Powered By Blogger

Wednesday, July 01, 2020

ஒரு ஸ்கோர் போர்ட் !

Nr. NAME PLACE
1 Mr.K.V.GANESH CHENNAI
2 Mr.K.PARTHIBAN TRICHY
3 Mr.V.HARIHARAN COIMBATORE
4 Mr.S.SENTHIL KUMAR TIRUPUR
5 Mr.KRISHNA MOORTHY DHARAPURAM
6 Mr.ARUN KUMAR NAMAKKAL
7 Mr.ARUN KUMAR NAMAKKAL
8 Mr.M.BABU MOHAMED ALI SALEM
9 Mr.T.SOUNDRA PANDIAN RAJAPALAYAM
10 Mr.T.SOUNDRA PANDIAN RAJAPALAYAM
11 Mr.R.ANBALAGAN GOBICHETTIPALAYAM
12 Mr.R.ANBALAGAN GOBICHETTIPALAYAM
13 Mr.R.GANESH MADURAI
14 Mr.AUGUSTIN SAINTLYDOSS HOSUR
15 Mr.A.D.BASKARAN CHENNAI
16 Mr.SARAVANAN SUNDARAVEL NOIDA
17 Mr.SARAVANAN VADIVEL NAGAPATTINAM
18 Mr.MOHAMMED ARAFARTH MAYILADUTHURAI
19 Mr.SURESH NATARAJAN AUSTRALIA
20 Mr.SURESH NATARAJAN AUSTRALIA
21 Mr.SURESH NATARAJAN AUSTRALIA
22 Mr.SRINIVASARAGHAVAN RAMAN CHENNAI
23 Mr.PRABHUDASS PALANI CUDDALORE
24 Mr.MAHENDRAN PARAMASIVAM COIMBATORE
25 Mr.A.SATHISH KUMAR VELLORE
26 Mr.PRASANNA SRIDHAR COIMBATORE
27 Mr.S.S.KARTHIK BANGALORE
28 Mr.A.PALANIVEL TRICHY
29 Mr.A.PALANIVEL TRICHY
30 Mr.RAJ KUMAR SIVANANDI MADURAI
31 Mr.SATHAYA BALAJI BANGALORE
32 Mr.MA.SENTHIL COIMBATORE
33 Mr.MA.SENTHIL COIMBATORE
34 Mr.SANKAR CHELLAPPAN CHENNAI
35 Mr.V.RAJEEV COIMBATORE
36 Mr.SELVAM ANNAMALAI ERODE
37 Mr.S.ANANTHA SANKAR TIRUNELVELI
38 Mr.R.SARAVANAN ERODE
39 Dr.PRASANNA SRI LANKA
40 Dr.PRASANNA SRI LANKA
41 Dr.PRASANNA SRI LANKA
42 Mr.A.PALANIVEL TRICHY
43 Mr.M.RAMKUMAR UNKNOWN
44 Mr.V.V.KRISHNA CHENNAI
45 Mr.N.SHANMUGAM TIRUCHENGODE
46 Mr.MOHAMED RAFIQ RAJA BANGALORE

நண்பர்களே,

வணக்கம். காது அடைக்கும் அளவுக்கு இ.ப. பற்றிப் பேசிவிட்டோம் தான் என்றாலும், இதோ இந்த உபபதிவுக்குமே அதையே தான் கையைப் பிடித்து இழுக்க வேண்டிப் போகிறது ! ஆனால் இம்முறையோ ஒரு தகவல் பலகை பாணியினில் மட்டுமே ! 2 நாட்களாய் இஷ்கோர் என்னவென்று சொல்ல மறந்து போய் விட்டதால் - இதோ இன்று மாலை வரையிலுமான updated list ! அரை சதத்தைத் தொட இன்னமும் சொற்ப தூரமே எனும் போது - ஆறில் ஒரு பங்குத் தூரத்தைக் கடந்தது போலாகிடுகிறது ! ஜூன் 18 அறிவிப்பினை official ஆகச் செய்த தினமென்று எடுத்துக் கொண்டால் - தோராயமாய் 2 வாரங்களை தொடும் தருவாயினில் இருக்கிறோம் ! So இந்தக் காலக்கெடுவுக்குள்  இந்த புக்கிங் எண்ணிக்கை ; அதுவும் இந்த இறுக்கமான நாட்களில் - என்பது சர்வ நிச்சயமாய் எனது எதிர்பார்ப்புகளை விடப் பன்மடங்கு அதிகமே ! என்ன, இந்த 46 பேர் கொண்ட பட்டியலில் மெய்யாலுமே இதுவரையிலும் "இ.ப'வினை கண்ணில் பார்த்திரா (புது) வாசகர்களின் எண்ணிக்கையினையும், நமக்குத் தோள் கொடுத்திடும் பொருட்டு just like that புக் செய்திருக்கும் நண்பர்களின் எண்ணிக்கைகளையும்   அறிந்திட வழியிருப்பின் - would make for interesting reading ! 

But காரணங்கள் எதுவாயிருப்பினும், இந்த வேகமும், முனைப்பும் இவ்விதமே தொடரின் - ஒரு அசாத்தியம் - சாத்தியங்களின் எல்லைக்குள் திடு திடுப்பெனப் புகுந்திருக்கும் ! பொறுமையாய்ப் பராக்குப் பார்ப்பதே இப்போதைய ஜோலி என்பதால் புது இதழ்களின்  பணிகளுக்கு இடையே ஒவ்வொரு மாலையும் ஸ்கோரை அறிவிக்க மட்டுமே ஆஜராகிட வேண்டியது தான் ! And - கூடுதலான விலைகளுக்கேற்ப பணம் அனுப்பியிருக்கும் நண்பர்கள் - அந்தக் கூடுதல் தொகைகளை திரும்பப் பெற்றுக்கொள்வதா ? அல்லது சந்தா 2021-ன் கணக்கினில் வரவு செய்திடுவதா ? என்றொரு மின்னஞ்சல் ப்ளீஸ் ? Refund எனும் பட்சத்தில், உங்களின் வங்கிக்கணக்கு விபரங்கள் ப்ளீஸ் ? 

And கிளம்பும் முன்பாய் - இதோவொரு XIII சார்ந்த trivia ! முயற்சித்துப் பார்த்துவிட்டு படைப்பாளிகள் ரிஜிட் செய்ததொரு அட்டைப்பட இமேஜ் !
போகிற போக்கைப் பார்த்தால் - "இ.ப." - 'யப்பப்பப்பா' என்று  மெகா சீரியல்களுக்கு கடும் போட்டி தரும்  போலிருக்கிறது ! ஷப்ப்பா !! Bye folks...see you around !

222 comments:

  1. இரண்டாவது.

    வணக்கம் ஆசிரியரே
    நண்பர்களே

    ReplyDelete
  2. தொடர்ந்துதானே ஆகனும் சார்...எங்களுக்கு வேலை வேண்டாமா...???😊😊😊

    ReplyDelete
  3. Hello. When we can expect this month book sir

    ReplyDelete
  4. அப்படியே 2021 சந்தா விவரங்களையும் தெரிவித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  5. 10க்குள்ளே வந்துட்டேனா?

    ReplyDelete
  6. இந்த மாத ஊதியம் வந்ததும் முன்பதிவு

    ReplyDelete
  7. என்னைப் போலவே வேறு சிலரும் இருக்கலாம்

    ReplyDelete
  8. ஒரு வழியாக 13 வதாகவும் நானே

    ReplyDelete
    Replies
    1. அடேங்கப்பா... அப்படியே 100வதும் வந்திடுங்க சகோ

      Delete
    2. இந்த மாத ஊதியம் வந்ததும் முன்பதிவு//

      அடேங்கப்பா....!! உங்களுக்கு ஊதியம் எல்லாம் கூட வருதா..?

      Delete
    3. // அடேங்கப்பா....!! உங்களுக்கு ஊதியம் எல்லாம் கூட வருதா..? //

      தற்போதைய சூழ்நிலையில் இதனை எப்படி எடுத்து கொள்வது என தெரியவில்லை நண்பரே :-(

      Delete
  9. காலை வணக்கங்கள்...

    ReplyDelete
  10. காலை வணக்கம் சார் மற்றும் நண்பர்களே 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  11. நானும் வந்துட்டேன்

    ReplyDelete
  12. போகிற போக்கைப் பார்த்தால் - "இ.ப." - 'யப்பப்பப்பா' என்று மெகா சீரியல்களுக்கு கடும் போட்டி தரும் போலிருக்கிறது ! ஷப்ப்பா !!

    உண்மைதானுங்க விஜயன்
    சார் 😃

    ReplyDelete
  13. அட்டைப் படத்தில் இருப்பது XIII ???
    President XIII ???

    ReplyDelete
  14. டியர் எடிட்டர் 

    எனது ஒரே ஆதங்கம் யாதெனின் 4100 - 2900 = 1200 INR * 300 உங்களின் பணியாள நண்பர்களுக்கு ஒரு cushion தந்திருக்குமே என்பதுதான். வரலாற்றுப்பிழை, கரும்புள்ளி, செம்புள்ளி, கழுதை மேல மொட்டை என்று நாமே மாத்தி(மாட்டிக்)கிட்டோமோ?

    ReplyDelete
    Replies
    1. இதற்காகவேனும் நீங்கள் சீக்கிரமே உங்கள் டாக்டர் படிப்பை முடித்தாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது ராக் ஜி!

      Delete
    2. // எனது ஒரே ஆதங்கம் யாதெனின் 4100 - 2900 = 1200 INR * 300 உங்களின் பணியாள நண்பர்களுக்கு ஒரு cushion தந்திருக்குமே என்பதுதான் //

      +1

      Delete
    3. விலை குறைப்பால் புக்கிங் எண்ணிக்கை அதிகமாக வருமேயானால் இந்த தொகை அதில் வந்துட்டு போகுது!

      Delete
    4. இதற்காகவேனும் நீங்கள் சீக்கிரமே உங்கள் டாக்டர் படிப்பை முடித்தாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது ராக் ஜி!

      #####

      :-))))))

      Delete
    5. //விலை குறைப்பால் புக்கிங் எண்ணிக்கை அதிகமாக வருமேயானால் இந்த தொகை அதில் வந்துட்டு போகுது//
      விலை குறைப்பாட்டினால் ஆயிரக்கணக்கில் விற்பனை கூடிடப்போவதில்லை நண்பரே....
      ஆசிரியர் சின்ன வாய்ப்பை இழந்து விட்டார்....சிலரின் ஆதங்கம்...புரளிக்கு முற்றுப்புள்ளி வைக்க இதை செய்து விட்டார்...ஆனா அவனுக்கு. மாறப் போவதில்லை...ஆசிரியரின் நல்ல மனச பாராட்டி ...அவர் சம்பாதிக்க உதவக் கூடிய வாய்ப்பு கெடுக்கிறோம்....சில நண்பர்கள் கூறுவது போல நெஞ்சத் திறந்து காட்ட வேணடாமே . அதுவும் பணியாளர்களுக்கு உதவ அல்லவே...அடையாறு கேன்சர் என எழுதியிருப்பார் சரியாகப் பாருங்கள் ...

      Delete
  15. மேற்கண்ட முன்பதிவு பட்டியலில் சீக்கிரமே இடம்பெற முயற்சிப்பேன்!

    (நண்பர்கள் 'வாவ் சூப்பர் ஈவி', 'அருமை ஈவி' போன்ற பின்னூட்டங்களை கீழே இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதானே ஒரு உத்வேகம் கிடைக்கும்?!)

    ReplyDelete
    Replies
    1. வாவ் சூப்பர் விஜய். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். :-)

      Delete
    2. வாவ்..செயலர்..

      சூப்பர் செயலர்..


      அருமை செயலர்...

      Delete
    3. வாழ்த்துகள் விஜய் ப்ரோ

      Delete
    4. நன்றி நண்பர்களே!! இன்னும் இரண்டொரு நாளில் முன்பதிவு செய்துவிடுமளவுக்குத் தேவையான உத்வேகம் தற்போது கிட்டியிருக்கிறது!
      மற்ற நண்பர்களிடமிருந்தும் சீக்கிரமே வாழ்த்துகள் கிடைத்திடும்பட்சத்தில் இன்றோ நாளையோ கூட முன்பதிவு செய்யும் முனைப்பு ஏற்படலாம்தான்!! fingers crossed!!

      Delete
    5. அருமை EV ஒரு புக் அல்ல நீங்கள் நினைத்தால் 10 புத்தகம் வாங்கி நண்பர்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஒன்று கொடுக்கலாம்.

      Delete
    6. @ப்ளூ

      ///வருங்கால டாக்டரே ....///

      ஆஹா!! உங்களுக்கு மட்டும் வாழ்நாள் முழுக்க கன்சல்ட்டிங் ஃபீஸ் இலவசம் ப்ளூ!!
      ஐயோ.. எனக்கு இப்பவே நாலஞ்சு பேரை படுக்கவச்சு ஆப்பரேசன் பண்ணணும்போல ஆசையா இருக்கே!!

      @KS

      ///10 புத்தகம் வாங்கி நண்பர்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஒன்று கொடுக்கலாம்.///

      தப்பித்தவறி என் கிளீனிக் பக்கம் வந்தீங்களோ.. தெரியும் சேதி! பெரிய ஊசியா எடுத்து சதக் புதக் தான்!!

      Delete

    7. //ஆஹா!! உங்களுக்கு மட்டும் வாழ்நாள் முழுக்க கன்சல்ட்டிங் ஃபீஸ் இலவசம் ப்ளூ!!
      ஐயோ.. எனக்கு இப்பவே நாலஞ்சு பேரை படுக்கவச்சு ஆப்பரேசன் பண்ணணும்போல ஆசையா இருக்கே!!//

      எனக்கு வாழ்நாள் முழுக்க கன்சல்ட்டிங் மட்டும் போதும்...

      Delete
    8. ///எனக்கு வாழ்நாள் முழுக்க கன்சல்ட்டிங் மட்டும் போதும்...///

      எனக்கும் வாழ்நாள் முழுக்க கன்சல்ட்டிங் மட்டும்தான் தெரியும்! :P

      Delete
    9. வாவ்! சூப்பர்!லாம் பணம் கட்டினா தான் சொல்லுவோம்!
      நாங்கெல்லாம் ரொம்ப கறாரான ஆளாக்கும்!!

      Delete
  16. ஈ வி 

    என்னடா பேரக்காணோமே .. கமெண்டு மட்டும் வந்துக்கிட்டிருக்கேன்னு கேக்கணும்னு நெனச்சேன் .. நீங்களே kerchief போட்டு delcare பண்ணிட்டீங்க :-p

    ReplyDelete
    Replies
    1. உங்களோட டொனால்டு-டக் காமிக்ஸ் வெளியாச்சுன்னா இன்னுமே தரை ரேட்டுக்கு விலை குறைய வாய்ப்பிருக்கேன்ற எதிர்பார்ப்புதான் என் தாமதத்திற்குக் காரணம் ராக் ஜி! :P

      Delete
  17. விலை குறைப்புக்கான காரணம் எதுவாயினும் எடிட்டர் சார், தங்களது முடிவை மதிக்கிறேன்!

    விலை குறைப்புல எனக்கு பரிபூரண சம்மதம் சார்!

    விலை குறைப்பால் புக்கிங் விரைவாக நடக்கும் என தெரிகிறது!

    விலை குறைப்புக்கு ரசிகர்கள் இடையே பலத்த வரவேற்பு இருப்பதை பார்க்க முடிகிறது!

    எல்லாம் நன்மைக்கே!

    ReplyDelete
    Replies
    1. //விலை குறைப்புக்கான காரணம் எதுவாயினும் எடிட்டர் சார், தங்களது முடிவை மதிக்கிறேன்!
      //+1

      Delete
  18. சால்ட்மா உள்ளேன் அய்யா

    ReplyDelete
    Replies
    1. ///சால்ட்மா உள்ளேன் அய்யா///

      கொஞ்சம் லேட்டாத்தான் புரிஞ்சது! :)))))))

      Delete
    2. பெட்டர் லேட் தான் நெவர் 🤣

      Delete
    3. சகோ@ ஹா...ஹா...!!

      சால்ட்மா வாழ்க...!!!

      Delete
    4. வாங்க சிஸ்டர்

      Delete
  19. Refund lam venam sir.. Pathukkalam vidunga.. Free ah irunga..

    ReplyDelete
  20. காலை வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  21. பட்டியல் அப்டேட் ஆகும் (எண்ணிக்கை) வேகத்தை பார்த்தால், அக்டோபருக்குள் 300 ஐ தாண்டி விடுமென்றே நினைக்கிறேன்! இதை சட்டுபுட்டுனு முடித்து விட்டு இதே போல (புதிய கதைகள்) மெகா இதழாக ஒன்னு வெளியிட முயற்சியுங்கள் சார்! ஏறைக்குறைய மூன்று கதைகள் ஒவ்வொன்றும் ஐந்து பாகத்திற்கு குறைவில்லாமல் போட்டால் வித்தியாசமான பாணியிலும் குண்டு புக் பஞ்சத்தை தீர்த்ததும் போலவும் இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. பாய் உண்மையிலேயே செமையாக இருக்கும் போலிருக்கே?
      ஆசிரியர் செய்வாரா?

      Delete
    2. ///ஆசிரியர் செய்வாரா?///

      ஆசிரியரும் செய்வார்.. நாமும் அவரை வச்சி செய்யலாம்! :D

      இப்பல்லாம் ஆசிரியரே "ஏம்பா.. போன வாரம் வச்சி செய்ய வரேன்னு சொல்லியிருந்தீங்க.. வரவேயில்ல?!!"னு கேட்கற அளவுக்கு அவருக்கே இதெல்லாம் பழகிப்போச்சோன்னு தோனறது! :P

      Delete
    3. கலீல் சார் அருமையான ஐடியா. ஒரே புக் ஆக சாத்தியம் இல்லை என்று ஏற்கனவே எடிட்டர் சார் கூறி இருந்தார். ஒரே புக் ஆக வேண்டாம் 3 தனி தனி புத்தகங்கள் ஆக வந்தாலும் சரி தான்.

      Delete
    4. சார் அப்படியே ரொம்பநாளா உறங்கிக்கொண்டிருக்கும் சிஸ்கோ ரிப்கெர்பி ஜார்ஜ் காரிகன் வெஸ்லேடு இன்னும் மீதமுள்ள evergreen hero க்களின் ஸ்பெசல் இதழ் ஒன்றை திட்டமிடுங்களேன்.....முடிஞ்சா அந்த டிடெக்டிவ் ஸ்பெசல தூசுதட்டுங்களேன் சார்...

      Delete
    5. நாசியில் தூசு ஏறுவதில் நோ சிக்கலெனில் - இஸ்பய்டர் + ஆர்ச்சி + மாயாவி என்று காத்திருக்கிறார்கள் ! பரால்லியா பழனி ? இவர்களை விடவுமா எப்போதும் பச்சையான நாயகர்கள் கிட்டிடுவார்கள் ?

      Delete
    6. இன்னாது ஸ்பீடர் ஆரச்சியா? பேசாம் ரத்தப்படலம் 3D ல போடுங்க அடுத்தது.

      Delete
    7. கலீல் +1
      எல பழனி இன்னும் கேளுல....யார்ட்ட கேக்குற...நம்ம ஆசிரியர்தாம்ல...

      Delete
  22. XIII Ad. is required here in every post (Y not?)

    ReplyDelete
  23. @ kumar selam

    ஒற்றை நொடி ஒன்பது தோட்டா (5) கென்யா (5) அர்ஸ் மேக்னா (3) இந்த மூன்று கதைகளையும் ஆக மொத்தம் பதிமூன்று கதைகள் வரும் இதைத்தான் ஒன்றாக போட்டால் நல்லாயிருக்குமென்று சொன்னேன் நண்பரே ஆனால், மூன்று நிறுவனமும் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்களென்று ஆசிரியர் கூறி விட்டார். இப்போ சொல்ல வருவது 15 கதைகளை (மூன்று தொடர் கதைகள், ஐந்து பாகம் வருவது) ஒன்றாகப் போட சம்மதிக்கும் நிறுவனமாக பார்த்து போடச் சொல்லி மறு விண்ணப்பம் சொல்லியுள்ளேன் பார்க்கலாம் ஆசிரியரின் பதிலை 😊

    ReplyDelete
    Replies
    1. நிறுவனம் ஒன்றாக இருந்தாலும், படைப்பாளிகள் வெவ்வேறு எனும் போது சம்மதம் கிட்டாது சார் - போனெல்லி தவிர்த்து ! தவிர 15 பாகங்களில் புதுசாய் ஏக் தம்மில் பணியாற்றுவதெல்லாம் மிஷன் இம்பாஸிபிள் என்பேன் !

      Delete
    2. சம்மதம் கிட்டவில்லை என்றால் பரவாயில்ல சார். 3 தனித்தனி புத்தகங்களாக வெளியிட்டாலும் பரவாயில்லை சார் அட்ஜஸ்ட் பண்ணி கொள்கிறோம்....

      Delete
    3. ஆசிரியருக்கு இது போன்ற சில கோரிக்கைகளை சில மாதங்கள் வைக்காமல் இருப்பது நலம் என நினைக்கிறன்!! XIII ஏற்பட்ட குழப்பங்கள் காயங்கள் ஆறட்டுமே நண்பர்களே! XIII புக்கிங் ஸ்டெடி ஆகட்டும், அதற்கான முயற்சியில் நாம் ஈடு படுவோம்! நமது லயன் கம்பெனியின் XIII ப்ராஜெக்ட் வெற்றி பெற நம்மால் ஆனா முயற்சிகளை முதலில் செய்வோம் நண்பர்களே!

      Delete
    4. ///நமது லயன் கம்பெனியின் XIII ப்ராஜெக்ட் வெற்றி பெற நம்மால் ஆனா முயற்சிகளை முதலில் செய்வோம் நண்பர்களே!///

      ----வெல்செட் பரணி!

      பர்ஸ்ட் திங் ஈஸ் பர்ஸ்ட்.
      இப்போ இரத்தப்படலம்!

      Delete
    5. @ எடிட்டர் வேறு வேறு பதிப்பகம் வேறு வேறு படைப்பாளிகள் கொஞ்சம் சிரமம் தான் வாசகர்களுக்கும் குண்டு புக் ஆசிரியருக்கும் ஒரே நிறுவனம் படைப்பாளிகள் என்ன செய்யலாம்

      கென்யா, நமீபியா, அமேசானியா செம்மையா இருக்கும் சும்மா தெறிக்க விடலாம். ஆசிரியர் மனது வைப்பாரா ஏப்ரல் அல்லது 2021 ஈரோடு சந்திப்பில் எப்போது முடியுமோ அப்போது ஆனால் முடிந்த அளவிற்கு சீக்கிரமாக செய்யுங்கள்.

      Delete
  24. விஜய் @

    // இப்பல்லாம் ஆசிரியரே "ஏம்பா.. போன வாரம் வச்சி செய்ய வரேன்னு சொல்லியிருந்தீங்க.. வரவேயில்ல?!!"னு கேட்கற அளவுக்கு அவருக்கே இதெல்லாம் பழகிப்போச்சோன்னு தோனறது! :P //

    செம செம வாய்விட்டு சிரித்தேன். சூப்பர்.

    ReplyDelete
  25. முன்பதிவு நம்பர் 50 செயலர். நாங்கள்ளாம் fancy no படிதான் வரு
    கரூர் ராஜ சேகரன் வோமாக்கும்......

    ReplyDelete
    Replies
    1. செயலர் வடக்குப்பட்டி வரைக்கும் ஒரு நடை போயிருக்கிறாராம் சார் !

      Delete
  26. வியாழன் ரகளை !!

    இன்றைய புக்கிங்ஸ் :

    1 M B மணி, சென்னை - 5 புக்ஸ் (புக்கிங் # 47 , 48, 49,50,51)
    2 P சுப்ரமணியன், சிதம்பரம் - 1 புக் (புக்கிங் # 52)
    3 Dr A K K ராஜா , கரூர் - 3 புக்ஸ் (புக்கிங் # 53,54 & 55) - phew !!
    4 K V கணேஷ், சென்னை -1 புக் (# 56)
    5 யோகி சிவக்குமரன் , ஸ்ரீ லங்கா (K VI கணேஷ்) - 1 புக் (#57)

    என்ன சொல்வதென்று / செய்வதென்று தெரியலை - திரு திருவென முழிப்பதைத் தாண்டி !

    ReplyDelete
    Replies
    1. ஏன் இப்படி சிரிக்கறீங்க டாக்டர்?!! உங்களுக்கான முதல் பேஷன்ட் யாராச்சும் கிடைச்சுட்டாங்களா?!!

      Delete
    2. Yes - neengathaan EV :-)

      Sari - eppo XIII order panna poreenga?;-) After so many bookings I resigned my Doctor job :-D

      Delete
    3. என்ன சொல்வதென்று / செய்வதென்று தெரியலை - திரு திருவென முழிப்பதைத் தாண்டி ! ///

      எல்லாம் அவன் செயல் சார்....

      Delete
  27. சார்.. இன்றைய இஸ்கோர் ப்ளீஸ்!!

    ReplyDelete
    Replies
    1. ஒரே நேரத்தில் எடிட்டர் மற்றும் செயலர் பதிவு......🤔

      Delete
  28. Phew! இரத்தப்படலத்தின் வெற்றி உறுதியாகிக் கொண்டே வருகிறது👍🏃

    ReplyDelete
  29. ""
    நாசியில் தூசு ஏறுவதில் நோ சிக்கலெனில் - இஸ்பய்டர் + ஆர்ச்சி + மாயாவி என்று காத்திருக்கிறார்கள் ! பரால்லியா பழனி ? இவர்களை விடவுமா எப்போதும் பச்சையான நாயகர்கள் கிட்டிடுவார்கள் ?""
    சார் இது ஓ.கே தான்.செயல்படுத்துங்கள்.

    ReplyDelete
  30. XIII மறு மறுபதிப்பை ஆசிரியர் முதலில் அறிவித்த போது 89 நாளில் பணம் அனுப்பி முன்பதிவு செய்யலாம் என இருந்தேன்! ஆனால் ஆசிரியரின் கடந்த பதிவை பார்த்தபின் பணத்தை உடனே அனுப்ப முடிவு செய்தேன்!! இன்று பணம் அனுப்பிவிட்டேன்!! சூழ்நிலை சரியான பின் மேலும் சில புத்தகங்களை முன்பதிவு செய்து ஏதாவது லைப்ரரிக்கு கொடுக்கலாம் என உள்ளேன்!!

    ஜெய் விஜயன் சார்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள்&பாராட்டுக்கள் பரணி சார்.

      Delete
    2. வாவ் சூப்பர் PfB! நல்ல மனசு உங்களுக்கு!

      Delete
    3. PfB: "சூழ்நிலை சரியான பின்"- அடுத்த ஏப்ரலுக்கெல்லாம் புக்கே வித்து தீந்திருக்கும் - அப்புறம் புக்கிங் எங்கேருந்து ? :-) இன்றே புக் செய்வீர் .. நன்றே புக் செய்வீர் ...

      Delete
    4. ///இன்றே புக் செய்வீர் .. நன்றே புக் செய்வீர் ...///

      --- ராக் ஜி ராக்ஸ்!💪

      Delete
    5. அன்புடன் வரவேற்க்கிறேன் நண்பரே...

      Delete
    6. // இன்றே புக் செய்வீர் //

      ஆசை தான் ஜி! ஆனால் எனது மகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் கடந்த மாதம் தொடங்கியது! அடுத்த வாரம் முதல் எனது பையனுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உள்ளன! இருவர் கையிலும் மொபைல் கொடுத்து வகுப்பு அட்டண்ட் செய்ய எனக்கு விருப்பம் இல்லை! எனவே மாற்று வழி ஏதாவது உள்ளதா என யோசிக்கிறேன்! முடிந்தால் ஒரு லேப்டாப் வாங்க முயற்சி செய்ய வேண்டும்! எனவே பண பிரச்சனை சரியான பின்னர் XIII புத்தக புக்கிங்ஐ பார்த்து கொள்ளலாம் என உள்ளேன்!

      Delete
    7. //சூழ்நிலை சரியான பின் மேலும் சில புத்தகங்களை முன்பதிவு செய்து ஏதாவது லைப்ரரிக்கு கொடுக்கலாம் என உள்ளேன்//

      Hats off bro

      Delete
  31. Dear Editor,

    My balance from first booking you add it to any of the expenses for those who are working for you in this period ! Thanks !!

    ReplyDelete
    Replies
    1. தடவிப்பார்த்த தொப்பையைக்காட்டிலும் பெரிது - யாரும்
      இன்றுவரை கண்டுணராத உங்கள் மனசு!

      வெல்டன் Ex.டாக்டர்!!

      Delete
    2. ///தடவிப்பார்த்த தொப்பையைக் காட்டிலும் பெரிது ///
      பெரியது என்றால் நிறைய விஷயங்கள் இருக்கு அண்ணா, கடலில் ஆரம்பித்து, ஔவையார் பாடல் வரை. அது என்ன specific ah தொப்பை?

      Delete
    3. சொல்றேன் சகோ.. சொல்றேன்!

      கடந்தமுறை நாங்கள் இருவரும் சென்னை புத்தகத் திருவிழாவில் சந்தித்துக் கொண்டபோது, கூட்ட நெரிசல் காரணமாக எங்கள் இருவரது தொப்பையும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன! (அப்போது பாய்லர் வெடித்ததைப் போன்ற ஒரு சத்தம் எழுந்ததாக எனக்கு ஞாபகம்). வலியை மறைக்க ஒருவர் மாற்றி ஒருவர் தொப்பையை தடவிவிட்டுக்கொண்டோம்!

      அந்த ரணகளத்திலும் எங்கள் இருவருக்குமே பலமாக எழுந்த கேள்வி ஒன்றுதான்! 'யார் தொப்பை பெரியது?' என்பதே அது!!

      இப்போது மேலே நான் எழுதியிருக்கும் கவிதையை.. ஐ ரிப்பீட்.. கவிதையை ஒருவாட்டி படியுங்கள் சகோ!

      Delete
    4. 2015 சென்னை விழாவில் , ஒரே ஆட்டோவுல இவுங்க 2பேருக்கும் நடுவே நான் உட்கார்ந்து 2கி.மீ. பயணித்து அரங்குக்கு போனோம் சகோ! என்னை நினைத்து பாருங்க! அதில் நசுங்கினதுதான் என் வயிறு! இன்னும் கூட வலிக்கும்.
      ஏதோ நம்ம ஆட்டோனு ஒரு ஆட்டோ! ரெகுலர் ஆட்டோவை விட கொஞ்சம் சிறுசு அது!

      ஆட்டோவை என்னவோ ராக்கெட் மாதிரி ஏன் சென்னைல ஓட்டுறாங்கனும் புரியல!ஹூம்!

      Delete
    5. 2015ல் ஈ வி உங்களை விட ஒல்லி என்பதுதான் நான் கண்டது Tex  :-)

      Delete
    6. களத்தில் இருந்து நேரடி தகவலுக்கு நன்றி விஜய் மற்றும் விஜயராகவன். உங்கள் அனுபவங்களை வைத்து 'The dash of the belly buddies' என்று ஒரு வரலாற்று புதினத்தை எழுதிவிட்டு தான் மறு வேலை. காப்பிரைட் உரிமைகளை பெறுவதற்கு ரம்மி ஆடி கழிக்கவும்.

      Delete
    7. ராக் ஜி@ இப்பத்தான் அந்த விழா போட்டோக்களில் செக் பண்ணினேன்.

      நான் தான் ஒல்லி பாய்!

      அனு@ சகோ... ஹா...ஹா..!!

      இதெல்லாம் சும்மா ! நம்ம செட்டில் பைக் பெட்ரோல் டேங் மேல் தொப்பையை லேண்ட் பண்ணி வெச்சிகிட்டி வண்டி ஓட்டும் பார்டிகள் நிறைய உண்டு!

      Delete
    8. ஒல்லி அண்ட் குண்டு பட் overall வெறி (this வெறி காமிக்ஸ் வெறி) bad பாய்ஸ்.

      Delete
  32. Dear Editor,

    I have placed orders for 3 more copies of XIII collector's edition.
    Whatever little profit you generate from this plus the difference from quoted and actual price of first order - please use towards any cause of your employees in the current context.

    Regards
    Comic Lover

    ReplyDelete
    Replies
    1. Very good Raghavan! Very much appreciated your act on XIII!

      Delete
    2. குறும்புகளும்
      குடாக்குத்தனங்களும்
      கொட்டிக்கிடந்தாலும்..
      குழந்தை மனமும் - கூடவே
      கொஞ்சம் வள்ளல் தன்மையும்
      குன்றின் மேலிட்ட விளக்காய்
      கொண்டவராம் - எங்கள் ராக் ஜி!

      வெல்டன் ராக் ஜி!

      Delete
    3. /* குன்றின் மேலிட்ட விளக்காய் */ - நீங்க கொஞ்சம் ஓவரா போய்கிட்டிருக்குற மாதிரி தோணறதே ? ;-)

      Delete
    4. இந்த அழகான நண்பரை ஈரோட்டில் செயலரும் நானும் சந்திப்பதாக இருந்து பிறகு என்னால் சந்திக்க முடியாமல் போனது இதுவரை வருத்தமான ஒன்றே...:!

      Delete
    5. தொடர்ந்து திக்குமுக்காடச் செய்து வருகிறீர்கள் சார் !! Fast running out of words to express our gratitude !

      Delete
  33. மகிழ்ச்சியாக உள்ளது, லிஸ்டில் எனது பெயரை பார்க்க... திரு விஜயன் சார்... எவ்வித சூழ்நிலையிலும் உங்களுக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ராஜ்குமார். தொடர்ந்து தளத்தில் பதிவிடுங்கள்.

      Delete
    2. வெல்கம் ராஜ்குமார்💐💐💐💐

      உங்கள் விமர்சனங்கள், கருத்துக்களை வாசிக்க ஆவலுடன் வெயிட்டிங்...!!!!

      Delete
    3. வாருங்கள் ராஜ்குமார். தொடர்ந்து தளத்தில் பதிவிடுங்கள்.

      முகநூலிலும், சில வாட்ஸ்அப் க்ரூப்களிலும் சிலரது அடாவடிகளுக்கு உங்களது எதிர்வினை பாராட்டப்படவேண்டியது!

      Delete
    4. வாருங்கள் ராஜ்குமார். தொடர்ந்து தளத்தில் பதிவிடுங்கள்.

      முகநூலிலும், சில வாட்ஸ்அப் க்ரூப்களிலும் சிலரது அடாவடிகளுக்கு உங்களது எதிர்வினை பாராட்டப்படவேண்டியது!

      Delete
    5. அன்புக்கும், வருகைக்கும் நன்றிகள் சார் !

      Delete
    6. வாருங்கள் ராஜ்குமார். தொடர்ந்து தளத்தில் பதிவிடுங்கள்.

      Delete
  34. //My balance from first booking you add it to any of the expenses for those who are working for you in this period ! Thanks !//

    இன்டென்ஷன் ஈஸ் குட்!


    ஆனா சும்மா ஏன் கொடுப்பானேன்?

    யாராவது ஒரு முடியாத வாசகருக்கு அரை ஆண்டு சந்தாவுக்கு அந்த பணத்தை நீங்களே கொடுத்துடுங்க

    அப்படின்னு சொன்னாக்க வாங்கறவங்க ,கொடுக்கறவங்க ரெண்டு பேருக்கும் பெருமை

    ஒரு வாசகரும் பலனடைஞ்சா மாதிரி ஆச்சு!!

    ----

    இப்படி சொல்ல ஆசை !!

    ஆனா உடனே கர்நாடக திப்பு சுல்தான் ஷரித் யுனானி கல்லூரியில க்ராஷ் கோர்ஸ் சேரப் போறேன்னு சொல்லி புடுவீங்களோன்னு கொஞ்சம் பயம்!!

    BTW ,i enjoyed & laughed over கோட்டக்கல் ஆர்யவைத்தியசாலா கமெண்ட்...

    ReplyDelete
    Replies
    1. Doc - you know there is no offense in it - before I put it here I shared in your whatzapp :-)

      Delete
    2. And Doc you pretty well know we are fourth Generation doctors (my family) @ Trichy - my gene just followed my dad into SW Engineering - my cousin continues the tradition !

      Delete
    3. My goodness! Ragavanji! I am a big fan of your satirical comments.. I love all of them..

      Yes! I have seen this particular one in what's app ..though i couldn't control the laughter i hadn' t responded because of workload!!

      I would never be offended by your comment as i know about your unique style of channelising your thoughts?

      I could never forget your comment ' lord Krishna has been the first well known cowboy..'



      Delete
    4. ./And Doc you pretty well know we are fourth Generation doctors (my family) @ Trichy - my gene just followed my dad into SW Engineering - my cous
      in continues the tradition !//

      Yes! I do remember all these from our earlier chats.

      Delete
  35. சார் இப்போது classic ஜேம்ஸ்பாண்ட் பட்டையை கிளப்புவது போல் சிஸ்கோ விங்கமாண்டர் ஜார்ஜ் காரிகன் மாண்ட்ரேக்
    ரிப்கெர்பி போன்ற நமது பழைய ஹூரோக்களுக்கு அடுத்த வருடம் மாதம் ஒரே ஒரு வாய்ப்பு கொடுத்துப்பாப்போம் சார்.. பணம் கொடுத்து வாங்கிய கதைகளை ஏன் மேஜையில் உறங்க வைக்கிரீர்கள்.. இந்த மாதிரி நெருக்கடியான நேரத்தில் புதிய கதைகளுக்கு செலவு செய்யாமல் இருப்பதை பயன்படுத்திக்கொள்வோம் சார்..

    ReplyDelete
    Replies
    1. அருமையான யோசனை சார்.
      சிஸ்கோ கதைகள் நன்றாக இருக்கும்.

      Delete
    2. மேஜையில் உறங்குவன ஆங்காங்கே உள்ளோரையும் உறங்கச் செய்தால் தப்பில்லை என்கிறீர்களா ? வண்டிகளுக்கு ஒரேயொரு கியர் மட்டுமே ரிவர்ஸ் போவதற்கு ; பாக்கி எல்லாமே முன்னே போகத் தான் என்பதை அவ்வப்போது மறந்து விடுகிறீர்கள் பழனி !

      Delete
    3. மறதிக்கார நண்பரின் ரசிகனாச்சே சார்.. அதான் அடிக்கடி இப்படி ஆயிடுறேன்...சார்..

      Delete
    4. இருந்தாலும் ஒரு எக்ஸ்ட்ரா கியர் போட்டுபாப்போமே சார்...???

      Delete
  36. இப்போதைய ரூ.40 ஸ்டைலில்...!

    ReplyDelete
  37. Replies
    1. @ சத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும்

      வித்தியாசமான உங்க ப்ரொஃபைல் நேம் மீது எனக்கு ரொம்ப நாளாவே ஒரு கண்ணு நண்பரே!!
      நான்கூட என்னோடதை 'ஈவிக்கு எலியும் பிடிக்கும் எடிட்டரையும் பிடிக்கும்'னு மாத்திக்கிடலாமான்னு இருக்கேன்! :D

      Delete
    2. // ஈவிக்கு எலியும் பிடிக்கும் எடிட்டரையும் பிடிக்கும்'னு மாத்திக்கிடலாமான்னு இருக்கேன்! //

      Please do ASAP Vijay :-)

      Delete
    3. என்னுடைய ஐடி: ரம்மிக்கு தங்க தலைவனை புடிக்கும் அதைவிடவும் அதிகாரியை கழுவி ஊத்த ரொம்பவும் புடிக்கும்..

      Delete
    4. என்னுடைய ஐடி: விஜயராகவனுக்கு அதிகாரியைப் புடிக்கும் அதைவிடவும் அதிகாரியை கழுவி ஊத்துறவங்க குமட்ல குத்த ரொம்பவும் புடிக்கும்..!

      Delete
    5. @Ev தாராளமாக நோ காப்பிரைட்

      @ரம்மி / சேலம் tex ஐடியிலும் பாச போரா !!!🙃

      Delete
    6. கால்வின் சத்யா @ இது டெக்ஸ் vs டைகர் பாசப்போர்! 😉

      Delete
    7. @சேலம் Tex விஜயராகவன் & @Rummi XIII

      என்ன ஒரு பாசம், எப்பிடி ஒரு நேசம்😋

      Delete
  38. pazjya chinna sizelaeyae podunga..///

    ஆமாம் அதுவும் அந்த பாக்கெட் சைஸ் காதல்

    ReplyDelete
    Replies
    1. நானும் சேந்துக்கறேன்...

      பழைய பாக்கெட் சைஸ்...

      ஆர்ச்சி
      ஸ்பைடர்
      மாயாவி
      லாரன்ஸ்-டேவிட்

      ஹிஹிஹி

      Delete
  39. Replies
    1. பென்சில் ஸ்கெட்சுக்கு லோகம் முழுக்கவே க்ரெய் தான் நிறம் ஸ்டீல் !

      Delete
  40. ஹைய்யா. எல்லாரும் ஜாலி மூடுக்கு திரும்பியாச்சு. இத வச்சு ஒரு கவிதை ப்ளீஸ் ஸ்டீல். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ! இதுக்கு பேசாம நீங்களே ஒரு கைப்பிடியளவு கரோனா வைரஸை அள்ளி எங்க வாய்ல போட்ருக்கலாம் ராஜசேகர் ஜி! :D

      Delete
    2. தெய்வமே ..பாண பட்டர் காதிலே இது விழுந்திருக்கக்கூடாது !

      Delete
  41. இப முன்பதிவு வேகமாக போவது மகிழ்ச்சி சார். இந்த அக்டோபரில் வெளியிட வாய்ப்பு இருந்தால் இன்னும் மகிழ்ச்சியே.

    ReplyDelete
    Replies
    1. தயாரிப்புக்கு சுத்தமாய் 100 நாட்கள் தேவைப்படும் நண்பரே ; முன்பதிவு பூர்த்தி பெற்ற பொழுதிலிருந்து அதனைக் கூட்டிக் கொள்ளுங்கள் !

      Delete
    2. சூப்பர் நியூஸ் சார்...

      Delete
    3. ஒண்ணு கேக்கனும்னு ஆசை ..
      வேணாம் நான் முன்பதிவு வெற்றிக்குபின் கேட்டுக்கறேன். சார்...

      Delete
  42. துரோகம் எப்போதுமே எதிரிகளிடமிருந்து வருவதில்லை.,

    ReplyDelete
  43. சார்.. இன்றைய ஸ்கோர் ப்ளீஷ்?

    ReplyDelete
    Replies
    1. 6 மணிக்கு - வடக்குப்பட்டி ராமசாமி மனசு வைத்தால் !

      Delete
    2. ஐயம் கொள்ளத் தேவையில்லை சார்! வ.ப.ராமசாமி திருந்தி ரொம்ப வருஷங்களாச்சு!!

      Delete
  44. சோடா - திசை மாறிய தேவதை

    அடடே... என்னவொரு அம்மா சென்டிமெண்ட்... அதிலே ஒரு கிரைம்... கதையின் ஓவியம் கார்ட்டூன் போல இருப்பதாக படித்திருந்தாலும், கதையின் வீரியம் அதை மறக்கடிக்கச் செய்ததை ஏற்க வேண்டும். சாலமன் டேவிட் கதையை படிக்கும் போது, லக்கிலூக்கின் எதிர் வீட்டில் எதிரிகள் கதை நினைவுக்கு வந்தது...

    பார்க்குக்கு போனா டுமீலு
    வீட்டு ஜன்னலை திறந்தா டமாலு
    லிப்டுக்கு போனா டமாரு
    ரோட்டை தாண்டினா கிராஷு

    இவ்வளவு விஷயத்தையும் படிச்சதில் சோடா, ஜில்சோடா ஆகி விட்டார்...

    வெல்கம் சாலமன் டேவிட்...


    விண்வெளியில் ஒரு வேதாளம்

    பழைய ஜேம்ஸ்பாண்ட்டின் அக்மார்க் கதை...

    அசாத்தியமான பணத்தாசை பிடித்த வில்லன்...

    வானில் தளமிடும் கதைக்களம்...

    திக்குத் தெரியாத தீவில் இரகசிய மறைவிடம்...

    ஜில்லென்று ஒரு பாண்ட்டுக்கு ஒரு ஏர் ஹோஸ்டஸ்...

    சுவாரசியமூட்டும் சூனியக்காரி...


    வெளிமாநிலத்தைச் சேர்ந்தவன் என்பதால், என்னுடைய விமர்சன பதிவுகள் இப்படித்தான் லேட்டாக வரும்... அதனால் இதர வாசகர்கள் என்னடா சம்பந்தமில்லாத நேரத்தில் பதிவு போடுகிறான் என நினைக்க வேண்டாம்... (இன்னும் ரெண்டு கதை படிக்கவிலலை)

    ReplyDelete
    Replies
    1. தமிழ் நாட்டைச் சேர்ந்தவன் தான்... ஆனாலும் தற்போதைய ஜாகை மகாராஷ்டிராவில்...

      Delete
    2. லேட் ஆனாலும் பரவாயில்லை.. போடுங்க!! செமயா இருக்கு!!

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  45. வெள்ளியின் புக்கிங்ஸ் :

    செல்வம் அண்ணாமலை, ஈரோடு - 2 புக்ஸ் (#58, 59)
    S .பாலசுப்ரமணியன்,பெங்களூரு (PFB) - 1 புக் (#60)
    VR ஸ்ரீனிவாச ராகவன், சென்னை - 3 புக்ஸ் (#61,62,63)

    டோட்டல் : 63

    ReplyDelete
    Replies
    1. புக் செய்த நண்பர்களுக்கு வடக்குப்பட்டி ராமசாமியின் சார்பாக நன்றிகளும், வாழ்த்துகளும்!!

      Delete
    2. வாழ்த்துகள் &பாராட்டுக்கள் காமிக்ஸ் காதலர்களே!

      Delete
    3. // வடக்குப்பட்டி ராமசாமியின் //

      இந்த பெயரை நினைத்தால் கௌண்டமணி செந்தில் காமெடி ஞாபகம் வருது! கிழக்கு பட்டி என இனிமேல் சொல்லுவோமே ? வ.ப வேண்டாம்!

      Delete
    4. அடடே வரவர புக்கிங்ஸ் எகிறி அடிக்கிறதே!!!!!

      Delete
  46. இரண்டு மூன்று நாட்களாக கண்ணில் பட்டுக்கொண்டே இருந்த மீம்ஸில் ஒன்று இது! நமது PfBயின் வேண்டுகோளுக்கு இணங்க - சால்ட்மா'வின் சார்பாக - "இங்கே க்ளிக்குங்க பாஸூ!"

    ReplyDelete
    Replies
    1. பத்த வச்சுட்டியே பரட்டை (விஜய்)!!

      Delete
    2. டூ மச்...இது எல்லை சாரி தொப்பை தாண்டிய பயங்கரவாதம்...
      இன்னொரு ரத்த படலத்திற்கு தயாராக இருங்கள்.... ஜெய் சால்ட்மா...

      Delete
    3. ஏற்கனவே இரத்த ஆற்றில் தான் நீந்திகொண்டு இருக்கிறோம்.....

      Delete
    4. ஜெய் சால்ட்மா!!!

      ஈவி@😂😂😂😂😂

      Delete
    5. EVயின் வீட்டம்மா நம்பர் வேண்டும். ஒரு வருஷத்துக்கு உப்புமா தான் காலை டிபனுக்கு, அப்படி செய்தால் தான் கொரோனா போகும்னு சொல்லிடரேன். இது அதிகாரியின் உப்புமா...

      Delete
    6. அவரு வீட்டில் தினமும் உப்புமா தான் வேண்டும் என அடம்பிடிக்கிறார் என் என்றால் அவருக்கு உப்புமா ரொம்ப பிடிக்கும். ஆனால் அவர் வீட்டம்மாவுக்கு உப்புமா பிடிக்காததால் இவருக்கு செய்து தர மாட்டேன் என சொல்லி விட்டார்கள். உங்கள் மூலமாக விஜயின் ஆசை நிறைவேறினால் சந்தோஷம் அனு :-)

      Delete
    7. ///ஒரு வருஷத்துக்கு உப்புமா தான் காலை டிபனுக்கு, அப்படி செய்தால் தான் கொரோனா போகும்னு சொல்லிடரேன்.///

      ஒரு வருசம்லாம் தேவையே இல்லை சகோ! ஒரு தடவை - போதும்! அடுப்படியிலிருந்து அந்த வாசம் வந்தாலே, பல சதுரகிலோ மீட்டர் சுற்றளவிலிருக்கும் கொரோனா உள்ளிட்ட கொடிய வைரஸ் எதுவாக இருந்தாலும் கொத்துக்கொத்தாய் மடிந்துவிடும் என்பது என் கணிப்பு!

      @PfB
      அடுத்ததபா EBFக்கு வரும்போது உடம்பு முழுக்க கவச உடை போட்டுக்கிட்டு வந்தீங்கன்னா உங்களுக்கு நல்லதும்பேன்!! இல்லேன்னா 'பூனை பிறாண்டியதால் பெரியவர் படுகாயம்'னு பேப்பர்ல நியூஸ் வர வாய்ப்பிருக்கு! உறுதியா இருக்கு!!

      Delete
    8. புஹா.... சீமானை நினைத்து கொள்ளவும்.

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. அப்புறம் கவசம் எல்லாம் தேவையில்லை எனக்கு எனது நண்பன் அரசவை புலவன் ஸ்டீலுடன் வருகிறேன். முடிந்தால் உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள். :-)

      Delete
    11. பரணி சார், பூனை பிறாண்டிய கமெண்ட் என்னாச்சு?

      Delete
    12. //அப்புறம் கவசம் எல்லாம் தேவையில்லை எனக்கு எனது நண்பன் அரசவை புலவன் ஸ்டீலுடன் வருகிறேன். முடிந்தால் உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள். :-)//

      ROFL

      Delete
    13. அந்த கமெண்ட் கொஞ்சம் சுமாராக தோன்றியது எனவே அதற்கு பதில் புதியதை பதிவு செய்தேன் அனு.

      Delete
    14. ///எனது நண்பன் அரசவை புலவன் ஸ்டீலுடன் வருகிறேன்.///

      சரிங்க PfB.. நீங்க இவ்ளோ தூரம் கெஞ்சிக் கேட்டுகறதுனால, சமாதானமாப் போய்டுவோம்ன்ற முடிவுக்கு வந்துட்டேன்!
      என்னதான் நாங்கள்லாம் ஒரு கொடிய விலங்காக ஊருக்குள் உலா வந்தாலும், எங்களுக்கும் பூனாபிமானம்லாம் உண்டுன்றதை நீங்க புரிஞ்சிக்கிடணும்!

      Delete
  47. விஜயன் சார் ..

    இ.ப

    முதல் பேஜ்ல வாசகர்களோட போட்டோ கண்டிப்பாய் இடம்பெறும் தானே ???

    அப்படியே புக்கிங் பண்ணிண எல்லார்க்கும் மூன்று எடிட்டர்களும் ஆட்டோக்ராப் போட்டு அனுப்பினீங்கன்னா இ.ப புக் செய்திருக்கும் ரொம்ப மகிழ்ச்சியைக் கொடுக்கும்

    ( உங்க மூணுபேர்க்கும் கை வலி எடுத்தா சொல்லுங்க அயோடெக்ஸ் இரண்டு பொட்டி அனுப்பி விடறேன் 😃😃 )

    ReplyDelete
  48. 100 ஐ தொடும் நாள் வெகு தொலைவில் இல்லை. எடி சார், விலை குறைப்பு காரணமாக , அந்த கேன்சர் சிறுமிக்கு செல்ல வேண்டிய தொகையில் எதும் மாற்றம் உண்டா

    ReplyDelete
  49. போர் முனையில் ஒரு பாலகன்

    இந்த முறை களையில் காமெடியை விட செண்டிமென்ட் தூக்கலாக இருந்ததாக தோன்றியது.

    பையனை சுட்டது நான் தான் ௰என கார்ப்பொரல் ஸ்கூபி 25ம் பக்கத்தில் அதிகாரிகளை கிழித்து தொங்கவிடும் வசனம் ஏ1 ரகம்.

    வெஸ்ட் பாயிண்ட், பெளவி கோட்டை என கேப்டன் டைகரின் கதையில் வந்த இடங்கள் இங்கேயும்... - அடடே

    இறுதியாக, புது லெப்டினன்ட் சிறப்பான, காலத்திற்கேற்ற தொழிலை முன்மொழிகிறார்... இதுவும் அசல் நையாண்டிக்கு சான்று🤣🤣🤣🙏🏼🙏🏼

    ReplyDelete
  50. 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

    பழகுவதில் பண்பானவர்,
    காமிக்ஸ் காதலர்,
    டெக்ஸ் நேசர்,
    குண்டுபுக் காதலர்,
    பிரியாணி பிரியர்,
    லெக்பீஸ் விரும்பி,
    அன்பு நண்பர்,
    அருமை அண்ணார்
    கரூர் சரவணன் அவர்களுக்கு
    இனிய இனிப்பான ❤️ கனிந்த
    பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂


    இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

    ReplyDelete
    Replies
    1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கரூர் சரவணன் அவர்களே!!

      Delete
  51. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சரவணன்.

    ReplyDelete
  52. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கரூர் சரவணன் அவர்களே!!💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete