நண்பர்களே,
வணக்கம். மறுக்கா "இரத்தப் படலம்" சார்ந்ததொரு மினி பதிவிது ! 'ஆத்தாடியோவ்' என்று தெறிக்கக்கூடிய நண்பர்கள், இம்மாதத்து இதழ்களின் அலசல்களை இங்கே தொடர்ந்த கையோடு Netflix-ல் படம் பார்க்கக் கிளம்பிடலாம் தான் ! தொடரும் வரிகளில் நிச்சயமாய் உங்களுக்கு சுவாரஸ்யம் ஏதும் இருக்க வாய்ப்புகள் குறைவே !
2 நாட்களுக்கு முந்தைய பின்னூட்டங்களில், 2 தவணைகளில் "இரத்தப் படலம்" முன்பதிவுகளைச் செய்து கொள்ளும் வசதியினை தர சம்மதித்திருந்தது எனக்கு இப்போது தான் நினைவுக்கு வந்தது ! And இன்றே அதற்கான ஆன்லைன் லிஸ்டிங் செய்து விட்டிருக்கிறோம் - முதல் தவணையில் ரூ.2000 செலுத்தும் வகையில் ! இரண்டாம் தவணைக்கான லிங்கினை 45 நாட்களுக்குப் பின்னே தயார் பண்ணிடலாம் - மீதத் தொகைக்கு நீங்கள் தயாராகி இருக்கக்கூடுமென்ற நம்பிக்கையில் ! 45 நாட்களிலோ ; அல்லது 89-வது நாளிலோ மீதத்தை செலுத்தினால் கூடப் போதும் தான் !
(or)
ஒரேயடியாய் பணம் தொடர்பாகவே பேசிக் கொண்டிருப்பதில் நெருடலாய் இருப்பதால் - இம்முயற்சி றெக்கை கண்டிடும் பட்சத்தில் நாம் செய்திடக்கூடிய சமாச்சாரங்களைப் பற்றிப் பேசலாமென்று தோன்றுகிறது !
For starters - XIII தொடரின் ஏகப்பட்ட ஒரிஜினல் அட்டைப்படங்களுள் மூன்றைத் திரட்டி, அவற்றை தலா Volume 1 & 2 & 3 -க்கு ராப்பர்களாக்கியிருந்தோம் - போன முறை ! இந்தத் தடவை கொஞ்சம் புதுசாய் Cover Variants என்ற சமாச்சாரத்தை நடைமுறைப்படுத்திட நினைத்தேன் ! அமெரிக்காவில் இந்த பாணி ரொம்பவே பிரசித்தம் ! ஒரு ஆல்பத்துக்கு மூன்றோ அல்லது நான்கோ வெவ்வேறு ராப்பர்களை டிசைன் செய்து, அவற்றை கலவையாய் அட்டைப்படங்களாய் அமைத்திடுவதுண்டு ! So புக் ஒன்றாக இருந்தாலும், அட்டைப்படங்கள் விதம் விதமாய் இருந்திடுவதுண்டு ! Of course - கடைகளில் வாங்கிடாது, ஆன்லைனில் வாங்கும் போதோ ; சந்தாக்களில் வாங்கிடும் போதோ - யாருக்கு எந்த ராப்பர் கிட்டும் என்பது புக் கைக்கு கிடைக்கும் வரையிலும் உறுதியாகத் தெரிந்திடாது ! இதோ பாருங்களேன் அதற்கொரு லேட்டஸ்ட் சாம்பிள் :
ஒரே இதழுக்கு எத்தனை ரகளையான ராப்பர்கள் உருவாக்கியுள்ளனர் என்று தான் பாருங்களேன் !! நமக்கோ இம்முறை பிரிண்ட்ரன் மொத்தமே 300 பிரதிகள் எனும் போது maybe இரண்டோ / மூன்றோ வித cover variants சாத்தியமே - provided படைப்பாளிகள் இதற்குச் சம்மதம் சொல்லும் பட்சத்தில் ! முழுக்கவே சேகரிப்பின் பொருட்டு என்றதொரு தொகுப்பை இது போன்ற சின்னச் சின்ன குட்டிக்கரணங்களின் வாயிலாய் சுவாரஸ்யமூட்ட முயற்சிக்கலாம் - உங்களுக்கும் ஓ.கே எனில் ! மாறாக, "ஊஹூம்...என்க்கு ஒரிஜினல் ஈயே தான் அட்சர சுத்தமாய் அடிச்சாகணும் ; புது ஈ அடிச்சால்லாம் தெய்வ குத்தமாகிப் போகும் !!அப்புறம் ஜேசன் கனவிலே வந்து கண்ணைக் குத்திப்புடுவார் !" என்று நினைப்பதாயின் 'சிவனே' என்று இந்த cover variants எண்ணத்துக்குக் கல்தா தந்திடுவேன் - அந்த வேலையும் மிச்சம்டா சாமீ என்றபடிக்கே ! நமக்கு வேற முகம் நிறைஞ்சு கண் இருப்பதால் ஜேசன் கண்ணை மூடிக்கிட்டு எங்கனக்குள்ளாற குத்தினாலும் சேதமாகிப் போகும் இல்லியா ?
அப்புறம் இந்த ஆல்பத்தினில் உங்கள் முகங்களையும் இணைத்துப் பார்த்திட ஆசை இருக்கும் பட்சத்தில் - 3 ஆண்டுகளுக்கு முன்பாய் கேப்டன் பிரின்ஸ் இதழினில் செய்தது போல இம்முறையும் முயற்சிக்கலாம் ! உங்களின் high resolution photo-வினை ஈ-மெயிலில் அனுப்பினால், அவற்றை டிஜிட்டலில் பிரிண்ட் போட்டு புக்கின் ஆரம்பப் பக்கமாக்கிடலாம் ! "அழகு பார்க்க மட்டுமே இந்த இதழ்" எனும் போது - அந்த அழகுக்கு அழகோ அழகு சேர்க்க முயற்சிப்பது இந்த அழகப்பனின் கடமையல்லவா ? So முன்பதிவுகளோடு உங்கள் புகைப்படங்களும் புளீஜ் !
அப்புறமாய் இன்னமும் சில யோசனைகள் தலைக்குள் நீச்சலடிக்கின்றன தான் ! ஆனால் இந்தக் கொடுங்காலத்தினில் இந்த முயற்சி நனவாகிடும் சாத்தியங்கள் பற்றிய ஆரூடம் சொல்ல யாருக்கும் ஆற்றலில்லா இவ்வேளையில், அடுப்பின்றி, மாவின்றி ; சட்டியின்றி, நான்பாட்டுக்கு வடையாய்ச் சுட்டிட முற்படுவது கோமாளித்தனம் என்பதால் - லக்கி லூக்குக்கு பேனா பிடிக்கப் புறப்படுகிறேன் ! The ball is truly in your court now XIII lovers ! அதை எவ்விதம் நீங்கள் கையாண்டாலும் என்னளவில் ஓ.கே. தான் ! இந்தச் சிரம காலத்தில் இத்தனை பணத்தை விரயம் செய்ய வேண்டாமே என்று எண்ணினீர்களெனிலும் நிச்சயமாய் புரிந்து கொள்வேன் !
Bye all...see you around !
I am first......
ReplyDeleteபார்டா!!!
Deleteவாழ்த்துகள் சகோ💐💐💐💐💐
Deleteசூப்பர் அனு.
Deleteஅனு அற்புதம்
DeleteDanks Danks.
Delete2nd
ReplyDeleteஅப்புறம் இந்த ஆல்பத்தினில் உங்கள் முகங்களையும் இணைத்துப் பார்த்திட ஆசை இருக்கும் பட்சத்தில் - 3 ஆண்டுகளுக்கு முன்பாய் கேப்டன் பிரின்ஸ் இதழினில் செய்தது போல இம்முறையும் முயற்சிக்கலாம்//
ReplyDeleteநான் அப்பவே சொன்னனே சார். நீங்க நிச்சயமா வெறும் புக்க சாதாரணமா தரமாட்டிங்கனு...உலகத்தரத்தையும் மிஞ்சும் வகையில்.. கூடவே எங்களோட படத்தோட இன்னும் என்ன வேண்டும்....செம சார்...
அந்த காமிக்கான்ல எடுத்து போட்டோவை அனுப்புங்க பழனி.
Deleteபத்த வெச்சுட்டயே பரட்ட.
Deleteஏன் தலைவரே வக்கீல் கிடையாது கோர்ட் கிடையாது....😢😢😢
Deleteஅந்த போட்டோவா... பழனியின் பயம் நியாயந்தேன்....!!!ஹி...ஹி...!!!
Delete// அந்த காமிக்கான்ல எடுத்து போட்டோவை அனுப்புங்க பழனி. // அருமை ஷெரீஃப் என்னா டைமிங் என்னா டைமிங். யாம் உன் அடிமை ஐய்யா
Deleteசெக்கச்சேவேல்னு ஒரு தக்காளி தோளோடு தோளா...
Deleteதோழா செம...
மரண மாஸூ பாஸூ....
இளவரசி வாழ்க!
ReplyDeleteஇளவரசி வாழ்க!
🧐🤔
Deleteஷீ நா பா வாழ்க
Deleteஎனக்கு இந்த புத்தகத்தை வாங்க ஆர்வம் இல்லாமல் இருந்தேன்.
ReplyDeleteBecause already I have black and white (Rs. 200) and Colour.
ஆனால் இந்த மாதிரி எல்லாம் போட்டு தாக்கினால் நானும் சபலப் போட்டுவிடுவேன் என்று நினைக்கிறன்.
மேலும் இந்த மெகா இதழின் நிகழ்வில் எனது பங்களிப்பும் இருந்தால் நன்றாக இருக்குமோ என்ற எண்ணம் துளிர்விடுகிறது.
I am the regular reader cum buyer from its inception.
ஐயா வாங்க வணக்கம்
Deleteஇந்த கிருதா கணேஷூ என்ன பண்றாரு...புரிலயே...
Deleteவணக்கம் ஆசிரியரே
ReplyDeleteO M G !
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteசத்யா. சத்தமில்லாமல் எட்டாவது. அதாவது பத்துக்குள்ள. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteHi
ReplyDeleteVariant cover design may be good for collectors issue.👏👏👏👌👌👌
ReplyDeleteஎத்தனை வேரியண்ட்ல அட்டைப்படம் வருதோ, அத்தனையும் வாங்கனுமே..
Deleteஉள்ளேன் ஐயா!
ReplyDeleteநானும் இந்த தொகுப்பை வாங்க ஆர்வம் இல்லாமல் தான் இருந்தேன்..
ReplyDeleteஎன்னிடமும் தனித்தனி புத்தகங்களும், கருப்பு வெள்ளையிலும், கலரிலும் உள்ளன..
நேற்றுதான் மீண்டும் ஒரு முறை வாசித்தேன்..
ஆனால் இந்த மாதிரி எல்லாம் ஆசை காட்டினால் நானும் ஆர்டர் விடுவேன் என்று நினைக்கிறேன்..
எதற்கும் அடுத்த வாரம் வேறு என்ன அறிவிப்பு வருகிறது என பார்ப்போம்..
///எதற்கும் அடுத்த வாரம் வேறு என்ன அறிவிப்பு வருகிறது என பார்ப்போம்..////
Deleteலொள்ளின் உச்சம்!! :))))))
:-)))
Deleteஎன்னண்ணே பண்ண போணியாகனுமே 🤷🏻♂️
Delete.
வந்துட்டேன்....!
ReplyDeleteஒரே கதைக்கு விதவிதமான அட்டைப்படமென்பது நமக்கெல்லாம் ஒன்றும் புதிதல்ல!!
ReplyDeleteபல ஆண்டுகளாக 'அதிகாரி'யின் கதைகளுக்கு இதைத்தானே பண்ணிக்கிட்டிருக்கோம்?!! :D (ஓடீர்றா ஈவி...)
(எப்படியும் ஸ்லீப்பர் செல்லேர்ந்து வந்து -வெத்திலைய குதப்பிக்கிட்டே - யாராவது இதைச் சொல்லத்தான் போறாங்க.. சரி நாமே சொல்லிடுவோமேன்னுதான் ஹிஹி!)
லொள்ளின் உச்சம்!! :))))))
Deleteசுத்தமான காப்பி-பேஸ்ட்!!
Deleteஏப்பா எதுனாலும் அதிகாரி கையவே புடிச்சி இழுக்கீறீகளா....????
Delete/// ஒரே கதைக்கு விதவிதமான அட்டைப்படமென்பது நமக்கெல்லாம் ஒன்றும் புதிதல்ல! ///
Deleteவாத்யார் ஃபார்முலா..
ஈனா வினாண்ணே
Deleteஎப்போன்னு காத்திட்டு இருந்தா மாதிரி இருக்கே 🤷🏻♂️
.
EV: Adhigaarikku title-um, maarumE :-)
Deleteபாயாசம் ஜூப்பரு
Deleteஎடிட்டர் சார்.
ReplyDeleteவரப்போகும் நாட்களில் என்னென்ன ஐடியாக்களெல்லாம் தோன்றுகிறதோ அத்தனையையும் போட்டுத்தாக்குங்கள்.
ஃபோட்டோ ஐடியா சூப்பர்!
ReplyDeleteஇதோ, அடுத்த ஐடியா!!
முன்னெல்லாம் சில ஹோட்டல்களின் எல்லா டம்ளர்களிலும் 'இது ஹோட்டல் கணேசாவில் திருடியது'ன்ற மாதிரி engrave பண்ணி வச்சிருப்பாங்களே.. (நான்கூட
நாலஞ்சு டம்ளர் வச்சிருக்கேன் :P) அதேமாதிரி 'இ.ப' பின்னட்டையிலும் 'இது மிஸ்டர்XXXXXXயிடம் திருடப்பட்டது'ன்னு பெரிசா பிரின்ட் பண்ணிக் கொடுத்துட்டீங்கன்னா எதிர்காலத்துல திருடுபோய்டுமோன்ற பயம் இல்லாம நிம்மதியா இருப்போம் பாருங்க?!!
:-)))
Delete//(நான்கூட
Deleteநாலஞ்சு டம்ளர் வச்சிருக்கேன் :P) //
ROFL
புத்தகம் வக்கிற சைசுக்கு ஒரு சூட்கேஸ் கொடுத்தால் நல்லா இருக்கும். படிச்சுட்டு பத்திரமா பூட்டி வச்சுக்கலாம்.
Delete🤭😝😝😝
Delete.
வந்தாச்சுங்க
ReplyDeleteஅந்த variant கலர் சொக்காய்களுக்கு மட்டும் ஒரு ரேட் ஃபிக்ஸ் பண்ணுனீங்கன்னா அத மட்டும் வாங்கி எங்கிட்ட இருக்கு 3 புள்ளைங்களுக்கும் (கலர் எடிஷன்) அத மாட்டிவிட்டு அழகு பார்க்கலாம்.
ReplyDelete3 செட்டா வாங்குனீங்க... ம் பெரிய XIII ரசிகர் சார் நீங்க..!!!
Deleteதப்பா புரிஞ்சுகிட்டீங்க. 3 தனித்தனி புத்தகம் தானே. ( ஆறு அத்தியாயங்களாக)
Deleteசார் ஞாயித்துக்கிழமை வெளியே போய் முடி வெட்ட பயந்து சூரியன் சரத்குமார் ஸ்டைலில் நானே முடிய வெட்டிகிட்டேன். இப்ப போட்டோ அனுப்பினா சரிப்படாது. போட்டோ மட்டும் 299 இதழ் ஆர்டர் வந்ததும் அனுப்பறேன்.
ReplyDeleteஅப்போ நான் 298 வது இதழ் வந்ததும் அனுப்புவேன்...
Deleteஇதற்கான ஈவியின் பதில்:
Deleteஅப்ப மட்டும் ? :D
நான்லாம் ஆதார் போட்டோவையே அனுப்பியிருக்கேன் ..
செனாஅனா... :))))))))
Deleteஆசிரியர் அவ்விடத்த இவ்விடம் ஒதுக்கிட்டார் நண்பரே
Delete🤣🤣🤣.
Deleteசெனா அனாண்ணே
Deleteசெம்ம 😝😝😝
.
எனக்கு மட்டும் 13 அட்டைப்படம் இல்லாம அந்த மூணாவது புக்கோட அட்டைப்படத்தைப் போட்டு புக்கை ரெடி பண்ணி அனுப்பிடுங்க.
ReplyDelete36 steel
ReplyDeleteசார் அருமை
ReplyDeleteஇப ௭ப்படி வந்தா அழகா இருக்கும்.. .
ReplyDeleteஎப்டியோ வந்தா நல்லாருக்கும். ....
எது சொல்ல
ஆத்தி
ReplyDeleteஇந்த மறதிக்காரருக்கு எம்புட்டு . . . . . . . .
🤷🏻♂️
.
// ஒரே இதழுக்கு எத்தனை ரகளையான ராப்பர்கள் உருவாக்கியுள்ளனர் என்று தான் பாருங்களேன் !! நமக்கோ இம்முறை பிரிண்ட்ரன் மொத்தமே 300 பிரதிகள் எனும் போது maybe இரண்டோ / மூன்றோ வித cover variants சாத்தியமே - provided படைப்பாளிகள் இதற்குச் சம்மதம் சொல்லும் பட்சத்தில் ! முழுக்கவே சேகரிப்பின் பொருட்டு என்றதொரு தொகுப்பை இது போன்ற சின்னச் சின்ன குட்டிக்கரணங்களின் வாயிலாய் சுவாரஸ்யமூட்ட முயற்சிக்கலாம் - உங்களுக்கும் ஓ.கே எனில் ! //
ReplyDeleteகட்டைவிரல் காதலர் என்பதை
மறுக்கா மறுக்கா ஆணித்தரமாக நிரூபித்துக்கொண்டு உள்ளீர்கள் சார்
உங்க பெரிய மனசுக்கு ஒரு பெரிய 🙏🏼🙏🏼🙏🏼
ஒருவேளை நீங்கள் நினைத்ததுபோல நடந்தாக்கா
அடுத்ததபா இப்படி நடக்கும்
எனக்கு சொப்பனசுந்தரியோட போட்டோ போட்டு இ ப
புக்கு வேணுமின்னு ரெண்டு வருசம் கழிச்சு வருவாங்க
இப்பமே நினைச்சா கண்ண கட்டுதே ஆத்தாடி 😬
.
// கட்டைவிரல் காதலர் என்பதை
Deleteமறுக்கா மறுக்கா ஆணித்தரமாக நிரூபித்துக்கொண்டு உள்ளீர்கள் சார்
உங்க பெரிய மனசுக்கு ஒரு பெரிய 🙏🏼🙏🏼🙏🏼 //
+1
// அப்புறமாய் இன்னமும் சில யோசனைகள் தலைக்குள் நீச்சலடிக்கின்றன தான் ! ஆனால் இந்தக் கொடுங்காலத்தினில் இந்த முயற்சி நனவாகிடும் சாத்தியங்கள் பற்றிய ஆரூடம் சொல்ல யாருக்கும் ஆற்றலில்லா இவ்வேளையில், அடுப்பின்றி, மாவின்றி ; சட்டியின்றி, நான்பாட்டுக்கு வடையாய்ச் சுட்டிட முற்படுவது கோமாளித்தனம் என்பதால் //
ReplyDeleteசார் சார் புளீஜ் சார்
அது என்னான்னு தயவு செஞ்சி சொல்லிடுங்க இல்லாட்டி என்னோட தலையே வெடிச்சுடுமே
இல்ல நீங்க பெவிகால் பெரியசாமியாத்தான் இருப்பேன்னு முடிவு பண்ணிட்டீங்கன்னா
தயவு செஞ்சி தனிசாட்டுலயாச்சும் சொல்லிடுங்கோ
உங்களுக்கு புண்ணியமா போகும் 🙏🏼
.
// இந்தச் சிரம காலத்தில் இத்தனை பணத்தை விரயம் செய்ய வேண்டாமே என்று எண்ணினீர்களெனிலும் நிச்சயமாய் புரிந்து கொள்வேன் ! //
ReplyDeleteமணந்தால் மகாதேவி ஆளாக்கும் நாங்க
ஒருதபா முடிவு பண்ணிட்டா எங்க பேச்ச நாங்களே கேக்க மாட்டோம் சார் 🤷🏻♂️
.
ஒரு ஊர்லே ஒரு காக்கா இருந்துச்சாம் ; அது திடீர் திடீர்னு உருவெடுத்த கடையெல்லாத்தியும் பாத்து - 'ஹை இன்னிக்கு ஒரு பாட்டியாச்சும் அசராமலா போயிடும் ? ஒரு வடையாச்சும் தேறாமலா போயிடும்னு நினைச்சுச்சாம் ! ஆனா பாட்டிமார் அசரவும் இல்லியாம் ; வடையோட வாசனை கூட வரலியாம் ! காக்கா கேட்டுச்சாம் - இன்னா மேட்டர் பாட்டி ? இன்னிக்கு இஷ்மெல் கூட வரலியே - இது எதுனாச்சும் புச்சான ரெசிபியான்னு ! அப்போ தான் பாட்டி சொல்லுச்சாம் - இது வடைன்னு ஆரு சொன்னது என் பீன்சு ? இது உப்மாவாக்கும்னு !
Deleteஎடிட்டர் சார் ஹாஹாஹா செம்ம
Deleteஎடிட்டர் சார்.. இக்கதையின் மூலம் நீவிர் எம்மக்களுக்குச் சொல்லவரும் கருத்து?!!
Delete//எடிட்டர் சார்.. இக்கதையின் மூலம் நீவிர் எம்மக்களுக்குச் சொல்லவரும் கருத்து?!/.
Deleteஎனக்கும் புரியல..
/////எனக்கும் புரியல.. ////
Deleteஅப்பாடா!! நான் எனக்கு மட்டும்தானோன்னு நினைச்சுப் பயந்துட்டேன்!!
KSக்கு மட்டும் ஏதோ புரிஞ்சிருக்கு! குமாரு.. குமாரு...
நானே பொங்கலுக்கு கியர் ஷிப்ட் பண்ணாலும் உப்புமாவை விட மாட்டீங்க. சில பேர் டிசைனே இப்படித்தான், சரியான லபோ,
Deleteதிபோ சங்கம். (டயலாக் விஜய் அண்ணாவிடம் திருடியது).
பதிமூன்றை வேண்டுவோருக்கு மகிழ்வான அறிவிப்புகள்..வாழ்த்துக்கள்..:-)
ReplyDeleteஇன்றைய நிலவரம் : டெக்சாசின் தங்கம் ; தானே சிகையலங்காரம் செய்து கொண்ட சிங்கம் - 1
ReplyDeleteமொத்தம் 24
அலங்காரம்னு சொல்ல முடியதுங்கோ. இருந்தாலும் பில்ட்அப்புக்கு ஓகே 🤣🤣🤣🤣
Deleteகலக்கிட்டிங்க மகி ஜி 👏👏👏👏
Deleteஎடிட்டர் சார் நீங்கள் சாம்பிள் காமித்த variant கவர்கள் எல்லாம் பயங்கரமாக இருக்கிறதே. இதில் ஏதேனும் குறியீடு உள்ளதா????
ReplyDeleteAxaவையும் சேர்த்து இருக்கலாம்...!!!
Delete////இதில் ஏதேனும் குறியீடு உள்ளதா????///
Deleteநாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு அதையெல்லாம் நீங்க பார்த்து ரசிக்கறதை உங்க வீட்டம்மா பார்த்துட்டாங்கன்னா.. அதுக்கப்புறம் உங்க உடம்பு முழுக்க ஏற்படுமே... அதான் 'குறியீடு'ங்க குமாரு!
Editor Sir,
ReplyDeleteRed Sonja eppo varaa? :-) Looks interesting !
ஓஹோ!!
DeleteHe he he...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபடிக்கிற காலத்துல கோவையை சேர்ந்த காட்டூர் வினாயகா பிரிண்டர்ஸில் அச்சுக் கோர்ப்பு மற்றும் பிரிண்டிங் மெசினை ஓட்டும் பணியை பகுதி நேர ஊழியனாக செய்திருக்கிறேன். காமிக்ஸ், கதைபுத்தகங்கள், சினிமா மற்றும் பௌஸ் போடறதுக்கான செலவுகளுக்கு இது தான் உதவியா இருக்கும். அந்த சமயத்தில பைண்டிங் பண்ணிய புத்தகங்களை கட் பண்ணி குடுக்க சொல்லி ஆட்கள் வருவாங்க. நார்மலா இதை இங்கே பண்ண மாட்டோம்னு சொல்லி அனுப்பிடுவோம். ஏன்னா அந்த கட் பண்றதுங்கற கடியான வேலை. புக்கை கட் பண்ற மெசின்ல வைச்சு, செட் பண்ணி, லீவர் சுத்தி வெயிட் வைச்சு, அப்புறம் அந்த ப்ளேடை சுத்தி இரண்டு புக்கை கட்பண்ற நேரத்துல ஆர்ட் பேப்பர் கல்யாணப் பத்திரிக்கையை நீட்டா ப்ரிண்டிங் மெசின்ல செட் பண்ணிடலாம். லெட்டர் ஹெட்னா ரெண்டு செட் பண்ணிடலாம். ஆனா ஆடி மாசம் மாதிரியான சமயத்துல பெரிய வேலை இருக்காது. அப்ப வந்து கேட்டாங்கன்னா பெரிய வேலை இருக்காது. லாபம் பெருசா இல்லன்னாலும் சரி கொண்டாங்க கட் பண்ணித்தரேன்னு வாங்கி செய்வோம்.
ReplyDeleteநான் இந்த ர. ப. முயற்சியை அப்படித்தான் பார்க்கிறேன். அர்ஸ் மேக்னா, ஒ. நொ. ஒ. தோ இந்த மாதிரி புதுக் கதைகளெல்லாம் தற்சமயம் வந்தா பெரும்பாலான ரசிகர்களால் வாங்க முடியாதுன்னு தள்ளி வைத்த எடிட்டர், இந்த சமயத்தை விட்டால் ர. ப. தவற விட்டவர்களுக்காக மறுபடியும் செய்ய முடியாது. உண்மையாலுமே அதனை தவற விட்டவர்களுக்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையும். முகநூலிலும், விற்பனை குரூப்புகளில் இந்த புத்தகத்தைக் கேட்கும் நண்பர்களையும் 7000 வரை குடுத்து வாங்கியதையும் நானே பார்த்திருக்கிறேன். அதிக வேலைப்பளு இல்லாத சமயத்தை இதற்கு பயன்படுத்திக்கலாம் என்று நினைத்து இந்த முயற்சியில் இறக்கியிருக்கிறார் என நினைக்கிறேன்.
முதலில் வாங்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். இருப்பினும் தளத்தில் இல்லாமல் வெளியில் படிக்க நேரிட்ட சில தகவல்கள் இந்த திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என உந்தியது. Whatever I read propelled me to stand with this effort. இந்த சமயத்தில் இந்த முயற்சி நமது நிறுவனத்திற்கு தேவைப்படும் ஆக்சிஜனாகக் கூட இருக்கலாம். இதுவும் எடிட்டரின் ப்ராஜக்டே எனும் போது வாங்கதவர்கள் தற்போதைக்கு இந்த முயற்சியை பேசாம இருந்தா புத்தகம் இல்லாமல் வாங்க விரும்புவர்களை டிஸ்கரேஜ் பண்ணாம இருக்கும்.
எனவே ஏற்கனவே ஒரு புத்தகம் ஆர்டர் செய்து விட்டேன். முன் பதிவு எண்ணிக்கை சில் மைல் கல்களை அடையும் போது மேலும் சிலவற்றை வாங்கி இங்கே தமிழர் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள நூலகங்களுக்கு அளிக்கவும் உத்தேசம். ஒருவேளை 300 எட்டாமல் இந்ததிட்டம் கைவிடப்பட்டால் இதற்கான பட்ஜெட்டைக் கொண்டு என்னைப் போன்ற சிறுவர்கள் விரும்பிப் படிக்கும் கார்ட்டூன் மற்றும் டெக்ஸ் கதைகளை வாங்கி இங்குள்ள நூலகங்களுக்கு அளித்து விடுகிறேன்.
என்னுடைய பதிவு இங்கு யாரும் இந்த புத்தகங்களை வாங்கத் தூண்டுவதற்கான பதிவு அல்ல. அன்பு மிகு செனா அனாவின் கருத்து தான் என்னுடையதும். I just want to explain to my dear friends here why I am changing my stand & buying this book.
சூப்பரான விளக்கமுங்க ஷெரீப்!!
Deleteஅதோன்னுமில்லே MP !
DeleteErode 3-part ரிலீஸ்-ல strong-ஆ invest பண்ணவங்க எல்லாம் 15k - 20k அடிக்கலாம்னு பிளான் போட்டு இந்த காலத்துல அதுவும் அப்பீட்டு ஆவுற சமயத்துல editor 3900ன்னு சொன்னா கடுப்பாகுமா ஆகாதா ? அதான் அலறல் :-)
Yes - this album is a sure shot sale and a much needed oxygen in these times for Editor.
You wait and see - 250 of these books will be picked up by our regular subscribers and next year another 300 folks will ask for the same book :-) :-) :-)
If people are too concerned they can help those who cannot afford by giving their old editions - even at cover price - and buying this ! If they think why should they help - then just keep mum and let those who need it buy it.
////You wait and see - 250 of these books will be picked up by our regular subscribers and next year another 300 folks will ask for the same book///
Deleteஹா ஹா! அதான் நடக்கப்போகுது! :)))
நீங்க சொன்னது நடந்து ப்ராஜக்ட் சக்சஸ் ஆனா அட்டகாசமான சாக்லெட் பாக்ஸ் அனுப்பி வைக்கறேன்.
Delete//நீங்க சொன்னது நடந்து ப்ராஜக்ட் சக்சஸ் ஆனா///
Deleteஅதிலென்ன சந்தேகம் உங்களுக்கு ஷெரீப்!! இது கண்டிப்பா சக்ஸஸ் தான்!!
இப்போ தினமும் ஒன்னு ரெண்டுன்னு நடக்கிற முன்பதிவுகளெல்லாம் ஒரு விளையாட்டு மாதிரி - இ.ப தீவிரவாதிகளையும், எடிட்டரையும் இக்ளியூண்டு கலவரப்படுத்திப் பார்த்திட!
மாசம் பொறந்ததுமே புக்கிங்கும் வேகம் எடுக்கும்.. கெடுநாள் நெருங்கும் சமயத்தில் 'வாங்கலாமா வேணாமா'னு மதில்மேல் ஈவியாய் இருந்தவர்கள் கூட அடித்துப் பிடித்து முன்பதிவு பண்ணிடுவாங்க!
எந்தவித முன்னறிவிப்புமின்றி எடிட்டர் செய்யப்போற சர்ப்ரைஸ் சமாச்சாரம் ஒன்னு - குறித்த காலக்கெடுவுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே முன்பதிவு எண்ணிக்கை 300ஐ தாண்ட பேருதவியாயிருக்கும்!
ஆனால் அதற்கு முன்பே எடிட்டர் தன் தயாரிப்புப் பணியில் முழுவீச்சோடு இறங்கியிருப்பார்!
இதெல்லாம் நடக்கும்! ஆத்தா சொல்லிட்டா !!
அருமையான விளக்கம் ஷெரீப்! டைம்லி டிஸிஸன்! நூலுகங்களுக்கு தரணும் என்ற உங்கள் நல்ல மனம் வாழ்க!!
Deleteஈவி. சாக்லெட் பாக்ஸ் உங்களுக்கல்ல. ராக்ஜி க்கு.
Deleteமகி ஜி தொடர்ந்து பாலுக்கு பால் சிக்ஸர் அடிக்கிறிங்க
Delete///ஈவி. சாக்லெட் பாக்ஸ் உங்களுக்கல்ல. ராக்ஜி க்கு.///
Deleteதெரியும்! பாக்ஸ் - அவருக்கு!! சாக்லெட் - எனக்கு!!
செம 🤣🤣🤣🤣
Delete//!Erode 3-part ரிலீஸ்-ல strong-ஆ invest பண்ணவங்க எல்லாம் 15k - 20k அடிக்கலாம்னு பிளான் போட்டு இந்த காலத்துல அதுவும் அப்பீட்டு ஆவுற சமயத்துல editor 3900ன்னு சொன்னா கடுப்பாகுமா ஆகாதா ? அதான் அலறல் :-)///
Delete----ஓஹோ..இதான் சங்கதியா!!!
இனிமே புகைந்து கொண்டே இருக்கும் இடங்களில் ஒரு கண் வெக்கனும்...!!
10000 / 20000 என்றெல்லாம் பேசிக் கொள்வதை வாயைப் பிளந்து கொண்டு பராக்குத் தான் பார்க்க முடிகிறது ; சத்தியமாய் அதன் லாஜிக்கைப் புரிந்து கொள்ள முடியவில்லை ! அந்த விலைகளெல்லாம் நிஜமாகவே நடைமுறைகள் எனில் speechless !
Deleteஎது எப்படியோ - சரியான பாதையில் புனித தேவன் நம்மை இட்டுச் செல்லுவாரென்று நம்புவோம் !
///10000 / 20000 என்றெல்லாம் பேசிக் கொள்வதை வாயைப் பிளந்து கொண்டு பராக்குத் தான் பார்க்க முடிகிறது ; சத்தியமாய் அதன் லாஜிக்கைப் புரிந்து கொள்ள முடியவில்லை///
Deleteசிலருக்கு அப்படியொரு ஹேபிட் இருக்கிறது சார்!! இப்ப இ.ப முன்பதிவு அறிவிச்சிருக்கீங்க இல்ல.. இப்பவும் அந்த சிலர் இதை பார்த்துகிட்டேதான் இருப்பாங்க.. முன்பதிவும் பண்ணமாட்டாங்க - புக்கும் வாங்க மாட்டாங்க!! ஆனா புக் எல்லாம் வித்துத் தீர்ந்து 4 மாசம் கழிச்சு லபோ-திபோன்னு அடிச்சுக்குவாங்க.. இதே புக்கை பதினஞ்சாயிரம் விலை கொடுத்து வாங்கி, காணாமப்போன பொண்டாட்டியைக் கண்டுபிடிச்ச மாதிரி ஆனந்தக் கண்ணீர் விடுவாங்க!!
அவங்க டிசைனே அப்படித்தான் - ஒன்னும் பண்ண முடியாது!! காமிக்லவர் சொன்ன மாதிரி அடுத்தவருசமே இன்னும் 300 பேர் வந்து 'இ.ப மறுபதிப்பை வாங்காம விட்டுட்டேன்.. இன்னொருதபா மறுபதிப்பு ப்ளீஸ்'னு வந்து நிற்பாங்க பாருங்க!
//காணாமப்போன பொண்டாட்டியைக் கண்டுபிடிச்ச மாதிரி ஆனந்தக் கண்ணீர் விடுவாங்க!!//
Deleteஈஸ் இட்? :-))
///ஈஸ் இட்? ///
Deleteவிவரம் போறாத அந்த ஒரு சிலர்! :)
அதன் லாஜிக்கைப் புரிந்து கொள்ள முடியவில்லை ! //
Deleteபோன தடவை மிஸ் பண்ணியவர்களும் ஸ்டாக்கில் எப்படியும் இருக்கும்; புத்தக விழாவில் தள்ளுபடியில் கிடைக்கும் என்ற பிரச்சாரத்தால் வாங்காமல் விட்டவர்கள் சார். பிறகு 7000 வரை குடுத்து வாங்கினார்கள். எனக்கு தெரிந்தது போக அதிக ஏலம் குடுத்து எடுத்தவர்கள் எத்தினி பேரோ?
சார் இப்புத்தகம் கோவையில் ஒருவர் ஒரு பாகம் ஆயிரம் என சொன்னார் .. . 8ம் பாகம் வரும்போது.. . மகி ஆசிரியர் சரியான முடிவை இப்பவும் எடுத்துள்ளார். .மின்னும் மரணத்துக்கு மட்டும் ஏனில்லை இந்த மௌசு. .. .
DeleteCover variants எல்லாம் தயவு செய்து வேண்டாமே சார்?! என்னதான் இ.ப. - ம.ம.ம.ப. வேண்டாமென முறுக்கிக் கொண்டு நின்றாலும், என்னைப் போன்ற பலர் நமது வெளியீடுகள் அனைவற்றையும் வாங்கியாகிய வேண்டிய கட்டாயத்தில் முன்பதிவைத் தாமதமாகச் செய்தாவது வாங்கத்தான் போகிறோம். இதில் நீங்கள் "கவர் கவராக" வெளியிட்டால், கலெக்டர்கள் நிலை - சிறு வயதில் கிரிக்கெட் ராப்பர் சேர்ப்பதற்காக, கணக்கில்லாமல் பிக்ஃபன் பப்பிள் கம் வாங்கி மென்று பல்வலியுடன் சுத்திய கதையாகி விடும். ரொம்ப நாளைக்குப் பிறகு "என்பது என் கருத்து" என்ற செருகலையும் நுழைத்துக் கொள்கிறேன். உங்கள் விருப்பப்படியே. செய்யுங்கள்!
ReplyDeleteஎங்க காலத்தில் 'ட்ரிப்பிள் டேஸ்ட் 'என்றொரு மிட்டாய் கார்த்திக் ; அதன் ராப்பர்களை அவர்களே வழங்கும் ஒரு ஆல்பத்தில் ஒட்டி , பூர்த்தியான பிறகு அனுப்பி வைத்தால் என்னமோ பரிசெல்லாம் உண்டு !
DeleteCover Variants என்பதெல்லாம் ஒரு novelty factor - ன் பொருட்டு மட்டுமே ! நண்பர்கள் பழசுக்கே 'ஜெ ' போடும் பட்சத்தில் அவ்விதமே செய்வோம் !
What say folks ?
இதற்கொரு ஓட்டெடுப்பை நடத்திடலாம் எடிட்டர் சார்.
Delete//Cover Variants என்பதெல்லாம் ஒரு novelty factor - ன் பொருட்டு மட்டுமே//
Deleteஇரத்தப் படலம் தலைப்பு மற்றும் லயன் லோகோ - இவற்றை மட்டும் அட்டைகளில் அச்சடித்து, டீயடிச்சான் காப்பியாக 19 ஒரிஜினல் கவர்களையும் தனித்தனி டஸ்ட் ஜாக்கெட்டுகளாக கொடுத்த கையோடு, இருபதாவது டஸ்ட் ஜாக்கெட்டாக வாசகரின் புகைப்படம் தாங்கிய கவரையும் இணைத்து விட்டால் நாவல்டி, ஒரிஜினாலிடி, எக்ஸ்க்ளூசிவிடி என ஒரே கப்பில் மூன்று ஈக்களை அடிக்கலாம். பொழுது போகாத சமயத்தில், பிடித்த கவரை மாட்டி விட்டு அழகும் பார்க்கலாம்.. காமெடிக்குச் சொல்லவில்லை.
வாசகர் புகைப் படலம், குருதிப்புனல் கமல் ஸ்டைல் போஸாக இருந்தால் சிறப்பு! ரேபான் கண்ணாடி போஸா, முகமெல்லாம் இரத்தம் வழியும் போஸா என்பதை அவரவர் விருப்பத்திற்கு விட்டு விடலாம். இதை நீங்கள் காமெடியாக எடுத்துக் கொண்டாலும் சரி.
அப்புறம், முன்னூற்றுச் சொச்ச வாசகர்களின் புகைப்படம் தாங்கிய டஸ்ட் ஜாக்கெட்டுகளை தனியே வாங்கும் வாய்ப்பையும் வழங்கினால், அவற்றையும் வாங்கி மகிழ்வோம் :P
Deleteபி.கு.: வாயில் வடை சுட்ட பாவம் வேண்டாம் என்பதாலும், நண்பர் ராகவன் தனியே பகிர்ந்த சில காரணங்கள் நியாயமாகப் பட்டதாலும், நாளையே வடை சுட்டு விடுகிறேன்!
டஸ்ட் ஜாக்கெட்டெல்லாம் கிடையாது கார்த்திக் ; முன்னூத்திச் சொச்சம் போட்டோக்களும் அவரவரது புக்குகளின் முதற்பக்கத்தில் இருந்திடும் !
Deleteகார்த்திக் : நீங்க # 25 !
DeleteThanks for the real வடை !
என்னாது ... ரத்தப்படலம்னு பேரு போட்டு மொதல் பக்கத்துல நம்ம படமா - வேணாஞ்சாமி - நமக்கு அந்த எடத்துல Felicityயோட ஒரு கலர் படத்தை ஒட்டி குடுங்கண்ணனேன் !!
DeleteBTW neither cover variants nor old covers sir - let's go for fresh covers - this time more colorful and bright colors - typical of Lion Comics ! (Definitely no stickers on top - solliputten !!).
DeleteWill have to be an original William Vance cover for sure ! They will not permit us to make our own covers on projects of this magnitude !
DeleteI meant original only sir - those not used hitherto - and possibly some are bright enough in originals or perhaps they would allow us to brighten them !?
Deleteகார்த்திக் சொன்ன மாதிரி டஸ்ட் தாக்கல் தரலாம் ..அட்டைகள நிதமோர் சட்டைகளா போட்டு அழகு பாக்கலாம்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎடிட்டர் சார்.
ReplyDeleteமுன்பு நீங்கள்கூட ஒரு ஆல்பத்தை கொடுத்து அதில் நமது காமிக்ஸின் பின்பக்க அட்டையில் உள்ள நாயகர்களின் படங்களை ஒட்டியனுப்பச் சொன்னீர்கள் என்பதுகளில். நான்கூட அனுப்பியிருந்தேன். பரிசு...! வழக்கம்போலத்தான்... 'கிடைக்கவில்லை.'
சார், முன்ன மாதிரியே மூன்று புக்கா போட டிரை பண்ணுங்களேன். கையில் ஏந்தி தொடர்ந்து படிக்க சிரமமாக இருக்காது..
ReplyDeleteஇந்தப் பிராது மீதெல்லாம் எப்போதோ தீர்ப்புச் சொல்லியாச்சே சார் ? போகிற போக்கில் ஜமுக்காளத்தை மடிக்கவே கூடாதாக்கும் !
Deleteசார் பெரிய சைசுல
Deleteஎடிட்டர் சார், மூன்று, நாலு வகையான அட்டை படங்கள், குழப்பத்திற்கு தான் வழி வகுக்கும் என்று தொனுகிறது. Peivided....அட்டைகளை தேர்வு செய்யும் option இருந்தாலோழிய...
ReplyDeleteஉதாரணம் - நான் மூன்று புத்தகங்கள் வாங்க உள்ளேன் சார். ஆனால் மூன்றும் ஒரே அட்டையில் எனக்கு வந்து விட்டால் ஏமாற்றமாக இருக்காதா... சரவணன், சென்னை
///நான் மூன்று புத்தகங்கள் வாங்க உள்ளேன் சார். ஆனால் மூன்றும் ஒரே அட்டையில் எனக்கு வந்து விட்டால் ஏமாற்றமாக இருக்காதா... ///
Deleteசெம பாயிண்ட்!!
சாரே புதுசாய் திட்டமிடுபவனுக்கு அதனை செயல்படுத்தும் ஆற்றலும் இருக்குமென்று நம்பித் தான் பாருங்களேன் ! வெறும் 300 பிரதிகள் எனும் போது யாருக்கு என்ன போகிறதென்று கண்காணிப்பது கம்பு சுற்றும் கடினமா - என்ன ? அட அப்படியே எனக்கு விபரம் போதவில்லை என்றாகிப் போனால் இருக்கவே இருக்கு தானே முட்டுச் சந்து ?
Delete////ஆன்லைனில் வாங்கும் போதோ ; சந்தாக்களில் வாங்கிடும் போதோ - யாருக்கு எந்த ராப்பர் கிட்டும் என்பது புக் கைக்கு கிடைக்கும் வரையிலும் உறுதியாகத் தெரிந்திடாது ////
Deleteஇப்படிச் சொன்னது நீங்கதானே சார்?!! அதான் பயந்துட்டோம்! ( நீங்க சொன்னது அமெரிக்காவுல நடக்கறதைத்தான்னாலும்!)
பல ஆயிரங்களிலோ சில லட்சங்களிலோ வண்டி ஓடும் அமெரிக்க நடைமுறைக்கும் பனங்காயைக் கொண்டு வண்டி செய்து குச்சைக் கொண்டு உருட்டி வண்டி ஓட்டும் நமக்கும் ஏணி வைக்கத் தான் யோசிக்கவாவது முடியுமா சார் ?
DeleteProvided*
ReplyDeleteஆங்! சொல்ல மறந்துட்டேனே!! நம்ம புது app மூலமாக முந்தாநேத்து புக் பண்ணிய 'பி.பி.வி' இன்றே DTDC மூலம் கைகளை வந்தடைந்தது!!
ReplyDeleteசூப்பர், நான் இன்னும் ஜேம்ஸ் பாண்ட், புளூ கோட்ஸ் படிக்கல, வேலை குவித்து கிடக்குது. இந்த வாரம் எப்படியும் படித்து முடிக்கனும்.
DeleteVariant wrapper ku எனக் முழு ஆதரவு சார். ஆனால் பிற்காலத்தில் இதன் பொருட்டு நிகழ போகும் exchange/ resale/least printed cover book/most beautiful cover book etc. நிகழ்வுகளெல்லாம்.... கற்பனையில் வந்து போகிறது - சரவணன்
ReplyDeleteஅட பஞ்சாயத்து நிகழாதா போய் விடப்போகிறது - cover variants சமாச்சாரத்தைக் கையில் எடுக்காது விட்டிடும் பட்சத்தில் ?
Deleteஇது இல்லாங்காட்டி வேறேதோ ஒரு காரணத்தின் பொருட்டு மண்டை உருட்டல் நிகழப் போகிறது ! ஒரு கட்டத்தில் யாருக்கு என்ன விசனம் நேரக்கூடுமோ ? என்ற சிந்தனையிலேயே நான் செயல்பட துவங்கினால் செக்கு மாடாய் இருக்கும் இடத்திலேயே தன சுற்றி வர சாத்தியமாகிடும் சார் !
இதுக்கு கார்த்தி சொன்ன அத்தனை டஜாக்கட்டயும் தந்து.. .முன்பு வாங்கியோர்க்கும் குறித்த விலைல டஜா மட்டும் தந்தா கலக்குமே.
Delete120th
ReplyDeleteஏற்கனவே புக் வாங்குனவங்க.. எல்லாம்...
ReplyDeleteடஜா போராட்டம்தான்
Deleteநாம இதையெல்லாம் பாக்காத மாதிரியே இருந்துடுவோம்..!:-)
ReplyDeleteகண்ணா அதே அதே ஹிஹிஹி
Delete126வது
ReplyDeleteஆஹா..! ஆளில்லாதா கடைக்கு நான்தான் டீ ஆத்த வந்துட்டேனோ...?! எல்லாம், இ. ப . அறிவிப்பால் வந்த மயக்கமா..., இல்ல கிலியான்னு தெரியலையே..?
ReplyDeleteசரி, வந்தது வந்துட்டோம்... ஒரு பிட்ட போடுவோம்.
ரெட் சோஞ்சா சாவோஸ் ராப்பர் ஒவ்வொன்றும் சும்மா தெறிக்க விடுகிறது. எல்லா ஆல்பத்தையும் சேர்த்து ஒரே கலெக்டர்'ஸ் எடிஷனாக வெளியிட ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா சார்..?
ஆஹா .இது கோரிக்கை !!
Deleteஅதென்ன கதயோ
Deleteசோஞ்சாவா ? சோன்யாவா? 🤔
DeleteMiss fury நல்லா இருக்கும் போலயே!
Delete//அதென்ன கதயோ//
Deleteகதை அது கிடக்குது, படம் பார்த்து கதை சொல்லுன்னு சொல்லுவாங்கள, அந்த மேரி கதையிது. ஆனால், எடிட்டர் மட்டும் "ரெட் சோஞ்சா: ஏஜ் ஆப் சாவோஸ்" பொம்மை புக்கு படத்தைப் பார்த்துட்டு நாமெல்லாம் சின்ன பசங்கன்னு நினைச்சி ரிஜெக்ட் பண்ணப் போறதா ஒரு கேள்வி?
MH MOHIDEEN
And today's bookings :
ReplyDeleteKarthik Somalinga, Bengaluru - 1
A.Sathish Kumar, Vellore - 1
Prasanna Sridhar,Kovai - 1
Grand Total : 27 bookings
நாம இன்னிக்கும் இந்தப் பக்கம் வராத மாதிரியே மெய்ன்டெய்ன் பண்ணிக்குவோம்..!
ReplyDeleteசனவரி 15 வரையுமா???
DeleteSeptember 15 வரை
Deleteஇரத்தப்படலம் திட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் !!!!
ReplyDeleteஒரு வேண்டுகோளும் தொடர்கிறது
ரத்தபடலம் வெற்றியடையுமாயின் ஒரு குழந்தைக்காக லாபத்தில் பங்கு அளிப்பதாக எடிட்டர் சொன்னார்....
உயரிய எண்ணம் ..
ஆனால் கடவுள் அருளால் குழந்தையின் சிகிச்சைக்கு தேவையான பொருளுதவி கிட்டிவிட்டதாக நல்ல செய்தியை நண்பர் ஒருவர் சொன்னார்..
பின்
அடையாறு புற்றுநோய் மையத்துக்கு ஒரு லட்சம் அளிக்க போவதாக சொன்னீர்கள்
மேலான எண்ணம் ...
ஆனால் அடையாறு புற்றுநோய் மையத்துக்கு நன்கொடை வழங்க பல்லாயிரம் நல்ல உள்ளங்கள் உண்டு ...
மாறாக
இந்த ஒரு லட்ச ரூபாயை உணவுக்கு மட்டுமே இக்கஷ்ட காலத்தில் சம்பாதிக்க இயன்று காமிக்ஸ் மீதான நெடுங்கால காதலின் சுகத்தை திடீர் கஷ்டத்தால் இழந்து நிற்கும் ஒரு ஐம்பது வாசகர்களுக்கான அரைச்சந்தா
கட்டுவதால் தீர்க்கமுடியுமல்லவா ?
நான் இப்போது ரத்த படலத்தை எதிர்க்கவில்லை ..
திட்டம் வெற்றியடையுமாயின் நீங்கள் உங்கள் பணத்தில் ஒரு பங்கை செலவழிக்க போகும் இடத்தை மட்டும் மாற்ற மன்றாடி வேண்டுகிறேன் ..
புற்றுநோய் மையம் போய் சேரும் பணம் புண்ணியம் அளிக்க வல்லது
அதில் மாற்று கருத்தில்லை
ஆயினும் இங்கிருந்து பெற்ற பணம் இங்கேயே செலவழிக்கப் படுவதிலும் தவறு ஒன்றுமில்லை ...
நண்பர் சேலம் விஜயராகவன் எவ்வளவு பெரிய காமிக்ஸ் ரசிகர் என்று எல்லாருக்கும் தெரியும்
வயதில் சிறியவர் என்றாலும் எனக்கான மதிப்பில் மிகவும் உயர்ந்து இருப்பவர் ..
அப்படிப்பட்டவரே சென்ற வருடம் சந்தா செலுத்த முடியாத சூழ்நிலை
மேச்சேரி, கண்ணன் தனக்கு வந்த சந்தா பரிசை அவருக்கு மாற்றி கொடுத்தபோது அவர் உள்ளம் அடைந்த மகிழ்வு எல்லையில்லாதது
இது விஜயராகவன் சொல்லித்தான் எனக்கு தெரியும்
லாக்டவுன் இருந்த ,இருக்கும் நேரத்தில் பலர் நெருக்கடியில் இருக்கலாம்
அவர்கள் யாரும் கேட்க போவதில்லை
இல்லாதார் சொல் அம்பலம் ஏறுவதில்லை ...
இரத்தப்படலம் வாங்குவோர் தானாகவே உதவி செய்த பலன் பெறுவார்
இப்பதிவு எடிட்டர் அவர்களுக்கு சங்கடம் அளிக்குமாயின் மன்னிப்பை வேண்டுவதோடு இப்பதிவை நீக்க வேண்டுகிறேன் ..
மனதில் தோன்றியதை சொன்ன திருப்தி மட்டும் மிஞ்சி இருக்கும்
மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள் செனாஅனா!! அதுவும் சரியான தருணத்தில்!!
Deleteநண்பர் ஜேடர்பாளையம் சரவணகுமாருக்கு மீண்டும் மூளைப்பகுதியில் சர்ஜரி அவசியமாகியிருக்கிறது! இச்சமயத்தில் நண்பர்களின் பொருளுதவியும் அவருக்குத் தேவையிருப்பதாக KVG முகநூலில் பதிவிட்டிருந்ததை நண்பர்கள் பலரும் கண்டிருக்கின்றனர். KVG யே எடிட்டருக்கும் தகவல் கொடுத்திருப்பதாக அறிந்தேன்!
இ.ப'வில் கிடைக்கும் நிதியை நாம் JSKவுக்காக கொடுப்பது எடிட்டரின் மூலம் உறுதியாகிடுமானால் இ.ப வேண்டாம் என்று நினைத்தவர்கள் கூட புக்கிங் செய்ய முன்வரும் வாய்ப்புள்ளது!! நண்பருக்கு உதவினாற்போலவும் இருக்கும் - ஒரு இ.ப'வை அடைந்தது போலவும் இருக்கும்!
முடிவு, எடிட்டரின் கையில்!! _/\_
உட்கருத்தை வழிமொழிகிறேன் ஈவி..
Deleteஆனால்
மருத்துவ உதவி என்பதால் உடனடி தேவை என்பதாகும்
அதற்கான தனி லிங்கை ஏற்படுத்தி கொடுக்கவும்..
எல்லாரும் சேர்ந்து செய்யலாம்..
ரத்த படலம் மூலமாக பணம் வருவது கால தாமதமாகும் ..
90 நாட்கள்..
இத்திட்டத்தின் வெற்றி தோல்வி எடிட்டரும்
அறியாதது..
வெற்றி பெறவில்லையாயின் அவர் பணத்தை திருப்பியளிக்க வேண்டும்..
அவரை கஷ்டப்படுத்துவது சரியல்ல..
ஆனால் நாம் அனைவரும் ஒன்றிணைய இயலும்..
சிறுதுளி பெருவெள்ளம்..
அப்படி செய்வதை விரைவாக செய.ய இயலும்..
எடிட்டர் மிகவும் சிரமமான நிலையில் இருப்பதாக உணர்கிறேன் ஈவி..
Deleteஎனவே எப்போதும் போல சிறுதொகை ஒன்றை நம்மை போல் அளிக்க அவர் முயன்றால் போதுமானது..
பலரும் இணைகையில் அது மருத்துவ செலவை ஈடுகட்ட இயலும் என்ற நம்பிக்கை உள்ளது..
வெற்றி தோல்வி ஊர்ஜிதமாகா நிலையில் ஊரார் பண்த்தை அவரை வழங்க சொல்வது நியாயமாகாது..
////மருத்துவ உதவி என்பதால் உடனடி தேவை என்பதாகும் ///
Deleteரொம்ப அவசரம் என்பதாகத் தெரியவில்லை! அறுவை சிகிச்சைக்குத் தேவையான உபகரணமொன்று சென்னையிலிருந்து வந்துசேர 3 வாரகாலங்கள் ஆகும் என டாக்டர் சொல்லியிருப்பதால், உத்தேசமாக ஒரு மாதகால அவகாசம் இருப்பதாகக் கணக்கில் கொள்ளலாம்! ( தகவல் : கரூர் குணா)
இ.ப புக்கிங் & நண்பருக்கான உதவி = ஆகிய இரண்டுமே ஒருசேர நடந்தேறினால் அனைத்துத்தரப்பினரும் மகிழ்ச்சியடைவார்களே என்ற எண்ணமே எனக்கு மேலோங்கியிருக்கிறது செனாஅனா!
அப்படியாயின் உங்கள் எண்ணப்படியே ஆகட்டும்..!!!
Delete///வெற்றி தோல்வி ஊர்ஜிதமாகா நிலையில் ஊரார் பண்த்தை அவரை வழங்க சொல்வது நியாயமாகாது..///
Deleteஉண்மைதான்!!
முன்பதிவு எண்ணிக்கை 300 தான் லட்சியமென்றாலும் கூட, 200ஐ தாண்டிவிட்டாலே எடிட்டருக்கு இந்தப் பிராஜக்டை செய்வதற்கான உத்வேகம் வந்துவிடும் என்பதே என் கருத்து!!
ஒருமாத கால அவகாசத்தில் 200 முன்பதிவுகள் நமக்குச் சாத்தியமாகிடுமாயின், எல்லோருக்கும் எல்லாமே கிடைத்தது போலாகிவிடும்!!
@ செனா அனா & ஈ.வி :
Deleteநமது "Project இரத்தப் படலம்" நனவாகின், அதனிலிருந்து ஒரு தொகையினை புற்று நோய் மையத்துக்கு வழங்க நான் முன்வந்ததில் நிச்சயமாய் யாருக்கும் எவ்வித நெருடல்களும் இராதென்ற நம்பிக்கை எனக்குள்ளது ! ஆனால் அதே பணத்தை நிதிச் சிரமங்களில் இருக்கக்கூடிய இதர நண்பர்களின் சந்தாக்களுக்கென உபயோகப்படுத்திக் கொள்ளவா ? என்ற கேள்வியினை நான் முன்வைத்தால் - சத்தியமாய் அதே பரிபூரண சம்மதம் கிட்டுமென்ற நம்பிக்கை எனக்கில்லை ! 'நானே நிறைய சிரமங்களுக்கு மத்தியில், இரத்தப் படலம் மீதான வெறியில் தக்கி முக்கிப் புரட்டிக் கட்டிய தொகையின் ஒரு பகுதி, முகமறியா வாசகர்களின் சந்தாக்களுக்குப் போகப் போகுதா ? நல்ல கதையா இருக்கே ?' என்ற ரியாக்ஷன் மட்டுமே உத்திரவாதமாய் சாத்தியமாகிடும் ! தவிர ஒவ்வொரு வாசக நண்பரின் நிதிச் சிக்கல்களையும் எந்த அளவுகோலின் அடிப்படையில் உறுதி செய்திடுவது - என்ற கேள்வியும் எழும் தானே ? And யாருக்கு சந்தாக்கள் செல்கின்றன ? என்பதில் என்னளவில் ரகசியம் காக்கப்பட்டாலும், ரொம்பச் சீக்கிரமே இத்தகைய சேதிகள் வெட்ட வெளிக்கு வந்திடுவதைத் தவிர்க்க இயலாது & யானையின் மணியோசையாய் நொடிப் பொழுதினில் சர்ச்சைகளும் பின்தொடர்ந்திடுவது சர்வ நிச்சயம் ! 'பாத்தியா ? அவனுக்கு ஜாலரா போடும் ஆட்களுக்கா பார்த்து, சந்தாக்களை இலவசமாய் தள்ளி விட்டிருக்கான் !' என்ற புகைச்சல்களுக்கு பஞ்சமே இராது ! குருவியின் புண்ணியத்தில் விழும் பனம்பழங்களுக்குமே என்னைக் காரணமாக்கி, கட்டி வைத்துத் துவைக்க ஆங்காங்கே ஆர்வலர்கள் ஆவலாய்க் காத்திருக்கும் போது, இத்தகைய லட்டுகளை அவர்களின் மடியினில் ஒப்படைப்பதில் எனக்குச் சம்மதமில்லை சார் !
And yes - நண்பர் சரவணகுமாரின் மருத்துவச் செலவுகள் குறித்த தகவல் எனக்கும் கிட்டியது தான் ! "இ.ப." நிதியிலிருந்து நண்பருக்கு ஒரு தொகை வழங்கிடும் முன்மொழிவு என்னளவுக்கு ஓ.கே. தான் ; ஆனால் இந்த project வெற்றி காண்பதும், கானல் நீராகிப் போவதும் இன்னொரு 80 + நாட்களுக்குப் பின் தானே தெரிந்திடும் ? Just in case - இலக்கைத் தொட ஆற்றலின்றிப் போயின், முன்பதிவின் பணங்களை மறு நொடியே திருப்பி அனுப்புவது நம் தலையாய கடமையாகிடும் எனும் போது, அதனிலிருந்து நண்பரின் வைத்தியச் செலவுக்கு பணம் அனுப்புவது இப்போதைக்கு சாத்தியமாகாதே ! Simply put - "300 in 90" என்பது உறுதியாகிடும் வரைக்கும், அந்தப் பணத்திலிருந்து பத்து ரூபாய் காசைக் கூட நாம் செலவிட தார்மீக உரிமை இராது !
So இந்த நொடியின் நண்பரின் தேவைக்கு அந்தத் திட்டமிடல் சுகப்படாதென்பதால் - இதற்கு முந்தைய தருணத்தில் நாம் செய்தது போலவே, இயன்ற பண உதவி செய்திடக் கோரி ஒரு பதிவைப் போட்டு விடலாம் ! And அவரவருக்கு இயன்ற தொகைகளை ஓசையின்றி நண்பருக்கு நேரடியாகவே அனுப்பிடலாம் !
ரைட்டோ - தப்போ ; நான் முதல் புள்ளியில் கொடுத்த வாக்கை நிறைவேற்றிடுவதே ஏற்கனவே ஒரு லட்சத்தை நம் கைகளில் ஒப்படைத்திருக்கும் 27 நண்பர்களின் நம்பிக்கைகளுக்கு நான் செய்திடும் நியாயமாய் இருக்கக்கூடும் ! நண்பர் சரவணக்குமாரின் பொருட்டு காலையில் ஒரு பதிவைத் தட்டி விடுகிறேன் & நம்மால் இயன்ற தொகையை அனுப்பி வைத்து ஒரு துவக்கமும் தந்து விடுகிறேன் !
//உண்மைதான்!!
Deleteமுன்பதிவு எண்ணிக்கை 300 தான் லட்சியமென்றாலும் கூட, 200ஐ தாண்டிவிட்டாலே எடிட்டருக்கு இந்தப் பிராஜக்டை செய்வதற்கான உத்வேகம் வந்துவிடும் என்பதே என் கருத்து!!//
அப்படியாயின்
நாளை நான் இரண்டு ரத்தப் படலங்களை பதிவு செய்கிறேன்
ஆனால்
எனக்கல்ல !!!
எனது சந்தோஷத்திற்காக உங்களுக்கும் இன்னொரு நண்பருக்கும் சந்தா முன்பதிவு செய்வீர்களா என கேள்வி எழுப்பிய போது
என்னோடு பழகியும் பேசியுமறியாத நண்பர் பழனிவேல் உங்கள் மகிழ்வுக்கு நான் ஏன் செய்ய வேண்டும் என கடுஞ்சொல் கூறாது
செய்கிறேன் என சொல்லி இன்பமூட்டினார்..
அவருக்கு அவ்விரண்டு பிரதிகள் அனுப்ப உத்தேசம்
நாளை எடிட்டருக்கு பணம் அனுப்பி பணம் அனுப்பிய விவரங்களை ஈமெயில் மூலம் தெரிவிக்கிறேன்
எடிட்டர் சகோதரர் பழனிவேல் அவர்களின் பிழை திருத்தும் பணியை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் - பழனிவேல் அவர்களின் மனதில் சக வாசர்களின் மேல் உள்ள ஏற்புடமை குறித்த விளக்கமாக இது இருப்பதில் மனதிற்கு நிறைவே ..
அத்தனையும் உண்மை, எடிட்டர் சார்!
Deleteஅப்படியே ஆகட்டும்!
(நண்பர்கள் மனது வைத்தால் 30 நாட்களில் 200 முன்பதிவுகளும் சாத்தியமே! ஊர்கூடி தேர் இழுப்பதுபோல! ஒரு online polling மூலமாக நண்பர்களின் கருத்தை அறிந்திட வாய்ப்பிருக்கிறதான்னு பாருங்களேன் எடிட்டர் சார்?! ப்ளீஸ்!)
அருமை அருமை செனாஅனா!! வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்! _/\_
Deleteவாழ்த்துகள் பழனிவேல்!! உங்களின் ஒரு இன்சொல் கொண்டு சேர்த்திருக்கும் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் இவை!! (வாழ்த்த வயதுண்டு.. அதனால் வாழ்த்தினேன்! :) )
வேண்டாமே சார் ; "இரத்தப் படல காதல்" என்பதெல்லாம் ஒரு வைராக்கியமே ! ஆனால் இந்த நொடியில் நிறைய வயிற்றுப் பாடுகளே கேள்விக்குறிகளாகி வரும் நிலையில் - வைராக்கியங்களை சுட்டிக்காட்டி அவசரப்படுத்துவது, நிறைய நண்பர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்திடக்கூடும் !
DeleteAnd நண்பரின் நலத்துக்கு பிரார்த்தனைகளை மட்டுமே வழங்கிடக்கூடிய சூழலில் இன்றைக்கு நிறையப் பேர் இருக்கக்கூடும் தான் ; so அவர்களையும் நாம் கருத்தில் கொண்டாக வேண்டுமே !
தகவலைச் சொல்லி விடுவோம் - நிச்சயமாய் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடு !
ஹம்.. ரொம்பவே யதார்த்தமான சிந்தனைகள் தான்!!
Deleteசரிங் சார்!! (மண்டையை ஆட்டிவிட்டேனென்றாலும், ஏதாவதொரு அதிசயம் நிகழ்ந்துவிடாதா என்ற எண்ணம் இன்னும் நீங்கியபாடில்லை!)
வாழ்த்துகள் பழனிவேல்!! உங்களின் ஒரு இன்சொல் கொண்டு சேர்த்திருக்கும் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் இவை!! (வாழ்த்த வயதுண்டு.. அதனால் வாழ்த்தினேன்! :) )//
Deleteநன்றி ஈவி..
ரைட்டோ - தப்போ ; நான் முதல் புள்ளியில் கொடுத்த வாக்கை நிறைவேற்றிடுவதே //ஏற்கனவே ஒரு லட்சத்தை நம் கைகளில் ஒப்படைத்திருக்கும் 27 நண்பர்களின் நம்பிக்கைகளுக்கு நான் செய்திடும் நியாயமாய் இருக்கக்கூடும் ! நண்பர் சரவணக்குமாரின் பொருட்டு காலையில் ஒரு பதிவைத் தட்டி விடுகிறேன் & நம்மால் இயன்ற தொகையை அனுப்பி வைத்து ஒரு துவக்கமும் தந்து விடுகிறேன் !//
ReplyDeleteசார் ! உங்கள் பதிவை இப்போதுதான் படிக்கிறேன் ..
இதற்கான என்னால் இயலும் தொகையை நீங்கள் அனுப்பும் லிங்கில் அனுப்பி விடுகிறேன் ...
நண்பர் பழனிவேலுக்கான ரத்தப்படல பிரதிகளை நான் பணம் அனுப்பிய செய்தி அனுப்பியவுடன் மேற்கூறிய காரணங்களுக்காக அவர் பேரில் முன் பதிவு செய்து கொள்ளவும்
செனா அனா ஜி நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும் அருமை உங்களின் இரண்டு புக்கிங் மகி ஜி யின் புக்கிங் இவைகளெல்லாம் இரத்தப்படலத்தின் வெற்றிக்கான அச்சாரங்கள்
Deleteஎன்னோடு பழகியும் பேசியுமறியாத நண்பர் பழனிவேல் உங்கள் மகிழ்வுக்கு நான் ஏன் செய்ய வேண்டும் என கடுஞ்சொல் கூறாது
Deleteசெய்கிறேன் என சொல்லி இன்பமூட்டினார்..
அவருக்கு அவ்விரண்டு பிரதிகள் அனுப்ப உத்தேசம்//
தங்களது இந்த அறிவிப்பைக்கேட்டு எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன் நண்பரே....உங்க மனதில் ஒரு நல்ல இடத்தில் நான் இருப்பது மிக்க மகிழ்ச்சி...
அதே சமயம் பழனிக்கு இரத்தப்படலமா அல்லது நண்பர் சரவணக்குமாருக்கு மருத்துவ உதவியா என பார்க்கும் பொழுது மருத்துவ உதவியே இப்போதயபிரதானம் எனவே எனக்கு அனுப்புவதாக கூறிய புத்தகத்திற்க்கான தொகையை நண்பருக்கு உடனடியாக அனுப்பி உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நண்பரே.. நன்றி...
மேலும் நீங்கள் விரும்பிய மற்றொரு சந்தாவையும் நான் நண்பர் சரவணக்குமார் அவர்களுக்கு 2021 க்காக நான் அனுப்புகிறேன் நண்பரே ....மீண்டும் தங்கள் அளவுகடந்த அன்புக்கு நன்றி மட்டும் கூறினால் போதாது நண்பரே...அதுக்கும் மேல்....
பழனி 👏👏👏👏👏👏
Delete@பழனி
Deleteஉயர்வான எண்ணங்கள்!! வாழ்க.. வாழ்க!!
/தங்களது இந்த அறிவிப்பைக்கேட்டு எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன் நண்பரே....உங்க மனதில் ஒரு நல்ல இடத்தில் நான் இருப்பது மிக்க மகிழ்ச்சி//
Deleteகாமிக்ஸ் நூல்கள் குறித்து கருத்து முரண்கள் இருப்பினும் மனிதர்களின் அடிப்படை நல்லியல்புகள் மாறுவதில்லை என தளத்தில் வெளிக்கொணர்ந்த தாங்கள் அதற்கான பாராட்டுகளுக்கு முற்றிலும் தகுதியானவரே...
நண்பர் JSK - க்கு நம்மாலான உதவிகளை செய்யலாம்..அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
நான் இரவு ஏற்கனவே செய்து வைத்தது போல் pre- scheduled money transfer காலை 8.00 மணிக்கு நடந்து இரண்டு ரத்த படல புத்தகங்களுக்கான முன்பதிவு தங்களின் பேருக்கான ஈமெயில் auto generate செய்யப்பட்டு எடிட்டருக்குஅனுப்ப பட்டுவிட்டது...
அன்புடன்..
நல்ல விஷயத்தை செய்துள்ளீர்கள் செல்வம் அபிராமி!
Deleteசரிங்க நண்பரே நிச்சயம் ஏதோ ஒரு நல்லது நடக்கும்...
Deleteஉயர்ந்த உள்ளம் செனா அனா க்கு
ReplyDeleteஎன் அன்பு கலந்த வணக்கங்கள்.
50 வாசகருக்கு சந்தா என்ற நல்ல
கருத்தை சொல்லியதற்கு.
நாம் அனைவரும் சகோதரர்கள் என்பதை
அடிக்கடி நினைவுபடுத்திவிடுகிறீர்கள்.
நண்பர் JSK கும் மருத்துவ உதவி தேவைப்
படுகிறது. நாம் அதற்க்கும் உதவி
செய்யலாம். மீண்டும் நன்றி
இரத்தபடலம் புத்தகத்துக்கு உங்கள்
ஆதரவை தெரிவித்ததுக்கு.
அன்புடனும் நட்புடனும் பிரதி வணக்கங்கள் கணேஷ் சார்!!
Deleteஉயர்ந்த உள்ளம் செனா அனா க்கு
ReplyDeleteஎன் அன்பு கலந்த வணக்கங்கள்.
50 வாசகருக்கு சந்தா என்ற நல்ல
கருத்தை சொல்லியதற்கு.
நாம் அனைவரும் சகோதரர்கள் என்பதை
அடிக்கடி நினைவுபடுத்திவிடுகிறீர்கள்.
நண்பர் JSK கும் மருத்துவ உதவி தேவைப்
படுகிறது. நாம் அதற்க்கும் உதவி
செய்யலாம். மீண்டும் நன்றி
இரத்தபடலம் புத்தகத்துக்கு உங்கள்
ஆதரவை தெரிவித்ததுக்கு.
"இதற்கு முந்தைய தருணத்தில் நாம் செய்தது போலவே, இயன்ற பண உதவி செய்திடக் கோரி ஒரு பதிவைப் போட்டு விடலாம் ! And அவரவருக்கு இயன்ற தொகைகளை ஓசையின்றி நண்பருக்கு நேரடியாகவே அனுப்பிடலாம் !
ReplyDeleteகாமிக்ஸ் மேல் உங்களுக்கு உள்ள காதலுக்கும் வாசகர்கள் மேல் உள்ள அக்கறைக்கும் மிக்க நன்றி ஆசிரியரே உங்களை ஆசிரியராக கொண்டதற்க்கு நித்தமும் பெருமைப்படுகிறேன் நண்பர் ஜேடர்பாளையம் சரவணகுமார் சீக்கிரமே உடல் உபாதைகளிலிருந்து மீண்டு வர ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்
///இரத்தப்படலம் திட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் !!!!///
ReplyDelete///நாளை நான் இரண்டு ரத்தப் படலங்களை பதிவு செய்கிறேன்///
அருமை செனாஅனா ஜி!
தங்களது மனமாற்றமும், செயல்பாடுகளும் உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது!
நல்லதோ, கெட்டதோ சில வாசகர்கள் விருப்பத்தையும், வேறு நற்காரியத்திற்காகவும் எடிட்டர் நிறைவேற்ற முடிவு செய்து இரத்தப் படலம் அறிவிப்பை வெளியிட்ட பிறகும் தொடர்ந்து எதிர்ப்பது என்பது ஒரு கட்டத்தில் என்னளவில் தவறாகத் தெரிந்த காரணத்தாலேயே நானும் எதிர்க்கருத்தை கூறவேண்டியதாகி விட்டது!
கருத்துக்கு எதிர்கருத்து கூற யாராக இருந்தாலும் தயங்கியதே இல்லை! மாறாக மனம் நோகச் செய்திருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்!
நல்லதே நடக்கட்டும்!!
மிதுன்! பொதுத் தளத்தில் வைக்கப்படும் எந்த ஒரு கருத்தும் விமர்சனங்களுக்கு ஆட்படுபவையே!!!
Deleteஆழ்ந்த சிந்தனைக்கு பேர் போன தங்களின் மீதான எனது மதிப்பு அப்படியே தொடர்கிறது...
இரத்தப்படல முன்பதிவு ஆசிரியர் கூறியது போல் அடித்தாடும் நேரமிது.தேவைப்படும்.நண்பர்கள் தாமதிக்காமல் பதிவு செய்வது பல நல்ல காரியங்களை முன்னெடுத்துச்செல்ல உதவும் நண்பர்களே... ம்ம் தெறிக்கவிடுங்க ....
ReplyDeleteஜூன்-21ம் தேதி சூரியகிரகணத்துக்குப் பிறகு சிலபல அதிசயங்கள் நடக்குமின்னு சொல்லியிருந்தாங்க!
ReplyDeleteஇப்போ வந்துக்கிட்டிருக்கும் கமெண்டுகளைப் பார்த்தா - அது உண்மைதானோன்னு தோனுது! :D
செயலரே 🤣🤣🤣🤣. இதெல்லாம் இங்கே சகஜம் தானே. முகநூலில் இருக்கும் ஹேட்டர்ஸ்க்கு மத்தியில் இவ்வாறு நடந்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவதில் நியாயம் உள்ளது.
Deleteஒரே சமயத்துல 100 சூரியகிரகணம் ஏற்பட்டாலும் அது முகநூல் மேன்மக்களின் மனதில் மட்டும் கடுகளவு மாற்றத்தையும் ஏற்படுத்திடாது என்பது இப் பேரண்டப் பொதுவிதியாச்சுங்களே ஷெரீப்!! :D
Deleteசார் போமுபா கதை விறுவிறுப்பா நகைச்சுவையோடு சார்ஜ்னு பாஞ்சு போனது அட்டகாசமா மட்டுமல்லாமல் ச்சார்ஜ் ஏத்தியது என் மனதிற்க்கும். பின்னட்டை கதையின் நான்கு கட்டங்களில் தாங்கி வந்ததும் அழகு. ௨ள் பக்கம் 13ன் இரு கதை விளம்பரமும் முன்னட்டையும்... ஆக மொத்த புத்தகமும் அட்டகாசம்
ReplyDeleteஸ்டீல்க்ளா
Deleteமகிழ்வான ,நெகிழ்ச்சியான பதிவுகள் ..
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பர்களே ..:-)
பொருளர் ஜி@
ReplyDeleteபழனிவேல்@
மிதுனரே@
& அன்பு எடிட்டர் சார்@
உங்கள் எல்லோரோடும் பழகும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம்.
இன்றைய பின்னூட்டங்கள் இந்த சோதனையான காலகட்டத்தில் பாலைவன சோலையாக ஒரு நம்பிக்கையை விதைக்கின்றன்.
"""நெல்லுக்(கு) இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)
எல்லார்க்கும் பெய்யும் மழை."""
---இத்தனை நல்ல உங்கள் இணைந்த பின்னும் இரத்தப்படலம் பதிப்பு 3 பெருவெற்றி பெரும் என்பதை நம்பவும் மறுப்பேனோ!!!!
நண்பர் JSK வும் நலம்பெறுவார், எல்லாம் வல்லவரின் அருளோடு...!!!
எடிட்டரின் புதிய மினிபதிவு ரெடி நண்பர்களே!
ReplyDeleteஅன்புள்ள எடிட்டர் அவர்களுக்கு...
ReplyDeleteரத்தப்படலம் முன்பதிவு செய்துள்ளேன் நான்.
அத்துடன் high resolution photo-வினை ஈ-மெயிலில் அனுப்பும்படி கூறியிருந்தீர்கள்.
தயவுசெய்து அந்த ஈ-மெயிலில் வேறு என்ன விவரங்கள் Mandatory என்று கூறவும்.
(Ex. Order Reference Number அல்லது வேறு எதாவது)
நன்றி.
ராஜ்குமார் சிவனாண்டி
rajkumar.sivanandi@gmail.com
+917406090011