Powered By Blogger

Thursday, March 10, 2022

RIP பழனி !

 நண்பர்களே,

நண்பர் பழனிவேல் நம்மோடில்லை ; படைத்தவரின் மடியினில் இளைப்பாறப் புறப்பட்டுப் போய்விட்டார் !

ஒரு தோற்கும் போரை வீரமாய், முனைப்பாய்ப் போராடிய பெருமை யுக்ரெய்னுக்கு மாத்திரமே சாராது  - நமது நண்பர் பழனிக்குமே தான் !  'கணையப் புற்று நோய்' எனும் அரக்கனோடு கிட்டத்தட்ட ஒன்றேகால் ஆண்டுகளாய் அவர் நடத்திய யுத்தம் சத்தியமாய் அசாத்தியமானது ! உலகின் பல பிரபலங்களைக் காவு வாங்கிய இந்த நோயை நிஜமாகவே வென்றிட முடியுமென்று நம்பிக்கை கொண்டிருந்தாரா ? ஒவ்வொரு இரவின் தனிமையிலும் அந்த மனசு  எப்படி அல்லாடியிருக்கும்  ? அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாளில் அவரது ஆழ்மனதில் என்ன ஓடியிருக்கும் ? என்பதெல்லாமே, நமக்குத் தெரியவே போவதில்லை தான் ; ஆனால் பயமென்று எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாது, சிரித்த முகமாய் அவர் வாழ்ந்த இந்த இறுதி 400+ நாட்கள் - a saga of bravery !!  

இரண்டு சின்னப் பெண்குழந்தைகள் ; உலகமறியா மனைவி ; முதிய  பெற்றோர் - என பழனி இன்று விட்டுச் சென்றுள்ளது ஒரு வெள்ளந்திக் குடும்பத்தை ! அவர்களது ஜீவிதங்கள் இனி எவ்விதம் தொடர்ந்திடும் ? அந்தக் குடும்பத்தின் சக்கரங்கள் சுழன்றிட இனி மாற்று வழிகள் தான் என்ன ? வாழ்க்கையில் இன்னும் ஏக தூரம் பயணிக்க வேண்டியுள்ள அந்தச் சிறுசுகளின் கல்வி, எதிர்காலம், என்பனவெல்லாம் மெகா கேள்விக்குறிகளாய் நிற்கும் இந்த நொடிதனில், ஒரு காமிக்ஸ் குடும்பமாய் நாம் செய்திடக்கூடிய சகாயம் என்னவாக இருக்கக்கூடும் ? தலைசுற்றச் செய்கின்றன - ஒவ்வொரு கேள்வியுமே ! 

இந்தத் தருணம் பழனியை நினைவு கூர்ந்திட மட்டுமே எனும் போது, நண்பருக்காக ஈரமாகும் விழிகள் காய்ந்திட கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்வோம் ! ஆனால் விழிகளில் படிந்திருக்கும் ஈரம் வடிந்திருக்கும் நொடியில், அந்தக் குழந்தைகளுக்கென நாம் செய்திடக் கூடியது என்னவாக இருக்குமென்று சிந்திக்கும் பொறுப்பு நமக்குக் காத்திருக்கும் !  

நிம்மதியாய்த் துயிலுங்கள் பழனி !! விண்ணுலகினில் உங்கள் பிரிய வில்லியம் வான்ஸ் உங்களை ஆரத் தழுவிடக் காத்திருப்பார் ! 

98 comments:

  1. சில பிரிவுகளும், இழப்பும் என்றும் ஈடு செய்ய முடியாதவை

    RIP 😢😭😭

    ReplyDelete
  2. //இரண்டு சின்னப் பெண்குழந்தைகள் ; உலகமறியா மனைவி ; முதிய பெற்றோர் - என பழனி இன்று விட்டுச் சென்றுள்ளது ஒரு வெள்ளந்திக் குடும்பத்தை ! அவர்களது ஜீவிதங்கள் இனி எவ்விதம் தொடர்ந்திடும் ? அந்தக் குடும்பத்தின் சக்கரங்கள் சுழன்றிட இனி மாற்று வழிகள் தான் என்ன ? வாழ்க்கையில் இன்னும் ஏக தூரம் பயணிக்க வேண்டியுள்ள அந்தச் சிறுசுகளின் கல்வி, எதிர்காலம், என்பனவெல்லாம் மெகா கேள்விக்குறிகளாய் நிற்கும் இந்த நொடிதனில், ஒரு காமிக்ஸ் குடும்பமாய் நாம் செய்திடக்கூடிய சகாயம் என்னவாக இருக்கக்கூடும் ?//

    இதை படிக்கும் போதே நெஞ்சம் கனக்கிறது 😞😞

    ReplyDelete
  3. இறைவனும் செவிடாகிய தருணமிது நமது வேண்டுதல்களும் பிரார்த்தனைகளும் கடைசி வரை இறைவனுக்கு எட்டவில்லையே

    ReplyDelete
  4. அதிர்ச்சி தாளவில்லை. மிகவும் நல்ல நண்பர். கடந்த பிப்ரவரி 10 அவரிடம் பேசியிருந்தேன். இன்னும் இந்த செய்தியை நம்ப இயலவில்லை. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  5. வருடம் 2019, ஆகஸ்ட் மாதம். ஈரோடு புத்தக திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நெல்லையில் இருந்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் Eரோடு நோக்கிய பயணத்தில் ஏதோவொரு வாட்சப் குழுவில் பழனிவேல் என்பவர் (இதற்கு முன் பழனியை தெரியாது) Eரோடு புத்தக விழாவுக்கு வரும் நண்பர்கள் யாரேனும் இந்த ரயிலில் வருகிறீர்களா.... என்று கேட்டிருந்தார்... நானும் வாட்சப் Eமோஜியில் கைதூக்கியிருந்தேன். ஸ்டேஷனில் இறங்கியபின் சந்தித்தோம்... இப்படித்தான் நண்பர் பழனிவேல் அறிமுகம்... "சற்று காத்திருக்கலாமா?" சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸில் எனது நண்பர் KVG வருகிறார்... அவருடன் சேர்ந்து செல்லலாம் என்றார் பழனி.
    5 நிமிட காத்திருப்புக்குள் பொதிகை எக்ஸ்பிரஸும் Eரோட்டில் சங்கமித்தது. இங்குதான் KVG அவர்கள் அறிமுகம்.... இதற்கு முன் அலைபேசியில் கூட பேசியதில்லை... ஆனால் நேரில் சந்தித்து பேசியதில் பல நாள் பழகிய உணர்வைத் தந்தது.... பழனியின் தோழமை.

    அன்று காலை முதல் மாலைவரை KVG மற்றும் பழனியோடு ஈரோடு புத்தக விழாவில் கலந்துகொண்டு முகமறியா பல நண்பர்களை நேரில் சந்தித்து மகிழ வாய்ப்பாக அமைந்தது .....

    உறவுகளே பேச மறுக்கும்/ மறந்துபோகும் இந்த அவசர உலகில் சந்தித்த நாள் அன்றிலிருந்து இன்றுவரை நாள்தோறும் தவறாமல் தொடர்பிலிருந்த பழகுவதற்கு இனியர், பண்பாளர், XIII இன் காதலர், 365 நாளும் கிடைக்கும் நேரங்களில் சுயத்தைப் பற்றி சிந்திக்காமல் நண்பர்களுடன் பழகியவர்.... இன்று நோயுடன் போராடி மடிந்தாரோ....

    இறந்தும் இறவாநிலையில் என்றும் நண்பர்கள் மனங்களில் வாழ்வாய் நட்பே....

    நல்ல நண்பர்களை அறிமுகப்படுத்தித் தந்த நட்பே....

    இது கனவாக இருந்திடக்கூடாதா? என்று மனம் அழுகிறது😭

    ReplyDelete
  6. அவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். "நெரு நல் உளன் ஒருவன் இன்றில்லை எனும் வெறுமை உடைத்து இவ்வுலகு"...💐😢

    ReplyDelete
  7. அழத்தான் முடிகிறது நம்மால். அத்தனைபேரின் ப்ராரத்தனைகளும் தோற்றுபோய் விட்டதே .. சென்று வா நண்பனே .. 😢😢😢

    ReplyDelete
  8. இரு ஆண்டுகளுக்கு முன்னர், என் தாயை இதே வகையில் இழந்ததால், நோய் மற்றும் அறுவைச் சிகிச்சைகளினால் நண்பர் பழனிவேல் உட்படுத்தப்பட்ட அளவில்லாத் துன்பங்களையும், வலிகளின் தீவிரத்தையும் சற்று உணர முடிகிறது. அத்துன்பங்களில் இருந்து விடுபட்ட நம் நண்பர், தம் குடும்பத்தைப் பெருந்துயரத்தில் ஆழ்த்திச் சென்றிருக்கிறார் (பத்து - மூன்று - 2022). நினைவிலிருந்து நீங்காமல் இருப்பீர்கள் பழனி.

    ReplyDelete
  9. ������

    கண்ணீர் வழிகிறது. எப்போதும் சிரிக்கும் அவரின் முகம் நினைவிலிருந்து என்றும் மறையாது.

    இறைவன் மடியில் இளைப்பாருங்கள் நண்பரே பழனி.

    ����������

    ReplyDelete
  10. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  11. நண்பர் பழனியை பற்றி நினைக்கும் போதெல்லாம் நினைவில் வருவது அவருடைய சிரித்த முகமே. அவரிடம் ஃபோனில் பல முறை பேசி இருக்கிறேன். நமது லயன் முகவர் என்பதால் ஏதேனும் நண்பர்கள் வாங்காமல் விட்ட புத்தகங்களை வாங்க அவரை நாடுவேன். எப்பொழுதுமே உதவி செய்ய அவர் தயங்கியது இல்லை. நல்ல மனிதர் அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை.

    Life is short என்பதை உணரும் நேரம் இது.

    ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete
  12. ஆழ்ந்த இரங்கல்கள்.
    பழனி அவர்களின் குடும்பத்திற்கு நம்மாலான உதவி ஏதாவது செய்ய முயற்சிப்போம்.

    ReplyDelete
  13. ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete
  14. 😰😰😰பழனி...என்ன ஒரு மனிதனய்யா நீர்..😰😰
    நண்பர்கள் யாரிடம் பேசினாலும் ஒருவர்கூட தவறாக ஒரு வார்த்தை சொல்லவில்லை.

    ஒன்று மட்டும் புரியவில்லை.. ஒரு மனிதனால் அத்தனை பேருக்கும் நண்பனாக இருக்கமுடியுமா?..🤔😰😔
    பழனி..நீங்கள் ..ஆச்சர்யம் அல்ல.. அதிசயம்..😰😰😰

    எப்போது பேசினாலும் என்ன தலைவரே.. சொல்லுங்க தலைவரே.. என்றுதான் ஆரம்பிப்பார். அனைவருக்கும் தொண்டனாகவே இருந்து இன்று மனம் வலிக்க வைத்து விட்டாரே.

    ReplyDelete
  15. காமிக்ஸ் வட்டத்தின் அன்பு முத்துக்கள் உதிர்ந்து போவது நெஞ்சை கணக்கிறது.. 🥺🥺 மிஸ் யூ பழனி அண்ணா.. 💔

    ReplyDelete
  16. ஆழ்ந்த இரங்கல்கள், மனம் வலிக்கிறது

    ReplyDelete
  17. ஆழ்ந்த இரங்கல்கள்..

    ReplyDelete
  18. பழனி பழனி :-( மனது வலிக்கிறது. 🙏🙏🙏🙏😢

    ReplyDelete
  19. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  20. // விழிகளில் படிந்திருக்கும் ஈரம் வடிந்திருக்கும் நொடியில், அந்தக் குழந்தைகளுக்கென நாம் செய்திடக் கூடியது என்னவாக இருக்குமென்று சிந்திக்கும் பொறுப்பு நமக்குக் காத்திருக்கும் //

    கல்வி என்பது இன்றியமையாதது. கல்வியை தொடர்ந்து கொடுத்தால் எதிர்காலத்தை அவர்களே சமாளிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

    நண்பர்கள் நாம் அனைவரும் சேர்ந்து அவர்களின் பள்ளி கல்விக்கு/கல்லூரி படிப்புக்கு ஆண்டு தோறும் உதவுவோமே? பழனியின் குடும்பத்துக்கு நம்மால் முடியும் ஒரு சிறிய உதவி.

    ReplyDelete
    Replies
    1. என்னால் முடிந்த உதவியை அவர்களின் கல்விக்கு ஆண்டு தோறும் செய்ய விரும்புகிறேன்.

      Delete
  21. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  22. சரிங்க தலைவரே!
    செஞ்சிரலாம் தலைவரே!
    நீங்க சொன்னா சரிதான் தலைவரே!
    ஏற்பாடு பண்ணிறலாம் தலைவரே!
    வாங்கி கொடுத்தரலாம் தலைவரே!
    பேச சொல்லுங்க தலைவரே நான் பாத்துக்கிறேன் தலைவரே!
    உடனே ஆபீஸ்ல கேட்கிறேன் தலைவரே!

    ---மூச்சுக்கு மூச்சு இந்த வார்த்தையை மட்டுமே பேசிய குரலை இனி என்று கேட்போமே????

    நட்புகளுக்கு உதவுவதே வாழ்நாள் லட்சியமாக வைத்திருந்தாயே நண்பா பழனி!

    XIII க்காகவே ஒவ்வொரு நொடியும் வாழ்ந்து சென்ற அதியம்ப்பா நீ!

    சந்திப்பது விழாக்களில் என்றாலும் கூட நெடுங்காலம் பழகிய பண்பை வெளிப்படுத்திய வெள்ளந்தி உள்ள நண்பா,

    வேதனை மறைத்து ஒவ்வொரு முறையும் சிரித்தாயே, எப்படி இயன்றதோ ஆண்டவா????

    மனம் வேதனையில் குமறுகிறது.,.. சென்று வா நண்பா!

    ReplyDelete
  23. ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..
    இறைவா..

    ReplyDelete
  24. 😔😔😰 *தலைவரே* *தலைவரே*..
    என இனி யார் எங்கே சொன்னாலும் பழனியின் ஞாபகம் வருவதை தவிர்க்க இயலாது.😰

    *இரத்தபடலம்* ..*இரத்தபடலம் ..என இரத்தம் சிந்தி அவஸ்தை பட்டது போதுமென நினைத்தும்,

    Xiii .. என்று சொல்லி சொல்லி.. கடைசியில் 10 ம் தேதி 3 வது மாதம் ..13 என தனது பிரிவுக்கான தேதியையும் தேர்ந்தெடுத்து விட்டாரே நமது *Xiiiபழனி*..😰😰

    ReplyDelete
  25. நான் பழனி சாரை நேரில் பார்த்ததோ, அலைபேசியில் பேசியதோ கிடையாது.ஆனாலும் அவரது உடல்நிலை பற்றிய தகவல்கள் எப்போதும் ஒரு பதற்றத்தை உண்டுபண்ணியே இருந்தது.புகைப்படங்களில் பார்க்கும்போதே அவரது குழந்தைத்தனமான சிரித்த முகமோ மனதை ஏதோ செய்தது.கடவுளே.. இந்த நண்பரை காப்பாற்று என இரண்டு நாட்களாக பிரார்த்தித்த வேளையில் அவரது இழப்புச்செய்தி இடியாய் இறங்கியது.முன்பின் பழகியிராத பேசிடாத எனக்கே இப்படி வருத்தமென்றால் இத்தனை வருடங்களாக அவருடன் நட்பில் இருந்தவர்கள் மற்றும் நம் ஆசிரியர் படும் துயரங்கள் என்னாவ் புரிந்து கொள்ள முடிகிறது.காலமும் விதியும் மிகக்கொடியது நண்பர்களே... அலர் நினைவுகளை போற்றியே நாம் ஆறுதல் அடைவோம்.

    ReplyDelete
  26. கடைசியாக பழனியிடமிருந்து வந்த புத்தக பார்சலே கடைசி கடைசியாக இருக்கும் என்று நினைத்தது கூட இல்லை. அனைவருக்கும் நல்லவராக இருப்பது இந்த உலகத்தில் வாய்ப்பில்லை என்ற உறுதியான நம்பிக்கை கொண்டவன், நான்.

    தன்னலம் கருதாமல் இருந்தால் அது சாத்தியமே என்று வாழ்ந்து காட்டிய நபர், பழனி. இவ்வுலகம் உன் போன்ற நல்லவர்களுக்கானது இல்லை என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டிருக்கிறது.

    மறுமையில் உனக்கான சாந்தி கிடைக்கட்டும். சென்று வா நண்பா !

    அவரை பிரிந்து வாடும் குடும்பத்திற்காக உதவும் பொருட்டு, அதேவேளையில் அவரின் ஞாபகத்திற்காக, அவர் விரும்பி கேட்ட XIII SPIN-OFF கதைகளின் தொகுப்பு ஒன்றை முன்பதிவுகளுக்கு ப்ரீமியம் விலையில் வெளியிட்டு உதவி செய்யலாமா ?! முன்பதிவுகளை முன்பே தொடங்கி அதன் மூலம் உடனே ஒரு உதவி தொகை வழங்க முடியுமா ? எடிட்டரின் முடிவிற்காக வெயிட்டிங்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ரஃபிக் சொல்லும் புத்தக ஐடியா ஒரு நல்ல tribute சார். ஆனால் Tex-ஐ வசூலில் அடிக்க ஆளில்லை என்பதால் ஒரு Tex reprint போட்டால் அந்த அதிகபட்சத் தொகையானது குடும்பத்திற்கு இன்னுமே உதவக்கூடும் சார் !

      Delete
  27. ஜய்யோ ஏன் இப்படி😲😲😲

    ஆழ்ந்த இரங்கல் 😔😔

    ReplyDelete
  28. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  29. . கொடுமையான நோய் தான்..
    ஆனாலும், ட்ரீட்மெண்ட்-டிலேயே இன்னும் சிலகாலம் கொண்டு செல்லமுடியும் என்று நம்பினேன்..
    (எனது தந்தையை-அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் - ட்ரீட்மெண்ட்டிலேயே-4 ஆண்டுகள் வரை 'சமாளித்தோம்...
    சளி வந்துதான் நெஞ்சை அடைத்துவிட்டது. )
    யாருக்கும் இந்த கொடுமை நடக்கக்கூடாதுதான்..
    இருந்தாலும் காமிக்ஸ் குடும்பம் என்னும் குறுகிய வட்டத்தில் இழப்பு என்பது ஜீரணிக்க முடியவில்லையே..
    பழக்கம் இல்லையெனினும் நெருங்கிய நண்பரை இழந்தது போல பரிதவிப்பாக உள்ளது..அவர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்... மன தைரியத்தை கொடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்..

    ReplyDelete
  30. RIp பழனி, ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  31. கண்களில் நீர் வருகிறது மனம் இன்னும் நம்ப மறுகிறது கடந்த 10 நாட்களுக்கு முன் கடைசியாக ஃபோனில் பேசியது முதல் அறுவை சிகிட்சை முடிந்து கணேஷ் அண்ணாவிடம் கை துக்கி கட்டவிரல் நலம் என கூறியது . சென்று வா என்று கூற மனம் இன்னும் மறுக்கிறது காலம் இன்னும் என்ன செய்ய போகிறது தெரியவில்லை

    ReplyDelete
  32. பழனி பழனி நேற்றில் இருந்து மனம் நிமிடத்திற்கு ஒருமுறை உங்கள் நினைவில் சுற்றி வருவதை கட்டுபடுத்த முடியவில்லை :-(

    ReplyDelete
  33. என்னருமை நண்பா எங்களைப் பிரிந்து செல்ல இவ்வளவு அவசரம் ஏன் ? அந்த உலகமறியா மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை நினைத்துப் பார்த்தாயா இரக்கமற்ற இறைவா? இறைவா நீ இனிமேல் இருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன ?
    கணையப் புற்று நோய் என்று ஆசிரியரின் பதிவு மூலம் அறிந்து வேதனை அடைந்தேன். இறைவனிடம் இடைவிடாது பிரார்த்தித்தோம். ஆனாலும் நண்பர் பழனி நம்மை ஏமாற்றிச் சென்றுவிட்டார். ஈடு செய்யவே முடியாத பேரிழப்பு.அவரின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாறட்டும்.

    ReplyDelete
  34. நண்பா பழனி ஸ்மாஸிங் 70 அறிவிப்பு வந்தவுடன் நாமெ ஜெயிச்சிட்டோம் மாறா ன்னு சந்தோஷமா போன் பன்னி குதுகலமாே பேசிகிட்டு இருந்தோமே அந்த நாட்கள் திரும்ப வருமா

    ReplyDelete
  35. Rest in Peace Palanivel! I met him during Erode meet. Very nice person. He is well known for fan hood of XIII.

    ReplyDelete
  36. இனி இரத்தப்படலம் புத்தகம் பார்க்கும்போதெல்லாம் நமது அருமை பழனி (வேல்ஸ்) நினைவில் வருவார். அவர் சந்தித்த வலி, வேதனைகளின் உச்சம் சொல்லி மாளாது...

    உலகமறியா பழனி மனைவி மற்றும் சிறுப்பிள்ளைகளுக்கு ஆறுதலும் தேறுதலும் அடையும் காலமும் சமயமும் விரைவில் வரட்டும்.😭

    ReplyDelete
  37. //...அவர்களது ஜீவிதங்கள் இனி எவ்விதம் தொடர்ந்திடும் ? அந்தக் குடும்பத்தின் சக்கரங்கள் சுழன்றிட இனி மாற்று வழிகள் தான் என்ன ? வாழ்க்கையில் இன்னும் ஏக தூரம் பயணிக்க வேண்டியுள்ள அந்தச் சிறுசுகளின் கல்வி, எதிர்காலம், என்பனவெல்லாம் மெகா கேள்விக்குறிகளாய் நிற்கும் இந்த நொடிதனில், ஒரு காமிக்ஸ் குடும்பமாய் நாம் செய்திடக்கூடிய சகாயம் என்னவாக இருக்கக்கூடும் ? தலைசுற்றச் செய்கின்றன - ஒவ்வொரு கேள்வியுமே !

    இந்தத் தருணம் பழனியை நினைவு கூர்ந்திட மட்டுமே எனும் போது, நண்பருக்காக ஈரமாகும் விழிகள் காய்ந்திட கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்வோம் ! ஆனால் விழிகளில் படிந்திருக்கும் ஈரம் வடிந்திருக்கும் நொடியில், அந்தக் குழந்தைகளுக்கென நாம் செய்திடக் கூடியது என்னவாக இருக்குமென்று சிந்திக்கும் பொறுப்பு நமக்குக் காத்திருக்கும் !//

    நிச்சயம் பழனி குடும்பத்திற்காக நீங்கள் முன்னெடுக்கும் எந்த முயற்சிகளுக்கும் வாசக நண்பர்கள் ஒவ்வொருவரும் உடன் நிற்போம்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் பழனி குடும்பத்திற்காக ஆசிரியர் முன்னெடுக்கும் எந்த முயற்சிகளுக்கும் நான் மற்றும் நண்பர்கள் ஒவ்வொருவரும் துணை நிற்போம்.

      Delete
  38. நீ போராளி ..... சகோதரா. ... எம்மிலிருந்து பிரிந்து இறைவனின் மடியில் இளைப்பாற சென்று விட்டாயா ....?? உம்முடன் உரையாடிய நாட்கள் நெஞ்சில் பசுமையாக உள்ளது . உமது
    ஆன்மா சாந்தியடையட்டும் சகோதரா....

    ReplyDelete
  39. எதிர்பாராத அதிர்ச்சி ...அன்னாரது ஆத்மா சாந்தி அடையட்டும்.

    ReplyDelete
  40. அவரது சிரித்த முகத்தை மறக்க இயலாது. ஈரோடு புத்தக விழாவுக்கு சொந்த ஊரிலிருந்து பைக்கிலேயே குடும்பத்தோடு வந்தார். எடிட்டர் விஜயன் கூட செல்லமாக கடிந்து கொண்டார்.

    இந்த இளம் வயதில் கான்சர் என்ற கொடிய நோயினால் அவர் மரணமடைந்தார் என்ற தகவல் வேதனையளிக்கிறது.

    அவரது இழப்பினால் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    நண்பர் பழனிவேல் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
    😔😔😔😔😔😒😒😒😒😒😒

    ReplyDelete
  41. சமீப நாட்களாய் வலைதளப் பக்கம் வர இயலாத சூழல். இன்று சிறிது நேரம் கிடைத்ததே என்று நுழைந்தால், இந்த அதிர்ச்சியான செய்தி.
    நண்பர் பழனிவேல் அவர்களின் மறைவு நிஜமாகவே என்னை அதிர வைத்துவிட்டது. அவரது குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
    RIP பழனிவேல்.

    ReplyDelete
  42. ///இந்தத் தருணம் பழனியை நினைவு கூர்ந்திட மட்டுமே எனும் போது, நண்பருக்காக ஈரமாகும் விழிகள் காய்ந்திட கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்வோம்///

    RIP

    ReplyDelete
  43. ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete
  44. Absolutely no words - especially after reading the comments of blog friends sir ... :-(

    ReplyDelete
  45. Heading is

    இப்போது சுமதி அக்கா பேசும் நிலையில் இல்லை .. 😰

    அம்மா கிட்ட மட்டும்தான் பேச முடிந்தது .. ரொம்பவே வெள்ளந்தி மனிதர்கள் .. 😰😰

    இரு குழந்தைகளும் என்ன நடக்கிறது எனத்தெரியாமல் விளையாடிக்கொண்டிருக்கின்றன .. பார்க்கவே ரொம்ப கஷ்டமாக உள்ளது .. 😢😢

    இக் குக்கிராமத்தில் சின்னஞ்சிறிய வீடு ஊரை கண்டவுடனே முதலில் பழனிவேலின் மறைவுச்செய்தி போஸ்டரே நம்மை வரவேற்கிறது ..

    வெள்ளந்தியான மனிதர்கள் ..

    அம்மா விடம் ஆறுதலான வார்த்தைகளை கூறிக்கொண்டு நிறைய பேசும் நிலையில் யாரும் இல்லை என்பதால் கடைசியாகவாவது பழனியை நேரில் பார்ர்த்திட வேண்டும் என்ற துடிப்போடு வந்த எங்களுக்கு முகம் காட்டாலே பூமித்தாயை முத்தமிட சென்றுவிட்டார் .. அவர் போட்டோவை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே கனத்த மனதுடன்.. 😰😰😰😰😥 நாங்கள் விடை பெறுகிறோம் ..

    ReplyDelete
  46. பழனி க்கு என்ன பிரச்சனை என்பதை டாக்டர்கள் சொல்லியும் அதை புரிந்து கொள்ள முடியாத அது ஒரு பெரிய நோய் என்கிற அளவில் மட்டுமே தெரிந்த அவர் மனைவி ..


    சொல்லெண்ணா துயரம் இங்கே ..

    ReplyDelete
  47. வலிமைமிக்க விதியின் விளையாட்டால் இன்று நினைவாகி போன பழனி வேலின் ஆன்மா ஆண்டவன் நிழலில் அமைதி காணபிரார்த்திக்கின்றேன்🙏🙏🙏🙏

    ReplyDelete
  48. எத்தனை எத்தனை காமிக்ஸ் குழுக்கள்.. அத்தனையிலும் நண்பர் பழனியை பற்றியே பேச்சு..
    Whats app ஐ திறந்தால் அத்தனை DP யிலும் கறுப்பு நிறங்கள், பழனியின் புகைப்படங்கள்..😰

    இத்தனை பேரின் மனதையும் எப்படி அய்யா கொள்ளை அடித்தீர்கள் பழனி..

    நண்பர்களின் போட்டோ/ஆடியோ பகிர்வுகள்..

    கண்ணீர் நினைவலைகள்😰😰😰 கதறல்கள்..😔
    குமுறல்கள்..😰
    பழனியின் குடும்பத்தின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள்..😔😔😔
    ஏதாவது பழனிக்கு செய்தே ஆக வேண்டும் ஒவ்வொருவரின் உயிரும் துடிக்கிறது..வழி தெரியாமல் தவிக்கிறது.. 😰தன் வீட்டு துக்கம் போல நண்பர்கள் வாடி வதங்கி கிடக்கிறார்கள்..😰😰

    தலைவரே..
    தலைவரே.. என அனைவரையும் அழைத்து தன்னை தானே தாழ்த்தி கொண்டதால் தான் இந்த மாயம் நடக்கிறதா🤔😔😰

    ஒரு பெரிய தலைவர் மறைந்தால் ஏற்படும் மாபெரும் துக்கத்தை போல நண்பர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்..😰😰😰

    இறைவனுக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதுபோல..

    தன்னை *தலைவரே* என்று அழைக்க ஆள் வேண்டுமென்று நம் பழனியை அழைத்து சென்றுவிட்டான்..😰😰😔

    ReplyDelete
  49. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  50. இரங்கல்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

    ReplyDelete
  51. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  52. This comment has been removed by the author.

    ReplyDelete
  53. +5:30
    ##அந்தக் குழந்தைகளுக்கென நாம் செய்திடக் கூடியது என்னவாக இருக்குமென்று சிந்திக்கும் பொறுப்பு நமக்குக் காத்திருக்கும் ###

    கரம் கோர்ப்போம் சார்..
    அண்ணன் பழனிவேலுக்காக,
    குழந்தைகளுக்காக..

    ReplyDelete
  54. நண்பரின் இழப்பு மிகுந்த வேதனை தருகிறது. அவரின் ஆன்மா அமைதியடையட்டும். பிரிவால் துயருறும் அத்தனை உறவுகளுக்கும் எமது ஆறுதல்களும் பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
  55. நண்பர்களே..
    நமது பழனி Bro இழப்பு ஈடு செய்ய இயலாததுதான். நமது Edi Sir ன் கோரிக்கைக்கு ஏற்ப பழனி Bro வின் குடும்பத்துக்கு உதவும் விதமாக நண்பர் KV Ganesh,Chennai அவர்கள் நிதி திரட்டி வருகிறார்கள். நண்பரின் முயற்சிக்கு தோள் கொடுப்போம்.

    ReplyDelete
  56. RIP பழனி வேல் சார்.

    ReplyDelete
  57. அறிமுகம் இல்லை. பழக்கம் இல்லை. இன்றுதான் பழனி பற்றி அறிந்தேன். காமிக்ஸ் நட்புகள் அறிமுகம் இல்லையெனினும் ஒரு குடும்பமே. இத்தனை கண்ணீரே அவரின் உயர்வை காட்டுகிறது. சென்றுவாரும் நண்பரே. ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள் 🥲

    ReplyDelete

  58. பழனிவேல் TNPL-ல்பணியாற்றியவர்.
    இது ஒரு அரசு நிறுவனம் எனக் கருதுகிறேன்.

    அது உண்மையாயின் GPF உட்பட பல பணப் பலன்கள் அவர் குடும்பத்துக்கு கிடைக்கும் .

    பழைய பென்ஷன் திட்டத்தின் கீழ் அவர் வருவாரா எனத் தெரியவில்லை.

    யூனியனை அணுகினால் விவரங்கள் கிடைக்கும்.

    அவர் மனைவிக்கு கருணை அடிப்படையில் ஏதேனும் வேலை கிட்டும்..

    அவர் மனைவி வெளி உலகம் அறியாதவராயின் இதெல்லாம் விரைவாக நடக்க அருகில் உள்ளோர் உதவி செய்யலாம்..

    படிக்கும் குழந்தைகளில் தந்தை தாய் யாரேனும் ஒருவர் மரணித்தாலும் அரசு 75000 ரூ உதவி வழங்கும் திட்டமுண்டு..அதற்கும் விண்ணப்பிக்கலாம்.

    ஆசிரியர் தனது பழனிவேலுக்காக தனது உதவும் அறிவிப்பை வெளியிடுமுன் நண்பர்கள் இதற்கு உதவவும்..ஒருவேளை இதற்கு யாரேனும் முன்னமே முனைப்பில் ஈடுபட்டு இருக்க கூடும்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க சார். இதற்கும் சாத்தியம் உண்டு. விவரமறிந்தவர்கள் கூடுதல் தகவல்களைத் தெரிவிக்கவும்.

      Delete
    2. அருமை நண்பர் பழனிவேல் TNPL நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக (நிரந்திர பணியாளர் அல்ல) வேலை பார்ப்பதாக முன்பு கூறியதாக நியாபகம்.
      ஒப்பந்த பணியாளர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால், அரசாங்கத்தின் எந்த பலனும் கிடைக்க வாய்ப்பில்லை.

      Delete
    3. /அருமை நண்பர் பழனிவேல் TNPL நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக (நிரந்திர பணியாளர் அல்ல) வேலை பார்ப்பதாக முன்பு கூறியதாக நியாபகம்.//
      😒

      Delete
    4. // பழைய பென்ஷன் திட்டத்தின் கீழ் அவர் வருவாரா எனத் தெரியவில்லை. //
      01.04.2003 க்கு முன்பு பணியில் நண்பர் சேர்ந்திருந்தால் கண்டிப்பாக ஓய்வூதியம் உண்டு....
      அதற்குப் பின்பு பணியில் சேர்ந்திருந்தால் நிரந்தரமாக்கப்பட்ட பணியாளராக,அது அரசு நிறுவனமாக இருந்து உரிய பிடித்தங்கள் செய்யப்பட்டிருப்பின்,உரிய பணப்பலன்கள் கிடைக்கும்...

      // அவர் மனைவிக்கு கருணை அடிப்படையில் ஏதேனும் வேலை கிட்டும்.. //
      அதற்கு அவர் நிரந்தரமாக்கப்பட்ட பணியாளர் அல்லது பணிக்காலத்தில் உரிய பயிற்சிகளை முடித்து அதற்கான உத்தரவு நகல்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்...

      // 75000 ரூ உதவி வழங்கும் திட்டமுண்டு //
      1 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு இதைப் பெற தகுதியுண்டு,அரசாணை எண்-189...
      இதைப் பெற அக்குழந்தைகள் படிக்கும் பள்ளி தலைமையாசிரியரை அணுகினால் உரிய வழிகாட்டுதல்கள் கிடைக்கும்,அடுத்து கிராம நிர்வாக அலுவலர்,வருவாய் ஆய்வாளர் சான்றுகளை இணைத்து உரிய படிவங்களுடன் சார்ந்த பள்ளி மூலமே அனுப்பலாம்...

      Delete
    5. // ஒப்பந்த பணியாளர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால், அரசாங்கத்தின் எந்த பலனும் கிடைக்க வாய்ப்பில்லை. //
      அடடா சங்கடமூட்டும் செய்தி...

      Delete
  59. ஆசிரியர் மறைந்த நண்பர் பழனிவேலுக்காக முன்னெடுக்கும் முயற்சிகள் நண்பர்களால் வெற்றியடையும்.

    ReplyDelete
  60. ஆசிரியரே இன்று பதிவுண்டா மனது கணத்து இருக்கிறது உங்கள் பதிவிலாவது லேசாகட்டுமே

    ReplyDelete
  61. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!

    ReplyDelete
  62. Junior Editor திருமணத்தில் அவரை
    குடும்பத்துடன் பார்த்த ஞாபகம்
    உள்ளது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து
    கொள்கிறேன்.

    ReplyDelete