Powered By Blogger

Sunday, February 20, 2022

ஹலோ மார்ச் !

 நண்பர்களே,

வணக்கம். சுடு தண்ணீரும், கஷாயங்களும் சகாயங்கள் பல செய்ய, இதோ வண்டி மெது மெதுவாய் தண்டவாளத்தைத் தேடிக் கிளம்புகிறது ! சும்மாவே மோட்டு வளையை முறைத்துக் கொண்டு பொழுதுகளை  நகர்த்துவது செம போர் என்பதோடு, சத்தமின்றித் தேதிகளும் ஓட்டமெடுத்து வருகின்றன என்பதால் இந்த வாரத் துவக்கத்திலேயே பேனாவைத் தூக்கியாச்சு ! ஏற்கனவே தினங்கள் குறைச்சலான மாதமிது எனும் போது - இதற்கு மேலும் சோம்பிக்கிடப்பது சுகப்படாதல்லவா ? So வந்தாச்சூ - பணிகளுக்கும், பதிவுக்கும் !  

நல்ல காலத்துக்கு இது மூன்று இதழ்கள் கொண்ட மாதமே & அவற்றுள் ஒன்றின் மொழிபெயர்ப்பு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்னமே நிறைவுற்றிருந்ததொன்று என்பதால் ரொம்ப மலைப்பாக இருக்கவுமில்லை ! So இதோ - அந்த 5 ஆண்டுகளுக்கு முன்பான 'தல' தாண்டவத்தின் பிரிவியூ :

நிறைய நேரங்களில், பெருசாய் லாஜிக் இன்றி, சில மாஸ் கதைகள் கூட பீரோவுக்குள் புதைந்து போயிடுவதுண்டு ! "பாலைவனத்தில் பிணம்தின்னிகள்" அவ்விதம் துயில் பயில நேரிட்டதொரு 'தல' சாகசமே ! Maybe இப்படியொரு டொக்கான பொழுதினில், எனது வேலைப்பளுவினைக் குறைக்கும் பொருட்டே, இந்த ஆல்பம் இத்தனை காலமாய் ஓய்வில் இருந்ததோ - என்னமோ ! 2016 - இதனை கருணையானந்தம் அங்கிளிடம் எழுத நான் அனுப்பிய வருஷமானது ! ஏதோ காரணங்களினால் தொடர்ந்திட்ட 2017 & 2018 ஆண்டுகளில் இந்த ஆக்ஷன் மேளா நம் அட்டவணைக்குள் புகுந்திடவில்லை & அதற்குள் என் ஞாபகத்திலிருந்தும் இது விலகியே நின்று வந்தது ! 2022-க்கான அட்டவணையினை இறுதி செய்திடும் போது அகஸ்மாத்தாய் கையிலுள்ள கதையிருப்பின் ஸ்டாக்கை செக் செய்த போது "ஏலே னொண்ணே, இந்த வருஷமாச்சும் சான்ஸ் தர்றதா உத்தேசம் கீதா - இல்லியா ?"  என்று நம்மவர் கொடுத்த குரல் loud & clear ஒலித்தது ! So 2022 அட்டவணையினில் நான் புகுத்திய முதல் TEX ஆல்பம் இது தான் ! கதை என்று பார்த்தால் அனல்பறக்கும் தெறி அதிரடி தான் ! பொதுவாகவே பனிப்பிரதேசங்களுக்கோ ; பாலைவனங்களுக்கோ நம் ரேஞ்சர் அணி பயணிக்கும் போதெல்லாம் கதைகள் பட்டையைக் கிளப்புவது வாடிக்கை ! And its no different this time too - கார்சனும், டெக்ஸும் ; கிட்டும், டைகரும் ஒட்டுமொத்தமாய் கரம்கோர்க்க ; ஒரு சைக்கோத்தனமான வில்லனும் அமைந்து போக - பட்டாசு பறக்கிறது பக்கங்கள் நெடுக ! And அந்தச் சித்திர ஜாலங்கள் இன்னொரு பக்கம் தம் பங்குக்குக் குமுறி எடுக்க - 224 பக்க புல்லெட் டிரெயின் பயணம் நமக்கு வெயிட்டிங் ! And  வேறொரு டெக்ஸ் ஆல்பத்தின் முகப்பை இந்த இதழுக்கு ஏற்றவாறு நமது சென்னை ஓவியர் மாற்றி வரைந்த அட்டைப்படமும் - கதையின் அனல் மூடுக்கு அச்சாரம் போடுவதாய் எனக்குத் தோன்றியது ! What say guys ? இதோ - உட்பக்க டிரெய்லருமே : 


மொத்த டீமுமே இத்தனை யூத்தாய் ; இத்தனை கெத்தாய் நாம் சித்திரங்களில் பார்த்து ஏக காலமாச்சு என்பேன் ; ஓவியர் நடத்தியுள்ளது ஒரு சித்திர மேளாவே தான் ! So ஏற்கனவே மொழிபெயர்ப்பு தயாராக இருந்த ஆல்பம் என்பதால்,  மாமூலான சில மாற்றங்களோடு இதனைத் தயார் செய்திட இன்னும் 2 நாட்களின் அவகாசமே நமக்கு அவசியமாகிடும் என்பேன் ! 

Moving on, ஏற்கனவே பாதிக்குப் பேனா பிடித்திருந்த நிலையினில், மீதத்தை முதலில் பூர்த்தி செய்தது - நம்ம 'போலீஸ் பாதி / பாஸ்டர் பாதி' பார்ட்டியான SODA வின் சாகசத்துக்கு ! "காலனோடு கூட்டணி" தான் நடப்பாண்டில் டேவிட் சாலமன் களமாடும் அரங்கம் ! இரண்டே ஆண்டுகளில், இந்த வித்தியாசமான நாயகர் நம் மத்தியில் ஒரு சாலிடான இடத்தைப் பிடித்து விட்டிருப்பது நிஜமாகவே எனக்கு ஆச்சர்யமூட்டும் விஷயம் ! ஆக்ஷன் நாயகர் தான் ; டுமீல்-டுமீல் என்று பயணிக்கும் கதைகளும் தான் - ஆனால் 'நேர் கோடு' என்றால் 'நெற்றியிலே போடு' என கண்சிவக்கும் கதாசிரியரின் செம dark கதை வரிசை இது எனும் போது, எனக்குள் குட்டியூண்டாய் ஒரு பயம் இருக்கவே செய்தது - இவரை நாம் எவ்விதம் வரவேற்போம் என்று ! பற்றாக்குறைக்கு சித்திர பாணியும் கார்ட்டூன் ஸ்டைல் ! ஆனால்  இனம் சொல்ல இயலா ஒரு வசீகரத்தை கதாசிரியர் இந்தத் தொடர் நெடுக விதைத்து வைத்திருக்க -  "நான் சோதா இல்லை" - என்று சவால் விடுகிறார் SODA ! "வித்தியாசமான ஹீரோ" ; "வித்தியாசமான கதை" என்ற வார்த்தைப் பிரயோகங்கள் - கால்மிதிகளாய் ஒரு நூறு தபா மிதிப்பட்டவைகளே நம் மத்தியில் ! ஆனால் அந்த வார்த்தைகளுக்கு நிஜமாய் நியாயம் செய்யவல்லவர் இந்த போலீஸ்கார பாஸ்டர் மட்டுமே என்பேன் : 

ஒரு பலவீன இதயத்துடனான குள்ளமான அம்மா ; கையில் ரெண்டு விரல்களைத் தொலைத்ததொரு ரகுவரன் ஜாடையிலான ஹீரோ - இவர்களே இந்தக் கதைவரிசையின் மைய மக்கள் ! கதை நெடுக ஒரே கருப்பு சூட்டில் ; கறுப்புக் கண்ணாடியுடன் சுற்றி வரும் ஹீரோவுக்கு போலீஸ் உத்தியோகம் ; ஆனால் வீட்டில் அம்மாவிடம் அதனைச் சொல்லிட இயலா சூழல் - so லிப்ட் அவர்கள் குடியிருக்கும் 23-ம் மாடிக்கு முக்கி முனகிப் பயணிக்கும் முன்பாய் - போலீஸ் யூனிபார்ம் to பாஸ்டர் டிரெஸ் என்று உருமாற்றம் செய்து கொண்டு குப்பை கொட்டும் நெருக்கடி ! கதையாய்ப் படிக்கும் போது - "ஓஹோ !" என்றபடிக்கே பக்கங்களை புரட்டியிருந்திருப்போம் தான் - ஆனால் யோசித்துப் பாருங்களேன் , கதாசிரியர் இப்படியொரு template தகர்க்கும் ஹீரோவை சிருஷ்டிக்க எத்தனை யோசித்திருப்பார் என்று ! ஒப்பீட்டில் - ஒரு CID ராபினின் உருவாக்கம் சுலபம் ; ஒரு ரிப்போர்ட்டர் ஜானியின் ஆக்கமும் சுலபம் ; ஒரு ஒற்றைக்கண் ஜாக்கின் படைப்பும் சுலபம் ! ஆனால் சொங்கியான ஒரு ஹீரோவுடன், நியூயார்க்கின் குற்ற வீதிகளில் SODA தொடரினை அரங்கேற்றுவது - calls for a special effort from the creator !! இம்முறையும் கதாசிரியர் புல் பார்மில் தான் இருக்கிறார் - தட தடுக்கும் ஒரு சாகசத்தை உருவாக்கிய கையோடு ! இங்கே கதையில் மட்டுமன்றி, வசனங்களிலும், ஸ்கிரிப்டிலும் கதாசிரியரின் முத்திரைகள் கணிசமாய் இருப்பதால் - தமிழாக்கம் ஒருபோதும் சுலபமாகவே இருப்பதில்லை ! இம்முறை பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழிமாற்றம் ஒரு சென்னை மாணவியின் கைவண்ணம் ; ஆங்காங்கே லைட்டாக தண்ணீர் குடித்துக் குடித்தே தமிழ் மொழிபெயர்ப்பினைச் செய்து முடித்தேன் ! And தெறிக்கும் டிஜிட்டல் கலரிங்கில் இந்த ஆல்பம் மினுமினுப்பதை அச்சு முடிந்த பக்கங்கள் பறைசாற்றுகின்றன ! திங்களன்று மீதமும் அச்சாகி, பைண்டிங் புறப்பட்டு விடும் ! Here you go with the trailers : 




மார்ச்சின் புக் # 3 - :"போர்முனையில் தேவதைகள்" ; ஜம்போ சீசன் # 4-ன் இதழ் நம்பர் 4 ! அந்த ஆல்பத்தின் இறுதிப் பத்துப் பக்க மொழிபெயர்ப்பு மட்டுமே பெண்டிங் எனும் போது, திங்களுக்குள் என் பணி நிறைவுற்று, வாரத்தின் நடுவாக்கில் அச்சுக்கு ரெடியாகி விடுமென்பேன் ! அந்த இதழின் பிரிவியூவை அடுத்த பதிவுக்கென வைத்துக் கொள்வோமே ?! இப்போதைக்கு தேவதைகளை பைசல் செய்து முடித்த கையோடு, சிகாகோ போகும் உத்தேசத்தில் உள்ளேன் - அங்குள்ள சாம்ராட்டை நம்மவர்கள் வதம் செய்வதை அருகிலிருந்து ரசிக்க ! ஏற்கனவே இதுவுமே பாதி முடித்திருந்த கதை எனும் போது அதிக நேரம் எடுத்திடக் கூடாது தான் ! பார்ப்போமே !

Bye all ; see you around ! Have a great Sunday !!

156 comments:

  1. வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  2. சென்னை புத்தக கண்காட்சி யில இருந்தா நல்லா இருந்துருக்கும்...
    மறுபடியும் ஒரு ஆன்லைன் மீட்டிங்காச்சும் போடுங்க...

    ReplyDelete
  3. மிட் நைட் வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  4. சிவப்பில் ஜோலிக்குது ரெண்டு அட்டைகளும்! அதிலும் SODA, அந்த கருப்பு பின்புலத்தில் வேற லெவல்!

    ReplyDelete
  5. அன்பான ஆசிரியர் அவர்களுக்கு தங்கள் உடல்நிலை சீரடைந்தது கண்டு இறைவனுக்கு நன்றிகள். தாங்கள் உடல் நலனை மேலும் பேணவேண்டும் என்று வேண்டுகின்றேன்.தொடர்ந்து தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நல்ல ஆரோக்யத்துடன் நீண்ட ஆயுளுடன் பெற்று நீடுழி வாழ எல்லாம் வல்ல கடவுள் அருளைப் பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  6. சார் டெக்ஸ் போன மாதம் வந்திருக்க வேண்டிய கதையா இது வேற?

    இல்லை என்றால் அது எப்பொழுது வரும் சார்.

    சோடா எனக்கு பிடித்தே இருக்கிறது அவரது கதையை படிக்க ஆவலுடன் உள்ளேன்.

    போன மாதம் வேதாளர் பற்றி பேசிய மற்றைய புத்தகங்கள் பற்றி சரியாக கவனிக்கவில்லை என எனக்கு படுகிறது.

    இரண்டும் செம கதைகளாக இருந்தது. ஆகையால் Deserving Credits கொடுக்கவேண்டும் சார்.

    அண்டர்டேக்கர்.

    போன மாதத்தின் நிஜ ஹீரோ அட்டகாசமான கதை களன், தெரிக்கும் வசனங்கள் பர ஆக்சன் என்று கலங்கினார் நம்ம அண்டர்டேக்கர். இன்னும் பிணத்தையும் அதன் காவலரையும் வைத்து என்ன கதை களங்கள் காத்திருக்கிறதோ என்று ஆர்வம் ஏற்படுகிறது.

    சார் நாம் ஏன் அந்த புத்தகம் for teens அல்லது 16+ என்று போடுவதில்லை.

    ப்ளூகோட் : போன புத்தக வெற்றியை அப்படியே தொடர்கிறார். வசனங்கள் நகைச்சுவையோடு நன்றாக அமைந்துள்ளது. வசனங்களோடு ஓவியரும் நகைச்சுவையை தெறிக்க விட்டுள்ளார். படங்களை நன்றாக கவனிக்கும் கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டார்

    ReplyDelete
  7. சோடா. நிச்சயமாய் ஒரு சித்திர அதகளமே. ஒவ்வொரு மறுவாசிப்பிலுமே கதையில் புதிதாக ஏதோஒன்று தோன்றுவதே இத்தொடரின் தனிச்சிறப்பு. அதிலும் கால்களில், லைட்எரியும் ஷு போட்டிருக்கும் கதாபாத்திரங்கள் தனி முத்திரை. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  8. Undertaker awesome like thriller action movie ...double👍

    ReplyDelete
  9. அட்டை படம் - செம. உட்பக்க பிரீவியூ - அசத்தல் சித்திரவிருந்து. என்னவென்றே புரியவில்லை SODA தொடரின் மீது இனம்புரியாத பற்று. பிவீயுவில் கண்ணுக்கு அழகான கலரில் சித்திரங்கள் மிளிர்கின்றன.

    ReplyDelete
  10. *ஒற்றை நொடி ஒன்பது தோட்டா*

    கதைக்கு மிகப்பெரிய வேகத்தடையே ஓவியங்கள் தான். கண்களை ஓவியங்களிலிருந்து அகற்ற முடியவில்லை. கலிபோர்னியாவின் நகரங்களை, பாலை பிரதேசங்களை, பசுந் தோட்டங்களை இரவு, பகல், விடியற்காலை, மாலை என ஓவியங்களில் ஓவியர் ரவுண்ட் கட்டி அடித்திருக்கிறார். ஒரே ஓவியத்தில் போகஸில் இருப்பவைகளைகஅழுத்தமான வண்ணங்களும் அவுட் ஆப் போகஸில் உள்ளவற்றை அழுத்தமில்லாத வண்ணங்களுமாக கலரிங்கிலும் வித்யாசப்படுத்தியிருக்கிறார்கள்.

    கதை என்னமோ கான்ஸ்பிரசி தியரி தான். பார்ன் அல்டிமேடத்தில் வருவது போன்ற சூப்பர் சோல்ஜர்ஸ்/கில்லிங் மெசின்களை உருவாக்கும் தேன்கூடு அமைப்பு. அதன் சிப்பாய்கள் தறிகெட்டு செயல்படுவதால் ஏற்படும் விளைவுகள்; அதனை துப்பறிய முயலும் ஸ்படாச்சினி, மேகி, “ஆவி” கேரக்டர்களை சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது.

    கதை சும்மா தறி கெட்ட வேகத்தில் செல்கிறது; ஆக்சன் ப்ளாக்குகள், துரத்தல்கள், கொலை என்று மட்டும் நிறைக்காமல் தீவிர விசாரணை மற்று துப்பு துலக்குவதாகவும் நகர்வது கதையை சாதாரண ஆக்சன் தளத்திலிருந்து வேறு தளத்திற்கு இட்டு செல்கிறது.

    ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்த கதை தான். இருந்தாலும் அழகு தமிழில் படிப்பது நிறைவாகவே உள்ளது. முத்து 50 கொண்டாட தரமான தேர்வு.

    ஐ லவ் இட்.

    ReplyDelete
  11. திக்கெட்டும் பகைவர்கள்

    சிங்கம் எந்த வயசில கர்ஜனை செஞ்சாலும் கம்பீரமாத்தான் இருக்கு. அட்டகாசமான ஆக்சன் கதை. கடைசி வரைக்கும் பரபரப்பை மெயின்டெயின் பண்ணிருந்தது ஒரு ப்ளஸ். தலக்கு கதைல தான் திக்கெட்டும் பகைவர்கள். வாசகர்களை பொருத்தவரை பெரும்பாலும் லவ்வர்ஸே

    ஐ லவ் இட்.

    ReplyDelete
  12. வந்துட்டேன். நீங்கள் உடல் நலம் தேறி வந்ததது நல்ல செய்தி. மார்ச் மாத preview அருமை சார். அதற்குள் இரண்டு புத்தகங்களை தயார் செய்தது ஆச்சரியமே.

    ReplyDelete
  13. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  14. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  15. *கோல்டன் ஹீரோ ஸ்பெசல்*

    மிடில.

    ReplyDelete
  16. டியர் எடி,

    கொரோனா வில் இருந்து மீண்டு புதிய உத்வேகத்துடன் வந்து சேருங்கள். இரண்டாம் அலையின் போது கொ.பி.க்கு பின்பான அந்த மூன்று மாதங்களில், நான் உணர்ந்த பலஹீனமான உடல் திறனை எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அனுபவித்ததில்லை. கொடூரன் இந்த கொரோனா.

    கடந்த சில வாரங்களில் இந்த பக்கம் பதிவுகளை மேலோட்டமாக மேய மட்டுமே முடிந்தது... ஆனால், நூல் மிகுந்த மார்ச் மாத தவணைகளுக்கான பதிவில் வந்து சேரந்து கொளவதை எப்படி தவிர்ப்பேன்... இதோ, ஆஜர்.

    டெக்ஸ் அட்டை வித்தியாச பாணி... கடைசியாக தண்ணீர் கேனுடன் பாலைவனத்தில் டெக்ஸ் அட்டைபடம் எப்போதோ பார்த்த ஞாபகம்... இது அந்த பாலவனத்தின் உக்கிரத்தைகண முன் காட்டிவிட்டது.

    அது சரி, இப்படி மொழிமாற்றம் செய்த புத்தகங்கள் எத்தனை கிடப்பில் கிடக்கின்றன என்று ஒரு புள்ளி விவரம் தாருங்களேன்... இன்னும் எத்தனை ஒழித்து வைத்திருக்கிறீர்களோ... ;) இப்படி கொரோனாபோல அதிரடி அவஸ்தைகளின் போதுவேளைபளூவை குறைக்க இவற்றை உபயோகபடுத்தி கொள்ளுங்கேன்... நமக்கும் வயசாகிறதில்லையா :)

    சோடா'வின் கருப்பு சிவப்பு அட்டை வர்ணம் பளீச்சென்று தென்படுகிறது. இது டிஜிட்டல் வர்ணபாணி இல்லைதானே?! 80களின் அடர் வண்ண அலாதி கோர்வை, மற்றும் கார்டூன் பாணி ஓவியங்கள், தான் இந்த க்ரைம் தொடரை தனி வாசிப்பு தளத்திற்கு எடுத்து சென்றிருக்கிறது... சோடா சோகையாக வாய்ப்பே இல்லை.

    ஜம்போ இதழின் அறிவிப்பு ஞாபகத்திற்கு வரவில்லை, அதை அடுத்த பதிவிலேயே சிலாகிப்போம்.

    ReplyDelete
  17. சார்.. தல அட்டைப்படம் - வேற லெவல்! அட்டைப்படமே ஒரு பரபரப்பையும் எதிர்ப்பார்ப்பையும் கிளப்புகிறது! டெக்ஸ் குழுவினர் அனைவருமே பங்கேற்கயிருப்பது கூடுதல் குதூகல கொண்டாட்ட கும்மாளம்!

    SODA உள்பக்கச் சித்திரங்களில் தெறிக்கும் வண்ணங்கள் கண்களுக்கு கிடா விருந்தாக அமையப்போவது உறுதி!
    இம்முறையும் தனது வித்தியாசமான கதை பாணியால் சோடா வெற்றிவாகை சூடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆவலுடன் வெயிட்டிங்!

    ம்.. அப்புறம்.. பபாஸியில் நாம உறுப்பினர் ஆக முடியாதாங் சார்?

    ReplyDelete
  18. சூப்பர் சார்...அட்டகாசமான பதிவு...டெக்ஸ் அட்டை பட்டய கிளப்புனா...இறங்க இறங்க சோடா மேலே ஏறுறார் உங்க பதிவில் படிக்கயில மேலும்...அடுத்த மாதம் ஹெவியா இல்லன்னு ஏங்க சோடா அட்டைப்படமும் பக்கமும் தெறிக்க விட உற்ச்சாக அலைகள் கூடுதலாய்...இந்த டெக்ச பூட்டி வைக்க எப்படிதான் மனம் வந்ததோ...சோடா அட்டை இது வரை வந்ததிலே டாப்....தெறிக்க விடும் கோடை மலரிலே கென்யாவும் ...ரிப்பும் உண்டே...இம்மாதத்தை ஏதேனும் ஒன்று அலங்கரித்திருக்கலாம் என ஏங்கினாலும் நீங்க குணமடைவந்து உற்சாகமா வந்ததும் செந்தூரானின் இம்மாத சிறப்பு வெளியீடே

    ReplyDelete
  19. வேதாளன் :
    இந்த வாரம் திங்கள் தான் கடையில் இருந்து வாங்கி வந்தேன். 3 நாட்களில் ஒரே மூச்சாக முடித்து விட்டேன். இதில் எத்தனை புத்தகங்கள் படித்த புத்தகங்களாக வருமோ என்று சிறு கலக்கத்தோடு இருந்தேன். 9 கதைகளில் 4 கதைகள் மட்டும் தான் நான் இந்திரஜாலில் படித்து இருந்தேன். அந்த விதத்தில் கதை தேர்வுகள் அனைத்துமே கலக்கல் ரகம். வாரிசை தேடி, ஜூம்போவை கொல், ஆழ்கடலில் மயானம் எனக்கு இதில் பிடித்த டாப் 3 .

    மாக்ஸி புக் சைஸ், அட்டை படம், பேப்பர் குவாலிட்டி, பேப்பர் half white கலர் - அமேஜிங்,சூப்பர், பான்டஸ்டிக்
    எடிட்டர் சார், இந்த format தயவு செய்து மாத்தவே மாத்தாதீர்கள். அப்பொழுது தான் கலெக்ஷன் அனைத்தும் ஒரே மாதிரி ஷெல்ப்பில் அடுக்கி அழகு பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.

    முக்கியமாக ஆச்சர்யமாக வழக்கமாக வரும் வசனகங்களான தூத்தேறி, சார்வாள், ஜாகை, கானம் படுவது, இசை கச்சேரி போன்ற எந்த வார்த்தைகளும் இல்லாமல், யாரோ புதியவர் மொழிபெயர்த்தது போல் இருந்தது, சிம்பிளான வசனங்களுடன் அட்டகாசமாக வேதாளரின் உலகத்திற்கு கொண்டு சென்று இருக்கின்றீர்கள். இதே ரிப் கிர்பி, மான்ட்ரெக், காரிகன் மற்றும் 2023 வரும் sizzling 60 ஸ் க்கும் தொடருங்கள்.

    நெறய பேர் சொன்ன ஒரே குறை தான் எனக்கும். பேனல் மற்றும் வசன பலூன்கள் were cluttered . ஒரே கொச்ச கொச்ச என்று இருந்தது. ஆனால் இரண்டு பக்கங்களுக்கு படிக்க ஆரம்பித்த பின் என் கண்களுக்கு இந்த format பழக்க பட்டுவிட்டது. இருந்தாலும் அடுத்த புத்தகங்களுக்கு 4 பேனல் நெருக்கி அடிக்கும் பட்சத்தில் தேவை பட்ட இடங்களில் 3 பேனல் இருந்தால் மிகவும் சந்தோஷ படுவோம். இதனால் ஒரு கதை கம்மியானால் கூட பரவாயில்லை. நான் சொல்லும் கூற்றை அனைவரும் ஒத்து கொள்வார்கள் என்று நினைக்கிறன்.

    இப்பொழுது வேதாளன் எங்களுக்கு அளித்தது ஒரு முழு வாழை இலை அறுசுவை படையல். இந்த குறை மட்டும் கண்களை உறுத்தாமல் இருந்து இருந்தால் பரிபூர்ணமாக சாப்பிட்டு ஐஸ் கிரீம் மற்றும் பீடா போட்டது போல் இருந்து இருக்கும்.

    ரேட்டிங் : 10 / 10

    செய்வன தில்லாய் செய் :
    மேகி கேரிஸன் அமைதியாக ஸ்கோர் செய்து இருக்கிறார். நேர்கோட்டில் அலட்டல் இல்லாத கதை மற்றும் கேரக்டர். எந்த மோசமான சூழ்நிலையும் தனக்கு சாதகமாக்கி கொள்ளும் ஒரு பாசிட்டிவான கேரக்டர்.

    ரேட்டிங் : 7 / 10

    களமெங்கும் காதல் :
    ஒரு உள்நாட்டு போரில் இரண்டு கேரக்டெர் மூலம் இத்தனை கதைகள் ரசிக்க சிரிக்க வைப்பதில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இவர்கள் நம்முடன் வெகு காலம் தொடருவார்கள் என்பது சந்தோஷமான விஷயம்

    ரேட்டிங் : 10 / 10

    ஒரு வானவில்லைத் தேடி :
    இந்த லக்கி லுக் கதை, லக்கி லூக்கின் இன்னொரு கதையான "ஒரு பட்டாப் போட்டி" மற்றும் டெக்ஸின் "ஓக்லஹோமா" கதைகளை ஞாபகம் படுத்துவது போல் இல்லை?? நிறைய சிரித்தேன் இந்த இதழ்.

    ரேட்டிங் : 10 / 10

    ReplyDelete
    Replies
    1. விரிவான விமர்சனம் நன்று நண்பரே..

      Delete
    2. // மோசமான சூழ்நிலையும் தனக்கு சாதகமாக்கி கொள்ளும் ஒரு பாசிட்டிவான கேரக்டர் //

      Yes.

      Good review

      Delete
  20. டெக்ஸ் அட்டைப்படம் செம ...

    இதழை காண இப்பொழுதே கண் நோக்கி காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  21. தங்களின் உடல்நிலை விரைவில் நலமடைந்ததில் மிக்க மகிழ்ச்சி சார் இருப்பினும் ஓய்வு முக்கியம் சார்..அதையும் கவனத்தில் கொள்ளுங்கள்..

    ReplyDelete
  22. // திங்களன்று மீதமும் அச்சாகி, பைண்டிங் புறப்பட்டு விடும் ! Here you go with the trailers //
    அப்ப இந்த முறை பிப்ரவரியில் மார்ச் கண்டிப்பா உண்டுன்னு சொல்லுங்க...

    ReplyDelete
  23. // And தெறிக்கும் டிஜிட்டல் கலரிங்கில் இந்த ஆல்பம் மினுமினுப்பதை அச்சு முடிந்த பக்கங்கள் பறைசாற்றுகின்றன ! //
    சோடா உட்பக்க டீஸர் வித்தியாசமான கலரிங்கில் அள்ளுது,இது கலர் சோடாங்கோ...

    ReplyDelete
  24. // மாமூலான சில மாற்றங்களோடு இதனைத் தயார் செய்திட இன்னும் 2 நாட்களின் அவகாசமே நமக்கு அவசியமாகிடும் என்பேன் ! //
    பிப்ரவரியில் லீவ் போட்டுட்டு மார்ச்சில் தல வருவதால் ஆவலுடன் வெயிட்டிங்...

    ReplyDelete
  25. தல அட்டைபடம் செம மாஸ் சார்...

    தகதக பகலவன் மேகங்களில் தெறிக்கும் சிவப்பு வர்ண ஜாலமும், இளமஞ்சலும் இணைந்த பின்னணியில் துறத்தும் போக்கிரிகளை எதிர்கொள்ளும் தலயின் போஸ் சும்மா தெறிதெறி...😍

    பாலைன மணல் அடுக்களில் பரவியுள்ள சூடு அதிகமா, தல முகத்தில் கொதிக்கும் கோபக்கனிலின் வெப்பம் அதிகமா??

    ReplyDelete
  26. தல பின்னட்டைதான் சும்மா மிரட்டுது..

    தலையின் வசீகரம் முகத்திலும் கேசத்திலும் வெளிப்படுது..

    கார்சன் தாத்ஸ் கூட பரால்ல...ஹி..ஹி..

    அடேயப்பா...நிஜ கலக்கல் அந்த சின்ன கழுகார் மயங்கி விழுந்திருக்க, இறந்த குதிரையை கபளீகரம் பண்ணும் பினந்திண்ணிகள் ஆத்தி வயித்தை கலக்குது....

    பட்டாஸான ஓவியங்கள்...

    ReplyDelete
  27. உள் பக்கத்தில் கழுகுகள் விருந்துண்ண, அதைக்கலைக்க டைகர் வின்செஸ்டரை முழக்க ஒரு நொடி யோசித்தேன்.... கழுகுகள் இறந்த குதிரையை புசிப்பது இயற்கை தானே என!!

    ஆனா அருகே மயங்கி உள்ள கிட்டை அடுத்ததாக அவைகள் "ருசி" பார்க்கும் முன்னே டைகர் அவைகளை கலைக்கிறார் என்பது பின் அட்டையில் புலனாகிறது...

    கதையோட்டத்தை தெளிவுபடுத்தும் இதுபோன்ற அட்டைகள் என்னிக்கும் வேற லெவல் தான் சார்.... கலக்கி எடுக்கப் போவுது தல சாகஸம் இம்முறை....

    ReplyDelete
  28. ஆங்....அப்புறம் அதே தான்...😉

    இதுவரை 40ஆண்டுகள் வந்ததுலயே இதான் டாப்பானா அட்டைபடம்....

    ReplyDelete
  29. /// ஸ்டாக்கை செக் செய்த போது "ஏலே னொண்ணே, இந்த வருஷமாச்சும் சான்ஸ் தர்றதா உத்தேசம் கீதா - இல்லியா ?" என்று நம்மவர் கொடுத்த குரல் loud & clear ஒலித்தது////


    -----🤣🤣🤣சுய பகடியில் தங்களை அடிச்சிக்க இயலுமாங் சார்....

    ReplyDelete
    Replies
    1. // னொண்ணே // ஐ நம்ப ஊரு பாசை :-)

      Delete
  30. //// So 2022 அட்டவணையினில் நான் புகுத்திய முதல் TEX ஆல்பம் இது தான் ! கதை என்று பார்த்தால் அனல்பறக்கும் தெறி அதிரடி தான் ! பொதுவாகவே பனிப்பிரதேசங்களுக்கோ////


    ---இப்படி ஒரு தெறி கதையை இத்தனை நாளு பீரோவில் வெச்சி பூட்டலாமா சார்??? இது ஞாயமா???

    ReplyDelete

  31. 'கென்'னியின் செல்வன் ஒரு மாத இடைவெளிக்கு பின் மறுபடி வருவது மகிழ்ச்சி..

    ( டெக்ஸின் தந்தை கென்னத் வில்லர் [KENNETH WILLER] KEN ( கென்) என்றழைக்கப்பட்டார்)

    [டெக்ஸின் தந்தை கென் வில்லரும் சகோதரன் சாம் வில்லரும் பண்ணை வேலைகளில் மும்முரம் காட்ட டெக்ஸூக்கு ஒரு இரண்டாவது தந்தை போல் பாசம் காட்டி விரைவாகவும் குறி தவறாமலும் துப்பாக்கி கையாளப் பழக்கியது பண்ணையின் மூத்த பணியாளர் GUNNY - என்பதால் 'கன்'னியின் செல்வன் என்றும் சொல்லலாம்.]

    ஸோடா தனித்துவமும் ஈர்ப்புசக்தியும் உள்ளதொரு தொடர் என்பதில் ஐயமில்லை..

    போதையூட்டும் மதுவான டெக்ஸின் கதையோடு பாலைவனத்தில் பயணித்துக் கடக்கையில் ஸோடா உடன் வருவது பொருத்தம்தான்.


    ReplyDelete
    Replies
    1. ////போதையூட்டும் மதுவான டெக்ஸின் கதையோடு பாலைவனத்தில் பயணித்துக் கடக்கையில் ஸோடா உடன் வருவது பொருத்தம்தான்.///

      ---செம..செம....

      Delete
    2. 'கென்'னியின் செல்வன் ஒரு மாத இடைவெளிக்கு பின் மறுபடி வருவது மகிழ்ச்சி..
      Nice

      Delete
  32. சோடா எல்லோரும் விரும்பி சாப்பிடுவது... சோடா கதையும் அப்படியே!

    ReplyDelete
  33. "போர் முனையில் தேவதைகள்"- சந்தா அறிவிப்பில் முதல் முறை பார்த்தபோதே ஒரு ஆவல் கிளம்பியது....

    வெயிட்டிங் ஃபார் திஸ்....

    ReplyDelete
  34. ஜனவரி மாத புத்தகங்களின் மினி விமர்சனம் & ரேட்டிங்

    1. ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள் - 9.75/10

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பிரம்மாண்ட விருந்து. கதை சொல்லும் பாங்கு பிரமாதம். ஒரே மூச்சில் படிக்க நேரம் ஒத்து வரவில்லை, ஆனால் ஒவ்வொரு பாகத்தை முடிக்கும் போதும் மூடி வைக்க மனது இல்லை, மீண்டும் கதைக்குள் எப்பொழுது நுழைவோம் என்கிற பரபரப்பு சமீபத்தில் படித்த வேறு எந்த இதழிலும் ஏற்படவில்லை.

    இன்ஸ்பெக்டரின் செயல்பாடுகள் ஆரம்பத்தில் இரும்புக்கை நார்மனை ஞாபகம் ஊட்டியது. கிட்டதட்ட அமெரிக்க டூர் போய் வந்த பீலிங். ஆவி கதாப்பாத்திரம் கன கச்சிதம். பாலைவனப் பகுதியில் நடக்கும் சம்பவங்கள் பரபரப்பின் உச்சகட்டம். "வருத்தத்தோடு வளர்ந்த வாலிபர் சங்கம்" மொழிபெயர்ப்பை பதம் பார்க்க ஒரு சோறு.

    இதை, இதைத்தான் சார் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம். இந்த வருடத்தின் மனிமகுடம் நிச்சயம் ஒ ஒ. தோட்டாவுக்கே. ஏதாவது கொஞ்சம் அசைக்க முடிந்தால் அது கென்யாவுக்கு மட்டுமே சாத்தியம்.

    2. டேங்கோ - 9.25/10

    இரத்தப்படலத்திற்கு பிறகு ஒரு ஸ்டைலான படைப்பு. Dress codes awesome. "பாலைவனத்தில் ஒரு பணயக்
    கைதி" நினைவலைகள் வந்து போகிறது. சித்திரங்களை பற்றி நான் சொல்லவே வேண்டாம், அவ்வளவு அழகு. எனது கோரிக்கை இந்த மாதிரி படைப்புகளை maxi size ல் வெளியிட்டால் தெறிக்க விடும். அதை விடுத்து நாம் ஆர்ச்சிக்கும், வேதாளரக்கும் பொருந்தாத சட்டையை போட்டு பார்த்து கொண்டிருப்பதாக ஒரு பீலிங். டேங்கோ இனி வரும் காலங்களில் நன்றாக ஊர் சுற்றி காட்ட போகிறார். Warm welcome Tango

    3. ஒரு வானவில்லை தேடி - 9.25/10

    இத்தனை பிரம்மாண்டங்களுக்கு மத்தியில் இந்த மறுபதிப்பு சத்தமில்லாமல் வந்து சிக்ஸர் அடித்திருக்கிறது. கனத்த கதைக்களங்களுக்கு இடையே ஒரு இலகுவான வாசிப்பு. லக்கிலூக் சைகை காட்ட, நத்திங்கல்ச்சிலிருந்து வண்டிகள் கிளம்ப, நமக்குள்ளும் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்வது உண்மை.

    செவ்விந்தியர்களை, கேரவன்கள் சுற்றி வளைப்பது எல்லாம் மாஸ் காமெடி. நாம் ரசிக்க நிறைய விசயம் கொட்டி கிடக்கிறது கார்டூன்களில், உதாரணம்: ஸ்கூலுக்கு செல்லும் குழந்தைகளின் ரியாக்ஸன்ஸ், ஒன்று ஆப்பிளை தூக்கி கொண்டு வரும், மற்றவை வழக்கம் போல் ஓடி வருவது போல் தோன்றினாலும், அதற்கு மத்தியில் அடம் பிடிக்கும் சுட்டி பயலை தூக்கி கொண்டு வருவர். கொஞ்சம் கவனமாக பார்த்து சென்றால் ஒவ்வொரு பிரேமிலுமே கதாசிரியர் மற்றும் ஓவியரின் உழைப்பு தெரியும். கார்டூன்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் நண்பர்களே.

    4. சிஸ்கோ - 9.25/10

    நமக்கு உளவுத்துறை புதிதல்ல, ஆனால் டிபார்ட்மெட்டுக்குள்ளேயே நடக்கும் கூத்துகளை இவ்வளவு விரிவாக கணடதில்லை. மனசாட்சியாவது, மண்ணாங்கட்டியாவது ரக ஹீரோ. தெறிக்கும் வசனங்கள் (மொழிபெயர்ப்பு), என நிறைய ப்ளஸ்கள். க்ளைமாக்ஸை இன்னும் கொஞ்சம் யோசித்து வைத்திருக்கலாம். ஆனால் கதை, வேகம், வேகம், அசுர வேகம். சிஸ்கோ இனி வரும் காலங்களில் இன்னும் சாதிப்பார் என்று பட்சி சொல்கிறது.

    5. ஆல்பா - 9/10

    கதைககளம் ரொம்ப ஸ்ட்ராங்க் சார். எக்கசக்க கதாபாத்திரங்கள் & அவை பேருக்கென்று இல்லமல் அனைவருக்கும் போதிய இடம் கொடுத்திருப்பது நன்கு. இவர்களுக்கு மத்தியில் வேடிக்கை மட்டும் பார்க்கும் பெயரளவு ஹீரோ. நிறைய குழப்பங்கள் நமது அலசல்களில் நிவர்த்தி ஆகிவிட்டது. ஆனால் அந்த இளம் காதல் ஜோடி part எதற்காக திணிக்கப்பட்டது என்று தெரியவில்லை, அவர்களால் கதையில் எந்த மாற்றமும் நிகழவில்லை. பரபரப்பிற்காக சேர்க்கப்பட்டதோ. ஒரு வரியில் சொல்வதானால், கதையில் ஆல்பாஸ் - ஆல்பா மட்டும் பெயில்.

    ReplyDelete
  35. 6. டெக்ஸ் க்ளாசிக்ஸ் 1 - 9/10

    பழிக்குப்பழி

    அக்மார்க் டெக்ஸ் அதிரடி நிறைந்த கதை. இம்முறை ஒற்றக்குக்கு ஒற்றை சண்டையில் ஒரு புதுமையான வில்லத்தனம். சிறப்பு. டைட்டில் கனக்ச்சிதம்.

    கானகக்கோட்டை

    வழக்கம் போல் பரபரப்பாக நகரும் மற்றுமொரு டெக்ஸ் சாகஸம். டெக்ஸ் மற்றும் கிட் பிரிந்து சென்று செயலாற்றுவது, திட்டமிடல்கள் அனைத்தும் ப்ளஸ். வில்லங்கோஷ்டி புனித சிலையை களவாடி ஆற்றில் கடாசும் காட்சிகளும் பர பர. ஆனால் கனடா ராணுவுமே அறியாத இடத்திற்கு டெக்ஸ் சுலபமாக செல்வதையே ஜீரணிக்க முடியவில்லை. சர்வசாதாரணமாக கிட்டும் வந்தடைவது கார்ஸன் இல்லாத காமெடி வறட்சியை போக்குகிறது.

    7. எலியப்பா - 9/10

    Surprised. என்ன இருக்க போகிறது, மிகவும் குழந்தைதனமாக தான் இருக்கும் என்று பார்த்தால், முற்றிலும் எதிர்பாராத
    தரத்தை குறுகிய பக்கங்களிலேயே காட்டி விட்டது எலியப்பா. தொகுப்பாக தர முயற்சியுங்கள், குறைவாக, தொடராக வருவது ஏமாற்றம் அளிக்கிறது. சீனியர் எடிட்டரின் கட்டுரைக்கும் இது பொருந்தும்.

    கானகக்கூத்துகள், மற்றும் இதர பக்க நிரப்பிகளை ரசிக்க முடியவில்லை

    8. கோல்டன் ஹீரோ ஸ்பெஷல் - 5/10

    செக்ஸ்டன் ப்ளேக் (Black & white)- 7/10

    தீவுக்குள் நடக்கும் ஒவ்வொரு கொலையும் பக்கங்களை பரபரக்க வைக்கிறது. சித்திரங்கள் சுமார் ரகம். Traditional classic. நெளிய முடியாமல் படிக்க முடிந்தது.

    ஸ்பைடர் - 7/10

    அண்ணாத்தே ஸ்பைடரின் intro செம சார். ஒவ்வொரு செல்லில் (சிறை) இருக்கும் வில்லன்களை விவரிக்கும் போதே விசில் போட வைக்கிறது. ஆனால் பொசுக்கென்று நிறுத்தி விட்டது நிறைவாக இல்லை

    செக்ஸ்டன் ப்ளேக் - 4/10

    வித்தியாசமான வண்ணம். ஆனால் ஆரம்பிக்கும் போதே முடிவு இப்படி தான் இருக்கும் என்று சுலபமாக யூகிக்க முடிகிறது.

    இரும்புக்கை மாயாவி - 2/10

    இப்படி ஒரு கதையா. முடியல சார். சித்திரங்களும் மிக சுமார் ரகம். நமது standards க்கு இத்தகைய முயற்சி அவசியமா சார்.

    இப்படி துண்டு துண்டாக வந்து க்ளாஸிக் நாயகர்க்ள் சாதித்தது என்னவோ.
    மேரிகேரிசனை பார்த்த பின்பு இலவசமானாலும் இப்படி ஒன்று கிடைத்திருக்கலாம் என்கிற ஆவல் எழுகிறது

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாவ்... செம்ம சார்... அனைத்தையும் அலசிவிட்டீர்கள்...

      Delete
  36. கதையின் தலைப்புக்கு ஏற்றவாறே அட்டை படம் அமைந்திருப்பது அட்டகாசம் தகிக்கும் சூரியனும் பாலைவனத்தின் வெம்மையும் தலையின் தாண்டவத்தை எடுத்து சொல்லுவது போல் இருக்குது.

    ReplyDelete
  37. ரொம்ப நாளைக்கு பிறகு உங்கள் தயாரிப்பில் வரும் டெக்ஸ் அட்டைப்படம் குறிப்பாக டெக்ஸ் முகம் ரியல் ஆர்ட்ஸ் ஆக சிறப்பாக நன்றாகவே உள்ளது. Late திரு ஓவியர் மாலையப்பன் artwork போன்று அதகளம் செய்யாவிடினும் மிகவும், அருமை. அட்டைப்படம் இது போன்று ரியல் ஆர்ட்ஸ் ஆக வருவது நமது காமிக்ஸின் தனிமுத்திரை... அதை எப்போதெல்லாம் இப்படி மாற்றி தரமுடிந்து தொடர முடிகிறதோ ஒரிஜினல் லைன் ஆர்ட்ஸ் அட்டையை அப்படியே உபயோகிக்காமல் ப்ளீஸ் இப்படியே தொடருங்கள், Sir..

    ReplyDelete
  38. In the FB some people were asking about subscription and other details..not sure whether the url they are connecting to find the details

    ReplyDelete
    Replies
    1. அவர்களை நமது அலுவலகத்திற்கு போன் அல்லது மெயில் அனுப்பி கேட்க சொல்லலாமே? கை அலை பேசி - +919842319755 அலைபேசி - 04562272649. E-மெயில் office.lioncomics@yahoo.com

      Delete
    2. In FB they asked Parani and informed them to check the link

      Delete
  39. வேதாளன் எல்லாம கதைகளையும் படித்து விட்டேன். ஓவ்வொரு கதைகளும் ஒரு விதம், மிகச்சிறந்த கதை தேர்வு. கானக ஒலிம்பிக்ஸ் இந்திரஜாலில் படித்த ஞாபகம், அந்த வித்தியாசமான ஒலிம்பிக் போட்டிகள் நடுவில் கோப்பையை கைப்பற்ற துடிக்கும் வில்லன் கூட்டம் என செம சுவாரஸ்யமாக இருந்தது. வசனங்கள் சுருக் நருக் என செம. அச்சு தரம் சூப்பரோ சூப்பர்.கதை காட்டுக்குள் நடக்கும் பழைய கதை போல் இருந்தாலும் பழைய நெடி தெரியவில்லை முக்கிய காரணம் கதாசிரியர் திறமை மற்றும் மொழிபெயர்ப்பு. இன்றைய தலைமுறையினர் இதனை விரும்பி படிக்க வாய்ப்புகள் அதிகம்.

    அடுத்த smashing 70s கதைக்கு waiting.:-)

    ReplyDelete
  40. டெக்ஸ் அட்டைப்படம் மற்றும் உட்புற பக்கங்களின் டீசர் நன்றாக உள்ளது. அட்டைப்படத்தில் டெக்ஸ் துப்பாக்கியை முழக்குவது செம ஸ்டைலிஸ்டா உள்ளது; அப்புறம் அவருக்கு இடுப்பு சுளுக்கி தவிடு ஒத்தடம் கொடுத்தது எல்லாம் behind the scenes:-)

    ReplyDelete
  41. ஒரு வெள்ளை செவ்விந்தியன் சுவாரசியமான வித்தியாசமான கதை ஒரு வரியில் சொல்லலாம்; கதையில் பல விஷயங்களை கதாசிரியர் மிகவும் அழகாக சொல்லி உள்ளார். தந்தை செவ்விந்தியனாக மகன் வெள்ளையனாக வாழ முயற்சி செய்வது இரண்டு தாய்களும் தங்கள் குழந்தைகளை தங்கள் முறையில் வளர வேண்டும் என நினைப்பது என வித்தியாசமான கதாபாத்திரங்களே கதைக்கு வலு சேர்த்தது உள்ளது. அண்டர்டேக்கரின் முத்தயை வாழ்கையை அவரின் நண்பர் ஃப்ளாஷ் பேக் என தனி சீன் இல்லாமல் நிகழ்காழத்து நிகழ்வுகளை கோர்த்து சொல்வது செமயாக இருந்தது. வில்லன் கதைக்கு மற்றும் ஒரு மிகப்பெரிய பலம்.

    கடைசி சில பக்கங்களை ஹாலிவுட் பட ஆக்சன் காட்சிகளுக்கு போட்டி போடும் வகையில் இருந்தது.

    அண்டர்டேக்கர் நிறைவான பொழுது போக்கு :-)

    அண்டர்டேக்கரின் அடுத்த கதை எப்போது சார். சீக்கிரம் வெளியிடுங்கள்.

    ReplyDelete
  42. Any chance the old digil comics books be reprinted as one or two mega special editions.

    ReplyDelete

  43. //சோடா எல்லோரும் விரும்பி சாப்பிடுவது/

    சோடா ஒரு திரவம் .அதை குடிப்பது அல்லது பருகுவது என எழுதுவதே நடைமுறை வழக்கம்.

    STV சங்கத் தமிழில் எழுதியிருக்கிறார் என்றே கொள்ளவேண்டும் ..சங்க காலத்தில் நீரை உண்ணுவது என்றே எழுதியுள்ளனர்..

    //உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை,
    அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
    உண்ணு நீர் ஊட்டி வா’ என்றாள்: என, யானும்
    தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
    வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு, 10
    அன்னாய்! இவனொருவன் செய்தது காண்’ என்றேனா,
    அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
    உண்ணு நீர் விக்கினான்’ என்றேனா,//


    கலித்தொகை 51- ம் பாடலில் குறிஞ்சி திணை பாடலாக கபிலர் பாடியது..

    சிறியகள்பெறினே,எமக்குஈயும்;மன்னே!
    பெரிய கள் பெறினே,யாம்பாட,
    தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே!

    ஒளவையார் தன்னை புரந்த அதியமான் நெடுமானஞ்சியுடன் கள்ளை "உண்டதாக" புறநானூறு 235- ம் பாடலில் சொல்கிறார்..

    அவ்வளவு ஏன்? வள்ளுவர் கள் பருகாமை எனச் சொல்லவில்லை

    கள்ளுண்ணாமை என்றுதானே சொன்னார்.

    ஆக STV சங்கத் தமிழில் எழுதியது உறுதியாகிறது.

    கள்ளுண்ணாமையில் ஒரு குறள் வாசகர்களை " சந்தா கட்டாதே" எனச் சொல்பவர்களை அச்செயல் வீண்முயற்சி என அறிவுறுத்த முனைகிறது என யாம் சொல்ல முயன்றால் அது பொய் என நீங்கள் தள்ளிவிடக் கூடாது...
    அணி அலங்காரம், இல்பொருள் உவமையணி என ஏதாவது பெயரிட்டு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.:)

    களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
    குளித்தானைத் தீத்துரீஇ அற்று(929)

    வழக்கமான சந்தா அல்லது சிறப்பு சந்தா கட்டி அதனால் கிடைக்கப் பெறும் இன்பங்களை துய்த்து களித்திருக்கும் வாசகர்களை பல காரணங்களை சொல்லி அவ்வாறு சந்தா கட்டாதே என தடுக்கமுயல்வது நீருக்கு அடியில் இருப்பவனை தீப்பந்தம் கொண்டு தேடுவதற்கு சமமாகும் என்கிறார் வள்ளுவர்..
    என்னே ஐயனின் தொலைநோக்குப் பார்வை

    ReplyDelete
    Replies
    1. லூசெட்@ அருமையான விளக்கங்கள்....

      தாய்மொழி நாளில் நின் தமிழில் கொஞ்சி விளையாடுகிறது ஐயனே💕💞😍👌


      அந்த சோடா வை பற்றிய என் இரு வரிகளில் 7சொற்கள் மட்டுமே ட்ரை பண்ணினேன்...ஆனா ஈற்றடியின் ஈற்றுசீர் "நாள், மலர், காசு & பிறப்பு"---- என்பதற்குள் அமைக்க இயலவில்லை...

      Delete
    2. செல்வம் அபிராமிக்கு ஒரு நன்னாரி சோடா சாப்பிட கொடுக்க :-)

      Delete
  44. வெள்ளை செவ்விந்தியனின் மகனை வெள்ளையர்கள் முறையில் வளர்க்க அவனின் தாய் ஒத்துக்கொள்ள மற்றும் ஒரு காரணம் என நினைப்பது அந்த சிறுவன் செவ்விந்திய போராளியாக கொடுத்த பயிற்சிகளில் அவன் சில இடங்களில் சறுக்கியதை கொண்டு கூட முடிவெடுத்தது இருக்கலாம்.

    வெள்ளை செவ்விந்தியனின் மனைவியான செவ்விந்திய பாத்திரப் படைப்பு செமையாக யோசித்து இருக்கிறார்கள் சமீபத்தில் இதுபோன்ற ஒரு காமிக்ஸ் கேரக்டரை பார்த்தது இல்லை. என்னா ஒரு போராளிப் பெண்.

    ReplyDelete
    Replies
    1. வெள்ளை செவ்விந்தியனை தங்கள் முறைப்படி அடக்கம் செய்ய தனியாக நின்று போராடுவது சத்தியவான் சாவித்திரி கதை கண்முன்னே வந்து சென்றது.

      Delete
  45. தங்கள் உடல்நலம் தேறியதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  46. அண்டர்டேக்கரின் வெள்ளை செவ்விந்தியன் கதை குறித்து என்னுடைய வாட்ஸப் கமெண்ட்ஸ் கீழே.


    இம்மாதம் அண்டர்டேக்கர் தான் முன்னிலையில் இருந்திருக்க வேண்டும், வேதாளர் பிரமாண்டத்தில் சற்று பின்னே போய் விட்டார். உண்மையில் வெள்ளை செவ்விந்தியன்தான் இம்மாத டாப்.

    *****************************************

    அண்டர்டேக்கர் மற்றும் கும்பல் இறந்த வெள்ளை செவ்விந்தியன் உடலை தோண்டியெடுத்து திருடி செல்லும் வழியில், அந்த உடலை மீட்டு தோளில் சுமந்தவாறே ஒரு கையில் கயிறை பற்றியவாறே மலை ஏறும் காட்சிகள் எல்லாம் அசாத்திய மிரட்டல். நான் முதலில் யாரோ ஒரு செவ்விந்தியன் என்றே எண்ணினேன் அடுத்து வந்த பக்கத்தில் அது ஒரு பெண் என்று அறிந்து வியந்து போய் அந்த பக்கத்தின் சித்திரத்தை சில கணங்களுக்கு பார்த்துக் கொண்டே இருந்தேன். அந்த பெண் தன் கணவன் மீது வைத்துள்ள பற்றுதல் அளப்பரியது என்பதை வார்த்தையில் விவரிக்காது அந்த சித்திரத்தின் வாயிலாக அற்புதமாக சித்தரித்து விடுகின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. // அந்த பெண் தன் கணவன் மீது வைத்துள்ள பற்றுதல் அளப்பரியது என்பதை வார்த்தையில் விவரிக்காது அந்த சித்திரத்தின் வாயிலாக அற்புதமாக சித்தரித்து விடுகின்றனர். //

      Excellent view Rajkumar

      Delete
    2. //வேதாளர் பிரமாண்டத்தில் சற்று பின்னே போய் விட்டார். உண்மையில் வெள்ளை செவ்விந்தியன்தான் இம்மாத டாப்.//


      ஆமோதிக்கிறேன்.
      வேதாளர் கதைகள் எளிமையானவை..பழமையானவை...
      இறுதிச் சடங்கு இயக்குநரோ - வன்மேற்கு கதையாயினும்- நவீன கதை சொல்லும் பாணிக்கு சொந்தக்காரர். முழுக்கதையையும் முடிக்கும்போதுதான்
      முதல் நான்கு பக்க சம்பவங்களும் அவற்றின் உரையாடல்களும் நமக்கு புரியும்.

      மேம்பட்ட சித்திர நுணுக்கங்கள், வண்ணச்சேர்க்கை, கதையின் ஆழம் , கதை சொல்லும் யுக்தி என்பதைத் தாண்டி மூன்று புதிய விஷயங்கள் சவக்காரர் கதையில் காணலாம்.

      1. பெண் போராளி..கதாநாயகனுக்கு இணையான பாத்திர சித்தரிப்பு.
      இதுகுறித்து ஏற்கனவே எழுதியுள்ளேன்

      2. வெள்ளை - செவ்விந்திய கலப்பினத் திருமணம் ஒன்றும் புதுமையானதல்ல.
      ஆனால் காலெப் பார்க்ளே கதாபாத்திர சித்தரிப்பு புதுமையானது.
      இதுகுறித்தும் ஏற்கனவே எழுதியுள்ளேன்.

      3.ஒரு வெள்ளையனான டெரக் நுரையீரல் அழற்சி காரணமாய் மரணத் தருவாயில் இருப்பினும் தனிமனித தற்கொலைப் படையாய் மாறுவதும் செவ்விந்திய குழு ஒன்றின் போராளிகளை உணவில் ( பீன்ஸ்) விஷமிட்டு கொல்வதும் புதிதாக கேள்வியுறும் விஷயங்கள்.

      அரசுப் படையோ, தனியார் படையோ செவ்விந்திய கிராமங்களை தாக்கி பெண்கள் , குழந்தைகள் என்றும் பாராமல் கொன்று குவிப்பது வரலாறு கூறும் உண்மை...ஆனால் இவை எல்லாமே நேரடி மோதல்கள் ..பேச்சுவார்த்தைக்கு அழைத்து சிறைப்பிடித்து பின் கொன்ற நிகழ்வுகளும் உண்டு.செவ்விந்தியர்களின் வாழ்வாதாரமான காட்டெருமைகளை பதினாயிரக் கணக்கி்ல் கொன்று குவித்து அவர்களை பட்டினியில் துடிக்கவைத்து இன நன்மை காரணமாய் அவர்களாகவே சரணடையச் செய்த சம்பவங்களும் உண்டு..

      ஆனால் உணவில் விஷமிட்டு கொல்வது விசித்திரமான நிகழ்வு..

      கிட்டத்தட்ட இது போன்ற சம்பவம் 1763- ம் ஆண்டு பிரிட்டிஷாரின் பிட் கோட்டை முற்றுகையின் போது நடந்ததாக வரலாற்று ஆவணங்கள் பல தெரிவிக்கின்றன.அதாவது பெரியம்மையால் (small pox) பாதிக்கப்பட்டு கோட்டையின் உள்ளே இருந்த நோயாளிகளின் கம்பளிகளையும், கைத்துண்டையும் கோட்டையை முற்றுகை இட்டு இருந்த செவ்விந்திய போராளிகளுக்கு சமாதானத்துக்கு அறிகுறியாய் மற்றும் சில பொருள்களோடு கொடுத்தனுப்பி அவர்களிடையே பெரியம்மையை பரப்பிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன...இதன் முழுவிவரங்களும் Siege of Fort Pitt என்பதின் கீழ் இணையத்தில் படிக்கலாம்

      இச்சம்பவம் போல் எங்கோ கேள்விப்பட்டது போல் தோன்றுகிறது அல்லவா?

      ஆம்! டெக்ஸின் எதிரிகள் இருவர் பெரியம்மை பாதிக்கப்பட்டோரின் கம்பளிகளை செவ்விந்திய கிராமங்களில் வினியோகித்து அதனால் அம்மை பரவி பல கிராமங்கள் கூண்டோடு அழிவதாக டெக்ஸ் கதையில் படித்திருப்போம்..டெக்ஸ் , கிட் வெளியூர் அச்சமயம் சென்றிருப்பதால் தப்பிக்க டெக்ஸின் அன்பு மனைவி லிலித் மரணிப்பதாய் வரும்.

      உயிரியல் ஆயுதம் செவ்விந்தியர்கள் மேல் உபயோகிக்கப்பட்டதாய் வரலாறு சுட்டிக் காட்டும் இச்சம்பவம் ( இதன் நடைமுறை சாத்தியமில்லை என அறிவியல் கூறுகிறது) மட்டுமே நமது இறுதிச் சடங்கு இயக்குநர் கதையில் வரும் விஷமிட்டு கொலை செய்யும் முயற்சியோடு கொஞ்சமேனும் பொருந்தி வருகிறது.

      3.A. உயிர்நண்பனாய் இருப்பினும் பிறவிக்குறைபாட்டை நையாண்டி செய்வதை ரசிப்பதில்லை என்பதை ஸிட் பீச்சம் ஜோனாஸை இவ்விஷயத்தில் புகழ்ந்துரைப்பதன் மூலம் அறியமுடிகிறது.ஸிட் பீச்சம் தன்னோடு சேர்த்து ஜோஸபின் பாரக்ளேவின் எஞ்சியிருக்கும் ஒரே வாழ்வாதாரமான விடுதியையும் சேர்த்து அழிப்பது ஜோஸபின் ஸிட்டை இருமுறை குள்ளப் பயலே என இழித்துரைப்பதனால்தானோ?

      Delete
  47. காமிக்ஸ் புதையலை கைப்பற்றி விட்டேன். சான்ஸே இல்லை. பிரமாதம் சார்!!!! தங்களுக்கும், ரீமுக்கும் கோடான கோடி நன்றிகள் சார்!! பார்த்து பார்த்து இழைத்துள்ளீர்கள். அதுவும் FFS இனையும், Samehing 70s இனையும் ஒன்றாகப் பார்த்ததில் எனக்கு சந்தோசத்தில், தலை கால் புரியவில்லை. அட்டை படத்தில் தொடங்கி, உட்பக்க கதைகள், போஸ்டர்கள், எலியப்பா, சீனியர் எடிட்டரின் கேள்வி-பதில்கள் என பல ஆனந்த தோரணங்கள். பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறீர்கள். எங்கள் ஒவ்வொருவரின் முகத்தில் புன்னகையையை பார்க்க நிறையவே உழைத்துள்ளீர்கள். Hats off you Sir! இனி காமிக்ஸ் மட்டுமல்ல, டப்பிகளையும் பாதுகாக்க , ரசிக்கும்படி அழகாக பிரிண்ட் செய்து அனுப்பி உள்ளீர்கள். என்னுடைய படம் அழகாக வரும்படி அமைத்துள்ளீர்கள் சார். மிக்க மிக்க நன்றி. மொத்தத்தில் சந்தோசத்த்தில் ஆனந்தகூத்தாட வைத்துவிட்டீர்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முகத்தில் தெரியும் சந்தோஷத்தை உங்கள் எழுத்துக்களில் காணமுடிகிறது!

      Delete
  48. *அண்டர் டேக்கர்-ஒரு வெள்ளைச் செவ்விந்தியன்*

    வாவ். ஜஸ்ட் வாவ். என்ன மாதிரியான கதைக்களம். விவரிக்க எனக்கு சாமார்த்தியம் பத்தாது. இது வரை வெளியான கதைகளிலேயே மிகவும் வித்யாசமான கதைக்களத்தோடு வெட்டியான் வந்திருக்கிறான். முந்தைய இரண்டு கதைகளுடன் ஒப்பிட்டால் வேகம் ஒரு மாற்று குறைவு. ஆனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஒரு பரபரப்புடனே கதை நகர்கிறது.

    செவ்விந்தியர்களால் கவரப்பட்ட ஒரு வெள்ளையனின் உடலை அவர்களின் மயானத்தில் இருந்து கடத்தி வந்து வெள்ளையர் (கிறிஸ்தவ) முறைப்படி அடக்கம் செய்ய முயல்வதே கதை. இதில் நிறைய திருப்பங்கள் இருக்கின்றன. அவற்றை சொல்லி விட்டால் சுவராஸ்யம் குன்றி விடும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கலாம். இந்த கதையி்ல் எத்தனை பலவிதமான மாந்தர்களை, அவர்களின் ஆளுமைகளை, குணதலன்களை துரோகம், நட்பு, பேராசை, குரோதம், திமிர், ஆணவம் என பல விதமான குணநலன்களுடன் விவரித்து ஒரு மாஸ்டர் பீசை படைத்திருக்கிறார் கதாசிரியர்.

    ஓவியங்கள் டக்சன், அதன் சுற்றவட்டார மலை, பாலைப் பகுதிளின் கோடை, பனிக் காலங்களை கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் ஓவியர். சிம்பளி ஆசம். டக்சன்ல இந்த அளவுக்கு பனிப்பொழிவு இருக்கா என்ன?

    கதைக்கேற்ற மொழிப்பெயர்ப்பு. கதையின் வேகத்துடனும் தன்மையுடனும் பயணிக்கிறது. ஒரு சில பேனல்களில் பலூனின் ஆக்கிரமிப்பு அதிகம். ஆனால் கதைக்கு அவசியமான வசனங்களாகத்தான் தெரிகிறது.

    இந்த மாதிரி இன்னும் இரண்டு மூன்று ஆல்பங்கள் ரிலீசானால் அண்டர் டேக்கர் என்னுடைய பர்சனல் பேவரைட்டில் முதலிடம் பிடித்து விடுவார் போல.

    ஐ அடோர் இட்.

    ReplyDelete
    Replies
    1. //இந்த கதையி்ல் எத்தனை பலவிதமான மாந்தர்களை, அவர்களின் ஆளுமைகளை, குணதலன்களை துரோகம், நட்பு, பேராசை, குரோதம், திமிர், ஆணவம் என பல விதமான குணநலன்களுடன் விவரித்து ஒரு மாஸ்டர் பீசை படைத்திருக்கிறார் கதாசிரியர்//

      படிக்க தூண்டுகிறீர்கள் சகோ, பார்ப்போம்..

      Delete
    2. //விவரிக்க எனக்கு சாமார்த்தியம் பத்தாது. //

      நீங்களே இப்படி சொன்னா எப்படி?

      //அவற்றை சொல்லி விட்டால் சுவராஸ்யம் குன்றி விடும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கலாம்//

      புக் வந்த முதல் ஒரு வாரம் சரி! இனிமே சொல்லலாம்


      //டக்சன்ல இந்த அளவுக்கு பனிப்பொழிவு இருக்கா என்ன?//

      அமெரிக்கால இருக்கறதால உங்களுக்கு இது தோணிருக்கு..மத்தவங்களுக்கு தோண வாய்ப்பில்ல..

      பனிப்பொழிவின் அளவுன்னு சொல்லியிருக்கறதால 1971 -ல டக்ஸன்ல 6.8 இஞ்ச் பனிப்படிவுதான் அதிகம்..பிப்ரவரி 2019 -ல டக்ஸன்ல பனிப்பொழிவு இணையப்படங்கள் நம்ம கதையில வர்ற அளவுக்கு அதிகமாத்தான் இருக்கு..

      பொதுவா டக்ஸன் இருக்கற அரிசோனாவில் பனிப்பொழிவு குறைவுங்கறது உண்மைதான் ..பனிப்பொழிவே இல்லாத இடம் அப்படின்னு அரிசோனாவில் இல்லை.

      நம்ம கதைகளில் வருகிற (அரிசோனா)ப்ளாக்ஸ்டாப் -ல் பனிப்பொழிவு அதிகம்தான்.

      கிட்டத்தட்ட பனிப்பொழிவே இல்லாத மாகாணங்கள்னு பாத்தா ப்ளோரிடா மட்டும்தான் சொல்லமுடியும்போல.

      ஹவாய்ல கூட பனிப்பொழிவுண்டு.

      Delete

  49. மா துஜே சலாம் இப்போதுதான் படித்தது போல் உள்ளது.

    ஒரே தேசத்து சகோதர ரத்தங்களுக்குள் குருதிக் களரி ஏற்பட்டு அதனால் விளையும் அனர்த்தங்கள் பற்றிய கசப்பான எண்ணங்கள் மறையுமுன்னே இதோ அடுத்த யுத்தம்..

    ரஷ்ய செசன்ய சகோதர யுத்தத்தின் போது சமூக வலைத் தொடர்பு குறைவு என்பதால் நம்மில் பலர் அறியாது போய்விட்டோம்.

    இப்போது ரஷ்ய உக்ரைன் சகோதர யுத்தம் கண்ணெதிரே தோன்றி உள்ளங்களை வலிக்கச் செய்கிறது.

    இன்னும் பத்து வருடம் கழித்து மா துஜே சலாம் -2 படிப்போமோ ? என்ற அச்சம் எழுகிறது.

    போரில்லா உலகம் அமைய இறைவன் மனம் வைக்கட்டும் ..

    ReplyDelete
    Replies
    1. // போரில்லா உலகம் அமைய இறைவன் மனம் வைக்கட்டும் //

      +1

      Delete
    2. // போரில்லா உலகம் அமைய இறைவன் மனம் வைக்கட்டும் .. //
      மனிதன் தான் மனம் வைக்க வேண்டும் செனா அனா ஜி...
      தீர்மானிக்கும் சுதந்திரம் நம்மிடம் உள்ளது,அதுவே வரமும்,சாபமும் ஆகும்...

      Delete
    3. நீங்கள் சொன்னால் சரிதான் அறிவு.

      Delete
    4. @Lusettesofia

      நம்மூர்ல.. இந்த பப்ஜி.. ஃப்ரீ ஃபயர்னு ஓய்வு ஒழிச்சல் இல்லாம வெளாண்டுட்டு திரியற ஒரு நூறு எறநூறு பேர்வழிகளை புடிச்சி அங்க அனுப்பிவெச்சா போரை முடிவுக்கு கொண்டு வந்துடமாட்டாங்க..!?

      ஹாஸ்யம் ஒதுக்கி..

      சங்கடமான சூழல்தான்.. விரைவில் முடிவுக்கு வந்துவிட்டால் நல்லது.!

      Delete
    5. // நம்மூர்ல.. இந்த பப்ஜி.. ஃப்ரீ ஃபயர்னு ஓய்வு ஒழிச்சல் இல்லாம வெளாண்டுட்டு திரியற ஒரு நூறு எறநூறு பேர்வழிகளை புடிச்சி அங்க அனுப்பிவெச்சா //

      அந்த குழுவுக்கு உங்களை தலைவராக போட்டு விடலாம்;-)😂

      Delete
  50. சார் இன்று பதிவுக் கிழமை...

    பிப்ரவரி யில் மார்ச்???? புத்தகங்கள் எப்போது கிளம்பும் சார்???

    ReplyDelete
  51. அப்படியே முட்டிங்கால் போடுங்கள் .... 'என்ன மாதிரியான வசனம் சார்?'

    ReplyDelete
  52. FFS முதல் புத்தகத்தை படித்து முடித்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. என்னாது காந்தி செத்து விட்டாரா???

      Delete
    2. இல்லை சிவாஜி செத்து விட்டாரா😂

      Delete
    3. பரணியாவது பரவாயில்லை..!இங்குட்டு இன்னும் காந்தி சிவாஜி எம்ஜியார் எல்லோரும் அப்படியேதான் இருக்காங்க..!

      Delete
    4. குமார் @ ஒ.நொ.ஒ.தோ இன்று முதல் படிக்க உள்ளேன் என்பது கொசுறு செய்தி :-)

      Delete
  53. Edi Sir..
    பதிவு உண்டுங்களா? மார்ச் புக்ஸ் கிளம்பிடுச்சுங்களா?..சுஸ்கி விஸ்கி வர்ராங்களா?..

    ReplyDelete
    Replies
    1. மார்ச் புக்ஸ் இந்த முறை மார்ச்சில் தான்:-)

      Delete
  54. பதிவு உண்டா சார் இன்று???

    ReplyDelete
  55. Edi Sir.. உடம்பு சரியாயிடுச்சுங்களா?. இன்னைக்காவது பதிவு வருங்களா?.🤔🤔

    ReplyDelete
  56. இரவு காத்த கிளியா ரா முழுக்க எதிர் பார்த்தோமே பதிவ ☹️☹️😤😤🥱🥱😵😵

    ReplyDelete
    Replies
    1. அது இளவு(இளவம் பஞ்சு)காத்த கிளி, இரவு காப்பது ஆந்தையும் வவ்வாளும் :P

      Delete
    2. பதிவுக்காக காத்திருந்ததை சும்மா நகைச் சுவைக்காக அப்படி சொன்னேன்ங்க 😃😃

      Delete
    3. அதெதான் சார் நானும் பதில் போட்டேன் :)

      Delete
  57. ஆஹா.... ஞாயிறு காலைகளில் காத்திருந்து பதிவை படிக்கும் என் ஃபேவரைட் நாட்களில் மீண்டும் உலவுவது போல உள்ளது... வெயிட்டிங் வித் ஈகர் சார்...

    ReplyDelete
  58. பல நாள் கறிகடையில் காத்திருக்கும் வேளையில் பதிவை வாசிப்பேன்..

    இன்று சிவராத்திரி விரத காலம் என்பதால் கீரை, காய் கடையில்..... வாழைப்பூ வாங்குறாங்க வீட்டம்மா...அநேகமாக வாழைப்பூ வடையாக இருக்கும் மதியம்....!!

    ReplyDelete
  59. வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  60. ஒரு வேளை புத்தகங்களை நாளை அனுப்பிவிட்டு பதிவு வரும் என நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நானும் இதையே நினைத்தேன்

      Delete
    2. // ஒரு வேளை புத்தகங்களை நாளை அனுப்பிவிட்டு பதிவு வரும் என நினைக்கிறேன் // ஒரு வேளை இப்படித்தான் இருக்குமோ?

      Delete
  61. இந்த வார பதிவு அடுத்த வாரம் புத்தகங்களை அனுப்பிய பிறகு தான் வரும் போல தெரிகிறது. அதனால் மதிய உணவை சாப்பிட்டு தூங்கச் செல்கிறேன் :-)

    ReplyDelete
  62. Edi Sir..
    சில Website ல நாம் போய் பார்த்த உடனே Visitors list நம்பர் increase ஆகிட்டே போகும். அதேமாதிரி நம்ப Blog க்கு ready பண்ணி வைங்க Sir.. ச்சும்மா Visitors count எகிறிகிட்டே போகும். நான் மட்டும் நேத்துல இருந்து 150 தடவைக்கு மேல Blog அ வந்து பாத்துட்டு பாத்துட்டு போயிட்டிருக்கேன். இந்த மாதிரி இன்னும் எத்தனை பேரு இருக்காங்களோ.. பாத்து செய்ங்க Sir.. ஒரு பதிவு போட்டுட்டுடுங்கEdi Sir..

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி நானும் இருக்கேன்.

      Delete
    2. ஆமாம். என்னாச்சு எடிட்டர்க்கு. எத்தனை தபா வர்ரர்து

      Delete
    3. அடியேனும் அந்த லிஸ்டில்

      Delete
  63. ஒருவேளை இன்னைக்கு வெள்ளிக்கிழமையோ நாளை தான் பதிவு வருமோ நான்தான் இன்று ஞாயிறென்று தவறாக நினைத்து விட்டேனா

    ReplyDelete
    Replies
    1. மனதின் வலியை ஆத்மார்த்தமாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் செந்தில் சத்யா!

      உடல்நலம் தேறிவிட்டீர்களா?

      Delete
  64. காற்று இல்லா டையரும்
    பதிவு இல்லா ஞாயிறும் நகராது.....

    ReplyDelete
  65. பதிவில்லையா சார்?

    ReplyDelete
  66. நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு ஞாயிறு தவறுனாலும் பதிவு தவறாம கொடுக்குரவரு ஆளையே காணோமே

    ReplyDelete
  67. சார் எங்க இருக்கீங்க

    ReplyDelete
  68. ஆசிரியர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஓய்வு எடுக்கின்றார் என்று நினைக்கின்றேன்.

    ReplyDelete
  69. ஒருவாரப் பதிவை ஒழியென்றால் ஒழியாய்
    மறுநாள் வரைப்பொறு என்றால் கேளாய் - ஒருநாளும்
    என்னோ வறியாய் இடும்பைகூர் என்நெஞ்சே
    உன்னோடு வாழ்தல் அரிது.

    ஆசிரியரின் பதிவை ஒரு வாரம் படிக்காமல் போனால்தான் என்ன ? என்று சொன்னால் கேட்க மாட்டாய்.
    சரி! ஒருநாள் பொறுத்திரு எனச் சொன்னாலும் செவிமடுக்க மாட்டாய்.
    நான் படும் வேதனையை அறியமாட்டாய்.

    ஓ! என் நெஞ்சே! உன்னோடு வாழ்வது மிக கடினம் .

    ReplyDelete
    Replies
    1. ஒட்டுமொத்த காமிக்ஸ் ரசிகர்களின் மனநிலையை அருமையான வரிகளில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் செனா அனா!!

      Delete
  70. எதாவது பெரிய surprise தயார் செஞ்சிகிட்டு இருக்கார் போல 🥳

    ReplyDelete
  71. Sir
    என்ன ஆச்சு
    உங்கள் மௌனம்
    புரியவில்லை.....

    ReplyDelete
  72. சார்..என்னாச்சு..!..இன்னைக்கு..ஏன் பதிவு போட வில்லை..?..உடல் நிலை சரில்லையா..

    ReplyDelete
  73. உடல் நிலைதான் சரியில்லை போல இருக்கு.
    இல்லையெனில் டான் என ஆஜராகி விடுவாரே.

    ReplyDelete
  74. ஆல்ஃபா கதையின் கடைசி பாகத்தின் இறுதி காட்சியில் குப்பை பெட்டியில் வெடி குண்டு வைத்து செல்வது யார்? ஏன்?

    ReplyDelete
    Replies
    1. தெரியவில்லையே அத தெரிஞ்சுக்க தான் கேட்டேன்:-)

      Delete
  75. எடிட்டரின் புதிய பதிவு ரெடி ப்ரியடெல்ஸ்!

    ReplyDelete