Powered By Blogger

Sunday, December 12, 2021

ஒரு எருதின் ஆண்டின் மீதான பார்வை !!

 நண்பர்களே,

வணக்கம். ரொம்ப காலத்துக்குப் பின்பாய் ஒரு ஞாயிறு காலையில் பதிவை டைப் செய்கிறேன் இன்றைக்கு ! மூன்று வாரங்களுக்கும் குறைச்சலான நாட்களே நடப்பாண்டினில் எஞ்சியிருக்க, ஆர்வமாய், நம்பிக்கையாய், 2022 க்கு நல்வரவு சொல்லிட உங்களைப் போலவே நாங்களும் காத்திருக்கின்றோம் !! And புத்தாண்டினை வாஞ்சையோடு எதிர்பார்த்திட, "ஜனவரி 6 தேதியினில் சென்னைப் புத்தக விழா துவங்கவுள்ளது !" என்ற தகவலும் ஒரு காரணியாக அமைந்திடுவதால், புனித மனிடோவிடம் கரம் கூப்புகிறோம் - ஸ்டால் கிடைத்து, விற்பனை சிறக்க வேண்டுமே என்று !! Fingers crossed big time !! 

இக்கடயோ பணிகள் சீராய் முன்னேறி வருவதை பராக்குப் பார்த்தபடிக்கே  நாட்களை கொஞ்சமே கொஞ்சமாய் லாத்தலாய்க் கழித்து வருகின்றேன் ! FFS புக் # 1 & 2 அச்சுப் பணிகள் நாளையோடு நிறைவுறுகின்றன !! இவை இரண்டும் தான் மெகா இதழ்கள் எனும் போது ஏழு கடல்களையும், ஏழு மலைகளையும் தாண்டி முடித்துவிட்ட பீலிங்கு !! And நாளையே "கோல்டன் ஹீரோஸ் ஸ்பெஷல்" இதழுமே அச்சாகி விடும் என்பதால் - எஞ்சியிருக்கப்போவது 16 பக்க "எலியப்பா" சிறு இதழ் மாத்திரமே ! அந்த இதழின் highlight - சீனியர் எழுதிடும் "அந்தியும் அழகே" பகுதி தான் & ஒரு மாதிரியாய் அதனையும் தேற்றியாச்சு எனும் போது - செவ்வாய்க்கிழமைக்குள் FFS பணிகளின் முழுமையும் அச்சு நிறைவுற்று, பைண்டிங் படலத்தினில் ஆழ்ந்திருப்போம் ! என்றென்றைக்கோ, எப்பப்போதோ துவங்கிய  பணிகளின் முழுமையும் ஒரு வழியாய் நிறைவுறுவதைப் பார்க்கும் போது, பெரியதொரு நிம்மதி பெருமூச்சோடு, சன்னமானதொரு ஏக்கப் பெருமூச்சும் வெளிப்படுகிறது ! பண்டிகைகளுக்கு இணையாக, அவை  சார்ந்த முஸ்தீபுகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்குமே நம் மனங்களில் ஜிலீரென்ற இடம் உண்டு தானே ? இனியொரு முறை இது போலொரு தருணம் வாய்க்க இன்னும் 13 வருஷங்கள் காத்திருக்கணுமே !!!  Bring on the LION 50 !!!!

And சந்தாக்களும், FFS முன்பதிவுகளும் செம சீராய் முன்னேறிய வண்ணமுள்ளன என்பது செம சந்தோஷ சேதி ! பைண்டிங் துவங்கிடவுள்ள இவ்வாரத்தின் பிற்பகுதியே உங்களின் போட்டோக்களை அனுப்பிட கடைசி வாய்ப்பாகிடும் folks ! So அதன் பின்னான சந்தாக்களுக்கு போட்டோ இணைக்கும் வாய்ப்பு கிட்டுவது கடினம். ஆனால் எப்படியும் இறுதி நிமிடத்தில் ரயிலில் தொற்றிக் கொள்வோரின் எண்ணிக்கையும் கொஞ்சம் இருக்கும் என்பதால், அவர்களின் பொருட்டு ஒரு ஐம்பது புக்ஸ்களை மட்டும் பைண்டிங் செய்திடாது, நிறுத்தி வைத்திட எண்ணியுள்ளேன் ! அவ்வித late சந்தாக்கள் கிட்டியான பின்னே, அவர்களின் போட்டோக்களும் கிட்டியான பின்னே, அந்த 50 பிரதிகளை ஜனவரியில் ஏதேனுமொரு தருணத்தில் பைண்ட் செய்து அனுப்பிட நினைத்துள்ளேன் ! ஆனால் அவை நிச்சயமாய் "இன்னிக்கு ஆர்டர் - நாளைக்கி புக்ஸ்" கதையாக இருக்க வாய்ப்பிராது ; will definitely take time !! ஆகையால் இவ்வாரத்துக்குள் சந்தாக்களோ, முன்பதிவுகளோ செய்திட நேரமெடுத்துக் கொண்டீர்களெனில், உங்கள் பாடும், எங்கள் பாடும் சுளுவாகிடும் ! ப்ளீஸ் guys !! 

ரைட்டு, இவ்வாரம் எதைப் பற்றி எழுதிடலாமென்று யோசிக்கும் போது - ஆண்டின் review காத்துள்ளது கைதூக்கி நிற்பது கண்ணில் படுகிறது ! சீன காலெண்டரின்படி 2021 எருதின் ஆண்டாம் !! So எருதினை ஆய்வோமா ?

டெக்னிகலாய் பார்த்தால் இம்முறை அமைந்திருப்பது ஒன்பது மாதங்களது சந்தாவே என்றாலும், இதழ்களின் எண்ணிக்கை கணிசம் என்பதால் - கண்முன்னே ஏகப்பட்ட புக்ஸ் அனுவகுப்பது போலொரு பிரமை !! And 2021-ல் வெளியாகியுள்ள இதழ்களின் பட்டியலைப் பார்க்கும் போது "கழுகு வேட்டை" வண்ண blockbuster இதழிலிருந்து துவங்கிய இந்தப் பயணத்தின் பெரும் பகுதி, full steam ல் ஓட்டமெடுத்திருப்பது புரிகிறது !! அவற்றை கொஞ்சம் ரகம் பிரித்துப் பார்த்தால் - கீழ்க்கண்ட சுவாரஸ்ய data கிட்டுகிறது :

  • டெக்ஸ் ஆல்பங்கள்  - 7 + 1 = 8 (அந்த + 1 - "சிகப்பாய் ஒரு சிலுவை" ஆன்லைன் Bookfair ஸ்பெஷல்)
  • கார்ட்டூன் ஆல்பம்ஸ் - 7 ( லக்கி லூக் - 2 ; சிக் பில் -1 ; மேக் & ஜாக் - 1 ; ப்ளூ கோட்ஸ் -1 ; ஹெர்லாக் ஷோம்ஸ் -1  ; மீசைக்கார கிளிப்டன் -1 )
  • கி.நா.கள் - 4 +1 = 5 (அந்த +1 - "சித்திரமும் கொலைப்பழக்கம் "!!)
  • ஆக்ஷன் / டிடெக்டிவ் ஆல்பம்ஸ் - 5 (SODA ; தோர்கல் ; ரிப்போர்ட்டர் ஜானி ; ஜேம்ஸ் பாண்ட் & மாடஸ்டி கூட்டணி ; XIII )
  • கௌபாய் ஆல்பம்ஸ் - 5 (டெட்வுட் டிக் ; ட்யுராங்கோ ; ட்ரெண்ட் ; ட்யூக் & ஜெரோனிமோ)
  • Others - 1 (மாயாவி - கொரில்லா சாம்ராஜ்யம்)

ஆக மொத்தம் : 30 இதழ்கள் (சிகப்பாய் ஒரு சிலுவை சேர்த்தால் 31)

இந்த stats பார்க்கும் போது சுவாரஸ்யமாகவுள்ளது becos :

😎இம்முறை - டெக்ஸுக்கு இணையான எண்ணிக்கையினில் கார்ட்டூன்களும் இடம் பிடித்துள்ளன ! இடம்பிடித்துள்ளது மட்டுமல்லாது - அவை சாதிக்கவும் செய்துள்ளன ! In fact , மீசைக்காரர் கிளிப்டன் நீங்கலான பாக்கி ஆறு கார்ட்டூன் இதழ்களுமே நிறைவாய் ஸ்கோர் செய்துள்ளன ! 

😎'தல' டெக்ஸ் ஓவர்கில் ; அதிகம் ; சாஸ்தி ; என்ற ரீதியிலான விசனங்களுக்கு பின்புலன்களே நஹி என்பதும் புரிகிறது ! ஒன்பது மாத சந்தாவினில் அவர் பிடித்துள்ள இடம் 7 மட்டுமே ! விற்பனையில் பாக்கி அத்தனை பேரும் ஜட்கா வண்டிகளில் தக்கி முக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், பென்ஸ் காரில் சொய்ங்ங்ங்க்க்க்க் என்று முன்னேறிப் போகும் நாயகருக்கு இந்த வாய்ப்புகள் கூடத் தராது போனெனெனில் என்னை மிஞ்சிய பேமானி எடிட்டரும் இருக்க முடியாது, என்னை மிஞ்சிய முட்டாள் பதிப்பாளரும் இருக்க முடியாது !  

😎நமது ஆக்ஷன் நாயகர்கள் pretty much நம்மோடு நெடும் தொலைவு பயணிக்கவுள்ளோர் என்பது அப்பட்டமாகிறது ! இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே அறிமுகமான SODA நம் மத்தியில் ஒரு நிரந்தரனாகி விட்டுள்ளார் ! ரிப்போர்ட்டர் ஜானியும் சரி, தோர்கலும் சரி ; XIII -ம் சரி - automatic choices ! And ஜேம்ஸ் பாண்ட் + இளவரசி கூட்டணியுமே கொஞ்ச காலத்துக்காவது அசைக்க முடியா இடம்பிடித்துள்ளதொரு ஜோடியாகிப் போய்விட்டுள்ளது ! Maybe அடுத்த முறை க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் vs ஜேம்ஸ் பாண்ட் 2 .0 என்றிருக்கலாம் தேர்வுப் படலமானது ! So நமது ஆக்ஷன் டீம் pretty much sorted out என்பேன் ! 

😎And நமது கௌபாய்க் கூட்டணியுமே ஆரோக்கியமே என்பேன் ! ட்யுராங்கோ என்றைக்குமே சோடை போனதில்லை & நடப்பாண்டிலும் மனுஷன் ஹிட்டடிக்கத் தவறவில்லை ! அவரது தொடருக்குப் புத்துயிர் ஊட்ட படைப்பாளிகளும் தீர்மானித்திருக்க, அவர் தொடர்ந்திடுவாரென்று எதிர்பார்க்கலாம் ! அதே போல - அதே படைப்பாளியின் இன்னொரு கௌபாய் தொடரான "LONESOME " 4 ஆல்பங்கள் கொண்டதொரு சங்கிலியாய் தயாராகி வருகின்றது ! அதனில் ஏற்கனவே 3 பாகங்கள் வெளியாகியாச்சு & # 4 - 2022-ன் பிற்பகுதியினிலோ அல்லது 2023 -ன் துவக்கத்திலோ வெளியாகவுள்ளது ! அவற்றிற்கான உரிமைகளும் வாங்கியாச்சு எனும் போது - பாகம் 4 தயாரான கையோடு, ட்யுராங்கோ பாணியிலேயே ஒரு 4 பாக hardcover அதிரடி இதழாய்த் திட்டமிட்டு விடலாம் ! 

தவிர,  சாத்வீகமாகவும் நம்மைக் கவர்ந்திட இயலுமென்பதை நிலைநாட்டியுள்ள டிரெண்ட் ஒரு இடத்துக்கு நிச்சயம் ஒர்த் தானே ?

And அதிரடிப் புதுவரவு டெட்வுட் டிக் நடப்பாண்டின் பளிச் அறிமுகம் அல்லவா ? தொடரினில் உள்ளதே மொத்தம் 7 பாகங்கள் & அவற்றுள் நாம் இரண்டை வெளியிட்டிருக்கிறோம் எனும் போது, இவர் நம்முடன் மிஞ்சிப் போனால் 2022 & 2023 -ல் மட்டுமே பயணிக்க சாத்தியப்படும் ! But வரும் வரைக்கும் மனுஷன் நம்மை மகிழ்விக்கத் தவற மாட்டார் என்பதே எனது அபிப்பிராயம் !!

And இறுதி கௌபாய் தான் ஒரு கேள்விக்குறியோடு நிற்கும் ட்யூக் !! "ஒருமுறை கொன்று விடு" என்று அறிமுகமானவரை எனக்குப் பிடிக்கவே செய்திருந்தது தான் ; ஆனால் உங்கள் மத்தியில் நிறைய தக்காளிகளை மனுஷன் வாங்க நேரிட்டது தான் நிஜம் ! இன்றைய தக்காளி விலைகள் மட்டும் அன்றைக்கும் இருந்திருப்பின், நான் ஓவர்னைட்டில் ஒபாமா ஆகியிருப்பேன் தான் !! Phewww !!


😎கி.நாக்களைப் பொறுத்தவரையிலும் a real mixed bag !! 

"ஒரு தோழனின் கதை" & "அந்தியும் அழகே" - இவை இரண்டும் ஈட்டிய சிலாகிப்புகளும் செம ரகம் ; எதிர்கொண்ட விமர்சனங்களும் கணிசம் !! விற்பனை அளவுகோல்களில் பார்த்தல் இவையிரண்டுமே blockbusters ! So இவற்றைக் கட்டியணைத்தோருக்கும் சரி, கழுவி ஊற்றியோருக்கும் சரி, அந்த விற்பனை வெற்றியினில் சமபங்கு உண்டு என்பதால் thanks guys !! தாத்தாக்கள் விற்பனையிலும் தாதாக்கள் என்றாகி விட்டுள்ள நிலையில், இவர்கள் நம் மத்தியில் இனி permanent ஆகிடுவர் ! 

அந்தத் தகுதி நாகரீக வெட்டியான் ஸ்டெர்ன்னுக்கும் தரலாமா ? என்பதை சொல்லிட maybe நீங்களே பொருத்தமான நபர்களாய் இருப்பீர்கள் guys ! முதல் ஆல்பம் கூட "சற்றே ஓ.கே." என்றிருக்க, இரண்டாம் ஆல்பமான "காட்டான் கூட்டம்" has been a real hit !

விமர்சனம் / விற்பனை - என 2 அளவீடுகளின்படியும் மொக்கை என்று அமைந்து போனது "சித்திரமும் கொலைப்பழக்கம்" மட்டுமே ! Sorry on that folks !!

இந்தாண்டின் எனது personal ஞாபகங்கள் என்று குறிப்பிடுவதாயின் - மொழிபெயர்ப்பில் முயற்சிக்கக் கிட்டிய பன்முக வாய்ப்புகளையே சொல்லுவேன் ! மாமூலான பணிகளிலிருந்து விலகி நிற்பனவே இப்போதெல்லாம் என் மண்டைக்குள்ளொரு வேகத்தைத் துளிர் விடச் செய்கின்றன என்பதில் ரகசியங்களேது ? "தோழனின் கதை" ஒரு தினுசாயும் ; புதுப் பயல் "டெட்வுட் டிக்" க்குக்கென முற்றிலும் இன்னொரு விதமாயும் ; "அந்தியும் அழகே" தாத்தாக்களுக்கு வேறொரு பாணியிலும் ; ஸ்டெர்ன் ஆல்பங்களுக்கு yet another பாணியிலும் பணியாற்ற அவசியப்பட்ட நாட்கள் இந்த 30 இதழ் குவியலின் மத்தியிலும் நினைவில் தங்கியுள்ளன ! அவற்றில் எத்தனை சதவிகிதம் சொதப்பினேன் ? எத்தனை சாதித்தேன் ? என்று சொல்லக்கூடிய ஜூரிஸ் நீங்களே என்றாலும், என்னளவிற்கு எஞ்சிடுபவை ஜாலி எண்ணங்களே ! பற்றாக்குறைக்கு FFS இதழுக்கென "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்கள் " & ALPHA நெட்டி கழற்றிய பணிகள் ! So மரத்தைச் சுற்றி ஓடி, டூயட் பாடும் அந்த மாமூல்களிலிருந்து விலகிடக் கிடைத்த வாய்ப்புகளே இந்த ஒன்பது மாதப் பயணத்தின் எனது நினைவுகள் !!

ரைட்டு, இனி உங்களுக்கான கேள்விகள் இதோ folks :

1 .நடப்பாண்டின் ALBUM OF THE YEAR என்று எதைத் தேர்வு செய்வீர்களா ? ("ஹுக்கும்....இன்னும் பாதி மூட்டையை டப்பிகளிலிருந்து பிரிக்கவே இல்லே ; என் கல்யாண ஆல்பத்தை செலெக்ட் பண்ணலாமா ?" என்ற மைண்ட்வாய்ஸ்கள் கொஞ்சம் உரக்கவே கேக்கி !!)

2 .நடப்பாண்டின் TOP அட்டைப்படம் ?

3 .நடப்பாண்டின் TOP அறிமுக நாயகர்ர்ர்ர் யாரோ ?

  • a) டெட்வுட் டிக்
  • b) ஸ்டெர்ன்
  • c) தாத்தாக்கள்
  • d) ட்யூக் 

4 .ஸ்டெர்ன் தொடர்ந்திடலாமா ? 

5 .நடப்பாண்டில் ரொம்பவே சோதித்த இதழ் எது ?

  • a) ஜெரோனிமோ 
  • b) சித்திரமும் கொலைப்பழக்கம் 
  • c) ஒரு தோழனின் கதை 
  • d) The B & B ஸ்பெஷல் (மாடஸ்டி & JB 007 )
  • e) வேறு ஏதேனும் ?

6 .நடப்பாண்டினில் 'தல' graph எப்படி ? உசக்கே செல்கிறதா ? நேர்கோட்டிலா ? கீழ்நோக்கியா ?

7.ட்யூக் ? தொடரலாமா ? 

கொஞ்சமாய் பதில்சொல்ல நேரம் எடுத்துக் கொள்ளுங்களேன் folks - மௌனமே சுகமென்று நீங்கள் தொடர்ந்தால், நான்பாட்டுக்கு "வெடிக்க மறந்த வெடிகுண்டு"களை கொண்டு வந்து சேர்த்தாலும் சேர்த்துத் தொலைப்பேன் ! So உங்களின் எண்ணப் பகிர்வுகள் நிரம்ப உதவிடும் ! So please do reply all !!

Bye folks ...enjoy your Sundays !! மீண்டும் சந்திப்போம் ! 



280 comments:

  1. Replies
    1. அட டே நம்ம புன்னகை ஒளிர் சாரா...வாழ்த்துகள் 💐💐💐💐

      Delete
    2. ஏங்க First-ஆ வந்ததுக்கு ஏதாச்சும் பரிசு இருக்கா.
      Haaaa ..Haaaa....

      Delete
    3. இருந்தாலும், இந்த First-அ நம்ப முடியலை..
      நானே தானா ...யாரோ தானா...

      இந்த பாட்டை முன்ன யாரோ இங்க பதிவிட்டிருக்காங்க.

      அவருக்கு எனது வணக்கங்கள்.

      Delete
    4. பரிசுதானே கொடுத்திடலாம், ரவுன்ட்டா இருக்கும்... ஈரோடு விழா மண்டபத்திலே ரசித்து உண்ணப்படும்..

      Delete
    5. கூட டீயு உண்டு தானே சேலம் டெக்ஸ்.

      Delete
  2. ஞான் இங்கே டீ கடை போட்டிருக்கு.யாரெங்கில் கதைக்க வாங்கோ.

    ReplyDelete
  3. வணக்கம் ஆசிரியர்

    ReplyDelete
  4. வந்திட்டேன் சார் 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  5. // "ஜனவரி 6 தேதியினில் சென்னைப் புத்தக விழா துவங்கவுள்ளது !" என்ற தகவலும் ஒரு காரணியாக அமைந்திடுவதால், புனித மனிடோவிடம் கரம் கூப்புகிறோம் - ஸ்டால் கிடைத்து, விற்பனை சிறக்க வேண்டுமே என்று !! Fingers crossed big time !! //

    கண்டிப்பாக
    எல்லாம் வல்ல இறைவன் துணையுடன்
    இந்த வருடம் சிறப்பாக அமையுமென தோன்றுகிறது சார் 🙏🏼🙏🏼🙏🏼

    .

    ReplyDelete
    Replies
    1. // எல்லாம் வல்ல இறைவன் துணையுடன் //
      இறைவன் புத்தக விழாவுக்கு எல்லாம் வர்றாருங்களா சிபிண்ணா...!!!

      Delete
    2. yes. வாசகர்கள் உருவில்.' தெய்வம் மனுஷ்ய ரூபேண' என்பது ஸ்லோகம்

      Delete
  6. வணக்கம் ஸார் 🙏🏼🙏🏼🙏🏼

    ReplyDelete
  7. 3 .நடப்பாண்டின் TOP அறிமுக நாயகர்ர்ர்ர் யாரோ ?

    a) டெட்வுட் டிக்
    c) தாத்தாக்கள்


    4 .ஸ்டெர்ன் தொடர்ந்திடலாமா ?

    தொடரலாம் சார்


    5 .நடப்பாண்டில் ரொம்பவே சோதித்த இதழ் எது ?

    a) ஜெரோனிமோ
    c) ஒரு தோழனின் கதை

    🙏🏼
    .

    ReplyDelete
    Replies
    1. // ஜெரோனிமோ
      c) ஒரு தோழனின் கதை //
      அப்ப ட்யூக்,சி.கொ.ப எல்லாம் உங்களுக்கு ஓகேவா சிபிண்ணா...!!!

      Delete
  8. // 1 .நடப்பாண்டின் ALBUM OF THE YEAR என்று எதைத் தேர்வு செய்வீர்களா ? ("ஹுக்கும்....இன்னும் பாதி மூட்டையை டப்பிகளிலிருந்து பிரிக்கவே இல்லே ; என் கல்யாண ஆல்பத்தை செலெக்ட் பண்ணலாமா ?" என்ற மைண்ட்வாய்ஸ்கள் கொஞ்சம் உரக்கவே கேக்கி !!) //

    கல்யாண ஆல்பமா 😲

    வாய்ப்பேஇல்ல ராசான்னு சொல்லத்தான் தோன்றுகிறது சார் 🤷🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️
    .

    ReplyDelete
    Replies
    1. நா கட்டை பிரம்மச்சாரி. இல்லாத ஆல்பத்தை நா எங்க போயி தேடுறது.

      Delete
    2. கொடுத்து வைச்ச மனிதர் நீங்கள் நாங்கெல்லாம் உங்கள் பெயரில் முதலில் உள்ளதை கடேசியா செய்த தருணம்

      Delete
  9. And சந்தாக்களும், FFS முன்பதிவுகளும் செம சீராய் முன்னேறிய வண்ணமுள்ளன என்பது செம சந்தோஷ சேதி !//

    இது முழுக்க முழுக்க உங்களின் அதிரடி சரவெடி அட்டவணைக்கான வெற்றிங்க சார். ஓடற குதிரைகளை சந்தாவிலும் மற்றவற்றை லயன் லைப்ரரி, புத்தக விழாலென்று கொண்டு வந்த பார்முலா is really working out.

    ReplyDelete
  10. 1.தலைவர் விருப்பம்
    2.பொன்ராஜ் சொல்லுவாரு
    3.டிக்தான்
    4.ஓகே
    5.A to D
    தோழனின் கதை தொடவே இல்லை
    6.ஏங்க இதை நாங்க சொல்லிதா தெரியனுமா என்ன. அந்த டெக்ஸ் நீண்ண்ண்ண்ட கதைய வெளியிடுங்க.அதை படிச்சுட்டுதா இந்த கேள்விக்கு பதில் சொல்லுவேன் ஆமா.

    என்னங்க கேள்விங்க இம்புட்டு தானா.

    ReplyDelete
  11. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  12. 7. என்னது ட்யூக்ஆஆ. என்னங்க 5வது கேள்வியே ரிபீட் ஆயிருக்கு. நா இந்த ஆட்டத்துல இல்லை.

    ReplyDelete
  13. 1. அந்தியும் அழகே. குறிப்பாக மொழிபெயர்ப்பு என்னை மிகவும் கவர்ந்தது.
    2. காட்டான் கூட்டம். புத்தகம் கைக்கு வரவில்லை. இருந்தும் வித்யாசமான அட்டைப்படம்
    3. தாத்தாக்கள்.
    4. டபுள் யெஸ்.
    5. ட்யூக். சி. கொ. ப. முடிவு தான் சோதித்தது. ட்யூக் மொத்தமாவே சோதிச்சுடுச்சு.
    6. இந்தக் கேள்வியே அநாவசியம். இப்பவே டெக்ஸ் 75 ஆம் வருடத்தை கொண்டாட அந்த வருடம் மட்டுமாவது 15 டெக்ஸ் புத்தகங்கள் வேண்டும். அதில் குறைந்தது 7 வது வண்ணத்தில் வேண்டும்.
    7. தலை தெறிக்க ஓடும் படங்கள் 100. அதே சமயம் உரிமம் வாங்கிவிட்டிருந்தால் புத்தக விழா ஸ்பெசலா குறைந்த எண்ணிக்கை அடிப்படையில் போட்டு விடுங்க.

    ReplyDelete
    Replies
    1. சார் இதெல்லா போங்கு ஆட்டம். நீஙக கணக்குல வீக்கு. 75 வருசம்னா 75 டெக்ஸ் கதைதானே வரணும். நா ஒழுங்காதானே பேசுறேன்.

      Delete
    2. 75 டெக்ஸ் வந்தா எனக்கும் சந்தோசங்க சார்.

      Delete
    3. // இப்பவே டெக்ஸ் 75 ஆம் வருடத்தை கொண்டாட அந்த வருடம் மட்டுமாவது 15 டெக்ஸ் புத்தகங்கள் வேண்டும். அதில் குறைந்தது 7 வது வண்ணத்தில் வேண்டும். //
      அதே,அதே...

      Delete
  14. நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பு... புத்தக விழா...

    ReplyDelete
  15. Edi Sir..
    புதுப்பதிவு வந்துடுச்சு..Me 23..

    ReplyDelete
  16. ///ஜனவரி 6 தேதியினில் சென்னைப் புத்தக விழா துவங்கவுள்ளது !" ///

    மனிடோ அருளால் ஸ்டாரல் கிடைத்து விற்பனை சிறக்க வாழ்த்துகள் சார்...💐🙏

    முத்து50லாம் காமிக்ஸே மறந்துபோன ஒரு பழைய வாசகர் ஸ்டால்ல பார்க்க நேரிட்டால் அவரோட ரியாக்சன் எப்படி இருக்கும்...???

    ReplyDelete
  17. முத்து 50 ஐ புத்தக விழாவில் வாசகர்கள் முன்னிலையில் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்...

    ReplyDelete
  18. வணக்கம் நண்பர்களே 🙏🙏

    ReplyDelete
  19. நடப்பாண்டின் ALBUM OF THE YEAR என்று எதைத் தேர்வு செய்வீர்களா ?
    டெட்வுட் டிக் மற்றும் தாத்தாக்கள்

    2 .நடப்பாண்டின் TOP அட்டைப்படம் ?
    கண்ணே கொலைமானே

    3 .நடப்பாண்டின் TOP அறிமுக நாயகர்ர்ர்ர் யாரோ ?
    b) ஸ்டெர்ன்


    4 .ஸ்டெர்ன் தொடர்ந்திடலாமா ? 
    கண்டிப்பாக

    5 .நடப்பாண்டில் ரொம்பவே சோதித்த இதழ் எது ?
    இது வரை எதுவும் என்னை சோதிக்கவில்லை


    6 .நடப்பாண்டினில் 'தல' graph எப்படி ? உசக்கே செல்கிறதா ? நேர்கோட்டிலா ? கீழ்நோக்கியா ?
    இதிலென்னங்க சந்தேகம்

    .7.ட்யூக் ? தொடரலாமா ?
    கண்டிப்பாக

    ReplyDelete
  20. 3 .நடப்பாண்டின் TOP அறிமுக நாயகர்ர்ர்ர் யாரோ ?


    ஸ்டெர்ன் ஸ்டெர்ன் ஸ்டெர்ன் ஸ்டெர்ன்

    4 .ஸ்டெர்ன் தொடர்ந்திடலாமா ? கண்டிப்பாக தொடரலாம்.

    5 .நடப்பாண்டில் ரொம்பவே சோதித்த இதழ் எது ?

    இரண்டு இதழ்கள்
    a) ஜெரோனிமோ - இன்னும் முழுமையாக படிக்க வில்லை. இந்த ஆண்டு இன்னும் படிக்காத இதழ்களில் இதுவும் ஒன்று :-(

    b) சித்திரமும் கொலைப்பழக்கம் - தட்டு தடுமாறி படித்து விட்டேன்.

    c) ஒரு தோழனின் கதை - டிசம்பர். விடுமுறையில் படிக்க வேண்டும் என நினைத்துள்ளேன்.

    6 .நடப்பாண்டினில் 'தல' graph எப்படி ? உசக்கே செல்கிறதா ? நேர்கோட்டிலா ? கீழ்நோக்கியா ?

    உசக்கே :-)

    ReplyDelete
    Replies
    1. 7.ட்யூக் ? தொடரலாமா ?

      படித்து விட்டேன். ஆகா ஆகா என சொல்ல முடியாது. ஆனால் சராசரிக்கும் கொஞ்சம் கீழ்.

      ஆனால் எல்லாம் தெறிக்கும் கதைகளாக இறக்கி வரும் இந்த காலகட்டத்தில் இவர் தொடர வேண்டாமே.

      Delete
    2. நடப்பாண்டின் ALBUM OF THE YEAR என்று எதைத் தேர்வு செய்வீர்களா ?

      வேறுயாரு நம்ப ட்யூராங்கோ தான்.

      Delete
  21. // கி.நா.கள் - 4 +1 = 5 (அந்த +1 - "சித்திரமும் கொலைப்பழக்கம் "!!) // சார் எனக்கு ஒரு சந்தேகம் இந்த வருடம் அறிவித்தது 3 கி நா தானே? தோழனின் கதை, அந்தியும் அழகே, காட்டான் கூட்டம் இது இல்லாமல் வேறு கி நா எதாவது வந்ததா என்ன?

    ReplyDelete
  22. வணக்கம் ஆசிரியர் & நட்பூக்களே..

    ReplyDelete
  23. ஆசிரியருக்கு வணக்கம் டேஞ்சர் டயபாலிக் மற்றும் ஆர்ச்சி கதைகள் ஆண்டுக்கு ஒரு புத்தகமாவது வெளிவர மனசு வையுங்கள் நன்றி

    ReplyDelete
  24. சார் தாதாக்கள் மற்றும் Stern கண்டிப்பாக வேண்டும்.

    மாடஸ்தி மற்றும் பழைய பாண்ட் எனக்கு பிடிக்கவில்லை சார்.

    இளம் டெக்ஸ் கூட பெரியவர் போல சுவாரஸ்யம் இல்லையோ என எனக்கு தோன்றுகிறது.

    Duke யோசித்து முடிவு செய்யுங்கள். மேலே நான் சொன்ன இருவர் கண்டிப்பாக வேண்டும் என்பதால் Duke வேண்டாம்.

    Stern பற்றிய சிறு கலந்துரையாடல்.

    ஒரு புதிய முயற்சியாக கிருஷ்ணா, சுரேஷ், கலீல் மற்றும் நான் சேர்ந்து Tamil Comics Cast என்ற ஒரு காமிக்ஸ் podcast ஆரம்பித்துள்ளோம். முதல் podcast ஆக இந்த மாதம் வெளிவந்த ஸ்டெர்ன் கதையை பற்றி பேசியுள்ளோம். இது ஸ்டெர்ன் கதையை பற்றிய ஒரு விரிவான audio கலந்துரையாடல். இதை கேட்டு உங்கள் கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறோம். அடுத்தடுத்து பல முயற்சிகளை இதில் மேற்கொள்ள இருக்கிறோம். உதாரணமாக காமிக்ஸ் ரசிகர்கள் உடனான உரையாடல் ,அவர்களின் அனுபவங்கள் மற்றும் அவர்களின் சேகரிப்புகள் போன்ற பல ஐடியாக்கள் உண்டு.

    https://anchor.fm/tamil-comics-cast/episodes/02---e1bibov

    ReplyDelete
    Replies
    1. கேட்டேன் கிருஷ்ணா!! அருமையான முயற்சி!!! புதிய முயற்சிக்கும், பங்களித்த நண்பர்களுக்கும் பாராட்டுகள்!
      நண்பர்களில் பெரும்பான்மையினரை இந்த ஸ்டெர்ன்-பாகம்2 கவர்ந்திருப்பது மகிழ்ச்சி! இக்கதையைப் படித்து முடித்தபோது நான் நினைத்ததைவிடவும் இது சூப்பர்ஹிட் ஆகியிருப்பது கூடுதல் மகிழ்ச்சி!

      Delete
    2. நன்றி ஈ வி. தொடர்ந்து முயற்சிப்போம்

      Delete
    3. சார் உரையாடலில் நண்பர் கூறி இருப்பது பார்த்தால் 3 பாகம் இன்னும் சிறப்பாக இருக்கும் போல உள்ளது. யோசிக்க வேண்டாம் சார் மேலும் காதிருதலும் வேண்டாம்

      Delete
    4. உரிய நேரத்தில் கிருஷ்ணா !!

      Delete
    5. And அழகான முயற்சி ! சூப்பர் !

      இந்த ஆல்பத்தில் பேசிட இன்னமுமே சில விஷயங்கள் இருந்தன தான் ; ஆனால் அவகாசம் கூடிப் போயிருக்கும் அவற்றையும் கையில் எடுத்திருந்தால் !

      Delete
  25. காட்டான் கூட்டம் - கதைன்னா இது கதை சார். இயல்பான மனிதர்களை கொண்டு ஒவ்வொருவருக்கும் ஒரு அழகான கிளைகதை என கொண்டு ரசிக்கும்படி ஒரு மனநிறைவான முடிவைக் கொண்ட கதை; கதாசிரியருக்கு பாராட்டுக்கள்.

    கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் என்னை கட்டிப்போட்டன. அதுவும் ஸ்டெர்ன் மனைவி மற்றும் மனைவியின் தோழி செம மாஸ்.

    இறுதிக்காட்சியில் நடக்கும் அந்த குத்து சண்டையை மிகவும் ரசித்தேன் அதுவும் கடைசியில் உள்ள டிவிஸ்ட் இன்னும் செம. அதே போல் அந்த சூதாட்டம் நடத்திய மனிதர் ஒரு பக்கா ஜென்டில்மேன்.

    காட்டான் கூட்டம் - மனதை அள்ளும் கூட்டம்.

    ReplyDelete
  26. அந்தியும் அழகே - புத்தகம் வந்த மாதம் முதல் பத்து பக்கங்களை மட்டும் படிக்க நேரம் கிடைத்தது. நேற்று காலையில் முழுக்கதையையும் படித்து முடித்தேன்.

    இந்த வயதானவர்கள் சண்டை போட போகிறார்களோ என நினைத்தால் நினைத்து பார்க்க முடியாத வேறு கோணத்தில் பயணித்த கதை, அதுவும் சுவாரசியமான முடிச்சுகளுடன் + நகைச்சுவையுடன் சொன்னது சிறப்பு. எளிதான ஆனால் வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது,

    அந்த புதையல் என்ன.. பேங்கில் உள்ளது என்ன... பேத்தி வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு அப்பா யார்? எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் சாமி.. அடுத்த பாகத்தை சீக்கிரம் வெளியிடுங்கள்.

    மொழிப்பெயர்ப்புக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள் சார்.

    ReplyDelete
  27. // ஜனவரி 6 தேதியினில் சென்னைப் புத்தக விழா துவங்கவுள்ளது !" //

    மகிழ்ச்சி சார். புத்தகத் திருவிழா நடக்கட்டும் நமக்கு ஸ்டால் கிடைக்கட்டும் விற்பனை சிறக்கட்டும்.

    ReplyDelete
  28. வணக்கம் பக்கோடா கடை ஆல் இன் ஆள் அழகுராசாவே ;-)

    ReplyDelete
  29. // And சந்தாக்களும், FFS முன்பதிவுகளும் செம சீராய் முன்னேறிய வண்ணமுள்ளன என்பது செம சந்தோஷ சேதி !
    //

    மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயம் சார். சந்தா எண்ணிக்கையில் 2022ல் புதிய உயரம் தொட வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  30. சென்னை புத்தக விழாவில் ஸ்டால் கிடைக்க பிரார்த்திக்கிறோம் சார்.
    நிச்சயம் கிடைக்கும்.

    விற்பனையில் சென்னை என்றும் கை விட்டதில்லை என்று நினைக்குறேன்.

    ReplyDelete
  31. கிளம்பினேன் (விருதுநகரில் இருந்து)
    சேர்ந்தேன் (சிவகாசி லயன் அலுவலகம்)
    பார்தேன் (அண்ணாச்சி, மைதீன், மகளிர் அணி)
    மகிழ்ந்தேன் (முதல் முறையாக நமது அலுவலகம் எனது மகளுடன் சென்றேன்)
    வந்து சேர்ந்தேன் (விருதுநகர்)

    ReplyDelete
  32. வித்தியாசமான கதை வரிசைகளாலும்,
    விதவிதமான மொழிபெயர்ப்பு பாணிகளாலும்,
    ரொம்பவே நிறைவாய் உணர்ந்த
    மற்றுமொரு சூப்பர் ஹிட் ஆண்டு இது
    எடிட்டர் சார்..!!
    இத்தனை மேஜிக்களும் இந்த கொரோனா கொடூரனின் கோர தாண்டவத்தினூடே என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமே!

    வலிகளை உங்களதாக்கி
    விருந்துகளை எங்களதாக்கியிருக்கிறீர்கள் - இம்முறையும் - இன்னும் அதிகமாகவே!

    எதிர்காலத்தின் என்றோ ஒரு ஆசுவாச பொழுதினில் நினைத்து நினைத்து பெருமைப்படும் + ஆச்சரியப்படும் ஆண்டாக இவ்வாண்டும் அமைந்திடுமென்பது உறுதி!

    பேங்க்கில் நீங்கள் கடன்பட்டுக்கிடக்க;
    நாங்களோ நன்றிக் கடன்பட்டுக் கிடக்கிறோம்!🙏

    ReplyDelete
    Replies
    1. // பேங்க்கில் நீங்கள் கடன்பட்டுக்கிடக்க;
      நாங்களோ நன்றிக் கடன்பட்டுக் கிடக்கிறோம்!🙏 // ஃபேக்ட் ஃபேக்ட்

      Delete
    2. // வலிகளை உங்களதாக்கி
      விருந்துகளை எங்களதாக்கியிருக்கிறீர்கள் - இம்முறையும் - இன்னும் அதிகமாகவே! //

      உண்மை.
      +1

      Delete
    3. // எதிர்காலத்தின் என்றோ ஒரு ஆசுவாச பொழுதினில் நினைத்து நினைத்து பெருமைப்படும் + ஆச்சரியப்படும் ஆண்டாக இவ்வாண்டும் அமைந்திடுமென்பது உறுதி! //
      அதே,அதே...

      Delete
  33. 1. ஆல்பம் ஆப் த இயர்

    காட்டான் கூட்டம்.

    நினைவோ ஒரு பறவை ஃபோட்டோ பினிஷில் செகண்ட்

    2. டாப் அட்டைப் படம்

    புத்தம் புது பூமி வேண்டும். அந்த நகசு வேலைகளுக்கு ஆகவே.

    3. டாப் அறிமுக நாயகர்.

    டெட் வுட் டிக் தான். ஸ்டெர்ன் மிக அருகில் வந்து விட்டார்.

    4. ஸ்டெர்ன் தொடர்ந்திடலாமா ?

    கண்டிப்பாக தொடரலாம்.

    5. ரொம்பவே சோதித்த இதழ்

    ஒரு முறை கொன்று விடு.
    மிக அருகில் உள்ள அடுத்த இதழ் சித்திரமும் கொலைப் பழக்கம்.

    6. இந்த வருட டெக்ஸ் கிராப்

    இந்த வருடம் ஒரு இதழ் கூட சோடை போகவில்லை. அனைத்து டெக்ஸ் இதழ்களும் சூப்பர் இந்த முறை. உங்கள் தேர்வு இந்த வருடம் கொஞ்சமும் பிசகவில்லை.

    7. ட்யூக் ? தொடரலாமா ?

    வேண்டவே வேண்டாம்.

    ReplyDelete
  34. 1. பருந்திற்கொரு பரலோகம்.
    2. லயன் #400.
    3. ஸ்டெர்ன் & டெட்வுட் .
    4. ஸ்டெர்ன் - தொடரலாம்.
    5. சோதித்தவைகள் - B & B Spl. & ஒ தோ. க.
    6. டெக்ஸ் - உச்சம்.
    7. ட்யூக் - தொடரலாம்.

    ReplyDelete
  35. லேட்டாய் வந்தாலும் லேட்டஸ் சாக சந்தாவில் இணையவிருக்கும் நண்பர்களின் புகைப்படங்கள் இடம் பெற வேண்டி, அவர்கள் முகங்களில் புன்னகை மிளிர ஜனவரி வரை ஒரு குறிப்பிட்ட FFS இதழ்களை ஒதுக்கியிருப்பது. யப்பா என்னவொரு பரந்த சிந்தனை. சூப்பர் சார்.

    ReplyDelete
    Replies
    1. தொகையினை புரட்ட அவகாசம் அவசியமாகிடும் நண்பர்களுக்கென இதைக் கூடச் செய்யாது போனால் எப்படி சார் ?

      Delete
    2. நல்ல முடிவு சார்.

      Delete
  36. சார் அருமையான உற்ச்சாகப் பதிவு..சந்தாவ இன்னைக்கே கட்டிடுறேன்....படிக்க வேண்டிய கதைகள் சில டெக்சிலும் உண்டு....சில பதில்கள்...படிக்காத கதைகளை பின்னர் படிக்க நேர்ந்தாலும் திருத்திக் கொள்கிறேன்

    ReplyDelete
  37. . நான் படித்த அனைத்துமே டாப் தான்...ஒவ்வொன்றும் ஒவ்வோர் விதத்தில் ஒன்றை ஒன்றை விஞ்ச...நீங்க சுமாரா சொன்ன சித்திரமும் கொலைப் பழக்கமும் கூட நியாயம் பார்த்து செயல்பட்ட அந்த கொலைகாரனும் டாரப் உளவியல் ரீதியாய்

    ReplyDelete
    Replies
    1. 2. டாப்பட்டை...ஒன்னப் பாத்தா இன்னொன்னு துள்ளிக் குதிக்குது...ஓரளவு சுமாரான அட்டைன்னு கேட்டா பதில் கிடைக்குமோ

      Delete
    2. 3... டெட்வுட் பாதிதான் படிச்சேன்..படிக்க நேரமில்லை..மீத மூன்று நாயகர்களும் டாப்...ஓவியம் வண்ணம் ...என் மூலை முடுக்குக்கெல்லாம் கை பிடித்துச் செல்வதுடன்...வாழ்க்கை எப்படி போனாலும் இன்பம்தான் வாழ்ந்து பார் எனச் சொல்லத் தவறலை

      Delete
    3. 6.தல கதைகள் இரண்டுதான் படிச்சிருக்கேன்...மீதி மறுபதிப்பு...படிச்ச கதையான கண்ணே கொலைமானே டாப்....வித்தியாசத்தை டாப் வேகம் ...வழக்கம் போல டெக்ஸ் டெக்ஸ்தான்

      Delete
    4. // நானும் எருது தான். //

      நீ சொல்லவே தேவையில்லைலே :-)

      Delete
  38. டியர் சார்,
    கடந்த வாரம்" குடும்ப விழா" இருந்ததால், இங்கே பதிவிட முடியவில்லை..
    ஆனால், இதழ்களை ஒன்று ஒன்றாக படித்தாகிவிட்டது.
    முதலில், வரவு-செலவு என்று ஒரு அட்டவணை தந்ததற்கு நன்றிகள் சார்..
    நானெல்லாம்-சந்தா முன்னோட்ட ஆல்பம் கிடைத்ததும்-ஒரு பேப்பரில் புக் பெயரையும், விலையையும் எழுதி கூட்டி கழித்து கணக்கு பார்க்கக்கூடியவன்தான்.
    _மேலும், மாதம் - மாதம்-வெளிவரும் இதழ்களை- ஒரு டைரியில் எழுதி வைக்கும் பழக்கமும் உண்டு.' (இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை). அதற்கும் இந்த அட்டவணை உபயோகமாக உள்ளது..
    இதில் ஒரு வேண்டுகோள் மட்டும்.
    சந்தா தவிர, வெளிவந்த இதழ்களின் விவரமும்-விலையும் சேர்க்க வேண்டுகிறேன்.
    இதனால் வாங்கியவர்களுக்கு ஒரு கணக்கும் தெரியும். வாங்காதவர்களுக்கு தெரியப்படுத்தியது போலும் ஆகும். அல்லவா..
    முதலில் படித்தது ஹோம்ஸ்தான்.அவரது மாறுவேடத்திற்கு வேலை இல்லையென்றாலும். இரண்டு ஆல்பமும் சுவராஸ்யமாக இருந்தன..
    (அந்த வாரிசு வேட்டை-ஆல்பத்தையும் - இதே தரத்தில் தந்துவிட்டால் மிக்க மகிழ்ச்சிதான்.
    ஸ்டெர்ன் - எங்களைப் போன்ற புத்தகப் பிரியர்களை செம ஓட்டு - ஓட்டியது போன்ற கதை. உண்மைதான். மனைவி-பிள்ளைகளுக்கு என்னை பிடிக்கவும் செய்கிறது. ஆனால், புத்தகத்தை அளவுகடந்து நேசிப்பது-(அவர்களை விட என்ற எண்ணத்தில்) - அவர்களுக்கு கொஞ்சம் கடுப்பாக இருக்கலாம்.
    உதாரணத்திற்கு-"மாநாடு." படம். புரியவில்லை- என்று சொல்லும் போது - அது எங்களுக்குத்தான் புரியும். (ஒரு படைப்பாளியின் படைப்புச் சுதந்திரம். +சுவராஸ்யமான கதைகளம்) என்றால் முறைப்பது..என்று
    அடுத்து, "நினைவோ ஒரு பறவை. -"அழகான தலைப்பு-நம். X 111-மிகவும் பொறுத்தமான தலைப்பு.
    இரவு 10 மணிக்கு மேல் ஒரே மூச்சில் படித்த கதை.
    முழு தொகுப்பாக வருவதற்கு - எதிர்ப்பு தெரிவிப்பவன் தான்.(அட்டைப்படம் வீணாக போகிறதே என்று.
    ஆனால், X 111-ன் இரண்டாம் சுற்றைப்
    பொறுத்தவரை இரண்டு - இரண்டு ஆல்பமாக வெளி வந்தால்தான் மூச்சை இழுத்து விட முடியும் போலும்..அப்பா..முடியல..?iii
    அப்றம் - திக்கெட்டும் பகைவர்கள் - வாரம் ஒரு பாகம் தான்-என்ற லட்சியத்தோடு? iபடித்து வருகிறேன்..
    நன்றி iii 2021..

    ReplyDelete
    Replies
    1. இரத்தப் படலம் இரு பாகமா வந்தாலும் போதாது வேகத்துக்கு...இரண்டாம் சுற்று எடுத்துப் படிக்கப் படிக்க வான்ஹேம்மேவ மிஞ்சுவார் போல...பெட்டியும் அதகளம் புரிய கதை திக்கெங்கும் பாய்ந்து மிரட்டுது

      Delete
  39. LONESOME ஆகா பெயர் நல்லா இருக்கே. படமும் அட்டகாசமாக உள்ளது. சீக்கிரம் களத்தில் இறங்கி விடவும்.

    ReplyDelete
  40. Replies
    1. கள்ளக்குறிச்சி பக்கம் நமது காமிக்ஸ் ரசிகர்கள் யாரும் இருக்கீங்களா நண்பர்களே? சொந்தங்களுடன் இன்னும் சில நிமிடங்களில் பல வருடங்களுக்கு பிறகு கள்ளக்குறிச்சியில் இறங்கப் போகிறேன். ;-)

      Delete
  41. 1 அந்தியும் அழகே
    2 காட்டான் கூட்டம்
    3 ஸ்டேர்ன்
    4 தொடரலாம்
    5 ஜெரோனிமோ
    6 உசரவே போகிறார்
    7 வேண்டாம்

    ReplyDelete
  42. லயன் ஐம்பதாமாண்டு மலராவது குண்டா ஒருவருட சந்தா விலைல வற்ர மாதிரி பாத்துக்கங்க....கதைக தெறிக்கனும்

    ReplyDelete
  43. டிசம்பர் மாதத்து இதழ்கள் இன்னும் படிக்கவில்லை. மற்றபடி இந்த ஆண்டில் வெளிவந்த கதைகளில் தோழனின் கதையை தவிர மற்ற அனைத்து கதையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தியும் அழகே கதை நன்றாக இருந்தது. ஆனால் தாத்தாக்கள் பேசுவது முகத்தில் அறைந்தாற் போலிருந்தது அது மட்டுமே பிடிக்கவில்லை. ஸ்டெர்ன் ட்யூக்இருவரும் தொடரலாம். இவர்கள் இருவரின் கதையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
    By
    சதாசிவம் வெள்ளியம்பாளையம் தாராபுரம்

    ReplyDelete
    Replies
    1. //தாத்தாக்கள் பேசுவது முகத்தில் அறைந்தாற் போலிருந்தது//

      சில யதார்த்தங்களுக்கு சர்க்கரைப் பூச்சுக்கள் சுகப்படாதே நண்பரே !

      Delete
  44. 1. ஆல்பம் - of the year_எனக்கு நம். X111-தான்.(மற்றபடி - கூடுதலாக கிடைத்த லக்கிலூக் இதழ்கள்..)
    2. Top அட்டைப்படம்-Tex - கண்ணே கொலைமானே''+/(லக்கி - ஆண்டு மலர்.
    3, Top அறிமுகம் - ஸ்டெர்ன் தான்.
    (டெட் வுட் டிக்- ஓவர் ரியாலிட்டி - எனக்கு ரசிக்கவில்லை.)
    4.ஸ்டெர்ன் - ஆட்சேபணையில்லை.
    5. ரொம்ப சோதித்த இதழ்..
    a. ஜெரோனிமா-டாக்குமெண்டிரி..?i
    b. ஓவியம் - சிறப்பு. ஆனால், கதைதான் வீணடித்து விட்டது.
    C. ஒரு தோழனின் கதை-கதைநாயகனை நாமாக நினைத்துக் கொண்டு நமக்கு என்ன தான் வேண்டும் என்று சுயபரிசோதனை செய்ய
    வைத்த இதழ்..(மீண்டும் ஒரு முறை பொறுமையாக படிக்க வேண்டும். - ஒருவேளை ஓவியம் கார்ட்டூன் பாணி இல்லாமல் இருந்திருந்தால் ரசித்திருக்கலாம்..)
    d_.சார், ப்ளீஸ்.. i கைவைத்துவிடாதீர்கள்.
    மாடஸ்டி வாழ்க..இளவரசி வாழ்க.
    e. வே று ஏதும்..
    டியூக் - தான். மீண்டும்..டியுராங்கோ-போன்ற சுவராஸ்யமான Cஓவியமும் சேர்த்து) இருக்கும் போது இது போன்ற கதைத் தொடர்கள் தேவையில்லையே என்பது எனது கருத்து...
    6. டெக்ஸ்-இந்த வருடம் ஒன்றும் சோடை போகவில்லை..(டெக்ஸ் வில்லர் - மோகத்திலிருந்து வெளியே வர முடியாது என்றே தோண்றுகிறது..)
    ? 7. எனக்கு சுவராஸ்யமாய் இல்லை-ஓவியமும் சரியில்லை..
    நன்றி சார். 2021-ன் சிறப்புகளுக்கு..

    ReplyDelete
  45. 1 .நடப்பாண்டின் ALBUM OF THE YEAR...
    கதை உள்ளடக்கத்தின் அடிப்படையில் ஸ்டெர்னும்,பொழுதுபோக்கின் அடிப்படையில் திக்கெட்டும் பகைவர்களும் எனது தேர்வு...

    2 .நடப்பாண்டின் TOP அட்டைப்படம் ?
    புத்தம் புது பூமி வேண்டும் - அந்த அட்டகாசமான வேலைப்பாடுகளும்,செய்நேர்த்தியும் நம் மனதை சுண்டி இழுக்காவிடில் வியப்பே...
    அதே நேரத்தில் காட்டான் கூட்டம் மற்றும் தீபாவளி மலர் அட்டைப் படமும் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது...

    3 .நடப்பாண்டின் TOP அறிமுக நாயகர்ர்ர்ர் யாரோ ?

    b) ஸ்டெர்ன் - தாத்தாக்களும் டெட்வுட் டிக்கும் ஓகேதான்,இருப்பினும் ஸ்டெரினிடம் கூடுதல் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது...

    4 .ஸ்டெர்ன் தொடர்ந்திடலாமா ?
    தாரளமாக தொடரலாம் சார்...

    5 .நடப்பாண்டில் ரொம்பவே சோதித்த இதழ் எது ?
    b) சித்திரமும் கொலைப்பழக்கம்.
    e) ட்யூக்- (ரொம்பவே சோதிச்சிட்டாரு)

    6 .நடப்பாண்டினில் 'தல' graph எப்படி ? உசக்கே செல்கிறதா ? நேர்கோட்டிலா ? கீழ்நோக்கியா ?
    கொஞ்சம் உசக்கே போக ஆரம்பிடுச்சி,ஆனால் இது பத்தாதுங்கோ,2022 & 2023 இல் இன்னும் இன்னும் உசக்கே போகனும்...

    7.ட்யூக் ? தொடரலாமா ?
    ஸ் யப்பா,இப்பவே கண்ணக் கட்டுதே...

    ReplyDelete
  46. // And சந்தாக்களும், FFS முன்பதிவுகளும் செம சீராய் முன்னேறிய வண்ணமுள்ளன என்பது செம சந்தோஷ சேதி ! //
    அருமையான செய்தி...!!!

    ReplyDelete
  47. // செவ்வாய்க்கிழமைக்குள் FFS பணிகளின் முழுமையும் அச்சு நிறைவுற்று, பைண்டிங் படலத்தினில் ஆழ்ந்திருப்போம் ! //
    அருமை சார்,அப்ப டிசம்பரில் ஜனவரி உண்டு...

    ReplyDelete
  48. // And புத்தாண்டினை வாஞ்சையோடு எதிர்பார்த்திட, "ஜனவரி 6 தேதியினில் சென்னைப் புத்தக விழா துவங்கவுள்ளது !" //
    சூப்பர் சார்,அப்ப புத்தக விழா ஸ்பெஷல் புக்ஸும் சீக்கிரமா எதிர்பார்க்கலாம்னு சொல்லுங்க...
    இந்த 2022 ஜனவரி நம்ம காமிக்ஸுக்கு ரொம்பவே ஸ்பெஷலாய் அமையும் போல...

    ReplyDelete
  49. // இனியொரு முறை இது போலொரு தருணம் வாய்க்க இன்னும் 13 வருஷங்கள் காத்திருக்கணுமே !!! Bring on the LION 50 !!!! //
    2034 இல் உங்களின் அந்தியும் அழகே தொடரைக் காண ஆவலுடன் உள்ளோம் சார்...

    ReplyDelete
    Replies
    1. 13 வருஷம் கழிச்சு "மு.ச." லைட்லாம் போட்டு நல்லா வெளிச்சமா இருக்கும்லே சார் ?

      Delete
    2. லைட்டை தட்டி தூக்கிடுவோம் சார்...

      Delete
  50. // அதே போல - அதே படைப்பாளியின் இன்னொரு கௌபாய் தொடரான "LONESOME " 4 ஆல்பங்கள் கொண்டதொரு சங்கிலியாய் தயாராகி வருகின்றது ! //
    பார்க்கறதுக்கு ட்யூராங்கோவோட அண்ணன் மாதிரியே இருக்காரே...!!!

    ReplyDelete
    Replies
    1. அதே படைப்பாளியாச்சே சார் !

      Delete
    2. அதானே பார்த்தேன்...

      Delete
  51. நண்பர் சேலம் குமார் அவர்கள் என்னிடம் குடுத்து சென்ற ஆங்கில ஆம்னி பஸ் புதையல்களை படித்து முடிப்பதிலேயே கவனம் செலுத்தி கொண்டு இருந்ததால், என்னால் லயன் முத்து புத்தகங்களை படிக்க நேரம் கிடைக்கவில்லை. வரும் ஆண்டு FFS , ஸ்மாஷிங் 70 'ஸ் மற்றும் பல இதழ்கள் வரவுள்ளதால் இந்த வாரத்தில் இருந்து தான் புத்தகங்களை படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். அடுத்த வருட துவக்கத்திற்குள் அணைத்து புத்தகங்களையும் படித்து முடிக்க வேண்டும்.

    இதுவரை படித்த புத்தகங்களுக்குள் என்னால் என்ன பதில் கூற முடியுமோ என்று பார்க்கிறேன்.

    1 ) ALBUM OF THE YEAR : ஒரு பிரளயப் பயணம்
    2 ) TOP அட்டைப்படம் : கண்ணே கொலைமானே
    3 ) TOP அறிமுக நாயகர்: ஸ்டெர்ன் (இது மட்டும் தான் படித்து இருக்கேன் )
    4 ) ஸ்டெர்ன் தொடர்ந்திடலாமா ? yes
    5 ) நடப்பாண்டினில் 'தல' graph எப்படி ? நான் டெக்ஸ் டூ மச் என்று நினைத்து இருந்தேன். ஆனால் 2021 அல்மோஸ்ட் சூப்பர் ஹிட்ஸ்
    6 ) ட்யூக் ? ரொம்ப கேவலமான விமர்சனங்கள் கிடைத்ததால் நான் புத்தகமே வாங்கவில்லை

    ReplyDelete
  52. என்னது டெஸ் 8 புக் தான் வந்து இருக்கா. நான் என்னமோ எக்கச்சக்க மா வந்து இருக்குனு இல்ல நினைச்சேன்.

    எல்லாரும் டெஸ் பத்தியே பேசுரதல அப்படி தோணுது போல.

    நான் ஒரு 6 மாசமா தான் காமிக்ஸ் பக்கம் வந்து இருக்கேன்.

    53 புக் வாங்கி இருக்கேன். ஒன்னு கூட கவ்பாய் கிடையாது. டெஸ் மட்டும் நல்லா போகுது மத்தத விடனு ஒரு போஸ்ட்ல சொன்னிங்க.

    அதனால தான் நான் மத்த ஹீரோ புக்ஸ் மட்டும் வங்குறேன்.

    இல்லனா அவங்கள வீட்டுக்கு அனுப்பிடுங்களே.

    ReplyDelete
    Replies
    1. அனுப்பிடிவேங்களேனு சொல்ல வந்தேன்.

      நான் படிகத்தில் பிரியமுடன் பிணைக்கைதி, ஜேசன் பிரிஸ், நியூயோர்க்கில் மாயாவி, smurf காசு, பணம் துட்டு ரொம்ப நல்லா இருந்தது.
      இதில் காசு பணம் துட்டு பள்ளியில் பாடப்புத்தகமாக வைக்க வேண்டும். பணம் குறித்து குழந்தைகளுக்கு நல்ல அறிமுகம் கிடைக்கும்

      Delete
    2. எழுத்து பிழைகளை பொறுத்து கொள்ளுங்கள். எடிட் option இல்லாததால், சரி செய்ய முடிய வில்லை

      Delete
    3. //எல்லாரும் டெஸ் பத்தியே பேசுரதல அப்படி தோணுது போல//

      Fact !

      Delete
    4. ///smurf காசு, பணம் துட்டு ரொம்ப நல்லா இருந்தது.
      இதில் காசு பணம் துட்டு பள்ளியில் பாடப்புத்தகமாக வைக்க வேண்டும்///

      சூப்பர் சூப்பர்!

      Delete
    5. // smurf காசு, பணம் துட்டு ரொம்ப நல்லா இருந்தது.
      இதில் காசு பணம் துட்டு பள்ளியில் பாடப்புத்தகமாக வைக்க வேண்டும் //

      அதே அதே. எனது குழந்தைகளுக்கு பணம் எப்படி எல்லாம் மனித வாழ்வில் விளையாடும் என்பதை இந்த கதை மூலம் என்னால் எளிதாக சொல்ல முடிந்தது.

      Delete
  53. Dear Editor

    65% of chennai folks do not wear masks or face shields in public sir. Source - Dr Radhakrishnan, Health secretary. Hence while I wish you a slot and good sales - I humbly request you not to come to Chennai and expose yourself to the hazardous behavior of junta.

    ReplyDelete
    Replies
    1. சென்னை தான் என்றில்லை சார் ; இந்தப் பக்கங்களிலும் அதே கதை தான் ! மாஸ்க் போட்டுத் திரியும் நம்மைத் தான் விநோதமாய்ப் பார்க்கிறார்கள் !!

      சென்னைக்கு நான் புறப்படுவதாக இருந்தால், அப்பாவும் வர நினைப்பார் & அது இன்னமும் பெரிய ரிஸ்க் ! So ஆன்லைனில் தான் ஏதாச்சும் மீட் ஏற்பாடு செய்யப் பார்க்கணும் சார் ! அல்லது நண்பர்கள் யாரேனும் ஏற்பாடு செய்திருப்பின், அதனில் புகுந்து கொள்ள வேண்டியது தான் !

      Delete
    2. ஆன்லைனே சுகப்படும் ஆசிரியரே...உறவினர் விசேசத்தில் இரண்டு குடும்பமே அவதி பட்டத பார்த்தாச்சு....

      Delete
    3. நம்முடைய பாதுகாப்பை கருதியே மாஸ்க் அணியவேண்டும், இதிலேயே மற்றவர்களின் நலனும் அடங்கும்.

      வரும் முன் காப்பதே அனைவருக்கும் நன்று. டாக்டர்சும், ஆய்வாளர்களும் தடுப்பூசி போட்டாலும் மாஸ்க் அணியவேண்டும் என்று தான் கூறுகிறார்கள்.

      சில அலட்சியவாதிகளால் மற்றவருக்கும் கஷ்டம் தான் வரும்.

      நல்லதை நாம் எப்போதும் பின்பற்றுவோமே நண்பர்களே.

      இது என் அன்பான கோரிக்கை.

      Delete
  54. 1 .நடப்பாண்டின் ALBUM OF THE YEAR..
    ALL TEX , டெட் வுட் டிக் ..

    2.நடப்பாண்டின் TOP அட்டைப்படம் ?
    JERONIMO , சித்திரமும் கொலைப் பழக்கம், YOUNG TEX BACK COVER ..

    3. டாப் அறிமுக நாயகர்.
    டெட் வுட் டிக் ..

    4. ஸ்டெர்ன் தொடர்ந்திடலாமா ?
    தொடரலாம்..

    5. ரொம்பவே சோதித்த இதழ்

    ட்யூக்

    6 .நடப்பாண்டினில் 'தல' graph எப்படி ?

    உசக்கே போகிறது ..

    7.ட்யூக் ? தொடரலாமா ?

    NO ...

    ReplyDelete
  55. 1 . அந்தியும் அழகே/ட்யூராங்கோ (நடப்பாண்டின் ALBUM OF THE YEAR என்று எதைத் தேர்வு செய்வீர்களா ?)!)

    2 . காட்டான் கூட்டம் / லயன் 400 (நடப்பாண்டின் TOP அட்டைப்படம் ?)

    3. ஸ்டெர்ன்/தாத்தாக்கள் (நடப்பாண்டின் TOP அறிமுக நாயகர்ர்ர்ர் யாரோ ?)

    4. YES (ஸ்டெர்ன் தொடர்ந்திடலாமா ? )

    5. ஜெரோனிமோ (நடப்பாண்டில் ரொம்பவே சோதித்த இதழ் எது ?)

    6 . நேர்கோட்டில் (நடப்பாண்டினில் 'தல' graph எப்படி ? )

    7. NO (ட்யூக் ? தொடரலாமா ?)

    ReplyDelete
  56. So many not in favor of Duke ??!!! :-)

    Namakku ambulimama baalamithra reprint looks like best bet sir ;)

    ReplyDelete
    Replies
    1. ரசனைகளின் பலமுகங்கள் சார் !

      Delete
  57. /// மௌனமே சுகமென்று நீங்கள் தொடர்ந்தால், நான்பாட்டுக்கு "வெடிக்க மறந்த வெடிகுண்டு"களை கொண்டு வந்து சேர்த்தாலும் சேர்த்துத் தொலைப்பேன் ///

    சார்..அந்த' வெடிக்க மறந்த வெடிகுண்டு' எப்போது வரும்?..அப்படியே 'தூங்கிப்போன டைம்பாம்'ன்னு அந்தக் காலத்துல ஒரு கதை வந்த மாதிரி ஞாபகம். முடிந்தால் இரண்டையும் சேர்த்து வெளியிடுங்கள். ஒரு பழசு + ஒரு புதுசு. ச்சும்மா ஜிலோர்ன்னு இருக்கும்.

    ReplyDelete
  58. //So மரத்தைச் சுற்றி ஓடி, டூயட் பாடும் அந்த மாமூல்களிலிருந்து விலகிடக் கிடைத்த வாய்ப்புகளே இந்த ஒன்பது மாதப் பயணத்தின் எனது நினைவுகள் //

    யார் மாமூலாய் வருவது, நம்ம அதிகாரி & கார்சன், அவங்க மரத்தை சுத்தி என்ன டூயட் பாடுவாங்க? யப்பா.. கற்பனை செஞ்சு பாக்கவே படு பயங்கரமா இருக்கு....

    ReplyDelete
    Replies
    1. கிரி கார்சனின் கடந்த கால டூயட்டுக்கே மயங்கிக் கிடக்கிறோம்...அது போல வந்தா வேண்டாங்க முடியுமா

      Delete
    2. நம்மாட்களுக்கு ஒரு போட்டியே நடத்திடலாம் போலிருக்கே - 'தல' டூயட் பாடினா எப்படியிருக்கும் ? வெள்ளிமண்டையர் பாடினா எப்படி இருக்கும்னு ?

      Delete
  59. வணக்கம் நண்பர்களே...!

    ReplyDelete
  60. 1) திக்கெட்டும் பகைவர்கள்.
    2) தீபாவளி மலர்.
    3) டெட்வுட்டிக்.
    4)Yes.
    5) ஜெரோனிமோ. (இன்னும் முடிக்கல)
    6) Top gear,
    7) No.

    ReplyDelete
  61. டிசம்பர் புத்தகங்கள் வரும் நாட்களில் தான் படிக்க முடியும். படித்ததில் பிடித்தது.

    01. Album of the year - புத்தம் புது பூமி வேண்டும்

    02. அட்டைப்படம் - சித்திரமும் கொலைப்பழக்கம்.

    03. புது வரவு - டெட்வுட் டிக்

    04. ஸ்டெர்ன் - தொடரலாம்

    05. சோதனை - B & B ஸ்பெஷல்

    06. டெக்ஸ் - உசக்கே, உயரே

    07. டியூக் - வேண்டாம்

    நன்றி

    ReplyDelete
  62. ஆசிரியரின கேள்விகளுக்கான எனது பதில்கள்:
    1) இளம் டெக்ஸின் கதை. ஐந்து பாகங்களும் துளி கூட விறுவிறுப்பில் குறைவில்லாதது.
    2) அட்டைப்பட வேலைப்பாடுகளும், நகாசுகளும் செம்ம.
    3)கதையில் முதல் பக்கத்திலேயே டிக் நம்மை ஈர்க்கத்துவங்கி, அடுத்த ஆல்பத்தை எதிர்பார்க்க வைத்துவிட்டார். ஒருவேளை வண்ணத்தில் வந்திருந்தால்..
    4)கண்டிப்பாக, இந்த வெட்டியானின் அடுத்த பாகம் எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டது.
    5) சித்திரங்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. கதையும் அது போலவே. ஏனென்று சொல்லத் தெரியவில்லை.
    6) டெக்ஸின் கதை வெளியாகும் போதெல்லாம் ஒரு வித உற்சாகம் அனைவரையும் தொற்றிக்கொள்கிறது. விற்பனையும் தூள் பரத்துகிறது. அப்புறம் என்ன.. கிராஃப் டாப்புல தான் ஏறும்.
    7) ட்யூக், ஜானதன் கார்ட்லேண்ட் 2 ஆகாம இருந்தா சரி.

    ReplyDelete
    Replies
    1. ///டெக்ஸின் கதை வெளியாகும் போதெல்லாம் ஒரு வித உற்சாகம் அனைவரையும் தொற்றிக்கொள்கிறது.///

      🤩🤩🤩🤩

      தல வந்தாவே பண்டிகை தான் பத்து சார்...

      Delete
  63. சேர்க்க மறந்தது. Album of the year ல்,
    டியூராங்கோவும் இணைகிறார். அடுத்து எப்போது வருவார் என்கிற எதிர்பார்ப்புடன்.

    ReplyDelete
  64. 1. Piralaya Payanam
    2. Chithiramum Kolai pazhakkam and Lion 400.
    3. C.Thathakkal and A. Deadwood Dick
    4. Certainly. Good Story line with thin Sad Layer and Dark Comedy.
    5. e. Duke - Oru Murai Kondruvidu
    6. Thala Graph - Peak and Incline Trend
    7. Duke - Vendavae Vendam -

    ReplyDelete
  65. ப்ரசன்ட் சார்...

    ( கொஞ்சம் லேட் தான் )

    ReplyDelete
  66. தோழனை தவிர எனக்கு எல்லாமே ஓகே சார்...:-)

    ReplyDelete
  67. ///6 .நடப்பாண்டினில் 'தல' graph எப்படி ? உசக்கே செல்கிறதா ? நேர்கோட்டிலா ? கீழ்நோக்கியா ?///

    தீபாவளி மலரும், கண்ணே கொலைமானேவும் எனது முடிவை மாற்ற வேண்டிய தேவையை உருவாக்கி விட்டது என்று நினைக்கிறேன்!

    அதுக்குள்ள அவசரப்பட்டு 'தல'யில்லா சந்தாவுக்கு பணம் கட்டிபுட்டேன்! முழு சந்தாவாக மாத்திகிட வாய்ப்பு உண்டுங்களா சார்!

    தவணையை பின்னர் செட்டில் பண்ணிடலாம்!

    குறிப்பு : 50ஆம் ஆண்டில் அரைகுறையாய் பயணிக்க மனமில்லை!

    ReplyDelete
    Replies
    1. பண்ணிக்கலாம் சார் ; நாளை ஆபீசில் பேசி மாற்றச் சொன்னீர்களெனில் பார்த்துக் கொள்வார்கள் !

      Delete
    2. // அதுக்குள்ள அவசரப்பட்டு 'தல'யில்லா சந்தாவுக்கு பணம் கட்டிபுட்டேன்! முழு சந்தாவாக மாத்திகிட வாய்ப்பு உண்டுங்களா சார்! //

      சூப்பர் மிதுன்.

      Delete
    3. ./ குறிப்பு : 50ஆம் ஆண்டில் அரைகுறையாய் பயணிக்க மனமில்லை! //
      நல்ல முடிவு மிதுன் சார்...

      Delete
    4. ///
      தீபாவளி மலரும், கண்ணே கொலைமானேவும் எனது முடிவை மாற்ற வேண்டிய தேவையை உருவாக்கி விட்டது என்று நினைக்கிறேன்!
      ///

      -----இன்னொரு ரசிகரையும் தல ஈர்த்துக்கொண்டார்....

      லாலி லாலே லாலா!!!💞💕

      Delete
  68. கழுகு எப்பொழுதும் உயரத்தில் பறக்கும்.

    ReplyDelete
  69. அன்பு ஆசிரியருக்கு...
    காமிக்ஸ் ஸ்நேகங்களுக்கு 🙏...

    முத்து 50 ரெடி.ஆஹா கேக்கவே காது குளு குளுன்னு இருக்குங்க.

    சென்னை ஸ்டாலில் இடம் கிடைக்கனும் சார். நம்பிக்கை உள்ளது.
    ஆனால் மீண்டும் இந்த தொற்று அவ்வப்போது அச்சுறுத்துகிறது சார்.
    தயவுசெய்து அனைவரும் மிகமிக கவனமாக இருக்கவும்.

    LONESOME படமே கண்கவரும் விதமாக உள்ளது.கண்டிப்பாக சோடை போகாது என நம்புகிறேன்.வரவேற்கிறேன்.

    நடப்பாண்டின் "ALBUM OF THE YEAR"ல்,
    கடைசி 3 மாதங்களில் காமிக்ஸ் குழுமத்தில் இணைந்ததால், நோ கமெண்ட்.

    சென்ற ஆண்டு எப்படி போனதோ தெரியவில்லை சார்.
    ஆனால் வரும் 2022ல், லயன் காமிக்ஸ் பட்டைய கிளப்பும் என்பது கண் முன்பே தெரிகிறது சார்.
    வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.

    "இத்தனை பெரிய சந்தா தொகை கட்டனுமா? என யோசியுங்கள்" என்பது போன்ற, பல எத்தனையோ எதி(ரி)ர் மறை விமர்சனங்களை, அடுத்தாண்டு வெளிவரும் நல்ல நல்ல கதைத் தேர்வின் மூலம் உடைத்து எறிந்து விட்டீர்கள் சார்.

    மேலும் சந்தாவின் உபயோகத்தை பற்றி,
    வாட்சப்&முக நூல்களில் போட்டிகள் நடத்தி, காமிக்ஸ் பரிசு, சந்தா சலுகை என, நமது காமிக்ஸ் நண்பர்கள் ஆற்றும் பணி மிக மகத்தானது.
    யார் என்ன கேட்டாலும் சந்தாவை பற்றி இவர்கள் பேசுவது, சந்தா பற்றி தெரியாத பல காமிக்ஸ் வாசகர்களுக்கு மிக மிக உபயோகமாக உள்ளது.
    இந்த மாதிரி நட்புக்களுடன் இணைந்தது மகிழ்வே.

    பின்பு "ட்யூக்".
    ஒரு முறை கொன்றே விட்டார்.
    டெக்ஸ் க்கு இணையாக வர முடியலை என்றாலும், டைகர்,ட்யூராங்கோ,டிக்,
    ஏன் கடைசியாக வந்த பெரிசுகள் கூட்டணி வரை, பல ஹீரோக்கள் தங்களை நிலைநிறுத்த படுவேகமாக வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில்...
    மிக மிக மெதுவாக,ஒரு சுவாரஸ்யம் இல்லாமல், "மூட்டைப்பூச்சி மிஷின்" பாணியில் இந்த ஹீரோ வந்தால் என்ன செய்வது சார்?.

    பொறுமையாக,மிக மிக பொறுமையாக படித்தாலுமே, இந்த ட்யூக்கை ரசிப்பது சிரமமே. இது பலபேருக்கு சாத்தியமே இல்லை சார். ரெம்ப சோதித்த ஹீரோ இவர்.
    இவரை மீண்டும் களம் இறக்காமல் இருப்பதே நலம் சார்.

    காமிக்ஸ் படிக்க இணைந்து சில மாதங்களே ஆனாலும், முன்பின் தெரியாத , "சில" நல்ல நட்புகளுடைய நம்பிக்கையை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
    நன்றி அன்பு நட்புக்களே❤️❤️❤️❤️❤️❤️.

    மீண்டும் அடுத்த பதிவில் 🌹🌹🌹

    ReplyDelete
  70. Disclaimer : இது எனது கருத்து மட்டுமே .... YMMV

    முதலில் அடுத்த வருடம் பற்றி... அடுத்தவருடம் வர இருக்கும் கதை தேர்வுகள் 90% எனக்கு பிடித்த தேர்வுகளை உள்ளது. Including Ffs, ஸ்மாஷிங் 70, உயிரை தேடி, சுஸ்கி விஸ்கி, tex 9+++ etc .

    இப்பொழுது இந்த வருடம் பற்றி... பொதுவாக, நான் almost ஆல் books வாங்கிவிடுவேன். ஆனால் இந்த வருடம் முதல் முறையாக நிறைய புத்தகங்கள் வாங்கவில்லை. Based on editor's blog teaser , my own perception, and based on critics. அதனால் ஆசிரியரின் சில கேள்விகளுக்கு பதில் கூட சொல்ல முடியவில்லை. வருத்தமே!

    சோ..

    1 .நடப்பாண்டின் ALBUM OF THE YEAR
    Durango
    2. நடப்பாண்டின் TOP அட்டைப்படம் ?
    ஆல் hard covers
    6 .நடப்பாண்டினில் 'தல' graph எப்படி ? உசக்கே செல்கிறதா ? நேர்கோட்டிலா ? கீழ்நோக்கியா ?
    தல always டாப்
    7.ட்யூக் ? தொடரலாமா ?
    வேண்டாம் சார்

    ReplyDelete
  71. இந்த வருடம் நான் படித்ததில் - எனக்கு பிடித்தது.

    அந்தியும் அழகே டாப் தான் சார் - நன்றாக ரசித்தேன். அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    லயன் 400 டெக்ஸ் கதை வேற லெவல். கார்சனின் காமெடி, டெக்ஸ்சின் அதிரடி என்று செம்ம அதகளம் தான். கலர்ல டெக்ஸ் சும்மா அள்ளுது. (நம்ம விஜய் சேதுபதி மாடுலேஷன்ல).

    தீவாளி வித் டெக்ஸ்ல - பருந்துக்கு ஒரு பரலோகம்ல கிட்டை தூக்குல போடும் இடத்துல டெக்ஸ் என்ட்ரி செம்ம மாஸ் - சான்ஸ்ஏ இல்ல & அந்த டைமிங் என்ட்ரி வசனம் "சூறாவளி என்றைக்குமே அமைதியாய் வருவதில்லை" - உங்க மொழி பெயர்ப்புக்கு ஒரு பிக் அப்லாஸ்.

    தோழனின் கதையும் மிக நன்றாகவே இருந்தது, பலருக்கு இதில் எதிர்மறை கருத்து இருந்தாலும்.

    நல்ல கருத்தும், நாம் வாழ்வினை பார்க்க வேண்டிய கண்ணோட்டத்தையும் இதில் படித்தேன்.
    பக்கம் 76 ல் வரும் வரிகள் செம்ம மாஸ்.
    உங்க புது முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும் அன்புடன்.
    இந்த கதையை ரசித்தவன் என்பதால் உங்களுடன் பகிர்கிறேன்.

    ReplyDelete
  72. // ! FFS புக் # 1 & 2 அச்சுப் பணிகள் நாளையோடு நிறைவுறுகின்றன !! இவை இரண்டும் தான் மெகா இதழ்கள்//

    ----லாலிலாலே லாலா....😍💕💞

    ஒரு யுகத்தின் ஆகச்சிறந்த மைல்கல் இதழை கண்ணில் பார்க்கும் போது அதை உருவாக்கியவரின் உணர்வுகளை அருகில் இருந்து பார்க்கனும்போல தோணுகிறது சார்....

    FFS ஐ கையில் தடவிப்பார்க்கும்போது சீனியர் எடிட்டர் சாரின் உணர்வுகளை இங்கே பதிவிடுங்கள் மறக்காமல்...!!

    தங்களை சிறுகுழந்தையாக கையில் ஏந்தியமகிழ்ச்சிக்கு சற்றும் குறைவில்லா அளவில் இருக்கும் என கணிக்கிறேன்....

    ReplyDelete
  73. 1.இந்த வருடத்தின் பெஸ்ட்
    இரத்தப்படலம் கலர்
    2.இந்த வருடத்தின் சிறந்த அட்டைப்படம்
    லயன் 400
    3.இந்த வருடத்தின் சிறந்த அறிமுக
    நாயகன்
    ஸ்டெர்ன்
    4.ஸ்டெர்ன் தொடர்ந்திடலாமா
    டபுள் ரைட்
    5.இந்த வருடத்தில் சோதித்த இதழ்
    ஒரு தோழனின் கதை
    6.இந்த வருடத்தில் டெக்ஸ் வில்லரின்
    கிராப் எப்படி
    அருமை மிக அருமை இந்த வருடம்
    டெக்ஸ் இன்னும் பல படிகள் உயர்ந்து
    விட்டார் நிறைய சூப்பர் ஹிட்கள் அதிலும்
    லயன் 400
    திக்கெட்டும் பகைவர்கள்
    நெஞ்சே எழு
    கண்ணே கொலைமானே
    இதெல்லாம் வேற லெவல் இந்த வருடம்
    டெக்ஸின் அதகள ஆர்பாட்ட வருடம்
    7. ட்யூக் தொடரலாமா
    வேண்டாமே ரிஸ்க்

    ReplyDelete
  74. 1.இந்த வருடத்தின் பெஸ்ட்
    ஸ்டெர்ன் 1 அண்ட் 2, 
    2.இந்த வருடத்தின் சிறந்த அட்டைப்படம்
    லயன் 400
    3.இந்த வருடத்தின் சிறந்த அறிமுக நாயகன்
    ஸ்டெர்ன்
    4.ஸ்டெர்ன் தொடர்ந்திடலாமா
    Abdolutely 
    5.இந்த வருடத்தில் சோதித்த இதழ்
    That french painter story - urghh 
    6.இந்த வருடத்தில் டெக்ஸ் வில்லரின் கிராப் எப்படி
    Splendid 
    7. ட்யூக் தொடரலாமா
    Yes Yes Yes 

    ReplyDelete
  75. 1 .நடப்பாண்டின் ALBUM OF THE YEAR #####


    தாத்தாக்கள் & ஸ்டெர்ன்.

    ReplyDelete

  76. 1. ஒ.தோழனின் கதை

    2. ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ஸ்டெர்ன்

    3.தாத்தாஸ்

    4.ஓ! யெஸ்

    5.சி.கொ.பழக்கம்

    6.தல (இவருக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லியே) உசக்கேதான்

    7. முடியல


    நேரப் பற்றாக்குறை பாடாய்ப் படுத்துது.அப்புறமா வாரேன்.

    ReplyDelete
  77. 2 .நடப்பாண்டின் TOP அட்டைப்படம் ? ####


    தீபாவளி வித் டெக்ஸ் அட்டைப்படம்.

    ReplyDelete
  78. TOP அறிமுக நாயகர்ர்ர்ர் யாரோ ? ####

    1.ஸ்டெர்ன்.

    2. தாத்தாஸ்.

    3. டிக்.

    ReplyDelete
  79. ஆசிரியர் சார்,
    ஒரு பிரளய பயணம் & நெஞ்சே எழு, இரண்டும் அடுத்த மாதம் வர வாய்ப்புள்ளதா? சார்?.

    ReplyDelete
    Replies
    1. புத்தக கண்காட்சி உறுதியாகி உள்ளதால் கண்டிப்பாக வர வாய்ப்புண்டு...

      Delete
  80. 1.நடப்பாண்டின் ALBUM OF THE YEAR என்று எதைத் தேர்வு செய்வீர்களா ?

    XIII

    2 .நடப்பாண்டின் TOP அட்டைப்படம் ? - XIII & ஸ்டெர்ன்

    3 .நடப்பாண்டின் TOP அறிமுக நாயகர்ர்ர்ர் யாரோ ?


    b) ஸ்டெர்ன்

    4 .ஸ்டெர்ன் தொடர்ந்திடலாமா ? - யெஸ்

    5 .நடப்பாண்டில் ரொம்பவே சோதித்த இதழ் எது ?


    c) ஒரு தோழனின் கதை


    6 .நடப்பாண்டினில் 'தல' graph எப்படி ? உசக்கே செல்கிறதா ? நேர்கோட்டிலா ? கீழ்நோக்கியா ?

    -நேர்கோடு

    7.ட்யூக் ? தொடரலாமா ?

    இன்னொரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். முதல் கதை பெரிதாக பேசப்படாமல், இரண்டாவதில் முத்திரை பதித்தவராக இவர் வர வாய்ப்புண்டு

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு பூபதி. 7 ஆம் கேள்விக்கான பதில்.

      Delete
  81. ஜனவரி 6 முதல் 23 வரை சென்னையில் புத்தகக் கண்காட்சி.அறிவிப்பை வெளியிட்டுவிட்டது பபாசி.

    ReplyDelete
  82. ஸ்டெர்ன் தொடர்ந்திடலாமா ?//////

    தொடர்ந்திடலாம்.

    ReplyDelete
  83. .நடப்பாண்டில் ரொம்பவே சோதித்த இதழ் எது ? ////

    1.ஒரு தோழனின் கதை

    ReplyDelete
  84. .நடப்பாண்டினில் 'தல' graph எப்படி ? உசக்கே செல்கிறதா ? நேர்கோட்டிலா ? கீழ்நோக்கியா ?//////

    உசக்கே செல்கிறது.

    ReplyDelete
  85. ட்யூக் ? தொடரலாமா? /////


    வேண்டாம் சாமி ?! முடியல.

    ReplyDelete
  86. 1.நடப்பாண்டின் ALBUM OF THE YEAR என்று எதைத் தேர்வு செய்வீர்களா ?

    1.லயன்400-புத்தம் புது பூமி வேண்டும்

    2.இரத்தப்படலம்1&2புதிய தொகுப்பு

    3.டெக்ஸ் தீபாவளிமலர் 2022& திக்கெட்டும் பகைவர்கள்


    ReplyDelete
  87. 2 .நடப்பாண்டின் TOP அட்டைப்படம் ? -

    1.டியூக்

    2.சித்திரமும் கொலைப்பழக்கம்

    3.காட்டான் கூட்டம்

    (புத்தகங்கள் கடையில் இருந்ததால் இன்று எடுத்து அட்டைகளை பார்த்து போட கொஞ்சம் தாமதமாகிட்டது)

    ReplyDelete
  88. 3 .நடப்பாண்டின் TOP அறிமுக நாயகர்ர்ர்ர் யாரோ ?


    தாத்தாஸ் & ஸ்டெர்ன்

    ReplyDelete
  89. 4 .ஸ்டெர்ன் தொடர்ந்திடலாமா ? -

    நிச்சயமாக... ஸ்டெர்ன் தொடரலாம்... ரியாலிட்டியை தெறிக்கவிடும் ஆல்பம்...தொடர்ச்சியாக ஸ்லாட் தரலாம்...

    ReplyDelete
  90. 5 .நடப்பாண்டில் ரொம்பவே சோதித்த இதழ் எது ?


    சித்திரமும் கொலைப் பழக்கம்!

    ReplyDelete
  91. 6 .நடப்பாண்டினில் 'தல' graph எப்படி ? உசக்கே செல்கிறதா ? நேர்கோட்டிலா ? கீழ்நோக்கியா ?

    தல தாண்டவம் உச்சத்திற்கு போயிள்ளது மீண்டும் இந்தாண்டு...அனைத்து கதைகளும் அதிர்வெடி சரவெடி... உசக்கே உசக்கே உசக்கேனு போயிட்டே இருக்கு தலபுகழ்....பீக் எத்தனை ஆண்டு நீடிக்கும்னு பார்க்க ரொம்ப ஆவல்!

    ReplyDelete

  92. 7.ட்யூக் ? தொடரலாமா ?

    ஆடாத பிளயருக்கு அணியில் இடமில்லைங்களே!

    ReplyDelete
  93. And சந்தாக்களும், FFS முன்பதிவுகளும் செம சீராய் முன்னேறிய வண்ணமுள்ளன என்பது செம சந்தோஷ சேதி

    #########


    மிக மிக சந்தோசமான செய்தி சார்...

    ReplyDelete
  94. நடப்பாண்டின் ALBUM OF THE YEAR என்று எதைத் தேர்வு செய்வீர்களா ? ("ஹுக்கும்....இன்னும் பாதி மூட்டையை டப்பிகளிலிருந்து பிரிக்கவே இல்லே ; என் கல்யாண ஆல்பத்தை செலெக்ட் பண்ணலாமா ?" என்ற மைண்ட்வாய்ஸ்கள் கொஞ்சம் உரக்கவே கேக்கி !!)

    ########


    இளம் டெக்ஸ் ..அன்ட் லயன் 400

    ReplyDelete
  95. .நடப்பாண்டின் TOP அட்டைப்படம் ?

    3 .நடப்பாண்டின் TOP அறிமுக நாயகர்ர்ர்ர் யாரோ ?

    a) டெட்வுட் டிக்
    b) ஸ்டெர்ன்
    c) தாத்தாக்கள்
    d) ட்யூக்


    ########


    லயன் 400



    ஸ்டெர்ன்..

    ReplyDelete
  96. .ஸ்டெர்ன் தொடர்ந்திடலாமா ?

    தாராளமாக....

    ReplyDelete
  97. சோதித்த இதழ்..


    தோழனின் கதை

    ReplyDelete
  98. நடப்பாண்டினில் 'தல' graph எப்படி ? உசக்கே செல்கிறதா ? நேர்கோட்டிலா ? கீழ்நோக்கியா ?


    சர்ர்ர்ர்ர்ன்னு ராக்கெட் மாதிரி கண்ணுக்கு தெரியாம படு வேகமா மேலே போகுது சார்...

    7.ட்யூக் ? தொடரலாமா ?

    சொல்ல தெரியல சார்..

    ReplyDelete
  99. 1. அனைத்து டெக்ஸ் ஆல்பங்களும், ஒன்று மட்டுமே எனில் தீபாவளி மலர்
    2. அனைத்து டெக்ஸ் ஆல்பங்களும், ஒன்று மட்டுமே எனில் கண்ணே கொலைமானே
    3. தாத்தாக்கள்
    4.
    5. ஜெரோனிமா, ஒரு தோழனின் கதை. சிகொப இன்னும் படிக்கல.
    6. தல என்றைக்கும் டாப்புதான்
    7.

    ReplyDelete
  100. This comment has been removed by the author.

    ReplyDelete
  101. This comment has been removed by the author.

    ReplyDelete
  102. 200 வெற்றி வெற்றி

    ReplyDelete
  103. 1.நடப்பாண்டின் ALBUM OF THE YEAR என்று எதைத் தேர்வு செய்வீர்களா ?

    காட்டான் கூட்டம்
    அந்தியும் அழகே

    2 .நடப்பாண்டின் TOP அட்டைப்படம் ? - Stern பின் அட்டை படம்

    3 .நடப்பாண்டின் TOP அறிமுக நாயகர்ர்ர்ர் யாரோ ?

    தாத்தாக்கள்
    Stern

    4 .ஸ்டெர்ன் தொடர்ந்திடலாமா ? - கண்டிப்பாக அதுவும் மூன்றாம் பாகம் நன்றாக இருக்கும் என்று தெரிந்தபின்.

    5 .நடப்பாண்டில் ரொம்பவே சோதித்த இதழ் எது ?

    மாடஸ்தி & பாண்ட்
    தயவு செய்து அந்த ஒரு ஸ்லாட் வேறு யாருக்காவது கொடுங்கள்


    6 .நடப்பாண்டினில் 'தல' graph எப்படி ? உசக்கே செல்கிறதா ? நேர்கோட்டிலா ? கீழ்நோக்கியா ?

    கண்டிப்பாக கீழ் நோக்கி இல்லை. சற்று மேலே பின் நேர்கோட்டில்

    7.ட்யூக் ? தொடரலாமா ?

    ஹிட் ஆன யாருக்கும் பாதிப்பு இல்லை என்றால் கொடுத்து பார்கலாம் ஆர்ட் வொர்க்காக

    ReplyDelete