Powered By Blogger

Saturday, September 01, 2018

ஒரு இலையுதிர் மாதத்து ரம்யங்கள் !!

கண்மணி....அன்போடு ஆந்தைவிழியன்  நான் எழுதும் கடிதம்..லெட்டர்.... கடுதாசி...இல்லே..பதிவு  ! பொன்மணி... உன் வீட்டில டெக்ஸ்... ட்ரெண்ட்... இளவரசி... ஷோம்ஸ்...சௌக்கியமா ? நாங்க இங்கு சவுக்கியமே  !! 

நண்பர்களே,

வணக்கம். நேற்றைக்கு ராவில் பார்த்த படத்தின் பாதிப்பா ? அல்லது இம்மாதத்து இதழ்களை நீங்கள் வாஞ்சையோடு வரவேற்றுள்ளதன் சந்தோஷமா ? என்று சொல்லத் தெரியவில்லை ; கவிதை சும்மா அருவியாய்க் கொட்டுது !! ஆனால் நம் மத்தியில் மெய்யான கவிஞர்களும், எழுத்தாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும் இருக்கும் போது உப்மா கவிஞர்கள் அடங்கிக் கிடப்பதே சாலச் சிறந்தது என்பது புரிவதால் - பெருமூச்சோடு அந்த கவிதை mode-க்கு விடை கொடுத்து நகர்கிறேன் !! கவிதை mode-க்கு நான் டாட்டா காட்டினாலும், நம் கதையோடு அது இம்முறை பின்னிப் பிணைந்திருப்பதால் - சித்தே அதனோடு உலாவியே தீர வேண்டும் நான் !! ஆனால் இதழ்களுக்குள் புகும் முன்பாய் உங்கள் சந்தோஷ வரிகளுக்கு நன்றி சொல்லும் கடமை எனக்குள்ளது !!

முதல் பார்வைகளின் வேளை மாத்திரமே இது ; இன்னமும் கதைகளுக்குள் புகுந்திருக்க முக்கால்வாசிப் பேருக்கு வாய்ப்பிருந்திராது ; அந்தக் கிணறுகளை தாண்டிட ஏகமாய் ஆற்றல் தேவை - என்பதெல்லாம் புரிகிறது ! ஆனால் கூரியரை உடைத்த நொடியிலேயே உங்களின் முதல் reactions கலப்படமிலா குஷியாய் அமைந்து விட்டதில் ஒரு சன்னமான திருப்தி  ! Oh yes - ஏழு கழுதை  வயசாகிப் போய் "நிறையவே பார்த்தாச்சு ; நிறையவே உணர்ந்தாச்சு" என்ற நிலையில் இருப்பினும் - உங்கள் ஒவ்வொருவரின் சந்தோஷங்களும்  "ஹை !!" என்று கண்கள் அகல என்னை மகிழ்வூட்டத் தவறுவதில்லை ! "எங்களுக்குத் தெரியும்லே...இந்த மாச புக்ஸ் ஹிட்டடிக்கும்னு எதிர்பார்த்தோமலே !!" என்ற தெனாவட்டு இதுநாள் வரையிலும் எழுந்ததில்லை ; and இம்மாதமும் அதற்கு விதிவிலக்கல்ல தான் ! இன்னும் சொல்லப் போனால் - "இரத்தப் படலம்" இதழுக்குப் பின்பாய் களம் காணும் இதழ்களென்ற முறையில் அவை ரொப்பிட வேண்டிய பூட்ஸ்களின் பரிமாணம் ரொம்பப் பெருசு என்ற புரிதலும், பயமும் கணிசமாகவே இருந்தன !! தவிர, வினோதமான "கள்ளமாட்டு syndrome" ஒன்றும்  "இரத்தப் படலத்தின் ரிலீசுக்குப் பின்பாய் என்னைப் பீடித்திருந்தது ! 'அட....பெருசையே தாண்டியாச்சு ; பொடுசுகளை ஊதிப்புட மாட்டோமா ?" என்றபடிக்கே நாட்களை விரயமாக்கித் திரிய  -ஆகஸ்டின் பெரும் பகுதி ஓட்டமெடுத்து விட்டது !! So முதுகில் நாலு சாத்து சாத்தி - மறுக்கா பள்ளிக்கூடத்துக்கு ஒரு மாதிரியாய் பிள்ளையை அனுப்பி வைப்பது போல என்னை நானே பணிகளுக்குள் ஆழ்த்திக் கொள்ள அவசியப்பட்டது !!

இம்முறை உங்களின் ஒருமித்த முதல் impression - அட்டைப்பட தரம் + பிரிண்டிங்கின் தரம் பற்றியே இருந்ததைக் கவனித்தேன் !! இம்முறை அதன் ஒரு கணிசமான பங்கை நமது inhouse அணி கோரிடலாமென்பேன் - simply becos இம்மாதத்து 4 ராப்பர்களுமே  கோகிலாவின் உருவாக்கமே !! "சைத்தான் சாம்ராஜ்யம்" மட்டும் நமது ஓவியர்களின் பணிகள் ; பாக்கி மூன்றின்  வடிவமைப்பும் நமது DTP அணியின் கைவண்ணமே ! அப்புறம் டிசைன் அழகாய் அமைந்துவிட்டால் - அச்சில் அட்டகாசம் செய்யும் தொழில் நுட்பங்களெல்லாம் இப்போது சந்து  பொந்தில் கூடப் பிரசித்தம் என்றாகிப் போயிருக்க ராப்பர்கள் டாலடிப்பதில் வியப்பில்லை என்பேன் ! உட்பக்கங்களைப் பொறுத்தவரை அச்சில் மிளிரும் அந்தக் கூடுதல் தரத்துக்குக் காலரைத் தூக்கி வீட்டுக் கொள்ள வேண்டியது படைப்பாளிகளே தவிர்த்து நாமல்ல ! டிரெண்ட் ; ஷோம்ஸ் - என இந்த இரு தொடர்களுக்குமே வர்ணமூட்டியது புராதன நாட்களிலல்ல !! So லேட்டஸ்ட் கம்பியூட்டர் கலரிங் யுக்திகள் ; புதுயுக ரசனைகள் என்று நிறைய ப்ளஸ் பாய்ண்ட்கள் தாமாய் அமைந்து விட்டுள்ளன இந்த new age ஆக்கங்களில் !! ஆதி காலத்துக் கதைகளெனில் -  ஏகமாய் அடர் வர்ணங்கள் ; நிறைய பஞ்சு மிட்டாய்க் கலர்கள் என்றிருக்கும் போது அச்சிலும் அவை பெருசாய்க் கண்னை பறிப்பதில்லை !! ஆனால் இம்முறையே அந்தச் சிக்கல்கள் லேது என்பதால், நீங்கள் புரட்டிடும் பக்கங்கள் உங்களைக் கட்டுண்டு போகச் செய்வதில் ஆச்சர்யங்களில்லை !! And "சைத்தான் சாம்ராஜ்யம்" பற்றிப் பேசவே அவசியமேது ? 'தல' நின்றாலும் அழகே ; நடந்தாலும் அழகே ; கறுப்பிலும் அழகே ; வர்ணத்திலும் அழகோ அழகே எனும் போது எங்கள் பாடு சுலபமாகிப் போனது !! So நாங்கள் வழக்கம் போலவே பணியாற்றியிருப்பினும் கிட்டியுள்ள ஒரிஜினல்களின் தரத்தின் புண்ணியத்தில் கொஞ்சம் பாராட்டுக்களில் நனைந்து கொள்கிறோம் !! 

Moving on, இம்மாதத்து இதழ்கள் பற்றிய உங்களது முதல் வரிகளுள் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய விஷயமொன்றுமிருந்தது !! அது தான் "சைத்தான் சாம்ராஜ்யம்" சார்ந்த மௌனம் !! ஜம்போவின் தரத்தையும், இளவரசியின் ஒயிலையும் , டிரெண்டின் சித்திர ஜாலங்களையும்  சிலாகித்தோருள் கலர் மறுபதிப்புக்கு பெருசாயொரு mention கூட இருக்கவில்லை என்பதை நீங்கள் கவனித்தீர்களோ - இல்லையோ ; நான் கவனித்தேன் !! In many ways - அதன் பொருட்டு எனக்கு வருத்தமில்லை !! புதுசுகள் கொணரும் ஒரு freshness முன்பாய் 'தல'யே ஒரு மறுபதிப்போடு வந்தாலும் பெரிதாயொரு  தாக்கம் இல்லையெனில் - அது என்னைப் பொறுத்தவரையிலுமாவது, ஊக்கமூட்டும் சமாச்சாரமே !! So அந்த சந்தோஷத்தோடே - இதழ்களுக்குள் புக முயல்கிறேனே !!   

"களவும் கற்று மற !" டிரெண்டின் இந்த ஆல்பம் வெளிவரும் தருணம் இங்கு நிச்சயம் சுவாரஸ்ய அலசல்களுக்குப் பஞ்சமிராதென்று நான் போன மாதமே எங்கோ எழுதியிருந்தேன் !! அந்நேரம் நண்பர் கா.பா.வின் மொழிபெயர்ப்பு முயற்சி பற்றிக் கூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை !! இருப்பினும் இந்த ஆல்பத்தின் கதையினில் எனக்குத் தோன்றியதொரு ஈர்ப்பை நீங்களும் உணராது போக மாட்டீர்கள் என்ற ஒரு நப்பாசையில் / நம்பிக்கையில் அந்த comment போட்டு வைத்தேன் ! பின்னாட்களில் நண்பரின் கவிதை மொழிபெயர்ப்புத் தொகுப்பு பற்றிய தகவலும் கிட்டிய போது ஒரு சட்டி சுண்டக் காய்ச்சிய பாலைப் பார்த்த மியாவியைப் போலானது என் வதனம் !! வெகு சீக்கிரமே பொருளாளர் இதற்கென எழுதவிருக்கும் அலசல் கட்டுரைகளும் ; நண்பர்கள் மிதுனன் ; கோவிந்தராஜ் பெருமாள் ; J ;  et al செய்திடவுள்ள அகழ்வாராய்ச்சிகளையும் &  அவற்றைப்  படித்த கையோடு இதர நண்பர்களெல்லாம் அடிக்கவிருக்கும் லூட்டிகளையும் மனக்கண்ணில் நிறுத்திப் பார்த்ததன் பலனாய் விளைந்த புன்னகை அது !! இப்போதிங்கே  கதையின் களம் பற்றி in depth நான் போகப் போவதில்லை - because உங்களுள் பெரும்பாலோர் இன்னமும் அதனைப் படித்திருக்கத்  துவங்கியே இருக்க மாட்டீர்கள் !! So எப்போதும் போலே நீங்களாய் படித்து, அலசி, ஆராய்வதே சுகப்படும் என்பதால் - நான் பராக்குப் பார்க்க முன்வரிசையில் ஒரு சீட்டுக்குத் துண்டை மட்டும்  போட்டு  வைத்திருக்கிறேன் ! ஆனால் ஒரு வரலாற்றுக் கவிஞனின் படைப்புகள், நமக்கு மிகவும் பரிச்சயமானதொரு   இலக்கியவாதியின் கைவண்ணத்தில் மொழிமாற்றம் கண்டு தமிழுக்கு அழகாய் வரும்  அதே தருணத்தில் தானா  - "யே..டமுக்கு டப்பா..!! யே...தகர  டப்பா ...!!" என்று பாட்டெழுதும் நானும் அதே கவிஞன் சார்ந்த கதையைக் கையிலெடுப்பேன் ???  ஈரோட்டில் நம் கலந்துரையாடலின் போது - கதைகளின் மத்தியில் வரும் கவிதைகள் பற்றிய பேச்சு எழுந்த போது - "செப்டெம்பரில் காத்துள்ளது ஒரு கவிதை பிரவாகம் !!" என்று நான் வாய்மலர்ந்த சமயம் கூட எனக்கு இந்தச் சமாச்சாரம் தெரியாது !! இல்லையெனில் நோகாமல் தருமியாகிப் போயிருப்பேன் - கோவில் மண்டபத்தில் பாட்டெழுதி வாங்கிடும் விதத்தில் !! என்னவொரு கொடுமை கா.பா. சார் !! எது எப்படியோ -தொடரும் நாட்களில் நிறையவே கூத்து காத்துள்ளது என்று மட்டும் தெரிகிறது !! ஏதோ - பார்த்து "செஞ்சிடுங்க" சகோஸ் !! 

On a sober note - டிரெண்டின் கதை இரு extreme ரியாக்ஷன்களைக் கொணர வல்லது என்பது புரியாதில்லை எனக்கு ! "அய்யே !!" அணி  பெரும்பான்மையாக அமைந்தாலுமே நான் பெரிதாய்க் கவலை கொள்ள மாட்டேன் - because இந்தத் தொடரின் முழுமையுமே ஒரு மென்னுணர்வுகளின் குவியல் + சித்திர சொர்க்கம் என்பது எனக்குத் தெரியும்  !! கனடாவின் தூதரகத்தில் பணியாற்றும் நண்பர் காரைக்கால் பிரசன்னாவின் ஒத்தாசைகளின்றியே ; விசாவுமின்றி ; டிக்கெட்டுமின்றி ; வெறும் 75 ரூபாய்க்கு கனடாவின் அதகள இயற்கை எழிலை ரசிக்கும் வாய்ப்பு நித்தமும் வாய்த்திடாது தானே ? !! So சில்லு மூக்குகள் சிதறாவிடினும் இந்தப் புதியவருக்கு சற்றே சலுகை காட்டிடலில் தவறில்லை என்று படுகிறது !! And சமீபமாய் இதன் ஆல்பம் # 3 -ஐப் பார்த்தேன் ; Uffffff ...சித்திரங்கள் உலுக்கி எடுக்கின்றன !! So ஆண்டுக்கு ஒருமுறையேனும் இதுபோன்ற கண்ணுக்கு விருந்தினை அனுமதிப்பதில் பிழையிராதென்றே தோன்றுகிறது !! ஆவலாய்க் காத்திருப்பேன் இந்த இதழின் அலசலுக்கு !! இலையுதிர் காலத்தின் வருகையை உணர்த்துவதே பழுப்பேறும் இலைகளும் ; மஞ்சளாய்க் காட்சி தரும் மரங்களுமே !! அத்தகையதொரு அட்டைப்படத்தோடு ட்ரென்டின் இந்த ஆல்பம் கனகச்சிதமாய் இலையுதிர்காலத்தின் இறுதி மாதத்தில் நம் முன்னே நிற்பதும் அழகானதொரு coincidence தானோ ? 
ஜம்போ !!! சில தருணங்களில் லேட்டானாலும், லேட்டஸ்ட்டாய் ; அழகாய்ப் பணிகள் அரங்கேறிடுவதுண்டு !! ஜம்போ காமிக்சின் அனுபவங்களும் இந்த ரகத்திலானவை தான் !! இதுவரையிலுமான  2 இதழ்களுமே தத்தம் பாணிகளில் score செய்துள்ளது ஆண்டவனின் கொடையென்பேன் !! ஹெர்லக் ஷோம்ஸ் நமக்கு ஏற்கனவே பரிச்சயமான நாயகரே என்றாலும், இவரை வண்ணத்தில் தரிசிப்பது ஒரு புது வித அனுபவம் தான் !! இதன் பிதாமகர் ஜூல்ஸ் இந்தாண்டு தனது 90 வது அகவையைக் கொண்டாடும் ஜாம்பவான் !! முழுக்க முழுக்க லாஜிக்கெனும் சமாச்சாரமே இல்லா ஜாலியான ஆக்கங்கள் மட்டுமே எனும் போது - தீவிர கார்ட்டூன் ரசிகர்களின்றி மற்றவர்களுக்கு இவை அவ்வளவாய் சுகப்படாது என்ற புரிதல் இருந்தாலுமே - இதனை ஒரு breezy read-க்கென உங்கள் முன் கொணரும் ஆசையை எனக்கு அடக்கிட இயலவில்லை ! இந்தத் தொடருக்கான உரிமைகள் ரொம்பவே costly என்றாலும் - அந்தக் குடைமிளகாய் மூக்கு டிடெக்டிவ்வை மறுக்கா நம் அணிவகுப்பினில் அழகு பார்க்க வேண்டுமென்ற நமைச்சல் சென்றாண்டில் வெற்றி கண்டது ! போன நவம்பரிலேயே கதையை வாங்கி விட்டிருந்த போதிலும், வழக்கமான கார்ட்டூன் சந்தாவில் நுழைத்திட வேண்டாமேயென்று பட்டது ! All serious கதைகள் கொண்ட ஜம்போவின் தடத்தில் ஒரேயொரு light read இருந்தால் தேவலாமென்று நினைத்ததால் ஷோம்ஸ் & wasteமகன் ஜோடியை துயில் பயிலச் செயதேன் என்  பீரோவினில் !! இந்தக் கதைகளை உங்கள் வீட்டு சிறுசுகளுக்கும் சொல்ல முயற்சித்துப் பாருங்களேன் guys - நிச்சயம் ரசிக்குமென்று பட்சி சொல்கிறது !! 
Next in line - இளவரசி !! என்ன சொல்வது இவரைப் பற்றி ?!! "காணோமே..காணோமே..எங்க மாடஸ்டியைக் காணோமே.." என்று பதை பதைத்து வந்த நண்பர்களிடமே இனி பந்தை  லாவகமாய் அடித்து ஆடும் பொறுப்பு தங்கியுள்ளது !! ஒரு decent அட்டைப்படத்தோடு - ஒரு ஆக்ஷன் கதையினை - எவ்வித ஓட்டுக்களுமின்றி - தெளிவான சித்திரங்களில் - நார்மலான  மொழிபெயர்ப்போடு வழங்கியுள்ளோம் ! So இதனில் கிட்டும் வெற்றியோ-தோல்வியோ தான் இத்தொடரின் litmus test - நம்மளவிற்காவது !! Oh yes - ஒரு உலகளாவிய நாயகியை எடை போடுமளவுக்கு நாமெல்லாம் அப்பாடக்கர்கள் அல்லவே & நாம் போடும் மார்க்குகள் அந்த சர்வதேச சூப்பர்ஸ்டாரின் தரம் மீதானதொரு statement-ம் ஆகிடாது !! நாம் வெளியிட்டாலும்,வெளியிடாது போனாலும் மாடஸ்டி ஒரு சகாப்தம் என்பதில் ஐயமேது ? ஆனால் சின்னதான நம் வட்டத்துக்கு இன்னமும் இந்தத் தொடர் மீது மையல் தொடர்கிறதா  - இல்லையா ? என்பது மாத்திரமே இந்தத் தருணத்தின் நம் வினா !! And  "ஒரு விடுமுறை வில்லங்கம்" சொல்லவிருக்கும் பதிலே நாம் செல்லவிருக்கும் திசைக்கொரு வழிகாட்டி !! ஆகையால் ரொம்ப ரொம்ப ஆர்வமாய்க் காத்திருப்போம் உங்களின் அலசல்களை அறிந்திட !! 
TEX in Color & COLOR TEX !!! வண்ணமூட்டப்பட்ட முந்தைய தலைமுறையின் கதை "சைத்தான் சாம்ராஜ்யம்" !! அது Tex in Color !!! And  வண்ணத்திலேயே உருவாக்கப்பட்ட இந்தத் தலைமுறையின் புத்தம் புதுப் படைப்புகளில் ஒன்றே "மண்ணில் துயிலும் நட்சத்திரம் !!" அது COLOR TEX !! டெக்ஸ் வில்லர் கதைகளில் பணியாற்ற முன்வரும் எக்கச்சக்கப் புது கதாசிரியர்களுக்கும், ஓவியர்களுக்கு ஒரு பரிசோதனைக் களமாய் அமைவது இந்தச் சிறுகதைத் தொகுப்புகள் ! 32 பக்கங்களில் 'நச்'என்று கதை சொல்லும் டீம் பின்னாட்களில் முழுநீளக் கதைகளில் பணியாற்றும் promotion-க்கு தகுதி பெறுகிறார்கள் என்றே நினைக்கிறேன் !! எது எப்படியோ - மாறுபட்ட பாணியில் டெக்ஸ் & கோ-வை மீண்டுமொருமுறை உங்கள் முன்னே களமிறக்கிய  திருப்தியோடு நான் நடையைக் காட்டுகிறேன் ! Before I sign off - ஒரு குட்டியூண்டு கேள்வி !! "சைத்தான் சாம்ராஜ்யத்தில்" ஒரு சின்ன வித்தியாசமுள்ளது ! கவனித்தீர்களா ??
Bye all !! Have an awesome weekend !! செப்டெம்பர் இதழ்களின் விமர்சனங்களை ரவுண்டு கட்டி அடிப்பீர்களென்ற அவாவோடு புறப்படுகிறேன் !! See you around !!

369 comments:

  1. இரவு வணக்கங்கள் சார்..
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

    ReplyDelete
  2. Saithan சாம்ராஜ்யம்.. This story line is not worth for a reprint.. I read this story for the first time but couldn't complete it.Boring to the core.

    Reprints should continue but please choose the stories a little more carefully.

    Modesty is okay...

    Rest all.. Yet to read.

    ReplyDelete
  3. ///அய்யே !!" அணி பெரும்பான்மையாக அமைந்தாலுமே நான் பெரிதாய்க் கவலை கொள்ள மாட்டேன் - because இந்தத் தொடரின் முழுமையுமே ஒரு மென்னுணர்வுகளின் குவியல் + சித்திர சொர்க்கம் என்பது எனக்குத் தெரியும் ///

    சூப்பா்ங்க சாா்! 👏👏👏

    ReplyDelete
  4. மண்ணில் துயிலும் நட்சத்திரம்.. கதாநாயகன் இல்லை டெக்சு.. கதையே நாயகன்... யூகிக்க கூடிய கதையே என்றாலும், ஒரு மழை நாளில் மின்னும் மரணம் சூடான 4 மிளகாய் பஜ்ஜிகளுடன் படிப்பதை போன்ற அனுபவம்

    ReplyDelete
  5. ///"சைத்தான் சாம்ராஜ்யத்தில்" ஒரு சின்ன வித்தியாசமுள்ளது ! கவனித்தீர்களா ??///-----
    தல&கோ முதல் முறையாக நம் இதழ்களில் சிகப்பு சட்டை அணிந்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. இந்த சிகப்பு சட்டை டெக்ஸ் தான் LMS அட்டைப்படத்தில் காட்சி தருகிறார்.

      Delete
  6. ஆத்தா கதை போயிட்டு இருக்கு..

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. விஜயன் சார்,
    இந்த மாத புத்தகங்களை வரும் நாட்களில் படிக்க வேண்டும்.

    ஆனால் கடந்த மாத மெகா குண்டு இதழான இரத்த படலம் முழுவதுமாக இன்று தான் படித்து முடித்தேன். நான் xiii உடன் பயணம் செய்த அனுபவத்தை கொடுத்தது சில இடங்களில் நாம்தான் xiiiனோ என்று விழிக்க வைத்து.

    இந்த கதை இவ்வளவு விறுவிறுப்பாக அமைய காரணம் கதாசிரியர் அந்த பாத்திரமாக மாறியதுதான்: ஆமாம் ஒவ்வொரு பாகம் முடிந்த பின்னரும் xiii
    தனது மண்டைக்குள் குடைந்து கொண்டு இருக்கும் தான் யார் என்று தெரிந்து கொள்ள தனது உயிரையே பணயம் வைத்து பயணிக்கும் நாயகன். கதையின் முழுவதும் இவரின் இந்த தேடல் பிராதனமா அத்துடன் சென்டிமென்ட் ஆக்ஷன் என அட்டகாசமான விருந்து.

    இதனை படமாக எடுத்தால் கடந்த மூன்று வாரங்களாக இந்த புத்தகத்தை படித்ததால் எனக்கு கிடைத்த அனுபவம் கிடைக்குமா என்றால் கிடைக்காது என்பது தான் எனது பதிலாக இருக்கும். இதனை இந்த அளவு ஒன்றிப் படிக்க மற்றும் ஒரு காரணம் மொழிபெயர்ப்பு; முழு ஈடுபாட்டுடன் பணியாற்றிய உங்கள் காமிக்ஸ் காதலுக்கு நன்றி எடிட்டர் சார்.

    ReplyDelete
    Replies
    1. சிறு குறிப்பு: இ.ப இதற்கு முன்னர் தனித்தனியாக வந்த போது எல்லா பாகங்களும் என்னிடம் இல்லை. ஆனால் கருப்பு வெள்ளை குண்டு புத்தகம் உள்ளது அதனையும் நான் முழுமையாக படித்த ஞாபகம் இல்லை. ஆனால் இந்த புத்தகத்தை முழுவதும் படித்து விட்டேன் :-) காரணம் வண்ணத் தொகுப்பாக வந்தது இன்னும் ஒரு காரணம் கதையை முழுவதும் புரிந்து கொள்ளும் பக்குவம் :-)

      Delete
    2. என்னன்னவோ சொல்றீங்க.. நான் இன்னும் சின்னதம்பி கவுண்டமணி தான்..

      Delete
    3. ரம்மி @ நான் சின்னத் தம்பி கவுண்டரின் அஜிஸ்டென்ட்.:-)

      Delete
    4. ///என்னன்னவோ சொல்றீங்க.. நான் இன்னும் சின்னதம்பி கவுண்டமணி தான்..///

      இரத்தப்படலம் குறித்த டிஸ்கஷன் :-

      PfB : இவுருக்கு எதுக்கு கைதட்றிங்க?

      ரம்மி : ஏன் ..? இவுருதான் கதையிலயே ஒரு டர்னிங் பாயிண்டு. இவுரு வந்தபின்னாடிதான் கதையில ஒரு கசமுசால்லாம் ஏற்பட்டு ...ஹையோ..!!

      Delete
    5. சார், நான் இந்த மாதம் 2ஆம் தேதியிலிருந்து தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். தினம் ஒரு பாகம் என்று.

      Delete
  9. ///"காணோமே..காணோமே..எங்க மாடஸ்டியைக் காணோமே.." என்று பதை பதைத்து வந்த நண்பர்களிடமே இனி பந்தை லாவகமாய் அடித்து ஆடும் பொறுப்பு தங்கியுள்ளது !! ////

    மாடஸ்டியை காணாதது இருக்கட்டும்; மாடஸ்டி ரசிகர்களையும் சமீப காலமாய் காணோமே?!!
    தீவிர ரசிகர்களில் ஒருத்தர் எப்பயாவது மட்டும் இங்கே எட்டிப்பார்த்து 'மாடஸ்டி ப்ளைசி'ன்னு மட்டும் கமெண்ட் போட்டுட்டு காணாமப் போய்டுறார்...

    பக்கத்துக்குப் பக்கம் மாடஸ்டியை சிலாகித்து எழுதும் மற்றொரு மடிப்பாக்க ரசிகர் இன்னும் 'சிறையிலொரு சிட்டுக்குருவி'க்கே விமர்சனம் எழுதக்காணாம்!!

    கொஞ்சம் கொஞ்சமாய் பேக் சீட்டுக்குப் போய்க் கொண்டிருப்பது இளவரசி மட்டுமல்ல என்றே நினைக்கத் தோன்றுகிறது!

    ReplyDelete
    Replies
    1. அணிதலைவர்கள் இவர்களோடு, இன்னும்,

      ATR,
      JSK,
      G.P.,
      செந்தில் சத்யா,
      ப்ளைசி பாபு
      &சில நண்பர்கள், தீவிர மாடஸ்தி ரசிகர்கள் லிஸ்ட்ல இருக்காங்க,
      பார்ப்போம் எத்தனை விமர்சனங்கள் வரும்னு...!!!

      Delete
    2. எடிட்டருமே கூட தீவிரமான இளவரசி ரசிகர்தான்!

      ஆனா இப்போல்லாம் இளவரசியை சிலாகிச்சு அவர் எதுவுமே எழுதறதில்லை!!

      லேடி-S வந்ததுக்கப்புறம் தான் அவர்கிட்ட இந்த மாற்றம்னு தோணறது!!

      Delete
    3. ///எடிட்டருமே கூட தீவிரமான இளவரசி ரசிகர்தான்!///

      அது அறியாத வயசு...


      ///ஆனா இப்போல்லாம் இளவரசியை சிலாகிச்சு அவர் எதுவுமே எழுதறதில்லை!!///

      இது அறிஞ்ச வயசு....

      ///லேடி-S வந்ததுக்கப்புறம் தான் அவர்கிட்ட இந்த மாற்றம்னு தோணறது!!///

      இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.....

      Delete
    4. // இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.....//
      இது புரிஞ்ச வயசா இருக்கும்.ஹிஹிஹி.

      Delete
    5. குரு சிஷ்யன் @ நடக்கட்டும்...!!! ஹா...ஹா...!

      Delete
    6. அப்போ பென்சில் இடையழகி ஜூலியாவைக் கொணர்ந்த வயசை என்னவென்பதோ ?

      Delete
    7. Modesty screenplay(script writing) is very boring..but production is high standard....

      Delete
    8. மாடஸ் டி மறுபதிப்பு கூட கேட்கவில்லை. புதிய கதைகளில் வருடத்திற்கு இரண்டு(?ii ) தான் கேட்கிறோம். எங்கே ஆணாதிக்க மனோபாவத்துடன் படித்தால் மாடஸ்டிடி போர் ஆகத்தான் தோனும். ஜுலியாவையும் இப்படித்தான் ஓட்டுகிறார்கள். கிராபிக் நாவல் வேண்டும் வேண்டும் என் கிறார்கள். என்க் கு ஜூலியா கதை ஒவ்வொன்றும் கிராபிக் நாவல் போல் தான் இருந்தது. புரியும்படியும் கதை முடிந்தது. ஆனாலும்..

      Delete
  10. விஜயன் சார், இந்த மாத கார்டூன் கதை பக்கங்களை புரட்டிக் கொண்டு இருப்பதில் ரசித்த விஷயம் இந்த கதையின் ஓவியங்கள் ஏ க்ளாஸ் ரகம் அதற்கு வலு சேர்ப்பது போல் நமது அச்சுத் தரம். இவை புத்தகத்தை கையில் ஏந்திய உடன் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி விடும்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு குரங்கு வே(சே)ட்டை: இந்த கதை நாயகனைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் எனது மகளிடம் சொல்லி இன்று அந்த புத்தகத்தை புரட்டி படம் பார்க்க சொன்னேன். நாளை கதையை படித்து கதை சொல்ல ஆரம்பிக்க வேண்டும்.

      Delete
  11. ஜம்போ -
    ஒரு குரங்கு வே(சே)ட்டை + மேற்கில் ஒரு மேதாவி :-

    எய்யா சாமீ ஹெர்லாக்கு ....இம்புட்டு நாளா எங்கய்யா இருந்தீரு??

    ஒவ்வொரு முறையும் மாறுவேசத்தைப் போட்டுக்கிட்டு ஷோம்ஷு படுற பாட்டை நினைச்சா இப்பக்கூட சிரிப்பா வருது .!
    நாய் வேசம் போட்டா நாய் புடிக்கிறவர் கொக்கிய மாட்டுறாரு., பூந்தொட்டியா மாறி நின்னா, மூஞ்சியிலயே போஸ்டர் ஒட்டிடுறாங்க., இதெல்லாம்கூட பரவாயில்லை ..., பெண்சிங்கமா வேசம் போட்டு துப்பறியப் போனா, நாலஞ்சி ஆண் சிங்கங்கள் மொத்தமா காதல் வெறியில் விரட்டு விரட்டுனு விரட்டித்தள்ள ..ஹாஹா ..அய்யா ஷோம்ஷு உம்ம பாடு ரொம்ப சங்கடம்தானுங்கய்யா.!!
    வேஸ்ட்சன் ..பேரே சிரிப்பை வரவழைக்கிறது. போதாக்குறைக்கு கதையில் வரும் குரங்கின் பெயர் அனஸ்தீசியா, குதிரையின் பெயர் குளோரோஃபார்ம் ..ஹாஹா ..!!
    முதல் கதையில் ஹெர்லாக் குரங்கு வேசத்திலும், குரங்கு ஹெர்லாக் வேசத்திலும் கூடவே அந்த திருடனும் அடிக்கும் லூட்டி சிரிச்சி மாளலை ..! யாரு யாரை விரட்டுறாங்கன்னே தெரியாம செம்ம கலாட்டா.! அதுவும் அந்த கடைசிப் பேனல் ஹோஹோஹோ..!!

    ரெண்டாவது கதையில் பணயக்கைதியான இளம்பெண்ணை செவ்விந்தியர் உதவியுடன் பதுக்கி வைக்க நினைக்கும் வில்லனிடம் .. ரெண்டடிக்கு ரெண்டு இஞ்ச் ஜாஸ்தி உயரமிருக்கும் செவ்விந்திய தலைவன் ..பெண்ணை நான் வெச்சிக்கிறேன்., டீல் முடிஞ்சுது கிளம்புன்னு சொல்றப்போ வில்லன் முகம் போற போக்கிருக்கே ..ஹிஹி.!
    அந்தப்பெண்ணை ஒரு மரத்தூணில் கட்டிப்போட்டு காவல் வைத்திருக்கையில், இரவில் அந்தப் பெண்ணோடு மரத்தூணே மெல்ல நகர்ந்து போகிறது ..என்னடான்னு பாத்தா மரத்தூணா மாறுவேசத்துல இருந்தது நம்ம ஹெர்லாக்கு ...ஹாஹாஹா..! இப்படி புத்தகம் முழுக்க ரசிக்க சிரிக்க ஏராளம் கொட்டிக்கிடக்கு ..!

    மேலோட்டமாய் வசனங்களை மட்டும் வேகநடையில் படிக்காமல் சற்று நிதானமாய் சித்திரங்களையும் கதாப்பாத்திரங்களின் முகபாவங்கள் அங்கசேஷ்டைகள் என எல்லாவற்றையும் ரசித்துப் படித்தால் ஹெர்லாக் ஷோம்ஸ் கதைவரிசை நூற்றுக்குநூறு அனைவரையும் கவரும் என்பது என் கருத்து.!

    அட்டை மேக்கிங்கும் சித்திரங்களும் உட்பக்க பிரிண்டிங் தரமும் எக்ஸலண்ட்டுக்கும் மேலே ஏதாவது ..!

    இனி ஜம்போ சந்தாவில் ஹெர்லாக் ஷோம்ஸ் நிரந்தரமாய் இருப்பார்.!

    ரேட்டிங் 1008/10

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரமே படிப்போம்!

      படிச்சுட்டு நாங்களும் கெக்கபிக்கேன்னு சிரிப்போம்!!

      Delete
    2. எனக்கு இந்த ஹேர்லாக் சுகபடலை. விலா நோகவைக்கும் சிரிப்பு எண்டெல்லாம் இல்லை. ஏதோ ok ரகம் தான்.

      Delete
    3. // ரேட்டிங் 1008/10 //
      இன்னும் ரெண்டு மார்க் சேர்த்து போட்டுருக்கலாம்,இருந்தாலும் இவ்ளோ ஸ்ட்ரிக்டா இருக்கக் கூடாது போங்க.

      Delete
  12. நிஜம் சொல்வதென்றால் காமிக்ஸ் படிப்பது வெறும் பொழுதுபோக்கு என்ற அளவில் மட்டுமே நான் பாா்ப்பதில்லைங்க சாா்!!

    ட்ரெண்ட் கதையில் வரும் அந்த இளம் கவிஞாின் வாழ்க்கை வரலாற்றையும், கவிதைகளையும் படிக்க வேண்டும் என்ற ஆா்வம் முதல் பாா்வையிலேயே மேலோங்கியிருக்கிறது! நிச்சயம் அது எனது விருப்பத்திற்குாியதாய் இருக்கக் கூடும்!! இதுபோல பல புதிய தேடல்களையும், புாிதல்களையும் பலமுறை நமது காமிக்ஸ் இதழ்கள் வழங்கியிருகின்றன! வழங்கியும் வருகின்றன!!

    என்னளவில் எனக்கு பிரெஞ்சு தேசத்தின் மீது ஒரு தனித்த ஈா்ப்பு உண்டு! காரணம் இலக்கியங்களுக்கும், பல்வேறு கலை மற்றும் அழகியல் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தேசம் என்பதே!!

    அதிலும் குறிப்பாக நாம் பொிதும் விரும்பும் காமிக்ஸ்களில் பெரும்பான்மை பிரெஞ்சு தேசத்தவையே என்னும் போது அதன் மீதான காதல் பன்மடங்காகிறது!!

    அதன் பயனாகவே தற்போது பிரெஞ்சு மொழியை கற்கும் பணியிலும் இறங்கியிருக்கிறேன்!

    விரைவில் DELF A1 எழுதப் போகிறேன்!

    காமிக்ஸ் காதல் ஒரு அந்நிய மொழியை கற்க வேண்டும் என்ற ஆவலையும் உண்டாக்கி, அதை நோக்கி ஓடவும் வைக்கிறது! தேங்க் யூ சாா்!!

    எப்படியும் ஒருநாள் எனது பேவரட் லக்கி, ஸ்மா்ப், XIII எல்லாத்தையும் பிரெஞ்சு மொழியிலேயே படிக்க வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் கனவு!

    ReplyDelete
    Replies
    1. ////காமிக்ஸ் காதல் ஒரு அந்நிய மொழியை கற்க வேண்டும் என்ற ஆவலையும் உண்டாக்கி, அதை நோக்கி ஓடவும் வைக்கிறது! தேங்க் யூ சாா்!!////

      அருமை!!!

      ///எப்படியும் ஒருநாள் எனது பேவரட் லக்கி, ஸ்மா்ப், XIII எல்லாத்தையும் பிரெஞ்சு மொழியிலேயே படிக்க வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் கனவு!
      ///

      படிச்சுட்டு எங்களுக்கும் கதை சொல்லுங்க மிதுன்!!

      Delete
    2. பலே மிதுன். நீங்க முடிச்சுட்டு காமிக்ஸ் மொழிபெயர்க்க ஆரம்பிக்க வாழ்த்துகள்

      Delete
    3. ///அதன் பயனாகவே தற்போது பிரெஞ்சு மொழியை கற்கும் பணியிலும் இறங்கியிருக்கிறேன்!

      விரைவில் DELF A1 எழுதப் போகிறேன்///


      சூப்பர் மிதுன் ..!!

      Delete
    4. கி.நா.கள்லாம் பிரெஞ்சு கத்துண்டு, பொளந்து கட்டபோறீங்க. வாழ்த்துகள் மிதுனரே💐💐💐💐💐

      Delete
    5. // விரைவில் DELF A1 எழுதப் போகிறேன் //

      வாழ்த்துக்கள் மிதுன்.

      Delete
    6. தூள் கிளப்புங்க சார் !! நமக்கெல்லாம் பந்தியில் அமரும் போதே - பெண்வீட்டு விருந்தாளியா ? மாப்பிள்ளை வீட்டு விருந்தாளியா ? என்பது கூட நினைவிருக்காது !! நீங்கள் ஒரு புது மொழியையே கற்றுக் கொள்ள முனைவது ஓஹோ !!

      Delete
    7. நன்றி! நன்றி!!
      வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!!!

      Merci beaucoup!!!

      Delete
    8. அடி சக்கை!!

      தூள் கிளப்புங்க மிதுனன் சார்.

      Delete
  13. ///கண்மணி....அன்போடு ஆந்தைவிழியன் நான் எழுதும் கடிதம்..லெட்டர்.... கடுதாசி...இல்லே..பதிவு ! பொன்மணி... உன் வீட்டில டெக்ஸ்... ட்ரெண்ட்... இளவரசி... ஷோம்ஸ்...சௌக்கியமா ? நாங்க இங்கு சவுக்கியமே !! ////


    மனிதர்கள் படித்துப் புரிந்துகொள்ள இது சாதா காமிக்ஸ் அல்ல... அல்ல... அல்ல... (ஊஊஊஜ்ஜ்ஜ்....) அதையும் தாண்டி கி.நா போன்றது...

    ReplyDelete
    Replies
    1. 🎶சில கி.நா.வால சாத்து வாங்கி,
      வாங்கி எந்தன் முதுகு பழுத்து போனது 🎶
      🎶🎶எந்த சாத்து வந்த போதும் என் முதுகு தாங்கி கொள்ளும்...
      உந்தன் முதுகு தாங்காது செம்மானே🎶🎶
      🎵கி.நா.வுக்கா இந்த நிலைமை என எண்ணி எண்ணி அழுகை வந்தது🎵
      🎵எந்தன் சோகம் உங்களை தாக்கும் .. என்றென்னும் போது வந்த அழுகை நின்றது 🎵

      🎼எல்லோரும் ஏற்றுக் கொள்ள இது டெக்ஸ் கதையும் அல்ல,
      கி.நா.என்பது புாிந்து போனது 🎼

      Delete
    2. 🎵அபிராமியே, மாடஸ்தி இனி இல்லையே அது உங்களுக்கு தொியுமா??🎵

      Delete
    3. நடுநடுவே ம்மீசிக் சிம்பல்ஸ்லாம் போட்டு அழகா வஜனம் எழுதியிருக்கீங்க மிதுன்! :))))

      Delete
    4. இந்த 'லாலி...லாலி 'யை விட்டுட்டீங்களே.!:-)

      Delete
  14. ட்ரென்ட் பட்டயக் கிளப்புவாரா?

    ReplyDelete
  15. ஞாயிறு விடுமுறை வணக்கம்.

    ReplyDelete
  16. களவும் கற்று மற...


    எழுந்து நின்று கை தட்டுகிறேன் சார் நாயகர் ட்ரெண்ட் சாகஸத்திற்கு..ஆனால் கனத்த இதயத்தோடு.யார் சார் அழுகாச்சி காவியம் பிடிக் காதுன்னு சொன்னா ...அழுகாச்சி காவியம்ன்னா இப்படி இருக்கனும் .படித்து முடித்த அடுத்த நொடியே இதை எழுதி கொண்டு இருக்கிறேன்.இன்னமும் கனத்த இதயத்தோடு .உண்மையில் படிக்கும் முன்னர் அட்டைப்படம்...அசத்தலான ஓவியங்கள்,சிறப்பான தரம் இதை பற்றி எல்லாம் எனது எண்ணத்தை விரிவாக வெளிப்படுத்த வேண்டும் என எண்ண நினைத்தேன்.ஆனால் இப்போது கதையை படித்து முடித்தவுடன் அந்த பாரமே என நெஞ்சில் இன்னும் குடி கொண்டு இருக்கிறது அதைப்பற்றியோ ,அட்டகாசமான மொழி ஆக்கத்தை பற்றியோ நான் எதையும் சொல்ல போவதில்லை சார் மன்னிக்க வேண்டுகிறேன்.ஒரு வில்லன் சுடப்பட்டதற்கு என் நெஞ்சம் பாரமானதும் ,கண்களில் கலங்கல்களும் உண்டானது இதுதான் எனது காமிக்ஸ் வரலாற்றிலியே முதல் முறை. இதுமட்டுமன்றி ஒரு கதையை படிக்கும் பொழுது ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நாமாக உணரமுடிவது உண்டு .ஆனால் இந்த களவும் கற்று மற இதழிலோ சில சமயம் அந்த வில்லனின் கதாபாத்திரமாக உணர்கிறேன். சிலசமயம் நாயகன் ட்ரெண்ட் ன் கதாபாத்திரமாக உணர்கிறேன். இப்படி மாறுபட்ட கதாபாத்திரங்களில் ஒரே சமயத்தில் உள்ளுணர்வதும் இதுவே முதல் முறை. சோக முடிவுகளும் ,சோக களங்களும் பலருக்கு எப்பொழுதும் பிடிக்காது என்னை போலவே ..ஆனால் ஒரு படைப்பை படைக்கும் விதத்தில் படைத்தால் சோகமும் சுகமே என்பதை உணர முடியும் .களவும் கற்று மற அதில் ஒன்று .எனக்கும் கவிதைக்கும் காத தூரம் படிப்பதற்கே .ஆனால் இந்த இதழில் அந்த கவிதைகளே இன்னமும் இந்த கதையில் என்னை உள்ளிழுத்து கொண்டதோ என என்னுள் பலத்த சந்தேகம்.உண்மையை சொல்ல வேண்டுமானால் எனக்கு இதுதான் கிராபிக் நாவல் .இப்படி இருக்கனும் சார் ஒரு கிராபிக் நாவல் .

    விகடன் இதழில் மிக சிறந்த திரைப்படத்திற்கு அதிகபட்சம் 60 மதிப்பெண் அளிப்பார்கள்.இன்னும் மிக சிறந்த படைப்பிற்கு மதிப்பெண்ணே அளிக்க மாட்டார்கள்.மதிப் பெண்ணிற்கு அப் பாற்பட்டது அந்த படைப்புகள் .களவும் கற்று மற அந்த வகை . மிக நீண்ட பக்கங்களில் கதையை இழுத்து கொண்டு போவதும் , வசனங்களை கூட கவிதைகரமாக பேசுவதும்.. .வசனங்களே இல்லாமல் படத்தை பார்த்து புரிந்து கொள்ளுங்கள் இது தான் உயர்தர ரசனை என்று இழுத்து கொண்டு போவதும் தான் சிறப்பு எனில் அந்த படைப்பை விட இப்படி ஒரு கமர்சியல் நாயக தரத்தில் குறுகிய பக்கங்களிலியே மனதில் நிற்கும் படி இருக்கும் இது போன்ற படைப்பு தான் என்னை பொறுத்தவரை உயர்தர இதழ்.இதை தவிர வேறு எதுவும் பகிர தோன்ற வில்லை சார் .


    ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் கேட்க தோன்றுகிறது கனத்த இதயத்துடனே...



    " மீண்டும் ட்ரெண்ட் எங்களை சந்திப்பது எப்பொழுது சார்...? "

    ReplyDelete
    Replies
    1. உள்ளத்தின் இண்டுஇடுக்குகளிலிருந்தெல்லாம் வார்த்தைகளை வரவழைத்து ரொப்பி, கலக்கலா எழுதிப்புட்டீங்க தலீவரே!!

      இப்பவே ட்ரெண்ட்டை படிக்கணும்போல ஆசையா இருக்கு!

      Delete
    2. கலக்கல் விமர்சனம் தலைவரே.

      Delete
    3. தலீவரே செம; இன்று நானும் ட்ரெண்ட் டோடுதான்...!!!

      Delete
    4. தலீவரை அழவைத்த ட்ரெண்ட்டை வன்மையாக கண்ணடிக்கிறேன். .!!

      Delete
    5. பரணி சோகத்திலும் ஒரு சந்தோஷம் உண்டு என்பதை ட்ரெண்ட் உங்களுக்கு உணர்த்தி இருப்பது சந்தோஷம்.

      உங்கள் விமர்சனம் அருமை. தாரை பரணியின் கண்களில் தாரை தாரையாக நீர் வரவைத்த டெரெண்ட் தொடர்ந்து நமது காமிக்ஸில் வரவேண்டும்.

      Delete
    6. தலீவரே...."சோகமும் சுகமே" என்று சொல்லிடும் ட்ரெண்ட் இனி 2019 -ல் தான் !!

      Delete
    7. And ஆல்பம் # 3 - இன்னொரு சித்திர சூறாவளி + மனதை வருடும் கதை களம் !! ரொம்பவே ரசித்தேன் !!!

      Delete
    8. ரொம்ப எதிர்பார்க்க வெக்கறிங்களே.

      Delete
    9. காத்திருக்கிறேன் சார் ..ஆவலுடன்..

      Delete
    10. தல
      அருமையான விமர்சனம்...

      Delete
  17. ///"சைத்தான் சாம்ராஜ்யத்தில்" ஒரு சின்ன வித்தியாசமுள்ளது ! கவனித்தீர்களா ??////

    கண்டுபிடிக்க முடியலைங்களே எடிட்டர் சார்... பேசாம நீங்களே சொல்லிடுங்களேன்?

    ரவுண்டு பன் - பரிசு உண்டு!

    பி.கு : EBF இ.ப வெளியீட்டு விழா முடிஞ்சதுமே அட்டைப்பெட்டியில் மீதமிருந்த அஞ்சாறு ரவுண்டு-பன்னுகளை ஆட்டையைப் போட்டு வச்சிருக்கேன்! அதிலேர்ந்து உங்களுக்கு ஒன்னை - ஒரு பன்னை - பரிசா கொடுக்க எனக்கு ஆட்சேபனை இல்லை!

    பி.பி.கு : சிவகாசியிலிருந்து நீங்கள் வாங்கிவந்த அந்த ரவுண்டு-பன்னு ரொம்பவே டேஸ்ட் எடிட்டர் சார்!! உண்மையில், இவ்வளவு சுவையான ரவுண்டு பன்னை நான் இதற்கு முன்பு சாப்பிட்டதில்லை! விழாவுக்கு வந்திருந்த நம் நண்பர்களில் சிலரும் இதே கருத்தை என்னிடம் சொல்லக் கேட்டேன்!!

    பி.பி.பி.கு : பறவை பேட்ஜ் எல்லாம் வாணாம்! அதுக்குப் பதிலா.... ஹிஹி!

    ReplyDelete
    Replies
    1. ///EBF இ.ப வெளியீட்டு விழா முடிஞ்சதுமே அட்டைப்பெட்டியில் மீதமிருந்த அஞ்சாறு ரவுண்டு-பன்னுகளை ஆட்டையைப் போட்டு வச்சிருக்கேன்! அதிலேர்ந்து உங்களுக்கு ஒன்னை - ஒரு பன்னை - பரிசா கொடுக்க எனக்கு ஆட்சேபனை இல்லை!///

      பன்னு இத்தனை நாள்ல வர்க்கி ஆயிருக்குமே குருநாயரே ..!!

      Delete
    2. இல்லை கண்ணா. எனது மகளும் நானும் எங்கள் பங்கு பன்னை 10 நாட்களுக்கு முன்னால் தான் காலி செய்தோம். நன்றாக இருந்தது.

      எங்கள் ஊர் பக்கம் பன்னின் சுவையே தனி.

      Delete
    3. இனிமேல் இங்கே கேப்ஷன் போட்டி வைத்தால் கூட பரிசாய் ஒரு டஜன் பன் அன்பளிப்பு என்று அறிவிக்கலாமோ ?

      Delete
    4. //கண்டுபிடிக்க முடியலைங்களே எடிட்டர் சார்... பேசாம நீங்களே சொல்லிடுங்களேன்?//

      அஸ்க்கு..புஸ்க்கு...!! அப்புறமாய் அதையே துடைப்பமாகவும் பின்னாளில் மாற்றிடும் ஆபத்துள்ளதே !!

      Delete
  18. அன்பின் ஆசிரியருக்கு
    முன்பெல்லாம் கதைக்கு மட்டுமே விமர்சனம் வரும்,தற்போது அட்டை படங்களுக்கும் தனி விமர்சனம் வரும் அளவிற்கு அட்டைப்படங்களின் தரம் உயர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
    இம்மாத அட்டை படங்களில் ட்ரெண்ட் முதலிடத்திலும் ஹெர்லக் ஷோம்ஸ் இரண்டாவது இடத்திலும் மாடஸ்தி மூன்றாவது இடத்திலும் டெக்ஸ் நான்காவது இடத்திலும் இருக்கிறார்கள்.
    நான் எப்பொழுதும் முதலில் படிப்பது டெக்ஸ் தான்.சைத்தான் சாம்ராஜ்யம் அப்போது(பால்யத்தில்)படிக்கும்போது இருந்த பரபரப்பு,பரவசம் தற்போது இல்லை,இருந்தாலும் படித்து முடிக்கும்போது நல்ல மனநிறைவு ஏற்பட்டது.
    மறுபதிப்பில் அட்டைப்படத்தில் கவனம் தேவை.இன்றைய பொழுது ட்ரெண்ட்டோடுதான்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து உங்கள் விமர்சனங்களை இங்கு பதிவிடுங்கள் வெர்னர்.

      Delete
    2. Judging a book by it's cover ....என்பது பேச்சு வழக்கு தான் சார் ; ஆனால் நம் போன்ற பதிப்பகங்களுக்கு அது யதார்த்தமும் கூட ! So அட்டைப்படங்களின் பணிக்கு நிறைய முக்கியத்துவம் தருவது காலத்தின் கட்டாயம் தான் !

      Delete
  19. // So ஆண்டுக்கு ஒருமுறையேனும் இதுபோன்ற கண்ணுக்கு விருந்தினை அனுமதிப்பதில் பிழையிராதென்றே தோன்றுகிறது !! //
    வருஷத்துக்கு ஒரு வாட்டி இன்னா சார்,வருஷத்துக்கு ரெண்டு தபா இந்த ட்ரெண்ட் அண்ணாச்சிய பார்க்கலாம்...தப்பில்லேன்றேன்...இன்னான்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. தப்பேயில்லை நண்பரே!

      Delete
    2. இப்போ தானே வோட்டுச் சாவடியே திறக்கப்பட்டுள்ளது சார்வாள்ஸ் ? நம்மவர்கள் அனைவரும் தங்கள் வோட்டுகளைப் பதிவிடட்டும் ; எண்ணிப் பார்த்து சீட்டை அறிவித்து விடுவோம்!!

      Delete
    3. ஓட்டு போடற பூத் வேணும்னா டாப் கார்னரினில் ஓப்பன் பண்ணுங்க சார்,ஓட்டை போட்டுத் தாக்கிடுவோம்,ஹிஹி,மறுபடியும் ஒரு வாய்ப்பு எங்களுக்கு.

      Delete
  20. இந்த மாதம் ட்ரெண்டுக்கும்,ஜம்போவுக்கும் தான் கடும் போட்டி போல,ட்ரெண்ட் அட்டைப்படம் அசத்தல்,அப்படியே போட்டோ எடுத்து ப்ரேம் செய்தது போல,கண்ணில் ஒற்றி கொள்ள தோன்றுகிறது,அட்டைப் படத்தில் அந்த காவலரின் குதிரை நடந்து வரும் லாவகம் இருக்கே,அடடா என்ன ஒரு நேர்த்தி,
    ஜம்போ எல்லாம் வேற லெவல் சார்,
    கண்ணன் சொன்னது போல அட்டைப்படத்துக்கே எல்லாக் காசும் சரியா போய்டும் போல.

    ReplyDelete
  21. அடுத்த மாதம் வரவில் நம்ம புதிர் நாயகர் ஜானி "மரணம் சொல்ல வந்தேன்"ல விசிட் அடிக்க போறார்,மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. படா இடியாப்பமும் ரெடி ஹை !!

      Delete
    2. பட் இந்த இடியாப்பம் ரொம்ப சுவையாகயிருக்கும் ஹை

      Delete
  22. காலை வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  23. Replies
    1. உங்க உள்ளேன் ஐயா இடையில் சில மாதங்கள் காணமல் போனது வருத்தமே. நீங்க மறுபடி வருவதும் ஒரிரு வரிகளில் புத்தகங்கள் எப்படின்னு சொல்றதும் நல்லாருக்கு பாஷா அவர்களே.

      Delete
  24. ஹெர்லக் ஷொம்ஸ்:

    அருமை, சுப்பர், காமெடி அதகளம்.

    சித்திரங்கள், அட்டைபடம் மற்றும் DTP பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அற்புதம்.

    ஹெர்லக் ஷொம்ஸ் நாயக ,குரங்காக , சிங்கமாக, பூந்தொட்டியாக பல்வேறு வகை மாறுவேடங்கள் போட்டாலும் கதை யோட்டம் சிக்கல் இல்லாமல் செல்கிறது.

    அதுவும் பெண் சிங்கமாக வேஷம் போட்டு ஆண் சிங்கத்தை பார்த்து மிரட்சியடையும் காட்சி இருக்கிறதே. கை தட்டி கொண்டே இருக்கலாம்.

    கிளைமாக்ஸில் அந்த பெண்ணை காப்பாற்றும் போது "அட சுப்பர்" என்று தோன்றியது.

    முதலில் ஜம்போவில் ஷெர்லக் ஷோம்ஸ் பார்த்த போது என்ன காமிக்ஸ் இது, இதை வேண்டாம் என்று கூறி விடுவோம் என்று நினைத்தேன்.வேலை பளுவில் கூற மறந்து விட்டேன். மறதி எவ்வளவு நல்லது என்று ஹொர்லக் ஷோம்ஸ் படித்த பிறகு தான் தெரிந்து கொண்டேன்.
    அடுத்த வருடம் ஜம்போவில் இரண்டு அல்லது மூன்று ஷெர்லக் வெளியிடுமாறு ஆசிரியரை கேட்டு கொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ///கிளைமாக்ஸில் அந்த பெண்ணை காப்பாற்றும் போது "அட சுப்பர்" என்று தோன்றியது.///

      எனக்கு கொஞ்சம் இழுத்து 'சூப்பர்' என்று தோன்றியது..!

      Delete
    2. + 10000000 - a refreshing issue with good production quality as well. Made me laugh frequently.

      Delete
    3. / * ஆசிரியரை கேட்டு கொல்கிறேன். */

      Ganesh Kumar - AVARA VITRUNGA. Innum neraya comics varanum ;-)!!

      Delete
    4. ஹெர்லக்கின் மீதான உங்கள் கனிவான பார்வைகள் - கார்ட்டூன் தொடர்கள் மீதொரு புது நம்பிக்கையைத் தருகிறது எனக்கு !! Maybe சரியான கதைகளாய்த் தேர்வு செய்தால் இந்த ஜானருமே ஹிட்டடிக்கும் என்று தோன்றுகிறது !!

      Delete
  25. இன்று வீட்டுக்கு சென்று புத்தகங்களை முதலில் கைப்பற்ற வேண்டும்

    ReplyDelete
  26. XIII தாக்கத்தில் இருந்து இன்னும் வெளிவரவில்லை. எனவே இன்று எளிதான கதைகளமான குரங்கு வேட்டை படிக்க உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. கேள்வி இரினா ஜியோர்டினோ, டயானா மற்றும் ப்ளாயிட்டை கொல்ல பணம் வாங்கியது யாரிடம்? யார் அவளை இவர்களை கொல்லத் தூண்டியது.?

      Delete
    2. நாட்காட்டிகளின் சருகுத் தாள்களைப் போலவே ரசனைகளும் !! புதியதொரு தினம் புலர்ந்துவிட்டால் - நேற்றைய தினம் வரலாறுக்குள் புதைந்து போய் விடும் !!

      Delete
    3. கேள்வி இரினா ஜியோர்டினோ, டயானா மற்றும் ப்ளாயிட்டை கொல்ல பணம் வாங்கியது யாரிடம்? யார் அவளை இவர்களை கொல்லத் தூண்டியது.?
      வேறு யாராக இருக்க முடியும்?
      வாலி ஷெரிடன் மனைவி லேடி பீ
      மே ப்ளவர் நாயகி ஜேனட் ஃபிட்சிம்மன்ஸ்
      தான்.?OK

      Delete
  27. காலனின் கவிபாடும் ஒற்றைக்கரத் தூக்கு மேடையிலே...!
    அரங்கேது பாரு.. போராளிகளின் சதிராட்டமே...!!

    சாத்தானின் ஊழியமிங்கே கொடி பறக்குது..!
    ஸாலடினின் சவங்களிங்கே அணி வகுக்குது..!!

    கயிற்றில் தொங்கும் பொம்மைகளை...
    காாிமுகில் நோக்கி இளித்திடச் சொல்லி..
    காதைத் திருகி இழுக்கிறானே காாிருளின் தேவன்!

    பிடாியில் ஒரு குத்தும் விட்டு, பழம்பாட்டுக்குக் களிநடனமும் செய்யாச் செய்கிறானே..!

    உயா்குலப் பெண்டிா் பலா் உன்மத்தமாய் அணைத்த நெஞ்சங்களை..
    இன்று ஆதவனின் கதிா்கள் ஒளிமழையில் நனைக்குதே..!

    ஹுா்ரே.. நலிந்து போன நடனக்காராள்; தீரா நாட்டியத்தை தொடா்ந்து அரங்கேற்றிட!

    இது யுத்தத்தின் ஒத்திகையா?
    மரண முத்தத்தின் பண்டிகையா?
    ரௌத்திர காலனின் சங்கீதத்தின் எதிரொலியை??

    ReplyDelete
    Replies
    1. அட....நீங்க ஏன் சார் ஞாபகப்படுத்திட்டு !!!

      "துபாய் எங்கே இருக்கு ?"

      "துபாயா..? அது எங்கியோ உசிலம்பட்டி கிட்டே இருக்கு !" என்றபடிக்கே ஓரமாய் ஒதுங்கப் பார்த்தால் நீங்க வரிக்கு வரி இங்கே போட்டு கோர்த்து விடுறீங்களே !!

      :-))

      Delete
  28. களவும் கற்று மற... ஒரு நேர் கோட்டு கதை.. டெக்சு கதைகள் போலவே.. உறுதியாக குற்றவாளி என தெரிந்த ஒரு நபரை தேடிச் செல்லும் ஒரு போலீசின் கதை.. அட்டகாசமான ஓவியங்கள், பிசிறடிக்காத கதையோட்டம்,அருமையான ட்விஸ்ட்,எதிர்பார்த்த கிளைமாக்ஸ், எதிர்பாராத உணர்ச்சிகள் படித்து முடிக்கும் பொழுது மற்றும் சில புரியாத கவிதைகள்..
    மறக்க முடியாத கதை மற்றும் மறுவாசிப்புக்காக பத்திர படுத்த வேண்டிய கதை.
    இந்த, இது போன்ற கதைகளை வெளியிடுவத்துக்கு பாதம் தொட்டு வணங்குகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ....பெரிய வார்த்தைகளெல்லாம் வேண்டாம் சார் !! உற்சாகமான வாழ்த்துக்களே போதுமான சன்மானம் எனக்கு !!

      Delete
    2. அட்டைப்பட அழகை எப்பிடி சொல்வது என்று தெரியவில்லை... வார்த்தைகளே இல்லை..

      Delete
    3. தவிர, இது போன்ற கதைகளை நாம் சரளமாய் ரசிக்கும் நிலைகளை சுலபமாய் எட்டிப் பிடித்திருப்பது ஒரு குஷியூட்டும் சமாச்சாரம் !! "பொம்மைப் புத்தகம்" படிக்கும் நமக்கு ஆர்தர் ரெம்போ பற்றியும் தெரியுமென்பதை யார் யூகித்திட முடியும் ?!!

      Delete
    4. என்னவோ போங்க .. எனக்கு தெரிந்தெல்லாம் ஆர்தர் விஜயனும், ஆர்ஹதர் ஸ்டீல் கிளாவுமே..

      Delete
    5. தவிர இதில் ஒன்றும் complications இல்லியே.. எப்படி நாங்கள் தலீவரின் வார்த்தை பிரயோகங்களில் கட்டுண்டு கிடக்கிறோமோ.. அது போலவே எமைலும் ரிம்பொவும்..

      Delete
    6. என்னவோ போங்க .. எனக்கு தெரிந்தெல்லாம் ஆர்தர் விஜயனும், ஆர்ஹதர் ஸ்டீல் கிளாவுமே..


      #######


      ரம்மி ....:-))))))

      Delete
  29. விஜயன் சார்
    ஹெர்லக்கின் புத்ததக வடிவமைப்பு
    வேற வேற லெவலாக இருக்கு.
    பக்கத்துக்கு 6 ப்ரேம் பெரியதாக
    தெளிவான சித்திரங்கள் அருமையான
    வர்ணக்கலவை அற்புதம் நிகழ்த்திவிட்டீர்.
    சைத்தான் சாராஜ்யத்தில் இன்னும் சற்று
    பளீச் கலர் சேர்த்து இருக்கலாம் பசிம போல.2019 புதிய அட்டவணையில்
    மறுபதிப்புக்கென தனித்தடம் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  30. விடுமுறை வில்லங்கம்
    ======================
    ருமேராவின் அற்புதமான சித்திர ஆக்கமும்
    ஆற்றொழுக்கான மொழிபெயர்ப்பு கதையை எளிதாக நகர்துதிச் செல்கிறது.
    இளவரசி ஊசிவெடியல்ல 1000 பட்டாசு என்பதை சிஸ்டர் குண்டு பூசினியை துவைத்து எடுக்கும் காடாசி அட்டகாசம்...
    ஆக்சன் மேளா இளவரசி ரசிகர்களுக்கு. ..
    இளவரசியின் அட்டைப்படம் ஏற்கனவே நான் பதிவிட்டதால் மீண்டும் ....
    கோலக்கிளி என் சோலைக்கிளி
    ============================

    சோலைக்கிளியின் பார்வை
    சொக்கவைக்கிது
    அதன் ஆழம் பார்க்கத்தான்
    மாமன் மனம் ஏங்குது......

    அடியே
    அத்தை பெத்த ரத்தினமே
    எனை ஆளவந்த
    சித்தரமே
    செல்லமயிலே
    சொல்லாமல் கொள்ளுதடி
    சிருங்காரம் பெற்றெடுத்த
    செண்பகமே.....

    பாதையோ வில்லங்கம்
    பாவைதான் காரணம்.....

    ரம்மியமான கதை .....
    நீண்ட நாட்களுக்கு பிறகு ....
    வருடம்தோறும் ஒருகதையாவது இளவரசி கதை வேண்டும் என இளவரசி சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்....
    💋யாழிசைசெல்வா💋
    02/09/2018

    ReplyDelete
    Replies
    1. Sorry ji...modesty is boring now a days ...only drawing is awesome....give that slot to reporter Johnny one more

      Delete
    2. Never ji ....
      I cannot accept this thought. ..
      ரிப்போர்ட்டர் ஜானி கதை ஒரே போர். ..
      இளவரசி கதைக்கு முன்னால் அது வெறும் பீலா.....
      ஒரே மசாலா தான் ஜானி கதை.....
      இப்படி பாருங்களேன் கதாநாயகர்கள் வரிசையில் அதற்கு இனணயாக களம் காணும் அதிரடி இவர் மட்டுமே.. .
      லேடி ஜேம்ஸ் பாண்ட் என போற்றப்படுபவர். ...
      கருத்தை மறுபரிசிலனை செய்யவும்

      Delete
  31. செப்டம்பர் மாத புத்தகங்கள் இனி நான் எப்பொழுது கோவை போவேனோ, அப்ப தான் அள்ளி கொண்டு வர முடியும்.

    நான் கோவை புத்தகவிழாவில் ஒரு 20 புத்தகங்கள் அள்ளி கொண்டு வந்ததே இன்னும் அலமாரியில் அலங்கரித்து கொண்டு இருக்க, ஈரோட்டில் டைனோசர் (XIII) வாங்கி வந்தது இப்பொழுது தான் பாதி விழுங்கி இருக்கிறேன், இன்னும் மீதி பாதி விழுங்க செப்டெம்பர் முடிந்துவிடும்.

    அதனால் என்னுடைய பாணி விமர்சனத்திற்கு நான் சென்று விடுகிறேன்.

    பழையது:
    ---------

    மரண ஒப்பந்தம் - ராபின் கதைகளில் இது ஒரு டெக்ஸ் வில்லர் பாணி நேர் கோட்டில் செல்லும் ஒரு ஆக்ஷன் கதை. செம அதகளம்.

    புதியது:
    -------

    XIII 10 பாகம் முடித்தாயிற்று.

    இப்பொழுது எல்லாம் எல்லா புத்தகங்களின் அட்டை படம் இன்டர்நேஷனல் லெவெலுக்கு கீழே இறங்காது போல இருக்கிறது. விரட்டும் விதியின் அட்டை அள்ளுது, Texture அதை விட சூப்பர், படுக்கை நிலையில் உள்ள கோடுகள் கலக்கல்.

    1. விரட்டும் விதி
    2. கடைசி பலி
    3. இரவு கழுகின் நிழலில்

    இந்த மூன்றில், எனக்கு முதலில் பிடித்தது இரவு கழுகின் நிழலில், விரட்டும் விதி , கடைசி பலி..ம்ம்ம் கலரிலும் டெக்ஸ் ரசிக்கலாம் போல உள்ளதே.

    ReplyDelete
  32. சார் மணுணில் துயிலும் நட்சத்திரம் அருமை ; சைத்தான் சாம்ராஜ்யம் அருமை, பரபர, சுறு சுறு .இதில் வித்யாசம் டெக்ஸ், கிட் உடைகள்தானே. காருசனுமில்ல!

    ReplyDelete
  33. ஹெர்லக்க எடுத்தேன், இப ஈர்த்துக்கொண்டது ஐந்து பாகங்கள் தொடர்ந்து போகுது

    ReplyDelete
  34. இளவரசியின்...

    ஒரு விடுமுறை வில்லங்கம்...


    படிக்காத ஒரு பழைய ஆரம்ப லயன்காமிக்ஸையோ ,முத்து காமிக்ஸையோ திடீரென கைக்கு சொந்தமாக கிடைக்கும் பொழுதும் அதை படிக்கும் பொழுதும் ஏற்படும் ஆனந்தம் மாடஸ்தி இதழை படிக்கும் பொழுது தன்னால் ஏற்பட்டு விடுகிறது .விடுமுறை ஓய்வு காலத்தை "சிறப்பிக்க" செல்லும் மாடஸ்திக்கு வழக்கம் போல ஒரு வில்லங்கம் மாட்ட ..வழக்கம் போல கார்வினுடன் இணைந்து போராட ,வழக்கம் போல சுவையான விறுவிறுப்புடன் செல்ல ...வழக்கத்தை விட கார்ட்டூன் இதழை விட அதிக இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்த உரையாடல்களுடன் இம்முறை " லேடி "வில்லங்கம் வழக்கத்தை விட அருமை...

    என்னை பொறுத்தவரை

    லேடி எஸ்ஸா ,இளவரசியா எனில் இளவரசிக்கே 90 %


    ஜூலியாவா இளவரசியா எனில் 100 % இளவரசியே.


    சமர்பா இளவரசியா எனில் 110 % இளவரசியே ...

    ( ஹீஹீ சமர்புக்கும் இளவரசிக்கும் என்னய்யா சம்பந்தம்னு கேக்க வேண்டாம் .இது ஒரு சமர்ப் ரசிகர் ஆபூன்னா இளவரசியை மட்டம் தட்டி வருவதற்கான மறைமுகமான பதலடி ..:-)


    இளவரசி காமிக்ஸ் உலகின் ஒரே அரசி ..


    மீண்டும் அடுத்த வருடம் அவரின் தரிசனத்திற்காக காத்திருக்கிறேன்..


    ஒரு விடுமுறை வில்லங்கம் ...நன்று ..

    ReplyDelete
    Replies
    1. ///
      ( ஹீஹீ சமர்புக்கும் இளவரசிக்கும் என்னய்யா சம்பந்தம்னு கேக்க வேண்டாம் .இது ஒரு சமர்ப் ரசிகர் ஆபூன்னா இளவரசியை மட்டம் தட்டி வருவதற்கான மறைமுகமான பதலடி ..:-)///

      இந்த பதிலடிக்கெல்லாம் பயப்படமாட்டாங்க தலீவரே!

      ஒரு ரெண்டு நாள் அடையாள உண்ணாவிரதம் இருங்க. அப்புறம் அம்மன்கோவில் கிழக்காலே விஜயகாந்தாட்டாம் சாட்டையால ரெண்டு நாளைக்கு விடாம அடிச்சிக்கோங்க ..அப்புறம் பாருங்க ஒருத்தரும் மாடசட்டிய கிண்டலே பண்ணமாட்டாங்க ..!!

      Delete
    2. //இளவரசி காமிக்ஸ் உலகின் ஒரே அரசி ..//

      உண்மை!
      உண்மை!!
      உண்மை!!!

      Delete
  35. Hello. I liked this months Tex.I was expecting this book for a long time. We need more please.My son too wanted to read this book

    ReplyDelete
  36. இந்த மாத இதழ்கள் ரேட்டிங் :
    1.களவும் கற்று மற -10/10,
    2.ஹெர்லக் ஹோம்ஸ் -10/10,
    3.மண்ணில் துயிலும் நட்சத்திரம்-8.5/10,
    4.சைத்தான் சாம்ராஜ்யம் -8/10,
    5.ஒரு விடுமுறை வில்லங்கம் -7.5/10.

    ReplyDelete
    Replies
    1. மாடசுட்டிய ஏழரைன்னு குறீயீடு மூலம் உணர்த்துறிங்களா ரவி?

      Delete
    2. மாடஸ்டி அக்கா எவ்ளோ நல்ல கதைய கொண்டாந்து உங்ககிட்ட கொடுத்தாலும் நீங்க அத ஓட்டத்தான் போறிங்க,ஏன்னா உங்களுக்கு டைம்பாஸ் ஆகனுமே,ஹிஹி உங்களை பத்தி தெரியாதா என்ன,அட போங்க பாஸ், போய் ஏதாவது புக் இருந்தா எடுத்து படிங்க.

      Delete
    3. அறிவரசு என்னைய அவமானப்படுத்திட்டாரு...

      நான் கோவமா போய் டீக் குடிக்கிறேன்..!!

      Delete
    4. நான் ஹார்லிக்ஸே வாங்கி தரேன்..குடிச்சுட்டு இளவரசி வாழ்கன்னு ஆயிரம் தடவை எழுதிட்டு வாங்க..

      Delete
    5. பார்த்து வாய சுட்டற போவுது.

      Delete
  37. 1.களவும் கற்று மற -
    மென்சோகம்,கதையெங்கும் இழையோடும் கவித்துவம்,எளிய கதைக் களம்,முடிவில் மனதில் சிறு வலியை உண்டாக்குவது,அச்சில் வார்த்து எடுத்தாற்போல் ஓவியங்கள்,எமைல் டூர்னியரும்,ட்ரெண்டும் மனதை கொள்ளையடித்து விட்டனர்,ஏமைலின் முரட்டுத்தனமான அணுகுமுறைக்கு காதலியின் இழப்பு ஒரு காரணமாக இருந்தாலும்,அவரின் ஆரம்ப கட்ட கொள்ளை முயற்சிக்கான விளககங்கள் தெளிவாக இல்லை.லைட்டான ஆக்ஷன்கள் இருந்தாலும் கதையோட்டத்திற்கு எந்த தடங்கலும் இல்லை,மிக சுவாரஸ்யமாகவே கதைக் களம் நகர்கிறது.மீண்டும் ஒரு மீள்வாசிப்பு மனம் நிம்மதியுறும்.
    2.ஹெர்லக் ஹோம்ஸ் - ஒரு குரங்கு வே(சே)ட்டை,மேற்கில் ஒரு மேதாவி இரண்டுமே ரசனையான களங்கள்,அருமையான அச்சுத்தரம்,அபாரமான அட்டை வடிவமைப்பு,அற்புதமான பைண்டிங்,நிறைவான கலரிங்,
    கதியோட்டதிற்கு ஏற்ற தெளிவான வசனங்கள்,இந்த கதைக் களத்திற்கு வசனங்கள் மிகப்பெரிய பலமா இருக்கும்னு தோணுது.
    மீள் வாசிப்புக்கு உத்தரவாதமுள்ள கதையிது.
    3.மண்ணில் துயிலும் நட்சத்திரம் - முன்பு வந்த மூன்று கதைகளின் அளவுக்கு இல்லை எனினும்,சுவராஸ்யமான வாசிப்புக்கு உகந்த கதை,இந்த கதைதான் மினி டெக்ஸுக்கு உகந்தாற்போல் அளவான Content உடன் உள்ளதோ என்று கூட தோன்றியது.
    4.சைத்தான் சாம்ராஜ்யம் - ஏற்கனேவே ஒருமுறை வாசித்திருந்தாலும் தலையை வண்ணத்தில் காண்பதே ஒரு அலாதியான மகிழ்ச்சிதான்.உறுத்தாத கலரிங்கில் அருமையான பேக்கேஜாக வந்துள்ளது.நம்ம பேவரட் ஸ்நாக்ஸ் காரப் பொரி வித் காபியுடன் படிக்க அருமையான தேர்வு.
    5.ஒரு விடுமுறை வில்லங்கம் - இளவரசியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சி,நல்ல டைம்பாஸ் கதை,ஆஹா,ஓஹோன்னு சொல்ல முடியாட்டாலும் ஒருமுறை படிக்க ஓகேதான்.

    ReplyDelete
    Replies
    1. அதுக்குள்ளே அஞ்சு புக்கையும் படிச்சிட்டீங்களே. படு ஸ்பீடாத்தான் இருக்கீங்க..!

      Delete
    2. எங்க அமைச்சுரு எப்புவம் ஸ்பீடு தாங்க...:-)

      Delete
  38. விஜயன் சார்
    ஹெர்லக்கின் புத்ததக வடிவமைப்பு
    வேற வேற லெவலாக இருக்கு.
    பக்கத்துக்கு 6 ப்ரேம் பெரியதாக
    தெளிவான சித்திரங்கள் அருமையான
    வர்ணக்கலவை அற்புதம் நிகழ்த்திவிட்டீர்.
    சைத்தான் சாராஜ்யத்தில் இன்னும் சற்று
    பளீச் கலர் சேர்த்து இருக்கலாம் பசிம போல.2019 புதிய அட்டவணையில்
    மறுபதிப்புக்கென தனித்தடம் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  39. ஒரு குரங்கு வேட்டை...



    அப்பாடா ....லக்கி ,சிக்பில் போல மனம் கவரும் ஒரு கார்ட்டூன் நாயகர் மீண்டும் நமது இதழுக்கு கிடைத்து விட்டார்...அருமை.அட்டகாசமான அட்டைப்படம்...அழகான ஓவியங்கள்..முக்கியமாக தெளிவான கண்ணை உறுத்தாத பெரிய எழுத்துருக்கள் என இதழ் வடிவமைப்பு தூள் எனில் ஷெர்லக் இரு சாகஸங்களாக வந்து பட்டையை கிளப்பி விட்டார்.பல இடங்களில் மனதார சிரிக்க வைத்த ஷெர்லக் அவர்களுக்கு ஒரு படா நன்றி...கண்டிப்பாக ஷெர்லக் அவர்களுக்கு அடுத்த வருடம் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களை கொடுக்குமாறு பணிவன்புடன் வேண்டிகொள்கிறேன் சார்.அதுவும் இந்த முறை போலவே டூ இன் ஒன் சாகஸமாக .


    ஜம்போ பாய்ந்து கொண்டே செல்கிறது.என்னுடைய மதிப்பெண் பத்துக்கு பத்து .

    ReplyDelete
    Replies
    1. தலீவரே ..!!

      ஷெர்லக் இல்லே ...ஹெர்லாக் ..ஹெர்லாக் ...!

      உங்க மேல கேசு கீசு போட்டாங்கன்னா ஜாமீன் எடுக்க சங்கத்துல நிதி கிடையாது.!
      கவனமா இருங்க ஆம்மா ..!!

      Delete
    2. :-(((

      ஆனா எனக்கு பழக்க தோசம் மாறாது...சமர்ப் மாதிரி ஷெர்லக் தான்...அதனால சங்கத்தை விட்டுட்டு அதுல இருக்குறவங்களை அடமானம் வைக்க முடியிமான்னு பாருங்க ...:-(

      Delete
  40. இப்பவே தெரிஞ்சு போச்சு ..இந்த மாசம் சுமார்ன்னு சொல்றதுக்கு ஒரு இதழ் கூட இல்லை என்பது..அனைத்தும் அட்டகாசம் என்பது தெளிவுறுகிறது...:-)

    ReplyDelete
  41. களவும் கற்று மற :

    ப்பா ..! என்ன ஒரு ஸ்டன்னிங் ஆர்ட்வொர்க்.!
    கனடாவை அட்டகாச கலரிங்கில் கண்முன்னே நிறுத்தியிருப்பதற்கு ஓவியருக்கு பாராட்டுகள்!

    ட்ரெண்ட் என்றாலே அற்புத சித்திரங்களோடு கூடிய ஆர்பாட்டம் ஏதுமில்லாத அழகான நேர்க்கோட்டு கதைகளுக்கு சொந்தக்காரர் என்பது தெள்ளத்தெளிவான விசயமாகிவிட்டதால் பெரிதாய் ஆக்ஷன் எதையும் எதிர்பார்க்கவில்லைதான். ஆனாலும் கையில் விலங்கோடு துப்பாக்கி முனையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தும் எமைலும் ட்ரெண்டும் அந்த தப்பியோடும் கைதிகளை போட்டுத்தள்ளும் சாகசம் டெக்ஸ் டைகருக்கு சற்றும் சளைத்ததல்ல.!

    ஆர்தர் ரிம்போவின் ரசிகன் என்பதைத் தாண்டி எமைலின் செயல்களுக்கு வலுவான பின்னனி எதுவும் சொல்லப்படாதது சிறு குறையே.!

    ட்ரெண்ட் வழக்கம்போல குதிரை நாய் சகிதம் குற்றவாளியைத் தேடிப்பிடிக்கும் பணியை சிறப்பாகவே செய்கிறார்.! வழக்கப்போலவே காதலியை நினைத்து ஏங்குகிறார்.!

    எமைல் மீது நமக்கு ஏற்படும் அதே பச்சாதாபம் ட்ரெண்டுக்கும் ஏற்படுகிறது.! இறுதியில் எமைலின் முடிவு ட்ரெண்டுக்கு மட்டுமல்ல நமக்குமே வருத்தத்தை தருகிறது.!

    அந்த கவிதைகளைப்போலவே எமைலின் வாழ்க்கையும் புரியாத புதிராக சீக்கிரமே முடிந்துவிடுகிறது.! எமைலின் முடிவு ஒரு இனம்புரியாத உணர்வை உண்டாக்கிவிட்டது. அந்த நகருக்குள் மீண்டும் எமைல் போகும்போது 'அங்கே போகாதேடா கிறுக்குப்பயலே ..' என்று ட்ரெண்டோடு சேர்த்து நம் மனதும் கூக்குரலிடுவதை தவிர்க்க முடியாது.!
    எமைல் மறக்கமுடியாத பாத்திரங்களுள் ஒன்று.!
    ஆர்தர் ரிம்போவைப் பற்றிய முன்னுரைகள் எமைலின் குணாதியசங்ளை விளங்கிக்கொள்ள பேருதவியாக இருந்தது.!

    இன்னுமொரு குறை - ஆஹா...அடடா .. என்று கண்ணுக்கு குளிர்ச்சியாய் ஆரம்பித்த கதையில் இரண்டே பக்கங்களில் லாராவைப் போட்டுத்தள்ளி ஒரு வெறுமையை உண்டாக்கிவிட்டார்கள்.!

    இரண்டாவது சாகசத்திலும் ட்ரெண்ட் தன் முத்திரையை அழுத்தமாக நம்மிடையே பதித்துவிட்டார்.!
    அமைதியான அழகான ஆழமான க(வி)தை ..!


    களவும் கற்று மற - எமைலை எளிதில் மறக்கமுடியாது.

    ரேட்டிங் 9/10

    ReplyDelete
    Replies
    1. ///ஆர்தர் ரிம்போவின் ரசிகன் என்பதைத் தாண்டி எமைலின் செயல்களுக்கு வலுவான பின்னனி எதுவும் சொல்லப்படாதது சிறு குறையே.!///

      நமது நண்பா் காா்த்திகை பாண்டியன் அவா்கள் மொழி பெயா்த்த ஆா்தா் ரிம்போவின் புத்தகத்தைப் படித்தோமானால், அந்த இளைஞனின் மனோநிலைக்கான காரணம் இன்னும் தெளிவாக விளங்கக்கூடும்!!

      நண்பரே கா.பா. அப்புத்தகம் எந்த பதிப்பகம்? எப்படி வாங்குவது?? கொஞ்சம் தகவல் சொல்லுங்களேன்!

      Delete
    2. // ஆர்தர் ரிம்போவின் ரசிகன் என்பதைத் தாண்டி எமைலின் செயல்களுக்கு வலுவான பின்னனி எதுவும் சொல்லப்படாதது சிறு குறையே.! //
      உண்மை,எமைலின் கொள்ளை முயற்சிக்கு கூட சரியான கற்பிதம் இல்லை,ஒருவேளை எமைல் தறிகெட்ட ஒரு மனதின் சொந்தக்காரனாக கூட இருக்கலாம்.
      "உங்கள் சட்டங்களை தூக்கி குப்பையிம் போடுங்கள்" என்று ஒரு இடத்தில் சீறுவதை வைத்து இதை கணிக்கலாம்.

      Delete
    3. ///எமைலின் கொள்ளை முயற்சிக்கு கூட சரியான கற்பிதம் இல்லை,///

      அந்த பாங்க் கொள்ளைக்கான காரணத்தையும் பின்னர் கொள்ளையிட்ட பணத்தை எமைல் எரிப்பதற்குமான காரணத்தையும் நாமே எளிதில் யூகிக்கலாம் ரவி!

      லாரா என்ற அந்த கேர்ள்ஃப்ரண்டின் பொருட்டு பணத்தேவைக்காக பாங்கை எமைல் கொள்ளையடித்திருக்கலாம்.லாரா கொல்லப்பட்டதும் வெறுத்துப்போய் பணத்தை எரித்திருக்கலாம்.!

      உண்மையில் எமைல் யார், எங்கிருந்து வந்தவன்? நல்ல குணங்கள் நிறைய இருந்தும் இப்படி தவறான பாதையில் அவன் ஏன் தறிகெட்டு அலையவேண்டும் என்பதே தெளிலாக சொல்லப்பட வேண்டியவை.! ஆர்தர் ரிம்போவின் கவிதை வரிகளால் கவரப்பட்டு இப்படி ஆகிவிட்டானோ என்று நாமே யூகிக்த்துக்கொள்ளவேண்டியதுதான்..!

      :-)

      Delete
    4. அதனால தான் சொன்னேன் இது கிராபிக் நாவல் போல என்று...


      நாங்களும் முன்னேறி வருவோம்ல...:-)

      Delete
    5. ////ஆர்தர் ரிம்போவின் கவிதை வரிகளால் கவரப்பட்டு இப்படி ஆகிவிட்டானோ என்று நாமே யூகிக்த்துக்கொள்ளவேண்டியதுதான்..!////

      சந்தேகமே இல்லாமல் அவனுடைய செயல்கள் அனைத்திற்கும் ஆா்தா் ரிம்போவின் கவிதைகள் தான் காரணம் என சொல்லலாம்!!

      கடந்த பதிவிலேயே நண்பா் கா.பா. ஆா்தா் எப்படிப்பட்டவா் என்பதை கூறியிருப்பதில் இருந்து அதனை புாிந்து கொள்ளலாம்!

      என்னுடைய ஆா்வமெல்லாம் அந்த ஆா்தரின் கவிதைகளைப் படிக்க வேண்டும் என்பதில் தான்!!

      Delete
    6. அன்பின் மிதுன்..

      ஆர்தர் ரைம்போவின் கவிதைகள் நிறைய உண்டு. நான் அவருடைய “A season in Hell" என்கிற உரைநடைக் கவிதைகளை மட்டுமே மொழிபெயர்த்திருக்கிறேன். அவருடைய மிக முக்கியமான தொகுப்பு - Illuminations. நம் ட்ரெண்ட் கதையின் ஆரம்பப் பக்கங்களில் உள்ள கவிதை ரைம்போவின் ஆரம்பகாலக் கவிதைகளில் ஒன்றான “Hanged Man Dance" என்கிற கவிதை. அது இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வில்லை. என்னிடம் ரைம்போவின் ஒட்டுமொத்த கவிதைகளின் ஆங்கில பிடிஎஃப் உண்டு. உங்கள் மெயில் ஐடியைச் சொன்னால் அனுப்பித் தருகிறேன்.

      மற்ற நண்பர்களுக்கு,

      எமைலைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நாம் ஆர்தர் ரைம்போவைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு வழியில்லை. வாழ்வின் சராசரித்தன்மையை வெறுத்தவர் ரைம்போ, சாகசங்களை மனமார நேசித்தவர் அவர். மேலும் இந்தச் சமூகம் வரையறுத்து வைத்த சட்டத்திட்டங்களுக்குள் பொருந்த முடியாமல் அவற்றை மீறுவதைத் தன் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். சந்திரமுகி பாணியில் சொல்வதென்றால், எமைல் ரைம்போவை வாசித்தான், ரைம்போவை உளமார நேசித்தான், ஒரு கட்டத்தில் தானும் ஒரு ரைம்போவே என உணரத் தொடங்கினான். ஆகவேதான் கொள்ளையடித்த பணத்தை அவன் எரிக்கிறான், அவனுக்குப் பணம் ஒரு பொருட்டேயல்ல. அந்தப் பணத்தைக் கொள்ளையடிக்கும்போது கிடைக்கும் உற்சாகம், சட்டத்துக்கு எதிராகச் செயல்படும் குற்றத்தின் நறுமணம் அவனுக்குத் தருகிற போதை. நம் பொதுபுத்தியில் பதிந்திருக்கும் வழக்கங்கள் யாவையும் மீறுகிற வேட்கை. இப்படியொரு கதை தமிழில் சாத்தியம் ஆகியிருப்பது அதிசயம்தான்.

      இதெல்லாம் ஒரு கதையா என்கிற ரீதியில் சில பதிவுகளை ஃபேஸ்புக்கில் பார்க்க முடிந்தது, எக்ஸ்ட்ரா நம்பர் போடச்சொல்லி நாங்கள் கேட்டோமா என்கிற ரீதியில். குண்டுச்சட்டியை விட்டு வெளியேறவே மாட்டோம் என்கிற நண்பர்களும் உண்டு என்பது தெரிந்தும் அவ்வப்போது கட்டை விரலை வாய்க்குள் திணித்துக் கொள்ளும் ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றியும் அன்பும்.

      பிரியமுடன்,
      கார்த்திகைப் பாண்டியன்

      Delete
    7. ymithunan@gmail.com

      அத்தோடு நண்பரே நீங்கள் மொழிபெயா்த்த புத்தகம் விற்பனையில் உள்ளதா? எந்த பதிப்பகம் என்ற விவரங்களையும் அனுப்பினால் மகிழ்வேன்!!

      Delete
    8. // நம் பொதுபுத்தியில் பதிந்திருக்கும் வழக்கங்கள் யாவையும் மீறுகிற வேட்கை. //
      அருமையான விளக்கம்,இதன் அடிப்படையிலேயே எமைலின் அனைத்து செயல்களுக்குமான விளக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம்,ஆர்தர் ரைம்போவை அந்தளவிற்கு எமைல் உள்வாங்கிக் கொண்டது ஏனென்று எமைலின் பின்புலத்தையோ, சிறு பிராயத்தையோ அறிந்து கொண்டால் தெரிய வருமோ என்னவோ,கங்கா சந்திரமுகியா மாறியதற்கு ஒரு பின்புலம் இருப்பது போல.

      Delete
    9. // இப்படியொரு கதை தமிழில் சாத்தியம் ஆகியிருப்பது அதிசயம்தான். //
      நாமெல்லாம் அதிர்ஷ்டகாரர்களாக்கும்.

      Delete
    10. // அத்தோடு நண்பரே நீங்கள் மொழிபெயா்த்த புத்தகம் விற்பனையில் உள்ளதா? எந்த பதிப்பகம் என்ற விவரங்களையும் அனுப்பினால் மகிழ்வேன்!! //
      அதே,அதே.

      Delete
    11. நரகத்தில் ஒரு பருவகாலம்
      ஆர்தர் ரைம்போ (தமிழில் - கார்த்திகைப் பாண்டியன்)
      எதிர் வெளியீடு
      www.ethirveliyedu.in
      தொடர்புக்கு: அனுஷ் - 98650 05084
      ethirveliyedu@gmail.com

      Delete
    12. ///இதெல்லாம் ஒரு கதையா என்கிற ரீதியில் சில பதிவுகளை ஃபேஸ்புக்கில் பார்க்க முடிந்தது, எக்ஸ்ட்ரா நம்பர் போடச்சொல்லி நாங்கள் கேட்டோமா என்கிற ரீதியில். குண்டுச்சட்டியை விட்டு வெளியேறவே மாட்டோம் என்கிற நண்பர்களும் உண்டு என்பது தெரிந்தும் அவ்வப்போது கட்டை விரலை வாய்க்குள் திணித்துக் கொள்ளும் ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றியும் அன்பும்.///

      +1

      ///எமைலைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நாம் ஆர்தர் ரைம்போவைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு வழியில்லை.///

      ஏற்கனவே நீங்கள் கொடுத்திருந்த அறிமுகக்குறிப்பைப் படித்துவிட்டு கதைக்குள் நுழைந்ததால் எமைல், ஆர்தர் ரிம்போவாகவே தன்னை உணர்ந்துகொள்கிறான் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது நண்பரே.!

      எமைலின் பின்னனி மிஸ்ஸிங் என்பதே சிறு குறை ..வேறொன்றுமில்லை.!!

      Delete
    13. தகவலுக்கு நன்றி நண்பர் கா.பா அவர்களே.

      Delete
    14. ஆளுக்கொரு ரசனை சார் ; so "எனக்கு இது போன்ற கதைகள் சுகப்படாது" என்று கருதும் நண்பர்களையும் நான் குறை சொல்ல மாட்டேன் ! ஆனால் அதே தருணத்தில் எதிர்ப்படும் இத்தகைய வித்தியாசமான க(வி)தைகளை ஒரு எக்ஸ்டரா நம்பர் போடும் தயக்கத்தின் பொருட்டு நிச்சயமாய்த் துறந்திடவும் போவதில்லை ! இன்றில்லாவிடினும் நாளை ; நாளை இல்லாவிடினும் அதன் மறு நாள் ; அட...அதுவும் சாத்தியமில்லையா - மறு மாமாங்கத்திலாவது இவற்றின் ஈர்ப்புகள் பரவலாகாது போகாதென்று நம்புவேன் !!

      Delete
    15. Hello ... what is this ? /* குண்டுச்சட்டியை விட்டு வெளியேறவே மாட்டோம் */

      ஓஹோ .. ஜாலியா .. காமெடியா.. பரபாரப்பா காமிக்ஸ் கதைகள் கேட்டால் / படித்தால் குண்டு சட்டியில் பயணிப்பதாகுமா? கவிதை ? அழுவாச்சி காவியம்! கனத்த இதயம் .. இதெல்லாம் மட்டும்தான் மாற்று சிந்தனையின் குறியீடா ?

      யாருக்கு என்ன பிடிக்குதோ அதை படிக்கிறோம் .. பிடிக்காததை படிக்க நேர்ந்தால் சொல்கிறோம் ... இதிலென்ன குண்டு சட்டி ? முகநூலில் கமெண்ட் போட்டா அங்க வந்து குண்டுசட்டின்னு சொல்லுங்க .. பேசி பார்ப்போம் .. இங்கே மாற்றுக் கருத்துக்களுக்கு எதிர்வினை வருவதால் தான் மாற்றுக் கருத்துக்கள் குறைந்து விட்டன ..

      நான் மறுபடியும் குண்டுச்சட்டிக்கு போகிறேன் .. நீங்கள் அடுத்த அழுவாச்சி காவியம் கேட்டு படித்து சிலாகிக்கவும் :-) ;-) :-p

      Delete
    16. அன்பின் ராகவன் சார்,,

      //இங்கே மாற்றுக் கருத்துக்களுக்கு எதிர்வினை வருவதால் தான் மாற்றுக் கருத்துக்கள் குறைந்து விட்டன .. //

      இதுதான் நம் வீடு. நிறை குறைகளை இங்குதான் பேச முடியும். ஃபேஸ்புக் என்பது பொதுவெளி. ஏன் நம் வீட்டுக்குள் நடக்கும் சங்கதிகளை பொதுவெளியில் பேச வேண்டும். உங்களுடைய இந்தப் பதிவை எடுத்துப் போட்டு என்னை ஒருவர் பெரிய மயிரா நீ என்றெல்லாம் திட்டியிருக்கிறார், மகிழ்ச்சி. பழகிப்போன கதைகளுக்கு வெளியே புதிய களங்களைத் தேட வேண்டும் என்பதை வேறு எப்படிச் சொல்ல முடியும்? கிராபிக் நாவல்களைச் சரியில்லை என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கும்போது ஏன் பழைய குதிரையில் பயணிக்கிறீர்கள் என்பதை யாரையும் குறிப்பிடாமல் சொல்லக்கூட எனக்கு உரிமையில்லையா? காமிக்ஸ் சார்ந்து யாருடனும் உரையாடால் இருப்பதே நலம் பயக்கும் என்கிற மனநிலைக்குக் கொண்டு வருவதே உங்கள் நோக்கம் என்றாகிறது. காமிக்ஸ் சார்ந்த விருப்பு / வெறுப்புகள் தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையேயான காழ்ப்புணர்ச்சியாக மாறுமெனில் அதிலிருந்து விலகியே இருக்க விரும்புகிறேன். உங்கள் அன்புக்கு நன்றி.

      பிரியமுடன்,
      கார்த்திகைப் பாண்டியன்

      Delete
    17. அன்புள்ள கார்த்திகைப் பாணடியன்!

      //இதுதான் நம் வீடு. நிறை குறைகளை இங்குதான் பேச முடியும். ஃபேஸ்புக் என்பது பொதுவெளி.//
      --இங்கு குறைகளை சுட்டி காட்டினால் தனியாக கூறவும் என்று சிலர் கடிந்து கொண்டுள்னர்.

      //காமிக்ஸ் சார்ந்த விருப்பு / வெறுப்புகள் தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையேயான காழ்ப்புணர்ச்சியாக மாறுமெனில்//
      --தனிப்பட்ட வெறுப்பாக மாறி வெகு காலமாகிறது.

      Delete
    18. ஆளுக்கொரு ரசனை சார் என்று ஆசிரியரே ஏற்றுக்கொண்டுள்ளார். எனவே இதனை பெருசு படுத்தாமல் எதார்த்தமாக எடுத்துக் கொண்டால் போதுமானது.

      Delete
    19. அன்புள்ள கா பா.
      நானும் தற்போதைக்கு ஒரு வட்டத்தை விட்டு வெளியே வர விரும்பாத வாசகன் தான். அதே சமயம்ஆ சிரியர் சிறிது சிறிதாக தனது எல்லைகளை விரிவுபடுத்த முயலுவதை ரசிக்கவும் விரும்பவுமே செய்கிறேன்.

      நான்குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவனாக இருந்தாலும் உங்களுடைய
      பதிவில் தவறு ஏதும் இருப்பதாக கருதவில்லை. Definitely not offensive. முக நூலில் யாரோ ஒருவர் நாகரிகமற்ற முறையில் உங்களைத் தாக்கி இருந்தால் அதை பொருட்டில் கொள்ளாமல் இங்கு உங்கள் பங்களிப்பைத் தொடரவும்.

      Delete
    20. நண்பர் கார்த்திகைப் பாண்டியன் அவர்களுக்கு,உங்கள் கருத்துமுழு முற்றிலும் நியாயமானது,சரியானது.உங்கள் கருத்தின் சாரத்தை என்னால் புரிந்து கொள்ள உடிகிறது,எப்போதும் போல் உற்சாகமாய் உங்கள் பங்களிப்பை தொடரவும்.

      Delete
  42. ஆசிரியர் சார்@

    //// Before I sign off - ஒரு குட்டியூண்டு கேள்வி !! "சைத்தான் சாம்ராஜ்யத்தில்" ஒரு சின்ன வித்தியாசமுள்ளது ! கவனித்தீர்களா ??///---

    கவனிச்சாச்சுது.

    அது வழக்கமான டெக்ஸ் சைஸில் இருந்து உயரம் 1சென்டிமீட்டர் & அகலம் ஒரு, அரை சென்டிமீட்டர் கட் ஆகி இருக்கு.

    கொஞ்சம் சின்னமா செய்துள்ளூர்கள்.
    உள் அளவில் படங்களில் உயரம் மாறல.
    அகலம் அரை சென்டிமீட்டர் காணல.
    ரொம்பவும் சின்ன வித்தியாசம் என்பதால் படக்குனு புலப்படல.

    கோணமானி, வெர்னியர் காலிப்பர்லாம் வெச்சு அளந்து கண்டு கொண்டாச்சுதுங் சார்.

    இந்த குறைவின் காரணமாகவே செயலருக்கு அப்படி ஒரு பதிலை தந்துள்ளீர்கள். Am i correct sir?????

    ReplyDelete
    Replies
    1. வெர்னியர் காலிப்பர்லாம் வெச்சு அளந்து கண்டு பிடிச்சுருக்கார்... ஏதோ பாத்து ஒரு பன்னாவது பரிசு கொடுங்க எடிட்டர் சார்...!

      @TVR பன்னுல பாதி - நேக்கு!

      Delete
    2. 10பன்னு வருவது உறுதி;
      5ஐ உங்களுக்கு ஒதுக்கிடலாம்.

      Delete
  43. களவும் கற்று மற:-

    *ஓவியங்கள் எல்லாத்தையும் முதல் புரட்டலில் ரசித்து விட்டு கதைக்குள் பயணமானேன்.

    *முதல் பக்கமே
    "சாத்தானின் ஊழியமிங்கே கொடி பறக்குது,ஸாலடினின் சவங்களிங்கே அணி வகுக்குது"---னு கவிதை சொல்லி கொண்டே டொக்கு பயலாட்டாம் எமைல் வந்தான்.

    *படார்னு பேங்க் கேஷியர் மூஞ்சியில் பிஸ்டலை வைத்து பெரிய தில்லாலங்கடிதான் என எதிர்பார்ப்பை எகிறசெய்கிறான்.

    *டுப்புனு கஸ்டமர் ஒருவனையும் 3டெபுடி மார்சல்களையும் போட்டுத்தள்ளி விருவிருப்பை கூட்டுகிறான்.இவன் தான் நாம் தேடிய ஹீரோ என சட்டுனு பிடித்துபோய்டுது. தொடரச்செய்கிறான் ஆர்வத்தோடு எமைல்.இது மாதிரி ஆண்டிஹீரோக்கள் எப்பவும் ரசனையை தூண்டுபவர்கள்.

    *லக்னர், சிலுக்கு வரிசையில் சிக்கிட்டான் எமைல்....!!! 8000டாலர்களோடு விரைகிறேன் எமைல்; டரெண்ட்டோடு துரத்துகிறோம் நாம்.....!!!!

    *ஆரம்பத்திலேயே பரபரப்பான ஸ்டார்டிங் டெக்ஸ் கதைகளுக்கு அடுத்து இங்கே; அடுத்து.......

    ReplyDelete
    Replies

    1. *17வயதில் ஒரு டஜன் கொலைகளை செய்ய கூடிய கொலைவெறி ஏன்? --என டரெண்ட்டோடு நாமும் யோசிக்க வைக்கும் அளவு எமைல் காரியங்களை செய்திருக்கிறான். ஏன்?ஏன்?ஏன்?.

      *"காதலின் ரம்மியங்களை எத்தனை விதங்களில் நான் கற்பனையில் சுமந்து திரிந்தேன்"---திரும்ப திரும்ப இந்த வாசகங்களை படித்த, ட்ரெண்ட்டும் இனிமறியா பாதிப்புக்கு உள்ளாகிறார்.

      *விடையையும் கண்டு கொள்கிறார்,
      "காதலின் ரம்மியம்"...என நினைத்தால் சத்தியமாய் இல்லை.

      *அபாச்சேக்கள் விசாரணை கைதியின் இமைகளை வெட்டி விடுகிறார்கள். சூரியனை வெறும் கண்ணால் கண்டால் அதன் கிரணங்கள் சீக்கிரமே மூளை சூட்டை உண்டாக்கி உண்மத்த நிலையை உண்டாக்கிவிடுகிறது.

      *எமைலுக்கு உண்மத்தத்தை உண்டாக்கிய சூரியன் இங்கே ராம்போவின் கவிதைகள். தலைக்குள் ஊடுருவிய தோட்டா மூளையை சிதறடித்து, சித்தத்தை கலங்கடிக்கும். ராம்போவின் கவிதைகளும் தான்....!!!!


      Delete
    2. *காதல் பித்து,

      *காசு பித்து,

      *காமப் பித்து,

      *காணி பித்து,

      ----என அவ்வப்போது மாறும் சூழ்நிலை பித்துக்களோடே மனித மனம் திகழ்கிறது.

      *கட்டுப்பாடான காவல் பணியில் இருக்கும் ட்ரெண்ட்ம் இதற்கு விதிவிலக்கு அல்லவே!

      *காதல் கனவுகளுக்கும், பிசகிய சித்தத்துக்கும் இடையே உலவிவந்த எமைலின் கவிதை புத்தகத்தை தனக்கேயென வைத்துக் கொள்வதன் மூலம் இதை புலப்படுத்துகிறார், ட்ரெண்ட்.

      ****#####****####****

      Delete
    3. *ட்ரெண்ட் தொடரலாம் இதேபோலவே!

      Delete
  44. மண்ணில் துயிலும் நட்சத்திரம்...


    நண்பர்கள் பலர் முதல் மூன்று இதழ் போல இது இல்லை என்று சொல்லி வந்த காரணத்தால் கொஞ்சம் ஆவலை மட்டுபடுத்தியே படித்தேன்.எனக்கு நன்றாகவே உள்ளது.என்ன ஒன்று முதல் மூன்று கதைகளில் க்ளைமேக்ஸ் யூகிக்க முடியாத அளவிற்கு கொண்டு சென்று இருந்தனர்.இதில் பாதியில் வில்லனாக இருப்பவர்கள யார் என்பதை முன்கூட்டியே யூகக்க முடிகிறது என்பதை தவிர வழக்கம் போல அருமையே...இவ்வளவு குறுகிய பக்கங்களில் டெக்ஸ் வருகை தந்து சாகஸம் புரிவதே கலக்கலாக தான் உள்ளது .


    மண்ணில் துயிலும் நட்சத்திரம் ...3 ஸ்டார்..

    ReplyDelete
  45. இனி பாக்கி இருப்பது சைத்தான் சாம்ராஜ்யம்...

    ஏற்கனவே விரும்பி படித்த கதை கறுப்பு வெள்ளையில் ...இப்பொழுது வண்ணத்தில்..ஙெற்றிகர படைப்பு என இனி படித்து தான் சொல்ல வேண்டுமென்பது இல்லையாதலால்...


    சைத்தானை தேடி பாசத்துடன் செல்கிறேன்..:-)

    ReplyDelete
  46. பொருளர் ஜி@

    *ட்ரெண்ட் கதை "களவும் கற்று மற"---ல், பக்கம் 40, எமைலால் கொல்லப்பட்ட 3கைதிகளின் பிணங்களை குழி தோண்டி புதைக்கனும் என்கிறார்,ட்ரெண்ட்.

    *அதைப்போலவே புதைக்கவும் செய்கிறார். இங்கே நடுக்காட்டில் திடீரென குழி தோண்டும் "மண்வெட்டி" ட்ரெண்ட்க்கு எப்படி கிடைத்தது???

    ReplyDelete
    Replies
    1. நடுக்காட்டில் டீ தயாரிக்க உதவும் கெட்டில்,அதைத் தாங்க உதவும் இரும்பினாலான மடக்க கூடிய ட்ரை போட் ,சாப்பிடும் மினி தட்டு,போர்க் எங்கிருந்து வந்தனவோ அங்கிருந்துதான் வந்து இருக்க கூடும்...ஆம் .ட்ரெண்ட்- ன் பயண பையிலிருந்து....

      கனடா பனி தேசம் என்பதால் பனியை அப்புறப்படுத்த கூடிய சிறிய snow shovel
      ஆக அது இருக்க கூடும்.

      பிரித்தெடுக்க கூடிய மரக்கைப்பிடியுடன் கூடிய இரும்பு shovel ப்ளேடு.

      A guess.

      Delete
  47. நான் யாா்? நான் யாா்? என தேடியலையும் XII காரணமோ?
    இதை தொடா்ந்து ஐன்ஸ்டீன், கால இயந்திரம், விண்வெளி, அண்டம் என்றெல்லாம் பேசியதால் வந்த ஆா்வம் காரணமோ?
    இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஆா்தா் ரைம்போவின் கவிதைகளால் களங்கடிக்கப்பட்ட இளைஞனின் வாழ்க்கை காரணமோ?
    எல்லாவற்றிற்கும் மௌன சாட்சியை பயணிக்கும் ட்ரெண்டின் ஆழ்மௌனப் பயணம் காரணமோ?
    எது காரணம் என்று தொியவில்லை?

    வழக்கமாக ஞாயிறு மாலைகளில் என்னோடு சோ்ந்து வாக்கிங் வரும் நண்பா், நேற்று என்னை ஒரு மாதிாியாய் தான் நினைத்து விட்டிருப்பாா் என்பதில் சந்தேகம் இல்லை! ஏனென்றால் வழக்கமாக வழவழவென்று உலக அரசியல், வரலாறு, பொருளாதாரம், புவியியல் என ஏதோ ஒன்றை பேசிக் கொண்டே வரும் நான், நேற்று வழக்கத்திற்கு மாறாக வாயே பேசாமல் 5 கி.மீ. நடந்துவிட்டு வீடு வந்து சோ்ந்ததையும், வளைவுகளிலும், மேடுகளிலும், நின்று எதுவும் பேசாமல் வானத்தையும், பூமியையும், மேகக் கூட்டத்தையும், அங்காங்கே தொியும் பனை மரங்களையும், கதிரவனின் ஒளிக் கற்றைகளையும், ஏதோ இன்று தான் இதையெல்லாம் புதியதாய் பாா்ப்பதைப் போல, விடாது வெறித்து பாா்த்துவிட்டு, வீடு வரும்வரை ஒரு வாா்த்தை கூட பேசாமல் வந்துவிட்டேனா? என்று நினைத்து, என் கபாலத்தில் ஏதேனும் கழன்றுவிட்டிருக்குமோ என்று கூட நினைத்திருக்கலாம்!!

    அவருக்கு தொியுமா? அந்த நடை பயணத்திற்கு முன் XIII யின் தேடலும், ஐன்ஸ்டீனின் அண்டவெளியும், ஆா்தாின் கவிதையால் கண்டுண்ட இளைஞனின் கதையுமே என் மண்டை முழுவதும் வியாபித்திருக்கிறது என்பது!!

    இந்த பின்னணியில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்ப நானும் பேனா பிடிக்க வேண்டிய அவசியம் உண்டாகி விட்டது!

    ஏதேதோ தோன்றியதையெல்லாம் எழுதி முடிக்கும் போது மணி மூன்றை கடந்துவிட்டது! இரண்டு பக்கங்களில் இரண்டு தலைப்புகளில் எழுதியிருக்கிறேன்! நிச்சயமாக இது "களவும் கற்று மற" (கத்தும் அற! செனாஜி okவா??!!) கதையின் விமா்சனம் அல்லது வெளிப்பாடு அல்ல! என்ற போதும், அதனுடைய தாக்கம் என்று உறுதியாகச் சொல்லலாம்!

    இந்த காமிக்ஸ்கானதொரு பொதுத்தளத்தில் அவற்றை பதிவிடலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் இப்போது வரை ஓடிக் கொண்டிருக்கிறது!!

    ஆனாது ஆகட்டுமென ஆரம்பிக்கிறேன்!

    தலைப்பு - 1 : "காாிருள்"

    தலைப்பு - 2 : "வெளிா்நிற ஒளி"

    தொடரும்...

    ReplyDelete
    Replies
    1. காாிருள்!

      நான்... போிறை பேசுகிறேன்...

      யாராலும், எதனாலும் பாா்க்கமுடியாத, பேசமுடியாத, உணரமுடியாத போிறை பேசுகிறேன். என்னை எந்தவொரு வட்டத்திற்குள்ளும் அடைத்துவிட முடியாது. எங்கும் சூழ்ந்திருக்கும் காாிருளே நான். காாிருளை நீங்கள் காண முடியாது. அவ்வளவு நுணுக்கமான பாா்வை உங்களுக்கு இல்லை. காாிருளிடமிருந்து எந்தவொரு வாா்த்தையையும் நீங்கள் கேட்க முடியாது. அதனுடைய மொழி இன்னதென்றே நீங்கள் அறிந்திருக்கவில்லை. மேலும் நீங்கள் அதை உணரவும் முடியாது. ஏனென்றால் அது தனிப்பட்ட முறையில் எந்தவித உணா்ச்சியையும் வெளிப்படுத்துவதுமில்லை. இவ்விதம் பாா்க்க இயலாத, கேட்க இயலாத, உணர இயலாத ஒன்றை எவ்விதம் விளங்கிக்கொள்ள இயலும்?

      வழி ஒன்றே ஒன்று தான். அதுவாகவே நீங்கள் மாறிவிட வேண்டும். அதனோடு இரண்டறக் கலந்துவிட வேண்டும். உண்மையில் அங்கே மாறுவதற்கோ, கலப்பதற்கோ கூட ஒன்றுமில்லை. அவ்விதம் புாிந்து கொள்ள வேண்டும். ஆம் 'புாிதல்' மட்டுமே மிகச் சாியானது.

      எங்கும் வியாபித்திருக்கும் 'காாிருளே நான்'. உங்கள் புறக்கண்ணை விடுத்து அகக்கண்ணைத் திறந்து பாருங்கள். உங்கள் வீட்டைத் தாண்டி, உங்கள் நாட்டைத் தாண்டி, உங்கள் பூமியைத் தாண்டி, சூாிய - சந்திரன் உட்பட உங்கள் பால்வெளி மண்டலத்தைத் தாண்டி, உங்கள் ஆயிரமாயிரம் நட்சத்திரக் கூட்டங்களைத் தாண்டி, உங்கள் அகக்கண்ணைத் திறந்து பாருங்கள். இதையெல்லாம் காண உங்கள் புறக்கண் போதாது என்பதை முதலாவதாகப் புாிந்து கொள்ளுங்கள்.

      அகக்கண் கொண்டே, வீட்டைக் கடந்து வெளியே வாருங்கள்; நாட்டை விட்டு வெளியே வாருங்கள்; பூமியை விட்டு வெளியே வாருங்கள்; பால்வெளி மண்டலம் - நட்சத்திரக் கூட்டம் - அண்ட சராசரம் சகலத்தையும் விட்டு வெளியே வாருங்கள் !

      இப்போது காணுங்கள். எங்கும் வியாபித்திருக்கும் காாிருள் என்னும் போிறையை. வீடு மறையட்டும்; நாடு மறையட்டும்; நட்சத்திரக் கூட்டம் மறையட்டும்; எல்லாம் மறைந்தபின் எங்கும் சூழ்ந்திருக்கும் காாிருளைக் காணுங்கள்.

      அதுவே போிறை! அதுவே சத்தியம்!

      அனைத்து வண்ணங்களும், அதிலிருந்தே உருவாகின்றன. அனைத்துமான "சூன்யமே" போிறை! மேலும் அது ஒன்றல்ல என்பதை உணருங்கள். ஒன்று என்பது 2-வதாக மற்றொன்றை உருவாக்கும். மற்றொன்று 3-வதாக வேறென்றை உருவாக்கும்! ஆனால் அந்த 'ஆதி ஒன்று' எப்பொழுதுமே சூன்யத்திலிருந்து மட்டுமே உருவாகும் என்பதை உணருங்கள். ஒன்றிற்கு முன்பாக 'சூன்யமே' உள்ளது. அதுவே, சா்வ வல்லமை கொண்ட சூன்யமே "போிறை"யாகும்.

      பன்னெடுங்காலமாக எனக்கு நானே பேசிக் கொண்டிருந்தேன். இப்பொழுது உங்களுக்காகப் பேசுகிறேன். ஏனென்றால் அங்கே பேசவும் வாா்த்தையில்லை; கேட்கவும் ஏதுமில்லை. ஆயினும் சம்பாஷனை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அம்மொழியை நீங்கள் யாரும் உணா்ந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அது மொழியில்லாத மொழி! வாா்த்தைகளற்ற வாா்த்தை!! ஆழ்ந்த 'மௌனத்தில்' மட்டுமே நீங்கள் அதனோடு பேசவோ அல்லது அதனைக் கேட்கவோ முடியும். 'மௌனத்தோடு' உறவாடத் தொியாதவன் வாா்த்தைகளோடு உறவாடிக் கொண்டிருக்கிறான்.

      'ஒன்று' எவ்விதம் சூன்யத்திலிருந்தே உண்டாகிறதோ, அதுபோல, வாா்த்தைகள் அனைத்தும் மௌனத்திலிருந்தே உண்டாகின்றன. நீங்கள் வாா்த்தைகளைக் கற்க வேண்டுமாயின் மௌனத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். மெய்யான ஒளியை காண வேண்டுமாயின் 'காாிருளை' காணுங்கள்.

      "மௌனத்தில் ஆழ்ந்த காாிருளே போிறை !!"

      தொடரும்...

      Delete
    2. வெளிா்நிற ஒளி!

      நான்... போிறை பேசுகிறேன்...

      நான் என்னை பல்லாயிரம் மடங்கு, லட்சம் மடங்கு, கோடி மடங்கு உள்முகமாக எனது பாா்வையைச் சுருக்கி என்னுள்ளே தேடிப் பாா்த்தேன். எங்கும் காாிருளே வியாபித்திருக்கிறது. இன்னும் பல கோடி கோடி மடங்கு சுருக்கிப் பாா்த்தேன். எங்கும் இருளே நிரம்பியிருக்கிறது. கோடி மடங்கு; லட்சம் மடங்கு; ஆயிரம் மடங்கு; நூறு மடங்கு; பத்து மடங்கு; ஒரு மடங்கு... ஆ! கண்டேன் அங்கே! ஒரு வெளிா்மேகத் திரள்! அது 'வெளிா்நிற ஒளி'. உள்ளும் புறமும் என எங்கும் இருள் நிரம்பிய என்னுள் மெல்லிய வெளிா்நிற ஒளி. முதன்முறையாக அதைக் கண்டபோது நான் பரவசடைந்தேன். பிறகு பலமுறை இது போன்ற ஒளித்திரள்களை நான் கண்டிருக்கிறேன். பின் சகஜப் பாா்வைக்கு வந்த பிறகு அதன் நினைவுகள் அதனை மீண்டும் காணத் தூண்டின.

      முன்பு கண்ட ஒளியைக் காண முயற்சித்தால் அது எளிதாகக் கிடைப்பதில்லை. வேறு தோற்றத்திலான ஒளித்திரளையே காண்கிறேன். முன்பு கண்டது இருளிலே கரைந்து போயிற்றோ! அல்லது வேறு இடம் மாறி தேடுகிறோமோ தொிவதில்லை. பூப்பதும் - கரைவதுமாக ஒளித்திரளானது பிரம்மாண்டான காாிருளிலே தொடா்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இருந்திருக்கிறது.

      இம்முறை எனது பாா்வையை கோடி, லட்சம், ஆயிரம், நூறு என மிகமிக நுண்ணியதாக்கிப் பாா்த்தபோது இவ்வெளிா்நிற ஒளியைக் கண்டேன். இம்முறை எனது பாா்வையை மேலும் மேலும் குறுக்கி, சுருக்கி ஒளியின் ரகசியத்தைக் காணப் போகிறேன்.

      கவனம் முழுதும் அதன்மேல் வைத்து மேலும் பலஆயிரம் மடங்கு சுருக்கிப் பார்த்த போது ஒளித்திரளானது ஓாிடத்தில் நில்லாமல் தொடா்ந்து புகைபோல விாிவதைக் கண்டேன். ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் சுருக்கிப் பாா்த்தேன். ஒளித்திரளுக்குள்ளே பல சுருள்வடிவத் தோற்றங்கள் தென்பட்டன. ஆஹா ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமான சுருள் வடிவங்கள் தென்படுகின்றன. மேலும் சுருக்கிப் பாா்த்தேன். சுருள் வடிவங்களுக்குள்ளே கோடிக்கணக்கான சுயஒளிப் புள்ளிகளைக் கண்டேன்.

      இனி என் கவனம் முழுவதும் அந்தச் 'சுயஒளிப் புள்ளிகள்' மேல் தான். கோடிக்கணக்கான சுயஒளிப் புள்ளிகளில் ஒன்றைத் தொிவு செய்து மேலும் பார்வையை பல மடங்கு சுருக்கிப் பாா்க்கலானேன். அட! விந்தைமிகு காட்சிகள் தென்படுகின்றன. காாிருளே எங்கும் என எண்ணியிருந்த எனக்கு, மிகமிக நுண்ணிய இவ்வொளித் திரள்களுக்குள்ளே எத்தனை அற்புதக் காட்சிகள்! இந்த சுயஒளிப் புள்ளிகள் தான் எத்தனை விந்தையானவை! இன்னும் நுணுக்கமாகப் பாா்க்க வேண்டும் என்ற பேராவல் தொற்றிக் கொண்டது. ஒரு 'சுயஒளிப் புள்ளியை' மட்டும் தனித்து மேலும் பல ஆயிரம், லட்சம் மடங்கு பாா்வையைச் சுருங்கிப் பாா்க்க எண்ணினேன்.

      ஆஹா விந்தையோ விந்தை! இருளும் வெள்ளையுமே இதுவரை கண்ட நான், பல வண்ணங்களையும் காண்கிறேன். உண்மையில் அந்தச் 'சுயஒளிப் புள்ளி' வெந்நிறம் அல்ல! அது ஒரு செந்தீப்பந்து. இந்த நெருப்பின் ஜூவாலைதான் எனது சுய இருளைக் கிழித்தெறிகிறது. இது என்ன விந்தை! மேலும் சில உருண்டைகள் உள்ளன. அவை சுயமாக ஒளிரவில்லை. செந்தீப்பந்தின் ஒளியைப் பிரதிபலிக்கின்றன. அதில் ஒன்று சிவப்பு. ஒன்று வெள்ளை. ஒன்று நீலம். மேலும் சில ஒளிரா உருண்டைகளும் உள்ளன. ஒவ்வொன்றாகப் பாா்த்துவிட வேண்டும்.

      முதலாவதாக மத்தியில் இருந்த நீலப்பந்தை தொிவு செய்தேன். மேலும் பலபடி பாா்வையைக் குறுக்கிப் பாா்த்தேன். ஆஹா! ஆஹா! அற்புதம்! அற்புதம்! விந்தையோ விந்தை! காணக் கண் கோடி வேண்டும்! இதுவே 'சுவா்க்கம்' அன்றி வேறென்ன! லட்சோப லட்சம் வண்ணங்கள் - தோற்றங்கள் - சப்தங்கள். எங்கும் காாிருள் சூழ்ந்த, எவ்வித ஒலியும் இல்லாத, வண்ணங்களற்ற, தனிமைச் சிறையில் நெடுங்காலம் கழித்த நான், கண்டேன் சுவா்க்கம் ஒன்றை! அதிலே அனைத்தும் "உயிா்ப்புடன்" இருப்பதையும் கண்டேன். எத்தனை வண்ணங்கள்! எத்தனை சப்தங்கள்!! எத்தனை தோற்றங்கள்!!!

      "அதன் பெயா் பூமி என்பதை பிறகு தான் அறிந்தேன்"

      Delete
  48. நண்பர்களே வணக்கம்.
    களவும் கற்று மற:சித்திரதரம்:எப்பொழுதும் படிக்கும் நேரத்தை விட ஒரு மணி நேரம் அதிகமானது காரணம் சித்திரங்களை மிகவும் ரசித்து படித்ததால் தான்.படித்தவர்கள் அனைவரும் நிச்சயமாக இந்த அனுபவத்தைப் பெற்றிருப்பர்.கண்ணுக்கு குளிர்ச்சியான அழகான சித்திரங்களை வரைந்த ஓவியர் லியோவுக்கு நன்றி.
    கதை:ஆரம்பம் முதலே ஒருவித எதிர்பார்ப்புடன் கதை செல்கிறது.ட்ரெண்ட் மிக எதார்த்தமான நாயகனாக தெரிகிறார்.எமைல் வெறுப்பது மனிதர்களை அல்ல மனிதர்களின் கெட்ட உணர்வுகளை.கதையின் முடிவில் ட்ரெண்ட் எமைலை சட்டத்தின்முன் நிறுத்தியிருந்தால் இந்த கதை சாதாரண கதையாகத்தான் தெரிந்திருக்கும்,மாறாக இந்த கதையின் முடிவு படித்தவர்களின் மனதில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.ஒரு நாயகனுக்கு உரிய மனிதாபிமானத்தை ட்ரெண்ட் இதில் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.சிறந்த இந்த கதையின் ஆசிரியர் ரொடால்பேக்கு நன்றி.
    முதலில் வந்த பனிமண்டல வேட்டை சித்திரங்கள் அருமையாக இருந்தாலும் கதை சுமாரானதுதான் என்ற எண்ணம் இருந்தது.அடுத்து "களவும் கற்று மற"விளம்பரத்தை பார்த்தவுடன் ஆசிரியர் அவர்கள் விஷப்பரீச்சைக்கு தயாராகிறாரோ என்ற எண்ணமே ஏற்பட்டது ஆனால் புத்தகத்தை படித்தபின்தான் அவருடைய தேர்வு எவ்வளவு சிறப்பானது என்று தெரிகிறது.இந்த கதையை அழகான அட்டைப்படத்துடனும் சிறந்த அச்சுத்தரம் மற்றும் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புடனும் தந்த ஆசிரியர் விஜயனுக்கு நன்றி.
    இந்த புத்தகத்தை வாங்கலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருப்பவர்கள் வாங்கி படித்தால் நிச்சய அனுபவம் காத்திருக்கிறது.நன்றி நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. என் மனதில் உள்ளதை அப்படியே பிரதிபலித்து உள்ளீர்கள் நண்பரே..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. // ஆனால் புத்தகத்தை படித்தபின்தான் அவருடைய தேர்வு எவ்வளவு சிறப்பானது என்று தெரிகிறது. //
      நல்லா சொன்னிங்க,நச்னு சொன்னிங்க.

      Delete
  49. எடிட்டர் சார்வாள்,

    இரும்புக் கை மாயாவியின் """ கொலைகாரக் குள்ளநரி """ கதையை மறுபதிப்பு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ஐ.வி.சுந்தரவரதன்
    சின்ன காஞ்சிபுரம்

    ReplyDelete
  50. இன்னும் செப்டம்பர் மாத புக்கை தோடகுட இல்லை
    காரணம் இரத்தப்படலம்
    புக்-2
    அத்தியாயம்-11
    பக்கம்-496
    படித்துக்கோன்டிருக்கிறேன் மிகவும் மர்மமாக போய் கோன்டிருந்க கதாநாயகனின் கதை புதிர் ஒரு அளவு விடுபட்ட மாறி இருக்கிறது
    ஜேசன் தன்னுடைய அப்பா மல்வேவை சந்தித்ததும் தான் உண்மை கதை செல்கிறார் மல்வே
    மிகவும் பிரமாதம்......
    சூப்பர்

    ReplyDelete
  51. காமிக்ஸ் என்றாலே காமெடி // அடிதடி ரகளை இரண்டும் இருக்க வேண்டும்.
    அவ்வப்போது காதலும் இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. அதுதான் நமது (காமிக்ஸ்) பண்பாடு.
      அதுதான் நமது (காமிக்ஸ்) கலாச்சாரம்.

      Delete
    2. அடிதடினா டெக்ஸ்ம் டைகரும்;
      காமெடினா லக்கி மட்டுமே- இதுவும் நமது (காமிக்ஸ்) கோட்பாடே!

      Delete
    3. அதுதான் நமது (காமிக்ஸ்) சம்பிரதாயம்.

      Delete
  52. @ Ganesh kV

    மண்ணில் துயிலும் நட்சத்திரம்

    பக்கம் 3-ல் போட்டோகிராபர் கிரவுன் ஸ்டுடியோவில் செல்லுலாய்ட் ப்ளேட்டை பயன்படுத்துவதை கவனித்தீர்களா?

    உடனே போட்டோகிராபரே ப்ரிண்ட் எடுக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி செனா அனா ஜி.
      இரவு கவனிக்கிறேன்.

      Delete
  53. களவும் கற்று மற ....
    ராமன் மிதிலை நகர வீதிகளில் நடக்கிறான் ..
    வீதியின் இருபுறமும் வனிதையர் குழுமி அவனை பார்க்கின்றனர் ..
    தோளைப் பார்த்தவர் தோளை மட்டுமே பார்க்கின்றார் .அவ்வளவு வனப்பு மிக்க தோள்கள் .
    பாதத்தைப் பார்த்தவர் பாதத்தை மட்டுமே பார்க்கின்றார் .அவ்வளவு வசீகரம் .
    அகன்ற கைகளை பார்த்தவர் கைகளை மட்டுமே பார்க்கின்றார் ...அவ்வளவு ஈர்ப்பு மிக்க கைகள் .
    இப்படியாப்பட்ட கதையா போச்சு களவும் கற்று மற –வை கையில் எடுத்த போது .
    முன் அட்டையை விட்டு ‘’முழிகளை ‘’ முக்கி எடுக்க வேண்டியதாயிற்று
    பின் அட்டையை விட்டு நேத்திரங்களை பிச்சு எடுக்க வேண்டியதா போச்சு .
    உள்ளே நுழைஞ்சால் ஒவ்வொரு பக்கமும் இப்படியே ..
    வீரை கவிராஜ பண்டிதர் போல ஞானம் இருப்பின் இக்கதையின் சித்திரங்கள் குறித்து ஒரு
    சௌந்தர்ய லஹரி (தமிழில் அழகின் அலைகள் என அர்த்தம் )பாடியிருக்கலாம் .

    //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    எமைல்..
    எமைல் –ன் வன்முறைகளுக்கு எதிராக பெய்யும் குற்றச்சாட்டு மழைக்கு இலக்கிய குடை பிடித்து காப்பாற்ற முடியாது ..
    நம்புங்கள்!!!
    அமெரிக்க மனதத்துவ நிபுணர் ஹார்வி கிளிக்லே தனது மாஸ்க் ஆப் சானிட்டி என்ற நூலில் குறிப்பிட்டுள்ள ஒரு சைக்கோபத் நோயாளியின் பதினாறு விதமான குண நலன்களும் எமைல் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகின்றன..
    வங்கியில் ,வனத்தில் ,லீ டார்ன் பாருக்கு வெளியே எமைல் –ன் நடவடிக்கைகள் சீரியல் கில்லருக்கு ஒப்பானவை .
    ரொம்பொ-வின் சமூக வெளி ஒழுங்கீனங்கள் ,பாலியல் திசைமாறல்கள் ,சிறு திருட்டுகள் (நன்றி காபா ) சகிக்கப் படக் கூடும் .
    ஆனால் அடுத்தடுத்த கொலைகள்-அவற்றுக்கான காரணங்கள் - ஆன்டிசோசியல் பர்சனாலிட்டி டிஸார்டர் என்ற மன நோய்-க்கு எமைல் ஆளாகியிருப்பதை மட்டுமே உணர்த்த கூடும் .
    எமைல் மேல் பரிதாபம் தோன்றுவது அவன் மனநோயாளி என்ற அளவில் மட்டுமே .

    ReplyDelete
    Replies
    1. சர்ரியலிசம் வகை கவிதைகள் இதுவரை வாசித்தது இல்லை ..
      முதலில் தமிழில் சிலவற்றை படித்து பார்க்கும் நோக்கில்
      அப்துல் ரஹ்மான்,ஞானக்கூத்தன் ,கலாப்ரியா கவிதைகளை சில வாசித்து பார்த்தேன் ..
      ம்ஹூம் ..அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் போலத்தான் இருக்கு ..

      மைல்கல்லே மைல்கல்லே
      நீற்றுப்பட்டையும் சந்தனப் பொட்டும் விளங்கும்
      தேக்குக் கடவுளைக் காட்டிலும்
      துதிக்கப்பட்ட எலுமிச்சைப்
      பழத்தைப் பலிகொண்டு
      முதலோட்டம் தொட்ட கார்க்கடவுளைக் காட்டிலும்
      நல்ல தெய்வம் நீ. அல்லவோ?
      திண்டுக்கல் எத்தனை தூரமென்று
      செங்கல்பட்டில் தெளிவாய்க் கூறும்
      உனது
      தீர்க்கதரிசனம் பரதெய்வம் காணுமோ?”
      தொலைக்காட்டிக் கல் ----ஞானக்கூத்தனின் செயற்கை படிம கவிதை

      அப்பாவும் பிள்ளைகளும்
      உட்கார்ந்தார்கள்
      உடுப்புகளைப் புறம்போக்கிப்
      படுத்துக் கொண்டாள்
      வள்ளிக்கிழங்கின்
      பதமாக
      வெந்துபோன
      அவள் உடம்பைப்
      பிட்டுத் தின்னத்
      தொடங்கிற்று
      ஒவ்வொன்றாக
      அவையெல்லாம்
      ஞானக்கூத்தனின் சர்ரியலிச படிம கவிதை
      நீரிலிருந்து பிறந்தவனே
      நீ ஏன் நீராக இல்லை?
      நீ மட்டும்
      நீராக இருந்தால்
      இல்லாமல் போகமாட்டாய்
      நீ மட்டும்
      நீராகவே இருந்தால்
      உன்னை யாரும்
      காயப்படுத்தவே முடியாது

      நீரைப்போல்
      மென்மையாக இரு
      மென்மையே
      உயிர்த் தன்மை
      நீரைப் போல்
      போராடுகிறவனாக இரு

      நீர் ஆயுதமில்லாமல்
      போராடுகிறது
      ஆனால்
      எல்லாவற்றையும்
      வென்று விடுகிறது

      நீரைப்போல்
      உன் சிறைகளில் இருந்து
      கசிகின்றவனாக இரு

      நீரைப்போல்
      கண்டுபிடிப்பவர்களுக்காக
      ஒளிந்திரு

      நீரைப்போல்
      சுவை அற்றவனாக இரு
      எப்போதும்,
      நீ தெவிட்டாதவனாக
      இருப்பாய்

      நீரைப்போல்
      பிரதிபலிப்பவனாக இரு
      சூரியனும் சந்திரனும்
      உனக்குக் கிடைப்பார்கள்

      நீரைப்போல்
      எங்கே சுற்றி அலைந்தாலும்
      உன் மூல சமுத்திரத்தை
      அடைவதையே
      குறிக்கோளாய்க் கொள்வாயாக
      அப்துல் ரஹ்மான்-ன் ‘’நீராக ‘’ கவிதை


      சுடலை மாடன் குறித்து ஒரு instant கவிதை…?
      நடக்கவே சீத்துவம்
      இல்லாதவன் போலிருப்பான்
      சந்நதம் வந்து ஆடுகிறான்
      சுடலைக்கு முன்னால்
      இவனுக்குள்ள
      இம்புட்டு பலமாய்யா
      புடிக்கவே முடியலையே
      வியப்பவர்கள் மத்தியில்
      சலிப்புடன் சொல்கிறாள்
      மனதுக்குள் அவன் மனைவி
      இந்தச் சாமி
      அந்தச் சமயத்தில
      வந்து தொலைக்காதா
      -கலாப்ரியா


      Delete
    2. கடேசி கவிதை,
      அம்மாடியோவ்...!!!

      Delete
    3. கதையின் விமர்சனம் படிக்கும் போதே புதுசா சில விசயங்களையும் தெரிஞ்சுக்க முடியுதுன்னா அது செனா அனாவோட விமர்சனமாத்தான் இருக்கும்.

      Delete
  54. இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன் நான் நாலாங்கிளாஸ் விடுமுறையில் படித்த முதல் நான்கைந்து காமிக்ஸ் சாக்சங்களுள் சைத்தான் சாம்ராஜ்யமும் ஒன்று. நாம் மிகவும் சிறார்களாக ஜஸ்ட் லைக் தட் கடந்து போகும் சில தருனங்களை வாழ்நாள் முழுதும் என்றாவது தீடிரென வருடம் ஒரு முறையோ இரண்டு முறையோ ஞாபகம் வருமல்லவா? அது போல் எனக்கு அடிக்கடி ஒரு நினைவு வரும். அது அந்த சாகசத்தில் வரும் சூரியகாந்தி பூ தான். பூமியில் உள்ள குழியில் இரவுக் கழுகு மற்றும் அவர் சகாக்கள் கயிறு போட்டு நுழைவர், பயங்கர ஏரியில் உள்ள இருவரை காக்கும், இந்த மூன்று ஃபிரேமும் இன்று வரை நான் மறக்கவில்லை. அதை நினைக்கும்போது என் சிறிய வயது நினைவுகள் அலையடிக்கும்.நேற்று ஏதோ பழைய காமிக்ஸ் கலர் ரீப்ரின்ட் போல என படித்து பார்த்தால் அதே பூவும், நான் சொன்ன மற்ற ஃப்ரேம்களும். மிகவும் ஜாலியாகி விட்டேன்.

    இந்த மாதிரி ஒவ்வொருக்கும் ஒரு சில இதழ்களும், ப்ரேம்களும் இருக்கும். அதனால் தான் மாயாவி மற்றும் கோ சில வருடம் முன் சூப்பர்ஹிட் அடித்தன.

    Thanks for giving me an issue important for ME.

    என்னுடைய மற்ற நாஸ்டால்ஜிக் இதழ்கள்-ஒரு வீரனின் கதை, மற்றும் பெயர் மறந்து போன இன்னொரு டெக்ஸ் இதழ், மற்றும் இரும்புக்கை யின் ஒரு சாகசம்.

    டிரன்ட்-மனதில் உள்ள யாழை இது மீட்டது

    ஹெர்லாக்-welcome back. great re entry. great creativity and laughter. சீரியசாக பல காமிக்ஸ் எழுதலாம். இந்த மாதிரி சிரிக்க வைப்பது அதை விட நூறு மடங்கு கஷ்டம்.

    மாடஸ்டி- நான் மேலே சொன்ன நாஸ்டால்ஜியா ஃபாக்டர் நமது ஆசிரியருக்கு மாடஸ்டி மேல் கொஞ்சம் தூக்கல் என்பது உலகம் அறிந்ததே. அவருக்காக படித்து வைப்போம். மூன்று காமிக்ஸ்களையும் ஒரே மூச்சில் படித்த நான், தினமும் Sleeping dose ஆக நான்கு பக்கங்கள் படித்து இருபது நாளில் விமர்சனம் சொல்கிறேன்.

    ReplyDelete
  55. ///தினமும் Sleeping dose ஆக நான்கு பக்கங்கள் படித்து இருபது நாளில் விமர்சனம் சொல்கிறேன்.///

    நீங்க மாடஸ்தி பத்தி சொல்லலைனு நம்புறேன். (மனசு வேற 'பக் பக் 'னு அடிக்குது.)

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் எடிட்டரும் சொந்தமோ?

      Delete
  56. களவும் கற்று மற...சில எண்ண பிரதிபலிப்பு.....



    மேலே நண்பர் ஒருவர் சொன்னது போல அழுகாச்சி காவியம் ,கனத்த இதயம் ,சோக படைப்பை கண்டு நானும் வெறுத்து ஒதுக்கியவன் தானே .ஆசிரியர் முன்பொருமுறை சொன்னது போல இதுபோன்ற மாற்று சிந்தனையுடைய ,கனக்க வைக்கும் களத்திற்குள் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கையை பிடித்து கொண்டு கூட்டி வருவேன் என்று சொன்னாரே .கூட்டி வந்து விட்டாரா ..ஐயம் எ காம்ப்ளான் பாய் என ஒத்து கொள்ள வைத்து விட்டாரா என்ற பலத்த சிந்தனை நேற்றிலிருந்து ...இல்லையே இப்பொழுதும் நிஜங்களி்ன் நிசப்தம் என்றாலே தலையை சுற்றி கொண்டு தானே வருகிறது .பிறகு எப்படி இந்த களவும் கற்று மற சோகமும் சுகமாக தோன்றியது ..? படிப்போருக்கு நாயகனாய் உள்ளுணர்வோர் உண்டு ...எதிர் நாயகனும் தானாய் உள்ளுனர்வு எழுந்தது எவ்வாறு என்ற பலத்த சிந்தனையின் காரணமாய் நேற்று மீண்டும் களவினுள் புகுந்தேன்.இந்த இதழ் நான் படித்து உணர்ந்ததையும் , குற்றவாளி எமைலின் காரிய காரணத்திற்கும்..அவன்மேல் பரிதாபம் அடைவதற்கும் ,அவன் மரணம் நம் மனதை பாதிப்பதற்கும் என்ன காரணம் என்னுள் உணர்ந்ததை பகிர்கிறேன்.இதற்காக பொருளாளர் செனாஅனாவுடனோ ...நண்பர் மிதுன் அவர்களை போலவோ...நண்பர் ரவிகண்ணர்போல ஆழ உணர்வதோ போலோ எனக்கு சுட்டு போட்டாலும் வராது என்பதையும் முன்னரே சொல்லி கொண்டு ஒரு சாதாரண ரசிகனாய் என்னுள் தோன்றியதை பகிர்கிறேன்.


    எமைல் கொள்ளை அடிப்பதன் காரணம் என்ன ? கொள்ளை அடித்த பணத்தை எரித்து விடுவதன் சூழல் என்ன ? தனக் கு ஆபத்து காத்திருக்கிறது என்று அறிந்தும் அவன் அந்நகரத்தில் நுழைவதற்கு காரணம் என்ன..?

    எமைலை பொறுத்தவரை அந்த சிறு வயதிலியே பல கொலைகளை செய்தவன் என்பதிலியே அவன் சிறுவயதிலிருந்தே தனிமையிலேயே வாழ்க்கையை வாழ்ந்து வந்தவன் என்பதை சொல்லாமல் உணர்த்துகிறது.தனது காதலியுடன் ஒரு வங்கியை கொள்ளை அடிக்கும் அளவிற்கு செல்லும் பொழுது தன் மீது அன்பு காட்டுபவளின் மீது..அவளுக்காக எந்த எல்லைக்கும் செல்பவன் என்றும் உணர முடிகிறது .தனது அன்புக்குரியவளே இல்லாது போகும் அவன் கொள்ளையடித்த பணமும் அவனுக்கு வெறும் காகிதமாக தோன்றுகிறது.தனிமையில் இருப்பவனுக்கும் ,அன்பை தேடுபவனுக்கும் ,தனது அன்பானவர்கள் விரைவில் அவனை விட்டு விலகி விடும் பொழுது மனிதர்கள் மேலே ஒரு வெறுப்பு வந்தடைந்து விடுகிறது.அதன் காரணமாய் எந்த எந்த மனிதரின் விமர்சனங்களும் அவனை காயப்படுத்துவதில்லை ...பொருட்படுத்துவதுமில்லை..அதற்கு காரணம் செனா அனா முன்னரையில் சொன்ன அந்த கவிஞரின் தீவிர வெறிபிடித்த ரசிகனாய் இருப்பதும் ,அந்த கவிஞர் பல தீய பழக்கங்களை கொண்டவராய் இருப்பதும் ,அது தவறு என்று ஒத்து கொள்ளாத அந்த மேதையரை தனது லட்சிய குருவாக பாவித்து கொள்வதால் தானும் அவ்வாறே உணர்ந்து கொள்கிறான் எனவே அவரை போலவே தான் செய்யும் குற்றங்களையும் தவறாக நினைக்க தவறுகிறான்.ஆனால் படிக்கும் நாம் அந்த எதிர் நாயகனாய் உள்ளுணர்வதன் மர்மம் என்ன ?காரணம் இங்கே பலரும் அவனை போலவே ..ஒரு நாயகன் தீயவனை நையப்புடைக்கும் போது ஒரு சாதாரணன் அவனால் செய்ய முடியாத ஒன்றை அதே சமயம் தாம் செய்ய நினைத்த ஒன்றை அந்த நாயகன் செயல்படுத்தும் அவனுள் தன்னை உணர்கிறானே அதே போலவே தான் எமைலின் கதாபத்திரமும் அமைகிறது.

    (தொடர்கிறது..)

    ReplyDelete
    Replies
    1. சாதாரண மனிதர்கள் பலர் அன்புக்காக ஏங்குபவர்கள்.அதே சமயம் தம்மீது அன்பு செலுத்துபவர்களுக காக தனது கட்டுபாடுகளையும் தளர்த்தி கொள்பவர்கள் தாம்.மூன்று வேளை பட்டினி கிடந்தாலும் ஒரு ரூபாய் கடன் வாங்காத வைராக்கியத்தில் இருந்த ஒருவனை தனது அன்புகுரியவர்களின் நேசத்திற்கும் ,பாசத்திற்கும் கட்டுபட்டு லட்சமாய் கடன் வாங்கியவர்களை அறிந்தே உள்ளேன்.எமைலின் கதாபாத்திரத்திற்குள் உள்ளுணர்வதன் காரணமே இதுதான்.ஆனால் ஒரு வங்கியை கொள்ளை அடிக்கும் அளவிற்கு செல்வானா என கேட்டால் அதற்கான பதில் தான் அந்த கவிஞனின் ரசிகனாய் இருப்பது.நமக்கு பிடித்த நாயகர் நல்லவர் ,தீமையை அடியோடு வெறுப்பவர் ,தீயவர்களை பந்தாடுபவர் ,இறுதியில் தீமை தோற்கும் .நியாயமே வெல்லும் என்ற நாயகர்களின் ரசிகர்கள்.எனவே அன்புகுரியவர்களுக்காக ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மாறுபவர்கள் தாம்.ஆனால் எமைலோ ஒரு தீயவரை தனது நாயகராய் ஏற்று கொண்டவன்.அவர் செய்யும் தவறுகள் அவனுக்கு நாயகதனமாய் அறியபடும் பொழுது அவனும் தனது செய்கையை நாயக பாணியாய் உருவெடுத்து கொள்கிறான்.யாருக்காக கொள்ளை அடித்தானோ அவளே இல்லை எனும் பொழுது அந்த பணத்தை அவன் மதிக்கவே இல்லை .குடுபத்திற்காக ,அன்பிற்காக பாடுபட்ட பலர் அவர்கள் பிரிய நேர்ந்து விடும் சமயங்களில் ,,தன்னை விட்டு அவர்கள் மறைந்து விடும் பொழுதும் அனைத்தையும் இழந்தது போல பைத்தியகார மனிதர்களாய் சுற்றி வரும் எத்தனை மனிதர்களை நாம் சந்திக்கிறோம்.அவர்கள் மேல் நமக்கு வெறுப்பு வருவதற்கு பதில் பரிதாபம் அல்லவா வர நேருகிறது .அதே பரிதாபம் தாம் நமக கு எமைலின் மேல் வருவதற்கு காரணம். அதே போலத்தான் சக மனிதர்களின் விமர்சனத்திற்கு அஞ்சி அதே இடத்தில் நிற்கும் மனிதர்களை விட ,அவர்களின் விமர்சனங்களையோ..காயப்படுத்தல்களை பொருட்படுத்தாமல் எதையும் மனிதில் கொள்ளாமல் தம் முடிவிற்கு சென்று கொண்டு இருக்கும் மனிதர்களும் உண்டு.அதே போல் தான் எமைலும்.எனவே தான் தனக்கு ஆபத்து வரும் நகரிலும் ,அவர்களை ஒரு பொருட்டாக எண்ண கருதாத காரணத்தாலிலும் அந்நகருக்கே செல்பவன் அந்நகரில் வசிக்கும் மனிதரை நலம் விசாரித்து செல்கிறான்.இப்படி அந்த எதிர்நாயகனும் நம்முள் ஒருவனாக ஆசிரியர் படைத்து உள்ளதால் தான் அவனிலும் நம்மை காண்கிறோம்.எனவே தான் ஒரு நாயகனாய் இருந்தாலும் அப்பாவிகளை கொன்ற,பணத்தை மட்டும் குறிக்கோளாக கண்ட டயபாலிக்கை கண்டு நாம் வெறுத்தது போல ஒரு எதிர் நாயகன் கொலை ,கொள்ளைகாரனாக இருந்தாலும் அன்பிற்கு முன் அந்த பணமும் துச்சமாகும் மதிக்கும் எமைல் நமக்கு நாயகனாய் தோன்றி விட்டோனா..?


      இந்த எனது உள்ளப்பாடு தவறாக இருக்கலாம்...ஆனால் இந்த தவறான எண்ணபாடே இந்த இதழில் நான் என்னுள் உணர்வதன் காரணமாய் இருப்பதால் இதுவே சரியானது என்றே முடிவெடுத்து கொள்கிறேன்.

      Delete
    2. போச்சு ..தலீவரையும் கெடுத்து வெச்சிட்டாங்க ..!!

      Delete
  57. சைத்தான் சாம்ராஜ்யம்:-

    *வழு வழுக்கும் வரி வரியான அட்டைப்பட லுக்கை ரசித்து உள் நுழைந்தோம்னா,முதல் பக்கமே இரவுகழுகு நம்மை நவஹோ ராஜ்யத்தில் வரவேற்கிறார்.

    * போனெல்லியில் 100,200,300.... என்ற வரிசையில் வரும் செஞ்சுரி மலர்கள் ஒரிஜினல் தயாரிப்பே கலரில் தான் எனும்போது கலரை கரைத்து ஊற்றியது போன்ற அடர்வண்ணத்தில் மிளரும்.

    *நாம் இந்த வரிசையில் ஏற்கெனவே பார்த்துள்ள நிலவொளியில் நரபலியும் பவளச்சிலை மர்மமும் இந்த வரிசையில் வந்தவையே.

    *அதேவரிசையில் வந்த சைத்தான் சாம்ராஜ்யமும் அடர்வண்ணத்தில் மிளிரத்தானே செய்யும்னு பார்த்தா.....ஙே...ஙே...ஙே.... பவளச்சிலை மாதிரி தூக்கியடிக்க காணோமே???---என்ன காரணம் என என் மண்டைக்குள் இல்லாத வஸ்துவின் உள்ளயேயுள்ள டேட்டாக்களை யோசித்து யோசித்து ஒன்றும் புலப்படல.

    *பவளச்சிலை மாதிரி தூக்கி அடிக்கலனாலும், மிதமான வண்ணங்கள் அதற்குறிய ஆளுமையோடு கவர்ந்திலுக்கத்தான் செய்கின்றன. இதிலும் ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்யுது, என ரசித்து மகிழ இதழினுள் மீண்டும் இறங்கினேன்.

    *துவக்ககால சாகசம் என்பதால் பிரம்மா காலப்பினியின் தூரிகையில் உருவான ஒரிஜினல் டெக்ஸின் முகம் கதையெங்கும் பல்வேறு ஆங்கிளில் கவரும். எந்தப் பக்கத்தை திரும்பினாலும் முதலில் கண்ணில் படுவது அவரது முகமே.

    *மாஷை என்ற சூனியக்காரி செவ்விந்திய மாந்த்ரீகர்களை வசியப்படுத்தி தன் கட்டுக்குள் வைக்கிறாள். நவஹோ உள்ளிட்ட செவ்விந்தியர்களை பயமுறுத்தி, அவ்வப்போது பாவப்பட்ட இளைஞர்களை பெற்று ஒரு பிரம்மாண்டமான பள்ளத்தில் இறக்கிவிட்டு ஒருவித மந்திர மலரை பறித்துத் தர பணிக்கிறாள். அந்த மலர்களின் மகத்துவத்தில் இளமையாக ஜொலிக்கிறாள்.

    *இரவுக்கழுகுக்கு இணையான வதனத்துடன் மாஷையும் ஜொலிப்பாள். தீக்கக்கும் கொடூர விழிப்பந்துகள் தாக்கித் தீய்க்கும் யாரையும். வீழ்த்தி கொல்லும் கொடூர விழியம்புகள்.

    *பிரம்மன், உலகத்தை படைக்கும்போது எல்லாம் படைத்து முடித்துவிட்டு, கடேசியாக பெண்ணை படைக்கும்போது, படைப்பின் மூலகங்கள் தீர்ந்து போச்சுது.... யோசித்து, படைத்தவற்றில் இருந்து,

    *நிலவின் வட்டமுகம்,
    கொடியின் வளைவு நெளிவுகள்,
    பூக்களின் மலர்ச்சி,
    மானின் மருட்சி,
    காற்றின் அசைவு,
    மேகத்தின் கண்ணீர்,
    முயலின் அச்சம்,
    மயிலின் கர்வம்,
    கொக்கின் வஞ்சகம்,
    புலியின் கொடூரம்,
    நாணலின் மென்மை,
    தேனின் இனிமை,
    நெருப்பின் வெம்மை,
    பனியின் தன்மை,.........என ஆங்காங்கே கொஞ்சம் கடன் வாங்கி பெண்ணை படைத்து விடுகிறார், பிரம்மன்.

    (இதை படிக்கும்போது எப்படி இப்படி வஞ்சகம்&கொடூரம் கலத்து இருக்க முடியும் என நினைத்தவர்கள், திருமணத்திற்கு பிறகு ஆமாம் அய்யா ஆமாம் என ஒப்புக் கொள்வார்கள்.)

    *இங்கே இந்த மாஷையும் கூட அந்த கொடூரம்+வஞ்சகத்தின் கலவையாக திகழ்கிறாள். கூடவே விரியனின் விசமும் அவள் விழிகளில் தெறிக்கிறது. (எதற்கும் கொஞ்சம் தள்ளியே இருப்போம்)

    *இந்த மாஷை மாதிரியே எங்கோ ஒரு பெண்ணை இதற்கு முன் சந்தித்து இருக்கிறோமே என தோணுதா????
    ...............

    ReplyDelete
    Replies
    1. *மாஷையின் இந்த அடாவடியை தட்டிக்கேட்க களம் இறங்குகிறார் தல "டெக்ஸ்".
      டெக்ஸின் தலையீட்டால் இந்த கொடூர செயல் அம்பலமாவதோடு, மாஷையும் பலியாகிறாள். வஞ்சக கொக்கு பலியாவது,
      வஞ்சகன் கொடூர பாலைவிரியனிடத்தே....

      *இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயமான முறையில் பலிவாங்கப்பட்டது. ஆனால், மலர்களை பறித்துத் தரும் இளைஞர்களின் கதி என்ன????

      *பள்ளத்தில் இறங்கி இளைஞர்களின் கதியை ஆராயப்போகும் டெக்ஸ், கிட் வில்லர்& டைகர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

      *பாதாள உலகம், டைனோசர்கள், ராட்சத மிருகங்கள், பெரிய ஏரியில் தோன்றும் வினோத மிருகங்கள், பாதளலோகத்தின் கிராமம், அங்கே வசிக்கும் கற்கால மனிதர்கள், வெள்ளப்பெருக்கு, புனித சடங்குகள் என பலவித அபாயங்களை கடந்து எப்படி மீள்கிறார்கள் என சிலபல கூடை புய்ப்பங்களை நம் காதில் சொருகிய பிறகு உணரலாம்.

      *செவ்விந்தியர்களின் மாந்த்ரீக புனித சடங்குகள், பழக்க வழக்கங்கள் நுட்பமாக விவரிக்கப் பட்டிருக்கும். செவ்விந்திய கட்டுப்பாடுகள் திகைக்கச்செய்பவை.

      *வித்தியாசமான டெக்ஸ் கதைகளை விரும்பும் நண்பர்களுக்கு செமத்தியான திகட்டாத நல்விருந்து.

      Delete

    2. *இப்ப துவக்கத்தில் தோன்றிய எண்ணத்திற்கு விடைதேடி யோசித்தால்,
      டெக்ஸ் கதைகளைப் பற்றி கேள்விப்பட்டு எதுவாயினும் பார்க்கனும் என ஓடித் திரிந்த, இணையம்பற்றி அதிகம் அறியாத காலங்கள் அவை.

      *டெக்ஸ் கலர் புக் வெச்சிருக்காராஆஆஆஆ , எங்கேஏஏஏஏ என தேடி, திகைத்துப்போய் பார்த்தா சைத்தான் சாம்ராஜ்யம் & பவளச்சிலை இத்தாலிய பிரிண்டிங். ஆச்சர்யப்பட்டு அகன்ற விழிகளில் பார்த்த என்னிடம் சொல்லப்பட்டவை தான்,

      "இத்தாலியில் 100,200,300..என வந்தவை மட்டுமே கலரில் வந்துள்ளன. அவைகளில் இருந்து வாங்கியதுதான் இவைகள். இது 100 வது சைத்தான் சாம்ராஜ்யம், இது 200வது பவளச்சிலை மர்மம்"... என.

      -----அப்போது பதிந்தவை தான் இந்த தகவல்கள். அவைகளை எப்படி படிப்பீங்க என்ற கேள்விக்கு எனக்கு கிடைத்த விடைதான் தலையை சுற்ற வைத்தது. அது,

      "லயன் வெளியீடு பவளச்சிலை மர்மத்தையும் ,இந்த இத்தாலி புக்கையும் இப்படி பக்கம் பக்கமா வெச்சிக்கிடனும். ஒரு கையில் இதை திருப்பனும். மறுகையில் அதை திருப்பனும். தமிழ்ழ டயலாக் படிச்சிகனும். இத்தாலி புக்ல படத்தை பார்த்துக்கனும்"

      -----சொய்ங்னு ஒரு சுத்து சுத்திடிச்சி.
      ஸ்...அப்பாடினு ரிகவர் ஆகி வந்துட்டன், வீட்டுக்கு.

      *இதே சமயத்தில் இதே மாதிரி மின்னும் மரணம் பிரென்ச் ஒரிஜினல் வைத்து உள்ளார் ஒருவர்னு அங்கன போய் பார்த்தா, அங்க அதுக்கும் மேலே.

      ###ஒரிஜினல் பிரென்ச் கலர் புக் மேல், பலூன்களில் மின்னும் மரணம் தமிழ் புக்கில் இருந்து டயலாக்குகளை கட் பண்ணி ஒட்டி வெச்சிருந்தாங்க####

      ---ஙே...ஙே....ஙே....எங்கிருந்து சாமி நீங்களாம் கிளம்பி வந்தீங்கனு செம ஷாக்+ பயங்கரமாக பீறிட்டு கிளம்பிய சிரிப்பு. அடக்கி கொண்டு வந்துட்டேன்.

      *வெள்ளையா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் எனபது மாதிரி கலர் புக் வைத்து இருக்கவங்க உண்மையான தகவல்களை தானே சொல்வாங்க என நம்புவது தானே இயல்பு. அப்படி நம்பிய தகவல்களை பிற்பாடு கூட சரிபார்க்கும் எண்ணம் வர்ல.

      *சைத்தான் சாம்ராஜ்யம் கூட அப்படி ஒரு செஞ்சுரி வெளியீடு என என்னுடைய முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன். அது தவறான தகவல். அதற்காக நண்பர்களின் மன்னிப்பை கோருகிறேன்.

      *இன்று காலை போனெல்லி சைட்டில் ஒரு 3மணி நேரத்தை செலவிட்டு, இத்தாலி செஞ்சுரி வரிசையில் வந்த 6கதைகளைப் பற்றிய தகவல்களை எடுத்து உள்ளேன்.

      ###100-Forte Apache....

      ###200-the crystal idol-பவளச்சிலை மர்மம்.

      ###300-The spear of fire...

      ###400-The voice in the storm...

      ###500-Men on the run

      ###600-The demons of the north-நிலவொளியில் நரபலி.

      -----இவைகள் ஒரிஜினலே கலரில் தான் தயாரிப்பு என்பதால் அடர் வண்ணத்தில் ஜொலிக்கின்றன. காலையில் இருந்து 6யும் பொம்மை பார்த்து வருகிறேன்.

      *இவற்றில் 200&600த் தவிர இன்னும் மற்ற 4ம் நாம அவசியம் பார்க்க வேண்டியவை அழகு தமிழில். அசாத்திய வர்ணச் சேர்க்கை. சுவாரசியமான ப்ளாட்கள். அவைகளைப் பற்றி சொல்லிட்டா கதை வரும்போது சுவாரஸ்யம் குறைந்து விடும்.

      *இந்த 6ஐ தவிர மற்றவை பிற்பாடு கலரிங் செய்யப்பட்டவை. ஒரு சுற்று குறைவாகவே கலரிங் இருக்கு. நாம் ரசித்து மகிழ அதுவே போதுமானது. இப்ப சைத்தான் சாம்ராஜ்யத்திற்கு வருவோம்.

      *1964 செப்டம்பரில் The lands of the abyss-என்ற பெயரில் கறுப்பு வெள்ளையில் வெளிவந்த கதைதான் நம்ம சைத்தான் சாம்ராஜ்யம். இது பிற்பாடே வண்ணம் பூசிக்கொண்டது. பவளச்சிலை மர்மத்தை விட கொஞ்சம் கலரில் குறைவான அடர்த்தியைக் கொண்டு இருப்பதற்கு இதன் மூலம் கறுப்பு வெள்ளை என்பதே காரணம்.

      *எது எப்படி இருந்தாலும் மாஷை ஜொலிக்கவே செய்கிறாள். தலையோடு நாமும் சைத்தான்களை வேட்டையாடி களிப்போம்.

      #####******#####*****#####

      Delete