திடீரென ராகுல் சஹர் ரேஞ்சுக்கு வார்த்தைகளில் ஸ்பின் போடுறானே...விசேஷம் என்னவோ என்ற கேள்வியா ? வேறொன்றுமில்லை - spin-offs ; நின்ற நாயகர்கள் ; நொந்த நாயகர்கள் என்றெல்லாம் சமீபப் பதிவுகளில் அலசிய போதே நமது இரண்டாம் வருகையினில் இதுவரைக்கும் ஆஜராகி, ஏதேதோ காரணங்களின் பொருட்டு ரிவர்ஸ் கியர் போட அவசியமாகிப் போனவர்களைப் பற்றிய நினைப்பு மனதில் நிழலாடியது ! சரி....அது தான் 'ரிஜிட்' என்று கவுண்டர் பாணியில் கழித்த பிற்பாடு அவர்களை பற்றிய அலசல் ஏனோ ? என்று கேட்கிறீர்களா ? Absence makes the heart grow fonder என்பார்கள் !! கைக்குள்ளும், காலுக்குள்ளும் சுற்றித் திரியும் வரைக்கும்..."ஏய்..உசுர வாங்காம அப்பாலிக்கா போவியா ?" என்று திட்டும் நாமே, கொஞ்ச காலமாய் அந்த உருப்படி கண்ணில் தென்படாது போகும் சமயம்.."அட...பயல் இருந்தவரைக்கும் கல கலன்னு இருந்துச்சே....இப்போ இடமே வெறிச்சோடிக் கிடக்கே..!" என்று நினைப்பதில்லையா ? அந்த பாணியில், நாம் நேற்றைக்கும், முந்தின நாட்களிலும் துரத்தி விட்ட நாயக / நாயகியரைப் பற்றித் திரும்ப ஒரு அலசலைப் போட்டால் results எவ்விதமிருக்குமோ ? என்ற curiosity தான் ! So இது நம்மளவில் தோற்றோரின் கதையே...!!
Please note : இது சம்பந்தப்பட்ட நாயக / நாயகியரின் தரம் / திறன் மீதானதொரு தீர்ப்பே அல்ல ; தீர்ப்புச் சொல்லும் அளவுக்கு நாம் அப்பாடக்கர்களும் அல்ல ; உலகளவில் சாதித்திருக்கக்கூடிய நாயகர்கள் நமது ரசனைகளுக்கு செட் ஆகாது போவதாலேயே அவர்கள் சொதப்பல்களாகிடவும் போவதில்லை ! இது சும்மா ஒரு ஜாலியான, நம் பார்வைக் கோணங்களிலொரு அளவீடே !! So "என்னமா நீ இந்த நாயகரை மட்டம் தட்டப் போச்சு ?!" என்ற கண்சிவத்தலோடு துடைப்பங்களைத் தேடும் ஆர்வமான FB முஸ்தீபுகள் அனாவசியம் !
பட்டியலின் முத்லிடத்தைப் பிடிக்கப் போகிறவர் சோடா புட்டிக் கண்ணாடியும், தொள தொள ஓவர்கோட்டும் போட்டபடிக்கே சுற்றி வருமொரு டிடெக்டிவ் ! Yes - டிடெக்டிவ் ஜெரோம் தான் வந்து ; நின்று ; புறப்பட்ட முதல் புண்ணியவான் - post 2012 ! "தற்செயலாய் ஒரு தற்கொலை" black & white-ல் வெளியானதொரு 2 பாக mystery த்ரில்லர் ! சொல்லப் போனால் இது நமது முதல் இன்னிங்சின் இறுதியிலேயே தயார் ஆன கதையே ; but முடங்கிக் கிடந்து, விடியலைப் பார்த்தது ரொம்பவே லேட்டாகத் தான் ! நிஜத்தைச் சொல்வதானால் எனக்கு இந்த ஆல்பம் ரொம்பவே பிடித்திருந்தது ! ஆரவாரமில்லா ஒரு டிடெக்டிவ் ; தெளிவான, யதார்த்தமான கதையோட்டம் ; clean சித்திரங்கள் என்று பயணித்த இந்தக் களத்தில், கதையின் plot ரொம்பவே முகம் சுளிக்கச் செய்யும் ரகத்திலிருந்ததில் தான் சிக்கலே ! உங்களில் எத்தனை பேருக்கு நினைவில் நின்ற கதையோ நானறியேன் - but ஒரிஜினலின்படி கிளைமாக்சில் முடிச்சவிழும் இரகசியத்தை நான் கொஞ்சம் மாற்றியமைக்காது போயிருந்தால் இன்னமுமே ரொம்பவே பொங்கியிருப்பீர்கள் !! ஆனால் சொந்தத் தாத்தாவே பேத்தியைச் சீரழித்து, கர்ப்பமாக்கியதாய் வந்த sequence தனை நான் வேறு மாதிரியாய் மாற்றியதற்கு "ஒக்குட்டுப்புட்டான் ஒரிஜினலை !" என்று மாலை மரியாதை நல்கிய கையோடு இந்த சாத்வீக டிடெக்டிவ்வையும் ஓரம்கட்டியதே பலனாகியது ! அன்றைக்கு நடந்த மண்டகப்படிகளின் முழு விபரமும் நினைவில்லை (ஒரு சந்திலே...ஒரு பொந்திலே மட்டும் சாத்து வாங்கியிருந்தா ஞாபகமிருக்கும் ; நாம தான் ஒண்ணு பாக்கியில்லாமல் அத்தனைலேயும் வாங்கியிருக்கோம்லே !!) & அன்றைய சாத்துக்கள் justified தானா என்பதுமே நினைவில்லை ! But முதல் ஓவரிலேயே மனுஷன் அவுட்....ஆனால் நோ-பாலில் என்பது தான் சோகம் !!
அதே பந்து ; அதே மாதிரியொரு விக்கெட் விழுந்தது
சாகச வீரர் ரோஜரின் புண்ணியத்திலும் ! மிரட்டலான சித்திரங்கள் ; அதிரடியான களங்கள் என்று ஓப்பனிங் எப்போதுமே செம அமர்க்களமாய் இருந்தாலும், போகப் போக தள்ளாட்டமே என்ற கதை தொடர்கதையாகிட - "
அடுத்த ஆப்பரேஷன் ரோஜராருக்கே !!" என்று தீர்மானிக்க நேரிட்டது !! கடைசி கடைசியாய், ஒரு கதையை அறிவித்து விட்டு, உரிமைகளை வாங்கி, மொழிபெயர்ப்பும் ; டைப்செட்டிங்கும் செய்துவிட்டு, வெளியிட வேண்டியதற்கு 15 நாட்களுக்கு முன்பாய் பேஸ்தடித்து பின்வாங்கியதும் நடந்தது ! கதை அத்தனை சுமார் ! பரணில் உறங்கும் கதைகள் லிஸ்டில் அதுவும் சேர்ந்தது தான் மிச்சம் !! 60 + கதைகள் ; அமர்க்களமான ஆக்ஷன் நாயகர் ; exotic locations என்றெல்லாம் ஏகப்பட்ட ப்ளஸ்கள் இருக்கும் போதிலும், இந்தத் தொடராய்ச் சரியாய் நமக்கு செட் செய்து கொள்ள முடியாது போவதில் வருத்தமே எனக்கு !
மூன்றாவது பந்தும் ஒரு கூக்ளி ; மூன்றாவது விக்கெட்டுமே ஒரு ஜாம்பவானே! ஆனால் அதை உரக்கச் சொல்ல முனைந்தால் தர்மஅடி தான் விழும் எனக்கு ! இருந்தாலும் நாம் பார்க்காத முட்டுச் சந்துக்களா ? So ஒரு வீரனாய் ; சிரிச்சா மேரியே மூஞ்சை வய்ச்சுக்கினு சொல்லித் தான் பார்க்கிறேனே !! "
டைகர்.....இளம் டைகர்...!!" தட்டை மூக்காரின் இள வயது சாகசங்கள் ஒரு சங்கிலித் தொடராய் ஓடி வர, நாம் அவற்றை ஆண்டுக்கு 2 என வெளியிட, ஆரம்பம் அட்டகாசமாய் இருந்தது ! "
கான்சாஸ் கொடூரன்" ; "
இருளில் ஒரு இரும்புக் குதிரை" என்றெல்லாம் ஹிட்டடித்தோம் ! ஆனால் தொடர்ந்த ஆல்பங்கள் வறண்டு காட்சி தர, வெகு சீக்கிரமே அயர்ச்சி உட்புகுந்ததை மறுப்பதற்கில்லை ! இந்தத் தொடரின் சீனியர் ஹீரோவின் (கேப்டன் டைகர்) அதிரடிக் கதைகளை எழுதியிருந்த சார்லியே அவர்கள் மரித்திருக்க, புதுப் புது கதாசிரியர்கள் இளம் புலிக்கு கதை சொல்ல முயன்று அத்தனை வெற்றியைப் பெற்றிருக்கவில்லை என்பது bottomline ! விடாப்பிடியாய் அவர்களும் அந்த வடக்கத்தியர் vs தெற்கத்தியர் உள்நாட்டு யுத்தத்தையே பிடித்துத் தொங்கிட, நம்மிடையே கொட்டாவிகள் விட்டம் வரை விரிந்ததை உணர முடிந்தது ! ஒரு கட்டத்தில் கொரியர் டப்பிக்களைத் திறக்கும் போதே உங்களுக்கெல்லாம் கை நடுங்கிடுமோ ? என்ற பயம் மேலோங்கிட - இளம் புலிக்கு டாட்டா சொல்லி வைத்தோம் ! Oh yes - இங்கே எனது தவறுகள் இல்லாதில்லை தான் ! Maybe தோர்களின் தொகுப்புகள் ; ட்யுராங்கோவின் தொகுப்புகள் போல Young டைகரையும் கையாண்டிருப்பின், results சற்றே தேவலாமாக இருந்திருக்கலாம் என்பதை மறுக்க மாட்டேன் ! But end of the day - தொடரின் கதைவலிமை அத்தனை சுகமில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை ! Therefore கூக்ளி - கூக்ளி தான் !
விக்கெட் # 4 பற்றி எழுதினால் bad bad words-லே திட்டு வாங்க வேண்டிவரும் என்பது புரிஞ்சூ ! But கடமைன்னு வந்துட்டா இந்த டெலெக்ஸ் பாண்டியன் ஒரு கர்ம வீரன் என்பதால் ஓங்கி அந்தப் பெயரையும் உச்சரித்தே விடுகிறேன் !! இன்னும் சொல்லப் போனால் அதுவொரு பெயரல்ல ; நம்பர் மட்டுமே !!
XIII !!! Yes - நமது பெயரில்லா மறதிக்கார இரத்தப் படல நாயகரே !! முதல் சுற்றில் 18 மறக்கவியலாக் கதைகளின் உபயத்தில் ஒரு அசுர உயரத்தைத் தொட்டு நிற்கும் cult hero ! So அவரது இரண்டாம் சுற்றினை படைப்பாளிகள் அறிவித்த போது நாமெல்லாம் ஆர்ப்பரித்தது நினைவுள்ளது ! ஓவியர் வில்லியம் வான்சுக்கு சற்றும் சளைக்கா சித்திர பாணியும் கண்ணில்பட - சப்புக் கொட்டினோம் காத்திருக்கும் விருந்தை எண்ணி !!
ஆனால்...ஆனால்...
அது வந்து....well ....I mean ....என்ன சொல்ல வர்றேன்னா....இப்போ பாத்தீங்கன்னா....mayflower...mayflower ன்னு ஒரு கப்பல் ; ஆமா...ஒரேயொரு கப்பல் தான்.....அது வந்து...அதிலே வந்து....ஆங்...எங்கே விட்டேன்...ம்ம்ம்..கப்பல்லே ...லேசா பசிக்கிற மாதிரி இருக்கு....ஒரு வா சாப்டுட்டு வந்து தொடர்றேனே... ? நேராய் அமெரிக்கக் குடியேற்ற நாட்களுக்குப் போய் வரலாற்றோடு பின்னிப் பிணைந்து ; சம கால அரசியலோடும் ஐக்கியமாகி,அப்புறம் யூதர்கள் ; உயர் குலத்தோர் ; இஸ்லாமிய தீவிரவாதம் என்றெல்லாம் track எப்படி எப்படியோ பயணிக்க - இந்த இரண்டாம் சுற்றின் ஆல்பங்களை எடிட் செய்வதற்குள் தலை நிறையவே நரைத்துப் போய்விட்டது ! And துவங்கிய வேகத்திலேயே ஒரு சந்தில் வண்டியை நிறுத்திய கையோடு அதன் புது ஓட்டுநர்களும் இறங்கிக் கொண்டுவிட - ஒரு சிகரம் தொட்ட தொடருக்கு இப்படியொரு sequel தேவையா ? என்ற எண்ணத்தைத் தவிர்க்க இயலவில்லை - at least என்னளவிற்கு !! வான் ஹாம் எனும் அசாத்தியரின் உயரம் என்னவென்பது இப்போது தான் இன்னமும் தூக்கலாய்த் தெரிகிறது என்பேன் !
எத்தனையோ புது சுவாரஸ்ய மார்க்கங்களில் நண்பர் ஜேசனைப் பயணிக்கச் செய்திருக்க வாய்ப்புகள் இருந்த போதிலும், இந்த Mayflower ரூட்டை கதாசிரியர் பிடித்திருக்க நிச்சயமாய் ஏதோ வலுவான காரணங்கள் இருந்திருக்க வேண்டும் தான் ; ஆனால் அதனைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் நமக்கில்லாது (at least எனக்கில்லாது ) போனது தான் வருத்தமே !! XIII எனும் அந்தப் புதிர் பிறவியினை இன்னமும் ஒருவாட்டி வான் ஹாம் கையில் எடுத்தால், வண்டி பென்ஸ் ரேஞ்சுக்கு உறுமும் என்பதில் சந்தேகமில்லை ; ஆனால் அது நடைமுறை காணுமா என்பது தான் சிக்கலே !!
தலை காட்டிய வேகத்துக்கே தலை தெறிக்க ஓட நேரிட்ட முதல் வீராங்கனை - "
விண்ணில் ஒரு வேங்கை" இதழின் நாயகியே ! அம்மணியின் பெயர் எனக்கு நினைவில்லை ; ஆனால் நீங்கள் வாளி வாளியாய் கழுவிக் கழுவி ஊற்றியது மட்டும் பளிச்சென்று நினைவுள்ளது !! "
எவனோ எங்கேயோ, எப்போதோ போட்ட சண்டையையெல்லாம் இன்னிக்கு இங்கே நாங்க படிச்சு எந்த ஆணியை பிடுங்க போறோம்பு ?" என்று மூஞ்சில் பன்னீர் சோடாவைத் தெளித்துத் தெளித்து அடித்த அழகை இன்றைக்கெல்லாம் சிலாகிக்கலாமே !! அன்றைக்கு மறுபடியும் பிளைட் ஏறின புள்ளை ; மறுக்கா கீழே இறங்கவே இல்லியாம் !! பராகுடா கப்பலானது சமுத்திரமெல்லாம் சுற்றுகிறதெனில், அந்த Spitfire விமானமோ வானமெலாம் வலம் வருகிறதாம் !!
அப்புறம் கெக்கே பிக்கே வென தரையில் உருண்டு சிரித்து மானத்தை ஏலமிட மாட்டீர்கள் என்ற உத்திரவாதம் தந்தீர்களெனில் ஒரு இரகசியத்தைச் சொல்கிறேன் - காதுகளைக் கொண்டு வாருங்கள் கிட்டே !! இந்த பெண் பைலட் கதைக்கு உரிமைகளை வாங்கிய சமயம் எக்கச்சக்கக் கனவுகள் எனக்குள் - இது பின்னிப் பெடலெடுக்கப் போகும் தொடராய் அமைந்திடுமென்று !! அந்நேரம் தான்
THE KING SPECIAL என்ற பெயரில் ஒரு TEX ஸ்பெஷல் இதழ் வெளியிட்டிருந்தோம் ! அதே பாணியில் "
THE QUEEN SPECIAL" என்ற நாமகரணத்தோடு - "
லேடி pilot + மாடஸ்டி + ஜூலியா" என்ற முக்கூட்டணியைக் களமிறக்க உள்ளுக்குள் ஒரு மஹா சிந்தனை உருப்பெற்றிருந்தது !! பின்னே எப்படியோ அதை மறந்து விட்டேன் ! எந்தச் சாமி புண்ணியமோ - நீங்களும் தப்பித்தீர்கள் ; நானும் தப்பித்தேன் !! யப்பா !!!
சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் இதழை விடவும் பெரிய கார்ட்டூனாகிப் போயிருக்கும்டா சாமி !! Just miss !!! But இதோ - 2014 முதலாய் ஒரு பெரும் தொகையைத் தன்னுள் அடக்கிக் கொண்டு பீரோவினில் அடங்கிக் கிடக்கும் இந்தத் தொடரின் பாக்கி இதழ்கள் !! ரொம்பவே காஸ்ட்லியான புத்திக் கொள்முதல் தான் !!
சாத்துப் பட்டியலில் அடுத்த இடமோ - ஒரு இத்தாலிய cult நாயகருக்கு ! "
Danger டயபாலிக்" என்றால் இத்தாலியில் ஷாரூக் கான் ; ரன்வீர் கபூர் ரேஞ்சுக்குப் பிரபல்யம் ! அவரது விளம்பரத்தைப் பார்த்த நொடியே ஒரு 50 இதழ்களை இத்தாலிக்குப் பார்சல் செய்து விடலாம் ; ரசிகர் மன்றத்தினர் வரிசையில் நின்று பணம் அனுப்பிடுவார்கள் ! நாமும் பெரும் எதிர்பார்ப்புகளோடே இவரைக் களமிறக்க, முதலில்
"அட..." என்ற நீங்கள் அடுத்து "
அடேய் !!" என்று கூக்குரலிடத் துவங்கிய சமயம் டர்ராகிப் போயிற்று எனக்கு ! 2014 என்று ஞாபகம் ; ஆண்டின் இறுதியில் review கோரியிருந்தேன் நாயக / நாயகியரைப் பற்றி ! "சும்மா கிழி..கிழி..கிழி" என்று இந்த முகமூடிக்காரரை போட்டுப் புரட்டோ புரட்டென்று வதம் செய்து விட்டீர்கள் ! "
நாளைக்குச் சாகப் போற கிழவியை கூட கொலை பன்றானே !!" என்று இந்த anti hero-வைப் பப்படமாக்கியிருந்தீர்கள் ! நிறைய நாயகர்களை வெளுத்து வெள்ளாவிக்குப் போட்டிருக்கிறீர்கள் தான் ; ஆனால் இந்த ரேஞ்சுக்கு நீங்கள் பொங்கி நான் பார்த்தது அண்ணன் DD கேசில் தான் !! மேற்கொண்டு ஒரு 4 இதழ்களுக்கு உரிமைகளை வாங்கிட எண்ணியிருந்தவன் சத்தமின்றி வாலைச் சுருட்டிக் கொண்டதே மிச்சம் ! Truly sad !!
அடுத்த பூரண கும்ப மரியாதை அரங்கேறியது இன்னொரு இத்தாலியருக்கே !! திருவாளர்
மேஜிக் விண்ட் !
"ஆத்மாக்கள் அடங்குவதில்லை" அழகான ஆரம்பமாகிட,
"உயரே ஒரு ஒற்றைக் கழுகு" fantasy ஜானருக்கு வழிகாட்ட - "
நீங்க தக தக ன்னு எம்.ஜி.ஆர் போலவே இருக்கீங்க தம்பி!" என்று மே.வி.யிடம் உற்சாகத்தில் சொல்ல நினைத்தேன் நான் ! ஆனால் தொடர்ந்த இதழ்களையும் சரி,இந்த ஜடாமுடிக்காரரையும் சரி -
"நீ அதுக்கு சரிப்பட்டு மாட்டே...நீ சுகப்பட மாட்டே !!" என்று நீங்கள் கட்டம் கட்டிட , கீழ்வானத்தை வெறித்துப் பார்த்தபடிக்கே "
போனால் போகட்டும் போடா !!" என்று பாடிக் கொண்டே போகத் தான் தோன்றியது ! இன்றைக்கும் எனக்குள் ஒரு குறு குறுப்பு ஓடுவதுண்டு தான் ; maybe இவரை black & white-ல் சிம்பிளாக வலம் வரச் செய்தால் எவ்விதமிருக்குமென்று !! 130 + கதைகள் உள்ளதொரு தொடரானது அத்தனை மத்திமமாகவா இருந்திடப் போகிறது ?
Next in the list : ஹெர்மனின் western நாயகர் !! நெடும் கயிறு வழங்கப்பட்ட பிற்பாடும் வண்டி ஸ்டார்ட் எடுக்காது நொண்டிக் கொண்டேயிருக்க, பொறுமையிழந்து நாம் கை கழுவ முனைந்தது
கமான்சே தொடரை !! When it started off - என்னுள் ஏகப்பட்ட கனவுகள் - கேப்டன் டைகர் ரேஞ்சுக்கு இந்தப் புள்ளையாண்டானும் வன்மேற்கில் சூறாவளியாய் சுற்றி வருவாரென்று ! "
யுத்தம் உண்டு எதிரி இல்லை" இதழ் சும்மா பட்டாசாய்ப் பொரிய, செம குஷி எனக்கு !! ஆனால் சிறுகச் சிறுக வேகம் கூடும் ; கதைகளில் வீரியம் எகிறுமென்று உங்களைப் போலவே நானும் காத்திருக்க, எகிறியதோ நமது பொறுமைகளின் தெர்மாமீட்டர் தான் ! அசாத்திய ஓவிய பாணி ; அடித்துத் தூக்கும் அடர் வர்ணங்கள் ; ஆனால் வெகு யதார்த்த ; மிகையிலாக் கதைக்களங்களே இந்தத் தொடரின் ஒட்டு மொத்த template என்பது புரிந்த போது - "
போட்றா ரிவர்ஸ் கியரை !" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் ! குறை என்று சொல்ல ஏதுமிலா தொடரே ; அதே சமயம் நிறையென்று சிலாகிக்கவும் நிறைய இல்லாதது தான் நெருடலே !!
இன்னொரு ஹெர்மன் படைப்பு ; இன்னொரு ரிவர்ஸ் கியர் தருணமும் நமக்குப் பரிச்சயமே ; but still அது தற்போதைக்கு நம்மிடையே லைவ்வாக உள்ள தொடர் என்பதால் no comments !!
"
ஆனாலும் இந்த சொடலைமுத்து ரொம்ப strict-பா" moment புலர்ந்தது நமது மதிமுக
(சேர்த்தே படிக்கணும் ; தேர்தல் நேரமும் அதுவுமுமாய் ம-தி-மு-க என்று படித்து குழப்பிக்கப்படாது !!) அழகியின் சமாச்சாரத்தில் தான் ! வான் ஹாம் எனும் கதாசிரிய ஜாம்பவான் ;
LADY S எனும் அட்டகாச ஹீரோயின் ; வெகு நவீன கதைக்களங்கள் ; மிரட்டும் ஓவியங்கள் ; குளிரூட்டும் வர்ணங்கள் என்றதொரு formula - வெற்றிக்கு இருநூறு சதவிகிதம் உத்திரவாதம் என்றே சொல்வேன் - நூற்றுக்குத் தொண்ணூறுவாட்டி !! ஆனால் நடந்ததென்னவோ வேறு மாதிரி ! "
விடை கொடு ஷானியா" என்று அமர்க்களமாய் தலைகாட்டிய
LADY S அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நம் மனங்களை ஆட்சி செய்யப் போகிறாரென்ற எண்ணத்தில் நான் ஜாலியாக இருந்தேன் ! ஆனால் முதல் ஆல்பத்துக்கு அப்பாலிக்கா அம்மணியின் கதைகளும், அவரது கதாப்பாத்திரம் எடுத்திட்ட மாற்றங்களும், நம்மை அத்தனை ரசிக்கச் செய்யாது போக - இந்தப் பத்தியின் முதல் வரி நடைமுறை கண்டது ! "
மதிமுக அழகியானாலும் சரி ; அண்டர்வேரை மாத்திரமே போட்டுக் கொண்டு கூரைகளில் பயணிக்கும் சொப்பன சுந்தரியாக இருந்தாலும் சரி - கதை சுகப்படாட்டி சட்னி சட்னி தான் ; டாட்டா....bye bye தான் !!" என்று படு தீவிரமாய் நின்று விட்டீர்கள் !! Gone with the wind...!
கிட்டத்தட்ட இதே நிலவரம் தான் பென்சில் இடையழகி
ஜூலியா விஷயத்திலுமே !
"என்னலே.... பாப் வய்ச்ச இந்தக் கொத்தவரங்காய்ப் பிள்ளை சண்டையே போட மாட்டேன்கி..? நெதம் பேசியே கொல்லுதே ?" என்றபடிக்கு அந்த கிரிமினாலஜிஸ்டை நீங்கள் கடைந்து எடுக்க, நான் தான் "அய்யா..தர்மவான்களே....
ஒரு ஓரமா அம்மணி இருந்திட்டுப் போகட்டுக்குங்கண்ணா !" என்று கூத்தாடி இடம் போட்டு வருகிறேன் ! ஆனி முடிஞ்சு ஆவணி துவங்குறச்சே, இந்தாண்டாவது பொண்ணு டாப்பா வந்ததோ - நான் தப்பித்தேன் ! இல்லாங்காட்டி நடு மண்டையில் ஒரு முட்டை பரோட்டா போடப்படுவது நிச்சயம் !!
சீரியஸ் நாயக நாயகியரை கட்டம் கட்டிய பட்டியலைத் தொடர்வது சிரிப்பு நாயகர்களின் கல்தா பட்டியல் ! எனது அவ்வப்போதைய புலம்பல்களின் புண்ணியத்தில் - அவர்களை எல்லாம் நாம் அடிக்கடி நினைவு கூர்ந்திடுகிறோம் தான் ! Anyways - வரலாறு முக்கியம் என்பதால் இங்கே பதிவிட்டு விடுகிறேனே :
- SMURFS
- சுட்டிப் புயல் பென்னி
- ரின்டின் கேன்
- லியனார்டோ தாத்தா
இவர்களை ஓரம்கட்ட நேர்ந்த சூழல்கள் பற்றி நிறையவே பேசி விட்டதால் no more மறுக்கா ஒலிபரப்பு !!
இந்தப் பட்டியலில் இருந்திட வேண்டிய இன்னொரு பெயர் "
ஸ்டீல்பாடி ஷெர்லாக்" !! பக்க நிரப்பிகளாய் வந்த இந்த ஷெர்லாக் ஹோம்ஸின் பகடி - எனது ஆதர்ஷ கார்ட்டூன்களுள் ஒன்று ! அந்தக் கோக்கு மாக்கான ஓவியங்கள் ; டாக்டர் வாட்சன் ; இன்ஸ்பெக்டர் லெஸ்டிரேட் ஆகியோருக்கு தரப்பட்டிருக்கும் பாத்திரங்கள் என எல்லாமே செம ரவுசு ! And இவருக்குப் பேனா பிடித்த ஒவ்வொருமுறையும் உற்சாகம் பீறிடும் உள்ளுக்குள் ! Sadly உங்களுக்குப் பிடிக்கக் காணோம் !! So தோற்றோர் பட்டியலில் உழல்கிறார் இந்தச் சிரிப்பு டிடெக்டிவ் !
இவர்கள் போக, விளிம்பு நிலையில் ஊசலாடும்
மாடஸ்டி பிளைசி ; ஜில் ஜோர்டன் ; டைலன் டாக் ; மதியிலா மந்திரி போன்ற நாயகர்களும் உண்டு தான் danger zone-ல் !! ரசனைகளின் ஓட்டம் காட்டாற்று வெள்ளம் போல ; எந்தவொரு தடுப்பையும் சட்டை செய்யாது ஓடியே தீரும் போலும் !! So அதுவே உலக நியதி எனும் போது பொம்மை புக்குகளின் நாயகர்களெல்லாம் விதிவிலக்காகிட முடியுமா - என்ன ?
Before I sign off, இரண்டே கேள்விகள் மாத்திரமே !
1.மேலுள்ள பட்டியலின் 'ரிஜிட்' நாயக /நாயகியரின் கல்தா குறித்து உங்கள் அபிப்பிராயங்கள் ப்ளீஸ் ?
2 .ஒரேயொரு நாயகரையோ, நாயகியையோ மறுபடியும் வண்டியில் ஏற்றுக் கொள்ளும் உரிமை உங்களிடமிருப்பின், யாருக்கு இடம் தருவீர்களோ ? Who do you feel deserves another go ?
கிளம்பும் முன்பாய், முட்டுச்சந்து முன்னூறு கண்ட மூத்த புலவர் முத்துவிசயனாரின் பொன்வரிகள், மீண்டும் உங்கள் நினைவூட்டலுக்கு :
வந்து...நின்று..வென்றவர் பலர்..!
வந்து..நின்று..சென்றவர் சிலர்... !
நின்றவரெல்லாம் வென்றவரல்லர்....
சென்றவரெல்லாம் தோற்றவருமல்லர் !!
ஏ..டமுக்கு...ஏ அஜிக்கு...!! ஏ..அஜிக்கு..ஏ டுபுக்கு !!
Bye all ! See you around..! Have a fab weekend !!