஸ்.... ஜெய் ஜெய் பொ.பா ! என்று புறப்பட்ட நிறைய நண்பர்களோ – ‘பே... பே...பே‘ என்று விழி பிதுங்கி நின்ற அந்த நாட்களில் எனக்கு உள்ளுக்குள் வண்டி வண்டியாய் நெருடல்கள் ! 200 ரூபாய்க்கான இதழை மிதமான கதைகள் ஊசலாடச் செய்து விட்டது ஒரு பக்கமெனில், ‘ஆண்டுமலர்‘ எனும் landmark இதழில் இந்தப் பிழை நேர்ந்து போனது குறித்து சங்கடம் இரட்டிப்பானது ! So அன்றைக்குத் தீர்மானித்தேன் - ஆண்டு மலர்களில் இனிமேல் நோ விஷப்பரீட்சைஸ் என்று ! டெக்ஸ் வில்லர் ; கேப்டன் டைகர் ; ட்யுராங்கோ & லக்கி லூக் தான் நமது 2017-ன் அணிவகுப்பினில் சந்தேகத்துக்கு இ்டமின்றிச் சாதிக்கும் கில்லிகள் என்றிருக்க – தொடரும் ஆண்டுமலர்களில் இவர்களுள் யாரையேனும் சுழற்சி முறையில் களமிறக்குவது என்று தீர்மானித்தேன் ! ஆனால்.....

- ட்யுராங்கோ முத்து காமிக்ஸ் நாயகராக வலம் வந்திட..

- கேப்டன் டைகரின் தொடரிலுமே வறட்சி நிலவிட...

-டெக்ஸ் வில்லர் தெறிக்க விடும் பட்டாசுகள் தீபாவளி மலருக்கென ரொம்பவே பொருத்தமாயிருக்க...

எஞ்சியிருந்த லக்கி தான் என் விசாலமான கண்களுக்கு ஆபத்வாந்தவனாய்த் தென்பட்டார் ! சந்தேகமேயின்றி ஹிட்கள் தரவல்ல நாயகர் என்பதோடு ; யாரது விமர்சனங்களுக்குமே ஆளாகிடா மிஸ்டர் க்ளீன் என்ற சமாச்சாரமும் பளிச்சென்று உரைத்தது ! டெக்ஸுக்கு அண்டாக்கள் ; டைகருக்கு குண்டாக்கள் என்பதே நடைமுறையெனும் போது – லக்கி லூக் & ஜாலி ஜம்பரை நினைத்துப் பாருங்களேன் : 1987 முதல் இன்று வரையும் 33 ஆண்டுகளாய் எப்போதும் பச்சையாய், அது தான் evergeen ஆக  வலம் வருகிறார்கள் ! So ஆண்டுமலர்களை அலங்கரிக்க who better ? என்று என்னை நானே கேட்டுக் கொண்ட நாளில் பிறந்தது தான் 'ஆண்டுமலர்கள் with அன்பான லக்கி‘ என்ற template ! Thanks a ton Betty !!

ஒவ்வொரு ஆண்டிலும் அட்டவணையினுள் லக்கி லூக் கதைகளை நுழைக்கும் தீர்மானமெடுத்திடும் தருணமானது  எனக்கு ரொம்பவே ஜாலியானது ! இவற்றை இங்கிலீஷிலேயே படித்து ரசித்திட முடியுமென்பது செம ப்ளஸ் பாய்ண்ட் எனும் போது என்னிடம் எப்போதுமே ஒரு அரை டஜன் கதைகளாவது short list–ல் இருந்திடுவதுண்டு ! So ஒவ்வொரு வருஷமும், கதைத் தேர்வுக்கான நேரத்தினில் வீட்டில் கிடக்கும் அந்த Cinebook லக்கி ஆல்பங்களை வேக வேகமாய் மேய்வது வாடிக்கை ! மற்ற நாட்களில் வாசிப்பது சும்மாக்காச்சும் எனும் போது – ‘படித்தோம் – சிரித்தோம் – மறுக்கா உள்ளே அடுக்கினோம்‘ என்றிருக்கும் ! ஆனால் கதைத் தேர்வு எனும் கண்ணோட்டம் தொற்றிக் கொள்ளும் போது – ரொம்பவே நுண்ணிய சல்லடையை கையிலெடுத்துக் கொள்ள வேண்டிப் போகும் ! சில கதைகளைப் படிக்கும் போது ‘ஓ.கே. ரகம்‘ என்று மட்டுமே தோன்றும் ! ஆனால் தமிழ்ப்படுத்தும் angle–ல் பார்க்கும் போது வேறு மாதிரித் தெரியும் ! ‘இங்கே – இங்கெல்லாம் கொஞ்சம் நகாசு வேலை செய்தாக்கா இந்தக் கதை நம்மாட்களுக்கு பிடிக்காமல் போகாது!‘ என்று தோன்ற ஆரம்பிக்கும் ! சமீபத்தைய ‘மார்செல் டால்டன்‘ ; ‘உத்தம புத்திரன்‘; ‘திசைக்கொரு திருடன்‘ எல்லாமே எனது original short list-ல் இருந்திடாமல்; மறுவாசிப்பின் / மறுபரிசீலனையின் பலனாய் ‘டிக்‘ பெற்ற ஆல்பங்கள். Of course – என்னளவில் லக்கியின் ஒவ்வொரு படைப்பும் ஒரு masterpiece தான்! கட்டாயங்கள் கழுத்தில் குந்தியிருக்காத பட்சத்தில், 'இன்க்கி-பின்க்கி-பான்க்கி' போட்டுப் பார்த்து சிக்கிய சகலத்தையும் வெளியிட்டு விடுவேன் தான் ! ஆனால் அடகுக்கடை முதலாளியை விடவும் பக்குவமாய் ஒவ்வொரு ஆல்பத்தையும் உரசிப் பார்க்க நம்மிடையே ஏகப்பட்ட நண்பர்கள் இருப்பதனால் – ஒவ்வொரு கதைத் தேர்வின் போதும்,  ‘சூப்பர் சர்க்கஸ்‘களும்; ‘புரட்சித் தீக்களும்‘; 'அதிரடிப் பொடியன்'களும் என் கண்முன்னே வந்து போவதுண்டு ! So ஒவ்வொரு பக்கத்திலும் உங்களை சிரிக்கச் செய்யும் வாய்ப்புகளுடனான சாகஸங்களாய்த் தேட முனையும் மனசு ! 

இந்தாண்டில் இடம்பிடித்த 2 ஆல்பங்களுமே எனது ஒரிஜினல் shortlist–ல் இருந்தவைகளல்ல ! ஜுனியர் எடிட்டர் மொழிபெயர்த்திருந்த அந்தக் “கௌபாய் கலைஞன்” கதையைப் போடாமலேயே டபாய்த்து வந்தவன் – சென்றாண்டின் ‘பாரிஸில் ஒரு கௌபாய்‘ இதழினை வெளியிட்ட பிற்பாடு மனசு மாறியது பற்றி போன பதிவின் பின்னூட்டங்களில் பகிர்ந்திருந்தேன் ! So ஒரு நிஜ வாழ்வின் மனுஷனைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கதைக்கு 'டிக்' அடித்த போதே, அதனுடன் களமிறங்கும் இரண்டாவது கதையுமே இது போன்ற real life பின்னணியுடன் இருந்தால் தேவலாமே என்று நினைத்தேன் ! அந்த மாதிரியான தேடலோடு துளாவிய சமயம் கண்ணில்பட்டது தான் “பொன் தேடிய பயணம்”! ஒன்றுக்கு இரண்டாய், நிஜ வன்மேற்கு மாந்தர்கள் & க்ளோன்டைக் என்ற நமக்குப் புதிதான (காமிக்ஸ்) பிராந்தியம் என்று பார்த்த போது சுவாரஸ்யமாகிப் போனேன் ! பற்றாக்குறைக்கு நமக்கு ஏற்கனவே பரிச்சயமான வால்டோவும், ஜேஸ்பரும் இதனில் தலைகாட்ட, டங்கென்று ‘டிக்‘கடித்தேன் ! Of course – கதைக்களம் திடமாய் இருந்திராவிட்டால் இதர காரணிகளால் கால் காசுக்குப்  பிரயோஜனமிருந்திராது தான் ! இங்கே கதாசிரியர் யான் லெடூர்ஜி ஒரு கதையை நிறுவி விட்டு, அதனைச் சுற்றியே நகைச்சுவையைத் தெளிக்க முனைந்திருந்ததால், நிச்சயமாய் சோடை போகாதென்று பட்டது ! And உங்களின் reactions அதனை ஊர்ஜிதம் செய்துள்ளதில் ஹேப்பி அண்ணாச்சி ! 

இம்மாதத்தின் ‘இளம் தல‘ ஒற்றை இதழானதன் பின்னணி by now நம் எல்லோருக்குமே தெரியும் தான் ! ஆனால் தெரியாத சின்னதொரு கொசுறு – இளவரசி தேஷாவின் பங்கேற்புடனான முழுவண்ண டெக்ஸ் ஆல்பம் நடப்பாண்டின் ஈரோட்டு surprise ஆக வெளிவந்திருக்க வேண்டிய சமாச்சாரம் ! எனது ஒரிஜினல் திட்டமிடலின்படி இளம் டெக்ஸ் – 4 தனித்தனி 64 பக்க இதழ்களாய் சந்தா: D-ல் வெளிவந்திருக்க வேண்டும் ! அது இல்லையென்று ஆன பிற்பாடு – ஒரே குண்டு புக்காய்த் திரட்டி, “எதிரிகள் ஓராயிரம்” இதழை ஆகஸ்டில் வெளியிடுவது தான் திட்டம் ! அதே ஆகஸ்டில் Surprise இதழாய் - டெக்ஸ் # 700 ஆக வெளியான (ஓவியர் சிவிடெலியின்) Pawnee’s Gold ஆல்பத்தையும் கலரில் போட்டுத் தாக்கவே எண்ணியிருந்தேன் ! ஆனால் இது போன்ற முக்கிய தருணங்களில் இரவுக் கழுகாரையே விடாப்பிடியாய் முன்நிறுத்தி வருவதில் இதர கதைரகப் பிரியர்களுக்கு நெருடல்கள் இருப்பதால் – "ஒற்றை நொடி ஒன்பது தோட்டா" ... & "கென்யா" என்று திட்டங்கள் மாற்றம் கண்டன ! ஆனால் இறைவனின் screenplay முற்றிலுமாய் வேறு விதமாயிருக்க – நமது திட்டமிடல்கள் சகலமும் சேவாக்கிடம் சிக்கிய full toss ஆகிப் போய்விட்டன  So தேஷாவைக் கலரில் காண 2021 வரை காத்திருக்க வேண்டி வரும் !

அப்புறம் இம்மாதத்தின் இந்த ஒற்றை இளம் டெக்ஸ் தொகுப்பு ஓ.கே. தானா ? அல்லது ஒரிஜினலான போனெலி பாணியில் 64 பக்க மாதாந்திரத் தொடர்களாய் வரும் ஆண்டுகளில் முயற்சிக்கலாமா ? உங்கள் அபிப்பிராயங்கள் என்னவோ ? இதோ – இந்த லின்க்கில் போய் உங்கள் ஓட்டுக்களைப் பதிவிடுங்களேன், ப்ளீஸ் : https://strawpoll.com/b1he7fa8x

இம்மாத இதழ் # 3 – more for nostalgia lovers than current readers ! 'லாரன்ஸ் டேவிட் கதைகள் – அந்த 128 பக்க, துவக்கநாள் முத்து காமிக்ஸ் பாணிகளோடு நிறைவுற்று விட்டன ; மொத்தமே அதனில் 13 ஆல்பங்கள் தான் & சகலத்தையும் முத்துவில் போட்டுத் தள்ளியிருந்தார்கள்' – என்பதே 1985 வரைக்குமே எனது புரிதலாக இருந்தது ! ஆனால் 1985-ல் வீட்டில் கிடந்த Fleetway வாராந்திர LION இதழ்களைத் துளாவிக் கொண்டிருந்த சமயத்தில் கண்ணில்பட்ட இந்தக் கிங் கோப்ரா – சாகஸம் 1 என்னை க்வாட்டர் அடித்த குப்பனாய் ஆனந்தத் தாண்டவமாடச் செய்தது ! மின்சாரத்தைக் கண்டுபிடித்த நொடியிலோ ; அமெரிக்க நிலப்பரப்பைக் கண்ணில் பார்த்த நொடியிலோ – அந்த அசாத்தியர்கள் போட்டிருக்கக்கூடிய குத்தாட்டத்தை விட “Codename Barracuda” என்ற பெயரைத் தாங்கி நின்ற 2 பக்கங்களைப் பார்த்த வேளையில் நான் அடித்த லூட்டிகள் ஜாஸ்தி ! “காணாமால் போன கடல்” 1985 ஜுனில் வெளிவந்த வேளையில் எனக்குக் கொஞ்சமும் சளைக்காத ஆட்டத்தை "அந்நாட்களது நீங்கள்" போட்டதுமே நினைவுள்ளது ! (அன்னிக்கே இதனைப் படித்தோர் யாருங்கண்ணா இங்கே ? And யாரிடம் அந்த இதழ் இன்னமும் உள்ளதோ ?) ஆனால் 35 ஆண்டுகள் கழிந்த பின்னே லா.டே. ஜோடியின் அத்தியாயம் 2 வெளியாகும் போது வரவேற்பு நிச்சயமாய் வேறு மாதிரி இருக்குமென்பதில் எனக்குச் சந்தேகங்களே இருக்கவில்லை ! இம்மாதத்து இதழ்கள் 1&2 ஹிட்டாவது எத்தனை உறுதியோ – அத்தனை உறுதியே இதழ் # 3-ன் பொருட்டு என் தாவாங்கட்டையில் பல பீச்சாங்கைகள் பதிக்கப்படுமென்பதும் ஸ்பஷ்டமாய் (ஹிஹி!!) தெரிந்திருந்தது ! ஆனால் நமது பால்யங்களை மட்டுமன்றி, ஓரிரு தலைமுறைகளின் இளவயது நாட்களையே கலர்புல்லாக்கிய இந்த சாகஸ ஜோடியை one ast time ஒரு சின்ன விலையிலான புக்கில் தரிசிப்பதில்,பெரிதாய்க் குடிகள் எங்கும் மூழ்கிடாதென்று நினைத்தேன் ! Oh yes – இன்னமுமே சிலபல புதுக்கதைகள் லா.டே சாகஸங்களைத் தாங்கி நிற்கின்றன தான் ! But இப்போதைக்கு ; அடுத்த சில ஆண்டுகளுக்காவது இவர்களுக்கு இடங்களை மனதில் மட்டுமே தந்திட நினைத்துள்ளேன் ! 

So இம்மாத முக்கூட்டணியின் background இதுவே ! இதைக் தெரிந்து கொண்டதால் ஆக்ஸ்போர்டில் அரங்கேறி வரும் கொரோனோதை் தடுப்பூசி ஆய்வுகளில் பங்கேற்கும் ஞானங்களோ, லடாக்கின் ஊடுருவலின் பின்னணி அரசியல்களை கிரகித்துக் கொண்ட திருப்தியோ சத்தியமாய்க் கிட்டப் போவதில்லை தான் ! ஆனால் உங்கள் வாரயிறுதியின் அரை மணி நேரத்தினை நமது தயாரிப்புகள் சார்ந்த trivia உடன் செலவிட்ட சன்னமான குஷி உங்களதாகலாம் !

And before I sign out – இன்னொரு விஷயமும் கூட ! சில தினங்களுக்கு முன்பாய் நமது காமிக்ஸ் குடும்பத்தின் ஒரு அழகான அங்கம் ஆண்டவனிடம் ஐக்கியமாகி விட்டிருந்த தகவலை நாமறிவோம் ! நண்பர் ஜேடர்பாளையம் சரவணக்குமாரை இழந்து வருந்தும் அவரது குடும்பத்துக்கு நமது பிரார்த்தனைகளை மட்டுமே இத்தருணத்தில் நம்மால் முன்வைக்க முடியும் ! “இழப்புகள் இறைவனின் சித்தமே” என்று தத்துவம் பேசுவது சுலபம் தான் ; ஆனால் அதனை upclose பார்த்திட நேரும் போது அதன் தாக்கம் விலக ரொம்பவே நேரமாகிடும் என்பது தெரியாதவர்களல்லவே நாம் ! எனக்கு நண்பர் JSK உடன் மிகப்பெரிய நேரடிப் பரிச்சயம் இருந்ததில்லை தான் ; ஈரோட்டின் வாசக சந்திப்பின் போது அதிர்ந்து பேசத் தெரியாத JSK-ஐ அவரது சகோதரர் குணாவுடன் பார்த்துப் பேசியது நினைவில் உள்ளது ! ஆனால் மெய்யான காமிக்ஸ் நேசத்தில் கட்டுண்ட குடும்பத்தின் ஒரு உறுப்பினர் இன்றைக்கு நம்மோடு இல்லை என்ற நிஜம் கடந்த சில நாட்களாகவே நெருடி வருகிறது ! அதுவும் மாமூலாய் காலன் கூட்டிப் போகும் வயதுமல்ல எனும் போது – இறுதி நாட்களில் நோயோடு போராடிய அந்த நண்பரின் மனவலிகளை ; ரணங்களை ; சூன்யமாய்த் தெரிந்திருக்கக்கூடிய எதிர்காலம் குறித்த சிந்தனைகளை  கற்பனை செய்து பார்க்கவே தடுமாறுகிறது ! அவரை அறிந்த நட்புக்கள் அவருக்குச் செலுத்தி வரும் மரியாதைகளைப் பார்க்கும் போது இந்த இழப்பின் நிஜப் பரிமாணம் புரிகிறது! And பல நண்பர்களும், JSK-ன் "ஸ்பைடர் காதல்" பற்றி எழுதியிருந்ததைப் படித்த போது மனதைப் பிசைந்தது ! கடைசி நாட்களில் காமிக்ஸ்களை ரசிக்கக்கூடிய மனநிலையோ / உடல்நிலையோ JSK-க்கு இருந்திருக்குமா ? என்பது கேள்விக்குறி தான் ; ஆனால் பூமியில் அவருக்கு எஞ்சியிருந்த நாட்கள் சொற்பமே என்பதை யூகித்திருக்க வழியிருந்திருப்பின் ; அவரைத் துளியூண்டேனும், ஒற்றைக் கணத்துக்கேனும் மகிழ்வித்திருக்கும் என்று தெரிந்திருப்பின்,  நிச்சயமாய் ஸ்பைடரின் புது சாகசம் ஏதோவொன்றை வெளியிட்டிருப்பேன் ! Anyways – better late than never !!

JSK இங்கிருந்த போது பார்க்க முடியாது போனதை – அவர் விண்ணிலிருந்து பார்க்கும் போதாவது வெளியிடுவோமே என்று மனதில் பட்டதால் – குற்றச் சக்கரவர்த்தி ஸ்பைடர் மறுவருகை செய்கிறார் – ஒரு புத்தம் புதிய சாகஸத்துடன்!

“சர்ப்பத்தின் சவால் !!”

Black & White-ல்; ஒரு vintage ஸ்பைடர் சாகஸத்துடன் ; பெரிய சைஸில் ரூ.90/- விலையில் ஒரு மினி collector’s இதழாய் – நண்பர் JSK-க்கொரு சன்னமான tribute ஆக வெளிவந்திடும் ! நமது விற்பனையாளர்களுள் ஆர்வப்படுவோர் மட்டுமே இதனை வாங்கிடுவர் ; மற்றபடிக்கு நமது ஆன்லைன் ஸ்டோரிலிருந்து அந்நேரம் நண்பர்கள் ஆர்டர் செய்து கொள்ள வேண்டி வரும் ! சந்தாக்களின் அங்கமாகிடாது இந்த திடீர் இதழ் !

JSK – இது உங்களுக்காக !
Bye all... See you around ! Have a great weekend ! 

333 comments:

 1. இரவு வணக்கம் நண்பர்களே.

  ReplyDelete
 2. சரி சரி...
  வந்துட்டோம்

  ReplyDelete
 3. ///எஞ்சியிருந்த லக்கி தான் என் விசாலமான கண்களுக்கு ஆபத்வாந்தவனாய்த் தென்பட்டார் ! சந்தேகமேயின்றி ஹிட்கள் தரவல்ல நாயகர் என்பதோடு ; யாரது விமர்சனங்களுக்குமே ஆளாகிடா மிஸ்டர் க்ளீன் என்ற சமாச்சாரமும் பளிச்சென்று உரைத்தது ! டெக்ஸுக்கு அண்டாக்கள் ; டைகருக்கு குண்டாக்கள் என்பதே நடைமுறையெனும் போது – லக்கி லூக் & ஜாலி ஜம்பரை நினைத்துப் பாருங்களேன் : 1987 முதல் இன்று வரையும் 33 ஆண்டுகளாய் எப்போதும் பச்சையாய், அது தான் evergeen ஆக வலம் வருகிறார்கள் ! So ஆண்டுமலர்களை அலங்கரிக்க who better ? என்று என்னை நானே கேட்டுக் கொண்ட நாளில் பிறந்தது தான் 'ஆண்டுமலர்கள் with அன்பான லக்கி‘ என்ற template ! Thanks a ton Betty !!///

  ஹிஹிஹி!

  நான் என்ன நெனைக்கறேன்னு யாருனா சொல்லுங்க பார்ப்போம்!!

  ReplyDelete
 4. ஜேடர்பாளையத்தாருக்கு இதைவிட பிரமாதமான மரியாதை செய்ய முடியாது நன்றி ஆசிரியரே 🙏🙏🙏

  ReplyDelete
  Replies
  1. நம் அன்பின் ஆசிரியரால் மட்டுமே இது செய்ய இயலும் செந்தில்.

   Delete
  2. ஆம்..சத்யா சரியாக சொன்னீர்கள்!

   Delete
 5. இளம் டெக்ஸ் மாதாமாதம் வருவதை வரவேற்கின்றேன்.
  வண்ணத்தில் வரலாமா?

  ReplyDelete
 6. அமரர் JSK க்கான அஞ்சலியாக தங்களின் Tribute Really great. ஒரு சின்ன வேண்டுகோள். உள் பக்கத்தில் நண்பர் JSK ன் படத்தை print செய்து காமிக்ஸ் காதலருக்கு ஒரு கண்ணீர் அஞ்சலி என்னும் குறுஞ்செய்தியுடன் வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. கண்ணீர் அஞ்சலி என்ற குறுஞ்செய்தி வேண்டாம் நண்பரே.அதைவிட JSK Memories speacal என்பதுபோல வாசகம் அட்டைப்படத்தின் ஒரு ஓரமாகவோ அல்லது கதையின் ஆரம்ப பக்கத்திலோ இருந்தால் அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக இருக்கும் என நினைக்கிறேன்.

   Delete
 7. மறைந்த காமிக்ஸ் காதலர் JSK அவர்களின் நினைவாக ஸ்பைடர் கதையினை வெளியிடும் ஆசிரியரின் அன்பு உள்ளத்தைக் கண்டு என் உள்ளமும் உடலும் புல்லரித்து விட்டன ஆசானே!
  இந்தக் காமிக்ஸ் குடும்பத்தில் நானும் ஒரு அங்கத்தினன் என்பதை நினைத்துப் பெருமிதப்படுகின்றேன்.

  ReplyDelete
 8. என்னது ஸ்பைடரின் புதுக்கதையா என்னால் நம்பவே முடியவில்லை சார் இதை நண்பர் Jsk இருந்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பார்தான்! டெக்ஸ் கதை வண்ணத்தில் போடுவதாக இருந்தது இந்த கொரொனோ கொடூரனால் தள்ளிப் போனது மிக வருத்தமே! அடுத்த வருடமாவது ஒன்னு ரெண்டு டெக்ஸ் கதையை வண்ணத்தில் போட்டு இந்த வருத்தத்தை தீர்த்தால் நல்லாயிருக்கும் சார்! தலையில்லா போராளி, இரும்புக் குதிரையில் ஒரு தங்கப்புதையல், விதி போட்டவிடுகதை இது போன்ற கதையெல்லாம் வண்ணத்தில் வெளிவந்திருந்தால் தெறிக்க விட்டிருக்கும்! இது போன்ற சித்திரங்களாக பார்த்து போடப் பாருங்கள்! இளம் டெக்ஸ் கதையை பிரித்து போடாமல் இதே போல முழுத் தொகுப்பாகவே போடுங்க! ஸ்பைடர் புதுக்கதையை போட முடிவெடுத்தமைக்கு மீண்டுமொரு நன்றி சார்

  ReplyDelete
 9. ஜேடர்பாளையத்தாருக்காக ஸ்பைடர்..மிக்க மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சார்..

  ReplyDelete
 10. அன்புள்ள ஆசிரியர் விஜயன் சாருக்கு
  வணக்கம். நண்பர் JSK வின் நினைவாக
  வெளிவரும் ஸ்பைடர் புத்தகத்தில்
  அவரது படத்தை போட்டு அஞ்சலி
  செலுத்தினால் காமிக்ஸ் உறவுகளாகிய
  எங்களுக்கு ஒரு சிறு மனநிறைவு கிட்டும்.
  இது அன்பான வேண்டுகோள்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல யோசனை சார்.

   Delete
  2. இதழின் முதல் பக்கமே JSK-க்கு தானே !

   Delete
  3. நல்ல ஐடியா சார் .. வாய்பிருந்தா போடுங்க...சார்...

   Delete
  4. அருமை சார்.. ஒரு சிறந்த ரசிகருக்கு சிறந்த அஞ்சலி..

   Delete
 11. அண்ணன் கடைசியாக புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த கதை...

  அரக்கன் ஆர்டினி...

  ஸ்பைடரின் அறிவிப்பு கண்டு நெகிழ்ந்து போகிறேன்..

  இந்தக் காமிக்ஸ் குடும்பம் என் சகோதரனின் மீது கொண்ட மாசற்ற பற்றிற்கு நன்றிகள்...

  ஒவ்வொரு மாதமும் அண்ணனுக்கும் சேர்த்து இரண்டிரண்டு புத்தகங்களாய் வாங்குவேன்....

  இனி.....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வேதனை புரிகிறது.. எம் அனைவருக்கும் பேரிழப்பே அண்ணனின் இன்மை.. கடந்து வாருங்கள்.. குடும்பத்தவர் தங்களையே சார்ந்திருக்கிறார்கள்.. திருவண்ணாமலை கொரோனா வார்டிலிருந்து உங்கள் நண்பன் ஜானி..

   Delete
  2. நண்பர் குணா தங்களின் வேதனை புரிகிறது.
   இதிலிருந்து மீண்டுவர ஆண்டவனை வேண்டுகின்றேன்.

   Delete
  3. தம்பிகள் இருக்கிறோம் 🤝🏻

   Delete
  4. குணா சார். தங்கள் அண்ணன் JSK ன் photo பார்த்தவுடன் இவரை பரமத்திவேலூரில் எங்கோ சந்தித்த நினைவு. எங்கே என்று ஞாபகம் வரவில்லை. என் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

   Delete
 12. பத்மநாபன் சார் இருவரும் ஒரேபோல்
  யோசித்து இருக்கிறோம்.
  நன்றி.

  ReplyDelete
 13. முன்னிரவு வணக்கங்கள்.

  ReplyDelete
 14. அருமையான முடிவு சார். JSK க்காக ஸ்பைடர் அருமை அருமை. நண்பருக்கு மிகச் சிறந்த அஞ்சலி.

  ReplyDelete
 15. நண்பர் JSK நினைவிதழாக ஸ்பைடரை தேர்ந்தெடுத்தது சிறப்பான முடிவு.

  ReplyDelete
 16. லக்கி ஆண்டு மலர்கள் எப்போதும் சோடை போனதில்லை என்பது உண்மைதானே.

  ReplyDelete
 17. குற்றச் சக்ரவர்த்தி ஸ்பைடரின் மறு வருகை மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது.


  அப்படியே அந்த ரொம்ப நாள் pending-ல இருக்கும் Sinister Seven விண்வெளிப் பிசாசு கதைகளையும் விரைவில் வெளியிட்டால், மிக்க மகிழ்ச்சி.

  முன்கூட்டிய நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழரே.. தங்களைப் போன்றே ஆவலுடன் காத்திருக்கிறேன்.. கோட் நேம் பாரகுடா மீத கதைகளை ஒன்று சேர்த்து வெளியிட்டுவிட்டால் எமக்கொரு நிறைவு கிடைத்து விடும் சார்.. ப்ளீஸ்..

   Delete
 18. பாயசப்பார்ட்டிக்கு கண்ணை மூடிக்கிட்டு வோட்டைப் போட்டுட்டு திரும்பிப்பார்த்தா..வேணவே வேணாம்..போட்டா ஒரே குண்டு புக்கா போடுங்க சாமியோவ்னு ஏகப்பட்ட ஓட்டு விழுந்திருக்கு..கிர்ர்.. இளம் டெக்ஸை எப்டியாவது கண்டினியூ பண்ணுங்க.. வி வாண்ட் மோர்..டமால் டுமீல்..

  ReplyDelete
 19. Replies
  1. வாருங்கள் தமிழரசன். தொடர்ந்து பதிவிடுங்கள்.

   Delete
 20. நான் 10 ச.சவால் வாங்காலாமுனு முடிவு பண்ணியிருக்கேன். நேற்றைய கனவு இன்று நிஜம் ஆனது. ரொம்ப நாளைக்கு அப்புறம் எடியின் அதிரடி.‌தெறிக்க விட்டுடிங்க.பிரிண்டிங் அட்டைப்படம் எல்லாம் பிரமாதமா பண்ணிடுங்க. ஜெஎஸ்கே மறைந்தாலும் அன்னாருடைய ஆசைகளில் ஒன்று உங்களால் நிறைவேறி விட்டது.

  ReplyDelete
 21. சரவணன் அண்ணாவிற்காக Tribute ஆக வெளியாகும் அந்த இதழில் கண்டிப்பாக அவருக்கான Tribute என்ற செய்தி இருக்கும் என தெரியும். அத்தோடு அவர் எழுதி நமது இதழில் வெளியான சில விமர்சனங்கள் மற்றும் புகைப்படம் இருந்தால் ஆண்டாண்டு கடந்தாலும் ஒரு காமிக்ஸ் காதலரை காமிக்சில் கண்டு கொள்ள முடியும். ஒரு காமிக்ஸ் வாசகருக்காக நீங்கள் இதை செய்வது உண்மையாகவே மிக்க மகிழ்ச்சி சார். சரவணன் அண்ணன் நிச்சயம் மகிழ்வார்.. 💜💜💜

  ReplyDelete
  Replies
  1. நமது காமிக்ஸ் நண்பர் அப்பு சிவா அவர்கள், JSK-க்கு அஞ்சலியாக ஒரு தொகுப்பை pdf ஆக உருவாக்கியுள்ளார். அதில் JSK-யின் ஃபேஸ்புக் விமர்ச்சனங்கள் மற்றும் அவரது ஓவிய, புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அதையும் பயன் படுத்தி கொள்ளலாம்...

   நன்றி அப்புசிவா!

   Delete
 22. நண்பர் JSK வுக்கு இதை விட சிறந்த அஞ்சலி இருக்க முடியாது Sir, நன்றி

  ReplyDelete
 23. "சர்ப்பத்தின சவால்" அறிவிப்புக்கு, ஸ்பைடர் ரசிகனாகவும், JSK-ன் நண்பராகவும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் எடிட்டர் சார்.

  ReplyDelete
 24. ஸ்பைடர்....இப்ப என்ன சொல்லன்னு தெரியல....நண்பரே ஆசிரியரின் பரந்த மனதிற்கு நன்றியும்....தங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் தங்களை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு கடவுள் வழி காட்டுதல் மூலம்....

  ReplyDelete
 25. சர்ப்பத்தின் சவாலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

  ReplyDelete
 26. ஒரு காமிக்ஸ் ப்ரியருக்கு ஏற்ற சிறப்பான அஞ்சலி / tribute. ஆசிரியரின் எண்ணங்களுக்கு மிக்க நன்றி!!

  ReplyDelete
 27. Good choice for tribute to Jedarpalayam saravanakumar!

  ReplyDelete
 28. போங்கு ஆட்டம்..இரவு லேட்டா வரும்னு வந்தா நாம தான் லேட் 66 கமெண்ட் இருக்கு

  ReplyDelete
  Replies
  1. ;-) அதானே. அப்படி கேளுங்க :-)

   அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் கதை விமர்சனம் எழுத ஆரம்பிச்சா இன்னும் நன்றாக இருக்கும் டெக்ஸ் கிட்.

   Delete
 29. "" சர்பத்தின் சவால் "" செம்ம தலைப்பு தலைவரே. தெறிக்க விட்டுடிங்க. ஓவர் நைட்டுல ட்ரீபிள் சென்சுரி அடிச்சிட்டிங்க.
  இதே மாதிரி வருஷத்துக்கு 5 புக் போட்டு தாக்குங்க.

  ReplyDelete
  Replies
  1. அது சரி!

   சர்பத் யாருக்கு சவால் விடும்?

   பன்னீர் சோடா?

   லெமன் சோடா?

   லஸ்ஸி ??

   Delete
  2. ///சர்பத் யாருக்கு சவால் விடும்?///

   ஹாஹாஹா! சூப்பர்!!

   Delete
  3. செனா அனா...

   ஹோ ஹோ ஹோ... :)))))) (இஸ்பைடருக்கு இப்படி சிரிச்சாத்தான் புடிக்கும்!)

   Delete
  4. இல்லை பெப்சி கோலா விற்கு சவாலோ????

   Delete
 30. அப்புறம் இம்மாதத்தின் இந்த ஒற்றை இளம் டெக்ஸ் தொகுப்பு ஓ.கே. தானா ? அல்லது ஒரிஜினலான போனெலி பாணியில் 64 பக்க மாதாந்திரத் தொடர்களாய் வரும் ஆண்டுகளில் முயற்சிக்கலாமா ? உங்கள் அபிப்பிராயங்கள் என்னவோ ? இதோ – இந்த லின்க்கில் போய் உங்கள் ஓட்டுக்களைப் பதிவிடுங்களேன், ப்ளீஸ் : https://strawpoll.com/b1he7fa8x//
  அங்கே அன்னாடமும் அண்டாவை அடுப்புலே அதிகாரிக்காக வெக்க முடியாது .. அதுனாலே மொத்தமா போட்டுட்டீங்கனா கேஸ் சிலின்டரு செலவு ஒரு இத்தினி கம்மியாகும்ன்னு தானுங் ஓட்டு போன்ற எடத்தக்கு போனேன்.. ஆரோ நம்ம ஓட்ட போட்டுட்டு போயிட்டாங்களோ என்னவோ தெரியலீங்க.. அந்த சைட்டு நம்மளையே பல்லை புடிச்சி பார்க்குதுங்க.. அது கெடக்குதுங்க கழுதே.. நாம தா எதுக்கு ஓட்டு போடுவம்ன்னு எல்லாருக்கும் தெரியுமாச்சுங்க.. இதுனாலே சனங்களுக்கு சொல்றது என்னங்கன்னா நாமளும் ஒட்டு போடறதுக்கு முயற்சி பண்ணங்க.. ஆனா ஓட்டு விழுகலைங்க.. அதிகாரி மாச மாசம் வரோன்னு ரமேஷ் ஓட்டு போட்டுட்டான்னு யாரும் நாக்கு மேல பல்லைப் போட்டு நாயம் பேசிறாதீங்க...

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. // இதுனாலே சனங்களுக்கு சொல்றது என்னங்கன்னா நாமளும் ஒட்டு போடறதுக்கு முயற்சி பண்ணங்க.. ஆனா ஓட்டு விழுகலைங்க.. அதிகாரி மாச மாசம் வரோன்னு ரமேஷ் ஓட்டு போட்டுட்டான்னு யாரும் நாக்கு மேல பல்லைப் போட்டு நாயம் பேசிறாதீங்க //

   கும்பிடுகிறேன் ரம்மி சாமியோவ். :-)

   Delete
 31. // JSK இங்கிருந்த போது பார்க்க முடியாது போனதை – அவர் விண்ணிலிருந்து பார்க்கும் போதாவது வெளியிடுவோமே //

  அருமையான முடிவு. JSK வை நினைவு கூறும் வகையில் நல்ல விஷயம். அவர் இருந்திருந்தால் மிகவும் சந்தோஷபடுவார்.

  காமிக்ஸ் நினைவஞ்சலி. 🙏🙏🙏🙏

  ReplyDelete
 32. எதிரிகள் ஓராயிரம் இப்பத்தான் படிச்சு முடிச்சேன்...

  தலைப்பு பற்றிய இவ்வார்த்தைகள் வில்லன் காஃபின் நோக்கி வீசப்படுவது - டெக்ஸ் குறித்து -அல்ல என அறிந்தபோது ஆச்சர்யமே!

  இளம் டெக்ஸை ரிலே ரேஸில் மாதாமாதம் படிச்சு கட்டுப்படியாகாது ..

  டைகர் கதையாக போயிட போவுது...

  ஒரே இதழாக போட்டுடறதுதான் உத்தமம்..
  ReplyDelete
  Replies
  1. எதிரிகள் ஒராயிரம்.. அட்டைகள் எழுநூற்றி சொச்சம்.. கூட ஒரு பாயாசமும்...

   Delete
  2. // இளம் டெக்ஸை ரிலே ரேஸில் மாதாமாதம் படிச்சு கட்டுப்படியாகாது ..

   டைகர் கதையாக போயிட போவுது...

   ஒரே இதழாக போட்டுடறதுதான் உத்தமம்.. //

   +1

   இதே இதே. எனது எண்ணமும் இதுவே.

   Delete
  3. ///
   ஒரே இதழாக போட்டுடறதுதான் உத்தமம்..
   //--++++1000000

   Delete
 33. JSK TRIBUTE ஸ்பைடரை வரவேற்கிறேன்!!!

  ReplyDelete
 34. கிங் கோப்ரா விமர்சனம் அருமை டாக்டர்.. டாக்டர்களும் மஞ்சள் சட்டை போட ஆரம்பிச்சிட்டீங்களோ...??

  ReplyDelete
  Replies
  1. சேச்சே. !!! மாடஸ்டி வாழ்க! நாம இப்படிக்கா போவோம்!!!( வார்த்தைகள் டெம்ப்ளேட் உதவி மேச்சேரி கண்ணன்)

   [ ஹி..ஹி]

   Delete
 35. This comment has been removed by the author.

  ReplyDelete
 36. வணக்கம் சார்...
  இதுவரை தமிழில் வெளிவராத
  ஸ்பைடரின் புத்தம் புதிய "சர்ப்பத்தின் சவால்" சாகஸம், அதுவும் இந்த வருடமே வருகிறது என்ற அறிவிப்பு கொண்டாட்டடமான பால்யங்களுக்கு திரும்ப செய்கிறது... இது தன் எழுத்துக்களால் அனைவரையும் கவர்ந்திட்ட நண்பர் JSK அவர்களுக்கு tribute செய்யும் இதழ் என்றதும் மனம் கனத்து தான் போனது. மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் தரும் இதழ் இது... மிக்க நன்றி சார்... ஆசிரியர் வாசகருக்கு அர்ப்பணிக்கும் இதழ் என்பதே நல்ல முயற்சி... விற்பனையில் நிச்சயமாக சாதிக்கும் என்பதில் ஐயமில்லை...
  சர்ப்பத்தின் சவால்! இப்படியொரு கிளாஸ் தலைப்பு வைக்க ஆசிரியரால் மட்டுமே முடியும். இதழையும் ரசிக்க வைக்கும்படி சிறப்பிப்பார் என்பது நிச்சயம்... மீண்டும் ஒருமுறை நன்றிகள் சார்...

  ReplyDelete
  Replies
  1. இயன்றமட்டிலும் மறக்கவியலா இதழாய் ஆக்கிட முயற்சிப்போம் நண்பரே !

   Delete
 37. கண்ணான கண்ணே:

  ஒரு பெண் குழந்தை மற்றும் அதன் தாயாருக்கும் இடையே உள்ள வசந்த காலமான உறவு. தீடிரென புயல் அடித்து அம்மாவை காணாமல் போகச் செய்கிறது. அதனை அந்த பெண் குழந்தை எப்படி புரிந்துகொள்கிறது, அதனை எப்படி ஏற்றுக்கொள்கிறது என்பதை மனதை கலங்கடிக்கும் கதை.

  அழகான ஓவியங்கள் மிகவும் குறைவான ஆனால் மனதை கனமாக செய்யும் வசனங்கள்.

  இந்த கதையில் வரும் சம்பவங்கள் வாழ்கையில் நடக்கும் உண்மை சம்பவங்களே, அதனை இயல்பு மாறாமல் கொடுத்த கதாசிரியர் பாராட்டுக்குரியவர்.

  க்ளாரா தனது பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்கு வரும் வழியில் நடக்கும் சம்பவங்கள் எனது மகள் play group படிக்கும் போது நடந்த பல சம்பவங்களை ஞாபகப்படுத்தியது. தினமும் மதியம் பள்ளி முடிந்தவுடன் அவள் அம்மாவுடன் ஒரு 10 நிமிடங்கள் நடந்து சென்று பஸ் அல்லது ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு வருவது வழக்கம்; அப்படி வரும் போது வெயில் படக்கூடாது என்று தலையில் கர்சீப் வைத்து கட்டி அவளுக்கு குடை பிடித்து வருது, நடுநடுவே அம்மாவின் இடுப்பில் உட்கார்ந்து வருவது, தாக சாந்தி செய்ய இருவரும் இளநீர் குடிப்பது என இருவருக்குமே அதுவொரு அழகிய நிலா காலம். இன்றும் அந்த நாட்கள் அவர்கள் மனதிற்கு சந்தோஷ சாரல் மழையை கொண்டு வருகிறது.

  க்ளாராவின் அம்மாவை மருத்துவனையில் சேர்ந்த பிறகு தினமும் சென்று பார்க்கும் குழந்தை அம்மாவின் உடல் நலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போவது, ம்ம் எனது அம்மா நான்கு வருடங்களுக்கு முன்னால் சத்தான உணவை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று வாழ்ந்த அவர்கள் உணவின் அளவை குறைத்தது, அடிக்கடி கட்டிலில் முடியவில்லை என்றாலும் உட்கார்ந்து எங்களுடன் பேச விரும்புபவர் தனது பேச்சை குறைத்து, எப்போதும் படுத்து இருப்பது என அவர்களின் ஒவ்வொரு அசைவுகள் குறைந்தது அவர்கள் எங்களை விட்டு போவதற்கு என்பது அவர்கள் இறந்த பிறகு தான் புரிந்தது.

  க்ளாரா அம்மா இறந்த பிறகு அவள் பாட்டி மற்றும் அப்பாவுடன் காரில் செல்லும் சம்பவங்கள் - எனது அம்மாக்கு சரியாகிவிட்டது என நினைத்து பெங்களூர் வந்த மறுநாள் இரவே எனது அம்மா இறந்த செய்தி கேட்டவுடன் குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு காரில் கிளம்பிய நாட்களை அசைபோட செய்தது. எனது மகளுக்கு எனது அம்மாவை (அய்யாம்மா) ரொம்ப பிடிக்கும், 7 வயது குழந்தையிடம் இதனை சொல்ல மிகவும் யோசித்தேன். ஊர் அருகில் வந்த பிறகு அவளிடம் அய்யாம்மாவை சாமிக்கு ரொம்ப பிடித்து விட்டது, எனவே சாமி இனி நான் அவர்களை பார்த்து கொள்கிறேன் என சொல்லி விட்டார் எனவே நாம் ஊருக்கு போய் அய்யாமாவை சாமியிடம் வழி அனுப்ப போகிறோம் என எனது கண்களில் வந்த நீரை மறைக்க முடியாமல் சொல்லி முடித்தேன். எனது 2.5 வயது மகனிடம் அய்யாம்மா தூங்குகிறார்கள் அவர்கள் சாமிகிட்ட போய் தூங்க போகிறார்கள் என சொன்னேன்.ஊர் சென்ற பின்னர் எனது அம்மாவை வைத்து இருந்த பெட்டியை சுற்றி சுற்றி வந்து அய்யாம்மா தூங்குறாங்க என கையை கூப்பிட்டு சொன்னதை மறக்க முடியாது. சில வருடங்களுக்கு அவனிடம் அய்யாம்மா எங்கே என்றால் சாமி தூங்க கூட்டி போய்விட்டார்கள் என்று சொல்வான்.

  க்ளாரா பள்ளியில் இருந்து அம்மாவுடன் சந்தோஷமாக திரும்பி வருவது, அதன் பின்னர் அவளது அப்பாவுடன் வருவது, அதன் பின்னர் அவளது பாட்டியும் வருவது - அந்த குழந்தைக்கு ஏதோ சரியில்லை என உணர்த்துகிறது ஆனால் புரியாத வயது முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை.

  அவள் தாயின் இழப்பை அதனை ஓரளவு புரிந்து கொள்ள செய்ய நடக்கும் அந்த பொம்மிக்காவுடனான பயண sequence அட்டகாசம். மனதில் உள்ள பாரம் வலி குறைய வேண்டும் எனில் கூச்சப்படாமல் அழுது விடவேண்டும் நான் மிகவும் ரசித்த இடம் இது.

  இறப்பின் இழப்பை குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு அழகாக சொல்வது இந்த கண்ணான கண்ணே.

  ReplyDelete
  Replies
  1. கண்களை நீர் திரையிடச் செய்த விமர்சனம் PfB!


   ////மனதில் உள்ள பாரம் வலி குறைய வேண்டும் எனில் கூச்சப்படாமல் அழுது விடவேண்டும் நான் மிகவும் ரசித்த இடம் இது.

   இறப்பின் இழப்பை குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு அழகாக சொல்வது இந்த கண்ணான கண்ணே.////

   அருமை அருமை!! _/\_

   Delete
  2. நல்ல விமர்சனம் பரணி.

   கனமான கதை; கண்ணீர் வரச்செய்யும் இடங்கள் பல!

   Delete
  3. பரணி பிரமாதமான விமர்சனம். அந்த கதையை படிக்கும் போது நம் ஒவவொருவருக்கும் இது போன்ற இழப்புகள் ஞாபகம் வரும். அது தான் அந்த கதையின் வெற்றி.

   Delete
  4. குமார் @ // நம் ஒவவொருவருக்கும் இது போன்ற இழப்புகள் ஞாபகம் வரும். //

   கண்டிப்பாக. இன்னும் நிறைய எழுத உண்டு இந்த கதையை பற்றி, கதை சம்பவங்கள் மற்றும் எனது வாழ்வில் நடந்தவைகளை இணைந்து பின்னொரு நாளில் நேரம் கிடைக்கும் போது பகிர்கிறேன்.

   Delete
  5. இதனை எழுத ஆரம்பித்த போது என்னையறியாமல் எனது வாழ்க்கையில் நடந்த விஷயங்களும் தானாகவே விழ ஆரம்பித்தன. இதனை விமர்சனம் என சொல்வதை விட க்ளாராவுடன் எனது பயணம் எனச் சொல்லலாம்.

   Delete
  6. பெண்பிள்ளைகள் வைத்திருப்போர் அத்தனை பேருக்குமே இந்தக் கதை ஒரு மிடறு கூடுதல் உணர்வுபூர்வமாய் இருக்குமென்பதை புரிந்து கொள்ள முடிகிறது சார் !

   Delete
 38. உள்ளே வந்தாச்சு !

  ReplyDelete
 39. This comment has been removed by the author.

  ReplyDelete
 40. This comment has been removed by the author.

  ReplyDelete
 41. தன்னுடைய நெடுநாள் வாசகரும், நம்முடைய அன்பு நண்பருமான JSK அவர்களுக்காக, ஆசிரியர் எடுத்துள்ள இந்த முடிவில் பெருந்தன்மையை தவிர வேறந்த வியாபார நோக்கமும் தெரியவில்லை.

  Hats Off to you EDI சார்... 🤝🏻🤝🏻🤝🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  இதுபோன்ற தருணங்களே என்னுடைய காமிக்ஸ் ஆர்வத்தையும், தங்கள் குழுமத்தின் மேல் இருக்கும் பெரும் இப்ப இவையும் குன்றாமல் வைத்துள்ளன...

  மீண்டும் ஒரு நன்றியுடன் விடை பெறுகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼

  ReplyDelete
 42. ஸ்பைடர் படை வாட்ஸ்அப் குழுவில், அண்மையில் இந்த கதையின் ஆங்கில படத்தை ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார். அதை பார்த்த போது, இந்த கதை என் கைகளில் என்று தவழுமோ என நினைத்தேன்...

  நினைத்தேன் வந்தாய்😍

  ReplyDelete
  Replies
  1. இது என்ன ஜுஜுப்பி சார் ..The Sinister Seven-ன்னு இன்னொண்ணு காத்திருக்குது பாருங்க !!

   Delete
 43. நண்பருக்காக வெளிவரும் ஸ்பைடரின் இதழை மகிழ்வுடன் வரவேற்கிறேன்.

  நண்பரின் ஆன்மா மிகவும் மகிழ்வுறும் என்பது உறுதி...

  ReplyDelete
 44. இளம் டெக்ஸ் கண்டிப்பாக தொகுப்பாகவே வெளியிடுங்கள் சார்...இந்த எதிரிகள் ஓராயிரத்தை தாங்கள் மாதா மாதம் வெளியிட்டு இருந்தால் இந்த மாத எனது இரண்டரை மணி நேர கெளபாய் உலகில் உலவ முடிந்து இருக்குமா...அதே போல் நான்கு பாகங்களும் திடீர் தடை போல் அந்தரத்தில் நிற்கது போலவே இருந்திருக்கும்..சிறிய பக்க அளவுகளும் தொகுப்பு அளித்த மகிழ்ச்சியை அளித்திருக்காது.

  எப்படி பார்த்தாலும் தொகுப்பே சிறப்பு.

  முதலில் நான் வாக்கை செலுத்தி விட்டு வருகிறேன் ..

  ReplyDelete
 45. வாவ்...இப்பொழுது தான் வாக்கை செலுத்தி விட்டு முடிவை பார்க்கிறேன்...தொகுப்பை தவிர மற்ற வாக்காளர்கள் டெபாசிட் காலியாக கிடைக்கிறார்கள்..  இது சமயம் ஆசீரியருக்கு ஓர் வேண்டுகோள் இல்லை எச்சரிக்கை எனவும் பொருள் கொள்ளலாம்.


  முன்னரின் வாக்கெடுப்பை போல வெற்றி பெற்ற முடிவை பிற காரணங்களுக்காக மாற்றி அமைத்தது போல இந்த முடிவை தயவு செய்து மாற்றம் செய்து விடாதீர்கள் சார்.அப்படி மட்டும் நடந்து விட்டால் இனி நான் வாக்களிக்கா சிறுவன் ஆகி விடுவேன் என்பதை அறுதியிட்டு கூறுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. // முன்னரின் வாக்கெடுப்பை போல வெற்றி பெற்ற முடிவை பிற காரணங்களுக்காக மாற்றி அமைத்தது போல இந்த முடிவை தயவு செய்து மாற்றம் செய்து விடாதீர்கள் சார்.அப்படி மட்டும் நடந்து விட்டால் இனி நான் வாக்களிக்கா சிறுவன் ஆகி விடுவேன் என்பதை அறுதியிட்டு கூறுகிறேன். //

   தலைவரே நானும் உங்கள் வழியே.

   Delete
  2. இல்லீங்கோ தலீவரே... இந்தவாட்டி மொத்தத்தின் தீர்ப்பே நம் பாதை !

   Delete
  3. // இல்லீங்கோ தலீவரே... இந்தவாட்டி மொத்தத்தின் தீர்ப்பே நம் பாதை ! //

   நீங்கள் அட்டவணையை அறிவித்த பின்னர் தீர்ப்பை உறுதி செய்கிறோம் சார் :-) இல்ல இல்ல புத்தகங்கள் கைகளில் வந்த பிறகு உறுதி செய்து விடலாம் சார் :-)

   Delete
 46. ////Oh yes – இன்னமுமே சிலபல புதுக்கதைகள் லா.டே சாகஸங்களைத் தாங்கி நிற்கின்றன தான் ! But இப்போதைக்கு ; அடுத்த சில ஆண்டுகளுக்காவது இவர்களுக்கு இடங்களை மனதில் மட்டுமே தந்திட நினைத்துள்ளேன் ! ////


  ஸோ சேடு, எடிட்டர் சார்!! இந்தமாத லக்கியை விட நான் அதிகம் சிரித்து மகிழ்ந்தது - மீண்டும் கிங் கோப்ரா'வே! அப்படியாபட்ட கதைகளுக்கு 'மனதில் மட்டும் இடம்'என்பது மனதை கனக்கச் செய்கிறது!

  ஸோ சேடு!! :(

  ReplyDelete
  Replies
  1. ரைட்டு... மிச்சக் கதைகளையும் வாங்கிடணும் போலிருக்கே !!

   Delete
 47. First time ever the announcement of Spider's story makes me sad sir. RIP JSK. And your consideration for readers is really moving.

  ReplyDelete
 48. இம்மாத ரேட்டிங்:

  1.பொன் தேடிய பயணம் ..

  நிஜ wild west பின்னணி உடன் வந்த சிறந்த கதை .. அந்த கூரியர் பார்ட்டி ,அந்த தராசு அம்மணி ,கனடா போலீஸ்காரர் ரசிக்கத்தக்க கதாபாத்திரங்கள் .. உங்கள் மொழி பெயர்ப்பு made it even better sir .. 9.5/10 ..

  2. எதிரிகள் ஓராயிரம் :

  இன்னொரு இளம் TEXன் தாண்டவம் .. தலைப்பிற்கு ஏத்த மாறி எதிரிகள் வந்துட்டே இருக்காங்க கதை fulla .. I.M.O YOUNG TEX LOOKS MORE FLAMBOYANT THAN THE ELDER .. எங் TEXஐ பிரித்து போட வேணாம் சார் .. 9/10 ..

  3.கௌபாய் கலைஞன்:

  "பொன் தேடிய பயணம்" போல STRONG PLOT இல்ல .. இருந்தாலும் ரசிக்க வைத்தது .. இதற்கும் மொழிபெயர்ப்பு பலம் .. தனியாக வந்து இருந்தால் இன்னும் SCORE செய்திருக்கும் .. IF POSSIBLE INCREASE COMEDY SLOTS NEXT YEAR SIR .. 8.5/10 ..

  //குற்றச் சக்கரவர்த்தி ஸ்பைடர் மறுவருகை செய்கிறார் – ஒரு புத்தம் புதிய சாகஸத்துடன்! “சர்ப்பத்தின் சவால் !!”
  JSK – இது உங்களுக்காக !//

  NICE GESTURE FROM U SIR .. I DONT KNOW WHETHER ANY OTHER PUBLISHER WOULD THINK ABOUT THEIR READERS LIKE THIS ..

  ReplyDelete
  Replies
  1. ///NICE GESTURE FROM U SIR .. I DONT KNOW WHETHER ANY OTHER PUBLISHER WOULD THINK ABOUT THEIR READERS LIKE THIS ///

   நெவர்!!

   Delete
  2. // I DONT KNOW WHETHER ANY OTHER PUBLISHER WOULD THINK ABOUT THEIR READERS LIKE THIS .. //

   இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.

   Delete
 49. நண்பர் JSKவுக்கான இந்த tribute உங்களிடமிருந்து எதிர்பார்த்த ஒன்றுதான் எடிட்டர் சார்! ஆனால், இத்தனை சீக்கிரத்தில் அல்ல!!

  நண்பர் குணாவின் கூற்றுப்படி JSK கடைசியாகப் படித்ததும் ஒரு ஸ்பைடர் கதையே எனத் தெரியவரும்போது உங்களின் இந்த அறிவிப்பு இன்னும் மேன்மையடைந்ததாய் தெரிகிறது!

  'சர்ப்பத்தின் சாபம்' - கதையைப் படிக்கநேரிடும்போது அதன் ஒவ்வொரு பக்கத்திலும் JSKவின் சிரித்த, நட்பான முகமே தோன்றி மறையும்!

  ReplyDelete
  Replies
  1. சர்ப்பத்தின் சாபம், பெளன்சர் கதையாச்சே. கிங் கோப்ரா படிச்சதுல ரொம்பவே காப்ரா ஆயிட்டீங்க போலிருக்கே ஈவி

   Delete
  2. இந்த கதையின் பெயர் "சர்ப்பத்தின் சவால்" விஜய். ஹி ஹி :-)

   Delete
  3. ஹீஹீ! லாரன்ஸின் கடிகாரத்திலிருந்து வெளியேறிய விஷவாயு என்னையும் கொஞ்சம் பதம் பார்த்துடுச்சு போல!! :)

   Delete
 50. //குற்றச் சக்கரவர்த்தி ஸ்பைடர் மறுவருகை செய்கிறார் – ஒரு புத்தம் புதிய சாகஸத்துடன்! “சர்ப்பத்தின் சவால் !!”
  JSK – இது உங்களுக்காக !//

  நான் அறிந்தவரையில், தமிழ் புத்தக வரலாற்றில் முதன்முறையாக ஒரு வாசகருக்காக, அஞ்சலி செலுத்தும் வகையில் வெளியிடப்படும் புத்தகம் இது தான் என்று நினைக்கிறேன்.
  நன்றே செய்க; அதையும் இன்றே செய்க. என்னும் வாக்கு உங்களால் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி இருக்கிறது.
  Editor sir, you are entirely different from others for your thinkings and decidings. hatsoff to you sir.

  ReplyDelete
  Replies
  1. அருமையா சொன்னீங்க பத்து சார்!! தேடினாலும் கிடைக்காது - இப்படியொரு எடிட்டரை!!

   Delete
  2. // நன்றே செய்க; அதையும் இன்றே செய்க. என்னும் வாக்கு உங்களால் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி இருக்கிறது. //

   // தேடினாலும் கிடைக்காது - இப்படியொரு எடிட்டரை!! //

   உண்மையான வரிகள்.

   Delete
  3. // நான் அறிந்தவரையில், தமிழ் புத்தக வரலாற்றில் முதன்முறையாக ஒரு வாசகருக்காக, அஞ்சலி செலுத்தும் வகையில் வெளியிடப்படும் புத்தகம் இது தான் என்று நினைக்கிறேன். //
   உண்மை,உண்மை,எவ்வளவு சாத்துகள் வாங்கினாலும் அவற்றை மனதில் கொள்ளாமல் இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் ஆசிரியரை தேவையில்லாமல் விமர்சிப்போர் மனதில் கொள்ள வேண்டும்....

   Delete
  4. // தேடினாலும் கிடைக்காது - இப்படியொரு எடிட்டரை!! //---

   ஒவ்வொரு ரசிகரையும் தங்களது குடும்ப உறுப்பினராகவே கருதும் எடிட்டரால் மட்டுமே இது சாத்தியம். உங்களது அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது எடிட்டர் சார்.

   Delete
  5. // ,எவ்வளவு சாத்துகள் வாங்கினாலும் அவற்றை மனதில் கொள்ளாமல் இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் ஆசிரிய //

   நமது ஆசிரியரால் மட்டுமே முடியும்.

   Delete
  6. சார் ..மூச்சுக்கு முன்னூறுவாட்டி "காமிக்ஸ் குடும்பம் " என்று நாமெல்லாமே உச்சரிப்பது வார்த்தை ஜாலங்களின் பொருட்டல்ல தானே ! அப்படியிருக்க, முழுசாய் ஒரு மனுஷனை ; அதுவும் 45 வயதினிலேயே நோயிடம் பறிகொடுத்து விட்டு சும்மா இருக்க முடியாதே ?! என்னிடத்தில் யார் இருந்திருப்பினும் இதையே செய்திருப்பர் என்பது உறுதி !

   Delete
 51. /// ஸோ சேடு, எடிட்டர் சார்!! இந்தமாத லக்கியை விட நான் அதிகம் சிரித்து மகிழ்ந்தது - மீண்டும் கிங் கோப்ரா'வே! அப்படியாபட்ட கதைகளுக்கு 'மனதில் மட்டும் இடம்'என்பது மனதை கனக்கச் செய்கிறது!

  ஸோ சேடு!! ///

  எடிட்டர் மைண்ட்வாய்ஸ்: பய புள்ளைக ... கார்ட்டூன் கதைய போட்டா ரசிக்க மாட்டேங்குறாங்க. லாரன்ஸ், டேவிட் கதைய போட்டா சிரிச்சு . மாளள்லேங்குறாங்க.சரின்னு ஸ்பைடர் கதைய போட்டா எனக்கு ரொம்ப நல்ல மனசுங்குறாங்க. இவனுங்கள் புரிஞ்சுக்கவே முடியல்லியே.
  ஏம்ப்பா..நெஜத்துல நீங்க நல்லவரா..இல்ல கெட்டவரா..

  ReplyDelete
  Replies
  1. இந்த சிந்தனை ஆசிரியர் மனதில் கண்டிப்பாக ஓடிக்கொண்டிருக்கும். :-)

   Delete
  2. பத்து சார் ..என் மைண்ட் வாய்ஸ் அவ்ளோ உரக்கவா கேட்டுப்புடிச்சி ?

   Delete
  3. நீங்கள் மைண்ட் வாய்ஸ் என சத்தமாக பேசிவிட்டீர்கள் சார். :-)

   Delete
 52. // Black & White-ல்; ஒரு vintage ஸ்பைடர் சாகஸத்துடன் ; பெரிய சைஸில் ரூ.90/- விலையில் ஒரு மினி collector’s இதழாய் – நண்பர் JSK-க்கொரு சன்னமான tribute ஆக வெளிவந்திடும் //
  நல்லது சார்,நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீள்வருகை புரியும் வலைமன்னன் ஸ்பைடர் அவர்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

  ReplyDelete
 53. அடுத்த மாத இதழ்களையாவது (ஆகஸ்ட்) கொஞ்சம் முன்னரே களமிறக்கும் எண்ணமுள்ளதா சார்,ஆகஸ்டு புத்தக விழா இல்லாத குறையை முதல் வாரத்தில் இதழ்களை அனுப்பி தீர்க்க இயலுமா சார் ???

  ReplyDelete
  Replies
  1. Aug 10 sir...கடைகளில் விற்றிட அவகாசம் தேவையே ?!

   Delete
  2. 15 க்குப் பதிலாக 10 மாற்றம் மகிழ்ச்சியே சார்,விரைவில் 05,01 என்று மாற்றம் கண்டு முன்னேற்றம் காண ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சார்......

   Delete
 54. /// அது இல்லையென்று ஆன பிற்பாடு – ஒரே குண்டு புக்காய்த் திரட்டி, “எதிரிகள் ஓராயிரம்” இதழை ஆகஸ்டில் வெளியிடுவது தான் திட்டம் ! அதே ஆகஸ்டில் Surprise இதழாய் - டெக்ஸ் # 700 ஆக வெளியான (ஓவியர் சிவிடெலியின்) Pawnee’s Gold ஆல்பத்தையும் கலரில் போட்டுத் தாக்கவே எண்ணியிருந்தேன்////

  ---அட டா!!! வடை போச்சே!

  அதுவும் கலர் வடை!

  ReplyDelete
 55. // அப்புறம் இம்மாதத்தின் இந்த ஒற்றை இளம் டெக்ஸ் தொகுப்பு ஓ.கே. தானா ? அல்லது ஒரிஜினலான போனெலி பாணியில் 64 பக்க மாதாந்திரத் தொடர்களாய் வரும் ஆண்டுகளில் முயற்சிக்கலாமா ? //
  இளம் டெக்ஸை பொறுத்தவரை குண்டுபுத்தகங்களாக வெளியிடுவதே சிறந்த முடிவு,ருசி குறையாத பிரியாணி அப்போதுதான் கிடைக்கும்,மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குண்டு ஸ்பெஷலாக வெளியிடலாம்,எந்த தடத்தில் வெளியிடுவது என்பது தங்களின் முடிவுதான் சார்,
  உத்தரவாதமான விற்பனை,பெரும்பாலான வாசகர்களை திருப்தி அடையச் செய்யும் நாயகரின் களம்,இந்த காரணங்கள் போதாதா வெளியிட......

  ReplyDelete
 56. ///அப்புறம் இம்மாதத்தின் இந்த ஒற்றை இளம் டெக்ஸ் தொகுப்பு ஓ.கே. தானா ? அல்லது ஒரிஜினலான போனெலி பாணியில் 64 பக்க மாதாந்திரத் தொடர்களாய் வரும் ஆண்டுகளில் முயற்சிக்கலாமா ? உங்கள் அபிப்பிராயங்கள் என்னவோ//

  இந்த தொகுப்பு பாணி ரொம்பவே ஓகே சார்.


  தனித்தனியாக வெயிட்டிங் பண்ணி படிப்பதெலாம் இனி நம்மால முடியாது.

  4பாகங்களோ, 5 பாகங்களோ-- இப்படி செட் செட்டாவே போடுங்க!

  குண்டு மாங்கா நல்லது!

  "குண்டு" புக்கும் நல்லதே!

  ReplyDelete
  Replies
  1. வோட்டெடுப்பின் நிலவரத்தை இப்போது தான் பார்த்தேன் - எண்பது சதவிகிதம் ஒரே புக்குக்கு !

   பாயச பட்டியல் - ஹி ..ஹி ..!

   Delete
 57. விஜயன் சார், JSK காமிக்ஸ் காதல் மலர்:

  நமது குடும்பம் காமிக்ஸ் குடும்பம் என்பதை மீண்டும் நிரூபணம் செய்து உள்ளீர்கள் சார். இது போன்ற பல நல்ல விஷயங்கள் நமது காமிக்ஸ் உறவை மேலும் மேலும் பலப்படுத்துகிறது. இந்த தளத்தின் மூலம் நண்பர்கள் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் தவறாமல் நாம் பங்கேற்பது தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல நிகழ்வுகளாய் தொடரட்டும் சார் & அவற்றினில் ஈடுபடும் வரம் கிட்டட்டும் ! போதும் ஒரு இழப்பு !

   Delete
  2. //
   நல்ல நிகழ்வுகளாய் தொடரட்டும் சார் & அவற்றினில் ஈடுபடும் வரம் கிட்டட்டும் ! போதும் ஒரு இழப்பு ! //

   உங்கள் எண்ணத்திற்கு நானும் உடன்படுகிறேன் சார்.

   Delete
 58. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. வெள்ளிக்கிழமை வந்த இம்மாத புத்தகங்களை சுமார் 45மணி நேர தனிமைபடுத்தலுக்கு பிறகு இப்போது புரட்ட ஆரம்பித்து உள்ளேன்.

   ஆண்டு மலரின் அட்டைப்படம் அருமை, கலர் காம்பினேஷன் படங்களின் வடிவமைப்பு மற்றும் கொடுக்கபட்ட பலவகையான மேட் பினிசிங் அட்டகாசம்.

   மி.கி.கோ அட்டைப்படம் செம.

   எதிரிகள் ஓராயிரம் அட்டைப்படம் சிம்ளி சூப்பர் சார். எனக்கு இந்த கச்சிதமான புத்தக சைஸ் மிகவும் பிடித்து உள்ளது. இதே சைசில் சந்தா - D யில் வரும் இதழ்களை அதன் எழுத்துக்களை பெரியதாக்கி தர வாய்ப்புகள் (பட்ஜெட் எல்லாம் சரிப்படும் என்றால் மட்டும்) இருந்தால் செய்யுங்கள் சார்.

   Delete
  2. நடப்பாண்டில் இதே சைசில் தொடரட்டும் சார் ; ஆண்டின் இறுதியில் ஒரு கருத்துக் கணிப்பு + தீர்மானம் !

   Delete
  3. ஓகே. நான் கேட்பது அடுத்த வருடத்திற்கு தான் சார்.

   Delete
 59. எதிரிகள் ஓராயிரம் நேற்று தான் முடித்தேன். Super. முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை செம விறுவிறுப்பு. கருப்பு வெள்ளையில் மிரட்டும் சித்திரஜாலம். எனவே இளம் டெக்ஸ் கதைகள் தொகுப்பாக வருவதற்கே என் ஓட்டு. லக்கி, கிங் கோப்ரா இனிமேல்தான்.

  ஒரு சின்ன டிஸ்பியூட்..
  கிங் கோப்ராவை கலாய்ப்போர்க்கு.

  ப்ளைட் 731,மஞ்சள் பூ மர்மம், விண்ணில் மறைந்த விமானங்கள், காற்றில் கரைந்த கப்பல்கள், தலை கேட்ட தங்கப் புதையல்.. (மூச்சு வாங்குது)..இன்னும் பல சிறந்த கதைகளை தந்தது இந்த ஜோடி...
  (லா/டே : அப்டி போடு அருவாள ..)
  ..என்னும் போது இந்தக் கதையில் என்ன தவறு?
  (லா/டே: அதானே..). பல ஆக்ஷன் படங்களில் நடித்த எம் ஜி ஆர் சபாஷ் மாப்ளே, அன்பே வா என்று காமெடி கலந்த படங்களில் கலக்கவில்லையா? சிவாஜி கலாட்டா கல்யாணம், ஊட்டி வரை உறவு என காமெடியில் கலந்து கட்டி அடிக்கவில்லையா? So...(லா/டே: ஙே... அடப்பாவி மனுஷா..இவன் நமக்கு சப்போர்ட் பண்றானா? இல்லே..இவனும் கலாய்க்குறானா புரியலயே.) ..எடி சார். நீங்களே நியாயம் சொல்லுங்க..
  எடி: ஐயோ..இவன் என்ன நம்ம பக்கம் திருப்புறான்..
  இவங்க நம்மளயே கழுவி கழுவி ஊத்துவானுங்க. இதுல இது வேறயா.. தம்பீ.. நான் எடிட்டர் , பப்ளிஷர் மட்டுமே.தீர்ப்பு வாசகர்கையில். Readers are the real justice. so dispute willbe dismissed or discharged by themselves only.so.. நீங்க அவங்க கிட்டயே கேளுங்க.(அப்பாடி..கிரேட் எஸ்கேப்.).
  (லா/டே: சாமி..நீ ஆணியே புடுங்க வேணாம். ஆள விடு.. உனக்கு அவுங்களே பரவால்ல..) .So.நான் என்ன சொல்றேன்னா...
  வாசகர்கள் (கோரஸாக): எடிட்டர் சார்..இந்த பதிவ அழிச்சிட்டு வேற பதிவு போடுங்க..ப்ளீஸ்..

  ReplyDelete
  Replies
  1. பத்மனாபன் சார்.. சிரிச்சு மாளல.. செம டைமிங்.. 🤣🤣🤣🤣

   Delete
 60. லாரண்ஸ் & டேவிட்டை பார்த்ததே சந்தோஷம் படித்தது அதைவிட சந்தோஷம் யார் எதிர்மறை விமர்சனம் செய்தாலும் என்னை பொறுத்தவரை KING கோப்ரா WIN கோப்ராவே

  ReplyDelete
 61. //இப்போதைக்கு ; அடுத்த சில ஆண்டுகளுக்காவது இவர்களுக்கு இடங்களை மனதில் மட்டுமே தந்திட நினைத்துள்ளேன் !

  உங்க மனசு ஹவுஸ்புல்லே ஆவாதா ஆசிரியரே ஏற்கனவே இரட்டை வேட்டையர். நார்மன்.அதிரடிப்படையினர்.பேட்மேன் போன்ற நிறைய ஹீரோக்கள் உங்கள் மனதில் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்

  ReplyDelete
  Replies
  1. லேடி S ; ஜூலியாவையெல்லாம் மறந்துப்புட்டீங்களே சத்யா !

   Delete
 62. My comments are only jovial thoughts. No negative comments for any books came from lion and Muthu banner. Because the one and only comics in tamil is ours.so no negative views will post by me.its sure.

  ReplyDelete
  Replies
  1. உங்களைப் புரிந்துகொள்ளாதவர்களுக்கு இதுபோல நீங்கள் எத்தனை disclaimer போட்டாலும் அது பிரயோஜனப்படாது பத்து சார்!

   உங்களைப் புரிந்துகொண்டவர்களுக்கு இந்த disclaimer ஒருமுறைகூட தேவையேயில்லை!

   எனவே, எங்களுக்கும் இது தேவையில்லை!! _/\_

   Delete
  2. சமயத்துல எனக்கு சங்கிலிமுருகன் மாதிரி சந்தேகம் வந்துடும். ( default ஆகவும் இருக்கலாம்) ஏம்பா நாம கரெக்டாதானே காமண்ட் போட்டுட்டு இருக்கோமுன்னு. அதை Clarify பண்ணிக்கவே this disclaimer.

   Delete
  3. எங்களுக்கும் இது தேவையில்லை பத்மநாபன்.

   Delete
  4. நாமெல்லாம் disclaimer டிசைனிலே வளர்ந்தவங்க பத்து சார் ; தானா வந்திடும் !

   Delete
 63. /// இளவரசி தேஷாவின் பங்கேற்புடனான முழுவண்ண டெக்ஸ் ஆல்பம் நடப்பாண்டின் ஈரோட்டு surprise ஆக வெளிவந்திருக்க வேண்டிய சமாச்சாரம் ! ///

  சார் சத்தியமா சொல்றேன்.. அந்தக் கொரனோ மட்டும் என் கைல மாட்டுச்சுன்னு வச்சுக்கங்க.. அதன் கழுத்தைப் பிடிச்சு கடிச்சே கொன்னுபிடுவேன்! கிர்ர்ர்ர்..

  ReplyDelete
 64. நம்ம குரூப்க்கு நாலு பேரு ஓட்டு போட்டுட்டாங்களே!

  சுலோ சைக்கிள் ரேஸ் மாதிரி குறைவான ஓட்டு வாங்கியவரே வெற்றி பெற்றதாக எடிட்டர் அறிவிக்க வேண்டும்!

  பாயாசம் வெல்க!

  ReplyDelete
  Replies
  1. ஆனாலும் உங்க அணி NOTA-வுக்கே tough குடுக்கும் போலிருக்கே சார் !

   Delete
 65. ///So தேஷாவைக் கலரில் காண 2021 வரை காத்திருக்க வேண்டி வரும் !///

  காத்திருந்து காத்திருந்து
  காலங்கள் போகுது தேஷா..
  பூத்திருந்து பூத்திருந்து
  பூனைவிழி நோகுது தேஷா..
  நேத்துவரை சேர்த்துவச்ச
  பெம்மிக்கன் வேகுது தேஷா..
  நீ கொடுத்து நான் தின்னுட்டா
  நிம்மதியாகும் தேஷா...

  ReplyDelete
  Replies
  1. தேசா ரொம்பவும் பாதிச்சிட்டாளோ....!!!

   Delete
  2. தேஷா 'தல'யோட தங்கச்சி முறைன்னு நினைவிருக்கட்டும் ; சில்லுமூக்குகள் ; தாவாங்கட்டைகள் ஜாக்கிரதை !

   Delete
  3. /// தேசா ரொம்பவும் பாதிச்சிட்டாளோ....!!!///
   ல்..ல்..லேசா...

   Delete
  4. /// நீ கொடுத்து நான் தின்னுட்டா
   நிம்மதியாகும் தேஷா///
   பதிலுக்கு டெக்ஸ் :
   நான் கொடுத்து நீ வாங்குனா
   பெயர்தந்திடும் சில்லுமூக்கு..

   Delete
  5. தேஷா 'தல'யோட தங்கச்சி முறைன்னு நினைவிருக்கட்டும் ;

   எங்க தலைக்கு என்ன சார் இவளோ தங்கைகள் பட்டாளம்? மக்கள் திலகம் படம் பார்க்கிற மாதிரி இருக்கு. அவருக்காவது ஒரு ஜெயலலிதா அல்லது சரோஜா தேவி ஹீரோயின் ஆக பிக்ஸ் பண்ணிருப்பாங்க, மீதி பேர் எல்லாம் தங்கை. இங்கே டெக்ஸ்க்கு ரொம்பவே அநியாயம் நடக்குது.

   Delete
  6. ///எங்க தலைக்கு என்ன சார் இவளோ தங்கைகள் பட்டாளம்? ///
   ///இங்கே டெக்ஸ்க்கு ரொம்பவே அநியாயம் நடக்குது.///


   ஆமாங் சார்! பொனெல்லிட்ட சொல்லி தல'க்கு ஒரு தலீ'யை ரெடி பண்ணச் சொல்லுங்க சார்! கதையெல்லாம் ரொம்ப dryயா போறமாதிரியே ஒரு ஃபீலிங்கு!

   Delete
 66. காமிக்ஸ் கதைகள் குறித்து JSK அவர்கள் எழுதும் எழுத்துக்கள் மிக அழகானவை. நேரடி பரிச்சயங்கள் இல்லாத போதும் அனைவருக்கும் பிடித்த ஒரு மனிதராக வாழ்ந்த, டெக்ஸ்-ஸ்பைடர் மீது அதிக ஈடுபாடு வெளிக் காட்டிய அந்த நல்ல மனிதர் நினைவாக ஸ்பைடர் கதையொன்றை வெளியிட்டு அவருக்கு தாங்கள் செய்யும் மரியாதைக்கு காமிக்ஸ் நண்பர்கள் அனைவரினதும் நன்றிகளும் சல்யூட்களும் உரித்தாகட்டும்.

  ReplyDelete
  Replies
  1. அவர் இருந்த போதே செய்திருக்க வேண்டியது....!!

   Delete
 67. எதிரிகள் ஓராயிரம்!

  பக்கம் 100

  "அந்தக் கிறுக்குப் பயல் கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிவதை வழக்கமாகக் கொண்டவன் போலும்!"

  சூப்பர்! சூப்பர்!!

  ReplyDelete
  Replies
  1. 100 பக்கங்களை மெய்யாலுமே படித்தீர்களா - இல்லாங்காட்டி நேராய் நூறாம் பக்கத்தைப் புரட்டினீர்களா சார் ?

   Delete
  2. டெய்லி 30 பக்கம் வீதம் மெய்யாலுமே 2 பாகம் முடிச்சாச்சாசுங்கோ!

   Delete
  3. ஏன் உங்கள் குடும்ப டாக்டர் டெய்லி 30 பக்கம் தான் படிக்க வேண்டும் என சொன்னாரா மிதுன் :-)

   Delete
  4. 200+ பக்க டெக்ஸ் வரும்போதெல்லாம் 1 வாரம் நல்ல தூக்கம் கெரண்டி!!!😴😴😴

   Delete
 68. விஜயன் சார்,

  //
  “சர்ப்பத்தின் சவால் !!”

  Black & White-ல்; ஒரு vintage ஸ்பைடர் சாகஸத்துடன் ; பெரிய சைஸில் ரூ.90/- விலையில் ஒரு மினி collector’s இதழாய் – நண்பர் JSK-க்கொரு சன்னமான tribute ஆக வெளிவந்திடும் ! நமது விற்பனையாளர்களுள் ஆர்வப்படுவோர் மட்டுமே இதனை வாங்கிடுவர் //

  இந்த புத்தகத்திற்கு பணம் அனுப்பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தால் இதனை செப்டம்பர் மாத இதழ்களோடு இணைத்து சந்தாதாரர்களுக்கு அனுப்ப முடியுமா சார்?

  ReplyDelete
  Replies
  1. நாளை ஒரு ஆன்லைன் லிஸ்டிங் இருந்திடும் சார் - முன்கூட்டியே ஆர்டர் செய்து கொள்ள வசதியாய் !

   Delete
  2. I'm also interested in pre ordering. Count me in.

   Delete
  3. // நாளை ஒரு ஆன்லைன் லிஸ்டிங் இருந்திடும் சார் - முன்கூட்டியே ஆர்டர் செய்து கொள்ள வசதியாய் ! //
   அடடே,சூப்பரு......

   Delete
 69. சார்.. சர்ப்பத்தின் சவாலில் வரயிருப்பது குற்றச் சக்கரவர்த்தியா, நீதிக்காலவனாங் சார்?

  அந்த ட்ரெயிலரைப் பார்த்தால் 'கு.ச'னுதான் தோனுது!

  ReplyDelete
  Replies
  1. எந்த அவதாராய் இருந்தாலுமே "கு.ச." உத்திரவாதம் ஆச்சே சார் !

   பி.கு : "கு.ச." = கும் ..சத்..!

   Delete
 70. எதிரிகள் ஓராயிரம்!

  1 - 3 பாகம் வழக்கம் போல! 😴😴😴

  4ஆம் பாகம் - நாலுகால் பாய்ச்சல்!!
  🐎🐎🐎🐎 🐴🐴🐴🐴

  பாகம் 4 : 9/10
  (முழு வண்ணத்தில் வந்திருந்தால்) 10/10

  ReplyDelete
 71. XIII முன்பதிவு நிலவரம் எப்படி உள்ளது சார்?

  ReplyDelete
 72. ஆர்டினி : பாஸ்! தமிழ்நாட்டில் இருந்து நமக்கு அழைப்பு வந்துள்ளது, இம்முறை நமது சாகச பயணம் உங்கள் ரசிகர் ஒருவரின் நினைவை போற்றும் வகையில் அமைய வேண்டுமாம்.

  ஸ்பைடர்: புரபஸர்! ஹெலி காரை தயார் படுத்துங்கள், என் மீது பாசம் வைத்திருந்த எனது ரசிக கண்மணிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு இந்த சாகசத்தை தெறிக்க விடுவோம்.

  பெல்ஹாம்: அருமை அப்படியே ஆகட்டும் ஸ்பைடர்!

  இந்த கதையை இரு வண்ணத்தில் வெளியிட வாய்ப்பு உண்டா சார்???

  ReplyDelete
 73. நண்பர்களே இந்த மாதம் வெளிவந்த லக்கிலுக்

  கதையில் பயன்படுத்தப்பட்ட பேப்பரின் தரம்
  மிகவும்மெலிதாக உள்ளது

  இது எனக்கு மட்டும் தானா

  இல்லை எல்லோருக்கும் இதுபோன்ற உள்ளதா

  உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்

  ReplyDelete
 74. எதிரிகள் ஓராயிரம்!!!

  9/10


  சட்டத்தால் துரத்தப்படும் குற்றவாளியாக டெக்ஸ்!!

  அனுபவமின்மை காரணமாக பல இடங்களில் அல்லல்பட நேரிடுவது கதையின் இயல்பான போக்கை காட்டுகிறது..

  இடர்வரப்போகிறது என்ற உள்ளுணர்வு இன்னும் கைவரப் பெறவில்லை...

  இளமையின் வேகம் இருக்கிறது..பின்னாளில் நாம் காணப்போகும் எச்சரிக்கை உணர்வுகளும்,விவேகமும் கூடிவரவில்லை.

  இது கதையின் பலத்தை அதிகரிக்க செய்கிறது..  ReplyDelete