நண்பர்களே,
வணக்கம். ஒரு நடுக்கும் பனியிரவு ! கொட்டும் பனியில், சாரை சாரையாய் படையெடுத்து வந்து கொண்டுருக்கும் எதிரிகளின் பூட்ஸ் தடங்கள் ஓராயிரம் தடங்களை உருவாக்கி வருகின்றன ! ஊருக்குள் நுழைந்திட உதவும் ஒரு பழைய பாலத்தை வெடி வைத்துத் தகர்த்து விட்டால் எதிரிகளைக் கணிசமாய்த் தேக்கி வைத்து விடலாமென்று அங்கே நிலை கொண்டிருக்கும் தாய்நாட்டுப் படை தீர்மானிக்கிறது ! தொலைவிசை இயக்குமுறையில் குண்டுகளை வெடிக்கச் செய்யலாமென்ற திட்டமிடலோடு அவசரம் அவசரமாய் பாலத்தில் வெடிபொருட்களை பொருத்துகிறார்கள் ! ஆனால்...ஆனால்...எதிர்பார்த்ததை விடவும் எதிரிகளின் டாங்கிகள் வேகமாய் நெருங்கியிருக்க, தொலைவிலிருந்து குண்டை இயக்கும் வாய்ப்பில்லை !! என்ன செய்வதென்று தாய் நாட்டின் சிறு படைப்பிரிவானது கையைப் பிசைந்து கொண்டிருக்க, சிரித்த முகத்துடன் marine வீரன் ஒருவன் முன்னே வருகிறான் ! நண்பர்களுக்கு bye சொல்லிவிட்டு, தானே போய் அந்த குண்டை வெடிக்கச் செய்து பாலத்தோடு, தானும் சுக்கு நூறாகிப் போகிறான் !!
இன்னொரு கொட்டும் பனியிரவு ! உக்கிரமாய் போர் நடந்து வரும் தன் நாட்டிலிருந்து தனது 2 சிறு குழந்தைகளோடு எல்லையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார் ஒரு தந்தை ! பிள்ளைகளின் தாயோ, இன்னொரு தேசத்திலிருந்து விரைந்து கொண்டிருக்கிறார், எல்லையில் தன் குடும்பத்தைச் சந்தித்த கையோடு, போர் முடியும் வரைக்கும் வேறெங்கேனும் குடும்பமாய் அடைக்கலம் தேடிடலாம் என்று ! ஆனால்...ஆனால்...எல்லையிலோ அந்தப் பிள்ளைகளின் தந்தை முரட்டுத்தனமாய் வழிமறிக்கப்படுகிறார் ! கை கால் திடமாயுள்ள, 60 வயதுக்குட்பட்ட எல்லா ஆண்மகர்களும் தாய்நாட்டு இராணுவத்தில் இணைந்து, யுத்தத்தில் பங்கேற்பது கட்டாயம் என்ற அவசரச் சட்டம் அங்கே பிரகடனம் செய்யப்பட்டிருப்பதால், அந்தத் தந்தையால் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு எல்லையைக் கடக்க வழியில்லை ! செய்வதறியாது சுற்று முற்றும் பார்க்கிறார், அவர் கண்ணில் படுவது 58 வயதுப் பெண் மட்டுமே ! அவர் யார் என்பதோ ? எந்த ஊர் என்பதோ தெரியாது ! ஆனால் தனது 2 பிள்ளைகளையும், அவர்களது பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டைகளையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு, எல்லையின் மறுமுனையில் காத்திருக்கவுள்ள தனது மனைவியின் செல் நம்பரை மட்டும் கிறுக்கித் தருகிறார் ! "எப்படியாவது என் பிள்ளைகளை என் மனைவியிடம் ஒப்படைத்து விடுங்கள் ; போர் முடியும் போது நான் உயிர் பிழைத்து மிஞ்சியிருந்தால் அவர்களை சந்திக்கிறேன்" என்று சொல்லிவிட்டு, கையில் திணிக்கப்பட்ட துப்பாக்கியோடு இராணுவத்தினருடன் நடையைக் கட்டுகிறார் ! முந்தைய நொடி வரைக்கும் அரணாய் நின்ற தந்தை இனி இல்லை என்ற நிலையில் - அந்தப் புதிய, முதிய பெண்ணின் தோளே கதியென்று 2 குழந்தைகளும் சாய்ந்து கொள்கின்றன ! இரவெல்லாம் பயணிக்கிறார் - புதிய பொறுப்பையும், பிள்ளைகளையும் சுமந்து நிற்கும் அந்தப் பெண். எல்லையையும் கடக்கிறார்கள் - மைனஸ் 7 டிகிரி குளிரில் ! போர் பூமியிலிருந்து அண்டை நாட்டுக்குள் தஞ்சம் தேடிக் குவிந்திருந்த ஆயிரமாயிரம் அப்பாவிகளின் ஜன சமுத்திரத்தின் மத்தியில், கிறுக்கலான ஒரேயொரு செல் நம்பரை மட்டும் கையில் பற்றியபடிக்கே அந்தப் பெண் பதைபதைப்போடு காத்திருக்கிறார் ! தேற்ற முடியா அழுகையில் பையன் கரைந்து கொண்டிருக்கும் போது, செல் போன் ஒலிக்கிறது ! சற்றைக்கெல்லாம் அந்தப் பிள்ளைகளின் 33 வயதுத் தாய் அங்கே தலை தெறிக்க ஓடிவருகிறார் தாரையாய் ஓடும் கண்ணீருடன் !! தனது 2 பிள்ளைகளையும் வெறி வந்தவர் போல வாரியணைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்னே - அவர்களை பத்திரமாய் அழைத்து வந்த பெண்மணியை இறுக அணைத்துக் கொள்கிறார் ! இருவருக்குமே பீறிட்டு வரும் அழுகையை அடக்க வழி தெரியவில்லை !
சின்னஞ்சிறு தீவு அது ! அதற்கு காவல் நிற்போர் வெறும் 13 தாய்நாட்டு வீரர்கள் ! ஒரு ராட்சச எதிரி கப்பல் அங்கே கரையினை நெருங்கியபடியே - "மரியாதையாய் அத்தனை பேரும் சரணடைந்து விடுங்கள் !" என்று மிரட்டலாய் அறிவிக்கிறது ! கப்பலில் உள்ள தளவாடங்களைக் கொண்டு அந்தத் தீவையே தடம் தெரியாமல் செய்து விட முடியும் தான் ! ஆனால் ரேடியோவில் செய்திப் பரிமாற்றம் நடத்திடும் தாய்நாட்டு வீரர்கள் துளியும் அசந்தது போல தெரியக்காணோம் ! "டேய் கொங்கனாடொக்குகளா....உங்களுக்குத் தெரிஞ்சதைச் செஞ்சுக்கோங்கடா ஈத்தரைகளா !!" என்று எகிறி அடிக்கின்றனர் ! வெகுண்டு தாக்குதல் நடத்துகிறது கப்பல் ! தோட்டாக்களும், வெடிகுண்டுகளும் ஏற்படுத்திய புகை மண்டலம் கலைந்த போது அந்தப் 13 வீரர்களும் அங்கே குருவிகளைப் போல செத்துக் கிடக்கின்றனர் !!
சரக்குக்குப் பிரசித்தி பெற்ற தேசம் அது ! தவித்த வாய்க்கு வோட்க்கா தருவது அங்கே ஜகஜம் ! ஆனால் திடீரென்று Molotov's Cocktail என்ற புது ஐட்டத்தை செய்வது எப்படி ? என்று அந்த நாட்டின் பாட்டி முதல் பேத்தி வரை ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்கின்றனர் !! "அட, ஊரே பற்றி எரிகிறது ; போர் ஒன்று உக்கிரமாய் நடந்து வருகிறது ! இந்த ரணகளத்திலும் இந்தக் கிளுகிளுப்பு தேவை தானா ?" என்று உலகமே மண்டையைச் சொரிகிறது ! அப்புறம் தான் தெரிகிறது - Molotov's Cocktail ஒரு புதுவகைச் சரக்கல்ல ; குப்பென்று பற்றியெறியக்கூடிய சரக்கு உள்ள பாட்டிலுக்குள் திரியைப் போட்டுத் தீவைத்துத் தூக்கி வீச ஏதுவான ஆயுதம் என்று ! எதிர்ப்படும் எதிரிகள் மீது அவற்றை வீச வீடுதோறும் ஜனம் ஆயத்தமாகி வருகிறார்கள் என்பதை உணரும் போது உலகமே வியக்கிறது அந்த மக்களின் வீரத்தையும், தாய் நாட்டுப் பற்றையும் எண்ணி !!
நேற்று வரைக்கும் பிஸியாய் இயங்கி வருமொரு ஐரோப்பியத் தலைநகரம் அது ! இடியாய் போர்மேகங்கள் சூழ்ந்திட, விண்ணிலிருந்து குண்டு வீச்சு நிகழக்கூடுமென்ற எச்சரிக்கை சைரன்கள் நகரம் முழுக்க நாராசமாய் ஒலிக்க ஆரம்பிக்கின்றன ! வளைகளைத் தேடி ஓடும் எலிகளை போல மக்கள் பதுங்கு தளங்களிலும், அருகாமையில் உள்ள மெட்ரோ தரைக்கடி ரயில்நிலையங்களிலும் தஞ்சம் புகுகிறார்கள் ! விறைக்கும் குளிரில் ஆயிரமாயிரம் மக்கள் அங்கே அண்டிக்கிடக்கின்றனர் - தங்கள் வேலைகளை போட்டது போட்டபடிக்கே விட்டுவிட்டு ! ஆனால் சில இயற்கையின் நியதிகளை போரோ ; சைரன்களோ ; பதுங்குதளங்களோ கட்டுப்படுத்தாதே ! நிறைமாத கர்ப்பிணியான ஒரு பெண்ணுமே அங்கே மெட்ரோ ரயில் நிலையத்தில் பதுங்கிக் கிடக்க, அவருக்குப் பிரசவ வலி ஆரம்பிக்கிறது ! மருத்துவமனைக்குச் செல்ல வாய்ப்பே இல்லை என்பதால், அங்குள்ள பெண்களே பிரசவம் பார்க்க முனைகின்றனர் ! மிகுந்த சிரமங்களுக்குப் பின்பாய், சூழ்ந்துள்ள மக்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் ஒரு அழகான பெண்குழந்தை அந்த போர்பூமியில் ஜனிக்கின்றது ! இன்னொரு பக்கமோ, அங்கே பதுங்கிக்கிடக்கும் சுட்டிகளின் பொழுதுபோக்குக்கென யாரோ ஒரு எஞ்சினியர் ஒரு ஸ்க்ரீன் போல ஏதோவொன்றை ரெடி செய்து, புரஜெக்டர் போலவும் உருவாக்கி, அதனில் கார்ட்டூன்களை ஓடச் செய்கிறார் ! எத்தனை இடர்கள் இடைப்பட்டாலும், அத்தனையிலும் ஒரு சாதனை செய்து காட்டும் மனிதனின் போர்குணத்தின் லேட்டஸ்ட் அத்தியாயமாய் இதனை உலகமே பார்க்கின்றது !!
Cut...Cut...!! Back to reality !! மேற்சொன்ன காட்சிகளை ஒரு சுமாரான டைரக்டரிடம் ஒப்படைத்தால் கூட, தனது படத்தில் மெர்சலான காட்சிகளாக்கிவிடுவார் ; ஒரு சுமாரான காமிக்ஸ் கதாசிரியரிடம் ஒப்படைத்தால் கூட - பின்னிப் பெடலெடுத்து விடுவார் தான் ! ஆனால் துரதிர்ஷ்டவசமாய் காட்சிகளில் எவையும் கற்பனைகளே அல்ல ! சகலமும் யுக்ரைன் மண்ணில் கடந்த சில நாட்களாய் தாண்டவமாடி வரும் யுத்தமெனும் அரக்கனின் கைவண்ணங்களே !
யுத்தங்கள் பூமிக்குப் புதிதே அல்ல தான் ; கடந்த கால் நூற்றாண்டுக்குள் மத்திய கிழக்கில் வெவ்வேறு இலக்குகளில் ; ஆப்கானிஸ்தானில் ; பிரிவினை கண்ட ரஷ்ய நாடுகளில் என ஏகமாய் சண்டைகளில் சட்டைகளும், பல்லாயிரம் உயிர்களும் வதைபட்டுள்ளன தான் ! ஆனால் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்பாய் இத்தனை பெரியதொரு படையெடுப்பினையோ, மோதலையோ உலகம் கண்டதில்லை எனும் போது இது வரலாற்றின் மெகா கரும்புள்ளி என்பதில் ஐயமேயில்லை ! நம்மவர்களிலும் சுமார் 25,000 பேரும் யுக்ரெய்னில் சிக்கிக் கிடக்க, அவர்களுள் 20,000 பேர் மருத்துவம் பயிலச் சென்ற மாணவ / மாணவியர் எனும் போது - எங்கேயோ யாருக்கோ நடக்கும் தலைநோவாய் இதனைப் பார்க்கத் தோன்றவில்லை ! இந்த வலைப்பூவைத் துவங்கிய நாளினில் காமிக்ஸ் சார்ந்த சமாச்சாரங்களைத் தவிர்த்த வேறு 'கருத்து கந்தசாமி' மேட்டர்களுக்குள் ஒரு போதும் தலையை நுழைத்திடவே கூடாதென்பதில் உறுதியாக இருந்தேன் தான் ; ஆனால் ட்விட்டரிலும், இன்ன பிற தகவல் தளங்களிலும் பிரவாகமெடுத்து வரும் செய்திகளின் தாக்கங்களை பார்க்கும் போது ரொம்பவே உறுத்துகிறது ! காப்பியில் அரை ஸ்பூன் சர்க்கரை குறைச்சலாகிப் போனால் விசனம் கொள்கிறோம் நாம் ; ஆனால் சோறு, தண்ணீரின்றி நம் மாணவர்கள் நடுக்கும் குளிரில் எங்கெங்கோ எல்லைகளில் அனாதைகளாய் நிற்கும் காட்சிகளைப் பார்க்கும் போது, அவர்களுக்காகவும், அவர்தம் குடும்பத்தினருக்காகவும் பதறாமல் இருக்க முடியவில்லை !
நமது கதைகளில் இரும்புக்கை நார்மன் யுத்த பூமியில் நடைபோட, பின்னணியில் 'டும்கீல்' என்று வெடிகள் வெடிக்கும் போது நாம் ஆர்வமாய்ப் பக்கங்களை புரட்டியிருப்போம் ! அதிரடிப் படை ; பெருச்சாளிப் பட்டாளம் ; சார்ஜெண்ட் தாமஸ் என ஏகமாய் war நாயகர்களைக் கதைகளில் சந்திக்கும் போது உற்சாகம் கொண்டிருப்போம் ; ஆனால் நிஜத்தினில் யுத்தங்களின் கோரப் பரிமாணங்களைப் பார்க்கும் போது உள்ளுக்குள் எழுவது உற்சாகமல்ல என்பது மட்டும் நிச்சயமாய்த் தெரிகிறது ! இங்கே ஒரு மூலையில் குந்தியபடியே போரின் அவல முகங்களைப் பற்றி ஒரு முழியாங்கண்ணன் அரற்றி, புடினின் மனசும் மாறப் போவதில்லை ; கியெவ் நகரின் அல்லல்களும் மட்டுப்படப்போவதில்லை தான் என்பது புரிகிறது ! கண்முன்னே விரியும் காட்சிகள் ஏற்படுத்தும் ஆற்றமாட்டாமைக்கு இது ஒரு வடிகால் மாத்திரமே என்று வைத்துக் கொள்ளுங்களேன் !! புனித மனிடோ இந்த இரத்தச் சேதத்துக்கு சீக்கிரமே ஒரு முற்றுப்புள்ளி வைத்து காத்திடட்டும் !
And இந்த மாதத்தினில் ஜம்போவின் வெளியீடாக வரவுள்ளதுமே போரும், போர் சார்ந்த முஸ்தீபுகளுமான "போர்முனையில் தேவதைகள்" என்பது செம irony !! இதோ - மெருகூட்டப்பட்ட ஒரிஜினல் அட்டைப்படத்தில் பிரிவியூ + உட்பக்கங்களின் முதற்பார்வைகளுமே :
நாம் வாழ்ந்து வரும் காலங்களின் பிரதிபலிப்பாய் இந்த ஆல்பத்தினைப் பார்த்திடலாம் என்று தோன்றுகிறது ! And இதன் படைப்பாளிகளில் ஒருவர் ஒரு முன்னாள் நீதிபதியுமே என்பதால் கதை நெடுக ஒருவித யதார்த்தம், புலனாய்வின் பரிமாணங்கள், என்று இழையோடுவதைப் பார்த்திட முடிகிறது ! In fact, ஒருவித மேற்கத்திய பார்வையில் இந்த ஆல்பம் புனையப்பட்டிருப்பினும், இது ஒரு நிஜ சம்பவத்தின் தழுவலாம் ; வித்தியாசமான சித்திர பாணி & இதமான டிஜிட்டல் கலரிங்கில் சொல்லப்பட்டிருப்பது ஒரு உக்கிரமான சமகாலத்துக் கதை ! இந்தக் கதையோட்டம் குறித்து நம் மத்தியில் நிச்சயமாய் நிறைய பேசிடுவோம் என்பது இப்போதே உறுதிபட தெரிகிறது ! மதம் சார்ந்த விஷயங்களில், மேற்கின் பார்வைகளும், நமது பார்வைகளும் நிரம்பவே மாறுபடும் என்பதை yet again இந்த ஆல்பத்தில் நாம் பார்த்திடவுள்ளோம் ! நிறையவே கூகுள் தேடல்களோடே இதன் மொழிபெயர்ப்பினைக் கையாண்டிட வேண்டிப் போனது ! சொல்லப் போனால் இந்தக் கடைசி ஒன்றரை ஆண்டுகளில் நமது பணிகளோடு நான் செய்ய நேர்ந்துள்ள கூகுள் தேடல்கள், செம வலிமையானது என்பேன் ! கூகுளப்பா - வாழ்க நீவீர் !!
மார்ச்சின் மூன்று இதழ்கள் + எலியப்பா இணைப்பு இதழும் அச்சாகி, பைண்டிங்கில் உள்ளன ! So செவ்வாயன்று டெஸ்பாட்ச் இருந்திடுமென்று எதிர்பார்க்கலாம் ! And இம்மாதத்து எலியப்பா இதழ் உங்களிடமிருந்து சில வினவல்களை வெளிக்கொணராது போனால் நான் ஆச்சர்யம் கொள்வேன் ! படிக்கும் போது புரியாது போகாது - நான் குறிப்பிடுவது எதையென்று !
அப்புறம் சனியிரவே வந்திருக்க வேண்டிய பதிவானது காணாமல் போனது குறித்து நிறைய நண்பர்கள் - "நலம் தானா ? உடலும் ,உள்ளமும் நலம் தானா ?" என்று அன்புடன் விசாரித்திருந்ததற்கு thanks a bunch folks ! முதுகுவலி எனும் சைத்தான் அநியாயத்துக்குப் படுத்தி எடுத்ததே இந்த சிவகாசி சம்முவசுந்தரம் மட்டையாகிக் கிடக்க வேண்டிப் போனதன் காரணம் ! தவிர, வாரயிறுதியில் சில பல அவசர மராமத்து வேலைகளுக்குள்ளும் தலைநுழைக்க வேண்டியிருந்ததால் இந்தப் பக்கமாய் தலைகாட்டத் தாமதமாகிப் போய்விட்டது ! Sorry guys !!
Before I sign out - சில குட்டி updates :
1.என் மண்டையில் எஞ்சியுள்ள கேசத்தைப் போல, "விரல் விட்டு எண்ணிவிடலாம்" - என்ற எண்ணிக்கையினைத் தொட்டு விட்டது "வேதாளர் ஸ்பெஷல்" கையிருப்பு !! சமீபத்தில் நான் பார்த்த அதகள பரபரப்பு முகமூடி மாயாத்மாவுக்கே !
2.மாண்ட்ரேக் ஸ்பெஷல் சார்ந்த கதைத் தேர்வுகளை நேற்றைக்குத் தான் பூர்த்தி செய்திருக்கிறேன் ! இயன்ற மட்டுமே காதுகளை பூ ஸ்டாண்ட் ஆக்கிடக்கூடிய கதைகளுக்கு கல்தா தந்துவிட்டு, ரசிக்கக்கூடிய கதைகளாய்த் தேர்வு செய்துள்ளேன் ! இந்தக் க்ளாஸிக் கதைகளுக்குள் துளாவத் துளாவத் தான் அந்நாட்களின் படைப்பாளிகளின் கற்பனை வளங்களின் முழுப் பரிமாணங்களும் புரிபடுகின்றன ! Promises to be a thrilling album !
3.ஒரு புது ஜானரில் ஒரு அதிரடி நாயகர் ; வித்தியாசமான பாணியினில் சீக்கிரமே களமிறங்கவுள்ளார் ! Any guesses ?
முதலாவதாக
ReplyDeleteFirst
ReplyDeleteSecond😀
ReplyDelete🙋♂️🙋♂️
ReplyDelete5th
ReplyDelete10 kulla
ReplyDeleteயெஸ் சார்,
ReplyDeleteவருத்தமான விஷயம் நடக்கிறது. தடுக்க வழிதான் இல்லை நம்மிடம்
போர் உக்கிரங்கள் மோசமானவை.
Deleteஉள்ளேன் ஐயா..!
ReplyDeleteஎடிட்டர் சார், கடைசி வரியை "ஒதுக்கிட" என்று மாற்றுங்கள்
ReplyDeleteமாத்திட்டார்! நன்றிகள் @Makesh!!
Deleteவணக்கம் சார்🙏
ReplyDeleteஹாய் நட்பூஸ்😍
ஹை!புதிய பதிவு!! இப்பத்தான் நிம்மதியாக்கீது!
ReplyDeleteஆமா இப்போதான் மூச்சே வருது.
Deleteஞாயிறு முழுமையடைந்தது
Deleteஎஸ்...:-)
Deleteஉங்கள் எழுத்து நடையில் உண்மையில் உயிரோட்டமான எழுத்துக்கள் ஆசானே!!உயிர் ஒன்று தான் என்னங்கள் தான் வேறு வேறு என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றியும் யாரும் கவலை பட்டமாதிரி தெரியவில்லை உலகம் எதை நோக்கி போகிறது என்பதை அந்த ஆண்டவனே சாட்சி
ReplyDelete/// So செவ்வாயன்று டெஸ்பாட்ச் இருந்திடுமென்று எதிர்பார்க்கலாம் ///
ReplyDelete----புதனும் கிடைக்கிறது! பொண் ச்சே புக்கும் கிடைக்கிறது!
வார இறுதி எல்லாம் ஒதுக்க முடியாது. புதன், வியாழன் முடித்து விடுகிறேன்
Deleteநீங்கள், தலீவர், ரவி எல்லாம் அதிரடி சரவெடி ஆட்டக்காரர்கள், நடக்கட்டும்...!!வெள்ளிக்கிழமையே ஏப்ரல் மாத புக்ஸ் கேட்பீர்கள்...🤣
Deleteநம்புள்து டெஸ்ட் மேட்ச், முதல் சாய்ஸ் சோடா!
ஆனா தலை முந்திகிட்டாலம் முந்திடுவார்😍
எனது முதல் சாய்ஸ் சோடா தான்.
Deleteநீங்கள், தலீவர், ரவி எல்லாம் அதிரடி சரவெடி ஆட்டக்காரர்கள், நடக்கட்டும்...!!வெள்ளிக்கிழமையே ஏப்ரல் மாத புக்ஸ் கேட்பீர்கள்
Delete####
:-)))))
///3.ஒரு புது ஜானரில் ஒரு அதிரடி நாயகர் ; வித்தியாசமான பாணியினில் சீக்கிரமே களமிறங்கவுள்ளார் ! Any guesses ?///
ReplyDeleteஸ்பைடர் 2.0 வா சார்.?
வேதாளர் ஹிட் அடிக்கவும்.. ஸ்பைடரும் கோடுபோட்ட டவுசர் வாங்கி பேன்ட்டுக்கு மேலே போட்டுக்கிட்டு ரெடியாகி இருக்காரோ.!? :-)
இல்லீங்கோ...இஸ்பய்டர் ஒரிஜினல் அவதாரிலேயே அக்கட பூமியில் களம் காண்கிறார் ! So 2.0 இப்போதைக்கு சான்ஸ் இருப்பதாய் தோணலை !
Deleteசூப்பர் சார்
Delete///And இம்மாதத்து எலியப்பா இதழ் உங்களிடமிருந்து சில வினவல்களை வெளிக்கொணராது போனால் நான் ஆச்சர்யம் கொள்வேன் ! படிக்கும் போது புரியாது போகாது - நான் குறிப்பிடுவது எதையென்று !////
ReplyDelete----ம்ம்ம், சீனியர் சாரின் கட்டுரையில் மிக முக்கியமான அத்தியாங்களில் ஒன்றினை காணப்போகிறோம் என நினைக்கிறேன். சரியாங் சார்???
ரைட்டும்...ராங்கும் சார் !
Deleteஹா...ஹா....ஹா... இந்த வாரம் பூரா தோர்கல் போட்டி தொடரில் "சிகரங்களின் சாம்ராட்"- விவாதம் சார்... கனவில் கூட ஓரோபோரஸ் வாகனத்தில் ஏறி 1980களின் அற்புத இதழ்களை தரிசிப்பது போல வந்தது..
Deleteஇன்றுதான் போட்டி முடிந்து இங்கே எட்டி பார்த்தா, இங்கும் ஓரு வான்ஹாம் டைப் பதிலா....எஸ்கேப்!
May be this is the last episode
Deleteவந்துட்டேன் வந்துட்டேன்
ReplyDelete///முதுகுவலி எனும் சைத்தான் அநியாயத்துக்குப் படுத்தி எடுத்ததே இந்த சிவகாசி சம்முவசுந்தரம் மட்டையாகிக் கிடக்க வேண்டிப் போனதன் காரணம் !///
ReplyDelete---ஓவ் டேக்கேர் சார்...
இரவுக்கழுகு கதையில் மட்டுமே இருக்கட்டும் சார்.
ஆமாம் உடல் நலனை கவனிக்கவும் சார். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.
Deleteரொம்பவே நெகிழ வைத்த பதிவு சார். அந்த இரு பெண்களோடு சேர்ந்து நானும் அழுதது போல இருந்தது. இது தான் உங்கள் எழுத்துக்கு இருக்கும் சக்தி.
ReplyDeleteஉண்மை..
Deleteவிஜயன் சார் செல் தொலைந்து விட்டதால் நம் தளத்துக்கு என்னால் வர முடியவில்லை. இன்றுதான் வந்தேன். அனைத்துப் பதிவுகளையும் இன்று தான் நான் படித்தேன். உங்கள் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.
ReplyDeleteஒரு புது ஜானரில் ஒரு அதிரடி நாயகர் ; வித்தியாசமான பாணியினில் சீக்கிரமே களமிறங்கவுள்ளார் ! Any guesses ?
ReplyDeleteSci-fi??? Horror? Thriller?
Zagor???
DeleteZagor? IRS? Sci-Fi? Horror?
Deleteஇவை மூன்றும் நாம பார்த்து உள்ளோமே KS... புதிது எனில் zodiac பாணி, உலகப்போரில் ஜெர்மன் வென்றிருந்தால் பாணி, வரலாற்றுடன் இணைந்த பேன்டசி.... இப்படி நாம் பார்க்காத களமாக...ஏதாவது!
DeleteAction adventure? Treasure hunt?
Delete///Treasure hunt///
Delete---வாவ்.. என் வாக்கு இதற்கே!
+1
Deleteஎனக்கு Zarrof போல ஒரு கதை வேண்டும் டெக்ஸ். அதும் அந்த climax சண்டை சிறுத்தைகளுடன் அப்பா அப்படியே சிலிர்க்க வைத்தது. சீட்டை விட்டு எழுந்து விட்டேன்.
Delete///2.மாண்ட்ரேக் ஸ்பெஷல் சார்ந்த கதைத் தேர்வுகளை நேற்றைக்குத் தான் பூர்த்தி செய்திருக்கிறேன் ! இயன்ற மட்டுமே காதுகளை பூ ஸ்டாண்ட் ஆக்கிடக்கூடிய கதைகளுக்கு கல்தா தந்துவிட்டு, ரசிக்கக்கூடிய கதைகளாய்த் தேர்வு செய்துள்ளேன் ! ///
ReplyDelete"மாயாஜால" மன்னன் மாண்ட்ரேக் எனும்போது காதுல பூ சமாச்சாரங்கள் மனதாரா ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவைதானே சார்.!?
///இந்தக் க்ளாஸிக் கதைகளுக்குள் துளாவத் துளாவத் தான் அந்நாட்களின் படைப்பாளிகளின் கற்பனை வளங்களின் முழுப் பரிமாணங்களும் புரிபடுகின்றன ! Promises to be a thrilling album !///
மாண்ட்ரேக்கின் நிழல் எது நிஜம் எது கதையில் கண்ணாடிக்குள் ஒரு பிம்ப உலகம்.. அதாவது நார்தா என்பது தார்நா.. அதுமட்டுமின்றி நிஜ உலகின் எதிர்பதமாக.. மாண்ட்ரேக் திருடனாக.. ஒரு அலுவலகத்தின் தலைமைப்பதவிக்கு ப்ரைவேட் (பியூன்.. அட்டென்டர்) என்ற பெயரும்.. அலுவலகத்தை கூட்டிப் பெருக்கும் எடுபிடி வேலைக்கு ஜெனரல் மேனேஜர் என்ற பெயரும் இருக்கும்.! கண்ணாடி உலகுக்குள் நார்தா மாட்டிக்கொள்ள.. மாண்ட்ரேக் குழு உள்ளேபோய் காப்பாற்றும்.!
மாயக்குள்ளன் என்றொரு கதையில் ஒரு மாதிரியான கண்ணாடி இழை உடுப்புகளுடன் மாயமாகித்திரியும் வில்லனுடன் மோதுவார்.! இன்னொரு கதையில் சர்க்க்கஸ் குள்ளர்கள்.. ஒரு நீண்ட உடுப்புக்குள் ஒருவர் மேல் ஒருவர் நின்று உயரமான மனிதனாய் காட்டிக்கொண்டு கொள்ளையடிப்பார்கள்.. மாண்ட்ரேக் கதைகளின் வில்லன்கள் படு சுவராஸ்யமானவர்கள் சார்.! எல்லைகளில்லா கற்பனையின் வெளிப்பாடே மாண்ட்ரேக் கதைகள்..!
ஆர்வமுடன் காத்திருக்கிறோம்..😍😍😍
சமீபத்தில் தான் செந்தில் சத்யா அவர்களின் தயவில் பயங்கர பல்வலி படித்தேன். ரொம்பவே நம்பகமான அட்டகாசமான கதை. மாயாஜாலம் என்றாலே எனக்கு அப்போது இருந்து இப்பொழுது வரை மிகவும் பிடிக்கும்.
Deleteஎன்ன ஜூலை மாதம் வரை காத்து இருக்க வேண்டும் என்பது தான் குறையே.
அருமை குமார்..!
Deleteமர்மத் தலைவன், எமனின் எண் 8 2ம் படியுங்கள்... முடிந்தால் நடுநிசி பயங்கரம் கதையும் படியுங்கள்...
Deleteஎல்லாமே மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆக இருக்கும்
///மர்மத் தலைவன், எமனின் எண் 8 2ம் படியுங்கள்... முடிந்தால் நடுநிசி பயங்கரம் கதையும் படியுங்கள்...///
Deleteஅனுப்பி வைங்க பூபதி.. இன்னும் கூட இருந்தாலும் பரவாயில்லை.. நான் தாங்குவேன்.. நீங்க அனுப்புங்க.!
//பயங்கர பல்வலி படித்தேன். ரொம்பவே நம்பகமான அட்டகாசமான கதை.//
Delete100%
நடுநிசி பயங்கரம் நன்றாகவே ஞாபகம் உள்ளது. செம்ம கதை. மற்ற கதைகள் இருக்கிறதா என்று பார்க்கிறேன்
Deleteவேதாளர் ஸ்பெஷல் விற்று தீர்வதில் மகிழ்ச்சி.
ReplyDeleteமாண்ட்ரேக் ஸ்பெஷல் உங்கள் தேர்வுகள் நிச்சயம் அருமையாக இருக்கும் என்பது எனது கருத்து. எனவே ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
எடிட்டர் சார்
ReplyDeleteதங்களின் உடல்நலத்திற்கு முதலிடம் கொடுங்கள்.
நமக்கான இதழ்கள் தாமதமானாலும் பரவாயில்லை !
வழிமொழிகிறேன் ..
DeleteAgreed!
Deleteகாமிக்ஸ் என்னும் கனவுலகம் பேஸ்புக் பக்க போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். நானும் எனது சந்தாவை (சந்தா எண் 1083 வெள்ளியம்பாளையம்) பதிவு செய்தது இருந்தேன். பதிவு செய்த அனைவருக்கும் சுஸ்கி இதழை பரிசளிப்பதாக அறிவித்துள்ளீர்கள் எனது பேஸ்புக் பக்கம் சதாசிவம் வில்லி குலம் தற்பொழுது லாக் ஆகி இருக்கிறது. எனவே காமிக்ஸ் எனும் கனவுலகம் பேஸ்புக் பக்க நிர்வாகிகள் என்னை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும். என் தொடர்பு எண்கள்
ReplyDelete9788640543
9345107385.
அல்லது உங்கள் என்னை இங்கே பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக ரபிக் ப்ரோ தயவுசெய்து இந்த எண்ணில் என்னை தொடர்பு கொள்ளுங்கள்
9787222717 என்ற எண்ணிற்கு உங்கள் முகவரியையும்(அலைபேசி எண்ணுடன்).. சந்தா எண்ணையும் தெரிவித்துவிடுங்கள் சார்.. பட்டியலில் இணைத்துவிடுகிறோம்.!
Deleteசதாசிவம் @
Deleteஉங்கள் பெயர் ஏற்கனவே பட்டியலில் இருக்கிறது சார்.!
👍👍👍
@Kid ஆர்டின் Kannan நன்றி நண்பரே. ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். ஆனால் அங்கு என் தொலைபேசி எண்ணையும் முகவரியோ கொடுத்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அதனால்தான் என்னுடைய பதிவு செய்தேன். தற்போது அந்த வாட்ஸ்அப் எண்ணுக்கு என் முகவரியை அனுப்பி வைக்கிறேன். மீண்டும் நன்றி நண்பரே
Deleteசதாசிவம் @
Deleteஉங்கள் குறுஞ்செய்தி கிடைத்தது நண்பரே.. பட்டியலில் இணைத்துவிட்டோம்..! ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி நண்பரே.!
Narman classic new or reprint try pannunga sir in 2023 ....
ReplyDeleteவணக்கம் நட்பூக்களே
ReplyDeleteதானைத் தலைவன் அங்கே மறுபதிப்பு காண்பதில் மிக்க மகிழ்ச்சி. இங்கேயும் இது வரை மறுபதிப்பு காணாத கதைகளை reprint செய்யலாமே சார்.
ReplyDelete1. விண்வெளிப் பிசாசு
2. நீதிகாவலன் ஸ்பைடர்
அப்படியே இந்த லிஸ்டை extend செய்ய நண்பர்களை அழைக்கிறேன்.
நான் மீண்டும் இங்கே அடுத்த வாரம் எட்டிப்பார்ப்பதாக தெரிவித்துக்கொள்கிறேன்.!
Delete1.மரண ராகம்
Delete2.பாட்டில் பூதம்
3.சதுரங்க வெறியன்
4.மீண்டும் ஸ்பைடர்
// அடுத்த வாரம் எட்டிப்பார்ப்பதாக தெரிவித்துக்கொள்கிறேன்.! //
Deleteநீங்கள் கமெண்ட் போட்டதே அடுத்த வாரத்தில் தான் :-) என்னா ஒரு தில்லாலங்கடித்தனம் ;-)
சிறுபிள்ளை விளையாட்டு
Delete///நீங்கள் கமெண்ட் போட்டதே அடுத்த வாரத்தில் தான் :-) என்னா ஒரு தில்லாலங்கடித்தனம் ;-)///
Deleteஎன்ன சொல்றிங்க பரணி..!? அப்போ நான் அட்வான்ஸா இருக்கேனா.!? ஹைய்யா ஜாலி.. அப்படின்னா.. இன்னொரு வாரம் லீவூ எடூத்துக்கலாம்.!
இரவு வணக்கம்
ReplyDelete50
ReplyDeleteBook fair special missed
ReplyDeleteHi..
ReplyDeleteTake care of your health sir.
ReplyDeleteஸ்பைடரை பொறுத்தவரை இது வரை தமிழில் மறுபதிப்பு காணாத இதழ்களை மட்டும் கொண்டாரலாம்.
வழிமொழிகிறேன்..
DeleteEdi Sir..
ReplyDeleteHow is your Health Sir?
வணக்கம் நண்பர்களே...
ReplyDeleteபுது ஜானரு அதிரடி வீரரு
ReplyDeleteலார்கோ
கடந்த மூன்று வாரங்களாக கனவுலகம் குழுவின் தோர்கல் போட்டிக்காக எந்நேரமும் தோர்கல்மயமாகச் சுற்றியதால் மண்டை எல்லாம் சூடாகிக் கிடந்தது. வான்ஹாம் என்ற மாமேதையின் கற்பனைத் திறன் மெய்சிலிர்க்க வைக்கிறது. தோர்கல் ஒரு அசாத்தியப் படைப்பு.
ReplyDelete// தோர்கல் ஒரு அசாத்தியப் படைப்பு. // ஆமாங்கோ
Deleteஆசிரியரின் பதிவைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.
ReplyDeleteஆசிரியர் சார் முதுகுவலி இப்போது பரவாயில்லையா ? தங்கள் உடல் நலனை கவனத்தில் கொள்ள வேண்டுகின்றேன்.
64வது
ReplyDeleteபோரில்லா நல்லுலகம் வேண்டும்...
ReplyDeleteஉடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் சார்..
மாண்ட்ரேக் ஸ்பெஷல் - மாண்ட்ரேக் கதைகளின் ஸ்பெஷல் ஐட்டம் ஆக இருப்பது அவரின் மாயாஜாலம் தான். எனவே,ஆக்சன் கதைகளுக்கு முன்னுரிமை என்ற பாணியில் எதுவும் நடவாமல் இருந்தால் நன்று.
ReplyDeleteமாயாஜாலமில்லா மாண்ட்ரேக் எல்லா இடங்களிலும் ரசிக்க இயலாது ஐயா...
வெல் செட் பூபதி.
Deleteயுத்ததின் கோரவடுக்கள் எத்தனை? எத்தனை? வன்னி யுத்தத்தில் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுனால் உடல் எரிந்த தாயின் முலையில் பால் அருந்த முயன்று, இயலாமல் கதறும் பச்சளங்குழந்தை. அதன் கதறல் கேட்டால் கல்லும் கரையும்.
ReplyDeleteகடவுளே. இம்மக்களை காப்பாறுங்கள். கொனாராவின் கோரத்தாண்டவதின் பிடியிலிருந்தே நாம் இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் இன்னொரு ரத்த ஆறா?
அட்டைப் படம் அழகு. டீசரில் “உம்மே” என்று மாறி மாறி விழிப்பது அடைமொழியோ?
ReplyDeleteவிஜயன் சார், போரின் நிஜங்களை உங்கள் எழுத்துக்களில் படிக்கும் போது மனது மேலும் வலிக்கிறது.
ReplyDeleteமுதுகுவலிக்கு முதலில் தேவை நல்ல ரெஸ்ட் சார் அப்புறம் கொஞ்சம் ரெகுலர் எக்செர்சைஸ் அதன் பிறகு புத்தகங்களை பாருங்கள் சார்.
ஆல்ஃபா எங்க இருந்து சார் இந்த கதையை பிடிச்சீங்க? :-) முதல் பாகம் படிக்க ஆரம்பித்த போது கதை மெதுவாக செல்லுது வசனங்கள் அதிகம் என நான் நினைத்தாலும் முழுக்கதையும் படித்த பிறகு இந்த எண்ணங்கள் மாறிவிட்டது. எவ்வளவு உண்மையான விசயங்கள் அதனை வைத்து அழகான அழுத்தமான வீரியமான வில்லன் புத்திசாலியான/சாதுரியமான நாயகன் பகடைக்காயக ஒரு அப்பாவி பெண் நடுவில் காதல் தந்தை மகன் உறவு எதிரி நாடு என்றாலும் அதிகாரிகளின் தில்லாலங்கடி வேலைகள், சஸ்பென்ஸ், சஸ்பென்ஸ்களை அவிழ்த்த விதம் என செமையான கதையாக கொடுத்து உள்ளார் கதாசிரியர். இதற்கு உறுதுணையாக சித்திரங்கள் மிகப்பெரிய ப்ளஸ். உங்களின் மொழிபெயர்ப்பு மற்றும் ஒரு பக்கபலம்.
ReplyDeleteஆல்ஃபா என்னை கவர்ந்து விட்டதால் சிஸ்கோ இரண்டாம் இடம் செல்கிறார்.
FFS 1: எனது தரவரிசை
1. ஆல்ஃபா
2. சிஸ்கோ
3. டேங்கோ
ஆல்ஃபா கதையின் இறுதிக் காட்சியில் குப்பை பெட்டியில் குண்டு வைப்பது யார் என்பதை கண்டுபிடிப்பது தான் அடுத்த பாகத்தின் மையப் புள்ளியாக இருக்குமோ?
இப்பொழுது நடக்கும் போரை பற்றிய செய்திகளை நாளேடுகளிலும் ,இனைய செய்திகளிலும் ,தொலைக்காட்சியில் அவ்வப்பொழுதும் கண்டாலும் தங்களின் பாரவையில் வாசித்ததும் மனம் அப்படியே பாரமாகி போனதும் ,கண்களில் கண்ணீரும் ஒரு சேர நிகழ்கிறது ..
ReplyDeleteஎந்த நாட்டு அதிபராக இருந்தாலும் ,எந்த நாட்டு படைவீரனாக இருந்தாலும் எந்த உயிரும் நிரந்தரமல்ல என்ற தெரிந்தாலும் இந்த பணத்தாசை , மண்ணாசை எவ்வளவு பெரிய வலியை கொடுக்கிறது என்பதை உணராமலே இருப்பது தான் மிக வேதனையான விசயம் சார்..
.என் மண்டையில் எஞ்சியுள்ள கேசத்தைப் போல, "விரல் விட்டு எண்ணிவிடலாம்" - என்ற எண்ணிக்கையினைத் தொட்டு விட்டது "வேதாளர் ஸ்பெஷல்" கையிருப்பு !! சமீபத்தில் நான் பார்த்த அதகள பரபரப்பு முகமூடி மாயாத்மாவுக்கே
ReplyDelete######
வாழ்த்துக்கள் சார்... மற்ற நாயகர்களும் இதே பரபரப்பும் ,விறுவிறுப்பும் ஆன விற்பனையை படைத்தால் நாம் எங்கோ செல்ல முடியும்..
யுத்தம் எப்போதுமே நமக்கு நேர்ந்தால் என அச்சமூட்டாமல் சென்றதேயில்லை...ஆனால் ஒன்றையொன்று அடித்து வாழும் விலங்குகளிலிருந்து...நாமும் அவற்றை வளர்த்து கொன்று தின்னும் போதும்.....அடப்போங்கடா என திக்குதெரியா காட்டில் வரும் வெறுமை தென்படுவது....கடவுளின் படைப்பே இப்படித்தான் எனும் போது யாரை நோக...தகுதியுள்ளவை தப்பிப்பிழைக்கும் என்பதுதான் கடவுளின் படைப்பா...அனைவருக்கும் நல்லெண்ணத்தை தர மாட்டாயா என கடவுள் மேல் கோபம் வருவதும் இப்போதுதான்....கதைகளில் நாம் விறுவிறுப்பை தேடி ஓடுவதும் போல கடவுளும் உலகை விறுவிறுப்பாக புரட்டிப் பார்க்கிறாரா....
ReplyDeleteமத்த நாள்கள்ல பதிவு போடுங்க...அல்லது போடாதீங்க...ஆனா சனியிரவு தவிர்த்து விடாதீர்கள்...நீங்க காட்டிய யுத்தக்காட்சிகளை விட கொடுமை
ReplyDeleteUkraine.. 😒😓😢
ReplyDeleteசீக்கிரமா போர் முடியட்டும்...
1.சூப்பர்
ReplyDelete2.சூப்பர்
3.அரசர் கால புராண கதைகள்
4.ஸ்பைடர் சமீபத்தில் வந்த கதையென்பதால் ஈர்க்க லை ...ஆனா புத்தக வடிவமைப்பு அதை அந்த கவலைய போக்கலாம்...இன்னோர் கதையறிய ஆவல்....வண்ணத்தில் வருமா சார்
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDelete// ஆனால் நிஜத்தினில் யுத்தங்களின் கோரப் பரிமாணங்களைப் பார்க்கும் போது உள்ளுக்குள் எழுவது உற்சாகமல்ல என்பது மட்டும் நிச்சயமாய்த் தெரிகிறது ! //
ReplyDeleteஉண்மை சுடும்,எதார்த்தங்கள் கசப்பானவை சார்...
சங்கடமான தருணமிது...
// அவர்களுள் 20,000 பேர் மருத்துவம் பயிலச் சென்ற மாணவ / மாணவியர் எனும் போது //
ReplyDeleteஇங்கே சேலம் மாவட்டத்தில் இருந்து கூட பலர் சென்றுள்ளனர் போலும் சார்,பல குடும்பங்களில் இருந்து கடந்த 3 தினங்களில் பல அழைப்புகள்,பதற்றமான அவர்களின் குரல்களை கேட்கவே சங்கடமாக இருந்தது...
அனைவரும் நலமாய் தாயகம் திரும்பினால் மகிழ்ச்சி...
// மாண்ட்ரேக் ஸ்பெஷல் சார்ந்த கதைத் தேர்வுகளை நேற்றைக்குத் தான் பூர்த்தி செய்திருக்கிறேன் //
ReplyDeleteகாதில் பூ சுற்றினாலும் ஏனோ மாண்ட்ரேக் கதைகள் பிடிக்கும் ஆவலுடன்...
// விரல் விட்டு எண்ணிவிடலாம்" - என்ற எண்ணிக்கையினைத் தொட்டு விட்டது "வேதாளர் ஸ்பெஷல்" கையிருப்பு !! //
ReplyDeleteசிறப்பான செய்தி...
// So செவ்வாயன்று டெஸ்பாட்ச் இருந்திடுமென்று எதிர்பார்க்கலாம் ! //
ReplyDeleteஆகட்டும்,வரட்டும்...
இந்த மாதமாவது சீக்கிரம் படிக்க முயற்சிக்கனும்...
// முதுகுவலி எனும் சைத்தான் அநியாயத்துக்குப் படுத்தி எடுத்ததே இந்த சிவகாசி சம்முவசுந்தரம் மட்டையாகிக் கிடக்க வேண்டிப் போனதன் காரணம் ! //
ReplyDeleteஉடல்நலனில் கவனம் செலுத்துங்கள் சார்...
அட்டைப்படமும்....உட்பக்கங்களும் தெறிக்குது
ReplyDelete100
ReplyDeleteThank god we are in INDIA. No war or no conflict for us.
ReplyDeleteso far .. !!
DeleteDay is not far off when we will have to face the aggression of hostile neighbours. The lesson for us, as Dr Kalam had said, is to be self reliant - expect no force in the world to come to help us. See Ukraine and learn !!
Deleteஇரண்டாம் உலகப்போரின்போது,
ReplyDeleteசில வாரங்களுக்கு பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்கு செல்ல விடுமுறை கிடைத்தது.
தனது வீட்டின் அருகே உள்ள தெருவை அந்த வீரர் அடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனங்களில் சடலங்கள் ஏற்றப்பட்டிருப்பதைப்பார்த்ததும், எதிரிகள் தனது நகரத்தில் குண்டு வீசியுள்ளனர் என்பதை புரிந்து கொண்டார்.
டஜன்கணக்கில் சடலங்கள் கூட்டுக்கல்லறைக்கு எடுத்துச்செல்லப்பட தயார் நிலையில் இருந்தன.அடுக்கப்பட்ட சடலங்களின் முன்னால் அந்த சிப்பாய் சற்று நேரம் நின்றார்.
ஒருபெண்ணின் பாதத்தில் இருந்த பாதணிகளை அவர் திடீரெனக் கவனித்தார்.முன்பு தனது மனைவிக்காக வாங்கி வந்த ஷூ போல் இருந்தது.
உடனே வீட்டிற்கு ஓடினார் வீட்டில் யாரும் இல்லை. வேகமாக திரும்பிவந்து வாகனத்தில் இருந்த அந்த உடலை பரி சோதித்தார். அது அவரது மனைவியேதான். அதிர்ச்சியடைந்தார்.
பொதுகல்லறையில் மனைவியைப் புதைக்க விரும்பவில்லை என்றும் தனிக்கல்லறையில் புதைக்க விரும்புவதாகவும் கூறி உடலை தருமாறு வேண்டினார் அனுமதி கிடைத்ததது.
வாகனத்தில் இருந்து உடலை வெகு சிரமத்துடன் வெளியே எடுக்கும்போது மனைவி இன்னும் உயிருடன் இருப்பதைப்பார்த்து அதிர்ந்தார்.
உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தேவையான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் உயிர்பெற்றாள் அந்த வீரரின் மனைவி.
இந்த சம்பவம் நடந்து பல வருடக்களுக்கு பிறகு,
கிட்டத்தட்ட உயிருடன் புதைக்கப்பட இருந்த அந்த மனைவி கர்ப்பமுற்றாள். ஆண்குழந்தை பிறந்தது.
பிரசவத்தின் பின்பு பையனுக்கு பெயர் சூட்டினர்.
பெயர் என்ன தெரியுமா....?
விளாடிமிர் புடின்
அவர்தான் ரஷ்யாவின் தற்போதைய ஜனாதிபதி
(ஹிலாரி கிளின்டன் தனது
"Hard choices" என்ற புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்)
DeleteHard choices 2014 - ம் ஆண்டு வெளிவந்தது.. இதற்கு முன்னரே 2000- த்தில் An Astonishing self- portrait of Russian President என்ற தனது சுயசரிதை நூலில் புடின் லெனின்கிராட்( தற்போதைய செயின்ட் பீட்டர்ஸ்பர்க் )முற்றுகையின் போது பட்டினியால் மயங்கி தன் தாய் மயங்கி விழுந்த்தாகவும் அவர் இறந்து விட்டார் எனக் கருதி பிற சடலங்களுடன் அவரை கிடத்தியதாகவும் பின் தனது தாயே மயக்கம் தெளிந்து எழுந்து விட்டதாகவும் எழுதியிருக்கிறார்.
போர்க்காயங்களால் மருத்துவமனையில் தனது தந்தை இருந்தபோது தனக்கு அளிக்கப்படும் உணவை பட்டினியால் வாடிய தனது மனைவிக்கு அவர் பகிர்ந்து கொண்டதாகவும் அதனால் தன் தாய் உயிர் பிழைத்ததாகவும் இதே நூலில் புடின் எழுதியிருக்கிறார்.
2014-ல் பிரிட்டிஷ் பத்திரிக்கையாளரான Macintire டைம்ஸ் நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில் புடின் போன்ற அரசியல்வாதிகள் தங்களைப் பற்றி தங்கள் குடும்பத்தைப் பற்றி நாடும் உலகமும் என்ன நினைக்கவேண்டும் என்று விரும்புகிறார்களோ அதையே எழுதுவார்கள் . இதில் உண்மை எவ்வளவு பொய் எவ்வளவு என கண்டு அறிவது கடினம்..ஹிலாரி கிளிண்டனும் இதற்கு விதிவிலக்கல்ல என எழுதியுள்ளார்.
உண்மை என்ன என்பது கடவுளுக்கே வெளிச்சம்
Interesting to read :-)
Deleteநீங்கள் சொல்வது மிகச்சரியே செல்வம்
Deleteஅபிராமி அண்ணா உண்மை கடவுளுக்கு மாத்திரமே வெளிச்சம்
நமக்கு பின்னே வரும் மடையர்களுக்கு இது தெரியவா போகிறது???
Deleteஉபயம் : இம்சை அரசன் 23ஆம் புலிகேசி
அதே அதே மிதுன். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே :-)
Delete//முதுகுவலி எனும் சைத்தான் அநியாயத்துக்குப் படுத்தி எடுத்ததே இந்த சிவகாசி சம்முவசுந்தரம் மட்டையாகிக் கிடக்க வேண்டிப் போனதன் காரணம்//
ReplyDeleteநீண்ட நேரம் உட்காருவதால் ஏற்படும் முதுகு வலி என்றால் புஜங்காசனம் போன்ற யோகா ஆசனங்களை முடிந்தளவு தினமும் செய்ய முயற்சி செய்யுங்கள் எடிட்டர் சார்.
மாண்ட்ரேக் கதைகள் இளவயதிலிருந்தே ஈர்ப்பை ஏற்படுத்தியவை.
ReplyDeleteஇன்றும் அதே நிலை தொடர்கிறது..
மனோவசியம் செய்யும் ஒருவர் கதையின் நாயகன் என்பதே புதுமையாகத்தான் இருந்தது.
உருவெளி மாயை என்ற பதம் அறியாவிடினும் அப்போது கணித ஆசிரியரின் நீண்ட பிரம்பு வாழைப்பழமாக மாறுவதாக அன்றைய காலகட்டத்தில் மாணவர்களாக இருந்த வாசகர்கள் பலருக்கு கனவுகள் தோன்றியிருக்க கூடும்.
இப்போதும் பாரியாளின் கையில் இருக்கும் பூரிக்கட்டை பூவன் வாழைப்பழமாக மாறுவதாக கனவோட்டம் மாண்ட்ரேக் கதைகளை படித்தபின் தோன்றினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
லொதார் என்ற கறுப்பின பாத்திரம் துணிச்சலான ஒன்று.லொதார் மாண்ட்ரேக்கின் தோழன் போல சித்தரிக்கப்படுகிறார்..இனவேறுபாடு சிந்தனைகள் மலிந்த அக்காலத்தில் வரைகதை உலகில் ஒரு கறுப்பினத்தவரை முதன்முதலாக கதாநாயகனுக்கு இணையாக உருவாக்கியது லீ பால்க்கின் நிறவேறுபாடு பற்றிய அவரது நிலைப்பாட்டை உணர்த்தும் செயலாகவே கருதவேண்டும்.
மாண்ட்ரேக் பெயர் ..லீ நிறைய வாசிக்கும் பழக்கம் உள்ளவர் .
15-ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் கவிஞனான ஜான் டன் (John Donne)-ன் கவிதையிலிருந்து இப்பெயரை தேரந்தெடுத்தார்
John Donne's song:
"Go and catch a falling star
Get with child a mandrake root
Tell me where all past years are,
Or who cleft the devil's foot…""
கனடிய குதிரைக் காவலன் ட்ரெண்டின் கதாசிரியர் போல லீ இவரது கவிதைகளை தனது கதைகளில் ஆங்காங்கே அள்ளித் தெளிக்காமல் விட்டது ரசிகர்கள் செய்த பாக்கியம் ( ஜான் டன்னின் சில கவிதைகளை படிக்க நேர்ந்தது)
மாண்ட்ரேக் குறுஞ்செடி பல மருத்துவ குணங்களைக் கொண்டது.
ஹாரி பாட்டர் கதைகளில் இரண்டாவதான Chamber Of Secrets -ல் வருவது இச்செடியே.இதன் வேர்கள் மனித உருவம் போல காட்சியளிப்பதால் உருவான கட்டுக்கதைகள் ஏராளம். மாண்ட்ரக்
செடி மண்ணிலிருந்து அகற்றப்படும்போது அச்செடி ஓலமிடும்..அச்சப்தம் மனிதனுக்கு மரணம் விளைவிக்கும் என்பது போன்றவை..
மாண்ட்ரேக் என்ற பெயர் பல இலக்கியங்கள், கவிதைகளில் இடம் பெற்று இருக்கிறது.
பழைய , புதிய வேதாகமம், (இத்தாலிய மறுமலர்ச்சி காலத்திய மாக்கியவெல்லி மாண்ட்ரேக் என நாடகமே போட்டார்), ஷேக்ஸ்பியர்( ஒத்தெல்லோ, ஆண்டனி & கிளியோபாட்ரா, ரோமியா & ஜீலியட், கிங் ஹென்றி IV ஆகிய 4 நாடகங்களில் மாண்ட்ரேக் இடம் பெற்றுள்ளது ) முன்பு குறிப்பிட்ட ஜான் டன் ஆகியவை சில உதாரணங்கள்.
உடல்பலம் கொண்டு லொதார் , மனோவசியம் செய்து மாண்ட்ரேக் சாதிப்பதை ரசிப்பதை காட்டிலும் அவ்வப்போது டூ பீஸ் உடையில் தோன்றும் நார்தாவுக்காகவே மாண்ட்ரேக் படிக்கலாம் என ஈரோட்டு பக்கம் இருந்து சில இரக்க சிந்தையுள்ள இளவரசர்கள், மேச்சேரி பக்கமிருந்து சில கான சிரோன்மணி சங்கீத சாம்ராட்டுகளின் குரல்கள் ஓங்கி ஒலிப்பதை புறக்கணிக்க முடியாதுதான்..:)
///அவ்வப்போது டூ பீஸ் உடையில் தோன்றும் நார்தாவுக்காகவே மாண்ட்ரேக் படிக்கலாம் என ஈரோட்டு பக்கம் இருந்து சில இரக்க சிந்தையுள்ள இளவரசர்கள், மேச்சேரி பக்கமிருந்து சில கான சிரோன்மணி சங்கீத சாம்ராட்டுகளின் குரல்கள் ஓங்கி ஒலிப்பதை புறக்கணிக்க முடியாதுதான்..:)///
Deleteதம்கட்டி எத்தனையோ பாயிண்டுகளை வெவ்வேற விதமா எடுத்துவெச்சி.. மாண்ட்ரேக்குக்காகத்தான் கதைபடிக்க ஆசைப்படுறேன்னு.. நல்லப்பையனா காட்டிக்க நினைச்சாலும்....
எப்படித்தான் டக்குன்னு கண்டுபுடிக்கிறாங்களோ...!? :-)
ஹிஹிஹி
Deleteஅப்பாலிக்கா லொதாரின் டாவு கார்மாவையும் சொல்ல மறந்துடாப்டி பாருங்களேன் !
Delete//அப்பாலிக்கா லொதாரின் டாவு கார்மாவையும் சொல்ல மறந்துடாப்டி பாருங்களேன் !//
Delete:-)))
///அப்பாலிக்கா லொதாரின் டாவு கார்மாவையும் சொல்ல மறந்துடாப்டி பாருங்களேன் !///
Deleteபோச்சா.. அடுத்த சீக்ரெட்டும் உடைஞ்சிடுச்சா..! நான் ஒரு கள்ளமில்லாத வெளள்ச்சொளம்னு இந்த சமுதாயத்தை நம்பவைக்கவே முடியாது போலிருக்கே..!
நல்லவேளை போக்கஸ் ஈரோடு,மேச்சேரிப்பக்கம் இருந்ததால் இலங்கை தப்பித்தது
Delete//இன்னொரு பக்கமோ, அங்கே பதுங்கிக்கிடக்கும் சுட்டிகளின் பொழுதுபோக்குக்கென யாரோ ஒரு எஞ்சினியர் ஒரு ஸ்க்ரீன் போல ஏதோவொன்றை ரெடி செய்து, புரஜெக்டர் போலவும் உருவாக்கி, அதனில் கார்ட்டூன்களை ஓடச் செய்கிறார் ! எத்தனை இடர்கள் இடைப்பட்டாலும், அத்தனையிலும் ஒரு சாதனை செய்து காட்டும் மனிதனின் போர்குணத்தின் லேட்டஸ்ட் அத்தியாயமாய் இதனை உலகமே பார்க்கின்றது !//
ReplyDeleteலயன் காமிக்சிக்கு ஹாட் லைன்...
லயன்முத்து ப்ளாகிற்கு ஹாட் ஸ்டோரி...
மிகவும் அருமையாகவும், புதுமையாகவும் உள்ளது. தொடரலாமே சார், இந்த பாணியை?
அட நீங்க வேற ஆதி...!! போர் ..அக்கப்போர் என்ற ஆதங்கத்தில் வாசித்ததைப் பகிர்ந்திருந்தேன் ! எல்லோரும் மகிழ்ந்திருக்கும் சூழல்களில் ஏதாச்சும் எழுத பார்க்கலாம் !
Delete//எல்லோரும் மகிழ்ந்திருக்கும் சூழல்களில் ஏதாச்சும் எழுத பார்க்கலாம் !//
Deleteப்ளீஸ் சார், எப்படியானாலும் இதுப்போல public தலையங்கம் அடிக்கடி எழுதுங்கள்.
கருத்து கந்தசாமி அவ்தார்லாம் நமக்கு செட் ஆகாது ஆதி ; 'காமிக்ஸ் கண்ணாயிரம்' தான் சுகப்படும் !
Deleteடியர் எடி,
ReplyDeleteஉக்ரைன் ரஷ்யா போர் ஓர் சர்வதேச பலபரீட்சை... அதில் அரசியல் இரு தரப்பிலும் வியாபித்திருக்கிறது. யார் சரி, தவறு என்று பரிந்து பேசுவதை விட இல் தரப்பிலும் ஏற்படும் உயிர் சேதங்களை எண்ணி வருந்த மட்டுமே முடியும்.. காலம் பதில் சொல்லட்டும்...
நாம் நம் காமிக்ஸ் கண்ணாயிரம் அவதாரத்திலேயே இத்தளத்தில் நர்த்தணம் ஆடி கொள்வோம். :D
மார்ச் இதழ்களுக்காக ஆவலுடன் வெயிட்டிங் :)
உலகில் அதிக அளவில் கற்பனை மற்றும் பொய்யால் புனையப்படும் புத்தகம் எதுவென்றால், அது 'சுயசரிதம்' தான்!!!
ReplyDeleteஉள்ளதை உள்ளபடி எழுதும் யோக்கியதையும்,
தைரியமும் மனிதர்களுக்கு இல்லை!!!
சத்ய சோதனை?
Deleteநான் காமிக்ஸ் மீது ஈர்ப்பு கொள்ள காரணமாக இருந்தவர்கள் இருவர்.ஒருவர் நமது இரும்புக்கை மாயாவி.அடுத்தவர் மந்திரவீரர்(ராணி காமிக்ஸில் இவரது பட்டப்பெயர் இதுதான்)மாண்ட்ரேக்.80-களின் இறுதியில் திணமனி நாளிதழில் ஒருமுறை படித்தேன்.அதில் கதாநாயகி நார்தா எதிரிகளிடம் சிக்கிக்கொண்டு மாண்ட்ரேக்கை டெலிபதி மூலமாக அழைக்கும் காட்சியை படித்தேன்.இது என்ன கதை என்று இதுவரை தெரியவில்லை.அதன்பின்பு அந்த கதையை ஒருசில பகுதிகள் மட்டுமே படிக்க முடிந்தது.பிறகு முத்து காமிக்ஸ்,லயன் மற்றும் ராணி காமிக்ஸ் மூலமாக வாசிக்க கிடைத்தது. அதனாலேயே இவர் இன்றுவரை எனது பேவரைட் ஆக உள்ளார்.இவரது பல கதைகள் வாசகர்கள் பலரின் பேவரைட் ஆக உள்ளது.டெக்ஸ் கதைகளிலும் டைகர் கதைகளிலும் சில சுமார் கதைகள் இருப்பது போல இவரது சில கதைகளில் ஆக்ஷன் இல்லாததால் வெறும் பூச்சுற்றல் என காரணம் காட்டி ஓரம்கட்டப்பட்டார்." அது வருதூஊஊஊ..." என டைனோசர்களை பார்த்து திரையில் ஒருவர் கத்தினாலோ டாக்டர்.ஸ்ட்ரேன்ஜ் ,வென்டேட்டா போன்ற திரைப்படங்களை பார்த்து பரவசமடையும் நண்பர்களுக்கு அதெல்லாம் ஏன் பூச்சுற்றல் என சொல்வதில்லை..?சினிமாவில் காட்டினால் நிஜம்.. காமிக்ஸில் மாயஜாலம் காட்டினால்?
ReplyDeleteஇந்த மாசம் மூனு புத்தகம் , ரெண்டு கதைகள் மட்டும் தானா??
ReplyDeleteஹிஹிஹி.
Deleteபுத்தகங்கள் கிளம்பி விட்டது. நாளை முதல் திருவிழா தான்.
எத்தனை வந்தா என்னப்பா.? நீ எப்படியும் டெக்ஸ் வில்லரை மட்டும்தான் மாஞ்சி மாஞ்சி படிக்கப்போற..!?
Deleteசார் புத்தகங்கள் கிளம்பியாச்சா
ReplyDeleteஆச்சு ஆச்சு
Deleteவாங்கியாச்சு போல
Deleteமுதல் புத்தகம் கைப்பற்றப்போகும் அதிர்ஷ்டசாலிக்கு வாழ்த்துக்கள்...சர்ப்ரைஸ ஓடச்சிராதீங்க
ReplyDeleteநீதான்லே இந்த உலகத்துக்கே சர்பைர்ஸ்லே மக்கா :-)
Deleteபுத்தகங்களை கைப்பற்றியாச்சுது....😍😍😍
ReplyDeleteவாழ்த்துக்கள் :-)
Deleteஆசிரியரின் புதுப்பதிவு ரெடி நண்பரகளே..
ReplyDelete