நண்பர்களே,
வணக்கம். காலத்துக்கேற்ப நாமும் சில விதிகளை மாற்றிக் கொள்ளணும் போலும் ! "300 பின்னூட்டங்களானால் உபபதிவு" என்ற கம்பெனி ரூல் நடைமுறையில் இருப்பது தெரியும் நமக்கு ! ஆனால் சமீப காலங்களில் இரும்புக் கவிஞர் வீறு கொண்டு களமிறங்கி, ஒவ்வொரு பின்னூட்டத்தினையும் தனது உரைநடை, செய்யுள், கவிதை,காப்பியம், இதிகாச வரிகளால் மெருகூட்டி வருவதால் , கம்பெனிக்கு அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க தோதுப்பட மாட்டேன்கி ! So இனிமுதற்கொண்டு "400 பின்னூட்டங்களில் உப பதிவு" என்று ரூல்ஸை மாற்றினாலென்ன ? என்ற சீரிய சிந்தனையில் இந்தச் செவ்வாய் பகலைக் கழித்து வருகிறேன் !
SMASHING 70's ; SUPER 60's என்று போன பதிவினில் நான் சொல்லியிருந்தது குறித்து நிறையவே curiosity எழுந்திருப்பதைக் கண்டேன் ! "இது என்ன புதுக் கரடி ?" என்ற கேள்வியுமே எழுந்திருக்கக்கூடும் என்பதும் புரிகிறது ! அது புதுசாகவோ ; பெருசாகவோ ஏதுமில்லை guys !! வேதாளன் ; மாண்ட்ரேக் ; ரிப் கிர்பி & காரிகன் மெகா தொகுப்புகள் நடப்பாண்டினில் SMASHING '70s என்ற தடத்தினில் வெளிவரவுள்ளது நமக்குத் தெரியும் தான் ! And இவற்றிற்கான உரிமைகளை வாங்கிடும் பொழுதே, படைப்பாளிகளின் குறைந்தபட்ச ராயல்டி இலக்கினைத் தொடும் அவசியத்தின் பொருட்டு - 2 ஆண்டுகளுக்கான கதைகளை வாங்க நேர்ந்திருந்தது ! And அது பற்றி ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருந்தேன் என்ற நினைவும் உள்ளது எனக்கு ! இந்த நாயகர்களின் டாப் கதைகள் உருவானது 1960 & 1970-களில் தான் என்பதால் நான் கதைத் தேர்வுகளை இந்த 2 தசாப்தங்களுக்குள்ளேயே செய்திருந்தேன் ! அதன் பலனாய் 2022-ன் தொகுப்புகளை SMASHING '70s என்ற பெயர் !! காத்திருக்கும் 2023-ன் தொகுப்புகள் - SUPER '60s என்ற பெயரினில் வெளிவந்திடும் ! நான் நேற்றைக்குக் குறிப்பிட்டிருந்தது இதனைத் தான் !
UNEDITED VERSION ! So வசனங்களில் திருத்தங்கள் இருந்திடும் ! |
2022-ன் நவம்பருக்கு முன்பாய் SMASHING '70s ஆல்பங்கள் நான்குமே வெளி வந்திருக்கும். So அவற்றிற்கான உங்களின் reactions-களை பொறுத்து 2023-ன் SUPER 60's க்கான திட்டமிடலிருக்கும் ! வேதாளர் நீங்கலான பாக்கி vintage நாயகர்கள் (ரிப் ; மாண்ட்ரேக் ; காரிகன்) தொடர்ந்திடணுமா ? அல்லது 2023 ஆண்டோடு போதுமா ? என்பதான தீர்மானங்களையும் அந்நேரம் எடுத்திட வேண்டி வரும் ! Maybe இதில் யாரேனும் இருவரைக் கழற்றி விட்டுவிட்டு, சார்லி & விங் கமாண்டர் ஜார்ஜை கூட்டணிக்குள் கொண்டு வரலாம் ; அல்லது வேதாளருக்கு mass ஆக ஸ்லாட்ஸ் தந்து விட்டு, பாக்கிப் பேருக்கு விடை தந்திடவும் செய்யலாம் ! எல்லாமே உங்களின் தீர்மானங்களாக இருந்திடவுள்ளன !
எது எப்படியோ - மொத்தமாய் இரண்டு ஆண்டுகளுக்கான ஒரு லோடு கதைகளின் மீது குந்தியிருக்கும் இந்த அனுபவம் செம த்ரில்லிங் !! And நேரம் கிடைக்கும் போதெல்லாம் கதைகளை படித்துப் பார்க்கும் போது மெய்யாகவே பிரமிக்கத் தோன்றுகிறது - அந்நாட்களில் கதை உருவாக்கத்தினில் படைப்பாளிகளின் செம ஷார்ப் திறன்களைக் கண்டு ! மாண்ட்ரேக் காதிலே சுற்றும் ரீல்கள் கூட செம நேர்த்தியாய், ரொம்பவே ரசிக்கும் விதமாய் உருவாகியுள்ளது சுலபக்காரியமே அல்ல ! And என்னை ரொம்பவே impress செய்தவை நமது ஜென்டில்மேன் டிடெக்டிவ் ரிப்பின் சாகசங்கள் ! ஒவ்வொன்றும் அவ்வளவு அழகு ; அவ்வளவு சுவாரஸ்யம் & அவ்வளவு மாறுபட்ட களங்கள் !! பின்னாட்களில் கதைகளின் பொறுப்பும் சரி, சித்திரங்களின் பொறுப்பும் சரி, கைகள் மாறிய பிற்பாடு இந்தத் தொடரை செம டப்ஸாவாக்கி விட்டனர் என்பதை கடுப்போடு பார்த்தவனுக்கு இந்த vintage '60s & '70s விருந்துகள் மெர்சலூட்டுகின்றன ! ஆண்டொன்றுக்கு 4 ஆல்பங்கள் வீதம் சுமார் 800 பக்கங்கள் எனும் போது - 2 ஆண்டுகளுக்கு 1600+ பக்கங்கள் என்றாகிறது ! And கிட்டத்தட்ட 75 சாகஸங்களாகிடும் இந்த 1600+ பக்கங்கள் ! Game arcade-களில் அரங்கு முழுக்க கலர் கலராய்ப் பந்துகளைக் குவித்து விட்டு வாண்டுகளை உள்ளாற இறக்கி விட்டு விளையாட அனுமதிப்பார்கள் அல்லவா ? கிட்டத்தட்ட அது போன்றதொரு சூழலில் தான் நானிருக்கிறேன் கடந்த 3 மாதங்களாய் ! 1970-களின் பிற்பகுதிகளில் முத்து காமிக்ஸ் ஆபீசுக்கு King Features முகவர்களிடமிருந்து ஒரு பழுப்பு நிற முரட்டு கவரில் இந்தக் கதைகளின் ஒரிஜினல்கள் வளவளப்பான பிரிண்ட்களில் வந்து சேர்ந்திடும் & நிறைய நாட்கள் நான் ஆபீசுக்கு வரும் போது அதனை உடைத்து கதைகளை வெளியெடுத்து, முதல் ஆளாய் வாசிக்கும் வரைக்கும் கவரையே உடைக்காமல் பத்திரமாக வைத்திருப்பார்கள் ! அன்றைக்கு அவற்றினுள் மிஞ்சிப் போனால் இரண்டோ, மூன்றோ கதைகள் இருந்திடும் ! But அதுவே ஒரு செம குதூகல அனுபவமாக இருந்திடும் ! இன்றைக்கோ 75+ கதைகள் ; 1600+ pages !! Phewwwwww !!
And 2023-ன் SUPER '60s - "Buy All 4 (or) Buy Any 2" என்ற வசதியுடனும் வந்திடும் ! So பிரச்சார பீரங்கிகள் இதன் பொருட்டு இன்னொருக்கா 'தம்' கட்ட 2023-ல் அவசியங்கள் இராதென்று நம்பிடலாம் ! கதைகளின் தரம் + தயாரிப்புத் தரம் உங்களை சகல இதழ்களையும் வாங்கச் செய்யுமென்ற நம்பிக்கையே எனது இந்தத் தீர்மானத்தின் பின்னணி !
இதோ - 2022 சந்தாவினில் கூட ரூ.3000 செலுத்தி "எனது காமிக்ஸ் - எனது உரிமை" என்று pick & choose செய்திட ஒரு வாய்ப்பை நாம் தந்திருப்பினும், இன்று வரையிலும் அந்தத் தடத்தினில் புகுந்திருப்போர் வெறும் 6 நண்பர்கள் மாத்திரமே !! பாக்கி அத்தனை பேருமே "ஒரே நாடு-ஒரே காமிக்ஸ்" என்று ALL IN சந்தாவுக்கே 'ஜே' சொல்லியுள்ளனர் ! சந்தாச் சேர்க்கையினில் பயணிக்க இன்னமும் நிறைய தூரம் உள்ளது தான் ; ஆனால் இந்த 'ஒரு சோற்றுப் பதம்' சொல்லும் சேதி ரொம்பவே உற்சாகமூட்டுகிறது ! நமது தேர்வுகள் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு ஐயாயிரத்து நூறு நன்றிகள் folks !!
ரைட்டு...FFS இறுதிக்கட்டப் பணிகளுக்குள் திரும்பவும் புகுந்திட கிளம்புகிறேன் ; see you around all ! Have a great week !
P.S : அப்புறம் அந்த கார லட்டு # 2 பற்றி லைட்டாய் !! இங்கே பூந்தி ரெடி ; லட்டு பிடிக்கச் சொல்லி நீங்கள் உத்தரவிட்டால் - 'சரிங்க ஆபீஸர்ஸ்" என்றபடிக்கு லட்டு பிடிக்க முனையணும் நான் ! அது பற்றி சனிக்கிழமையில் பதிவினில் ! Trust me on this guys - இது யூகிக்க வாய்ப்பே இல்லாததொரு பண்டமாக்கும் ! So கவிஞர் வழக்கம் போல அள்ளி விட்டுக் கொண்டிருப்பதை, "ஒரு வேளைக்கு இதா கூட இருக்குமோ ?" என்ற யோசனைகளின்றி ஜாலியாய்க் கடந்திடலாம் !!
1 st
ReplyDeleteஇரண்டாவதாக
ReplyDeleteஉள்ளேன் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
ReplyDelete.
என்னுடைய all time favourite இளவரசிக்கு அடுத்து... Gentleman ரிப்தான்... நமது லயனின் அழகான Smashing 70sல் என் முதல் choice... ரிப்தான்... அடுத்தது.. காரிகன்... பின்னர் மற்ற இருவரும்..
ReplyDeleteபுத்தகம் ஏந்தும் நாளை எண்ணி ஆவலுடன் waiting...
AKK
My Choice First Karikon Next Rip kerbi and another next choice. 😁😁
Deleteவணக்கமுங்க
ReplyDelete🙏🙏
ReplyDelete10குள்ள
ReplyDeleteஆசிரியர் அவர்களே 400 கமெண்ட் வந்தால் தான் உப பதிவு என்பது கவிஞருக்கு 100 ஸ்லாட் அதிகமாக வழங்குவதைப் போல் ஆகிவிடுமே. இனி கவிஞருக்கு கொண்டாட்டம்தான். சார் எங்களைப் பார்த்தால் பாவமாக இல்லையா? கொஞ்சம் கருணை கூர்ந்து இப்போது உள்ளது போலவே 300 கமெண்ட்ஸ் வந்தால் உப பதிவு என்கிற முறையை பின்பற்றுங்கள். கவிஞரே உங்களுக்காக ஆசிரியர் நூறு ஸ்லாட் தந்திருக்கிறார் பூந்து விளையாடுங்க.
ReplyDeletefact fact fact
Deleteநண்பர்கள் அனைவரும் 400அ சும்மா தெறிக்க விடுவார்கள் என்பது புரியாம பேசிட்டார்...ராகவரே சிக்கியது பரணியா ஆசிரியரா
Delete10....
ReplyDelete// இது யூகிக்க வாய்ப்பே இல்லாததொரு பண்டமாக்கும் ! //
ReplyDeleteஅப்படின்னா அது வாரம் ஒரு மாடஸ்டி தான்.
சிரிக்கிறதுக்கு ரெண்டு நாள் லீவு வேணுமே..!!
Deleteகொண்டாட்டம் தான்.. 😍😍😍😍
Deleteஹிஹிஹிஹி
DeleteNAnum nazhu naz serthu eduthukaren KOK
DeleteUnknown sir நான் உங்க பக்கம் ஆனாக்கா ரிப்கிர்பி, இளவரசி. என் வரிசை. பிறகு, சார்லி வேதாளர், மாண்ட்ரேக். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஉப கூட பெரிதாக அமைந்ததற்கு வேதாளர் & கோ விற்கு நன்றிகள் பல.
ReplyDeleteநமது தேர்வுகள் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு ஐயாயிரத்து நூறு நன்றிகள் folks !!
அதில் சிறிதும் சந்தேகம் இல்லை சார். நீங்கள் எங்களை பயணிக்க செய்யும் அவ்வளவு திசைகளும் அமர்க்களமாக உள்ளது.
தொடர்ந்து எங்களை சந்தோசைப்படுத்த உங்களின் உழைப்பும் அபரீதம் சார். அதற்கு எங்களது நன்றிகள் பல.
நிச்சயமா யாராலும் இப்படியோர் மாபெரும் கொண்டாட்டத்த தர முடியாது...என்ன இல்லை இதில் என்பதே கேள்வி...
Deleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteSuper 60's kku நல்வரவு!
ReplyDeleteஎப்படியாவது சார்லி சாயர் மற்றும் விங் கமாண்டர் ஜார்ஜ் இருவரும் மறுபதிப்பு கண்டால் மகிழ்ச்சி!
Wow - sir I have read that story in the strip above. A good one. Awaiting Jan !!
ReplyDeleteஅட டா கவனிக்கலையே நம்ம டாக்டர் சார்தான் அன்னௌன் சாரா சாரிங்க சார் கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteBTW sir Imagine 200 comments from kavignar - indha 400 paritchai ellam venaam saamee !!
ReplyDeleteநீங்களே 50 போடுவீங்களே
DeleteEdi ji,
ReplyDeleteநீங்கள் சொன்னது போலவே சார்லி ஜார்ஜ் கதைகளை தொகுப்பாக வெளியிடவும் எப்போது இந்த விளம்பரங்கள் வரும் என்று ஆவலாக இருக்கிறேன்
Edi ji,
ReplyDeleteயாரையும் காவு கொடுக்காமல் ஆறு தொகுப்பாக மாற்றி விட்டால் என்ன
// SMASHING '70s என்ற பெயர் !! காத்திருக்கும் 2023-ன் தொகுப்புகள் - SUPER '60s என்ற பெயரினில் வெளிவந்திடும் ! //
ReplyDeleteஅப்போ அது 60களில் வெளிவந்த டெக்ஸின் புக்கு
இல்லீங்களா சார் 🤷🏻♂️
அப்படீன்னு
டெக்ஸ் விஜய் கேக்க சொன்னாருங்கோ சார் 🙏🏼😇
.
பொதுவா 60-70 காமிக்ஸ்களின் பொற்காலம்னு சொல்வாங்க, ஆனாக்க நமக்கு 2022 தான் பொற்காலமாக இருக்க போகுதுன்னு நினைக்குறேன்
Deleteதமிழ் காமிக்சுக்கு என்பதே பொற்காலம்...எழுவதுகளோ துவக்க காலம்...ஆனா என்பத தூக்கி சாப்பிடுது இந்தக்காலம் மாதம் மூனு கதைகள்...மேலும் வழக்கம் போல மூனு...லட்டுகள் ஆரம்பம் ஒன்று...இப்ப மூனு...இன்னுமெத்தனை கொட்டுமோ
Delete////இந்த 2 தசாப்தங்களுக்குள்ளேயே செய்திருந்தேன் ! அதன் பலனாய் 2022-ன் தொகுப்புகளை SMASHING '70s என்ற பெயர் !! காத்திருக்கும் 2023-ன் தொகுப்புகள் - SUPER '60s என்ற பெயரினில் வெளிவந்திடும் ! நான் நேற்றைக்குக் குறிப்பிட்டிருந்தது இதனைத் தான் ! ///
ReplyDelete---ஸ்ஸ்ஸ்ஸ்....அப்பாடி... நிம்மதி.. என்னவோ ஏதோவென பயந்திருந்தோம்....!!!😍😋🤣🤣
😂🤣😂
Deleteஎன் காமிக்ஸ் உலகின் முதல் நாயகன் முகமூடி வீரர் மாயாவி என்னும் வேதாளரை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். மாயாஜால மன்னன் மாண்ட்ரேக் மற்றும் திருப்பியும் எனக்கு மிகவும் பிடிக்கும். காரிகன் ஐப் பொறுத்தவரை லயன் டாப்10 ஸ்பெஷலில் வந்த ஒரு கதையை மட்டுமே படித்துள்ளேன். மேகலா காமிக்ஸில் இரண்டு கதைகள் படித்துள்ளேன். எனவே இவர் மீது எனக்கு பெரிய அபிப்பிராயம் இல்லை. என்னைப்பொருத்தவரை வேதாளர் டாப். அதன்பின் மாயாஜால மன்னன் மாண்ட்ரேக் ஜென்டில்மேன் டிடெக்டிவ் ரிப் கெர்பி இவர்களுக்காக காத்திருக்கிறேன்.
ReplyDeleteஅனைவருக்கும் வேதாளர் டெக்ஸ் போல நண்பரே...ஒளி வட்டம் இவர் மேலத்தான் என்பதால் துவக்கத்திலே வந்தா நல்லாருக்கும்தா
Deleteஜார்ஜ் கதைகளில் நெப்போலியன் தேடிய பொக்கிஷம் மட்டும் மறந்து விடாதீர்கள்
ReplyDeleteநீங்க நம்ம ஆளுங்க..
Deleteநானுந்தா...நண்பர்கள் அநேகமாக தேடுவதால ஆவல் கூடுது
Delete///// இது யூகிக்க வாய்ப்பே இல்லாததொரு பண்டமாக்கும் ! //
ReplyDeleteகிளியோபட்ரா வாழ்க்கை வரலாறோ?
என்னாது கிளியோபட்ரா வாழ்க்கை வரலாறா!!!!????
Deleteஇதை யூகிப்பது கஷ்டமே இல்லை
Delete//Trust me on this guys - இது யூகிக்க வாய்ப்பே இல்லாததொரு பண்டமாக்கும் ! So கவிஞர் வழக்கம் போல அள்ளி விட்டுக் கொண்டிருப்பதை, "ஒரு வேளைக்கு இதா கூட இருக்குமோ ?" என்ற யோசனைகளின்றி ஜாலியாய்க் கடந்திடலாம் !!
ReplyDeleteat 12/21/2021 02:19:00 pm Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest//
அப்ப சனி கிழமை வரை இந்த தலைப்பை வைச்சு தான் பட்டி மன்றம் நடக்கும் ஹிஹிஹிஹி
நண்பர்களே ஸ்டீல் ஆர் புகுந்து விளையாட ஆசிரியர் களம் அமைத்துக் கொடுக்கிறார் யாராவது தடுத்து நிறுத்துங்கள்
ReplyDelete// அப்புறம் அந்த கார லட்டு # 2 பற்றி லைட்டாய் !! இங்கே பூந்தி ரெடி ; லட்டு பிடிக்கச் சொல்லி நீங்கள் உத்தரவிட்டால் - 'சரிங்க ஆபீஸர்ஸ்" என்றபடிக்கு லட்டு பிடிக்க முனையணும் நான் ! அது பற்றி சனிக்கிழமையில் பதிவினில் ! Trust me on this guys - இது யூகிக்க வாய்ப்பே இல்லாததொரு பண்டமாக்கும் ! //
ReplyDeleteசட்டு புட்டுன்னு பூந்திய லட்டா பிடிச்சி வெள்ளிக்கிழமை சொன்னாக்கூட எங்களுக்கு ஓகேதானுங்கோ சார் 🙏🏼
.
முகமூடி வேதாளர் கதைகள் கண்டிப்பாக அடுத்த வருடமும் வேண்டும்..
ReplyDeleteஏன் அதற்கடுத்த மாதமே வேணாமா
Deleteஅன்புசால் எடிட்டர் ஐயா...
ReplyDeleteசில வருடங்களுக்கு முன்னால் மாத காலண்டர் ஒன்று வாசகர்களுக்கு கொடுத்தீர்கள்...
அது போல் இந்த வருடமும் 2022 க்கு ஒனாறு கொடுக்க வேண்டுகிறேன்...
அதற்கான தொகையையும் நீங்கள் பாரபட்சமின்றி அறிவித்து விடுங்கள்...
வேண்டுவோருக்கு மட்டுமே என்ற அடிப்படையில்...
ஒரு சரித்திர முக்கியம் வாய்ந்த இந்த ஐம்பதாம் வருடத்தில் அதை செய்யலாம்...
நீங்கள் மனது வைக்கலாம்...
இது நீண்ட கால வாசகனின் கோரிக்கை...
J
+11111
Deleteஆமாம். நிச்சயமாக காலெண்டர் வேண்டும்.
Deleteஇந்தமுறை சுவற்றில் மாட்டும் படியாக இருந்தால் நன்று.
.
.
.
.
.
.
.
.
.
(அதிலயும் 12 பக்கத்துக்கு 12 மாடஸ்டி ஸ்டில்ல போட்டா மாதம் ஒரு மாடஸ்டி வந்தமாதிரி ஆயிடும்.)
பாபு சார்...
Deleteஇது நியாயமா...
அப்ப டைகரூ டெக்ஜூ ஜேம்ஸு ஸ்பைடரூ மாயாவி
லாரன்ஸ் டேவிட் ஜானி வித் ஸ்டெல்லா பதிமூணு இவங்கெல்லாம் எங்க போவாங்க...சார்?
புரியலைங்க பாபு.
Deleteபோன முறை கொடுத்த காலண்டரை நான் சுவற்றில் அழகாக மாட்டியிருந்தேன்...
விலை அதிகம்னாலும் பிரம்மாண்டமா லிமிட்டெட் எடிசன்ல வந்தாலும் சரி
Deleteஸ்கூல் படிக்கும் போது படிச்சது இந்த முகமூடி வீரரை, ஆனா முகமூடி மாயாவினு தான் நான் எல்லாம் படிச்சு இருக்கேன் இங்க வேதாளர்னு சொல்லறீங்களே.
ReplyDeleteவேதாளர்னும்...மாயாத்மான்னும்தா முதல் தமிழ் காமிக்ஸ் தலைமுறைக்கு அறிமுகம்
Deleteமாலை வணக்கம் நண்பர்களே.
ReplyDeleteஅறிவிப்புகளுக்காக அல்ல உங்கள் பதிவுக்காக வாசிப்போம் So உபபதிவுக்கான Target ஐ கூட்டி விடாதீர்கள் Sir
ReplyDeleteஅன்பு ஆசிரியருக்கு 🙏...
ReplyDeleteஉங்கள் பதிவை பார்க்கும் ஆவலில்தான்
300ஐ கஷ்டப்பட்டு நெருக்கினார்கள் சார்.
இப்ப அதிலியும் மாற்றமா?. ஏன் அது 200 ஆக குறைக்கலாமே சார்😉.
நீங்க 60sனு சொன்னாலும் சொன்னீங்க,
நம்மாளு விடிய விடிய இதே விவாதம்தான்.
எங்களுக்கு 70களுக்கு மேல் வந்த காமிக்ஸ்கள் தான் கொஞ்சம் தெரியும்.
இப்ப நீங்கள் 60லியே கதைகள் வந்தது என்கிறபோது ஆச்சரியமே.நல்ல தகவல்.
கடந்த மாதங்களில் பூந்தியை மிக மிக சுவையாக தருவதால், இந்த பூந்தியும் சோடை போகாது என நம்புகிறோம். இன்றே சொல்லியிருந்தால் சனிக்கிழமை ரிசல்ட் தெரிந்திருக்குமே சார்.?
பின்பு...
1)ஸ்மாஷிங் 70s வாங்கும் அனைவருக்கும்
போஸ்ட்+புக்லெட் இலவசம்ங்களா?,
இல்லை
முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமா?சார்?.
2) முத்து 50 க்கு தேர்வான லோகோ எதுங்க?
3) வாசகர்களுக்கு 2022ல், லயன் முத்து
ஆஸ்தான நாயகர்கள் கொண்ட
காலண்டர் போடுவீர்களா சார்?.
(வந்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி தான்
போங்க)
மீண்டும் அடுத்த பதிவில் 🌹🌹🌹
காலண்டரூக்கான விண்ணப்பம் மேலே எழுப்பியுள்ளோம் சார்...
Deleteஉங்கள் ஆதரவிற்கு நன்றி
அருமை அண்ணா...
Deleteஅருமை 🌹🌹🌹
//அப்புறம் அந்த கார லட்டு # 2 பற்றி லைட்டாய் !! இங்கே பூந்தி ரெடி ; லட்டு பிடிக்கச் சொல்லி நீங்கள் உத்தரவிட்டால் - 'சரிங்க ஆபீஸர்ஸ்" என்றபடிக்கு லட்டு பிடிக்க முனையணும் நான்//
ReplyDeleteலட்டு கார லட்டுவா இருந்தாலும் "திருப்பதி லட்டு" அளவு இருந்தா நன்னா இருக்கும்.
ஆகா மொத்தம் 2022 பட்டைய கிளப்புற வருசமாக இருக்க போகுதுனு தெரியுது - நீங்க ஜமாயுங்க எடி சார்.
என்ஜாய் பண்ண நாங்க இருக்ககோம்.
//And நேரம் கிடைக்கும் போதெல்லாம் கதைகளை படித்துப் பார்க்கும் போது மெய்யாகவே பிரமிக்கத் தோன்றுகிறது - அந்நாட்களில் கதை உருவாக்கத்தினில் படைப்பாளிகளின் செம ஷார்ப் திறன்களைக் கண்டு ! மாண்ட்ரேக் காதிலே சுற்றும் ரீல்கள் கூட செம நேர்த்தியாய், ரொம்பவே ரசிக்கும் விதமாய் உருவாகியுள்ளது சுலபக்காரியமே அல்ல ! And என்னை ரொம்பவே impress செய்தவை நமது ஜென்டில்மேன் டிடெக்டிவ் ரிப்பின் சாகசங்கள் ! ஒவ்வொன்றும் அவ்வளவு அழகு ; அவ்வளவு சுவாரஸ்யம் & அவ்வளவு மாறுபட்ட களங்கள் ///
ReplyDeleteசூப்பர் சார்! அந்நாளைய படைப்புகளில் பலவும் கதையாழம் மிக்கவை என்பது புரிகிறது. 'சூப்பர்-60' மூலம் அவற்றை தரிசித்திட ஆவலாய் இருந்திடுவோம்!
///உங்களின் reactions-களை பொறுத்து 2023-ன் SUPER 60's க்கான திட்டமிடலிருக்கும் ! வேதாளர் நீங்கலான பாக்கி vintage நாயகர்கள் (ரிப் ; மாண்ட்ரேக் ; காரிகன்) தொடர்ந்திடணுமா ? அல்லது 2023 ஆண்டோடு போதுமா ?///
ReplyDeleteஆசிரியர் சார்@@@
நான் புரிந்து கொண்டது,
2023லும் இதே வேதாளர்,ரிப், மாண்ட்ரேக், காரிகன் தொடருது Smashing 60என்ற பெயரில்! 2024ல் வேதாளர் உறுதி.
மற்ற மூவரையும் மாற்றனும்னா அடுத்த ஆண்டு இறுதியில் தெரிவிக்கணும் அப்படிதானே????
2023ல் யாரையும் புதிதாக நுழைக்க இயலாது??
சார்லியோ, விங் கமாண்டரோ வேணும்னா குறைந்தபட்சம்2024ல் சாத்தியம்!!??
//2023லும் இதே வேதாளர்,ரிப், மாண்ட்ரேக், காரிகன் தொடருது Smashing 60என்ற பெயரில்! 2024ல் வேதாளர் உறுதி. மற்ற மூவரையும் மாற்றனும்னா அடுத்த ஆண்டு இறுதியில் தெரிவிக்கணும் அப்படிதானே????
Delete2023ல் யாரையும் புதிதாக நுழைக்க இயலாது??
சார்லியோ, விங் கமாண்டரோ வேணும்னா குறைந்தபட்சம்2024ல் சாத்தியம்!!??//
ஆதரவு பாட்டையா கிளப்புனா ரெண்டு பேருக்கும் கூடுதல் ஸ்லாட் போட்டு 2023லேயே இறக்கலாமே
சின்ன திருத்தம் விஜய் சகோ...
Deleteநாயகர்களின் வரவேற்பு பாத்துட்டே,60ன் ஆல்பம் தொடரும்...
வெற்றி பெற்றா சார்லிக்கும் பைலட்டுக்கும் வாய்ப்பிருக்காதா
Delete///அப்புறம் அந்த கார லட்டு # 2 பற்றி லைட்டாய் !! இங்கே பூந்தி ரெடி ; லட்டு பிடிக்கச் சொல்லி நீங்கள் உத்தரவிட்டால் - 'சரிங்க ஆபீஸர்ஸ்" என்றபடிக்கு லட்டு பிடிக்க முனையணும் நான் !///
ReplyDeleteகொடுப்பது நீங்கள் என்பதால் எங்களுக்கு புளிப்பு லட்டு கூட பிடிக்கும் சார்! சீக்கிரமே பூந்தியை உருட்டுங்க!
ஈரோடு விஜய்,
Delete//புளிப்பு லட்டும் பிடிக்கும்//
அருமையான வரிகள்.
அருமை....
அறுசுவையிலும் கேளுங்க
Delete2022-ன் நவம்பருக்கு முன்பாய் SMASHING '70s ஆல்பங்கள் நான்குமே வெளி வந்திருக்கும். So அவற்றிற்கான உங்களின் reactions-களை பொறுத்து 2023-ன் SUPER 60's க்கான திட்டமிடலிருக்கும் ! வேதாளர் நீங்கலான பாக்கி vintage நாயகர்கள் (ரிப் ; மாண்ட்ரேக் ; காரிகன்) தொடர்ந்திடணுமா ? அல்லது 2023 ஆண்டோடு போதுமா ? என்பதான தீர்மானங்களையும் அந்நேரம் எடுத்திட வேண்டி வரும் ! Maybe இதில் யாரேனும் இருவரைக் கழற்றி விட்டுவிட்டு, சார்லி & விங் கமாண்டர் ஜார்ஜை கூட்டணிக்குள் கொண்டு வரலாம் ;
ReplyDelete= நான்கு நாயகர்களுடன் இவர்களும் இணைந்து 6 இதழ்களாக போடலாம் சார்.....
// இந்த நாயகர்களின் டாப் கதைகள் உருவானது 1960 & 1970-களில் தான் என்பதால் நான் கதைத் தேர்வுகளை இந்த 2 தசாப்தங்களுக்குள்ளேயே செய்திருந்தேன் ! அதன் பலனாய் 2022-ன் தொகுப்புகளை SMASHING '70s என்ற பெயர் !! காத்திருக்கும் 2023-ன் தொகுப்புகள் - SUPER '60s என்ற பெயரினில் வெளிவந்திடும் //
ReplyDeleteSuper!
// அத்தனை பேருமே "ஒரே நாடு-ஒரே காமிக்ஸ்" என்று ALL IN சந்தாவுக்கே 'ஜே' சொல்லியுள்ளனர் ! //
ReplyDeleteசெம செம சார்!
இந்த டெக்ஸ் அட்டை படிங்களையெல்லாம் கோர்த்து ஒரு புக்குன்னு சொல்லீட்ரூந்தீங்க - இல்லீங்களாங்க சார்...
ReplyDeleteநாங்கள் கேட்பது முத்து காமிக்ஸ் ஆரம்பித்து ஐம்பது வருடங்கள் எட்டியுள்ளோம்...
இதில் முத்துவின் நாயகர்களை வைத்து பன்னிரண்டு பக்கங்கள் கலர்புல்லாக ஒரு அழகானமாத காலண்டர் விலைக்குத்தான்.
கேட்கிறோம் - தார்மீக உரிமை
தரவேண்டியது முத்துவின் தார்மீகப் கடமை...
நண்பர்களே கை கோருங்கள்...
Yes good idea
Deleteஒரு அழகான ஐம்பதாம் வருடம் நினைவினில் அழகான பெரிய்ய்ய காலண்டர்...
Deleteநல்ல விளம்பரமாகவும் ஆகும்.
இப்பல்லாம் ஆறடி உயரத்துக்கு காலண்டர் போட்டாங்க...
நீங்க போட்றீங்க...
நாங்க வாங்குவோம்...வேணுங்கிறவங்க மட்டும்...
மாட்டு வோம்...
பாக்குறவங்கெல்லாம் வித்தியாசமா இருக்குன்னு பாத்துட்டு கேக்கட்டுமே...
நெஞ்சம் நிமிர்த்தி சொல்வேன்...
இது எம் முத்துவின் 50 என்று...
பெருமிதம் கொள்வேன் நாள்தோறும் அதை பார்த்து...
தினத்தந்தி காலண்டர் எவ்வளவு தெரியுங்களா
Deleteதிட்டமிடல் சுலபமே சார் - ஆனால் நடைமுறை not சுலபம் ! அதற்குமே ராயல்டி ; படைப்பாளிகளின் சம்மதம் என சகலமும் தேவை . And Pubல்ishers நிறைய பேர் "NO" என்று மறுப்பையும் சொல்லி விட்டார்கள் ! கேட்காமல் இருப்பேனா சார் ?
Delete12 ஷீட்டில் மாயாவி சார்வாளையும் , ஜானி நீரோவையும்,மொட்டை டேவிட்டையும் பார்க்க 'தம்' இருந்தால் சொல்லுங்கள் ; Fleetway -ல் துண்டை விரிச்சுப் பார்ப்போம் ! (12 ஷீட்டிலும் ஸ்டெல்லாவை போட்டாக்கா பிய்ச்சுகிட்டு போகுமோ ?)
சார்...
Deleteவெறும் லயன் லோகோவை மட்டுமே போட்டாலும் சம்மதமே சார்.
காமிக்ஸ் தவிர, வருடம் முழுவதும் கண்ணில்படுவது காலண்டர் மட்டுமே.
நீங்க எது தருவாதாயினும் சரி.
லயனில் இருந்து வந்தது என்பதே போதும்.
//ஒரு அழகான ஐம்பதாம் வருடம் நினைவினில் அழகான பெரிய்ய்ய காலண்டர்...
Deleteநல்ல விளம்பரமாகவும் ஆகும்.
இப்பல்லாம் ஆறடி உயரத்துக்கு காலண்டர் போட்டாங்க...
நீங்க போட்றீங்க...
நாங்க வாங்குவோம்...வேணுங்கிறவங்க மட்டும்...
மாட்டு வோம்...
பாக்குறவங்கெல்லாம் வித்தியாசமா இருக்குன்னு பாத்துட்டு கேக்கட்டுமே...
நெஞ்சம் நிமிர்த்தி சொல்வேன்...
இது எம் முத்துவின் 50 என்று...
பெருமிதம் கொள்வேன் நாள்தோறும் அதை பார்த்து...
//+1
//12 ஷீட்டில் மாயாவி சார்வாளையும் , ஜானி நீரோவையும்,மொட்டை டேவிட்டையும் பார்க்க 'தம்' இருந்தால் சொல்லுங்கள் ; Fleetway -ல் துண்டை விரிச்சுப் பார்ப்போம் ! (12 ஷீட்டிலும் ஸ்டெல்லாவை போட்டாக்கா பிய்ச்சுகிட்டு போகுமோ ?)// ஸ்பைடரும் ஆர்ச்சியும் என்ன பாவம் செய்தார்களாம்
Deleteஆர்டினியும் பெல்ஹாமும் கூட கணிசமான புண்ணியம் பண்ணி இருக்காங்களாமே ஸ்டீல் ?
Deleteஇருந்தாலும் ஸ்படரோட, ஹெலிகாரோட சேக்கலாந்தாம் சார்
Deleteவரவேற்கின்றேன்.ஆமோதிக்கின்றேன்.
Deleteவாருங்கள் நண்பர்களே... காலண்டர் ஆறடி...
Deleteகேட்டு தான் பாருங்க எடிட்டர் சார்...
மனம் இருந்தால் காமிக்ஸ் ...
மார்க்கமிருந்தால் காலண்டர்...
சார் அருமை...வேதாளனைக் காணும் போது ஜனவரி ஒன்னாந்தேதியே வந்'திடுமென' யூகிக்க ஏலுகிறது...
ReplyDeleteபக்கமே ராட்சஸதனமாருக்கே
Deleteபூந்தியில் சிலந்தி இல்லயா
ReplyDeleteதெய்வமே....அடுத்த பதிவு சனிக்கிழமைக்குத் தான் ! கொஞ்சம் கருணை காட்டுங்க நம்மாளுங்க மேலே !
Deleteஊஹும் இது சரி வராது, பஞ்சாயத்தை கூட்ட வேண்டியது தான்.
Deleteசரி சார்...சனிக்கிழமை அந்த லட்டு ஸ்பைடர்தான
Deleteயூகிக்க இயலாத பண்டமென்றெல்லாம் ஒன்றுமில்லை...
ReplyDeleteஅதை சரியாக யூகித்தால் என்ன தருவீர்கள் சார்.
பூந்தி..
Deleteஅந்த புக்கின் மொழிபெயர்ப்பு + எடிட்டிங் பொறுப்பு சார் !
Deleteஸ்டோரீ ஆஃப் என் ஆபீஸர்...
Deleteஆபீசர் கதைக்கு நான் ஏன் சார் பில்டப்பெல்லாம் தரப் போறேன் ?
Deleteஹாரர் ஸ்டோரிங்களா சார்? (டைகர் கதைகளை சொல்லலைங்க சார்)
Deleteவாவ்..உப பதிவே மெயின் பதிவு போல் நீளமும் ,அறிவிப்பும் மகிழ்ச்சியை கூட்டுகிறது சார்...
ReplyDeleteவரும் பதிவிற்கு வெகு ஆவலுடன் வெயிட்டிங்...:-)
எடிட்டர் சார்,
ReplyDeleteவேதாளரின் சாம்பிள் பக்கம் மொழிபெயர்ப்பு அருமையாக வந்துள்ளது.
ஆனால் இந்த "ப்ரெசிடெண்ட் பேசலானார்" போன்ற பதங்கள் இப்போது படிப்பதற்கு என்னவோபோல் உள்ளது. :-)
நீங்கள் unedited version என்று சொல்லியிருந்தாலும், I would like to express my thoughts.
ஆபீசில் அழகுக்கு அழகு சேர்க்கும் போட்டோக்கள் செட்டிங் பணிகள் ஒடி வருகின்றன சார் ; வேதாளர் பணிகளுக்குள் புகுந்திட நேரமில்லை மூன்று நாட்களாய் ! காத்திருந்து அலுத்துப் போச்சு எனக்கு ; ஸ்டீல் வேற கவிதை பொழிய ஆரம்பிச்சுட்டாரா - unedited version-ஐத் தூக்கி இங்கே போட்டு விட்டேன் !
Delete////அழகுக்கு அழகு சேர்க்கும் போட்டோக்கள்//
Deleteஓஹோ... எங்க போட்டோக்கள்லாம் பிரிண்ட் ஆகுது போலயே🤩🤩🤩🤩
அழகுக்கு அழகு" ன்ன உடனே புரிஞ்சிட்டது😜
நிச்சயமா வெற்றியடையும்
ReplyDeleteஎப்படா ஜனவரி மாதம் வரும் எப்படா புத்தாண்டு முதல் இதழ்களை பார்க்க போகிறோம்..எப்படா 70 s நாயகர்களை தரிசிக்க போகிறோம் என நாள்கள் படபடப்பாக போகிறது சார்...
ReplyDeleteஇன்னும் பத்தே நாட்கள்..😍😍😍
Deleteஎட்டே நாள்...
Deleteமுத்து 50 அறிவிப்புகள் நண்பர்களை கூத்தாடச் செய்வதால் 400ம் தொட்டு விடும் தூரமே
ReplyDeleteஆனாலும் இதை வன்மையாக மறுதலிக்கிறோம் ..300 என்ற எண்ணிக்கையே உப பதிவுக்கான சரியான இடம் என தீர்ப்பு எழுத படுகிறது சார்..:-)
Deleteவிடுங்க தலைவரே...ஆளாளுக்கு பத்து போட்டா முத்து வாராதா
Deleteபத்து எங்க போடறது ஸ்டீல் உங்க முதுகுலயா ? 😋😋
Deleteஆசிரியரோட மைண்ட் வாய்சா சம்பத்
Deleteசார் நமது 70 s நாயகர்களின் சாகஸங்கள் மறுபதிப்பாகவும் வர இருக்கிறது அந்த கதைகளின் தலைப்பு பழைய இதழின் தலைப்பாகவே இருப்பின் நலமே சார்..:-)
ReplyDeleteநம்ம ரம்மி டெக்ஸ் சந்தா மட்டும் கட்டியுள்ளாராமே...உண்மையா
ReplyDeleteஆசிரியரே ரொம்ப நாட்களுக்கு முன்பு கல்கண்டு இதழில் வந்த ரிப்போர்ட்டர் ஜானி கதையை போடலாம் என்று சொல்லியிருந்தீர்கள் அதனை மறந்து விட்டீர்களா
ReplyDeleteஆஹா ..ஆவலுடன்...:-)
Deleteஇன்னும் போடாதது ஒரு வண்டி இருக்கு சாமீ ; அவற்றை வாசிக்க வழி தேடுவோம் முதலில் !
Deleteதலீவரே ; Smashing 70 s பக்கோடாக்கள்
Deleteலயன் லைப்ரரி மிக்சர்கள் இப்போதைக்கு போதும் - பால்யங்களின் அடையாளங்களுக்கு ! மேற்கொண்டும் பின்னோக்கியே வண்டியை விடணுமா ?
ஜானி கதை திறைய்ய இருக்கிறதா
Deleteஅப்ப ஓகே சார்..:-)
// Smashing 70 s பக்கோடாக்கள்
Deleteலயன் லைப்ரரி மிக்சர்கள் இப்போதைக்கு போதும் - பால்யங்களின் அடையாளங்களுக்கு ! மேற்கொண்டும் பின்னோக்கியே வண்டியை விடணுமா ? //
Enough sir!
அந்த ராஜா ராணி மாயாசாகசக் கதைகள்
Deleteவேதாளன்
ReplyDeleteமாண்ட்ரேக்
ரிப் கிர்பி
காரிகன்
சார்லி புஷ்சாயர்
விங் கமாண்டர் ஜார்ஜ்
என அனைவருமே வேண்டும். இவர்கள் கதைகள் 2024லும் வரவேண்டும். வந்தால் என் ஆதரவு எப்போதும் போல் உண்டு.
Dear Edi
ReplyDeleteபுதுவருசத்தில் முத்து ஐம்பதாம் லருடத்தில் காலண்டர் ஏதும் வாசகர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளதா ? அதை நீங்க கார லட்டுவாக 2 எனச் சொல்கிறிர்களா ?
12 மாதங்களும் ஏதாவதொரு நாயகர்களை போட்டு ஒரு காலண்டர் கொடுங்க சார்.
ReplyDeleteவரவேற்கின்றேன்.
Deleteஆமோதிக்கின்றேன்.
அடுத்த SMASH-ஆக மேற்கண்ட ஆறு லெஜெண்ட் ஹீரோக்களையும் சேர்த்தே தாருங்கள் சார்.இதற்கென கேள்வியோ சந்தேகமோ ஏதும் தேவையில்லை என்பது என் கருத்து.ஏனெனில் ஒவ்வொரு ஹீரோவுமே தனித்தனி பாணி,கதையமைப்பு கொண்டவர்கள்.வெறும் ஹிட் அல்ல... சூப்பர் ஹிட் ஆகவே ஆகும் தகுதிவுடையவர்கள் அவர்கள்.கறுப்பு வெள்ளையில் வந்தாலும் சரி.. வண்ணத்தில் தந்தாலும் சரி.நாங்கள் காத்திருக்கிறோம்.
ReplyDeleteவந்துட்டேன் வந்துட்டேன்.
ReplyDeleteEdi Sir..வேதாள மாயாத்மாவ பழையபடி நம்ப லயன் ல பார்த்தவுடனே தல கால் புரியலீங்க. ரொம்ப சந்தோசமாயிருக்கு.
ReplyDeleteTrailerக்கே இப்படின்னா, புக்க பாத்தா எனக்கு என்ன ஆகுமோ தெரியலியே.. சொக்கா..
டியர் எடி,
ReplyDeleteகிளாசிக் சார்லி, மற்றும் விங் கமாண்டர் ஜார்ஜ் இன்றும் உங்கள் பார்வையில் இருப்பதை அறிந்ததில் மகிழ்ச்சியே.
70 ஸ்பெஷல் நாயகர்களை நால்வரையும் கழட்டிவிடாமல் எப்படியாவது இவர்களையும் சேர்த்து தம் கட்ட முடிந்தால் நன்றாக தான் இருக்கும்... ஆனால், விற்பனையே அதை முடிவு செய்யும் என்பதால் ஆவலுடன் வெயிட்டிங்.
ஒரு கேள்வி, முனபதிவு போக புத்தக கண்காட்சி, மற்றும் நேரடி விற்பனை இருக்குமென்று கூறியிருந்தீர்கள்... ஆனால், அப்போதும் 4 இதழ்கள் மொத்தமாக மட்டும்தானே விற்பனைக்கு என்று தெரிவித்து இருந்தீர்கள்... அப்போது தனிபட்ட நாயகர் இதழ் விற்பனைகளை எப்படி கணிப்பது ?!
Deleteஅவரவருக்குக் கிட்டும் முதல் மரியாதைகளோ ; முட்டுச் சந்து மரியாதைகளோ சொல்லாத சேதியையா விற்பனைகள் சொல்லப் போகின்றன சார் ? இங்கும் சரி, இன்ன பிற தளங்களிலும் சரி,களைகட்டக்கூடிய அலசல் படலங்கள் சொல்லிடுமே ஆயிரம் கதைகளை !
Deleteஓரு வாசகம்னாலும், திருவாசகம் போங்க... எடி சார். அலசல்களே கோடிட்டிடும், யார் பாஸ், யார் பெயில் என்பதை.
DeleteEdi sir.. இந்திரஜால தமிழ்ல நம்ப தலை வேதாளரை படிச்சிட்டு, இப்ப நம்ப லயன்ல வேதாளரை பாக்கிரப்ப, படிக்கிறப்ப மனசு ச்சும்மா ஜ்வ்வுன்னு இருக்கு சார்..
ReplyDeleteங் இந்த
Deleteஎன்னதான் லட்டு, மிச்சர்ன்னு குடுத்தாலும் தங்க தலைவன் இல்லீங்கறதே நெனைச்சா நேரா 2023க்கு போயிறாலாம்ன்னு தோணுது..
ReplyDeleteஆமாமா. லட்டு மிச்சர் குடுக்கும் போது பேதி மாத்திரையும் குடுத்தாத்தானே சரியா இருக்கும்.
Deleteஅங்க போனா..2024...2025 ன்னு நேரா போய் போய் பாக்கனும் முடிவே கிடையாதா
Deleteஎடிட்டர் சார், நான் ஏஜென்ட் மூலம் smashing 70's புக் செய்து இருக்கிறேன். ப்ரீ போஸ்டர், புக்லெட் எனக்கும் கிடைக்குமா ??
ReplyDelete//Maybe இதில் யாரேனும் இருவரைக் கழற்றி விட்டுவிட்டு, சார்லி & விங் கமாண்டர் ஜார்ஜை கூட்டணிக்குள் கொண்டு வரலாம் //
ReplyDeleteயாருடைய கதைகளையும் நீக்கவெல்லாம் வேண்டாம் சார்...
நீக்காமல் புதிதாக யாருடைய கதைகளை வேண்டுமானாலும் சேர்க்கலாம்...
//சார்லி & விங் கமாண்டர் ஜார்ஜை கூட்டணிக்குள் கொண்டு வரலாம்//
Deletejess long, wes slade யும் சேர்த்து மொத்தமாக வருடத்திற்கு 8 இதழ்கள்களாக தந்து விடலாம் சார்...
சிஸ்கோகிட் பாஞ்சோ இந்த செட்டுக்கு ஏற்றவர்கள் அல்லவா! அவர்களுக்கும் 2ஸ்லாட் தரலாம்! 2சிங்கிள் கதை முத்து நாயகர்களையும் சேர்த்துவிட்டம்னா மாதந்தோறும் கிளாசிக்னு 2023 களைகட்டிடாது!!!🤩😍
Deleteஅப்படியே கபீஷ் அப்பு விச்சுகிச்சு
Delete😍👍நடந்தால், 2023 கண்டிப்பாக பொற்காலம் தான்...
Deleteஅந்த ஒற்றைக்கண் சிங்கம் ஒண்ணு வருமே அது, குண்டன் பில்லி - இது ரெண்டையும் விட்டுடீங்களே ஸ்டீல் ? எல்லாம் ஒரு கதம்பமா குண்டா வந்தா எப்படி இருக்கும்?
Deletealso ஒரு கருப்பு கிழவி டைஜஸ்ட் !
ஆமா..அந்த ஜூனியர் லயன் ஜெர்ரி...அந்த நாய் பேரு மறந்திடுச்சி...வேட்டைக்காரன் ரங்கையா...காக்கை காளியா
DeleteEdi Sir.. என்னை மாதிரி பழமை விரும்பிகளுக்கு (புதுமை விரும்பிகளுக்கும்தான்) ரொம்ப புடிச்ச வேதாள மாயாத்மாக்கு கட்டாயம் ஒரு ஸ்லாட் இனிமேல் பர்மனன்டா ஒதுக்கிடுங்க please.
ReplyDeleteஎனக்கு ரொம்ப பிடிச்ச வரிசை:
வேதாளர்,மாண்ட்ரெக், ரிப்கெர்பி,காரிகன்..
வேதாளர் உறுதின்னிட்டார்....
Deleteகாலெண்டரில் க்+இளவரசர்களின் மனங்கவர்ந்த இஸ்டெல்லா, மாடஸ்டியக்கா மாதிரியானவங்க போட்டோக்களை போடுவதாக இருந்தால் எனக்கு காலண்டரே வேணாம்.
ReplyDeleteயூத்களின் மனங்கவர்ந்த க்ரிஸ் ஆப் வலனர் அல்லது சிகுவாகா சில்க்கின் படங்களோடு வருவதாக இருந்தால் மட்டுமே காலெண்டர் வரவை ஆதரிக்க முடியும்.
நீங்க நம்மாளுன்னே.. என்னதான் அந்த காலத்து சரோஜாதேவி அழகா இருந்தாலும் எவ்வளோ நேரந்தான் கண்ணையே பார்த்துக்கிட்டு இருக்குறது..?
Delete@மகேந்திரன் பரமசிவம்
Deleteஇரத்தப் படலத்தில் கிரீன் பால்ஸில் வருமே ஒரு ஸ்வீட்டி அதோட படத்தையும் போடலாம்
நீங்கள் ஒளித்து வைத்து பார்ப்பது போல இல்லாம எல்லாரும் எப்போதும் பார்க்கிற ஒரு மாதிரி காலண்டர் கேளுங்கப்பா :-)
Delete@சதாசிவம் ரத்தப்படலத்துல நிறைய வில்லிகள் இருக்காங்க. அவங்க எல்லாரையுமே போட்டுடலாம். அனுமதியும் ஒரே கம்பெனிகிட்ட வாங்கறதோட முடிஞ்சிடும்.
Deleteஅந்த டயானா 13லதா
Deleteடயானா 13 லதாவா? ஒரு லதாவுக்கே அந்த நாள்ல கண்ண கட்டிச்சு.
Delete@பரணி From தூத்துக்குடி:
Deleteஎன் கோரிக்கையே அதுதான்.
இரண்டிலும் ஒரு காலண்டர் போட சொல்லி ஆசிரியரிடம் சொல்லிட்டா போச்சு.
நான் இரண்டு காலண்டரும் வாங்க தயார்.
@மகேந்திரன் பரமசிவம்
Deleteஅந்த வில்லிகள் எல்லாம் எனக்கு வேண்டாம் அந்த ஸ்வீட்டி மட்டும்தான் வேண்டும். அந்தப் பொண்ணு பாவம் தனியா மெடிக்கல் ஷாப் வெச்சி இருக்கிறதா கேள்விப்பட்டேன்.
@மகேந்திரன் பரமசிவம்
Deleteஅந்தப் பொண்ணோட அழகுல அந்த பொண்ணோட பெயர் கூட மறந்து போச்சு
13லதா...13 லதா அல்ல சின்னவரே...லதான்னா போதுமே
Delete134வது
ReplyDeleteபொன்ராசும் இஸ்பைடரும் - கண்ண கட்டுது முருகா :-)
ReplyDelete---ஸ்டீல் குடும்பத்தினரிடம் இருந்து :-)
பயப்படாதல தம்பி...ஸ்பைடர் ரா சும்மாவா
Deleteஇஸ்பைடரை விட உன்னை நினைத்தால் ரொம்ப பயம் வருதுல மக்கா :-)
Deleteஅதுக்குதா ஸ்பைடர்ல...பயப்டாத
Delete// அழகுக்கு அழகு சேர்க்கும் போட்டோக்கள் //
ReplyDeleteஅழகுக்கே அழகா :-)
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஎன்னது வேதாளர் தொடர்ந்திடுவாரா. அப்போ classic நாயகர்கள் வரும் இரண்டு வருடங்களை தாண்டியும் தனது அபிமானிகளை குஷிபடுத்த போகிறார்களா. நண்பர்களுக்கா சந்தோசப்பட்டு கொள்வதா. அல்லது இந்த ஒற்றை பக்க டீசருக்கே பேஸ்தடித்து போயிருக்கும் என் மனதை தேற்றவா.
ReplyDeleteஎனது முதல் ஹீரோ முகமூடி வீரர் மாயாவி தான். அந்த பருவத்தில் என்னை மிகவும் கவர்ந்தவர். ஆனால் இப்பொழுது ஒரு கதையை கூட 5 பக்கங்களுக்கு மேல் தாண்ட முடியவில்லை. என் ஆருடம் என்னவாயின் இந்த நால்வரில் ரிப்கிர்பி முத்திரை பதிப்பார் என்று தோன்றுகிறது. டெக்ஸ் கதையே வேறு அவர் அன்றும் கவர்ந்தார், இன்றும், இனியும் கவர்வார். ஆனால் வேதாளர்? காத்திருக்கிறது 2022 & 2023 பதில் சொல்ல.
விற்பனை பதில் சொல்லட்டும்னு்நான் காத்திருக்கப் போகிறேன். லக்கிலூக்கின் கதைகளில் 2010க்கு உருவாக்கப்பட்ட கதைகள் இப்போது உருவாக்கப்படும் கதைகளை விட என்னைக் கவருகின்றன. அது போல் இருக்கிறதா என்பதை வரும்பொழுது படித்துப் பார்த்து முடிவெடுத்துடலாங்க சார்.
Deleteலக்கி லூக் தொடரைப் பொறுத்தவரையிலும் - அதன் க்ளாசிக்ஸ் இருப்பது எழுபதுகளிலும், எண்பதுகளிலும் தான் சார் - கோசினி & மோரிஸ் அதகளம் செய்து வந்த நாட்களில் !
Deleteஇந்த SMASHING 70 s நாயகர்களின் உச்சங்கள் - அறுபதுகளில் & எழுபதுகளிலும் என்பது எனது அபிப்பிராயம் !
வேதாளர் கதைகளில் Sy Barry ;
ரிப் கிர்பி கதைகளில் Fred Dickenson & John Prentice
காரிகன் கதைகளில் Archie Goodwin & Al williamson
என ஜாம்பவான்கள் உலா வந்த காலகட்டமல்லவா அது ?
வேதாளர் நிச்சயமாய்த் தொடர்ந்திடுவார் நண்பரே - உடன் பயணிக்கும் இதர க்ளாஸிக் நாயகர்கள் தொடர்ந்தாலும் சரி, கழன்று கொண்டாலும் சரி !
Deleteநானும் முடிந்த வரை ஒன்றிட முயற்சிக்கிறேன் சார்
Deleteஎல்லா கதைகளும் நல்லாதானிருக்கும் என நீங்க சொல்வதில் சந்தோசம் கூடுது
Deleteசற்று தாமதமான சிந்தனை... ஒரு வேளை Super 60க்கு உபயோகப்படலாம்.
ReplyDeleteநான்கு இதழ்களிலும் நான்கு ஹீரோக்களின் கதைகள் கதம்பமாக வந்தால் வெரைட்டியாக/நல்லதொரு விருந்தாக இருக்கும். படிப்பதற்கும் போரடிக்காமல் இருக்கும்.
அதற்கு படைப்பாளிகள் சம்மதிப்பார்கள் என்று தெரியவில்லை. மலையாள ரீகல் பப்ளிஷர்ஸ் கூட மாண்ட்ரெக் வேதாளன் கதைகளை தனித்தனி தொகுப்புக்களாகவே வருகின்றனர். சங்கர் சகோவின் யோசனை மிகப்பிரமாதம்.சாத்தியமா என்று ஆசிரியர் தான் சொல்ல வேண்டும்.
Deleteபார்க்கலாம் சார் ; இடைவெளி விட்டே SMASHING '70 s இதழ்கள் ஒவ்வொன்றும் வெளிவந்திடும் ! So நிதானமாய் கதைகளைப் படிக்க அவகாசமிருக்கும் ! And கதைகளுமே செம சுவாரஸ்யமாய் இருப்பதால் படிப்பதில் தொய்விராது !
Deleteமாற்றங்கள் அவசியப்பட்டால் 2024 -ல் பார்த்துக் கொள்ளலாம் !
சார் அப்படி வந்தாலும் சரிதா...இப்படி வந்தாலும் சரிதா...மல்லிகைப் பூமாலையோரழகு...கதம்பம் பூமாலை ஓரழகு
Deleteசரிதா மேல அவ்ளோ பாசமா ஸ்டீல்...
Deleteயார் அந்த சரிதா?
Deleteகாரலட்டு 2 பற்றி யோசித்து யோசித்து மண்டையிலிருந்த நாலைந்து முடியும் காலியானது தான் மிச்சம்.
ReplyDeleteநீங்களே சொல்லிடுங்க சார்.
இது கூட தெரிலயா...அந்த ஆயிரம் பக்க கௌபாய்தா
Deleteஏலே வேற ஏதாவது புதுசா சொல்லு சும்மா எப்பப்பாரு இஸ்பைடரு/மேபிஸ்டோ/கௌபாய்/காதல் கதைன்னுகிட்டு :-) கொஞ்சம் புதுசா யோசில :-)
Deleteகாமிக்ஸ் நமகக்கு போரடிக்குமென்று எடி நாவல் ஏதும் போடப்போகிறாரா ?? ( ஸ்சுபைடர் ஒரு முறை நாவலில் வந்துள்ளாரே )
Deleteசினிமா பாணி கதைகள்...
Deleteசிண்ட்ரெல்லா...ஏழு குள்ளரும் ராஜகுமாரியும்
நீ கொஞ்சம் கூட வளரலே :-)
Deleteவெற்றி !!!!
ReplyDeleteவெற்றி !!!!!
வெற்றி !!!!!!!!
#### 150 .
152nd
ReplyDeleteஎட்டே நாள்...
ReplyDeleteஎட்டு வைக்கும் தூரமே...
கடக்க ஒரு வாரமாகுமே...
கடத்த தினமோர் பதிவு போதுமே...
பதிவு தோறும் கதைகள் உற்சாகத்த தூவுமே...
இன்னும் எட்டே நாட்கள்.உற்சாக மீட்டர் எகிறிக் கொண்டே போகிறது . முத்து பொன்விழாச் சிறப்பிதழ்களை தரிசிக்க ஆவலாய்க் காத்திருக்கின்றோம்.
ReplyDelete7.5நாள்
Deleteஅதென்னவோ தெரியவில்லை முன்பை விட இந்த முறை புத்தாண்டு இதழ்களுக்காக மனம் பரபரத்து கொண்டே இருக்கிறது எப்பொழுது புத்தாண்டு பிறக்கும் இதழ்களை கைகளில் ஏந்துவோம் என ஏங்கி கொண்டே இருக்கிறது..
ReplyDeleteவிரைந்து செல்லுங்கள் தினங்களே...!
எல்லாம் 50மாண்டு மகிமை
Deleteஹலோ லயன் & முத்து காமிக்ஸ் எடிட்டர் விஜயன் சாருங்களா! எனக்கு வரும் வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 3தேதி வரை விடுமுறை! ஓமிக்கிரான் / கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரு சுற்றவும் முடியாது எனவே ஜனவரி மாத புத்தகங்களை நாளைக்கு அனுப்ப முடியமா :-) கண்டிப்பாக குமாரோ நம்ப அறிவரசோ இப்படி கேட்க சொல்லவில்லை :-) இல்லை அடுத்த 10 நாட்களுக்கு உங்களுக்கு ஆபீஸ் பாய் வேலைக்கு நான் வரட்டுமா :-)
ReplyDeleteசொல்லாம போய் வாங்கிட்டு வால
Deleteஅல்வாலே :-)
Delete// கண்டிப்பாக குமாரோ நம்ப அறிவரசோ இப்படி கேட்க சொல்லவில்லை :-) //
Deleteஎல் நம்ம பரணியாலே இது நம்ப முடியலயேல...
Sir, Release Super 60 with Phantom, Mandrake, Rip Kirby and Corrigan. :)
ReplyDeleteஅப்படியே புதிய கார்டூன் கதைகளை கொண்டு Laughing Special போட்டால் கார்டூன் ரசிகர்கள் சந்தோஷம் அடைவோம்:-) ஏதாவது பார்த்து செய்யுங்கள் சார்.
ReplyDeleteஎனக்கு முத்து -50ஐ விட SMASH-70ஐ காண்பதில்தான் ஆர்வம் மேலோங்கி இருக்கிறது.தினம்தினம் காணும் அலுவலக நண்ர்களைவிட நம் நெடுநாளைய பள்ளித்தோழனை நீண்ட நாட்களுக்கு பின்பு பார்ப்பபதில்தானே மகிழ்ச்சி இருக்கிறது.
ReplyDelete:-)
Deleteஉண்மைதான்...ஆனா எனக்கு பள்ளித்தோழனை இப்பத்தய தோழனோடு அறிமுகப்படுத்தி...ரெண்டு பேரோடும் அலாவலாவ ஆவல்...அதும் இம்முறை புதிய கதைகள் தெறிக்க விடும் போல...அந்த இரத்தப்படலத்த மிஞ்சும் கதை...ஸ்பைடர் மாயாவி..நம்ம சினிஸ்டர்...சுஸ்கி விஸ்கி...வேதாளன்...இன்னும் லட்டுகளாம்...காரமாம்...நினைத்தாலே தித்திக்குதே
Delete// இது யூகிக்க வாய்ப்பே இல்லாததொரு பண்டமாக்கும் ! //
ReplyDeleteகுழந்தைகளை கொண்டு சாகசம் செய்வது போல உள்ள கதையா இருக்குமோ :-)
விண்வெளி கதையாக இருக்குமோ?
இல்ல ஆழ்கடலின் அடியில் நடக்கும் கதையாக இருக்குமோ?
அதுவும் இல்லை என்றால் நம்ம ஊரில் நடக்கும்படி அமைந்த கதையாக இருக்குமோ?
சரிப்பா அதுவும் இல்லை எனில் அழகிய பேய் கதையாக இருக்குமோ?
இல்ல முழுக்க முழுக்க பெண்களை கொண்டு சாகசம் செய்யும் கதையாக இருக்கோமோ?
ஒருவேளை மிருகங்களை பிரதானமாக கொண்டு அமைத்த கதையாக இருக்குமோ ?
இல்லை நமது வாசகர்கள் யாராவது எழுதிய கதையாக இருக்குமோ ?
யோசித்துவிட்டு நாளை வருகிறேன் :-)
Marupadiyumaa
Deleteபிரமிட் கதையோ...
Deleteபாலை வனமோ
பூமிக்கடியிலோ...
சூனியக்காரியோ...
ராஜா ராணியோ..
மாயாஜாலமோ...
குழந்தை சாகசம்...
Deleteபறவைகள் சாகசம்...
தவளை ராஜகுமாரி
ஆன்லைன் புத்தகத் திருவிழா ஜனவரியில் உண்டுங்களா சார் ?!
ReplyDeleteஇருந்தால் முன்பு போல் லார்கோ,ஷெல்டன் இதழ்களுக்கு 30 % தள்ளுபடி உண்டா ?!
லயன் லைப்ரரிக்கு எப்ப ஆன்லைன் லிஸ்டிங் ஓப்பன் ஆகும் ?!