Powered By Blogger

Saturday, June 06, 2020

கொஞ்சம் ஜாலி + கொஞ்சம் ஜோலி !

நண்பர்களே,

வணக்கம். மனித மனதின் திடத்தை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை ! வரலாற்றில் ஒரு கறுப்புப் பக்கமாகிடப் போகும் இந்தக் கொரோனா வைரஸ் இன்னமும் சகஜமாய் புழக்கத்தில் இருந்து வரும் போதிலும், கிட்டத்தட்ட எல்லாமே நார்மல் என்பதாய் ஊரும், ஜனமும் நாட்களை செம தில்லாய் நகற்றிடுவதைப் பார்க்கும் போது - 'எண்ட குருவாயூரப்பா !!' என்று மாத்திரமே சொல்லத் தோன்றுகிறது ! எது எப்படியோ - இந்த மண்ணின் எண்ணற்ற தெய்வங்கள் இந்த இடர்மிகு நாட்களை முழுசாய், பத்திரமாய்க் கடக்கும் வரம்தனை நமக்கெல்லாம் வழங்கினால் - பின்னொரு நாளில் அகன்ற விழிகளோடு இந்த நாட்களைப் பற்றிக் கதை கதையாய்ப் பேசித்தள்ளலாம் !! All Fingers Crossed for now 24/7 !!

நம்மைப் பொறுத்தமட்டில், மேட்டில் ஏறும் சைக்கிளைப் போல - சுழற்சியில் பணியாட்கள் ; குறைச்சலான பணிநேரங்கள் என்று  வண்டி தக்கி முக்கி  ஓடி வருகிறது ! ஆங்காங்கே புத்தகக்கடைகளும் மெதுவாய் செயல்படத் துவங்கிவிட்டதால் - முகவர்களின் ஆர்டர்களும் கிட்டி வருகின்றன - சென்னை நீங்கலாய் ! But வசூல் நிலவரங்களும், தலைநகரின் overall நிலவரமும் அத்தனை சுகமில்லை என்பது மட்டுமே ரொம்பவே நெருடுகிறது ! இந்த நொடிதனில் ஆன்லைன் ஆர்டர்கள் இன்னமும் சற்றே வேகமெடுக்கக் காத்திருக்கிறோம் - கொஞ்சமேனும் மூச்சு விட்டுக்கொள்ளும் பொருட்டு ! So உங்கள் பள்ளி / கல்லூரி / அபார்ட்மெண்ட் நூலகங்களுக்கோ ; அல்லது பணியிடக் காத்திருப்பு வளாகங்களில் போட்டு வைப்பதற்கோ ; பிறந்த நாள் / திருமண நாள் பரிசாக வழங்கிடவோ - நமது இதழ்கள் நிரம்பவே உதவிடும் என்பதை மண்டையைச் சொரிந்தபடியே நினைவூட்டுகிறேன் folks !! And நம்மிடம் CINEBOOK ஆங்கிலப் பதிப்புகளுமே உள்ளன என்பதையும் மறந்திட வேண்டாமே - ப்ளீஸ் !  என்னடா - உள்ளே நுழைந்தவுடனேயே 'கோபால் பல்பொடி' பாணியில் விளம்பரத்தைப் போட்டுத் தாக்குகிறானே? என்ற நினைப்பு உங்களுக்குத் தலைதூக்கினால் நிச்சயம் பிழையில்லை தான் ; ஆனால் தரைதட்டி நிற்கும் நிதிநிலைமைகள் வேறு வழியின்றிச் செய்திடுகின்றன ! 

Moving on to brighter stuff - காத்திருக்கும் வண்ண இதழ்களின் அச்சுப் பணி நிறைவுற்று, அந்த 2 புக்குகளுமே பைண்டிங்கில் உள்ளன ! And சமீப மாதங்களின் ராசி இம்மாதமுமே தொடர்கிறது - ஒரிஜினல்களின் வர்ணச்சேர்க்கைகள் அட்டகாசமாக இருப்பதன் காரணமாய் !! பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்புகளின் pre-digital era-வின் ஆக்கங்கள் பெரும்பாலும் அந்நாட்களது கலரிங் டெக்னாலஜியுடன், சற்றே கண்ணை உறுத்தும் வர்ணங்களில் டாலடிப்பதுண்டு தான் ! ஆனால் இம்முறையோ அந்தச் சிக்கல்களில்லை !! SODA உட்பக்கங்கள் கலரில் அழகென்றால் - ப்ளூகோட் பட்டாளத்தின் ஆல்பம் வண்ணத்தில் வேறொரு லெவெலில் மிரட்டுகிறது !!  இதோ பாருங்களேன் - அட்டைப்படத்தினையும், உட்பக்க preview-ம் :

போர் முனையில் ஒரு பாலகன் : நமது கவுண்டர்  + செந்தில் கூட்டணி மாதிரியான இந்தப் பட்டாளத்துக் கூட்டணி, கதை நெடுக வேறு யாருக்கும் இடம் தராது பின்னியெடுக்கின்றனர் ! சொல்லப் போனால் இம்முறை மிஸ்டர்.குள்ளவாத்து கொஞ்சம் தூக்கலாகவே ஆவர்த்தனம் செய்கிறார் ! As always - யுத்தத்தின் வியர்த்தங்களைப் பகடி கலந்து சொல்லிடும் இந்த கார்ட்டூன் தோரணம் இம்மாத வாசிப்பினை இலகுவாக்கிடும் என்று நம்பலாம் ! சொல்லப் போனால் இம்மாதம் ஒரு overall shift towards light reading என்றே சொல்லலாம் ! போன மாதத்து இதழ்களில் ஒரு மென்சோகம் & கனம் தூக்கலாய் அமைந்திருந்தது தற்செயலாய் அமைந்து போனதொரு நிகழ்வு ! ஆனால் சுற்றிலும் கேட்டு வரும் முகாரி ராகங்களே ஒரு ஆயுட்காலத்துக்குப் போதுமெனும் போது, இம்மாதம் நமது வாசிப்புகள் அதற்கு நேர் மாறாய் அமைந்தால் தேவலாமே என்று நினைத்தேன் ! அதிகாரியின் சாகசம் கூட இம்முறை 110 பக்க breezy read தான் ! இதோ அதன் உட்பக்க முதற்பார்வை :
இம்மாதத்து இறுதி இதழும் ஒரு black & white சாகசமே - இம்முறை நமது 007-ன் க்ளாஸிக் அதிரடியுடன் ! "விண்ணில் ஒரு வேதாளம்" இந்தாண்டின் இரண்டாவது ஜேம்ஸ் பாண்ட் சாகசம் ! இந்தத் தொடரானது ராணி காமிக்சில் வெளிவந்து கொண்டிருந்த '80s & '90s களில் இக்கட காதில் கணிசமாய்ப் புகை வெளிப்பட்டுக் கொண்டிருந்ததெல்லாம் ஸ்பஷ்டமாய் நினைவில் உள்ளது ! இன்றைக்கு அதே கதைகளை புதுப் பொலிவோடு வெளியிடவொரு வாய்ப்புக் கிட்டியுள்ளதில் ரொம்பவே சந்தோஷம் அடியேனுக்கு ! Moreso - ஜேம்ஸ் பாண்ட் 2.0 வண்ணக் கதைகள் வெளியாகும் அதே பொழுதுகளில் இந்த க்ளாஸிக் கதைகளையும் வெளியிட முடிந்திருப்பதில் ஒரு கூடுதல் high !! இதோ அதன் அட்டைப்பட முதற்பார்வை !
வழக்கம் போலவே இம்முறையும் கண்சிமிட்டும் foils உண்டு ; so 007 என்ற எழுத்துக்கள் தங்க வர்ணத்தில் மினுமினுக்கின்றன அட்டைப்படத்தில் ! இதன் டிசைன் உபயமோ - நமது சமீபத்தைய கண்டுபிடிப்பான அமெரிக்க ஓவியை தான் ! மூப்பின் காரணமாய் நமது ஆஸ்தான ஓவியர் மலையப்பன் பணியாற்றச் சிரமம் கொள்வதால் - இப்போதெல்லாம் நமது அட்டைப்படத் தேவைகளை பூர்த்தி செய்து தருவது அட்லாண்டிக் சமுத்திரத்துக்கு அக்கரையில் இருக்கும் அந்த யுவதியே ! மின்னஞ்சலிலேயே விபரங்கள் அனுப்பி ; திருத்தங்களைப் போட்டு வாங்கி - ஒரு மார்க்கமாய் சக்கரங்களை சுழல விட்டுக் கொண்டிருக்கிறோம் ! இப்போதெல்லாம் பெரும்பாலும் ஒரிஜினல் டிசைன்களே நமது அட்டைப்படங்களாகி வருவதால் ஆண்டுக்கு நமக்கொரு 15 டிசைன்கள் போடும் அவசியம் எழுந்தாலே ஜாஸ்தி என்பேன் ! And இந்த அமெரிக்கப் பெண்ணோ மின்னல் வேகத்தில் பணியாற்றுவதால் அதற்குள்ளாகவே அடுத்தாண்டிற்கான அட்டைப்பட வேலைகள் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பூர்த்தி கண்டுவிட்டுள்ளது !! நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரின் வேகத்துக்கு ஈடு தருவது தான் இத்தினி நாட்களாய் நாக்குத் தொங்கச் செய்து வரும் சமாச்சாரமாக இருந்ததெனில்  - தற்போது இந்த ஓவியையும் அதகள வேகம் காட்டி நாக்காரை தொங்கோ தொங்கென்று தொங்கச் செய்து வருகிறார் ! Women Power !! Rocking !!

அந்தக்காலத்து அம்பாஸடர் காரைப் போல டொர டொரவென ஓடிக்கொண்டிருக்கும் எனது சமீப சோம்பேறி அவதாரைக் கடாசிட பெண்கள் காட்டி வரும் இந்த முனைப்புகள் உதவினால் செமத்தியாக இருக்கும் ! அதற்கொரு துவக்கமாய் - இதோ இன்றைக்குக் காலையில் லக்கி லூக்கின் புது சாகசத்துக்குப் பேனா பிடிக்கத் துவங்கிடும் போதே பழைய வேகம் சிறுகச் சிறுகத் தொற்றிக் கொண்டது போலிருந்தது ! 'வரணும்....பழைய முட்டைக்கண்ணனாய் வரணும் !!' என்ற டயலாக் உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டிருக்க,  இழந்த முனைப்புகளையும், வேகங்களையும் தொடரும் நாட்களில் மீட்டிட பெரும் தேவன் அருள் பாலிப்பாராக !! நம் சிறுவட்டம் இந்த சிரம நாட்களின் தாக்கத்திலிருந்து மெதுவாய் மீண்டிடும் பட்சத்தில் - நிச்சயமாய் வண்டி டாப்கியரைத் தொட்டு விடுமென்ற நம்பிக்கையுள்ளது !

திங்களன்று டெக்ஸ் அச்சுக்குச் செல்கிறார் & செவ்வாய் ஜேம்ஸின் தினம் ! So if all goes well - வெள்ளியன்று (ஜூன் 12) புக்குகள் கூரியரோடு குசலம் விசாரிக்கத் தயாராகிட வேண்டும் ! இம்முறை அந்த நலம் விசாரிப்பு - கூரியரோடு குடும்பம் நடத்தும் படலமாகிடாது போகிட வேண்டும் தெய்வமே !! Hopefully தொடரும் வாரயிறுதிக்கு நமது 30 நாட்களின் உழைப்பின் பலன்கள் உங்கள் கைகளில் இருந்திட வேண்டும் !!

Further down the road - இந்தாண்டின் சில பல புத்தக விழாக்களின் எதிர்காலங்கள்  கொஞ்சம் மொச மொசவென இருப்பதாகவே என் கண்ணுக்குப் படுகிறது ! So விற்பனையில் நேரவுள்ள தொய்வு என்பதைத் தாண்டி, விழாக்கள் கொணரக்கூடிய அந்தப் பரபரப்பை ; உங்களைச் சந்திக்கும் மகிழ்வுகளை ரொம்பவே miss செய்வோமென்பது உறுதி ! ஆண்டுக்கொரு தபா பேட்டரிகளை ரீசார்ஜ் செய்திடக் கிடைக்கும் ஒரு வாய்ப்பு, துளியும் எதிர்பாரா விதத்தில்  பணாலாகிப் போவது ரொம்பவே பெரியதொரு இழப்பு தானே ? Maybe in the not so distant future - ஆங்காங்கே நடந்திடும் ஆன்லைன் வகுப்புகள் ; சந்திப்புகள் ; போல் நாமும் ஏதேனும் முயற்சித்துப் பார்க்கலாமோ - என்னவோ ? ZOOM ; BOOM என்று ஏதேதோ ஆன்லைன் வீடியோ app பெயர்கள் காதில் விழுந்துள்ளன தான் ; அவற்றுள் நமக்கு பிரயோஜனப்படக்கூடிய ஏதாவதொன்றைத் தேர்வு செய்து, ஒரு சனி மாலைக்கு கும்மியடிக்க சாத்தியமாகின் - should be fun ! இது பற்றி உங்கள் அபிப்பிராயங்கள் ப்ளீஸ் ?

Looking further down the horizon - ரொம்பவே முக்கியமானதொரு வினாவுக்கு உங்களின் பதில்கள் கிட்டின் - நம் திட்டமிடல்களுக்கு பெரும் உதவியாக இருந்திடும் என்பேன் ! So please do give the following lines your consideration please :

ஆண்டின் நடுப்பகுதியினைத் தொட்டு நிற்கும் இத்தருணத்தில், எல்லாம் நலமாகயிருந்திருக்கும் பட்சத்தினில் - அடுத்தாண்டின் அட்டவணைத்  திட்டமிடலில் நான் ஐக்கியமாகிக் கிடப்பது இந்நேரத்து மாமூல் ! புதுத் தடங்கள்  ; existing நாயக / நாயகியரின் கதை finalization ; சந்தாத் தொகை இறுதிப்படுத்தல் ; புதுக் காண்டிராக்ட் ஏற்பாடுகள் - என எனது கபாலம் பரபரத்துக் கிடக்கும் இப்போதெல்லாம் ! ஆனால் 'அடுத்த வாரம் எவ்விதமிருக்குமோ ?' என்ற ஆரூடம் சொல்லக்கூட யாருக்கும் 'தம்' இல்லாத இன்றைய சூழலில் ஆறு மாதங்களுக்குப் பின்னான திட்டமிடல்களை எவ்விதம் அணுகுவதென்ற குழப்பம் வாட்டுகிறது ! Here is our present situation :

இந்த ஜூன் 12-க்கு, அறிவிக்கப்பட்டுள்ள  4 இதழ்கள் டெஸ்பாட்ச் ஆன பிற்பாடு - ரெகுலர் சந்தாவினில் டிசம்பர் வரைக்குமான பொழுதினில் எஞ்சியிருக்கப் போவது 28 இதழ்கள் :

-சந்தா A : 4  
-சந்தா B : 6  
-சந்தா C : 3 
-சந்தா D : 7 
-சந்தா E - 4 
-MAXI லயன் : 4

அப்புறம் மார்ச் 2021 வரைக்கும் நீண்டு ஓடும் ஜம்போ சீசன் 3-ன் அட்டவணையில் எஞ்சியிருப்பவை 5 இதழ்கள் ! நார்மலாகப் பார்த்தால் இந்த ஐந்தில் - 3 இதழ்கள் டிசம்பருக்குள்ளாகவும், பாக்கி இரண்டு ஜனவரி 2021 & மார்ச் 2021 என்று வெளிவந்திடும் !

So அப்படி வைத்துக் கொண்டால் :

ரெகுலர் சந்தாவின் 28 இதழ்கள் + ஜம்போவின் 3 இதழ்கள் = a total of 31 புக்ஸ் !

ஆக 6 மாதத்து அவகாசத்தினில் 31 புக்ஸ் வெளிவந்திட வேண்டியது இன்றைய நிலவரம் - which will mean, இங்கிருந்து இனி சகல மாதங்களிலும் 5 புக்ஸ் இடம்பிடித்திட வேண்டி வரும் ! நம் வசம் கதைகள் சகலமும் ரெடி & 70% மொழிபெயர்ப்புகளும் ரெடி தான்! So மாதம் 5 இதழ்களென்பதெல்லாம் எங்கள் மட்டிற்கு சாத்தியமே ! அடுத்த ஓரிரு மாதங்களில் தமிழக நிலவரம் கொஞ்சம் சீரடைந்து விடுமென்ற நம்பிக்கையில் - இந்த இதழ்களை திட்டமிட்டபடியே இந்தாண்டினிலேயே போட்டுத் தாக்கிடலாமா ?

அல்லது :

இவற்றை சற்றே space out செய்து மார்ச் 2021 வரைக்கும் இந்த இதழ்களை கொண்டே வண்டி ஓட்டுவது நலமென்பீர்களா ? In that case - புதுச் சந்தாக்களை ஏப்ரல் 2021 முதலாய் துவக்கிடத் திட்டமிட வேண்டி வரும் ! 

இன்றைய ground reality உங்கள் ஒவ்வொருவருக்கும் ரொம்பவே மாறுபடலாம் என்பது புரிகிறது ! But இந்தக் கடின நாட்களிலும், உங்களில் யாரையுமே நம் பயணத்தினில் இழந்திடாது ; இயன்ற மட்டிலும் நம் வெளியீடுகள் அனைத்துமே உங்கள் அனைவரையும் எட்டிட வேண்டுமென்பது எங்களின் அவா & லட்சியம் ! So உங்களுக்கு எது சுகப்படுமோ - அதுவே நமது பயணத் திட்டமிடலாகவும் இத்தருணத்தில் அமைத்திட விரும்புகிறேன் ! So உங்களின் அபிப்பிராயங்கள் ப்ளீஸ் ? அதிக நேரம் நல்க இயலா நண்பர்களின் வசதிக்காக இதோ - பதிலளிக்கவொரு சுலப pattern :

**If you feel 31 books by December 31 is fine - 31 / 31 என்று பதிவிட்டால் கூடப் போதும் !

**In case you feel spacing it out till March 31 is better - March 31 என்று பதிவிட்டால் போதும் ! 

உங்களின் பதில்கள், தொடரவுள்ள மாதங்களது திட்டமிடலையும், அடுத்தாண்டின் ஏற்பாடுகளையும் எவ்விதம் அணுகுவதென்று எனக்கொரு வழிகாட்டியாகிடும் என்பதால் - தயை கூர்ந்து பதிலளிக்க முனைந்திடுங்களேன் - ப்ளீஸ் ! And பதிலளிக்க நீங்கள் ரெடியாகிடும் வேளைகளில், லக்கி லூக்கோடு கனடாவின் பனிக்குள் பணியாற்ற நானிப்போது நடையைக் கட்டுகிறேன் !!

Bye folks....see you around ! Have a Safe Sunday !!!

229 comments:

  1. Replies
    1. மிக நீண்ட காலம் கழித்து... ஃபர்ஸ்ட். :)

      Delete
    2. வாழ்த்துக்கள் சார்....

      Delete
  2. Replies
    1. சிவா ஜஸ்ட் மிஸ் அடுத்த முறை முதல் இடம் பிடிக்க வாழ்த்துக்கள்

      Delete
  3. இரவு வணக்கம் சார் & நண்பர்களே 🙏🏼
    .

    ReplyDelete
  4. ஞான் பத்துக்குள்ளா !!

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் 10 குள்ளயா சூப்பர்

      Delete
    2. நீங்களுமா சார் 🙏🏼
      .

      Delete
  5. இரவு வணக்கம்.

    ReplyDelete
  6. இரவு வணக்கம் சார் & நண்பர்களே 🙏🏼

    ReplyDelete
  7. Replies
    1. இல்லீங்கோ...ஜேசன் மக்ளீன் தான் 13 ! நீங்க 14 !

      Delete
    2. நஹீ நஹி. நான் தான் 13, ஜேசன் நெக்ஸ்ட். பை த பை 31/31. அப்புறம் zoom பற்றிய அபிப்பிராயத்தில் நான் பரணி சார் சொல்வதை ஆமோதிக்கிறேன். Zoom has lot of security lapses. As a content writer, In May month i did an article for a client on the gate crashing problems in zoom. Anyone can barge into our meetings. Personally I don't recommended it.

      Delete
    3. சரியான நேரத்தில் ஜேஸன் மக்லேனை
      மறவாது நினைவுபடுத்தியதற்க்கு
      நன்றி விஜயன் சார்.31 / 31

      Delete
    4. ஜூனியர் எடிட்டரிடம் ZOOM பற்றி இப்போது தான் கேட்டுக் கொண்டிருந்தேன் & இதே ஒலிபரப்பே அக்கடவும் கிட்டியது ! So ரிஜிட் !!

      Delete
    5. மகிழ்ச்சி - ஜுனியர் எடிட்டர் ரொம்பவே உஷார்.

      Delete
    6. // Zoom has lot of security lapses. //

      +1

      Delete
  8. நடு ராவுலியும் வந்தாச்சு ...இனி படித்து விட்டு....!

    ReplyDelete
    Replies
    1. தலீவரே....பதுங்கு குழிக்குள்ளாற கடிகாரத்தில் பாட்டரி தீர்ந்து போச்சோ ?

      Delete
    2. தலீவர் நடு ராவுல தளத்துக்கு வந்தத்தை கொண்டாடும் விதமா நடு ராவுல தலீவர் ஸ்பெசல்னு ஒன்னு போடனும்னு போ. கு. சார்பா வேண்டிக்கிறேன்.

      Delete
  9. / /ZOOM ; BOOM என்று ஏதேதோ ஆன்லைன் வீடியோ app பெயர்கள் காதில் விழுந்துள்ளன தான் ; அவற்றுள் நமக்கு பிரயோஜனப்படக்கூடிய ஏதாவதொன்றைத் தேர்வு செய்து, ஒரு சனி மாலைக்கு கும்மியடிக்க சாத்தியமாகின் - should be fun ! இது பற்றி உங்கள் அபிப்பிராயங்கள் ப்ளீஸ் ? //

    Not interested sir! Sorry!!

    ReplyDelete
    Replies
    1. நேரில் பார்த்து பேசும் சுகம் இதில் இல்லை! எனவே இதில் எனக்கு விருப்பம் இல்லை!!

      Delete
    2. இவையெல்லாம் என்னவென்றே எனக்குத் தெரியாது ; so no idea !

      Delete
    3. zoom - ஒரே நேரத்தில் பலர் ஒன்றாக பேசும் வசதி உள்ள ஒரு app, இதில் வீடியோ உரையாடல் வசதியும் உண்டு!!
      சமீபத்தில் எனது நண்பர்கள் 6 பேருடன் இதன் மூலம் பேசினோம், ஒவ்வொருவரும் தங்கள் பக்கம் உள்ள செய்திகளை பரிமாறிக்கொள்ள சுமார் 1 மணி நேரம் ஆனாது! நம்மை போன்ற காமிக்ஸ் நண்பர்கள் கூட்டத்திற்கு 10-12 மணி நேரம் வேண்டும் எல்லோரும் பேசி குளாவிட! எனவே இது நமக்கு சரிபடாது என்பது எனது எண்ணம்.

      இது ஆன்லைன் வகுப்பு அல்லது அலுவலக மீட்டிங்க்கு சரிப்படும்! அல்லது ஒருவர் பேச மற்றவர்கள் கேட்க சரியாக அமையும்!

      மற்ற நண்பர்கள் மற்றும் உங்கள் விருப்பத்தை கொண்டு முடிவு செய்யுங்கள்!

      Delete
    4. +1

      நமக்கு சரிபட்டு வராது.!

      Delete
  10. All is well 31/31 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  11. விஜயன் சார், புத்தகங்களை 12ம் தேதி வெள்ளிக்கிழமை அனுப்புவதற்கு பதில், முடிந்தால் வியாழக்கிழமை (11ம் தேதி) அனுப்ப முடியுமா? பொதுவாக வெள்ளிக்கிழமை அனுப்பும் கொரியர்கள் எனக்கு திங்கள்கிழமை தான் எனக்கு கிடைக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. சாத்தியமில்லை சார் !

      Delete
  12. இந்த கொரோனா மட்டும் கண்ணுக்கு தெரிந்தால் எனக்கு இருக்கும் வெறியில் அப்படியே கடித்து குதறி விடுவேன்.. :((

    எனவே வேறு வழியில்லை. எனது ஆதரவு...

    "March 31"

    ReplyDelete
  13. **If you feel 31 books by December 31 is fine - 31 / 31

    ReplyDelete
    Replies
    1. எட்டே நிமிடங்களில் பதிவைப் படித்து, பதிலும் போட்ட நள்ளிரவுப் புகழ் தலீவருக்கு சங்கம் சார்பில் ஒரு வாழைப்பூ வடை !

      Delete
  14. மாசம் அஞ்சு புக்கு இந்த கொரானா கொடுமையை மறக்க அருமையான ஐடியா ...

    ப்ளீஸ் கை விட்றாதீங்க சார்..

    ReplyDelete
  15. ப்ளூ கோட் பட்டாளம் நீண்ட இடைவெளிக்கு பிறகு! காமெடி கதை படித்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது!! லக்கி லூக் கதைக்கு பிறகு சமீப காலங்களில் மிகவும் விரும்பி படிப்பது இவர்களில் கதைகளே! அட்டைப்படம் மற்றும் உட்பக்கம் அருமை!!

    ReplyDelete
  16. அட்டைப்படங்கள் அழகு எனில் டெக்ஸ்ன் உட்பக்க ஓவியங்கள் இன்னும் அழகு...

    ReplyDelete
  17. ப்ளூகோட் பட்டாளம் என்றும் எனது இனிய கார்ட்டூன் தோழர்கள் ...நீண்ட நாட்கள் கழித்து அவர்களை காணும் ஆவலில் ..காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  18. 31/31 ஆ அல்லது மார்ச் 31 ஆ என்ற கேள்விக்கான பதிலை உங்களிடமே விடுகிறேன் சார். எனக்கு ஆறாயிரம் ரூபாயில் முடியும் சந்தா உங்களுக்கு எத்தனை லட்சம் ஸ்டாக்கோ. நீங்கள் உங்கள் வசதியின் பொருட்டு எந்த முடிவெடுத்தாலும் அதற்கு துணை நிற்பதைத் தவிர வேறு திட்டம் என்னிடம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் ! பார்ப்போமே - இந்தப் பதிவிற்கு நண்பர்களின் பெரும்பான்மை எவ்விதம் பதில் சொல்லுகின்றனர் என்று !

      Delete
    2. உண்மைதான் மகேந்திரன் சார்..

      Delete
    3. இதே(மஹிஜியின்) பதில்தான் எனதும் ஆசிரியரே...

      வெளிநாட்டுவாசியானோ எனக்கு, உங்கள் புத்தகம் கையில் கிடைத்தால் போதும் என்ற நிலமையில், உங்கள் வசதிபடியே அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.

      Delete
    4. விமானப் போக்குவரத்து நார்மலான பிற்பாடே ஏர்மெயில் சாத்தியம் என்று சொல்லிவிட்டார்கள் சார் ! உங்களைப்போன்ற அயல்தேச வாசகர்களை இந்த நொடியில் 'அம்போ'வென விட்டது போலொரு ஆற்றமாட்டாமை உள்ளுக்குள் !

      Delete
  19. So விற்பனையில் நேரவுள்ள தொய்வு என்பதைத் தாண்டி, விழாக்கள் கொணரக்கூடிய அந்தப் பரபரப்பை ; உங்களைச் சந்திக்கும் மகிழ்வுகளை ரொம்பவே miss செய்வோமென்பது உறுதி

    ######


    உண்மை சார்...ஈரோடு திருவிழாவிற்காக எப்படி எப்படி எல்லாம் நண்பர்களுடன் திட்டம் போட்டு வைத்திருந்தோம்...வருடத்தின் அழகான மூன்று நாட்கள் இந்த வருடத்தில் இழந்து போனது மிக கொடுமையான ஒன்று..ஹீம்..:-(

    ReplyDelete
    Replies
    1. இழந்துள்ளது 3 நாட்களை மாத்திரமல்ல தலீவரே !!

      Delete
    2. // உண்மை சார்...ஈரோடு திருவிழாவிற்காக எப்படி எப்படி எல்லாம் நண்பர்களுடன் திட்டம் போட்டு வைத்திருந்தோம்...வருடத்தின் அழகான மூன்று நாட்கள் இந்த வருடத்தில் இழந்து போனது மிக கொடுமையான ஒன்று..ஹீம்..:-( //

      +1

      Delete
    3. ஆம்...உண்மை தான் சார்..:நான் என்னளவில் கணக்கில் கொண்டு விட்டேன்..:-(

      Delete
  20. நமது ஓவியர் பெயர் மாலையப்பன் என நினைக்கிறன், ஆனால் நீங்கள் மலையப்பன் என இங்கு குறிப்பிட்டது இருக்கிறீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. S.Malayappan என்று கையெழுத்திடுவார் ; எவ்விதம் உச்சரிப்பதென்பது நம் பிரியம் சார் ! பாவம் வழங்கப்பட்ட பெயர் என்னவென்று அவருக்கே உறுதிபட தெரியாதே !

      Delete
    2. ‌புரிந்து கொண்டேன்.

      Delete
  21. Zoom மீட்டிங்கில் 40 பேர் வரை ஸ்க்ரீனில் பார்த்து பேசும் வசதி உண்டு. புத்தக விழாக்கள் இல்லாத பட்சத்தில் இது ஒரு நல்ல ஐடியா தான். சரியாத் திட்டமிட்டு செயல்படுத்தினால் இதுவும் ஒரு நல்ல அனுபவமே.

    ReplyDelete
  22. நமது காமிக்ஸ் குடும்பத்தில் இருக்கும் ஓவிய நண்பர்களை கொண்டும் வரும் காலங்களில் நமது காமிக்ஸ் அட்டை படங்களை முயற்சித்து பார்க்கலாமே சார்! டயபாலிக்கின் குற்ற திருவிழாவிற்கு படம் போட்ட நண்பர், அப்பு சிவா, சாரதி, மற்றும் மறுபதிப்பில் சாதித்த கழுகு மலை கோட்டை அட்டைப்படம் போட்ட நண்பர்!! ஆனால் இவர்களின் விருப்பம் எனக்கு தெரியவில்லை!! just a suggestion!!

    ReplyDelete
    Replies
    1. எல்லோருமே பிசி சார் !

      Delete
    2. புரிந்து கொண்டேன்! நன்றி சார்!

      Delete
  23. Replies
    1. தலீவரே....நண்பர் சேலம் குமார் தூங்கப் போகும் முன்பாய் உங்களிடம் ஏதாச்சும் பொறுப்புக் கொடுத்துப் போயிருந்தாரோ ?

      Delete
    2. நோ...சார்...ஆனா +1 வரும் இடங்களில் எல்லாம் கூட தாங்கள் ஓட்டில் கணக்கெடுத்து கொள்ள வேண்டும் என்பது மட்டும் எஸ் சார்..:-)

      Delete
    3. கண்ணில்படும் பூத்தில் எல்லாம் ஒட்டு குத்த முடியாதுங்கோ ! உங்கள் ஒட்டு ஒண்ணே ஒண்ணு ; அதுவும் உங்கட பூத்தில் மட்டுமே !

      Delete
    4. சார்..அரசியல் ஓட்டே மாத்தி மாத்தி குத்துனா தான் ஆட்சியே புடிக்குறாங்க..

      ஏதோ பாத்து எண்ணுங்க...:-(

      Delete
    5. // கண்ணில்படும் பூத்தில் எல்லாம் ஒட்டு குத்த முடியாதுங்கோ ! உங்கள் ஒட்டு ஒண்ணே ஒண்ணு ; அதுவும் உங்கட பூத்தில் மட்டுமே ! //

      :-)

      // அரசியல் ஓட்டே மாத்தி மாத்தி குத்துனா தான் ஆட்சியே புடிக்குறாங்க.. //

      அரசியல் வேறு நமது காமிக்ஸ் வேறு தலைவரே :-)

      Delete
  24. தற்போதைய நிலை ஓர் ஆண்டு தொடரவாய்புள்ளது ஆகவே விவேகமான முடிவு தேவை. 31 இதழ்களை மார்ச் மாதம் வரை வெளியிடவே என் ஆதரவு. ஏப்ரல் மாதத்தில் 2021-22 கான சந்தா ஆரம்பிக்கலாம்.

    ReplyDelete
  25. March 31கருர் ராஜசேகரன்

    ReplyDelete
  26. Replies
    1. +1

      ஓ...இன்னும் நீங்க பதில் சொல்லலையா...?!

      Delete
    2. யாராச்சும் பொருளாளர் கிட்டே ஒரு இக்ளியூண்டு தூக்க மாத்திரை வாங்கிட்டு வாங்களேன் ; ஒரு 7 மணி உறக்கப் பார்ட்டி ராவிலே வந்து ரகளை செய்யிங்ஸ் !

      Delete
    3. சங்கத்துல அந்த அளவுக்கு வசதி இல்ல சார்..:-)

      Delete
  27. ஆங்கில காமிக்ஸ் விற்பனை பக்கத்தில் டெக்ஸ்வில்லர் பேக்னு ஒன்னு இருக்கு. ஆங்கிலமா தமிழா?

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ ! நம்மாட்களின் சொதப்பல்ஸ் !

      Delete
  28. உயிரில் கலந்த ஈரோடு இந்த வருடம் கண்ணில் நீரோடு பிரிந்து போகிறேதே

    ReplyDelete
    Replies
    1. உண்மை...சைந்தில் சத்யா..:-(

      Delete
  29. முதலில்
    இளவரசி வாழ்க!
    அப்புறமா...... பதிவைப் படிச்சுட்டு வந்துட்டு நம்ம கருத்தை விதைப்போம்.

    ReplyDelete
    Replies
    1. அப்போ கார்வின் எக்கேடோ கெட்டொழியட்டுமா ?

      Delete
  30. // **In case you feel spacing it out till March 31 is better - March 31 என்று பதிவிட்டால் போதும் !

    இவற்றை சற்றே space out செய்து மார்ச் 2021 வரைக்கும் இந்த இதழ்களை கொண்டே வண்டி ஓட்டுவது நலமென்பீர்களா ? In that case - புதுச் சந்தாக்களை ஏப்ரல் 2021 முதலாய் துவக்கிடத் திட்டமிட வேண்டி வரும் !

    //

    தற்போது உள்ள நிலைமை சீராக இன்னும் 6-9 மாதங்கள், ஏன் அதற்கு மேல் கூட ஆகலாம்!! வரும் நாட்களில் மாத வருமானதில் வண்டி ஓட்டும் பலருக்கு அவர்கள் வேலை செய்யும் companyகள் தங்கள் பிசினெஸை சரி செய்ய அவர்களின் மாத வருமானத்தை குறைக்கலாம் அல்லது அவர்கள் வேறு வேலை தேடும் நிலைக்கு செல்ல வாய்ப்புகள் அதிகம்! எனவே March 31 is better - March 31 என்பதே எனது சாய்ஸ்!! இது உங்களுக்கும் எங்களுக்கும் மிகவும் வசதியாக இருக்கும்!!

    புதிய சந்தாவை 1-ஏப்ரல்-2021 முதல் 31-டிசம்பர்-2021 என மாற்றிகொள்ளலாம்! 2022 முதல் ஜனவரி - டிசம்பர் என வழக்கமான சாந்த தடத்திற்கு மாறிக்கொள்ளலாம்!

    ReplyDelete
    Replies
    1. மாதம் 5 புத்தகங்கள் சந்தோஷமான விஷயம்! ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் இப்போது தான் தட்டு தடுமாறி எழுந்து கொண்டு நிக்கிறார்கள், அவர்கள் எல்லாம் முன் போல் ஓட கொஞ்சம் அவகாசம் தேவை! என்பதால் March 31 is better - March 31.

      Delete
    2. //அனைவரும் இப்போது தான் தட்டு தடுமாறி எழுந்து கொண்டு நிக்கிறார்கள், அவர்கள் எல்லாம் முன் போல் ஓட கொஞ்சம் அவகாசம் தேவை!//

      எழுந்து நிற்கிறார்களா ? தவழ்ந்து கொண்டுள்ளனர் சார் முக்கால்வாசித் தொழில்களில் !!

      அத்தியாவசியங்கள் + மருத்துவம் சார்ந்த துறைகள் நீங்கலாய் பாக்கிப் பேரெல்லாம் டாஸ்மாக் போகாமலே தள்ளாட்டத்தில் !

      Delete
    3. // எழுந்து நிற்கிறார்களா ? தவழ்ந்து கொண்டுள்ளனர் சார் முக்கால்வாசித் தொழில்களில் !! //

      உண்மை இது தான்!! ஆனால் கொஞ்சம் positive-ஆக இருக்க வேண்டும் என்று அப்படி குறிப்பிட்டேன் சார்!

      Delete
    4. எங்க ஊர் நிலவரமோ கொஞ்சம் இப்படியும்-அப்படியும் !!

      தீப்பெட்டிகள் அத்தியாவசியம் என்பதால், செம ஓட்டம் ! லாக்டவுனின் போது கூட வெறும் 5 நாட்களே கதவடைத்திருந்தனர் !

      பட்டாசுத் தொழிலிலோ நிலவரம் என்னவாக இருக்கப் போகிறதென்று யாருக்கும் கணிக்கத் தெரியவில்லை ; பொத்தாம் பொதுவாய் உற்பத்தி செய்து வருகின்றனர் !!

      அச்சுத் தொழிலிலோ, தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்காகப் பணியாற்றும் அச்சகங்கள் செம பிசி ! பாக்கிப் பேர் செம ஈயோட்டிங் !

      Delete
    5. அத்தியாவசியங்கள் + மருத்துவம் சார்ந்த துறைகள் நீங்கலாய் பாக்கிப் பேரெல்லாம் டாஸ்மாக் போகாமலே தள்ளாட்டத்தில் !


      ########


      அந்த தள்ளாட்டத்தை மறந்து தாளம் போட்டு ஆட 31 க்கு 31 தான் சரியான மருந்து ..

      இதுக்கு மேல கண்ணு முழிக்க முடியாது என்பதால் மீண்டும் நாளை :-)

      Delete
    6. ///எழுந்து நிற்கிறார்களா ? தவழ்ந்து கொண்டுள்ளனர் சார் முக்கால்வாசித் தொழில்களில் !!///

      நானெல்லாம் இன்னும் மல்லாக்த்தான் படுத்துக்கிட்டு இருக்கேன்.!
      கவுந்து படுக்கவே இன்னும் ரெண்டு மாசம் ஆகுமாம்.. அப்புறமா தலையைத் தூக்கி.. அப்புறம் தேச்சிக்கிட்டே நகந்து.. அப்புறமா முழங்கால்ல தவழ ஆரம்பிச்சி.. அப்புறமா எழுந்து நின்னு.. அப்புறமில்ல நடக்க ஆரம்பிக்கணும்.. 2020ஆம் வருசத்தை மறந்துட வேணடியதுதான்..!;-(

      Delete
    7. ///அந்த தள்ளாட்டத்தை மறந்து தாளம் போட்டு ஆட 31 க்கு 31 தான் சரியான மருந்து ..///

      தலீவர் சொல்றதும் ஞாயமாத்தேன் படுது..!

      Delete
    8. புரிகிறது கண்ணா. தற்சமயம் நமது பல நண்பர்கள் நிலைமையும் இதுவே.

      Delete
  31. புளுகோட் பட்டாளத்தை முதன் முறையாக வாசிக்க காத்திருக்கிறேன்... டிசம்பரோ அல்லது மார்ச்சோ நீங்களாக பாத்து எது செஞ்சாலும் ஓகே தான்.

    ஆனால் இந்த படுபாவி கொரோனாவுடனான சண்டையில ஸ்பெஷல் புத்தகங்களை கைவிட்டுராதீங்கோ... மன்றாட்டத்துடன் நான்.

    ReplyDelete
    Replies
    1. என்னத்தைச் சொல்ல சார் ? கதைகள் சகலமும் வாங்கியாச்சு ; குவிந்து கிடக்கின்றன !!

      ஆனால் நாட்டின் யதார்த்த நிலவரத்தில் தான் ஒளிவு மறைவு ஏதுமில்லையே ?! உலகுக்கே எது கதியோ - அதுவே தானே சார் நமக்கும் ?

      Delete
    2. இங்க கொரோனா பத்தாதுன்னு டெல்லில நிலநடுக்கம் வேற... இதுக்கெல்லாம் சாஞ்சுட்டா எப்படி சார்.. இன்னும் உங்கள் புண்ணியத்தில எவ்வளவு புத்தகங்கள் படிக்க வேண்டியிருக்கு.

      எனக்கென்னவோ எல்லாம் சீக்கிரமே சரியாயுடும்னு தோனுது சார்..

      //உலகுக்கே எது கதியோ - அதுவே தானே சார் நமக்கும் ?//

      அழகான வாக்கியம்.... நோட்டடு சார்..

      Delete
    3. //எனக்கென்னவோ எல்லாம் சீக்கிரமே சரியாயுடும்னு தோனுது//

      நோய்டாவுக்கு ஒரு கிலோ சர்க்கரை பார்சல்லல்லல் !

      Delete
    4. //எனக்கென்னவோ எல்லாம் சீக்கிரமே சரியாயுடும்னு தோனுது//

      நோய்டாவுக்கு ஒரு கிலோ சர்க்கரை பார்சல்லல்லல் !////


      என் சார்பில் அரைக்கிலோ ஜாங்கிரி..! (பட்ஜெட் பிராப்ளம்..ஹிஹி..அரைக்கிலோதான் முடியும்..;-))

      Delete
  32. Replies
    1. பதிவிட முனைந்துள்ளமைக்கு நன்றிகள் சார் ! மௌன வாசகரெனில் - welcome !

      Delete
  33. அனைவருக்கும் இரவு வணக்கங்கள். என்னுடைய சாய்ஸ் 31/31/

    ReplyDelete
  34. காமிக்ஸ் காதலால் பெரும்பான்மை நண்பர்கள் ஒருவேளை 31/31 சொன்னாலும் கூட, அதை தவிர்த்து,

    கள நிலவரம் மிக மோசமாக இருப்பதால் "மார்ச் 31" முடிவை எடுப்பதே நியாயமானதாகவும், சரியானதாகவும் இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. மனசு காமிக்ஸ் காதலால் டிசம்பர்31 என்கிறது.

      ஆனா புத்தி சொல்கிறது மார்ச் 31 தான் ரியாலிட்டி என....., வழக்கம் போல மனசு ஆகஸ்ட் விழாவில் சந்தா முன்னோட்டத்தை பார்க்க விழைகிறது.

      (இந்தாண்டு விழா இல்லை என்பதை மனசு ஏற்க மறுக்கிறது; நண்பர்களை சந்திக்க இருக்கும் ஒரே வின்டோவும் அடைபடுவதை சகிக்க முடில......)

      Delete
    2. வருடத்திற்கு நியூஸ் பேப்பர், புத்தகங்களுக்குமே சுமார் 20000க்கு மேல் காலியாகி விடுவதால், கொரோனா காலத்தில் செலவை வெகுவாக குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது!

      Delete
    3. சங்கடமான நிஜம் சார் ! அதனை மனதில் இருத்தியே இந்த வரியினை எழுதினேன் :

      //But இந்தக் கடின நாட்களிலும், உங்களில் யாரையுமே நம் பயணத்தினில் இழந்திடாது ; இயன்ற மட்டிலும் நம் வெளியீடுகள் அனைத்துமே உங்கள் அனைவரையும் எட்டிட வேண்டுமென்பது எங்களின் அவா & லட்சியம் ! So உங்களுக்கு எது சுகப்படுமோ - அதுவே நமது பயணத் திட்டமிடலாகவும் இத்தருணத்தில் அமைத்திட விரும்புகிறேன் !//

      Delete
  35. வணக்கம் சார். ஹேப்பி சன்டே!

    ReplyDelete
  36. டிசம்பர் 31 அல்லது மார்ச்31....

    தங்களுக்கு எது முடிகிறதோ அது சார்!

    லேசாகத்தான் வியாபாரம் பிக்அப் ஆகிறது. எனவே மார்ச் 31 தான் தங்களது சாய்ஸ் ஆக இருக்கும் என கணிக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. எனது சாய்ஸ் என்பது ஒருபக்கமிருக்க , ஓராண்டின் பணத்தை முன்கூட்டியே ஒப்படைத்திருக்கும் நண்பர்களின் குரல்களுக்கு செவிமடுப்பதும் அத்தியாவசியம் அல்லவா சார் ?!

      Delete
    2. நிச்சயமாக சார்.

      "சந்தா செலுத்தி உள்ள நண்பர்களின் குரல்கள் இருமடங்காக கவனிக்கப்படவேண்டியது அவசியம்'" எனபதே நிதர்சனம். பெரும்பாலான நண்பர்கள் நினைப்பதை செயல் படித்தும் கடமையும் தங்களுக்கு இருக்கிறது.

      Delete
  37. மார்ச் 31 ? டிசம்பர் 31 ?
    எதுவென்றாலும் எனக்கு சரிதான். பெரும்பான்மையினரின் விருப்பமே எனது விருப்பம். புத்தகங்கள் நான்கோ ஐந்தோ ஆனால் மாதாமாதம் கூரியர் பெட்டி கையில் கிடைத்தால் போதும்.

    ReplyDelete
  38. ///இவற்றை சற்றே space out செய்து மார்ச் 2021 வரைக்கும் இந்த இதழ்களை கொண்டே வண்டி ஓட்டுவது நலமென்பீர்களா ? In that case - புதுச் சந்தாக்களை ஏப்ரல் 2021 முதலாய் துவக்கிடத் திட்டமிட வேண்டி வரும் !///

    இதுவே சரி!👍👍👍

    ReplyDelete
    Replies
    1. யதார்த்தத்தின் குரல் !

      Delete
  39. சார்.. எனக்கு அந்த ரோஜர் மூர் மூஞ்சியே புடிக்கலை.. பியார்ஸ் பிராஸ்னன் போடுங்க..

    ReplyDelete
    Replies
    1. டேனியல் கிரெய்க் ?

      Delete
    2. செல்லாது.. செல்லாது..
      அது தான் 2.0க்கு போட்டுட்டீங்களே.்

      Delete
    3. எனக்கும் ஜேம்ஸ்பாண்டுன்னாவே பிராஸ்னன்தான் பிடிக்கும்..!

      ஆனாலும்...

      இங்கதான் ஜேம்ஸ்பாண்டுன்னு பேரு எழுதிடுறிங்க இல்ல.. அப்புறமும் அட்டையில அவரு போட்டோ வேற எதுக்கு.!?
      அதுக்கு பதிலா அந்தந்த கதையில வரும் ஹீரோயின்., வில்லி இவங்க போட்டோக்களை அஞ்சாறு விதமான போசுல போட்டா நல்லாருக்குமில்ல.. சேல்ஸூம் ஜாஸ்தியாகுமில்ல...!

      Delete
    4. // அதுக்கு பதிலா அந்தந்த கதையில வரும் ஹீரோயின்., வில்லி இவங்க போட்டோக்களை அஞ்சாறு விதமான போசுல போட்டா நல்லாருக்குமில்ல.. சேல்ஸூம் ஜாஸ்தியாகுமில்ல...! //

      ஹீரோ என சொல்வதற்கு பதில் ஹீரோயின் என சொல்லி விட்டார் சார். :-)

      கண்ணா @ லொல்லு ஜாஸ்தி :-)

      Delete
  40. 31/31

    Zoom இலவச app ல் 40 நிமிடங்கள் மட்டுமே பேச முடியும். தனாகவே cut ஆகிவிடும்.
    Net connection speed பொறுத்த விஷயம் வேறு. ஒரு முறை முயன்று பார்க்கலாம் சார்!

    ReplyDelete
  41. youtube live முயற்சிக்கலாம் சார்! நீங்கள் பேச நாங்கள் கேட்ட! நண்பர்கள் தங்கள் கேள்விகளை இந்த மீட்டிங்க்கு சில நாட்கள் முன்னால் உங்களுக்கு அனுப்ப சொல்லிவிட்டு நீங்கள் அந்த மீட்டிங்-ன் நடுவே நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டே உங்கள் பேச்சை தொடரலாம் சார்!

    ReplyDelete
    Replies
    1. Great idea. ஃபேஸ்புக் அல்லது யூடியூப் லைவ் கூட நல்ல ஆப்ஷன்.

      Delete
  42. //மருத்துவம் சார்ந்த துறைகள் நீங்கலாய்//

    மருத்துவத் துறையே தள்ளாடிக்கிட்டுத்தான் இருக்கு... பேரு பெத்த பேரு... ஆனா உண்மை அப்படி இல்லை சார். ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு எல்லாம் பாக்குறோம் சார்...வடிவேலு வாய்ஸ்ல வலிக்கலையே ரீயாக்-ஷன் தான்...

    அப்புறம்... மார்ச் 31னா கொஞ்சம் வசதியா இருக்கும் சார். ஏதோ பாத்து பண்ணுங்க.

    ரொம்ப நாள் கழிச்சு ஒரு ஜாலியான பொம்ம புக்... பையன் குஷியா இருக்கான்.

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. March 31

    என்னால் புத்தகங்களை வாங்க முடியும் என்றாலும், அனைத்து நண்பர்களுக்கும் இது அவசியமான செலவுகளில் வருமா என்பது கேள்விக்குறியே?

    மேலும், கடைகளில் தொங்கும் புத்தகங்கள் 4லிருந்து 5ஆக உயரும் போது மாதாமாதம் பட்ஜெட் கூட துண்டு விழலாம்.

    நான் சொல்வது ஓவராக தோன்றினாலும், இதழ்களின் எண்ணிக்கையை குறைத்து செலவை குறைக்கலாம்

    நிலைமை சீரடைவதாக தோன்றும் நேரங்களில் 2-3 கதைகளை ஸ்பெஷல் வெளியீடுகளாக இந்த இதழ்களை வெளியிட்டு இடைவெளியை நிரப்பலாம்...

    ReplyDelete
    Replies
    1. அதேநேரம் இன்றைய சூழலில் இதுதான் சரியாக இருக்கும்.

      Delete
  45. டியர் எடி, தற்போதைய நிலவரங்களை கருத்தில் கொண்டு என்னுடைய ஓட்டு

    **In case you feel spacing it out till March 31 is better - March 31 **

    ReplyDelete
  46. **In case you feel spacing it out till March 31 is better - March 31 **

    ReplyDelete
  47. டிசம்பர் 31ஆ அல்லது மார்ச் 31ஆ...

    தங்களுக்குத் தெரியாத சட்டம் ஒன்றுமில்லை.! அதில் எது சிறந்த சட்டமோ அதை தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளூங்கள் மை லார்ட்..!!

    ReplyDelete
    Replies
    1. நான் சந்தாவில் இருப்பதால் செட்யூல் படி புத்தகங்கள் வருவதையே விரும்புவேன்.!ஆனாலும் நிலவரத்தை பொறுத்து எடிட்டர் சார் எடுக்கும் எந்த முடிவுக்கும் நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறேன்.!

      Delete
    2. // ஆனாலும் நிலவரத்தை பொறுத்து எடிட்டர் சார் எடுக்கும் எந்த முடிவுக்கும் நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறேன்.!//
      அதே,அதே...

      Delete
  48. ஹைய்யா புதிய பதிவு......

    ReplyDelete
  49. எடிட்டர் சார் இரண்டு முடிவுகள்
    இரண்டில் எது என்றாலும் எனக்கு சம்மதமே.

    எனது வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் இந்த வருட சந்தா வினை மார்ச் 31 வரை நீட்டிப்பதாய் இருந்தால் இரண்டு ஸ்பெஷல் வெளியீடுகள் வெளியிட முடியுமா

    வழக்கம் போல ஆகஸ்ட் மாதம் ஒன்று

    2021 ஜனவரி மாதம் ஒன்று, இதற்கு வாய்ப்பு இருந்தால் எனக்கு டபிள் ஓகே தான் சார்.

    Please consider this too.....

    ReplyDelete
  50. விஜயன் சார்,
    நமது மறு வருகைக்கு பிறகு காமிக்ஸ் ரயில் வண்டி தடையின்றி ஓட முக்கிய காரணம் சந்தா மற்றும் சென்னை மற்றும் ஈரோடு போன்ற பெரிய புத்தகத் திருவிழாக்கள் என நினைக்கிறேன்.

    இந்த ஆண்டு சந்தா வேகம் எடுக்க ஆரம்பிக்கும் நேரத்தில் கொரோனா வேலையை காட்ட ஆரம்பித்தது விட்டது. எனவே கடந்த வருடம் சந்தாவில் வண்டியில் பயணம் செய்த அனைவரும் இந்த வருடம் இருந்தால் சந்தோஷம். ஆனால் கடந்த வருட சந்தா எண்ணிக்கையை விட இந்த வருட சந்தா எண்ணிக்கை குறைவு என்றால் கஷ்டமான விஷயம்.

    அதேநேரத்தில் இந்த வருடம் வர உள்ள நாட்களில், புத்தகத் திருவிழாக்கள் நடைபெற வாய்ப்புகள் குறைவு என்றால் நமது காமிக்ஸூக்கு மிகவும் கஷ்டமான விஷயம்; அதுவும் ஈரோடு போன்ற பெரிய புத்தகத் திருவிழாக்கள். நாம் இந்த வருடம் ஈரோடு புத்தகத் திருவிழாவில் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போவது கவலை தரும் விஷயம் தான் ஆனால் அதனை விட கவலை தரும் விஷயம் ஈரோடு புத்தக திருவிழா விற்பனை.உங்கள் நிலையை நினைத்தால் மிகவும் வேதனையாக உள்ளது.

    இந்த ஆண்டு இறுதி வரை மட்டும் மாதம் தோறும் வெளி வரும் புத்தகங்களின் பிரிண்ட் ரன்னை குறைத்தால் ஏதாவது கொஞ்சம் செலவுகளை/கஷ்டங்களை சரிசெய்ய உதவுமா?

    வரும் மாதங்களில் எங்களால் முடிந்த அளவு புத்தகங்களை வாங்கி donate செய்வோம் சார்.

    இதுவும் கடந்து போகும்.

    ReplyDelete
  51. March 31 என்பதே சரி
    அடுத்த சந்தாவிற்க்கும் நேரம் கிடைக்கும்
    எ.எ.க

    ReplyDelete
  52. விஜயன் சார்,
    சில பழைய புத்தகங்களுக்கு தள்ளுபடி அறிவித்தது அதில் ஸ்டிக்கர் கண்ணுக்கு தெரியும் அளவிற்கு கொஞ்சம் பெரியதாக ஒட்டி "20% தள்ளுபடி தற்போதைய சிறப்பு விலை ₹50" புத்தக விற்பனை செய்யும் கடைகளுக்கு கொடுக்க முடியுமா? அதன் கூடவே லயன்-முத்து காமிக்ஸ் ஆடித் தள்ளுபடி விற்பனை 10-30% என்பது போல் ஒரு போஸ்டர்.

    இங்கே தள்ளுபடியில் குறிப்பிட்ட எண்கள் உதாரணத்திற்கு குறிப்பிட்டு உள்ளேன். உங்களுக்கு சாத்தியப்படும் தள்ளுபடி விலையில் அறிவிக்க முடியுமா சார்.

    ReplyDelete
  53. March 31

    கொஞ்சம் மீண்டு வருவதற்கு இந்த அவகாசம் தேவைப்படுகிறது.

    ReplyDelete
  54. இங்கே நண்பர்களுடன் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

    நான் பணிபுரியும் 45 ஆண்டுகள் அனுபவம் உள்ள நிறுவனத்தில் 1500+ பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் வாடகை வீடு அல்லது லோனில் சொந்த வீட்டில் வசிப்பவர்கள். இன்னும் டூவீலர், கார் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் EMI ல் சிக்கியிருப்பவர்கள். மேலும் பிள்ளைகள் படிப்பு செலவுகள் என பல சிக்கல்களில் சிக்கி திண்டாடிக்கொண்டியிருப்பவர்கள். நான் உட்பட.

    இப்போது என்ன சிககல் என்றால், இந்த கொரோனா எனும் அரக்கனால் எங்களது நிறுவனம் தவிர்க்க முடியாத பல கடினமான செலவுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதில் சில...

    ஒரு ஆண்டுக்கு இன்கிரிபெண்ட், அலவண்ஸ், கூடுதலாக வேலைக்கு (Overtime) ஊதியம் கட், முக்கியமாக வருடத்தில் தரப்படும் இரண்டு போனஸ் (ஸ்கூல் பீஸ்க்காக ஏப்ரல் மற்றும் தீபாவளி போனஸ்) கிடையாது. மேலும் 6 மாதங்களுக்கு 15 நாள் வேலை, பாதி சம்பளம் மட்டுமே. இப்படி பல கட்டுபாடுகள் தினமும் நீண்டு கொண்டே செல்கிறது. பணியாளர்கள் என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டு மிகுந்த மன உளச்சோர்வுடனும் எதிர் கால பயத்துடனும் பணியாற்றும் சூழ்நிலையில் இருக்கிறார்கள். அதிலும், ஓனர்கள் சொல்லும் இது போன்ற கடினமான விஷயங்களை தொழிலாளர்களிடம் விளக்கி சொல்லும் இடத்தில் பணிபுரியும் என்னைப் போன்றவர்களின் நிலமை இன்னும் கொடுமை. :(

    கொரோனா பலரின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டிருக்கிறது. இது கட்டுபடாமல் தொடர்ந்தால் என்னவெல்லாம் விபரிதங்களை சந்திக்க நேரிடுமோ பீதியிலேயே நாட்களை கடத்த வேண்டியுள்ளது. இதுவும் கடந்து போகும் என சுலபமாக சொல்லி சென்று முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். சரி, மனதை லேசாக்குவோம் என்று நமது வாழ்வோடு கலந்த நமது காமிக்ஸ் புக்கோடு அமர்ந்தால் மனம் அதில் ஒன்ற மறுக்கிறது.

    கடவுள் என்ன தீர்மானத்தில் இருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.

    நம்பிக்கை அதானே வாழ்க்கை.

    ReplyDelete
    Replies
    1. *இன்கிரிபெண்ட

      இன்கிரிமெண்ட் - Increment

      Delete
    2. // ஒரு ஆண்டுக்கு இன்கிரிபெண்ட், அலவண்ஸ், கூடுதலாக வேலைக்கு (Overtime) ஊதியம் கட், முக்கியமாக வருடத்தில் தரப்படும் இரண்டு போனஸ் (ஸ்கூல் பீஸ்க்காக ஏப்ரல் மற்றும் தீபாவளி போனஸ்) கிடையாது. மேலும் 6 மாதங்களுக்கு 15 நாள் வேலை, பாதி சம்பளம் மட்டுமே. இப்படி பல கட்டுபாடுகள் தினமும் நீண்டு கொண்டே செல்கிறது. பணியாளர்கள் என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டு மிகுந்த மன உளச்சோர்வுடனும் எதிர் கால பயத்துடனும் பணியாற்றும் சூழ்நிலையில் இருக்கிறார்கள். அதிலும், ஓனர்கள் சொல்லும் இது போன்ற கடினமான விஷயங்களை தொழிலாளர்களிடம் விளக்கி சொல்லும் இடத்தில் பணிபுரியும் என்னைப் போன்றவர்களின் நிலமை இன்னும் கொடுமை. :( //


      பல மாத சம்பளதாரர்களின் நிலைமை இதுவே. எனக்கு இது போன்ற அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத நிலைதான் கார்த்திகேயன். மிகவும் சரியாக சொன்னீர்கள்.

      வார சம்பளம் மற்றும் தின சம்பள வேலையில் இருக்கும் மக்களின் கஷ்டத்தை நினைத்து பார்த்தால் மனது வேதனையில் துடிக்கிறது. நிலைமை விரைவில் சீராக எல்லா வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

      Delete
    3. //வார சம்பளம் மற்றும் தின சம்பள வேலையில் இருக்கும் மக்களின் கஷ்டத்தை நினைத்து பார்த்தால் மனது வேதனையில் துடிக்கிறது//

      இது அதைவிடகொடுமைதான் பரணி சார்

      Delete
  55. If possible and probable .. 31/31 .. or else watever u decide ok for me sir ..

    ReplyDelete
  56. சென்னையில் பேருந்துகள் ஓட துவங்கினால் நிலவரம் சரியாகும் எனவே மார்ச்31 kasi

    ReplyDelete
  57. 31/ 31 என்பது எனது விருப்பம்.
    காமிக்ஸ் நேசமே என் சுவாசம்.

    பிறகு ஜேம்ஸ் பாண்ட் முகத்திற்கு சீன் கானரி தான் இந்த கிளாசிக் ஜேம்ஸ் பாண்ட் முகத்திற்கு செட்டாவார்.

    ReplyDelete
  58. ஜேம்ஸ்பாண்ட் அட்டைப்படம் அசத்தலாக உள்ளது! மாதம் வெளியிடும் புத்தகங்களின் எண்ணிக்கையை பார்க்காமல் விலைக்கு தகுந்தாற்போல் புத்தக எண்ணிக்கை கூட்டிக் கொண்டும் குறைத்தும் கொள்ளலாம் சார்! இந்த வருட புத்தகத்தை இந்த வருடத்திலேயே முடிக்கணும்னு கட்டாயம் இல்லை! நிதானமாகவே போட்டு முடிக்கலாம்! இம்மாதிரியான சூழ்நிலையில் எல்லாவற்றையும் போட்டீங்கன்னா உங்களுக்குத்தான் தேக்கம் வரும்! அதே போல இந்த வருடத்தில் தோர்கல் & தீபாவளி மலரை தவிர வேற எந்த புத்தகங்களையும் திட்டமிடாமல் இருப்பதே நல்லது என்பேன்!ஒருவேளை ஈரோடு புக் நடபெறும் சூழ்நிலை வந்தால் மட்டும் ஏதேனும் ஒரு ஸ்பெஷல் புக் மட்டும் போடப் பாருங்கள்! இந்த வருடத்திற்குள் ஓரளவு நிலைமை சீரடைந்தால் அடுத்த வருடம் நிறைய ஸ்பெஷல் புத்தகத்தை போட்டுக் கொள்ளலாம்! எந்த முடிவாக இருந்தாலும் யோசித்து எடுங்கள் சார்! நன்றி

    ReplyDelete
    Replies
    1. // இந்த வருடத்தில் தோர்கல் & தீபாவளி மலரை தவிர வேற எந்த புத்தகங்களையும் திட்டமிடாமல் இருப்பதே நல்லது என்பேன்!ஒருவேளை ஈரோடு புக் நடபெறும் சூழ்நிலை வந்தால் மட்டும் ஏதேனும் ஒரு ஸ்பெஷல் புக் மட்டும் போடப் பாருங்கள்! //

      +1

      Delete
    2. அறிவித்துள்ள இதழ்களை பூர்த்தி செய்வதே நடப்பு வருடத்தில் சிரமமாய்த் தென்படும் இந்த வேளைதனில் புதுசாய் ஸ்பெஷல் இதழ்கள் பற்றிய நினைப்பே தலைக்குள் நஹி சார் !

      Delete
  59. 31/31.
    டிசம்பர் 2020 வரை இந்த ஆண்டு வர வேண்டிய இதழ்களைக் கொண்டுவந்துவிடுங்கள். பின்னர் ஜனவரி 2021 முதல் மார்ச் 2021 வரை சிறு ஓய்வு எடுத்துககொண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 9 இதழ்களைத் திட்டமிடலாம். இப்போதிருந்து ஏப்ரலுக்குள் வாசகர்கள் பொருளாதார ரீதியாக தயாராகவும் வாய்ப்பு இருக்கிறது. பிறகு ball is in your court.

    இந்த நேரத்தில் வாசகர்களின் கருத்தையும் கேட்கும் உங்களுக்கு ஒரு big salute.


    ReplyDelete
    Replies
    1. இந்த நேரம் என்றில்லை சார் ; எந்த நேரமுமே வாசகக் குரல்களே நமக்குப் பிரதானம் ! Of course - சில தருணங்களில் வியாபார நிர்ப்பந்தங்கள் முன்னுரிமை எடுக்க வேண்டிப்போவதும் நிஜமே ; ஆனால் இயன்றமட்டிலும் இரண்டுக்கும் இயன்ற நியாயங்களைச் செய்திட முயல்வதே எனது அவா !

      Delete
  60. // அவற்றுள் நமக்கு பிரயோஜனப்படக்கூடிய ஏதாவதொன்றைத் தேர்வு செய்து, ஒரு சனி மாலைக்கு கும்மியடிக்க சாத்தியமாகின் - should be fun ! இது பற்றி உங்கள் அபிப்பிராயங்கள் ப்ளீஸ் ? //
    நல்ல யோசனை சார்,இந்த முயற்சியை ஆகஸ்ட் முதல் வாரத்தில் கூட வைத்துக் கொள்ளலாம்.......
    புத்தக விழாவை தவறவிடும் உணர்வை சற்றே மட்டுப்படுத்தியது போலவும் இருக்கும்....

    ReplyDelete
  61. // அடுத்த ஓரிரு மாதங்களில் தமிழக நிலவரம் கொஞ்சம் சீரடைந்து விடுமென்ற நம்பிக்கையில் - இந்த இதழ்களை திட்டமிட்டபடியே இந்தாண்டினிலேயே போட்டுத் தாக்கிடலாமா ? //
    திட்டமிடலை தள்ளி வைக்க வேண்டாம் என்பதே எனது கருத்து சார்,எனக்குமே பணி சார்ந்த அழுத்தங்கள் பல்வேறு வகையில் உலா வந்து கொண்டே உள்ளது,இனி வரும் காலங்களில் நிதி சார்ந்த விஷயங்களில் நிறைய திட்டமிடல்கள் அனைவருக்கும் அவசியம்,எப்போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை,அரசு சிக்கன நடவடிக்கை எனும் பெயரில் இனி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள போவதால் பணியை தக்கவைத்துக் கொள்வதும்,பாதுகாப்பான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் ஆகச்சவாலான ஒரு செயலாக இருக்கப்போகிறது போல.....
    போகிற போக்கில் உயிருடன் இருந்தால் போதும் என்ற மனநிலையை உருவாக்கி விடுவார்கள் போல...
    இதுபோன்ற அழுத்தமான நேரங்களில் நம்மனதிற்கு நெருக்கமான காமிக்ஸே நம்மை ஆற்றுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்....
    எல்லாவற்றையும் கடந்து வந்தது போல இதையும் கடந்து வருவோம்.....
    இந்தாண்டின் திட்டமிடலை நிறைவாக,முழுதாக முடித்து விட்டு,அடுத்தாண்டு திட்டமிடலை கூட கொஞ்சம் சிக்கனமாக திட்டமிட்டுக் கொள்ளலாம் சார்,ஆனால் எப்போதும் போல் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான திட்டமிடலே நலம் என்பேன்...

    ReplyDelete
    Replies
    1. //போகிற போக்கில் உயிருடன் இருந்தால் போதும் என்ற மனநிலையை உருவாக்கி விடுவார்கள் போல...//

      இந்தக் கொடுமையின் உச்சமே அது தான் சார் !!

      Delete
  62. எனது தனிப்பட்ட விருப்பம் 31/31

    ReplyDelete
  63. @ ALL : நெருக்கடியின் தன்மையைப் புரிந்தவர்களாய் நெடும் மௌனங்களைக் கலைத்துக் கொண்டு, இங்கு தம் எண்ணங்களைப் பதிவிட முனைந்திருக்கும் (புது )நண்பர்களுக்கும் ; எப்போதும் போல இங்கே அலசல்களின் ஆணிவேர்களாய் பரிணமிக்கும் ரெகுலர்களுக்கும் ஞாயிறு வணக்கங்கள் !! Thanks for all the inputs..!!

    ReplyDelete