நண்பர்களே,
வணக்கம். இதோ நாம் பேசிக்கொண்டிருந்தது சார்ந்த அறிவிப்பு ! TEX க்ளாசிக்ஸ் 2 சார்ந்த பணிகளை நேற்றைக்கே முனைப்போடு துவங்கியாச்சு & முன்னூற்றுச் சொச்சம் பக்கங்கள் எனும் போது அடுத்த வாரத்தின் மத்தியில் டைப்செட்டிங் நிறைவுற்றிட வேண்டும் ! அதன் அடுத்த கட்டம் proof reading ! இந்த ஒரு தபா மாத்திரம் அந்தப் பணியினை உங்களில் யாரேனும் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், இந்த இதழை அச்சுக்குக் கொண்டு செல்லும் எனது பனி சுலபமாகிடும் ! Any volunteers folks ?
அப்புறம் அட்டைப்படப் பணிகளும் வேகமாய் நடந்தேறி வருகின்றன ! Maybe "கௌபாய் ஸ்பெஷல்" இதழுக்கென நமது ஓவியர் மாலையப்பன் போட்டுத்தந்த பெயின்டிங் இன்னமும் நம்மிடம் பத்திரமாக இருக்கும் பட்சத்தில், அதனை மெருகூட்டி அட்டைப்படமாக்குவது திட்டம் ! பெயின்டிங் கிட்டிடா பட்சத்தில் போனெல்லியின் கவர்களுள் ஒன்று அட்டையினை அலங்கரிக்கும் ! நகாசு வேலைகள் ; அச்சு ; பைண்டிங் என எல்லாமே முடிந்து புக் ரெடியாகிட குறைந்த பட்சம் 20 to 25 நாட்கள் எடுக்குமென்று சொல்லுவேன் ! So ஏப்ரலின் இரண்டாம் வாரம் புக்கை உங்களிடம் ஒப்படைப்பது practical ஆக இருக்குமென்பேன் !
And அந்த இரத்தப் படலம் 1 replica edition-க்கு அவ்வளவாய் வேகம் தென்படக்காணோம் ! இன்றைக்கு நமது ஆபீஸ் வாட்ஸப்புக்கு மிகச் சொற்பமான நண்பர்களே இது குறித்து இசைவு தெரிவித்து மெசேஜ் அனுப்பியுள்ளனர் ! So தற்போதுள்ள இந்த நம்பர்களைக் கொண்டு இதனை முன்னெடுப்பது சாத்தியமே ஆகிடாது ! தொடரும் நாட்களில் மேற்கொண்டு நண்பர்கள் ஆர்வம் தெரிவிக்கும் பட்சத்தில் பார்த்துடலாம் ; இல்லையேல் this will be a non starter !
ரைட்டு...இனி என் தரப்புப் பணிகளில் பிஸியாகிடுகிறேன் guys ; நீங்கள் உங்களுக்கு சாத்தியமாகிடக்கூடிய ஒத்தாசைகளுக்கு சற்றே மெனெக்கெடக் கோருகிறேன் !
TEX CLASSICS 2 - ஆன்லைன் லிஸ்டிங்குகளும் ரெடி : https://lioncomics.in/product/tex-classics-2-prebooking-for-april-2022-within-t-n-including-courier/
Bye all...see you around !
Well done sir.
ReplyDeleteHi..
ReplyDeleteவணக்கம் நண்பர்களே...
ReplyDelete//Maybe "கௌபாய் ஸ்பெஷல்" இதழுக்கென நமது ஓவியர் மாலையப்பன் போட்டுத்தந்த பெயின்டிங் இன்னமும் நம்மிடம் பத்திரமாக இருக்கும் பட்சத்தில், அதனை மெருகூட்டி அட்டைப்படமாக்குவது திட்டம் ! //
ReplyDeleteஇரத்த வெறியர்கள் அட்டை ஆர்ட்ஒர்க் இருக்குமாயின் இன்னும் பிரமாதமா இருக்குமே சார்...
ஆம்.... இரத்த வெறியர்கள் அட்டை அப்படியே நம்மை ஏர்லி1990s க்கு கொண்டு போயிடும்....
DeleteSuper sir
ReplyDeleteசிறப்பு.. உங்களின் கற்கால நோட் புத்தகங்களின் கடைசி பக்கத்தை அட்டைப்படமாக போட்டாலுமே சந்தோசமே..
ReplyDeleteஇப்புத்தகம் முழு வண்ணமா இல்லை கருப்பு வெள்ளையா சார்?
ReplyDeleteஏன் அரைத்த மாவையே அரைக்க வேண்டும்?
ReplyDeleteபுதிய முயற்சிகள் புதிய டெக்ஸ் வில்லர் என்று நாம் முயற்சிக்கலாமே.
பல முறை சொல்லப்பட்ட மெபிஸ்டோ...
அல்லது வேறு இதழ் முயற்சிக்கலாமே..
பத்தி பத்தியாய் எழுதுகிறோமே - கொஞ்சம் சுருக்கமாய் எழுதினால் சுகப்படாதா ? என்று எப்போதாவது எனக்குத் தோன்றிடுவதுண்டு ! உங்களின் பின்னூட்டம் போலானவற்றைப் பார்க்கும் போது அந்த எண்ணம் மாயமாகி விடுகின்றது நண்பரே !
Deleteநேரம் கிடைக்கும் போது நேற்றைய பதிவை வாசிக்க முயற்சியுங்களேன் !
Edi Sir..
ReplyDeleteTex Classic 2-one book - Rs.490 & Contribution to Palani bro..வினை Lion office க்கு Gpay பண்ணிட்டேன்.
வணக்கம்
ReplyDeleteசிறப்பான முடிவுங்க சார். Act first and fast என்பதற்கான தருணம் இது. 🙌👌
ReplyDeleteColour or b&w ah sir...but i am ok for both
ReplyDeleteஆரம்பிக்கலாம் சார்....
ReplyDeleteநல்ல விவரைவான முயற்சி எடிட்டர் சார்
ReplyDelete//முன்னூற்றுச் சொச்சம் பக்கங்கள் எனும் போது அடுத்த வாரத்தின் மத்தியில் டைப்செட்டிங் நிறைவுற்றிட வேண்டும் ! அதன் அடுத்த கட்டம் proof reading ! இந்த ஒரு தபா மாத்திரம் அந்தப் பணியினை உங்களில் யாரேனும் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், இந்த இதழை அச்சுக்குக் கொண்டு செல்லும் எனது பனி சுலபமாகிடும் ! Any volunteers folks ?//
ReplyDeleteதாங்கள் விருப்பப்பட்டால் நான் இதுக்கு உதவிட முடியும் உங்களின் பதில் ப்ளீஸ்.
👏👏👏
Deleteமனசார வாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteநெகிழ்ச்சியாக உள்ளது.
நேரம் அறிந்து விரைவாக முடிவெடுத்தமைக்கு நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
அதன் அடுத்த கட்டம் proof reading ! இந்த ஒரு தபா மாத்திரம் அந்தப் பணியினை உங்களில் யாரேனும் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், இந்த இதழை அச்சுக்குக் கொண்டு செல்லும் எனது பனி சுலபமாகிடும் ! Any volunteers folks ? //
ReplyDeleteI am ready sir
My mail I'd jeevansure@gmail.com
சார், இந்த இதழை இந்த விலையில் கருப்பு வெள்ளையில் வெளியிட்டு கூடுதல் நிதி திரட்டலாமா என்று முயற்சித்து பாருங்களேன்.
ReplyDeleteபள்ளியில் புது அரங்கம் கட்ட நன்கொடை வசூலித்தார்கள் ! சும்மா ரசீது புக்கை நீட்டாமல் ஆம்பூரிலிருந்து மாஸ்டரை வரவழைத்து, மணக்க மணக்க பிரியாணி செய்து , அதை நேரத்தியாய் பேக்கிங் செய்து, ஒவ்வொரு 500 ரூபாய் நன்கொடைக்கும் ஒரு பார்சல் என்று தந்தார்கள் ! ஆயிரம் ரூபாய் நன்கொடை தர நினைத்தோர் கூட 4 ரசீது கிழித்துப் போனார்கள் !
Deleteசரி, நல்ல விஷயத்துக்கான வசூல் தானே ; யார் குறை சொல்லப் போகிறார்கள் ?.. டால்டா போட்டுப்போம் ; மட்டனை குறைச்சுப்போம் ; உள்ளூர் மாஸ்டரைக் கூட்டிப்போம் என்று நிர்வாகிகள் நினைக்கவில்லை !
ஏனோ அது இந்த நொடியில் நினைவுக்கு வந்தது ஆதி !
ஆனியே .. வேணாம்.. இப்போதைக்கு இதன் நோக்கமே குடும்பத்திற்கு உதவ வூண்டிம் என்பது தான்.. தேவை இல்லாத ஆனிகளை இங்க புடுங்காமல் இருப்பதே நல்லது..
Deleteபதிலுக்கு நன்றிகள் சார்.
DeleteMy phone number 9489842624
ReplyDeleteMy name Sures Thanapal from Tiruvannamalai
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDelete// TEX க்ளாசிக்ஸ் 2 சார்ந்த பணிகளை நேற்றைக்கே முனைப்போடு துவங்கியாச்சு //
ReplyDeleteஅருமையோ அருமை...
விரைவான முடிவுங்க எடிட்டர் சார் 🙌🙌
ReplyDeleteஅருமையான தேவையான அறிவிப்பு சார். எனது ஆதரவு எப்போதும் உண்டு.
ReplyDelete🙏🙏🙏🙏🙏
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteஅருமை சார்... சரியான துவக்கம். முழு வெற்றி!
Deleteவாழ்த்துக்கள் சார்...இதழின் அறிவிப்பு விளம்பரம் அழகு ..
ReplyDeleteஅடுத்த வெளியீடு சமயம் இதனை இதழ்களில் வெளியிடுமாறு ஆவண செய்யுங்கள் சார் ..இணையம் பரிச்சியமில்லாதரும் உதவலாம்..
அடுத்த கட்டம் proof reading ! இந்த ஒரு தபா மாத்திரம் அந்தப் பணியினை உங்களில் யாரேனும் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், இந்த இதழை அச்சுக்குக் கொண்டு செல்லும் எனது பனி சுலபமாகிடும் ! Any volunteers folks ?
ReplyDeleteபார்த்துத் தருகிறேன் ஸார்...
நல்லதுங்க..நல்ல முடிவா எடுத்துருக்கீங்க சார்.நல்லபடி நடக்கும் நம்ம வாசகர்கள் துணையோடு.
ReplyDeleteபிறகு இதுக்கு மேலயும் நொல்லயும்,நொட்டயும் சொல்லாம அனைவரும் சேந்து, நாம் நேசிக்குற லயன் காமிக்ஸ் நிறுவனத்தோடு இணைஞ்சு,பழனி அண்ணா குடும்பத்துக்கு உதவ வேணும். இது முடிஞ்சு வேணா,
இத போட்டா என்ன?,
அதபோட்டா என்னா,
கருப்புல போட்டா என்ன?
செவப்புல போட்டா என்ன?,
அந்த கதய போட்டா என்ன?
இந்த கதய போட்டா என்ன?
இந்த மாதிரி வீண் விவாதங்கள்,
வெட்டி பஞ்சாயத்துகல,
இந்த நிதி உதவி முடிஞ்சு
வெச்சுக்கோங்க சில வாசக ப்ரென்ட்சுகளே.
தேவயில்லாம கமெண்ட் பண்ணி,
உதவனும்னு நெனைக்கறவங்களையும் ஓட உட்றாதீங்க.
ஆகவே அமைதியாக இருந்து,
இப்ப அவர் குடும்பத்துக்கு உதவ,
நம்ம ஆசிரியர் முன்னெடுத்துள்ள முயற்சிக்கு ஆதரவு தாங்க.
வணக்கம்.
சிறப்பு
ReplyDelete// அதன் அடுத்த கட்டம் proof reading ! இந்த ஒரு தபா மாத்திரம் அந்தப் பணியினை உங்களில் யாரேனும் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், இந்த இதழை அச்சுக்குக் கொண்டு செல்லும் எனது பனி சுலபமாகிடும் ! Any volunteers folks ? //
ReplyDeleteநான் செய்ய தயாராக இருக்கிறேன் சார்.
பல நண்பர்கள் விருப்பப்படுவதால் நான் விலகிக் கொள்கிறேன் விஜயன் சார்.
Deleteநிச்சயம் கரைசேர்ந்து விடுவார் என்ற நம்பிக்கையோடு கல்லூரி ஆடிட்டிங்கில் முழுவதும் மூழ்கியிருக்க, நண்பர் குமார் சேலம் மூலம் பெற பெற்ற துயர செய்தி நிலை குலைய வைத்து விட்டது. நண்பர் பழனியிடம் நான் அதிகம் பழகியது இல்லை, நண்பர் ஈரோடு விஜய் மூலம் செல் நம்பர் வாங்கி க்ரைம் நாவல் முதல் பிரதிக்கு ஆர்ட்ர் கொடுத்திருந்தேன். புத்தகம் வந்ததும் கால் பண்ணுகிறேன் என்றார். அப்புறம் பணம் அனுப்புங்கள் என்றார். அப்படியே மறைந்து விட்டார்.
ReplyDeleteபுலன் விசாரனை பாகத்தை சர்ப்ரைஸாக ஈரோடு புத்தக விழாவில் வெளியிட்ட போது துள்ளி குதித்து ஒடி வந்தது இன்னும் கண் முன் நிற்கிறது. RIP பழனி.
இவ்வளவு விரைவாக நீங்கள் முடிவெடுத்ததிற்கு மிக்க நன்றி சார்....
ReplyDeleteஎனது பணியில் பழனியைப் போன்று பலரை சந்திக்க வேண்டிய சூழலுள்ளது.... ஒரு குடும்பத் தலைவனின் திடீர் மறைவு அவரின் மனைவி மக்களின் எதிர்காலத்தை எப்படி ஒரு நொடியில் மாற்றிப் போடும் என்பதை ஐயமற அறிந்தவன் என்கிற வகையில், உங்களைப் போன்ற ஒரு அருமையான மனிதரை எங்கள் இனிய காமிக்ஸின் ஆசிரியராகவும்.... இங்கும் whatsappலும் தங்கள் அன்பு உள்ளத்தை ஒரு நலிந்த குடும்பத்திற்கு பண உதவியாக வாரி வழங்கும் அன்பு நண்பர்களையும் பெற்றதற்கும்... நான் என்றும் கடமைப்பட்டவனாகிறேன்...
உங்களுக்கு நல்ல இளகிய மனது.
Delete🙏🙏🙏🙏🙏🙏
இந்தப் பேரிடர் காலத்தினில் நீங்களும் உங்களைப் போன்ற மருத்துவர்களும் தங்கள் உடல் , குடும்பத்தினர் என்று எல்லோரும் 'சூடு' (கிருமி) வாங்கி மற்றவரைக் காத்ததை விடவா AKK ? Hats off to Docs all over !!
Deleteமருத்துவர் ஐயாவிற்கு நிச்சயமாய் இளகிய மனதுதான்.
Delete//முன்னூற்றுச் சொச்சம் பக்கங்கள் எனும் போது அடுத்த வாரத்தின் மத்தியில் டைப்செட்டிங் நிறைவுற்றிட வேண்டும் ! அதன் அடுத்த கட்டம் proof reading ! இந்த ஒரு தபா மாத்திரம் அந்தப் பணியினை உங்களில் யாரேனும் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், இந்த இதழை அச்சுக்குக் கொண்டு செல்லும் எனது பனி சுலபமாகிடும் ! Any volunteers folks ? //
ReplyDeleteநானும் ரெடி சார்..
மு.பாபு
கெங்கவல்லி..
சேலம் மாவட்டம்..
முன்பதிவு done sir. தங்களது முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteஅமௌண்ட் அனுப்பியாச்சிங்க சார்....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ReplyDeleteசூப்பர் சார்
ReplyDelete47th
ReplyDeleteயார் இந்த பழனிவேல்?
ReplyDeleteவரைகதை அந்தப்புரத்தில் பன்னூறு கன்னியர் இருப்பினும் பதிமூன்று எனும் பட்டத்தரசி மேல் மட்டும் பலமடங்கு காதல்பட்டு தழுவி கலவி புரிந்த விசித்திர காதல் மன்னன்.
பல்வேறு வரைகதைகள் படுகதிர்களாய் விழுந்தபோதும் பதிமூன்று எனும் ஒற்றைப் பிம்பத்தை உருவாக்கிய வினோத விழித்திரைக்கு சொந்தக்காரர்
பலவித அகடு முகடு உடைய வரைகதை ஒலி அலைகள் செவிப்பறையில் விழுந்தாலும்
பதிமூன்று எனும் ஒற்றை சப்தமதை ஒலி நரம்பில் கடத்தும் காக்லியாவை
கொண்டவர் இவர்.
மற்ற சுவைகளை புறம் தள்ளி பதிமூன்றை மட்டும் சுவைக்கும் கற்புள்ள இவர்தம் சுவைநாளங்கள்
வரைகதை நந்தவனத்தில் பல்வேறு மலர்கள் இருப்பினும் பதிமூன்று எனும் ரோஜாவை மட்டும் நுகர்ந்த நாசி இவருடையது..
பதிமூன்று பற்றி இவர் உச்சரித்த வார்த்தைகளின் எண்ணிக்கை பார்த்தால் உலகு தோன்றிய நாள்முதல் மண்ணில் இதுவரை விழுந்த மழைத்துளிகளுக்கு ஈடாக மாறும்.
வெள்ளை ,பழுப்பு என மூளையின் அத்தனை பகுதிகளிலும் ரத்தப்படலம் எனும் எண்ணப்படலம்.
பிராண வாயுவை சுமந்து செல்லும் ஆக்ஸிஹீமோகுளோபினுக்கு பதிலாக ஆக்ஸிஜேஸன்மக்லேன் கொண்டு செல்லும் விசித்திர குருதியோட்டம் இவருடையது.
ஒரு நிமிடத்துக்கு சுமார் 72 என்பதற்கு பதிலாய் இவரது இருதயம் பதிமூன்று முறை சுருங்கி விரிந்திருக்கும் என்ற ஐயமுண்டு.
பதிமூன்றை சுவாசித்தவை இவரது நுரையீரலின் நுண்ணிய காற்றுப் பைகள் எனச் சொல்ல முயன்றால் அக்கூற்றை மறுக்க கூடியவர் யாருளர்?
உப்போடு சேர்த்து பதிமூன்று பற்றிய உவர் கருத்துகளையும் வடிகட்டியவை இவர் சிறுநீரகங்கள்.
சுவாசித்தது பதிமூன்று என்றால் உண்டதும் அதுவே எனச் சொல்லும் அவரது உணவுப்பாதை.
இப்படி முக்கிய அவயங்கள் அனைத்திலும் பதிமூன்று வியாபித்து பரபரப்பாய் இயங்கிக் கொண்டு இருந்தமையால்தான் கருணையற்ற காலன் கணையத்தை குறிவைத்தானா?
வீரியமிக்க வார்த்தைகளால் வேறுபட்ட கருத்துகள் தன் மீது விழுந்தபோதும் அவற்றை உள்வாங்கி பண்பான வார்த்தைகளால் பிரதிபலித்த அபூர்வமான குழி ஆடி பழனிவேல்.
2020 - ம் ஆண்டு முதல் அலையின்போது தளத்தில் பதிமூன்று மறுபதிப்பு குறித்து எதிர்ப்பு தெரிவித்து இவருடன் நடந்த விவாத உரையாடலின் முடிவு எதை நான் எதிர்த்தேனோ அதே மறுபதிப்பின் இரண்டு இதழ்களை இவருக்கே அளிப்பதில் போய் முடிந்தது என்றால் அவரது நெறியாளுகை எப்படிப்பட்டதாய் இருக்கவேண்டும்..அப்பேர்ப்பட்ட பண்பாளர்..
தனது திருமண நாளுக்காக ஒதுக்கி வைத்திருந்த ஆயிரம் ரூபாயை எடிட்டர் அப்போது வைத்த ஒரு பொதுவான வேண்டுகோளின் பொருட்டு சமூக சேவை மையம் ஒன்றிற்கு வழங்கிய வெள்ளந்தித் தன்மைக்கு சொந்தக்காரர்.
தமிழ் வரைகதை உலகில் பழனிவேல் சேப்டர் என்ற ஒன்று எப்போதும் இருக்கும் .
மேற்கத்திய உலகில் 13 என்ற எண் அதிர்ஷ்டமற்றதாக கருதப்படும்.
BUT TO ME , XIII IS LUCKY TO HAVE PALANIVEL.
Palanivel - an unending saga
👌🙌🙌
Deleteநண்பர் பழனிக்கு அட்டகாசமான tribute டாக்டர் சார்.
Deleteஉண்மை. அருமை.
Deleteஅருமையான ட்ரிபியூட்...சிறப்பு!
Deleteஅருமை!!!
Delete///2020 - ம் ஆண்டு முதல் அலையின்போது தளத்தில் பதிமூன்று மறுபதிப்பு குறித்து எதிர்ப்பு தெரிவித்து இவருடன் நடந்த விவாத உரையாடலின் முடிவு எதை நான் எதிர்த்தேனோ அதே மறுபதிப்பின் இரண்டு இதழ்களை இவருக்கே அளிப்பதில் போய் முடிந்தது என்றால் அவரது நெறியாளுகை எப்படிப்பட்டதாய் இருக்கவேண்டும்..அப்பேர்ப்பட்ட பண்பாளர்..
Deleteதனது திருமண நாளுக்காக ஒதுக்கி வைத்திருந்த ஆயிரம் ரூபாயை எடிட்டர் அப்போது வைத்த ஒரு பொதுவான வேண்டுகோளின் பொருட்டு சமூக சேவை மையம் ஒன்றிற்கு வழங்கிய வெள்ளந்தித் தன்மைக்கு சொந்தக்காரர்.///
அருமையான நினைவுப் பகிரல்கள் செனா அனா ஜி!
அருமை 🙌🙌🙌
Deleteமிக்க நன்றி சகோதரரே
கண்கள் ஈரமாகுவதை தவிர்க்க முடியவில்லை
அருமையான நினைவஞ்சலி..
Deleteவிஜயன் சார், செல்வம் அபிராமி எழுதிய நினைவஞ்சலியை பழனிக்காக வரவுள்ள புத்தகத்தில் (பழனியின் படத்துடன்) இணைக்க முடியுமா!
Delete51 வது
ReplyDeleteஎன் சார்பிலும் பணம் அனுப்பிச்சு வச்சு ஆரம்பிச்சிட்டேன்.
ReplyDeleteமிகச்சிறப்பு ஐயா
ReplyDeleteஎடிட்டர் சார்,
ReplyDeleteஇத்தனை வேகமான உங்கள் செய்பாடுகள் பிரம்மிப்பூட்டுகின்றன. நன்றிகள் சார்.
அப்புறம் நமது Muthu comics app மூலமாக டெக்ஸ் க்ளாசிக்ஸ்-2 pre-booking செய்யும்போது ஏற்கனவே கொரியர் சார்ஜுடன் ரூ.490 என்ற விலையோடு மீண்டும் ஒருமுறை கொரியர் சார்ஜ் ரூ.40 சேர்ந்து செலுத்த வேண்டிய தொகை ரூ.530 என்று காட்டுகிறது. அதை சரி செய்யச் சொல்லுங்கள் சார்!
இந்த லிங்க்ல சரியா இருக்குதுங்க. நான் இதில்தான் ஆர்டர் செய்தேன்.
Deletehttps://lion-muthucomics.com/tex-willer/940-tex-classics-2-prebooking-for-april-2022-within-tn-including-courier.html
பார்க்கச் சொல்லியுள்ளேன் சார் !
Delete6 நண்பர்களுக்காக 6 காப்பிகள் ஆர்டர் பண்ணியாச்சு எடிட்டர் சார். 25ம் தேதி நண்பர் பழனிவேல் குடும்பத்திற்காக ஒரு தொகையை கண்டிப்பாக அனுப்புவேன் சார்.
ReplyDeleteAwesome sir !!
DeleteEXcellent Raghavan!
DeletePaid
ReplyDeleteApril 2nd week????
It must be named Never Before Special-2
Never an issue was decided so fast and listed so fast and promised to deliver so fast.
I think, Prakash Publishers can apply for ISO 9001
Very happy with the services
குறுக்கால டிடெக்டிவ் ரூபின் & உளவாளி மாட்டா ஹாரி (ஏப்ரல் ரெகுலர் இதழ்கள்) இல்லாத பட்சத்தில், இரண்டே வாரங்களில் புக்கை கண்ணில் காட்டியிருப்போம் சார் !
Deleteஅதுவும் டிடெக்டிவ் ரூபின் ...சும்மா அதிரடிக்கிறார் !
Deleteபுது முகம் என்றாலே எனக்கு குஷி தான் சார். I'm waiting
Delete// I think, Prakash Publishers can apply for ISO 9001 //
Delete+1 :-)
Mata Hari was world famous true story. Most of spy stories are inspired by Mata Hari s real story only. Eagerly expected.
DeleteWelcome detective Rubin.
டெக்ஸ் கிளாசிக் 2 ஐ என்னால் இயன்ற ஒரு சிறு தொகையுடன் முன்பதிவு செய்து விட்டேன்.
ReplyDeleteநன்று.
Deleteடெக்ஸ் கிளாஸிக்ஸ் 2 தோர்கல் போட்டியில் வெற்றி பெற்றதற்காக எனக்குக் கிடைத்துவிடும்.என்னால் முடிந்த தொகை ஒன்றை நம் லயன் காமிக்ஸ்ஸிற்கு Gpay மூலம் அனுப்பிவிட்டேன். நன்றி நண்பர்களே.
ReplyDeleteநன்று.
Deleteநல்லது நண்பரே!
Deleteஒரு வாரமாக மொபைல் in Service Centre. MoteE மொபைலில் தடுமாறிக கொண்டு இருந்தேன். இன்று தான மொபைல் கைக்கு வந்தது. முதலில் Bank app ஐ install செய்து amount transferred to lion office account just now.
ReplyDeleteடெக்ஸ் க்ளாஸிக் 2 மற்றும் நண்பர் பழனிவேல் ஆறுமுகம் குடும்ப நல நிதிக்கும்.
வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பிவிட்டேன். Please check editor sir.
ஒரு வாரமாக மனம் ஒருவித சங்கடமான நிலையிலேயே இருந்தது. சூழ்நிலை அவ்விதம்.
இன்று பணப்பரிமாற்றம் செய்ததும்தான் Mind feels free.
// இன்று பணப்பரிமாற்றம் செய்ததும்தான் Mind feels free. //
DeleteGood to hear!
Thank you Editor sir, for your kind heart. I'll send my contribution shortly.
ReplyDeleteஇன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும்
ReplyDeleteஅன்பின் எடிட்டர்சார்
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 🙏
சொல்ல வயது பற்றாததால் வணங்குகிறேன் 🙏🏼
இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏
🎂🎂🎂🎂🎂
🍧🍧🍧🍧🍧
💐💐💐💐💐
🍫🍫🍫🍫🍫
🍉🍉🍉🍉🍉
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆசிரியரே🎂🎂🎂🎂🎂🎂
Delete🍧🍧🍧🍧🍧🍧
💐💐💐💐💐💐
🍫🍫🍫🍫🍫🍫
🍉🍉🍉🍉🍉🍉
அன்பு எடிட்டருக்கு ஈரோட்டு இளவரசரின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
Delete💐💐🙏🙏🙏🎂🎂🎂🎂🎂🍧🍧🍫🍫🍫
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆசிரியர் சார்..
Delete💐💐💐💐💐💐
🍫🍫🍫🍫🍫🍫
ஆசிரியருக்கு மனங்கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். ஆரோக்கியமும் மனமகிழ்வும் கூடிய நெடிய ஆயுளை அருள இறைவனிடம் பிரார்த்தனைகள்.
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மை டியர் எடி .. 💙💜
ReplyDelete🍰🍰ஆசிரியர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🍰🍰🍡🍫🍬🍭
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete🙏Edi Sir.. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்💐🎂
ReplyDeleteபிறரை மகிழ்வித்து தானும் மகிழும் நல் உள்ளம் கொண்ட ஆசிரியருக்கு உளமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎊🍏🍎🍉🍒🎂🎂🥙🎉🎊
ReplyDeleteஇறைவனின் அருளால் நல்ல ஆரோக்கியமும், வளமும் குறைவில்லாமல் பெற பிராத்திக்கிறேன் 💐💐🙏🙏🙏🙏💐💐
Many more happy returns of the day sir.
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார்..💐💐💐
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார்
ReplyDeleteஉளமார்ந்த நன்றிகள் நண்பர்களே !! வீட்டில் உள்ளோருக்க்கே நினைவில் நின்றிரா பொழுதினை நீங்கள் நினைவு வைத்திருப்பதற்கு ஒரு ரவுண்டு கூடுதல் தேங்க்ஸ் !!
ReplyDelete// ஒரு ரவுண்டு கூடுதல் தேங்க்ஸ் ! //
Deleteஅப்ப அந்த ரவுண்டு பன்னு :-)
😋😋🤤🤤
Deleteஎங்களின் நிரந்திர ஆசிரியருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteகாமிக்ஸ் சிவ்கத்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..
ReplyDeleteநமது அன்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள், டியர் எடிட்டர்... ஹோலி திருநாள் போல வண்ணமிகு நாளாக மாற வாழ்த்துகள்.
ReplyDeleteஅப்படியே 99 ஓட, 100 வது கமெண்டையும் போட்டு இந்த பதிவை முடித்து வைக்கிறேன். ;)
ReplyDeleteடியர் எடி, அப்படியே பிறந்த நாள் சிறப்பிதழ் ஒன்றை அறிவிட்டாச்சா இந்த நாள் இனிய நாளாக மாறிடும் ;)
ஏதாச்சும் 'வடிவேலு ஸ்பெஷல்' போட முடிஞ்சா பொருத்தமா கீதும் சார் !
DeleteThis comment has been removed by the author.
Deleteவரவேற்கிறோம் 🙌👏🙏
DeleteMany many happy returns of the day, sir. Happy birthday,
ReplyDeleteஇறை ஆசியோடு நீடுழி வாழ்கவே நீவீர்.
**** பாலைவனத்தில் பிணம்தின்னிகள்! ***
ReplyDeleteசப்பை மேட்டர்!
ஆனால் அதை சுவாரஸ்யமாய் சுழலவிட்டு, களேபரமாய் கதை நகர்த்தி, பரபரப்பாய் பக்கங்களைப் புரட்டவைத்து, சென்டிமென்டாய் சீனை முடிக்கும் சீரிய கலையில் பொனெல்லி டீமை அடிச்சுக்க ஆளே கிடையாது என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு கதை!
9/10
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆசிரியரே
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஆசிரியரே.
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார்..
ReplyDelete// ஏதாச்சும் 'வடிவேலு ஸ்பெஷல்' போட முடிஞ்சா பொருத்தமா கீதும் சார் ! //
ReplyDeleteஓகோ கார்ட்டூன் ஸ்பெஷல் போட போறீங்களா :-) சூப்பர்! நாங்க ரெடி :-) இத இத தான் எதிர் பார்த்தேன் :-)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எடிட்டர் சார் ..
ReplyDeleteநீண்ட ஆயுளுடனும், மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும், நீடித்த புகழுடனும், நல்ல சுகத்துடனும் நீங்கள் என்றென்றும் இன்பமுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மதிப்பிற்குரிய எடிட்டர் சார்.. 💐💐💐
ReplyDeleteI am ready for proof reading sir...
ReplyDeleteV. RAMKUMAR 7871930729
I am ready for proof reading sir...
ReplyDeleteV. RAMKUMAR 7871930729 chennai
ஆசிரியர்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
ReplyDelete💐💐💐
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சார் 🌹
ReplyDeleteHappy Birthday Vijayan SIR !!!
ReplyDeleteஅன்பள்ள ஆசிரியருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார்.
ReplyDeleteஎடிட்டர் இற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete🎂🎁💐🌹🎊🎆🎉🌈💥🎇🍰
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சார் 💐💐💐💐
ReplyDeleteMany more returns of the day dear editor sir
ReplyDeleteMany more happy returns of my evergreen influencial editor sir ....
ReplyDeleteThanks a ton all !! உங்கள் அன்புக்கு ஆயுட்காலக் கடன்பட்டுள்ளேன் !
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்
ReplyDeleteMany more happy returns Editor sir..
ReplyDeleteHappy Birthday Sir
ReplyDeleteHappy birthday sir
ReplyDeleteTexன் பிரித்து பிரித்து போட்ட 10ரூபாய் கதைகளை மொத்தமாக வெளியிடலாமே
ReplyDeleteதாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார்...
ReplyDeleteஆரம்பிக்கலாமுங்களா.... இன்றைய பதிவ
ReplyDeleteஆசிரியரே இன்று பதிவு உண்டுங்களா
ReplyDeleteஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!
ReplyDelete