நண்பர்களே,
வணக்கம். 499-க்கும்… 501-க்கும் மத்தியிலான பதிவு தான் ! அதை எழுதப் போவதும் பழகிப் போன பழமான அடியேன் தான் ; வாசிக்கப் போவதும் ஜாலியான நீங்கள் தான் ! இதைப் படித்த மறுநொடிகளிலேயே இந்திய எல்லைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு பிறந்து விடப் போவதில்லை தான் ; எட்டுவழிச் சாலைக்கு அர்த்தங்கள் புரிந்துவிடப் போவதில்லை தான் ; தலைவரின் கட்சிக்குப் பெயரும் புலப்பட்டு விடப் போவதில்லை தான் ! வழக்கமான கொட்டாவிகளை விட்டபடிக்கே – ”புரட்டாசி மாசம் ஊரே விரதம்னா சிக்கன் விலை குறைச்சலா இருக்குமோ?” என்ற மகா சிந்தனைகளோடே லுங்கியோடு தெருவில் இறங்கி நடைபோடப் போகிறோம் தான் ! ஆனாலும் என்னமோ தெரியலை – “பதிவு # 500“ என்றால் லைட்டாக ஜெர்க் அடிக்கத் தான் செய்கிறது ! இது போன்ற கிலோமீட்டர்கல் தருணங்கள் (!!!) எனும் போதே அந்த ப்ளாஷ்பேக்குகளுக்கே உரித்தான பேக்கிரவுண்ட் மியூசிக்கும் ; தமிழ் சினிமாவின் வட்ட வட்டமான முட்டைகளையும் தவிர்த்திட முடியாதே ! ‘திரும்பிப் பார்க்கிறேன் பேர்வழி!‘ என்ற கதையாக, கடந்து வந்துள்ள பாதைகளின் பக்கமாய் பார்வையை ஓட விடுவதும் ஒரு தவிர்க்க இயலா சம்பிரதாயம் என்பதால் – வடிவேலு பாணியில் கொஞ்சம் ‘டர்ன்‘ பண்ணி நின்று கொள்கிறேன் – நினைவலைகளை மீட்டெடுக்க வசதியாக ! And a word of extra caution please: பாதித் தூக்கத்தில் மசங்க மசங்க எழுந்த கையோடு ‘பதிவிலே என்ன எழுதியிருக்கான்?‘ என்று வாசித்திட முற்படும் சங்கத்தின் உறுப்பினராக நீங்களிருப்பின் – “விட்டுப் போன அந்தத் தூக்கத்தை மறுக்கா அரவணைக்க முயற்சிகளைத் தொடருங்க பாஸ்!” என்பதே எனது அறிவுறுத்தலாய் இருந்திடும் !
500 !! ஒரு சாதனையின் பரிமாணமாய் நிச்சயமாய் இந்த நம்பரை நான் பார்த்திடவில்லை ! மாறாக – ஒரு ஜாலியான பயணத்தில், ஒட்டு மொத்தமாய் நாம் அடித்து வந்திருக்கும் லூட்டியின் பரிமாணமாகவே இது எனக்குத் தென்படுகிறது !! எவ்வித எதிர்பார்ப்புமின்றி, 'அட...சும்மாக்காச்சு எழுதித் தான் பார்ப்போமே !' என்று இந்தப் பதிவுகளின் லோகத்தினுள் புகுந்தவனையும், அவனது one dimensional எழுத்துக்களையும் இத்தனை காலம் ; இத்தனை தூரம் ரசித்தோ / சகித்தோ வந்திருக்கும் உங்களின் அன்புக்கும், ஆதர்ஷத்துக்கும், பொறுமைகளுக்கும் ஒரு ஜெயமாகவே பார்க்கத் தோன்றுகிறது !
பிள்ளையார்சுழி போட்ட நாளிலிருந்தே – இங்கே (நமது) காமிக்ஸ் சார்ந்த சேதிகளின்றி – கூரை மேலேறி நின்று உலகத்துக்கு ரோசனை சொல்ல முற்படும் முஸ்தீபுகளில் இறங்கப் போவதில்லை என்பதில் தெளிவாகவே இருந்தேன் ! So சுற்றிச் சுற்றி நமது இதழ்கள் பற்றி; விமர்சனங்கள் பற்றி; புத்தக விழாக்கள் பற்றி; எனது ஊர்சுற்றல்கள் பற்றி; காத்திருக்கும் தொடர்கள் பற்றியே இந்த 500 பதிவுகளும் அமைந்திருப்பது கண்கூடு! Of course – துவக்க நாட்களது பரபரப்புகளோ; ‘ஹோ‘வென ஆர்ப்பரித்த அபிப்பிராய சங்கமங்களோ பின்நாட்களில் லேசாய் மட்டுப்பட்டது நிஜம் தான் ! இருந்தாலும் – இத்தனை பதிவுகளுக்கு என்னைச் சுமந்து பயணித்த பெருமை உங்கள் ஒவ்வொருவரையுமே சாரும் ! Simply becos – கிருஸ்துமஸ் தினத்துக்கு முன்பான அந்த 2011-ன் டிசம்பரில் – பதிவுகளுக்குள் கால்பதிக்கத் துணிந்த வேளையில், இதன் ஆயுட்காலம் பற்றி எனக்குள் சத்தியமாய் பெரியதொரு நம்பிக்கையோ – எதிர்பார்ப்போ இருந்திடவில்லை!
- கைவசம் குவிந்து கிடந்த முந்தைய இதழ்களின் பாரம் !
- இரத்தப் படலம் – B&W தொகுப்பினை விற்று கரை சேர்வதற்குப் பட்ட அல்லல்கள்!
- ரூ.10/- விலையிலான இதழ்களைக் கூட வெறும் 4000 பிரதிகளே அச்சிட்டும் ஆயிரம்+ பிரதிகள் மிஞ்சிக் கொண்டிருந்த நாட்களின் அயர்ச்சி !
- கையில்… பையில்… வங்கிக் கணக்கில் வறட்சி ! நிலுவைச் சிட்டைகளிலோ புஷ்டி!
என்று பலமாதிரியான பிசாசுகள் என்னைச் சுற்றிக் கும்மியடித்துத் திரிந்து வந்த நாட்கள் 2008-2011 ! என்னளவில் ‘மூட்டையைக் கட்டிவிடலாம்‘ என்ற எண்ணமும் கிட்டத்தட்ட பதிவாகவும் செய்திருந்தது தான் ! இன்றைக்கு “500” என்ற இந்தக் குஷனோடு பின்னோக்கிப் பார்க்கும் போது – சின்னச் சின்னதான பல புள்ளிகள் ஒன்று சேர்ந்தே தற்போதைய பூக்கோலத்தைச் சாத்தியமாக்கியுள்ளது புரிகிறது! Maybe இது போன்ற ப்ளாஷ்பேக் சமயங்கள் – சன்னமான நினைவு கூர்தல்களின் அவசியங்களை வலியுறுத்தத் தான் நடைமுறைகளில் உள்ளனவோ என்றும் தோன்றுகிறது !
Random ஆக இங்கொன்றும், அங்கொன்றுமாய் என்னைச் சுற்றி அன்றைக்கு சிறகு விரித்த நிகழ்வுகள் பல ! கம்ப்யூட்டர் சார்ந்த விஷயங்களில் துளியும் ஞானமின்றி; சகலத்தையும் ஆர்டிஸ்ட்கள் மூலமாகவே பணி செய்து வந்த நாட்களவை ! அப்போது +2 மாணவனான ஜுனியர் – ஒரு ஞாயிறு மதியம் லக்கி லூக் கலர் பக்கமொன்றை என் கண் முன்னேயே பிராசஸ் செய்து, தமிழாக்கத்தோடு ரெடி செய்து நீட்ட, எனக்கோ நிலாவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கின் சாதனை லெவலுக்கு நிகரான உற்சாகம் ஊற்றடித்தது ! அது நாள் வரைக்கும், கலரில் இதழ்களை வெளியிடுவதென்பது தியாகராஜ பாகவதர் காலத்துப் புராதன பிராசஸிங் யுக்திகள் துணையோடு தான் என்று இருந்தவனுக்கு, கம்ப்யூட்டர்களால் இதை அழகாய், நயமாய், சுலபமாய் சாதித்துக் காட்ட முடியுமென்று புலப்பட்ட போது – எக்கச்சக்கமாய் வண்ண வண்ணக் கனவுகள் பாரதிராஜா படத்தில் வருவது போலான வெள்ளை கவுன் முதிர்கன்னிகளின் நாட்டியத்தோடு துவங்கின!
எப்போதுமே எனக்கு செமையாய் போரடித்தால் – என்னை நானே உசுப்பிக் கொள்ள எதையாவது கோக்கு மாக்காய் செய்து வைப்பது வழக்கம் ! முதன் முதலாக ரூ.100/- விலையில் “மெகா ட்ரீம் ஸ்பெஷல்” இதழை அறிவித்ததும் இது போன்ற தருணத்தில் தான்! If I remember right, அந்த நாட்களிலும் நமது வலைத்தளத்தில் ஒரு பதிவுகள் பக்கமிருந்தது. அங்கே உங்களது அபிப்பிராயங்களை (பாராட்டுக்களை) பதிவு செய்திடுவீர்கள்; நானும் எதையோ எழுதி வருவேன் ! அந்த routine சிறுகச் சிறுக போரடிக்கத் துவங்கியிருக்க, நமது இதழ்களுமே மூக்கு முட்ட தின்ற கையோடு மதியத் தூக்கம் போடும் நடுத்தர வயதுக்காரன் பாணியில் குறட்டை விடாத குறையிலிருந்தன ! எதையாச்சும் செய்யாங்காட்டி இது சரிப்படாது என்று தோன்றிய மறுகணமே “மெகா ட்ரீம்” என்றதொரு கனவை அறிவித்து விட்டு பேந்தப் பேந்த முழிக்கத் துவங்கினேன்! அதுவே தான் நமது Comeback ஸ்பெஷல் சமாச்சாரத்திலும் ! வண்ணத்தில் லக்கி லூக்கை கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் பார்த்த நொடியே – ரொம்ப காலம் முன்பாகவே நான் மறந்தே போயிருந்ததொரு உணர்வு எனக்குள் ஓடுவதை உணர முடிந்தது ! “கொலைப் படை” (ஸ்பைடர்) கதையின் ஒரிஜினல்களை கையில் ஏந்திய நொடியில் 1984-ல் அதை உணர்ந்திருக்கிறேன்! “யார் அந்த மினி-ஸ்பைடர் ?” கதையைப் பார்த்த முதல் நொடியில் எனக்குள் அது ஓடிப் பிடித்து விளையாடுவதை உணர்ந்திருக்கிறேன்! “சூப்பர் சர்க்கஸ்” இதழின் ஒரிஜினல்களை பாரிஸின் ஒரு தம்மாத்துண்டு ஹோட்டல் ரூமில் கையிலேந்தி நின்ற சமயத்தில் ரசித்திருக்கிறேன் ! அந்த “சந்தோஷ ஜிலீர்” தான் இந்தப் பயணத்துக்கே பெட்ரோல் எனும் போது, ரொம்ப காலமாய் தொலைந்து போயிருந்த அந்த வஸ்து இல்லாத காரணத்தால் தான் தடுமாற்றமே என்பதும் புரிந்தது! So 'கண்டேன் சீதையை" என கலரில் லக்கியைப் பார்த்த நொடியில் - எனக்குள்ளேயே தீர்மானித்து விட்டேன் COMEBACK ஸ்பெஷல் என்றொன்றை உருவாக்கிட ! இதை எங்கே ? எவ்விதம் விற்கப் போகிறோமென்று யோசிக்கவெல்லாம் அந்த நொடியில் தோன்றவில்லை ! ஓவராய் மண்டையை உருட்டினால் மறுபடியும் நெகட்டிவ் சமாச்சாரங்கள் சூழ்ந்து தொலைத்து பின்வாங்கச் செய்து விடுமோவென்ற பயம் தான் ! அப்போது சென்னைப் புத்தக விழாவென்றால் வீசம்படி எவ்வளவு ? என்று கூடத் தெரியாது தான் !! So வழக்கமான அந்தக் கட்டைவிரல் காதல் மட்டுமே துணைநிற்க பணிகளை துவக்க முற்பட்டேன் !
வேலைகளைத் துவக்க முற்பட்ட போது ரொம்பவே சந்தோஷப்பட்டது மைதீன் தான்! அதுவரையிலும் சோம்பிக் கிடந்த ஆபீஸ் மறுபடியும் சுறுசுறுப்பாகப் போவதை உணர்ந்தோ என்னவோ – பன்மடங்கு வேகமாகி விட்டான்! கதைத் தேர்வு; மொழிபெயர்ப்பு; கலரில் பிராசஸிங்; அச்சு என்று அந்த Comeback ஸ்பெஷலின் ஒவ்வொரு பணியுமே ஏதோ புதுசாய் வேலை கற்பவனின் தள்ளாட்டத்தோடே அரங்கேறின! எத்தனை கனத்தில் ராப்பர் இருக்க வேண்டும் ? உட்பக்கங்கள் இருக்க வேண்டும் ? அச்சில் வர்ணங்கள் தெறிக்க வேண்டுமெனில் – முதன்முறையாக பெல்ஜியத்திலிருந்து வந்திருந்த டிஜிட்டல் கோப்புகளில் எவ்விதம் வேலை செய்திட வேண்டும் ? என்று தொட்டதுக்கெல்லாம் சந்தேகங்களே தலைதூக்கின ! ஆனால் அவற்றையெல்லாம் ஒருவித உற்சாகத்தோடு தாண்டிட முயன்றது – லக்கியின் பக்கங்களை அச்சில் பார்த்த நொடி முதலாய் ! ஜுனியர் எனக்குக் கண்ணில் காட்டியிருந்த அந்த கதையையே கேட்டு வாங்கியிருந்ததால் (ஒற்றர்கள் ஓராயிரம்) கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் பார்த்திருந்த அதே வர்ண ஜாலத்தை அச்சிலும் பார்த்த போது – பச்சைப் பிள்ளையைப் போல துள்ளிக் குதித்தது மனசு ! இந்தத் தரமெல்லாம் சொப்பனங்களில் கூட நமக்கு சாத்தியமென்று எண்ணியதில்லை அல்லவா - so திறந்த வாயை மூடவே தோன்றவில்லை ரொம்ப நாட்களுக்கு !
இதற்கிடையே கோலத்தின் இன்னொரு புள்ளியும் எட்டும் தூரத்திலிருந்தது அந்த நாட்களில் ! Oh yes – பின்நாட்களில் ஏதேதோ காரணங்களால் விலகிச் சென்றது மாத்திரமின்றி, விரோதங்களையும் தமக்குள் வளர்த்துக் கொண்டதொரு சிறு அணி தான் நான் குறிப்பிடும் அடுத்த புள்ளி ! அந்நாட்களில் நமது அலுவலகத்திற்கு அடிக்கடி விசிட் அடிப்பது மாத்திரமின்றி – சென்னைப் புத்தக விழாவில் பங்கேற்றால், கைவசமுள்ள எக்கச்சக்க ஸ்டாக்கை கரைத்து விடவும் சாத்தியப்படுமென்று சென்னையிலிருந்து வருகை தந்திடும் அந்த அணியினர் என்னிடம் வலியுறுத்தி வருவது வாடிக்கை ! ஏற்கனவே சீனியர் எடிட்டரின் மூத்த சகோதரர் வாயிலாக சுமார் ரூ.30,000/- க்கான சரக்கை ஏதோவொரு சென்னைப் புத்தக வியாபாரியிடம் 2008-ன் சென்னைப் புத்தக விழாவிற்கு அனுப்பியிருந்தோம் ! ஆனால் அந்தப் புண்ணியவான் ‘ஏவ்வ்வ்‘ என்று விட்ட எப்பச் சத்தம் மாத்திரமே சிவகாசியை எட்டியடைந்ததே தவிர, பத்து நயா பைசாவைக் கூட கண்ணில் பார்க்க முடியவில்லை ! So “சென்னைப் புத்தக விழா” என்றாலே அந்தக் கசப்பு தான் என் நினைவுக்கு வந்திட – சென்னை அணியிடம் பிடிகொடுக்காதே பொழுதைக் கடத்தி வந்தேன் ! ஆனால் ஒரு கட்டத்தில் – கையில் மலையாய்க் கிடக்கும் பிரதிகளை கரையான்கள் புசிக்கும் முன்பாய் விற்றிட வேண்டுமெனில் “சலோ சென்னை” தான் ஒரே மார்க்கம் என்பது புலனானது ! So செ.அ. (நம்ம பொருளாளர் நஹி!!) வழக்கமாய் முன்வைத்திடும் கோரிக்கைக்கு 2011-ன் இறுதியில் தலையசைத்தேன் ! BAPASI-யின் விண்ணப்பத்தைப் பெற்று, நமக்காக விண்ணப்பித்தது ; ஸ்டால் கிடைக்காது போன சூழலில் இன்னொரு ஸ்டால்காரரிடம் பேசி – 50/50 என்று ஒண்டுக் குடித்தனம் நடத்த அனுமதி வாங்கியது ; ஸ்டாலுக்கான ஏற்பாடுகள் என சகலமும் அவர்களது முயற்சிகளின் பலன்களே ! So பழைய புத்தகங்களை மட்டுமல்லாது – புத்தம்புதுசான நமது Comeback ஸ்பெஷலையும் showcase செய்திட ஒரு அழகான மேடையும் சந்தடிசாக்கில் உருவானது ! பற்றாக்குறைக்கு முதல் இதழை வெளியிட திரு.S.இராமகிருஷ்ணன் அவர்களையும், பெற்றுக் கொள்ள திரு.டிராட்ஸ்கி மருது அவர்களையும் வரச் செய்ததுமே செ.அ. தான் ! பின்நாட்களில் பாதைகள் வெவ்வேறானதும் ; விரிசல்கள் வீதி வரை அகலமானதும் துரதிர்ஷ்டங்களே ! ஆனால் நிகழ்காலத்து மனத்தாங்கல்கள், முன்காலத்து ஒத்தாசைகளை மறக்கச் செய்திடக் கூடாதென்பதில் நம்பிக்கை கொண்டவன் நான் ! So இந்தப் பயணத்தின் ரம்யத்துக்கு தம் பங்கைச் செய்த வகையில் அவர்களும் நம் நன்றிகளுக்கு உரியவர்களே !
நான்காவது புள்ளி – கம்பியூட்டரில் சீட்டு விளையாடக் கூடத் தெரிந்திருக்கா என்னையும் - ஒரு blog பக்கத்தினை உருவாக்க ஜுனியர் வற்புறுத்தியதொரு டிசம்பரின் மாலைப் பொழுதின் மேஜிக் என்பேன் ! வழக்கமாய் எனக்கு நேரடிப் பரிச்சயமில்லா சமாச்சாரங்களுள் தலைநுழைக்க நான் விழைவதே கிடையாது ! ஆனால் என்னமோ தெரியலை - 2011-ன் அந்த தினத்தில் 'சரிங்கோ' என்றபடிக்கே ஜுனியரின் ஆசையை நிறைவேற்றத் துணிந்தேன் !! தொடர்ந்தது தான் நமக்குப் பரிச்சயமான அனுபவங்களாயிற்றே !!
Last but not the least - கோலத்தின் புள்ளி # 5 : நமது மறுவருகையையும், இந்தப் பதிவுகளையும் வாஞ்சையோடு, ஆரவாரத்தோடு அரவணைத்துக் கொண்டாடிடக் காத்திருந்த நீங்களே guys !! உங்களது காமிக்ஸ் நேசம் மீது என்றைக்குமே எங்களுக்கொரு சந்தேகம் இருந்ததில்லை !! ஆனால் அந்த அபிமானம் காமிக்ஸின் நாயகர்களைத் தாண்டியும், அதன் பின்னணியில் பம்மி நின்ற எங்களையும் இத்தனை ஆதர்ஷதோடு சேர்த்தணைக்குமென்று கனவிலும் எதிர்பார்த்திடத் துணிந்ததில்லை !! So இந்த மறுவருகை எனும் கேக்கின் மீதான icing நீங்கள் காட்டி வரும் எல்லைகளில்லா வாஞ்சையே !! இன்றைய காமிக்ஸ் பயணத்தின் ஜீவநாடியே, இந்தப் பதிவுப் பக்கமும், அதனில் பங்கேற்கும் நீங்கள் ஒவ்வொருவருமே, என்பதில் எது இரகசியம் ?
‘கண்ணை மூடிக் கொண்டால் லோகம் இருண்டே போய் விடும் ‘ என்று எண்ணித் திரியும் பூனையைப் போல (செயலாளர் நஹி!!) அந்நாட்களில் ஒதுங்கிக் கிடந்தவன் நான் ! நமது இதழ்களில் தாமதத்தைத் தாண்டி, குறைகள் எனக்குத் தெரியவே ஓராயிரம் உண்டென்பதால் – எங்கே உங்களிடம் நெருங்கிப் பழகிடும் பட்சத்தில் அவற்றை நீங்கள் சுட்டிக் காட்டத் தொடங்கி விடுவீர்களோ, என்ற பீதியிலேயே தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொள்வேன் - தீக்கோழியைப் போல ! ஆனால் to your eternal credit – எங்களிடம் நீங்கள் காட்டியது அக்மார்க் அன்பு மாத்திரமே என்பதை சிறுகச் சிறுக எனக்கு உணர்த்தியது இந்தப் பதிவுப் பக்கமும், ஒவ்வொரு புத்தக விழாவின் சந்திப்புமே !! ஒவ்வொரு பாராட்டையும் DTS சிஸ்டத்தின் பிரம்மாண்டத்தோடு நீங்கள் இங்கே பதிவிடும் போதும் ; ஒவ்வொரு சின்னஞ்சிறு விஷயத்தையும் நீங்கள் சிலாகிக்கும் போதும் - அதன் அதிர்வலைகள் யாருக்கு என்ன மாதிரியான சேதியைச் சொல்கிறதோ இல்லையோ - என்னைப் பொறுத்தமட்டிலும் - இந்த ஆதர்ஷத்துக்கும், அன்புக்கும் அருகதையுடையவனாய்த் தொடர்ந்திட எத்தனை மெனக்கெட்டாலுமே தப்பில்லை என்ற எண்ணத்தை மாத்திரமே !!
இந்தப் பயணத்தின் ஹை-டெக் அவதாரும், இந்தப் பதிவுப் பக்கமுமே ஒன்றோடொன்று இணைந்தவையே எனும் போது - துவக்க நாட்களது இதழ்களின் உற்சாகங்களும், இங்கு அதன் நீட்சியாய் ஒலித்த ஆரவாரங்களும் ஒரு ஆயுட்கால நினைவுகள் - at least என்னளவிற்காவது ! பாராட்டுக்களில் திளைத்தது ; உங்களின் ஆச்சர்ய`தாண்டவங்களின் அழகில் மெய்மறந்தது ; விழுந்த சாத்துக்களின் வீரியத்தில் பேய்முழி முழித்தது ; எனது சந்தோஷங்களை / சங்கடங்களை பகிர்ந்து கொண்டது என இங்கே அலி பாபாவின் குகைக்கு ஈடான புதையல்களைத் தேடிப் பிடித்திடச் சாத்தியமாகியுள்ளது !ஆரம்ப நாட்களில் மாதம் ஒரேயொரு (வண்ண) இதழே என்ற நிலையிலும் – முப்பது நாட்களுக்குமே உற்சாகங்களைத் தக்க வைத்தபடிக்கு வண்டியை ஓட்டிய வித்தைகளின் இரகசியத்தை மலைப்போடு பார்க்கிறேன்! Oh yes – இடையிடையே ஈஸ்ட்மென் கலரோடு; ப்ரூஸ் லீயும், ஜாக்கி சானுமே மூக்கில் விரல் வைக்கும் ரேஞ்சுக்கு இங்கே அரங்கேறியுள்ள சண்டைக் காட்சிகளின் பங்களிப்பையும் மறந்திட இயலாது! சேதமான சட்டைகளும், ஈகோக்களும் ஒரு பக்கமெனில் – கைகளில் பாப்கார்னோடு வேடிக்கை பார்த்து மகிழ்ந்த நண்பர்கள் இன்னொருபுறம்!
துவக்க நாட்களில்,இங்கே என்னிடம் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் ; பகிரப்படும் ஒவ்வொரு விமர்சனத்துக்கும், பதில் சொல்லா விட்டால் மண்டையே வெடித்து விடும் போலத் தோன்றுவதுண்டு! அதே போல பிசாசுமே உறங்கப் போய்விட்டிருக்கும் பின்னிரவுகளிலுமே எனது ‘டைப்பும் படலங்கள்‘ தொடர்ந்துள்ளன! கடந்த ஆறேழு மாதங்களுக்கு முன்புவரைக்கும் ஒவ்வொரு பதிவையுமே நானே லொட்டு லொட்டென்று தான் டைப்பித்து வந்தேன்; சமீபமாய்த் தான் அந்தச் சிரமத்திலிருந்து விடுதலை கிட்டியுள்ளது! நாட்களும், பதிவுகளும், கடந்து செல்லச் செல்ல மெது மெதுவாய் சில பல புரிதல்கள் தலைக்குள் குடியேறத் துவங்கின! At no point in time – நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் சாத்தியமாகிடாது என்பதைப் புரிந்த போதே – தலைக்குள் ஒரு இலகுத்தன்மை விரவியது! வலைத்தள உதைபடலில் இன்றைக்கு நான்… நாளைக்கு இன்னொருத்தர்… மூன்றாவது நாளுக்கு புத்தம் புதிதாய் ஒருத்தர் என்று சக்கரங்கள் சுழன்று கொண்டே போவது புதுயுகத்தின் அங்கமே என்பது சித்தே லேட்டாய்ப் புரிபட்டது! So வாங்கும் சாத்துக்கள் வலிக்கிறதோ - இல்லையோ; வலிக்காத மாதிரியே மூஞ்சை வைத்துக் கொள்ளும் வித்தையானது நாளாசரியாய்ப் பழகிப் போய் விட்டது !
And in many, many ways – பதிவுகளுடனான பயணத்தில் தான் எனது வாழக்கையின் ஏகப்பட்ட சந்தோஷத் தருணங்களும் கலந்துள்ளன! ‘என் பெயர் லார்கோ‘ வெளியான நாட்களின் ஆரவாரங்கள்; வான் ஹாமின் அந்த கௌ-பாய் கிராபிக் நாவல் வெளியான (முதல்) COMIC CON சார்ந்த பதிவுகள்; டெக்ஸ் வில்லரின் மறுவருகை உருவாக்கிய உத்வேகம்; LMS ; மின்னும் மரணம்; சமீபத்தைய XIII-ன் இரத்தப் படலம்; ஒவ்வொரு சென்னை விசிட் / ஈரோடு உவகை என இங்கே நான் பகிர்ந்திடக் கிட்டியுள்ள சந்தோஷ topic-கள் தான் எத்தனை எத்தனை ! அந்த 2014-ன் சுட்டி லக்கியின் அறிமுகத்தின் போது சன்னமாய் நான் பயன்படுத்தியிருந்த “நாக்கார்… மூக்கார்” வார்த்தைப் பிரயோகங்களை அப்படியே உல்டா செய்து இங்கே நீங்கள் பதிவிட்டு ஜமாய்த்திருந்த அட்டகாசங்களெல்லாம் “சிங்கத்தின் கிழவயதில்” பகுதிக்கான லட்டு மாதிரியான மேட்டர்களல்லவா ? LMS-ன் முஸ்தீபுகளோடு துவங்கிய “வாரமொரு பதிவு” என்ற routine இத்தனை காலமாகியும் தொடர்ந்து வருகிறதென்பதில் முதல் ஆச்சர்யக் குறி என்னதே – simply becos இதற்கு அவசியமாகிடும் உழைப்பை ஆரம்ப காலத்து ஹனிமூன் phase-க்குப் பின்பாகவும், தொடர்ச்சியாய்த் தந்திட சாத்தியமாகிடுமென்று சத்தியமாய் நாம் நம்பிடவில்லை ! பலவிதங்களில் take it easy என்று இருந்தவனை அக்மார்க் ராக்கோழியாக்கிய பெருமை இந்தப் பதிவுகளின் முதுகெலும்பாகிய உங்களையே சாரும்!
இதெல்லாம் கூட பரஸ்பர முதுகுத் தடவல்களாகத் தெரிந்தாலுமே – நம்மைத் தடதடவென புதுத் தேடல்களுள் ஆழ்த்திடுவதில் இந்தப் பதிவுகளின் பங்கை என்னால் சிலாகிக்காது இருக்க இயலாது ! பிடிக்காதவர்கள் தலையைப் பிய்ப்பது ஒரு பக்கமெனில், பிடித்தவர்கள் தலையில் தூக்கிக் கொண்டாடுவதை நிதரிசனமாய்ப் பார்த்திட இயல்வது இங்கு தானே ?
- ஒரு சிப்பாயின் சுவடுகள்
- தேவ இரகசியம் தேடலுக்கல்ல
- நிஜங்களின் நிசப்தம்
- களவும் கற்று மற
- மெல்லத் திறந்தது கதவு
- ஜேஸன் ப்ரைஸ்
போன்ற ‘கோக்கு மாக்கான‘ கதைகளை இங்கே நீங்கள் எனக்கென நிர்மாணித்துத் தந்து வரும் பாதுகாப்பு வலையின்றி முயற்சித்திருக்கத் தான் முடியுமா?
அப்புறம் இங்கே பிரவாகமெடுக்கும் நகைச்சுவைகளும், அகழ்வாராய்ச்சிகளும் ஒவ்வொரு ஞாயிறையும் நமக்கு தெறிக்கும் நாட்களாகி வருவதில் எது இரகசியம் ? அமெரிக்காவோ ; ஆப்ரிக்காவோ - அமிஞ்சிக்கரையோ - நாமிருக்கும் இடம் எதுவாயிருப்பினும் - ஒரு வாகான தலைப்பும், வகையான செட்டும் அமைந்துவிட்டால் இங்கே நர்த்தனமாடும் சந்தோஷங்களை உணராதோர் தான் யார் ? "சார்...நான் ரெகுலராக blog வாசகன் ; ஆனால் கலந்துக்கிறது இல்லே ; மௌனப் பார்வையாளன் மட்டுமே " என்று என்னிடம் நேரில் சொல்லியுள்ளோர் ஏகப்பட்டோர் ! அவர்கள் ஒவ்வொருவருக்குமே இங்கே அரங்கேறும் நண்பர்களின் சங்கமிப்பில், ஒரு அலாதி சந்தோஷம் கிட்டி வருவதும் அவர்களிடமிருந்து நான் கேட்டுத் தெரிந்து கொண்ட சேதியுமே !!
என்றைக்கேனும் ஓய்வாக வீட்டில் அமர்ந்தபடிக்கே ‘பழைய நினைப்புடா பேராண்டி‘ என்று இந்தப் பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை அசைபோடும் வாய்ப்பு கிட்டின் – இந்தப் பதிவுகளின் ஒவ்வொன்றையும் நின்று, நிதானமாய் வாசிப்பேன் என்பது நிச்சயம் ! சிறுகச் சிறுக நமது சிறகுகள் விரிந்த கதையை இந்தப் பதிவுகள், ஒரு வாராந்திர டைரியைப் போலச் செயல்பட்டு, நினைவுகள் மங்கிடக் கூடிய அந்நாட்களிலும் highlight பண்ணிட உதவிடுமென்பது உறுதி ! Maybe இன்றைக்கு என்னை உராங்குட்டான் போல முறைக்கச் செய்த சம்பவங்களுமே, அன்றைக்கு செமையாய் சிரிக்கச் செய்திடவும் கூடும் தான் ! So இந்தப் பதிவுகள் ஜாலியான டைரிக்குறிப்புகளாய் என்னளவிற்காவது நீடிக்கப் போவது உறுதி!
Of course – அவ்வப்போது “தேசத்தை விட்டே புறப்பட வேண்டியது தான்!” என்ற ரீதியில் சில பல வாரங்களது பதிவுகளுக்கு லீவு கொடுத்த தருணங்கள்; மிஞ்சியிருக்கும் கேசத்தையும் பிறாண்டிப் பார்த்த நாட்கள் ; இந்த routine-க்குக் கல்தா கொடுத்து விடலாமென்ற உத்வேகத்தில் ஒரு விடைபெறும் பதிவை எழுதிய (இரகசியத்) தருணங்கள் என்ற கூத்துக்களுமே இல்லாதில்லை தான்! ஆனால் முன்தினத்து ரவுசுகள் எல்லாமே உலகை உலுக்கிடும் நிகழ்வுகளல்ல என்ற புரிதலும், நிதானமும், தூங்கி எழுந்த மறுநாளைக்கே புலர்வதைப் பார்த்தான பின்னே, மறுக்கா இங்கே தஞ்சமடைவதும் இந்த அனுபவங்களின் இன்னொரு அத்தியாயமே ! Someday down the line – சம்பந்தப்பட்ட எல்லோருமே இந்த நாட்களை எண்ணி சிரித்துக் கொள்வோமென்பது உறுதி !
எல்லாவற்றையுமே விட இந்தப் பதிவுகளின் ஒரு அழகான பாசிட்டிவ்வாக நான் பார்த்திடுவது – சில பல வாழ்நாள் நட்புகளுக்கு இது அஸ்திவாரமாய் அமைந்துள்ளதையே ! மும்மூர்த்திகள் வரலாம்; போகலாம் ; மின்னும் மரணங்கள் ஜொலிக்கலாம்; தகிக்கலாம்; இரத்தப் படலப் புலன் விசாரணைகள் நினைவில் தங்கிடலாம்; காலத்தோடு காலாவதியும் ஆகலாம் ! ஆனால் இங்கே துளிர்விட்டுள்ள சில நட்புக்களின் ஆயுள் ரொம்பவே கெட்டி என்பதைக் கண்கூடாகப் பார்க்கும் போது – எனது இந்த வாராந்திர ramblings-களுக்கும் ஒரு பலனுள்ளதே என்று மனம் குளிர்கிறது !
இந்தத் தருணத்தில் இதன் longevity க்கு ஏதேதோ விதங்களில் உதவியுள்ள / உதவி வரும் அத்தனை நண்பர்களும் எனது மெகா சல்யூட் உரித்தாகுக !! ஒவ்வொரு பதிவிற்கும் +1 போட்ட நண்பராக இருந்தாலும் சரி ; சங்க இலக்கியம் முதல், சம காலப் பீட்டர்கள் வரை அத்தனையையும் கொணர்ந்து இந்தப் பக்கங்களுக்கு மெருகூட்டும் நண்பர்களாக இருந்தாலும் சரி - உங்கள் அனைவரின் சுவடுகளுமிங்கே ஒன்றிணைந்து ஒரு அட்டகாச ஹைக்கூ கவிதையாய் உருப்பெற்றிருப்பதை இந்த "500 " உணர்த்துகின்றது !! More than anything else - உங்களின் ஒவ்வொரு பின்னூட்டத்திலும் உங்களது மலர்ந்த முகங்களை பார்த்திட சாத்தியமாவது எனது பணிகளை இலகுவாக்கிடும் மாயாஜாலத்தை அறிந்து வைத்துள்ள அதிசயங்கள் !! Take a bow folks !! You have been just awesome !!
”500” என்ற நம்பரைத் தொட்ட பிற்பாடு – சித்தே 'ரமணா' பாணியில் புள்ளி விபரங்களை அடுக்காது போனால் தமிழ் சினிமாவில் ஊறிப் போன நம் நெஞ்சங்கள் தகிக்காதிருக்குமா ? So here you go!
இதுவரையிலான டாப் பார்வைகளை ஈட்டியுள்ள பதிவுகளின் பட்டியல் இதோ:
1. 02-08-2014 தல… தளபதி… திருவிழா - 7678 views
2. 02-01-2013 ஒரு பணி இரவின் உரத்த சிந்தனை - 7158 views
3. 16-11-2013 இது வேங்கையின் வேளை - 6387 views
4. 06-12-2012 எட்டும் தூரத்தில் NBS - 6249 views
5. 07-06-2013 காசு… பணம்… துட்டு… Money ! - 6143 views
6. 10-11-2014 ஒரு கௌபாய் வானவில் - 6043 views
இதில் last mentioned பதிவுக்கு 524 பின்னூட்டங்களிட்டு, அந்தப் பட்டியலில் டாப் இடத்தைத் தந்திருக்கிறீர்கள்!
தொடர்ந்திடும் ஒரு நெடும் பயணத்தின் டைரிக் குறிப்பாய்த் திகழ்ந்திடும் இந்தப் பதிவுகளில் ஒரு memorable தருணத்தைத் தொட்டுப் பிடித்திருக்கும் வேளைதனில் அதைக் கொண்டாட வேண்டியது காலத்தின் கட்டாயமோ ? ஏற்கனவே 3 மில்லியன் ஹிட்ஸ் என்ற moment-ஐ சிலாகிக்க 2019-ன் அட்டவணையில், அதற்கென ஒரு ஸ்பெஷல் இதழ் திட்டமிட்டுள்ளோம் ! அதனை இப்போதே போட்டு உடைக்க வேண்டாமே என்று தோன்றுவதால் – அக்கட பெவிகால் பெரியசாமியாய் அவதாரம் எடுத்துக் கொள்கிறேன்! ஆனால் ஜாலியான இந்த நொடியில் ஓட்டைவாய் உலகநாதனையும் சித்தே முன்வரிசைக்கு இட்டாந்திடலாமா?
என்ன தேர்வு செய்திடலாம் இந்த 500-ன் தருணத்துக்கு என்று யோசித்த போது சில பல options என் முன்னே அணிவகுத்தன ! இந்த மைல்கல்லைத் தொட்டுப் பிடித்திட உதவியது நீங்கள் தான் எனும் போது அந்த ஸ்பெஷல் இதழ் எதுவாக இருந்திடலாமென்ற தேர்வையுமே உங்களிடமே ஒப்படைக்கலாமென்று தோன்றியது !“ஆங்… சாய்ஸில் எதையுமே விட்டுத் தள்ளாம – அத்தனையையும் போட்டுப்புடலாமே!” என்றே நீங்கள் அபிப்பிராயப்படுவீர்கள் என்று பட்சி சொன்னாலும் தேர்வு செய்திடும் சுதந்திரத்தை உங்களிடமே ஒப்படைக்க எண்ணுகிறேன் - இந்த ஒற்றைத் தருணத்திலாவது !!
- Fun with 500!! என்பதே இந்த ஸ்பெஷல் இதழின் பெயராக இருந்திடும் !
- சந்தாவினில் இடம்பெறாது ; முன்பதிவுகளுக்கு மாத்திரமேயான limited edition !!
- “500” என்பதால் இதழின் விலையும் ரூ.500 !! Plus courier costs...!
இதற்கென உங்களுக்கு நான் தரக்கூடிய Options 3 !!
முதலாவது நமது குண்டு-கதம்ப புக் ஆசைக்கு நியாயம் செய்திடக் கூடிய விதத்தில் - "THE BEST OF BONELLI" - என்றதொரு 550+ பக்க black & white ஆல்பம் - 5 அட்டகாசக் கதைகளோடு !!
"இத்தாலி பக்கமாய்ப் பறந்து - பறந்து அலுத்துப் போயிட்டூ அண்ணாத்தே !! " - என்பதே உங்களது எண்ணங்களாயிருப்பின் - பிளேனை நேராக பிராங்கோ -பெல்ஜிய மண்ணை நோக்கி விட்டு - அங்கே அவர்களிடம் ஆசீர்வாதங்களையும், அனுமதிகளையும் வாங்கிக் கொண்டு, லைட்டாக பெட்ரோல் நிரப்பிக் கொண்ட கையோடு - அமெரிக்க களத்தை நோக்கிப் படையெடுப்போமா - அந்த மண்ணிலான க்ரைம் த்ரில்லர்களெல்லாம் சுகம் தானாவென்று கண்டறிய ? 5 பாகங்கள் கொண்டதொரு வண்ண த்ரில்லர் maybe ? What say ?
அட..."அமெரிக்காலாம் பார்த்துப் பழகிய கதைக்களம் தானே அண்ணாச்சி ? " என்கிறீர்களா ? கவலையே வாணாம் - மறுக்கா பிளைட்டை அதே பிரான்க்கோ-பெல்ஜிய மண்ணை நோக்கி விட்டு, மறுக்கா ஆசீர்வாதங்கள் + அனுமதி + பெட்ரோல் என்று நிரப்பிக் கொண்டு, நாம் ஜாஸ்தி பார்த்திரா ஆப்ரிக்கா மீதாகப் பறந்து பார்க்கலாமா ? மறுக்கா 5 பாகங்கள் கொண்ட கலர் த்ரில்லர்களை அங்கேயும் பார்க்கலாமோ ? "என்னா ஒய்.. அவ்ளோ பெரிய இருண்ட கண்டத்தில் எங்கேன்னு பறக்கிறதாம் ?" என்று கேட்கிறீர்களா ? "ஆங்....ஒன் மினிட் ப்ளீஸ் !! ம்ம்... கென்யா மேலே பறந்து பார்க்கலாமா ?" சுகப்படுமென்று தோணுதோ ?
இந்த டீசர்களோடே இப்போதைக்குப் புறப்படுகிறேன் folks - இந்தத் தேர்வுகளில் உங்களது எண்ணப் பிரதிபலிப்புகளைப் பார்த்திடும் ஆர்வத்தோடு !! Before I sign off, I owe you this too !! இந்தப் பதிவுகளின் பயணத்தில் தெரிந்தோ-தெரியாமலோ சில பல பாதங்களில் நான் இடறியிருப்பின் - my apologies !! இங்கே வருகை தருவோருக்கு மகிழ்ச்சி மாத்திரமே தொடர்கதையாகிட வேண்டுமென்ற பிரார்த்தனையோடு கிளம்புகிறேன் !! Have a lovely weekend guys !! See you around !! Ciao for now !!
501
ReplyDeleteரவுண்டு பன்னு எனக்கு தான்!
Deleteவாழ்த்துகள் மிதுன்!! முதல் பன்னு/பரிசு உங்களுக்கே!! :)
Deleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteஎனக்கு ரவ்வூண்டு பன்னாச்சும் குடுங்க..!!!
Deleteவந்தாச்சி.
ReplyDelete10க்குள் ஒன்று
ReplyDeleteவந்துட்டாரையா வந்துட்டாரு
ReplyDelete5வது...
ReplyDeleteHI
ReplyDelete500வது பதிவுகள் என்ற இமாலய சாதனை க்கு முதல் வாழ்த்துகள் சார்💐💐💐💐💐
ReplyDelete5000
50000
500000
------
------னு போட்டு தாக்க வாழ்த்துகள்🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
10
ReplyDeleteஎனக்கு மூன்றில் எது போட்டாலும் ஓகே தான்.
ReplyDeleteமூன்றையுமே போட்டால் செம்ம ஹப்பி அண்ணாச்சி.
+1
Deleteகென்யா.....!!!!!!!
ReplyDeleteவாவ்...!!!
வரவேற்கிறேன் சார்.
me too
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஹாஸ்ய உணர்வு ததும்பும் பதிவு!
ReplyDelete500-வது பதிவிற்கு மனப்பூர்வமான பாராட்டுகளும் வாழ்த்துகளும் சார்!!!
நம்ம சாய்ஸ் ஆப்ரிக்கா ...கென்யா...!!!
500-வது பதிவிற்கு மனப்பூர்வமான பாராட்டுகளும் வாழ்த்துகளும் சார்!!!
Deleteகென்யா! Ok 👍👍👍
Deleteஆப்பிரிக்கா, கென்யா ஆஹா
Deleteகென்யா குறித்து ஏதாவது எழுதுங்க செனா
Deleteபதிவு வந்தாச்சி
ReplyDelete/// அமெரிக்க களத்தை நோக்கிப் படையெடுப்போமா - அந்த மண்ணிலான க்ரைம் த்ரில்லர்களெல்லாம் சுகம் தானாவென்று கண்டறிய ? 5 பாகங்கள் கொண்டதொரு வண்ண த்ரில்லர் maybe ? ///
ReplyDeleteவாவ் ....5 பாகங்கள் கொண்ட ஒரே கதையா சார்??
என்னுடைய ஓட்டு இதற்கே ..!!
///ம்ம்... கென்யா மேலே பறந்து பார்க்கலாமா ?" சுகப்படுமென்று தோணுதோ ? ///
Deleteகென்யா வருகிறதென்றாலும் மகிழ்ச்சியே..!!
👌👌👌👍👍👍
Deleteகென் யாவும் வேண்டாம், கியூபாவும் வேண்டாம், நம் வழக்கமாக சக்ஸஸ் அணியின் குண்டு புக் பாதுக்காப்பானது
Delete// நம் வழக்கமாக சக்ஸஸ் அணியின் குண்டு புக் பாதுக்காப்பானது. //
Deleteஎனது கருத்தும் அதுவே.
ReplyDelete/// அமெரிக்க களத்தை நோக்கிப் படையெடுப்போமா - அந்த மண்ணிலான க்ரைம் த்ரில்லர்களெல்லாம் சுகம் தானாவென்று கண்டறிய ? 5 பாகங்கள் கொண்டதொரு வண்ண த்ரில்லர் maybe ? ///
என் ஓட்டும் இதற்கே...
+1000.
Deleteஎன் ஓட்டு இதற்கு...
+100
Deleteஎன்னுடைய ஓட்டும் அமெரிக்க ஐந்துபாக வண்ண க்ரைம் த்ரில்லருக்கே..!!
Delete+100
Deleteகரூராரின் அணிக்கு வலு சேர்க்கிறேன்.+1000
Deleteஇரவு வணக்கம் 🙏
ReplyDelete22nd
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம். 500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். குழப்பமே வேண்டாம் Fun with 500 part 1 மற்றும் part 2 போடலாமே.
ReplyDeleteபார்ட்3??? 3தானே ராசி.
Delete(ஆப்+அமெ)-ரிக்கா
Delete500-வது பதிவிற்கு மனப்பூர்வமான பாராட்டுகளும் வாழ்த்துகளும் சார்!!!
ReplyDeleteஐயா 27
ReplyDeleteஅமெரிக்கக் க்ரைம் த்ரில்லர்..!
ReplyDelete500-வது பதிவிற்கு மனப்பூர்வமான பாராட்டுகளும் வாழ்த்துகளும் சார்!!!
ReplyDelete_____/\_____
பெயரை சொல்லிவிட்டீர்கள்.விலையும் தெரிந்துவிட்டது. வெளியீடு எப்போது என்பதையும் சொல்லிவிட்டால் மனதுக்குள் பறக்கும் பட்டாம்பூச்சி கொஞ்சம் அமைதியாக இருக்கும்.
ReplyDeleteஇனி வரும் மாதங்களில் எந்த மாதம் குறைவோ அந்த மாதமே, சரிதானே ஆசிரியரே?
Deleteகென்யா நல்ல முடிவு என்றே நினைக்கிறேன்..
ReplyDelete500 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் சார்.
எனக்கு ஒரு குண்டு புக் கிடைத்தால் சரி.
அருமையான நினைவுகள்.. ரத்தபடலம் முன்பதிவு செய்துவிட்டு வருமா வராதா என்று இருந்த நேரத்தில் திடீரென கொரியர் வந்த பொழுது இருந்த மகிழ்வு என்றும் மறவாது ☺️
பர்ஸ்ட் சாய்ஸ் கென்யா
ReplyDeleteபோனெல்லி 2nd choice
/// "THE BEST OF BONELLI" - என்றதொரு 550+ பக்க black & white ஆல்பம் - 5 அட்டகாசக் கதைகளோடு !! ///
ReplyDeleteஇதுவும் நல்லாத்தான் இருக்கும்..!!
ஆனா என்னுடைய ஓட்டு அமெரிக்க ஐந்துபாக வண்ண க்ரைம் த்ரில்லருக்கே..!!
+11111
Deleteவாவ்!!! என்னவொரு அருமையான பதிவு!!
ReplyDelete500க்கு வாழ்த்துகள் எடிட்டர் சார்!
'Fun with 500' செம ஐடியா!!
"Fun with 500"
Delete@ மிதுன்! உங்களுக்கு
Bun with 500. :)
///Bun with 500///
Deleteஹாஹாஹா!
///Bun with 500///
Deleteஹாஹாஹா! :)))))
சார் அட்டகாசமான, அமர்களப் பதிவு. நினைவு கூறல்கள் அருமை. கொலைப்படை நம்ம லயனின் ஒரிஜினலயும், யார் அந்த மினி ஸ்பைடர் அவர்களின் ஒரிஜினலயும் நீங்க காட்ட போவதுறுதி எனினும் இப்ப காட்டியது போல உற்சாக மின்னல் மனதில் ஒளிருது !
ReplyDeleteஆப்பிரிக்காவ பாக்கலாமா?
அமரிக்காவயா!
சார் ஆப்பிரிக்கா மொதல்ல, அமரிக்கா பொறவு
///சார் ஆப்பிரிக்கா மொதல்ல, அமரிக்கா பொறவு///
Delete+500 with courier charge
ரெண்டும் வர வாய்ப்புள்ளது போல
Deleteநா அயர்லாந்து போறேன்
ReplyDeleteநானும் இப்போ கெல்லி பிரையன் படலம் படிக்க ireland கோயிங் !
Deleteநா முடிச்சாச்சு, அட்டகாசம்
Delete////ஒவ்வொரு பாராட்டையும் DTS சிஸ்டத்தின் பிரம்மாண்டத்தோடு நீங்கள் இங்கே பதிவிடும் போதும் ; ஒவ்வொரு சின்னஞ்சிறு விஷயத்தையும் நீங்கள் சிலாகிக்கும் போதும் - அதன் அதிர்வலைகள் யாருக்கு என்ன மாதிரியான சேதியைச் சொல்கிறதோ இல்லையோ - என்னைப் பொறுத்தமட்டிலும் - இந்த ஆதர்ஷத்துக்கும், அன்புக்கும் அருகதையுடையவனாய்த் தொடர்ந்திட எத்தனை மெனக்கெட்டாலுமே தப்பில்லை என்ற எண்ணத்தை மாத்திரமே !! ////
ReplyDelete+500
Tex(cowboy thriller)+reporter Johnny(detective thriller)+dylon dog(mystery thriller)+magic wing(fantasy dark thriller) +lucky Luke(cartoon thriller)....what you decide we will support it sir
ReplyDeleteDear Editor,
ReplyDeleteIn the given choice it will be Kenya but ..
How about Chimpanzee Complex? It was awesome to read in English.
Here are some more options:
1. Chimpanzee Complex - 3 parter
2. Barracuda - 6 parter
3. Long John Silver - 4 parter
4. Wisher - 4 parter
எனக்கென்னமோ interstellar பார்த்தாகிவிட்டோம் ஆதலால் Chimpanzee Complex இப்போது ஒத்து வருமோ என்று தோன்றுகிறது.
+8888
Delete//Barracuda - 6 parter
Delete3. Long John Silver - 4 parter//அதெல்லா அடுத்த வருட அட்டவணைல உண்டு நண்பரே, அதில்லாம இது வேற
///இங்கே வருகை தருவோருக்கு மகிழ்ச்சி மாத்திரமே தொடர்கதையாகிட வேண்டுமென்ற பிரார்த்தனையோடு கிளம்புகிறேன் !! ///
ReplyDeleteசார்.. தொடர்கதை வேண்டாம்னு போன பதிவுலயே சொன்னோமே சார்? ஒரே புக்காவே போட்ருங்களேன்? :D
நெறய புக்கா போடட்டுமே
Deleteஅமெரிக்க கிரைம் திரில்லர் வேண்டும் சார்
ReplyDelete////எல்லாவற்றையுமே விட இந்தப் பதிவுகளின் ஒரு அழகான பாசிட்டிவ்வாக நான் பார்த்திடுவது – சில பல வாழ்நாள் நட்புகளுக்கு இது அஸ்திவாரமாய் அமைந்துள்ளதையே ! மும்மூர்த்திகள் வரலாம்; போகலாம் ; மின்னும் மரணங்கள் ஜொலிக்கலாம்; தகிக்கலாம்; இரத்தப் படலப் புலன் விசாரணைகள் நினைவில் தங்கிடலாம்; காலத்தோடு காலாவதியும் ஆகலாம் ! ஆனால் இங்கே துளிர்விட்டுள்ள சில நட்புக்களின் ஆயுள் ரொம்பவே கெட்டி என்பதைக் கண்கூடாகப் பார்க்கும் போது – எனது இந்த வாராந்திர ramblings-களுக்கும் ஒரு பலனுள்ளதே என்று மனம் குளிர்கிறது !///
ReplyDelete+500
செம & உண்ம, எடிட்டர் சார்!
///ஏற்கனவே 3 மில்லியன் ஹிட்ஸ் என்ற moment-ஐ சிலாகிக்க 2019-ன் அட்டவணையில், அதற்கென ஒரு ஸ்பெஷல் இதழ் திட்டமிட்டுள்ளோம் ///
ReplyDelete+500
அடடே!! செம்ம!!!
###ஒவ்வொரு பதிவிற்கும் +1 போட்ட நண்பராக இருந்தாலும் சரி #####
ReplyDeleteவந்துட்டேன் ஆசானே +123456789
///ஒரு அழகான பாசிட்டிவ்வாக நான் பார்த்திடுவது – சில பல வாழ்நாள் நட்புகளுக்கு இது அஸ்திவாரமாய் அமைந்துள்ளதையே !///
ReplyDelete/// ஆனால் இங்கே துளிர்விட்டுள்ள சில நட்புக்களின் ஆயுள் ரொம்பவே கெட்டி என்பதைக் கண்கூடாகப் பார்க்கும் போது – எனது இந்த வாராந்திர ramblings-களுக்கும் ஒரு பலனுள்ளதே என்று மனம் குளிர்கிறது !///
காமிக்ஸ் நண்பர்கள் என்பதையும் தாண்டி சொந்தங்களாக மாற்றிய பெருமை உங்களுக்கே பொருந்தும்..
என்றென்றும் நன்றிக்கடன் பட்டு இருக்கிறோம்..
/// சாய்ஸில் எதையுமே விட்டுத் தள்ளாம – அத்தனையையும் போட்டுப்புடலாமே!”///
நீங்களே சொல்லீட்டீங்க.. அப்புறம் அப்பீல் ஏது.. மூன்றையும் மூன்று குண்டு புக்குகளாக போட்டுடுங்க..
நிதர்சனமான உண்மை, அது எங்கள் குடும்ப உறவையும் சேர்த்து பிணைத்து உள்ளது இந்த காமிக்ஸ் நேசம்//+1000 கரூர்ஜி
DeleteHi...
ReplyDeleteடாக்டர் சாய்ஸே கென்யான்னா பேசன்ட்டுக நாங்க என்ன சொல்லப் போறோம்??
ReplyDeleteஇதுவரை
ReplyDeleteகென்யா - 11
அமொிக்கா - 7
இத்தாலி - 4
கென்யா - 12
Delete7pm status ...'Best of bonelli' -13
Delete500 ஸ்பெஷல் அமெரிக்கா ஸ்பெஷலாக இருந்தால் பிரமாண்டமாக இருக்கும்!
ReplyDeleteDear editor sir Congrats with the 500!
ReplyDeleteReading the blog for a long time never commented before will post regularly from now. My vote is for 2 x 500+ celebration ஒரு குண்டு புக்!
And not to forget go with a American special please
Delete@Jagannath
Deleteமெளனம் கலைத்தமைக்கும், முதல் கமெண்டுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் நண்பரே!
அருமை கருப்பு ,வெள்ளை ஆப்ரிக்காவின் 500 பக்கங்கள் கருப்பாய் இருண்டகண்டமாயும் , அமெரிக்காவின் 500பக்கங்கள் வெளுப்பாயும் வந்தால் வண்ணமாய் ஏதாச்சும்....
Deleteஇன்னிக்கு வீட்டிலே வீட்டுக்காரம்மாவை லேசா திட்டினாக்கூட அடுத்த நிமிசமே கரூர், சேலம், நாகர்கோயில் ஏன் அமெரிக்கா ,பிரான்சு என எல்லாப் பக்கமும் இருந்து வார்னிங் மெசேஜ் வருது.. இதுக்கெல்லாம் காரணம் இந்த 500 பதிவுகள் தான் காரணம் என்பது நெம்ப சந்தோசம்... இருந்தாலும் எதிர்தரப்பிலிருந்து ரத்த காயமே ஆனாலும் மேற்படி ஊர்களிலிருந்து ஒரு சின்ன சத்தம் கூட வரதாது மட்மில்லாமல் , இரத்த காயத்துக்கு கட்டு போட அரியலூர் பக்கம் ஒதுங்கினாலும் அதே ரிசல்ட்டு தான் என்பதால் ... நீங்க நல்லவரா இல்லை கெட்டவரா??... இத்தனை நாள் பாம்பேலே என்ன பண்ணிட்டு இருந்தீங்க??
ReplyDeleteரம்மி.. உருண்டு பொறண்டு சிரிக்கும் படங்கள் ஆயிரம்..
Delete:-))))))
Deleteஹா ஹா ரம்மி... செம!!! :)))))))
Deleteரம்மி....:-)))))))))
Deleteஎதுக்கு ரம்மி? உங்களுக்கு சப்போர்ட் பண்ணி அதுக்குத் தனியா எங்களுக்கு ரத்தக் காயம் வர அடி விழுகுறதுக்கா? உள்ளே அடி வாங்கிட்டு வெளில வரும் போது வீரமா வீக்கத்தை மறைச்சுட்டு நெஞ்சு நிமித்திட்டு உதாரா சத்தம் போட்டுட்டு வரனும். இது கூட தெரியாமா இருந்தா எப்படி?
Delete//இன்னிக்கு வீட்டிலே வீட்டுக்காரம்மாவை லேசா திட்டினாக்கூட அடுத்த நிமிசமே கரூர், சேலம், நாகர்கோயில் ஏன் அமெரிக்கா ,பிரான்சு என எல்லாப் பக்கமும் இருந்து வார்னிங் மெசேஜ் வருது.. //
Deleteமேச்சேரி எனும் வெளிநாடு மிஸ் ஆகுதே
//மேச்சேரி எனும் வெளிநாடு மிஸ் ஆகுதே ///
Deleteஹிஹி....நேரடியா சொல்ல பயந்துக்கிட்டுதான் சேலம்னு சொல்லிட்டாரே..!!
(இதுக்கும் இன்னிக்கு ரம்மிக்கு மாட்டுப்பொங்கல் இருக்கு ..:-))
உண்மையிலியே செம பதிவு... நன்றி..
ReplyDelete+8888
Delete500பதிவுக்கு வாழ்த்துகள் ஆசிரியரே!
ReplyDeleteGood blog today.
ReplyDeleteகென்யா'வைப் பற்றி மத்தவங்க சொல்லி கேள்விப்பட்டிருக்கேன் - ஆனா படிச்சதில்ல! அதனால என்னோட வோட்டும் கென்யாவுக்கே!
ReplyDeleteஆனாலும், 'பொனெல்லி காம்போ'வை விடவும் மனசில்லை!!
இந்த 500வது பதிவுக்கு ஒரு உப பதிவு 501வதா வருமே... அதுமாதிரி கென்யாவுக்கு உபஇதழா பொனெல்லி காம்போவை....
500 பதிவுகள் போட்ட அபூர்வ முத்து ஸ்ரீகாந்த் விஜயருக்கு மன மகிழ்ந்த வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்
ReplyDeleteஅருமை எனதுயிர் ஆசிரியரே தொடரட்டும் உங்கள் சேவை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
போனெல்லிக்கே எனது ஓட்டு
ReplyDelete80வது
ReplyDelete500 ஆவது பதிவுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteஅமெரிக்கா மற்றும் ஆப்ரிக்கா ஓ.கே சார்.... கென்யா புதுசா இருக்கு....
ReplyDeleteஇத்தாலி மசாலா தான் ஒவ்வொரு மாதமும் வந்து கொண்டே இருக்கே....
500 ஆவது பதிவை கடக்கும் இந்த 2018 இல், back to the bevilion கதையாக 2011 இன் நிலவரம், குடோன் இருப்பு,எட்டி பார்ப்பது மனதை நெருடுகிற து.ஆனால் ஏதோ ஒரு எண்ணம் இதுவும் கடந்து போகும் என்றே தோன்றுகிறது.
ReplyDelete500 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஆசானே.தடையில்லாமல் தொடர்ந்து பயணிப்போம்.
ReplyDelete500வது பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் சார். போனொல்லியை அடிக்கடி தரிசிக்கிறோம்தானே சார். அமெரிக்க கிறைம் திரில்லர்களையும் உங்கள். புண்ணியத்தில்கொஞ்சம் தரிசிப்போமே சார்.
ReplyDeleteஇன்று பதிவுத் தபாலில் காமிக்ஸ் பொக்கிஷம் வந்து கிடைத்தது. மிக்க நன்றி சார்.
1.ஆப்ரிக்கா
ReplyDelete2.அமெரிக்க க்ரைம் த்ரில்லர் 5பாக சாகசம் ஒரே தொகுப்பாக
3.போனெல்லியின் படைப்புகள்,( ஒரு முடியா இரவு ,என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம், கனவுகளின் கதையிது ) போன்ற மாறுபட்ட கதைகளங்களின் தொகுப்பாக ஒரு வெளியீடு.இதில் டெக்ஸ் வில்லர்,ராபின், மார்டின் கதைகளை இடைக்காலப் இருக்க வேண்டும்.
Dear EDi,
ReplyDeleteCongrats on 500. My codech for Million Special would be "Kenya" collection.
Dear Sir,
ReplyDelete1. Africa (Kenya) - Is it Rodolphe & Leo's 5 part series?, if so, mixed opinion..
(But please reprint Irattai vettayar Aafrikka Sathi too)
2. American Crime thrillers - double OK
3. Already "Enough of BONELLI" :-(
Thanks
Safer போனெல்லியே என்னோட first choice.
ReplyDeleteஇல்லையேனில் மிச்சம் உள்ள young டைகர் series கதைகளை மொத்தமாக இந்த வாய்ப்பை பயன்படுத்தி வெளியிட்டு விடலாமே. (கதைகள் நல்லா இருக்கா இல்லையானு நாங்களே படித்து தெரிந்து கொள்கிறோம் :-) ).
ஆப்ரிக்காவோ, அமெரிக்காவோ,போனெல்லியோ எனக்கு எல்லாம் OK தான். ஆக குண்டு புக் வேண்டும்
ReplyDeleteஅடேங்கப்பா எவ்ளோ பெரிய டானிக்...குடிச்சுட்டு வரேன் சார்..:-)
ReplyDeleteI would like to have bonelli special as it has 550 pages.
ReplyDelete500 வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் ,பாராட்டுகள் சார்...
ReplyDeleteஎப்போதுமே எனக்கு செமையாய் போரடித்தால் – என்னை நானே உசுப்பிக் கொள்ள எதையாவது கோக்கு மாக்காய் செய்து வைப்பது வழக்கம் ! முதன் முதலாக ரூ.100/- விலையில் “மெகா ட்ரீம் ஸ்பெஷல்” இதழை அறிவித்ததும் இது போன்ற தருணத்தில் தான்! If
ReplyDelete#########
அடிக்கடி உங்களுக்கு போரடிக்க எனது மனமார்ந்த வேண்டுதல்கள் சார்...:-)
நிகழ்காலத்து மனத்தாங்கல்கள், முன்காலத்து ஒத்தாசைகளை மறக்கச் செய்திடக் கூடாதென்பதில் நம்பிக்கை கொண்டவன் நான் ! So இந்தப் பயணத்தின் ரம்யத்துக்கு தம் பங்கைச் செய்த வகையில் அவர்களும் நம் நன்றிகளுக்கு உரியவர்களே
ReplyDelete########
எங்களுடைய மனமார்ந்த நன்றிகளும்..!
“நாக்கார்… மூக்கார்” வார்த்தைப் பிரயோகங்களை அப்படியே உல்டா செய்து இங்கே நீங்கள் பதிவிட்டு ஜமாய்த்திருந்த அட்டகாசங்களெல்லாம் “சிங்கத்தின் கிழவயதில்” பகுதிக்கான லட்டு மாதிரியான மேட்டர்களல்லவா...
ReplyDelete########
முதல்ல சிறுவயதை முடிங்க சார்...அப்புறமா நடுவயது ,வாலிப வயது ,கிழ வயது எல்லாம் தொடரலாம்...போராடி போராடி போராட்ட குழுவிற்கே போரடிச்சு போயிறுச்சு ..
உங்களுக்கு போரடிச்சா எங்களுக்கு ஸ்பெஷல்...போராட்ட குழுவுக்கே போரடிச்சா நாங்க எங்கே போவோம் கோபால்....கோபால்....:-(
இன்றைய பதிவும் கூட சிங்கத்தின் நடு வயதில் தானே, தலிவரே..
Deleteதல...பாதி நேரம் பதுங்கு குழில படுத்து தூங்கறது. மீதி நேரம் வாழைப்பூ வடையை சாப்பிட்ட செரிக்க முடியாம அவதில மறுபடி தூங்கறது. இந்த லட்சணத்துல எங்க போராட்டம் நடத்தினீங்க. உங்களை நம்பி வெள்ளை மாளிகை முன்னாடி போயி போராட்டம் பண்ண ட்ரை பண்ணி ட்ரம்ப் கிட்ட அடி வாங்காம தப்பிச்சு வந்தது தான் மிச்சம். போராட்டம் அப்படி இப்படின்னு ஏதாவது சத்தம் தாரைப்பக்கம் கேட்டுச்சு எனக்கு கெட்ட கோபம் வரும். ஆமா...சொல்லிப்புட்டேன்...
Deleteதாரமங்கலத்துல தலிவருக்கே தெரியாத ஒரு மெஸ் இருக்கு ஷெரிப்.. அதுக்குமேல சொல்லறதுக்கு ஒன்னும் இல்லை..
Deleteஆனால் முன்தினத்து ரவுசுகள் எல்லாமே உலகை உலுக்கிடும் நிகழ்வுகளல்ல என்ற புரிதலும், நிதானமும், தூங்கி எழுந்த மறுநாளைக்கே புலர்வதைப் பார்த்தான பின்னே, மறுக்கா இங்கே தஞ்சமடைவதும் இந்த அனுபவங்களின் இன்னொரு அத்தியாயமே ! Someday down the line – சம்பந்தப்பட்ட எல்லோருமே இந்த நாட்களை எண்ணி சிரித்துக் கொள்வோமென்பது உறுதி
ReplyDelete########
உண்மை....:-)
எல்லாரும் 500, கென்யா, ஆப்ரிக்கா, பேரிக்கான்னு சொல்லிட்டு்இருக்கும் போது கவரிமான் னு ஆரம்பிச்சா்நம்மளை குமறிடுவாங்க. இருந்தாலும்...எல்விரா என்னும் செந்தூரப் பூவின் ரபேலுடனான காதலை காக்க வரும் பூந்தோட்ட காவல்காரர்களாக டெக்ஸ் மற்றும் கார்சன். சென்டிமென்ட் கலந்த நான் ஸ்டாப் ஆக்சன். செம. எடுத்த ரெண்டரை மணி நேரம் கீழே வைக்க முடியலை புக்கை. கடைசில நீங்க தான் டாடியா ன்னு ரொம்ப சுத்துனாலும் நல்ல பழய ரசினி படம் பாத்த திருப்தி.
ReplyDeleteகவரிமான்களின் கதை. 9/10.
500 வது பதிவுக்கு வாழ்த்துகள். 5000 வது பதிவையும் நீங்கள் எழுத நாங்கள் படித்து இன்புறுவோம். இறையருள் ஆவன செய்யும்.
ReplyDelete100வது கமெண்ட்!! பன்னு/பரிசு பெறும் அடுத்த அதிர்ஷ்டசாலி!!
Deleteவாழ்த்துகள்!!
பன் வழங்கிடும் உமது பண்பட்ட மனதைப் பாராட்டும் விதமாய் நீவிர் இன்று முதல் "பன் விஜய்' என்று அன்போடு அறியப்படுவீராக !!
Deleteகூடவே கொஞ்சம் பட்டரும் வழங்கினால் better !
கென்யா!
ReplyDeleteஇங்கே துளிர்விட்டுள்ள சில நட்புக்களின் ஆயுள் ரொம்பவே கெட்டி என்பதைக் கண்கூடாகப் பார்க்கும் போது – எனது இந்த வாராந்திர ramblings-களுக்கும் ஒரு பலனுள்ளதே என்று மனம் குளிர்கிறது !
ReplyDelete#######
101 % உண்மை சார்....
நட்புகள் உறவுகள் ஆகி இப்பொழுது குடும்பங்கள் ஆகவும் மாறிவிட்டது.
இது மட்டுமில்லாமல் வெளியூர் என எதையும் தரிசிக்காமல் ஆபிஸ் விட்டா வூடு ,வூட்டை விட்டா ஆபிசு என்ற இருந்த சிலரை கூட மெட்ராசு ,சென்னை ,மயிலாடுதுறை என பல பல வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று சுற்றி காட்டிய பெருமையும் உண்டு இந்த நட்பு வட்டாரத்துக்கு...:-)
ஏற்கனவே 3 மில்லியன் ஹிட்ஸ் என்ற moment-ஐ சிலாகிக்க 2019-ன் அட்டவணையில், அதற்கென ஒரு ஸ்பெஷல் இதழ் திட்டமிட்டுள்ளோம்
ReplyDelete#########
வாவ்...சூப்பர்....:-)
Fun with 500!! என்பதே இந்த ஸ்பெஷல் இதழின் பெயராக இருந்திடும் !
ReplyDelete- சந்தாவினில் இடம்பெறாது ; முன்பதிவுகளுக்கு மாத்திரமேயான limited edition !!
- “500” என்பதால் இதழின் விலையும் ரூ.500 !! Plus courier costs...!
#####
வாவ்...வாவ்....சூப்பரோ சூப்பர்....!!
முதலாவது நமது குண்டு-கதம்ப புக் ஆசைக்கு நியாயம் செய்திடக் கூடிய விதத்தில் - "THE BEST OF BONELLI" - என்றதொரு 550+ பக்க black & white ஆல்பம் - 5 அட்டகாசக் கதைகளோடு !!
ReplyDelete#######
என்னுடைய முதல் சாய்ஸ் இதற்கே ...எத்துனை நாட்களாயிற்று ...இல்லை ..மாதங்களாயிற்று ..கதம்ப குண்டு இதழை பார்த்து...ரசித்து ..படித்து...
ஐ லவ்..போனலி...வித் டெக்ஸ்..
இந்த போனெல்லி ஷ்பெசலில் டெக்ஸ் இடம்பெறமாட்டர் வெளிநாடுகள் போய்வந்த தலீவரே..!!
Delete// என்னுடைய முதல் சாய்ஸ் இதற்கே ...எத்துனை நாட்களாயிற்று ...இல்லை ..மாதங்களாயிற்று ..கதம்ப குண்டு இதழை பார்த்து...ரசித்து ..படித்து... //
Delete+11111111111111
///இங்கே வருகை தருவோருக்கு மகிழ்ச்சி மாத்திரமே தொடர்கதையாகிட வேண்டுமென்ற பிரார்த்தனையோடு கிளம்புகிறேன் !! ///
ReplyDelete#######
அதே மகிழ்ச்சி மட்டும் தங்களுக்கும் தொடர எங்களுடைய பிரார்தனைகளும் சார்..
ஆல் இஸ் வெல்...
டியர் எடிட்டர்
ReplyDeleteபதிவு 500 க்கு வாழ்த்துகள்!!💓👋👋🙏💥💥💥
ஆனாக்கா இந்த 500 தொடுவதற்கு 499, 498 எல்லாம் கடந்ததாலதான் என்பதை எப்படி மறந்தீர்கள்..
அதனால..
Fun for 500 க்கு - "THE BEST OF BONELLI" - என்றதொரு 550+ பக்க black & white ஆல்பம்
500 க்கு காரணமாக இருந்த 499 க்கு - அமெரிக்க திரில்லர்
499 க்கு காரணமாக இருந்த மிஸ்டர் 498 க்கு - கென்யா ஆல்பம் கொடுத்து சிறப்பு செஞ்சிடுங்க.
இதுதான் 500 பதிவை கடந்த எங்கள் அபூர்வ எடிட்டருக்கு அழகு. 😊😍😀
+8888
Delete+1
Deleteஇது நல்லாருக்கே ...ஹிஹி,,!!
Delete+1
+++++++++++++++ 100000000
Deleteஆனாலும் இந்த டீலிங் ரொம்பவே புடிச்சிருக்கு !!
Delete//ஆனாலும் இந்த டீலிங் ரொம்பவே புடிச்சிருக்கு !!//
Deleteஅப்புறம் என்ன சார் தயக்கம்.. சட்டுபுட்டுன்னு சந்தாவையும் தனி சந்தாக்களையும் அறிவிச்சுடுங்க.. புரட்டாசில மிச்சமான காசை அனுப்பிடறோம்..👻👻👻👻👻👻👻👻
// ஆனாலும் இந்த டீலிங் ரொம்பவே புடிச்சிருக்கு !! //
Deleteநடந்தா நல்லாத்தான் இருக்கும்.
// புரட்டாசில மிச்சமான காசை அனுப்பிடறோம். //
இது செம டீலிங்கா இருக்கே.
அடடே..கரூரில் கூட புரட்டாசி சைவ மாதமா ??
DeleteI was very happy to see our comics on newsstand near Salem junction. Esp. Modesty book!. What about publishing such 50 rupees book every month sir? (Not reprint). Such issues will carry advertisement of our costlier issues of the month! . Anyway it is really wonderful to see our books at newsstand.
ReplyDelete500 வது பதிவை எட்டியதற்கு வாழ்த்துக்கள் சார்! கென்யா கதம்ப இதழுக்கு சரி வராதென்றே தோன்றுகிறது. இதை வேறொரு தருணத்தில் களம் இறக்குவதே சிறந்ததாக இருக்கும். அதே போல் த்ரில்லர் கதைகளும் ஒன்ஷாட் ஆல்பமாக வெளிவருவதே சிறந்தது என்பது எனது கருத்து. கதம்ப இதழுக்கு இத்தாலிய நாயகர்கள்தான் சிறப்பாக இருப்பார்கள் விற்பனையிலும் சோடை போக மாட்டார்கள்
ReplyDeleteநம்பி களம் இறக்கலாம்!
நான் சொன்ன 3 இதழ்களில் போனெல்லி தொகுப்பு மாத்திரமே கதம்ப இதழ் சார் ; பாக்கி இரண்டுமே ஐந்து பாகங்களில் முடிந்திடும் one shots ! And அவற்றை வெளியிடுவதாயின் ஒரே இதழாகவே !
Delete// கதம்ப இதழுக்கு இத்தாலிய நாயகர்கள்தான் சிறப்பாக இருப்பார்கள் விற்பனையிலும் சோடை போக மாட்டார்கள்
Deleteநம்பி களம் இறக்கலாம்! //
+111111111111
அன்பு எடிட்டர் ஐ லவ் அமெரிக்கன் திரில்லர்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்...
ReplyDeleteLMS போன்ற 'Bonelli special' குண்டு Bookகிற்கே எனது வாக்கு.
+1
Deleteஅமெரிக்கன் த்ரில்லருக்கே ஆதரவு நிறைய இருக்கு.!
ReplyDelete(கென்யாவுக்கு ஒரே நண்பர் பல இடங்களில் +1 போட்டு எண்ணிக்கையை காட்டக்கூடாது ..ஆம்மா ..!):-)
அவ்வப்போது (நல்ல) வோட்டுக்களின் எண்ணிக்கையை update செய்திடுங்களேன் நண்பர்களே !!
Deleteமேல ஒரு ஓட்டுப்பெட்டி வெச்சீங்கன்னா நல்ல ஓட்டும் போட வசதியாயிருக்கும்..
Deleteவெக்கலாமே.......
Deleteஏனோ தெரியவில்லை - ஆனால் Poll option-ஐ blogger .com தூக்கிடுத்தூ !! அதனால் தான் சில காலமாகவே உங்களது "குத்தும் திறனை" நடைமுறைப்படுத்திப் பார்த்திட இயலவில்லை சார் !
Deleteஎடிட்டர் சார்
ReplyDelete500 வது பதிவிற்கு வாழ்த்துகள்.
இதுவே 5000 வது பதிவாக இருந்திருந்தால் 5000 பக்கங்களில் ஒரு குண்டூடூ....புக் கிடைத்திருக்கும்.ஹூம்....
5000 பதிவுகளைப் போடும் நாளில் எங்கேனும் எகிப்திய பாலைவனம் போலான பிரதேசத்தில் மம்மிக்களாய் சுருங்கிப் போய் பெட்டிக்குள் அடைபட்டுக் கிடப்போம் !! ஆனால் அன்றைக்குமே ஞாயிறாகி விட்டால் லூட்டிகளை ஆரம்பித்து விட மாட்டோமா - என்ன ?
Delete// அன்றைக்குமே ஞாயிறாகி விட்டால் லூட்டிகளை ஆரம்பித்து விட மாட்டோமா. //
Deleteஹாஹாஹா உண்மை சார்.
///ஆனால் அன்றைக்குமே ஞாயிறாகி விட்டால் லூட்டிகளை ஆரம்பித்து விட மாட்டோமா - என்ன ?////
Deleteஹா ஹா ஹா!! அப்படியே செஞ்சுடலாம் எடிட்டர் சார்!! :))))))
நீங்க மறக்காம லேப்டாப்பை எடுத்து வச்சிக்கிடுங்க; நாங்க மொபைல் ஃபோனை!!
ராத்திரியானாலே எல்லா பெட்டிகளுக்குள்ளிருந்தும் மினுக் மினுக்னு வெளிச்சம் வந்துக்கிட்டிருக்கும்! :)
1. Kenya
ReplyDelete2. America
What is the name of 5 part American thriller?
ReplyDeleteஎடிட்டர் சார்
ReplyDeleteஅமெரிக்காவோ, ஆப்ரிக்காவோ கதையை பற்றி ஒரு வரி சுருக்கமாக கூறினால் தேர்வு செய்ய எளிதாக இருக்கும்.
Yesssss
Delete+1
Deleteஆமாம் சார்..! கதைகளைப்பற்றி முத்தாய்ப்பாக நாலுவரி சொன்னீங்கன்னா தேர்வு செய்ய எளிதாக இருக்குமே..!!
போனெல்லிக்கு கதைச் சுருக்கங்கள் தேவையிராது !! நமக்குத் தான் தெரியுமே - நாயக / நாயகியரின் மாண்புகளை !!
Deleteஅமெரிக்க மண்ணிலான க்ரைம் த்ரில்லர் - 5 பாகங்கள் கொண்ட நெடும் சாகசம் ! Cold War நிலவி வந்த நாட்களில் அமெரிக்க / ரஷ்ய உளவுத் துறைகளின் லடாயின் நடுவிலான racy episodes !
கென்யா - ஒரு பிரமிக்கச் செய்யும் ஆப்பிரிக்க adventure ; நிறைய ஆக்ஷன் ; நிறைய கற்பனை ; நிறைய fantasy என்ற கலவையோடு ! இதுவுமே 5 பாகங்களிலான நெடும் சாகசம் !
KENYA
Delete// போனெல்லிக்கு கதைச் சுருக்கங்கள் தேவையிராது !! நமக்குத் தான் தெரியுமே - நாயக / நாயகியரின் மாண்புகளை !! //
Delete+1111111111
///அமெரிக்க மண்ணிலான க்ரைம் த்ரில்லர் - 5 பாகங்கள் கொண்ட நெடும் சாகசம் ! Cold War நிலவி வந்த நாட்களில் அமெரிக்க / ரஷ்ய உளவுத் துறைகளின் லடாயின் நடுவிலான racy episodes !///
Deleteஇதுக்கு எத்தனை நல்ல ஓட்டு வேணும்னு சொன்னீங்கன்னா ஏற்பாடு பண்ணீடலாம்..
//கென்யா - ஒரு பிரமிக்கச் செய்யும் ஆப்பிரிக்க adventure ; நிறைய ஆக்ஷன் ; நிறைய கற்பனை ; நிறைய fantasy என்ற கலவையோடு ! இதுவுமே 5 பாகங்களிலான நெடும் சாகசம் !?//சார் அப்ப கென்யாவும் வரட்டுமே
Delete500 வாழ்த்துக்கள் விஜயன் சார்.
ReplyDeleteஅனைத்து நாடுகளுடன் நட்புறவு வேண்டும்
ஆகையால் அமெரிக்கா ஆப்ரிக்கா பெஜியம்
மூன்றுக்கும் தனித்தனியே 500 பக்க
ஸ்பெஷல் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அப்படியே XIII. ஐ பற்றி புதிய செய்திகள்
வெளிவருவதால் அதை விரைவில் எதிர்
பார்க்கிறேன்.LIMITED EDITION ஆக
4 அல்லது 5 ஸ்பின் ஆப் கதைகளை
குண்டு புக்காக வெளியிட்டால் மகிழ்ச்சி.
//LIMITED EDITION ஆக
Delete4 அல்லது 5 ஸ்பின் ஆப் கதைகளை
குண்டு புக்காக வெளியிட்டால் மகிழ்ச்சி.//
+1
KENYA
ReplyDeleteஇருண்டகண்டத்தை நாங்களும் அறியும் வண்ணமும், அந்த வெப்பத்தில் கருகவும், பாலைவனத்தில் பறக்கவும், எகிப்து நாகரிகத்தில் கலக்கவும், நைல் நதியில் குளிக்கவும் சீக்கிரம், இயன்றால் இனி புத்தகங்கள் குறைவாய் இருப்பதால் தீபாவளிக்கு பின்னர்
ReplyDeleteவிட்டால் இப்போவே நைல் நதிக்கரைக்கு சீயக்காயும், சோப்பும் எடுத்துக் கிளம்பி விடுவீர்கள் போலுள்ளதே சாமி ?!!
Deleteசார் குளிக்க அதெல்லாம் தேவயா என்ன
Delete//முதலாவது நமது குண்டு-கதம்ப புக் ஆசைக்கு நியாயம் செய்திடக் கூடிய விதத்தில் - "THE BEST OF BONELLI" - என்றதொரு 550+ பக்க black & white ஆல்பம் - 5 அட்டகாசக் கதைகளோடு//
ReplyDelete+100
//அமெரிக்க களத்தை நோக்கிப் படையெடுப்போமா - அந்த மண்ணிலான க்ரைம் த்ரில்லர்களெல்லாம் சுகம் தானாவென்று கண்டறிய ? 5 பாகங்கள் கொண்டதொரு வண்ண த்ரில்லர் maybe ? What say ?//
ReplyDelete+100
//"ஆங்....ஒன் மினிட் ப்ளீஸ் !! ம்ம்... கென்யா மேலே பறந்து பார்க்கலாமா ?" சுகப்படுமென்று தோணுதோ ? //
ReplyDelete+1
2 x 100
Delete1 x 1
:-)
இது என்ன கணக்கு!??
Deleteபோனல்லி,அமரிக்கா,கென்யா
Deleteமூனுமேமா
Deleteஅப்படியே இரத்தப்படலம் ஏர்லி பேர்ட்
ReplyDeleteபேட்ஜ் எப்ப வரும்னு சொன்னீங்கன்னா.?
ஐ யாம் ஹாப்பி அண்ணாச்சி.
இந்த மாத பார்ஸலில் ! பேக் செய்தாச்சு !
Delete// இந்த மாத பார்ஸலில் ! பேக் செய்தாச்சு ! //
Deleteஅடடே அப்ப பார்சல் சீக்கிரமா கிளம்ப போகுதுன்னு சொல்லுங்க.
ஐயா
Deleteசார் அப்டியே பார்சல நாளைக்கே
Deleteகென்யா
ReplyDeleteடடா பன்னு போச்சே
ReplyDeleteடியர் விஜயன்சார், காலங்கள்தான் எவ்வளவு வேகமாக ஓடுகின்றன.
ReplyDeleteதங்களின் முதல் பதிவிலிருந்து கூட இருக்கிறேன்..
தற்போது 500 வது பதிவு...
வாழ்த்துகள் சார்...
விரைவிலேயே 1000மாவது பதிவுகள் தொட வாழ்த்துகிறேன்....
நம் காமிக்ஸ் மீள் பதிவிற்கு உதவிய கிங்விஷ்வா அன்ட் கோ விற்கும் வாழ்த்துகள்...
அவருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அன்று அவர் செய்த உதவி மறக்க இயலாதது...
ஆரம்ப கால ப்ளாக்கை கலக்கிய என் மனதில் நின்ற சில நண்பர்கள்:
கனவுகளின் காதலன்
கார்த்திக்
BN USA
புனித சாத்தான்
புத்தகபிரியன்
எப்போதுமே புரியாமல் தனக்கு மட்டுமே புரியும்படி பத்தி பத்தியாக எழுதும் கோவைகாரர்...
இவர்களில் கோவைகாரரை தவிர மீதி நபர்களை காணவில்லை...
அவர்களும் இந்த 500 வது கொண்டாட்டத்தில் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும்..
கூடவே ஒலக காமிக்ஸ் ரசிகரும்
கிங்கும்...
செய்வார்களா....
அட...பத்தி பத்தியாய் எழுதுவதெல்லாம் நம்ம கோவைக்காருக்குமே புரியுமென்றா நினைக்கிறீர்கள் சார் ? எஞ்சினை ஸ்டார்ட் பண்ணும் வரை தான் அவரது கண்ட்ரோலில் ; அப்புறம் தெறிப்பனவெல்லாமே auto pilot !!
Deleteசார் அப்ப என் பைலட் கனவு நெனவாயிருச்சா....எனக்கு புரியுது நண்பரே
Delete// THE BEST OF BONELLI" - என்றதொரு 550+ பக்க black & white ஆல்பம் - 5 அட்டகாசக் கதைகளோடு !! //
ReplyDeleteஎனது ஓட்டு இதற்கே சார்,
காரணங்கள்,பழகிய களம்,பிடித்த கதைகளாக இருக்கும் என்ற ஒரு எண்ணம்,black & white ல் ஒரு குண்டு புக் பார்க்க ஆசை.
500 வது பதிவுக்கு எமது வாழ்த்துகள் சார்,விரைவில் 1000 வது பதிவை எட்டிப்பிடிக்க வாழ்த்துகள்,எங்களது வாழ்வை சுவாரஸ்யமான ஒரு பகுதியாக மாற்றியதில் உங்களுக்கும் உங்கள் பதிவுகளுக்கும் முக்கிய இடமுண்டு சார்.
ReplyDelete//எங்களது வாழ்வை சுவாரஸ்யமான ஒரு பகுதியாக மாற்றியதில் உங்களுக்கும் உங்கள் பதிவுகளுக்கும் முக்கிய இடமுண்டு சார்.//well said
Deleteகாமிக்ஸ்...
Deleteஅப்புறமாய் அது சார்ந்த பதிவுகள்...
Maybe அதற்கும் அப்புறமாய் நான் !!
இந்த வரிசை தான் சரியானது சார் !
// காமிக்ஸ்...
Deleteஅப்புறமாய் அது சார்ந்த பதிவுகள்...
Maybe அதற்கும் அப்புறமாய் நான் !!
இந்த வரிசை தான் சரியானது சார் ! //
காமிக்ஸுக்கு அடித்தளமே நீங்கள்தானே சார்.
வாழ்த்துக்கள் சார் 500 க்கு இது ஒன்றும் சாதாரணம் இல்லை சிறப்பான வெளியீடாக இருக்கவேண்டும்.வான்ஸ் நினைவாக ஒரு ஸ்பெசல் பென்டிங்ல இருக்கு முடிஞ்சா அத திணிப்போமே ரிங்கோ ப்ரூஸ்ஹாக்கர் இன்னும் பல......
ReplyDeleteஎடிட்டர் அவர்களுக்கு,
ReplyDeleteநமக்கே நமக்காய் எனில் இத்தாலிக்கு என் ஓட்டு.
சென்னை போன்ற புத்தக விழாக்களுக்கும் எனில் அமெரிக்க மோகம் உபயோகப்படலாம்...
கென்யா.... ?!?!
ஏதோ பார்த்து பண்ணுங்கள்.
எதுவாயினும் நம் பந்திக்கே first priority !
Delete// எதுவாயினும் நம் பந்திக்கே first priority ! //
Deleteஅப்புறம் என்ன சார்,போட்டுத் தாக்குங்க.
// ஏற்கனவே 3 மில்லியன் ஹிட்ஸ் என்ற moment-ஐ சிலாகிக்க 2019-ன் அட்டவணையில், அதற்கென ஒரு ஸ்பெஷல் இதழ் திட்டமிட்டுள்ளோம் ! //
ReplyDeleteஹை,சூப்பரே.....
///கென்யா - ஒரு பிரமிக்கச் செய்யும் ஆப்பிரிக்க adventure ; நிறைய ஆக்ஷன் ; நிறைய கற்பனை ; நிறைய fantasy என்ற கலவையோடு ! இதுவுமே 5 பாகங்களிலான நெடும் சாகசம் !///
ReplyDeleteநண்பா்களே, கொஞ்சம் மனசு வையுங்க!
நாம் இதுவரை பாா்த்தேயிராத ஆப்பிாிக்க கண்டத்திற்குள் நுழைந்து பாா்க்க இது அறிய வாய்ப்பாக இருக்கும்!
Adventure, Action, Fantasy ன்னு அமா்களமாக இருக்கும் போலிருக்கு!