நண்பர்களே,
வணக்கம். புது இதழ்களை உங்களிடம் ஒப்படைத்து விட்டாச்சு & அவை பெற்று வரும் முதல்நிலை விமர்சனங்கள் எல்லாமே பாசிட்டிவ் ரகம் எனும் போது, கொஞ்சமே கொஞ்சமாய் சாய்ந்து அமர சபலம் தலைதூக்குகிறது தான் ! ஆனால் போன ஆண்டின் இந்நேரத்துக்கு, புது அட்டவணை மாத்திரமன்றி, கதைகளுக்கான ஏற்பாடுகளின் பெரும் பகுதியும் நிறைவுற்றிருந்தன என்பதை நினைத்துப் பார்க்கும் போது - வயிற்றுக்குள் பயப்பட்டாம்பூச்சிகள் பட படக்கின்றன ! லாக்டௌன் அறிமுகம் செய்து வைத்துள்ள இந்தச் சோம்பலை ஒரு தொடர்கதையாகிட அனுமதிப்பின் அது கொரோனாவுக்குப் போட்டியான வைரசாகிடுமென்ற எண்ணம் தலைதூக்குவதால், its back to work right away ! ஆகஸ்டின் ஜேம்ஸ் பாண்டிற்கு பேனா பிடிக்கும் பணி கொஞ்ச நேரம் ; 2021 ஏப்ரல் to டிசம்பர் அட்டவணைக்கான இறுதி வடிவங்களுக்கென நிறைய நேரம் என நாட்கள் கரைந்து வருகின்றன ! அதன் மத்தியில் வழக்கமான ஞாயிறுப் பதிவுக்கென லேப்டாப்பைத் தூக்கிக் கொண்டு அமரும் போது தான் 36 என்ற நம்பர் மனதினில் நிழலாடுவதை உணர முடிகிறது ! Oh yes, சிங்கத்துடனான இந்தப் பயணத்தினை நாம் துவக்கி 36 ஆண்டுகள் ஓட்டமெடுத்து விட்டுள்ளன என்பதை நினைத்துப் பார்க்கும் போது ஏதேதோ சிந்தைகள் கலவையாய் தலைக்குள் ஓட்டமெடுக்கின்றன ! ஏகப்பட்ட ஆயுட்களுக்குப் போதுமான flashbacks-களை அவ்வப்போது போட்டுத் தாக்கியுள்ளேன் எனும் போது, மறுக்கா இன்னொரு வாடகை சைக்கிளை மிதிக்கப் போவதில்லை நான் ! On the contrary, ஆண்டவன் அருளும், ஆயுட்தேவனின் கருணையும் நம்மனைவருக்கும் பரிபூரணமாய் இருக்குமென்ற நம்பிக்கையில் இந்தப் பயணத்தினில் இன்னொரு 10 ஆண்டுகள் முன்னோக்கின் - நிலவரம் எவ்விதமிருக்குமென்று ஜாலியாக யூகிக்க முயற்சிப்பதே இந்தப் பதிவு !
2030 !!
சிலபல பேருக்கு சிரத்தின் சிகரத்தில் போற்றிப் பாதுகாத்து வரும் சமாச்சாரங்கள் சுத்தமாய்க் காணாது போயிருக்கும் ! தம் கட்டி பெல்ட்டுக்குள் திணிக்கும் நடுப்பகுதிகளின் விஸ்தீரணம் சிலபல சுற்றுக்கள் கூடியிருக்கும் ! 'அங்கிள் கிட்டே உட்காரும்மா...' என்று கேட்டு வந்த குரல்கள்...'தாத்தா கிட்டே உட்காருமா !' என்று மாறியிருக்கும் ! ஜூனியர் குப்பண்ணாக்களிலும், அஞ்சப்பர்களிலும் அஞ்சாத சிங்கங்களாய் லெக் பீஸ்களைக் கவ்வியோர், ரவுண்ட் பன்களை தோய்த்து விழுங்கவே ஒரு சாயாவையோ, காப்பியையோ தேடிட அவசியமாகிடலாம் !
ஆனால் -
ஒரு மஞ்சள்சட்டைக்காரர் தனது 82-வது வயதிலும் வன்மேற்கில் செய்து வரும் அதகளங்களை திறந்த வாய் மூடாது ரசித்துக் கொண்டிருப்போம் ! பயண வேகங்கள் மாறியிருப்பினும், வாசிப்பின் ரசனைகளில் மாற்றங்கள் குடிவந்திருப்பினும் - டெக்ஸ் வில்லர் எனும் (காமிக்ஸ்) யுகபுருஷரை பச்சைக் குழந்தைகளாய் ரசிக்கும் நம் பாணியில் சத்தியமாய் மாற்றம் இருந்திராது ! 'இளம் டெக்ஸ்' என்ற தடத்தில் இப்போதே மாதந்தோறும் காட்டு காட்டென்று காட்டி வரும் 'சின்னவர்' அன்றைக்கு ஒரு நூற்றுச் சொச்சம் சாகசங்களோடு இன்னமும் செமத்தியாய் மிரட்டிக் கொண்டிருப்பார் ! எடிட்டர் மௌரோ போசெல்லி அவர்கள் இளம் டெக்ஸுக்கென உருவகப்படுத்தியிருக்கும் கதை பாணி செம solid என்பதால், வரும் பொழுதுகளில் / ஆண்டுகளில் I can only visualise Young Tex growing from strength to strength ! ஆண்டுக்குப் 12 இளம் டெக்ஸ் ஆல்பங்களை, இத்தாலியில் வெளியாகும் அதே பாணியில் நாமும் அந்நேரத்துக்கெல்லாம் போட்டுத் தாக்கிக் கொண்டிருப்போம் எனும் போது - சில சம்முவங்கள் அவசரம் அவசரமாய்க் காசியப்பன் பாத்திரக் கடைகளைத் தேடி ஓட வேண்டி வரும் - 2 தனித்தனிப் பாயசச் சட்டிகள் வாங்கிடும் பொருட்டு ! And 10 years from now - நாம் 250 + டெக்ஸ் ஆல்பங்களை வெளியிட்டிருப்பினும், போனெல்லி ஆயிரத்துச் சொச்சத்தில் பயணிப்பதைக் கண்டு பெருமூச்சே விட்டுக் கொண்டிருப்போம் ! அப்போதுமே மாவீரனாரும், யுவக்கண்ணர்களும் - "மெபிஷ்டாய மெபிஷ்டாய !!' என்று கோஷமிட்டுக் கொண்டேயிருப்பர் & STV - "1997-லே நாலாவது மாசத்திலே, மூணாவது வாரத்திலே வந்த டெக்சின் 16 -வது பக்கத்திலே என்ன நடந்துச்சு தெரிமா--தெரிமா ?" என்று ரமணா பாணியில் போட்டுத் தாக்கிக் கொண்டிருப்பார் ! காலங்கள் மாறிடலாம் ; காட்சிகள் மாறிடலாம் ; கூன் விழுந்திடலாம் ; நரை பிடித்திடலாம் ; முகமூடிகள் வியாபித்து நிற்கும் இன்றைய வதனங்களில் சுருக்கங்களும், கண்ணாடிகளும் ஆக்ரமித்து நிற்கலாம் - ஆனால் ஆட்டுத்தாடி ஆத்ம நண்பனை நம்மவர் வாரும் போதெல்லாம் முகத்தில் விரிந்திடும் புன்னகைகளிலும், ஆக்ரோஷ எதிரியை இரவுக்கழுகார் பந்தாடும் போது நம் இரத்தங்கள் சூடேறுவதிலும், நிச்சயமாய் மாற்றங்கள் இராதென்பேன் ! பத்தாண்டுகளுக்குப் பின்னேயும், நமது அட்டவணையினைப் போடும் இடத்தில / திடத்தில் நானிருப்பின் - பிள்ளையார் சுழிக்குப் பின்பாய் நான் எழுதும் முதல் பெயர் "TEX WILLER" என்றே இருந்திடும் !
இத்தாலியின் ஆதர்ஷ நாயகன் ஒரு அசாத்திய விதிவிலக்காய் தக தகக்க - நமது வாசிப்பு பாணிகளில் சிறுகச் சிறுக ஒரு பெரும் மாற்றம் குடி கொண்டிருந்திருக்கும் ! இன்றைக்கோ ஆக்ஷன் நாயகர்கள் / அவர்களின் தொடர்கள் என்றே நம் வாசிப்புகள் பிரதானமாய்ப் பயணித்து வருகின்றன ! ஆனால் 2030 -ல் நிலவரத்தில் மாற்றம் நிச்சயம் இருந்திடும் என்பேன் - simply becos அன்றைக்கு இந்த ஆக்ஷன் ஆதர்ஷ நாயகர்களின் தொடர்களில் புதுக் கதைகள் ஏதும் எஞ்சியிராது ! அட, பத்தாண்டுகளுக்குப் பிந்தைய பொழுது வரைப் போவானேன் ? ; அடுத்த சில ஆண்டுகளிலேயே - No லார்கோ ; No ஷெல்டன் ; No தோர்கல் ; No டிரெண்ட் ; No SODA ; No ட்யுராங்கோ ; No கேப்டன் டைகர் என்பதே நிலவரம் எனும் போது -120 months from now - நிச்சயமாய் நம் வாசிப்பினில் ஒரு தவிர்க்க இயலா மாற்றம் நிகழ்ந்திருக்கும் ! Maybe ஜெரெமியா தொடரினை அன்றைக்கு நாம் அரவணைத்திருக்கலாம் ; அல்லது வருஷங்களாக கோரிக்கை வைத்து வரும் டாக்டர் AKK ராஜாவின் ஆதர்ஷ Valerian எதிர்காலத் தொடரை நாமும் பரிசீலித்து அந்த spaceway-ல் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கலாம் ! Incals ; Metabaron ; போன்ற எதிர்கால மெகா தொடர்கள் நம்மிடையே மெகா ஹிட்களாய் உலா வரலாம் ! ஆனால் இந்த "லாம்..லாம்" என்ற ஹேஷ்யங்களின்றி ஒற்றை விஷயத்தை என்னால் அடித்துச் சொல்ல முடியும் ! அது - 'கதையே நாயகன்' ; 'கட்டுப்பாடுகளிலா கதைத் தேடல்" என்ற template சகிதம் பயணித்து வரும் ஜம்போ காமிக்ஸ் அன்றைக்கொரு இன்றியமையா ஆட்டக்காரராகி இருக்கும் என்பதே !! நடப்பாண்டினில் (சீசன் # 3) ஜேம்ஸ் பேண்ட் ; தி Lone ரேஞ்சர் போன்ற கமர்ஷியல்ஸ் நீங்கலாய் நீங்கள் இன்னமும் வாசிக்கவுள்ள சில கதைகள் எனது "கதையே நாயகன்" கோஷத்துக்கு வலு சேர்த்திடக்கூடும் ! So 2030-ல் அட்டவணையில் நாயக ஆதிக்கம் குறைந்திருக்கும் ; ஏகப்பட்ட one-shots இருந்திடும் ; and ரகம் ரகமான ஜானர்களிலான கதைகளை திகட்டல்களின்றி தலீவர் முதல் தொண்டர் வரையிலும் ரசிப்பதை பார்த்திடுவோம் !
காலத்தின் கட்டாயமாய் ரசனைகளில் நிகழக்கூடிய மாற்றங்கள் நாம் தேர்வு செய்திடும் கதைகளிலும் பிரதிபலிக்காது போகாது ! Manga என்றால் இன்றைக்கு ஊறுகாய் போடும் காய் மட்டுமே நமக்கு நினைவுக்கு வந்தாலும், maybe 10 years down the line - ஜப்பானின் இந்தப் பிரியமான படைப்புகளைப் பரிசீலிப்பதிலும் நாம் முனைப்பு காட்டுவோமோ - என்னவோ ! Manga இன்றைக்கு கால்பதித்திரா காமிக்ஸ் தேசமே கிடையாது என்ற நிலையில், காத்திருக்கும் காலங்களில் அவற்றின் முக்கியத்துவங்களை ignore செய்வது நமது நஷ்டமாகவே அமைத்திடலாம் ! பிரான்சில் ஏகப்பட்ட ஆசிய ஓவியர்களை குடியமர்த்தி, அவர்களைக் கொண்டு Manga உருவாக்குவதெல்லாமே இன்றைக்கே சர்வ சாதாரணமான நிகழ்வுகளெனும் போது - பிரான்க்கோ-பெல்ஜிய மங்கா உரிமைகளை பெற்று வெளியிடுவதென்பது 2030-ல் ஒரு நடைமுறையாகி இருக்கக்கூடும் ! So "குண்டூ" புக் இல்லையே என்ற ஏக்கக்குரல்களே அன்றைக்கு கேட்டிடாது - ஆளாளுக்கு ஆயிரம், இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட புக்குகளை எந்த பீரோவுக்குள் போட்டு வைப்பது ? என்ற குழப்பத்தில் தவித்திடும் போது !
புக்குகளோ டிஜிட்டல் பரிணாம வளர்ச்சிகளின் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கும் - நகலெடுக்க இயலா கோப்புகளோடு ! And இன்றைக்கே நடைமுறை கண்டுவிட்ட Augumented Reality மேலும் பல படிகள் முன்னேறியிருக்க - அந்த டமால், டுமீல், பணால் ; இச் ; பச்சக் effects எல்லாமே பக்கங்களை புரட்டும் போதே நோகாது நம் கண்முன்னே விரிந்திடும் ! அன்றைய பொழுதினில் சிலபல டாக்டர்களும், தொழிலதிபர்களும் மட்டுமே அன்றி, மாடஸ்டி ; AXA ; Lady S போன்றோரின் ஜாகஜங்களுக்கு கோஷமிட நம்மிடையே ஒரு போட்டியே நடந்திடக்கூடும் ! அட்டைப்படங்களிலோ 3D எபெக்ட் என்பதெல்லாம் குழந்தைப்புள்ளை விஷயமாகியிருக்கும் எனும் போது ஒரு ஹாலிவுட் திரைப்பட அனுபவத்தின் சிறு பகுதியினை நம்ம பொம்மை புக்குகளே தரும் ஆற்றல் பெற்றிருக்கும் ! And 'டவுன்ஹால் முனையிலிருந்து பாத்துப்புட்டேன் மக்கா ; காந்திபுரத்திலேர்ந்தும் பார்த்துப்புட்டேன்லே ; ஆயுசிலே டாப்பான ராப்பர் இதுவே தான் !' என்று ஒவ்வொரு நான்கு வாரங்களுக்கும் இரும்புக்குயில்கள் கூவும் நடைமுறைகளும் தொடர்ந்திடும் !
கட்சி மாநாட்டுக் கூட்டம் அளவிற்கு என்றில்லாவிடினும், ஒரு தெருமுனைப் பிரச்சாரக்கூட்டம் அளவிற்காவது இள ரத்தம் அன்றைய நமது வாசக வட்டத்தினுள் குடியேறியிருக்கும் ! So 'ஞிய்ய..முய்ய..புய்யா..' என்ற லெமூரிய பாஷையின் பாணியிலான மொழிபெயர்ப்புகளை கொஞ்சம் கொஞ்சமாய் ஏறக்கட்டி விட்டு - சுலபமான ; பேச்சு வழக்கிலான, சுலபப் புரிதலுக்கான எழுத்துக்களை உட்புகுத்தியிருப்போம் ! Of course - அன்றைக்குமே "நீயா புரிஞ்சு உருப்படியா எழுத வாய்ப்பே இல்லே ராஜா !!' என்ற MB பகடிகளுக்குப் பஞ்சமேயிராது தான் ! அதென்ன MB என்கிறீர்களா ? மாற்றங்கள் சகலத்திலும் இருந்திடும் எனும் போது, இன்னும் ஒரு லெவல் முன்னேறி, Facebook - Mindbook ஆகியிருக்கக்கூடும் அல்லவா - மனதில் நினைப்பதே பதிவுகளாய் அலையடிக்கும் விதமாய் ! என்ன ஒரே சிக்கல் - சும்மானாச்சும் லைக்ஸ் போடவும் அதனில் வழியிராது ; "மெய்யாலுமே நல்லாத்தான் பண்ணியிருக்கானுங்கோ" என்று உள்ளுக்குள் grudging ஆகத் தோன்றினாலுமே - "புச்ச்' என்று விமர்சனத்தின் அடையாளமாய் உதடுகளைப் பிதுக்குவதும் சாத்தியப்படாது !
Oh yes, பயண வேகங்கள் பன்மடங்கு கூடியிருக்கும் எனும் போது 100 கி.மீ. தொலைவிலிருக்கும் ஊர்களுக்கு கூட மூணு நாள் கழித்துப் பட்டுவாடா செய்திடும் கூரியர்கள் வழக்கொழிந்தே போயிருக்கும் ! Amazon Fulfilled போலொரு மையமான கேந்திரத்துக்கு புக் அனுப்பிட, அன்றைக்கே பெற்றுக்கொள்ளும் drone சர்வீஸ் அமலுக்கு வந்திருக்கும் ! So ஆத்தாவுக்குக் கூழ் ஊத்தும் அல்வாக்களுமே காணாது போயிருக்க, மொட்டை மாடியிலே நின்றபடிக்கே சொட்டைத் தலைகளில் டப்பிக்கள் மொத்தென்று land ஆகின்றனவா ? என்பதில் போட்டியே அரங்கேறும் ! Of course, பக்கத்து வீட்டு மொட்டை மாடிகளில் சாட்டலைட் போன்களில் கதைக்க ஆஜராகியிருக்கக்கூடிய சில பல யுவதிகள் நம் "இயைஞர்களுக்கு" ஒரு கூடுதல் motivation ஆக இருக்கக்கூடும் தான் !
பத்தாண்டுகளுக்குப் பின்னே அவரவரது பெயர்களைக் கேட்டாலே - "ஆங்...' என்று மண்டையைச் சொறியும் நிலையிலும் - ஞாபக மறதிக்கார XIII-ன் பதிமூணாவது மறுபதிப்பு வெளியாகாவிட்டால் அன்னம், தண்ணீர் உள்ளாற இறங்காதென்ற கொடியோடு ஆங்காங்கே ஆர்வலர்கள் கூட்டம், கூட்டமாய்க் கிளம்பிடும் கேளிக்கைகளுக்கும் பஞ்சமிராது ! "இரத்தப் படலம் - The Collector's Thirteen" என்ற பெயரில் முன்பதிவுகள் நிச்சயம் தட தடத்திடும் - 13 பிரதிகளே கொண்டதொரு மறுபதிப்புத் திட்டமிடலோடு ! அன்றைக்கெல்லாம் print on demand என்பது சுலப சாத்தியமாகியிருக்க, நாலு ஆமைவடையும், ஒரு டீயும் உள்ளே தள்ளி விட்டு வரும் நேரத்துக்குள், ஆபீசில் புக்கை பிரிண்ட் போட்டு கையில் ஒப்படைத்திருக்கும் வசதிகள் பிறந்திருக்கும் !
அன்றைய புத்தக விழா சந்திப்புகள் ரொம்பவே சூதானமாய்த் திட்டமிடப்பட்ட வேண்டிவரும் ! ஊரிலிருந்து கிளம்பும் நொடிகளிலேயே தலைக்குச் சாயமும், தொப்பைக்கு டி-ஷர்ட்டும், வதனங்களில் யூத் கெட்டப்பும் தொற்றிக் கொண்டாலும், இல்லத்தரசிகள் செலபோன்களில் இணைத்து அனுப்பிடும் டிராக்கர்கள் ஈரோட்டில் கால்பதித்த மறு நொடியே செயல்படத் துவங்கிவிடும் எனும் போது - "அங்கே என்ன ஆட்டம் வேண்டிக்கிடக்கு ?" என்ற எச்சரிக்கை ஒலிகள் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கக்கூடும் ! மூணாவது பரோட்டாவை சால்னாவில் குளிப்பாட்டும் போதே - "யோவ்வ்வ்வ்வ்வ் ; கண்ட்ரோல்லல் " என்ற எதிரொலிகளுக்கு வாய்ப்புகள் பிரகாசம் ! ஜூனியர் குப்பண்ணா மெனுவில் பால் சாதத்தை தேட நேரிடலாம் அந்த bifocals-களை மாட்டிக் கொண்டே !
எது எப்படியிருப்பினும் வாரயிறுதிகளில் இங்கே அடிக்கும் கும்மிகள் குறையா உற்சாகங்களோடே தொடர்ந்திடும் ! இன்னொரு 120 மாதங்களது பரிச்சயமானது, நட்பின் சங்கிலிகளை சங்கர் சிமெண்டால் மேலும் பிணைத்திருக்க - அன்றைக்கு எல்லாமே high tech digital blog ஆகியிருக்கும் நிலையினில் - அத்தினி பேருமே வீடியோ conference-ல் இங்கே லைவாகப் பார்த்துக் கொண்டே, பதிவிட்டபடிக்கே லூட்டியடிக்க இயலும் ! என்ன ஒரே கஷ்டம் - வாரா வாரம் மேக்கப்களுக்கு ஆகிடும் செலவுகள் புக் வாங்கும் காசுக்கு இணையானதாக இருந்திடக்கூடும் ! அது மட்டுமன்றி, தலீவர் பாட்டுக்கு பதுங்கு குழிக்குள்ளாற இருந்தபடிக்கே பட்டாப்பட்டியோடு ஆஜராவதெல்லாம் அப்போது வேலைக்கு ஆகாது ! ஆனால் ஒற்றை விஷயத்துக்கு நாமெல்லாம் அன்றைக்கு தயாராகிக் கொண்டே தீர வேண்டும் ; அது புயலை விட வீரியமானதாய் இருந்திடும் ; சுனாமியை விட ஆரவாரமாய் இருந்திடும் ; எதிர்ப்படும் சகலரையும் சுருட்டி வாரிக் கொண்டு போயிட்டே இருக்கும் ; அதனைத் தாங்கி நிற்கும் ஆற்றல் அன்றைக்கொரு கட்டாயமாகியிருக்கும் ! அப்படிப்பட்டதொரு திகிலூட்டும் சமாச்சாரம் என்னவென்கிறீர்களா ? லைவாக ; வீடியோவில் நம்ம ஸ்டீலின் கவிதைகளைக் கேட்டு ; உணர்ந்து ; ரசித்து ; பாராட்டிச் ; சீராட்டும் அனுபவங்களை கொஞ்சமாய் யோசித்துப் பாருங்களேன் - எனது முந்தைய வரியின் பொருள் புரியும் !!
அந்த சிந்தனையில் நீங்கள் லயித்திருக்கும் தருணத்தில் நான் விடை பெறுகிறேன் guys - காலையில் 2021-ன் அட்டவணையின் final touches பணிகளுக்குள் புகுந்திட ! நீங்கள் புது இதழ்களின் அலசல்களைத் தொடர்ந்திட்டால் இந்த ஞாயிறு ஓட்டமெடுக்கும் சுவாரஸ்யமாய் ! Bye all...see you around !!
P.S : நமது lioncomics.in தளத்தில் கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு வசதிகள் இப்போது வழக்கம் போல் உள்ளன ! So அங்கே ஆர்டர் செய்து பழகியுள்ள நண்பர்கள் எப்போதும் போலவே ஆர்டர் செய்திடலாம் ! http://lioncomics.in/latest-releases/745-july-2020-pack.html
1st
ReplyDelete2nd :-)
ReplyDeleteXIII னோட 4 வது சுற்று வந்துகொண்டிருக்கலாம்... இதையும் சேத்துக்கங்க சார்...
ReplyDelete//ஜூனியர் குப்பண்ணாக்களிலும், அஞ்சப்பர்களிலும் அஞ்சாத சிங்கங்களாய் லெக் பீஸ்களைக் கவ்வியோர், ரவுண்ட் பன்களை தோய்த்து விழுங்கவே ஒரு சாயாவையோ, காப்பியையோ தேடிட அவசியமாகிடலாம் ! //
ReplyDeleteஎடிட்டர் சார் செம forward thinking :-)
5th
ReplyDelete10kulla
ReplyDeleteபொட்டி வந்துடுத்து..லாரன்ஸ்,வைக்கின்றது ஆரம்பிக்க வேண்டியது தான்
ReplyDelete3rd.
ReplyDelete//No லார்கோ ; No ஷெல்டன் ; No தோர்கல் ; No டிரெண்ட் ; No SODA ; No ட்யுராங்கோ ; No கேப்டன் டைகர் //
ReplyDeleteஎடிட்டர் சார்
இதில் கேப்டன் டைகரை தூக்கிவிடுங்கள். ஏனென்றால் சென்ற டிசம்பர் மாதம் ஒரு புதுக்கூட்டணியுடன் (JOANN SFAR and CHRISTOPHE BLAIN) Amertume Apache என்ற ஆல்பம் வந்திருக்கிறது. இந்தக்கூட்டணி தொடரும் என்றே நினைக்கிறேன்.
தெரியும் சார் ; 2 பாக கதையாய்த் திட்டமிட்டுள்ளனர் ! Part 2 இந்த ஆண்டினில் இருக்கும் !
Deleteஅப்புறமாய்த் தொடர்வது பற்றி இப்போதைக்கு முடிவெடுக்கவில்லை !
11th
ReplyDeleteவணக்கம் எங்கள் ஆசானே
ReplyDeleteவணக்கம் சத்யா !
Deleteஇந்த வைரஸ் பிரச்சனை வந்த பின்னர் எனக்கு எமது வெளியீடுகள் வருவதில்லை. ஏதும் பிரச்சனையா சார் ?
ReplyDeleteசார்...மார்ச் இறுதி முதலே நிறுத்தப்பட்டுள்ள விமானப் போக்குவரத்து மீளும் போதே ஏர் மெயில் சேவைகளும் மீண்டிடும் சார் ! இன்னமும் அயல்நாட்டுச் சேவைகளை இந்திய தபால் துறை துவங்கிடவில்லை !
Deleteஆஜர் சார்.
ReplyDeleteவலேரியன் வர பத்தாண்டுகள் வரை காத்திருக்க வேணுமா? தோர்கல் போல இதுவும் வெற்றி பெற நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. சீக்கிரமாகவே போட்டுத் தாக்கவும். இங்கே வராமல் முகநூலிலும் வாட்ஸ்அப் குரூப்புகளிலும் சை பை ஆதரவு குரல்களை பார்க்க முடிகிறது.
ReplyDeleteசை பை என்னவென்று புரியவில்லை முதலில் அப்பறம் தான் தெரிந்தது sci fi என்று. சை.பை க்கு +1
Delete+1 for sci-fi
Deleteஅந்த தாத்தாவின் போட்டோவில் பூனையின் முகச்சாயலும் வயதானவர்களின் பிரிய உணவு ரவுண்ட் பன் என்று சொல்வதிலும் ஏதேனும் குறியீடு இருக்கான்னு தெர்லயே 🤔
ReplyDeleteதாத்தா அவ்ளோ ஒயரமா தெர்லயே...
Deleteஏன்.. அந்த தாத்தாவுக்கென்ன குறைச்சலாம்?!! கர்னல் கிளிப்டன் மாதிரி - ஷோக்கா இருக்காரே?!!
Deleteஎனக்கென்னமோ அது தலீவரின் அடுத்தவருட ஃபோட்டோ மாதிரியே இருக்கு!!
பயமாய் இருக்கிறது...இதெல்லாம் விரைவில் நடந்து விடுவோமா என்று பயமாய் இருக்கிறது...
ReplyDeleteஆனால் ஆவலாகவும் இருக்கிறது...:-)
நேற்று இதழ்களை ரசிப்பதிலியே நேரம் கழிந்து விட்டது...இன்று ஞாயிறு ஞாயிறுக்கே விடுமுறையில் வரிசையாக இதழ்களை படித்து முடிக்க திட்டம்..
ReplyDeleteரெடி...Go...:-)
ஹைய்யா புதிய பதிவு......
ReplyDeleteலக்கி லுக்கின் அட்டை படமும் சித்திரங்களும் அதன் வண்ணங்களும் நன்றாக உள்ளது
ReplyDeleteநானும் வந்துட்டேன்
ReplyDeleteசூப்பர்!
ReplyDeleteHi..
ReplyDeleteகற்பனையில கூட கார்ட்டூனுக்கு இடமில்லையே.. ஹூம்..!!
ReplyDeleteநான் இதை இப்போது தான் கவனித்தேன். என்ன கொடுமை சார் இது?????
Deleteஅதெல்லாமே கேக்குறவங்களுக்கு உடனடி பிரிண்ட் ஆன்ஹேண்ட் டிமாண்ட் ப்பா...
Delete"ஆசைகள் ஓராயிரம்" என்றொரு புக் போட நேர்ந்தால் :
Delete"ஆசை # 1 - ஊரெல்லாம் கார்டூனைக் கொண்டாடணும் "
என்றே எழுதுவேன் ! ஆனால் அப்படியொரு புக் போடும் வாய்ப்பை கண்ணில் கட்ட மறுக்கிறார்களே !!
வந்துட்டோம்ல ....
ReplyDelete2030 ல் கண்டிப்பாக பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்தான் சார்! என்னதான் வீடியோ கான்பரன்ஸ், யூடியூப்ல வீடியோ போட்டாலும் இது போல பதிவும் வாசகர்கள் கருத்தை பதிவு (கமெண்ட்) செய்வதில் உள்ள சுகமே தனிதான்
ReplyDeleteஉண்மை
Deleteஅட..எனக்கும் பொறுமையெல்லாம் போய் விடுகிறது சார் - YouTube வீடியோக்களை போடுவதற்குள் !! இது லொங்கு லொங்கென்று டைப்படிக்கச் செய்தாலும், திருப்தியாக உள்ளது !
Deleteமீண்டும் கிங் கோப்ரா..!:
ReplyDeleteஒரு பழைய ஹாலிவுட் ஆக்ஷன் படத்தை பார்த்த உணர்வு...
தொடக்கத்தில் சில பக்கங்களில் ஓய்வெடுக்கும் லாரன்ஸ் & டேவிட் கூட்டணி முதலில் எடுத்த ஓய்வுக்கும் சேர்த்து கதையின் இறுதிவரை ஓடிக் கொண்டே இருக்கின்றனர்...
படிக்கற நமக்கே கொஞ்சம் டயர்ட் ஆயிடுது போங்க...
கோப்ராவால் நம் கூட்டணியினர் எதிர்கொள்ளும் ஆபத்துகள் கொஞ்சநஞ்சமல்ல,இருந்தாலும் நம்மாளுங்க அசகாய சூரர்கள் ஆச்சே அடிவாங்கி,சுண்ணாம்பாகி,மண்டை காய்ஞ்சி,நொந்து நூடுல்ஸாகி எல்லாவற்றையும் முறியடிச்சிடறாங்கப்பா...
C.I.D கூட்டணிக்கு வரும் ஆபத்துகளை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் சில இடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தினாலும்,ஆங்காங்கே கிச்சுகிச்சும் மூட்டுகின்றன...
எது எப்படியோ நம்ம லாரன்ஸ் & டேவிட் கூட்டணியை பார்த்து ரொம்ப நாளாச்சி அதுக்காகவே வாசிக்கலாம்...
லாஜிக் கண்ணாடியை கழட்டி வைத்துவிட்டால் ஜாலியா பொழுதை போக்க நல்ல இதழ்...
ஓவியங்கள் ரொம்ப சுமார் இரகம்,அதிலும் நம்ம டேவிட் சில இடங்களில் "மொட்டை முருகன் மாதிரியே" போஸ் கொடுக்கிறார்....
எமது மதிப்பெண்கள்-8/10.
நல்லா தாராளமா மதிப்பெண் கொடுத்து இருக்கீங்களே. எனக்கு இப்பவே படிக்கணும் என்று தோணுதே
Delete// நல்லா தாராளமா மதிப்பெண் கொடுத்து இருக்கீங்களே. //
Deleteஅப்படியா சொல்றிங்க குமார்....!!!
8/10 டிஸ்டிங்ஷன் அல்லவா???
DeleteGood one.
Delete//எனக்கு இப்பவே படிக்கணும் என்று தோணுதே//
Delete//அப்படியா சொல்றிங்க குமார்....!!!//
//அப்படியா சொல்றிங்க குமார்....!!!//
Deleteஏன் சார் ஏன். நீங்களே இப்படி சொல்லுறீங்க.🙄😔
/// காலங்கள் மாறிடலாம் ; காட்சிகள் மாறிடலாம் ; கூன் விழுந்திடலாம் ; நரை பிடித்திடலாம் ; முகமூடிகள் வியாபித்து நிற்கும் இன்றைய வதனங்களில் சுருக்கங்களும், கண்ணாடிகளும் ஆக்ரமித்து நிற்கலாம் - ஆனால்... /
ReplyDelete...ஆனால் தல சார்பாக கொடி பிடிக்கும் அணிகளிலும், தளபதி சார்பாக கோஷமிடும் அணிகளிலும், இரண்டு அணிகளையும் புரியாமல் பார்த்தபடி, நமக்கு புதிதாக ஒரு கதை புக்கு கிடைத்தால் சரிதான் என்று அமைதியாக இருக்கும் அணிகளிலும் மாற்றங்கள் ஏதும் இருக்காதுதான்.
// நமக்கு புதிதாக ஒரு கதை புக்கு கிடைத்தால் சரிதான் என்று அமைதியாக இருக்கும் அணிகளிலும் மாற்றங்கள் ஏதும் இருக்காதுதான் // நம்ம அணி பத்து சார்
Deleteசரியா சொன்னீங்கோ
Deleteஹி..ஹி..ஹி..!
Delete31 over 36.... முப்பத்தி ஆறிலேயே பல கனரக மாற்றங்கள். எடிட்டர் சார், இரவு Valerian படம் பாத்தீங்களா?
ReplyDeleteNopes sis ! பதிவை டைப் பண்ண ஆரம்பித்ததே 11 மணிவாக்கில் தான் ! முடிக்கும் போது 2 ஆகி விட்டது !
DeleteValerian திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளோடு தயாரிப்பில் இருந்த சமயமே இந்தியாவில் வெளியிட உத்தேசித்திருந்த PVR சினிமாஸ் குழுமத்துடன் பேசி, ஒரு காமிக்ஸ் இதழையும் தியேட்டர்களில் விற்றிட முயற்சிக்கலாமே ? என்று படைப்பாளிகள் suggest செய்திருந்தனர் ! ஆனால் sci-fi என்றாலே நம்மவர்கள் ஓட்டமெடுப்பதால் நான் பெருசாய் ஆர்வம் காட்டிக்கொள்ளவில்லை & sadly படமும் பெரியளவிற்குப் பேசப்படவில்லை !
Yes, படம் hardly break even ஆனது பெரிய விஷயம். ஆனால் எனக்கு ரொம்ப பிடித்த படங்களில் ஒன்று Valerian. ஹாலிவுட் ஆதிக்கம் கூட படம் சரியாக ஓடாதிற்கு ஒரு காரணம் என்பது என் கருத்து. Marvel படங்களுக்கு உள்ள வரவேற்பு வேறு படங்களுக்கு(அதே ஜானர் ஆனாலும்) இல்லை. But i feel your post sounds bleak. As they say in Jurassic Park "Nature always finds a way". Technology will find a way out. We weren't born with Largo Winch or Thorgal but we like them now. காமிக்ஸ் ரசிகர்கள் இருக்கிறார்கள், உங்களுக்கு என்ன கவலை? Kindle in Motion புத்தகங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீகளா? என்னிடம் ஒரு Harry Potter KIM புக் உள்ளது. Jim Kay illustrations உடன் மாயாஜால உலகை அப்படியே ரசிக்கலாம். அண்ட் it can't be shared or copied to any device. We have to look forward to changes and keep adapting our tastes.
Deleteஆளாளூக்கு ஒரு Lion glassவாங்கியிருப்போம்...
ReplyDeleteபுக்க விரிச்ச உடனே மொத பக்கத்த கேப்டன் டைகரு குருதைல வேகமா பௌவி கோட்டைக்கு போய்ட்ருப்பாரு...டக்கடி டக்கட....
லைவ்வா தெரியும்...
அடுத்த பிரேம் படம் வந்து நிக்கும்...
விர்ச்சுவல் ரியாலிட்டி ங்கிறது...ஆக்சுவல் ரியாலிட்டி யா மாறியிருக்கும்...
ஜிம்மி மௌபர்ன் குடிக்கிற சத்தமும் கிளாஸ் சத்தமும் கேட்கும்....
கூடவே வீட்டுல - சகதர்மிணி அதட்டுற சத்தமும் கர்ணகடூரமா....
இந்த"காமிக்ஸ் வந்துடக்கூடாது...கெழவனுக்கு தலகாலு புரியாது" ங்குற ஹோம் ரியாலிட்டி தொடரும்...
கூடவே வீட்டு ட்ரோன் , பூரிகட்டய தூக்கீட்டு வந்து நம்ம தலையில போட்டு அடிக்கும்...
நாயத்து கெழம ஆச்சுன்னு வூட்டுல மருமகட்ட பர்மிஷன் வாங்கி அவ சீதனமா கொண்டு வந்த ரியாலிட்டி புரஜக்டர வாங்க இளிச்சிட்டு நிக்கணும்...(மருமக டெய்லி அவ அம்மா அப்ப்பா தம்பி கூட பேசுர மிஷினு)...
உடம்புல வலு கொறஞ்சி போயிருக்கும்...
மனசுல காமிக்ஸ் வலு நூறு மடங்கு எகிறியிருக்கும்...
இளமையில் கொல் - ரெடி பிரிண்ட் பத்தி மரத்தடீ மீட்டிங் நடக்கும்...
ஏகப்பட்ட சன்ஷைன் - மூன்ஷைன் பளபளா மண்டைகள் கூடி களிக்கும்...
மீட்டிங் முடியிறதுக்குள்ள...புக் கைல கெடச்சிருக்கும்...புக் ஸ்டால்லயே பிரிண்ட் அடிச்சி தந்திடுவாங்க...கூடவே அந்த ரவுண்ட்பன்னும் அதே அன்போட....
இளந் தாத்தாக்களும்
முதிர் தாத்தாக்களும்
மனசு விட்டு சிரிச்சிட்டிருப்பாங்க...
புல்லட் ட்ரெய்ன்ல சென்னை புக் பேருக்கு போவோம்னு பேசிக்குவாங்க....
/// ஆளாளூக்கு ஒரு Lion glassவாங்கியிருப்போம் ///
Deleteசார், நான் இப்பவே led magnifying glass வெச்சி தான் இரவில் காமிக்ஸ் படிக்கிறேன். 3D effect மாதிரி அட்டகாசமா இருக்கும். பேசாம இரத்த படலம் மாதிரி லிமிடெட் எடிசன் லயன் கிலாஸ் வேணும்னு ஒரு போராட்டம் ஆரம்பிக்கலாமா? ஜெய் சால்ட்மா.
அண்ணா அருமையான முன் நோக்கிய பார்வை.
Deletej ji.. என்னா ஒரு கற்பனை வளம்!! அதுவும் காமெடி கலந்து!!
Deleteஇங்கன மட்டும் என்னங்குறீங்க அனு அம்மா...
Deleteஎங்க கண்ணுல்லாம் காமிக்ஸ் படிச்சே வீங்கி ...வீரம் பொங்கி வீங்கி....
சகதர்மிணி சொல்லடி...பதிலடி...மண்ட வீங்கி...
வாழ்க்கையில இதெல்லாம் ஜகஜமாய்டிச்சி...
பி.கு: டேபிள் லேம்ப் ப்ளஸ் மூக்கு கண்ணாடி ...
உதை வாங்குறது நமக்கு சகசந்தானே...!!!
Deleteஇது மட்டும் மாறாது.ஹூம்.
Refresh tears என்ற eye drops போட்டு கொள்ளலாம். புதுசா கண்ணில் நீர் விடலாம்.
Delete//சகதர்மிணி சொல்லடி...பதிலடி...மண்ட வீங்கி...//
Deleteஇந்தவாட்டி அடி கொஞ்சம் ஓவரோ 'தல' ?
அனு அம்மா
Deleteஎதுக்கு ரெப்ரஷ் பண்ணீட்டு பண்ணீட்டு வந்து தாக்க!!! வாங்க....
"நீலிக்கண்ணீரா"- ன்னு வீரவசனம் பேசீட்டே வீசுவாங்க...
அப்பறம் இங்க வீசம்படி கூடத் தேறாது...
எடிட்டர் சார்...
Deleteஓவர் ஓவர்...
அவருக்கு ஆறு பவுலிங்...
இங்க ஏழு எட்டு நோபால்லாம் போட்டு சிக்சரடிப்பாங்க...
ஜி, எனக்கென்னமோ ஒரு சந்தேகம்? இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தேர்வு ஆனவரை உங்கள்ளுக்கு கட்டி வைத்து விட்டார்கள். எதற்கும் மாமனார் வீட்டில் விசாரிக்கவும். முத்தையா முரளிதரன் போல தூஸ்ரா பவுலிங் போட்டால் சிரமம் பார்க்காமல் லைவ் ஸ்ட்ரீம் செய்யவும். ஊரடங்கில் ஒரு எண்டர்டெயின்மெண்ட் ஆக இருக்கும் (எனக்கு இன்னும் புக் வரலை, அந்த காண்டு கூட உண்டு).
Deleteபொன் தேடிய பயணம்:
ReplyDeleteமஞ்சள் உலோகத்தை தேடும் படலத்தில் இதுபோன்ற காமெடி அதகளங்கள் செய்வது சற்றே கடினமான விஷயம்தான்...
பொன் தேடி சென்ற ஜாஸ்பர் எனும் நண்பனைத் பொன்னைவிட உயர்வாய் மதிக்கும் செல்வந்தர் வால்டோ நம் லக்கி & ஜாலி ஜம்பர் கூட்டணியுடன் அசாதாரண ஓர் வழித்தடத்தில் க்ளோன்டைக் நோக்கி பயணிக்கும் சிலுசிலு சாகஸமே பொன் தேடிய பயணம்...
பயணத்தின் இறுதியில் ஜாஸ்பரை கண்டுபிடித்தார்களா?
ஜாஸ்பரின் மஞ்சள் உலோக வேட்டையின் நிலை?
கதையை வாசித்து முடிக்கும்போது நமக்கும் சற்றே குளிரெடுத்தால் அதில் வியப்பேதுமில்லை...
கதையின் நெடுக பயணிக்கும் கனேடிய சிவப்பு சட்டை போலீஸ் செய்யும் சீரியஸ் இரக சேட்டைகள் சிரிப்பு இராக்கெட்டுகளாய் மாறுகின்றன...
சோப்பி ஸ்மித்,மேட்டி சில்க்ஸ் பற்றிய தகவல்களும் சில்கூட் பாதை பற்றிய குறிப்பும் சுவராஸ்யமூட்டின...
"கஞ்சி போட்டு இஸ்திரி பண்ணிய சொக்காய் போல் விறைத்து கிடக்கிறாரே !"
"கட்டையிலே போறவனேன்னு சொல்லுவாங்களே.... அது இது தானோ ஜி?"
"சவசவன்னு பேசாம தொங்கவிட ஒரு புளியமரத்தைத் தேடுங்க !"
"ஹே இங்கே ஏதுப்பா புளியமரம் ?!"
-ஹா,ஹா,ஹா வசனங்கள் சிறப்பு, செம ஜாலி மூடில் எழுதப்பட்டது போல...
அதிலும் ஜாலி ஜம்பர் தாகசாந்தி செய்து கொள்ள நீர்த் தொட்டியருகே திருதிருவென்று முழிக்கும்போதான காட்சியமைப்பு செம......
தாராளமாய் இரசிக்கலாம்,சிரிக்கலாம்...
பொன் தேடிய படலத்திற்கு
எமது மதிப்பெண்கள்-10/10.
கார்ட்டூன்களுக்குப் பேனா பிடிப்பதே ஒரு அலாதி அனுபவமாச்சே சார் !
Deleteமீண்டும் கிங் கோப்ரா: (லாரன்ஸ் - டேவிட்)
ReplyDeleteகிங் கோப்ரா வை அழித்து விட்ட வேலை முடிந்த நண்பர்கள் இருவரும் அதற்கு பரிசாக கிடைத்த சொகுசு தீவில் ஓய்வில் இருக்கின்றனர் .. அங்க பனை மரத்தை வெறும் கையால் வேரோடு பிடுங்குவது (?!) .. கம்ப்யூட்டர் உடன் போட்டி போட்டு கணக்கில் வெல்வது (!?).. சுறா வேட்டை (அட நெசமாதானுங்க ) என பொழுதை கழிக்கின்றனர் ..
இதற்கு இடையே நமது "கதை நாயகன்" கிங் கோப்ரா ஹாங்காங் ல் உள்ள ஒரு மாஸ்க் கடையில் ஒரு மாஸ்க் ஐ அந்த கடையின் முதலாளி கிழவனை கொன்று திருடி விடுகிறார் .. அதை மாட்டி கொண்டு இரு திரைப்படங்களில் நடித்து அமெரிக்க ப்ரெசிடெண்ட்(?!) ஆகி விடுகிறார் .. (தமிழ் ஆக்டர்ஸ் எல்லாம் கத்துக்கோங்கப்பா ) ..
பின்னர் "உலகையே " ஆளணும்னு முடிவு பன்றார் .. அதற்கு தடையாக இருக்கும் லாரன்ஸ் - டேவிட் ஐ கொல்ல பல சதிகள் செய்கிறார் .. நீச்சல் குளத்தில் முதலை விடுவது , படுக்கை அறையில் பாம்பை விடுவது (தன் மூச்சை அடக்கி அந்த பாம்பையே ஏமாற்றி விடுகிறார் லாரன்ஸ் ) , சில பல அம்பு பொறிகள் ,சில பல விஷ வாயுக்கள் , ராட்சச சிலந்திகள் .. wolverine (அதை hypnotism பண்ணியே தூங்க வைத்து விடுகிறார் லாரன்ஸ் )
இப்படி இன்னும் சில பல இடர்களை (இன்னும் இருக்கு .. ஆனா type பண்ண முடியலே ) தாண்டி கிங் ஐ எப்படி தடுத்து "உலகையே "எப்படி காப்பாற்றுகிறார்கள் நாயகர்கள் என்பதே மீதி கதை ..
தம்பி ஓரமா போய் கிலுகிலுபை வச்சு விளையாடிட்டு இருக்கணும். எதுக்கும் நான் இந்த கதையை படிச்சுட்டு அப்பறம் வரேன்.
Deleteபடிப்பிங்க சரி .. ஆனா அதுக்கு அப்புறம் வருவீங்களா ??
Deleteதூங்கி முடிச்சிட்டு அப்பாலிக்கா வருவாரு குமார்...
Deleteஒண்ணு கூடிட்டங்க யையா ஒண்ணு கூடிட்டங்க
Deleteஹா ஹா.. KS.. ஹாஸ்யத்திலும் கலக்கறீங்க?!!
Deleteதலீவரின் தீர்ப்பு தந்த மகிமையோ என்னமோ?!! :)
தம்பி ஓரமா போய் கிலுகிலுபை வச்சு விளையாடிட்டு இருக்கணும். எதுக்கும் நான் இந்த கதையை படிச்சுட்டு அப்பறம் வரேன்///
Deleteஇந்த கதையை படிக்கிறதுக்கு கிலுகிலுப்பையை வெச்சி விளையாடுறது எவ்வளவோ பெட்டர்
wolverine (அதை hypnotism பண்ணியே தூங்க வைத்து விடுகிறார் லாரன்ஸ்//
Deleteலாரன்ஸு அந்த ஹிப்னாடிஸசத்த வோல்வரின்க்கு பதிலா நமக்கு பண்ணியிருக்கலாம் ஶ்ரீ...இந்த கதையை படிக்கிறதுக்கு பதிலா நல்லா தூங்கியிருப்போம்..
நேத்தைக்கு வாங்குன அடி ஒரு ரகம்னா - இது வேறொரு ரகமோ யுவா ?
Delete//இரு திரைப்படங்களில் நடித்து அமெரிக்க ப்ரெசிடெண்ட்(?!) ஆகி விடுகிறார் .. (தமிழ் ஆக்டர்ஸ் எல்லாம் கத்துக்கோங்கப்பா ) ..//
Deleteகோலிவுட்டுக்கு ஒரு டஜன் பார்சல்லல்லல்ல !
ஒரு கெளபாய் கலைஞன்:
ReplyDeleteஓவியக் கலைஞர் ப்ரெட் ரெமிங்டனின் பாதுகாப்பு பணிக்கு லக்கி & ஜாலி கூட்டணி பொறுப்பேற்க,தொடர்ந்து நடக்கும் அட்ராசிட்டிகளே கதைக்களம்...
ஹவுண்ட் சிட்டியில் சலூனில் நடக்கும் களேபரங்கள் கலகலப்பூட்டுபவை,ஒரண்டை இழுப்பதும்,"கும்,ணங்,சத்" சாத்துகள்,மொத்துகளை போட்டுக் கொண்டே நலம் விசாரிப்பது,களைத்தவுடன் ட்ரிங்ஸ் அடிப்பதும்,திரும்ப ஒரண்டை இழுப்பதும்,திரும்ப "கும் ணங் சத்" சாத்துகள்,மொத்துகள்,திரும்ப ட்ரிங்ஸ்...ஹா,ஹா,ஹா....
ஹவுண்ட் சிட்டியில் காணப்படும் டெட்பாடி துன்னும் கழுகார் வாயில் ஜொள் விடுவதும் செம....
கதைக் களம் நெடுக காட்சிகளுக்கு ஏற்றவாறு ஆங்காங்கே கழுகார் தென்படுவது சிறந்த உத்தி...
கர்லியின் வில்லத்தனம் இன்னும் கலகலப்பூட்டுகிறது,அதிலும் பழிவாங்கும் முறைகள்... ஹி,ஹி,ஹி ரகம்....
வரைதலைப் போலவே உண்பதையும்,ட்ரிங்ஸ் அருந்துவதையும் நேசிக்கும் ப்ரெட் ரெமிங்டனின் கதாபாத்திரம் அருமை...
"லக்கியின் கோலா ஆர்டர் -அண்ணனுக்கு சூடா ஊத்தப்பம்" காட்சியை நினைவூட்டுகிறது...
"பிரச்சனைகளை தீர்க்கும் உன் ஸ்டைலே அலாதி தான்பா !"
"இதுக்குப் பெயர்தான் கருத்து மோதல்"
"ஒண்ணுமில்ல ப்ரெட் ! ஒரு மரமும் மரமண்டையும் !"
"ஒண்ணிமில்ல ப்ரெட் ! ஒரு பாறையும் ஒரு பக்கியும் !"
"போஸ் கொடுக்கறதுன்னு ஆன பிற்பாடு பின்பக்கத்தையா காட்டுவாங்க பாஸ் ?
என்னமோ போங்க !"
-வசனங்கள் செம,செம...
சிறு குறைகளாய் தெரிவது யாதெனில்,
ஜாலி ஜம்பர் லக்கியை "ஜி" என்றழைப்பது கொஞ்சம் அன்னியத்தனமாய் தோன்றுகிறது,அதை தவிர்த்திருக்கலாம்......
அதேபோல் லாக்டெளன் குறித்த வசனங்கள் கூட முழுமையாக பொருந்துவதாய் தோன்றவில்லை...
வழக்கமாய் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வந்து ஹாலிவுட் படங்களை டப்பிங் செய்து தமிழில் வெளியிடும்போது இதைப்போல் ட்ரெண்ட்செட் வார்த்தைகளைத்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தனர்,ஒருகட்டத்தில் அது போரடிக்க தொடங்கி விட்டது...
அதே போல் ஒரிடத்தில் ஸ்மர்ப்ஸ் பாணியிலான வசனநெடி அடிக்கிறது,ஜாலி ஜம்பர் ப்ளுகோட் கேப்டனைப் பற்றி பேசுவதும் ஏற்கனவே வேறு கதையில் படித்த நினைவு...
இதையெல்லாம் தவிர்த்திருந்தால் இன்னும் தரமாய் இருந்திருக்குமோ என்னவோ....
கெளபாய் கலைஞனுக்கு
எமது மதிப்பெண்கள்-10/10.
அசத்தலான அலசல் பார்வை, அறிவரசு அவர்களே!!
Deleteலக்கியை "ஜி" என்று ஜாலி ஜம்பர் கூப்பிடும் பாணி கடந்த சில ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது சார் ; போன வருஷத்து புக்சில் கூட அவ்விதமே இருந்ததாய் ஞாபகம் !
Deleteஅப்புறம் இந்தக் கதையின் ஒரிஜினல் ஆங்கிலப் பதிப்பினை ஒருமுறை படித்துப் பார்த்தீர்களெனில், ஜாலியின் ஸ்கிரிப்டில் நான் குரங்கு வேலைகள் செய்துள்ளதன் காரணங்கள் புரியும் ! Not to justify anything though !!
ஓகே சார்....
Deleteஅட்டகாசம் அறிவரசு
Deleteஆண்டுமலரை பொறுத்தமட்டில் எனது பார்வையில் இரண்டு கதைகளுமே டாப்தான்,ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல...
ReplyDeleteஓவிய பாணிகளும்,காட்சி அமைப்புகளும்,கதாபாத்திர வடிவமைப்புகளும்,வசனங்களும் நிறைவை அளிக்கின்றன....
அதேநேரத்தில் சில வசனங்களை இன்னும் மெருகேற்றி இருக்கலாமோ என்ற எண்ணமும் சில இடங்களில் தோன்றியது...
அண்ணா பேக் டூ ஃபார்ம். அருமையான விமர்சனம். லக்கி எப்போதுமே ஹிட் என்பதை உங்கள் விமர்சனம் மூலம் தெரிந்து கொண்டேன்.
Deleteஅருமை.
Deleteஇன்னும் படிக்கல... இப்பத்திக்கி உங்க விமர்சனங்கள் அனைத்தும் வெயிட்டிங்ல வெச்சி இருக்கேன். பின்னர் படிச்சிட்டு, படிச்சிக்கலாம்.
Deleteதொடருங்க...
அப்பவும் மும்மூர்த்திகள் reprint கேட்போம்
ReplyDeleteஅதானே !!
DeleteEnakkennavo aadivaasi kadhaigal dhaan innoru roundu varumnu thonudhu
ReplyDeleteநம்ம ஜேடர்பாளையத்தார் 2030ல் என்ன புக்கு கேட்பார், வேறென்ன ஸ்பைடராக இருக்கும்
ReplyDelete+1
Delete+2
Delete2030 வரைக் காத்திருப்பானேன் சார் ? அவர் நாளைக்கே எழுந்து வந்து கேட்கட்டும் ; முப்பதே நாட்களில் வலைமன்னனைக் கண்ணில் காட்டி விடுவோம் - அதுவும் புத்தம் புதுக் கதையோடு !
Delete//அவர் நாளைக்கே எழுந்து வந்து கேட்கட்டும் ; முப்பதே நாட்களில் வலைமன்னனைக் கண்ணில் காட்டி விடுவோம் - அதுவும் புத்தம் புதுக் கதையோடு !//
Deleteசூப்பர் சார் ! காத்திருப்போம் !
// காலையில் 2021-ன் அட்டவணையின் final touches பணிகளுக்குள் புகுந்திட ! //
ReplyDeleteசீக்கிரமா நகாசு வேலைகலை முடிச்சிட்டு டிரெய்லரை கண்ணில் காட்டுங்க சார்...
அக்டோபர் இறுதி சார் !
Deleteஎனக்கென்னவோ இன்றைய பதிவு ஃபில்லர் பேஜஸ் மாதிரி ஒரு ஃபீலிங். இன்றைய பதிவை 2030க்கு பதிலா 2132 ஐ தலைப்பாக்கி, அதுபற்றிய முன்னோட்டமாக எழுதி இருக்கலாம். மறதிக்கார மன்னாரு அப்படியாப்பட்ட ஒரு graceful கேரக்டர்.
ReplyDeleteமுன்னோட்டம், பின்னூட்டம், சைட் ஓட்டம் என எல்லாமே உரிய நேரங்களில் சார் ! இப்போதைக்கு லக்கியோட்டம் !
Delete// ஒரு மஞ்சள்சட்டைக்காரர் தனது 82-வது வயதிலும் வன்மேற்கில் செய்து வரும் அதகளங்களை திறந்த வாய் மூடாது ரசித்துக் கொண்டிருப்போம் ! //
ReplyDeleteமாறாத விஷயம் அது ஒன்றுதானே சார்,ஏனெனில் டெக்ஸில் நம்மை,நம் ஆழ்மனப் பதிவுகளைப் பார்ப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்தான்....
// 'இளம் டெக்ஸ்' என்ற தடத்தில் இப்போதே மாதந்தோறும் காட்டு காட்டென்று காட்டி வரும் 'சின்னவர்' அன்றைக்கு ஒரு நூற்றுச் சொச்சம் சாகசங்களோடு இன்னமும் செமத்தியாய் மிரட்டிக் கொண்டிருப்பார் ! //
ReplyDeleteஅப்புறம் சார்,இளம் டெக்ஸ் பட்டையைக் கிளப்புது,அதிரிபுதிரியாய் இருக்கு...
இன்னும் எத்தனை சார் பாக்கி இருக்கு,முடிஞ்சா 2021 ல் இன்னும் கொஞ்சம் அதிக கதைகளை ஒரே இதழாக வெளியிட முயற்சிக்கலாமே....
ஆமா...ஆமா.. எடிட்டர் சார்.
Delete20தாண்டிட்டது போல..
நாம இந்த டெசாவும் டெக்ஸூம் பாக்கி 5பாகங்கள் காண இந்தாண்டே ஏதாவது வாய்ப்பு இருக்கா சார்???
யங் மெபிஸ்டோ கூட அதற்கடுத்த 4 பாகங்கள் இருக்கு...!!
கலரில் அதற்குள் இதை மறுபதிப்பாக்கிட்டாங்க,தாய்க்கழகத்தில்.. வாய்ப்பு இருந்தா கலரில் போடலாம் சார்...!!!
மெபிஸ்டோ கேட்டவங்களையும் திருப்தி படுத்தின மாதிரி இருக்கும்; கலர் டெக்ஸ் படிச்சா மாதிரியும் இருக்கும்!
பற்பல காற்றாடும் பாக்கெட்களின் மத்தியினில் பட்ஜெட் போடவுள்ளோம் என்பதை நினைவூட்டுகிறேனே !
Delete// 20தாண்டிட்டது போல.. //
Deleteஅடடே,இப்பவே இன்னும் 16 பாக்கியிருக்கா?!
டெக்ஸ் மெபிஸ்டோ யுமா கதைகளை கலர்ல்ல ஹார்ட் பவுண்டுல ஏக் தம்மா "" கொரோனா ஸ்பெஷல் """ ன்னு போட்டு தாக்கிடலாம் 2021 ஈரோடு புக் ஃபேரில். சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிடும்.
Delete// அது - 'கதையே நாயகன்' ; 'கட்டுப்பாடுகளிலா கதைத் தேடல்" என்ற template சகிதம் பயணித்து வரும் ஜம்போ காமிக்ஸ் அன்றைக்கொரு இன்றியமையா ஆட்டக்காரராகி இருக்கும் என்பதே !! //
ReplyDeleteஇப்பவே ஜம்போ தவிர்க்க முடியாத ஒரு தடமாகத்தானே உள்ளது,தேர்ந்தெடுக்கபடும் கதைகள் பெரும்பாலும் ஆர்வத்தை கிளப்புவதாகவே உள்ளன....
வருங்காலத்தில் இந்தத் தடத்தை மேலும் மெருகூட்டி மேம்படுத்த வேண்டும் சார்....
ஆமாம் அப்போது மாதம் ஒரு ஜம்போ என்று ஆகி விடும்.
Deleteஇது 2025லயே நடந்துடும்.
Delete61
ReplyDeleteசார் அட்டகாசமான பதிவு....அந்த விண்வெளிக் கதைவள இப்பவே போட வாய்ப்பிருக்கா... ஃப்ளாஷ் கார்டனெல்லாம் சுத்தமா பிடிக்கலன்னாலும் நண்பர் கோரிய இக்கதைகள் ஏனோ ஆர்வத்தைத் தூண்டுது....நம்ம ஸ்பைடர் ஆர்ச்சிய கேட்டும் சில பல குரல்கள் ஒலிக்கும்னு சேக்க மறந்துட்டியலே சார்...இப்ப இங்லாந்துல தூசி தட்டியெடுத்த...புதிதாய் வடிக்கவுள்ள இரும்புக் கை...லாரன்ஸ்....ஸ்பைடருக்குக் காரணமே நம்ம தூசி தட்டி எடுத்ததுதானே(பட்டர் ஃப்ளை தியரி படிக்க)...மறுபதிப்ப மட்டமா நெனைக்காதிய மக்கா...
ReplyDeleteஅப்ப ஆசிரியர் தவற திருத்த நம்ம டாப் மனோவியல் சார்ந்த முதல் பிள்ளையார் சுழி போட்ட....பிள்ளையாய் தவழ்ந்த டெக்ச...வளர்ந்த பின்னர்...பிழையா தலைவாங்கிக் குரங்கு கதய எப்படியோ போட்டத மறைக்கவோ மறக்கவோ தற்போதய மேக்சி லயன் சைசுல அசரடிக்கும் வண்ணத்துல....
அதோட இணைத்து நட்பு ...காதல்...துரோகம்...வலி....கார்சன் டெக்சுக்கு மேலயோ என எண்ண வைக்கும் வில்லன் கூட்டத்தோடு....துவக்கம் முதலே திக் திக் அசுர வேகத்தோடு பயணிக்கும் கதைக்களனோட இதுவரை வந்ததிலயே டாப் என ஹார்டு பௌண்ட்ல...ஜிகுனா மினுங்க...டைகர சேத்தா போனல்லி நம்ம சேக்கமாட்டாவல்லா என ஆசிரியர் கூறுவத மாத்த நம்ம விக்ரம் இதனோட இலவச இணைப்பா டவுசரோட தங்கக்கல்லறய பெரிய சைசுல போட்டுத் தாக்க...வருது எதிர்காலம் அடுத்த வருடமே...நம்ம ஒரே முக்கா குண்டு இபவோடவே
//ஒரே முக்கா குண்டு இபவோடவே//
Deleteவாழைப்பழம் நல்லதும்பாங்களே ஸ்டீல் ?!
ஞாயிறு வணக்கங்கள் சார்!
ReplyDeleteஹேப்பி சன்டே ஃப்ரெண்ட்ஸ்!
பதிவுனா இதான் சார்!
வழக்கமான இளமை துள்ளல் நடை;
தங்களது ஹாஸ்யங்களும், ரைட்டிங்ஸ்ம் பேக் டூ ஃப்ரைம் ஃபார்ம்!
பல இடங்களில் வாய்விட்டுச் சிரத்தேன்!
எதிர்பாரா இன்பமூட்டிய பதிவு!
மைண்ட் ஃபுல்லா ரிலாக்ஸ் ஆகிட்டது.
ரீஜார்ஜ் ஏத்தி விடும் வரிகளாக போட்டுத்தாக்கிட்டீங்க! செம....செம..!!
கதைகளின் கதையை எதிர்பார்த்து வந்திருந்த இன்ப அதிர்ச்சி!
மகிழ்ச்சி சார்!😍😍😍
///'அங்கிள் கிட்டே உட்காரும்மா...' என்று கேட்டு வந்த குரல்கள்...'தாத்தா கிட்டே உட்காருமா///
ReplyDelete----அவ்வளவு வயசா ஆகிடும்!ஹி..ஹி...!!!
J-இப்பவே தாத்தா தான்...ஹா..ஹா!
ஷெரீப் தாத்தா...!!
KOK--தாத்தா...ஐ லைக் இட்!
ஈவி தாத்தா...!
தலீவர் தாத்தா...!!
ஆஹா...ஆஹா...!!!
ஓ...அப்பவும் நா ஒனக்கு தம்பி மாதிரி தா இருப்பேன்...
Deleteநீ தா கோல ஊணிக்கின்னு லொக்கு லொக்குன்னுட்டு வருவ...
ஹா....ஹா...!!!
Deleteதாத்தாக்கள் மாநாடு மாதிரி இருக்கும்.
ஒரே ஆறுதல் டை அடிக்க தேவை இருக்காது.ஹி...ஹி...!
எங்களுக்குலாம் அந்தச் செலவுமே இருக்காது !! ஹை !!
Deleteஎன்னா ஒரு சந்தோசம்!!!??
Delete///ஜூனியர் குப்பண்ணாக்களிலும், அஞ்சப்பர்களிலும் அஞ்சாத சிங்கங்களாய் லெக் பீஸ்களைக் கவ்வியோர், ரவுண்ட் பன்களை தோய்த்து விழுங்கவே ஒரு சாயாவையோ, காப்பியையோ தேடிட அவசியமாகிடலாம் ! //---
ReplyDeleteஹா..ஹா...
54 வயசுதான ஆகி இருக்கும். அப்பவும் லெக் பீஸை கவ்வ இயலும்!
எதேய்.. பல்லு செட்ட கழட்டி வெச்சிட்டு தான...
Delete////ஒரு மஞ்சள்சட்டைக்காரர் தனது 82-வது வயதிலும் வன்மேற்கில் செய்து வரும் அதகளங்களை திறந்த வாய் மூடாது ரசித்துக் கொண்டிருப்போம்..///
ReplyDeleteஆஹா..
ஆஹா...
இன்னொரு முறை சொல்லுங்க..!
சில விசயங்கள் மாற்றங்களை வென்று ஜீவித்திருக்கும்.
டெக்ஸ்ம் அப்படியே!
70ஆண்டுகள் ஆக இத்தாலில ரசிக்கிறார்கள் எனும்போது நாம இன்னும் ஒருபடி மேலே தான் இருப்போம்.
/// I can only visualise Young Tex growing from strength to strength ! ஆண்டுக்குப் 12 இளம் டெக்ஸ் ஆல்பங்களை, இத்தாலியில் வெளியாகும் அதே பாணியில் நாமும் அந்நேரத்துக்கெல்லாம் போட்டுத் தாக்கிக் கொண்டிருப்போம்///
ReplyDelete---வாவ்..வாவ்.. எனக்கு இப்பவே 2030க்கு போகனும் போல இருக்கே!
ஆர்ச்சி உதவுவாறோ கோட்டையை தந்து???
நேத்திக்கு ராவுலேர்ந்து மனசு பாரமா இருந்துச்சு.. காலையில் கண்விழித்தபோது எடிட்டரின் பதிவு! ஒரு இன்ஸ்டன்ட் குபுக் சந்தோசம்!!
ReplyDeleteபதிவைப் படிக்கும்போது பத்துப் பதினைந்து முறை என் கட்டில் குலுங்கியது! அதன் பலனாக.. அதிகாலையிலேயே சிலரது தீக்கணல் பார்வைக்கு ஆளானேன்!
சில மணிநேர இடைவெளியிலேயே இன்பமும், துன்பமும் எத்தனை முறை வாழ்க்கையில் வந்து வந்து போகிறது!!
// அதிகாலையிலேயே சிலரது தீக்கணல் பார்வைக்கு ஆளானேன்! //
Deleteஅது என்ன சிலரது... ஒருவரின் தீக்கணல் எனதானே வரனும் 🤔🙄
குட் கொஸ்டின் PfB!
Deleteஆனா அதுக்கும் பதிலிருக்கு எங்கிட்ட!
ஆதாவது, ஒரு அடி அடிச்சாங்கன்னா பத்துப்பேர் சேர்ந்து அடிக்கிற மாதிரி இருக்கும்!!ஹிஹி!!
புரியுது.. :-) enjoy the weekend.
Deleteஜெய் பூரிக்கட்டை !
Deleteஜெய் ஜெய் தோசைக் கரண்டி !!
ஜெய் ஜெய் ஜெய் அம்மிக் குளவி !
நீங்கள் விஜயை மேலே சொன்னதை எல்லாம் கூட வைத்து அடிக்கலாம் என சொல்லாமல் யாருக்கோ சொல்வது போல் உள்ளது விஜயன் சார் :-)
Delete///மெபிஷ்டாய மெபிஷ்டாய !!' என்று கோஷமிட்டுக் கொண்டேயிருப்பர்//
ReplyDelete---ஹா..ஹா... மிகவும் நல்லது!
30 பக்க விமர்சனம்..! டெக்ஸ் வில்லரின் - எதிரிகள் ஓராயிரம்..!
ReplyDeleteநேற்றிலிருந்து தம் கட்டி 30 பக்கங்கள் மட்டுமே படிக்க முடிந்தது. சரி படித்தவரைக்கும் விமர்சனம் செய்யலாம் என்று ஓடி வந்துள்ளேன். இல்லையென்றால் +1 மற்றும் நன்று போட்டே 300 கமெண்டுகள் தாண்டிவிடும் ; அப்புறம் நாம் புத்தக விமர்சனம் போட்டால் என்ன போடாவிட்டால் என்ன என்று தோன்றிவிடும் என்பதால் இந்த அவசர பதிவு !
இளம் டெக்ஸை சுட்டுப் பிடிக்க நான்கு வெகுமதி வேட்டையர்கள் பொறி வைத்துக் காத்துள்ளனர். குதிரை கேப்பில் அவர் ஒரு மாயாவி ; மந்திரவாதி ; விலங்கு மீன் ; அப்பேற்பட்ட அப்பாடக்கர் என்று அடித்து விடுகின்றனர். தாங்கள் ஒரு மிகப் பெரிய கொடூர ரவுடிகள் என்று காட்டுவதற்காக - ஒரு அப்பாவி நோஞ்சானை தூக்கிலட ஆயத்தம் செய்கின்றனர்.
அப்போது சின்ன தல என்ட்ரி கொடுக்கிறார். வெறும் 4 நபர்களை துப்பாக்கியால் சுட 40 தோட்டாக்களைச் சராமாரியாக சுட்டு விரையம் செய்கிறார் இளம் டெக்ஸ் ; முன்பெல்லாம் வயதான டெக்ஸ் மொத்தம் 40 நபர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொள்ள வெறும் 4 தோட்டாக்களை மட்டுமே பயன்படுத்துவார் ! கடைசியில் இரண்டு நபர்கள் மரணிக்க ; ஒருவன் தானே ரவையை நெஞ்சில் வாங்க ; ஒருவன் பாதாள அருவியில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறான் !
அந்த பழைய ஸ்பானியச் சுரங்கம் அற்புதமாக இருக்கிறது ; மனதை என்னவோ செய்கிறது - அருமை !
30 பக்க விமர்சனம்..! டெக்ஸ் வில்லரின் - எதிரிகள் ஓராயிரம்..!
Deleteமன்னிக்கவும், மறந்து விட்டேன். இவை எல்லாவற்றையும் ரவுடிகள் செய்வது வெறும் 500 டாலர் வெகுமதிக்காக ! ஏனெனில் இளம் டெக்ஸின் தலைக்கு அதாவது சின்ன தலயின் தலைக்கு வெகுமதி வெறும் 500 டாலர்கள். அட்டைப்படத்தில் கூட போஸ்டரை மரத்தில் ஆணியடித்து காட்சிக்கு வைத்து உள்ளனர் !
1860 களில் :
Deleteஒரு கால்நடையின் கிரயம் - $12
ஒரு ரைபிளின் கிரயம் - $8
ஒரு புத்தம் புது கோல்ட் பிஸ்டலின் கிரயம் - $17
ஒரு டப்பி நிறைய தோட்டாக்கள் கிரயம் - $௦.50
ஒரு டெபுடி ஷெரீபின் மாசச் சம்பளம் - $60
ஒரு பள்ளிக்கூட டீச்சரின் மாதச் சம்பளம் - $30
ஒரு இராணுவ சார்ஜென்டின் வாரச் சம்பளம் - $17
ஒரு போனி எக்ஸ்பிரஸ் ஊழியனின் வாரச் சம்பளம் - $25
ஒரு முழு பாட்டில் விஸ்கியின் கிரயம் - கால் டாலர்
அட....கொஞ்சம் கொச்சையாய்த் தோன்றினாலும் சொல்கிறேனே - அந்நாட்களில் பெண்தோழிகளுக்குக் கிட்டிய பணம் என்னவென்று : உச்சமாய் 2 டாலர்கள் வாடிக்கையாளன் ஒருவனுக்கு !!
இப்போது சொல்லுங்களேன் - அந்த $500 சன்மானம் - "வெறும் 500 " தானா என்று ?
அந்நாட்களில் ஜெஸ்ஸி ஜேம்ஸ் உச்சத்தில் இருந்த போது அவனது தலைக்கு அறிவிக்கப்பட்ட வெகுமதியான - $5000 அஸாத்யமானதொரு பெரும் தொகையாய்க் கருதப்பட்டது ! 12 வருடங்களாய் ரயில் கொள்ளைகள் ; பேங்க் கொள்ளைகள் ; கொலைகள் என்று அட்டகாசம் செய்து வந்த ஜெஸ்ஸியை எப்படியேனும் மடக்கிட எண்ணி இத்தனை பெரும் தொகையினை அறிவிக்கச் செய்தார் அன்றைய மிசூரி மாநில கவர்னர் !
இன்றைய ஒப்பீட்டில் - வன்மேற்கு ஒரு பராரிகளின் பிரதேசமாகவே தெரிந்திடும் தான் ; ஆனால் அந்த ஒப்பீடு சரி தானா ? இன்றைய விலைவாசிகளும் சரி தானா ? என்று சிந்திக்கலாமே ?
//இப்போது சொல்லுங்களேன் - அந்த $500 சன்மானம் - "வெறும் 500 " தானா என்று ? ஆனால் அந்த ஒப்பீடு சரி தானா ? இன்றைய விலைவாசிகளும் சரி தானா ? என்று சிந்திக்கலாமே ? //
Deleteநிச்சயமாக ஸார் ! சின்ன தல உண்மையாகவே பெரிய தல தான் போல !!
நேத்திக்கு வூட்ல,டீவீல ரமணா படம் ஓடிச்சுங்களா?
Deleteகாலகட்டத்திற்கு ஏற்றவாறு சன்மானம்...
Deleteசரியான விளக்கம் சார் ..நன்றி...
/// STV - "1997-லே நாலாவது மாசத்திலே, மூணாவது வாரத்திலே வந்த டெக்சின் 16 -வது பக்கத்திலே என்ன நடந்துச்சு தெரிமா--தெரிமா ?" என்று ரமணா பாணியில் போட்டுத் தாக்கிக் கொண்டிருப்பார் ! ///
ReplyDelete---ஹி...ஹி...!!!
மைண்டு எதை பார்த்தாலும் கணக்கு போட்டே பழகிட்டது!
லயன் 100
லயன் 200
லயன் 300
லயன் 400
லயன் 500
----னும்,
எடிட்டர் சாரின் 1000வது, 1500 வது வெளியீடுகள்னும்,
ஈரோட்டில் 20ஆண்டுகள்னும்,
புதிய புதிய தலைப்புகளை தேடிட்டு இருப்போம்!
////பத்தாண்டுகளுக்குப் பின்னேயும், நமது அட்டவணையினைப் போடும் இடத்தில / திடத்தில் நானிருப்பின் - பிள்ளையார் சுழிக்குப் பின்பாய் நான் எழுதும் முதல் பெயர் "TEX WILLER" என்றே இருந்திடும் ! ////
ReplyDelete---நிச்சயமாக தாங்கள் அப்போதும் எங்கள் எடிட்டர் ஆக இருப்பீர்கள் சார்.
நாங்கள் இப்போது போலவே ஸ்பெசல் 4,
ஹார்டுகவர் 3;
ஈரோடு ஸ்பெசல் ஒன்று சார்னு கேட்டி கொண்டே இருப்போம்!
முதலில் வாழ்த்துக்கள் ஜுனியர் எடிட்டர் சார்!
ReplyDeleteலக்கிலூக்கை படித்தாலே "பிரவி" பயனை அடைந்த திருப்தி ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது!
(பிறவிக்கு இந்த "ர" வா? அந்த "ற" வா??) ஹிஹி!
சீச்சாக்கோஸ்!* அம்மாஞ்சி புதுவரவுகளுக்கு சூப்பர் நேம்!
கொஞ்சம் சுலோவாக ஆரம்பித்தாலும் "ஒரு கௌபாய் கலைஞன்" முழுவதுமாக படித்த பிறகு முழு நிறைவை தருகிறது!
ப்ரெடரிக் ரெமிங்டன் இந்த வாழ்நாள் உள்ளவரை மறக்க முடியாது! வரலாற்று நிகழ்வுகளோடு சேர்ந்த லக்கி கதைகள் என்றுமே அலாதி தான்!
எனக்கு மட்டும் ஒரு பையன் பொறந்தாக்க
ப்ரெடரிக் ரெமிங்டன் பெயரை தான் வைக்கணும்னு முடிவே பண்ணிட்டேன்! (அதுக்கு முதல்ல ஒரு அம்மிணிய கைபுடிக்கணும் அப்பு; தனிமையே என் துணைவன் பாடிக்கிட்டு திரியக் கூடாது!!?? ஹி!)
மேலும் பல சிறப்புகளையும், சிரிப்புகளையும் தன்னகத்தே கொண்ட லக்கி ஆண்டு மலர் டாப் கிளாஸ்!!
அப்புறம் எடிட்டர் சார் நல்ல ஸ்கோப் உள்ள கதைய நீங்க எடுத்துட்டு, ஒரு மிடக்கு ஸ்ருதி கம்மியான கதையை ஜுனியருக்கு குடுத்து ஆட வெச்சுட்டீங்களோ??
முன்னது 10க்கு 20
பின்னது 10க்கு 9 மார்க்
//பிறவிக்கு இந்த "ர" வா? அந்த "ற" வா??) ஹிஹி!//
Deleteஹா ஹா ஹா :D சூப்பர் !
// எனக்கு மட்டும் ஒரு பையன் பொறந்தாக்க
Deleteப்ரெடரிக் ரெமிங்டன் பெயரை தான் வைக்கணும்னு முடிவே பண்ணிட்டேன்! (அதுக்கு முதல்ல ஒரு அம்மிணிய கைபுடிக்கணும் அப்பு; தனிமையே என் துணைவன் பாடிக்கிட்டு திரியக் கூடாது!!?? ஹி!) //
உங்கள் ஆசை விரைவில் நிறைவேறட்டும் மிதுன்.
ஜூனியர் எடிட்டருக்கு 'சார்' அடைமொழியெல்லாம் அவசியமில்லை மிதுனன் சார் ; நீங்கள் ஒவ்வொருவரும் பார்த்து வளர்ந்த பிள்ளைக்கு உங்களின் அன்புகளே ஒரு வரம் தானே ?! ("வரம்" - சின்ன ர-வா ? பெரிய ற-வா ?)
Deleteஅப்புறம் கதைத் தேர்வு என்னதல்ல !
2014 -ன் ஈரோட்டுப் புத்தக விழாவினில் நம்மிடம் கைவசம் titles மிகக்குறைவாக இருந்ததால் - கொஞ்சம் ஆங்கில காமிக்ஸ் இதழ்களை தருவித்து, அவற்றையுமே ஸ்டாலில் விற்றிட நமக்கு அமைப்பாளர்கள் அன்புடன் அனுமதி வழங்கியிருந்தனர் ! அப்போது சென்னையில் சைதாப்பேட்டில் இருந்ததொரு மொத்த ஸ்டாக்ஸ்டிடம் நிறைய லக்கி லூக் ஆங்கிலப் பதிப்புகளை வாங்கியிருந்தோம். அது ஜூனியர் சென்னையில் காலேஜில் படித்துக் கொண்டிருந்த சமயம் எனும் போது - நாங்கள் இருவருமே படித்திரா கதைகளில் ஒவ்வொரு பிரதியினை அவனிடம் கொடுத்து வைத்திருந்தேன் ! ஒரு போரடித்த பொழுதில் இந்த கவ்பாய் கலைஞன் கதையினை விளையாட்டாய் மொழிபெயர்த்திருக்க - அதனை எப்படியோ நான் பத்திரப்படுத்தியும் வைத்திருந்தேன் !
லக்கியின் துவக்க நாட்களது சாகசங்களை விடவும், பின்னாட்களது சாகசங்களில் காமெடி ஒரு மிடறு குறைவு என்பதால், தொடர்ந்திட்ட 5 ஆண்டுகளாய் இந்தக் கதைக்கு வாய்ப்புத் தர நான் முனையவில்லை ! ஆனால் போன வருடம் - லக்கி தொடரினில் லேட்டஸ்ட்டாய் வெளியான 'பாரிசில் ஒரு கவ்பாய் " இதழினை படைப்பாளிகளின் வேண்டுகோளுக்கிணங்க இங்கே நாமும் வெளியிட்ட போது தான் - 'இதுக்கு - அதுவே தேவலாம் தான் !' என்று தோன்றியது !
அதைத் தொடர்ந்தே ஜூனியர் எழுதி வைத்த அந்த நோட்டைத் தூசி தட்டி வெளியே எடுத்தேன் !
வாவ்... கதைகளின் கதைகளில் ஓரு அத்தியாயம் தெரிந்துட்டது.
Deleteஉபபதிவில் மற்ற கதைகளின் பின்னணி எதிர்பார்க்கிறோம் சார்.
//// டாக்டர் AKK ராஜாவின் ஆதர்ஷ Valerian எதிர்காலத் தொடரை நாமும் பரிசீலித்து அந்த spaceway-ல் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கலாம் ! Incals ; Metabaron ; ///
ReplyDelete---இதுவே எதிர்காலம்!
இன்றைய கெளபாய் யுகத்தில் இருந்து நம்மை விடுவிக்க விண்வெளியும் எதிர்காலமும் தான் மாற்றுசக்தி!
விண்வெளியில் குருத ஓட்டுறாப்டி யாராச்சும் சிக்குறாங்களான்னு பாக்கணும் !
Delete//// 'கதையே நாயகன்' ; 'கட்டுப்பாடுகளிலா கதைத் தேடல்" என்ற template சகிதம் பயணித்து வரும் ஜம்போ காமிக்ஸ் அன்றைக்கொரு இன்றியமையா ஆட்டக்காரராகி இருக்கும்.///
ReplyDelete---இது இது இன்னும் 5்ஏ ஆண்டில் நடந்துடும்.
டெக்ஸ்வில்லரின் "எதிரிகள் ஓராயிரம்"
ReplyDeleteசரியாக இரண்டரை மணி நேரம் டெக்ஸ் உடன் ,டைனமட் உடன் காலை ஏழரை மணிவாக்கில் இருந்து பயணித்து , இப்பொழுது தான் நானும் தேஷாவை காண செயிண்ட் தாமஸை நோக்கி செல்கிறேன்..இடையே பசி ,தாகத்திற்காக பீன்ஸ் ,வறுத்த கறி ,ஒரு குடுவை தண்ணீருக்காக இறங்கி ஓய்வெடுக்கும் நேரத்தில் இந்த விடுதியில் சிறிது ஓய்வெடுத்து செல்லலாம் என்றே வந்துள்ளேன்.
அப்பாடி..கதையை பற்றி என்ன சொல்ல முதல் பக்கத்தை திருப்பி படிக்க தொடங்கியது தான் தெரியும் கடைசி பக்கம் வரை இந்த இரண்டரை மணி நேரமும் எப்படி போனது என்றே தெரியவில்லை...இடையில் இல்லாள் உணவருந்த அழைத்த போதும் தெரியவில்லை..( யுவா சொன்னது போல அடி விழுந்தாலும் ஓகே தான் என்று முடிவெடுக்க வைத்தாயிற்று கதையின் விறுவிறுப்பு ) இதழை முடித்தவுடன் தான் எழுந்தேன்.இளம் டெக்ஸ் மட்டுமல்ல குதிரை திருடன் ,செவ்விந்திய தோழி , செவ்விந்திய தோழர்கள் , புத்தி தடுமாறிய ஷெரீப்கள் என பலரும் இன்னமும் மனிதில் நின்று கொண்டு இருக்கிறார்கள்.அதுவும் இதுவரை வயதான தலைவராக கோசைஸ் அவர்களை பார்த்து வந்து இப்பொழுது டெக்ஸை பல ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும் இளமையான சகோதரன் கோசைஸ் ஆக பார்க்கும் பொழது அவ்வளவு மகிழ்ச்சி.டெக்ஸ்ற்கு கதைகளில் எதிரிகள் ஓராயிரம் இருக்கலாம்..நிஜத்தில் ஓரிருவர் எதிரி என சொல்லிக்கொண்டு இருக்கலாம் . கதையில் எப்படி எதிரிகளை வென்று சாதனை புரிகிறாரோ அவ்வாறு தான் எங்களுக்கு அவரின் நிஜ எதிரிகளுக்கும் ஒவ்வொரு கதைகளை படித்து முடித்தவுடன் பதில் சொல்ல வைக்கிறாரோ என தோன்றுகிறது...அதிலும் ஆசிரியர் சொன்னது போல இரு தினங்களுக்கு முன்னர் தான் முன்வந்த இளம் டெக்ஸ் இருகதைகளையும் மீண்டும் படித்த காரணத்தால் அப்படியே சிறுவயது முதல் இப்பொழுது வரை நானுமே டெக்ஸ் உடன் வளர்ந்து வந்தது போல ஓர் எண்ணம்..அதுவும் இந்த முறை அட்டைப்பட ஓவியங்களும் சரி ,உட்பக்க சித்திரங்களும் சரி அவ்வளவு உயிரோட்டம்.ஒரு நிஜ வன்மேற்கில் இன்னமும் நான் மனதளவில் உலவிக் கொண்டே இருக்கிறேன். இதற்கு மிக முக்கிய காரணம் அழகான மொழிப்பெயர்ப்பும் தான் எனவும் சொல்ல வேண்டுமா.
? குதிரை திருடனிடம் டெக்ஸ் பேசிக் கொண்டு வரும் தருணங்களில் அழகான நகைச்சுவையை ஊட்டியது எனில் பிற கதாப்பாத்திரங்களுடன் அதிரிபுதிரி பன்ச்கள் இல்லாமல் "இளம் டெக்ஸ்க்கான" வசனங்கள் இன்னமும் கதையில் ஒன்ற வைத்தன.
இன்னமும் இந்த இதழை பற்றி ஏதாவது பகிர வேண்டும் என்று தோன்றுகிறது தான் ஆனால் இன்னமும் புரட்டாமல் ,கைகளில் கிடைக்காமல் இருக்கும் நண்பர்களை கருத்தில் கொண்டு எதுவும் சொல்ல தோன்றவில்லை.
எவரோ ,எப்படியோ டெக்ஸை எவ்வாறு வேண்டுமானாலும் சொல்லட்டும்..பட்
அதிகாரி எனில் டெக்ஸ் டெக்ஸ் எனில் அதிகாரி தான் இளம் டெக்ஸாகவே இருந்தாலும் என ஒவ்வொரு முறையும் தன்னை நிரூபித்து கொண்டே இருக்கிறார் டெக்ஸ்..
எதிரிகள் ஓராயிரம் உடன் இருப்பவர்களோ பல்லாயிரம்..
வாழ்க டெக்ஸ்..வளர்க டெக்ஸ்
இந்த விமர்சனத்தை பதிந்து விட்டு தான் மேலிருந்து பதிவிகளை இப்பொழுது படித்து வந்தேன் என்பது ஒரு முக்கிய பின்குறிப்பு...:-)
Deleteஅட்டகாசமான விமர்சனம் பரணி
Delete//அதிகாரி எனில் டெக்ஸ் டெக்ஸ் எனில் அதிகாரி தான் //
Deleteபின்றீங்க தலீவரே !
டெக்ஸ்க்கு போட்டி டெக்ஸ்( இளம்) டெக்ஸ் தான்.
Deleteஎவர்கிரீன் ஹீரோ ஒன் அண்ட் ஒன்லி டெக்ஸ்.
தலைவரே செம,செம...
Deleteபின்னு பின்னுனு பின்னிட்டீங்க தலீவரே!!! செமயான விமர்சனம்.
Deleteதெறி விமர்சனம் தல...
Delete/// காலங்கள் மாறிடலாம்...///... ஆனால்,..///
ReplyDeleteஇரும்புக் குயிலாரின் ' இ(த)னிய'? கீதங்களில் அப்போதும் மாற்றம் இராதுதான்.
ஈரோட்டுப்பூனையாரின் புண்படுத்தாத நகைச்சுவையில் அப்போதும் மாற்றம் இராதுதான்.
கொரானா கொள்முதல் மையத்தில் இருந்து வரும் உப்... வாசத்திலும் எந்த மாற்றமும் இராது தான்.
(கரூருக்கு சுடச்சுட கரண்டி Speed parcel கியாரண்டி.. எஸ்கேப்ப்ப்).
இன்னும் பலப்பல 'இராதுதான்' கள்.
ஹா ஹா!! கிண்டிய கரண்டி பட்டு மண்டிய மண்டை வீங்கப்போவது உறுதி! :)))
Deleteஉங்கள் இராதுகள் எல்லாமே அருமை. பூனையிடமும் குயிலிடமும் உப்புமா விடமும் உங்களுக்கு இருக்கு.
Deleteகொஞ்சம் தேள் கொடுக்கு போட்டு ...?
Deleteநாடோடிமன்னன் தலைவர் டயலாக் இங்கே உல்டாவாக..
ReplyDelete"பட்டுப்பட்டு தேறிய என் மண்டை எதையும் தாங்கும். ஆனால்.. சகோதரி, உப்... கரண்டியை மட்டும் என்னால் தாங்கமுடியாது சகோதரி.. தாங்கமுடியாது."
2030 எது மாறினாலும் நான் தொடர்ந்து லயன் முத்து காமிக்ஸ் காதலனாக, சந்தா செலுத்தி நமது புத்தகங்களை வாங்கி படிப்பது மட்டும் மாறாது.
ReplyDelete:-) :-)
Delete/////அப்போதுமே மாவீரனாரும், யுவக்கண்ணர்களும் - "மெபிஷ்டாய மெபிஷ்டாய !!' என்று கோஷமிட்டுக் கொண்டேயிருப்பர்///
ReplyDeleteசார் இதெல்லாம் அநியாயம் சார்...இன்னும் பத்து வருசம் ஆனாலும் " டெக்ஸ் & மெபிஷ்டோ " கதையை தமிழில் வெளியிட மாட்டேன் னு சொல்லாம சொல்றிங்க போல சார்..."மீண்டும் கிங் கோப்ரா" க்கு எல்லாம் 100 மெபிஷ்டோ தேவலாம் சார்.....தென்னைமரத்தை கயிறு கட்டி வளைக்கிறது...எஃகு வளையங்களை உடைக்கிறதுன்னு டேவிட் பண்ற மாயாஜாலங்களை விட மெபிஷ்டோ பண்ற மாயாஜாலங்கள் எவ்வளவோ பரவாயில்லை சார்......மெபிஷ்டோ எல்லாம் டேவிட்கிட்ட கத்துக்க வேண்டியது நிறையா இருக்கும்போல சார்...
அதானே :-)
Deleteசார் வருடத்திற்கு ஒரு முறையாவது மட்டும் இந்த மெபிஷ்டோ கதையை கொடுங்கள்.
ஹி..ஹி...படிச்சிடீங்களா ?
Delete//சார் வருடத்திற்கு ஒரு முறையாவது மட்டும் இந்த மெபிஷ்டோ கதையை கொடுங்கள்.//
Delete+13
//மெபிஷ்டோ எல்லாம் டேவிட்கிட்ட கத்துக்க வேண்டியது நிறையா இருக்கும்போல சார்//...
Deleteடேவிட் கிட்ட மட்டும் தானா .. அப்போ லாரன்ஸ் கிட்ட இருக்குற வித்தையெல்லாம் ??
யுவா@ காதை கொடுங்க...!
Deleteஇம்மாத போக்கிரி்டெக்ஸ்் தொடரின் 10டூ13வது பாகங்கள்
யங் மெபிஸ்டோ & அவனது தங்கை லில்லி
Vs யங் டெக்ஸ்! அதுவும் கலரில் வந்துட்டது!
எப்படியும் இது வந்து தானே ஆகணும்!
2022ல இதை எதிர்பாரக்கலாம்.
2030 நமது கௌபாய்கள் எல்லாம் கையில் செல்போனும் துப்பாக்கியுமாக அலைவார்கள். :-)
ReplyDeleteடெக்ஸ் & கார்சன் செல்போனுடன் இருக்கும் ஒரு காட்சிக்கு நண்பர்கள் கேப்ஷன் எழுதினால் எப்படி இருக்கும் :-)
சொல்லென்பர்....செல்லென்பர்....நம் ஸ்டீலின் கவிதைகளைக் கேட்கும் திடம் கொண்டோர் !!
Deleteமக்கா.....நான் வரலை இந்த ஆட்டத்துக்கு !
வரனும் நீங்க வரனும்.கண்டிப்பாக நீங்கள் வருவீங்க... வரவைப்போம். :-) சத்திரியன் பட வசன ஸ்டைலில் இதனை படியுங்கள் சார்.
Deleteஓடணும்....நான் திரும்பிப் பாக்காமல் ஓடணும்....காலிலே செருப்பே இல்லாங்காட்டியும் ஓடணும்...!
Deleteஹாஹா...:-)))
Deleteவிஜயன் சார், இந்த வருட தீபாவளிக்கு வரும் புத்தகங்கள் உடன் ஒரு காமெடி கதையும் வரும்படி பார்த்து கொள்ளுங்கள் சார்.
ReplyDeleteகார்ட்டூன்களில் எஞ்சியிருப்பனவே 2 இதழ்கள் தான் சார் - கிளிப்டன் & ஹெர்லாக் ஷோல்ம்ஸ் !
Deleteஅதில் எதாவது ஒன்றை மறக்காமல் போட்டு தாக்குங்கல் சார்.
DeleteEnakkennavo aadivaasi kadhaigal dhaan innoru roundu varumnu thonudhu
ReplyDeleteஆதிவாசிக் கதைகள் இன்னொரு ரவுண்ட் வருவதெல்லாம் இருக்கட்டும் சார் ; முதல் ரவுண்டே எப்போது வந்தார்களென்று மண்டையைச் சொறிந்து கொண்டிருக்கிறேன் !
Delete///.சொல்லென்பர்....செல்லென்பர்....நம் ஸ்டீலின் கவிதைகளைக் கேட்கும் திடம் கொண்டோர் !!///
ReplyDeleteசின்ன கரெக்சன்."சொல்லென்பர்..அவர். சொன்னபின்போ...உடனே செல்லென்பர்" (ஓடிடுடா கைப்புள்ளன்னு அர்த்தம்)
//// அப்போதுமே மாவீரனாரும், யுவக்கண்ணர்களும் - "மெபிஷ்டாய மெபிஷ்டாய !!' என்று கோஷமிட்டுக் கொண்டேயிருப்பர் ////
ReplyDeleteஎங்களையும் மெபிஸ்டோவையும் இன்றளவும் ஞாபகம் வைத்திருப்பதற்கு மிகவும் நன்றி.
அப்படியே மெபிஸ்டோ யுமா கதைகளை சீக்கிரமாக போட்டால் பேஷா இருக்கும். சஸ்பென்ஸாக நிலவாளியில ஒரு நரபலி சைஸில் ஹார்ட் பவுண்டுல போட்டா சூப்பராகவும் இருக்கும், விற்பனையும் களை கட்டிடும். செய்வீர்களா ?? நீங்கள் செய்வீர்களா???? குறைந்தபட்சம் 10 புக் நான் வாங்குவேன். I V S, LITTLE KANCHEEPURAM
பதினோராவது புக் வாங்க நான் ஆள் தேடுவேன்...நான் தேடுவேன் ..நான் தேடுவேன் சார் !
Deleteநமது நிறுவனத்தின் இருந்து எந்த காமிக்ஸ் புத்தகங்கள் வந்தாலும் வாங்கி படிப்பேன் விஜயன் சார்.
Deleteநானே 10 புக் வாங்குன டெக்ஸ் வெறியர்கள் ஆளுக்கு 3 என்று வாங்கினால் கூட 1500 காப்பிகள் சுலபமா விற்பனை ஆயிடும். இரத்தபடலமும், டெக்ஸ் மெபிஸ்டோவும் காம்போவா போடும் பட்சத்தில் குறைந்தபட்சம் 500 முன்பதிவுகளாவது கண்டிப்பாக வரும்.நானே 10 வாங்குன டெக்ஸ் தலைக்கு பின்னி பெடலெடுத்துடுவாங்க.
Deleteபதினோராவது புக் வாங்க நான் ஆள் தேடுவேன்...நான் தேடுவேன் ..நான் தேடுவேன் சார் !///
Deleteஅப்படி மட்டும் டெக்ஸ் & மெபிஷ்டோ கதையை லிமிடெட் எடிசனாக நீங்க அறிவிச்சித்தான் பாருங்களேன் சார், 3 மாதத்தில் 300 இல்ல 3;000 முன்பதிவே தாண்டிடும் .....டெக்ஸ் கதைகளை வெறுப்பவர் மாதிரி நடிக்கலாம் ஆனால் டெக்ஸ் கதையை வாங்காமல் யாராலும் இருக்க முடியாது....
இரத்தபடலமும், டெக்ஸ் மெபிஸ்டோவும் காம்போவா போடும் பட்சத்தில் குறைந்தபட்சம் 500 முன்பதிவுகளாவது கண்டிப்பாக வரும்.///
Deleteஇது இரத்தப்படலம் புத்தகத்தின் முன்பதிவை அதிகரிக்க செய்யும் ஐடியா போல இருக்கே..
My rating for this month
ReplyDeleteLawarance & David. - 6/10
Lucky Luke. - 7.5/10
Tex Willer. - 9/10
நான் கூட பட்டியலின் முதலிடத்தில் லாரன்ஸ் & டேவிட்டைப் பார்த்த நொடியில் அவர்களுக்குத் தான் டாப் spot தந்து விட்டீர்களோ என்று பயந்தே போய் விட்டேன் நண்பரே !
Deleteநானும் கூட அப்படித்தான் நினைச்சிட்டேன் சார்..ஒரு செகண்ட் ல ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும்... :(:(
Deleteஎதிரிகள் ஓராயிரம்:
ReplyDeleteஎன்னவொரு மாஸ் ஓப்பனிங்,சர்வமும் நானே சாகஸத்திற்குப் பிறகு சரியான ஓப்பனிங் சீன் இதுதான்,அதில் ஸோசானா என்பவரை தூக்கிலிடப்படும் காட்சியில் அதிரிபுதிரியாய் டெக்ஸ் & கோ என்ட்ரி ஆவார்கள்...
இதில் டெக்ஸ் மட்டும் ஸோலோ என்ட்ரி....
வசனமும் நச்-"நமத்துப்போன நால்வர் கூட்டணி ! உங்கள் ஆட்டத்தை நான் கலைத்து விட்டேனா என்ன???"
சகோதரரின் மரணத்திற்கு பழிவாங்கும் டெக்ஸின் மேல் கொலை வழக்குப் படர சட்டத்தின் பார்வையில் தேடப்படும் குற்றவாளியாய் உலாவரும் வில்லர் வெகுமதி வேட்டையர்களுக்கு டேக்கா கொடுப்பதும்,தந்திர உத்திகளில் வீழ்த்துவதும்,எதிர்ப்படும் சூழலில் சிறுபிராயத்தில் பழகிய செவ்விந்தியப் இளவரசி தேஷாவிற்கு இழைக்கப்படும் அநீதிக்கு உரிய நியாயம் கிடைக்கச் செய்வதுமே கதையின் மையக்களம்...
வில்லரின் ஆஸ்தான நாலுகால் நண்பன் டைனமைட்டை பார்த்தவுடன் தோன்றிய சந்தேகமிது,
டைனமைட் முதலில் இடம்பிடித்த சாகஸம் எது???
இறுதியில் உடன் பயணித்த சாகஸம் எதுவாக இருக்கும் என்ற வினாவே???
டெக்ஸிற்கும் கோசைஸிற்குமான சகோதர உறவு பிணைப்பு அலாதியானது...
வன்மேற்கின் பகுதிகளை உண்மைக்கு நெருக்கமாக தூரிகையில் கொணர்ந்துள்ளனர்...
இளம் டெக்ஸ் எனும்போது ஆவணத்தன்மையில் ஆமையாய் கதை நகருமோ என்று ஒரு எண்ணம் இருந்தது,அதை தவிடுபொடியாக்கி கதைக்களம் பம்பரமாய் சுழல்கிறது...
இதுபோன்ற கதைகள் வந்துகொண்டிருந்தால் வரலாற்று நாயகரின் சிறந்த கதைகளை டாப் டென்னில் அடக்குவது கடினம்...
கண்டிப்பாக டாப் 25,டாப் 50 இப்படித்தான் எகிரும்....
வசனங்களும் அசத்தல்தான்,
"ஒரு காந்தத்தைப் போல் நீங்கள் பிரச்சினைகளை ஈர்த்துக் கொண்டேயிருந்தாலும்,அதிசயப் பிறவியாக மரணத்தை வென்று கொண்டேயிருப்பீர்கள் !"
"என் வழியில் உன்னைக் கொணர்ந்த விதியை சபிக்கிறேன் !"
"நரகத்தின் முதல் படிக்கட்டுதான் இது,இன்னும் ஏறவேண்டியது நிறைய பாக்கி இருக்கிறது !"
"விதி ! தூயநெருப்பு,அசுத்தங்களை எரித்துச் சாம்பலாக்கி விட்டது ! "
வில்லர் சாகஸங்களுக்கும்,"இழவு" எனும் வசவு சொல்லிற்கும் ஏதோ தவிர்க்கமுடியா பந்தம் இருக்கும் போல...!!!
டெக்ஸிற்கு எதிரிகள் ஏராளம்,அதனால் செய்யும் சாகஸங்கள் தாராளம்...
கதையின் போக்கில் வில்லர் எடுக்கும் முடிவுகள் திடமானதாகவும்,மனிதம் சார்ந்தவையுமாக அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு....
இளம் டெக்ஸ் மனதை வென்றெடுத்து விட்டார்...
சிலாகிக்க இக்கதையில் உள்ள செய்திகள் எராளாம்...
தனது வாசகர்களை எல்லா வகையிலும் மகிழ்விக்கும் டெக்ஸிற்கு எமது மதிப்பெண்கள்-10/10.
டெக்சின் இளம் நாட்களைப் பற்றி random ஆக அங்கொன்றும், இங்கொன்றுமாய் சில ஆல்பங்களை போனெல்லி முயற்சித்த போதிலும், அவை அனைத்திலுமே மௌரோ போச்செல்லியின் பேனாவே பொதுவாய்ப் பயணித்த போதே எனக்கு அதன் பின்னணியில் ஒரு வலுவான திட்டமிடல் இருப்பதாய்ப் பட்டது ! And அழகாய் இளம் டெக்ஸுக்கென ஒரு crisp 64 பக்க மாதாந்திரத் தடத்தினை சென்றாண்டு உருவாக்கிக் காட்டி சாதித்து விட்டார்கள் ! நாமும் அந்த பார்முலாவை ஈயடிச்சான் காப்பி அடிக்க நினைக்கிறேன் சார் - 2022-லாவது!
Delete// அந்த பார்முலாவை ஈயடிச்சான் காப்பி அடிக்க நினைக்கிறேன் சார் - 2022-லாவது! //
Deleteசூப்பர். இளம் டெக்ஸ் என தனி சந்தாவை உருவாக்குங்கள்.
அருமை,தற்போதைய நிலையில் இது நல்ல முடிவும் கூட சார்,இளம் டெக்ஸின் தனித்தடம் ஸ்திரமான விற்பனைக்கும் வழிவகுக்கும்,வருவாய் எனும் ஆக்ஸிஜன் இருப்பின் தேடுதல்கள் இன்னும் சிறப்பாய் அமையும்...
Delete2030 யும் சுஸ்கி விஸ்கி, ஆர்ச்சி, ஸ்பைடர், இரட்டை வேட்டையர் Reprint கேட்போம்
ReplyDeleteஆர்ச்சிக்கு புதுசே பாக்கியிருக்கும் போது ரீப்ரின்ட் கொடி பிடிப்பானேன் சார் ?
Deleteவெளிநாடுகளுக்கு எப்போது வரும் சார்?
ReplyDeleteலக்கி லூக்கை கையில் ஏந்தி/படிக்க ஆவலாக இருக்கிறேன்...
கொரோனா ஒழிக...
கொரோனா ஒழிந்த தினமே ஏர் மெயில் மறுதுவக்கம் கண்டிடும் நண்பரே !
Deleteஆன்லைன் புக்கிங்குளா ஏதோ பிராப்ளம் மற்றும் டெபிட் கார்டு வழியா ₹450/- அனுப்பினேன். பணம் அக்கௌன்ட்ல டெபிட் ஆயிடுச்சி.ஆனா ஆர்டர் கனபர்மேஷன்வரலை. செக் பண்ணி பாரத்துட்டு இந்த மாத புத்தகங்களை எஸ் டி கொரியர்ல அனுப்புங்க. இமெயில் அனுப்பியிருந்தேன்.
ReplyDeleteI V SUNDAR, LITTLE KANCHEEPURAM
. எப்படித் தான் மனசு வருகிறதோ ..?i
ReplyDeleteஉடனே புத்தகங்களை படிக்க...? i
நேற்றிலிருந்து புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
முதலில் "லயன் காமிக்ஸ் "க்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களையும்
இவ்வளவு தூரம் (காலம்) வளர்ந்து வர காரணமாயிருந்த அத்தனை நல் உள்ளங்கருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(முதல் லக்கி லூக் இதழ் வர உதவியது Uற்றிய அந்த பதிவை - நினைவு கூர்கிறேன்.)
அவருக்கு செய்யும் மரியாதையாகவே தற்போதைய இதழ் தரத்தை பார்க்கிறேன். அருமை சார் .இதழ் தயாரிப்பு மெனக்கெடல்கள்.வாழ்த்துக்கள் சார்... i
2030 நமது சந்தாதாரர்கள் எண்ணிக்கை சுமார் 2030 வந்து இருக்கும். நமது சிறிய வாசகர்கள் வட்டம் மாவட்டம் அளவுக்கு பெரியதாக விரிவடைந்து இருக்கும்.
ReplyDeleteஎனது அபிமான ந (ன்)ம்பர் XIII - யின் வரவு சந்தோசமாயிருக்கிறது. _
ReplyDeleteஇரண்டாவது சுற்றை மறுவாசிப்பு செய்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வயதில் படிக்கும் போதும் ஒரு மெச்சூரிட்டியுடன் படிக்க முடிகிறது./ சில பேரை சிக்கலில் மாட்டி விடுவது தெரிந்தும் ஏன் கொல்லாமல் தவிர்க்கிறார் என்ற கேள்வி எழுகிறது. X 111-யில் உள் மனதில் ஏதோ Plan - ஓடுகிற் தோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
2030ல் மாதம்தோறும் வரும் புத்தகங்கள் எண்ணிக்கை 6 ஆக இருக்கும். அதில் இரண்டு புதிய சந்தா தடத்தில் இருக்கும். ஒன்று இளம் டெக்ஸ் மற்றொன்று கார்டூன்; வாழ்க்கை இன்னும் வேகமாக ஓடுவது போல் மாறிவிடும் அப்போது சிரிப்பதற்கு கூட நேரம் இருக்காது நமக்கு. அப்போது இந்த கார்டூன் சந்தா சிரிப்பதற்கு மட்டுமே என பலர் புரிந்து கொண்டு கார்டூன் கதைகள் மூலம் சுவாசிக்க/சிரிக்க ஆரம்பிப்பார்கள். Mark my words your honor.
ReplyDeleteஎப்போ சார் 2030 வரும்??
DeleteThis comment has been removed by the author.
Delete2030 திலும் குதிரையா?
ReplyDelete2030 திலும் அண்டவெளி சாகசங்கள் வராதா?
2030 திலும் இரத்தப் படலமா?
// கார்ட்டூன்களுக்குப் பேனா பிடிப்பதே ஒரு அலாதி அனுபவமாச்சே சார் !//
ReplyDelete2022 முதல் வருடத்திற்கு குறைந்தது 12 கார்டூன் கதைகளுக்கு நீங்கள் பேனா பிடிக்க புனித தேவன் அருள் புரியட்டும். ஜெய் பகவதி.
லக்கி புக்க பார்த்துக் கொண்டே இருக்க தோன்றுகிறது. அவ்வளவு நேர்த்தி. அட்டைப் படங்கள் சும்மா தெறிக்க விடுகிறது. என் மகன்களுக்காகவே அத்தனை காமிக்ஸ் புத்தகங்களையும் படித்து பாதுகாத்து வைத்திருப்பேன்
ReplyDeleteபத்மநாபன் @
ReplyDelete// நேத்திக்கு வூட்ல,டீவீல ரமணா படம் ஓடிச்சுங்களா? //
நமது ஆசிரியரின் புள்ளி விபரங்களை வைத்து தான் ரமணாவில் அந்த புள்ளி விபர வசனத்தை சேர்ந்தார்கள் :-)