Powered By Blogger

Thursday, September 27, 2018

மீண்டுமொரு "4 புக் மாதம்" !

நண்பர்களே,

வணக்கம். ஆப்பிரிக்காவா ? அமெரிக்காவா ? துபாயா ?  உடுமலைப்பேட்டையா ? என்ற விவாதம் இங்கே செம பிசியாக ஓடிக்கொண்டிருந்த வேளையில் - நமது அலுவலகமுமே  பிசியோ பிசி !! ஒரு பிரேக்குக்குப் பின்பாய் மீண்டுமொரு "4 புக் மாதம்" ; அதிலும் ஒன்று செம புஷ்டியான பயில்வான் எனும் போது பைண்டிங் இறுதிக் கட்டப்பணிகள் ; பேக்கிங் ; டெஸ்பாட்ச் என்று பர பரப்பிற்குப் பஞ்சமே லேது !! பற்றாக்குறைக்கு 2019 அட்டவணைக்கான வேலைகளிலும் நமது டிசைனிங் டீம் பிசியாக வேண்டியிருப்பதால், ஆபீசுக்குள் நுழைந்தாலே ஆளாளுக்கு எதிலாவது மும்முரமாய் இருக்கும் காட்சிகள் தான் !! And இன்றைக்கு அதே ஜோரில் உங்களது கூரியர்கள் சகலத்தையும் பேக் பண்ணி அனுப்பியும் விட்டார்கள் !! So நாளைய காலையில் நமது 'தல' யின் 70 -வது பிறந்தநாளை  கொஞ்சம் அட்வான்சாகவே நாம் கொண்டாடிடலாம் !! 

இத்தாலியில் நிச்சயமாய் ஏதேனும் blockbuster இதழாகத் திட்டமிட்டிருப்பார்கள் என்பது நிச்சயம் !! அதனை இப்போதுவரைக்கும் under wraps வைத்திருக்கிறார்கள் எனும் போது - நாமுமே அந்த பாணியை இந்த ஒரு தபா மாத்திரமே கடைபிடித்துப் பார்ப்போமே என்று தோன்றியது !! புலியைப் பார்த்து புளி கோடு போட்டுக் கொண்ட கதையாய் இருந்தாலுமே - இக்ளியூண்டு சஸ்பென்ஸ் நல்லது தானே ? So டப்பிகளை  உடைத்து இதழைக் கையிலேந்திப் பார்க்கவிருக்கும் நேரம் வரையிலாவது அட்டைப்படத்தை உங்கள் கண்களில் காட்டாது விடலாமே என்று நினைத்தேன் ! ஆகையால் இப்போதைக்கு கேரட் மீசைக்காரரின் கார்ட்டூன் இதழின் அட்டைப்பட தரிசனம் மட்டுமே !!

TEX - டைனமைட் ஸ்பெஷலின் அட்டைப்படமுமே ஒரு இத்தாலியத் தயாரிப்பு தான் !! நமக்கென பிரேத்யேகமாய் இத்தாலிய ஓவியர் போட்டுத் தந்திருக்கும் இந்த டிசைன் வழக்கமான - நமது  run of the mill பாணியில் இராது என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக் கொள்கிறேன் ! So பயங்கரமான கம்பு சுத்தும் ஆக்ஷன் ராப்பரில் இராது  என்பது மட்டுமே இப்போதைக்கு preview தகவல் !!  ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்பதால் - "மிச்சத்தை வெள்ளித்திரையில் காண்க" என்று சொல்வது தானே பொருத்தம் ?!

விடியும் வரைக் காத்திருங்கள் !! See you around folks !! Bye now !



305 comments:

  1. Replies
    1. பார்சலை கைப்பற்றியாச்

      Delete
  2. Wow , first time in life , i am second

    ReplyDelete
  3. Replies
    1. அலோ கவர்ல அனுப்பி இருந்தாலும் ஜிலேபியை சாப்பிட்டு இருக்கலாம். இப்படி பிச்சி போட்டு வேஸ்ட் ஆகிட்டு!கர்ர்ர்ர்ர்ர்...

      Delete
  4. ஓவர் சஸ்பென்ஸ் உடம்புக்கு ஆகாதுன்னு பெரயவா சொல்லுவா..

    ReplyDelete
  5. மனமெல்லாம் சந்தோஷம் நாளைய தினத்தை நோக்கி

    ReplyDelete
  6. இந்த தடவை லேட்டா தான் புக்க பார்க்க முடியும்...வெளியூரிவ் இருப்பதால்..

    ReplyDelete
  7. புளூ பேர்டோ யல்லோ பேர்டு வேற வருதாம்லா...

    ReplyDelete
  8. 2019 அட்டவணையும் நாளை வருகிறதா?

    ReplyDelete
    Replies
    1. டபுள் டிலைட்டா இருக்கும்தான்!

      அநேகமாக ஞாயிறு, தலை பிறந்தநாள் அன்று வரக்கூடும்!

      Delete
    2. தீபாவளி அன்று வரட்டுமே?

      Delete
    3. தீபாவளி நவம்பர்6ல், அது ரொம்பவும் தாமதம் ஆகிடும்... சந்தா புக்கிங்கிற்கு தேவையான காலம் வேணுமே நண்பா!

      3மாதங்கள் அவசியம் தேவை!

      Delete
  9. அருமையான வரவுகள்

    ReplyDelete
  10. நானும் வந்துட்டேன்.

    ReplyDelete
  11. சார் கேரட்டாரின் அட்டை அட்டகாசம், டெக்ச நான்தான் மொத பிடிக்க வாய்ப்பளி முருகா

    ReplyDelete
  12. விஜயன் சார்,

    ஐ ஜாலி நாலு நாலு புத்தகங்கள். அதில் ஒன்று குண்டு...

    மதியில்லா மந்திரி இந்த வருடத்தில் எப்போது வருகிறார்?

    ReplyDelete
  13. S.T கூரியர்காரர்கள் மனது வைத்தால் எனக்கு "நாளை நமதே".
    போன மாசம்" இன்று போய் நாளை வா" ன்னு அலைய விட்டார்கள்.

    ReplyDelete
  14. மொத வெடிய நான்தான் வெடிச்சு எல்லாத்தயும் எழுப்புவேன்

    ReplyDelete
    Replies
    1. உனக்கு யாரும் வெடி வச்சிறாமல😁

      Delete
  15. 🎈🎊🎶🎵🎶🎆🎵🎇🎈🎶🎵🎂🎂🎂🎂🎂🎂🎂அட்வான்ஸ்ட் ஹேப்பி பர்த்டே டூ தல எ டெக்ஸ் எ இரவுகழுகு எ டெக்ஸ் வில்லர்🎈🎊🎶🎵🎇🎉🎆🎈🎈🎈🎈

    ReplyDelete
  16. விஜயன் சார், மிஸ்டர் X டீசர் பக்கங்கள் நன்றாக இயல்பான நகைச்சுவையுடன் உள்ளது, இது இந்த கதையை படிக்கும் ஆர்வத்தை கிளப்பி உள்ளது.

    ReplyDelete
  17. அடுத்த வருட ஸ்பெஷல் என்னன்ன..
    3 மில்லியன் ஸ்பெஷல்
    3.5 மில்லியன் ஸ்பெஷல்
    500 பதிவு ஸ்பெஷல்
    ஜம்போ
    டெக்ஸ் வில்லர் 71 வருட ஸ்பெஷல்..
    2019 வருட ஸ்பெஷல்
    2019 பொங்கல் மலர்
    2019 கோடை மலர்
    2019 தீபாவளி மலர்

    இது கூட ஆசிரியர் ஸ்பெஷல்,துணை ஆசிரியர் ஸ்பெஷல்,இணை ஆசிரியர் ஸ்பெஷல்,தலைமை ஆசிரியர் ஸ்பெஷல், வகுப்பாசிரியர் ஸ்பெஷல் மற்றும் எலெக்ஷன் ஸ்பெஷல்
    இதுக்கு மேலே நீங்களே சேர்த்துக்கோங்க சார்...

    ReplyDelete
    Replies

    1. அமெரிக்க த்ரில்லர் கோடைமலராக வரலாம்.

      கூடவே "லயன் 350"ஸ்பெசல் சேர்த்து கொள்ளுங்கள் கிட்.

      Delete
  18. நான்
    நவ்
    கொரியர்
    ஆபீஸில்
    வெய்டிங்

    துண்டு போட்டாச்சு .. 😉😉😉

    ReplyDelete
    Replies
    1. விடிய விடிய அங்கிட்டு என்ன பண்ணமுடியும் தம்பி சம்பத்!
      டென்சன் இன்னும் தான் சாஸ்தி ஆவும். கோழி கூப்பிடு போங்க!
      தம்பி குமார்க்கும் உங்களுக்கும் ஒரே கொரியர் ஆபீஸா???

      Delete
    2. எஸ் ஸூ
      அவர்க்கு முன்னாடி நாம ட்ரை பண்ணி பார்ப்போம்

      பட் அது நடக்காது

      குமாரு பின் வாசல் வழியா உள்ள போய்ட்டாருன்னா சிரமம்தான் 😉

      Delete
    3. அப்ப நீங்க ஓட்டை பிரித்து இறங்கி விடுங்கள் :-)

      Delete
  19. விஜயன் சார், இந்த மாதம் நான்கு புத்தகங்கள் என்றால் நான்காவது புத்தகம் ஏது?

    டெக்ஸ்
    கிளிப்டன்
    ஜானி
    ????

    ReplyDelete
    Replies
    1. ராபின் கதையின் அட்டைப் படம் மற்றும் டீசர் பக்கங்கள் இங்கு கண்ணில் காண்பிக்க பட்டதா நண்பர்களே?

      Delete
  20. ///டப்பிகளை உடைத்து இதழைக் கையிலேந்திப் பார்க்கவிருக்கும் நேரம் வரையிலாவது அட்டைப்படத்தை உங்கள் கண்களில் காட்டாது விடலாமே என்று நினைத்தேன்///-----ஙே.ஙே...ஙே....

    அட்டை படத்தை கண்டு ஆனந்த கூச்சல் போட ஓடோடி வந்தா.....!!!ஹூம்.

    சஸ்பென்ஸ் நல்லது...சரிதான்!ஆனா?

    இது கொஞ்சம் வித்தியாசமான பரபரப்பு தான்...!!!

    இன்று தூக்கம் காலி...காலியோ காலி!!!

    2004 மே29இரவு 11மணிக்கு மேல் என் வீட்டுக்காரிக்கு பிரசவ வலி வந்து ஆஸ்பத்திரிக்கு போய், விடிய விடிய பெஞ்சில் உட்கார்ந்து இருந்தேன்.


    அடுத்த நாள் காலை 8மணிக்கு சுக பிரசவம். ஆண் குழந்தை! அன்று தூங்காது இருந்த அயர்ச்சி குழந்தையை பார்த்து ஓடோடி விட்டது...

    இன்று அதைவிட இன்னும் இரண்டு மணிநேரம் சேர்த்து காத்து இருக்கனும்!

    காத்திருப்பும் கூட சில வேளைகளில் சுகமான அவஸ்தையே!

    ReplyDelete
  21. விடியும் முன்னரே திருப்பூர் குமார் அண்ணன் அட்டைப்படத்தை கண்ணில் காட்டுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
    இம்முறை சம்பத் அண்ணன் முந்திக் கொள்வாரா? எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.

    ReplyDelete
  22. வணக்கம் காமிக்ஸ் நண்பர்களே..

    ReplyDelete
  23. பிறந்தநாள் வாழ்த்துகள் டெக்ஸ் வில்லர்.
    ஆமா.... இளவரசிக்கு எப்பங்க பிறந்தநாள் வருது? ஒரு குண்டு புக் கேட்கலாம்னு........?

    ReplyDelete
    Replies
    1. முதலில் கடந்த மாதம் வந்த இளவரசியின் கதைக்கு விமர்சனம் போடுங்கள் பாபு. அதன் பிறகு இளவரசிக்கு ஒரு குண்டு புத்தகம் கேட்கலாம்.

      Delete
    2. 13-05-1963 மாடஸ்தி பிறந்தநாள்...!!!!

      ஜஸ்ட் 55வருடம் தான் ஆகுது...!!!

      Delete
    3. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் எங்கள் இளவரசி

      Delete
    4. ஐ மே மாசம்
      கோடை மலர்?!?!

      Delete
  24. நண்பர்களே 2019 அட்டவணையும் வருகிறதா?

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக இருக்காது என்பது எனது அனுமானம்.

      கடந்த வருடங்களில் ஆசிரியர் எப்போதும் இங்கு முதலில் அட்டவணையை வெளியிட்ட பின்னரே அவைகளை நமக்கு அனுப்பி இருக்கிறார். எனவே அட்டவணை நாளைக்கு வருவது சந்தேகம்.

      Delete
  25. இத்தனூண்டு பதிவா, so sad.

    ReplyDelete
  26. Replies
    1. உங்களை பற்றி சொல்லுங்க நண்பரே!!!

      டைம் கொஞ்சம் ஓடும்...!!!!

      Delete
    2. பாவம். ஒருத்தர் தூங்க முடியாம அல்லாடிகிட்டு இருக்கார் போல.

      Delete
    3. அவரால தூங்க மட்டுமா முடியல நான்-வெஞ் கூட சாப்பிட முடியாது:-)

      நாளைக்கு இந்த நான்கு புத்தகங்கள் மாதத்தை சிக்கன் பிரியாணி உடன் கொண்டாடலாம் என இருக்கிறேன். 🤔🤔😄

      Delete
    4. டென்சன்... டென்சன்...டென்சனோ டென்சன்....!!!

      ரோட்டா கேப்ஸ் தான் ஒரேவழி!

      Delete
    5. ரோட்டா கேப்ஸ கண்டு பிடித்தது யாரு இத சொல்லுங்க முதலில்?

      Delete
    6. // பாவம். ஒருத்தர் தூங்க முடியாம அல்லாடிகிட்டு இருக்கார் போல.///


      😃😃😃😃😃😃

      Delete
    7. // பாவம். ஒருத்தர் தூங்க முடியாம அல்லாடிகிட்டு இருக்கார் போல. //

      இவரு நம்பல நிம்மதியாக தூங்கவிட்டால் போதும் சாமி :-)

      Delete
    8. @சேலம் Tex விஜயராகவன்

      I'M also waiting for thala tex.

      Short to tell about me from Tirupur sir

      Tension Veenam sir just oru naal poruthukonga :)

      Delete
  27. கடந்த சில பதிவுகளுக்கு முன் காமிக்ஸ் பட்ஜெட் பற்றி பேசிய பிறகு அடுத்த வருடம் மாதம் எத்தனை புத்தகங்கள் வரும் என்று தெரியாது. எனக்கு மாதம் நான்கு புத்தகங்கள் வேண்டும். இது போன்று வரும் மாதங்களிலோ அல்லது வரும் வருடங்களிலோ நான்கு புத்தகங்கள் கிடைக்குமா என்ற கேள்விக்குறியே.


    எனவே நாளை கிடைக்க இருக்கும் நான்கு புத்தகங்கள் கண்டிப்பாக கொண்டாட வேண்டியது கொண்டாடப்பட வேண்டிய நாள் என்னைப் பொறுத்தவரை.

    என்னைப் பொறுத்தவரை நமது மறுவரவுதான் காமிக்ஸின் பொற்காலம். இந்த பொற்காலம் வரும் நாட்களில் தொடரும் என்ற நம்பிக்கையுடன் தூங்கச் செல்கிறேன்.

    ReplyDelete
  28. இந்த சமயத்துல தான் பழய கதையோட விமர்சனத்தைப் போட்டுட்டு ஓடிடனும். நேற்றைய 40 நிமிட வாசிப்பில் முடிந்த கதை மிஸ். அட்டகாசம். செம சிரிப்பு. இன்னிக்கு என் மகளுக்கு படிச்சு காட்டப் போறேன். 10/10. மொழி பெயர்பபு பலே.

    ReplyDelete
  29. கிளிப்டன் முன்பு படித்தாக ஞாபகம்

    ReplyDelete
    Replies
    1. இன்னாது mgr செத்துட்டாரா?

      Delete
    2. என்னாது , இந்தியாவுக்கு சுதந்திரம் கிடுச்சுருச்சா ! அவ்வ்

      Delete
    3. இதோ வந்துட்டேன் , சிங்கம் ரிட்டரன்ஸ்

      Delete
  30. விடியும் வரை காத்திருப்போம். நாளை நமதே. 70 டெக்ஸ் facebookல் அறிமுக படுத்தப்பட்டுள்ளது. இத்தாலியில் கதை புத்தகமாக அல்ல இதுவரை வரை வந்துள்ள வந்த கதைககளை பற்றிய கட்டுரை தொகுப்பாக.

    ReplyDelete
  31. இம்முறை கூடுதலாக "வேலை" பார்த்துள்ளார் எடிட்டர் சார்.

    ஆன் லைன் லிஸ்டிங் போட்டா அதில் அட்டை படத்தை போடனும்னு அதையும் இதுரை லிஸ்டிங்போடல!

    என்னா கொடுமை சார் இது..!!!

    ReplyDelete
    Replies
    1. Mudiyala editor sir not even showing us the tex face

      Delete
  32. சிரஞ்சீவி டெக்ஸ்......

    நம்ம பூராணங்கள்ல சொல்லிருப்பாங்க.....

    சிரஞ்சீவிகள்.......

    அஸ்வத்தாமன்

    ஆஞ்சநேயர்

    ......
    நம்ம டெக்ஸும் அதே....


    600 சொச்சம் புக்குல கதைகள்ல வந்துட்டாலும் அதே மாதிரி சிரஞ்சீவி....



    நம்ம கொள்ளும்பேரங்க படிக்கிறப்பவும் இதே மாதிரி இருப்பாரு

    ReplyDelete
    Replies
    1. ஆஞ்சநேயர் சரி..

      அஸ்வத்தாமன் ??

      தூக்கத்தில் இருந்த உப பாண்டவர்களை

      கொன்றவன்..

      உத்தரையின் வயிற்றில் இருந்த அபிமன்யுவின் கருவை நோக்கி பிரம்மாஸ்திரத்தை தொடுத்தவன்..

      அவனது மரணமில்லா வாழ்வு வரம் அல்ல..கிருஷ்ணரின் சாபம்.

      பரசுராமரை வேண்டுமானால் சேர்த்து கொள்ளலாம்...

      Delete
    2. நம்ம சீனியா் எப்பவுமே என்ன சொல்லுவாா்னா, புது புக் வா்ரச்சே சஞ்சீவி, சிரஞ்சீவியெல்லாம் பேசக் கூடாது!

      Delete
    3. சிரஞ்சீவி அப்படின்னா தலை வெட்டுபவர் அதாவது சிரம் சீவி அப்படித்தானே. இந்த பேரு எப்படி டெக்ஸுக்கு பொருந்தும்.

      மல்லாக்க படுத்து யோசிக்கும் படங்கள் 10

      Delete
    4. //நம்ம சீனியா் எப்பவுமே என்ன சொல்லுவாா்னா, புது புக் வா்ரச்சே சஞ்சீவி, சிரஞ்சீவியெல்லாம் பேசக் கூடாது!//

      சொல்ற பேச்சை கேக்காட்டாதான் ஜூனியர்...:)

      Delete
    5. //சிரஞ்சீவி அப்படின்னா தலை வெட்டுபவர் அதாவது சிரம் சீவி அப்படித்தானே. இந்த பேரு எப்படி டெக்ஸுக்கு பொருந்தும்.//

      சிரம் சீவி= தலை சீவி=சீப்பு= சீஃப்= நவஹோ சீஃப்= டெக்ஸ்.

      புக்ஸ் வர்றவரைக்கும் பொழுதுபோக தாவல..ஹி..ஹி...

      Delete
    6. ///சிரம் சீவி= தலை சீவி=சீப்பு= சீஃப்= நவஹோ சீஃப்= டெக்ஸ். ///---அடேயப்பா... சீரம்சீவிக்கி இப்படி ஒரு விளக்கத்தை இனிமே தொல்காப்பியரால கூட தரமுடியாது!

      இதை பொருளர் ஜியின் தமிழ் அய்யா பார்கோனும்...அந்த அய்யாவின் ரியாக்சனை நாம பார்க்கோனும்.!!!

      Delete
  33. அனைத்து டெக்ஸ் ரசிகா்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
    🍸🍷🍹🍺🍻🍹🍹🍷🍸🍺🍻

    ReplyDelete
  34. Replies
    1. இன்னம்மும் 3 மணி நேரம்தான் செந்தில் , பொழுது விடிஞ்சுரும் , நானும் தூங்காமத்தான் முயுச்சுகிட்டே கீறேன் .பட்சே நேரம்தான் போகவே மாட்டேங்குது ,

      Delete
    2. நாம எவ்வளவு தான் முழிச்சு இருந்தாலும் நாளைக்கு வந்து சேந்தாதான் உண்டு.நாம வாழுற இடத்தோட வரலாறு புவியியல் அப்படி :(

      Delete
  35. வழக்கம் போல புத்தகங்கள் இன்று இரவு ஆபிஸ் சென்று வந்த பின்னர்தான் கைகளில் கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டு ஆபிஸுக்கு வேலை பார்க்க கிளம்பி விடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கடவுள் இருக்காரு!

      சிக்கன் வருவல் படமா அனுப்பறீங்க!

      ஹா....ஹா... கொரியர் ஆபீஸ் கிளம்பிட்டு இருக்கேன்.

      4புக்கில் இருந்தும் 1அவர்க்கு ஒரு போட்டோ போட்டு வெறுப்பு ஏத்துறன்!!!!

      Delete
    2. உங்களுக்கு பொட்டி வருவியா? இப்பதான் கொரியர் மெய்ன் சென்ட்ரலில் இருந்து புத்தகத்துடன் திரும்பி வந்தேன்.

      ஒரு வார்த்தையில் சொன்னால் வித்தியாசமான அட்டைப் படம் மனதை அள்ளுது.

      Delete
    3. கடவுள் எல்லாம் சாப்பிடலாம் என்று சொல்லி இருக்கிறார்:-)

      Delete
    4. வாட்ஸ்அப் இன்பாக்ஸ் பாருங்க

      Delete
    5. சரி பார்த்து விட்டேன் ஜி. அங்கேயும் இங்கேயும் கடவுள் ஏன் எல்லா இடங்களிலும் இருக்கிறார்.

      எனக்கு இந்த டெக்ஸ் அட்டைப்படத்தில் நான் மிகவும் ரசித்து கண்கள்.

      Delete
    6. இத்தாலி ரசிகர் டெக்ஸ் படத்தை செம ரசனையுடன் வரைந்து உள்ளார்.

      Delete
  36. ஆத்தா மகமாயி... கொரியர் பையனுக்கு நல்ல புத்தியக் கொடுத்து நீதான் சட்டுபுட்டுனு அனுப்பி வைக்கணும் தாயி...
    777 பக்கங்களோட தல தடியா வர்ற நேரமாப் பாத்து பழிவாங்கிடாத தாயி... எதுவானாலும் பேசி பைசல் பண்ணிக்கிடலாம்.. வேணுமின்னா நிலுவையிலிருக்கும் அசல் கூழுக்கு வட்டிக் கூழ் வேணும்னாலும் ஊத்திப்புடறேன்...

    சரிதானே தாயி?

    ReplyDelete
    Replies
    1. அசலுக்கு வட்டி,வட்டிக்கு வட்டி,அந்த வட்டிக்கு மீட்டர் வட்டின்னு இதுவரைக்கும் ஆத்தாவுக்கு 5 கண்டெயினர் அளவுக்கு ஆத்தாவுக்கு கூழ் பெண்டிங்காமே???
      பிராது வந்திருக்கு.

      Delete
    2. காலையில் தல தரிசனம் பார்த்த திருப்தியில் நம்ம பார்சலை கைப்பற்ற கொரியர் ஆபீஸ்போனாஆஆஆஆ....

      இந்தா ஈ.வி. கூல் ஊற்றாம போனதுக்கு எனக்கு தண்டனை கொடுத்து போட்டது ஆத்தா!!!!

      நேற்று கொரியர் ஆபீஸ் ஸ்டாஃப் சமயபுரம் போனவர் காலையில் தான் வந்துள்ளார்... பார்சல் மூட்டையை வாங்கி உள்ளே வைத்து கண்ணாடி கதவை லாக் பண்ணிட்டு வீட்டுக்கு போயிட்டார். குளிச்சி,ரெடியாகி வருவாராம்.

      வெயிட்டிங்,
      வெயிட்டிங்,
      ........
      ........
      ஸ்டீல் வெயிட்டிங்...

      ஆத்தா வேண்டுதல்லாம் உடனே செய்ங்கப்பா!!!

      கூட இருக்கும் எனக்கே இப்படி சோதனை காட்டுதுனா, வேண்டுதலை தள்ளி போட்டு வருபவருக்கு....!!!

      Delete
  37. வெற்றி... வெற்றி... நம்ம அன்புத்தம்பி திருப்பூர் குமார் , கொரியரை கைப்பற்றி தல தரிசனம் காட்டிட்டார்... தேங்யூ குமார்...💐💐💐

    ReplyDelete
    Replies
    1. புயலுக்கொரு பிரளயம்-507பக்க கலர்

      தெற்கே ஒரு தங்கத் தேட்டை-260பக்க கறுப்பு வெள்ளை சாகசம்.

      Delete
    2. அட்டைபடம் அள்ளுதூஊஊஊஊஊஊஊஊஊ....

      கொரியர் ஆபீஸ் ஜூஊஊஊஊட்...

      Delete
  38. யார்க்கும் கெடக்கலியமா....மறுக்கா போவோம்

    ReplyDelete
  39. எனது பார்சலில் அடுத்த வருட அட்டவணை இல்லை. உங்கள் யாருக்காவது வந்து இருக்கா?

    அப்புறம் டப்பாக்குள் சுவீட் உடன் டெக்ஸ் பிறந்தநாள் கொண்டாட சொல்லி இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அட்டவணை கிடையாது 5ஸ்டார் சாக்லேட்டுடன்

      Delete
    2. //5ஸ்டார் சாக்லேட்டுடன்//

      நிஜமாலும் குழந்தைங்கன்னு எடிட்டர் நினைச்சுட்டாரா?

      ஒரு 30 மிலி TEQUILA அனுப்பியிருக்கப்படாது? :D

      Delete
    3. எனக்கு dairy milk சாக்லேட் வந்தது.

      பள்ளியில் இருந்து குழந்தைகள் வந்த உடன் அவர்களுக்கு கொடுக்க பத்திறமாக வைத்துள்ளேன்.

      செல்வம் அபிராமி @ சாக்லேட் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு.

      Delete
    4. ///
      ஒரு 30 மிலி TEQUILA அனுப்பியிருக்கப்படாது? :D///

      எனக்கு bar-one வந்திருக்கிறது.! ஏதாவது சூசகமான செய்தியா இருக்குமோ ..?!! -:)

      Delete
    5. ///எனக்கு bar-one வந்திருக்கிறது.! ஏதாவது சூசகமான செய்தியா இருக்குமோ ..?!! ///

      ஙே!! அப்படீன்னா எனக்கு Milky-barல்ல வந்திருக்கு?!!

      Delete
    6. பூனை பால் குடிக்கும் னு சரியாத்தானே அனுப்பி இருக்காங்க!!!

      Delete
    7. எனக்கு மில்கி பார் சாக்லேட்

      Delete
    8. "பூனை பால் குடிக்கும் னு சரியாத்தானே அனுப்பி இருக்காங்க!!!"
      இந்த பூனை பீரே குடிக்கும்

      Delete
  40. சும்மா இப சைசுல பார்சல்....திரிய கொளுத்திட்டமுள்ள...ஸ்டேண்டுக்கு போயி வெடிகுகும் அழக வேடிக்கை காட்றேன்

    ReplyDelete
  41. பார்சலை கைப்பற்றியாச்சே ... 😃😃😍😍

    ReplyDelete
  42. கூரியர் வேன் இன்னும் வரவில்லை.
    சை..எனக்கு S.T. கூரியரே புடிக்காது.

    ReplyDelete
  43. பழையது:
    ---------
    1. ஒரு திகில் பயணம் - கமாண்டர் ஜார்ஜ் தன் நண்பனின் கல்யாணத்திற்கு செல்ல, மணப்பெண்ணை கடத்தி ஆள்மாறாட்டம் செய்யும் ஒரு கும்பலிடம் மாட்டி, அதிர்ஷ்டத்தின் துணையால் தப்பிக்கிறார்.

    நண்பனின் கல்யாணம் சுபமாக முடிகிறது
    Plus அடிமை நகரம் - மாண்ட்ரேக் மற்றும் லொதார் வசியம் பண்ண பட்டு அடிமைகளாக மாறி போக, நார்தா மற்றும் கர்மா அவர்களை காப்பற்றுகிறார்கள்

    2. நிழல் எது ? நிஜம் எது? நாரதாவை கண்ணாடிக்கு அப்பாலுள்ள தலைகீழ் தேசத்துக்கு கடத்தி செல்கிறார்கள் கெட்டவர்களாக க்ரெட்நாம், தார்னா,ரோதல் (தலைகீழ் பெயர்கள்). இவர்களின் உலகை ஆகரிமிப்பு

    திட்டத்தை நார்தா முறியடிக்கிறாள். இதில் மாண்ட்ராக்குக்கு ஒரு வேலையும் இல்லை,
    பிளஸ் ராட்சச ஐந்து - சட்டி தலையன் ஆர்ச்சி ஒரு ராட்சச ஐந்துவை பிடித்து அந்த அதிவாசிகளுக்கு உதவி செய்கிறான். 3 பக்க சாகசம்

    புதியது:
    -------

    1. காவியில் ஒரு ஆவி - ஜில் ஜோர்டன் ஒரு கிராமத்தின் மடாலயத்தில் நடமாடும் பேய் உண்மையா பொய்யா என்று துப்பறியும் கதை. கதை சுமார் தான்.
    2. நடமாடும் நரகம் - அட அட அடா ... என்னவொரு ஆக்ஷன், என்ன ஒரு த்ரில். யாரோ இது நல்ல இல்லை என்று சொன்னதாக ஞாபகம். எப்படி அப்படி சொல்லி இருப்பர் என்று புரியவில்லை. செம விறு விருப்பு,

    ஆரம்பம் முதல் கடைசி வரை அதிரடி. இந்த முறை டெக்ஸ்ஏ நிர்கதியில் நிற்கற நிலைமை. அதிர்ஷ்ட தெய்வம் தான் டெக்ஸையும் கார்சனையும் காப்பாத்தியது.

    ReplyDelete
  44. சார் ஒரு சந்தேகம் நாம் ஏன் எப்பொழுதும் அட்டையில் paint அடித்து ஊற்றியது போலவே செய்கிறோம். பல முறை நீங்கள் ஒரிஜினல் ஷார் செய்யும் போதும் subtle ஆக ஒரு கம்பீரத்துடன் இருப்பது போல தோன்றும் நாம் ஏன் அது போல ஒரு முறை செய்து பார்க்க கூடாது.. இந்த புக் மார்க் கூட பச்சை கலர் பேண்ட் போட்டு கார்சன் நன்றாகவே இல்லை என்பது எனது கருத்து சார்.

    ReplyDelete
  45. தல™ 70

    ஹார்ட்பவுண்ட் அட்டை

    இந்த எடையில் இது வரை வந்ததில்லை என்று நினைக்கிறேன் . நல்ல கனமான அட்டை

    முன்னட்டை அருமை
    பச்சை கலர் பின்னணியில் அருமை
    டாப்பில் கழுகு பறப்பது அருமையான அட்டை அமைப்புடன் ஒன்றி விட்டது .. எழுத்துக்களும் அழகு.. டெக்ஸ் ன் முகம் மாஸ் ..

    கீழ் பகுதியில் டெக்ஸ்ஸுடன் கூட நடந்து வருபவர்கள் யார் யார் என்றே தெரியவில்லை (கதை படிக்கும் போது தெரிய வாய்ப்பிருக்கலாம்)


    பின்னட்டை டிசைன் ஆர்ட் வொர்க் சும்மா அள்ளுது ..
    டெக்ஸ்தான் முகம் கொஞ்சம் உப்பினார் போல் உள்ளது .. இந்த டிசைன் முன் பக்கத்தில் இருந்திருந்தால் அமர்களமாக இருந்திருக்கும்

    உள்பக்கம்
    முதல் நாஜ்கு பக்கங்ககள் நாம் அடிக்கடி பார்க்கின்ற டெக்ஸ் கார்சனின் போட்டோக்கள் தான் .. (புதிய போட்டோக்களை இங்கு நிறைத்திருக்கலாம்)

    பின்பக்கங்களில்
    டெக்ஸ் ன் வரலாற்றை பற்றி இரண்டு பக்கங்கள் ..
    அடுத்ததாக நண்பர்களின் முதல் டெக்ஸ் அனுபவங்கள்

    நன்றாக வந்துள்ளது

    ReplyDelete
  46. ஸ்.. அப்பாடா ஒரு வழியே கொரியர் ஸ்டாஃப் வரவும் பார்சலைக் கைப்பற்றி வந்தாச்சுது...

    வழக்கத்தை விட கொஞ்சம் கனமான புஷ்டியான காம்ப்ளான் பாய் பாக்ஸ்!

    கையில் எடுக்கும்போதே கனம் அழுத்துது.

    மழை ஈரத்தில் கார்னர்கள் லேசா ஈரம் தெரிய கண்ணி்ல் வேர்வை எட்டி பார்க்க, நல்லவேளை உள்ளே ஈரம் ஊறும் முன் கவரை வெளியே எடுத்துட்டேன்.

    முதலில் பார்த்தது தலைனு சொல்லவும் வேணுமோஓஓஓஓஓ....


    ஓவ்...ஓவ்...ஓவ்...

    பச்சை வர்ண பின்னணியில்
    மஞ்சள் சட்டை தக தகக்க,
    ஆகாய நீல வண்ண தொப்பி மினிமினுக்க,
    வில்லன்கள் கூட்டம் ரைபிள்&கன்களோடு எதிரே வர,
    70ஆண்டென்ன 700ஆண்டானாலும் தல கொடி பறக்கும் உயரே உயரே என அறிவித்தவாறே இரவுகழுகு இறக்கை விரிக்க,
    தல டெக்ஸ் வசீகரிக்கிறார்....

    ReplyDelete
    Replies
    1. முன் அட்டையில் லோகோ பளீர்...

      புத்தகத்தின் முதுகு யம்மாம் பெரிசு...

      புத்தகத்தின் தையல் கூட சிவப்பாய் பளபளத்து, சின்ன வயசில் சுட்ட கொள்ளு பட்டாசை ஞாபகப்படுத்துகிறது. ஃபெண்டாஸ்டிக்.

      Delete
    2. பின்னட்டை இன்னும் பிரமாண்டம்.
      கையில் வழுவழுவென ஃபீலிங் தரும் தலையின் ஸ்டிக்கர்கள் மாதிரியான பிரிண்டிங் அசத்துது.

      "70ஆண்டுகளாய்த் தொடர்ந்திடும்
      ஒரு காமிக்ஸ் சூறாவளி"

      ---என்ற டைட்டில் ஏகப் பொருத்தம்.


      Delete
  47. கெட்டியான அட்டை LMS நினைவுகளை கிளறுது.

    LMS,
    லயன் 250,
    ஈரோட்டில் இத்தாலி,
    சர்வமும் நானே,
    லயன் 300வரிசையில்

    தி பெஸ்ட் ஆஃப் த பெஸ்ட்ஸ் ஆக The டைனமைட் ஸ்பெசல் தூக்கி அடிக்குது.

    ReplyDelete
  48. புக்கு வாங்கியாச்சேஏஏஏஏஏய்ய்...

    தேங்க்ஸ் ஆத்தா!!

    டெக்ஸ் -70 அட்டைப்படம் பட்டையக் கிளப்புது!! தலயின் முகம் க்ளோஸ்அப்பில், கம்பீரமாய், பொழிவாய் - செம செம செம!!

    பச்சைநிற கானகப் பின்னணியும், அணிவகுத்து வரும் நிழலுருவ கெளபாய்ஸின் ஸ்டைலான நடையும் - ப்பா!!
    அழகுக்கு அழகு சேர்ப்பதுபோல் மேல்புறத்தில் அந்தக் கழுகு!!!

    எப்படியிருக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் பூர்த்தி செய்து கம்பீரமாய் நம் கைகளில் தவழ்கிறது!

    உற்சாகத்தில் துள்ளிக்குதிக்குது மனசு!

    ReplyDelete
    Replies
    1. @ஈரோடு விஜய்
      கூழ்??????

      Delete
    2. கூழ் வேண்டுமா சகோ.
      அவர் ஆத்தா மகமாயிக்கு போன ஆண்டில் ஊற்றி மீதமிருக்கும் கூழைத்தான் வட்டிக்கூழ் ஊற்றுகிறேன் என்கிறார்.அதையா கேட்கிறீர்கள்!!
      ரவுண்டு பன்னையே காய்ந்து போய் வர்க்கி போல் ஆக்கி பத்திரமாக வைத்திருக்கும் அவரிடம் கூழ் கேட்கிறீர்களே. கூழ் வைத்திருக்கும் பாத்திரத்தை திறந்தால் கோவையே மணக்கும் பர்ரால்லியா!!

      Delete
    3. ///@ஈரோடு விஜய்
      கூழ்??????///

      ///ஈ.லி.cool ///

      ///இதுவரைக்கும் ஆத்தாவுக்கு 5 கண்டெயினர் அளவுக்கு ஆத்தாவுக்கு கூழ் பெண்டிங்காமே???///

      என்ன நினைச்சுக்கிட்டிருக்க அல்லாரும்.. ஹஹ்?!! ஆத்தாட்ட போட்டுக்குடுக்கறீங்களா? கிர்ர்ர்ர்...

      இன்னிக்கு ஆபீசுல தூங்கிட்டிருக்கச்சே ஆத்தா என் கனவுல வந்து "உன் தவத்தை மெச்சினேன் ஈவி பையா... எல்லா பயபுள்ளைகளும் கூழா ஊத்தி ஊத்தி என் ட்ரெஸ்ஸையெல்லாம் பாழா பண்ணிட்டாய்ங்க.. அதனால உன் பழைய பாக்கிகளையெல்லாம் குலவைகளா கன்வெர்ட் பண்ணிக் கொடுத்துடேன்?" அப்படீன்னு கேட்டுட்டு, முஷ்டியை மடக்கி நடுவிரலில் எச்சி பண்ணி என் நடுமண்டையில் நச்சுனு ஒன்னு கொட்டிட்டு மறைஞ்சுட்டாங்க!

      நானே சொந்தமா போட்ட ட்யூனில் இப்போது குலவை ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டிருக்கேன்! கிடைக்கிற கேப்ல எல்லாம் குலவை பாடி அடுத்த மாசம் புக்கு வர்றதுக்குள்ள என் கடனையெல்லாம் அடைச்சிடுவேன்! தெரிஞ்சுக்கோங்க!!

      பி.கு : கோரஸ் குலவைக்கு சங்கீத ஞானமுள்ள ஆட்கள் தேவை! சேவை மனப்பான்மை கொண்டவர்கள் தொடர்புகொள்ளவும்!

      Delete
    4. // இன்னிக்கு ஆபீசுல தூங்கிட்டிருக்கச்சே ஆத்தா என் கனவுல வந்து "உன் தவத்தை மெச்சினேன் ஈவி பையா... எல்லா பயபுள்ளைகளும் கூழா ஊத்தி ஊத்தி என் ட்ரெஸ்ஸையெல்லாம் பாழா பண்ணிட்டாய்ங்க.. அதனால உன் பழைய பாக்கிகளையெல்லாம் குலவைகளா கன்வெர்ட் பண்ணிக் கொடுத்துடேன்?" அப்படீன்னு கேட்டுட்டு, முஷ்டியை மடக்கி நடுவிரலில் எச்சி பண்ணி என் நடுமண்டையில் நச்சுனு ஒன்னு கொட்டிட்டு மறைஞ்சுட்டாங்க!

      நானே சொந்தமா போட்ட ட்யூனில் இப்போது குலவை ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டிருக்கேன்! கிடைக்கிற கேப்ல எல்லாம் குலவை பாடி அடுத்த மாசம் புக்கு வர்றதுக்குள்ள என் கடனையெல்லாம் அடைச்சிடுவேன்! தெரிஞ்சுக்கோங்க!!

      பி.கு : கோரஸ் குலவைக்கு சங்கீத ஞானமுள்ள ஆட்கள் தேவை! சேவை மனப்பான்மை கொண்டவர்கள் தொடர்புகொள்ளவும்!//

      எடிட்டர் சார்,

      மிக்க நன்றி சார், உங்கள் Blog மூலமாக ஈரோட்டு நாத்தீகம் வளர்வதற்கு / உதவி செய்வதற்கு _/\_

      Delete
  49. டெக்ஸ் 70Not out...

    உள்பக்கங்கள் புரட்டலில் டாலடிக்குது.

    முதல் கதை புயலுக்கொரு பிரளயம்-507பக்க முழுநீள சாகசம் என்ற அம்சம்தான் நீருற்றை கடவாயோரம் கிளப்புகிறது.

    இந்த ஓவியம் எங்கோ ரசித்து உள்ளோமே என யோசிக்க, அடநம்ம ஒக்லஹோமா பாணி என நினைவூட்டும்.

    கதையில் வரும் மிரா என்ற பெண்மணி "தாராள" மனசுடையவள்னு பார்க்கும் போதே தெரியுது...ஹி...ஹி...

    பாலைவன காட்சிகள், கிட்வில்லர்&டைகர் நவஹோக்களுடன் விரையும் காட்சிகள் என கண்ணில் மின்னல்கள் தெறிக்குது.
    டைகர் முகம் ஆங்காங்கே அசத்தல்.

    கம்பிகளுக்கு பின்னே தலை ஏன் என காரணம் அறிய இதை முதலில் படிக்க வேணும்.

    2வது கறுப்பு வெள்ளை கதை ,
    தெற்கே ஒரு தங்கத் தேட்டை- புதிய பாணி ஓவியங்கள் கியூபா படலம், சிவப்பாய் ஒரு சிலுவை கதைகளை கண் முன்னே கொணருது. இதுவும் ஈக்குவலாக கலக்கும் என எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete
  50. 70ஆண்டு டெக்ஸின் பிதாமகர்கள் முதல் சமீபத்திய கதாசிரியர் & ஓவியர்கள் வரை போட்டோ பொட்டு மரியாதை செய்துள்ளார் எடிட்டர் சார். வாழ்த்துகள் சார். அருமையான எண்ணங்களை செயல் படுத்தி உள்ளார்.

    10கேள்விகளில் டெக்ஸின் வரலாறை துல்லியமாக சொல்லியுள்ளார், ஆசிரியர் சார். சூப்பர்.

    டெக்ஸ் 70பற்றிய சிறு குறிப்புகளில்,

    Mks Ramm,
    மரு.பார்த்தீபன் கரூர்,
    L.Suseendra Kumar,
    Trichy Vijay,
    Comics Lover Raghavan,
    Maendran Paramasivam,
    Prasanth karthik,
    Rummy XIII,
    Thirunavukkarasu Vazzukkupparai
    &என்னோடதும் இடம்பெற்று உள்ளது.

    நண்பர் சிவகுமார்,ஸ்ரீரங்கம் அவரது ஓவியம் இடம்பெற்றுள்ளது.

    வாழ்த்துகள் நண்பர்களே!

    நான் இதற்கென எழுதியதை ஸ்கிப்பிட்டி,

    என்னுடைய காமிக்ஸ் மந்திரமாம்,

    Tex is comics
    Comics is Tex என்ற பஞ்ச் போட்டு எனக்கு இன்ப அதிர்ச்சியை அளித்த ஆசிரியர் சாருக்கு நன்றிகள்!

    ReplyDelete
  51. கூடவே ஒரு 3புத்தகங்கள் வந்திருக்கு. என்ன அது,
    ராபின்,
    கிளிப்டன்,
    ஜானி 3ம் தான் அவைகள்.

    ஜானி அட்டைபடம் தூள்,
    யார் அந்த மிஸ்டர்X 2ம் இடம்.

    ஜானி இதழின் உள்பக்கங்கள் செம. ட்ரெண்ட் ஓவியங்கள் மாதிரி துல்லியம்.

    டெக்ஸ் 70பர்த்டே கார்டு அட்டகாசம், அதை டெக்ஸ் 70ன் அட்டையில் கொண்டு வந்திருந்தால் கூடுதல் கெத்தாக இருந்து இருக்கும்!

    பேட்ஜ், நல்லவேளை விழாவில் தர்ல!

    புக்மார்க்காக எனக்கு வந்தது டைகர்.

    மொத்தத்தில் அருமையான மாதம் இது.

    டெக்ஸ்க்கு அக்டோபர்,
    இரத்தப்படலத்துக்கு ஆகஸ்ட்...
    ஹூம் , பங்காளி டைகருக்கு ஏதும் இல்லையே என நினைக்கும் போது கொஞ்சம் சங்கடமாக தான் இருக்கு.

    ReplyDelete
  52. புதையலை கைப்பற்றி விட்டேன் அருமை அபாரம் சூப்பர் உங்களின் உழைப்புக்கு என்ன சொன்னாலும் இனையாககாது

    ReplyDelete
  53. ஹாய் சார்...
    டைனமைட் நாளைதான் எனக்காக வெடிக்க வாய்ப்புள்ளது.
    புத்தகத்தில் என் "டெக்ஸ்பா"வும் இடம் பெற்றதை நண்பர்களின் பதிவில் அறிந்தேன்.
    எடிட்டருக்கு நன்றிகள்..
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    மகிழ்ச்சி....

    மரு.பெ.பார்த்தீபன்.

    ReplyDelete
  54. இன்ப அதிர்ச்சி ஆசிரியரே காமெடி கர்னலை மறுபதிப்பு கேட்கலாம் என்று நினைத்தால் சத்தமில்லாமல் போட்டு அசத்திவிட்டீர்கள் மிக்க நன்றி ஆசிரியரே பெயர் மட்டுமே மாறியிருக்கிறது யார் அந்த மிஸ்டர் X

    ReplyDelete
  55. அடுத்த வெளியீடுகள் விளம்பரங்கள் இன்னும் பிரமாதம்.

    அட டே அடுத்த மாசமும் தல தாண்டவம் தான், தீபாவளி மலராமே....ஜூப்பரு!

    காதலும் கடந்து போகும்! டைகர் ஜாக்கின் கதை! மனசை கனக்க செய்யும் இதழ் இது. 344பக்கங்கள் அடேயப்பா! வாயெல்லாம் பல்லாக அடுத்த அதிரடியை எதிர்நோக்கி!!!


    அடுத்த ஜம்போ, The ஆக்சன் ஸ்பெசல் பழமையில் மூழ்க மீண்டும் ஒரு வாய்ப்பு.



    ReplyDelete
    Replies
    1. Enna sir waiting for my copy to arrive. Neenga very lucky enjoying the copy already :)

      Delete
    2. காத்திருப்பதும் ஒரு த்ரில் தான் ஜி.

      Delete
  56. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  57. தெய்வம் நின்று கொல்லும்...


    நியூயார்க் நகரில் நவஹோ அம்பு

    தெய்வம் மண்டி போட்டும் கொல்லுமதை நம்பு.

    அட்டகாச த்ரில்லர்..9/10

    ReplyDelete
  58. எடிட்டர் சார்
    இது உங்களுக்கே நியாயமாக படுகிறதா!
    இப்படி (இன்ப) அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய் கொடுக்கிறீர்களே! உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் ஆயிரம் முறை நன்றி சொன்னாலும் தகும்.முப்பது நாட்கள் இடைவெளியில் இப்படிப்பட்ட பொக்கிஷங்களை கொடுத்து கொடுத்து ஆச்சர்யப்பட வைக்கிறீர்களே!
    பலர் பார்சலை கைப்பற்றி இருக்க மாட்டார்கள்.அதனால் அதிகம் பேசுவது நியாயமில்லை என்றாலும் பேசாமல் இருக்க முடியவில்லை.
    டெக்ஸ் புத்தகம் கையில் ஏந்தும் போதே உடம்பில் முறுக்கேறுகிறது.
    புத்தகம் கனமாக இருந்தாலும் சந்தோஷத்தில் மனது லேசாகிறது.பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் டெக்ஸ் டைனமைட்!
    கூடவே வந்த மூன்று புத்தகங்களும் சூப்பர்.இந்த பொக்கிஷங்களையெல்லாம் பார்க்கையில் இன்று பூராவும் புரட்டி புரட்டி பார்த்து ஆனந்தப்பட தோன்றுகிறது.
    டெக்ஸ் டைனமைட் ஸ்பெஷலுக்காக உழைத்த அனைத்து தோழர்களுக்கும் ஆயிரம் நன்றிகள்.

    ReplyDelete
  59. டெக்ஸ் டைனமைட்
    ரிப்போர்ட்டர் ஜானி
    கர்னல் க்ளிப்டன் கலரில் அள்ள ...
    ராபின் கறுப்புவெள்ளையில் மிளிர....

    பக்கங்களை மேலோட்டமாக புரட்டும்போது தோன்றியது : காமிக்ஸ் உலகில் இணைய வாய்ப்பில்லாதவர்கள் வாழ்வது சத்தியமாய் சொல்கிறேன்... நிச்சயம் புண்ணியம் பண்ணியிராத குறைவாழ்க்கைதான்...!!

    Love u LionMuthu

    Love u Editor sir

    Love u co readers

    ReplyDelete
  60. டெக்ஸ் டைனமைட் ஸ்பெஷலை பார்க்கையில் டெக்ஸ் விஜய் அவர்களின் முகம் ஆனந்தத்தில் எப்படி மின்னும் என்று கற்பனை பண்ணி பார்க்கிறேன்.அவர் டெக்ஸை பற்றி எழுதி எழுதி இப்போதெல்லாம் டெக்ஸ் புத்தகத்தை பார்க்கும் போதெல்லாம் டெக்ஸ் விஜய்யின் முகமே நினைவில் வந்து போகிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆசீர்வாதம் என் பாக்கியம் சார். உங்களது மகிழ்ச்சி யை பார்க்கும் போது டெக்ஸ் டைனமைட் ஸ்பெசல், ஹிட் ஆஃப் த இயர்னு சத்தமாக சொல்கிறேன் உங்களோடு ஒரே குரலில்...!!!

      Delete
    2. சந்தேகமில்லாமல் டெக்ஸ் டைனமைட் ஸ்பெஷல் ஹிட் ஆஃப் த இயர் தான் சார்.நாம் மட்டுமல்ல அனைவரும் உரத்த குரலில் சொல்லத்தான் போகிறார்கள் சார்.

      Delete
  61. மரணம் சொல்ல வந்தேன்..

    மலைக்க வைக்கும் மர்மக் கதை..

    உடனே படிக்கலாம் என்ற


    தகவல் சொல்ல வந்தேன்..

    9.5/10

    ReplyDelete
    Replies
    1. மெடிக்கல் ஸ்டோர்ஸ் தானே ஸ்ட்ரைக், டாக்டர்ஸ்ம் ஸ்ட்ரைக்கா???

      தட்டி தள்ளறீங்களே ஜி!

      அடுத்து?

      Delete
    2. ஒரு சின்ன இன்ஸ்டலேஷன் வொர்க்..எஞ்சினியர்ஸ் ரெண்டு மணி நேரம் ப்ரேக் விட சொல்லிட்டாங்க டெக்ஸ்..

      யார் அந்த Mr X பாதி படிச்சுட்டுருக்கும்போதே தோ கூப்பிடறாங்க...

      நைட்டு க்ளிப்டன் முடிச்சிட்டு

      டண்டண்டய்..

      நாளைலேர்ந்து டெக்ஸ்..

      அனுபவிச்சு படிச்சு முடிக்க ஒரு வாரம் ஆயிடும்னு நினைக்கறேன்..

      Delete
  62. வாழ்த்துகள் டெக்ஸ்....

    "புயலுக்கொரு பிரளயம்"....
    படித்தாயிற்று....

    புத்தக வடிவமைப்பு - 10/10

    வண்ணக்கலவை - 10/10

    சித்திரம் - 10/10

    கதை - 100/10

    அற்புதமான வாசிப்பு அனுபவம்... அளவிடமுடியாதது...

    போனெலியே பொறாமை கொள்ள வைக்கும் இந்த இதழக்கு...

    ஆசிரியருக்கு எனது நன்றிகள்...

    ReplyDelete
  63. புக்கு வந்திடுச்சா இனி எல்லாரும் அண்டர்க்ரவுண்டுக்கு போயிடுவாங்க. நாம தான் இங்க கெத்து கெத்துன்னு ஏதாவது நியூஸ் வருதான்னு பாக்கனும்.

    ReplyDelete
    Replies
    1. முதலில் வாழ்த்துகள் ஜி💐💐💐💐
      தங்களது டெக்ஸ் குறிப்பு இதழில் இடம்பெற்று உள்ளது.

      புக்கு படிக்காம உங்களுக்கு கம்பெனி தரணுமா?

      நான் உறுதியளித்தவாறு டெக்ஸ் பிறந்தநாள் வரை படிக்கல ஷெரீஃப் அய்யா.


      Delete
    2. யப்பா. தல ரசிகரை காக்க வைச்ச பாவம் எனக்கு வேண்டாம். தல தாண்டவத்த அனுபவிச்சுட்டு வந்து உங்க ஸ்டைல்ல ஒரு விமர்சனம் போடுங்க. அது போதும். உங்களை மனோகரா சிவாஜிய சத்தியத்தில இருந்து கண்ணாம்பா ரிலீஸ் பண்ற மாதிரி போதும் விஜி பொங்கி எழுன்னு ரிலீஸ் பண்றேன்.

      Delete
    3. M.P. சார்
      உங்களது நிலமை கவலைக்குரியதுதான் சார்.புத்தகம் உங்களுக்கு கிடைக்க பத்து நாளாகுமா சார்?

      Delete
    4. இல்லீங்க ஏடிஆர் சார். கோவை விலாசத்துக்குத்தான் போகும். நான்கு மாதத்திற்கு ஒரு முறை அம்மா எடுத்து அனுப்பிக் கொண்டிருந்தார். கடந்த ஒரு வருடமாக அவரால் முடிவதில்லை. அதனால் வரும் வருடத்திலிருந்து வேற வழிமுறைகளை நாட வேண்டும்.

      Delete
    5. நான்கு மாதம் என்பது கொடுமைதான் சார்.வேறு வழிமுறையை தேட வேண்டியது அவசியமான ஒன்றுதான்.இங்கு ஒரு நாள் கூரியரில் தாமதமானாலே இருப்புக் கொள்ளவில்லை. நான்கு மாத காத்திருப்பு என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்தான் சார்.

      Delete
    6. //நான்கு மாதம் என்பது கொடுமைதான் சார்.வேறு வழிமுறையை தேட வேண்டியது அவசியமான ஒன்றுதான்.இங்கு ஒரு நாள் கூரியரில் தாமதமானாலே இருப்புக் கொள்ளவில்லை. நான்கு மாத காத்திருப்பு என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்தான் சார். //

      கவலை வேண்டாமே Atr சார், இந்த அன்புள்ள அநாமதேயர், கொஞ்சமே கொஞ்சம் கூடுதலாக தன் சந்தாவைச் செலுத்தி நேரடிபாக தன் அமெரிக்க விலாசத்திற்கே தருவித்துக் கொள்வார் இனி வரும் காலங்களில் !

      Delete
  64. இப்பதான் பிரிக்க முடிஞ்சது !
    அட்டைபடத்தின் பைண்டிங் கொள்ளு பட்டாசை சைடில் வைத்து, நூலால் தைத்தத போல ஹார்டு பௌண்ட்ல, கழுகு தலைக்கு மேல பறக்க , கழுகுப்பார்வையுடன் தல !பிண்ணனி அசத்த , நீலத் தொப்பி மின்ன என்னவோ அட்டைல மிஸ்ஸிங்....பின்னட்டை அட்டகாசம் எழுவதாண்ட கொண்டாடியபடி அட்டகாசமாய் டெக்ஸ்.....பின்னட்டை அசத்தல்

    ReplyDelete
    Replies
    1. முதல் பக்கத்தில் அடளடகாச டெக்ஸ்,கார்சன் ஜோடி, விரையும் டெக்ஸ், அத புரட்டுனா பழய விளம்பரம் கலக்க சூப்பர்!

      Delete
    2. இதுல அசத்தலான வியப்பான விசயம் ஜானியின் முதல் பக்கத்த புரட்டுனா, சான்சே இல்லை ....அசத்தல்...அசத்தலான அட்டை ஜானிதான ....கேரட்டாரின் வண்ணக்கலவை அசத்தல் லார்கோ வண்ணம் ....அருமையான டைகரின் இலவச இணைப்பு வண்ணத்தில் சும்மா ஜொலிக்குது !

      Delete
  65. Man on mission அசத்தல் , அந்த காலத்துக்கு போன நினைவு, புதுமையில் பழமை

    ReplyDelete
  66. 2019 க்கான அட்டவணை வந்துவிட்டதா?? என்ன ஸ்பெஷல்??? டெக்ஸின் 1000 பக்கங்கள் கொண்ட ஸ்பெஷல் புக் எதாவது???

    ReplyDelete
    Replies
    1. அட்டவணை வரவில்லை சார்.

      Delete
  67. எடிட்டர் விஜயன் ஸாப் ...
    புயலுக்கொரு பிரளயம்
    செம்ம பாஸ்ட்டா தட தடத்து ஓடிக் கொண்டிருக்கிறது ..

    நவ் 464 ம் பக்கம்

    #படிக்க_ஒரு_ஸ்டாண்டாவது கொடுத்திருக்கலாம் ...
    கையில பிடிச்சு படிக்க முடியலை ..

    கை ரொம்ப வலிக்கிறது..

    படிச்சு முடிச்சதும் எலும்பு டாக்டரை போய் பார்த்து எதற்க்கும் ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்துக்கணும் .. 😉😉

    ReplyDelete
    Replies
    1. சம்பத்!

      டெக்ஸ் எலும்பை பதம் பாப்பாரு ..

      அவரு புக்கு சும்மா இருக்குமா..??:D

      Delete
    2. செல்வம்ன்னா ...
      ஹா ஹா ஹா ஹா ...😉😉😉

      Delete
  68. இதழ்களை கைப்பற்றியாச்சி,
    முதல் புரட்டலில்,
    1.இந்த மாத டாப் அட்டை டெக்ஸ்தான்,வலுவான கடின அட்டை,முன் அட்டையில் வித்தியாசமான கலரிங்கில் அசத்தும் தல,தலைப்பிற்கு மேல் கழுகு படம் நச்,பின்னட்டையில் செம கெத்தாக போஸ் கொடுக்கிறார்,அதற்கு பிண்ணனியில் மின்னும் நட்சத்திரங்கள் செம அழகு,
    தி டைனமெட் ஸ்பெஷலை கையில் ஏந்தி பார்க்க அம்புட்டு அழகு,நிற்க வைத்து தூரத்தில் பார்த்தால் அதுவும் ஒரு அழகு,
    மொத்தத்தில் இந்த மாத டாப் ஸ்டார் டெக்ஸ்தான்.
    2.மரணம் சொல்ல வந்தேன்- தலைக்கு அனேகமாக இந்தமாதம் வலுவான போட்டி ஜானிதான்,அட்டைப்படம் செம,அசத்தும் கலரிங்,கலக்கும் ஓவியங்கள் என நல்ல இரசனையான முறையில் அமைந்துள்ளது.
    3.கிளிப்டனின் அட்டைப்படம் ஜில்லாரின் கதையை நினைவுபடுத்துகிறது,கிளிப்டன் இரசிக்கும்படி கலக்குவார் என்று நம்புகிறேன்.
    4.எல்லோரும் வண்ண உடை தரித்திருக்க,ராபின் என் வழி தனி வழி
    க & வெ உடையில் கலக்குகிறார்,வித்தியாசமான திரில்லர் பாணியில் அசத்துவாரா பார்ப்போம்.
    -சுவிட் எடு தல பிறந்தநாளை கொண்டாடு பாணி சுவராஸ்யம்,
    இந்த மாத இதழ்கள் அனைத்துமே அசத்தல் பேக்கேஜாக அமைந்துள்ளது, இனி கதைக்குள் குதிக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. மெதுவா குதிங்க ரவி மல்லூர்ல பூகம்பம் வந்துடப் போகுது!😁😁😁😁

      Delete
  69. காலைல இருந்தே இந்த பக்கம் எட்டி பார்க்கல எடிட்டர் சார்.

    ம்..ம்...அநேகமாக அட்டவணையை ஃபைனல் பண்ணி டைப்பிங்ல இருப்பாரோ????

    ஞாயிறு தலை பிறந்தநாள் அன்று ரிலீஸ் ஆகுமோ?????

    ReplyDelete
  70. அகில உலக டெக்ஸ் ரசிகர்களுக்கு

    டைகர்,XIII மற்றும் டெக்ஸ் ரசிகனின் மனமார்ந்த டெக்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் ஒவ்வொருவரின் குதூகலத்தையும் அருகில் இல்லன்னாலும் உணர முடியுது.

    காமிக்ஸ் உலகில் நம் அனைவருக்கும் இது ஒரு முக்கியமான தருணம். வேறு வேறு இடங்களில், தருணங்களில் இருந்தாலும் இந்த குதூகலத்தை அனைவரும் உணர முடிவதே பெரிய விசயம்.

    தல போட்டோவையாவது பாருங்கன்னு புக்கு கிடைச்ச உடனே போட்டோக்களை அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி. புக்குங்கறது நல்ல விசயம். நல்லதை செய்யும் கதாநாயகனின் கதை இன்னும் நல்ல விசயம். அவை நம் அனைவரையும் இணைத்திருப்பது இன்னும் அருமையான விசயம்.

    இந்த தருணத்தை ஸ்பெசலாக உணர செய்த ஆசிரியருக்கும், டெக்ஸை நமது வாழ்வில் கொணர்ந்த போனெல்லி மற்றும் லயன் நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    இது போன்ற சிறு சிறு சந்தோசங்களின் வழியே பேரின்பத்தை அடைவோம்.

    ஹேப்பி பர்த் டே தல...நீ கலக்கு தல...

    ReplyDelete
    Replies
    1. பெர்சனலாக டெக்ஸை விட உங்களுக்கு டைகரின் மேல் ஒருபடி அபிமானம் அதிகம்னு அறிவோம்.

      டெக்ஸ் & டைகரை பரஸ்பரம் கொண்டாடுவதே நம் இயல்பு.
      உங்களோடு நாங்களும் மகிழ்வோடு தல பிறந்தநாளை கொண்டாடுகிறோம் ஜி.

      வன்மேற்கில் நம்மையும் உலா கூட்டி போவதில் இருவரும் சளைத்தவர்கள் அல்ல. அதனால் தான் நான் இருவரையும் சமமான இடத்திலேயே பார்க்கிறோம். நானும் அப்படியே, என்னை அருகில் இருந்த அறிந்த நண்பர்களுக்கு அது தெரியும்.

      டைகர் கதை டல் அடிக்கும் போது கலங்கி போகும் நண்பர்களின் முதல் அணியில் நானும் இருக்கிறேன். அதை யாருக்கும் நிரூபிக்க அவசியம் இல்லை.

      வன்மேற்கு காதலர்களாக இன்று முதல் தீபாவளிமலர், அதை தொடர்ந்து வரும் முக்கிய தருணம் என எல்லாத்தையும் செலிபரேஷன் மன்த் ஆக கொண்டாடுவோம்.🎈🎈🎈🎈🎈🎈🎈🎶🎵🎷🎇🎆🎊🎉🎂🎂🎂🎂🎂🎂💖💖💖💖💖💖💖💖

      Delete
  71. சூப்பர் மஹி ஜி.....அருமையா சொன்னீங்க....

    ReplyDelete
  72. தனக்கு கிடைக்க தாமதமாகுமென்றாலும் அடுத்தவர் சந்தோஷப்படும்போது அதில்தானும் கலந்து கொண்டு ஆனந்தப்படமடைவது எல்லோராலும் முடியாது M.P.சார்.

    ReplyDelete
    Replies
    1. அதே அதே சார்...
      மஹிஜி யின் தாரக மந்திரம்,

      "மகிழ்வித்து மகிழ்"

      Delete
  73. தலீவர் பரணிதரன் @ பொட்டி வந்ததா???

    உங்கள் ரியாக்சன் என்ன என அறிய ஆவல்.

    டெக்ஸ் ரசிகனாக மற்றொரு டெக்ஸ் ரசிகரின் பார்வையில் டைனமைட் ஸ்பெசல் பற்றி பார்க்க பார்க்க இனபம் பொங்கும். கமான் தலீவரே!

    ReplyDelete
  74. வழக்கம் போல தல ராக்ஸ்

    ruff அண்ட் tuff

    ஆனா தலைக்கு

    ruff அண்ட் tuff ஆ

    அட்டைப்படம் போட்டு அசத்திட்டீங்க சார்

    கலக்கலோ கலக்கல் _/|\_

    .

    .

    ReplyDelete
    Replies
    1. 'தல' அட்டைப்படத்தில் பின்னே ஒரு பதிவு நீளக் கதையுள்ளது சார் !! நேரம் கிடைக்கும் போது அது பற்றி !!

      Delete
    2. சார். நீங்களும் உங்க டீமும் டெக்ஸ் 70 சம்பந்தமா அடிச்ச குட்டிக்கரணம் சாகசமெல்லாம் சுட சுட அடுத்த பதிவுல எதிர்பார்க்கிறோம்.

      Delete
  75. "TEX 70" கிடைத்தது இன்று ..ஒரு மாத இடைவெளிக்குள் இரண்டு HI QUALITY ஹார்ட் கவர் இதழ்களை தந்த எடிட்டர்க்கும் AND HIS TEAM க்கும் HATS OFF ..முன் அட்டை ஒரு கிளாசிக் FEEL தருகிறது .. பின் அட்டை தலயின் அக்மார்க் "கெத்து" FEEL தருகிறது ..TOTAL MAKE கும் நன்றாக உள்ளது ..
    முதல் முறையாக என்னுடைய பதிவும் நம்ம காமிக்ஸ் இல் வந்து உள்ளது .. IT WAS A SURPRISE ஏன் என்றால் என்னை விட திறமையாக எழுதும் நண்பர்கள் பலர் உள்ளனர் .. SO THANK YOU EDITOR SIR .. AND அனைத்து TEX ரசிகர்களுக்கும்
    "ஹாப்பி பர்த்டே தல"..

    ReplyDelete
  76. டெக்ஸ் டைனமைட் ஸ்பெஷலை பக்கம் பக்கமாக படம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு பக்கமும் சும்மா வண்ணத்தில் கலக்கியிருக்கிறீர்கள் சார்.அச்சுத்தரம்,வண்ணம், பைண்டிங், அட்டைப்படம் எதிலுமே குறை சொல்ல முடியாது. கறுப்பு வெள்ளை பக்கங்களும் சூப்பர். இதை வண்ணத்தில் கொடுத்திருந்தால் இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது. வன்மேற்கின் கரடுமுரடான பக்கங்கள் கறுப்பு வெள்ளையில் அனலடிக்கின்றன. இன்று முழுவதும் புத்தகத்தை ரசிப்பதுதான் என் வேலை!

    ReplyDelete
  77. // இன்னிக்கு ஆபீசுல தூங்கிட்டிருக்கச்சே ஆத்தா என் கனவுல வந்து "உன் தவத்தை மெச்சினேன் ஈவி பையா... எல்லா பயபுள்ளைகளும் கூழா ஊத்தி ஊத்தி என் ட்ரெஸ்ஸையெல்லாம் பாழா பண்ணிட்டாய்ங்க.. அதனால உன் பழைய பாக்கிகளையெல்லாம் குலவைகளா கன்வெர்ட் பண்ணிக் கொடுத்துடேன்?" அப்படீன்னு கேட்டுட்டு, முஷ்டியை மடக்கி நடுவிரலில் எச்சி பண்ணி என் நடுமண்டையில் நச்சுனு ஒன்னு கொட்டிட்டு மறைஞ்சுட்டாங்க!

    நானே சொந்தமா போட்ட ட்யூனில் இப்போது குலவை ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டிருக்கேன்! கிடைக்கிற கேப்ல எல்லாம் குலவை பாடி அடுத்த மாசம் புக்கு வர்றதுக்குள்ள என் கடனையெல்லாம் அடைச்சிடுவேன்! தெரிஞ்சுக்கோங்க!!

    பி.கு : கோரஸ் குலவைக்கு சங்கீத ஞானமுள்ள ஆட்கள் தேவை! சேவை மனப்பான்மை கொண்டவர்கள் தொடர்புகொள்ளவும்!//

    எடிட்டர் சார்,

    மிக்க நன்றி சார், உங்கள் Blog மூலமாக ஈரோட்டு நாத்தீகம் வளர்வதற்கு / உதவி செய்வதற்கு _/\_

    ReplyDelete
    Replies
    1. ஹை!! அக்மார்க் ஆத்திகரு வந்திருக்காரு.. அல்லாரும் கும்பிட்டுக்கோங்க பாக்கலாம்!! _/\_

      Delete
  78. தலயின் 'டைனமைட் ஸ்பெஷல்' அட்டைப் படத்திற்கு திருஷ்டி சுத்திப்போடுங்க எடிட்டர் சார்! என் கண்ணே பட்டுடும் போலிருக்கு!!

    LMSஐ கையில் ஏந்திய கணத்தில் கிடைத்த அதே சிலிர்ப்பு - இப்போதும்!

    அந்த இத்தாலிய ஓவியருக்கு நம் சார்பில் ஒரு மெகா மெகா நன்றியைத் தெரிவித்துவிடுங்கள்!! அசத்தியிருக்கிறார் அசத்தி!!

    அட்டைப்பட நகாசு வேலைகளும் அருமை! டெக்ஸின் தொப்பியைத் தடவினால் சொரசொரன்னு உண்மையான தொப்பியைத் தடவுவது போன்றே..!முகத்தில் கை வைத்தாலோ - வழுக்குப்பாறை மாதிரி வழவழா!!

    பின்னட்டையில் பிரம்மாண்ட TEX-70 முத்திரையின் பின்னணியில் தல ஒரு மெல்லிய புன்னகையோடு நிற்பது - நம் டெக்ஸ்-70 கொண்டாட்டங்களையெல்லாம் ஒரு மெல்லிய பெருமிதத்தோடு பார்வையிடுவது போல் உள்ளது!!

    இப்புத்தகத்தின் தயாரிப்புப் பற்றிய உங்களது முழுநீள, முழுவண்ண பதிவுக்காக ஆவலுடன் வெயிட்டிங் எடிட்டர் சார்!!

    ReplyDelete
  79. WHEN WILL COME KATRIL KARAINTHA KAPPALGAL.THAT STORY RESEMBLED JAMES BOND MOVIE THE SPY WHO LOVED ME.THIS IS ALSO MY FAVORITE LAWRENCE DAVID ACTION STORY.

    ReplyDelete