உஷார் !! இதுவொரு ரோலர்கோஸ்டர் சவாரி போலானதொரு பதிவு !! ஜிவ்வென்று உசக்கே இட்டும் செல்லும் ; சொய்ங்கென்று பாதாளத்துக்கும் கூட்டிப் போகும் !! So பெல்ட்களை இறுக்கிக் கொள்ளுங்கள் guys ; அல்லது "நேக்கு ராட்டினமென்று பேப்பரில் எழுதிப் பாத்தாலே தலை சுத்துமே !!" என்ற அணியினராய் (என்னைப் போல) இருப்பின், நேராக பதிவின் tailend-க்குப் பயணமாகிடுங்களேன் please !!
நண்பர்களே,
வணக்கம். `தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரி கட்டும்’ என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் ! தென்னை மரத்தில் தேளுக்கு என்ன ஜோலி ? அதற்கு மீறி மாங்கு மாங்கென்று அது மரமே ஏறினாலும் – அங்கே கொட்டி வைத்து அது சாதிக்கக் கூடியது என்ன ? அட - அப்படியே கொட்டி வைத்தாலும் – அது 'தேமே' என்று வேறொரு திக்கிலிருக்கும் பனை மரத்தை எப்படிப் பாதிக்கும் ? என்றெல்லாம் ஒரு நாளும் நான் யோசித்துப் பார்த்ததுமில்லை ! ஆனால் இப்போது அமெரிக்க டாலரெனும் தென்னையில் தடாலடித் தடுமாற்றம் என்ற தேள் பொடேரென்று போட்டிட – எங்கோவொரு தூரத்திலிருக்கும் தம்மாத்துண்டு பனைமரமான நமக்கு நெரி கட்டோ கட்டென்று கட்டுவதைப் பார்க்கும் போது – பழமொழி சொன்ன பெரிய மனுஷனை நினைத்துப் பொத்தாம் பொதுவாய் ஒரு கும்பிடு போட்டு வைக்கத் தோன்றுகிறது! ஆத்தாடியோவ் – என்னவொரு தீர்க்கதரிசனம்!
“ஆஹா… பில்டப்பை ஆரம்பிச்சிட்டான் மாப்ளே…! முட்டைக்கண்ணன் விலை ஏற்றத்துக்கு அடி போடப் போறான்டோய்!” என்று இதைப் படித்த மாத்திரத்திலேயே சிலபல வாட்சப் க்ரூப்களில் ஸ்மைலிக்களோடு குறுந்தகவல்கள் பறக்கத் துவங்கியிருக்குமென்பது தெரியாதில்லை ! ஆனால் ஒரு சந்துக்குள் சிக்கிய பெருச்சாளி எவ்விதம் உணருமோ – அதை அட்சர சுத்தமாய் நானும் அனுபவித்து வருவதால் கொஞ்சம் மனம்திறக்க அவசியமாகியுள்ளது! And வாரா வாரம் எனது பதிவுகளைப் படித்து வரும் சீனியர் எடிட்டருக்கும், நமது கருணையானந்தம் அவர்களுக்கும் நான் எழுதவுள்ள சமாச்சாரங்களில் அத்தனை உடன்பாடிராது என்பது எனக்குத் தெரியும் ! "விற்பனை சார்ந்த நெகடிவ் விஷயங்களைப் பகிர்வானேன் ? மாதம் மும்மாரி மழை பொழியோ பொழிகிறதென்று சொல்லிக் கொண்டு வண்டியை ஓட்டிக் கொண்டே போக வேண்டியது தானே ?” என்பதே அவர்களது பார்வைக் கோணங்கள் ! அதுவும் சரி தான் ; இருக்கும் சின்னதொரு வட்டத்தினுள் நமது சிரமங்களைப் பகிரங்கமாக்கி அவர்களையும் கலங்கச் செய்வானேன் ? என்ற எண்ணம் எனக்குமே மேலிடத் தான் செய்யும் ! அதனாலேயே நாம் போடும் மொக்கைகளின் பெரும்பான்மையை விழுங்கிடுவதுண்டு ! ஆனால் ஏதேதோ காரணங்களால், முருங்கைமரத்தில் ஏறும் டாலரின் உபயத்தில் நமக்கு டிரவுசர் கழறத் தொடங்கி வருவது ஆபத்தான லெவல்களைத் தொட்டு வர – தொடர் மௌனம் சுகப்படமாட்டேன்கிறது எனக்கு !
புத்தாண்டின் அட்டவணைத் தருணம் ; பழைய ராயல்டிப் பாக்கிகள் பைசல் செய்யப்பட வேண்டிய வேளையுமே கூட ! So தட்டுத் தடுமாறி பணத்தைச் சேகரம் செய்து, அவர்களது பில்களையெல்லாம் எடுத்து வைத்த சமயம் தான் தொடங்கியது அமெரிக்க டாலரின் வெகு சமீப தறிகெட்ட பேயாட்டம் ! ‘சனிப் பிணம் தனியாயப் போகாது‘ என்பது போல, டாலர் ஏறும் போது, துணைக்கு மற்ற கரென்சிகளையுமே இழுத்துக் கொண்டு செல்வது தானே வாடிக்கை ? So ரூ.75/- சுமாருக்கு இருந்த யூரோ – கண்மூடிக் கண் திறப்பதற்குள் ரூ.84/-ஐத் தொட்டு நிற்கிறது ! பத்தே நாட்களின் இடைவெளியில் நமது ராயல்டி பாக்கித் தொகைகளின் பரிமாணம் பகீரென்று எகிறிப் போய் விட்டுள்ளது ! பற்றாக்குறைக்கு, “தீபாவளி விருந்துக்கு வந்த மாப்பிள்ளை எப்போடா கிளம்புவான்”? என்று காத்திருக்கும் மாமனார்களைப் போல – இறக்குமதி செய்து ஆர்ட் பேப்பர்களை விற்பனை செய்திடும் பேப்பர் ஸ்டோர்வாலாக்களும் இந்த நொடிக்காகவே காத்திருந்தவர்கள் போல ‘பொடேரென‘ டன்னுக்கு ரூ.4,500 விலையேற்றி விட்டுள்ளனர் - ஒற்றை மாதத்தின் போக்கில் !
ஒளிவு மறைவுகளில்லை guys – நமது பிரிண்ட்ரன் கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் மாறிக் கொண்டு தானுள்ளது! சென்றாண்டு வரைக்குமே ஒவ்வொரு இதழிழுமே 2500 பிரதிகள் வரை அச்சிட்டு வந்தோம் – புக்கின் விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமெயென்ற அவாவோடு ! (நிலையான செலவினங்கள் கொஞ்சம் கூடுதலைப் பகிரப்படும் போது விலை குறைவாய் நிர்ணயம் செய்தல் சாத்தியமல்லவா ?)ஆனால் தட்டுத் தடுமாறி 1500 பிரதிகளை விற்பதற்குள்ளாகவே சந்நியாசம் போக காவியும், கமண்டலமும் எங்கே மலிவாய்க் கிடைக்குமென்று தேடும் நிலை எழுந்து வந்தது ! பாக்கி 1000 பிரதிகளைத் தொடரும் புத்தக விழாக்களில்; ஆன்லைன் ஸ்டோரில் விற்றுக் கொள்ளலாமென்ற எனது நம்பிக்கைகளின் பின்னே இருந்தது அசட்டுத் தைரியம் தானன்றி – திடமாய் ஏதுமில்லை என்பதை சமீபத்தைய ‘ஸ்டாக் சரிபார்க்கும் படலம்‘ பறைசாற்றியது ! நம்பினால் நம்புங்கள் guys –
- வேய்ன் ஷெல்டன்
-லார்கோ
- கமான்சே
- சிக் பில்
-தோர்கல்
- மாடஸ்டி
ஆகியோரின் ஒவ்வொரு ஆல்பத்திலுமே குறைந்த பட்சம் 700+ பிரதிகள் கையிருப்பிலுள்ளன! ஒரு புக்கை அச்சிட்டு, உங்கள் கைகளில் ஒப்படைத்து, அதன் அலசல்களில் ஆழ்ந்த பிற்பாடு ‘தொபுக்‘கென காத்திருக்கும் அடுத்த பணிக்குள் பாய்வதே வாடிக்கை என்பதால் – இது போன்ற backend சிக்கல்களுக்கு நேரம் ஒதுக்க எனக்குத் தீரவில்லை! தவிர, யதார்த்தத்தை நேருக்கு நேராய்ப் பார்த்திடுவதிலுள்ள அச்சமுமே பெரியதொரு காரணமென்பேன்! “சாமீ… இவ்வளவு தேங்குகிறதா?” என்ற நிஜத்தை எதிர்நோக்கிடத் தயக்கமென்பதால் – ‘ஆங்…அடுத்த புக் ரெடியா ? அப்டிக்கா கவனத்த செலுத்து... கிளம்பு… கிளம்பு…‘ என்று சுனா பானாவைப் போல அடுத்த டாபிக்குக்குள் புகுந்திடுவதையே வழக்கமாக்கி வந்துள்ளேன்! ஆனால் – பல நாள்ப் பொதியை என்றேனும் ஒரு நாள் சலவை செய்தே தீர வேண்டுமல்லவா ? இந்தாண்டின் துவக்கம் முதலாகவே 2500 என்ற அந்த ப்ரிண்ட்ரன்னைக் கணிசமாகவே… ஆகக் கணிசமாகவே கம்மி செய்து விட்டோம். அத்தோடு நமது ஏஜெண்டுகளை அதிகப்படுத்தும் முயற்சிகள் லேசாய்க் கைகொடுக்க – நடப்பாண்டில் ஸ்டாக்கின் பழு அத்தனை பாடாவதியாக இல்லை தான் ! 😃
மாறாக – நமது costing தர்ம அடி வாங்கி வருகிறது ! ராயல்டி தொகைகள் ஒரு குறைந்தபட்ச உத்தரவாதத்தின் அடிப்படையிலானவைகளே எனும் போது, நாம் வெறும் 50 பிரதிகளை அச்சிட்டாலும் சரி, 2500 பிரதிகளை அச்சிட்டாலும் சரி – செலுத்த அவசியமாகிடப் போவது ஒரே மாதிரியான தொகையினையே ! அதே போல எகிறி வரும் நிர்வாகச் செலவுகளும் நமது சர்குலேஷனுக்குத் துளியும் சம்பந்தமிலா சமாச்சாரங்களே ! மாதம் 4 புக் டெஸ்பாட்சோ; ஒற்றை புக் டெஸ்பாட்சோ – சம்பளங்கள் அதுவே தான் ; வசூல் தொகைகள் பத்தாயிரமோ – ஐம்பதாயிரமோ நமது பிரதிநிதிகளின் பயணச் செலவுகளும் மாறிடப் போவதில்லை ! மொழிபெயர்ப்புகளுக்கும் ; தட்டச்சுகளுக்கும் ; டிசைனிங்குக்கும் ; பிராசஸிங்குக்கும் – நாம் தரவிருக்கும் ஊதியங்களுமே விற்பனை எண்ணிக்கைகளுக்குத் துளி கூடச் சம்பந்தமில்லாதவை ! So கையில் மிஞ்சும் ஸ்டாக்கைக் குறைக்கும் பொருட்டு நாம் செய்துள்ள ப்ரிண்ட்ரன் கத்திரிப்பின் புண்ணியத்தில் – இந்த நிலையான செலவினங்களை balance செய்திட வழி தெரியாது கிறுகிறுத்துப் போயிருக்கும் வேளையில் தான் இந்த டாலர் – யூரோ சம்மட்டி அடிகள் ! So இதுவே இந்த நொடியின் நிலவரம் !
இவற்றைக் கொஞ்சமேனும் சமன் செய்திட வழிகளென்னவென்று யோசிக்க அமர்ந்தால் – ‘அடேய் பேப்பயலே… விற்பனையைக் கூட்டினால் எல்லாமே சரியாகிடுமே?!‘ என்று மண்டை கூக்குரலிடுகிறது ! ஆக பிரதான – பிரதம இலக்கு சரிந்து கிடக்கும் அந்தப் ப்ரிண்ட்-ரன்னை முன்னளவிற்கு இல்லாது போனாலும் – தற்போதைய பாதாளங்களிலிருந்து கொஞ்சமாகவேணும் தூக்கி விட வேண்டியதே ! சென்னை போன்ற பெருநகரங்களில் கூட நமது மொத்த விற்பனை நம்பர் பரிதாபமானது என்பதால் – நம்மாட்களை ஊர் ஊராய்… தெருத் தெருவாய் சுற்ற ஏற்பாடு செய்துள்ளோம் ! So சிறுகச் சிறுகவாவது அதற்கொரு பலன் கிட்டுமென்ற நம்பிக்கை கொள்வோம் !
சமன் செய்யும் வழி # 2 – விலைகளை ஏற்றுவது ! இந்த டாலர் – யூரோ சலம்பல் இல்லாதிருந்தாலுமே 2019-க்கு விலைகளை ஏற்றுவதொரு கட்டாயமாக இருந்த நிலையில் – இந்த double whammy-ன் புண்ணியத்தில் விலைகளை எங்கே கொண்டு சென்று நிறுத்தி வைப்பதென்று கிஞ்சித்தும் புரியவில்லை! ஏற்கனவே இது பென்ஸ் கார் ரேஞ்சுக்கானதொரு பொழுதுபோக்காய் உருமாறி வரும் வேளையில் – மேற்கொண்டும் விலைகளை உசத்துவது தவிர்க்க இயலா நிர்ப்பந்தமேயானாலும் – எனக்கு அதன் பொருட்டு ஏகமாய் வயிற்றுக் கலக்கல் !
விலையேற்றம் நிச்சயம்....! அது குறைந்தபட்சமாக மாத்திரமே இருந்திட வேண்டுமென்பது லட்சியம்..... !
இந்த இரண்டுக்கும் மத்தியில் என் சொட்டைத் தலை உருளோ உருளென்று உருளப் போவதிலுமில்லை சம்சயம்..!
ஷப்பாாாா! ட்ரெண்டின் தாக்கமோ ?? ரணகளத்திலுமே கவிதை பொழியுது !!!
விலைகளை மட்டுமே ஏற்றிடாது – செலவினங்களைக் குறைக்கவும் சில சாத்தியங்களைப் பரிசீலிக்கத் தோன்றியது ! இவையெல்லாமே என்னுள் சடுகுடு ஆடிவரும் சிந்தனைகளின் துளிகளே தவிர்த்து – தீர்மானங்களல்ல ! So ‘போச்சு....தலையிலே கல்லை போட வழி பாத்துப்புட்டே...!! நான் தேசத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர்த்து இனி வேறு வழியேயில்லை‘ என்ற பொங்கல்களைத் தற்போதைக்கு அடுப்பில் ஏற்றிடத் தேவை நஹி என்பேன் ! பொறுமையோடு படித்து ; எனது நிலைப்பாட்டிலிருந்து சிந்திக்க முயன்றால் மகிழ்வேன் !!
ரோசனை # 1:
இயன்ற கலர் ஆல்பங்களில்… I repeat… இயன்ற கலர் ஆல்பங்களில் மட்டும் தற்போதைய பெரிய சைஸினைக் குறைத்து டெக்ஸ் சைசுக்கு மாற்றம் செய்ய முனைவது ! அதாவது ஏகப்பட்ட frame-கள்; நிறைய வசனங்கள் என்றிருக்கும் கதைகளை ; ஆல்பங்களை நோண்டிடாது – ட்ரெண்ட் போன்ற சற்றே விசாலமான சித்திர frame-கள் நிறைந்த கதைகளை மட்டும் டெக்ஸ் வில்லர் கதைகளின் சைஸுக்குக் கொணரலாமா ? Oh yes – சித்திரங்களே ஜீவநாடி ; புத்தக அளவினை சிறிதாக்கும் போது ஒரு மாற்று குறைவாய்த் தெரிந்திடக் கூடும் என்பதெல்லாம் புரிகிறது ! ஆனால் தாடி பற்றி எரியும் போது - நளினமாய் ; நாசூக்காய்த் தீயணைக்க நினைப்பது சிரமமே என்பது தான் நிலவரம் ! So சற்றே சிந்தனையை இதன் பக்கமாய் செலவிட நேரம் எடுத்துக் கொள்வோமா ? Thoughts on this please ?
ரோசனை # 2:
மேற்படி சிந்தனையே தான் ; இம்முறை டெக்ஸ் வில்லரின் b&w சாகஸங்களின் ஒரு பகுதியையாவது (சிங்கிள் ஆல்பங்கள் போல ஏதேனும் சிலவற்றுக்கு ) ‘நிலவொளியில் நரபலி‘ சைசுக்குக் கொண்டு சென்றாலென்ன என்ற தலைப்போடு ! Again – இதுவொரு விலை management-க்கான option தானே தவிர, உங்கள் மீது நான் திணிக்கத் தயாராகி விட்ட தீர்மானமல்ல ! இதன் சாதகங்கள் பற்றி நான் பிரஸ்தாபிக்கத் தேவை லேது ; maybe உங்கள் பார்வைகளில் அதன் பாதகத்தைப் பற்றி நீங்கள் புட்டுப் புட்டு வைக்கலாம் - பொறுமையோடு !
ரோசனை # 3:
கலர் !! எங்கேயேனும் கலருக்குக் கல்தா தந்து விட்டு black & white-ல் வண்டியோட்ட சாத்தியமாகின் கணிசமாய் செலவுகள் குறைந்திடக் கூடுமென்பது புரிகிறது ! ஆனால் கதைகளைப் புரட்டும் போது – எனக்குத் தெரிந்தமட்டிலும் வேய்ன் ஷெல்டனைத் தவிர்த்து பாக்கிக் கதைகள் சகலத்துக்குமே வண்ணமே உயிர் என்பது பிடரியில் சாத்துகிறது ! அதிலும் கார்டூன்களை கலரின்றிப் பார்ப்பது கொடுமையிலும் கொடுமையாக இருக்குமென்பதால் இந்த ரோசனையை தூக்கிப் பரணில் தான் வைக்கத் தோன்றுகிறது ! Maybe ஷெல்டனை மட்டுமாவது b&w-ல் பார்க்க முனைவோமா ? என்று யோசித்தால் – “அட… இது தான் மனுஷனின் கடைசி சாகஸம் தற்போதைக்கு! அதில் குறை சொல்ல ஒன்றை வைப்பானேன்?” என்று தோன்றுகிறது ! ஹ்ம்ம்ம்ம்!
ரோசனை # 4:
காகிதத் தரம்…! அடுத்து கைவைக்கக் கூடியது டெக்ஸ் வில்லர் & b&w கதைகளுக்கான வெள்ளைத் தாளின் தரத்தில் மட்டுமே ! ஆர்ட்பேப்பரில் கை வைப்பது சாத்தியமேயில்லாததொன்று என்பதால் அந்தத் திக்கில் யோசிப்பதாகக் கூட இல்லை ! ஆனால் டெக்ஸின் b&w ஆல்பங்களில் ; கிராபிக் நாவல்களில் ; மறுபதிப்புகளில் நாம் compromise செய்து கொள்ளத் தயாராக இருப்பின் – அங்கொரு சாத்தியமுண்டு – செலவைக் குறைத்திட ! Again பெரிதாய் உடன்பாடில்லை எனக்கு ; ஆனால் எதைத் தின்றால் பித்தம் தெளியுமென்ற குழப்பத்திலிருப்பவனுக்கு சாலையோர வெங்காயவடை கூட நோய் தீர்க்கும் அருமருந்தாய்த் தெரிவதில் வியப்பில்லை போலும் ! I know this isn't going to happen - ஆனால் இப்போதெல்லாம் நியூஸ்பிரிண்ட்டைப் பார்த்தாலே ஸ்னேஹமாய்ப் புன்னகைக்கத் தோன்றுகிறது !! Phew !!
ரோசனை # 5:
இது சற்றே practical ஆனதொரு சிந்தனை ! கையையும்; பையையும், பிடிக்காத மட்டிற்கு விலையைக் கூட்டி விட்டு, இதழ்களின் மொத்த எண்ணிக்கையைக் குறைப்பது ! So ஒட்டுமொத்த சந்தா பட்ஜெட்டில் தாக்கமிராது ; ஆனால் இதழ்களின் எண்ணிக்கையில் உதை விழாது போகாது ! இதனை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் உங்களின் பூரண புரிதல் இருந்தால் மட்டுமே வண்டி ஓடிடும் ! "போச்சு..எனக்குப் புடிச்ச ஹீரோவுக்கு ஸ்லாட் இல்லே ; ஹீரோயினுக்கு ஸ்லாட் இல்லே !! எடிட்டர் எனக்கெதிராய்ச் சதி செய்ய ISI கூட ; Mossad கூட கூட்டுச் சேர்த்துப்புட்டாண்டோய்ய் !!" என்று குரலெழுப்பும் பட்சத்தில் வண்டி இம்மி கூட நகர்ந்திராது! So இந்த ரோசனையின் செயலாக்கம் பூரணமாய் உங்கள் ஏகோபித்த சம்மதங்களிருக்கும் பட்சத்தில் மாத்திரமே !
ரோசனை # அரை டஜன்:
“அட… ஓவராய்த் தலையைப் பிய்த்து ஆகப் போவது என்ன? எதில் விலையேற்றமில்லை இன்றைக்கு - இத்தனை தடுமாற்றத்தை நீ தலைக்குள் ஏற்றி வைத்துத் திரிவதற்கு?” என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டு நியாயமான ஏற்றங்களை / மாற்றங்களைச் செயல்படுத்திடுவது ! வியாபாரியெனும் குல்லாவை மட்டுமே போட்டிடும் பட்சத்தில் இதுவே the way out என்பேன் ! ஆனால் “காமிக்ஸ்” என்பதெல்லாம் ஒரு சொகுசே தவிர்த்து – “அத்தியாவசியம்” அல்ல என்ற நிலையில்,இத்தகைய தடாலடிகளுக்கெல்லாம் பயந்து பயந்து வருது ! தம்மாத்துண்டாகவேணும் முட்டையிடும் வாத்தை, குண்டாச்சட்டிக்குள் கொதிக்கப் போட்ட கதையாகிடக் கூடாதே என்ற மிரட்சியும் கைகோர்க்கிறது ! எண்ட குருவாயூரப்பா!!
ரோசனை # 7:
"பொறுத்தது பொறுத்தாச்சு…! இன்னும் ஒரு வருஷம் பொறுத்துக்கோ ! பல்லைக் கடிச்சுக்குவியோ…பக்கத்து சீட்டிலிருப்பவரோட மூக்கைக் கடிச்சுக்குவியோ – அது தெரியாது! ஆனால் 2019-ன் பன்னிரெண்டு மாதங்களுக்கு, ஒரு லேசான விலையேற்றத்தோடு மட்டும் எப்படியேனும் தாக்குப் பிடித்துக் கொண்டு, விற்பனையை உசத்துவதில் ஜெயம் கண்டு விட்டால் – எல்லா அல்லல்களுமே கதிரவனைக் கண்ட பனித்துளியாகக் கரைந்திடுமே !!" என்றும் தலைக்குள் ஒரு கதறல் கேட்கிறது ! ஆனால் டாலர் – யூரோ – ரூபாய் மதிப்பு சார்ந்ததொரு forecast-ஐப் படித்துப் பார்த்த போது கண்முழி பிதுங்காத குறை தான் ! அடுத்தாண்டு இதே சமயம் யூரோ 93 ரூபாயைத் தொட்டிருக்குமென்றும் ; 1 அமெரிக்க டாலர் 81 ரூபாயைத் தொட்டிருக்குமென்றும் கண்ணில் தென்படும் சகல ரிப்போர்ட்களும் கதைக்கின்றன ! 😭
இனி ‘சிவனே‘ என்று ஈரோட்காரைக் கதையெழுதச் சொல்லி ; கோவைக் கவிஞரை ஸ்க்ரிப்ட் எழுதச் சொல்லி ; கணேஷ்குமாரை படம் போடச் சொல்லிடணும் போலும் ! செம ரொமான்ஸ் கதைகளாய் களமிறக்கிட ஒரு வாய்ப்பானது போலவும் இருக்குமல்லவா ? கவிஞரே அதற்கான விமர்சனங்களையும் ராக்கெட் ஸ்பீடில் எழுதி விடுவாரெனும் போது அங்கும் வேலை சுலபமாகிப் போகும் !! சந்தா R என்று ஒன்றை அறிவித்து விடலாம் !! Any takers ?
ரோசனைகள் ஒருபுறமிருக்க – ‘கெக்கேபிக்கே‘ என்ற சிரிப்பும் இன்னொரு பக்கம் எனக்கு ! இங்கே உள்ள கதைகளை / தொடர்களை தொடர்வதிலேயே மனுஷனுக்கு டப்பா டான்ஸ் ஆடிவரும் நிலையில் – இரு நாட்களுக்கு முன்பாய் ஒரு மின்னஞ்சல் ! “நீங்கள் போன வருடம் போட்டிருந்த மெயிலைப் பரிசீலனை செய்தோம் ! நீங்கள் கோரியுள்ள “அந்தக் கதைக்கான” உரிமைகளைத் தரச் சம்மதம் ! ராயல்டி மட்டும் நீங்கள் முன்மொழிந்ததை விட 'இத்தனை' சதவிகிதம் ஜாஸ்தி ! ஓ.கே.யென்றால் கான்டிராக்ட் போட்டுடலாம் !” என்றிருந்தது ! போன ஏப்ரலில் நான் கோரியிருந்ததொரு கிராபிக் நாவலுக்கான உரிமைகள் குறித்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழிந்த நிலையில் அவர்களது சம்மதம் கிட்டியுள்ளது ! நமக்குத் தான் பொழுது போகாவிட்டால் கட்டை விரலை மட்டுமில்லாது, காலணியையுமே வாய்க்குள் திணித்துக் கொள்வதெல்லாம் கைவந்த கலையாச்சே – விட்டு வைப்போமா ? “சரிங்க சார்…we agree ! கான்டிராக்ட் அனுப்புங்க… ப்ளீஸ்!” என்று மின்னஞ்சலில் பதிலைத் தட்டி விட்டு கண்ணாடியில் என்னை நானே பார்த்துக் கொண்ட போது சிப்புச் சிப்பா வந்தது ! “இடுக்கண் வருங்கால் நகுக” என்று பள்ளியில் படித்து விட்டு, கட்டுரைப் போட்டிகளிலும், பேச்சுப் போட்டிகளிலும் அதை பந்தாவாய் அள்ளிவிட்ட பிற்பாடு, வாழ்க்கையிலும் அதைச் செயல்படுத்தாது போனால் எப்பூடி? So நகுகிட்டே இருக்கேன் ! And அந்த கி.நா. 2019-க்கு உண்டு என்பதும் கொசுறு சேதி !!
But honestly – என்னுள் ஏதோவொரு நம்பிக்கையுமே இந்தத் தருணத்தில் ததும்புகிறது guys! நிச்சயமாய் இந்த இக்கட்டுகளையும் உங்கள் ஒத்தாசைகளோடு தாண்டிடுவோம் ; இந்த இண்டிலிருந்து முழுசாய் வெளிவரவும் ஆண்டவன் வழிகாட்டாது விட மாட்டாரென்று gut feeling எனக்கு ! அதற்குக் காரணமில்லாதில்லை !!
இப்போதெல்லாம் மாதத்தின் துவக்கமாகிவிட்டால், நமது சொற்பமான ஏஜெண்ட்கள் "புக் அனுப்பிடறீங்களா ? ஜம்போ உண்டா இந்த மாசம் ? டெக்ஸ் இருக்காரா ? கார்ட்டூன் என்ன புக் ?" என்ற ரீதியிலான கேள்விகளோடு நமக்கு சந்தோஷமூட்டி வருகிறார்கள் ! கடனுக்கோ - ரொக்கத்துக்கோ - மாதத் துவக்கத்தில் தவறாது ஆர்டர் தந்து விடுகிறார்கள் பழக்கப்பட்டுவிட்டுள்ள முகவர்கள் !! அதிலும் ஏதேனும் இதழ்கள் இங்கோ FB ; வாட்சப் க்ரூப்களிலோ ஆர்வமாய் அலசப்படும் பட்சத்தில் - அதன் தாக்கம் விற்பனையாளர்கள் வரை எட்டி வருவது கண்கூடாய்த் தெரிகிறது ! கைகளில் தேங்காது அந்த இதழ்களும் விற்பனையாகிடும் போது விற்பனையாளர்களும் மனம் குளிர்வதைக் காண முடிகிறது ! So உங்களின் மௌனங்களின் கலைவானது - உங்களின் அலசல்களானது நமக்கு எத்தனை வீரியமானதொரு ஒத்தாசையினைச் செய்ய வல்லது என்பதை, தாண்டிப் போகும் ஒவ்வொரு தினமும் வலியுறுத்தத் தவறுவதில்லை !! ஒரு பாசிட்டிவ் அதிர்வினை நீங்கள் ஒவ்வொருவரும் உருவாக்கிடும் போது இங்கு மாத்திரமன்றி, வேறெங்கெல்லாமோ அவை தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன guys !! "இது வெறும் ஜால்ரா !! முகஸ்துதிப் படலம்" என்று இன்னமும் கருத்து கொண்டிருப்போரிடம் - good luck to you folks !! என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது ! And இந்த நொடியில் ஒரு சிறு பெருமூச்சுமே !! மௌனங்களைக் களைந்து குரல்களை இன்னமும் அதிகமாக்கிட மௌனப் பார்வையாளர்களுமே மனது வைப்பின் ; எண்ணிக்கையில் நாமெல்லாம் இன்னும் மிகுந்து, ஆர்ப்பரிப்பின் - அதன் சந்தோஷ விளைவுகளை நினைத்துத் தான் பாருங்களேன் !! Phew !!
ஒவ்வொன்றிலும் 500 பிரதிகள் கூடுதலாய் விற்பனை செய்திட 8 கோடி ஜனமுள்ள இந்த மாநிலத்தில் வழியில்லாதா போய்விடப் போகிறது ? அந்த வழி மட்டும் நமக்குப் புலப்பட்டு விட்டால் நமது தானைத் தலைவர் ஸ்டைலில் ‘அட்ரா சக்கை… அட்ரா சக்கை… அட்ரா சக்கை!” என்று துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட மாட்டோமா ? இதோ, இப்போதே கூட, தலைக்குள்ளிருந்த பாரத்தை ஒளிவு மறைவின்றி உங்களிடம் இறக்கி வைத்த பிற்பாடு மனசுக்குள் ஒரு இலகுத்தன்மை விரவி நிற்கிறது!
‘இத்தனை பிலாக்கனமெல்லாம் நான் கேட்டேனா ?‘ என்று சிலரும்; ‘சத்தமில்லாமல் விலைகளைக் கூட்டிப்பிட்டு, சன்னமாய் ஒரு அறிவிப்பைப் போட்டுக்கிட்டு நடையைக் கட்ட வேண்டியது தானே ? அதைவிட்டுப்புட்டு இம்புட்டு விளக்கம்லாம் தேவையா ?!‘ என்று பலரும் நினைத்திடலாம் என்பது புரியாதில்லை ! அதே போல ‘நீ கிளிப்பிள்ளையாட்டம் ஒப்பிச்சிட்டதுக்காக நாங்க உன்னை மத்தளம் கொட்டாம விட்டுடுவோமாக்கும் ? விளக்கம் சொன்னாலும் விளக்குமாறு உனக்குத்தாண்டியோவ் !‘ என்ற மைண்ட் வாய்ஸ்களும் coming in loud & clear ! ஆனால் இது எனக்கே எனக்கானதொரு ‘பாரமிறக்கும் படலம்‘ என்று எடுத்துக் கொள்ளுங்களேன் guys ?! ரைட்டோ-தப்போ, மனதில் பட்டதைப் பகிர்ந்துவிட்ட ஒரு இக்ளியூண்டு திருப்தியோடு – அந்த 2019 அட்டவணையை ஆயிரத்துப் பதினெட்டாவது தபா திருத்தியமைக்கப் புறப்படுகிறேன் ! And rest assured - அந்த அட்டவணையில் இம்மி கூட சுவை குன்றியிராது !! That's a promise !!
Getting back to normal - இதோ இம்மாத ஆக்ஷன் சந்தாவின் ஆல்பம் - ரிப்போர்ட்டர் ஜானியின் ஒரு அக்மார்க் நூடுல்ஸ் சாகசத்தோடு !! இப்போதெல்லாம் ஜானியின் கதைகளை எடிட் செய்யும் போது ரொம்ப சிண்டைப் பிய்த்துக் கொள்வது கிடையாது நான் ! பிய்த்துக் கொள்ள அங்கே ஜாஸ்தியில்லை என்பது ஒருபுறமிருக்க - அந்தக் கடைசி 2 பக்கங்களில் ஒட்டுமொத்தமாய் சகலத்தையும் முடிச்சவிழ்க்கும் பாணி மாறிடவே போவதில்லை எனும் போது - வழி நெடுக _ "ஆங்..இவன் யாரு ? அவன் ஏன் குறு குறுன்னு பாக்குறான் ?...இந்தப் புள்ளை ஏன் இங்கே வந்து வில்லங்கத்தை வாங்குது ? போலீஸ்காரங்களே கதைக்குள்ளாற நுழைய மாட்டாங்களா ?" போன்ற லாஜிக்கான கேள்விகளை எழுப்பிக் கொள்வதில்லை ! பொட்டென்று பொணம் ஒவ்வொன்றாய் விழத் துவங்கிடும் போது அவற்றுக்கொரு நம்பரைக் கொடுத்து குறிப்பு மட்டும் எடுத்துக் கொள்வேன் - கிளைமாக்சில் ஒத்துப் பார்த்திடும் பொருட்டு ! So அவ்விதம் வெகு சுலபமாய் தாண்டிட முடிந்த ஆல்பம் இம்மாதம் உங்களை சந்திக்கவுள்ளது !! As always - மிரட்டும் சித்திரங்கள் + கலக்கும் கலரிங் !! அச்சும் இம்முறை அழகாய் அமைந்திருக்க - பக்கத்துக்குப் பக்கம் வர்ணஜாலம் மெய்ம்மறக்கச் செய்கிறது !! ஒரிஜினல் அட்டைப்படமே - நமது மெருகூட்டலோடும், ஓவியர் சிகாமணியின் எழுத்துருவோடும் !!
இம்மாதப் பணிகளில் எஞ்சியிருப்பது கேரட் மீசைக்காரரின் கார்ட்டூன் மட்டுமே என்பதால் - இந்த ஞாயிறு எனக்கு அவரே துணை !! அவரையும் சடுதியில் கிளப்பி விட்டால் - 'தல' பிறந்தநாளைக் கொண்டாட தடை நஹி !! Bye guys! Have an awesome weekend ! Will see you around!
P.S : கீழேயுள்ள நமது விளம்பரத்தை - உங்களது நட்பு வட்டங்களுக்கு மத்தியில் வாட்சப்பில் பகிர்ந்திட இயலுகிறதாவென்று பார்த்திடுங்களேன் - ப்ளீஸ் ? (ஐடியா உபயம் : சீனியர் எடிட்டர்)
P.S : கீழேயுள்ள நமது விளம்பரத்தை - உங்களது நட்பு வட்டங்களுக்கு மத்தியில் வாட்சப்பில் பகிர்ந்திட இயலுகிறதாவென்று பார்த்திடுங்களேன் - ப்ளீஸ் ? (ஐடியா உபயம் : சீனியர் எடிட்டர்)
First
ReplyDeleteய்யாஹூ...!
ReplyDeleteபடித்துவிட்டு வருகிறேன்
ReplyDeleteகாமிக்ஸ் நண்பர்களுக்கு மாலை வணக்கங்கள்..
Delete5
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHi i am 6 th good evening
ReplyDeleteMy opinion is convert it all the books in to tex size except some special books don't touch colour option...
ReplyDeleteAnd also club two stories in a single issue and double albums ...it will reduce the costing don't touch the numbers sir
ReplyDeleteமாலை வணக்கங்கள் சார்!
ReplyDeleteஹாய் ஃப்ரெண்ட்ஸ்!
ரோசனை (என்னுது) :
ReplyDeleteபெரியவங்களா பாத்து என்ன செஞ்சாலும் அடியேனுக்கு சம்மதமே ..!!
ரோசனை 1 மற்றும் 7 கலந்து கட்டி - சில கதைகளை டெக்ஸ் கதை சைசுக்கு குறைத்து, மிதமான விலையேற்றத்தோடு, எண்ணிக்கையையை குறைக்காமல், 10 டெக்ஸ், + கலர் மினி டெக்ஸோட களம் காணலாமா?
ReplyDeleteவழக்கம் போல கம்பெனிக்கு எது கட்டுபடியாகுதோ்அதை பண்ணுங்க என்கிற டிஸ்க்ளெய்மரையும் போட்டுக்கலாம்.
This comment has been removed by the author.
Delete// சில கதைகளை டெக்ஸ் கதை சைசுக்கு குறைத்து, மிதமான விலையேற்றத்தோடு, எண்ணிக்கையையை குறைக்காமல், 10 டெக்ஸ், + கலர் மினி டெக்ஸோட களம் காணலாமா? //
Delete+1
Dear Editor,
ReplyDeleteOur latest and greatest re-entry, was special because of these great parameters - Full Color, Original size (almost), Genre Variety, and Paper Quality. I wouldn't like to see any of these things taking a beating, and taking us back to past, just for keeping the price in control. Please don't make any compromises on these factors.
Instead, I would suggest, the following (just my 5 cents/points):
1. Monthly 2 - 3 issues, (with Jumbo alternating every month, Tex being regular, and Cartoon and Action/Fantasy taking turns every month as second issue)
2. Moderately, increase Price of individual issues - Our regular readers and collectors, form the core and they wouldn't mind the price increase.
3. Reducing print run - make the comics dear, which would ensure those who need them - would buy them for sure in few months from print, thus reducing backorder stocks.
4. Special issues only via Pre-order. We are already following this, so this needs to stay.
5. Only caveat I see on this plan, is that, this reduced print run and social editions are going to make it comics dear in Black market... But that is something we can't prevent, unless, I hope you have a deal with copyright owners, to have small reprints, for the high selling, in demand titles, every year. Cinebook follows this time and again.
+1 .. on the size and price.
DeleteTaking future into consideration, number of books in regular subscriptions also needs a trim down.
Rest is your decision really - nothing to say !!
+2 எல்லாவற்றிற்கும்
Delete// Full Color, Original size (almost), Genre Variety, and Paper Quality. I wouldn't like to see any of these things taking a beating, and taking us back to past, just for keeping the price in control //
Delete+1
+100
Deleteவிலை குறித்த முடிவுகளை நீங்களே எடுங்கள் சார். எப்போதும் நீங்களே எடுக்கும்போதுதான் சரியாக வருகிறது. எமக்கு மாதாமாதம் இடைவெளியில்லாமல் புத்தகம் வந்தாலே போதுமானது. டெக்ஸ் சைஸ் கதைகளை வரவேற்கிறேன். ரிப்போர்ட்டர் ஜானி சூப்பர் சார்.
ReplyDeleteHi..
ReplyDeleteஎனக்கு ரோசனை 5& அரை டஜன் ஓகே.. முட்டையை உடைக்காமல் ஆம்லேட் போடும் வித்தை இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லையே சார்..
ReplyDeleteஎண்ணிக்கையை குறைக்க வேணாமே ரம்மிணா...
Deleteஎண்ணிக்கை ஆல்ரெடி வருடம் 36தானே. அதை எங்கே குறைக்க!
Deleteகீப் இன் 36சார் 3*12=36ஸ்ட்ரிக்ட்டாக.
விஜயன் சார் என்றும் எங்கள் ஆதரவு
ReplyDeleteஉங்களுக்கே.விலை ஏற்றம் தவிர்க்க
இயலாததுதான்.தற்போது உள்ள தரம்
குறையாமல் மாதம் 4 *12 +SPL புத்தகங்களை சிறிது விலைஏற்றத்துடன்
வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தரம் அதுவே என்றும் நிரந்தரம்.
உடல் மண்ணுக்கு உயிர் லயன் காமிக்ஸ்க்கு
உங்கள் அன்புக்கு நாங்கள் என்றும்
உறுதுணையாக இருப்போம்.
மாதச் சந்தாவுக்கான புத்தக மொத்த எண்ணிக்கையை 36 ஆக குறைத்து சிறப்பு வெளியீடுகளை குறைந்த பிரிண்ட் ரன்களோடு தனி சந்தாவுக்கு கொண்டு போவது தான் சிறப்பு..
ReplyDeleteமாத சந்தாவும் விலை குறைவாக கிடைக்கும்.. ஆனால் தனிசந்தாவுக்கான புத்தகங்கள் கள்ள மார்கெட்டை வளர்க்கத்தான் செய்யும்..
அப்புறம் வழக்கம் போல கம்பெனிக்கு எது கட்டுபடியாகுதோ அதை பண்ணுங்க..
//அப்புறம் வழக்கம் போல கம்பெனிக்கு எது கட்டுபடியாகுதோ அதை பண்ணுங்க..///+100
Deleteவிஜயன் சார், இதழ்களின் சைஸ், காகிததரம் மற்றும் வண்ணத்தில் உள்ள கதைகளை கருப்பு வெள்ளையில் தருவது கஷடப்பட்டு நமது இதழ்கள் international standard and qualityயைத் தொட்டுவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு செல்வதில் எனக்கு உடன்பாடில்லை.
ReplyDeleteஅதேநேரம் A4 sizeல் வரும் இதழ்களின் அளவை குறைப்பதில் உடன்பாடு இல்லை. கார்சனின் கடந்த காலம் கண்ணில் வந்து பயமுறுத்துகிறது :-)
அதேநேரம் புத்தக அளவை குறைத்து அதே பக்கங்களின் எண்ணிக்கையில் கொடுக்கும் போது வசனங்களின் font size சிறியதாக மாறும். சித்திரங்களை முழுமையாக ரசிக்க முடியாது.
இந்த ஆண்டே புத்தகங்களின் எண்ணிக்கை குறைவு. இதில் விலையை கட்டுப்படுத்த அடுத்த வருடம் புத்தகங்களின் எண்ணிக்கையை குறைப்பதில் எனக்கு துளி கூட விருப்பம் இல்லை. சாரி.
கண்டிப்பாக இது போன்று ஏதாவது செய்துதான் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் ஏன்றால்:-
கார்டூன், தோர்கல், ட்ரெண்ட், மற்றும் ஷெல்டன், ஷெர்லாக் போன்ற வண்ணத்தில் ரசிக்க உகந்த இதழ்களை மட்டும் வண்ணத்தில் கொடுக்கலாம்.
என்னைப் பொறுத்தவரை விலையை ஏற்றுவதே சரியான முடிவு. வீட்டு வாடகையில் இருந்து சாப்பிடும் உணவு பொருட்கள் வரை வருடம்தோறும் விலையேற்றம் காணும் நாளில் நாம் கொஞ்சம் விலையை ஏற்றலாம். அவ்வளவு ஏன் சார் எல்லா பத்திரிகைகளும் கூட விலையை வருடம் தோறும் ஏற்றுகிறார்கள்.
காமிக்ஸ் வாசகனின் பார்வையில் இருந்து விலையை கட்டுக்குள் வைக்க முயற்சிக்கும் உங்களை நாங்கள் புரிந்து கொண்டோம். எனவே நீங்கள் தாரளமாக விலை ஏற்றுங்கள். எங்கள் ஆதரவு உண்டு. உங்களுடன் எப்போதும் பயணிப்போம்.
விலை ஏற்றம் காலத்தின் கட்டாயம்.
Delete// விலை ஏற்றம் காலத்தின் கட்டாயம்.//
DeleteWell said.
Don't Worry. We Agree your price increase
Delete+12345678987654321
Delete// ரோசனை # 5: கையையும்; பையையும், பிடிக்காத மட்டிற்கு விலையைக் கூட்டி விட்டு, இதழ்களின் மொத்த எண்ணிக்கையைக் குறைப்பது ! So ஒட்டுமொத்த சந்தா பட்ஜெட்டில் தாக்கமிராது //
ReplyDelete+1 Seems reasonable.
+ 1, Agreed. These are not times for sentiments.
Deleteஆல்ரெடி மாசம் 3தான் இருக்க, அதிலும் குறைந்தா என்ன பண்ண R & R jis.
Deleteமாசம் 2னா, ஒரே அடியில் 4ஆண்டு பின்னாடி போயிடுவோம்.
Tex: Ipdi paarthal puriyalaam ..
DeleteNormal track : 2 * 12 = 24
GN Track: 6 * 1 = 6
Jumbo: 6 * 1 = 6
Total 36 and even with reduced print run and increased price there will be 36 books for all. Dollar ini kurayap povathillai enpathu nitharsanam !!
இது பேச்சு! ஐ ஆல்சோ அக்ரீட் ஜி.
Delete///
DeleteNormal track : 2 * 12 = 24
GN Track: 6 * 1 = 6
Jumbo: 6 * 1 = 6
///
+8888
+101
Deleteவிஜயன் சார்,
ReplyDeleteகண்டிப்பாக இது போன்று ஏதாவது செய்துதான் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் ஏன்றால்
2. நமது மறு வரவிற்கு முன்னால் வந்த கதைகளை மட்டும் அதே சைஸ் மற்றும் அதே அளவில் (கார்டூன் கதைகள் தவிர) வெளியிடலாம்.
இது கூட நல்லாருக்கு 🔟 ரூபாய் புக் சைஸ்.
DeleteOK PROCEED
ReplyDelete*குறைந்த விலையேற்றம்.
ReplyDelete*3x12=36.
*குளோஸ் த ரீபிரிண்ட் செக்சன். டெக்ஸையும் சேர்த்தே, சர்வைவல் தான் முக்கியம்.
*சந்தா Action, Block&white, Cartoon, Graphic novels.
*கோடைமலர், ஆண்டுமலர்,தீபாவளி மலர்& மைல்கல் மலர்கள்-தனி முன்பதிவு பேக்கிங்கில்.
*மெர்ஜ் ஜம்போ வித் சந்தா;
ஸ்பெசல் இதழ்களின் இடத்தில்!
*கலர், பேப்பர், சைஸ் போன்ற உயிர்நாடிகளில் கைவைக்கும் எண்ணமே வேணாம் சார்.
*பொடி சைஸ்லாம் படிக்க முடியல, கண்ணு டிம் ஆகுது. எங்களுக்கும் வயசாகிறது. (எவ்வளவு நாள்தான் யுத்துனு சீன் போட முடியும்.)
*கடைசியாக நீங்கள் எது செய்தாலும் சம்மதம்.
Delete*கடைசியாக நீங்கள் எது செய்தாலும் சம்மதம்.
ஆமாம்.
எ. எ. க
// *கலர், பேப்பர், சைஸ் போன்ற உயிர்நாடிகளில் கைவைக்கும் எண்ணமே வேணாம் சார்.
Delete//
+1
உங்களுடைய யோசனைகளில் இதழ்களின் எண்ணிக்கையை குறைப்பது என்பது சரியாக படுகிறது. உங்கள் எண்ணம் என்னவோ அதன்படி செய்யுங்கள். மாறிவரும் உலக பொருளாதார நிலைமைகள் கண் கூடாக தெரிவதால் உங்கள் நிலைமையை புரிந்து கொள்ள கடினமாக இல்லை. வாசகர்கள் துணையோடு மீண்டு வாருங்கள்..
ReplyDeleteமாதம் 3 குறைய வேண்டாமே சார்
ReplyDeleteIo41
ReplyDeleteஇரவு வணக்கம்.
ReplyDeleteடெக்ஸ் சைஸ்
ReplyDeleteநீயுஸ் பிரிண்ட் பேப்பர்ஸ்
ஸ்பெஷல் மட்டும் கலர் தேவை பட்டால்.
நோ ரிப்ரிண்ட்ஸ்.
விலை ஏற்றம் வேண்டாம் சார்.
ஜம்போ டெக்ஸ் சந்தா B டெக்ஸ் ஒன்றாக்கி விடலாம்.இங்கே டெக்ஸ் தவிர ஏதும் வேண்டாம்.
கார்டூன் நோ கமெண்ட்ஸ்.
Suggests digital Comics only color edition.
மொபைலில் படித்து கொள்கிற மாதிரி.
ரோசனை # 4:
ReplyDeleteகாகிதத் தரம்…! அடுத்து கைவைக்கக் கூடியது டெக்ஸ் வில்லர் & b&w கதைகளுக்கான வெள்ளைத் தாளின் தரத்தில் மட்டுமே ! ஆர்ட்பேப்பரில் கை வைப்பது சாத்தியமேயில்லாததொன்று என்பதால் அந்தத் திக்கில் யோசிப்பதாகக் கூட இல்லை ! ஆனால் டெக்ஸின் b&w ஆல்பங்களில் ; கிராபிக் நாவல்களில் ; மறுபதிப்புகளில் நாம் compromise செய்து கொள்ளத் தயாராக இருப்பின் – அங்கொரு சாத்தியமுண்டு – செலவைக் குறைத்திட ! Again பெரிதாய் உடன்பாடில்லை எனக்கு ; ஆனால் எதைத் தின்றால் பித்தம் தெளியுமென்ற குழப்பத்திலிருப்பவனுக்கு சாலையோர வெங்காயவடை கூட நோய் தீர்க்கும் அருமருந்தாய்த் தெரிவதில் வியப்பில்லை போலும் ! I know this isn't going to happen - ஆனால் இப்போதெல்லாம் நியூஸ்பிரிண்ட்டைப் பார்த்தாலே ஸ்னேஹமாய்ப் புன்னகைக்கத் தோன்றுகிறது !! Phew !!
+1
ஆனால் டெக்ஸ் சைசில் கை வைக்க வேண்டாம் கபர்தார் ஆமாம் சொல்லிபுட்டேன்.
பொடி சைஸ்லாம் படிக்க முடியல, கண்ணு டிம் ஆகுது. எங்களுக்கும் வயசாகிறது. (எவ்வளவு நாள்தான் யுத்துனு சீன் போட முடியும்.)
ReplyDeleteஆமாம் வலிக்காத மாதிரியே எவ்வளவு நாள் நடிக்கிரது.
நீங்க ஆம்லேட் போடுவீங்களோ ஆஃபாயில் போடுவிங்களோ எங்களுக்கு மாசம் 3 புக் வந்தேயாகனும். அதுல ஒரு புக் புஷ்டியா இருந்தேயாகனும். ஆங்....
ReplyDeleteஆம்லேட்-ஆஃபாயில் தீய்ந்து (கருப்பு வெள்ளை) போய் வந்தாலும் சரி, கலர்ஃபுல்லா வந்தாலும் சரி எங்களுக்கு மாதம் தவறாமல் புத்தகம் வந்தேயாகனும், ஆமா...
47வது
ReplyDeleteGood morning. Dear sir kindly do not reduce the number of books and quality.
ReplyDeleteSir, Even Tamil novels and Magazines also increased the prices in the last 3 months. We will understand the difficulties. Pls go ahead with price increases sir.
ReplyDelete+1
Deleteசார் இதுவரை வந்ததிலே ஜானி அட்டைகளில் இதான் டாப் ; தூள்.அதப்போல கறுப்பு மரணத்தை , சிவப்பு இரத்தத்தால் சொல்ல வந்த எழுத்துருவும் டாப் ! சீனியரின் விளம்பரமும் அருமை $
ReplyDelete5 வது யோசனை சரியாகப்பட்டாலும் இதழ்கள் குறைந்துபோவதை நண்பர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ?
ReplyDeleteஇன்றைய காலகட்டத்தில் விலை ஏற்றம் தவிற்கமுடியா ஒன்று என்கிற யதார்த்த நிலையில்,
காமிக்ஸும் விதிவிலக்கல்ல..
எது எப்படியாயினும் நான் உங்களோடு.
// இன்றைய காலகட்டத்தில் விலை ஏற்றம் தவிற்கமுடியா ஒன்று என்கிற யதார்த்த நிலையில்,
Deleteகாமிக்ஸும் விதிவிலக்கல்ல..
எது எப்படியாயினும் நான் உங்களோடு.//
+1
சார் தயவு செய்து மாதம் நான்கை குறைக்க வேணாமே !
ReplyDeleteஷெல்டனின் கடேசி கதய வண்ணமிழக்க செய்து விடாதீர்கள்
டெக்ஸ் மெகா சைசுல கேட்டா, சிறிய சைசு என்பதில் என்ன நியாயம் !
இதே சைசுல பிற கதைகளும் வரட்டும்
தரமான தாள்களே கருத்தாலும், வெளுத்தாலுமே!
பிரிண்ட் ரன்னை குறையுங்கள், விலையை தயங்காமல் அதிகரியுங்கள் .உங்க நியாய விலை எண்ணத்தால் ராயலுடி அதிகமான கதைகள் எங்களுக்கு கிடைக்காமல் போவதை இனியாவது உணருங்கள், அந்த ஆஸ்ட்ரிக்ச அழைத்து வாருங்கள்! இப்ப ராயல்டிய சிறிது அதிகபடுத்த கேட்ட கதைய அடுத்த வருட அட்டவணைல இணையுங்கள் .
வேண்டாம் வேண்டாம் விலை குறைப்பு!
வேணும் வேணும் தரமான கதைகள் தரமாய்!
// சார் தயவு செய்து மாதம் நான்கை குறைக்க வேணாமே ! //
Delete// பிரிண்ட் ரன்னை குறையுங்கள், விலையை தயங்காமல் அதிகரியுங்கள் //
+1
/*வேண்டாம் வேண்டாம் விலை குறைப்பு!
Deleteவேணும் வேணும் தரமான கதைகள் தரமாய்*/
தங்களுக்கு தெரியாத ரோசனை இல்லை எது தேவையோ அதை அமல்படுத்துங்கள் யுவர் ஆனர்! எப்போதும் நாங்கள் உங்களுடன் இருப்போம்.
ReplyDeleteஇனி ‘சிவனே‘ என்று ஈரோட்காரைக் கதையெழுதச் சொல்லி ; கோவைக் கவிஞரை ஸ்க்ரிப்ட் எழுதச் சொல்லி ; கணேஷ்குமாரை படம் போடச் சொல்லிடணும் போலும் ! செம ரொமான்ஸ் கதைகளாய் களமிறக்கிட ஒரு வாய்ப்பானது போலவும் இருக்குமல்லவா ? கவிஞரே அதற்கான \\\
ReplyDeleteஇதை காமெடியாக நினைத்து சொன்னிர்கள் என்று புரிகிறது.
ஆனால் உண்மையாலுமே ஒரு கதையை எழுதி உள்ளேன். அதற்க்கு நன்கு படம் வரையும்(realistic ஓவியம் வரைவது எனக்கு அவ்வளவு வராது) என் நண்பணின் உதவியை நாடி உள்ளேன்.
இரண்டு வருடத்தில் முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.
சித்திரமும் கதையும் சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும் என்பதில் நானும் என் நண்பனும் உறுதியாக உள்ளோம்.
இறுதி முடிவு ஆசிரியர் கையில்.
👏👏👏
Deleteஅப்ப டைகர் தயார்
Deleteஅருமை அருமை
Deleteபுத்தங்களின் எண்ணிக்கையோ Size யோ குறைக்காமல் கலரையும் மாற்றாமல் சற்று விலையை ஏற்றி வெளியிடுங்கள் சார்...
ReplyDeleteகம்பெனிக்கு என்ன கட்டுபடியாகுதோ அதற்கு என் முழுசம்மதம் உண்டு
ReplyDeleteசார்,
ReplyDeleteதங்களுக்கு நியாயமாக படும் விலையை ஏற்றி புதங்கங்களை வெளியிடுங்கள். மாதம் நான்கு புத்தகம் கண்டிப்பாக வர வேண்டும்.
நான்கு புதங்கங்களை சேர்த்து ஒரே குண்டு புக்காக வெளியிட்டாலும் சரி.
+10181828383
Delete2019 ல் மட்டும்
ReplyDelete2*12 = 24 + ஸ்பெசல்ஸ் 6 ம் சேர்த்து = 30
இந்த எண்ணிக்கை சரியாக இருக்கும் என்பது சரியாக படுகிறது
இவ்வாறு புத்தகங்களை போட்டு அடுத்த வருடம் சிறிது விலை ஏற்றி கொள்ளலாம் எடி சார்
மற்றபடி
கனம் கோர்ட்டார் எடி அவர்களுக்கு தெரியாத தீர்ப்பென்று எதுவுமில்லை தங்களுக்கு எந்த தீர்ப்பு சரி என்று படுகிறதோ அதை செயல் படுத்துங்கள் 😊😊
India rupaiyin mathippu kuraithu ponathu patri paditha pothu ninaivukku vantha mudhal visayam namma comics thaan
ReplyDeleteThaangal enna mudivu seithaalum enakku OK thaan aasiriyare
விஜயன் சார், மாதம் நான்கு புத்தகங்கள் கண்டிப்பாக வேண்டும். இதனை எந்த காரணம் கொண்டும் குறைப்பது நாம் நமது மறுவரவுக்கு முந்தைய நாட்களில் பயணிக்கும் உணர்வைத் தருகிறது.
ReplyDeleteஅடுத்த வருடமும் இதே போல் டாலர் மற்றும் பேப்பர் விலை அதிகமானால் 2020 வருடத்திலும் புத்தக எண்ணிக்கையை குறைப்பீர்களா? இல்லை அதற்கு அடுத்த வருடமும் இதே நிலை என்றால் இதே போல விலையேற்றத்தை கட்டுப்படுத்த புத்தகங்களின் எண்ணிக்கையை குறைப்பீர்களா? புத்தகங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது சரியான தீர்வு இல்லை.
புத்தகங்கள் எண்ணிக்கையை குறைக்கும் யோசனைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை சிறிதளவு புத்தகங்களின் விலையை கூட்டுவதே சரியான தீர்வு.
விஜயன் சார், இந்த விஷயத்தில் மட்டுமாவது வியாபாரி என்ற குல்லாவை அணிந்து கொண்டு தயங்காமல் புத்தகத்தின் விலையை சிறிதளவாவது கூட்டுங்கள். அதே சமயம் புத்தகங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டாம். இப்போது தான் புதிய கதைக்களங்களை தரிசிக்கிறோம்.
ReplyDelete+ல
DeleteSemma parani ji. Valid point
DeleteEdi sir,
ReplyDeletenormal Rs.75/ விலையில் வரும் இதழ்களின் விலை ஏவ்வளவு உயர்த்த வேண்டி வரும் என்று சொல்ல முடியுமா.
நம் தேசத்தின் பொருளாதார நிலை சாியாகி, டாலா் மதிப்பு குறைந்து, உற்பத்தி பெருகி, தனி மனித வருமானம் அதிகாித்து, கச்சா எண்ணெய் விலை குறைந்து, வேளாண்மை - இயற்கை வளம் பெருகி, வேலையின்மை குறைந்து, தொழில் வளம் பெருகி...
ReplyDeleteசொல்லும் போதே தொியலீங்களா? இதெல்லாம் நடக்குற கதை இல்லைனு...
புக் அளவை குறைப்பது, எடையை குறைப்பதுனு நாம எதை செய்தாலும் மூன்று வருடம் கழிந்தபின் அதே பல்லவிய தான் மறுபடியும் பாட வேண்டி வரும்!! இது காமிக்ஸ் மட்டுமல்ல! இந்தியாவின் எல்லா துறைக்குமே பொருந்தும்!!
ஒன்னு விலையேத்தனும்!
இல்லைனா விற்பனைய கூட்டனும்!!
அதுவும் இல்லைனா,
விளம்பரம், வியாபார உத்திகள்னு எதுனா பழசையே புதுசு மாதிாி செய்யணும்!!!
விலையேற்றம் முதல்ல கஷ்டமாகத் தான் இருக்கும், அப்புறம் அதுவே பழகிடும்!!
நம்ம மக்களைப் பொருத்தவரை,
டாடாவின் "நானோ காா்" திட்டம் போல படுதோல்வி அடைந்த திட்டம் இல்லைனு கூட சொல்லலாம்!!
காரே இல்லாம கூட இருப்பாங்க, ஆனா காா் மாதிாி ஒன்ன ஒருநாளும் வாங்கமாட்டாங்க!
தரத்தில் கை வைத்தால் நானோகாா் நிலை தான் ஏற்படும்! எல்லாத்துக்குமே!!
ஒன்னு வந்தாலும் நல்லதா வரணும்!!
இப்பெல்லாம் தியேட்டா் எதுவும் ஓடறதில்ல! ஆனா மல்டி பிளக்ஸ் ஓடிட்டே தான் இருக்கு!
ஏதோ மனதில் பட்டதை சொல்லிட்டேங்க சாா்! ஏதேனும் தவறு இருந்தால் பொறுத்து கொள்ளவும்!!
எது எப்படியிருந்தாலும், நீங்களும் காமிக்ஸ் வெளியிடுவதை நிறுத்தப் போவதில்லை! நாங்களும் காமிக்ஸ் படிப்பதையும் நிறுத்தப் போவதில்லை!!
ஆனாலும் எனக்கு நிலவொளியில் நரபலி, பாக்கெட் சைஸ் ஸ்பைடா் போன்ற சிறிய அளவில் சிறிய புத்தகங்கள் படிக்க ரொம்பவே சௌகா்யமாக இருப்பதாகவே உணா்கிறேன்!
Deleteஇரத்தப் படலம் வண்ணப் பதிப்பு மாதிாி மெகா சைஸ் புக்கெல்லாம் "பைபிள், குா்ரான், கீதை" போல பயபக்தியோடே படிக்க வேண்டியுள்ளது!
சைஸ் ஒருபக்கம்னா, விலையொரு பக்கம் பயபக்தியை கொண்டுவந்திடும் போலிருக்கு!😁
எப்புடி நாங்களும் Big Boss பாக்குறோம்ல!
Delete// விலையேற்றம் முதல்ல கஷ்டமாகத் தான் இருக்கும், அப்புறம் அதுவே பழகிடும்!! //
Delete+2
// தரத்தில் கை வைத்தால் நானோகாா் நிலை தான் ஏற்படும்! எல்லாத்துக்குமே!! //
Delete+11191817
//நம்ம மக்களைப் பொருத்தவரை,
Deleteடாடாவின் "நானோ காா்" திட்டம் போல படுதோல்வி அடைந்த திட்டம் இல்லைனு கூட சொல்லலாம்!!
காரே இல்லாம கூட இருப்பாங்க, ஆனா காா் மாதிாி ஒன்ன ஒருநாளும் வாங்கமாட்டாங்க!
தரத்தில் கை வைத்தால் நானோகாா் நிலை தான் ஏற்படும்! எல்லாத்துக்குமே!!
ஒன்னு வந்தாலும் நல்லதா வரணும்!!
இப்பெல்லாம் தியேட்டா் எதுவும் ஓடறதில்ல! ஆனா மல்டி பிளக்ஸ் ஓடிட்டே தான் இருக்கு!//யதார்த்தமான நச்
67th
ReplyDeleteஆசிரியரே மாதம் 4 என்ற இலக்கை தயவு செய்து குறைக்க வேண்டாம்
ReplyDelete// ஆசிரியரே மாதம் 4 என்ற இலக்கை தயவு செய்து குறைக்க வேண்டாம் //
Deleteமாதம் 4லாம் இனி 2016,2017,2018லிஸ்ட்ல தான் பார்க்க இயலும் என தோணுது 7அம்ச திட்டங்களை பார்க்கையில்...!!
Deleteமாதம் "மும்மாறி" பொழிஞ்சா நம் உள்ளம் குளிரும்!
புத்தகங்களின் நீளத்தை குறைக்க வேண்டாம் ஏற்கனவே எனக்கு கண் பார்வை மைனஸ் 5 ல் உள்ளது
ReplyDeleteஎங்களுக்கும் உங்களுக்கும் பாதிப்பில்லா வகையில் விலையேற்றம் இருந்தால் நல்லது உங்களுக்கு தெரியாத சட்டமில்லை அதில் எது நல்ல சட்டமோ அதை நீங்களே தேர்ந்தெடுங்கள்
ReplyDeleteஜட்ஜ்மன்ட் அதான்.
Deleteஎடிட்டர் எது செய்தாலும் சரிதான்.
ReplyDeleteஆனால் இதழ்களின் எண்ணிக்கையை குறைக்க என் மனம் ஒப்புக் கொள்ளவில்லை.அதே போல் இன்றிருக்கும் தரம் குறைப்பதையும் நான் வண்மையாகக் கண்டிக்கின்றேன்.விலையேற்றம் தவிர்க்க முடியாது.நீங்கள் தாராளமாக சிறிய விலையேற்றம் செய்யலாம்.நான் வேலை பார்க்கும் ஹோட்டலில் வருடா வருடம் விலையேற்றம் கண்டிப்பாகச் செய்வார்கள் எந்தக் காரணமும் இன்றி!ஆதலால் நீங்கள் சிறிய விலையேற்றம் செய்யலாம் மற்றும் விற்பனை உயர்த்த வழிவகை செய்யலாம்.உங்கள் முடிவு எதுவாக இருப்பினும் எனக்குச் சம்மதமே சார்.
// இதழ்களின் எண்ணிக்கையை குறைக்க என் மனம் ஒப்புக் கொள்ளவில்லை.அதே போல் இன்றிருக்கும் தரம் குறைப்பதையும் நான் வண்மையாகக் கண்டிக்கின்றேன்.விலையேற்றம் தவிர்க்க முடியாது.நீங்கள் தாராளமாக சிறிய விலையேற்றம் செய்யலாம் //
Delete+1234
மதுரை புத்தகத் திருவிழா படங்களை கண்ணில் காண்பியுங்கள் சரவணன்.
Deleteஎடிட்டர் சார்வாள் அவர்களுக்கு,
ReplyDelete8கோடி மக்கள் தொகை உள்ள தமிழ்நாட்டில் 2500 காப்பி புத்தகங்கள் விற்க முடியவில்லை என்றால் இது ஆச்சரியம் அளிக்கும் அதிர்ச்சியான விஷயம் தான். என்றாலும் பரவாயில்லை நாம் சமாளித்து விடலாம். கவலையில்லை. நாம் நம் விற்பனை ஸ்டைலை மாற்றிக் கொள்வதன் வழியாக.
1. புத்தகத்தின் சைஸை குறைக்கலாம். பக்கங்களை அதிகரிக்கலாம்.
2. நேரிடையாக வாங்குபவர்களுக்கு 15% டிஸ்கவுண்ட்டும், ஆன்லைனில், போன், இமெயில் வழியாக வாங்குபவர்களுக்கு 20% டிஸ்கவுண்ட் அல்லது தபால் செலவு இலவசமாக தரலாம்.
3. டர் ஆன் கி.நா.க்களை தவிர்த்து நல்ல தரமான கதைகளை போடலாம்.
4. குழந்தைகள் அதிகமாக விரும்பும் டாம் அண்ட் ஜெர்ரி, மிக்கி மவுஸ், டொனால்ட் டக் கதைகளை தனியாக போடலாம்.
5. 45 நாட்களுக்கு ஒரு முறை புத்தகங்களை வெளியிட்டால் புத்தகங்கள் விற்பனை ஆவதற்கு சீரான இடைவெளியில் கிடைக்கும்.கண்டிப்பாக இந்த இடைவெளியில் புத்தகங்கள் விற்பனை ஆகும்.
6. ரிட்டர்ன்ஸ் கொடுக்கமால் புத்தகங்களை விற்பனை செய்யும் முகவர்களுக்கு 5%எக்ஸ்ட்ரா கமிஷன் கொடுக்கலாம்.
7.இரண்டு, மூன்று சாந்தா கட்டும் சாந்தாதாரர்களுக்கு ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் தரலாம்.
8. ஸ்பெஷல் வெளியீடுகளை குறைந்ந அளவு பிரிண்ட் செய்து 20% விலையை ஏற்றி விற்கலாம்.
9. எக்காரணத்தைக் கொண்டும் தரத்தில் சமரசம் வேண்டாம். தரம் குறைந்தால் விற்பனை கண்டிப்பாக அடிபடும்.
10. பழைய அரிதான லயன், முத்துக்காமிக்ஸ்களை நல்ல தரமான தரத்தில் குறைந்த அளவு பிரிண்ட் செய்து, விலையை ஏற்றி விற்கலாம்.
மேலே குறிப்பிட்ட 10 வழிகளில் தங்களுக்கு பொருத்தமானவற்றை தேர்ந்தெடுத்து தமிழ் காமிக்ஸ் விற்பனையை அதிகரிக்க செய்யுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
ஐ.வி.சுந்தரவரதன்
சின்ன காஞ்சிபுரம்.
// புத்தகத்தின் சைஸை குறைக்கலாம். பக்கங்களை அதிகரிக்கலாம் //
Deleteவிலை அதிகமாகும். சைசைக் குறைத்து பக்கங்களின் எண்ணிக்கையை அதே எண்ணிக்கையில் படங்களின் அளவை குறைத்தால் தான் இப்போது வரும் விலையை விட கொஞ்சம் அதிக விலையில் தரமான முடியும் சுந்தர்.
//எக்காரணத்தைக் கொண்டும் தரத்தில் சமரசம் வேண்டாம். தரம் குறைந்தால் விற்பனை கண்டிப்பாக அடிபடும். //
Delete+1211
// 8கோடி மக்கள் தொகை உள்ள தமிழ்நாட்டில் 2500 காப்பி புத்தகங்கள் விற்க முடியவில்லை என்றால் இது ஆச்சரியம் அளிக்கும் அதிர்ச்சியான விஷயம் //
Delete😢😢😢😓😓😓
சார், டெக்ஸ் சைசில், எண்ணிக்கையில், தரத்தில் கை வைக்க வேண்டாம் pls. மற்றவற்றில் கருத்தில்லை, உங்கள் முடிவே.
ReplyDelete// எண்ணிக்கையில், தரத்தில் கை வைக்க வேண்டாம் pls. //
Delete+1
+123445667788999
DeleteAvoiding hardcover will be helpful to reduce the price to 1% sir? These rascals won't reduce price to the ratio when rupee value goes up.
ReplyDeleteயாருக்கும் பெரிதாக பாதிப்பில்லாத வகையில் சிறிய விலையேற்றத்தை ஏற்றிக் கொள்ளலாம் சார். கார்ட்டூன் கதைகளை மட்டும் டைலன்டாக் & மேஜிக் விண்ட் சைஸில் இரண்டு கதைகளாக போட முயற்சிக்கலாம். ஒரு கதை சொதப்பினாலும் ஒரு கதை நிச்சயமாக ஹிட்டடிக்க வாய்ப்புண்டு. அதுவுமில்லாமல் ஆரம்ப காலங்களில் மினிலயனே இந்த சைஸில்தானே வெளிவந்தது. அதே போல் டெக்ஸ் கதை சைஸை எக்காரணம் கொண்டும் குறைக்க வேண்டாம்.
ReplyDeleteஅன்பு எடிட்டர் வருடம் ஒரு விலையேற்றம் என்பது தவிர்க்கமுடியாதது.விகடன் இப்பொது ₹30/ ...வாங்காமல் விட்டுவிட்டோமா என்ன?.₹1000/என்பது கூட இப்போது இருவர் மல்டிப்ளெக்சில் சினிமா பார்க்கும் செலவு.புத்தகத்தில் தரம் இருக்கும் போது விலை அதிகம் என்று வாங்காமல் இருக்கப்போவதில்லை.புத்தக எண்ணிக்கை குறைய வேண்டாம்.
ReplyDelete+1
Delete// அன்பு எடிட்டர் வருடம் ஒரு விலையேற்றம் என்பது தவிர்க்கமுடியாதது.விகடன் இப்பொது ₹30/ ...வாங்காமல் விட்டுவிட்டோமா என்ன? //
Deleteஉண்மை,இதைதான் நானும் சொல்லலாம் என்றிருந்தேன்.
எடிட்டர் sir,
ReplyDelete12 color books *85= 1020 rs
24 b/w *70 rs =1680
jumbo 6 color books * 85 = 510
total = Rs 3210
monthly 3 books plus once in 2 months we will get 4 books.இந்த விலையில் இருந்தால் எல்லோரும் புக் வாங்குவார்கள், சந்தா உயரும்.
தேவையற்ற புத்தகங்களை நீக்கி விட்டு எது தேவையோ எது கண்டிப்பாக விற்க்குமோ அதை மட்டும் பிரிண்ட் போடுங்கள்
DeleteTex, ஜேம்ஸ் பாண்ட், ஜானி, டயபாலிக் , ப்ளூ கோட்ஸ் ,லக்கி ,திகில் ,ராபின், மார்ட்டின்,மாஜிக் விண்ட், டயலான் டாக் கதைகள் இதை எல்லாம் முன் சீட்டில்
சுமர்ப், மாடஸ்டி, ட்ரெண்ட், பழைய மும்ம்மூர்திகள் போன்ற சுமாரான கதைகளை பின் சீட்டுக்கு தள்ளுங்கள்.
எல்லோரும் ரசிக்க தகுந்த கதைகளை கொண்டு வாருங்கள் அங்குதான் வெற்றி இருக்கிறது
You're the decider, எதை செய்தாலும் எமக்கு சம்மதமே. ��
ReplyDeleteHi Edi
ReplyDeleteFew things i could think of
1. Please dont reduce size. Already sometimes font is too small. Kindly increase font where possible. Sometimes i find the dialogues lengthy where it could have been much crispy.
2. Instead of individual issues can club 2 issues of same publisher so that we can two sets of covers which may help.
3. Reduce combine the advertisement pages. Convert full pg ad to half pg.
4. Use inside of cover for edior writeups. In altrnate book u can give the available books list.
5. You have not considered courier cost which is surely to increase. Maybe an option for subscribers to get one courier every two months.
6. This year you can look at more of b.w stories Modesty, Martin etc
7. Personally there is too much of Tex but i guess that is what is pulling the wagon.
8. Increase the price keeping in mind the next couple of years.
9. Consider a forex futures contract .. maybe you already are
Finally I am with you on any path u choose except anything which reduces the font size😊
Delete// Please dont reduce size. Already sometimes font is too small. Kindly increase font where possible. Sometimes i find the dialogues lengthy where it could have been much crispy. //
Delete// Increase the price keeping in mind the next couple of years. //
+1111
அரைப்பக்க / ஒரு பக்க விளம்பரங்களாலோ ; ஹாட்லைனை அட்டை உட்பக்கத்துக்கு மாற்றம் செய்வதாலோ செலவினங்களில் மிச்சமிராது சார் ; பக்க மொத்த எண்ணிக்கை அதன் பொருட்டு மாறிடப் போவதில்லை தானே ?
DeleteAnd 2 இதழ்களை ஒன்றாக இணைப்பது சந்தா நண்பர்களுக்கு ஓ.கே.வாக இருக்கலாம் ; நமக்கும் அட்டைப்படச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் தான் ! ஆனால் கடையில் வாங்குவோருக்கு இரட்டிப்பான விலைகள் தயக்கங்களை உண்டாக்கக் கூடுமல்லவா சார் ?
அப்புறம் Courier - இரு மாதங்களுக்கு ஒருமுறை என்று முன்மொழிந்தால் நண்பர்கள் பொங்கிடுவார்கள் !!
Font சைஸ் பற்றிய உங்கள் அபிப்பிராயத்துக்கு +1 ; நிச்சயமாய் இதற்குச் சிறிதாக்கிட அனுமதிக்க மாட்டோம் !
விஜயன் சார், அதிக யோசனை உடம்புக்கு ஆகாது.
ReplyDeleteபேசாமல் விலையை மட்டும் ஏற்றிவிட்டு இன்று போல் என்றும் தொடருங்கள்.
இதுவே சிறந்ததா படுது
Deleteசெமல மக்கா
Delete// விஜயன் சார், அதிக யோசனை உடம்புக்கு ஆகாது.
Deleteபேசாமல் விலையை மட்டும் ஏற்றிவிட்டு இன்று போல் என்றும் தொடருங்கள். //
அதே,அதே.
// அதிக யோசனை உடம்புக்கு ஆகாது.
Deleteபேசாமல் விலையை மட்டும் ஏற்றிவிட்டு இன்று போல் என்றும் தொடருங்கள்//
இந்த டீலிங் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு சார் !
அப்பறமென்ன ஆசிரியரே நேரா போயுட்டே இருப்போம் முழுவேகத்ல
Deleteஅன்புடன் ஆசிரியருக்கு உங்க கவலை ஒரு குடும்பதலைவனோட கவலை ஸ்கூல்பீஸ் வீட்டுத்தேவைகள் வண்டிக்கு பெட்ரோல் மருத்துவசெலவு எல்லாம் எல்லோருக்கும் உண்டு இதுல எதையும் தவிற்க்க முடியாது எங்களுக்கு இருக்கிறது காமிக்ஸ் மட்டுமே இந்த கவலைகளை குறைக்கிற வடிகால். குழந்தைகளுக்கு வேண்டியத செய்யுரமாதிரி நீங்க எங்களுக்கு வழங்க படுகிற கஷ்டம் புரியுது சார். நாங்க எவ்வளவு தாங்குவோன்னு உங்களுக்கு தெரியும் தாராளமா எனது ஆதரவு விலையேற்றத்திற்க்கு உண்டு.சைசைக்குறைக்க வேண்டாம்.பேப்பர்தரம் குறைக்க வேண்டாம்.முடிந்தால் மு டி ந் தா ல் மட்டுமே புத்தக எண்ணிக்கையை குறைக்க யோசியுங்கள் சார்.ஒவ்வோரு தலைப்பிலும் 700+ ஸ்டாக் நிச்சயம் சிரமம்தான் சார்.விற்பனையை அதிகரிக்க நாங்க என்ன செய்யனும்னு சொல்லுங்க..முடிந்தால் ஸ்டாக்கில் இருக்கும் புத்தகங்களுக்கு குறிப்பிட்ட % அதிக டிஸ்கவுன்ட் கொடுத்து விற்றுத்தீர்ப்போம் சார்.என்னால் முடிந்தவரை என் ஆதரவு உண்டு சார் குறிப்பா # 7.👍
ReplyDeleteயாராவது நீளமா டைப்படிக்க கத்துக்கொடுங்களேன்....
ReplyDeleteஸ்கூலுக்கு போறதுநீங்க தானே ..நீங்கதான் டைப்படிச்சு பழகணும் 😉😉
Deleteடைப்ப விட அத பப்ளிஷ் பண்ணங்குள்ள போன் வந்து நெட்கட்டாகுது அட ராமா...
Deleteஅதிகக் கையிருப்பு உள்ள title களுக்கு offers ; புதுசாயொரு திட்டமிடல் என்று சீக்கிரமே அறிவிப்புகள் வரும் பழனிவேல் !
Deleteசகல துறைகளிலும் விலையேற்றம் தவிர்க்க இயலாததே! இயன்ற வழிகளை மேற்கொண்டுகொண்டே தொடர்ந்து பயணிக்க வேண்டியதுதான். தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றுமில்லை யுவரானர்! :-)))
ReplyDeleteசெஞ்சுட்டா போச்சு வக்கீல் வண்டுமுருகன் சார் !!
Deleteஎவ்வளவு ஏறப்போகுது மீறிப்போனால் 4 புக் 40-50 மாதம் கண்டீப்பா இது தாங்கக்கூடியதே..தாராளமா தொடருங்க சார் இதே சைஸ் இதே எண்ணிக்கை .வேண்டுமால் அடுத்த ஆண்டு வேற ஐடியா யோசிப்போம் .சீக்கிரம் அட்டவணை பதிவை அன்போடு எதிர்பார்க்கும்.
ReplyDeleteXIII பழனிவேல்
ஒரு 4 டீ குடிக்கிறத கொறைச்சுகிறேன்.முடிஞ்சுது போய் அட்வணையை தயார்பண்ணுங்க சார்..
Deleteசும்மாவே 4 டீ உடம்புக்கு கெடுதி சாமீ !! கொஞ்சம் குறைச்சுக்கோங்க !!
Deleteமாசத்துக்கு 4 டீதானே சார் .சமாளிப்போம்
Delete4டி கொறச்சது போதுமா ஆசிரியரே
Deleteதற்போதுள்ள நடைமுறை தொடர்வதற்கு எவ்வளவு விலையேற்றம் செய்தால் சரியோ அதை செய்யவும்,..தரத்திலோ புத்தகங்களின் எண்ணிக்கையிலோ கைவைக்க வேண்டாம் என்பதே என் கருத் து.அப்புறம் அந்த சந்தா R வரக்கூடுமானால் ஹி ஹி ..ஈரோட்கார் கதை யோடு அய்யாவின் கதையையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் ..ஏகப்பட்ட கதை கைவசம் இருக்கிறதாக்கும் ..உதாரணம் .மயானத்தில் யுத்தம்..கத்திமுனை ரத்தம் ..
ReplyDeleteஈரோட்க்கார் எழுதினால் அது "மயானத்தில் முத்தம்" என்றிருக்கும் ! நீங்களோ "மயானத்தில் யுத்தம் " !! மொத்தத்தில் இன்னொரு அண்டர்டேக்கர் கதை ரெடி என்கிறீர்கள் !!
Deleteரொம்ப யோசிச்சு யோசிச்சு சிரமப்படாதிங்க சார்..!!
ReplyDeleteஇப்ப எல்லாத்திலுமே விலையேற்றம் தவிர்க்கமுடியாததா ஆயிடுச்சி.!
ஒரேயொரு வித்தியாசம் ...மத்த யாரும் எங்ககிட்ட கேட்டுட்டு விலையேத்துறது கிடையாது ..! தூங்கி எந்திரிச்சிப் பாத்தா விலையேறிப்போய் இருக்கு.!
நீங்க வாசகரின் பார்வையிலிருந்து யோசிப்பது ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு சார்..!
சட்டுபுட்டுனு பதிப்பாளரின் பார்வையில் யோசிச்சி லேசா ஒரு விலையை ஏத்தி மத்த எதிலும் காம்ப்ரமைஸ் பண்ணாம காமிக்ஸ் விருந்தை குறையில்லாம தொடர்ந்து படைக்க ஆவண செய்யுங்க சார்...!!
அது...
Delete+112333
// ஒரேயொரு வித்தியாசம் ...மத்த யாரும் எங்ககிட்ட கேட்டுட்டு விலையேத்துறது கிடையாது ..! தூங்கி எந்திரிச்சிப் பாத்தா விலையேறிப்போய் இருக்கு.! //
Deleteஉண்மையோ உண்மை.
+111111111111111111
சார்...பெரும் குழுமங்களின் படைப்புகள் 5 ஸ்டார் ஹோட்டல்களின் தயாரிப்புக்களைப் போல !! அவர்களது overheads ; தயாரிப்புத் தரங்கள் ; செலவுகள் என சகலமும் பன்மடங்கு ஜாஸ்தி ! தவிர கோடிகளில் முதலீடு செய்து நிற்போர்கள் அதனிலிருந்து நியாயமானதொரு இலாபத்தை எதிர்நோக்குவதும் இயல்பே ! So இன்றியமையா தருணங்களில் நெருக்கடிகளுக்கேற்ப விலையேற்றங்களைச் செய்யாது இருக்க சாத்தியப்படாது !!
Deleteஆனால் நாமோ தெரு முனையிலுள்ள ராயர் மெஸ் போன்றவர்கள் ! ரெகுலராய்ச் சாப்பிட வரும் ஒவ்வொருவரையும் தெரிந்திருந்தது ; அவர்களது ரசனைகள் ; செலவிடும் திறன்கள் பற்றியும் நினைவில் இருத்திக் கொள்ளும் வீட்டுச் சாப்பாட்டுக் கடை ! So ஒரு நாள் காலையில் 'திடு திடுப்பென' விலையை ஏற்றிவிட்டு பில்லை நீட்ட மனம் ஒப்புமா சார் ?
தவிர, இது நாம் சேர்ந்தே வளர்த்ததொரு விருட்சம் ; இதற்கு என்ன உரமிட வேண்டும் ? எவ்வளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் ? எப்போது களை பிடுங்க வேண்டுமென உங்களை விட வேறு யாருக்குத் தெரிந்திருக்கக் கூடும் ? So உங்களிடம் கேட்காது வேறு யாரிடம் கேட்பேனாம் ?
க்கும்.. எல்லாம் தெரிஞ்சும் விட்டுவிட மாட்டோம்.. ஆனாலும் கொஞ்சம் சண்டை போட்டுட்டுதான் கொடுப்போம்..
Delete// ரோசனை # 1,
ReplyDeleteரோசனை # 2,
ரோசனை # 3,
ரோசனை # 4, //
இதெல்லாம் எதுவும் வேண்டாம் சார்,இந்த யோசனைகள் சரிப்பட்டு வராது.
// இது சற்றே practical ஆனதொரு சிந்தனை ! கையையும்; பையையும், பிடிக்காத மட்டிற்கு விலையைக் கூட்டி விட்டு, இதழ்களின் மொத்த எண்ணிக்கையைக் குறைப்பது ! //
விலையை வேண்டுமானால் ஏற்றிக் கொள்ளுங்கள் சார்,இன்றைய சூழலில் இந்த முடிவு தவிர்க்க இயலாதுதான்,உங்கள் நெருக்கடியான நிலை புரிகிறது சார்,ஆனால் இதழ்களின் எண்ணிக்கையை தயவுசெய்து குறைக்க வேண்டாமே சார்,ரொம்பவுமே கசப்பான,சங்கடமான முடிவு இது,இந்த வருடமே இரத்தப் படலம் வருகிறது மேலும் ஸ்பெஷல் வெளியிடுகளை விட்டு பண ரீதியிலான சிரமத்திற்கு எங்களை ஆளாக்க கூடாது என்று சில ஸ்பெஷல் வெளியீடுகளை தவிர்த்தீர்கள்,அடுத்த வருடமும் விலை உயர்வு போன்ற காரணங்களை காட்டி இதழ்களின் எண்ணிக்கை குறைவதும்,ஸ்பெஷல் வெளியிடுகள் வெளியாகாமல் இருப்பதும் ஏற்றுக் கொள்ளவே மிகவும் கடினமான முடிவு சார்,இதழ்களின் வெளியிடு,தரத்தில் சமரசம் எதுவும் வேண்டாம் சார்,மீண்டும் பின்னால் போக வேண்டாம்,அதற்கு விலை உயர்வே சிறந்த முடிவு,சில சூழல்களில் தேவையற்ற செலவுகள் செலவுகளையும் நாம் விருப்பமே இல்லாமல் செய்யும் நெருக்கடி ஏற்படுகிறது,அப்படியிருக்க காமிக்ஸ் என்னும் பிடித்த விஷயத்திற்காக கொஞ்சம் விலை உயர்வை புன்னகையுடன் ஏற்றுக் கொள்வோம் சார்.
நீங்கள் போய் அடுத்த ஆண்டு அட்டவணையை இன்னும் கொஞ்சம் மெருகுபடுத்துங்கள் சார்.
//காமிக்ஸ் என்னும் பிடித்த விஷயத்திற்காக கொஞ்சம் விலை உயர்வை புன்னகையுடன் ஏற்றுக் கொள்வோம் சார்.
Deleteநீங்கள் போய் அடுத்த ஆண்டு அட்டவணையை இன்னும் கொஞ்சம் மெருகுபடுத்துங்கள் //
சரிங்க சார் !! Vox Populi....Vox Dei !!
///சரிங்க சார் !! Vox Populi....Vox Dei !!///
Deleteபாவம் அறிவரசு ரவி ..! ஏதோ தெரியாம சொல்லிட்டாரு ..அதுக்காக இப்படியெல்லாம் திட்டக்கூடாது சார்...!:-)
கிட்!
Deleteஹா ஹா ஹா!! நம்மாலதான் திட்ட முடியல.. அவராவது திட்டட்டுமே?
/// நம்மாலதான் திட்ட முடியல.. அவராவது திட்டட்டுமே?///
Deleteஅல்டிமேட் ஈ.வி. அல்டிமேட்😹😹😹😹😹👏
யரோ, அன்றாடங்காய்ச்சினு ஒரு தபா சொன்னாங்க நிறைய பேர் போலோ அப் போட்டாங்க, பட்டுனு ஒன்னு அடிச்சீங்க,
"நான்லாம் எப்பவாது காய்ச்சி"///---னு அதற்கு அடுத்து இது மறக்க இயலா ஸ்லாங் செம செம....,ஹா...ஹா....?!!!!
// சரிங்க சார் !! Vox Populi....Vox Dei !! //
Deleteசார் ஏதாவது தப்பா சொல்லிட்டனா??? அதுக்காக சைனீஸ் மொழியில் ஏன் சார் திட்டறிங்க.
// கிட்!
ஹா ஹா ஹா!! நம்மாலதான் திட்ட முடியல.. அவராவது திட்டட்டுமே? //
ஈ.வி உங்களுக்குள்ள இப்படி ஒரு ஆசை இருக்கறது தெரியாம போச்சே,சரி விடுங்க அடுத்த தடவை பார்க்கும்போது இதுக்காகவே கொஞ்ச நேரத்தை ஒதுக்கி மாத்தி,மாத்தி திட்டிக்கிறோம்.
கூடவே கெடா விருந்தும் வைக்கிறோம்..
Deleteதவிர்க்க முடியாதென்றால் விலையேற்றமோ அல்லது இதழ்களின் என்ணிக்கை குறைப்போ ஓகே! காகித தரத்திலோ அல்லது இதழ்களின் அளவிலோ கை வைக்க வேண்டாம்.😊
ReplyDeleteகாகிதத் தரத்தில் நிச்சயமாய் compromise இராது சார் !! சைசில் மாற்றங்களையும் ஒரு கடைசி கட்ட யுக்தியாய் மாத்திரமே பார்த்திடுவேன் !
Deleteபெரும்பாலான நண்பர்கள் சூழலின் கடுமையை புரிந்துகொண்டு உங்களுக்கு ஆதரவே தெரிவித்துள்ளனர்,ஆகவே எங்களை சந்தோஷப்படுத்தும் முடிவை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம் சார்.
ReplyDeleteகீழே தேக்கோ சார் !!
Deleteஅதே...அதே... விலையேற்றம் எல்லோரும் எல்லா பக்கமும் பார்த்து கொண்டு தானே வர்றோம்.
Deleteவிலையை ஏற்றி தரத்தை தொடருங்கள் சார்.
வேறு வழியே அகப்படலனா மட்டுமே எண்ணிக்கையில் கத்திரி போடவும்....!!!
@ ALL : Guys : ஆக்கபூர்வமான யோசனைகளை நீங்கள் சரமாரியாக முன்வைப்பதைப் பார்க்கும் போது மனதுக்கு ரொம்பவே நிறைவாக உள்ளது ! வழிமுறைகளை வித விதமாய் முன்மொழிந்திருந்தாலும், உங்கள் சகலரின் சிந்தைகளிலும் நமது இக்கட்டுகள் பற்றிய பூரண புரிதலும், அவற்றை நாம் சேதமின்றித் தாண்டிக் கடக்க வேண்டுமே என்ற மெய்யான அக்கறையும் இழையோடுவதை நெகிழ்வோடு பார்க்கிறேன் !! Thanks a million all !!
ReplyDeleteநிச்சயமாய் இன்றைய பொழுதை உங்களின் suggestions சகிதமே கழித்திடுவேன் - தொடரவிருக்கும் புத்தாண்டின் திட்டமிடல்களின் பொருட்டு !! Rest assured - உங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்களுக்கும் உச்ச கவனம் தந்திடுவேன் !!!
And தெறிக்க வைக்குமொரு அட்டவனையோடு உங்களை சீக்கிரமே சந்திக்கிறேனா - இல்லையா பாருங்கள் !!!
புரிதலுக்கு நன்றி சார்.
Deleteதெறிக்க விடுங்கள் காத்திருக்கிறோம்.
உற்சாகத்தோடு காத்திருக்கிறோம் ஆசிரியரே
Deleteதெறிக்க வைக்கும் அட்டவணையில. ஹிஹி. அந்த .....வரும் வரும் காத்திருக்கேன்...எல ஸ்டீலு. கேளு கேட்டு வைப்போம்....
Delete///தெறிக்க வைக்குமொரு அட்டவனையோடு உங்களை சீக்கிரமே சந்திக்கிறேனா - இல்லையா பாருங்கள் !!!///
DeleteSuper sir👏👏👏👏👏👏
இதை இதைத்தான் தங்களிடம் எதிர்பார்த்தோம்.
உங்கள் உற்சாகம் எங்களையும் இப்ப தொற்றிக் கொண்டது.
அட்டவணைக்காக முன் எப்போதும் இல்லாத அதீத ஆவலுடன்....!
///And தெறிக்க வைக்குமொரு அட்டவனையோடு உங்களை சீக்கிரமே சந்திக்கிறேனா - இல்லையா பாருங்கள் !!!///
Deleteமனதிலே நிம்மதி ...
மலர்வதோ புன்னகை....
சார் ஆக்சன் தெறிக்கட்டும்
Delete////And தெறிக்க வைக்குமொரு அட்டவனையோடு உங்களை சீக்கிரமே சந்திக்கிறேனா - இல்லையா பாருங்கள் !!!////
Deleteபாத்துடலாம் சார்.. அதையும்தான் பாத்துடலாமே... க்ர்ரா.. உர்ர்ர்...
சார் ஒரே கேள்வி : அட்டவனை செப்டம்பர் இறுதியில் ஆக்டொபர் இதழ்களோடா அல்லது ஆக்டொபர் இறுதியில் நவம்பர் இதழ்களோடா ? சொல்லிடீங்கன்னா நாங்களே இங்க தெறிக்க விட்ருவோம்லே ?! :-)
Delete2018ன் அட்டவணை 2017அக்டோபரில் தீபாவளியன்று இரவு 7மணிக்கு அறிவிச்சீங்க. இப்பவும் அக்டோபரில் தானாங் சார்???
Deleteஇல்லை முன்கூட்டியே செப்டம்பர் 30, தலை பர்த்டே அன்று???
தலை பர்த்டே ஞாயிறு, செப்டம்பர் 30சார். அன்று அட்டவணை அறிவிப்பு செய்ய ஆவண செய்யுங்கள் சார்🙏🙏🙏🙏🙏
////தலை பர்த்டே ஞாயிறு, செப்டம்பர் 30சார். அன்று அட்டவணை அறிவிப்பு செய்ய ஆவண செய்யுங்கள் சார்🙏///
Deleteசெம ஐடியா!!
// And தெறிக்க வைக்குமொரு அட்டவனையோடு உங்களை சீக்கிரமே சந்திக்கிறேனா - இல்லையா பாருங்கள் !!! //
Deleteசூப்பர் சார்,இதே உற்சாகம் என்றும் தொடரட்டும்.
No matter about the price.whatever the price,i will purchase.
ReplyDeleteஎடிட்டர் சார்...
ReplyDeleteவிலையேற்றம் காலத்தின் கட்டாயம் - உங்களுக்கு சரின்னு படற விலையேற்றத்தை தயங்காம செய்யுங்க. நாட்டு நடப்பு - விலைவாசி உயர்வு பற்றியெல்லாம் நம் நண்பர்களும் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்களென்பதால் உங்களது சிரமங்களையும் புரிந்து கொள்வார்கள்! (புரிந்துகொண்டாலுமே கூட 'ஆ..ஊ..' என சவுண்டு விடுவது நம்ம பாரம்பரியப் பழக்கம் என்பதால் 'நான் சந்தா கட்டப்போவதில்லை', 'நான் காமிக்ஸே படிக்கப்போவதில்லை','நான் பேங்க்ல லோன் வாங்கித்தான் காமிக்ஸ் படிக்கணும் போலிருக்கு' இப்படியெல்லாம் சவுண்டு விடுவாங்க. அப்புறமா அவங்களே இறங்கிவந்து 'சரி சரி.. சந்தாதாரர்களுக்கான விலையில்லா பரிசு இந்த தபா என்னன்னு சொல்லுங்க' - அப்படீம்பாங்க! இதெல்லாம் எங்களுக்குள்ள ஜகஜம்!!)
என்னோட கோரிக்கைகள் பின்வருமாறு :
* நோ நியூஸ் பிரின்ட் பேப்பர்ஸ் எனிமோர்! அது காமிக்ஸ் படிப்பவர்கள் தவிர மற்றவர்களிடம் காமிக்ஸ் மீதான பார்வையை அதள பாதாளத்தில் வைத்திருந்தது! நம்முடைய தற்போதைய தரமே பொதுமக்கள் பலரது நன்மதிப்பைப் பெற்றுவரும் நிலையில் மீண்டும் அப்படியொரு பின்னடைவு வேண்டாமே ப்ளீஸ்?
* மாதம் குறைந்தபட்சம் 4 புத்தகங்களாவது வேண்டும்! (அதில் ஒன்று - கார்ட்டூன், ஒன்று - தல'யாக இருக்க வேண்டியது அவசியம்)
*குறைந்தபட்சம் 6 கி.நா'க்கள் தனி சந்தாவில் அவசியம், அவசியம், அவசியம் வேண்டும்! (இல்லாவிட்டால் போராட்டம் வெடிக்கும்!)
* புத்தகங்களின் சைஸை குறைப்பது உங்களிஷ்டம்! வேண்டுமானால் 'சந்தாதாரர்களுக்கு இம்முறை ஒரு பூதக்கண்ணாடி பரிசு' என்று அறிவித்துவிடுங்கள்! சரோஜாதேவி பயன்படுத்திய சோப்புடப்பா மாதிரி 'ஷெர்லக் ஹோம்ஸ் பயன்படுத்திய ஒரிஜினல் பூதக் கண்ணாடி' என்று அறிவிச்சுட்டீங்கன்னா இலவசங்கள் பிடிக்காத கணேஷ்குமார் கூட 4 சந்தா கட்டுவாரு!
உங்களுக்கு சரின்னு படற விலையேற்றத்தை/மாற்றங்களை தயங்காம செய்யுங்க! என்றும் நாங்கள் உங்களுடன்!! என்னென்றும் நீங்கள் எங்களுடன்!
அம்புட்டுதேங்!
///* நோ நியூஸ் பிரின்ட் பேப்பர்ஸ் எனிமோர்! அது காமிக்ஸ் படிப்பவர்கள் தவிர மற்றவர்களிடம் காமிக்ஸ் மீதான பார்வையை அதள பாதாளத்தில் வைத்திருந்தது! நம்முடைய தற்போதைய தரமே பொதுமக்கள் பலரது நன்மதிப்பைப் பெற்றுவரும் நிலையில் மீண்டும் அப்படியொரு பின்னடைவு வேண்டாமே ப்ளீஸ்?
Delete* மாதம் குறைந்தபட்சம் 4 புத்தகங்களாவது வேண்டும்! (அதில் ஒன்று - கார்ட்டூன், ஒன்று - தல'யாக இருக்க வேண்டியது அவசியம்)
*குறைந்தபட்சம் 6 கி.நா'க்கள் தனி சந்தாவில் அவசியம், அவசியம், அவசியம் வேண்டும்! (இல்லாவிட்டால் போராட்டம் வெடிக்கும்!)///
மேல குர்நாய்ர் இன்னாயின்னா கூறிகிறாரோ ...அத்தயே நானும் வூடுகட்டி கூறிகிறேன்....!!
பெரியவரும்,பெரியவரோட பெரியவரும் வேண்டிய கோரிக்கைகளே இந்த சின்னவரின் கோரிக்கைகளும்.
Delete+123456789987654321
Deleteகுறைந்தபட்சம் 6 கி.நா'க்கள் தனி சந்தாவில் அவசியம், அவசியம், அவசியம் வேண்டும்! (இல்லாவிட்டால் போராட்டம் வெடிக்கும்!)
Deleteபோராட்டதில் எனக்கு பங்கு உண்டா??!!
மொத்தத்துல இப்போதைய கண்டிசன் அப்படியே தொடரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.விலையேற்றம் மட்டும் உங்கள் கையில்.
DeleteVijayan sir. Vanakkam🙋♀️
ReplyDeletePlease don't reduce the size of cartoon books as it may reduce the font size which will reduce the readability as well
Price hikes are common nowadays.go ahead with reasonable price hike in ur books too
Have a happy Sunday all 😀
// Price hikes are common nowadays.go ahead with reasonable price hike in ur books too //
Delete+1
2013ல் சென்னைபுக்பேர்ல் செய்தது போல் சின்ன சின்ன பேக்கேஜ்.மீடியம் பேக்கேஜ் மெகா பேக்கேஜ் என அனைவரும் வாங்கும் வகையில் ஸ்டாக் புத்தக பன்டல்கள் போடுங்க சார் ஒரு நல்ல % டிஸ்கவுன்டுடன் .சீக்கிரமே குடோன காலி பண்ணனும்
ReplyDeleteவிஜயன் சார், மதுரை புத்தகத் திருவிழா விற்பனை மற்றும் புகைப்படங்கள் பற்றி இங்கு பதிவிடலாமே?
ReplyDeleteசார்,
ReplyDeleteஇரண்டு புத்தகங்களை ஒன்றாக சேர்ந்து வெளியிடும் போது அட்டைக்கான செலவு குறையும் இல்லையா!!!!
.
.
.
.
.
டிரென்ட் டெக்ஸ் வரும் போது புது வாசகர்களுக்கு ஆர்வத்தைதுன்டும்....+1
டெக்ஸ்சை நிலவொளியில் நரபலி சைஸ்சில் வந்தால் மிகவும் அருமை....டிராவலிங்கிள் இருக்கும் போது கைக்கு அடக்கமான புக்கை தான் விரும்புவார்கள்...
.....இயன்ற அளவுக்கு நாங்கள் காமிஸ்சை பிரபலமாக்க முயற்சிக்கிறோம்
இப்போதே என் முகநூல் பக்கத்தில் பதிவு செய்கிறேன்...
சார் சந்தா Rக்கு நான் கதை எழுதுறேன்.....பிளிஸ்
தம்பி அகில்... R for Romance! அந்த மாதிரி கதைகளுக்கு ஈரோட்ல நான் ஏற்கனவே ஃபார்ம் ஆகிட்டேன்பா.. நீ வேணும்னா கி.நா கதை ட்ரை பண்ணு! :)
Deleteஈ.வி ஹிஹிஹிஹிஹி.......
DeleteRomanceஆ சாரி படிக்க தவறிடேன்...
Deleteசரி கி.ந கிடைசாலும் சரி...
கதை எழுத நான் தயார்
ஓவியம் போட யாராவது இருக்கிகளா?????!!!!!
Suggestions:
ReplyDelete1)Please print all the issues in the size and paper quality in which you print Tex comics, which is easier to hold and read. Even block busters like Asterix and TINTIN comes in smaller size which are easier to read.
2)Avoid printing in the art paper. Though they look glossy and rich, the glossiness causes strain on the eyes.
3)Avoid printing Big Format (in size not in volume) issues for fancy sake.
4)Try sourcing paper from the local paper mills which would reduce the risk of exchange fluctuation.
+13344556788999099999
Deleteஅன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
ReplyDeleteமாவுக்கு தகுந்த பணியாரம்(னி?!) என்றொரு செலவாடை உண்டு.
நம் கதைகளில், அல்லது புத்தகங்களின் வடிவமைப்பு, வர்ணங்களில் நீங்கள் எங்கள் பொருட்டு சமரசம் செய்ய வேண்டாம்.
பிற்பாடு அது நொட்டை, இது நொல்லை என எங்களிடம் இருந்தே கருத்துக்கள் கலந்து அடிக்கும்.
விலை ஏற்றம் நியாயமே...
உடன் புத்தகங்களின் எண்ணிக்கையை ஏற்றுங்கள்...
குறைந்தது ஒரு புத்தகமேனும் சென்ற ஆண்டை விட அதிகம் வேண்டும்.
Plan accordingly dear editor.
+1000000
Delete// உடன் புத்தகங்களின் எண்ணிக்கையை ஏற்றுங்கள்...
Deleteகுறைந்தது ஒரு புத்தகமேனும் சென்ற ஆண்டை விட அதிகம் வேண்டும். //
இது பாயிண்ட்.
தவிர்க்க இயலாத காரணத்தால் அடுத்த இதழ் முதல் சிறு விலையேற்றம். வாசகர்கள் பொறுத்து கொண்டு ஆதரவு தர வேண்டும். இதுதான் எல்லா புக்லயும் போடுவாங்க. நீங்க என்ன எங்களை கருத்து கேட்டு எங்களை கருத்து கந்தசாமி ஆக்காதிங்க.
ReplyDeleteசரி. அதெல்லாம் விடுங்க. இன்னைக்கு வீட்டுல மட்டனா இல்லை சிக்கனா . போய் சாப்பிட்டுட்டு வந்து அட்டவணையை ஜம்முன்னு ரெடி பண்ணுங்க.
///நீங்க என்ன எங்களை கருத்து கேட்டு எங்களை கருத்து கந்தசாமி ஆக்காதிங்க.///
Delete+8888
Price raise of ur STD comic books is inevitable.carry on editor sir.Fix ur own price.
ReplyDeleteஇன்றைய blog பெயருக்கு ஏத்தபடி ஒரு ரோலர் கோஸ்டர் தான். நீங்கள் கஷ்டப்படுவது எங்கள் பொருட்டு என்னும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
ReplyDeleteஐடியா 1: சைஸ் அண்ட் கலர் மாற்றம் வேண்டாம்
ஐடியா 2: சைஸ் குறைக்கவே வேண்டாம். உங்க கால்ல விழறேன். படிக்கவே முடியமாட்டேங்குது. Ex: நிலவொளியில் நரபலி, சிறுபிள்ளை விளையாட்டு.
ஐடியா 3: கலருக்கு கண்டிப்பா கல்தா கொடுக்கணும்னு சொன்ன, டெக்ஸுக்கு குடுங்க. அவருக்கு கலர் தேவையே இல்லை. எனக்கு ரி -பிரிண்ட் கலரில் வந்தது ஓகே தான், பட் தல can manage without கலர்.
ஐடியா 4: கலர் quality அப்படியே இருக்கட்டும். மறுபடி பழைய பாணிக்கு போக வேண்டாம். அது கிளாசிக், இது மாடர்ன்.
ஐடியா 5: எண்ணிக்கையை குறைப்பது. என்னை பொறுத்த வரை ஒகே. Yearly 30. மற்றவர்களுக்கு எல்லாம் பேஜார் ஆகி விடும்.
ஐடியா 6: எத்தனை விலை ஏத்தினாலும் நம்ம பூக்குகளை வாங்கும் நண்பர் வட்டம் இருக்கும்போது மினிமம் guarantee இருக்கிறது. கவலை பட வேண்டியதில்லை என்றாகிறது.
ஐடியா 7: கம்பி மேல நடக்க வேண்டியது தான் 2019 க்கு.
என் எண்ணங்கள்:
1. ரி-ப்ரிண்ட்ஸ் சுத்தமாக நிறுத்தி விடுங்கள். நீங்கள் ரி -பிரிண்ட் பண்ணும் புத்தகம் என்னிடம் இல்லாத பட்சத்தில் மட்டும் தான் வாங்குகிறேன். ஏனெனில் அந்த பணத்தை வைத்து புது புத்தகங்களை வாங்க
உபயோகித்து கொள்கிறேன். என்னை பொறுத்த வரையில், பழைய பூக்கே போதும். என்னதான் கலரில், சைஸில், வசனத்தில் மெருகற்றி வந்தாலும் அதே கதை தானே.
2. என்னை மற்றும் என் டீமை நல்லாத்தூரு நாளில் நான் வேலை செய்து கொண்டு இருந்த நிறுவனத்தில் இருந்து தூக்கி விட்டார்கள், 8 மாதங்கள்ஆகின்றன வேலை இல்லாமல். இப்பொழுது நான் கிராபிக்
டிசைனிங் மற்றும் வெப் டிசைனிங் கோர்ஸ் படித்து வருகிறேன். என்னுடைய சேமிப்பில் இருந்து தான் என் குடும்பத்தையும் நாட்களை ஒட்டி கொண்டு வருகிறேன். இருந்தபோதிலும், இந்த வருஷம் நான்
கிட்டத்தட்ட ஒரு 6௦௦௦ ரூபாய்க்கு முத்து, லயன், கிராபிக் நாவல் என காமிக்ஸ் வாங்கி இருக்கிறேன் வேலை போன பிறகு. இரத்த படலமும் அதில் அடக்கம்.
காமிக்ஸ்க்காக நாங்கள் விலை ஏற்றத்தை பொருட்படுத்த மாட்டோம் என்பதற்கான உதாரணம் நான்.
3. இரத்த படலம் தான் இத்தனை வருடங்களில் என் முதல் சந்தா. ஏன்? ஏனென்றால் மிக குறைந்த பதிப்புகள். விட்ட போச்! என்ற நிலையில் நான் சந்தா கட்டினேன்.ஆக, பிரிண்ட் ரன் கம்மி பண்ணுங்கள். அத்தனை
பூக்குகளும் சீக்கிரம் தீர்ந்து போகும்.
4. மாற்றங்கள் ஒன்றே தான் மாறாதது. நீங்களும் பல்லை கடித்து கொண்டு தயாரியுங்கள், நாங்களும் பல்லை கடித்து கொண்டு வாங்குகிறோம்.
5. இதற்க்கு நடுவில் நம்ம விற்பனையை ஏற்றி விட்டே ஆக வேண்டும். காமிக்ஸ் உலகிற்கு அதை ச்சி ச்சி என்று நினைத்து கொண்டு இருப்பவர்களின் எண்ணத்தை மாற்ற நாம் முயற்சிக்க ஆரம்பிக்க வேண்டும்.
சீரியசாக!!!
சரி என் விமர்சனங்கள்
பழையது:
-------
1. தனியே ஒரு வேங்கை - கிட்டை தனியே ஒரு பயங்கர பயணத்திற்கு அனுப்பிவிட்டு தானும் தன் மகனுடன் போய் சேருகிறார். இடையில் சில உரசல்கள் சிலருடன். இந்த கால்வாய் அளக்கப்போகும் வேலையை
முட்டுக்கட்டை போட பல பேர் காத்து கொண்டு இருக்கும் பயங்கர பயணத்தில் டெக்ஸும் சேருகிறார்.
2. கொடூர வனத்தில் டெக்ஸ் - அப்பப்பா என்ன ஒரு பயங்கர வனம், இப்படி டெக்ஸ் வில்லருக்கு அடுக்கு அடுக்காக இத்தனைபிரெச்சனைகள் ஒரே நேரத்தில் வருவது போல் பார்த்தது இல்லை. உயிர் எப்பொழுது
வேண்டுமானாலும் போய் விடும் என்று இருக்கும் நிலையில் டெக்ஸும் கிட்டும் நடத்தும் சாகசங்கள் மெய் கூச்சரியவைக்கும்.
3. சித்திரமும் கொல்லுதடி - ராபினின் ஒரு அட்டகாசமான டிடெக்ட்டிவ் ஸ்டோரி. இதில் வளர்ச்சி குன்றிய ஒரு ஞான திருஷ்டி உடைய ஒரு சிறுவனின் உதவியுடன் கொலையை துப்பு துலக்குவதே கதை.
புதியது:
------
XIII முடிந்தது. என்ன சொல்ல, என்னத்த சொல்ல, ஒரு படம் அல்லது அமெரிக்க சீரியலுக்கு எடுக்கும் சிரத்தையை இந்த கதையில் காட்டி இருக்கிறார்கள், எத்தனை ட்விஸ்ட்டா சாமி. ஒவ்வொரு பாகமும் ஒரு
முடிவு குடுத்தாலும் 17 பாகத்தில் தான் XIII யார் என்று தெரிய வருகிறது.
இது ஒரு சகாப்தம், எனக்கு படித்த ஞாபகம் சுத்தமாக இல்லாததினால், புதிதாக கலரில் படிக்கும் அனுபவமே அலாதி அனுபவம். ரசிச்சு ருசிச்சு குழம்பி படித்தேன்
மின்னும் மரணம் படித்த பிறகு ஏற்பட்ட உணர்வை விட இதில் ஒரு இது... அது எதுன்னு சொல்ல முடியவில்லை.. உணர்வு அதிகம்.
நெறய எழுதினால் பிடிக்காதவர்களுக்கு ஸ்பாய்லர் ஆக கூடும் என்பதால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்.
புலன் விசாரணை ஆரம்பித்து இருக்கிறேன். இது மெதுவாக தான் செல்லும் ஆனால், புரியாமல் இருந்த இடம் எல்லாம் இதை படிக்க புரிய ஆரம்பிக்கிறது
எவ்ளோ பெரீரீய்ய்ய மாத்ரே??
Deleteபுலன் விசாரணை பாதி படித்து விட்டேன். ஒரு சின்ன சந்தேகம்.இதில் வரும் பலவகையான விமானங்களின் போட்டோக்கள் எல்லாம் ஆசிரியரின் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக இணைக்கப்பட்டு இருப்பதாக நினைக்கிறேன்.
Deleteபலதரப்பட்ட சந்தாக்கள் & சிறப்பிதழ்கள் மற்றும் அளவுப் பதிப்புகள் - இவற்றின் மொத்தத் மதிப்பு, கூரியர் சேர்த்து ₹.'பெரும்பான்மை வாசகர்களுக்கு உறுத்தலாகத் தோன்றாத தொகை'/- க்கு மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்! என்னைப் பொறுத்த வரையில் ₹4000/-
ReplyDelete6000 ... :-)
Delete8000 :-P
Delete10,000 ;-)
Delete10001
Deleteநமக்கு தொடர்ந்து புத்தகங்கள் வர வேண்டும் என்றால் மாதம் தோறும் வரும் புத்தகங்களுக்கு உங்கள் விமர்சனங்களை தவறாமல் பதிவிடுங்கள்.முடிந்த அளவு பாஸிட்டிவ் விமர்சனம் செய்யுங்கள், பிடிக்கவில்லை என்றால் நயமாக சுட்டிகாட்டுங்கள் (அப்படி எழுத தெரியவில்லை என்றால் பாஸிட்டிவ் விமர்சனம் மட்டும் போடுங்கள்). உங்கள் கோபம் மற்றும் ஆதங்கத்தை e-mails மூலம் ஆசிரியருக்கு தெரியப்படுத்தவும்.
ReplyDeleteஇங்கு நிலவும் பாஸிட்டிவ் விமர்சனம் மற்றும் நல்ல சூழல் நமது விற்பனை மற்றும் வாசகர் வட்டத்தை அதிகரிக்கச் செய்யும். எதிர்காலத்தில் வாசகர் வட்டம் அதிகரித்தால் புத்தகங்களின் விலை குறைய வாய்ப்பு உண்டு.
எல்லாரும் சொல்ற மாதிரி நாலுவரியில சொல்லிட்டு போலாமே ? நீட்டி முழக்கத்தான் போறீங்களா ? குழப்பமா சொல்லாதீங்க...குழப்பம் வேணும்னா இதோ ‘’ஜானியோட மரணம் தரும் தேவன் ‘’வரப்போவுது அதை படிச்சுக்குறோம்....பெரியவங்க சொன்னத சொல்லப்போறீங்களா? என்னது ! ஓ! சொந்த சரக்கு எதுவும் இல்லையா ? ஒத்துகிட்டா சரி !
ReplyDeleteவீணைதன் நரம்பை விரல் மீட்டும்போது
மிருதங்க ஒலி தோன்றுமா ?
இது எதுக்கு !? ஓ! சைஸ் –ஆ ? ஒரிஜினல் சைஸ் படிச்சு பழகியாச்சு ...சின்ன சைஸ் –ஆ போட்டா ஒரிஜினல் சைஸ்ல படிச்ச சந்தோஷம் வராதுன்னு சொல்ல வரீங்க ...அப்புறம் ?
விளக்கேற்றி வைத்து பகல் நேரம் வைத்தால்
விளைகின்ற ஒளி தோன்றுமா ?
இது எதுக்கு ? வண்ணமா ? ஒரிஜினல் கலர்ல வந்ததை கருப்பு வெள்ளையில குடுத்தா கதை ,சித்திரம் நல்லா இருந்தாலும் அதன் தாக்கம் இல்லாமல் போயிடும்னு சொல்ல வர்றீங்க ? அப்புறமேட்டு ?
திரி அழல் காணின் தொழுப ; விறகின்
எரி அழல் காணின் இகழ்ப
போச்சு ..மறுபடியுமா ? அப்படின்னா ? விளக்கு சின்னதா இருந்தாலும் அதன் சுடரை பாத்து எல்லாரும் கும்பிடுவாங்க ..சரி ..விறகு நிறையா போட்டு எரிச்சாலும் அதன் ஒளியை வணங்க மாட்டாங்க ..சரி .
என்ன சொல்ல வர்றீங்க ? ஓ! உயர்தர தாளில் இதழ்கள் கம்மியா போட்டா கூட ஏத்துக்குவாங்க ..
நியூஸ் பேப்பர் தாளில் நிறைய இதழ்கள் போட்டாலும் ஒத்துக்க மாட்டாங்க ..சரிதானே ? மேல
சொல்லுங்க
கறக்கின்ற பாலை சுரக்கின்ற மடிக்குள்
அனுப்புதல் நடக்காதம்மா ..
இது புரியுது ...பிரிண்ட் ரன் பத்தி சொல்ல வர்றது மாதிரி தெரியுது ..அடிச்ச புஸ்தகங்கள் அடிச்சதுதான் ..அதை நம்மளால ஒண்ணும் பண்ண முடியாது ...
கடல் வற்றிப் போகும் கருவாடு தின்னலாம் என
உடல் வற்றி காத்து இருக்கும் கொக்கு ..
2500 அடிச்சு 1500 –ஐ தட்டு தடுமாறி விற்று மீதி 1000 விக்கும்னு எதிர்பாக்கறது கொக்கின் நிலைமை மாதிரி ஆகிப்போகும்னு சொல்ல வரீங்க ...1500 அடிச்சு அதுக்கான விலையை சொல்றது தப்பில்லைங்றீங்க ...
சூரிய ஒளியும் வெம்மையும்
ஓ ! அதானே பாத்தேன் ..பாட்டனி வந்தாச்சா ? சூரிய ஒளி ஜீவாதாரம் ..ஒளிச்சேர்க்கை நடந்தாதான் நம்ம சோறு தின்னமுடியும் ...பத்தாததுக்கு வெளிச்சம் தருது ...ஆனா வெம்மை தருவதும் அதுதான் ...காமிக்ஸ் திங்கணும்னா விலை அப்படிங்கற வெம்மையையும் தாங்கித்தான் ஆவணும் ..அதானே ..
வரப்பை காக்க வயலை விற்பதா ?
விலை வரம்பை நிர்ணயிக்க நம்ம இப்போதைய அடையாளத்தை தொலைச்சுடப்படாது...சரியா ?
நூலும் திரியும்
ஓஹோ ! நூலை நாலு துண்டு வச்சு எண்ணையில முக்கி எடுத்து தீப்பத்த வச்சா எரிஞ்சு போவும் ..பத்து துண்டு வச்சு பத்த வச்சா திரியா மாறி எரியும் .... எண்ணிக்கை சில சமயம் மிக முக்கியம் அப்டீங்கிறீங்க .ஆக எண்ணிக்கை, தாளின் தரம் ,வண்ணம் ,சைஸ் எதுவும் மாறப்படாது ....அதானே ...முடிவா சொல்றது என்ன ?
விலை எம்புட்டு தேவையோ அவ்வளவு ஏத்திக்கலாம் ...சம்முவத்தை மாட்ட கட்ட சொல்லலாம் ..
அப்பாடி! ஒத்த வரிக்கு எத்தனை சுத்து ! இதுக்கு ரிம்போ கவிதையை கூட படிச்சுடலாம் போல .
செம பொருளர் ஜி👏👏👏👏👏
Deleteஎண்ணிக்கையை ஏத்த சொல்லுங்க சார்
Deleteஇதுதான் நாலு வரியில நறுக்குன்னு சொல்றதா சார்?
Deleteடியர் விஜயன் சார்,
ReplyDeleteஎண்ணிக்கையில் கை வைக்க வேண்டாம் சார்.... விலையேற்றம் என்பது தவிர்க்க இயலாததது எனக் கண்கூடாக தெரிகிறது, நண்பர்கள் அனைவரும் இந்த சூழ்நிலையை புரிந்து கொள்வார்கள் சார் ...
திருப்பூர் ப்ளுபெர்ரி (அ) நாகராஜன்