நண்பர்களே,
வணக்கம். எழுதச் சோம்பேறித்தனப்பட்டு வீடியோ பதிவாய்ப் போடுவோமென்று தீர்மானித்தால் அதை Youtube க்கு அப்லோட் செய்வதற்குள் சந்நியாசமே வாங்கிடலாம் போலுள்ளது ! சனிக்கிழமை மாலை என்பதால் நெட் இத்தனை டப்ஸாவாக உள்ளதா ? அல்லது பொதுவாகவே இது தான் லட்சணமா - தெரியவில்லை - ஆனால் கடுப்பில் அதிகாரியைப் போல் சில்லுமூக்குகளைத் தேடி கைகள் பரபரக்கத்தான் செய்கின்றன ! நெட் போடும் மொக்கை ஒரு பக்கமென்றால் கும்மிடிப்பூண்டியில் ஆரம்பித்து க்வீன் எலிசபெத் வரை நீட்டி முளக்கும் எனது பாணி இன்னொரு பக்கம் - முழுசாய் 42 நிமிடங்களுக்கு ஓடுகிறது Vlog !! So கூடுதலாய் ரெண்டு பரோட்டாக்களையோ ; ஒரு தட்டு உப்புமாவையோ தெம்பாய் உள்ளே தள்ளிக் கொண்டு, ஹெட் செட்களை மாட்டினீர்களெனில் சரியாக இருக்கும் என்பேன் !
இதோ இன்றைய வீடியோ பதிவுக்கான லிங்க் : https://youtu.be/DMvFJX9KTvU
அப்புறம் இன்றைய இரத்தப் படல நிலவரம் :
முகம்மது அராபத், மயிலாடுதுறை - 1
சுரேஷ் நடராஜன், ஆஸ்திரேலியா - 3
சுரேஷ், மதுரை - 1
டோட்டல் : 5 புக்ஸ்
Keep going people !!
அப்புறம் - ஏதோவொரு யுகத்தில் ஜூனியரின் மேற்பார்வையில் துவங்கிய இந்தப் பணி ஒரு மாதிரியாய் நிறைவு கண்டுள்ளது இப்போது !! Hope this will help !
Bye all...see you around !!
Me??
ReplyDeleteMe 3
ReplyDeleteஇந்த முறை இங்கிலீஷ் me 3 thaan win
DeleteHi!
ReplyDeleteமீ 3
ReplyDeleteவந்திட்டேன் சார் 🙏🏼
ReplyDelete.
Yes
ReplyDeleteDear Vijayan Sir and all,
DeleteCheckout Kumudam 24.06.2020 book on page 14. Fantastic review by "Arasu pathilgal" on "Kannana Kanne".
Within first 10, YES!!!
ReplyDeleteAndroid app???
ReplyDelete// Youtube க்கு அப்லோட் செய்வதற்குள் சந்நியாசமே வாங்கிடலாம் போலுள்ளது ! சனிக்கிழமை மாலை என்பதால் நெட் இத்தனை டப்ஸாவாக உள்ளதா ? அல்லது பொதுவாகவே இது தான் லட்சணமா //
ReplyDeleteUploading எப்போதும் குறைவான வேகத்திலேயே இருக்கும் சார் 🙏🏼
.
Editor sir, video converter use panni AV1 format il upload seithal easy ah upload seiyalam. Neengal upload seiyum video epadiyum upload aagum pothe convert aagum athanal than delay. So convert nama panna net balance save pannalam file size kammi aayidum so faster upload.
DeleteBut converter conversion speed depends on laptop speed.
Use any latest freeware video converters
நானும் வந்துட்டேன்.
ReplyDeleteவணக்கம்!
ReplyDeleteI'm back 🔙
ReplyDeleteஒரு கப் ஹார்லிக்ஸ் போட்டுக்கோங்க ; அவசியப்படலாம் !!
Deleteநாங்க பூஸ்ட் குடும்பம் சார். BTW சோடா ரொம்ப நல்லா இருக்கு ஆண்டி என்ற பாசிட்டிவ் review வந்துள்ளது. நாங்கள் mature audience தான், ஆனால் இன்றைய young adults இன்னமும் matured. Vampire diaries பார்க்கும், acceptable graphic violence உடன் கேமிங் செய்யும் அவர்களுக்கு இதெல்லாம் உப்புமா பட்டபாடு. என் கேள்விக்கு இவ்வளவு விவரமாக பதில் சொன்னதிற்கு ரொம்ப தாங்க்ஸ்.
Deleteசெம்ம சார் செம்ம அனு !!!!!
Delete// ஏதோவொரு யுகத்தில் ஜூனியரின் மேற்பார்வையில் துவங்கிய இந்தப் பணி ஒரு மாதிரியாய் நிறைவு கண்டுள்ளது இப்போது !! Hope this will help ! //
ReplyDeleteவாவ் முத்து காமிக்ஸ் ஆப் 😍👍🏼💐
.
இனிமே "ஆப்பு" எங்ககிட்டேயும் இருக்குல்லே"ன்னு உதார் விட்டுக்கலாமில்லயா சார் ?!
Deleteஇரவு வணக்கம்,ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்.
ReplyDeleteWOWWWW!!! நம்ம காமிக்ஸுக்கு Appஆ!! இதோ இன்ஸ்டால் பண்ணிட்டு வாரேன்!!
ReplyDeleteகடந்த வெள்ளிக்கிழமை அனுப்பிய இரண்டு மாத புத்தகங்கள் வியாழக்கிழமை கிடைத்தது. பின்கோடு தவறாக எழுதியதால் எனது பார்சல் பெங்களூரை சுற்றிப் பார்த்து விட்டு வந்தது கோரொனா பற்றி பயமில்லாமல் :-)
ReplyDeleteஇரண்டு நாட்கள் புத்தகங்களை தனிமைபடுத்திய பின்னர் இன்று புத்தகப் பார்சலை பிரித்தேன் குழந்தைகளுடன். எனது மகனும் மகளும் பிரிவோம் சந்திப்போம், சோடா மற்றும் டயபாலிக்கை எடுத்துக் கொண்டார்கள் படம் வரைந்து பழக :-)
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நமது புத்தகங்கள் கைகளில் பார்த்த போது ஆனந்தமாக இருந்தது. வரும் நாட்களில் நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக படிக்க வேண்டும்.
Hi..
ReplyDelete24th
ReplyDeleteவணக்கம் ஆசிரியரே
ReplyDeleteபாவம் உப்மா
ReplyDeleteசார், இந்த நேரத்தில் கேட்க்க்கூடாதுதான்ஆனாலும் மண்டைக்குடைச்சல் அடங்கமாட்டேங்கதே. தயவுசெய்து சொல்லுங்கள், ப்ளீஸ், வாண்டுஸ்பெஷல் அமைப்புஒரு அவுட்லைன் ப்ளீஸ் கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteநமக்கா ஒரு ஆப் சூப்பர் சார்....
ReplyDeletePlay Store ல் Download செய்ய முடியுமா சார்?!
ReplyDeleteMuthuComics - No space in between - search செய்யவும்..
Deleteஆச்சி...
Delete..மசாலாவோட காலையில குழம்பு வாசம் ஆளைத் தூக்கும்.:-)
DeleteG P....!!!! ஹி,ஹி....
DeleteDear Vijayan Sir and all,
ReplyDeleteCheckout Kumudam 24.06.2020 book on page 14. Fantastic review by "Arasu pathilgal" on "Kannana Kanne".
அய்யோ சார்! சோடா முதல் கல்ப் - ல ஆறாம் பக்கம்தான் வந்திருக்கேன்.
ReplyDelete12.23 -ல கறிக்கடைன்னு நீங்க ஆரம்பிச்சுதுல கபால்னு வீடியோவை பாஸ் போட்டுட்டேன்..
இந்த மாச புக்ஸ்ல சோடாவும் ஜேம்ஸ் -ம் பாக்கியிருக்கு ..
படிச்சுபுட்டு மீதி வீடியோவை பாத்துடறேன்..நாளைக்கு நிறைய டைம் இருக்கு...
🤣🤣🤣
Deleteஓ...அது Appஆ.? ஏதோ போட்டோனு அசட்டையா இருந்திட்டேன்.
ReplyDeleteஎன்னைப் போல் ஒருவன்..:-)
Deleteஆப்ஸ் டவுன்லோடிட்டேன்
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்
க்ளாசிக் பாண்ட்.!
ReplyDeleteஎப்போதும் போல ரசிக்க வைத்தது.இந்த ஸ்டைல் ஓவியங்கள் என்னை ரொம்பவே இம்ப்ரஸ் செய்தது.
வீடியோ சூப்பர்ப் சார்.
ReplyDeleteதங்களது விவரிப்புல கதைகள் பின்னணி அருமை!
சோடாவின் பின்புலம் செம.
ஒரு தொடரை தேர்வு செய்ய இத்தனை பிரம்ப்பிரயத்தனம் செய்கிறீர்கள் என புரிகிறது சார்.
2018ல் வரவேண்டிய சோடா இப்ப வந்திருக்கு, செம!
ஆப் டவுன்லோடியாச்சு...!!!🎈🎈🎈🎈🎈🎈
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteCheck properly Sir - it is six books :-)
ReplyDeleteஇரத்தப்படலம் மறு-மறுபதிப்பு பற்றிய தங்களது விளக்கம் அருமை!
ReplyDeleteதாங்கள் சற்றே நையாண்டியாக பேசி வந்ததை அடுத்து சில நண்பர்களுக்கு தங்களது டெடிகேசன் பற்றிய ஐயம் வந்திருக்கும். தங்களது விளக்கம் அதை போக்கிட்டது தற்போது. இனி முன்பதிவுகள் வேகம் எடுக்கும் என நம்புவோம்.
ஒரு புராஜக்ட் ஆரம்பிக்கும் முன்பு அபிப்ராய பேதங்கள் இருப்பினும் அறிவிப்பு வந்த பின் அது லயன்காமிக்ஸ்ஸின் அபிஷியல் புராஜக்ட்; அதன் முழு பொறுப்பு தங்களை சார்ந்தது என நாங்கள் அறிவோம்!
ReplyDeleteஅதை தாங்கள் உறுதி செய்தது மகிழ்ச்சி!
முந்தைய என்பெயர் டைகர்-தயாரிப்பு தரத்தில் இதை உணர்ந்து கொண்டுள்ளோம்.
IOS App எப்பொ சார் ?
ReplyDeleteஇரத்தப்படலம் வெற்றி அடுத்து "Reported Johnny" special of 10 stories collectors edition போடுங்க சார்.
+1111
Deleteஇந்த முரை video தெலிவா இருக்கு.
ReplyDeleteAndroid app-ல் ரீஜினல் செட்டிங் ஏதேனும் இருந்தால், அதை இன்டர்நேஷனல் அல்லது குளோபல் என்று மாற்றவும்.
ReplyDeleteபிரான்ஸ் கூகுள் பிளே ஸ்டோரில் காமிக்க மாட்டேங்குது. அதனால் இன்ஸ்டால் பண்ண முடியவில்லை.
இருப்பினும், வேறு வழியில் ஆப்பை நிறுவிவிட்டேன்.
How to install bro? I am in UK.
DeleteCreate a secondary gmail/Google account using Indian VPN server and indian address, then login play store using that account.
DeleteYou are able to install any indian apps.
Or, you can extract .apk file, and then install it.
Ref: https://www.google.co.in/amp/s/beebom.com/how-install-android-apps-not-available-country/amp/
Thanks bro. Will try this.
Deleteடவுன்லோடு பன்னிட்டேன்
ReplyDeleteவீடியோ 42 நிமிடங்கள் போனதே தெரியவில்லை முடியும் போது சின்ன சோகம் தாக்கியது உங்களை வீடியோவில் பார்க்க இன்னும் நாலு வாரம் காத்திருக்க வேண்டுமே
ReplyDeleteவேணும்னா இதே வீடியோவை வாரா வாரம் போட்டுப் பார்த்துக்குவோம் சத்யா,குறை தீர்ந்து விடும்.....!!!!---)))
Deleteரவியாரே நீங்க சொன்னா சரிதான்
Deleteஇம்மாத புத்தங்களின் ரேட்டிங் என் பார்வையில்
ReplyDelete1.விண்ணில் ஒரு வேதாளம் 10/10
2.திசை மாறிய தேவதை 9/10
3.போர்முனையில் ஒரு பாலகன் 9/10
கைதியாய் டெக்ஸ் 8/10
Getting "This item is not available in your country" message sir.. I am in UK
ReplyDelete57வது
ReplyDeleteதமிழ் காமிக்ஸ்க்கென்றே ஒரு ஆப் வெளியிட்டிருக்காங்க என்று நண்பர்களிடம் கெத்தாக காட்டிகொள்ளலாம்.
ReplyDelete:-)
Deleteஎடிட்டர் சார்!!
ReplyDeleteஅருமையான வெலாக்கு (Vlogன்றதை பேச்சுத்தமிழ்ல சொன்னேன்!).
புத்தகங்களைப் பற்றிய பின்னணியை அருமையா சொல்லியிருக்கீங்க. குறிப்பா 'ஸ்கூபி & ரூபி' பெயர்க்காரணங்களும், Andy என்ற பெயரை தமிழில் எழுதுவதிலுள்ள சிக்கல்கள் பற்றியும் விவரித்திருந்தது - சூப்பர்!!
இறுதியில், அந்த ஈமெயிலுக்கான பதிலில் 'once the Lion logo comes in...'னு ஆரம்பிச்சு நீங்க சொன்ன விளக்கங்கள்ல நிஜமாவே எனக்கு goosebumps ஏற்பட்டது உண்மை!! எழுந்து நின்று ஒரு ஆட்டம் போடத் தோன்றியது - வீட்டம்மா குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த காரணத்தால் அந்த நினைப்பை விட்டொழித்தேன்!! 'இதுதான்டா எங்க லயன் காமிக்ஸு!' என்று பெருமை கொள்ளும்படியாக இருந்தது உங்கள் ஸ்டேட்மென்ட்!! அட்டகாசம் சார்!!
இந்தவாட்டி க்ளாசிக் 007 கதைகளுக்குமே நிறைய வசனம் வரும் ஃபிரேம்களின் அளவை மாற்றியமைத்து மெனக்கெட்டிருப்பதும் - உங்கள் உழைப்பை நினைத்து ஆச்சரியப்படுத்தியது!
இந்த வெலாக்கு பாணி பதிவும் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது! இந்தமுறை உங்களோடு மரத்தடி மீட்டிங் இல்லாமல் போவதை இது கொஞ்சமாவது சரிகட்டும்தான்! எழுதும்போது உங்களிடம் வெளிப்படும் ஹாஸ்யம் வெலாக்குகளில் இல்லை என்பது மட்டுமே ஒரே குறை!!
APPஐ இன்ஸ்டால் பண்ணி மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்ததில் 'அட்ரா சக்கை' என்று விசிலடிக்கத்தோன்றியது!! பின்னணி உட்பட எல்லாமே வெண்மை நிறத்தில் இருந்தது மட்டும் சிறு நெருடலாகப்பட்டது! இந்த முயற்சி மகத்தான வெற்றிபெற எனது வேண்டுதல்கள்!!!
///Andy என்ற பெயரை தமிழில் எழுதுவதிலுள்ள சிக்கல்கள் பற்றியும் விவரித்திருந்தது - சூப்பர்!!///
Deleteசூப்பர்!
செயலரின் அனைத்து கருத்துகளையும் வழிமொழிகிறேன்..!
Deleteஅருமையான vlog சார். சோடா மற்றும் இம்மாத கார்ட்டூன் இதழ்கள் பற்றி நீங்கள் சொன்னது. எல்லாம் அருமை.
ReplyDeleteபோன vlog vida இப்போது நல்ல improvement. 42 நிமிடங்கள் பட் என்று முடிந்தது போல ஒரு ஃபீலிங் எனக்கு.
இந்த வருட மரத்தடி meeting இல்லாத குறையை நீங்கள் பேசும் vlog மூலம் தான் தீர்க்க முடியும். நீங்கள் நேரில் பேசுவது போலவே இருந்தது. நன்றி...
+1. அதே போல் ஏதோ ஒரு ஜூம் மீட்டிங்கோ அல்லது வேறு ஏதாவது வகையிலோ ஒரு வீடியோ மீட் போட்டால் அருமையாக இருக்கும்.
Delete+1
Deleteநமக்கென ஒரு app welcomed decision. Congratulations Junior Editor for your contribution.
ReplyDeleteVLOG பாத்தாச்சு. அதுவுந்தேன் இதுவுந்தேன் ஸ்டைல் பேச்சை கேட்க இனி வருடத்துக்கு ஒரு முறை மட்டுமில்லை. மாதத்திற்கு ஒரு முறை என்பது மகிழ்ச்சி.
ReplyDelete///அதுவுந்தேன் இதுவுந்தேன்///
Deleteஹாஹா சூப்பர்!
ஹாஹா...:-)))
Deleteகைதியை டெக்ஸ் : அயோக்கியத்தனம், அநியாயம், மொள்ளமாரிதானம், அராஜகம் செய்யும் டெக்ஸ்சை இன்னொரு டெக்ஸ் தேடியலைகிற கதை இது. ஆமா, டெக்ஸ் இரட்டை வேடம்.
ReplyDeleteபாங்கில் பணத்தையும், ஊரில் உள்ள கால்நடையையும் ஆட்டைப் போட்டு போறது முதல் டெக்ஸ், அதாவது டெக்ஸ் மேரி உருமாறும் (லாஜிக், லாஜிக்) Mr. P ரெண்டாவது டெக்ஸ் ஒரிஜினல்.
டெக்ஸ் & கோ பி யை பிடிக்க குதிரையைவிரட்டிட்டு போய் டயர்ட்டு ஆவுராங்களோ இல்லையோ, நான் டயர்ட்டு ஆயிட்டேன். இந்த மேரி டெக்ஸ் கதை 4 வந்தா போதும் டெக்ஸ் இமேஜ் டோட்டல் டேமேஜ் ஆயிடும்.
4 பேரு முகரையை நொறுக்குவதும், கையில் மாட்டுபவனைப் போட்டு பந்தாடுவதும், கணக்கு வழக்கில்லாமல் தோட்டக்களை சீற விடுவதும் தான் டெக்ஸ், கொஞ்சம் அதிகப்படியாக சொல்லப்பட்டாலும் இந்த கதையைப் படிக்கும் போது தான் அதன்அருமை புரிகிறது.
எதிரணிக்கு சும்மா லட்டு மேரி கிடைச்சிருக்கு இந்த கதை, ஊருக்கே பாயாசத்தை ஊற்றும் அட்ஷய பாத்திரம்.
களைப்பாய் டெக்ஸ், நானுந்தேன்
MH MOHIDEEN
//களைப்பாய் டெக்ஸ், நானுந்தேன்//
Deleteஎன்னையும் சேர்த்துக்கோங்க சார் !
அசந்த களைப்பில் # நான்..!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅடப்பாவி ப்ராடியஸ் மக்கா.!
ReplyDeleteஇப்படி ஆட்டைக் கடிச்சி, மாட்டைக் கடிச்சி கடைசியிலே டெக்ஸ் வில்லர் தலையிலேயே கைய வச்சிட்டியே.!
பத்து பக்கத்திலேயே இப்படின்னா கதை முழுக்க டெக்ஸ் வில்லரை என்ன பாடு படுத்துவானோ.?
Deleteபத்தாம் பக்கத்தைத் தாண்டி படித்துக் கொண்டிருருக்கிறேன்.
எதுக்கும் பக்கத்துல ஒரு சொம்பு தண்ணீ வச்சுக்குங்க நண்பரே...:-)
Deleteசொம்பு எதுக்குங்க தலீவரே?
Deleteபஞ்சாயத்துல தீர்ப்பு எதுவும் சொல்லப்போறீங்ளா?
விஜயன் சார், வீடியோ பார்க்க ஆரம்பித்து விட்டேன். கடந்த வீடியோவை recordingஐ விட இது மிகவும் பல வகையில் அருமையாக வந்து உள்ளது. பாராட்டுக்கள்.
ReplyDeleteஒரு சிறிய suggestion: உங்களுக்கு பின்னால் உள்ள இரண்டு lightஐ அனைத்து விட்டு அடுத்த முறை record செய்யுங்கள்.
காலங்கார்த்தாலே ரூமைச் சாத்திக்கிட்டு அவரா பேசிக்கிட்டிருக்கார்னு நினைக்கின்ற நம்ம ஆபீஸ் மக்கள், நான் லைட்டையும் அணைச்சுப்புட்டா ஏதோ அவுஜா போர்டில் ஆவிங்க கிட்டே பேசுறதா தீர்மானமே பண்ணிடுவார்கள் சார் !
Delete///உங்களுக்கு பின்னால் உள்ள இரண்டு lightஐ அனைத்து விட்டு அடுத்த முறை record செய்யுங்கள்.///
Deleteமுடிஞ்சா எல்லா லைட்டையுமே ஆஃப் பண்ணிடுங்க சார்! ரெக்கார்டிங்கின்போது லேசா முதுகு நோவுறாப்ல இருந்தா அப்படியே மல்லாக்கப் படுத்துக்கிட்டே கூட பேசலாம்.. யாருக்கும் எதுவும் தெரியப்போறதில்லே! :P
உங்கள் முன் பக்கம் உள்ள lightஐ மட்டும் போட்டு recording செய்யுங்கள்.
Deleteதற்போது இந்த வீடியோவில் உங்கள் தலைக்கு பின்னால் ஒளிவட்டம் தெரிகிறது சார். :-)
தலைக்கு பின் ஒளிவட்டம் தெரிவதால் இனி ஸ்ரீகாந்த் முத்து விஜய சிவபெருமான் என அழைக்கப்படுவாராக
Deleteஇனி வரும் காலங்களில் கொஞ்சம் முகத்தை சிரித்தபடி வைத்து கொஞ்சம் பேசுங்கள். :-)
Deleteஒளீவட்டம் எல்லாம் தானா அமையுறது பரணி சார்...யார் நினைச்சாலும் தடுக்க முடியாது :-)
Delete///அடுத்தமுறை உங்கள் தலைக்கு பின்னே ஒளிவட்டம் இன்னும் 'பளிச்' சென்று இருக்கிற மாதிரி பார்த்துக் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்! எக்ஸ்ட்ரா லைட்டிங் செலவு ஆனாலும் பரவாயில்லை சார். இந்தமுறை உதயசூரியனின் வெளிச்சம் டல்லடிக்கிறது. (நான் அரசியல் ஏதும் பேசலிங்கோ....!)///
Delete24 may 2020 அன்று உங்கள் வீடியோவை பார்த்தபின் என்னுடைய பதிவு இது! அதனை ஞாபகம் வச்சு உங்கள் தலைக்கு பின்னே ஒளிவட்டம் இருக்குற மாதிரி ஏற்பாடு பண்ணதற்கு ரொம்ப ரொம்ப நன்றிங் சார். இன்னும்கூட லைட்டிங்கை அதிகப்படுத்தலாம். கம்பெனிக்கு கட்டுப்படியாகும் பட்சத்தில்!🙏🙏🙏
டார்க் ரூமில் உட்கார்ந்து கொண்டு முகத்துக்கு மட்டும் வெளிச்சம் படற மாதிரி பார்த்துக்கொண்டு திகில் கதைகள் வரும் மாதங்களில் வீடியோ பண்ணலாம்.
Deleteமேலே சொன்னதெல்லாம் விளையாட்டுக்கு. சீரியஸாக யாரும் எடுத்துக்க வேண்டாம். உண்மையில் இரவு எடிட்டரின் வீடியோவை பார்க்கையில் காமிக்ஸ் என்றால் ஏளனமாக பார்ப்பவர்களுக்கும், பேசுபவர்களுக்கும் இதனை போட்டுகாட்ட வேண்டும் என்று டவுன்லோட் பண்ணி வைத்துக்கொண்டேன். இத்தனை உழைப்பும், ஆனால் உழைப்புக்கேற்ற பலனும் கிடைக்காதென தெரிந்துதான் இங்கு இருக்கும் பெரிய நிறுவனங்கள்கூட காமிக்ஸ் பக்கம் மழைக்குகூட ஒதுங்குவதில்லை போலும். உண்மையில் நம் ஆசிரியர் பெரிய மனுஷன்தான். அவர் அவருக்கு சமமாக நம்மையும் நடத்துவதால் அவர் அருமை முழுமையாக உணரப்படாமல் இருக்கிறது போலும்.
Deleteஅப்புறம் எனக்கு ஒரு நீண்டகால ஆசை.ஒவ்வொரு காமிக்ஸூம் தேர்வான பின் அது நம் கையில் வந்தடைவதற்கும் இடையே நடக்கும் பணிகளை பார்க்க வேண்டும் என்பது என்னுடைய பலநாள் கனவு. டெஸ்பாட்ச் பண்ணும் சமயத்தில் எடிட்டரும் அலுவலக தோழர்களும் தீயாய் வேலை செய்வதையெல்லாம் பார்க்க ஆவல். இதெல்லாம் பேராசை என்று தெரிகிறது. இருந்தாலும் அதையெல்லாம் பார்க்க வேண்டும் என்று சிறிய வயதிலிருந்தே இருக்கும் ஆசை இது.
Enakum athe aasai than niraivermuma paakalam....
DeleteKaalam theermanikum...
சார்...எல்லாமே டிஜிட்டல் மாயம் / மயம் என்றான பின்னே, அச்சுக்கு முன்னான அத்தனை பணிகளுமே ஒரு தாலுகா ஆபீசில் அரங்கேறும் மாமூல் பணிகள் போலவே தான் காட்சி தரும் ! முன்னெல்லாம் ஓவியர்கள் அமர்ந்து பணியாற்றுவர் ; கைதேர்ந்த கம்பாசிட்டர்கள் ஈய எழுத்துக்களோடு டைப்செட்டிங் பணிகள் செய்து கொண்டிருப்பர் ; அப்புறமாய் நெகட்டிவ் எடுக்கும் செக்ஷன் பரபரக்கும் ; பின்னர் அதனில் பணியாற்றும் ரீட்டச்சிங் செக்ஷனில் மும்முரமாய் வேலை ஓடும் ; தொடர்வது அச்சு & இறுதியாய் கையால் பைண்டிங் So ஆபீசுக்குள் நுழைந்தால் 'ஜே ஜே' வென திருவிழா போலவே ஒரு பீலிங்கு இருக்கும் ! ஆனால் இன்றைக்கு நான்மட்டும் தான் பழைய பஞ்சாங்கமாய் பேப்பர் & பேனா என்றிருப்பேன் ' பாக்கிப் பணிகள் சகலமும் கணினிகளில் ! பைண்டிங் கூட இப்போதெல்லாம் சொற்ப ஆட்கள் + மிகுந்த இயந்திரங்கள் என்றாகி விட்டது ! டெஸ்பாட்ச் மட்டும் அன்றும்-இன்றும் ஆட்களின் புண்ணியங்களில் தான் !
DeleteATR சார் சும்மா ஃபுல் ஃபார்ம் க்கு வந்து விட்டீர்கள்.... மனதில் இருந்து நீங்கள் எழுதுவது கண்டிப்பாக அடுத்த வாசகர் மனதை தொடும்.
DeleteEditor சார் ஒரு நாள் சிவகாசி வந்து உங்களை அலுவலக நண்பர்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என்பது எங்கள் ஒவ்வொருவரின் ஆசை. அப்போது அப்படியே அலுவலகத்தை சுற்றி பார்த்து விட்டு, உங்களுடன் ஜூனியர் editor udan உங்கள் பணிக்கு பாதிப்பு இல்லாமல் சிறிது நேரம் கழித்து விட்டு வரவேண்டும் என்று நெடு நாள் ஆசை....
குமார் எடிட்டர் சொல்வதுகூட உண்மையே. எல்லாமே இயந்திர மயமாகிவிட்டதால் நாம் எதிர்பார்க்கும் ஒரு திருவிழா எஃபெக்ட் கண்டிப்பாக கிடைக்காதுதான்போல.என்பது தொன்னூறுகளில் இதையெல்லாம் கண்டு களித்திருக்கலாம்.
Deleteஅடிக்கடி கும்மிடிபூண்டியை சேர்த்துவிடுகிறீர்கள் ரெட்ஹீல்ஸீக்கு அருகில் கும்மிடிபூண்டி இருந்தாலும் இரத்தப்படல கோதாவில் கலந்து கொள்ள முடியவில்லையே ஐயா
ReplyDeleteகைதியாய் ஒரு டெக்ஸ்
ReplyDeleteரொம்ப நாளைக்கப்புறம் டெக்ஸ்-ஐ பாக்கறதுல இப்பத்திய பத்தாப்பு கடேசி பென்ச் மாணவன் போல் ரொம்ப சந்தோசம் ..
காலேஜ் படிக்கறச்சே பிரடெரிக் போர்சித் எழுதின A DAY OF THE JACKAL நாவலை படிச்சப்போ இருந்த அதே பரபரப்பு இந்த டெக்ஸ் படிக்கறப்பவும்
( இதே படம் ரொம்ப சுமார்)
எப்பவும் அடுத்தவங்களுக்காக ஓடுற டெக்ஸ் –எப்பாவாச்சும் தனக்காகவும் ஓடறதுண்டு...இந்த கதையிலும் அப்படியாப்பட்ட ஓட்டம்தான் .
மூச்சிரைக்காம ,டெக்ஸ் குதிரை பின்னாடி நானுந்தேன் ஓடினேன் .
ப்ரோட்டியஸ் பத்தி முத கதையிலேயே நிறைய எழுதியாச்சு .
டெக்ஸ் கதையில என்ன நடக்கும்ங்கறது தெரிஞ்சதுதான் ..
எப்படி நடக்குதுங்கறதுலதான் ஆர்வமே !!!!
கதையின் நெருடல் ...
பக்கம் 68,104 - களில் முறையே பார்,மற்றும் புகைவண்டியில் அப்பாவிகள், பெண்கள் ,சிறார்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பினும் டெக்ஸ் & கோவினால் நிகழ்த்தப்படும் துப்பாக்கி சூடு
கதையோட்டத்தில் கவர்ந்தது
பக்கம் 82-ல் தலைபோகும் அவசரம் என்ற நிலையிலும் அடமானவில் இருந்து ட்ராலியில் தங்களை அழைத்து வந்த ஒரு சாதாரண ஊழியரிடம் உடன் உணவருந்த முடியாமைக்கு டெக்ஸ் மன்னிப்பை தெரிவிக்க சொல்வதும் அவரது உணவு ,சௌகரியம் குறித்து அக்கறை கொள்வதுமே
.எப்போதும் போல் என் மனச்சிறையில் கைதியாய் டெக்ஸ்
9/1௦
பின்னிணைப்பு
எப்போதும் டெக்ஸ் பயணிக்கும் பகுதிகளின் புவிப்பகுதியில் ஆர்வமுண்டு
லிட்டில் கொலராடோ நதிக்கரைகளும் ,டோண்டோ ரிம் ,மொகல்லன் ரிம் பகுதிகளும் கவனத்தை ஈர்த்தன
MOGOLLON RIM - உண்மையில் மொகியான் ரிம் என் உச்சரிக்கபப்டவேண்டும்
இணையத்தில் இப்பகுதிகளின் படங்கள் மனதை வசீகரிக்கின்றன
லிட்டில் கொலராடோ என்னும் பெயரில் சிறிய முரண் உள்ளது
கொலராடோ என்றால் சிவப்பு என்று அர்த்தம் ..
தான் சுமந்து வரும் தாதுக்கள் காரணமாக இயற்கை நிறம் லேசான டான் சிவப்பு என்பதால் இப்பெயர் ( கிரான்ட் கான்யான் டேம் விட்டு வெளியேறும்போது பாசிகள் காரணமாக பச்சை)
அறிசானா பகுதியில் கொலாராடோ –வின் முக்கிய பங்களிக்கும் நதிகள் லிட்டில் கொலராடோ மற்றும் டெக்ஸின் பல கதைகளில் துவக்க புள்ளியாக இருக்கும் ஜிலா நதி
டெக்ஸின் பல கதைகளில் இடம்பெறும் ப்ளாக்ஸ்டாப் நகருக்கு வடக்கேதான் கொலராடோ –லிட்டில் கொலராடோ சங்கமம்
லிட்டில் கொலராடோ –வின் அது கொணரும் சுண்ணாம்பு தாதுக்கள் காரணமாகஇயற்கை நிறம் நீலம்
என்றாவது ஒருநாள் டெக்ஸ் பயணித்த பகுதிகளை –ஒருவாடகை ரேன்ஜ் ரோவரில் பார்வையிடஆவல்
இணையத்தில் இருக்கும் படங்கள் அவ்வளவு ஆசையை தூண்டுகின்றன
டெக்ஸ் கதாசிரியர்களுக்கு நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் அக்காலத்திய மேற்கின் லேண்ட்ஸ்கேப் பற்றிய ஆழமான ஞானம் இருக்க வேண்டும் ...
///பக்கம் 82-ல் தலைபோகும் அவசரம் என்ற நிலையிலும் அடமானவில் இருந்து ட்ராலியில் தங்களை அழைத்து வந்த ஒரு சாதாரண ஊழியரிடம் உடன் உணவருந்த முடியாமைக்கு டெக்ஸ் மன்னிப்பை தெரிவிக்க சொல்வதும் அவரது உணவு ,சௌகரியம் குறித்து அக்கறை கொள்வதுமே///
Deleteயெஸ்! என்னையும் கவர்ந்தது!!
///என்றாவது ஒருநாள் டெக்ஸ் பயணித்த பகுதிகளை –ஒருவாடகை ரேன்ஜ் ரோவரில் பார்வையிடஆவல்///
பின்வரிசை ஜன்னலோர சீட்டில் நானும்!
தங்களின் டெக்ஸ் விமர்சனத்திற்கு நன்றிகள் செனாஅனாஜீ..:-)
Deleteசெனா அனா சார் அருமையான விமர்சனம். அந்த நிலப்பரப்பு பற்றிய தகவல்களை மிகவும் ரசித்தேன்.
Deleteஉங்களிடம் இருந்து மற்ற கதைகளின் விமர்சனமும் எதிர் பார்க்கிறேன்....
கெளபாய் கதைகளை அவ்வப்போது கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டு படிப்பது நானும் பொருளர் ஜி! இது தங்களடம் இருந்து கற்றுக் கொண்டது. கதை நடக்கும் இடங்கள் புரிந்து கொண்டாலே கதைல நாமும் ஒரு குதிரையில் பயணிக்கலாம்.
Deleteஅருமையாக விமர்சனங்கள் பண்ணி டெக்ஸ் கதைக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள்.
கண்ணான கண்ணே?&
பிரிவோம் சந்திப்போம்!
----2ன் தங்களது விமர்சனங்கள் ஆவலோடு எதிர் நோக்கி உள்ளேன்.
இப்பொழுது தான் தங்களை சந்தித்து விட்டு வந்தேன் சார்..நன்றி..
ReplyDeleteஒவ்வொரு புத்தக பிண்ணனிகளையும் விவரித்தது மகிழ்ச்சி .அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.இத்தனை நாள் ஸ்கூபி ரூபி ஒரிஜினல் பெயர்கள் என்றே நினைத்து இருந்தேன்.
நாயகர்களுக்கான தங்கள் வேறு பெயர் சூட்டல் என்றுமே நன்று தான்..:-)
ReplyDeleteகைதியாய் டெக்ஸ்...!!!
வண்ண இதழ்கள் இப்பலாம் ஃபேவரைட் என்பதால், இம்மாத இரண்டு வண்ண இதழ்களை முடித்து 3வதாக டெக்ஸைக் கையில் எடுத்தேன்.
ஆண்டாண்டு காலமாக சினிமாவுல பார்த்த இரட்டை வேசக் கதை! நாயகன் போல வேசம் போட்டுகொண்டு கொலையோ, கொள்ளையோ பண்ணிட்டு நாயகனை கோர்த்து விட்டுவிடுவது. நாயகன் இந்த இக்கட்டில் இருந்து எப்படி மீள்வான் என்பதை காலத்திற்கு தகுந்தாற்போல படமாக்குவாங்க!
அதே பாணில வந்துள்ள இம்மாத டெக்ஸ் கதைல ஒரு வித்தியாசம் என்னானா டெக்ஸ் எளிதாக தான் குற்றவாளி இல்லைனு நிரூபித்துடறார்.....!!!
சரினு ப்ரோடியஸை,
தேடறார்....
தேடறார்....
தேடறார்....
....................
....................
காட்டில தேடறார்,
மேட்டில தேடறார்,
பள்ளத்துல தேடறார்,
ரோட்டில தேடறார்,
காரிருளில் தேடறார்,
நகரில் தேடறார்,
சலூன்ல தேடறார்,
கெடைக்க மாட்டறானே ப்ரோட்டியஸ்!
டெக்ஸிற்கு இணையாக புத்திசாதுர்யத்துடன் செயல்படும் Mr.P யை தன்னுடைய பிடிவாதமான தேடலின் முடிவுல மடக்குறாரா என்பதை க்ளைமாக்ஸில் அறியலாம்.
டைகருக்கு ஒரு லக்னர்.............!!!
டெக்ஸுக்கு ஒரு ப்ரோடியஸ்...!!!
"குதிரையில் ஒரு தேடல்"--னு டைட்டில் வெச்சி இருக்கலாம்.
"கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது"- என்பது போல 110பக்கத்தில் டைம்பாஸ்க்கு சரியான தேர்வு!
கதையோடு இழையோடும் நையாண்டிகள் இம்முறை செம டாப்பு! சில சேம்பிள்கள்....
###பக்கம் 19.....,
கேப்டன் பிரிஸ்கோல்: உங்கள் ஜாலத்தை காட்டச் சொல்ல ஆசைதான் வில்லர்! ஆனால் உங்கள் " வைத்தியமுறைகள்" ரொம்பவே ரகளையானவை ஆச்சே"
டெக்ஸ்: மயில்கள் என்றைக்குத் தாமாய் இறகுகளை தானம் செய்துள்ளன ட்ரிஸ்கோல்""
###பக்கம் 62....,
(சின்ன ரயில் விசைப்பொறியில் டெக்ஸ் கோஷ்டி தேடலை தொடரும்)
"""டெக்ஸ்: இந்த தடத்தில் இப்போது ரயில்கள் ஏதும் வராதென்று நிச்சயமாகத் தெரியுமா?
ரெயில்வே ஊழியர்: அப்படி ரயில் வரும் நேரமென்றால் உங்களுடன் நானும் இந்த சிறிய வண்டியில் தைரியமாக ஏறியிருப்பேனா?
கார்சன் மைண்ட் வாய்ஸ்: எங்க மம்மி தவமிருந்து பெற்ற பிள்ளைடா நான்! போட்டுத் தள்ளிடாதே!"""
###பக்கம் 95....,
20 மைல்கள் இருக்கும் உட்ரஃப்க்கு நடந்தே செல்லனும்னு டெக்ஸ் & டைகர் முடிவு பண்ணுவாங்க, அதற்கு கார்சன் டயலாக் செம..
"*கார்சன்: அடங்கொப்புரானே இருபது மைல்கள் கால்நடையாக! நான் செத்து சவமாகி விடுவேனப்பா""
###பக்கம்100....,
ட்ரெயினை பிடிக்க உட்ரஃப்ல வாங்குன (கழுதைகளில்) குதிரைகளில் விரைவர்.
மற்ற மூவரும் முன்னாடி போயிட பின்தங்கும் கார்சன் புலம்பல்,
""ஏய் கிழக்கோட்டானே.. நீயும், நானும் ஒரே வயசாக இருக்கலாம் தான்! ஆனால், அதைக் காட்டிக் கொடுக்க இது தருணமல்ல! ஓடித்தொலை!""
மொத்த விருந்திலியும் ஊறுகாய்தான் சூப்பரன்னு சப்பு கொட்டுற மாதிரி இருக்கு... பாவம் அதிகாரி..
Deleteவீடியோ முழுமையும் பார்த்துவிட்டேன்.
ReplyDeleteஇம்முறை இரண்டு விஷயங்களை நன்றாக இருந்தது என்று சொல்லவேண்டும்.
ஒன்று உங்கள் சட்டை அருமை .
இரண்டாவது உங்கள் பேச்சு குரல் பதிவு நல்ல தரம்.
குறை என்னவென்றால் தலைக்கு மேலே தெரியும் வெளிச்சம் மட்டுமே.
ஆசிரியரின் வீடியோ பதிவில் தெரிவித்த கருத்துக்களில் அதிக இடத்தை எடுத்துக் கொண்டது சோடா திசை மாறிய தேவதை.
அதற்கு முழுத் தகுதியையும் கொண்டது தான் அந்த கதை.
இரண்டாவது கைதியாய் டெக்ஸ் குறித்து ஆசிரியரின் விளக்கம்.
எனக்கு உண்மையில் உள்ளட்டையில் இருக்கும் டெக்ஸ் படுத்துக்கொண்டே சுடும் படம் மிகவும் பிடித்திருந்தது.
ஏன் இந்த படத்தை அட்டைப்படமாக போடவில்லை என்று எண்ணியிருந்தேன்.
ஆனால் இதைப் பற்றி நான் எதுவும் குறிப்பிடவில்லை. ஆசிரியர் இதற்கு எல்லாம் விளக்கம் கூறியிருந்தார்.
மூன்றாவதாக போர்முனையில் பாலகன் கதை பற்றியும் அதன் பின்புலம் குறித்தும் விரிவாக கூறியிருக்கிறார்.
நான்காவதாக ஜேம்ஸ்பாண்ட் கதை.
கதையை பற்றி கூறாமல் அதன் பின்புலம் உள்ள அச்சு அளவு எழுத்துருக்களின் அளவு குறித்து அற்புதமாக விளக்கி இருந்தார்.
ஆசிரியரின் வீடியோ பதிவில் தெரிவித்த கருத்துக்களில் அதிக இடத்தை எடுத்துக் கொண்டது சோடா திசை மாறிய தேவதை.
அதற்கு முழுத் தகுதியையும் கொண்டது தான் அந்த கதை.
இரண்டாவது கைதியாய் டெக்ஸ் குறித்து ஆசிரியரின் விளக்கம்.
எனக்கு உண்மையில் உள்ளட்டையில் இருக்கும் டெக்ஸ் படுத்துக்கொண்டே சுடும் படம் மிகவும் பிடித்திருந்தது.
ஏன் இந்த படத்தை அட்டைப்படமாக போடவில்லை என்று எண்ணியிருந்தேன்.
ஆனால் இதைப் பற்றி நான் எதுவும் குறிப்பிடவில்லை. ஆசிரியர் இதற்கு எல்லாம் விளக்கம் கூறியிருந்தார்.
மூன்றாவதாக போர்முனையில் பாலகன் கதை பற்றியும் அதன் பின்புலம் குறித்தும் விரிவாக கூறியிருக்கிறார்.
கடைசியாக வீடியோவில் அதிக தகவல்கள் கிடைத்தபோதிலும் பிளாக் படிப்பது போன்ற அனுபவம் கிடைக்கவில்லை.
எனக்குமே இதை வீடியோ பதிவாக்கி, அப்புறமாய் Youtube -ல் அப்லோட் பண்ணுவதற்குள் போதும்-போதும் என்றாகி விடுகிறது சார் ! கூட்டிக் கழித்துப் பார்த்தல் - பேப்பரையும், பேனாவையும் எடுத்துக் கொண்டு எழுத உட்கார்ந்தால் எத்தனை நேரம் பிடிக்கிறதோ - கிட்டத்தட்ட அதே அளவு அவகாசம் இதிலும் செலவாகிறது எனும் போது ப்ளாக்கே தேவலாம் என்று தோன்றுகிறது ! அடுத்த மாதம் முதலாய் back to the routine !
Delete// அடுத்த மாதம் முதலாய் back to the routine ! //
Deleteசார். NO. ONCE IN A MONTH PLEASE DO THIS, SOON THIS WILL BECOME EASY FOR YOU LIKE WRITING. NO U TURN PLEASE.
Me too want vlog. Once in a month won't be strenuous editor sir. There is no shortcut for your hard work, writing or vlog will take up the same time but vlog will have a wider reach and appeal.
Delete// Editor sir, video converter use panni AV1 format il upload seithal easy ah upload seiyalam. Neengal upload seiyum video epadiyum upload aagum pothe convert aagum athanal than delay. So convert nama panna net balance save pannalam file size kammi aayidum so faster upload.
DeleteBut converter conversion speed depends on laptop speed.
Use any latest freeware video converters // Editor சார் மேலே நண்பர் ஜெகன் ஜாக் கொடுத்து இருந்த தகவல் ஈஸியாக அப்லோட் செய்ய. அடுத்த மாதம் முயற்சிக்கலாமே....
அனு சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன். Vlog will have a wider reach and appeal.
எந்த ஒரு புதிய முயற்சியும் ஆரம்பத்தில் கடினமே சார். இன்னும் கொஞ்ச நாள் முயற்சிக்கலாமே சார்
ஹி .ஹி ஒரு ஓட்டெடுப்பு போட்டுப்புடுவோமா Blog-ஆ ? Vlog-ஆ ? என்று ! நமக்குத் தான் ஒரு ஓசித் தளம் சிக்கியுள்ளதே !
Deleteமறுபடியும் ஓட்டா... எடுடா பரணி ஓட்டத்தை :-)
Deleteநமது புதிய appஐ பயன்படுத்தி (ஒரு சோதனை முயற்சியாக) 'பிஸ்டலுக்கு பிரியா விடை'யை ஆர்டர் செய்திருக்கிறேன்!
ReplyDeleteபயன்படுத்தியவரையில் அட்டகாசமாக இருக்கிறது! appல் நுழைந்ததுமே 'your account'ஐ கிளிக் செய்து நம் பெயர், முகவரி போன்றவற்றைக் கொடுத்து register செய்துகொண்டானபின், வேண்டுமென்ற புத்தகத்தை ஆர்டர் செய்யவேண்டியது தான்!!
payment optionல் 'paytm'ஐ க்ளிக் செய்தால் debit card, credit card, BHIM UPI, net banking - என்று எல்லா optionனும் வருகிறது!! இதை முடித்துவிட்டால் order number மற்றும் invoice சகிதம் சுடச்சுட ஆர்டர் ரெடி!!
மேற்கூறிய சமாச்சாரங்கள் எல்லாமே ஆன்லைன் வர்த்தகத்தில் புழக்கத்திலிருக்கும் வழக்கமான முறைகளே!! புதிதாய் ஆர்டர் செய்ய முற்படும் நண்பர்களுக்காகக் கொஞ்சம் விளக்கமாய் சொல்லியிருக்கிறேன்- அவ்வளவே!!
நம் மொபைல் ஃபோன் ஸ்கிரீனில் பல்வேறு appகளோடு நமது லயன் காமிக்ஸ் லோகோவையும் பார்த்திடுவது ஒரு புதிய, பரவச அனுபவம்! :)
சூப்பர். ரொம்ப நாளாக paytm ஆப்ஷன் இல்லையென்று கவலைப்பட்டது ஒரு வழியாய் solved. தகவலுக்கு நன்றி விஜய் அண்ணா.
Deleteஉண்மை தான் விஜய்.
Deleteமொபைல் சாதனத்தில் லயன் லோகோ பார்ப்பது பரவசமே...
DeleteMe too
DeleteMee three
Deleteஅப்புறம் இன்றைய மாலை 5 மணி புக்கிங் நிலவரம் :
ReplyDeleteகாமிக் லவர் ராகவன் - 1
(ஆர்டர்கள் இரு முறை வந்துள்ளதாய்க் காட்டுகிறது ; ஆனால் 2 புக்ஸுக்கா - அல்லது ஒரே புக்கா ? என்பதை நாளை தான் பார்த்தாக வேண்டும் !
Today's டோட்டல் : ஒன்றே ஒன்று ; கண்ணே கண்ணு !
Sir - two attempts - but one booking only. The first transaction did not go through due to my credit limit settings. I had to change it to allow the second attemot.
Deleteகடைசியாக வீடியோவில் அதிக தகவல்கள் கிடைத்தபோதிலும் பிளாக் படிப்பது போன்ற அனுபவம் கிடைக்கவில்லை//
ReplyDelete+1. எடிட்டர் எழுதும் போது சரளமாக வரும் நகைச்சுவை மிஸ்ஸிங் ஆக எனக்குத் தோன்றியது. புத்தக விழாக்களில் நேரில் அவரை சந்தித்து பேசும் போது இருக்கும் இயல்பு இன்னும் அவருக்கு கேமரா முன்னாடி வரலைன்னு நினைக்கிறேன். கேமராவுக்கு புதுசு என்பதாலான ஆரம்ப கூச்சங்கள் அகன்ற பிறகு அதெல்லாம் சரியாயிடும் பாருங்க.
அடடே well said ஷெரீஃப். நானும் அப்படித்தான் ஃபீல் செய்தேன். ஒரே ஒரு விசயம் மிஸ்ஸிங் என்னவென்றால் எழுத்தில் அவர் கொண்டு வரும் நகைச்சுவை மட்டுமே...
Deleteவாசகர்களின் க்ரூப் போட்டோவை வெச்சு பேசுனா பழக்கமாயிடுமோ.. 🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️
Deleteஆசிரியர் அவர்களுக்கு,
ReplyDeleteரத்தப் படலம் வாசகர்கள் கேட்பதற்காக மறுபதிப்பு செய்வதற்கு ஒத்துக் கொண்டீர்கள் நல்லது, ஆனால் அது ஏன் 90 நாட்களுக்குள் முடித்தே ஆக வேண்டும் என்றும் பணத்தை முழுவதுமாக அனுப்பவேண்டும் ஒரே தவணையில் என்றும், மூன்று மாதத்துக்குள் முடித்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடிகளும் ஏன் தருகிறார்கள்.
முன்பு வெளிவந்த ரத்தப் படலம் புத்தகத்தை வாங்க முடியாதா எங்களுக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.covid 19
காரணமாக எங்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு தான் வருகிறது இந்நிலையில் எங்களுக்கு கால அவகாசம் கொடுத்தால் நாங்களும் வாங்குவோம் அல்லவா.
எங்களுக்கு முன்பதிவு செய்து கூடுதல் மாத அவகாசமும் தவணை முறையும் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
ReplyDeleteநான்காயிரம் ரூபாய் உள்ள புத்தகத்துக்கு நீங்கள் தரும் காலக்கெடு மிகக்குறைவு என்று உங்களுக்குத் தோன்றவில்லையா, தயவுசெய்து முன்பதிவு செய்ய கூடுதல் அவகாசம் தவணை முறையில் வேண்டும் என்று மறுபடியும் கேட்டுக்கொள்கிறேன்
ReplyDeleteஒருவருட கால அவகாசம் கொடுக்கப்பட்டு - இரண்டாயிரத்து சொச்சமே விலையில் - கொரோனா எதுமில்லாத வசந்தநாட்களில் - கடந்தமுறை வெளியானபோது அதை நீங்கள் முன்பதிவு செய்து வாங்கிவிட்டீர்களா, இல்லையா நண்பரே?!
Deleteஒரு டவுட்டு தான்!
மேற்கூறிய என் கேள்வி உங்களை நையாண்டி செய்யும் நோக்கத்தோடு கேட்கப்பட்டதல்ல! நிச்சயமாக அல்ல!
Deleteஉங்கள் ஆதங்கத்தைப் படித்தபோது இயல்பாக ஏற்பட்ட ஒரு சந்தேகமே!!
மனநெருக்கடி இல்லாதவர்கள் மட்டுமே உங்கள் புத்தகங்களை வாங்கினால் போதுமா, அவகாசம் வேண்டும் என்று சேர்க்கும் எங்களைப் போன்ற வாசகர்களுக்கு உங்களது பதில் என்ன
ReplyDeleteபதிவுகளைப் பொறுமையாய்ப் படியுங்கள் ; இன்றைய சூழலில் செலவினங்களின் ஸ்திரத்தன்மையின்மையை அப்படியே கொஞ்சம் சிந்தனைகளுக்கு கொண்டு வாருங்கள் ; இறுதியாய் இன்னொரு ஆறே மாதங்களிலோ ; எட்டே மாதங்களிலோ புதுச் சந்தாக்களின் திட்டமிடல்கள் காத்திருக்குமென்பதையுமே கருத்தில் கொள்ளுங்கள் - நீங்கள் தேடும் பதில் கிட்டியிருக்கும் நண்பரே !
Deleteஇப்படி வைத்துக் கொள்வோமா ? ஒரு வருஷ அவகாசம் புக்கிங்கிற்கு ; அன்றைய பொழுதில் மறுபடியும் ஒரு விலை நிர்மாணம் ; கூடியிருக்கக்கூடிய செலவினங்களை ஈடு செய்திட அன்றைக்கு இன்னொரு நானூறோ ; ஐநூறோ ; maybe இன்னும் ஜாஸ்தியோ அனைவரிடமும் வசூல் செய்துவிட்டு தயாரிப்பில் இறங்கிட எனக்கொரு 3 மாத அவகாசம் ! ஆக 2022-ல் - அதாவது முத்து காமிக்ஸின் பொன் விழா ஆண்டின் துவக்கத்தில் இந்த இதழ் கொட்டாவி பறக்க உங்களிடம் வந்து சேரும் !
ரசிக்குமென்று தோன்றுகிறதா சார் ?
பண நெருக்கடி என்பது தவறாக மனநெருக்கடி என்று வந்துவிட்டது பண நெருக்கடி என்று படிக்கவும்
ReplyDelete2 தவணைகள் தரலாம் தான் சார் ; ஆனால் இரண்டாம் தவணைகளை வசூலிக்க ஒவ்வொரு முறையும் நம்மவர்கள் எடுக்க அவசியமாகிடும் காவடிகளை நான் மட்டுமே அறிவேன் ! சங்கடமூட்டும் அந்த அனுபவங்கள் வேண்டாம் என்பதாலேயே மொத்தமாய் 89 வது நாளில் செலுத்தினால் கூடப் போதுமென்று சொல்லியிருந்தேன் ! தவணைகள் இருந்தாலே முடியுமெனில் 2100 + 2000 என்று ஏற்றுக் கொள்ள நான் தயாரே - ஆனால் இரண்டாம் தவணைகளில் தாமதங்கள் நேரின் மொத்தத் திட்டமிடலும் ஆட்டம் காணும் ஆபத்துள்ளது என்பதை புரிந்து கொள்ளும் பட்சத்தில் ! 300 க்கு 300 தேர்வாகிடா பட்சம் பாதிக் கிணற்றையே தாண்டியிருப்போம் என்பதை அழுத்தமாய்ப் பதிவு செய்து கொள்கிறேன் !
Deleteஇந்த சிக்கல் வரக்கூடும் என்று எதிர்பார்த்திருந்தேன் சார். இம்முறை XIII புக்கிங் என்பது நிஜமாகவே சந்தோஷத்திற்கும் சங்கடங்களுக்கும் இடையிலான ஒரு கயிற்றில் ஆடும் ஆட்டமே சார் !
Deleteநானுமே அறியாததல்ல சார் ; ஆனால் மணந்தால் மஹாதேவியே தான் என்று பிடிவாதங்களைச் சமாளிக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை ! யூரோ அடுத்த ஆறு மாதங்களில் எங்கே நிற்குமென்றோ ; டாலர் விலைகளும் அவற்றின் பிரதிபலிப்பாய் பேப்பர் விலைகளும் எங்கே நிற்குமென்றோ யூகமாய்க் கூட ஆரூடம் சொல்ல பயமாக இருக்கும் இத்தருணத்தில் நெடுங்கால புக்கிங் அவகாசம் தந்திட வாய்ப்பில்லையே !
DeleteAnd more than anything else - வழக்கமான விசாலத்தில் இல்லாவிட்டாலுமே ஒரு யதார்த்த சந்தாத் தொகையினையும் அறிவிக்கும் நேரத்திலும் இந்த இரத்தப் படல மண்டகப்படிகளை நடத்தி - இதுவா ? அதுவா ? என்ற தர்மசங்கடங்களுக்கு நண்பர்களை ஆழ்த்திடப் பிரியமில்லை !
So the sooner the better என்று நினைக்கத் தோன்றியது !
// So the sooner the better //
Delete+1
If it boiled down to a situation where people would need to choose between an expensive reprint or an year's subscription - I would for sure wish for people to opt for the latter !
Delete//I would for sure wish for people to opt for the latter !//
DeleteMy heart aches
My eyes do bleed
சார் ஒரே ஒரு சிறிய suggestion. போன வருடம் வந்த ரிங்கோ 50/50 தான் பெற்றது. இந்த வருடம் அதற்கு பதிலாக சோடாவின் இன்னொரு சாகசத்தை வெளியிட முடியுமா?????
ReplyDeleteChick Bill : நீங்கள் யாரோ தெரியவில்லை.
ReplyDeleteஒன்று செய்யலாம் : ஈரோட்டில் மூன்று பாக வண்ண-மறுபதிப்பு வாங்கிய சில நண்பர்களுக்கும் சேர்த்த appeal யாதெனின் :
நண்பர்களே நீங்கள் ஈரோட்டில் இரு பதிப்புக்கள் வாங்கி இருந்தாலோ அல்லது ஒரே copy என்றாலும் கூட - இப்போது உங்களால் பதிவு செய்து வாங்க முடியும் பட்சத்தில் உங்களின் ஈரோடு copyயை பழைய விலைக்கு ஒரே தவணையில் இப்புத்தகம் இல்லாதவர்களுக்கு கொடுக்க முடிந்தால் சிறப்பாக இருக்கும்.
Chick Bill : XIII மீதுதான் உங்கள் காதலென்றால், 90ல் 300 சாத்தியமாகிட்டால், 90 நாட்களுக்குள் உங்களால் பணம் செலுத்த இயலவில்லை என்றால் எனது ஒரே முறை படிக்கப்பட்டு பிளாஸ்டிக் wrapper மற்றும் ஸ்லிப் கேஸ் சகிதம் அப்படியே இருக்கும் ஈரோட்டில் வெளியான புத்தகம் உங்களுக்கு பாதி விலைக்கே தருகிறேன் - ஒரு முறை பிரித்துப் படிக்கப்பட்டதால் பாதி விலை - deal ??
நன்றி ஜி, கண்டிப்பாக வாங்கிக் கொள்கிறேன்
DeleteDeal ji
Deleteஜூப்பர் !
Deleteராகவன் சார் அருமையான தீர்வு. நல்ல மனம் இருந்தால் எதுவும் சாத்தியமே என்று உணர்த்தியது.
DeleteChick bill சார் all is well.....
Dear Editor,
ReplyDeleteமுதலில் வந்த BW சிங்கள் XIII தொகுப்பும் சரி பின்னர் வந்த ஈரோடு கலர் தொகுப்பும் சரி - எழுத்துப் பிழைகள் / அச்சுப் பிழைகள் சற்றே சிரமமில்லாமல் கண்டெடுக்கும்படி இருந்தது சார். இம்முறை ஒரு Landmark (and so called 7 வருடத்துக்கு கடைசீ பதிப்பென்பதால் ;-p :-) :-D ) - அடுத்த 90 நாட்களில் கொஞ்சம் செலவு செய்து பிழைகளை இயன்றவரை நீக்கிடுங்களேன் ?
அப்படியே .. ஹி ஹி .. XIII என்ற பெயரினை வெளி அட்டைகளிலும் - 'குத்துப் படலம்' என்ற 'நம்மூர்' பெயரை உள்ளட்டையிலும் (கவனமாகப் படிங்கோ சார் !!) பதித்தால் ('ள்' அல்ல !!) சிறப்பு சார் !!
இப்புடி பண்ணுவோமே - ;இ..ப. ஆர்வலர்களாய் ஒன்று சேர்ந்து எழுத்துப் பிழைகளை கண்டறிந்து ஒரு மின்னஞ்சலில் தெரிவித்தால், சரி செய்த கையோடு 2 புக்ஸ் நம் அன்புடன் வழங்கிடலாமா சார் ?
DeleteWill do that sir. Such a nice gesture from you...
Deleteநானும் ரெடிசார்..!!
Delete3விதமாக வந்த எல்லா இரத்தப்படலங்களும் ஏற்கெனவே இருக்கிறது. ஏதாவது ஓரு வகையில் உதவ முடிவது மகிழ்ச்சி!
நானும் ரெடியே சார்.
Deleteப்ளூகோட்ஸ்...!
ReplyDeleteஹா...ஹா...ஹா..செம ரகளையான கதை சார்.நிறைய இடங்களில் வாய் விட்டு சிரிக்க வைத்தது.
சூப்பர்.!சூப்பர்.!
அதுவும் அந்த குதிரை ஹிஹிஹி.....
Deleteசார்லி சலூன் களேபரங்கள்.ரூபிக்காக கர்னல் ஆப்பிள்டன்னை வார்த்தையால் விளாசும் ஸ்கூபி.பக்கத்திலேயே ஜார்ஜ் எமிலியோட சகோதரன் என்றுணர்ந்து மோன நிலையில் ரூபி.க்ரே உல்பிடம் போய் ஆளாளுக்கு 'நான்தான் சுட்டேன் நான்தான் சுட்டேன் 'வாலெண்டியராக வாக்குமூலம் தருவது.டென்ஷனாகும் கர்னல் மூவரையும் இடமாற்றம் செய்யும் இடம். 22வது குதிரைப்படையின் கீர்த்தியை? போர்க்களத்திலேயே வகுப்பெடுக்கும் காட்சி.ஸ்கூபியை அப்படியே பின்பற்றும் குதிரை.இதெல்லாம்.. வேற..வேற லெவல்.நினைத்து நினைத்து சிரிக்கலாம்.
Deleteஹா...ஹா....ஹா.
சோடா நன்றாக இருக்கிறது என்று நிறைய நண்பர்கள் சொல்லிவிட்டனர்....
ReplyDeleteஅடுத்த வருடம் இரண்டு ஸ்லாட் பிளீஸ்
இப்புடி பண்ணுவோமே - ;இ..ப. ஆர்வலர்களாய் ஒன்று சேர்ந்து எழுத்துப் பிழைகளை கண்டறிந்து ஒரு மின்னஞ்சலில் தெரிவித்தால், சரி செய்த கையோடு 2 புக்ஸ் நம் அன்புடன் வழங்கிடலாமா சார் ?//
ReplyDeleteகரும்பு தின்னக்கூலியா நாங்க எப்பவுமே தயார். என் பெயரை முதலில் சேத்துக்கங்க சார்....
விஜயன்சார் புரூஃப் ரீடிங் பார்க்க நான்
ReplyDeleteரெடி.
தெய்வங்களே .கல்யாணம் நடப்பது உறுதியாகட்டுமே முதலில் !
ReplyDeleteப்ளூகோட்ஸ்..
ReplyDeleteபக்கம் 45ல்.கர்னல் தன் மகன் ராணுவத்தை விட்டு விலகப் போவதாக எழுதிய கடிதத்தைப் படித்து வருங்கால 'செனட்டர் ஆப்பிள்டன் 'எனப் புளங்கிதம் அடைவதும், அருகிலிருக்கும் எமிலி ஒருபடி முன்னே போய் 'வருங்கால பிரசிடெண்ட் 'குதூகலம் அடைவதும் ஓரளவு உண்மையே.பெரும்பாலான அமெரிக்க அதிபர்கள் முன்னாள் ராணுவத்தினரே.!
ReplyDelete//கரும்பு தின்னக்கூலியா நாங்க எப்பவுமே தயார். என் பெயரை முதலில் சேத்துக்கங்க சார்....//
//விஜயன்சார் புரூஃப் ரீடிங் பார்க்க நான்
ரெடி.//
இப்பக் கூட இலவசமா புக்ஸ் வேணாம்..
சும்மாவே பண்ணி தரோம்னு சொல்ல மனசு வர்லியே priyatels?
எடிட்டர் அதுக்காக விட்ற போறதில்லை ..
கொடுத்தே தீருவார்...
நீங்க இலவச புக் வேணாம்னு சொன்ன திருப்தியாவது மிஞ்சியிருக்கும்..
இலவசமாக இல்லை நண்பரே அன்புடன்...
Deleteநீங்க இலவச புக் வேணாம்னு சொன்ன திருப்தியாவது மிஞ்சியிருக்கும்..
ReplyDelete/உங்களுக்கு அதுவே மகிழ்ச்சி தரும் என்றால் எனக்கு சம்மதமே....
//உங்களுக்கு அதுவே மகிழ்ச்சி தரும் என்றால் எனக்கு சம்மதமே....//
Deleteகொடுக்கப் போவது எடிட்டர்..
பெறப்போவது நீங்கள்..
இதில் என் மகிழ்வு என்று ஏதுமில்லை..
பணியாட்கள் குறைவாய் இருக்குமோ ?
வழக்கமான சந்தா பணிகளின் ஊடே ரத்தப்படல பிழை திருத்த பணிசெய்வோர்
இல்லையோ என்ற ஐயத்தில் எழுப்பபட்ட வினா அது..
என்னுடைய சந்தோஷம் குறித்து மெய்யாகவே உங்களுக்கு அக்கறை இருப்பது உண்மையாயின் அது கீழ் வருவதே..
சகோதரரே !!
ரத்த படல பிழை திருத்தும் பணியை மேற்கொண்டு ( அதை உங்களால் செவ்வனே செய்ய இயலும்)
இரண்டு ரத்த படல புத்தகங்கள் பெற்று கொள்ளுங்கள்..
அது உங்கள் உழைப்புக்கானது..
ரத்த படல பிழை திருத்தும் பணியை துவங்கும்போதே
உங்களுக்கான,இயலாத உங்கள் ஒரு நண்பருக்கான 2021 - க்கான 2 சந்தாவை செலுத்தி விடுங்கள்..
பின்னது எனது சந்தோஷத்திற்கானது
செய்வீர்களா?
சிறப்பாக செய்துவிடலாம் நண்பரே....
Deleteநன்றி ப்ரோ!! இதை விட பேரானந்தம் ஏதுமில்லை!!
Deleteபழனி..யதார்த்தம் என்றும் ஒரு உலகம் உண்டென்பதை இங்கு வரும் போது ஒன்றுக்கு நாலுவாட்டி நினைவுபடுத்திக் கொண்டே வாருங்களேன் !
Deleteநண்பர் கூறியது நடந்தால் நான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன் சார்....
DeleteKumar.STV விட்டுட்டிங்களே. அவங்களையும் சேத்துக்கங்க முதல்ல ஓகே சொன்னதே அவங்கதான். ஒரு வேளை எங்களுடைய கமெண்ட் மட்டும்தான் உங்களுக்கு பளிச்சென தெரிகிறதோ.. .
ReplyDeleteடியர் விஜயன் சார் iii
ReplyDelete" இரத்தப் படலம் " - மறு (வண்ணப் ) பதிப்பு வருவதில் சந்தோசமே.
நான் முன்பே இதைத் தான் ஒரு தொகையை நிர்ணயம் செய்து கொண்டு இரண்டு இரண்டு பாகங்களாக வெளியிடச் சொன்னேன்.
வாங்காமல் தவறவிட்டவர்கள் வாங்கிய மாதிரியும் இருக்கும்." புத்தகத் திருவிழாவில் "நமதுஸ் டாலுக்கு x 111-யின் விளம்பர போஸ்டர் மூலம் ஒரு பிரகாசமான ஒளிவட்டம் கிடைக்குமே என்று எதிர்பார்த்தேன்.
பரவாயில்லை தாங்கள் வேறு ஒரு நோக்கம் + புத்தகத் திருவிழா - வாய்ப்பும் குறைந்து வருகிறது. எனவே இந்த முடிவெடுத்துவிட்டீர்கள்.
இப்போதும் என்னுடைய ஒரு ஆலோசனை - " இரத்தப் படலம் " வண்ண பதிப்பை வாங்கலாமா வேண்டாமா என்ற ஊஞ்சலாட்டத்தை ஒரு முடிவிற்கு கொண்டு வர இரத்தப் படலம் "முதல் பாகத்தை "மட்டும் வண்ண இதழாக வெளியிடுவதே.
ஏற்கனவே "சந்தாதாரருக்கு "ஆர்ச்சி வண்ண இதழ் என்று சொன்னீர்கள். அதற்கு பதிலாகவும் + வேறு ஒரு இதழை தியாகம் செய்து விட்டு - ஆகஸ்டு மாதம் " இரத்த படலம் பாகம் I" யை வெளியிட்டால் _ அதனுடைய பிரதிபலனாய் கண் டிப்பாக 300 - யைத் தாண்டியும் முன்பதிவு கிட்டும். அதன் பின் இத்துடன் - இரத்த படலத்திலிருந்து - விடுபட்டு அடுத்த Project -க்கு செல்லலாம்.சார் 1 iii
சார்... போகும் ஊரை ; பயண மார்க்கத்தை ; பயண வகுப்பை ; பயண தேதியை என சகலத்தையும் நிர்ணயம் செய்து வீட்டைப் பூட்டி விட்டு ரயிலடிக்குக் கிளம்பவும் செய்தாச்சு ! மறுபடிக்கும் புதுசாய் ஒரு திட்டமிடலெல்லாம் இனி சாத்தியமே கிடையாது என்பதால் வேண்டாமே புதிது புதிதாய் திட்டமிடல்கள் !
Deleteரைட்டோ - தப்போ ...
the planning phase is over ; it is now the time to carry out those plans !
எடிட்டர் கையால் பரிசு வாங்கும் சந்தோஷம் கூட எங்களுக்கு வரக்கூடாதா.?
ReplyDeleteஎந்த ஒரு முயற்சியையும் நாங்கள்
செய்யக்கூடாது என்று செனா அனா
விரும்பினால் அப்படியே நடக்கட்டும்.
//எடிட்டர் கையால் பரிசு வாங்கும் சந்தோஷம் கூட எங்களுக்கு வரக்கூடாதா.?//
Deleteஉச்சத்தில் கர்ணன் இருந்தபோது பரசில் பெற்ற பயனாளிகள் பல பேர்.
அச்சு முறிந்த தேரில் உதிரம் வழிய கர்ணன் இருக்கையில் தானம் கேட்ட அந்தணனாக நீங்கள் ஆக வேண்டாம் என்ற ஆதங்கத்தில் அப்படி எழுதினேன்.
//எந்த ஒரு முயற்சியையும் நாங்கள்
செய்யக்கூடாது என்று செனா அனா
விரும்பினால் அப்படியே நடக்கட்டும்//
நான் உங்கள் மேல் குரோதம் ஏதும் கொள்ளவில்லை அன்பு நண்பரே.
சித்திரக்கதை ஒன்றை -காமிக்ஸ் -ன் இதிகாசம் என போற்றப்படும் -ஒன்றை நீங்கள் கேட்பதால் காமிக்ஸ் மேல் அன்பு கொண்ட யாருமே தங்களை - தங்களை சார்ந்தோரை கோபிக்க போவதில்லை..
அது எப்படி இயலும்?
அறிதுயில் புரிந்து அவனியை ரட்சிக்கும் விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரின் அருள்மொழிகளை உணர்ததவே விரும்புகிறேன்..
காமிக்ஸ் மீதான அன்புக்கும் மோகத்துக்கும் நிறைய வித்தியாசமுள்ளது..
நீங்கள் காமிக்ஸ் மேல் வைத்திருப்பது மோகம் அன்பு நண்பரே..
அன்பு கருணையிலிருந்து பிறப்பது..
மோகம் அகங்காரத்தில் இருந்து பிறப்பது.
மகாபாரத யுத்தம் தோன்ற சகுனியோ ,துரியோதனனோ காரணம் அல்ல..
தன்னை சுற்றியுள்ள தர்மம் ,தன்னுடைய வாக்கு ,தனது நட்பு என எண்ணி உலகின் பொது தர்மத்தை கருத்தில் கொள்ளாத பீஷ்மர்,துரோணர்,கர்ணன் ஆகியோர் உரிய நேரத்தில் தகுந்த தீர்மானம் எடுக்காததே..
நீங்கள் ,பழனிவேல்,இலங்கை வாழ் மருத்துவர் போன்றோர் இவர்கள் மூவரை ஒத்தவர்கள்..
ரத்த படலம் என்னும் தங்களை சுற்றியுள்ள தர்மத்தை கைவிட்டு
தமிழ் காமிக்ஸ் வருங்காலம் எனும் பொதுநலனை ஸ்வீகரியுங்கள்..
என்பதே எனது வேண்டுகோள்..
காலம் மாற்றங்களை ஏற்படுத்த வல்லது..
மாற்றங்களோடு இயைபு கொள்பவரே ஜீவிக்க இயலும்..
கோவிட்-19 கால மாற்றத்தின் ஒரு அங்கம்..
மாற்றம் பெறுங்கள் என வேண்டவே செய்கிறேன்..
சத்தியம்,ஞானம் இவற்றின் உருவமான வாசுதேவ கிருஷ்ணன் - ன் வாய்மொழிகளையே இங்கு சொல்லியிருக்கிறேன்..
உங்கள் யாருக்கும் நான் எதிரியுமல்ல..
@ செனாஅனா
Deleteமிக அழகான, தெளிவான விளக்கம்!! அர்த்த ராத்திரியிலும் கூட எழுந்து நின்று கைதட்டத் தோன்றியது!!
செனா அனா..
Deleteதேங்காய்கடை தேனப்பனிடம் பேரம் பேசும் வெங்கல்ராவை நினைவிருக்கிறதா...??
சரி.. ஆர்ர்ரூப்பாய்..!
என் கண்ணுக்கு நீங்கள் தேங்காய்கடை தேனப்பனாகத் தெரிகிறீர்கள்..!
ஆர்ர்ரூப்பாயை தாண்டி யாரும் வரப்போவதில்லை.!
எத்தனை மகத்துவமான உவமானங்கள்.. உபதேசங்ககள்.. நீங்கள் நந்தகோபன் குமரன்தான்.. ஆனால் சொல்வது அர்ச்சுனனிடம் அல்ல என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்..ப்ளீஸ்.!
//சரி.. ஆர்ர்ரூப்பாய்..!//
Deleteவாய் விட்டு சிரித்தேன்..:-)))
நண்பர்கள் பற்றி இன்னமும் நம்பிக்கை உள்ளது என வைத்து கொள்ளுங்களேன்.
தவிர
பலன்களின் மேல் பற்று அற்று கடமையை செய்வதும் கர்ம யோகத்தின் ஒரு அங்கம் என வைத்து கொள்ளலாம்..!!!!
///பலன்களின் மேல் பற்று அற்று கடமையை செய்வதும் கர்ம யோகத்தின் ஒரு அங்கம் என வைத்து கொள்ளலாம்..!!!!///
Deleteதெய்வீகம்...
சரணடைந்தேன் செனா.!
// காலம் மாற்றங்களை ஏற்படுத்த வல்லது..
Deleteமாற்றங்களோடு இயைபு கொள்பவரே ஜீவிக்க இயலும்.. //
எதார்த்தம் இதுவே....
வியப்பு என்னவெனில் இதை அடியொற்றிய வார்த்தைகளையே கிருஷ்ணர் பீஷ்மரிடம் சொல்வது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்..
அது எனக்கு பிடித்த காட்சியும் கூட...
///உங்கள் யாருக்கும் நான் எதிரியுமல்ல..///
Deleteஇதை நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதல்ல செல்வம் அபிராமி சார்.பல ஆண்டுகளாய் இத்தளம் அதனை உணர்ந்துதானே இருக்கிறது.
கடந்த சில நாட்களாக இரத்தப்படலம் சம்பந்தமான உங்கள் பதிவுகள் அனைத்தும் எதனை உணர்த்துகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல நண்பர்களால் உணரமுடியும் சார்.எனக்கே புரிகிறது. நண்பர்களுக்கு புரியாதா? உங்கள் நோக்கம் நிச்சயம் நிறைவேறும். நிறைவேற வேண்டும்.
/* எத்தனை மகத்துவமான உவமானங்கள்.. உபதேசங்ககள்.. நீங்கள் நந்தகோபன் குமரன்தான்.. ஆனால் சொல்வது அர்ச்சுனனிடம் அல்ல என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்..ப்ளீஸ்.! */
Deleteநச் !!
எனக்கு தெய்வமகன் அண்ணன் சிவாஜி சொல்லுவாரே அதான் ஞாபகம் வருது !
'டாக்டேர் !! டாக்டேர்ர்ர்ர் !!! இப்டி இ.ப. நாலாம் பதிப்பாய் வாங்க துடிப்பாயிருப்பவரிடம் நீங்க மஹாபாரதம் பேசலாமா டாக்டேர்ர்ர்"
(இவனைப் பார்றா ? சந்தாவும் கட்டிப்புட்டு சந்துலயும் சிந்து உடறான் ?!!)
//பலன்களின் மேல் பற்று அற்று கடமையை செய்வதும் கர்ம யோகத்தின் ஒரு அங்கம் என வைத்து கொள்ளலாம்..!!!!//
Deleteசெனா அனா சார்,
அருமை அருமை...
(எழுந்து நின்று கைதட்டும் படங்கள் ஓராயிரம்)
கண்ணன் சொன்னதே எனது வார்த்தைகளும்...
நல்லதே நடக்கும் என்று நம்புவோம்,
அது கொரோணா-வாக இருக்கட்டும், இ.ப புராஜெக்ட்டாக இருக்கட்டும்..
செனா. .. நிச்சயமாக இப்புத்தகத்த வாங்கவிருப்போர் பிற கதைகள் வாங்காம இருக்கப் போவதில்லை... அது போல பிற புத்தகங்கள் முன் பதிவில் இத்தகைய ஈர்ப்ப காட்டுமா இந்நேரத்தில் என்பதிலும் ஐயமில்லை... இங்கே கர்ணனிடம் ௨ண்மைத் தேவைக்காக கடைசியாய் கையேந்தி நிற்பது இப கேட்டு நிற்கும் நண்பர்களே என்பதாய் பார்க்கிறேன்.. .நிச்சயமா ஆசிரியர் கூறிய ஐந்தாயிரம் பெரிதே இன்றைய காலத்தில். .. சூழலில்... ஆனா இப்பணத்தை விட அரிது அப்புத்தகம். .. அதனால்தானே எந்த விலை கொடுத்தேனும் வாங்கத் துடிப்போர் அதிகம்... அதை விட குறைந்த விலையில் ஆசிரியர் தருகிறாரே கர்ணனாய்.. கொண்டாடுவோமே
Deleteஎடிட்டர் சார்.
ReplyDeleteஎன்னிடம் இரத்தப்படல புத்தகம் இல்லாத காரணத்தால் எழுத்துப் பிழைகளை சரி செய்யும் வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ள முடியவில்லை. இந்த இக்கட்டான நேரத்தில் ராமருக்கு அணில் போல உதவியிருப்பேன். பதிலுக்கு உங்களிடமிருந்து அன்பை மட்டும் வாங்கியிருப்பேன்.புத்தகத்தை அல்ல.நம் காமிக்ஸில் உள்ள பிழைகளை திருத்தி பதிலுக்கு புத்தகத்தை பெற்றுக்கொள்வது எனக்கு சரியாகப் படவில்லை.
இம்மாத ரேட்டிங்
ReplyDelete1.போர்முனையில் ஒரு பாலகன் 9.5/10 ..
if possible cartoonக்கு 2 slot அதிகப்படுத்தங்கள் சார் ..
2.விண்ணில் ஒரு வேதாளம் 9/10 ..
bond .. JAMES BOND .. brosnan அல்லது connery அடுத்த வாட்டி அட்டை படமா போடுங்க சார் .. if there r no copyright issues ..
3.திசை மாறிய தேவதை 9/10 .. SODA .. வருடம் ஒன்று குடிக்கலாம் ..
4. கைதியாய் டெக்ஸ் 8.5/10 ..
proteus தான் ஹீரோ .. தல பல்பு வாங்கும் இன்னொரு வில்லன் after mefisto .. expect to c more of proteus .. good for a breezy read ..
எழுத்து பிழை, அச்சுப்பிழை, சில இடங்களில் பெயரே தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.... இவை எல்லாம் இல்லாமல் ஒரு பதிப்பு வருகிறதென்றால், ஏற்கனவே கருப்பு வெள்ளை, வண்ணம் ரெண்டும் வைத்திருக்கும் எனக்கே வாங்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. ( அவ்வளவு வெறி மாப்பிள்ளைக்கு, ரத்தப்படலம் மேல)
ReplyDeleteஅப்புறமும் மாப்பிள்ளையைத் தடுப்பது என்னவோ ?
DeleteXIII எனும் மந்திரச்சொல் செய்யும் மாயம்தான் என்ன? கடந்த சில நாட்களாக முன்பதிவுகள் தொடங்கியதிலிருந்து இருவேறு கருத்துக்கள் நேர்எதிராய். பூனைக்கு மணி கட்டியாகி விட்டது. தேர் நகர்ந்தோட முன்பதிவு எண்ணிக்கை 300க்கு 90 நாட்கள் அவகாசம்.
ReplyDeleteஇந்த ஆண்டுக்கு அறிவிக்கப்பட்ட இதழ்கள் டிசம்பர் 31ஆ அல்லது மார்ச் 31ஆ என்பது இன்னும் இழுபறி. பெரும்பான்மை வாசகர்கள் இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய வாக்களித்துள்ளனர். ஆசிரியர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. சந்தாவில் MAXI LION இன்னும் நான்கு இதழ்கள் பாக்கி. அதில் 2 வாண்டு ஸ்பெசல் கதை (சஸ்பென்ஸ்) இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஈரோடு ஸ்பெசல் வெளியீடுகள் மற்றும் பல புத்தகத் திருவிழா சிறப்பு வெளியீடுகள் நஹி. ஈரோட்டிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட இளம் டைகர் தொகுப்பு தற்போது சீண்டுவாரில்லை (Including Editor). வாசகர்கள் பல ஆண்டுகளாக கேட்டு வரும் கென்யா> அர்ஸ்மேக்னா (ஈரோடு புத்தக விழா) போன்ற இதழ்கள் அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ளது.
தற்போதைய பொருளாதார சூழலில் அனைவரும் பகுதிநேர வேலைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டு வருகின்றனர். சிலருக்கு வேலையிழப்பும் நேரலாம். இதையெல்லாம் மீறி இந்த ஞாபக மறதிக்காரர் வசியம் செய்கிறார். 2018-ல் பலருக்கு இதழ் கிடைக்கவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட இதழ்கள் வைத்திருக்கும் நபர்கள் சொல்லும் இதழின் விலை எல்லோராலும் வாங்கக்கூடியதாக இல்லை.
இந்தச்சூழ்நிலையில் வாசகர்களின் அன்புக் கட்டளையை ஆசிரியர் ஏற்றிருக்கிறார். அவரது நிலைப்பாட்டில் அதுவும் காலக்கெடுவோடு. கட்டாயப்படுத்தவில்லை. இலக்கை எட்டவில்லை என்றால் அடுத்த ஆண்டு சந்தாவுக்கு முன்னெடுத்துச் செல்லலாம் அல்லது திரும்பப் பெறலாம். கூடவே இந்த லாபத்தின் ஒருபகுதி புற்றுநோய் சிகிச்சைக்கு நன்கொடையாக அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதழ் கிடைக்காத நபர்கள் முன்பதிவு செய்ய முன்வந்தாலும் ஒரே தவணை என்பது யோசிக்க வைக்கிறது. COMICS COLLECTORS, XIII வெறியர்கள் பற்றி சொல்லத் தேவையில்லை. அவர்கள் வாங்குவார்கள்.
இந்த மாயையில் உண்மையிலேயே காமிக்ஸ் வாசகர்கள் அனைவருமே இப்படி ஒரு அசுர இதழ் - ஒரிஜினல் படைப்பாளிகளே சிந்திக்காத மெகா இதழ் நம்மிடம் இருந்தால் என்ன என்று ஏங்குவது நிச்சயம். அப்படிப்பட்டவர்கள் தங்கள் லோகோவில் எந்த இதழ் வந்தாலும் வாங்கக்கூடியவர்களே. அவர்கள் நிலை? எப்படியும் வாங்கத்தான் போகிறார்கள். அதில் மாற்றுக் கருத்தில்லை. இப்போது மறுப்பவர்களும் வாங்கத்தான் போகிறார்கள்.
இதில் ஆறுதலான ஒரு விசயம் - ஆசிரியர் இதுபோன்று முன்பதிவு அடிப்படையிலான இதழ்களை அவ்வப்போது பரீட்சித்துப் பார்க்கலாம் என்று கூறியிருப்பது மட்டுமே. இவ்வளவு பெரிய தொகையைக் கொண்டு பல சிறந்த இதழ்கள் வெளிவர வாய்ப்பிருந்தும் XIII என்னும் மந்திரச்சொல் இடைமறிக்கிறது.
காமிக்ஸ் வாசகர்கள் அருகி வரும் இந்நாளில்: காமிக்ஸ் கலெக்டர்ஸ்> ஆர்வலர்கள் இவற்றைத் தாண்டி ஒரு சராசரி-சாமானிய காமிக்ஸ் வாசகனுக்கு தங்களுடைய இதழ்கள் எட்டாக்கனியாகி விடக்கூடாதே என்பதே என் அவா.
XIII வரட்டும் என்பது ஒரு காமிக்ஸ் ரசிகனாக என் ஆசை. ஆனால் இனி வரப்போகும் எந்த இதழுக்கும் இது முன்னுதாரணமாகி விடக்கூடாது என்பது என் பேராசை.
கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை. பெருத்த குடைமிளகாயும் காரம் இருப்பதில்லை.
இப்படிக்கு,
சராசரி-சாமான்ய காமிக்ஸ் வாசகர்களில் ஒருவன்.
அற்புதமான பார்வை - இரு தரப்பின் சார்பிலும் !
Delete//இப்போது மறுப்பவர்களும் வாங்கத்தான் போகிறார்கள்.//
Deleteமன்னிக்கவும்!! நான் வாங்க போவதில்லை..
ஒரு ரத்த படலம்= ஒரு சந்தா
என்பதே என் நிலைப்பாடு..
மற்றொரு சராசரி- சாமான்ய காமிக்ஸ் ரசிகன்..
@ செல்வம் அபிராமி! நீங்கள் என்னில் வயதில் மூத்தவரோ அல்லது இளையவரோ எனக்குத் தெரியாது! எதற்கும் SA என்றே அழைத்துக் கொள்கிறேன். பொதுவில் நான் இங்கு முகம் தெரியாத யாரிடமும் வாதமோ எதிர்வாதமோ செய்வதில்லை. பலதடவை எடிட்டருடன் மட்டுமே கருத்துப்பகிர்வுகளை மேற்கொண்டுள்ளேன். சென்றமுறை இரத்தப்படல வெளியீட்டை ஒட்டி இடம்பெற்ற வாதங்களில் என்னுடனான சிலரின் வாதங்களில் இருந்த நாணயத்தை அடுத்து பெரிதாக யாருடனும் பதிலளிக்க விரும்புவது மில்லை. இங்கு பல விடயங்கள் புரிதலில் பிறழ்வடைந்துள்ளன என்பதே என் பதிலாக அமையக்கூடும். சில புரிதல்களை அடுத்து வினவப்பட்ட கேள்விகளும் இலக்குத்தவறியதாக இருப்பதுவும் அதுவும் தெரிந்தே தவறியதாக இருப்பதும் வெளிப்படை.
ReplyDeleteமுதலில் இம்முறை இரத்தப்படலம் வேண்டும் எனக்கேட்டோரில் நான் இருக்கவில்லை. பல நண்பர்களின் வேண்டுதல்களை அடுத்து ஓர் கறுப்பவெள்ளை பதிப்பை (விலையின் நிமித்தம்) குறித்தளவு பிரதிகளாக இரத்தப்படலம் வேண்டும் எனக் கேட்டபோருக்காக போட முடியுமா எனக் கேட்டார் பழனிவேல். வழமையாக மறுத்து வரும் எடிட்டர் இம்முறை சற்று விளக்கமான விரிவான பதிலைத் தந்திருந்தார். இரத்தப்படலத்தின் கறுப்பு வெள்ளை பதிப்பை மறுத்த எடி colour edition எனும்போது அதை சற்று யோசிக்க முடியும் என்று கூறியதுடன் அதற்குரிய விலையையும் பருமட்டாக கூறியிருந்தார். விலை அதிகம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் ஒரு அனுபவப்பட்ட பதிப்பாளராக அவரால் நிர்ணயிக்கப்பட்ட விலையை அதுவும் ஓர் limited edition புத்தகத்திற்கு எனும்போது யாராலும் ஏதும் கருத்துக்கூறமுடியுமா எனத் தெரியவில்லை. அதேவேளை பெரும்பாலானோர் colour editionஐயே விரும்பியிருந்தனர் என்பதும் உண்மை. மேலும் வெளியில் (black market plus reselling market) இங்கு குறிப்பிட்ட விலையை விட அதிகமாகவே விற்பனையாகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. அந்த விலைகளுடன் ஒப்பிடும்போது இந்த விலைக்கு புத்தகம் வாங்குவது என்பது புத்தகம் இதுவரை கிடைக்காத அதேநேரம் வெளியில் இதைவிட அதிக விலைக்கு வாங்க தயங்கும் /இயலாத நண்பர்களுக்கு ஓர் ஏதுவான விடயமே! தற்போது காமிக்ஸ் அனைத்துமே தரமும் அதிகம் விலையும் அதிகம் . விலைவாசி விடயங்களை கருத்தில் கொண்டால் வேறு வழி இல்லை. அதேபோல் எந்த புத்தகங்கள் black market இலோ அல்லது book reselling market இலோ விலை அதிகமாக விற்கவில்லை? அது இரத்தப்படலத்திற்கு மட்டுமானதாகக் கருதுவதில் அரத்தமில்லை! ஆக இது தொடர்பில் பழனியையோ, கணேஷ் அண்ணனையோ அல்லது என்னையோ கேள்வி கேட்பதில் அல்லது இப்பதிப்பை மறுதலிக்க/ புறக்கணிக்கச் சொல்வதன் காரணம் விளங்கவில்லை. மேலும் எடியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து புத்தகம் வருவதற்கான தேவையையும் அவ்வாறு வருவதாயின் புது வடிவில் வரவேண்டும் எனும் கோரிக்கையும் மட்டுமே என் சார்பான வேண்டுகோளாக இருந்தது. நான் ஒரு XIII collector. இதுவரை உலக அளவில் வெளியான XIII புத்தகங்களை சேகரிப்பவன். ஆகவே ஏற்கனவே வந்த புத்தகத்தைப் போலல்லாது தவறுகள் களைந்து புதுப்பொலிவில் வந்தால் மேலும் ஓர் add on to my collection. அதற்காக வந்தே ஆகவேண்டும் எனும் பிடிப்பில் கேட்கவில்லை. XIII fan ஆக, அது வந்தால் நன்று வராவிட்டால் பறவாயில்லை. ஆனால் புத்தக அறிவிப்பு officially announced ஆனாலோ வரும் சாத்தியம் அதிகமாகவோ இலக்கிற்கு சமீபமாகவோ அல்லது நான் விரும்பும் புதுப்பொலிவில் வருமாகவோ இருந்தால் என் பங்கு ஒத்துழைப்பும் கணிசமாக இருக்கும். இதை யாரும் தவறெனக் கூறமுடியாது. கடந்த முறை நான் 13 புத்தகங்கள் வாங்கினேன். 3 புத்தகங்கள் அன்பளிப்பாகியது. மிகுதிகளை என் நண்பர்களுக்கு பிரித்துக் கொடுத்தாயிற்று. தற்போது என் வசம் 3 அல்லது 4 உண்டு. ஒன்று இங்கு நிச்சயம் ஓர் எதிர்கால அதீத வாசகருக்கு அன்பளிப்பாகிவிடும். அது என் பிரச்சனை.
@SA!
ReplyDeleteதற்போதைய புதிய அறிவிப்பு வெளியாகி புத்தக பதிவுகளும் ஆரம்பமாகிய பின்னர் இவ்வாறான பதிவுகளோ சம்பாஷனைகளோ தேவையற்றது என்பது என் தனிப்பட்ட கருத்து. யார் கேட்டாலும் என்ன வாக்கெடுப்பு முடிவு வந்தாலும் இறுதி முடிவுகளை எடுப்பது எடிட்டர்தான். கென்யா கேட்டபோது ஒற்றை நொடி ஒன்பது தோட்டா, இளம் டைகர், ஏன் தற்போது சந்தா பின்னீட்டிப்பு தொடர்பான அதிகளவு ஆதரவுகள் எப்புறம் இருந்தாலும் இவை அனைத்தும் தொடர்பாக ஆராய்ந்து சாத்தியமான இறுதி முடிவுகளை திட்டமிடுவது எடிட்டரே. நாம் 3 பேர் கேட்டதற்காக அறிவிப்பு வந்ததாகவோ அல்லது நாம் 3 பேரும் ஆதரவைக் கைவிடுவதால் புத்தகங்கள் வராது விடுவதோ யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது. நாம் மூவரும் பலதடவை குரல் கொடுத்தது XIII யின் வெளியீடுகளை லயனில் தரும்படியே அன்றி 1-18 பாகத்தை அடிக்கடி தரும்படி அல்ல.
இங்கு புத்தக முன்பதிவு 300ஐ எட்டாவிடின் திட்டம் கைவிடப்படும் என எடி கூறியுள்ளதால் it's very simple. விலை அதிகம் கட்டுப்படியாகாது அல்லது ஆர்வமில்லை எனும்போது ஆதரவு குறையும் பட்சத்தில் automatically it will be dropped. அதற்கேன் இவ்வளவு பிரச்சனைகள்? இதற்காக மகாபாரதத்தையும்
கர்ணனையும் இங்கு ஒப்பிடாதீர்கள். நான் நானாகவே இருக்க ஆசைப்படுகிறேன். அத்துடன் எமக்கு XIII இல் இருப்பது மோகமாக இருந்துவிட்டுப் போகட்டும் அதற்காக மோகம் அகங்காரத்தில் வருவதென்பது not ready to accept.
மேலும் கடந்த முறையே proofreadingஇற்கு பழனிவேலும் கணேஷ் அண்ணனும் STVRஉம் மேலும் சிலரும் பெயர் கொடுத்திருந்தபோதும் அவ்வுதவிகளை ஏற்று புத்தகம் வெளியிடப்படவில்லை. அதற்காக அவர்கள் இலவசத்திற்காக ஆசைப்பட்டு செய்ய முனைந்ததாக எள்ளி நகையாடாதீர்கள். அவ்வளவு சிறுமைப்படுத்துவது போன்ற நகையாடல் தேவையற்ற வாதப்பிரதிவாதங்களையே கொணரும்.
மேலும் புத்தகங்களை வாங்க முனையும் பலருக்கு இருக்கும் நண்பர்கள் பாதிவிலையிலும் வாசிக்கக் கொடுத்தும் உதவலாம் என்றார்கள். விரும்பியவர்கள் அதை செய்யட்டும். ஆனால் பலரும் தம் வசம் ஓர் புத்தகத்தை வைத்திருக்கவே ஆசைப்படுகிறார்கள். அது அவரவர் விருப்பம்.
எடிட்டர் வெளியிடும் புத்தகங்களில் ஒவ்வோர்வருக்கு ஒவ்வோர் கதைகளில் மிகுந்த ஆர்வம். அவரவர் விரும்பியதை எடிட்டரிடம் கேட்கிறார்கள் . முடிந்ததை எடிட்டர் தருகிறார். அதற்கேன் வாசகர்களுக்கிடையில் பேதம்? நான் மிகவும் விவாதித்த ஒருவர் சேலம் Tex VijeyaRagavan அவர் தற்போது என் அன்பான நண்பர்களில் ஒருவர். Parani from Bangalore யதார்த்தமாகப் பேசும் பழகும் ஒரு நண்பர். பல தடவை இரத்தப்படலத்திற்கெதிராக பல கருத்துக்களை கூறியிருந்தார். ஆனாலும் நான் எதிர்க்கருத்தைக் கூறி அவர் மனதை புண்படுத்த விரும்பாததால் பதில் கூறுவதில்லை. அப்படி நண்பர்களுக்காக சில விடயங்களை பொறுத்தால் அனைத்தும் சுபம்.
இறுதியாக நானும் யாருக்கும் எதிரியில்லை யாரையும் எதிரியாகப் பார்க்கவுமில்லை. இதற்கு நீங்களோ வேறு யாருமோ தரும் பதிலுக்கு திரும்ப என்னால் பதில் தர இயலும் ஆனால் விவாதங்களில் எனக்கு விருப்பமில்லை. என் பெயர் குறிப்பிட்டு பதிவு இருந்ததால் பதிலளிக்க முனைந்தேன். Thanx for your understanding!
//ஆனால் விவாதங்களில் எனக்கு விருப்பமில்லை. //
Deleteஉங்கள் நிலைப்பாட்டை மதிக்க விரும்புவதால் மௌனம் காக்கின்றேன்!!
நிச்சயமாக கதை விரும்புவோர் யாராயினும் கையில் வைக்க ஆசைப்படும் பொக்கிசமே.. .பார்க்க பார்க்க பரவசம். . படிக்க படிக்க புது சுகம். .. பல ஆடை கட்டி இரசிக்க ஆசைப்படும் தாயின் மன நிலையில் நான்.. .. சேய் இப்புத்தகம்... .ஆசிரியர் கையை கடிக்க போவதில்லை.. ஒரே புக் போதுமென்போர் மடியில் குடிக்கப் போவதுமில்லை
Deleteமடியில் துடிக்க
Deleteவெறும் வாயால் சுடும் வடை வயிறை நிரப்பப் போவதுமில்லை !
Deleteஇன்னும் ரெண்டு 'மானே தேனே' சேர்த்துக்கோங்க பானபத்திரரே !
சார் வாங்கப் போவது நிச்சயமே
Deleteபோர்முனையில் ஒரு பாலகன்!!
ReplyDelete9.5/10
இதுவரை வந்த ப்ளூகோட்ஸ் வரிசையில்
ஆல்டைம் பெஸ்ட்
மேக்கிங் செய்த விரல்களுக்கு சுவர்ண மோதிரம் போட வேண்டும்( தங்கம் விலை கொறஞ்சா தேவலை)
விமர்சனம் எழுதியெல்லாம் கவைக்குதவாது
அனுபவிக்கோணும்-
கண்ணதாசன் சொன்ன மாதிரி
அனுபவிச்சு தெரிஞ்சுக்கனும்!!
இன்றைய புக்கிங் நிலவரம் :
ReplyDeleteபிரபுதாஸ் பழனி, கடலூர் - 1
இது வரையிலும் மொத்தம் : 23
நான் 250 வந்ததும் சேந்துக்கிறேன் சார். .இப நினைவே ஒரு ச௩்கீதம். . வெகு சிறப்பாக தருவிய எனும் எண்ணம் எப்பத்தையும் விட அதிகம் . .. சும்மா தகதகக்கும் தொகுப்புக்காக
Deleteதங்கப்ப தக்கம்
அச்சோ.. எதுக்கு அவசரம் ஸ்டீல் ? 299 புக்கிங் ஆன பிற்பாடு கூட சேர்த்துக்கலாம் இல்லியா ?
Deleteசார் . ... பணம் ஒதுக்க காலம் வேணுமே அதான். .. .நாளையே முன் பதிவு 250வந்தாலும் செந்தூரான் அருளால் நிறைவேறும்
DeleteInteresting & informative you tube post sir. (Asterix comics 40,00,000 copies !). But SO MANY 'vandhu...' sir.
ReplyDelete195
ReplyDeleteSteel
சோடாவை குடிச்சாச்சு.. . .அருமை.. துவக்க வரிகளே பட்டய கிளப் புது.... இது போல கவிதைத்தொகுதி வரிகளே எனக்குமீர்ப்பு... .கதை ஊன்றி படிச்சா... காதுல ரத்தம் பாத்து தாய் கூறும் வசனம். .. அந்த கார்ல வரும்ஸகொலைகாரன் என பல விசயம் ரசிக்க வைத்தது. வண்ணமும் ,கதாசிரியர் பாச எண்ணமும், ஓவியமும் அதகளம். . தாயைக் காத்த தனயன் மட்டுமல்ல... கார்ட்டூன் மீட்க வந்த இரட்சகன் கூட.. .பாண்டும் அதகளம். . .
ReplyDeleteஸ்டீல்க்ளா