நண்பர்களே,
வணக்கம். கஷ்டத்தில் பெரும் கஷ்டம் என்ன தெரியுமோ ? ஒரு முக்கியப் பணியில் நமது பங்கினை பல்டியடித்துப் பூர்த்தி செய்து விட்டு, அடுத்த கட்டத்திற்கென மொத்தமாய் அடுத்தவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, பொறுமையாய்க் காத்திருப்பது போல நடிப்பது தான் !!
*ஒரு லோடு மொழிபெயர்ப்பு - டிக் !
*ஒரு வண்டி டைப்செட்டிங் - டிக் !
*வண்டி வண்டியாய் எடிட்டிங் - டிக் !
*பிராசஸிங் படலம் - டிக் !
*ப்ரிண்டிங் பஞ்சாயத்து - டிக் !
இவையெல்லாமே நமது கட்டுப்பாடுகளுக்குள் இருக்க, நாள்-நட்சத்திரம்-கிழமை-நேரம் என எதையும் பார்த்திடாது உருண்டு, புரண்டு all done !!
அடுத்த இலக்கங்களோ :
**அட்டைப்பட டிசைனிங் ;
**அட்டைப்பட ப்ரிண்டிங் &
**இறுதியாய் அட்டைகள் மீதான நகாசு வேலைகள் !
&
**then உங்களின் போட்டோக்களை ரெடி செய்வது !
&
then பைண்டிங்ங்க்க்க்க் பணிகள் !!
&
இறுதியாய் - உங்களின் கூரியர் டப்பிக்கள் தயாரிப்பு !
"அட, கஷ்டமான வேலைகளை முழுசும் ரெம்போ முன்னமே முடிச்சாச்சு ; இனி மாதம் மும்மாரி மழை பெய்ய வையுங்கள் ஆபீஸாரே !!" என்று சொல்லிய கையோடு அடுத்த வேலைகளுக்கும் மும்முரமாகிடலாம் என்ற கனவில் மிதந்திருந்தேன் தான் !! ஆனால் ஆளாளுக்கு விடறாங்களே பாருங்கள் - பிட்டத்தில் மிதிகள் ; டிக்கிலோனாவில் கட்டுப்போட்டபடியே குப்புறக் கிடக்கும் வடிவேல் போல கிடத்தாத குறை தான் !
அட்டைப்படங்களைப் பொறுத்தவரைக்கும் இது போன்ற ஸ்பெஷல் இதழ்களுக்கு நமது டிசைனர் பொன்னனிடமே பணிகளை ஒப்படைப்பது வாடிக்கை & இம்முறையும் அதே நடைமுறை & 3 மாதங்களுக்கு முன்னமே சகலத்தையும் ஒப்படைத்து விட்டிருந்தோம். தொடர்ந்த வாரங்களில் நம்மை ஊறப் போட்டு, ஊறப் போட்டு மொத்தியெடுத்தார் பாருங்கள் - அவ்வப்போது நீங்கள் கண்ணில் காட்டிடும் மு.ச.க்களெல்லாம் ஒன்றுமே இல்லை என்றாகிடும் அளவுக்கு ! எனக்கோ ஒரு நூறு திருத்தங்கள் சொல்லாது ஒரு விச்சு-கிச்சு டைஜெஸ்ட் அட்டைப்படத்துக்கே சம்மதம் சொல்ல மனசு கேட்காது ; இந்த அழகில் ஒரு மைல்கல் இதழுக்கு கேட்கவும் வேணுமா - என்ன ? திருத்தங்கள் ; மறு திருத்தங்கள் ; மறுமறுமறு திருத்தங்கள் என்று அவசியமாகிட, ஒவ்வொன்றுக்கும் ஒரு வாரம் சுவாஹாவாகிப் போயிருக்க, கிட்டத்தட்ட 700 பக்கங்களையும் பிரிண்ட் செய்து முடிக்கும் நேரத்துக்கே அட்டைப்படம் # 1 ரெடியாகியிருந்தது ! புக் # 2 - "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்கள்" and அதற்கான 5 அத்தியாயங்களின் ஒரிஜினல் அட்டைப்படங்களும் ரொம்பவே சுமாரோ சுமார் stuff ! So ஒரிஜினலை அப்படியே கொஞ்சம், கொஞ்சம் உல்டா பண்ணி ராப்பர் தேற்றிடும் முயற்சி எனக்கு கொஞ்சமும் ரசிக்கவில்லை ! So ஒரே நேரத்தில் பொன்னனையும் பணி செய்யச்சொல்லி ; இன்னொரு பக்கம் கோகிலாவையும் ஒரு டிசைனை உருவாக்கச் சொல்லிப் பணித்தது பற்றாதென்று - பெங்களூருவில் உள்ளதொரு புது டிசைனரிடமுமே அதே பணியை ஒப்படைத்திருந்தேன் ! சொல்லி வைத்தாற்போல மூவருமே இந்த ராப்பரை சொதப்போ சொதப்பென்று சொதப்பித் தர - 'சிவனே' என்று ஒரிஜினலையே போட்டுப்புடுவோமா ?? என்றெல்லாம் நினைப்பு ஓட ஆரம்பித்தது ! கழிந்திடும் ஒவ்வொரு தேதியும் வயிற்றில் நயம் புளியைக் கரைக்க, நானாக ஏதேதோ reference-களை உருட்டியெடுத்து ஒரு ஐடியாவினைத் தந்திட, அதனைக்கொண்டு பொன்னன் உருவாக்கிய டிசைனில் ஒரு மார்க்கமாய் "கண்டேன் கண்ணாளனை !!" என்று பெருமூச்சு விட முடிந்தது ! அடித்துப் பிடித்து பிராசஸிங் செய்து முடித்து, அச்சும் முடித்தால் - நகாசு வேலைகளின் பொருட்டு மறுக்கா ஜவ்வுமிட்டாய்ப் படலம் துவங்கியது டிசைனருடன் !! விடியும் ஒவ்வொரு பொழுதும் எகிறும் BP-ஐ கண்ணில் காட்ட, இவ்வார முதல் நாளில் தான் நகாசு வேலைகளுக்கான கோப்புகள் தயாராகின ! அவசரம் அவசரமாய் அவற்றை ரெடி செய்து எடுத்துக் கொண்டு அந்தப் பணிகளைச் செய்து தரும் கான்டிராக்டரைத் தேடிப் போனால், அவர்களிடம் ஆண்டின் இறுதி சார்ந்த பணிகள் மலையளவுக்கு குவிந்து கிடக்கின்றன ! "திங்கட்கிழமை (20th Dec) முடிச்சு தாரேன் சார் !" என்று அவர் சொல்ல, விக்கித்துப் போய்க் காத்திருக்கிறோம் !! இன்னொரு பக்கமோ, குளிர் காலத்து நோவுகளின் காரணமாய் பைண்டிங்கில் கணிசமாய் ஆட்கள் லீவு போட்டுப் போயிருக்க, ஸ்டீலின் கவிதைகளைப் போல பணிகள் பற்களை ஆட்டம் காணச் செய்யும் வேகத்தில் நகன்று வருகின்றன !! So பைண்டிங்கிலும், அட்டைப்பட finishing பணிக்கெனவும், நம்மாட்கள் நாள் முழுக்க தேவுடு காத்து வருகின்றனர் !! குட்டிக் கரணங்கள் அடித்தாவது இம்மாதத்தின் இறுதி தினங்களுக்குள் புக்ஸை தயார் செய்து முரட்டு டப்பிக்களுக்குள் அடைத்திடுவோமென்ற நம்பிக்கையில் பொழுதுகள் நகர்ந்து வருகின்றன ! புத்தாண்டு தினத்தினில் கூரியர்கள் டெலிவரி செய்வார்களா ? என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ள வேண்டும் தொடரும் நாட்களில் ! Phewwwwww !!
ஒரு பக்கம் காது வழியே புகை விட்டுக் கொண்டிருந்தாலும் - அடுத்தடுத்து ஆக வேண்டிய பணிகளைக் கவனித்தாக வேண்டுமல்லவா ? சென்னைப் புத்தக விழாவும் இம்முறை 17 தினங்களுக்கென அறிவிக்கப்பட்டிருக்க, நமக்கு ஸ்டால் கிடைக்கும் பட்சத்தில், உங்களை சுவாரஸ்யமாய் நம் திக்கில் திரும்பிடச் செய்யும் பொருட்டு சன்னமாய் சில திட்டமிடல்களைச் செய்தாலென்னவென்று தோன்றியது ! Of course - "இந்த பட்ஜெட்டே ஓவர் ; இதிலே மேற்கொண்டுமா ?" என்ற புகை சிக்னல்ஸ் ஆங்காங்கே எழுமென்பது புரியாதில்லை தான் ! ஆனால் 2 ஆண்டுகளின் புத்தக விழா விற்பனைகள் சுத்தமாய் பூஜ்யமாகிப் போயிருக்க, overall நிதி நிலைமையில், அவை விட்டுச் சென்றிருக்கும் பெரும் வெற்றிடத்தை கொஞ்சமே கொஞ்சமாகவேணும் ரொப்பிட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகிடுகிறது ! So சென்னையில் நமக்கு ஸ்டால் கிடைத்திட்டால் அங்கே தலைகாட்ட 'தல' கலக்கல் கலரில் தயாராகி வருகிறார் ! இதோ - The LION LIBRARY இதழ் # 1-ன் அட்டைப்பட முதல் பார்வை ! இன்னமும் கொஞ்சம் மெருகூட்டல் பாக்கியுள்ளதெனினும், அதற்கு முன்பான output இது :
And வண்ணத்தில் மிளிர தயாராகி வரும் இரவுக் கழுகாரின் உட்பக்கப் preview இதோ :
ஜனவரியின் hardcover இதழ் # 3 ஆக இதனைத் தெறிக்க விட தற்சமயம் பணிகள் ஏக ஜரூர் நம்மிடத்தில் ! And லயன் லைப்ரரி வரிசைக்கான லோகோ முயற்சிகளிலுமே பிசியாக இருந்தோம் ! இதோ கொஞ்சமாய் நம்மாட்கள் கைவண்ணங்கள் :
வன்மேற்கு !! முன்னெப்போதும் இல்லாத ஒரு புதுவிதப் பார்வையில்...ஒரு புதுவித பாணியினில் !! இதனுள் புகுந்திட செம ஆவலாய் ஞான் வெயிட்டிங் ! நிங்களுக்குமே அதே ஆவல் இருக்குமென்கில் "வாகான தருணம்" ஒன்றினை ஏற்படுத்திடலாம் - ஒரு சுபயோக சீக்கிர சுபதினத்தினில் !!
1st
ReplyDelete2nd
ReplyDeleteவந்துட்டேன்…
ReplyDeleteOkai
ReplyDeleteவந்துட்டேன்..
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDelete7th
ReplyDelete9th
ReplyDeleteஇரவு வணக்கம்
ReplyDeleteஆஹா வந்தாச்சா
ReplyDeleteஎவ்ளோ பெரிய மாத்ரே .. 😬😬
ReplyDeleteவந்துட்டேன்!
ReplyDeleteவாவ் OTT தளங்களில் பிரபலாமாகி வரும் Anthology போல இருக்கும் போலுள்ளது.
ReplyDeleteஒவ்வொரு படங்களும் தெரிக்க விடுகிறது சார்.
படிக்க ஆவலுடன் காத்திருக்கறோம்.
டெக்ஸ் மறுபதிப்பு இதழ் கண்டிப்பாக வெற்றி அடையும் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கதை பழிக்கு பழி. புத்தக கண்காட்சி செல்ல மற்றொரு காரணம்.
லட்டு 2 & 3 பற்றி தகுந்த நேரத்தில் சொல்லுங்கள் சார்.
S70 வேதாளர் புத்தகம் மாத கடைசியில் தானா சார்? புத்தக கண்காட்சியில் முன்பதிவு செய்வது பற்றி ஒரு விளம்பரம் வையுங்கள் சார்.
//புத்தக கண்காட்சியில் முன்பதிவு செய்வது பற்றி ஒரு விளம்பரம் வையுங்கள் //
Deleteநிச்சயமாய் கிருஷ்ணா !!
டெக்ஸ் மறுபதிப்புக்கான கதைகளின் புதுப்பிக்கப்பட்ட விருப்பப் பட்டியல்:
ReplyDeleteபழிக்குப்பழி் மற்றும் கானகக் கோட்டை ஜனவரியில் வருவதால் அதை ரிமூவ் பண்ணிட்டேன். இன்னும் இரண்டு டெக்ஸ் புத்தகங்கள் அறிவிக்க வாய்ப்பிருப்பதால் கீழே இருக்கற கதைகளில் ஏதாவது வந்தால் நல்லா இருக்கும்.
*இரத்த முத்திரை*
*இரத்த வெறியர்கள்*
*இரும்புக் குதிரையின் பாதையில்*
*இரத்த நகரம்*
*நள்ளிரவு வேட்டை*
*பாலைவனப் பரலோகம்*-
" *மந்திர மண்டலம்* "
*மெக்ஸிகோ படலம்*-
*ஓநாய் வேட்டை& இரத்த தாகம்*
*இரத்த ஒப்பந்தம், தணியாத தணல்& காலன் தீர்த்த கணக்கு*
மரண தூதர்கள்.
சாத்தான் வேட்டை
அதிரடி கணவாய்.
எல்லையில் ஒரு யுத்தம்
எமனுடன் ஒரு யுத்தம்.
நள்ளிரவு வேட்டை
பனிக்கடல் படலம்
*கார்சனின் கடந்த காலம்*...
3ஆம் பதிப்பு. வசனம் பாடல்கள் மாற்றாமல்.
சதுப்பில் ஒரு சதிகார கும்பல் தொடர்,
கொடூரவனத்தில் டெக்ஸ் தொடர்.
கபால முத்திரை + சதுப்பில் ஒரு சதிகார கும்பல் நல்லா இருக்கும்..!
Deleteகொடூர வனத்தில் டெக்ஸ் + தனியே ஒரு வேங்கை + துரோகியின் முகம் இதுவும் நல்லாதான் இருக்கும்..!
இந்த லிஸ்ட்ல ஒரு மிகப்பெரிய ஹிட்டை விட்டுட்டியே மச்சான்..!
குத்தம் பண்ணிப்போட்டியே..!
பயங்கர பயணிகள் + துயிலெழுந்த பிசாசு இதை எப்படி நீ மறக்கப் போச்சு..!?
(அடிக்க வர்ரதுக்குள்ள ஓடீர்ரா கைப்புள்ள)
கடேசில பிஜிலி வெடி வெடிப்பாரே அந்தகதையா ??!!
Delete😂😂😂 ஆமா சம்பத்..!
Deleteமேலே உள்ள tex கதைகளின் வரிசையில் உள்ளவற்றில் தேர்ந்தெடுத்து அடுத்த மறு பதிப்பாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
Deleteஅடுத்த tex அதிரடி சரவெடியாக தொடரட்டும்.
இந்த லிஸ்ட்க்கு +1000
Deleteமேலே உள்ள tex கதைகளின் வரிசையில் உள்ளவற்றில் தேர்ந்தெடுத்து அடுத்த மறு பதிப்பாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
Deleteஅடுத்த tex அதிரடி சரவெடியாக தொடரட்டும்
16th
ReplyDelete3வது லோகோ அருமையாக உள்ளது.
Delete// ஆளாளுக்கு விடறாங்களே பாருங்கள் - பிட்டத்தில் மிதிகள் ; டிக்கிலோனாவில் கட்டுப்போட்டபடியே குப்புறக் கிடக்கும் வடிவேல் போல கிடத்தாத குறை தான்
ReplyDelete//
// ஊறப் போட்டு மொத்தியெடுத்தார் பாருங்கள் //
ஹாஹா படிக்க படிக்க இந்த இரவு நேரத்திலும் ஹாஸ்யம் பண்றீங்க டியர் எடி .. 😆😆😆😅😅
'பேன பத்தாம் டிக்கிலே வையுடி மாலா ; எரியுது' moment #
Deleteசார்.. 'மேற்கே போ மாவீரா !!' ரிவ்யூ பக்கங்கள் எல்லாமே பட்டையைக் கிளப்புதுங்க சார். புதுசாய், ஒரு திணுசாய், கலக்கலாய் இருக்குங்க சார். கெளபாய் கதைகளில் ஒன்-ஷாட்டுகள் எதுவுமே இதுவரை சோடை போனதில்லை சார். ஏற்கனவே சூப்பர் ஹி்ட் அடிச்ச இதழ் வேற! சீக்க்கிரமா போட்டு விடுங்க சார்!
ReplyDelete'மேற்கே போ மாவீரா' - எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வேண்டும்!
தற்சமயமாய்ப் புடிச்சிக்கிட்டிருக்கும் லட்டுக்களை பரிமாறி முடிச்சிட்டு நம்மவர்களின் அவாக்கள் எவ்விதம் உள்ளன என்பதைப் பார்க்கலாம் சார் ! "சீக்கிரமே !!" அணி ஸ்ட்ராங்காய் இருந்திடும் பட்சத்தில் டாப் கியர் போட்டுப்புடலாம் !
Deleteவெகு சீக்கிரமே என்று ஒரு அணி இருக்கு சார்.
Deleteலோகோவில் எனக்கு பிடித்தது 3 & 8. எல்லோர் முகத்திலும் புன்னகைங்கும் போது சிங்கமும் புன்னகைக்க வேண்டும் என்பதால் 3 ரொம்ப பிடிச்சிருக்கு.
ReplyDeleteவல்லிய பொயிண்ட் !
Delete///வன்மேற்கு !! முன்னெப்போதும் இல்லாத ஒரு புதுவிதப் பார்வையில்...ஒரு புதுவித பாணியினில் !! இதனுள் புகுந்திட செம ஆவலாய் ஞான் வெயிட்டிங் ! நிங்களுக்குமே அதே ஆவல் இருக்குமென்கில் "வாகான தருணம்" ஒன்றினை ஏற்படுத்திடலாம் - ஒரு சுபயோக சீக்கிர சுபதினத்தினில் !!///
ReplyDeleteஇந்த ப்ரீவியூக்களைப் பார்க்கும்போது..
கிருஷ்ணா நீ பேகனே பாரோ...ன்னு கிருஷ்ண பரமாத்வின் வரவிற்காக ஏங்கிப் பாடுவார்களே.....
அதே போல்
மேற்கே போ மாவீரா
சீக்கிரமா
மேச்சேரி பக்கம் ரா ரா ன்னு பாடத்தோணுது சார்...!
கிருஷ்ணா முகுந்தா மு ரா ரே பாட வேண்டிய வயசில.... ஹ்ம்ம்ம்ம்!
Deleteஅந்தப் பாட்டை பாடினப்போ பாகவதருக்கே வாலிப வயசுதான் பாபண்ணா...😆
Delete"ரா..ரா" என்ற கானக் குரல் கணிசமாய் ஒலிக்குதாவென்று பார்ப்போம் சார் !
Deleteவெல்கம் த காரலட்டு. ஆசம்.
ReplyDeleteநெஸ்ட்டு லட்டு நிம்பள்கி நிச்சயம் கூடுதலாய் பிடிக்கிறான் !
Deleteஆஹா…வெயிட்டிங் 😍😍😍😍🥰🥰🥰🥰
Delete🙏🙏
ReplyDeleteவந்தாச்சு 🙏🙏🙏🙏
ReplyDeleteஸ்டீலின் கவிதைகளைப் போல ... 😇😋😋😋😋
ReplyDeleteGo west young man - சித்திரத்தரம் மிரட்டுகிறது Sir, மீண்டும் ஒரு மின்னும் மரணத்தை எதிர்பார்க்கிறேன்
ReplyDeleteஒப்பீடுகள் எப்போதுமே ஆபத்தானவை சார் ; அதது, அததன் போக்கிலேயே களம் காணட்டுமே !
Deleteபழிக்குப் பழி முன்னட்டை செம்ம மாஸ் ஸா இருக்கு இது வரை டெக்ஸ் கதைகளில் வந்திரா (த) அட்டை படம் இதுவே இப்புத்தகத்தை
ReplyDeleteவிற்பனைக்கு முன்னெடுத்து அவுட்டாப் ஸ்டாக் ஆகச் செய்யும் .. மாஸ் அட்டைபடம் 😍😍
திருப்பூருக்கு நாட்டுச் சர்க்கரை ஒரு கிலோ பார்சல்லல்லல்ல !
Deleteநாளையும் நாளை மறுநாளும் எனது அலுவலக/வீட்டு கதவு திறந்தேதான் இருக்கும் டியர் எடி ..
Deleteஇன்னுமொரு சஸ்பென்ஸா ஐய் ஐய் ஐய் ஜாலி இந்த வருட ஜனவரி காமிக்ஸ் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கபட வேண்டிய ஒன்று
ReplyDeleteஓமிக்ரான் !! Phewwwww !!
Delete///லட்டுஸ் # 2 & 3 கொஞ்சம் முரட்டு லட்டுஸ் என்பதால் அவற்றை FFS ரிலீஸ் ; SMASHING 70's ரிலீசுக்கு அப்புறமாய் வைத்துக் கொள்வோமே ? ///
ReplyDeleteமுரட்டு லட்டுஸ்னா ஆம்பளை பசங்க மட்டும் வந்து தம்முதொம்முன்னு அடிச்சிக்கிட்டு திரியிற கதையா இருக்குமோ..!?
நம்ம டேஸ்டுக்கு ஏத்தா மாதிரி சீனிலட்டு எதுவும் கிடையாதா சார்.!? :-)
ஒரு குல்ஃபி லட்டு இருக்கு ; கூச்ச சுபாவம் கொண்ட இளவரசருக்கு, தலீவருக்குலாம் ஒத்துப் போகாதோன்னு தயக்கத்திலே பரணில் வைச்சூ சார் !
Deleteஹிஹி.. கூச்சப்பட்டுக்கிட்டேயாச்சும் எப்படியும் படிச்சு முடிச்சுடுவோம் சார்!
Delete///ஒரு குல்ஃபி லட்டு இருக்கு ///
Deleteஹைய்யா..😍😍😍
///கூச்ச சுபாவம் கொண்ட இளவரசருக்கு, தலீவருக்குலாம் ஒத்துப் போகாதோன்னு தயக்கத்திலே பரணில் வைச்சூ சார் !///
கி. நா க்களில் ரசனையில் முதிர்தோருக்குன்னு டேக் போடுறாப்போல..
இந்தக் குல்பி லட்டு தொடரில் "வாலிபர்ஸ் ஒன்லீ.. வயோதிகர்ஸ் நாட் அலவ்டு" ன்னு விளம்பரம் பண்ணிடலாம் சார்.!
அப்படியில்லைன்னா...
கண்ணாடி போடாம படிக்க வேண்டிய தொடர்னு சொல்லிடலாம்.. தலீவரும் செயலாளரும் அந்தப்பக்கமே வரமாட்டாங்க..!
///கண்ணாடி போடாம படிக்க வேண்டிய தொடர்னு சொல்லிடலாம்.. தலீவரும் செயலாளரும் அந்தப்பக்கமே வரமாட்டாங்க..!///
Deleteமிஸ்டர்.. நாங்கல்லாம் பிரெய்லி முறையில தடவித்தடவியாவது படிச்சுக்குவோமாக்கும்!
///மிஸ்டர்.. நாங்கல்லாம் பிரெய்லி முறையில தடவித்தடவியாவது படிச்சுக்குவோமாக்கும்!///
Deleteநம்பமாட்டோம்..!
ரெண்டு ராமைய்யா கதைகள் + சூப்பர் ஹீரோ சூப்பர் ஷ்பெசல் இந்த மூணு புக்ஸையும் தடவிப்பாத்து கதை சொல்லுங்க.. அப்பத்தான் நம்புவோம்.!
பழிக்கு பழி அட்டைப்படத்திற்காகவே இரண்டு இதழ்கள் வாங்கலாம் போலிருக்கே
ReplyDeleteசரி... அட்டையை எடுத்துக்கிட்டு புக்கை எனக்கு அனுப்பிடுங்க செந்தில்.!
Deleteநீங்கள் நடத்திய போட்டியில் முதல் மூன்று இடங்கள் ஜெயித்த நண்பர்களுக்கு முத்து 50 பரிசு பின் வருமிடங்களை பிடித்த என்னைப் போன்ற நண்பர்களுக்கு பரிசாக தருவீர்கள் என்று பார்த்தால் எங்ககிட்டயே ஆட்டையை போட பாக்குறிங்களே
Delete3 வது படம் லயன் லைப்ரரி என்கிற எழுத்துக்களை டௌடும் நேர் செய்திட்டால் புதியதாய் வரும் பழங்காமிக்ஸ் ரசிகருக்கும் எளிதாய் இது லயன் காமிக்ஸ் குடும்ப இதழ் என தெளிவாய் தெரியும் நன்றாக ரீச் ஆகும் .. மற்ற படங்கள் ஏனோ அவ்ளோ அட்ராக்ஷன் இல்லை
ReplyDeleteலோகோ எனக்கு பிடித்தது 3 & 4
ReplyDeleteலயன் லைப்ரரி லோகோவுல அந்தக் கடைசி லோகோவைத் தவிர வேற எதுன்னாலும் ஓகே சார்! அதென்னமோ கரடிக்கு கலர் விக்கு வச்ச மாதிரி இருக்கு!
ReplyDeleteகடைசிக்கு முந்தின லோகோவுமே சுமார் தான்.. பல் சக்கரத்தில் சிக்கின பூனையாட்டம் இருக்கு!
என்னோட தேர்வு மேலிருந்து ஐந்தாவது லோகோ! ஆனா அதுல 'லைப்ரரி'ன்ற வார்த்தையின் அலைன்மெண்ட் சரியா இல்லைன்றதையும் குறிப்பிட விரும்புகிறேன்!
இன்னும் எதுமே பணி முடியலீங்க இளவரசே ! மாவு பிசைஞ்சிட்டு இருக்கும் போதே "பணியாரத்தை டேஸ்ட் பாக்குறேன்" என்று சொல்லி லவட்டியாந்தவை எல்லாமே !
Deleteஅயாம் வெய்டிங் எலியப்பா .. அட்டை டிசைன் குழந்தைகளை நிச்சயம் கவரும் எடி
ReplyDeleteஅட்டை மட்டுமல்ல ; கதையும் கவரும் சம்பத் ! பசங்களுக்கு கதை சொல்ல நல்லதொரு தொடர் இது !
Deleteகாத்திருக்கேன் டியர் எடி .. 😏😍
Deleteலயன் லைப்ரரி முன்பதிவுக்கு மட்டுங்களா அல்லது எப்போதும் போல வாங்கி கொள்ள முடியுங்களா sir? லோகோ 3 செமையாக உள்ளது.
ReplyDeleteலயன் லைப்ரரி எப்போதும் போல் ; எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் சார் !
Deleteஆஹா அருமை. அப்புறம்.. இதுவரையில் வந்த டெக்ஸின் மறுபதிப்பு ஸ்டாக் தீர்ந்து போன இதழ்களை மாத்திரம் மீண்டும் தற்போதைய விலை நிலவரங்களுக்கு ஏற்ப உயர்த்தி மீண்டும் அச்சிட்டால் சிறப்பாக இருக்கும், புத்தக விழாக்களிலும் நிச்சயம் களை கட்டும். அதற்கு சிறிதளவாவது வாய்ப்பு இருக்குங்களா sir?
Deleteபுத்தக விழாவினில் ஸ்டால் கிடைக்கட்டும் சார் ; பாக்கி சமாச்சாரங்களை அதன் பின்னே பார்த்துக்கலாம் !
Deleteஅல்லாருக்கும் வணக்கமுங்கோ 🙏🙏
ReplyDeleteபழிக்குப்பழி அட்டைப்படம் கதைப்படி உண்மைக்கு புறம்பாக உள்ளது.
ReplyDeleteரூபி ஸ்காட் துப்பாக்கியை வெளியே எடுத்து சுடுவது போல் உள்ளதும், அதன் காரணமாக டெக்ஸ் வீழ்வதும்.... ம்ஹூம்.... கொஞ்சமும் நியாயமற்ற அட்டைப்பட ஓவியம்.
கதைப்படி இந்த விசயம் தவறு என்பதால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
ஒரிஜினல் போனெல்லி ராப்பருங்கண்ணா ; நீங்களோ, நானோ ஒத்துக்கிட்டாலும், ஒத்துக்கிடாட்டியும் இது தான் இத்தாலியிலும் அட்டைப்படம் ; நம்மூரிலும் அட்டைப்படம் !
Deleteநண்பரே கதைப்படி இரண்டாவது குண்டு வெளியே எடுத்ததுதான் சுடுவான். முதல் குண்டு தான் பித்தலாட்டம்
Deleteஅழுத குழந்தைக்கு பால் கிடைக்காது போலத் தெரியுதே....
Deleteஅழுதது குழந்தையா இருந்தா பால் கிடைச்சிருக்கும். கொள்ளுத்தாத்தாவாச்சே..
Deleteமேற்க்கே போ மாவீரா .. ஆர்ட் கலரிங் செம்ம தூக்கலாக இருக்கு டியர் எடி .. காத்திருக்கிறோம் .. 😍
ReplyDeleteகார லட்டுக்கு ஆவலுடன் வெயிடிங் ...
ReplyDeleteடெக்ஸ் கிளாசிக்கில் லயன் லோகோ இடம் பெற்று உள்ளது அதுவேதான் தொடரபோகிறதா.????
ReplyDeleteலயன் லைப்ரரியின் லோகோக்களில் என்னுடைய ஓட்டு 3 ஆவது லோகோவுக்கே..!!
ReplyDeleteபாக்குறதுக்கு என்னைய மாதிரியே இருக்குது..!
Yes
Deleteமற்ற லோகோக்கள் எதுவுமே திருப்தியில்லை.
மகிழ்வித்து மகிழும் சிங்கமே பொருத்தமான லோகோ!
அட ஆமால்லா .. மொத முறையா பாத்தப்பக்கூட இந்த படம் யாரையோ நினைவுடுத்துதேன்னு நெனைச்சேன் .. இப்பகன்பார்ம்டு
Deleteஹிஹி..ஹிஹி..ஹி..ஹி..
Delete///அட ஆமால்லா .. மொத முறையா பாத்தப்பக்கூட இந்த படம் யாரையோ நினைவுடுத்துதேன்னு நெனைச்சேன் .. இப்பகன்பார்ம்டு///
Deleteஹா ஹா!! எனக்கும் கூட இதே மாதிரிதான் தோன்றியது! :)
நேக்கு வெக்க வெக்கமா வர்ரது பெருமாளே...☺☺
Deleteஅப்ப அது கரடியா? சிங்கமில்லியா?
Deleteஹிஹி! நெத்தியடி ஷெரீப்!!
Delete///அப்ப அது கரடியா? சிங்கமில்லியா?///
Deleteநீ பாத்தது கண்ணாடி மேன்..!
'எலியப்பா' அடிக்கப்போகும் லூட்டிகளுக்காக ஆவலுடன் வெயிட்டிங்! அதைவிட ஆவல் - சீனியர் எடிட்டரின் 'அந்தியும் அழகே' தொடர்!!
ReplyDeleteஅடடே! மேலே நான் போட்டிருக்கும் கமெண்ட் - பப்ளிஷ் ஆன நேரத்தைக் கொஞ்சம் கவனியுங்களேன்!!
Deleteஉங்களில் அட்டைப்பட தேர்வை மிக அதிக அளவு நேசிப்பவன் நான்... அதிலும் சமீபத்தில் 2132 மீட்டர் ஒரிஜினல் அட்டைப் படத்தையும் தங்களின் அட்டை படத்தையும் ஒப்பிட்டு பார்த்ததில்..... வியப்பு மேலோங்கியது. தங்களின் அட்டைப்படத்தில் 2132 மீட்டர் கீழே ஸ்கேலில் இருக்கும் அளவு போல் அமைத்து இருப்பது மிக பாராட்டப்பட வேண்டிய விஷயம்... உங்களின் மெனக்கெடல் மிக மிகத் தெளிவாக தெரிகிறது இது தான் எங்களுக்கு வேண்டும்... தொடரட்டும் உங்களின் காமிக்ஸ் காதல் ❤❤❤❤❤
ReplyDeleteநம்ம டிசைனர்களுக்குப் போக வேண்டிய கிரெடிட் சார் !
Deleteமறக்காமல் சொல்லி விடுங்கள் ஐயா 🌹🌹🌹🌹
Deleteமற்றவற்றை விட நம்பர் 3 லோகோ ஓகே சார்.
ReplyDeleteஆனா நார்னியா படத்துல வர்ற சிங்கம் மலை மேல முன்னிரண்டு காலை வைச்சுகிட்டு கம்பீரமா நிக்குற ஒரு போஸ் வரும் பாருங்க, அது மாதிரி ஏதாவது கம்பீரமா இருந்தா நன்னா இருக்கும்.
நார்னியா ரேஞ்சுக்கு நாம எங்கே போறது சார் ?
Deleteநம்ம ரேஞ்சுக்கு ஒரு 'குலேபகாவலி'....'தங்கப்ப தக்கம்' தானே சாத்தியப்படும் ?!
பாரின் கதைய தானே நாமும் போடுறோம் எடி சார்.
Deleteஅப்ப லோகோவும் அந்த லெவல்ல இருக்கலாமே.
கருத்து எங்களது முடிவு உங்களது.
எந்த முடிவா இருந்தாலும் வரவேற்கிறோம்.
மாவு, வடைச்சட்டி, வாணலி - என பாரின்காரவுகளே சகலத்தையும் நமக்குத் தந்து விடுகிறார்கள் ; so வடையைத் தப்பி, எண்ணைக்குள்ளாற போட்டெடுத்து சுலபமா விழுங்கிட முடியுது !
Deleteஆனால் நாமே மாவாட்டி, பக்குவம் பார்த்து, ருசி பார்த்து ரெடி பண்ண வேணும் போது 'பேக்கே பேக்கே'ன்னு தானே முழிக்க முடியுது சார் !
கார லட்டு.. ப்ரிவ்யூ பக்கங்கள் நிஜமாவே அதிருது சார்.லோகோக்களில் 3 வது தவிர மீதி எதுவும் ரசிக்கவில்லை.எல்லாமே முழுசா மானை முழுங்கிட்டு ஜீரணம் ஆகாத மாதிரியே இருக்குதுங்க...
ReplyDeleteஆளுக்கொரு ENO குடுக்கணுமோ ?
DeleteSame feeling sir - the Lion Library logos look way too serious - you must consider changing to Logo 3 OR in our existing logo please replace Comics with Library and colorize the the current logo for a distinct appeal.
Deleteஇந்த எலியப்பா குந்திக்கிட்டு இருக்குற ஸ்டைலைப் பாத்தா...
ReplyDeleteஎம்பட குருநாயரு ஈரோடு விஜய் ஏனோ ஞாபகத்துக்கு வாராரு....!
ஓஹோ! சிரிக்கும் சிங்க லோகோவை பார்த்தா உங்கள மாதிரியே இருக்கும்.. ஆனா யானையைப் பார்த்தா மட்டும் குருநாயர் நினைப்பு வருதோ?!!
Deleteபிளிறிருடுவேன்.. பிளிறி!!
///பிளிறிருடுவேன்.. பிளிறி!!///
Deleteபாத்திங்களா..நீங்களே ஒத்துக்கிட்டிங்க..!;-)
எனக்கொரு சந்தேகம் :
Deleteஒருக்கால்ல்ல்ல்ல்ல் .....சொவத்திலே தொங்குறதை எலியப்பான்னு நினைச்சுப்புட்டீங்களோ ? அது பசங்களோட பொம்மை சார் !
///ஒருக்கால்ல்ல்ல்ல்ல் .....சொவத்திலே தொங்குறதை எலியப்பான்னு நினைச்சுப்புட்டீங்களோ ?///
Deleteஎம்பட குருநாயரை எனக்கு இருட்டுல கூட அடையாளம் தெரியுமே சார்.!
அதுமட்டுமில்லாம.. செவுத்துல தொங்குற பொம்மையோட முகத்துல நம்ம தலீவர் சாயல் தெரியுதே சார்..!
///அதுமட்டுமில்லாம.. செவுத்துல தொங்குற பொம்மையோட முகத்துல நம்ம தலீவர் சாயல் தெரியுதே சார்..!///
Deleteசரிதான்! ஆனா அந்தப் பொம்மை ரொம்ப அழகா இருக்கே?!!
அதனால் தான் சொல்றாரு குருநாயரே...
Deleteஒரு ஹாரர் or திரில்லர் கதைகள் ஏதாவது வருமோ மிச்ச ரெண்டு கார லட்டுல.😍😍😍😍
ReplyDelete100th
ReplyDeleteகார லட்டு அருமையா இருக்கும் போலிருக்கு சார்
ReplyDeleteமொத்தம் எத்தனை கதைகள் & பக்கங்கள் சார் ??
*மேற்கே போ மாவீரா* என்பதற்கு பதில் *மேற்கில் ஒரு மாவீரன்* என வெளிவந்தால் நன்றாக இருக்கும் போலிருக்கு சார்..
லோகோ நம்பர் 3 நல்லாயிருக்கு சார்.
*எலியப்பா* அட்டைபடமே ஆர்வத்தை கிளப்புது சார்..
லயன் லைப்ரரி முதல் இதழ் அருமையான காம்போவில் தல பட்டய கிளப்புறார்..
#####புத்தாண்டு தினத்தினில் கூரியர்கள் டெலிவரி செய்வார்களா ? என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ள வேண்டும் தொடரும் நாட்களில் ! Phewwwwww !!#####
ReplyDeleteபுக் ரெடியாச்சுன்னா சொல்லுங்க சார் பொடி நடையா கூட நடந்து வந்து வாங்கிக்கிறேன்...
###காரவாலா லட்டுக்களின் எண்ணிக்கை மொத்தம் 3"###
ReplyDeleteமீதி ரெண்டு என்னவா இருக்கும் ???
இதை எப்போ சொல்ல போறீங்க சார் ?!!!
லயன் லைப்ரரிக்கு அந்த மூணாவது லோகோ மட்டும்தான் நன்றாக இருக்கிறது. மற்ற லோகோக்களைப் போட்டால் அது லயன் இதழ் தானா என்று அனைவருக்கும் சந்தேகம் வந்துவிடும்
ReplyDeleteநானும் வந்து விட்டேன். மேற்கே போ மாவீரா மிகப் பெரிய வெற்றி பெறும். சீக்கிரமே வெளியிட ஏற்பாடு செய்யுங்கள் சார்.
ReplyDeleteசார், சென்ற மாதமே இந்த இதழை பற்றி நெட்ல பார்த்துவிட்டு ஏக்கப் பெரு மூச்சு விடாத குறைதான். அந்தளவிற்கு பார்த்தவுடன் ஆவல் தொற்றி கொண்டது. கூடிய விரைவில் நம் கைகளில் தவழும் என்ற கனவை நனவாக்கியதற்கு நன்றி சார். A tribute to the Western என்பதால், மிரட்டலான தரத்தில் Hard Bound-ல் வெளியிடுங்கள்.
ReplyDeleteகதையாசிரியர் & ஒவியரான Tiburce Oger இந்த ஆல்பத்தில் கதையை மட்டும் கையாண்டுள்ளார். 1763 முதல் 1916 வரை கிட்டத்தட்ட 150 ஆண்டுக்கும் மேலான வன்மேற்கின் நிகழ்வுகளை 14 சிறு தொகுப்பாக நூல் பிடித்ததுப் போல அழகாக சித்தரித்துள்ளார். இதில் ஹை-லைட் & ஆச்சரியமானது இந்த கதைகளுக்கு 16 ஒவியர்கள் பணியாற்றியதுதான். இது ஒரு பிரம்மிப்பான விஷயமே! Marini என்ற ஓவியர் அட்டைப்படத்தை தீட்ட மற்ற 15 ஓவியர்கள் 14 சிறு கதைகளுக்கு ஓவியர்களாக பணியாற்றியுள்ளனர். (ஒரு கதைக்கு மட்டும் 2 ஓவியர்கள்).
இந்த இதழைக் காண ஆவலுடன் Waiting. கூடிய விரைவில் வெளியிடுங்கள்.
அருமையான தகவல்கள் சார். அப்படியே எத்தனை பக்க இதழ் இது என்பதையும் சொல்லுங்கள்.
Deleteகார லட்டு செமயாக இருக்கு ஸார். மேற்கே போ மாவீரா!! இன் ஆல்பத்தில் 16 கதாசிரியர்கள்+ ஓவியர்கள் பணியாற்றி உள்ளது வியப்பான விடயம். காண ஆவலுடன் waiting! உட்பக்க பிரீவியூ - அதகளம்
ReplyDeleteஎன் பெயர் எலியப்பா - அட்டை படம் அருமை கூடவே சீனியர் எடிட்டரின் “அந்தியும் அழகே” தரிசிக்க ஆவலுடன் waiting.
“பழிக்கு பழி”+ “ கானக கோட்டை”. அட்டை படங்கள் அருமை. பழிக்கு பழி இல் டெக்ஸை வில்லன் சுட்டு, டெக்ஸ் குண்டடி படுவது, ஆவலை கிழறுகின்றது. 3வது லோகோ - ஓகே ஸார். பழகிவிட்டது என்பதும், சிங்கம் புன்முறுவலோடு இருப்பதும் முக்கியமானவை.
அருமையான ஓட்டப்பதிவு சார்...பட்டய கிளப்புங்க மூனு கார லட்டு அடி தூள்..அட்டைப்படம் இது வரை வந்த டெக்ஸ் கதைகளில் டாப்பாய் மிளிரப் போவது இதுன்னு பச்சைக் குழந்தை கூட சொல்லிடுமே......
ReplyDeleteபுதிய கார கௌபாய் 20ஆசிரியர்கள் ...ஆவலை கிளப்புது...
சார் சுஸ்கி விஸ்கி ஜனவரிக்குதான்னு கன்பார்ம் பன்னியதற்கு நன்றிகள்
அறிவிப்புகள் அனைத்தும் திக்கு முக்காட வைக்குது...முத்து 50அ களைகட்டச் செய்யுறீங்க...காமிக்ஸின் பொற்காலம் என்பதா...அல்ல அல்ல...இருபதுன்னு அடிச்சு சொல்வேன்
Deleteகென்யா..சுஸ்கி...உயிரைக் தேடி....என்னா ஒரு கலக்கல் என வியந்தா... கார லட்டு மூனாமேமே...
Deleteஎலியப்பா தூள் கிளப்பும் போல...அந்தியும் அழகேவுடன்
Deleteலோகோ நம்ம ஸ்டைல் லயன் லோகோ பொருத்தமான தோனுது
ReplyDeleteEdi Sir.. எலியப்பா..வழிமேல் விழி வைத்து காத்திருக்கோமப்பா உன் வருகைக்கு.சீனியர் எடிட்டரின் சீர்மிகு சிந்தனைகளுடன் சீக்கிரமே வாருங்கள் எலியப்பா.
ReplyDeleteமேற்கே போ மாவீரா.. Tex க்கும் டைகருக்கும் சரியான போட்டியாக களமிரங்குவார் போலிருக்கே.மேற்கே போற கார லட்டுகாரரை வழிமறித்து அப்படியே பொங்கலுக்கு வந்துவிட செய்யுங்களேன் Edi Sir.
ReplyDeleteலயன் லைப்ரரி லோகோ.. 3 ஓ.கே. லயனாரின் சிரிப்பு O.k தான். ஆனால் லைப்ரரி என்பதால் சிரித்த முகத்துடன் கையில ஏதாவது புத்தகத்துடன் இருந்தால் நம்ம லயனார் இன்னும் அம்சமா இருப்பாருங்க.
ReplyDeleteசென்னை Bookfair 2022:
ReplyDeleteநிம்பிள் Book fair ல ஸ்டால் போட்றான்.நம்பிள் எல்லாம் அங்கே வர்றான்.சேல்ஸ்ல பட்டைய கிளப்பறான்.ஓமைக்கிரான அட்ச்சு துரத்றான்.ஸ்டாக்லாம் காலி பண்றான். வர்ரவங்களுக்கு நிம்பிள் ஸ்பெசல் பன்னு தர்றான்.நம்பிள் ஸ்டால்ல வாங்கின புத்தக மூட்டையோட வீட்டுக்கு கிளம்ப்றான்.டீக் ஹே!!!
லோகோ 3 நன்றாக உள்ளது..
ReplyDeleteஒரு சிறிய ஆசை:
வரும் லயன் க்ளாசிக் இதழ்கள் அனைத்தும் ஒரே அளவிலும் ( பக்க எண்ணிக்கை தவிர ), SPINE of the book ஒரே டிசைனாகவும் இருந்தால், அடுக்கி வைத்து ரசிக்க அழகாக இருக்கும்..
எனது கருத்தும் இதுவே டியர் எடி .. போனெல்லி ல போடுற மாதிரி ஒரே சைஸ் புக்ஸ் ஆக வேண்டும்
Delete// வரும் லயன் க்ளாசிக் இதழ்கள் அனைத்தும் ஒரே அளவிலும் ( பக்க எண்ணிக்கை தவிர ), SPINE of the book ஒரே டிசைனாகவும் இருந்தால், அடுக்கி வைத்து ரசிக்க அழகாக இருக்கும்.. //
Deleteஅதே,அதே...
போனெலியில், அட்டைப்பட ராப்பரை ரெடி பண்ணிவிட்டு, சிவகாசிக்கு அனுப்பி, மெருகேற்றிக் கொடுங்க சார்,ப்ளீஸ் அப்படீன்னு கேட்டு வாங்கும் காலம் நெருங்கிவிட்டது. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteலோகோ மூன்று நன்றாக உள்ளது சார்.
ReplyDelete*****
பழிக்கு பழி அட்டைப்படம் செம செம செம கலக்கல் சார்..சூப்பர்.
******
எலியப்பா இப்பவே ஆவலை கிளப்புகிறது ..சீனியரின் அந்தியும் அழகே வேறு...சந்தா கட்ட இந்த ஒரு காரணம் போதுமே ..
கார லட்டு என்றவுடன் உண்மையாகவே நா எதிர்பார்த்தது ஏதோ கிராபிக் பாணியில் உள்ள இதழ் என நினைத்தால் வன்மேற்கு அட்டகாசத்தை காரலட்டில் அனைத்து விட்டீர்களே சார்...
ReplyDeleteஇதுவும் எங்களை பொறுத்தவரை இனிப்பு லட்டு தான் சார்..இன்னும் இரண்டு லட்டு வேற காத்திருக்கிறது ..ஏற்கனவே சொன்னது போல 2022 காமிக்ஸ் ஆர்வலர்களுக்கு முத்தான ஆண்டு என்பது மறுக்க முடியாத ஒன்று என்பதை நிரூபித்து கொண்டே உள்ளீர்கள் சார்..
சென்னை புத்தக விழா அன்று போல் ..அதை விட அதிகமாய பட்டையை கிளப்ப மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்...
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteசார்
ReplyDelete* கார லட்டு 1 amazing choice. அடுத்த வருடம் Muthu 50 என்பதால் சில-பல extra இதழ்கள் ஓகேதான்.
* Welcome to எலியப்பா !
* சார் 2022 அனைத்து இதழ்களிலும், அனைத்து பக்கங்களிலும் "இது உங்கள் அபிமான முத்து காமிக்ஸ்ன் 50ம் ஆண்டு" என்ற ஒற்றை வரியினை பிரிண்ட் - underscribe - செய்ய முடியுமா - across all our books regardless of brand !
+888 888 8888 😍😍😍😍👍👍👍
Deleteகார லட்டு 1 - எதிர்பார்க்காத ஒன்று. மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteThe BOMB போல ஒரு படைப்பை (கிராபிக் நாவலை) கார லட்டுவில் எதிர்பார்த்தேன். கிராபிக் நாவல் ரசனைக்கும் கொஞ்சம் தீனி தேவை சார். முத்து 50 வது ஆண்டு அனைவரது ரசனையையும் பூர்த்தி செய்ததாக இருக்கட்டுமே. Action, Adventure, கிளாசிக்ஸ், மறுபதிப்புகள், கார்டூன், கௌபாய் மத்தியில் கொஞ்சமேனும் கிராபிக் நாவலையும் கருத்தில் கொள்ளவும். சந்தாவில் ஒற்றை இதழ் தான். ஏற்கனவே அறிவித்தபடி ஸ்பெசல் இதழ்களாக கொஞ்சமேனும் எதிர்பார்க்கிறோம். காத்திருக்கிறோம்.
ஒரு special கி. நா பிளீஸ் சார். இதுவே ஒரு கிராஃபிக் நாவல் தான்.
Delete// The BOMB போல ஒரு படைப்பை (கிராபிக் நாவலை) கார லட்டுவில் எதிர்பார்த்தேன். //
Deleteவாகான ஒரு தருணத்தில் வெளியாகும் என்று நினைக்கிறேன்,ஆசிரியரோட பேனாவுக்கு 2022 இல் ஓய்வே கிடையாது போல...
எனது ஓட்டு லோகோ 3 தான்.... மற்றொரு லோக எல்லாம் ஏதோ கிராபிக் நாவலுக்கு போடப்பட்டது போல் உள்ளது. சிரித்த முகத்துடன் தலையில் கிரீடத்துடன் கார்ட்டூன் சாயலில் தெறிக்கவிடும் சிங்கமே அழகு.
ReplyDeleteமற்ற லோகோ
ReplyDeleteHi..
ReplyDelete// இன்னுமொரு சஸ்பென்ஸ் இதழுக்காக பேனா பிடித்து வரும் பணியின் க்ளைமாக்ஸுக்குள் புகுந்திட ! Bye all ....see you around !! // இன்னும் ஒரு சஸ்பென்ஸ் இதழா??? இந்த முறை தீபாவளி ஜனவரியில் போல.
ReplyDelete3rd. Y doubt?
ReplyDeleteThe 3rd logo is fine. The placement of "classics-1" over the Tex logo doesnt look right.
ReplyDeleteநேஞ்சே ஏழு.பிரளய பயணம் இரண்டும் Dec மாதம் இறுதிக்குள் கிடைக்கும் என்றீர்கள்.இது வரை no information.
ReplyDelete3வது லோகோவும், 4வது லோகோவும் - ok சார்..
ReplyDeleteலோகோவில் தமிழ் எழுத்துக்கள் இருப்பது கட்டாயம் சார். (அது ஆங்கில வார்த்தையாக இருந்தாலும்)....சிங்க நூலகம் - பொதுவான பெயர்..லயன் லைப்ரரி -ஒன்லி காமிக்ஸ் நூலகம்..என்ற அர்த்தம் தோணிக்கும்..சார்.
பொங்கலில் ஒரு தீபாவளி...
ReplyDeleteபுது காமிக்ஸ்ன் அட்டைப்படங்கள் பார்த்தாலே ஒருவித குழந்தைத்தனமான
வெளிப்படுத்த முடியாத மகிழ்ச்சி மனதில்.
லயன் காமிக்ஸ்ன்,
2022 ஆரம்ப அதிர் வேட்டு தொடக்கங்களில்
மறுபதிப்பாக வரும் ,
இந்த 10000 வாலா சர வெடியும் ஓன்று.
பல காமிக்ஸ் "ஸ்நேகங்களின்" நெடுநாளைய எதிர்பார்ப்பு இந்த கதைகள்.
தலைவாங்கி குரங்கு,
பவளச்சிலை மர்மம்,
பழிவாங்கும் பாவை
என்ற 3 கதைகளின் வெற்றிக்கு பின்,
4 வது கதையாக,
1987-ல் 5 ரூபாய்க்கு வெளியான "கோடைமலர்"ல்,4 வது கதையாக வந்தது
இந்த "பழிக்கு பழி" கதை.
பள்ளி விடுமுறையில் வாங்கி கொண்டாடிய காமிக்ஸ்.
கதை சத்தியமாக ஞாபகம் இல்லை.
இதை மறுபதிப்பாக கொண்டு வந்ததில் என்னைப் போல பலருக்கும் மகிழ்வே.
முத்து 50 வது ஆண்டு மலர்,
கோல்டன் ஹீரோஸ் ஸ்பெஷல்-இலவச இணைப்பு,
சுஸ்கி-விஸ்கி மறுபதிப்பு,
சாமேஷிங்70s என இவைகளோடு...
ஜனவரி 2022ல் 6ம் தேதி நடக்கும் சென்னையில் நடக்கும் புத்தக திருவிழா ஸ்பெஷலாக,
டெக்ஸின் இந்த 2 கதையையும் ஒரே தொகுப்பில்,
"டெக்ஸ் க்ளாசிக்-1" என கொண்டு வந்து,
2022 பொங்கலை தீபாவளி போல் கொண்டு வந்து விட்டார் ஆசிரியர் விஜயன்.
வாழ்த்துக்கள் சார்.
"இப்படி ஒரே மாசத்துல இத்தனை கொண்டு வந்தா எப்படி வாங்குவது?,
வாங்க காசு?, எப்படியெல்லாம் லாபம் பார்க்கிறார்?, கஷ்டம்" என்பது போன்ற அபத்தமான கேள்விகளை தூக்கி எறிந்து விட்டு🤣😂🤣,
கொஞ்சம் வீண் செலவுகளை கட்டுப்படுத்தி, நம்மால் முடிந்த காமிக்ஸ்களை வாங்கி வாசித்து,
அடுத்த வருட துவக்கத்தை நமக்கு பிரியமான லயன் காமிக்ஸ் உடன் கொண்டாடி மகிழ்வோம்.
மீண்டும் அடுத்த பதிவில் 🌹🌹🌹.
// குட்டிக் கரணங்கள் அடித்தாவது இம்மாதத்தின் இறுதி தினங்களுக்குள் புக்ஸை தயார் செய்து முரட்டு டப்பிக்களுக்குள் அடைத்திடுவோமென்ற நம்பிக்கையில் பொழுதுகள் நகர்ந்து வருகின்றன ! //
ReplyDeleteஒவ்வொரு மாதத்தையும் கடக்க நீங்கள் நேரிடும் எதார்த்தப் பிரச்சனைகள் தொழில் சார்ந்த நெருக்கடிகளை,புரிதல்களை எங்களுக்கு உணர்த்துகிறது சார்...
எத்தனை லோகோ இருந்தாலும்,
ReplyDeleteஅந்த 3 வது பழைய, மனம் கவர்ந்த லோகோ வுக்கு இணை எதுவும் இல்லை ஆசிரியர் சார்.
"GOLD WEST YOUNG MAN"...
*வன்மேற்கு !! முன்னெப்போதும் இல்லாத ஒரு புதுவிதப் பார்வையில்...ஒரு புதுவித பாணியினில் !!*
டெக்ஸ்,டைகர்,ட்யூராங்கோ இவர்களும் புதுமுகமாக வந்தவர்கள் தானே? சார்.
கெளபாய் கதைகள் என்றுமே ரசிக்க தகுந்தவைகள் தான்.கொடுங்க சார் இவரையும் ரசிக்கலாம்.
எலியப்பாவை படிக்கறமோ இல்லையோ,
மூத்த ஆசிரியரின் பதிவை காண ஆவலாக உள்ளேன்.
2022 ஆம் ஆண்டை கலக்கிடலாம் சார்
நம் அன்பு வாசகர்களோடு
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
// The LION LIBRARY இதழ் # 1-ன் அட்டைப்பட முதல் பார்வை ! //
ReplyDeleteலயன் லைப்ரரி அட்டைப்படம் அசத்தல் சார்,வழக்கம்போல் விற்பனையில் சாதனை நிகழ்த்தும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி...
சில திரைப்படங்களை தயாரிப்பு அளவில் இருக்கும்போதே இது கண்டிப்பாக மாஸ் ஹிட் அடிக்கும்,வேற லெவலில் ரீச் ஆகும் என்று கணிப்பதாக சொல்லப்படுவதுண்டு...
இதே போன்ற கணிப்பு பெரும்பாலான டெக்ஸ் படைப்புகளில் நமக்கே முன்பே தோன்றுவதுண்டு,டெக்ஸ் படைப்புகளுக்கு ஆகப்பெரும் பலங்களில் இதுவும் ஒன்றாக நான் பார்க்கிறேன்...!!!
// புத்தாண்டு தினத்தினில் கூரியர்கள் டெலிவரி செய்வார்களா ? என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ள வேண்டும் தொடரும் நாட்களில் ! //
ReplyDeleteஜனவரி 29 ஆம் தேதி டெலிவரிக்கான புக்கிங் செய்வதுதான் நல்லது,இல்லையேல் பலருக்கு ஏமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு...!!!
Edi sir..எலியப்பா முத்து லோகோ சிம்பிளா இருக்கு.முத்து ஸ்பெசல் லோகோ போடுங்க சார்.
ReplyDeleteலயன் லைப்ரரி லோகோக்கள் இன்னும் கொஞ்சம் கம்பீரமாய் இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது,மூன்றாவது லோகோ புன்னகையுடன் நல்லாதான் இருக்கு,அது லயன் லைப்ரரியை விட கார்ட்டூனுக்கு இன்னும் சிறப்பா இருக்கோமோன்னு தோணுது...
ReplyDeleteலயன் என்றாலே கம்பீரமும்,கர்ஜனையும் தான்...
இது எனது தனிப்பட்ட கருத்து...
மற்றபடி ஒவ்வொன்றும் ஒருவித சிறப்பாய் உள்ளது...
3 logo awesome and opt sir
ReplyDeleteலயன் லைப்ரரி- 3 வது. நமது ஆஸ்தான சிங்க முகத்துடன் செல்வது நன்றாக இருக்கும். மற்ற சிங்கங்களை உபயோக படுத்துவதில் காப்பிரைட் பிரச்சினை வரலாம்.
ReplyDeleteஇது நம்ம அடையாளம்....இதையே மாத்தி வரையலாம்
Deleteநீங்க 'ரைட்...ரைட்..' மட்டும் சொல்லுங்க சார் ; காப்பி, டீ, கஷாயம்லாம் நான் பார்த்துக்கிறேன் !
Deleteநமது சிங்கத்தை மாற்றி வரைவதே சிறப்பு என சொல்லி இருக்கேன்லே மக்கா.
Deleteஎனக்கு நமது சிங்கம் உள்ள 3 லோகோதான் வேண்டும் :-)
Deleteஉனக்கு தனியா அனுப்பப் சொல்வோம்ல
Delete// அறிவிக்கிறேன் பேர்வழி என ஆரம்பித்து, "காரவாலா லட்டுக்களின் எண்ணிக்கை மொத்தம் 3" என்பதையுமே நான் உளறிக் கொட்டி விடும் வாய்ப்புகள் உண்டென்பதால் //
ReplyDeleteசொல்ல மாட்டேன்,சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் சொன்னிங்க பாருங்க,ஹா,ஹா,ஹா...
ஒரு புளோவிலே வந்துருச்சு சார் !!
Delete// "மேற்கே போ மாவீரா !!" என்ற பெயருடன் பொருத்தமானதொரு தருணத்தினில் இந்த ஆல்பம் உங்கள் முன்னே ஆஜராகிடும் !! //
ReplyDeleteகால மாற்றத்திற்கு ஏற்றவாறு தகவமைப்பில் மாற்றம் செய்து காமிக்ஸ்கள் வருகை புரிவது மிக்க மகிழ்ச்சி,நமது வாசிப்புத் திறன்களையும் மேம்படுத்திக் கொள்ள நல்லதொரு வாய்ப்பு...!!!
இந்த ஆல்பம் பிரான்சில் வெளியானதே போன மாசம் தான் சார் ; சூட்டோடு சூடாய் துண்டை விரிச்சாச்சு !
Deleteஅப்ப பட்டய கிளப்புவது உறுதி
Delete// வன்மேற்கு !! முன்னெப்போதும் இல்லாத ஒரு புதுவிதப் பார்வையில்...ஒரு புதுவித பாணியினில் !! //
ReplyDeleteசொல்லப்படாத கதைகள் ஏராளம்...
// லட்டுஸ் # 2 & 3 கொஞ்சம் முரட்டு லட்டுஸ் என்பதால் அவற்றை FFS ரிலீஸ் ; SMASHING 70's ரிலீசுக்கு அப்புறமாய் வைத்துக் கொள்வோமே ? //
ReplyDeleteஅடிக்கற பந்துகள் எல்லாம் சிக்ஸர்கள்தான்...!!!
மெய்யாகிடின், புனித மனிடோவின் ஆசீர்வாதங்கள் அன்றி வேறில்லை சார் !
Deleteசினிஸ்டர் செவன்னா சும்மாவா
Deleteடியர் எடி,
ReplyDeleteஇரு கதைகளும் எனக்கு ஞாபகம் இல்லை... வந்தபின் நினைவுகளை தட்டுகிறதா என்று பார்க்க வேண்டும்.
முதலில், இந்த சிறப்பிதழ் வருமா என்ற கேள்வியை விட, சென்னை புத்தக கண்காட்சி நடக்குமா என்ற சந்தேகம் தான் இப்போது அதிகமாக தென்படுகிறது. நம்புவோமாக.
எலியப்பா, கோ வெஸ்ட் இரண்டு அறிவிப்பும் எதிர்பார்ப்புகளை நிரப்புகிறது... சந்திப்போம் இவர்களையும்.
நண்பர்களிள் சிலர் காமிக்ஸ் பட்ஜெட் எல்லை மீறி போய் கொண்டிருக்கிறது என்று கருத்து தெரிவித்தார்கள்... அவர்களிடம், அனைததையும் எப்படி வாங்குவது என்று யோசிப்பதை விட, இதில் நமக்கு கட்டுபடியான, மற்றும் பிடித்த இதழ்களை வாங்குவது எப்படி என்று நோக்குவதே சிறப்பு என்று பதிலளித்தேன்.
Deleteநிறுவனத்திற்கு விற்பனை மூலங்கள் இருக்கும் வரை வெளியீடு எண்ணிக்கை அதிகரிப்பது புதிதல்ல... என்ன கிட்டங்கி நிரம்பி, மற்ற மாத இதழ் வெளியீடுகளை தடுக்காத வரை எல்லாம் சுகமே.
அந்தளவு பட்ஜெட் பிரச்சனை வராமல், முன்னேற்பாடுகளுடன் நீங்கள் முடுவெடுப்பீர் என்ற நம்பிக்கை என்றும் உண்டு. 50வதுவருட கொண்டாட்டம் தொடரட்டும்.
நிறைய முன்ஜாக்கிரதைகளுடன் சென்னை விழாவிற்குத் திட்டமிட்டு வருகிறார்கள் சார் ; பொதுஜனத்துக்கு மாஸ்க் விநியோகம் ; ஆங்காங்கே sanitizer ; நாட்களின் எண்ணிக்கை குறைவாய் இருப்பின் கூட்டமாகிடக் கூடும் என்பதால் மொத்த அவகாசத்தை 17 நாட்களாக்கியது - என்று நிறையவே சிந்தனை திட்டமிடலுக்குள் சென்றுள்ளது !
Deleteஅப்புறமாய் இறைவனின் சித்தமே !
லயன் லைப்ரரிக்கான லோகோ தேர்வில் மூன்றாம் இடமிருக்கும் இலட்சினம், நமது லயன் முத்து லோகோவின் அதே பாணியில் இருப்பதால், அதற்கே என் வரவேற்பு.
Deleteஆனாலும், லயன் லைப்ரரி என்ற புதிய ஒரு வரிசை தேவைதானா ?
சன்ஷைன் லைப்ரரி என்ற திடீர் இதழ்களுக்கான வரிசை இன்றும் உண்டுதானே ?!
ஏற்கனவே பிரிண்ட் ஆன இதழ்கள் நீங்கலாய் சன்ஷைன் லைப்ரரி வரிசையில் வேறெதுவும் இனி வராது சார் ; அதுவும் நமது குழுமத்து வெளியீடே என்று சொல்லி விற்பதில் சிரமங்கள் இருப்பதாய் முகவர்கள் அபிப்பிராயப்பட்டனர் ! So மொத்தமாய் லயன் / முத்து பெயர்களில் மாத்திரமே வரும் காலங்களில் !
Deleteதிடீர் இதழ்களுக்கான வரிசை - LL மாத்திரமே இனி !
அப்போது பேஷாக தொடரலாம் ஐடிட்டர் சார்... லயன் முத்து வார்ப்பில் புத்தகங்கள் வருவதே எல்லோருக்கும் சிறப்பு.
Deleteஇவைகளுடன், ஜம்போ காமிக்ஸ்...தொடரும்தானே ?!
'லயன் லைப்ரரி' என்ற புது பெயருக்கு இப்படி ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் என நினைத்தேன்.
Deleteலயன் லைப்ரரி 3வது மிகச் சிறப்பாக எளிமையாக அட்டகாசமாக உள்ளது.
ReplyDeleteமேற்கே போ மாவீரா - வரவேற்கின்றேன்.
ReplyDeleteவிரைவில் எதிர்பார்க்கின்றேன்.
பொங்களுக்கேவா மாவீரா வா
Deleteநீங்க டெக்ஸ் கதைக்கு தந்த லோகோவ இப்பத்தான் அட்டையோட பாத்தேன்...இந்துப் அம்சமாதானிருக்கு...நம்ம கார்ட்டூன் அடையாள சின்னமும் நல்லாத்தானிருக்கு...என்ன செய்யலாம்...எல்லா லோகோவயும் போட்ரலாமா...முடியல சார்...கடவுள்ட்ட விட்ருங்க
ReplyDeleteகடவுள் பாவம் ஸ்டீல் !
Deleteநமக்காக போராடுறார்ல...நிச்சயமா சார்
Deleteகார லட்டு என டாப் கியரில் பதிவு போகிறது என பார்த்தால் படக்கென்று பதிவை முடித்து விட்டீர்கள் சார்; முத்து 50 பணியின் காரணம் என நினைக்கிறேன்.
ReplyDeleteஉங்களின் ஓவர் சஸ்பென்ஸ் எங்கள் உடம்புக்கும் ஆகாது சார். அதனால் விரைவில் மற்ற மூன்று சஸ்பென்ஸ்களையும் உடைக்கவும்:-)
உரிய நேரங்களில், உரிய லட்டுக்கள் சார் .....அறிவிப்பும் சரி, வெளியீடும் சரி !
Deleteமேற்கே போ..மாவீரா..!
ReplyDeleteசிறப்பாகத் தென்டுகிறது சார்..அதில் இனம்புரியா வசீகரம் இருப்பதை மறுக்கமுடியாது.கதைகளும் தன்பங்குக்கு செவ்வனே அமையும் என்று உள்மனசு சொல்கிறது.
மூன்றாவது லோகோ மட்டும் கொஞ்சமாக ஈர்க்கிறது, ஆனால் இன்னும் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்தால் நன்றாக இருக்கும். முடிந்தால் ஒரு பெரிய சிங்கமும் குட்டி சிங்கமும் புத்தகம் படிப்பது போல் அமைந்தால் லயன் லைப்ரரி என்ற கருத்துக்கு உருவம் கொடுத்தது போல் இருக்கும் என்பது என் கருத்து
ReplyDeleteஒரு வட்டத்துக்குள் ரெண்டு சிங்கம்ஸ் & புக்ஸ் என்று அடைத்தால் லோகோவாக்கி நமது இதழினில் பார்க்கும் போது ஈர்க்குச்சி சைசில் தான் ஒவ்வொன்றும் தெரியும் நண்பரே !
Deleteலயன் லைப்ரரிக்காக நீங்கள் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என்று தெரியவில்லை சார்,எனினும் எனது கருத்தாக ஒன்றை சொல்கிறேன்,மூன்று மாதங்களுக்கு ஒரு முறை லயன் லைப்ரரி என்ற அடிப்படையில் 2022 இல் குறைந்த பட்சம் நான்கு லயன் லைப்ரரி வந்தால் மிக்க மகிழ்ச்சி சார்...!!!
ReplyDelete2022-ஐ எவ்விதம் முன்னெடுத்துச் செல்ல பெரும் தேவன் மனிடோ முடிவெடுத்துள்ளாரோ - அதற்கேற்பவே நமது திட்டமிடல்களும் அமைந்திடும் சார் !
Deleteஅடித்து ஆடும் batting pitch ஆக 2022 அமையும் பட்சத்தில் கைவசம் கணிசமான சேவாக்களும் , ரிஷாப் பந்த்களும் ; ஹார்திக் பாண்ட்யாக்களும் வெயிட்டிங் !
அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
Delete// மேற்கே போ மாவீரா !! //
ReplyDeleteஆர்வத்தை கிளம்புகிறது. புதிய முயற்சியை வரவேற்கிறேன்.
ஆனால் ஜெரோனிமா கதை போல் ஆகாமல் இருந்தால் நன்று. கதையை முதலில் இருந்து கடைசி வரை படித்து முடிவெடுத்து இருப்பீர்கள் என நம்புகிறேன். ஹிஸ்டரி ஜாக்ரபி கொஞ்சம் குறைவாக ஆக்சன் மற்றும் விறுவிறுப்பான கதையாக இருந்தால் நன்றாக இருக்கும். அடுத்த வருட கதைகள் அனைத்தும் மெகா ஹிட் ரகமாகவே இருக்கட்டும் சார்.
எலியப்பா....
ReplyDeleteஹா...ஹா..ஹா
காத்திருக்கிறோம் சார்.
எலியப்பா - முன்னோட்டம் அருமை. கடந்த 10 வருடங்களாக குழந்தைகளுக்கான அனிமேஷன் படங்களை மட்டும் பார்த்து வரும் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் இதனை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறோம் :-)
ReplyDeleteஎலியப்பா மாதமாதம் இனி குழந்தைகளுக்கு கதை சொல்லும் அனுபவத்தை கொடுக்க போகிறார். மகிழ்ச்சி.
மூணாவது லோகோதான் எவர்க்ரீன்.அதை அசைச்சுக்கவே முடியாது.
ReplyDeleteமீதி லோகோவில் சிங்கம் கொஞ்சம் பரிதாபமாகத் தெரிகிறது.
நம்மாள் 1984 முதலாய் சிரிச்சா முகமாய் அத்தினி பேரின் மனதிலும் இடம் பிடிச்சுப்புட்ட பார்ட்டியாச்சே சார் !
Deleteவிச்சு-கிச்சு டைஜெஸ்ட்
ReplyDeleteSuper
வீழ்வேனென்று நினைத்தாயோ..!
ReplyDeleteடெக்ஸ் @ பழிக்குப் பழி ராப்பர்.
திக்கெட்டும் பகைவர்கள் - ஒரு சிறப்பான கதையை கொடுக்க முயற்சி செய்து இருக்கிறார்கள். ஆனால் கடைசி இரண்டு பாகங்கள் பொறுமையை கொஞ்சம் சோதித்து விட்டது.
ReplyDeleteகதை பல கோணங்களில் பயணிக்கிறது அது டெக்ஸ் எப்படி தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார் என்பதை உணரச்செய்கிறது.
கதையில் மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள் மெக்சிகன் சிப்பாயாக இருந்து டெக்ஸின் நண்பர்களாக கதையின் இறுதிவரை வரும் நண்பர்கள். கதைக்கு இவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
கிளைமாக்ஸ் கொஞ்சம் ஆக்ஷ்ன் கலந்து இருந்தால் கதை முடிவு இன்னும் செமையாக இருந்து இருக்கும். ஒருவேளை டைகர் கதை போல டெக்ஸை இயல்பான நாயகனாக காண்பிக்க நினைத்து இருக்கலாம் என நினைக்கிறேன்.
கதையை படித்து முடித்த பின்னர் மின்னும் மரணம் டைகர் மனதில் வந்து சென்றார்.
பருந்து மற்றும் கழுகு வித்தியாசம் என்ன ?
ReplyDeleteகழுகுகள் பொதுவாக பருந்துகளை விட பெரியவை. வழக்கமான கழுகு 9 முதல் 10 கிலோ எடையைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் பெரிய பருந்துகள் 4 அல்லது 5 கிலோ எடையை கொண்டுள்ளது. இதில் சிவப்பு வால் பருந்து மட்டும் ஒரு விதிவிலக்கு. இது ஆஸ்திரேலிய சிறிய கழுகை (சிறிய கழுகு இனம்) விட மிகப் பெரியது. - கூகுள் மூலம் கிடைத்த தகவல்.
டெக்ஸை கழுகார் அல்லது இரவுகளுகார் என குறிப்பிடுகிறோம். தீபாவளி டெக்ஸ் கதைக்கு பருந்துக்கொரு பரலோகம் என இருந்தது, இது கழுகுக்கொரு பரலோகம் என இருந்து இருக்க வேண்டுமோ என தோன்றியது. ஒரு வேளை டைட்டிலில் ரிதமாக (பப) வரவேண்டும் என்பதால் ஆசிரியர் இந்த பெயரை வைத்து இருப்பாரா அல்லது நான் கதையின் தலைப்பை தவறாக புரிந்து கொண்டேனா ? :-)
பெரியவரை (பெரிய) "கழுகு" எனும் போது - சின்னவரை (சின்ன)"பருந்து" என்று அடையாளம் காட்டுவது தப்பில்லையே சார் ?
Delete201
ReplyDeleteஆனால் அவரை சின்னக் கழுகார் என்று தானே எல்லா கதைகளிலும் கூப்பிடறாங்க.
ReplyDelete