Powered By Blogger

Monday, June 29, 2020

3 கேள்விகளும் ; 3 பதில்களும் !

நண்பர்களே,

வணக்கம். "இரத்தப் படலம்" என்றாலே மண்டை உடைப்புப் படலங்களுக்கும் பஞ்சமிராதென்பதை yet again நிரூபித்துள்ளன கடந்த பத்து நாட்களின் நிகழ்வுகள் ! முதல்முறை 2010 -ல் கருப்பு-வெள்ளைத் தொகுப்பினை வெளியிட்ட நாட்களில் அவற்றை ஒட்டு மொத்தமாய் கொள்முதல் செய்திட ஒரு கூட்டணி முயற்சித்ததும், அது சாத்தியமாகாது போன பின்னே அரங்கேற்றிய ஆட்டங்களும் நமது வலைப்பக்க வருகைகளுக்கு முந்தையவை என்பதால் நினைவோடு மாத்திரமே அகன்று விட்டன ! அப்புறம்  2 ஆண்டுகளுக்கு முன்பாய்க் கலரில் வெளியிடத் திட்டமிட்ட வேளையில் இங்கு நடந்த ரகளைகள் வீரியத்தில் நிச்சயமாய் ஒரு சட்டமன்றத்துக்கே tough fight தந்திருக்கும் ! And இதோ, விளையாட்டாய்த் துவக்கியதொரு "முன்னூறு முயற்சி " முழுசாய் சிறகு விரித்தாலும் விரித்து கூடுமோயென்ற நிலையில்  கிளம்பியுள்ள வெப்பத்தை நான் நேரடியாய் உணராது போயினும், ஆங்காங்கே காமிக்ஸ் குழுக்களில் அங்கமாகியிருந்திடும் நம் நண்பர்கள் உணர்ந்து வருவதைச் சிறுகச் சிறுகக் காதில் வாங்கிய போது சலனங்கள் துவங்கின உள்ளுக்குள் ! போன பதிவின் இறுதியினில் ஸ்டீலுக்குப் பதிலாயொரு பின்னூட்டத்தில் நமது மகிஜி குறிப்பிட்டிருந்த வரிகள், பின்னூட்டத்து Load More கத்தைக்குள் புதைந்து போயிருந்தாலும், அதனில் தொனித்த சங்கடம் என்னைத் தாண்டிடவில்லை ! அது நேற்றைய நிகழ்வெனில், இன்றைய பொழுதும் ஒரு eye opener ஆக அமைந்தது ! 

And trust Doctors to know what's good & what's not !! இன்றைய காலையினில் கண்ணில்பட்ட நேசத்துக்குரிய 3 டாக்டர்களின் பின்னூட்டங்கள் உணர்த்தின ! டாக்டர் AKK ராஜா & நமது டாக்டர் செனா அனா - "இ.ப."வின் சங்கடப் பக்கத்தினையும், இதனில் நம் தரப்பின் சூழலையும் சீர்தூக்கிப் பார்த்திடும் பக்குவத்தையும், Dr ஹரிஹரன் அவர்கள் சிரம நாட்களிலும் இருளைத் தாண்டிட கையிலெடுக்க வேண்டிய உத்வேகம் பற்றியும் பதிவிட்டிருந்தனர் ! காலையில் இவற்றை அசை போடத் துவங்கிய போதே இந்த "இ.ப" திட்டமிடலினில் இன்னும் கொஞ்சம் சிந்தனைகளைத் தந்திருக்க வேண்டுமோ ? என்ற நெருடல் ஆட்கொள்ளத் துவங்கியது ! And பகடியென்ற பெயரில் அமிலத்தை நனைத்து - ஒரு டுபுக்கு ஐடியின் பின்னிருந்து ரொம்பவே மெனெக்கெட்டு அனுப்பி வைத்த நண்பரும் நமக்கு பரிச்சயமானவரே எனும் போது, ஒரேயொரு விஷயம் மட்டும் புலனானது : திட்டமிடப்பட்டுள்ள இந்த இதழ் - திட்டமிடப்பட்டுள்ள விலையினில் - திட்டமிடப்பட்டுள்ள இந்தக் காலகட்டத்திற்குள் வெளியாகும் பட்சத்தில் - இதனில் கிட்டிடக் கூடியது பண நிறைவாய் இருந்திடலாம் ; ஆனால் கிஞ்சித்தும் மன நிறைவாய் இராது ! நமது காரணங்களோ ; நியாயங்களோ என்னவாய் இருப்பினும் - காலத்திற்கொரு களங்கமாகவே இந்த முயற்சி பார்த்திடப்படும் என்பதை மறுக்க முடியவில்லை என்னால் !

நிஜ முகங்களோடு, அன்பின் மிகுதியில், மருத்துவ நண்பர்கள் கண்ணியதோடு முன்வைத்த சிந்தைகளும், போலி முகத்தோடு, ரௌத்திரத்தின் பிரவாகத்தோடு, கூசச் செய்யும்  வார்த்தைப் பிரயோகங்களோடு இன்னொரு அணி முன்வைத்த பகடியும் ஒரே நாளில் பதிவானது தான் நமது சிறு வட்டத்தின் இரு வேறு துருவங்களைப் பற்றி பிடரியில் அடித்துச் சுட்டிக்காட்டியது ! அன்பினையும், அக்கறையையும்,  coolers-களாக்கிப் பார்ப்பவர்களுக்கு நானொரு சூழ்நிலைக்கைதி என்பது புரிந்திடுவதும் ; ஏதேதோ குரோதங்களைக் கண்ணாடியாக்கிப் பார்ப்பவர்களுக்கு, நானொரு கொள்ளைக்காரனாய்த் தென்படுவதும் இயல்பே என்பதும் புரிந்தது ! நான் உதைபடுவது புதுசும் அல்ல ; என்னைப் பகடி செய்வோர் அலுத்துப் போகப்போவதுமில்லை ; ஆனால் இம்முறை இடையில் நின்றபடிக்கே சங்கடப்படும் நண்பர்கள் அநேகம் என்பதும் சரி, அவர்கட்குமே இந்த முயற்சி குறித்த சிறு நெருடல் இராது போகாதெனும் போது - 'இதுவும் கடந்து போகும்'  என்று ஓய்ந்து கிடக்க மனம் ஒப்பவில்லை !

To cut a long story short - இன்றைய சங்கடங்கள் மூன்று காரணங்களின் பொருட்டு என்பது அப்பட்டம் :

1 இந்தச் சிரம நாட்களில் இத்தகையதொரு செலவினை நண்பர்களின் தலைகளில் சுமத்துவது 

2 மூன்றே மாதங்கள் என்ற காலக்கெடு !

3 And அந்த விலை !

ரௌத்திரங்களையும், வன்மங்களையும் சற்றே தூர வைத்து விட்டு மேற்கண்ட 3 சமாச்சாரங்களிலும் தென்படும் ஒருவிதக் குதர்க்கத்தையும் ; அதனை நானே பிடிவாதமாய்ப் பின்பற்றிட நினைக்கும்  காரணத்தையும் அலசிட நமது பகடி நண்பர் & பின்னணிக் குழு முயற்சித்திருப்பின் - எனது அடிப்படை எண்ணமென்னவென்று புரிந்திருக்கும் ! அதைக் கிரகிக்கும் பொறுமையின்றி, குப்பைக்கூடையைத் தலையினில் கவிழ்க்கக் காட்டியிருக்கும் அவசரத்திலும், மும்முரத்திலுமே தெரிகிறது - என் மீதான கடுப்பில் மிகுதியில் எதைத் தொலைத்திருக்கிறார்கள் என்று ! But இன்றைய நமது சிறுவட்டத்தில் இத்தகைய ஜனமுமே ஒரு அங்கமே எனும் போது - யாரையும் நொந்து பிரயோஜனமில்லை - என்னைத் தவிர்த்து !

சிக்கல்கள் மூன்றுக்கும் இதோ நான் செய்திடவுள்ள பரிகாரங்கள் :

1 இந்தத் திட்டமிடலை அடுத்த மூன்றே மாதங்களுக்குள் நிறைவேற்றிட வேண்டுமென்ற பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்கிறேன் ! இந்தாண்டின் எங்களது அச்சுப் பிரிவினரின் வண்டிகள் ஓடிட வேண்டுமென்ற வேகத்தினிலும் ; புதுச் சந்தா முயற்சிகளின் மத்தியில் "இ.ப" இடராகிடக்கூடாதே என்ற எண்ணத்தில் இட்ட இந்த நிபந்தனையை மாற்றியமைத்துக் கொள்வோம் ! மரம் வைத்தவர் தண்ணீர் விடாதா போய்விடுவார் - நமது பணியாட்களின் நிலைமைக்கு ? So அதனைப் பிரதான காரணமாக்கிட இனியும் விழைய மாட்டேன் ! அட, இன்றைக்கு இந்த "இ.ப" 300 என்றொரு சமாச்சாரம் சாத்தியமில்லாது போயிருப்பின் என்ன செய்திருப்போமோ - அதனையே இப்போது செய்திட்டால் போச்சு ! 

2 அக்டோபர் 30 வரையிலும் இப்போதை போலவே முன்பதிவுகள் அவரவரது வசதிகளுக்கேற்ப நடந்திடட்டும் ! அந்நேரத்திற்குள் ஒரு 150 / 170 முன்பதிவுகள் தான் தேறியுள்ளதென்றாலும் no worries ; தற்காலிகமாய் புக்கிங்குகளை ஒத்தி வைப்போம் 2021 ஏப்ரல் வரைக்கும். And 2021-ன் ரெகுலர் சந்தாப் பணிகள் பூர்த்தி கண்ட பின்பாய் மறுக்கா  "இ.ப' கடையை விரிப்போம் - மேற்கொண்டொரு 3 மாத அவகாசத்தோடு ! So ஏப்ரல், மே & ஜூன் 2021 "இ.ப."புக்கிங்குக்கான இரண்டாம் சாளரமாக இருந்திடும் எனும் பொழுது இன்றிலிருந்து கிட்டத்தட்ட ஓராண்டு கால அவகாசம் கிட்டியது போலாயிற்று !

3 And அந்த விலை ! சிக்கலான இன்றைய நாட்களில் இந்த விலை விண்ணுயரமாய்த் தென்படுவது புரிகிறது தான் ! So அதன் நியாயங்களை பற்றியெல்லாம் இன்னொருமுறை நான் 'தம்' கட்டும் நேரத்துக்கு - டப்பென்று சொல்லி விடுகிறேனே - அதற்கான எனக்குச் சாத்தியமாகிடும்  தீர்வினை :

  • கலரில் 1000 பிரதிகள் பிரிண்ட்ரன்னின் போது நமது விலை : ரூ.2600 ! அடுத்தாண்டின் இறுதியில் விலைவாசிகள் உச்சத்தில் இருந்தாலும் சரி, பாதாளத்தினுள் கிடந்தாலும் சரி இந்த "இ.ப" 300 முயற்சியின் விலையும் அதே இரண்டாயிரத்து அறுநூறாக இருந்திடும் !
  • "புலன்விசாரணை" புக்கினை அன்றைக்கு இலவசமாய்த் தந்திருந்தோம் ; அதற்கு மாத்திரம் இம்முறை ரூ.150 மட்டும் சேர்த்துக் கொள்வோம்.
  • ஆக "இ.ப' 300 project ரூ.2750 என்ற விலையுடன் வெளிவந்திடும்...... ! Plus Courier & Packing Charges of course ! 
  • ஆக தமிழகத்தினுள் ரூ.2900 (all inclusive) & பெங்களூரு ரூ.2975 என்றே இருந்திடும் ! 
இந்த முயற்சியில் கையைப் பிடித்தாலும் சரி, காலைப் பிடித்தாலும் சரி - அதனை நிரவல் செய்திடும் ஆற்றலை ஆண்டவன் அருளாது போக மாட்டார் ! தொண்ணூறு சதவிகிதத்தினர் மனமுவந்து பணம் தந்து, வெறும் பத்துப் பேர் குரோதத்தோடு தரும் பணமானது கூட நிச்சயமாய் நமக்கோ ; நம்மைச் சார்ந்தவர்களுக்கோ செரிமானமாகாது ! நீலம் ஒரு சொட்டோ ; பல சொட்டுக்களோ - அவை விட்டுச் செல்லும் கறைகளின் ஆயுள் ஜாஸ்தி என்பதால் செய்யவிருந்த தவறினை சந்தோஷமாய்த் திருத்திக் கொள்கிறேன் !

என்ன ஒரே விஷயம் - "மறுக்காவும் இ.ப'" என்ற நொடியில் - சில பல ஜாக்பாட்  விலைகளிலான resale சாத்தியங்கள் ஓய்ந்து போய்விட்டதில் வெளிப்பட்டிருக்கக்கூடிய புகைச்சல்கள், இந்த விலை குறைப்பின் புண்ணியத்தில் இன்னும் கொஞ்சம் ஜாஸ்தியாகிடக் கூடும் - வரும் நாட்களில் ! அதுமட்டுமன்றி - "பார்டா..இவ்ளோ விலையைக் குறைச்ச பிறகும் இதிலே லாபம் எவ்ளோ இருக்குமோ ?" என்ற அடுத்த கட்ட ஆராய்ச்சிகளுக்குள் அந்த ஆற்றல் வாய்ந்த அணி புறப்படுமென்பதிலும் ஐயமில்லை ! So விறு விறுவென்று சீசன் 3-ற்கு ரெடியாகிக் கொள்ளுங்க பகடி & கோ ! And எப்போதாச்சும் ஒரேயொருவாட்டி அந்த உழைப்புகளை ஏதேனுமொரு சந்தோஷச் செயலுக்கும் உரமாக்கித் தான் பாருங்களேன் ? அதனில் கிட்டக் கூடிய நிறைவு, இந்தக் கூத்துக்களில் கிட்டுவதை விடவும் அதிகமென்பதை அறியாதவர்களா நீங்கள் ? And stay assured - விலையினை டமக்கென்று குறைத்திருப்பினும் - தயாரிப்பினில் துளியும் compromises இன்றி "இ.ப" வெளிவந்திடும் என்பது எனது உத்திரவாதம் - whenever that is !


ஏற்கனவே பணம் அனுப்பியுள்ள நண்பர்களின் கூடுதல் தொகைகளை வாபஸ் செய்திடலாம் ; அல்லது 2021-ன் சந்தாக்கணக்குகளில் வரவு செய்திடலாம் ! And நாளைக்கு காலையில் லிஸ்டிங் தொகைகளைத் திருத்தி விடுவோம் ; so அதன் பின்பான முன்பதிவுகளுக்கு no worries !

So டி-வி ரியாலிட்டி ஷோக்களில் அரங்கேறும் கூத்துக்களுக்கு இணையான இந்த லேட்டஸ்ட் எபிசோடிற்கு எனக்கு சாத்தியமாகியுள்ள தீர்வைக் சொன்ன கையோடு  நான் கிளம்புகிறேன் folks ! நம்மைச் சுற்றியிருப்போர் அன்பில் மட்டுமல்ல ; நிதானங்களிலும் சளைத்தவர்களல்ல என்பதைப் புரிந்த பரம திருப்தி எனக்கு !

அதே சமயம் - 'யாரோ முகமில்லா ஆசாமி போடும் வெத்துக் கூச்சலுக்கோசரம் இந்த kneejerk ரியாக்ஷன் தேவை தானா ?' என்ற எண்ணம் உங்களுக்குள் எழுந்திருப்பது நிச்சயம் ! As always எனது பதில் ரொம்பவே சிம்பிள் guys : பிள்ளைக்கு விட்டுச் செல்வது புண்ணியங்களாய் இல்லாதே போனாலும், சாபங்களும், வயிற்றெரிச்சல்களாகவும் இருந்திட வேண்டாமே என்று நினைக்கிறேன் ! இது பொழுது போகா பத்துப் பேரின் ஆற்றமாட்டாமைகளின் வெளிப்பாடாய்  இருப்பினுமே - இத்தனை வன்மம் கலந்து வெளிப்படும் போது அதன் பலனில் விரல் நுனியினை வைக்கக்கூட கூசிடுகிறது எனக்கு ! இந்த விலை குறைப்பின் காரணமாய் நான்  இழக்கக்கூடிய ஏதோவொரு தொகை இங்கேயே என்றோ சம்பாதித்த ஒன்று தானே ? So - இங்கே சேர்த்ததைத் தானே இங்கேயே செலவிடவும் போகிறேன் ? திரும்பவும் என்றோ ஒரு நாளில் வாய்ப்பிருந்தால் ஈட்டிக் கொண்டால் ஆச்சு !' என்ற புரிதலோடு அடுத்த பணிக்குள் ஆழ்ந்திடுவோமே !

அதே போல - "பாத்தியால்லே ? ஒரு போடு போட்ட உடனே விலை குறைச்சுப்புட்டாப்ப்லே !!" என்ற அறிவு சார்ந்த ஐன்ஸ்ட்டின் ரக பதிவுகளை, தொடரும் நாட்களில் நீங்கள் பார்க்கவிருப்பதும் நிச்சயமே ! அவற்றைப்  பார்க்கும் போது ஒரு சிறு புன்னகையோடு தாண்டிச் செல்லும் பெருந்தன்மையும் உங்களதாகிட  வேண்டிக் கொள்வேன் ! என் பொருட்டு எவ்வளவோ சங்கடங்களை சுமந்துள்ள நீங்கள், இந்த ஒரேயொரு முறையும் தாண்டிச் செல்லுங்களேன் ப்ளீஸ் ?  Thank you again for being who you all are !!

Bye for now ! See you around !

P.S : நம் மீதான அன்பினில் தொடர்ந்து அதே 4100 / 4200 விலைகளில் நண்பர்கள் பணம் அனுப்பிட்டாலும், இங்கு அறிவித்துள்ள தொகை தவிர்த்த மீதம் அவரவரது 2021 சந்தா முன்தொகைகளாகவே கருதிடப்படும் ! So please do stick to the new prices only ! Maybe..just maybe 300 என்ற இலக்கு சற்றே அதிகமாகிடின் நன்மை கிட்டும் என்று வேண்டிக் கொள்ளுவோம் ! 

305 comments:

  1. Replies
    1. மகிழ்ச்சி..

      சார்.. கையைக் கடிக்காத ப்ரிண்ட் ரன்னும் அதற்கேற்ப அனைத்து புத்தக விழாக்களிலும் பங்கேற்புமாக பேலன்ஸ் செய்தால் நிலைமையை கொஞ்சம் சமாளித்திட முடியும்.. கொரோனாவின் கோரப்பிடி புத்தக திருவிழாக்களை இறுக்கிப்பிடித்து விட்டது என்பதுதான் இதிலுள்ள சோகம்.. இரத்தப்படலம்..பெயருக்கேற்ப எக்கச்சக்க இரத்தம் சிந்த வைப்பதாக அமைந்தாலும் வெற்றியின் நிழல் பின்னொரு தினத்தில் நிச்சயம் சாத்தியப்படும்.. வானம் வசப்படட்டும்.. விலைக்குறைப்புக்கும், கால நீட்டிப்புக்கும் நன்றிகள்..

      Delete
  2. படிச்சுட்டு வருகிறேன்..

    ReplyDelete
  3. முகமூடிகளின் கூச்சலுக்காக உங்களை நஷ்டப்படுத்திக்கொள்ளும் முயற்சிகள் வேண்டாமே ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. சத்தியமாய் இது உணர்ச்சிவசப்பட்டு எடுத்ததொரு முடிவல்ல சத்யா ! இங்கு நிலவி வரும் உஷ்ணம் தொடர வேண்டாமே ?

      Delete
  4. படிச்சுட்டு வருகிறேன்..

    நாமளும் ஒருமுறையாவது பத்துல ஒன்னா வரவேணாம்...

    ReplyDelete
  5. இந்த மாதிரி எதிரிகளை தெறிக்கவிட உங்களதவிர யாராலும் முடியாது...

    ReplyDelete
  6. //இந்த ஒரேயொரு முறையும் தாண்டிச் செல்லுங்களேன் ப்ளீஸ்///

    இந்த ஒரு முறை மட்டும் நாங்கள் உங்கள் வார்த்தையை தாண்டி செல்கிறோம், மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்லும்யா ஷல்லூம்...!!!

      இது தாண்டிச்செல்ல வேண்டிய நேரம் அன்று! திருப்பி தரவேண்டிய நேரம்!

      Delete
  7. உங்கள் முடிவு எதுவானாலும் எங்களுக்கு
    சம்மதமே சார். என்றும் உங்ளுக்கு
    துணை இருப்போம்.

    ReplyDelete
  8. Dear editor, your decision is a double edged sword.... you are cutting the black marketers sharper trusting that the number of books will cross 300 number. I wasn't interested in getting one of this earlier as I have all the other editions of XIII.

    Now, just to blunt the edge facing your side, I'm planning to get two. One immediately by tomorrow and next one on next month salary date.

    Praying that the numbers should cross 1K.
    Lots of love from me....

    ReplyDelete
    Replies
    1. சார் ...திகைக்கச் செய்யும் இத்தகைய அன்புகளும், நம்பிக்கைகளுமே அந்தத் தரப்பில் புகை மிகுந்திட முக்கிய காரணம் ! கவலை வேண்டாம் சார் ; முன்பதிவு எண்ணிக்கை 300 மாத்திரமே என்றாலும் எப்படியேனும் சமாளித்து விடுவோம் !

      உளமார்ந்த நன்றிகள் !

      Delete
  9. சார் ஒரு சந்தேகம்

    அக்டோபருக்குள் 300 புக்கிங் வரவில்லை என்றால், ஒத்தி வைக்கப்படும்.

    அக்டோபருக்குள் 300 வந்து விட்டால், பிரிண்ட் ஆக வாய்ப்புள்ளது.

    இப்படித்தான் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். இது சரியான புரிதலா?

    ReplyDelete
  10. முதன்முறையாக, எடிட்டரின் பதிவைப் படித்துவிட்டு என்ன எழுதுவதென்று தெரியாத ஒரு மோனநிலை!!

    மண்டையை பரபரவென தேய்த்துவிட்டுக் கொண்டு, கொஞ்சநேரம் சிந்தனையில் ஆழ்ந்தபிறகாவது ஏதாவது தோனுதா பார்ப்போம்!


    ReplyDelete
    Replies
    1. இங்கயும் அதே நெலமதான் தல

      Delete
    2. //கொஞ்சநேரம் சிந்தனையில் ஆழ்ந்தபிறகாவது ஏதாவது தோனுதா பார்ப்போம்!//

      I'm a Complan Boy !!

      இப்டி ஏதாச்சும் தோணுனா கூட பதிவிடலாம் இன்னிக்கு !

      Delete
  11. நான் இ.ப. ஏற்கனவே வாங்கியாகிய காரணத்தினால் இம்முறை முன்பதிவு செய்யவில்லை என்றாலும் எவரோ போடும் கூச்சலுக்கு ஏன் உங்களை மாற்றிக் கொள்கிறீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. சார்...ஒரு மாநாட்டுக் கூட்டத்துக்குச் செய்யும் சமையல் குண்டாவினில் ஒரு கைப்பிடி உப்பை அள்ளிக் கூடுதலாய்ப் போட்டால் - அது ஒரு சமாச்சாரமாகவே யாருக்கும் தோன்றாது ! ஆனால் அதே அளவு உப்பை வீட்டு மெஸ்ஸின் சோற்றுச் சட்டிக்குள் போட்டால் கரிக்கும் தானே ?
      வெகு ஜன ஊடகங்கள் மாநாட்டுச் சமையல்கள் ; சிற் சிறு சலனங்கள் பாதிப்பினை ஏற்படுத்திடாது ! நம் கதை அப்படியல்லவே ! அரை டஜன் பேர் ஆளுக்கொரு கைப்பிடி உப்பைக் கொட்டினால் மொத்தப் பேரது போஜனமும் கெட்டது போலாகிடுமல்லவா ?

      Delete
  12. இப பலவித சர்ச்சைகளை கொண்டுவந்துள்ளது நிதர்சனம் சார்.

    ஆனால் அந்த சர்ச்சைகளை சமாளிக்கும் உங்கள் நிதானம் அருமை சார்.

    அதில் உங்கள் வருத்தமும் மேலோங்கி இருப்பது தான் மனதை ஏதோ செய்கிறது சார்.

    இதற்கு பின்பாவது சர்ச்சைகள் நீங்கி இம்முயற்சி வெற்றி அடையவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நிதானம் தவற வேண்டுமென்பது தானே சார் எதிர்பார்ப்பே ?

      Delete
    2. அவர்களது எதிர்பார்ப்பு கண்டிப்பாக நடக்காது சார்.

      Delete
  13. ""ஒரு சிறு புன்னகையோடு தாண்டிச் செல்லும் பெருந்தன்மையும் உங்களதாகிட வேண்டிக் கொள்வேன் ! என் பொருட்டு எவ்வளவோ சங்கடங்களை சுமந்துள்ள நீங்கள், இந்த ஒரேயொரு முறையும் தாண்டிச் செல்லுங்களேன் ப்ளீஸ் ""

    முடியலையே உங்களை பலமுறை சிலுவையில அறையிறாங்களே சார்

    ReplyDelete
    Replies
    1. அட ..விடுங்க சத்யா ! என்னென்னமோ நடக்கும் நாட்களிவை !

      சாத்தான்குளத்துக்கு மேலாகவா யாருக்கேனும் ஒரு கஷ்டம் வந்திட முடியும் ? அந்தப் பாவப்பட்ட தந்தையையும்-பிள்ளையையும் நினைத்துப் பாருங்கள் - இதெல்லாம் சுண்டைக்காயாய்க் கூடத் தெரியாது !

      Delete
  14. இந்த பதிவை கண்டதும் திக்குமுக்காடி போனேன்.

    விலை அதிகம்,
    குறைந்த கால அவகாசம்,
    300 புக்கிங் வரவில்லை என்றால் கேன்சல்

    என இந்த புத்தக அறிவிப்பினில் இருந்த அனைத்து நெருடலான விஷயங்களையும் தட்டி தூர எறிந்து விட்டீர்கள். இதற்காகவே நானும் புக்கிங் செய்யப் போகிறேன்.

    அதே நேரம் ஓராண்டுக்கு தள்ளி வைத்ததன் மூலமாக, வெளியீடுகளுக்கும் இடையிலான இடைவெளியையும் அதிகரித்தது, உடனடியாக ஏன் மறுபதிப்பு என்று கேட்டதையும் சற்றே மழுங்கச் செய்து விட்டது எனலாம்.

    புத்தகம் எப்போ வந்தாலும் சரி, வாங்கறோம் 😁 படிக்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. இந்த முறை ரெண்டு... எனக்கு எனக்கா😀

      Delete
    2. சார்..ஒன்று இப்போதைக்கு பதிவு செய்யுங்கள் ; இன்னொன்றை நிலவரம் சற்றே சீரான பின்பாய்ப் பார்த்துக் கொள்ளலாம் !

      Delete
    3. செஞ்சுடுவோம் சார்...

      Delete
  15. மேலே நவீன் சொன்னது போல என்னிடமும் அனைத்து புத்தகங்களும் உள்ளன.

    ஆனால் உங்களது முயற்சிக்கு எனது சிறு பங்களிப்பை அளிக்க நானும் ஒரு புத்தகம் வாங்குகிறேன் சார்.

    ReplyDelete
  16. நான் பிறந்த தேதியே 13 பழனி 😉. எனக்கு ராசியான நம்பர்.

    ReplyDelete
  17. அதிரடி அறிவிப்பு. அட்லீஸ்ட் முன்பதிவு 600 எண்ணிக்கையை தாண்டினா உங்களுக்கு ஓரளவு கட்டுபடியாக வாய்ப்பு உண்டு.

    இதையும் வைத்து பஞ்சாயத்து செய்ய ஆளுங்க இருப்பபாங்க. அவ்வளவு நேரம் இருக்கு போல.

    வழக்கம் போல என்னுடைய ஆதரவு உண்டு.

    ReplyDelete
    Replies
    1. ஐநூறு ; அறுநூறு என்றெல்லாம் நாமாய்க் கோட்டைகள் கட்டுவானேன் சார் ? இடர்மிக்க இந்த நாட்களில் அவை அசாத்தியங்கள் என்பேன் !

      We'll take it as it comes !

      Delete
  18. உங்களின் இந்த முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு பிடிக்கவும் இல்லை. 100ல் 10 பெயருக்காக உங்கள் முடிவை நீங்கள் மாற்றினாலும் அவர்கள் மாறப்போவதில்லை. வழக்கம் போல் நீங்கள் அவர்களை வெற்றி பெற / லாபம் பெற செய்றீங்க.



    நீங்கள் முதலில் எடுத்த முடிவில் உறுதியாக இருங்கள். சிலருக்காக இப்படி நீங்கள் வளைய வேண்டாம்.

    இது போன்ற உங்கள் முடிவு அந்த சிலரை இன்னும் சந்தோஷபடுத்தும்.:-(

    ReplyDelete
    Replies
    1. உங்களின் இந்த பதிவை முழுமையாக படிக்க பிடிக்க வில்லை சார். மன்னிக்கவும்.

      எனது ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு.

      Delete
    2. சார். என்னால் உங்கள் பார்வைக் கோணங்களை ஓரளவேனும் புரிந்திட இயலும் ; பகடி கபடி பார்ட்டிக்களின் விரோதங்களின் காரணங்களையும் யூகிக்க எனக்குச் சாத்தியமே ! ஆனால் ரொம்பவே unique எனது நிலவரம் ! அதனை முழுமையாய்ப் புரிந்திட நிச்சயமாய் யாருக்கும் சாத்தியமாகாது !

      Delete
    3. சார், உங்கள் மனநிலை மற்றும் நல்ல மனது புரிகிறது. நீங்கள் ரொம்ப வளைந்து கொடுக்கறீங்க. இந்த ஒரு முறையாவது நீங்கள் முதலில் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து காண்பியுங்கள். அடுத்த முறை இது போன்று கூச்சல் போடுபவர்கள் போடத் தயங்குவார்கள்.

      Delete
  19. /* உங்களின் இந்த முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு பிடிக்கவும் இல்லை. */

    Same here sir !

    Just because some @##@#@#@#@## put a shoddy comic book should you want to change your stance? So so disappointed !

    I will go for another copy or couple for sure but I vouch for this as Parani had stated - நீங்கள் முதலில் எடுத்த முடிவில் உறுதியாக இருங்கள். சிலருக்காக இப்படி நீங்கள் வளைய வேண்டாம்.

    Just so ridiculous !

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete

    2. @பரணி @ராகவன்

      நீங்க சொல்ற உணர்வுகளை என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. முகநூல் கீ போர்ட் நிஞ்சாக்களையும் , போலி ஐடி பெயரில் காமிக்ஸ் விட்டவர்களையும் கொண்டு மட்டும் முடிவெடுத்தது போல் தெரியவில்லை. மூன்று டாக்டர்கள் (பழய சினிமா டைட்டில் போல இருக்கு 🤣) சொன்னதும் முடிவுக்கு காரணம் போல் உள்ளது.

      எனக்கும் பிடிக்கவில்லை. But if it gives editor peace of mine then I am ok with it.

      Delete
    3. // எனக்கும் பிடிக்கவில்லை. But if it gives editor peace of mind then I am ok with it. //

      True! I am not going to talk about this any more!!

      Delete
  20. உங்கள் உயர்ந்த எண்ணத்தால், நம் தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு, நீங்கள் கண்டுபிடித்திருக்கும் மருந்து சார் இந்த பதிவு.
    ஆனால் இதெல்லாம் அந்த மனநோயாளிகளை என்றுமே குண படுத்தாது என்பதுதான் வருத்தமே.

    உங்கள் எண்ணம் போல், நம் தமிழ் காமிக்ஸ் உயரே கொடிகட்டி பறக்க வாழ்த்துக்கள் சார். உங்களுக்காகவும், உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெறவும் என்றும் பிரார்த்திப்பேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. // அந்த மனநோயாளிகளை என்றுமே குண படுத்தாது என்பதுதான் வருத்தமே. //

      +1

      Delete
  21. கடந்த நான்கு நாட்களாக ஆபீஸ் வேலை அதிகம், தூங்க செல்லும் நேரம் 2-3 மணியாகி விட்டது. இன்று சீக்கிரம் தூங்கலாம் என நினைத்தேன் ஆனால் உங்களின் இந்த பதிவு எனது தூக்கத்தை தொலைந்து போக வைத்து விட்டது.

    ReplyDelete
  22. எடிட்டர் சார்,

    உங்களின் இந்த முடிவு எனக்கும் பிடிக்கவில்லை சார்,
    எல்லோருக்கும் நல்லவராக அந்த ஆண்டவனாலேயே இருக்க முடியாது என்று சொல்லுவார்கள்.
    தூற்றுவோர் தூற்றியபடி இருக்கட்டும் என்று நீங்கள் உங்கள் முதல் முடிவை தொடரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  23. வணக்கம் சார்,

    கொரோனா கொடூரம் சீக்கிரமே கடந்து போகும்... அனைவரும் வாங்கக்கூடிய வகையில் கால அவகாசம் நீட்டித்தது சமயோஜித ஓன்று... ஆக, திட்டமிடுதலே சிறந்தது.

    முதல் வண்ண மறுபதிப்பின் போது நீங்கள் எடுத்து கொண்ட அசுர உழைப்பை கேட்டிருக்கிறேன், கண்டுமிருக்கிறோம்... உங்களின் அந்த உழைப்பிற்கான விலை குறைப்பை ஏற்பது, நிச்சயம் உங்கள் நலம் விரும்பும் வாசகர்களாக நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம்...

    ஆனால் முதல் வண்ண பதிப்பிலேயே நான் உங்களை வேண்டிக்கொண்ட ஒன்றை இங்கே விண்ணப்பமாக பதிவிடுகிறேன். XIII வண்ண மறுபதிப்பின் விலையை குறைக்க வேண்டாம்... வேண்டுமானாலும் விலையை இன்னும் 15 சதவீதம் உயர்த்திடுங்கள்.
    இதுவரை நீங்கள் XIIIக்காக எந்த வகையிலும் பணத்தை செலவிடாவெனில், வில்லியம் வான்ஸ் காவியம் படைத்த அந்த XIII ஓவிய களஞ்சியத்தை தமிழில் அதே A4 சர்வதேச A4 அளவிலேயே... நீங்கள் வெளியிட வேண்டும் என்பது என்/எங்களின் நீண்டநாள் அவா... நானெல்லாம் வளர்ந்தது எல்லாம் வில்லியம் வான்ஸ் ஓவியங்களை பார்த்து தான்...

    A4 சைஸில் ஆங்கில பதிப்பு கிடைக்கும் தான், நீங்கள் வெளியிடும் கண்ணிய பதிப்பு எங்கும் கிடைக்காது சார். மேலும் விற்பனை கண்ணோட்டத்தில் A4 சைஸில் வெளியிடுவதில் பற்பல plus இருக்கிறது என்பது நீங்கள் அறியாததல்ல. நிறைய சொல்ல நினைத்தேன்... நேரமின்மை தடுக்கிறது.

    எப்படியிருந்தாலும் எனக்கு 2 அல்லது 3 பிரதிகள் தேவைப்படும் சார்.

    ReplyDelete
    Replies
    1. // உங்களின் அந்த உழைப்பிற்கான விலை குறைப்பை ஏற்பது, நிச்சயம் உங்கள் நலம் விரும்பும் வாசகர்களாக நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம்...
      //

      உங்களின் அந்த உழைப்பிற்கான விலை குறைப்பை ஏற்பது, நிச்சயம் உங்கள் நலம் விரும்பும் வாசகர்களாக நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம்...

      Delete
  24. சார் உங்கள் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் நேர்மையின் வெளிப்பாடாய் அமையும் . இதுவும் அதன் சிகரமாய் அமைந்தாலும் நீங்க வியாபாரியாய் செயல்படுவதே சிறந்தது ....வாழ்க்கைல பணம் முக்கியமல்ல என்பதை இன்றைய சூழல் புரிய வைத்தாலும்...நாளை செந்தூரான் அருள் வழக்கம் போலவே வெளிப்படும் என்பதில் ஐயமில்லை . ஆனால் தொழில் நடத்த இந்த சூழல்ல வரும் வாய்ப்புகள உதறிட வேண்டாமே...இவனுக்கு எப்பயுமே இப்படிதானே...குறைக்கும் நாய்கள கண்டா ஒதுங்குவோம் ஆனா செல்லும் காரியத்தை கை விடப்பட்ட போவதில்லையே . அது போல முயற்ச்சி தொடரட்டும் . இந்த முன்னூறு நிச்சயமா குறிப்பிட்ட நாளில் இலக்கை எட்டுவது நிச்சயமே . நாம் ஒவ்வொரு முறையும் மனத திறக்கும் போதும் சோதனைகள் ...இவனால....முடியுமான்னு டெஸ்ட் செய்யத் தொடர்வது வாய்ப்பே...ஆனா அதுல நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய பாடம் தாக்குப் பிடிக்க என்ன செய்யலாம் என்பதாய் மட்டுமே இருக்கனும்...பன்னிக ...நாய்க உறுமுவத பாத்தா எதுவும் நடக்கப் போவதில்லை . தேவைப்படும் பிரிண்ட் எண்ணிக்கைக்கான விலையில் புத்தகத்த மட்டும் வெளியிடுவோம் அதற்க்கான விலையில் . புத்தகம் அத்தியாவசியப் பொருள் அல்லவே ...இயன்றோர் வாங்கட்டும் . இப போன்ற கதைள....விற்பனை. அதிகமுள்ள கதைகள அடுத்த சுற்றுல வெளியிடும் வாய்ப்ப யோசிச்சா காணாமல் போயிருவானுக .இவனுக்கு போல சிக்கிடாம இருக்க சுடச்சுட விற்பனையாக வாய்ப்பான முன் கூட்டிய பதிவுகளுக்கு மட்டுமே விற்பனை செய்வதே சிறப்பு . இனிமேலாவது புத்தகங்கள் அடைகாக்கும் தவற செய்யாதீர்கள் . குடோனில் தேக்கி வைத்து கலங்கியது போதும் .அறுநூறோ ...ஆயிரமோ அதற்கேற்ப வெளியிடுவோம் ...விற்றபின் தேவைப்படுமாயின் முன்பதிவிற்கேற்ற விலையில் இரண்டாம் சுற்றில் தொடர்வோம் திருடர்களின் அநியாய விலையில் இல்லாது சரியான விலையில் .

    ReplyDelete
  25. ""பிள்ளைக்கு விட்டுச் செல்வது புண்ணியங்களாய் இல்லாதே போனாலும், சாபங்களும், வயிற்றெரிச்சல்களாகவும் இருந்திட வேண்டாமே என்று நினைக்கிறேன் ! இது பொழுது போகா பத்துப் பேரின் ஆற்றமாட்டாமைகளின் வெளிப்பாடாய் இருப்பினுமே - இத்தனை வன்மம் கலந்து வெளிப்படும் போது அதன் பலனில் விரல் நுனியினை வைக்கக்கூட கூசிடுகிறது எனக்கு ! இந்த விலை குறைப்பின் காரணமாய் நான் இழக்கக்கூடிய ஏதோவொரு தொகை இங்கேயே என்றோ சம்பாதித்த ஒன்று தானே ? So - இங்கே சேர்த்ததைத் தானே இங்கேயே செலவிடவும் போகிறேன் ? திரும்பவும் என்றோ ஒரு நாளில் வாய்ப்பிருந்தால் ஈட்டிக் கொண்டால் ஆச்சு !' என்ற புரிதலோடு அடுத்த பணிக்குள் ஆழ்ந்திடுவோமே !"

    கண்ணீரை வர வழைக்கும் வரிகள்
    😭😭😭😭

    ReplyDelete
    Replies
    1. சத்தியமாக சத்யா மனசை எண்ணமோ பண்ணுது...நமக்கே இப்படியெனில் ஆசிரியருக்கு....???

      Delete
    2. மனதை கனக்கச் செய்த வரிகள் அவை - செந்தில் சத்யா! :(

      Delete
    3. மனதை கனக்கச் செய்துவிட்டது, இந்த வரிகள்!
      எடிட்டர் சாரின் வலிகளை உணரமுடிகிறது!

      Delete
  26. மனம் ஆயிரம் எண்ணங்களைச் சொல்ல எண்ணினாலும்......


    சார், இந்த மாத லக்கி புத்தகங்களை எப்போ அனுப்பறீங்கனு இன்னும் சொல்லவே இல்லையே! இன்னொரு லாக்டவுன்னு கூரியர நிறுத்தும் முன்பாக அனுப்பிடுங்க! லக்கிலூக்கை தரிசிக்க ஆவலோடு வெயிட்டிங்!

    ReplyDelete
  27. எனக்கு தெரிந்த வகையில் வாசகர்களால் மிகவும் அதிகமாக நேசிக்கப்பட்ட எடிட்டரும், ஒரு சிறு கும்பலால் மிகவும் அதிகமாக அளவில் துவேஷத்துடன் வெறுக்கப்பட்ட ஒரே எடிட்டரும் நம் விஜயன் சார் தான் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை , மாப்பு ராஜா!

      இதனால் எடிட்டரை நேசிக்கும் இன்னும் சில நல்ல உள்ளங்கள் இன்று மனம் திறந்துள்ளன!

      எல்லாம் நன்மைக்கே!

      Delete
  28. முதல்வர் லாக்டவுன் காலத்த extend பண்ண மருத்துவ வல்லுநர் குழு வச்சிருக்கிற மாதிரி நீங்களும் மருத்துவர் குழுவோட ஆணேசனைப்படி இ.ப. முன்பதிவு தேதிய நீட்டிப்பு பண்ணிட்டீங்க. சந்தோஷம். ஒரு சின்ன வேண்டுகோள்.
    நீங்கள் எடுத்த முடிவு உங்களுக்கே தவறு என தோன்றும் பட்சத்தில் அதனை மாற்றிக்கொள்வதில் தவறில்லை.
    ஆனால் மற்றவர்கள் வெளியில் பேசிக்கொள்கிறார்கள் என்பதற்காக மாற்றிக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.
    அப்படி இருந்தால் எந்த முடிவையும் எடுக்க இயலாது. ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு முடிவு என தொடர்கதை ஆகிவிடும்.
    ஏற்கெனவே ஒரு பதிவில் நண்பர் ஒருவர் சொன்னதுபோல, மரத்தைக் கேட்டுக்கொண்டு படகு செய்வது என்பது முடியாத ஒன்று.
    எல்லோரையும் எல்லா விஷயங்களிலும் திருப்திப்படுத்த முடியாது.
    முடிவுகளில் ஜெயலலிதாவாக இருங்கள்.
    Once you decide don't back in any reason.
    Best wishes.

    ReplyDelete
    Replies
    1. நான் ரொம்பவே ரசித்த கமெண்ட் இது - பத்து சார்!! நச்!!!

      Delete
    2. நான் மற்ற வரிகளை அவ்வளவாகப் படிக்கவில்லை, ஆனால் இந்த ஒற்றை வரி போதும். "முடிவுகளில் ஜெயலலிதாவாக இருங்கள்."
      One line says it all. இப்போதைய ஃபாஷனில் டிரம்ப் மாதிரி ஒரு devil may care attitude வைத்து கொள்வதே கவுரவம். Let the dogs wag for themselves.

      Delete
    3. பத்து சார்@ அத்தனை வரிகளும் பத்தரை மாத்து தங்கம்!

      Delete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. Regularஇதழ்கள் பற்றிய update please editor sir

    ReplyDelete
  31. // அதே சமயம் - 'யாரோ முகமில்லா ஆசாமி போடும் வெத்துக் கூச்சலுக்கோசரம் இந்த kneejerk ரியாக்ஷன் தேவை தானா ?' //

    முகமறியா கிறுக்கனின் உளறல்களுக்காக ஏன் சார் இந்த முடிவு,உங்கள் முடிவு தவறென்பது எனது பணிவான கருத்து, எடுத்த முடிவில் திடமாய் நின்று பழகுங்கள் சார்,தற்போதைய தங்களது முடிவினால் மட்டும் சாத்தான்கள் ஓலமிடுவதையோ,ஓநாய்களின் கூச்சல்களையோ அடக்கிவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?!
    பின்நின்று எக்காளமிடுவார்கள்,
    "பார்த்தாயா இரத்தப்படலத்திற்கு இலவசமாக பு.வி கேட்டு வாங்கியது போல,இதுக்கும் தரம்தாழ்ந்து பேசி விலையை குறைச்சிட்டோமில்ல,இதுல இலாபம் இல்லாமலா இருக்கும்."
    -இப்படித்தான் பேசுவாங்க அந்த அதிபுத்திசாலிகள்....
    நீங்க எந்த முடிவு எடுத்தாலும் குறை சொல்லி பிழைப்பை ஓட்டுவதே இவர்களின் தலையாய பணி,இந்த பிறழ்மனச் சிந்தனை கொண்டவர்களை திருத்த முடியாது,இவர்களுக்கு தேவை மருத்துவர்களின் ஆலோசனையே...
    "யார் சொன்னாலும் நான் விரும்பினால் மட்டுமே தாகம் எடுத்தால்தான் சுனையில் வாய் வைப்பேன் என்று சொன்ன அந்த ஆசிரியர் விஜயன் எங்கே சார்??!!
    -இந்த கருத்து தங்களின்மீதான அன்பினால் மட்டுமே சார்...
    ஏதேனும் தவறாக பேசியிருந்தால் மன்னிச்சூ...

    ReplyDelete
    Replies
    1. மனதில் தோன்றும் ஆதங்கத்தை அப்படியே வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள் ரவி!!

      Delete
  32. குள்ள நரிகளின் கூச்சலை காதில் போட்டுக்கொள்ள வேண்டாம் சார்..
    தங்கள் மனம்படும்பாடு உங்க எழுத்தில் தெரிகிறது சார். கவலை வேண்டாம் என்றும் உங்களுடன் இருப்போம்..

    4 புத்தகங்களுக்கு பணம் அனுப்பியுள்ளேன் சார்.

    ReplyDelete
  33. மற்றவருக்காக நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள நினைத்தால் தினம் தினம் மாற வேண்டி இருக்கும்

    ReplyDelete
  34. நல்ல முடிவு சார். முன்பு போட்ட மாதிரியே ஸ்லிப் case மாதிரியே போட்டால் ஏற்கனவே வாங்கியவர்களுக்கு திரும்ப வாங்கும் சுமை இருக்காது.

    ReplyDelete
  35. சாரே, ஒரு சின்ன ரிக்குவெஸ்ட்டு. இரத்தப்படலம், ரத்தக்களறிப்படலமா ஆகிடுச்சு. பேசாம தலைப்ப XIIIன்னு மட்டும் மாத்தி வச்சிப் பாருங்களேன். நேமாலஜி ஒரு வேள ஒர்க் அவுட் ஆகலாம்.

    ReplyDelete
  36. எப்படி என்ன சொல்வதென்றே புரியவில்லை.
    இ ப உங்களை மிகக் குழப்பிவிட்டது என்றே நினைக்கின்றேன்.
    கொண்ட கருத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்பது மட்டும் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.
    நடப்பது யாவும் நன்மைக்கே என்று நினைத்துக் கொண்டே கடந்து விடுவோம்.
    300ஐயும் தாண்டி அதிக அளவு முன்பதிவுகள் நடந்து இந்தாண்டே இதழ் வெளிவந்து வாகை சூடவாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  37. முன்பதிவு காலத்தை நீட்டித்தது நல்ல முடிவு சார். கோரோனா பிரச்சினைகள் அடங்கும் சூழலில் முன்பதிவுகள் கண்டிப்பாக அதிகரிக்கும்.ஆனால் விலை குறைப்பு என்பது குறிப்பிட்ட சிலரின் விமர்சனங்களுக்காக என்றால் வருத்தமே.. இந்த இக்கட்டான சூழலில் முன்பதிவை வேறொரு சமயம் பார்த்து கொள்ளலாமே என்பதே எனது கருத்துமாய் இருந்தது. உங்கள் பதிவை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது சார்.

    பிரிண்ட் ரன் அதிகமானால் விற்பனையில் உள்ள நஷ்டங்களை ஈடு செய்ய முடியுமென்றால் அக்டொபரில் 300 முன்பதிவுகள் வந்ததும் பிரிண்ட் செய்வதை விட, இந்த முன்பதிவை நீங்கள் மேலே சொன்னது போல அடுத்த ஆண்டின் ஏப்ரல் வரை நீட்டிக்கலாமே.. கால அவகாசம் அதிகம் இருக்கும் நிலையில் 300க்கும் அதிகமான முன்பதிவுகள் கண்டிப்பாக வரும்.

    ReplyDelete
  38. கொரோனாவை விட சில மனிதர்கள் ஆபத்தானவங்க என்று சொல்வாங்க அது சரிதான் போல...

    ReplyDelete
  39. டியர் திரு. விஜயன் sir. வணக்கம்! நான் ராஜ்குமார், திருப்பூர்.

    தற்போது அனைத்தும் சேர்த்து 2,900 ரூபாய்க்கு வர போகும் புத்தகம் வடிவமைப்பு முந்தைய புத்தகத்தின் மாதிரியே இருக்குமா?

    புதிய அட்டைப்படம், புதிய வடிவமைப்பு என்று அமையுமா? ஒரே கனத்த புத்தகமாக இம்முறை வரப்போகிறதா?

    ReplyDelete
  40. குழப்பப் படலம்...
    ஆயிரத்துச் சொச்ச வாசகர்களில், இரத்தப்படலத்தை வாங்கத் தவறிய சில நூறு பேருக்காக (மற்றும் இதர காரணங்களுக்காக), ஆறு மாதத்தில் வெளியாக வேண்டிய பதிப்பு, பல நூறு காப்பிகள் விற்றால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய விலையில் ஒரு வருடம் கழித்து வெளிவரப் போகிறதா? ம்...! அந்த வாங்கத் தவறிய சில நூறுபேராவது அடித்துப் பிடித்து முன்பதிவு செய்தார்களா என்றால் அதுவும் இல்லை! பல்வேறு காரணங்களுக்காக மல்டிபிள் காப்பி வாங்குபவர்கள், விலை குறைவென்பதால் இன்னும் ஒன்றிரண்டு கூடுதலாக வாங்கிப் போடப் போகிறார்கள், அவ்வளவுதான் (ஆதரவு தருவதற்காக, இந்த கடின சூழலிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பிகள் வாங்குபவர்களையும் சேர்த்து)!

    உங்கள் தொழில் சார்ந்த தகவல்களான பிரிண்ட் ரன், முன்பதிந்தோர் பட்டியல் (நம்பர்ட் எடிஷன்களாக இருந்தாலன்றி), நிர்வாகச் செலவினங்கள், புத்தக விழா புள்ளி விவரங்கள், ஆன்லைன் ஆர்டர் எண்ணிக்கைககள் போன்றவற்றை, இத்தளத்தில் விவாதப் பொருளாக்குவதை முடிந்தால் தவிர்க்கலாமே சார்? எதிர் கருத்துகள் மட்டுமல்ல, ஆதரவுக் குரல்களும், உணர்வுத் ததும்பல்களும் கூட, நீங்கள் எடுக்கும் முடிவுகளில் பாதிப்பு ஏற்படுத்துவதைக் காண முடிகிறது! காமிக்ஸ் தொண்டாற்றும் ரசிகர், காமிக்ஸ் வியாபாரி, இரண்டும் கலந்த புத்திசாலி என உங்களை, பிடித்த கோணத்தில் அவரவர் பார்த்துக் கொள்ளட்டும். இம்மூவரில் நீங்கள் யாராக இருந்தாலும் அது ஒன்றும் குற்றமில்லை. உங்களுக்கு இழப்பு ஏற்படாமல் மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியான, தெளிவான கருத்துகள் கார்த்திக்!

      Delete
    2. // உங்கள் தொழில் சார்ந்த தகவல்களான பிரிண்ட் ரன், முன்பதிந்தோர் பட்டியல் (நம்பர்ட் எடிஷன்களாக இருந்தாலன்றி), நிர்வாகச் செலவினங்கள், புத்தக விழா புள்ளி விவரங்கள், ஆன்லைன் ஆர்டர் எண்ணிக்கைககள் போன்றவற்றை, இத்தளத்தில் விவாதப் பொருளாக்குவதை முடிந்தால் தவிர்க்கலாமே சார்? //

      கரெக்ட். இனி வரும் காலங்களில் இதனை தவிருங்கள். இவைகளை நீங்கள் எங்களுக்கு விளக்க தேவையில்லை.

      Delete
    3. எல்லா கருத்தும் அற்புதம் கார்த்திக்!

      நீங்கள் சொல்வது போல எல்லாவற்றையும் ஓப்பனாக சொல்வதை எடிட்டர் சார் தவிர்க்கனும்.

      எடிட்டர் சார், வாசகர்களை அதற்கும் மேலாக பார்த்ததன் வெளிப்பாடு இது!

      Delete
  41. புக்கிங் கால அவகாசம் கொடுத்தது ஓ.கே தான்.விலையைக் குறைத்தது ஏற்புடையதாக இல்லை சார்.மற்ற எல்லோரையும் விட அதிலுள்ள சிரமங்களையும், நெருக்கடியும் இன்னபிற தலைவலியும் நீங்கள் மட்டுமே உணர்ந்தது.வெற்றுக் கூச்சலுக்கு செவிசாய்க்க வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.மேற்படி புண்ணியவான்கள் அதை வழக்கமாக்கிக் கொண்டு விடுவார்கள்.

    என்னுடைய ஆதரவு என்றுமே உங்களுக்கே சார்.300ஐத் தாண்டி முன்பதிவு முன்னேறும் நம்பிக்கையோடு காத்திருப்போம்.

    ReplyDelete
  42. எடிட்டர் சார் எனக்கு நிஜமாகவே என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இந்த நேரத்தில் ஒரு புத்தகத்திற்கு 1200 ரூபாய் இழப்பு என்பது மிகப் பெரிய தொகை. அதுவும் நாம் அந்த 300 முன் பதிவை அடைவோமா என்பது கேள்விக்குறி. திரிசங்கு நிலையில் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள். இருந்தும் முந்தைய பதிவில் நண்பர்கள் சொன்னது தான் எப்போதுமே உங்களுடன் துணை இருப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த முடிவு ஆசிரியரின் மனவலியால் விளைந்தது குமார்...
      அவர் தப்பித்தவறி கூட எதிலும் சம்பாரித்து விடக்கூடாது,
      மனக்காயத்தை பெரிதாக்கி சங்கடத்தை உண்டு செய்து,சிந்தனையை குழப்பி இதில் இருந்து ஒதுங்கச் செய்வது கூட திட்டமாக இருக்கலாம்...
      ஆசிரியரைத் திட்டித் தீர்க்கும் இந்த சைக்கோ பின்புறம் எத்தனை காமிக்ஸை பிளாக் மார்க்கெட்டில் விற்றானோ யார் அறிவார்...
      நம்மிடம் எல்லாவற்றையும் அவர் வெளிப்படையாக பகிர்வதும்,வாசகர்களின் கருத்துக்கு காது கொடுப்பதுமே சமயத்தில் அவருக்கு பிரச்சனையாகி விடுகிறதோ என்னவோ...
      எனினும்,புரவியை தடுக்கி விழச் செய்தால் அது மின்னல் வேகத்தில் விருட்டென எழுவதுபோல ஆசிரியரும் எழுந்து வருவார் என்று நம்புவோமாக...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. நண்பரே ; I thrive on challenges ! இப்போதைக்கு அவ்வளவோடு நிறுத்திக் கொள்கிறேனே !

      Delete
  43. வணக்கம் சார். விலை குறைப்பு நிச்சயம் வரவேற்புக்குறியது. புத்தகங்கள் வாங்குவோர் எண்ணிக்கை நிச்சயமாக கூடும். ஆனால் கால நீட்டிப்பு ஜூன் 2021 வரை , இ. ப ஃபீவர் ஐ கொஞ்சம் dilute ஆக்கி விட்டது போல் தோன்றுகிறது‌ சார். ஆனாலும் வேறு வழியில்லை

    ReplyDelete
  44. நண்பர்களே...

    எடிட்டரின் இந்த முடிவை உறுதி செய்தது வேண்டுமானால் அந்த முகமூடி நபர்களின் முகம்சுளிக்கும் படைப்பாக இருந்திருக்கலாம்தான். ஆனால் அவரது எண்ணங்களின் துவக்கப் புள்ளிகள் நமது மரியாதைக்குரிய டாக்டர்களின் நியாயமான கருத்துகளால் என்பதை கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்!!
    எடிட்டரின் இந்த முடிவுக்காக நாம் அவரை குறை கூறுவது நம் மதிப்பிற்குரிய மருத்துவர்களின் (அட!! அருமையான தலைப்பா இருக்கே!) மனதையும் மறைமுகமாகவாவது புண்படுத்திட வாய்ப்பிருப்பதை உணர வேண்டுகிறேன்!

    ஒரு முடிவை எடுக்க ஒரே சமயத்தில் சில நல்ல ஆத்மாக்களும், சில துர்ஆத்மாக்களும் உதவியிருப்பதுதான் இதில் விசித்திரமே!

    ReplyDelete
    Replies
    1. //ஒரு முடிவை எடுக்க ஒரே சமயத்தில் சில நல்ல ஆத்மாக்களும், சில துர்ஆத்மாக்களும் உதவியிருப்பதுதான் இதில் விசித்திரமே!//

      Exactly my point too !!!

      Delete
    2. விஜய் @ இங்கே தங்களது எதிர்ப்பை நண்பர்கள் தெரிவிப்பது அந்த சில துர் ஆத்மாக்களுக்கு.

      நமது டாக்டர் நண்பர்களுக்கு எதிராக இல்லை. தவறாக எண்ண வேண்டாம்.

      Delete
    3. //இங்கே தங்களது எதிர்ப்பை நண்பர்கள் தெரிவிப்பது அந்த சில துர் ஆத்மாக்களுக்கு.

      நமது டாக்டர் நண்பர்களுக்கு எதிராக இல்லை. தவறாக எண்ண வேண்டாம்///---உண்மை!சரியாகச் சொன்னீர்கள் பரணி!

      Delete

  45. " கண்ணை மறைக்கின்ற காலம் வரும்போது
    தருமம் வெளியேறலாம்.
    தருமம் அரசாளும் தருணம் வரும் போது
    தவறு வெளியேறலாம்.
    நல்லவர் லட்சியம்,
    வெல்வது நிச்சயம்."
    தலைவரின் நம்பிக்கை ஊட்டும் பாடல் வரிகள்.
    All is well.

    ReplyDelete
  46. விலைகுறைப்பு என்ற தீர்மானத்தை அறிவிக்கும் கணத்தில் உங்களின் ரியாக்ஷன்ஸ் இவ்விதமே இருந்திடும் என்பதை நான் எதிர்பார்த்தேன் தான் ! ஆனால் பதிவினில் நான் அடிக்கோடிட்டிருந்ததொரு விஷயம் சார்ந்த புரிதல் புலர்ந்திருக்கும் என்றும் எதிர்பார்த்தேன் ;

    But அது நிகழவில்லை !

    எது எப்படியோ - இத்தனை காலமாய் ஒரு எடிட்டராய் மட்டுமே இருக்க முனைந்துள்ளேன் திட்டமிடல்களில் ; விலை நிர்ணயங்களில் ; விற்பனை பாணிகளில் ! அதனில் பெரிதாய் ஏதும் சாதித்தேனோ - இல்லையோ ; சம்பாதித்தேனோ - இல்லையோ பெரிதாய் பணம்சார்ந்த நெருடல்களுக்கு ஆளாகியதில்லை !Of course - தலையில் குப்பைகளைக் கொட்ட முனைவோர் அன்றைக்கும் தாட்டியமாய் இருந்தனர் தான் !

    ஆனால் ஒரு பப்லிஷராக மட்டுமே இருக்க முயன்ற முதல் தருணத்தில் நிறையவே நெருடல்களும் ; சலனங்களும் தொற்றிக் கொண்டுள்ளதை நேற்றைய காலையே உணர்ந்த நொடி முதலே எனக்குள் அமைதியில்லை ! மாலையில் அந்த வாந்திப் படலம் வந்திராவிடினுமே எனது விலைகுறைப்புத் தீர்மானம் அரங்கேறியிருக்கும் தான் ! Maybe அதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் கூடுதலாய்த் தேவைப்பட்டிருக்கலாம் & ஒருக்கால் நான் அறிவித்திருக்கக்கூடிய நம்பரானது ஒரு நூறோ , நூத்திச் சில்லறையோ முன்னே பின்னே இருந்திருக்கலாம் ! ஆனால் நிச்சயமாய் எனது தீர்மானம் இவ்விதமே இருந்திருக்கும் !

    வாந்திப் பார்ட்டிகள் இது குறித்து வேறு மாதிரிப் பேசலாம் தான் ; ஆனால் நிஜம் என்னவென்று ஆண்டவன் அறிவார் !

    எல்லோரிடமும் நல்லவனாகப் பெயர் வாங்குவது சாத்தியமாகாது என்பதை எப்போதோ புரிந்து கொண்டதால் சில பல கபடிப் படலங்களை அந்நேரத்துச் சங்கடங்களைத் தாண்டி மனதினில் இருத்திக் கொள்வதில்லை ! இதோ நாலைந்து நாட்களுக்கு முன்பாய் நமது சோடா இதழ் குறித்து நிகழ்ந்ததொரு காமெடிக்கு பதில் சொல்லி விட்டுத் தான் வந்திருக்கிறேன் ! So நான் இந்தப் பொறுப்பில் குப்பை கொட்டி வரும் வரையிலும் என் தலையில் குப்பை கொட்ட விழையும் அணிக்கு ஓய்விராது என்பது தெரிந்த கதையே
    எனும் போது இத்தீர்மானம் அவர்கள் மகிழ்வின் பொருட்டல்ல ! என்னையே உறுத்த துவங்கியிருந்த விஷயத்தின் பரிகாரமாய் மட்டுமே !

    ReplyDelete
    Replies
    1. And இன்றைக்கு எனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது பலவீனத்தின் வெளிப்பாடாய்த் தெரிந்தாலும் கூட no worries !

      காலத்துக்கும் பேசப்படக்கூடியதொரு பிழை செய்யாது போன சிறு சந்தோஷமே போதும் எனக்கு !

      Delete
    2. எந்தவொரு சூழலிலும் சரியாய் வழிகாட்ட நண்பர்கள் இருப்பது எத்தனை பெரும் வரம் என்பதை உணர்கிறேன் !

      Delete
    3. விஜயன் சார், உங்கள் மனதில் உள்ள வலியை புரிந்து கொண்டேன் அதே நேரம் உங்களின் முடிவுக்கான காரணத்தை ஓரளவு புரிந்து கொண்டேன்! ஆண்டவன் உங்களுக்கு மன வலிமை மற்றும் நீண்ட ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டிக்கொள்கிறேன்!

      Delete
    4. ///எந்தவொரு சூழலிலும் சரியாய் வழிகாட்ட நண்பர்கள் இருப்பது எத்தனை பெரும் வரம் என்பதை உணர்கிறேன் !///----ஆத்மார்த்தமாய் தங்களை நேசிக்கும் நண்பர்களை பார்க்கும் போது மெய்சிலிர்க்கிறது சார்!

      Delete
  47. ஒன்று மட்டும் நிச்சயம் சார். தான் யாரென்று தெரிந்துகொள்ள அலைந்து திரிந்த மறதிக்காரருக்கு கூட இவ்வளவு சங்கடங்கள் வந்திருக்காது.
    once again , எல்லாருக்கும் நல்லவனாக இருக்க முயல்வதென்பது இறைவனால் கூட முடியாத ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. ஆயிரம் பேரே வாசகர்கள் எனும் போது ஆங்காங்கே தலை தூக்கும் ஈகோக்கள் ; பணம் சார்ந்த கணக்குகள் ; அவை பொய்த்திடும் போது எழும் எரிச்சல்கள் ; வெளிச்ச வட்டம் சார்ந்த தேடல்கள் ; அவை கிட்டாத நிலையில் நேரும் கோபங்கள் ; என சிக்கல்களுக்கு காரணிகள் ஒரு வண்டி சார் !

      ஒட்டு மொத்தமாய் உறுத்துவது - ஒற்றை ஆளாய் நான் மாத்திரமே காமிக்ஸ் துறையில் தாக்குப் பிடித்து வருவதும் ; நிபந்தனைகளற்ற அன்பினைக் காட்டும் இந்த வாசக வட்டமுமே ! அந்த உறுத்தல்களே விதம் விதமாய் அவ்வப்போது வெளிப்படும் அனற்றல்கள் !

      Delete
    2. இதோ ரீகல் காமிக்ஸ் தமிழிலும் பணித்துவக்க இருப்பதாய் சேதிகள் வந்தன ; இன்னொருத்தரும் களத்தில் இருக்கும் போது உறுத்தல்கள் கொஞ்சம் மட்டுப்படுமென்று நம்புவோம் சார் !

      Delete
    3. ரீகல் காமிக்ஸ் தமிழில் இப்போதைக்கு இல்லை சார்.. ஆங்கலம் மட்டுமே அதுவும் லேட்டாகும்....

      Delete
  48. எடிசார், ஒன்னுமே புரியவில்லை.. உங்களது அனுபவம் எனது வயது.. இருந்தாலும் ஆற்றாமையால் சொல்ல நினைப்பது, இந்த காலத்தில் நாம் மட்டுமே நல்லவர்களாக இருக்கும் பட்சத்தில் இழப்பை தவிர வேறொன்றும் கிடைக்கப்பெறாது.

    ஒரு மனிதன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் அவனின் நல்லெண்ணத்தை, நல்லமனதை ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாய் அதிகபட்சமாக பரிசோதிப்பதை நிறுத்தமாட்டார்கள்.. நண்பர்கள் கூற்று சரியே, அனைவரையும் எல்லா நேரத்திலும் திருப்திபடுத்துவது முடியாத காரியம்....அது நமது வேலையும் இல்லை...

    ஒரு விஷயம் சார்.. பகடி செய்பவருக்கு மற்றவரின் உணர்வுகளை உணர முடியாது.. மற்றவரின் உணர்வுகளை புரித்துகொள்பவர் பகடி செய்ய மாட்டார்....

    எல்லாவற்றிற்க்கும் மேலாய் யார் இவர்கள், முகநூல் ஐடியும், பைரேடட் மென்பொருளை வைத்து தமிழ் காமிக்ஸை வளர்க்கிறேன் பேர்வழி என்று வேஷம் போடுபவர் தானே... திருடனை திருத்த, தண்டிக்க முயற்ச்சிக்கலாமே தவிர அவனின் சொற்களுக்கு மதிப்பு கொடுக்க அவசியமன்று..

    இறுதியாய், பொருள் உங்களுடையது, உழைப்பு உங்களுடையது, இதில் வரும் இழப்பும் உங்களுடையது எனும் போது உங்களை விட யாரலால் சரியாக திட்டமிட முடியும்... எல்.ஐ.சி டவர் பதிவு மனதில் ஒரு எழுச்சியை அளித்தது.. இருக்கும் ஒரே ஒரு தமிழ் காமிக்ஸின் மீது போர்தொடுக்கும் மனநோயளிகளை அடக்க முடியாததால் இப்போது குற்றஉணர்ச்சியே மேலோங்கி நிற்கிறது... ஏனெனில் இவர்கள் இயக்கும் முகநூல் பக்கத்தின் நோக்கமறியாமல் இணைந்ததால்...இன்று முதல் முகநூல் மற்றும் வாட்சப் க்ரூப் அனைத்திலும் விடைபெற்றேன்...

    மீண்டும் உங்களது முடிவை மாற்றச்சொல்லி வலியுறுத்த மாட்டேன்... ஆனால் என்றென்றும் உங்களுக்கு தோள் கொடுப்பேன்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உள்ளத்திலிருந்து வந்த உண்மைகள்.
      அற்புதம் நண்பரே.

      Delete
    2. // பகடி செய்பவருக்கு மற்றவரின் உணர்வுகளை உணர முடியாது.. மற்றவரின் உணர்வுகளை புரித்துகொள்பவர் பகடி செய்ய மாட்டார்....///----

      உண்மை நண்பரே!
      எல்லா பகடி பார்டிகளும் உணர்வார்களா????

      பகடி செய்யப்படுபவரது மனநிலையில் ஒரேயொரு நொடி சிந்தித்து பார்த்தாலே தாம் செய்யும் செயலின் விளைவை உணர்வார்.

      ஆண்டாண்டு காலமாக பகடி செய்பவர்கள் இனியும் திருந்தினால் நல்லது! ஹூம்!

      Delete
  49. சார்..தங்களின் பதிவையும் ,நண்பர்களின் கருத்தையும் இப்பொழுது தான் படித்து முடித்தேன்..மேலே செயலர் சொன்றது போல


    எனக்கு என்ன பதிவிடுவது என்றே தெரியவில்லை..


    இது சரியான முடிவா ,தவறான முடிவா எதையும் என்னால் அனுமானிக்க முடியவில்லை..

    ஆனால் என்றும் நாங்கள் உங்களுடன் துணை நிற்போம் என்பதை மட்டும் தெரிவித்து கொள்கிறேன்..

    ReplyDelete
  50. விஜயன் சார், XIII இந்த மறுபதிப்பு விலை புத்தகம் + புலன் விசாரணை மற்றும் பேக்கிங் மற்றும் கொரிஎர் சார்ஜ் மட்டும் என தெளிவாக சொல்லியது நன்று! இதில் சிலிப் case கிடையாது என இன்னும் ஒருமுறை தெளிவாக சொல்லிவிடுங்கள்!
    இதனை வைத்து இன்னும் கம்பு சுத்த வருவதற்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டாமே!

    ReplyDelete
  51. ஆசிரியருக்கு
    ஊர் வேண்டாம் பேர் வேண்டாம்...
    உங்கள் மனதை வருத்திய அந்த வரிகளையாவது கண்ணில் காட்ட முடியுமா..
    இந்த பதிவை படித்த போது என் தந்தையின் கண்ணியத்தை களங்கப் படுத்தியது போல கோபமும்,கண்ணீரும் ஒருங்கே வந்தது.😭😭😭😭தீயினால் சுட்டப்புண் உள்ளாரும் -ஆறாதே
    நாவினால் சுட்ட வடு.
    ப்ளீஸ் அந்த வரிகளை கண்ணில் காட்டுங்கள்..

    ReplyDelete
  52. முன்பு பிளாகரில் இருந்தேன். பின்னர் அதை ஓரமாக வைத்து விட்டு முகநூலில் எழுத ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் ஆயிரத்தெட்டு சண்டைகள் என் போஸ்டுகளின் கமெண்ட்களில் நடக்கும். தூக்கம் தொலைத்த நாட்கள் பல. பின்னர் ஒரு விஷயம் கண்டுபிடித்தேன். போஸ்டை படிக்கும் பலர், லைக் பட்டன் அழுத்துவதில்லை. லைக் அமுக்கும் பலர் போஸ்டை படிப்பதில்லை. போஸ்ட் படிக்கும் மக்களில் கமெண்ட்களை 1%பேர் மட்டுமே படிக்கிறார்கள். கமெண்ட்களுக்கு முக்கியத்துவம் கிடையாது. ஒருவரின் கமென்ட்டை, பலர் படிப்பார்கள், அதனால் நாம் பதிலளித்து கமெண்ட் போட்டவருக்கு புரிய வைக்க வேண்டும் என்று நினைப்பது தூக்கத்தை கெடுக்கும், ஏண்டா போஸ்ட் போட்டோம் என்ற நிலைக்கு போய் விடுவோம். நான்கு வருடங்களாக நான் செய்வது இது தான். கமெண்ட்க்கு லைக் போட்டு விட்டு பதில் போடாமல் விட்டு விடுவது. இல்லாவிட்டால் சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவது. இது தான் சோஷியல் மீடியாவில் நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உண்டான ஒரு ரகசியம்.

    கமென்ட் செய்ய ஒருவருக்கு உரிமை உண்டு. அதை டெலிட் செய்ய போஸ்ட் போடுபவருக்கு உரிமை உண்டு. இது தான் சோஷியல் மீடியா ரூல்ஸ். முன்பு அதை செயல்படுத்தினீர்கள். மறுபடியும் செயல் படுத்துங்கள். நிம்மதி கிடைக்கும்.

    ReplyDelete
  53. உங்கள் பதிவில் என் பெயர் வந்தமைக்கு நன்றி.
    இங்ஙனம்-சைலன்ட் க்ருப் மெம்பர். :-)

    ReplyDelete
  54. நான் இந்த blog ற்கு புதியவன் எனது முதல் பதிவு இது
    முன்பு வாங்காமல் இந்த முறை வாங்கி வாசிக்க நினைத்துள்ளேன்
    ஒரே புத்தகமாக( குண்டு புக் ? ) வாசிப்பதை விட சிறிய அளவில் இருந்தால்
    நல்லது என நினைக்கிறேன்

    ReplyDelete
  55. டியர் விஜயன் சார்..

    நண்பர்கள் சொல்வது போல, எல்லோருக்கும் நல்லவராய் இருத்தல் என்பது கடவுளுக்கே முடியாத செயல்.

    உங்களை நன்கு அறிந்தவர், உங்களை தவிர வேறு யாரும் இல்லை. உங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதை மட்டும் நீங்கள் கேட்டாலே போதும்.

    எப்பொழுதும் உங்களுக்கு துணை இருப்போம்..

    🙏🙏🙏🙏

    திருப்பூர் ப்ளூபெர்ரி (எ) நாகராஜன்

    ReplyDelete
  56. எடிட்டர் சார்@

    தங்களது முடிவை வரவேற்கிறேன்;
    அதன் பின்னுள்ள காரணங்களை புரிந்து கொள்ள முடிவதால்....!!!

    எப்போதும் போல் இப்போதும் தங்கள் முடிவுகளுக்குத் துணை நிற்போம்!

    நல்லதே நடக்கும் சார்!

    முன்னெப்போதையும் விட இன்னும் வீரியமாக செயலாற்றுவீர்கள் என அந்த வீணர்கள் உணர்வர்!

    ReplyDelete
  57. எதிலுமே நிதானமாக முடிவெடுப்பீர்கள் இதில் தீடிரென ஏதோ மன உளைச்சலில் எடுத்த முடிவு போன்றே உள்ளது சார்! சென்ற பதிவிலேயே தெளிவான விளக்கம் கொடுத்த பிறகு நிறைய பேர் சூழ்நிலையொ தெள்ளத்தெளிவாக புரிந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த முடிவு தேவையற்றதாக நினைக்கத் தோன்றுகிறது இலக்கு 300 என்று வைத்துவிட்டு கால அவகாசத்தை மட்டும் கொஞ்சம் நீட்டித்திருக்கலாமே சார்

    ReplyDelete
  58. நேக்கு நேத்திக்கி முளுக்க இங்கன இருக்குற கமெண்ட் அத்தனையும் படுச்சுட்டு வந்த சிந்தனைகள் :

    1) நான் இத்தனை வயசுக்கப்புறம் MBBS டாக்டர் ஆக முடியாதுங்கறதாலே கோட்டக்கல் ஆர்யா வைத்ய சாலையில் கரஸ்பாண்டென்ஸ் கோர்ஸ் சேர்ந்து ஆயுர்வேத டாக்டர் ஆகப்போறேனாக்கும். அப்புறம் ஒரு நாலாவது டாக்டரா கமெண்ட் சொல்லலாமில்லியா ? :-D 

    2) எடி-பிடி அப்டீங்கற பேர்ல நானும் ஒரு டொனால்ட் டக் கலர் காமெடி காமிக்ஸ் ரெடி பண்ணீகிட்டிருக்கேன். (பேரு : ரணகளத்துல ஒரு உணர்ச்சி கலவரம் !!)
    அத படிச்சோடனே நம்ம எடிட்டர் சார் 2900 விலையை பழைய black and white விலைக்கான 265 (+ அந்த புது புக்கு black and white-ல 25 ரூவா + கொரியர் + பஞ்சு மிட்டாய் இத்யாதி .. இத்யாதி ... மொத்தம் 300 ரூபாய்) - அப்புறம் ஆளுக்கு 10 வாங்கிக்கலாம் பாருங்கோ !!

    ReplyDelete
    Replies
    1. ////கோட்டக்கல் ஆர்யா வைத்ய சாலையில் கரஸ்பாண்டென்ஸ் கோர்ஸ் சேர்ந்து ஆயுர்வேத டாக்டர் ஆகப்போறேனாக்கும்///

      :)))))))) சிரிச்சு முடியலை ராக் ஜி!


      ////எடி-பிடி அப்டீங்கற பேர்ல நானும் ஒரு டொனால்ட் டக் கலர் காமெடி காமிக்ஸ் ரெடி பண்ணீகிட்டிருக்கேன். (பேரு : ரணகளத்துல ஒரு உணர்ச்சி கலவரம் !!)////

      சிரிச்சே வயித்துவலி வந்துடுச்சு எனக்கு! :)))))))))

      Delete
    2. இ.ப'வை எடிட்டர் இலவசமாவே கொடுக்கறமாதிரி ஏதாவது காமெடி காமிக்ஸ் ரெடி பண்ணுங்க ராக் ஜி! அதற்குள் இன்னும் சில நண்பர்களும் கூட டாக்டர் படிப்பை முடிச்சுட்டாங்கன்னா வேலை ரொம்ப சுளுவாயிடும்! :D

      Delete
    3. ///எடி-பிடி அப்டீங்கற பேர்ல///

      இன்னும் சிரிச்சுக்கிட்டிருக்கேன்! :)))))))

      Delete
    4. ராகவன். சிரிச்சு மாளலை.

      Delete
  59. படித்தபின் மன வருத்தம் தான் மேலிடுகிறது எடிட்டர் சார்.

    என்னிடம் ஏற்கனவே ரத்த படலம் வண்ணப் பதிப்பு இருக்கிறது. இருப்பினும், தற்போது சூழலுக்காக நானும் ஒரு புத்தகம் இம்மாதம் முன்பதிவு செய்கிறேன்.

    அவர்கள் மீண்டும் மீண்டும் சீண்டுவதும், நீங்கள் பெருந்தன்மையோடு நடந்து கொள்வதும் தான் அவர்களுக்கு தைரியம் கொடுக்கிறது சார். இப்போது அவர்கள் வருமானம் போய் விடும் என்று உம் மேல் துவேஷம் கற்பிக்கிறார்களோ என்னவோ.

    நாம் நம்பிக்கையோடு மீண்டெழுவோம் சார்.

    - சங்கர்

    ReplyDelete
  60. டியர் எடி,

    ஒரு கலெக்டராக என்னுடைய ஆதங்கத்தை மட்டுமே நமது ப்ளாக் உட்பட பல இடங்களில் பதிவிட்டிருந்தேன், ஆனால் எங்கும் கண்ணியம் தவறவில்லை. ஆனால், உங்கள் விலைவிதிப்பில்லோ, முன்பதிவு எண்ணிக்கையிலோ எந்த கேள்வியும் எனக்கிருந்த்தில்லை. மொத்த தயாரிப்பிலும் பங்கெடுக்கும் உங்களை விட நான் அதற்கு சரியான விளக்கம் கொடுக்க முடியாது.

    பல நேரங்களில், சினிபுக் போன்ற இதழ்களை விட நமது இதழ்களின் விலை சல்லிசாக இருப்பதை பெருமிதமாக மற்றவர்களிடம் கூறியிருக்கிறேன்.

    எனவே, உங்கள் முடிவுகளை எல்லாரையும் சந்தோஷபடுத்த முனையும்பாங்கு மாற்றிகொள்ள வேண்டாம். முக்கியமாக, ஃபேக் ஐடி பின் ஒழிந்து கல்லெறியும் நபர்களுக்காக.

    இந்த சிறிய காமிக்ஸ் கூட்டத்தில், அனைவரும் ஒத்த எண்ணம் கொண்டவர்களாக எப்போதும் இருக்கபோவதில்லை என்பதை கண்கூடாக பார்த்து வருகிறேன். வாதங்கள், விவாதங்கள்
    - எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும், தடித்து போவது தான், நிதர்சனம்.

    ReplyDelete
  61. எங்கோ கண்ணில்பட்டது :

    Opinions require no accountability ; no understanding.
    Empathy on the other hand requires us to suspend egos and live in another's world !

    The world needs more of empathy today !

    இந்த வரிகளை அழகாய் தமிழுக்கு மொழிமாற்றம் செய்திடும் நண்பருக்கு ஒரு இஸ்பய்டர் கதையினை தமிழாக்கம் செய்யும் வாய்ப்பு காத்துள்ளது ! Anybody care to give it a try folks ?

    ReplyDelete
    Replies
    1. அதாவதுங்க எடிட்டர் சார், பச்சாதாபம் எனப்படுவது யாதெனில்... ஒரு நிமிஷம் நில்லுங்க - இஸ்பைடர் கதையை மொழிபெயர்க்கணுமா?!! ஐய்யோ சாமீ.. இந்த விளையாட்டுக்கு நான் வரலை!

      Delete
    2. அதாவதுங்கோ :

      "அபிப்ராயங்களுக்கு கணக்காயிருக்கறது வேணாம் சாரே ; இல்ல கீழ நிக்கறது. ஆனாங்காட்டிக்கு இன்னொரு கையில பச்சாதாபப்படணுமின்னா அஹங்காரத்த வேற லோகத்துல தொங்க விட்ரு நைனா" ங்குறீங்கோ !

      இஸ்பைடரு கிட்டுமா மொழி 'பேர்க்க'? ;-) 

      Delete
    3. டி நகருக்கு ஒரு பார்ஷல்ல்ல்ல் !!

      Delete
    4. ராக் ஜி.. செம ஃபார்ம்ல இருக்கீங்க போலிருக்கே... :))))))))

      குறிப்பா understandingக்கு 'கீழ நிக்கறது' - ஹா ஹா!! செம்ம!! :))))

      Delete
    5. அபிப்பிராயங்களுக்கு பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது அவசியமில்லை ; புரிந்து கொள்வதும் அவசியமில்லை,

      மறுபுறம் பச்சாதாபம் என்பதோ நமது அகங்காரத்தை களைந்து வேறொருவரின் உலகில் வாழ வழி செய்கிறது!

      இன்று உலகத்தில் மிகவும் தேவையாக உள்ளது பச்சாதாபமே...

      Delete
    6. Work is so boring. So, small attempt in between. BTW eve teasing is a punishable offense... ஆமா சொல்லிட்டேன்.

      கருத்துகளுக்கு பொறுப்பு தேவையில்லை ; புரிதல் தேவையில்லை
      மற்றொருபுறம் பச்சாத்தாபம் நமது ஈகோக்கள் நிறுத்திவிட்டு, மற்றொருவரின் உலகில் வாழ வேண்டும் வேண்டுமென்று கோருகிறது!

      இன்றைய உலகில் பச்சாத்தாபம் இன்னும் அதிகமாகவே தேவைப்படுகிறது!

      Delete
    7. ///BTW eve teasing is a punishable offense... ஆமா சொல்லிட்டேன்.///

      ஹா ஹா!! செம ஹியூமர் சென்ஸ் சகோ உங்களுக்கு! :))))

      Delete
    8. @ Anu : இக்கட ஈவ்-டீசிங் கிடையாதுங்கோ ; ஒன்லி ஈவி-டீசிங் & ஈவியால் டீசிங் !

      அப்புறம் emphathy என்பதற்கு "பச்சாத்தாபம்" என்பதைவிடவும் "அனுசரணை" என்ற வார்த்தை பொருந்தக்கூடும் - contextwise ! அப்புறம் கொஞ்சமாய்ப் பொறுங்கோ - இங்கொரு ஆஸ்தானக் கவிஞர் இருக்கிறார் ; அவர் வந்த பிற்பாடு சும்மா பொழியும் பாருங்களேன் !

      Delete
    9. All bad boys are here including எடி... அதான் Disclaimer போட்டுட்டேன்.

      Delete
    10. எடிட்டர் சார், empathyகிற வார்த்தையை பார்த்த உடனே ஆட்டோமேட்டிக்கா மேரா பதி தான் ஞாபகத்துக்கு வந்தார். அதனால பதி = பச்சாதாபம் என்று கணக்கை முடிச்சுட்டேன்.

      Delete
    11. பின்னுறீங்கோ ! இதுக்காகவே இஸ்பைடரை நீங்க எழுதலாம் போலிருக்கே !

      Delete
    12. சிரிச்சு மாளலை. இனி ஸ்டீலு வேற வந்தா அவ்வளவு தான். 🤣🤣🤣

      Delete
    13. This comment has been removed by the author.

      Delete
    14. கருத்த கைதையும் சொல்லலாம் கஸ்மாலமும் சொல்லலாம் ஆனாக்கோ..
      கயிறு கட்டி இஷ்க்கிறவன் கஷ்டம் தெரியனுனாக்கோ அகம்புடுச்ச கழுதையா இல்லாம நாமலும் இஷ்த்து பாத்தாதான் தெரியும்

      ***ego - அகம்புடுச்ச கழுதை translation copywrite goes to Vijayakumar in குஷி***

      Delete
    15. கருத்துகளைச் சொல்லிச் செல்ல, புரிதல்களும் பொறுப்பேற்றலும் தேவையில்லை...
      பரிவு கொள்ளவோ, தான் என்பதைத் தள்ளி வைத்து, பிறர் நிலையில் இருத்திப் பார்க்க வேண்டியிருக்கும்...
      இப்பாருக்குப் பரிவின் தேவையே மிகுதியாய் இருக்கிறது!

      //இஸ்பய்டர் கதையினை தமிழாக்கம் செய்யும் வாய்ப்பு காத்துள்ளது//
      ஸ்பைடர் கத நல்லால்லைன்னு சொல்லி கொக்கரிக்க, நீ மொழிபேர்க்கவும் எடிட்டராக இருக்கவும் வேண்டிய அவசியமில்ல...
      ஆனாக்க, அந்தாள் கதையை மொழிபேர்க்கவோ, முதல்ல அந்தக் கொடுமையை படிச்சாக வேண்டியிருக்கும்...
      அப்பேர்ப்பட்ட துணிச்சலான பேர்வழிகளே இக்கம்பெனியின் உடனடித் தேவை..


      அப்படித்தானே எடிட்டர் சார்? :) ஆனாலும். அடிக்கடி கருத்து சொல்லிட்டு இருக்கிறவன் கையிலேயே இப்படி எல்லாம் எழுதி வாங்க ஒரு தனித்திறமை வேண்டும்தான்! :D 

      Delete
    16. ///பின்னுறீங்கோ ! இதுக்காகவே இஸ்பைடரை நீங்க எழுதலாம் போலிருக்கே !///
      நான் முன்னமேயே சொல்லிட்டேன் ஈவ் டீசிங் ஒரு குற்றம். தப்பு தப்பா மொழி பெயர்ப்பு பண்ண வெச்சு,கோபம் கொப்பளிக்க
      குற்ற சக்கரவர்த்தி என்னை கடத்தி போகவா? ஒழிந்தாள் உப்மா சண்டாளி னு என் ஆத்துகாரர் உடான்ஸ் ஆடுவார். நோ..

      Delete
    17. ///கோபம் கொப்பளிக்க
      குற்ற சக்கரவர்த்தி என்னை கடத்தி போகவா?///

      எனக்கென்னவோ அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லைன்னு தோனுதுங்க சகோ! குற்றச்சக்கரவர்த்திக்கும் கொஞ்சமாவது அறிவிருக்கும்தானே?!! :D

      Delete
    18. யப்பா சாமிகளா.. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது..

      புதுசா டாக்டருக்கு படிக்கிறவருக்கிட்டத்தான் மாத்திரை கேட்டு வாங்கணும்.. பழைய டாக்டர்கிட்ட கேட்டா, டவுட்டாதான்னுட்டு ஆஸுபத்திரிக்குள்ள தூக்கி வெச்சுருவாங்க..

      Delete
    19. /// குற்றச்சக்கரவர்த்திக்கும் கொஞ்சமாவது அறிவிருக்கும்தானே?!! :D ///

      நம்ம உப்புமாவுக்கு ஒரு உலகளாவிய பயம் உண்டுன்னு சொல்லறீங்களா விஜய் அண்ணா :-)

      Delete
    20. ///புதுசா டாக்டருக்கு படிக்கிறவருக்கிட்டத்தான் மாத்திரை கேட்டு வாங்கணும்.. ///

      அப்படீட்னா நீங்க Dr.ராகவன்'ட்டதான் போகணும்!! பழைய மாத்திரைகளை பாதி விலைக்குத் தந்து உதவறதுல அவரை அடிச்சுக்க டாக்டர் கிடையாது இங்கே! :D

      Delete
    21. ///நம்ம உப்புமாவுக்கு ஒரு உலகளாவிய பயம் உண்டுன்னு சொல்லறீங்களா விஜய் அண்ணா ///

      உலகத்தில் எல்லா ஆண்களுக்குமே உப்புமாவை மட்டுமின்றி அதைச் செய்துதரும் உப்பின மாமிகளின் மீதும் அதீத பயம் உண்டு சகோ! :D

      (அச்சச்சோ! என்மேல ஈவ்-டீசிங் வழக்கு - கன்பார்முடு!)

      Delete
    22. கிர்ர்ர்ர்....

      Delete
    23. சரி ..சா பூ த்ரீ போடுவோமாம் ; இஸ்பைடரை சமாளிக்கும் வாய்ப்பு கோட்டக்கல்லாருக்கா ? உப்புமா விற்பன்னருக்கா ? அல்லது நம்ம கார்த்திக்குக்கா ? என்று தீர்மானம் பண்ணுறோம் !

      Delete
    24. //Opinions require no accountability ; no understanding.
      Empathy on the other hand requires us to suspend egos and live in another's world !

      The world needs more of empathy today !

      இந்த வரிகளை அழகாய் தமிழுக்கு மொழிமாற்றம் செய்திடு//


      வலைப்பூ வாசகனுக்கு பொறுப்புமில்லை ; புரிதலும் தேவையில்லை !
      அனுசரணைக்கு அன்பே போதும் ; அட்ராசிட்டி அல்ல !

      இவையே தேவை இக்கணம் !

      Delete
  62. அன்பு எடிட்டர் ,ஒரு பப்ளிஷர் ஆக சிந்திப்பதும், செயல்படுவதும் தவறா என்ன?.ஒரு முதலீடும் இல்லாமல் உங்களை வைத்து சம்பாதிப்பவர்களுக்கு எந்த ஒரு குற்ற உணர்வும் இருக்கப்போவதில்லை.ஆனால் தன் உழைப்பைக்கொட்டி பணம் செலவழித்து ஒரு படைப்பை தமிழுருவாக்கம் செய்யும் ஒருவர் தன் குறைவற்ற தன் உழைப்பை பற்றிய பெருமிதத்தை கூட மறந்து மன அமைதியில்லை,நெருடுகிறது என்கிறார். வாருங்கள் நண்பர்களே இந்த அரிய எடிட்டரை கொண்டாடுவோம்

    ReplyDelete
    Replies
    1. /// வாருங்கள் நண்பர்களே இந்த அரிய எடிட்டரை கொண்டாடுவோம்///

      இந்த உலகத்துலயே இப்படியொரு எடிட்டர் கிடையாதாம்! ஊருக்குள்ள பேசிக்கிடறாய்ங்க! :D

      Delete
    2. EV:

      /* இந்த உலகத்துலயே இப்படியொரு எடிட்டர் கிடையாதாம்! ஊருக்குள்ள பேசிக்கிடறாய்ங்க! */

      இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அவர டரியல் ஆகிடுவானுக :-)

      Delete
    3. இந்த உலகத்துலயே இப்படியொரு எடிட்டர் கிடையாதாம்! ஊருக்குள்ள பேசிக்கிடறாய்ங்க! :D//உண்மைதானே

      Delete
  63. நண்பர்களுக்கு ஒரு கோரிக்கை!

    'எடிபாபா - சீஸன்2' - ஒரு கேவலமான படைப்பு!! எடிட்டரின் மேல் உண்மையான அபிமானமுள்ள நண்பர்கள் யாரும் அதில் வரும் வசனங்களை சுட்டிக்காட்டியோ, ஃபோட்டோ எடுத்தோ முகநூலில்/வாட்ஸ்அப்பில் போட்டு அதை promote செய்யவேண்டாமே ப்ளீஸ்?

    இங்கே பதிவிட்டுள்ள நண்பர் ஒருவர் கூட தெரிந்தோ தெரியாமலோ முகநூலில் ஒரு குறிப்பிட்ட வசனத்தை பதிவிட்டு, ஒரு அசிங்கத்தை ப்ரமோட் செய்யும் வேலைக்கு துவக்கம் கொடுத்துள்ளார்! அவர் பதிவிட்டதென்னமோ சிரிக்கும்படியான வசனம் இடம்பெற்ற காட்சியைத்தான் எனினும், இதன் தொடர்ச்சியாக இனி மற்றவர்களும் சில அசிங்கமான வசனங்களைப் பதிவிடும் சாத்தியக்கூறுகள் உண்டு என்பதாலேயே இந்த வேண்டுகோள்!

    செய்வீர்களா.. நீங்கள் செய்வீர்களா?!!

    ReplyDelete
    Replies
    1. இதுக்குத் தான் நாங்கெல்லாம் FACEBOOK படிக்கறதே இல்லை!
      Only History Book!! ஹிஹி!!

      Delete
    2. முகநூல்னா இந்த மூஞ்சி புக்குன்னு சொல்றாங்களே அதுவா,அங்க போனாத்தான் உன் மூஞ்சியில் என் பீச்சாங்கைய வெக்கன்னு கிளம்பி வந்துடறாங்களே...

      Delete
    3. ///மூஞ்சி புக்குன்னு சொல்றாங்களே அதுவா,///

      ஹாஹாஹா

      Delete
    4. போனாப் போகுது விடுங்க சார் ! ஒவ்வொரு நாளும் உயிர் பிழைத்துத் தாண்டிச் சென்றாலே பெரும் விஷயம் எனும் போது இந்த வாந்தியெடுத்தான்களை நினைத்துச் சங்கடம் கொள்வானேன் !

      வாழ்க்கை இந்த அற்பத்தனங்களுக்கு அப்பாற்பட்டதென்பதை அனுதினமும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம் !

      Delete
    5. மேலே நான் குறிப்பிட்டிருந்த - முகநூலில் பதிவிட்டிருந்த அந்த நண்பரும் இதன் தொடர்விளைவுகளை உணர்ந்துகொண்டு நம் கோரிக்கைக்கு இணங்க தன் பதிவை நீக்கியிருக்கிறார்!!

      நண்பருக்கு நம் நன்றிகள் உரித்தாகட்டும்! _/\_

      Delete
  64. இந்த மாத புக் எப்போ அனுப்புவீங்க!?

    லக்கி லூக் வரப்போவுது!

    ReplyDelete
  65. சார் நாளைக்கு ஜூலை 1 ஆம் தேதி சார்...

    ReplyDelete
    Replies
    1. கடைகளின் விற்பனைக்கு அவகாசம் தந்து ஜூலை 15 ல் தான் நண்பர்களே !

      Delete
    2. ரொம்ப பெரிய அவகாசமா இருக்கும் போல சார்...😀😀😀

      Delete
  66. அபிப்பிராயங்களுக்கு பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது அவசியமில்லை ; புரிந்து கொள்வதும் அவசியமில்லை,

    மறுபுறம் பச்சாதாபம் என்பதோ நமது அகங்காரத்தை களைந்து வேறொருவரின் உலகில் வாழ வழி செய்கிறது!

    இன்று உலகத்தில் மிகவும் தேவையாக உள்ளது பச்சாதாபமே

    the translation as per your request sir... tried it just for fun... dont know if it is good

    ReplyDelete
  67. @ கிறுக்கல் கிறுக்கன்
    யாராக இருந்தாலும் சரி அது எடிட்டராக இருந்தாலும் சரி அந்த ஆண்டவனாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் அவர்கள் முகத்திற்கு நேராகப் பேசிதான் எனக்கு பழக்கமே தவிர இப்படி பேடி மாதிரி பெட்டைத்தனமா பேக் ஐடி ஒளிஞ்சிக்கிட்டு ஒருத்தர தாக்குகிற எண்ணம் எனக்கு எப்போதுமே இருந்ததும் இல்ல வந்ததும் இல்ல இது என்கூட நல்லா பழகினவங்க எல்லோருக்குமே நல்லா தெரியும் இது கூட ஏன் இங்கு வந்து சொல்றேன்னா எனக்கு முதுக்குப் பின்னாடி பேசி பழக்கமில்லைன்னு நீ தெரிஞ்சிக்கத்தான்! எதையும் யூகத்தின் அடிப்படையில் பேசுவதை விட்டுட்டு இனிமேலாவது ஆதாரத்தோடு பேசிப் பழகிக்கொள்

    ReplyDelete
    Replies
    1. எனது பதிவை சரியாக படித்துவிட்டு வரவும். அவசரம் வேண்டாமே நண்பரே

      Delete
    2. இப்போதுதான் பதிவை கமெண்ட்டை பார்த்தேன் ஜி மன்னிக்கவும் தவறான புரிதலுக்காக

      Delete
  68. அவனுக வெச்சிருந்த Whatsapp gp ல லயன் காமிக்ஸ் னு ஒரு வார்த்தை அனுப்பியதற்கு என்னை Remove செஞ்சிட்டானுக.

    ReplyDelete
  69. சார், நீங்கள் இதுவரை லயன் ப்ளாகில் எழுதியதில் இந்த பதிவுதான் எனக்கு பிடிக்காமல் போய்விட்டது, மன்னிக்கவும். தயவுசெய்து உடணடியாக ஜுலை மாத இதழ்களின் ப்ரிவியூ பதிவு ஒன்று போட்டு வாசகர்களை ஜாலி மூடுக்கு கொண்டுவாருங்கள். நீங்களும் வழக்கமான ஜாலி மூடுக்கு மாறுங்கள்.

    ReplyDelete
  70. எடிட்டர் அவர்களே அநியாயத்துக்கு நல்லவராக இருக்கிறீர்கள்.போற்றுவார் போற்றட்டும் என்ற சொல்லை நினைத்து இருக்க வேண்டாமா? என்றாலும் உங்கள் நல்ல உள்ளத்தை வாழ்த்துகிறேன்.வாழ்வில் நல்லவர் என்றும் வீழ்வதில்லை இது நான்கு முறை தீர்ப்பு என்ற பாடலை நினைவு கூறுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நம் எடிட்டர் மீது கல்லெறிபவர்கள் கண்டிப்பாக வீழ்த்தபடுவார்கள் இது கண்டிப்பாக நடக்கும்

      Delete
  71. இரண்டு வருடங்களுக்கு முன்பு இருக்கும் அதே விலைக்கேவா? பேப்பர் பெட்ரோல் விலையேல்லாம் எகிறிபோயிருச்சே.
    கூட்டி கழிச்சு பாத்தா கணக்கு எங்கையோ இடிக்குதே???
    Like u shared,it is easy to say an openion, but no one can empathize your position.
    "It's your product and you only have the rights to price it" is my humble opinion.

    ReplyDelete
  72. This comment has been removed by the author.

    ReplyDelete
  73. அன்பு விஜயன் சார்,

    என்னாலும்... என் போன்ற சில ‘நலம் விரும்பி’களாலும்... நீங்கள் அடைந்துள்ள மனத்துயருக்கு... என்னை முதற்கண் மன்னியுங்கள்... நிற்க..

    காமிக்ஸ் எனக்கு Hobby, காமிக்ஸ் உங்களுக்கு Profession... நம் இருவரின் எண்ணங்களும் ஒன்றாய் இருக்கப் போவதில்லை... இருக்கவும் கூடாது...

    போன மாதம் ‘குழந்தையும் பொம்மையும்' என்னை மிகவும் பாதித்து விட்டது... என்னால் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை.. உங்கள் மேல் எனக்கு படு கோபம்... உடனே ப்ளாகிற்கு வந்து கடினமான வார்த்தைகளால் என் உள்ளக் குமுறலை கொட்ட வேண்டும், இனி இப்படிப் பட்ட புத்தங்களை என்றும் நீங்கள் வெளியிடக்கூடாது என ஆணித்தரமாக கருத்திட எண்ணினேன்.. வேலைப் பளுவினால் என்னால் வர முடியவில்லை... இடைப்பட்ட நாட்களில் மற்ற நண்பரகளின் கருத்துக்களை கவனித்தேன்.. ஒருவரோ, இருவரோ தான் என்னைப் போல் வருத்தப்பட்டிருந்தார்கள்.. 90% நண்பர்கள் அந்த இதழை வெகுவாகப் புகழந்து வரவேற்றிருந்தார்கள்... Minorityயான என் நிலை அப்பொழுது தான் புரிந்தது... புத்தகம் எனக்கு பிடிக்கவில்லை எனக் கூறும் உரிமை எனக்கிருக்கிறது... இது போன்று இனி வெளியிடக்கூடாது எனக் கூறும்போது என் எல்லையை நான் மீறுகிறேன்..

    எங்கள் professionல் இருவர் சந்திக்கும் போது.. நாங்கள் அதிகம கிண்டல் செய்வது... மக்கள் googleல் diagnosis படித்துவிட்டு எங்களிடம் cross questions கேட்பதைதான்.. அது போலத்தான் நான் என் அறிவை புத்தக வெளியீட்டில் காட்ட முனைவது... நீங்கள் இப்படி வெளியிட வேண்டும், இத்தனை கால அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும், இதை சேர்த்து வெளியிடவேண்டும், இப்படி வெளியிட்டால்தான் நன்றாக இருக்கும் என்றெல்லாம் கூறுவது உங்களுக்கு எரிச்சலையே உண்டு செய்ய வேண்டும்... எனக்கு புத்தகம் வேண்டும் / வேண்டாம்... கதை பிடித்திருக்கிறது / பிடிக்கவில்லை.. இதுவே என் எல்லைக்கோடு... இந்த எல்லைக் கோட்டை மீறும் போதுதான் வருத்தம் நேரிடுகிறது

    நீங்கள் அதிகம் மனதை விட இதயத்தையே நம்புகிறீர்கள்... என்பது என் diagnosis... உங்களின் இந்தப் பதிவு என்னை மிகவும் வருத்தம் கொள்ளச் செய்கிறது... உங்களை நான் அறிந்த வரையில்... எதையும் மிகவும் யோசித்துதான் முடிவெடுப்பீர்கள்... ஒரு முடிவெடுத்தால் அதை maintain செய்வீர்கள்... சூப்பர் ஹீரோக்களை நீங்கள் ஓரம் தள்ளியதிலும், பின்னர் திரும்ப அழைத்ததிலும்... இரண்டிற்கான காரணங்களும் அப்பழுக்கில்லாதவை... இ.ப விஷயத்தில், Its not a knee jerk reaction என நீங்கள் சொல்கிறீர்கள்... இருந்தும் இன்னும் இரு தினங்கள் யோசித்த பின் இதை பதிந்திருக்கலாம் என்பது என் எண்ணம்... மீண்டும் என் எல்லையை நான் மீற ஆரம்பிக்கிறேன்...
    என் தரப்பில் நான் உங்களை எந்தவிதத்திலாவது காயப் படுத்தியிருந்தால்... என்னை மன்னியுங்கள்.. நான் இதற்கு பிராயச்சித்தமாக... என்னால் முடிந்தவரை 2021 சந்தா எண்ணிக்கையை கூட்ட... என் பிற நண்பர்களின் துணையுடன் முயலப் போகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. ///என்னால் முடிந்தவரை 2021 சந்தா எண்ணிக்கையை கூட்ட... என் பிற நண்பர்களின் துணையுடன் முயலப் போகிறேன்..///

      ----அருமை டாக்டர்! நல்லமனசு-நல்ல முயற்சி-பலனளிக்கும் நல்ல முறையில்!!

      Delete
    2. Not at all டாக்டர் ! நிச்சயமாய் இதுவொரு knee jerk ரியாக்ஷன் அல்ல என்பதை இ.ப. வெளிவந்த பிற்பாடு புரியச் செய்கிறேன் ! இப்போது எது சொன்னாலும் அதற்கொரு குதர்க்க அர்த்தம் காண ஆவலாய் ஒரு வெண்ணிலா கபடிக்குழு காத்துள்ளது !

      எந்தவொரு சூழலிலும் நமது நண்பர்கள் மீதான எனது அபிமானம் குன்றிடப்போவதில்லை !So அவசியமின்றி உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள் சார் !

      As you rightly mention எனது தீர்மானங்களின் கணிசமானவை இதயத்திலிருந்து வருபவைகளே ; ஆனால் இம்முறை அதன் பின்னணியில் லாஜிக்கும் உள்ளது ! Relax sir !

      Delete