Powered By Blogger

Tuesday, July 21, 2020

ஒரு அலசலுக்கு வாரீகளா ?

நண்பர்களே,

வணக்கம்.  ஒரு இளம் தல + ஒரு கௌபாய் தல இடம்பிடிக்கும்  மூன்று புக் மாதத்தில், பாக்கியுள்ள ஒற்றை இடத்திலிருப்போர் யாராயினும் பாவமே ! And இம்முறை நெரிசலில் சிக்கியுள்ளோர் நமது சாகஸ ஜோடி லாரன்ஸ் & டேவிட் ! வாராந்திரத்  தொடராய் எழுபதுகளில் வெளியான கதை எனும் போது, அந்நாட்களது ஆல் இந்தியா ரேடியோவின் புராதனத்தோடு இந்த "மீண்டும் கிங் கோப்ரா" இதழ் பயணிப்பது தவிர்க்க இயலா நிகழ்வாகிடுகிறது ! பற்றாக்குறைக்கு அப்போதைய அவர்களின் target audience சிறார்களாகவே இருந்திருப்பர் என்பதால் லாஜிக்கை ஜன்னல் வழியே கடாசிவிட்டு ஜாலியாய் ரவுண்டு கட்டியடித்துள்ளார் கதாசிரியர் ! இதே நாயகர்களுக்கு ஒரு 120 பக்க ஆடுகளத்தையும், a complete album என்ற அந்தஸ்த்தையும் தந்த போது "மஞ்சள் பூ மர்மங்களும்" ; "பார்முலா X 13-களும்" மலர்ந்ததை நாம் மறந்திருக்க மாட்டோம் ! Of course அப்போதுமே லாஜிக்குகளில் மிதமான துவாரங்கள் இருக்கவே செய்தன தான் ; ஆனால் அந்நாட்களில் அவற்றைக் கண்டுகொள்ளாது நம் வண்டிகள் ஓடிய வண்ணமிருந்தன ! இன்றைக்கோ எல்லாமே ஒளிவட்டத்துக்கு உட்படுவதால், விமர்சனங்கள் தவிர்க்க இயலா அங்கமாகிடுகின்றன ! Winds of changes....!

எனது கேள்வி இதுவே guys

யதார்த்தங்களை சொல்லிடும் கி.நா மாதிரியான படைப்புகள் நீங்கலான பாக்கி எல்லா நாயக / நாயகியரின் தொடர்களுமே, லாஜிக் எனும் நூல்கோட்டைப் பெரிதாய் மதிப்பன அல்ல தான் ! And to top it, பெரிதாய் லாஜிக் மீறல் இல்லாத யதார்த்த "கமான்சே' ; ஜூலியா தொடர்கள் நம் மத்தியில் பெரிதாய்ப் பேசப்படவில்லை ! So நாம் லாஜிக் மீறல்களைக் கண்டயிடமெலாம் பொங்கிடும் பஞ்சாபகேசன்கள் அல்ல என்பதில் no secrets ! ஆனால் நம் பால்யங்களின் பரிச்சயங்கள் (ஸ்பைடர் ; ஆர்ச்சி ; லாரன்ஸ் & டேவிட் et al) என்று வரும் போது மட்டும் பொங்கப்பானைகளையும், பாயச அண்டாக்களையும் உருட்டுவது தவிர்க்க இயலா நிகழ்வாகிப் போவது ஏனோ ? Why do we see a selective discrimination ? ஒருக்கால் மாறிவிட்டிருக்கும் ரசனைகளின் அளவுகோல்களை, நமது இளமைகளின் நாயகர்களுக்கு மட்டும் தீவிரமாய்ப் பொருத்திப் பார்த்து நம்மை நாமே பரிகசித்துக் கொள்கிறோமோ ?  So இதற்கான விடை தேடும் முயற்சியின் ஒரு படியாக "மீண்டும் கிங் கோப்ரா"வை எடுக்கிறோம்....இந்த உ.ப.விலே அலசுறோம் ! ரெடியா ? (அந்தக் கதவைப் பூட்டியாச்சு தானே ?)
அப்புறம் : "இ.ப" முன்பதிவு நிலவரம் இதோ :

பாலமுருகன், திருச்சி - 1 புக்  - # 84 
இக்னேஷியஸ் லோரன், கோர்பா  - 1  புக் - # 85 
குமார், காஞ்சிபுரம் - 1  புக் - # 86 
திருச்செல்வம் பிரபாநாத், பிரான்ஸ் - 1 புக் - # 87 

மெது மெதுவாய் ஓடிவரும் வண்டி "100" எனும்  ஒரு முக்கிய மைல்கல்லைப் பார்த்திடும் நேரம் not too far என்பது புரிகிறது ! மூன்றில் ஒரு பங்கு தொலைவு !!   

Bye all...see you around !

P.S : கடந்த 2 மாதங்களின் ஒப்பீட்டில் இம்மாதத்து ஆன்லைன் sales செம ஆறுதல் அளிக்கும் ரகம் ! And மூன்று புக்குகளையுமே அநேகமாய் அனைவரும் வாங்கியிருப்பது ரொம்பவே மகிழ்வூட்டுகிறது ! Thanks a ton guys !!

அப்புறம் ரூ.500-க்கு மேலான ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.50 விலையிலான இதழ்கள் (Smurfs ; கமான்சே etc) நம் அன்புடன் இணைப்பாய் அனுப்பிடும் நடைமுறையும் கடந்த ஒரு மாதமாய்த் தொடர்கிறது ! 

187 comments:

  1. Replies
    1. இவரே பதிவு போட்டுட்டு இவரே பர்ஸ்ட் மீ போடுவாராம்..
      அநியாயம் பண்றீங்க பூனையாரே.

      Delete
    2. @ Sivakumar siva

      ஹா ஹா ஹா!! எடிட்டரின் டூப்போட டூப்போட டூப் கூட அவரை மாதிரி எழுத முடியாது!!

      ஏன்னா அதுவொரு திணுசு! :)

      Delete
  2. Hi.. .
    வந்தாச்சு அலசறதுக்கு..

    ReplyDelete
    Replies
    1. அண்டா கழுவறதுக்குன்னே சொல்லலாம்.!

      Delete
  3. (கடந்த பதிவின் கேட்பாரற்ற ஒரு மூலையில் கண்டெடுக்கப்பட்ட கடிதாசி - உரியவரின் பார்வைக்கு!)

    *** எடிட்டர் சாருக்கு ஒரு மடை திறந்த மடல் *****

    'எதிரிகள் ஓராயிரம்' படைப்பின் ஒன்றிரண்டு வண்ணப் பக்கங்களை ஒரு வாட்ஸ்அப் க்ரூப்பில் தல'யின் தீவிர ரசிகர் ஒருவர் பகிர்ந்திருந்தார்!! கணவாய் பகுதிகளின் அழகை வண்ணத்தில் கண்டபோது மூச்சே நின்றுவிடும்போலிருந்தது!!
    கருப்பு-வெள்ளையும் கம்பீரமான அழகுதான் என்றபோதிலும், வண்ணத்தில்தான் சித்திரங்களின் உண்மையான பரிமாணங்களை உணர்ந்து லயித்துப் போனேன்!

    அதே கணத்தில், இதுபோன்ற ஒரு அற்புதப் படைப்பை வண்ணத்தில் அளிக்காத உங்களின்மேல் துளியூண்டு கோபமும் எட்டிப் பார்த்தது! (கிர்ர்.. புர்ர்ர்) என்னதான் பட்ஜெட் அது இது என்று நீங்கள் கணக்குச் சொன்னாலும், இதை வண்ணத்தில் காண முடியாமல் போனது என்னளவில் - எதையோ இழந்து நிற்கும் மனநிலையையே கொடுக்கிறது!

    இதை வண்ணத்தில் பெறுவதற்காக வேறு இதழ்களில் ஒன்றையோ, இரண்டையோ காவு கொடுக்க நேர்ந்திருந்தாலும் கூட எனக்கு முழுச் சம்மதமாகவே இருந்திருக்கும்!

    போவட்டும்!! மீண்டும் எங்களின் உக்கிரப் பார்வைக்கு ஆளாகாமல் இருக்க, அடுத்து வரயிருக்கும் இளம்-அதிகாரியின் கதைகளையாவது வண்ணத்திலேயே தரும்படி தங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. ஹி..ஹி...இளம் அதிகாரியின் அந்த முதல் 4 நீங்கலான பாக்கி ஆல்பங்கள் எல்லாமே b & w-ல் மட்டுமே இப்போதைக்கு உள்ளன !

      Delete
    2. அப்புறம் இந்த 'இளம் தல' அறிமுகம் கண்ட சூழலை மறுக்கா யோசித்துப் பாருங்களேன் :

      ரூ.40 விலையில், ஒரு அதிரடி நாயகர் என்பதே சந்தா D -ன் template ஆக மனதில் கொண்டிருந்தேன் ! So அங்கே கலர், கத்திரிக்காய் என்ற ஆடம்பரங்களுக்கு இடமிருந்திருக்குமா - என்ன ?

      Delete
  4. ///"மீண்டும் கிங் கோப்ரா"வை எடுக்கிறோம்....இந்த உ.ப.விலே அலசுறோம் ! ரெடியா ? (அந்தக் கதவைப் பூட்டியாச்சு தானே ?)///

    வெளியே போய் இறுக்கமா பூட்டிக்கிட்டு நின்னுட்டேன் சார்..! பேசி முடிச்சதும் சொல்லுங்க திறந்துவிடுறேன்.!

    ReplyDelete
    Replies
    1. அஸ்கு...அஸ்கு...கிங் கோப்ராவின் மெய்க்காப்பாளன் இவான் வாசலில் நிக்குறாப்டி !

      Delete
  5. ///ரூ.500-க்கு மேலான ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.50 விலையிலான இதழ்கள் (Smurfs ; கமான்சே etc) நம் அன்புடன் இணைப்பாய் அனுப்பிடும் நடைமுறையும் கடந்த ஒரு மாதமாய்த் தொடர்கிறது ! ///

    சூப்பர் சார்!!

    ReplyDelete
  6. கதைக்கு கால் கிடையாது என்று யதார்த்தமாகக் குறிப்பிடுவர்.காமிக்ஸ்க்கும் இது பொருந்தும்.அனைத்துக்கும் லாஜிக் தேடிக் கொண்டிருந்தால் எதையும் ரசிக்க முடியாது.நிஜ வாழ்க்கையில் நாம் மரத்தைச் சுத்தி காதல் பாட்டு பாடுவது இல்லையே,ஆனால் 70 வயது ஹீரோ 20ஹீரோயினுடன் பாடும் சினிமாவை ஏற்றுக் கொள்கின்றோமே எதனால்?பழைய கதாநாயகர்களைக் கேட்டு வாங்கி பிறகு அதை குறை சொல்லாமல் நண்பர்கள் தவிர்க்கலாம் அல்லவா?
    சிறிய வயதில் ரசித்தோம் லாஜிக் பார்க்காமல் ,இப்பவும் அதை ஒருமுறை ரசித்துவிட்டுச் செல்லலாமே?

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள்.. 👍🏼👍🏼👍🏼

      Delete
    2. செம செம... சரவணன்.

      +2

      Delete
    3. லாஜிக் மீறி வரதாலதான் அங்க கதையே உருவாகுதுன்றதுதான் லாஜிக்...

      Delete
  7. /// ஒரு படியாக "மீண்டும் கிங் கோப்ரா"வை எடுக்கிறோம்... ///

    ஏம்பா சர்வர்.. இருக்கிற நான்வெஜ் ஐட்டத்தில எல்லாத்துலையும் ரெண்டு ப்ளேட் உடனே சூடா கொண்டுவா..

    ReplyDelete
  8. நாம் எல்லோரும் சும்மா காமெடிக்காக கலாய்த்தாலும் ரசிச்சி படிச்சிட்டுத்தானே செய்கிறோம்.!
    லாஜிக் மீறலும் கற்பனையின் முக்கிய அங்கம்தான்.! எனவே அதற்காகவேணும் கட்டாயம் இதுபோன்ற கதைகளும் வரவேண்டும். தவிரவும் தீவிர ரசிகர்களின் பொருட்டும் இதுபோன்ற பழங்கதைகள் வருவதை வரவேற்கிறோம்.!

    அப்புறம்..

    ஸ்பைடர் எப்ப சார் போடுவிங்க.!? :-)

    ReplyDelete
    Replies
    1. அப்புறம்..

      ஸ்பைடர் எப்ப சார் போடுவிங்க.!? :-) + 1

      Delete
  9. // ரூ.500-க்கு மேலான ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.50 விலையிலான இதழ்கள் (Smurfs ; கமான்சே etc) நம் அன்புடன் இணைப்பாய் அனுப்பிடும் நடைமுறையும் கடந்த ஒரு மாதமாய்த் தொடர்கிறது ! //

    Super.. super... Super

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சார். நன்றி. |

      Delete
  10. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. // இம்மாதத்து ஆன்லைன் sales செம ஆறுதல் அளிக்கும் ரகம் ! And மூன்று புக்குகளையுமே அநேகமாய் அனைவரும் வாங்கியிருப்பது ரொம்பவே மகிழ்வூட்டுகிறது ! //
      அட இது செம நியூஸ்! இத இதைத்தான் எதிர் பார்த்தோம்! ஒரு டான்ஸ் போடுவோம்! அட இப்படிதான் அதிரடிகாரன் இந்த மஞ்சள் சட்டை மாவீரர்கள்

      Delete
  12. // அப்புறம் ரூ.500-க்கு மேலான ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.50 விலையிலான இதழ்கள் (Smurfs ; கமான்சே etc) நம் அன்புடன் இணைப்பாய் அனுப்பிடும் நடைமுறையும் கடந்த ஒரு மாதமாய்த் தொடர்கிறது ! //
    சூப்பரே....அடிக்கும் குட்டிக்கரணங்கள் உரிய பலன்களை தரட்டும்....

    ReplyDelete
  13. "மீண்டும் கிங் கோப்ரா" - புத்தகங்கள் நாளை அனுப்ப சொல்லனும்! அதுவரை ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. // ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறேன்! //
      ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்க்கப் போறீங்களா,இல்லை டைப் பண்ணப் போறீங்களா ??!!

      Delete
  14. பெரிதாய் லாஜிக் மீறல் இல்லாத யதார்த்த //


    மாயாவி, லா&டே, ஸ்பைடர் படிக்க கெட்டாவி தான் வருது. நி. நி. படிச்சப்பவும், குளிர் கால குற்றங்கள் படிச்சப்பவும் அதே தான் வந்துச்சு. இதுல கிநா பழசுங்கற வித்யாசமே இல்லை. லாஜிக் பற்றியெல்லாம் கவலையில்லை. கதை ஆர்வமூட்டும் வகையில் இருக்கனும். அவ்வளவே. மத்ததெல்லாம் இரண்டாம் பட்சமே. என்ன..எது ஆர்வமூட்டும் என்பது ஆளாளுக்கு ரசனைக்கு ரசனை வேறுபடுது. அவ்வளவு தான்.

    ReplyDelete
    Replies
    1. இதே தான் என்னுடைய கருத்தும்..+12345678910

      Delete
  15. // Of course அப்போதுமே லாஜிக்குகளில் மிதமான துவாரங்கள் இருக்கவே செய்தன தான் //
    எனக்குத் தெரிந்த காரணங்கள்,
    1.பால்யங்களில் எதையும் லாஜிக் அளவுகோல் வைத்து எடைபோடுவதே தோன்றாது என்பதே,கிடைத்தால் போதும்,படித்தால் போதும்,அதை மட்டுமே சிலாகித்து கொண்டிருப்போம்....
    ஆனால்,வளர்ந்து விட்டபின் எதையும் தராசில் நிறுத்தி எடை போடுவதே வழக்கமாகி விடுகிறது,அறிவு சார்ந்து யோசிப்பது காரணமாக இருக்கலாம்....
    2.சிறுவயது வாசிப்பு "ஒரு குழந்தை கீழே விழுவதை போல இயல்பாக இருக்கும்",இப்போதைய கட்டத்தில் நம் வாசிப்பு,ஒரு வளர்ந்த மனிதர் கீழே விழுவதைப் போல", அது இயல்பாக இருக்காது,நாம் விழுவதை எதிர்ப்போம்....
    3.பாட்டில் பூதம் கதையை அப்போதைய காலக் கட்டத்தில் கடையில் நான் பார்த்த போதும்,அதை முதலில் வாசித்த போதும் அந்த இதழ் கொடுத்த அனுபவமும்,கனவுகளும் ஏராளம்,ஹாரிபாட்டர் கதையை முதலில் படித்தால் எப்படியிருக்குமோ அப்படி...
    ஆனால்,தற்போது படித்தபோது சிரிப்பு வந்தது...
    எனினும் அந்த இதழின் மேல் எப்போதும் தனி விருப்பம் உண்டு என்பது வேறு கதை....
    அடுத்தடுத்த காலகட்ட நகர்வில் இது தவிர்க்க முடியாதது என்று நினைக்கிறேன்.
    யார் கண்டது நாம் வாசித்த தற்போதைய இதழ்கள் பலவற்றையே அடுத்த தலைமுறையினர் பார்த்து சிரிக்கலாம்,கிண்டலடிக்கலாம்....
    அப்புறம் என்னதான் நாம் பழைய இதழ்களை கிண்டலடித்தாலும் வெறுக்க மாட்டோம் என்றே நினைக்கிறேன், ஏனெனில் ஒவ்வொரு தருணத்திலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு இதழை சிலர் கேட்டுக் கொண்டும்,படித்துக் கொண்டும் தானே உள்ளனர்...அதற்கு சிறுபிராயத்தில் ஏற்பட்ட ஈர்ப்பும்,காமிக்ஸ் காதல் என்ற அந்த ஆழ்மன படிமமும் கூட காரணமாக இருக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. பாகுபலி திரைப்படம் நிறைய பேரை கவர்ந்தது,கவனித்து பார்த்தால் அதில் நிறைய லாஜிக் மீறல்கள் இருக்கும்,எனினும் அத்திரைபடத்தை பலமுறை பார்த்ததுண்டு,எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது....
      காரணம்,அதன் மேஜிக்கல் திரைக்கதை, நம்மை மீண்டும்,மீண்டும் ஈர்க்கும் களமது....
      ஒருவேளை அப்படி ஒரு களம் அமைந்தால் எதையும் யோசிக்காமல் பார்ப்போமோ என்னவோ.....!!!

      Delete
    2. 👏👏👏My thoughts exactly. நான் இன்னும் இந்த புக்கை படிக்கவில்லை. ஆனால், சில விஷயங்களை அப்படியே எடுத்துக் கொள்ளாமல், ஒரு pinch of salt உடன் எடுத்து கொள்ள வேண்டும், esp classic comics. பாகுபலி படத்தை எத்தனை முறை பார்த்தாலும் பிடிக்கும். ராஜமவுலி ஒரு அமர் சித்திர கதைகளின் fan. பாகபலியின் ஒவ்வொரு ஃபிரேமும் காமிக்ஸ் பேனல் போல தான் இருக்கும். சில லாஜிக் அத்துமீறல்கள் இருந்தாலும் ரசிக்க வைக்கிறது. This is the minor stuff. Bigger stuff வேண்டுமென்றால் டிவி சீரியல் பார்த்து உயிர் பிழைத்த பின்னர் பேசலாம்.

      Delete
    3. // Bigger stuff வேண்டுமென்றால் டிவி சீரியல் பார்த்து உயிர் பிழைத்த பின்னர் பேசலாம். //

      எப்படி இப்படி :-)

      செம ஜாலி காமெடி.

      Delete
    4. ///This is the minor stuff. Bigger stuff வேண்டுமென்றால் டிவி சீரியல் பார்த்து உயிர் பிழைத்த பின்னர் பேசலாம்.//

      //டிவி சீரியல் பார்த்து உயிர் பிழைத்த பின்னர் //

      LOL :))))))

      Delete
    5. // பாகபலியின் ஒவ்வொரு ஃபிரேமும் காமிக்ஸ் பேனல் போல தான் இருக்கும். //
      அதே,அதே...

      Delete
    6. //////This is the minor stuff. Bigger stuff வேண்டுமென்றால் டிவி சீரியல் பார்த்து உயிர் பிழைத்த பின்னர் பேசலாம்.////

      ---ஹா...ஹா...!!!

      பாகுபலி பலமுறை ரசிக்க வைத்தது . பவளச்சிலை மர்மம் கூட இதே போல தான்.

      லாஜிக் மீறல் இல்லாமல் வந்த பல கதைகள் வரவேற்பு குறைவாகவே பெற்று உள்ளது. உதாரணமாக கமான்சே போன்றவை...!!!

      லாஜிக்னா என்னானு கேட்ட டியூராங்கோ வரவேற்பு பெற்றதே!

      Delete
  16. பழைய கதைகள் ஒரு சிலருக்கு பிடிக்காததென்பது என்பது உண்மைதான்! ஆனால், பலருக்கு இக்கதையை பார்த்ததும் படித்ததும் அளவிட முடியாத சந்தோஷத்தை வழங்கியுள்ளது!,அதை கண்கூடாகவும் காது குளிரவும் சில நாட்களாக கேட்டு வருகிறேன் பல எதிர்ப்புகள் இருந்தாலும் இதை போட முடிவெடுத்தமைக்கு நன்றி சார் (இதே போல நீண்ட வருடமாக தொங்கலில் உள்ள ஸ்பைடர் கதையையும் போட்டிங்கன்னா....)

    ReplyDelete
    Replies
    1. // பழைய கதைகள் ஒரு சிலருக்கு பிடிக்காததென்பது என்பது உண்மைதான்! ஆனால், பலருக்கு இக்கதையை பார்த்ததும் படித்ததும் அளவிட முடியாத சந்தோஷத்தை வழங்கியுள்ளது!,அதை கண்கூடாகவும் காது குளிரவும் சில நாட்களாக கேட்டு வருகிறேன் //

      Super!! super!!!

      Delete
    2. இப்படி சொன்னாவதாவது ஸ்பைடர் கதை போடுவாங்கன்னு நினைக்கிறீங்களா நடக்கா கலீல் ராஜா நடக்காது

      Delete
  17. கிங் கோப்ரா கதை மொக்கையெல்லாம் இல்ல சார்! ஒகே ரகம்தான் லாஜிக் ஓட்டைகளை கொஞ்சம் அடைத்திருந்தால் இன்னும் ரசிக்கிற மாதிரியே இருந்திருக்கும்

    ReplyDelete
  18. ஆனால் என்கிட்டே வேற ஒரு புத்தகம் இருக்கே அலச! "விண்ணில் ஒரு வேதாளம்"

    Mக்கு ஒரு பார்சல் வருகிறது. அதில் ஒரு மில்லியன் பவுண்ட் பெறுமானமுள்ள தகவல் உள்ளது, அதனை சொல்ல விரும்புவது S.P.E.C.T.R.E தலைவி! அதனை நம்பலாமா வேண்டாமா என ஆரம்பிக்கும் கதை, அந்த பேரம் முடிய 007 பணயமாக செல்ல முதல் பக்கத்தில் வேகம் எடுக்கிறது (அட மெய்யாலுமே). உடன் மணிபென்னியை அழைத்து கொண்டு செல்லகிறார்! அவருக்கு தகவல் கொடுக்க உள்ள நபரின் ஏஜென்ட் கொல்லபடுகிறார், ஏன் எதற்கு யார் என்ற கேள்விகளுடன் வேட்டை ஆரம்பிக்கிறது! இதன் மைய காரணம் ஒரு புதுமையான விண்கப்பல் அதில் பயணிக்கும் செல்வந்தர்கள், இதில் பெரிய ட்விஸ்ட் அந்த வில்லன் யார்! விண்கப்பலை எப்படி காப்பாற்றினார் என்று போகும் வேகத்தில் நடு நடுவே ரசிக்க செய்யும் சில திருப்பங்கள், வழக்கமான 007 சண்டை காட்சிகள், வில்லனை எப்படி கண்டு பிடித்தார் என ரசிக்க செய்தது.
    வழக்கம் போல் தனது ஸ்டீல் பாடியை காண்பித்து ஒரு சண்டை :-)

    இதில் கொஞ்சம் யோசிக்க செய்தது, 007 தனது முகத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் தனது பெயரை மட்டும் ஹசார்ட் மாற்றி விட்டு அந்த விண்கப்பலில் பயணிப்பது, "முகத்தில் ஒரு மருவை ஒட்டிக்கொண்டு நான் ஜேம்ஸ் பாண்ட்" இல்லை என்று சொல்லுவது போல் இருந்தது!

    மொத்தத்தில் 007 ரசிக்க செய்தார்!

    ReplyDelete
    Replies
    1. SPECTRE - Special Executive for Counter-intelligence, Terrorism, Revenge and Extortion
      M - https://en.wikipedia.org/wiki/M_(James_Bond)

      Delete
  19. லாஜீக் இல்லா மேஜீக் என்பது காமிக்ஸ் இதழ்களுக்கு உரியதே..அனைத்து நாயகர்களின் கதைகளும் ஏதாவது ஓரு விதத்தில் ,ஏதாவது ஒரு இடத்தில் லாஜீக் மீறல் இருக்கத்தான் செய்கிறது அது டெக்ஸ் ஆக இருந்தாலும் சரி லார்கோவாக இருந்தாலுமே சரி..அதே சமயம் நமது பால்ய வயதில் ரசித்து கை தட்டி ஆவென வாய் பிளந்து பார்த்த கறுப்பு வெள்ளை படங்களின் சண்டைக்காட்சிகளும் ,மந்திர தந்திர காட்சிகளும் இப்போது முதல் முறையாக பார்க்க நேர்ந்தாலுமே கூட அவை எல்லாம் இப்பொழுது சிரிப்பை வரவழைப்பதாகவே உள்ளது என்பதே மறுக்க முடியா உண்மை.அதே நிலைமை தான் அன்று பால்ய வயதில் இத்தனை விஞ்ஞான அறிவியல் கண்டுபிடிப்புகளையோ ,செய்திகளையோ அறிந்திராத நாம் ஸ்பைடரின் வலை வீச்சும் ,ஆர்ச்சியின் சக்திகளும் ,லாரன்ஸ் டேவிட்ன் பலமும் நம்மை ஆச்சர்யபடுத்தியது அதுவும் அந்த சிறு வயதில் திரையிலோ ,தொலைக்காட்சியிலோ கூட கண்டிராத நமக்கு அதுவே ஒரு நாயக பிம்பமாகவும் பார்க்கப்பட்டது.ஆனால் இன்றோ பார்ப்பது ,படிப்பது மட்டுமல்ல பல விஞ்ஞான அறிவியல்களை நாமே கைகளில் வைத்து நடைபயின்று கொண்டு இருக்கும் போது அன்றைய ஆச்சரயங்கள் இன்று நகைச்சுவை ஆகி போனதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.எனவே தான் இன்று ஸ்பைடர் ,ஆர்ச்சி ,லாரன்ஸ் டேவிட் போன்றோர்கள் இனி நமக்கு ஓவர் லாஜீக் மீறலாகவே காணப்படுவார்கள் என்பது மட்டுமல்ல இந்த காலகட்டத்தில் கொஞ்சம் சிரம படுத்த செய்வார்கள் என்பதும் உண்மையே.ஒரு சிலரின் மிக நெருக்கமான ரசிகர்கள் விட்டுக்கொடுக்காமல் பேசினாலும் மனதளவில் அவர்கள் அந்தந்த நாயக இதழ்களுடன் பழைய காலத்தில் போல ஒன்றிப்போனார்கள் என்று சொன்னால் கண்டிப்பாக 90% அது மிகையாகவே இருக்கும்.எனவே இந்த நமது சிறுவயது நாயகர்கள் ஆர்ச்சி ,ஸ்பைடர் ,லாரன்ஸ் டேவிட் ,ஏன் பெருச்சாளி பட்டாளம் கூட இதயத்தில் இடம் கொடுத்து வைத்து இருப்பதே சிறப்பாக இருக்கும்..இவர்களுக்கெல்லாம் ஆக மிக சிறந்த ரசிகன் நானுமே என்பதுமே இந்த சமயத்தில் அறவித்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன். ஏன் நானே கூட இதுவரை மீண்டு வராத ஜார்ஜ்டிரேக் ,அதிரடி படை ,இரும்புக்கை நார்மன் போன்றோர்களை இப்பொழுது அறவித்தால் கூட விழுந்தடித்து கொண்டு ஓடி வந்து ஓட்டு போடுவேன் என்பதும் உண்மை.மீண்டும் அவர்கள் வந்து கதைகளை படித்து முடித்ததும் இதே லாஜீக் மீறல் கற்பனையை நினைத்து சிரிக்க போவதும் உண்மை. லாரன்ஸ் டேவிட் மட்டுமல்ல சமீபத்தில் வந்த ஆக்‌ஷன் ஸ்பெஷலை கூட நினைத்து பாருங்கள் அதுவே நிதர்சனம்.

    எனில் டெக்ஸ் , , மாடஸ்தி 007, ( கார்ட்டூன் நாயகர்களை இதில் இணைக்க தேவையில்லை) போன்றோர் கூட அன்று முதல் இன்று வரை ரசிக்க வைக்கிறார்களே ,அவர்களின் லாஜீக் மீறல் உறுத்த வில்லையே ஏன் என சிந்தித்தால் கிடைக்கும் விடை ஒன்றே ஒன்று தான்.

    அவர்களின் கதைகளிலும் லாஜீக் மீறல் இருக்கலாம் தான்.ஆனால் கதையே லாஜீக் மீறலாக இருக்காது.நமது அனுபவங்களும் ,வளர்ச்சிகளும் ,வயதுகளும் கூட கூட நமது பால்ய நாயகர்களை விட்டுக் கொடுக்க கூடாது என மனது சொல்கிறது ,புத்தியோ அதனை தடுமாற வைக்கிறது.

    பழைய நாயகர்களை மனதில் இடம் கொடுத்து வைப்பதே மனதிற்கு நல்லது என்பது சமீபத்திய ஆர்ச்சி ,லாரன்ஸ் போன்றாரை படிக்கும் பொழுத ஏற்பட்ட மனநிலை .


    இறுதியாக ஸ்பைடர் வாழ்க ,ஆர்ச்சி வாழ்க ,லாரன்ஸ் டேவிட்டும் வாழ்க ...


    நன்றி சார்..

    ReplyDelete
    Replies
    1. அருமையா சொன்னீங்க தல....

      Delete
  20. // பாலமுருகன், திருச்சி - 1 புக் - # 84
    இக்னேஷியஸ் லோரன், கோர்பா - 1 புக் - # 85
    குமார், காஞ்சிபுரம் - 1 புக் - # 86
    திருச்செல்வம் பிரபாநாத், பிரான்ஸ் - 1 புக் - # 87
    //

    Super friends!!

    ReplyDelete
  21. பார்சல் இன்னும் கிடைக்கவேயில்லை. Full lockdown.:-((

    ReplyDelete
  22. புரியாத புதிர்களான கிராபிக் நாவல்களுக்கு மீண்டும் கிங் கோப்ரா எவ்வளவோ மேல். அரை மணி நேரத்தில் ஒரு ஹாலிவுட் படம் டாம் குருஸின் மிசன் இம்பாசிபிள் படம் பார்த்த மாதிரி இருந்தது. டாம் குருஸூம் மாஸ்க் போடுவார் கிங் கோப்ரா மாதிரி.

    ReplyDelete
    Replies
    1. //புரியாத புதிர்களான கிராபிக் நாவல்களுக்கு//

      அதனால் தான் கி. நாவல்களின் பின்னட்டையில் "இரசனைகளில் முதிர்ந்தோருக்கு" என்ற சொல்லாடல் இடம்பெற்றிருக்கும் நண்பரே !!!

      Delete
  23. நானும் வந்துட்டேன். என்ன கொஞ்சம் லேட் அவ்வளவு தான்

    ReplyDelete
  24. லாஜிக் ஓட்டை இல்லாத ஹீரோ இல்லை .. TEX ஆக இருக்கட்டும் TIGER , லார்கோ யாராக இருந்தாலும் சில ஓட்டைகள் இருக்கும் .. ஆனால் கதை சுவாரசியமாக இருந்தால் ஓகே .. லாஜிக் இல்லாத கதை வேண்டும் என்றால் TEX முதல் சண்டையிலேயே இறந்து விடுவார் .. கதை 4 பக்கங்களில் முடிந்து விடும் ..

    தோர்கல் ஒரு பாண்டஸி கதை .. அதில் எதை சேர்த்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் .. MODESTY , பாண்ட் 1.௦ ரசிக்கிறோம் இன்றும் .. "தலை கேட்ட தங்க புதையல்"," திகிலூட்டும் நிமிடங்கள்" அன்று FAVORITE .. இன்று ரசிக்க முடியலை .. OVER THE TOP HEROISM தான் SIR ரசிக்க முடியவில்லை ..

    MAYBE 'பி.பி.வி',' பிரிவோம் சந்திப்போம்' போன்ற கதைகளை எங்களுக்கு காண்பிக்காமல் இருந்து இருந்தால் இன்று "மீண்டும் கிங் கோப்ரா"க்கு விசில் அடித்து இருப்போமோ என்னவோ ..

    ReplyDelete
    Replies
    1. ///'பி.பி.வி',' பிரிவோம் சந்திப்போம்' போன்ற கதைகளை எங்களுக்கு காண்பிக்காமல் இருந்து இருந்தால் இன்று "மீண்டும் கிங் கோப்ரா"க்கு விசில் அடித்து இருப்போமோ என்னவோ///

      ----நெத்தியடி ராம்!

      Delete
    2. தோர்கல் ஒரு பாண்டஸி கதை .. அதில் எதை சேர்த்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் .. MODESTY , பாண்ட் 1.௦ ரசிக்கிறோம் இன்றும் .. "தலை கேட்ட தங்க புதையல்"," திகிலூட்டும் நிமிடங்கள்" அன்று FAVORITE .. இன்று ரசிக்க முடியலை .. OVER THE TOP HEROISM தான் SIR ரசிக்க முடியவில்லை ..////

      உண்மை ஶ்ரீ...+12345

      Delete
  25. Why do we see a selective discrimination ?

    அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை சார் ! தங்களின் வயது 45 லிருந்து 55 ற்குள் தான் ; நாங்கள் இன்னும் யூத் தான் என்று காட்டுவதற்காக மட்டுமே இங்கு லாரன்ஸ் & டேவிட் கதையை கிண்டலடிக்கிறார்கள் !!

    நன்றி !

    ReplyDelete
  26. விஜயன் சார், நமது புத்தக ஏஜென்ட் நண்பர்களின் பெயர், முகவரி மற்றும் அவர்களில் போன் போன்ற விவரங்களை நமது blog மற்றும் ஆன்லைன் விற்பனை தளத்திலும் ஒரு லிங்க் மூலம் கொடுக்கலாமே! ஆன்லைனில் வாங்க முடியாத நண்பர்கள் புத்தக ஏஜென்ட் மூலம் நமது புத்தகங்களை வாங்க உதவியாக இருக்குமே!

    ReplyDelete
    Replies
    1. அந்த விவரங்கள் நமது இதழ்களிலியே பெரும்பாலான மாதங்களில் இடம்பிடிக்கின்றனவே PFB...!!!

      Delete
    2. Arivarasu @ Ravi கடந்த சில மாத இதழ்களில் இவைகளை காணவில்லை! இதற்கு முன்னால் சில இதழ்களில் பார்த்து இருக்கிறேன்! நான் சொன்னது போல் செய்தால் இன்னும் வசதியாக இருக்கும்!

      Delete

  27. எதிரிகள் ஓராயிரம்....

    ஆர்ப்பாட்டமான அட்டையை தாண்டி உள்ளே புரட்டினால் மொத பக்கமே சும்மா புரட்டி அடிக்கும்
    அசாத்திய ஓவியங்கள் கண்ணில் டாலடிக்குது.

    மாலை சாய்ந்து மனதை மயங்கும் அந்தி நேரம், அரிசோனா பாலையின் சியாரா மலைப்பகுதி; கற்றாழை புதர்களிடையே மறையும் கிரணங்கள்; முகட்டின் மேட்டுப்பகுதியில் நெருப்பின் கதகதப்பில் நால்வர்; நெருங்கிச் சென்று என்ன பேசுறாங்கனு கேட்போம் வாருங்கள்.

    500டாலர் வெகுமதிக்காக தங்களது இரைக்கு வலைவிரித்து தேடிவரும் வெகுமதி வேட்டையர் கும்பல் அது.

    யார் இந்த இரைனு பார்த்த போஸ்டரில் சின்ன தல "டெக்ஸ்"!

    அட தலையின் தலைக்கு 500டாலர்தான் வெகுமதியா??? என யோசித்து கொண்டே பக்கங்களை புரட்டினால் விசயம் வெட்ட வெளிச்சமாகிறது.


    "ராபர்ஸ் நெஸ்ட்" எனும் திருடர்களின் புகழிடத்தில் சின்னதல கொன்று குவித்த போக்கிரிகளின் சாவுக்கு பழிவாங்க வெகுமதி வேட்டையர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு வந்துள்ளான் போக்கிரி காஃபின்! வெகுமதி தொகையை விட காஃபினுக்கு, தன் கூட்டாளிகளின் சாவுக்கு பழிதீர்ப்பதே பிரதானம்!

    அதென்ன ராபர்ஸ் நெஸ்ட்??? போக்கிரிகளை ஏன் சின்ன தல போட்டு தள்ளினர்? என எழும் கேள்விகளுக்கு விடை தெரிஞ்சிகிட்டு மேலே போக மனசு சொல்ல..., முந்தைய யங் டெக்ஸ் சாகசம் "காற்றுக்கு ஏது வேலி"-யை எடுத்து புரட்டினேன்.

    ...........,

    ReplyDelete
    Replies
    1. // அரிசோனா பாலையின் சியாரா மலைப்பகுதி; கற்றாழை புதர்களிடையே மறையும் கிரணங்கள்; //
      நானும் முதலில் இதையே யோசித்தேன்...ஹி,ஹி...

      Delete
    2. ஆம் ரவி... அந்த காட்சி ஓவிய ரசிகர்கள் நம் எல்லோரிடமும் இதே உணர்வைதரதான் ஏற்படுத்தும்...!!!

      Delete
  28. "ராபர்ஸ் நெஸ்ட்டின் மர்மம்....."

    *"பினோஸ் ஆல்டோஸ் "என்ற அபாச்சேக்களின் குடியிருப்பு எல்லையில் உள்ள தங்கச்சுரங்கத்தினரின் தங்கத்தை வழிப்பறிசெய்து விட்டு, சாதுர்யமாக அப்பழியை இளம் டெக்ஸ் மீது போடுகிறான் கிராதகன் வெர்டுகோ. அவனின் கூட்டாளிகள் ஸ்கிர்மெர் & மெண்டோஸ்; தங்கள் பங்கை வாங்கிக் கொண்டு தக்க சமயத்தில் டெக்ஸையும் போட்டுத்தள்ள ஆட்களை ஏவுகிறான் மெண்டோஸ்.

    *இதற்கிடையே தலயின் தலைக்கே விலை அறிவித்து அவரை கைது செய்ய தங்களது ஆயதக்காவலர்களை ஏவிவிடுகிறது பினோஸ் ஆல்டோஸ்...., சட்டத்தால் தேடப்படும் குற்றவாளியாக்கப் படுகிறார் டெக்ஸ்.(இதான் அந்த 500 டாலர் வெகுமதி போஸ்டர் ரகசியம்)

    *டாம் டெக்கார்ட் தலைமையில் வரும் ஆயதபணிக் காவலர்கள்தான் தலையை வேட்டையாட துரத்தும் கூட்டம். டாமின் ஆட்களில் ஒருவனை போட்டுத்தள்ளிட்டு, டைனமைட்டின் சகாயத்தில் தப்பி ஓடுகிறார் தல.

    *தான் குற்றவாளியாக்கப்பட்டதன் பின்னணி பற்றியறிய நியூமெக்ஸிகோவில் உள்ள "ரேட்டில் ஸ்னேக்" டரேடிங் போஸ்ட் வருகிறார் டெக்ஸ். (அந்நாட்களில் பன்னாக்கில் இருந்த "ஸ்கின்னர் ட்ரேடிங் போஸ்ட்" ஞாபகம் வந்தால் நீங்களும் என்னைப்போல ஒரு "அப்பாவி" தான்...!)

    *ரேட்டில் ஸ்னேக் உரிமையாளன் சாட்டோவிடம் உரையாடிட்டு இருக்கும் டெக்ஸை போட்டுத்தள்ள விழையும் (மெண்டோஸின் ஆட்கள்) போக்கிரிகள் மூவரை நொடியில் பரலோகம் அனுப்புகிறார் இளம்தல...மின்னல் தோற்றது போங்க...

    *போக்கிரிகளை பற்றி சாட்டோவிடம் விசாரித்து அறியும் டெக்ஸ், "ராபர்ஸ் நெஸ்ட்" என்ற வரைபடத்தில் இல்லாத சமூக விரோதிகளின் புகலிடத்திற்கு விரைகிறார். தேடப்படும் குற்றவாளி என்பதால் ஏகபோக வரவேற்பு தான் தலைக்கு....!!!

    *ஸ்கிர்மெர் & மெண்டோஸ் இருவரும் ராபர்ஸ் நெஸ்டின் இரு டேஞ்சரஸ் தலைகள். நகரின் ஒவ்வொரு கோடியிலும் ஆளுக்கொரு சலூனை வைத்து கொண்டு அராஜகம் செய்து வரும் இருவரும் ஒருவரை யொருவர் வீழ்த்த சமயத்தை எதிர்பார்த்து இருப்பவர்கள். உள்ளுக்குள் இந்ந வஞ்சக எண்ணம் இருந்தாலும் கூட இருவரும் கிடைக்கும் பணத்தை சமமாக பங்கிட்டு கொள்கிறார்கள்.

    *ஸ்கிர்மெரின் சலூனில் சதை வியாபாரம் செய்யும் ஸோபியிடம் இருந்து அனைத்தும் அறியும் டெக்ஸ், வெர்டுகோவின் இடத்திற்கு செல்ல கிழட்டு போக்கிரி டஸ்டியின் உதவியை நாடுகிறார். டெக்ஸிடம் முறைத்துக் கொள்ளும் இளம் போக்கிரி வில் க்ரெமெர் டெக்ஸை எப்போதும் பின்தொடர்கிறான்.

    *இரவில், மெண்டோஸின் ஆட்கள் தன்னை கொல்ல இருக்கும் வலையை நோக்கி டெக்ஸ் போக; டஸ்டி & வில் கிரெமர் சகாயத்தால் உயிர் பிழைக்கும் இளம் டெக்ஸ்ம், வில்லும், டஸ்டியும் டெவில் பள்ளத்தாக்கில் வெர்டுகோவை வேட்டையாடி போகிறரார்கள். தான் குற்றமற்றவர் என நிரூபிக்க டெக்ஸ் செய்த முயற்சியில் எதிர்பாரா திருப்பம் நிகழ்கிறது.

    *ஸ்கிர்மெரின் சலூனில் இருந்து டெக்ஸ் வெளியேறி வந்ததால், தன் வஞ்சக சதிவலை பற்றிய தகவலை டெக்ஸிடம் பகிர்ந்தது ஸ்கிர்மெர் தான் என முடிவு கட்டும் மெண்டோஸ், அவனோடு நேரடி மோதலில் ஈடுபடுகிறான். டெக்ஸ்,வில்மர்& டஸ்டியும் பங்குபெற, ராபர்ஸ் நெஸ்ட்டில் உள்ள பெரும்பாலான போக்கிரிகள் கொல்லப்படுகிறார்கள்.

    *கிரிகாகுவா அபாச்சே செவ்விந்திய பெண்களை கடத்தி "வியாபாரிகள்" என்ற போக்கிரிகளிடம் விற்கும் ஈனத்தனத்தை வெர்டுகோ செயதுவருவதை ஸோபியிடம் இருந்து அறியும் டெக்ஸ், வியாபாரிகளை முறியடிக்க முடிவெடுக்கிறார்.

    *தங்கள் பெண்களை கடத்தி சென்றதால் வியாபாரிகளையும், மற்ற கடத்தல்காரர்களையும் தேடியலையும் கோசைஸ் தலைமையிலான செவ்விந்தியர், டெக்ஸின் பாதையில் குறுக்கிடுகிறார்கள்.

    *பரபரப்பான, திடீர்திருப்பங்கள் நிறைந்த, துணிச்சலான வீரம் தெறிக்கும், நீண்ட நெடிய சம்பவங்கள்+ அசாதாரண யுக்திகள் கொண்ட நெடிய போராட்டத்தின் முடிவில் வியாபாரிகளை காலி செய்கிறார்கள்; டெக்ஸூம் கோசையும் சகோதரர்கள் ஆகிறார்கள்!

    *சட்டத்தின் முன் குற்றவாளி அல்ல என நிரூபிக்கும் முயற்சியில் கோசைஸ்ஸின் சிரிகாகுவாக்கள் டெக்ஸூக்கு உதவ முன்வருகின்றனர்.

    (இந்த அளவில் காற்றுக்கு ஏது வேலியை நினைவு படுத்திக் கொண்ட பின், இப்போது நாம புதிய கதையில் காஃபின் கோஷ்டியை பின் தொடரலாம்)

    ReplyDelete
  29. லாஜிக் பார்த்தா எந்த ஹீரோ வொர்ஷிப் கதையும் சரி, படமும் சரி,தேறவே தேறாது. டெக்ஸ் கதைகளில் இல்லாத லாஜிக் ஓட்டைகளா?
    டெக்ஸ் சுடுற குண்டுல வில்லன் ஆள்காலி. ஆனால் வில்லன் சுடறப்ப மட்டும் குண்டு தோள் பட்டைய உரசிகிட்டு போகும். அந்த ஓட்டைகள் எல்லாம் கதையின் டெம்ப்போவில் அடிபட்டு போய்விடும்.
    எம் ஜி ஆர், ரஜினி, விஜயகாந்த் என எந்த ஹீரோவின் படங்களை எடுத்துக்கொண்டாலும் அவற்றில் லாஜிக் என்பது மருந்துக்குக் கூட கிடையாது. ஆனால் அவற்றின் விறுவிறுப்பில், சுவாரஸ்யத்தில் அவை வெற்றிபெற்றன.
    மாடர்ன் மசாலா படங்களில் ஹீரோயின் 9 கெஜம் புடவை தழைய தழைய கட்டி வருவதும், காமிக்ஸ் கற்பனை கதைகளில் லாஜிக் பார்ப்பதும் ஒன்றே.

    ReplyDelete
  30. டெக்ஸ் துப்பாக்கி குண்டில் இருந்து தப்பிப்பதும் ,வில்லன் துப்பாக்கியில் சுடப்பட்டு சாவதும் என்பதை எல்லாம் லாஜீக் மீறலாக பார்க்க வேண்டாம் சார்...அப்படி பார்த்தால் டைகருமே இதில் அடங்கி தான் போவார்...டைகர் மட்டுமல்ல லார்கோ ஷெல்டன் கூட த்தான்.

    திரைப்படத்தில் கூட நாயகன் ஒரு படத்தில் இறந்து விட்டு அடுத்த படத்தில் அடுத்த கதையில் வேறு கதாபாத்திரத்தில் உயிருடன் வரலாம்.ஆனால் நமது காமிக்ஸ் கதையில் தொடர்ந்து வரும் நாயக கதாப்பாத்திரம் வில்லனால் சுடப்பட்டு மறைந்தால் அடுத்த படைப்பில் உயிர் பெற முடியாதே..எனவே வில்லன் துப்பாக்கி குண்டிற்கு தொடர்ந்து வரும் எந்த நாயகராக இருந்தாலும் தப்பித்து தான் ஆக வேண்டும்..டெக்ஸ் மட்டுமல்ல டைகரும் தான்.ஏன் சில கதைகளில் வில்லனே டெக்ஸ் கதையில் கூட தொடர்ந்து வருகிறாரே.அவரையும் முடிவில் உறுதியாக இறப்பது போல் காட்டுவது இல்லையே..ஏன் உதாரணமாக அதிரடிப்படை ,கொலைப்பசி கதையில் வரும் நாயகர் கேப்டன் ஜான் வெஸ்ட் இறப்பது போலவே கதை முடிந்து கண்களில் நீரை வரவழைத்து பின் அவருக்கு பதிலாக சாகஸ தலைவியாக ஒரு பெண்மணி அவருக்கு மாற்றாக வருவார்..அதே போல் தொடர் வெற்றி நாயகர் டெக்ஸ் ,டைகருக்கு மாற்றாக வேறு ஒருவரை நம்மால் நினைத்து பார்க்க முடியுமா..?

    எப்படி சுட்டாலும் டெக்ஸ் தப்பித்து ஆக வேண்டும்.எனவே நாம் அதனை லாஜீக் மீறலாக பார்க்க தேவையில்லை என்பது என் கருத்து.

    ReplyDelete
  31. மீண்டும் " -கிங் கோப்ரா "
    நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் " லாரன்ஸ் & டேவிட்" ஜோடி யின் சாகஸம்.
    சாகஸம் என்று சொன்ன பிறகு அதில் என்ன "லாஜிக் "பார்ப்பது.
    . பொதுவாகவே சாகஸ ஜோடிகளை மனதுக்குள் ஆராதிப்பதன் காரணம். - ஃ
    உலகத்தையே பெரும் அழிவில் இருந்து காப்பாற்றி இருப்பார்கள். அதற்காக பெரும் பலனை எதிர்பார்க்க மாட்டார்கள். என்பது தான்.
    ".கிங் கோப்ரா " -வை Batman - யின் "ேஜாக்கர் குணாதிசியத்துடன் படித்தால் நிச்சயம் ரசிக்கும் தான்.
    ஆனால், எனக்கு இரண்டு குறைகள் தான்.
    முதலாவது, திரைக்கதையில் பெரும் செல்வந்தர்களால் ஆடம்பரத்தீவு ஒன்று கொடுத்ததாகச் சொல்வது.அப்றம் லாரன்ஸ் / டேவிட் ஜோடி போலீஸோ - பொதுமக்களோ, அறியாத துப்பறியும் வீரர்கள் . ஐ.நா சபையின் கண் ரோலில் இருப்பவர்கள். க்ளைமேக்ஸில் போலீஸில் மாட்டிகொண்டு அவஸ்தைபடும் போது ஐ.நா.சபை அதிகாரி ஒருவர் தலையிட்டு அவர்களை பற்றி உயர்த்தி பேசி உலகத்தை காப்பாற்ற சொல்லி கேட்பது போன்ற ப்ள்ட் அப் இல்லாதது.
    இரண்டாவது, இதழ் சைஸ்தானுங்க...
    நீங்க என்ன தான் சொன்னாலும் அந்த பாக்கெட் சைஸில் ரசித்ததை பாக்கெட் சைஸில்தான் ரசிக்க முடியும். என்பததே..i

    ReplyDelete
  32. பெட்டியை இன்னும் பிரிக்கவில்லை. அதனால் கதைகள் பற்றி பேசவில்லை. லாஜிக் பற்றி நீங்கள் கேட்டதால்....
    ஒரு துக்கடா வில்லன் டெக்ஸ் போலவே மாறி ஊரையே ஏமாற்றுவானாம்! அதனை யாரும் கண்டு கொள்ளமாட்டடோம். அதுவே எல்லா வசதிகளும் உள்ள டயபாலிக் அப்படி முகம் மாற்றிக் கொள்ளும் போது அதனை கிண்டலடித்து பேசுவோம்.
    அட்சயபாத்திரம் போல அட்சய துப்பாக்கி டெக்ஸிடம் இருக்கிறதாம்! அவர் ஆயிரம் பேரைக்கூட ஒற்றைத்துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருப்பாராம்! அதனையும் கண்டுகொள்ள மாட்டோம். லாஜிக் பார்த்தால் ஒரு கதையிலாவது அவரை போட்டுத் தள்ளியிருக்கவேண்டாமா?இத்தனை காலமாக அவரை யாராலும் வீழ்த்த முடியாது என்ற பிம்பமே லாஜிக் எல்லாவற்றையும் தாண்டி ஒரு கடவுள் ஸ்தானத்தில்தானே அவரை வைத்திருக்கிறது. அதுபற்றி எமக்கு கவலையில்லை. புரட்சித்தலைவர் கீழே விழும் பெரிய மரத்தையே தன் தோளில்தாங்கி நாயகியை காப்பாற்றுவார். சூப்பர் ஸ்டார் காலை சுழற்றினாலே வர்தா புயல் வீசுகிறது. உடம்பை சிலிர்த்தாலே அவரை சுற்றியிருக்கும் முப்பது தடியர்களும் பறந்துபோய் விழுகிறார்கள்.விஜயகாந்த் படம்...? கண்ணை கட்டுகிறது!பைத்தியக்காரன்கூட நம்ம சினிமாவில் ராகம் தாளம் பல்லவி மாறாமல் பாடுவான். ரன்னிங்ரேஸில் ஓடுவதைபோல ஓடிக்கொண்டே நாயகனும் நாயகியும் மூச்சிரைக்காமல் பாடுவார்கள்! ஒரு தலை ராகம் படத்தை என்பதுகளில் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் இயல்பான படம் என்று ஊரே கொண்டாடியது. அந்தப்படத்தில் நாயகன் பலகுரல் மன்னன்போல ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பாடகர் என்று வரிசையாக பாடல்களை பாடி தள்ளினார்! உலகமே கொண்டாடிய(எடிட்டர் அதற்கென தனிபதிவே போட்ட ஞாபகம்!) பாகுபலியில் லாஜிக் என்று பார்க்க ஆரம்பித்தால் தேற இரண்டு ரீல்கள்கூட மிஞ்சாது! பட்டியலுக்கு முடிவேயில்லை! மும்மூர்த்திகளின் கதையைமட்டுமே கிண்டல் செய்வதன் காரணம் மும்மூர்த்திகளை கேட்டு ஒரு கூட்டம் இருக்கிறதல்லவா? அவர்களை நக்கலடிக்கவே இந்தக் கிண்டல், கேலி எல்லாம்! மற்றபடி நீங்கள் எங்கள் எடிட்டர் என்பதைதாண்டி ஒரு பதிப்பக உரிமையாளராவும் இருப்பதனால் நீங்கள் ஒரு கதை விற்பனையில் சாதிக்கிறதா இல்லையா என்று பாருங்கள். போனியாகாத நாயகர் யாராக இருந்தாலும் உதறி தள்ளுங்கள். நீங்களும் கதையில் லாஜிக் எல்லாம் பார்க்க ஆரம்பித்தால் உங்களது குடோன் நிரம்பி வழிவதுதான் மிஞ்சும்.

    ReplyDelete
    Replies
    1. மும்மூர்த்திகளை கேட்டு ஒரு கூட்டம் இருக்கிறதல்லவா? அவர்களை நக்கலடிக்கவே இந்தக் கிண்டல், கேலி எல்லாம்! Appadi podunga sir

      Delete
  33. ******* மீண்டும் கிங் கோப்ரா! *******

    சுமார் 25+ வருடங்களுக்கு முன்பு இக்கதையைப் படித்திருந்தேனேயானால், பக்கத்துக்குப் பக்கம் மயிர்கூச்செரிய வைத்திடும் சாகஸக் கதைகளில் இதுவே நம்பர்-1 என்றிருப்பேன்!

    லாரன்ஸுக்கும், டேவிட்டுக்கும் எத்தனை எத்தனை சோதனைகள்!! ஒவ்வொன்றுமே விதவிதமாக, குரூரமாக, தொழில்நுட்பத்தில் மிரட்டும் விதமாக - அப்பப்பா.. நமக்கு மூச்சிறைக்கிறது!

    முதல் பக்கத்திலேயே தென்னை மரத்தை வேறோடு பிடுங்கியெறிவது, கம்யூட்டரை விட வேகமாகக் கணக்குப் போடுவது - ஆகியவை காட்டப்பட்டிருப்பதின் அர்த்தமே 'இனி வரும் பக்கங்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கப் போகிறது.. அதற்கேற்ப உங்கள் மனதைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள்' என்பதுதான்! (கொஞ்சம் கஷ்டம் தான் என்றாலும் கூட) இதைத் தெளிவாக உணர்ந்து கொண்டடோமேயானால், தொடர்வது ஒரு அதிரி புதிரி ஆக்ஸன் திருவிழா என்பதே உண்மை!!

    சராசரியாக மூன்று பக்கங்களுக்கு ஒருமுறையாவது நம் லா&டே ஜோடி மயங்கிய நிலையில் கிடக்கிறது! பரிதாபம்!! ஏற்கனவே நண்பர் ஒருவர் இங்கே குறிப்பிட்டிருந்ததைப் போல 'மொத்த மயங்கக்கள் எத்தனை?' என்று போட்டியே வைக்கலாம்! சரியான விடையளிப்பவர் அசாத்தியத் திறமைச்சாலியாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது!

    நிச்சயம் லா&டே ரசிகர்களுக்கு மறக்க இயலாத ஒரு பெரிய விருந்து!!

    என்னுடைய ரேட்டிங் :
    25 வருடங்களுக்கு முன்பு : 10/10
    தற்போது : 8/10

    ReplyDelete
  34. எதிரிகள் ஓராயிரம் தொடர்கிறது.....

    நமத்துப்போன நால்வர்.....

    காஃபின் & மற்ற வெகுமதி வேட்டையர்கள் டெக்ஸை பிடிப்பதாக நினைத்து ஒரு குதிரைக் களவாணியை பிடித்து பல்பு வாங்குகிறான்கள். தாங்கள் ஏமாந்த ஆத்திரத்தை மறக்க, அவனை தூக்கில் தொங்கவிடுகின்றனர்.

    டுங்ங்ங்கீஈஈஈஈ.....டுங்ங்ங்கீஈஈஈஈ...கயிறு தெறிக்க சின்ன தல இருகைகளிலும் ஏந்திய "கன்"களோடு மாஸாக எண்ட்ரி ஆகிறார்....!!

    (ஊய்...ஊய்...ஊய்....னு விசில் பறக்க...கைதட்டல்கள் திரையில் எதிரொளிக்க பூந்தூறல் வீச.......)

    இரணடு வெகுமதி வேட்டையர்களை தல போட்டு தள்ள. காஃபினும் இன்னொரு வேட்டையனும் சுரங்கத்தில் ஓடி ஒளிந்து கொள்கின்றனர். அவர்களை நோக்கி சின்னதல மெதுமெதுவாக முன்னேற, குதிரைக்களவாணி தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓட்டம் புடிச்சிடுதான்.

    சுரங்கத்தில் சதிபண்ணும் கடேசி வெகுமதி வேட்டையன், அவன் சதிக்கு அவனே பலியாக காஃபின் பாதாள ஆற்றில் விழுந்தது கண்டு திகைக்கிறார் சின்ன தல.

    தலைதெறிக்க ஓடும் குதிரைக்களவாணி வழியில் காஃபின் வகையறாக்களின் குதிரைகளையும் போகிற போக்கில் ஆட்டையபோட்டுகிட்டு போறான். களவாணிக்கு டெக்ஸின் குதிரை டைனமைட், டிமிக்கு கொடிக்கிறது. வெகுமதி வேட்டையர்களின் குதிரையோட சேணப்பையில் இருந்த
    டெக்ஸ் வெகுமதி போஸ்டரை பார்க்கிறான். உலர் இறைச்சியை விழுங்கிட்டு, ஓடையில் நீர் அருந்திட்டு நிமிர மின்சார அதிர்ச்சிக்குள்ளாகிறான்.

    தன்னை சுற்றிலும் அபாச்சேக்களை பார்த்து வெலவெலத்து போகும் குதிரைக்களவாணி , அவர்களிடம் மாட்டுவதை விட தன் துப்பாக்கியால் சுட்டுகொண்டு சாவதே மேல்னு பிஸ்டலை எடுக்க மீண்டும்,

    "டுங்ங்ங்கீஈஈஈஈஈ......"

    குதிரைக்களவாணியின் கைத்துப்பாக்கி எகிற சின்னதலை புகையும் தன் துப்பாக்கியோடு போஸ்தர்றார்.

    அபாச்சேக்களிடம் சின்ன தலைக்கு இருக்கும் செல்வாக்கு கண்டு குதிரைக்களவாணி திகைக்கிறான். இருவரும் அபாச்சே கிராமத்தில் கோசைஸின் விருந்தோம்பலில் திளைக்கின்றனர்.

    இதற்கிடையே ஆற்றோடு போன காஃபினை மீட்கிறான் பாணீ செவ்விந்தியன் உல்ஃப் டீத்; இவனே முன்பு டெக்ஸின் தடத்தை காட்டி
    கொடுத்தது. டெக்ஸிடம் அடிவாங்கி மீண்டதை விவரிக்கிறான் காஃபின்! பாணீ இன புதையலை அபகரிக்கும் அடுத்த சூழ்ச்சியில் இருவரும் இறங்குகின்றனர். புதையலை இருக்கும் இடத்தை குறிக்கும் மெடலை அணிந்திருக்கும் பாணீக்களின் முதிய தளபதியை அவரது குடிசையில் தாக்கி கொன்று, மெடலை அபகரிக்கின்றனர்.

    வேட்டைக்குப் போன முதியவரின் மகள் தேசாவும், இரு பாணீ வீரர்களும் துப்பாக்கி சத்தம் கேட்டு
    விரைந்து வர, தன்னை சுட்டது பாணீ இனத்தில் இருந்து விரட்டப்பட்ட உல்ஃப் டீத்தும், காஃபின் என்ற வெள்ளையனும் என சொல்லிட்டு உயிரை விடுகிறார், பாணீ தளபதி கிரே பியர்.

    கிரே பியரை எரியூட்டிட்டு காஃபீனை தேடிச் செல்கின்றனர் தேசாவும் பாணீ வீரர்களும்.

    கோசைசிடம் விடைபெற்று தன் வழிய
    விரையும் டெக்ஸ், தூரத்தில் இருந்தே கிரே பியரின் குடிசையில் இருந்து கிளம்பும் புகையை கவனித்து அதை பற்றி தெரிந்து கொள்ள போகிறார்.

    ஆனால் சின்ன தலையை தேடியலையும் ரோந்து படை சமயம் பார்த்து வர அவர்களிடம் இருந்து தப்ப ஓடும் டெக்ஸ், முட்டு பள்ளத்தாக்கில் சிக்கிக்கொள்ள.... ரோந்து படை நெருங்குகிறது!
    ..............

    ReplyDelete
  35. நம் அருமை நண்பர் JSK நம்மை விட்டுப் பிரிந்து மீளாத் துயிலுக்குச் சென்றுவிட்டதாகத் தகவல் வந்திருக்கிறது நண்பர்களே! :(

    ReplyDelete
    Replies
    1. துயரமான செய்தி.
      நண்பர் JSK வின் ஆத்மா சாந்தியடைவதாக.

      Delete
    2. ஆழந்த அனுதாபங்கள்..

      Delete
    3. வாழ்க்கையின் வலிமிகுந்த அத்தியாயத்தைக் கடந்து விட்டார் நண்பர் ! ஆனால் அவர் விட்டுச் சென்றுள்ள குடும்பத்துக்கோ இந்த ரணம் ஆற ஒரு யுகம் போதாது ! நண்பருக்காகவும் , அவரது குடும்பத்துக்காகவும் பிரார்த்திப்போம் ! RIP JSK sir..

      Delete
    4. அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

      Delete
    5. அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

      Delete
    6. //வாழ்க்கையின் வலிமிகுந்த அத்தியாயத்தைக் கடந்து விட்டார் நண்பர் ! ஆனால் அவர் விட்டுச் சென்றுள்ள குடும்பத்துக்கோ இந்த ரணம் ஆற ஒரு யுகம் போதாது ! நண்பருக்காகவும் , அவரது குடும்பத்துக்காகவும் பிரார்த்திப்போம் ! RIP JSK sir..//


      +1111111111111111111111111111111

      Delete
    7. RIP JSK ஸார். :-( ஆன்மா சாந்தியடைய பிராத்தனைகள். குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். :-((

      Delete
    8. ///வாழ்க்கையின் வலிமிகுந்த அத்தியாயத்தைக் கடந்து விட்டார் நண்பர் ! ஆனால் அவர் விட்டுச் சென்றுள்ள குடும்பத்துக்கோ இந்த ரணம் ஆற ஒரு யுகம் போதாது !///

      அடடா! ஆழ்ந்த அனுதாபங்கள்!!

      Delete
    9. May God bless our friend JSK's soul. My sincerest condolences to his family.

      Delete
  36. Rip JSK sir.
    ஆழ்ந்த இரங்கல்கள்.
    அன்னாரின் ஆன்மாசாந்தி அடையட்டும்.
    குணாவிற்கும் அவர் தம் அன்பான குடும்பத்திற்கும் என் வலி மிகுந்த ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  37. மிக சோகமான செய்தி..நண்பரின் ஆன்மா சாந்தி அடையட்டும்...

    அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்..

    ReplyDelete
  38. மிக சோகமான செய்தி..நண்பரின் ஆன்மா சாந்தி அடையட்டும்...😭

    துயரமான செய்தி.
    நண்பர் JSK வின் ஆத்மா சாந்தியடைவதாக 🙏

    😭😭😭😭😭

    அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  39. இறைவனனின் நிழலில் நம் சகோதரர் இளைப்பாறட்டும். ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  40. நண்பரின் ஆன்மா நித்திய இளைப்பாற்றலடையட்டும்...

    ReplyDelete
    Replies
    1. ஆழ்ந்த இரங்கல்கள்,அவரின் ஆன்மா அமைதி பெறட்டும்....

      Delete
  41. நம் நண்பரின் மறைவுக்கு எனது இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  42. RIP JSK sir. my deep condolences to his family and karur Guna sir.

    ReplyDelete
    Replies
    1. காமிக்ஸ் நண்பர் JS K_ வை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தின் ருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      Delete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. நண்பரின் ஆத்மா சாந்தி பெறட்டும்.

    ReplyDelete
  45. அண்ணன் ஜேடர்பாளையம் சரவணகுமார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  46. வேதனையிலாழ்த்தும் செய்தி..

    ஆன்மா இளைப்பாறட்டும்..

    ReplyDelete
  47. காமிக்ஸ் உலகில் நல்ல நண்பர்களில் ஒருவரான ஜேடர்பாளையம் சரவணகுமார் அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும். இவரது இழப்பு மிகவும் வேதனையளிக்கின்றது.

    ReplyDelete
  48. //வாழ்க்கையின் வலிமிகுந்த அத்தியாயத்தைக் கடந்து விட்டார் நண்பர் ! ஆனால் அவர் விட்டுச் சென்றுள்ள குடும்பத்துக்கோ இந்த ரணம் ஆற ஒரு யுகம் போதாது ! நண்பருக்காகவும் , அவரது குடும்பத்துக்காகவும் பிரார்த்திப்போம் ! RIP JSK sir..//

    வேதனையிலாழ்த்தும் செய்தி..
    அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்... நண்பர் உடல் நலம்பெற்ற பின் இவரிடம் பேச வேண்டுமென நினைத்ததுண்டு.... இவரை சந்திக்கவில்லையே என்ற வருத்தம் நிலைத்தே விட்டது.
    😢🙏🏽

    ReplyDelete
  49. துயரமான செய்தி.My deepest condolences :-((((

    ReplyDelete
  50. மீண்டும் ஒரு முறை சந்தித்து உரையாடிவிடுவோம் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருந்தேன்.
    தகவல் அறிந்ததில் இருந்து மனதில் ஒரு வலி.
    ஆழ்ந்த இரங்கல்கள்!

    ReplyDelete
  51. நண்பரின் ஆன்மா சாந்தியடைவதாக. நண்பரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .

    ReplyDelete
  52. RIP JSK sir deep condolences to Guna sir

    ReplyDelete
  53. RIP,அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
    MH MOHIDEEN

    ReplyDelete
  54. JSK.உங்களது ஆன்மா சாந்தியடையட்டும். உங்களை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  55. ஒரு சகோதரனை இழந்த வலியிலிருந்து மெல்ல மீண்டு வரும் போது இன்னொரு சகோதரர் என்னை விட்டு பிரிந்துவிட்டாரே அவர் மீண்டு வருவார் அவர் கேட்கும் ஸ்பைடர் புக்கை ஆசிரியர் போடுவார் என நம்பிக்கையோடு காத்திருந்தேன் கடவுள் ஏமாற்றிவாட்டாரே சரவணகுமாரின் ஆன்மா சாந்தியடையட்டும்

    ReplyDelete
  56. ஆழ்ந்த வருத்தங்கள்.

    RIP JSK 😢😪 .

    ReplyDelete
  57. ஆழ்ந்த இரங்கல்கள் 😭😭😭😭

    ReplyDelete
  58. Jsk நீங்கள் செல்லும் இடத்தில் உங்கள் ஆன்மாவுக்கு அமைதி கிடைக்கட்டும் அன்பு நண்பரே! குடும்பதினர்க்கு இது பேரிழப்பாகும் எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை -இலங்கையிலிருந்து சர்மா

    ReplyDelete
  59. JSK எனும் சகாப்தம்......,

    காமிக்ஸ் அது ஒரு மந்திரச்சொல்.
    இந்த வசீகர மந்திரத்தால் பால்யத்தில் கட்டுண்டு திளைத்தவர்களுக்கு அது ஒரு கனவு கோட்டை.

    அந்த கோட்டையில் உலவும் இரும்புக்கையார், வேதாளர், ஸ்பைடர், ஆர்ச்சி, மாடஸ்தி, லக்கிலூக், டெக்ஸ்வில்லர், சிஸ்கோகிட்......போன்றோருடன் பழகி களிக்கலாம்.

    பால்யத்தில் இந்த இன்பத்தை துய்க்காத நான் 1990களின் ஆரம்பத்தில் இந்த கனவு கோட்டையில் கால் பதித்து அங்கே துள்ளித்திரியும் மூத்த ரசிகர்களோடு தோளோடு தோள் உரசி உலவினேன். அதுவரையில் வந்திருந்த காமிக்ஸ் பொக்கிஷ குவியல்களை அலசி ஆராய்ந்து திரிந்தேன்.

    அந்த கோட்டையில் தங்களது முத்திரையை பதித்த மூத்த ரசிகர்கள் பலர்.

    அவர்களுள் ஒருவரின் கடிதங்கள் மென்மையாக மயிலிறகுபோல வருடிக் கொடுக்கும்.

    ஒவ்வொரு ஹீரோவையும் தனிப்பாங்குடன் விமர்சனம் செய்திருப்பார். அவரது கடிதங்களை தேடிப்படிக்க ஆரம்பித்தேன்.

    ஆர்ப்பாட்டமில்லாத அவரது எழுத்துக்கள் என்னுள் ஆழமாக பதிந்தது. அவரின் மேல் தனிப்பட்ட மரியாதை மனதில் உதித்தது.

    டெக்ஸ் வில்லர் கதைகளை மிகவும் ரசித்து விமர்சிப்பார். டெக்ஸின் தீவிர ரசிகர் என உணர்த்தியது அவரின் விமர்சனங்கள்.

    1997-99களின் போது லயன் காமிக்ஸின் நெ.1 இதழான லயன் சூப்பர் ஸ்பெசல் நீஈஈஈண்ட தேடலின் முடிவில் கிடைத்த போது அதில் இருந்த கடிதங்களை பார்வையிட்டேன்.

    அதில் இருந்த அவரது பெயர் வாவ்.. என சொல்ல வைத்தது. அந்த பெயர்....,

    """"M.சரவணக்குமார், ஜேடர்பாளையம்"""""

    ---இத்தனை முக்கியத்துவமான இதழில் நான் மிகவும் மதிக்கும் நண்பரது கடிதம் கண்டு அவரின் மேல் இருந்த மதிப்பு இன்னும் கூடியது.

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் சார் ஹாட்லைன் எனும் பகுதியை அந்த இதழில் இருந்துதான் துவக்கி இருந்தார். அந்த முதல் அறிவிப்பிலேயே நண்பர் JSKன் கடிதம் இருப்பதே அவரது காமிக்ஸ் ஆர்வத்திற்கு சான்று.

      வாழ்க்கையின் ஓட்டத்தில் காமிக்ஸ்ம் & லயன் காமிக்ஸ் தளமும் இன்றியமையாத காரணியாக மாறின. 2015ல் ஒருமுறை ஈரோடு விழாவில் பங்கு கொள்ளும் நண்பர்களுக்கு உதவும் பொருட்டு என் மொபைல் நெம்பரை லயன் காமிக்ஸ் தளத்தில் போட்டு இருந்தன்.

      ஒருநாள் மாலையில் ஒரு புதிய எண்ணில் இருந்தொரு அழைப்பு. மிருதுவான குரலில் சரவணக்குமார், ஜேடர்பாளையத்தில் இருந்து பேசுகிறேன் என்றார். மெல்லிய இன்ப அதிர்ச்சி எனக்கு.

      என் மனதில் பெருமதிப்பு கொண்டு இருந்த வாசக நண்பரிடமிருந்து போன் வந்திருந்தது பெருஉவகை தந்தது எனக்கு.

      எழுத்துக்கள் வாயிலாக மாத்திரமே அறிந்திருந்த நண்பரின் கருத்துக்களை அவரது குரலில் கேட்பது எத்தனை மகிழ்ச்சியான விசயம்...!!

      எத்தனை காமிக்ஸ் காதல் கொண்ட மனிதர் என உணர்த்தியது அவரது பேச்சுக்கள். ஸ்பைடர், ஆர்ச்சி, டெக்ஸ் வில்லர் என அவ்வப்போது தொடர்ந்து பேசுவோம்.

      டெக்ஸ் வில்லர் பற்றியும் அவரது கதைகள் பற்றியும் சிலாகித்து பேசும் அவரது பேச்சுகளுக்காகவே அவரது போனை எதிர்பார்த்து இருப்பேன்.

      டெக்ஸ் கதைகளை நிறைய போடணும் என்றும், பழைய சிறப்பான கதைகளை மறுபதிப்பு போடுவேணும் என்ற அவரது கோரிக்கையையும் அவர் சார்பில் லயன் தளத்தில் போட்டேன்.
      இணைய பரிச்சயம் அவருக்கு ஆகும் வரையில் அவரது கருத்துக்களை தளத்தில் சில மாதங்களுக்கு பதிவு செய்து வந்துள்ளேன்.

      என்னுடைய அழைப்பை ஏற்று 2015 ஈரோடு விழாவில் முதன்முறையாக கலந்து கொண்டார். நேரில் சந்தித்தபோது மிகவும் எளிமையாக எல்லோருடனும் பழகினார். எடிட்டர் சாருடன் மிகுந்த ஆர்வத்தோடு புகைப்படம் எடுத்து கொண்டார்.
      இயன்ற போது ஈரோடு விழாக்களில் கலந்து கொள்ள வருவார்.


      தொடர்ந்த ஆண்டுகளில் முகநூலில் தொடர்ந்து விமர்சனங்கள் செய்து வந்தார். அவரது விமர்சனங்கள் எப்போதும் நேர்மறையாகவும் நடுநிலையாகவும் இருக்கும்.

      முகநூலில் அவரது தொடர் விமர்சனக் கட்டுரை "JSK ன் மலரும் நினைவுகள்" என வரும். அந்நாளைய புகழ்பெற்ற ஹீரோக்களின் சிறந்த கதைகளை நேர்த்தியாக விரிவான விமர்சனம் பண்ணி இருப்பார். எதிர்பார்ப்புடன் இந்த தொடரை வாசித்து வந்தேன்.

      2018ல கரூரில் உள்ள மற்றொரு வாசக நண்பர் ராஜசேகரன் உடல் நலம் பாதிக்கப்பட்ட போது எடிட்டர் சாரும், வாசக நண்பர்களும் இணைந்து அவரது சிகிச்சைக்கு உதவினார்கள். அப்போது அந்த நண்பர் ராஜசேகரை நேரில் பார்த்து நலம் விசாரிக்க நண்பர்களோடு நானும் சென்றிருந்தேன். நண்பர் JSKம் வந்திருந்து , நண்பரை நலம் விசாரித்து சென்றார். நண்பர்களுக்கு ஒன்றுனா முன்னாடி நிற்பார், JSK.


      நண்பர் JSK க்கு முதல் முறையாக உடல் நிலை குறைந்தபோது மிகவும் அதிர்ந்து போனேன்.
      முன்போலவே எடிட்டர் சாரும் நண்பர்களும் உதவி செய்ய முதல் அறுவை சிகிச்சையில் இருந்து உடல்நலம் தேறி மீண்டு வந்தார்.
      மீண்டும் அவரது விமர்சனங்கள் கண்டபோது கண்களில் நீர் துளிர்த்தது.

      ஆனால்..... இந்த நிம்மதி நிலைக்கவில்லை,
      2வது அறுவை சிகிச்சையில் நண்பர்JSKவை இறைவன் பறித்துக் கொண்டார்.

      என்னை விட ஓராண்டே வயதில் மூத்த நண்பரது மறைவை மனம் ஏற்க மறுக்கிறது. மறையும் வயதா இது...????

      அவர் மறைந்தாலும் அவரது விமர்சனங்கள் வாயிலாக என்றும் நம்முடன் வாழ்த்து கொண்டு இருப்பார்......!!!

      Delete
  60. டியர் எடி,

    எதிரிகள் ஓராயிரம் - இளம் டெக்ஸ் கலக்கலாக தொடங்குகிறது. தெளிவான ஓவியங்கள், மற்றும் விறுவிறுப்பான கதைபோக்கு அலாதி. 64 பக்கங்களில் ஒரு பாகம் என்ற concept கதையோட்டத்தை ஆர்வமாக தொடர செய்கிறது.

    ஓவியர் தேர்வு கனகச்சிதம். Longshot, Closeup, Facial என்று அனைத்திலும் தெள்ளதெளிவாக மிரட்டுகிறார்.

    தனி தனி இதழ்களாக வந்திருந்தால், அருமையான அட்டைகள் 4 கிடைத்திருக்கும். குண்டு புக் மோகம் என்று அடங்குமோ! கூடவே, கதை இன்னும் பல பாகங்களில் தொடர்வதால், 4 பாகம் மட்டும் இணைப்பது ஒரு கலெக்‌ஷன் என்று வகைபடுத்திட தான் வேண்டுமோ ?!?

    ReplyDelete
    Replies
    1. குண்டு புக்காவே வரட்டும் ஜி.ஒவ்வொரு பாகத்திற்கும் அந்த ஒரிஜனல் அட்டையையேப் போடலாமே?

      Delete
    2. //4 பாகம் மட்டும் இணைப்பது ஒரு கலெக்‌ஷன் என்று வகைபடுத்திட தான் வேண்டுமோ ?!?//

      அப்படியில்லை சார் ; ஒரு கதைச் சுற்று எத்தனை பாகங்களில் நிறைவுறுகிறதோ அவற்றைத் திரட்டியே சிங்கிள் ஆல்பமாக்கிடுகிறோம் ! முதல் 4 கதைகள் consitute the first story arc ! அடுத்த 5 ஆல்பங்களில் இரண்டாம் சுற்று ! And so on...

      Delete
  61. ******* பொன் தேடிய பயணம் *******

    ஒரு வரலாற்றுச் சம்பவத்தை இதைவிட அழகாய் கார்ட்டூனில் படைத்துவிடமுடியாது!

    பொன் தேடி வாழ்க்கையைத் தொலைத்த மனிதர்களை இதைவிட அருமையாய் பகடி செய்துவிட முடியாது!

    பக்கத்துக்குப் பக்கம் ரசிக்கவும், சிரிக்கவும் வைத்திடும் இக்கதைக்கு - இதைவிட ரசித்து, ருசித்து மொழியாக்கம் செய்துவிடவும் முடியாது!

    10/10

    ReplyDelete
  62. //2030ல் என்ன புக்கு கேட்பார், வேறென்ன ஸ்பைடராக இருக்கும்
    2030 வரைக் காத்திருப்பானேன் சார் ? அவர் நாளைக்கே எழுந்து வந்து கேட்கட்டும் ; முப்பதே நாட்களில் வலைமன்னனைக் கண்ணில் காட்டி விடுவோம் - அதுவும் புத்தம் புதுக் கதையோடு ! ///

    அன்னாரின் நினைவாக வலை மன்னன் ஸ்பைடரின்‌ கதைகளை ஜேஎஸ்கே ஸ்பெஷல் புத்தகமாக குறைந்த பதிப்பாக பீரிமியம் விலையில் போட்டு அதில் வரும் தொகையில் ஒரு பகுதியை அன்னாரின் குடும்பத்துக்கு கொடுக்கலாமே. ஒரு வாசகர் மினிமம் இரண்டு புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற அன்புக்கட்டளையின் பேரில் இந்த முயற்சியை தாங்கள் செய்யலாமே.கண்டிப்பாக நல்ல விற்பனை ஆகும். எல்லோருக்கும் மனதிருப்தி கிடைக்கும். முடிவு உங்கள் கையில்.

    ReplyDelete
  63. கிங் கோப்ரா !!!
    • கிங் கோப்ரா – ராஜ நாகம் – மட்டும்தான் பாம்புகளிலேயே இலை சருகு வச்சு கூடு கட்டி முட்டையை பாதுகாத்து பாம்பு குட்டி வருகிறவரை வீட்டை பாதுகாக்கும் ..அப்பத்தான் ரேஷன் கார்ட் கொடுப்பாங்களோ என்னவோ ?


    கூடு பாத்தீங்கன்னா பெரும்பாலும் 22 செ மீ உயரம் 22 இன்ச் அகலம் இருக்கும் ..பொம்பள புள்ளீங்க.சிவில் இஞ்சினீரிங் கிராஷ் கோர்ஸ் படிக்குவாங்கன்னு நினைக்குறேன்

    அதென்ன கிங் கோப்ரா ? கிங் கோப்ராவுக்கு முக்கிய சாப்பாடே மத்த பாம்புங்கதான் ..அதான் இந்த பேரு..
    கட்டுவிரியன் ,சாரைப்பாம்பு ,பச்சை பாம்பு ,கண்ணாடி விரியன்னு எல்லாமே சாப்பிடும்
    கன்னிபலிசம்...
    சில அரசியல்வாதிங்க கூட இதைத்தான் பண்றாங்கன்னு உங்களுக்கு தோணுனா அதுக்கு நான் பொறுப்புல்ல..

    மத்த பாம்புங்கல்லாம் நம்ம மத்த காமிக்ஸ் மாதிரின்னா கிங் கோப்ரா நீளத்துல கொஞ்சம் ஜாஸ்தி – பதிமூணு அடி பொதுவா ..மின்னும் மரணம் மாதிரி

    சிலசமயம் இதையும் தாண்டி பதினெட்டு அடி ..ரத்தப்படலம் மாதிரி ..

    ஏழிலேர்ந்து நாப்பது குட்டி வரை வரலாம்
    முதிர்ச்சியான கோப்ரா மனுஷங்களா பாத்தா கொஞ்சம் வெக்கப்படும் ..புதுப்பொண்டாட்டி மாதிரி ( ம்ம்ம் .அதெல்லாம் ஒரு காலம் ) தள்ளி போகத்தான் பாக்கும்

    ஆனா குட்டிங்கல்லாம் ரொம்ப படுத்தும் .யங் டைகர் மாதிரி ( அப்புறம் இங்க ஒண்ணு சொல்லிக்க விரும்புறேன் ..ரம்மி ரொம்ப நல்ல மனுஷர்...உயிர்ப்பயம் காரணமா நான் இதை சொல்லலேங்கறதை நீங்க புரிஞ்சுக்கணும் )

    ஒரு கொத்துல சுமார் நானுத்து இருவது மிகி நஞ்சு உள்ளே போயிடும் .
    ஒரு ஆப்ரிக்க யானை அல்லாங்காட்டி இருபது மனுஷங்கள சாய்ச்சுபுடும்

    நரம்பு மண்டலம் ,இருதயததை பாதிக்க கூடிய நச்சு வேதி பொருள்கள் பண்ற வேலைதான் இது .

    முதல்ல கார்ட்லேன்ட் படிக்கறச்சே வர்ற மாதிரி மயக்கம் வரும்
    அப்பால
    ஸ்பைடர் படிக்கறச்சே வர்ற மாதிரி கண்ணு இருட்டிட்டு வரும்

    டெக்ஸ் கிட்ட அடிவாங்குன போக்கிரி மாதிரி உடம்பெல்லாம் வலி பின்னி எடுக்கும்
    ஆறு மாசம் குளிக்காத டைகரை பக்கத்துல நிஜத்துல பாத்துட்ட ரசிகர் மாதிரி பொத்துன்னு விழுந்து கை கால் அசைக்க முடியாத நிலைக்கு போயிட வேண்டியதுதான்

    முழிச்சு பாக்க சொல்லோ சிகுகுவா சில்க் மடியில தலை இருந்துச்சுன்னா ..கன்பார்ம்டு .. அது சொர்க்கம்தான்

    இதெல்லாம் வீட்டுக்காரம்மா வைக்கிற ரசம் மாதிரி ஸ்லோ பாய்சன் இல்ல...

    முப்பது நிமிஷம் தான் ..

    பைனான்சியர் உதவி ஏதுமில்லாம நல்லா படம் எடுக்க கூடிய கிங் கோப்ராவின் வாழ்நாள் – குயின் கோப்ராவின் சமையலை எதிர்கொள்ள வேண்டிய ஆபத்து ஏதுமில்லாததாலோ என்னவோ – இருபது வருடங்கள்

    ஒரே எதிரி –மனுஷனுக்கு அப்புறம் கீரிதான் ..
    கீரி கூட கிங் கோப்ராவை டெக்ஸ் மாதிரி இழுத்து போட்டு அடிக்கறதில்ல ..
    பார்ல பக்கத்து ஸ்டூல்ல கிங் கோப்ரா வைன் சாப்பிட்டுட்டு இருந்தாலும் செவ்விந்தியர்களை ராணுவம் துவம்சம் பண்ணினாலும் அமைதியா இருக்கற டைகர் மாதிரி – சாத்வீகமா ஒரு ஸ்மால் சாப்பிட்டு எழுஞ்சு போயிடும் ..

    பின் குறிப்பு
    கிங் கோப்ரா படிச்சுட்டு சுவாரஸ்யமா ஒரு விமர்சனம் எழுத நினைச்சா அது இப்படித்தான் எழுத முடியுது






    ReplyDelete
    Replies
    1. கிங் கோப்ரா (ராஜ நாகம்) பற்றிய தகவல்கள் நன்று. எனது குழந்தைகளுக்கு உங்கள் மூலம் இன்று நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டார்கள் செல்வம் அபிராமி. நல்ல தகவல்கள்.

      Delete
    2. செனா அனா...

      :))))))))))))))))))) காலங்காத்தால சத்தம்போட்டு சிரிச்சுட்டேன் (சமையல்கட்டுக்கு கேட்காத அளவுக்கு)

      Delete
    3. ரசத்தில் இவ்ளோ விஷயம் இருக்கா.... 🤣

      Delete
    4. செனாஜி! ராஜதாகம் பற்றிய விளக்கங்களும், அனைவருக்கும் புரியும்படியான சுவையான உதாரணங்களுடன் கூடிய விளக்கங்களும் மிகவும் அருமை. அதிலும் சிகுவாகுவா சில்க், ஜடாமுடி ஜானதன்..செம..

      Delete
    5. பொருளர் ஜி@ ஹா...ஹா...ஒவ்வொரு பாயிண்ட்டும் ஆச்சர்யமான தகவல்கள்;

      காமிக்ஸ் ஹீரோக்களின் இயல்புகள் வாயிலாக நகைச்சுவையாக செமயா இருக்கு...!!!

      Delete
    6. இந்த ரகளையான விமர்சனத்திற்காகவே லாரன்ஸ் டேவிட்டை வரவேற்கிறேன்...:-)))))

      Delete
    7. செனாஜி கிங்கோப்ரா விமர்சனம் அருமை 👌 உதாரணம் மிகஅருமை

      Delete
  64. ரசனைகளின் அளவுகோல்களை, நமது இளமைகளின் நாயகர்களுக்கு மட்டும் தீவிரமாய்ப் பொருத்திப் பார்த்து நம்மை நாமே பரிகசித்துக் கொள்கிறோமோ ? Suuuuuuuuuuuuuuper sir. It is 100% true. But many advanced readers won't accept the truth.

    ReplyDelete
  65. ஜேம்ஸ் பாண்ட் படங்களின் கிளைமாக்ஸில் மாட்டிக்கொண்டஜேம்ஸை வில்லன் உடனே துப்பாக்கியால் சுடமாட்டான். கட்டி வைத்துவிட்டுஒரு டைம்பாமையுன் ஆன்பண்ணிவிட்டுசென்றுவிடுவான்முடிந்தால் தப்பித்துக்கொள்ஹாஹாஹா என்று சிரித்தவாரே அதையெல்லாம் லாஜிக் பார்க்காமல் ரசித்தோம் நாம். அதே போல் நம் லாரன்ஸ் டேவிட் ஜோடியையும் ரசிப்போம் என்ற எண்ணத்தினோடே கிங் கோப்ராவை கையில்எடுத்தாலும் கதை செமவிறுவிறுப்பு. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  66. அதுவொரு குட்டித் தீவு! லாரன்ஸுக்கும் டேவிட்டிற்கும் சொந்தமானது!

    லா&டே'யின் பணியாளர்களெல்லாம் திடீர்னு காணாமப் போயிருப்பாங்க..
    வீடு சூறையாடப்பட்டிருக்கும்.. படுக்கையறையில் பாம்பு விடப்பட்டிருக்கும்..
    முங்கிக் குளிக்குமிடத்தில் முதலை விடப்பட்டிருக்கும்..
    ரேடியோ கருவிகள் சிதைக்கப்பட்டிருக்கும்..
    சொகுசுப் படகு அடித்து நொறுக்கப்பட்டிருக்கும்..
    ஹெலிகாப்டர் தகர்க்கப்பட்டிருக்கும்..
    தீவு முழுக்க விதவிதமான பொறிகள் அமைக்கப்பட்டிருக்கும்..
    கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தீவுமே புரட்டிப் போடப்பட்டிருக்கும்!
    இது அத்தனையும் ஒரே இரவில் நிகழ்த்தப்பட்டிருக்கும்!

    ஆனால் அங்கேயே வீட்டுக்குள்ளிருந்த நம் டிடெக்டிவ்ஸ் லா'வுக்கும், டே'வுக்கும் மட்டும் இது எதுவுமேஏஏஏஏ தெரியாது!!

    சிரிச்சு மாளலை!!😆😆😆

    இதுபோன்ற இன்னும் பல காமெடிகளுக்கு இன்றே படியுங்கள் - மீண்டும் கிங் கோப்ரா!

    ReplyDelete
    Replies
    1. ஆரம்பப் பக்கங்களில்.. லாரன்ஸும், டேவிட்டும் அவர்களுடைய தீவில் *ஓய்விலிருப்பார்கள்* - அப்போது..
      * தென்னையை தெறிக்க விடு
      * கணிணியை கலங்கடி
      * சுறாவோடு சடுகுடு
      * முதலையை முத்தமுடு

      போன்ற விளையாட்டுகளில் ரணகளப்படுத்துவார்கள்..

      பிறகு, கோப்ராவை இனம் கண்டு *பணியில் இறங்கிய பின்னே* பாதாளச் சாக்கடை, நடு ரோடு-ன்னு பாரபட்சமில்லாம எல்லா இடங்களிலும் மணிக்கணக்கில் மயங்கிக் கிடப்பார்கள்!!

      எனக்கு நினைவு தெரிந்து, கதையின் நாயகர்கள் ஒரே கதையில் இத்தனைமுறை மயங்கிக் கிடந்தது - இதுவாகத்தானிருக்கும்! 😁😁

      Delete
    2. ரொம்ப தப்பு ஈவி...இதெல்லாம் ரொம்ப யதார்த்தமானது..

      வீட்ல ஒருவாட்டி அவங்க கேட்ட பனாரஸ் பட்டு புடவை வாங்கி கொடுக்கலன்னு ஒரே ராத்திரியிலே வீடே இதே கதிக்கு ஆளாச்சு.

      இதுக்கு முன்னாடி ஒருவாட்டி கண்ணால நாள் மறந்து தொலைச்சப்போ ஒரே மணி நேரத்தில் அப்படி நடந்தது..

      இந்த பார்ட்டை நீங்க ஒரு கிநா மாதிரி எடுத்துக்கனும்..:-)

      Delete
    3. Comedy story with reminders. எங்கே வில்லனை நாம மறந்து விடக்கூடாது என்பதற்காக "கொடூர வில்லன், கொடூர வில்லன் " பக்கத்துக்கு பக்கம் ஞாபகம் பண்ணி படுத்துறங்க. வில்லனும் சீனுக்கு சீன் முகமூடியை உரிச்சி நான் தான், நான் தான் என்று காட்டுறார்.

      Delete
    4. ///இதுக்கு முன்னாடி ஒருவாட்டி கண்ணால நாள் மறந்து தொலைச்சப்போ ஒரே மணி நேரத்தில் அப்படி நடந்தது..///

      ஹா ஹா ஹா!! நிஜவாழ்க்கை ரணகளம்! :))))))))


      ////வில்லனும் சீனுக்கு சீன் முகமூடியை உரிச்சி நான் தான், நான் தான் என்று காட்டுறார்.////

      இறுக்கமான மாஸ்க் - முகத்துல கசகசனு வருமில்லே சகோ? அதான் அப்பப்போ உரிச்சு எடுத்து ஆசுவாசப் படுத்திக்கிறார்னு நினைக்கிறேன்!! :))))))

      Delete
    5. இங்கிலாந்தில் முக கவசம் போட ஏகப்பட்ட எதிர்ப்பாம் ; NO MASK DAY என்றெல்லாம் கொண்டாடாத குறை தான் ! ஆனால் நம்மாள் கிங் கோப்ராவைப் பாருங்களேன் - பிரிட்டிஷ்காரராய் இருந்தும் அன்னிக்கே முழு மூஞ்சியையும் மூடி ஒரு தீர்க்கதரிசியாய் ; செம உதாரண புருஷராய்த் திகழ்கிறார் !! இத்தோட 'மானே..தேனே..' ன்னு கொஞ்சம் பிட்டுக்களைச் சேர்த்து பாராட்ட ஆருக்காச்சும் தோணுச்சா ?

      Delete
    6. ///இதுக்கு முன்னாடி ஒருவாட்டி கண்ணால நாள் மறந்து தொலைச்சப்போ ஒரே மணி நேரத்தில் அப்படி நடந்தது..//.

      ---தாங்கள் எவ்வளவோ கொடுத்து வைத்தவர்கள் ஜி! தட்டு முட்டு சாமான்கள் மட்டுமே உடையுது.

      இங்கெல்லாம் 5கிமீ தொலைவுல இருக்கும் அவிக அம்மா வீட்டுக்கு அழைத்து போகலனாவே....🤕🤕🤕🤕 இதான் கதி!

      Delete
    7. 'அசையும் பொருட்கள் மட்டுமே பாம்பின் கண்களுக்கு புலனாகிடும்.. அசையாப் பொருட்களை அவை தீண்டுவதில்லை'ன்ற பொது அறிவு நம்ம 'மீண்டும் கிங்கோப்ரா' கதாசிரியருக்கு இருப்பதில் மகிழ்ச்சி தான்!

      ஆனா அந்தப் பொது அறிவை அப்படியா காட்சி படுத்துவாங்க?!!
      அதாவது, நம்ம லாரன்ஸ் மேசை ட்ராயரைத் திறக்கும்போது உள்ளேர்ந்து விரியன் பாம்பு (வாலில் கிலுகிலுப்பையோடு) சீறிக்கிட்டு வெளிவருமாம்- கட் - நீச்சல்குளத்தில் முதலைகிட்டேர்ந்து தப்பி, லாரன்ஸ் ரூமுக்குள் நுழைகிறார் நம்ம டேவிட்டு! அங்கே தரையில் லாரன்ஸ் கிடக்க - அவர்மேலே பாம்பு படுத்திருக்கும்! பதறிப்போய் ஓடிவந்த டேவிட், பாம்பின் கிலுகிலுப்பையைப் பிடித்து சுழற்றி சுவத்திலே - சொதேல்!
      சிரிச்சுகிட்டே எந்திரிக்கறார் நம்ம லாரன்ஸ். 'பாம்பு கடிச்சு நீங்க செத்துட்டீங்கன்னில்லே நினைச்சேன்'னு டேவிட்டு ஆச்சரியப்பட்டுக் கேட்க, அப்போதான் இந்தக் கமெண்டின் முதல் வரியை புன்னகையோடு சொல்லி, டேவிட்டுக்கு மட்டுமல்லாது நமக்கும் பொதுஅறிவைப் புகுத்துகிறார் லாரன்ஸு!

      நமக்கு பொதுஅறிவை புகுத்திடத் தன் உயிரையே பணயம் வைத்திடும் ஒரு நாயகரை இங்கன்றி ஈரேழு லோகத்திலும் நாம் வேறெங்கு கண்டிடமுடியும்?!!

      லைக் யூ லாரன்ஸு!!

      Delete
    8. ஆங்! சொல்ல மறந்துட்டேன்! இதுபோன்ற பொதுஅறிவு சமாச்சாரங்களை சுடச்சுட அறிந்துகொள்ள இன்றே படியுங்கள் - 'மீண்டும் கிங் கோப்ரா'!

      Delete
    9. @Erode VIJAY சிரிச்சிகிட்டே இருக்கேன் :)))))))))

      Delete
    10. இன்றே படியுங்கள் - மீண்டும் கிங் கோப்ரா/// Oh sure!

      Delete
    11. It is not always true that snakes don't bite dead/ nonmoving things https://youtu.be/3dIIPvAAPSE

      Delete
    12. செம வீடியோ! சும்மாவா சொன்னாங்க.. மாம்பா வகைப் பாம்புகள் ரொம்ப பயங்கரமானதுன்னு?!!

      Delete
  67. // இதுக்கு முன்னாடி ஒருவாட்டி கண்ணால நாள் மறந்து தொலைச்சப்போ ஒரே மணி நேரத்தில் அப்படி நடந்தது..//.

    Purposive ஆக மறந்துவிட்டீர்களோ?
    சாயங்காலம் பூவொன்று புயலானது சினிமா கூட்டிட்டு போனீங்களா?

    ReplyDelete
  68. எதிரிகள் ஓராயிரம் !

    படித்து முடித்து விட்டேன். சூப்பராக இருக்கிறது. நல்ல விறுவிறுப்பான கதை. யங் டெக்ஸ் சூப்பர் !

    ReplyDelete
    Replies
    1. எதிரிகள் ஓராயிரம் !

      படித்து முடித்து விட்டேன். சூப்பராக இருக்கிறது. நல்ல விறுவிறுப்பான கதை. யங் டெக்ஸ் சூப்பர் !

      Delete
  69. காற்றுக்கு ஏது வேலி ?!

    இங்கு ஒரு காமிக்ஸ் வாசகர் பதிவிட்ட கமெண்ட் டின் உதவியால் இந்தக் கதையைப் படிக்க கையில் எடுத்தேன். அற்புதமாக இருக்கிறது. பாதி கதைதான் படித்துள்ளேன். ஆஹா என்ன ஒரு கதை அம்சம். நான் டெக்ஸ் வில்லரின் ரசிகனாகவே மாறிவிட்டேன்.


    யங் டெக்ஸ் கதை வரிசையை யாராவது இங்கு கூற முடியுமா ?! அனைத்தையும் படிக்க ஆவலாக இருக்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. காற்றுக்கு ஏது வேலி ?!

      இங்கு ஒரு காமிக்ஸ் வாசகர் பதிவிட்ட கமெண்ட்டின் உதவியால் இந்தக் கதையைப் படிக்க கையில் எடுத்தேன். அற்புதமாக இருக்கிறது. பாதி கதைதான் படித்துள்ளேன். ஆஹா என்ன ஒரு கதை அம்சம். நான் டெக்ஸ் வில்லரின் ரசிகனாகவே மாறிவிட்டேன்.


      யங் டெக்ஸ் கதை வரிசையை யாராவது இங்கு கூற முடியுமா ?! அனைத்தையும் படிக்க ஆவலாக இருக்கிறேன் !

      Delete
  70. யங் டெக்ஸ் கதை வரிசையை..

    தலைப்புகளுடன் வரிசைப்படி தெரிவித்தால் படிக்க வசதியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மொத்தமாக 4யங் டெக்ஸ் கதைகள் வந்துள்ளன...

      A.ஒரு தலைவன் ஒரு சகாப்தம்.(இது ஒரு தனி சீரியஸ்ல ஒரே கதை மட்டுமே, ஒன் ஆஃப் மட்டுமே; வயதான கார்சன் இளவயது நடப்புகளை நினைவு கூர்ந்து சொல்வது)


      1.சிங்கத்தின் சிறுவயதில்...
      (டெக்ஸ் வில்லர் பிறப்பு இளமை பருவம்)

      2.காற்றுக்கு ஏது வேலி!
      (டெக்ஸ் வில்லர் வீண்பழிக்கு ஆளாவது, இதான் படிச்சி இருக்கீங்க)

      3.எதிரிகள் ஓராயிரம்...
      (இம்மாத புக்... இதில் இளம் டெக்ஸ் கதை தொடருது... தன் மேல் விழுந்து உள்ள பழியை துடைக்க அவர் முயற்சி செய்யும் மிக நீஈஈஈண்ட கதைகளம்....; அதில் அவர் சந்திக்கும் பல்வேறு அனுபவம்; பயணங்கள்---இதுவரை இத்தாலில 21பாகங்கள் வந்திருக்கு; தமிழில் இனி தொடர்ந்து வரும்! தொடர்ந்து படியுங்கள்)

      Delete
    2. நல்ல காமிக்ஸ் வாசகர் அவர்களுக்கு மிகவும் நன்றி ! வரும் வாரம் எனக்கு மிகவும் சிறப்பானதாக அமையும் என்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது.

      நல்லவேளையாக என்னிடம் அத்தனைப் புத்தகங்களும் இருப்பது சந்தோஷமாக உணரச் செய்கிறது.

      மீண்டும் நன்றி !

      Delete
    3. ///21பாகங்கள் வந்திருக்கு; தமிழில் இனி தொடர்ந்து வரும்! தொடர்ந்து படியுங்கள்)///

      யங் டெக்ஸ் "டைகர்" இல்லா குறையை ஓரளவு ஈடு செய்கிறது!

      பார்ப்போம்!!

      (முழு வண்ணத்தில் வந்தால் இன்னும் நல்லா இருக்கும்)

      Delete
  71. கிங் கோப்ரா கதை விமர்சனம் !

    லாரன்ஸ் திறமைக்கு இதோ ஒரு சான்று...


    https://youtu.be/kvymoFdjuHw

    ReplyDelete
  72. கிங் கோப்ரா கதை விமர்சனம் !

    தல டேவிட் திறமைக்கு இதோ ஒரு சான்று...

    https://youtu.be/KoeR1CaAnFM

    ReplyDelete
  73. கிங் கோப்ரா கதை விமர்சனம் !

    இனிமேல் யாரும், உப்பு இல்லை ; காரம் இல்லை; லாஜிக் இல்லை என்று விமர்சனம் செய்ய வேண்டாம். பொழுது போகவில்லை என்றால் பழைய லாரன்ஸ் டேவிட் கதைகளை மீண்டும் படிக்கவும். மிகவும் போரடித்தால் ஸ்பைடர் கதைகளை மீண்டும் படிக்கவும்.

    நன்றி !

    ReplyDelete
  74. கிங் கோப்ரா கதை விமர்சனம் !

    கிங் கோப்ரா அணியும் முகமூடியை முன்னுதாரணமாக வைத்து தான் பின்னாளில், ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்த மிஷன் இம்பாசிபிள் பார்ட் 2 அல்லது 3 படம் எடுக்கப்பட்டது என்பது லாரன்ஸ் டேவிட் கதைகளுக்கு ஒரு மணிமகுடம் !

    ReplyDelete
  75. கிங் கோப்ரா கதை விமர்சனம் !

    கதையின் முதல் நான்கு பக்கங்கள் மட்டுமே படித்து உள்ளேன். முழுக்கதையும் பிறகு படித்து விட்டு விமர்சனம் எழுதுகிறேன்.

    நன்றி !

    ReplyDelete
  76. 'மீண்டும் கிங்கோப்ரா'வில் ஒரு மயிர்கூச்சொறிய வைக்கும் காட்சி :

    வில்லன் உருவாக்கிவைத்திருந்த புதிரான குகை அமைப்பிலிருந்து தப்பித்து சற்றே விசாலமான அறையில் காலடி வைப்பாரு நம்ம லாரன்ஸு! அப்பத்தான் பெரிய புலி ஒன்று அந்த அறையில் தூங்கிக் கொண்டிப்பதைக் கவனிப்பாரு. மெல்ல நடந்து புலியைக் கடந்து, அந்த அறையின் சுவரிலிருக்கும் ஓட்டை ஒன்றில் தலையை விட்டு வெளியே போகப் பார்ப்பாரு. கச்சக்குனு ஒரு பொறி அமைப்பு அவர் கழுத்தைக் கவ்விப் பிடிச்சுக்கும்! அப்பத்தான் கவனிப்பாரு - அவர் தலையை நீட்டிக்கிட்டிருக்கும் பகுதி - ஒரு மிகப் பெரிய கடிகாரத்தின் டயல் பகுதி! அந்தக் கடிகாரத்தில் முள்ளுக்குப் பதிலாக ஒரு ராட்சத் கத்தி!! அது கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து, நாலு மணி நேரத்தில் லாரன்ஸின் கழுத்தை கஜக் பண்ணும்! முக்கவோ முனகவோ முடியாத சூழ்நிலை - ஏன்னா உள்ளே புலி தூங்கிக்கிட்டிருக்கு!
    நாலு மணிநேரத்தை நெருங்க சில மைக்ரோ வினாடிகளே பாக்கியிருக்கும் நேரத்தில் நம்ம டேவிட்டு ஓடிவந்து காப்பாத்திடுவார்!! கரெக்ட்டா லாரன்ஸ் அந்தப் பொறியிலேர்ந்து விடுபடுற நேரம் தூங்கிக்கிட்டிருந்த புலியும் விழிந்தெழுந்து கடிக்க வரும்! கடைசி மில்லி வினாடியில் அந்த ஓட்டையிலிருந்து வெளியேறி புலிக்கு பெப்பெப்பே காட்டுவாரு நம்ம லாரன்ஸு! என்னாவொரு ஜாகஜம்!!! படிக்கும்போதே தி்க்திக்-தடக்தடக்!!!

    நாலு மணி நேரமா அந்தப் பொறியில் சிக்கி ( சீனர்கள் வணக்கம் சொல்ற ஸ்டைலில்) குனிஞ்சு நின்னுக்கிட்டிருப்பாரு நம்ம லாரன்ஸு! அந்த பொஸிசனில் புலி கிலி கடிச்சு வச்சிருந்தா எங்கே கடிச்சிருக்கும்னு கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தேன்.. ய்ய்யீஈஈஈஈக்க்!!!

    நிஜமாவே கிரேட் எஸ்கேப்பு லாரன்ஸு!!

    ReplyDelete
    Replies
    1. ///என்னாவொரு ஜாகஜம்!!! படிக்கும்போதே தி்க்திக்-தடக்தடக்!!!///

      என்ஜாய்!! ஹிஹிஹி!!

      Delete
  77. பதிவுக் கிழமை..
    இருட்டும் வேளை..
    வாசலில் காத்திருந்தேன்..

    ReplyDelete
  78. இன்று பதிவு உண்டா ஆசானே?

    ReplyDelete
  79. ஆங்! எடிட்டரின் பதிவு சுடச்சுட ரெடி நண்பர்களே!

    ReplyDelete
  80. Iyo sir vijayan sir lion comics na ippothan pakuren. after 30 yrs. Hw r u sir. Comics irukka. Iam one of the best fan of John sir

    ReplyDelete
  81. And this is venkatesan from pondicherry

    ReplyDelete
    Replies
    1. welcome venkatesan sir!!
      30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நீங்கள் காமிக்ஸில் இணைந்திருப்பது மகிழ்ச்சி!
      உற்சாகமான பல சங்கதிகள் உண்டு தெரிந்துகொள்ள! நேரம் கிடைக்கும்போது வலைப்பதிவுகளைப் பாருங்கள்!
      தொடர்ந்து உங்கள் எண்ணங்களைப் பதிவிடுங்கள்!

      Delete