Powered By Blogger

Sunday, February 06, 2022

நேற்று..இன்று..நாளை..!

 நண்பர்களே,

வணக்கம். வேதாள மாயாத்மா !! சந்தேகமின்றி இந்நொடியின் நாயகர் இந்த முகமூடி சூப்பர் ஹீரோவே ! ஒற்றை நாளே ஓடியுள்ளது - பிப்ரவரியின் இதழ்கள் உங்கள் கைகளை எட்டி, so pretty early days தான் ! இருந்தாலும் இந்த நொடி வரையிலுமான உங்களின் அதிரடி சிலாகிப்புகள் சந்தேகமறப் பறைசாற்றுவது, மாயாத்மா மீதான நமது  அசாத்திய மையல்களை !! 'ஹய்யய்யய்யோ....நான் இது எதிர்பார்க்கவே இல்லை ; என்க்கு ஆச்சர்யமா இருக்குது ! தேங்க்யூ ஸ்வீட்ஹார்ட்ஸ் !' என்று புதுமுக நடிகைகள் பாணியில் பீலாவும்  விட மாட்டேன் ; "ஆங்...இது எனக்கு முன்னமே தெரியும் சார் ! எதிர்பார்த்திருந்தேன் சார் ...ஐ நோ...ஐ நோ...ஐ நோ...!!" என்று ரகுவரன் பாணியில் போட்டுத் தாக்கவும் மாட்டேன் ! Simply becos ரசனைகளின் ஒரே பக்கத்தில் நீங்களும், நானும் உள்ளோமோ ? Smurfs ; பென்னி ; லியனார்டோ தாத்தா தேர்வுகளில் நிகழ்ந்தது போல, பேப்பயலாட்டம் நானாகவே ஏதேனும் கற்பனையினில் வாழ்ந்து வருகின்றேனா ? என்ற சந்தேகம் இந்த வியாழன் வரைத் தொடர்ந்தது எனக்கு ! Oh yes - உங்களின் சந்தா எண்ணிக்கைகள் சொன்னது செம பாசிட்டிவ் சமாச்சாரத்தினையே ; ஆனால் தேக்ஸாவில் கமகமக்கும் பிரியாணி, இலைகளில் பரிமாறப்பட்டு, வயிறுகளுக்குப் பயணமாகி, திருப்தியான ஏப்பங்களாகவும், நிறைவான புன்னகைகளாகவும் உருமாற்றம் காணும் வரையிலும் சமையல்காரனுக்கு உள்ளுக்குள் உடுக்கை அடிக்காது போகாதே ?!  

பெங்காலி கானகத்தின் முதல்வரை நமது மறுவருகைக்குப் பின்பாய் நண்பர்கள் பலரும் முன்மொழிந்திருக்கலாம் தான் ; ஆனால் எனக்கு நினைவில் நிற்பதோ நமது கோவைக்கார இரும்பு தெய்வம் துள்ளிக் குதித்தபடியே 2014 ஈரோடு புத்தக விழாவின் போது எழுப்பிய கோரிக்கை தான் ! LMS புக் ரிலீஸ் ; ஸ்டாலில் நண்பர்கள் சந்திப்பு என்ற உற்சாகத்தின் மத்தியில் அந்தக் கானக்குரலோன் "வேதாளர் வருவாரா சார் ?" என்று கேட்டபோது பொத்தாம் பொதுவாய் ஏதோ பதில் சொல்லி வைத்திருந்தேன் என்பது மட்டும் ஞாபகமுள்ளது ! அந்த ஆண்டின் அக்டொபர் தான் வேதாளரெனும் கனியினை மடியில் விழச் செய்ய வாய்ப்புள்ளதா ? என்று நான் முதன் முதலாய் முயற்சித்தது - நமது இரண்டாவது இன்னிங்சில் ! மும்பையில் இருந்த அந்நாட்களது ஏஜெண்ட்களிடம் தொடர்கதையாக வேதாளர் கதைகளை நமது இதழ்களில் முயற்சிக்கலாமா ? என்ற ரீதியில் கேட்டிருந்தேன் ! அதன் காரணம் - அந்நேரத்துக்கெல்லாம் King Features நிறுவனமானது தம் நாயகர்களின்  முழுநீளத் தொகுப்புகளுக்கான உரிமைகளை நேரடியாய்  அமெரிக்க ஆபீஸிலிருந்தே  கையாளத் துவங்கியிருந்தது ! இங்கிருந்த முகவர்களுக்கு, தினசரிகளுக்கு, வாராந்தரிகளுக்கு, தொடர்கதைகளுக்கு  உரிமைகளைச் சந்தை செய்யும் பொறுப்பு மட்டுமே எஞ்சியிருந்தது ! So இக்கட உள்ளோரிடம் தொடர்கதைகள் ரூபத்தில் தலைநுழைத்திடுவோமே என்பதே அந்நாட்களின் மஹா சிந்தனை ! "பண்ணலாம் ; ஆனால் ஒவ்வொரு முறையும் 2 பக்கங்களுக்கு மிகுந்திடக்கூடாது" என்று முகவர்கள் சொல்லிய போது என் வேகம் போன இடம் தெரியலை ! ஒரு கணிசமான அளவிலான பக்கங்களை ஒவ்வொரு இதழிலும் நுழைத்தாலன்றி, உங்கள் வீட்டுத் துடைப்பங்களோடு நேர்முகச் சந்திப்பினை நடத்திட உத்திரவாதமானதொரு வழியாக இருக்குமென்பது புரிந்தது - becos முன்னொரு காலத்தில் "காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்" எனும் ரயிலை விடறேன் பேர்வழியென மு.ச.வா ?  மூ.ச.வா ? என்று தெரிந்திராத ஒரு முட்டுச் சந்துக்குள் போய் முட்டி நின்று, அங்கே ஆளாளுக்கு ஊறப்போட்டு ஊறப்போட்டு ஒரு வாரத்துக்கு வெளுத்தெடுத்தது நேற்றைய நிகழ்வாட்டம் நினைவில் நிற்கி !! In fact - அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பசுக்கு நிகராய் "முட்டுச் சந்து" எனுமொரு மர்ம மண்டலத்தை நீங்கள் தேடிப் பிடித்து எனக்கு அறிமுகம் செய்து வைத்த நாட்களே அவை தான் எனலாம் ! 

So திட்டத்தைக் கைவிட்டுவிட்டு வேறு பணிகளின் மும்முரத்தில் மறந்தும் போனேன் ! அடுத்ததாய் வேதாளர் வேட்டையில் நான் ஈடுபாடு காட்டியது 2017-ல் !  சின்ன விலை ; ரெகுலரான சிறுசிறு வேதாளர் black & white கதைகள் என்ற திட்டமிடல் அன்றைக்கிருந்தது !  அமெரிக்காவில் இருந்த அவர்களின் தலைமையகத்தோடு நேரடியாய் பேசிட முனைந்தேன் ! But எனக்கே எனது முன்மொழிவில் அன்றைக்கு அத்தனை நம்பிக்கை இருந்திருக்கவில்லை ; becos கிராபிக் நாவல்ஸ் ; கார்ட்டூன்ஸ் ; டெக்ஸ் சந்தா ; ஆக்ஷன் சந்தா ; மறுபதிப்புச் சந்தா என அந்நேரம் ரவுண்டு கட்டிச் சாத்திக் கொண்டிருந்தோம் ! So ஆண்டொன்றுக்கு மிஞ்சிப் போனால் மூன்றோ, நான்கோ சிங்கிள் ஆல்பங்களைத் தாண்டி வேதாளருக்கு ஸ்லாட்ஸ் ஒதுங்கியிருக்க வழியிராது என்பது எனக்குத் தெரிந்தே இருந்தது ! எனக்கே முழுசாய் ஓ.கே. என்றுபட்டிராததொரு சமாச்சாரம், படைப்பாளிகளுக்கு ரசிக்க வழி ஏது ? Sorry ! என்று கை விரித்து விட்டார்கள் ! அதன் பின்னே மலையாளத்தில் ரீகல் காமிக்ஸ் நிறுவனம் வேதாளரை வெளியிடுவதைக் காட்டி, நண்பர்கள் என்னிடம் கேட்ட கொஞ்ச காலத்தில் மறுக்கா முயற்சித்தேன் தான் ! But கொரோனா ரவுசுகள் துவங்கியிருந்த நாட்கள் அவை ! முழு லாக்டௌன் ; முழுசாய் கடைமூடல் என்ற ரீதியில் பிழைப்பு நாறிக் கொண்டிருக்க, வேதாளருடன் கைகுலுக்கும் முனைப்பு தற்காலிகமாய்ப் பின்னுக்குச் சென்றது ! அந்நேரத்திற்குள் ரீகல் காமிக்ஸ் இங்கிலீஷிலும் வேதாளரை அட்டகாசமாய் வெளியிடத் துவங்கிட, எனக்கு மண்டைக்குள் குடைச்சல் துவங்கியது ! நாட்களின் ஓட்டத்தோடு லாக்டௌன் # 2 வந்து சேர்ந்தது ! தினசரிப் பதிவுகள், முத்து காமிக்ஸ் 50-வது ஆண்டுமலர் சார்ந்த கும்மிகள், என்று நாட்கள் ஓடி வந்தன ! இந்த மைல்கல் ஆண்டினில் என்ன செய்யலாமென்று யோசித்த போது எனக்குத் தோன்றிய concept தான் - "நேற்று..இன்று..நாளை "! 

நேற்றைய ஜாம்பவான்கள் 

+இன்றைய சூரர்கள்

+நாளைய வீரர்கள் 

என நாயகர்களை 3 ஆல்பங்களில் முத்து ஐம்பதாவது ஆண்டுமலர் ஸ்பெஷலினில் அடக்கிட எண்ணினேன் ! ஆனால் ஒரே சமயத்தில் சகலத்தையும் இழுத்து விட்டால் பட்ஜெட் ; பணிச்சுமை என எல்லாமே எகிறி விடும் என்பது புரிந்தது ! So கொஞ்சம் யோசித்த போது, இந்த "நேற்று..இன்று..நாளை.." சமாச்சாரத்தை ஒற்றை மாதத்து ஆல்பங்களுக்குள் அடைப்பதற்குப் பதிலாய், அந்த ஆண்டினையே இந்த concept-க்கான களமாக்கினால் என்னவென்று தோன்றியது !! அதன் பின்னே ஜனித்தவை தான் SMASHING '70s சார்ந்த திட்டமிடல் ; சுஸ்கி-விஸ்கி மீள்வருகை முயற்சிகள் ; இளம் டைகர் தொகுப்பென்ற எண்ணம் ; ஆல்பா ; சிஸ்கோ ; டேங்கோ ; IR$ ; ZAGOR etc etc என்ற புது நாயகர்களின் வேட்டை  et al ! 

உங்களின் பழமைக்காதல்கள் கல்வெட்டுக்களில் பதிக்காத குறையாய் அனைவரும் அறிந்த விஷயம் எனும் போது எனது பிரதான கவனம் அங்கே இருந்தது ! ஆண்டின் 4 பருவங்களுக்கேற்ப, 4 க்ளாஸிக் ஜாம்பவான்களை களமிறக்கினாலென்ன ? என்று யோசித்த போது வேதாளர் & கோ.வைத் தாண்டி வேறு யாரும் மனதில் ஓட்டமெடுக்கவில்லை ! நமது ஆதர்ஷ மும்மூர்த்திகளிடம் புதுசாய்க் கதைகள் லேது எனும் போது - மறுக்கா மறுபதிப்பெனும் பால் கறக்கும் முயற்சிகளில் சுவாரஸ்யம் இருக்காதே ? So முழுமூச்சில் திட்டமிட்ட போது தான் அமெரிக்க Hermes Press செய்து வரும் black & white மெகா தொகுப்புகள் நினைவுக்கு வந்தன ! அவற்றை அமெரிக்காவில் நேரில் பார்த்திருந்த சமயத்தில், அங்கிருந்து  தூக்கி வருவதற்கு சோம்பல்பட்டு வாங்காது விட்டிருந்தேன் ! சரி, அமேசான் உள்ளவனுக்கு அண்டமே அரைஞாண் கயிற்றில் தொங்கும் தானே - சூட்டோடு சூடாய் அமேசானில் ஆர்டர் போடலாம் என்று பார்த்தால் கொத்தோடு, குலையோடு சொத்தை எழுதி வைத்தால் மட்டுமே அந்த இதழ்களை வாங்கிட முடியும் போலும் என்று எண்ண வைக்கும் விதங்களில் விலைகள் ரூ.16,000 ; ரூ.20,000 என்று இருந்தன ! ஒரேயொரு புண்ணியவான் மட்டும் நான்காயிரத்துச் சில்லறைக்கு ஒற்றை புக் வைத்திருக்க, அவசரமாய் அதற்கு ஆர்டர் போட்டேன் ! மூன்று வாரங்களில் கதவைத் தட்டிய வேதாளரை சைடில் இருந்து ; ஓரத்திலிருந்து ; முக்கிலிருந்து, மூலையிலிருந்து - என வெவ்வேறு கோணங்களில் ரசித்தான பின்னே நாமும் இதே போல ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக் கதைகளை தைரியமாய் black & white -ல் ஒரு மெகா தொகுப்பாய்ச் செய்யலாம் என்று துணிந்தேன் ! என் முன்னே இருந்த சபலங்களும், சவால்களும் கணிசம் :

சபலம் : வண்ணத்தில் நாம் முழுசுமாய் மனதைப் பறிகொடுத்திருக்கும் பார்ட்டிஸ் ! And அண்டை மாநிலத்தில் ரீகல் கலரில் தாக்கு தாக்கென்று தாக்கிக் கொண்டிருக்கின்றனர் ! So அதே ரீதியிலான ஜோதியில் ஐக்கியமாகிடும் சபலம் ஆர்ப்பரித்தது ! 

ஆனால் உள்ளுக்குள்ளோ எனக்குத் தடா போட்டது வேதாளர் கதைவரிசையின் உச்சங்கள் இருப்பது புதிய / சமீபத்தைய படைப்புகளில் அல்ல என்ற நம்பிக்கை தான் ! எனது லங்கோட்டு பால்யங்களில் பிதாமகர் Lee Falk & ஓவிய அசுரர் Sy Barry - என்ற கூட்டணியுடன் தான் வேதாள உலாவில் நான் பங்கேற்றிருந்தேன்  எனும் போது, அதுவே நமது துவக்கப் புள்ளியாய் இருந்திட வேண்டுமென்ற நமைச்சல் உள்ளுக்குள் குடியிருந்தது ! So என் முன்னான முதல் சவால், கலரெனும் ஊட்டித் தக்காளி கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்தாலும், கருப்பு வெள்ளையெனும் நாட்டுத் தக்காளியில் உங்களை ஆர்வம் காட்டிடச் செய்வது ! \

சவால் # 2 - க்ளாஸிக் ஜாம்பவான்களில் வேதாளர் டபுள் ஓ.கே. ; ஆனால் மீதப் பேரை உங்களின் பகடிகளிலிருந்து போர்த்தி, இந்தத் திட்டத்தின் அங்கங்களாக்கிட வேண்டிய அவசியம் ! 4 நாயகர்கள் ; ஆளுக்கொரு ஆல்பம் எனும் போது variety அள்ளிடும் ! அதே இடத்தில 4 ஆல்பங்கள், நாலுமே வேதாளர் என்றால், இரண்டாவது ஆல்பத்துக்குப் பின்பாய் லேசாய் அயர்ச்சி எட்டிப்பார்த்து விடும் என்று எனக்குப்பட்டது ! So King Features நிறுவனத்திடம் கோரிக்கையினை முன்வைத்த போது, நான்கு நாயகர்களை 'தகிரியமாய்' தொகுப்புகளில் போட்டுத் தாக்குவது என்று உள்ளுக்குள் உறுதி கொண்டிருந்தேன் ! அதனை, 'லயனுக்கு சந்தா கட்டிப்புடாதீங்க' ஆர்வல அணியினைத் தாண்டி உங்களிடம் கொண்டு சேர்ப்பது எனது சவால் # 2 ஆக இருந்தது !

சவால் # 3 : 'எடுத்தோம், கவிழ்த்தோம் ' என்றில்லாது - ஒரு புதுத் திட்டமிடலுக்கு போதுமான அவகாசம் வழங்கிட வேண்டும் ; knee jerk ரியாக்ஷனாய் முதல் சாத்து விழும் பட்சத்தில், கடையைத் தூக்கிடாது - குறைந்த பட்சமாய் 2 ஆண்டுகளுக்கேனும், 8 ஆல்பங்களுக்கேனும் 'தம்' கட்ட வேண்டுமென்ற எனது நம்பிக்கை ! 'ஒரு வெற்றிக்கு நிறைய பிள்ளைகள் இருந்திடக்கூடும் ; தோல்வியோ அநாதை ' என்று எங்கோ படிந்திருந்தது நினைவுக்கு வந்தது ! பீற்றிக் கொண்டு பிள்ளையார் சுழி போட்டு விடலாம் தான் ; ஆனால் அந்தத் துவக்கம் உங்களின் ஆதர்ஷங்களைப் பெறத் தவறினால், தொடர்ந்திடக்கூடிய 7 ஆல்பங்களைக் கொண்டு பீச்சில் சுண்டலுக்குப் பொட்டலம்  மடிக்கவாச்சும் செய்யலாமென்று நினைத்தால், பீச்கள் கூட பூட்டியே கிடக்கும் காட்சிகள் தான் கண்முன்னே ஓடி வந்தன ! So இந்த முயற்சி 'all or nothing' ரகம் என்பது தெள்ளத் தெளிவாய்ப் புரிந்தே இதனுள் கால் நுழைத்திட வேண்டியிருந்தது ! That was சவால் # 3 !

சவால் # 4 - நடைமுறையிலானது ! ஒரு தடம் ரெடியாய் இருக்கும்  போது, அதன் மீது ஜட்கா வண்டியையோ, பென்ஸ் காரையோ செலுத்த ஓரளவுக்கு நொள்ளையில்லாத கண்களும், கொஞ்சமாய் பாதைகள் பற்றிய ஞானமும் இருந்தால் போதும் தான் ! ஆனால்  'புளிசாதத்தை நீயே கட்டிக்கினு, ரோட்டையும் நீயே போட்டுக்கினு, டயரை உருட்டிக்கினோ, அரைபாடி லாரியை ஒட்டிக்கினோ ஊர்போய்ச் சேர்ந்துக்கோ மாப்பு !' என்பதே நிலவரம் என்றால் பேந்தப் பேந்த முழிக்க வேண்டிப் போகும் ! இந்த ஆல்பத்தை எந்த format-ல் செய்வது ? என்ன விலை நிர்ணயிப்பது ?  'டூ மச்' என்று தோன்றாமல், 'டூ லிட்டில்' என்றும் தோன்றாமல் எத்தனை கதைகளை இணைப்பது ? மெய்யாலுமே ஒரு collector's edition ஆக இதனை மிளிரச் செய்வதாயின் என்ன பேப்பர் ? என்ன திக்னெஸ்ஸில் ? அட்டைப்படங்களே இல்லாத இந்தக் கதைவரிசைக்கு அட்டைக்கென எங்கு போவது ? என அணிவகுத்த ஒரு வண்டிக்கேள்விகளே சவால் # 4 சார்ந்த புள்ளீங்கோ !

உங்களிடம் கேட்டால், சர்வ நிச்சயமாய் 'பாக்கெட் சைஸ்' ; 'ரெகுலர் சைஸ்' என்பதைத் தாண்டி இந்த MAXI சைசுக்கு வோட்டுப் போடவே மாட்டீர்கள் என்பது தெரியும் தான் ! பக்க எண்ணிக்கையென்ற கேள்விக்கு கவிஞர் 'நாலாயிர திவ்ய பிரபந்தம் ' என்று பதில் சொல்லுவார் ; இல்லாங்காட்டி ஆயிரம் பக்கங்களென்றெல்லாம் பரவலாய் பதில்கள் வரும் என்பதுமே யூகிக்க முடிந்தது ! ஆனால் எனக்கோ - இந்த MAXI சைசில், ஒரிஜினல் artwork அதே சைஸ்களில், அமைப்புகளில் பிரம்மாண்டமாய் வந்தால் மட்டுமே ஒரு wow factor சாத்தியமாகிடும் என்பதில் திட நம்பிக்கை இருந்தது ! பக்கங்களுமே 200 என்ற ரீதிக்கு மேலிருந்தால் overkill ஆகிப் போகும் என்று நினைத்தேன் ! ஆனால் அதே சமயம் புக்கும் பார்வைக்கு சொங்கியாய்த் தெரியாது புசு புசுவென்று காட்சி தந்தாக வேண்டும் ! So முழுக்கவே எனது இந்த concepts & visualisation - உங்களின் பொதுவான ஆதர்ஷ சமாச்சாரங்களுக்கு நேர் எதிர் திசையில் தானிருக்கப் போகிறது என்பது புரிந்தது !; ஆனாலும், அதையும் மீறி, உங்களை இந்தத் திட்டத்தினில் பங்கேற்கச் செய்திட வேண்டும் என்பதே பகாசுர சைசிலான சவால் !  

புயல் எச்சரிக்கைச் சின்னங்களைப் போல ஒவ்வொரு சவாலும் எழுந்து நிற்பது புரிந்தாலுமே, எனக்குள் ஒருவித குருட்டு நம்பிக்கை - நிச்சயமாய்  இந்த முயற்சி குடைசாய நீங்கள் அனுமதிக்க மாட்டீர்களென்று ! இன்றைக்கு யோசித்தால் அன்றைக்கு நான் இம்மி கூட தயங்கவில்லை என்பது மட்டுமே நினைவில் உள்ளது ! அதைத் தாண்டி இந்த ரிஸ்க் ரஸ்க் சாப்பிட அன்றைக்கு எனக்குத் தெம்பூட்டிய லாஜிக்கான விஷயமாய் வேறெதுவுமே நினைவுக்கு வர மாட்டேன்கிறது ! முழுக்க முழுக்கவே உங்கள் மீதும், க்ளாஸிக் நாயகர்கள் மீதும், எனது gut feel மீதுமான நம்பிக்கையே இதனுள் என்னை இறக்கி விட்டதென்பது தான் வார்னிஷ் இல்லாத நிஜம் ! 

And ஒற்றை இதழ் + ஒண்ணரை நாட்களின் சிலாகிப்புகள் - கூரை மீதேறிக் கூவிடும் முகாந்திரமாகிடாது என்பது புரிகிறது ! And இப்போது கடந்திருப்பது தான் "வேதாளர்" எனும் சுலபமோ, சுலபமான தேர்வு ; காத்திருப்பன டைனோசர் போல வாய் திறந்து காத்திருக்கும் கடினர்கள் என்பதுமே புரிகிறது ! And இந்த ஒற்றை வெற்றி ஓராண்டின் வெற்றியாகிட இன்னும் மூன்று பங்கு தூரம் கடந்திட வேண்டியுள்ளது என்பதுமே புரிகிறது ! ஆனால் 'a job well begun is half done' என்பதில் தீரா நம்பிக்கை கொண்டவன் நான் ! So ஆண்டவன் கருணையில், அழகாய்த் துவங்கியுள்ள பயணமானது, சீராய்த் தொடர்ந்திடுமென்று நம்புவேன் ; பிரார்த்திப்பேன் !  So இது தான் மாயாத்மாவின் துவக்கப் புள்ளியின் பின்னணி ! பணிகள் பற்றி, இதர சின்னச் சின்ன நுணுக்கங்கள் பற்றி ; முக்கியமாய் இணைப்பாய் வந்துள்ள மேகி பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாமே !! 

Bye guys....have a super sunday ! See you around ! "போர்முனையில் தேவதைகள்" வெயிட்டிங் ! 


116 comments:

  1. Replies
    1. யாரோ தானோ... மெல்ல மெவ்ல

      Delete
  2. நள்ளிரவு வணக்கம் நண்பர்களே.

    ReplyDelete
  3. வணக்கம் ஆசிரியர் சார்.இம்மாத இதழ்கள் இன்று தான் வந்தன.இப்போது தான் பொட்டியை உடைத்து பொக்கிஷங்களை தடவி தடவி ரசித்து வருகையில் உங்கள் பதிவு கண்டு இங்கு ஓடோடி வந்துள்ளேன். என் மனங்கவர்ந்த முதல் காமிக்ஸ் கதாநாயகன் வேதாளனை நெடு நாட்களுக்குப் பிறகு உங்கள் தயவால் கையில் ஏந்தி ரசித்து வருகின்றேன்.பிரமிப்பு என்னைக் குதூகலத்தில் மூழ்க வைத்துவிட்டது. உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இன்றித் தவிக்கின்றேன். பிரம்மாண்டம் + பிரமிப்பு + அழகு என அனைத்தும் என்னைக் கட்டிப் போட்டுவிட்டன. நன்றி ஆசிரியர் சார்.

    ReplyDelete
  4. அண்டர் டேக்கரின் 3ம் பக்கம் அசத்த...நான்காம் பக்கமோ சான்சே இல்ல...கருப்புதான் என்ன அழகு....சூப்பர் சார்....


    ஏனோ ஒரு வெறுமை அடுத்த மாதத்தின் மேல் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறியதும
    போல ...இதுக்கு மேல என்ன வேணும்னு மனசு கேக்க.. நிச்சயமா பாத கட்டைவிரல் வேலைய காட்டும் என்ற பெரிய நம்பிக்கையோட பத்துநாள் புத்தகதிருவிழாவுக்காக ஆவலாய்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார், அந்த பக்கம் அப்படியே அந்த பனிபடர்ந்த பள்ளத்தாக்குக்கு கூட்டி சென்று விடுகிறது. சில நிமிடங்கள் அந்த பக்கத்தை மட்டுமே ரசித்தேன்.

      Delete
  5. வேதாளரின் பின்னணி எங்களுக்கு சுவாரஸ்யமாக இருந்தாலும் உங்கள் மூளையை சலவை செய்திருப்பது நன்றாக தெரிகிறது 😀

    வந்த கொரியரில் சந்தேகம் இல்லாமல் படிக்க தூண்டியது வேதாளர் தான். நீங்கள் மேக்ஸி சைஸ் என தேர்வு செய்தது மாஸ்டர் stroke.
    அடுத்து தாள் தேர்வும் அட்டகாசம் ஒரு ரிச் பீல் கொடுக்கிறது, குண்டு புத்தகத்திற்கே உண்டான கையில் வைத்து படிக்கும் எடை பிரச்சனை சுத்தமாக நீக்கிவிட்டீர்கள் அது மிக பெரிய advantage.

    தாளின் ரிச் பீல் பிரிண்டிங் மட்டும் கொஞ்சம் டார்க்காக இருத்திருக்கலாமோ என்று தோனவைக்கிறது, அதன் possibility பற்றி தெரியவில்லை.

    இரண்டு கதைகள் முடித்துவிட்டேன் ஒரு லையிட் ரீடிங் தகுந்த கதைகள் மிக நன்றாக இருந்தது.

    ஒரு சிறிய வேண்டுகோள் வேதாளர் பற்றிய கானக மொழி மட்டும் கொஞ்சம் வேறு fontil பெரித்தாக தனித்து தெரிந்தால் அதன் தாக்கம் இன்னும் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது.

    அடுத்து போன பதிவில் சொன்னது தான் பெயர்களும் இன்னும் கொஞ்சம் க்ளாஸியாக நமது மற்ற புத்தகங்கள் போல இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  6. ஆசிரியர் சார் இம்மாதப் புத்தகங்களுடன் அண்டர்டேக்கர் புத்தகமும் வந்துள்ளது எனக்கு.ஜம்போ சந்தாவில் நான் இல்லை. தவறுதலாக அலுவலகத்தில் அனுப்பி வைத்துவிட்டார்கள் போல.அவர்களைக் கடிந்து கொள்ள வேண்டாம். அண்டர்டேக்கர் இதழின் விலை ரூபாய் 200ஐ விரைவில் தங்கள் வங்கி முகவரிக்கு அனுப்பிவைக்கின்றேன். தவறாக நினைக்க வேண்டாம் சார். மன்னிக்கவும்.நன்றி.வணக்கம் சார்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் காமிக்ஸ் நேர்மையை
      பாராட்டுகிறேன்

      Delete
  7. Edi Sir..
    தனியாக பெங்காலி காட்டுக்கு வேதாளரை பார்க்க செல்வதே சாதாரண விஷயம் இல்லை. இதில் எங்களை போன்ற நாஷ்டாலஜிஸ்டுகளை மட்டுமல்ல அனைவரையும்,கைபிடித்து பெங்காலி காடு சேர்ப்பது கடும் சிரமம்தான். ஆனால் சாதித்து விட்டீர்கள் Edi Sir. வேதாளரை கலரில் நல்ல தமிழில் தரிசித்த மகிழ்ச்சியில் தேன் குடித்த கரடியாட்டம் சொக்கிபோய் கிடக்கிறோம்.ஆயிரம் கோடி நன்றிகள்.🙏🙏🙏

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. பால்யத்தில் மாலைமலரில் தினசரி எழுத்து கூட்டி கூட்டி படித்து படம் பார்த்த மாயாவி கதை தான் முதல் காமிக்ஸ் அனுபவமாக எனக்கு தோன்றியது... அந்த கதையும் இதில் சங்கமிக்க செய்து பால்யத்தின் நினைவுகளை கண்முன்னே வர செய்தமைக்கு நன்றிகள் சார்.

      Delete
  9. இனி வரும் இதழ்களும் பெரு வெற்றி பெற நல்வாழ்த்துகள்.

    இன்னும் ஜனவரி புத்தகங்களே இங்கே வரவில்லை.புதனுக்குள் அனுப்புவதாக அலுவலகத்தில் இருந்து தகவல். காத்திருப்பதும் ஒரு சுகமே..

    அடுத்த வருடம் கதம்ப இதழ்களாக வந்தால் நன்றாக இருக்கும். படிப்பதற்கும் வெரைட்டி கிடைக்கும்.

    ReplyDelete
  10. FFS வேதாளர் கதை மிக அருமை hats off to you

    ReplyDelete
  11. ஆனால், உண்மையைச் சொல்வதென்றால் வேதாளர் புத்தகத்தை பெற்ற பின்னர் தான் முத்து 50 கொண்டாட்டம் மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது என்னளவிற்கு. 😁😁😃🥰😍.

    புத்தகத்தை கையில் ஏந்தி புரட்டிப் பார்க்கும் போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி.


    அப்படியே பள்ளிக்கூட நாட்களில் படித்த நாட்கள் அலையடிக்குது உள்ளுக்குள். 😇😇🥰😍🥰😍

    ReplyDelete
    Replies
    1. அனைத்தையும் ஆமோதிக்கின்றேன்.

      Delete
  12. சார் அருமை....நிச்சயமாய் செந்தூரானும் நம்மோடு பயணிப்பான்....அப்ப கொலைப் படையும் இருவண்ணத்ல அட்டை டூ அட்டை கேட்டதும் நினைவிருக்கா....வெறுமய போக்க அட்டகாச கதைகளோட புத்தக விழால குதிங்க....மாதா மாதம் ஐம்பதாமாண்டு கொண்டாட்ட பயணம் இருக்கனும்....அடுத்த மாதத்த இன்னும் கொஞ்சம் சிறப்பாக நிரப்புங்க...கதைகள் போதாது....நார்மலான எதிர்பார்ப்பான மாதமா தெரியுது....இந்த ஒரு வருடத்த மட்டும் பன்னெண்டு வானவில்லாய் மாற்றிடுவோமே ஐம்பதாமாண்டு என்றைக்கும் நினைவில் தங்குமாறு....வானவில்லின் நிறங்கள் ஏழுன்னு சொல்லிடாதீங்க....அடிச்சு ஆடுவோம்....தயாரான உயிர்த் தேடி வந்தாலும் சுகமே...நாட்களில் கேப் விழலாம்....மாதங்களில் விழ வேண்டாமே

    ReplyDelete
  13. ஆசிரியரே சென்னை புத்தகக் திருவிழாவில் டெக்ஸ் வில்லரின் மினி சாகஸங்களான எரிந்த கடிதம் மரண நடை இரண்டையும் ஒரே புத்தகமாக வெளியிடலாமே

    ReplyDelete
  14. எடிட்டர் சார்...வேதாளர் ஸ்பெஸல் புத்தகத்தின் தரம், வடிவமைப்பு, பிரமாண்டமான அந்த மேக்ஸி சைஸ், அட்டை படம், பேப்பர் தரம், மொழிபெயர்ப்பு, கதைகளின் தேர்வு & முக்கியமாக அந்த வேதாளர் போஷ்டர் என்று எல்லாமே அட்டகாசமாய், கண்ணில் ஒற்றிக்கொள்ளும் விதமாய் அருமையாக உள்ளது சார்..அதற்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் சார்.......ஆனால் இவ்வளவு தரத்தையும் 2ண்டு மைனஸ்கள் ( என்னையை பொறுத்தவரை மட்டுமே சார்) மூடி மறைத்து இந்த புத்தகத்தை மேக்ஸி சைஸ் புத்தகமாக நினைத்து படிக்க ( ரசிக்க ) முடியாமல் செய்து விட்டதுங்க சார்...

    மைனஸ் 1- ஒரு பக்கத்துக்கு சின்ன சின்னதாக 16 பேனல் னு இருப்பதால் , அந்த ஓவியங்களை பார்க்கும்போது, அதை மேக்ஸி சைஸ் புத்தகத்தில் ரசிக்கும் விதமாக எனக்கு தோன்றவில்லைங்க சார்...எப்பவும் போல வரும் ரெகுலர் சைஸ் புத்தகத்தில் வரும் பேனல்களை விட சின்னதாக இருப்பதுபோல் எனக்கு தோன்றுகிறது சார்.....

    மைனஸ் 2- பேனல்கள் சின்னதாலதாலோ என்னவோ , எழுத்துகளும் ரொம்பவே சின்னதாக , படிக்கவே மிகவும் சிரமமாக உள்ளதுங்க சார்....எழுத்துகளை இன்னும் கொஞ்சமாவது பெரிது பண்ணியிருக்கலாம் என்பது என்னுடைய கருத்து மட்டுமேங்க சார்...
    இந்த இரு குறைகளினால் இந்த இதழை , அட்டைபடத்தையும் , பேப்பர் தரத்தையும், வடிவமைப்பையும் கொண்டு மட்டுமே மேக்ஸி சைஸில் ரசிக்க முடிகிறதே தவிர , புத்தகத்தை பிரித்து படிக்க ( ரசிக்க ) தொடங்கும்போது , இதை ஒரு மேக்ஸி சைஸ் புத்தகமாக நினைத்து படிக்கவோ ...ரசிக்கவோ என்னளவில் முடியவில்லைங்க சார்..


    இந்த இதழை பார்த்தவுடன் எனக்கு மனதில் தோன்றியதை , எனக்கு தெரிந்த விதத்தில் கூறியுள்ளேன் சார்...இதில் தப்பாக ஏதாவது இருந்தால் மண்ணிக்கவும் சார்..இந்த இரு குறைகளை ( எனக்கு மட்டுமே) தவிர்த்து பார்த்தால் இதுவரை வந்த அனைத்து புத்தகங்களிலேயே தரத்திலும் , மேக்கிங்கிலும் இதுவே சிறந்த புத்கம் சார்....புரிதலுக்கு மிக்க நன்றிங்க சார்..

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் தோன்றியது இதுவே சார். ரொம்பவே நெருக்கமாக படங்கள் இருந்ததாக உணர்ந்தேன்.

      Delete
    2. YES .. I TOO FELT THE SAME SIR .. MAKING IS AWESOME .. BUT TOO MUCH PANELS IN SINGLE PAGE MAKES IT DIFFICULT TO READ ..

      Delete
    3. I felt it ji...to be uselittle zoom will more elegant and clear

      Delete
    4. என்ன தான் சைஸ் பெரிது என்றாலும் சித்திரங்கள் சிறிதாக இருப்பதால் வெளியில் தெரிந்த பிரம்மாண்டம் உள்ளே இல்லை. ஏற்கனவே டெக்ஸ் மேக்ஸியிலும் இதே குற்றசாட்டு தான் வைக்கப்பட்டு, பின்பு maxi size கைவிடப்பட்டது. குட்டி குட்டி சித்திரங்களாக நிறைய பேனல்கள் அதுவும் ஸ்கேலில் கோடு போட்டது போல் இருப்பதால் ஒரு பக்கத்தை தாண்டுவதற்குள் அயர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. புத்தக வடிவமைப்புக்கு ஒரு ஸ்பெசல் பொக்கே. ஆனால் சாரி சார் சித்திரங்களை முற்றிலும் ரசிக்க முடியவில்லை. Maxi size என்றால் "தலைவில்லா போராளி" தான் பளிச்சென்று ஞாபகம் வருகிறது.

      Delete
    5. எடிட்டர் சார்
       
      இதனைத் சரி செய்யும் முயற்சியாக நீளவாக்கில் பானெல்களை அச்சிட்டால் சைஸ் இன்னும் கொஞ்சம் கூடுதலாய் இருக்குமோ?

      I am ok with the print as it is - just thinking what we can do about getting more sized up sketches !

      Delete
  15. விஜயன் சார் வருடத்திற்கு ஒருமுறையாவது வேதாளரின் சாகசங்களை இதேபோல் காண வேண்டும். மஞ்சள் சட்டை,புளூ கோட், பரட்டை மண்டையோடு பாலைவனத்தை வலம் வரும் ஹீரோக்களுக்கு நடுவில் பச்சைப் பசேல் என கானகத்தை ரவுண்ட் அடிப்பதும்; காட்டுக்குள் நூலகம் வைத்து லயன் முத்து Comics படித்து சேகரித்தை வைத்திருப்பதும், ஓவராக பேசினால் முகத்தில் மண்டை ஓட்டை பதிப்பதும் என இவர் தனிரகம் தான்.... எனவே வருடம் வேதாளர் தொடர வேண்டும்... இவர் சாகசங்களை ஆர்ட் பேப்பரில் கலரிலும் பார்க்க ஆவலாக உள்ளது.... Thank u editor sir

    ReplyDelete
  16. வேதாளர் தொகுப்பு, ஒரு சிறப்பான திட்டமிடலுக்கு, சரியான எடுத்து காட்டு!!!! அனைத்துக்கும் எடிட்டர் சார் காரணம், ஜம்போ மகிழ்ச்சி!!! தொடரட்டும் வேதாளர் maxis!!!

    ReplyDelete
  17. நேற்று..இன்று..நாளை. வேதாள மாயாத்மா!!
    வேதாள மாயாத்மா!!
    வேதாள மாயாத்மா!!

    ReplyDelete
  18. Phantom book cover art and hardcover design are so great. What I wondered was weightlessness of books. Never seen such lightqeighted but high quality paper. Read 3 or 4 of the stories. Tex viller of African jungle l.

    ReplyDelete
  19. உங்கள் திட்டமிடல்களில் பின்னே இப்படியாப்பட்ட மகா சிந்தனைகள் இல்லாது போனால் தான் ஆச்சரியமே! அட்டகாசம் எடிட்டர் சார்!

    வேதாளரின் மிகச் சிறந்த கதைகள் கருப்பு-வெள்ளையில் தான் கிடைக்கும் என்றால் இன்னும் சில வருடங்களுக்கு இதே பாணியே தொடரட்டும்!

    'டார்லிங் டிடெக்டிவ்' மேகி பற்றிய உங்களது அடுத்த பதிவுக்காண்டி வெயிட்டிங்!

    ReplyDelete
  20. இந்த மாத இதழ்களின் அச்சுத் தரம் ஏ-1 சார். இது போன்ற அசாத்திய பிரிண்டிங் NBS க்கு பிறகு இப்போது தான் அமைந்துள்ளது.குறிப்பாக அண்டர்டேக்கர் அட்டை டு அட்டை சர்வதேச தரம்.சான்ஸே இல்லை சார்.புத்தகம் அவ்வளவு அற்புதமாக வந்திருக்கிறது. இனி வரும் காலங்களிலும் இதே போன்ற அச்சுத் தரம் அமைய பெருந்தேவி வொண்டர் வுமனை வேண்டிக்கொள்கிறோம் சார் !

    ReplyDelete
    Replies
    1. Ha Ha - perundevi wonder woman. Konjam ellamE oru satru perusudhaan !!

      Delete
  21. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  22. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  23. நேர் கோட்டுக் கதைகளில் என்னவெல்லாம் மாயாஜாலம் செய்யலாம் என்று புதிய கதாசிரியர்களுக்கு பாடமேஎடுத்துள்ளார் கதாசிரியர்லீ பாக். தலைமுறை தலைமுறையாகத் தொடரும் ஒரு ஹீரோ. சாகாவரம் பெற்றவர் என்ற நம்பிக்கை. கெட்டவர்களுக்கு பரிசு"வேதாளமுத்திரை" மோதிரம்.முகமூடிதோற்றம், நகருக்குள் வரும்பொழுது ஓவர் கோட் கண்ணாடி.
    ஒரு குதிரை +(ஓ) நாய். களம் கானகம். என்று பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார் வேதாளர் என்னும் மாஸ் ஹீரோவை. கலரில் வேதாளர் என்று மஞ்சக் கொடி பிடித்துக்கொண்டு ஒருகூட்டமே ஆரவாரமாய் கிளம்பிவரும் எதிர்காலக்காட்சி இப்பவே கண்ணில் தெரிகிறது. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  24. எடிட்டர் சார். என்ன மாயாஜாலம் சார். இவ்வளவு பெரிய குண்டுப் புத்தகம் வெய்ட்டே இல்லாமல் இருக்கிறது.. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  25. *சென்னை புத்தக கண்காட்சி 2022*

    நாள்: 16.02.2022 முதல் 06.03.2022 முடிய

    இடம்: YMCA மைதானம், சென்னை.

    நேரம்: காலை 11 முதல் மாலை 6.00 முடிய

    முன்பதிவு கட்டணம்:
    ரூ.100 (அனைத்து நாட்களுக்கும்)
    ரூ.10 (நாள் ஒன்றுக்கு)

    முன்பதிவுக்கு: www.bapasi.com

    ReplyDelete
    Replies
    1. மருத்துவ செலவுகளுக்கு கொஞ்சம் பணம் ஒதுக்கிக்கொண்டு bookfair செல்வது உத்தமம் :-)

      Delete
  26. Edi Sir..
    நம்ப ஸ்டால் நம்பர் எண் என்னதுங்க..

    ReplyDelete
  27. Vethalar rocks ...weight less paper 👍wow...hard binding 👍....totally ✌️...thank u sir

    ReplyDelete
  28. Phantom , தயாரிப்பு தரம் அருமை, இவ்வளவு பெரிய புத்தகத்தை எதிர்பார்க்கவே இல்லை, மேலும் 50-50 போல phantom design பாக்ஸில் வந்தது எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்.
    எனக்கு ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே,
    அடுத்த phantom கலெக்ஷன் வரும்போது, same சைஸில் வண்ணத்தில் ஒரு பக்கத்துக்கு இத்தனை பேனல்கள் இல்லாமல் ஓவியத்தை முழுவதுமாக ரசிக்கும்படியாக குறைந்த பேனல்லோடு வேண்டும் ஜி.

    ReplyDelete
  29. நேற்று இன்று நாளை உங்களின் இடைவிடாத முயற்சி திட்டமிடல் பற்றிய இந்த பதிவு உங்களுடன் இருந்து இதனை நாங்களும் அனுபவித்த உணர்வைத் தருகிறது.

    இந்த ராட்சஸ வேதாளர் எங்களுக்கு முழு திருப்தி எல்லா வகையிலும். நன்றி சார்.

    அடுத்து வரவுள்ள மற்ற மூன்று க்ளாசிக் நாயகர்களும் இதே போல் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
    தொடருங்கள் உங்களை எப்போதும் தொடருவோம்

    ReplyDelete
    Replies
    1. ////அடுத்து வரவுள்ள மற்ற மூன்று க்ளாசிக் நாயகர்களும் இதே போல் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.///

      வேதாளர் போல 8-9 கதைகளை தொடர்ந்து படிக்க முடியுமா???

      Delete
    2. ரசித்து படித்தால் பத்து பதினைந்து கூட படிக்கலாம்.

      எல்லாம் மனசு செய்யும் மாயம்

      Delete
    3. // எல்லாம் மனசு செய்யும் மாயம் //

      +1 எப்படி மின்னும் மரணம் மற்றும் xiii படித்தோம் மிதுன் :-)

      வேதாளன் கதைகள் நேர்கோட்டு கதைகள் அதேநேரம் சுவாரசியமாக விறுவிறுப்பாக உள்ளது. இந்த கதைகளை பிஸியான வாழ்கையில் இருந்து விடுபட அல்லது மனதை லகுவாக மாற்றிட படிக்கலாம் எப்போதும் படிக்கலாம் வகை கதை இது.

      Delete
    4. Definitely - I usually read 10-20 phantom stories (English) together !

      Delete
    5. ///வேதாளர் "போல" 8-9 கதைகளை தொடர்ந்து படிக்க முடியுமா?///

      ("போல") மற்ற நாயகர்களை படிக்க முடியுமா என்று தான் கேட்டிருக்கிறேன்!

      Delete
    6. மிதுன் @ தவறான புரிதலுக்கு சாரி. Lets wait for other stories to come :-)

      Delete
  30. முத்து FFS என்னை மிகவும் கவர்ந்தது சிஸ்கோ தெறி வேகம். இந்த ஆண்டின் மிகச்சிறந்த அறிமுகம். சீக்கிரம் இவரின் அடுத்த பாகத்தை வெளியிடுங்கள்.

    டேங்கோ இதன் குறைந்த பக்கங்கள் உடனே என்னை வாசிக்க செய்தது கொஞ்சம் பொறுமையாக படித்தேன் மண்டைக்கு யோசிக்கிற வேலை கம்மி, அடுத்த பாகங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

    ஆல்ஃபா நிறைய பொறுமையுடன் படித்து கதைக்குள் புகுந்து ரசித்த கதையிது. நன்றாக இருந்து ரஷயா பற்றியும் பல மாப்பியா கும்பல்கள் பற்றி தெரிந்து கொண்டேன். மொழிபெயர்ப்பு மிகப்பெரிய ப்ளஸ் இந்த கதைக்கு.

    மொத்தத்தில் FFS1 சிறப்பு.

    ReplyDelete
  31. ஸ்டீல் பாணியில் சொன்னால்
    " இதுவரை நீங்க வெளியிட்ட புக்ஸ்லயே இது தான் top "

    ReplyDelete
  32. எடிட்டர் சார், என் பால்யத்தின் நாயகனை பல பத்தாண்டுகளுக்கு பிறகு மிகச் சிறப்பான முறையில் தந்தமைக்கு கோடான கோடி நன்றிகள்!

    மிகச்சிறப்பான வடிவமைப்பு, அட்டகாசமான தரம். இதைவிட சுமாரான தரத்தில் ஆங்கிலத்நில் கலெக்டர்ஸ் எடிஷன் என்ற பெயரில் சில பல ஆயிரங்களில் விற்கிறார்கள். சிறப்பான தரத்தில் இந்த விலையில் தந்த தாங்கள் வாழ்க! தங்களின் குலம் வாழ்க!

    என்னதான் கலரில் அட்டகாசமான கதைகளோடு சில நூறு பக்கங்களில் தாங்கள் FFS தந்திருப்பினும் , வேதாள மாயாத்மாவே முத்துவின் 50 ஆண்டு பொன்விழாவை நிறைவாக்கியுள்ளார்.
    இந்த திட்டமிடலுக்காக நன்றிகள் கோடி!

    சிறு வேண்டுகோள்! அடுத்த வேதாளர் கலரில் வேண்டும்.

    ReplyDelete
  33. வேதாளர் கதையில் letters font size சற்று பெரிதாக போடலாமே தற்பொழுது உள்ளது கண்ணை strain செய்கிறது

    ReplyDelete
  34. இம்மாத இதழ்கள் வெள்ளியன்று கிடைத்தது சார்,முதல் புரட்டலில் எல்லா இதழ்களுமே நிறைவு,வேதாளர் மெகா சைஸில் மிரட்டுகிறார்...
    வெட்டியான் மேக்கிங் உண்மையில் மிரட்டல்...கையில் ஏந்திப் பார்க்கவே அழகோ அழகு...
    பல்வேறு பணிச் சூழல்கள்,உள்ளாட்சி தேர்தல் பணிகள்,அலுவலகம் சார்ந்த பணிகள்,உடல்நலன் சார்ந்த சிரமங்களால் இந்த மாத இதழ்களை வாசிக்க நேரம் தற்போது சாத்தியம் இல்லை...
    கிடைக்கும் நேரத்தில் புரட்டனும்...

    ReplyDelete
  35. உள்ளேன் ஐயா..!

    பெங்காலி கானகத்தில்...!

    ReplyDelete
  36. இன்றைய காலைப்பொழுது வேதாளரின் கானகத்தில் அவரோடு கழிகிறது. 1989ல் மிகவும் தாமதமாக காமிக்ஸ் வாசிப்பில் நுழைந்ததால் எனக்கு வேதாளரை ராணி காமிக்ஸில் தான் தெரியும். பின்னர் முத்துவில் (அந்த முத்து இதழ்கள் எல்லாம் நான் காமிக்ஸ் வாசிப்பில் நுழைந்த சமயத்திலேயே வெரி வெரி ரேர்.) வந்ததும் அறிவேன். இந்திரஜாலின் ஒரு இதழைக் கூட கண்டதில்லை. மேற்குறிப்பிட்ட இதழ்கள் எதுவுமே தற்போது வந்திருக்கும் முத்துவின் வேதாளன் ஸ்பெஷலின் அற்புத விருந்தை தரவில்லை என்பதே உண்மை. பழைய முத்து இதழ்கள் இருப்பதிலேயே சிறப்பு என்றால் தற்போதைய ஸ்பெஷல் ஒரு உச்சம். தமிழில் எனக்கு தெரிந்து இப்படி ஒரு அற்புதமான வாசிப்பு அனுபவத்தை இதற்கு முந்தைய வெளியீடுகள் வழங்கியதில்லை. நம்ம விஜயன் sir மிகவும் கதையை ரசித்து கையாண்டுள்ளது கண் கூடாக தெரிகிறது. hats off to you sir!

    எனக்குமே ஆச்சர்யமாக உள்ளது. வேதாளரை இப்படி ஒரு வாசிப்பு அனுபவத்தில் கண்டதால் மனம் உற்சாகம் அடைந்துள்ளது நேற்றிலிருந்து இரண்டு மூன்று கமெண்ட் இட்டுவிட்டேன் என்றால் பாருங்களேன். அனைத்து காமிக்ஸ் நண்பர்களுக்கும் நான் கூறிக்கொள்வது என்னவெனில், மனம் விட்டு சிரித்தால் வாழ்நாள் கூடும் என்பார்கள் வேதாளரை வாசிப்பதும் அதுபோல்தான் என்பேன். உண்மையில் 1990 களுக்கே சென்று விட்ட மாயை. அப்போது சிறுவனாக கடமைகள் ஏதுமின்றி எவ்வுளவு உற்சாகமாக காமிக்ஸ் வாசித்தோமோ அந்த நிறைவை இந்த வேதாளன் இதழ் எனக்கு தருகிறது. மின்னும் மரணம், இரத்தப்படலம் போல நம் வாசகர் மனதில் என்றும் நிலைத்திருக்கப் போகும் இதழ் இது.

    அடுத்த வேதாளர் ஸ்பெஷல் வண்ணத்தில் வந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. // மேற்குறிப்பிட்ட இதழ்கள் எதுவுமே தற்போது வந்திருக்கும் முத்துவின் வேதாளன் ஸ்பெஷலின் அற்புத விருந்தை தரவில்லை என்பதே உண்மை. //

      Agreed.

      I read இந்திரஜால் ஆனால் கதையோடு ஒன்றிப் போக மொழிபெயர்ப்பு மிகப்பெரிய தடை அதில்.

      Delete
  37. வேதாளரை தவிர அனைத்து இதழ்களையும் முழுவதுமாக படித்து முடித்தாயிற்று .எப்படி நீட்டித்து எழுதினாலும் ,எப்படி பட்ட வரிகளை கொண்டு நிரப்பினாலும் அதன் கருத்தின் சாரம்ஸம் அருமை அல்லது சூப்பர் என்பதாகவே இருக்கும்..

    எனவே ஒரு வரியில் முடித்து கொள்கிறேன் ..


    "அருமை"


    அடுத்து வேதாளர் நேற்று இரவு உறங்கும் முன் அனைத்து கதைகளையும் படித்து முடித்தாலும் ,வேதாளரை ஞாயிறுக்காக ஒதுக்கி இருந்தாலும் வேதாளரின் ஒரு கதையாவது படித்து விடலாம் என்ற ஆசையில் முதல் கதையை மட்டுமே படித்தேன்.டெலிபோன் ,கடுதாசி என பால்யகட்டங்களில் கதை நகர்ந்தாலும் கொஞ்சம் கூட போரடிக்காமல் விறுவிறுப்பாக சென்றது ..கதைகளை தொடர்ந்து படிக்க வேண்டும் என ஆசை வந்தாலும் ஞாயிறுக்கு என இதழ் வேண்டுமே என இதழை மூடி வைத்தேன் .காலையில் எழுந்தால் வேதாளரின் பல கதைகளை படித்தது போலவே ஓர் எண்ணம் ...என்னடா இது என யோசித்தால் கனவு .நீண்ட வருடங்களுக்கு பிறகு காமிக்ஸ் நாயகர் வேதாளருடன் கனவில் .அவ்வளவு மகிழ்ச்சி .இத்தனைக்கும் முத்துவில் வந்த வேதாளர் ஒரே ஒரு கதையை தான் நண்பரின் உதவியால் படிக்க முடிந்தது ..ராணிகாமிக்ஸ் மாயாவியாக ஆரம்பித்தில் ரசித்தாலும் அதன் பிறகு சுமாரான மொழிப்பெயர்ப்பால் மாயாவி என்றாலே காத தூரம் ஓடும் நிலைக்கு ஆளானேன்.இந்திரஜால் சொல்லவே தேவையில்லை தலைப்பே காத்தூரம் ஓட வைக்கும் ஆனால் தங்கள் மொழிப்பெயர்ப்பில் இப்பொழுதும் அந்த காலகட்ட கதைகள் ரசிக்க வைக்க முடிகிறது எனில் அதில் தான் லயன் முத்துவின் வெற்றியே..

    அதிலும் ஒரு கதை படித்ததிற்கே கனவில் நுழைந்தாயிற்று ..முழுவதுமாக படித்தால்...


    இனி படித்து முடித்து....

    ReplyDelete
  38. அண்டர்டேக்கர் ஓவியங்கள் சும்மா பின்னுது!

    கதையை படிக்கவே கவனம் போகமாட்டாமல் ஓவியங்களிலேயே லயிக்கச் செய்கிறது!!

    இப்படியே நீடித்தால் கௌபாய் கதைகளில் தவிர்க்க முடியாத தனி இடத்தை தனதாக்கி கொள்வான் இந்த வெட்டியான்!!

    எனது டாப் 5 கௌபாய்களில் 'அதிகாரி' மேலும் ஒரு இடம் சறுக்கிவிட்டார்!

    1. டைகர்
    2. ட்யூரங்கோ (இவரும் ஒரு படி கீழே போக வாய்ப்புகள் அதிகம்)
    3. அண்டர்டேக்கர்

    4. இளம் அதிகாரி (மட்டும்)
    5. இன்னொரு வெட்டியான்

    ReplyDelete
  39. ///அண்டர்டேக்கர்///

    சமகாலத்தில் வெளிவந்து மெகா ஹிட்டடித்துக் கொண்டிருக்கும் நாகயரை, நாமும் அதே காலத்தில் (தமிழில்) படித்துக் கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பே அலாதி ஆனந்தத்தை தருகிறது!

    நன்றி! நன்றி!!

    ReplyDelete
  40. //அண்டர்டேக்கர்//

    குழியை மூடும் முன் சின்னதாய் ஸ்தோத்திரம் சொல்ல வேண்டும் என்பது கம்பெனியின் எதிர்பார்ப்பு! அது ஆச்சா?

    இல்லை!

    ஏன்?

    உத்தரவு போட்டாவனும் அதைக் கேட்கப் போவதில்லை! செத்தவனும் கேட்கப் போவதில்லை! அலட்டிக் கொள்வானேன்?

    இந்த நாத்திகம் தான் ஒரு உற்சாகத்தையும், உந்துதலையும் உண்டாக்கிறது!

    (வழக்கமாக நெருங்கிய உறவினராய் இருந்தாலும், இறப்புக்கு போகும் நான் - கருப்புக்கு (காரியத்திற்கு) போவதில்லை! அதெல்லாம் வெட்டி வேலை என்பது என் எண்ணம்)

    போனை ஓரமாக வைத்தால் தான் கதையை நிம்மதியாக படிக்க முடியும்னு நினைக்கறேன்!

    பக்கத்திற்கு ஒரு கமெண்ட் போட வேண்டியதாகிவிடும்!

    ReplyDelete
  41. அழகான அட்டகாசமான அட்டைப்படம் !!!

    ஆச்சரியமான ஆர்ப்பாட்டமான உருவாக்கம் !!!

    இனிமையான கதைகள் இளம்பருவத்தை மலரச் செய்கின்றன !!!

    ஈர்க்கும் கதைகள் !!!

    உற்சாகமும் உத்வேகமும் தருகின்றான் வேதாளன் !!!

    ஊக்க சக்தியாய் வேதாளன் !!!

    எங்கும் வேதாளன் புகழ் பரவட்டும் !!!

    ஏக்கம் கொள்கின்றது மனது மற்றொரு வேதாளன் தொகுப்பிற்கு !!!

    ஐயமில்லை முத்து காமிக்ஸின் வேதாளன் வெற்றியில் !!!

    ஒளிர்கின்றான் வேதாளன் எங்கள் முத்துவில் !!!

    ஓங்குக எங்கள் வேதாளன் மகிமை !!!

    ஔடதமாய் வேதாளன் எங்களுக்கு !!!

    ஃ வாய் வேதாளன் விஜயன் சார் வாசகர்கள் நாங்கள் !!!

    ReplyDelete
  42. ///அண்டர்டேக்கர்///

    Sépia Mode கலரிங் ஒரு விதமான ஈர்ப்பை கூட்டுகிறது!

    வழக்கமாக மணிரத்னம் படங்களில் Blue sépia அதிகம் பயன்படுத்தியிருப்பார்கள்!

    அண்டர்டேக்கரில் Réd sépia coluring தூள் கிளப்புகிறது!

    ReplyDelete
  43. FFS இதழுக்கு மற்றொரு சிறப்பு உண்டு.
    சீனியர் எடிட்டர், எடிட்டர், ஜூனியர் எடிட்டர் மூவரும் சங்கமித்த இதழ் இது.
    ஒற்றை நொடி,ஒன்பது தோட்டா' தலைப்பு ஜூனியர் கைவண்ணம்.
    பேனா பிடித்தது ஆசிரியர்.
    அதில் தன் அனுபவங்களை பகிர்ந்தது சீனியர்.
    மூவரும் இணைந்தது, இந்த இதழுக்கே சிறப்பான ஒரு விஷயம் அல்லவா.

    ReplyDelete
  44. வேதாளர் - தயாரிப்பு தரம் உச்சம் தொட்டுள்ளது, இந்த தரத்திலான ஆங்கில புத்தகங்கள் நிச்சயம் சில பல ஆயிரங்களில்தான் இருக்கும்,

    அட்டைப்படம் குறித்து சொல்ல வார்த்தைகளே இல்லை, யானை படம் சற்று சொரசொரப்பாகவும், வேதாளர் படம் வழுவழுப்பாகவும் இருப்பதும், எழுத்துருக்கள் மின்னுவதும் ஆசிரியர் எவ்வளவு கவனம் செலுத்தி பார்த்து பார்த்து செய்திருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

    வாசகரின் ஒவ்வொரு பைசாவுக்கும் திருப்தியளிக்க நினைக்கும் ஆசிரியரின் எண்ணம்தான் இலவச வண்ணப் புத்தகம், Poster, Book Mark,

    இவையெல்லாம் நிச்சயமாக வாசகரை அதீத திருப்திபடுத்தவே, வரவு செலவு கணக்கு பார்த்தால் இவற்றை செய்ய இயலாது.

    Maxi Size And Paper Quality தேர்வுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் Sir,

    S70 அடுத்தடுத்த இதழ்களுக்கான எதிர்பார்ப்பு எகிறுகிறது,


    இந்த இதழுக்காக தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகில் என்றென்றும் நினைவு கூரப்படுவீர்கள் Sir,

    இப்படிக்கு

    கொடுத்த பணத்திற்கு மிக மிக மிக திருப்தியடைந்த ஒரு வாசகன்

    ReplyDelete
    Replies
    1. வரிக்கு வரி உடன்படுகின்றேன்.

      Delete
  45. வேதாளர்..

    மூன்று கதைகளை படித்தாயிற்று.!

    வாரிசைத்தேடி

    ஜூம்பாவைக் கொல்

    முகமூடித் திருவிழா

    கதைகளைப்பற்றி பிரஸ்தாபிக்க தேவையில்லை.. வேதாளர் கதைகள் எப்படியானவை என்பது நமக்கு தெரிந்ததுதானே.!
    இவ்விடத்தில் நம்மை பொங்கிப் புளகாங்கிதம் அடையச்செய்தது தயாரிப்புத்தரமே..!

    தொகுப்பில் முதல் வேதாளன் கதை இடம்பெற்றிருந்தால் (முதல் கதையாக) முதன்முதலாக வேதாளரை அணுகும் நண்பர்களுக்கு கூடுதல் பிடிமானம் ஏற்பட்டிருக்கும்.. அது மிஸ்ஸிங்.!

    வேதாளர் என்பவர் யார்..? அவருக்கு மரணமே இல்லையென்பது எதனால்.. எப்படி.?? என்பதற்கான விளக்கங்களை தெரிந்துகொண்டால் புது வாசகர்களுக்கும் தொடர் மீது ஈர்ப்பு அதிகரிக்கும் என்பது சிறியேனின் மிகச்சிறு கருத்து..!

    (முதல் வேதாளன் கதை.. இந்திரஜாலில் படித்தது.. அதன் பின்னர்தான் எனக்கு வேதாளர் தொடரில் ஈடுபாடு ஏற்பட்டு தேடித்தேடி படிக்கத் தொடங்கினேன்.!)

    ReplyDelete
  46. Replies
    1. களமெங்கும் காதல் :

      போர்முனையில் குதிரைகளையும் பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் தாடிவைத்த தடிப்பசங்களையும் மட்டுமே பார்த்துக்கொண்டு விரக்தியில் திரியும் சிப்பாய்களுக்கு உற்சாகமூட்டவேண்டி.. நர்ஸ் வேலைக்காக நச்சுன்னு நாலு ஃபிகர்களை இறக்குகிறார் ஜெனரல்.!

      காயம் பட்டவர்கள் மட்டுமே நர்சுகளை அணுகமுடியும் என்பதால்.. குருதிப்புனல் கமலஹாசன் ரேஞ்சுக்கு அடிபட்டுவிட்டதாய் புளுக ஆரம்பிக்க.. அவர்களை ஒழுங்குபடுத்தி உண்மையாக அடிபட்டவர்களை மட்டும் உள்ளே அனுமதித்து.. புளுகுணி ஆசாமிகளை பிட்டத்தில் மிதித்து வெளியேற்ற, முரட்டு சிப்பாய் ஒருவனை லேடியாக்கி மிஸ் ஹிப்போ என்ற பெயரில் பணியலமர்த்துகிறார் ஜெனரல்.!

      மிஸ் ஹிப்போ ஆண் எனத் தெரியாமல் ரோமியோ ரேஞ்சுக்கு லவ்வுகிறார் கேப்டன் ஸ்டார்க்..! அதற்காக அவர் அடிக்கும் லூட்டிகள் செம்ம சிரிப்பு.!

      மிஸ் ஹிப்போ பற்றிய ரகசியத்தை சார்ஜெண்ட் ரூபி கண்டுபிடித்துவிட.. அதற்கு பரிசாய் மிஸ் ஹிப்போவுக்கு பதில் மிஸ் ரைனாவாக ரூபி களமிறங்க வேண்டி வருகிறது..! மிஸ் ஹிப்போ காணாமல் போய்விட்டதால் காதல் தோல்வியில் ஸ்டார்க் தேவதாஸ் ஆகிறார்..!

      இதற்கிடையே நம்ம ஸ்கூபிக்கு ஒரு நர்சுடன் காதல் மலர.. கல்யாணமாகி ஹனிமூன் போகும் வழியில் எதிரிகளின் திட்டம்பற்றி கிடைக்கும் தகவலை படைப்பிரிவுக்கு கொண்டுவந்து சேர்க்கிறார் ஸ்கூபி..! அதற்கு பரிசாய் மிஸ ரைனாவுக்கு பதிலாக ஸ்கூபிக்கு அதே நர்சு வேடம் கிடைக்க.. அவ்வை ஸ்கூபியாகி காதலி நர்சோடு கலகலப்பாய் பொழுதை ஓட்டுகிறார் ஸ்கூபி.!

      ஸ்கூபியின் குதிரை போல்கா ஆங்காங்கே ஜாலி ஜம்பரை நினைவுபடுத்துகிறது.!

      களமெங்கும் காதல் நிறைவான நகைச்சுவை பொழுதுபோக்கு..!

      Delete
  47. Edi Sir..
    Smashing 70 - வேதாள மாயாத்மாவின் கதைகளை படித்து மனம் லயித்து போய் இருக்கிறேன்.ஒவ்வொரு கதையாக பக்கம் பக்கமாக ரசித்து படித்து வருகிறேன்.

    "வாரிசுக்கு வலை" கதையில் எனக்கு கீழ்கண்ட சில விஷயங்கள் குழப்பமாக உள்ளது.

    1) பக்கம் 98-ல் காதலர்களான லானும், லைலாவும் தங்கள் தந்தைகள் இருவரும் பரம எதிரிகள் என்பதால் ஓடிப்போய் திருமணம் செய்யலாம் என இருவரும் பேசி முடிவு செய்கிறார்கள். ஆனால்,பக்கம் 100-ல் லான் "என் தந்தையின் பரம எதிரியின் மகளா நீ? உன்னை நம்பி மோசம் போய்விட்டேன்,நானொரு முட்டாள்" என்று அதிர்ச்சியுடன் கேட்கிறான். அது எப்படி?

    2)பக்கம் 100-ல் ஜெனரல் பாபாபு "அதிர்ச்சியாக இருக்கிறதா லைலா? உன் அன்பு தந்தைக்கு ஒரு முத்தம் கொடுக்க தோன்றவில்லையா?" என்று லைலாவை பார்த்து கேட்கிறார். ஆனால் பக்கம் 102 -ல் லான் "இரவில் நாங்கள் அலுவலகத்தை மூட இருந்த கடைசி தருணத்தில்" என்று நடந்ததை வேதாளரிடம் சொல்லும்போது இடம்பெற்றுள்ள படத்தில், ஜெனரல் பாபாபு துப்பாக்கியை காட்டி லைலாவை மிரட்டி ஆவணங்களை எடுப்பதாக உள்ளது. அப்போது லைலாவுக்கு அவர் தன் தந்தை என்று அடையாளம் தெரியாதா? கொள்ளையடித்தது மற்றும் லானை கடத்தியது யார் என்றும் தெரிந்துள்ளபோதும் உயர் அதிகாரிகளிடம் ஏன் சொல்லவில்லை?

    ஆனால் பக்கம் 98ல் வேதாளர் லைலாவிடம் "உன் தந்தை எங்கிருக்கிறார்" என்று கேட்க , அதற்கு லைலா "அவர் இந்துமாக்கடலில் தனித்தீவில் இருக்கிறார்" என்று பதில் சொல்கிறார். அதற்கு வேதாளர் "உன் தந்தை இங்கேதான் இருக்கிறார்" என்று சொல்ல, லைலா "அப்படியா" என்று ஆச்சரியமாக கேட்கிறார்.இது எப்படி?

    லைலா பொய் சொல்கிறாரா? தந்தைக்கு உடந்தையா? அப்படி என்றால் லானுக்கும் லைலாவுக்கும் திருமணம் எப்படி நடக்கிறது? பக்கம் 103 -ல் திருமண செய்தி கேட்டு ஜெனரல் பாபாபு "தூத்தேரி"என்று கோபப்படுகிறாரே?

    எனக்கு கொஞ்சம் குழப்பமாக உள்ளது..

    ReplyDelete
  48. Edi Sir..
    மேகிகேரிஸன் உண்மையிலேயே செம தில்லான பார்ட்டிதான். தலைப்புக்கு நியாயம் செய்கிறார்.போலிஸ் உடன் தொடர்பு வைத்து கொள்வது என்ன?.. உடனே ட்விஸ்ட் அடித்து வில்லன் ஆளுடன் ஒட்டி கொள்வது என்ன?.. செம தில்லான புள்ளைதான்.கிளைமாக்ஸ் ல 50000 பவுண்டுடன் வில்லன் ஆளுடன் லவ்வரே என்று இழைவது என்ன?. 50000 பவுண்டு தீர்ந்தவுடன் அந்த "நாய்சங்கிலி லவர்" கதி என்ன ஆக போகுதோ என யோசிக்க வைக்கிறாள் மேகி..

    ReplyDelete
    Replies
    1. Edi Sir..

      S'70 - வேதாள மாயாத்மாவின்
      9 சாகசங்களையும் படிச்சு முடிச்சாச்சு.. 😍🥰😘💪

      1)வாரிசைத்தேடி
      2)ஜூம்போவை கொல்
      3)ஒரு முகமூடித் திருவிழா
      4)கானக ஒலிம்பிக்ஸ்
      5)வாரிசுக்கு வலை
      6)வேதாளரின் மேடை
      7)க்ரைம் ஸ்கூல்
      8)காற்றில் கரைந்த Daddy
      9)ஆழ்கடலில் மயானம்


      A4 size ல அட்டகாசமான பேப்பர்ல அருமையான 9 கதைகள்..

      *அத்தனையும் நவரத்தினங்கள்*

      சின்ன வயசுல வேதாளர் கதை ஒருகதை, ரெண்டுகதைதான் சேர்ந்தாப்ல படிக்கிற வாய்ப்பு கிடைக்கும். இப்ப 9 கதைகளை ஒட்டுக்கா படிச்சவுடனே சின்னவயசு ஏக்கம் தீந்துருச்சுங்க.

      Delete
  49. வேதாளர் மனதைக்கவந்துவிட்டார். தயாரிப்பு மேன்மை மற்றும் மொழியாக்க தனித்துவம் ஆரம்ப சில பக்கங்களை வாசிக்கும்போதே தெரிகிறது எனினும் கதாசிரியர் லீ ஃபால்க்கின் நேர்த்தி, நுணுக்கம் மற்றும் ஆழம் முதல் கதையை வசித்து முடித்ததும் வியக்க வைக்கிறது. வாரிசைத் தேடி கதையை மட்டுமே வாசித்தேன், உள்ளே இழுத்துக் கட்டிபோட்டுவிட்டது.

    சிறு வயதில் நான் வேதாளர்/மாயாவி கதைகளை விரும்பி வாசித்ததில்லை, படிக்க வேறு எதுவும் கிடைக்காத நேரங்களில் அரை மனதுடன் ராணி காமிக்ஸில் வாசித்துள்ளேன். கானகம் மற்றும் வாக்கர் / வேதாளரின் குணாதிசயம் ஆழ்மனதில் வேரூன்றி இருந்தாலும் பெரிதாக கண்டுகொள்ளாமலேயே இருந்துள்ளேன், phew..

    மிகுந்த சிரத்தையுடன் இந்த 9 கதைகளை மீட்டு அளித்ததற்கு நன்றிகள் சார், என்னளவில் இதுவொரு எதிர்பாராத பொக்கிஷம்.

    ReplyDelete
  50. Same here. Both Phantom and Tex Willer - I did not bother about as a kid. They were lying around as a set of monthly books and I would resort to them as last option. However post 2012 with SIGAPPAAI ORU SOPPANAM it was different. I started loving Tex and eventually Phantom more - I think in my case it is due to the relaxation they provide due to being MGR formula stories which can veer us away from routine Tiredness - and there are endless stories with the same MGR formula to enjoy !!

    Dear Editor,

    Please consider color reprint of SIGAPPAAI ORU SOPPANAM - may be for upcoming Bookfair ?

    ReplyDelete
  51. சார் நானும் ஷ்மாஜிங் 70'ஸ் மெம்பர் தான். புத்தகம் கிடைத்தது.
    கதைகள் ஓகே.
    ஆனால் சுமார் 200 பக்கங்களுக்கு 450 ரூபாயா? ரொம்பவே அதிகமாக தெரிகிறது.
    200 கருப்பு வெள்ளை பக்கங்களுக்கு இவ்ளோ விலையா?
    இலவச இணைப்பு சூப்பர். ஆனால் அதன் விலையும் 100ரூபாய் என்று உள்ளது?
    இலவசம் ஆனாலும் இதனை விலையா ?

    விலைகளில் இப்பொழுது லைன் காமிக்ஸ் ரொம்ப அதிகமாக தோன்றுவது எனக்கு மட்டும் தானா ?

    ReplyDelete
    Replies
    1. Classic comics are always costlier due to their popularity and hence the reprint cost they command in the market. An English book of similar stories and print and 250 pages is 5000 INR minimum EVEN considering the fact that it is printed tens of thousands of copies.

      /* இலவச இணைப்பு சூப்பர். */

      It is free for subscribers but has a worth (art paper) which is worth 100/- which is what is mentioned in the cover.

      Delete
    2. எனக்குப் புரியலீங்க சார் ; 6 மாசமா வந்து கொண்டிருந்த அத்தனை விளம்பரங்களிலும் - பக்க எண்ணிக்கை ; விலை என்ற சகலத்தோடுமே போட்டிருந்தோம். அதைப் பார்த்த போது தோன்றாத கேள்வி இன்றைக்குத் தோன்றுவானேன் ? அது மட்டுமன்றி உங்கள் கருத்து அதுவே எனில், அதைத் தாராளமாய்ப் பதிவிடலாமே - துணைக்கு ஆள் தேடுவானேன் சார் ?



      And விலையின்றி தரும் புக்குக்கு "விலை ஜாஸ்தி" என்ற விமர்சனத்தை நான் என்ன மாதிரி எடுத்துக் கொள்வதென்று தெரியலை !

      Delete
    3. // 6 மாசமா வந்து கொண்டிருந்த அத்தனை விளம்பரங்களிலும் - பக்க எண்ணிக்கை ; விலை என்ற சகலத்தோடுமே போட்டிருந்தோம். //
      ஆமாம் சார் நான் தெரிந்து தான் சந்தா கட்டினேன் . ஆனால் புத்தகம் பார்த்த பின் விலை அதிகமாக தோன்றியது. மேலும் மொழிபெயர்ப்பு ஒரு flow'வாக இல்லாமல் தந்தி படிப்பது போல் இருந்தது .
      உங்களுக்கு நான் சொல்வது புரிகிறதா? Strip கதைகளின் காரணமாகவா?


      //விலையின்றி தரும் புக்குக்கு "விலை ஜாஸ்தி" என்ற விமர்சனத்தை நான் என்ன மாதிரி எடுத்துக் கொள்வதென்று தெரியலை ! ///
      சார் விலையின்றி தரும் புத்தகத்திற்கு 100 ருபாய் என்று இருந்ததால் தான் கேட்டேன். NOT FOR SALE என்று எழுதியிருக்கலாமே

      ///துணைக்கு ஆள் தேடுவானேன் சார்? // மன்னிக்கவும் சார்

      Delete
  52. This comment has been removed by the author.

    ReplyDelete
  53. பர பர நகரத்து சூழ்நிலையை விட்டு பெங்காலி காட்டில் ஒரு சுற்றுலா போனது போல இருக்கு ஒரு புதிய அனுபவம் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு.

    புத்தகம் பெரியதாக இருந்தாலும் கையில் தூக்கி படிப்பதற்கு ஏற்ற வகையில் எடை குறைவாக இருந்தது ஒரு கூடுதல் பிளஸ்.

    ஆசிரியருக்கு ஒரு சின்ன வேண்டுகோளும் கூட, அடுத்த வேதாளர் மாக்ஸி சைஸில் சித்திரங்களும் கொஞ்சம் பெரிய அளவில் இருந்தால் கூடுதல் பலமாக இருக்கும்.
    மற்ற வகையில் தயாரிப்பு தரம் அற்புதம் தான்.

    ReplyDelete
  54. தி அண்டர்டேக்கர் – ஒரு வெள்ளைச் செவ்விந்தியன்

    கதை, சித்திரங்கள், வண்ணம் என்ற முப்பரிமாண எல்லைகளின் உச்சத்தை முழுவதுமாகத் தொட்டு நிற்கிறது இம்மாதம் வெளிவந்திருக்கும் அண்டர்டேக்கரின் வெள்ளைச் செவ்விந்தியன். லான்ஸ் ஸ்ட்ரைக்லேண்ட் ஏன் ஜோனாஸ் க்ரோ ஆனான்? … அந்த ஸ்கல்ஹில் படுகொலைகள் பற்றிய மர்மம் என்ன? … இதெல்லாம் அண்டர்டேக்கரின் இறந்தகாலத்தில் புதைந்திருக்கிற இரகசியங்கள். இது குறித்த தகவல்களை ஆங்காங்கே தூவிக்கொண்டே ஒவ்வொரு ஆல்பமும் நகர்ந்து செல்கிறது. முழு முடிச்சே இன்னும் பிடிபடவில்லை. அதை எப்போது அவிழ்க்கப் போகிறார்கள் என்பது படைப்பாளிகள் மட்டுமே அறிந்த விடை.

    இனி இந்த ஆல்பத்துக்கு வருவோம்… டக்ஸனின் பெருந்தனக்கார விதவைப் பெண்மணியின் ஒற்றை மகன் அபாச்சே செவ்விந்தியனாக மாறுவதன் பிண்ணனி என்ன? அவன் இறப்பை அடுத்து உடலைத் தேடி கொண்டுவரச் செல்லும் அண்டர்டேக்கரின் பால்ய நண்பனுடைய குழுவின் நிஜமுகம் என்ன? அந்த வெள்ளைச் செவ்விந்தியனின் மரணத்தில் மறைந்திருக்கும் மர்மம் என்ன? அவனுக்கும் அபாச்சேப் போராளி சால்வாஹேக்கும் உள்ள தொடர்பு என்ன? என கதை சுறுசுறுவெனப் பற்றிக்கொண்ட திரிபோல பயணிக்க ஓவியங்களும் வண்ணமூட்டலும் அதற்கு சற்றும் சளைக்காமல் உடன்வருவது அட்டகாசம்!

    “உத்தரவு போட்டவனும் வந்து கேட்கப் போவதில்லை. செத்தவனும் காதுகொடுக்கப் போவதுமில்லை! பின்னே அலட்டிக் கொள்வானேன்?” போன்ற அண்டர்டேக்கரின் வசனங்கள் மொழிபெயர்ப்பின் லாவகத்தையும் கதாபாத்திரத்தின் தன்மையையும் ஒருங்கே வெளிப்படுத்துகின்றன.

    கதையைப் படித்து முடித்ததும் அண்டர்டேக்கரின் அடுத்த ஆல்பம் எப்போது வரும் என்று எதிர்பார்க்க வேண்டியதாகிப் போகிறது.

    வெள்ளைச் செவ்விந்தியன் 10/10.

    ReplyDelete
    Replies
    1. ///“உத்தரவு போட்டவனும் வந்து கேட்கப் போவதில்லை. செத்தவனும் காதுகொடுக்கப் போவதுமில்லை! பின்னே அலட்டிக் கொள்வானேன்?”///

      செம்ம டயலாக்!

      Delete
    2. First time ever I was totally impressed with an Undertaker album ! Awesome !!

      Delete
    3. இதுவரையிலுமான ஒவ்வொரு அண்டர்டேக்கர் ஆல்பத்துக்கும் அவர்கள் தேர்வு செய்திருக்கும் களம் ஒவ்வொன்றுமே செம வித்தியாசமானது சார் ! அவையே வெற்றிக்கான முதற்படி என்பேன் !

      Delete
  55. Feb books are proving ultimate sir. Undertaker was excellent - 9/10. The free book was also excellent - 9.5/10. Now jumpting into Bluecoats.

    ReplyDelete
    Replies
    1. The creative team behind The Undertaker is amongst the best of the current Franco-Belgian crop sir...very highly rated !

      Delete
  56. " ங்கறது தமிழ்ல கொஞ்சம் கிளுகிளுப்பான சமாச்சாரம்தான்.
    ஒரு வெள்ளையனுக்கும் ஒரு பழங்குடி இன பிகருக்கும் டாவுங்கறதால ரொமாண்ட்டிக்கா அந்த " ச் " வந்துச்சான்னா தெரியலே..

    ஒரு வெள்ளைச் செவ்விந்தியன் - ங்கறதுல ச் வருமா?

    வெள்ளை சாமந்தி, வெள்ளை சேவல், வெள்ளை செவ்வந்தி, வெள்ளை கொக்கு என எங்கேயும் ஒற்று வருவது போல் தெரியவில்லை..

    என்னா சொல்றீங்க? வடையைத் திங்க சொன்னா துளையை ஏன் எண்ணுறங்றீங்களா?

    அதுவும் சர்தான்!!!!!

    ReplyDelete
    Replies
    1. ஒரு வெள்ளை செவ்விந்தியன்..

      தலைப்பே டக்கர்தான்..கூட்டம் சேர்ற இடத்தை நோக்கி இழுக்கப்படற கோவிட் வைரஸ் கணக்கா இந்த தலைப்பே கவர்ந்து இழுக்குது..

      ஏன்னா இது முரண் தொடை..ம்ஹூம்.சரியா படிங்க .கிரண் தொடை இல்ல...(விந்திய மலைக்கு அப்பாலேயும் சரி இப்பாலேயும் சரி..இருக்கற நடிகைகள் இடை ,தொடை பத்தி விவாதிக்கறது இந்த விமர்சன கட்டுரையின் வரம்புக்கு அப்பாற்பட்டது...)

      முரண் தொடைன்னா

      காலையும் நீயே மாலையும் நீயே

      முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

      பொய்ம்மையும் வாய்மையுடைத்து புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்


      நிறமும் கூடத்தாங்க

      குமரகுருபரர் இயற்றிய சிதம்பர செய்யுட்கோவையின் 28 - ம் பாடல் ஆரம்பத்தில் வர்ற மாதிரி

      "கருமிடற்றன் செஞ்சடையன் வெண்ணீற்றன் என்னும் "

      இந்தப் பாடலில் கருப்பு, சிவப்பு & வெள்ளைன்னு வர்றதால முரண்தொடை..

      ( மேலே சொன்ன 3 வண்ணம் வர்றதால ஏதோ ஒரு கழகப் பிரசாரப் பாடல்னு நினைச்சிராதீங்க..
      சிவனைப் பத்தி பாடறாரு)

      என்ன சொல்றீங்க?

      ஓ! இது தமிழ் இலக்கோண ஆராய்ச்சி தளமில்லைங்கறீங்க..

      நெசம்தானுங்க ...

      வெள்ளை செவ்விந்தியன் அப்டீங்கறதுல ஒரு கிறக்கம் வந்ததுங்க...

      உத்து பாத்தமுன்னா நமக்கு இது புதுசு இல்லைங்கற மாதிரி தோணும்


      நவஹோ செவ்விந்திய தலைவனா நம்ம டெக்ஸ் இருக்காருல்ல..

      ஆனாக்க டெக்ஸ் -க்கு லிலித் மேல ஒண்ணும் லவ்ஸ் இல்லீங்க..
      அப்பத்திக்கு...

      கானக கறுப்பினத்தார்க்கு ஒரு வெள்ளைக்காரர் தலைவரான்னு நம்ம வேதாளரைப் பத்தி கூட விமர்சிப்பாங்க..

      வெள்ளைக்கார சிறுவர்களை கடத்தி போய் செவ்விந்தியனா மாத்தி வளர்த்த சம்பவங்களும் உண்டுதான்

      நம்முடைய பொருளாதார எழுச்சி , அரசியல் ஐடியாலஜி பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த பிரிட்டிஷ் அரசு நம்மளை ஆண்டபோது உருவான இந்திய தேசிய காங்கிரஸ் ஸ்தாபகர்களில் முக்கியமானவர் ஆங்கிலேயரான ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்..

      இப்படி பல முரண்கள் இருந்தாலும் தன்னுடைய கலாச்சாரமே புடிக்காம அப்பா கோடீஸ்வரரா இருந்தாலும் அந்த வசதியும் புடிக்காம இயற்கையோடு ஒன்றி நியாய வாழ்க்கை வாழும் ஒரு சிரிகாகுவா இனத்தவரோடு சேர்ந்து செவ்விந்தியனா மாறி வாழ்வு நடத்தும் காலெப் மனதை வசீகரிக்கிறான்..

      காலெப் இறந்துவிட்டாலும் அவனுடைய உடலுக்காக தனது சிறுவயது மகனின் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் சல்வாஹே மனதை கொள்ளை கொள்ளுகிறாள்...

      இவர்களுக்காக போராடும் ஜோனாஸ் க்ரோ வாசகர்களின் மனதில் ஆழப் பதிகிறான்..

      அண்டர்டேக்கர் கதைவரிசையில் இதுவரை வந்த கதைகளில் சிகரம் தொட்டுநிற்கும் கதை இதுவே..

      9.7/10

      Delete
    2. கதையே ஒரு முரண்தொடையா மாறுகிறது எப்பன்னா

      அப்பா காலெப் பார்க்ளே வெள்ளையனாய் பிறந்து செவ்விந்தியனாக இருக்கப் பிரியப்பட

      மகன் சாட்டோ பார்க்ளே செவ்விந்தியனாய் பிறந்து வெள்ளையனாய் வாழ "முடிவெடுக்கப்படுவதுதான்"..


      கதையில் இன்னும் பல கதா பாத்திரங்கள் பற்றி எழுதிக் கொண்டே போகலாம்...

      ஆனாலும் வாசிப்பவர்கள் இம்சைப்படுவதற்கும் ஒரு threshold உண்டல்லவா?

      Delete
  57. களமெங்கும் காதல் 9/10

    ஜம்போவின் அடுத்த இதழான போர்முனையில் தேவதைகள் தலைப்பு புளுகோட்ஸின் இவ்விதழுக்கும் பொருந்தி வருவது வியப்பு

    ReplyDelete
  58. செய்வன தில்லாய்ச் செய்...9/10

    அறிந்திராத பாதையில் எதிர்பாராது வந்த இன்ப வியப்பை அளித்த கதை..


    ReplyDelete
  59. வேதாளர்
    க்ரைம் ஸ்கூல், காற்றில் கரைந்த டாடி கதைகள் மட்டுமே பாக்கியுள்ளது.

    ஏறத்தாழ சமகால மேகி கேரிஸன், வன்மேற்கு கதையாயினும் வீச்சுடன் எழுதப்பட்டு சித்திரப்பாணி, நவீன கலரிங்குடன் மனமயக்கும் அண்டர்டேக்கர் ஆகியவற்றை படித்துவிட்டு வேதாளர் படிக்கையில் நெளியத்தான் வேண்டியிருக்கிறது.

    முயற்சி செய்துதான் பார்த்தேன்.
    ஆஸ்திரேலியாவிலிருந்து சில சிக்னேச்சர் எடிஷன்களை கூட சில வருடங்கள் முன் தருவித்தேன்..

    ஒரே இதழோடு சரி...பிற இதழ்களை பிரிக்க கூட இல்லை...

    ஆனால் தமிழில் வாசித்தோம் என்ற ஆத்ம திருப்தியாவது இதில் கிட்டுகிறது...

    ReplyDelete
    Replies
    1. Phantom is pretty much like Tex Doctor - but even more simplistic and straight line. Will be like this only - but THIS indeed is the addiction. And if you dont like American stories of Phantom - try European - will be like chewing raw meat !

      Delete
  60. அண்டர்டேக்கரின் 'ஒரு வெள்ளைச் செவ்விந்தியன்' வாசித்து விட்டேன். ஆதிக்க மேட்டுகுடி பெண்ணுக்கும், எளிய சிறுபான்மை போராளி பெண்ணுக்கும் இடையே அவரவர் நியாயத்தை நிலைநாட்ட நிகழும் ஒரு வித பாசப் போராட்டம்தான் கதையின் மையம். அதை பொறி பறக்கும் விதத்தில் மிக நேர்த்தியாக சொல்லியுள்ளனர். தமிழில் விஜயன் sir மிக சிறப்பாக கையாண்டுள்ளார். குறிப்பாக.. பக்கம் 53ல் வரும் சல்வாஹே பேசும் இடங்கள் அனைத்தும் நெஞ்சை தொடுபவை, அதில் அந்த மண்ணின் மைந்தர்களின் உள்ளக்குமுறல் அடங்கியுள்ளது. நீண்ட பறந்து விரிந்த அமெரிக்காவில் வெள்ளையர் கால்வைக்கும் முன்னர் எவ்வுளவு நிம்மதியான வாழ்வு வாழ்ந்து வந்தனர் என்று அந்த வார்த்தைகளின் வழியே வெளிபடுகிறது. கதைகளின் வாயிலாக படிக்கும்போதே மனம் பதறுகிறதே. ஆதிக்க வெள்ளையர் கால் வைத்ததும் அவர்கள் எவ்வுளவு இன்னல்களை அனுபவித்திருப்பர்.

    இத்தாலி கதாசிரியர்களை விட பிரெஞ்ச் கௌபாய் கதைகளை அதன் கதாசிரியர்கள் அந்த வன்மேற்கு நிலவெளிகளின் கொடூரங்களை படம் பிடித்து நம் கண்முன்னே நிறுத்துவது போல படைப்பதாக எனக்கு தோன்றுகிறது. உதாரணமாக, கேப்டன் டைகர். பௌன்சர். தற்போது அண்டர்டேக்கர். விதிவிலக்காக இத்தாலியின் ஒரு வீரனின் கதையும் உண்டு. அண்டர்டேக்கர் மீண்டும் மீண்டும் மறுவாசிப்புக் உள்ளாக போகும் கதைகள் என்பது மட்டும் உறுதி.

    இந்த பிப்ரவரியில் வந்த வேதாளர் மற்றும் அண்டர்டேக்கர் இரண்டுமே அருமை! (ப்ளூகோட் எனக்கு இன்றுதான் தாமதமாக வந்துள்ளதால் அதை இன்னும் வாசிக்க வில்லை.)

    ReplyDelete
    Replies
    1. அருமையாக எழுதியுள்ளீர்கள். Excellent

      Delete
    2. ///இத்தாலி கதாசிரியர்களை விட பிரெஞ்ச் கௌபாய் கதைகளை அதன் கதாசிரியர்கள் அந்த வன்மேற்கு நிலவெளிகளின் கொடூரங்களை படம் பிடித்து நம் கண்முன்னே நிறுத்துவது போல படைப்பதாக எனக்கு தோன்றுகிறது.///

      சூப்பர்!

      எனக்கும் இத்தாலிய கதைகளை விட பிரெஞ்சுக் கதைகள் அதிக ஈர்ப்பை உண்டாக்குகின்றன!

      Delete

  61. அண்டர்டேக்கர்

    ஒரு வெ.செவ்விந்தியன்

    முதன்முறையாக வன்மேற்கு களத்தில் மனோதிடத்துடன் போராடும் ஒரு அபாச்சே பெண்போராளியை சந்திக்க நேர்ந்தது..

    பழிவாங்கும் பாவையில் கூட அப்பாவை பின்புலத்தில் இருக்க அதிரடியில் இறங்குவது ஆண்களே.

    தேஷா கூட சிக்கலில் மாட்டி சிறைப்படுவதும் டெக்ஸ் வந்து விடுவிப்பதும் வாடிக்கையாய் போனது..


    சல்வாஹே ஒரு வயோதிகனை மட்டும்துணையாய்க் கொண்டு தனியாளாய் நின்று போராடத் துணிவது புதுமையானது..ஜோனாஸ் க்ரோ இணைவது அவள் விருப்பத்தினால் அல்ல...

    வன்மேற்கில் பெண் செவ்விந்திய போராளிகள் உண்டா என ஆராயத் துணிந்தால் மேற்கத்திய திரைப்படங்களும் சரி, சித்திரக் கதைகளும் சரி, புதினங்களும் சரி இவர்களை முதன்மைப் படுத்தவில்லை எனப் புரிகிறது..

    எண்ணிலடங்கா பெண் போராளிகள்
    இருப்பினும் ஒரு சிலரை இங்கு குறிப்பிட விழைகிறேன்.இவர்கள் வரலாற்று ஏடுகளில் இடம் பெற்று இருப்பவர்கள்

    1. Buffalo calf road woman ..செயன்னீ போராளி..லிட்டில் பிக் ஹார்ன் சண்டையில் இவள் ஜெனரல் கஸ்டரை கொன்றதாக கூறப்படுகிறது..


    2.Pretty nose..அரபாஹோ போராளி. இவளும் லிட்டில் பிக் ஹார்ன் சண்டையில் பங்கெடுத்தவளே..

    3. Lozen.. சிரிகாகுவா அபாச்சே .செகன்னீ உட்பிரிவை சார்ந்தவள்.
    ரைபிளை இரு கரங்களிலும் உயர்த்தி கொண்டு இவள் குதிரை மேல் ஆரோகணித்து வருவது காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும் அப்போது சிறுவனாக இருந்த ஒருவன் வர்ணித்து இருக்கிறான்.
    ஜெரோனிமா குழுவோடு இவள் இணைந்து எடுத்த படம் இணையத்தில் உள்ளது..

    4. Victoria...Lozen -ன் தமக்கை ..போராளிக் குழுவின் தலைவியும் கூட..

    5.Dahteste ... மெஸ்கலாரோ அபாச்சே.
    Lozen - உடன் எப்போதும் இணைந்தே போராடியவள்...ஆங்கிலம் கற்றுக் கொண்டவள்...

    6.Gouyen. . அபாச்சே...நிஜமாகவே பழிவாங்கிய பாவை..1870-ல் இவளுடைய கணவன் ஒரு கமான்சே குழு தாக்குதலின்போது கொல்லப் பட அக்குழுவை பின்தொடர்ந்து சென்று அவர்கள் வெற்றி நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது அவர்களிடையே ஊடுருவி தனது கணவனின் மண்டைத் தொலியை இடைவாரில் அணிந்து ஆடிக் கொண்டிருந்த கமான்சே தலைவனை மயக்கி அவனது அறையில் அவனை கொன்று அவனது மண்டைத்தொலியை உறித்து ,அவனது இடைக்கச்சை , காலணிகளை மட்டுமல்லாது அவனுடைய குதிரையையும் கவர்ந்து வந்து கமான்சே தலைவனின் மண்டைத் தொலியை தன் கணவனின் சமாதியில் தொங்க விட்டாள்..இவளும் ஜெரோனிமா குழுவில் இணைந்தவளே..

    7. Pine leaf aka Bianwacheeitchish

    Gros Ventres இனத்திலிருந்து கடத்தப்பட்டு க்ரோ இனப் போராளியாக உருவெடுத்தவள்..

    8.Running Eagle...ப்ளாக்ஃபீட் இனப் போராளி...

    9. Osh-Tisch (meaning Finds them kills them) க்ரோ இனப் போராளி..( two spirits leader..


    இவர்கள் ஒவ்வொருவருக்கும் விரிவான உண்மைக் கதைகள் உண்டு..

    இதல்லாது இன்னும் எத்தனையோ பேர்...

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசம் டாக்டர் சார் அருமையான தகவல்கள்.

      Delete
  62. வேதாள மாயாத்மா வந்துட்டார்...
    நான் காமிக்ஸ் படிக்க துவங்கியது 2வது படிக்கும்போது.. ராணி காமிக்ஸ்தான் நான் முதலில் படிக்க துவங்கிய காமிக்ஸ்.
    அதில் முதல் தர நாயகர் முகமூடி வீரர் மாயாவி..
    பலமுறை இங்கு வேதாளர் என்ற மாயாவி பற்றிய discussions நடக்கும்போது (எப்போதும் போலவே ) silentஆக கவனிப்பது வழக்கம்.
    நமது ஆசிரியரின் மொழியாக்கத்தில வேதாளர் எப்படி இருப்பார்?
    எப்படி கதை இருக்கும் என கற்பனை செய்வதுண்டு.
    ராணி காமிக்ஸ்ல் ரொம்ப சாதாரணமக கதை, மொழிநடை எல்லாமே சாதாரணமாக இருக்கும்..
    இந்திராஜால் காமிக்ஸ்லும் அதே நிலமைதான்
    (Bith are strictly my opinions and no offense to anyone or anything)
    வேதாள மாயாத்மாவை அவரின் அதே original கெத்தில் பாக்கணும்னு ரொம்ப நாள் ஆசை.. ஒரிஜினல் ஆங்கில காமிக்ஸ்களில் வருவதுபோல..
    இன்று அது நிறைவேறியது...

    Thanks a ton editor sir... For making a childhood dream come true and giving us a special Phantom - the true Phantom - the ghost who walks..
    மிக்க நன்றி அன்பு ஆசிரியர் அவர்களுக்கு... 💐💐💐

    ReplyDelete
  63. டியர் சார்..
    தங்கை மகன் திருமண விசேசத்தை சிறப்பித்துவிட்டு-நேற்று மாலைதான் பார்சலை கைப்பற்றி பிரித்துப் பார்த்து ஒவ்வொன்றாக பார்த்து ரசித்துவிட்டாச்சு..
    அனைத்து இதழ்களையும் கொஞ்சம் - கொஞ்சம் படித்து ரசித்தாச்சு..
    உடனடியாக சொல்லவேண்டியது..
    அட்டைப் பெட்டியில் விளம்பரம் என்பது உண்மையில் நல்ல முயற்சிதான்..
    DTDC-கொரியர் ஆபீஸில்-ஒரு பையன்தான் இருப்பான்..இதுநாள்வரை இவருக்கு என்னதான் மாதம் மாதம் பார்சல் வருகிறது என்று வெறுப்பாக பார்ப்பவன் - நேற்று புன்னகையோடு ரெண்டுகைகளிலும் ஏந்தி சந்தோசமாக பார்சலை தந்தான்-அப்பா...இனிமேல் என் மதிப்பு கூடுதல் தான்..
    எப்படி எல்லாம் சிரத்தை எடுத்து எங்களுக்காக யோசிக்கிறீர்கள்..
    ஆனால், நாங்கள் தான் அதிலும் ஒரு கோரிக்கை வைத்து பழகியவர்கள் ஆயிற்றே..
    சார்..ஏற்கனவே - பீரோ-அலமாரி என்று புத்தகங்களை நிரத்தி வைத்திருக்கிறோம்..இனி அட்டைப் பெட்டியையும் பாதுகாக்க வைத்து இடத்தை அடைக்க வைத்து விடாதிர்கள்.
    எனவே, அட்டை பெட்டியின் மேல் போஸ்டரை முழு பேஸ்ட் போட்டு ஒட்டாமல்-ஒன்று இரண்டு இடங்களில் மட்டும் ஒட்டினால்- அப்படியே பிரிந்து எடுத்து பாதுகாத்துக்கொள்வோம்.. பெட்டி சேகரிப்பை தவிர்க்கலாம்..சார்..ப்ளீஸ்.. பரிசீலனை செய்யுங்கள் சார்..
    அப்றம், புத்தகம் கனம் குறைவாக இருப்பதற்கு பேப்பரின் தரம்தான் காரணம் என்று கருதுகிறேன்..
    ம்ஹூம்..எங்களுக்குதான் ரசிக்காதே சார்.. டெக்ஸ் வில்லர் இதழின் ஃப்யூர் வொய்ட் பேப்பரே போதுமே சார்..
    அதில்தான் B/w_printing அழுத்தமாக இருக்கும் என்பது என் எண்ணம்...
    அப்றம், தனி போஸ்ட்டராக செலவு செய்வதற்கு பதில் உள்பக்கம் பைண்டிங்கில் ஒட்டும் பேப்பரில் இருக்கும் ஓவியத்தை கலரில் தரலாமே சார்.
    அடுத்த என் அபிமான "ரிப் கிர்பி "இதழுக்கு இவைகளை பரிசீலனை செய்வீர்களா சார்..?' iii.

    ReplyDelete
  64. I love the quality of vedhalan book. All the best.

    ReplyDelete
  65. I love the Vedhalan of this quality book :)

    ReplyDelete
  66. ஆசிரியரின் "வேதாள பதிவு " ரெடியோ ரெடி நண்பர்களே...:-))


    செயலர் பிஸியாக இருப்பதால்..

    ReplyDelete