Powered By Blogger

Wednesday, December 29, 2021

செய்வன "த்ரில்லாய்ச்" செய் !

 நண்பர்களே,

முன்குறிப்பு : "நான் கொஞ்சம் பிசி ; உன் மொக்கையை முழுசா படிக்க இப்போ நேரமில்லை !" என்று சொல்வோரா நீங்கள் ? நேராக பதிவின் கடைசிப் பகுதியில் சிகப்பில் உள்ள வரிகளுக்கு ஜம்ப் பண்ணி வாசித்த கையோடு நீங்கள் புறப்பட்டு விடலாம்  ! மாறாக, "லீவிலே தான் இருக்கேன் ; தோசை சுடற நேரத்திலேயோ ; பாத்திரம் தேய்க்குறே நேரத்திலேயோ வாசிச்சிப்புடுவேன் !" என்போரா நீங்கள்  ? - carry on with the reading !!

வணக்கம். கோலிவுட் பட க்ளைமாக்ஸ் காட்சிகளில் அடிக்கொரு தடவை பார்த்திருப்போம் - ரயில் கிளம்பி வேகம் எடுக்க ஆரம்பிக்கும் போது, பிளாட்பார்ம் டிக்கெட் கூட எடுத்திருக்காத ஈரோ சார் ரத்தம் சொட்டச் சொட்ட கையை நீட்டியபடிக்கே ஓடியாருவார் & ரயில் பெட்டியின் வாசலில் தொங்கிக்கொண்டே நிற்கும் ஈரோயினி கையை நீட்டியபடிக்கே "பிராணநாதா...கமான் ..கமான்  !!" என்று கிண்டியில் ரேசுக்குப் போகிறவரைப் போல கூவிக் கொண்டிருப்பார் ! இந்த மாதிரியான சீன்களைப் பார்க்கும் போதெல்லாம் - 'ஏண்டாப்பா டேய்...அது தான் ரயில் ரெண்டு நிமிஷத்தில் கெளம்பிடும்னு தெரியுமில்லே ? ரெண்டு நிமிஷங்களுக்கு முன்னே வந்து தொலைச்சிட்டா குடியா முழுகிடும் ?' என்று கடுப்பாக இருக்கும் ! ஆனால்..."செய்வன 'த்ரில்லாய்ச்' செய் " என்ற சினிமாக்களின் தாரக மந்திரங்களை அத்தினி சுலபமாய் மாற்ற முடியாது தானே ? ; so ரயில்வே ஸ்டேஷன்களின் slow motion sequences தொடர்ந்து கொண்டே இருக்கின்றன !

'அது சரி, இந்த விளக்கமெல்லாம் இப்போ எதுக்குடா தம்பி ?' என்கிறீர்களா ? Simply becos எரிச்சல்மூட்டும் அந்த ஈரோ சார் last நிமிட்டில் ஓடியாரும் சீனுக்கு நிகரான காட்சிகள் நம் தரப்பிலும் இவ்வாரத்தில் அரங்கேறி வந்துள்ளன & 'தேமே' என்று அவற்றைப் பராக்குப் பார்த்து வர வேண்டிப் போனது எனக்கு !! 

*FFS எனும் concept இறுதியானது 7 மாதங்களுக்கு முன்பாய் !!

*FFS இதழினை டிசம்பர் 29 -ம் தேதிக்கு டெஸ்பாட்ச் செய்திட வேண்டுமென தீர்மானித்ததும் அதே 7 மாதங்களுக்கு முன்பாய் !!

*FFS-ன் கதைகளுக்கு ஏற்பாடுகள் பூரணமானது 5 1/2 மாதங்களுக்கு முன்பாய் !

*FFS-ன் ஒட்டு மொத்த மொழிபெயர்ப்பும் ; டைப்செட்டிங்கும் ; எடிட்டிங்கும் நிறைவுற்றது 1 1/4  மாதங்களுக்கு முன்பாய் !

*FFS-ன் ஒட்டு மொத்த அச்சுப் பணிகளும் நிறைவுற்றது டிசம்பர் 10 தேதிக்கு !

நியாயப்படிப் பார்த்தால் பைண்டிங் & இத்யாதி வேலைகள் நிதான வேகத்தில் நடந்திருந்தால் கூட கிறிஸ்துமஸுக்குள் புக்ஸ் கைக்கு வந்திருக்க வேண்டும் & 4 நாட்கள் சாவகாசமாய் கிட்டியிருக்கும் - நம்மாட்கள் டெஸ்பாட்ச் செய்திட ! இது தான் இந்த டைரடக்கரின் திட்டமிடல் ! ஆனால் அட்டைப்பட டிசைனுக்கு போராட்டம் ; பைண்டிங்கில் சதிராட்டம் ; கனத்த பொட்டிகளுக்கோசரம் குத்தாட்டம்  என்று குறுக்கால நிறைய சண்டைக் காட்சிகள் அரங்கேறியதன் பலனாய், புக்ஸ் திங்கள் இரவுக்குத் தான் ஆபீஸ் வந்து சேர்ந்தன ! 

புக்ஸ் வந்து இறங்கும் போதே - "நாளைக்கே இம்புட்டையும் அனுப்பப் சொல்லி சாமியாடுவானே ? இந்த காண்டாமிருகக் கனத்திலான டப்பிக்குள்ளாற புக்ஸை அடைச்சு, வாயை ஓட்றதுக்கே ஆளாளுக்கு அரை டஜன் இட்லிக்களை கூடுதலா சாப்பிட தேவைப்படுமே ?"  என்ற நம்மாட்களின் பீதி தோய்ந்த மைண்ட்வாய்ஸ் எனக்குக் கேட்காத குறை தான் ! ஒண்ணு...ரெண்டு..மூணு....நாலு ...என குடும்பம் குட்டியோடு FFS ஆபீசுக்குள் வலது காலை எடுத்து வைத்துப் புகுந்த நொடியில், நம்மாட்களுக்கு உட்காரக் கூட இடம் நஹி ! So 'அடுத்த சில நாட்களுக்கு ஞான் ஆத்தும் டீயை வெளியிலே வைச்சு ஆத்திக்கும் ; நிங்கள் எண்ட ரூமை எடுத்துக் கொள்ளுங்கோ !' என்றபடிக்கே என் ரூமை திறந்து மொத்தத்தையும் அங்கே இறக்கச் செய்தேன் ! அப்பாலிக்கா ஆரம்பிச்சது தான் பாம்பே சர்க்கஸ் !!

டப்பிக்கள் நாம் எதிர்பார்த்ததைவிடவும் முரட்டுத்தனமாய் அமைந்து போயிருக்க, பசையின் ஈரம் காய்ந்த பாடைக் காணோம் !! "காய போடுங்க...விரிச்சுக் காய போடுங்க !" என்றபடிக்கே FFS மெயின் புக்ஸ்களை வேக வேகமாய்ப் புரட்டினேன் ! கடந்த 6 மாதங்களாய் என்னோடு வீட்டில் குடித்தனமே நடத்தியிருந்த அத்தனை கதை மாந்தர்களையும் புக்கில் பார்க்கும் போது கும்பகோணத்து அசோகா அல்வாவைப் பார்த்தது போல குஷியாய் இருந்தது ! Alpha....ம்ம்ம்...சிஸ்கோ...என்றபடிக்கே பக்கங்களைப் புரட்டினால்.திடு திடுப்பென சிஸ்கோவுடன், டேங்கோவும் ஆஜராகியிருக்கக் கண்டேன் ! "இது எப்போ இவங்க கூட்டணி போட்டாங்க - எனக்கே தெரியாம ?" என்றபடிக்கே புரட்டினால் - பைண்டிங்கில் பக்கங்களைத் தப்பாக வைத்துத் தைத்து விட்டிருப்பது புரிந்தது ! 'போலீஸ்...ஆம்புலன்ஸ்...பயர் சர்வீஸ்..மிலிட்டரி' என கூவாத குறையாய் நான் கத்திக் கூப்பாடு போட்டதில் 3 பேர் பைண்டிங் ஆபீசுக்கே ஓட்டமெடுத்திருந்தனர் - அங்கே பணி நடந்து கொண்டிருந்த பாக்கிப் பிரதிகளிலும் இது போலான குளறுபடி ஏதேனும் நேர்ந்துள்ளதாவென்று சரி பார்க்க ! ஆபீஸிலோ அத்தனை பேரையும், அவரவரது வேலைகள் என்னவாக இருப்பினும், தூக்கி ஓரம் கட்டிவிட்டு, புக்ஸை புரட்டச் சொல்லிப் பணித்தேன் ! 'சரி, நம்மாட்களில் யாரும் இதில் அரைப் பக்கத்தைக் கூடப் படிக்கும் பொருட்டு புரட்டப் போவதில்லை ; இப்புடியாச்சும் முழு புக்கையும் புரட்டட்டுமே !!' என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டேன் ! புரட்டினார்கள்.. புரட்டினார்கள்.... வாழ்க்கையின் ஒரத்துக்கே போகும் வரைப் புரட்டினார்கள் & at the end of it - மொத்தம் 3 புக்ஸ் மட்டும் உல்டா புல்டா பக்கங்களோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது ! And அங்கே பைண்டிங்கில் இன்னொரு 6 பிரதிகள் !! 'அவற்றைக் கடாசுங்கள்' என்றபடிக்கே லைட்டாக ஒரு பெருமூச்சை விட்டுக் கொண்டேன் ! 

ஆனால் அது சற்றே அவசரப்பட்ட பெருமூச்சாகிப் போனது ! Becos ஜவ்வு மிட்டாய் படலங்கள் ஓய்ந்த பாடில்லை !!

இதழ்களில் இரண்டு - செம பருமன் எனும் போது, வாசிப்பு அடையாளங்களுக்கென bookmarks அவசியமாச்சே ?! And ஒன்றுக்கு நான்காய் அவற்றைத் தந்திடும் மஹாசிந்தனை கொஞ்சம் தாமதமாகவே எழுந்திருந்தது எனக்கு ! 'ரைட்டு...அதை டிஜிட்டலில் பிரிண்ட் போட்டால் ஒரு மணி நேரத்தில் வாங்கிப்புடலாமே' என்றபடிக்கே கோகிலாவுக்கு ஓலை அனுப்பினோம் - டிசைன் பண்ணி அவசரமாய் அனுப்பப் சொல்லி ! அந்தப் பொண்ணும், நமது அவசரம் புரிந்தவராய் மின்னல் வேகத்தில் அனுப்பி வைக்க, மைதீனிடம் கொடுத்து டிஜிட்டல் பிரிண்ட் போட அனுப்பினால், மண்டையைச் சொரிந்தபடிக்கே திரும்பினான் - ""டிஜிட்டல் ஸ்டுடியோவில் செம ரஷில் பணிகள் ஓடி வந்ததன் பலனாய் அவர்களிடம் பிரிண்டுக்கான Toner Inks காலியாகிடுச்சாம் ; நாளை தான் பெங்களூரிலிருந்து வருமாம் !" என்றான் ! ஊருக்குள் டிஜிட்டல் பிரின்டர்ஸ் நிறையவே இருந்தாலும், நாம் செல்வது அவர்களுள் லேட்டஸ்ட்டான மிஷினை வைத்திருக்கும் நிறுவனத்துக்கே & அவர்கள் தரும் ரிஸல்ட்ஸ் செமையாய் இருக்கும் ! மற்றவர்களிடம் அந்தத் தரம் இருப்பதில்லை என்பதை அனுபவத்தில் பார்த்துள்ளோம் ! கையைப் பிசைந்தபடிக்கே நில்லாமல்,  இங்கும் அங்குமாய் விசாரித்துவிட்டு சிவகாசியின் புறநகரில் உள்ள இன்னொரு புதுவரவிடம் ஓடினோம் ! Wow - அவரும் ஒரு புத்தம்புது மிஷினை வைத்திருந்தார் and மாதிரிகளை போட்டுப் பார்த்தோம் - செம ஹேப்பி ! 

ரைட்டு...பிரிண்ட் போட்டு வாங்கி வந்தால் வேலை முடிந்தது என்றபடிக்கே ஆபீசுக்குத் திரும்பி 'ஆபரேஷன் ரவுண்டு பன்' ஆரம்பித்தோம் ! போனவாட்டியே மிஸ் ஆன ரவுண்டு பன்னை இம்முறையாச்சும் உள்ளே நுழைக்கணுமே - என்றபடிக்கு ஒரு பன்னை வாங்கியாந்து டப்பிக்குள் புக்ஸோடு வைத்து ஒட்டி விட்டு, மொத்து மொத்தென்று நாலுவாட்டி கீழே போட்டுப் பார்த்தேன் - 'கூரியர் டெஸ்டிங்..கூரியர் டெஸ்டிங்' என்றபடிக்கே ! அப்புறமாய் பாக்ஸைப் பிரித்து பன்னும், புக்ஸும் நலமா ? என்ற பரிசோதித்தோம் ! கிங்கரர்கள் போல புக்ஸ்சார் அனைவருமே திடமாய், தாட்டியமாய் இருக்க, ரஷ் அவரில் பஸ்சுக்குள் சிக்கிய ஓமக்குச்சி நரசிம்மன் போல பன் பிதுங்கிக் கிடந்தது ! பொட்டியைத் திறந்த நொடியில் இது கருவாடாட்டம் வெளிப்பட்டால் சுகப்படாதே என்றபடிக்கே பன்னுக்குப் பதிலாய் என்ன வைக்கலாம் ? என்ற அவசர ஆலோசனைக்குழு போட்டு ஆராய்ந்தோம் ! மிகச் சரியாக அந்நேரம் தான் நம்ம STV அன்போடு அனுப்பியிருந்த மெகா திருப்பதி லட்டு பார்சலும் கூரியரில் வந்து சேர, பெருமாளின் பிரசாதத்தை கொஞ்சமாய் வாயில் போட்டபடிக்கே - "பன்னுக்குப் பதிலாய் லட்டு !! போய் இருக்கிற லட்டுகளிலே ஒரு சேம்பிள் வாங்கிட்டு வா மைதீன் !" என்று தீர்மானித்தேன் ! சோட்டா பீம் லட்டு ; திருப்பதி லட்டு ; ஸ்பெஷல் லட்டு - என 3 கிரேடுகளில் லட்டுக்கள் ஆஜராயின & மறுக்கா நாசா விஞ்ஞானிகளைப் போல "டப்பி ஓபன்...புக்ஸ் + லட்டு பேக்கிங்...டப்பி க்ளோஸ்....டப்பி crash test " என்ற பரிசோதனைகளை செய்து பார்த்தோம் ! மூன்று லட்டுக்களும் பூந்தியாய் மட்டுமே வெளியேறின இந்தப் பரிசோதனையின் முடிவில் ! மனம் தளராது - பேப்பரில் பேக் செய்யப்பட்டிருக்கும் plum cake ஒன்றை வாங்கி வரச் சொல்லி உள்ளே நுழைத்துப் பார்த்தால், ஊஹூம்..அது உள்ளே நுழைந்த பாடையே காணோம் ! "பக்கி பசிக்குதுனு எதையாச்சும் வாங்கித் தின்னுறானா ? இல்லாங்காட்டி மெய்யாலுமே டெஸ்டு தான் பண்ணுறானா ?" என்ற சந்தேகம் மைதீனுக்கு எழுந்துவிடக்கூடும் என்பதால் மேற்கொண்டு மைசூர்பாகு ; சூஸ்பெரி ; ஜாங்கிரி போன்ற ஐட்டங்களை வாங்கி வரச்சொல்லும் யோசனைகளைக் கைவிட்டேன் ! "ஸ்வீட் எடு..கொண்டாடு...!" என்று மாமூலுக்குத் தீர்மானித்த கையோடு, எலி சைசில் அல்லாது, நார்மல் அளவிலான சாக்லெட்டை வாங்கிட்டு வாப்பா !" என்று பணம் கொடுத்து அனுப்பிவைத்தேன் ! Sorry guys ; இந்தவாட்டியும் பன் கதை - அல்வா கதையாகிப் போய் விட்டது ! But ரொம்பச் சீக்கிரமே காத்திருக்கும் நமது Online புத்தக விழாவினில் - எல்லா கொள்முதல்களுக்குமே ஒரு ரவுண்டு பன் நிச்சயமாய் அனுப்பிடப்படும் ! Thats a promise !! பன்னின்றிப் பிரதிகள் வாராது !!

கொடுக்கப்பட்டிருந்த பணிகள் அனைத்தையும் முடித்து விட்டு, what next ? என்ற கேள்வியோடு நம்மாட்கள் நிற்க - அதற்குள்ளாக அவர்களை கசரத்து வாங்க அடுத்த பணியோடு காத்திருந்தேன் ! நீரின்றி அமையாது உலகு ; ஸ்டிக்கரின்றி அமையாது புக்கு ! So 2 திருத்தங்கள் பண்ணிட அவசரம் அவசரமாய் ஓட்டமெடுத்தனர் ஸ்டிக்கர்களை பிரிண்ட் செய்து வாங்கி வர ! இப்போதெல்லாம் நம்மாட்கள் எதுக்குமே அசருவதில்லை தான் ; ஆந்தை மண்டையன் ஒவ்வொருவாட்டியும் ஏதாச்சும் கோக்கு மாக்காகப் பண்ணச் சொல்லிக் குடலை உருவாது இருக்கமாட்டான் என்பது அவர்களை பொறுத்தவரைக்கும் ஒரு given ! ஆரம்பித்த ஸ்டிக்கர் ஒட்டல்ஸ் இரவு ஒன்பது வரை தொடர்ந்தது ! Phew !! இதற்கு மேலும் பெண்டு நிமிர்த்திட வேண்டாமென்று 'இன்று போய் நாளை வாங்கோ !' என்று வழியனுப்பினேன் ! 

ரைட்டு...புக்ஸ் சரி பார்த்தாச்சு ; புக் மார்க்ஸ் ரெடி ; சாக்லெட்டும் ரெடி ; டப்பாக்களும் ரெடி - பேக்கிங் ஆரம்பிக்கலாமென்றால் - அழகுக்கு அழகேற்றும் போட்டோக்களுடனான அவரவரது புக்ஸ்களை அவரவரது சந்தா / முன்பதிவு நம்பர்களோடு tally செய்து சரியாய் அனுப்பிடும் படலம் காத்திருந்தது ! ஆசை ஆசையாய் புக்கைத் திறந்து, பிள்ளைகளிடம் அவர்களது போட்டோக்களைக் காட்டும் ஆர்வத்தோடு இருப்பவர்களுக்கு, வேறேதேனும் பூச்சாண்டி மாமாவின் போட்டோ வெளிப்பட்டால் மெய்யாலுமே சங்கடமாகிப் போய்விடுமல்லவா ? So சந்தாவில் இருப்போரில்  போட்டோஸ் அனுப்பியோர் யார் ? ; போட்டோஸ் அனுப்பாதோர் யார் ? ; ஆன்லைனில் FFS முன்பதிவுகள் மட்டும் செய்து அவற்றுடன் போட்டோஸ் அனுப்பியிருப்போர் யார் ? ; அப்புறம் ஏஜெண்ட்களிடம் ஆர்டர் செய்து அவர்கள் வாயிலாய் போட்டோக்களை அனுப்பியிருப்போர் யார் ? - என ரகம் ரகமாய் பிரித்திட வேண்டியிருந்தது ! நம்மாட்கள் இன்றைக்கு காலையில் எட்டு மணிக்கெல்லாம் ஆஜராகி விட்டிருக்க, போட்டோஸ் sorting படலம் துவங்கியது ! And ஒன்பதரைக்கு ஆபீஸ் வந்து சேர்ந்த நேரம் முதலாய், தினுசு தினுசாய் அவ்வப்போது நான் சுட்டு வைக்கும் இது போலான இடியாப்பங்களை அவர்கள் கையாளும் நேர்த்தியை ரசித்துக் கொண்டிருக்கிறேன் ! சரிபார்த்துப், பார்த்து  டப்பாக்களுக்குள் அவர்கள் புகுத்தும் புக்ஸ்களின் முதல்பக்கத்தினிலிருந்து அவ்வப்போது புன்னகைக்கும் உங்களின் போட்டோக்களை பார்க்கும் போது மெய்யாலுமே எனக்கே ஜிவ்வென்றிருந்தது  ! Guys - இந்த இதழின் பாக்கி 311  பக்கங்களுமே உங்களுக்கு ரசிக்காது போனாலும் கூட, இதனில் நீங்கள் cherish செய்திட உருப்படியாயொரு காரணம் இருக்கவுள்ளது ; போட்டோக்கள் அனைத்துமே செம !! 

So நடு நடுவே உங்களின் எண்ணற்ற போன்களுக்குப் பதில் சொல்லியபடிக்கே நடந்த தெறிக்கும் பேக்கிங் படலமானது  ஒரு வழியாய் நிறைவுற்று, சந்தாக்கள் + FFS முன்பதிவுகள் முழுசும் கூரியர்களுக்குப் பயணமாகி விட்டன ! And நாளை காலை முதலாய் உங்கள் இல்லக் கதவுகளைத் தட்டிட FFS குடும்பம் தயாராகயிருக்கும் - - கூரியர் நண்பர்கள் மனசு வைக்கும் பட்சங்களில் ! உங்களின் உள்ளக் கதவுகளையுமே அவை தட்டிட வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனைகள் !! All Fingers Crossed !! 

எது எப்படியோ - எனக்குள் ஒருவித PPD syndrome ! "இது என்னடா டேய் புதுக் கரடி என்கிறீர்களா ?"   10 மாசம் வயிற்றில் பிள்ளையைச் சுமந்து பயணிக்கும் தாய்க்கு, பிரசவத்துக்குப் பின்பாய் ஒரு வித மனச்சோர்வு ; ஒரு தற்காலிக வெறுமை தோணுமாம் ! அதனை PostPartum Depression என்கிறார்கள் ! நாம பிரசவத்தைக் கண்டோமா - வயிற்றில் சுமக்கும் அனுபவங்களைக் கண்டோமா  - இந்த PPD-தனை உணர்ந்திருக்க ? நாம் வளர்க்கும் வயிறுகளெல்லாமே பரோட்டாக்களும், பிரியாணிகளும் தரும் உபயங்கள் தானே ? இருப்பினும், என்னால் இந்த நொடியில், அந்தத் தாய்களின் உணர்வுகளோடு சன்னமாய்...ரொம்பச் சன்னமாய்  relate செய்திட முடிகிறது ! ஒரு பிரசவத்தின் பாதி அவகாசமே FFS எனும் இந்தக் கனவை நான் சுமந்து திரிந்திருப்பேன் ! And சுமந்து திரிந்த நாட்களின் ஒவ்வொன்றுமே ஏதோ ஒருவித  நோவையோ, படபடப்பையோ கொண்டு வந்தவைகளே ! ஆனால் இன்று அந்தக் கனவைத் தரையிறக்கிய வேளையில், தாண்டி வந்துள்ள ஒவ்வொரு நாளுமே விலைமதிப்பற்றவைகளாகத்  தென்படுகின்றன ! மாநிறமோ, ஆப்பிள் நிறமோ  ; குட்டையோ, நெட்டையோ ; வத்தலோ , தொத்தலோ - அந்தக் கனவெனும் மழலை(களை) இறக்கி வைத்த  நிம்மதியோடு ஒரு சன்னமான வெறுமையுமே உணர்கிறேன் !! தொடரும் நாட்களில் அந்த மழலை(கள்) ஓடியாடிடத் துவங்கிட்டால் - அந்த வெறுமையின் இடத்தில் சந்தோஷம்  குடியேறும் என்பது நிச்சயம் ! புனித மனிடோ அருள் புரிவாராக நம் மழலை(கள்) மீது !!

Happy Reading all !! And Advance Wishes for a Wonderful 2022 !! தொடரும் நாட்களில் நமது FFS குடும்பத்துக்குமே கொஞ்சம் நேரம் ஒதுக்கிட முனையுங்களேன் - ப்ளீஸ் ? 

And புத்தாண்டின் தினத்திலோ, அதன் மறுநாளான ஞாயிறிலோ சீனியர் எடிட்டருடன் அளவளாவ எண்ணிடும் பட்சத்தில் ஒரு ZOOM மீட்டிங்கையோ  ; அது போல ஏதோவொன்றையோ ஏற்பாடு செய்திடலாம் ! ஆர்வமிருப்பின் சொல்லுங்களேன் - ஜூனியரைக் கொண்டு ரெடி பண்ணிடலாம்  ! Bye all ....see you around soon !386 comments:

 1. இதோ நானும் சார்..

  ReplyDelete
 2. ஆனால், பதிவை முழுதும் படிக்கவில்லை...

  ReplyDelete
  Replies
  1. "புக்ஸ் அனுப்பியாச்சு" என்பதைத் தாண்டி முக்கிய சேதி எதுவும் லேது நண்பரே ;

   Delete
  2. _புக்ஸ் அனுப்பியாச்சு" - ரொம்ப சாதாரண வார்த்தையாகத் தெரியலாம் சார்..
   ஆனால், முழு பதிவையும் படிக்கும் போது - உங்கள் உழைப்பு-உங்களுடன் ஒத்துப் பாடி மற்றவர்களின் உழைப்பு-சிறப்பாகத்தான் செய்வேன் என்ற அந்த அதீத மெனக்கெடல்கள்-
   பாராட்டவோ - நன்றி சொல்லவோ வார்த்தைகள் போதாது தான்..
   சிறுபிள்ளைத்தனம் என்றெல்லாம்-தோன்றவில்லை சார்.. ii
   .இந்த தடவை பார்சலை பிரித்து- FFS. - இதழை கையில் ஏந்தி முத்தம் கொடுத்துவிட்டுத்தான். இதழை பிரித்து படிக்கப்
   போகிறேன்..நன்றிகள் சார்.. உங்கள் PPD-அனுபவத்திற்கு..
   இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் அலுவலக நண்பர்களுக்கும்..

   Delete
 3. உங்கள் ஆர்வத்துக்கும் உழைப்புக்கும் வணக்கம்

  ReplyDelete
 4. வணக்கம் நண்பர்களே...

  ReplyDelete
 5. //பக்கி பசிக்குதுனு எதையாச்சும் வாங்கித் தின்னுறானா ? இல்லாங்காட்டி மெய்யாலுமே டெஸ்டு தான் பண்ணுறானா ?" என்ற சந்தேகம் மைதீனுக்கு எழுந்துவிடக்கூடும் என்பதால் மேற்கொண்டு மைசூர்பாகு ; சூஸ்பெரி ; ஜாங்கிரி போன்ற ஐட்டங்களை வாங்கி வரச்சொல்லும் யோசனைகளைக் கைவிட்டேன்// :-))

  சத்தம் போட்டு சிரித்துவிட்டேன் :-))

  ReplyDelete
 6. வணக்கம் சார்🙏
  ஹாய் ப்ரெண்ட்ஸ்💞

  ReplyDelete
 7. செஞ்சிடுவோம் .... குற்றாலத்தில் இருந்து உங்கள் பரணி:-)

  ReplyDelete
 8. /// And நாளை காலை முதலாய் உங்கள் இல்லக் கதவுகளைத் தட்டிட FFS குடும்பம் தயாராகயிருக்கும் - - கூரியர் நண்பர்கள் மனசு வைக்கும் பட்சங்களில் ! ///


  -----யாஹீ..ஹீ...ஹீ....கர்ராயாஆஆஆஆஆஆ

  ReplyDelete
 9. பதிவை படித்து விட்டு பிறகு வருகிறேன். குற்றாலநாதர் கூப்பிடுகிறார் :-)

  ReplyDelete
  Replies
  1. அதற்கடுத்த ஸ்டாப் கணபதியா ? பார்டரா சார் ?

   Delete
 10. Zoom meetingக்கு double ready...

  ReplyDelete
  Replies
  1. இந்த கேள்வி எல்லாம் கேட்கவே கூடாது. வெகு நாட்கள் ஆகி விட்டது சார். Zoom மீட்டிங் ஏற்பாடு செய்யுங்கள் சார். நன்றி

   Delete
 11. ஆத்தா நான் 10,(வது)ங் கிளாஸ் பாஸ் பண்ணீட்டேன்!!

  ReplyDelete
 12. டைப் பண்ணும்போது பத்து ல இருந்தேன்...இப்போ 17 ?! ஏதோ உள்நாட்டு சதி!!

  ReplyDelete
  Replies
  1. உங்க மனசை போல வயசும் அதானே சார்...!

   Delete
 13. Yes - to E-meeting with all of you - please set it up sir !

  ReplyDelete
  Replies
  1. அந்த நொடி - சீனியரின் day in the sun சார் !

   இந்த சன்னோ ; எந்தன் சன்னோ maybe இன்னொரு தருணத்தில் !! FFS இதழ்களினுள் நீங்களெல்லாம் புகுந்து அலசி, ஆராய்ந்திட்ட பின்னானதொரு தினத்தில் maybe !

   Delete
 14. // And நாளை காலை முதலாய் உங்கள் இல்லக் கதவுகளைத் தட்டிட FFS குடும்பம் தயாராகயிருக்கும் //
  இதைவிட ஆனந்தம் வேறென்ன சார் வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆமா திருவிழா ஆரம்பம். புது வருடம் பிறந்து விட்டது. சக்சஸ்

   Delete
 15. //'ஆபரேஷன் ரவுண்டு பன்' ஆரம்பித்தோம் ! போனவாட்டியே மிஸ் ஆன ரவுண்டு பன்னை இம்முறையாச்சும் உள்ளே நுழைக்கணுமே//

  அப்படி என்ன அந்த ரவுண்டு பன்ல ஸ்பெஷல், அடிக்கடி இந்த ரவுண்டு பன்னு பத்தி இங்க பேச்சு அடிபடுதே எங்க ஏரியாலேயும் தான் ரவுண்டு பன் விக்குது. (ஒரே சிந்தனை)

  ReplyDelete
 16. // "பக்கி பசிக்குதுனு எதையாச்சும் வாங்கித் தின்னுறானா ? இல்லாங்காட்டி மெய்யாலுமே டெஸ்டு தான் பண்ணுறானா ?" //

  சார் செம காமெடி :-)

  ReplyDelete
  Replies
  1. //"லீவிலே தான் இருக்கேன் ; தோசை சுடற நேரத்திலேயோ ; பாத்திரம் தேய்க்குறே நேரத்திலேயோ வாசிச்சிப்புடுவேன் !" என்போரா நீங்கள்?//

   முதல் பத்தியிலேயே தெறி காமெடி

   Delete
 17. சென்னை புத்தக விழா ஏற்பாடு பற்றி ஏதும் சொல்லுவீங்கன்னு நினைச்சேன்.

  ReplyDelete
  Replies
  1. நாமெல்லாம் ஓரமாய் நின்னு ஸ்டால் ஒதுக்கீடுக்காக விண்ணப்பித்துக் காத்திருக்கும் non members நண்பரே ! நல்ல சேதியாய் கிடைக்கும் வரைக்கும் நாம் செய்யக்கூடியது பொறுமை காப்பதே !

   Delete
  2. நம்ம ஸ்டால் இல்லை என்றால் எங்களுக்கு எல்லாம் புத்தக விழா ஒரு எட்டி காய் போல கசப்பு தான்.
   கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது சார். இறைவன் அருள் புரிவார் நமக்கு.

   Delete
 18. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. வந்தாச்சுங்க. பாதிப் பதிவு படிக்க படிக்க சிரிப்பு அடக்க முடியலீங்க. அதனால் ப்ரேக். மறுக்கா போயி படிச்சிட்டு வரேன்.

  ReplyDelete
  Replies
  1. டீ போட்ட கெட்டிலைக் கழுவ தானே போறீங்கன்னு உங்க மச்சான் கேக்க சொன்னாரு சார் !

   Delete
  2. எப்படித்தான் கண்டுபிடிகிறாங்களோ..!!???)))

   Delete
  3. 🤔. நம்ம ரகசியமெல்லாம் எப்படி இப்படி வெளியே வருது?🤔

   Delete
  4. மகி: "உள்ள அழுகிறேன்.. வெளிய சிரிக்கிறேன்..
   நல்ல வேஷந்தான்.. வெளுத்து வாங்குறேன்.."
   மத்தவுக : இந்த வேதனை யாருககுத்தான் இல்ல..

   Delete
 20. வந்துட்டேன் வந்துட்டேன்

  ReplyDelete
 21. புத்தகம் கிளம்பிடுச்சுங்கோ....

  ReplyDelete
 22. Zoom meeting க்கு நானு ரெடி

  ReplyDelete
 23. புத்தகங்களை குறித்த நேரத்தில் சேர்ப்பிக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் எல்லோரும் படும் சிரமங்கள் தான் எத்தனை எத்தனை - வியக்க வைக்கிறது எடி சார், உங்களின் ஆர்வமும், ஈடுபாடும்.

  அந்த சிரமங்களை கூட ரசிக்கும் விதத்தில் அழகிய எழுத்து / வசன நடையில் இங்கு பதிவிடுவது சிறப்பு.

  உங்களுக்கும் அங்கு பணி புரியும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள் அன்புடன்.

  ReplyDelete
 24. // நாளைக்கே இம்புட்டையும் அனுப்பப் சொல்லி சாமியாடுவானே ? இந்த காண்டாமிருகக் கனத்திலான டப்பிக்குள்ளாற புக்ஸை அடைச்சு, வாயை ஓட்றதுக்கே ஆளாளுக்கு அரை டஜன் இட்லிக்களை கூடுதலா சாப்பிட தேவைப்படுமே ?" //
  சிரிப்பு வந்துடுச்சி சார்,ஹா,ஹா,ஹா...

  ReplyDelete
 25. நீங்கள் கூறிய விவரிப்பில் அப்படியே மனதில் படமாக ஓட ஒரு காமெடி படம் பார்த்த உணர்வு. உங்கள் முக பாவங்கள் பணியாளர்களின் நிலை. பண் முதல் லட்டு வரையான டெஸ்டிங் என சிரித்து முடியவில்லை.

  ஆனால் அதில் உள்ள கஷ்டம் புரிந்தது சார் எங்களுக்கு டிசம்பரில் ஜனவரி கிடைக்க.

  நாளைய கொரியருக்காக காத்திருப்பு ஆரம்பம். நண்பர்கள் பலர் இரவே கொரியர் வாசலுக்கு போய் விடுவார்கள் 😀

  உங்களுக்கும் நண்பர்களுக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. // Thats a promise !! பன்னின்றிப் பிரதிகள் வாராது //
  ஏகப்பட்ட பல்டிகள் அடிச்சிருப்பிங்க போல சார்,உங்கள் விவரணைகள் கண் முன்னே படமாய் ஓடின,போதும் சார் மெனக்கெடல் விட்டுத் தள்ளுங்க,தங்களது அன்பே போதும் சார்...
  பன் செலவுக்கு பதில் தங்களது நம் வாசகர்கள் சார்பாக ஏதேனும் முதியோர் இல்லம் அல்லது சிறார்கள் இல்லத்திலோ ஒரு மினி விருந்து வைத்து புத்தாண்டையோ,பொங்கலையோ கொண்டாடுங்கள் சார்...
  முத்து 50 க்கும் நல்லதொரு அர்த்தம் கிடைக்கும்...
  எல்லோர் மனமும்,வயிறும் நிறையும்...

  ReplyDelete
  Replies
  1. ஜனவரி 1 க்கு எற்கனவே அதற்கான திட்டமிடல் உள்ளது சார் !

   Delete
  2. மனதார நன்றிகள் சார்...!!!

   Delete
  3. //பன் செலவுக்கு பதில் தங்களது நம் வாசகர்கள் சார்பாக ஏதேனும் முதியோர் இல்லம் அல்லது சிறார்கள் இல்லத்திலோ ஒரு மினி விருந்து வைத்து புத்தாண்டையோ,பொங்கலையோ கொண்டாடுங்கள் சார்...
   முத்து 50 க்கும் நல்லதொரு அர்த்தம் கிடைக்கும்...
   எல்லோர் மனமும்,வயிறும் நிறையும்...//

   ரொம்ப நல்ல சிந்தனை நண்பரே.

   Delete
  4. // ரொம்ப நல்ல சிந்தனை நண்பரே. //
   நன்றி நண்பரே...

   Delete
  5. அருமையான உயர்ந்த சிந்தனை அறிவரசு நண்பரே...
   நெகிழ்வாக உள்ளது.
   💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

   Delete
  6. செய்யப் போவது ஆசிரியர் தானே ஸ்ரீ...
   மகிழ்ச்சி...

   Delete
  7. நல்ல யோசனை ரவி..
   செயலாகக முனையும் ஆசிரியருக்கும் நன்றிகள்..

   Delete
  8. // ஜனவரி 1 க்கு எற்கனவே அதற்கான திட்டமிடல் உள்ளது சார் ! //

   சூப்பர் சார். நல்ல விஷயம்.

   Delete
  9. // ஜனவரி 1 க்கு எற்கனவே அதற்கான திட்டமிடல் உள்ளது சார் ! // அருமை சார்.

   Delete
 27. // உங்களின் உள்ளக் கதவுகளையுமே அவை தட்டிட வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனைகள் !! //
  வாழ்த்துகள் சார்,மிகப்பெரிய இலக்கை வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள்...

  ReplyDelete
 28. ஆசிரியரின் பதிவை இனி நான் படிக்கப் போவதில்லை.


  ஆசிரியரின் இந்தப் பதிவைப் படித்து நான் சிரித்த சிரிப்பில்....
  சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவருக்குப் புரையேறிவிட்டது.
  மற்றொருவர் வாயிலிருந்த புரோட்டாவை எதிரில் துப்பிவிட்டார். என் நல்லவேளை அவர் எதிரே ஒருவருமில்லை.  கூட வேலை பார்ப்பவர்கள் ஒரு மாதிரியாய்ப் பார்க்க .....  ஒரே ரணகளமாகிவிட்டது நான் வேலை பார்க்கும் ஹோட்டல்.  இனிமேல் ஆசிரியரின் பதிவுகளை வீட்டிலேயே படிக்க முடிவெடுத்துவிட்டேன்.

  ஆசிரியரின் நகைச்சுவை சும்மா கில்லி மாதிரி சொல்லியடிக்கிறது.

  ReplyDelete
 29. குறித்த நேரத்திற்குள் , திறம்பட வேலை செய்த உங்களின் குழுவிற்கு எங்களின் வாழ்த்துகளை தெரிவியுங்கள் சார்

  ReplyDelete
 30. // தொடரும் நாட்களில் நமது FFS குடும்பத்துக்குமே கொஞ்சம் நேரம் ஒதுக்கிட முனையுங்களேன் - ப்ளீஸ் ? //
  நாளைக்கே கிடைச்சுட்டா மிக்க மகிழ்ச்சி சார்,இந்த வாரம் FFS ஐ பிரிச்சி மேய்வதே முக்கியப் பணி...

  ReplyDelete
  Replies
  1. இனி எல்லாம் அவர்கள் செயல் சார் - ST & DTDC !!

   Delete
 31. இந்த வருடத்தின் மிகச் சிறந்த பதிவில் இதுவும் ஒன்று சார்...

  ReplyDelete
 32. //சந்தாக்கள் + FFS முன்பதிவுகள் முழுசும் கூரியர்களுக்குப் பயணமாகி விட்டன !//
  Thank you sir 🧡...

  ReplyDelete
 33. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. நாளைக்கே எனக்கு கிடைச்சா மகிழ்ச்சி.. அல்லது வழக்கம்போல கூரியர் புண்ணியத்தில் நாளை மறுநாள் கிடைச்சாலும் அதைவிட மகிழ்ச்சி...

   Delete
  2. எந்த நாளில் கிடைத்தாலும், அந்த நாள் இனிய நாளே.

   Delete
 34. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்ககும் & வெற்றிகரமான உங்கள் டீம் & அவர் தம் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் டியர் எடி .. 💐💐💐

  இந்த 2021 வருடம் எல்லார் வாழ்க்கையில் மறக்க முடியாத இன்றியமையாத ஒன்றாகி விட்டது என்றால் அது மிகையல்ல .. 😍😍😥😥

  காமிக்ஸ் உலகின் ** ஜாம்பாவான் ** என்பதை மறுபடியும் நிருபித்து இருக்கீங்க .. 🙌🙌🙌🙌

  ரயிலை பிடிக்க ஒடி வற்ர ஈரோ நீங்கதான்எ ன்று எங்களுக்கு தெரியாதாக்கும் ..😉😉😉

  // மொத்தம் 3 புக்ஸ் மட்டும் உல்டா புல்டா பக்கங்களோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது ! And அங்கே பைண்டிங்கில் இன்னொரு 6 பிரதிகள் //

  இதில் ஒரு மூணு புத்தகங்களை எனக்கு தேவை .. எனக்கு அனுப்புங்க டியர் எடி .. 😃😃😃😉😉😍😍

  புத்தகங்களின் வரவை எதிர் நோக்கி ..

  ReplyDelete
 35. Muthu 50** புத்தகங்களின் வரவை எதிர் நோக்கி ..

  ReplyDelete
 36. லயன் மற்றும் முத்து காமிக்ஸ் எடிட்டர் மற்றும் பணியாளர்கள் வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்💐💐🌄🌄🌄🎂🎂🎂🎂🎂🌄🌄🌄🌄💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

  ReplyDelete
 37. எல்லாம் ரெடி என்றாலும் நமக்கு கடைசி நேரம் ஏதாவது ஒரு திரில் வேண்டாமா சார்:-) இந்த முறை பேக்கிங்கில் நடந்த விஷயங்களை ரொம்ப ரொம்ப நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள் சார்.

  குற்றாலநாதரை தரிசித்து விட்டு - உங்கள் பரணி

  ReplyDelete
  Replies
  1. பார்டர் கடைக்கு மறக்காம போயிட்டு வாங்கோ...!!!

   Delete
  2. விட மாட்டோம்லே :-)

   Delete
 38. அன்பு ஆசிரியருக்கு 🙏,
  எங்களை மகிழ்விக்கும் தங்களுக்கும்,
  தங்களை மகிழ்விக்கும் குடும்பத்தாருக்கும்,
  எங்களுக்காக பல சிரமங்களை, இன்முகத்தோடு ஏற்றுக் கொள்ளும் லயன்குழும நிர்வாக ஊழியர்களுக்கும் அன்பான இனிய முன்பதிவு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  💐💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐

  தங்கள் பதிவை படித்தால்,"புக் வர லேட் பண்றாரே" எனும் எண்ணத்தை விட,
  உங்களின் அக்கறையும்,சிரமங்களுமே மேலோங்கி நிற்கிறது/புரிகிறது.
  இந்த சிரமங்களை நம் அன்புள்ளங்கள் புரிந்து கொள்வார்கள்.பொறுத்தும் கொள்வார்கள் சார்.

  //ஒரு பிரசவத்தின் பாதி அவகாசமே FFS எனும் இந்தக் கனவை நான் சுமந்து திரிந்திருப்பேன் ! And சுமந்து திரிந்த நாட்களின் ஒவ்வொன்றுமே ஏதோ ஒருவித நோவையோ, படபடப்பையோ கொண்டு வந்தவைகளே ! ஆனால் இன்று அந்தக் கனவைத் தரையிறக்கிய வேளையில், தாண்டி வந்துள்ள ஒவ்வொரு நாளுமே விலைமதிப்பற்றவைகளாகத் தென்படுகின்றன !//
  அருமையான உள்வாங்கிய வரிகள் சார்.
  ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
  சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறோம் சார் எங்கள் அன்பு குழந்தைகளை.

  சீனியர் ஐயாவுடன் பேச கசக்குமா? என்ன சார்?.
  கண்டிப்பாக நல்லபடியாக அமையும் சார்.

  தாமதத்தை பொறுட்படுத்தாமல் கடந்து செல்பவர்களுக்கு மத்தியில்,
  உங்களின் இந்த அக்கறையான, உண்மையான காரணப்பதிவு உங்களின் மேலுள்ள மரியாதையை,ஒரு படி உயர்த்துகிறது சார்.

  அன்பு காமிக்ஸ் ஸ்நேகங்கள் அனைவருக்கும் முன்பதிவு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  என்றும் இதே போல் ஆசிரியருடன் இணைந்து, காமிக்ஸ் எனும் கனவுலகில் மகிழ்வோம்.
  மீண்டும் அடுத்த பதிவில் 🌹🌹🌹.

  ReplyDelete
 39. Happy New Year 2022 Wishes to All Lion & Muthu Group Members/Staffs/Readers and Editor's Family.

  ReplyDelete
 40. இன்றுதான்-இப்போதுதான் சந்தா செலுத்த முடிந்தது. நமது காமிகஸ் கம்பேக் முதல் தொடர்ந்து சந்தா எக்ஸ்பிரசில் நவம்பர் மாதமே துண்டு போட்டு விடுவேன். இந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள், எதிர்பாராத சில இழப்புகள் என இந்த 2021 ரொம்பவே சோதித்துவிட்டது. எப்படியோ கடைசி நேரத்தில் 2022 க்கான சந்தாவில் எனக்கான இடத்தை இன்று பிடித்துவிட்டேன். எதிர்வரும் புத்தாண்டை, எனது வாழ்வுடன் பயணமாகும் லயன்-முத்து உடனுடன் வழக்கம் போல் ஆரம்பமாவது மகிழ்ச்சியை தருகிறது. 🙏🏻

  ReplyDelete
  Replies
  1. வெல்கம் பேக் கார்த்திகேயன். புத்தாண்டில் அனைத்தும் விரைவில் சரியாகிவிடும். கவலை வேண்டாம்.

   Delete
 41. டப்பாவுக்குள் பன் அடைக்கும் படலம் காமெடி படலம். :-)

  ReplyDelete
 42. சார் 10 வருடங்களில் செம முன்னேற்றம் ... 2011ல் பலூனுக்குள் வார்த்தைகளை நுழைக்க போராடி அன்றைய முட்டுச் சந்து ஸ்பெஷல்களின் தலைப்பு செய்தியாய் இருந்தோம் :-) இப்போ டப்பாவுக்குள் ரவுண்டு பன் நுழைக்கும் போராட்டம் ..2031ல் என்னவோ :-) :-) :-)

  ReplyDelete
 43. இந்த வருடத்தின் இறுதிப் பதிவு இதுவே,அடுத்து 2022 இன் புத்தாண்டு பதிவுதான்,அதில் ஏதேனும் லட்டு உண்டுங்களா சார்...

  ReplyDelete
  Replies
  1. 119 பதிவுகள் இதுவரையிலும் ! ரவுண்டாய் 120 ஆக்கிப்புட்டால் ?

   Delete
  2. 31ந்தேதி 120வது பதிவை தாக்கிடலாம் சார்...😍 பன்னு சாப்பிடவும் பதிவு படிக்கவும் ஆல்வேஸ் ரெடி💞

   Delete
  3. கரும்பு தின்னக் கூலி வேண்டுமா என்ன? போட்டு தாக்குங்கள் சார்..

   Delete
  4. // 119 பதிவுகள் இதுவரையிலும் ! ரவுண்டாய் 120 ஆக்கிப்புட்டால் ? //

   ரொம்ப சிறப்பாக இருக்கும் சார் :-)

   Delete
  5. 120 க்கு ஜே ஜே 31ஆம் தேதி இரவு போட்டு விடுங்கள் சார். புத்தாண்டு பதிவு.

   Delete
  6. // ரவுண்டாய் 120 ஆக்கிப்புட்டால் //
   தாரளமாக சார்...

   Delete
 44. ஆன்லைன் திருவிழாவிற்கு திட்டமிட்டிருந்தால் கொஞ்சம் முன்னரே முடிவு செய்யுங்கள் சார்,பொங்கல் கழித்து என்ன நடக்குமோ ???!!!
  கிடைக்கும் தகவல்கள் அவ்வளவு உவப்பாய் இல்லை...

  ReplyDelete
  Replies
  1. நிஜம் தான் சார் ; கார்மேகங்கள் கண்ணுக்கெட்டும் தொலைவிலேயே தெரிவது போலுள்ளது !

   Delete
  2. நல்ல suggestion அண்ணா.

   Delete
 45. //மூன்று லட்டுக்களும் பூந்தியாய் மட்டுமே வெளியேறின இந்தப் பரிசோதனையின் முடிவில் //

  என்னா சார், பூந்தியும் நல்ல பலகாரம்தானே??!! பூந்திய பூந்தியாவும் சாப்பிடலாம், புடுச்சு திரும்ப லட்டுவாக்கியும் சாப்பிடலாமே. நம்ம லட்டுகளோடு ரியல் லட்டுகளும் சேத்து சுவைத்திருக்கலாம்.

  ReplyDelete
 46. இது வர வந்ததிலே...வரப்போறதிலே ...டாப் பதிவு இதான் சார்...ஆங்காங்கே புன்முறுவலுடன் சிரித்தபடி நகர்கிறேன்...மகனைத் தாண்டி பதிவ படிப்பதற்கும் போதும் போதுமென்றாகி விட்டது...அங்கங்கே ஒளிச்சு படிச்ச பதிவு இதான்...இரவு வரை காக்க பொறுமையில்லை...இது வரை அதிக எதிர்பார்ப்பை...ஏன் இரத்தப்படலத்தை மிஞ்சி காத்திருந்த திருநாள் இதான....எல்லாமே அதிரடி புது கதைகள்...அழகிய நாயகி...இபக்கு இணையாய் ஓர் கதை...மனம் திறக்கும் தலைமையாசிரியர்...கோல்டன் ஹீரோஸ்...அப்படியே இரும்புக் கை மாயாவி...அடேயப்பா...

  ReplyDelete
 47. என்னோட 37 வருட History ல ஒரு சிறப்பிதழுக்கு எந்த எடிடட்டரும் இவ்ளோ மெனக்கெட்டதா தெரியலை ...'முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும் என்ற வாக்கின் படி FFS கண்டிப்பா Complete success package ah இருக்கும் ...புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete
  Replies
  1. சத்தமின்றிப் பணியாற்றுவோர் அநேகம் சார் ; நமக்க்கோ வாய் காது வரை நீள்வது தான் டிசைனே !

   Delete
 48. குற்றாலத்தில் குளியல்...
  குற்றாலநாதரா தரிசனம்...
  பார்டர் கடை சாப்பாடு...

  இப்படித்தான் FFS வரவேற்கனும் என்று பெரியவங்க சொல்லி இருக்காங்க :-)

  ReplyDelete
 49. விஜயன் சார், அட்டகாசமான திட்டமிடல் மற்றும் செயல்வடிவம் கொடுத்து சொன்ன நேரத்தில் தயார் செய்து எங்களுக்கு அனுப்பிய உங்களுக்கு எனது நன்றிகள். உங்களுடன் உறுதுணையாக இருந்த சீனியர், ஜுனியர் எடிட்டர் மற்றும் நமது அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி மற்றும் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 50. //சிஸ்கோவுடன், டேங்கோவும் ஆஜராகியிருக்கக் கண்டேன் ! "இது எப்போ இவங்க கூட்டணி போட்டாங்க - எனக்கே தெரியாம ?" என்றபடிக்கே புரட்டினால் - பைண்டிங்கில் பக்கங்களைத் தப்பாக வைத்துத் தைத்து விட்டிருப்பது புரிந்தது ! 'போலீஸ்...ஆம்புலன்ஸ்...பயர் சர்வீஸ்..மிலிட்டரி' என கூவாத குறையாய் நான் கத்திக் கூப்பாடு போட்டதில் 3 பேர் பைண்டிங் ஆபீசுக்கே ஓட்டமெடுத்திருந்தனர்-// குலுங்க குலுங்க சிரிச்ச வைக்கும் ஒரு நகைச்சுவை கதைக்கே உரித்தான வாசகங்கள் வாத்தியாரே.. செம்ம...

  ReplyDelete
 51. ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா
  ஐம்பதாமாண்டு முத்து மலரு
  ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

  ஐம்பதாமாண்டு முத்து மலரு
  முழுக் கதைகளும் கலரு
  அந்த சாக்குலேட்டு பாரு
  இதுவே எனக்கு ஜோரு


  ஐம்பதாமாண்டு முத்து மலரு
  முழுக் கதைகளும் கலரு
  அந்த சாக்குலேட்டு பாரு
  இதுவே எனக்கு ஜோரு
  அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா
  அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா
  அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா

  அந்தார பண்ணு அங்கே
  சுந்தார லட்டு எங்கே
  அந்தார பண்ணு அங்கே
  சுந்தார லட்டு எங்கே
  சந்தோஷ மீறிப் பொங்க
  ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா
  சாக்லேட்டே எனக்குத் திங்க  ஐம்பதாமாண்டு முத்து மலரு
  முழுக் கதைகளும் கலரு
  அந்த சாக்குலேட்டு பாரு
  இதுவே எனக்கு ஜோரு
  அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா
  அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா
  அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா

  மாயாவிதுரையின் பவரு
  பழம் பொருத்தமாய் அட்டைகவரு
  மாயாவிதுரையின் பவரு
  பழம் பொருத்தமாய் அட்டைகவரு
  ஸ்பைடர் கதையும் பாரு
  ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா
  இதுவே எனக்கு ஜோரு


  ஐம்பதாமாண்டு முத்து மலரு
  முழுக் கதைகளும் கலரு
  அந்த சாக்குலேட்ட பாரு
  இதுவே எனக்கு ஜோரு

  அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா
  அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா
  அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா

  ஜோரான தேனீ சாக்லட்டு
  சுவையான கதைக படிச்சிபுட்டு
  ஜோரான தேனீ சாக்லட்டு
  சுவையான கதைக படிச்சிபுட்டு
  தாராளமா கைதட்டு
  ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா
  இனி இஷ்டம் போல வெட்டு


  ஐம்பதாமாண்டு முத்து மலரு
  முழுக் கதைகளும் கலரு
  அந்த சாக்குலேட்ட பாரு
  இதுவே எனக்கு ஜோரு

  அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா
  அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா
  அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா
  அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா
  அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா
  அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா
  அஹஹஹ்ஹா ஹஹா ஹஹா

  ReplyDelete
 52. ம்க்கும்...

  இந்த தடவையும் பன்னு போச்சே...

  நசுங்கீருந்தாலும் பிச்சுதான சாப்புடப் போறோம் கார்நேசன் ரவுண்ட...

  அந்த பேக்கரி ஃபிரட் இதைவிட சூப்பரா இருக்கும்...

  சிவகாசி பக்கம் வந்தே நாலு வருஷமாச்சு...


  உங்கள் எல்லாரூக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 53. தங்களுக்கும், அலுவலக நண்பர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் சார் :) சக காமிக்ஸ் காதலர்களுக்கு - இருக்கு.. நாளைக்கு சிறப்பான, தரமான சம்பவங்கள் இருக்கு.புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே :)

  ReplyDelete
 54. எடிட்டர் சார்..

  பதிவின் இறுதியில் கொஞ்சமே கொஞ்சமாய் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் தாய்மை உணர்வை விவரித்து எழுதியிருந்தீங்க பாருங்க - அங்க நிக்கறீங்க நீங்க!! அருமையான உணர்வுப் பிரதிபலிப்பு!! அழகான, பொருத்தமான எழுத்துக்கள்!! (ஒரு குடும்ப நாவல் எழுத முயற்சியுங்களேன் சார்?). எல்லாக் குழந்தைகளுமே உங்களைப் பெருமைப்பட வைத்திடுவார்கள் சார்!

  இரவு 9 வரைக்கும், மறுக்கா காலை 8 மணிலேர்ந்து ஓயாது உழைத்துவிட்டு இன்று டப்பிகளை அனுப்பிய கையோடு தொங்கிப்போன நாக்கை வாய்க்குள் திணித்துக் கொஞ்சமாய் ஆசுவாசப்பட்டுக் கொண்டிருக்கும் உங்கள் டீமிற்கு எங்கள் அனைவரின் சார்பாகவும் தலா ஒரு பூங்கொத்து! குறித்த நேரத்துக்குள் இதையெல்லாம் சாத்தியமாக்கி காட்டியிருக்கும் இந்தக் கப்பலின் கேப்டன் - உங்களுக்கும் தான்!!

  புத்தக ஆக்கத்தையும், அட்டைப்படங்களையும், தெறிக்கும் வண்ணங்களையும் கண்டு களித்திட ஒரு குழந்தையின் குதூகல மனநிலையுடன் நாங்கள் - குண்ண்ண்டு கொரியர் டப்பியை எதிர்நோக்கி!!

  ReplyDelete
 55. // அதற்கடுத்த ஸ்டாப் கணபதியா ? பார்டரா சார் ? //

  அது என்ன கணபதியா? புதுசா இருக்கே :-)

  சிவனின் குடும்பத்தினர் அனைவரையும் தரிசனம் செய்து விட்டோம் சார் :-)

  ReplyDelete
  Replies
  1. (விருதுநகர்) கணபதி தெரியாமலா சார் - இத்தினி காலம் குற்றாலம் போயிருக்கீங்க ? பஸ் ஸ்டாண்டுக்கு நேர் எதிரே இருக்குது இப்போ !

   Delete
  2. இப்போது தான் முதன் முதலாக கேள்விப்படுகிறேன். அடுத்த முறை முயற்சி செய்கிறேன். ஆனால் பார்டர் எனது விருபாமான கடை, மற்ற கடைகள் அதற்கு அடுத்தது தான் சார் :-)

   Delete
  3. கணபதி மெஸ் @ Google ratingல் average என சொல்கிறது.எனவே நோ டு கணபதி மெஸ்:-)

   Delete
 56. நல்ல வேளை, ரவுண்ட் பன் தரல. எனக்கு வர்ரதுக்குள்ள கெட்டு போய் புக்ஸ் பன் ஆகி இருக்கும்.

  ReplyDelete
 57. என்னோட லாக்கின் மாறி போச்சுங்களே.. இல்லீனா புது வருசத்தை மறக்க முடயாத பாயாசத்தோட விருந்து வெச்சிரிப்பேன்..
  டாக்டர்க்கு படிச்சவங்களே ரெண்டு மூனு மாசம் தலை காட்ட முடியாதளவுக்கு பிசின்னா பன்னென்டாவது படிச்ச நாங்க எத்தனை பிசியா இருப்போம்..??

  ReplyDelete
 58. ஆசிரியரே புத்தகத்திருவிழாவில் நமக்கு ஸ்டால் கிடைத்து விட்டதா

  ReplyDelete
 59. விஜயன் சார், அட்டைப்படங்களை மற்றும் லோகோவை இப்போதாவது கண்களில் காட்டலாமே சார். வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் சந்தோஷம் கொள்வார்களே :-)

  ReplyDelete
  Replies
  1. பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா,. ஆனால் கவலையில்லை நமது நண்பர்கள்FB ல் பதிவிட்டு விடுவார்கள்

   Delete
 60. என்னவொரு அருமையான பதிவு, அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் தகவலை வரிக்கு வரி நகைச்சுவையோடு பகிர்ந்திருக்கிறீர்கள். தங்களுக்கும், நமது அணிக்கும் நன்றிகள் பல.

  நாளை பார்சல் கிடைத்து விடும், ஆண்டின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் தனதாக்கி கொண்ட "ஒற்றை நொடி ஒன்பது தோட்டா" வெளிப்படுத்த போகும் அதிர்வுகள் எவ்வளவோ.

  தமிழ் சினிமா பாணியில் சாதித்த காமிக்ஸ் நாயகர்களின் மூன்று எழுத்து மந்திரம் மீண்டும் எடுபடுமா. முன்பு - மாயாவி, டெக்ஸ், லக்கி, XIII, லார்கோ, டைகர். இன்று - ஆல்பா, சிஸ்கோ, டேங்கோ. இவர்கள் நட்சத்திரங்களாக ஜொலிப்பார்களா. ஜொலித்தாலும் மூவரில் முந்த போவது யார்?

  கோல்டன் ஹீரோ ஸ்பெசல் நாயகர்கள் மீண்டும் தனது ஆளுமையை நிலை நாட்டுவார்களா.

  புது வரவு எலியப்பா கார்டூன் வரட்சியை போக்க கைகொடுப்பாரா?

  நீண்ட நாள் காத்திருந்த "வேதாளர்" மறுவருகை எவ்விதமோ. மாஸ் நாயகராக தன்னை செதுக்கி கொள்வாரா.

  மான்ட்ரேக், ரிப்கிர்பி, காரிகன் தங்கள் இருப்புகளை 2022 லிலும் தக்க வைத்து கொள்ளும்படி சாதிப்பார்களா

  ஒளிவட்டமே இல்லாமல் பதுங்கி இருக்கும் புதுமுகம் "டிடெக்டிவ் ரூபின்" பாய்ந்திடுவாரா

  இரட்டை எஞ்சின் பொருத்திய அட்டவணை ரயிலின் இரண்டாவது எஞ்சின் "கென்யா" வின் வேகம் எவ்வளவோ. தாக்கம் எவ்வாறோ.

  இந்த வருடம் புரட்சியை ஏற்படுத்திய டெட்வுட் டிக்கும், தாத்தாக்களும், ஸ்டெர்னும் மீண்டும் அதே அதிர்வலைகளை கொணர்வார்களா

  கடும் போட்டியின் மத்தியில் தோர்கல், மார்டின், சோடா, ட்ரெண்ட், ஜானி, சிக்பில், மேக் & ஜாக், ப்ளுகோட்ஸ் ஆகியோர் தங்களது இருப்பை தக்க வைப்பார்களா. அல்லது அசால்டாக கடந்து செல்வார்களா.

  ஏற்கனவே அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கும் பாண்டும், ப்ளைசியும் அடிக்கும் சூறாவளிக்கு ஈடுகொடுத்து நிற்பார்களா

  வெற்றி மேல் வெற்றியை 2021 போட்டு தாக்கிய ஆண்டுமலர் நாயகன் லக்கி லூக் தன் ராஜாங்கத்தை தொடர்வாரா.

  இத்தனை சவால்களையும் சமாளித்து தனது நம்பர் ஒன் இடத்தை நமது காமிக்ஸின் தலைமகன் "டெக்ஸ் வில்லர்" தக்க வைத்து கொள்வாரா.

  பதில் சொல்ல காத்திருக்கிறது முத்து வின் பொன்விழா ஆண்டு 2022.

  Celebration count downtown starts now.  ReplyDelete
  Replies
  1. :-) சூப்பராக எழுதியுள்ளீர்கள்.

   Delete
 61. சொல்வன தெளிந்து சொல்( இது நம்ம டைட்டில் 😂😂😂).
  இதெல்லாம் சுத்த போர் என்று நினைப்பவர்கள் கடைசியில் உள்ள ப்ளூ மார்க் வாசகத்தை படித்து விடுங்கள் என்று சொன்னீர்கள். மிகவும் சரியாக சொன்னீர்கள்.. ஆனால் இங்குள்ளவர்கள் அப்படி இல்லையே என்ன செய்வது. இந்த வழ வழா கொழ கொழா ( உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்வது )பதிவை படிக்க தானே ஆவலுடன் அத்தனை கண்களும் காத்திருக்கின்றன.. அப்படி இருக்க யார் உடனே கடைசி பாராவை படிக்கப் போகிறார்கள்.
  நமது புத்தகம் 50 100 200 500 அல்லது ஆயிரம் எத்தனை புத்தகங்கள் வந்தாலும் அவையெல்லாம் வெறும் புத்தகங்களே. ஆனால் அந்த ஒவ்வொரு புத்தகத்திற்கும் நீங்கள் அடிக்கும் கூத்து ( மெனக்கெடல் ) எங்களை சீட்டு நுனிக்கு கொண்டு வருகிறது என்றால் மிகையாகாது... கதை ஓவியம் கலரிங் அட்டைப்படம் முதற்கொண்டு யாரோ ஒருவர் செய்ததை ஏனோ தானோ என்று வழங்காமல் அதிலும் தங்கள் முத்திரையைப் பதிக்கும் ஒவ்வொரு புத்தகங்களுமே மைல்கல். ❤❤❤❤❤❤.
  இதோ இந்த மைல்கல்லை முடித்துவிட்டு வெறுமனே என்று உட்கார அல்லது உட்கார வைக்க எங்களுக்கு சாத்திய பட்டாலும் கட்டை விரலை வாயில் வைக்கும் அந்த காமிக்ஸ் காதல் உங்களிடம் இருக்கும் வரை... உங்களின் தேடல் முடிவே இல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன் தொடரவேண்டும் என்பதே இப்போது மட்டுமல்ல எப்போதும் இறைவனிடம் வேண்டிக் கொள்வது.தங்களின் உடல் நலத்தை நல்ல முறையில் காத்து வர வேண்டும் என்பதே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽..

  ReplyDelete
  Replies
  1. மிகவும் அருமையாக சொல்லி உள்ளீர்கள் நண்பரே.

   Delete
 62. அருமையான பதிவு எடி சார்..தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும், பணியாளர்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்... கடவுள் உங்களுடன் துணை நிற்பாராக...

  ReplyDelete
 63. விஜயன் சார், இந்த பதிவு வழக்கத்தை விட காமெடி தூக்கலாக உள்ளது, எழுத்துக்களில் உற்சாகம் கொப்பளிங்கிறது. கடந்த பல மாதங்களாக திட்டமிட்டு வந்த ஒரு மிகப்பெரிய கடினமான பணியை முடித்து விட்ட ஒரு நிம்மதி பெருமூச்சின் வெளிப்பாடு இது என நினைக்கிறேன். கொஞ்ச நாள் நன்றாக குடும்பத்துடன் ஓய்வு எடுங்கள் சார். உடம்புக்கும் மனதுக்கும் தேவையான ஓய்வை கொடுங்கள் சார்

  ReplyDelete
  Replies
  1. பரணி பேக் டூ தூத்துக்குடி :-)

   Delete
 64. Edi Sir.. இது அட்டகாசமான ஜாலியான பதிவு. புத்தகங்களை விட உங்கள் பதிவுக்கான என்னைப் போன்ற ரசிகர்கள் அனேகம்.கோவை KMCHல் ஆஞ்சியோ முடிந்து ஸ்டன்ட் வைத்து just a minute வீடு திரும்பிய உடனே என் போனை புடுங்கி வைத்திருந்த குடும்பத்தாரிடமிருந்து கைப்பற்றி புதிய பதிவை பார்த்து பதிவிட்டவுடன்தான் அடுத்த வேலை.New year special வருகைய படிச்சவுடன்தான் மனசுக்கு நிம்மதி சார்.மருத்துமனையில் 3 நாட்களாக இருந்த போது ஆறுதலும்,தைரியமும் சொன்ன காமிக்ஸ் சொந்தங்களே உங்களுக்கு கோடி நன்றிகள். குறிப்பாக மரு.கரூர் AKK ராஜா அவர்கள் செய்த உதவி மறக்கவே இயலாது.ஒரு பொம்மை புத்தக வாசிப்பு இவ்வளவு அன்பு பிணைப்பை தந்திருப்பது மனசை சந்தோசமாக ஆக்கி வலியை மறக்க செய்கிறது.நன்றி சொந்தங்களே! !!நன்றி ஆசிரியரே இப்படிப்பட்ட அன்பு சொந்தங்களை தந்தமைக்கு!!!

  ReplyDelete
  Replies
  1. விரைவில் முழுமையாக குணமடைந்து துள்ளி குதித்து நீங்கள் வர எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

   Delete
 65. >>>மாறாக, "லீவிலே தான் இருக்கேன் ; தோசை சுடற நேரத்திலேயோ ; பாத்திரம் தேய்க்குறே நேரத்திலேயோ வாசிச்சிப்புடுவேன் !" என்போரா நீங்கள் ? - carry on with the reading !!

  ஹாஹாஹா....

  ஆனாலும் அப்பப்போ subtle-ஆக வாசகர்களின் காலை நகைச்சுவையாக வாரிவிடுவது ரசிக்கும் படியாகத்தான் இருக்கிறது...
  யாரும் கவனிக்கவில்லை என்று நினைக்கிறீர்கள்....

  ReplyDelete
  Replies
  1. அதெப்படி கவனிக்காம விடுவோம்னேன்? 'பூச்சாண்டி மாமா' தானே?

   அந்த பூச்சாண்டி மாமா நாம இல்லன்னு நிரூபிக்கணும்னா அப்படியே கண்டுக்கிடாமப் போய்டறதுதான் நல்லது ஹிஹி!

   Delete
  2. ஹாஹாஹா

   பூச்சாண்டி மாமாவும் தான்....

   Delete
 66. மருத்துவர் அய்யா AKK ராஜா அவர்கள் உரிய நேரத்தில் செய்த உதவியும், நண்பர்கள் அனைவரும் கொடுத்த மன தைரியமும், FFSம், Smashing '70 ம் படித்தே ஆக வேண்டும் என்ற உறுதியுமே நான் மீண்டு வர காரணம்.💪🤓🙏

  ReplyDelete
  Replies
  1. நண்பரே நீங்கள் மருத்துவமனையில் சிரித்துக் கொண்டே இருந்த போட்டோவைப் போட்டதைப் பார்த்தேன்..உங்களுக்கிருந்த மனவுறுதியும் திடமும் உங்களைக் காத்தன.எங்களின் வேண்டுதல்கள் இரண்டாவது தான். நல்ல நலத்துடன் தொடர்ந்து இங்கு கருத்திட்டு எங்களை மகிழ்விக்க வேண்டுகின்றேன்.

   Delete
 67. மிக்க நன்றிகள் சார்...உங்களின் காமிக்ஸ்க்கு என் வாழ்க்கையில் மிக முக்கிய பங்குண்டு. தமிழில் காமிக்ஸ் படிக்க இப்படி ஒரு வாய்ப்பு உங்கள் மூலமாக மட்டுமே கிடைத்து வருகிறது... இவ்வளவு சிரமங்களுக்கிடையே இதை செய்வது உங்களின் அசாத்திய காமிக்ஸ் காதலால் மட்டுமே.. இது இரண்டு தலைமுறைக்கு கிடைத்த பாக்கியம்... நீங்கள் இதே காதலுடன், நலமுடன், மகிச்சியுடன் வாழ அந்த இயற்கையிடம் வேண்டுகிறேன்...

  ReplyDelete
 68. இதோ புத்தாண்டு...புத்துணர்ச்சியாண்டு...புலவரக் காத்திருக்கு கொரியர் டப்பிக்குள்...முதலில் வருவோர் யாரோ

  ReplyDelete
 69. ஜி, அனைத்து அட்டைப் படத்தையும் கண்ணில் காட்டுங்கள் ஜி

  ReplyDelete
 70. டைரடக்கர் சார், புத்தகங்களுடன் இன்னும் சாக்லேட் வைத்து தருவது, நீங்கள் எங்களை குழந்தைகளாகவே நினைப்பதால் தான்..பிள்ளைகள் வளர்ந்தாலும்,தாய்க்கு அவர்கள் பிள்ளைகள் தானே...இந்த எண்ணம் தான், தங்களை சிறப்பானவற்றை எங்களுக்கு தேடி தேடி தரமுடிகிறது...வாழ்த்துகளும், நன்றியும்...

  ReplyDelete
 71. கொரியர் ஆஃபீசில் தவம்...மதுரை பார்சலை இறங்குகிறார்கள்....அதற்குள் என்னை யாரும் அழைக்காமலிருக்க அருள்வாய் செந்தூரா

  ReplyDelete
  Replies
  1. மொதோ பொட்டி உங்களுக்கு தானா...!!!

   Delete
  2. இல்லை நண்பரே...கொரியர் ஆஃபீசுல ஏக கெடுபிடி..நண்பர் வேலை மாறி விட்டார்...உள்ள ஃபிரீயா விட மாட்டேங்குறாங்க...போன மாசமே கிளை எங்க ஏரியாக்கு மாறிடுச்சி.‌‌..அவங்க நம்பர வேற மிஸ் பன்னிட்டேன்...எல்லாம் செந்தூரான் அருள்...வாங்குனாலும் என் மகன் கைல கொடுத்து பொறுமையா ரசிச்சு பிரிக்கனும்...செந்தூரான்ட்டயும் காட்டனும்...அதனால

   Delete
 72. அப்பப்பா...
  ஒரு ஹாலிவுட் த்ரில்லர் படம் பார்த்தா மாதிரி இருக்கு சாரே இந்தப் பதிவு..
  பர பர..விறு விறு..சுறு சுறு..
  என்னமோ நாமளே பார்சல பேக் பண்ண மாதிரி பீலிங்கு..

  அர்ப்பணிப்புக்கு உங்களுக்கும் நமது அலுவலகக் குழுவினருக்கும் நன்றிகள்!

  ReplyDelete
 73. இந்த குழுவில் உள்ள சில பேருக்கு சர்க்கரை நோய் இருக்கலாம். பெரிய பார்சலை ஆர்வமாக பார்க்கும் எங்கள் வீட்டு குழந்தைகள் ஏமாறாமல் இருக்க இனிப்பு...எங்களுக்கு புத்தகமே இனிப்பு...

  ReplyDelete
 74. சார் FFS இன்னும் ஆன்லைன் லிஸ்டிங் ஓப்பன் ஆகலை போல....
  புக்கிங் தான் காட்டுது...

  ReplyDelete
 75. கடமை குறுக்கிட்டதால் திரும்பி வந்தாச்சு...அதிர்ஷ்டசாலிக்கு வாழ்த்துக்கள்...கைப்பற்றிய பின் வருகிறேன்

  ReplyDelete
 76. அடேயப்பா பார்சலை ரஞ்சித் ஜி கைப்பற்றி தரிசனம் காட்டிட்டாரு...

  ஐ மீன் "பார்சல்" தரிசனம்.. முதல் முறையாக கலர் பார்சல் பாக்ஸ்....11வது ஆண்டில் முதல் பிக் ஸ்டெப்...

  முத்து காமிக்ஸ் லோகோ

  லயன் லோகோ...

  மஞ்சள் வர்ண பின்னனியில் இரும்புக்கை பார்சலை ஏந்தி வருது....

  முதல் பாலே சிக்ஸர் சார்....💞💞💞💞

  ReplyDelete
 77. டியர் எடி,

  2022 அமர்க்களமாக எங்களுக்கு முன்பே தொடங்க வழிவகை ஏற்படுத்திவிட்டீர்கள். இந்த முறை வாரயிறுதி பட்டுவாடா சிக்கல்கள் இல்லையென்பதால், நாளையே பாரசல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

  புத்தாண்டு வாரயிருதியில் கண்டிப்பாக சீனியருடன் ஒரு ஜூம் மீட்டிங் ஏற்பாடு பண்ணுங்கள். No excuses please 😉

  ReplyDelete
 78. பார்சல கைப்பத்தியாச்சி...

  ReplyDelete
  Replies
  1. கலர் கலர்
   என்னா கலர்...

   பார்சல் கலர்
   சூப்பர் கலர்...

   Delete
  2. போடு டண் டணக்கா
   டடக்கு டக்கா

   Delete
  3. நம்புங்க...
   கலர் பார்சல் பெட்டிங்க...

   கலரு...

   தூக்கிப் போட்றாதீங்கப்பா..

   Delete
 79. வரலாற்று சிறப்புமிக்க இராட்சஸ பெட்டியை கைப்பற்றியாச்சி...

  ReplyDelete
 80. பெட்டியே கலர்ல சும்மா பட்டையக் கிளப்புதே...
  பெட்டியோட வெயிட்டில் சைடு ஸ்டேண்ட் போட்ட என் சைக்கிளே பேலன்ஸ் கிடைக்காமல் கீழே சாய்ந்து விட்டது...

  ReplyDelete
 81. ஒரு வழியா டெய்ரி மில்க் வந்து விட்டது சார்...

  ReplyDelete
 82. ஆன்லைன் திருவிழா அறிவிப்பு, 35 % வரை டிஸ்கவுண்ட்...செம சார்...

  ReplyDelete
 83. கோல்டன் ஹீரோஸ் க & வெ,கலரில் அசத்தல்,பேப்பர் குவாலிட்டி நல்லா திக்கா இருக்கு சார்,விலை மதிப்பில்லா இதழ்...

  ReplyDelete
 84. அடடே இரும்புக்கை மாயாவி பெரிய போஸ்டரில் தகதகக்கிறார்...

  ReplyDelete
 85. ஒவ்வொரு பக்கத்திலும் முத்து காமிக்ஸ் முத்திரை செம....

  ReplyDelete
 86. விரைவில் கென்யா விளம்பரம் ஆர்வத்தை கிளப்புகிறது...

  ReplyDelete
 87. அடுத்த மாத இதழ்கள்,
  பாலைவனத்தில் பினம் தின்னிகள்,
  ஒரு வெள்ளைச் செவ்விந்தியன்,
  ப்ளுகோட்...
  சூப்பரு...

  ReplyDelete
 88. FFS முதல் இதழில் நெடும் பயணமும்,நிஜமனிதர்களும் அருமையான நினைவலைகள்...

  ReplyDelete
 89. FFS இரு இதழ்களின் தயாரிப்புத் தரம்,அட்டையின் கெட்டித் தன்மை,தாளின் தரம் எல்லாமே அட்டகாசம்...
  பார்த்து,பார்த்து செதுக்கி இருக்கிங்க சார்...

  ReplyDelete
 90. FFS உண்மையிலேயே சும்மா தகதகன்னு மின்னுதுங்கோ...

  ReplyDelete
 91. சிவகாசி பட்டாசு பார்சல் வந்து சேந்தாச்சேய்ய்ய்.!!!

  ReplyDelete
 92. சந்தோஷம் எனும் தொடர்கதை தொடங்கியதுதுதுது.......

  ReplyDelete
 93. @ ALL : உங்களது போட்டோக்கள் சரியாய் வந்திருப்பதை உறுதி செய்தும் பதிவிடுங்களேன் - ப்ளீஸ் ! நம்மாட்கள் அடுத்த 2 நாட்களுக்கு உசிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பார்கள் !

  ReplyDelete
  Replies
  1. அட விடுங்க சார்...

   மருந்தடிச்சி வச்சிருக்கேன்...


   அப்படியே இருந்தாலும் கவலைப்பட மாட்டேனுங்க...

   Delete
 94. 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  முத்து 50- FFS அளவிலா ஆனந்தத்தை கொண்டு வந்துள்ளது....

  💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  50ஆண்டுகள் எனும் நெடிய பயணத்தில் இன்றைய நாள் ஒரு மிக முக்கிய நாள்....

  FFS ஐ பார்க்கும் போது இந்த பயணத்தில் இணைந்து கொண்ட நாம் எத்தைய பாக்கியவான்கள் என்பதை உணரமுடிகிறது...

  முத்து 60ஐ நோக்கிய பயணத்தில் இதே உற்சாகத்தோடு..........🤩🤩🤩🤩🤩🤩

  ReplyDelete
  Replies
  1. போடு
   டண்டக்கு...
   டடக்கு டங்கு...

   Delete
 95. விமர்சனம் எழுதும் நண்பர்கள் அடுத்த சில நாட்களுக்கு short & sweet ஆக எழுதுங்கள், உங்கள் விமர்சனத்தில் கதையை பற்றி முழுமையாக எதுவும் சொல்ல வேண்டாம்; தாமதமாக புத்தகங்கள் கிடைக்கும் நண்பர்களுக்கு கதையை சுவாரசியத்தோடு படிக்கும்படி இருக்கட்டும் உங்கள் விமர்சனங்கள் நண்பர்களே. இது ஒரு வேண்டுகோள் மட்டுமே.

  ReplyDelete
  Replies
  1. தப்பில்லை தம்பி...அத நாம் தாண்டி போவோம்..‌படிச்சதும் எழுதலன்னா மறந்திடும் ..சுவையிராதுல

   Delete
  2. நா பாரு மேல் போகல...பார்சல் பத்தி படிச்சிடக்கூடாதுன்னுதா...இல்ல இப்பவே தெரியட்டும்னா மேல போலாம்...

   Delete
 96. சார் நகைச்சுவை நிரம்பிய பதிவு.நிறைய இடங்களில் சிரிப்பு தெறித்தது.பாராட்டுக்கள்.

  ReplyDelete
 97. Edi Sir..எனக்கு இன்னும் கூரியர் வர்ல ன்னு ST கூரியர்ல சொல்றாங்க. அனுப்பியாச்சான்னு செக் பண்ணுங்க Sir..
  ஸ்ரீபாபு,நாமக்கல்..

  ReplyDelete
  Replies
  1. All sent sir ; நம்மிடம் எதுவுமே பெண்டிங் இல்லை !

   திங்கட்கிழமைக்குப் பின்பாய் சந்தா அல்லது முன்பதிவு செய்திருப்போருக்கு மட்டுமே இன்றைக்குச் செல்கின்றன !

   Delete
 98. நமக்கும் இன்னும் வரல...
  அவ்வ்வ்..

  ReplyDelete
 99. புத்தகங்கள் வந்து சேர்ந்தன, பத்திரமாகவும் சரியான புகைப்படத்துடனும். இதுவரை வந்த முத்து காமிக்ஸ் புத்தகங்களின் cover art களை இணைத்த விதம் unexpected surprise sir. மாயாவி poster, தரமான book marks, dairy milk, customized packing box... பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறீர்கள் சார். நன்றிகள் கோடி. ஒற்றை நொடி... I am coming :)

  ReplyDelete
 100. Books received in my home. Iam in duty. Will see evening. happy moments waiting for me.

  ReplyDelete
 101. @ ALL :

  நண்பர்களே, I repeat திங்கட்கிழமை வரைக்குமான சந்தாக்களுக்கும், முன்பதிவுகளுக்கும் நேற்றே கூரியர்கள் அனைத்தும் அனுப்பி விட்டோம். பாக்கி இன்று கிளம்புகின்றன !

  கூரியர்கள் கிடைக்கப் பெறாத நண்பர்கள் சற்றே பொறுமை காத்திடக் கோருகிறேன் ப்ளீஸ் ! இன்றைய மதியம் போனில் ரௌத்திர தாண்டவம் ஆடியுள்ளார் நண்பர் ஒருவர் ; "சந்தா கட்டிவிட்டுக் கேவலப்பட்டு நிற்கிறேன்" ..இத்யாதி..இத்யாதி என்று !

  கூரியரில் பார்சல் வராது போன எரிச்சலை நம்மவர்களிடம் கொட்டிக் குவிப்பது எவ்விதத்தில் நியாயம் என்பது எனக்குப் புரியவில்லை ! இதே வார்த்தைகளை கூரியர் கிளையில் கொட்டிப் பார்க்கத் தான் முடியுமா ? பாவப்பட்ட நம் பணியாட்கள் தான் சிக்குகின்றனர் அத்தனை அட்சதைகளையும் வாங்கி கொள்ள !

  இது போன்ற தரம் குறைவான பேச்சுக்களை இனியும் சகிப்பதாய் இல்லை ; அவ்வித போன்கள் அந்த நேரமே கட் செய்யப்படும் & அவர்களின் நம்பர்கள் ப்ளாக் செய்யப்படுவதோடு,சந்தாவோ ஆர்டரோ கேன்சல் செய்யப்பட்டு பணம் திருப்பி அனுப்பப்படும் !

  யார் வீட்டுப் பெண்களோ நம் பொருட்டு கேவலப்பட்டு நிற்பதை இனியும் சகிப்பதாய் இல்லை - அதுவும் பிழை ஏதும் அவர்கள் மீது இல்லையெனும் போது !

  ReplyDelete
  Replies
  1. And சந்தா செலுத்தி "கேவலப்பட்டு நிற்கும்" நண்பருக்கு, அந்த நோவை நாம் தொடர்ந்து தந்திடுவதாக இல்லை !

   Delete
  2. // அதுவும் பிழை ஏதும் அவர்கள் மீது இல்லையெனும் போது ! //
   சரியாக சொன்னீர்கள் சார்...

   Delete
  3. பக்குவமில்லாத ந(ண்)பர் என்று புரிகிறது. வேதனையிலிருக்கும் சகோக்களுக்காக வருந்துகிறேன். எடிட்டரின் முடிவு வரவேற்கத்தக்கது!

   Delete
 102. ஆசிரியருக்கு அன்பு வணக்கம்.. அனைத்து புத்தகங்களும் சிறப்பான முறையில் வந்துள்ளது.. நாங்கள் கேட்டதை விட எதிர்பார்த்ததை விட மிக சிறப்பாக உள்ளது.. பிரிண்ட் செய்யப்பட்ட புகைப்படமும் மிக சிறப்பாக உள்ளது sir.. நன்றி..
  மு பாபு முகமது அலி
  கெங்கவல்லி
  சேலம்

  ReplyDelete
 103. சார் வீட்டுக்கு வந்ததும் புத்தக பார்சலை தேட....மனையாள் என் மகன் பிரித்து தரச் சொல்லி அழுத்தாமல் பிரித்துத் தந்திருக்கிறார்கள்..இதுதான் முதல் முறை நானில்லாமல் பிரித்தது....காரணம் பாக்ஸின் ஈர்ப்பு...சாக்லேட்டை மகன் தின்று விட்டதாய் கூற...குழந்தை மலையில் வாயைத் திறந்து கையால் வாய்க்குள் போட்டதாய் சைகை செய்ய மகிழ்ச்சி இல்லமெங்கும்...இல்லமெங்கும் காமிக்ஸ் மட்டுமல்ல மகிழ்ச்சியும்.. உள்ளமெங்கும் மகிழ்ச்சி ...இது வார்த்தையல்ல...உங்க நல்ல மனது தந்த சந்தோசம்...பதிவிட விட மாட்டேங்குறான்...சற்று நேரத்தில் விரிவாய்...

  ReplyDelete
  Replies
  1. இதுவே கச்சிதமாய் இருக்கு - விரிவு படுத்தாதீங்க ப்ளீச் :-)

   அழகான வர்ணனை ஸ்டீல் - இனிமே குழந்தையை பக்கத்துல வெச்சுக்கிட்டே கமெண்ட் போடுங்க - சூப்பரா இருக்கு !

   Delete
 104. தலை கால் புரியல...பின்னூட்டத்த காலிரிக்கி கட்டை விரலிரிக்கில போட்டுட்டேன்

  ReplyDelete
 105. FFS கொரியர் வந்துவிட்டது.. நானோ அலுவலகத்தில்.. பேசாமல் நாளை லீவு போடுவிட்டால் என்ன என்ற யோசனையில் இருக்கிறேன்...

  ReplyDelete
 106. அட்டைப் படங்கள் உலகத் தரத்த நா பாத்ததில்ல...ஆனா தமிழக தரத்தில் என நிச்சயமா வெளிநாட்டினர் எழுதுவார்கள்...

  ReplyDelete
 107. என் மகனின் புகைப்படம் டாலடிக்குது...தூங்கி விட்டான்...எழுந்ததும் காட்டனும்

  ReplyDelete
 108. Ffs அந்த மயில் வண்ண நிறப் பின்ணணிலதங்கத்ல நம்ம லோகோவோட பொருத்தமான அமைஞ்சத சொல்லவா...அழகாய் துப்பாக்கியோட காட்சி தரூம் நாயகரச் சொல்லவா...அந்த வலைய சொல்லவா...ராணுவ குரூப்ப சொல்லவா...பின்னட்டய சொல்லவா

  ReplyDelete
 109. மாயாவியோட ஃப்ளோ அப்ப சொல்லவா....அடடா சத்தியமா இப்பதான் நினைவு வருது இரும்புக்கை மாயாவி இல்லையா சார்

  ReplyDelete
 110. ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள் மஞ்சள் ...சிவப்பு...பின்னணி பாலம்...பின்ணட்டை நாலு கட்டங்களில் நாற்பதாயிரம் கதைகள்...இதே போல என்பதுகளில் நம்ம லயன் தீபாவளி மலர் அல்லது முத்து மலர் பின்னட்டை நாயகர்கள் தூளாய் வந்தார்கள் என நினைக்கிறேன்

  ReplyDelete
 111. மதியம் முதல் எதிர் பார்க்காத கன மழை சென்னையைப் புரட்டியெடுக்க, கூரியர்வாலா மழையோடு மழையாக டெலிவரி செய்வாரா...? இல்லை நாளை பார்த்துக்கலாம் என்று குப்புற படுத்துப்பாரோ...? கடவுளே..

  ReplyDelete