Powered By Blogger

Saturday, July 04, 2020

Let's take a selfie புள்ளே !

நண்பர்களே,

வணக்கம். ஆலமரத்தடிப் பஞ்சாயத்துக்கள் ரொம்பவே ஓடிவிட்டுள்ளதால்  time to move on – to better & brighter things ! கடந்த 8½ ஆண்டுகளாக காலெண்டர்களின் தேதி கிழிப்புப் படலமே எனது சுறுசுறுப்பையோ ; சோம்பேறித்தனத்தையோ தீர்மானிக்கும் சமாச்சாரமாய் இருந்து வந்துள்ளது ! மாத இறுதிகள் எனில், பொழுது விடியும் போதே – ”ஆத்தாடியோவ்… அதிகாரி கதையிலே இன்னும் 50 பக்கம் பாக்கி நிற்குதே… அம்மாடியோவ்… கி.நா. முழுசாய் எழுத வேண்டிக் கிடக்குதே !‘ என்ற ரீதியில் ஏதேனுமொரு பரபரப்பு ஒட்டிக் கொள்ளும் ! அதே நேரம் மாதத்தின் முதல் வாரமெனில் – ஹாயாக புது புக்குகளின் உங்கள் அலசல்களை வாசித்தபடிக்கே குறட்டை நேரங்களை நீட்டித்தபடிக்கே, பொழுதுகளை ஓட்டத் தோன்றும் ! ஆனால் கொரோனா நாட்களின் புண்ணியத்தில் இப்போது எல்லாமே உல்டா ! இதோ – மாதத்தின் முதல் வாரத்திலுள்ளோம் – ஆனால் பணிகளில் பாதி முடிந்தும், முடியாமலும் கிடக்க, ‘மாதத்தின் 1-ம் தேதி” என்ற அந்த இலக்கு இல்லாது போனதன் குழப்பங்களை உணர்ந்து வருகிறோம்! என்ன தான் மாதத்தின் 10-ம் தேதி, 15-ம் தேதி என்று நிர்ணயித்துக் கொண்டாலுமே முதல் தேதியின் focus இதனில் சாத்தியமாக மாட்டேன்கிறது! Maybe ஆகஸ்டில் 10-ம் தேதிவாக்கினில் அந்த மாதத்து இதழ்களை வெளியிட்ட கையோடு – செப்டம்பர் முதல் தேதியினை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும் போலும் ! அதற்குள்ளாய் கொரோனா தாண்டவம் மட்டுப்பட்டிருக்குமென்று வேண்டிக் கொள்வோமாக!

ஜுலை !! 1984 முதலாகவே இது நமக்கு ஸ்பெஷலானதொரு மாதமாக இருந்து வருகிறது! ‘லயன் காமிக்ஸ்‘ என்றதொரு கோலத்தின் முதற்புள்ளி 36 ஆண்டுகளுக்கு முன்பாய் இதே வேளையினில் தான் அரங்கேறியது எனும் போது, தொடர்ந்துள்ள ஜுலைகள் சகலமுமே நம்மளவிற்கு வாஞ்சையான நினைவுகளைத் தாங்கி நின்று வந்துள்ளன ! உள்ளபடிக்க்குப் பார்த்தால் லயனின் முதல் இதழ் மே 1984-ல் வெளிவந்திருக்க வேண்டும் தான் ! அப்போதெல்லாம் (காமிக்ஸ்) விற்பனைக்கு உகந்த மாதங்கள் என்ற வகையில் எனது முதல் இலக்கு மே 1984 தான் ! ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது ? எப்படிப் பயணிப்பது ? என்று எதுவும் தெரியா குழந்தைப் புள்ளையாய்த் தடுமாறித் திரிந்தவனுக்கு – இன்னும் கொஞ்சம் காத்திருந்து முயற்சித்தால், எப்படியாவது ஜேம்ஸ் பாண்ட் 007 கதைகளையுமே லவட்டி விட வாய்ப்பிருக்காதா ? என்ற சபலமும் ! And most importantly – “முதலீடு” என்றதொரு சமாச்சாரம் எங்கிருந்து தேறக் கூடுமென்ற ஞானம் கிஞ்சித்தும் இல்லாத நிலையில் மே சொதப்பி ; ஜுனும் சொதப்பி , இறுதியாய் ஜுலையில் வண்டி நகரத் தொடங்கியிருந்தது – நமது இளவரசி மாடஸ்டி பிளைஸியின் பெயரைச் சொல்லி ! இதோ – இன்றைக்கு நமது 36-வது ஆண்டுமலரை லக்கி லூக்கின் yet another கலர் தொகுப்போடு வரவேற்கத் காத்திருக்கும் வேளையில் – இடைப்பட்ட 432 மாதங்களின் அனுபவங்கள் ‘வாம்மா மின்னல்ஸ்ஸ்ஸ்‘ என்ற வேகத்தில் குறுக்கும் நெடுக்குமாய்ப் பவனி வருகின்றன! இந்த வேளையில் எனது கேள்விகள் இவையே!

1. “கத்தி முனையில் மாடஸ்டி“ வெளியான அந்த நாட்களில் வாசிப்பைத் துவங்கியோர் யாரேனும் இக்கட உண்டோ ? I mean, நமது துவக்க (லயன்) இதழின் 1984 முதலாய் இந்தப் பயணத்தினில் தொற்றிக் கொண்டோர் யாரேனும் ?

2. “கத்தி முனையில் மாடஸ்டிஇதழைப் பின்நாட்களிலாவது வாங்கிடச் சாத்தியமானது எத்தினி பேருக்கு ? இன்னும் அந்த இதழைக் கைவசம் வைத்துள்ளீர்களா folks ?

3.உங்களுள் பெரும்பான்மை அப்புறமாய்ப் பயணங்களில் இணைந்து கொண்டோராகவே ருப்பது நிச்சயம் ! So உங்களின் முதல் வாசிப்பு எதுவோ - நம் குழுமத்தின் காமிச்சினில் ? நினைவிருப்பின் சொல்லுங்களளேன் புலீஜ் !

4. அதனை வைத்திருக்கும் நண்பர்கள் – ஒரு Selfie with Blaise ப்ளீஸ் ? எத்தனை வண்டி இதழ்கள் தொடர்ந்திட்டாலுமே அந்த "முதல் இதழ்" என்ற பெருமை மாறாதெனும் போது அதற்கொரு கெத்து உண்டு தானே ? And உங்கள் selfie-க்களை நமது அலுவலக செல் நம்பரான 98423 19755-க்கே அனுப்பிடலாம் ; அது இப்போது என்னிடமே இருந்திடும் !  

நிஜத்தைச் சொல்வதானால் ரொம்பவே சுமாரான கதை ; படு சுமாரான மொழிபெயர்ப்பு என்ற கூட்டணியோடு இன்றைக்கு இதே இதழ் மட்டும் வெளியாகியிருப்பின் சில பல டாக்டர்களைத் தாண்டி பாக்கிப் பேர் எல்லாமே பிறாண்டித் தள்ளியிருப்பது உறுதி! ஆனால் அன்றைக்கு The Gods were kind & so were you! இன்றைக்கு நிறைய தூரம் பயணம் பண்ணி விட்டோம் – வாழ்க்கையிலும், வாசிப்பிலும் ! ஆயிரம், ரெண்டாயிரம், மூவாயிரம் என்ற விலைகளையெல்லாம் பார்த்து விட்டோம் – ஆனால் அந்த இரண்டு ரூபாய்க்கான முதல் இதழைக் கையில் ஏந்திப் பார்க்கும் போது உள்ளம் லேசாய்த் துள்ளத் தவறுவதில்லை! 

இந்த 64 பக்கங்களை அந்தக் காலத்தில் மொழிபெயர்க்க நாலைந்து நாட்களோ, என்னவோ எடுத்துக் கொண்டது போலொரு ஞாபகம்; ஆனால் அச்சுக்கோர்த்து, ஆர்டிஸ்ட்கள் பணிமுடித்த பக்கங்களை அடுத்த ஒரு மாதத்திற்குக் குட்டி போட்ட குரங்காட்டம் சுமந்து கொண்டே திரிந்தது மட்டும் நன்றாகவே நினைவில் உள்ளது! இன்றைக்கு மேலோட்டமாய் வாசிக்கும் போது அந்நாட்களின் கூட்டெழுத்துத் தமிழ் fonts; அப்போதே “சங்கதி”; “பிதற்றல்கள்” போன்ற நயமான ட்ரேட்மார்க் வார்த்தைகள் மீதான காதல் கண்ணில் படுகிறது! ஆனால் பெருசாய் உறுத்தியது முதல் பக்கத்து அறிமுகம் சமாச்சாரம் தான் ! மாடஸ்டியும், கார்வினும் ஏதோ ஜேம்ஸ் பாண்ட் பாணியில் தேசத்து உளவு ஸ்தாபனத்தில் குப்பை கொட்டிய பிற்பாடு VRS வாங்கியவர்களைப் போல நான் அன்றைக்குத் தந்திருந்த பில்டப்பை இப்போது வாசிக்கும் போது ‘ஙே‘ என்றே முழிக்கத் தோன்றுகிறது !
தவிர புக் முழுசும் புரட்டினாலும் கூட ஒரேயொரு Post Box நம்ரைத் தாண்டி முகவரி என்றோ; தொடர்பு கொள்ளவொரு தொலைபேசி நம்பரோ கண்ணில் படவேயில்லை! அந்நாட்களது “டெல்லி டிரான்ஸிஸ்டர் ரேடியோ” விளம்பரங்களாய் நம்மையும் டுபாக்கூராகக் கருதிடாது, ஏஜெண்ட்கள் எப்படித் தான் பணம் அனுப்பி வைத்தார்களோ? என்று வியக்கிறேன் இப்போது !
And இக்கட எனது கேள்வி # 5 :

5. மாடஸ்டியை “இளவரசி” என்று அழைக்கச் செய்ததெல்லாம் பின்நாட்களது வாடிக்கை என்பது மட்டும் நினைவுள்ளது ! ஆனால் எந்த இதழிலிருந்து என்பதை மாடஸ்டி பேரவையோ ; தொழிலதிபப் பேரவையோ தெளிவுபடுத்திட முடியுமா ? Just curious !

பழங்கதைகள் போதும் என்பதால் – இதோ காத்திருக்கும் லக்கி ஆண்டுமலரின் பக்கமாய்ப் பார்வைகளைத் திருப்புவோமா ? இதோ அட்டைப்பட முதல் look !
And வழக்கம் போலவே hardcover-ல்; அட்டைப்பட நகாசு வேலைகளுடன் நமது லக்கி கௌபாய் மிளிரவுள்ளார் ! Maybe – just maybe இந்தச் செலவுகளைக் கழற்றி விட்டு – இந்த இதழை ரெகுலர் பைண்டிங்கோடே தயாரிக்கலாமா ? என்ற சபலம் ஒரு ஓரமாய் எட்டிப் பார்த்தது தான் ! ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே சகல லக்கி தொகுப்புகளையும் கம்பீரமான ஹார்கவர்களில் பார்த்து விட்டு – இப்போது சாதா லுக்கில் வெளியிட்டால் நிச்சயமாய் பதம் தவறிய பர்பியைப் போலவே இருக்குமென்றுபட்டது ! தவிரவும் ஆண்டுமலரின் கேக்கை 36 மெழுகுவர்த்திகளுடன் கொண்டாடவுள்ள சிங்கத்தைப் பார்த்த போது சிக்கனம் இதற்குச் சுகப்படாதுடோய் ! என்று புரிந்தது. So எப்போதும் போல இந்த இதழ் compromises ஏதுமின்றி உருவாகிடும் !

கதைகளைப் பொறுத்தவரையிலும் சமீபப் படைப்புகள் என்பதால், மேக்கிங்கில் ; கலரிங்கில் டாலடிக்கின்றன இரு சாகஸங்களும் ! ஏற்கனவே நாம் சந்தித்திருக்கும் அந்த ஜென்டில்மேன் கோமகனும், அவரது பட்லரும் “பொன் தேடிய பயணம்” கதை நெடுகப் பயணிப்பது ஒரு highlight! இதோ – அந்த ஆல்பத்திலிருந்து ஒரு உட்பக்க preview !
கதை # 2 – ஜுனியர் எடிட்டரின் மொழிபெயர்ப்போடு வந்திடவுள்ளது என்பதை முன்னமே நான் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்! 2013-ல் ஏதோ ஒரு வேகத்தில் புள்ளையாண்டர் எழுதியது கூடப் பெரிய சமாச்சாரமல்ல; ஆனால் அந்த நோட்டை இத்தனை காலம் தொலைக்காமல் நான் பத்திரப்படுத்தி வைத்திருந்தது தான் என்மட்டிற்கு big deal ! Of course – ஆங்காங்கே பட்டி-டின்கரிங் பார்க்கத் தான் செய்துள்ளேன் ; ஆனால் இயன்றமட்டிலும் எனது பேனாவின் நிழல் ஆக்ரமிக்காதிருக்க முயற்சி செய்திருக்கிறேன் ! So வாசிக்கும் போது – நான் நோண்டிய இடங்கள் எவை ? ஒரிஜினலானவை எவை ? என்பதை நிச்சயமாய்க் கண்டுபிடிக்கத் தவற மாட்டீர்கள் தான் ! And இதோ – அந்த ஆல்பத்திலிருந்தும் ஒரு preview !
Moving on இம்மாதத்து சந்தா D அட்டைப்படத்தின் முதல் பார்வையும் இதோ :
அட்டைப்படத்தில் லாரன்ஸ் குத்த ஒரு குமட்டைத் தேடிக் கொண்டிருக்க, மொட்டை டேவிட்டோ அபிநயம் பிடித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றினாலும் – இதுவொரு ஸ்பானிஷ் மொழியில் வெளியான இதே சாகஸத்தின் அட்டைப்படமே ! நமது அமெரிக்க ஓவியையின் கைவண்ணத்தில் உயர்தரத்தில் புத்துயிர் பெற்றுள்ளது ! And அந்த மாமூலான மினுமினுக்கும் effect சகிதம் அட்டைப்படம் கண்ணைப் பறிக்கக் காத்துள்ளது ! 

என்ன ஒரே வருத்தம் – நமது இந்தக் குறைந்த விலை, b&w கமர்ஷியல் இதழ்களின் தடமான சந்தா : D, கொரோனாவின் மகிமையில் எதிர்பார்த்த பலன்களை ஈட்டவில்லை ! மார்ச் முதலே கடைகள் அடைப்பு ; வியாபார மந்தம் ; ஆங்காங்கே லாக்டௌன்கள் என்ற சூழலில், டாலடிக்கும் அட்டைப்படங்களோடு 007-ம்; இளவரசியும்; டயபாலிக்கும் ஜொலித்திருந்தாலும் – வழக்கமான நமது வாசக வட்டத்தைத் தாண்டியுமே புதியவர்களை எட்டிப் பிடிக்க எண்ணிய நமக்கு, ஜெயம் நஹி ! இந்தாண்டின் பாக்கி இதழ்கள் எல்லாமே அறிவித்தபடியே வெளிவந்திடும் தான் – ஆனால் இந்தத் தடம் தொடர்வது சார்ந்த இறுதி முடிவு அக்டோபரிலேயே இருந்திடும் !

And at this point - எனது கேள்வி # 6 இதுவே :

6. வழக்கமான டெக்ஸ்வில்லர் சைஸில் b&w இதழ்களைப் படிப்பதற்கும், இந்தப் பெரிய சைஸில் படிப்பதற்கும் ஏதேனும் வித்தியாசங்களை உணர்கிறீர்களா ? Of course எழுத்துக்கள் சின்னதாக இருக்கும் சிக்கல்களைக் களைந்து விட்டாச்சு தான் ; So அது நீங்கலாய் இந்தப் பெரிய சைஸில் ஏதேனும் ப்ளஸ் or மைனஸ் உங்கள் பார்வையினில் ?

மீண்டும் கிங் கோப்ரா” நமது ஆதர்ஷ Fleetway காமிக்ஸ் புதையலின் அங்கமே ! ஒட்டுமொத்தமாய் அந்நாட்களது க்ளாஸிக் கதைகளைத் திரட்டி, உயர்தரத்தில் மீண்டும் வெளியிட்டு ப்ரிட்டனின் மார்க்கெட்டைத் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர் ! காத்திருக்கும் 2021-ல் ஒரு 128 பக்க மாயாவி பெரிய சைஸ் ஸ்பெஷல் ; ஸ்பைடர் ஸ்பெஷல் என்று ஏதேதோ திட்டமிடல்கள் தூள் பறத்திக் கொண்டுள்ளன ! மொத்தமாய் அந்நாட்களது ஆக்கங்களை விஸ்வரூபம் எடுக்கச் செய்யத் தயாராகி இருப்பதால் – தொடரும் ஆண்டுகளில் நமது 1980’s & `90s களின் அதிரடி ஹிட்களுக்குக் காரணமான பல்வேறு நாயகர்களையும் / கதைத் தொடர்களையும் ஒன்றன்பின் ஒன்றாய் ரசித்திட இயலும் போல்த் தெரிகிறது! இது சிலருக்குத் தேனாய் இனிக்கவும், சிலருக்குத் தேளாய் கொட்டவும் கூடும் என்பது புரிகிறது தான்! Anyways – “உறுதிபட போணியாகும்” என்ற உத்திரவாதத்தைத் தாங்கி வரும் நாயகர்களை மட்டும் 2021-ல் ‘டிக்‘ அடிக்க நினைத்துள்ளேன் – evergreen இரும்புக்கை மாயாவி அதனில் முதல்வராய் இருந்திடும் விதமாய் ! இதோ - மீண்டும் கிங் கோப்ராவின் உட்பக்க பிரிவியூ :
And எனது கேள்வி # 7 :

7. “பெருச்சாளிப் பட்டாளம்” நினைவுள்ளதா folks? நினைவில் இருந்து, அவர்கள் மீது நாட்டமும் இருக்கும் பட்சத்தில் – அவர்களது கதையினை பரிசீலிக்கலாம் என்பீர்களா? Black & White –ல் நமது தற்போதைய சந்தா:D சைஸில் அம்சமாய் fit ஆகிடக்கூடிய கதைகள் இவை! ரசனைகளிலுமே அம்சமாய் பொருந்திடும் பட்சத்தில் முயற்சிக்கலாம்  !

மேற்கண்ட 7 கேள்விகளுக்கான பதில்களோடு, இன்னொரு சகாயத்தையும் கோரிடுகிறேன் உங்களிடமிருந்து ! வேறொன்றுமில்லை – நமது lion-muthucomics.com ஆன்லைன் தளத்தில், ஒவ்வொரு இதழின் ஆர்டர் பக்கத்திலும் அந்த இதழின் உட்பக்க preview-க்களைப்  போட்டுக் கொண்டிருக்கிறோம். அந்தப் பக்கங்களில் கீழேயுள்ள பெட்டிகளுக்குள், அந்தந்தக் கதைகளைப்  பற்றி கதைச்சுருக்கம் போல ‘நச்‘சென்று நாலு வரிகளைச் சேர்க்க முடிந்தால், புதுசாய் browse செய்திடக் கூடிய வாசகர்களுக்கு / வாடிக்கையாளர்களுக்கு  வாங்கிட அதுவொரு உந்துகோலாகிடக் கூடுமென்று நினைத்தேன்! நம்மிடமோ – கிட்டத்தட்ட 300 புக்குகள் லிஸ்டாகிக் கிடக்க, அவை சகலத்துக்கும் நானே கதைச்சுருக்கம் எழுதுவதாயின் டப்பா டான்ஸ் ஆடிப் போகும் ! So ஆர்வமுள்ள நண்பர்கள் – தத்தமக்கு நினைவில் நின்றிடக்கூடிய ஆதர்ஷ இதழ்களின் Synopsis-களை எழுதி இங்கே பதிவு செய்தால், நம்மாட்கள் அப்படியே தூக்கிச் சாத்தி விடுவார்கள் வலைப்பக்கத்தில் ! கதையை முழுசுமாய் ஒப்பிக்காத வண்ணம், மேலோட்டமாய், ஆர்வத்தைத் தூண்டும் விதமாய் மட்டும் எழுதுதல் முக்கியம் என்பதை நினைவூட்டுகிறேன் folks ! அப்புறம் ஒரே ஆல்பத்துக்கே ஆள் மாற்றி ஆளாய் synopsis எழுதிடக் கூடிய விரயத்தைத் தவிர்க்கும் விதமாய் – எந்த இதழை review செய்திட விரும்புகிறீர்களோ – அதன் பெயரை மட்டும் இங்கு முதலில் பதிவிட்டு விட்டால் நலமென்பேன் !

Before I sign off - இதோ இன்றைய முன்பதிவுகளும் சேர்ந்தான updated இரத்தப் படல முன்பதிவு லிஸ்ட் :


NO NAME PLACE
1 Mr.K.V.GANESH CHENNAI
2 Mr.K.PARTHIBAN TRICHY
3 Mr.V.HARIHARAN COIMBATORE
4 Mr.S.SENTHIL KUMAR TIRUPUR
5 Mr.KRISHNA MOORTHY DHARAPURAM
6 Mr.ARUN KUMAR NAMAKKAL
7 Mr.ARUN KUMAR NAMAKKAL
8 Mr.M.BABU MOHAMED ALI SALEM
9 Mr.T.SOUNDRA PANDIAN RAJAPALAYAM
10 Mr.T.SOUNDRA PANDIAN RAJAPALAYAM
11 Mr.R.ANBALAGAN GOBICHETTIPALAYAM
12 Mr.R.ANBALAGAN GOBICHETTIPALAYAM
13 Mr.R.GANESH MADURAI
14 Mr.AUGUSTIN SAINTLYDOSS HOSUR
15 Mr.A.D.BASKARAN CHENNAI
16 Mr.SARAVANAN SUNDARAVEL NOIDA
17 Mr.SARAVANAN VADIVEL NAGAPATTINAM
18 Mr.MOHAMMED ARAFARTH MAYILADUTHURAI
19 Mr.SURESH NATARAJAN AUSTRALIA
20 Mr.SURESH NATARAJAN AUSTRALIA
21 Mr.SURESH NATARAJAN AUSTRALIA
22 Mr.SRINIVASARAGHAVAN RAMAN CHENNAI
23 Mr.PRABHUDASS PALANI CUDDALORE
24 Mr.MAHENDRAN PARAMASIVAM COIMBATORE
25 Mr.A.SATHISH KUMAR VELLORE
26 Mr.PRASANNA SRIDHAR COIMBATORE
27 Mr.S.S.KARTHIK BANGALORE
28 Mr.A.PALANIVEL TRICHY
29 Mr.A.PALANIVEL TRICHY
30 Mr.RAJ KUMAR SIVANANDI MADURAI
31 Mr.SATHAYA BALAJI BANGALORE
32 Mr.MA.SENTHIL COIMBATORE
33 Mr.MA.SENTHIL COIMBATORE
34 Mr.SANKAR CHELLAPPAN CHENNAI
35 Mr.V.RAJEEV COIMBATORE
36 Mr.SELVAM ANNAMALAI ERODE
37 Mr.S.ANANTHA SANKAR TIRUNELVELI
38 Mr.R.SARAVANAN ERODE
39 Dr.PRASANNA SRILANKA
40 Dr.PRASANNA SRILANKA
41 Dr.PRASANNA SRILANKA
42 Mr.A.PALANIVEL TRICHY
43 Mr.M.RAMKUMAR UNKNOWN
44 Mr.V.V.KRISHNA CHENNAI
45 Mr.N.SHANMUGAM TIRUCHENGODE
46 Mr.MOHAMED RAFIQ RAJA BANGALORE
47 Mr.MANI.MB CHENNAI
48 Mr.MANI.MB CHENNAI
49 Mr.MANI.MB CHENNAI
50 Mr.MANI.MB CHENNAI
51 Mr.MANI.MB CHENNAI
52 Mr.SUBRAMANIAN CHIDAMBARAM
53 Dr.A.K.K.RAJA KARUR
54 Dr.A.K.K.RAJA KARUR
55 Dr.A.K.K.RAJA KARUR
56 Mr.K.V.GANESH CHENNAI
57 Mr.YOGI SIVAKUMARAN SRILANKA
58 Mr.SELVAM ANNAMALAI ERODE
59 Mr.SELVAM ANNAMALAI ERODE
60 Mr.S.BALA SUBRAMANIYAN BANGALORE
61 Mr.V.R.SRINIVASA RAGHAVAN CHENNAI
62 Mr.V.R.SRINIVASA RAGHAVAN CHENNAI
63 Mr.V.R.SRINIVASA RAGHAVAN CHENNAI
64 Mr.SUNDARALINGAM MATHINATH SRILANKA
65 Mr.R.S.SHARMA SRILANKA
66 Mr.VIMALAKANDHAN THANUSHAN SRILANKA
67 Mr.VIMALAKANDHAN THANUSHAN SRILANKA
ஜெய் ஜேசன் மக்லேன் ! இலக்கின் முதல் கால்வாசித் தூரத்தை அடுத்த ஓரிரு நாட்களுக்குள் எட்டி விடுவீர்கள் என்று தோன்றுகிறது ! பார்க்கலாமே - துரிதம் ஒரு தொடர்கதையாகிறதா என்று ! 

மீண்டும் சந்திப்போம் folks! Bye for now… See you around !




339 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. வந்திட்டேன் சார் 🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  3. Lucky luke summa பட்டயை கிளப்புகிறார்....

    ReplyDelete
  4. நன்றி நன்றி நன்றி....:

    ReplyDelete
  5. பெருச்சாளி பட்டாளம்..


    #####


    சொல்ல தெரியலை சார்...:-(

    ReplyDelete
  6. பெரிய சைஸ்...

    நமது வழக்கமான டெக்ஸ்வில்லர் சைஸில் வந்தால் கொஞ்சம் குண்டு புக் போல தோற்றம் நருமே என்ற எண்ணம் அடிக்கடி வருவது உண்டு சார்..எழுத்துருக்களும இன்னும் தெளிஙாகவே தோன்றும்..

    இருப்பினும் எது உங்களுக்கு வசதியோ அப்படி...;-)

    ReplyDelete
  7. இரு இதழ்களின் அட்டைப்படமும் செம கலக்கலாக அமைந்து உள்ளது சார்..

    ReplyDelete
  8. நான் கத்தி முனையில் மாடஸ்டியிலேயே ஆரம்பித்துவிட்டேன் தான். ஆனாலும் புத்தகம் என்னிடம் இல்லாததால் பெருமையுடன் கூறவேண்டிய செய்தியை தலைகுனிந்தவாறு கூறுகிறேன். அதேசைசில் வவெளி வந்த கபாலர் கழகம் எனது கனவு இதழ்,. அதில் குடித்து விட்டு சலம்பும் பெனடிக்ட் or ஜேக்கப் என்னும்கேரக்டர் நான் அந்நாளில் மிகவும்ரசித்த கதாபாத்திரம். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  9. Replies
    1. உப்மா மாமி வந்திட்டாங்க

      Delete
    2. நாயத்து கெழம - நாளக்கி - காலைல நான்தான் உப்மா கிண்டி வைக்கணும்...மத்த பார்ட்டிங்க எல்லாம் ஒரு பத்து மணி வாக்ல எந்திரிப்பாங்க...

      Delete
    3. Too much... நாளைக்கு காலை டிபன் ராகி சேவை

      Delete
  10. கோமகன் மட்டுமின்றி நம்ம பிரியமான வெட்டியானும் பல நாட்களுக்குப் பிறகு தலைகாட்டுவதுசந்தோசம் கரூர்ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. எனக்கு முதலில் புரிய வில்லை. இந்த பதிவில் லார்கோ மற்றும் Undertaker பற்றி எதுவும் எடிட்டர் எழுதவில்லை யே என்று நினைத்தேன். பிறகு தான் படம் பார்த்து புரிந்துகொண்டேன்....

      Delete
  11. * ஆண்டுமலர் அட்டைப்படம் அட்டகாசம் சார்!! லக்கிலூக்கின் அட்டைப் படங்களைப் பார்த்த மாத்திரத்தில் 'குபுக்'கென்று ஒரு உற்சாகம் பிறப்பது இன்னும் குறையவேயில்லை!!

    * லக்கியின் இருகதைகளுமே ஆர்வத்தைக் கிளப்புகின்றன!! எனினும், ஜூ.எடியின் மொழியாக்கத்தில் இரண்டாவது கதையை முதலாவதாகப் படித்திடவே பேராவல் இப்போது!!

    * மாயாவி, இஸ்பைடரெல்லாம் மீண்டும் புதிய வடிவில் வரயிருப்பது மகிழ்ச்சி மாதிரிதான் தோனறது.. ஆனாலும் சரியாச் சொல்ல தெரியலை..

    *தற்போதைய சந்தா-D சைஸில் கருப்பு-வெள்ளை இதழ்களைப் படிப்பது வசதியாகவே இருக்கிறது!

    * 'மீண்டும் கிங் கோப்ரா' அட்டைப்படமும் அசத்தல்! அந்த அமெரிக்க அம்மணிக்கு எங்கள் சார்பாக வாழ்த்துத் தெரிவித்துவிடுங்கள் - தொடர்ந்து கலக்குகிறார்!

    * 'பெருச்சாளிப் பட்டாளம்' அன்றைய நாட்களில் மிகவும் பிடித்திருந்தது! இன்றைக்குப் பிடிக்குமா என்று வாசித்த பிறகே சொல்ல இயலும்!

    * என் முதல் லயன் காமிக்ஸ் - அதிகாரியின் 'தலை வாங்கிக் குரங்கு' என்பதாகவே ஞாபகம்! அதிகாரியின் மீதும், லயன் காமிக்ஸின் மீதும் அதீத ஈடுபாடு ஏற்பட்டதே இந்த இதழினால்தான்! அப்போதே நூற்றுக்கும் மேற்பட்ட முறை மறுவாசிப்புச் செய்திருக்கிறேன்!

    * 'கத்தி முனையில் மாடஸ்டி' என்னிடம் இல்லை!

    * மாடஸ்டியை 'இளவரசி' என்று அழைக்கத் தொடங்கிய இதழ் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது! ஆனால் 'இளவரசி' என்றழைக்கப்படும்போது மாடஸ்டிக்கு ஒரு கூடுதல் வசீகரம் கிடைத்துவிடுவதை பிஞ்சிலேயே ரசித்திருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. // லக்கிலூக்கின் அட்டைப் படங்களைப் பார்த்த மாத்திரத்தில் 'குபுக்'கென்று ஒரு உற்சாகம் பிறப்பது இன்னும் குறையவேயில்லை!! // என்றுமே குறையாது....

      Delete
  12. பெருச்சாளிப்பட்டாளம் விடுமுறையை உல்லாசமாய் கொண்டாடும் கலாட்டாக்களைமீண்டும்ரசிக்கும் வாய்ப்பினை வரவேற்க்கிறேன். என்றாலும் தற்போதைய கிராபிக் நாவலில்மூழ்கிய வாசகர்களுக்கு சற்றே நெருடல் இருந்தாலும், மாறுதல் என்பதற்க்காகநிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள். எனவேபெருச்சாலிப் பட்டாளத்தைமீண்டும் கொண்டுவரலாம்கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  13. 7. பெருச்சாளி பட்டாளம்.. ட்புள் ஓகே.. 😍😍😍

    ReplyDelete
  14. பல ஆண்டுகளாக ரசித்த சலூன் கலாட்டா முதல்முறை யாகஅட்டைப் படமாக அட்டகாசம். சூப்பர். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  15. லக்கி லூக் அட்டைப்படம் சூப்பர் பயங்கர டெம்ப்ட்டிங் ஆக இருக்கு ஆனால் நான் ஏற்கெனவே ஆங்கிலத்தில் படிச்சாச்சு. "The Painter" is my all time favourite, so is "The Green Horn". அந்த எஜமானாரும் பட்லரும் செய்யும் லூட்டி பயங்கரம். பாக்கலாம். லயனுக்கும் எனக்கும் ஒரே வயது என்று நினைக்கும் போது சிரிப்பா வருது.
    நான் முதன்முதலில் வாங்கியது தங்க கல்லறை பாகம் இரண்டு, அதிகாரியின் சாகசத்தில் எரிந்த கடித்தமா இல்ல பழி வாங்கும் பாவையா சரியாய் ஞாபகம் வரலை ஆனால் மரண நடை மற்றும் பபவ are my all time favourites. ட்யுராங்கோவின் சாகசங்களுக்கு synopsis எழுத விரும்புகிறேன்.
    நான் வாங்கும் காலம் தொட்டு மாடஸ்தி "இளவரசி" தான். No idea about earlier issues.

    ReplyDelete
    Replies
    1. //லயனுக்கும் எனக்கும் ஒரே வயது என்று நினைக்கும் போது சிரிப்பா வருது.//

      Feeling giddy !! Madamoiselle revealed her age voluntarily..

      In this blog wonders will never cease!!

      Delete
    2. Thank you, but i answered back Padhu sir when he asked about my age long back during the post on லக்கி லூக்'s பூம் பூம் படலம்.

      I'm no heroine to avoid the age question but at the same time, i like playing around.

      Delete
    3. செல்வம் அபிராமி சார். அனு ஏற்கனவே தனது வயதை கூறி இருந்தார். மற்றவர்களை போல இல்லை எனது சகோதரி.....

      Delete
    4. நானும் சமீபத்தில் நண்பர் ஒருவரின் தயவால் இந்த மாதம் வரும் இரண்டு லக்கி லூக் கதைகளையும் ஆங்கிலத்தில் படித்தேன். இரண்டுமே அருமை. என் ஆர்வம் என்னவென்றால் இதன் தமிழாக்கம் எப்படி இருக்கும் என்று தான்.

      முதல் முறையாக எடிட்டர் மற்றும் ஜூனியர் இருவரும் இணைந்து கலக்கும் இதழ். I'm waiting

      Delete
    5. @ Anu : This isn't "The Greenhorn" though !

      Delete
    6. குமார் சகோ உங்களுக்கு ஆயிரம் நன்றிகள் சமர்ப்பணம். செல்வம் சார் அந்த போஸ்டை படிக்கவில்லை என நினைக்கிறேன்.

      Delete
    7. @ Edi sir, I know its "The Klondike". I'm sorry i meant where "The Tenderfoot" returns. Got mixed up as both greenhorn and tenderfoot refer to inexperienced people. Please excuse.

      Delete
    8. சிலருக்கு வயதென்பது வெறும் நம்பர்தான் ...!

      Delete
    9. /// சிலருக்கு வயதென்பது வெறும் நம்பர்தான் ...!///

      இது இங்குள்ள எல்லோருக்குமே பொருந்தும். காமிக்ஸ் கடலில் மூழ்கி வர ஒரு ஜென்மம் போறவே போறாது.

      Delete
    10. சந்தடி சாக்கில் உங்கள் வயதைச் சொல்லி விட்டீர்களே சகோதரி?

      Delete
    11. கஷ்டம். சரவணன் சார் வயசை மறைத்தோ இல்லை சொல்லியோ தான் என்ன நடந்துவிடும்??? சால்ட்மா செய்ய இதை விட கம்மி வயசு இருக்கணுமா என்ன??? வர வர இந்த பசங்க சரியே இல்ல சிங்கள் டீக்கு ஒரு மீம் போட்டு பதினாறு வயசு பருவ சிட்டு லைக் செய்யணும்னு எதிர்பார்க்கிறாங்க.

      Delete
    12. ///I'm no heroine to avoid the age question but at the same time, i like playing around.///

      சூப்பர் சகோ!!

      Delete
    13. ///I'm no heroine to avoid the age question but at the same time, i like playing around.///

      ----அருமை சகோ!

      ///லயனுக்கும் எனக்கும் ஒரே வயது என்று நினைக்கும் போது சிரிப்பா வருது///---

      உங்க வயசை சபையில் சொல்வது ரியலி கிரேட் சகோ! உங்க மேல் இருக்கும் மதிப்பு இன்னும் கூடுது;

      Delete
  16. //
    1. “கத்தி முனையில் மாடஸ்டி“ வெளியான அந்த நாட்களில் வாசிப்பைத் துவங்கியோர் யாரேனும் இக்கட உண்டோ ? I mean, நமது துவக்க (லயன்) இதழின் 1984 முதலாய் இந்தப் பயணத்தினில் தொற்றிக் கொண்டோர் யாரேனும் ?
    //
    உள்ளேன் ஐயா!
    சென்னை புத்தகக் கண்காட்சியில் லயன் கம்பேக் ஸ்பெஷல் புத்தகமும், அதை கையில் வாங்கியவுடன் வடிவமைப்பு, தரம் என அனைத்தையும் பார்த்து வியந்ததுமே ஒரு மறக்க இயலாத்தருணம். அத்தருணத்தை மேலும் சிறப்பாக்கியது எடிட்டர் அவர்களை முதன்முதலில் அங்கே சந்தித்தது. அப்போது நான் கத்திமுனையில் மாடஸ்டி யிலிருந்து லயன் வாசகன் என்ற சொன்னபோது , எடிட்டர் அவர்கள் பெருமிதம் கலந்த சந்தோஷத்துடன் புன்னகைத்தது வாழ்வின் மறக்க இயலாத் தருணங்களின் ஒன்று!

    எவ்வளவு மன உளைச்சலில் இருந்தாலும் என் மனதுக்குகந்த லயன் காமிக்ஸ் கையில் எடுத்து விட்டால் சற்று நேரத்திற்காவது ஒரு பெரிய ஆசுவாசம் கிடைத்து விடும்.

    எடிட்டர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும், அவர் நலமுடன் வாழ பிரார்த்தனைகளும்!!!

    ReplyDelete
    Replies
    1. @M Harris

      அருமை நண்பரே! உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகள்!

      Delete
    2. அருமையான அனுபவம்! பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் நண்பரே!

      Delete
  17. “கத்தி முனையில் மாடஸ்டி“ படித்து இருக்கிறேன். ஆனால் இந்த புத்தகம் இப்போது என்னிடம் இல்லை. அடுத்த வருடம் இந்த கதையை கொடுக்க முடிந்தால் கொடுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்லுங்க பரணி👍

      Delete
    2. நானும் கேக்கேன்

      Delete
    3. ஆம் அதே அட்டைப்படத்தோடு அதே சைஸில் வந்தால் மிகவும் அருமையாக இருக்கும்...

      Delete
    4. இளவரசிக்கு என்னுடைய ஆதரவும்!

      Delete
    5. சந்தா D ல் வர நானும் வாக்களிக்கிறேன்!

      Delete
  18. /// 5. மாடஸ்டியை “இளவரசி” என்று அழைக்கச் செய்ததெல்லாம் பின்நாட்களது வாடிக்கை என்பது மட்டும் நினைவுள்ளது ! ஆனால் எந்த இதழிலிருந்து என்பதை மாடஸ்டி பேரவையோ ; தொழிலதிபப் பேரவையோ தெளிவுபடுத்திட முடியுமா ? Just curious ! ///

    இதைப் படித்தவுடன் ஞாபகம் வந்தது, 86 இல் - நான் +1 படித்தபோது - இளவரசியை கதைகளில் ரசித்து படித்துவிட்டு .. வேண்டாம் எனக்கு நானே குழிபறித்துக் கொள்ள விரும்பவில்லை..

    1986ல் வந்த இளவரசி கதையாகத்தான் கண்டிப்பாக இருக்க வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. //இளவரசியை கதைகளில் ரசித்து படித்துவிட்டு .. வேண்டாம் எனக்கு நானே குழிபறித்துக் கொள்ள விரும்பவில்லை///---

      காதல் மயக்கம்...
      அழகிய கண்கள் துடிக்கும். இது ஒரு காதல் மயக்கம்...!!

      நீங்கள் சொல்லாம மறைத்தாலும் இதை யூகிப்பது எளிது ஐயா!

      Delete
  19. 1). ஏற்கனவே முத்து காமிக்ஸ்
    வாசகர் கத்திமுனையில் மாடஸ்ட்டி
    வந்ததிலிருந்து லையன் காமிக்ஸ்
    வாசகரும்...

    2) லையன் வந்த மாதமே
    வாங்கினேன்.

    3) முத்துவின் இ.கை.மாயாவிதான்
    முதல் வாசிப்பு.

    பெருச்சாளிப்பட்டாளம் வரலாம்.

    ReplyDelete
  20. // “கத்தி முனையில் மாடஸ்டி“ வெளியான அந்த நாட்களில் வாசிப்பைத் துவங்கியோர் யாரேனும் இக்கட உண்டோ ? //

    “கத்தி முனையில் மாடஸ்டி“ வெளியான அந்த நாட்களில், பிறந்து 17 மாதங்களே ஆன பச்சைக் குழந்தை ஒன்று இங்கு உள்ளது!
    தற்போது அந்த குழந்தை
    மாடஸ்டி வாழ்க!
    மாடஸ்டி வாழ்க!
    என்றபடியே......

    ReplyDelete
  21. ஹைய்யா புதிய பதிவு......

    ReplyDelete
  22. எல்லோருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  23. 1. படிக்க வில்லை சார்
    2. பிறகு படித்ததாக ஞாபகம் இல்லை
    3. இரும்பு மனிதன்
    4. பாஸ்
    5. இளவரசி என்று எப்போது அழைக்க ஆரம்பித்தோம் என்று தெரியாது. ஆனால் EV சொன்னதை தான் இங்கே copy paste. அப்படி அழைக்க ஆரம்பித்ததும் ஒரு வசீகரம் வந்து ஒட்டி கொண்டது....
    6. எனக்கு டெக்ஸ் புக் size சந்தா D kku நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது...

    7. பெருச்சாளி பட்டாளம் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் சார்.


    தட்ஸ் ஆல் யுவர் ஹானர்.....

    தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை

    ReplyDelete
  24. யாழ்ப்பாத்தில் ராஜன் புக் சென்டர் என்ற கடையில் கத்திமுனையில் மாடஸ்டி வாங்கியஞாபகம் இன்னும் நெஞ்சைவிட்டகலா இனிய நினைவுகள் மட்டுமே உள்ளது எடிசார் நாட்டில் நடந்த அனர்த்தத்தில் புக்ஸ் எல்லாம் கோவிந்தா சார் இப புக்கிங்கில் 65 வதாக நானும் 66.67 ல் எனது நண்பரும் இருப்பதும் மகிழ்ச்சி இங்கும் சில நண்பர்களுக்கு புக்கிங் செய்ய சொல்லியிருக்கிறேன் இப வெற்றிக்கொடி நாட்டுவது உறுதி

    ReplyDelete
    Replies
    1. அருமை சார்... அருமை உங்களது காமிக்ஸ் காதல் கண்டு மகிழ்ந்தேன்..

      Delete
    2. காமிக்ஸ்காதல் வாழ்க
      காமிக்ஸ் காதலர்கள் வாழ்க

      Delete
    3. காமிக்ஸ் காதலர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

      Delete
    4. சர்மா சார் உங்கள் காமிக்ஸ் காதலுக்கு வணக்கங்கள்🙏🙏🙏

      Delete
  25. சிங்கத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. 1. ரெம்ப லேட்டாக தொற்றிக் கொண்டதால் கத்தி முனையில் மாடஸ்டி இருந்ததைப் பார்க்க வில்லை.

    2.கத்தி முனையிலேயே பார்க்காததால், மேலும் சுத்தி, சுத்திப் பார்க்க சுத்தமா எண்ணமில்லை.

    3.போன் இருக்கு..ஆசையிருக்கு...ஆனா புக் இல்லையே..!

    4.பின்னாடி வந்து பிக்கப் ஆனதால் முன்னாடி உள்ள வரலாறு யாமறியேன் பராபரமே.

    ReplyDelete
    Replies
    1. இங்கும் போன் இருக்கு... புக் இல்லையே!

      Delete
  27. வணக்கம் சார்
    லயனின் முதல் இதழ் மட்டுமல்ல
    முத்துவின் முதல் இதழிலிருந்தே
    நான் வாசகன் என்பதை பெருமையுடன்
    சொல்லிக்கொள்கிறேன்.
    முத்து வெளிவந்த புதிதில் தீபாவளிக்கு
    என்று ஞாபகம் ஓரு A5 சைஸ்
    இரும்புக்கைமாயாவி காலண்டர்
    அன்பளிப்பாக கிடைத்தது. அதை
    சுவற்றில் மாட்டி அழகு பார்த்த நினைவு
    என்றும் என்னை விட்டுப்போகாது.
    மாடஸ்டி முதல் அறிமுகமான
    கழுகுமலைக்கோட்டையில் இருந்தே
    இளவரசி என்ற பெயர் இருந்தது

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் கேவிஜி ஐயா

      Delete
    2. ஐயோ வயச கணக்கு போட்ருவாங்கண்ணா.....!!!😢😢😢

      Delete
    3. முத்து காமிக்ஸ் 1972ல் ரிலீஸ்!

      28+20=48வருடங்கள்

      அதை படிக்கும் போது ஒரு 10வயசு னா கூட 58!

      வணக்கங்கள் KVG ஐயா!🙏

      Delete
    4. இல்லை டெக்ஸ் 53தான் ஆவுது.
      ஆனா சொல்லுறது என்றும்13 வயசு
      மட்டும்தான்.
      உண்மையில் என் மூன்றாவது வயது முதலே என் அப்பா எனக்கு கதைபுத்தகம் படக்கதைகள் வாங்கி
      கொடுத்து வந்தார்.

      Delete
    5. அண்ணா என்னிடம் உள்ள Comics காலண்டர் நீங்கள் அன்புடன் அனுப்பிய XIII காலண்டர்தான்,அந்த காலண்டர் காதலுக்கு காரணம் இப்போதுதான் புரிகிறது

      Delete
  28. 6.பெரிய சைஸ் நல்லதொரு மாற்றமே.

    7.பெருச்சாளிப் பட்டாளம் பேரை மட்டும்தான் கேள்விப்பட்டிருக்கேன்.

    ReplyDelete
  29. // Maybe ஆகஸ்டில் 10-ம் தேதிவாக்கினில் அந்த மாதத்து இதழ்களை வெளியிட்ட கையோடு // ஆகஸ்டிலும் 10 ஆம் தேதியா ??? என்ன கொடுமை சார் இது !!!

    ReplyDelete
  30. அநாயசமான. நளினமான மாடஸ்டியின் போஸ், கத்தியெறிபவனின் உடல்மொழி என ஏகப்பட்ட லைக் 'குகளை முதல் அட்டைப்படம் அள்ளுகிறது.இதை வரைந்த ஓவியர் மாபெரும் கலாரசிகராகத்தான் இருப்பார்.

    ReplyDelete
  31. I have lion comics #1 without cover sir . I ll send selfie as soon as I find it from the trunk containing treasure of our old comics.

    ReplyDelete
  32. இரத்தப் படல விளம்பரத்தைப் பார்த்த போது டக் 'கென தோணியது....

    'தலைகீழாத்த்தான் குதிப்பேன்..'

    ReplyDelete
  33. // 7. “பெருச்சாளிப் பட்டாளம்” நினைவுள்ளதா folks? நினைவில் இருந்து, அவர்கள் மீது நாட்டமும் இருக்கும் பட்சத்தில் – அவர்களது கதையினை பரிசீலிக்கலாம் என்பீர்களா? //
    ஒன்றை முயற்சிப்போம்,அது நன்றாய் இருப்பின் தொடர்வோம்....

    ReplyDelete
  34. லக்கியின் அட்டைப்படம் வழக்கம்போல உற்சாகம் வழிகிறது.

    லாரன்ஸ் டேவிட் டை பார்த்ததும் வழக்கம்போல் கொட்டாவி வருகிறது.:-)

    ReplyDelete
  35. // 6. வழக்கமான டெக்ஸ்வில்லர் சைஸில் b&w இதழ்களைப் படிப்பதற்கும், இந்தப் பெரிய சைஸில் படிப்பதற்கும் ஏதேனும் வித்தியாசங்களை உணர்கிறீர்களா ? //
    எனக்கு வழக்கமான டெக்ஸ்வில்லர் சைஸ் இதழ்கள்தான் பிடித்துள்ளன,அதை கையில் ஏந்தி பிடிப்பது அலாதியான அனுபவம்....

    ReplyDelete
  36. ஆயிரம், ரெண்டாயிரம், மூவாயிரம் என்ற விலைகளையெல்லாம் பார்த்து விட்டோம் – ஆனால் அந்த இரண்டு ரூபாய்க்கான முதல் இதழைக் கையில் ஏந்திப் பார்க்கும் போது உள்ளம் லேசாய்த் துள்ளத் தவறுவதில்லை// There is no wonder sir. We may (pretend to) be advanced readers...but.........Old is gold.அந்நாட்களது க்ளாஸிக் கதைகளைத் திரட்டி, உயர்தரத்தில் மீண்டும் வெளியிட்டு ப்ரிட்டனின் மார்க்கெட்டைத் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர் ! காத்திருக்கும் 2021-ல் ஒரு 128 பக்க மாயாவி பெரிய சைஸ் ஸ்பெஷல் ; ஸ்பைடர் ஸ்பெஷல் என்று ஏதேதோ திட்டமிடல்கள் தூள் பறத்திக் கொண்டுள்ளன ! மொத்தமாய் அந்நாட்களது ஆக்கங்களை விஸ்வரூபம் எடுக்கச் செய்யத் தயாராகி இருப்பதால் – தொடரும் ஆண்டுகளில் நமது 1980’s & `90s களின் அதிரடி ஹிட்களுக்குக் காரணமான பல்வேறு நாயகர்களையும் / கதைத் தொடர்களையும் ஒன்றன்பின் ஒன்றாய் ரசித்திட இயலும் போல்த் தெரிகிறது// Ha ha ha ha.....I am thinking of ( theif )Vadivelu...pongadaa ennaala mudiyaladaa !

    ReplyDelete
  37. * ஆண்டுமலர் ஜொலிக்கும் போல,கதைகள் இரண்டும் சிறப்பாய் இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது...
    *மீண்டும் கிங் கோப்ரா களம் காண ஆவலுடன்...
    *முதல் இதழ் வாசிப்பாய் அமைந்தது எது என்பது சரியாக நினைவில்லை,அனேகமாக மனித எரிமலை என்ற இதழாக இருக்கலாம் என்று நினைக்கிறேன் (இரும்புக்கை நார்மன் சாகஸம் என்பதாக நினைவு) அதுவும் பாதிக் கதை மட்டுமே கிடைத்தது,அடுத்த இதழ் பாட்டில் பூதம் என்பதாக நினைவு...

    ReplyDelete
  38. // தொடரும் ஆண்டுகளில் நமது 1980’s & `90s களின் அதிரடி ஹிட்களுக்குக் காரணமான பல்வேறு நாயகர்களையும் / கதைத் தொடர்களையும் ஒன்றன்பின் ஒன்றாய் ரசித்திட இயலும் போல்த் தெரிகிறது! //
    முன்னரே சொன்னது போல் நீண்ட இடைவெளிக்குப் பிறகான சாகஸங்கள் என்பதால் சொல்லுமளவிற்கான சாதனையை விற்பனையிலும்,வாசிப்பிலும் இவர்கள் நிகழ்த்துவார்கள் என்றே தோன்றுகிறது...
    எனினும்,சாகஸங்கள் தொடர்ந்தால் சாதிப்பார்களா என்பதை சொல்லத் தெரியவில்லை....

    ReplyDelete
  39. கிங் கோப்ரா "" தீ கேம் சேஞ்சர் """
    பக்கத்திற்கு ஆறு கட்டம், பெரிய ஓவியங்கள், அட்டைப்படம் தெறிக்க விடுகிறது. அப்படியே ஸ்பைடர், ஆர்ச்சி, இரும்பு கை மாயாவி கதைகளையும் போட முயற்சிக்க வேண்டும்.

    ReplyDelete
  40. வணக்கம் சார்.

    லயனுடன் முதல் அறிமுகம் சரியாக நினைவில்லை. ஸ்பைடர் என்று மட்டும் தெரியும். கத்தி முனையில் மாடஸ்டி, வெகு காலம் கழித்துதான் கையில் கிடைத்தது. இப்போதும் இருக்கிறது. ஸ்கேன் அட்டை என்பதுதான் வருத்தம்.
    ஒரு சிறிய ஆராய்ச்சிக்கு பின்பு , லயன் வெளியீடு எண் 28, மாய எதிரியில் வந்த, நடுக்கடலில் அடிமைகள் கதையில், பக்கம் 34 இல் , "ஒரே சீராக நீச்சல் அடித்து கொண்டு செல் இளவரசி " என்று கார்வின் சொல்கிறார். இதற்கு முன் வந்த கதைகளில்,( மாடஸ்டி இன் இஸ்தான்புல், மரண கோட்டை) இளவரசி கண்ணுக்கு என்ற வார்த்தை தென் பட வில்லை.

    சந்தா D TEX size இல் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    சோடா. ஒரே மூச்சில் படித்து விட்டேன். Simply superb. முதல் காட்சியில் வரும் சண்டை, மீண்டு தொட்டியில் , சிகரெட் சுவைத்து , புகை விடும் மீன் , விறு விறு கிளைமாக்ஸ் என்று அருமை. அடிக்கடி John wick , stop , or my mom will shoot படங்களை நினைவு படுத்தியது., நன்றி

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்ன 3 புத்தகங்களும் என்னிடம் இருக்கும். நானும் பாக்கேன்

      Delete
  41. என்னன்னவோ கேள்விகள் கேட்டு இருக்கீங்க.. பிராமி மொழி எழுத்துகளாக இருப்பதால் என்னை மாதிரி சின்ன பையனுக்கு புரியவில்லை..
    ஆனாலும் லக்கி அட்டைபடம் சூப்பர்..

    ReplyDelete
  42. 1. And 2. Yes got the book from old paper shop
    3. Mayavi title nyabagam illai
    4. 1st round books miga silavae ennidam. Modesty illai.
    5. Teriyadhu but Ilavarasi miga porutham
    6. Big size perfect for such atories makes it feel a breezy read easy to handle cover doesnt bend good for a bit of rough handling, can read comfortably, glare adikkadhu :-)
    7. Peruchali can sure try


    Appuram freeya rendu badilgal..
    8. My fav is always Spider for his chikdish tantrums and ego
    10. Dragon nagaram Tex was my fav during those times

    Wishing a very happy birthday for our comics!

    ReplyDelete
  43. 1. ராம்நகர் பிரபா ஸ்டோர்ஸில் வாங்கியது நினைவிருக்கிறது. அப்போது தான் 5 வது முடித்த 6 வது போன காலம். நான் படித்த முதல் காமிக்ஸ். இரண்டாவது ராணி காமிக்ஸின் அழகியைத் தேடி.

    2. 2000 ஆமாவது வருடம் என்னோட மொத்த கலெக்சனையும், 150 60 நிமிட ராஜா கலெக்சனையும் இழந்து விட்டேன். அதற்குப் பிறகு கலெக்டர் பதவியை ராஜினாமா பண்ணிட்டேன். டெக்ஸ்வில்லர் கதைகளும், டைகர் கதைகளும் மட்டும் கலெக்ட் செய்தேன்.
    3. 1 வது பதில்
    4. 2 வது பதில்
    5. வயதான டாக்டர்கள் யாராஙது இதுக்குப் பதில் சொல்லுவாங்க.
    6. பெரிய சைஸ் புத்தகங்கள் பார்க்க நோஞ்சானாக ஒல்லியாக இருப்பது பெரிய குறை.
    7. முயற்சித்துப் பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. // 6. பெரிய சைஸ் புத்தகங்கள் பார்க்க நோஞ்சானாக ஒல்லியாக இருப்பது பெரிய குறை. //
      சரிதான் ஷெரீப்,நான் நினைத்ததும் இதுவே......

      Delete
    2. நானும் நினைத்தது இதுவே

      Delete
    3. // அதற்குப் பிறகு கலெக்டர் பதவியை ராஜினாமா பண்ணிட்டேன். // எனக்கு இதை படித்ததும் பக் என்று ஆகி விட்டது

      Delete
    4. அடேயப்பா நீங்களும் முதல் இதழை கடையில் வாங்கியவரா...!!!

      அருமை மஹி!!

      // அதற்குப் பிறகு கலெக்டர் பதவியை ராஜினாமா பண்ணிட்டேன். //--ஹா..ஹா...!!

      நானும் கொஞ்சம் இருந்ததை தொலைத்து ரிசைன் பண்ணிட்டேன்!

      இருப்பினும் லயன் கம்பேக்கிற்கு வந்தவைகளை வைத்து உள்ளோம்னு ஆறுதல் பட்டுக்கலாம்.
      கோல்டன் எராவுல இல்லீனாலும் பிளாட்டின எராவில் உள்ளோமே!

      Delete
    5. // கோல்டன் எராவுல இல்லீனாலும் பிளாட்டின எராவில் உள்ளோமே! // அவ்வளவு தான்

      Delete
  44. இரண்டாவது ராணி காமிக்ஸின் அழகியைத் தேடி..//
    பதின்ம வயசு பஞ்சாயத்து..

    ReplyDelete
    Replies
    1. நம்ம கிட்டயும் //அழகியைத் தேடி!///--இருக்கப்பா!

      அப்பவே எடிட்டிங் இல்லாமல் வெளியிட்டிருக்காங்க!

      Delete
  45. பெருச்சாளி பட்டாளம் அவசியம் வேண்டும் சார். அந்த ஜானர் கதையை கண்டு பல வருடங்களாச்சு

    ReplyDelete
  46. நான் முதன் முதலில் வாங்கிய காமிக்ஸ் சிலந்தி வலையில் மாயாவி..
    நம் வெளியீடு மைக்ரோ அலைவரிசை 848.. ஸ்டெல்லாவின் முதலாளி..

    ReplyDelete
  47. பெருச்சாளி பட்டாளத்திற்க்கு தாரளமாக வாய்ப்பு தந்து பார்க்கலாம்

    ReplyDelete
  48. 1) “கத்தி முனையில் மாடஸ்டி” இதழினை வாசித்துள்ளேன் சார். அருமை. இன்று அந்த இதழ் என்னிடமில்லை.
    2) எமது குழுமத்தில் “சைத்தான் சிறுவர்கள்” நான் வாசிப்புக்கு உட்படுத்திய முதல் இதழ் என்பதாக ஞாபகம்
    3) மாடஸ்டியை “இளவரசி” என்று இந்த இதழில் இருந்து கார்வின் அழைத்து தொடக்கி வைத்தார் என்பதே நிஜம்.
    4)ஆண்டு மலரில் லக்கியின் அட்டைபடம் + உட்பக்க பிறிவியூ அட்டகாசம்
    5) “மீண்டும் கிங்கோப்ரா” இன்அட்டைபட வில்லன் - ஜேம்ஸ் பாண்டின் “குவாண்டம் ஒப் சொலேஜ்” இனை ஞாபகப் படுத்துகிறது.
    6)”பெருச்சாளிப் பட்டாளம்” இனை தரிசிக்க கிட்டவில்லை. மீண்டும் வர பரீட்சிப்பத்ற்கு ஜே!

    ReplyDelete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
  50. 1. நான் காமிக்ஸ் வாசிக்க துவங்கியது 90களில் தான்

    2. இதுவரையிலும் கண்ணில் படாத கதை இது. அப்படியே பட்டாலும் அட்டையுடன் பார்ப்பது அபூர்வம். ரீபிரிண்ட் வந்தால் வாங்குவேன்

    3. முதலில் படித்த கதை ஒரு ஸ்பெஷல் வெளியீட்டில் வந்த லக்கிலூக் மற்றும் ஒரு ஆர்ச்சி கதை. பெயர் நினைவில்லை. நினைவில் நிற்பது காசில்லா கோடீஸ்வரன் மற்றும் கொலையுதிர் காலம் (மாண்ட்ரேக்)

    4. ஹீஹீஹீ

    5. ஹீஹீஹீ

    6. டெக்ஸ் வில்லர் சைஸில் புத்தகம் சற்றே புவ்டியாக தெரியும். இப்போதைய சைஸ் பார்க்க நன்றாக இருக்கிறது ஆனால் ஒல்லிபிச்சான்...

    ஆனாலும், பாக்கெட் சைஸுக்கு மட்டுமே எப்போதும் என்னுடைய ஓட்டு

    7. பெருச்சாளி வரலாம்

    ReplyDelete
  51. 1. ஹி.. ...ஹி....!
    2. ஹி.. ...ஹி....!
    3. நான் படித்த முதல் இதழே ஸ்பெஷல் இதழ் தான். ஆம், 1986-ஆம் ஆண்டு மே மாதம் வந்த கோடை மலர். அட்டகாசமான (அப்போ) ஆறு கதைகள். 320 பக்கங்களில் வந்த ஒரு குண்டு புக். பாக்கெட் சைஸ் வேறு. அட்டையில் ஸ்பைடர் ஹீ ஹீ ஹீ என்று விழிக்கும் டெரர் அட்டைப்படம் . குற்றசக்ரவர்த்தியின் "குற்ற தொழிற்சாலை" கதையும் அதில் அடக்கம்.
    4. ஹி.. ...ஹி....!
    5. ஹி.. ...ஹி....!
    6. சந்தா D சைசில் டெக்ஸ் ன் ஓர் மெகா கதையை வெளியிட்டால் என்ன டெக்ஸ் எல்லா சைஸையும் பார்த்தாச்சு இதை மட் டும் விட்டு வைப்பானேன்.
    7. பெ. பட்டாளம் ஒரு வாய்ப்பு தரலாம். காலியாக இருக்கும் சந்தா D ல போட்டு தாக்கிப்புடலாம் !.

    லக்கியின் பொன் தேடிய பயணம் ஒரிஜினல் அட்டையே சூப்பராக இருப்பதால் அதையே நாம் இந்த இதழுக்கு ராப்பர் ஆகியிருக்கலாம் எ. எ . க. பொன் தே. ப. கதை கோல்ட் ரஷ் சம்பந்தபட்டதென்பதால் ரொம்ப எதிர் பார்க்க வைக்கிறது. (இங்லீஷில் இந்த கதையை நான் இன்னும் படிக்கலீங்கோ ...!) கோல்ட் ரஷ் பற்றிய வரலாறு மிகவும் நீண்டது. கலிபோர்னியா ரஷ், அலாஸ்கா ரஷ், வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா ரஷ், ஜோர்ஜியா ரஷ், Klondike ரஷ் என எக்கச்சக்கம். நாம் படிக்கவிருக்கு பொ. தே. ப. கனடாவில் உள்ள Klondike ரஷ் பற்றி சொல்லயிருக்கிறது.

    MH MOHIDEEN

    ReplyDelete
    Replies
    1. Mh. mohideen ji, லயன் காமிக்ஸ் மட்டும் இல்லாமல் பிளாக் தொடங்கப்பட்டது முதலும் நீங்கள் ஒன்றாக பயணித்து வந்துள்ளீர்கள். 2011 எடியின் முதல் பதிவின் , முதல் comment நீங்கள் தான் என்று நினைக்கிறேன்.

      Delete
    2. நீங்கள் கொடுக்கும் விவரங்களுக்கு நான் ரசிகன் மொய்தீன் சார்.

      Delete
    3. @ S S
      அது நானில்லை ஜி...!

      @ K S
      ஏதோ ! நானறிஞ்சது!

      MH MOHIDEEN

      Delete
    4. அந்த கோடை மலர் கண்டு இந்த வண்டு பெற்ற தேனின்பம்தான் எவ்ளோ... வழவழப்பான கண்ணாடி அட்டை ஆறுகதன்னு ஆசிரியரின் பில்டப் விளம்பரமே தனி சுகம்...அடுத்த இதழ் குறித்து ஏங்க வைத்ததிகம்

      Delete
  52. வணக்கம் சார்.

    ஸ்பைடர், மாயாவி ஸ்பெஷல் இதழ்களை வரவேற்கிறேன்.

    மீண்டும் கிங் கோப்ரா... சமீபத்தில் பார்க்கும் பெஸ்ட் அட்டைப்படம்.

    1. 1984ம் வருடம் காமிக்ஸ் படிக்கும் வயதில்லை...

    2. எங்கள் பகுதியில் அரிய புத்தகமான "கத்திமுனையில் மாடஸ்டி" இதழ் வெளிவந்து 5 வருடம் கழித்தே 1989ம் வருடம் எனக்கு கிடைத்தது... முட்டாள்தனமாக நண்பனுக்கு விற்றுவிட்டேன். இன்று வரை அந்த இதழ் கிடைக்கவில்லை... ஆனாலும் (நண்பர் RT Murugan கொடுத்த அன்பளிப்புகளால்)
    லயன் 2ம் இதழான "மாடஸ்டி in இஸ்தான்புல்" என்னிடம் உள்ளது.

    3. 3ம் வகுப்பில் தமிழ் எழுத படிக்க கற்ற வருடமே காமிக்ஸ் பால் ஈர்ப்பு கொண்டேன்... 1986, 1987 களில் பால்யத்தில் நடுநிசி கள்வன், மீண்டும் ஹிட்லர், புரட்சித்தலைவன் ஆர்ச்சி, நீதிக்காவலன் ஸ்பைடர் போன்ற பாக்கெட் சைஸ் கதைகளை புரியாமல் அக்காவிடம் கேட்டு கேட்டு படித்த என் முதல் வாசிப்பு அனுபவங்கள். நீதிக்காவலன் ஸ்பைடர் என் தந்தை கொடுத்த எனக்கே எனக்கேவான முதல் லயன் புத்தகம்.

    5. பழிவாங்கும் புயல், மரண இயந்திரம் கதைகளில், கார்வின், 'இளவரசி' என்று அழைக்க ஆரம்பித்ததாக நினைவு. நிச்சயம் வசீகரமான வார்த்தையே.

    6. மஞ்சள் சட்ட அதிகாரி, கருப்பு வெள்ளை புத்தகங்களில், பக்கம் நிறையவே வெறுமையாக வீணாவதால் அவ்வளவாக பிடிக்கவில்லை.... ஆனால் Maxi சைஸில் கலக்குகிறார்... எனக்கு பிடித்துள்ளது, ஒரிஜினல் layout மிஸ்ஸிங் என்ற ஒரு குறையை தவிர...

    7. பெருச்சாளி பட்டாளம், கௌபாய் ஆதிக்கம் சற்றே தளர அவசியமே.

    ReplyDelete
    Replies
    1. ஸ்பைடர், மாயாவி கதைகளை மீண்டும் வெளியிட வேண்டும் என்பது எனது கோரிக்கையும் கூட...

      அதுவே அந்த அசத்தாலன பாக்கெட் சைஸில் வந்தால், ஹேப்பி ஹேப்பி

      Delete
    2. நான் பாக்காத ஒரே புத்தகம் மாடஸ்டி இன் இஸ்தான்புல்...வருகிறது விளம்பரங்கள்ல இந்த இஸ்தான்புல் பேரே ஈர்ப்பா இருந்தது

      Delete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. This comment has been removed by the author.

    ReplyDelete
  55. அதிகாரியின் விலையில்லா இதழ் இந்த மாதத்தில் கிடைக்குமா ஆசிரியர் அவர்களே

    ReplyDelete
  56. மகி ஜி. கலக்டர் பதவியை ராஜினாமா பண்ணிவிட்டேன். நிச்சயம்உங்கள் உயரம் மிகப் பெரிது. எங்களை நீங்கள்நெருங்கிவந்ததுகாமிக்ஸ் எனக்குக் கொடுத்த வரம். மற்றும் உங்கள் பெருந்தன்மை. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. நம்மை ஒருங்கிணைத்த காமிக்ஸிற்கும் எடிட்டருக்கும் நம் அன்பை தந்து விடலாம் நண்பரே. 🙏🙏🙏

      Delete
    2. // எங்களை நீங்கள்நெருங்கிவந்ததுகாமிக்ஸ் எனக்குக் கொடுத்த வரம். மற்றும் உங்கள் பெருந்தன்மை. // நூறு சதம் உண்மை.

      Delete
    3. // எங்களை நீங்கள்நெருங்கிவந்ததுகாமிக்ஸ் எனக்குக் கொடுத்த வரம். மற்றும் உங்கள் பெருந்தன்மை. //---சத்தியமான வார்த்தைகள்!

      மஹியின் நட்பு இல்லீனா நான் காமிக்ஸ்ல இருந்து ரிட்டையர் ஆகி 3, 4 வருடங்கள் ஆகி இருக்கும்!

      Delete
    4. காமிக்ஸ்க்கும் காமிக்ஸ் நண்பர்களுக்கும் வளர்ச்சிக்கு உதவும் நல்ல மனம் உள்ளவர்களில் மகி ஜி முதன்மையானவர்

      Delete
  57. long long ago, once upon a time. முத்து காமிக்ஸ் முதல் இதழ், இரும்புக்கை மாயாவி, விலை 90 பைசா என்று ஞாபகம், தொடங்கி கொள்ளைககார.மாயாவி வரை வந்த மூவேந்தர் கதைகளை வரிசையாக படித்த நினைவு உள்ளது. அதன் பிறகு not in touch. 1984, பிப்ரவரி முதல் கரூரில் வேலைக்கு வந்துவிட்டதால், no way to read. இடையிடையே திருவண்ணாமலையில் வீட்டிற்கு செல்லும் போது. லக்கி கதைகள், தங்கக் கல்லறை, இரத்தப்படலம் படித்த ஞாபகம் உள்ளது. After a long gap இத்தப்படம் கலெக்டர் எடிஷன் B/W. வந்தபிறகு, Still now காமிக்ஸ் தொடர்பு தொடர்கிறது.
    So, தங்கள் கேள்விகளுக்கு என்னிடம் பதில் நஹி சாப்.

    ReplyDelete
  58. முதல்முதலாக ஸ்பைடர் பாதாள போராட்டம் நண்பனின் உபயத்தில் படித்தேன். சொந்தமாக முதலில் வாங்கிய லயன் காமிக்ஸ் சதுரங்க வெறியன். பெருச்சாளி பட்டாளம் மீண்டும் வந்தால் கண்டிப்பாக வரவேற்போம்.36 வது ஆண்டு மலர் அட்டைப்படம் அட்டகாசம்.fleetway heroes மீண்டும் தலை காட்டுவார்கள் என்பது மகிழ்ச்சியான சேதி!

    ReplyDelete
    Replies
    1. பாதாள போராட்டம் நண்பனிடம் வாங்கிப் படித்தவன் நானுமே...சதுரங்க வெறியன் கோடை விடுமுறைல ஆத்தூர்ல அடடா

      Delete
  59. 1.அப்போது 3ம் வகுப்பு; கிராமத்தில் இருந்த பள்ளிக்கூடம் & அங்கே இருக்கும் தின்பண்டங்கள் விற்கும் கட்டில் கடையும் தான் உலகு! இப்படி ஒரு உலகு இருப்பதே தெரியாது சார்!

    2.ஓசியில் படிக்க முடிந்தது; வாங்க இயலவில்லை சார்!

    3.பிற்பாடு மாநகரில் இருந்த பள்ளிக்கு வந்தபோது படித்த முதல் லயன் காமிக்ஸ் புக்:-முதல் சிலபக்கங்கள் இல்லாமல் இருந்த கடத்தல் குமிழிகள்! முழுதும் படித்த முதல் புக் டெக்ஸின் பழிவாங்கும் புயல்!

    4.GPன் பதில்..!! போன் இருக்கு...புக் இல்லை!

    5.ஓவர் டூ இளவரசி பேரவை

    6.டெக்ஸ் இதழ் சைஸில் படிக்கும் போது பழைய நினைவுகள் வந்துபோகும். இந்த பெரிய சைசில் அது மிஸ்ஸிங்! ஆயினும் புதிய அனுபவமாக இருக்கு! சந்தா D இதே சைசில் வரட்டும்! வித்தியாசமான தோற்றம் பிடிச்சிருக்கு சார். முக்கியமாக அட்டை படங்கள் பெரிய சைசில் செம லுக் தருது! இதையே தொடருங்கள் சார்.

    7.வரட்டும்.. வரட்டும்!

    ReplyDelete
  60. “கத்தி முனையில் மாடஸ்டி“ வெளியான அந்த நாட்களில் வாசிப்பைத் துவங்கியோர் யாரேனும் இக்கட உண்டோ ?
    இதற்கு எனது பதில்.... 'அந்ந்த்த புத்க்க்கம் வந்ந்த்த போத்து நான்னு பிர்க்க்கவே இல்ல. மை மம்மிதான் அத்தோட யங் ஏஜில பட்ச்ச்சிது' ன்னு...தமிழ் தெரிந்தும் தெரியாதமாதிரி பேசி வயதை மறைக்க கதையளக்கும் நம்ம ஊர் நடிகைகளைப் போல வயதை மறைத்துபேச அவசியமில்லை என்பதால்.... '1972ல் முத்து காமிக்ஸ் ரயில் புறப்பட்டபோதே அதில் துண்டைவிரித்து இடம் பிடித்தவன் நான். பிறகு லயன்தான் என்னுடைய பயணத்தில் என்னுடன் இணைந்து கொண்டது!!
    நானும் சந்தோஷமாய் என் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டேன். பக்கத்தில் உட்கார்ந்த லயன் பிற்காலத்தில் என் நெஞ்சில் குடியேறுமென்று சத்தியமாய் அப்போது தெரியாது. யாரோ ஒரு எக்ஸ் காமிக்ஸ் வெளியிடுகிறார். ஒரு வருடமோ இரண்டு வருடமோ...இதன் ஆயுள் அவ்வளவுதான் என தப்பாக கணக்கு போட்டுவிட்டேன். என் அதிர்ஷ்டம் இன்றுவரை எங்கள் பயணம் தொடர்கிறது. என்பதுகளைப்போல அதே உற்சாகத்துடன் இனிமை ப்ளஸ் இளமையுடன்!!!'
    உங்களின் ஒரு கேள்விக்கு பதில் இது ஆசானே! கேள்விகள் தொடர்வதால் பதிலும் தொடரும்!

    ReplyDelete
    Replies
    1. இன்னொரு மூத்த வாசகர்!

      மகிழ்ச்சி ATR sir!

      தங்களது உடல் நலம் எப்படி உள்ளது? கால்வலி குறைந்து உள்ளதா?

      Delete
    2. உங்களை திரும்ப பிளாக் பக்கம் பார்ப்பது மகிழ்ச்சி சார். முதுகு வலி , கால் வலி குறைந்து உள்ளதா???

      Delete
    3. நன்றி டெக்ஸ் விஜய். நன்றி குமார்.
      முதுகு வலி பரவாயில்லை. இப்போதைக்கு நடப்பதுதான் கொஞ்சம் சிரமம்.அவ்வளவுதான்.
      அப்புறம்...நீங்கள் மூத்த வாசகர் என்று குறிப்பிடுவதை நானே முத்த வாசகர்ன்னு படிச்சிடறேன். என்னைப்போல யாராவது படிச்சிட்டு அடிக்க வந்திடுவாங்களோன்னு கொஞ்சம் உதறல் எடுப்பது நிஜம்.

      Delete
  61. முதல் முதலாக படித்தது?
    திக்குத் தெரியாத தீவில்

    பெரிய சைஸில் black & white பற்றி?
    OK

    பெருச்சாளி பட்டாளம்?
    படித்ததில்லை சார்

    ReplyDelete
  62. கத்தி முனையில் மாடஸ்டி வந்தது தெரியாது சார், லயனில் முதல் அறிமுகம் தானைத்தலைவன் ஸ்பைடர் தான்! முதன்முதலாக வாசித்தது டாக்டர் டக்கர் அதையும் ஒரு அண்ணனிடம் இரவலாக வாங்கிப் படித்தது! அதில் ஏற்பட்ட ஆர்வம் படிப்பதோடு நில்லாமல் சேகரிக்கவும் வைத்தது! லயனில் எல்லா இதழ்களும் கையிருப்பில் இருப்பது அது அளவிட முடியாத ஆனந்தமே! விரைவில் கத்தி முனையில் மாடஸ்டியோடு போட்டோ அனுப்புகிறேன் சார்! பெருச்சாளிப் பட்டாளம் வருதில் தவறில்லை வரலாம் இவர்கள் கூடவே அதிரடிப்படை, மின்னல் படை போன்ற நல்ல ராணுவக்கதைகள் இருந்தாலும் போடலாம் சார்! பெரிய சைஸை விட டெக்ஸ் வில்லர் சைஸ் தான் கருப்பு வெள்ளை கதைகளுக்கு உகந்ததாக இருக்கும்! பக்கமும் கொஞ்சம் புஷ்டியாக இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. // அதிரடிப்படை, மின்னல் படை போன்ற நல்ல ராணுவக்கதைகள் இருந்தாலும் போடலாம் சார்! பெரிய சைஸை விட டெக்ஸ் வில்லர் சைஸ் தான் கருப்பு வெள்ளை கதைகளுக்கு உகந்ததாக இருக்கும்! பக்கமும் கொஞ்சம் புஷ்டியாக இருக்கும்! //

      எல்லா பாய்ண்ட் களுக்கும் +1000000

      Delete
    2. Kumar Selam
      நன்றி நண்பரே

      Delete
    3. டாக்டர் டக்கர் கடைல வாங்கிக் குவித்திருக்கும் தண்ணி டேங்க்ல படித்தது நினைவில்

      Delete
  63. பெரும்பாலான பழைய புத்தகக் கடைகளே என்னுடைய புத்தகம் மற்றும் காமிக்ஸ் பசிக்கு விருந்தூட்டின.சல்லிசான விலையில் அறிவூட்டின.வயிற்றுக்கு உணவில்லாத போதும் செவியுணவை குறைவின்றி பார்த்துக் கொண்டன.
    போரடிக்கும்போது ,பொடி நடையாக கால் போன போக்கில் கிளம்பினால், எப்படியும் ஒன்றிரண்டு காமிக்ஸ் கையில் சிக்கிவிடும்.வெறும்கையோடு வீட்டுக்கு வந்த வரலாறே கிடையாது.புத்தம்புதூசா காமிக்ஸ் வாங்கும் எண்ணம் சுத்தமாக இல்லாத நாட்கள்..
    பழைய புத்தகக் கடைகள்தான் அட்சயப் பாத்திரம்போல் கொட்டுகிறதே.அவை அள்ள, அள்ளக் குறையா வரம் வாங்கியவை.ஆனால் அவையும் கால ஓட்டத்தின் நாலு கால் ஓட்டத்தில் தேய ஆரம்பித்தது காலக் கொடுமை.!.
    கொஞ்சம் கொஞ்சமாக கடைகள் காற்று வாங்க..ருசிகண்ட பூனை பசிக்கு ஆளானது.லயன் வருவது தெரியும் ஆனால் எங்கே கிடைக்கும் என்ற ஞானம் இல்லாததால் ,அறிவுப்பசிக்கு வேறு மார்க்கங்கள் தேட வேண்டிய சூழல்.

    ஒருநாள்....

    பஸ்ஸ்டாண்டில் பஸ்ஸுக்காக காத்திருந்த போது, பக்கத்திலிருந்த புத்தகக் கடையை பராக்கு பார்த்துக் கொண்டிருந்தேன்.கை தன்னிச்சையாக ஒரு புத்தகத்தை தூக்கியது.உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு தாக்கியது.அது ஒரு காமிக்ஸ்.எகிறி குதித்தேன்..மேற்கூரை இடித்தது..கண்களிரண்டும் படடவெனத் துடித்தது.
    அப்பாடா..இத்தனைக் காலம் தேடிய புதையலை எப்படியோ கண்டு கொண்ட திருப்தி எனக்கு.
    அது...

    டெக்ஸின் 'மந்திர மண்டலம் '
    இன்னொன்று..

    லக்கியின் 'கௌபாய் எக்ஸ்ப்ரஸ் '

    இதற்குமுன் எத்தனை வருடங்களுக்கு முன்பே காமிக்ஸ் பரிச்சயம் இருந்ததுதான்.உள்ளம் கவர்ந்த கதைகள் எத்தனையோ உள்ளதுதான்.ஆனால் அதையும் தாண்டி இது ஸ்பெஷலானது. காரணம் புத்தம் புதுசாக வாங்கியவை அவை.அன்றிலிருந்து அது தொடர்கதையானது.அதனாலேயே என் காமிக்ஸ் கணக்கை மந்திர மண்டலத்திருந்தே தொடங்குவேன்

    ReplyDelete
    Replies
    1. அட! நீங்களும் பழைய பேப்பர் கடை மேய்ந்தவரா? Join the club sir. நானும் எக்கச்சக்கமான பேப்பர் கடைகளில் மேய்ந்து, திருவல்லிக்கேணியில் எந்த கடையில், எந்த புக் கிடைக்கும் என்று ஒரு காலத்தில், Complete database வைத்திருந்தேன். கையில் ஜந்து ருபாய் சேர்ந்தால் போதும், கடைக்கு ஓடிவிடுவேன்.

      Delete
    2. நான் அந்த க்ளப்பில் ஆயுட்கால மெம்பர் மேடம்.நான் மட்டுமல்ல எல்லா காமிக்ஸ் நண்பர்களும் அப்படித்தான்.என்ன.. சிலர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறாங்க.சிலர் தொடர்ந்து எல்லைக்கு அப்பாலே இருக்கிறாங்க.

      Delete
  64. “கத்தி முனையில் மாடஸ்டி“ இதழைப் பின்நாட்களிலாவது வாங்கிடச் சாத்தியமானது எத்தினி பேருக்கு ? இன்னும் அந்த இதழைக் கைவசம் வைத்துள்ளீர்களா folks ?
    புத்தகம் வந்த சமயமே வாங்கிவிட்டேன். அந்த இதழ் இன்னும் கைவசம் உள்ளது.

    ReplyDelete
  65. அதனை வைத்திருக்கும் நண்பர்கள் – ஒரு Selfie with Blaise ப்ளீஸ் ?
    விட்டலாச்சார்யா படங்களில் மந்திரவாதியின் உயிர் ஏழு கடல் தாண்டி ஒரு மலை. மலைக்குள் ஏகப்பட்ட தடைகள். இதையெல்லாம் தாண்டி ஒரு காளியின் சிலை. அந்த சிலையின் கையில் ஒரு கூண்டு. அந்த கூண்டுக்குள் ஒரு கிளி. அந்தக் கிளியின் கழுத்தை அறுத்து வழியும் ரத்தத்தை அங்கிருக்கும் தடாகத்தில் இருக்கும் தாமரையின்..... படிக்கும்போதே தலை சுற்றுகிறதே...!எதற்கு இந்த கதையென்றால் அந்த மந்திரவாதியின் உயிர் இருக்கும் பாதுகாப்பு வளையங்களுக்குள் இருப்பது போன்ற பாதுகாப்புடன் வைக்கப்பட்டு தப்பிபிழைத்த காமிக்ஸ்களில் இந்த இதழும் ஒன்று.
    அதை இப்போது தேடி எடுக்க உடல் ஒத்துழைக்க மறுப்பதால் செல்ஃபிக்கு வழியில்லை சாரி சார்.

    ReplyDelete
  66. வழக்கமான டெக்ஸ்வில்லர் சைஸில் b&w இதழ்களைப் படிப்பதற்கும், இந்தப் பெரிய சைஸில் படிப்பதற்கும் ஏதேனும் வித்தியாசங்களை உணர்கிறீர்களா ?
    நிச்சயமாக சார். இப்போதுள்ள சைஸ் ஒரு பத்து பதினைந்து கதைகளாக பைண்ட் பண்ணி வைத்து பாதுகாக்க வசதியாக இருக்கும். பெரிய சைஸ் குண்டு புத்தகம். கிளாசிக் கதைகளுடன். நினைக்கவே சந்தோஷமாயுள்ளது. வழக்கமான டெக்ஸ் சைஸூக்கு மாறினால்....இந்த சந்தோஷமும், புத்தகங்களும் மிஸ்ஸாகும் வாய்ப்புகள் அதிகம்.தவிர இப்போது விற்பனையாகும் கடைகளிலும் பெரிய சைஸில் மின்னுகிறது. அளவை சுருக்கினால் புதியவர்களை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி கொஞ்சம் குறையக்கூடும்.

    ReplyDelete
  67. மாடஸ்டியை “இளவரசி” என்று அழைக்கச் செய்ததெல்லாம் பின்நாட்களது வாடிக்கை என்பது மட்டும் நினைவுள்ளது ! ஆனால் எந்த இதழிலிருந்து என்பதை மாடஸ்டி பேரவையோ ; தொழிலதிபப் பேரவையோ தெளிவுபடுத்திட முடியுமா ? Just curious !
    முத்து காமிக்ஸில் வந்த கழுகு மலைக்கோட்டையிலேயே வந்த ஞாபகம். ஆனால் பழைய புத்தகங்களை எடுத்து சரிபார்க்க உடல் ஒத்துழைக்க மறுப்பதால் மீண்டும் ஒரு சாரி.

    ReplyDelete
  68. “பெருச்சாளிப் பட்டாளம்” நினைவுள்ளதா folks? நினைவில் இருந்து, அவர்கள் மீது நாட்டமும் இருக்கும் பட்சத்தில் – அவர்களது கதையினை பரிசீலிக்கலாம் என்பீர்களா?
    இந்தக் கதைகள் வந்த சமயம் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால் பெரும்பாலான நண்பர்கள் விருப்பப்பட்டால் வெளியிடலாம்.

    ReplyDelete
  69. என் முதல் காமிக்ஸ் வாசிப்பு 'ஃபார்முலா திருடர்கள்' எனும் லாரன்ஸ் ,டேவிட் சாகசம் படித்து முடித்த அன்றே ஜானி நீரோவின் 'துருக்கியில் ஜானி நீரோ'வும் வாங்கி படித்தாயிற்று.ஆறாம் வகுப்பு கோடை விடுமுறையில் பவானிசாகர் அக்கா வீட்டில் இருக்கும்போது வாங்கியது.'கத்திமுனையில் மாடஸ்ட்டி' வந்த மாதமே வாங்கியாகி விட்டது.
    க.மு.மா புத்தகம் இல்லை.என் அக்கா பெண் புண்ணியத்தில் நிறைய புத்தகங்களை இழந்து விட்டேன்.
    ரீடைரக்ட் டு இளவரசி பேரவை ஆனாலும் மரண இயந்திரம் என நினைவு
    பெருச்சாளி பட்டாளம் போர்.வேண்டவே வேண்டாம்.

    ReplyDelete
  70. கண்ணான கண்ணே..! கிராஃபிக் கதை விமர்சனம் - ரசனைகளில் முதிர்ந்தோருக்கு..!


    நாளை முழு லாக்டவுன் என்றவுடன் மனதில் ஒரு ஆசை துளிர் விட்டது. காலை மணி 9 வரை துயில் கொள்ளும் ஆசைதான் அது ! வழக்கம் போல் காலை 5 மணிக்கே விழிப்பு வந்தப் பின்பும் விடாப்பிடியாக, மஞ்சத்தில் மல்லாந்து கிடந்தேன் !

    தூக்கம் மெதுமெதுவாக கண்களை அரவணைக்க ; கனவுகளும் ஆங்கே ஆலிங்கனம் செய்ய ஆரம்பித்திருக்க வேண்டும் ! விழித்தெழும் முன்பு கண்ட கனவு சிறு துளிதான் எனினும், துடிதுடித்து எழுந்தப் பதைபதைப்பு காலத்திற்கும் அழியாத நிலை கொண்டது !

    மனத்திரையில் விரிந்த காட்சியின் பரிதவிப்பில் இருந்து மீளவும் முடியாமல் ; துடிதுடித்துப் பதறித்தவிக்கும் இதயத்தை சமன்படுத்த இயலாமலும் மனம் அங்குமிங்கும் அல்லாட ஆரம்பித்தது !

    காலம்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும், ஒரே நடைமுறை வைத்திய பயனால், இரண்டைந்து நிமிடங்களிலேயே என் காதுகளில்....

    ReplyDelete
    Replies
    1. வலி என்றால் காதலின் வலி தான் பெரிது என்ற பாடலின் வரிகள் காதுகளில் மெதுவாக ரீங்காரம் இசைக்க ஆரம்பித்தது. துயரத்திற்கு சோகமே மருந்தென நினைத்து, கண்ணான கண்னே..! (ரசனைகளில் முதிர்ந்தோருக்கு..!) படிக்க ஆரம்பித்தேன். ஏற்கனவே மங்கலான பார்வை இன்னும் கொஞ்சம் மங்கலாகத் தெரிய தெரியவே படித்து முடித்தேன்.

      தன் சின்னஞ்சிறு வயதில் தன் தாயை பறிகொடுத்த சிறுமியின் கதை. எப்படிச் சொல்வது..?! இருந்தாலும் சொல்கிறேன் ...

      விவரம் அறியாத வயதில் ஏற்படும் இழப்புகள் வெறும் நினைவுப் பேழைகள் மட்டுமே ; எல்லாம் அறிந்த ; உணரத் தெரிந்த வயதில் ஏற்படும் இழப்புகள் வாழும் வரை ஆறாத ரணங்களே !!

      Delete
  71. சார் வாழ்க்கையின் வசந்தம் துவங்கியது அப்பத்தான் .... சிவானந்தா காலனி யில் எங்க அத்தை வீட்ல சில புத்தகங்கள் கிடக்க புரட்டிய ஞாபகத்தில் இருவண்ண டார்சான பார்த்ததா நினைவு ...கூடவே சில படக்கதைகளும் அதில் மாண்ட்ரேக்கும் கண்டிருக்கலாம் .
    1. நான் முதன் முதல் படித்தது கத்தி முனையில் மாடஸ்டி அல்ல .
    2 .இரண்டாங்கோப்பு படிக்கும் போது நீண்ட நாட்களாக கடைல தொங்கிய இரும்பு மனிதன் எப்படியோ கண்கள மயக்க வாங்கிப் படித்தேன் தாயார் உதவியால் .

    ReplyDelete
  72. 2.பிறிதோர் நாளில் எங்க சித்தப்பா மனைவி மருத்துவமனையில் தங்கியபோது மறுநாள் காலைல கத்தி முனையில் மாடஸ்டிய கணபதியில ஒரு கடைல வாங்கினேன் .அது படிக்க ஏன் பிடிக்கின்றது தோணல. பக்கத்து வீட்டுக்காரக்கா கேக்க கொடுத்தேன் . ஆனா அது திரும்பத் தரல .அதனாலயும் படிக்கவே இல்ல

    ReplyDelete
    Replies
    1. ஆனா நண்பர் சிபி அட்டையில் லாம் வழங்கிய பரிசு கைவசம் உள்ளது. கதை அருமை

      Delete
    2. 4.இளவரசி...படிக்க அப்ப பிடிக்கல...நினைவில்லை...மரணகோட்டைய இரசிச்ச நினைவும் உள்ளது

      Delete
    3. 6.இப்பத்தய சைசுக்கு அட்டகாசம் .டெக்ஸ் சைசுக்கு வேண்டாம்
      .அட்டைகள் மனச ஈர்க்கிறது பெரிய சைசுல.
      லாரன்ஸ் கோப்ரா வார்த்தைகள் கேட்டதும் மனம் துள்ளிக்குதித்து குதித்தது சந்தோசமாய் .
      நம்ம ம்ம் ஸ்பைடர் மாயாவிய விட்டதும் லண்டன் லண்டன் நம்மள பாத்து தூசி தட்டிட்டாவலோன்னு தோணுது . மாயாவியும் ஸ்பைடரும் லாரன்சும் மீண்டும் கோலோச்சனும் .ஆக்சன் ஸ்பெசல் படித்தது சமீபத்தில்தான் .அட்டகாசமான கதைகள் நண்பர்கள் ஈர்க்காதது துரதிர்ஷ்டமே . மாயாவி ஸ்பைடருக்காய் காத்திருப்பேன் வழமை போலவே

      Delete
    4. இப் இந்த அட்டை பட்டை...வங்கியின் அட்டைவள்ல இந்தட்டை இது வரை வந்த லக்கிலயே டாப்....ஜிகுணாவோட பாக்க ஆவல்.

      Delete
    5. நெப்போலியன் அட்டையும் ஒரு பக்கத்தில் பாக்கணும்னும் கூடுதல் ஆவலாய் காத்திருக்கிறேன் எல்லையில்லா...எல்லை மீறிய ஆவலாய்

      Delete
    6. லாரன்ச ...மொழி பெயர்ப்பு பக்கத்த பாக்கயிலே கடந்த கால சந்தோசம் சலம்புது சோகமாய்....இளம் பூங்காற்று

      Delete
    7. உபபதிவுக்கு சாயந்திரமே தயாராகிக்குறேன் கவிஞரே !

      Delete
    8. ///உபபதிவுக்கு சாயந்திரமே தயாராகிக்குறேன் கவிஞரே ///

      ஹா ஹா ஹா! :))))))

      Delete
    9. நான் உ.ப வந்த பின்னர் வந்து பின்னூட்டம் இடுகின்றேன். நண்பேன்டா ஸ்டீல். :-)

      Delete
  73. ஜிமெயில் ஐடி போடுங்க

    ReplyDelete
  74. வீடியோ மீட்டிங் போயிட்ருக்கு

    ReplyDelete
  75. லாரன்ஸ் அட்டைப்படம் அருமை...பெருச்சாளிகள் பட்டாளம் ஈர்ப்பில்லை அப்போது

    ReplyDelete
  76. பழைய பேப்பர் மற்றும் புத்தகக் கடைகள்....!
    ஆஹா...பால்யங்களில் காமிக்ஸ் பசிக்கு விருந்தளித்த புண்ணியஸ்தலங்கள் அல்லவா அவைகள். புத்தக கடைகளில் விற்பனைக்கு தொங்கும் அனைத்து புதிய காமிக்ஸ்களையும் வாங்க மனது துடித்தாலும் கையில் பணமிருக்காது. பெரியதாக ஒரு பெருமூச்சு விட்டு மெல்ல நகரத்தான் முடியும். ஆனால் அந்த ஏக்கத்தையெல்லாம் தீர்த்து வைத்தவையெல்லாம் பழைய பேப்பர், புத்தக கடைகள்தானே. கடலூர், பாண்டிச்சேரி, சிதம்பரம், கும்பகோணம், தஞ்சை, திருச்சி, சென்னை இப்படி நம்மூர் மட்டுமில்லாமல் விசாகப்பட்டினம், பெங்களூரு என்று போன இடங்களிலெல்லாம் வாங்கி சேர்த்த காமிக்ஸ்கள் ஏராளம். பெங்களூருவில் எம்.ஜி. ரோட்டருகேயும், முன்பு லியோ தியேட்டராக இருந்து இப்போது லிடோ மாலாக மாறிய அதே வரிசையில் அல்சூர் காவல் நிலையத்திற்கும் இடையே இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் 'ராஜன்' என்ற பெயரில் இயங்கிய கடையில்( பிளாட்பாரமும் அதனை ஒட்டிய கட்டிடத்திலும்) ஏராளமான தமிழ் காமிக்ஸ்கள், நாவல்கள் கிடைத்தன. ஒருமுறை ஊருக்கு புறப்பட்டு பஸ் ஏற வந்த சமயம் ஒரு கோணிப்பையே கொள்ளாத அளவு காமிக்ஸ்கள். முத்து, லயன்,திகில், பொன்னி,வாசு,இந்திரஜால், மாலைமதி, எம்.ஜி.ஆர்.இடம் பெற்ற காமிக்ஸ் என்று இன்னும் கேள்வியே பட்டிராத காமிக்ஸ்கள்! எல்லாமே புத்தம் புதியதாய்! அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள். தனித்தனியே விற்க முடியாது.எல்லாம் பாதி விலை. இன்னும் சில நாட்களில் கடையை மூடப்போகிறேன் என்று சொல்ல எனக்கோ நேரமும் இல்லை. அதனை எப்படி கொண்டு வருவது என்ற குழப்பம் வேறு. பின்பு வேறு வழியில்லாமல் புறப்பட்டு வந்துவிட்டேன். ஒருவாரம் கழித்து இதற்காகவே பெங்களூரு போய் பார்த்தால் அவர் சொன்னது போலவே கடையே இல்லை. இதை எண்ணி எண்ணி தூக்கம் தொலைத்த நாட்கள் எத்தனையோ. அதன் பிறகு பெங்களூரு போகும்போதெல்லாம் அந்த இடத்தை கடக்கும்போது மனது வலிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. தாலாட்டும் நினைவுகள் சார் ; எனது பால்ய சொர்க்கம் சென்னை மூர் மார்க்கெட்டின் பழைய புத்தகக் கடைகளே ! அவை ஒட்டு மொத்தமாய் தீக்கிரையாகிப் போனது சென்னைக்கு மாத்திரமான இழப்பல்ல !

      Delete


    2. ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
      காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
      தினம் காண்பது தான் ஏனோ....

      Delete
  77. பழைய பத்தகக்கடையில் உருண்டு புரண்டு புதையல் எடுக்காத காமிக்ஸ் காதலர்கள் யாரேனும் உண்டா
    அட்டையில்லாத ஒரு முத்துகாமிக்ஸ் கையில் கிடைத்தால்உலகக்கோப்பையை கையில் ஏந்தியகபில்தேவ் போன்ற உற்சாகத்துடன் பனியனுக்குள் புத்தகத்தைவாஞ்சையுடன் வைத்துக்கொண்டு வீடுவரும் அந்தசந்தோசம்இனி எப்போதும் கிடைக்காது. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே அந்த வயசும், மனசும் சார்ந்த விஷயங்கள் தானே சார் - தாண்டிப் போன பிற்பாடு மீட்டெடுப்பது நடவாக் காரியம் ஆச்சே !

      Delete
    2. உண்மைதான் ஸ்டீல்.பழம் புத்தகத்தை இப்ப பார்த்தாலும் கொண்டாட்டம்தான். ஒருசிலருக்கு அது திண்டாட்டமாக இருக்கத்தான் செய்கிறது.
      நான் படித்த பள்ளி,பாடம் கற்பித்த ஆசிரியர்கள்,பள்ளி வாயிலில் மிட்டாய் கடைபோட்டு உட்கார்ந்திருந்த ஒரு தாத்தா, பாட்டி, நீச்சல் பழகின ஆறு, நண்பர்களுடன் நேரம் போவதே தெரியாமல் கதையளந்த ரயிலடி, இருபது வயதில் உடம்பை முறுக்கேற்ற உடற்பயிற்சியும், கராத்தேவும் பழகிய இடம் இன்று பாழடைந்துபோய் கிடப்பது,நினைவு தெரிந்து நாங்கள் குடியிருந்த பேய் வீடு(இதற்கு தனி கதையே உள்ளது!) முக்கியமாக எனது பாட்டியின் மடியில் படுத்து கதைகேட்ட வீடு எல்லாமே மனதில் செதுக்கப்பட்டவை. அதற்கு அழிவேயில்லை. அதுபோல நமது மும்மூர்த்திகள். இவர்கள் உணர்வுகளுடன் கலந்தவர்கள். சாகும்வரை மறக்க இயலாது. வெறும் கதையாகப் பார்ப்பவர்களுக்கு மும்மூர்த்திகள் இன்றைக்கு கோமாளிகளாக காட்சியளிப்பார்கள். பன்னிரண்டு வயதிலிருந்து அவர்கள் மூவரும் கொடுத்த சந்தோஷத்தை உணர்ந்தவர்களால் அவர்களை வாழ்நாள் முழுக்க மறக்க இயலாது. இன்றும் ஏன் இப்போதுகூட என் பக்கத்தில் மும்மூர்த்திகளின் கதைகள்தான் இருக்கிறது. மனது பாரமாயிருக்கையில் அவர்களை கையிலெடுத்தால் மனது பின்நோக்கிப்போய் அந்த புத்தகம் வெளியான நாட்களில் நடந்த நிகழ்வுகள், அவர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சிகள் எல்லாம் மனதில் படமாக ஓடும். சற்றுநேரத்தில் இயல்பு நிலைக்கு மாறிவிடுவேன்.

      Delete
  78. லயனின் முதல் இரண்டு இதழ்களைப் படிக்காத துரதிர்ஷ்டசாலி நான்.
    நான் படித்த முதல் லயன் காமிக்ஸ் ""சதுரங்க வெறியன்"".
    நான் முதன்முதலில் வாடகைக்கு வாங்கிப் படித்த லயன் காமிக்ஸ் அதிகாரியின் ""பழி வாங்கும் பாவை"".
    நான் முதன் முதலில் சொந்தமாக வாங்கிய லயன் காமிக்ஸ் மஞ்சள் சட்டை மாவீரர் அசத்திய ""டிராகன் நகரம்"" தான்.

    பெருச்சாளிப் பட்டாளம் ஒன்றை வெளியிட்டு முயற்சி செய்து பார்க்கலாம்.

    சந்தா D அப்படியே தொடர வேண்டுகின்றேன்.பெரிய வடிவமும் சித்திரங்களும் கதையை மேலும் ரசிக்கத் தூண்டுகின்றன.

    ReplyDelete
  79. லயனின் முதல் இரண்டு இதழ்களையும் இணைத்து ஓரே குண்டு இதழாக கறுப்பு வெள்ளையில் வெளியிட வேண்டுகின்றேன்.இதற்கு நண்பர்கள் ஆதரவு தரவேண்டுகின்றேன்.

    ReplyDelete
  80. கைதியாய் டெக்ஸ் அட்டைப்படத்தில் உள்ளது கூட டெக்ஸ் கிடையாது அது டெக்ஸ் வேடத்தில் இருக்கும் ப்ராடியெஸ் :-) இங்கே தான் ஓவியரின் திறமையை பாராட்டனும் ஆமாம் அட்டைப்படத்தில் உள்ள டெக்ஸின் கண்களை பாருங்கள் குறுகுறுப்பாக தெரியும். :-) யாருகிட்ட :-)

    ReplyDelete
  81. 1. லயன் காமிக்ஸ் அறிமுகமானது 89களில்தான் சார். அப்போது மல்லாகம் என்ற சிறிய கிராமத்தில் இருந்தோம். 5 ஆம் வகுப்பில் இங்கே ஒரு பொதுப் பரீட்சை உண்டு. அதில் சித்தியடைந்தால் யாழ்ப்பாண நகரத்தில் உள்ள பெரிய பாடசாலைகளில் 6 ஆம் வகுப்பில் அனுமதி கிடைக்கும். எனவே என்னைப்போன்ற கிராமப் புற மாணவர்கள் கடும் பிரயத்தனத்தோடு படிப்போம். அவ்வளவு சிறு வயதில் அழுத்தத்திற்கிடையில் படிக்கும்போது எனது அம்மா, அந்த கிராமத்திலிருந்த ஒரு சிறிய லெண்டிங் புத்தகக் கடையில் லயன் காமிக்ஸ் படிக்க வாங்கிக் கொடுப்பார். எனது சிறுவயது நினைவுகளை ஒழுங்குபடுத்தி நினைவுகொள்ள காமிக்ஸ்களே உதவிடும்.

    2. பின்னர் யாழ்ப்பாண நகர மத்தியிலுள்ள யாழ். இந்துக்கல்லூரியில் அனுமதி கிடைத்து நகரப் பகுதிக்கு நகர்ந்தபோதுதான் முதன் முதலில் லயன் காமிக்ஸ் வாங்கிடும் வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலில் சொந்தமாக வாங்கியது இளவரசியின் 'கற்கால வேட்டை'தான்!

    கத்தி முனையில் மாடஸ்டி யை மட்டுமல்லாமல் எல்லா இதழ்களையுமே தேடிப்பிடித்து (மினி, ஜூனியர்) உட்பட - பழைய புத்தகங்களைகளையெல்லாம் துழாவி வாங்கி சேகரித்துவிட்டேன். 1995 இல் பெரியதொரு இடப்பெயர்வு வந்து, பொருட்களை எடுக்கவியலாது வெளியேறி பல மாதங்கள் கழித்து வந்தபோது சேகரிப்பிலிருந்தவற்றில் 90 வீதமானவை வீட்டுக் கூரை உடைந்து மழையில் நனைந்து நாசமாகிவிட்டன. அதன் பின்னர் அந்த அரிய கலெக்ஷனை மறுபடி எட்டிட முடியவில்லை.

    3. முதன் முதலில் வாசித்தது திகில் கோடை மலர் 87 - என்றுதான் நினைக்கிறேன்.

    4. -
    5. -

    6. பெரிய சைஸ் அழகுதான். ஆனால், 90களின் தமிழ்ப் படங்களில் பஞ்சாயத்தில் குந்தியிருப்பாரே ஒரு நடிகர் - அவர்போல நெடு நெடுவென வளர்ந்து, மெலிந்துபோயிருப்பது லேசாக உறுத்துகிறது. நமக்கு எப்பவுமே கொஞ்சம் புஷ்டியாக இருப்பதுதான் பிடிக்கிறது.

    7. பெருச்சாளிப்பட்டாளம்- ஓரளவு இரசிக்கக்கூடியவர்களே! ஆனால், தனிக்கதையொன்று முழு நீளத்துக்கு வருமா? இரண்டு மூன்று கதைகள் சேர்த்து ஒரு புத்தகமாக்கும் எண்ணமா சார்?

    ReplyDelete
  82. பழைய புத்தகக் கடைகள் ஒவ்வொரு ஞாயிறையும் சந்தோசமாக்கியஅந்தஞாபகங்களைபழைய நமதுபுத்தகங்களைபற்றியஉங்கள்பதிவுகள் கிளறும் போதான உணர்ச்சியில் இட்ட பதிவுங்கஸார்அது. எங்கள் பால்யங்களை சந்தோசமாக்கிய உங்களுக்கும் எங்கள்காமிக்ஸிற்க்கும் நன்றிகள்கோடி. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  83. This comment has been removed by the author.

    ReplyDelete
  84. கத்தி முனையில் மாடஸ்டி முதல் புத்தகத்தை குமாரபாளையம் நகரில் ஒரு சிறிய வாடிக்கையான பெட்டிக்கடையில் வாங்கியது பசுமையாக நினைவுள்ளது சார்.அந்த கடையில் நமது அத்தனை இதழ்களும் ரெகுலராக கிடைக்கும்.இப்போது அந்த கடை இருந்த இடத்தில் போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது.அந்த போலீஸ் ஸ்டேஷனை பார்க்கும்போதெல்லாம் 80 களின் ஆரம்ப காலத்தில் நான் வாங்கி குவித்த புத்தகங்கள் நினைவுக்கு வரும்.ஹூம்...அதெல்லாம் ஒரு காலம் சார் !!!

    ReplyDelete