Powered By Blogger

Wednesday, July 08, 2020

நடுவர்களைத் தேடி !!

நண்பர்களே,

வணக்கம். சென்னை சிறுகச் சிறுகவொரு ஒளிக்கீற்றைக் காணத்  தயாராகி வருவதைக் கண்டு உள்ளுக்குள் நிம்மதி கலந்த மகிழ்வு அலையடிக்கிறது ! தொடரும் தினங்களிலுமே இந்த கொரோனா தாண்டவத்தின் வீரியம் குறைந்திட்டால் தமிழகத்தின் இருதயமே சீரானது போலான உணர்வு நம் அனைவருக்கும் கிட்டிடுவது உறுதி !  அதே சமயம் - அங்கே குறைவது ; இங்கே எகிறியடிக்கத் துவங்கியிருப்பது தீரா தலைநோவுக்குக் காரணமாகி வருகிறது ! சென்னையில் நடத்திய கச்சேரியின் அடுத்த அத்தியாயத்தை இங்கே  மதுரை ; தூத்துக்குடி  & எங்கள் மாவட்டமான விருதுநகரில் அரங்கேற்ற ஆரம்பித்திருப்பது அநியாயத்துக்கு வயிற்றைக் கலக்கி வருகிறது ! அநேகமாய் ஜூலை 8 பின்னிரவு  முதலாய் குறைந்த பட்சம் ஒரு வாரத்துக்கு முழு அடைப்பு இங்கே சிவகாசியினில் அமலுக்கு வரக்கூடும் என்ற சேதிகள் ஊரெங்கும் றெக்கை கட்டிப் பறந்து வருகின்றன ! பகலில் நிலவரம் தெளிவாகிடும் ! 

So மண்டை காய்ந்து கிடக்கும் இந்தத் தருணத்தினில் கண்ணில்பட்ட  இந்த caption தான் இந்த உபபதிவின் பொழுதைக் கடத்திட உதவிடும் என்று நினைத்தேன் ! வெற்றி பெறும் caption எழுதிடும் நண்பருக்கு 'இ.ப" ஒரு புக் நம் அன்புடன் ! அசத்துங்கள் பார்க்கலாம் ! 
அப்புறம் இதற்கு நடுவராக யாரைக் கோர்த்து விடுவதோ ? என்ற யோசனையில் சுற்று முற்றும் பார்வையை ஓட விட்டால், தலைகளில் முக்காடுகளை போட்டபடிக்கே, வேஷ்டிகளைத் தூக்கிச் செருகிக் கொண்டு ஊரை  விட்டே ஓடும் சில பிம்பங்கள் மாத்திரமே தென்படுகின்றன ! எப்படியும் பை-பாசில் போய் மடக்கிப்புடலாம் - யாரையாச்சும் ! Bye folks for now !! See you around !!

P.S. : "இரத்தப் படலம்' இன்று வரைக்குமான புக்கிங்கில் 74 பிரதிகளுக்கு முன்பதிவாகியுள்ளது ! கிட்டத்தட்ட கால்வாசித் தொலைவை கண்ணிமைக்கும் வேகத்தில் தாண்டியாச்சு - சுமார் 20 நாள் அவகாசத்தினுள் ! இன்னமும் மூன்று மடங்குத் தொலைவு waiting !! பார்ப்போமே - தொடரும் நாட்களின் துரிதங்களும் இதே நாற்கால் பாய்ச்சலில் இருக்கவுள்ளதா என்பதை !! 

241 comments:

  1. Replies
    1. எட்டு செகண்ட் முத்தம்! :-)

      Delete
    2. கிட் : ஏன் பாஸ் மூஞ்ச கரப்பான்பூச்சி மாரி வச்சிருக்கீங்க!

      டாக்புல் : அடேய்! மடப்பயலே! காட்டுக்குள்ள போயிட்டா கொரானா வராதுன்னு ஐடியா குடுத்து, இந்த தீச்சட்டி மண்டையானுககிட்ட மாட்டி விட்டுட்டயேடா!?

      தீச்சட்டி C : இதோட 19 வார்த்தையாச்சு! 19 வெறக சேத்திக்க!

      (அட! இ.ப. + பு.வி = 19 தானே!)

      Delete
    3. இரத்தப்படலம் கெடைச்சிடுமோ?😉

      Delete
  2. ஆமாம் சார். அதுவும் எனது அக்கா வசிக்கும் முத்துராமன்பட்டி மற்றும் அல்லம்பட்டி இரண்டு ஏரியாவும் திங்கட்கிழமை முதல் முழுவதுமாக அடைத்து விட்டனர் இந்த மாதம் முழுவதும். ஒரு தெருவுக்கு 2-3 குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது.

    கவலையான விஷயம் தான்.

    புத்தகங்கள் ஒரு வேளை இந்த வெள்ளிக்கிழமை தயாராகி விட்டால் அனுப்பி விடுங்கள், அடுத்த லாக்-டவுன் வருவதற்குள்.

    ReplyDelete
  3. ஆறாவதாய் வந்தாச்சு !

    ReplyDelete
  4. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்..
    மு.பாபு
    கெங்கவல்லி.

    ReplyDelete
    Replies
    1. அட டே! நம்ம டிஸ்ட்ரிக்ட்! வணக்கம் நண்பரே!😊

      Delete
  5. கிட் : பாஸ், நம்மள நல்ல தண்ணீல தான் போட்டிருக்காங்க

    டாக்புல்: ஐயோ கடவுளே! நம்மள ரோஸ்ட் பண்ண தான் இந்த ஏற்பாடுனு தெரியாம இவனும் கொல்றானே...

    ஆதிவாசி: பிரியாணி ரெடி ஜிங்காலோ

    ReplyDelete
  6. கிட்: ஹய்யா ஜாலி, இந்த விளையாட்டு ஜீப்பரு

    டாக்புல்: இந்த மங்குணிய டெபுடியா வெச்சா வேறென்ன மிஞ்சும்.

    ஆதிவாசி: கிலிபிலிகிலிபிலி! காரம் கொஞ்சம் தூக்கலா போடுப்பா. கிலிபிலிகிலிபிலி! அடுப்பை இன்னும் கொஞ்சம் நல்லா ஊதப்பா. கிலிபிலிகிலிபிலி!

    ReplyDelete
  7. கிட் : நமக்கும் சாப்பாடு குடு்ப்பாங்களா பாஸ்!?

    டாக்புல்: சாப்படே நாமதாண்னு தெரியாம, இவன் வேற. அடுத்த மாசம் நடக்குற ஒலக ஆணழகன் போட்டீல கலந்துக்க முடியாம போச்சே!


    ஆதிவாசி: விறகை சொருகு. லபோதிபோ... மசாலா 4 கரண்டி போடு, லபோதிபோ

    ReplyDelete
  8. கிட்: பாஸ், கவலைப்படாதீங்க. சிக்பிலும், குள்ளனும் வழக்கம் போல வந்துடுவாங்க!

    டாக்புல்: ஐயய்யோ, அவனுங்க நம்ம வழியில வரக்கூடாதுன்னு, ரூட்ட மாத்தி சொல்லி நான் தானே அனுப்பினேன்.


    ஆதிவாசி: ஜிம்பரக்கா ஜிம்போ! உப்பு 1 ஸ்பூன்! ஜிம்பரக்கா ஜிம்போ! மசாலா 2 ஸ்பூன்! ஜிம்பரக்கா ஜிம்போ! கொரோனா ஒரு அண்டா! ஜிலேலோ🤣

    ReplyDelete
  9. சார் இப்போதைக்கு பாதுகாப்பாக இருப்பது மட்டுமே முக்கியம். புத்தகங்கள் பற்றி யோசிக்காமல், சற்றே ஓய்வெடுக்க கிடைத்த வாய்ப்பாக கருதுங்களேன்.

    நான் இருக்கும் ஊரில் 25 என்ற பாதிப்பு எண்ணிக்கை ஒரே மாதத்திற்குள் இப்போது 125என் அருகில்...

    ReplyDelete
  10. ஏதாவது அட்டைப்படங்கள் / டீசர்களைப் போடுவீர்கள் என நினைத்தேன்.

    கேப்சனா?...............

    ReplyDelete
  11. காலை வணக்கம் சார் மற்றும் நண்பர்களே 🙏🏼🙏🏼🙏🏼

    கேப்சன் போட்டியா

    அசத்துங்க நண்பர்களே👍🏼
    .

    ReplyDelete
    Replies
    1. +1000

      நமக்கும் வாசிப்பது, கைதட்டுவது தாண்டி.....ஹி...ஹி...!!

      Delete
  12. குறுகிய காலத்திலேயே மறுபதிப்பு. முன்பதிவிலும் அசத்தல். நிச்சயம்ஞாபக மறதிக்கார 13 ஒருசூப்பர் ஸ்டார்தான். கரூர்ராஜ சேகரன்

    ReplyDelete
  13. A:பாஸ்....இவங்க உப்புபோட மறந்துட்டாங்க...
    B: (ஏற்கனவே உப்பு கலந்துடுச்சுடா...பயலே..)
    C:அட...இ.ப.புக் பண்ணிருக்கானுவ...கொஞ்சநாள் விட்டுவைப்போமா..?

    ReplyDelete
  14. இனிய காலை வணக்கம் ..:-)

    ReplyDelete
  15. ஹலோ, எனக்கு ஒன்டலொள பாக லேது. சென்னையின் சுட்டெரிக்கும் வெயில் கொஞ்சம் குளுமை காட்டியதும் இந்த மாதிரி பிரச்சனை ஆகிறது. ஜுரத்தில் கண்கள் பெரிய சைஸ் கோலி சோடா பாட்டில் மாதிரி ஜும் ஆகுமா? தெரியவில்லை பட் feeling like that. கேப்ஷன் போட்டிக்கு ஸ்வாஹானு கடைசியில் ஜாயின் பண்ணிக்கிறேன். எடி சார் ஊரடங்கு வருவதற்குள் முடிச்சால் புத்தகங்களை ஆன்லைனில் லிஸ்ட் பண்ணுங்க. அனு signing out.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா take care sister. Get well soon

      Delete
    2. அச்சச்சோ!! get well soon. saho!!

      Delete
    3. அனு சரியாக தூங்காமல் இருந்தால் நீங்கள் சொன்னது போல் தான் இருக்கும். நல்லா ரெஸ்ட் எடுக்க.

      Delete
    4. போட்டியெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். முதலில் உடம்பை கவனியுங்கள் அனு. சென்னையில் ஊரடங்குக்குக்கு தான் தளர்வே தவிர கொரோனா இன்னும் ஒழிந்த பாடில்லையே.

      Delete
    5. குடும்ப மருத்துவரிடம் உடனே ஆலோசனை பெறுங்கள் ஸிஸ்டர்!!!

      Delete
    6. விரைவில் நலமடைய வேண்டுகிறேன் தோழமையே...

      Delete
    7. அட டா!!! டேக்கேர் சகோ! மருத்துவ உதவியை உடனடியாக நாடவும்!

      Delete
    8. உங்களின் பரிவிற்கு ரொம்ப தாங்க்ஸ் நண்பர்களே, EV அண்ணே, பின்னால பார்த்துக்கறேன். fever gone... Continuing tablet course for today to be on safer side. Mild temp only was there.பத்து சார் மற்றும் ஸ்டீலாரின் பாட்டில் ஜுரம் ஓடியாச்சு.
      பரணி சார் சொன்னது போல சரியான தூக்கம் இல்லாமல் கண் பார்வை ஒரு மாதிரி இருக்கு. Resting today.
      ஆத்துகாரர் @ சமயல்கட்டு.

      Delete
  16. A : சாரி பாஸ், கொரோனாவுக்காக எங்கள் உயிரையும் கொடுக்க தயார்னு சும்மா பேச்சுக்குதான் சொன்னேன்....

    B : அடேய் கோவிட் மண்டையா, இவிங்க எல்லாம் மாறு வேஷத்துல இருக்கிற விஞ்ஞானிகள்னு எங்கிட்ட சொல்லாம ஏண்டா மறைச்ச...

    C : ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த புக்ல எழுதிருக்கிற மாதிரி ஆராய்ச்சி பண்ணி தடுப்பு மருந்து கண்டுபிடிச்சிடனும். உலக மக்களுக்காக ரெண்டு உயிர்களை பலி கொடுத்தா தப்பில்லன்னும் இதுல எழுதி இருக்கு..

    ReplyDelete
  17. A : சென்னையிலிருந்து சிவகாசிக்கு இந்த காட்டுவழியா போனாக்கா ஈ-பாஸ் தேவைப்படாதுன்னு குள்ளந்தான் ஐடியா குடுத்தான் பாஸ்.,.

    B : அடேய் மங்குனி, எப்படியாச்சும் எடிட்டர சந்திச்சி ஒரு ஐயாயிரம் ரூபாய்க்கு 'கோமாளிகள் ஸ்பெஷல்' போடச் சொல்லலாம்னு ஆசைய காட்டி இந்த காட்டானுங்ககிட்ட மாட்ட வச்சுட்டியேடா...

    C : இதுல என்ன ஒரே பொம்மையா வரைஞ்சி வச்சிருக்கானுங்க. அதுவும் நம்ம மூஞ்சி இவ்வளவு கேவலமா இருக்கு. இதுக்காகவே இவனுங்கள சூப்பு வைக்காம விடக்கூடாது...

    ReplyDelete
  18. ////அப்புறம் இதற்கு நடுவராக யாரைக் கோர்த்து விடுவதோ ? என்ற யோசனையில் சுற்று முற்றும் பார்வையை ஓட விட்டால், தலைகளில் முக்காடுகளை போட்டபடிக்கே, வேஷ்டிகளைத் தூக்கிச் செருகிக் கொண்டு ஊரை விட்டே ஓடும் சில பிம்பங்கள் மாத்திரமே தென்படுகின்றன ! எப்படியும் பை-பாசில் போய் மடக்கிப்புடலாம் - யாரையாச்சும் ! ////

    ஹா ஹா ஹா!! :)))))))

    ReplyDelete
  19. Replies
    1. C. ஜிம்பல ஜிம்பா ஜீ பூம்பா ஜிம்பள ஜிம்பா...ஹோ... ஹோ... ஹோம்...மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி ஹோ ஹோ ஹோய்....
      B.உப்பு ஊத்துனதுக்கு ஏன்டா இளிச்ச கொரனா வாயா....
      C.ஆசிரியருக்கு இந்தக் குசும்பு கூடாது பாஸ்...மஞ்சள் பூசும் மூனழகிக...நாமலோ ரண்டே பேரு...நடுவர்கள தேடின்னு ஆசிரியர் நமக்கு நடுவால கொண்டு வரப் போற முகத்தைப் பாருங்க...ஹ..ஹ..ஹா

      Delete
  20. கிட் :::பாஸ் அடுப்பே இன்னும் சூடாகலை
    ஆனா தண்ணீர் மட்டும் எப்படி சூடாச்சு.???
    டாக்புல்.::: அடேய் கூமுட்டை கிட் பயத்துல
    நான் உச்சா போய்ட்டேன்டா அதான்.
    ஆதிவாசி :::டேய் பசங்களா மசாலா மட்டும்
    போதும். உப்பு வேண்டவேவேண்டாம்.

    ReplyDelete
  21. கிட்:::பாஸ் அப்பவே சொன்னேன் இ.ப.
    புக் பண்ணிடூங்கன்னு....
    டாக்புல். :::டேய் டவுசர் பாண்டி அதுக்கும்
    இதுக்கும் என்னடா சம்பந்தம்.???
    ஆதிவாசி:::பசங்களா இ.ப. புக் செய்தவங்களுக்கு இதயத்தில இடம்.
    செய்யாதவங்களுக்கு வயத்துல இடம்.

    ReplyDelete
  22. Replies
    1. C.குருமிளகு...வேப்பல ......மஞ்சள.. ஜிம்பள ஜிம்பள ஜிம்பள...போடு ...பொம்பள பொம்பள... பொம்பள...

      A.கொரனா இல்லாத எடத்துக்கு கூட்டிப் போறேன்னு குழம்புச் சட்டில தள்ளிட்டியேடா கூமுட்டை
      B.ஹஹஹஹா...தமிழ்நாடு போனதில்லயா பாஸ்...இதெல்லா கொரனாவ கொல்ல...நம்மள அல்ல சித்த வைத்தியம்.... நம்புங்க பாஸ்

      Delete
    2. ஸ்டீல் சூப்பர்

      Delete
  23. கிட்: பாஸ், அடுத்த முறை லாக்டவுனுக்கு வாலண்டியர்ஸ் வேண்டும்னு கேட்டீகளே... இவங்கள கேட்டு பாப்போமா...

    டாக்புல்: அடேய், மாஸ்க் போடாம ஒரு கும்பல் சுத்துதுன்னு என்ன கூட்டி வந்து குருமா ஆக்கிட்டு, லாக்டவுன் பத்தி பேசறியா... இந்த குண்டான்ல இருந்து தப்பிச்சா உனக்கு இருக்குடி...

    லூசி(லூc): விபரீத கபசுர குடிநீர் ரெசிபி.. இரு குண்டன்களை குண்டாவில் போட்டு வேகவைக்கவும். பிறகு ஒரு கைப்பிடி மஞ்சள் தூள்......

    ReplyDelete
  24. கேப்சன் போட்டிக்காக

    ஆர்ட்டின் : பாஸ்!! நமக்கு தனித்தனியா பாத் பாட் (pot) கொடுக்காமல் ஒண்ணா இறக்கி விட்டுடாங்களே???

    ஷெரீஃப் : இது குளிக்கிற சட்டி இல்லை நம்மை குழம்பாக்கற சட்டிடா

    ஆதிவாசி : guys டூடேஸ் மெனு இஸ் அவிச்ச மொட்டை வித் அவிச்ச முட்டகோஸ்

    ReplyDelete
    Replies
    1. போட்டியில் மோதுது உங்கள்தும்...!!

      Delete
    2. கலக்குங்க..கலக்குங்க.!

      Delete
  25. கிட்: பாஸ் மரபு வழி வாழனும்னு ஆசப்பட்டீங்களே... நல்லா பாத்துக்குங்க...

    டாக்: இனிமேல் எங்கடா வாழ்றது... ரோந்து போலாம்னு கூட்டி வந்து ரோஸ்ட் ஆக விட்டுட்டியேடா, பாவிப்பயலே...

    லூசி: லயன் காமிக்ஸ் மறுபடியும் வருதா? உங்கள விட்டுட்டா எங்களுக்கு ஒரு சந்தா கட்டுறீங்களா?

    ReplyDelete
  26. கிட்: பாஸ் இவங்க எல்லாம் மாஸ்க் போடாம சுத்துறாங்க... பாத்துகிட்டு சும்மா இருக்கீங்களே..

    டாக்: இவனுங்க டிரஸ் போடுறதே பெரிசு. இதுல எங்க இருந்து மாஸ்க் போடறது.. தப்பிக்க வழிய பாருடா பண்ணாட...

    லூசி: பொம்மை புக்கு நல்லா இருக்கே... இவனுங்கள அவுத்து விடுங்கப்பா... கதைய கேப்போம்..

    ReplyDelete
  27. வானவில்லுக்கு நிறமேது ..

    என்னா கதை ...

    பின்னிரவில் ஒரே மூச்சில் படித்த கதை ..
    வாங்காதவங்க வாங்கி படிங்க
    வாங்கி இன்னும் படிக்காதவங்க படிக்க ஆரம்பிங்க ......
    டெக்ஸ் கதைகள் படிக்க சுளுவானது
    மனதை பரவசப்படுத்த உத்தரவாதம் உண்டு
    இந்த கதையும் அப்படித்தான் ..
    கதையைப் பத்தி பல அற்புதமான விமர்சனங்கள் எழுதப்பட்டுவிட்டன
    கதையின் மையப்புள்ளியை தாங்கி வரும் துவக்க பக்கங்கள் சொல்ல வரும் உண்மைகள் ஆயிரமாயிரம் ..

    அபாச்சே கணவாய் யுத்தம்

    1862- இதே ஜூலை மாதம் 15 –ம் தேதி
    கான்பெடரேட் வசம் இருந்த அரிசோனா பகுதிகளை மீட்கவும் நியூ மெக்சிகோ பகுதியில் இருந்த யூனியன் படைகளை வலுப்படுத்தவும் அனுப்பப்பட்ட படைகளின் ஒரு பகுதி முன்னணி துருப்புகளுக்கும் கோசைஸ் ,மங்காஸ் கொலராடோஸ் தலைமையில் இருந்த சிரிகாகுவா அபாசேக்கள் இடையில் நடந்த யுத்தம் .
    { மங்காஸ் கொலராடோஸ்-
    கோசைஸ்,மெஸ்கலரோ குழு தலைவர் ,மிம்பர்னோ குழு தலைவர் – இவங்க மூணு பேருக்கும் மாமனார் .[ எத்தனை பொண்ணுங்க இவருக்கு]
    இந்த சண்டையில் மார்பில் காயம்பட்ட இவர் பிற்பாடு சரணடைந்தபோது ( 1863 –ஜனவரி ) பிரிகேடியர் ஜெனரல் ராட்மேன் வெஸ்ட்-ஆல் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் )

    இப்போரில்தான் செவ்விந்தியர்களுக்கு எதிராக முதன்முறையாக ஹோவிட்சர் ரக பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன ...
    தாகம் , பயணக்களைப்பு ஆகியவற்றால் தவித்து கொண்டிருந்த வெறும் 166 நூறு காலாட்படையினர் , 22 குதிரைப்படையினர் கொண்டிருந்த கலிபோர்னிய யூனியன் படைகளை சுமார் 500 செவ்விந்தியர்களின் உக்கிர தாக்குதலில் இருந்து காப்பாற்றியவை இரண்டு பீரங்கி யூனிட்டுகள்

    இறப்பு யூனியன் பக்கம் இருவர் , காயம் மூவர்
    அபாச்சேக்கள் பக்கம் இறப்பு அறுபத்தி ஆறு.

    பௌவி கோட்டை- நமக்கு மிகவும் அறிமுகமான அதேதான் – இப்பகுதியில் உருவாக இப்போர் ஒரு காரணமெனில் போர் முடிந்தபின் கண்டெடுக்கப்பட்ட மண்டைத்தொலி உரிக்கப்பட்ட நிலையில் இருந்த ஒன்பது வெள்ளையின சிவிலியன்களின் சடலங்களும் ஒரு காரணம் ...


    உண்மையில் இக்கதை டைகர் கதையொன்றின் ஆதார சம்பவமாக இதே அபாச்சே கணவாய் –ல் 1861- பிப்ரவரி 5 தேதியில் நடைபெற்ற யுத்தத்தின் மூல காரணத்தின் கற்பனை வடிவ மிர்ரர் இமேஜ் எனலாம் ...( அன்பு நண்பர் ரம்மி மிகவும் நன்றாக அறிவார் )

    பாஸ்கம் சம்பவம்

    அதில் தொடர்புடைய குழந்தையின் உண்மை பெயரோடு நம் டெக்ஸ் கதையின் குழந்தையின் பெயரும் ஒத்து போவது ஆச்சர்யம்

    அங்கு – ஜான் வார்ட் பேரன் – பெலிக்ஸ் வார்ட் – வெள்ளையின சிறுவன் கடத்தப்பட்டு அபாசே சிறுவனாய் வளர்கிறான்

    இங்கு ஜானி வார்டன் –செவ்விந்திய சிறுவன் மீட்கப்பட்டு வெள்ளையினத்தவன் போல் வளர்க்கப்படுகிறான்
    மிர்ரர் இமேஜ்

    டெக்ஸ் கதைகளில் கொண்டாடப்பட வேண்டியவை எவ்வளவோ உண்டு

    ReplyDelete
    Replies
    1. வாவ்!! அருமையான தகவல்கள்!!!

      Delete
    2. அதிகாரியின் ரசிகர்களுக்கு ஆறுதலானா விமர்சனம்.. இருந்தாலும் இந்த கதையில் அதிகாரியை பத்தி சொல்ல ஒன்னுமேயில்லைன்னு நீங்க சொல்ல நினைக்கிறது எனக்கு புரியுது டாக்டர்.. நல்ல விமர்சனம்.. தகவல்கள் வியப்பூட்டுகின்றன..

      Delete
    3. செம..செம...அருமையான தகவல் திரட்டு. ஒவ்வொரு முறையும் தங்களது அர்ப்பணிப்பு வேற லெவல்.

      Delete
    4. அடேங்கப்பா விமர்சனம்...

      அருமை செனாஅனாஜீ...

      Delete
  28. கிட்: பாஸ் சொல்ல மறந்துட்டேன். லயன் காமிக்ஸ் ஆப் விட்டிருக்காங்களாம்.

    டாக்: சூப் ஆகப் போர் நேரத்துல தான் ஆப் பத்தி ஞாபகம் வருதா... அடேய் குள்ளா சீக்கிரம் வந்து காப்பாத்துங்கடா...

    லூசி: இரத்தப்படலம் மறுபதிப்பு வருதா. ஐ ஜாலி....

    ReplyDelete
  29. கிட்: பாஸ் இது என்ன கொரோனாவுக்கு மரபு வழி வைத்திய முறையா?

    டாக்: கடுப்ப கிளப்பாத கிட். இவனுங்கள பாத்தா வைத்தியனுங்க மாதிரியா தெரியுது.

    லூசி: கொரோசன கஷாயம் இப்படியும் செய்யலாமா. இது தெரியாம போச்சே...

    ReplyDelete
  30. கிட்: பாஸ் ஜூலை மாச புக் எல்லாம் கரெக்டா 15 ஆம் தேதி வந்துடுமா? லக்கி லூக் படிக்கனும்.

    டாக்: லக்கி லூக் படிக்க நமக்கு லக் இருந்தா தான் முடியும் போலிருக்கே. அடேய் தப்பிக்க யோசனை பண்ணுடா...

    லூசி: இவங்க லயன் காமிக்ஸ் வாசகர்கள் போலிருக்கே.. ஏய் யாரங்கே இவங்கள அவுத்து விடுங்க... நான் இந்த புக்க முடிச்சிட்டு வரேன்.

    ReplyDelete
  31. **** ஜாலிக்காண்டி - நோ போட்டிக்காண்டி *****

    கிட் : குருநாயரே.. கடேசியா ஒரு தபா பாடிக்கிடட்டுமா?

    குருநாயர் : அதுதான்.. அதேதான்..! அதுதான் உயிர்பிழைக்க நமக்கிருக்கும் ஒரே வழி! சீக்கிரமா பாடித்தொலை!

    அனு : அடக்கடவுளே!! அப்படீன்னா இதான் உப்புமாவுக்கான உண்மையான ரெசிப்பியா?!!! நான் உடனே ஓடிப்போய் என்ர வூட்டுக்காரர்ட்ட மன்னிப்புக் கேட்கணும்!

    ReplyDelete
    Replies
    1. டாப் க்ளாஸ்...!! ஓவர் டூ நடுவர்.

      Delete
    2. // நோ போட்டிக்காண்டி // - அப்ப எப்போ போட்டிக்காண்டி caption எப்ப போடுவீங்க! :-)

      Delete
    3. EV எப்போதும் போல இப்போதும் அருமை.

      Delete
  32. டேக்கேர் எடிட்டர் சார். ஸ்னாக்ஸ்லாம் ஸ்டாக் வாங்கி ரொப்பிடுங்க!
    இனி இரண்டு வாரம் கேப்சன் போட்டிகதான் வழி!

    லோக்கல் லாக்டவுன் முடிந்தபின் பொறுமையாக புத்தகங்கள் அனுப்பி வையுங்கள்!
    ப்ளீஸ்...டோன்ட் டேக் எனி அன்வான்ட்ட் ரிஸ்க் சார்

    ஒரு மாதம் புத்தகங்கள் படிக்கலனா ஒன்றும் ஆகிடாது. காத்திருக்கோம்!

    ReplyDelete
  33. A: பாஸ்.....இம்மாம்பெரிய குண்டானும் இதுக்கு கைப்பிடியும் செஞ்சு வச்சுருக்கானுங்களே! இதயெல்லாம் யானையா தூக்கிட்டுப் போவும்?
    B: ஏய்...இதுல இருந்து தப்பிக்க வழி சொல்லுவியா. அதவுட்டுட்டு சாவப்போற நேரத்துல சந்தேகம் கேக்குறியே படுபாவி. கடுப்புகள கெளப்பிட்டு....!
    C: ஏய் உடும்பா......! ஏய் கடும்பா...! அடுப்ப அணைங்கடா...! இவனுங்க கொரோனா வார்டுல இருந்து தப்பிச்சி ஓடிவந்தவனுங்களாம்! படத்தோட சேதி வந்திருக்கு. இவனுங்கள அப்படியே தூக்கிட்டுப்போய் குண்டானோட நம்ம ஊர் எல்லையில கடாசிடுங்க!
    A: பாஸ்...குண்டாவ எப்படி தூக்குவானுங்கன்னு கேட்டதுக்கு கோவப்பட்டீங்களே! காட்டு வழியா போறமே எதுக்கும் இருக்கட்டும்னு எவனோ ரெண்டு பேர் மூஞ்சிமேல நம்ம படத்த ஒட்டி வச்சதுக்கு கைமேல பலன் கடச்சிடுச்சி! இப்பக்கூட பாராட்ட மனசு வர்லியா?

    ReplyDelete
  34. Caption contest

    Entry 1
    கிட்:பாஸ் வெந்நீர்ல உப்பு மஞ்சள் போட்டு நம்மள குளிப்பாட்டுறாங்க பாருங்க. நமக்கு கரோனா வராது.
    புல்டாக்: சாகும் போது கூட முட்டாளாவே சாவியா?
    காட்டுவாசி: மசாலா நிறைய போடணும். இவனுங்க மூளையில மசாலா கம்மி.

    Entry 2
    கிட்: பாஸ் கவலைப்படாதீங்க. என் பேண்ட் பாக்கெட்ல காலைல வாங்கின ஐஸ்க்ரீம் வெச்சுருக்கேன். நெருப்பை ஐஸ் முறியடிச்சுடும். இந்த மாசம் போனஸ் தருவீங்கள்ள?
    புல்டாக்: போனஸ் என்னடா போனஸ், கொஞ்ச நேரத்துல நம்மலே "போன்ஸ்" ஆயிடுவோம்.
    காட்டுவாசி: எவ்வளவு சமைச்சும் ருசி வரலியே. கெட்டுப் போன கறியோ?

    Entry 3
    புல்டாக்: காட்டுவாசி சமையல் நல்லாருக்கும், வாங்கணு கைய புடிச்சு இழுத்துக்கிட்டு வந்தியே, இங்க நம்மளையே சமையல் பண்றாணுங்க பாரு.
    கிட்: பாஸ், இருங்க சமைச்சு முடிக்கட்டும். அப்புறம் சொல்லுங்க டேஸ்ட் பத்தி
    காட்டுவாசி: நம்ம கிராமம் முழுக்க சாப்பிட்டாலும், பாக்கி கறி இருக்கும் போலயே. அடுத்த கிராமத்தையும் கூப்பிட வேண்டியது தான்.

    Entry 4
    கிட்: பாஸ் என்னா மருவாதைய் பாத்தீங்களா? வாசனை திறவியத்துல குளிப்பாட்டுறாங்க.
    புல்டாக்: டேய். வாயை மூடுடா. வர கோவத்துல கடிச்சு தூப்பிருவேன்.
    காட்டுவாசி: இவனுங்களுக்கு கரோனா இருந்தா என்ன பண்றது? நைட் ஃபுல்லா வேக வச்சிற வேண்டியது தான்

    ReplyDelete
    Replies
    1. Entry 1 அமர்க்களம் போங்கோ... கடைசி பஞ்ச் படிச்சிட்டு ROFL...

      Delete
    2. 1 செம.. சிறப்பு..

      Delete
  35. B: ஏண்டா லூசு, இங்க நம்மள அண்டாவுல வேக வச்சிட்டு , அங்க அவன் என்ன சமையல் குறிப்பா படிக்கிறான்?

    A: இல்ல பாசு. நம்ம ரெண்டு பேருக்கும் கொரானான்னு சும்மா ஒரு சர்டிபிகேட் ரெடி பண்ணி பாக்கெட்டுல வச்சிருந்தேன். இந்த மாங்கா அதப் படிச்சுட்டு. நம்ம ரெண்டு பேருக்கும் கொரானான்னு நெனச்சு பயந்துபோய் நம்மள விட்டுடுவான் பாருங்களேன்.

    C: டேய்ய்.. இந்த ரெண்டு மாக்கான்களும், நம்மள மாக்கான்னு நெனச்சுக்கிட்டு கொரானான்னு லெட்டர் வச்சிருக்காங்க. கபசுரக்குடிநீர் நாலு கேன் ஊத்தி, நாலு கட்ட வெறக உள்ள தள்ளி, ரெண்டு பேரையும் நல்லா வேக விடு. ஆச்சி மசாலா கொஞ்சம் சேர்த்து போடு. நான் அதுக்குள்ள ஃபேஸ்புக்குல கொரானா மீம்ஸுக்கு நாலு லைக் குடுத்துட்டு வாரேன்.

    ReplyDelete
  36. டாக்: எங்கம்மா அப்பவே சொல்லிச்சு எனக்கு தண்ணியில கண்டம்னு.. அடேய் கிட் வில்லர்னு நினைச்சு உன்னை டெபுடி ஆக்கினதுக்கு நல்லா செஞ்சுட்ட..

    கிட்: விடுங்க பாஸ்... கடைசி நேரத்துல கரெக்டா வந்து காப்பாத்திடுவானுங்க சிக்பில்லும் குள்ளனும்.

    லூசி: @#% @₹#&% @&%#₹ ( இது என்ன மொழின்னே தெரியலியே)

    ReplyDelete
  37. கிட்: பாஸ்... தண்ணி வெது வெதுன்னு குளிக்க சூப்பரா இருக்கும் பாஸ்...

    டாக்: முட்டாளே. நம்மை கும்பிபாகம் பண்ணப் போறாங்கன்னு இன்னுமா உன் மரமண்டைக்கு உரைக்கலை...

    லூசி: சமூக இடைவெளி விட்டுத்தான் நிக்கிறோம். ஆனாலும் மாஸ்க் போடாம சுத்துற கொரோனா அதிகமா இருக்குற ஊர் பயலுக. எதுக்கும் நல்லா கொதிக்கவிட்டு ரத்தப்படலம் கிண்டுவோம்.

    ReplyDelete
  38. சென்னையின் நிலைமை இன்னும் சீராகவில்லை பல பகுதிகளில் தளர்வென்பதே கிடையாது எங்கள் பகுதிகளில் இன்னும் படுமோசம்
    வேணாம் கொரோனா விட்டுரப்பா
    இதுக்கு ஜெயிலே நமக்கு பெட்டரப்பா

    ReplyDelete
  39. // அநேகமாய் ஜூலை 8 பின்னிரவு முதலாய் குறைந்த பட்சம் ஒரு வாரத்துக்கு முழு அடைப்பு இங்கே சிவகாசியினில் அமலுக்கு வரக்கூடும் //
    அடடே,கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளங்கள் சார்,எல்லா பாதுகாப்பு அம்சங்களிலும்....
    முடிந்தால் இதழ்களை சற்று முன்னரே அனுப்ப இயலுமா என்று பார்க்கவும் சார்,வறட்சியான வெற்றிடத்தை வாசிப்பின் இனிமையால் நிரப்ப இயலும்....

    ReplyDelete
  40. Replies
    1. C...ஜலபுல கொதிக்கயிலே..ஹே... ...ரெண்டு பேரு துடிக்கயிலே நீரில் வாசம் அலை தூவுது
      A.கொதிக்குது கொழும்பு...
      B. ..ரொம்பச் சரி ரொம்பச் சரி

      Delete
    2. கொதிக்குது கொழும்பு ❓❓❓

      Delete
  41. கிட்: ஷெரீப் குளிச்சி ரொம்ப நாளாச்சி,இதையே சாக்கா வெச்சி ஓசியில் ஒரு குளியலை போட்டுடுவோம்.....
    டாக்புல்:காலுக்கு கீழே கபகபன்னு எரியுதே....!!! ஒருவேளை நம்மளை வெச்சி கபசுர குடிநீர் காய்ச்சப் போறானுங்களா இந்த காட்டுவாசிப் பயலுக....!!!
    C: மனித சூப் வைப்பது எப்படின்னு இருக்கற சமையல் குறிப்பில்,துணியோட மசால் தடவி போடனுமா ??? துணியில்லாம மசாலா தடவி போடனுமான்னு சொல்லவே இல்லையே ???

    ReplyDelete
  42. (A.கிட்
    B.டாக்புல்
    C.காட்டுவாசி)


    கேப்சன்1:-
    C.மூளைக்கறி செய்ய தேவையான பொருட்கள் எண்ணெய்,மிளகாய்...
    A.பாஸ்..இந்த மூளைக்கறினா என்ன பாஸ்?
    B.ம்க்கூம்...எவ்வளவு முயற்சி பண்ணாலும் நம்ம கிட்ட இருந்து அந்த ஒரு டிஸ்ச மட்டும் இவனுங்களால செய்யவே முடியாதாக்கும்...

    கேப்சன்2:-
    C.ஙிஙிஙிஙிஙி
    B.பாஸ்..ஹாட் பாத் சூப்பரா இருக்குதுல்ல
    A.குடும்ப கட்டுப்பாடு பண்றதுக்கு ஆள் பிடிச்சு கொடுத்தா காசு கிடைக்குமுனு இவனுங்க கிட்ட கூட்டிக்கிட்டு வந்து இப்படி நமக்கு குடும்பமே அமையாம பண்ணிட்டியேடா பாவி

    கேப்சன்3:-
    A.பாஸ் இவனுங்க யாரும் மாஸ்க் போடல..சோசியல் டிஸ்டன்சும் பாலோ பண்ணல..பைன் போட்டிடலாமா
    B.இன்னும் கொஞ்ச நேரத்துல நம்மள ஒயின்ல தொட்டு சாப்பிட போறானுங்க. பைன் போடறது ரொம்ப முக்கியமாக்கும்?

    கேப்சன்4:-
    C.கொத்தமல்லி துள் ஒரு டீஸ்பூன்..
    சக்தி மசாலா ஒரு பாக்கெட்..
    மிளகுதூள் கொஞ்சம்..
    தேவையான அளவு உப்பு...
    A.பாஸ் இந்த சூப் ரெசிப்பிய கேட்கறப்ப எனக்கே நாக்குல எச்சில் ஊறுது
    B.நற நற நற நற

    கேப்சன்5:-
    A.பாஸ் பயப்படாதிங்க..சமையல் புக்க லவட்டிட்டு அந்தம்மா கையில கிராபிக் நாவல கொடுத்திட்டேன்..
    A.அய்யய்யோ..அப்ப டெத் கன்பார்ம்...
    அங்க பாரு அத படிச்சு அந்தம்மா டெரர் ஆய்கிட்டு இருக்கு
    C.ஈஈஈஈஈஈஈஈஈஈஈ...

    கேப்சன்6:-
    C.ஒழுங்கா அந்த சாங்க பாடுங்க..பாடினா உயிரோட விட்டுடறேன்
    B.அடேய் எனக்கு அந்த சாங்லாம் தெரியாதுடா.நம்பு
    A.பாஸ் ஒரு சாங் தானே கேட்கறாங்க. பாடிடுங்க.என்ன சாங்பா வேணும்?
    C.சூப் சாங்...

    கேப்சன்7:-
    A.பாஸ்..நம்ம முன்னாடி தட்டோட நிற்கறவன பார்த்தா நம்ம குள்ளனோனு டவுட்டா இருக்கு
    B.சீ..சீ..அவன் குள்ளமா கறுப்பா இருப்பான்.இவன் கறுப்பா குள்ளமால்ல இருக்கான்

    கேப்சன்8:-
    C.ஜிம்பாரே ஜிம்பரஜிம்பா
    A.பாஸ் இது கெட்ட கனவுதான்...சாங்லாம் கேட்குது பாருங்க. பயப்படாதிங்க.நான் வேணுமுனா கிள்ளி காட்டறேன் வலிக்கும் பார்க்கறிங்களா
    B.ஏற்கனவே அடில வச்ச கொள்ளில கண்ட இடமெல்லாம் எரியுது..
    இதுல கிள்ளி பார்த்துதான் இது நிஜமுனு தெரிஞ்சுகணுமா...

    கேப்சன்9:-
    B.மடையா உன்னால இங்க வந்து மாட்டிக்கிட்டோம் நீ என்னடான்னா இளிச்சுகிட்டு இருக்க...இன்னும் கொஞ்ச நேரத்துல நாம ரெண்டு பேரும் நரகத்துக்கு போகப் போறோம்
    A.அப்படினா அங்க போக இபாஸ் அப்ளை பண்ணிடவா பாஸ்
    C.ஹி..ஹி...

    கேப்சன்10:-
    A.ஏம்மா எங்கள வறுக்கற விட இதோ இவர கண்ணாலம் கட்டிக்கலாமுல...
    இந்த தை பொறந்தா நாற்பதட்டு வயசுதான்
    B.ஹி..ஹி..எனக்கு ஒகே தான்...
    உன் பேரு என்ன பாப்பா
    C.ம்..காந்த கண்ணழகி..

    ReplyDelete
    Replies
    1. பத்தும் பிரமாதம் சகோ! பின்னிட்டீங்க! இம்முறை நடுவர் பாடு...ஹி..ஹி...!!!
      உள்ளூர் லாக்டவுன் எனில் எடிட்டர் சாரே நடுவராக இருப்பாராம்.😉😉😉😉

      Delete
    2. கேப்சன்ஸ் தொடர்ச்சி...
      A.கிட்
      B.டாக்புல்
      C.காட்டுவாசி


      கேப்சன் 11:-
      A.எதுக்கு பாஸ் இவ்ளோ பீல் பண்றிங்க.உயிர் போக போகுதுனா?
      B.அது கூட பரவால்ல கிட்..வழக்கமா நம்ம புத்தகத்த படிச்சுட்டு கார்ட்டூன் கதைனு சொல்லி நம்மள வறுத்தெடுப்பாங்க..
      இப்ப இந்தம்மா,வேற ஏதோ புக்க படிச்சுகிட்டும் நம்மளயே வறுக்குது..
      C.அய்யோ பாவம்..இத கேட்கறப்ப எனக்கும் கண்ணு வேர்க்குது...


      கேப்சன் 12:-
      B.சொட்டைத் தலைக்கு அமேசான் காடுகள்ள ஆயில் கிடைக்குமுனு நம்பி வந்து, இருக்கற ஆயுளும் போனதுதான் மிச்சம்..
      A.பாஸ் அத விடுங்க.வழக்கமா இந்த சீன்ல ஒரு குத்து பாட்டு இருக்குமே எங்க காணோம்
      C.பாட்டு டவுட்டுதான் ஆனா குத்து கன்பார்மா இருக்கு தம்பி..


      கேப்சன் 13:-
      B.இவ்ளோ நாளா நீ சமைச்சதே இல்லயாம்மா.ஒரு சூப் வைக்கறதுக்கு போய் புத்தகத்த உத்து பார்த்துகிட்டு இருக்க
      A.அதானே?
      C.யோவ் இது சமையல் குறிப்பு புத்தகம் இல்ல..கருட புராணம்...கும்பிபாகத்துக்கு அடுத்து உங்களுக்கு என்ன தண்டனை தரலானு பார்த்துகிட்டு இருக்கேன்


      கேப்சன் 14:-
      A.ஊரடங்கால கஷ்டபடுவாங்கனு அரிசி பருப்பெல்லாம் கொண்டு வந்த நம்மளேயே இவங்க பிடிச்சு வச்சுகிட்டானுங்களே
      B.அடேய் கிட்டு இன்னுமா புரியல.. நிவாரணப் பொருள், நாம கொண்டு வந்த ஐட்டங்கள் இல்ல, நாமளேதான்..இத பிளான் பண்ணிதான் நம்ம டார்ச்சர் தாங்காத ஊருக்காரனுங்க
      எல்லாத்தையும் நம்ம கிட்ட கொடுத்து அனுப்பிருகானுங்க
      C.சூ..தொணதொணனு..உப்பு போட்டனானு மறந்து போச்சு..


      கேப்சன் 15:-
      B.என்னடா இந்த நிலைமையிலயும் சிரிச்சுகிட்டு இருக்க
      A.இல்ல கேப்சன்ல சும்மா இருக்கற நமக்கே எண்ணெய் சட்டினா, இந்த போட்டிக்கு தீர்ப்பு சொல்ல போற ஜட்ஜிக்கு என்ன ஆகப் போறாருனு நினைச்சி சிரிச்சேன் பாஸ்...
      C.கதம்...கதம்..


      கேப்சன் 16:-
      A.பாஸ் இந்த பையன் என்னை எவ்ளோ பாசமா பார்க்கறான் பாருங்க..
      B.அடேய் அவன் நாக்க சப்புக் கொட்டறத பார்த்தா நம்ம சூப்ப கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம குடிப்பான் போல...
      C.சே..சே..அவனுக்கு சூப்லாம் பிடிக்காது.ஒன்லி லெக்பீஸ்.

      Delete
  43. ஷெரீப் பாஸ்.. நல்லதா ஜோக் சொன்னா இரத்த படல புக்கு பரிசு இப்பவாது ஏதாவது நல்ல ஜோக்கை சொல்லி ஒரு இரத்தபடலத்தை பரிசா வாங்க பாருங்களேன்..

    அடேய்...நம்மளையவே படையல் போட்டு அந்த கொரில்லாவாயன் நம்மை இரத்த படலமாக்க போறான்..இப்ப உனக்கு ஜோக்கு கேக்குதா...


    சரியா சொன்னீக ஜிம்பலக்கா பொறியல்களா இன்னும் கொஞ்ச நேரத்துல ஜீம்பலக்கா சரவணன் வந்து பரிசை தட்டிட்டு ஜிம்பலக்கா போக போறாரு அதனால தான் ஜிம்பலக்கா அவுரு வர்றதுக்குள்ள அவசரவசரமா ஜிம்பலக்கா நானே இரத்த படலத்தை படிச்சுட்டு இருக்கேன்..நீங்க கம்முன்னு இன்னும் மசாலாவை ஜிம்பலக்கா தடவிக்கிட்டு உள்ள அமுங்குங்க ஜூம்பலக்கா

    ReplyDelete
    Replies
    1. ஜிம்பலக்கா இந்த தடவை ஜூம்பலக்கா கேப்ஷன் போட்டிக்கு ஜிம்பலக்கா நடுவராக ஜூம்பலக்கா நம்ம தலீவர்தான் ஜிம்பலக்கா பொருத்தமானவர்!!! ஜிம்பலக்கா...ஜிம்பலக்கா!

      Delete
    2. ATR sir@ சூப்பரு...!!! நானும் வழிந்து வழிந்து வழி மொழிகிறேன்.

      Delete
    3. செயலர் இல்லாமல் தலைவர் தனியா செயல்படமாட்டார்னு ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க....!!!😉

      Delete
    4. ஐயோ சாமீ ஆள விடுங்க..நான் எப்பவுமே ( பரிசு பெறா) போட்டியாளர்தான்..போட்டி தீர்ப்புக்கு எல்லாம் நிறைய்ய வல்லவர்கள் இங்கே உள்ளார்கள்..எனவே..:-)

      Delete
    5. செயலரு செனாஅனாஜீ ஷெரீப் ரவிகண்ணர் பெங்களூர் பரணி இப்படி நிறைய்ய வல்லவர்கள் இங்கு உண்டு என்பது பின்குறிப்பு..:-)

      Delete
    6. அப்ப நீங்க எப்பதான் தலீவரே அந்த வல்லவர்கள் லிஸ்ட்ல சேரப்போறீங்க?
      நல்லவரா மட்டும் இருக்கீங்க.வல்லவராக வேண்டாமா?
      என்பதுகூட பின் குறிப்புதான்...!

      Delete
    7. :-)

      Atr // நல்லவரா மட்டும் இருக்கீங்க.வல்லவராக வேண்டாமா? //

      +1

      Delete
  44. @ ALL : மாவட்ட நிர்வாகம் - உள்ளூர் ஊரடங்குக்கு NO சொல்லி விட்டது !

    So அடுத்த வாரம் புக்ஸ் டெஸ்பாட்ச் இருந்திடும் !

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சார். நல்ல சேதி சொன்னீர்கள்.

      Delete
    2. வாவ்... குட் நியூஸ் சார்.

      யங் டெக்ஸைக் காண ஆவலுடன் காத்துள்ளேன் சார்.

      அப்ப நடுவர் பணியில் இருந்து தப்பிச்சீட்டீங்களே!!! ஜஸ்ட் மிஸ்!!!

      Delete
    3. நல்ல செய்தி நன்றி சார்...:-)

      Delete
    4. குட் நியூஸ் சார்.

      Delete
    5. கெட்ட நியூஸ் கேடுகெட்ட நியூஸ்ன்னு விழுந்த இந்த காதுக்கு உண்மையிலேயே நல்ல நியூஸ் லாரண்ஸ் & டேவிட்டை பார்க்க ஆவலுடன் நான்

      Delete
    6. இந்த ID லயன் குழுமத்தை சேர்ந்ததா?

      Delete
    7. பூபதி @ ஆம்...!! இது எடிட்டர் சாரின் மொபைல் ஐடி!
      ரெகுலராக வருவது லேப்டாப் ஐடி!

      Delete
    8. நல்ல செய்தி நன்றி சார்...:-)

      Delete
  45. சூப்பர் சார். நல்ல சேதி சொன்னீர்கள்.

    ReplyDelete
  46. கிட்: பாஸ் ஊரடங்கு இல்லியாம்.

    டாக்: உசுரே அடங்கப் போகுது, இதுல ஊரடங்கு இருந்தா என்ன இல்லேன்னா என்ன?

    லூசி: அடுத்த வாரம் லக்கி லூக் வரும் வரை இந்த ஸ்மர்ப்ச மறுக்கா படிக்கனும் போலிருக்கே

    ReplyDelete
  47. கிட்: பாஸ் ஊரடங்கு போட்டா யாரும் சாக மாட்டோம்னு சொன்னீங்களே, அப்புறம் ஏன் பயப்படுறீங்க.

    டாக்: அடேய்... உன்ன...

    லூசி: குளிக்காம இருக்குறவங்களுக்கு உப்பு தூக்கலா போடனுமா குறைச்சு போடனுமான்னு தெரியலியே

    ReplyDelete
  48. இன்றைய இ.ப புக்கிங் நிலவரங்களை அறிவிக்க வருமாறு.. மரியாதைக்குரிய எடிட்டர் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்..

    ReplyDelete
    Replies
    1. இன்னிக்கு ஒண்ணே ஒண்ணு ...கண்ணே கண்ணு தான் :

      L பூபதி, சந்திராபூர் - 1 புக் (#75)

      Delete
    2. புனித தேவனின் அருள் பூபதிக்குக் கிட்டட்டும்!

      Delete
    3. இன்னொன்றும் வரும், சற்று தாமதமாக

      Delete
  49. விஜயன் சார்,

    // எப்படியும் பை-பாசில் போய் மடக்கிப்புடலாம் - யாரையாச்சும் ! //

    நடுவரை தேட இவ்வளவு ஏன் கஷ்டபடனும். சிவகாசியில் ஒரு நல்லவர் வல்லவர் புதிய சிந்தனைகள் உள்ளவர் தந்தைக்கு சில நேரம் அட்டகாசமான யோசனைகள் கொடுப்பவர் இன்னும் தனது பல திறமைகளை காட்ட துடித்து கொண்டு இருக்கும் இளம் சிங்கம்- நமது ஜூனியர் எடிட்டர் விக்ரம் இருக்க பயம் ஏன்.

    இதுவரை நடுவரை நீங்கள் தேர்வு செய்தீர்கள் இந்த முறை ஒரு changeக்கு நாங்கள் நமது விக்ரமை நடுவராக தேர்ந்தெடுக்க உள்ளோம். :-)

    லயனின் ஆண்டு மலர் வரும் நேரத்தில் இந்த கேப்ஷன் போட்டிக்கு இவர் நடுவராக இருந்தால் சிறப்பாக இருக்கும் சார்.

    ReplyDelete
    Replies
    1. அந்த நல்லவர், வல்லவர், எப்போதுமே ஒதுங்கியும் நிற்பவரே ! அவர் வழி - ஒரமான வழியே !

      So நம்ம கைய பிடிச்சி இழுத்தியாக்களுக்கு நாமே சங்கிலி முருகர்களைத் தேடிடணும் சார் !

      Delete
  50. வாவ்...சரியான அருமையான ஐடியா வழி மொழிகிறோம்..:-)

    ReplyDelete
  51. B: டேய் மங்குனி, இங்க ஒருத்தன் அடியில சூடு தாங்காம கதறிகிட்டு கெடக்கன் நீ என்னடானா கெக்கே பெக்கேனு இலிச்சிட்டு இருக்க. அதுசரி உனக்குதான் சூடு சொரனையே இல்லையே...

    A: அது ஒன்னுமில்ல பாஸ், இந்த காட்டுவாசி படிக்கத் தெரிஞ்ச மாதிரியே சீன் போடுரானே அவன பார்த்தாதான் சிப்பு சிப்பா வருது பாஸ்...

    C: நல்லா சிரிங்கடா சிரிங்க, நாங்களாம் ஆன்லைன்ல படிச்ச 2K காட்டுவாசிங்கனு தெரியாது உங்களுக்கு.

    ReplyDelete
  52. கிட்: பாஸ் ஆவி புடிச்சா கொரோனா போயிடுமாம். நல்லா மூச்ச இழுத்து விடுங்க.

    டாக்: மூச்ச விட்டா ஆவி போயிடும்டா...

    லூசி: கௌ பிரியாணியும் கௌபாய் பிரியானியும் சாப்பிட்ட ஒரே இனம் நம் இனமா தான் இருக்கும்...

    ReplyDelete
  53. டாக் புல்;டேய் ,மாங்காய் மடையா உனக்கே இது நல்லாருக்காடா,கொரோனாவுக்கு மூலிகை தேடிக் கண்டுபிடிக்கலாம்னு கூட்டிட்டு வந்து இப்படி மாட்டிவிட்டதும் இல்லாம அப்பிராணியா நின்னுக்கிட்டு இருக்கியேடா ரப்பர் வாயா?டேய் ஏதாவது பண்ணுடா,இன்னும் எனக்கு கண்ணாலாம் கூட ஆவல?!.ஐயோ ஐயோ நான் என்ன பண்ணுவேன்?.சிக்பில் ...குள்ளா சீக்கிரமா வந்து என்ன மட்டும் காப்பாத்துங்க உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.!.
    கிட்;சிக்பில்லும் குள்ளனும் தான் கொரோனா வந்து ஆசுபத்திரில கிடக்காங்களே,அப்புறம் எப்படி உங்கள மட்டும் காப்பாத்துவாய்ங்க சீப்?!

    லூசி;இவிங்க ரெண்டு பேரும் ஏதோ புலம்பிக்கிட்டே இருக்காய்ங்க ,இன்னும் நாலு விறக சேத்து திகு திகுனு எரியவிடுங்கடா,சீக்கிரம் பசியாறுவோம்.

    ReplyDelete
  54. கேப்ஷன் போட்டியில் நண்பர்கள் எல்லோரும் பின்னுகிறார்கள்! ஒன்றுக்கு ஒன்று போட்டி போடும் வகையில், சிரிப்பை கொண்டு வருகிறது! சூப்பர் நண்பர்களே!! இன்னும் தளத்தில் பலமுறை கேப்ஷன் போட்டியில் வென்ற நண்பர்கள் களத்தில் இறங்கவில்லை!! ஆவலுடன் அவர்களின் கேப்ஷனை படிக்க ஆர்வமுடன் உள்ளேன்!

    ReplyDelete
    Replies
    1. சகாே நான் என்ட்ரி போட்டுட்டேன்..😉

      Delete
  55. டாக் புல்;டேய் சோப்பு மண்டையா,என் கண்ணாலத்துக்கு பொண்ணலாம் பார்த்துட்டேன்,காட்ல புதையல் இருக்கிற மேப் என்கிட்ட இருக்குனு கூட்டிட்டு வந்து இப்டி மசாலவுல புதைய விட்டுட்ட உன்ன,டேய் நீ நல்லாவே இருக்க மாட்டடா? இதுல இருந்து தப்புச்சுட்டேன் உனக்கு இருக்குடா ஆப்பு?

    கிட்;அப்புறம் என்ன பாஸ் நான் டாவடிக்கிற பொண்ண நீங்க லவட்டினா நான் சும்மா விடுவேனா ?

    லூசி;என்னடா ரண்டு பேரும் சலம்பிக்கிட்டே இருக்கீங்க.டேய் வயிறு பசிக்குது வேகமா வேக வைக்கங்கடா இவங்கள?!.

    ReplyDelete
  56. A பாஸ் நீங்க பல நாளா குளிக்கலைனு தெரிஞ்சு இவனுக நம்மள வெந்நீரில் குளிப்பாட்டுறானுக சொகமா இருக்கில்ல
    B: அடேய் மங்குனி இவனுக நம்ள உயிரோட ஆவி பிடிக்க போறானுகடா
    C 100 கிலோ மிளகாய் 5கிலோ மிளகு 8 கிலோ உப்பு 50கிலோ ஜாம் என்னடா இது அசைவத்துல ஜாம் போடச்சொல்லிருக்கு

    ReplyDelete
  57. A..சட்டி சுட்டதடா கொதித்து விட்டதடா
    சட்டி சுட்டதடா கொதித்து விட்டதடா
    B...உப்பு கெட்டதடா இப்ப கொட்டுதடா
    உப்பு கெட்டதடா இப்ப கொட்டுதடா
    C...மசாலா போட்டு முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா

    B...சட்டி சுட்டதடா கொதித்து விட்டதடா
    சட்டி சுட்டதடா கொதித்து விட்டதடா
    A...உப்பு கெட்டதடா இப்ப கொட்டுதடா
    உப்பு கெட்டதடா இப்ப கொட்டுதடா
    C...பாதி குழம்பில் ஆர்ட்டின் கிடந்து சிரித்துக் கொண்டதடா
    மீதி குழம்பில் க்ஷெரிப் இருந்து ஆட்டி வைத்ததடா
    ஆட்டி வைத்த க்ஷெரிப்புமின்று அடங்கிவிட்டதடா
    ஆட்டி வைத்த க்ஷெரிப்புமின்று அடங்கிவிட்டதடா
    கொதிக்கும் குழம்பில் முழு அளவில் கிடந்து அவியுதடா
    B....சட்டி சுட்டதடா கொதித்து விட்டதடா
    சட்டி சுட்டதடா கொதித்து விட்டதடா
    A....உப்பு கெட்டதடா இப்ப கொட்டுதடா
    உப்பு கெட்டதடா இப்ப கொட்டுதடா

    B...ஆராவாரப் பேய்களெல்லாம் ஊதிவிட்டதடா
    கொதிக்கும் ஓசை கொஞ்சம் கூடிவிட்டதடா
    A...கொதிக்கும் குழம்புச் சட்டியிலே மனக்கத் துவங்குதடா
    கொதிக்கும் குழம்புச் சட்டியிலே மனக்கத் துவங்குதடா
    C...நாக்கு ருசி ருசி ருசியென்று சப்பு கொட்டுதடா

    B....சட்டி சுட்டதடா கொதித்து விட்டதடா
    சட்டி சுட்டதடா கொதித்து விட்டதடா
    A...உப்பு கெட்டதடா இப்ப கொட்டுதடா
    உப்பு கெட்டதடா இப்ப கொட்டுதடா
    A...எனது தோலை உரித்துப் பார்க்க பொண்ணுக வந்ததடா
    B... நான்
    உனது தோலை உரித்துப் பார்க்கும் கோபம் வந்ததடா
    C...பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இப்ப வெந்ததடா
    பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இப்ப வெந்ததடா
    இறந்த பின்னே வரும் வாசம் வந்து விட்டதடா
    B...சட்டி சுட்டதடா கொதித்து விட்டதடா
    சட்டி சுட்டதடா கொதித்து விட்டதடா
    A...உப்பு கெட்டதடா இப்ப கொட்டுதடா
    உப்பு கெட்டதடா இப்ப கொட்டுதடா

    ReplyDelete
    Replies
    1. ஙே..ஙே..ஙே...🤕🤕🤕🤕🤕
      கேப்சனாப்பா இது...எப்படியும் கவிதை எழுதிடனும் உமக்கு...!!!

      எஸ்கேப்...

      Delete
    2. ஸ்டீல்...!
      நடுவரை இப்படியெல்லாம் மிரட்டக்கூடாது! ஆமாம்...😂😂😂

      Delete
    3. ///A...எனது தோலை உரித்துப் பார்க்க பொண்ணுக வந்ததடா
      B... நான்
      உனது தோலை உரித்துப் பார்க்கும் கோபம் வந்ததடா///
      😅😅😅

      Delete
    4. ஸ்டீல். சமீபத்தில் எங்கேயும் கிடா வெட்டு விருந்துக்குப்போய் வந்தீர்களா?
      டாடி ஆறுமுகம் தோற்றார் போங்கள்!
      சிரித்து சிரித்து வயிறே வலிக்கிது.
      உங்களுக்கு வெளியில் தெரிவது ஒரு ரூபம்தான். ஆனால் உள்ளுக்குள் பத்து கண்ணதாசன்,இருபது வாலி, முப்பது வைரமுத்துக்கள் என பல ரூபங்கள் இருக்குது போல!

      Delete


    5. ஓரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா?
      நீ பாட இன்றொரு நாள் போதுமா?
      நாதமா கீதமா - அதை
      நீ பாட இன்றொரு நாள் போதுமா?
      புதுநாதமா சங்கீதமா - அதை
      நீ பாட இன்றொரு நாள் போதுமா?

      ராகமா சுகராகமா கானமா தேவகானமா?
      ராகமா சுகராகமா கானமா தேவகானமா? - உன்
      கலைக்கிந்தத் திருநாடு சமமாகுமா? - உன்
      கலைக்கிந்தத் திருநாடு சமமாகுமா?
      நாதமா கீதமா அதை
      நீ பாட இன்றொருநாள் போதுமா?

      குழலென்றும் பததபம மபபமக கமமகரி ரிககரிஸ
      காக்ரீஸ் நீதபமக
      யாழென்றறும் பா பம பததப பமப ததப பம
      பததபபம பததபபம பத மபமத பதமப
      கமகப மபகம ரிகரிம கமரிக
      ஸரிநிததா ஸரிநிததா ஸரிநிததா
      ஸரிநிததா ஸரிநிததா ஸரிநிததா

      குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார் - உன்
      குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
      குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார் - உன்
      குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
      அழியாத கலையென்று உனைப் பாடுவார் ஆ..
      அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் - உனை
      அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் - உனை
      அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்

      இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ?
      எழுந்தோடி வருவாரன்றோ?
      எழுந்தோடி தோடி..
      இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ?

      உனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ?
      தர்பாரில் எவரும் உண்டோ தர்பாரில்...
      உனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ?

      Delete
    6. :-) ஏலே மக்கா இது கேப்ஷன் போட்டு கவிதை போட்டி இல்லை. :-)

      Delete
    7. ஓடுங்க..ஓடுங்க...அதுநம்மை நோக்கித்தான் வருது...ஓடுங்க!

      Delete
    8. ///ஏலே மக்கா இது கேப்ஷன் போட்டு கவிதை போட்டி இல்லை////

      ஹா ஹா ஹா! :))))))))

      Delete
  58. கிட் ;காட்டுக்குள்ளே வேட்டையாடப் போகலாம்னு கூட்டிட்டு வந்து இந்த நாராப் பயலுகளுக்கு என்னத் தீனியாக்கிட்டிங்களே,உங்களுக்கு இப்ப சந்தோஷமா பாஸ்?

    லூசி;டேய் உங்களுக்கு ஒரு சான்ஸ்.
    வீராச்சாமி படத்த முழுசாப் பாத்துட்டு எங்களுக்கு கத சொன்னீங்கனா உங்கள உசிரோட விட்றேன்.என்ன டீல் ஒ கே வா?

    டாக் புல் ;என்னாது வீராச்சாமிய முழுசாப் பாக்கணுமா,அதுக்கு இப்படியே செத்துப் போயிடறோம்.ஆள விட்றா சாமீ..!

    ReplyDelete
  59. கண்ணான கண்ணே நேற்றுதான் படித்தேன். மிகவும் அருமையான சித்திரங்கள் தாங்கிய கனமான கதை!

    ReplyDelete
  60. B: ஏண்டா கைப்புள்ள கிட்டு.. உன் பாக்கெட்லேர்ந்து அவன் என்னமோ சீட்ட எடுத்து படிக்கிறானே, என்னடா அது?

    A: அதுவா பாஸ்..நம்ம ஸ்டீலோட கவிதயில ஒண்ண பேப்பர்ல எழுதி வச்சிருந்தேன். காட்டு வழியில போறோம்.எதுக்கும் இருக்கட்டுமேன்னு...

    B: ஆனாலும் உனக்கு தெகிரியம் சாஸ்திடா?

    A: கேளுங்க பாஸ்..பயபுள்ள அத படிச்சிட்டு தெறிச்சி ஓடப்போறான் பாருங்க. அப்புறம் நாமளும் தப்பி ஓடிடலாம்.
    C: தமிழ்லேயே எனக்கு பிடிக்காத மூணு எழுத்து..கவித..இவனுங்க அத பேப்பர்ல எழுதி வேற வச்சிருக்காங்க. அதுவும் ஸ்டீல்லோடது.இதுக்காகவே இவங்கள சூப் வெக்கணும். டேய்..ரெண்டு கட்டய சேத்து போடுடா..

    ReplyDelete
  61. A: ஐயோ பாஸ் இந்த காட்டுவசிங்க மாஸ்க் இல்லாம சுத்துறாங்க.நமக்கும் கோரோனோ நோய் வந்துராதா?...

    B: டேய் பாவி இன்னும் கொஞ்ச நேரத்தில் ரெண்டு பேரும் சாக போறோம். இதுல கோரோனோ வந்தா என்ன வராட்டி என்ன வாய மூடுடா...

    C: மனுஷ கறி மூலமா கோரோனோ பரவுமா பரவாதானு இந்த புக்ல போட்டு இருக்கான்னு பாக்கணும்...

    ReplyDelete
  62. A: இந்த காட்டுவசிங்க சமூக இடைவெளி இல்லாம லைன்ல நிக்கிறாங்க பாஸ் நமக்கும் கோரோனோ வந்துதுருமே?...

    B: டேய் நமக்கும் சமூகத்துக்கும் நிறைய இடைவெளி விழ போதுடா பேசாம வாய மூடிட்டு இருடா...

    C: இவனுங்கள தனித் தனியா சமைக்கலாமா?...நமக்கு கோரோனோ வந்துருச்சுனா... இந்த புக்ல என்ன இருக் குன்னு பாப்போம்...

    ReplyDelete
  63. கிட்: கேப்சன் போட்டிக்கு நடுவரா உங்கள் போட்டிருக்கலாம் சீஃப்.

    டாக்: கடுப்ப கிளப்பாத கிட். பைபாஸ்ல போய் நடுவர புடிச்சிடலாம்னு எடி சார் சொன்னத கேட்டு இந்த குறுக்குவழிய புடிச்சது தப்பா போச்சு.

    லூசி: நான் ஹாட்லைன் படிச்சிட்டு வரேன். அதுவரைக்கும் குண்டாவ ஹாட்டா வைங்க பசங்களா...

    ReplyDelete
  64. டாக்: அடேய் கிட் மடையா நீ அவனுங்க கிட்ட என்ன சொன்னேனு நம்மள இப்படி குழம்பு வைக்க ரெடியாய்ட்டானுங்க!

    கிட் : அதுவா பாஸ் . நாம வுட்சிட்டி போலீஸ்னா காமெடியா பார்ப்பானுங்கனு,நாம சாத்தான்குளம் போலீஸ்னு சொன்னேன் பாஸ்.அதான் செம காண்டாய்ட்டானுங்க போல?

    லூசி : இந்த புக்ல காவலர்களை கபாப் செய்வது எப்படினு எந்த பக்கத்தில் போட்டு இருக்காங்க.

    ReplyDelete
  65. கேப்சன்ஸ் தொடர்ச்சி...
    A.கிட்
    B.டாக்புல்
    C.காட்டுவாசி


    கேப்சன் 11:-
    A.எதுக்கு பாஸ் இவ்ளோ பீல் பண்றிங்க.உயிர் போக போகுதுனா?
    B.அது கூட பரவால்ல கிட்..வழக்கமா நம்ம புத்தகத்த படிச்சுட்டு கார்ட்டூன் கதைனு சொல்லி நம்மள வறுத்தெடுப்பாங்க..
    இப்ப இந்தம்மா,வேற ஏதோ புக்க படிச்சுகிட்டும் நம்மளயே வறுக்குது..
    C.அய்யோ பாவம்..இத கேட்கறப்ப எனக்கும் கண்ணு வேர்க்குது...


    கேப்சன் 12:-
    B.சொட்டைத் தலைக்கு அமேசான் காடுகள்ள ஆயில் கிடைக்குமுனு நம்பி வந்து, இருக்கற ஆயுளும் போனதுதான் மிச்சம்..
    A.பாஸ் அத விடுங்க.வழக்கமா இந்த சீன்ல ஒரு குத்து பாட்டு இருக்குமே எங்க காணோம்
    C.பாட்டு டவுட்டுதான் ஆனா குத்து கன்பார்மா இருக்கு தம்பி..


    கேப்சன் 13:-
    B.இவ்ளோ நாளா நீ சமைச்சதே இல்லயாம்மா.ஒரு சூப் வைக்கறதுக்கு போய் புத்தகத்த உத்து பார்த்துகிட்டு இருக்க
    A.அதானே?
    C.யோவ் இது சமையல் குறிப்பு புத்தகம் இல்ல..கருட புராணம்...கும்பிபாகத்துக்கு அடுத்து உங்களுக்கு என்ன தண்டனை தரலானு பார்த்துகிட்டு இருக்கேன்.


    கேப்சன் 14:-
    A.ஊரடங்கால கஷ்டபடுவாங்கனு அரிசி பருப்பெல்லாம் கொண்டு வந்த நம்மளேயே இவங்க பிடிச்சு வச்சுகிட்டானுங்களே
    B.அடேய் கிட்டு இன்னுமா புரியல.. நிவாரணப் பொருள், நாம கொண்டு வந்த ஐட்டங்கள் இல்ல, நாமளேதான்..இத பிளான் பண்ணிதான் நம்ம டார்ச்சர் தாங்காத ஊருக்காரனுங்க
    எல்லாத்தையும் நம்ம கிட்ட கொடுத்து அனுப்பிருகானுங்க
    C.சூ..தொணதொணனு..உப்பு போட்டனானு மறந்து போச்சு..


    கேப்சன் 15:-
    B.என்னடா இந்த நிலைமையிலயும் சிரிச்சுகிட்டு இருக்க
    A.இல்ல கேப்சன்ல சும்மா இருக்கற நமக்கே எண்ணெய் சட்டினா, இந்த போட்டிக்கு தீர்ப்பு சொல்ல போற ஜட்ஜிக்கு என்ன ஆகப் போறாருனு நினைச்சி சிரிச்சேன் பாஸ்...
    C.கதம்...கதம்..


    கேப்சன் 16:-
    A.பாஸ் இந்த பையன் என்னை எவ்ளோ பாசமா பார்க்கறான் பாருங்க..
    B.அடேய் அவன் நாக்க சப்புக் கொட்டறத பார்த்தா நம்ம சூப்ப கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம குடிப்பான் போல...
    C.சே..சே..அவனுக்கு சூப்லாம் பிடிக்காது.ஒன்லி லெக்பீஸ்.

    ReplyDelete
  66. கிட் : வருண ஜெபம் செய்யணும்கிற கோரிக்கை வெச்சு தண்ணீர் அண்டாவுக்குள் நம்மள இறக்கிட்டு, இப்ப அடியில கொள்ளிகட்டயை போட்டு எரிக்கறானுங்களே பாஸ்????

    ஷெரீஃப் : ஜெபம் பண்ணி முடிச்ச உடனே அடுத்த புரோகிராம் அவ கையிலே நீராவி குளியல்னு சொன்னதுல மயங்கி ஓகே சொன்னவன, நீராவிலயே அவியல் பண்ணப் போறாளே

    ஆதிவாசி பெண்(பாடுகிறாள்) :

    மனம் போல் தின்று ஜமாய்.....

    அரிசோனா அவியல் என்ஜாய் .......

    ReplyDelete
  67. எடிட்டர் சார்... இன்றைய புக்கிங் நிலவரம் ப்ளீஸ்!

    ReplyDelete
    Replies
    1. ஆங்! புரிஞ்சுடுச்சுங்க எடிட்டர் சார்.. சரி விடுங்க நாளைக்குப் பார்த்துக்கிடலாம்! :P

      Delete
    2. அதே அதே ஆசிரியர் இந்த மாத புத்தகங்களின் கடைசி கட்ட வேலைகளில் பிஸியாக இருப்பார். எனவே அடுத்த ஒரு வாரம் ஸ்கோர் கேட்க வேண்டாம் என நினைக்கிறேன்.

      Delete
    3. Today's Booking :

      R.Ganesh, Madurai - 1 (#76)

      Delete
    4. சிறு துளி பெரு வெள்ளம் விரைவில் சார்!

      Delete
    5. நண்பர் மதுரை கணேஷுக்கு விழாக்குழுவினர் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

      Delete
    6. அந்த விழா குழுவில் என்னையும் சேர்த்து கொள்ளுங்கள் விஜய்! 4 ரவுண்டு பன்னு வாங்கி தருகிறேன்! :-)

      விழாக்குழுவினர் சார்பாக நண்பர் கணேஷுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

      Delete
    7. போற போக்கை பாரத்தா ஸ்ட்ரெய்ட்டா 2022சனவரி, முத்து 50வது ஆண்டுவிழா தான் நடக்கும் போல....!!!

      Delete
    8. ///அந்த விழா குழுவில் என்னையும் சேர்த்து கொள்ளுங்கள் விஜய்!///

      விழாக்குழுவின் வீடியோகிராபர் - நீங்க இல்லாமலா?!!

      Delete
    9. Kaal kinaru thaandiyaachu sir !

      Delete
    10. இந்த கொரோனா காலத்தில் அதுவும் இரண்டு வாரங்களில் 76 நண்பர்கள் புக்கிங் செய்து உள்ளது பெரிய விஷயம்! வெரி much impressed!! எனவே வரும் நாட்களில் சூழ்நிலை சரியாக ஆரம்பித்து விட்டால் ஆசிரியர் சொன்ன 90 நாட்களில் குறிப்பிட்ட என்ணிக்கையை நாம் எட்டிவிடும் வாய்ப்புகள் அதிகம்! ஜெய் ஜக்கம்மா!!

      Delete
  68. கிட்:நம்மளை சாப்பிடுற ஆவலில் இவனுகள் சமூக இடைவெளி இல்லாமல் நிற்கிறாங்களே பாஸ்

    ஷெரீஃப்:உயிர் போகப்போகுதுன்னு கவலையே இல்லையாடா மங்குனிபயலே

    ஆதிவாசி:எதற்கும் மனிதக்கறிக்கு மசாலா தேவை இல்லை என்று சொல்லி வைப்போம் அப்போதான் நான் பெரியஅறிவாளி என்று நம்மாக்கள் நினைப்பார்கள்

    -சர்மா

    ReplyDelete
  69. சார் கவலை வேண்டாம் நம்மைப்படைத்த கடவுளுக்கு கருணை இல்லாது போகாது காலம் ஒருநாள் மாறும்
    நம்கவலைகள் யாவும் தீரும் -சர்மா

    ReplyDelete
  70. நாமளும் ஏதாவது caption போட்டு வைக்கலாம் இல்லைனா ஆசிரியர் பைபாஸின் போய் பிடிக்கும் நடுவர் நாமாகி விடுவோம்!

    கிட்: பாயாச அண்டாக்குள் சந்தோஷமா இருக்காமல் இப்படி வருத்தபடுறீங்க பாஸ்?

    டாக்-புல்: அடேய் பலாபழ மண்டையா இது ரம்மி அதிகாரிக்கு தயார் செய்த ஸ்பெஷல் பாயாச அண்டாடா!

    ஆதிவாசி: பாயசம் கூட கொஞ்சம் கொழ கொழ சால்டமாவையும் சேர்த்து இவனுக்களை பத்திரமாக வழி அனுப்பிவிட வேண்டியதுதான்!

    ReplyDelete
    Replies
    1. ////நாமளும் ஏதாவது caption போட்டு வைக்கலாம் இல்லைனா ஆசிரியர் பைபாஸின் போய் பிடிக்கும் நடுவர் நாமாகி விடுவோம்!////

      என்னாவொரு புத்திச்சாலித்தனம்!! :)

      Delete
    2. என்ன வொரு வில்லத்தனம்
      (ரூம்போட்டு யோசிப்பாங்களோ❓)
      சர்மா

      Delete
    3. ரூம்போட்டுயோசிப்பாங்களோ?
      சர்மா

      Delete
  71. நாமளும் ஏதாவது caption போட்டு வைக்கலாம் இல்லைனா ஆசிரியர் பைபாஸின் போய் பிடிக்கும் நடுவர் நாமாகி விடுவோம் ஹிஹிஹி நான் caption போட்டதற்கும் காரணம் இதுவே...

    ReplyDelete
    Replies
    1. அப்படி எல்லாம் தப்பிக்க முடியாதாம்....

      Coach cum player மாதிரி நடுவராக செலக்ட் பண்ண வாய்ப்பு இருக்காம்....!!!

      Delete
    2. விதி வலியது என எடுத்து கொள்ள வேண்டியதுதான்!

      Delete
    3. ///ஹிஹிஹி நான் caption போட்டதற்கும் காரணம் இதுவே...///

      ஓஹோ!!

      அப்படீன்னா நானும் அவ்வழியே!!

      Delete
  72. C:ரெண்டு மாங்க மடையனுங்க மாட்டி இருக்காணுங்க.ஏதேனும் ஸ்பெஷல் அயிட்டம் போட்டு தாக்கலாம் என்று பார்த்தால்....இதில் ஒன்றும் தேறவேயில்லையே.!!!!
    B:டேய்.ஆர்டினி பய....இந்த தண்ணி கொதிக்கிறது முன்னாடி சிக்பில் வந்து நம்மள காப்பாத்தி விடுவான் இல்லையா???
    A: சிக்பில் கதைகளில் ஹீரோ பேர போடாம நம்ம பேர போட்டதாலே சிக்பில் வேற எடிட்டரை தேடி போயிட்டான்....இப்ப என்ன செய்றதுன்னு தெரியல கடவுளே...(மனதிற்குள்...இந்த இக்கட்டில் இருந்து தப்பித்தால் எடிட்டரிடம் சொல்லி சிக்பில் பேரையே போடச் சொல்கிறேன்.....சிக்பில் வந்து காப்பாத்துப்பா)....

    ReplyDelete
  73. A: பாஸ், கேப்ஷன் போட்டிக்கு வழக்கமா அதிகாரி அண்ட் கோ தான் சிக்குவாங்க. எடி இந்தவாட்டி நம்மல வேகவ்ச்சிட்டிருக்காரு..

    B: இதுல வேற நடுவர்களை தேடி போயிருக்காராம். அவர் எப்ப கண்டுபுடிச்சி, எப்போ வந்து நம்மை ரிலீஸ் பண்ணுவாரோ. அப்பப்போ கால் கட்ட விரலை வாய்க்குள் விட்டுட்டு மத்த விஷயத்தை மறந்து தடாலடியா ஏதாச்சும் பண்ண ஆரம்பிச்சிடுவாரு.

    C: ம்ம்ம்.. நடுவர்களை செலக்ட் பன்ற வேலையை என்கிட்ட விட்டுட்டார் எடி. கேப்ஷன் போட்டியில கலந்துக்காம டிமிக்கி கொடுத்த ஆட்களை இந்த லிஸ்ட்ல இருந்து தனியா பிரிக்கனும். அதுவரைக்கும் இந்த கோமாளிங்க வேகட்டும்.

    ReplyDelete
  74. அவர்எப்பல்லாம் கால் கட்டவிரலை வாய்க்குள்ள விட்டுக்கிறாறோ அப்பல்லாம் நமக்கு கொண்டாட்டந்தான்சார் அவருக்ககுத் திண்டாட்டம் என்றாலும். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. அதே அதே சரியாக சொன்னீர்கள் சார்.

      Delete
  75. இந்த மாத புத்தகங்களுக்கு ஆவலுடன் காத்து கொண்டு இருக்கேன்....

    ReplyDelete
  76. திசை மாறிய தேவதை செம. அட்டகாசமான ஆரம்பம் for சோடா.

    ReplyDelete
  77. திசை மாறிய தேவதை:

    முதல் பக்கத்தில் கதையின் நாயகனை பற்றி இதனை விட சுருக்கமாக சொல்லி ஆரம்பிக்க முடியாது! அடுத்த பக்கத்தில் ஒரு கொலை, அதனை தொடர்ந்து சோடா செய்யும் fight sequence செம! 4-5 பக்கங்களுக்கு படத்தை மட்டும் வைத்து ஆர்ப்பாட்டமான fight! அந்த சண்டை நடக்கும் இடத்தில் கூர்ந்து கவனிக்க பல விஷயங்கள்! அதுவும் மாட்டு இறைச்சியில் வில்லனின் மகன் ஒளிந்து கொண்டு சுடும் இடம், அவனை சோடாவின் தோட்டா பதம் பார்க்கும் இடம்! சண்டையின் இறுதியில் வில்லன் பேசும் வசனங்கள் செம, இவன் சாதாரண வில்லன் கிடையாது அதே நேரம் கார்ட்டூன் பாணியில் உள்ள இந்த கதை காமெடி கதை கிடையாது என மண்டையில் சுரீர் என உரைக்க வைக்கிறது!

    சோடாவின் தாய் செண்டிமெண்ட் செம! அவரின் மகன் செண்டிமெண்ட் அதனைவிட செம! மிகவும் ரசித்தேன்! சோடாவின் பாஸ் சோடாவுக்கு சப்போர்ட் செய்து பேசும் வசனங்களை மிகவும் ரசித்தேன்! சோடாவின் உடன் வேலை செய்யும் அவரின் நண்பன் மற்றும் அந்த பெண் போலீஸ் என செமையா கதாபாத்திரங்கள்.

    சோடா தனது அம்மாவை ஓவ்வொரு நாளும் வீடு மற்றும் பார்க் போன்ற இடத்தில் எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவது செம! நடிகர் ரஜினியை இந்த இடத்தில் அடிக்கடி பொருத்தி பார்த்தது மனது படிக்கும் போது. சோடாவின் கண்கள் செம ஷார்ப்! இதனை பல இடங்களின் சித்திரங்கள் மூலம் அழகாக ஓவியர் வெளிப்படுத்தி இருந்தார். அதே போல் கதையில் ஆங்காங்கே நமக்கு தோன்றும் சில கேள்விகளுக்கு அதற்கு முந்தைய பக்கங்களின் ஓவியங்களை நன்றாக கவனித்தால் அதற்கான விடையை நாமே எளிதாக கண்டு பிடிக்கலாம்; வசனங்களும் இதற்கு மிகவும் வலு சேர்த்தன!

    கடைசியில் வில்லனுக்கு கிடைக்கும் முடிவு, அந்த முடிவுரையை எழுதிய கத்துக்குட்டி பேசும் வசனத்தை மிகவும் ரசித்தேன்; மனதை கனமாகியது!

    சோடா - லெமன் சோடா போஞ்!

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விமர்சனம் PfB!!

      Delete
    2. செம்ம பரணி செம்ம....

      Delete
  78. சோடா வரும் வருடங்களிலும் இவர் தாராளமாக வரலாம்! நேர்கோட்டு கதை அதே நேரத்தில் ஒரு commercial கதைக்கு தேவையான அனைத்தும் உள்ளது! கதை விறுவிறுப்பாக செல்கிறது, புத்தகத்தை கையில் எடுத்த பின் ஒரே மூச்சில் சமீபத்தில் படித்த கதை இதுவே!

    ReplyDelete
  79. ***** சத்தியமா இது போடிக்காண்டி தான்! *****

    கிட் : என் கட்டுகளுக்கு முடிச்சுப்போட மறந்துட்டாங்க பாஸ்!

    ஷெரீப் : எனக்கும்தான் முடிச்சுப் போடலை! இப்ப அதுவா முக்கியம்? தப்பிக்க ஏதாவது வழியைச் சொல்லுடா மண்டையா!!

    (பெரி)C : பார்ர்ரா!! உலகத்துலயே வடிகட்டின முட்டாள்கள் இவங்கதான்னு இந்தப் புத்தகத்துல போட்டிருந்தது உண்மைதான் போல!!

    ஈ.வி : அப்பாடா!! நடுவர் பதவியிலேர்ந்து நானும் எஸ்கேப்!!

    ReplyDelete
  80. C புக்கு பார்ட்டி: (பார்த்து படித்தவாறே) ஆக, என்னை மணம் புரிய சம்மதம் என்றால் இதிலிருந்து... 💞💞💞😍🥰
    B ஷெரீப்: (இடைமறித்து) அடேய் லந்து பண்ணாதீங்கபா... அதுக்கு நான் இப்படியே வெந்து பிணம் ஆயிடுற சம்பவம் பெட்டர் 😟😟😟😠😠😠
    A கிட்: பாஸ் இதுதான் சான்ஸ். திரும்பி டைட் க்ளோஸ் அப்ல உங்க அழகு மூஞ்சியை காட்டி பழி வாங்கிடுங்க 😜😛😝

    ReplyDelete
  81. ஆர்டின் : நம்மள வெச்சு இப்போதான் சமைக்க தொடங்கி இருக்காங்க அதுக்குள்ள ஒரு கூட்டமே தட்டை தூக்கிட்டு லைன் ல நிக்க ஆரம்பிச்சுடுச்சே !!!! பாவம் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆய்டுச்சு போல பாஸ்!!!!

    ஷெரீஃப்: அடேய் ! அவனுங்க சாப்பிடப் போறது நம்மை, நீ அவனுங்களுக்கு பாவம் பாக்கறியா?? எனக்கு வர கோவத்துல உன்னை ......... இருந்தாலும், இவனுங்க பலநாள் பட்டினி போலத்தான் தெரிகிறது! பாவம்தான் டா

    ஆதிவாசி : கண்ணுங்களா நாங்க எல்லாம் நேரத்துக்கு சாப்பிடறவிக, எங்க "மனுஷ கறி சாஸ்திரம்" புக்குல உங்கள மாறி காமெடி காரங்கள பிடிச்சு சமைச்சு சாப்பிட்டா வாழ்நாள் முழுவதும் சிரிச்சு சந்தோசமா இருக்கலாம்னு போட்டு இருக்கு அதான் இப்பவே கூடிட்டாங்க.....

    ReplyDelete
    Replies
    1. ஒரு captionக்கு மேல போடுறவங்க நடுவராக இருக்க முழு தகுதி பெறுகிறார்கள் விஜய் அண்ட் குமார்!

      Delete
  82. விழாக்குழுவினர் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட வேண்டிய அந்த நண்பர்(கள்) யாரென்பதை அறிவிக்க எடிட்டர் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்!!

    ReplyDelete
  83. வடக்குப்பட்டி ராமசாமி டோய்...ஊருக்குத் திரும்பிட்டாரு டோய் :

    இன்றைக்கு புக்கிங் :

    குமரேசன் பழனிவேல், விருத்தாச்சலம் - 1 புக் (#77 )
    ஜெகன் தர்மேந்திரா, ஸ்ரீ லங்கா - 1 புக் (#78 )
    யோகநாதன், கொடுமுடி - 1 புக் (#79 )

    Total : 79

    ReplyDelete