நண்பர்களே,
வாரயிறுதியின் வணக்கங்கள் ! புது இதழ்கள் இன்னமுமே பிரெஷாக உங்கள் அலமாரிகளில் குந்திக்கிடக்கும் வேளையிது எனும் போது ஒளிவட்டத்தை வேறு திக்கில் பாய்ச்ச மனசில்லை ! ஆனால் போரடிக்கும் ஒரு வாரக்கடைசியை எனக்கு நானே சுறுசுறுப்பாக்கிக் கொள்ள ஏதாச்சும் செய்தால் தேவலாமே என்று தோன்றியது ! பொதுவாய் கடைவாய்க்குள் கட்டைவிரலைப் பொருத்திப் பார்க்கும் படலங்கள் ஜனிப்பது இது போன்ற தருணங்களில் தான் என்பது வரலாறு (!!!!) ! ஏழு கழுதை வயசான பின்னே இந்த ஆலிலைக் கண்ணன் அவதாரை பொழுதன்னிக்கும் கடன் வாங்கிட வேண்டாமே என்று மண்டை சொல்கிறது தான் ; ஆனால் நாம என்னிக்கு மண்டை சொன்னதுக்கு மண்டையை ஆட்டியிருக்கோம் ? So வடிவேலார் பாணியில்..."போவோமே...போய்த் தான் பாப்போமே !!" என்று தோன்றிட, இதோ அது சார்ந்த உரத்த சிந்தனை !
பொதுவாகவே மார்ச் மாதம் புலர்ந்து விட்டால் ஒரு இனமறியா பரபரப்பு தொற்றிக் கொள்வது அந்தக் காலத்து வாடிக்கை ! "ஹை..தொடரவுள்ள ரெண்டு மாசங்களும் கோடை விடுமுறை மாதங்கள் ; பள்ளிகளுக்கு விடுமுறை ; so காமிக்ஸ் சூப்பராய் விற்கும் ; கோடை மலர், குட்டிக்கரண மலர் என்று போட்டுத் தாக்கலாம்!" என்பதே அப்போதைய உற்சாகங்களின் பின்னணிகளாக இருந்து வரும் ! தவிர, அப்போதெல்லாம் நமது ஏஜெண்ட்களில் சிலர், சம்மர்களில் மட்டும் முந்தய இதழ்களைத் தருவித்துக் கொள்வது வாடிக்கை ! So மார்ச் இறுதியிலேயே..."உபய குசேலோபரி ; இப்போவும் நிகழும் மங்களகரமான பள்ளிக்கூட விடுமுறைகளை முன்னிட்டு, நமது முந்தைய இதழ்களுக்கு ஆர்டர் செய்திடுவோருக்கு பம்பர் மெகா பரிசாய் 5% கூடுதல் கமிஷன் வழங்கிட உத்தேசித்துள்ளோம் !" என்ற ரேஞ்சில் முகவர்களுக்கு ஒரு சர்குலரைத் தட்டி விட்டு, போஸ்டாபீஸிலிருந்து ஓலை ஏதாச்சும் வருதா ? ஓலைக்குள் காசோலை ஏதேனும் கீதா ? அந்தக் காசோலைகளில் கனமும் கீதா ? என்று பார்ப்பது ஏப்ரல் & மே மாதங்களில் ஒரு செம முக்கிய பணியாக இருந்திடும் ! ஏஜெண்ட்கள் யாராச்சும் "ஒரு மாச கடனுக்கு..." என்ற பேச ஆரம்பித்தால் கூட "நை..நை...! ஜாவ்..ஜாவ்...! நோ கடன் ! கை மேலே பைசா ; வாய் மேலே தோசா !!" என்று போர்டு மாட்டி விடுவோம் ! அந்தக் கொழுப்பின் பலனாய் சிறுகச் சிறுக ரொம்பிய கிட்டங்கியைப் பின்னாட்களில் காலி பண்ண..."அரே ஓ சம்போ ! மொத்த pack போட்டு நம்பள் விற்கிறான் ; நூறு புக் எட்டுநூறு ரூபாய்க்கு தர்றான்...வா சார்...வா சார்.. !" என்று 2012 வாக்கில் பாதி விலைக்கும் குறைச்சலாய் இடத்தைக் காலி செய்ததெல்லாம் நம்ம வீர ஜாகஜங்களின் வரலாறு !
அந்த கோடை மலர் நாட்கள் ஆண்டுதோறும் இப்போதுமே தொடர்ந்திட்டாலும், அந்த பால்யங்களின் பரபரப்பு இப்போதெல்லாம் இருப்பதில்லை தான் ! ஏற்கனவே திட்டமிட்ட அட்டவணை ; அறிவித்த இதழ்கள் என்ற ரீதியில் வண்டி அமைதியாய் ஓடி வருவது தானே நடைமுறை guys ?! ஆனால் இந்த மைல்கல் ஆண்டில் back to the future போனாலென்னவென்று தோன்றியது ! மறுக்கா அந்நாட்களது ஆப் டிராயரை மாட்டிக்கினா அலங்கோலமாய் இருக்கும் தான் ; இடுப்பு பொத்தான்களெல்லாம் தெறித்து தெருக்களில் உருண்டோடிடும் தான் ; ஆனால் "போடுவோமே....போட்டு தான் பாப்போமே ?" என்று பட்டது ! இந்த மஹா சிந்தனைக்குப் பின்னே மாமூலான நமது குட்டிக்கரணங்களைத் தாண்டி சில பல கெட்டிக் காரணங்களுமே உள்ளன தான் ! அவை என்னவென்று நீங்கள் கேக்காங்காட்டியுமே சொல்லுகிறேனே :
காரணம் # 1 : கொரோனாவின் புண்ணியத்தில் சென்னைப் புத்தக விழாவினில் நமக்கு இடமின்றிப் போனது நிச்சயமாய் ஒரு இடரே ! அங்கன ரிலீஸ் செய்யும் நோக்கில் ஞான் திட்டமிட்டிருந்த சில இதழ்கள் "நாங்க வெளிச்சத்தைப் பார்க்கும் நாள் எப்போ பாஸூ ?" என்ற கேள்வியைப் போட்டு வருகின்றன ! நல்ல காலத்துக்கு ஸ்டால் உறுதிப்படும் வரையிலும் எதனையுமே taken for granted ஆக எடுத்துக் கொள்வதில்லை என்ற முன்ஜாக்கிரதை நமக்குப் பத்தாண்டுகளாகவே துணை நிற்பதால் கதைகளை வாங்கியதைத் தாண்டி பெருசாய் வேறெதெனிலும் டப்பை முடக்கும் தப்பை செய்திருக்கவில்லை ! அந்தக் கதைகளைக் களமிறக்க ஒரு மாற்றுக் களம் அவசியமாகிடுகிறது ! So இது ஒண்ணாம் காரணமாயீ !!
காரணம் # 2 : இந்தப் பொன்விழா ஆண்டினை அவ்வப்போது வாணவேடிக்கைகளுடன் உற்சாகமானதாய்த் தொடரச் செய்வதும் முக்கியமென்று தலைக்குள் ஓடியது ! இது குறித்து போன வருஷத்தின் வெவ்வேறு தருணங்களில் "அன்பான வாசகப் பெருமக்களே ! நாங்கள் சிங்கப்பூரை சிங்கம்புணரியாக்குவோம் ....அய்யய்யோ...tongue slip ...சிங்கம்புணரியை சிங்கப்பூர் ஆக்குவோம் ! வெத்திலைஊரணியை வெனிஸ் ஆக்குவோம் !" என்ற ரீதியில் வாக்குறுதிகளை அள்ளி விட்டிருந்தேன் என்பதுமே நினைவில் நிற்கின்றது ! So அவற்றில் கொஞ்சத்தையேனும் மெய்ப்படுத்திட ஒரு களம் தேவைப்படுகிறது ! இது ரெண்டாம் காரணமாயீ !
காரணம் # 3 : முன்னெல்லாம் திருச்செந்தூர் போகும் போதும், கன்னியாகுமரி போகும் வேலைகளிலும் கடலில் குளிக்கவோ , கால் நனைக்கவோ அனுமதிப்பார்கள் ! "ஏயப்பா..அங்க பெரூசா ஒரு அலை வருது பாரேன் !!" என்றபடிக்கு பொங்கிடும் அலைகளை குஜாலாய் ரசிப்பது வழக்கம் ! ஆனால் இன்றைக்கெல்லாம் "ஏலே !" என்று ஆராச்சும் பக்கத்துத் தெருவினில் பாசத்தோடு கூவினால் கூட, "அலையா இருக்குமோ ? "அந்த" அலையா இருக்குமோ ?" என்ற பீதியில் அருகாமையிலுள்ள கக்கூஸைக் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளும் மிரட்சியே மேலோங்குகிறது ! இந்த அழகில், "நான்கு மாதம் நீடிக்கவுள்ள நான்காவது அலை, ஜூன் மாதத்திலிருந்து புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...டிங்..டிங்,, டிடிங்...! " என்று கான்பூரைச் சேர்ந்த IIT புண்ணியகோடிகள் காரைகளில் ஏறி நின்று கூவி வருகின்றனர் ! அதிலும் "ஜெய் ஜக்கம்மா ; ஆகஸ்டில் தான் பீக் கீது தாயீ !!" என்று தண்டோரா போட்டுள்ளனர் ! "அதே ஆகஸ்டில் தான் ஈரோடுப் புத்தக விழாவும் வாடிக்கையாய் இருக்கும் ஜக்கம்மா ; கொஞ்சம் கருணை காட்டுங்கம்மா !!" என்று பெர்மிஷன் கேட்டுப் பார்க்க முயற்சிக்கலாம் தான் ; ஆனால் 'டொம்மு..டொம்மு' என்று யுக்ரெய்னில் பொழிந்து வரும் குண்டு மழைகளின் நாராச ஓசைகளுக்கு மத்தியினில், நமது கருணை மனுக்கள் அம்பலம் ஏறுமோ - என்னவோ ? So இயன்றால் ஒரு முன்கூட்டிய பொழுதினில், ஒரு மினி மேளாவை நடைமுறைப்படுத்திட முயற்சித்தாலென்னவென்று தோன்றியது ! இது மூணாம் முன்ஜாக்கிரதை முன்சாமிக் காரணம் !
So காலரைக்கால் காரணம் கிடைத்தாலே கடைவாயைப் பதம் பார்த்துப் பழகியவனுக்கு, முத்தான மூன்று காரணங்கள் போதாதா - ஒரு சுபயோக சனியன்று டான்சில்களை கட்டைவிரலால் வருடிப் பார்க்கும் ஆசை மேலோங்கிட ?
கோடையில் ஒரு காமிக்ஸ் மேளா !
- இது தான் நம்ம அடுத்த படத்தோட டைட்டில் !
- மே இறுதியோ, ஜுனின் நடுவோ, இதற்கான தருணமென்று அமைத்துக் கொள்ளலாம் !
- வசதியான தேதிகளில் ஒரு வாரம் ஓடும் ஆன்லைன் விழாவாக இது அமைந்திடட்டுமா folks ?
- இம்முறை ஸ்டாக்கில் உள்ள பழசுகளை உங்கள் தலைகளில் கட்டுவதில் முனைப்பினைக் காட்டாது - இந்த ஸ்பெஷல் தருணத்துக்கென நாம் தயார் செய்திடக்கூடிய இதழ்களை போணி பண்ணுவதில் நமது கவனங்கள் இருந்திடும் !
- தடி தடி புக்குகள் ; முரட்டு முரட்டு விலைகள் - என்றெல்லாம் இந்த தபா போட்டு உங்கள் பொறுமைகளையும், பர்ஸ்களையும் சோதிக்காது - lightweight ரீடிங் ; lightweight விலைகள் - என்பதில் முனைப்பைக் காட்டுவோமா ?
- ஒரு அரை டஜன் இதழ்கள் என்பது ஓ.கே.வாகிடுமா - மொத்தமாய் இந்த மேளாவுக்கென ?
- "உயிரைத் தேடி" & "சுஸ்கி-விஸ்கி" - இந்த மேளாவின் துவக்க ஆட்டக்காரர்களாய் களமிறங்கிடட்டுமே ! சுஸ்கி-விஸ்கி - கார்ட்டூன் ஜானரின் பிரதிநிதியாய் ! "உயிரைத் தேடி" - த்ரில்லர் ஜானரின் பிரதிநிதியாய் !
- மீதம் இருக்கக்கூடிய 4 ஸ்லாட்களில், நீங்கள் பார்த்திட விரும்பக்கூடியது எந்தெந்த ஜானர்களாய் அமைக்கலாம் folks ? Any suggestions please ?
- Oh yes - இது சார்ந்த ஒரு மினி திட்டமிடல் என்னுள்ளே உள்ளது தான் ! ஆனால் நம் வசம் உள்ள கதைக் கையிருப்பில் அநேகமாய் சகல ஜானர்களிலுமே சரக்கிருப்பதால் - உங்களின் விருப்பங்களுக்கேற்ற மாவை வெளியே எடுத்து அந்த ஜானர் வடையாய் சுட்டுவிடலாம் ! So உங்களின் பரிந்துரைகள் - எந்த மூட்டையை வெளியெடுப்பது ? என்ற ரீதியில் எனக்கு உதவிடக்கூடும் !
- அந்த 4 ஸ்லாட்களிலுமே குட்டிக் குட்டி விலைகளிலான இதழ்களாகவே அமைத்திடத் திட்டமிடலாம் guys ! வாங்குவதற்கும், வாசிப்பதற்கும், எங்களின் தயாரிப்புகளுக்கும் அவையே இலகுவாகிடும் ! So கவிஞர் பாணியில் "2000 பக்கங்களில் மூணு, நாலாயிரம் பக்கத்தில் ஒண்ணு" - என்ற பரிந்துரைகள் வேணாமே - ப்ளீஸ் ! Slots 4 எனும் போது உங்களின் பரிந்துரைகளுமே நான்காக மட்டும் இருந்திடட்டுமே - ப்ளீஸ் !
- பொன்விழா ஆண்டின் சிங்கப்பூர்..வெனிஸ் பிராமிஸ்களுள் ஒன்றான "அட்டைப்படங்களின் தொகுப்பு - ஒரு பிரத்யேகத் தொகுப்பாய் "! என்பதனை இந்தத் தருணத்தில் களமிறக்குவது சரியாக இருக்குமா ? Thoughts on that please ?
1st...
ReplyDelete2nd
ReplyDeleteMe 3
ReplyDelete4th
ReplyDelete4 மு.பாபு
ReplyDeleteJust miss
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவணக்கம் நண்பர்களே.
ReplyDeleteமாலை வணக்கம் நண்பர்களே
ReplyDeleteவணக்கம் நட்புக்களே
ReplyDeleteவணக்கம்!
ReplyDeleteEdi
ReplyDeleteJeslong
Norman
Love this
Delete1.டெக்ஸ் வில்லரின் மினி சாகசங்கள் எரிந்த கடிதம்.மரணநடை.பாங்க் கொள்ளை மூன்றும் ஒரே இதழாக
ReplyDelete2.ரூட் 666
3.புதையல் பாதை & யானைக்கல்லறை
4.புது கௌபாய் சாகசம் இல்லையெனில் டிடெக்டிவ் ஸ்பெஷல்
# 1.டெக்ஸ் வில்லரின் மினி சாகசங்கள் எரிந்த கடிதம்.மரணநடை.பாங்க் கொள்ளை மூன்றும் ஒரே இதழாக #
Delete+ 100000000
ஆசிரியருக்கு 🙏..
ReplyDelete1 மாதத்திற்கு பின் நல்ல எனர்ஜியான பதிவு❤️.
அந்த நாட்களை நினைவுபடுத்தும் வகையில்,தங்கள் யோசனை காமிக்ஸ் வாசகர்களுக்கு உற்சாகமாக இருக்கும்.
டெக்ஸ்+லக்கி+இவர்களை ரெகுலராக போடுவதே.
பிறகு மறுபதிப்பாகும் கதைகளும் நாங்கள் எதிர்பார்த்தவைகளே எனும்போது,
உங்களிடம் உள்ள கதைகள் சிலவற்றை போட்டால், எதாவது தேர்வு செய்ய ஈஸியாக இருக்கும் சார்.
இல்லையென்றாலும் நண்பர்கள் எது தேர்வு செய்தாலும் ஓகே சார்.
அடடே இதைத் தான் நான் எதிர்பார்த்தேன். போட்டு தாக்குங்கள் சார். கோடை புத்தக விழா
ReplyDeleteஅட அதுக்குள்ள பதிவு
ReplyDeleteமுன்மாலை பதிவு.... ரொம்ப நாளைக்கு பிறகு......
ReplyDeleteHi..
ReplyDeleteஒரு விச்சு கிச்சு ஸ்பெஷல்
ReplyDeleteஅதானே!
Deleteவிச்சு கிச்சு எப்போ வந்தாலும் கரகோஷம் உண்டு.
Deleteஜெஸ்லாங் கதைகள் களம் இறங்க நல்ல வாய்ப்பு
ReplyDeleteI agree with this. Jesslong my favorite.
Deleteசார்,
ReplyDeleteதயை கூர்ந்து... சுஸ்கி விஸ்கி கதைகளுக்கு கஷ்டம் பார்க்காமல் பட்டி டிங்கரிங் செய்திடுங்கள்... அந்த juvenile நடையெல்லாம் இன்றைய தேதியில் படிக்க கொடுமையாக இருக்கும் என்பது எனது கருத்து...
நல்லாவே தட்டி தட்டி பாருங்க சார்.....
Deleteசிரிப்புக்கு கதைதான் உத்தரவாதம் ஆக இருக்கணும்...
// சிரிப்புக்கு கதைதான் உத்தரவாதம் ஆக இருக்கணும்... //
Deleteஎனது எண்ணமும் இதுவே.
இந்த 4 ஜானர் வேண்டும்
ReplyDelete1. Horror
2. Adventure
3. Sci-fi
4. Detective
//மீதம் இருக்கக்கூடிய 4 ஸ்லாட்களில், நீங்கள் பார்த்திட விரும்பக்கூடியது எந்தெந்த ஜானர்களாய் அமைக்கலாம் folks ? Any suggestions please ? ///
ReplyDelete3.கெளபாய் ஜானர்....தளபதி
----தங்க கல்லறை"--- பழைய மொழி பெயர்ப்பில்....
அல்லது
*இளமையில்கொல்"-பாகம்2&3---வண்ணத்தில்!
4.கெளபாய் ஜானர்....தல...தல...தல....
தலயின்* எல்லையில் ஒரு யுத்தம்& நள்ளிரவு வேட்டை"
5.பழமைக்கு...
சிறை மீட்டிய சித்திரக்கதை& நாடோடி ரெமி
6.இது போர் காலம் பாருங்க...நம்ம பிரிட்டிஷ் சார்ஜண்ட் தாமஸ்ஸின் "எமனுக்கு எமன்"-(மறுபதிப்பு)+ஒரு வெளிவரா கதை!(அப்படி ஏதும் இல்லைனா இரும்புக்கை நார்மனை கோர்த்து விட்டு போர் ஹீரோ ஸ்பெசல் ஆக போடுங்க சார்)
//மீதம் இருக்கக்கூடிய 4 ஸ்லாட்களில், நீங்கள் பார்த்திட விரும்பக்கூடியது எந்தெந்த ஜானர்களாய் அமைக்கலாம் folks ? Any suggestions please ? ///
Delete3.கெளபாய் ஜானர்....தளபதி
----தங்க கல்லறை"--- பழைய மொழி பெயர்ப்பில்....
அல்லது
*இளமையில்கொல்"-பாகம்2&3---வண்ணத்தில்!
4.கெளபாய் ஜானர்....தல...தல...தல....
தலயின் "நள்ளிரவு வேட்டை"
5.பழமைக்கு...
சிறை மீட்டிய சித்திரக்கதை& நாடோடி ரெமி
6.இது போர் காலம் பாருங்க...நம்ம பிரிட்டிஷ் சார்ஜண்ட் தாமஸ்ஸின் "எமனுக்கு எமன்"-(மறுபதிப்பு)+ஒரு வெளிவரா கதை!(அப்படி ஏதும் இல்லைனா இரும்புக்கை நார்மனை கோர்த்து விட்டு போர் ஹீரோ ஸ்பெசல் ஆக போடுங்க சார்)
----திருத்தப்பட்ட பதிப்பு....😉 விலை& ஸைஸ் ப்ரீஸ் ரீடிங்கிற்கு தக இருக்க வேணும் என்பதால் தலையின் ஒரு கதை மட்டுமே... (நன்றி:ஷெரீப்)
இரும்பு கை நார்மன் & ஜான் மாஸ்டர்
ReplyDelete+infinity
DeleteLovely
Delete1. மேற்கோ போ மாவீரா/இளைஞா…
ReplyDelete2. சயன்ஸ் பிக்சன்
3. கார்ட்டூன் அல்லாத காமெடி
4. அதிரடி ஆக்சன்.
நீங்களே ஆப்சன்ஸ் குடுங்க சார். நாங்க எங்களுக்கு பிடிச்சுதுக்கு காசு வாங்காமயே மாங்கு மாங்குன்னு கள்ள ஓட்டு போட்டாஙது ஜெயிக்க வைச்சிடறோம்.
அந்த சயின்ஸ் பிக்ஷ்ன் இடத்துல Valérian and Laureline 😍
Delete////Valérian and Laureline 😍///
Delete--இது வருதுனா தலையின் ஸ்லாட்டை கூட விட்டுத்தர்றோம்....💪💪💪💪
+1111
Deleteஎது வேண்டும் என்று சொல்லத் தெரியவில்லை.
ReplyDeleteஎதை வேண்டாம் என்று சொல்லத் தெரியவில்லை.
நீங்க எதைப் போட்டாலும் சரி தாங்க.
அம்புட்டையும் அள்ளிக் கொள்ள நாங்க ரெடிங்கோ !!!
ஒரு வீரனின் கதை மறுபதிப்பில் வர வாய்ப்பிருந்தால் கொண்டு வரலாம்.
ReplyDelete+100000
Deleteஅதேபோல உள்ள இன்னொரு கதையும் இணைத்து....
Deleteஅது எதுனு நண்பர் ராஜ்குமார்,திருப்பூர் குறிப்பிட்டிருந்தார்னு நினைவு......
ரத்த பூமியா?
Delete+100000
Deleteஆமாங்க சேலம் Tex விஜயராகவன் அண்ணா இரத்த பூமி தான். அந்த வரிசையில் உள்ள கதைகள் அனைத்தும் வன்மேற்கின் டாகுமெண்டரி டைப் கதைகள், அதை எடிட்டரும் குறிப்பிட்டிருப்பார். நம்ம எடிட்டர் அதில் இரண்டு கதைகளை மட்டுமே வெளியிட்டுள்ளார். இணையம் இல்லா அந்த கால கட்டத்தில் நம்ம விஜயன் சாரின் உலகளாவிய கதை தேடல்களை காணும் போது வியப்பாக உள்ளது.
Deleteவிஜயன் sir... முன்பு இயற்கையின் பாதையில் மற்றும் இன்ஸ்பெக்டர் டேஞ்சர் என ஒரு பக்க நிரப்பி கதைகள் வருமே அதை மீண்டும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் sir.
+1///
Deleteஅந்த சயின்ஸ் பிக்ஷ்ன் இடத்துல Valérian and Laureline 😍//
ReplyDelete@AKK முத்து 50ஐ கொண்டாட இதுவும் ஒரு அருமையான துவக்கமாய் அமையும்.
+100000
Delete+8888888888
Deleteவலேரியன் க்கு +1000
Delete+ 10000000
Deleteசூப்பர் அறிவிப்பு சார்...
ReplyDeleteசுஸ்கி விஸ்கி பட்டி பாரப்பது தவறேதும் இல்லை சார்..தயங்காமல் செய்யலாம்..
இந்த திடீர் ஸ்பெஷலில் மறுபதிப்பும் உண்டு எனில் பத்து ரூபாய் விலையில் டெக்ஸ் மூன்று சாகஸமாய் ( இரத்த ஒப்பந்தம் வரிசை )வெளிவந்த இதழை ஓர் தொகுப்பாய் வெளியடலாம் சார்..
ReplyDeleteபுதிய கதைகள் நிறைய உள்ளன.
Deleteஅவற்றை கேட்போம் சார்.
ஏற்கனவே நிறைய மறு பதிப்பு இதழ்கள் ஒரு அயற்சியை ஏற்படுத்தி விடுகறது.
தற்சமயம் வெளியான படிக்க படையுடன் வந்த இன்னொரு கதையும் என்னுடன் உள்ளது ஆனால் பழிக்குப்பழி என்னிடம் இல்லை அந்த ஒரு கதையை என்னிடம் உள்ளதால் அதனை நான் வாங்கவில்லை இதுபோல் சில இடர்பாடுகள் ஏற்படுகிறது டெக்ஸ்ட் கதைகளை இனி புதியதாக வெளியீடு செய்தால் நன்றாக இருக்கும் என எனக்கு தோன்றுகிறது.
+11111111111
Deleteஆசிரியர் கவனத்திற்கு ஒரு வேண்டுகோள்.
Deleteஒரு 25 வருடங்களுக்குள் வந்த கதைகளை மறு பதிப்பு செய்யாமல் 25-30 வருடங்களுக்கு முன்பு வந்த கதைகளை மறு பதிப்புக்கு தேர்வு செய்தால் அனைவரும் விரும்பி வாங்குவர், ஏன் என்றல் அதற்கு முற்பட்ட கதைகள் பெரும்பாலோரிடம் இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு.
வாரமானா ஒரு வெடி போடுவீங்க எடிட்டர் சார்.
ReplyDeleteஆனால் இப்போது
சர வெடி அதுவும் யானை சர வெடிய இந்த வாரம் கொளுத்தி போட்டு இப்படி பட்டைய கிளப்ப உங்களால மட்டுமே முடியும் 😁😁😇😇😍😍🥰🥰
ஜான் மாஸ்டர் pls...any pocket size possible ?
ReplyDeleteIrumukkai Norman special
ReplyDeleteசார் பழைய கதைகள் வேண்டாம் என்பது நல்ல முடிவு, லைட் வெயிட் லைட் ரீடிங் என்பது அடுத்த நல்ல முடிவு.
ReplyDeleteசுஸ்கி மற்றும் உயிரை தேடி நல்ல ஆரம்பம்.
தொடர்ந்து எனது விருப்பம்.
1. விருப்பமான கவ்பாய் 1
2. நாம் நிறுத்தி வைத்திருக்கும் பேய்/த்ரில்லர் கதைகளில் ஒன்று
3. ஆக்சன் அதிரடியாக ஒன்று
4. டீடெக்டிவ் த்ரில்லர்/சயின்ஸ் பிக்சன் ஒன்று
இம்மாத புத்தகங்கள் டெக்ஸ் தவிர மற்றவை ஓவர்.
1. எலியப்பா : குறுநகையுடன் நன்றாக இருந்தது. ஒரே குறை அந்தியும் அழகே ஆரம்பிப்பதற்கு முன்பே முடிந்துவிட்டதாக தோன்றியது.
2. சோடா : முதல் 3 பக்க மோனோ வாசனங்கள் கடந்துவிட்டால் ஒரு நல்ல த்ரில்லர் காத்துள்ளது. வெறும் அம்மாவிடம் எப்படி மறைக்கிறார் என்று மட்டும் இல்லாமல் இப்படி வித்தியாசமான களங்கள் ஒவ்வொரு கதையில் வருவது சிறப்பு. சஸ்பென்ஸ் கடைசி வரை கொண்டு சென்றது மேலும் சிறப்பு. இறுதியில் கொஞ்சம் அவசர அவசரமாக சோடா விளக்கம் கொடுத்தது போல இருந்தது.
3. போர்க்களத்து தேவதைகள் : விமர்சனம் போன பதிவில் சொல்லிவிட்டேன்.
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteJason brice மாதிரி ஒரு த்ரில்லர் கதை , ஹாரர் ஸ்பெஷல் னு ,sci fi
ReplyDeleteஹாரர்..
ReplyDeleteசயின்ஸ் ஃபிக்ஷன்..
கார்டூன்..(யாருமே கேக்கலையே)
மிஸ்டரி..
அதான் அந்த 6ல் ஏற்கனவே சுஸ்கி விஸ்கி இருக்கு இல்லீங்களா? அதனாலன்னு நினைக்கிறேன்.
DeleteMini tex நான்கு அல்லது ஆறு போட்டு தாக்கிடலாம் சார் விற்பனையும் சோடை போகாது.
ReplyDeleteஹா...ஹா....ஹா..
ReplyDeleteசெம ஜாலியான பதிவு சார்.
படிச்சவுடன் மனசு லேசாயிடுச்சி.
Tex மறுபதிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைத்து புதிய கதைகளை வெளியிட வேண்டுகிறேன் சார்.
ReplyDeleteஇம்மாத இதழ்கள் அனைத்தும் வாசித்து விட்டேன்.பாலைவனத்தில் பிணந்தின்னிகள் வாசிக்க போரடிக்காமல் நகர்ந்தது. பக்கம் 150ல் ப்ரீச்சர் அந்தப் பெண்ணை உற்றுப் பார்க்கும்போதே யூகித்து விட்டேன் அவளின் மாமா அவர்தான் என்று. அவர் இராணுவத்தில் இருந்து படைகளை பலியிட்டது மற்றும் தப்பித்தது கூட ஓகே தான், அவரின் ஆட்கள் செய்யும் பல அக்கிரமங்களை மற்றும் கொலைகளுக்கு உடந்தையாக இருந்தவர் மருமகளை கண்டதும் மனம் வெதும்புகிறார், அப்படியே குண்டடி பட்டு செத்தும் போகிறார். அந்தப்பெண் கேட்டுக் கொண்டதற்கு இணங்க டெக்ஸும் மனிதாபிமான அடிப்படையில் அவரின் பெயரை வெளியிடாமல் விட்டுவிட்டாலும், ஏனோ.. கதையின் துவக்கத்தில் ப்ரீச்சரால் பலியாகும் அந்த அப்பாவி வண்டியோட்டிகள் நினைவில் வந்து போயினர். ஆனாலும் கதையின் முடிவு ஒருவகையில் ஓகே தான்.
ReplyDeleteSodaவின் காலனோடு கூட்டணி கதை மிகவும் அருமை. கதையை தொடங்கும் வில்லன் டேனியின் சாதுர்யம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதையின் நாயகனையே தமது திட்டத்திற்காக அவரறியாமல் இணங்க வைப்பதெல்லாம் அருமை. மேலும் கதை தொடங்கும் போதே டேனி தமது யோக்யதையை கூறுவதெல்லாம் சிறப்பு. ஆனால் அவன் தமது சகோதரிக்காகத்தான் காவல்துறையில் இருந்து கொண்டே தெரிந்தே இத்தனை செயல்களை செய்கிறான் என்று கதையின் இறுதியில் தெரிய வரும்போது ஏனோ டேனி மீது கோபம் வரவில்லை.
அப்புறம்... சுஸ்கி விஸ்கியின் பழைய மொழிப்பெயர்ப்பை தற்போதும் தொடர வேண்டாம் sir. அது அந்த பழைய இதழ்களின் நினைவோடு அப்படியே இருக்கட்டும். தற்போது வரும் மறுபதிப்புகளுக்கு புதிய மொழிப் பெயர்ப்பை தொடர்ந்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
// சுஸ்கி விஸ்கியின் பழைய மொழிப்பெயர்ப்பை தற்போதும் தொடர வேண்டாம் sir. அது அந்த பழைய இதழ்களின் நினைவோடு அப்படியே இருக்கட்டும். தற்போது வரும் மறுபதிப்புகளுக்கு புதிய மொழிப் பெயர்ப்பை தொடர்ந்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. //
Deleteமிகவும் அருமையாக சொன்னீங்க. எனது எண்ணமும் இதுவே.
Edi Sir..
ReplyDeleteஎங்க எல்லாருக்கும் பிடிக்கறமாதிரி நீங்களே ஒரு நல்ல முடிவு எடுத்து வச்சிருப்பீங்க Sir.. அதையே கொடுங்க Sir.. We are eagarly waiting ..
கோடை மலர் நாளே குண்டு புக்கு தானே சார் ஒரே ஒரு புக்கு நல்லா குண்டா அதுவும் டெக்ஸ் புது கதையா இல்லாட்டி இளம் டெக்சா போட்டுத்தாக்குங்க சார்
ReplyDeleteEdi Sir.. Book fair ல நமக்கு இடம் கிடைக்கலையேன்னு எல்லோரும் ரொம்ப வருத்தத்துல இருந்தோம் Sir.. இப்ப மினி மேளா வருதுன்னு பாலை வார்த்திங்க. போட்டு தாக்குங்க Sir..
ReplyDeleteசார் கோடை கொண்டாட்டம் மேதானே...இறுதிக்கு தள்ளுவது தகுமோ....
ReplyDeleteஏக எதிர்பார்ப்பில் உள்ள சுஸ்கி..உயிரைக் தேடி....எப்படியிருக்குமோ என எதிர்பார்ப்பில் உள்ள கிர்பி ....
சூப்பர் மே 50' மாதமா அமைய உள்ளது....
1.ராஜாராணி கதை
2. மாயாஜால கதை
3.புதையல் கதை
4. நண்பர்கள் நீண்ட காலமாக கேட்டு வரும் விஞ்ஞான கதை வாலரினோ என்னவோ அதே
5... முடிஞ்சா பிரமிட் கதைகள்
6... இன்னும் கொஞ்சம் முயற்சித்தா சிறுவர்களை ஈர்க்க விலங்குகள் தூள் கிளப்பும்..சிறுத்தைச் சிறுவன் போல கதைகள்
// ஒட்டுமொத்தமாய் மாற்ற முற்பட்டால் மாத்து மாத்தென்று மாத்துவீர்கள் என்னை //
ReplyDeleteஅப்படி செய்ய போவதில்லை. இப்போது உள்ள நடைமுறைக்கு ஏற்றவாறு தாராளமாக மாற்றி எழுதுங்கள் சார்.
1. ஒரு டெக்ஸ் புதிய கதை
ReplyDelete2. ஒரு ஸ்மர்ப் (அ) பென்னி (அ) விஞ்ஞானி தாத்தா (அ) புதிய லக்கி லூக்
3. ஒரு ஆக்ஷன் ஒன் சாட் கதை (வேட்டையாடு விளையாடு போல்)
4. ஒரு க்ரைம் திரில்லர்
// "நை..நை...! ஜாவ்..ஜாவ்...! நோ கடன் ! கை மேலே பைசா ; வாய் மேலே தோசா !!" என்று போர்டு மாட்டி விடுவோம் ! அந்தக் கொழுப்பின் பலனாய் சிறுகச் சிறுக ரொம்பிய கிட்டங்கியைப் பின்னாட்களில் காலி பண்ண..."அரே ஓ சம்போ ! மொத்த pack போட்டு நம்பள் விற்கிறான் ; நூறு புக் எட்டுநூறு ரூபாய்க்கு தர்றான்...வா சார்...வா சார்.. !" என்று 2012 வாக்கில் பாதி விலைக்கும் குறைச்சலாய் இடத்தைக் காலி செய்ததெல்லாம் நம்ம வீர ஜாகஜங்களின் வரலாறு ! //
ReplyDeleteசிரிப்பை அடக்க முடியவில்லை. செமையாக எழுதி உள்ளீர்கள். சிரித்தாலும் புத்தகங்கள் குடோனில் தங்கியதால் உள்ள வருத்தம் புரிகிறது.
அட, அன்னிக்கு black & white ஆகக் காட்சி தந்தது சார் கிட்டங்கி ! இன்றைக்கோ கலராய், கலக்கலாய் ! அவ்வளவே வித்தியாசம் !
DeleteROFL sir - as much as it pains !
Deleteகாமிக்ஸ் கலர்களாய் சிரித்த படிக்கே வாழ்க்கையைக் கடந்து கொண்டிருக்கிறோம் சார் - அவ்விதத்தில் நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்களே சார் ! கடந்த பத்தாண்டுகளின் பல ரணமான நிகழ்வுகளைக் கடக்க உதவியது நமது காமிக்ஸ்கள் மற்றும் இந்தத் தளம் என்பதில் சற்றும் மிகையில்லை சார் !!
Totally agree with you Raghavan.
Deleteசார் மறுபதிப்புகளும், பழமையும் வண்டி வண்டியாய் வந்தாயிற்று, ஏன் நீங்கள் திட்டமிட்டபடி வரும் முதல் இரண்டிலுமே ஒன்று மறுபதிப்பு, இன்னொன்று பழைய ஆக்கம். இனி வரும் நான்கை புதிய கதைகளுக்கு ஒதுக்கலாம்.
ReplyDelete1. பிரளயம்
2. காலனின் கால் தடத்தில்
3. உலகத்தின் கடைசி நாள்
4. The BOMB
முதல் மூன்றும் அறிவிப்போடு கைவிடப்பட்டு வாகான தருணத்திற்காக already waiting. The BOMB முற்றிலும் புதிது. யுத்தம் நடக்கும் இந்த சூழ்நிலைக்கு ஏற்ற கதை.
மேற்கூறியவைகள் எனது சாய்ஸ். நிலுவையில் உள்ளவற்றை களமிறக்கியது போலவும் ஆச்சு, கிராபிக் நாவல்களும் முத்து 50 ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றது போலவும் ஆச்சு.
முழுவதும் முடியாது என்றால் குறைந்த பட்சம் ஒன்றையாவது களமிறக்குங்கள் என்பது எனது கோரிக்கை. இறுதி முடிவு தங்களுடையதே என்றாலும் கேட்பது எங்கள் உரிமை அதுவும் அன்புடன்.
சுஸ்கி விஸ்கி நான் படித்ததில்லை. ஆனால் நண்பர்கள் கூறியவற்றை பார்த்தால் புதிய மொழிபெயர்புடன் வருவது நலம் என்று எனக்கு படுகிறது.
"Lightweight விலை ; lightweight வாசிப்பு" !
Deleteமேற்படி அளவுகோல்களின் தெருப்பக்கமாகவாவது THE BOMB வர இயலுமா நண்பரே ? அதுவொரு அசாத்திய வரலாற்று ஆவணம் ; மிகுந்த கவனத்தோடு, நிறைய நேரமெடுத்துக் கொண்டு தயாரிக்கவும், வாசிக்கவும் அவசியமாகிடும் ஆக்கம் ! ஒண்ணரை மாத அவகாசத்தில் ஒரு காவியத்தை வடிக்க வழி எது ?
சார் The Bomb தவிர்த்து மற்ற கதைகள் வந்தாலும் போதும் சார். ஒரே ஒரு கிராஃபிக் நாவல் வந்தாலும் போதும். எனது தேர்வு காலனின் கால் தடத்தில்
Delete2020 இல் வந்து இருக்க வேண்டிய புத்தகம் சார். இப்போது அருமையான வாய்ப்பு
// மறுக்கா அந்நாட்களது ஆப் டிராயரை மாட்டிக்கினா அலங்கோலமாய் இருக்கும் தான் ; இடுப்பு பொத்தான்களெல்லாம் தெறித்து தெருக்களில் உருண்டோடிடும் தான் ; ஆனால் "போடுவோமே....போட்டு தான் பாப்போமே ?" என்று பட்டது ! //
ReplyDeleteபோய்விடுவோம் சொல்லிட்டீங்கல போய்விடுவோம்:-)
அப்புறம் ஜீன்ஸ் டவுசர் ட்ரை பண்ணுங்க சார். நல்லா இருக்கும்.
மாமியாரை பார்த்த மாதிரி ஒரு திகில் கதை
ReplyDeleteஒரு Sci-fi
அப்புறம் ஒரு ராஜா/ கடல் கோல்லையர் காலத்து கதை
*கொள்ளையர்கள்*
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகடந்த மாதம் வந்த களமெங்கும் காதல் கதை பற்றி உடனே எழுத முடியவில்லை. மிலிட்டரி காதல் காமெடி கலாட்டா. பெண் வேடம் மற்றும் பெண்கள் மிலிட்டரி கேம்பில் நுழைந்த பிறகு கதையின் காமெடி வேற லெவல். கதையின் இறுதியில் ஸ்கூபியின் பெண் வேட அவதாரம் செம திருப்பம் மற்றும் சரியான முடிவு.
Deleteஇந்த வருடத்தின் முதல் காமெடி கதை செமயான சிரிப்பு மேளா.
லைட் வெயிட்..சரி
ReplyDeleteலைட் ரீடிங் ..சரி
உ(எ)ங்களுக்கு தோதான விலை..சரி
4 ஸ்லாட்டுகளும் புதிய கதைகளாக இருக்கவேண்டும் ..அவ்வளவுதான்..
அப்படி போடுங்க பேனா கத்தியை..!
Delete( அருவா கொஞ்சம் வெய்ட்டு..அதான்.)
😃😃😃
// புது இதழ்கள் இன்னமுமே பிரெஷாக உங்கள் அலமாரிகளில் குந்திக்கிடக்கும் வேளையிது எனும் போது //
ReplyDeleteஎன்ன சார் இப்படி சொல்லிட்டீங்க :-) போர்முனையில் தேவதைகள் தவிர கடந்த இரண்டு நாட்களில் மீதம் உள்ள புத்தகங்களை முடித்து விட்டேன். நாளைக்கு போர்முனையில் தேவதைகளை ஆரம்பிக்க போகிறேன்.
ஓ.நொ.ஓ.தோ ஆபீஸ் வேலை பளு கொஞ்சம் குறைந்த பிறகு ரசித்து படிக்க வேண்டும்:-)
விஜயன் சார், உங்கள் மனதில் உள்ள லிஸ்டை எடுத்து விடுங்கள் அதில் இருந்து நான்கை நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம் :-) பிறகு உங்களிடம் உள்ள லிஸ்டை பார்த்தது போலவும் இருக்கும் நாங்களும் நான்கு புத்தகங்கள் சொன்னது போலவும் இருக்கும்:-)
ReplyDeleteஇதுவும் ஒரு நல்ல அகுடியா
Deleteஇது தான் ஈசி. நானெல்லாம் மெனு பாத்து ஆர்டர் பண்றதுக்கே தடுமாறுவேன். எங்கிட்ட நாளைக்கென்ன சமைக்கறதுன்னு கேட்டா பேபே பேபே தான்.
Delete// எங்கிட்ட நாளைக்கென்ன சமைக்கறதுன்னு கேட்டா //
Deleteதயிர் சாதம் ஊறுகாய் :-)
//எங்கிட்ட நாளைக்கென்ன சமைக்கறதுன்னு கேட்டா //
Deleteஇந்த விசாரணையில் பல உண்மைகள் வெளியே வரும் போலிருக்குதே !!
This comment has been removed by the author.
ReplyDelete// புது இதழ்கள் இன்னமுமே பிரெஷாக உங்கள் அலமாரிகளில் குந்திக்கிடக்கும் வேளையிது எனும் போது //
ReplyDeleteமூணு மாச புக்கை மோந்து பார்த்ததோடு சரி.
நான்கு ஸ்லாட்டிலும் புதிய கதைகள் வேண்டும். அவ்வளவுதான்:-)
ReplyDeleteபோர்முனையில் தேவதைகள்!
ReplyDeleteஏக் தம்மில் முடிச்சாச்சு!
விஜயகாந்த் பட பாணி கதை!
நல்ல விருவிருப்பு! தெரிந்த முடிவு!
7/10
83வது
ReplyDeleteஅட்டை படங்களின் தொகுப்பு சரி தான்! அந்த புத்தகங்களை படிக்க ஆசைபடுபவா்களுக்கு என்ன பதில்?
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDelete1. Apocalyptic- உயிரைத்தேடி
Delete2. Cartoon- சுஸ்கி விஸ்கி
3. Horror
4. Sci-fi- வலேரியன்
5. Treasure hunt/ Expedition
6. Detective
அடடே அப்படியே என்னுடைய கருத்துடன் பக்கவாக மேட்ச் ஆகிறதே...
Deleteவலேரியனுக்கு எனது ஓட்டும்
Deleteஎடி ji
ReplyDeleteSurvival Thriller stories
Adventure stories
Sci-fi stories
Ghost story
psycho thriller, serial killer stories.
Detective stories
Dear Editor,
ReplyDeleteMy choices
1.Spider - neethikavalan, kolai padai
2.Merke po maavera
3.Tex Romance story
4.Some new graphic novel(commercial, action)
Science Fiction
ReplyDeleteHorror
ReplyDelete//Tex மறுபதிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைத்து புதிய கதைகளை வெளியிட வேண்டுகிறேன் சார்//
அதே அதே!!
என்ன கதைகள் போடலாம் என்று நீங்கள் இனி இங்கு கேட்டால் பெரும்பாலானோர் அரைத்த மாவையே அரைக்க சொல்லுவார்கள் என்பது தெளிவு. புதுப்புது ஜானர்களை, கதைகளை அறிமுகப்படுத்தியது நீங்களே, மெய்மறக்கச் செய்தது நீங்களே. எனவே நீங்களே முடிவெடுத்து புதுப்புது கதைகளை புதுப்புது தளங்களை எங்களுக்கு அறிமுகப் படுத்துங்கள் சார்...
ReplyDeleteஇது பேச்சு +1000
Deleteபழைய கதைகள் அல்லது ரீ பிரிண்டுகள் இவைகளுக்கு தனியே ஒரு சந்தாவை அறிமுகப்படுத்தினால் கூட தேவலாம் என்பேன். வேண்டாதவர்கள் அவற்றை விலக்கி வைக்க வாய்ப்பு கிடைக்கும் அல்லவா?
ReplyDeleteஇப்போதும் அவை அப்படியே தான் சார் வருகிறது லயன் லைப்ரரியில். சந்தா கிடையாது தேவைபட்டால் மட்டும் வாங்கிக்கொள்ளலாம்
DeleteThanks கிருஷ்ணா !
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆசிரியரே சில கதைகளைக் கூறினால் தேர்ந்தெடுக்க எளிதாக இருக்கும்.
ReplyDeleteநீங்கள் பார்த்திருக்கவே செய்யாத கதைகளை நான் பட்டியலிடுவதால் என்ன பலன் கிட்டிடக்கூடும் சார் ? ஜானர்களை மட்டும் தேர்வு செய்யுங்கள் என நான் கோரியது அதன் பொருட்டே !
Deleteஜானர்கள் என்றால்
Deleteஒரு காமெடி
ஒரு ஹாரர் / திரில்லர்
ஒரு ஆக்க்ஷன்
ஒரு புது கதை / கிராபிக் நாவல்ன்னு கலந்து கட்டி அடிச்ச நன்னா இருக்கும்.
சுஸ்கி & விஸ்கி
ReplyDeleteஇயல்பான பழைய உரை நடையிலேயே இருக்கட்டும் டியர் எடி எதையும் மாற்ற வேண்டாமே.
எங்களின் பால்யத்தை இதைக்கொண்டு தேற்றிக்கொள்கிறோம் .. ( அக்கால நினைவுகள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது அந்த பால்யகால நினைவுகள் உற்றெடுக்குமே ப்ளீஸ் டியர் எடி )
அதில் இயல்பும் இல்லை ; உரையும் இல்லை ; நடையும் இல்லை சம்பத் ! மொக்கை மட்டுமே உள்ளது பிரதானமாய் ! ரொம்பவே பாடாவதியாய்த் தென்படும் இடங்களை மட்டுமாவது மாற்றாமல் விட்டால் சிரிப்பாய்ச் சிரித்துப் போய்விடும் இந்த இதழ் !
Delete103rd
ReplyDeleteWent to book fair..all stores are near only not much distance and almost same count as previous book fair...
ReplyDeleteOnly missing thing is muthu comics book stall
அட, நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை எண்ணி தூக்கத்தைத் தொலைப்பானேன் நண்பரே ? விசனம் கொண்டு நிற்கும் நேரத்துக்கு அடுத்த முயற்சிக்குள் புகுந்திட்டால் போச்சு !
DeleteFB some.people adding comment if respond there my be new people can join
ReplyDeleteசெம்ம, சூப்பர் decision... ஒரே கல்லுல 6 மாங்காய்... அதுவும் சுஸ்கி விஸ்கி, உயிரைத்தேடி... காவியங்களுடன்... தயவுசெய்து செய்து இதில் குதிரை வீரர்களை நுழைக்காதீர்கள் ப்ளீஸ்... ஸ்பைடர், ஆர்ச்சி, இரட்டை வேட்டையர், ஜானி இவர்கள் நால்வரும் எனது choice...
ReplyDeleteFantasy, (Spider, Archie)
DeleteAction, (Modesty???)
Adventure, (Hunters)
Suspense/Thriller (Reporter Johnny)
அந்நாளைய மொழிபெயர்ப்பு சைஸுக்கு ஏற்ப குறைக்கப்பட்டிருக்கலாம் என்றாலும் தரத்திற்கு பஞ்சம் இருந்ததில்லை... ஆனால் புதிய வாசகர் நலன் கருதி மொழிபெயர்ப்பை மெருகூட்டலாம் தான்.
Deleteசொதப்பலான அந்நாட்களில் வரிகளுக்கு காரணம் சைசும் இல்லை ; ஒண்ணுமில்லை ஆதி....டப்ஸா மொழிபெயர்ப்பு ! அவ்வளவே !
Deleteஎனது மகளும் மகனும் மற்றும் அவர்களது பள்ளி நண்பர்களும் மங்கா/அனிமே series விரும்பி படிக்கின்றனர்/பார்க்கின்றனர். I think it is apt time for any Indian comic publishers to come out with translation of some hot selling manga series. I remember once upon a time you had written about this sir.
ReplyDeleteஅதற்கு இன்னமும் நேரம் கனியவில்லை நண்பரே ! எனக்கே அவற்றுள் புகுந்து வெளியேறும் பொறுமையைத் தேட வேண்டியிருக்கும் முதலில் !
Deleteகாத்திருக்கிறேன் சார்
DeleteMy choice of genre
ReplyDelete1. Adventure
2. Detective
3. War
4. Graphic novel
5. Slice of life manga
1) டிடெக்டிவ் ஸ்பெஷல்
ReplyDelete2) Sci-fi
3) டியனார்டோ தாத்தா தொகுப்பு
4) கெளபாய் கதை
// டியனார்டோ தாத்தா தொகுப்பு//
Deleteஅதே அதே
அவர் டியனார்டோ அல்ல சார் ; நமது டியர் லியனார்டோ !
Deleteவிஜயன் சார், 2022 காமிக்ஸ் அட்டவணையில் நீங்கள் விருப்பப்பட்டு தவிர்க்க முடியாத காரணத்தால் இடம் கொடுக்க முடியாமல் பரணில் தூக்கி போட்ட கதைகளை அந்த நாலு ஸ்லாட்டில் போட்டு தாக்கலாமே ?
ReplyDeleteஅது ஒரு 25 இதழ்களாச்சும் தேறும் சார் ; அதை இங்கே பட்டியலிட்டால் வேலைக்கு ஆகாது !
Deleteஅதில் ஒரு 4 to 6 மட்டும் இங்கே லிஸ்ட் செய்யுங்கள் சார்.
Deleteஅந்த கதைகளை காட்டலாமே...நாங்களும் பெருமூச்சிடுவோமே
Deleteபோர் முனையில் தேவதைகள் ....பெண்களும் தீவிரவாதிகளானால் என்று முடுக்கி விட்டுள்ளார்கள்...17 வயதுப் பெண்னை மூளைச் சலவை செய்வதும்....சிறிது நேர்மையான பெண்ணை மூளைச்சலவை செய்து தடுமாற வைப்பதும் தாங்களே அவனை நம்பாமல் கொல்வுதும்....என் தீவிரவாதத்தின் முகத்தை அப்பட்டமாய் படம் பிடிக்கும் கதை...பெண்களால் எல்லாம் முடியும் என அவர்கள் ஈகோவை தட்டியெழுப்ப மின்னலாய் பாயும் கதை
ReplyDelete....சித்திரங்கள் வண்ணச்சேர்க்கை தூள் கிளப்புது ...அந்த ஒரு பக்க குன்றுகளில் காட்டிய இல்லங்கள் அருமை...
கடைசியில் மனைவியை கணவனும் தலைவனும் கைவிட அவளும் இவர்களை கைவிட கடவுளும் கைவிடுகிறார் ராக்கெட்டை அனுப்பி ....
தீவிரவாதிகள் எப்படியும் அழிக்கப்படுவார்கள் ....வித்தியாசமான முயற்சிக்கு கிடைத்த கதை...ஓர் அற்மபுதமான பாடம் நல்லவர்க்கும் தீயவர்க்கும்
அட்டைப் பட தொகுப்பு மறந்துட்டேன்....சார் அட்டகாசமா இப்ப ஆல்பால வந்த சைசுல போட்டா தெளிவா நல்லாருக்கு...அல்லது தீப்பெட்டி சைசுல சின்ன புக்காவோ .அந்த கால தீப்பெட்டி லேபிள் சேகரிப்பா வந்தாலோ அருமையாருக்கும்
ReplyDeleteOriginal size + 1
DeleteOriginal size +100
Deleteஆல்பாவின் உள்ளட்டையில் பக்கத்துக்கு பதினாறு நல்லாதான இருக்கு நண்பர்களே...25 பக்கங்கள் போதுமே
Deleteஇந்த வேலையை ஆசிரியரிடம் விட்டு விட்டுமோமே. :-)
Deleteசார் நீங்கள் புதிய கதை எது வேண்டுமானாலும் போடுங்க ஆனால் தயவு செய்து ரீ பிரின்டிங் போடாதீர்கள்
ReplyDeleteபட்டியலில் முதலிடத்தில் உள்ள சுஸ்கி-விஸ்கி மறுபதிப்பு தானே நண்பரே ?
Deleteஅவர் சொல்ல வருவது அந்த நான்கு ஸ்லாட் கதைகளை சார்:-)
DeleteSmurf , Smurfs, Smurf,. Smurf
ReplyDeleteஅதே அதே அதே அதே
Deleteபோர்முனையில் தேவதைகள் : தலைப்பே கதையை சொல்லி விட்டது ஆம் வீட்டுத் தேவதைகள் போராளிகளாக மாற முயற்சி செய்தால் எப்படி இருக்கும் ? படங்கள் மிக பெரிய ப்ளஸ் கதை வேகமாக சென்றாலும் ஆங்காங்கே ஒரு அயர்வு தலை தூக்கியது. கதையில் பெரிய ஹீரோ அல்லது ஆக்ஷன் கிடையாது ஆனால் கதை படிக்க சுவாரசியமாக இருந்தது.
ReplyDeleteஎனது ரேட்டிங் 7/10.
ஒரே ஒரு suggestion சார் கோடை புத்தக விழாவை மே மாத நடுவில் அமைத்துக் கொள்ளலாமே சார். ஜூன் மாதம் நாலாவது அலை வரும் முன்பாக.
ReplyDeleteஅட்டை பட தொகுப்பு வந்தாலும் ஓகே வரவில்லை என்றாலும் பாதகம் எதுவும் இல்லை. என் அளவில்...
மே ஒன்னுக்கே வரட்டுமே குமார்
Deleteசார்...
ReplyDeleteஎல்லாமே படிச்சி முடிச்சாச்சி...
இன்னும் இருபது நாளு இருக்கே...
வறட்சியா இருக்குங்க...
நம்ம பொன் விழா வருஷத்துல இப்பிடி மார்ச் மாசத்த காய வச்சு புட்டீகளே...
எனக்கு புது புக்கு வேணும் படிக்க...
அடுத்த மாசம் இப்டீ மூணு புக்கு போட்டீக எனக்கு நல்ல கோவம் வந்துடும் சொல்லிபுட்டேன்...
உங்கள யாரூ மூணே மூணு புக்கு போடச்சொன்னது...
ஜனவரி மாசம் மாதிரி எத படிக்கன்னு எங்கள தெணர விடணும்...
அத விட்டுட்டு ...
என்னமோ போங்க மவராசா...
இப்பிடியா பண்ணுவீக...
இது ஒங்களுக்கே நல்லாருக்கா...
இந்த மாசம் போல வரூம் மாதங்களை காயவிட்டு விடாதீர்கள்...ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது குண்டாவது மாதமொன்னென வரட்டும்
Deleteகுலோத்துங்க சோழனும், கொட்டிக் கிழங்கும் பின்னே போர்ட்ரூம் ஜேம்ஸ்பாண்ட் லார்கோ விஞ்ச்சும்
ReplyDeleteஅவர்: எடிட்டர் சார் சில பதிவுகளுக்கு முன்பு ஒரு புது நாயகன் இருப்பதாய் போட்டிருந்தார்.இப்ப இருக்கற 4 ஸ்லாட்ஸ்ல அத ஒண்ணாப் போடலாம்ல?
இவர்: விலைக்கும் லைட் ரீடிங்குக்கும் ஒத்து வராதோ என்னவோ?
அவர்: இருக்கலாம்..வேற ஒரு சந்தேகம்.லார்கோ விஞ்ச் தொடர் வந்துகிட்டுதானே இருக்கு..அதை ஏன் போடலை?
இவர்: பட்டுடுத்திய அரச கன்னிகை பத்தி ஒருத்தர் ஆரம்பிக்க கொட்டிக் கிழங்கு விற்பவளை பத்தி இன்னொருத்தர் முடித்த கவிதை மாதிரி ஆகிடப்போதுன்னு எடிட்டர் சார் பயப்படறாருன்னு நினைக்கிறேன்... அவரே இதப்பத்தி சொல்லியிருக்கிறார்..
அவர்: ஏம்ப்பா ? நீ நேரடியா எதையும் சொல்லமாட்டியா? போகட்டும்..முதல்ல கொட்டிக் கிழங்குன்னா என்னா?
இவர்: கொட்டி ஒரு நீர்த்தாவரம்.மண்ணுக்கடியில வேர்விட்டு தண்டு தண்ணிக்கு மேல வந்து தாமரை மாதிரி இலை பரப்பி நடுவுலேர்ந்து மரவள்ளி கிழங்கு கணக்கா மஞ்சரி(பூ மாதிரி) நிக்கும். மேலே இருக்கற அடர் ஊதா உறையை பிரிச்சா உள்ற இருக்கறது கொட்டிக் கிழங்கு..
இதுபத்தி அவ்வையார் மூதுரையில பாடியிருக்கார்
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழி தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.
அதாவது குளத்தில தண்ணி வத்திப் போச்சுன்னா அங்கிருக்கற நாரை , கொக்கு போன்ற பறவைங்கள்ளாம் போயிடும். குளத்தில் இருக்கற கொட்டி,ஆம்பல் , நெய்தல் போன்ற தாவரங்கள்ளாம் போகாது.காசு பணம் இல்லாங்காட்டி பொய்யான சொந்தக்காரங்க நம்மள விட்டு போயிடுவாங்க..உண்மையான சொந்தக்காரங்க அந்த நிலையிலும் நம்மள விட்டு போக மாட்டாங்க..
இதுல வர்ற கொட்டிதான் நம்ம பேசுறது..
குண பாடம், பதார்த்த குண சிந்தாமணி போன்ற மருத்துவ நூல்கள் சுட்டிக் காட்டும் அகத்தியர் பாடல் மற்றொரு உதாரணம்..
Deleteகொட்டிக்கிழங்கு குளிர்ச்சி என்பார், தேமலுடன்
ஒட்டி நிறைமேகம் ஒழிக்கும்காண் - வட்டமுலை
மானே ! அகக்கடுப்பும் வந்த அழலும் தணிக்குந்
தானே, இதை அறிந்து சாற்று
தேமல், மேகநோய், உடல் உட்சூடு தணிக்க வல்லது என்கிறது இப்பாடல்
அவர் : லார்கோன்னு போட்டிருக்கேன்னு படிக்க வந்த ஒருத்தர் ரெண்டு பேரும் தலை தெறிக்க ஓடப்போறாங்கன்னு நினைக்கிறேன்..அதுசரி! ஆரம்பிச்சவர் ஒருத்தர் முடிச்சவர் வேறொருத்தர்னு சொன்னியேப்பா .அது என்ன?
இவர்: மூன்றாம் குலோத்துங்க சோழன் கம்பரையும் அவரது மகன் அம்பிகாபதியையும் விருந்துண்ண அரண்மனைக்கு அழைக்கிறான்.வந்திருப்பது மிகப்
பெரும் புலவனென்பதால் தாதியரை அழைக்காது தனது மகளை விட்டுப் பரிமாறச் சொல்கிறான்.
அரச மகள் அமராவதி தட்டெடுத்து வருகிறாள்.முன்பே அமராவதிக்கும் அம்பிகாபதிக்கும் காதலுண்டு என்பதால் அமராவதியைக் கண்டவுடன்
இட்டஅடி நோவ எடுத்தஅடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய” –
எனப் பாடத் துவங்குகிறான் அம்பிகாபதி.
சூழ்நிலை மறந்து காதலியின் தந்தை அதுவும் கொற்றவன் இருப்பதை மறந்து பாடிய வரிகள்.காதலி வெறுமனே நடப்பதாலேயே அவள் பாதங்கள் வலிக்கின்றனவாம்..அவளின் பாதம் தரையை விட்டு அகலுகையிலேயே பாதம் அதன் சூடு பொறுக்காமல் கொப்பளித்து விடுகிறதாம்.
தட்டு சுமப்பதால் அவள் இடை துவள்கிறதாம்
புலவன் மகன் பாடியதைக் கேட்டு மன்னன் முகம் சினத்தால் சிவக்கிறது.இதைக் கவனித்த கம்பர் அவசரமாக
கொட்டிக்
கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் நாவில்
வழங்கோசை வையம் பெறும்” என முடிக்கிறார்
அதாவது கூடையில் வைத்து கொட்டிக் கிழங்கு வீதியில் விற்று வருபவள் பாதங்கள் அலைந்து திரிந்தமையால் வலிக்கின்றன..வெயிலில் நடந்து வந்தமையால் பாதங்கள் கொப்பளித்து விடுகின்றன.
அவள்' கிழங்கு' 'கிழங்கு' என எழுப்பும் ஒலி உலகத்துக்கே கேட்கிறது..
மகன் காதலியை நினைத்துப் பாட தந்தையோ மன்னன் சினம் தவிர்க்க எண்ணி அதனை கொட்டிக்கிழங்கு விற்கும் பெண்ணை நினைத்து பாடியதாக மாற்றிவிடுகிறார்.
அவர்: இதுக்கும் லார்கோவுக்கும் என்ன சம்பந்தம்?
Deleteஇவர்: லார்கோ கதையை ஆரம்பிச்சு வச்சது வான் ஹாம்மேன்னு எல்லாருக்கும் தெரியும்.அவரு ஏதோ காரணத்துனால கதை எழுதறத விட்டுட்டுதால கதையின் ஓவியர் பிலிப் ப்ராங்க் எரிக் ஜியாகோமெட்டி (ERIC GIACOMETTI) அப்டிங்கற பிரெஞ்சு த்ரில்லர் எழுத்தாளர் மூலமா லார்கோ தொடரைத் தொடர்ந்து
எடுத்து செல்கிறார்..
அரச குமாரியை பத்தி துவங்கிய பாடல் கொட்டிக் கிழங்கு விக்கறவளப் பத்தி மாறின கதையா எரிக் பண்ணிட்டா என்னாவறதுங்கிற பயத்துலதான் எடிட்டர் சார் லார்கோ கதைகளை போடல..
அவர்: வான் ஹாம்மே விலகிவிட எரிக் ஜியோகோமெட்டி அப்டிங்கற எழுத்தாளர் லார்கோ கதைகளை எழுத அது எப்படியிருக்கும்னு தெரியாததால் எடிட்டர் சார் லார்கோ கதைகளை தொடர்ந்து போடல ..ரெண்டு வரி சமாச்சாரத்தை ஏய்யா ரெண்டு பக்கத்துக்கு இழுக்கற?
இவர்: அதுக்கு சாண்டில்யன் மாதிரி ஆளுங்கதான் காரணம்.
அவர்: நீ அடிக்கற கூத்துக்கு அவரை ஏன்யா இழுக்கற?
இவர்: கதாநாயகிய வர்ணிக்கிறார்..இடுப்பு மெலிசா இருந்துச்சுன்னு நேரடியா சொல்லிட்டுப் போறதுதானே?
ரெண்டு பணக்காரங்க நடுவில மாட்டிக்கிட்ட ஏழையைப் போல அவள் இடை இருப்பதாக சொல்றாரு..
அவர் : அது என்னய்யா?
இவர்: மேலே இருக்கும் ஸ்தனங்கள் ஒரு தனவந்தனாம்..கீழே இருக்கும் பிருஷ்ட பாகம் ஒரு தனவந்தனாம்.
இடைப்பட்ட இடுப்பு ஒரு ஏழையாம்
அவர்: ( சிரித்து) நீ ஒரு விவகாரம் புடிச்ச ஆளுய்யா..
பின்குறிப்பு1: கம்பர் காலம் பற்றி உறுதியாகத் தெரியவில்லை.
மூன்றாம் குலோத்துங்க சோழன்
ஆட்சிக் காலத்தே அவர் வாழ்ந்தார்
என்பது ஆய்வுக்குரியது.
பின்குறிப்பு2: இட்ட அடி நோவ என மேலே குறிப்பிடப்பட்ட பாடல்
கம்பரின் தனிப்பாடல் திரட்டில் இடம்
பெற்றிருப்பது உண்மை. முதல்
இரண்டு வரிகளை அம்பிகாபதியும்
அடுத்த இரண்டு வரிகளை கம்பரும்
பாடியதாகச் சொல்லப்படுவது
ஆய்வுக்குரியது.
பின் குறிப்பு3:
எரிக் ஜியோகோமெட்டி எழுதி பிலிப்
ப்ராங்க் வரைந்து இரண்டு பிரெஞ்சு லார்கோ ஆல்பங்கள் வெளியாகியுள்ளதாகவும், அவை
வான் ஹாம்மே இல்லாதபோதும்
வாசகர்கள் மத்தியில் வரவேற்பு
பெற்றுள்ளதாகவும் தகவல்கள்
உள்ளன.அவற்றின் உண்மை நிலை என்ன என்பது எடிட்டர் சாரின்
ஆய்வுக்குரியது.
கலக்கிட்டீங்க..
Deleteஅப்பலார்கோக்கோர் ஸ்லாட்
Deleteஜானர்களை மட்டும் தேர்வு செய்யுங்கள் என நான் கோரியது அதன் பொருட்டே
ReplyDelete#####
ஆஹா கேள்வி இதுவா சார்...அப்ப ஒண்ணாவது ஆக்ஷன் கெளபாயா இருக்கனும் சார் அவ்ளோத்தான் சார்..அதுக்கு மேல நீங்க எது கொடுத்தாலும் ஓகே :-)
காலனோடு கூட்டணி: சோடா தன் பாதிரியார் வேடத்தை தாய்க்காக மட்டும் இல்லாமல் தன்னுடைய உத்யோகத்திற்காகவும் பயன்படுத்துகிறார்..
Deleteஇந்த மாதத்தில் வெளியான மற்றொரு நபரின் கதைகளை போல அல்லாமல் இவரின் வித்தியாசமான கதை களங்களே படிப்பதற்கு ஆர்வம் ஊட்டுகின்றன..
டேவிட் சாலமன் என்ற பெயரை சுருக்கி சோடா என்பதை விடவும் நம்ம ஊருக்கு ஏத்தா மாதிரி Sயையும் , D யையும் இடம் மாத்தி தோசா என்று வைத்திருக்கலாம்..
அப்ப... அந்த மற்றொரு நபரின் கதையை முதல்ல படிச்சிட்டுதான் SODAவை படிச்சிருக்கே..🤣
DeleteHa Ha Ha - ROFL !
Deleteரம்மி @ எப்படி எழுதினாலும் கேட் போடுறாங்களே :-)
Deleteசார் அடுத்த மாதம் உயிர்த் தேடிய அனுப்புனா குண்டு கெடைக்குமே
ReplyDeleteசார்
ReplyDeleteசம்மர் புத்தக மேளாவுக்கு ஓகே தான் சார் !
The Muthu 50 Mega Mela - Summer of 2022
ஒரு Tex குண்டு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள் சார் - சு-வி, உயிரைத் தேடி மற்றும் tex குண்டு முடிந்துவிட்டால் இருப்பது 3 ஸ்லாட்கள் சார். அதிலே புதியவை தெறிக்க விடலாம் சார் - லக்கி 75 என்பதால் அவரையும் ஒரு புதிய ஆல்பத்தில் இணைக்கலாம் சார் !
1. War Stories ( மின்னல் படை, அதிரடிப்படை மற்றும் ராணி காமிக்சில் வந்த கொலை வாரண்ட் போன்ற கதைகள்)
ReplyDelete2. Treasure hunt
3.Ghost ( கறுப்பு கிழவி போன்று)
4.Adventure ( இரட்டை வேட்டையர், புயல் வேக இரட்டையர் போன்று)
March month issues:
ReplyDeletePormunaiyil Devathaigal: 9
Soda: 9
Paalai vanathil Pinanthinnigal: 9 (as usual massive hit :-) )
Wanted Lucky Luke - இந்த மாதிரி ஒரு சமயத்தில் குடுக்கலாமே சார், *லக்கியை சுட்டது யார்* மாதிரி *தலைக்கு சன்மானம்*, டெக்ஸ் ரசிகர்களுக்கு அள்ளி கொடுப்பது பொல் லக்கி ரசிகர்களுக்கு கொஞ்சம் கிள்ளி கொடுங்கள் சார்
ReplyDeleteஆமாம் சரியான நேரம். Wanted Lucky Luke வெளியிட.
DeleteAgreed and supporting this.
Deleteஅமானுஷ்ய கதைகள் கிடைத்தால் நன்றாக இருக்கும் ..டெக்ஸ் கதையில் அமானுஷ்யம் உண்டென்று சொல்லிடாதீங்க Please.
ReplyDeleteநேற்று படித்த கதை: செய்வன தில்லாய் செய் -
ReplyDeleteவேலை இல்லாத ஒண்டிக்கட்டை ஹீரோயின், புதிதாக ஒரு பாடாவதி டிடக்டிவ்விடம் அசிஸ்டன்ட் ஆக வேலைக்கு சேர்கிறார். வேலைக்கு சேர்ந்த இடம் போலவே வேலைகளும்...
கிளியை கொன்ற பூனையை தேடனும்... சிகரட் திருடனும்... சொந்த கதை, சோக கதைகளை கேட்கனும்...
கொஞ்சம் பக்கங்களுக்கு பிறகு, 3 டிக்கட்டுகளின் மூலமாக கதை சூடு பிடிக்கிறது. போலீஸ்கார நண்பி, திருடனின் நண்பன் என பல டர்நிங் பாயின்டுகள் உள்ளன...
ஆண்ட்ரூ பிளின்டாப் கையெழுத்து போட்ட பந்தினை, ஒருவன் ஆட்டைய போட, அதை கண்டுபிடிக்க அம்மணி கடைபிடிக்கும் வழிமுறை ஹிஹிஹி...
ஒருமுறை படிக்கலாம் என்று சொல்ல வைத்த கதை...
நன்றி
//ஒருமுறை படிக்கலாம் என்று சொல்ல வைத்த கதை...// அதுவே பெரிய தகுதியன்றோ...? ஒருமுறை அட்டையையும், உட்பக்க ஓவியங்களையும் படம் பார்த்த பின் செல்ஃபுக்குள் அடைக்கலம் புகும் புத்தகங்கள் இருக்கையில்...?
Deleteடியர் சார்..
ReplyDeleteபுக் ஃபேர் ஸ்பெஷலுக்கு புது கதைகளையெல்லாம் கேட்கத் தயாராயில்லை..(போர்முனையில் தேவதைகள்-ல்லாம் படித்த பிறகு..?i)
மீண்டும் முத்து 50- ஐ கொண்டாடும் விதத்தில்-இரும்புக்கை மாயாவியின்
1. ஒற்றைக் கண் மர்மம் (அல்லது)
கொலைகாரக்குள்ளநரி.
2. ஃபார்முலா X13- லாரன்ஸ் & டேவிட் சாகஸம்.
3. அப்பல்லோ படலம் - ப்ருனோ ப்ரேசில் குழுவின் அதிரடி ஆட்டம்+ வில்லியம் வான்ஸின்_ஓவிய நேர்த்தி..
4. இன்னும் ஒரு SoDA_
:அல்லது-ரிப்ஜானியின்_சிவப்புப்பாதை (அ) விசித்திர நண்பன்..
நன்றி...iii.
பாலைவனத்தில் பிணந்தின்னிகள்:
ReplyDeleteஇத்தினி ஷோக்கா ஒரு கதைக்கரு கெட்ச்சிர்ந்தும்...
பூந்தி மேரி டுபாக்க்கி ஃபைட்ஸு.. திராட்சை மேரி டர்னிங் பாயிண்ட்ஸு.. முந்திரி மேரி பிளானிங்ஸ்னு கயந்துகட்டி சொம்மா லட்டுக் கெணக்கா குட்த்துர்க்க வேண்டிய கதைய...
இன்ட்ரஸ்டிங்கே இல்லாத பிளானிங்கு.. காமாசோமான்னு டுபாக்கி ஃபைட்டு.. இன்னாவோ போடான்ற மேரி ஒரு க்ளைமாக்ஸுன்னு லட்டுக்கு புடிக்கிறதுக்கு மாறா புட்டு சுட்டு வெச்சிட்டாங்கோ..!
ஸ்டார்டிங்லயே சொன்னாமேரி சொம்மா அம்சமான கதைக்கரு.. கதை போற போக்குதான் கொஞ்சோம் போரடிக்குது.!
பிளஸ் பாயிண்டுகள்:
கிட் கார்சன், லிஸா., டெக்ஸ் வில்லர்.. கதையின் முதல் பாதி..
மைனஸ் பாயிண்ட்ஸ்
காலண்டர்ல தேதிகிழிக்கிற அளவுக்கு சுளுவா கொள்ளைகும்பலோட மறைவிடத்தை தெரிஞ்சிக்கிறது..
தாமஸ் ப்ரீச்சர் ஆவதற்கான காரணம் வலுவானதாக இல்லை.!
தெரியாமல் இழைத்துவிட்ட தவறுக்கே வருந்தும் நல்ல மனதுள்ள தாமஸ்.. இத்தனை கொடூரங்களை செய்வாரா என்பது யோசிக்க வேண்டிய விசயம்.!
விறுவிறுப்பான சம்பவக்கோர்வைகள் இல்லாமல் பேசிக்க்க்க்க்க்கொண்டே இருப்பது.!
கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் டெங்ஸ் வில்லர் கதைவரிசையில் இதுவும் சூப்பர்ஹிட் ஆகியிருக்கக்கூடும்.. ஜஸ்ட் மிஸ்..!
அப்பாடி ஒரு உண்மையான விமர்சனம்.
Deleteஎனக்கு தெரிஞ்சதெல்லாம் உண்மை நேர்மை கருமை.. அவ்வளவுதான் குமார்..!:-)
Deleteரொம்ப லாஜிக் பார்க்காமல் படித்தால் ரசிக்கலாம். நீங்கள் சொல்லும் குறைகள் உண்மை தான் ஆனால் கதை விறுவிறுப்பாகவே சென்றது.
Deleteஅட.. நீங்க வேற பரணி..! லாஜிக் மேல பன்னென்டு வீலு லாரியையே ஏத்துன எத்தனையோ கதைகளை ரசிச்சிருக்கோமே..!
Deleteஇங்கே பிரச்சினை லாஜிக்கைவிட சுவாரஸ்யம்தான்..!
இப்படி யோசிச்சிப் பாருங்க பரணி..!
Deleteஅந்தப் பாலைவனப்பகுதியில இருக்குறதே ஒண்ணுரெண்டு செவ்விந்திய கிராமங்கள்தான்.!
அவங்ககிட்ட கூட விசாரிக்காம இந்த இராணுவத்தினர் அப்படி எங்கதான் தேடினாங்களாம்.. அதுவும் வருசக்கணக்கா.?
டெக்ஸ் வில்லர் & கோ கொஞ்சம்கூட மெனக்கெடவே இல்லை.. அப்புறம் கோவாலு.. ராத்திக்கு என்னா டிபனுன்னு கேக்குறமாதிரிதான் கேக்குறாங்க.. உடனே அபாச்சேக்கள்கிட்ட இருந்து கொள்ளைக்கும்பலின் இருப்பிடம் பின்கோடு முதல்கொண்டு சொல்லப்படுது..!
வில்லன் ஸ்ட்ராங்கா இருந்தாத்தானே கதை சுவாரஸ்யமா இருக்கும்.. இங்குட்டு பிரீச்சரை பாத்தா வில்லன் மாதிரியா இருக்கு..!? டாஸ்மாக் பார்களுக்கு வெளியே சார்.. பத்துரூவா குடு சார்.. சாப்பிட்டு நாலுநாள் ஆச்சி சார்னு குடிக்க காசு ரெடி பண்ணுவாங்களே.. அவங்களை பாக்குற ஃபீலிங்தான் வருது.! வில்லன்னா டெர்ரரா கொடூரமா.. வஞ்சகனா.. இருக்கணும். ! உதாரணத்துக்கு ரே கிளம்மன்ஸ்.. கஸ்டாப்.. ராக்கி டர்பின்.. இப்படி நிறைய..!
வேதாளர் S70
ReplyDeleteநிறுத்தி நிதானமாக ரசித்துப் படித்து முடித்தாயிற்று வேதாள மாயாத்மாவை.!
அத்தனையிலும் எனக்குப் பிடித்த டாப் கதைன்னா அது கானக ஒலிம்பிக்ஸ்தான்.!
நடிகர் திலகத்தின் முதல் வசனம் "சக்சஸ்".. அதன்பிறகு அவர் பேசியது எல்லாமே சக்சஸ்தான்..! அதைப்போலவே S70 யின் முதல் இதழ் சக்கைபோடு போட்டிருக்கிறது.. இனி தொடரும் அனைத்துமே அப்படியே இருக்குமென்று நம்பலாம்.!
ரிப் கிர்பி.. மாண்ட்ரேக் வெளியீடுகளுக்காக வெறித்தனமாகவும்.. காரிகன் வெளியீட்டிற்காக வெறியற்றத்தனமாகவும் காத்திருக்கிறேன்.!
செய்வன தில்லாய் செய் (மேகி கேரிசன்):
ReplyDeleteவேதாளர் இதழோடு இலவமாக இணைந்து வந்திருந்த இதழ்.!
சோத்துக்கு வழியில்லன்னு சின்னாயி வூட்டுக்கு போனா அவ சாத்துக்கு வழியில்லன்னு எதுக்கால வந்தாளாம்ங்கிற கதையா..
வேலைவெட்டி இல்லாத ஒரு புள்ளக்கி ஒரு ப்ரைவேட் டிடெக்டிவ் ஆபிசுல வேலை கிடைக்குது.. நிற்க.. வேலை மட்டும்தான் கிடைக்குது..(மேலே உள்ள சொலவடை எதுக்குன்னு இப்போ புரிஞ்சிருக்குமே).!
அந்த தேங்காமூடி டிடெக்டிவ்கிட்ட அஸிஸ்டென்டா சேந்துக்கிட்ட மேகிக்கு ஒரு கிளியை கண்டுபுடிக்கிற கேஸ் மாட்டுது..! 20 பவுண்ட் மதிப்புள்ள கிளியை கண்டுபுடிச்சி குடுத்தா 70 பவுண்டு சன்மானம்..! மேகி புள்ள ஸ்மார்ட்டா கடையில ஒரு கிளியை 20 பவுண்டுக்கு வாங்கிக் குடுத்துட்டு 70 பவுண்டை அடிச்சிருது..!
அதேபோல முன்னாள் CSK பிளேயரும் இங்கிலாந்து ஆல்ரவுண்டருமான ஆன்ட்ரூ ஃப்ளின்டாஃப் ஆட்டோகிராஃப் போட்டுக்குடுத்த பந்தை பாருக்கு வந்த எவனோ ஆட்டையை போட்டிருக்க.. அதை மேகி கண்டுபிடிக்கும் மெத்தேட் கிளுகிளுப்பு.!
மேகிக்கு ஒரு சூதாட்ட விடுதியின் டோக்கன்கள் மூன்று கிடைக்க அதை அபகரிக்க நடக்கும் சூழ்ச்சிகள் அருமை..!
மேகிக்கு கிடைக்கும் போலிஸ்கார சிநேகிதி., டோக்கன்களுக்காக துரோகி ஆகிறாள்.!
மேகியை மிரட்டி டோக்கன்களை பிடுங்க வந்த அடியாள் மேகியின் காதலன் ஆகிறான்..!
மிகவும் சுவாரஸ்யமான ட்விஸ்ட்டுகளோடு.. அதிக ஆர்பாட்டமில்லாத.. அதே சமயம் பரபரப்பான கதையோட்டம் ரொம்பவே ரசிக்கவைத்தது..!
ஒரே ஒரு குறைன்னா அது சித்திரங்கள் மட்டுமே..!
காக்கை காளியைப் போல் மேகியை வரைந்து வைத்திருக்கிறார்கள்.!
அதைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் மேகி கேரிசன் ஒரு அட்டகாச புது வரவு.!
// கிளியை கண்டுபுடிக்கிற கேஸ் மாட்டுது..! //
Deleteஅது குருவி :-)
அருமையான விமர்சனம்
Deleteமேகி கேரிசன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது இவரின் அடுத்த கதையை விரைவில் வெளியிடுங்கள்.
Delete///அது குருவி :-)///
Deleteகுருவியா அது..!? சரி.. பரவால்ல விடுங்க.. ரெண்டும் ஒரே சைஸ்தானே.!
1. Rin tin can
ReplyDelete2. Smurfs
3. Leonardo
4. Benny
Ithellam varathunu theriyum. Ethukkum namma vote pottu vaippom
ஐ நம்ப அணி. இங்கு குறிப்பிட அனைத்து கதைகளுக்கும் எனது ஆதரவு.
DeleteMe also 🤗🤗
DeleteSir, whatever u decide is ok for us.
ReplyDeleteOnly request is to please mail all subscribers about special issues. I am a regular reader of blog and subscriber, but I dont know how I missed 2 books in last book fair release.
True, if can't follow blog you will miss book fair issues...
Deleteகாமிக்ஸ் படிக்கும் எம் காமிக்ஸ் குல மகளிரை வாழ்த்தி இம் மகளிர் தின வாழ்த்துகள் சொல்லி மகிழ்கிறேன்...
ReplyDeleteசார் ஒரு சிந்தனை, சாத்திய கூறுகள் பற்றி தெரியவில்லை.
ReplyDeleteசூதாடும் சீமாட்டி போல ஒன் ஷாட் கவ்பாய் கதைகள் பல பிரிட்டிஷ் காமிக்சில் இருக்குமே அவைகளை நாம் முயற்சிக்கலாமா. குறைந்த விலை கருப்பு வெள்ளையில் சாத்தியமாகுமா. தற்சமய பழைய ராணி ஜேம்ஸ்பாண்ட் மாற்றாக அதை முயலலாமா.
+1
Deleteமாஸ்கோவில் ஜான் மாஸ்டர். போ ட்டால் நன்றாக. இருக்குமே. (ரஷ்யாவின். ருத்ர. தாண்டவம். நடந்து கொண்டிருக்கும். இந்த. நேரத்தில். பொருத்தமாக. இருக்குமே). பல. வருடங்களாக மறு பதிப்பு. என இழுத்து. கொண்டிருக்கும். இதழ். Dekshnamoorthy. Thiruvarur
ReplyDelete/// Slots 4 எனும் போது உங்களின் பரிந்துரைகளுமே நான்காக மட்டும் இருந்திடட்டுமே///
ReplyDeleteசிக்பில்
லக்கி லூக்
சிக்பில்
லக்கி லூக்
(ஸ்மர்ஃப்ஸ்
பென்னி
மதியில்லா மந்திரி
ரின்டின் கேன்
இப்படி கேக்க ஆசைதான் சார்.)
ஆனா எங்களுக்கோ ஆசையிருப்பதென்னவோ தாசில் பண்ணத்தான்... ஆனால் அம்சம் இருப்பதோ.😂😂
ReplyDeleteரொம்ப லாஜிக் பார்க்காமல் படித்தால் ரசிக்கலாம். நீங்கள் சொல்லும் குறைகள் உண்மை தான் ஆனால் கதை விறுவிறுப்பாகவே சென்றது
கமர்ஷியல் ஆக்ஷன் கதையில் லாஜீக் ஏது..?!
வழிமொழிகிறேன்..