நண்பர்களே,
வணக்கம். எனக்கு ஒரு ஆசை !! ஒரேயொரு தபா நம்மாட்களை அமெரிக்க தேர்தல் நேரத்தில் அங்கனக்குள்ளே கூட்டிட்டுப் போய் களத்திலே இறக்கி விட்டுப் பார்க்கணும் !! நம்ம தேர்தல் பிரச்சார யுக்திகள் ; களப்பணிகள் ; பொட்டி கடத்தல் ; வேட்பாளர் கடத்தல் ; கோஷங்கள் ; மார்தட்டல்கள் ; பன்ச் டயலாக்குகள் ; பேன்னர்கள் ; கட்-அவுட்கள் ; நல்ல "குத்துக்கள்" ; நொள்ளைக் குத்துக்கள் என்று ராப்பகல் பாராது நாம் சுற்றிச் சுழல்வதைப் பார்த்தாக்கா - வெள்ளை மாளிகையே சரண்டர்னு வெள்ளைக் கொடியாட்டி விடாதா ? மனது வைத்தால் - பவர்ஸ்டாரைக் கூட பவருக்கு கொணரும் பவர் நமக்குண்டு என்பதை நேற்றைக்கு இங்கே தரிசித்த அனுபவமிருக்கிறதே - ஆத்தாடியோவ் ; ஆயுசுக்கும் மறவாது !! லேசாயொரு கோடு போட்டதுக்கே - தார் ரோடு காண்டிராக்ட் ; எட்டு வழிச் சாலை காண்டிராக்ட் என்று flyover கட்டாத குறையாய் அதகளம் செய்துவிட்டீர்களே ; இதுக்கு முன்னே ஆளாளுக்கு பம்பாயில் என்னவா இருந்தீங்க சாமீஸ் ? Absolutely smashing show !!! நேற்றைய ஒரு நாளின் பார்வைகளின் எண்ணிக்கை மட்டும் : 3295 !!!!!
இதில் பெரிய கொடுமை என்னவென்றால் - இந்த மும்முனைப் போட்டியில் பெரிய fighter ஆக இருப்பாரென நான் எதிர்பார்த்த இத்தாலியின் பிரதிநிதி - கந்துவட்டிக் கோவிந்தன் ரேஞ்சுக்கு பொசுக்கென்று பின்தங்கி விட்டதே !! போட்டி மூன்று contestants மத்தியிலும் கடுமையாய் இருக்குமென எதிர்பார்த்தால் - வெகு சீக்கிரமே அது - ஆப்ரிக்கா vs அமெரிக்கா என்ற நேருக்கு நேராகி விட்டது !!
KENYA !!!!
உள்ளதைச் சொல்வதானால் - எனது வோட்டு இக்கடயே இருந்திருக்கும் !! முற்றிலும் புதிய களம் ; ட்ரெண்ட் தொடரினில் நாம் பார்த்து ரசித்த கதாசிரியர்-ஓவியர் கூட்டணி ; நிறைய ஆக்ஷன் ; நிறைய fantasy ; மெலிதான விஞ்ஞானம் என்று இந்த 5 பாக த்ரில்லரில் நாம் ரசித்திட ஏகப்பட்ட சமாச்சாரங்கள் உண்டு !! Icing on the cake - இந்தத் தொடர் ஒரு நீண்டு செல்லும் பயணத்தின் முன்னோடி மாத்திரமே ! KENYA - 5 பாகச் சுற்று நிறைவுற்ற பின்பாய் அடுத்து NAMIBIA என 5 பாகங்கள் ; அதற்கும் பின்பாய் AMAZONIA என இன்னொரு 5 part த்ரில்லர் என்று ஏகமாய் புதுவுலக தரிசனங்கள் காத்துள்ளன !! ஆனால் KENYA-வின் வாசக ஸ்கேன்லேஷன் சுற்றில் இருப்பதாலேயே ஆப்பிரிக்காவுக்கு அல்வா கிட்டியுள்ளதென்பது உங்களின் பின்னூட்டங்களை படிக்கும் போது சங்கடத்தோடு புரிகிறது !
நாமிந்தத் தொடரை முயற்சிப்பதாகவுள்ளோம் என்பது ஸ்கேன்லேஷன் முயற்சியின் பின்னணியில் உள்ளோருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் ; ஆனால் இது போன்ற ஆர்வங்களின் மேலோங்கல்களின் flipsides இத்தகைய நெருடல்களே !! Please guys - வரும் நாட்களிலாவது creative-ஆக ஏதேனும் செய்திட நீங்கள் விரும்பும் பட்சத்தில், உங்கள் உழைப்புகளையும், நேரங்களையும் நமக்குத் தந்திட முன்வாருங்களேன் - நண்பர் கார்திகைப் பாண்டியனைப் போல ; நண்பர் J -வைப் போல ?!! சின்னதொரு வட்டத்தோடு நின்று கொள்ளும் உங்களின் மெனெக்கெடல்களை நமது வட்டத்தின் முழுமைக்கும் கொண்டு சென்றது போலவும் இருக்குமன்றோ ? And 15 ஆல்பங்கள் கொண்டதொரு நெடும் பயணத்தின் முனைப்பிலேயே இன்றைக்கு நாம் மோவாயைத் தடவிக் கொண்டு நிற்கும் சூழல்களும் எழுந்திராதல்லவா ? பவுன்சரின் புதுக் கதைகளும் வெகு சமீபமாய் இதே கதிக்கு ஆளாகியிருப்பதைக் கேள்விப்பட்டேன் ! Phew !!!
The same goes for pdf files of our back issues too guys !! வாட்சப் குழுக்களில் நமது முந்தைய இதழ்களின் pdf-களை ஸ்கேன் செய்து சுற்றில் விடுவதுமே - பின்னாட்களில் நாம் அவற்றை மறுபதிப்பிட எண்ணிடும் பட்சத்தில் பொதுவான ஆர்வங்களை மட்டுப்படுத்திடாதா ? Grey மார்க்கெட்டை ஒடுக்க இது செம வழி என்று சொல்லும் அதே மூச்சில் - இது நமது எதிர்கால prospects-களையுமே ஒடுக்கிடக்கூடும் என்ற கோணத்தில் சிந்தித்துப் பாருங்களேன் ப்ளீஸ் ? நமது மார்க்கெட் சின்னது ; நமது ஆற்றல்களும் சன்னமானது எனும் போது - எந்தத் திக்கிலிருந்தும் சாத்தியமாகிடும் ஒத்தாசைகளும் நமக்கு பலம் தர வல்லவைகளே !! ஆனால் பலங்களே, நமது பலவீனங்களுமாய் ஆகிடச் செய்வானேன் ? இது யாரை நோக்கியும் விரல் நீட்டும் எண்ணத்துடனான பதிவல்ல ; KENYA சார்ந்த disappointment-ன் வெளிப்பாடு மாத்திரமே ! So இதன் மீதான விவாதங்களில் இறங்கி இந்த நொடியின் சந்தோஷ மெருகைக் குலைத்துக் கொள்ள வேண்டாமே - ப்ளீஸ் ? வரும் நாட்களிலாவது இந்த அரூப இணைதடம் வேண்டாமே - என்பது மாத்திரமே இந்த நொடியின் எனது கோரிக்கை !!
தொடரும் நாட்களில் உரிமைகளுக்கான ஏற்பாடுகளை செய்த கையோடு - FUN WITH 500 அறிவிப்பினை உங்கள் முன் கொணர்ந்திடுவேன் !! அதற்கு முன்பாய் - ஆக்டொபர் இதழ்கள் என்றொரு சமாச்சாரத்தை மறந்தே போயிருந்தோமல்லவா ? அதனை நினைவூட்டுகிறேன் - வியாழன்று உங்கள் கூறியர்கள் புறப்படும் guys !! Bye all..See you around !!
P.S : அச்சச்சோ....தீர்ப்பே சொல்லாமல் விட்டுப்புட்டேனா ??
Without a doubt : அமெரிக்கா தான் !!
P.P.S : அப்புறம் KENYA முழு தொடருமே வரவுள்ளது !! ஜம்போவில்
P.S : அச்சச்சோ....தீர்ப்பே சொல்லாமல் விட்டுப்புட்டேனா ??
Without a doubt : அமெரிக்கா தான் !!
P.P.S : அப்புறம் KENYA முழு தொடருமே வரவுள்ளது !! ஜம்போவில்
சூப்பர்,first
ReplyDeleteசார் அப்போ kenya confirm தான?
Deleteசாரி சார். பவுன்சரின் மொழியை பேர்த்துப் பார்க்க ஆசைப்பட்டது அடியேன்தான். தர்மசங்கடமான சூழல். பவுன்சர் 8&9 மட்டுமே நாங்கள் செய்ய நேரிட்ட அவசியத்தை நம் நண்பர்களோடு விவாதித்தும் உள்ளோம். அதே கதையை தாங்கள் வெளியிட்டால்..இதே மொழிபெயர்ப்பை பயன்படுத்துவதில் எவ்விதத்திலும் எனக்கு ஆட்சேபணையில்லை. பிரதிபலன் எதையுமே நான் எதிர்பார்க்கவில்லை. தங்களது கொள்கைளுக்கு மாறாக ஆபாசமும் இரத்தமும் பல நூறு மடங்கு தெறிக்கிற கதை என்கிற ஒரே காரணத்தால் லயனில் வரவே முடியாத கதை என்கிற அளவுகோலை வைத்துக் கொண்டு செய்து விட்டேன். ஆசிரியரும் நம் நண்பர்களும் மன்னிக்கவும்.மற்றபடி ஏதேனும் கதையை மொழிபெயர்த்துப் பார்ப்பதை விளையாட்டாக முயன்று வந்திருக்கிறேன் சார். சீரியஸாக ஏதும் இல்லை. ஏதேனும் ஆங்கில கதையை ஆறு மாதங்கள் முன்பாக கொடுத்தால் பணி இடைவேளையில் செய்து பார்க்கிறேன். தங்களுக்கு ஏற்புடையதாக இருப்பின் நம்ம லயனில் வெளியிடுங்களேன் சார். தங்களது முடிவே இறுதியானது.. நன்றி..
Deleteசார்....2 ஆண்டுகளுக்கு முன்புவரை KENYA வை நாம் அணுக நினைத்திருப்போமா ? 2012-ல் taboo என்று நாம் ஒதுக்கிய ஜேசன் ப்ரைஸை, 2016-ல் நாமே வெளியிடவில்லையா - கொண்டாடவில்லையா ?
Deleteசிறுகச் சிறுக நாட்களும், அகவைகளும், ரசனைகளும் மாறும் போது பார்வைக் கோணங்களும், அவற்றின் நீட்சியாய்த் தேர்வுகளும் மாறுவது இயல்பு தானே ? So இன்றைக்கு தொடப் போவதில்லை என்றதொரு ஆல்பத்தை என்றைக்குமே நாம் தொடப் போவதில்லையென நீங்களாகவே அனுமானிப்பது எவ்விதம் பொருத்தமோ ? And என்றேனும் அந்த ஆல்பத்தை நாம் வெளியிடத் தீர்மானிக்கும் பட்சத்தில் . ஸ்கேன்லேஷன் என்ற பெயரில் சுற்றி வந்த அதே மொழிபெயர்ப்போடு களமிறக்குவோம் என்ற எதிர்பார்ப்பிலும் லாஜிக் தான் இருக்க முடியுமா ? அல்லது sensitive ஆனதொரு கதையின் மொழிபெயர்ப்பைத் தான் கையில் எடுக்காது "வேலை லேசு !!"" என்று ஒதுங்கிட என் மனம் ஒப்புமென்று நினைக்கிறீர்களா ?
Live ஆக நாம் கால்பதித்திருக்கும் ஒரு தொடரினுள் இது போன்ற முயற்சிகள் நிச்சயமாய் என் அபிமானத்தை ஈட்டப் போவதில்லை !! Phew !! ரொம்பவே வருத்தமாகவுள்ளது !!
Delete//லட்சக்கணக்கில் இருக்கும் franco-belgian கதைகள் அனைத்தும் நமது சிறிய தடத்தில் வரக்கூடிய சாத்தியம் இல்லை என்பதால்.//-1
ஏற்கனவே நசிந்திருக்கும் தொழிலை செய்து வருவோர்க்கு இது ஏற்பான பதிலா இருக்குமா தெரில, ஆனா இனிமேலாவது நண்பர்கள் மொழி பெயர்க்காமலோ அல்லது பிறரிடம் வாங்குவத தவிர்த்தல் நலம், ஏன்னா ஆசிரியர் வெளி விடுவத தடுக்க எண்ணிய நண்பர்களும் இங்குண்டே ! இனியாவது ஏற்காமல் இருப்போமே?
//Live ஆக நாம் கால்பதித்திருக்கும் ஒரு தொடரினுள் இது போன்ற முயற்சிகள் நிச்சயமாய் என் அபிமானத்தை ஈட்டப் போவதில்லை !! Phew !! ரொம்பவே வருத்தமாகவுள்ளது !!//
Deleteசார் ஆர்வக்கோளாறுல நண்பர் செய்தத போல உள்ளது, இனி இதனை ஆதரிக்க மாட்டார்னு நம்புவோமாக
This comment has been removed by the author.
ReplyDeleteமாலை வணக்கங்கள் சார்🙏
ReplyDeleteஅலோ ஹாய்...ஹாய்...
எல்லோருக்கும் வணக்கம்
கென்யா படங்கள் மனதை அள்ளுது.
ReplyDeleteAgain,
ReplyDelete10க்குள்ள 1....
:-))
சார், இப்போது அமெரிக்கா உண்டா? இல்லையா? இல்லை கென்யாதானா?
ReplyDeleteஇத்தாலி b/w என்ற காரணத்தால் ஓரம் கட்டப்பட்டது, இதுவே colour ஆக இருந்தால் நீங்கள் எதிர்பார்த்த மாதிரி நடந்திருக்கலாம்.
ReplyDeleteவிஜயன் சார், அப்ப கென்யாதான் fun 500 இதழாக வருகிறதா? கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்?
ReplyDeleteகடைசியில் பிம்பிலிக்கி பிளாகி போல் ஆகிவிட்டது, கவலை வேண்டாம் நாளை இன்னொரு பதிவு போட வச்சிடலாம்.
Deleteஏற்கனவே முடிவு பண்ணிட்டார் போலிருக்கே..
Deleteஅச்சச்சோ....தீர்ப்பே சொல்லாமல் விட்டுப்புட்டேனா ??
DeleteWithout a doubt : அமெரிக்கா தான் !!
ஓகே,வெல்கம் பேரிக்கா....
DeleteOk,
DeleteSorry I don't buy that edition.
Thanks
வெல்கம் பேரிக்கா..../// என்னாது பேரிக்காவா ட்ரம்ப் கிட்ட சொல்லி கொமட்டுலயே குத்த சொல்றேன்.
DeleteThank you sir for your information..
Delete.
ReplyDeleteகென்யா - எனக்கு பிடித்தமான ஒரு கதைகளும். அதிலும் உங்கள் மொழிபெயர்ப்பில் நிச்சயம் பலமடங்கு மெறுகேற கூடியது. இருப்பினும், பல வருடங்களாக அதன் ஸ்கேன்லேசன் சுத்திக்கொண்டு இருப்பதால், எங்கே முன்பதிவுகள் குறைந்திட கூடுமோ என்ற அச்சத்தில்தான், எனது ஓட்டு அமெரிக்காவுக்கு போனது. மேலும், அமெரிக்க திரில்லரையும ருசித்து பார்க்கலாமே என்ற ஆசைதான்...
ReplyDeleteகென்யாவையும், நீங்கள் அடுத்த திட்டமாக இறக்கலாம் சார். ஏனென்றால் அதன் தொடர்ச்சியாக வருபவைகளும் நீண்ட எதிர்பார்ப்பில் உள்ளவைகளே.
என்னாது மறுபடியும் மொதல்லருந்தா...
ReplyDeleteதீர்ப்பா திகைப்பா.....
Deleteஅட போங்கப்பா......
டீவியில
உப்புமா செய்றது எப்டின்னு பாக்கப்போறேன்.......
வாழ்க்கையில நான் உப்புமா சாப்ட்டதேயில்லே............
ஆதனாலே. கென்யாவா அமெரிக்கா வான்னே தெரியாம தெளிவ்வா குழப்பிட்ட எடிக்கு உப்புமா செய்றது எப்டின்னு சொல்லி குழப்பணும்ல...
America than
Deleteநாம பண்ண அலப்பறையில் நாட்டாமை தீர்ப்பை மறந்துட்டாரு போல.
ReplyDeleteSuper sir
ReplyDeleteவந்தாச்சி.
ReplyDeleteDon't hesitate. We are ready to your aafriA series stories.
ReplyDelete+1111
ReplyDeleteதிருட்டு VCD நியாயங்கள் :P
ReplyDelete# KENYA
விதவிதமான
ReplyDeleteவிந்தை விலங்குகள் !
பூச்சிகள் !
பறக்கும் தட்டுகள் !
இவற்றைக் கொண்ட கற்பனை உலகம் கண்முன் விரிகிறது !
Wow ...Super !
I want only Kenya
ReplyDelete√
I want only Fun ya...
DeleteI want Any one ya😁
Delete// வியாழன்று உங்கள் கூறியர்கள் புறப்படும் guys !! Bye all..See you around !! //
ReplyDeleteஇன்னிக்கு இதுதான் சார் சூப்பர் நியூஸ்.
Welcome kenya
ReplyDelete// நேற்றைய ஒரு நாளின் பார்வைகளின் எண்ணிக்கை மட்டும் : 3295 !!!!! //
ReplyDeleteஆஹா சூப்பர்,சூப்பர்...
///தொடரும் நாட்களில் உரிமைகளுக்கான ஏற்பாடுகளை செய்த கையோடு - FUN WITH 500 அறிவிப்பினை உங்கள் முன் கொணர்ந்திடுவேன் !!//--
ReplyDeleteஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்டு....!!
ஓப்பந்தமே முடிவை நிர்ணயிக்கும் எனப் புரிகிறது சார்...!!!
நாங்கள் விரும்பி தேர்வு செய்துட்டோம் என்பதற்காக, தங்களின் கையை கடிக்கும் முடிவு எதுவும் வேணாம் சார்...!!!!ப்ளீஸ்...
கென்யா நாங்கள் சில ஆண்டுகள் முன்பு ரசித்தோம்.
தற்போது நம்ம லயன்-முத்து மொழி பெயர்ப்பில், புத்தகமாகவே வருமானால் அத்தனை பேரும் ஆதரவு தருவோம் என்பதை உறுதிப்படுத்துகிறோம் சார்.
கென்யா தான் தங்களது முடிவு எனில் தயங்காமல் அறிவிக்கலாம்...🙏🙏🙏🙏🙏
அபாரமான வெற்றி பெறச் செய்யும் பொறுப்பு நாங்கள் எடுத்து கொள்கிறோம்.
முடிவு எதுவாயினும் சம்மதம்.
நேற்றைய நடப்புகள் நண்பர்களோடு ஜாலியான பொழுது போக்கு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் சார்...
ஓவ்.... தீர்ப்பு தந்துட்டீர்களா! பார்க்கவில்லை சார்.
Deleteகென்யாவும் ஓகே தான், எங்களுக்கு!
// கென்யாவும் ஓகே தான், எங்களுக்கு! //
Deleteபேரிக்கா அணியினர் குழப்பத்தில் உள்ளனர்,போய் ஓரமா உட்கார்ந்து சீட்டு குலுக்கி போட்டு மொதல்ல முடிவு பண்ணுங்க பாஸ்,ஹிஹி,..
எடிட்டர் சார்,
ReplyDeleteKENYA மட்டுமே வெளியிடுங்கள். விலை ஒரு பொருட்டல்ல, அமெரிக்காவை வெளியிட்டால் நீங்கள் Scanlation க்கு பயந்தது போல் ஆகிவிடும்.
அல்லது
எங்களையும் Scanlation படிக்க மறைமுகமாக நீங்கள் தூண்டுவதாக அமைந்து விடும்.
அப்புறம் உங்கள் விருப்பம் √
கவலையே வேணாம் சார் ; KENYA முழு தொடருமே வரவுள்ளது !! ஜம்போவில் !!
DeleteToo good a series to miss out on...!
DeleteSuper :)
Delete//கவலையே வேணாம் சார் ; KENYA முழு தொடருமே வரவுள்ளது !! ஜம்போவில் !!//
Deleteநன்றி எடிட்டர் சார் _/\_
கென்யா வருவதில் சந்தோஷம் ஆனால் ஒரே புத்தகமாக போட்டு முடிச்சிடுங்க சார்
Delete
Deleteகென்யா வருவதில் சந்தோஷம் ஆனால் ஒரே புத்தகமாக போட்டு முடிச்சிடுங்க சார்//
+100. எத்தனை ஸ்கேன்லேசன் வந்தாலும் லயன்ல வரதை விடவே மாட்டோம். புக் மார்க்கர் வந்தாலே அடிச்சுக்கிற ஆளுக நாங்க. புக்கையா விடுவோம்.
நான் சமீபப் பதிவில் "தொடர்களாய் இதழ்கள் வந்தால் சுகப்படுமா ?" என்று கேள்வியை முன்வைத்ததே இது போன்ற தொடர்களை மனதில் வைத்தே !! ஒருமித்த குரலில் அத்தனை பேருமே - "வேண்டாம்" என்று பதிவிட்ட பின்னே, நான் மாற்றிடத் தான் நினைப்பேனா சார் ? எது வந்தாலும் - ஏக் தம்மில் தான் !!
Delete// கவலையே வேணாம் சார் ; KENYA முழு தொடருமே வரவுள்ளது !! ஜம்போவில் !! //
Deleteஇதுவும் நல்ல டீல்தான்...
மிக மிக மகிழ்ச்சியான செய்தி. அப்டியே கென்யால ஆரம்பித்து, நமீபியா வழியாக்க, அமேசான் பக்கம் போவோம்...
Deleteஎர்வாமார்ட்டின்ல இருக்கற அபூர்வ மூலிகை கூட சொந்த உபயோகத்துக்கு அள்ளிக்குங்க...
இந்த தம் எனக்கு பிடிச்சுருக்கு.
Deleteபோற போக்க பாத்தா ஆசிரியர் தினம்
ஒரு பதிவு போடனும்போல.
வாரம் ரெண்டு கேட்டதுக்கு மறுத்தீங்களே
இப்ப என்ன செய்வீங்க
இப்ப என்ன செய்வீங்க.
@ Vijayan Sir,
ReplyDelete//அச்சச்சோ....தீர்ப்பே சொல்லாமல் விட்டுப்புட்டேனா ??
Without a doubt : அமெரிக்கா தான் !!//
இப்படி பண்ணிடிங்களே சார், லெப்ட்ல இன்டிகேட்டர் போட்டுட்டு ரைட்ல திரும்பிடிங்களே. .கென்யா, நமீபியா, அமசோநுணு படமெல்லாம் போட்டு காட்டிட்டு அமேரிகாணு ஒரு அணு குண்ட போட்டுடிங்களே.
சித்தே மேலே தேக்கோ சார் !
Deleteசூப்பர் சார், மூன்று சீசனும் ஒரே ஆண்டிலா சார்?
Deleteஅங்கேயே சீசன் 3 இன்னும் நிறைவுறவில்லை சார் ; இப்போது தான் அதன் பாகம் 3 வெளியாகியுள்ளது ! So 2019 -ல் பாகம் 4 & 2020 -ல் பாகம் 5 வெளியாகி, தொடர் நிறைவுற்றிடும் ! அதற்குள் நாமும் அதே ஸ்பீடுக்கு ஈடு கொடுத்திருப்போம் ! ஓ.கே.வா ?
Deleteவெரி ஹப்பி சார்
Deleteஅட்டகாஷ்
Deleteஅமெரிக்காவை போட முடிவெடுத்தது சிறப்பு சார். அதற்காக கென்யாவை போடாமல் விட்டு விடாதீர்கள். 2019 ரெகுலர் சந்தாவில் வெளியிட முயற்சியுங்களேன். ஏனென்றால் அடுத்த வருடத்தில் மெகா ரீபிரிண்டோ மெகா இதழோ வர்ற மாதிரி தெரியவில்லை அதனால் கென்யாவையும், இத்தாலி குண்டு புக்கையும் 2019 ல போட்டு விட்டால் பஞ்சாயத்து ஓவராகி விடும்.
ReplyDeleteஇதுவும் சரிதான்...இப்போ இல்லாட்டி 2019 ல ஸ்லாட் போட்டுருங்க மேட்டர் ஓவர்...
Deleteரெகுலர் சந்தா ஏற்கனவே இறுதி செய்து கதைகளுமே ஆர்டர் செய்தாச்சு சார் ; so அதனில் இனியொரு இடைச்செருகல் சுலபமே அல்ல !!
Deleteஜம்போ இருக்க பயமேன் !!
// ஜம்போ இருக்க பயமேன் !! //
Deleteஹாஹா...ஜெய் ஜம்போ :) :) :)
// ஜம்போ இருக்க பயமேன் !! //
Deleteகரெக்ட் சார்,அப்படியே இத்தாலியையும் அதுல நுழைச்சி விட்டுங்க,வேலை முடிஞ்சிடும்,எல்லோருக்கும் சந்தோஷம்...
ஆயிரம் pdf படிச்சாலும் நம்ம எழுத்துநடை புத்தகமாக படிக்கும் திருப்தி வராது சார் .கென்யா நமீபியா அமேசானியா அமெரிக்கா ஏதோ ஒன்று நாங்க காத்திருக்கோம் எப்போ என்று விரைவில் முன்பதிவு அறிவிப்பை எதிர்பார்த்து...நன்றி சார்
ReplyDeleteசீக்கிரமே பழனிவேல்...!!
Delete//ஆயிரம் pdf படிச்சாலும்?//
Delete!
இனியுமா
Deleteஇனிக்குமா
Deleteஅட ஒரு பேச்சுக்கு ஆயிரம்னு சொன்னேன் மக்கா...!
Deleteபூனையின் பசிக்கு மீனை (kenya) காமிச்சிட்டு
ReplyDeleteஅப்புறம் சூடான பாலை (USA) காமிச்சிட்டீங்களே எடி
இது நியாயமே இல்லை
காட்டில் நடக்கிற சம்பவங்களை கடேசியா யானைக்கல்லறையில் பார்த்தது
ஆவலோட கென்யாவை எதிர்பார்த்தேன்
இப்ப இப்படி பண்ணிட்டீங்களே..
ஜம்போ எப்ப முடியறது
கென்யா எப்போ உள்ளே வரது ..😓😓
காத்திருப்பும் ஒரு சொகம்தான் 😌😌
காரணங்கள் எதுவாயினும், எண்ணிக்கையில் அமெரிக்கா தானே முன்னணியில் நின்றது நண்பரே ? அதை மறுப்பதற்கில்லையே !!
DeleteScanlation அவ்வளவாக படிப்பதில்லை, அமெரிக்காவுக்கு வோட்டு போட்டு இருந்தாலும் welcome கென்யா !!!!.
ReplyDeleteஆஹா48ஆ,,நன்றில
ReplyDelete//கவலையே வேணாம் சார் ; KENYA முழு தொடருமே வரவுள்ளது !! ஜம்போவில் !!//
ReplyDeleteஐயம் ஷோ ஹேப்பி சார்..💐💐
51வது
ReplyDeleteவிஜயன் சார், ஜம்போவில் ஜெரேம்யா ஏப்போது? கடந்த வருடம் ஜனவரியில் அவரது முதல் கதையை படித்தது. இன்னும் மூன்று மாதங்கள் போனால் இரண்டு வருடங்கள் ஆகிவிடும் அவரது முதல் கதையை படித்து.
ReplyDeleteஇவரைக் கொஞ்சம் சீக்கிரம் கண்ணில் காண்பியுங்கள்?
இது போன்ற கதைகளை இது போன்று அதிக இடைவெளி கொடுக்காமல் வெளியிடுங்கள்.
நவம்பரில் ஜேம்ஸ் பாண்ட்
Deleteடிசம்பரில் ACTION ஸ்பெஷல்
பிப்ரவரி 2019 -ல் ஜெரெமியா
இரண்டு வருடங்கள் கழித்து ஜெரெமியா :-(
Deleteராமையாவுக்காகவும் ஒரு ஜீவன் காத்திருக்கிறதே....
Deleteதொடர் கலக்கல் மாதங்கள்
Delete///ராமையாவுக்காகவும் ஒரு ஜீவன் காத்திருக்கிறதே....///
Deleteஹாஹாஹா...!!
விஜயன் சார், ஜம்போவில் கென்யா என்றால் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்று சொல்லுங்கள். எல்லாம் ஜெராம்மையின் அனுபவம் தான் :-(
ReplyDeleteஎன்றும் போல் காத்திருக்கிறேன் காத்திருப்பேன்.
ஜம்போவின் முதல் சுற்று மார்ச் 2019 -ல் நிறைவுற்று விடும் !
DeleteSo - சீசன் 2 ஆரம்பிக்க பெரியதொரு காத்திருப்பு அவசியமாகிடாது சார் !
+1
Deleteசார் இது தனித்தடம், ஜம்போதான் அதுக்கான கதைக நெறய இருக்கே
Deleteசார் வருந்துகிறேன். ...நானும் வாங்கிட்டேன்...அழித்து விடுகிறேன்
ReplyDeleteசார் அந்த அட்டைகள கண்ல காட்டிருந்தா எங்க அணி முன்னிடம் பெற்றிருக்கும்....பரவால்ல, இத வெளி விடும் எண்ணம் உண்டா
ReplyDeleteமேலே(யும்) சித்தே படியுங்கள் கவிஞரே !
Deleteஅடப்பாவி மக்கா, ரெண்டு நாளா கென்யாவ நிமிரவிடாம குனிய வச்சி குமுறிபுட்டு இன்னிக்கி கென்யா கென்யான்னு உருகுகிறிங்கலே இது உங்களுக்கே நியாயமா?! 🤤 இனி கென்யாவைக் புத்தக வடிவில் கான ஓராண்டுக்கு மேல் காத்திருக்கனும் ம்ம்ம்ம் 🤔
ReplyDelete+1111
Deleteஇரு ஆறுதலான விஷயங்கள் சார் :
Delete1 .வென்ற அமெரிக்கா - முன்பதிவுகளுக்கான இதழ் எனும் போது குறைந்த பட்சம் மூன்றோ / நான்கோ மாதங்களுக்கு புக்கிங்கில் இழுத்து விடும் !
2 .அதற்குள்ளாக ஜம்போவின் முதல் சுற்றை முடித்த கையோடு - ஜம்போவின் சீசன் 2 -ன் முதல் இதழாக ஜம்போவைக் களம் காணச் செய்து விடுவோம் !!
So மிஞ்சிப் போனால் ஓரிரு மாதங்களது இடைவெளிக்கு மேலிராது - அமெரிக்காவுக்கும் / ஆப்ரிக்காவுக்குமிடையே !
2 . Jumbo வில் முதல் இதழாக கென்யா வா சார் ?
Deleteதிருப்தி பரமதிருப்தி !
Deleteஅப்புறம் என்ன பஞ்சாயத்து முடிஞ்சிது. போங்க போய் பிள்ளைங்கலாம் ஹோம்வர்க் முடிச்சாங்களான்னு செக் பன்னிட்டு போய் தூங்குங்க போங்க... 😀
நன்றி சார்,கென்யாவை ஜம்போவில் இணைத்ததற்கு.
DeleteKenya Team Very Happy Sir.............
Deleteஉங்களுடைய ஆதங்கம் புரிகிறது சார்... ஆனால் இக்கதைகள் புழக்கத்தில் இருந்து ஆண்டுகள் முன்பு அப்பொழுது நாம் இது போல லயனில் முயல்வோமா என்பதே சந்தேகமாக இருந்தது. நான் செய்தவர்களுக்காக பேசவில்லை இருந்தும் அன்றைய காலகட்டத்தில் இது போலவும் உள்ளது என்று காமிக்ஸ் காதலர்களுக்கு அறிமுகப்படுத்த நண்பர்கள் செய்த முயற்சியே.
ReplyDeleteஆனால் இது புதிதும் அல்ல நண்பர்கள் செய்த பலமுயற்சிகள் நீங்கள் லயனிலும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள் .. பொடியர்கள் உட்பட. 15 பாகங்கள் உள்ள தொடரில் முதல் ஐந்து பாகத்திற்காக தவிர்த்திருக்க வேண்டாம் தான்.
இது எனது கருத்தே.
இவை சமீபத்தைய உருவாக்கங்களா ? பழையனவா ? என்றெல்லாம் எனக்கு சுத்தமாய்த் தெரியாது சார் ! நேற்றைய பின்னூட்டங்களில் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன் ! எனதுஆதங்கம் ரொம்பவே சிம்பிள் :
Deleteபுலன் விசாரணை - Project Impossible என்றிருந்ததொரு சமாச்சாரம் ; ஆனால் நண்பர்கள் வரிந்து கட்டிக் களமிறங்கத் தயாரானதன் விளைவாய் - அது நனவானது !
ஆனால் இது போன்ற ஓசையிலா முயற்சிகளின் impact நேர் மாறல்லவா ?
சுலபமாய் அனைவருக்கும் சாத்தியமாகிட வேண்டியதொரு இதழ் - இன்றைக்கு வேண்டுமா ? வேண்டாமா ? என்ற யோசனையை அவசியமாக்கிடுகிறதே ?!
//சுலபமாய் அனைவருக்கும் சாத்தியமாகிட வேண்டியதொரு இதழ் - இன்றைக்கு வேண்டுமா ? வேண்டாமா ? என்ற யோசனையை அவசியமாக்கிடுகிறதே ?!//
Deleteவருந்ததக்கதே சார்.. நன்றி ஜம்போவில் சேர்த்ததற்கு.. கண்டிப்பாக அனைவரும் வாங்குவார்கள் .. கென்யா வேண்டாம் என்று கூறியவர்களும் சேர்ந்தே
அந்த நண்பர்கள் இதனை ஃப்ரீயாக கொடுக்கத்தான் மெனக்கட்டிருப்பார்களா?மெனக்கட்டார்!களா
Delete//அந்த நண்பர்கள் இதனை ஃப்ரீயாக கொடுக்கத்தான் மெனக்கட்டிருப்பார்களா?மெனக்கட்டார்!களா//
Deleteஇந்த கேள்விக்கான பதில் என்னிடம் இல்லை சார்.. நான் பதிவிட்டது சார் இதனால் தவிர்த்துவிட்டாரோ என நினைத்தே.. அவ்வாறு இல்லை என்பதே எனக்கு மகிழ்ச்சி
எல்லாம் நன்மைக்கே...இதன் பிறகாவது நண்பர்கள் இதனை ஆதரிக்காமல் இருக்க கூடுமல்லவா!
Deleteகென்யா தான் வரும்னு பாத்தா அமெரிக்கா வருதே !
ReplyDeleteஇதுல ஏதாவது சி.ஐ.ஏ.சதி இருக்குமோ?
KGB சதி முறியடிப்பு அணி,சிக்கலைச் சரி செய்து விட்டது சார் !! கென்யா(வும்) உண்டு !!
Delete//Grey மார்க்கெட்டை ஒடுக்க இது செம வழி என்று சொல்லும் அதே மூச்சில் - இது நமது எதிர்கால prospects-களையுமே ஒடுக்கிடக்கூடும் என்ற கோணத்தில்//நண்பர்களே புரிந்து கொள்வோமே
ReplyDelete///
ReplyDeleteP.S : அச்சச்சோ....தீர்ப்பே சொல்லாமல் விட்டுப்புட்டேனா ??
Without a doubt : அமெரிக்கா தான் !!///
நீதி வென்றது ..!!
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,பைனலா சூதே வெல்லும்.
Deleteஹிஹி.
ரணகளத்திலும் கிளுகிளுப்பு !!
Deleteஅமெரிக்கா
ReplyDeleteஅப்படின்னா என்ன கதை
பிற நாட்டு காமிக்ஸ் ல நான் கொஞ்சம் வீக்.
விளம்பரம் வர்ரச்சே தெரிந்து கொள்வீர்கள் நண்பரே !
Deleteஅமெரிக்கா வரணும் நினைச்சோமே தவிர கென்யா வரக்கூடாதுன்னு சத்தியமாய் நினைக்கவில்லை.! சொல்லப்போனால் குருநாயர், மிதுன் போன்றோரிடம் கென்யாவை பற்றி சிறப்பாகவே சொல்லியிருந்தேன்.!
ReplyDeleteமிகப்பெரிய ஆறுதல், சந்தோசம் என்னன்னா கென்யா தொடர் ஜம்போவில் வருமென்று அறிவித்ததுதான் ..நன்றி எடிட்டர் சார்..! புதிய ஜானரை வரவிடாமல் செய்துவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சி ஏற்படாமல் செய்துவிட்டீர்கள்...!!
தேர்தல் ஜுரத்திலிருந்து நீங்கள் மீண்டு விட்டீர்களா, இல்லையோ - இங்னக்குள்ளே அது மாறிய பாடைக் காணோம் ! So ஒரு தேர்தல் நேரத்துப் பாட்டையே பதிலாக்குகிறேனே சார் :
Delete"ஆயிரம் கரங்கள் முயன்றாலும், ஆதவனை மறைப்பதில்லை !! "
சூப்பர்
Delete///புதிய ஜானரை வரவிடாமல் செய்துவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சி ஏற்படாமல் செய்துவிட்டீர்கள்...!!///+10000.....
Deleteஒரு கட்டத்தில் லீடிங்ல இருந்த கென்யா பின்தங்கியது கண்டு மகிழ்ச்சி இருந்தாலும், நாம செய்வது சரியா என ஒலித்துக் கொண்டே இருந்தது ஒரு குரல்.
இன்று அந்த குற்ற உணர்வை போக்கி விட்டீர்கள். அதற்கே 502நன்றிகள் சார்...!!!
கென்யாவும் சொல்லி அடிக்கும்!
சலோ கென்யா!!!!
கென்யாவுக்கு நியாயம் செய்துவிட்டீர்கள் சரி ...பாவம் அந்த இத்தாலிக்கு ஓட்டுப்போட்ட நண்பர்களையும் கொஞ்சம் கவனிச்சீங்கன்னா அவங்களும் (நானும்) சந்தோப்படுவாங்களே சார்..!
ReplyDeleteஆச்சர்யம் பேரிக்காவில் இருந்து அனுதாபக் குரல்...
Deleteரெண்டு "அ"னாக்களைத் தாண்டி இத்தாலி பக்கமாய் யாரையுமே பார்த்த ஞாபகம் இல்லியே ?
Deleteஇத்தாலி ஸ்பெசல் வேணுமா வேணாமான்னு இன்னொரு ஓட்டு எடுப்பு நடத்திடலாம் சார்.
Deleteதினம் ஒரு பதிவுக்கு அச்சாரம் போடுறீங்க மஹிஜி... நடக்கட்டும்!
Deleteபோடுங்கய்யா ஓட்டு இத்தாலி சின்னத்த பார்த்து!!!
நம்மளை பாத்து மிரண்டு போய்த் தான் blogger காரங்க Poll option-ஐ தூக்கியிருப்பாங்களோ ?
Deleteநம்ம நல்ல + "நல்ல" ஓட்டுகள் அப்படி சார்....!!!ஹி...ஹி...!
Deleteக்ரே மார்க்கெட்,ஒயிட் மார்க்கெட்,ப்ளாக் மார்க்கெட் என்று சொல்லிக் கொண்டே Pdf ல் படித்துவிட்டோம் வேண்டாம் என்பது எப்படி சரியாகும் தெரியவில்லை. புத்தகமாக ஏற்கனவே கறுப்பு வெள்ளையில் வெளியான கதைகளெல்லாம் வண்ணத்தில் மறுபதிப்பு காணுகையில் Pdf ல் படித்ததை வைத்து ஓட்டுப்போட்டு ஒரு நல்ல கதைக்களனை படிக்க ஆர்வமாக இருந்தவர்களை அதற்காக காக்க வைத்து விட்டீர்களே. இப்படியே ஒவ்வொருத்தரும் அமெரிக்கா,இத்தாலி என்று Pdf ல் படிக்க ஆரம்பித்தால் எங்கு போய் முடியும்.தெரியவில்லை.ஆசிரியர் மும்மூர்த்திகளை மறுபதிப்பு செய்வதற்கு முன்பு நமது மும்மூர்த்திகளின் கதைகள் அட்டகாசமாக ஸ்கேன் செய்த காப்பிகள் எனக்கு எளிதாக வாங்கும் விலையில் ஒரு நண்பர் மூலம் தகவல் வந்தது. ஆனால் நான் அதனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தொடர்ந்து ஆசிரியரிடம்தான் கோரிக்கை வைத்து வந்தேன்.எனக்கு நம் ஆசிரியர் வெளியிடுவதுதான் காமிக்ஸ்.அதனைத் தவிர வேறெங்கும் காமிக்ஸை தேடி போக மாட்டேன்.
ReplyDelete//கவலையே வேணாம் சார் ; KENYA முழு தொடருமே வரவுள்ளது !! ஜம்போவில்//
ReplyDeleteசார் இதிக்கவலையும் பதிவில் சேர்த்துவிடுங்கள் ப்ளீஸ் .. இதனை பார்த்திருந்தால் நான் கமெண்ட் செய்திருக்கமாட்டேன் ☺️
92nd
ReplyDelete""அமெரிக்கா""
ReplyDeleteI AM HAPPY
ஒரு தலைவன் ஒரு சகாப்தம் மற்றும் அழகாய் ஒரு அராஜகம்.
ReplyDeleteகுறிப்பா ரெண்டாவது கதையப் பத்தி. இந்தக் கதை சில நண்பர்கள் பிடிக்கலைன்னு சொல்லிருந்தாங்க. எனக்கு ரெண்டுமே பிடித்திருந்தது. இரண்டுமே விறுவிறுப்பாகவே இருந்ததாய் உணர்ந்தேன். இந்தக் கதைகள் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.
9/10.
வேண்டாம் சாமி வேண்டாம்.
Deleteநான் இந்த இரண்டு கதைகளையும் முழுவதும் படிக்க வில்லை, படிக்க முடியவில்லை. சொல்லப் போனால் படிக்க விருப்பம் இல்லை.
DeleteParani + 1
Deleteஅந்தளவு தரம் தாழ்ந்த தொடர் அது அல்ல நண்பர்களே!
Deleteஅத்தொடரில் இம்மாத வெளியீட்டோடு 8ஆச்சுது...
3வது,4வது, 5வது,6வதுலாம் ஓவிய உண்ணதங்கள்....!!!
7வது பிரமாண்ட ஹிட்...!!!
அதன் சேம்பிள் பக்கங்கள் பார்த்தா சொக்கிப் போய் விடுவீர்கள். பிறகு அபிப்ராயம் மாறலாம்....!!!
@சேலம் டெக்ஸ். எனக்கு முத ரெண்டு கதைகளுமே பிடித்து இருந்தது. ஓவியங்களில் டெக்ஸ் மாதிரி இல்லை என்ற விமர்சனங்கள் பாரத்தேன். 18 வயதுல இருந்த முக அமைப்பு இப்ப 25 வயசுல இல்ல. அதுக்கு என்ன பண்றது. இரண்டு கதைகளும் எனக்கு நன்றாகவே பிடித்து இருந்தது.
Deleteஎன்னமோ நடந்துருக்கும் போலேயே...
ReplyDeleteபெட்ரோல் 100 ரூபாய்க்கு போடு என்று
சொல்லும் சங்கம்...
tex kit @
Delete:))))))))))))))))
சார் ஏகப்பட்ட கதைகள் ஜம்போக்கு காத்திருப்பதால், இந்த கதைகளுக்கு இணைத்தடம் விடவும்
ReplyDeleteகுடோன்....குடோன்....குடோன்....
Deleteஅது என்ன - எனக்கே தெரியாமல் காத்திருக்கும் ஏகப்பட்ட கதைகள் கவிஞரே ?
Delete//அது என்ன - எனக்கே தெரியாமல் காத்திருக்கும் ஏகப்பட்ட கதைகள் கவிஞரே ?//
Delete1.45 மணிக்கு ட்ராவல் பஸில் சத்தமாக சிரித்துவிட்டேன்.. அனைவரும் எட்டி பார்க்க கஷ்டமாகிவிட்டது 😊
சார் கடல் கொள்ளையர், இளம் டெக்ஸ், ஜெரமையா, ஜேம்ஸ் னு இன்னுஞ் சில கதைகள விட நேரமும், இடமும் போதலையே அநனால அமெரிக்கா, ஆப்ரிகா , இத்தாலி ,மூனு மில்லியன் ஹிட்ஸ கொண்டாட்ட இதழ்கள்னு தனித் தடத்ல விடலாமே !
Deleteடெக்ஸ் இனி மெயின் சந்தா Print run ஏ குறையப் போவுதுன்னும் போத கொடோன் இடப் பிரச்சணை இராதே!
///சார் கடல் கொள்ளையர், இளம் டெக்ஸ், ஜெரமையா, ஜேம்ஸ் னு இன்னுஞ் சில கதைகள விட நேரமும், இடமும் போதலையே ///
Deleteஸ்டீல் ...!அந்த ஸ்பைடர் கதையை சொல்ல மறந்துட்டீங்க பாருங்க...!
அப்போ ஜம்போ இளம் டெக்ஸ் அவ்வளவு தானா?
ReplyDeleteஅந்த 500 பக்க மெபிஸ்டோ அதுவும் கிடையாதா சார்.
சார் பதில் பிளீஸ்.
Deleteரோமாபுரி கட்டப்பட்டது ஒற்றை நாளில் அல்ல சார் !
Deleteபுரியவில்லை சார்.
Deleteஆசிரியர் சில காலம் காத்திருக்க சொல்கிறார் சார்.
Deleteஉண்மைதான் சார்,பொறுமையாக காத்திருப்போம்...
Deleteயானை கல்லறை மறுபதிப்பே பல தடவை கேட்குறவங்க நாங்க...இதுல கென்யாவுக்கா வேணாம்னு சொல்ல போறோம்...
ReplyDeleteஒரே நளில் ஜம்போவுக்கு மாத்திப்புட்டிங்களே..
யானை கல்லறை மறுபதிப்பு அடுத்த வருடம் வருமோ...
அன்பின் ஆசிரியருக்கு,
ReplyDeleteவணக்கம். 500 பதிவுகள் என்பதைச் சொல்லும்போதே இனிக்கிறது. மனமார்ந்த வாழ்த்துகள். முன்னமே சொன்னதைப் போல, நம்முடைய காமிக்ஸை வாங்கியவுடன் முதலில் நான் வாசிப்பது ஹாட்லைன்தான். உங்களுடைய நடை, எளிமை மற்றும் எழுத்துகளில் தெறிக்கும் உற்சாகம், இன்று வரை அது துளி கூட குறையவில்லை என்பதே உங்கள் பலம். நிறைய உயரங்களையும் சிற்சில தடங்கல்களையும் தாண்டி அற்புதமான வாசக நண்பர்களின் பலத்தில்தான் நம் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது எனச் சொன்னால் அது மிகையாக இருக்காது. எனவே நம் நண்பர்களனைவருக்கும் உங்கள் சார்பில் ஒரு சியர்ஸ். அமெரிக்கா வெளிவருவதில் மகிழ்ச்சி எனில் அதன் பொருட்டு கென்யா ஒதுக்கப்படாமல் ஜம்போவில் வெளியாவதில் டபுள் மகிழ்ச்சி. புத்தகமாக மட்டுமே வாசிக்க வேண்டும் என்று எண்ணுகிற வாசக நண்பர்களின் கனவு பொய்த்து விடக்கூடாது என்கிற உங்கள் அக்கறையைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பயணம் இன்னும் பல காலங்கள் கடந்து ஆயிரங்களில் தொடர மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.
பிரியமுடன்,
கா.பா.
????
ReplyDeleteகா.பா. சார்
Deleteஉங்கள் வார்த்தைகளை வரிக்குவரி வழிமொழிகிறேன்.
கா.பா சார்,
Deleteஅழகாக,அருமையாக சொன்னீர்கள்...
//புத்தகமாக மட்டுமே வாசிக்க வேண்டும் என்று எண்ணுகிற வாசக நண்பர்களின் கனவு பொய்த்து விடக்கூடாது என்கிற உங்கள் அக்கறையைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பயணம் இன்னும் பல காலங்கள் கடந்து ஆயிரங்களில் தொடர மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.//🌷💐🌷
Deleteஅமெரிக்க அணி வெற்றி பெற்றதை சேமன் மீன் வறுவலுடன் கொண்டாடி வருகிறேன் என்று கென்யா மற்றும் இத்தாலி அணிகளுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
ReplyDeleteM.P. சார்
Deleteஅதென்ன புதுசாக இருக்கிறது.
சேமன் மீன்!!!
புடலங்காய் பொரியல் அய்யா!
Deleteஇப்படி சேமன், சிக்கன்னு அலும்பு பண்ணாதீங்க..!!!
அமெரிக்க அணி வாழ்க!
அமெரிக்க அணிக்கு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏😁🙏😁🙏😁🙏😁🙏
Salmon மீன். நம்மூர்ல இது கிடைக்குதான்னு தெர்ல. வஞ்சிரமா இருக்கும்னு நினைச்சதுண்டு. சிலர் இதை காலா மீன் அல்லது கிழங்கான்னு சொல்றாங்க.
Deleteடியர் எடிட்டர்
ReplyDeleteFan-based-scanlation என்பது டிஜிட்டல் யுகத்தின் ஒரு மறுக்கவியலா side-twin. It is also a world-wide phenomenon. இவை இங்கே விற்பனைக்காக செய்யப்படுவதில்லை. நமது limited ட்ராக்ல் வருவதற்கு சிரமம் என்று சொல்லப்படும் இதழ்கள் தான் scanlate செய்யப்படுகின்றன.
மேலும் scanlation வெற்றியடைந்ததைத் தொடர்ந்து வந்த official தொடர்களான smurfs, bluecoats போன்றவையும் உண்டே.
மேலும் சென்ற காலங்களில் Barracuda மற்றும் Long John Silver சில பாகங்களும் scanlate செய்யப்பட்டிருக்கின்றன. மூலக்காரணம் ஒன்றே : பணம் செய்வது அல்ல. லட்சக்கணக்கில் இருக்கும் franco-belgian கதைகள் அனைத்தும் நமது சிறிய தடத்தில் வரக்கூடிய சாத்தியம் இல்லை என்பதால்.
இதற்கு மேல் விவாதம் வளர்க்க விரும்பவில்லை - simply because one can also understand the disappointment of official release being devoid of the fizz.
இதற்கு சரியான தீர்வு என்பது ஒரு series வெளிவருகிறது என்று தெரிந்தால் அதனை scanlate செய்வதை நிறுத்துவதே.
On the other hand I do agree with your other point - digitizing and uploading of our own old releases must stop.
//On the other hand I do agree with your other point - digitizing and uploading of our own old releases must stop.//
Delete+1
//லட்சக்கணக்கில் இருக்கும் franco-belgian கதைகள் அனைத்தும் நமது சிறிய தடத்தில் வரக்கூடிய சாத்தியம் இல்லை என்பதால்.//-1
ஏற்கனவே நசிந்திருக்கும் தொழிலை செய்து வருவோர்க்கு இது ஏற்பான பதிலா இருக்குமா தெரில, ஆனா இனிமேலாவது நண்பர்கள் மொழி பெயர்க்காமலோ அல்லது பிறரிடம் வாங்குவத தவிர்த்தல் நலம், ஏன்னா ஆசிரியர் வெளி விடுவத தடுக்க எண்ணிய நண்பர்களும் இங்குண்டே ! இனியாவது ஏற்காமல் இருப்போமே?
Steel Claw : மீண்டும் கூறுகிறேன் - ஸ்கேன்லஷன்கள் விற்கப்படுவதில்லை. அவை படித்து மகிழவே. ஸ்கேன்லஷன் நிற்பதும் கடினம். Smurfs , Bluecoats போன்ற ஸ்கேன்லஷன்கள் ஒன்று வெளியிடப்பட்டு ஆசிரியர் வெளியிடப்போகிறார் என்றவுடன் அவர்களே நிறுத்தி விட்டார்கள். அது போல செய்ய முடியுமே தவிர ஸ்கேன்லஷன் கூடாது என்ற எதிர்பார்ப்பு இந்த டிஜிட்டல் யூகத்தில் ஏற்புடையதல்ல.
Deleteபொம்மை புத்தக நேசன் 500பதிவிட்ட சந்தோசத்தில் ஆட்டம் போட்டபடி நடந்த போது கையிலிருந்த காமிக்சை காமிக்ஸ் கடலில் தவற விட்டான்.
ReplyDeleteகாமிக்ஸ் காதலன் 'ஓ' வென கதற உள்ளிருந்து தோன்றியது ஒரு காமிக்ஸ் தேவதை ஆந்தை விழியுடன்...
காதே:ஏனப்பா அழுகிறாய்?
காகா:என் உயிரினும் மேலான
புத்தகத்தை தண்ணிக்குள்ள தவற விட்டுட்டேன் தாயே
காதே:ஓ..அவ்வளவுதானே..இதோ இப்பவே தேடி கொண்டு வருகிறேன்.
(சிறிது நேரம் போய்)
காதே:இதுவா நீ தொலைத்தது?
காதே:இது..இது அமெரிக்காவாச்சே..நான் தொலைத்தது இதுவல்ல தேவதையே
(மீண்டும் சிறிது நேரம் கடந்து)
காதே:இதுதானே நீ தொலைத்தது
காகா:ஆ..இல்லை.இல்லை...இது கென்யாவாச்சே...
(இன்னும் சிறிது நேரம் போக)
காதே:இதுவாச்சானும் பாருப்பா..
தேட முடியல
காகா:ஆங்..இதேதான் தேவதையே...
நான் தொலைச்ச இத்தாலி.. இதேதான்.
காதே:பொம்மைய உயிரா நினைச்சாலும் புதுச பார்த்து பழைய இத்தாலிய விட்டுதராத உன் நல்ல குணத்துக்காக இதோ இந்த மூன்றும் உனக்கே அளிக்கிறேன்...
👏👏👏👏👏👏👏👏👏
Deleteஅருமை நண்பரே
அருமையான உவமானம் ..!!
Delete👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
நம்ம காமிக்ஸ் தேவதை இரண்டிற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.! இத்தாலி கதைகளும் கண்டீப்பாக நமக்கு கிடைக்கும் நண்பரே ..தனித்தனியாகவேனும்.....!!
செம்ம ப்ரோ
Deleteவாவ்! சூப்பா்!!
Deleteநம்ம காமிக்ஸ் தேவன் பூரண அருள் நமக்கு கிட்டும். இத்தாலிக்கு ஜே.
DeleteThis comment has been removed by the author.
Delete🌸💐தேவதய விட்ராதிங்க , இன்னமு ஏகபட்டத முங்கி எடுக்க வெப்போம்
Delete@M. Vidya
Deleteஹா ஹா!! அருமை!! :))))))
@ஸ்டீல்
///
தேவதய விட்ராதிங்க , இன்னமு ஏகபட்டத முங்கி எடுக்க வெப்போம்///
ஹா ஹா ஹா!! செம! :)))))
///KENYA !!!!
ReplyDeleteஉள்ளதைச் சொல்வதானால் - எனது வோட்டு இக்கடயே இருந்திருக்கும் !! முற்றிலும் புதிய களம் ; ட்ரெண்ட் தொடரினில் நாம் பார்த்து ரசித்த கதாசிரியர்-ஓவியர் கூட்டணி ; நிறைய ஆக்ஷன் ; நிறைய fantasy ; மெலிதான விஞ்ஞானம் என்று இந்த 5 பாக த்ரில்லரில் நாம் ரசித்திட ஏகப்பட்ட சமாச்சாரங்கள் உண்டு !!///
எங்கே எங்கே அந்த டெக்ஸ் விஜய்,
எப்ப பாரு எடிட்டருக்கு எதிராகவே வேலை செய்றதே வேலையா போச்சு!!
அவரு வேலை செய்றது மட்டுமில்லாம கூட்டத்த வேற கூட்டராரு!!
சொன்னா கேக்கறீங்களா? 😂😂😂😤😤😤
ஙே. மிதுனரே மொத ஓட்டு அமெரிக்கான்னு போட்டு ஆரம்பிச்சு வைச்சது நானுங்க. பாவம் அவரை ஏன் மாட்டி விடறீங்க. அப்புறம் தானா ஒரு கூட்டம் சேந்துகிச்சு. இப்பதான் கென்யாவும் வந்துடுச்சே. நம்ம ரவி வேற சோகமா இருக்காரு. அதனால அடுத்த கட்ட நடவடிக்கையா இத்தாலி ஸ்பெசலும் கேட்டு போராடுவோம் வாங்க.
Deleteஎனக்கு என்னமோ அந்த அமொிக்காகாரா் மேல தான் சந்தேகம்!!
Deleteஅடடே! நீங்களே வந்துட்டீங்களா??
Deleteஈரோட்டில் இத்தாலி பாா்ட் - 2 னு அறிவிச்சரலாம் விடுங்க!!
Deleteஷெரீப் & மிதுன் ..!
Deleteஅமெரிக்காவுக்கு முதல் ஓட்டை பதிவு செய்த ஆசாமி யாருன்னு 500ஆவது பதிவுல போய் உறுதிப்படுத்திக்கிட்டிங்கன்னா பரவாயில்லை..!!
(நேக்கு தற்பெருமை பிடிக்காதுன்றதால அந்த அம்பியோட பேரைச்சொல்ல நான் விரும்பலை..ஹிஹி )
அமெரிக்காவையும் வாங்கியாச்சு ..கென்யாவையும் வாங்கியாச்சு ...!
Deleteஇன்னுமா உங்களுக்கு எங்க மாஸ்ட்டர் ப்ளான் புரியலை ..ஹிஹி..!:-)
ஈரோட்டில் இத்தாலி பார்ட்2-வாழ்க...வாழ்க..!!!
Deleteஎன்னோட ஓட்டும் அதற்கே!
அன்பான பண்பான ஆருயிர் காமிக்ஸ் நெஞ்சங்களே@ உங்கள் அனைவரின் பொன்னான வாக்கு களை இத்தாலி சின்னத்தில் பொறித்து ஈரோட்டில் இத்தாலி பார்ட்2வை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு பணிவோடு்ம் பக்தியோடும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.,🙏🙏🙏
மாம்ஸ் நீர் சொன்னா மாதிரியே இத்தாலி க்கும் ஓட்டு கேட்டாச்சுய்யா!
Deleteபதனி...பதினி...!!!!
///ஈரோட்டில் இத்தாலி பார்ட்2-வாழ்க...வாழ்க..!!!///
Deleteஆஹா ..!
பார்ட் 2 ன்றதால சைசும் ரெண்டு மடங்கு இருக்கோணும் சொல்லிப்போட்டேன் ஆமா..!!
இப்படி கையில "கென்யா"வை வைச்சுட்டு, அமொிக்கா-க்கு அழையுர கதைய போயிடுச்சே!!
Delete///மாம்ஸ் நீர் சொன்னா மாதிரியே இத்தாலி க்கும் ஓட்டு கேட்டாச்சுய்யா!
Deleteபதனி...பதினி...!!!!///
ஹிஹிஹி..!!
நாம யார் வம்புக்கும் போறதில்ல யார் தும்புக்கும் போறதில்ல ..நாம உண்டு நம்ம சோலி உண்டுன்னு இருந்திடுறதுதான்...!! :-)
என்னோட ஓட்டும் இத்தாலிக்கே...ஈரோட்டுல வைச்சாலும் சரி. இத்தாலில வைச்சாலும் சரி.
Delete//அமெரிக்காவுக்கு முதல் ஓட்டு//
அது செல்லாத ஓட்டாச்சே கண்ணரே. ஒரே இடத்துல கென்யாவும் ஓகேன்னு சொன்னதால முதுனர் தான் அத கணக்கெடுக்காம விட்டாரே. அப்புறம் தான் நீங்க மறுபடி வந்து ஆணித்தரமா அமெரிக்கான்னு ஓட்டு போட்டீங்க.
ஈரோட்ல அவுளோ சின்ன இதழா!
Delete///ஒரே இடத்துல கென்யாவும் ஓகேன்னு சொன்னதால முதுனர் தான் அத கணக்கெடுக்காம விட்டாரே. ///
Deleteதெளிவா ஆணித்தரமா கடப்பாரைத்தனமா, 6.5 இஞ்ச் போர் ராடு தனமா அமெரிக்காவுக்கு என்னோட ஓட்டு ன்னு பதிவு பண்ணியிருக்கேன்..!
அடுத்த கமெண்ட்டில கென்யா வந்தாலும் சந்தோசமேன்னு சொல்லியிருக்கேன்.!
ஓட்டு எதுக்குன்னு சொல்லிட்டு, அடுத்தது வந்தாலும் சந்தோசமேன்னு அடுத்த கமெண்ட்ல சொல்லியிருப்பதை வைத்து செல்லாத ஓட்டுன்னு மிதுன் சொல்றதைப் பாத்தா நம்மூரு காமெடிகளா பரவால்லைன்னு தோணுது ஷெரீப்..!!;-)
ஒரு மனுசன் கொஞ்சமாச்சும் பந்தா பண்ணி காலரைத் தூக்கி விட்டுக்கலாம்னு பாத்தா ...இப்படி குறுக்கால கட்டைய போடுறிங்களே ...ப்பூபூஊஊஊ...ஊஊ...!!
Deleteகிட் அங்கிள்@
Deleteமஹி அங்கிள்@
சூரிய வம்சம் படத்து பஸ் காமெடி தான் கியாபகம் வருது.
நீங்க 2பேரும் கரும்பு, இரும்பு, குறும்பு னு பேசி அமெரிக்க அணியை ஆரம்பித்து வைச்சீங்க. ஆனா பஸ் புரவிபாளையத்தை தாண்டலயே!
பச்சக் னு எலுமிச்சைய நசுக்கிட்டு கிளப்புவாறே சரத், அதுமாதிரி அய்யா (ஹி...ஹி...நான்தான்) ட்ரைவிங் சீட்ல உட்கார்ந்து கியரை போட்ட வுடன் தானே புளியம்பட்டி , பொள்ளாச்சினு ரெக்கைய கட்டியது.
கூடவே நம்ம ஸ்டைல்ல ஓட்டுகளை சேகரிக்க தொடங்கினோம்.
பின்தங்கி இருந்த அமெரிக்க அணி சரசரனு முந்த தொடங்கியது.
இனி தொடவே முடியாத லீடிங்கில் கொண்டு போய் தானே ப்ரேக்னு ஒன்றில் காலையே வைத்தோம்....!!!
ஆயிரந்தான் இருந்தாலும் இது நம்ம கூட்டு முயற்சி...எல்லோருமே காலரை தூக்கிவிடுங்கப்பா! அமெரிக்கா வாழ்க...வாழ்க...
த்ரில்லரில் திளைப்போம்.🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
// இப்பதான் கென்யாவும் வந்துடுச்சே. நம்ம ரவி வேற சோகமா இருக்காரு. அதனால அடுத்த கட்ட நடவடிக்கையா இத்தாலி ஸ்பெசலும் கேட்டு போராடுவோம் வாங்க. //
Deleteஹிஹி காமெடி பண்ணாதிங்க ஷெரீப்,ஒரே ஒரு தாரைத் தலைவர் இத்தாலி அணியில் இருந்து பேரிக்கா அணிக்கு சென்றதால்,நம்ம எடிட்டரும் மிக மிக கனத்த மனதுடன் வேறு வழியின்றி பேரிக்கா அணிக்கு வாய்ப்பளித்துள்ளார்,இது இத்தாலி அணிமேற்கொண்ட முதற்கட்ட புலனாய்வு விசாரணையில் தெரிய வந்துள்ளது,மேலும் பேரிக்கா அணிக்கு தலைவர் சென்றதன் காரணம் பட்டர்பன்னுக்கு ஆசைப்பட்டுதானாம்,ஆனால் இப்போது காய்ந்த வர்க்கி கிடைப்பதே சந்தேகம் என்ற தகவலறிந்து அதிர்ச்சியான தலைவர் இத்தாலி அணியை விட்டு வந்தது தவறு என்று தெரிய வந்ததால் இனிவரும் காலங்களில் பேரிக்கா அணியை நம்பி ஓட்டளிக்கப் போவதில்லையாம்.
மேலும் வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் தன்னடக்கத்துடன் அமைதியாக இருக்கும் இத்தாலி அணியைக் கண்டு பலரும் வியப்பதாகவும்,வெற்றி பெற்ற குஷியில் துள்ளாட்டம் பேரிக்கா அணியைக் கண்டு வருந்துவதாகவும் எங்கள் அணிக்கு இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.
பேரிக்கா அணிக்கு இந்த செய்திகள் தெரியாது பாவம்,எனவே வேறு வழியின்றி இந்த இரகசிய தகவல்களை வெளியிடுகிறோம்.
தற்போதைக்கு எடிட்டர் இத்தாலி அணிக்கு இதயத்தில் இடம் கொடுத்திருந்தாலும் எதிர்காலத்தில் இதழ்களிலும் இடம் கொடுப்பார் என்று நம்புகிறோம்.இத்தாலிக்கு எண்ட் கார்டே கிடையாது என்பதையும் கூறிக் கொள்கிறோம்.
பேரிக்காவின் ஏகாதிபத்திய போக்கு இத்தாலியிடம் செல்லாது என்பதையும் கூறிக் கொண்டு விடை பெறுகிறோம்......
///
Deleteஆயிரந்தான் இருந்தாலும் இது நம்ம கூட்டு முயற்சி...எல்லோருமே காலரை தூக்கிவிடுங்கப்பா! அமெரிக்கா வாழ்க...வாழ்க...
த்ரில்லரில் திளைப்போம்.🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈 ///
அதே அதே ...!!
500 ஆவது பதிவில்...
ReplyDelete///(ஆப்+அமெ)-ரிக்கா///
இப்படி ஓட்டு போட்ட நண்பா் யாருனு கண்டுபுடிங்க பாா்ப்போம்!!
முதல்ல பழைய பஞ்சாயத்தை முடிங்க மிதுன் ..!
Deleteஇதை அடுத்த மாரியம்மன் திருவிழாவுல பாத்துக்கலாம்..!!
எல்லாமும்ன முதல் நபர் யாரோ
Delete///எல்லாமும்ன முதல் நபர் யாரோ ///
Deleteஒரு எட்டு போய் பாத்துட்டு வந்து சொல்லுங்க ஸ்டீல் ..!
இவிங்க பேச்சையெல்லாம் நம்பாதிங்க ...டேஞ்சரஸ் பில்லோஸ் இவிங்க..!!
//ஈரோட்டில் இத்தாலி பார்ட்2-வாழ்க...வாழ்க..!!!//
ReplyDeleteஈரோட்டில் இத்தாலி பார்ட்2- வுக்கு ஜே
964 வது கமெண்ட் இந்த வாரத்தில்.
ReplyDeleteஅம்மையப்பன் தான் உலகம் ,உலகம் தான் அம்மையப்பன் என்று என் ஓட்டை ஆசிரியருக்கு போட்டதால் ரெண்டு குண்டு புத்தகமும் ஓகே ஆகிவிட்டது. என் வழி தனி வழி.
ReplyDeleteகவுண்டமணி பாணியில் சொன்னால்," புஸ்வாணம், சங்குசக்கரம் அப்படின்னு என்னென்னமோ சொல்றாங்க.அதெல்லாம் சத்தம் மட்டும் தான் கேட்டிருக்கேன். கண்ணால கூட பாத்தது இல்லிங்கோ"
ReplyDeleteஐ யாம் 194th
ReplyDeleteஅபிரிக்கவும், அமெரிக்காவும் சேர்ந்து இத்தாலியின் மௌஸை குறைத்து விட்டது, இன்னும் 5 நாளில் வர இருக்கும் தள டெக்ஸ் வில்லர் வாழ்க.
ReplyDelete///வியாழன்று உங்கள் கூறியர்கள் புறப்படும் guys !!////
ReplyDeleteஹைய்யா!!
Editor sir, we love all places around the world. So, hopefully, we would have Africa, America and Italy all covered. !!!! But, I really really like the new initiative on the series Kenya, the creators Rodolphe and Leo had created some interesting series in this series. It would definitely be off the usual zone where we are in now. !!! cant wait enough and looking forward to them !!!
ReplyDeleteஉ.உ.உப பதிவு வரலியே!!
ReplyDeleteAgree with Raghavan on scanlation part. ஸ்கேன்லஷன்கள் வருவதை யாரும் நிறுத்த முடியாது. உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் படிக்காமல் வேண்டுமானால் இருக்கலாம்.இங்கே வரும் என அறிவித்த தொடர்களை யாரும் முயற்சிப்பதில்லை. இன்டர்நெட்டில் cbr போர்மட்டில் கிடைக்கும் கதைகள் அனைத்தும் யாரோ ஒருவரால் ஸ்கேன் செய்யப்பட்டவையே. DC++ இல் கிடைக்காத கதைகளே கிடையாது. அதுவும் உடனடியாக. அனால் அதனால் விற்பனை பாதிப்பதில்லை. கதைகள் நன்றாக இருக்கும்போது ஹர்ட்காபி வாங்குவதையே அனைவரும் விரும்புகின்றனர்.
ReplyDeletescan, scanlation என்று கவலைப்படுவதற்கு பதில் நல்ல கதைகளை அனைவரும் விரும்பும் கதைகளை வெளியிட்டால் அனைவரும் வாங்குவார்கள்.
ஸ்கேன்லேசன் பண்ணாதீர்கள் என கூற அந்த கதையின் உரிமை வைத்திருப்பவர்களை தவிர வேறு யாருக்கும் உரிமையில்லை. and no one can stop that.
Delete