Powered By Blogger

Saturday, July 11, 2020

ஒரு 60 நாளின் ஆராய்ச்சி !!

நண்பர்களே,

Disclaimer : ஏற்கனவே சிலபல முந்தைய பின்னூட்டங்களில் படித்த அதே சமாச்சாரத்தின் மறுஒலிபரப்பாய்  இப்பதிவு ஆங்காங்கே தென்படக்கூடும் தான் ! Over a regular period of time - நம் ரசனைகளை review செய்திடுவது நடைமுறை எனும் பொழுது, கிட்டிடும் விடைகள் ஒன்றாகவே இருப்பின், அவை சார்ந்த அலசல்களிலும் பெரிதாய் மாற்றங்கள்  இராது என்ற முன்கூட்டிய புரிதலுக்கு கம்பெனியின் முன்கூட்டிய நன்றிகள் !  

வணக்கம். எவ்போவேணும் இது போன்ற ‘பு.வெ.கொ.மு.‘ தருணங்களில் மாட்டும் போது தான், என்ன எழுதுவதென்ற குழப்பம் தலைதூக்கும்! ஓரிரு நாட்கள் முந்தியிருக்க முடிந்தால் – ‘பு.வெ.கொ.பி.‘ என்பதைக் காரணம் காட்டி, உங்கள் அலசல்களுக்காக வெயிட்டிங் என்று கம்பி நீட்டியிருக்க முடிந்திருக்கும் ! அதென்ன புது சைனீஸ் மெனுவின் ஐட்டமாகத் தென்படுகிறதே என்று யோசிக்கிறீர்களா ? வேறொன்றுமில்லை !

- புக்ஸ் வெளியீட்டுக்குக் கொஞ்சம் முன்னே

- புக்ஸ் வெளியீட்டுக்குக் கொஞ்சம் பின்னே

தான் மேற்படி சங்கேத பாஷையின் பொருள் ! இதோ – பிரிண்டிங் நிறைவுற்ற நிலையில் புது இதழ்கள் மூன்றும் பைண்டிங்கில் உள்ள தருணம் எனும் போது – நானிருப்பது பு.வெ.கொ.மு. moment-ல்! 

And yes – எஞ்சியுள்ள ரெகுலர் சந்தா இதழ்கள் + ஜம்போ சீஸன் 3 உபயத்தில் மார்ச் 2021 வரையிலும் வண்டியை நீட்டித்து ஓட்டத் தீர்மானித்திருப்பதால் மாதாந்திர ரேஷன் அமலுக்கு வருகின்றது ! ஒரு மாதம் 3 புக்; மறு மாதம் 4 புக் என்ற ரீதியில் ஜானர்களுக்கேற்ப ; விலைகளுக்கேற்ப – தொடரவுள்ள 9 டெஸ்பாட்ச்களையும் திட்டமிட உள்ளோம் ! So இம்முறை இடம் பிடித்திடும் இதழ்களின் பட்டியல் + அவற்றிற்கான இடங்கள் குறித்த காரணங்கள் - as follows !

சந்தா C: லக்கி’s லயன் ஆண்டுமலர் – ரூ.200/-

சந்தா B: இளம் TEX: எதிரிகள் ஓராயிரம் – ரூ.150/-

சந்தா D: CID லாரன்ஸ் டேவிட் – மீண்டும் கிங் கோப்ரா 

Of course – இது ‘ஆண்டுமலர் மாதம்‘ என்பதால் லக்கி கதவை உடைத்துக் கொண்டு உட்புகுந்திடுகிறார்! போன வாரத்துப் பதிவினில் இந்த இதழ் பற்றியும், அதனுள் இடம்பிடித்திடவுள்ள 2 ஆல்பங்கள் பற்றியும் பார்த்திருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாய் அவை அச்சாகின! உப்ப்ப்ப்… வண்ணத்தின் ரம்யமே தனி; அதுவும் கார்ட்டூன்களின் வண்ண அழகு தனியோ தனி & சமீப டிஜிட்டல் ஆக்கங்களின் கலரிங் தரங்கள் கூரையிலேறிக் கூப்பாடு போட வேண்டிய தனியோ தனி ரகம் என்பதை yet again உணர முடிந்தது! லக்கி லூக் கதைகள் சகலமும் ஆதி முதலே கலருக்கென வரையப்பட்ட ஆல்பங்கள் எனும் போது அதனில் பணியாற்றும் எல்லாக் கலரிங் ஆர்ட்டிஸ்ட்களும் சிக்ஸர் அடிப்பது சுலபம்! And இம்முறையிலான “பொன் தேடிய பயணம்” + “ஒரு கௌபாய் கலைஞன்” டிஜிட்டல் யுகங்களின் பிள்ளைகள் எனும் போது பக்கத்துக்குப் பக்கம் பந்தை ஸ்டேடியத்துக்கு வெளியே சாத்தித் தள்ளியுள்ளனர் கலரிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் ! பதிலே புரிந்திடாது, எனக்கொரு வாழ்நாள்ப் புதிராய்த் தொடர்ந்திடக் கூடியதொரு சமாச்சாரம் இருக்குமாயின் அது – கார்ட்டூன்களை ஒற்றை அணியாய் நெஞ்சோடு அரவணைத்துக் கொள்ள இயலாது போகும் நமது நெருடல்களாகத் தான் இருந்திடும் ! நாள் முழுக்க படங்களையும், அந்த நகைச்சுவை ஜாலங்களையும், வர்ணங்களையும் பார்த்துக் கொண்டே இருக்கலாமென்று நம் சகலருக்கும் மட்டும் தோன்றி விட்டால் – அடடடடடாாாா…. என் ஜென்மம் சாபல்யமடைந்து விடாதா? நிச்சயமாய் அந்த ஜெ.சா. விற்கொரு சிறு படியாய் இம்மாத ஆண்டுமலர் உதவிடும் என்ற மட்டிற்கு நிச்சயம்!!

இதழ் # 2ன் ஸ்லாட்டை ஒரே அமுக்காக அமுக்கியுள்ள இளம் டெக்ஸ் குறித்தும் பெரிய வியப்பிருக்க முடியாது தான்! Moreso during these difficult times! லாக்டவுணுக்கு அப்புறமான அடுத்த 60+ நாட்களின் (மே 4-க்குப் பின்பாக) ஆன்லைன் ஆர்டர்களை “வே.இ.பூ.பி.சி” கதையாக அலசிட முனைந்த போது எனக்குக் கிட்டிய தகவல்கள் பின்வருமாறு : (PUC தெரியும் ; BBC தெரியும், BCG தெரியும்...அது என்ன வே.இ.பூ.பி.சி ? என்கிறீர்களா ? எங்கள் பக்கத்துப் பேச்சு வழக்கின் சங்கேத பாணியினை நீங்களே யூகிக்கப் பாருங்களேன் ? )

- 25% டிஸ்கவுண்டில் நாம் லிஸ்டிங் செய்துள்ள இதழ்கள் கலவைகளாய் விற்றுள்ளன!

- அப்புறம் Feb Pack ; ஏப்ரல் Pack என்று விடுபட்டுப் போன இதழ்களைக் கொஞ்ச நண்பர்கள் ஆர்டர் செய்துள்ளனர்.

- பொதுவான இந்த ஆர்டர்களுக்கு அப்பாலிக்கா அங்கொரு லக்கி லூக் ; இங்கொரு சிக் பில் ; தோர்கல் என்பதைத் தாண்டி ஸ்கோர் செய்திருப்போர் கீழ்க்கண்ட மூவரே !!

     - TEX

     - கேப்டன் டைகர்

     - ஜேம்ஸ் பாண்ட் 007 (Version 2.0 & Black and white classics)

கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆர்டரிலுமே TEX இடம் பிடித்திருக்க, ஜேம்ஸ் பாண்ட் 007 & surprisingly (to me at least) கேப்டன் டைகரும் அத்தனை பின்தங்கியிருக்கவில்லை ஓட்டப்பந்தயத்தில் !! இது 60+ நாட்களுக்கு மேலானதொரு பரவலான உருட்டலின் முடிவுகள் எனும் போது, இதன் தகவல்கள் நமக்கு நிறையவே பாடங்கள் கற்பிப்பதாய்த் தோன்றுகிறது!

* பாடம் # 1 :

மேற்காலே போங்கோ...… தெற்காலே போங்கோ...…! அண்டாவைக் கழுவிப் பாயாசம் போட்டாலும் சரி, பாயாசத்துக்குள்ளாறயே குண்டாவைப் போட்டாலும் சரி ; பகடி பண்ணினாலும் சரி, கபடி ஆடினாலும் சரி, “என் வழி – ஜனங்களின் வழி” என்று ஆணித்தரமாய்ச் சேதி சொல்கிறார் அதிகாரி ! என்ன தான் அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்தாலும் – ஒரு ரகளையான வாசிப்புக்குண்டான தேடல் எழும் போது பாக்கிப் பேர் அனைவரையும் – ‘அப்டிக்கா ஓரமாப் போயி வெளையாடுங்கடா தம்பிகளா!‘ என்று டெக்ஸ் வில்லர் சொல்வதாய்த் தோன்றியது இந்த 60+ நாட்களின் ஆய்வில் (!!)

* பாடம் # 2 :

- அன்றைக்கு மக்கள் திலகம் & நடிகர் திலகம்!

- அப்புறமாய் சூப்பர் ஸ்டார் & உலக நாயகன்!

- அப்பாலிக்கா ‘தல‘ & தளபதி!

தலைமுறைகளாய் larger than life நாயகர்களை ஆராதித்தே வளர்ந்து வந்திருக்கும் நமக்கு – வாசிப்பினில் ஒரு இலகுத்தன்மை அவசியமாகிடும் போதுமே சில பல டாப் நாயகர்களே நமது ஆதர்ஷத் தேர்வுகளாய் அமைந்திடுகிறார்கள்! அவ்வகையில் நமது தற்போதைய அணிவகுப்பினில் இரும்புக்கை மாயாவியை VRS பெற்றவராய்க் கருதிவிட்டு பாக்கி பெயர்களைப் பரிசீலித்தால் – மேலுள்ள பட்டியலின் 3 பேருமே ஜாம்பவான்களை கைதூக்கி நிற்பதில் வியப்பில்லை தான்! தேய்ந்து போன அந்தப் பழமொழியில் கொஞ்சம் நிஜம் உண்டு தான் போலும்! ‘When the going gets tough; the tough get going !! And they don’t make them any tougher than these 3… do they?!

* பாடம் # 3 :

‘கா…க்கா…காா….கார்ட்டூன்‘ என்று தொண்டை கிழியக் கத்தலாம் தான்…

கி..கி..கி-நா வென்று கூரையிலேறிக் கூவவும் செய்யலாம் தான் ! 

ஆனால் ரிலாக்ஸ்டான வாசிப்பை நாடுவோர்க்கு முதல் choice – ஆக்ஷன் ஜானராகவே இருந்து வருகிறது / இருந்தும் வரும் போலும்! நாலு குத்து; எட்டு சாத்து; பன்னிரெண்டு மொத்து; பதினாறு சிதறிய சில்லுமூக்குகள் என்று வண்டி ஓடும் போது உடம்பில் எகிறும் சார்ஜே அலாதி தானோ?

* பாடம் # 4:

வாசிப்பினில் diversity… பன்முகத்தன்மையைக் கொணர நிறையவே பல்டிக்கள் அடிப்பது முழுசுமாய் அர்த்தமின்றிப் போகவில்லை தான்! இந்த 60+ நாட்களின் ஆர்டர்களில் “பராகுடா”; “தோர்கல்” போன்ற மாறுபட்ட ஆல்பங்களுமே இடம்பிடித்துள்ளன தான்! ஆனால் எப்போதுமே கமர்ஷியல் first… கலைநயம் next என்பதே யதார்த்தத்தின் குரலாய் இருக்கும் போலும்! கமர்ஷியல் ரசனைகளை மட்டமென்று சொல்லும் விதமாய் இதை நான் பதிவிடவில்லை; மாறாகக் காத்திருக்கும் 2021ன் சிக்+சிக்கனச் சந்தாவினில் மட்டுமாவது முன்னூறு மைல்களுக்கு ஷேர் ஆட்டோவைப் பிடித்துப் போய் மூக்கைத் தொட முயற்சிக்கும் படைப்புகளை தவிர்த்தல் அவசியமோ? என்ற ஞானம் புலர்ந்த ஞானதேசிகனாய்ப் பதிவிடுகிறேன்! Maybe when things are back to the ‘real’ normal in 2022, நமது குரங்கன் அவதாரை மீட்டுக் கொள்ளலாமோ ?!

ஆக இத்தினி பாடங்களைக் கற்றவன் இம்மாதத்தின் அட்டவணையில் இளம் டெக்ஸை நுழைக்காதிருந்தால் தான் ஆச்சர்யமே! இதோ “எதிரிகள் ஓராயிரம்” இதழின் அட்டைப்பட முதற்பார்வை! போனெல்லியின் இந்தப் பிரத்தியேக ‘இளம் டெக்ஸ்‘ தடத்தின் முதல் இதழின் ஒரிஜினல் ராப்பர் அட்சர சுத்தமாய் இதுவே! பார்த்த மாத்திரத்திலேயே சட்டத்தால் தேடப்படும் “போக்கிரி டெக்ஸ்” தான் இந்த ஆல்பத்தின் பின்னணியே என்பது புரிந்திருக்கும்! And என்னைப் போன்ற வெண்டைக்காய் அவசியமாகிடும் சஞ்சய் ராமசாமிப் பார்ட்டிகள் ஜம்போ சீஸன் 1 & 2-ல் வெளியான

- காற்றுக்கென்ன வேலி?

- சிங்கத்தின் சிறுவயதில்…

இதழ்களைத் தேடிப்பிடித்து, மேலோட்டமாய் ஒரு புரட்டுப் புரட்டி விட்டு – “எதிரிகள் ஓராயிரம்” இதழுக்குள் புகுந்திட்டால் சிறப்பு! 

இந்த சிங்கிள் ஆல்பம் நமது ஒரிஜினல் திட்டமிடலின்படி – 4 தனித்தனி; ரூ.40/- விலையிலான இதழ்களாய் சந்தா : D-ல் வந்திருக்க வேண்டியவை என்பது நினைவிருக்கலாம்! ஆனால் இவற்றை வேலைக்கு எடுத்த போது தான் ஒற்றை முழுநீள சாகஸமே நான்கு பாகங்களாய்ச் சொல்லப்பட்டிருப்பது புரிந்தது! And நமக்கோ ‘தொடரும்‘ என்ற போர்ட் போட்டுத் தொங்கலில் நிற்கும் புக்குள் மீது கொலை ‘காண்டு‘ என்பதால் அவசரம் அவசமாய் – ஒருங்கிணைந்த தொகுப்பாய்த் திட்டமிடலை மாற்றிக் கொண்டோம்! அந்தப் பதட்டங்களின்றி, ‘தொடரும்‘ என்ற பதாகைகளோடே சந்தா:D-ல் இந்த ஆல்பத்தை 4 இதழ்களாய் – நான் வெளியிட தீர்மானித்திருந்து; நீங்களும் ‘அட… முயற்சித்துத் தான் பார்ப்போமே‘ என்று ஏற்றிருந்தாலும் – கொரோனாவின் புண்ணியத்தில் நாய் குதறியது போலாகியிருக்கும்! So இந்த “ஒன்றே நன்று” policy சரி தான் என்றுபடுகிறது! ஆனாலும், நிதானமாய், இந்த 4 பாக ஆல்பங்களினுள் பணியாற்றிடும் போது தான் ஒரு விஷயம் கொஞ்சம் கொஞ்சமாய்ப் புரிபடத் துவங்கியது! ஒரே கதையின் 4 அத்தியாயங்களாக இவை இருந்தாலும், கதாசிரியர் மௌரோ போசெல்லி அற்புதமாய்த் திட்டமிட்டுள்ளார் – இவை தனித்தனியே வாசிக்கப்பட்டாலும் ஓவராய் நெருடிடாத வகையில்! So இந்தக் கொரோனா காலங்களெல்லாம் வரலாறாகிப் போகுமொரு தருணத்தில், இந்தச் சந்தா :D தடமும் தொடர்ந்திடும் பட்சத்தில் – இளம் டெக்ஸின் அடுத்த சுற்றுக் கதையை – போனெல்லியின் பாணியிலேயே தனித்தனி இதழ்களாய் வெளியிட்டுப் பார்க்கும் சபலம் எனக்குள்! May be இந்த “எதிரிகள் ஓராயிரம்” ஆல்பத்தைப் படித்து முடித்த பிற்பாடு, நான் குறிப்பிடும் இந்த கோணத்தில் அலசிட்டால் உங்களுக்குமே போசெல்லியின் genius மீது நம்பிக்கை பிறக்கலாம்!
கதையைப் பொறுத்தவரை – 4 x 62 பக்க ஆல்பங்கள் என்பதே போனெல்லியின் / போசெல்லியின் திட்டமிடலாய் இருந்திட்டதால் மெகா சீரியல் பாணியில் ஜவ்வு இழுக்காமல், Netflix தொடர்களின் ‘நறுக்‘ பாணியில் அசத்தியுள்ளார்! உலகை உலுக்கிப் போடப் போகும் கதைக்களமெல்லாம் கிடையாதென்ற போதிலும் சம்பவக் கோர்வைகளின் விறுவிறுப்பு just terrific ! ஆனால் மூன்று கவலைகள் தலைதூக்கியதைத் தவிர்க்க இயலவில்லை இங்கே:

1. வெள்ளி முடியார் கார்சனுக்கு entry கிட்டிடும் அத்தியாயங்கள் பின்னே தான் காத்துள்ளன எனும் போது தற்போதைக்கு ‘தல‘ on his own ! பெருசோ ; பெருசின் சிறு அவதாரோ உடனிருந்திருப்பின் இன்னும் கொஞ்சம் ஜாலியாய்க் கதை நகன்றிருக்கும் என்பேன்.

2. ஒரு ரேம்போவோ; அர்னால்டோ; எதிரிகளைப் பந்தாடும் போது ‘சிக்கிபுக்கி‘ என்று சிரிக்கத் தோன்றாது! ஆனால் அந்த காரியத்தை ஒரு 55 கிலோ ஒல்லிக்குச்சி நாயகர் செய்ய முயற்சித்தால் நமட்டுச் சிரிப்புகள் தவிர்க்க இயலாது போயிடும்! ‘தல‘ விஷயத்தில் பன்ச் டயலாக்குகள் கூட இந்த பணியில் தான் என்பதும் எ.க.! ஒரு திடமான, தாட்டியான, தடலாடியான டெக்ஸ் நாலு பேரை விசிறியடித்த கையோடு பேசக் கூடிய பன்ச்களை ஒரு விடலை டெக்ஸுக்குத் தந்திட மனது ஒப்பவில்லை‘ முன்னது நெருடிடாது; பின்னது நிச்சயமாய்ப் பொருந்திடாது என்பதால் – எங்குமே ஒரிஜினல் ஸ்க்ரிப்டின் வரம்புகளை மீறிட முயற்சிக்கவில்லை! So இங்கே கதையே பேசிடும்; கதை வரிகள் நாட்டாமை செய்திடாது!

3. அட்டைப்படங்கள்!!! இந்த 4 பாக ஒரிஜினல் ஆல்பங்களின் ஒவ்வொரு அட்டைப்படமும், அதகள அழகு! துரதிர்ஷ்டவசமாய் அவற்றுள் ஒன்றேயொன்றை மாத்திரமே பயன்படுத்திட முடிந்துள்ளது! தவிர்க்க இயலாச் சமாச்சாரம் என்றாலும், அந்த ஆதங்கப் பெருமூச்சுமே தவிர்க்க இயலாதே போகிறது!

So “போணியாகும் சூப்பரான சரக்கு” என்ற காரணத்திற்காக இம்மாதத்து இரண்டாம் ஸ்லாட்டைத் தனதாக்கிக் கொள்கிறார் டெக்ஸ் !
And “சொற்ப விலையில் சிம்பிளான கமர்ஷியல்கள்” என்ற template 2020-ல் முழுமைக்குமே என்பதால் CID லாரன்ஸ் & டேவிட்டும் இடம்பிடிக்கின்றனர்  ! ஆனால் இங்கே சின்னதொரு கொசுறுச் செய்தி ! இந்த இதழை தீவிர Fleetway ரசிகர்களும் ; துவக்க நாட்களது நம் feel good பாணிகளின் பிரியர்களும் தவிர்த்த மற்ற நண்பர்கள் ஆற அமரப் படித்திடுவது மதி என்பேன் !

On the subject of Fleetway - நமக்குத் பரிச்சயமான ஏஜெண்ட் ஜான் ஸ்டீல் கலரில் மறுபதிப்புக் காணவுள்ளார் இங்கிலாந்தில் !! பாருங்களேன் :
ஆக, இம்மாதத்திய மூன்றின் கதை இதுவே ! சகலமுமே அச்சு முடிந்து பைண்டிங்கில் உள்ள நிலையில் – வரும் புதனுக்கு despatch செய்திடுவோம் என்று எதிர்பார்க்கிறேன் ! மதியம் 3 மணி ஊரடங்கு, ஆங்காங்கே containment zones என்று அமலில் இருப்பதால், பணிகள் எல்லாமே தட்டுத் தடுமாறியே அரங்கேறி வருகின்றன எனும் போது சற்றே பொறுமை அவசியமாகிடுகிறது folks ! யாரையும் இத்தருணத்தில் கடிந்து கொள்வது நியாயமல்ல தானே ? So அடுத்த சில நாட்களில் ‘பொட்டிகள் புறப்பட்டாச்சு‘ என்ற தகவல் சொல்லக் காத்திருக்கிறேன் ! இடைப்பட்ட நேரத்தில் நான் “4 புக் ஆகஸ்டில்” பிஸி – ஜேம்ஸ் பாண்ட் 007-ன் ”நில்...கவனி...கொல்...” ஆல்பத்தோடு ! பட்டையைக் கிளப்பும் ஆக்ஷன் என்பதால் பேனா தொய்வின்றி ஓட்டமெடுக்கிறது !

Before I sign out – இன்னொரு தகவல் மட்டும் ! சிலபல உலக மார்கெட்களில் காமிக்ஸ் துறை சார்ந்த தகவல்கள்; புள்ளி விபரங்கள் என்றதொரு ஆய்வுக் கட்டுரையைக் கண்ணில் பார்க்க இயன்றது! திகைக்கச் செய்யும் பற்பல தகவல்களால் திறந்த வாய் இன்னமுமே மூடவில்லை தான்! ஏதேனும் ஒரு not so distant நாளில், இதைக் கொண்டு ஒரு பதிவைப் போட்டுத் தாக்கலாம் போலும் ! பார்ப்போமே !

அப்புறம் போன பதிவின் caption போட்டிக்கு நடுவரைத் தேடி பை-பாசில் போய் நின்று பார்த்தால் , ஒருத்தரையும் காணோம் ; அத்தினி பேரும் ஆறு வழிச் சாலையைப் பிடித்து ஆந்திராவுக்கு அப்பீட் ஆகிவிட்டதாய்த் தெரிந்தது ! அப்போது தான் நினைவுக்கு வந்தது  - தரைக்கடியில் ஒரு தங்கம் குடியிருப்பது ! So நமது தாராமங்கலத்தின் தங்கம் ; கடுதாசிச் சிங்கம் ; பதுங்கு குழித் தலீவரை இந்தப் போட்டிக்கு நடுவராக  தேர்வு செய்கிறேன் ! தலீவரே...பாத்து சூதானமா ஒரு தீர்ப்பை சொல்லுங்கோ ! 

Bye all... have a safe weekend & more! See you around!

P.S : இன்றைக்கு வடக்குப்பட்டியார் லீவு ! So "இ.ப' நேற்றைய புக்கிங் எண்ணிக்கையே தொடர்கிறது ! 

379 comments:

  1. படித்து விட்டு வருகிறேன்

    ReplyDelete
  2. ஆவலுடன் சிங்கத்தின் சிறுவயதில் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. இளம் டெக்ஸ் உட்பக்க சித்திரம் அருமை.

    ReplyDelete
  4. நானும் படித்துவிட்டு வருகிறேன்

    ReplyDelete
  5. 007 இந்த மாத கதை 007 2.0 போட்டி போடும் வண்ணம் இருந்தது.

    ReplyDelete
  6. Double O sevenக்காக ஆர்வமுடன் waiting..

    ReplyDelete
  7. ரொம்ப நாள் ஆச்சு..

    உள்ளேன் ஐயா..

    ReplyDelete
  8. Sir
    I have all five parts of KENYA.

    ReplyDelete
  9. முன்னூறு மைல்களுக்கு ஷேர் ஆட்டோவைப் பிடித்துப் போய் மூக்கைத் தொட முயற்சிக்கும் படைப்புகளை தவிர்த்தல் அவசியமோ? //

    2021 முடிய சர்வைவல் மட்டுமே மிக முக்கிய நோக்கம் என்பதால் அதற்கு தகுந்தாற் போல போணியாகும் கமர்சியல் கதைகளையே தேர்வு செய்யவும். எல்லா பரீட்சைகளையும் 2022 ல் செய்து கொள்ளலாம்.

    அல்லது

    சந்தாவில் இல்லாமல் முன் பதிவு எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. வரிக்குவரி சரிதான் சார். 2021 முடியும் வரை விற்பனைக்கு உத்திரவாதமுள்ள கதைகளே தேவை.

      Delete
    2. Nice suggestion ஷெரீஃப்

      Delete
    3. // 2021 முடிய சர்வைவல் மட்டுமே மிக முக்கிய நோக்கம் என்பதால் அதற்கு தகுந்தாற் போல போணியாகும் கமர்சியல் கதைகளையே தேர்வு செய்யவும். //
      அட இப்பதான் பார்த்தேன் ஷெரீப்.......

      Delete
    4. கென்யா அறிவிப்பு வெளியானதிலிருந்தே தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. ஆவல் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது. என்று தணியும் இந்த கென்யா தாகம்.

      Delete
  10. எம்மாம் பெரிய டேப்லட்.
    நானா இருந்தா டைப்படிக்க வேலைக்கு ஆள் வைத்துக் கொள்வேன்.
    உங்கள் காமிக்ஸ் காதலுக்கு தலைவணங்குகின்றேன் ஆசானே!

    ReplyDelete
  11. //சந்தாவில் இல்லாமல் முன் பதிவு எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியிடலாம்.//

    இதை பற்றி யோசிக்க வேண்டிய வேளை இது.....

    ReplyDelete
  12. ஒரு இளம் குற்றவாளியை அப்பவே புடிச்சு சீர்திருத்த பள்ளியில் அடைக்காதது அமெரிக்க நீதித் துறையின் கரும்புள்ளிகளில் ஒன்று..

    ReplyDelete
    Replies
    1. என்னங்க பண்றது. அவரு மாட்டிருந்தா தூக்கில போட்டிருப்பாங்க. ஆனா அவரு உயிரை காப்பாத்திக்கறதுக்கு எதிர் ராணுவத்துல போயி பீப்பி ஊதற வேலைக்கு சேந்ததால தப்பிச்சிட்டாரு

      Delete
    2. ரம்மி அன்ட் ஷெரீப்..


      :-))))))

      Delete
  13. மாயாவி வருவாரா?

    வரமாட்டாரா?

    ReplyDelete
  14. சூப்பரான மூன்று லட்டுகள்!!!
    நன்றி சார். லாரன்ஸ் டேவிட்டை நீண்ட காலம் கழித்து காண்பதற்கு மிகவும் ஆவலாய் இருக்கிறேன்.இளம் டெக்ஸ் பட்டையை கிளப்புவது நிச்சயம். கார்ட்டூன்கள் ஹார்ட் பவுண்டில். அழகான வண்ணத்தில்! சூப்பர்! நன்றி சார்.மூன்று பொக்கிஷங்களுக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  15. என்ன சார் சொல்றிங்க "வேட்டிய இழுத்து பூவெல்லாம் பிச்சி சிவகாசிக்கு" அனுப்பனுமா!? வே.இ.பூ.பி.சி ? 🤔😘😂

    ReplyDelete
  16. இளம் டெக்ஸ் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.

    ReplyDelete
  17. கண்ணா லட்டு திங்க ஆசையா?
    அதுவும் மூன்று லட்டு சாப்பிட ஆசையா?
    இந்த மாத இதழ்களைத் தரிசிக்க ஆசை ஆசையாய்க் காத்திருக்கின்றோம்.

    ReplyDelete
  18. ஜட்ஜ் யாருனு கை காட்டாம கிளம்பிட்டிங்களே சார்...

    ReplyDelete
    Replies
    1. Oops....பதிவின் வாலில் சேர்க்க மறந்தே போச்சு சார் ! இப்போ சேர்த்தாச்சு !

      அப்புறம் போன பதிவின் caption போட்டிக்கு நடுவரைத் தேடி பை-பாசில் போய் நின்று பார்த்தால் , ஒருத்தரையும் காணோம் ; அத்தினி பேரும் ஆறு வழிச் சாலையைப் பிடித்து ஆந்திராவுக்கு அப்பீட் ஆகிவிட்டதாய்த் தெரிந்தது ! அப்போது தான் நினைவுக்கு வந்தது - தரைக்கடியில் ஒரு தங்கம் குடியிருப்பது ! So நமது தாராமங்கலத்தின் தங்கம் ; கடுதாசிச் சிங்கம் ; பதுங்கு குழித் தலீவரை இந்தப் போட்டிக்கு நடுவராக தேர்வு செய்கிறேன் ! தலீவரே...பாத்து சூதானமா ஒரு தீர்ப்பை சொல்லுங்கோ !

      Delete
    2. அ...ஆனா சார்...போட்டில நானும் உள்ளேன் என்பதை கவனிக்க மறந்து விட்டிர்களே..:-)

      சரி விடுங்க..போட்டில கலந்துகிறது தான் நாம..செயிக்கிறது நண்பர்கள் தானே..பார்த்திடலாம் ..:-)

      Delete
    3. தலைவரை நடுவராக அறிவித்து போட்டியை பெருமைபடுத்திய ஆசிரியர்க்கு நன்றி..

      Delete
  19. என்றும் எங்கள்"" தல"" சாதிக்கத் தவறியதே இல்லை.
    ""எதிரிகள் ஓராயிரம்""அசத்தலான தலைப்பு;அசத்தலான அட்டைப்படம்.
    கதையும் பட்டாசாய் தெறிக்கவிடப் போவது உறுதி.என்றென்றும் காமிக்ஸ் தலைமகன் எங்கள் தல டெக்ஸ் வில்லர் என்பதில் பெருமிதம் கொள்ளுகின்றோம்.

    ReplyDelete
  20. வேலை
    இல்லாத
    ".........."
    பூனையைப்
    பிடித்துச்
    சிரைத்தானாம்.
    வே.இ.பூ.பி.சி.
    சரிதானே சார்.
    இது உங்கள் பக்கம் மட்டும் இல்லை. பரவலாக பேசப்படுவதுதான்.

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ எங்க பக்கம் இதே கருத்த வேற மாதிரி பேசுவாங்க ஆனா சொல்ல தா முடியல

      Delete
  21. சார் டெக்ஸ் அட்டைப்படம் அட்டகாசம் . பின்னட்டைப் பட வரலாற்றிலே டாப் அட்டை இதுதான் . சும்மா பின்னிப் பெடலெடுக்குது. வண்ணத்தில் வாய் பிறக்கப் செய்யும் என்னும் வார்த்தையை பார்த்ததுமே அன்றய சூப்பர்சர்க்கச பாத்து திகைத்த நினைவில் உள்ளமெல்லாம் மகிழ்ச்சியே.
    லாரன்ஸ் டேவிட்னாலே குத்தாட்டம்தான்...அதுவும் காணாமல் போன கடல் கிங்கோப்ரா எனும் போது கம்ப்யூட்டராய் மாறும் லாரன்சும் ,எஃகின் உறுதியைப் பெறும் டேவிட்டும் வந்து நிற்கிறார்கள் ...காலத்திரை கிழியுமா எனப் பார்க்கும் முன்...அத்திரையை தன் லேசர் துப்பாக்கியால் கிழிக்கக்காத்துள்ள ஸ்பைடரின் குண்டு புக்கிற்குமோர் கோரிக்கை . ஜான்ஸ் டீல் வண்ணத்தில்...அடடா உள் பக்கத்தை காட்டுங்களேன் சார்....

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சர்க்கஸ் உண்மையிலேயே Super book அட்டைப்படம் Chance ஏ இல்ல அதுவும் ரூ 2/- விலையில்.
      அதை வைத்திருப்பவர்கள் பாக்கியவான்கள்

      Delete
  22. 4 பாக ஒரிஜினல் ஆல்பங்களின் ஒவ்வொரு அட்டைப்படமும், அதகள அழகு! துரதிர்ஷ்டவசமாய் அவற்றுள் ஒன்றேயொன்றை மாத்திரமே பயன்படுத்திட முடிந்துள்ளது!//

    இந்த அட்டைப்படங்களை அடுத்த நாலு அல்லது ஐந்து பாக கதையை வெளியிடும் போது அதனுடன் உள்ளே வண்ணத்தில் இணைத்து விடுங்கள். பாத்து சந்தோசப்பட்டுக்கறோம்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு அட்டை மிஸ்ஸிங் பாக்கி அட்டையில் 2ம் நம்பர் முதல் அட்டையில் 3,4,5 பின்னட்டையில்,முதல் அட்டை மிஸ்ஸிங்

      Delete
    2. தவறு !

      கதை # 1 ஓடுவது ஒரிஜினலின் ஆல்பம்ஸ் 1-4-ல் மட்டுமே. ஆல்பம் # 5 முதலாய் அடுத்த சுற்றாய்க் கதை நகர்கிறது.

      So எதுவும் மிஸ்ஸிங் இல்லை !

      Delete
    3. And முதல் ஆல்பத்தின் ராப்பரே நமது அட்டைப்படம் !

      Delete
  23. @ ALL : அப்புறம் போன பதிவின் caption போட்டிக்கு நடுவரைத் தேடி பை-பாசில் போய் நின்று பார்த்தால் , ஒருத்தரையும் காணோம் ; அத்தினி பேரும் ஆறு வழிச் சாலையைப் பிடித்து ஆந்திராவுக்கு அப்பீட் ஆகிவிட்டதாய்த் தெரிந்தது ! அப்போது தான் நினைவுக்கு வந்தது - தரைக்கடியில் ஒரு தங்கம் குடியிருப்பது ! So நமது தாராமங்கலத்தின் தங்கம் ; கடுதாசிச் சிங்கம் ; பதுங்கு குழித் தலீவரை இந்தப் போட்டிக்கு நடுவராக தேர்வு செய்கிறேன் ! தலீவரே...பாத்து சூதானமா ஒரு தீர்ப்பை சொல்லுங்கோ !

    ReplyDelete
    Replies
    1. தரமான தீர்ப்ப வழங்கக் காத்திருக்கும் எங்கள் தானைத் தலைவர் , ""பதுங்கு குழிச் சிங்கம்"" "" தாரை பெற்றெடுத்த தங்கமகன் "" பரணிதரன் அவர்களை வருக வருக என வரவேற்கின்றோம்.

      Delete
    2. எங்கள் தங்கத் தலீவரை நடுவராக அறிவித்ததன் மூலம் போட்டியின் ரேஞ்சே வேற லெவலுக்கு சென்றுவிட்டது என்பதை தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

      Delete
    3. நீதிபதி பொறுப்பேற்கவிருக்கும் தலீவருக்கு வாழ்த்துகள்.
      அடிச்சி தூள் கிளப்புங்க தலீவரே!
      சென்ற பதிவில் நான் சொன்னது போலவே நடந்துவிட்டதால் எனக்கு ரெண்டு ரவுண்டு பன்னு பார்சேல்....!

      Delete
    4. ஹிஹிஹி. தலைவர் வாழ்க தலைவர் வாழ்க.

      Delete
    5. தலைவர்...வாழ்க..வாழ்க...!

      Delete
    6. உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி பதவிக்குக்கூட தகுதியான எங்கள் தங்கத் தலீவருக்கு இதெல்லாம் சப்பை மேட்டரு என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

      Delete
    7. தலீவருக்கு இது நடுச்சாமம். காலையில் எழுந்து ஜாலியாக ஆசிரியரின் பதிவை படித்துவிட்டு கீழே கமென்டுகளை படித்துக் கொண்டே வந்து அப்படியே 'ஷாக்' ஆகப்போகிறார். நான் எஸ்கேப்...!

      Delete
    8. வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
      கோல்நோக்கி வாழுங் குடி.

      Delete
    9. எங்க தலைவர்க்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்.

      Delete
    10. தலீவரே @ நடுவராக பதவி ஏற்று சிறப்பான தீர்ப்பு தர வாழ்த்துகள்!💐💐💐💐

      ////Rajendran.A.T8 July 2020 at 15:51:00 GMT+5:30
      ஜிம்பலக்கா இந்த தடவை ஜூம்பலக்கா கேப்ஷன் போட்டிக்கு ஜிம்பலக்கா நடுவராக ஜூம்பலக்கா நம்ம தலீவர்தான் ஜிம்பலக்கா பொருத்தமானவர்!!! ஜிம்பலக்கா...ஜிம்பலக்கா!


      சேலம் Tex விஜயராகவன்8 July 2020 at 16:05:00 GMT+5:30
      ATR sir@ சூப்பரு...!!! நானும் வழிந்து வழிந்து வழி மொழிகிறேன்///

      ---- தலீவரை கோர்த்து வுட்டவங்க இவீங்கதான்!!! ஹி...ஹி...!!!

      எங்க கோரிக்கையை ஏற்ற எடிட்டர் சாருக்கும் நன்றிகள்...!!!😉

      Delete
    11. ஹா....பாராட்டி பயப்படுத்தும் அனைவருக்கும் நடுக்கத்துடன் என் நன்றிகள்...:-)

      Delete
    12. தலீவரே...
      மன்னிக்கவும்.பழக்க தோஷம்.
      கனம் நீதிபதி அவர்களே...!
      சேலம் டெக்ஸ் விஜய் அவர்களுக்கும் இரண்டு ரவுண்டு பன்னு பார்சேல்...!

      Delete
  24. எங்கள் தலீவர் இன்னமும் எத்தனை பஞ்சாயத்து அட்டண்ட் பண்றது ???

    ReplyDelete
    Replies
    1. பொது வாழ்க்கைனு வந்துட்டா பஞ்சாயத்து வர்றது சகசம்தானே.

      தலைவரோட தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நடக்க சுத்தியுள்ள எட்டுப்பட்டியும் காத்துள்ளளன என்பதை சொல்லிக் கொள்ள விழைகிறேன்.:-)

      Delete
    2. ///தலைவரோட தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நடக்க சுத்தியுள்ள எட்டுப்பட்டியும் காத்துள்ளளன///

      அக்கானுங்க!

      Delete
  25. ஹைய்யா புதிய பதிவு......

    ReplyDelete
  26. Commercial success ஆகும் கதைகளாக அடுத்த ஆண்டு இவ்வருடம் வெளியாக வேண்டிய ஈரோடு ஸ்பெஷல் கதைகளும் இடம் பிடிக்க ஆவன செய்யவும் எடிட்டர் சார்

    ReplyDelete
  27. என் தலைவர் டெக்ஸ் வில்லர்க்காக ஆவலாக காத்திருக்கிறேன்😍

    ReplyDelete
  28. டெக்ஸ் பிரிவியூ அருமை சார். புதன் கிழமை despatch all of us are waiting

    ReplyDelete
  29. // தலீவரே...பாத்து சூதானமா ஒரு தீர்ப்பை சொல்லுங்கோ ! //
    தலைவர் கையில் கம்பு,ச்சீ...பம்பு,ச்சீ...வம்பு,ச்சீ...சொம்பு...

    ReplyDelete
  30. "திங்கக் கிழமை சேலத்துல ஒரு மாநாடு...

    செவ்வாய் கிழமை ஊட்டியில ஒரு ஊர்வலம்....

    புதன் கிழமை நான் எங்கிருக்கேனு எனக்கே தெரியலையே.. ஆங்..டெல்லியிலே ஒரு அப்பாயிண்மெண்ட்.."னு சொல்ல முடியாதே.!கொரோனா புண்ணியத்துல புல் டைம் சும்மாதான் இருக்கேன்.நீங்க புக்கை எப்ப வேணும்னாலும் அனுப்புங்க.நான் பிக்கப் பண்ணிக்கிறேன்.

    ReplyDelete
  31. // எங்குமே ஒரிஜினல் ஸ்க்ரிப்டின் வரம்புகளை மீறிட முயற்சிக்கவில்லை! So இங்கே கதையே பேசிடும்; //
    அட சூப்பரு,வாசிக்க மிக்க ஆவலுடன்...

    ReplyDelete
  32. ஆஹா!! சின்னத் தல'யின் அட்டைப்படம் அழகோ அழகு!! மரத்தில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரில் தன் எஜமானரின் முகம் இருப்பதை குதிரையும் (கொஞ்சம் ஆச்சரியத்துடன்) பார்ப்பதைப் போல வரையப்பட்டிருப்பது - சிறப்பு!!

    சின்னத் தலயின் அதகளங்களை ஆர்வத்தோடு ரசிக்கக் காத்திருக்கும்...

    'செவ்விந்திய சின்னக் கிளி' தேஷா ரசிகர் மன்றத்தினர்!

    ReplyDelete
  33. // வரும் புதனுக்கு despatch செய்திடுவோம் என்று எதிர்பார்க்கிறேன் ! //
    இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே......

    ReplyDelete
  34. // காத்திருக்கும் 2021ன் சிக்+சிக்கனச் சந்தாவினில் மட்டுமாவது முன்னூறு மைல்களுக்கு ஷேர் ஆட்டோவைப் பிடித்துப் போய் மூக்கைத் தொட முயற்சிக்கும் படைப்புகளை தவிர்த்தல் அவசியமோ? //
    2021 ஐ பொறுத்த மட்டில் விற்பனைக்கு உத்திரவாதம் தரும் கதைகளை மட்டும் தேர்வு செய்தல் நலம் சார்,அது கமர்ஷியல் கதைகளாக இருந்தாலும் தவறில்லை....
    மைக்கேல் மதன காமராஜன்களாக இருப்பினும்,தில்லுமுல்லுகளாக இருப்பினும் அந்த கமர்ஷியல் வட்டங்கள் என்றும் போரடிக்காத ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டும்,சலிக்காத ஒரு பார்வையைக் கொண்டுமே என்றும் தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளன.....

    ReplyDelete
  35. // நாள் முழுக்க படங்களையும், அந்த நகைச்சுவை ஜாலங்களையும், வர்ணங்களையும் பார்த்துக் கொண்டே இருக்கலாமென்று நம் சகலருக்கும் மட்டும் தோன்றி விட்டால் //
    ஆவலைத் தூண்டுகிறது சார் தங்களது எழுத்துகள்.....

    ReplyDelete
  36. அப்பாடா புத்தகங்கள் ஒரு வழியாக இந்த வாரம் வந்துடும் போல

    ReplyDelete
    Replies
    1. தப்பு.!

      அடுத்த வாரம்.:-)

      Delete
  37. இளம் டெக்ஸ் அட்டைப்படம்..!

    கொரோனா வரும்... எல்லாரும் முகமூடியுடன் இருப்போம் என அன்றே கணித்தார் டெக்ஸ்.:-)

    ReplyDelete
  38. // நாள் முழுக்க படங்களையும், அந்த நகைச்சுவை ஜாலங்களையும், வர்ணங்களையும் பார்த்துக் கொண்டே இருக்கலாமென்று நம் சகலருக்கும் மட்டும் தோன்றி விட்டால் //

    இன்னும் மூணே மூணு நாள்தான்.நாங்களும் ஜோதியில ஐக்கியமாயிடுவோமில்ல.!

    ReplyDelete
  39. விஜயன் சார், கேப்ஷன் போட்டியில் ஒரு பரிசா இரண்டு பரிசா அல்லது மூன்று பரிசா என கொஞ்சம் சொல்லுங்களேன்? அதே போல் பரிசு என்ன என சொன்னீர்கள் என்றால் தாரை பரணி சிறந்ததை தேர்வு செய்ய உதவும் சார்.

    தாரை பரணி கவலை வேண்டாம் நான் உடனிருக்கிறேன். உங்களுக்கு சிறந்ததாக தெரிவதை தேர்வு செய்யுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இல்லைனா தலைவர் பரணி போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் வெற்றியாளராக அறிவித்து விடுவார்! ஆமாம் எங்க தலைவருக்கு இளகிய மனசு யாரும் கஷ்டப்படுவதை அவரால் தாங்க முடியாது! :-)

      Delete
    2. பரணி சார், இப்படி நீங்கள் கேட்பது ஆச்சார்யமாக இருக்கிறது.
      அதான் போன பதிவிலேயே பரிசு என்ன என்பதை ஆசிரியர் சொல்லிவிட்டாரே !!!

      Delete
    3. அதானே...இரத்தப்படலம் ஒர் இதழ் பரிசு பெ.ப..
      :-)

      Delete
    4. சாரி நண்பர்களே நான் அதனை கவனிக்க வில்லை. Sorry again.

      Delete
  40. இந்த மாதம் மூனு புக்கும் ஆர்டர் போட்றலாம்.
    அதுலயும் இளம் டெக்ஸ் ஆகாகக.இத தான் எதிர் பார்தேன்.லேட்டானாலும் லேட்டஸ்.
    அசராம அடிக்கிற இந்த உங்க பாலிசி சூப்பர் சார்.
    இம்மாத இதழ்கள் விற்பனை அடிதூள் தான். பட்டையை கிளப்பும்.

    ReplyDelete
  41. சார் இளம் டெக்ஸ் இந்த கதையில் நம்பர் 1 கார்சன் இளவயதில் இருப்பது போல் அட்டைபடம்.
    இதன் முதல் பாகம் நாலைந்து பக்கம் தான் இருக்கும் அதுவும் உண்டா சார்.

    ReplyDelete
  42. இளம் டெக்ஸ் பின்னட்டையில் டெக்ஸுடன் பின்னா வரும் மங்கை லிலித்???!!!

    ReplyDelete
  43. மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  44. Hi all,

    I was reading all tiger stories from beginning, can anyone tell what's the continuation of "Kansas koduran" and "irulil oru irumbu kuthirai" published in NBS

    ReplyDelete
    Replies
    1. இளம்டைகர்...
      1,2&3=இளமையில் கொல்-3பாக
      கதையாக லயன் கெளபாய் ஸ்பெசலில் வெளியானது.

      4.மரணநகரம் மிசெளரி(வைல்டு
      வெஸ்ட் ஸ்பெசல்sep2012-இருபாக கதையின் முதல் பாகம்)
      5.கான்சாஸ் கொடூரன்
      (முத்துNBS jan2013-இருபாக கதையின் க்ளைமாக்ஸ்)

      6.இருளில் ஒரு
      இரும்புக்குதிரை(முத்து NBS
      jan2013-அடுத்த இருபாக கதையின் முதல் பாகம்)
      7. வேங்கையின் சீற்றம்(டிசம்பர்
      2013-NBSல் வந்த இருபாக கதையின் க்ளைமாக்ஸ் சாகசம்)

      8.அட்லான்டா ஆக்ரோசம்
      9.உதிரத்தின்விலை...8&9-ஒரே
      இதழாக மார்ச்2014ல் வந்த இருபாக
      சாகசம்.


      மீதியுள்ள இளம் டைகர் 12கதைகள் ஒரே தொகுப்பாக அறிவிச்சாச்சு...உரிய சமயத்தில் வரும் நண்பரே!

      Delete
    2. Thanks steel and Salem Tex vijay sir. Cowboy special book missing, found vengayin seetram,

      I think editor sir will be publishing young tiger 2&3 in color, saw a advertisement. Waiting for the rest of the stories.

      Delete
  45. அலைக்கடலில் அதகளம்: ஒரு சொகுசு கப்பலில் பயணம் செய்யும் பணக்காரர்களிடையே டயபாலிக்கும் தனது காதலியுடன் கண்ணியமான மனிதனாக முகமூடி அணிந்து பயணம் செய்து அவர்களிடம் இருக்கும் பொருட்களை கொள்ளை அடிப்பதுதான் கதை! போலியான நகைகளை பணக்கார்களின் ஒரிஜினல் நகைக்கு பதிலாக வைத்து ஒவ்வொருவராக திருடிவரும் டயபாலிக்; என்னடா கதை போராடிகிறதே என நினைக்கும் நேரம் தீடிரென ஒரு திருப்பம் கடல் கொள்ளையர்கள் மூலம் அதன் பின் நடக்கும் சமாச்சாரங்கள் ஆகா ஓகோ என்று சொல்ல முடியாது ஆனால் கொஞ்சம் ரசிக்கும் படி சுவாரசியமாக இருந்தது. நேர் கோட்டில் செல்லும் கதை, கருப்பு வெள்ளை சித்திரங்கள் அருமை, வசனங்கள் கொஞ்சம் பெரிய font சைசில் இருந்தது பிளஸ்! அட்டை படம் அருமை!

    டயபாலிக் இந்த கதையின் ஆரம்பத்தில் கொஞ்சம் போரடித்தது அதன் பிறகு ரசிக்கும் படி இருந்தது! இந்த முறை 100க்கு 60 மதிப்பெண் பெற்று தப்பித்து விட்டார்!

    ReplyDelete
  46. // ஜான் ஸ்டீல் கலரில் மறுபதிப்புக் காணவுள்ளார் இங்கிலாந்தில் !! //

    நல்ல விஷயம் சார்! எனக்கு விருப்பம் இல்லை இவரின் கதைகளில்!!!

    ஆர்ச்சி, இரும்புக்கை, ஸ்பைடர், லாரன்ஸ் டேவிட், மற்றும் ஜானி நீரோ ஸ்டெல்லா கவர்ந்த அளவுக்கு இவர் என்னை கவரவில்லை!!

    ReplyDelete
  47. கண்ணா மூனு லட்டு திங்க ஆசையா...??

    நிச்சயமா இம்மாத இதழ்கள் எதிர்பார்ப்பை எகிறடிக்கிறது.. அதிலும் இந்த அதிகாரி தான் ரொம்ப....

    ReplyDelete
  48. இந்தாண்டு எஞ்சியிருக்கும் அசத்தலான 2 Hard Bound புக்கில் முதல் புக்கான லக்கியின் ஆண்டு மலரை காண ஆவலுடன் வைட்டிங். டெக்ஸ் அனைத்து ராப்பரும் அட்டகாசமான ரகம். அட்டையில் டெக்ஸ் @ 70 என்று இப்போது வருவதுதான் ஒரு சிறு நெருடல். . Young டெக்ஸ்க்கு எஞ்சியிருக்கு 3 ராப்பரையும் டஸ்ட் கவராக மாட்டியிருக்கலாம் அல்லது ஒவ்வொரு பாகத்தின் முடிவில் ஒரு ஆர்ட் பேப்பரை insert பண்ணி அந்தந்த பாகத்தின் ராப்பரை பிரிண்டிங் செய்து இணைத்து கொள்ளலாம் என்பது இன்னொரு சாய்ஸ்.

    ஒரிஜினலில் இந்த 4 பாகங்களையும் போட்டு முடித்த அடுத்த மாதமே, இந்த 4 ஆல்பங்களும் ஒன்றாக இணைந்து ஒரே இதழாக முழு வண்ணத்தில் வெளிவந்தது. அதனுடைய ஒரிஜினல் ராப்பர்

    ஒரே கதையின் color & B/W பக்கங்களின்
    Preview

    நாம் டெக்ஸ்-ன் புது கதையை வண்ணத்தில் பார்த்தது ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு முன்பு டெக்ஸ்-ன் 70-வது ஆண்டு சிறப்பிதழாக 2018 அக்டோபரில் வெளி வந்த Dynamite ஸ்பெஷ லில் தான். (டெக்ஸ் மாக்ஸி & வண்ண மறுபதிப்பு நீங்கலாக). அதனால் டெக்ஸ்-ன் புது கதைகளை வருடத்திற்கு ஓரிரு இதழ்களாவது வண்ணத்தில் வெளிவருவது அவசியம்.

    MH Mohideen

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்ன கருத்து அனைத்தையும் வரிக்குவரி ஆமோதிக்கிறேன் மொய்தீன் சார். வருடம் ஒன்று அல்லது இரண்டு டெக்ஸ் ஆவது கலரில்...

      Delete
    2. டெக்ஸ்-70வது ஆண்டை சிறப்பிக்க உருவானது, இந்த இளம் டெக்ஸ் தொடர் என தெரிய வைப்பது அந்த "டெக்ஸ்@70"---லோகோ தான் ஜி!அது இருப்பது இதழுக்கு அழகுதான்.

      /// டெக்ஸ்-ன் புது கதைகளை வருடத்திற்கு ஓரிரு இதழ்களாவது வண்ணத்தில் வெளிவருவது அவசியம்.///++++++ப்ளஸ்ஸோ ப்ளஸ்கள்....!!!

      2022ல இருந்து நடைமுறை படுத்த ஆவண செய்யுங்கள் சார் என வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்!

      Delete
    3. //அதனால் டெக்ஸ்-ன் புது கதைகளை வருடத்திற்கு ஓரிரு இதழ்களாவது வண்ணத்தில் வெளிவருவது அவசியம்.//


      இருட்டாய் இருக்கிறது என்பதற்காக மின்னலை காண கைவிளக்கு அவசியமில்லைதான்...

      குரலினிமை கூட்ட குயிலுக்கு ஜலசாதகமும்,மிளகு ரச ஔஷதமும் தேவையில்லைதான்..


      நனைந்து விடும் அச்சத்தில் மேகத்துக்கு குடை பிடிப்பது அவசியமில்லைதான்..

      ஆயினும்...

      நிலைமை எல்லாம் சரியானபின்


      பலாச்சுளைகளை தேனில் முக்கிய அவ்வப்போது தருவதை வரவேற்கத்தான் வேண்டும்..

      Delete
  49. // நாலு குத்து; எட்டு சாத்து; பன்னிரெண்டு மொத்து; பதினாறு சிதறிய சில்லுமூக்குகள் என்று வண்டி ஓடும் போது உடம்பில் எகிறும் சார்ஜே அலாதி தானோ?//

    உண்மைதான் சார்,

    சமீபத்தில் படித்த சூது கொள்ளும் கதை அப்படித்தான் இருந்தது.
    சும்மாபோற ரவுடிகளை வேண்டுமென்றே வம்புக்கிழுத்து சும்மா கும் கும்முனு குத்து விடற டெக்ஸ் ஸ்டைலே தனிதான்.
    அதற்கு நீங்கள் எழுதியுள்ள பன்ச் டயலாக் வேற லெவல் :-)
    டெக்ஸ் கதை எப்ப படிச்சாலும் சார்ஜ் அப்படி ஏறும் !!!

    ReplyDelete
  50. ஹைய்யா நீண்ட பதிவு..:-)


    படித்து விட்டு...

    ReplyDelete
  51. சார்...பதிவை படித்து கொண்டே வந்து இறுதியில் ஏடிஆர் சொன்னது போல அதிர்ச்சியை ( இன்ப ) ஏற்படுத்தி விட்டீர்கள்.

    நன்றி சார்...மீண்டும் நண்பர்களின் பதிவுகளை இன்று முழுவதும் மீண்டும் படித்து ரசித்து விட்டு நாளை மதியத்திற்குள் முடிவை சொல்லி விடுகிறேன் சார்..மீண்டும் நன்றி...:-)

    ReplyDelete
  52. மூன்று அழகிய சுவையான கனிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..

    இளம் டெக்ஸ் முன்பாகத்தை புரட்ட சொல்லி விட்டீர்கள் அல்லவா..இன்றும் நாளையும் இனி இளம் டெக்ஸ் உடன்தான்..

    ReplyDelete
  53. ஒரு மாதம் 3 புக்; மறு மாதம் 4 புக் என்ற ரீதியில் ஜானர்களுக்கேற்ப ; விலைகளுக்கேற்ப – தொடரவுள்ள 9 டெஸ்பாட்ச்களையும் திட்டமிட உள்ளோம் !

    #########

    ஒவ்வொரு மாதமும் ஒரு குண்டு புக்கு வருவது போலவும் செயல் படுத்தவும் சார்...!

    ReplyDelete
  54. மேற்காலே போங்கோ...… தெற்காலே போங்கோ...…! அண்டாவைக் கழுவிப் பாயாசம் போட்டாலும் சரி, பாயாசத்துக்குள்ளாறயே குண்டாவைப் போட்டாலும் சரி ; பகடி பண்ணினாலும் சரி, கபடி ஆடினாலும் சரி, “என் வழி – ஜனங்களின் வழி” என்று ஆணித்தரமாய்ச் சேதி சொல்கிறார் அதிகாரி !

    ######

    தவுசண்ட் ஹேண்ட்கள் மறைத்தாலும் ஆதவனை...

    ReplyDelete
    Replies
    1. அங்க எங்கே தவுசண்ட்ஹேண்ட் இருக்கு. ரம்மியோட பாயாச சொம்பு மட்டுந்தான் தலீவரே.

      Delete
  55. அவசரம் அவசமாய் – ஒருங்கிணைந்த தொகுப்பாய்த் திட்டமிடலை மாற்றிக் கொண்டோம்!

    #####

    இனிமையான மாற்றம்...:-)

    ReplyDelete
  56. திகைக்கச் செய்யும் பற்பல தகவல்களால் திறந்த வாய் இன்னமுமே மூடவில்லை தான்! ஏதேனும் ஒரு not so distant நாளில், இதைக் கொண்டு ஒரு பதிவைப் போட்டுத் தாக்கலாம் போலும் ! பார்ப்போமே !

    #######

    ஆவலுடன் வெயிட்டிங் சார்..:-)

    ReplyDelete
    Replies
    1. நானும் வெயிட்டிங்....

      நீங்க ரமணா பாணியில் விரலை ஆட்டி ஆட்டி புள்ளி விபரம் சொல்வதும் நான் திறந்த வாய் மூடாமல் அதை கேட்டு ரசிப்பதும் இன்று நேற்றா நடக்கிறது????

      Delete
  57. பனியில் ஒரு செங்குறுதி கதை ஏதாவது பிரச்சனையா சார்? இப்படி அடிக்கடி தள்ளிப் போகிறதே? வருமா? என் நண்பர் ஒருவர் வேற அந்த கதைக்காக காத்திருக்கிறார்! காரணம், நீண்ட வருடங்களுக்குப் பிறகு இருவண்ண அச்சில் வெளிவரப் போகும் கதையையும், வர்ணத்தையும் பார்ப்பதற்காக, அவர் சொன்ன நேரமோ என்னமோ இப்படி தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கிறது 😳

    ReplyDelete
  58. Wow ! Welcome Code Name Barracuda. I am very happy.....
    Fleetway Fleetway thaan


    ReplyDelete
  59. தலைக்கு விலை வெரும் 500$ தானா???

    ReplyDelete
    Replies
    1. குட் அப்சர்வேஷன்!!

      பை த வே, நீங்க வெகுமதி வேட்டையரா? :D

      Delete
    2. இளம் டெக்ஸூக்கு இந்த வெகுமதி ஓகே :-)

      Delete
    3. சிங்கத்தின் சிறுவயதில் டெக்ஸ் ஓட்டிச் செல்லும் கால்நடைகளுக்கு தலைக்கு 35 டாலர் நிர்ணயிப்பார்.அதோடு கம்பேர் பண்ணும்போது அது கணிசமான தொகையே.

      Delete
    4. பை த வே, நீங்க வெகுமதி வேட்டையரா? :D

      ஹாஹாஹா...:-)))

      Delete
  60. பல கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு கேப்ஷனின் பல பதிவுகளை கண்டபிறகு ஆஹா ஓஹோ அருமை படித்தவுடன் சிரிப்பை வரவழைத்த பதிவு இது என கண்டறிந்தேன்.அது இதோ

    ஷெரீப் பாஸ்.. நல்லதா ஜோக் சொன்னா இரத்த படல புக்கு பரிசாம் இப்பவாது ஏதாவது நல்ல ஜோக்கை சொல்லி ஒரு இரத்தபடலத்தை பரிசா வாங்க பாருங்களேன்..

    அடேய்...நம்மளையவே படையல் போட்டு அந்த கொரில்லாவாயன் நம்மை இரத்த படலமாக்க போறான்..இப்ப உனக்கு ஜோக்கு கேக்குதா...


    சரியா சொன்னீக ஜிம்பலக்கா பொறியல்களா இன்னும் கொஞ்ச நேரத்துல ஜீம்பலக்கா சரவணன் வந்து பரிசை தட்டிட்டு ஜிம்பலக்கா போக போறாரு அதனால தான் ஜிம்பலக்கா அவுரு வர்றதுக்குள்ள அவசரவசரமா ஜிம்பலக்கா நானே இரத்த படலத்தை படிச்சுட்டு இருக்கேன்..நீங்க கம்முன்னு இன்னும் மசாலாவை ஜிம்பலக்கா தடவிக்கிட்டு உள்ள அமுங்குங்க ஜூம்பலக்கா

    #####

    யாரோ பரணீதரன் தாரமங்கலத்துல எழுதி இருக்காங்க இது ஓகே..

    அப்டீன்னு சொல்லிட்டு பரிசை தட்டிட்டு போயிடலாம்ன்னு பாத்தேன்..ஆனா ஆசிரியர் தேடிய பைபாஸில் இருந்து வண்டி நிறைய கல் லோடுடன் வந்து தாரமங்கலத்தில் மட்டுமல்ல என்னால் சிவகாசியிலும் கல்பாரம் இறங்கும் அச்சம் வருவதால் இதனை உடனடியாக நிராகரித்து விட்டு மீண்டும் பரிசுக்கான பதிவுகளை தேடி செல்கிறேன்.


    பீகேர்புல் ( நான் என்னை சொன்னேன்)

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி ஒரு கணம் ஷாக் ஆயிட்டேன் தலீவரே

      Delete
    2. ரகளை பண்றீங்க தலீவரே!

      சரி சரி.. சட்டுபுட்டுனு அங்கே யாராச்சும் 'கண்டிப்பா போட்டிக்காண்டிதான்'ன்ற தலைப்புல கேப்சன் போட்டிருந்தாங்கன்னா, அவங்களை தேர்ந்தெடுத்துட்டு வேலைகளைக் கவனியுங்க! கண்டதையும் படிச்சு உடம்பைக் கிடம்பைக் கெடுத்துக்காதீங்க!

      Delete
    3. Hi Paranitharan,

      My name is Senthil. I'm also from Tharamangalam. Looking forward to meet you.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. ஹா...ஹா... நான் அப்பிடியே ஆடிப் போயிட்டேன் தலைவரே.

      Delete
    6. சூப்பர் தலீவா! தானே ஜெயிச்ச தானை தலீவர் வாழ்க வாழ்க :)

      நன்றி செயலரே !
      நானும் போட்டிகாண்டினு தான் போட்ருக்கேன் ;-)

      Delete
    7. // தானே ஜெயிச்ச தானை தலீவர் வாழ்க வாழ்க :) //

      +1 :-)

      Delete
    8. @ Saanvanan R

      உங்க கேப்சனை இப்பதான் படிச்சேன்..!

      லகலகலகலகலக.....

      Delete
    9. Warm welcome senthilraj. தொடர்ந்து பதிவிடுங்கள்.

      Delete
    10. வாருங்கள் செந்தில் ராஜ்..தாரமங்கலத்திலியே படிக்கும் வயதில் இரு காமிக்ஸ் நண்பர்களை மட்டுமே அறிவேன்..ஆனால் இப்பொழுது அவர்களை காணவே முடிவதில்லை..தாங்கள் காமிக்ஸ் வாசகராக இங்கே அறிமுகமாவதில் மிக மகிழ்ச்சி.தொடர்ந்து வாருங்கள்.

      எனது அலைபேசி எண் 9942759238..

      இதில் தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே..சந்திக்கலாம்..:-)

      Delete
  61. எதிரிகள் ஓராயிரம் என்ற தலைப்பை போல் ஒற்றர்கள் ஆயிரம்/ஓராயிரம் என்ற தலைப்பில் லக்கி-லூக் கதை ஏதும் வந்துள்ளதா? ஊரு முழுவதும் ஒற்றர்கள் பரவி கிடப்பார்கள் என்பதாக ஞாபகம்! அப்படி ஒரு தலைப்பில் லக்கி-லூக் கதை படித்ததாக ஞாபகம்!

    இந்த மாதம் வரவுள்ள மூன்று கதைளும் செம எதிர்பார்ப்பை கொடுக்கிறது! லாரென்ஸ் டேவிட் நீண்ட இடைவேளைக்கு பிறகு அதுவும் புதிய கதை அதற்கும் மேல் கிங் கோப்ரா ஏற்கனவே வில்லனாக கலக்கியவர்!

    லக்கி-லூக் மற்றும் டெக்ஸ் இரண்டு கவ்பாய், இருவரும் அனைவர்க்கும் பிடித்தவர்கள். ஒருவர் காமெடி மற்றொருவர் அடிதடி! அட்டகாசமான காம்பினேஷன்!!

    இதற்கு இடையில் பெங்களூரில் கொரோனா பரவுவது அதிகம் ஆகியுள்ளதால் 24 தேதி வரை முழு ஊரடங்கு! ஊரடங்கு முடிந்த பின்னர் புத்தகங்களை அனுப்பும் படி நமது அலுவலகத்திற்கு நாளை தகவல் சொல்ல வேண்டியதுதான்! எனவே இந்த மாதம் வரவுள்ள புத்தகங்களை உடனே கைகளில் கிடைக்க போவது இல்லை!

    ReplyDelete
    Replies
    1. ஆம்.கம்பேக் ஸ்பெஷலில் வந்த லக்கியின் கதை ஒற்றர்கள் ஓராயிரம்

      Delete
    2. நன்றி கோவிந்தராஜ்.

      Delete
    3. பதில் சொல்ல வந்தேன் நண்பரே சொல்லி விட்டார்..வாழ்த்துக்கள் கோவிந்த்ராஜ் சார்..

      கவனமாக இருங்கள் பெ.பரணி அவர்களே...

      Delete
  62. Hi vijayan sir🙋‍♀️
    Nice post.expecting lucky special & young rex eagerly as both r my all time favourite heroes. Awesome cover page for tex. Waiting for online listing.
    👋

    ReplyDelete
    Replies
    1. Me too sister. So eagerly waiting for this month's books.

      Delete
  63. அலைகடலில் அதகளம்

    ஐம்பதாம் பக்கத்தில் விச்சு & கிச்சு படித்து சிரித்தேன்

    மிமியும் ஈவாவும் மனதை கவர்ந்தனர்..

    இடையிடையே டயபாலிக் என்ற பெயர் அடிபட்டது ....

    ReplyDelete
    Replies
    1. செனா அனாஜீ....

      விமர்சனத்தை படித்து முடித்தவுடன் வாய்விட்டு சிரித்து விட்டேன்..:-))))

      Delete
    2. செம்ம விமர்சனம் சார் ஹிஹிஹி

      Delete
    3. ஹிஹி!! மரண பங்கம்!! :)))

      Delete
    4. ///இடையிடையே டயபாலிக் என்ற பெயர் அடிபட்டது///

      இப்பவும்தான்! செனாஅனாவால்!! :D

      Delete
  64. கனவே கலையாதே ...

    இது முழுக்க முழுக்க வைல்ட் பில் நினைவஞ்சலி –ட்ரிப்யூட்- இதழ் போலும்
    இவ்விதழ் அமெரிக்க வன்மேற்கு நாயகர்களில் ஒருவராக கருதப்படும் ஜேம்ஸ் பட்லர் ஹிக்காக் பற்றி முழுதுமாக வாசித்தறிய கட்டாயப்படுத்தியது .

    • கதையில் வருவது போல் இறப்பதுக்கு முன்னரே தான் இறக்க போகிறோம் என்ற உள்ளுணர்வு உண்மையான பில்லுக்கு இருந்தது..
    • பில் –லின் தலைமுடி நிறம் ,சிகை வடிவம் கதையில் கையாளப்பட்டுள்ளது .
    • முப்பதாம் பக்கம் இறுதி பேனலில் பில் பேசும் வசனங்கள் போலவே மார்ச் 1876-ல் திருமணம் செய்த உண்மையான பில் ஹிக்காக் அதே வருடம் ஆகஸ்ட்டில் சுடப்பட்டு இறந்தார்.
    • கதையில் வருவது போலவே சுமார் ஐம்பது வயது வயோமிங் பகுதி சர்க்கஸ்காரியை மணம் செய்தார்
    • விசித்திரம் என்னவெனில் அப்பெண்ணின் பெயர் அக்னஸ்( தாட்சர் லேக்)
    • பில் ஹிக்காக் –ன் வாழ்க்கை-யில் பரபரப்பான சம்பவங்களுக்கு பஞ்சமில்லை
    • கலமிட்டி ஜேன் தான்தான் பில்லின் முதல் மனைவி என்றும் அக்னசை மணம் செய்ய அனுமதிக்கும் வண்ணம் தான் அவரை விவாகரத்து செய்தேன் என்று பேட்டி ஒன்றில் கூறியிருப்பது உண்மையா பொய்யா எனத் தெரியவில்லை
    • பில்லின் உடலுக்கு பக்கத்தில் ஜேனின் உடல் புதைக்கப்பட்டது உண்மை .
    • ட்ரென்ட் பிரெஞ்சு கவிதைகள் நிரம்பி வழிந்த இதழ் ஒன்றை போலவே ( அவ்விதழும் கவிஞர் ஒருவருக்கான ட்ரிப்யூட் போலும் ) பின் சீட்டில் உட்கார வேண்டிய நெருக்கடி .
    • வாசித்து சுகப்பட அருமையான இதழ் 8/10

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசமான தகவல்கள் அருமை சார்.

      Delete
    2. இன்னும் படிக்கவில்லை சார்.!

      Delete
    3. வெரி நைஸ்....!!!

      சார்ட் & சுவீட்...!!!

      லெமன் ஜூஸ் வித் சால்ட்&சுவீட்...!!!

      சமோசா வித் டீ...!!!

      Delete
  65. //ஆன்லைன் ஆர்டர்களை “வே.இ.பூ.பி.சி” கதையாக அலசிட முனைந்த போது எனக்குக் கிட்டிய தகவல்கள் பின்வருமாறு ://
    //
    //ஆக இத்தினி பாடங்களைக் கற்றவன்//


    ஆன்லைன் எஜுகேஷன் பத்தி கேள்விப்பட்டிருக்கிறேன்..

    ஆசிரியருக்கேவா???

    :-)

    ReplyDelete
  66. சகோதரி அனுவை காணோமே??? எங்கிருந்தாலும் வந்து இந்த அண்ணனின் வணக்கத்தை பெற்று செல்லவும்....

    ReplyDelete
  67. இன்னும் சில விநாடிகளில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும்...:-)

    ReplyDelete
  68. மீண்டும் தீவிர கேப்ஷன் ஆராய்ச்சியில் இறங்கிய ஆராய்ந்த பொழது திரு செயலர் அவர்களின் முதல் பதிவு சிறப்பாக காணப்பட்டது.ஆனால் அவரே அது

    *போட்டிக்காண்டி அல்ல* *ஜாலிக்காண்டி*


    என அறிவித்துவிட்ட படியால் அந்த பதிவு தன்னால் போட்டியில் இருந்து விலக்கி கொள்ளப்படுகிறது.மீண்டும் தீவிரமாக ஆராய்ந்ததில் அனைத்து நண்பர்களுமே சிறப்பாக பதிவை இட்டு இருந்தனர் .குறிப்பாக p.கார்த்திகேயன் சார் ,அப்பு சிவா ,சரவணன் ,பத்து சார் ,பார்த்தீபன் சார்,கணேஷ் சார் போன்றோரின் பதிவுகள் மிகவும் ரசிக்கும்படி இருந்தன.இருப்பினும் கிட் ஆர்ட்டின் ,ஷெரீப் அவர்களின் கேரக்டர்களுக்கு ஏற்றவாறும் ,புகைப்படத்திற்கு ஏற்றவாறும் மற்ற நண்பர்களை விட சிறிது நெருக்கமாக என்னால் உணரப்பட்டது திரு .சேலம் குமார் அவர்களின் கீழ்க்கண்ட பதிவு.

    Kumar Salem8 July 2020 at 08:34:00 GMT+5:30
    கேப்சன் போட்டிக்காக

    ஆர்ட்டின் : பாஸ்!! நமக்கு தனித்தனியா பாத் பாட் (pot) கொடுக்காமல் ஒண்ணா இறக்கி விட்டுடாங்களே???

    ஷெரீஃப் : இது குளிக்கிற சட்டி இல்லை நம்மை குழம்பாக்கற சட்டிடா

    ஆதிவாசி : guys டூடேஸ் மெனு இஸ் அவிச்ச மொட்டை வித் அவிச்ச முட்டகோஸ்

    எனவே திரு.சேலம் குமார் அவர்கள் இந்த கேப்ஷன் போட்டியில் வெற்றி பெறுகிறார் என்பதை மகிழ்வுடன் அறிவித்து கொள்கிறேன்.


    நன்றி வணக்கம்🙏🏻😊


    பின்குறிப்பு :

    இந்த கடுமையான பணியினை நான் மேற்கொண்டதன் காரணமாக அடுத்து நடக்கும் ஈரோடு சந்திப்பில் (?) ஓர் ஏழெட்டு ரவுண்ட் பன்னை எனக்கு சேர்த்தி தருமாறு பணிவன்புடன் ஆசரியரை கேட்டுக்கொள்கிறேன்.:-)

    ReplyDelete
    Replies
    1. தலீவரின் தீர்ப்பு. கட்டளை. சாசனம்.

      Delete
    2. அந்த ரவுண்ட் பன்ல பாதியை எனக்கு தந்துடுமாறு தலீவர் தீர்ப்பை மாத்த சொன்னாருங்க.

      Delete
    3. அப்ப பன்னை பதினாறாக மாற்றிக்கொள்ளும் படி ஆசிரியர் அவர்களை வேண்டிக்கொள்கிறேன்..:-)

      Delete
    4. கேப்ஷன் போட்டியில் வெற்றிவாகை சூடிய KSக்கு வாழ்த்துகள்!

      சிரமமான பணியை செவ்வனே செய்து முடித்த தாரைத் தலீவருக்கு பாராட்டுகள்!!

      கலந்துகொண்டு சிரிக்கவைத்த மற்ற நண்பர்களுக்கும் பாராட்டுகள்!!

      Delete
    5. சிறப்பான தீர்ப்பு தலைவரே.

      வாழ்த்துகள் KS.

      Delete
    6. ///அப்ப பன்னை பதினாறாக மாற்றிக்கொள்ளும் படி ஆசிரியர் அவர்களை வேண்டிக்கொள்கிறேன்..:-)///

      பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ.......,

      Delete
    7. போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் KS💐💐💐💐💐

      Delete
    8. ஆஹா ஆஹா 1000 பொன்னும் எனக்கே எனக்கா நன்றி தலைவரே நன்றி. வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மிக்க மிக்க நன்றி.

      Delete
    9. சேலம் குமார் @ வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

      Delete
  69. போட்டியில் வெற்றி வாகை சூடியதற்கு வாழ்த்துகள் சேலம் குமார்.

    ReplyDelete
  70. ங்ங்ஙிங் கிங்நிங் மெய்ங் ஙிங் ஙெய்டா
    ங்ங்ஙிங நிங்ஙிங் ஙெய்ங் மிங் மெய்டா

    சொல்றாரு..

    தலீவர் சொல்லியிருக்குற தீர்ப்பு மிகச்சரியானதாம்.! தலீவருக்கு பாராட்டுகளாம்..!

    ங்ஙிங்ஙீங் ஙெய்ங்ஙீ ஙெய்ங் ஙெய்டா
    ஙெய்ங்ஙிங் ஙிங்ஙிங் மிங்ஙிங் ஙெய்டா

    சொல்றாரு..

    குமார் எழுதியிருந்த கேப்சன் கேரக்டர்களுக்கு ஏத்தமாதிரி பொருத்தமா இருந்துச்சாம்..! குமாருக்கு வாழ்த்துகளாம்..!

    ங்ங்ங்ங்ஙிங்ஙிங் ஙெய்ய்ங்ஙிங் ஙெய் ஙெய்டாங்
    ஙீங்ஙீங் ஙெய்ய்ங்ஙிங் ஙெய்ங் நெய்டா..

    சொல்றாரு..

    நான் விளக்கம் சொல்லி கிழிச்சது போதுமாம்.. போய் வேலையைப் பார்க்கிறதாம்..

    ReplyDelete
  71. கேப்சன் போட்டியில் வெற்றி பெற்ற சேலம் குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்💐💐💐

    ReplyDelete
  72. Congrats to KS and appreciation to the participants...

    & gudos to தலீவர் !!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி செல்வம் அபிராமி சார். மிக்க நன்றி

      Delete
  73. சேலம் குமார் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  74. கேப்சன் போட்டியில் வெற்றி பெற்ற சேலம் குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்💐💐💐

    ReplyDelete
    Replies
    1. நன்றி கார்த்திகேயன் சார். நீங்கள் ஈரோடு புத்தக விழாவில் chief guest ஆக இருந்ததை பார்த்து வியந்தவன் நான். இப்போது உங்களிடம் இருந்து கிடைக்கும் பாராட்டு. மிக்க மகிழ்ச்சி

      Delete
  75. இன்று வடக்குப்பட்டி ராமசாமி வருவாரா?

    ReplyDelete
  76. போட்டியில் வென்ற நண்பர் சேலம் குமாருக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete