Powered By Blogger

Saturday, September 08, 2018

ஒரு டைனமைட்டின் கதை...!

நண்பர்களே,

வணக்கம், என் மேஜையோரமிருக்கும் கம்ப்யூட்டரின் கீழே 'தேமே' என்றொரு தாள் சதா நேரமும் கிடக்கும்! தினமும் அதை ரெண்டு நொடிக்கேனும் கையில் ஏந்தியபடி மோவாயைத் தடவிக் கொண்டு சிந்தைனை செய்வது போல மூஞ்சை வைத்துக் கொள்ளவது வாடிக்கை! சிலைக் கடத்தல்  சார்ந்த துப்புக்களோ, குட்கா விசாரணைக்கு  வலு சேர்க்கக் கூடிய மேட்டர்களோ அதனில் கிடையாது! மாறாக-ஒவ்வொரு மாதத்தையும் கோழி கிறுக்கலாய் எழுதி-அவற்றின் அடியில் சந்தா A ; சந்தா B என்று திட்டமிடலின் இதழ்களைக் குறித்து வைத்திருப்பேன்! இப்போதெல்லாம் barcode சகிதம் நமது இதழ்கள் வெளிவருவதால், ஒவ்வொரு இதழுக்குமே நம்பர் அத்தியாவசியமாகிப் போகிறது! So முன்கூட்டியே இதழ்களின் வரிசைக்கிரமத்தை அந்தத் தாளில் எழுதி வைத்து ஓரமாய் வெளியீடு நம்பர்களையும் போட்டுக் கொண்டு, மோவாய் தடவலோடு யோசனைக்குள் ஆழ்ந்திடுவது சுகமானெதாரு பொழுதுபோக்கு எனக்கு! அந்நேரம் ஓடும் மகாசிந்தைனகளின் சாம்பிள் இதோ!

  • ·         ஆங்... இந்த மாசம் டெக்ஸ் சாகஸம் இல்லே... அதை ஈடு பண்ண சித்தே வலுவான கதையா எதைத் தேர்வு பண்ணலாம்??
  • ·         ம்ம்ம்... கார்ட்டூன் இல்லாத மாதமிது! ஓவராய் 'கடுங்காப்பி இதழ்களாய்' இந்த மாசம் போட்டுத் தாக்கப்படாது!
  • ·         ஷப்பா ... இது பெண்டு கழற்றும் மாதம்; இதற்கு முன்பான மாதத்தில் ஜாஸ்தி நோவு தரக்கூடிய இதழ்களைத்  திட்டமிடப்படாது!
  • ·         மொழிபெயர்ப்பில் கூடுதலாய் நேரம் பிடிக்கக் கூடிய இதழொன்று களமிறங்கும் மாதமிது! அந்த மாதத்தின் இதர வெளியீடுகள் கொஞ்சம் ஜாலியான பணிக்களங்களாய் இருந்தால் தேவலாம் ! 

எல்லாவற்றிற்குமான highlight - அந்தந்த மாதங்களது நிறைவோடு - அந்தந்த இதழ்களெல்லாம் அச்சாகி முடிந்திடும் சமயம், 'done & dusted' என்றொரு பெரிய டிக்காக அடிப்பதே! மிதமோ-நன்றோ; சொதப்பலோ-ஹிட்டோ -4 இதழ்கள் கொண்டதொரு கூட்டணி  மீதான பணிகள் முழுமை காணும் போது மனசுக்குள் லேசாயொரு விடுமுறை பீலிங்க் எழுந்திடும்! அதன் மறுமாதம் கடோத்கஜன் சைஸில் புது இதழ்கள் காத்திருந்து பீதியைக் கிளப்பினாலும்  அந்த "all is completed" தருணத்தின் சுகமே அலாதி தான்! அதே போல - ஒரு "ஒழுக்கமான புள்ளையாண்டான்" மூடில் இருக்கும் போது-பரபரவென மறுமாதத்து திட்டமிடல்களைச் செய்த கையோடு நம்மவர்களை குச்சியைக் கொண்டு குத்தாத குறையாக அவசரப்படுத்துவதுண்டு! ஆனால் பல நேரங்களில் "சோம்பேறி மாடன்" மூடே மேலோங்கும் என்பதால் - "ஆங்... நேரம் இருக்குதுல்லே.... பார்த்துக்கலாம்!" என்ற படிக்கே லாத்தலாகச் சுற்றுவதும் உண்டு! அத்தகைய தருணங்கள் தான் post இரத்தப்படல நாட்கள் ! இதழைத் தயாரித்து; ஈரோட்டில் ரீலிஸ் செய்து; உங்கள் கைகளில் ஒப்படைக்கவும் செய்தான பின்னே - அசுர உறக்கம் போடும் கும்பகர்ணனின் சோம்பல் தான் வியாபித்துக் கிடந்தது! தொடர்ந்த மாதத்து இதழ்களும் lightweights தான் எனும் போது - பாதி உறக்கத்திலேயே வண்டி ஓடி விட்டது! 

ஆனால் "அக்டோபரின் அட்டவணை"  என்ற சமாச்சாரத்தை சீரியஸாகக் கையில் எடுத்த கணத்தில் நெஞ்சுக்குள் பரிச்சயமான அந்தப் பரபரப்பு மறுக்கா குடிகொள்ளத் துவங்கியது! 777+பக்கங்களுடன் நம் டாப் நாயகர் பிறந்த நாள் கொண்டாடவிருக்கிறார் எனும் போது நான் சோம்பிக் கிடந்தால் புனித தேவன் மனிடோ கண்ணைக் குத்தி விடமாட்டாரா-என்ன? So அடித்துப் புடித்து பணிகள் சூடேறத் தொடங்கி விட்டன கடந்த 10 நாட்களாகவே!

"எல்லாம் சரி ; ஆனால் "டைனமைட்டின் உட்பொருட்கள் என்னவோ? என்ன கதை? என்ன சமாச்சாரம்?" என்று நீங்கள் புருவத்தை உயர்த்தி யோசிப்பது புரிகிறது! ஓவர் சஸ்பென்ஸ் உடம்புக்கு ஆகாது என்பதாலும்-ஆரோக்கியமான எதிர்பார்ப்புகளும் ; விவாதங்களும்; அலசல்களும் -அந்த இதழ் மீதான ஆர்வத்தைப் பரவலாக்கிட உதவிடும் என்பதாலும்- வாய் நிறையக் குழைத்து பூசியிருந்த பெபிக்காலைப் பரபரவென களைந்திட முயற்சிக்கிறேன்! Oh yes folks-என்ன தான் நான் "இந்திரன்-சந்திரன்" என்று ஒரு நாயகருக்கு பில்டப் தந்தாலும் அவரை நீங்கள் ஒட்டுமொத்தமாய் அலசி ஆராயும் போது கிட்டும் பாசிடிவ் அதிர்வுகளின் தாக்கம் -பற்பல மௌன வாசகர்களையும் - ஆர்வமாய் வாங்கிடும் வாசகர்களாய் உருமாற்றி வருவதைப் பார்க்க முடிகிறது! "மெல்லத் திறந்தது கதவு" இதழின் போது நீங்கள் செய்த அதிரடி அலசல்களின் புண்ணியத்தில், ஒரே மாதத்தில் அந்த இதழ் விற்றுத் தீர்ந்து (கதையின் தன்மையைக் கண்ட 'டர்ரில்' நான் முன்கூட்டியே பிரிண்ட் ரன்னை கணிசமாய்க் கம்மி பண்ணியிருந்தேன் என்பது வேறு விஷயம் !!); "நிஜங்களின் நிசப்தம்" இதே விஷயத்தை நடைமுறைப்படுத்திக் காட்டியது அதிரடியாய் !! And இதோ இம்மாதத்து "களவும் கற்று மற" கூட உங்களின் உத்வேகமான வரவேற்புகளால் சார்புநிலைகள் ஏதுமின்றி- "புடிச்சா வாங்குவோம்!" என்றிருக்கும் வாசகர்களை உந்தித் தள்ளும் சக்திகளாக வேகம் பெற்று வருகின்றன ! 

ஓரிரு மாதங்களது அனுபவங்களென்றில்லாது - over a period of time நான் கவனித்துள்ள விஷயமிது guys : பிடிக்காதவைகளைக் கூட நயமாய்; பகடியாய் சொல்லி விட்டு, பாராட்ட வேண்டிய சமாச்சாரங்களை நீங்கள் highlight செய்திடும் பட்சங்களில், அந்த இதழ் தலையில் துண்டைப் போடாது தேறிவிடுகிறது ! So ஒவ்வொரு இதழின் வெற்றியிலும் ,தோல்வியிலும் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் ஸ்பஷ்டமாய் உள்ளதென்பதே யதார்த்தம் ! உங்கள் ஒவ்வொருவரையும் நான் தொங்கோ தொங்கென்று  தத்தம் அபிப்பிராயங்களை பகிரக் கோருவதும்  இதன் காரணமாகவே ! காமிக்ஸ் மீதான ஆர்வத்திலும், நம் மீதான அன்பிலும் நண்பர்கள் சில தருணங்களில், இங்கோ - வேறெங்கோ கொஞ்சம் தூக்கலாய் பாராட்டுக்களை நல்கிடலாம் தான் ! அப்போதெல்லாம் அவர்கட்கு அழகாய் வழங்கப்படும் "ஜால்ரா விற்பன்னர்கள்" என்ற அடைமொழியை விடவும் "விற்பனைத் தூதர்கள்"; "நமது பிராண்ட் அம்பாசிடர்கள்" என்ற அடையாளங்கள் பொருந்திடும் ! ஒரு ஆகச் சிறிய வட்டத்தைப் பாட்டுப் பாடி; ஆட்டம் போட்டு அயர விடாது தொடரச் செய்வதற்கு  உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் எத்தனை உதவுகின்றன என்பதை நீங்களே அறியமாட்டீர்கள் guys ! ஆனால் உங்களுக்குள்ளே உறையும் சக்தியின் பரிணாமங்களை நாங்கள் அறிவோம்!ஆங்... உசிலம்பட்டியில் ஆரம்பிச்சு ஊட்டி வழியா உஸ்பெகிஸ்தான் போய் விட்டேன் என்பது புரிவதால் சடுதியாய் ஒரு U-டர்ன் போட்டு இந்த மேட்டரைத் துவக்கிய புள்ளிக்கே திரும்பிடுகிறேன்!

The Dynamite Special!

இரு முழு நீள சாகசங்களோடு இந்த மெகா இதழ் தயாராகி வருகிறது!

கதை #1 - "புயலுக்கொரு பிரளயம்!" நமது 33 ஆண்டு கால "டெக்ஸ் பயணத்தில்" நாம் இதுவரை சந்தித்திரா ஒரு புது அனுபவம் இதன் மூலம் காத்துள்ளது என்பேன்-simply becos இதுவொரு மெ-கா-மெ-கா சாகஸம் என்பதால்! டபுள் ஆல்பங்கள் 220 பக்கங்களில்; சில ஸ்பெஷல்கள் 260 பக்கங்களில்; Maxi ஆல்பங்கள் 330 பக்கங்களில் என்பதே இதுவரையிலான நமது உச்ச வாசிப்புகளாய் இருந்து வந்துள்ளன - இரவுக்கழுகாருடனான சவாரிகளில்! ஆனால் முதன்முறையிலாக "500" என்றதொரு உயரத்தையும் தாண்டவிருக்கிறோம் இந்த ஒற்றை சாகஸத்தின் வாயிலாக! Oh yes - 507 பக்கங்கள் கொண்டதொரு முழு நீள -முழு வண்ண சாகஸமிது! டெக்ஸ் தொடரின் longest சாகஸம் 586 பக்கங்கள் கொண்டதென்று ஞாபகம் ; தற்போதைய தேர்வு இரண்டாமிடமோ; மூன்றாமிடமோ பிடித்திடக்கூடும் ! And இது பற்றி நாம் ஏற்கனவே 2 வருடங்களுக்கு முன்பாகவே பேசியிருக்கிறோம் ! நம்மவரைத் தூக்கி "மாமியார் வீட்டுக்குள்" போட்டு பாடாய்ப்படுத்தி எடுக்கும் காட்சிகளை முன்னமே பார்த்த ஞாபகம் உள்ளதா? அந்தக் கதையே தான் டைனமைட்டின் முழு வண்ண block! இதோ சில previews!



சிறையில் கல்லுடைப்பதும்; கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்படுவதும்; சித்திரவதைக்கு உள்ளாவதும் இதனில் டெக்ஸ் சந்திக்கவுள்ள அல்லல்களுள் சில! இது போனெல்லியின் கிளாசிக் கதை வரிசைகளுள்  ஒன்று என்பதால்-அவர்களது டாப் படைப்பாளிகளின் கைவண்ணத்தில் மிளிர்கிறது! கதை: G.L. போனெல்லி ; சித்திரங்கள் எரியோ நிக்கோலோ ! 507 பக்க சாகஸம் என்பதற்காக பல டஜன் சில்லுமூக்குச் சிதறடிப்புகளை இங்கே நாம் பார்த்திடப் போவதில்லை! மாறாக-டெக்ஸ்&கோ-வின் மதியூகத்தை; திட்டமிடும் பாணிகளை; தெளிந்த நீரோடை போலான ஸ்க்ரிப்டில் ரசித்திடவுள்ளோம்! And வர்ணங்களில் சும்மா மின்னுகிறார் நமது பிறந்தநாள் நாயகர்!! அச்சிலும் ரொம்பவே அழகாய் இந்த இதழ் அமைத்துள்ளதாய் மனத்துக்குப்பட்டது! நிச்சயமாய் புக்கைப் புரட்டவே நிறைய  நேரம் எடுத்துக் கொள்வீர்களென்று பட்சி சொல்கிறது! So டெக்ஸ் தொடரின் ஒரு மைல்கள் சாகஸம் - waiting!

இதழின் b&w சாகஸமோ ஒரு 266 பக்க crackerjack ஆக்ஷன் மேளா ! டெக்ஸ்&கார்சனின் அதிரடிகள்; நக்கல்கள்; நையாண்டிகள்; சில்லுமூக்குச் சிதறடிப்புகள் என்று அட்சர சுத்தமாய் பட்டையைக் கிழப்பும் சாகஸம் ! கதாசிரியர் க்ளாடியோ நிஸ்ஸியின் அதிர்வேட்டுப் படைப்புகளுள் இதற்குமொரு முக்கிய இடமுண்டு! இதன் preview அடுத்த வாரம் !! வண்ண சாகஸத்திற்கும்; b&w கதையினிற்கும் க்ளைமேக்ஸில் ஒரு ஒற்றுமையுண்டு! இதழைப் படிக்கும் போது அதனை நீங்களே புரிந்து கொள்வீர்கள் ! 

So ஒரு கிளாசிக் மெகா..... நீள சாகஸமும்; இன்னோரு நீ-ள-மா-ன  சாகஸமுமாய் இணைந்து உங்களது அக்டோபரை  மெர்சலாக்க வருகின்றன ! செப்டம்பர் 30-க்கு உங்கள் கைகளில் இதழை ஒப்படைப்பதே இப்போதைக்கு எங்களது ஒரே இலட்சியம்! அப்புறம் இந்த இதழின் பிற்பகுதியில் நமது  'டெக்ஸ் காதலைப்' பதிவு செய்திட பக்கங்கள் சிலவற்றை ஒதுக்க எண்ணியுள்ளேன்! எனது கதகாலட்சேப நீளங்களில் அல்லாது - "நறுக்"கென்று உங்களது பார்வைகளில் இரவுக்கழுகாரையும் அவருடனான நமது பயணங்களையும் பற்றி எழுதி அனுப்புங்களேன்? அல்லது இங்கேயே கூடப் பதிவிடலாம் ?!
  • நீங்கள் வாசித்த முதல் டெக்ஸ் இதழ் பற்றி....
  • உங்களது all-time favorite சாகஸம் பற்றி ...
  • டெக்ஸ் & கோ மீது தீராக் காதல் நமக்கெல்லாம் தொடர்ந்திடுவதன் காரணம் என்னவாக இருக்ககூடும் என்பது பற்றி

crisp ஆக எழுதிட  முயற்சியுங்களேன் folks? ஓவிய திறமை கொண்ட நண்பர்கள் நம்மவரை வரைந்தும் கூட அனுப்பலாம் ! 

அவகாசம் அதிகமில்லை என்பதால் -இன்றே; இப்போதே; இங்கேயே ஒரு தொடக்கம் தந்திடலாமே?

Back to the present - செப்டம்பரின் மாதத்தில் 3 முக்கிய கேள்விகளுக்கான விடைகள் எனக்குக் கிட்டியுள்ளன- ஒரு சேர ! பிரதானமானது சமீப நாயகர் ட்ரெண்ட் சார்ந்தது! இவரது அலட்டலில்லா பாணிக்கு முதல் ஆல்பத்திலேயே பரவலான வரவேற்பு கிட்டியிருந்தாலும்- 'ஆக்ஷன் இல்லாம இந்தாள் பேசிக்கிட்டே திரியறானே?' என்ற புகாரை நண்பர்களில் ஒரு சிறு அணியினர் வாசித்து வந்ததில் ரகசியமேது? so அதன் இரண்டாவது ஆல்பத்திற்கு கிட்டிடக்கூடிய வரவேற்போ -விளக்குமாற்றுப் பூசையோ தான் இவரது எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடும் என்பது அப்பட்டமாய் தெரிந்தது ! ஆல்பம் #2 கிட்டதட்ட கி.நா. பாணியில் கவித்துவமாய் பயணிக்கும் ஒரு உணர்வுபூர்வமான கதையே எனும்போது இங்கே ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் லேது என்ற சமாச்சாரம் லைட்டாக பிகில் ஊதியது தலைக்குள் ! so போட்டுத் தாக்கப் போகிறீர்களா?-அல்லது வாஞ்சையாய் அரவணைத்திடப் போகிறீர்களா? என்ற கேள்விகளுக்கு என்னிடம் ஹேஷ்யமாகவே பதில்கள் இருந்தன! கதையினில் இழையோடியதாய் நான் நினைத்த அரூப ஈர்ப்பானதும் ; பிரமிக்கச்செய்யும் சித்திர ஜாலங்களும் கரை சேர்த்துவிடும் என்ற நம்பிக்கை நிரம்ப இருந்தாலும்- எதையும் taken for granted ஆகக் கருதுவதை நான் சரியென்று எண்ணவில்லை! So இதழ் உங்கள் கைகளை எட்டி; உங்களது வாசிப்புகளுக்கு உள்ளாகி; கலக்கலான பாராட்டுக்களை குவிக்கும் வரையிலும் 2019-ன் அட்டவணையின் ஸ்லாட்களை இறுதி செய்திடாதே தொங்கலில் தொடரச் செய்திருந்தேன்! ஆனால் இந்த ஆண்டில் memorable இதழ்களுள் 'களவும் கற்று மற' முக்கியமானதொன்றாகிடும் அளவுக்கு இந்த ஆல்பத்தை நீங்கள் உசத்திப் பிடித்திருப்பதால் ட்ரெண்ட் முன் நான் போட்டு வைத்திருந்த சிறு கேள்விக்குறி இப்போது ஒரு முரட்டு ஆச்சரியக்குறியாக மாறிவிட்டுள்ளது ! Of course- 'ஙே' என்ற ரியாக்ஷனோடு இந்த ஆல்பத்தை அணுகியுள்ள நண்பர்களும் உண்டென்பது புரிகிறது தான் ; ஆனால் அவர்களுமே தொடரும் காலங்களில் இந்த தொடரின் ரம்யத்தில் மனதைப் பறிகொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! மொத்தமே 8 ஆல்பங்கள் தான் ட்ரெண்டின் தொடரினில் எனும் போது- ஆண்டுக்கு 2 ஸ்லாட்கள் ஒதுக்கினாலே 2021-ல் மங்களம் பாடியிருப்போம்! So எனக்கான விடை #1 இது!

கேள்வி #2-கார்ட்டூன் ஜானரில் மறுவருகை தந்துள்ள ஹெர்லக் ஷோம்ஸ்  சார்ந்தது! எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலுமே பரிட்சயமான லக்கி லூக் & சிக் பில் ஜோடியைத் தாண்டி கார்ட்டூன்களில் உங்களிடையே மத்தாப்பு மலரச் செய்யும் ஆற்றலை பிற சிரிப்பு நாயகர்கள் பெற்றிடுவதில்லை என்பது புலனாகி வரும் தருணத்தில் இந்த மாறுவேஷப் புலி களம் இறங்கியுள்ளார் ! Truth to tell - இவருக்கு என்ன மாதிரியான reception கிட்டிடுமென்றும் யூகிக்க தெரியவில்லை! Granted - இவர் நம்மிடையே புதியவரல்ல தான்; ஏற்கனவே மினி லயனில் இவரை ரசித்துள்ளோம் தான்; ஆனால் அதெல்லாமே 20+ ஆண்டுகளுக்கு முன்பாய் எனும்போது அதே ரசனைகளும்; வாஞ்சைகளும்; தொடர்ந்திடுமென்ற உத்தரவாதம் கிடையாது தானே? So 'எடுறா துடைப்பதை!' என்று நீங்கள் பொங்கிடும் பட்சத்தில்-ஷோம்ஸின் அந்த மாறுவேஷப் பையை இரவல் வங்கிக்கு கொண்டு ஜார்கண்ட் பக்கமாய் ஏதேனும் கோவேறு கழுதை வேஷமிட்டு திரியத்தான் வேண்டுமென்று நினைத்திருந்தேன்! ஆனால் ஜார்கண்ட் தப்பித்தது! நானுமே தான்..... ஷோம்ஸ் & வேட்ஸ்மே தான்!  So கார்ட்டூனில் யார் இடத்தில் யார்? என்ற எனது கேள்விக்கொரு பதிலும் கிட்டிவிட்டது செப்டெம்பரில்!

Last but not the least-கேள்வி # 3- நமது இளவரசி சார்ந்தது!! தள்ளாட்டம் கண்டு வரும் நமது தானைத் தலைவியை இம்முறை தூக்கி நிறுத்தப் போகிறீர்களா? அல்லது வாரிடப் போகிறீர்களா? என்பதை அறிந்திட ஆவலாகவே இருந்தேன்! And இம்முறை ஒரு சோடை போகா சாகஸமுமே ! So இதுவொரு செம comeback ஆக அமைந்திடா பட்சத்தில் 'ரோசனைகளே' நமக்கான அடுத்த கட்டமென்பதும் புரிந்தது! இதுவரையிலும் சிதறல்களாய் சில பாராட்டுக்கள் மாத்திரமே பதிவாகியிருப்பதை பார்க்க முடிந்துள்ளதெனும் போது-கையை பிசையத்தான் தோன்றுகிறது! மாடஸ்டி அணியினரே கரை வேஷ்டிகளை மாற்றிக் கொண்டு விட்டார்களா ? அல்லது கட்சியையே கலைத்து விட்டார்களா ? என்று சொல்லத் தெரியவில்லை - இந்த muted response-தனைப்  பார்த்திடும் போது! So கேள்வி #3-க்குக் கிட்டியுள்ள பதிலில் அத்தனை தெளிவில்லை என்பதே நிலவரம்!

இதற்கு மேலுமாய் 2019-ன் அட்டவணைக்கென waiting list களைத் தொடர்ந்திட இயலாதென்பதால்-final charting செய்து ரயிலைத் துவக்கும் பணிகளுக்குள் இந்த ஞாயிறு புகுந்திடவுள்ளேன் folks! So இப்போதைக்கு கிளம்புகிறேன் !!Have a lovely weekend all !!  Bye for now!

309 comments:

  1. Replies
    1. அருமையான கவிதைக்கதை ட்ரெண்டுடையது.. சிறப்பு. மாடஸ்டி கதைகளை தொடரலாம். ஹெர்லாக் ஷோம்ஸ் ஓக்கே. ஏன் சீரியஸ் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளையும் முயற்சிக்கலாமே?!?

      Delete
  2. விஜயன் சார், அடுத்த மாதம் டைனமைட் ஸ்பெஷல் மட்டும் தானா?

    ReplyDelete
    Replies
    1. // விஜயன் சார், அடுத்த மாதம் டைனமைட் ஸ்பெஷல் மட்டும் தானா? //

      இந்த மாசமுங்கோ
      .

      Delete
    2. அடுத்த மாத புத்தகங்களை இந்த மாசம் கடைசியில் அனுப்பறாங்கோன்ணா:-)

      Delete
  3. சரவெடி பதிவு போல...எம்மாம் நீளம்..படிச்சுட்டு வரேன் சார்...:-))


    ஆங்...


    இனிய இரவு வணக்கம் சார்...:-)

    ReplyDelete
  4. இப்போதைக்கு வணக்கம் 🙏 படிச்சிட்டு வாரேன்...

    ReplyDelete
    Replies
    1. நம்ம தல டெக்ஸ் கல் ஒடைக்கறதையும், கட்டி இழுத்துட்டு போவதையும், மொத்து வாங்குவதையும் பார்த்து சந்தோஷபட்டுக்குங்க டெக்ஸ் ஹேட்டர்ஸ். 30ந் தேதி இருக்கு, எப்படி திருப்பித் தரோம்னு. சும்மா டைனமைட் நான்ஸ்டாப்பா வெடிக்கும் பாருங்க. 🔥 🔥 🔥

      Delete
    2. // பார்த்து சந்தோஷபட்டுக்குங்க டெக்ஸ் ஹேட்டர்ஸ். 30ந் தேதி இருக்கு, எப்படி திருப்பித் தரோம்னு. சும்மா டைனமைட் நான்ஸ்டாப்பா வெடிக்கும் பாருங்க. 🔥 🔥 🔥 //

      ஹா ஹா. சூப்பர் ஜி.

      Delete
  5. Replies
    1. அதான பார்த்தேன்... ஆறாம் இடத்துக்கு வந்தாச்... ஆனாலும் பரால்ல... பத்துக்குள்ள ஒரு முத்தாயாச்சு..!

      Delete
  6. ///! Oh yes - 507 பக்கங்கள் கொண்டதொரு முழு நீள -முழு வண்ண சாகஸமிது ///

    அட்ரா.....சக்க...!!

    அட்ராசக்க
    அட்ராசக்க
    அட்ராசக்க...!!

    ReplyDelete
    Replies
    1. //////! Oh yes - 507 பக்கங்கள் கொண்டதொரு முழு நீள -முழு வண்ண சாகஸமிது ///

      அட்ரா.....சக்க...!!

      அட்ராசக்க
      அட்ராசக்க
      அட்ராசக்க...!!

      Delete
    2. அட்ரா சக்க...


      அட்ரா சக்க..


      அட்ரா சக்க...!!!

      Delete
    3. /////! Oh yes - 507 பக்கங்கள் கொண்டதொரு முழு நீள -முழு வண்ண சாகஸமிது ///

      அட்ரா.....சக்க...!!

      அட்ராசக்க
      அட்ராசக்க
      அட்ராசக்க...!!

      Delete
    4. /! Oh yes - 507 பக்கங்கள் கொண்டதொரு முழு நீள -முழு வண்ண சாகஸமிது ///

      அட்ரா.....சக்க...!!

      அட்ராசக்க
      அட்ராசக்க
      அட்ராசக்க...!!

      Delete
    5. :-D

      அட்ரா.....சக்க...!! (குண்டு..... சட்டி !!)

      அட்ராசக்க (குண்டுசட்டி)
      அட்ராசக்க(குண்டுசட்டி)
      அட்ராசக்க...!! (குண்டுசட்டி...!!)


      :-D :-) :-) :-)

      Delete
    6. சின்ன குண்டுசட்டி இல்ல......ரொம்ப பெருசு உயர்திரு ராகவன்.!

      Delete
    7. ஆமாம் தவத்திரு கிட் ஆர்ட்டின் கண்ணன் .. அதுனால தான் நாலு தபா போட்டுருக்கேன் :-)

      Delete
  7. விடுமுறை வில்லங்கம்:- இளவரசியின் கதை இந்த முறை வித்தியாசமாக இருந்தது. வழக்கமான இளவரசி மற்றும் லில்லி கார்வினின் உயிரை பணயம் வைத்து தெளிவான திட்டமிடலில் நடக்கும் சாகசம். எளிதான நேர்கோட்டில் பயணிக்கும் கதை மற்றும் எளிதான வாசிப்புக்கு உகந்த கதை. சித்திரங்கள் அருமை. கதையில் வரும் டாக்டரின் தொன தொன என்ற பேச்சு எரிச்சலை கொடுத்தது.

    அட்டைப் படம் அருமை. அதிலும் பின்புறம் உள்ள அட்டைப் படம் செம. மேட் பினிசிங்கில் பார்க்க நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பெங்களூர் பரணியே சொல்லிட்டாரு சார்...


      இளவரசி பாஸ்...


      பாத்து அடுத்த வருசம் அட்லீஸ்ட் ஒரு தடவையாவது கண்ணுல காட்டுங்க சார்...


      இல்லைன்ன்னா சில பேரு கண்ணு வேத்துரும்....


      எங்கப்பா மடிப்பாக்கம் மாடஸ்தி சாரு...அவரு வந்தா தான் ப்ராப்ளம் சால்வ் ஆகும் போல...:-(

      Delete
    2. இளவரசியின் அட்டைப் படத்தை ஆசிரியர் இங்கு காண்பித்த போது அது நன்றாக இல்லை என சொன்னவர்களில் நானும் ஒருவன். ஆனால் அதனை கைகளில் மேட் ஃப்னிசிங் உடன் பார்த்த போது மனம் வாவ் எனச் சொல்லியது. பின் அட்டையை உருவாக்கிய நமது ஓவியருக்கு பாராட்டுக்கள்.

      Delete
    3. Sorry ......modesty is out of trend ..simple issue but dialogue more but without interesting content like art movies...once again sorry but ennala modiyala

      Delete
  8. ////So 'எடுறா துடைப்பதை!' என்று நீங்கள் பொங்கிடும் பட்சத்தில்-ஷோம்ஸின் அந்த மாறுவேஷப் பையை இரவல் வங்கிக்கு கொண்டு ஜார்கண்ட் பக்கமாய் ஏதேனும் கோவேறு கழுதை வேஷமிட்டு திரியத்தான் வேண்டுமென்று நினைத்திருந்தேன்! ஆனால் ஜார்கண்ட் தப்பித்தது! நானுமே தான்..... ////


    ஹா ஹா ஹா!! :) :) :) :)

    ReplyDelete
  9. என்னது எங்க டெக்ஸயே இழுத்துட்டு போறாங்களா ...இழுத்துட்டு போறது இல்லாம சிறைல கல்லு உடைக்குறார்...அடிவாங்கி மடங்கி கிடக்குறார்....



    டேய்...யாருடா அது...வாங்கடா வெளியே ...எங்க எங்க தலைவரையேவா ...


    அடிங்....


    ஒரு மாசம் கழிச்சு வரேன் இருங்கடா ...அப்புறம் பாருங்க...



    பசுபதி எடுறா வண்டியை...கிர்ர்ர்...

    ReplyDelete
  10. வாவ்

    டெக்ஸ் கலக்குறாரே

    இப்பவே படிக்கணுமுன்னு தோணுதே சார்

    இன்னமும் 22 நாட்களிருக்கே
    .

    ReplyDelete
  11. சார் ஒரு சின்ன கேள்வி
    செப்டம்பர் 30 ஞாயிற்றுக்கிழமையாகிச்சுங்களே எப்படி எங்களுக்கு அன்னிக்கி கிடைக்கும்

    ஒரு நாள் முன்னாடியே கிடைக்க வாய்ப்பிருக்குங்களா சார் _/|\_
    .

    ReplyDelete
    Replies
    1. குட் கொஸ்டீன் சித்தரே...


      இது தான் இதுக்குதான் நீங்க எப்பவும் இளமையா இருக்க காரணம்..:-)

      Delete
    2. இள மைக்கு கூட அவசியம் இல்லாமல் இளமையாக இருக்கிறார் 😆

      Delete
    3. ஹலோ 30ம் தேதிக்கு முன்னால் என்று ஆசிரியர் எழுதி இருக்கிறார். மீண்டும் ஒருமுறை பாருங்கள்:-)

      Delete
    4. செப்டம்பர் 28 அல்லது 29 ல் கைக்கு கிடைக்க வாய்ப்புண்டுன்னு தோணுது,காத்திருப்போம் ஆவலுடன்.

      Delete
  12. Sir can we send our comments and drawing about Tex viller in WhatsApp?

    ReplyDelete
  13. குரங்கு சே(வே)ட்டை : முதலில் பாராட்ட வேண்டிய விஷயம் தெளிவான சித்திரங்கள் அருமையான வண்ணக்கலவையுடன்; குறிப்பாக கண்ணை உறுத்தாத வண்ணத்தில் சித்திரங்கள். இதற்கு வலு சேர்க்கும் விதமாக அச்சுத்தரம். பாராட்டுக்கள்.

    கதைக்கு செல்லாம். மாறுவேட புலி துப்பறியும் சிங்கம் தான் நமது நாயகர். அலட்டல் இல்லாமல் துப்பறியும் இவரது பாணி கதையின் ப்ளஸ். இவரது அசிஸ்டன்ட் கொஞ்சம் அறிவு கம்மி என்பது கதையை படிக்கும் போது அழகாகப் புரிகிறது; அதேநேரம் இவர் காமெடி செய்கிறேன் என்று மொக்கை ஜோக்ஸ் எதுவும் சொல்லாமல் இவரது வசனங்களை அமைத்தது சிறப்பு.

    இரண்டு கதைகளும் நன்றாக இருந்தது. குறைவான வசனங்கள், பல இடங்களில் சித்திரங்கள் கதையை சொன்னது. குழந்தைகளுக்கு இந்த கதையை தாராளமாக படிக்க கொடுக்கலாம்/படித்து காட்டலாம்.

    இவரின் கதையை இப்போது தான் முதன் முறையாக படிக்கிறேன். இவர் வரும் காலங்களில் ஆண்டுதோறும் நமது காமிக்ஸில் தவறாமல் காட்சி தரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ///குழந்தைகளுக்கு இந்த கதையை தாராளமாக படிக்க கொடுக்கலாம்/படித்து காட்டலாம்.///

      Yes!!

      Delete
  14. Expectation to read this Tex viller book increased by 500 ℅ after reading today post

    ReplyDelete
  15. அடேங்கப்பா டெக்ஸையே ஜெயிலில் போட்டது போதாது என்று கல்லு எல்லாம் உடைக்க வைக்கிறார்களா. அந்த அளவுக்கு வில்லனுக்கு தில் இருக்கா அல்லது எம் ஜி ஆர் பாணியில் இரண்டு அடி வாங்கி விட்டு கரண்ட் வட்டி மீட்டர் வட்டியாக கொடுக்க போகிறாரா? இல்லை டெக்ஸூக்கு வயசானதால் வில்லன் ஓவரா ஆட்டம் போடுகிறானா? என்று மண்டைக்குள் இப்போதே குடைச்சல் எடுக்க ஆரம்பித்தது விட்டது சார்;
    சீக்கிரம் கைகளில் கொடுத்து விடுங்கள் சார் இல்லே என்றால் எங்களை கீழ்பாக்கம் அனுப்பி வைத்த புண்ணியம் உங்களைச் சாரும். பார்த்து செய்யுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Seems the villian himself is sheriff .see the badge.i think for a particular reason ,tex wants to come inside jail

      Delete
  16. இரவு வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  17. விஜயன் சார், டைனமைட் ஸ்பெஷல் உடன் ஏதாவது கார்டூன் கதையையும் சேர்த்து களம் இறக்குங்கள். முடிந்தால் மதியில்லா மந்திரி ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. செப்டம்பரில் 4 புக்ஸ் உண்டு.

      Delete
  18. ///"500" என்றதொரு உயரத்தையும் தாண்டவிருக்கிறோம் இந்த ஒற்றை சாகஸத்தின் வாயிலாக! Oh yes - 507 பக்கங்கள் கொண்டதொரு முழு நீள -முழு வண்ண சாகஸமிது! ////

    -----507பக்கங்களாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ......
    (கிள்ளிப் பார்த்தனா அதான் அந்த சுகமான வலி..)
    அம்மாடியோவ்... ஆத்தாடியோவ்...!!

    போட்டுத்தாக்கு....போட்டுத்தாக்கு...😁😂😁😂😁😂😁😂😁

    ReplyDelete
  19. ////Oh yes - 507 பக்கங்கள் கொண்டதொரு முழு நீள -முழு வண்ண சாகஸமிது////

    வாவ்!! வண்ணத்தில் டெக்ஸ்

    ReplyDelete
  20. ஐய்யா!!

    ஹொ்லக் சோம்ஸ்ம் கன்பாா்ம்!!

    ட்ரெண்ட்-ம் கன்பாா்ம்!!

    ReplyDelete
  21. இன்று இரவு

    சைத்தான் சாம்ரஜ்யத்தோடு!!

    ReplyDelete
  22. //Vijayan31 August 2018 at 14:54:00 GMT+5:30
    No ....அடுத்த வாரம் சின்னதொரு கவரில் முதல் 200 நண்பர்களுக்கு மாத்திரம் அந்த பேட்ஜ்கள் தபாலில் அனுப்புவதாக உள்ளோம் !

    சந்தா A ; சந்தா B ; சந்தா D ; ஜம்போ சந்தா என இந்த நால்வகையினரைப் பிரித்து இம்மாத டெஸ்பாட்ச் செய்வதே பெரும் பிரயத்தனமாக இருக்க - இவர்களுள் யாரெல்லாம் இரத்தப் படல முன்பதிவு 200 -ல் உள்ளனர் என்றும் தேடிப் பிடிப்பதற்குள் குளறுபடிகளே மேலோங்குமென்று பட்டது !!

    So தனியாய் தபாலில் !//

    Any Update on this??

    ReplyDelete
  23. விஜயன் சார், அடுத்த வருட அட்டவணையை எப்போது கண்ணில் காட்டுவீர்கள்? தீபாவளி அன்று?

    ReplyDelete
  24. நீங்கள் வாசித்த முதல் டெக்ஸ் இதழ் பற்றி.....:

    நான் வாசித்த முதல் டெக்ஸ் இதழ் நள்ளிரவு வேட்டை.! ஆபத்தில் சிக்கியிருக்கும் நண்பரின் பண்ணையை காப்பாற்ற டெக்ஸ் விரைவார். ஆனால் நண்பர் எதிரிகளால் உயிரிழக்கும் தருவாயில்தான் டெக்ஸ் அங்கேபோய்ச் சேர்வார்.! நண்பருக்கு கொடுத்த வாக்குறுதிப்படி பண்ணையை வில்லனிடம் இருந்து காப்பாற்றி நண்பரின் வாரிசிடம் ஒப்படைப்பார் டெக்ஸ்.!
    மேலோட்டமாக பார்த்தால் சராசரி கதைபோல தோன்றினாலும், எல்மோரா என்னும் அந்த முகமூடி வில்லனின் பெரும்படைக்கு முன்னால் முதலில் ஒற்றை ஆளாகவும் பிறகு கமான்சே அதன்பின்னர் நவஹோ தோழர்கள் உதவியுடனும் நின்று ஜெயித்து பண்ணையை காப்பார்.!
    கால்நடைத் திருட்டை தடுக்க டெக்ஸ் அமைக்கும் வியூகங்கள் அட்டகாசமாக இருக்கும்.! ஆற்றில் ஆழமில்லாத இடத்தில் முள்வேலியிட்டு கமான்சேஸ் உதவியுடன் கால்நடை மந்தையை நகரவிடாமல் தடுப்பது, முகமூடி எல்மோரா யார் என டைகர்ஜாக் உதவியுடன் வெளிப்படுத்தும் விதம் என ஒரு அருமையான ஆக்ஷன் ப்ளாக் இந்த நள்ளிரவு வேட்டை.!

    உங்களது all-time favorite சாகஸம் பற்றி .....:

    என்னுடைய all-time favorite டெக்ஸ் சாகசங்கள் ஒன்றல்ல இரண்டு.!

    முதலில் கார்சனின் கடந்தகாலம். நட்பின் மகத்துவம், நம்பிக்கைத் துரோகத்தின் வலி, பழியெடுக்கத் துடிக்கும் துரோகமிழைக்கப்பட்ட கூட்டாளிகளின் வெறி, இவற்றினூடே புகுந்து கலக்கும் டெக்ஸ், கார்சன் ஜோடி ..என அக்மார்க் க்ளாசிக் காவியம் இது.! பணத்திற்காக நண்பனையே இழக்கத்துணிவதும், நண்பர்களுக்கே துரோகமிழைத்து மொத்தமாக நாமம் சாத்துவதும், பின்னர் நட்புக்காக உயிரையே தருவதும் என ரே க்ளம்மன்ஸ் மறக்கமுடியாத ஒரு கதாப்பாத்திரம்.

    அடுத்து வல்லவர்கள் வீழ்வதில்லை ..!
    அம்மாடியோவ்...டெக்ஸ் கதையில் இத்தனை ஆழமா என வியக்கவைத்த கதை.! அயர்லாந்து விடுதலைப்போரட்டம், மாக்ஸ்மில்லியன் தங்கம், மெக்ஸிகோ புரட்சி எல்லாவற்றையும் கலந்துகட்டி அதனுள் டெக்ஸ் அண்ட் கோவை விளையாட விட்டிருப்பார்கள். இக்கதையில் என்னைக் கவர்ந்தவர் ஷான் ஓ நீல் ..! தன் தாய்நாடான அயர்லாந்து மீது அவர் கொண்ட பற்றும் அதன் விடுதலைக்காக மனிதர் சந்திக்கும் போராட்டங்களும்..அப்பப்பா..! கடைசியில் நண்பனால் துரோகமிழைக்கப்பட்டு உயிர்விடும்போது கண்கலங்க வைத்துவிடுவார். வைராக்கியம், தேசப்பற்று, நட்பு, காதல் அனைத்தும் தன்னுள் கொண்ட ஷான் ஓ நீல் ஒரு மறக்கமுடியாத கதப்பாத்திரம்.

    டெக்ஸ் & கோ மீது தீராக் காதல் நமக்கெல்லாம் தொடர்ந்திடுவதன் காரணம் என்னவாக இருக்ககூடும் என்பது பற்றி.....:

    நம் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கும் பாஸிட்டிவ் எண்ணங்களின் பிம்பமே டெக்ஸ் வில்லர்.! எங்கோ நடக்கும் அநியாயத்தைக் கண்டு நம் உள்ளம் குமுறினாலும் அதை தட்டிக்கேட்க நம்முடைய சூழலும் பலமும் கைகொடுக்காது.! அதை கதையில் ஒருவர் செய்யும்போது அதை ஆராதிக்கிறோம் .! அந்த தெனாவெட்டான லுக்கும் கெட்டவன் எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் எதிர்த்து நின்று முகத்தைப் பெயர்க்கும் தில்...இதையெல்லாம் பார்க்கும்போது டெக்ஸ் ரூபத்தில் நாமே செய்வது போல ஒரு ஆனந்தம்.! டெக்ஸ் -கார்சன் நட்பு ரொம்பவே அழகானது.!அவர்களுடன் டைகர் ஜாக் கிட்வில்லர் இருவரும் சேர்ந்துவிட்டால் அநீதிக்கு எதிராக ஒரு ராணுவமே ஒன்றிணைந்தது போல் நமக்கு ஒரு சந்தோஷம் ஏற்படும்.!
    டெக்ஸ் & கோ வேறு யாருமல்ல ..நம்முடைய வெளிப்படுத்தமுடியா போராட்ட குணங்களின் உருவமே ..! எனவே எப்போதும் அவர்களை ஆராதிக்கவே செய்வோம்..!!

    Love you ever TEX

    ReplyDelete
    Replies
    1. 12345678999999999999888899999999999999999999999999999999999999999999999999+++++++++++++++

      Delete
    2. மிகவும் அருமையான எழுத்து நடை நண்பரே.

      Delete
    3. சூப்பர்யா மாம்ஸ்... நல்லா எழுதி இருக்கிறாய். வாழ்த்துகள்...!!!

      Delete
    4. சரி தான் கண்ணா. நல்லா இருக்கு. ஆனால் டெக்ஸ் பற்றி குறிப்பு வரையச் சொன்னால் கட்டுரை எழுதி இருக்கீங்க?

      Delete
  25. சார் மெகாஆஆஆஆஆ டெக்ஸ்....சூப்பர்டெக்ஸ் குறித்த சிந்தனைகள் நாளை

    ReplyDelete
  26. தலைக்கு என்னுடைய அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete

  27. நீங்கள் வாசித்த முதல் டெக்ஸ் இதழ் பற்றி

    டிராகன் நகரம். பள்ளிப் பருவத்தில் பதின்ம வயதுகளின் துவக்கத்தில் வாசித்தது. அந்த பாலத்தில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி ஒரு photographic memoryயாக மனதில் பதிந்து விட்டது. இந்த கதை முதலில் வெளியிட்டு சுமார் முப்பது ஆண்டுகள் கடந்து விட்டது என்னளவில் நம்ப முடியாத ஆச்சர்யம் இன்னும். Its a lifetime landmark !

    உங்களது all-time favorite சாகஸம் பற்றி ...

    நில் .. கவனி ..சுடு .. என்ற action அதகளம் என்னை வெகுவாக கவர்ந்திருந்தது இதுவரை. ஆனால் மிகச்சமீபத்தில் வெளிவந்த 'விரட்டும் விதி' என்ற 32 பக்க Tex கதை எனது all-time லிஸ்டில் இப்போது No 1. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்று நிரூபித்த கதை.

    டெக்ஸ் & கோ மீது தீராக் காதல் நமக்கெல்லாம் தொடர்ந்திடுவதன் காரணம் என்னவாக இருக்ககூடும் என்பது பற்றி

    சிறுவயதில் அவ்வளவு ஈர்ப்பு இருந்ததில்லை. வாங்குவேனே என்பதற்காக படித்தது தான் அதிகம். ஆனால் நமது மறுவரவுக்குப் பின்னர், அனைத்து கதைகளும் பிடித்தது. நீண்ட நெடு நேர IT சார்ந்த தின அலுவலக வாசத்திற்கு பின் சும்மா ஸ்டைலா, பரபரன்னு, breezyயா, ஒரு action packed adventure என்னை மிகவும் சமனப்படுத்தி ஒரு relaxing-cum-cooling effect வழங்குகிறது. அழுத்தங்கள் விலகி லகுவாக உணர்கிறேன்.

    Comic Lover Raghavan

    ReplyDelete
  28. Dynamite மீதான ஆவல் கூடுகிறது ...

    ReplyDelete
  29. நீங்கள் வாசித்த முதல் டெக்ஸ் இதழ் பற்றி....

    தலைவாங்கி குரங்கு. அந்த திரில் யப்பா யா யா ஹி ஹி ஹி.
    அப்புறம் அது தலையில்லா போராளியில் கிடைத்தது.

    உங்களது all-time favorite சாகஸம் பற்றி ...
    நள்ளிரவு வேட்டை
    கா.க.காலம்,சர்வமும் நானே, ப.சி.ம,எல்லாமே.recently காற்றுக்கு ஏது வேலி.
    டெக்ஸ் & கோ மீது தீராக் காதல் நமக்கெல்லாம் தொடர்ந்திடுவதன் காரணம் என்னவாக இருக்ககூடும் என்பது பற்றி

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் & கோ மீது தீராக் காதல் நமக்கெல்லாம் தொடர்ந்திடுவதன் காரணம் என்னவாக இருக்ககூடும் என்பது பற்றி....

      நாமும் டெக்ஸ் & கோவுடன் பயணம் செய்வது போல இருப்பது. இது போல் வேறு கதையில் ஒன்றியது இல்லை.

      சில சமயங்களில் நாமே டெக்ஸாக மாறிடுவதால்.

      நேரில் வேறு எங்கும் காண இயலாத நிலத்தோற்றம், நீர் நிலைகள், குதிரைகள், வண்டிகள், லாந்தர் விளக்குகள், துப்பாக்கி, வின்ஸெட்டர்கள்etc.
      டெக்ஸின் நேர்மை,நீதி,தெனாவெட்டு,கெத்து,சமயோசித புத்தி,கலாய்ப்பு,அதிரடி,நட்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம், துணிச்

      Delete
    2. சமயோசித புத்தி,கலாய்ப்பு,அதிரடி,நட்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம், துணிச்சல், வேகம்,துப்பாக்கி கையாளும் லாவகம் etc.
      இறுதியாக விஜயமகாதேவனின் வசனஜாலம்,வார்த்தை வித்தை டெக்ஸிற்க்கு வீரியம் சேர்பதினால் டெக்ஸ் எல்லோருக்கும் பிடிக்கும்.
      முக்கியமாக டெக்ஸின் எதிரிகளுக்கும் டெக்ஸை பிடிக்கும்.
      நன்றி.

      Delete
    3. ஸ்ரீதர் @ நல்லா இருக்கு.கொஞ்சம் பட்டி டங்கரீங் பார்த்து சிரியதாகக் கொடுங்கள்.

      Delete
  30. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்..._/\_/\_/\_

    வாழ்க்கையில் பல சம்பவங்கள், தொடர்புகள் நம் இதயத்தில் பல கோடுகளை கீறி செல்கின்றன... அவற்றில் பல கால ஓட்டத்தில் அழிந்து போனாலும் அழிந்து போகாத உயிருள்ளவரை அழியாமல் இருக்கும் சில கோடுகளும் உண்டு.. அப்படி 7 வயதில் என் தந்தையால் வரையப்பட்டு இப்போது என்றும் அழியாத கோடாக என் இதயத்தில் மாறிவிட்ட காமிக்ஸ் என்ற கோட்டை XIII வருடங்களாக சுமந்து திரியும் இவன் இலங்கையிலிருந்து சிவா....

    இத்தருணத்தில் முதலில் ஒரு சில தடவை மட்டும் இங்கு எட்டி பார்த்துவிட்டு அப்புறம் மௌன வாசகனாக மாறிவிட்ட என்னை மறுபடி உற்சாகப்படுத்தி இங்கு எழுதவைத்த மகி அண்ணாவுக்கு நன்றிகள் பல.../\/\/\

    வெளியான சில வாரங்களிலேயே என் கைக்கு கிடைத்த முதல் புத்தகம் என்ற வகையில் இ.ப பற்றி சில வரிகள் எழுதலாம் என்பது தான் என் ஆசை (விமர்சனம் எல்லாம் இல்லீங்.. சும்மா ஜாலியா என் இ.ப அனுபவங்கள் பற்றி)... அதனை கிடைக்க எனக்கு வகை செய்த நண்பருக்கும் நன்றிகள் பல... மற்றபடி நம் இலங்கை விற்பனையாளர்களிடம் வாங்க நேரிடில்...... போன வாரம் தான் "ஒரு கணவாய் யுத்தம்" புத்தகமே இங்குள்ள ஒரு நண்பர் வாங்கியதாக கேள்வி... இந்த தகவல் போதும் என்று நினைக்கிறேன்��

    புத்தக பார்சல் என் கைக்கு கிடைத்தது ஆகஸ்ட் 28... புத்தகத்தை 3 நாட்களில் நாளுக்கு ஒன்று என ஏக் தம்மில் படித்து முடித்து விட்டேன் தான்.. இருந்தாலும் தாமதத்திற்கு காரணம் எனக்கு முன்பாக வீட்டில் இன்னொருவர் இ.ப படிக்க ஆரம்பித்தது தான்... வந்த பார்சலை உடைத்து அழகுபார்த்து என்னை விட ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தவர் என் 72 வயதான தந்தை.. யெஸ் என் காமிக்ஸ் காதலின் காரணத்துக்கு சொந்தக்காரர்... அவர் சார்பாக இங்குள்ள நண்பர்களுக்கு ஒரு பெரிய ஹாய்... (அவர் கொஞ்சம் பிஸி... இன்னும் இ.ப கதை முழுதும் புரியல என்று 2ம் தடவை வாசித்து கொண்டு இருக்கிறார்... அதனால நானே சொல்லிட்டேன்��)

    OK புராணங்கள் போதும் என்கிறீர்களா... நம்ம மேட்டருக்கு போலாம்...

    சிவா என்கிற ராஜ் என்கிற பிரின்ஸ் என்கிற சிவராஜ் என்கிற நான்... ஊப்ஸ் ஸாரிங்... அதே நினைவு��... "இந்த கதையை முதன்முதலாக கலரில் முழுமையாக படிக்க போகிறவர்கள் அதிஷ்டசாலிகள்" நம்ம எடிட்டர் சார் ஹாட்லைன் இல் எழுதிய இந்த வசனங்களோடு தொடர்புடையவன் நான்.. இதை விட நான் XIII ஐ நேசிக்க வேறு என்ன காரணம் வேண்டும்? ஆனால் இருக்கிறது என பிறந்த தினமும் XIII தான்... (நான் XIII என்று விளையாட்டாக கையில் பச்சை குத்தி கொண்ட போது இ.ப பற்றி தெரியாதவர்களுக்கு விளக்கம் சொல்ல என் பிறந்த நாள் தான் உதவியது என்பது வேறு விடயம்) இந்த கதை பற்றி பல நண்பர்கள் காலம் காலமாக விமர்சனம் எழுதி தள்ளியிருக்கும் நிலையில் நான் வேறு புதிதாக என்ன எழுத போகிறேன்? அப்படி எழுதுவது என்றாலும் எழுதி முடிக்க கூடிய விடயம் அல்லவே... அதனால் சுருக்கமாக 1 வரி... இப்படிப்பட்ட ஒரு காமிக்ஸ் காவியத்தை எங்களுக்கு கொடுத்ததற்கு எடிட்டர் சார் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி _/\_/\_/\_

    இந்த கதையை படிக்கும் போது மனதை நெருடிய 2 விடயங்கள் அவற்றை பற்றி மட்டும் சொல்லி விடுகிறேனே... முதலாவது இ.ப கதையில் இருந்த Typing Mistakes... ஒரு புத்தகத்திலேயே 10க்கும் மேல் இருக்கிறது எடிட்டர் சார்... உங்கள் எந்த குண்டு புத்தகத்திலும் இந்த அளவுக்கு நான் எழுத்து பிழைகள் பார்த்ததில்லை.. மிகவும் கஷ்டமாக இருந்தது சார்... எதிர்காலத்தில் சரிசெய்து கொள்ள வேண்டுகிறேன்...

    நான் இ.ப B&W படித்ததில்லை.. ஆனால் கலர் பதிப்பு படித்த போது அதன் மொழிநடை உங்கள் பழைய மொழிநடை போல இருந்தது... எனவே விஜி அண்ணாவை கேட்டேன்.. அவர் ஆமா இது பழைய மொழிநடை தான் என்று சொன்னார்.. ஏன் மாற்றவில்லை என்று கேட்டதுக்கு தங்க கல்லறை பிரச்சனை பற்றி சொன்னார்... அது 2012 இல் சார்... இப்போது 6 வருடங்கள் கடந்து விட்டது... நம் ரசனைகளும் எவ்வளவோ முன்னேறி விட்டன... அதனால் இனி வரப்போகும் மறுபதிப்புகளில் புது மொழிபெயர்ப்பு வேண்டும்... இதனை நீங்கள் பரிசீலிக்கலாமே எடிட்டர் சார்... எங்களை போன்ற இளம் வாசகர்களுக்கு மிகவும் நன்றாகவும், மூத்த வாசகர்களுக்கும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து சார்...._/\_/\_/\

    நன்றி
    சிவா

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் டூ லயன் தளம் சிவராஜ்💐💐💐💐💐

      டைகர் ரசிகரான உங்களையும் கட்டிப்போடும் படியான டெக்ஸ் இதழ் ரெடியாகி கொண்டு உள்ளது. விரைவில்......!!!!

      Delete
    2. நன்றி ஜி

      ஆமாம்.. 500+ பக்கங்கள்...

      ஆவலுடன் காத்திருக்கிறேன்..

      Delete
    3. வருக...வருக...தொடர்க...

      Delete
    4. சூப்பர் சிவா. தொடர்ந்து இங்கு தயக்கம் இல்லாமல் பதிவிடுங்கள்.

      Delete
  31. மரணமுள்..டெக்ஸ்..படிக்கும் போதே கவர்ந்த கதை....பழைய புத்தக கடையில் வாங்கி படித்தது...

    முதல் டெக்ஸ் புத்தகம் என்றால் தலை வாங்கி குரங்கு..அட்டைபடம்,தலைப்பு இல்லாமல் படித்த கதை. மறுபதிப்பில் தான் கதை பெயர் தெரிந்தது.

    ReplyDelete
  32. 507 பக்க சாகஸம் என்பதற்காக பல டஜன் சில்லுமூக்குச் சிதறடிப்புகளை இங்கே நாம் பார்த்திடப் போவதில்லை! மாறாக-டெக்ஸ்&கோ-வின் மதியூகத்தை; திட்டமிடும் பாணிகளை; தெளிந்த நீரோடை போலான ஸ்க்ரிப்டில் ரசித்திடவுள்ளோம்! And வர்ணங்களில் சும்மா மின்னுகிறார் நமது பிறந்தநாள் நாயகர்!! அச்சிலும் ரொம்பவே அழகாய் இந்த இதழ் அமைத்துள்ளதாய் மனத்துக்குப்பட்டது! நிச்சயமாய் புக்கைப் புரட்டவே நிறைய நேரம் எடுத்துக் கொள்வீர்களென்று பட்சி சொல்கிறது! So டெக்ஸ் தொடரின் ஒரு மைல்கள் சாகஸம் - waiting!
    ஆகா ஆக ககா.இப்போ இப்பவே படிக்கனும் போல இருக்கே.

    ReplyDelete
  33. இரத்த படலம் இப்போ தான் ஸ்டார்ட்டிங்..கலரில்...
    முதல் தடவையாக அட்வான்ஸ் பே பண்ணி..எத்தனை தடவை கால் பண்ணி..எப்போ வரும் எப்போ வரும்னு கேட்டுட்டு இருந்தேன்..கருப்பு வெள்ளை புத்தகம் வரும் போது...
    10 வது பாகம் மில்லினியம் ஸ்பெஷலில் படித்து அதற்கு முன்பான கதைகளை படிக்காததால் என்னவாக இருக்கும் னு யோசிச்சுட்டு..முழு புத்தகம் வந்த போது உட்கார்ந்து படிச்ச போது..அந்த அனுபவமே தனி தான்..

    ReplyDelete
  34. ஹெர்லாக் நோம்ஸ் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை விலை சற்று கூடுதல் என்பது நீங்கலாக.
    இனி எனக்கு ஜம்போவில் கார்டூன் வேண்டாம் சார்.
    டெக்ஸ் மற்றும் ஜேம்ஸ் போதும் சார்.

    ReplyDelete
  35. 507 பக்கத்தில் டெக்ஸ் கதையா...அதுவும் வண்ணத்திலா............!
    ஆஹா...ஓஹோ ...பேஷ் !பேஷ்!! பேஷ்!!!!!.
    அட்டகாசமான ஆனந்தமான இனிமையான ஈர்ப்பான உவப்பான ஊக்கமான என்றென்றும் ஏங்க வைக்கும் இதழ் தரும் ஆசிரியர்க்கு ஒரு ராயல் சல்யூட்.நன்றிகள் பலப்பல.

    ReplyDelete
  36. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு.,,,
    முதற்கண் நன்றிகள் ஓட்டை வாய் உலக நாதனை விரட்டி அடித்ததற்கு🙏🙏🙏🙏
    500 பக்கத்திற்கு ஒரு முழு நீள கதையை படிக்க போகிறோம் அதுவும் மதி நுட்பத்துடன் டெக்ஸ் களத்தில் இறங்குகிறார் என்றால் எதிர் பார்ப்பு எந்த அளவுக்கு எகிறி கிடக்கிறது...மற்றுமொரு கார்சனின் கடந்த காலமோ!!!!!
    2 வது கதையோ டெக்ஸின் அக்மார்க் கதை என்று சொல்லி விட்டீர்கள்.டெக்ஸ் ரசிகர்களை பொறுத்த வரை இந்த புத்தகம் கையில் கிடைக்கும் நாள் தான் தீபாவளி .அதுவும் இரட்டை தீபாவளி💐💐💐💐💐💐
    ஆசிரியருக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம். ..(முடிந்தால்)...
    என்ன காரணம் என்று தெரியவில்லை 2 முறை எனக்கு அனுப்பிய புத்தகம் திரும்பவும் இந்தியாவிற்கு சென்று விட்டது..அதனாலேயே சவூதி வரும் நண்பர்கள் எங்கே இருந்தாலும் அவர்களின் முகவரியை கண்டு பிடித்து அவர்களின் வாயிலாக டெக்ஸ் புக்கை எப்படியாவது படித்து விடுவது வழக்கம்...இது வரையிலும்.டைனமைட் புக்கை கையில் ஏந்துவது எப்போது என்று கவலைப் பட்டு கொண்டிருந்தேன்2 தினங்கள் முன்பு வரை இந்த மாதம் 17 ந் தேதி ஒருவர் வருகிறார். (800 கிலோமீட்டர் தூரம் தள்ளி உள்ளார்)..நீங்கள் மட்டும் மனது வைத்து புத்தகம் எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் மட்டும் அனுப்பினால் போதும் நடந்து சென்றாவது வாங்கி விடுவேன்.அனுப்புவீர்களா???????
    நன்றி! வணக்கம் 🙏🙏🙏

    ReplyDelete
  37. நான் மொதப் படிச்ச டெக்ஸ் தலை வாங்கிக் குரங்கு. அப்ப ஆறாம்போ ஏழாம்போ படிச்சிட்டிருந்ததா ஞாபகம். தீபாவளி மலரா வந்துச்சு. காட்டூர் பிள்ளையார் கோயில் பக்கத்திலிருக்கிற பிரபா ஸ்டோர்ல குருதை மேல மனிதக் குரங்கு கத்தியோட இருக்கிற அட்டைப்படத்தோட புக்கை பாத்து டெரராயி உடனே வாங்கி ரேசன் கடை க்யூல நின்னுட்டே படிச்சேன். பயங்கர த்ரில்லான கதை. டெக்ஸ் இந்தக்கதை மூலமா நமக்கு டிடெக்டிவாத்தான் அறிமுகமானாரு. இன்னும் மனசுலேயே இருக்காரு.

    கொசுறா இந்த புக்குல கண்ணாடி கோட்டு சூட்டெல்லாம் போட்டுட்டு சரத்பாபு மாதிரி ஆசிரியரோட போட்டோ வேற ஒன்னு வந்துச்சு.

    ReplyDelete
    Replies
    1. /// தலை வாங்கிக் குரங்கு. அப்ப ஆறாம்போ ஏழாம்போ படிச்சிட்டிருந்ததா ஞாபகம். தீபாவளி மலரா வந்துச்சு. ///

      பொய்யி ...பொய்யி...நம்பாதிங்க..!

      யூத்துன்னு நம்ப வைக்கிதுக்காக புளுகுறாரு...அந்தப் புத்தகம் வந்தப்போ அவர் மூணாவது வருசம் இன்ஜினியிரிங் படிச்சிட்டு இருந்தார்னு வரலாறுல படிச்சிருக்கேன்.!

      Delete
    2. யூத்துன்னு நம்ப வைக்கிதுக்காக புளுகுறாரு...அந்தப் புத்தகம் வந்தப்போ அவர் மூணாவது வருசம் // கரீக்ட். மறு பதிப்பு வந்தப்ப அதத்தான் பண்ணீட்டு இருந்தேன் 😜

      Delete
  38. 70 வது டெக்ஸை ரத்தப்படலத்தால் ஈரோட்டுல கொண்டாட முடியாம போச்சு. 75 வருடத்தையாவது நல்ல லொக்கேசன்ல குண்டு புக்கோட கொண்டாடற மாதிரி இறைவன் அருள் புரிவாராக.

    ReplyDelete
  39. ////கேள்வி # 3- நமது இளவரசி சார்ந்தது!! தள்ளாட்டம் கண்டு வரும் நமது தானைத் தலைவியை இம்முறை தூக்கி நிறுத்தப் போகிறீர்களா? அல்லது வாரிடப் போகிறீர்களா? என்பதை அறிந்திட ஆவலாகவே இருந்தேன்! And இம்முறை ஒரு சோடை போகா சாகஸமுமே ! So இதுவொரு செம comeback ஆக அமைந்திடா பட்சத்தில் 'ரோசனைகளே' நமக்கான அடுத்த கட்டமென்பதும் புரிந்தது! இதுவரையிலும் சிதறல்களாய் சில பாராட்டுக்கள் மாத்திரமே பதிவாகியிருப்பதை பார்க்க முடிந்துள்ளதெனும் போது-கையை பிசையத்தான் தோன்றுகிறது! மாடஸ்டி அணியினரே கரை வேஷ்டிகளை மாற்றிக் கொண்டு விட்டார்களா ? அல்லது கட்சியையே கலைத்து விட்டார்களா ? என்று சொல்லத் தெரியவில்லை - இந்த muted response-தனைப் பார்த்திடும் போது! ////

    இந்தமுறை இளவரசியின் கதை மிக அருமையானதொரு பொழுதுபோக்கு அம்சமாகவே இருந்தது! இளவரசியின் இம்புட்டுக்காண்டி ரசிகனான என்னையே இக்கதை இந்த அளவுக்கு ஈர்த்திருக்கும்போது, மாடஸ்டியின் அதிதீவிர ரசிகர்களுக்கு இதுவொரு விருந்தாய் அமைந்திடுமென்பதில் சந்தேகமில்லை!!

    ஆனால், மாடஸ்டியின் அதிதீவிர ரசிகர்களில் பலரும் தொடர்ந்து மெளனம்காத்து வருதைப் பார்த்தால்... மாடஸ்டியை அவர்களே விடைகொடுத்து வழியனுப்பி வைக்கத் தயாராகிவிட்டதாகத் தெரிகிறது!!

    விழித்துக் கொள்ளுங்கள் மாடஸ்டி ரசிகர்களே... உங்கள் இளவரசிக்கு red alert கொடுக்கப்பட்டிருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. இந்த வாரம் புதன்கிழமை தான் கடையில் புத்தகம் வாங்க முடியும். மாட ஸ்டியையும் படிக்க முடியும். (அதுவே ஒரு சோகம் இதில் அடுத்த ஆண்டு மாடஸ்டிடிக்கு சோதனையா? i)
      பொதுவாக மாட ஸ்டியை ரசிக்க இரண்டு விதமான மனோபாவம் வேண்டும்.
      முதலாவது ஆணதிக்க சிந்தனையுடன் படிக்கக் கூடாது.
      இரண்டாவது நமது சிறுவயது ஞாபகங்களுக்கு | தற்போது இருக்கும் ஒரே வாய்ப்பு மாடஸ்டி தான்.
      இ.கை. மாயாவியும், லாரன்ஸ் / டேவிட் - ம் நமக்கு தந்த அந்த பால்ய நினைவுகளை தரும் சக்தி தற்போது மாட் ஸ்டிக்குகு மட்டுமே உள்ளது.
      எனவே, மறு பதிப்பு என்ற சந்தா பிரிவிலாவது மாட ஸ்டியை தொடர்வவதற்கு அனைவரும் ஆத ரவு தர வேண்டும் .
      .என்னைக் கேட்டால் மறுபதிப்பு சந்தாவில் மும்மூர்த்திகள் பங்கு முடிந்து விட்டதால், பழைய ஹீரோக்கள் என்று CID ராபின் & மாடஸ்டி, CI Dராபின் & ஜீலியா என்று. இரண்டு கதைகள் இணைந்த தொகுப்பாக கொண்டு வரலாம். ( புதிய கதை களைத்தான் சொல்கிறேன். மறு பதிப்பை அல்ல)
      எனவே, நீங்கள் எப்படி கேட்டாலும் காரிக னோ, ரிப் கிர்பிபியோ
      மறுபதிப்பு வரப்போவதில்லை. நமதுபால்யத்தின் நினைவுகளை மீண்டெடுக்கும் மாடஸ் டியையும் இழந்து விடக் கூடாது என்பதே எனது கவலை.
      எனவே, வேண்டும், வேண்டும் மாட ஸ்டி வேண்டும்.நன்றி

      Delete
  40. மாடஸ்டிக்கு ஒரு இடத்துக்கு என் ஆதரவு உண்டு...

    ReplyDelete
    Replies
    1. ///மாடஸ்டிக்கு ஒரு இடத்துக்கு என் ஆதரவு உண்டு ///

      பட்டியலுக்கு வெளியேதானே..ஹிஹி...என்னோட ஆதரவும் உண்டு..!

      Delete
  41. இன்றைய இரவு சைத்தான் சாம்ராஜ்யத்தோடு ரொம்ப திரில்லாக போனது. கலரிங் மற்றும் புது மாடல் அட்டைகள் அசத்துகிறது...


    (டெக்ஸ் 70ஐ-ஆவது ஃபிரான்ஸில் கிடைக்க ஆவண செய்யவும்)

    ReplyDelete
    Replies
    1. ஹசன் @ டெக்ஸ் அட்டைப்படத்தில் உள்ள தவறு என்ன என்பதை கண்டுபிடித்தீங்களா?

      Delete
    2. அட்டைப்படத்தில் தவறு என ஆசிரியர் சார் சொல்லவில்லை நண்பரே!
      ஒட்டுமொத்த புத்தகத்தில் துளியூண்டு வித்தியாசம் இருக்கு என்றே தெரிவித்து உள்ளார்...

      Delete
    3. அட்டைப் படத்தில் என்பதாக நினைவு, கடந்த பதிவில் ஒரு பின்னூட்டத்தில் ஆசிரியர் இதனை சொன்னதாக ஞாபகம்.

      Delete
    4. "தவறு" கண்டுபிடிக்கக் கோரவுமில்லை ; அது அட்டையில் உள்ளதென்று சொல்லவுமில்லை சார் !! ஒரு வித்தியாசம் புக்கில் உள்ளது என்று மாத்திரமே சொல்லியிருந்தேன் !

      Delete
  42. நான் முதல்முறையாக லயன் காமிக்ஸை ஒரு புத்தக நிலையத்தில் பார்த்தபோது நிறைய காமிக்ஸ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து ஏனோ டெக்ஸ் ன் பூத வேட்டை அட்டைப்படம் என்னை கவர்ந்தது. நான் ரொம்ப ரசித்து படித்த புத்தகம். கதையை இப்போது யோசிக்கும்போது சுமாராக தோன்றினாலும், தலைவாங்கி குரங்குக்கும், இதற்கும் சில வித்தியாசங்கள் உண்டு என்றாலும் அதன் சித்திரபாணிகளுக்காகவே ரசித்தேன். டெக்ஸ்சுக்கு நான் ரசிகன் என்ற தோற்றத்தை முதல் முதலில் அளித்த புத்தகம் டெக்ஸ் தீபாவளி ஸ்பெஷலில் வெளிவந்த "நீதியின் நிழலில்". ஒரு செவ்விந்தியரை ஒரு வெள்ளைக்கார அநியாய காரனிடம் இருந்து காப்பாற்ற டெக்ஸ் செய்யும் த்ரில்லிங்கான பயணம் அது! கடைசியாக இதற்கெல்லாம் காரணம் தனது உயர் அதிகாரிதான் என்று தெரிந்ததும் கொஞ்சமும் யோசிக்காது அவரை மேசையோடு தூக்கி அடித்துவிட்டு செல்லும் காட்சி அபாரம். நான் அதிக முறை படித்த டெக்ஸ் சாகசங்களில் அதுவும் ஒன்று. அதற்கு பிறகு வந்த "நில் கவனி சுடு" வில்லன்களுக்கே செம கெத்து காட்டிய கதை.. டெக்ஸ் வில்லர் கதைகளில் இப்போது சில விவாதங்கள் இருந்தாலும்.. என்னிடம் யாராவது "முதல் முறையா காமிக்ஸ் படிக்க போறேன்! என்ன காமிக்ஸ் படிக்கலாம்?" என்று கேட்டால் நான் முதலாவதாக பரிந்துரைப்பது டெக்ஸ்தான்! டெக்சின் இந்த 70வது வருட சிறப்பிதழ் தமிழ் காமிக்சில் டெக்ஸ்க்கு பெருமை சேர்க்கும் ஒன்று! நன்றி!!!

    ReplyDelete
  43. (நேற்றைய அலப்பறைகளின் தொடர்ச்சி...)

    **** 'ட்ரெண்ட்' ஒரு கிறுக்குப் போலீஸா?!! ******
    ----- ஆய்வுக்கட்டுரை -----

    கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் அப்படித்தான் தெரியுது!

    காரணம் - 1 :

    குற்றவாளியைத் தேடிப் போகும் போலீஸ் - நாள்கணக்கில் யூனிஃபார்மை அணிந்தபடியே பயணம் செய்யவேண்டிய அவசியமில்லை! அதுவும், சில மைல் தூரத்திலிருந்தே எளிதாக இனங்கண்டுகொண்டு விட ஏதுவான 'சிவப்புச் சட்டை' யூனிபார்மோடு! எதிரியினால் எளிதாக ஈர்க்கப்பட்டு, ஆபத்தைத் தேடித் தந்துவிடும் என்ற சாதாரண சிந்தனை கூட இல்லாமப் போச்சே... நம்ம ட்ரெண்டுக்கு! பக்கம்-15ல் பண்ணையில் வேலை செய்யும்; படிப்பறிவில்லாத ஒரு சிறுவன் கூட இந்த விசயத்தை ட்ரெண்டிடம் சொல்லி எச்சரிப்பான்! ஆனால், அதுக்கப்புறமும்கூட நம்ம செவப்புப் போலீஸுக்கு புத்திவந்தா மாதிரி தெரியலை!

    காரணம்-2 :

    பக்கம் 20 & 21. பனிக்காட்டில் - பட்டப் பகலில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறான் கொலைகாரன் எமைல்! மெல்ல அருகில் வந்து அவன் முகத்தை மூடியிருக்கும் தொப்பியை நீக்கிப் பார்த்து அவனை அடையாளம் கண்டுகொள்கிறார் நம்ம செவப்பு போலீஸ்! கைகளில் துப்பாக்கியுடன் தூங்கும் ( அல்லது தூங்குவதுபோல பாசாங்கு செய்யும்) ஒரு பயங்கரக் கொலைகாரனை - அதுவும் சுடுவதிலும், செயல்திறனிலும் தன்னை மிஞ்சியவனான ஒரு போக்கிரியை - மண்டையில் ஒரு போடு போட்டு பிடிப்பதுதானே உத்தரவாதமான தற்காப்பு வழிமுறையாக இருந்திருக்கும்?!! ஆனால், நம்ம செவப்பு போலீஸ் என்ன பண்றாருன்னு பார்த்தா... தூங்கிட்டிருக்கும் கொலைகாரப் பய அவனே கண்ணுமுழிச்சு எழுந்திரிக்கிற வரைக்கும் காத்துக்கிட்டிருக்கார் (நல்லவேளையா சாமரம் எதுவும் வீசலை!). அவன் தூங்கியெழுந்ததுமே டீ போட்டுக் கொடுத்து உபசரிக்கிறார்!!

    பாசக்கார போலீஸ்!!


    சரி, ட்ரெண்ட் தான் இப்டீன்னு நினைச்சோம்னா... ட்ரெண்ட்டின் நாயும் அப்டீயேதான் இருக்கு! தன் எஜமானரை துப்பாக்கி முனையில் நிறுத்திவைத்து மிரட்டிக்கொண்டிருக்கும் ஒரு தறுதலைக் கொலைகாரனிடம் வலியச் சென்று 'உம்மா' எல்லாம் கொடுத்து பாசத்தைப் பிழி பிழி என்று பிழிகிறது!'
    ஹூம்... 'தாயைப் போல பிள்ளை... தன் எஜமானரைப் போல நாயி!'

    ReplyDelete
    Replies
    1. ///நாள்கணக்கில் யூனிஃபார்மை அணிந்தபடியே பயணம் செய்யவேண்டிய அவசியமில்லை!///

      வேற சட்டை இருந்தா போடமாட்டாரா ...? சம்பளம் சாப்பாட்டுக்கும் சேவிங் பண்ணிக்கவுமே சரியாப்போயிடுதாம்..இதுல எங்கத்தப்போய் கலர்கலரா சட்டை வாங்குறது.?

      ///ஒரு தறுதலைக் கொலைகாரனிடம் வலியச் சென்று 'உம்மா' எல்லாம் கொடுத்து பாசத்தைப் பிழி பிழி என்று பிழிகிறது!'///

      ட்ரெண்ட் அந்த நாய்க்கு ஒரு பொறை கூட வாங்கிப்போடுவதில்லையாம்.! சரி இந்தாளுக்கு முத்தம் குடுத்தா பிஸ்கெட் போடுவானோன்னு நினைச்சிருக்கும்.! ஆனா அவனோ பசிச்சா கவிதையை சாப்பிடுற பயல்னு அப்புறந்தான் தெரிஞ்ருக்கும்.! ம்ம்ம்...எல்லா நாயும் ரின்டின்கேன் மாதிரி வருமா?

      Delete
    2. ட்ரெண்ட் அவன் துப்பாக்கியை எடுத்துவிட்டு கையில் விலங்கு மாட்டிவிட்டுட்டுதான் டீ போட உக்காருகிறார்.!

      ஆனா எது அசைஞ்சாலும் சுட்ருவானன்னு பில்டப் கொடுக்கப்பட்ட எமைல் பேன்ட்டையே உருவுனாக்கூட தூங்கிட்டே இருப்பான் போலிருக்கே ..!? அதையெல்லாம் கேக்கமாட்டீங்களே ...பயப்படுவிங்களே ..பத்திரிக்கை படிக்கிறவரா நீங்க!? :-)

      Delete
    3. கன்னி கொள்ளையா்கள் எமைலும்-லாராவும் தங்கள் முதல் கொள்ளையே படு தோல்வியடைந்து காதலியை இழந்து கொலைகாரனாகவும் மாறி, பாிதாபத்திற்கு உாியவனாய் அழிந்து போகிறான்!

      கொள்ளையடித்து வாழ வேண்டும் என்ற முடிவு செய்தால் இப்படித்தான் அழிய வேண்டி வரும்!

      டெட் என்பவன் தான் நிஜமான தொடா் கொள்ளைக் காரன்!! இதை காவலா்களின் உரையாடலில் இருந்து தெளிவாக விளங்கி கொள்ளலாம்!

      நமக்கு வந்த அடையாளம் பொருந்துகிறது ஒரு காவலா் சொல்லும்போதே, இவா்கள் டெட்டை விட பொடியா்கள், மேலும் மளிகை கடையில் பொருட்கள் வாங்கத்தான் செல்கிறாா்கள் என்கிறான்!! பொறு அவா்கள் வங்கிக்குள்ளும் நுழைகிறாா்கள் என்று சொல்கிறான்!

      காவலா்கள் எதிா்பாா்ப்பது டெட் என்னும் கொலைகாரனை!! அவனோடு ஒரு பெண்ணும் இருந்திருக்க வேண்டும்!

      அதனால் தான் அடையாளம் பொருந்திப்போகிறது என காவலா்கள் சொல்கிறாா்கள்!

      ஆனால் டெட் வேறு; எமைல்-லாரா ஜோடி வேறு என்பதை வயது வித்தியாசமே ஊா்ஜிதப்படுத்துகிறது!

      டெட் என்னும் கொலைகாரனின் பழியும், கொலையும் இந்த சம்பவத்திற்கு பிறகு "எமைல்"ன் கணக்கில் சோ்ந்து கொள்கிறது!!

      அவா்கள் கொலைவெறியா்கள் அல்ல என்பதை எமைலைவிட லாராவின் முகபாவனைகள் அற்புதமாக வெளிப்படுத்தும்!!

      முதல் பக்கத்திலேயே லாரா "எனக்கு பயமாக உள்ளது" ஒருநாள் நாம மாட்டிக்கொள்வோம் என்று சொல்லவரும் போதே பேச்சை தடை செய்கிறான் எமைல்!

      லாராவின் பயம், வங்கியிலே பொடியன் பாா்த்த பாிவு, இவையெல்லாமே அதற்கு சாட்சிகள்!!

      அவா்கள் செய்த தவறு வாழ்வதற்காக வங்கியை கொள்ளையடிக்கலாம் என்ற முட்டாள்தனமான முடிவு தான் காரணம்!!

      வங்கி சம்பவத்திற்கு பின் டெட் செய்த கொலைகளும் எமைலின் கணக்கில் சோ்கிறது!

      நீங்கள் சொல்வது போல எமைல் ஒரு போக்கிாி, தறுதலை, பொறம்போக்கு என்பதெல்லாம் சுத்தமாகப் பொருந்தாது!!

      Delete
    4. டெட் என்பவன் தான் நிஜமான தொடா் கொள்ளைக் காரன்!! இதை காவலா்களின் உரையாடலில் இருந்து தெளிவாக விளங்கி கொள்ளலாம்!

      நமக்கு வந்த அடையாளம் பொருந்துகிறது ஒரு காவலா் சொல்லும்போதே, ///இவா்கள் டெட்டை விட பொடியா்கள், மேலும் மளிகை கடையில் பொருட்கள் வாங்கத்தான் செல்கிறாா்கள் என்கிறான்!! பொறு அவா்கள் வங்கிக்குள்ளும் நுழைகிறாா்கள் என்று சொல்கிறான்!

      காவலா்கள் எதிா்பாா்ப்பது டெட் என்னும் கொலைகாரனை!!///

      மிதுன் !


      நமக்கு ஒருத்தரை அல்லது கதாபாத்திரத்தை புடிச்சுடிச்சுன்னா அவருக்காக பரிந்து பேச முனைவது தவறில்லைதான் ...

      அதுக்கும் சில எல்லைகள் இருக்கு ...

      நீங்கள் குறிப்பிடுவது வயது தொடர்பானது ...

      பேச்சு போட்டியில ராம் முதல் பரிசு வாங்கிட்டானாமே ...கார்த்திய விட சின்னவன்தான் ...

      அப்டீங்கற தொனிதான் அவங்க உரையாடலில் தென்படுகிறது ..


      ஒரு விஷயத்தை பைனாகுலர் மூலமா பார்த்தா நமக்கு என்ன வேணுமோ அது மட்டும்தான் தெரியும் ...

      பறவை பார்வை பார்த்தா ஒரு விஷயத்தோட முழுப்பரிமாணமும் தெரியும் ..

      Delete
    5. டெட்-அப்டிங்கிறது பேசுபவர் அல்லது வேய்ன்-ன் மகனாக அல்லது அவர்களுக்கு தெரிந்த ஒரு இளவயது நபராக இருக்க கூடும் .

      Delete
    6. ///பறவை பார்வை பார்த்தா ஒரு விஷயத்தோட முழுப்பரிமாணமும் தெரியும் ..///

      அதையே தான் நானும் சொல்கிறேன்!

      எனக்கு ஆச்சாியாக உள்ளது !!
      நீங்களே இதை புாிந்து கொள்ளவில்லையே என்பது எனக்கு ஆச்சா்யம் தான்!

      செனாஜி! நீங்க ஒரு மைண்ட் செட்ல இருக்கும்போது, நான் என்ன சொன்னாலும் அது வீண் தான்ங்க!

      டெட் வேறு; எமைல் வேறு; அதில் எனக்கு குழப்பமே இல்லைங்க! அந்த கோணத்தில் தான் நான் கதையை அணுகுகிறேன்!

      அப்படி இல்லையென்றால் நம்ம ஈ.வி., நீங்க எல்லாம் பகடி செய்வது போல ஆயிரம் கேள்விகள் வரும்! ஆனால் ஒன்றுக்கும் பதில் கிடைக்காது!!

      இப்பவும் சொல்கிறேன் இக்கதை ஒரு சராசாி கதையல்ல! அற்புதமான படைப்பு! ஒரு சாதாரண கதையை அற்புதமானதுன்னு வெறுமனே சொல்லி எனக்கு ஆகப்போவது என்னங்க செனாஜி!!

      இக்கதையை பொருத்தமட்டிலும் பக்கத்திற்கு பக்கம் விளக்கவும், விவாதிக்கவும் தயாா்! நீங்க தயாா்னா சொல்லுங்க எப்படி தொடா்பு கொள்வது!

      உண்மையிலேயே இக்கதையை பற்றி
      ஆரோக்கியமான முறையில் விவாதிக்க ஆா்வமிருக்கும் நண்பா்கள் என்னை தொடா்பு கொள்ளலாம்!!

      ymithunan@gmail.com

      Delete
    7. ///இக்கதையை பொருத்தமட்டிலும் பக்கத்திற்கு பக்கம் விளக்கவும், விவாதிக்கவும் தயாா்! நீங்க தயாா்னா சொல்லுங்க எப்படி தொடா்பு கொள்வது!///

      நீங்கள் விளக்க நினைப்பதை கொஞ்சம் சிரமம் பாராது இங்கேயே விளக்கினால் நான் உள்ளிட்ட நிறைய நண்பர்கள் தங்கள் தவறான கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள இயலுமில்லையா,மிதுன் ஜி?

      Delete
    8. ///முதல் பக்கத்திலேயே லாரா "எனக்கு பயமாக உள்ளது" ஒருநாள் நாம மாட்டிக்கொள்வோம் என்று சொல்லவரும் போதே பேச்சை தடை செய்கிறான் எமைல்!///---

      மிதுன்@ இது உங்கள் பதிவில் இருக்கு. கதையிலும் இருக்கு.

      லாரா எதற்கு பயப்படனும். மளிகை ஜமான் கடையில் வாங்கறவங்க எதற்கு மாட்டிக்கப் போவதை்பற்றி பேசணும்???

      அவர்கள் தான் தப்பு செய்தவர்கள், கொலைகாரர்கள், கொள்ளை அடித்தவர்கள் என்பதால் தானே அந்த பயம் வருகிறது.

      சாதாரண காதல் ஜோடி எதுக்குங்க போலீஸை பார்த்து பயப்படனும்....

      Delete
    9. செனா அனா ஜி சொன்ன டெட்டை விட வயது கம்மி என்பதற்கான காரணம் சரியாக பொருந்தி வருகிறது.

      டெட்டை விட வயது கம்மி என்பதை குறிக்கும் சாதாரண உரையாடல் தான் அது...
      அதில் எந்த குறியீடும் இல்லை நண்பரே...!!!

      Delete
    10. முடியல ஷ்ஷாமீ...!!
      நான் போய் விடுமுறை வில்லங்கத்தையாச்சும் படிக்கப்பாக்குறேன்..! :-)

      Delete
    11. ///கன்னி கொள்ளையா்கள் எமைலும்-லாராவும் தங்கள் முதல் கொள்ளையே படு தோல்வியடைந்து காதலியை இழந்து கொலைகாரனாகவும் மாறி, பாிதாபத்திற்கு உாியவனாய் அழிந்து போகிறான்!////--- கன்னி கொள்ளையர்கள் எதற்காக சாமி போலீஸ்க்கு பயந்துகிடனும்.???
      கன்னி கொள்ளையர்கள் எதற்காக மாட்டிக்கிடுவோமா என பயப்படனும்...!!??
      கொலை செய்த பயம் லாரா முகத்திலேயே தெரிகிறது.

      அமெரிக்காவில், அதுவும் 1850ளில் காதலுக்கு தடை நிலவியது. அதைதான் லாரா சொல்கிறாள்னு குறியீடு சொல்லுதுனு மட்டும் சொல்லிடாதீங்க,தாங்கவே முடியாது போயிடும்...!!

      Delete
    12. மாம்ஸ் ..!
      போனபதிவிலேயே அதையெல்லாம் கேட்டாச்சுயா ..!
      பேங்கில் அவனை தொடையில்தான் சுடுகிறான் எமைல்.!அது கொலையில் சேராது .. சித்திரங்களை கவனிக்கணும் சொன்னாரு.! ஆனா அடுத்த கட்டத்துலயே சுடப்பட்டவன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சரிகிறான்.! மேலும் லெப்டினென்ட் சொல்லும்போது ப்ளாக்டவுனில் இரண்டு டெபுடிகள் உட்பட மூவர் கொல்லப்பட்டதாக கூறுவார்.!மூன்றாறாவது நபர் பாங்கில் கொல்லப்பட்டவர்தான்.!
      மேலும் இங்கு வருவதற்கு முன்னரே பேட்ச் டவுனில் இருவரைக்கொன்ற குற்றமும் ரோன்ஸ்க்கியில் இருவரைக் கொன்ற குற்றமும் அவன்மேல் உள்ளதாக லெப்ட்டினென்ட் கூறுவார்.!

      இதை வைத்து லாராவின் வசனத்தை பொருத்திப்பபாருங்க...

      "எனக்குப் பயமாக இருக்கிது எமைல்! என்றாவது ஒருநாள் நாம்..."
      இதுதான் லாரா பேசும் வசனம்..! இப்படியே தொடர்ந்து கொள்ளையும் கொலையும் செஞ்சிக்கிட்டு இருந்தா என்றைக்காவது மாட்டிக்குவோம் என்பதே லாராவின் பயம்.!
      பலநாள் திருடன் பழமொழிதான்.!
      ப்ளாக்டவுனில்தான் கன்னிமுயற்சி என்பது தவறு.!
      மேலும் பேங்கினுள் எமைல் காசியரை துப்பாக்கி முனையில் நிறுத்தியதும் லாராவை கவனியுங்கள். தேர்ந்த கொள்ளைக்காரி மாதிரி எல்லோரையும் தேக்கி நிறுத்துவாள். அதுவும் துப்பாக்கி வைத்திருக்கும் ஆசாமி அசைவதைப் பார்த்துவிட்டு துப்பாக்கியின் சேஃப்டி லாக்கரை க்ளிக் என விடுவித்து கைகளை மேலே வைத்திருங்கள் என்று மிரட்டுவாள்.. இதெல்லாம் கன்னிக்கொள்ளைக்காரி செய்யும் செயல்களா என்ன?

      Delete
    13. ///இதெல்லாம் கன்னிக்கொள்ளைக்காரி செய்யும் செயல்களா என்ன?///---ஒருவேளை அபிமன்யூ மாதிரி ,லாராவும் அவுங்க அம்மா வயிற்றுக்குள்ள இருக்கும் போதே இதெல்லாம் கற்றுத் தேர்ந்திருப்பாளோ????

      Delete
    14. புதிய புத்தகங்களை வீட்டுக்கு கொண்டே வர மாட்டேன். ஆனா இன்று மிதுன் படம் படமாக குறியீடு எல்லாம் விளக்குவார்னு கையோடு கொண்டு வந்துள்ளேன்.

      லாராவின் முக பாவனை 8ம்பக்கம் பார்த்தாலே விளங்குதே, தேர்ந்த கொள்ளைக்காரினு...!!! லெஃப்ட், ரைட்னு வாட்ச் பண்ணுவதும், பூலான்தேவி தோத்தா மாம்ஸ்...!!

      ஆமா நீர் சொன்னபிறகு பார்க்கிறேன், 9ம் பக்கம் வயிற்றை பிடித்து கொண்டு பிஸ்டலை கீழே நழுவ விடுறான்.

      தொடையில் சுட்ட குண்டு மேலே திரும்பி வகுத்தை துளைத்துட்டதோ என்னவோ????

      Delete
    15. ட்ரெண்ட் பாகம் 3 & 4 வரட்டும் ; மனுஷன் மீது பச்சாதாபப்பட்டு நாமெல்லாம் கண்ணிலே ஜலம் விடுறோமா - இல்லையான்னு பாருங்க !!

      Delete
  44. விமர்சணம்: "சைத்தான் சாம்ராஜ்ஜியம்"

    டெக்ஸ் மறுபதிப்பு சந்தா D ல் வருவதால் படிக்க வேண்டிய கட்டாயம்.
    படித்து சிரித்து பின் இவ்விமர்சணம்.

    டெக்ஸ் பற்றி நிறைய நண்பர்கள் நிறைய விஷயத்தை சொல்லி உள்ளனர். ஆனால் தலைக்கு மேஜிக் பவர் இருப்பதை பற்றி எந்த ஒரு டெக்ஸ் ரசிகரும் கூற வில்லை. அதை கூர்ந்து உற்று நோக்கி நான் கண்டு பிடித்தேன்.

    ஆம் டெக்ஸுக்கு மந்திர சக்தி உள்ளது. அது என்ன வென்றால் தூப்பாக்கி தோட்டாக்களை மந்திர சக்தியால் உருவாக்குவது. ஆம் நூற்று கணக்கானோரை தான் வைத்திருக்கும் ஒற்றை துப்பாக்கியால் சுட்டு கொன்றாலும் தோட்டா மட்டும் திரவே திறாது. எல்லாம் டெக்ஸ் மந்திர சக்தியின் மகிமை.

    இப்போது கதைக்கு வருவோம்.

    மாஷா என்கிற மிகப்பெரிய மந்திரவாதி செவ்விந்திய கிராமங்களில் இருக்கும் மந்திர வாதிகளை துனையுடன், கிராமங்களில் இருக்கும் தேற்தெடுக்கபட்ட குடும்பத்தில் இருந்து ஒரு இளைஞனை பலி கேட்பது வாடிக்கை.

    இத கேள்விபட்ட தல பொங்கிட்டாரு.

    மாஷா வை தேடி தன் மகன் மற்றும் டைகர் ஜாக்குடன் கிளம்புகிறார்.

    மாஷாவின் இருப்பிடத்தை மாஷாவின் ஆளை வைத்தே அறிய முற்படும் டெக்ஸ்ஸின் முயற்ச்சியில், எதிர்பாராமல் மாஷாவின் ஆள் இறக்க நேரிடுகிறது. தூரத்தில் இருக்கும் மாஷாவிற்கு, தன்னுடைய அமானுஷ்ய சக்தி கொண்டு தன் ஆள் இறந்துவிட்டத்தையும் அதற்க்கு காரணமானவர் டெக்ஸ் என்பதையும் அறிகிறார். டெக்ஸை கொல்வேன் என்று சபதம் எடுக்கிறார்.

    டெக்ஸ் தன் மதியுகத்தால் மாஷாவை கண்டுபிடிக்கிறார். மாஷா பெண் என்று அறிந்து அதிர்கிறார். (அதான் பெயரிலேயே பெண் என்று தெரிகிறதேன்னு அச்சுபிச்சு தனமான கேள்வி கேட்க கூடாது).

    கொடுருமானவளும் மந்திர சக்தி மிகுந்த மாஷா டெக்ஸை எதிர்கொள்கிறாள். டெக்ஸ் சாதாரண தோட்டா தீராத துப்பாக்கி உபயோகிக்க, மாஷா கொடுறமாகா ' ஜொய்ய்ங்' 'ஜொய்ய்ய்' ங்குன்னு அம்பு கொண்டு தாக்குகிறாள்.

    விமர்சணம் தொடரும்....

    ReplyDelete
    Replies
    1. ஹஹாஹா....!

      நல்லாத் தொடருங்க கணேஷ் ..!

      ஆனா அது மாஷாவோ ரோசாவோ அல்ல ...அந்தப் பெயர் மாஷை!

      நல்ல நகைச்சுவையாக எழுதுகிறீர்கள் ...அதிகம் சிரித்தது

      /// தோட்டா மட்டும் திரவே திறாது.///

      இதைப் படித்துதான்....!:):)

      அப்புறம் இந்த ண., ன,, ற ..ர ...இதையெல்லாம் நீங்கள் உபயோகித்திருக்கும் விதம் அட்டகாசம். ..!

      சுப்பர் ..சுப்பர்...

      Delete
    2. ஆம் டெக்ஸுக்கு மந்திர சக்தி உள்ளது. அது என்ன வென்றால் தூப்பாக்கி தோட்டாக்களை மந்திர சக்தியால் உருவாக்குவது. ஆம் நூற்று கணக்கானோரை தான் வைத்திருக்கும் ஒற்றை துப்பாக்கியால் சுட்டு கொன்றாலும் தோட்டா மட்டும் திரவே திறாது...

      ######


      அப்ப டைகரும்...கிட்டும் டைனசோரை சுடலையா ...பாவி பயலுக...:-(


      *******


      டெக்ஸ் தன் மதியுகத்தால் மாஷாவை கண்டுபிடிக்கிறார். மாஷா பெண் என்று அறிந்து அதிர்கிறார். (அதான் பெயரிலேயே பெண் என்று தெரிகிறதேன்னு அச்சுபிச்சு தனமான கேள்வி கேட்க கூடாது).

      #₹₹#####


      ஹா..ஹா....என்னோட பேரே ஆண் பெண் இருபாலாருக்கும் (தரன் மட்டும் கட்..) பொதுவாக இருக்கிறது ..மாஷை அதுவும் அந்த காலகட்டத்தில் செவ்விந்திய பழங்குடியினரிடத்தில் அந்த பெயரை வைத்து சந்தேகத்தை தெளிவுபடுத்துவதில் என்ன நகைச்சுவையோ ..


      ஒரு வேளை லலிதா ...லதா ...குமுதா ...கவிதா ன்னு இருத்தா ஆணா பெண்ணான்னு கண்டுபிடிக்க கஷ்டமா இருந்திருக்கலாம்...:-)


      காமெடியா குறை சொல்றீங்க ஜீ...தொடருங்க...நல்லாருக்கு..:-)))

      Delete
    3. டெக்ஸ் ஒரு இடத்தில் தனது நண்பர்களை தோட்டாக்களை விரைவாக நிரப்பிக்கொண்டு தாயாராகுங்கள் என்பதையும் கொஞ்சம் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் கணேஷ்.

      Delete
    4. Pfb & தலீவர் ...தயவு செய்து கணேஷ்குமார் அவர்களை டிஸ்கரேஜ் செய்யவேண்டாம்.!
      நன்றாக நகைச்சுவையாகத்தானே எழுதுகிறார்.,அதுவும் ஒரே வார்த்தைக்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு எழுத்தைப் பயண்படுத்தி (திரவே திறாது) .......!

      டெக்ஸ் கதைகளை யாரும் குறை சொல்லக்கூடாதா என்ன?
      எந்த கதைகளையும் பாராட்டவும் குறைசொல்லவும் எல்லோருக்கும் உரிமை உண்டு.!

      Go ahead Ganesh ji ..!!

      Delete
    5. // டெக்ஸ் தன் மதியுகத்தால் மாஷாவை கண்டுபிடிக்கிறார். மாஷா பெண் என்று அறிந்து அதிர்கிறார். (அதான் பெயரிலேயே பெண் என்று தெரிகிறதேன்னு அச்சுபிச்சு தனமான கேள்வி கேட்க கூடாது).//
      கணேஷ் சார்,மாஷை பெண் என்பது முதலிலேயே டெக்ஸிற்கு தெரியும்,பக்கம்-11 ல் பாருங்கள்,நவஹோ கிராம மாந்திரீகர் ஓம்ஹோபி என்பவர் டெக்ஸிடம் சொல்கிறார்,பின்னர் மாஷையை காணும்போது அவள் ஒரு அழகான இளம்யுவதியாக இருப்பதைக் கண்டே டெக்ஸ் அதிர்ச்சியடைகிறார்.

      Delete
    6. கண்ணா @ அவர் படிக்காமல் விட்ட பக்கத்தை நினைவு படுத்தினேன் சாமி. வேறு மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டாம் சாமி.

      Delete
    7. சும்மா தமாஷ் பரணி.!
      அவர் தொடர்ந்து எழுதினா நல்லாருக்குமேன்னு ...ஹிஹி..!! :-)

      Delete
    8. ஸா ஸா ஸா! :))))))

      மிகவும் அறுமையான விமர்சணம்!! நாண் மிகவும் ரசித்தேன்.. சிறித்தேன்! தொடர்ந்து எலுதுங்கள் நன்பறே!

      Delete
    9. நான் படித்தது english medium. டெக்ஸ் பற்றி நான் குறை கூறும் போது ஒன்று பாய்து வந்து மோசமான வாரத்தைகளால் தாக்குவிர்கள் அல்லது பகடி செய்விர்கள்.
      இங்கு மாற்று கருத்து சொல்லும் டைகர் ரசிகர்களை எவ்வாறு விரட்டினர்கள் என்று நான் கடந்த நான்கு வருடமாக பார்த்து கொண்டு தான் இருக்கிறேன்.

      எவ்வளவு தான் நான் தவறாக எழுதினாலும் அதை படிக்க முடியாத குழந்தைகள் யாரும் இங்கு இல்லை.(சொல்லபோனால் வாலிபர்களே மிகவும் குறைவு).

      இனிமேல் யார் என்ன கூறினாலும் சரி டெக்ஸை வச்சி செய்வது தான் என் வேலை.

      Delete
    10. சபாஷ் ...! கலக்குங்க கணேஷ் ஜி..!!

      Delete
    11. ///இங்கு மாற்று கருத்து சொல்லும் டைகர் ரசிகர்களை எவ்வாறு விரட்டினர்கள் என்று நான் கடந்த நான்கு வருடமாக பார்த்து கொண்டு தான் இருக்கிறேன்.///

      மாற்றுக் கருத்துகளை கூறுவோர் ..தங்களுடைய கருத்துகளுக்கு வரும் மாற்றுக்கருத்துகளை மட்டும் ஏற்றுக்கொள்ளாமல் ஓடுவது சரியா சார்.!.?


      கீழ்வருவது ப்ளாக்கை குறைசொல்லும் சிலருக்காக....:


      எங்களுடைய கருத்துக்கு நீங்க மாற்றுக்கருத்து சொல்லலாம் ..ஆனா உங்களுடைய கருத்துக்கு நாங்க மாற்றுக்கருத்து சொன்னா உடனே ஓடிப்போய் வேறெங்காவது அங்கே போனா மாற்றுக்கருத்து சொல்ல வுடமாட்டேங்குறானுங்கன்னு புரணி பேசுறது.!
      மீண்டும் தெளிவாக ....உங்களுடைய மாற்றுக்கருத்தை நாங்க பொறுத்துக்கனும் ..எங்க மாற்றுக்கருத்தை நீங்க பொறுத்துக்க மாட்டீங்களா ..என்ன லாஜிக் இது?

      Delete
    12. \\அப்ப டைகரும்...கிட்டும் டைனசோரை சுடலையா ...பாவி பயலுக...:-(\\

      டைனோசர் பற்றி என்னுடைய இராண்டாவது பகுதி விமர்சணத்தில் வரும். அப்ப பார்த்துக்கலாம்.

      Delete
    13. சார்...சொல்ல வந்ததைச் சொல்லாது "இங்கிலீஷ் மீடியம்" ; "டைகர் ரசிகர்கள் " ; "வாலிப-வயோதிக அன்பர்கள்" என்ற ரேஞ்சிலான side track கள் அவசியம் தானா ? உங்கள் கருத்தினில் உங்களுக்கு conviction இருப்பின் அதை நயமாய் முன்வைக்க இங்கே யாரும் தடையாக நிற்கப் போவதில்லை !! தவிர பின்னூட்டங்களிலுள்ள பிழைகளுக்கும் இங்குள்ளோரின் வயதுக்கும் என்ன சம்பந்தமோ ??

      Delete
    14. டெக்ஸ் ரசிகர்கள் ஓநாய் கூட்டம் போன்றது. அவர்கள் தேவைக்கு தகுந்த மாதிரி ஆட்டகளத்தை மாற்றி கொண்டு இரையை ஓன்றும் இல்லாமல் சொய்து விடுவார்கள்.

      உ.ம்:
      நான் டைகருக்கு எதிரி இல்லை என்று கூறுபவர்கள். இளம் டைகர் வந்தபோது ஒரு ஐந்து அல்லது ஆறு பேர் சேர்ந்து கொண்டு திரும்ப திரும்ப டைகரை பற்றி தவறாக எழுதி எழுதி டைகரை வர விடமல் செய்து விட்டனர்.

      விமர்சணங்கள் எவ்வாறு ஒரு காமிக்ஸை எப்படி விற்பணையை உயர்த்துகிறதோ அதே போன்று எதிர்விமர்சணம் அதன் விற்பணையை பாதிக்கும்.

      நான் அனைத்து டெக்ஸ் ரசிகர்கள் அல்லாதோரும் வாருங்கள். டெக்ஸ் பற்றிய
      கருத்துக்களை கூறுங்கள்(எத்தனை பேர் என்பது முக்கியமில்லை). இன்று இல்லா விட்டாலும் எதிர்கலத்தில் டெக்ஸ் இரசனை குறைய ஆரம்பிக்கும்.
      டிரெட்ன்ட் மாதிறி புதிய நாயகர்களுக்கு ஸ்லாட் கிடைக்கும்.

      Delete
    15. \\பிழைகளுக்கும் இங்குள்ளோரின் வயதுக்கும் என்ன சம்பந்தமோ ??\\

      சிறுவர்கள் மட்டும் தான் தவறோடு உள்ள சொற்களை வாசிக்க தடுமாறுவார்கள்.

      கல்லுறி படிப்பை தாண்டியவர்களுக்கு சொற்பிழை ஒரு பெரிய பிரச்சினை இல்லை. (இதை நான் சொல்லவில்லை நரம்பு மற்றும் மூளை பற்றிய ஆராய்ச்சி செய்த Oxford ன் அறிக்கை)

      Delete
    16. // டெக்ஸ் ரசிகர்கள் ஓநாய் கூட்டம் போன்றது. //
      வார்த்தைகளில் இவ்வளவு கடுமையா சார்,உங்கள் பேச்சு அபத்தமானது,சாரமில்லாதது,தவறான வார்த்தைகளை முன்மொழிந்து உங்கள் தரப்பு வாதத்தை ஏன் பலவீனப்படுத்துகிறீர்கள்,டெக்ஸ் ரசிகர்கள் எவ்வளவோ பேர் டைகரின் மின்னும் மரணம்,இரத்தக்கோட்டை போன்ற இதழ்களை சிலாகித்து எழுதி உள்ளார்களே,அது உங்கள் கண்ணுக்கு தெரிய மறுப்பது ஏனோ,வாதத்துக்கு வாதம் என்பதுதானே சரி சார்,நண்பர்கள் உங்கள் பிழைகளை சுட்டிக் காட்டினால் அதை திருத்தி கொள்ளலாமே,அதைவிடுத்து சிறுபிள்ளை விளையாட்டு ஏனோ???

      Delete
    17. கவலையே வேண்டாம் சார் ; சச்சின் டெண்டுல்கருக்கும் shelf life உண்டு ; ராஜர் பெடெரருக்குமுண்டு ; விஸ்வநாதன் ஆனந்துக்குமே !! So டெக்ஸ் மாத்திரம் அதற்கொரு விதிவிலக்காகிப் போகும் பட்சத்தில் அவர் இறை அவதாரமாகிடுவார் அல்லவா ? No - அவருமே ஒரு சராசரியான படைப்பே என்பதை நிலைநாட்டவாவது கி.பி. 3042 -சுமாருக்கு அவரது மவுசு குறைந்திடும் சாத்தியங்கள் ஏகப் பிரகாசம் என்று பட்சி சொல்கிறது !! So அதுவரைக்கும் மனுஷன் உலாவித் திரியட்டுமே ?

      அப்புறம் இங்கிலீஷ் மீடியமோ ; டிம்பகுட்டூ மீடியமோ - வார்த்தைகளில் கண்ணியம் என்றைக்குமே நல்லது என்பது மட்டுமே எனக்குத் தெரிந்த சமாச்சாரம் சார் ! மற்றபடிக்கு உங்கள் எண்ணங்கள் ; அவற்றை வெளிப்படுத்தும் விதங்களும் உங்களதே !!

      Delete
    18. // டிரெட்ன்ட் மாதிறி புதிய நாயகர்களுக்கு ஸ்லாட் கிடைக்கும். //
      அடுத்த வருடமும் ட்ரெண்டுக்கு ஸ்லாட் உண்டு என்று ஆசிரியர் கூறியுள்ளாரே,டெக்ஸ் இதழ்களால் மற்ற இதழ்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாதுன்னுதான் அதை தவிர்க்க டெக்ஸை தனி ஸ்லாட்டில் கொண்டு வந்துள்ளார்,மேலும் விற்பனை விகிதத்தில் டெக்ஸ் முக்கிய இடத்தில் இருப்பது இந்த பிரபஞ்சம் அறிந்த இரகசியம் தானே,பிறகு ஏன் இந்த காட்டம்....

      Delete
    19. கணேஷ் @ உங்கள் புரிதலுக்கு நன்றி. கடந்த வருடம் அட்டவணை வெளியிட்ட நாளில் டெக்ஸ் கதை சந்தாதாரர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கிடைக்கும் என்று அறிவிப்பின் போது நீங்கள் செய்த கலாட்டாவையும் கொஞ்சம் நினைத்து பாருங்கள். சந்தாதான் நமது காமிக்ஸ் அஸ்திவாரம் ஆனால் உங்களின் டெக்ஸ் பிடிக்காத காரணத்தால் ஏற்படுத்திய கலாட்டா எத்தனை சந்தாவை பாதித்தது இருக்கும் என நினைத்து பாருங்கள்.

      எதிர் வரும் காலத்தில் இவைகளை நாம் அனைவரும் மனதில் வைத்துக் கொள்வது நலம்.

      Delete
    20. சார்...நீங்கள் நிரூபிக்க விரும்பும் மையப் புள்ளி என்னவென்று எனக்குப் புரியவில்லை ; ஆனால் வாதம் செய்கிறேன் பேர்வழி என நீங்கள் எழுதும் வரிகளே உங்களது கருத்துக்களை வலுவிழக்கச் செய்து விடுகின்றன என்பதே நிஜம் !

      தாய்மொழியில் பிழைகளைத் தவிர்ப்பது அத்தனை பெரிய ராக்கெட் விஞ்ஞானமும் அல்ல ; அதை நியாயப்படுத்திட "கல்லுறி" படிப்பு சார்ந்த oxford அறிக்கைகளும் தேவையில்லை !! பொறுமை ப்ளீஸ் ; நிதானம் ப்ளீஸ் !

      Delete
    21. Paranitharan and Barani from bangalore, நீங்கள் இருவரும் விமர்சனத்தை அனுகிய விதம் அருமை.
      Kid ஆர்ட்டின் மற்றும் ஈரோடு விஜய் அவர்களின் பகடி தனிமனித விமர்சனம் எனத் தோன்றுகிறது.
      நம் மனதிற்கு பிடித்த நாயகனை நய்யாண்டி செய்கையில் மனதிற்கு வருத்தம் வருமேயாயினும்,பகடி சற்றே கட்டுப்பட்டு வந்திருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

      Delete
    22. /*டெக்ஸ் பற்றி நிறைய நண்பர்கள் நிறைய விஷயத்தை சொல்லி உள்ளனர். ஆனால் தலைக்கு மேஜிக் பவர் இருப்பதை பற்றி எந்த ஒரு டெக்ஸ் ரசிகரும் கூற வில்லை. அதை கூர்ந்து உற்று நோக்கி நான் கண்டு பிடித்தேன்*/ என்ற வாசகத்தை கணேஷ் தவிர்த்து இருக்கலாம். தூண்டுவது போல் உள்ளது.

      Delete
    23. /*டெக்ஸ் ரசிகர்கள் ஓநாய் கூட்டம் போன்றது. அவர்கள் தேவைக்கு தகுந்த மாதிரி ஆட்டகளத்தை மாற்றி கொண்டு இரையை ஓன்றும் இல்லாமல் சொய்து விடுவார்கள்.*/
      இதை நாம் ஒரு பாராட்டாக எடுத்துக் கொள்வோம். ஓநாய்க் கூட்டத்தில் ஒரு ஒழுங்கு இருக்கும், கட்டுப்பாட்டுடன் கூடிய ஆக்ரோஷமான இருக்கும். நண்பர்களுக்கு புரியும் என்று எண்ணுகிறேன்.

      Delete
    24. /*மிகவும் அறுமையான விமர்சணம்!! நாண் மிகவும் ரசித்தேன்.. சிறித்தேன்! தொடர்ந்து எலுதுங்கள் நன்பறே!*/
      .
      /*அப்புறம் இந்த ண., ன,, ற ..ர ...இதையெல்லாம் நீங்கள் உபயோகித்திருக்கும் விதம் அட்டகாசம். ..!

      சுப்பர் ..சுப்பர்...*/
      ...
      மேற்கண்ட பின்னூட்டங்களையும் நம் ஆசிரியர் முறைப்படுத்த வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
      கணேஷ் அவர்களை நெறிப்படுத்த வேண்டி தாங்கள் இட்ட பின்னூட்டங்கள் போன்றே, ஏமாந்து என்றேனும் தங்கள் பகடிகள் பிறர் மனம் வருந்த செய்யும் என மறந்து விடும் அன்பர்களையும் நெறிப்படுத்துங்கள்...

      Delete
    25. Arivarasu@Ravi அவர்களுமே மிகவும் தன்மையுடன் விமர்சனத்தை எதிர்கொண்டு இருக்கிறார்...

      Delete
    26. Navaneetha krishnan @

      உங்களுடைய கருத்துகளை மறுக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் சார்.!அதற்காக உங்களிடமும் மற்ற நண்பர்களிடமும் வருத்தமும் தெரிவித்துக்கொள்கிறேன்.!

      ஆனால் ஒரு சின்ன திருத்தம், டெக்ஸ் கதையை அவர் கேலி செய்துவிட்டார் என்பதற்காக அவரை பகடி செய்யவில்லை.! அவருடைய முந்தைய சாகசங்கள் அப்படி.!

      அவர் வருந்துவாரே என்று வருத்தப்படும் உங்களை பாராட்டுகிறேன் சார்.! அதேசமயம் எங்களைப்பற்றியும் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் சார்.!இதே நண்பர் இங்கு ரெகுலரா பதிவிடும் சில நண்பர்களை தனிப்பட்ட முறையில் பலமுறை கேலி செய்திருக்கிறார்.!
      மனதுக்குப் பிடித்த காமிக்ஸ்களை நல்லா இருக்குன்னு கொண்டாடியதற்கும், அந்த காமிக்ஸை நமக்கு வழங்கும் எடிட்டரை மதித்து பாராட்டியதற்கும், இங்கும் சரி வெளியிலும் சரி எங்களுக்கு கிடைத்த பட்டங்கள், கேலிகள், அவமானங்கள் எத்தனை எத்தனை தெரியுமா?
      எங்களுக்கும் மனவேதனை இருக்கக்கூடதா சார்.! இதே நபர் டெக்ஸ் கதைகளை பாராட்டிய ஒரு நண்பரை ஓசி சந்தா என்று சாடியிருக்கிறார். . .! எடிட்டர் ஓசி சந்தா கொடுத்து சிலரை வளர்ப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.! சரி சரி ...அதையெல்லாம் நாங்கள் ஒரு பொருட்டாக கருதி வருந்திக்கொண்டிராமல் துடைத்தெறிந்துவிட்டு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறோம் ..இருப்போம்.!

      என்னுடய பகடி உங்களை சங்கடப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன் நண்பரே..!

      டெக்ஸ் மட்டுமல்ல எந்த கதையையும் நாயகரையும் பகடி செய்யவோ, குறை சொல்லவோ எல்லோருக்கும் உரிமை உண்டு ..! தாராளமாக செய்யலாம். .!!

      Delete
  45. நமது காமிக்ஸ் புதிய அவதாரத்தில், கலரில் - பெரிய சைஸில் 50 பக்கங்களில் என்றாலும் முழு திருப்தி கிடைத்து விடுகிறது. பழைய நாயகர்கள் என்றாலும்.
    ஆனால், B & Wயில் டெக்ஸ் வில்லரை 200 பக்கம் , 300 பக்கங்களில் படிக்க வைத்து (Uழக்கிவிட்டு) - சற்றே கதையில் ஒரு மாற்று குறைந்தாலும், நிரம்பவே சாத்து வாங்கி விடுகிறார்கள்.
    டெக்ஸ் வில்லருக்கும் இது தான் நிலமை. (ஒரு காலத்தில் தலைவாங்கி குரங்கையும் ' பழிக்குப் பழியையும் ஓகோ என்று பாராட்டிடியவர்கள் தற்போது Dr. டெக்ஸ், குற்றம் பார்க்கின் - போன்ற கதைகளை ஓட்ட வில்லையா?i)
    எனவே 50 பக்க 100 பக்க சிறிய வெளியீடுகள் ரசிக்க முடியாமல் போய் விட்டதோ என்னமோ? ii
    அதனால் தான் CI Dரா பினும், மாட ஸ்டியும் இணைந்து வரும் இதழை மிகவும் எதிர்பார்த்திருந்தேன் ( புத்தக விழாக் களில் விற்பனையில் தூக்கி நிறுத்திதினால் தங்கள் மனம் மாறுமன்றோ?) ஜுலியாவையும் இதே போல் கொண்டு வர வாய்ப்பிருக்கு மே என்று கருதினேன்.
    அடுத்த ஆண்டு மட்டுமே னும் இரண்டு இரண்டு ஹுரோக்கள் உள்ள உoo பக்கங்களுக்கு குறையாத B & Wஇதழ்களை வெளியிட்டுத்தான் பாருங்களேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. நான் அவ்விதம் பார்த்திடவில்லை சார் ; கதையின் வலுவே அதன் வீரியத்தைத் தீர்மானிக்கிறதே தவிர்த்து அதன் நீளம் மட்டுமல்ல !! தற்போது வெளிவந்து நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வரும் Color TEX கதைகள் எல்லாமே வெறும் 32 பக்கங்கள் தானே ?

      And "குற்றம் பார்க்கின்" அந்த வருடத்தின் bestsellers பட்டியலும் இடம்பிடித்த இதழ் சார் !!

      Delete
  46. 1.நீங்கள் வாசித்த முதல் டெக்ஸ் இதழ் பற்றி...

    நள்ளிரவு வேட்டை .. ஒரு பழைய புத்தக கடையில் கிடைத்தது .. Tex இன் அக்மார்க் அதிரடி சாகசம் ..ஒரு மாறுதலுக்கு Tex கதையில் யார் வில்லன் என்பது இதில் கடைசி பக்கத்தில் தான் தெரிய வரும் ..

    2. உங்களது all-time favorite சாகஸம் பற்றி ...
    1.நள்ளிரவு வேட்டை ...
    2.மந்திர மண்டலம் .. Tex க்கு சவாலாக இருந்த ஒரு சில வில்லன்களில் மெபைஸ்டோவும் ஒருவன் .. மெபைஸ்டோவின் 500 பக்க கதை அடுத்த வருடம் வந்தால் நன்றாக இருக்கும் ..
    3.வல்லவர்கள் வீழ்வதில்லை .. TEX இன் ஒரு சில கதைகளில் தான் டெக்ஸிக்கு நிகரான இன்னொரு கதாபாத்திரம் வரும் .. இதில் ஷான் அப்படி ஒரு கதாபாத்திரம் .
    4.கார்சனின் கடந்த காலம் .. TEX இன் வித்தியாசமான கதைகளில் ஒன்று .. கார்சனுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் ...
    5.பலி வாங்கும் புயல் .. one man against all..
    6. காற்றுக்கு ஏது வேலி .. இளம் தலையின் தாண்டவம் ..

    //3.டெக்ஸ் & கோ மீது தீராக் காதல் நமக்கெல்லாம் தொடர்ந்திடுவதன் காரணம் என்னவாக இருக்ககூடும் என்பது பற்றி.//

    எப்படியெல்லாம் நாம் இருக்க நினைகிறோமா .. ஆனால் இந்த சமுதாயத்தில் இருக்க முடியாதோ அப்படி இருப்பவர் TEX .. தப்பு செய்பவர் யாராக இருந்தாலும் எந்த இடத்தில் இருந்தாலும் எதிர்ப்பது .. மேலும் சிறந்த நண்பனாக .. தந்தையாக .. தலைவனாக இருப்பது .. He brings out our positive vibes out .. and for a relaxed , casual breezy read இக்கு TEX கதைகள் உத்திரவாதம் ..

    ReplyDelete
    Replies
    1. //எப்படியெல்லாம் நாம் இருக்க நினைகிறோமா .. ஆனால் இந்த சமுதாயத்தில் இருக்க முடியாதோ அப்படி இருப்பவர் TEX ..//

      Super !!

      Delete
    2. மந்திர மண்டலம் .. Tex க்கு சவாலாக இருந்த ஒரு சில வில்லன்களில் மெபைஸ்டோவும் ஒருவன் .. மெபைஸ்டோவின் 500 பக்க கதை அடுத்த வருடம் வந்தால் நன்றாக இருக்கும்

      இதை சொல்லி சொல்லியே எனக்கு வயசாகி போச்சு சார்..

      Delete
  47. இந்த மாதத்து இதழ்கள் அனைத்துமே super! Modesty-ன் ஒரு விடுமுறை வில்லங்கம், ஒரு amazing comics story! தெளிந்த நீரோடை போன்ற கதையும், action sequence-ம், அற்புதம். Tex-ன் சைத்தான் சாம்ரஜ்யம், ஒரு non stop action thriller. ஒரு comics எப்படி இருக்க வேண்டும் என்பதற்க்கு ஒரு எடுத்துக்காட்டு.ஹெர்லாக் ஷொம்ஷும் டாக்டர் வேஸ்ட்சன்னும், அதகளப்படுத்தி விட்டார்கள்! மொத்தத்தில் ஒரு action packed week! Thanks to our editor for picking such wonderful stories and feeding our comics rage. Pictures and fabulous and the print quality is world class! Hats off, Vijayan Sir!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ரசிப்பதே thanks enough நண்பரே !!

      Delete
  48. டெக்ஸ் 70....!!!

    1. நீங்கள் வாசித்த முதல் டெக்ஸ் இதழ் பற்றி....

    #பழிவாங்கும் புயல்.....!!!

    *சிறுவயதை தாண்டிய நிலையில் காமிக்ஸ் படிக்க வந்தபோது முதலில் படித்த லயன் சாகசம் இதுவே.

    *ஒரு பழங்குடி இன மக்களின் சொற்ப வீரர்களை வைத்து கொண்டு ஒரு அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ராணுவ படைப்பிரிவுகளை வெல்ல முடியுமா???. அதுவும் உயிர்பலி ஒன்று கூட இல்லாமல் டெக்ஸ் தன்னுடைய புத்திசாதுர்யத்தால் அதை செய்து காட்டி இருப்பார்.

    *மதியூகம், தெளிவான திட்டமிடலுக்கு இக்கதை ஒரு சிறந்த உதாரணம். தண்டனை வழங்கும் உரிமையை கூட நியாயப்படி டெக்ஸ் தீர்மாணிப்பது கதையின் ஹைலைட்டான கட்டம்.

    *டெக்ஸின் உயிர் நண்பர் கார்சனோடே மல்லுக்கட்டும் நிலையிலும் தன் நவஜோஸ்களை கைவிடாதவர் தான் டெக்ஸ்...நட்பையே தன் மக்களுக்காக இழக்க துணியும் நாயகன் உயர்ந்து நிற்கும் காட்சி அது; என்றும் நினைவில் வீற்றிருக்கும்.

    2.உங்களது all-time favorite சாகஸம் பற்றி ...

    *கார்சனின் கடந்த காலம், பழிவாங்கும் புயல், ட்ராகன் நகரம், கழுகு வேட்டை, பவளச்சிலை மர்மம், மரணமுள், நள்ளிரவு வேட்டை, இரத்தநகரம், மெக்ஸிகோ படலம், மரண தூதன், எல்லையில் ஒரு யுத்தம், சாத்தான் வேட்டை, சிவப்பாய் ஒரு சிலுவை, ஓநாய் வேட்டை, சிவப்பாய் ஒரு சொப்பனம், ஒக்லஹோமா, பிரம்மன் மறந்த பிரதேசம், எமனின் வாசலில், விதி போட்ட விடுகதை, சர்வமும் நானே, ஒரு கணவாய் யுத்தம்............... என பிடித்தவைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போனாலும் ஆல்டைம் பேவரைட் என்றால் அது காமிக்ஸ் காவியம்,

    ######கார்சனின் கடந்த காலம்#####

    *கரடுமுரடான வாழ்க்கை நிலவும் வன்மேற்கில் தங்கம் என்ற வார்த்தை செய்யும் ஜாலங்கள், சூழ்ச்சிகள், அது கொணரும் பேராசை என கலவையான நகரமான பன்னாக்கும், பேராசையின் மொத்த உருவான ரே க்ளம்மன்ஸ்ம், அவனது வஞ்சக கூட்டம் நிகழ்த்தும் சதிராட்டங்களும் பரபரப்பை நம் நாளங்களில் ஏகத்துக்கும் ஏற்றிவிடும்.

    *கார்சனின் மதியூகம், ஒரு தலைக்காதல், பூன்வகையறாவின் புதைகுழி வஞ்சகம், டெக்ஸின் சமயோசிதம், பொன்னாசையால் நட்பு, கூட்டாளிகள்& காதல் என அனைவருக்கும் துரோகம் இழைக்கும் ரே; பிள்ளை பாசம் & நட்புக்காக தங்கத்தையும், உயிரையும் தியாகம் செய்வது என காலத்தால் அழிக்க இயலா காவியமாக திகழ்கிறது கார்சனின் கடந்த காலம்.

    3.டெக்ஸ் & கோ மீது தீராக் காதல் நமக்கெல்லாம் தொடர்ந்திடுவதன் காரணம் என்னவாக இருக்ககூடும் என்பது பற்றி

    *நட்பு, காதல், தியாகம், வீரம், துணிச்சல், தன்னம்பிக்கை, இரக்கம், நியாயம்.....என வாழ்வின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கதைகள்; வாழ்வியல் நெறிமுறைகளை தெளிவாக வெளிப்படுத்தும் நாயகன்.

    *டெக்ஸ் கதைகளின் மிக முக்கியமான அம்சம் நடுநிலை தவறாமை.

    *ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவ ஒரு நொடியும் தாமதிக்காத தன்னலமற்ற டெக்ஸ் & கோ.

    *தவறு செய்வது மேலிடமா, அதிகாரியா, பணமுதலையா என பாராமல் துணிச்சலுடன் தட்டிக்கேட்பது.

    *ராணுவமே என்றாலும் அவர்களுக்கு உரிய வரம்பு மீறும்போது எதிர்ப்பு தெரிவித்து , மோதல் வந்தாலும் சமயோசிமாக திட்டமிட்டு அதை முறியடித்து, அவர்கள் செய்த தவறை உணரச்செய்து, நீதியை நிலைநாட்டுவது.

    *செவ்விந்தியர்களின் உரிமையை எதற்காகவும் விட்டுக் கொடுக்காதவர். அவர்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது பொங்கி எழுந்து நியாயம் கிடைக்கச் செய்வது. அதேசமயம் வெள்ளையர் உரிமையையும் மதிப்பது. தவறாக நடக்கும் செவ்விந்தியர்களை அடக்கத் தவறுவதில்லை.

    *அன்பான காதலனாக லிலித் மேல் காட்டும் பாசம்; கிட்டின் மேல் காட்டும் தந்தைப் பாசம். கிட்டிற்கு ஒன்று என்றவுடன் துடித்துப்போவது.

    *நட்பை உயிரைவிட மேலாக மதிப்பது. கார்சனை அவ்வப்போது நையாண்டி செய்தாலும், அவருக்கு ஏதேனும் ஆபத்து வரும்போது பொங்கி எழுந்து நண்பனையும் நட்பையும் காப்பாற்றுவது.

    *தேசநலனைக் காப்பது, ராணுவத்தில் நிகழும் ஒழுங்கீனத்தையும் களைவது. கள்ளப்பணம் அடித்து நாட்டின் டாலரை சீர்குலைக்கும் முயற்சிகளை எப்பாடு பட்டேனும் தடுத்து நிறுத்துவது.

    *உள்ளூர் ஷெரீப்புகளை கைக்குள் போட்டுக்கொண்டு நிலங்களை அபகரிப்பது, பேங் என்ற பெயரில் சுரண்டுவது, அடியாட்களை வைத்து சிறு நகரங்களை ஆட்டிப்படைப்பது, சட்டத்தை மதியாமை போன்றவற்றை துணிச்சலுடன் தட்டிக்கேட்டு நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுவது.
    ----இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    *வன்மேற்கில் இன்னொரு குதிரையில் நம்மையும் பயணிக்கச் செய்யும் ஆற்றல் கொண்ட, ஒரு 70ஆண்டுகால தொடர் நாமும் அதனுள் வாழ்கிறோம் என்ற எண்ணைத்தை தோற்றுவிப்பதே அதன் நீண்டகால வெற்றியின் ரகசியம்.
    *****#######******#######

    ReplyDelete
    Replies
    1. ///பிடித்தவைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போனாலும் ஆல்டைம் பேவரைட் என்றால் அது காமிக்ஸ் காவியம்,

      ######கார்சனின் கடந்த காலம்##### ///

      அது...!! -)

      Delete
    2. சார்...."டெக்ஸ் காதல்களின்" கட்டுரை (!!) நீளம் குறித்து அடியேனின் கோரிக்கையினை ஒருக்கா கவனிக்கக் கோருகிறேன் !!

      Delete
    3. ஹா...ஹா... சுருக்கிடலாம் சார்...!!!

      சுருக்கி வரைகிறேன்...!!!

      Delete
    4. நல்ல வேல, நான் என் போஸ்ட publish பண்ணிட்டு இதை படிச்சேன் :-)

      Delete
    5. 1. நீங்கள் வாசித்த முதல் டெக்ஸ் இதழ் பற்றி....
      #பழிவாங்கும் புயல்.....!!!

      *ஒரு பழங்குடி இன மக்களின் சொற்ப வீரர்களை வைத்து கொண்டு ஒரு அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ராணுவ படைப்பிரிவுகளை வெல்ல முடியுமா???. அதுவும் உயிர்பலி ஒன்று கூட இல்லாமல் டெக்ஸ் தன்னுடைய புத்திசாதுர்யத்தால் அதை செய்து காட்டி இருப்பார்.


      2.உங்களது all-time favorite சாகஸம் பற்றி ...
      "கார்சனின் கடந்த காலம்"

      *கரடுமுரடான வாழ்க்கை நிலவும் வன்மேற்கில் தங்கம் மீதான பேராசை,ஒருதலைக் காதல, பூன்&வாகோவின் புதைகுழி வஞ்சகம்; நட்பு & காதலை விட தங்கத்தை தேடும் ரே; பாசம்,தங்கத்தை வெல்வது என காலத்தால் அழிக்க இயலா காவியமாகத் நிகழும் சாகசம்.

      3.டெக்ஸ் & கோ மீது தீராக் காதல் நமக்கெல்லாம் தொடர்ந்திடுவதன் காரணம் என்னவாக இருக்ககூடும் என்பது பற்றி

      *நட்பு, காதல், தியாகம், வீரம், துணிச்சல், தன்னம்பிக்கை, இரக்கம், நியாயம், நடுநிலைமை, பாசம்.....என வாழ்வியல் நெறிமுறைகளை தெளிவாக வெளிப்படுத்தும் நாயகன்.

      *வன்மேற்கில் இன்னொரு குதிரையில் நம்மையும் பயணிக்கச் செய்யும் உணர்வை அளிப்பதே, டெக்ஸ் & கோவின் நீண்டகால வெற்றியின் ரகசியம்.

      -சேலம் Tex விஜயராகவன்.


      (ஆசிரியர் சார்@ சுருக்கப்பட்ட பதிப்பு,ஹி...ஹி..)

      Delete
    6. அசோக்@ இங்கே எப்படி வேணா நாம போட்டுடலாம் நண்பரே! புத்தகத்தில் இடம்பெறனும்னா, சுருக்கமானது தானே வசதி. நீங்களும் செட்டு புட்டுனு, ஒரு சுருக்கமான பதிப்பையும் பதிச்சிடுங்க...!!!

      Delete
    7. எல்லாம் சரி தான் விஜயராகவன். நல்லா இருக்கு. ஆனால் டெக்ஸ் பற்றி குறிப்பு வரையச் சொன்னால் கட்டுரை எழுதி இருக்கீங்க?

      Delete
    8. பரணி @ அதான் கட்டுரையை சுருக்கி, குறிப்பாக்கிட்டனே நண்பா!!!

      இன்னும் சுருக்கினா, வடிவேல் மீன் வித்த கதையா போயிடாது...!!! ஹி...ஹி...!!!

      Delete
  49. இரத்தப்படலம் பாகம்-17
    அயர்லாந்துக்குள் போய் கொண்டிருகிறேன்

    ReplyDelete
  50. //////இதுவரையிலும் சிதறல்களாய் சில பாராட்டுக்கள் மாத்திரமே பதிவாகியிருப்பதை பார்க்க முடிந்துள்ளதெனும் போது-கையை பிசையத்தான் தோன்றுகிறது! மாடஸ்டி அணியினரே கரை வேஷ்டிகளை மாற்றிக் கொண்டு விட்டார்களா ? அல்லது கட்சியையே கலைத்து விட்டார்களா ? என்று சொல்லத் தெரியவில்லை - இந்த muted response-தனைப் பார்த்திடும் போது! So கேள்வி #3-க்குக் கிட்டியுள்ள பதிலில் அத்தனை தெளிவில்லை என்பதே நிலவரம்!/////

    அவசரப்படாதீங்க எடிட்டர் சார் !

    மாசம் பொறந்து எட்டு நாள்தானே ஆவுது ..விமர்சனம் வரும் ..

    கதையின் முதல் பக்கம்

    மாடஸ்டி :............பொதுவாய் டாக்டர்கள் மீது அவ்வளவு ஈடுபாடும் கிடையாது ...

    இதைப் படிச்சுட்டு சில டாக்டர்கள் மனசொடிஞ்சு உப்புமா சாப்பிட போயிருக்கலாம் ..
    மனசை தேத்திக்கிட்டு விமர்சனம் எழுதுவாங்க பாருங்க !!!!!

    ReplyDelete
    Replies
    1. ///மாடஸ்டி :............பொதுவாய் டாக்டர்கள் மீது அவ்வளவு ஈடுபாடும் கிடையாது ..///

      பின்னே ...தனியா கூட்டிட்டு போய் உக்கார வெச்சி ..நாலுமணிநேரமா மீன் புடிச்சிக்கிட்டு இருந்தா அந்தபுள்ளக்கி எப்படி ஈடுபாடு வரும்னேன்.!! :-)

      Delete
    2. சில இல்லங்களின் உப்மாக்களைத் தின்ற பல மணி நேரங்களுக்குப் பேச்சு -மூச்சு வராது போவது இயல்பே சார் !! So மௌனங்களின் காரணம் இப்போது புரிகிறது !!

      Delete
    3. // இதைப் படிச்சுட்டு சில டாக்டர்கள் மனசொடிஞ்சு உப்புமா சாப்பிட போயிருக்கலாம் ..
      மனசை தேத்திக்கிட்டு விமர்சனம் எழுதுவாங்க பாருங்க !!!!! //

      செம காமெடி.

      Delete
    4. செனா அனா...

      ஹா ஹா ஹா!! :))))))))

      Delete
    5. மாடஸ்டி :............பொதுவாய் டாக்டர்கள் மீது அவ்வளவு ஈடுபாடும் கிடையாது ...

      இதைப் படிச்சுட்டு சில டாக்டர்கள் மனசொடிஞ்சு உப்புமா சாப்பிட போயிருக்கலாம் ..
      மனசை தேத்திக்கிட்டு விமர்சனம் எழுதுவாங்க பாருங்க


      ######


      ஹாஹாஹா...:-)))))


      Delete
  51. Sir, When I was Studying 8th std., I read 'Thalai Vaangi Kurangu', but at that time I was Big fan of Spider and Archie. so I did not like that story and also got upset when I came to know the "Kurangu" in that story is not a real monkey but a man. Only after 7 or 8 years I started to like and love Texviller stories.

    ReplyDelete
  52. Tex‘s stories are always good. But this month’s Tex was awesome as some black magic was involved. Till the witch was dead, the story went on with a menacing grip on the readers. Full of suspense. After that it fell a bit low. But still it’s very good story overall. If you can remember a hand full of stories, these will definitely take a spot as the plot is new and totally different. That’s why these magic stories also must figure in our line up.

    My second favourite is always the princess. I was overawed by her acumen and skill from my young age. Because we haven’t read any stories where the female dominated their counterpart till then. She was like a lady James bond. Some stories are unparalleled. Her meticulous planning, vicious fights and not to forget her special bond with Garvin are a treat to read. Still my all time favourite is “kalugu Kottai”. No Words can apprise or appreciate this story.

    (I) My first Tex’s story was “Thali vaangi kurangu”. I immediately “liked” and “subscribed” Tex for the rest of my life. Slowly I gathered and collected all Lion comics books. Till then I was regular to ambuli mama, bala mithra and numerous monthly novels. I was happy when I first saw young and handsome James bond in “rani comics” with laminated cover. It was the first of a kind during those days. Then came the ultimate “Lion Comics” introducing me to Tex, modesty, tiger, spider and archie. It was the happiest time of my life. I thank Vijayan sir for making my childhood a memorable one. I was studying in 7th Std and Lion comics would never come on time in those days. I used to visit Turaiyur shop regularly from 1st of every month praying to every god that lion comics should have come. If any special had been announced, extra tension and fever would grip me. No God could change Vijayan Sir and book would come only after 5th. Sometimes It used to come after 12th. When I received the book, I used to feel top of the world and carried it in my school bag next day and showed to all my friends. I was like Lion comics Rep. I introduced lion comics to many of my friends. They were golden days.

    (II) All time favourite is “Irulin Maindharhal” due to extraordinary story telling.

    (III) As many of our readers pointed out...

    - We always love single hero adventures as our inner self wants to be and worship who are such.
    - The chemistry between Tex and Carson..
    - Our interest to know about West and its culture as they are totally new to us
    - Meticulous storytelling and brilliant moves and counter moves between Tex and his opponents. After all a hero can only be as good as his nemesis. A powerful villain can make the story interesting and guarantee its success.
    - Excellent Story and drawings.
    - Most importantly the translation and quality of the books
    That’s all sir..

    ReplyDelete
    Replies
    1. சூப்பர்.... விசிலடிக்கும் படங்கள் பலப்பல...!!!

      ஆனா ஆங்கிலத்தில் போட்டு உள்ளீர்கள். இன்னும் சுருக்கி தமிழில் போடுங்க, லயன் 70ல் இடம் பிடிச்சே ஆகணும் நண்பரே!

      Delete
    2. அட...ஒரு பரீட்சைப் பேப்பருக்கான பாணியில் ஆணித்தரமாய் கருத்துக்களை முன்வைத்துவிட்டு "that 's all !!" என்று முடித்து விட்டீர்களே சார் !! அமர்க்களமான டெக்ஸ் காதலின் வெளிப்பாடு !!

      Delete
    3. @ Asok kumar

      அருமையா எழுதியிருக்கீங்க நண்பரே!

      Delete
    4. @ Asok kumar

      அருமையா எழுதியிருக்கீங்க நண்பரே!

      Delete
  53. என் முதல் டெக்ஸ் அனுபவம் 1987 குண்டு புத்தகத்தில் உள்ள பெயர்தெரியாத கதை. அதி முதல் டெக்ஸ் எனது favorite.

    மரண மண்டலம், சைத்தான் சாம்ராஜ்யம், பழிவாங்கும் புயல் all time favorite.

    Trent yearly once தொடரவேண்டும்...modesty blasé also must be for yearly once.

    ReplyDelete
  54. Wild west hero க்களில், அதிகம் அறியப்படாத wild bill Hickock, and Jesse James ஆகியோரை protoganist ஆக காட்டப்படும் கதைகள் உள்ளனவா எடிட்டர் சார்.....

    ReplyDelete
  55. 1.நீங்கள் வாசித்த முதல் டெக்ஸ் இதழ் பற்றி,
    மரண முள் என்பதாக நினைவு,இரவு நேரத்தில் படித்து விட்டு அருகே ஏதேனும் முள்ளுருண்டை உள்ளதா என்று பீதியோடு பார்த்தது இன்னும் கூட நினைவில் உள்ளது.
    2. உங்களது all-time favorite சாகஸம் பற்றி ...
    1.கார்சனின் கடந்த காலம் - டெக்ஸ் & கார்சனின் மகுடத்தில் முக்கியமான ஒரு வைரக்கல் இது,நட்பின் மகத்துவம்,கார்சனின் காதல்,"நான் ஒரு அப்பாவி",ரே கிளம்மன்ஸ் இதெல்லாம் மறக்க முடியுமா என்ன.
    2.வல்லவர்கள் வீழ்வதில்லை - ஒரு கி.நா பாணியிலான சாகசத்தில் டெக்ஸ் & கோ வை அருமையாக பொருத்தியிருப்பார்கள்,
    3.பலி வாங்கும் புயல் - நுட்பமான,மதியூகமான திட்டங்களால் வெற்றிக் கனியை ஈட்டும் சாகசம்,
    4.மரண முள் - அப்போதைய காலகட்டத்தில் படிக்கும்போது முதுகுதண்டை சில்லிட வைத்த சாகசம்,டெக்ஸ் & கோ மற்றும் மோரிஸ்கோ காம்பினேஷனில் ஒரு அருமையான சாகசம்.
    5.கழுகு வேட்டை - மறக்க முடியுமா அந்த சங்கீத ஒலி எழுப்பும் கடிகாரத்தை,
    6.இரத்தநகரம் - பக்காவான கமர்சியல் மசாலா,எத்தனை முறை படித்தாலும் சலிக்காது.
    7.சர்வமும் நானே - கொஞ்சமும் பிசிறு தட்டாமல் விறுவிறுப்பாக செல்லும் ஒரு மெகா சாகசம்,
    8.சிவப்பாய் ஒரு சொப்பனம் - லயனின் மீள்வருகையின்போது வெளியானது,செவ்விந்தியக் களத்தில் அமைந்த முக்கியமான சாகசம்.
    9. எமனின் வாசலில் - அற்புதமான ஓவியங்களோடு தீபாவளி மலராக வெளி வந்த மெகா சாகசம்,கிராமத்தை இரவில் சூறையாடும் வேட்டையர்களை டெக்ஸ் வேட்டையாடும் களம்.
    10.இருளின் மைந்தர்கள் - அமானுஷ்ய,மாந்திரீக பின்னணியில் அமைந்த என்றும் சலிக்காத ஒரு சாகசம்.

    //3.டெக்ஸ் & கோ மீது தீராக் காதல் நமக்கெல்லாம் தொடர்ந்திடுவதன் காரணம் என்னவாக இருக்ககூடும் என்பது பற்றி.//
    1.கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப எப்போதும் செயல்படுவது,
    2.செய்யும் செயலில் நியாயங்கள் இருப்பின் அதை காக்க எந்த எல்லைக்கும் போவது,
    3.எந்தவித இடர்ப்பாடான நிலையிலும் கார்சன்,கிட்,டைகரை காக்க தன்உயிரை ஒரு பொருட்டாக கருதாமல் முன்நிற்பது,
    4.பெண்களுடம் கண்ணியம் காப்பது,
    5.எந்த சூழ்நிலையிலும் தனது நேர்மையை கடைபிடிப்பது,
    6.தவறு செய்தவர்கள் பதவியில்,வசதியில் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருப்பினும் அஞ்சாமல் உரிய தண்டனை பெற்று தருவது,
    7.சூழ்நிலைகளின் நெருக்கடியை பொறுத்து விவேகமான முடிவுகளை எடுப்பது,
    8.நட்பை தனது உயிரைப் போல் எண்ணுவது,
    9.நியாயத்தை நிலைநாட்ட தனது வாழ்வை அர்ப்பணித்தது,
    10.எளிவர்களின்,நல்லவர்களின் மன எண்ணங்களை பிரதிபலிக்கும் பிம்பமாக திகழ்வது.
    -மொத்தத்தில் டெக்ஸ் "எப்போதும் வென்றான்" என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர்,டெக்ஸ் நம்மில் ஒருவர்.

    ReplyDelete
    Replies
    1. அறிவரசு @ நல்லா இருக்கு. ஆனால் டெக்ஸ் பற்றி குறிப்பு வரையச் சொன்னால் கட்டுரை எழுதி இருக்கீங்க? கொஞ்சம் சின்னதாக்கிக் கொடுக்க.

      Delete
    2. இதைவிட எப்படி சுருக்க,சரி முயற்சிக்கிறேன்.

      Delete
    3. PFB,மேலே கண்ணன் போட்டுருக்க கட்டுரையும் கிட்டத்தட்ட இதே சைஸ்தான்,அதனால பிரச்சினை இல்லைன்னு நினைக்கிறேன்,தேவைப்பட்டால் சுருக்கிக் கொள்வோம்.

      Delete
  56. அமரிக்காவின் கவர்ச்சி அதன் நகரங்களை காட்டிலும் அதன் பாலைவனங்களிலும், அளவற்ற அதன் plains களிலும் உள்ளது.

    அலுவலகங்களில் எல்லாம் நவநாகரீக மனிதர்களை காட்டிலும, கிராமங்களில், சிறு ஊர்களில், பண்ணைகளில் வாழ்க்கை நடத்தும் கால்நடை மேய்ப்பர்கள், முரட்டுத்தனமான விவசாயிகளும் தான் அதன் கவர்ச்சி என்பது என் கருத்து....

    ReplyDelete
  57. This comment has been removed by the author.

    ReplyDelete
  58. Hi all☺

    Bought oru kurangu chettai book last week and just finished reading
    LOL in many pages becoz of funny dialogues and drawings
    excellent making too
    Yet to tell this story to my daughter after her quarterly exams over
    Have a funny weekend all 😃

    ReplyDelete
  59. டெக்ஸ்பா1:-
    நவஹோக்கள் கொண்டாடும் இரவுக்கழுகெனும் ரேஞ்சரே,
    உனக்கென உருவான கூட்டம் உரத்து சொல்கிறோம் "உன் ரேஞ்சே வேற"..

    கற்பனையில் உயிர்கொடுத்தான் அன்றொருநாள் போனெல்லி,
    காமிக்ஸ் உலகம் என்றென்றும் வாழ்த்தும் உங்கள் பேர் சொல்லி..

    எழுபதில் இருந்தாலும் திடம் இன்னும் போகவில்லை,
    எதிர்ப்பது நீயென்றால் எமனும் எதிர்நின்றதில்லை..

    நேசத்தில் பாசத்தில் நிறைந்து நீ வாழ,
    கார்சனும் கிட்டும் கால்தடங்கள் போல..

    காலங்கள் போனாலும் வயதாகவில்லை,
    தோட்டாக்கள் குறையாத துப்பாக்கியும்
    நீயும்
    தோற்றதாய் என்றும் சரித்திரம் இல்லை..

    வன்மேற்கு டெக்ஸாஸில் கண்ணியம் கடமையே
    நீதியை போதிக்கும் நீயுமெங்கள் கடவுளே..



    டெக்ஸ்பா2:-
    சட்டத்திற்கொரு சவக்குழி பறித்து
    அராஜகம் அன்லிமிட் ஆகும்போது
    வல்லவர்கள் வீழ்வதில்லையென
    நடமாடும் நரகமாய்
    சர்வமும் நானே என
    நீதி காக்கும் காவல் கழுகே..
    நீ தற்செயலாய் ஒரு ஹீரோ அல்ல..
    காமிக்சுக்கு கிடைத்த ஒரு தங்க புதையல்.
    எமனின் எல்லையில்
    மரணத்திற்கு முகமில்லை என்பவனை
    நில் ,கவனி, சுடு..
    விதி போட்ட விடுகதையையும் மாற்றும் நீ
    ஒரு தலைவன், ஒரு சகாப்தம்..


    (என் முதல் டெக்ஸ்: எமனின் எல்லையில். பழைய புத்தக கடையில் கிடைத்த புதையல்.

    விருப்பமான டெக்ஸ்: காற்றுக்கு ஏது வேலி, ஒரு தலைவன் ஒரு சகாப்தம்)
    நன்றி.

    -மரு.பெ.பார்த்தீபன் கரூர்

    ReplyDelete
  60. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  61. Why doubt sir. Modesty stories never ever bore. May be new readers do not appreciate

    ReplyDelete
  62. Trend romba sumaar . Sherlock 2vathu kathai ok. Modesty innum padikkala

    ReplyDelete
  63. என்னது இன்னும் " களவும் கற்று மற " பஞ்சாயித்து முடியலையா ..


    அட போங்கப்பா....இனி நோ பதில்...நான் போய் " நிழல்களின் நிசப்தமே " படிக்க போறேன்..

    ReplyDelete
    Replies
    1. நிழல்களின் நிசப்தமே படிக்க போற அளவுக்கு உங்களுக்கு தைரியம் யார் கொடுத்தது :-)

      Delete
    2. ஒரு ரெண்டு பேரு...:-)

      Delete
  64. ஹெர்லக் ஷோம்ஸ்- நல்வரவு...
    "ஒரு குறங்கு சேட்டை" இரண்டாம் பக்கம் முதலாகவே, அடுத்தடுத்த வேஷங்கள் மீது ஆர்வம் ஏற்படுகிறது. யூகிக்க முடியும் கதைக்கருவாக இருப்பினும் தொய்வில்லாமல் கதை ஓடியது. இரண்டு கதைகளும் 'ஆஹா' ரகமில்லை எனினும் 'அருமை' ரகங்களே...

    ReplyDelete
  65. நண்பர் கணேஷ் அவர்களே ...

    டெக்ஸை எதிர்த்து போர்கொடி தூக்கி நீங்கள் அழைப்பதற்கான பதிலே இது ஒழிய விதாண்டாவாதம் அல்ல என்பதை முன்கூட்டியே தெரிவித்து கொள்கிறேன் உங்கள் நடுநிலமையை போன வருட சந்தா ஆரம்பத்திலியே அனைவரும் அறிவார்கள் என்பதையும் அறிவேன்..

    ஒரு கேள்வி கேட்டீங்களே அடேங்கப்பா...டெக்ஸ் ரசிகர்கள் சேர்ந்து டைகரை ஓரம் கட்டி விட்டார்களா ...டெக்ஸ் ரசிகர்கள் அனைவருமே டைகருக்கும் ரசிகர்கள் தாம் .தங்க கல்லறையையும் ,மின்னும் மரணத்தையும் ,இரத்த கோட்டையையும் டைகர் ரசிகர்கள் சிலாகித்ததை விட டெக்ஸ் ரசிகர்கள் கொண்டாடியது தாங்கள் அறியாதவர் போல .அதன் வண்ண மறுபதிப்புகளுக்கும் வெளிவர போராடியவர்கள் நீங்கள் எதிர்க்கும் அதே டெக்ஸ் ரசிகர்களும் தாம்.அதன் பிறகு வந்த இளம் டைகர் கதைகளும்..,மார்ஷல் டைகர் கதைகளும் சோடை போனதை டெக்ஸ் ரசிகர்கள் மட்டுமல்ல டைகர் ரசிகர்களுமே ஒப்பு கொண்டுள்ளார்கள்.எனவே அந்த டைகர் கதைகளை பெரும்பாலானோர் ஆதரிக்க வில்லை.அதனை புரிந்து கொள்ளாமல் டைகர் ரசிகர்களை ஓட ஓட டெக்ஸ் ரசிகர்கள் விரட்டினார்கள் என்று அரசியல்வாதியை போல பேசுகிறீர்களே ..? அந்த கதை பிடிக்கலை ..குறை சொன்னாங்க...குறை சொன்னார்கள் என்பதை விட பிடிக்கவில்லை என்ற கருத்தை ஆணித்தரமாக வைத்தார்கள் .அதில் என்ன தவறு..? டைகர் கதையை குறை சொன்னார்களே தவிர டைகர் கையில ஒரு வின்செஸ்டர் இருக்குறப்பவே ..இன்னொரு கையிலையும் கத்தி வச்சுருக்காரு ..கடப்பாறை வச்சிருக்காருன்னு யாரும் புறம் பேசலை.இங்கே யாரும் குறை சொல்ல வருபவர்களை தடுப்பதில்லை...குறை சொல்வதற்கு என்றே வருபவர்களை நிறையை சொல்லவும் வாருங்கள் நண்பரே என்று தான் அழைக்கிறோம்.அதுவும் நீங்க சொல்ற குறை....அடேங்கப்பா ..!?டெக்ஸ் துப்பாக்கில தோட்டா தீர மாட்டேங்கது ..தோட்டா தீந்துருச்சு ..ரவையை நிரப்புங்கப்பா ன்னு நாலு பேனலுக்கு ஒரு தடவ டெக்ஸ் வசனம் பேசிட்டு இருந்தா இழுவையா இருக்கு...பக்கத்தை நிரப்ப இழுத்துட்டே போறாங்கன்னு குறை சொல்லவும் கண்டிப்பா வருவாங்க...ஏன்னா தங்களை போன்ற நண்பர்களுக்கு கதை நல்லாருக்கா ,இல்லையான்னு பிரச்சனை இல்ல.குறை சொல்லனுமே என்றே வருவது தான் பிரச்சனை.அப்புறமா சின்ன நினைவூட்டல் ..டாக்டர் டெக்ஸ் போன்ற டெக்ஸ் சாகஸங்களை சுமார்தான் சார்..நல்லாயில்லை என்ற விமர்சனம் வைத்தவர்களும் அதே டெக்ஸ் ரசிகர்கள் தாம்...


    இப்பவும் அடிச்சு சொல்றேன்.மீண்டும் ஒரு டைகர் கதை வந்து அது தங்க கல்லறை போல இரத்த கோட்டை போல கூட வேண்டாம் படிப்பதற்கு சுவையாக சென்றால் கூட உங்களை விட அதிகமாக அந்த கதையை பாராட்ட போகிறவர்கள் இந்த டெக்ஸ் ரசிகர்கள் தாம்.அதை விட முக்கியம் ஆசிரியரே நமது சந்தா முன்னேற்றத்தை " டெக்ஸே " நிர்ணியிக்கிறார் என பலதடவை மறைமுகமாகவும் ,நேரிடையாகவும் பல முறை சொல்லியும் டெக்ஸை எதிர்க்க அதுவும் குண்டு நிரப்புல ,ஆம்பளையா ,பொம்பளையான்னு கரீட்டா கண்டுபிடிக்கலை ங்குற ரேஞ்சுக்கு டெக்ஸை எதிர்கிறீர்கள் எனில் உங்கள் எதிரி டெக்ஸ் அல்ல ..வேறு என்று தான் பலரும் உணருவார்கள்..



    எனவே


    ஆல் தி பெஸ்ட் ...

    உங்கள் "குறையை "

    தொடருங்கள்...


    ReplyDelete
  66. ட்ரெண்ட் -
    சில கதைகள் படிக்கும் அனுபவம் வழங்கும். சில கதைகள் நம்மையும் உடன் ஏற்றிக்கொண்டு பயணிக்கும்.
    'களவும் கற்று மற'- இரண்டு பக்கங்களில் இறந்து விடும் "ஸாரா" இன்னும் என்னுள்...
    ஆசிரியர் அடுத்த ஆண்டில் ட்ரெண்ட் பாகம் 3,4 ஒரே ஆல்பமாக வெளியிட முயற்சித்தல் நலம்

    ReplyDelete
  67. அடுத்து ...


    தங்களை போல சிலரும் வெளி இடங்களில் இங்கே மாற்று கருத்தை சொல்ல விட மாட்டேங்கிறாங்க...ஏதாவது சொன்னா உடனே ரவுண்ட் கட்டி வருவாங்கப்பா....அதனால தான் தளத்து பக்கமே போறதில்லை...போனாலும் பாக்குறது இல்ல...பாத்தாலும் படிக்குறது இல்ல..படிச்சாலும் சொல்றது இல்ல ன்னு பேசிட்டு இருக்காங்க ...


    "ஏதாவது " பேசுனா ரவுண்ட் கட்ட மாட்டாங்க ...ஆனா " ஏடாகூடாமா" பேசுனா கண்டிப்பா ரவுண்ட் கட்டுவோம்.ஏன்னா காமிக்‌ஸையும் ,அந்த காமிக்ஸை வழங்கும் ஆசிரியரையும் நாங்கள் உண்மையாகவே நேசிக்கிறோம்.மதிக்கிறோம்.


    இங்கே நிழல்களின் நிசப்தம் பலரின் பாராட்டுதல்களை ,கரகோஷத்தை பெற்ற அதே சமயம் என்னை போன்ற சிலருக்கு அதை படிக்கவே முடியவில்லை என்ற கருத்தையும் முன் வைத்து தானே இருந்தோம்.யாரும் ரவுண்ட் கட்ட வில்லையே.ஒரு பொது தளத்தில் சொல்லும் முறை என்று உள்ளது .அநாகரீக முறையில் இங்கே விமர்சனம் எழுப்பினால் கண்டிப்பாக மாற்று கருத்தை நாங்களும் முன்வைப்போம்.வரும் மாற்று கருத்து சரியான முறையில் இருந்தால் அவர்களுக்கு வரும் மாற்று கருத்தும் சரியாகவே இருக்கும்.முறையில்லா மாற்று கருத்து எனில் அதே முறையில்லா மாற்று கருத்துதான் அதற்கு பதலாக வரும் அவ்வளவு தான்.

    ரவுண்ட் கட்டுபவர்களால் இங்கே அநாகரீக பதிவுகள் குறைந்துள்ளன .அல்லது மறைந்துள்ளன.என்னமோ சொல்லிட்டு போறாங்க நமக்கென்ன என்று பலரும் ஒதுங்கினால் போன பதிவிலியே ஒரு நல்ல நண்பர் பொது இடத்தில் வருந்தியது போல இங்கேயும் பலருக்கு வருத்தத்தை பதிய வைப்பார்கள்.அதை ரவுண்ட் கட்டுபவர்கள் தடுக்க தான் செய்வார்கள்.

    இதில் இன்னொன்றையும் பார்க்கிறேன்.அநாகரீக முறையில் மாற்றுகருத்தை வைப்பவர்களுக்கு எவரும் சரியான பதில் சொல்ல மாட்டார்கள் .அப்படியே அமைதியாக இருப்பார்கள்.ஆனால் அந்த அநாகரீக மாற்று கருத்திற்கு ரவுண்டாக வருபவர்கள் பதில் மாற்று கருத்தை சொன்னால் தளத்துல எதுவுமே பேச விட மாட்டேங்கிறாங்க..லவுண்டா வராங்க என்ற புலம்பல் வேறு...நீ ஏன் குறுக்கால வரே...இது ஆசிரியர் தளம்...ஆசிரியர்கிட்ட தான் கேக்குறேன் ன்னு சொன்னா ஒரு பொது இடத்துல ஆசிரியர்கிட்ட கேள்வி கேக்குற மாதிரி கேள்வி கேளுங்க..பங்காளி சண்டைகாரங்க மாதிரி கேள்வி கேட்டா நாலு நல்லவன் குறுக்கால வரத்தான் செய்வான்.ஒண்ணும் பண்ண முடியாது.


    வினை விதைப்பவன் வினை அறுப்பான் அவ்வளவுதான்..



    ரவுண்ட் பன் மட்டுமல்ல ரவுண்டர்களும் சுவையானவர்களே...

    ReplyDelete
    Replies
    1. தலீவரே!!

      பின்னீட்டீங்க!! பிச்சு உதறிட்டீங்க!! அட்டகாசமா விளக்கம் கொடுத்து அசத்திட்டீங்க!!!!

      இதுவரைக்கும் நீங்க எழுதின கடுதாசிகளிலேயே இதுதான் பெஸ்ட் தலீவரே!

      Delete