Powered By Blogger

Wednesday, March 02, 2022

முக்கூட்டு மார்ச் !

 நண்பர்களே,

வணக்கம். வருஷம் பிறந்தது நேற்றைக்குப் போலுள்ளது ; அதற்குள் மார்க்சும் பிறந்தாச்சு ; முதல் க்வாட்டரின் இதழ்களும் ரெடியாச்சூ ! நேற்றைக்கு கூரியர்களில் புறப்பட்டிருக்கும் 3 இதழ் காம்போவானது இன்றைக்கு உங்கள் கதவுகளைத் தட்டுமென்று எதிர்பார்க்கலாம் ! And ஆன்லைன் லிஸ்டிங்கும் ரெடி என்பதால் crisp ஆன இம்மாத வாசிப்புக்குத் தயாராகிடலாமே folks ?

https://lioncomics.in/product/march-pack-2022/

https://lion-muthucomics.com/all-available-comics/935-march-pack-2022.html

இம்மாத இதழ்கள் in many ways - தொடரவுள்ள காலங்களுக்கான template ஆக அமைந்திடுமென்று நினைக்கிறேன் ! 'தல' டெக்ஸ் மட்டும் solid ஆக  இடம் பிடிக்க, அவரைச் சுற்றி வாசம் செய்திடவுள்ள இதர நாயகர்கள் ஒன்றோ, மிஞ்சிப் போனால் இரண்டோ பேர் மாத்திரமே இருந்திடுவார்களென்று இனி எதிர்பார்க்கலாம் ! "மொது மொதுவென்று புக்ஸ் ; நாயகர்கள்" என்று மாசா மாசம் போட்டுத் தாக்குவதற்கு நாங்கள் தயாராக இருந்தாலும், வாசிக்க நேரத்தைத் திரட்ட அல்லல்படும் உங்களுக்கு, இந்த மித புஷ்டியிலான அட்டவணைகளே இனி சுகப்படக்கூடும் என்று படுகிறது ! And சீரான இடைவெளிகளில் "வேதாளர் ஸ்பெஷல்" ; பழிக்குப் பழி" போன்ற குண்டு பார்ட்டிகள் தலைகாட்டுவது, வாசிப்பினை balance செய்திட உதவிடும் போலும் ! 

பார்க்கலாமே ! Bye for now ! See you around !


146 comments:

  1. வணக்கம் தண்பர்களே...

    ReplyDelete
  2. சார்

    இந்த "உயிரைத் தேடி" முழு வண்ணத்தில் வந்தால் சிறப்பாக இருக்கும்....

    தாமதமாக வந்தாலும் பரவாயில்லை... தயவு செய்து ஆவன செய்யுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. போன மாதத்து அந்த கூகுள் மீட்டில் கூட இது பற்றிச் சொல்லியிருந்தேனே சார் ; படைப்பாளிகளே இதனை கொஞ்ச காலம் கழித்து கலரில் வெளியிடும் சிந்தனையில் உள்ளதால் தற்சமயத்துக்கு கலர் செய்திட அனுமதி லேது !

      Delete
    2. Good thing it’s released in its original way. No artificial makeup on great art of Jose Ortiz

      Delete
  3. தொடங்கிய வேகத்திலேயே முடிந்த பிபரவரி மாதம் போலவே பதிவும்.. I hope this is the shortest writeup by Editor ever published.. புத்தகங்களை வாசிக்க கிளம்புறேன்..

    ReplyDelete
  4. ஆசிரியருக்கு 🙏.
    உடல்நிலை எப்படி உள்ளதுங்க?. நலமா?.
    நலமுடன் இருக்க வேண்டும்.

    என்னங்க சட்டுனு முடிச்சுட்டீங்களே?பதிவை?.
    இந்த மாத புக்ஸ் வந்துவிட்டது.
    விளம்பரங்களே ஒரு காமிக்ஸ் படித்த உணர்வை தூண்டியது.
    கோடைமலருக்கு எதிர்பார்ப்பை உண்டாக்கி விட்டீர்கள்.அருமை.
    "உயிரைத்தேடி" கலரில் பல நண்பர்கள் கேட்டுள்ளார்கள். ஆவண செய்யுங்கள் சார்.
    டைம் ஆனாலும் தேவலை.

    உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் சார்.
    நன்றி 🙏 வணக்கம்.

    ReplyDelete
  5. உயிரை தேடி கலரில் தான் வெளி வரும் என்று சொன்னீர்களே இப்போ விளம்பரம் கருப்பு வெள்ளை என்று வந்திருக்கே??!!
    Please confirm Sir.

    ReplyDelete
  6. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  7. வணக்கம் சார்.

    உயிரைத் தேடி வண்ணத்தில் தருவதாகச் சொன்னீர்கள் சார் ?

    கறுப்பு வெள்ளையில் வெளிவருவதாக விளம்பரம் வந்துள்ளதே சார் ?

    ReplyDelete
  8. எலியப்பா

    இரண்டாவது இதழ் போலவே இந்த இதழும் சோடை போகவில்லை ஆனால் இரண்டாவது இதழ் போல் அசத்தல் குறைவே. கப்படிக்கும் கதை தவிர மீதி கதைகள் சிறுவர்களின் கற்பனைத் திறனில் குழைத்து தரப்பட்டுள்ளது. அதுவும் அந்த எறும்பின் காலில் மெட்டி... செம... (ஆங்கிலத்திலும் அதே வசனம் தானா சார்.. அல்லது உங்கள் கைவண்ணமா?)

    கானகக் கூத்துக்களும் ஓகே ரகம்

    அந்தியும் அழகே வழக்கம் போல் சிறப்பே . சுவாரசியமான இடத்தில தொடரும்... எப்ப ஏப்ரல் வரும் என்று இருக்கிறது

    குட்டீஸ் கார்னர் செம TOUGH..

    ReplyDelete
  9. // தல' டெக்ஸ் மட்டும் solid ஆக இடம் பிடிக்க, அவரைச் சுற்றி வாசம் செய்திடவுள்ள இதர நாயகர்கள் ஒன்றோ, மிஞ்சிப் போனால் இரண்டோ பேர் மாத்திரமே இருந்திடுவார்களென்று இனி எதிர்பார்க்கலாம் ! //

    ஆகட்டும் ஆபீஸர் :-) குறைந்தது மூன்று புத்தகங்கள் மாதம் தவறாமல் வர வேண்டுகிறேன் சார்.

    ReplyDelete
  10. உயிரைத் தேடி வண்ணத்தில் தான் வரும் எனும் நம்பிக்கையுடன் அடுத்த புத்தகத்தை படிக்க கிளம்புகிறேன்... சோடா

    ReplyDelete
  11. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  12. // நேற்றைக்கு கூரியர்களில் புறப்பட்டிருக்கும் 3 இதழ் காம்போவானது இன்றைக்கு உங்கள் கதவுகளைத் தட்டுமென்று எதிர்பார்க்கலாம் ! //
    இதுவரைக்கும் வரலை,நாளைக்குதான் போல...

    ReplyDelete
  13. வேதாளர் போன்றே ரிப்கிர்பியும் வந்திடுமா சார் ?

    இல்லை உள்ளே சித்திரங்களில் மாற்றம் இருந்திடுமா சார் ?

    ReplyDelete
  14. உயிரைத் தேடி பிளாக் அண்ட் ஒயிட்டா? வேஸ்ட்..ஸ்கிப்பிங்..

    ReplyDelete
  15. Edi Sir..
    எனக்கு மார்ச்'2022 மாத சந்தா புத்தகங்கள் இன்று வந்துவிட்டன..🤓👍

    1) Tex- பாலைவனத்தில் பிணந்தின்னிகள்.

    2) SODA

    3)எலியப்பா-3 (free)

    ReplyDelete
  16. மதிப்பிற்குரிய எடிட்டர் சார் ‌, உயிரைத் தேடி என்னைப் போன்ற வாசகர்களுக்கு ஒரு நீண்ட நாள் கனவு. இப்புத்தகம் கலரில் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். எனவே உயிரைத் தேடி வண்ணத்தில் வர ஏற்பாடு செய்ய வேண்டும். நன்றி.

    ReplyDelete
  17. பார்சலை இன்று பெற்றுக் கொண்டு விட்டேன். முதலில் படித்தது என் போன்ற குழந்தைகள் விரும்பும் எலியப்பாவைத் தான். அடுத்து சோடா. அப்புறம் தேவதைகள். நின்று நிதானமாக தலை. இதுதான் என் வரிசை. அப்புறம் இன்னொரு கோரிக்கை எடிட்டர் சார் லயன் காமிக்ஸில் முன்னர் வந்த ஒரு பக்க புலனாய்வு இன்ஸ்பெக்டர் கிரைமை மீண்டும் கொண்டு வாருங்கள்

    ReplyDelete
  18. ///தல' டெக்ஸ் மட்டும் solid ஆக இடம் பிடிக்க, அவரைச் சுற்றி வாசம் செய்திடவுள்ள இதர நாயகர்கள் ஒன்றோ, மிஞ்சிப் போனால் இரண்டோ பேர் மாத்திரமே இருந்திடுவார்களென்று இனி எதிர்பார்க்கலாம் !////

    ஆஹா....ஆஹா...ஆஹா.... இது டீல் ஆஃப் த இயர்....😍😍😍😍

    3புக்+ ஒரு இலவச இணைப்பு நல்ல திட்டம்....

    நடு நடுவே மானே தேனேனு குண்டுபுக்கு...செம செம சார்....

    ஐ லைக் இட்....

    சந்தாவையும் கட்டுக்குள் வைக்கும்...

    ReplyDelete
  19. இம்மாதம் நான்கும் மிதமான புத்தகங்கள் ஓரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்யுது....

    4ல் எலியப்பாவே அட்டைபடத்தில் கவருகிறது...

    டெக்ஸ் ஓவியங்கள் மிரட்டல் ரகம்....

    போர் முனையில் தேவதைகள்... முழு பக்க ஓவியங்கள் சும்மா அசத்துது...இது மாதிரி நாலைஞ்சி இருந்தாவே ஓரு பரவசம் வந்திடுது....

    சோடா ஏகப்பட்ட டயலாக்குகளுடன் அதற்கே உரிய அடர் வண்ணத்திலும் அருந்த அழைக்கிறது....

    தலையிருக்க வால் ஆடலாமா???

    பாலைவனத்தில் தல காத்துள்ளார்.....விசாரித்துட்டு வந்துடறேன்.....

    ReplyDelete
    Replies
    1. சேலம் TEX விஜயராகவன்
      நீங்கள் தலையிலிருந்து ஆரம்பியுங்கள் அண்ணா நான் வாலில் (எலியப்பாவில்) இருந்து தலைக்கு வருகிறேன்.

      Delete
    2. சதாசிவம்@ அப்படியே ஆகட்டும்...


      ///And இம்மாதத்து எலியப்பா இதழ் உங்களிடமிருந்து சில வினவல்களை வெளிக்கொணராது போனால் நான் ஆச்சர்யம் கொள்வேன் ! படிக்கும் போது புரியாது போகாது - நான் குறிப்பிடுவது எதையென்று !////

      ----இது எலியப்பா பற்றி எடிட்டர் சார் போன பதவில் சொல்லி இருந்தது... இது எதுனு கண்டுபிடிச்சி போடுங்க....!!

      Delete
  20. தலையின் மறுபதிப்பாக வர நான் நினைத்த மரண முள், கானக கோட்டை ஆகிய கதைகள் வெளிவந்துவிட்டன. பனிக் கடல் படலம் வர காத்திருக்கிறது.
    இன்னும் மறுபதிப்பாக வர விரும்பும் கதைகள்
    1 நள்ளிரவு வேட்டை
    2 பாலைவன பரலோகம்
    3 கானலாய் ஒரு காதல் மூன்று பாக
    சாகசம்
    விஜயன் சார் இதை சீக்கிரம் கொண்டுவர முயற்சி செய்வீர்கள் என்று நம்புகிறேன்

    ReplyDelete
  21. அநியாயம்...அக்கிரமம் சார்.இந்த 50ம் ஆண்டை மட்டுமாவது மாதம் தோறும் ஒரு குண்டு புக் போடவும்....இத் திட்டத்தை அடுத்த ஆண்டுக்கு மாற்றலாமே...

    ReplyDelete
  22. *10000 வாலா பட்டாசாய் சிதறடிக்குது இம் மாத டெக்ஸ் புத்தகம் .. அருமையான கதை .. ரொம்ப நாள் கழித்து இடைவேளை இல்லாமல் முழு மூச்சாய் 226 பக்கங்களையும் படித்து முடித்த கதை ..*

    *வித்யாசமான டிபரண்டான கதை களன் .. இது வரை இப்படி ஒரு கதை டெக்ஸ் வரலாற்றில் வந்ததே கிடையாது ..*

    சீக்கிரமே இப்புத்தகம் அவுட்டாப் ஸ்டாக் ஆகும் வாய்ப்பு உள்ளது டியர் எடி 😉😉😉

    ReplyDelete
    Replies
    1. ஒரு கிலோ வெல்லம் பார்சல் :-)

      Delete
  23. இம்மாத டாப் இதழ் .. சந்தேகமே இல்லாமல் எலியப்பா தான் .. கிட்டத்தட்டபத்து பக்கங்களே எனும்போதும் .. நன்கு ரசித்து சிரித்து படித்தேன் .. அதிலும் அந்த லவ் ஸ்டோரி இருக்கே லவ் ஸ்டோரி உற்சாகமான சிரிப்பை வரவழைத்து விட்டது. 😍😍😍

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் எலியப்பாவுக்கு ரசிகர்கள் வட்டம் பெரியதாகிறது :-).

      Delete
  24. சோடா ... ப்ச்ச்ச்ச்..

    வசனம் வசனம் வசனம் இதைத்தவிர இங்கே வேறொன்றுமில்லை ..

    இது சோடா தான் ( கலர் பானம் கிடையாது )

    ReplyDelete
  25. போர்முனையில் தேவதைகள்

    வித்தியாசமான அட்டையே... இதை முதலில் படிக்கத் தூண்டியது... நமது லயன் காமிகஸ்க்கு ஒரு வித்தியாசமான கதைக்களம்... பட்டாசாக கிளம்பும் கதை... தொய்வேயில்லாமல் கடைசி வரை பரபரப்பாகச் செல்கிறது... தீவிரவாதமும் பெண்களும் ஒரு மறக்க முடியாத combination..

    சித்திரங்களும் வண்ணச் சேர்க்கையும் அழகு... Crispஆன வசனங்கள் கதைக்கு மேலும் மெருகூட்டுகின்றன...

    இன்றைய உலக சூழலுக்கு ஏற்ற கதை... மிகச் சரியாக இந்த மாதம் வெளிவந்தது ஆச்சர்யமே...

    என்னைப் பொருத்தவரை... 9/10

    ReplyDelete
    Replies
    1. //வித்தியாசமான அட்டையே... இதை முதலில் படிக்கத் தூண்டியது...//

      Me too. Best cover art.

      Delete
  26. காலனோடு கூட்டணி

    SODA என்னைப் பொருத்தவரை என்றும் சோடை போனதில்லை... காலனோடு கூட்டணியும் அதற்கு விதிவிலக்கல்ல...

    பாஸ்டர் வேடத்தை தனது தாயை ஏமாற்ற மட்டுமே உபயோகித்து வந்த சாலமன்... இம்முறை ஒரு கறுப்பாட்டை சிக்க வைக்க வேடமேற்கிறார் நமது SODA...

    SODA vs CLEAR WATER...

    என்னைப் பொருத்தவரை... 8/10

    ReplyDelete
    Replies
    1. //SODA vs CLEAR WATER...//

      இந்தக் கதையின் முதுகெலும்பே இந்த பானங்களுக்கு மத்தியிலான போராட்டம் தான் சார் !

      Delete
  27. *எலியப்பா -3 ல் வந்த நான்கு கதைகளுமே இந்த முறை நகைக்க வைத்து உள்ளது சிறப்பு .திருப்பூர் ப்ளுபெர்ரி அவர்களின் புதல்வரின் ஓவியம் அருமை ..என்ன ஒன்று ஓவியத்தை சிறிது பெரிதாக காண்பித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்குமோ என்ற எண்ணமும் எழாமல் இல்லை..அதே போல் போனமுறை போலவே இந்த முறையும் சீனியரின் அனுபவங்கள் டக்கென்று முற்றுப்பெறுவது போலவே ஒரு பீலிங் சார் ..அவருக்கு இன்னொரு பக்கத்தை ஒதுக்கித்தான் கொடுங்களேன் சார்...

    மற்றபடி சுட்டிஸ்களுக்கான குட்டி இதழான "எலியப்பா " ஸ்வீட்டி"

    ReplyDelete
    Replies
    1. ஐ தாரை பரணிக்கு எலியப்பா பிடித்து உள்ளது :-)

      Delete
    2. பளிச்'வெள்ளை தாளை ரசிக்க ஆசையாக்கும் தலீவரே ?

      Delete
    3. ஐ தாரை பரணிக்கு எலியப்பா பிடித்து உள்ளது :-)

      #####

      ஙே ...எப்பப்பா பிடிக்கலைன்னு சொன்னேன் கிர்ர்ர்..

      *****

      பளிச்'வெள்ளை தாளை ரசிக்க ஆசையாக்கும் தலீவரே

      ****

      என்ன கொடுமை சார் இது..:-(

      Delete
    4. இப்போது எல்லாம் நீங்கள் காமெடி கதைகளை ரசிக்க ஆரம்பித்து விட்டீங்களே தாரை பரணி :-)

      Delete
  28. காலனோடு கூட்டணி..( படிக்காதவர்களும் படிக்கலாம்..)

    எளிமையான ஆனால் ரசிக்கும்படியான அட்டைப்படம்.. இதழில் அடுத்த வெளியீடு விளம்பரங்கள் ஆர்வத்தை கூட்டுகிறது அதுவும் முத்து கோடை மலர் விளம்பரமும் ,சுஸ்கி விஸ்கி க்ளாஸிக்ஸ் ஆக பயங்கரபயணமும் ,ராஜா ராணி ஜாக்கியும் என கண்டவுடன் மனதில் செம கொண்டாட்டம் இப்படி இப்படித்தான் இப்படிப்பட்ட மறுபதிப்பு காணாத பழைமையான இதழ்களை தான் மறுபதிப்பாக காண மெகா ஆசை சார் ..வரவேற்கிறேன்..இனி கதையை பற்றி.

    சீரியஸான கதை ,கார்ட்டூன் பாணி சித்திரங்கள் மனதில் அதன் கதையோட்டத்தை ரசிக்க வைப்பது சிரமம் தான்..ஆனால் இந்த சோடா மட்டும் எப்படி இந்த பாணியில் வெற்றி பெறுகிறார் என்பது மாபெரும் புதிராக உள்ளது.இந்த முறையும் கதை செம விறுவிறுப்பாக சென்று ரசிக்க முடிந்தது ..முடிவில் எதிர்பாரா திருப்பம் ஆனால் வில்லன் கொலையாளியின் (?) பழிவாங்கல்... நாயகனாய் இருந்தால் ஏற்றுக்கொண்டுதானே இருப்போம் .ஆனால் வில்லனாக இருப்பதால் அந்த முடிவு அவனின் மேல் பரிதாபத்தையும் ஏற்படுத்தி முழுமையாக வில்லனாக அவனை மனதினுள் நுழைய வைக்க முடியவில்லை சில குற்றங்களை இழைத்து இருந்தாலுமே கூட ..இன்னும் எவரும் படித்திரா சூழலில் கதை களத்தை பற்றி இன்னும் எழுத முடியவில்லை..ஆனால் ஒன்று "சோடா" மீண்டும் குலுக்கி எடுத்து குளிர்ச்சியை அளிக்கும் பன்னீர் சோடா போல் ஜில்..

    மீண்டும் சோடாவை அருந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  29. *போர் முனையில் தேவதைகள்*

    ( படிக்காதவர்களும் படிக்கலாம் )

    இரு பக்க அட்டைப்படமும் ,தலைப்பும் ஒரு மிகப்பெரிய நாவல் இதழ் போல தோற்றம் அளிப்பது உண்மை.உள்ளே சித்திரங்கள் கதையுடன் சீரியஸாக பயணிக்கும் பொழுது நிஜ உலகில் நாமும் பிரான்ஸில் உலவுவதை போலவே ஓர் எண்ணம்..போர் முனையில் தேவதைகள் என்ற தலைப்பை கண்டதும் தேவதைகள் தான் கதையின் ஆகஷன் நாயகிகள் என நினைக்க தோன்றியது ..ஆனால் கதையை படித்து முடித்தவுடன் தான் ..ஹீம் இதுவுமே முதல் இரு பக்கமே தெரிய வைத்த போதிலும் எதிர்பாரா சஸ்பென்ஸே ..அப்படியே ஒரு நிஜத்தில் காவல் துறை ,புலனாய்வு துறையில் நாம் நடமாடுவது போலவே கதை ஏற்படுத்தியதும் உண்மையே..கதை செல்லும் பாதையும் ,அதன் முடிவும் அருமை...ஆனால் போர் முனையில் தேவதைகள் கதை அப்படியே குறிப்பிட்ட மத உணர்வுகளை.. குறிப்பிட்ட மத வெறிகளை வெளிப்படுத்தி சென்ற பாங்கு படிக்கும் சில வாசகர்களை வருத்தப்பட வைக்கலாம் என்பதும் உண்மை.. மதத்தை பிண்ணனியாக கொண்டு வெளிவந்த இந்த கதையை விவரிக்க என்னை போன்ற சிறுவர்களால் கண்டிப்பாக முடியாது என்பதும் உண்மை.. இந்த இதழுக்கான விமர்சனங்களும் ,விவாதங்களும் பலமாக நண்பர்களிடையே எழலாம் .ஆனால் மதம் என்பதனை தவிர்த்து விட்டு கதையை மட்டும் பாரத்தால் ஓர் அட்டகாசமான ,விறுவிறுப்பான படைப்பே இந்த போர் முனையில் தேவதைகள்..

    ReplyDelete
    Replies
    1. ஒரு நிஜப் புலனாய்வின் தழுவல் இது என்பதோடு விட்டு விடுவோமே தலீவரே..!

      Delete
    2. இதுவும் உண்மையே சார்..

      Delete
  30. புத்தகங்களை குறைக்காதீர்கள் சார்.. பிளீஸ்...

    ReplyDelete
    Replies
    1. வழிமொழிகிறேன் சார்..

      Delete
  31. புத்தகங்களை குறைக்க வேண்டாம் சார். மெதுவாக படித்தாலும் முடித்து விடுவோம்

    ReplyDelete
    Replies
    1. மூச்சுவிட்டுக் கொள்ள நண்பர்களின் பெரும்பான்மைக்கு கொஞ்சம் அவகாசம் அவசியமாகிடுவது கண்கூடு நண்பரே ! "படிக்காத புக்ஸ்" பட்டியலை நீண்டு செல்ல அனுமதிப்பது, நிச்சயமாய் யாருக்குமே பிரயோஜனம் தந்திடாதே !

      Delete
    2. நான்கு புத்தகங்களை மூன்றாக குறைத்தால் பரவாயில்லை ஆசிரியரே

      Delete
  32. அடடே வந்துட்டேன். புத்தகங்களும் வந்து விட்டது இப்போது சோடா உடன்.

    ReplyDelete
  33. பார்சல் வந்துவிட்டதாம்..!

    இன்று அமாவாசை... கூரியர் ஆபிஸ் திறப்பதற்கு முன் கோவிலுக்கு வெளியூர் போனவன்.. ஆபிஸ் மூடியபிறகே திரும்பிவந்தேன்.!

    எனவே நாளைக்குத்தான் தல தரிசனம்.!

    ReplyDelete
  34. *வணக்கம் நண்பர்களே*

    *காமிக்ஸ் எனும் கனவுலகம் போட்டி எண் 15*

    *தோர்கல் போட்டித்தொடர் பகுதி 2*

    *போட்டி முடிவுகள்*

    *மொத்தப்பரிசுகள்- 25+1=26*

    *25 நபர்கள் 26 பரிசுகள்*

    *பம்பர் பரிசு 1*

    *பம்பர் பரிசு பெறும் சாம்பியனுக்கு அதனுடன் டெக்ஸ் க்ளாசிக் 2ம் சேர்த்து பரிசாக அளிக்கப்படும்*

    *அடுத்த11 இடங்களுக்கு டெக்ஸ் க்ளாசிக்ஸ் 2 பரிசாக வழங்கப்படும்*

    **ஊக்கப்பரிசு 1-2-3 ஆகிய மூன்று பிரிவுகளுக்கான பரிசுகளும் அந்தந்த புத்தகதிருவிழா சிறப்பு வெளியீட்டின் போது வழங்கப்படும்*

    *ஊக்கப்பரிசுகள் மற்றும் டெக்ஸ் க்ளாசிக் போன்றவை சந்தாவில் அடங்காத இதழ்களே*

    *ஊக்கப்பரிசு பிரிவு 3ஐ வென்ற நான்கு நண்பர்கள்*

    25. கிரிதரசுதர்ஷன் திருச்சி

    24. பரணிதரன் தாரமங்கலம்

    23. மாதேஸ்வரன் சேலம்

    21. ஜெயப்ரகாஷ் கோவை

    *ஊக்கப்பரிசு பிரிவு 2ஐ வென்ற ஐந்து நண்பர்கள்*

    20. யோகநாதன் பல்லடம்

    19. ஜான் சைமன் திருவண்ணாமலை

    17. M K ஸ்ரீராம் சேலம்

    16. பூபதி சந்தர்பூர்

    15. மணிமாறன் சென்னை

    *ஊக்கப்பரிசு பிரிவு 1ஐ வென்ற ஐந்து நண்பர்கள்*

    14. சிவக்குமார் திருப்பூர்

    13. மாதேஸ்வரன் கிருஷ்ணகிரி

    12. சரவணன் கரூர்

    10 . சிவலிங்கம் சென்னை

    8. ஜனார்தனன் கும்பகோணம்


    ((*ஊக்கப்பரிசு பிரிவு 1க்கான பரிசுப்புத்தகம்*

    *உயிரைத்தேடி கருப்பு வெள்ளை இதழ்*))

    *சிறப்பாக பங்காற்றி டெக்ஸ் கிளாசிக் 2 சிறப்பு பரிசைப் பெறும் பத்து நண்பர்கள்*

    22. குமரன் வேலூர்

    18. சரவணன் சின்னமனூர்

    11. முகமது ஹசன் பாரிஸ்(ஃப்ரான்ஸ்)

    9. Dr. A K K ராஜா கரூர்

    7. அப்பு சிவா ஆத்தூர்

    6. சத்யசாய்நாதன் வேலூர்

    5. கோவிந்தராஜ் பெருமாள் ஈரோடு

    4. சுசீந்தரகுமார் சேலம்

    3. ரம்யா (கடல்யாழ்) கோவை

    2. சுரேஷ் தனபால் திருவண்ணாமலை

    *இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக பங்காற்றியதோடு மதிப்பெண்களின் கூட்டுத் தொகையிலும் முதலிடம் பெற்று.. டெக்ஸ் க்ளாசிக் 2வைப் பரிசாகப் பெற்று... அத்தோடு... 2023ஆம் ஆண்டு சந்தாவான பம்பர் பரிசையும் கைப்பபற்றிய நண்பர்..*

    *1. விஜயராகவன் சேலம்*

    வாழ்த்துகள் நண்பர்களே...💐💐


    *போட்டியை வெகு திறமையாகவும் சுவாரஸ்யமாகவும் புதுமையாகவும் நடத்திக்கொடுத்த நமது அருமை நண்பர் பல்லடம் சரவணகுமார் அவர்களுக்கு குழுவின் சார்பில் இளம் டைகர் (Young Blueberry) ஆங்கில ஆல்பங்கள் அன்புப் பரிசாக வழங்கப்படும்.. நன்றி நண்பரே*

    ReplyDelete
    Replies
    1. போட்டி நடத்திய ,பரிசு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

      Delete
    2. முதல் பரிசு பெற்ற டெக்ஸ் விஜயராகவனுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்..

      Delete
    3. வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். ஸ்பெஷல் பாராட்டுக்கள் விஜயராகவனுக்கு. போட்டியை சிறப்பாக நடத்திய காமிக்ஸ் குழுவின் நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். தொடரட்டும் இது போன்ற போட்டிகள்.

      Delete
    4. பங்கேற்ற, பரிசு பெற்ற , நடத்தியவர்களுக்கு பாராட்டுக்கள்..

      Delete
    5. போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

      எனக்கு இளம் டைகர் ஆங்கில இதழ்களை பரிசளித்த கனவுலகம் குழு நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! அட்டகாசமான பரிசு!!

      Delete
    6. போட்டியில் கலந்துக் கொள்ள வாய்ப்பளித்த குழுவினருக்கும், போட்டியை சுவாரசியமாக நடத்திச் சென்ற அனைவருக்கும், கலந்துக் கொண்டு கலக்கிய வெற்றி பெறாத வெற்றி பெற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள்

      Delete
    7. போட்டியை நடத்தியவர்களுக்கும் கலந்துகொண்டு பரிசை ஜெயித்த நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

      Delete
    8. ஜெயித்தவர்களுக்கும், ஜெயத்தை விட்டுத் தந்தவர்களுக்கும், ஜெயிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தவர்களுக்கும் நம்மள் கி பாராட்டுக்கள் !

      பங்கேற்ற அத்தினி ஜனத்துக்கும் சுஸ்கி & விஸ்கி வண்ண ஸ்பெஷல் இதழ்கள் நமது அன்புடன் இருக்கட்டுமே !

      Organisersவாள் : பங்கேற்றோரின் மொத்த எண்ணிக்கையினை தெரிவியுங்கள்! புக்ஸ் ரெடியாகும் தருணத்தில் உங்களுக்கு அனுப்பி வைக்கின்றோம் !

      Delete
    9. காலப் பயணங்களை பிரித்து மேய்ந்து தெறிக்கவிட்ட நண்பர்களின் திறமைகளை என்னவென்பது...

      சிகரங்களின் சாம்ராட் டை ஊதித் தள்ளி விட்டார்கள்...அக்கு வேறு ஆணிவேராக...

      அதையும் பாராட்டி...

      பரிசும் தரும் பெரும்புலவர் சிவகாசி சௌ முவன்னா வினாவை கைகள் தட்டி பாராட்டி மகிழ்கின்றோம்.

      Delete
    10. ஜெயித்தவர்களுக்கும், ஜெயத்தை விட்டுத் தந்தவர்களுக்கும், ஜெயிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தவர்களுக்கும் நம்மள் கி பாராட்டுக்கள் !

      பங்கேற்ற அத்தினி ஜனத்துக்கும் சுஸ்கி & விஸ்கி வண்ண ஸ்பெஷல் இதழ்கள் நமது அன்புடன் இருக்கட்டுமே !

      Organisersவாள் : பங்கேற்றோரின் மொத்த எண்ணிக்கையினை தெரிவியுங்கள்! புக்ஸ் ரெடியாகும் தருணத்தில் உங்களுக்கு அனுப்பி வைக்கின்றோம் !

      ######


      வாவ்...வாவ்...சூப்பர் சார்... வாட்ஸ் அப் குழுவில் போட்டி நடந்தாலும் வாசகர்களை ஊக்கப்படுத்தும் தங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை சார்...நன்றி நன்றி நன்றி..

      Delete


    11. காமிக்ஸையும், காமிக்ஸை நேசிப்பவர்களையும் நீங்கள் எந்த அளவு நேசிக்கிறீர்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம் சார்.

      ஒரு சிறு வாட்ஸ்அப் குழுவில் நடைபெற்ற போட்டிக்கு தங்களின் பங்களிப்பு மிகுந்த உற்சாகமூட்டுகிறது.

      ரொம்ப நன்றிங்க சார்.

      உங்களுடைய பாராட்டும் அங்கீகாரமும் குழுவின் செயல்பாடுகளை மேன்மேலும் அதிகரிக்கச் செய்யும்.

      அனைத்து நண்பர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்!!

      Delete
    12. பரிசுக்கு மேல் பரிசு குவிகின்றது . ஆசிரியருக்கு நன்றி. காமிக்ஸ் கனவுலகம் குழுவினருக்கும் நன்றிகள் & பாராட்டுக்கள்.

      Delete
    13. பரிசுக்கு மேல் பரிசு குவிகிறதே... செம செம

      Delete
    14. ///ஜெயித்தவர்களுக்கும், ஜெயத்தை விட்டுத் தந்தவர்களுக்கும், ஜெயிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தவர்களுக்கும் நம்மள் கி பாராட்டுக்கள் !

      பங்கேற்ற அத்தினி ஜனத்துக்கும் சுஸ்கி & விஸ்கி வண்ண ஸ்பெஷல் இதழ்கள் நமது அன்புடன் இருக்கட்டுமே !

      Organisersவாள் : பங்கேற்றோரின் மொத்த எண்ணிக்கையினை தெரிவியுங்கள்! புக்ஸ் ரெடியாகும் தருணத்தில் உங்களுக்கு அனுப்பி வைக்கின்றோம் !///


      வாவ்... 😍😍😍😍😍
      நமது குழுவின் போட்டிகளுக்கு நீங்கள் பரிசளிப்பது இது இரண்டாவது முறை.. ஏற்கனவே ஒருமுறை லயன் 400ஐ பரிசளித்து இருக்கிறீர்கள்.. மிக்க நன்றி சார்..😍🙏

      உங்களுடைய பாராட்டும் பரிசுகளும் புதிய உத்வேகத்தை கொடுக்கின்றன... மிகவும் பெருமைப்படுகிறோம்.சார்..!

      டீட்டெய்ல்ஸை உங்களுக்கு நன்றியோடு அனுப்பி வைக்கிறோம் சார்.!

      Delete
    15. //உங்களுடைய பாராட்டும் பரிசுகளும் புதிய உத்வேகத்தை கொடுக்கின்றன... மிகவும் பெருமைப்படுகிறோம்.சார்..!//

      +1111

      Delete
    16. ஆசிரியர் சார் அவர்களின் அறிவிப்பு "icing on the cake" போல இருக்கு இதில் கலந்து கொண்டவர்களுக்கு எதிர்பாரா இன்ப அதிர்ச்சி சார்.

      இது மற்ற நண்பர்களையும் உற்சாக படுத்தும் விதமாக இருக்கும்.

      Delete
    17. வாவ்…சூப்பர்.

      😍😍😍😍😍

      Delete
    18. அட, பரீட்சைக்குக் கூட ஆளாளுக்கு இத்தனை மெனெக்கெட்டிருக்க மாட்டோம் ;ஆனால் இன்றைக்கு நம்ம பொம்ம புக்குக்கோசரம் இவ்வளவு பேர் , இவ்வளவு நேரங்களையும் , முயற்சிகளையும் அள்ளித் தெளிப்பது லேசுப்பட்ட சமாச்சாரமா - என்ன நண்பர்களே ? அதனை அங்கீகரிக்காது போனால் சாமி கண்ணைக் குத்திப்புட மாட்டாரா ? அதுவும் கோலி குண்டாட்டம் வாகாக இருக்கும் போது ?

      Delete
    19. அதுவும் இந்த சிகரங்களின் சாம்ராட் எத்தினி பேரு சேர்ந்தாலும் முடிச்சு அவிழ்க்க முடியாத புதிர் கதை, ஆளாளுக்கு மண்டை காஞ்சது தான் மிச்சம்.

      Delete
    20. The sheer amount of original and Editors prizes are mind-boggling and make this show all the more credible - hats off folks !

      KOK,

      May be make it a 11 month long event - monthly once and finals on the 12th Month - name it TCPL - Tamil Comics Premiere League !!

      Editor to note: this could be good publicity as well for our comics !

      Delete
    21. /* பரிசும் தரும் பெரும்புலவர் சிவகாசி சௌ முவன்னா வினாவை கைகள் தட்டி பாராட்டி மகிழ்கின்றோம் */

      That is ::

      புலவர் சிவகாசி சௌ ஸ்ரீ மு வி 

      அந்த King ஸ்பெஷலோ என்னவோ படிச்சது தாங்காம யாம் வைத்த நாமகரணம் ! ;-)

      Delete
    22. ///monthly once and finals on the 12th Month - name it TCPL - Tamil Comics Premiere League !!///

      its a big idea Rag ji..! But little hard to execute i think.!

      Delete
    23. பாராட்டி வாழ்த்து தெரிவித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏

      வாழ்த்தியதோடு தானும் ஒரு பரசளித்த ஆசிரியர் சாரின் அன்புக்கு ஈடு இணையேது... ரொம்ப மகிழ்ச்சிங் சார்...🙏😍


      ஒரு மாதம் இந்த போட்டிக்காக உழைத்து சிறப்பாக நடந்திய அருமை நண்பர் சரவணகுமார்,பல்லடம்& அட்மீன்கள் மஹி& KOK மூவருக்கும் பாராட்டுகள்...

      தொடருங்கள் நல்ல பணியை....

      ஆசிரியர் சாரிடம் இருந்து கிடைத்துள்ள அங்கீகாரம் மிகவும் பெருமை படவைக்கிறது, குழுவுக்கு...!!!

      Delete
    24. ///monthly once and finals on the 12th Month - name it TCPL - Tamil Comics Premiere League !!///

      Its very difficult to maintain the momentum through out the hole year ji....

      Already we participants travel with thorgal in dreams......!!!!🤣

      Especially "The master of the mountains "!!!

      Stil some questions left without conclusive answer....!!!

      Delete
    25. அதிலே பாத்தீங்கன்னா பரிசுகளை தர்றதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு ! "போட்டி வைச்சிருக்கோம் சாரே ; நிங்களும் கலந்து கொள்ள வேணும் !" ன்னு குண்டைப் போட்டுப்புட்டா இந்த தருமி எந்த மண்டபத்திலே போய் பாட்டெழுதி வாங்கிக்கினு வர்றது ? அந்த மேரி சிக்கல்லிலே நம்மளை கோர்த்து விடாத அந்த பச்சை மண்களுக்கு இது கூடச் செய்யங்காட்டி எப்புடி ?

      Delete
    26. //ஜெயித்தவர்களுக்கும், ஜெயத்தை விட்டுத் தந்தவர்களுக்கும், ஜெயிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தவர்களுக்கும் நம்மள் கி பாராட்டுக்கள் !

      பங்கேற்ற அத்தினி ஜனத்துக்கும் சுஸ்கி & விஸ்கி வண்ண ஸ்பெஷல் இதழ்கள் நமது அன்புடன் இருக்கட்டுமே ! //

      விஜயன் சார் @ சூப்பர்.

      Delete
  35. Some people are asking about our details in FB ...i asked them to contact office..
    If we share the message may be some people can join

    ReplyDelete
  36. பாலைவனத்தில் பிணம் தின்னிகள் அட்டைப்படமும் ,பக்க அளவுகளும் அட்டகாசப்படுத்துகிறது ..இன்னமும் புரட்டி ,புரட்டி ரசித்து கொண்டு தான் இருக்கிறேன் ..இன்று மாலை தான் வன்மேற்கின் சூப்பர் ஸ்டாரோடு உலவ போகிறேன் ..:-)

    ReplyDelete
  37. சோடா 

    முதல் 5 பக்கங்கள் என் பொறுமையை சோதித்தது என்றால் அது மிகையல்ல.. உண்மையில் அந்த 5 பக்கத்துக்கு மேல் படிக்க பொறுமை இல்லாமல் புத்தகத்தை வைத்து விட்டு படம் பார்க்க ஆரம்பித்து விட்டேன். இன்று காலை என்னிடம் மொபைலும் இல்லாமல் இருந்தது. பால்காரருக்கு காத்திருக்கும் வேளையில் சும்மா புரட்டுவோம் என்று விட்டு விட்டு சென்ற பக்கத்தில் இருந்து தொடங்கினேன். சரியாக 20 நிமிடங்கள். பர பர என்று நகர்ந்த பக்கங்கள், படங்கள், வசனங்கள். A1 ரகம். கதை இப்படி போகப் போகுதோ என்று நினைத்திருந்தால் அது வேறு ஒரு பக்கத்துக்கு அழைத்து செல்கிறது. இப்படி கதையை யூகிக்க முடியாமல் திணற அடித்தது. வில்லன் கொலை செய்ய நினைத்த அந்த ரோலர் ஸ்கேட் ஆசாமி கைதாகி கிளைமாக்சில் சோடாவுக்கு உதவுவது என்பது கொஞ்சம் நம்பும்படியாக இல்லை. மற்றபடி ஒரு லைட் ரீடிங்கு சிறந்த கதை. விறுவிறுப்பான கதை.

    ReplyDelete
  38. மார்ச் இதழ்களை இன்று வெற்றிகரமாக கைப்பற்றியாச்சி...

    ReplyDelete
  39. பிப்ரவரி இதழ்களை நேற்று முடித்தாயிற்று...
    1.ஒரு வெள்ளைச் செவ்விந்தியன் அசத்தல்,பின்பாதிக்கு மேல்தான் பரபரப்பு தொற்றுகிறது,ஆர்ட் ஒர்க்கும்,புத்தக ஆக்கமும் செம...
    2.ப்ளூகோட் காதல் + காமெடி என அசத்தியது...
    3.மேகி கேரிஸன் ஒருமுறை வாசிப்புக்கு ஏற்ற இதழ்...
    4.வேதாளன்-பிரம்மாண்டமான ஆக்கம்,ஓவியங்கள் நிறைவு,கதையளவில் அக்காலக்கட்டத்தில் நாமும் வேதாளருடன் உலாவத் தயராக இருப்பின் உறுத்தலின்றி வாசிக்கலாம்...
    சில நாயகர்கள் கதையளவில் வலுவாக இருப்பினும் பெரும் வெற்றியை ஈட்ட திக்கி திணறுகின்ன்றனர்,ஆனால் ஆவரேஜ் வாசிப்பில் (என்னளவில்) உள்ள வேதாளர் போன்ற கதைகள் எளிதில் பெரும் வெற்றியை ஈட்டுவது வியப்பையே அளிக்கிறது...

    ReplyDelete
  40. சர்ப்ரைஸ்....
    1.எலியப்பா அட்டைப்படம் அருமை
    2.சுஸ்கி விஸ்கி.....உயிரைக் தேடி...விளம்பரங்கள் .இடம் கெடச்சிருந்தா சென்னை புத்தக விழா இதழா இருந்திருக்குமா சார்
    3.ஜம்போ தேவதைகள் மிஸ்ஸிங்

    ReplyDelete
  41. Replies
    1. இரவு புத்தகங்களை பாருங்க - பகிர்ந்தா 'உள்ள' வச்சிடப்போறானுவ !

      Delete
    2. பாத்துட்டு எனக்கும் அனுப்பிவைங்க ஸ்டீல்.. அந்த இரவு புத்தகங்களை.!

      Delete
    3. ராகவன் @ குசும்பு:-)

      Delete
  42. போர்முனையில் தேவதைகள்

    இம்மாத புத்தகத்தில் முதலில் படிக்க தூண்டியது வித்தியாசமான அட்டை படமே.

    பர்தாவுடன் கண்ணாடியில் முகம் பார்க்கும் பெண், அருகில் துப்பாக்கி என ஒரு அருமையான வாசிப்பிற்கு நம்மை தயார் படுத்திவிடுகிறது.

    ஆரம்பமே அமர்க்களம் பாரிஸ் ஈபில் டவர் ஒரு பிளேன் கொண்டு இடிக்குமாறு கனவுடன் எழுந்திருக்கும் பெண். அங்கு ஆரம்பிக்க்கும் பரபரப்பு இறுதிவரை தொடர்கிறது.

    பொதுவாக படங்கள் மற்றும் வெப்சீறிஸ்களில், ஆண் தீவிரவாதிகள் பற்றியே இருக்கும் இங்கு பெண்கள் சார்ந்த கதைக்களம் முற்றிலும் புதியதே, அதுவே இதன் மிக பெரிய பலம்.

    ஆர்ட் ஒர்க் அதகளம் அப்படியே நிகழ்வுகளை நமது கண் முன் கொண்டு வந்துவிடுகிறது. பெண் போராளிகள், அவர்களை கண் காணிக்கும் நபர்கள், மேல் இடத்தில் இருக்கும் நபர்கள் அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல்கள் அனைத்துமே நன்றாக இருந்தது.

    ஒரே ஒரு இடத்தில் வரும் பாஸ்வாள் தவிர மொழிபெயர்ப்பு அருமை.

    ஜம்போ இதழ்களில் மற்றும் ஒரு வெற்றி கதை.

    ReplyDelete
  43. டெக்ஸ் வில்லரோடு பாலைவனத்துக்கு டூர் போயிட்டு வரலாமின்னு இருக்கேன்..!

    டெய்லி ஒரு டெக்ஸ் கதை படிச்சா லிவருக்கு ரொம்ப நல்லதாமே.. பிரேசில்ல பேசிக்கிட்டாங்க.!

    ReplyDelete
    Replies
    1. யோவ் கிட்டு விமர்சனத்தை போட்ட கையோடு உம்முடைய இந்த பதிவை காண்கிறேன் ..அவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ நா நம்புறேன்யா அதுக்காகவாது ஆசரியரை மாதம் ஒரு டெக்ஸ் என்பதை தடைபோடாமல் செய்ய வேண்டும் கதையை படிய்யா செம சூப்பரு..தாமதிக்காதே..

      Delete
    2. உங்க உத்தரவை என்னிக்காச்சும் மீறியிருக்கேனா தலீவரே..!? அதுவும் இவ்வளவு அன்பா சொல்லும்போது தட்டமுடியுமா.?

      இதோ..உடனே...

      புக்கைத் தூக்கி பரண்மேல போட்டுடுறேன்.. அஞ்சாறு மாசத்துக்கு தீண்டுறதாவே இல்ல..!

      ஜெய் ஜெய் தலீவர்..💪💪

      Delete
  44. பாலைவனத்தில் பிணம்தின்னிகள்


    சரியாக ஒண்ணரை மணி நேரம் குனிந்த தலை நிமிராமல் நானும் பாலைவனத்தில் உலாவி கொண்டு இருந்தேன் என்றால் நம்ப முடிகிறதா ..?! ஆனால் உண்மை..

    "எல்லையற்று பரந்து விரிந்த கிடந்த அரிஸோனா பாலைவனப் பரப்பில் தகிக்கும் கோடையில் ஒருநாள் .." என ஆரம்பித்து பயணித்த நான் "உங்களுடைய நட்பை ஆயுளுக்கும் மறக்க மாட்டேன் " என லிஸா சொல்லும் வரை நான் இங்கு இல்லவே இல்லை..

    வெறும் டமால் டுமீல் கதை என்பார்கள் சிலர் .. டெக்ஸ் நிஜத்தை ஒட்டியவர் அல்ல என்பார்கள் சிலர் ..ஒரே பாணி ஒரே முடிவு என்பார்கள் சிலர்.. ஆனால் வாசிக்கும் நேரத்தில் அவர்களையும் அவர்களுடனே பயணிக்க வைக்கும் திறமை என்னை பொறுத்தவரை டெக்ஸ்க்கு மட்டுமே உண்டு ..சில நாயகர்களும் இல்லாமல் இல்லை..ஆனால் இத்தனை வருடமாய் ..,இத்தனை சாகஸங்களை கண்டும் ஒவ்வொரு முறையும் நம்மை வன்மேற்கில் வாசிப்போரையும் பாதுகாப்போடு அழைத்து செல்கிறாரே இந்த டெக்ஸ் இவரை தவிர வேறு என்ன வேண்டும் எங்களுக்கு..செம ..செம..செம..அட்டகாசமான சரவெடி கதை சார் பாலைவனத்தில் பிணம்தின்னிகள்..அதிரடி ஆக்‌ஷன் கதையில் இறுதியில் மனதில் ஒரு பாரத்தை ஏற்றி சந்தோசமாய் முடிவுரை அமைப்பது டெக்ஸ்க்கே உரித்தான ஒன்று போல...அதிலும் சித்திரங்கள் அடேங்கப்பா அப்படியே நிஜத்தை கண்முன் காட்டுகிறது ..அட்டைப்படமும் சரி ..உள்பக்க சித்திரங்களுக்கும் சரி ,மொழிப்பெயர்ப்பிற்கும் சரி பெரிய பெரிய பூங்கொத்து பாராட்டுகள் சார்...இந்த மாதம் வெளிவந்த அனைத்து இதழ்களின் கதைகளுமே அட்டகாசம் தான் ..ஆனால் பாலைவனத்தில் பிணம் தின்னிகள் அதற்கும் மேலே மேலே மேலே...நண்பர்களே ..டெக்ஸை ஓரம் கட்டும் சில நண்பர்களே தயவு செய்து இந்த இதழை தவறவிட்டு விடாதீர்கள் ..பின்னர் கண்டிப்பாக இந்த இதழை தேடி அலைய நேரிடும்

    அவ்வளவு தான் சொல்ல முடியும் என்பதோடு இதழை அருகிலியே சில நாள்களுக்கு வைத்து கொள்ள போகிறேன் மீண்டும் மறுவாசிப்பிற்கு. அனைத்தையும் மறக்க வைத்து .அட்டகாசமான அனுபத்தை அளித்த பிரகாஷ் பப்ளிஷர்ஸ் குழுவினர் அனைவருக்கும் ஒரு ராயல் சல்யூட் ..

    ReplyDelete
  45. பூனைக்குட்டிகளும் குரங்கு குட்டிகளும்


    பூனை தனது குட்டியை வேறிடம் செல்லும்போது வலிக்காது வாயில் கவ்விச் செல்லும்.பூனைக்குட்டிக்கு யாதொரு சிரமமில்லை.

    குரங்கு குட்டிகள் நிலை வேறு.தனது தாயின் மடியை இறுக்கிக் கட்டிக் கொள்ளவேண்டியகட்டாயமுண்டு.
    தாய் குரங்கு கிளை விட்டு கிளையும்
    மரம் விட்டு மரமும் தாவும். கீழே விழாது இருப்பது குரங்கு குட்டியின்
    சாமர்த்தியத்தைப் பொறுத்தது.

    டெக்ஸ் கதைகள் தமது எளிய நடை , பலவித பலப்பரீட்சைகள் இன்னும் பல காரணிகளால் பூனைக்குட்டிகள்
    என மாற வாசகர்கள் தாய் பூனைப்
    போல் நெஞ்சத்தில் சுமந்து செல்கிறார்கள்..அறிமுகமான ஒரு கதை என்ற நிலையிலிருந்து இன்றோ தனித்தடம் என்ற உயர்நிலையில் டெக்ஸ் கதைகள்.


    லக்கி லூக் நீங்கலாக பிற கதைகள்
    குரங்கு குட்டிகள் போல வாசகர்கள்
    நெஞ்சை பிடித்துக்கொள்ள வேண்டிய நிலை..வரைகதை ஆரண்யத்தில் வழக்கமான கதைகள்,
    கிராபிக் நாவல்கள்,ஜம்போ போன்ற விருட்சங்களில் வாசகர்கள் எனும் வான் கவிகள் அங்குமிங்கும் தாவ கீழே விழுந்த குரங்கு குட்டிகளின் எண்ணிக்கைதான் எவ்வளவு?

    பொடியர்கள் எனும் கு.கு.
    தாத்தா எனும் கு.கு.
    கமான்சே எனும் கு.கு

    இன்னும் பல ..அதில் வருத்தமே .

    இந்த மாசி மாத பூனைக்குட்டியாய்
    பாலைவனத்தில் பிணம் தின்னிகள்

    9.5/10

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் பூனைக்குட்டி

      பொடியர்கள் மற்றும் கமான்சே குரங்கு குட்டி

      அப்போ

      டைகர் என்ன தேவாங்கு குட்டியா.?

      (ஆராச்சும் அவர் புலிக்குட்டின்னு தூக்கிட்டு வந்திங்க.. க்ர்ர்ர்ர்.. தலீவரைவிட்டு குதறிப்புடுவேன் குதறி..!)

      Delete
    2. அதிகாரி பூனை குட்டின்னா தலைவன் புலிக்குட்டி தான்..

      Delete
  46. போர்முனையில் தேவதைகள்

    பொதுவாக இம்மாதிரி கதைகளை தவிர்ப்பது நலம் என்பது எளியேனின் அபிப்பிராயம்

    ReplyDelete
    Replies
    1. உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு பின்னூட்டம் வருதுன்னா அதை உடனே படிச்சு ஏன் சொன்னீங்கன்னு தெரிஞ்சுக்கற ஆவல் கூடுதுங்க சார்.

      Delete
  47. அட்டைப் படம் கண்ணாடிய மிஞ்சி அட்டகாச ஈர்ப்பு தருது அண்டர் டேக்கரட்டை போல......மேட் ஃபினிச விட இது அட்டகாசம் சார்...எலியப்பா அட்டையும் ஈர்க்குது....டெக்ஸ் அட்டை என் மகனையும் ஈர்க்க கதை சொல்கிறேன் ...குதிரைக் கதை...சித்திரங்கள் அதகளம்னா நம்ம சோடா கலரிங்ல வித்யாசமா தூள் கிளம்புவது போல தோண்றுவது எனக்கு மட்டும்தானா...அப்படியே தாள்களில் மிதக்கும் நிரம்பிய எழுத்துக்களால் மனம் தளும்புது....சூப்பர் சார் ...வண்ணங்கள் ஐ டாப்பான லார்கோ....வித்தியாச வண்ண அந்த மூனு பாக அம்மானுஷ்ய கதைகளின் வண்ணத்ல கலந்து கட்டியதால்..இவைகளை மிஞ்சுவதால் இது வரை வந்த வண்ணத்லயே டாப்பிலிவ்வண்ணமே...போர் முனை தேவதைகள் புத்தகம் வந்த பின்

    ReplyDelete
  48. தலைமையாசிரியர் நிதானமா எழுதுகிறார் போல....பரவாயில்லை சார்....உங்களைப் போல ....சாரி சாரி அவுங்கள போல நீங்களும் பதிப்பகங்கள சுத்துரீங்க...தொடரட்டும் வரலாறு....முத்துவின் காமிக்ஸ் பிதாமகனுக்கோர் வாழ்ந்து...பதிவாய்

    ReplyDelete
  49. ஆனா கோடை மலர்னா ஏழெட்டு கதைகள்தான சார் பழங்காலத்துல...சிண்ட்ரெல்லாவுக்காக இளவரசர் வெய்ட்டிங்

    ReplyDelete
    Replies
    1. உங்க வீட்டு இளவரசர் 3 வயதிலேயே மீன் பிடிக்க ஆசை படுகிறாராக்கும்:-)

      Delete
  50. போர்க்கால வேகத்தில் போமுதே வந்தடைந்து...நன்றிகள் ஆசிரியரே... இரவு வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. // ஆசிரியரே... இரவு வருகிறேன் //

      தளத்தை காவல் காக்கும் வேலையாலே நைட்டு ;-) சொல்லவே இல்ல மக்கா:-) நைட் டூட்டிய ஒழுங்கா பாருலே :-)

      Delete
  51. சோடா செம சோடா. ஐ என்ஜாய்ட்

    ReplyDelete
    Replies
    1. பக்கம் 37 உள்ள சேஸிங் சீனில் சோடா வேகமாக நிறுத்தும் அந்த ஓவியத்தை பாருங்கள் ஓவியரின் மெனக்கெடல் தெரியும். கார்டூன் பாணியில் கதை என்றாலும் ஓவியர் மிகவும் சிறப்பாக பங்காற்றி உள்ளார்.

      Delete
    2. பக்கம் 33 -ஐ சொல்கிறீர்களா பரணி?
      பக்கம் 37-ல் சேஸிங் ஸீன் ஏதுமில்லையே?

      Delete
    3. புத்தகம் கையில் இல்லை இப்போது, சேஸிங் முடியும் போது சோடா வேகமாக காரின் பிரேக் அழுத்தியதால் நான்கு டயர்களின் தடங்களை வரைந்து இருப்பது போல் உள்ள படத்தை சொன்னேன். அந்த பக்கத்தின் எண் 37 என நினைவு. நான் ஒரு வேளை பக்கத்தின் எண்ணை தவறாக சொல்லி இருக்க வாய்ப்புள்ளது.

      Delete
  52. சார் 4 புத்தகங்களையும் படித்து முடித்து விட்டேன். சும்மா சூப்பர்.

    என்னை பொறுத்த வரை இந்த மாதம் சோடா தான் டாப். அட்டகாசமான கதை. எதிர்பாராத டுவிஸ்ட். சாலமன் எப்போதும் ஹிட் தான்.
    எனது மதிப்பெண் 9/10

    போர்களத்தில் தேவதைகள் நான் நினைத்த கதை வேறு ஆனால் வந்த கதை வேறு. செம்ம பாஸ்ட் ஆன புலனாய்வு கதை. புத்தக அட்டையை பற்றியும் ஓவியங்கள் பற்றியும் சொல்லியே ஆகவேண்டும் அவ்வளவு அருமை. கையில் இருந்து சும்மா வழுக்கி கொண்டு செல்கிறது புத்தகம். மொத்தத்தில் நன்றாக இருந்தது.

    எனது மதிப்பெண் 8/10

    கடைசியாக படித்து டெக்ஸ், போன வருடம் வந்த கதைகளை ஒப்பிடும் போது இந்த கதை ஒரு மாற்று குறைவே. கார்சன் வரும் பாகங்கள் ரொம்பவே ரசிக்கும் படி இருந்தது. ஆனால் கிட் வில்லரை சுத்தமாகவே டம்மியாக ஒரு கதையில் பார்ப்பது இதுவே முதல் முறை.

    சண்டைகளும் ஒன்றும் அந்த அளவுக்கு பரபரப்பாக இல்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு சராசரி டெக்ஸ் கதை தான்.

    எனது மதிப்பெண் 7/10

    ReplyDelete
    Replies
    1. // சண்டைகளும் ஒன்றும் அந்த அளவுக்கு பரபரப்பாக இல்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு சராசரி டெக்ஸ் கதை தான். //

      புலி ரசிகர் கிட்ட இருந்து என்ன கிடைத்தாலும் சந்தோஷம் தான்::-)

      Delete
  53. வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  54. போர்முனையில் தேவதைகள்:

    கதை என்னவோ ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகவே செல்கிறது. ஆனால் கையில் எடுத்துக் கொண்ட கதையின் சாரம்சம் தான் சிலரது பார்வையில் Betterராகவும், சிலருக்கு Bitter ராகவும் உள்ளது. இருவர் தலைமையின் கீழ் 5 பெண்கள் தங்கள் மதத்தின் கொள்கையின் பொருட்டு Suicide bombers
    ஆகத் துணிவதும், அதில் வென்றார்களா? இல்லையா என்பதுதான் கதை.

    ஏற்கனவே இதைப் போல ஊடங்களிலும், திரைப்படத்திலும் நிறைய சொல்லப்பட்டதுதான் என்றாலும், ஆண்களுக்குப் பதில் இதில் வித்தியாசமாக பெண்ணியவாதிகளைக் களமிறக்கியுள்ளர். அதிலும் வெறும் பதினாறே வயதுடைய ஒரு இளம் பெண் Just do it என வாசகம் போட்ட பனியனுடன் Suicide bomber -ராக வருவதை என்னவென்பது? ரொம்ப Sensitive வான சப்ஜெக்ட் இப்பொழுது இந்த பொம்மைப் புக்லெயும் என்பது தான் கொஞ்சம் நெருடலாகவுள்ளது. லயன் / முத்து குழுமத்தில் இதுவரையில் வந்துள்ள 2 இதழ்கள் மட்டுமே என்னை நெளிய வைத்துள்ளன, முதலாவது ஒரு தோழனின் கதை, இப்பொழுது போர்முனையில் தேவதைகள் இதழ். இந்த கதையை வெளியிடாமல் தவிர்த்திருக்கலாமோ? என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

    ReplyDelete
  55. காலனோடு கூட்டணி

    முன்னொரு நாள் ரேவதி மோகனுக்கு செய்ய முற்பட்டதுதான்.

    பிறிதோர் நாள் ஏதோ ஒரு தமிழ்ப்படத்தில் வழக்கறிஞர் ஒருவர் செய்தது போல்தான்.

    கதையின் கரு அப்படிப்பட்டதுதான்.

    ஆனால் கதை சொல்லப்பட்ட விதம் மிக அருமை..

    பென் கதாபாத்திரம் நினைவில் நிற்கும்படி செய்தது கதாசிரியரின் திறமை...

    சோடா தனித்துவம் பெறத் துவங்கிவிட்டதாகத் தோன்றுகிறது.

    9/10

    ReplyDelete
  56. டெக்ஸ் (தலைப்பு ஒரு மாதிரி இருந்தாலும்) மற்றும் போர் முனையில் தேவதைகள் 2-ம் செம மாஸ் வர வர
    கி நா எனக்கும் பிடிக்க ஆரம்பிச்சிட்டது

    ReplyDelete
  57. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  58. பாலைவனத்தில் பிணம்தின்னிகள் - செமையாக இருந்தது முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை விறுவிறுப்பு + சஸ்பென்ஸ் + ஆக்சன் என அட்டகாசமான வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது. இந்த வருடத்தின் முதல் புதிய டெக்ஸ் கதை சூப்பர்.

    ReplyDelete
  59. எலியப்பா!
    ஸீனியர் எடிட்டர் விவரிப்பு சுவாரஸ்யமாக உள்ளது.அகவை காரணமாக கொஞ்சமாக எழுதினாலும் க்ரிஸ்பாக எழுதுகிறார்.

    போகப் போக சிங்கத்தின் சிறுவயதில் may be eclipsed by அந்தியும் அழகே it seems.:)

    எலியப்பாவின் பிற பகுதிகளால் வசீகரிக்கப்படும் வயது குழந்தைகள் இப்போது யாரும் இல்லை என்றாலும் சில வருடங்களுக்குப் பின் இவை தேவைப்படும் என்பதை இப்போதுதான் உணர்கிறேன்..

    பத்திரமாக இவற்றை தனியே சேகரிக்க வேண்டும்.

    ReplyDelete
  60. அணு ஆயுதப் போருக்குப் பிறகு உலகில் எஞ்சிய மனித உயிரினங்களின் வாழ்நிலை எவ்விதமெல்லாம் இருக்கும் என ஒரு புத்தகம் அற்புதமாக புனையப்பட்டுள்ளது!

    உலகப் போர் மூழுமோ என்ற பீதியில் உலகமே இருக்கும் தற்சமயத்தில் படைப்பாளியின் தூரிகை விளையாடியிருக்கும் அப்புத்தகம் அற்புதமாய் தோன்றுகிறது!

    நிராதரவான காலத்திலும் எதிர்வரும் வாழ்நாட்களை எதிர் கொள்ளும் இரு இளைஞர்களின் வாழ்க்கைப் பயணம் உண்மையிலேயே உயிர் வாழ்தலின் அற்புதத்தை அருமையாக விளக்குகிறது!

    முடிந்தால் முயற்சியுங்கள் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. என்ன புத்தகம்???

      Delete
    2. ///என்ன புத்தகம்???///

      உங்கள் வீட்டு புத்தக அலமாரியிலேயே இருக்கும் நண்பரே!

      Delete
  61. அட்டைப்படம் கண்ணாடி தீவிரவாதியாய் காட்ட...நம்ம கண்ணாடி அட்டை காமிக்தீவிரவாதியாய் நம்மை காட்ட இது வரை வந்ததிலேயே வித்தியாசத்தில் டாப் அட்டை இதான்...சான்சே இல்லை...அட்டகாசம் சார்....இரத்தம் வழிந்தாலும் தேவதைகள் வெண்ணிற எழுத்தில் அருமை ஆசிரியரே....தேவதைகள்தானே....பின்னட்டையும் புரட்டிப் போட இது வரை எழுதியதை புரட்டிப் போடுகிறேன் இதுவரை வந்த பின்னட்டையில் இதாம் டாப்பென.....உள்பக்கங்கள் வண்ணக்கலவை தூள் கிளப்பு...பேனல்கள் வித்தியாசமாய் ஈர்த்தும் ஈர்க்காமல் செல்ல முதல் பக்கமே மிரட்ட கதைக்குள் நுழைகிறேன்...படிச்சிட்டு வாரேன்

    ReplyDelete
  62. எடிட்டரின் புதிய பதிவு எப்பியோ ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete