Powered By Blogger

Saturday, March 19, 2022

தொட்டால் தெறிக்கும் !

 நண்பர்களே,

வணக்கம். எண்ணெய் போட்ட சக்கரங்கள் தண்டவாளத்தில் வழுக்கிக் கொண்டு ஓடுவதை போல பொழுதுகள் தடதடத்து மின்னல்களாய் நகர்ந்திட, இதோ கோடை தொட்டு விடும் தொலைவினில் நிற்கின்றது ! வருஷங்களெல்லாம் ஆரம்பிப்பது எப்போ ? முடிவது எப்போ ? என்பதெல்லாம் இப்போது தெரிய மாட்டேன்கி ; 'மொத லாக்டௌன் டைம் ; ரண்டாது லாக்டௌனுக்கு அப்பாலிக்கா ; மூணாவது அலைக்கு மூணாவது நாள்" என்று தான் இப்போதெல்லாம் அடையாளம் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது ! காத்துள்ள புதுப் பொழுதுகளாவது படுத்தி எடுக்காது, சந்தோஷங்களைக் கண்ணில் காட்டினால் தேவலாம் !

ஏப்ரல் & மே நெருங்கி விட்டாலே "கோடை மலர்" ; "கோடை ஸ்பெஷல்" என்று எதையேனும் போட்டுத் தாக்குவதே நமது லயனின் துவக்க நாட்களின் template ! இந்த மைல்கல் ஆண்டினில் மறுபடியும் அந்த பால்யங்களை மீட்டெடுக்க முடிந்த சாகசங்களையெல்லாம் செய்து பார்ப்போமே என்ற எண்ணத்தில் துளிர் விட்டதே - காத்திருக்கும் "முத்து கோடைமலர்" ! And இதோ அதன் அட்டைப்பட முதல் பார்வை : 

காலமாய்ப் பழம் தின்னு, ஏகமாய்க் கொட்டை போட்ட ஜாம்பவான்கள் இருவர் அதே இதழினில் இருக்க, அவர்கள் இருவரையும் "ஓரமாய்ப் பின்னட்டையில் போய் வெளயாடிக்கோங்க கண்ணுகளா !" என்றபடிக்கே தில்லாய் முன்னட்டையில் லுக்கு விடும் அம்மணியைப் பார்த்து லைட்டாக புருவங்கள் உயரலாம் தான் ! ஆனால் இந்த ஆல்பம் வெளியாகி, அதன் 3 கதைகளையும் நீங்கள் படித்தான பின்னே, 'இன்ஸ்பெக்டர் ரூபின் முன்னட்டையில் இடம் பிடித்ததில் தப்பே இல்லை !' என்று நீங்களும் சொல்வீர்களென்றே தோன்றுகிறது ! 

"தொட்டால் தெறிக்கும்" ! ஏதோவொரு பிரபுதேவா-விஜய் கூட்டணியின் கோலிவுட் தலைப்பு போலிருந்தால் அது நிச்சயமாய்த் தற்செயலே அல்ல folks ! இந்த கேரட் கேச அம்மணி போகுமிடமெல்லாம் அனல் பறக்கிறது ; வெட்டியான்கள் கொண்டாடுகிறார்கள் என்பதாலேயே தலைப்பை இவ்விதம் அமைத்தேன் ! பாருங்களேன் ஒரு சாம்பிள் பக்கத்தை :  

எடிட்டிங் செய்திடாத பக்கமிது ; ஆசிரியர்கள் மன்னிச்சூ !!

இந்த புது நாயகியின் தமிழ் வரவு முறைப்படி இருந்திருக்க வேண்டியது நடப்பாண்டின் ஜனவரியினில் - நமது FFS இதழினில் தான் ! எனது ஒரிஜினல் திட்டமிடலின்படி  - ஆல்பா + சிஸ்கோ + டேங்கோ + ரிப்போர்ட்டர் ஜானி + சிக் பில் + ரூபின் = ரூ.1000 விலையிலான ஒரேயொரு FFS புக் என்பது தான் ! ஆனால் "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்கள்" ரொம்ப காலமாய்க் காத்திருக்க, அதன் பணிகளும் பெரும்பகுதி முடிந்திருக்க, சபலம் தலைக்குள் குடியேறியது ! நீங்களுமே 'we want more emotions' என்று குரல் கொடுத்து வந்த நேரம் அது ! பற்றாக்குறைக்கு இந்த ரூபின் பிள்ளையின் கதையைத் தூக்கி வைத்துக் கொண்டு மேலோட்டமாய்ப் படித்தால் - இது ஜானிக்கு ஒண்ணு விட்ட சித்தி பொண்ணு போலத் தோன்றியது !  ஏற்கனவே ஜானியைச் சமாளிப்பதே கல்லோடு ஒட்டிக் கொண்டு அடம்பிடிக்கும் கோதுமைத் தோசையினைப் புரட்டிப் போடுவதற்கு ஈடான அனுபவம் எனும் போது, இந்தப் புதுப் பிள்ளை பிழியக்கூடிய இடியாப்பங்களையும் சேர்த்துச் சமாளிக்க அந்நேரத்துப் பரபரப்பில் சாத்தியப்படுமென்று தோன்றவே இல்லை ! ஆல்பாவின் அந்த 3 பாக கோனார் நோட்ஸ் வசனங்கள் காத்திருக்கும் சமாச்சாரமுமே  தலைக்குள் அமர்ந்திருந்தது ! So  'தாயீ...உன்னை கொஞ்சம் ஆர அமர பாத்துக்கலாம் ; இப்போதைக்கு நீயும் அந்த ஜானி தம்பியும் ஓய்வெடுங்க !' என்றபடிக்கே ரூட் மாறினேன் ;  2 மெயின் இதழ்கள் FFS-க்கென என்று மனதை மாற்றிக் கொண்டேன் ! 

தள்ளிப் போயிருப்பினும் இந்த நாயகியை சீக்கிரமே உங்களுக்கு அறிமுகம் செய்திடும் அவா மட்டும் விலகியிருந்திருக்கவில்லை ; simply becos - இந்தத் தொடரினில் ஏதோ ஒரு இனம்புரியா வசீகரம் இருப்பதாகவே மனசுக்குத் தோன்றியது ! சற்றே கார்ட்டூன் பாணியில் ஒரு செம த்ரில்லர்  என்ற விதத்தினில், கொஞ்சமாய் SODA வை நினைவூட்டியது அதற்கொரு  காரணமாய் இருந்திருக்கலாம் தான் ! ஆனால் SODA தொடரின் அந்த இருண்ட களங்கள் இங்கே மிஸ்ஸிங் ! இருந்தாலுமே ஏதோவொரு ஈர்ப்பு தொடர்ந்திட, ஒரு சுபயோக சுப சாமத்தில், ஒரு கத்தை பிரெஞ்சு மொழிபெயர்ப்புப் பக்கங்களோடு ரூபினோடு பழகிப் பார்க்கும் படலத்தைத் துவங்கினேன் ! எப்போதுமே கதையை முழுசாய் முதலிலேயே படித்து உள்வாங்கி விட்டு, அப்புறமாய் எழுதும் பொறுமையெல்லாம் இருப்பதே இல்லை எனக்கு ; 'ஆங்...இது மாடசாமியாக்கும் ? அது வில்லன் சின்னச்சாமியாக்கும் ? ரைட்டு..இந்தப் புள்ளை க்ளைமாக்சில் ட்விஸ்ட் வைக்கப் போற ராக்காயியாக்கும் ?' என்றபடிக்கே பக்கங்களுடன் பயணிப்பேன் ! ஆனால் இம்முறையோ சரியாக எட்டுப் பக்கங்களை முடித்திருந்த   பொழுதில், சுவற்றைப் பிறாண்டுவதா ?  பாயைப் பிறாண்டுவதா ? என்ற கேள்வியோடு நின்று கொண்டிருந்தேன் ! பட்டாசாய்ப் பொறி பறக்கும் கதையினில் உள்ள முடிச்சுகளை புரிந்து கொள்ள முடியாது போனால், இம்மியும் நகர வழி லேது என்றான பின்னே, பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் முழுமையையும் வாசித்து நோட்ஸ் வேறு எடுத்துக் கொண்டேன் ! ஆஹா....செம சிம்பிளான கதை தான் ; ஆனால் அதனை கதையோட்டத்தோடு செமத்தியாய் இழையோடச் செய்திருக்கும் கதாசிரியரின் லாவகமே லாவகம் என்பது புரிந்தது ! இங்கே நிறைய fill in the blanks வேலைகள் உங்களுக்குக் காத்திருக்கும் என்பதை முன்கூட்டியே சொல்லிக் கொள்கிறேன் people !! "ஓஹோ...இதைச் செய்து இதைக் கண்டுபிடித்திருப்பார்களோ ? கண்டுபிடித்ததன் பலனாய் இந்தப் புலனாய்வை செய்கிறார்களாக்கும் ?" என்ற ரீதியில் நீங்கள் ஆங்காங்கே கோர்வைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கும் ! 'கதை இது தான்' என்பது புரிந்தான பிற்பாடு,  தடுமாற்றங்களின்றி பேனா ஓட்டமெடுக்க - நான்கு நாட்களில் 'சுபம்' போற்றிட முடிந்தது ! எல்லாம் முடிந்து, DTP செய்த பக்கங்கள் என் மேஜைக்கு மறுக்கா வந்து - கதையை கோர்வையாய், முழுசாய் வாசித்த போது ஒரு விஷயம் மட்டும் புரிந்தது - இதனை மறுவாசிப்பு செய்திடும் வேட்கை சர்வ நிச்சயமாய் உங்களுக்கும் எழாது போகாது என்று !!

As crime thrillers go, இது உலகை உலுக்கிப் போடவல்ல த்ரில்லரெல்லாம் நஹி தான் ; ஆனால் ஒரு முனைப்பான, யதார்த்தமான போலீஸ் புலனாய்வில் ஒரு தில்லான பெண் அதிகாரியோடு பயணிக்கும் அனுபவத்தில் ரசிக்க நிறையவே விஷயங்கள் இருப்பதை உணர்ந்திடலாம் ! அனல் பறக்கும் பன்ச் லைன்ஸ் இங்கே கிடையாது ; சந்தில் சிந்து பாடி உங்களிடம் க்ளாப்ஸ் வாங்க முயற்சிக்கும் இடங்களும் கிடையாது ; ஆனால் ஒரு ஜாலியான நிறைவைத் தந்த மொழியாக்கப் பணியிது என்பதில் எனக்கு ஐயமில்லை ! So இத்தினி பில்டப்புக்குப் பிற்பாடு ஏப்ரலின் இதழ்களில் உங்களின் வாசிப்புகளில் யாருக்கு முதலிடம் இருந்திடக்கூடும் என்பதில் ரகசியங்கள் இராது தானே folks ? 

இந்த இதழின் அடுத்த க்ரைம் த்ரில்லரின் நாயகர் நமது பிரிய ஜானி ! இவருக்கும் சரி, இவர் நூடுல்ஸ் போடும் அழகுக்கும் சரி, புதிதாய் நான் பில்டப் செய்திடும் அவசியங்கள் இல்லை என்பதால், அவரது சாகஸத்தின் ட்ரெய்லரோடு நகர்கிறேன் ! 

Ditto with கிட் ஆர்டின் !! இம்முறை அசமஞ்ச ஆர்டின் பெரீஈஈய அதிகாரியாகி ஏகப்பட்ட ரவுசுகளைக் கிளப்புவதை ஷெரீப் டாக்புல் வாய் பிளந்து ரசிப்பதே highlight ! செம ஜாலி சாகசமிது !! 


And காதலில் விழுந்து கிடக்கும் நம்ம எலி சாருக்குமே ஒரு ஹல்லோ சொல்லிக்கொள்வோமே ! (இது இன்னமும் மெருகேற்றப்படவுள்ள ராப்பர்) திங்களன்று கோடைமலர் அச்சுக்குச் செல்கிறது & 'தல' சாகஸத்தின் மொழிபெயர்ப்பு என் மேஜையிலிருந்து அடுத்த 2 நாட்களுக்குள் கிளம்பியிருக்கும் DTP டீமுக்கு ! So காத்திருக்கும் வார இறுதிக்குள் டெக்ஸும் அச்சுக்கு ரெடியாகி விடுவார் ! எஞ்சியிருக்கக்கூடிய ஜம்போவின் "உளவும் கற்று மற" ஆல்பத்தினில் எடிட்டிங் பணிகள் மட்டுமே காத்துள்ளன ; இவ்வாரமே அதுவும் அச்சுக்குப் புறப்படுமென்று நம்பியுள்ளேன் ! Fingers crossed !

Before I sign out, update on பழனிவேல் ஸ்பெஷல் :

TEX Classics 2 - பணிகள் செம வேகமாய் அரங்கேறி வருகின்றன ! முன் அட்டை & பின்னட்டை என இரண்டுமே மாலையப்பனின் ஒரிஜினல்கள் என்பதால் இது நிஜமானதொரு கிளாசிக் ஆக அமைந்திடவுள்ளது ! And முன்பதிவுகள் அதிரடியாய் அரங்கேறி வருகின்றன ; பழனியின் நிதிக்கென சிறிதும், பெரிதுமான உங்களின் பங்களிப்புகளோடு ! அநேகமாய் இதுவரையிலுமான அத்தனை ஆர்டர்களோடுமே ஒரு கொடைத் தொகையும் இணைந்துள்ளதெனும் போது - மெய்யாகவே ஊர்கூடி இழுக்கவுள்ள முதற்தேராக இது இருந்திடுமென்று தோன்றுகிறது ! ஓராயிரம் நன்றிகள் all !! இன்னும் நாம் கடக்கவுள்ள தொலைவு அதிகம் எனும் போது - please keep those orders coming !!

கிளம்பும் முன் ஒரு வேண்டுகோள் ப்ளீஸ் : பழனிவேலின் போட்டோக்கள் நல்ல resolution-ல் யாரிடமாவது இருப்பின், மெயில் செய்திடுங்களேன் ப்ளீஸ் ! Bye all...see you around !

Online Listings :

https://lioncomics.in/product/tex-classics-2-prebooking-for-april-2022-within-tamilnadu/

https://lion-muthucomics.com/tex-willer/940-tex-classics-2-prebooking-for-april-2022-within-tn-including-courier.html

129 comments:

  1. Replies
    1. நீங்கள் புகழ்பெற்ற "ஆத்தூர் மாதேஸ்வரன்" ஐயா அவர்களின் மகனா ?

      Delete
  2. வணக்கம் நண்பர்களே 🙏🙏

    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  4. Edi Sir..
    கோடைமலர் சந்தாவுல வருங்கலா?.. தனிங்கலா?..

    ReplyDelete
  5. ஐயாம் வெய்டிங் .. 1+5

    ReplyDelete
  6. Edi Sir..
    நம்ப இன்ஸ் ரூபினின் un edited version அ நல்லா இருக்கும் போலிருக்கே..

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. //ஏப்ரல் & மே நெருங்கி விட்டாலே "கோடை மலர்" ; "கோடை ஸ்பெஷல்" என்று எதையேனும் போட்டுத் தாக்குவதே நமது லயனின் துவக்க நாட்களின் template ! இந்த மைல்கல் ஆண்டினில் மறுபடியும் அந்த பால்யங்களை மீட்டெடுக்க முடிந்த சாகசங்களையெல்லாம் செய்து பார்ப்போமே என்ற எண்ணத்தில் துளிர் விட்டதே//

    இனி வரும் ஆண்டுகளில் இது போல் தவறாமல் கோடை மலர் வெளியிட்டால் அதுவும் இப்போது போல் குண்டு புக் வெளிவந்தால் ஒரே ஜாலியாக இருக்கும்.

    பள்ளி, கல்லூரி போல் கோடை விடுமுறை கிடையாது தான் என்றாலும் இது போன்ற வெளியீடுகள் ஒரு மன மகிழ்ச்சி தரும்.

    வறுத்தெடுக்கும் கோடை வெயிலில் இது போன்ற வெளியீடுகள் ஒரு ஜாலி ட்ரிப் போல அமையும் ����

    ReplyDelete
  9. கோடை மலர் ன்னா முத்து மட்டும்தானா ?? டியர் எடி ?

    கோடை மலர்ன்னா வே அது லயனின் குடும்ப சொத்தாச்சே .. லயன் சிம்பலில் ஏதும் கிடையாதுங்களா ??

    ReplyDelete
    Replies
    1. 2012 கம்பேக்கில் இருந்து லயன் வேறு; முத்து வேறல்ல... இணைந்த,

      """" லயன்-முத்து""""

      இப்ப வருவதும் லயன்-முத்து கோடைமலரே....

      Delete
  10. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  11. //...அந்த பால்யங்களை மீட்டெடுக்க முடிந்த சாகசங்களையெல்லாம் செய்து பார்ப்போமே என்ற எண்ணத்தில் துளிர் விட்டதே - காத்திருக்கும் "முத்து கோடைமலர்" //
    எத்தனை மலர் இருப்பினும் லயன் முத்து கோடை மலர் என்றாலே உற்சாகம் பிய்த்து கொள்ளும்.

    ReplyDelete
    Replies
    1. //முன் அட்டை & பின்னட்டை என இரண்டுமே மாலையப்பனின் ஒரிஜினல்கள் என்பதால் இது நிஜமானதொரு கிளாசிக் ஆக அமைந்திடவுள்ளது !//
      பிரம்மாதம் சார்... ரீப்ரிண்ட் என்று வரும்போது கூடுமானவரை முதல் பதிப்பில் நீங்கள் தயாரித்த ஒப்பற்ற அட்டைப்பட ஓவியங்கள் பயன்படுத்துதலே சிறந்தது...

      Delete
  12. டியர் எடி, கோடை மலர் அறிவிப்புகள் கனஜோர். அதுவும் ரூபின் அறிமுகம், அணிவகுப்பில் பரிதவிக்கும் துப்பறியும் கதாபாத்திரங்களுக்கு ஒரு உற்சாகம் மட்டுமில்லாமல், அதில் பெண் அணியை மீண்டும் களத்திற்கு கொண்டு வந்ததில்டபுள் ஓகே.

    ஜூலியா அந்த இடத்தை பிடிக்காமல் போனதில் எனக்கை வருத்தமே. ஆனால், வண்ணத்தில், அதுவும் நமக்கு பிடித்த சோடா பாணி ஓவியங்களுடன் புதிய அம்மணி சாதிப்பார் என்றே தோன்றுகிறது. களம் காணட்டும்.

    இது இந்த வருட ட்ரெண்டா, இல்லை சமீப காலங்களில் நடந்துள்ளதா என்று நினைவில் இல்லை... ஆனால், ஒரு மாற்றமாக லயனுக்கு பதில், முத்துவில் கோடைமலர் வருவதில் மிக திருப்தி. முத்துவின் மைல்கல் வருடத்தில் அதற்கு அனைத்து மாதங்களிலும் பூரணகும்ப மரியாதை கிடைக்காமல் எப்படி... :)

    ReplyDelete
  13. சார் அருமை....கோடை மலர்னாலே நினைவுக்கு வருவது வழவழப்பான கண்ணாடி அட்டை.....ஆறு ஏழு கதைகள்...விச்சு கிச்சு .ஸ்பைடர் ஆர்ச்சி யின் தலைதான் அந்த என்பதின் மீ/வீதிகளில்...ஆனால் அதோடு வந்த பால்ய கால விடுமுறைகளை மீட்டெடுத்தால் அடடா...என்னா ஒரு வாழ்க்கை....நம்ம புத்தகங்கள் மட்டுமே ஏதோ சிறிதளவு ஏக்கத்தை போக்குவது இன்றும் தொடருது...இந்த கதைகளில் இரண்டு பேருமே அந்தத் தெறிக்கும் என்பதுகளின் கோடை மலரில் இடம் பிடித்தார்களா என்பது நினைவில் இல்லையாயினும் அன்றய நாயகர்களே...கருப்பு வெள்ளைல ஏழு நாயகர்கள் அன்று வண்ணத்ல மூன்றின்று... ஏறத்தாள அதே விலைக்குள் அடைக்கலாம்தான்...ரூபின் எதிர்பார்ப்பில் இல்லை....ஆனா இங்க காட்டிய வண்ணப்பக்கங்கள் வண்ணத்ல இதான் டாப்புன்னு கந்த வைக்குதே...அதும் கதைக்கு நீங்க தரும் உறுதி எதிர்பார்ப்ப கூட்டுது...அட்டை தூள்....எலியப்பா அட்டை தான் இம்மாத அட்டைல டாப்பாருக்குமோ...

    ReplyDelete
    Replies
    1. மாலையப்பனின் அந்த கௌபாய் ஸ்பெசல் அட்டை வண்ணக்கலவைய இன்னைக்கும் யாரும் டச் பன்ன முடியாது அருமை சார்...நமது இரு நண்பர்களுக்குமான நினைவு மலர்....இருவரும் மேலிருந்து ரசிப்பார்கள் என நம்புவோமாக

      Delete
    2. ஆர்ட்டின் மண்டைல அடிவாங்கி தூள் கிளப்புவாறே அந்தக் கதையும் ....இவர்களின் முதல் கதையான அதிரடி மன்னனும் நினைவில் உங்கள் வரிகளின் விளைவாய்

      Delete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. அப்புறம் இந்த பாத்டப்ல இருந்து துப்பாக்கில சுடும் காட்சி 'The Good the Bad and the Ugly' ல இருந்து சுட்டது மாதிரியில்ல?

    ReplyDelete
    Replies
    1. The one who shoots is Good
      The one was shot is bad
      The place shot at was perhaps ugly .. hee hee ;-)

      Delete
  16. கோடைமலர் வெளிவரும் நாளை ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன்...

    ReplyDelete
  17. April repeats Jan with Rip Kirby special, Muthu kodai malar and Tex Classics 2 - Thanks a to for making the 50th year memorable sir !!

    ReplyDelete
  18. தோசை சுடபவர்களுக்கு தான் கோதுமை தோசை சுடவது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும். சாப்பிட மட்டுமே செய்பவர்களுக்கு அது தெரியாது

    ReplyDelete
  19. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  20. ஆஹா, நமது "கோடை மலர்" - கோடைக்காலத்தின் வெய்யிலின் கடுமையை மறக்கடித்துவிடும் போல் தெரிகிறதே...
    ஓவியர் திபெத்-தின் கைவண்ணத்தில்-இரு கதைகள்- புதிய பாணியில் ஒரு லேடி' இன்ஸ்-(ஆனாலும், கேரட் கலர் முடியழகியிடம் மயங்குவோமாக்கும்- ஹீரோயின் என்றால் - அது ஒன்லி மாடஸ்டி தான்-பார்ப்போமே-யார் கெத்து என்று.. மே மாதம்-மாடஸ்டி வரும்படி பார்த்துக்கொள்ளுங்கள் சார்-மே மாதமும் கோடைக்காலம்தான்..)

    ReplyDelete
  21. நான் லைனில் படித்த முதல் இதழ் 1995 இல் வெளிவந்த கோடை மலரான டாப் 10 ஸ்பெஷல் தான்.
    நான் படித்த முதல் கதை தலையின் பாலைவன பரலோகம். இன்னும் அந்தக் கடை பேனல் பை பேனல் நன்றாக நினைவில் உள்ளது. அதுவும் அந்த மலை சிங்கங்களுடன் போராடுவது அட்டகாசமாக இருக்கும்.
    விஜயன் சார் பாலைவன பரலோகத்தை எப்போது மறுபதிப்பாக கொண்டு வரப் போகிறீர்கள்.

    ReplyDelete
  22. ///ஜானியைச் சமாளிப்பதே கல்லோடு ஒட்டிக் கொண்டு அடம்பிடிக்கும் கோதுமைத் தோசையினைப் புரட்டிப் போடுவதற்கு ஈடான அனுபவம் எனும் போது,///

    ஹாஹாஹா! எப்படிங்க இதெல்லாம்???

    😃🤣🤣😆😂

    ReplyDelete
    Replies
    1. அய்யோ... அய்யோ... 🤣😂😂😁😄😃🤣

      Delete
    2. :-))) அனுபவங்கள் வார்த்தைகளாக வெளிப்படுவதில் ஆச்சர்யப்பட அதில் என்ன இருக்கிறது?

      Delete
  23. // இந்த இதழின் அடுத்த க்ரைம் த்ரில்லரின் நாயகர் நமது பிரிய ஜானி ! //
    ஜானியின் ரிப்போர்ட்டிங்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்.....

    ReplyDelete
  24. எல்லா தரப்பையும் வீழ்த்தும் ஆயுதங்களை[ ;-)] தாங்கி நடமாடும் ஆயுதக் கூடமாகத் திகழும் ரூபின் THE RED HEADED வருக , வருக

    ReplyDelete
  25. போர்முனையில் தேவதைகளும் பிரான்சின் ல லைசிட்டியும்
    போர்முனையில் தேவதைகள் இதழுக்கு விமர்சனம்
    எழுத கொஞ்சம் தயக்கம் எழுந்தது .
    காரணம் ஆசிரியரே எழுதியிருந்தவண்ணம் இது
    மேற்கத்திய பார்வையில் எழுதப்பட்ட ஒரு நிகழ்வின் மேல் புனையப்பட்ட வரைகதை…
    ஒரு மேற்கத்தியர்அல்லாத மற்றவர்கள் பார்வை அதே
    நிகழ்வின் மேல் எப்படியிருக்கும் என அறிய ஆவல்
    ஏற்பட்டது.
    அந்த ஆவலுக்கு காரணம் கதையில் ஒரு பதினாறு
    வயது பெண், ஒரு பெண்தவிர அனைவரும் இளம் தாய்மார்கள்..இவர்கள் தாங்களாகவே முன்வந்து சக மனிதர்கள் மேல் வன்முறையை கட்டவிழ்த்து விட எது தூண்டுதலாக இருந்திருக்கும் என்ற கேள்வி எழுகிறது..

    ஐரோப்பிய தேசங்களில் ப்ரான்ஸ் கடந்த பத்தாண்டுகளில் மத அடிப்படைவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இருக்கிறது.

    1979-2021 காலகட்டத்தில் ப்ரான்ஸில் 82 இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்கள் நடந்து 332 பேர் மரணித்ததாக CBC NEWS ( கனடியன் ப்ராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்) தெரிவிக்கிறது.

    ஏறக்குறைய இதே எண்ணிக்கையை ப்ரான்ஸின் தலையாய பத்திரிக்கைகளில் ஒன்றான LE MONDE - வும் தெரிவிக்கிறது.

    ப்ரான்ஸ் ஒரு மதச்சார்பற்ற நாடு.
    இதன் அரசியல் சாசன சட்டத்தின் ஒன்றாம் பிரிவு ல லைசிட்டி -யை [(secularism- மதச்சார்பின்மையை)( la laicite)] வலியுறுத்துகிறது
    .இதன்படி " அரசோ, அரசு சார்பு நிறுவனங்களிலோ, அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளிகளிலோ, உயர்நிலை பள்ளிகளிலோ, பொது இடங்களிலோ எந்த மத சின்னங்களை அணிவதோ , மதத்தை பற்றி பேசுவதோ கூடாது..

    63% கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் , 7-9% இஸ்லாமியர்கள், 0.5-1 % யூதர்கள், 2% ப்ராட்டஸ்டன்கள், 23-28% நாத்திகர்கள், புத்த மதம் போன்ற இதர மதத்தவர்கள் வசிக்கும் பிரான்ஸில் மதம் அவரவர் சொந்த விஷயம் ..பொது இடங்களில் மத சின்னங்கள்- கிறிஸ்துவர்கள் சிலுவைகளை, சீக்கியர்கள் கத்தி , டர்பன்களை, யூதர்கள் கிப்பா எனப்படும் குல்லாய்களை , இஸ்லாமியர்கள் ஹிஜாப் அணிவதை ல லைசிட்டி அங்கீகரிப்பதில்லை ..( விதிவிலக்கு ஜெர்மனி பகுதியாக இருந்து 1919 -ல் பூரண ப்ரான்ஸ் பகுதியாக இணைந்த அல்சாஸ்- மொசெல்லே பிராந்தியம்.( ALSACE MOSELLE).1801-ல் நெப்போலியன்- போப் பயஸ் vii இருவருக்கும் ஏற்பட்ட உடன்படிக்கைக்கு மதிப்பளித்து இப்பகுதி விலக்களிக்கப்பட்டது..
    நாட்டின் தொன்மையான சின்னங்களுக்கும் விதிவிலக்குண்டு)

    சிறிது காலம் முன்வரை ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகித்த மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான கிரேட் பிரிட்டனும் ( constitutional

    ReplyDelete
    Replies
    1. monarchy - முடியரசின் கீழ் குடியாட்சி என்றபோதும் முடியாட்சி பெயரளவிற்குத்தான்) சரி , உலகின் வல்லரசு ஜனநாயக நாடான வட அமெரிக்காவும் தங்களை மதச்சார்பற்ற அரசுகள் எனக் கூறிக்கொண்டாலும் அரசியல்வாதிகளும் சரி, மக்களும் சரி மதம் பற்றி பேசவோ, விரும்பிய மதத்தை வெளிப்படையாக பின்பற்றவோ பூரண சுதந்திரம் அளிக்கின்றன..

      அரசு, மதம் ஒன்றோடொன்று கலக்க கூடாது ,பிரிந்திருக்க வேண்டும் எனச் சொல்லும் லா லைசிட்டி பிரிட்டன், வட அமெரிக்காவை விட
      மதச்சார்பின்மையை அதிகம் பின்பற்றுவதாகத்தானே கருதப்பட வேண்டும்?

      மதம் பற்றி பொதுவெளியில் ஒரு பிரெஞ்சு அரசியல்வாதி பேசினால் அது அரசியல் தற்கொலைக்குச் சமமாகக் கருதப்படுகிறது.

      (லா லைசிட்டி ஏன் இப்படி அரசு , மதம் இரண்டையும் பிரித்து வைக்கிறது என்பதற்கான பதில் பிரெஞ்சு புரட்சிக்கு முன் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்த சம்பவங்கள், பிரெஞ்சு புரட்சியின் போது நடந்த நிகழ்வுகள் இவற்றில் அடங்கியுள்ளது. இதைப் பின்னர் பார்ப்போம்)

      இப்படி மதச்சார்பின்மையை கடைப்பிடித்து வரும் ப்ரான்ஸில் ஏன் இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்கள் நடக்கின்றன?

      காரணங்கள்

      1. கருத்துரிமை( freedom of expression)

      2. ப்ரான்ஸ் அரசின் வெளிநாட்டு கொள்கைகள்.

      3.ல லைசிட்டி வெளிநாடுகளில் உள்ள இஸ்லாமிய தலைவர்களால் எப்படி பார்க்கப்படுகிறது?

      என்பவையே.

      1. பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற கருத்துரிமை ப்ரான்ஸில் மிக அதிகம்
      வட அமெரிக்காவில் கூட இந்த அளவு உரிமையில்லை...
      காமிக்ஸ்கள், கார்ட்டூன்கள் போன்றவற்றிற்கு எல்லையில்லா உரிமைகள்..
      நமது சிஸ்கோவில் நேரடியாக பிரெஞ்சு ஜனாதிபதி ஊழலில் ஈடுபடுவதாகவும், அதை மறைக்க கொலைகளில் மறைமுகமாக ஈடுபடுவதாகவும் வந்ததை மறக்க இயலாது.

      Charlie hebdo ஒரு பிரெஞ்சு அங்கதச் சுவை ( satirical) வாரந்தரி இதழ்.

      இனவாதம் , உள் நாட்டு வெளிநாட்டு சமூக நிகழ்வுகள், உள் நாட்டு ,சர்வதேச அரசியல் , மதங்கள்( கிறிஸ்துவம், இஸ்லாம், யூதம் ) அனைத்தையும் சகட்டு மேனிக்கு கிண்டலும் கேலியும் செய்யும் ஒரு இடது சார்பு இதழ். ( இந்த இடது , வலது எனும் பதங்கள் பிரெஞ்சு புரட்சியின் போது தோன்றியவை.
      நவீன உலகில் இவற்றின் உபயோகம் மாறுபட்டு காணப்படினும் அடிப்படை ஒன்றுதான் . இந்த வலது இடது என்பதே வட அமெரிக்காவில் கன்சர்வேட்டிவ் , லிபரல்ஸ் என அறியப்படுகிறது..
      (but I am digressing)

      இந்த சார்லி ஹெப்டோ இதழ் மிகவும் சர்ச்சைக்குள்ளாகும் உள்ளடக்கத்தை கொண்டு விளங்குவது..

      இதன் முந்தைய வடிவங்கள்( hara- kiri) தற்காலிக தடை , ஆறு மாத தடை களை சந்தித்தவை..

      ப்ரெஞ்ச் முன்னாள் அதிபர் சார்லஸ் டி காலே -யின் மரணம் குறித்த இப் பத்திரிக்கையின் கேலிச் செய்தி கடும் கண்டனங்களை எழுப்பியது.


      சார்லி ஹெப்டோ 2006 - ம் ஆண்டு இஸ்லாமிய இறைதூதர் முகமது நபியின் உருவப் படத்தை கேலிச் சித்திரமாக தனது அட்டையில்

      Delete
    2. வெளியிட்டது..இது பிரான்சில் மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களின் மன உணர்வுகளை புண்படுத்தியதோடு
      கடும் கோபத்தையும் எழுப்பியது.

      ப்ரான்ஸின் இஸ்லாமிய கூட்டமைப்புசார்லி ஹெப்டோ குழுமத்துக்கு
      எதிராக நீதிமன்றத்தில் ஹெப்டோ இனவாதம் பேசுவதாக குற்றம் சாட்டி வழக்கு தொடுத்தனர்.

      பிரெஞ்சு தேச பின்னாள் அதிபர்கள் நிகோலஸ் ஸர்கோஸி, ப்ரான்கோஸ் ஹோலண்ட் சார்லி ஹோப்டாவுக்கு ஆதரவு குரல் கொடுத்தனர் .கேலிச் சித்திரங்கள் ப்ரான்ஸின் தொன்மையான மரபு என்றனர்.

      இஸ்லாமிய கூட்டமைப்பு இவர்களீன் கூற்று நீதிமன்றத்தில் உள்ள வழக்கை அரசியலாக்கும் முயற்சி என கண்டித்தது.

      ஆனால் அப்போதைய பிரான்சின் அதிபர் ஜாக்ஸ் சிராக் சார்லி ஹெப்டோவின் இச்செயலைக் கண்டித்தார்..இதர மக்களின் நம்பிக்கையை அதுவும் மத நம்பிக்கையை சீண்டுவது விபரீதத்தில் போய் முடியுமென்றார்.
      2007 - ம் ஆண்டு நீதிமன்றம் சார்லி ஹெப்டோவின் செயல் ஆசிரியர் வாலை ( val) விடுவித்தது.

      2011-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஸிரியாவில் ஷரியா[CHARIYA) சட்டங்கள் அமல்படுத்தப்பட்டது.
      துனிஷியாவில் இஸ்லாமிய கட்சி வெற்றி பெற்றது.

      இதன் பின்னணியில் சார்லி ஹோப்டோ மறுபடியும் இறைதூதரை அட்டையிலிட்டு கேலிச்சித்திரமிட்டது.

      பெண்களுக்கு எதிராக ஒடுக்குமுறை ,கசையடிகள் , பலதாரமணம் இன்னபிறவற்றை எதிர்த்து இக்கேலிச்சித்திரம் அமைவதாக சார்லி ஹெப்டோ கூறியது.

      பத்திரிக்கை வெளியான நவம்பர் மாதம் அதன் அலுவலகத்தின் மேல் தீக்குண்டுகள் வீசப்பட்டன.சார்லி ஹெப்டோ தனது வழக்கமான ப்ரிண்ட் ரன் 60000 என்பதை 3 லட்சமாக உயர்த்தி எதிர்வினையாற்றியது.

      2012-ம் ஆண்டு ஜூலை மாதம் இஸ்லாமுக்கு எதிரான ஒரு குறும்படம் innocence of Muslims ஒரு மகா மோசடி பேர்வழியான தயாரிப்பாளர் மூலம் யூடுயூப்பில் வெளியானது..

      இதை எதிர்த்து மத்திய கிழக்கிலிருந்த அனைத்து அமெரிக்க தூதரகங்களும் தாக்கப்பட்டன.

      ப்ரான்ஸ் சில நாடுகளில் தனது தூதரகங்களின் பாதுகாப்பை உயர்த்தியது.சுமார் 20 இஸ்லாமிய நாடுகளில் தனது தூதரகங்கள், கலாச்சார மையங்கள், சர்வதேச பள்ளிகளை மூடியது...

      இப்பின்னணியில் சார்லி ஹோப்டோ மறுபடியும் இறைதூதரை தனது அட்டையில் கேலிச்சித்திரமாக 2012 செப்டம்பரில் வெளியிட்டது..

      மிகவும் இழிவான முறையில் இக்கேலிச்சித்திரங்கள் அமைந்திருந்தன..ப்ரான்ஸ் வெளியுறவு அமைச்சர் freedom of expression -ஐ சிதைக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும் எனச் சொன்னார்..

      2015 ஜனவரி 7-ம் தேதி சார்லி ஹோப்டோ அலுவலகம் ஆயுதமேந்திய இருநபர்களால் தாக்கப்பட்டது..

      அலுவலக அங்கத்தினர், காவல் துறையினர் என 11 நபர்கள் மரணித்தனர்..பலர் படுகாயமுற்றனர்

      தாக்குதல் நடத்தியவர்கள் இருவரும் பிரெஞ்சு குடியுரிமையுள்ள அல்ஜீரிய முஸ்லிம்கள்..
      செட் கௌவாஸி மற்றும் செரிப் கௌவாஸி..

      2020 -ம் ஆண்டு பிரெஞ்சு பள்ளியாசிரியர் சாமுவேல் பேட்டி freedom of speech பற்றி விளக்க சார்லி ஹோப்டோவின் இறைதூதர் நபியின் கேலிச்சித்திரங்களை தனது மாணவர்களிடம் காண்பித்து பாடம் நடத்த

      Delete
    3. அவரது தலை செசன்ய முஸ்லிம் அகதியான 18 வயது வாலிபரால் துண்டிக்கப்பட்டு கம்பி வேலி மேல் செருகப்பட்டது..

      சாமுவேல் பேட்டியின் படுகொலை குறித்து அப்போதைய பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மாக்ரன் உதிர்த்த இஸ்லாமிய தீவிரவாதம் பற்றிய கருத்துகள் துருக்கி அதிபர் எர்கடானுடன் உரசலை ஏற்படுத்தியது.

      இந்நிலையில் சார்லி ஹோப்டோ எர்கடான் பற்றி வெளியிட்ட கேலிச்சித்திரம் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போலானது.

      ப்ரான்ஸ் அங்காராவிலிருந்து தனது தூதரை திருப்பி அழைத்துக் கொண்டது.

      துருக்கி உட்பட பல முஸ்லிம் நாடுகள் ப்ரான்ஸில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை பகிஷ்கரித்தன.

      ( 2016 -ல் தாக்குதல் நடைபெற்ற ஒரு வருடம் கழித்து சார்லி ஹெப்டோ பெருந்தெய்வம் எனக் கருதப்படும் யகோவா ( yahweh) வை அட்டைப்படத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் பிரசுரித்தது. வாடிகனும் உலகெங்கும் உள்ள யூத அமைப்புகளும் தங்கள் மனம் புண்பட்டதாக சொன்னார்கள்.அமெரிக்காவின் அஸோஸியேட்டட் ப்ரஸ் படத்தை தணிக்கை செய்து வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் நேரிட்டது)

      போர்முனையில் தேவதைகளும் freedom of expression - கீழ் வருவதாகத்
      தோன்றுகிறது..

      சார்லி ஹெப்டோ ஒரு உதாரணமே.

      இது போல் எண்ணற்ற இதழ்கள் வெளியாகி இருக்க கூடும்.

      பிரான்ஸின் மண்ணில் என்ன நடக்கிறது என்பதையும் அறிந்தே போர்முனையின் தேவதைகள் கதா மாந்தர்கள் பற்றி ஒரு முடிவுக்கு வர வேண்டியதாகிறது என்பதை பதிவின் இப்பகுதி சுட்டிக் காட்ட முனைகிறது..

      வன்முறையும், உயிர்ப்பலியும் எக்காலத்திலும் கண்டிக்கப்படவேண்டியவைதான்.

      Provocation - என்ற பகுதி பற்றியும் அறிந்து கொள்ளவேண்டியது அவசியம்தானே?

      2 மற்றும் 3 காரணங்கள் பின்பு தொடரும்




      Delete
    4. சிறப்பு 👌 டாக்டர்..

      Delete
    5. அருமையாக சொன்னீங்க செல்வம் அபிராமி.

      Delete
  26. இன்ஸ்பெக்டர் ரூபின் வருகை பற்றி நானெல்லாம் பெண்ணைப் பார்த்தால் மண்ணை பார்க்கும் சங்கத்தைச் சேர்ந்த குழந்தை. இதற்கு மேல் நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. கவலையேபடாதீங்க. சிவகாசில இருக்கற டெய்லர் தாராள மனசுக்கார். நிறைய பெரிய சைஸ் துணியா தைச்சு போட்டுடுவார் 😤😤😤😤

      Delete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. அட்டை படம் அசத்தல். இந்த வருடம் முத்து காமிக்ஸ் இனை வருடம் பூராகவும் கொண்டாட வைக்க ஆசியரியர் எண்ணி, அதனை நடைமுறைப்படுத்துவது கண்கூடு. அதில் ஒன்றுதான் முத்து கோடை மலர். தீபாவளி-கோடை மலர் என்றால் கொண்டாட்டம்தான். ரிப்போட்ர் ஜானி, கிட் ஆர்டின்-டாக்புள் சரியான தேர்வு. டிடெடிவ் பிள்ளையும் இடம் பிடிப்பார். இல்லாவிடில் முன்னட்டையில் இடம் பிடிப்பாரா? அதற்கு உட்பக்க பிரீவியூவே சாட்சி.

    ReplyDelete
  29. இன்ஸ்பெக்டர் ரூபி சங்கத்தை ஆரம்பிச்சுட வேண்டியதுதான்....😍😍😍

    ReplyDelete
  30. 'கோடை மலர்' கேட்க்கவே எவ்வளவு நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  31. முத்து கோடை மலர் பெயரை கேட்டவுடன் மனதில் இனம் புரியாத சந்தோஷம்! பள்ளிக்கூடம் செல்லும் போது ஏப்ரலில் கோடை விடுமுறை ஆரம்பித்து விடும், இப்போது நமக்கு கோடை விடுமுறை கிடையாது ஆனால் குழந்தைகளுக்கு இப்போது விடுமுறை அவர்களை பள்ளிக்கு அனுப்பும் வேலை அடுத்த 40 நாட்களுக்கு கிடையாது எனும் போது கொண்டாட்டமே அதுவும் முத்து கோடை மலர் வரும்போது கோடை கொண்டாட்டம் இந்த முறை இரண்டு மடங்காகி விட்டது! கோடை மலரே வாமீண்டும் குழந்தை பருவ வசந்தத்தை தா :-)

    ReplyDelete
  32. //கோடை மலரே வாமீண்டும் குழந்தை பருவ வசந்தத்தை தா//
    😍🥺♥️

    ReplyDelete
  33. ஜானி கதையின் உட்பக்க டீசர் சூப்பர் கலரிங் & படங்கள் அருமை!

    சிக்-பில் கதையின் டீசர் இந்த முறை செம சிரிப்பு மேளா காத்து இருப்பதை உணர்த்துகிறது! ஆர்வத்தை கிளப்பி விட்டீர்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. அடடே ஆமா ஜானி, சிக் பில் preview பக்கங்கள் இணைக்கப் பட்டுள்ளன.

      Delete
  34. வண்ணமிகு கோடை மலர் அருமை. விற்பனையில் சாதிக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  35. 🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐
    நம்ம காமிக்ஸ் நண்பரும்,
    தீவிர டெக்ஸ் ரசிகருமான
    அருமை சகோதரர்
    பாசமான இனிய நண்பர்
    யுவா கண்ணன் அவர்களுக்கு
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்....
    🎂🎂🎂🎂🎂🎂

    ReplyDelete
    Replies
    1. பிறந்த நாள் வாழ்த்துக்கள் யுவா !!

      Delete
    2. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நண்பரே..!

      Delete
    3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பர் யுவா 🥙🎂🤝

      Delete
    4. Manymore Happy returns of the day YUVA Kannan..

      Delete
    5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யுவா அண்ணா...


      💐💐💐💐💐🎂🎂🎂

      Delete
    6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யுவா ... வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.

      Delete
    7. ஆசிரியர் மற்றும் நண்பர்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள்...🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

      Delete
    8. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யுவா

      Delete
    9. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் யுவா...

      Delete
    10. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே!
      🎂🎁🌹🎊🎆🎉🌈💥🎇🍰

      Delete
  36. வண்ணமிகு கோடைமலரைத் தரிசிக்க ஆவலாய்க் காத்துக்கொண்டுள்ளேன்.

    ReplyDelete
  37. போர்முனையில் தேவதைகள்..

    பெண் ஜிகாதிகளும், ப்ரான்ஸூம்

    நண்பர் மொஹிதின் 05.03.2022 அன்றைய பதிவில் பெண்ணியவாதிகளை களமிறக்கியுள்ளார் எனக் குறிப்பிட்டிருந்தார்..
    எனக்கும் அந்த வியப்பு ஏற்பட்டது உண்மை..
    இதுகுறித்து படிக்க முற்பட்டபோது
    வியப்பு மறைந்ததும் உண்மை..

    உலகெங்கும் பெண் ஜிகாதிகள் பற்றி வாசிக்க வாய்ப்பு கிட்டியபோதும் மேலேயுள்ள தலைப்பை ஒட்டி ப்ரான்ஸை மட்டும் மேலோட்டமாக இப்பதிவு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

    ISIS ( Islamic state of Iraq and Syria) or ISIL ( Islamic state of Iraq and Levant) வளைகுடா போருக்குப் பின் ஈராக்கில் எழுச்சியுற்றபோது பல தேசங்களிலிருந்தும் பல இளம்பெண்கள் ஈராக்/ சிரியாவுக்கு சென்று பங்களிப்பு செய்ய விரும்பினர்..ப்ரான்ஸூம் இதற்கு விதிவிலக்கல்ல..

    பெண் ஜிகாதிகள் உருவாவதன் பின்னணி, காரணங்கள், விளைவுகள் பற்றி வாசிக்க வாய்ப்பு கிட்டினும் அது பதிவை வாசிக்க முயலும் ஒரு சிலரையும் அயர்ச்சிக்குள்ளாக்கும் நெடிய பதிவாக மாறக்கூடும் என்பதால் அதைக் கைவிட்டு ஒரு உண்மைச் சம்பவத்தை மட்டும் இங்கு கோடிட்டு காட்டியிருக்கிறேன்.

    மகளிர் மட்டும் தீவிரவாத குழு - 4 பெண்களை உள்ளடக்கியது - 2016 -ம் ஆண்டு ப்ரான்ஸில் கைது செய்யப்பட்டது.

    முதல் நபர்

    INES MADANI(19 வயது)

    இரண்டாம் நபர்

    ORNELLA GILLINGMANN( 29 வயது)

    மூன்றாம் நபர்

    SARH HERVOUET(23 வயது)

    நான்காம் நபர்

    AMEL SAKAOU( 39 வயது)

    Rue de la bucherie பகுதியில் Notre Dame கதீட்ரல் அருகே செப்டெம்பர் 2016
    -ல் கேஸ் சிலிண்டர்களை வெடிக்க வைத்து அழிவை ஏற்படுத்த இவர்கள் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.

    இதற்கு முன்னரும் இவர்கள் அழிவு வேலைகளில் ஈடுபட்டு அவை தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன.

    இவர்கள் அனைவருமே சிரியா செல்ல முயன்று ( ISIS அமைப்பில் சேர) அது கைகூடவில்லை.

    இவர்கள் அனைவருக்கும் 20 முதல் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார்கள்..

    2017-ல் ISIS வீழ்ச்சியுற்றபோது அதில் பங்கேற்று போராடிய சுமார் 80 பிரெஞ்சு பெண்களும் , அவர்களின் 200 குழந்தைகளும் வடக்கு சிரியாவில் AL HOL, ROJ பகுதியில் திறந்தவெளி முகாம்களிலும் நிலத்தடி சிறைகளிலும் இருக்கிறார்கள்.
    .மறுபடி இவர்கள் பிரான்சில் நுழைய அனுமதியில்லை.

    ReplyDelete
    Replies
    1. பெண் ஜிகாதிகள் என்பது பிரமிப்பை ஏற்படுத்தினாலும் பெண்கள் போர்க்களம் நுழைவது என்பது இறைதூதர் நபிகள் நாயகம் காலத்தேயும் அவர் மெதீனாவில் சுவர்க்க உலகு சென்ற சிறிது காலம் பின்னேயும் பெண்கள் போர்க்களம் சென்றனர் என்பது வரலாறு.

      THE IDEOLOGICAL DEBATE
      //Whether women are prohibited from fighting in jihad altogether, or whether they are permitted to fight under specific circumstances, has been a subject of debate since the times of the Prophet Muhammad. There is no clear consensus in the religious literature on the acceptability of Muslim women taking up arms.

      There are two well-known accounts of women who fought alongside the Prophet Muhammad in his battles. Nusayba, also known as Umm Umara, fought in the Battle of Uhud in 626 AD. The Prophet’s aunt, Safiya, took up a sword in the Battle of Khandaq in 627 AD. Safiya reportedly cut off the head of an enemy fighter trying to scale the city walls and threw it back over to his fellow soldiers.[26] And early in Islam’s history, Muhammad’s widowed young wife, Aisha, led an army of 3000 in the Battle of the Camel in the religion’s first civil war. Despite these accounts of women fighting during the Prophet’s time, many Muslim jurists advised against it in later periods, recommending alternative jihads for women, such as the hajj or pilgrimage to Mecca.[27]

      Nevertheless, there was no firm consensus on when and how women were to participate in jihad.///

      இதன் சுருக்கமான தமிழாக்கம்

      NUSAYBA என்றும் UMM UMARA என்றும் அழைக்கப்படும் பெண்மணியானவர் இறைதூதரின் புனிதப் போர்களில் பங்கெடுத்ததாக இறை வரலாறு கூறுகிறது.இவர் battle of uhud -ல் CE 626 -ல் பங்கேற்றது உறுதி.

      சபியா(safiya) இறைதூதரின் அத்தை .இவர் battle of khandaq-ல் CE 627-ல் எதிரி வீரனின் தலையை வெட்டி வீழ்த்தியதாக வரலாறு கூறுகிறது.

      ஈராக்கின் பஸ்ரா பகுதியில் CE 656--ல் இறைதூதரின் மருமகனும் நான்காவது காலிப்புமான ALI IBN ALI TALIPH - க்கும் இறைதூதரின் விதவை மனைவிகளில் ஒருவரான ஆயிஷா ( AISHA)வுக்கும் நடந்த போரான Battle of Camel-ல் ஆயிஷா நேரடியாக பங்கேற்றார்.மூன்றாம் காலிப்பான UTHMAN படுகொலை குறித்த சரச்சையால் எழுந்த இப் போர் இஸ்லாமின் முதல் உள்நாட்டு யுத்தமுமாகும்..

      மேலும் எழுத விரும்பினாலும் சுருக்கமான பதிவை வேண்டி முடிக்கிறேன்..

      Delete
  38. கோடை மலர் அட்டைப்படம் அட்டகாசம். முன் அட்டையில் இன்ஸ்பெக்டர் ரூபின் படத்துக்கு பக்கத்தில் விகாரமாக இளிக்கும் பூசனியை போட்டது ஏன் இது கதையை படிக்கும் ஆர்வத்தை கூட்டுகிறது. செம கதையாக இருக்கும் போல தெரிகிறது.‌

    இந்த குண்டு புத்தகத்தில் வித விதமான கதைகள் ஜானியின் துப்பறியும் கதை, நமது உட் சிட்டி கவுண்டமணி செந்தில் கதை என கதம்பமாக உள்ளன. உண்மையில் இது குழந்தை காலத்திற்கு அழைத்து செல்ல போகிறது.

    வருடத்திற்கு இது போன்ற கதம்ப கதைகளை ஒரே புத்தகமாக கொடுங்கள் சார். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. // வருடத்திற்கு இது போன்ற கதம்ப கதைகளை ஒரே புத்தகமாக கொடுங்கள் சார். நன்றி.// ஆமா ஆமா

      Delete
  39. மூன்று வண்ணப்பக்கங்களும் அசத்தல்.....முதல் முழுவண்ணக் கோடை மலர் இன்னுமிரண்டு தினங்களில்

    ReplyDelete
  40. இப்படி மதச்சார்பின்மையை கடைப்பிடித்து வரும் ப்ரான்ஸில் ஏன் இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்கள் நடக்கின்றன?

    இரண்டாவது காரணம்

    2. ப்ரான்ஸ் அரசின் வெளிநாட்டு அரசியல் , ராணுவ கொள்கைகள்.

    1.லெபனான் - சிரியா

    1905 -ல் ப்ரான்ஸ் தனது நாட்டில் மதச்சார்பின்மை கொள்கையை அமல்படுத்தியது.

    1920 களில் முதல் உலகப் போர் முடிந்தவுடன் ஜெர்மனியுடன் கைகோர்த்ததால் வீழ்ந்த ஒட்டோமோன் பேரரசின் பகுதிகளை
    பிரிட்டனும் ப்ரான்ஸூம் பகிர்ந்து கொண்டன.லீக் ஆஃப் நேஷன்ஸ் லெபனான் , சிரியா பகுதிகளுக்கான ஆட்சிக் கட்டளை அதிகாரத்தை வழங்கியது..(mandates)

    ஒருங்கிணைந்த லெபனான்- சிரியா
    பகுதிகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை என்றபோதும் ஒப்புநோக்குகையில் சிறுபான்மையினரான MARONITE கிறிஸ்துவர்களிடம் ஆளும் அதிகாரத்தை வழங்கியது ப்ரான்ஸ்.
    பிரெஞ்சு படையினரால் லெபனான் முஸ்லிம் மக்கள் கடும் துன்பங்களுக்கு ஆளானது உண்மை.

    இரண்டாம் உலகப்போரில் ப்ரான்ஸின் வீழ்ச்சியால் லெபனான்- சிரியா சுதந்திர நாடுகளாக மாறின.

    தனது நாட்டில் மதச்சார்பின்மை ஆனால் லெபனானில் MARONITE கிறிஸ்துவர்களுக்கு அதிகாரம் , இஸ்லாமிய மக்களுக்கு துன்பம் என ப்ரான்ஸ் பாரபட்சம் காட்டியது..

    2. வட ஆப்ரிக்காவில் அல்ஜீரியா , மேற்கு ஆப்ரிக்காவில் பல நாடுகள் பிரான்சின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தன..இப்போது இவை அனைத்தும் சுதந்திரம் பெற்று சுயாட்சி நடத்துகின்றன.

    இங்கு பிற தேச இஸ்லாமியர்கள் பிரான்ஸின் மேல் வைக்கும் குற்றச்சாட்டு தனது மொழி, கல்விக்கொள்கைகள் மூலம் தனது கலாச்சாரத்தை மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் மேல் திணித்து தங்கள் மத சுய அடையாளங்களையும், மதக் கோட்பாடுகளை பின்பற்றுவதையும்
    ஆப்ரிக்க இஸ்லாமியர்கள் இழக்க காரணமாக இருந்தது என்பதே.
    இதில் உண்மை இல்லாமல் இல்லை.
    இன்றும் சுமார் 29 மேற்கு ஆப்ரிக்க நாடுகள் francophone நாடுகள் பட்டியலில் உள்ளன.இவற்றின் ஆட்சிமொழிகளில் பிரெஞ்சு உண்டு.

    துவக்கத்தில் ப்ரான்ஸின் மீதான ஜிகாதி தாக்குதலில் ஈடுபட்டது லெபனான்,அல்ஜீரிய, ஆர்மினிய இஸ்லாமியர்களே..
    அல்ஜீரியர்கள் பிரெஞ்சு படைகள் தங்களுக்கு இழைத்த கொடுமைகளை மறக்க இயலாது என சமீபத்தில் கூட சொல்லியிருக்கிறார்கள்..

    ReplyDelete
    Replies
    1. 3. ISIS.( ஈராக் / சிரியா)

      வளைகுடா போருக்குப் பின் மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்ட வெற்றிடத்தை சாதகமாக்கி கொள்ள அல்கொய்தாவின் ஈராக் பிரிவு முனைந்து செயல்பட்டது.

      பின்னர் அல்கொய்தாவிலிருந்து பிரிந்து தனி இயக்கமாக உருவெடுத்த இஸ்லாமிக் ஸ்டேட் (IS)
      ஒரு இஸ்லாமிய பேராட்சியை - கலிஃபேட் ( caliphate) - ஏற்படுத்த எண்ணியது..இந்த அமைப்பின் வழிமுறைகள் மிகவும் கொடூரமாக இருக்கவே இதனை தடுத்து நிறுத்த முனைந்த அமெரிக்க தலைமையிலான கூட்டணிப் படைகள் வெகுவேகமாக வளர்ந்து வந்த IS அமைப்பின் மேல் தாக்குதல்
      துவங்கின. ப்ரான்ஸூம் இதில் ஒரு அங்கம்.

      ஜூலை 2014- ல் துவங்கியது கூட்டுப் படைகளின் தாக்குதல்.

      நவம்பர் 2015-ல் ப்ரான்ஸில் பாரிஸிலும், புறநகர் பகுதியான செயின்ட் டேனஸிலும் நடைபெற்ற தொடர் தாக்குதல்கள் ப்ரான்ஸ் மற்றும் உலக நாடுகளை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

      மூன்று குழுக்கள் - 9 நபர்கள்- பாரிஸின் கால்பந்து மைதானம் ( உள்ளே ப்ரான்ஸ்- ஜெர்மனி ப்ரசிடெண்ட்கள் இருந்தார்கள்), பாரிஸின் நகர வீதிகள், BATACLAN கேளிக்கை மையம் ஆகியவற்றில், துப்பாக்கிச் சூடு ,வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள், மக்களை பிணைக்கைதிகளாக்கி அச்சுறுத்துதல் மூலம் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ப்ரான்ஸ் சந்திக்கும் பேரழிவு நிகழ்வை ஏற்படுத்தினார்கள்..

      137 பேர் மரணித்தனர். பல நூறு பேர் படுகாயமடைந்தனர்.
      தாக்குதல் நடத்தியவர்களில் 2 பேர் ஈராக்கிய முஸ்லிம்கள்.மீது 7 பேர் பெல்ஜியம் மற்றும் ப்ரான்ஸ் குடியுரிமை பெற்ற முஸ்லிம்கள்.
      இத்தாக்குதலுக்கு ISIS பொறுப்பேற்றது.ஈராக் மற்றும் சிரியாவில் ப்ரான்ஸ் தொடுத்த தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் இது என்றது.இரண்டுநாள் கழித்து operation chammel என்ற பல மடங்கு கடுமையான வான்வழி தாக்குதலை _ISIS மீது சிரியா மற்றும் ஈராக்கில் துவங்கியது.

      இவை பிற தேசங்களில் ப்ரான்ஸின்
      அரசியல், ராணுவக் கொள்கைகளால் ப்ரான்ஸ் மண்ணில் விளையும் ஜிகாதி தாக்குதலுக்கான உதாரணங்கள்.

      Delete
    2. இந்த கதையில் மற்றுமொரு முக்கியமான விஷயம் கதையில் வரும் பெண்கள் எல்லா விதத்திலும் ஆணுக்கு தாங்கள் சமமானவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் விதத்தில் இருக்கும, அதாவது தீவிரவாத்திலும் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது.

      Delete
  41. Replies
    1. வித்தியாசமான அட்டகாசமான சூப்பர் கதைகள். ஓடிப்போய் வாங்குங்கள் நண்பரே.

      Delete
  42. வணக்கம் நண்பர்களே.

    வெயில் அதிகம் அதனால் மக்கள் நடமாட்டம் பகலில் குறைவு. நமது தளத்தில் நண்பர்களைக் காணாமே .ஏங்க ?!

    ReplyDelete
  43. Ha.. Ha.. Beautiful sir... நந்தி with love...

    ReplyDelete
  44. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  45. கோடை மலர். சிறு வயதில், எத்தனை எத்தனை இன்பம் தந்தது . ஆஹா.

    ReplyDelete
  46. இன்று பதிவுக்கிழமை.

    ReplyDelete
  47. Edi Sir..
    இன்றைய பதிவு after Cricket ங்களா? ..

    ReplyDelete
    Replies
    1. விக்கெட் விழாது போல...

      பதிவை டைப்ப ஆரம்பியுங்க சார்...

      அடுத்த மேட்சில பார்த்துகிடலாம்...

      Delete
  48. ரிப் கிர்பி பத்தி ஏதும் தகவல் இருக்கான்னு பாத்தா இன்னும் பதிவக் காணமே...

    ReplyDelete
    Replies
    1. கிர்பி வர இன்னும் ஒரு மாசம் இருக்குங்களே. ஏப்ரல் கடேசில தான் வரும்னு நினைக்கிறேன்.

      Delete
    2. இந்த பதிவில் டெக்ஸ் preview, உளவும் கற்று மற பற்றிய அறிமுகம் இருக்கும் என்று எண்ணுகிறேன். புத்தகங்கள் எப்போது கிளம்பும் என்ற அறிவிப்பும் இருக்கும்.

      Delete
    3. ஏப்ரல் முதல் வாரத்தில் கிர்பி வரும் என நினைத்தேன் மஹி..

      Delete
  49. மீண்டும் ஞாயிறு பதிவு...😍

    ReplyDelete
  50. Edi Sir..
    ஏதோ பெரிசா டைப்புறீங்க போலிருக்கு .. We are waiting for new பதிவு..

    ReplyDelete
  51. Replies
    1. ரவி, இன்னிக்கி முகூர்த்த நாள்.... ஏதும் கண்ணாலத்துக்கு போயிருக்கலாம்....

      Delete
    2. அய்யா அந்த பதிவு...

      Delete
  52. ஆசிரியருக்குப் பணிகள் நிறைய இருக்கும் போல. வருவார் தாமதமாக.

    ReplyDelete
  53. காத்திருந்து...


    காத்திருந்து....


    காலங்கள் போனதடி....

    பூத்திருந்து....

    பூத்திருந்து ...

    பூவிழி நோகுதடி...

    ReplyDelete
  54. 1st





    புது பதிவு வந்த உடனே இதை கணக்குல சேர்த்துக்குங்க

    ReplyDelete
  55. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!

    ReplyDelete