நண்பர்களே,
வணக்கம். அதே துரிதத்தில் தான் நாட்களைக் கிழித்துத் தள்ளுகிறோம் காலண்டரில் ; வாட்சப்பில் வரும் குட் மார்னிங் ; குட் நைட்கள் அட்சரம் பிசகாது தொடர்கின்றன ; பந்தின் நிறத்தை மட்டும் மாற்றிக் கொண்டு ஆடினாலும் ஸ்ரீ லங்காவை அதே போலப் புரட்டிப் புரட்டித் தான் எடுக்கிறது இந்திய அணி ; வலிமைகளும், மாறன்களும், எதற்கும் துணிந்தவர்களாய் ஊரெல்லாம் காட்சி தருகின்றனர் ; அட 39 வயசே ஆனதொரு முழு மனுஷனை ; நண்பனை ; இந்த காமிக்ஸ் குடும்பத்தின் அங்கத்தினை விதி வாரிச்சுருட்டிப் போன பின்னேயும் கூட உலகத்தின் சுழற்சியில் இம்மியூண்டு மாற்றங்களைக் காணோமே ? அவ்வளவு போவானேனுங்க - வேளைக்குப் பசிக்கிறதே இன்னமும் ? இது தான் வாழ்க்கையின் நியதியோ ? அப்படியானால் நமக்கு எழும் அதே பசிகளே, மகனை இழந்து, கணவனை இழந்து, தந்தையை இழந்து நிற்கும் அந்தக் குடும்பமும் ஒவ்வொரு பொழுதிலும் உணருமோ ? இந்தச் சிந்தனை எழுந்த முதல் நொடியில், சோகங்களைப் புறம்தள்ளி விட்டு, கொஞ்சமேனும் தெளிந்த சிந்தையோடு, பழனியின் பிள்ளைகளுக்கென இயன்ற உதவிகளைச் செய்யும் முனைப்பு துளிர் விடுகிறது !
Right guys - பழனிக்கென விதி நிர்ணயித்திருந்த கோட்டா ஓவர் ; விடை பெற்றுக் கிளம்பி விட்டார் ! கேட்க நாராசமாய் இருப்பினும், நிதரிசனம் அதுவே ! இந்தத் தருணத்தில் சோகத்தை விடவும் அவர்தம் பிள்ளைகள் சார்ந்த சிந்தனைகளே முதலிடம் பெற்றாக வேண்டிய கட்டாயம் ! Of course - பழனியின் பணியிடத்தில் நிவாரணங்கள் ; அரசின் சகாயங்கள் ; தனிப்பட்ட முறையினில் அவரது எண்ணற்ற நண்பர்களின் உதவிகள் என்று கிட்டிட வேண்டிக் கொள்வோம் நாம் ! தவிர பழனி அவர்கட்கென ஏதேனும் சேமித்திருப்பார் என்றும் நம்புவோம் ! அதே வேகத்தில், இந்தக் காமிக்ஸ் குடும்பமாய் அவரது குடும்பத்துக்குச் செய்திடக்கூடியது என்னவாக இருக்க முடியுமென்று பார்ப்போமா ?
நம் முன்னே உள்ளன இரு பாதைகள் :
Option # 1 : நண்பர் JSK-க்கொரு tribute ஆக "சர்ப்பத்தின் சவால்" இதழை சிறப்பிதழாய் வெளியிட்டு, நிதி திரட்டியத்தைப் போலவே, பழனிக்கென ஒரு ஸ்பெஷல் இதழினைத் திட்டமிட்டு, அதனில் கிட்டிடக்கூடிய இலாபம் + நமது பங்களிப்பு எனவொரு தொகையினை அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கலாம் !
Option # 2 : அல்லது, நமது ஓவியர் மாலையப்பனின் குடும்பத்திற்கென நம் நிறுவனத்தின் சார்பில் ஒரு தொகை + பிரத்யேகமாய் உங்களின் பங்களிப்புகள் என்று நிதி திரட்டித் தந்தது போலவும் செய்திடலாம் !
இவற்றுள் எது உதவினாலும் என்னளவில் ஓ.கே. தான் !
ஆனால் பின்னதில் உள்ள சிக்கல் - பழனியை அறிந்திருக்கக்கூடிய நண்பர்களைத் தாண்டிய மீதப் பேர் இதனை பெரிதாய்ப் பொருட்படுத்தாமல் நகர்ந்து செல்லும் வாய்ப்புகள் உண்டு என்பதே ! நமக்குப் பரிச்சயமானவரின் இழப்பு நம்மிடம் ஏற்படுத்திடும் அதே தாக்கத்தை தொலைவில் உள்ளோரிடமும் ஏற்படுத்திடாது தான் !
So இரண்டு பாதைகளையும் ஒன்றிணைத்தொரு hybrid பாதை சுகப்படுமா என்று பார்க்கலாமா ? இது என்னளவில் தோன்றிய சிந்தனையின் உரத்த பகிர்வு மாத்திரமே ; அதனில் இருக்கக்கூடிய பாதகங்களையும், அவற்றை செப்பனிடக்கூடிய மார்க்கங்களையும் சுட்டிக் காட்டினால், துளித்தயக்கமும் இன்றி ஏற்றுக் கொள்ளுவேன் ! And இந்த ஒற்றைத் தருணத்திலாவது நம்மிடையிலான பேதங்களை முன்னிறுத்த முனைந்திடாது, பழனியின் பசங்களை மட்டுமே நம் சிந்தைகளில் இருத்திடுவோமே - ப்ளீஸ் ?
"பழனிக்கொரு ஸ்பெஷல்" என்றால் சந்தேகங்களின்றி "இரத்தப் படலம்" சார்ந்த முயற்சியாகவே இருந்திட வேண்டிவரும் என்பது பொதுவான கருத்தாய் இருந்திடும் ! No doubts on that ! "இ.ப. 1 to 18-ஐ" காதுகளில் இரத்தப் படலம் பெருக்கெடுத்து ஓடும் அளவிற்குத் துவைத்துத் தொங்கப் போட்டாச்ச்சு எனும் போது அதையே இன்னொருக்கா கையில் எடுப்பது நிச்சயமாய் நிதி திரட்டும் நம் நோக்கிற்குக் கைகொடுக்காது ! எஞ்சியிருப்பது spin-offs ! அவற்றுள் இரண்டோ, மூன்று கதைகளை ஒன்றிணைத்து ஒரு ஸ்பெஷல் இதழாய்த் திட்டமிடலாம் ! இது சாத்தியக்கூறு # 1 !
ஆனால் பழனியின் "XIII காதல்" என்ற சென்டிமென்டை சற்றே ஓரமாய் ஒதுக்கி விட்டு ஒரு பப்ளீஷராய் மாத்திரமே சிந்தித்தால் - வெற்றி என்ற உத்திரவாதத்தை தரவல்லவர் நமது 'தல' தான் என்பது அப்பட்டமாய்ப் புரிகிறது ! XIII spin-offs என்ற முயற்சியானது - பழனியை அறிந்தோரையும், அவர் கொண்டிருந்தது போலான அதே XIII காதலையும் கொண்டிருப்போரை தாண்டி, இதர வாசகர்களிடம் பெரிதாய்த் தாக்கத்தினை ஏற்படுத்திடாது என்பதில் எனக்கு ஐயங்களே இல்லை ! தவிர, அவற்றிற்கெல்லாமே தமிழாக்கம் செய்திட அவகாசம் எடுத்துக் கொண்டாக வேண்டிவரும் ! எவ்வளவு அதிகம் நண்பர்களை எட்டிப் பிடித்து, எவ்வளவு சீக்கிரமாய் அவர்களிடம் சகாயங்கள் கோரிட நமக்கு சாத்தியமாகிடுமோ, அந்த அளவுக்கு பலன்கள் அதிகமாகிடும் எனும் நிலையில், பந்தயக் குதிரையைக் களம் இறங்குவதே லாஜிக் பரிந்துரைக்கும் option !
So உங்களுக்கு ஓ.கே.வெனில் TEX & டீமினை ஒரு ஸ்பெஷல் ஷோவாக ரிலீஸ் செய்திடலாம் ! And தயாரிப்புக்கென நிறைய அவகாசமோ, பணம் திரட்டிட நிறைய நேரமோ இருப்பதாக நான் நினைக்கவில்லை ! ஏற்கனவே ஓராண்டாய் மருத்துவச் செலவுகள் ; பணியினில் விடுமுறைகள் என்று பழனியின் பொழுதுகள் ஓடியிருந்திருப்பது நிச்சயம் எனும் போது, நாம் செய்திடக்கூடியவற்றை சடுதியில் செய்வது சாலச் சிறந்தது என்று படுகிறது ! So புது இதழ் ; புது சாகசம் என்ற திட்டமிடலைக் காட்டிலும் - ஒரே வாரத்துக்குள் டைப்செட்டிங் செய்தால், மறு வாரத்தில் அச்சுக்குப் புறப்பட ஏதுவான TEX க்ளாசிக்ஸ் - 2 தான் தேவலாம் ! இதனில் இன்னொரு சவுகர்யமுமே உண்டு - அதன் விலையின் பொருட்டு ! ரூ.450 விலையிலான இதழ் எனும் போது, அதிலிருந்து நாம் திரட்டக்கூடிய நிதி, நார்மல் விலையிலான இதழ்களில் இருந்து கிட்டக்கூடிய நிதியினை விட சற்றே அதிகமாய் இருந்திட வாய்ப்புகள் உண்டு ! TEX க்ளாசிக்ஸ் 2 எனில் - "இரத்த வெறியர்கள்" + கௌபாய் ஸ்பெஷலில் வெளியான அந்த ஓவியர் சிவிடெல்லி க்ளாஸிக் Boston சாகசம் என்ற காம்போ சாத்தியமாகிடும் ! இது சாத்தியக்கூறு # 2 !
அல்லது - சுஸ்கி & விஸ்கி க்ளாஸிக் ! ஏற்கனவே தயாராகி வரும் இந்த இதழின் விற்பனையிலிருந்து ஒரு தொகையினைத் திட்டமிடலாம் ! இதழின் தயாரிப்பு சீக்கிரமாய் முடியும் சாத்தியம் இங்குண்டு என்ற போதிலும், இது பொதுவாய் hardcore கார்ட்டூன் அபிமானிகளைத் தாண்டியோரின் ஆர்வங்களைத் தூண்டிடுமா ? என்பது கேள்விக்குறியே ! And நிச்சயமாய் முகவர்கள் ஒரு டெக்ஸ் இதழை வாங்கிடும் அதே முனைப்போடு சு & வி.யை ஏற்றுக்கொள்வரா ? என்பதிலும் I have my own doubts ! But still இது சாத்தியக்கூறு # 3 !
Udhay Adhi : இரத்தப்படலம் முதல் பாகம் மட்டும் உள்ளது உள்ளபடியே replica போன்று பிரீமியம் விலையினில் வெளியிடலாம். முதல்பாகம் அட்டையுடன் பழனியுடமும் இருக்கவில்லை என்பதும் உண்மை ! Sure - இதனை சாத்தியக்கூறு # 4 ஆக வைத்துக் கொள்ளலாம் !
மேற்படி நான்கில் எது ஓ.கே.வாகிடும் என்ற தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன் guys ! நீங்கள் சொல்லுங்கள் - அதற்கேற்ப திங்கள் முதலே பணிகளைத் துவக்கிடலாம் !
ஒவ்வொருவருமே இந்த இதழினை வாங்கிடுவதோடு, உங்களால் இயன்ற சிறு தொகைகளை சேர்த்து அனுப்பினால், நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த hybrid பாதை சாத்தியமாகிடும் !
உதாரணத்திற்கு TEX க்ளாசிக்ஸ் 2 - கூரியர் சேர்த்து விலை ரூ.490 எனில், நீங்கள் ரூ.100 ; ரூ.200 ; என பிரியப்படும் தொகைகளை இதழின் கிரயத்தோடு சேர்த்து அனுப்பினால், அதனையும் பழனியின் குடும்ப நிதிக்கணக்கில் இணைத்துக் கொள்ளலாம் ! தனிப்பட்ட முறையில் சிறு தொகைகளை அனுப்பிட சங்கோஜம் கொள்ளக்கூடிய நண்பர்களுக்கு மாத்திரமே இந்த உபாயம்.
சற்றே கூடுதலாகவோ, பெரும் தொகைகளோ அனுப்பிட எண்ணும் நண்பர்கள் நேரடியாக டாக்டர் AKK ராஜாவின் ஒத்துழைப்போடு பழனியின் மனைவியின் கணக்கிற்கே பணம் அனுப்பிடலாம் ! துவக்கம் முதலே இந்த இன்னலான நாட்களில் பழனிக்கு வழிகாட்டி வந்திருக்கும் நமது டாக்டர் சார் நிச்சயமாய் இதனில் உதவிடுவார் ! Please sir !
எந்த இதழ் தேர்வானாலும், அதனில் கிட்டும் இலாபம் மட்டுமன்றி நமது பங்களிப்பு என்றொரு தொகையினையும் சேர்த்தே பழனியின் குடும்பத்திடம் ஒப்படைத்து விடுவோம் என்பது எனது promise !
இனி எத்தனையோ சனியிரவுகளில் நான் கேட்டிருக்கக்கூடிய கேள்விகளுக்கு உற்சாகமாய்ப் பதில் சொல்லிய அதே பழக்கத்தில் இம்முறையும் பதில் ப்ளீஸ் ! And"ஸ்பைடர் ஸ்பெஷல்" ; "மறுபடியும் இ.ப. ஒற்றை புக்காய்" ; என்ற ரீதியிலான suggestions இம்முறை தவிர்த்திடுவோமே ப்ளீஸ் ! வாசிப்பின் நமது விருப்பு வெறுப்புகளைக் காட்டிலும் - இப்போது காரியசித்தியும், துரிதமுமே முன்னிலை கொண்டிட வேண்டும் !
And "டெக்ஸ் புது இதழ் போட்டாலென்ன ?" எனில் அந்த லவ் ஸ்டோரி போடலாம் தான் ; கதை கையில் உள்ளது தான் ; ஆனால் அதற்கான மொழிபெயர்ப்பினை கையில் குவிந்து கிடக்கும் பணிகளை முடித்தான பின்னரே எடுக்க எனக்கு சாத்தியப்படும் என்பது தான் சிக்கலே ! "கோடை மலர்" (3 in 1 ஆல்பம்) ; ரிப் கிர்பி ஸ்பெஷல் என்று மேஜை நிறைந்து கிடக்கிறது இந்த நொடியினில் !
Bye all...See you around ! Safe Sunday !
Edi Sir..வணக்கங்கள் ..
ReplyDelete🙏🙏🙏🙏
ReplyDeleteவணக்கம் சார்
ReplyDeleteVanakkam
ReplyDeleteவணக்கம் நண்பர்களே....
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
ReplyDeleteஇரத்தப்படலம் முதல் பாகம் மட்டும் உள்ளது உள்ளபடியே replica போன்று பிரீமியம் விலையினில் வெளியிடலாம் சார். முதல்பாகம் அட்டையுடன் பழனியுடமும் இருக்கவில்லை என்பதும் உண்மை.
ReplyDeleteSure, செய்திடலாம் தான் ஆதி - நண்பர்களுக்கு உடன்பாடெனில் !
Deleteகருப்பு வெள்ளை என்பதால் இந்த முயற்சி ரொம்பவே சுலபம்... பிரீமியம் விலை என்று நான் சொல்வது Rs.300 Rs.500 போன்று... அதிக நிதி திரட்டலாம் என்பது என் யூகம்.
Delete@ ALL : நண்பர்களே : இதனை சாத்தியக்கூறு # 4 ஆக வைத்துக் கொள்ளுங்கள் !
Delete//Sure, செய்திடலாம் தான் ஆதி - நண்பர்களுக்கு உடன்பாடெனில் !//
Deleteநன்றிகள் சார். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும் பட்சம் ரொம்பவும் நல்லது.
ஆதி இப்புத்தகத்தை அவரை அறிந்த நமது தளத்தை பார்க்கும் வெகு சிலரே ஆர்வமாக வாங்குவார்கள். அதனால் அவர் குடும்பத்திற்கு உதவும் அளவிற்கும் பணம் சேர்க்க முடியுமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது நண்பரே
Deleteஎதுவானாலும் எனக்கும் ஒகே தான் சகோ... பழனி நினைவு இதழ் என்றால் இரத்தப்படலம் ரொம்பவே நெருக்கம் அல்லவா...
Delete// இப்புத்தகத்தை அவரை அறிந்த நமது தளத்தை பார்க்கும் வெகு சிலரே ஆர்வமாக வாங்குவார்கள். அதனால் அவர் குடும்பத்திற்கு உதவும் அளவிற்கும் பணம் சேர்க்க முடியுமா...//.
Deleteமிக சரியான சந்தேகம் கிருஷ்ணா....
டெக்ஸ் விலையும் கணிசம்..
அனைத்து செண்டர்களிலும் அமோக விற்பனை ஆகி நிறைய நிதி திரட்ட டெக்ஸே ஏற்றவர்...
இரத்தப்படலத்தை உயிராக கொண்டு வாழ்ந்தவர் தான் பழனி..
ஆனா அதை காமிக்ஸ் உலகில் அறிவை விரும்பனுமே!
ஆதி@ மன்னிச்சிக்கங்க குறிக்கீடு செய்வதற்கு... நெருக்கம் என்பது நமக்கு தெரியும்...
Deleteஇப்போதைய தேவை அதிக நிதி திரட்ட உரியவழி..
அதற்கு டெக்ஸ் உத்தரவாதம் என்பது அனைவரும் அறிவோம்...
This comment has been removed by the author.
Deleteசோகமான நேரத்தில் எதிர்பார்த்த நிதர்சன அறிவிப்புக்கு நன்றிகள் ஐயா!
Deleteஇந்த ஸ்பெஷல் இதழை பொறுத்த வரையில், பழனிக்கு உதவி செய்வது மட்டுமே தலையாய குறிக்கோள். எனவே ஒடும் குதிரையான டெக்ஸ் & குழுவின் கிளாசிக் ஸ்பெஷல் என்பது நல்ல தேர்வுமே ஆகும்! இதற்கு எனது ஆதரவு உண்டு... 🤝🏽
அதே சமயத்தில், நண்பர் பழனிவேல் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பமாக, நீண்ட நாள் கனவாக இருந்த இரத்தப்படலம் முதல் பாகம் இதழையும் நண்பர் உதய் குறிப்பிட்டபடி வெளியிட்டால், அது ஒரு பெரிய TRIBUTE ஆக இருக்கும். பழனிக்கு TRIBUTE செய்ய இதைவிட வேறு எப்போதும் வாய்ப்பு வராது என்பது எனது தனிப்பட்ட கருத்து!
எனவே, டெக்ஸ் + இ.ப-1 Replica நல்ல தேர்வாக இருக்கும் என்பேன்!
நன்றிகள் பல!
நண்பர் பழனியிடம் சில மாதங்களுக்கு முன்பு பேசிய போது, இரத்தப்படலம் 1 இதழின் அனைத்து மொழி பதிப்புகளையும் வாங்குவது தனது குறிக்கோள் என்று சொன்னார். அந்த நாட்களில் வாங்கிய ஜெர்மன் பதிப்பை காட்டி உள்ளம் பூரித்திருந்தார்!
Deleteஅப்பொழுது கூட, தமிழ் பதிப்பின் முதல் பாகம் இல்லை என்பதை சொல்லி வருத்தப்பட்டதும் நினைவில் உள்ளது!
@விஜயராகவன் ப்ரோ,
Delete//...குறிக்கீடு செய்வதற்கு... //
அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை. மாற்றுகருத்துகள் எப்போதும் பதற வைப்பதில்லை... அதுவும் நேருக்கு நேர் மாற்றுக்கருத்து சொல்பவர் எப்போதும் நம்பிக்கைக்குரியவர்களே.
சிஸ்கோ கதையில் கதாசிரியர் லாஜிக் இல்லாமல் அமைத்த கதாப்பாத்திரத்தை மாற்று கருத்து வருகையில் அதற்கும் விடாபிடியாக நியாயம் சொல்வதை தான் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்...
🙏🙏🙏🙏🙏🙏🙏
ReplyDeleteநன்றிகள் ஆசிரியரே
ReplyDeleteEdi Sir..சூப்பர் ஸ்டார் Tex தான் சரி.. Collection பட்டைய கிளப்பும்..
ReplyDeleteபுக் என்ன விலைன்னாலும் நம்ம பழனிக்காக நாங்க வாங்க ரெடி..
+1
Delete+3
Delete+12345678910
DeleteTex ok sir
ReplyDeleteஇந்த தருணத்தில் நிச்சயமாக விரைவாகவும் அதிக நிதி திரட்டக்கூடிய வாய்ப்புள்ளவர் டெக்ஸ் மட்டுமே சார்.
ReplyDeleteஎக்ஸாக்ட்லி...
DeleteSTV சார் - வழக்கம் போல எண்ணிக்கை updates காலையில், மதியம், இரவு என்று தாருங்களேன் ப்ளீஸ் ? நாளை இந்நேரத்துக்கு எது தேர்வாகிறதோ, அதனையே திங்கள் காலையில் வேலைக்கு எடுத்து விடுகிறோம் ! Files எல்லாமே கையில் தான் உள்ளன !
Delete//Files எல்லாமே கையில் தான் உள்ளன !//
Deleteஅருமை சார்
இந்த தருணத்தில் நிச்சயமாக விரைவாகவும் அதிக நிதி திரட்டக்கூடிய வாய்ப்புள்ளவர் டெக்ஸ் மட்டுமே சார்.////
Delete100 % உண்மை...இப்போதைக்கு இது தான் சார் தேவை.....
ஆசிரியர் சார்@ ஆகட்டும் சார்.🙏
Deleteஉங்கள் முயற்சிக்கு ௭ன் வாழ்த்துக்கள்👍
ReplyDeleteடெக்ஸ்+ ஹைப்ரிட் ஆப்சன் நல்ல ஐடியாவாக தென்படுகிறது. 🙏🙏🙏🙏
ReplyDeleteடெக்ஸ் கிளாசிக் 2 வையே போடலாம் சார்
ReplyDeleteDear Sir...
ReplyDeleteTex Classics 2 தான் இப்போதைய நிலையில் கரிய சாத்தியம்...காரியசித்தியும் ஆகிடும்...
நல்லாவும் விக்கும்
போட்டுத் தாக்குங்க...
...
கூடுதலா அவரவர் வசதிக்கான ...து பண்ணீடலாம்ங்க
Deleteஆமாம் சார் ; இயன்ற எல்லா உண்டியல்களையும் குலுக்குவோம் ! உள்ளன்போடு கிட்டிடும் அணாக்களும், ஆயிரங்களுக்கு நிகரான மதிப்பு வாய்ந்தவைகள் தானே நமக்கு ?
Deleteடெக்ஸ் நல்ல சாய்ஸ்
ReplyDeleteஎதை செய்தாலும் ஒத்துழைக்க நாங்கள் ரெடி பழனியின் குடும்பம் தலை நிமிர நம்மால் முடிந்த உதவிகளை சேர்ந்தே செய்வோம் ஆசானே 🙏
ReplyDeleteநிச்சயமாய் நண்பரே ! ஊர்கூடி இழுக்க வேண்டிய தேர் அல்லவா இது ?!
Deleteநம்மால் இயன்ற பண உதவி செய்வோம், அப்புறம் ஏதாவது சுயமாக வருமானம் வரும் வகையில் ஒரு கடை / சுய தொழில் ஏதாவது ஏற்பாடு செய்து கொடுத்தால் அது அவர்களுக்கு ஒரு நிரந்தர வருமானம் வரும், இது எனக்கு தோன்றியது.
Deleteஇதைப் பற்றி நண்பர்கள் மற்றும் ஆசிரியரின் கருத்து.
பழனி விட்டுச் சென்றிருப்பது உலகமறியா 3 குழந்தைகளை நண்பரே !
Deleteஉண்மை சார் xiii சார்ந்த இதழ்கள் விற்பனை அவருக்கு உதவும் அளவிற்கு இல்லாமல் போவதற்கு சாத்தியங்கள் அதிகம். டெக்ஸ் இதழ் முகவர்கள் மூலமும் நன்றாக விற்கும் ஆகையால் எனது ஓட்டு டெக்ஸ் கிளாசிக் 2.
ReplyDeleteஆனால் முகநூலில் நமது xiii முகத்தில் பழனியை வைத்து வரைந்திருந்தார் ஆதி, அதுபோல செய்து இனைக்க முடிந்தால் அவருக்கும் அவரது xiii மேல் இருக்கும் பிரியத்திற்கும் நாம் டெடிக்கெட் செய்தது போலவும் இருக்கும்
Hybrid முறையும் நல்ல யோசனை சார்
Krishna bro..Excellent idea..
Deleteநண்பர் உதயின் அந்த வடிவமைப்பு மிக அருமை.... அதை புக் மார்க் ஆக போட்டு தந்தா சிறப்பாக இருக்கும்....
DeleteNopes கிருஷ்ணா !! Fans' Creations முயற்சிகள் படைப்பாளிகளின் அங்கீகாரத்தினைப் பெற்றிடாது ! அதிலும் XIII போன்ற அவர்களது cult series-களில் இத்தகைய விஷயங்களை அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் !
Deleteஆசிரியர் விஜயன் சாருக்கும்
Deleteமற்றும் தண்பர்களுக்கும்
வணக்கம். என் உடன்பிறவா
சகோதரனும் காமிக்ஸ் ரசிகனுமான
பழனியின் மறைவு நம்மை விட்டு மறைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது தெரிந்ததே. அவர் நினைவாக ஒரு சிறப்பு பதிப்பு வெளியிடும் தங்கள் எண்ணத்திற்கு மிகவும் நன்றி அதேசமயம் எத்தனை சித்திரக்கதைகள் வந்தாலும் இரத்தப் படலத்தின் மீது அவர் கொண்ட தீராத காதல் காமிக்ஸ் உலகம் அறிந்ததே.
அவருடைய விருப்பத்தின் பெயரில் இரத்தப் படலத்தின் கிளைக் கதைகளில் தாங்கள் வெளியிடாமல் இருப்பது எட்டு கதைகள்.
அதுமட்டுமல்லாமல் புலன் விசாரணை இரண்டாம் பாகமும் ஜேசனின் வரலாறும் எஞ்சியுள்ளது.
ஸ்பின் ஆப் கதைகளில் உள்ள எட்டு கதைகளும் மொழிபெயர்த்து தயாராக உள்ளது அவற்றில் இரண்டு கதைகள் ஆங்கிலத்தில் இருந்தும் மீதி ஆறு கதைகள் பிரெஞ்சு மொழியில் இருந்தும் மொழிபெயர்க்கப்பட்டது மட்டுமல்லாமல் புலன் விசாரணை இரண்டாம் பாகமும் ஜேசனின் வரலாறும் பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாக தமிழுக்கு மொழிமாற்றம் செய்து தயாராக வைத்திருக்கிறேன் அதை தாங்கள் விரும்பும் பட்சத்தில் பழனியின் நினைவாக அவருக்கு உதவும் நோக்கத்தில் அவர் குடும்ப நலனை கருத்தில் கொண்டு கூடுதல் விலையுடன் புத்தகத்தின் விலைகளை நிர்ணயித்து மேற்கண்ட புத்தகங்களை வெளியிட்டு அவரது நினைவுகளைப் போற்றவும் செய்யலாம் அவரது ஆசைகளை நிறைவேற்றவும் செய்யலாம் ஆத்மாவை சாந்தி அடையவும் செய்யலாம். மேற்கண்ட இரண்டு புத்தகங்களின் ஒரிரு பக்கக மாதிரியை உங்களுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்கிறேன். இதை வழக்கமாக
மொழிபெயர்க்கும் நபருக்கு தாங்கள் செலுத்தும் தொகையையும் பழனியின் குடும்ப எதிர்கால நிதிக்காக சேர்த்துவிடலாம்
என்னுடைய இந்தப் பதிவு எந்த வித சுய லாபத்திற்கோ சுய விளம்பரத்திற்கோ செய்யப்பட்டது அல்ல. நான் பழனியுடன் பழக ஆரம்பித்த இந்த ஐந்து வருடங்களில் நான் பழனி மற்றும் இலங்கை மருத்துவர் பிரசன்னா மூவரும் உடன்பிறவா சகோதரர்கள்போல் பழகி வருவது அனைவரும் அறிந்ததே. அவரது சின்னஞ்சிறு இரு குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்காக ஒரு சிறு முயற்சியை முன்னெடுத்து உள்ளேன் இதற்கும் தங்களது ஆதரவு தேவை.
நன்றி.
இப்படிக்கு
K.V.GANESH.
டெக்ஸ் தான் சார் இப்போதைய சூழ்நிலையில் சரியான தேர்வு பணமும் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு அதிகமாகவே வரும் tex மட்டுமே
ReplyDeleteடெக்ஸ் க்ளாஸிக் கதைகளை வாசர்கள் தலைக்கு இரண்டு மூன்றாக கூட வாங்கி கொள்வார்கள்...இதுவே சரியானதாக இருக்கும் என்று தோன்றுகின்றது சார்...மேலும் பழனி அவர்களோடு நமது லயனின் நினைவுகளையும் மூத்த நண்பர்களின் நினைவுகளையும் சில பக்கங்கள் அவரின் பலதரபட்ட புகைபடங்களோடு இணைத்து பகிரும்போது அது மேலும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது...
ReplyDeleteதாராளமாய்ப் போடலாமே ; இப்போதிலிருந்தே நண்பர்களின் நினைவலைகளைத் திரட்ட ஆரம்பிக்கலாம் ! எனக்கொரு pdf file ஆக அனுப்பி விட்டால் பிரமாதமாய்ப் போட்டு விடலாம் நண்பரே !
DeleteFor me Tex classic 2 better option sir.
ReplyDeleteMy choice option #4
ReplyDeleteமுன்பதிவு செய்பவர்களுக்கு முதல் பக்கத்தில் போட்டோ இடம்பெற செய்ய வாய்ப்புள்ளதா (எனக்கு வரும் புத்தகத்தில் நான் பழனியுடன் எடுத்த போட்டோ அதில் இடம்பெற்றால் மகிழ்ச்சியடைவேன்)
ReplyDeleteஅதற்கான தருணம் இதுவல்ல சத்யா !
Deleteஉடனடியாக இதழ் விற்பனைக்கு வரணும் சத்யா.. இச்சமயத்தில் போட்டோ கலக்ட் பண்ணி போடுவற்கு அவகாசம் இல்லை..
Deleteசட்டு புட்டுனு விற்பனைக்குவர வேண்டி ய இதழ் இது
No முன்பதிவு ! நேரடியாய் புக்கே வெளிவந்திடும் - தேர்வு எதுவாக இருந்தாலுமே !
Delete👍👍🙏🙏
Delete🙏🙏🙏🙏🙏
ReplyDeleteஏதோ ஒரு புக்கு. எது வந்தாலும் ஓகே. இப்ப பழனி குடும்பத்துக்கு எது அதிக உதவியை தருமோ அது வரட்டும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteEdi Sir..
ReplyDeleteTex book+ ஆதி Bro ready பண்ணின நம்ப பழனியின் இ.ப புக் மார்க்..
Tex classic
ReplyDeleteஇடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியக்கூடாது என நினைக்கும் உள்ளங்களும் இங்கே தான் இருக்கிறார்கள்
ReplyDeleteஆகையால் நாம் செய்யும் இந்த உதவிகளையும் மலை போல் பழனியின் குடும்பத்திற்கு உதவட்டுமே" அப்பா இருக்காரா இல்லையா என தெரியாத அந்த இளம் குழந்தைகளுக்காக 😥நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் ஆசானே 🙏
சிறு துளிகள் பெரு வெள்ளமாகினால் விண்ணிலிருந்து பழனி நிச்சயமாய் உவகை கொள்வார் ! உதவிகள் எந்த ரூபத்தில் கிட்டினாலும் ஓ.கே. தான் என்றாலும், அவரின் மனதுக்கு நெருக்கமான இந்தக் காமிக்ஸ் குடும்பத்திலிருந்து கிட்டிடின் அது நிச்சயமாய் அவரை நிம்மதி கொள்ளச் செய்யும் சார் !
DeleteTex classic with Palani photo on one of the cover.
ReplyDeleteஅதற்கு வாய்ப்பிராது நண்பரே ; போனெல்லியில் அனுமதிக்க மாட்டார்கள் !
DeleteOk Sir.
Deleteஎன்வாக்கு:- டெக்ஸ் கிளாசிக்ஸ் 2
ReplyDeleteஎனது வாக்கும்
DeleteTEX க்ளாசிக்ஸ் 2 எனில் - "இரத்த வெறியர்கள்" + கௌபாய் ஸ்பெஷலில் வெளியான அந்த ஓவியர் சிவிடெல்லி க்ளாஸிக் Boston சாகசம் என்ற காம்போ சாத்தியமாகிடும் ! இது சாத்தியக்கூறு # 2
ReplyDeleteஎனது ஓட்டு...👆
+1
DeleteHi..
ReplyDelete///- சுஸ்கி & விஸ்கி க்ளாஸிக் ! ஏற்கனவே தயாராகி வரும் இந்த இதழின் விற்பனையிலிருந்து ஒரு தொகையினைத் திட்டமிடலாம் ! இதழின் தயாரிப்பு சீக்கிரமாய் முடியும் சாத்தியம் இங்குண்டு என்ற போதிலும், இது பொதுவாய் hardcore கார்ட்டூன் அபிமானிகளைத் தாண்டியோரின் ஆர்வங்களைத் தூண்டிடுமா ? என்பது கேள்விக்குறியே ! And நிச்சயமாய் முகவர்கள் ஒரு டெக்ஸ் இதழை வாங்கிடும் அதே முனைப்போடு சு & வி.யை ஏற்றுக்கொள்வரா ? என்பதிலும் I have my own doubts ! But still இது சாத்தியக்கூறு # 3 !///
ReplyDeleteஉண்மைதான்.. இந்தச் சூழலில் விற்பனைக்கு உத்திரவாதம் அதிகம் உள்ள டெக்ஸ் கிளாசிக் 2 தான் பொருத்தமான தேர்வு சார்.!
நிஜம் சார் !
DeleteSir,
ReplyDeleteடெக்ஸ் கிளாசிக் 2 is my choice too - for the sheer sales as well as the amount that can to to Pazhanivel's family immediately. Once you announce I am ordering multiple copies !!
(Note: I like all the 4 choices (or 5) but I believe that Tex Classics 2 will provide the maximum collection to help the family.
Also regarding sending bulk amounts we would prefer to route through you under the LION FAMILY BANNER Sir - Hats off to Dr AKK for all his efforts - nothing personal against him - but we know Pazhani through Lion Comics and would love to route the fund through Lion Comics sir - please consider !
அதைப் பார்த்துக் கொள்ளலாம் சார் ! Either way would be no problems !
Delete//Once you announce I am ordering multiple copies !!//
DeleteThanks a ton sir !
டெக்ஸ்+ என்பதே தற்போதைய பழனியின் குடும்பத்திற்க்கு மிக உதவியாக இருக்கும்.
ReplyDeleteஅத்துடன், பின்னர் ஒருமுறை (உங்களால் முடிந்தபோது), Xlll spin-off ஒன்றையும் வெளியிட்டு அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டுகிறேன்.
🙏🙏🙏
மிக சரி ஹசன்
DeleteSure...அடுத்தாண்டின் அட்டவணையில் !
Deleteநன்றி ஆசிரியரே
Deleteநன்றி ஐயா
DeleteRespect EDI sir...Tex for contribution and spinoff special (3 titles) momentum for Palani in next year ....
Delete62வது
ReplyDeleteTex
ReplyDeleteTex classics
ReplyDeleteடெக்ஸ் கிளாசிக்
DeleteTex classics or suskie wiskie இரண்டில் எதுவென்றாலும் Ok Sir
ReplyDeleteTex classics 2
ReplyDeleteடெக்ஸ் கதைகளே அதிக கலெக்ஷனை ஈட்டித்தரும் - அதுவே பழனியின் குடும்பத்திற்கு உதவியாகவும் இருந்திடும் என்பதால் என்னுடைய தேர்வும் டெக்ஸ் க்ளாசிக்ஸ்-2வே!
ReplyDeleteஏற்கனவே ஒருபுறம் KVGயும் பழனியின் குடும்பத்திற்காக நண்பர்களிடம் நிதி திரட்டிக்கொண்டிருப்பதால், இந்த புத்தக விற்பனை மூலம் கிடைக்கும் தொகையை பழனியின் இரண்டு மகள்களின் பேரில் நீண்டகால முதலீடாக (உதாரணம் : செல்வ மகள் சேமிப்புத் திட்டம்) அமைத்துக் கொடுக்கலாம். இதிலுள்ள கூட்டுவட்டி விகிதத்தின் பலனால், குழந்தைகள் வளர்ந்து திருமண வயதை எட்டும்போது ஒரு கணிசமான தொகை அவர்களின் கைகளில் கிடைத்திடும்.
இது என் யோசனையே! மற்றபடி எடிட்டர் சார் இறுதியாக எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் உடன்படுவேன்!
அவர்களின் தற்போதைய நிதி நிலைமை குறித்து நமக்குத் தெரியாது சார் ; இன்றைய பொழுதுகளைத் தாண்டிடும் ஆற்றல் அவர்களுக்கு இருப்பின், நீங்கள் சொல்லும் ஐடியா ஓ.கே. ! ஆனால் நடப்பின் நாட்களே சிக்கல் எனில் அதற்கு உதவிடுவதே முன்னுரிமை பெற்றிட வேண்டி வரும் !
Delete80th
ReplyDeleteTex
ReplyDeleteடெக்ஸ் கிளாஸிக்ஸ் 2க்கே என் வாக்கு. இப்போதைக்கு நண்பர் பழனிவேல் குடும்பத்திற்கு உதவ வேண்டும்.அதற்குச் சரியான தேர்வு டெக்ஸ் வில்லர் மட்டுமே.அடுத்தாண்டு பதிமூன்று ஸ்பின்ஆப் வரட்டும்.
ReplyDeleteTex Classics 2
ReplyDeleteசார்,
ReplyDeleteநண்பர் பழனிக்காக... என் தரப்பில் அனைத்திற்கும் என் சம்மதம்... உங்களுக்கும் நமது காமிக்ஸ் தோழர்களுக்கும்... என் நெஞ்சார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றிங்க டாக்டர் சார்.
DeleteHats off for your efforts Doctor !
DeleteAKK சார்..
Deleteநண்பர் பழனியின் சிகிச்சைகளுக்காக நீங்கள் செய்த உதவி மகத்தானது! அனைவரது சார்பிலும் என் வந்தனங்கள்!🙏🙏🙏🙏🙏
பழனியின் சிகிச்சைகளுக்காக நீங்கள் செய்த உதவி மகத்தானது தலை வணங்குகிறேன். அனைவரது சார்பிலும் நன்றி.
DeleteSalutes AKK sir!
Deleteஎன்னுடைய சிரம் தாழ்ந்த பணிவான வணக்கங்களும்🙏🙏🙏🙏
Deleteஉங்களுடைய நல்ல உள்ளத்திற்கு என்னுடைய சிரம் தாழ்ந்த பணிவான வணக்கங்களும் டாக்டர் 🙏🙏🙏🙏
Deleteநண்பர் பழனிவேல் இன் குடும்பத்தினருக்கு உதவுதலே பிரதானம். அதற்கு டெக்ஸ் கிளாஸிக் 2 ஏ சரியான தேர்வு ஆக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. விற்பனைக்கு உத்தவாதம் என்பதுடன் கூடுதல் தொகையும் கிட்டும். மற்றும்படி என்ன வெளியிடாலும் சரிதான். நண்பர் பழனி இனுடைய ஆசைப்படி, வாகான தருணத்தில் spin-off இனை வெளியிடம் சார்.
ReplyDeleteஎது அதிக அளவில் பொருளீட்டுமோ அதற்கே என் ஓட்டு. வரலாறு டெக்ஸ் என்கிறது.
ReplyDeleteஅவரின் நினைவாக XIII spinoff அடுத்த வருடம் வரட்டும்.
மிக்க நன்றி.
தற்போது உடனடி நிதியுதவி தேவை என்பதால் டெக்ஸ் கிளாஸிக்ஸ் 2 சிறப்பான தேர்வாக இருக்கும் சார்.
ReplyDeleteஅடுத்த ஆண்டு நண்பர் பழனி நினைவாக XIII ஸ்பின்ஆப் வெளியிடலாம் சார்... அதில் படைப்பாளிகள் அனுமதித்தால் நண்பர் பழனி பற்றிய நினைவலைகளை புகைப்படங்களுடன் வெளியிடலாம் சார்.
Tex is the right option
ReplyDeleteநண்பர் பழனிக்காக
ReplyDeleteTex
எனது பார்லையில்
ReplyDelete----------------------------
இ.ப முதல் பாகம் அப்படியே அதே சைஸ்ஸில் .. பழனி க்கு மரியாதை செய்தது போல இருக்கும் .. இந்த இதழ் நிறைய பேரிடம் இல்லை என்பதே நிதர்சனம் பழனி உட்பட . மேலும் XIII லிமிடேட் எடிசனாக குறிப்பிட்ட அளவு புத்தகங்கள் மட்டுமே பிரிண்ட் என்றால் இவ்விதழ் ஸ்டாக் ஆகிடாமலும் இருக்கும் டியர் எடி
+ ஒரு டெக்ஸ் இதழ்
இது ஒரு நல்ல சாய்ஸ் ..
ஒரு பெரிய தொகை இதன் மூலம் கிட்டும்
சிறு தொகை அளிக்க சங்கோஜப்படுபவர்களுக்கும் வாய்ப்பளித்ததற்கு நன்றி சார். சிறு துளி பெரு வெள்ளம்.
ReplyDeleteTex classics 2
ReplyDeleteTex classics-2 மற்றும் இரத்த படலம் பாகம் ஒன்றும் சரியான தேர்வாக இருக்கும் edi sir. பதிப்பகத்தார்கள் அனுமதியுடன் பழனி வேல் sir இன் புகைப்படங்கள் வெளியிடப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
ReplyDeleteTex special 2 + இரத்த படலம் முதல் பாகம் சரியான தேர்வு edi சார். பழனி வேல் சார் இன் புகைப்படங்களுடன் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
ReplyDeleteஅன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
ReplyDeleteடெக்ஸ் க்ளாஸிக் 2
சார் ஹைபிரிட் தயார் செய்வோம்....
ReplyDeleteடெக்சே சரிப்படும்.....
வாய்ப்புகள் இருந்தால் புது டெக்ஸ்...
இரத்தப்படல ரிப்ளிகா எத்தனை பேர கவருமோ தெரியல..
சுஸ்கி விஸ்கியும் சாதிக்க வாய்ப்பதிகம்
நண்பர் பழனியின் குடும்பத்திற்கு உதவுவதே பிரதான நோக்கம்,அதையே அவருடைய ஆன்மாவும் விரும்பும், எனவே டெக்ஸ் ஸ்பெஷல்-2 ஐ உள்ளே களமிறக்கினால் சேதாரம் இன்றி நல்லதொரு தொகை சேரும்,வலுவானதொரு தொகையை அக்குடும்பத்திற்கு வழங்கலாம்...
ReplyDeleteஎன்னைக் கேட்டால் இவ்வளவு தேர்வுகளை நீங்கள் தந்தே இருக்கத் தேவை இல்லை சார்,நமது பிரதான நோக்கம் உதவுவது மட்டுமே,நோக்கத்தை எளிதில் நிறைவேற்ற உதவும் வாய்ப்பை விற்பனையில் சாதிப்பவரே தரவல்லவர்..
இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே...
எதிர்பார்த்த நல்லதொரு பதிவு...
ReplyDeleteஊருக்கு அவசரமாக போய்த்தான் ஆகவேண்டிய தருணங்களில் நேரடி புக்கிங் இல்லையெனில் தட்கால் டிக்கெட் போடுவது போல இப்போதைக்கு தெரியும் ஒரே வழி டெக்ஸ் க்ளாசிக் தானெனில் அதைத் தேர்ந்தெடுப்பதுதான் புத்திசாலித்தனம். அடுத்த ஆண்டு வேண்டுமானால் இ.ப.ஸ்பின் ஆப் அல்லது இ.ப.முதல் இதழ் (அதே சைஸ் + அட்டை) வெளியிடலாம்.
ReplyDeleteடெக்ஸ் க்ளாசிக் - இக்கட்டான நேரத்தில் எப்போதும் துணையாக இருக்கும் வல்லமை உடையது சார்.
ReplyDeleteஇது ..நண்பர் பழனிவேல் குடும்பத்துக்கு வேதனையான இந்த நாட்களில் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை
இந்த தருணத்தில் நிச்சயமாக விரைவாகவும் அதிக நிதி திரட்டக்கூடிய வாய்ப்புள்ளவர் டெக்ஸ் மட்டுமே சார்.////
ReplyDelete+1
டெக்ஸ் இதழே வெளியிடலாம் ஆசிரியர் சார்.
ReplyDeleteடெக்ஸ் + ஹைப்ரிட் ஆப்சன்
ReplyDeleteடியர் விஜயன் சார்,
ReplyDeleteடெக்ஸ் இதழுக்கான முன்பதிவுத் தொகையுடன், தங்களால் இயன்றதொரு உதவித் தொகையை இணைத்து அனுப்பும் சிந்தனையே மிகச் சிறந்ததாகப் படுகிறது. பழனியின் XIII காதலுக்கு மதிப்பளிக்கும் விதமாக ஒரு XIII போஸ்டரை சிறப்பிதழுடன் சேர்த்து அனுப்பலாம்.
பழனிவேல் அவர்களின் துணைவியாருக்கு நமது வாசக நண்பர்கள் தனித்தனியாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ பிரிந்து உதவ முற்படுவதை விட, காமிக்ஸ் நேசம் என்ற ஓர் குடையின் கீழ் இணைந்து, ஒரு பெருந்தொகையைத் திரட்டி உதவுவதே சிறப்பு என்பது என் தனிப்பட்ட கருத்து. அதற்கான சரியான தளம் நமது லயன் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கருத்து வேறுபாடுகள் களைந்து, இங்கே ஒன்று கூடுங்கள் நண்பர்களே!
// காமிக்ஸ் நேசம் என்ற ஓர் குடையின் கீழ் இணைந்து, ஒரு பெருந்தொகையைத் திரட்டி உதவுவதே சிறப்பு என்பது என் தனிப்பட்ட கருத்து. அதற்கான சரியான தளம் நமது லயன் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கருத்து வேறுபாடுகள் களைந்து, இங்கே ஒன்று கூடுங்கள் நண்பர்களே //
Deleteஆமோதிக்கிறேன். +1
இது போன்ற நேரங்களில் ஆபத்பாந்தவன் காமிக்ஸ் சூப்பர்ஸ்டார் டெக்ஸ் மட்டுமே கைகொடுப்பார். எனவே...
ReplyDeleteஎனது விருப்பம் "டெக்ஸ்"
Tex classics 2
ReplyDeleteடியர் சார்,
ReplyDeleteஅவசர பதிப்பாக Tex-இதழையே வெளியிடலாம்..
மற்றொரு இதழாக - இரத்தபடலம்-முதல் பாகம் வெளிடுவதை வரவேற்கிறேன்..
அதை - தங்களுக்கு நஷ்டம் இல்லாத ஒரு விலையை குறிப்பிட்டுவிட்டு-நண்பர் பழனி க்கு உதவும் நண்பர்கள் அவர்களால் இயன்ற அதிக தொகை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்பது இரண்டு வகையிலும் உதவியது போல் அமையுமே..சார்..ஒரு யோசனைதான்...
Option$1
ReplyDeleteOption #1
Deleteடென்த் கிளாசிக் 2 இத்தருணத்தில் சரியாக இருக்கும்.
ReplyDeleteXII ஐ அடுத்த வருட அட்டவணையில் சேர்த்துக் கொள்ளலாம். புத்தகத்தின் விலையுடன் என்னால் முடிந்த சிறு தொகையையும் அனுப்ப விரும்புகிறேன். எப்பொழுது அனுப்பலாம் என்ற விவரத்தை கூறுங்கள்.
மன்னிக்கவும் டெக்ஸ் கிளாசிக் என்பது டென்த் கிளாஸ் என்று விழுந்துவிட்டது.
ReplyDeleteசதாசிவம் வெள்ளியம்பாளையம்
அய்யா வணக்கம்,
ReplyDeleteநீங்கள் எந்த புத்தகத்தினை போட்டாலும் வாங்கிக்கொள்கிறேன்... நண்பர் பழனிக்காக
Dear Editor,
ReplyDeleteMy option Tex classics
Regards
Arvind
// ஸ்பெஷல் இதழை பொறுத்த வரையில், பழனிக்கு உதவி செய்வது மட்டுமே தலையாய குறிக்கோள். எனவே ஒடும் குதிரையான டெக்ஸ் & குழுவின் கிளாசிக் ஸ்பெஷல் என்பது நல்ல தேர்வுமே ஆகும்! இதற்கு எனது ஆதரவு உண்டு... //
ReplyDeleteடெக்ஸ் கிளாசிக் + இ.ப போஸ்டர்
🙏🙏🙏🙏🙏
டெக்ஸ் ஸ்பெஷல் நிறைய பணம் கிடைக்கும் அதிக பிரதிகளும் விற்க முடியும்
ReplyDeleteஆசிரியர் சார் & நண்பர்களே@
ReplyDeleteஎந்தெந்த சமயத்துக்கு எந்த ஹீரோவென நம் நண்பர்கள் மிக மிக சரியாக அறிந்து வைத்து உள்ளனர்....
உதவிக்கு டெக்ஸ்தான் உகந்தது என்பது உலகறிந்த ரகசியம் என்றாலும் நட்புகள் உரக்கச் சொல்லி உள்ளார்கள்...
காலை 8மணி நிலவரப்படி....
ஆப்சன்2: டெக்ஸ் க்ளாசிக்= 52 வாக்குகள்
இரத்தப்படலம்1= 2 வாக்குகள்
ஸ்பின் ஆப்= 1வாக்கு
சுஸ்கி விஸ்கி= 1வாக்கு
மற்றவை....(ஆப்சன்ல இல்லாதவை)
டெக்ஸ்+இ.ப=2
எதுவாயினும்=1
டெக்ஸ் அல்லது சு.வி.=1
உள்ளாட்சித் தேர்தல் நிலவரம் போலுள்ளதே !
Delete// ஆப்சன்2: டெக்ஸ் க்ளாசிக்= 52 வாக்குகள் //
Deleteசட்டு,புட்டுனு டைப் செட்டிங் வேலையை ஆரம்பிச்சிடுங்க சார்...
விஜயன் சார் :-)
Deleteஸ்பெஷல் இதழை பொறுத்த வரையில், பழனிக்கு உதவி செய்வது மட்டுமே தலையாய குறிக்கோள். எனவே ஒடும் குதிரையான டெக்ஸ் & குழுவின் கிளாசிக் ஸ்பெஷல் என்பது நல்ல தேர்வுமே ஆகும்! இதற்கு எனது ஆதரவு உண்டு
ReplyDeleteTex Special - 53
DeleteIncluding Tex with other choice - 3
Strictly others - 5
தங்களது அறம் சார்ந்த இந்த முயற்ச்சிக்கு நிச்சயம் எனது ஆதரவு உண்டு ...எந்த புக்ன்னாலும் Ok..
ReplyDeleteTexok
ReplyDelete1. கணவனை இழந்த ஆதரவற்ற பெண்களுக்கு உதவி தொகையாக அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000/= வழங்குகிறது. இதற்கு என்று தனி விண்ணப்ப படிவம் உள்ளது இதனை நிரப்பி இதனுடன் இறந்தவரின் இறப்பு சான்றிதழ், அவரின் ஆதார், மனைவியின் ஆதார், பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ் மற்றும் ரேஷன் கார்டு ஜெராக்ஸ் எல்லாவற்றையும் இணைத்து கலெக்டர் ஆபீஸ் கலெக்டரிடம் நேரடியாக (மாதம் ஒரு நாள் கலெக்டர் பொதுமக்கள் குறைகளை கேட்பார் அன்று கொடுப்பது நல்லது) மனு கொடுத்து பெற்றுக் கொண்டதற்கான ரசீதையும் வாங்கிக் கொண்டால் சில மாதங்களில் இந்த உதவி தொகை இறந்தவரின் குடும்பத்தினருக்கு கிடைக்க ஆரம்பித்து விடும்.
ReplyDelete2. லோக்கல் கவுன்சிலர் தெரிந்தவராக இருந்தால் அவரிடமும் சென்று இதே மனுவை கொடுத்து முயற்சி செய்ய சொல்லவும்.
3. இறந்தவரின் மனைவியை அவர் படித்த ஸ்கூல் அல்லது காலேஜ் சர்டிபிகேட் மற்றும் கணவனை இழந்த ஆதரவற்ற பெண் சர்டிபிகேட்டையும் இணைத்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்கு பதிந்து வைக்கலாம். பிற்காலத்தில் எதாவது ஒரு அரசாங்க வேலை அவர் படிப்புக்கு ஏற்றார் போல் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். கணவனை இழந்த இளம் பெண்களுக்கு வேலை கொடுப்பதில் முன்னுரிமை கொடுக்கப்படும்.
பழனியின் நெருங்கிய நண்பர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் இதனை உடன் இருந்து செய்து கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
//கணவனை இழந்த ஆதரவற்ற பெண்களுக்கு உதவி தொகையாக அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000/= வழங்குகிறது.//
Deleteஇந்திரா காந்தி திட்டம் மூலம் 40 வயது பூர்த்தியாகி இருந்தால் சிறு பென்சன் உதவி கோரி பெற்றிடலாம்.
பழனிக்கே 39 தானே ஆதி !
Delete//பழனிக்கே 39 தானே ஆதி !//
Deleteஆமாம் சார்... அது சாத்தியமில்லை என்பதாலேயே இங்கே குறிப்பிட்டேன்.
மாதம் மாதம் கிடைக்க உள்ள கணவனை இழந்த இளம் பெண்களுக்கான உதவி தொகையை பெறலாம். இது அவர்களுக்கு கண்டிப்பாக ஏதாவது வகையில் உதவும்.
Delete// மாதம் மாதம் கிடைக்க உள்ள கணவனை இழந்த இளம் பெண்களுக்கான உதவி தொகையை பெறலாம். //
Deleteஇ சேவை மையம் மூலம் விண்ணப்பம் செய்து விட்டு,வருவாய்த் துறை மூலம் அணுகினால் பெறலாம்...
எது லாபம் அதிகம் வருமோ அதுதான் இப்போதைய தேவை, பழனிக்காக இ.ப என்பது இப்போது லேட் என்று என் மனசுக்கு தோனுது, மன்னிக்கவும்.
ReplyDeleteடெக்ஸ் + extra amount எனது choice
Tex special is good for fund support.
ReplyDeleteவணக்கம் நண்பர்களே பழனியின் குடும்பத்திற்கு உதவுவதே பிரதான நோக்கம் எனவே டெக்ஸ் ஸ்பெசல் -2 ஜ களமிறக்கினால் நல்லதோரு தொகை அக்குடும்பத்திற்கு வழங்கலாம்
ReplyDeleteதற்போதைய சூழ்நிலையில் டெக்ஸ் தேர்வே சரியானது. ஆதரிக்கிறேன் ஆசிரியரே
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் சார்! வணக்கம் நண்பர்களே...
ReplyDeleteடெக்ஸ் தான் இச்சூழலுக்குப் பொருத்தமானது என்பது நிதர்சனம். தாமதமில்லாமல் செய்யவேண்டும் என்பதே முக்கியம் சார்.
நன்றிகள் சார்.
ஆசிரியர் விஜயன் சாருக்கும்
ReplyDeleteமற்றும் தண்பர்களுக்கும்
வணக்கம். என் உடன்பிறவா
சகோதரனும் காமிக்ஸ் ரசிகனுமான
பழனியின் மறைவு நம்மை விட்டு மறைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது தெரிந்ததே. அவர் நினைவாக ஒரு சிறப்பு பதிப்பு வெளியிடும் தங்கள் எண்ணத்திற்கு மிகவும் நன்றி அதேசமயம் எத்தனை சித்திரக்கதைகள் வந்தாலும் இரத்தப் படலத்தின் மீது அவர் கொண்ட தீராத காதல் காமிக்ஸ் உலகம் அறிந்ததே.
அவருடைய விருப்பத்தின் பெயரில் இரத்தப் படலத்தின் கிளைக் கதைகளில் தாங்கள் வெளியிடாமல் இருப்பது எட்டு கதைகள்.
அதுமட்டுமல்லாமல் புலன் விசாரணை இரண்டாம் பாகமும் ஜேசனின் வரலாறும் எஞ்சியுள்ளது.
ஸ்பின் ஆப் கதைகளில் உள்ள எட்டு கதைகளும் மொழிபெயர்த்து தயாராக உள்ளது அவற்றில் இரண்டு கதைகள் ஆங்கிலத்தில் இருந்தும் மீதி ஆறு கதைகள் பிரெஞ்சு மொழியில் இருந்தும் மொழிபெயர்க்கப்பட்டது மட்டுமல்லாமல் புலன் விசாரணை இரண்டாம் பாகமும் ஜேசனின் வரலாறும் பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாக தமிழுக்கு மொழிமாற்றம் செய்து தயாராக வைத்திருக்கிறேன் அதை தாங்கள் விரும்பும் பட்சத்தில் பழனியின் நினைவாக அவருக்கு உதவும் நோக்கத்தில் அவர் குடும்ப நலனை கருத்தில் கொண்டு கூடுதல் விலையுடன் புத்தகத்தின் விலைகளை நிர்ணயித்து மேற்கண்ட புத்தகங்களை வெளியிட்டு அவரது நினைவுகளைப் போற்றவும் செய்யலாம் அவரது ஆசைகளை நிறைவேற்றவும் செய்யலாம் ஆத்மாவை சாந்தி அடையவும் செய்யலாம். மேற்கண்ட இரண்டு புத்தகங்களின் ஒரிரு பக்கக மாதிரியை உங்களுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்கிறேன். இதை வழக்கமாக
மொழிபெயர்க்கும் நபருக்கு தாங்கள் செலுத்தும் தொகையையும் பழனியின் குடும்ப எதிர்கால நிதிக்காக சேர்த்துவிடலாம்
என்னுடைய இந்தப் பதிவு எந்த வித சுய லாபத்திற்கோ சுய விளம்பரத்திற்கோ செய்யப்பட்டது அல்ல. நான் பழனியுடன் பழக ஆரம்பித்த இந்த ஐந்து வருடங்களில் நான் பழனி மற்றும் இலங்கை மருத்துவர் பிரசன்னா மூவரும் உடன்பிறவா சகோதரர்கள்போல் பழகி வருவது அனைவரும் அறிந்ததே. அவரது சின்னஞ்சிறு இரு குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்காக ஒரு சிறு முயற்சியை முன்னெடுத்து உள்ளேன் இதற்கும் தங்களது ஆதரவு தேவை.
நன்றி.
இப்படிக்கு
K.V.GANESH.
துயரமயமான சூழ்நிலையில் இம்மாதிரி முன்வரைவுகளை பிரத்தியேகமாக எடிட்டரின் ஈமெயிலில் கொண்டுசெல்வது பல தர்மசங்கடங்களை தவிர்க்கும் எனத்
Deleteதோன்றுகிறது KVG சார்..பொதுவெளியில் இதைப் பகிர்வது உசிதமானல்ல எனக்
கருதுகிறேன்.
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteசாரி சார் ; மொழிபெயர்ப்பிற்கென எனக்கு நேரம் ஒதுக்க சாத்தியப்படும் பொழுது spin offs களில் ஓரளவிற்கு ஒ.கே .வானவற்றைத் தேர்வு செய்து மெது மெதுவாய் வெளியிடுவோம் ! நமக்கென பழகியுள்ள அந்த பாணி தவிர்த்தவற்றுள் எனக்கு பணியாற்ற நிச்சயமாய் இயலாது !
Deleteதவிர இந்த நொடியின் இலட்சியம் நிதி திரட்டுவதாய் இருந்தாலுமே, பணம் தந்து வாங்குவோரின் வாசிப்புகளுக்கு நியாயம் செய்திடும் கடமையினையும் லயன் காமிக்ஸ் மறந்திடலாகாது ! So பிரெஞ்சிலேயே தர்ம அடி வாங்கிய சுமார் படைப்புகளை சென்டிமென்ட்களின் பொருட்டு மட்டுமே வெளியிட்டு வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை ! And அது பழனிக்குமே தெரியும் தானே !
நமக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ 4/5 அமோக வெற்றி தான் என்னும் போது....
ReplyDeleteஒன்றியமா, மத்தியமானு குழம்புவதை விட்டுவிட்டு ....
ஜெயிக்கற குதிரையில பயணம் போவதே இச்சூழ்நிலையில் சரின்னு சொல்றேன்...
நான் என்ன சொல்ல வர்றேன்னா
அந்த பார்ட்டி யாருன்னா...
Deleteசுருங்கச் சொன்னா மூன்றெழுத்து!
முழுசாய் சொன்னா ஏழெழுத்து!!
Tex classic ok
ReplyDeleteTexwiller double ok..
ReplyDeleteTex Classic 2 plus Hybrid for our friend.
ReplyDeleteTex Classic -
ReplyDeleteOK sir
டியர் எடி,
ReplyDeleteஎன் தரப்பிலிருந்து மும்முனை திட்டங்களாக செயல்படுத்துவதிற்கு பரிந்துரைக்கிறேன்.
1. விற்பனைக்காக, டெக்ஸ் அதிரடி ஸ்பெஷல், உடனே வெளியீடு, ஒரு பக்கத்தில் பழனிக்கு நினைவஞ்சலியுடன்
2. 2-3 மாதங்கள் பொறுத்து நோஸ்டால்ஜியாவிக்காக, XIII முதல் இதழ் Replica வாகப்ரீமியம் விலை (500), ஆனால், அதற்கான பணம் இப்போதே முன்வாங்கி, அதில் வரும் லாபத்தை பழனி குடும்பத்திற்கு 1 திட்டத்துடன் அனுப்பி வைத்துவிடுவது
3. உண்மையான அஞ்சலி. அவர் மிகவும் ஆசைபட்ட XIII SPINOFF MYSTERY-2 போன்ற எஞ்சிய கதைகளை முன்பதிவுக்கு மட்டும் என்று அறிவித்து நாள்கெடு வைத்து... தேவையான எண்ணிக்கை கிடைத்தபின் அச்சுக்கு கொண்டு செல்வது. அதற்கான முன்பதிவு, விலை விவரம் இப்போதே அறிவிக்கபட்டு, இந்த மாதத்திலிருந்து தொடங்கினால் சிறப்பு.
பழனியின் பரிச்சயம் கொண்ட நூறோ, நூற்றிஐம்பதோ நண்பர்களைத் தவிர்த்த மற்றவர்களுக்கு இதுவொரு overkill ஆகத் தென்படக் கூடும் சார் ! And நண்பர்களின் பர்ஸ்களுக்கும் சங்கடங்களை தந்திடலாகாதே ! இன்றைய நாட்களில் பிழைப்புகளின் பாடுகளில் ஏது இரகசியம் சார் ?
Deleteஒவ்வொரு ஆண்டின் மே மாதமும் ஒரு ஸ்பின் ஆப் - சற்றே கூடுதல் விலையில் !
DeleteAnd அந்த உபரித் தொகை ஜூன் மாதத்துக்கு பிள்ளைகளின் கல்விக் கட்டணங்களுக்கு என்று யோசிப்போமா ?
This comment has been removed by the author.
Deleteஇ.ப.replica edition 1 ஒ.கே தான் சார் ; அதற்கென நண்பர்களில் எத்தனை பேர் கை தூக்குவார்களென்று பார்த்த பின்பே விலை நிர்ணயிக்கவும், படைப்பாளிகளிடம் அது சார்ந்த ஒப்புதலும் வாங்கிட இயலும் !
Deleteஇங்கே பொதுவெளியில் அதனைப் பகிரச்சொல்லி நண்பர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்திடாது , அதற்கு ஒ.கே சொல்வோர் மட்டும் நமது ஆபிஸ் வாட்சப் எண்ணுக்கு ( 9842319755 ) YES REPLICA என்று மெசேஜ் செய்திடக் கோருவேன் !
சூப்பர் சார்....டாக்டர் மார்த்தாவிலிருந்து ஆரம்பிப்போமா...முதல் நாயகி அவர்தான
Delete//ஒவ்வொரு ஆண்டின் மே மாதமும் ஒரு ஸ்பின் ஆப் - சற்றே கூடுதல் விலையில் !
DeleteAnd அந்த உபரித் தொகை ஜூன் மாதத்துக்கு பிள்ளைகளின் கல்விக் கட்டணங்களுக்கு என்று யோசிப்போமா//
Good idea Sir... Pls don't hesitate to proceed this.
// டாக்டர் மார்த்தாவிலிருந்து ஆரம்பிப்போமா... //
Deleteஅந்த வேலையை ஆசிரியரிடம் விட்டு விட்டுலே மக்கா. :-) நமது வேலை ஆசிரியருக்கு உறுதுணையாக இருப்பது மட்டும்.
///ஒவ்வொரு ஆண்டின் மே மாதமும் ஒரு ஸ்பின் ஆப் - சற்றே கூடுதல் விலையில் !
DeleteAnd அந்த உபரித் தொகை ஜூன் மாதத்துக்கு பிள்ளைகளின் கல்விக் கட்டணங்களுக்கு என்று யோசிப்போமா ?///
மிக மிக உசிதமானதுங் சார்....
இதை செயல்படுத்த உரியவற்றை அந்தந்த நேரங்களில் தொடங்கலாம் சார்...
// ஒவ்வொரு ஆண்டின் மே மாதமும் ஒரு ஸ்பின் ஆப் - சற்றே கூடுதல் விலையில் !//
Deleteஇது நடைமுறையில் சாத்தியமான்னு தெரியலை சார்,சூட்டோடு சூடாய் செய்யப்படும் உதவிகளே முழுப் பலன் கொடுக்கும்,காலப் போக்கில் மனநிலைகள் மாறும்,இதுவே எதார்த்தம்...
இதை மீறி நல்லது நடந்தால் மகிழ்ச்சியே,இது என் தனிப்பட்ட கருத்தே...
எனவே, டெக்ஸ் + இ.ப-1 Replica நல்ல தேர்வாக இருக்கும் என்பேன்!////
ReplyDelete+1
எனது தேர்வும் டெக்ஸ்.
ReplyDeleteஆசிரியர் தேர்வு எதுவாயினும் அதுவும் சம்மதமே.
நண்பர் பழனியின் குடும்ப நலனே முக்கியம். அவர் இப்பொழுது இறைவனிடம் சேர்ந்து, இரத்தப்படலத்தை எண்ணிக்கொண்டுருப்பார் என்று நினைக்ககூடவில்லை.
சடுதியில் உதவக்கூடிய முன்னெடுப்பை ஆசிரியர் செயல்படுத்துவார் என்று நம்பிக்கை உள்ளது.
//2-3 மாதங்கள் பொறுத்து நோஸ்டால்ஜியாவிக்காக, XIII முதல் இதழ் Replica வாகப்ரீமியம் விலை (500), ஆனால், அதற்கான பணம் இப்போதே முன்வாங்கி, அதில் வரும் லாபத்தை பழனி குடும்பத்திற்கு 1 திட்டத்துடன் அனுப்பி வைத்துவிடுவது//
ReplyDeleteStrongly agree with this opinion.
@ ALL : நண்பர் கார்த்திக் சோமலிங்கா - பழனியின் நிதிக்கான பிள்ளயார் சுழியை செம நேர்த்தியாய் இன்று காலையே போட்டு துவக்கம் தந்து விட்டார் ! Thanks கார்த்திக் !
ReplyDeleteAnd இன்றைய தேதியைப் பாருங்களேன் ?!! 13 !!
நல்ல செயல் கார்த்திக்.
Deleteதுரித நிவாரணமாக டெக்ஸ் ஹைபிரிட்
ReplyDeleteநீண்ட கால நிவாரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட XIII ஸ்பின் ஆப்ஸ் சற்றே உச்சவிலையில்.
அற்புதமான திட்டம்..
பிற வாசகர்களுக்கும் கையைக் கடிக்காத வகையில்..
மனப்பூர்வமாக வரவேற்கிறேன்
// ஒவ்வொரு ஆண்டின் மே மாதமும் ஒரு ஸ்பின் ஆப் - சற்றே கூடுதல் விலையில் !
ReplyDeleteAnd அந்த உபரித் தொகை ஜூன் மாதத்துக்கு பிள்ளைகளின் கல்விக் கட்டணங்களுக்கு என்று யோசிப்போமா //
Excellent Idea
எதுவானாலும் ok சார். ஆனால் கூடுதல் நிதி எதன் மூலம் திரட்ட முடியுமோ அதை வெளியிடலாம்.
ReplyDeleteஎன்னுடைய சாய்ஸ் டெக்ஸ் கிளாசிக். இப்போதைய தேவை நிதியை விரைவாக திரட்டுவது என்பதால் இதுவே சிறந்தது. ஆனாலும், எந்த புத்தகமாக இருந்தாலும் எனக்கு ஒகே தான்
ReplyDeleteடெக்ஸ்
ReplyDeleteJust a thought - why not a group health / term insurance plan for our lion/muthu subscribers? Not sure how practical or manageable it is from your end sir, but off late, we are seeing many such unfortunate situations where our readers are affected due to lack of awareness or financial means.
ReplyDeleteFrom IRDAI's website:
https://www.policyholder.gov.in/group_insurance.aspx
Definition of a group:
Groups – for this purpose - can be employer-employee groups or non employer-employee groups as defined by IRDA’s group insurance guidelines. (Examples are holders of the same credit card, savings bank account holders of a bank or members of the same social or cultural association and so on.)
இன்று காலையில் தான் நானும் இதை யோசித்துக் கொண்டிருந்தேன் கார்த்திக் ! ஆனால் வெவ்வேறு ஊர்களில் , மாநிலங்களில் வசிக்கும் நண்பர்களுக்கு எந்த ஆபிசில் claims settlements சாத்தியமாகிடும் ? என்றெல்லாம் கேள்விகளும் எழுந்தன !
Deleteஇன்ஷுரன்ஸில் பணியாற்றும் நண்பர்கள் யாரேனும் இருந்தால் இதன் நடைமுறை சாத்தியங்கள் பற்றி எனக்கொரு மின்னஞ்சல் ப்ளீஸ் ?
//Just a thought - why not a group health / term insurance plan for our lion/muthu subscribers?//
DeleteVery hopeful suggestion, Karthick bro
நம்ம சௌந்தருக்கு தெரிய வாய்ப்பிருக்குங்க சார். உங்களை தொடர்பு கொள்ள சொல்லி ஒரு மெசேஜ் தட்டி விடறேன்.
Deleteஒவ்வொரு ஆண்டின் மே மாதமும் ஒரு ஸ்பின் ஆப் - சற்றே கூடுதல் விலையில் !
ReplyDeleteAnd அந்த உபரித் தொகை ஜூன் மாதத்துக்கு பிள்ளைகளின் கல்விக் கட்டணங்களுக்கு என்று யோசிப்போமா ?//
சார்…இதெல்லாம் ப்ராக்டிகலா சாத்தியமான்னு தெர்ல. எமோசனலா இருக்கும் போது குடுக்கப்படும் வாக்குறுதிகள் உங்களுக்கு எதிராக உபயோகப்படுத்தியதை பல தடவை பாத்தாச்சு. எதற்கு இவ்வளவு distractions னு எனக்கு சுத்தமாப் புரியலை. இப்போதைக்கு முன்னே இருக்கும் ஒற்றை அஜெண்டாவை தவிர எந்த வாக்குறுதி குடுக்கும் முன்னும் நிறைய கவனம் தேவைங்க சார். தவறாக இருந்தால் மன்னிக்கவும். 🙏🙏🙏🙏
உண்மைதான் மகி..👍👍
Deleteயோசிக்க வேண்டிய விஷயம் மகேந்திரன்
Delete//இதெல்லாம் ப்ராக்டிகலா சாத்தியமான்னு தெர்ல. எமோசனலா இருக்கும் போது குடுக்கப்படும் வாக்குறுதிகள்//
Deleteநானும் சொல்ல நினைத்தேன் ம.ப., ஆனால் இந்நிலையில் தவறாக புரிந்து கொள்ளப்படக் கூடும் என்பதால் வாய் திறக்கவில்லை.
இது போன்ற துயர / கடின நிகழ்வுகளின் போதெல்லாம், அரக்கப் பரக்க ஸ்பெஷல் இதழ்கள் வெளியிடுவதும், அது குறித்த நீண்ட விவாதங்கள் புரிவதும், (விலை, பக்கம் மற்றும் நாயகர் இதர) ஆலோசனைகளும் , மிகுந்த தர்ம சங்கடத்தை அளிக்கின்றன. இக்கட்டான சூழ்நிலையிலும், ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஸ்பெஷல் இதழ்களையும், அரிய காமிக்ஸ் இதழ்களையும் வாங்க ஆயத்தமாக இருக்கும் வாசகர்கள், ஆண்டுக்கொரு முறை ஆயுள் காப்பீட்டுத் தொகை கட்டுவது குறித்து அலட்டிக் கொள்வதில்லை என்றே எண்ண வேண்டியிருக்கிறது, கசப்பான உண்மை (அனைவரையும் சொல்லவில்லை, யாரையும் குறிப்பிடவில்லை).
அதனாலேயே க்ரூப் இன்சூரன்ஸ் சாத்தியமா என்று கேட்டேன். அது சாத்தியாமாகவே இருந்தாலும், Insurance is a subject matter of solicitation என்பதால், "சந்தா I" என்ற ஒரு தேர்வை வைத்து, காப்பீடு வேண்டுபவர்கள் சற்றே கூடுதல் தொகையை கட்டலாம் என்று சொல்லத்தான் முடியும். அந்தத் தொகையில் இரண்டு ஸ்பெஷல் இதழ்கள் வாங்கலாமே என்று யாராவது நினைத்தால், யாரும் எதுவும் சொல்ல முடியாது அல்லவா?
Not at all sir ; நூறு ரூபாய்க்கான ஒரு ஸ்பின் ஆப் இதழினை ரூ.125 என விலை நிர்ணயித்து , ரெகுலர் சந்தாவினில் ஒரு அங்கமாக்குவதில் யாருக்கும் சிரமம் இருக்குமென்று நான் நினைக்கவில்லை ! அதிலிருந்து கிட்டக்கூடிய இருபத்தையாயிரமோ, முப்பதாயிரமோ அந்தப் பிள்ளைகளுக்கென தந்திடலாம் என்றே பட்டது !
Deleteமற்றபடிக்கு இன்றைய வேகத்தில் எதையுமே அவசரத்தில் அறிவித்து விட்டு ஆர அமர வருத்தம் கொள்ளும் அனுபவத்தின் பாதகங்களை 2 வருஷங்களுக்கு முன்னமே உணர்ந்து விட்டாச்சு சார் - முதற் லாக்டௌன் சமயத்தின் இ.ப. அறிவிப்பினைத் தொடர்நது !
Option 2:Tex
ReplyDeleteஎம்மை விட்டுப் பிரியும் அற்புதமான காமிக்ஸ் வாசக நண்பர்களுக்கு காமிக்ஸ் குடும்பத்தின் சார்பில் எடிட்டரும் சக காமிக்ஸ் நண்பர்களும் தரும் மரியாதையும் அதைவிடவும் பிரிவால் கதிகலங்கி நிற்கும் குடும்பங்களுக்கு செய்ய நினைக்கும் உதவிகளும் மகத்தானவை. உதவும் உங்கள் முயற்சிகள் எதுவாக இருப்பினும் துணை நிற்போம் 🙏🙏🙏🙏🙏
ReplyDeleteபழனியின் நினைவாக 13 spin off ஒன்றும் நிதிக்காக Tex இதழ் ஒன்றும் இணைந்து ஒரு நினைவு மலர் வெளியிடுங்கள் சார்.
ReplyDeleteஅதே சமயம் நண்பர் KVG ன் கருத்துகளும் பரிசீலிக்க படலாம்.
இன்சூரன்ஸ் சமாச்சாரமெல்லாம் எந்தளவிற்கு ஒத்துவரும் என்று தெரியவில்லை!
ReplyDeleteஎன் போல் தினப்படி செலவுகளுக்கே மல்லுக்கட்டும் நண்பர்கள் ஒருபுறம்,
இன்சூரன்ஸே தேவைப்படாத கணிசமான இருப்புகளை கொண்டிருக்கும் அன்பர்கள் மறுபக்கம்,
நாம அந்தாண்டையா? இந்தாண்டையா? என்று சொல்ல முடியாத நண்பர்கள் ஒருபக்கம்
என்று இருக்கும்போது,
எல்லோரும் பொதுவானது "காமிக்ஸ்" மட்டுமாகத் தான் இருக்க முடியும்! மற்ற எல்லாமே ஒரு வேகத்தின் வெளிப்பாடாக மட்டும் இருக்க முடியும்!
யார், இன்னார் என்ற விபரம் எல்லாம் இல்லாமல் நம்மாலான உதவிகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் செய்வதே நல்லது!
முன்பு ஒருமுறை GPay நெம்பர் கொடுத்தது போல நேரடியாக அவரவர் தம்மால் இயன்றதை கொடுத்து உதவலாம்!
மற்றபடி அவர்தம் குடும்ப விஷயங்களை பொதுதளத்தில் விவாதிப்பது கொஞ்சம் நெருடலாய் உள்ளது!
மனதில் பட்டதை சொன்னேன்!
தவறிருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே!!