நண்பர்களே,
வணக்கம்.'ஜல்பண்ணன் வந்திருக்காக...ஜுரம்மண்ணே வந்திருக்காக... மற்றும் தொண்டை வலியெல்லாம் வந்திருக்காக ---- வாம்மா ஓமிக்ரான்!!' என்பதே கடந்த ஞாயிறு முதலான எனது ரிங்க்டோனாகிப் போயுள்ளது ! "போர்முனையில் தேவதை"களுக்குள் நுழையலாமென்று கிளம்பிய போதே தொண்டையில் 'கிச் கிச்' வித்தியாசமாய்த் தோன்ற, ஒரு அண்டாவில் வெந்நீரையும், கஷாயங்களையும் போடச் செய்து மண்ட ஆரம்பித்தேன் ; ஊஹூம்..பப்பு வேகலியே !! ஞாயிறு இரவே புரிந்தது - 2 சீசன்களுக்கு கதவைத் தட்டியிரா விருந்தாளி இந்த மூன்றாம் சீசனுக்கு வந்தேபுட்டார் என்பது ! தடுப்பூசிகளை முறைப்படிப் போட்டு, மாஸ்க்கோடே விடாப்பிடியாய்க் குப்பைகொட்டி ; கூட்டங்களை அறவே தவிர்த்து வந்த நம்மளையுமே - 'அட...வாங்க, பழகிப் பாப்போம் அண்ணாச்சி !' என்று ஓமிக்ரனார் அணுகியிருந்தார் ! அப்புறமென்ன, விருந்தாளிக்கான உபசரிப்புகளோடு இந்த வாரத்தின் பொழுதுகள் முழுநேர மோட்டுவளை ஆராய்ச்சியோடு தொடர்கின்றன ! தடுப்பூசிகளின் மகிமையும், மருத்துவத்தின் மாயாஜாலமும் கைகொடுத்திட மூன்று நாட்களில் சிரமங்கள் நீங்கி விட்டன - உசிரை வாங்கும் அந்தத் தொண்டை வலி நீங்கலாக ! வேதாளரின் அசாத்திய வெற்றி ஏகப்பட்ட அஸ்திகளில் ஏற்படுத்தியுள்ள எரிச்சலுக்குத் துளியும் குறைச்சலில்லா அனல் மட்டும் தொண்டையினில் தொடர்ந்தது !! மிமிக்ரி மயில்சாமியெல்லாம் இந்த வாரம் அடியேனிடம் பிச்சை தான் எடுத்திருக்க வேண்டும் - பெருந்தலைவர்கள் அண்ணாவிலிருந்து, கலைஞரிலிருந்து ஒவ்வொருவரது குரல்களையும் டிசைன் டிசைனாய் எனது தொண்டை எடுத்துவிட்ட அழகின் முன்னே ! இதோ - ஒரு மாதிரியாய் தொண்டை நோவு இன்றைக்குத் தான் கொஞ்சமாய் மட்டுப்பட்டுத் தென்பட , இதற்குமேலும் விட்டத்தை முறைத்துக் கொண்டிருந்தால் மறை கழன்று போகுமென்று பட்டது ! 'ரைட்டு....ஜம்போவோடு பயணிக்கலாமென்று பக்கங்களை எடுத்துக் கொண்டு அமர்ந்தால், பேனா பிடிக்க கை நடுங்கித் தொலைக்கிறது ! 'போச்சா..போச்சா....இந்த மாதம் வாய்ஸில் மொழிபெயர்ப்பைப் பதிவு செய்வது தான் வழி போலும் !' என்றபடிக்கே வேலையை ஆரம்பித்தவனுக்கு வேகம் பிடிக்கவேயில்லை ! போதி தர்மர் செட்டைச் சேர்ந்த நமக்கெல்லாம், பேப்பரும், பேனாவும் இல்லாது எழுத முற்படுவது, முட்கரண்டியோடு ரவா தோசையைத் தின்ன முற்படுவது போலுள்ளது ! 'ஊஹூம்...ரெண்டு நாள் கழிச்சு வேக வேகமாகவாச்சும் எழுதி சமாளித்துக் கொள்ளலாம் ; இந்த வாய்ஸ் ரெக்கார்டிங் கூத்துக்கள் நமக்கு சத்தியமாய் வேலைக்கு ஆகாது' என்று தீர்மானித்தேன் ! ரொம்பவே போர் அடிக்க, எனது லேப்டாப்பில் குவிந்து கிடக்கும் வேதாளரின் புதுக் கதைகளுக்குள் கொஞ்ச நேரம் ரவுண்டு அடித்தாலென்னவென்று கம்பியூட்டரைத் தூக்கிக் கொண்டு அமர்ந்த போது surprise ...surprise - டைப்படித்தால் கைநோவக் காணோம் ! அப்புறமென்ன - 'உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக, வெள்ளிக்கிழமையே ஒரு பதிவு !' என்று போட்டுப்புடலாமென்றபடிக்கே ஆஜராகி விட்டேன் ! Before I get into the blog - ஒற்றை அறிவுரை guys !! தடுப்பூசிகளை, பூஸ்டர் டோஸ்களை மட்டும் சரியான நேரங்களில் போட்டுப்புடுங்க - ப்ளீஸ் ! அப்புறம் அந்த மாஸ்க் மேட்டரையும் 'ஜெய் டயபாலிக் !' என்றபடிக்கே தொடர்ந்திடுங்களேன் !! Phewwwww !!
And yes , இன்னொரு பெரிய PHEWWWWWWWW !!! கூட போட்டுக் கொள்கிறேனே - "வேதாளன் ஸ்பெஷல் -1" ஈட்டியுள்ள அதகள வெற்றியின் பரிமாணத்தைப் பார்த்து ! இதுவரையிலுமான இந்த 50 ஆண்டுப் பயணத்தின் கடைசிப் 10 ஆண்டுகளின் ஒவ்வொரு hit இதழும் என் நினைவில் ஸ்பஷ்டமாய்த் தங்கியுள்ளன ! NBS கண்ணில் காட்டிய ஆரவாரங்கள், LMS ஏற்படுத்திய அதிரடிகள் ; "மின்னும் மரணம்" காட்டிய உத்வேகங்கள் ; "இரத்தப் படலம்" உண்டாக்கிய அதிர்வலைகள் ; "நிஜங்களின் நிசப்தம்" கொணர்ந்த காட்டாற்று வெள்ளம் ; டைனமைட் ஸ்பெஷல் / லயன் 250 / லயன் 400 ; Muthu FFS கட்டவிழ்த்து விட்ட உற்சாகங்கள் etc etc ; என்று அடுக்கிக் கொண்டே போகலாம் தான் ! ஆனால் அவை அனைத்திலுமே ஒரு நூலிழையாகவேனும் பகடிக்குரல்கள் ; விமர்சனக்குரல்கள் ஒலித்திருந்தன என்பதை மறுப்பதற்கில்லை ! அட, "இரத்தப் படலம்" வண்ணத்தில் வெளியான வேளையில் கூட சர்ச்சைகள் சல்லிசாய் சுற்றில் இருந்து வந்தன தானே ? ஆனால், ஆனால், இம்மாதம் வேதாளர் ஈட்டியுள்ள வெற்றியானது beyond my wildest dreams ; ஒற்றை சிறு விமர்சனமுமின்றி பெங்காலியின் காவலர் ஒரு அசாத்திய ஆளுமையினைப் பதிவு செய்துள்ளார் ! அட்டை டப்பியில் துவங்கி, அட்டைப்படம், இதழின் வடிவமைப்பு ; தயாரிப்புத் தரம் ; கதைகளின் classic தன்மை - என்று Smashing '70 s இதழ் # 1-ஐ நீங்கள் சிலாகித்திருப்பது முற்றிலும் வேறொரு லெவலில் !! 2015-ல் 'நயாகராவில் மாயாவி' மறுபதிப்போடு மும்மூர்த்திகள் மறுவருகை துவங்கிய நாட்களில் மட்டுமே இது போன்ற ஏகோபித்த ; பிசிறில்லா உற்சாகங்களைப் பார்த்திட முடிந்திருக்கிறது ! நாம் பால்யங்களின் மாறாக் காதலர் கூட்டம் என்பதில் ரகசியங்களே லேது தான் ; வேதாளர் ஒரு செமத்தியான நாயகர் என்பதிலும் சந்தேகங்களே இருந்திருக்கவில்லை தான் ! ஆனாலுமே இந்த ஒற்றை வாரத்தின் உங்கள் ஆரவார வரவேற்பு has been staggeringly stunning ! கண்ணாடிகளில் வதனத்தைப் பார்க்கும் போதெல்லாம் மீசையின் நரைமுடிகளும், பள பளக்கும் கபாலமுமே கவனத்தைக் கோருவது எனக்கு வாடிக்கை ! ஆனால் இன்றைக்கோ - 'அட பேப்பயலே...இப்படியொரு ஸ்டார் நாயகரை இத்தினி காலமா தொங்கலில் விட்டிருந்திருக்கியே !!' என்று கழுவி ஊற்றும் மனச்சாட்சியே கண்ணாடியில் பிரதானமாய்த் தெரிகிறது ! நிஜத்தைச் சொல்வதானால் இந்த நாயகரின் ஆளுமையினையும், உங்களின் ஆதர்ஷங்களையும் குறைத்து மதிப்பிட்டமைக்கு - I owe an apology for sure !! நமது வாசிப்புகளில் பழமைக்கும்,புதுமைக்கும் மத்தியில் இருந்திட வேண்டிய ஒரு balance சார்ந்த எனது கணக்கில் கொஞ்சம் பிசிறடித்துள்ளது புரிகிறது - சாரி guys !
அடுத்த பத்தியிலுமே இன்னொரு Phewwwwww போட்டுக்குவோமே - இம்முறை வேதாளரின் பெயரைச் சொல்லி ஆங்காங்கே காது வழியாய், மூக்கு வழியாய் அந்நாட்களது கரி எஞ்சின்கள் போல புகைவிட்டுவரும் அன்பர்களுக்கொரு அடையாளமாய் !! "சந்தா கட்டிப்புடாதீங்க !!" என்ற ஒற்றை agenda சகிதம் கொஞ்ச காலமாகவே கொடி பிடித்து வரும் ஆர்வலர்களை FB க்ரூப்பில் உள்ள நண்பர்கள் அறிவர் ! And இம்முறை Smashing '70s தடத்தினில் - 'all or nothing ' என்பதில் நாம் தீர்மானமாயிருக்க, அதைப் பிடித்துக் கொண்டு - "வேதாளன் மட்டும் வேணும்னா அதை மட்டும் தனியா வாங்கிக்கோப்பா ; சந்தா கட்டுவானேன் ?" என்ற அடுத்த கொடியேற்றத்துக்கு அஸ்திவாரம் அதிதீவிரமாய் நிகழ்ந்தது ! And ஒரு சுபயோக சுபதினத்தில் புக்கும் வந்தாச்சு ; பந்தை ஸ்டேடியதுக்கு வெளியே சாத்தும் சேவாக் பாணியில் வேதாளர் சிக்ஸரையும் போட்டுத் தாக்கிய நிலையில் "அன்பு அணி" வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தது - மார்க்கெட்டில் வேதாளர் இதழ் விற்பனைக்கு வருகிறதா ? என்ற தேடலில் !
இவை சகலமுமே இவ்விதம் தான் அரங்கேறும் என்பதை 4 மாதங்களுக்கு முன்னமே உணர்ந்திருந்ததால் - நமது முகவர்களிடம் "இதனில் உங்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு அவசியம்ங்க சார் ! முதல் புக்குக்கு ஆர்டர் செய்திடும் சமயமே, அடுத்த புக்கான ரிப் கிர்பி ஸ்பெஷலுக்கான முன்பணமும் செலுத்தினால் மாத்திரமே சப்ளை செய்திட வேண்டி வரும் ! ரிப் கிர்பி புக் ரெடியாகும் தருணம், அதற்கடுத்த மாண்ட்ரேக் ஸ்பெஷல் இதழுக்காக முன்பணம் அவசியமாகிடும்ங்க சார் & so on " என்பதை வலியுறுத்தியிருந்தோம் ! புக் ரிலீஸ் ஆகும் தினம் வரையிலும் வெறும் 15 பிரதிகளுக்கு மட்டுமே ஒரேயொரு ஏஜெண்டின் ஆர்டர் + முன்பணம் கிட்டியிருந்தது ! ஆனால் உங்கள் கைகளில் வேதாளர் மினுமினுக்கத் தொடங்கி, ஆங்காங்கே க்ரூப்களில் நீங்கள் சிலாகிக்கத் துவங்கிய பின்னர் சுதாரித்த சுறுசுறுப்பான முகவர்கள், வேதாளருக்கான முன்பணம் + ரிப் கிர்பிக்கான முன்பணங்களை அனுப்பத்துவங்கினர் ! And அதுவும் கூட சொற்பமான எண்ணிக்கைகளில் தான் ! பாக்கி முகவர்களோ, "இந்த புக்குக்கு மட்டும் தான் இப்போ பணம் அனுப்ப முடியும்" என்று அடம் பிடிக்க, "சாரிங்க....! It has to be all or nothing !" என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டோம். இதன் பொருட்டு கண்சிவந்த முகவர்கள் எத்தனை பேர் என்பது அவர்களிடம் பேசி வரும் அண்ணாச்சிக்கும், எனக்கும் தான் தெரியும். ஆனால், கடக்கும் ஒவ்வொரு நாளிலும் வேதாளரின் ரகளைகளை நீங்கள் ரவுண்டு கட்டிப் பதிவிட்டுக் கொண்டிருக்க, முகவர்களிடம் மனமாற்றங்கள் !! கொஞ்சம் கோபங்களோடே ரிப் கிர்பிக்குமான முன்பணங்களோடே ஆர்டர்கள் செய்தனர் and அவர்கட்கு புக்ஸும் அனுப்பியாச்சு ! And இதுவும் கூட இன்னமும் அனைத்து ஏஜெண்ட்களின் நடைமுறை என்றும் ஆகியிருக்கவில்லை ; மெய்யாகவே கடை வைத்து வியாபாரம் செய்திடும் முகவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் இம்மாதம் அண்டர்டேக்கர் + ப்ளூகோட்ஸ் மட்டுமே வாங்கியுள்ளனர் ! இதுவரைக்கும் ஆர்டர் செய்துள்ளோரின் பெரும்பான்மை இணையத்தில் கம்பும் சுழற்றி, கடையும் விரித்திடும் pseudo agents மாத்திரமே ! So பினாமி பெயர்களில் கொக்கரிப்புகளும், அவர்களது கடுப்புக் குரல்களும் இன்று ஒலிப்பதில் no surprises at all !! "இல்லே..இல்லே...நான் வேதாளனுக்கு மட்டும் தான் காசு அனுப்புனேன் ; அடுத்ததுக்குலாம் commit பண்ணிக்கலை !!" என்று இன்னமும் கம்புசுற்றல்கள் தொடராது போகாதென்பதை யூகிப்பதில் சிரமமேயில்லை - becos பொதுவெளியில் ஒரு பில்டப் தருவதைத் தலையாய கடமையாக நம்பி வரும் பார்ட்டிகளுக்குப் பஞ்சமேது ? எங்களுக்கும் தெரியும், எங்களின் வங்கிக் கணக்குக்கும் நிஜங்கள் தெரியுமெனும் போது more power to the கம்புசுத்திங்ஸ் ஜென்டில்மென் !
அப்புறம் நமது நிபந்தனைகளுக்கு உட்பட்ட முகவர்களிடம் - "அண்ணாச்சி....புக்ஸ் வேங்கிட்டீங்க..சந்தோசம் !! ஆனா நீங்க என்ன பண்றீங்க - வேதாளரை அப்புறமாய் விற்றுக்கோங்க ! இப்போதைக்கு கடைகளில் தனியாய் வித்தீங்கன்னா எங்க அன்பு அணி - "பாத்தியா ? பாத்தியா ?" என்று துள்ளிக் குதிப்பாங்க !!" என்று சொல்லவாவது சாத்தியப்படுமா ? எதிர்பார்த்தபடியே கடைகளில் விற்பனைக்கு வந்தவற்றை வேக வேகமாய் வாங்கிப் போட்டு ; அதுவும் ஒண்ணுக்குப், பத்து புக்கா வேங்கிப் போட்டு, அதை அழகா அடுக்கி வைச்சு ; போட்டா புடிச்சி -"பாத்தியாலே..? நான் தான் சொன்னேனலே ?" என்று கொக்கரிக்கும் அந்த அன்பைப் பார்த்த போது புல்லரித்தது ! காமிக்ஸ் நல்லுலகத்துக்கு ஒரு கருத்தை நிலைநாட்டுற வேகத்தில், இதே போல நீங்க ஆளாளுக்கு தொடர்ந்து பத்து பத்தா வேங்கி ஆங்காங்கே போட்டீகன்னா, நம்ம ஏஜெண்ட்கள் செழிப்பாகிக்குவாங்கல்லியா ? என்ன நான் சொல்லுதது ? இந்த ஆரவார புகை சமிக்ஞைப் படலங்கள் இன்னும் சில நாட்களுக்குத் தொடர்ந்தாலே போதும் - ஒரு மறுபதிப்பை திட்டமிட வேண்டிய அவசியம் உருவாகிடலாம் ; becos we are already running low in stock of வேதாளர் !! வெளியான ஒற்றை மாதத்துக்குள் விற்றுத் தீர்ந்த இதழ்களென்ற பெருமை, இதற்கு முன்பாக - "நிஜங்களின் நிசப்தம்" இதழுக்கும், மார்டினின் "மெல்லத் திறந்தது கதவு" இதழுக்குமே உண்டு ! ஆர்வலர்கள் மனசு வைத்தால் வெகு விரைவில் வேதாளன் ஸ்பெஷல் - 1 அந்தப் பட்டியலுக்குள் புகுந்திருக்கும் !
நிதானமாய் யோசிக்கும் போது இந்தச் "சந்தா கட்டாதீங்க" குரல் ஒலிப்பதற்கான காரணம் - வெறுமனே என் மீதான பொத்தாம் பொதுவான வெறுப்பின் வெளிப்பாடு மட்டுமே அல்ல என்பது obvious ! "நந்தியாட்டம் குறுக்கால இவன் கடை விரிச்சுக் கிடக்கும் வரையிலும் - ஏதேதோ புது முயற்சிகள் சிரமமாகிப் போகின்றன ! So இவனைக் கடையைச் சுருட்டச் செய்ய ஒரே வழி, கடந்த பத்தாண்டுகளாய் lifeline தந்து வரும் சந்தாதாரர்களை கலைப்பதே ! கொரோனா காலங்களிலேயாச்சும் ஏதாச்சும் சுணங்கும்னு பார்த்தாக்கா, இந்தப் பயபுள்ளை இப்போதான் இன்னும் வேகமா ரவுண்டு கட்டியடிக்குது & இவன் சொல்றதைக் கேட்டுப்புட்டு மக்களும் சந்தாக்களைக் கட்டி வைக்கிறாங்களே !!" என்ற ஜெலுசில் பருகும் படலங்கள் - குயந்தை பிள்ளை கூட அறிந்திருக்கும் காரணம் ! அப்புறமாய் வெவ்வேறு குறிக்கோள்களோடு, சில புது திட்டமிடல்களோடு புறப்பட்டோர், ஆங்காங்கே தடித்தாண்டவராயனாட்டம் நாம் நிற்பதால் சந்தித்த சில பின்னடைவுகள், வன்மங்களின் அடுத்த முக்கிய காரணி ! விலாவாரியாய் அவற்றைப் போட்டுடைப்பது அத்தனை நாகரீகமாக இராதென்பதால், அதனில் elaborate செய்திட மாட்டேன் ! இத்தனை மட்டும் சொல்லுவேன் - "இரத்தப் படலம்" கண்ணில் காட்டியுள்ள விலைகளையும், க்ரே மார்க்கெட்டில் அவை ஈட்டி வரும் விலைகளையும் பார்த்த பின்னே நிறையப் பேர் கால்குலேட்டர்களும், கையுமாய் உலவத் துவங்கியுள்ளனர் & அவர்களது கணக்குகளுக்குப் பெரும் இடர்கள் - நானும், நம்மை நேசித்திடுவோரும், சந்தா செலுத்திடும் உங்களின் அன்புள்ளங்களுமே ! So ஒன்றைக் குலைத்தால் சீக்கிரமே அடுத்ததையும் குலைத்து விடலாமென்ற உத்வேகங்களே - இந்தத் தொடர் "Anti சந்தா" பிரச்சாரங்களின் பின்னணி என்பது எனது பார்வை ! இலைமறை காய்மறையாது - புண்ணாக்காவது, இப்போதெல்லாம் வெளிப்படையாகவே வன்மங்களைக் கொப்பளிப்பதிலேயே புரிகிறது - யார் யாரது / எந்தெந்தத் திட்டமிடல்கள் / எவ்வளவு பாதிப்புகளைக் கண்டு வருகின்றன என்பது ! யார் பிழைப்பையும் கெடுப்பது நமது நோக்கமே அல்ல ; ஆனால் நாமிருப்பதே இடைஞ்சல் என்று எண்ணுவோரை என்னென்பது ?
இந்தப் புகை சமிஞைகள் வானவில்லின் ஒரு இருண்ட முனையெனில், நண்பர்களின் ஆரவாரமான கொண்டாடல்களும், நமக்கென உத்வேகங்களுடன் ஒவ்வொரு நிலையிலும் அவர்கள் குரல் கொடுத்து வருவதும், வானவில்லின் வர்ணமயமான மறுமுனை ! பல காலமாகவே சிலபல FB க்ரூப்களிலும், வாட்சப் க்ரூப்களிலும் நண்பர்கள் நமக்காக குரல் கொடுத்து வருவது கண்கூடு ! ஆனால் இந்த "ஊட்டிக்குப் போகாதீங்க" பாணிப் பிரச்சாரங்களை "அன்பர்கள் அணி" கையில் எடுத்த நாள்முதலாய் - பாசிட்டிவ் உணர்வுகளைத் தெறிக்க விடும் நம் நண்பர்கள், விஸ்வரூபமெடுத்து இன்று நமது ஒவ்வொரு இதழின் வெற்றியிலும் பங்கெடுக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளனர் ! நல்லவற்றை உரக்கச் சொல்லுவது ; நெருடுபவற்றை எனது கவனங்களுக்குக் கொண்டு வருவது ; வன்மப் பிரச்சாரங்களுக்கு ஜாலியாய் கவுண்டர் பாணியில் கவுன்டர் தருவது ; படித்ததில், பிடித்ததை ஊருக்கே கேட்கும் விதமாய்ப் பகிர்வது - என ஒவ்வொரு நாளும் நண்பர்கள் நமக்கென செய்து வரும் உபகாரங்கள் ஒரு வண்டி ! இதோ - சமீபத்தைய SMASHING '70s சந்தா சேர்க்கைக்குக் கூட நண்பர்களின் பங்களிப்பு அளப்பரியது ! நமது ஐம்பதாண்டு அனுபவத்தில் பார்த்திரா ஒரு சந்தா நம்பரை இங்கு நிஜமாக்கியுள்ளது க்ளாஸிக் நாயகர்களின் கீர்த்திகள் மட்டுமல்ல, நண்பர்களின் அயரா உழைப்புகளுமே ! அதன் பொருட்டு பொதுவெளிகளில் அவர்கட்கு கிடைத்து வரும் அர்ச்சனைகள் + முதல் மரியாதைகளின் வீரியம் தான் அவர்களது உழைப்புகளுக்கான அங்கீகாரங்கள் !! And இந்த வெறுப்புப் பிரச்சாரங்களை வழக்கம் போல தாண்டிப் போக நினைத்த என்னை, இன்றைக்கு இது குறித்த விளக்கமளிக்கச் செய்வதுமே நமக்காக துணை நிற்கும் நண்பர்களின் முயற்சிகளை கொண்டாடிடும் வேட்கையே ! Thanks for everything guys ; என்றேனும் ஒரு நாளில் இந்த எதிர்பார்ப்புகள் இல்லாத அன்புகளுக்கு நிச்சயமாய் ஏதேனும் கைமாறு செய்யாது நான் ஓய்வுக்குள் போக மாட்டேன் ! இப்போதைக்கு எங்களது கரம் கூப்பிய நன்றிகளை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள் !
So where do things stand with SMASHING '70s ?
நண்பரொருவர் - "நான் வேதாளன் வெளியே தனியா கிடைக்காதென்ற காரணத்துக்காகவேண்டி தான் ரெண்டாது சந்தாவுமே கட்டினேன் ; இப்போ கூவிக் கூவி விக்கிறாங்களே ?" என்று ஆதங்கப்பட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் ! நான் அவருக்களித்த பதில் மேலே விவரித்துள்ள விஷயங்களின் சாரம் & ஓரிரு கூடுதல் தகவல்கள் :
தகவல் # 1 - நமது ஆன்லைன் ஸ்டோரில் வேதாளர் புக்கை நாங்கள் தனியிதழாய் லிஸ்டிங் செய்திடவில்லை ; செய்திடப் போவதுமில்லை !
தகவல் # 2 : If at all ஸ்டால் கிடைக்கும் பட்சத்தில், சென்னைப் புத்தக விழாவுக்கும் சரி, தொடரவுள்ள விழாக்களுக்கும் சரி, வேதாளரை தனியிதழாய் விற்கும் உத்தேசமும் இல்லை ! So எங்கள் அளவில் சொல்லிலும், செயலிலும் வேறுபாடுகள் இராது ! காரிகன் ஸ்பெஷல் -1 வெளியாகும் தினத்தில் தான் அதுவரையிலுமான இதழ்களை தனித்தனியாய் லிஸ்டிங் செய்திடுவோம் !
தகவல் # 3 : SMASHING '70s பயணத்தினில் இன்னமும் சில surprises காத்துள்ளன & சந்தா செலுத்தியுள்ளோருக்கு exclusive ஆக ; பெருசாய்ப் புன்னகைக்கக் காரணமின்றிப் போகாது என்ற promise !
தகவல் # 4 : இரண்டாவது சந்தா செலுத்தியது வீண் விரயமென்று இன்னமும் தோன்றிடும் பட்சத்தில், no worries - உங்களின் தொகையினை திருப்பித் தந்து விடுகிறோம் நண்பரே !
மேற்படி பதிலானது நண்பருக்கு மட்டுமல்ல ; இரண்டோ, மூன்றோ சந்தாக்கள் செலுத்தியிருக்கக்கூடிய நண்பர்களுக்கும் holds good !! நீங்கள் செய்திட வேண்டியதெல்லாம் உங்களின் 2 சந்தா நம்பர்களையும் குறிப்பிட்டு, lioncomics@yahoo.com என்ற நமது மின்னஞ்சலுக்கு "REFUND ONE SANTHA" என்ற வாசகத்தோடு, உங்களின் GPay விபரத்தோடு ஒரு மெயிலைத் தட்டி விட்டால் போதும் ; வேதாளன் புக்குக்கான கிரயத்தை மட்டும் கழித்து விட்டு மீதத்தை மறுதினமே ஆவன செய்திடுவோம் !
இது நிச்சயமாய் அசட்டுத் துணிச்சலின் பீற்றலோ, கொழுப்பின் வெளிப்பாடோ அல்லவே அல்ல guys ! இன்றைக்குக் கடைகளில் வேதாளரை தனியிதழாய் வாங்க முடிந்தாலுமே, SMASHING '70s சந்தா சேர்க்கை இன்னமுமே செம வேகமாய்த் தொடர்ந்து வருவதே இந்த க்ளாஸிக் தடத்தின் rousing statement & எனது நம்பிக்கைகளின் அச்சாணி ! And வேதாளர் மாத்திரமல்ல, தொடரவுள்ள ஒவ்வொரு க்ளாஸிக் நாயகருமே முத்திரை பதிக்காது போக மாட்டார்களென்பதில் எனக்கும் சரி, உங்களுக்கும் சரி, பூரண நம்பிக்கையுள்ள போது - இன்றைய வன்ம வெளிப்பாடுகளை ஜாலியாய்க் கடந்து செல்வதென்ன பெரிய காரியமா folks ? "He who laughs last" ....என்று ஏதோ இங்கிலீஷில் சொல்லுவார்களே ; அதை மட்டும் நினைவில் இருத்திக் கொண்டால் போச்சு !
மீண்டும் சந்திப்போம் all ; have a great weekend !! See you around & Stay safe !!
1st
ReplyDelete2வது....
ReplyDelete3வது
ReplyDeleteமாலை வணக்கம்
ReplyDeleteவந்தாச்சுங்
ReplyDeleteஅனைவருக்கும் என் பணிவான அன்பான மாலை வணக்கம்.
ReplyDelete🙏🙏
ReplyDelete3வது
ReplyDeleteஅவ்வளவு வேகமாகவா? ii படிக்கிறீங்க...
ReplyDeleteநான் ரொம்பவே எதிர்பார்த்திருந்த பதிவு!
ReplyDeleteநன்றி அண்ணா!
(விரைவில் வேதாளர் ஸ்பெஷல் விமர்சனத்தோடு வருகிறேன்.)
The right explanation at the right time without any delay... Feels good...
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteமாலை வணக்கம்
ReplyDeleteஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். தயவு செய்து தங்கள் உடல் நிலையைக் கவனித்துக் கொள்ளவும். பதிவில் தாங்கள் தெரிவித்த தகவல்கள் உண்மையே. மனந்திறந்த பதிவிற்கு நன்றி சார்.
ReplyDeleteகுட் ஈவ்னிங் ஆல்..
ReplyDeleteFirst time 25க்குள்ள
ReplyDeleteநீண்ட நெடிய விளக்கங்களுக்கு நன்றிகள் பல சார்.
ReplyDeleteவேதாளர் புத்தகத்தில் இரண்டு விஷயங்கள் சரி செய்யும் வாய்ப்பு இருந்தால் நன்றாக இருக்கும் சார்.
1. ஒரு வரிக்கு 3 பேனல்களாக குறைக்க முடியுமா?
2. கொஞ்சம் பிரிண்டிங் டார்க் செய்ய முடியுமா?
இவைகளும் இருந்திருந்தால் இன்னும் அசைக்க முடியாத இதழாக இருந்திருக்கும் சார்
Printing is just right like the originals
DeleteHi..
ReplyDeleteவணக்கம் நண்பர்களே...!
ReplyDeleteஅருமைங்க சார்...!
Deleteசரியான நேரத்தில் தேவையான விளக்கங்களை தெளிவாக தந்துட்டீங்க... ரொம்ப நன்றி!
வேதாளரின் வெற்றிக் கொண்டாட்டம் தொடரட்டும்.
கொஞ்சம் உடம்பையும் கவனித்துக் கொள்ளுங்க சார்!
உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் சார்
ReplyDelete// becos we are already running low in stock of வேதாளர் //
ReplyDeleteஅருமை சார்,இடர்ப்பாடான ஒருகாலக் கட்டத்திலும் நமது காமிக்ஸ் மீண்டு வருவதும்,விற்பனையில் சாதித்து ஊக்கம் அளிப்பதும் மிகபெரிய விஷயம்,மிக்க மகிழ்ச்சி...
உங்களின் உற்சாகம் அனைவரையும் தொற்றிக் கொள்ளட்டும்...
இதைவிட ஆனந்தம் வேறென்ன வேண்டும் சார்....
நன்றிகள் பல சார்...
ReplyDelete// SMASHING '70s பயணத்தினில் இன்னமும் சில surprises காத்துள்ளன & சந்தா செலுத்தியுள்ளோருக்கு exclusive ஆக ; பெருசாய்ப் புன்னகைக்கக் காரணமின்றிப் போகாது என்ற promise ! //
ReplyDeleteஅடடே சூப்பரு,எதிர்பார்ப்பை எகிற வெச்சிகிட்டே இருக்கிங்களே சார்...
வணக்கம்
ReplyDeleteஉடம்பைப் பார்த்துக் கொள்ளுங்க சார். வேதாளர் தனியாக தடம் பிரித்துக் கொண்டு வந்தால் கூட சாதிக்க வல்லவர்தான். ஸ்மாஷிங் 70ஸ் சந்தாக்களின் தடத்தை விட்டுத் தனியே தனித்துத் தெரிகிறது. அதுவே அதன் புதுமையாகவும் தெரிவது கண்கூடு. வேதாளரை வரவேற்கிறோம்.
ReplyDeleteதெளிவான விளக்கம்.... நண்பர்களின் கேள்விகள் அனைத்திற்கும் விடை கிடைத்திருக்கும்...
ReplyDeleteஉடம்பை பார்த்து கொள்ளுங்கள் ஆசிரியரே
ReplyDeleteஉங்கள் ஏற்பட்ட உடல் வேதனைகளையும் காமெடியாக தெரிவித்திருப்பது உங்கள் மன உறுதியை காட்டுகிறது பாராட்டுக்கள் ஆசிரியரே
உள்ளேன் ஐயா...!
ReplyDeleteமேகி கேரிசனுடன்...!
வணக்கம் நண்பர்களே
ReplyDeleteEdi Sir..
ReplyDeleteசிங்கம் சிங்கம் தாங்க .. சிங்கம் கர்ஜிக்கறப்ப காடு அதிரதாங்க செய்யும்.
காடு அதிர்ரதைன்னு பாத்து சிங்கம் கவலைபட கூடாதுங்க..
"சிங்க நடைபோட்டு சிகரத்தில் ஏறு" ன்னு நம்ப தலைவரே சொல்லிருக்காருங்க.
நீங்க சிகரத்தில் ஏறுங்க Edi Sir..
This comment has been removed by the author.
DeleteWell said. Smashing 70s வெற்றியை எத்தனை கைகள் வந்தாலும் மறைக்க/தடுக்க முடியாது.
Deleteஆஹா ஆஹா என்ன ஒரு இன்ப அதிர்ச்சி... வந்துட்டேன்.
ReplyDelete/// ! And வேதாளர் மாத்திரமல்ல, தொடரவுள்ள ஒவ்வொரு க்ளாஸிக் நாயகருமே முத்திரை பதிக்காது போக மாட்டார்களென்பதில் எனக்கும் சரி, உங்களுக்கும் சரி, பூரண நம்பிக்கையுள்ள போது - ///
ReplyDeleteமாண்ட்ரேக் & ரிப் கிர்பி இருவருக்காகவும் வெறித்தனமாக வெயிட்டிங்...
பிலிப் காரிகனுக்காக வெறியில்லாம வெயிட்டிங் சார்..!
டியர் விஜயன் சார்..
ReplyDeleteஉடல்நலத்தை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள் சார்..
அதுவே மிக முக்கியம்..சார்..
இந்த பதிவை படிக்கும் போது, சந்தோசமாகவும் இருக்கிறது. நான் முன்பே குறிப்பிட்டது போல திரும்பத் திரும்ப ரசித்துப்படிப்பதற்குரிய ஹீரோக்களின் தொகுப்பு-அட்டகாசமாகவே அமையும்..
மற்றபடி - ஒரு பக்கத்தில் நிறைய Frame கள் - என்பதையெல்லாம்-அடுத்த அடுத்த தொகுப்புகளில் பழகிக் கொண்டு ரசிக்க பழகிவிட்டால் உங்களிடம் இருந்து இன்னும் நிறைய கிடைக்கலாம்..ரூ100 மதிப்புள்ள புத்தகத்தை இலவசமாக தந்ததை சொல்லலாம்..
போஸ்டர் - அட்டைப் பெட்டி தொடர்பாக
போ னபதிவில் ஒரு கருத்தை சொல்லி இருந்தேன்.. பரிசீலனை செய்யுங்களேன் சார்..
ReplyDeleteஅட! எடிட்டரும் நம்ம ஜோதியில கலந்துட்டாரே...31-01.2021 -ல் துவங்கிய ஓமைக்ரான் அட்டகாசத்தால் 9 நாட்கள் 9.02.2022 வரை தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கும் ஏற்பட்டது...Take care editor sir!
எவ்வளவோ சொல்லியும் கேட்காததால் மனைவியின் வற்புறுத்தலால் ஒரு புதுமனை புகுவிழா விசாரிக்கப் போய் மாஸ்க்கை ஒரு அரைமணி நேரம் லெட் டவுன் செய்ய ஓமைக்ரான் புகுவிழா நடந்துவிட்டது..wife regretted for this..too late..
Omicron is too infectious.. அனைவரும் கவனமாக இருங்கள்...ஓமைக்ரான் மென்மையாக இருப்பினும் covid affected lungs would never be the same....வராமலிருப்பதுதான் நல்லது.
எடிட்டர் இப்பதிவில் எழுதியுள்ள விஷயங்கள் பல என்னவென்று தெரியவில்லை அல்லது புரியவில்லை...காமிக்ஸ் வாசிப்போடு அதைப் பற்றி மனதில் தோன்றுவதை கொஞ்சமாக எழுதுவதோடு நிறுத்திக் கொள்வதாலும் இதற்கே நேரத்துக்கு ததிகிடத்தோம் போடுவதாலும் அதைப் பற்றி எழுத ஒன்றுமில்லை.
வேதாளர் கதைகள் மட்டுமல்லாது பிற நாயகர்கள் கதைகளும் மிகவும்
கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் என எடிட்டர் சார் சொல்லியிருப்பதால் ஆவலுடன் அவற்றுக்காக காத்திருக்கிறேன்.
குறிப்பாக மாண்ட்ரேக் , ரிப் கிர்பி..
Take care Selvam Abirami.
DeleteThanks parani..recovered ..
Deleteஒ! இந்த Lusettesofia செனாஜி தானா?!
Deleteஉங்களுக்குமா....பூரண நலத்தை செந்தூரான் அருளட்டும்...எதையும் தீவிரமாக யோசிக்காதீங்க...ஓமிக்ரான் தாக்கினாலும் உங்க நுரையீரல் மேலும் வலுப்பெற்று நோயெதிர்ப்பூக்கம் பெற்று முன்னை விட அழகாய் இயங்கும்....நம்புங்க நல்லாருக்கும்...
DeleteTake care dr sir
Deleteடேக் கேர் செனா. ஓமிக்ரான் பத்து நாள் தனிமைப்படுத்தலோட விட்டுச்சு. வீட்டம்மா பேச்சை கேட்டு நீங்க பு. ம. பு. விக்கு போகலேன்னா அப்பறம் அவ்வளவு தான் 🤣🤣🤣
Deleteஓம் நானே மாயாவி என்றவனே- அடர்
ReplyDeleteகாட்டு குகைக்குள்ளே வசிப்பவனே...
சாகாவரம் பெற்ற சஞ்சீவி -என்றே
பேர் பெற்று வாழும் வேதாளனே...
தன்னன்னே நாதினம் தன்னானே தான
தன்னென்னே நாதினோம் தன்னானே
தன்னன்னே நாதினம் தன்னானே தான
தன்னன்னே நாதினோம் தன்னானே...
கும்மியடிப் பெண்ணே கும்மியடி நம்
வேதாளன் பேர் சொல்லி கும்மியடி
இளம் பால்யங்கள் மீண்டன என்றிங்கு
உற்சாகம் பொங்கிட குனிந்து கும்மியடி...
பெங்காலி காட்டிலே குரன் டெவில் ஹீரோட யானாவுடன்
அளவில்லாத பொக்கிஷ சொந்தக் காரனவன்...
விஷக்குள்ளர் கூட்டமாய் காத்திடும் ராஜ்ஜியம் மீறிப்
போன வீணர் தோற்றே மாய்வார்...
(தன்னன்னேநாதினம்...
அதிர்ந்திடும் கானகமவன் குரல் கேட்டிட இடை
துப்பாக்கிகள் மின்னல் வேகம்
நகர் போனால் அவனுக்கு வாக்கர் என்றே
ஒரு விநோதமான பெயரு முண்டு...
(கும்மியடி பெண்ணே...
ஆக்கம்
J
இது தான் நம்பளோட கம்பு சுத்தல்...
DeleteWhere are you steel. Please come here.
Deleteமுடில
Deleteஇந்த வேதாளர் போஸ்ட் செம்ம (தெறி ரகம்) அடுத்து வரக்கூடிய வேதாளர் புத்தகத்துக்கு இது மாதிரி அட்டைப்படம் போட்டு தாக்குங்க எடி சார்.
ReplyDeleteஉடல் நல குறைவிலிருந்து மீண்டு வந்தது மகிழ்ச்சி.
ReplyDeleteஓமிக்ரான் சத்தமில்லாமல் எல்லார் வீட்டுலேயும் ஒரு அழையா விருந்தாளியாக வந்து போயிருக்கு என்பது நிதர்சனமாக தெரியுது.
உடல்நலனை கவனித்து கொள்ளுங்கள் சார்...
ReplyDeleteலயன் முத்து வின் தொடர் வெற்றி அது என்றும் முற்றுப்பெறாத தொடர் வெற்றியாக ஓடிக்கொண்டே இருக்கும் என்பதை காமிக்ஸ் நண்பர்கள் உணர்ந்தே உள்ளோம்..
வாழ்த்துக்கள் சார்..
அப்புறம் இம்மாத அனைத்து இதழ்களையும் படித்து முடித்தாயிற்று சார்..அடுத்த இதழ்கள் வெளிவரும் தகவல் எப்பொழுது என அறிய ஆவல் சார்..!
SMASHING '70s பயணத்தினில் இன்னமும் சில surprises காத்துள்ளன & சந்தா செலுத்தியுள்ளோருக்கு exclusive ஆக ; பெருசாய்ப் புன்னகைக்கக் காரணமின்றிப் போகாது என்ற promise !
ReplyDelete######
ஆஹா...ஆஹா...:-)))
ஆனால் நாமிருப்பதே இடைஞ்சல் என்று எண்ணுவோரை என்னென்பது ?
ReplyDelete######
அவர்கள் கண்டிப்பாக காமிக்ஸ் ரசிகர்களாக இருக்க மாட்டார்கள் சார்..!
சார் உடல்நலம் முக்கியம்.
ReplyDeleteஇந்த சலசலப்புக்கெல்லாம்நாம் அஞ்வேண்டாம்
"ஈட்டி தீட்டப்படும்போதுதான் கூர்மை அதிமாகிறது"
வேதாளன் மாயாத்மா மட்டுமல்ல
மகிமை பொருந்தியவரும்கூட.
அடுத்த வெளியீட்டையும்
ஆவலுடன் எதிர்பார்க்கும்
ஆரம்பகாலத்து அன்புவாசகன்👍
உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் சார்.
ReplyDeleteVijayan sir, நீங்கள் விரைவில் முழுமையாக குணமாகி நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்! Take care!
ReplyDelete/வேதாளர் மாத்திரமல்ல, தொடரவுள்ள ஒவ்வொரு க்ளாஸிக் நாயகருமே முத்திரை பதிக்காது போக மாட்டார்கள்/
ReplyDeleteநூறு சதவீதம் மற்ற க்ளாசிக் நாயகர்கள் மூவரும் இதுபோலவே முத்திரை பதிப்பார்கள் சார்...
//தகவல் # 3 : SMASHING '70s பயணத்தினில் இன்னமும் சில surprises காத்துள்ளன & சந்தா செலுத்தியுள்ளோருக்கு exclusive ஆக ; பெருசாய்ப் புன்னகைக்கக் காரணமின்றிப் போகாது என்ற promise !///
ReplyDeleteஅட்றா சக்க!! பழைய ஆளுங்களாச்சேன்னு smashing 70s ஒரு சந்தாதான் கட்டினேன்..
இரண்டாவது சந்தா கட்டிட வேண்டியதுதான்..
என்ன சார் இப்படி அதிரடியா போட்டு தாக்குறீங்க???
நாளைக்கே ...ஏன் இன்னைக்கே ..ஏன் இப்பவே கட்டிட வேண்டியதுதான்...
கட்டியாச்!
Deleteஎடிட்டர் சார்
Deleteஇந்த தள டாக்டர்களுக்காக ஒரு முதிர் கன்னி ஸ்பெஷல் ஏதாவது பதிப்பிக்க இருக்கிறீர்களா ? :-) :-)
பிடிக்காத Phantomக்கே ரெண்டு சந்தாவா? முதிர்கன்னி டிடெக்ட்டிவ் மட்டும் announce பண்ணினா அத்தனை பிரதிகளும் நீங்களே வாங்கிடுவீங்க போலிருக்கே ;-)
Deleteராகவன்@ ROFL
Delete//பிடிக்காத Phantomக்கே ரெண்டு சந்தாவா?//
Deleteஇதைப் படிக்கும்போது என்ன தோணுதுன்னா எடிட்டர் சார்
காரிகன்
மாண்ட்ரேக்
ரிப் கிர்பி
வேதாளர்
இந்த ஆர்டர்ல ஸ்மாஷிங் 70s -ஐ வெளியிட்டிருந்தால் இந்த குழப்பத்துக்கெல்லாம் ஆரம்பத்துலேயே முற்றுப்புள்ளி வச்சிருக்கலாம்.
க்ளைமாக்ஸை துவக்கத்துலேயே வச்சிட்ட படம் மாதிரி இல்லாம போயிருக்கும்..
உண்மையான முகவர்கள் நிலை எண்ணி வருந்தும் நிலையும் தோன்றியிருக்காது.
அடுத்த முறை smashing 70s வருகையில் எடிட்டர் சார் இதனைக் கையாள்வது நல்லது என்பது என் எண்ணம்..
Phantom ought to be "grande finale"
எல்லாமே phantom ஆக இருந்துட்டா ? ;-) அப்புறம் 1994 world series போல finalsல ஆஸ்திரேலியா A vs Australia B தான் !
Delete//எல்லாமே phantom ஆக இருந்துட்டா ? //
DeleteOverkill ஆ போயிடும்னு எடிட்டரே சொல்லிட்டார் ராகவன்..
///இந்த தள டாக்டர்களுக்காக ஒரு முதிர் கன்னி ஸ்பெஷல் ஏதாவது பதிப்பிக்க இருக்கிறீர்களா ?///
Deleteஹா ஹா ஹா!! செம செம!! :))))
இந்த தள டாக்டர்களுக்காக ஒரு முதிர் கன்னி வெடி ஸ்பெஷல் ஏதாவது பதிப்பிக்க இருக்கிறீர்களா? - வெடி என்ற வார்த்தையை விட்டுட்டீங்களே ராகவன் :-)
Deleteவேதாளர் வெற்றி மகிழ்ச்சி. தொடரட்டும் இந்த வெற்றி பிற கதைகளிலும் மற்றும் விற்பனையில் சாதனை படைக்கட்டும்.
ReplyDeleteஆமா ட்டும்!!
Delete// தகவல் # 3 : SMASHING '70s பயணத்தினில் இன்னமும் சில surprises காத்துள்ளன & சந்தா செலுத்தியுள்ளோருக்கு exclusive ஆக ; பெருசாய்ப் புன்னகைக்கக் காரணமின்றிப் போகாது என்ற promise ! //
ReplyDeleteஅட சேம நியூஸ். சூப்பர். ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ReplyDeleteவிரைவில் முழுமையாக குணமாகி நலம் பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
S70 சந்தா எண்ணிக்கை உயர்ந்ததன் பலனாக 100 ரூபாய் இதழ்இலவசமா கிடைச்சது. இன்னும் நிறைய சர்ப்ரைஸ் இருக்கா🥰🥰🥰?
ReplyDeleteஉடல்நிலையைப் பாத்துக்குங்க சார். சுவரிரிருந்தால் தான் சித்திரம், சித்திரக் கதை எல்லாமே.
என்னுடைய புத்தகங்கள் இன்னிக்கு சேலத்துல இருந்து கெளம்பிடுச்சு. பத்து டூ 15 நாளில் வந்துடும். ஆவலுடன் வெயிட்டிங்.
எனக்கு ப்ளைட் டிக்கெட் புக் பன்னி கொடுத்தீங்கன்ன 2 நாளில் டெலிவரி செய்திடுவேன்.. டீல்... ??
Deleteகாஸ்ட்லியான டீல் போலிருக்கே.
Delete
ReplyDeleteSmashing 70s எல்லா இதழ்களையும் படிக்க ஆசையிருந்தும் பொருளாதார தட்டுப்பாடு காரணமாய் வேதாளர் மட்டுமே படிக்க நினைத்து எடிட்டர் சார் கூறியபடி சிரமப்பட்டு அனைத்து இதழ்களுக்கும் சந்தா கட்டிய உண்மை வாசகனின் கண்ணில் முள் பாய்ச்சுவது போல் பத்து வேதாளர் இதழ்களுடன் ஒரு வாசகரின் புகைப்படம்..
வேதாளர் மட்டுமென்றால் ஏற்படவிருக்கும் பொருளாதார சிக்கலை தவிர்க்க நான்கு நாயகர்கள் என்ற நிலைப்பாட்டை எடுத்த எடிட்டர் சாரின் இதயத்தில் கூர்வாளை ஆழப் பதிக்க போலி முகவர்களின் சிண்டிகேட்
புத்தக கடையை நம்பி பிழைப்பு நடத்தும் மெய்யான முகவர்களுக்கு
அடுத்த smashing 70s இதழ்களுக்கான
முன்பணம் செலுத்த சொல்ல வேண்டிய மனவேதனை அளிக்கும்
நிகழ்வு..
இனி இதுபோன்ற திட்டமிடல்களில்
சிறப்பானதை இறுதியாகத் தாருங்கள் சார்..
(வேதாளர் இதழை கையில் சும்மா ஏந்தும்போதே மனதில் ஏற்படும் பெருமிதம் சொல்லில் அடங்காது..
கம்பி நீட்டிய குருவி சுமாரான கதையென்றாலும் சித்திரங்களை அடிக்கடி பார்க்கத் தூண்டியது..எந்த ஒரு காமிக்ஸ் ரசிகனும் ரசிப்பது கதையை மட்டுமல்லவே..
ஜீவநாடியான சித்திரங்களையும் சேர்த்துத்தானே..அவ்வகையில்
வேதாளர் மனதை அள்ளிக் கொண்டு செல்கிறார்.)
///Smashing 70s எல்லா இதழ்களையும் படிக்க ஆசையிருந்தும் பொருளாதார தட்டுப்பாடு காரணமாய் வேதாளர் மட்டுமே படிக்க நினைத்து எடிட்டர் சார் கூறியபடி சிரமப்பட்டு அனைத்து இதழ்களுக்கும் சந்தா கட்டிய உண்மை வாசகனின் கண்ணில் முள் பாய்ச்சுவது போல் பத்து வேதாளர் இதழ்களுடன் ஒரு வாசகரின் புகைப்படம்..
Deleteவேதாளர் மட்டுமென்றால் ஏற்படவிருக்கும் பொருளாதார சிக்கலை தவிர்க்க நான்கு நாயகர்கள் என்ற நிலைப்பாட்டை எடுத்த எடிட்டர் சாரின் இதயத்தில் கூர்வாளை ஆழப் பதிக்க போலி முகவர்களின் சிண்டிகேட்
புத்தக கடையை நம்பி பிழைப்பு நடத்தும் மெய்யான முகவர்களுக்கு
அடுத்த smashing 70s இதழ்களுக்கான
முன்பணம் செலுத்த சொல்ல வேண்டிய மனவேதனை அளிக்கும்
நிகழ்வு..
இனி இதுபோன்ற திட்டமிடல்களில்
சிறப்பானதை இறுதியாகத் தாருங்கள் சார்..
///
தெளிவான சிந்தனையின் அழகான வெளிப்பாடுங்க செனா அனா!! கிரேட்!!
//இனி இதுபோன்ற திட்டமிடல்களில்
Deleteசிறப்பானதை இறுதியாகத் தாருங்கள் சார்..//
ஒரு வியாபாரி அப்படித்தான் செய்வார், ஆனால் விற்பவரும் ஒரு காமிக்ஸ் லவ்வர் ஆச்ச!
அதுவும் இல்லாமல், நம்ம லைன்க்கு ஆரம்பத்தில் ஒரு வியாபார காந்தம் தேவை, அடுத்த வருடம் may be…
அதாவது 1800 ருபாய் கொடுத்து நாலு வேற வேற புக்கு எதுக்கு வாங்கணும் நான் 4500 குடுத்து 10 phantom வாங்கி காட்டினேனா இல்லியா ? நம்ம டிசைன் ஏன் இப்டி இருக்கு ? :-) :-) :-)
ReplyDeleteஹா ஹா ஹா! செம ராக் ஜி! :)))))
Deleteசெம :-)
Deleteவிரைவில் முழுமையாக குணமாகி நலம் பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
ReplyDeleteஎனது வேண்டுதல்களும்!
Deleteமிகச் சிறப்பான பதிவு எடிட்டர் சார்!
ReplyDeleteசமீப நாட்களில் கிளப்பிவிடப்பட்ட புரளி, கட்டுக்கதைகளுக்கு ஒரு தெளிவான விளக்கமளித்து, சாமானிய வாசகர்களின் குழப்பத்தைப் போக்கியிருக்கிறீர்கள்.. 'ஆகவே சந்தா கட்டாதீக' கூட்டத்திற்கும் பதிலடி கொடுத்திருக்கிறீர்கள்!
உங்களைக் கவிழ்க்க நினைக்கு சிறு கூட்டத்தைவிட உங்கள் மீது அன்பு வைத்திருக்கும் கூட்டத்தின் எண்ணிக்கை மிகப் பெரியது சார்! அதன் வலிமையும் மிக அதிகம்! எல்லாவற்றிற்கும் மேலாக, இதை அத்தனையையும் சமாளித்து நிற்கும் உங்கள் மனோ வலிமையும் ஒரு இஸ்பைடரின் மனோவலிமைக்கு ஒப்பானதே!
வேதாளர் விரைவில் ஸ்டாக்-அவுட் ஆகவிருக்கும் செய்தியும், ரெகுலர் சந்தா எண்ணிக்கையைக் காட்டிலும் smashing-70 சந்தா எண்ணிக்கை அதிகமென்பதும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது சார்!
ரெகுலர் சந்தாவுமே விரைவில் ஒரு மைல்கல் எண்ணிக்கையைத் தொட்டுவிட எங்கள் எல்லோரது ஆசைகளும், வேண்டுதல்களும்!
//உங்களைக் கவிழ்க்க நினைக்கு சிறு கூட்டத்தைவிட உங்கள் மீது அன்பு வைத்திருக்கும் கூட்டத்தின் எண்ணிக்கை மிகப் பெரியது சார்! அதன் வலிமையும் மிக அதிகம்! //
Deleteஉண்மை உண்மை !!!
// உங்களைக் கவிழ்க்க நினைக்கு சிறு கூட்டத்தைவிட உங்கள் மீது அன்பு வைத்திருக்கும் கூட்டத்தின் எண்ணிக்கை மிகப் பெரியது சார்! அதன் வலிமையும் மிக அதிகம்! //
Deleteஅதே அதே. உண்மை விஜய்.
உங்களைக் கவிழ்க்க நினைக்கு சிறு கூட்டத்தைவிட உங்கள் மீது அன்பு வைத்திருக்கும் கூட்டத்தின் எண்ணிக்கை மிகப் பெரியது சார்!
DeleteVery true EV.
When the blog was started, I used to visit other blogs and fb sites too. After sometime stopped going anywhere. Ennanamo nadakuthu polarukku. Subscribe panninoma, blog padichoma, ithu thaan namma policy
Smashing 70s சந்தா ஹிட் ஆனதில் சந்தோஷம் எடிட்டர் சார்.
ReplyDeleteஓமிக்ரானில் இருந்து குணமடைந்ததற்கு வாழ்த்துக்கள் சார்.
உங்கள் உடல்நலத்தில் கூடுதல கவனம் தேவை சார்.
இதை சொல்ல காரணம்,
நான் இன்று திருவண்ணாமலையில் என் அண்ணனுக்கு ஏற்பட்டுள்ள நுரையீரல், மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் காணமாக, அவரை ஹாஸ்பிட்டலில் ICU ல் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம். இரண்டாவது தடுப்பூசி போடுமுன்பு, சரியான உடல் பரிசோதனை செய்து கொள்ளாததின் விளைவாக ஏற்பட்டுள்ள பாதிப்பு இது.
எனவே நண்பர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முன்பு, ஏற்கெனவே உள்ள பாதிப்புகளை பற்றி சொல்லி அதன் பின்பு தடுப்பூசி போட்டு கொள்வது நல்லது.
செனா அனாஜி , ஓமிக்ரானில் இருந்து குணமடைந்ததற்கு நல்வாழ்த்துக்கள்.
Dear edi,
ReplyDeleteGet well soon
Get well soon Editor Sir!
ReplyDeleteS70 அறிவித்த போது இது sure shot hit! என தோன்றியது , ஒரே டவுட் மந்திரவாதி மட்டுமே.
எனக்கு பிடித்த ஒருவர் ரிப் கிர்பி மட்டுமே. எல்லாருடைய கதையும் சிறுவயதில் படித்ததுண்டு. இவர்களின் தீவிர ஃபேன் என்று யாருமே கிடையாது.
ஆனாலும் “பலவருடங்களாக உலக ரசிகர்களாள் கொண்டாட படுபவர்கள், கொட்டிகிடக்கும் கதைகளிலிருந்த 8தான், நம்பி வாங்க சந்தொஷமா போங்க”
என whatsapp , FBல கம்பு சுத்துவது , முட்டு குடுப்பது… எங்கெல்லாம் “பழைய நெடி” போன்ற கமெண்ட் வருதோ அங்கு.
எனக்கு இதில் பிடித்ததே
என் வீட்டிற்க்கு வரும் அடுத்த generation பிள்ளைகளுக்கு இந்தா படி என்று நம்பி கொடுக்க
இந்த 4 புத்தகங்களும் செம்ம choices.
இப்ப மொதோ புக்க பாத்தோன கம்பு சுத்த அடுத்த பாயிண்ட் “இந்த மேக்கிங் கொண்ட புக்ஸ் கண்டிப்பாக மற்றவர்களால் பல மடங்கு அதிகமாக விற்கபடும், அதில்லாமல் போஸ்டர் & இலவச இனைப்பு, So உங்களுக்கு 1 புக்கு பிடித்திருந்தாளும் 1800ரூக்கு worth all the penny. இதெல்லாம் collectable items, பிடிக்காத புக்ஸ் கண்டிப்பாக வந்த விலைக்கி குறையாமல் விற்று விடலாம்”
சந்தா கட்டாதீர் என்று சொல்லும் இடத்திலும் நான் டிசைன் செய்த போஸ்டர் உபயோக படுத்த படுகிறது, விளம்பரத்தை பொருத்த வரை “ A PR is a PR, there is no Good PR or Bad PR”.
இன்றைய தேதிகளில் எத்தினை பார்வைகள் என்பதற்க்கே காசு, எப்படி பட்ட பார்வைகள் என்பது அல்ல. ஏப்படி ரீச் ஆனால் என்ன.. ரீச் ஆகனும். ரீச் ஆகுது… இந்த போஸ்டரை டிசைன் செய்ததில் ஆத்ம திருப்தி, கல்வெட்டில் என் பேயரும் உள்ளது போன்ற சந்தோஷம்!!! இந்த இடத்தில் தற்பெருமை அடிக்க கோஞ்சம் கூட் வெட்கமாக் இல்லை.
GET WELL SOON editor sir...
ReplyDeleteவிஜயன் சார், smashing 70s திட்டமிடல் மிகவும் சரி. இதன் விற்பனை பற்றிய உங்களின் நிலைப்பாட்டை சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறேன். இதுபோன்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருங்கள் இனி வரும் காலங்களில். நாங்கள் உங்களுடன் கண்டிப்பாக இருப்போம்.
ReplyDelete// வேதாளர் மாத்திரமல்ல, தொடரவுள்ள ஒவ்வொரு க்ளாஸிக் நாயகருமே முத்திரை பதிக்காது போக மாட்டார்களென்பதில் எனக்கும் சரி, உங்களுக்கும் சரி, பூரண நம்பிக்கையுள்ள போது - இன்றைய வன்ம வெளிப்பாடுகளை ஜாலியாய்க் கடந்து செல்வதென்ன பெரிய காரியமா folks ? "He who laughs last" ....என்று ஏதோ இங்கிலீஷில் சொல்லுவார்களே ; அதை மட்டும் நினைவில் இருத்திக் கொண்டால் போச்சு ! //
ReplyDeleteமிகவும் சரி. அப்படியே நடக்கட்டும்.
ஒமீக்ரான் என்றதும் பதைபதைப்பு எட்ட....பதிவிலே இதை கண்டதால் எட்டப் போக....தொடருது செந்தூரான் அருள் தங்கள் வரிகளில்....
ReplyDeleteகள்ள மார்கெட் வியாபாரிகளை புரட்சியாரின் பாடல் அன்றே தாக்கி வைக்க ...மூலைக்கு மூலை தூக்கி எறிஞ்சோம் தலைகுனிவா ஆனாங்க... என் எக்காளமிட முழங்குறார் வேதாளர்....
சிங்கம் நிதானமா வைக்கும் அடி ஓங்கியடிச்சா ஒன்றை டன் வெயிட்டுடா ...என பாயுது அப்பாவி மான்களை வலைவிரித்து வேட்டையாடிய ஓநாய்களை...
2000 வாக்கில் இரத்தப் படலத்த ஆயிரம் ஒரு புத்தகமென ஓநாய்கள் இரத்த தாகத்தோடு துவங்க ...இவ்வளவு விலை நமக்காகாதென நானும் ஒதுக்க....கருப்பு வெள்ளை ஒரே தொகுப்பாக பாய்ந்து வர...வண்ணத்தில் வரலயே என எக்காளமிட தொடர்ந்தது வண்ணப் பாய்ச்சல் சிங்கப் பாய்ச்சலால்...
இப்ப நீங்க நான்குமே என வைத்த செக்...நீங்க சதுரங்க ஆட்டத்துல உங்க அட்டாகாச நகர்த்தலால் சதுரங்க வெறியன்... ஸ்பைடரால் தனது சிப்பாய்கள் இழந்தது காட்டுது...பிற காய்களும் உண்மை உணர்ந்து பின் வாங்கி அணி மாற காலம் உதவட்டும்...
ராம்போவின் மரண அடி இரண்டுக்கு மேல் சந்தா செலுத்தியோர் அவர்களாய் இருக்கும் பட்சத்தில் பின் வாங்க ஓர் வாய்ப்பும்... மோதாதே எனும் எச்சரிக்கையும் அருமை....
ஆனா அந்த பார்ட்டிகள் அவங்க ஆசைப்பட்ட வேதாளர் கெடச்ச மாதிரி ஆக வாய்ப்பும் அதிகம்...பொழச்சு போகட்டும்கிற கருணை இரையெடுத்த சிங்கம் வேட்டையாடாது எனக் காட்டுது....உண்மையான நண்பர்கள் பாதிக்கப் படக் கூடாது ஆயிரம் குற்றவாளி தப்பலாம் ஒரு நிரபராதி தண்டிக்கப் பட்டு விடக் கூடாது எனவும் பார்க்கலாம்தான் ....இனி வரும் சந்தாக்கள திருப்பித் தர முடியாது என அறிவிச்சிருப்பீங்க நிச்சயமாய்....
வந்துடீங்களா தெய்வமே ? :-)
DeleteEnd of the day - your business your decisions.
ReplyDeleteஇதில் அடுத்தவர் அபிப்ராயங்களுக்கு நீண்ட விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை சார்.
Deleteமுதலில் நானும் அப்படித்தான் நினைத்தேன்..நண்பர் STV வாட்ஸ் அப்பில் விளக்கியபின்னேதான் முழு விஷயமும் - முழு விஷமச் செயல்களும் -என்பதே பொருத்தமானது- புரிந்தது.வேதாளர் இதழ் மட்டுமே சாத்தியமல்ல - all or none - என்ற எடிட்டரின் நிலைப்பாட்டை தகர்த்துவிட்டோம் என்பதற்காகவே முகநூல் பதிவுகள் சில வெளிப்பட அனைத்துக்கும் சந்தா கட்டிய சில நண்பர்கள் மனம் தடுமாறக் கூடும் என்பதற்காக அவர்களுக்காக எழுதப்பட்ட பதிவு...
ஏற்கனவே ஒரு நண்பர் இதை நேரிடையாக கேட்டுவிட்டதால் அவருக்கும் அவரைப் போன்றவர்களுக்கும் எழுதப்பட்ட பதிவு இது..
பலவகையில் அவசியமானதும் கூட..
நேரடி சந்தாதார்களுக்கு மேகி கேரிஸன் இலவச இதழ் கிடைத்திருக்க மேலும் பல ஆச்சர்யப் பரிசினை எக்ஸ்குளூசிவ் ஆக அறிவித்திருப்பது சந்தாதாரர்களை ஊக்கப்படுத்தவே...
சந்தா கட்டாதீங்க என்ற விஷமப் பிரச்சாரத்திற்காக ரெகுலர் சந்தா கட்ட முயல்பவர்களை தடுக்க முயலும் முகவர் போர்வையில் செயல்படும் சில நபர்கள் கையாளும் வழிமுறைகள் விபரீதமானவை..அவர்கள் களையெடுக்கப்பட வேண்டியவர்களும் கூட..எடிட்டரும் அதைச் செய்து கொண்டிருக்கிறார் .
அப்பாவி உண்மை வாசகர்கள் சிலர் மனக்குழப்பத்தை தெளிவுபடுத்த முயலும் இப்பதிவு அவசியமானதே...
// அப்பாவி உண்மை வாசகர்கள் சிலர் மனக்குழப்பத்தை தெளிவுபடுத்த முயலும் இப்பதிவு அவசியமானதே... //
Delete+1
இந்த background எனக்கு தெரியாது.
Deleteஅதே சமயம்,
இந்த முறை Edi சார் முடிவில் உறுதியாக இருக்கிறார்.
பல ஸ்பெஷல் இதழ்கள் வர இருப்பதால், சில சமயம் ஆசிரியர் களத்திற்கு ஏற்ப சில flexible business முடிவுகள் எடுக்க வேண்டி வரும்.
ஓவ்வொரு முறையும் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க கூடாது.
அவர்கள் களையெடுக்கப்பட வேண்டியவர்களும் கூட//
DeletePseudo Agent கள் களை எடுக்கப்பட வேண்டியவர்களே. ஏஜெண்ட்கள் விளம்பர தூதர்கள் போல் செயல்பட வேண்டும். அதை விடுத்து தொடர்ந்து எடிட்டரை பற்றி தனிப்பட்ட முறையிலும், அவருடைய பிசினெஸ் மாடல் பற்றி, இன்டெக்ரிட்டி பற்றி பொது வெளியில் ஆதாரமின்றி தவறான தகவல்களை கொட்டித் தீர்ப்பதைத்தான் இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஸ்பெசல் இதழ்களை பதுக்கி பின் பினாமிகளைக் கொண்டு அதிக விலைக்கு விற்பது, பதுக்கல்காரர்களுக்கு டிஸ்கௌண்டில் ஸ்பெசல் இதழ்களை பதுக்க உதவியாய் அளிப்பது என செயல்படும் இந்த pseudo agent கள் எடிட்டர் அல்லாமல் கடைகளில் விற்கும் முகவர்களுக்கும் சாதாரண வாசகர்களுக்கும் நீண்ட நாள் காமிக்ஸ் நலனுக்கும் எதிரிகளே.
சார் மார்ச்சுக்கு ஜனவரி...ஃபிப்ரவரிக்கு ஹெவியான இதழ்கள் இந்த ஐம்பதாமாண்டுக்கு மட்டுமாவது மாதம் தோறும் ஓர் இதழ் எதிர்பார்ப்பை விஞ்சி வரும்னு இருந்தேன்...உடல் நலத்தை கவனிங்க ...பின்னர் பார்ப்போம்
ReplyDeleteவேதாளர் புக் நன்றாக உள்ளது.
ReplyDeleteஆனால் நீங்கள் கூறியது போல் விமர்சனங்கள் இல்லாமல் இல்லை.
தயாரிப்புத் தரம் திருப்தியாக உள்ளது. ஆனால் வசனங்கள் எல்லாம் கோர்வையாக இல்லாமல் தந்தி படிப்பது போல் இருந்தது .
கிட்டத்தட்ட சிறு வயதில் ராணி காமிக்ஸ் படித்தது போல்.... சிறு முன்னேற்றம் அவ்வளவே ....
(பஞ்ச் வசனங்கள் எல்லாம் 'பழமொழி' என்று கூறி தப்பித்ததை போல)...
எடிட்டர் அவர்கள் பூரண குணமடைய மனமார்ந்த ப்ரார்த்தனைகளும் வாழ்த்துகளும்!!
ReplyDeleteமேலே நீங்கள் கூறிய வெளியீடு மாற்றங்கள் தெளிவாக புரியவில்லை....
ReplyDeleteஎன்ன சொல்கிறீர்கள் என்று புரியவே இல்லை.
சந்தா கட்டியது சரியாய் தவறா என்று புரியவில்லை ...
வேண்டுமானால் பணம் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றால், நாங்கள் கட்டியது தவறா ?
யாரோ செய்யும் தவறுக்கு எல்லோரையும் குழப்புவது எப்படி சரியாகும்?
நீங்கள் நல்லது செய்வதாக நினைத்தாலும், இவ்வாறு உங்கள் முடிவை மாற்றிக் கொண்டே இருப்பது என்னைப் போன்ற வாசகர்களுக்கு வருத்தமே...
நானும் விலை அதிகம் என்று போன பதிவில் கூறியிருந்தேன்.. ஆனால் அதற்காக விலையை குறைக்க முடியுமா?
உங்கள் முடிவுகள் உறுதியாக இருந்தால் யாரும் ஒன்றும் செய்ய இயலாது...
சார், தங்களின் "all or nothing concept" என்ற உங்களின் முடிவை பெரிதும் மதிக்கிறேன். நான் மொத்தமாகத்தான் சாந்த கட்டி உள்ளேன். அனாலும் என் கருத்தினை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
ReplyDeleteஇதழ்களின் எண்ணிக்கை அதிகமான இந்த கால கட்டங்களில் "all or nothing concept" ஒருவித அழுத்தத்தையே தந்தது. ராணி காமிக்சில் வேதாளரை படித்தவர்களில் யாராவது இந்த இதழை வாங்க விரும்பினால் "all or nothing concept" னால் வாங்காமல் போகவும் வாய்ப்பிருக்கு. இது அனைவரையும் நமது காமிக்ஸ் சென்றடைய வேண்டும் என்ற நமது எண்ணத்திற்கு வலு சேர்ப்பதாக இல்லை என்பது என் எண்ணம்.
Get well soon Editor Sir!
ReplyDeleteSeivathai thillai sei super!
ReplyDeleteகைகளில்-நான்கு இதழ்கள் இருந்தாலும் எண்ணங்கலெல்லாம்- வேதாளன் - இதழையே-அனைவருக்கும் சுற்றிவருகிறது..
ReplyDelete- "மேக்ஸி"-சைசில் வேதாளனை ஹார்டு பவுண்ட் அட்டையில் பார்க்கும் போது தெறிக்கும் அந்த ராயல் லுக்-கண்டிப்பாக சின்ன சைஸில் கிடைக்காது..
- உள்பக்க பேனல்களை பொறுத்தவரை / ஒரிஜினலின்படியே வெளியிடுவதாக ஆசிரியர் சொல்லிவிட்டார்
அதை மாற்றிவரிசைக்கு 2 Frame,3Frame என்பது தயாரிப்பில் காலதாமதமும் ஏற்படலாம் ..பக்க எண்ணிக்கை கூடி விலை ஒரு கட்டுக்குள் இல்லாமல் போகலாம்..
மொழிபெயர்ப்பில் வித்தியாசம் தெரிவது.. வேதாளனை - இந்திரஜால் காமிக்ஸில்-படித்ததால் தோன்றலாம்-
ஆங்கிலத்தை அப்படியே மொழிபெயர்த்திருப்பார்கள்- செய்வினை - செயல்பாட்டு வினை மாறி கிடக்கும்..(இவ என்ன சொல்றா என்பது-என்னெ ன்ற இவ என்று மாறிவரும்) அது வேதாளர் கதைக்கு ஒரு திகிலை மெய்ன் டெய்ன் செய்யும் -
அடுத்த தொகுப்புகளில் அந்த பிரச்சனை வராது..ஏனெனில் அது நமது நிறுவனமொழிபெயர்ப்பிலேயே படித்து பழகிய கதைகள் என்பதால்..
மேலும், இந்த தொகுப்பை நமக்கான (பால்யத்தின் தேடல்கள்) ரசனையாக மட்டுமே பார்க்கக்கூடாது..
இனிவரும் சந்ததியினருக்கு ஒரு அட்டகாசமான வாசிப்பு அனுபவத்தை தரும் இதழாகத்தான் பார்க்க வேண்டும்..
அவர்களுக்கான இதழாக இதை கருதினால்-ஆசிரியரின் மெனக்கெடல்கள் தெளிவாகப் புரியும்..
என்னைப் பொறுத்தவரை-2 சந்தா - மூன்று சந்தா - என்றில்லாமல் - இந்த இதழையே-தம்பி பிள்ளைகளிடம் படிக்கக்
கொடுத்து வாங்கிக்கொண்டாலே போதும். இதழுக்கும் எந்த சேதாரமும் ஆகப்போவதில்லை..அவர்களை காமிக்ஸ் வட்டத்திற்குள் கொண்டுவந்ததாகவும் ஆகிவிடும்..நன்றி விஜயன் சார்.. ii.
Well said. DCWவை நேற்று கடந்து திருச்செந்தூர் செல்லும் போது உங்கள் ஞாபகம் தான். :-)
DeleteMaggy Garrison good introduction to our comics! Translation is good.
ReplyDeleteடியர் எடிட்டர் சார், எனது காமிக்ஸ் பயணத்தில் முதன்முதலில் நான் வாசித்ததே வேதாளன் (மாயாவி) கதை தான்.அன்றிலிருந்து அவர் மேல் உள்ள ஈர்ப்பு எத்தனை கௌபாய், டிடெக்டிவ் என்று பலரக நாயகர்களை சந்தித்த போதிலும் சற்றும் குறைய வில்லை. 90 ஸ் இல் இலங்கையில் வேதாளர்/ மாயாவி என்ற பெயருக்கு இருந்த மதிப்பும் வரவேற்பும் வார்த்தைகளில் சொல்ல முடியாதது. என்றாலும் லயன் முத்துவில் வெளியான அவரின் பழங்கதைகள் படிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்த தில்லை.
ReplyDeleteஎனவே தான் நானும் தங்கள் மொழிபெயர்ப்பில் அவரைக் காணும் பேராவலுடன் இங்குள்ள பல நண்பர்களை ப்போல் விடாமல் வேதாளர் கேட்டு கொண்டிருந்தேயிருந்தேன். அந்த நீண்ட காத்திருப்பை பூர்த்தி செய்ததற்கு நன்றி.அவரது கதைகளுக்கு தமிழ்க் காமிக்ஸ் ரசிகர்களிடம் எப்படிப்பட்ட வரவேற்புக் கிடைக்கும் என்று நீங்களே இப்போது நேரடியாகக் காண்பது மகிழ்ச்சியாக உள்ளது.டெக்ஸ் போல் எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
தயவு செய்து வருடம் ஒரு வேதாளர் புத்தகமாவது வெளியிடுங்கள் சார்.அதுவும் வண்ணத்திலும் சாதாரண சைஸிலும் அனைவரும் வாங்கக் கூடிய விலையிலும் இருந்தால் எண்ணிலடங்காத புதிய வாசகர்களை வேதாளர் நிச்சயம் உருவாக்குவார்.காமிக்ஸில் மீண்டும் ஒரு வசந்தகாலம் உருவாகும்.நன்றி 🙏
100
ReplyDeleteவருடத்திற்கு ஒரு வேதாளர் ஸ்பெசல் எல்லாம் பத்தவே பத்தாது சார்...
ReplyDelete// அப்பாவி உண்மை வாசகர்கள் சிலர் மனக்குழப்பத்தை தெளிவுபடுத்த முயலும் இப்பதிவு அவசியமானதே... //
ReplyDeleteWell said.
108th
ReplyDeleteதகவல் # 3 : SMASHING '70s பயணத்தினில் இன்னமும் சில surprises காத்துள்ளன & சந்தா செலுத்தியுள்ளோருக்கு exclusive ஆக ; பெருசாய்ப் புன்னகைக்கக் காரணமின்றிப் போகாது என்ற promise !
ReplyDeleteநன்றி சார்....உங்கள் வெற்றிகள் தொடரட்டும்...
சார்.. Take care of your health. வரயிருக்கும் ஸ்பெசல்களில் ஒரு வேதாளன் சாகசத்தை அட்டையேதும் இல்லாமல் (80 பக்க) பாக்கெட் சைஸாக இணைத்தால் மற்ற மூன்று இதழ்களும் விற்பனையில் சாதிக்குமே... இந்த supplementary விற்பனை உலககெங்கும் பட்டைய கிளப்பும் யுக்தியாயிற்றே... தொடருங்கள் இந்த வெற்றிப்பாதையை...
ReplyDeleteசெம ஐடியா. அப்கோர்ஸ் செய்வன தில்லாக செய் நல்லாருந்தாலும் மீதி 3 கதைகளையும் விக்க வேதாளர் இலவச இணைப்பு கண்டிப்பா உதவும்.
Deleteஎந்த அளவுக்கு சாத்தியம்னு தெர்ல. இருந்தாலும் நல்ல ஐடியா.
நன்றிகள் சகோ.
Deleteஒரு 48 பக்க முழு நீள ஐரோப்பிய கதை இலவச இணைப்பு நமக்கு போனஸ் தான். அலட்டிக்காமல் சாகசம் செய்யாமல் ஸ்மார்ட் ஒர்க் செய்யும் நாயகி மேகி கதையும் ஒகே தான். எனினும் அதை ஒரு முழு வண்ண வேதாளன் கதையாக கொடுத்திருந்தால் இன்னும் நலமாயிருக்குமே என்று RT முருகன் என்னிடம் சொன்னார்.
அதை யோசனையை முன்வைத்தே 72 - 80 பக்க பாக்கெட் சைஸ் வேதாளன் இணைப்பு பற்றி சொன்னேன். இந்த வேதாளன் பாக்கெட் சைஸ் அல்லது 10 ரூபாய் டெக்ஸ் வில்லர் (7.5"x5") சைஸ் போன்றவற்றில் format செய்வது சுலபம்.
பட்ஜெட் பொறுத்து சாத்தியக்கூறானதை ஆசிரியர் தான் எடுத்திடல் வேண்டும்.
நல்ல யோசனை
Deleteஇந்த காமிக்ஸ் அரசியலை தவிர்த்துவிட்டுப் பார்க்கையில் , எனது காசுக்கு குறையில்லாமல் வேதாளரை கொடுத்தற்கு , நன்றி சொல்லும் அதே வேளையில் எனது பகுதியில் தங்கள் வெளியீடுக்கான முகவர் இல்லாததால் , நான் சிரமமானாலும் சந்தாவை தொடர்வேன் என்பதையும் , என் ஆயுள் முழுவதும் ,உங்களது வெளியிடுகள் குறைக்கும் என் மன அழுத்தத்தை கவனத்தில் கொண்டாவது , உங்கள் உடல் நலத்தையும் கவனமாக பேணுமாறு, சிறிது சுயநலத்துடன் கேட்டுக் கொள்ளும் அதே வேளையில் நான் அரசாங்க வேலைக்கு போகும் முன்னேவும் , இப்போதும் லயன் காமிக்ஸ் வாசகன் என்பதில் பெருமை கொள்கிறேன்
ReplyDelete// நான் சிரமமானாலும் சந்தாவை தொடர்வேன் என்பதையும் , என் ஆயுள் முழுவதும் ,உங்களது வெளியிடுகள் குறைக்கும் என் மன அழுத்தத்தை கவனத்தில் //
Deleteநன்றி. தொடர்ந்து சந்தாரராக வர நீங்கள் முடிவெடுத்தது சந்தோஷம்.நன்றி.
அது சரி..
Deleteநீங்க எந்த ஊரு ஸ்டீல் க்ளா-ன்னு தெரியலியே...
(இரண்டு தடவை படித்த பிறகுதான் புரிந்தது..)நன்றி..
115வது
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவிஜயன் சார், உங்கள் உடல் நலம் தேறி வரும் நேரத்தில் எழுதிய இந்த பதிவில் உங்கள் உற்சாகம் சிறிதும் குறையாமல் மிகவும் அருமையாக சிறப்பாக எழுதியுள்ளீர்கள். இதற்கு காரணம் காமிக்ஸ் மேல் உள்ள காதல் மற்றும் வாசகர்களை மதிக்கும் நல்ல மனம் தான். இவ்வளவு சிரமத்திற்கு இடையில் மிகவும் முக்கியமான பதிவை கொடுத்து சந்தாதாரர்கள் மற்றும் நமது காமிக்ஸ் நண்பர்களுடன் நீங்கள் எப்போதும் இருப்பீர்கள் என உங்கள் நிலைப்பாட்டை தெளிவாக எழுதியுள்ளீர்கள். நன்றி சார்.
Deleteஎடிட்டர் சார். சத்தமில்லாமல் வருவதில் ஓமிக்ரோன் கெட்டிக்காரன். தங்களின் உடல்நலம்தான் பிரதானம். தயவுசெய்து நன்றாக ஓய்வெடுங்கள் சார். வாசகர்களான எங்களுக்குகாக. புகழ்ச்சி இல்லை. நெயமாலுமே தங்களை மாதிரி இத்தனை தூரம் மனதுக்கு நெருக்கமான எடிட்டரை காண்பது குதிரை கொம்பு. இந்த சலசலப்பெல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. எங்களுக்காக என்றாலும் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள் சார். சுயநலம்தான். கொஞ்ச நாட்களாகவே கோகுலாண்டவரால் பதிவிட முடியவில்லை.
ReplyDeleteஆசிரியர் இலவசம்னதும் வேதாளரின் பாதுகாப்பு முத்திரை மோதிரமும்...மண்டையோட்டு மோதிரமும் தருவார்னு நினைக்க..வந்தது புத்தகம்....
ReplyDeleteநாளை படிக்க காத்திருக்கிறேன்
Very nice sir...Bharathi Nandheswaran with love...
ReplyDeleteஅன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
ReplyDeleteஎடிட்டர் சார் கசாயமே கதி என்று இருங்கள். ஒரு நாள் கபசுரம் (சாப்பாட்டிற்க்கு பின்),மறுநாள் நிலவேம்பு (சாப்பாட்டிற்க்கு முன்) என்று குணமாகும் வரை இருக்கலாம்.குணமான பின்பும் வாரம் இருமுறை அருந்தலாம்.எதிர்ப்பு சக்தி தொடர்ந்து இருக்கும்.
Smashing 70 ல் வேதாளர்...சிறு குழந்தைகள் மிட்டாய் விரைவில் தீர்ந்து போகாமல் இருக்க கடித்து சாப்பிடாமல் சப்பி சாப்பிடுவதை போல ஒரு நாள் ஒரு கதை என்று படித்து இன்றுதான் 8 வது கதையை முடிக்கிறேன்.
கபால குகை,வேதாளர் முகடு,ஹீரோ,டெவில்,குரன்,மிஸ்.டகாமா,ரெக்ஸ்,டாம்,ப்ரான்கா,டயானா,லெமண்டா என்று எட்டு நாட்களும் ஆழ நடுக்கட்டில் வாழ்த்தாயிற்று.இன்றாவது கோவை போய் விடவேண்டும்
//சிறு குழந்தைகள் மிட்டாய் விரைவில் தீர்ந்து போகாமல் இருக்க கடித்து சாப்பிடாமல் சப்பி சாப்பிடுவதை போல ஒரு நாள் ஒரு கதை என்று படித்து இன்றுதான் 8 வது கதையை முடிக்கிறேன்.//
Deleteஹா..ஹா..ஹா.. சிறந்த பொருத்தமான உதாரணம்...
" வெள்ளத்தில் மூழ்கினவங்களை விட சரக்கிலே மூழ்கி ஓய்ஞ்சு போனவங்க தான் ஜாஸ்தி " செம இயல்பான டயலாக் மிகவும் ரசித்தேன். எப்படி சார் இப்படி எல்லாம் எழுதுறீங்க. சூப்பர்.
ReplyDeleteவாரரிசைத் தேடி அருமையான தலைப்பு...வேதாளரும் தேடுறார்...வில்லனும் தேடுவான்....அச்சச்சோ என பதைபதைக்க வில்லன புரட்டுறான் ....கானகத்தில் வளர்ந்த பிள்ளை ஏப்பை சாப்பையல்ல...வேதாளர் கிணற்றில் இறங்கும் போதும்...வாக்கரா மாறும் போதும்...கல்நாற்காளியில் அமரும் போதும் இனம்புரியாத சந்தோசம்....என்பது களுக்குள் ஒரு கனம் போய் வருகிறேனோ தெரியல....காலக்கடத்தியானது இங்கே புத்தகமா அல்லது மனதார தெரியவில்லை....மொழி பெயர்ப்பும் அதே போல் அன்று போல் அட்டகாசம்....வேதாளம் கதைகளின் வாக்கியங்கள் முற்று பெற்றிருக்கும் இவ்வளவுதானா என கேக்க வைக்கும்....அதாவது முற்று பெறாதது போல தோணும் ஆனா கவனிச்சா முற்று பெற்றிருக்கும்...ஸ்பெசலான மொழி பெயர்ப்புக்கு சபாஷ்....படித்த கதை போல தோணினாலும் நினைவில் இல்லை...தலைமை ஆசிரியரின் நினைவும்...அந்த அட்டைப்படமும்....லங்கோடும் மனதில் இங்கோடுது...கதை அட்டகாசம் சார்..
ReplyDeleteசில நண்பர்கள் பேனல்கள் குறைக்கச் சொல்கிறார்கள்....ஆனா எட்டு கதைக அட்டகாச பக்கத்ல இவ்வளவு மலிவு விலைல சாத்தியமா....பிம்மாண்டமா இருக்கு....தொடரட்டும் இதே பாணி....நிறைய கதைகள் வேண்டுவோரின் அட்சய பாத்திரம் இது....பழமைய மீட்கும் அலாவுதீனின் விளக்கு இது....திருப்தி கொள்வோம் ...கதை பக்கம் முழுக்க ஒரே பேனல்ல வந்தா இன்னும் நல்லா தானிருக்கும்...ஆனா நிதர்சனம்....இந்த புக்க கையிலேந்தயில இரத்தப்படலத்த ஒரே புக்கா இதே தாள்கள் வந்தா என தோணுதுதான்
வேதாளர் நிச்சயமா முதன்முறையா இந்திரஜாலிவில் பார்த்திருக்கலாம் அல்லது மூனாப்புநாலாப்பு படிக்கயில எங்க பழம் இரும்புக் கடைல கொத்தாக கிடைத்த கூண்டில் தொங்கிய சர்வாதிகாரியாக இருக்கலாம்...வேதாளர் கதைகள் நான் அதிகம் தேடினேன் வரவில்லை . இந்திரஜால் வசந்தம் ஸ்டோரில் பழம் விற்காத கதைகள்நிறைய இருந்ததும் ....லயன் முத்து ஜூனியர் ராணி ரத்னபாவா கோகுலம் இத்யாதி கதைகள வாங்க திண்டாடியதில் அதிக விலை தந்து இந்திரஜால் வாங்கல...ஆனா என்பதுகட்குபின்இறுதிகளில் ராணி காமிக்ஸின் வந்த வருகிறது விளம்பரத்ல வந்த மாயாவி புரூஸ்லி புரட்சிப் பெண் ஷீலா பாத்து நான் அடைந்த உற்சாகத்துக்கு அளவே இல்லை..புரூஸ்வி கலக்க இரகசிய போலீஸ் என மாயாவி தொடர பின்னர் வாங்கிக் குவித்தேன்...ஆனா அந்த உற்சாகம் தொடராததால வாங்காமல் விட்டு விட்டேன்....அந்த மனக்குதிரய தட்டி எழுப்பி ஓடச் செய்துள்ளீர்கள்...
Deleteவேதாளர் கதைகளிலே டாப் முன்னோர் கதைகள் அவர் வாசிக்க சூழ்ந்துள்ளோர் கேட்டுக் கொண்டிருக்க நைசாக நானும் அவர்களுக்குள் நுழைந்திருப்பேன்....கோப்பை வாள் பொக்கிசம் என சொல்லி பாதியில் விட்டு விடுவார் தூங்கச் சொல்லி...அவர்கள் உறங்கி எழும் முன் நான் அங்கே உறங்காமல் காத்திருப்பேன்...அதப் போல கதைகள் நிறைய விடுங்க சார்...
சில நண்பர்கள் பேனல்கள் குறைக்கச் சொல்கிறார்கள்....ஆனா எட்டு கதைக அட்டகாச பக்கத்ல இவ்வளவு மலிவு விலைல சாத்தியமா....பிம்மாண்டமா இருக்கு....தொடரட்டும் இதே பாணி....நிறைய கதைகள் வேண்டுவோரின் அட்சய பாத்திரம் இது....பழமைய மீட்கும் அலாவுதீனின் விளக்கு இது....திருப்தி கொள்வோம்
Delete#####
+1
சில நண்பர்கள் பேனல்கள் குறைக்கச் சொல்கிறார்கள்....ஆனா எட்டு கதைக அட்டகாச பக்கத்ல இவ்வளவு மலிவு விலைல சாத்தியமா....பிம்மாண்டமா இருக்கு....தொடரட்டும் இதே பாணி/////
Deleteஅப்ப இதே பக்க எண்ணிகைல இன்னும் ஒரு 5 கதையை சேர்த்திபோட்டுக்களாம் ஜி...இன்னும் நிறைய கதையை படிச்ச மாதிரி இருக்கும்...என்ன காமிக்ஸ் படிச்ச மாதிரி இருக்காது...ஏதோ நாவல் படிச்ச மாதிரி தான் இருக்கும்..சொல்லப்போன இப்பவே எனக்கு அந்த புக்க படிக்கும்போது, நாவல் படிக்கிற பீலிங் தான் வந்துச்சு...
சரிதான் நண்பரே...ஆனால் இப்ப வரும் பேனல்கள் படிக்க இயலாமலில்லையே..மேலும் ஆண்டு சந்தா...குறுக்கே வரும் புத்தகங்கள்...புத்தகவிழா வெளியீடுகள் என சந்தா அதிகம்னு கொடி பிடிப்போரும் உண்டே....அதே சமயம் இவை அனைத்தும் ஒரிஜினல் ஃபார்மேட்தானாமே...
Deleteவிற்பனை எனும் உண்மையான சக்திக்கு முன்னே எல்லாமே அடிபடுதே
அதே சமயம் இவை அனைத்தும் ஒரிஜினல் ஃபார்மேட்தானாமே..////
Deleteஹோ....ஒரிஜினல் ஃபார்மட்டே இப்படிதான் ஒரு பக்கத்துக்கு 14-16 பேனல் இருக்குமாங்க ஜி.!! அப்படி இருக்கும்பட்சத்தில் குறை சொல்றதுக்கு ஒன்றுமில்லை ஜி...
அப்பறம் விற்பனை பத்தி சொல்லியிருக்கிங்க...லயன்..முத்து காமிக்ஸ் (ஸ்பெஷல் வெளியிடுகள்) விற்பனை ஆகாமல் போனால் தான் ஆச்சர்யம் ஜி...
நண்பரே இன்னைக்கு வரும் புத்தக எண்ணிக்கையை கணக்கில் கொள்ளுங்கள்..இந்த ஸ்பெசலும் ரெகுலர் இதழ்தானே இனி
Deleteஎன்னமா சொல்ரிங்க....ஆன என்னானு தான் எனக்கு புரியலை ...என்னோட அறிவு அவ்வளவுதான் , மண்ணிக்கவும் ஜி...இத்தோட நிப்பாட்டிக்குவோம்..
Deleteசெய்வன தில்லாய்ச் செய்:
ReplyDeleteபெரிய ஹீரோ கிடையாது, ஆக்ஷ்ன் கிடையாது, மண்டையை குடைய செய்யும் கதை கிடையாது ஆனால் புத்தகத்தின் முதல் சில பக்கங்களை படித்த உடன் இந்த கதையை படித்து முடித்த பிறகு தான் கீழே வைக்க வேண்டும் என ஓரே மூச்சில் படித்து முடித்தேன். இயல்பான ஆனால் கொஞ்சம் கோக்கு மாக்குகள் தெரிந்த மேகி, அவள் சிட்டு குருவியை கேஸை முடித்த விதம் செம சிரிப்பை அடக்க முடியவில்லை, யாருமே யோசிக்காத ஒரு கோணம் இது; இதைவிட கிரிக்கெட் பந்தை கண்டு பிடிக்கும் விதம், மிகவும் ரசித்தேன். டிக்கெட் ரகசியம் நடுவில் வந்து சேரும் போலீஸ் தோழி என கதை முழுவதும் கலகலப்பு. விரலை ஒடிப்பதை பற்றி டோபி பேசுவது நல்ல காமெடி. கடைசியில் உண்மையில் ஒரு துப்பறிவு வேலை செய்து கதையை முடித்தது மகிழ்ச்சி. படித்து முடித்த உடன் மனது லேசானது முகத்தில் ஒரு மகிழ்ச்சி.
அட்டகாசமான அறிமுகம் மேரி. அடுத்த வருடம் முதல் இவரை ரெகுலர் சந்தாவில் வெளியிடுங்கள்.
விலையில்லாம் இந்த கதையை சந்தாதாரர்களுக்கு கொடுத்ததற்கு நன்றி. இதற்கான பணத்தை நல்ல கதையை கொடுத்த உங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஆசை. நன்றி.
மேகி கேரிஸன் நம்ப டெட்வுட் டிக் மாதிரி செம don't care & ஜாலி பேர்வழி :-)
DeletePhantom- book finish and print are excellent. Usage of the light weight thick paper adds to its classiness.I think the heavy binding can be avoided and can be in the flexi bind quality as you have done in Never Before Special issue. This could save some cost as well.
ReplyDeleteநண்பர்களே... நம்ம லயன் காமிக்ஸ் டைட்டில் மற்றும் கதைகள் லிஸ்டை எக்ஸ்செல் ஷீட்டில் தொகுத்து ஓரளவு விபரமாக பதிவிட்டுள்ளேன். லிஸ்டில் லயன் 200 வரை மட்டுமே தொகுத்துள்ளேன். லயன் மறுவருகைக்கு பின்னர் லயன் முத்துவை தொடர்ந்து வாங்க வில்லை என்பதால் பின்னர் வந்த டைட்டில்களின் கதைகள் குறித்த புள்ளி விபரங்கள் என்னிடம் இல்லை என்பதால் தற்போது 200ல் நிற்கிறது. ஆர்வமும் விருப்பமும் உள்ள நண்பர்கள் விவரம் கூறினால் மேற்கொண்டு அந்த லிஸ்டை தொடர்ந்து கண்டினியூ செய்திடலாம். கீழே தளத்தின் முகவரி.
ReplyDeletehttps://worldcomicscollectionwcc.blogspot.com/
லயன் காமிக்ஸ்க்காக குரல் குடுக்கும் நண்பர்கள் மேல் நீங்க வெச்சிருக்கும் அன்புக்கு வணக்கங்கள்.
ReplyDeleteசரியோ, தப்போ ஒருசில விசியங்கல சொல்லிடறேன்.
எப்பவும் ஒரு ரூல்ஸ் போட்டால் அதை கடைசிவரை கொண்டு போயிருங்க.
இது உங்க ப்ளாக்ல போடும் போஸ்டுகளை பலர்கிட்ட கொண்டுபோய் சேர்க்குற நல்ல ரசிகர்களுக்காக.
வாசகர்களுக்கு ஒரு ரூல்ஸ்,
அப்பறம் சந்தா,
அப்பறம் ஏஜென்டுகளுக்கு ஒரு சலுக.
படிக்கிறவங்களுக்கு ஒரு சலுகன்னு எத்தனை?.
ஏற்கனவே தீவிர காமிக்ஸ் ரசிகர்கள்ங்கற பேர்ல இருக்கும்,
தமிழ் சாக்கு,லக்கி தமிழ், சுந்தரவரத ஐயர்,கலீல்,வெள்ளை இளவரசின்னு பலருமே, எப்ப எங்க கேப் கெடைக்கும்னு காத்துட்டு இருக்காங்க.
இந்த வாய்ப்பு கெடச்சதும் ஊதுஊதுன்னு வவுரு பொடைக்க ஊதுறாங்க.
வாட்சப், பேஸ்புக் னு, லயன் பத்தி பொய்யான தகவல்களை பரப்பறதே இவிங்கதான்.
ஒண்ணு கூட உண்ம இருக்காது.
தனியா கெடச்சிருந்தா 2000 ரூபாய்க்கு விக்கலாம்ங்கற நெனப்புல டன் கணக்குல மண்ணு உளுந்துருச்சு.
நீங்க ஏஜென்ஞுகளுக்கு குடுத்த சலுகைய, உண்மைய சொன்னவங்க மேல காட்டறாங்க.
ஏஜன்டுக குடுத்தா வாங்கி படிக்கற உட்டுட்டு,
"தனியா கெடக்காதுனு சொன்னீங்கனு",
சில ஆதரவாளர்கல குறிவெச்சு, வாட்சப் குரூப்புகள்ல பேசறது சிரிப்பா வருது.
அதும் அவங்க போட முடியலைன்னு,
அந்த குரூப்புல இருக்குர வேற ஆட்களை கொண்டு போட சொல்லிட்டு, இவங்க ஒளிஞ்சுக்கறதுக்கு என்ன பேர்னு தெரீல.
யாராவது எனக்கும் வாங்கிகொடுங்கனு கேட்டா, பின்னங்காலு பொடனீல படறமாரீ ஓடறாங்க.
பொய்யி புட்டுக்குச்சேன்னு.
கண்கொள்ளா காச்சியா இருந்துச்சு.
கேட்டா, "இது தெரிஞ்சு நீங்க உசாராயிட்டீங்களாம்" அதனால ஏஜென்ஞுகளுக்கு புக்கு கெடக்கலயாம்"
என்னா பொய்யி.
ஒரு நிறுவத்தோட பேரைக்கெடுக்கறதுல போட்டி போட்டு அலையும் இவர்களை எந்த கணக்குல சேக்கரது ? இங்குள்ள நண்பர்களே?.
இவங்க சொல்லும் எல்லா தகவல்களுக்குமே எந்த ஆதாரமும் கெடையாது. சந்தேகமிருந்தா கேட்டு பாருங்க.
இதை ஏன் சொல்றேன்னா,
நல்ல வாசகர்களுக்கும், நிறுவனத்துக்கும் இடையே தேவையில்லாம பேசி,காமிக்ஸ் மீதான மதிப்ப கொறைக்கறவங்க இவங்கதான்.
ஜாக்ரதையா இருந்துக்கங்க.
எதுனாலும் நேரடியா இங்க கேட்டு உங்க சந்தேகத்த தீத்துக்கங்க.
பிறகு இந்த கமெண்ட அழிக்காதீங்க சார்.
நல்ல வாசகர்களுக்காக...
@ ஸ்பைடர் ராஜா தமிழ் காமிக்ஸ் பற்றி எழுதுவதை சென்ற வருடத்தோடு விட்டு விட்டேன். இன்னும் என் பெயரை இழுக்க வேண்டாம்.
Deleteதனியா கிடைக்காதுன்னு சொன்ன புத்தகத்தை, மொத்தமா முன் பதிவு பணம் கட்டிய பின்னர் (பிடிச்ச புக்கை மட்டும் வாங்குறவங்களுக்கு) தனியா விக்கிறது எப்படி சரியாகும்? அதை சுட்டிக்காட்ட தான் 10, 5 புத்தகம்னு வெச்சி படம் போடறாங்க. தனியா விக்கலாம்ன்னு இருந்தா எதுக்கு போட்டோ போடணும்? இரகசியமா தானே வெச்சி விக்கணும் ...?? அதுவுமில்லாம அதை ஏன் அதிக விலைக்கு விக்கணும்? அதான் தனியாவே கடைகளிலேயே கிடைக்கிறதே. நேற்றுகூட கோவை மணிக்கூண்டு அருகிலுள்ள கடைகளில் வேதாளர் புத்தகம் தனியாக போஸ்டர் மற்றும் மேகி கேரிசன் புத்தகம் உட்பட கிடைக்கிறது.
Delete@Shankar அதான் கேக்கரன்.
Deleteதனியா கெடைக்குதுன்னா, அது யார்ட்ட கெடைக்குதுனு தைரிய்யமா போஸ்ட்டு போட வேண்டியதுதான?.
ஏன் ஓடறாங்க?.
மிஞ்சி போனா 15 புக்கு வாங்கிருப்பாங்க.
அதுக்கு மேல கெடைச்சிருக்காது.
கோவை கடையில 5 புக்கு கேட்டு பாருங்க, வந்ததே 10தாம்பாரு.
கேட்டாலும் கெடைக்காது.
சரி விக்கறாங்க, வாங்குங்குங்க தப்பில்ல.
அத எதுக்கு நீங்கதா சொன்னீங்க,
நீங்கதா சொன்னீங்கனு
ஒலப்பிட்டு இருக்காங்கனு புரீல.
லயன் ஆபீஸ்ல கேக்கலாமே?.
@தமிழ்சாக்ரடீசு,
Deleteஒருமாசமா எதும்போடலனா நீங்க போட்ட போஸ்ட்லாம் நல்லதா?
எதுக்கு இந்த ட்ராமா?.
இங்க என்ன போஸ்ட்டு போட்டாலும்,
அதுக்குன்னே வெடிய வெடிய உக்காந்து எகத்தாளம் பண்ணி மீம்ஸ்சு போடறவரு நீங்க.
என்னமோ டீசன்டா பேசறமாரீ பேசுறீங்க?.எத்தினி வருசமா பாக்கறேன்.
@ ஸ்பைடர் ராஜா:
Deleteஅதெல்லாம் பழைய கதை!
இந்த வருஷம் லயன் காமிக்ஸ்கள் பற்றியோ, எடிட்டரை கிண்டல் செய்தோ எதுவும் எழுதவில்லை. இனியும் எழுதப்போவதில்லை.
//தமிழ் சாக்கு,லக்கி தமிழ், சுந்தரவரத ஐயர்,கலீல்,வெள்ளை இளவரசின்னு பலருமே, எப்ப எங்க கேப் கெடைக்கும்னு காத்துட்டு இருக்காங்க.
இந்த வாய்ப்பு கெடச்சதும் ஊதுஊதுன்னு வவுரு பொடைக்க ஊதுறாங்க.//
இப்படி என் பெயரை இழுக்காதீர்கள்.
This comment has been removed by the author.
ReplyDeleteநண்பர்கள் திருந்தி வந்தால் நல்லதே நடக்கும்....திரும்பி வந்தால் மேலும் இன்ப அதிர்ச்சிகள் காத்திருக்கும்....உங்களை வைத்து சம்பாதிக்க ஆசைப்படும் நபர்கள் நமது நிறுவனத்த அழிச்சா கடை விரிக்கலாம்னு செய்யுறாங்க....விரட்டி விடுங்க ....ஆசிரியருக்கு உங்கள் சந்தாக்களால் வலு கொடுங்க....ஆசிரியரின் தெளிவான பதிவ மனசார படிங்க
ReplyDelete// ஆசிரியருக்கு உங்கள் சந்தாக்களால் வலு கொடுங்க.... //
Delete+1
"திருந்தி வர" யார் என்ன குற்றம் இழைத்து விட்டார்கள் கவிஞரே ? பார்வைக் கோணங்கள் வெவ்வேறாய் இருப்பது இன்றைக்கெல்லாம் ஒரு விஷயமா - என்ன ?
Deleteவிஜயன் சார், நமது மீள் வருகைக்கு பிறகு பாக்கெட் சைசில் வந்த புத்தகங்களின் font size காரணமாக அதனை படிக்க மிகவும் சிரமமாக இருந்தது. Font size increase செய்தால் படங்கள் தெரியாது. எனவே இனிவரும் காலங்களில் புத்தகங்களை டெக்ஸ் ரெகுலர், வண்ண கதைகள், மேக்ஸி புத்தகங்கள் சைசில் தொடர்ந்து வெளியிடுங்கள் சார். இது கோரிக்கை மட்டுமே.
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete//Font size increase செய்தால் படங்கள் தெரியாது//
Deleteவிலை increase செய்தால் புக்கே மார்க்கெட்டில் இல்லாது போய்விடுமே சார் !
// விலை increase செய்தால் புக்கே மார்க்கெட்டில் இல்லாது போய்விடுமே சார் //
DeleteTiming COMMENT டியர் எடி .. படிச்சவுடன் பட் ன்னு சிரிச்சிட்டேன் ..😆😆
Dear Editor Sir,
ReplyDeleteடெக்ஸ் வில்லரின் முதல் வண்ணப்புத்தகம், "நிலவொளியில் ஒரு நரபலி" என்றாவது ஒரு நாள் பெரிய சைஸ் புத்தகமாக வர வாய்ப்புள்ளதா?
In combo with sigappaai oru soppanam sir!
Delete//"என்றாவது ஒரு நாள்"// ---- fair enough sir !
Deleteஆனால் "பெரிய சைஸ்" என்று நீங்கள் குறிப்பிடுவது எந்த சைஸை என்பது தெரியலியே ?
Editor Sir,
Deleteலக்கி லூக், ப்ளூ கோடஸ் சைஸில் நிலவொளியில் ஒரு நரபலியை படிக்க ஆசை. இந்த சைஸ் (layout) டெக்ஸ் கதைகளுக்கு சரியாக வருமா என்பது பற்றி எனக்கு சரிவரத்தெரியாது. கார்சனின் கடந்த காலம் புத்தக சைஸில் (டெக்ஸ் கதைகளுக்கான சைஸ்/layout) நீங்கள் வெளியிட்டாலும் நன்று.
மிக்க நன்றி.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ReplyDelete💕💕💕💕💕💕💕💕
காமிக்ஸ்
காதலர்கள்
அனைவருக்கும்
இனிய
காதலர் தின
வாழ்த்துகள்.....
💞💞💞💞💞💞💞💞
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
காமிக்ஸ் படிச்சா என்றும் 16....
காணும் எல்லாமே அழகாக தோன்றும்.... அழகியலை உணர்த்தும் காமிக்ஸை ஆராதிக்கும் நாம் அனைவரும் என்றென்றும் காதலர்களே......😍😍😍😍
Same to you STV ji..
Deleteசென்னை புத்தக விழாவில் நம்முடைய ஸ்டால் என் எண்ண? ஏதேனும் சிறப்பிதழ் உண்டா?
ReplyDeleteஎண் *
Deleteஅடுத்த பதிவு அது சார்ந்ததாக தான் இருக்கும்
Deleteஊஹூம்...நல்ல சேதி இல்லை நண்பர்களே !
Deleteஅரசாங்கம் நிறைய கொரோனா கட்டுப்பாடுகளோடே புத்தக விழாவுக்கு அனுமதி வழங்கியுள்ளதால், ஸ்டால் எண்ணிக்கையினைக் கணிசமாய்க் குறைக்க வேண்டிப் போயுள்ளது ! அதன் பலனாய் பபாசி அங்கத்தினர் தவிர்த்த non members எல்லோருக்குமே இம்முறை ஸ்டால் லேது ! So 'கைவீசம்மா...கைவீசு...' என்று சிவகாசியில் இருந்தபடிக்கே பராக்குப் பார்ப்பதே இம்முறை நமக்கான திட்டம் !
இவ்விதம் நிகழக்கூடுமென்ற சந்தேகம் இருந்த காரணத்தின் பொருட்டே, நானும் ஸ்பெஷல் இதழ் என்று எதையும் திட்டமிடவில்லை ! Sorry guys !!
அடடா வேதாளர் தூள் கிளப்பி இருப்பாரே
Deleteவருத்தமான செய்தியே! :(
Deleteவேதனையளிக்கும் தகவல்...ஒரு பெரிய வருவாய்க்கான வாசல் தொடர்ந்து அடைக்கப்பட்டு வருகிறது..
Deleteஉடல் நலம் பேணுங்கள் சார்...
அதிர்ச்சியான விசயம் கேட்க வருத்தமா இருக்குது.
Deleteநண்பர் பழனிவேலுக்கான அறுவை சிகிச்சை நாளை காலையில் நடைபெறவுள்ளது ! ரொம்பவே முக்கியமான இந்த சிகிச்சை நல்லபடியாக நடந்தேறி, நண்பர் விரைவில் பூரணமாய் நலம் பெற வேண்டிக்கொள்வோமே all ? அவரையும், அவரது குடும்பத்தாரையும் நம் பிரார்த்தனைகளில் இருத்திக் கொள்வோமே !!
ReplyDeleteGod be with you பழனி ! இந்தச் சிரம நொடியும் கடந்து போகட்டுமே !
God be with you, Palani. Get well soon. All is well.
Deleteநண்பர் பழனி நல்ல படியாக அறுவை சிகிச்சை முடிந்து சீக்கிரமே வீடு திரும்புவார். 🙏
Deleteநண்பர் பழனிவேல் நல்ல படியாக அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் சீக்கிரமே வீடு திரும்ப எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டுகிறேன்... 🙏
Deleteநண்பர் பழனி நல்ல படியாக சிகிச்சை முடிந்து நலமாக வீடு திரும்ப ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்
Deleteநண்பர் பூரண நலம் பெற செந்தூரான் அருளை வேண்டுகிறேன்
Deleteநண்பர் பழனிவேல் பூரண குணம் பெற என்னுடைய வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும்!
Deleteபழனி சகோ க்கு சிகிச்சை நல்லபடியாக முடிந்து விரைவில் குணமடைய என் முருகனிடம் வேண்டிக் கொள்கிறேன் .. 🙏🙏🙏
DeletePray for speedy recovery
Deleteநண்பர் பூரண குணமடைந்து மீண்டு வர நம் அனைவரது வேண்டுதல்களும் பிராத்தனைகளும் நிச்சயம் உடனிருக்கும்.
Deleteநண்பர் பழனிவேல் நல்ல படியாக அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் சீக்கிரமே வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Deleteநண்பர் பழனி நல்ல படியாக அறுவை சிகிச்சை முடிந்து பூரண குணம் பெற என்னுடைய வேண்டுதல்களும் !!!
Deleteநண்பர் பழனிவேல் பூரண குணம் பெற என்னுடைய வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும்
Deleteநண்பர் பழனிவேல் அவர்கள் நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் இல்லம் திரும்பிட எல்லாம் வல்ல ஈசனை வணங்கி வேண்டிக் கொள்கின்றேன்.
ReplyDeleteநண்பர் கரூர் பழனிவேல் அவர்களுக்கு நல்லபடியாக அறுவைசிகிச்சை முடிவடைந்து பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ReplyDeleteநண்பர் பழனிவேல் நல்ல படியாக அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் சீக்கிரமே வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
ReplyDeleteThis is Satheesh from tiruttani, please consider another online book fair in April sir.
ReplyDeleteநண்பரே பூரண நலம்பெற்று புத்துணர்வுடன் வருவீராக.
ReplyDeleteசார் வாரிசுக்கு வலை கதையில், பக்கம் எண் 98ல் லான் லைலா இருவரும் அவர்களது தந்தைகள் எதிரிகள் ஒன்று சேர்வது கஷ்டம் என்று பேசுகிறார்கள், ஆனால் அடுத்த பக்கத்தில் லான் லைலா அவளது தந்தை பற்றி சொல்லாமல் ஏமாற்றிவிட்டதாக வருகிறது, கதையிலேயே இந்த தவறா?
ReplyDeleteஅதே போல லான் குறியீடுகள் பற்றி சொல்லும் படத்தில் லைலா திருடுவது போல வரைந்துள்ளார்கள் அதுவும் தவறாக உள்ளது.
ReplyDeleteசிஸ்கோ எனக்கு மிகவும் பிடித்த நாயகன்.
அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டா ரடீ — கிளியே
ஊமைச் சனங்க ளடீ.
ஊக்கமும் உள்வலியும்
உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக்கோர் கணமும் — கிளியே
வாழத் தகுதி யுண்டோ?
மானம் சிறிதென்றெண்ணி
வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் — கிளியே
இருக்க நிலைமை யுண்டோ?
நாட்டில் அவமதிப்பும்
நாணின்றி இழிசெல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே — கிளியே
சிறுமை யடைவா ரடீ.
சொந்தச் சகோதரர்கள்
துன்பத்திற் சாதல்கண்டும்
சிந்தை இரங்கா ரடீ — கிளியே
செம்மை மறந்தா ரடீ.
என்ற பாரதியாரின் வரிகளைப் பொய்ப்பிக்க வந்த நன்மகனாய், அபலைப் பெண்ணுக்கு உதவிக் கரம் நீட்டுபவனாய், ஊக்கமும் உளவலியும் கொண்டு வஞ்சகருக்கு எதிராய் போராடுபவனாய் உள்ள முத்து நாயகனை யாருக்குத்தான் பிடிக்காது?
இவனுடைய பெயரே மெக்ஸிக சர்வாதிகார எதிராக போராடிய புரட்சிப்படை ஜெனரல் ப்ரான்சிஸ்கோ பாஞ்சோ வில்லா - வின் பெயரைத் தழுவியதுதான் என்பார் உளர்.
இவருடைய காற்றிலே வரும் கீதம், ரயில் கொள்ளை ஆகிய கதைகளை மட்டுமே படித்து இருக்கிறேன்.
யெஸ்! "Hail cisko kid "& his pal "pancho"
( FFS -ல் வந்த ஸிஸ்கோ பற்றி எழுதியிருப்பேன் என ஆரம்பத்தில் உங்களுக்கு தோன்றியிருக்குமாயின் அது என் தவறல்ல.ஆனால் பாரதியாரின் கவிதைக்கு அந்நபர் பொருத்தமானவரே)
ஓகோ..
Deleteஒங்களப் பத்தி தெரிஞ்சும் அப்டி நெனச்சா ...
Deleteபாரதி என்...
வள்ளுவன் என்...
தொல் காப்பியனு மென் செய்வாரியலாமை...காண்பர்
Vijayan Sir,
ReplyDeleteIf possible please have a Plan B and bring and sell our close to heart Lion and Muthu comics in book fair through some other stall or through somebody.
Thanks.
Still we have 3 weeks, even getting these books in last 2 weeks also will help to ease the burden.
Visiting Chennai book fair every year and buying few extra copies in the stall became a habit.
ReplyDeleteThis year going to miss Lion Muthu Comics stall visit.
மகேஷ் உடன் ஆமோதிக்கிறேன், ஏதாவது வகையில் முயற்சி செய்யுங்கள் சார். கண்டிப்பாக நீங்கள் செய்திருப்பீர்கள், இருந்தும் அவர் சொல்லியது போல ஸ்டால் இல்லாதது அதிக வருத்தமாக உள்ளது. நண்பர்களை உங்களை சந்திக்கவும் நல்ல வாய்ப்பாக இருந்தது.
ReplyDeleteஇதை விட்டால் அடுத்த வாய்ப்பு ஈ பு வி தான்
200
ReplyDelete201
ReplyDeleteசார். வைரஸால் பாதிக்கப்பட்ட உங்களுக்கு ஓய்வு அவசியம். எனவே குறைந்தபட்சம் இன்றைய பதிவிற்காவது விடுமுறை கொடுத்து, ஓய்வெடுங்கள். நீங்கள் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.கரூர் ராஜசேகரன்
ReplyDeleteஎடிட்டர் சார்.
ReplyDeleteஉடல்நலம் கவனியுங்கள் சார்.
இந்த வேளையில் சிலரின் செயல்கள் மனதை சங்கடப் படுத்துகிறது.