நண்பர்களே,
வணக்கம். வாரத்தின் துவக்கத்தில் புக் டெஸ்பாட்ச் இருக்க நேர்ந்தால், உங்களின் வாசிப்பு வேகங்கள் நிச்சயமாய் ஜாலி ஜம்பருக்குப் போட்டி தரப் போவதில்லை என்பது கடந்த சில நாட்களின் பாடம் ! வாரயிறுதிக்கு புக்ஸ் உங்களிடம் இருக்கும் விதமாகவே சமீப ஐந்தாறு மாதங்களில், எல்லா டெஸ்பாட்ச் தேதிகளுமே அமைந்திருந்ததால் - சூட்டோடு சூடாய் உங்களின் வாசிப்புகள் + அலசல்கள் அரங்கேறியதைப் பார்க்க முடிந்திருந்தது ! இம்முறை செவ்வாய் என்பதால் ஸ்லோவாய் வாசிப்ஸ் போலும் !!
Anyways - இம்மாதத்து 4 இதழ்கள் கூட்டணியினில், ஸ்டெர்ன் சார்ந்த உங்களின் பாசிட்டிவ் எண்ணங்கள் தொந்தியில் மில்க்க்ஷேக் வார்க்கின்றன ! முதல் ஆல்பத்தில் மதில் மேல் பூனையாய் இந்த மனுஷனுக்கான opinion இருந்திட, உங்களிடம் வாக்கெடுப்பொன்றை நடத்திய பின்னேயே இவருக்கான மறுவாய்ப்பு தரத் தயாராகி இருந்தேன் ! இருந்தாலுமே லைட்டாய் ஒரு பீதி உள்ளுக்குள் இல்லாதில்லை தான் - ஆண்டின் இறுதி மாதத்தினை சொதப்பாது நகற்ற இந்த நாகரீக வெட்டியான் ஒத்துழைக்க வேண்டுமே - என்று ! இது வரைக்குமான உங்களின் பகிர்வுகள், சின்னதொரு திசைகாட்டியாய் இருக்கும் பட்சத்தில் - ஸ்டெர்ன் சாதிக்கிறாரோ, இல்லியோ, சொதப்பவில்லை என்பது புரிகிறது ! இன்னும் நிறையவே காத்திருப்போம் - இந்த மனுஷன் நம் மத்தியில் தொடர்ந்திட உங்களின் ஏகோபித்த க்ரீன் சிக்னல் கிடைக்கிறதாவென்று அறிந்திட !
க்ரீன் சிக்னலோ ; ரெட் சிக்னலோ - இவர்களுக்கு நீங்கள் தந்திடவுள்ளது எதுவாயினும், டாட்டா சொல்லிக் கிளம்பிடவுள்ள ஹெர்லக் & வேஸ்ட்சன் ஜோடியின் ஆல்பமும் "Not Bad" என்ற ரீதியில் துவக்க விமர்சனங்கள் ஈட்டியிருப்பது குறித்து மகிழ்ச்சியே !! In many ways - நம் வீட்டுக் குட்டீஸ்களுக்குக் கதை சொல்ல இந்த ஜாலி ஜோடி பயன்படக்கூடுமென்பது எனது எண்ணம். அதிலும், அலாவுதீன் பூதம் ; மந்திரம், தந்திரமென்ற concepts கொண்ட இந்த இதழானது அவர்களுக்கு செமையாய் ரசித்திடக்கூடும் ! So இந்த வாரயிறுதியில் முயற்சித்துப் பார்க்கலாமே folks ?
அப்புறம் மறதிக்கார XIII + "குண்டு" சின்னவரை ஓரிரு வேகவாசிப்பாள நண்பர்களைத் தாண்டி வேறு யாரும் சீண்டிய பாடைக் காணோமென்பதும் புரிகிறது ! அதற்கென நேரம் ஒதுக்கிட வார நாட்களில் வாய்ப்புகள் குறைவே எனும் போது - தொடரும் நாட்களில் அவர்களோடு நீங்கள் அன்னம் தண்ணீர் புழங்க வாய்ப்புக் கிட்டுகிறதாவென்று பார்க்கலாம் !!
ரைட்டு....மசி மணம் மாறியிருக்கா 4 இதழ்களோடு உங்களின் நாட்கள் நகர்ந்து வரும் அதே சமயத்தில், எங்களது நாட்களை நாங்கள் நகர்த்துவது யாரோடு ? என்று பார்க்கிறீர்களா ? இதோ பாருங்களேன் :
FFS-ன் புக் # 1 & 2-ல் புது வரவுகள் ; ஆக்ஷன் டிடெக்டிவ்ஸ் ; ஸ்டைலிஷ் newcomers என்று இருக்க, இதோ - இது தான் நமது FFS புக் # 3 preview !! "நீ சான் பிரான்சிஸ்கோ போய்க்கோ இல்லே சாயல்குடிக்குப் போய்க்கோ ! நீ ஆல்பாவைக் கூட்டிட்டு வா ; இல்லே தீட்டாவைக் கூட்டிட்டு வா !! நீ ஹார்ட்கவர் போட்டுக்கோ ; இல்லே ப்ரவுண்கவர் போட்டுக்கோ !! ஆனாக்கா நாங்க வர்றச்சே கொயந்தைப் புள்ளீங்களை ஓரமா ஒதுங்கி நின்னு விளையாடச் சொல்லு தம்பி !!" என்று சொல்வது போல மிரட்டல் காட்டும் நமது கிளாசிக் நாயகர்களின் இதழுக்காக அட்டைப்படம் இதுவே folks !! மாயாவியின் அந்த இரும்புக்கரமும், நம்ம சிலந்தியாரும் - ஒரிஜினல் ஓவியரின் கைவண்ணத்தில் தெறிக்க விடுவதாக எனக்குத் தோன்றியது ! இருவருமே தலைகாட்டவுள்ளது சிற்சிறு சாகசங்களில் மட்டுமே என்றாலும் - ஒரு மைல்கல் தருணத்தில் அவர்களது பங்களிப்பும் இருக்குமென்ற மகிழ்வு பெரிதல்லவா ? அதிலும் "குற்றச் சக்கரவர்த்தி" கலரில் ரகளை செய்கிறார் !! பாருங்களேன் :
கலரில் சாகஸம் செய்வது டிடெக்டிவ் செக்ஸ்டன் பிளேக்குமே கூட !! புது யுக சித்திர பாணியில், புது யுக டிஜிட்டல் வர்ணங்களுடன் இந்த க்ளாஸிக் ஹீரோ மிளிர்வதைப் பாருங்களேன் !!
Black & White-ல் நமது மார்க்கண்டேய மாயாவியார் கலக்குகிறார் - ஒரு புது மினி சாகசத்துடன் :
And செக்ஸ்டன் ப்ளேக்கின் முழுநீள b&w சாகஸம் தான் இந்த 68 பக்க combo இதழின் அதிரடி முதுகெலும்பே !!
கருணையானந்தம் அவர்களின் க்ளாஸிக் பாணியிலேயே இந்த கோல்டன் ஹீரோஸ் ஸ்பெஷலின் மொழிபெயர்ப்பு இருந்திடும் என்பதால் - நாயகர்கள் யாரும் நவீன பாணிக்கு மாற்றம் கண்டிருக்க மாட்டார்கள் !! So "அந்த நாள் நாயகர்" கோட்டாவினை இந்த "கோ.ஹீ.ஸ்பெ" அழகாய்ப் பூர்த்தி செய்திடுமென்று எதிர்பார்க்கலாம் ! அடுத்த சில நாட்களில் அச்சேறவுள்ள இந்த க்ளாஸிக் நாயகர்களே இப்போதைய எங்களின் கவனங்களை ஆக்கிரமித்து வருவோர் !! And சந்தேகங்களின்றி, உங்களின் கவனங்களையும் இப்போது ஈர்த்திடுவர் என்பது திண்ணம் !
டிசம்பர் இதழ்களுக்குள் புகுந்திடவும், உங்களின் அலசல்களைப் பகிர்ந்திடவும் நேரமெடுத்துக் கொள்ளுங்கள் - ப்ளீஸ் ! நானிப்போது "நிழல்களின் சாம்ராஜ்யத்தில்" ஓரம்கட்டப் புறப்படுகிறேன் guys !!
Before I sign out - பாருங்களேன் நமது தாத்தாக்களின் வெள்ளித்திரை லூட்டிகளை !!
அந்த சிகப்பு டிரக் ; மாசமாயிருக்கும் பேத்தி ; கண்ணாடித் தாத்தா ; தோஸ்து தாத்தாஸ் என அட்சர சுத்த details பாருங்களேன் !! படம் பிரெஞ்சில் ரிலீஸ் ஆன உடனே நமது பிரான்ஸ்வாழ் நண்பர்களை பார்க்கச் சொல்லி அபிப்பிராயம் கேட்ட்டாகணும் ; மறவாதீர்கள் guys !!
And yes - சந்தா 2022 எக்ஸ்பிரஸில் இடம்பிடிக்கவும் ; இடம்பிடித்துள்ளோர் போட்டோக்களை அனுப்பிடவும் கூட மறந்திட வேண்டாமே folks !! Bye for now....see you around ! Have a chill weekend !!
முதலாவதாக...
ReplyDelete2வது...
ReplyDeleteHappy evening edi
ReplyDelete3rd
ReplyDeleteவணக்கம் ஆசிரியரே
ReplyDeleteMe..5th..
ReplyDelete8th
ReplyDeleteEdi Sir..Me 5th
ReplyDeleteமாயாவி மாமா வாராக
ReplyDeleteஸ்பைடர் சித்தப்பா வாராக
ப்ளேக் பெரியண்ணன் வாராக
Finally
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...!!!
ReplyDeleteEdi Sir.. வலை மன்னனையும்,இரும்பு கையரையும் வருக.. வருக.. என வரவேற்கிறோம்.
ReplyDeleteSir .. Santha 2022 is not showing in lionmuthucomics.com. . please check it ..
ReplyDeleteநாளை காலையில் சரி செய்திடச் சொல்லிடலாம் சார் !
Deletehttps://lion-muthucomics.com/86-2022-subscription
Deletehttps://lion-muthucomics.com/2022-subscription/877-with-in-tamilnadu-o-n-o-c-total-25-books.html
DeleteFor Tamil Nadu
For other states in India - below link:
Deletehttps://lion-muthucomics.com/2022-subscription/880-o-n-o-c-total-25-books-other-state.html
Hi.
ReplyDeleteதிக்கெட்டும் பகைவர்கள்:
ReplyDeleteவாசிப்பினிடையே தோன்றிய இரு விஷயங்கள்,
1.டெக்ஸின் தலைமைப் பண்புக்கான குணாம்சங்கள் இளம்பருவத்திலேயே புலப்படும் விதமாக பாத்திர வார்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது...
2.சற்றே திமிர்த்தனமும்,முரட்டுத்தனமும் தூக்கலாய் இருப்பது,இளம் பருவத்திற்கே உரிய சிக்கல் அது என்பதாலும் அதன்படி உருவாக்கப்பட்டிருக்கலாம்,இது சற்றே சிக்கலான நூலிழையிலான இடைவெளி தான்,கோட்டிற்கு இடையிலான இரு பக்கங்கள் போல,நூலிழை பிசகினாலும் அந்த கேரக்டரின் தன்மை முரண்பட்டு விடும்...
கதையைப் பற்றி விரிவா பேசனும்னா நிறைய பேசலாம்,அந்த வேலையை வேறு நண்பர்கள் செய்யட்டும்...
ஜெனரல் ஒர்டெகோ வடக்கத்திய தலைமையகம் நியூவா அசன்சியானைப் பார்க்கும் போது வல்லவர்கள் வீழ்வதில்லை கதையில் வரும் ஜெனரல் கார்ராஸ்கோவின் கோட்டைக்குள் டெக்ஸ் & கோ மற்றும் ஹட்ச் குழுவினர் நுழையும் காட்சி ஏனோ நினைவில் வந்து போனது...
டெக்ஸுடன் இறுதிவரை நல்லதும்,கெட்டதுமாய் பயணிக்கும் பெட்ரோவும்,மைக்கேலும் கூட கவனிக்க வைக்கும் கேரக்டர்கள்தான்...
5 ஆம் பாகத்தில் ஏகப்பட்ட திருப்புமுனை காட்சிகள்,அதுவும் குகைக்குள் செல்லும் காட்சிகள் கொஞ்சம் பக்பக் இரகம்தான்,
கடைசிவரை விறுவிறுப்பு குறையவே இல்லை...
ஒர்டெகோவின் கோட்டையில் நண்பர்களுடன் நுழையும் டெக்ஸ் ஏன் பெயரைக் கூட மாற்றி சொல்லாமல் விட்டு விடுகிறார் ?!
300 பக்கங்கள் சும்மா அசால்ட்டா போகுது,கதை ஜெட் வேகத்தில் பறக்குது...
எப்போதும் போல நிறைவான வாசிப்பு,டெக்ஸ் கதைகளை பொறுத்தவரை 1000 பக்கம்னாலும் நம்பி படிக்கலாம்,சும்மா பரபரன்னு போய்கிட்டே இருக்கும்...
வேறெந்த கதைக் களங்களுக்காவது இந்த பாக்கியம் இருக்கான்னு தெரியலை...
அடுத்த இளம் டெக்ஸ் எப்போ சார் ?!
கிட்டத்தட்ட குண்டுபுக் கணக்காக தெரிவதால் ஹார்ட் பைண்டிங்கில் வந்திருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்குமோன்னு ஒரு நப்பாசை எட்டிப் பார்க்காம இல்லை...
சிறு குறையாக தெரிந்தது-சற்றே சுமாரான ஓவியங்கள்...
எமது மதிப்பெண்கள்-9/10.
//1000 பக்கம்னாலும் நம்பி படிக்கலாம்,சும்மா பரபரன்னு போய்கிட்டே இருக்கும்...
Deleteவேறெந்த கதைக் களங்களுக்காவது இந்த பாக்கியம் இருக்கான்னு தெரியலை//
பாயசப் பார்டீசுக்குக் கேட்டுச்சான்னு தெரிலே சார் ; இன்னொருக்கா சொல்லிப் போடுங்க !!
//அடுத்த இளம் டெக்ஸ் எப்போ சார் ?!//
Deleteஜூலை சார் !
வாவ் .. எடி .. 😍😍
Deleteஉண்மை உண்மை உண்மை..
Deleteஉண்மையை தவிர வேறொன்றுமில்லை..:-)
1000 பக்கம்னாலும் நம்பி படிக்கலாம்,சும்மா பரபரன்னு போய்கிட்டே இருக்கும்...
Deleteவேறெந்த கதைக் களங்களுக்காவது இந்த பாக்கியம் இருக்கான்னு தெரியலை//
இதற்கான பதில்...:-)
அலாவுதீனும் ஒரு புலனாய்வுப் பூதமும் :
ReplyDeleteகொஞ்சம் கதை,கொஞ்சம் கிச்சு கிச்சு,கொஞ்சம் காமெடி...
ஏனோ ஹெர்லக் இரண்டாம் நிலை கதாபாத்திரமாய் தோன்றுகிறார்...
முதல் கதையில் விட்ட இடத்தை இரண்டாம் கதையில் பிடித்து விடுகிறார் ஹெர்லக்,நானா சாஹிப்பும்,ஹெர்லக்கும் மாற்றி,மாற்றி சிரிக்க வைக்கிறார்கள்...
லாஜிக்கை கழட்டி வெச்சிட்டா மேஜிக்கை இரசிக்கலாம்...
எமது மதிப்பெண்கள்-8/10.
+1
Deleteகிராண்டேல் நார்மன் போல இருக்கிறார்.
ReplyDeleteநினைவு ஒரு பறவை,
ReplyDeleteஎடுத்ததும் தெரியலை,படிச்சதும் தெரியலை,முடிச்சதும் தெரியலை...
விறுவிறு,சுறுசுறு...
கிளைமேக்ஸிற்கு சற்று முன்னர் ஜேஸனுக்கு நடக்கும் நிகழ்வைப் பார்த்ததும் மனதில் தோன்றியது "மறுபடியும் முதல்ல இருந்தா"...
அசாத்தியமான படைப்புகளின் மிகப் பெரிய வெற்றியே அதன் மையக் கரு வலுவாக இருப்பதும்,அதில் இருந்து தடம் பிறழாமல் கதைக் களத்தின் தடத்தை விறுவிறுப்பாய் கொண்டு செல்வதுதான்...
அப்படைப்பு வணிக நோக்கில் செல்லாத வரை நலம்,அதில் தடம் புரளும் போது வணிக நோக்கிற்காகவே படைப்புகள் படைக்கப்படும்...
இதன் விளைவு படைப்பின் மேலான ஈர்ப்பு இயல்பாகவே குறையும்...
ஸ்பின் ஆப் கதைகளில் நாம் இதை உணரலாம்...
ஆக ஈர்ப்பு குறைவதற்குள் ஜேஸன் கரேயேறி விட்டால் சிறப்பாக இருக்கும்...
விளையாட்டு உலகில் கூட நாம் சிலரை இதற்கு உதாரணமாக காணலாம்,வெற்றிகரமாக கோலோச்சிக் கொண்டிருக்கும்போதே எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் அத்துறையில் இருந்து விலகும் முடிவை அறிவிப்பார்கள்...
நினைவு ஒரு பறவை,விரிக்கும் அது சிறகை....
எமது மதிப்பெண்கள்-9/10.
+1
Delete//ஈர்ப்பு குறைவதற்குள் ஜேஸன் கரேயேறி விட்டால் சிறப்பாக இருக்கும்...//
DeleteVery true sir...
But this month xiii is like rollercoaster Hollywood movie ....
Deleteநினைவோ ஒரு பறவை
Deleteஇன்றே...:-)
எனவே தாண்டிங்...:-)
வந்தாச்சு
ReplyDeleteகாட்டான் கூட்டம் :
ReplyDeleteஒரு மனிதனின் புத்தகக் காதல் எதையெல்லாம் செய்ய வைக்கும் என்பதற்கான விளக்கம் நம் நாயகன் எலிஜா ஸ்டெரினிடம் நமக்குக் கிடைக்கிறது...
வாசிப்பின் தேடல் ஸ்டெர்னை கேன்சஸ் சிட்டிக்கு அழைக்க,தேடலுக்கான விலையாக காட்டான் கும்பலிடம் கிடைக்கும் மோசமான அனுபவங்களும்,ரகளையான கூத்துக்களுமே கதைக் களம்....
இறுதியில் ஸ்டெர்னின் வாசிப்புக் தேடலுக்கு அர்த்தம் கிடைத்ததா ?!
புத்தகத் தேடல் என்ற ஒற்றைப் பின்னணியைக் கொண்டு ஒரு நாளின் நிகழ்வை சிறப்பாய் நகர்த்திச் சென்றுள்ளனர் படைப்பாளிகள்...
பொதுவில் கதை சிம்பிள் லைனாக இருப்பினும் அதை திரைக்கதையாக திறம்பட கொணர்வதே படைப்பாளியின் வெற்றி,அந்த வகையில் கதாசிரியர் மிளிர்கிறார்...
துணைப் பாத்திரங்கள் வடிவமைப்பும் நம்மை ஈர்க்கிறது,
முரட்டுத் தோற்றத்துடன் உதவும் குணம் கொண்ட ட்ரீஷ்,சில்லறைத்தனமான சிந்தனை கொண்ட நண்பன் பெர்கஸ்,கழுதையை திருடிய பெருசு பார்ட் டைம் ஓவியராய் இருப்பது,ஸ்டெர்னின் முன்னாள் மனைவி ஜீன் இப்படி பல பாத்திரங்கள் மனதில் நிற்கிறது...
எளிய தோற்றம்,தன் வேலை உண்டு,தான் உண்டு என்று பயணிக்கும் நாயகன் பரிதாபத்திற்குரிய ஒரு பாத்திரம் அமைப்பாக இருப்பினும் நம்மை முதன்மையாக ஈர்ப்பவர் அவரே,எருமைக் கூட்டத்திற்கு நடுவே மாட்டிக் கொண்ட சுண்டெலியைப் போல...
ஸ்டெர்னும்,வாசிப்புக் காதலும் கதை நெடுகிலும் பரிதாபமாக அல்லாடுகிறது...
வெட்டியான் வாசிப்புக் காதலனாய் இருப்பதும்,புத்தக கடைக்காரர் கந்து வட்டிக்காரனின் கணக்குப் பிள்ளையாய் இருப்பதும் வித்தியாசமான முரண்...
கடை வாசலில் ட்ரிஷ் போலீஸ்காரன் பிலிப்பால் கட்டி போடப்பட்டு அமர வைக்கப்பட்டிருக்கும் காட்சி ஜீனுக்கு துன்பவியல் நிகழ்வாகவும்,ஸ்டெர்னுக்கு ஷேக்ஸிபியர் படைப்பின் இலக்கிய நிகழ்வாகவும் ஒரே நேரத்தில் தோன்றுவது அழகிய முரண்பாடு...
சம்பவங்கள் ஒன்று,பார்வைகள் வேறு,வேறு...
சராசரி பார்வையாளனின் கண்ணோட்டத்தில் ஸ்டெர்னின் பார்வை எரிச்சலை ஏற்படுத்தலாம்,ஆனால் ஸ்டெர்னைப் பொறுத்தவரை வாசிப்பின் நேசிப்பும்,ஆழமான சிந்தனையும் அந்த பார்வையை கொணர்ந்திருக்கலாம்...
இதை காட்சியமைப்பில் கொண்டு வந்த விதம் சிறப்பு....
ஓவிய பாணிகள் சிறப்பு...
மொத்தத்தில் வழியனுப்ப வந்தவனை விட காட்டான் கூட்டத்தில் ஸ்டெர்ன் மிளிர்கிறார்,நம் மனதிலும் இடம் பிடிக்கிறார்...
நிறைவான வாசிப்பு....
எமது மதிப்பெண்கள்-9/10.
//அழகிய முரண்பாடு...//
Deleteவன்மேற்கின் ஒரு ஜென்டில்மேன் - வெட்டியானாகவும் வலம் வருவதிலிருந்தே முரண்களின் பட்டியலைக் கதாசிரியர் துவக்கி விட்டார் தானே சார் !
வாவ் செம்ம செம்ம ரவி அண்ணா, எடிட்டர் சார் இருவருக்கும் எனது கை தட்டல்கள்.
Deleteஆழ்ந்து படித்துள்ளீர்கள் ரவி அவர்களே அருமை...!
Deleteசிறப்பான விமர்சனம் ரவி. பாராட்டுதல்கள்.
Deleteபெர்கஸின் தாய் மேகி, திருட்டு ஓவியரின் முன்னாள் கனவுக்கன்னியாக இருப்பதாக காட்டியிருப்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
ஓவியர் கழுதையை படம் வரைய மாடலுக்காகவே திருடுவதும் புன்னகைக்க வைக்கிறது.
ஜீன்னுக்கும், ஸ்டெர்ன்னுக்கும் பரஸ்பர புரிதல் இல்லாமல் போவதும்,
மென்மையான, (தன் முன்னாள் கணவனாக இருந்தும்) உதவும் குணம் கொண்ட ஜீன்னுக்கும், அடாவடி, அடிதடி ட்ரிஷ்க்கும் இடையிலான பரஸ்பர புரிதலும் முரண்களில் சேர்த்தியே.
காட்டான் கூட்டம் கண்டிப்பாக ரசிக்க வேண்டிய கூட்டமே
ஆசிரியருக்கு ஒரு கேள்வி.
இந்தக் கதையில் முழுக்கவே நகைச்சுவை விரவிக் கிடக்கிறது. எனவே இது கார்ட்டூன் ஜானரில் அல்லவா வந்திருக்க வேண்டும்.
// ஜீன்னுக்கும், ஸ்டெர்ன்னுக்கும் பரஸ்பர புரிதல் இல்லாமல் போவதும்,
Deleteமென்மையான, (தன் முன்னாள் கணவனாக இருந்தும்) உதவும் குணம் கொண்ட ஜீன்னுக்கும், அடாவடி, அடிதடி ட்ரிஷ்க்கும் இடையிலான பரஸ்பர புரிதலும் முரண்களில் சேர்த்தியே.
//
குட் பாயிண்ட்ஸ் 10 சார்,சில முரண்பாடுகள் வினோதமானவை...
கேள்வி & பதில்களுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கலாம்...
சொன்ன விதம் நகைச்சுவையுடன் இருந்திருக்கலாம் சார், ஆனால் சொல்லியுள்ள சமாச்சாரங்கள் கார்ட்டூனுக்குள் அடங்கிடும் ரகமல்லவே ? தவிர, கதை நெடுக ஒரு மென்சோகம் விரவிக் கிடப்பதை மறுக்க இயலுமா ?
Deleteஉண்மைதான் சார்.
Delete///சில முரண்பாடுகள் வினோதமானவை...
Deleteகேள்வி & பதில்களுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கலாம்...///
practically true. கணவன் புத்தகப்புழுவாக, காமிக்ஸ் உட்பட, இருப்பதும், மனைவி காமிக்ஸ் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவராக இருப்பதும் (என்னையும் சேர்த்தே) | நடைமுறையில் நாம் காணும் பிரத்யட்சமான முரண்களே.
சிந்து பைரவி படத்தில் ஒரு காட்சியில் சிவக்குமார் சுகாசினியிடம்,தன் மனைவி சுலக்சனா பற்றி சொல்லும் போது, "பெரிய்ய சங்கீத வித்வானோட மனைவின்னு தான் பேரு. ஆனா அவளுக்கு சங்கீதம்னா.." என்று சொல்லும் இடத்தில் காட்சி கட் ஷாட் ஆகி,சுலக்சனா காய்கறி காரரிடம் "கிலோ என்ன விலை"என்று கேட்பதாக
முடியும்.
இது கேபி சாரின் நகைமுரண் டைரக்டோரியல் டச்.
நான் மிகவும் ரசித்தது
அருமை நண்பர்களே...வெட்டியான் மனதில் நிற்கிறார் வித்தியாசமாய்
Delete// இது கேபி சாரின் நகைமுரண் டைரக்டோரியல் டச். //
Deleteநடைமுறை வாழ்க்கையிலும் இது போன்ற முரண்களை கண்டுள்ளேன் 10 சார்,நண்பர் ஒருவர் சித்தர்கள் வழி செல்பவர்,அதேநேரத்தில் அவருக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்,ஆனால் அவரின் மனைவியோ தீவிர கடவுள் பக்தை,உருவ வழிபாட்டில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்...
இந்த முரணைப் பற்றி நண்பர் விவாதிக்கும்போது சிரித்துக் கொண்டே சொல்வார்,எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கும்,எனக்குப் பிடிக்காது என்பதற்காக நான் அதை மறுக்கக் கூடாது அல்லவா என்பார்...
இதெல்லாம் பேசினால் அது பாட்டுக்கு போய்கிட்டே இருக்கும்...
Present sir
ReplyDeleteXIII ன் அம்பின் பாதையில் பயணித்ததோடு சரி.. ஆல்பம் 24&25 ரெண்டும் இன்னும் படிக்கவில்லை.. ஆகவே நினைவோ ஒரு பறவை இப்போதைக்கு என்னிடம் பறந்துகாட்ட முடியாது.!
ReplyDeleteநேரம் கிடைக்கும்போது இரண்டாவது சுற்றை முதலில் இருந்து ஆரம்பிக்க விரும்புகிறேன்..!
லவ் யூ ஜேசன்..!
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்🙋🙋🙋🙋
ReplyDeleteகோல்டன் ஹீரோ ஸ்பெசல் முன் அட்டையின் அடர் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் கலரை மாற்ற முடியுமா சார். ஒரு மாதிரி உறுத்துகிறது.
ReplyDeleteசான்ஸே கிடையாது சார் ; ஒரிஜினல் டிசைன் இது !
Delete** நினைவோ ஒரு பறவை***
ReplyDeleteசிறப்பான சித்திரங்கள். அமரர் வில்லியம் வான்ஸ்க்கு டஃப் ஃபைட் கொடுக்கும் வகையில் உள்ளன. அமெரிக்க அதிபர் உட்பட அனைவரும் கொல்லப்படும் அந்த குண்டுவெடிப்பு காட்சி, வெகு தத்ரூபமான சித்திரம். நம் கண் முன்பாகவே அது நிகழ்வது போன்ற உணர்வு.
அது போல் காலின்னை ஜேஸன் மீட்கும் காட்சியின் சித்திரங்களும் செம்ம.
இரத்தப்படலம் கதைக்கும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கும் ராசி இல்லை போலிருக்கு.
முதல் சுற்றில் வில்லியம் ஷெரிடனும், பின்னர் வாலி ஷெரிடனும கொல்லப படுகின்றனர். கால்ப்ரெய்ன் பதவி விலகுகிறார்.
இந்த இரண்டாம சுற்றிலும் அதிபர் கொல்லப்படுகிறார்.
நல்ல வேளையாக இதில் பழி ஜேஸன் மீது இல்லை.
அடுத்த சுற்று வந்தால்(?) அடுத்த அமெரிக்க ஜனாதிபதியின் நிலை பாவம்..
அது போல் முதல் சுற்றில், தலையில் குண்டு பாய்ந்ததால், ஜேஸன் பழைய நினைவுகளை இழக்கிறார்.
இந்த சுற்றில் ஜேனட்டால் பழைய நினைவுகளை ஆப்ரேஷன் மூலம் வலுக்கட்டாயமாக மறக்கடிக்கப்படுகிறார். எல்லா சுற்றுகளிலும் மறதிக்கார மன்னாரு ஆக வலம் வரவேண்டும் என்பது தான் அவருக்கு 'எழுதப்பட்ட விதி'யோ?
சரி, மனிதனின் மூளை என்ன, சாதாரண மெமரி கார்டா? தேவைப்படும் போதெல்லாம் அழித்து விட..?
நம்பமுடியவில்லையே?
ஆனால் கதை பக்கத்துக்கு பக்கம் பட்டாசாக தெறிக்கிறது.
முதல் பக்கம் தெரடங்கிய விறுவிறுப்பு, கடைசி பக்கம் வரை குறையவே இல்லை. எடுத்ததும், படித்ததும், முடித்ததும் தெரியவேயில்லை. பாராட்டுக்கள் எடிட்டர் சார்.
இரண்டாம் சுற்றில் எத்தனை பாகங்கள் இன்னும் வரும் என்று தெரியவில்லை. அவையெல்லாம் வெளிவந்து, இரண்டாம் சுற்று முடிந்தால்(?) மொத்தமாக இரண்டு வால்யூமாக வருவது உறுதி என்பதால், இப்போதே முதல் துண்டை போட்டு , இடம் பிடித்து, கொடியும் பிடிக்கிறேன்.
எடிட்டர் சார்.. பார்த்து செய்யுங்க சார்.
அடுத்த பாகத்தோடு இரண்டாம் சுற்று நிறைவுறவுள்ளதாய் கொஞ்ச மாதங்கள் முன்னே சொன்னார்கள் சார் ! தற்போதைய நிலவரம் என்னவென்று விசாரித்துப் பார்த்தால் தெரியும் !
DeleteEdi sir - *Xiii-நினைவோ ஒரு பறவை*. அருமையான ஆக்சன் blog.ஆரம்பம் முதல் இறுதி வரை சர்..ன்னு ஜெட் வேகம்தான்..
Delete+1
Delete// மனிதனின் மூளை என்ன, சாதாரண மெமரி கார்டா? தேவைப்படும் போதெல்லாம் அழித்து விட..?
Deleteநம்பமுடியவில்லையே? //
கதையை நீட்டனுமே,அதுக்காக பண்றாங்க போல 10 சார்...
ஸ்பைடர் அட்டைப் படம் சூப்பரோ சூப்பர்
ReplyDeleteவணக்கம்
ReplyDelete///அந்த சிகப்பு டிரக் ; மாசமாயிருக்கும் பேத்தி ; கண்ணாடித் தாத்தா ; தோஸ்து தாத்தாஸ் என அட்சர சுத்த details பாருங்களேன் !! ///
ReplyDeleteஅந்த தில்லாலங்கடி பாட்டியையும் பாட்டியோட செட்டப்பு பாஸையும் போஸ்டர்ல ஒரு ஓரமாவாச்சும் போட்டிருந்திருக்கலாம்..
ஹூம்..!
34th
ReplyDeleteகாட்டான் கூட்டம் :-
ReplyDeleteபக்கங்கள் 8 மற்றும் 9 லிருந்து கண்களை எடுக்கவே ரொம்ப நேரமாயிற்று.. வந்தனங்கள் Julien Maffre..!
அப்புறம் ஆரம்ப பக்கத்தில் வரும் அந்த ஜெனரல் ஸ்டோர் உரிமையாளரின் ஹேர்ஸ்டைல் சூப்பரா இருக்கு.! 2023 ஆகஸ்டு ஈரோடு புத்தக திருவிழாவிற்கு அந்த ஹேர்ஸ்டைலில் வரலாமின்னு நானும் மஹியும் பின்னே விஜியும் முடியெடுத்து சாரி.. சாரி.. முடிவெடுத்து இருக்கிறோம்.!
கதை... ஏன்டாப்பா உங்க ஊருக்கு புத்தகம் வாங்க வந்தது ஒரு குத்தமாடான்னு நம்ம ஸ்டெர்னை கதறவிட்டுடுறாங்க கான்சஸ் பிரஜைகள்.! ஸ்டெர்னின் முன்னாள் மனைவி ஜீனும் அவளுடைய தோழி ட்ரிஷ்ஷும் ரசனையான கேரக்டர்கள்..! அதிலும் ஜீன் ஸ்டெர்னிடம் பேசும் சில வசனங்கள் கணவன் மேல் எதிர்பார்ப்புகள் வைத்து ஏமாந்துபோகும் ஒரு சராசரி இல்லத்தரசியை பிரதிபலிக்கின்றன..!
காட்டான் கூட்டம் என்ற தலைப்புக்கு வெகு பொருத்தமான நபர்கள் பெர்கஸும் அவனோட மம்மியும்தான்.. ஷ்ஷ்ஷப்பா.. சீக்கிரம் யாராச்சும் அந்த கிறுக்குக் கிழவியை போட்டுத் தள்ளுங்கடான்னு கத்துற அளவுக்கு கதை முழுக்க ரகளை பண்ணி வெச்சிருக்கு அந்த பாட்டீமா.!
மெரில்.. ஸ்டெர்ன்.. ட்ரிஷ் மூவரும் மோதும் அந்த குத்துச்சண்டை சூப்பர்.. ஆனா அதைவிட அந்த சண்டையில் பெர்கஸின் மம்மி தன்னைத்தானே வெடிக்க வெச்சிக்கிற சம்பவம் படு சூப்பர்.. கதைமுழுக்க பாடா படுத்திடுச்சிப்பா..😂
ஸ்டெர்ன் திருந்திடுவானா.. அவனுடன் சேர்ந்திடலாம்கிற ஆசையில ஜீன் அவ்வபோது பேச்சை ஆரம்பிச்சாலும்.. நம்மாளு எலிஜா ஸ்டெர்ன் இலக்கியமா பேசி அந்தபுள்ள ஆசையில ஒரு லோடு மண்ணை கொட்டிடுறாரு..!
காட்டான் கூட்டம் - நல்லாருக்கு பாஸ்
//நம்மாளு எலிஜா ஸ்டெர்ன் இலக்கியமா பேசி அந்தபுள்ள ஆசையில ஒரு லோடு மண்ணை கொட்டிடுறாரு..!//
Deleteதானுண்டு, தன கழுதையுண்டுன்னு நிம்மதியா குப்பை கொட்டி வரும் மனுஷன், அவ்ளோ சீக்கிரத்தில் சிக்கிடுவாரா - என்ன ?
ஓஹோ.. இப்போதான் புரியுது சார்..
Deleteகழுதைக்கு பக்கத்துல உக்காந்து நம்மாளு நிறைய படிச்சிருப்பாரு போல.. அந்தக் கழுதையும் குடும்பத்துல சேராமா இந்தாளு கூடவே சுத்திகிட்டு இருக்கு.. ஒருவேளை அதுவும் அதோட பொஞ்சாதிகிட்ட இலக்கியம் பேசி விரட்டிவிட்டிருக்குமோ என்னமோ.!?
கண்ணா ROFL ...
Deleteகாட்டான் கூட்டம் படிச்சி முடிச்சதும் குருநாயர் ஈரோடு விஜயின் மனக்குரல் (டமில்ல மைண்ட் வாய்ஸ்)...
Deleteநாமளும்தான் வீட்டுல காமிக்ஸ் பேசிக்கிட்டே இருக்கோம்.. ஒண்ணும் பிரயோஜனமில்லையே.. ஒருவேளை காமிக்ஸ் இலக்கியத்துல சேராதோ.!?
// 2023 ஆகஸ்டு ஈரோடு புத்தக திருவிழாவிற்கு அந்த ஹேர்ஸ்டைலில் வரலாமின்னு நானும் மஹியும் பின்னே விஜியும் முடியெடுத்து //
Deleteஅது எல்லாம் மண்டையில் முடி இருக்கிறவங்க செய்யலாம் கண்ணா :-)
///அது எல்லாம் மண்டையில் முடி இருக்கிறவங்க செய்யலாம் கண்ணா :-)///
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
அது எல்லாம் மண்டையில் முடி இருக்கிறவங்க செய்யலாம் கண்ணா :-)
Delete#######
உண்மை உண்மை உண்மை உண்மையை தவிர வேறொன்றுமில்லை..:-)
// 2023 ஆகஸ்டு ஈரோடு புத்தக திருவிழாவிற்கு அந்த ஹேர்ஸ்டைலில் வரலாமின்னு நானும் மஹியும் பின்னே விஜியும் முடியெடுத்து //
Delete----அந்த ஹேர் ஸ்டைலு செமயா இருக்கு மாம்ஸ்...!! அப்படியே போயிடலாம்...
கொரோனா கொரோனா னு ஒவ்வொரு விழாவா தள்ளிப்போக போக உடைகூட அதேபோல ஷோல்டர் ஸ்ரிப்போட்ட பேண்ட்டுதான் அணிய இயலும் போலயே...
புதுசா "ஓமைக்கிறான், சமைக்கிறான்" னு எதையோ கிளப்பிட்டானுக... 2022லயாவது வுடுவாங்களா விழாவிக்குனு பீதியா இருக்கு...!!!
எல்லோரும் ஒருக்கா ஜோரா கைதட்டுங்கோ..
ReplyDeleteஇளம் தல யின் (அப்பாடா.. இனிமே தைரியமா சொல்லலாம்) திக்கெட்டும் பகைவர்களை சந்திக்க கிளம்புகிறேன்..!
ஹைய்யோ..
ஆயிரம் சொல்லுங்க.. (ஆயிரம் னு சொல்லி மொக்கை போட்டிங்க.. நறநநற..)
குண்ண்ண்ண்டா ஒரு டெக்ஸ் புக்கை பாக்குறச்சே பிறக்குற உற்சாகம் இருக்கே... அது வேறெங்கேயுமே கிடைக்கிறதேயில்லை.!
பெட்டி பார்னோவ்ஸ்கி புக்கிலே கூட ?
Deleteஹிஹி...
Deleteஅதுவந்து..
Deleteகுண்ண்ண்ண்டா ஒரு டெக்ஸ் புக்கை பாக்குறச்சே பிறக்குற உற்சாகம் இருக்கே... அது வேறெங்கேயுமே கிடைக்கிறதேயில்லை.!
#####
உண்மை உண்மை உண்மை
உண்மையை தவிர வேறொன்றுமில்லை...:-)
Edi Sir.. காரம் சீக்கிரமா சாப்பிட்டா BP எகிறுடும்னு கார லட்டுஸ் லேட்டா தர நினைக்கிறாரோ என்னவோ?..🤔🤔
ReplyDelete"பட்ஜெட் எகிறிப்புடுச்சி" என்ற விசனங்கள் இப்போவே ஒலித்து வருகின்றன சார் ! இதில் நான் மேற்கொண்டு பட்டியலிட்டு கடுப்பைக் கூட்டிடுவானேன் ?
Deleteசார் சாப்பாடு என்பது அவரவர் வயிற்றுப் பசிக்காக மாறும்தானே
Delete//"பட்ஜெட் எகிறிப்புடுச்சி" என்ற விசனங்கள் இப்போவே ஒலித்து வருகின்றன சார் ! இதில் நான் மேற்கொண்டு பட்டியலிட்டு கடுப்பைக் கூட்டிடுவானேன் ?//
Deleteநீங்கள் கொடுத்த 3 லட்டுகளும் பட்ஜெட்டில் கொண்டு வரக்கூடாத நினைவுகளின் மீட்சி சார்... காரமும் சேராது போனால் சுகம் பெறாது எங்கள் ருசி... வருடம் முழுவதும் எல்லா புக்ஸ்ம் ஸ்டாக் அவுட் ஆகிடாமல் கிடைக்குமாறு மட்டும் வழிவகை செய்யுங்கள்... அது போதும், மேற்கொண்டு பார்த்துக்கலாம்...
கார லட்டு என்னவோ என்ற சஸ்பென்ஸ் தயவு செய்து reveal பண்ணுங்க சார்..
*** காட்டான் கூட்டம்***
ReplyDelete'வழியனுப்ப வந்தவன' கதை என்னை அவ்வளவாக ஈர்க்காததால், ஒரு வித தயக்கத்துடனேயே படிக்க அமர்ந்தேன்.
புத்தகப் பைத்தியமான ஸ்டெர்ன் புத்தகம் வாங்க கேன்ஸஸ் நகரில் காலடி வைத்ததில் இருந்து ஆரம்பமாகும் ரகளை, கடைசிப் பக்கத்தில் அவர் புத்தகக் கடைக்கு என்ட்ரி ஆகும் வரை பக்கத்துக்கு பக்கம் உச்சமாகிறது.
கழுதைக்கு பெனிமோர் என்று தனக்குப் பிடித்த எழுத்தாளரின் பெயரை வைக்கும் அளவுக்கு வாசிப்பை நேசிப்பவர் நம் ஹீரோ.
தன் நண்பனான பெர்கஸைே கேன்ஸஸ் நகரில் சந்திக்க, அவரால், தன் பணம், தன் பெனிமோர், தன் ஷூ என சகலததையும் இழக்கிறார். தன் முன்னாள மனைவி ஜீன்னை சலூனில சந்திக்கும் ஸ்டெர்ன், அவர் மூலம் பெர்கஸ்ஸை சந்தித்து விக்ரமாதித்தன் கணக்காக தான் இழந்தவைகளை மீட்க நடக்கும் முயற்சியில் அரங்கேறும் அலப்பறைகளே கதை.
வட்டிக் கடைக்கார ஷைலக்கை ஷேக்ஸ்பியரின் ஷைலக்குடன் பொருத்திப பார்ப்பது நல்ல தொழில ரீதியிலான கம்பேரிஸன்.
கதையை பக்கத்துக்கு பக்கம் ரணகளப்படுத்தி சுவாரஸ்யமாக்குவது மேகி ஓ பிரையன்தான். என்ன ஒரு டெரர்ரான பெண்மணி. காமக்கெரடுரான்னு கத்திக்கொண்டே அவர் துப்பாக்கியுடன் ஹீரோவை துரத்தும் காட்சிகள் ரகளையின் உச்சம்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
வசனங்கள் எல்லாமே ஆசிரியரால் ரசித்து ரசனையுடன் எழுதப்பட்டுள்ளன.
சில துளிகள்...
" நீ மாறவே இல்லடா. முடி தான் டாட்டா காட்டிடுச்சு போல."
" நான் அதுக்கு டாட்டா சொல்லல..
அதுதான எனக்கு டாட்டா சொல்லிடுச்சி."
" என்ன வேலை பாக்குறீங்க"
"வெட்டியான் வேலை. திருப்தி இல்லேன்னு வாடிக்கையாளர் புகார் சொல்றது இந்த தொழில்லே இல்ல"
இப்படி இன்னும் நிறைய.
திருப்தியான புத்தப் பிரிய வெட்டியான்,
தனக்கான அடுத்த ஸ்லாட்டை உறுதிசெய்கிறார்.
கதைக்கு 'ஒத்த ஷு'ன்னும் பேர் வைக்கலாம்.
" நீ மாறவே இல்லடா. முடி தான் டாட்டா காட்டிடுச்சு போல."
Delete" நான் அதுக்கு டாட்டா சொல்லல..
அதுதான எனக்கு டாட்டா சொல்லிடுச்சி."
😂😂😂😂😂
அருமையான விமர்சனம் நண்பரே...:-)
Delete"முடிக்கு டாட்டா" காட்டும் வரிகளை நான் எழுதாமல் விட்டிருந்தால் தானே சார் அதிசயமே !! :-))
Deleteஅந்தப் பெண்மணியின் கோப முகம்...நம்மையும் கோவமுறச் செய்தே
Deleteடியர் எடி ஒரு சின்ன சந்தேகம் ..
ReplyDeleteஇ.கை.மாயாவியின் அட்டைபடத்தில் பார்க்கும் போது ஏன் இடது கையில் வருகிறார் அன்பின் எடி ...
Delete// இ.கை.மாயாவியின் அட்டைபடத்தில் பார்க்கும் போது ஏன் இடது கையில் வருகிறார் //
Deleteஎன்னா பார்வை. எப்படி இதனை எல்லாம் ஞாபகத்தில் வைத்து சரியாக கண்டுபிடித்தீங்க. :-)
கவிஞர் பதில் போட்ருக்கார் பாருங்கோ கொஞ்சம் கீழே !
Deleteஅருமையான பதிவு. புத்தகங்கள் எதுவும் இன்னும் முழுமையாக படிக்க நேரம் கிடைக்கவில்லை. வேலை அதிகம், புதிய பிராஜெக்ட் மற்றும் புதிய மேனேஜ்மென்ட் என்பதால் வேலை தவிர பிற விஷயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை கடந்த சில வாரங்களாக.
ReplyDeleteஇன்றிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்கு விருதுநகரில் டேரா, உறவினர் வீட்டில் விஷேசம்.. புத்தகங்கள் கையோடு எடுத்து வந்துள்ளேன், அடுத்த இரண்டு நாட்களில் டெக்ஸ் தவிர பிற கதைகளை படித்து முடிக்க திட்டம் பார்க்கலாம்.
கோல்டன் ஹீரோ ஸ்பெஷல் - அட்டைப்படம் முதல் உட்பக்க டீசர் வரை பக்கா மாஸ். ஸ்பைடர் மற்றும் மாயாவின் சித்திரங்கள் புதிய விதத்தில் அட்டகாசமாக வந்து உள்ளது. செஸ்டன் கதை இதற்கு முன்னர் படித்ததாக ஞாபகம் இல்லை, வரட்டும் படித்து விடுவோம்.
ReplyDeleteகுறிப்பாக மாயாவியின் சித்திரங்கள் amazing ரகம்.
Deleteஆம்...:-)
Deleteஏற்கனவே மொத கல்யாணத்தால வெட்டியானாத் திரியுறமனுசன் உசாராகி எஸ்கேப் ஆயிடறாரு. இருவருக்குமான உரையாடல்கள் ரசிக்கும்படிஉள்ளன. திரும்பத்திரும்ப படிச்சுக்கிட்டேருக்கிறேன். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஉஷாராகி விட்ட வெட்டியானைப் பார்த்து லைட்டா பொறாமையோ சார் ?
Delete"நீ சான் பிரான்சிஸ்கோ போய்க்கோ இல்லே சாயல்குடிக்குப் போய்க்கோ ! நீ ஆல்பாவைக் கூட்டிட்டு வா ; இல்லே தீட்டாவைக் கூட்டிட்டு வா !! நீ ஹார்ட்கவர் போட்டுக்கோ ; இல்லே ப்ரவுண்கவர் போட்டுக்கோ !! ஆனாக்கா நாங்க வர்றச்சே கொயந்தைப் புள்ளீங்களை ஓரமா ஒதுங்கி நின்னு விளையாடச் சொல்லு தம்பி !!" என்று சொல்வது போல மிரட்டல் காட்டும் நமது கிளாசிக் நாயகர்களின் இதழுக்காக அட்டைப்படம் இதுவே folks !! மாயாவியின் அந்த இரும்புக்கரமும், நம்ம சிலந்தியாரும் - ஒரிஜினல் ஓவியரின் கைவண்ணத்தில் தெறிக்க விடுவதாக எனக்குத் தோன்றியது ! இருவருமே தலைகாட்டவுள்ளது சிற்சிறு சாகசங்களில் மட்டுமே என்றாலும் - ஒரு மைல்கல் தருணத்தில் அவர்களது பங்களிப்பும் இருக்குமென்ற மகிழ்வு பெரிதல்லவா ? அதிலும் "குற்றச் சக்கரவர்த்தி" கலரில் ரகளை செய்கிறார் !! பாருங்களேன் :
ReplyDeleteமகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி... எங்கே ஓரமாக போனாலும் இரும்புக்கையாரும், தானைத்தலைவனும் "நாங்க இன்னும் பார்ம்ல தான்பா இருக்கோம் எங்கே நழுவ பார்க்கிறே" ன்னு சுண்டி இழுக்கின்றனர். வேறேதும் தேவை இல்லை வருஷம்தோறும், இப்படி ஏதாவது சித்திரக்கதையாகவே, சிறுநாவலாகவோ, ஏன் வாசகர் ஸ்பாட் லைட்டிலாவது எங்கள் பால்யத்து தோஸ்துக்களை கண்களில் காட்டுங்க சார்.
அட்டைப்பட சித்திரம் அல்டிமேட்டாக, அமர்க்களமாக, அட்டகாசமாக ஜொலிக்கிறது...ஒரு சிறிய வேண்டுகோள், அட்டையில் ஸ்பைடரை முகம் ரொம்பவும் தான் விகாரமாக ஒரிஜினலில் உள்ளது... சிலந்தியானை கொஞ்சம் பாந்தமாக மாற்றக்கூடுமானால் மாற்றும்படி அன்பாக ஒரு வேண்டுகோளை வைக்கிறேன் சார். நன்றிகள் Sir உங்களுக்கு.
//அட்டையில் ஸ்பைடரை முகம் ரொம்பவும் தான் விகாரமாக ஒரிஜினலில் உள்ளது... சிலந்தியானை கொஞ்சம் பாந்தமாக மாற்றக்கூடுமானால் மாற்றும்படி//
Deleteஊஹூம்...வாய்ப்பே இல்லை நண்பரே ; இது அவர்களது பிரசித்தி பெற்ற ஓவியரின் custom made சித்திரம் ; ஒரு இம்மி கூட மாற்றிடச் சம்மதிக்க மாட்டார்கள் !
So sad...
Deleteடியர் எடி,
ReplyDeleteஒருவழியாக நமது கிளாசிக் நாகர்கள் களம் கண்ட சமீபத்திய இதழை, தமிழில் கொண்டு வந்ததற்கு நன்றிகள் பல. ஏற்கனவே முத்து 1 ம் இதழ் மறுபதிப்பு காண போகும் பொன்விழா ஆண்டில், இப்படி நவீன கதை மற்றும் ஓவியமைப்பு பாணியில் பால்ய நாயகர்களை சந்திப்பதில் ஏக மகிழ்ச்சிதான்.
சென்னை புத்தக கண்காட்சி தேதி கூட அறிவிப்பு வரபோவதாக பபாஸியிடம் இருந்து தகவல்... களை கட்டட்டும் புத்தாண்டு தோரணம்.
நாளை இம்மாத கதைகளை படித்துவிட்டு கருத்து பதிய வருகிறேன். அதற்குள் லோட்மோர் ஆகாது இருக்கனும்... :)
//களை கட்டட்டும் புத்தாண்டு தோரணம்.//
Deleteஎல்லாம் மேலுள்ளவரின் கைகளில் சார் !! Fingers crossed !
பாத்துத்தானே இவ்ளோவும்...அதகள ஆண்டு
DeleteMy Daughter has read This Month Tex book. Her comment was it was really awesome and interesting story line. Drawing are not that much attractive. Had it been in Hard cover on considering size and pages of this book, it would have been Fantastic.
ReplyDelete// My Daughter has read This Month Tex book //
DeleteWow. Good to hear this.
சார், ஹார்ட்கவர் என்பது 300 ரூபாய் ப்ளஸ் பட்ஜெட்களுக்கு மட்டுமே consideration க்கு வந்திடும். தொட்டதுக்கெல்லாம் சாத்தியமாகிடாது !
Deleteசெலவினம் ஒருபக்கம் ; கூரியர் கட்டணங்களில் எகிறும் தொகைகள் இன்னொரு பக்கம் & இந்த பைண்டிங் முறைக்கென தேவைப்படும் அவகாசங்கள் இன்னொரு பக்கமென இங்கே நிலவரம் அத்தனை சுலபமே கிடையாது !
//My Daughter has read This Month Tex book.//
DeleteSuperrrr !!
மெயில் போட்டு இருந்தேன் . பாதிங்கள்னு தெரியல .
ReplyDeleteCurrently website does not display information like number of pages , black and white or color information.
Also it is difficult to add the books. Each time it goes to check out page and says continue shopping .
Please see regal publishers site for easy access
https://regalpublishers.in/
சரி பண்ணிடுவோம் சார் !
Deleteநன்றி சார்
Deleteநானும் வந்துட்டேன் அனைவருக்கும் வணக்கங்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteநான் தாங்க உங்க சின்னத்தம்பி
Deleteபாட்டு பாடுவிங்களா?
Deleteகை வசம் பாட்டு எதுவும் இல்லேன்னா நம்ம ஸ்டீல் கிட்ட கேளுங்க.
Deleteகீழ் இருக்கு நண்பரே
Deleteகோ.ஹீ.ஸ்பெ" இதழில் முத்துக் காமிக்ஸின் பழைய லோகோவே உள்ளதே! அடுத்தாண்டு வரும் அனைத்து முத்துக் காமிக்ஸ் இதழ்களில் சமீபத்தில் தேர்வான பொன் விழா ஆண்டு புதிய லோகோவையே இடம் பெறச் செய்யலாமே....!
ReplyDeleteபழைய ஹீரோக்களின் ஸ்பெஷலில் பழைய லோகோவே போதுமென்று நம்மாட்கள் நினைத்திருப்பார்கள் சார் ; மாற்றி விடுவோம் !
Deleteசார் செஸ்டன் பிளேக் கலர் ஆர்ட் அட்காசமாக இருக்கிறது. கலரில் பெரிய கதைகள் இருந்தால் தொடர்ந்து கொண்டு வாருங்கள் சார்.
ReplyDeleteசார் ஸ்டர்ன் மொத்தம் எத்தனை கதைகள் தொடர்ந்து புது கதைகள் உருவாகி வருகின்றனவா?
தாத்தாக்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
செக்ஸ்டன் பிளேக் கதைகளை மேற்கொண்டு அவர்கள் கையில் எடுக்கும் போது நாமும் துண்டை விரித்து விடுவோம் கிருஷ்ணா !
Deleteஸ்டெர்ன் இதுவரைக்கும் 4 ஆல்பங்கள் & இன்னும் கொஞ்ச காலமாவது தொடர்ந்திடும் !
வெட்டியானும்....தாத்தாவும் பதிமூன்றாம் தொடரட்டும்
Deleteவணக்கம் நண்பர்களே.......
ReplyDeleteகோல்டன் ஹீரோ ஸ்பெசல் கொடுத்து அசத்திட்டீங்க ஐயா! மிக்க நன்றி!
ReplyDeleteஒரு வேண்டுகோள் - ஒரிஜினல் அடடைப்படத்தை பயன்டுத்தியதும் அற்புதமே என்றாலும், அதில் உள்ள இரும்புக்கை இடது கையாக உள்ளதே!
இரும்புக்கை மாயாவி வலது கையில் தான் இரும்புக்கை இருக்கும். இங்கே இடது கையை வரைந்திருப்பதற்கு ஏதாவது காரணம் உள்ளதா?
தவறென்றால், அதை சரி செய்ய வாய்ப்பு இருக்குமா?!
// இரும்புக்கை மாயாவி வலது கையில் தான் இரும்புக்கை இருக்கும். இங்கே இடது கையை வரைந்திருப்பதற்கு ஏதாவது காரணம் உள்ளதா? //
Deleteஎப்படி எல்லாம் நோட் பண்ணுறீங்க. நீங்கள் காமிக்ஸ் ரசிகன்யா. :-)
கண்ணாடிய நோக்கி வரூது நண்பரே
Deleteபடைத்தவர்களின் படைப்பினில் பிழையிராது சார் ; கீழே கவிஞரே பதிலிட்டுள்ளார் பாருங்களேன் !
Delete//கண்ணாடிய நோக்கி வரூது நண்பரே//
Deleteஉங்கள் புனைப்பேர் உங்களுக்கு பொருத்தமானது பொன்ராஜ் தோழரே...
// கண்ணாடிய நோக்கி வரூது நண்பரே //
Deleteகூரிய பார்வைல உனக்கு!
ஆங்கில புத்தகத்தில் தவறாக வந்த மாயாவி யாரின் இடது கையை நாம் தமிழில் வலது கையாக சரி செய்யலாமே சார்..
ReplyDeleteஅது கண்ணாடி இமேஜாம் நண்பரே
DeleteEdi Sir.. திக்கெட்டும் பகைவர்கள் ஒரே மூச்சில் இப்போதுதான் படித்து முடித்தேன்.👍கதை ச்சும்மா பர..பர வென பறக்கிறது.🤓
ReplyDeleteஒரு சின்ன சந்தேகம், ஏன் டெக்ஸை வில்லன் குரூப்ஸ் எல்லோரும் *கிரிங்கோ* என கூப்பிடுகிறார்கள்.🤔🤔
/// ஏன் டெக்ஸை வில்லன் குரூப்ஸ் எல்லோரும் *கிரிங்கோ* என கூப்பிடுகிறார்கள்.🤔///
Deleteஅமெரிக்கர்களை மெக்சிகன்ஸ் (மெஹிஹன்ஸ்) "கிரிங்கோஸ்"னுதான் குறிப்பிடுவாங்க ஜி.!
// "கிரிங்கோஸ்"னுதான் குறிப்பிடுவாங்க ஜி.! //
Deleteசரிங்கோஸ் :-)
ஸ்பானிஷ் மொழி பேசும் மண்ணினில், அம்மொழி பேசாதோரை ; குறிப்பாக அமெரிக்கர்களை "க்ரிங்கோ" என்று விழிப்பது வழக்கம் சார் ! வடக்கில் நம்மை "மதராஸி" என்று சொல்கிறார் போல !
Deleteக்ரிங்கோ என்றால் சட்டத்தால் தேடப்படும் ஒரு குற்றவாளி என்று அர்த்தமாம்..
Delete*கிரிங்கோ*- என்பதற்கு விளக்கமளித்த Edi Sir, KoK,Thuthukudi Bharani & Rummy Xiii ஆகியோருக்கு நன்றிகள்.
Delete78வது
ReplyDeleteசார் அட்டைன்னா இதான் அட்டை...பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு...இது வரை வந்த எல்லா அட்டைகளையும் ஒத்திப் போய் விளையாடச் செய்யுது...குற்றவியல் சக்கரவர்த்தியாய் ஸ்பைடர் மீண்டு வந்துள்ளாரா...அருமை...செக்ஸ்டன் வண்ணம் வித்தியாச கலவையில் என் மேலும் தெறிக்குது ....பின்னட்டையும் அடி தூளு....இதோ வந்தாச்சு அட்டைப்படம் என்பதுகளின் ஸ்டைலில்...டாப்புக்கே டாப்
ReplyDeleteஸ்பைடர் கண்டு மாயாவிய மறந்தாச்...மாயாவியின் கரங்களிலே அம்சம் இதான்...இரு டாப் நாயகரயும் தாங்கி வருதே...ஆரஞ்சு வண்ண மிட்டாய் போலட்டை
Delete..வேறென்ன சார் வேணும்
ஒத்திப் போ ஒத்திப் போ
ReplyDeleteகொஞ்சம் ஓரமா ஒத்திப் போ
அட ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ
இந்த ஸ்பைடர் மாமா வண்டி வருது
ஓரம் போ தூரம் போ
சின்ன பாப்பாக்கள தாண்டி வருது
பார்த்துப் போ பார்த்துப் போ
இது யாரு தந்த புக்கு
சௌந்தரனார் தந்த புக்கு
குழு : இது யாரு தந்த புக்கு
சௌந்தரனார் தந்த புக்கு
ஆ…ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ
ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ
ஆல்பாவ பிடிச்சவங்க
மாயாவிய வெறிக்க
டேங்கோவ பாத்தவங்க
செக்ஸ்டனுக்கு வழி குடுக்க
ஒற்றைநொடில போறவங்க
ஸ்பைடரை வியக்க
எஃப்எஃப்ஃஎஸ்3 ஒன்னை விட
மூனு ஸ்பீடு எடுக்க
விசயன் கண்ட நாயகர்களுக்கு
ஆளுக்காளு டிமாண்டுதான்
ரசிச்சு ரசிச்சு இளசாச்சு
அண்ணாச்சி மனசுதான்
எல்லாரும் ஒண்ணா வந்தா
இப்படித்தான் ஆகுமையா
ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ
ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ
இந்த ஸ்பைடர் மாமா வண்டி வருது
ஓரம் போ தூரம் போ
சின்ன பாப்பாக்கள தாண்டி வருது
பார்த்துப் போ பார்த்துப் போ
இது யாரு தந்த புக்கு
சௌந்தரனார் தந்த புக்கு
குழு : இது யாரு தந்த புக்கு
சௌந்தரனார் தந்த புக்கு
ஸ்பைடர் கதைக எதுக்கிருக்கு
புரிஞ்சுக்கணும் பாப்பா
மாயாவி உடம்பு மறஞ்சிருக்கு
முன்னால நீ போப்பா
ஆல்பா டேங்கோ கதைக கூட
இது இது போட்டி போடுது
என்பதிலே இருக்கும்
சனங்க இதயம் இதயும் கேக்குது
பிடிச்சத எப்போதும் சந்தாவுல வாங்கிக்க நீ
சந்தாவும் கூடனும்னுதான்
புரிஞ்சிக்கனும் ராசா நீ
நாளைக்குள்ள ஹீரோக்கள
இன்னிக்கு தாங்கிப் போகும் வண்டி
ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ
அட ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ
இந்த ஸ்பைடர் மாமா வண்டி வருது
ஓரம் போ தூரம் போ
சின்ன பாப்பாக்கள தாண்டி வருது
பார்த்துப் போ பார்த்துப் போ
இது யாரு தந்த புக்கு
சௌந்தரனார் தந்த புக்கு
குழு : இது யாரு தந்த புக்கு
ஆண் : ஹான்
குழு : சௌந்தரனார் தந்த புக்கு
ஆ…ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ
அட ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ
அசத்திட்டீங்க Steelu 😁😁😁😁
ReplyDeleteகடுகு சிறுத்தாலும் காரம் கொறையாது.
ReplyDeleteஆட்டோபாம் வெடி இந்த ஸ்பெஷல் இதழ்.
வாழ்த்துக்கள்.
(தமிழ் சாக் கு, ஜெகன் ஜீய்யீ,போஸ்டு வந்துருச்சுப்பா. குரூப்பில் போட்டு கதறவும்)
அட்டை படம் நன்று. கலரில் வலை மன்னன் அசத்தலாக மிரட்டுகிறார். செக்ஸ்டன் பிளேக் உட்பக்க பிரீவியூ -அருமை . இரும்பு கரத்தார் புதுமாதிரி சித்திரங்களில் அசத்துகிறார். நண்பர் ராட்ஜா பதிவிட்டதுமே தாத்தாஸ் இன் youtube இனை பார்த்து விட்டேன். அருமையாக உள்ளது. எப்படியும் படம் ரிலீஸ்
ReplyDeleteஆனதும் படம் பார்த்து விட்டுதான் மறுவேலை.
போட்டுத் தாக்குங்க சார் !
Deleteஅடேங்கப்பா கோல்டன் ஹீரோஸ் அட்டைப்படம் சும்மா அள்ளுகிறது சார்...செம மாஸாக உள்ளது...அட்டைப்படத்திற்கே இந்த இதழ் அட்டகாச வெற்றியை பெற போவது உறுதி...:-)
ReplyDeleteEdi Sir.. அந்தியின் அழகே 2ம் பாகம் சீக்கிரமாகவே கொண்டாங்க.
ReplyDeleteஅடுத்த வருடம் இன்னும் ஒரு பாகம் இருக்கு சார்.
Deleteஅடடே....தாத்தாக்களும் நம்ம "எதிர்பார்க்கப்படும் ஈரோ" லிஸ்டில் சேர்ந்துப்புட்டாங்களே !!
Deleteசூப்பர் ...
DeleteEdi Sir.. எதிர்பார்க்கபடும் ஹீரோஸ் லிஸ்ட்ல நம்ப *காட்டானை*யும் சேர்த்துக்குங்க.
Deleteவந்திட்டேன் சார் 🙏🏼.
ReplyDelete.
///மாயாவியின் அந்த இரும்புக்கரமும், நம்ம சிலந்தியாரும் - ஒரிஜினல் ஓவியரின் கைவண்ணத்தில் தெறிக்க விடுவதாக எனக்குத் தோன்றியது ! ///
ReplyDeleteஉண்மைதான் சார்! அட்டகாசம்!! உண்மையான மிரட்டல்!!
ஹெர்லக் ஷோம்ஸ்
ReplyDeleteமந்திர தந்திரங்களில் சிறந்த ஒருவன் கொள்ளையடித்து விட்டு போலீசார் கண்களில் விரலை விட்டு ஆட்டும் பக்கா காமெடி மாஸ் கதை. நானா சாகிப்பை போலீஸ் ஒவ்வொரு முறை நெருங்கும் போதும் நடக்கும் தப்பிக்க பயன்படுத்தும் மந்திரம் ஒருபக்கம் ஆச்சரிய பட செய்தால் அதன் விளைவு நம்மை கண்டிப்பாக சிரிக்க வைக்கும் ரகம்.
கடந்த கதையில் ஷோம்ஸ் மாறுவேடம் போடாத குறை இந்த கதை போக்கிவிட்டது, அதுவும் ஏணி வேஷம் செம.
ஒரு கட்டத்தில் இவனை எப்படி மடக்க போகிறார்கள் என கேள்வி மனதில் எழ ஆரம்பித்தது, அதுவே நானா சாகிப் கதாபாத்திரத்துக்கு கிடைத்த வெற்றி.
துடைப்பம் மற்றும் பூனை பற்றி வரும் அந்த காமெடி சீக்குவன்ஸ் டயலாக்குகள் சிரிப்பு ரகம்.
மனதிற்கு நிறைவான கதை, கண்டிப்பாக குழந்தைகளும் இந்த கதையை ரசிப்பார்கள்.
ஷோம்ஸ் உன்னை அடுத்து எப்பப்பா பார்ப்போம் :-)
குறை: ஆரம்பத்தில் ஒரு பேனலில் டயலாக் பலூன் மாறி இருந்தது.
Deleteஹோட்டல் அறை ரூம் மறைந்த பின்னர் 251, 23.. 24ம் எண் ரூம் மறைந்த நிலையில், இதில் 25, 23 என வரும் என நினைக்கிறேன்.
//ஷோம்ஸ் உன்னை அடுத்து எப்பப்பா பார்ப்போம் :-)//
Deleteநண்பரே,
பிணம் ஒன்று! கொலை எட்டு!! என்று விளம்பரப்படுத்திய ஹெர்லாக் ஷோம்ஸ் அறிமுகமான "வாரிசு வேட்டை" மறுபதிப்பு வெளிவருமானால் நம் மீண்டும் வண்ணத்தில் பார்க்கலாம். "எழுந்து வந்த எலும்புக்கூடு" ஏற்கனவே மறுபதிப்பு ஆயாச்சு.
//ஷோம்ஸ் உன்னை அடுத்து எப்பப்பா பார்ப்போம் :-)//
Deleteஒண்ணே ஒண்ணு...கண்ணே கண்ணு - என்று ஒரு 20 பக்க புதுக் கதை மட்டும் பாக்கியுள்ளது சார் ; ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம் !
போட்டுத்தாக்குங்கள் :-)
Delete///அந்த சிகப்பு டிரக் ; மாசமாயிருக்கும் பேத்தி ; கண்ணாடித் தாத்தா ; தோஸ்து தாத்தாஸ் என அட்சர சுத்த details பாருங்களேன் !!///
ReplyDeleteஇப்பவே அந்தப் படத்தைப் பார்க்கணும் போல இருக்குங்க சார்!
ஆங் புரியுது விஜய் உங்கள் ஆர்வம்:-)
Deleteஹிஹி! சமர்த்து!!
Delete// இது தான் நமது FFS புக் # 3 preview !! " //
ReplyDeleteகோல்டன் ஹீரோஸ் அசத்தறாங்க...
நினைவோ ஒரு பறவை - மீண்டும் XIII நினைவை அழிந்து அடுத்து என்னப்பா என கேள்வியோடு முடிந்த மிசைல் வேக ஆக்சன் கதை.
ReplyDeleteஇன்னுமொரு 10 மாதங்களில் அடுத்த பாகம் வரும் போது விடை தெரியும் சார் !
Deleteஅட்டகாசமாதானருக்கு...வந்துட்டு தொடரட்டுமே
DeleteVowwww ....ஸ்பைடர் வண்ணத்தில்....
ReplyDeleteதானைத் தலைவன் முழு வண்ணத்தில்...
ReplyDeleteநீ கலக்கு தல..
சார் பொம்மைகளின் பேரரசரும் வாராய் போல...இதுவும் கொலைப் படையா
ReplyDeleteஇல்லீங்க கவிஞரே !
Deleteஓகே சார்...வரட்டும்
Deleteபடித்த வரை:
ReplyDeleteஷெர்லக் ஷோம்ஸ் - ஓகேய்ஸ் ரகம்; இரண்டாம் கதைக்கும் தலைப்பு வைத்திருந்திருக்கலாம்.
XIII அதிரடி; அடுத்த பாகம் முன்பு போல U டர்ன் அடித்து விடுமோ என்ற பயமும்.
ஸ்டெய்ன்: தெறி ரகம்... வசனங்கள் பட்டையை கிளப்பின 👌👌👌
அடுத்த ஆண்டு சந்தா தவிர வரவுள்ள இதழ்களின் உத்தேச விலையை அறிவித்து விடலாமே சார்..இது வரை உறுதி செய்த புக்ஸ் வரையிலாவது பணப் பரிமாற்றம் செய்ய ஏதுவாக ...
ReplyDelete*2022 எவ்விதம் இருக்கவுள்ளது ?
Delete*ஒமிக்கிறான் வைரஸ் என்ன செய்யக் காத்துள்ளது ?
*சென்னைப் புத்தக விழா நடைபெறுமா ?
*நடைபெற்றால் நமக்கு இடம் கிடைக்குமா ?
*கிடைத்தால் வழக்கம் போலான வியாபாரம் நடக்குமா ?
*கோவை விழா ?
*ஈரோடு ?
*மதுரை ?
*நெய்வேலி ?
*திருப்பூர் ?
மேற்படிக் கேள்விகளுக்கான பதில்களில் தான் நீங்கள் கோரியுள்ளதன் பதிலும் உள்ளது சார் !
இந்த நொடியில், ஊப்பர்வாலாவைத் தாண்டி, ஊப்பர் உள்ள கேள்விகளுக்கான பதில்கள் யாருக்கும் தெரியாதெனும் போது, we'll take it one day at a time sir !
மிகவும் சரியே சார் 🙏
Deleteஎல்லாம் நல்லாருக்கும் சார்
DeleteEdi Sir.. 2022 ல ஒமிக்ரான நம்பிள் சமாளிக்ரான்.சென்னை புத்தகவிழா நடக்கும்.நம்ப ஸ்டால்ல சேல்ஸ் களை கட்டும்.அடுத்து ஈரோட்டுல bookfair போடறோம்.கலக்குறோம்.
Delete//அடுத்த ஆண்டு சந்தா தவிர வரவுள்ள இதழ்களின் உத்தேச விலையை அறிவித்து விடலாமே சார்..இது வரை உறுதி செய்த புக்ஸ் வரையிலாவது பணப் பரிமாற்றம் செய்ய ஏதுவாக//
ReplyDeleteYes, Sir. Kindly do so.
சார் 50 இலட்சப் பார்வைகளுக்கான சிறப்பிதழ் ???!!!
ReplyDeleteமில்லியன் கண்டான் காமிக் கொண்டான் சிறப்பிதழ்
Deleteஸ்டீல் பெயர் வெக்கறதில கில்லாடிதான் போங்க...
Deleteஅப்டின்னா என்னங்க ஜி..
Deleteசார் அண்டர்டேக்கர் நம்மை பிரம்மாண்டத்தில் அசத்தி ஆச்சரியப்படுத்தினால்...வெட்டியானோ விளிம்பு நிலை வாழ்க்கை காட்டி வசப்படுத்துறார்...இயல்பாய் காதல் இருந்தும் இல்லாமல் ஒருவித மோன நிலையில் நகருது கதை...காட்டான்கள் வாழும் உலகம் என விளிம்பு நிலையை சித்திரப் படுத்தினாலும் ....உண்மையா என கேள்வி கேக்க நினைக்காம நகர்த்துது இயல்பான வசனங்கள் அற்புத வண்ணங்கள்...நையாண்டிகள்...வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும் என்பதை சித்திரப் படுத்திக் காட்டி பார்த்தும் உணர வைப்பது படக்கதைகளே...லார்கோவின் வசீகரமும் கெத்தும் கட்டிப் போட்டது சரிதான் கச்சிதமான ஓவியங்களாவல் அதகள வர்ணங்களால்...நெடுநெடுவென வளந்த கருப்புடை கேசங்களை ஓரளவு இழந்த கீசலான ஓவியம் கொண்ட வெட்டியானும் ஈர்ப்பது ஆச்சரியமே...கடவுளின் படைப்பில் இக்கரைக்கு அக்கறை பச்சை என்பது உண்மை போலென ஏங்குவோம்...வசதியான பகட்டு வாழ்க்கை...ஏழ்மையிலும் அன்புமயமான வாழ்க்கை என தரிசிக்கிறோம் வாழ்ந்து பார்த்து லார்கோ வாயும்...வெட்டியானாயும்...நன்றிகள் எத்தனை கொட்டினாலும் போதாதே...ஆனாலும் இக்கதையை அளித்ததற்கு நன்றிகள் சார்...
ReplyDeleteஅருமையான விமர்சனம் ஸ்டீல்.
ReplyDeleteஇந்த முறை வெட்டியான் விமர்சனங்களின் நாயகனாகிறார், பாசிட்டிவ்வான .
ReplyDeleteஎன்னவென சொல்ல இயலா ஈர்ப்பு தாத்தாக்களிலும்...வெட்டியானிலும் நண்பரே
Deleteஅந்த ஈர்ப்புக்கு முக்கியமான காரணம் ஆசிரியரின் சரளமான எழுத்து நடையே. அதுவே நம்மை கதையோடு ஒன்றிப் போக வைக்கிறது.
ReplyDeleteஅதுவுந்தான் நண்பரே ஓவியங்களுக்கு வீரியம் பாய்ச்சி வட்டத்துக்கு மெருகூட்டுது
Deleteவண்ணத்துக்கு
Deleteஷோம்ஸ் //ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுண்ணு ஒரு 20 பக்க கதை ஒண்ணு மட்டும் பாக்கி இருக்கு சார்//லக்கியின் ஒரு சிறிய கார்ட்டூன் மறுபதிப்புடன் இதையும் இணைத்து வெளியிட்டுவிடுங்கள் சார் சீக்கிரமே. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteகாட்டான் கூட்டம்: கதைக்கு ஏற்ற பொருத்தமான தலைப்பு. கதையை படித்து புத்தகத்தை முடிய பின்னர் அட்டைபடத்தை பார்த்துக் கொண்டே இருந்தேன் முகத்தில் என்றும் இல்லாத அமைதி மனதில் ஒரு சந்தோசம், இதுவரை எந்த ஒரு காமிக்ஸ் கதையை படித்த பிறகு இதுபோன்ற உணர்வை எனக்கு கொடுத்தது இல்லை.
ReplyDeleteஆமா...கதய முடிச்ச பிறகு அட்டைப்பட ஈர்ப்பு கூடுது...
Deleteஎதையும் சமாளிக்கலாம்னு கதை நடத்தும் பாடம் கூட அந்த சந்தோசத்த தரலாம்
// எதையும் சமாளிக்கலாம்னு கதை நடத்தும் பாடம் கூட அந்த சந்தோசத்த தரலாம் //
Deleteஆமாம். எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு என்பது மற்றும் ஒரு காரணம்.
நினைவோ ஒரு பறவை மிகவும் நன்றாக இருந்தது ஒரு ஹாலிவுட் படம் பார்த்த திருப்தி 13 தேடல் தொடர்கிறது.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletehttp://lion-muthucomics.blogspot.com/2018/01/blog-post_14.html?m=1
ReplyDeleteஐயனின் தலைப் பொங்கள்...கொலைப் படை பொங்கள்
Deleteகாலை வணக்கம்.
ReplyDeleteஇன்னும் 23 நாட்களே உள்ளன. முத்து காமிக்ஸின் 50 ஆண்டு மைல்கல் தருணமிது. பொன்விழா இதழ்களைத் தரிசிக்க படிக்க ரசிக்க மனம் ஆவலாதி கொள்கிறது. சிறுவயதில் குண்டு புத்தகங்கள் மற்றும் மலர்கள் மீதிருந்த ஈர்ப்பு இன்றும் அப்படியே இருப்பது காமிக்ஸ் என்ற ஒன்றின் மீது மட்டுமே. ஜனவரி 1யை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன். ஆசிரியருக்கும் பணிச்சுமை அதிகமாக இருக்கும். வாழ்க காமிக்ஸ் காதல்.
பதிமூன்று : முடிவுறாத தேடல்
ReplyDelete2132-ல் பறந்த தோட்டா யாரைத் துளைக்குமோ என்ற கேள்விக்கு ஆரம்ப பக்கங்களிலேயே பதில் கிடைத்து விட்டது. இனிமேல் சஸ்பென்ஸுக்கு என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுவதற்குள்ளாகவே, முழு வீச்சில் எகிறி அடிக்கிறது ஜேஸனின் துரத்தல்...
இரண்டாம் சுற்றின் சூத்ரதாரியும், கைப்பாவையும் அழகியின் அதிகார போராட்டத்தில் களையப்படுவதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
ஒரு மனிதனுக்கு நினைவில்லை, தான் யாரென்று தெரியவில்லை... 20-25 வருட தேடலுக்குப் பிறகு அதைக் கண்டு கொள்கிறான். அந்த மனிதனுக்கு எது நினைவு வர வேண்டும், எது வரக்கூடாது என முடிவு செய்து அதை செயல்படுத்த முனைவது தேடலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறது. ஹாட்லைனில் சொல்லியுள்ளபடி, இந்த கதையில் வந்துள்ளது முடிவல்ல, முடிச்சு (மிகவும் இறுக்கமாக)...
ஹேப்பி கிறிஸ்துமஸ் என்று பிரெஸிடெண்டுக்கு ஜேஸன் சொல்வது, வாசகர்களைப் பார்த்து கையசைத்து சொல்வது போல இருந்தது செம டச். சரிதான் கதை முடிந்தது என்று புத்தகத்தை மூடி வைக்க போனால், 40 பக்கம் படித்த கதையில் அந்த கடைசி 2 பக்கங்களில் மறுபடியும் ட்விஸ்ட்!
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க!
Good review!
DeleteStern - Two Albums
ReplyDeleteவழியனுப்ப வந்தவன் + காட்டான் கூட்டம் - Wonderful Read - 18+ Only - அதிலும் ரசனையில் முதிர்ந்தோருக்கு உகந்தது. (மற்றவர்கள் பொம்மை பார்க்கலாம்).
மேற்சொன்ன இரண்டு ஆல்பம்களையும் ஒன்றாக படிக்க நேர்ந்தது. ஒரு ஆரவாரமற்ற ஊரில் வெட்டியானாக தொடக்கம் - அனுபவம் மூலம் சில விஷயங்களை அறியும் மதி கூர்மை - வெளியிட வேண்டிய இடத்தில் வீரம் என்று Strern கோடி நாட்டுகிறார் !
காட்டான் கூட்டத்தில் புத்தகங்களின் மேலுள்ள காதலால் அவர் சந்திக்கும் ஒரு mob episode அழகான சித்திரங்களுடன் கையாளப்பட்டுள்ளது.
ஒன்றும் புதிதான கதையோ கருவோ இல்லைதான் (Happens till date in big cities in various forms). It is the way it is sequenced.
Loved both the parts. Awesome sketches. எனக்கு இது Undertaker-ஐ விட இன்னும் பிடித்திருந்தது.
மதிப்பெண்கள் - 10/10
*** திக்கெட்டும் பகைவர்கள்***
ReplyDeleteஷப்பாடா... முதுகு பெண்டு நிமிர்ந்துவிட்டது, டெக்ஸ்ஸுடன் காடு, மலை, மேடு என குதிரையில் சுற்றி வந்து.
ஒன்றிரண்டு நாட்களாக, அதுவும் விட்டுவிட்டு, ப்ரேக் என்று பயணித்த எனக்கே இவ்வளவு வலி..இந்த மனுஷன் சளைக்காமல், எப்படித்தான் குதிரையில் சுற்றுகிறாரோ..அதுவும் 70 வருடங்களுக்கும் மேலாக.. உண்மையிலேயே இவர் சூப்பர்ஹீரோதான்.
சரி, கதைக்கு வருவோம்.
சர்ச்சில் புகுந்து கொள்ளையடிக்க முயலும் கும்பலை தனியொருவராக டெக்ஸ் வீழ்த்தும் ஆரம்பக்கட்டத்தில் தொடங்கி, அந்த கும்பலைச் சேர்ந்த பெட்ரோ, மைக்கேல் துணை வர,கமான்செரரோக்களால் கடத்தப்பட்ட ஜூலியையும், டேஷாவையும் மீட்க டெக்ஸ் மேற்கொள்ளும் சாகஸப் பயணமே கதை.
முதலில் செவ்விந்தியர்களிடம் இருந்து ஜூலியை மீட்டு, ஜிம்முடன் அனுப்பிய பின்பு, டேஷாவை மீட்க அவளைத் தேடி , டெக்ஸ்ஸின் பயணம் மறுபடியும் தொடர்கிறது. இறுதியில் கர்னல் ஓர்டெகாவிடம் , தங்கப் புதையலை அடைவதற்காக, சிக்கியிருக்கும் டேஷாவை மீட்க அவரது கோட்டைக்குள் நுழையும் டெக்ஸ் தன் நண்பர்களாலேயே அவரிடம் சிக்கிக்கொள்கிறார். இறுதியில் ஓர்டெகாவை, புதையல் ஆசைகாட்டி அலைக் கழித்து , கடைசியில் தன் நண்பன் ஜுவான் உதவியுடன் ஓர்டெகாவையும், அவரது ஆட்களையும் வீழ்த்தி, இறுதியில் டேஷாவையும் காப்பாற்றிவிடுகிறார்.
320 பக்கங்கள். துளி கூட விறுவிறுப்பு குறையாமல செல்கிறது. டெக்ஸ்ஸுடன் நாமும் எல்லா இடங்களுக்கும் பயணிக்கிறோம்.
சித்திரங்கள் சற்று , கீச்சலாக தெரிந்தாலும் ரசிக்கும்படி இருக்கின்றன.
கதைக்குத் தேவையான அளவிற்கே வசனங்கள் அமைந்திருக்கின்றன.
2021ம் வருடத்தை டெக்ஸ் சிறப்பாக முடித்து வைத்து விட்டார்.
சிறப்பான, விறுவிறுப்பான கதையை தந்த ஆசிரியருக்கு மனமுவந்த பாராட்டுகள்.
// ஷப்பாடா... முதுகு பெண்டு நிமிர்ந்துவிட்டது, டெக்ஸ்ஸுடன் காடு, மலை, மேடு என குதிரையில் சுற்றி வந்து. //
Deleteதவிட்டு ஒத்தடம் முதுகுக்கு கொடுங்க பத்து :-)
திக்கெட்டும் பகைவர்கள் படிக்கத் தொடங்கியிருக்கின்றேன். குண்டு இதழை கையில் ஏந்திப்படிப்பதே அலாதி சுகம் தான். வண்ணத்தில் வந்திருந்தால் இன்னும் செமையாக இருந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து ஏது ?!
ReplyDeleteEdi Sir.. திக்கெட்டும் பகைவர்கள்-முழு மூச்சில் படித்து முடித்துவிட்டேன். கதை ஆரம்பம் முதல் இறுதி வரை பர..பரவென குதிரை வேகத்தில் பறக்கிறது.Tex வழக்கம்போல் அதிரடி.. சரவெடி.
ReplyDeleteஎனது மதிப்பெண்கள் 10/10
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete/ தவிட்டு ஒத்தடம் முதுகுக்கு கொடுங்க பத்து ///
ReplyDeleteதவிடு வேணும்னு எங்க வீட்ல சொன்னேன். "அப்படியேவா, கரைச்சா"ன்னு கேக்கறாங்க
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது இதுதான் போல :-)
Delete