Powered By Blogger

Saturday, December 25, 2021

தொடும் தூரத்தில் FFS !

 நண்பர்களே,

வணக்கம். நேற்றோடு பத்து வருடங்கள் ஆகிவிட்டனவாம் - இந்த வலைப்பக்கத்தினில் நான் எழுதத் துவங்கி !! "டிசம்பர் 24, 2011" என்ற தேதி தாங்கிய அந்த முதல் பதிவின் screenshot ஒன்றோடு நண்பர் காரைக்கால் 'ரிப் கிர்பி' பிரசன்னா அனுப்பிய இந்தத் தகவலைப் படித்த போது - 'அடங்கொன்னியா...அதுக்குள்ளாற இம்புட்டு நேரம் ஓட்டம் பிடிச்சிருச்சா ?' என்ற எண்ணம் தான் மேலோங்கியது ! விளையாட்டாய்த் துவங்கியதொரு முயற்சியானது, இன்றைக்கு ஜாலியானதொரு காமிக்ஸ் நிழல்குடையாய் உருப்பெற்றிருப்பது நிச்சயமாய் உங்களின் ஜாலங்களால் தான்  ! நிஜத்தைச் சொல்வதானால் "COMEBACK ஸ்பெஷல்" என்று துவங்கிய இந்த இரண்டாம் இன்னிங்ஸானது, இன்று இத்தனை உத்வேகம் கொண்டிருப்பதன் தலையாய  காரணியே - பின்னிருந்து நீங்கள் ஒவ்வொருவரும் என்னை உந்தித் தள்ளிடக் காட்டி வந்திருக்கும் தளரா முனைப்பே !! And அது பிரதானமாய்  சாத்தியப்பட்டிருப்பது இந்த வலைப்பூவின் பக்கங்களின் வாயிலாகவே ! 

அந்தக் காலத்து Standard 10 மோட்டார் காரை ஒர்க் ஷாப்புக்குக் கொண்டு போய் விட்டாச்சு ; ஏதேதோ பட்டி, டிங்கரிங்கெல்லாம் செய்து, வண்டிக்குப் பெயிண்ட் அடித்து, எஞ்சினுக்கு ஆயிலெல்லாம் ஊற்றி, ஸ்டார்ட்டும் பண்ணியாச்சு தான் - ஜனவரி 2012-ல் ! ஆனால் துருப்பிடித்துக் கிடந்த டேங்கிலிருந்த பெட்ரோலானது, வண்டியினை எத்தனை தொலைவுக்கு இட்டுப் போயிருக்கும் என்பதையோ, பெட்ரோல் தீர்ந்திருக்கக்கூடிய  பட்சத்தில் மறுக்கா ரொப்பிக் கொள்ளும் முனைப்பு எனக்கு இருந்திருக்குமா ? என்பதையோ சத்தியமாய் அன்றைக்கு நான் அறிந்திருக்கவில்லை ! ஆனால் அந்த 2012 புத்தக விழாவினில் சந்தித்த நண்பர்களும் சரி, இங்கே வலைப்பூவினில் நான் செய்து கொண்ட ஏராளப் பரிச்சயங்களும் சரி, உள்ளுக்குள் உறைந்து வந்த சோம்பேறிமாடனை ஒட்டுமொத்தமாய் விரட்டியடித்த புண்ணியத்தை ஈட்டியதே நிஜம் ! மகிழ்வித்து மகிழ்வதென்பது எத்தனை பெரிய வரமென்பதை என்னை உணரச் செய்தோர் நீங்கள் & அதற்குப் பெரிதும் உதவிய இந்த வலைப்பக்கம் deserves a ton of credit ! 

பத்தாண்டுகளுக்கு அப்பாலிக்கா - 819 பதிவுகள் ; கிட்டத்தட்ட ஐந்தரை மில்லியன் பார்வைகள் ; 210,836 பின்னூட்டங்கள் ; சுமார் 450 இதழ்கள் என்ற நம்பர்களோடு இந்த வலைப்பூ தொடர்ந்திட்டிருக்கும் என்று 2011-ல் யாரேனும் என்னிடம் சொல்லியிருப்பின் -  "போங்க பாஸு...காமெடி பண்ற  நேரத்துக்குப் போயி புள்ளீங்களைப் படிக்க வைப்பீங்களா ?" என்றபடிக்கே நகர்ந்திருப்பேன் தான் ! ஆனால் புனித மனிடோவின் சித்தம் இதுவே என்றிருக்கும் போது அதனை மாற்ற யாருக்கு முடியும் ? 

இந்தப் பதிவு சார்ந்த பயணத்தில் தான் எத்தனை-எத்தனை நினைவுகள் !!தமிழில் டைப்படிக்கத் திணறிய அந்த ஆரம்ப நாட்களும் சரி, மொக்கை இன்டர்நெட் வசதிகளோடு ராக்கூத்தடித்த நாட்களும் சரி, ஊர் ஊராய், தேசம் தேசமாய் இந்தப் பதிவுப் படலங்களைத் தொடர்கதையாக்கிய நாட்களும் சரி, உற்சாகத்தின் உச்ச நாட்களும் சரி, மணக்கும் மூ.ச.க்களையும், மயக்கும் மு.ச.க்களையும் தரிசித்த நாட்களும் சரி - இந்த 120 மாதங்களின் பயணத்தின் மறக்க இயலா துணைகளாகி விட்டுள்ளன ! காலுக்கடியே பெருச்சாளிகள் ஓட்டமெடுக்கும் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ராத்திரி 2 மணிக்கு டைப்படித்த கூத்து ; 'தல' & 'தளபதி' ஒருங்கே களம் கண்டிடவிருந்த ஈரோட்டுத் திருவிழாக் காலைப்பதிவு ; இரவு இரண்டே முக்காலுக்குப் படுத்த கையோடு 4 மணிக்கு எழுந்து வீட்டாரை எழுப்பிடக்கூடாதென பாத்ரூமில் குந்தியபடியே டைப்படித்த ஜனவரிப் பனிக்காலையின் புத்தக விழாப்பதிவு ; பெல்ஜியத்திலும், இத்தாலியிலும் பாஸ்போர்டைத் தொலைத்த தினங்களின் பதிவுகள் ;  தெற்கத்தியர்களின் போர்ச்சின்னங்கள் நிறைந்த அமெரிக்க தென்பகுதியினை Greyhound பஸ்ஸில் தாண்டிச் செல்லும் வேளையில் டைப்படித்த 'என் பெயர் டைகர்' பதிவு ; பிள்ளையின் திருமணப் பதிவு ; இரத்தப் படல ரணகளப் பதிவு ; லாக்டௌன் நாட்களின் நித்தமொரு பதிவு - என்று தலைக்குள் கலர் கலராய் ஏதேதோ நினைவலைகள் குறுக்கும் நெடுக்கும், மின்னலாய் ஓட்டமெடுக்கின்றன !!  என்றைக்கேனும் டொக்கு விழுந்த கண்ணோடு, "பாட்டையாவின் பல் போன வயசில்..." என்று ஏதாச்சும் எழுதுவதாக இருப்பின், doubtless எனது துவக்கப் புள்ளி இந்த டிசம்பர் 24-2011 ஆகத் தானிருக்கும் !  Thanks பிரசன்னா - நினைவூட்டியமைக்கு ! And இந்த வேளையினை சிறப்பிக்க இப்போது நம்ம இரும்புக் கவிஞர் "பத்தாண்டுப் பயணம்" என்ற பெயரில் ஒரு கவிதை பொழிவாரென்று எதிர்பார்க்கிறேன் ! போட்டுத் தாக்குங்க ஸ்டீல் ! 

Moving on, ஒரு பிரஷர் ஏற்றிய வாரத்தின் இறுதியினில் பணிகள் நிறைவடையும் சந்தோஷம் எனதாகிறது ! அட்டைப்படங்களை முடித்துத் தருவதில் நம்மைப் டிசைனர் போட்டுத் தள்ளியது ஒருபக்கமெனில், பைண்டிங்கில் ஆண்டின் இறுதி சார்ந்த ரஷ் - டயரிக்கள் தயாரிப்பினில் என்ற ரூபத்தில் பிராணனை வாங்கி விட்டது ! டயரி நிறுவனத்தின்  ஆட்கள் விடிய விடிய தவம் கிடக்க, நமது பணிகளை அம்போவெனக் கிடத்தி விட்டார்கள் பைண்டிங்கில் ! ஆளாளுக்குப் பிய்த்துப் பிடுங்குவதை சமாளிக்க முடியாத பைண்டிங் ஓனரோ செல்லை off பண்ணிவிட்டு கிளம்பிவிட்டார் & புதனிரவுக்கெல்லாம் இங்கே எனக்கு காதில் புகை வராத குறை தான் ! ஒரு மாதிரியாய் கெஞ்சிக் கூத்தாடி, நமது பணிகளை வியாழன் முதற்கொண்டு துவங்கப் பண்ணி, இதோ, நாளை முடிக்கவுள்ளார்கள் ! இன்னொரு பக்கமோ, குண்டு டப்பிக்கள் தயாரிப்பிலும் ஜவ்வு மிட்டாய் இழுவை ! அவர்களுமே திங்களன்று ஒப்படைக்கவுள்ளார்கள் ! So தொடரவுள்ள தினங்களில் நண்பர்களின் போட்டோக்கள் ஒட்டிய புக்ஸ்களை பார்த்து, பக்குவமாய், பதவிசாய், அவரவரது டப்பிக்களுக்குள் நுழைக்கும் படலங்களைத் துவக்கிட வேண்டி வரும் ! கடைசி நிமிடம் வரைக்கும் போட்டோக்கள் அனுப்பும் படலம் தொடர்ந்திட, நம்மாட்கள் இதனில் ஏதேனும் கோக்கு மாக்குகள் செய்து வைக்காமலிருந்தால் தலை தப்பிக்கும் ! தெய்வமே !!!! 

ரைட்டு...! டப்பி...குப்பி...சுப்பி...என எல்லாவற்றையும் உருண்டு புரண்டு ஏதோவொரு மார்க்கத்தில் தேற்றிடுவோம் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ;  காத்திருப்பதோ முற்றிலும் வேறொரு பரிமாணத்திலான சவால் ! நான் பரீட்சையினை எழுதி முடித்தது எப்போதோ ஒரு மாமாங்கத்தில் ; but இதோ, ஒரு வழியாய் மார்க் போடும் நேரம் நெருங்கியாச்சூ எனும் போது உள்ளுக்குள் 'கதக் கதக்' என்கிறது ! 'தெனாலி' படத்தில் உலக நாயகன் ஒப்பிப்பது போல் அடியேனிடம் இந்த நொடியில் ஒரு நெடும் பயம் லிஸ்ட் இருக்கி !! 

1.அட்டைப்படங்கள் அல்லாருக்கும் பிடிச்சிருக்கணுமே தெய்வமே ! விடிய விடிய அவற்றோடே அன்னம் தண்ணி புழங்கியவனின் கண்களுக்கு ஒவ்வொன்றுமே  மோனா லிசா ஓவியங்களாய்த் தெரியலாம் தான் ; ஆனால் வாசக ஜூரிக்களுக்குப் பிடித்தாகணுமே !!

2."கோல்டன் ஹீரோஸ் ஸ்பெஷல்" நீங்கலான பாக்கி 3 புக்குகளிலுமே, டோட்டலாய் புதியவர்கள் தான் கோலோச்சுகிறார்கள் எனும் போது நாயகர்கள் ; பாணிகள் ; கதைகள் என சகலமும் செட் ஆகிட வேண்டுமே ! 

3.ALPHA கதையின் ஆழம் ஜாஸ்தி & therefore துவக்க நாட்களது லார்கோ கதைகளை போல இங்கே நடு நடுவே வசனங்கள் ஜாஸ்தி ! "ஐயே... முழியாங்கண்ணன் ஏகப்பட்ட எஸ்டரா நம்பர்களைப் போட்டுப்புட்டானோ ? " என்று கண்சிவக்க மக்கள் ஆவலாய்க் காத்திருப்பரோ ?

4.மொழிபெயர்ப்பில் பிழை காண புலவர்கள் ஒரு அண்டாவினில் தீபாஞ்சலி எண்ணெயோடு காத்திருப்பரோ ?

5.எதிர்பார்ப்புகள் சில சமயங்களில் மெகா சத்ருக்கள் ஆகிடுவதுண்டு ! இங்கோ சில பல மாதங்களாய் ; எக்க + சக்க பில்டப்களை நான் கொஞ்சம் செய்திருக்க, நீங்களாகவும் கொஞ்சத்தை ஏற்றி வைத்துக் கொண்டிருக்க - அவற்றிற்கு நியாயம் செய்திட சாத்தியமாகிடணுமே !!

6. Post Festival Depression : "தீவாளி வருது...பட்டாசு வருது....லீவு வருது...தலைவர் படம் வருது....பட்சணம் வருது....புதுத் துணி வருது...!!! என்ற எதிர்பார்ப்புகள் பல தருணங்களில் தரும் அந்த high விலைமதிப்பற்றது !! And ஒரு வழியாய் மெய்யாலுமே பண்டிகையும் வந்து, கொண்டாட்டங்களும் நடந்து முடிந்திடும் போது ஒரு வித வெறுமை நம்மை ஆட்கொள்வதுமே உண்டு தான் ! "ம்ம்ம்....எல்லாம் ஆச்சு ; இனி மறுக்கா பள்ளிக்கூடத்துக்குப் போயி அந்த அக்பரையும், பாபரையும் படிக்கணும் !! Phewwwww !! அடுத்த பண்டிகைக்கு வேற இன்னும் நெறய நாள் கிடக்கு !!" என்ற கவலைகளுக்கு நிகராய் இங்கே ஒரு வெற்றிடம் உருவாகிடுமோ ? 

So நாய் சேகராட்டம் உடம்பை விறைப்பா வைத்துக் கொண்டு திரிந்தாலும் பாட்டம், லைட்டாக கதக்களி ஆடி வருவதென்னவோ நிஜமே ! ஆனால் பயங்கள் ஒரு பக்கமெனில் ஏகப்பட்ட கருப்பசாமிக் கோயில் கயிறுகளும் எட்டும் தொலைவினில் உள்ளன தான் ! And அவற்றுள் பிரதானமானது - FFS புக் # 2 ஆன "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்கள்.." !! சில கதைகளின் அவுட்லைனைப் படிக்கும் போதே புரிந்து விடும் - இது சாதிக்கப் படைக்கப்பட்ட ஆக்கமென்பது ! அந்த ரகத்திலானது "ஓ.நோ.ஓ.தோ !" சில ஆண்டுகளுக்கு முன்பாய்  "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" அறிவிக்கப்பட்ட போது - "முற்றிலும் அறிமுகமில்லா one shot ; கார்ட்டூன் பாணியில்...இதென்ன விஷப் பரீட்சை ? " என்ற குரல்கள் காதில் விழாதில்லை தான் ! ஆனால் எனக்கோ நூற்றுக்கு நூறு சதவிகிதம் நம்பிக்கை இருந்தது அந்தக் கதையின் மீது ! So தகிரியமாய் களமிறக்கினோம் ; சமீப காலங்களின் செம ஹிட்ஸ் பட்டியலில் இணைந்தது ! அதே ரீதியிலான நம்பிக்கை இந்த 5 பாக மெகா த்ரில்லர் மீது எனக்குள்ளது ! என்ன - நெடும் கதை என்பதால் இயன்ற மட்டுக்கு ஒரு stretch -ல் படிக்க நீங்கள் நேரத்தைத் திரட்ட வேண்டி வரும் ! 


In fact - FFS புக் # 1 - ஆறு அத்தியாயங்கள் கொண்டது & FFS புக் # 2 - ஐந்து மெகா அத்தியாயங்கள் கொண்டது ! So கிட்டத்தட்ட 12 சிங்கிள் ஆல்பங்களின் வாசிப்பு அனுபவம் இந்த ஜனவரியில் காத்துள்ளது எனும் போது உங்களின் நேரங்கள் அத்தியாவசியமாகிடும்  ! So புக்கைத் தடவிப் பார்த்து விட்டு, அஸ்ஸியா டொன்கோவாவை பராக்குப் பார்த்து விட்டு, "FFS ஜூப்பர் " என்று போங்காட்டம் ஆடாது, மெய்யாகவே கதைகளுக்குள் குதித்திட முனைந்திடுங்கள் கைஸ் - ப்ளீஸ் ! And எனது பரிந்துரை இந்த வரிசையில் இருந்திடும் :

1 .எலியப்பா - because இதனை வாசிப்பது எளிதப்பா !

2 .என் பெயர் டேங்கோ - simply becos சிங்கிள் ஆல்பம் என்பதால் - பக்க நீளத்தில் the smallest of them all !

3"ஒற்றை நொடி ..ஒன்பது தோட்டாக்கள்" : அமெரிக்காவின் மாகாணங்களை அங்குள்ள நமது நண்பர்களுக்கு நிகராய் நாமும் தரிசிக்க இங்கே வாய்ப்புகள் in abundance !! கதையோ - தெறிக்க விடும் த்ரில்லர் ! So நேரம் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் go for this guys !!

4 அப்புறமாய் சிஸ்கோ - இது இரட்டை ஆல்பம் & இங்கு மூச்சிரைக்கச் செய்யும் ஆக்ஷன் அதிகம் ; வஜனங்கள் குறைச்சல் ! பற்றாக்குறைக்கு இனி வரும் நாட்களில் நம்ம பாரிஸ்வாழ் நண்பர்களுக்கு நகருக்குள் ஏதேனும் வழி தெரியாது போய்விடும் பட்சத்தில், "அந்த புல்வா டு ரூஷாஷுவா பக்கமா டிராபிக்கா கீதாம்பா...அந்த ரைட்லே கட் பண்ணி ட்ராக்கடியெரோ வழியா போயிடுப்பா !!" என்ற ரேஞ்சுக்கு கொட்டாம்பட்டியில் குந்தியபடிக்கே நம்மால் வழி சொல்ல இயலுமென்பேன் ! கதை சுற்றிச் சுழல்வது பாரிஸின் சந்து, பொந்திலெல்லாம் !!

5 ALPHA !! 3 பாகங்கள் ; 139 பக்கங்கள் ! பக்க நீளத்தில் "ஓ.நொ.ஓ.தோ."-வில் கிட்டத்தட்ட பாதியே என்றாலும் intense ஆன சாகசமிது ! Again பாரிஸ் ; அப்புறம் மாஸ்கோ ; சர்வதேச க்ரைம் ; சர்வதேச உலவுப் பிரிவுகள்  - என்று நிற்காது ஓட்டமெடுக்கும் இந்தக் கதைக்கும் கணிசமாய் நேரம் ஒதுக்கிட அவசியமாகிடும் !! And அதற்கு உதவிட அந்த ரஷ்ய அம்மணி காத்திருப்பார் ஆவலாய் !!

6 அப்புறமாய் நம்ம தங்கங்கள் !! எவ்வித வரிசையில் வாசித்தாலும், ஸ்பைடர் + மாயாவி + செக்ஸ்டன் பிளேக் கூட்டணியினை ஜாலியாய் ரசிக்கலாம் ! 'பம்மல் சம்மந்தம்' படத்தில் கமல் சார் சொல்வது போல - "பழையவர்களை அனுபவித்து வாசிக்கணும் - ஆராயப்படாது !!" 

Of course - இது எனது பரிந்துரை மாத்திரமே ! ரசனைகளுக்கேற்ப இந்த வரிசையினை உல்டா-புல்டாவாக்கத் தோன்றினால் Sure !! And இதோ - FFS புக் # 2-ன் உட்பக்க preview :
இந்தக் கதையினுள்ளே புகுந்து வெளியேறுவதற்குள் ஏகப்பட்ட ஹாலிவுட் & கோலிவுட் சினிமாக்கள் நினைவுக்கு வந்தால் வியக்கவே மாட்டேன் ; மிரட்டியுள்ளனர் படைப்பாளிகள் !! ஒவ்வொரு பிரேமிலும் கட்டிடங்கள் ; பின்புலங்கள் ; பார்வைக் கோணங்கள் என என்னமாய் தெறிக்க விட்டுள்ளார் ஓவியர் !! Phew !! 

ஓ.கே....கிளம்பிட ரெடியாகும் முன்னே அந்தக் கார லட்டு # 2 பற்றிய சமாச்சாரத்தினுள் புகுந்திடலாமா ? In fact அதைச் சொல்லாமல் நான் கிளம்பினால், உருட்டுக்கட்டைகளோடு ஆட்டோ ஏறிடுவீர்கள் என்பது தெரியும் ! So without further ado - அந்த லட்டு # 2 ஒரு புதிய தொடர் ! And கொஞ்ச காலம் முன்னர் ஈரோட்டுப் புத்தக விழாவின் மரத்தடிச் சந்திப்பின் போது நண்பர்களில் யாரோ கேட்டிருந்த தொடர் அது ! "அதற்கு செட் ஆகிட  நமக்கு இன்னும் கொஞ்சம் நேரம் தேவை ; சற்றே ஆழம் கூடுதலான வரிசை அது !" என்று நான் பதிலும் சொல்லியிருந்தேன் ! ஆனால் இப்போதெல்லாம் தாத்தாக்களையும், வெட்டியான்களையுமே லெப்டுக்கா விட்டு, ரைட்டுக்கா வாங்கிடும் சூட்சமசாலிகளாய் நீங்கள் மாறியிருக்கும் சூழலில், இன்னமும் இந்தத் தொடரை அடை காத்திருப்பதில் அர்த்தமில்லை என்று தீர்மானித்தேன் ! ஆகையால் - அறிமுகம் I.R.$ !! இதன் நாயகர் ஒரு டிடெக்டிவோ ; போலீஸ்காரரோ ; கௌபாயோ கிடையாது ! மாறாக Internal Revenue Service என்றழைக்கப்படும்  வருமான வரித்துறை மாதிரியானதொரு அமெரிக்க அமைப்பின் "வசூலிஸ்ட் !!" வரி ஏய்ப்பு செய்திடும் முதலைகளை மோப்பம் பிடித்து அவர்களது கள்ளப்பணங்களை வலை போட்டுப் பிடிக்கும் ஒரு சாகஸக்காரர் ! 1999-ல் துவங்கிய இந்தத் தொடரானது பிரெஞ்சில் ரொம்பவே பிரசித்தம் & கிட்டத்தட்ட ஆண்டுக்கொரு புது ஆல்பம் என்ற ரீதியில் இதுவரையிலும் 22 இதழ்கள் வெளிவந்துள்ளன ! 

கௌபாய்களுக்கும், இதர நாயகர்களுக்கு மத்தியில் ஒரு balance கண்டுபிடிக்கும் முயற்சிக்கு இந்தப் புது வரவும் உதவிடுவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! And oh yes - நாளையே இவரை இறக்கி விட்டு, நாளான்னிக்கே உங்கள் பர்ஸ்களுக்குப் புதிதாய் வெடியொன்றைப் பற்ற வைக்கப் போவதில்லை தான் ! நிறையவே நேரத்தையும், கவனத்தையும் மொழிபெயர்ப்பினில் கோரிட உள்ள இந்தத் தொடரினை நிதானமாய் study  செய்து, நிதானமானதொரு வேளையினில் எழுதி முடித்து, நிதானமோ, நிதானமான தருணத்தில் உங்களிடம் ஒப்படைப்போம் ! 

And 2022-ல் காத்துள்ள கதைகளின் கணிசத்தில் மொழிபெயர்ப்புக்கு முழி பிதுக்கும் சிரமங்கள் காத்துள்ளன என்பதையும் கடந்த 2 வாரங்களில் உணர்ந்திருக்கிறேன் ! So இன்னொரு புது கியரைத் தேடிப் பிடித்தாகணும்  போலும் அவற்றிற்கெல்லாம் நியாயம் செய்திட ! Phewwww !!

இப்போதைக்கு கிளம்புகிறேன் - டப்பாக்களின் பஞ்சாயத்து ஓய்கிறதாவென்று பார்த்திட ! Bye guys !! See you around !! Have a fun & festive weekend !! 

அனைவருக்கும் (தாமதமான) கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் folks !! 

280 comments:

 1. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

  ReplyDelete
 2. 11 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது லயன் தளத்திற்க்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. 10 குள்ள வந்தாலே ஒரு ஆனந்தம்.

  ReplyDelete
 4. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 5. வந்துட்டேன் நானும்

  ReplyDelete
 6. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

  ReplyDelete
 7. Edi Sir..இன்னும் பல பத்தாண்டுகளை மகிழ்வுடன் கடந்து நீங்களும் மகிழ்ந்து எங்களையும் மகிழ்விக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. அருமை சார்...இன்னும் நான்கை தினங்கள்...கதை கோணங்கள்...வண்ணங்கள் அருமை...22பாக கார் லட்டை ஐந்து பாகங்களாக போட்டுத் தாக்குங்கள்...ஐஆர்எஸ் ஏக எதிர்பார்ப்பில்....

  ReplyDelete
 9. Replies
  1. Edi sir..ஆமாங்க. 10 வருச கொண்டாட்டத்துக்கு ட்ரீட் கொடுங்க.ஸ்டீல் சொல்றது கரெக்ட் தாணுங்க.கொடுக்கலேன்னா அப்புறம் கவிதைதான்.. கலவரம்தான்.

   Delete
  2. ஆமா ஆமா வேண்டும் அறிவிப்பு வேண்டும்.

   Delete
  3. 10 th anniversary blogday special
   Choose the best option sir
   1)IR$ 5 parts hard cover
   2)paraloga paathai plus irumukkai Ethan reprint hard cover _tigerukku ethuthan vaippu
   3)mafesto 1000 pages tex

   Delete
  4. ஏனுங்கண்ணா...மாங்கு மாங்கென்று பதிவிட்டவன் நான் ! காடு, மேடு, மலைன்னு ஒற்றை இடம் பாக்கி கிடையாது, நான் லேப்டாப்பைத் தூக்கிக்கொண்டு ஷண்டிங் அடிக்காததா !

   முறையா பாத்தாக்கா நீங்கல்லே எனக்கு ட்ரீட் தரணும் ? அதை விட்டுப்புட்டு இதென்ன போங்கு ஆட்டம் ?

   Delete
  5. நம்ம குழந்தையோட பிறந்த நாளுக்கு நாம தானே கேக் வெட்டி நண்பர்களை அழைத்து கொண்டாடி மகிழ்கிறோம். So, நீங்க 10ம் ஆண்டு கொண்டாட்ட ஸ்பெஷல் கேக் அறிவிப்பு கொடுங்க. நாங்க அதை வாங்கி படித்துகொண்டாடி மகிழ்கிறோம்.

   Delete
  6. // நம்ம குழந்தையோட பிறந்த நாளுக்கு நாம தானே கேக் வெட்டி நண்பர்களை அழைத்து கொண்டாடி மகிழ்கிறோம். // ஆமா ஆமா எனவே ஒரு ஸ்பெஷல் இதழ் வெளியிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் யுவர் ஆனர்.

   Delete
  7. /முறையா பாத்தாக்கா நீங்கல்லே எனக்கு ட்ரீட் தரணும் ? அதை விட்டுப்புட்டு இதென்ன போங்கு ஆட்டம் ?/

   ஸ்டீல் தர்ர ட்ரீட் மாதிரியா பாஸ்😀

   Delete
 10. Edi sir.. ஒற்றை நொடி ஒன்பது தோட்டா.. உண்மையிலேயே very detailed. செம சூப்பருங்க. காரலட்டு IRS.. வித்தியாசமான ஜானர்.பட்டைய கிளப்பும் போல இருக்கே. IRS ஐ வரவேற்கிறோம்.

  ReplyDelete
 11. அடடே 10வருடம் ஆகிவிட்டதா?? இதற்கு ஒரு ஸ்பெஷல் வெளியீடு வேண்டுமே.

  அட்டகாசமான பதிவு சார். Preview எல்லாமே அருமை. புது வருடத்திற்கு முன்பே புத்தகங்கள் கைக்கு கிடைக்கும் என்று நம்புவோம்.

  கார லட்டு 2 பற்றிய அறிவிப்பு அருமை விரைவில் இந்த ஹீரோ களம் இறங்குவார் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 12. வணக்கம் நண்பர்களே...

  ReplyDelete
 13. உண்மையை சொல்வதென்ரால் ஒரு ரயில் என்ஜினை பின் தொடரும் பெட்டிகளை போல நாங்களும் உங்களை பின் தொடர்கிறோம்.

  நீங்கள் ஒரு அழகிய பூஞ்சோலை வழியே பயணிக்கும் போதும், ஒரு மலை பிரதேசத்தை கடக்கும் போதும், ஒரு பாலைவனத்தை கடந்து செல்லும் போதும் நாங்களும் அதை ரசிக்கிறோம் அவ்வளவே.

  ஒரு சிறு அணியின் மகிழ்ச்சிக்காக ஒரு நாளின் பெரும் பொழுதுகளை எங்கள் பொருட்டு செலவிடும் உங்களின் அன்பை என்னவென்பது ஆசிரியரே.

  ஒரு காமிக்ஸ் படிக்கும் போது ஏற்படும் ஒரு மகிழ்ச்சி போல இருக்கின்றது உங்களின் ஒவ்வொரு வாரத்தின் இந்த தளத்தின் பதிவும்.

  வாழ்த்துக்கள் 10 வருடம் பூர்த்தி அடைந்ததற்கு.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே.....அன்பான வார்த்தைகளுக்கு நன்றிகள் ! வேறு ஏதேனுமொரு தொழிலினில் நான் பிசியாகி இருந்து, அதில் ரெண்டு காசு சம்பாதிக்க சாத்தியப்பட்டிருப்பின், maybe நானும், என்னைச் சார்ந்தோரும் புன்னகைத்திருக்க வாய்ப்பிருந்திருக்கும் ! இன்றைக்கோ அந்தப் புன்னகை வட்டத்தை கொஞ்சமே கொஞ்சமாய்ப் பெரிதாக்கிடும் வாய்ப்பு எனதாகியுள்ளது - இந்த 'பொம்ம புக்' பெயரினைச் சொல்லி ! So அதற்கென மெனெக்கெடுவதில் தப்பே இல்லை சார் !

   Delete
  2. தப்பே இல்லை எடி

   எல்லோர் மனங்களிலும் நீ வாழ்கிறாய்

   எங்கோ எதிலோ படித்தது இப்போ ஞாபகத்திற்க்கு வருகிறது ... 😍😍

   Delete
  3. நன்றிகள் எல்லாம் ஏன் சார்.

   எங்களின் வாழ்வின் பல பொழுதுகள் இனிய நினைவாக நிற்பது தங்களின் இந்த உழைப்பின் மற்றும் காமிக்ஸ் மேல் தங்களின் தணியாத காதலின் வெளிப்பாடும் தான்.

   "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
   என்பதற்கு ஏற்ப நீங்கள் செயல் படுவது தனி சிறப்பு.

   தூற்றுவார் தூற்றட்டும். தொடரட்டும் உங்களின் இந்த சிறப்பான பணி.

   இது எனது வார்த்தைகள் மட்டும் அல்ல இந்த தளத்தில் சிலாகிக்கும் அனைத்து நண்பர்களின் அன்பின் வெளிப்பாடாக இதை இங்கு பதிவிடுகிறேன்.

   Delete
  4. மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள் சிவலிங்கம்.

   Delete
  5. அருமை நண்பரே..அழகாக சொல்லி் உள்ளீர்கள் உண்மை.

   Delete
  6. நன்றி நண்பர்களே 🤝🤝👍👍

   Delete
 14. ) நீங்கள் ஒரு அழகிய பூஞ்சோலை வழியே பயணிக்கும் போதும், ஒரு மலை பிரதேசத்தை கடக்கும் போதும், ஒரு பாலைவனத்தை கடந்து செல்லும் போதும் நாங்களும் அதை ரசிக்கிறோம் அவ்வளவே.///
  Yes. Absolutely எடிட்டர் சார்.. but இந்த மு.ச., மூ.ச.லல்லாம் போகுறப்ப மட்டும் நீங்க Solo வா போகுற மாதிரி ஆகிடுது

  ReplyDelete
  Replies
  1. பயணங்களின் பல பரிமாணங்களில் இவையும் ஒரு அங்கமென எடுத்துக் கொண்டால் போச்சு சார் !! அது மட்டுமன்றி, நில்லாமல் ஓடிக் கொண்டே இருப்பதில் ஒரு வசதியும் உண்டு தானே சார் ; நின்று, நிதானித்து கவலை கொள்ளவெல்லாம் நேரமே இருப்பதில்லையே !

   Delete
  2. // ஓடிக் கொண்டே இருப்பதில் ஒரு வசதியும் உண்டு தானே சார் ; நின்று, நிதானித்து கவலை கொள்ளவெல்லாம் நேரமே இருப்பதில்லையே ! //

   +1

   கடந்த 17 வருடங்களாக இதுதான் எனது நிலையும்:-)

   Delete
  3. ஓடிக் கொண்டே இருப்பதில் ஒரு வசதியும் உண்டு தானே சார் ; நின்று, நிதானித்து கவலை கொள்ளவெல்லாம் நேரமே இருப்பதில்லையே ! //


   அழகான உண்மையான வரிகள் ஆசிரியர் சார்..

   Delete
 15. IR$ is welcome sir ! However many stories are two parters- please take care to give them together.

  ஸ்டீல், 10ம் ஆண்டு சிறப்பிதழ் இந்த கார லட்டு No 2 என்று நினைக்கிறேன் !

  ReplyDelete
  Replies
  1. //many stories are two parters- please take care to give them together.//

   நிச்சயமாய் சார் !

   Delete
  2. ராகவரே அது எப்படி...ஆசிரியர் ஏற்கனவே முடிவெடுத்த கதையிது....இப்பதான பத்து வருடம் பதிவு நாள்னு ஆசிரியரே அறிகிறார்....கொண்டாட்டம் வேணாமா

   Delete
 16. NBS 5 காப்பி வாங்கியிருந்த போதும் இவ்வளவு எதிர்பார்ப்புக்கள் இல்லை சார் - இப்போ சும்மா செம டென்ஷன் - for a single treasured copy!

  ReplyDelete
 17. அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. Welcome to I.R.$ 💐💐💐
  இதேபோல் tintin னையும் எப்படியேனும் நமது அணியில் சேர்த்திடுங்கள் sir.
  எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 19. சார்,
  பரலோக பாதை, இரும்புக்கை எத்தன் மற்றும் தங்கக்கல்லறை 2 பாகங்கள் அடங்கிய 4 கதைகள் கொண்ட ஹார்ட் bound ப்ளீஸ் !

  ReplyDelete
  Replies
  1. சார் பரலோக பாதை இரும்புக்கை எத்தனின் மீதம் 2 கதைகள் என்ன செயவது

   Delete
  2. டைகரின் 1 to 28... அதாவது இரத்தக் கோட்டை to என் பெயர் டைகர் வரை என.. ஒரு தரமான ஸ்லிப்கேஸ் (இரத்தப்படலம் மாதிரி) சகிதம் ஒரு கம்ப்ளீட் கலெக்ஷன் நம்ம எடிட்டர் வெளியிட்டால் செமையா இருக்கும்ல?

   Delete
  3. தற்போதைய பிரச்சனைகள் முடிந்து சகஜநிலைக்கு வந்த பின் 2023 அல்லது 24 இல் முன்பதிவிற்கு முயற்சி செய்யலாம்

   Delete
 20. Sir, can you please provide Books ranking based on sales

  ReplyDelete
  Replies
  1. இவர் மட்டும் தனியாய் ஒரு மண்டலத்தில் >>>>>>Tex வில்லர்

   அப்புறம் இவர் அடுத்த நிலையில் >>>>>>>லக்கி லூக்

   மூன்றாவதான நிலையில் >>>>>>>தாத்தாஸ் & ஸ்டெர்ன் வெட்டியான் & டெட்வுட் டிக் !

   பாக்கிப் பேரெல்லாம் கும்பலாய் அப்புறமாய் !

   Delete
  2. Wow Deadwood dick also made in top 3. It did not had much reviews but still strong in Sales. Super

   Delete
 21. /* லயனா முத்துமா */

  பாத்து கவிஞரே - பாதி ராத்திரில தப்பா படிச்சிட்டு அலைஞ்சி ஆத்துக்காரி பூரி கட்டையை விட்டெறியப்போறா !

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ஆஹா
   ஆஆ ஆஆ ஆஹா ஹா
   ஆஆ ஆஆ ஹாஹாஹா
   ஆஆ ஹா ஆஆ

   ஒரு நாள் போதுமா
   இன்றொரு நாள் போதுமா
   பத்தாண்டை பாட இன்றொரு நாள்
   போதுமா லயனா முத்துமா
   அதை நான் பாட இன்றொரு
   நாள் போதுமா புது கதைகளா
   பதிவுகளா அதை நான் பாட
   இன்றொரு நாள் போதுமா

   லார்கோவா சக
   ஷெல்டனா லக்கியா தேவ
   தோர்களா ட்யூராவா சக
   வெட்டியானா கௌபாயா தேவ பதிமூனா


   உன் கதைக்கிந்த
   சிறு பாட்டு சமமாகுமா உன்
   கதைக்கிந்த சிறு பாட்டு
   சமமாகுமா ஸ்பைடரா ஆர்ச்சியா
   அதை நான் பாட இன்றொரு
   நாள் போதுமா

   நாவல் என்றும்
   ம்ம் ப ட ட ப மா மா ப
   ப மா க க மா மா க ரி ரி
   க க ரி ச ச க ரி ச நீ ட ப
   மா க

   படங்கள் என்றும்
   ப ப மா ப ட ட ப மா ப
   ட ட ப ப மா ப ட ட ப
   ப மா ப ட ட ப க மா ரி
   மா க ரி ச ரி நீ க ட ச ரி
   நீ க ட ச ரி நீ க ட


   ச ரி நீ க ட ச ரி
   நீ க ட ச ரி நீ க ட
   நாவல் என்றும் படங்கள்
   என்றும் பலர் கூறுவார்
   உன் காமிக்ஸ் படித்த பின்னாலே
   அவர் மாறுவார்

   அழியாத கலை
   என்று காமிக்சை பாடுவார்
   ஆஆ ஆஆ ஆஆ அழியாத
   கலை என்று காமிக்சை பாடுவார்
   உன்னை அறியாமல் எதிர்ப்போர்கள்
   எழுந்தோடுவார் உன்னை அறியாமல்
   எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்

   கதை கேட்க உனைத்தேடி
   வருவார் அன்றோ உனைத்தேடி
   வருவார் அன்றோ உனைத்தேடி
   தேடி ஆஆ ஆஆ ஆஆ கதை
   கேட்க எழுந்தோடி வருவார்
   அன்றோ

   உனக்கு இணையாக
   கதைபோட எவரும் உண்டோ
   கதைபோட எவரும் உண்டோ
   கதைபோட ஆஆ உனக்கு
   இணையாக கதைபோட
   எவரும் உண்டோ

   கலையாத கதையான
   சுவை தான் அன்றோ டெக்சின்
   சுவை தான் அன்றோ டெக்ஸ்டின்
   ஆஆ ஆஆ கலையாத டெக்ஸ்டின்
   சுவை தான் அன்றோ

   கானயா ஆஆ
   ஆஆ ஆஆ உன் எழுத்து
   தேன் அயா கதை
   தெய்வம் நீ அயா

   Delete
  2. அவசரத்தில் "தெய்வம் நீ ஆயா !!" என்று வாசித்து வைத்தேன் ஸ்டீல் ! ஒரு நிமிஷம் பக்கோவென்று ஆகிப் போச்சு !

   Delete
  3. உங்கள் கற்பனையும், பாடல் தேர்வும் அருமை நண்பரே. 👏👏👏👏

   Delete
  4. ஸ்டீலின் கவிதை மிகச்சிறப்பு.. மிகுந்த அர்த்தம் பொதிந்ததாக உள்ளது. Steel ji.. u r rocking..

   Delete
 22. 10வது ஆண்டு முடிந்து 11வது ஆண்டில் காலடி வைக்கும் நமது தளத்திற்கும் தங்களுக்கும் பயணத்தை சிறக்க வைத்த நண்பர்களுக்கும் வாழ்த்துகள்🌹🌹🌹🌹🌹🌹

  அப்புறம்....அப்புறம்


  ஆங்

  அதேதான் சார்..

  10வது ஆண்டு கொண்டாட்ட மலர்....

  யங் டைகர் இளமயையில் கொல் பார்ட்2&3இணந்த ஒரு ஸ்பெசல்

  அல்லது

  தங்க கல்லறை முற்றிலும் பழைய வசனங்களோடு....ஹார்டுகவர் இதழாக..

  அல்லது

  கார்சனின் கடந்த காலம்-முற்றிலும் பழைய வசனங்கள்+பாடல்கள் உடன் ஹாரடு கவர் கலக்டர் ஸ்பெசலாக.....

  இம்மூன்றிலும் தங்களின் பணிகள் குறைவு என்பதால் ஆவண செய்யவும் சார்🙏😍🤩

  ReplyDelete
  Replies
  1. இப்போதுதான் கொஞ்சம் மேலே இந்தப் பஞ்சாயத்துக்கு பதில் சொல்லிட்டு வந்திருக்கேன் சார் ! Scroll up ப்ளீச் !

   Delete
  2. எடிட்டர் சார் நண்பர் விஜய ராகவரின் கோரிக்கை பல வாசகர்களின் எதிர்பார்ப்பின் வெளிப்பாடு,
   இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து ஏதாவது ஒரு புத்தக விழாவின் போது வெளியிடலாமே ?!?!

   அதுவும் முத்துவின் பொன்விழா ஆண்டில்
   டைகரின் தங்க கல்லறை பழைய வசனங்களுடன் வந்தால் மகிழ்வோம்.
   நினைவில் நீங்க இடம் பிடித்த இதழ் என்பதால் இந்த கோரிக்கையை வைக்கிறோம்.

   Delete
 23. DEAR EDI

  FFS 1 & 2 HARD BOUND AH R NORMAL BOOK AH.??

  ReplyDelete
 24. 10 வருடங்கள் பிளாக்கில் லயன் முத்து காமிக்ஸ் கோலோச்சியதை நினைத்தாலே சிலிர்க்குது டியர் எடி .. 😍😍

  அடுத்து என்னோட 50 வது வயதிலும் 20 வருடங்கள் பிளாக்கை பார்த்தே வளர்ந்தேன் என் என் வாரிசுகளிடம் சொல்லி ஃபீல் பண்ணிக்கனும் ..

  நடக்குமா ?? 😍😍

  ReplyDelete
  Replies
  1. Sampath க்கு இப்ப 40 வயசு.. கரெக்டுங்களா?.. எப்படி கண்டுபுடிச்சேன் பாருங்க..

   Delete
 25. //மூன்றாவதான நிலையில் >>>>>>>தாத்தாஸ் & ஸ்டெர்ன் வெட்டியான் & டெட்வுட் டிக் !//

  இவற்றில் இரண்டு கிராபிக் நாவல்கள் மீதமிருக்கும் ஒன்றை கௌபாய் கதையும் நாம் இதுவரை காணாத புதிய முயற்சியே. பின்பு ஏன் சார் கிராபிக் நாவல்களின் நம்பர்கள் சுருங்கி கொண்டே செல்கிறது. விற்பனையிலும் சாதிப்பது கண்கூடாய் தெரிகிறதே. 50ம் ஆண்டு கொண்டாட்டத்தில் ஏதேனும் வாகான தருணத்தில் ஒரு பிரம்மாண்ட கிராபிக் நாவல் இடம் பெற வேண்டும் என்பது என் அவா. நானும் விடாது கேட்டுக் கொண்டிருக்கிறேன் சார். இந்த ரசனைக்கும் கொண்டாட்டதில் இடம் தாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. //தாத்தாஸ் & ஸ்டெர்ன் வெட்டியான் & டெட்வுட் டிக் !//

   மூவரும் தான் 2022 லும் உள்ளனரே நண்பரே !

   Delete
  2. சார், 2022ல் ஸ்டெர்ன் உண்டா

   Delete
 26. 10 ஆண்டு கடந்து வந்ததற்கு வாழ்த்துக்கள் விஜயன் சார்.

  ReplyDelete
 27. காரா லட்டு கார லட்டுனுட்டு இனிப்பு லட்டாய் கொடுக்கிறார்களே. உண்மையான காரா லட்டு எங்கேபா கதையாக்கீது

  ReplyDelete
 28. IRS பற்றி கேட்டது நான் தான் சாமி!இந்த ஆண்டு வந்தால் மகிழ்ச்சி.10 ஆண்டு blog நிறைவடைந்தது வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல கதை தேர்வு நண்பரே.
   ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

   Delete
 29. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 30. மகிழ்வித்து மகிழுவதில் நீங்கள் வல்லவர் ஆசிரியரே இத்தனை வருடங்கள் காமிக்ஸ் வெளியிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமில்லாமல் 10 வருடமாக பதிவுகள் மூலமாக மகிழ்வித்தது மட்டுமின்றி எங்களை உயிர்ப்புடன் வைத்திருந்ததற்க்கு நன்றிகள் நீங்கள் இல்லையெனில் வாழ்வில் பல சுவாரஸ்யங்களை இழந்திருப்பேன் அதற்காக வாழ்நாள் முழுவதும் நன்றிகள் சொல்லிக்கொண்டிருப்பேன் என் ஆசானே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  ReplyDelete
  Replies
  1. அருமையா சொன்னீங்க செந்தில் சத்யா! உண்மை உண்மை!!

   Delete
 31. 10 வது நிறைவு ஆண்டுக்கு, வாழ்த்துகள் எடி. வலைபதிவுகளை அதே உத்வேகத்துடன் தொடர்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நேரில் கண்டவன் எனும் விதத்தில், இது ஒரு இமாலய சாதனை என்று சல்யூட் அடித்த சொல்லலாம்.

  தனிபட்ட வாழ்வில் கிடைக்கும் கூடுதல் பொறுப்புகள் மற்றும் தொழில் சம்பந்தமான வேலைகளின் தாக்கத்தில், நமது பொழுதுபோக்கு நேரங்களை தொலைத்து விட்டு நிற்கிறோம். வேலையே நமது நேசங்களுடன் என்னும் விதம் சொர்க்கம் போன்றது. எங்கள் கனவுலகத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அந்தளவில் அதை பார்ப்பதில் எங்களுக்கும் திருப்தியே.

  அடித்து தூள் கிளப்புங்கள். IR$ ஆரம்ப இதழ்கள் எனது பெர்சனல் ஃபேவரைட்டுகளில் ஒன்று. என்ன அந்த சிக்கலான கணக்கு வழக்கு கதைகள் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு எடுபடுமா என்ற ஒரே சந்தேகம் தான்.

  ஆனால், லார்கோ போன்ற பங்கு சந்தை உலகம், தோர்கள் போன்ற மாயாஜால கதைகளங்கள் அறிமுகமான நமது வாசகர்களுக்கு இந்த தளமும் பிடிக்கும் என்று நம்பலாம். அமர்க்களமாக அறிமுகபடுத்துங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ரஃபிக் கடந்த இரண்டு வருடங்களில் பங்கு சந்தை குறித்த விழிப்புணர்வு மற்றும் புரிதல் அதிகமாகி இருக்கிறது. இது ஒரு சாதகமான அம்சம்

   Delete
  2. இது பங்கு சந்தை விவகாரம் அல்ல, கணக்கு வழக்கு வரி சம்பந்தமானது...
   2008ல் படித்தது, அவ்வளவு சுவாரசியமான தொடரில்லைதான் http://www.comicology.in/2008/12/cinebook-largo-winch-ir-2008.html

   ஆனாலும் ஹிட்டிக்கலாம் ஆவலுடன் எதிர்பார்ப்போம்.

   Delete
 32. உங்கள் கதைகள் , அட்டைப் படங்கள் , கதைகள் தேர்வு பொருட்டு எங்களை பற்றி கவலை பட வேண்டாம். உங்களை நம்பி இத்தனை வருடம் பின்தொடர்ந்து வந்துள்ளோம் நம்பிக்கையோடு. உங்கள் அர்பணிப்பு பற்றி எங்களுக்கு சந்தேகம் ஏதுமில்லை. மனதில் சஞ்சலம் தேவையில்லை. வரும் வெளியீடுகள் வென்றாலும் , தோற்றாலும் எங்கள் பயணம் உங்கள் தலைமையில் தான்

  ReplyDelete
  Replies
  1. சூப்பரா சொன்னீங்க இனியன் சார்!

   Delete
  2. அருமையாக சொன்னீர்கள் நண்பரே👏👏👏👏

   Delete
 33. வணக்கம் சார்...அப்போ "புத்தாண்டுக்கும்", "பத்தாண்டுக்கும்" சேர்த்து ஒரு ஸ்பெஷல் போட்டிடலாமா.

  ReplyDelete
 34. 10 ஆண்டுகள் என்பதுடன் பெஇய விடயம் என்பதுடன் சிறிய வட்டமாக இருப்பினும் வாசகர்களாகிய எம்மை எதிர்பார்ப்புடனும் ஆவலுடனும் பேணுவது என்பது சாதாரண விடயமல்ல சார்.அதற்காக தாங்கள் அடுத்த குட்டுக்கரணங்கள் எத்தனைஎத்தனை? Hat off you Sir.! ஞாயிறு காலையில் தேனீர் குவளையை தேடுகிறோமோ இல்லைநோ, கட்டாயம் உங்கள் பதிவை படிப்பதுவே எம்முதல்வேலை. சிறப்பிதழ
  இல்லையாங்ஸர? IR$ அரைமையான கார லட்டு. Waiting . ஒற்றை நொடி ஒன்பது தோட்டா பிரீவியூ அசத்தல். அதுவும் ஒவ்வொரு கோணங்கள் மாறுபடுவது. சிறப்பு. ஆவலுடன் புத்தாண்டுக்காக காத்துள்ளேன்.

  ReplyDelete
 35. This comment has been removed by the author.

  ReplyDelete
 36. / புத்தாண்டுக்கும்", "பத்தாண்டுக்கும்" சேர்த்து ஒரு ஸ்பெஷல் ///

  //) பரலோக பாதை இரும்புக்கை எத்தனின் மீதம் 2 கதைகள் ///

  /// யங் டைகர் இளமையில் கொல் பார்ட் 2&3 இணந்த ஒரு ஸ்பெசல் ///

  இந்த மூன்று நண்பர்களின் மற்றும் பல நண்பர்களின் (என்னுடையதும் கூட) 'கனவு மெய்ப்பட வேண்டும்'. கைவசமாவது விரைவில் வேண்டும். இதனை வெளியிடுவோம் என்று எடிட்டரின் 'மனதில் உறுதி வேண்டும்''

  ReplyDelete
 37. இந்த வருடத்தின் கடைசி "ஹைலைட்"
  இந்த 10ஆண்டு நிறைவு வலைப்பதிவு.
  வாழ்த்துக்கள் சார் 💐🌹💐.
  இதை கவனத்தில் கொண்டு வந்த, காரைக்கால் நண்பருக்கு அனைவரின் சார்பிலும் நன்றிகள்.❤️

  எங்களின் பால்ய கால நினைவுகளை மீட்டெடுப்பதில்,"லயன் காமிக்ஸ்"க்கு எந்தளவுக்கு பெரும் பங்கு உள்ளதோ,
  அதே அளவு ஆர்வத்தை உங்களின் வலை தளப் பதிவுகளில் வாசகர்களை பார்க்கிறேன் ரசிக்கிறேன்.
  அருமை சார்.
  இதற்காகவே உங்களின் ஆரம்பகால பதிவுகளை மெதுவாக படித்து வருகிறேன்.

  பல குறைகள்,வெறுப்புகள்,
  என பலதரப்பட்ட வாசகர்களின் கருத்துக்களுக்கு, நிதானமான உங்கள் பதில்கள் சிறப்பு.

  IRS கண்டிப்பாக வரவேற்பு பெறும் என்பதற்கு உங்களின் முகவுரையே போதும் சார். கேட்ட வாசகருக்கு நன்றிகள்.
  சித்திரங்கள் மிக அழகு.

  புத்தாண்டில் கையில் தவழ, 50 வது ஆண்டுமலரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்/றோம்.
  முகவுரையே படிக்க ஆவலாக உள்ளது.
  மகிழ்ச்சி.

  ReplyDelete
 38. வெட்டியான் அண்டர் டேக்கர் ஞாபகத்திலேயே இல்லை. முதல்முறை சிலாகித்தாலும், மறுவாசிப்பில் 10 பக்கங்கள்கூட தாண்ட முடியவில்லை. ஸ்டெர்ன் தாத்தாக்கள் போன்ற இலகு ரக க்கதைகளே எப்பொழுதும் படிக்கமுடிகிறதுஎன்னதான் கிராபிக் நாவல்கள் என்றாலும். சார் நீங்கள் ரசித்த ஒன்ஸ்லாட் கார்ட்டூன்களும்இடையிடையே வெளியிடலாங்களே. ப்ளீஸ் கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 39. பத்தாம் ஆண்டு வலை பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.  கார லட்டு காரலட்டு ன்னு சொல்றீங்க ஆனா எல்லாமே இனிப்பு லட்டாவே வருது எப்ப சார் காரலட்டு அறவிப்பு கொடுப்பீங்க...:-)

  ReplyDelete
 40. எடிட்டர் சார்..

  இந்தப் பதிவைப் படித்து முடித்தவுடன் மனதினுள் எழுந்த எண்ணங்களையும், எழுத்துக்களையும் இங்கே நண்பர் சிவலிங்கம் எங்கள் அனைவரது சார்பிலும் பதிவிட்டு அசத்தியிருக்கிறார். இந்த பத்தாண்டுகளில் நிறையவே சந்தோச அனுபவங்களையும், சிரமங்களையும் எங்களோடு பகிர்ந்துகொண்டு, எத்தனை வேலைப்பளு இருப்பினும் இங்கே பதிவிடுவதையும் ஒரு முக்கியப்பணியாகக் கருதி, இன்றளவும் அதைச் சிறப்பாகச் செயல்படுத்தி எங்களை மகிழ்வித்துவரும் உங்களுக்கு சில கோடி நன்றிகள் - அனைவரது சார்பிலும்!

  ஒரு விறுவிறுப்பான காமிக்ஸ் கதையைப் படிப்பற்கு ஒப்பானது உங்களது ஒவ்வொரு பதிவும்! அதனால்தானோ என்னவோ சிலபல சமயங்களில் காமிக்ஸ் படிப்பதையும் கூட ஒத்திவைத்து உங்களது பதிவுக்காக காத்திருந்த தருணங்களும் ஏராளம் ஏராளம்! அவ்வளவு ஏன் - இப்போதெல்லாம் காமிக்ஸ் வட்டாரத்திற்கு வெளியேயும் கூட "சார் இந்தவாரம் வெள்ளிக்கிழமையோ அல்லது பதிவுக்கிழமையோ எனக்கு கால் பண்ணுங்க - மற்ற விவரங்களை அப்புறம் சொல்றேன்" என்று பேசுமளவுக்கு முற்றிவிட்டதுன்னா பார்த்துக்கோங்களேன்!

  இப்படியொரு பதிவுக்கு அச்சாரமிட்ட 'ரியல் வாழ்க்கை ரிப்-கெர்பி' பிரசன்னாவுக்கு நன்றிகள் பல!

  @ சிவலிங்கம்

  அபாரமான எழுத்து நடை + அழகான எண்ணத்தின் வெளிப்பாடு! இத்தனை நாளும் எங்கே இருந்தீங்க நண்பரே?!! அருமை அருமை!!

  ReplyDelete
  Replies
  1. // "சார் இந்தவாரம் வெள்ளிக்கிழமையோ அல்லது பதிவுக்கிழமையோ எனக்கு கால் பண்ணுங்க - மற்ற விவரங்களை அப்புறம் சொல்றேன்" என்று பேசுமளவுக்கு முற்றிவிட்டதுன்னா பார்த்துக்கோங்களேன்! // உண்மையோ உண்மை...

   Delete
  2. ஆமாம் எதாவது ஒரு வாரம் பதிவு வரவில்லை என்றால் எதையோ இழந்தது போலவே இருக்கும்.

   Delete
  3. # இந்தப் பதிவைப் படித்து முடித்தவுடன் மனதினுள் எழுந்த எண்ணங்களையும், எழுத்துக்களையும் இங்கே நண்பர் சிவலிங்கம் எங்கள் அனைவரது சார்பிலும் பதிவிட்டு அசத்தியிருக்கிறார். இந்த பத்தாண்டுகளில் நிறையவே சந்தோச அனுபவங்களையும், சிரமங்களையும் எங்களோடு பகிர்ந்துகொண்டு, எத்தனை வேலைப்பளு இருப்பினும் இங்கே பதிவிடுவதையும் ஒரு முக்கியப்பணியாகக் கருதி, இன்றளவும் அதைச் சிறப்பாகச் செயல்படுத்தி எங்களை மகிழ்வித்துவரும் உங்களுக்கு சில கோடி நன்றிகள் - அனைவரது சார்பிலும்!

   ஒரு விறுவிறுப்பான காமிக்ஸ் கதையைப் படிப்பற்கு ஒப்பானது உங்களது ஒவ்வொரு பதிவும்! அதனால்தானோ என்னவோ சிலபல சமயங்களில் காமிக்ஸ் படிப்பதையும் கூட ஒத்திவைத்து உங்களது பதிவுக்காக காத்திருந்த தருணங்களும் ஏராளம் ஏராளம்! அவ்வளவு ஏன் - இப்போதெல்லாம் காமிக்ஸ் வட்டாரத்திற்கு வெளியேயும் கூட "சார் இந்தவாரம் வெள்ளிக்கிழமையோ அல்லது பதிவுக்கிழமையோ எனக்கு கால் பண்ணுங்க - மற்ற விவரங்களை அப்புறம் சொல்றேன்" என்று பேசுமளவுக்கு முற்றிவிட்டதுன்னா பார்த்துக்கோங்களேன் # +1111111111111111

   Delete
  4. நான் எதை மறந்தாலும் லயன் பிளாக்கில் அவ்வப்போது ( துணை பதிவுகளை ) பார்த்து கொண்டேதான் இருக்கிறேன் ஆரம்பம் முதற்கொண்டு .. என் வலைப்பதிவு ஆரம்ப நாட்கள் முதல் 2014 என்று நினைக்கிறேன் .. அதற்க்கு முன்பும் பார்ப்பேன் .. பட் எப்படி பிளாக்கில் பதிவு போடனும்ன்னு அப்போ தெரியாது அந்த நாட்கள் செம்மையா இருக்கும் .. பேச்சு வார்த்தைகள் , மறு பதிப்பு , கேள்வி கணைகள் , கடைசியா சண்டை களங்கள் ஐ பார்த்து இன்புற்றிருக்கிறேன் வருந்தியும் இருக்கிறேன் .. நெட் அப்போது 1 ஜிபி க்கு 350/- ரூபாய் எனும் அளவிலே .. எனவே அதிகம் அப்போது இங்கே கலந்துரையாடவில்லை .. இப்போது எல்லாமே தலை கீழாக மாறியுள்ளது .. VIJAY அண்ணா ..

   இன்னும் பத்து வருட காலங்களை பார்த்து 20 ஆம் ஆண்டில் எடியோட பதிவு வரனும் அதில் எனது கமண்ட்டும் வரனும் .. ( டியர் எடி அப்போது நான் ஓய்வெடுத்து கொள்கிறேன். இனி ஜூ.எடிதான் இங்கே சகலமும்ன்னு சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்க்கு ஒன்றுமில்லை 😀😀 )

   Delete
 41. நன்றி நண்பரே உங்கள் அன்புக்கு.

  பல வருடங்களாக மெளன பார்வையாளனாக இருந்து அனைத்தையும் ரசித்தேன்.

  ஆனால் பாராட்ட வேண்டிய ஒரு தருணத்தில் மனதில் உள்ளதை சொல்லி விட வேண்டுமல்லவா.

  ReplyDelete
  Replies
  1. சத்தியமான வார்த்தைகள் சார்.
   ஆனால் அதனை வெளிப்படுத்தும் சரளமான எழுத்து நடை சிலருக்கே அமைகின்றது. நீங்களும் அதில் ஒருவர்.

   Delete
 42. பதிவுலகப் பத்தாண்டு மற்றும் பொன்விழா புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்! முதற்பதிவு முதற்கொண்டு அடியேனின் கடாமுடா கருத்துக்களையும், ரம்பமான அலசல்களையும், ஆரம்பகால சுய விளம்பரங்களையும் பொறுத்துக் கொண்டதிற்கு நன்றிகள் சார். இணையத்தில் எழுதுவது எப்படி (எழுதக் கூடாது) என்பதற்கான பயிற்சிப் பட்டறையாக என்னளவில் இத்தளம் இருந்திருக்கிறது. கற்றுக் கொண்டவை ஏராளம், அன்புடன் தொடர்வேன், நன்றி, வணக்கம்! :)

  பி.கு.: அந்த இரண்டு லட்சத்தி சொச்ச பின்னூட்டங்களில் என்னவை எத்தனை என ஆராய்ந்தால் ஆயிரத்திற்கு அருகே நிற்கிறது. நானே ஆயிரம் என்றால், இத்தளத்தின் மின்னல் முரளியின் பங்களிப்பு இலட்சத்தைத் தாண்டியிருக்குமோ?! :) ஆங், படம் அருமை, தவறாமல் பாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. // இத்தளத்தின் மின்னல் முரளியின் பங்களிப்பு இலட்சத்தைத் தாண்டியிருக்குமோ?! // சத்தியமாக தாண்டி இருக்கும்.

   Delete
 43. மின்னல் முரளி யார் தெரியலையே (கவிஞரோ?). கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. அவரே தான். நம்ம இரும்புக் கவிஞர்.

   Delete
 44. // நிறையவே நேரத்தையும், கவனத்தையும் மொழிபெயர்ப்பினில் கோரிட உள்ள இந்தத் தொடரினை நிதானமாய் study செய்து, நிதானமானதொரு வேளையினில் எழுதி முடித்து, நிதானமோ, நிதானமான தருணத்தில் உங்களிடம் ஒப்படைப்போம் ! //

  I like this idea sir. Good plan.

  ReplyDelete
 45. 🙏🙏🙏வலை தள 10 என ஒரு ஸ்பெஷல் இதழ் உருவாக வேண்டியது காலத்தின் கட்டாயம். 😀😀😀

  ReplyDelete
  Replies
  1. அப்படியே அந்த 50 இலட்சப் பார்வைகளுக்கான ஸ்பெஷலையும்...!!!

   Delete
 46. // ஆகையால் - அறிமுகம் I.R.$ !! இதன் நாயகர் ஒரு டிடெக்டிவோ ; போலீஸ்காரரோ ; கௌபாயோ கிடையாது ! //
  அடடே I.R.$ ஆர்வத்தை கிளப்புகிறதே...!!!

  ReplyDelete
 47. // இப்போதைக்கு கிளம்புகிறேன் - டப்பாக்களின் பஞ்சாயத்து ஓய்கிறதாவென்று பார்த்திட //
  புத்தாண்டை FFS உடன் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம் சார்...

  ReplyDelete
  Replies
  1. மிக ஆவலுடன்... எப்போதும் புத்தகங்கள் வரும் போது ஏற்படும் ஆர்வம் இப்போது வரை குறைவது இல்லை அதிலும் சிறப்பு வெளியீடுகள் என்றால் கேட்க வேண்டுமா?? இந்த இதழ் மிக மிக முக்கியமான இதழ் எனது வாழ்நாளில் எனவே ரொம்பவே ஆவலுடன் வெயிட்டிங்.

   Delete
 48. வாவ்
  வரும் 2022 கலக்கலாக துவங்கப்போகிறது என பட்சி சொல்லுகிறது சார்
  புனித மனிடோ ஆசீர்வதிப்பாராக 🙏🏼🙏🏼🙏🏼

  ஆவலுடன் காத்திருக்கிறோம் சார்

  IRS சாதிப்பாரென நம்புவோம் சார் 👍🏼🙏🏼
  .

  ReplyDelete
 49. டியர் சார்,
  பத்தாண்டுகள் உங்கள் பதிவுகளுக்கு-வாழ்த்துக்கள். ஆனால் -
  நானெல்லாம் சின்ன மொபைல்-சைனாமொபைல் என்று (விலை குறைவு)
  ஆரம்பித்து-ஒரு ஐந்து ஆண்டுகளாக தான்-பெரிய மொபைல் (ஆண்ட்ராய்டு போன்) பரிசயம். எனவே உங்கள் பதிவுகளையும் - அதிலும், பின்னுட்டங்களை படித்தது சமீபமாகத்தான்..(பழைய பதிவுகளை
  படிக்க வேண்டும். மிகவும் ஆசை. எப்படி என்றுதான் தெரியவில்லை.. Back-யிலேயே போகவேண்டுமா?-அல்லது வருடம் போட்டால்-படிக்கலாமா?..முயற்சிக் க வேண்டும்..
  அப்றம், ஆண்டு மலருக்கு-காத்திருந்தது, மாதங்கள் - வாரங்களாக சுருங்கி-நாட்கணக்கில்.வந்துவிட்டது.
  50வது ஆண்டு மலரை கையிலேந்தும் அந்த தருணம். அலைமோதும் அந்த எண்ணக்கலவைகள்.. தற்போதைய நீங்கள் - அப்போதைய முத்துக் காமிக்ஸ்-அந்த பால்ய வயது.. நிச்சயம் மறக்கமுடியாத ஒரு தருணமாகவே இருக்கும்..நன்றிகள் பல.. பல...
  காரலட்டு என்றதுமே |, ஏதோ பேய் கதைதான் என்ற பீதியிலேயே இருந்தேன்..
  லார்கோ -வின் வெற்றிடத்தை நிரம்ப ஒரு ஹீரோ என்பதாகவே படுகிறது..
  அதுவும் அந்த இரண்டாவது ஓவியம் பச்சை பிண்ணனியில் - ஓவிய அதகளம். - ஆவலைத் தூண்டும் தொடராகவே அமையும் என்று கருதுகிறேன்..சார்.
  அட்வான்ஸ்-புத்தாண்டு வாழ்த்துகள்..சார்...

  ReplyDelete
  Replies
  1. ////பழைய பதிவுகளை
   படிக்க வேண்டும். மிகவும் ஆசை. எப்படி என்றுதான் தெரியவில்லை.. Back-யிலேயே போகவேண்டுமா?-அல்லது வருடம் போட்டால்-படிக்கலாமா?..முயற்சிக் க வேண்டும்..///

   மொபைலில் இந்த தளத்தைத் திறந்த பிறகு உங்கள் Browserல் உள்ள மெனுவில் 'desk top view'வை தேர்வு செய்யுங்கள். பிறகு இத்தளத்தின் கீழே scroll செய்து கீழே கடைசியில் தெரியும் 'view web version'ஐ அழுத்தினீர்கள் என்றால் இத்தளம் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் தெரிவது போல காட்சியளிக்கும். அதில் வலப்புறமாகப் பார்த்தால் ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு மாதமும் எத்தனை பதிவுகள் வெளியாகியிருக்கிறது என்ற எண்ணிக்கை இருக்கும். தேவையான வருடம் + மாதத்தை க்ளிக்கினால் அந்த மாதத்தில் வந்த எல்லாப் பதிவுகளும் உங்கள் மொபைல் ஸ்க்ரீனில் காணக்கிடைக்கும். வேண்டியதைப் படித்துக் கொள்ளலாம்!

   Delete
 50. நீங்கள் அளிக்கப்போகும் கார லட்டு உண்மையிலேயே அசத்தல்தான்.புதிய ஹீரோ என்றாலே கௌபாய்,டிடெக்டிவ்,அட்வென்சர்,உளவாளி... இப்படி வழக்கம் போல அல்லாமல் மாறுபட்ட ஹீரோவை அறிமுகப்படுத்தும் தங்கள் சிரத்தை பாராட்டுக்குரியது.நன்றி ஆசிரியரே..தேங்க்ஸ் சார்..எடிட்டருக்கோ நன்றிகள் என்றெல்லாம் வழக்கம் போல் சொல்லாமல் சமீபத்திய உற்சாகங்களுடன் உரிமையுடன் தங்கள் தோளில் கை போட்டு சொல்கிறோம். "நீ கலக்கு தல..."

  ReplyDelete
 51. அனைவருக்கும் வணக்கம்.

  இன்று என்ன எழுதுவது என்று தெரியவில்லை.மனம் நிறைந்து நெகிழ்ச்சியாய் உள்ளது. நேற்றிலிருந்து என்ன எழுதுவது என்று வார்த்தைகளை வலைவீசியும் முடியவில்லை.மனம் உணர்ச்சிகளால் நெகிழ்ச்சியாய் உள்ளது. கடந்த 32 ஆண்டுகளாக தங்கள் கரம்பிடித்து தொடர்ந்த காமிக்ஸ் உறவு. 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு காமிக்ஸ் உறவு தடைப்பட்டது. இங்கு காமிக்ஸ் வருவதுமில்லை.தெரியவுமில்லை. வாங்கவும் வழியில்லாததால் சில காலம் தடைப்பட்டது.

  2012 ஆம் ஆண்டில் சாத்தூரில் சித்தி வீட்டில் ஒரு நிகழ்ச்சிக்குச் செல்ல பயணிக்கையில் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் இறங்கினேன். அங்கிருந்த புத்தகக் கடையில் நமது டெக்ஸ்வில்லர் , ஜானி , காரிகன் , விங்கமாண்டர் புத்தகங்கள் தொங்கிக் கொண்டிருந்தைப் பார்த்து என் மனம் குதூகலித்ததை சொல்லவும் வேண்டுமோ ?!!. நெடு நாட்கள் பிரிந்திருந்த தோழனை சந்தித்த மகிழ்ச்சி. கையில் வைத்திருந்த பணம் அனைத்திருக்கும் கை நிறைய காமிக்ஸ்கள் வாங்கி தடவித் தடவிப் பார்த்த அனுபவம் இருக்கின்றதே ....அடடா வாழ்க்கையின் சந்தோஷத் தருணம் அது. சித்தி வீட்டு விழா கூட ருசிக்கவில்லையே. அன்றிலிருந்து 2016 வரை ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர்கள் பயணித்து சிவகாசிக்கே வந்து புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தேன்.
  பதினோரம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நமது தளத்திற்கு வாழ்த்துகள்.முத்து 50 பொன்விழா ஆண்டிற்கு பாராட்டுக்கள் & வாழ்த்துகள்.
  இன்னும் நிறைய இருக்கிறது எழுத.பிறிதொரு நாளில் எழுதுகின்றேன்.
  நன்றி.வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. போக வர .கம்பம் என்ற ஊரில் வேலை .
   கம்பத்திலிருத்து தேனிக்கு 40 கிமீட்டர்கள். தேனியிலிருந்து சிவகாசிக்கு 110 கிமீட்டர்கள். இராதா கிருஷ்ணன் அண்ணாச்சி , சகோதரி ஸ்டெல்லா மற்றும் மைதீன் ஆகியோர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நான் மதியம் 12.30 மணிக்குக் கிளம்புவேன். மாலை 5.30 அல்லது 6.00 மணியாகிவிடும் சிவகாசி வர. நான் செல்லும் நேரம் ஆசிரியர் ஆபிஸில் இருந்ததில்லை.
   ஒரே ஒரு தடவை ஆசிரியரைச் சந்தித்தேன். பார்க்கத் தான் முடிந்தது. ஆனால் பேச முடியவில்லை. ஏன் ? அது ஒரு முக்கியமான தருணம். அதை பிறிதொரு நாளில் சொல்லுகின்றேன். இரவு இல்லம் வர இரவு 1.00 மணியாகிவிடும். அது ஒரு கனாக் காலம்.

   Delete
  2. உங்கள் அனுபவங்கள் அருமை சார். உண்மையான காமிக்ஸ் காதலரின் அனுபவங்கள். அப்படியே என்னையும் அங்கே கூட்டி சென்று விட்டீர்கள்.

   Delete
  3. ///ஒரே ஒரு தடவை ஆசிரியரைச் சந்தித்தேன். பார்க்கத் தான் முடிந்தது. ஆனால் பேச முடியவில்லை. ஏன் ? அது ஒரு முக்கியமான தருணம். அதை பிறிதொரு நாளில் சொல்லுகின்றேன்.///

   அடடே!! ஆவலைக் கிளப்புகிறீர்களே?!! சீக்கிரமே இங்கே பகிர்ந்துக்கணும்னு கேட்டுக்கறேன்!

   Delete
  4. அருமையான நினைவுகள் சரவணன்.

   Delete
  5. உங்க கூடவே பயணித்த உணர்வுகளைத் தோன்றச் செய்திட்டது உங்க ரைட்டிங்ஸ்... அற்புதம் சரவணாரே!

   Delete
  6. குமார் சார் , விஜய் சார் , பரணி சார் மற்றும் விஜயராகவன் ஆகியோருக்கு என் அன்பும் நன்றிகளும்.

   Delete
 52. //அன்றிலிருந்து 2016 வரை ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர்கள் பயணித்து சிவகாசிக்கே வந்து புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தேன்.//

  வாய்ப்பே இல்லை சரவணன் சார் உங்களின் காமிக்ஸ் காதல்.

  இந்த காமிக்ஸ்ச பார்க்கும் போது மனசுல ஒரு குதூகலம் வருதே அதை வார்த்தையால் விவரிக்க முடியாது. உங்களின் இந்த நீண்ட தூர பயணம் இதை நிரூபிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. 'சார்'லாம் வேண்டாம் நண்பரே.

   Delete
  2. என் அன்பும் நன்றிகளும் சிவலிங்கம் நண்பரே.

   Delete
 53. முழுமையாக வாசித்தேன். அத்தனை வரவுகளும் அருமை. கலக்கலாக அமைகிறது 2022. ஐ.ஆர்.எஸ். நிஜமாகவே எதிர்பார்த்த புத்தகம்தான். தமிழுக்கு நல்வரவு..

  ReplyDelete
 54. IR$- வெல்கம். நெம்ப நாளைக்கு முன்னாடி படிச்சது. இந்த தொடர் நம்மாளுங்களுக்கு ஒரு வித்யாசமான அனுபவமாக இருக்கும்.

  பத்தாண்டு ஆயிடுச்சா…2013/14 வாக்குல தான் நான் தளம் பற்றி அறிந்து இங்கு வர ஆரம்பித்தது. இதுக்கு ஒரு சிறப்பிதழ் போட்டு விடலாமே.

  ReplyDelete
  Replies
  1. நானும் தளத்திற்கு வந்தது 2015க்கு பிறகு தானென்று நினைக்கிறேன்.

   Delete
  2. // இதுக்கு ஒரு சிறப்பிதழ் போட்டு விடலாமே. // போட்டே ஆகணும்.

   Delete
  3. ///IR$- வெல்கம். நெம்ப நாளைக்கு முன்னாடி படிச்சது. இந்த தொடர் நம்மாளுங்களுக்கு ஒரு வித்யாசமான அனுபவமாக இருக்கும்///

   அடடே! வீ ஆர் வெயிட்டிங்...

   Delete
 55. *** லயன்-முத்து*** வலைத்தளம்.

  பத்து ஆண்டுகளைக் கடத்து 11வது ஆண்டில் அடியெடுதது வைக்கிறது.
  ஒரு வலைத்தளம் சிறிதும் தொய்வின்றி பத்து ஆண்டுகளாக, உயிரோட்டத்துடன் செயல்படுவது என்பது சாதாரண விஷயம் அல்ல.
  வாரந்தோறும் எடிட்டர் அவர்கள்தொடர்ந்து பதிவிடுவதும், அதனை தவறாமல் வாசகர்கள் பின் தொடர்வதும் ஒரு அசாத்தியமான விஷயமே.

  ஒவ்வொரு பதிவும், நம்ம ஸ்டீல் சொல்ற மாதிரி, 'இதுவரை வந்ததிலேயே இது தான் டாப்' ரகம்.
  ஏதாவது ஒரு பதிவு .. நம்மை சலிப்படைய வைத்ததா என்றால், நிச்சயமாக இல்லை என்ற பதில் தான அனைவரிடமிருந்தும் வரும்.
  அதிலும் கொரோனா அலையில் வீட்டில் பலரும் முடங்கியிருந்த காலக்கட்டத்தில் அனைவரது உற்சாக மீட்டரும் எகிற காரணமாக இருந்தது தினம் ஒரு பதிவு என ஆசிரியர வெளியிட்டவைகளே.
  அனைத்தும் காமிக்ஸ் சார்த்த பதிவுகளேயன்றி, வேறு எந்த விஷயங்களும் அதில் வராது. அரைத்த மாவை அரைப்பது என்பதும் கிடையாது.
  எனில்,அவரது சிந்தை முழுவதும் எந்த அளவிற்கு காமிக்ஸ் என்னும் மந்திரச் சொல் ஆக்ரமித்திருக்க வேண்டும். மனமார்ந்த வாழ்த்துக்கள் எடிட்டர் சார்.

  Then,

  வாசகர்களின் பங்களிப்பையும் இங்கே சொல்லியே ஆகவேண்டும்.

  ஒவ்வொரு நண்பர்களுக்கு உள்ளேயும் ஒளித்திருக்கும் அந்த சந்தோஷக் குழந்தை வெளியே வந்து, சனிக்கிழமை இரவு பதிவு வந்தது தொடங்கி ஞாயிறு,திங்கள் என நீண்டு அடிக்கும் லூட்டி இருக்கிறதே..அதை வர்ணிக்க வார்த்தைகள போதாது.

  பதிவுக்கு நினைவூட்டும் ஒரு குழந்தை,

  'தாரை'தப்பட்டையுடன் ஒரு குழந்தை,

  'ரம்மி'யமாய் ஒரு குழந்தை,

  விக்ஸை கூட டெக்ஸ் என சொல்லும் ஒரு குழந்தை,

  அட்டைப்படங்களை சிலாகிக்கும் ஒரு குழந்தை, (இதுவரை வந்ததிலேயே
  இதுதான டாப். மாதாந்திர இம்போசிஷன் மாதிரி.)
  கவிதை பாடியே கதிகலங்க வைக்கும் ஒரு இரும்புக் குழந்தை,

  பாயாசம் கிண்டும் ஒரு குழந்தை,

  பதுங்கு குழிக்குள்ளே ஒரு குழந்தை,

  தளத்தின் செல்லப்பூனையாக ஒரு குழந்தை,

  தகவல் களஞ்சியமாக ஒரு குழந்தை,

  கடல் கடந்து இருந்தாலும் காமிக்ஸை
  உயிர் மூச்சாக கொண்ட குழந்தைகள்,

  கலைக்களஞ்சியமாக ஒரு குழந்தை..
  டெக்ஸ் தான் டாப்பு ..
  இல்லேயில்லே டைகர் தான் டாப்பு..
  தல ..தளபதி.. கர்ர்ர்.. கிர்ர்ர்..என
  வரிந்து கட்டும் சின்னஞ்சிறுசுகள்..

  இவர்களில்..

  யாரைச் சொல்வது.. யாரை விடுவது..

  பாரதியின் பாடல்வரிகளைப் போல்,
  'எந்த வகையிருந்தாலும், இவை யாவும் ஓரினமன்றோ'.

  இவர்களை இங்கே ஒன்றிணைத்திருப்பது காமிக்ஸ் நேசம் ஒன்றே.

  இந்த நேசமும், அதீத ஆர்வமும் இல்லையென்றால், இத்தளம் 50 லட்சம் பார்வைகளை கடந்திருக்குமா?..

  இல்லை நான்தான் இவ்வளவு நீண்ட பின்னூட்டம் இட முடியுமா?..

  தளத்தை உயிரோட்டத்துடனும், துடிப்புடனும் வைத்திருக்கும், காமிக்ஸை சுவாசிக்கும் அன்பு ஆசிரியருக்கும், காமிக்ஸை நேசிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கும்' என் வாழ்த்துக்களும்,வணக்கங்களும்.
  இத்தளம் இன்னும் பல 'பத்து' வருடங்கள் தொடர்ந்து வெற்றி நடை போட 'பத்து'வோட வாழ்த்துக்கள். (நான்தானுங்கோ)

  (ஹப்பா.. மூச்சு வாங்குதுடா சாமி.. இவ்ளோ நீளமா டைப்பறதுக்குள்ள.. செனாஜி.. நீங்கள்லாம் உண்மையிலேயே greatங்க..)

  ReplyDelete
  Replies
  1. பத்து சார். நீங்கள் நிறைய பின்னூட்டம் இட்டு இருக்கிறீர்கள். உங்கள் தம்பி பற்றிய பின்னூட்டம் எப்போதுமே என் நினைவில் இருக்கும்.

   உங்கள் பதிவுகளில் இதுதான் டாப் என்று அடித்துச் சொல்வேன். 50ஆவது ஆண்டு மலர் நமது நண்பர்களை எல்லாம் பல விசயங்களை எழுத தூண்டுகிறது. ஒரு விதமானபரவச நிலையில் அனைவரும்.

   பத்து சார் சொன்னது போல 10 வருடங்கள் ஆசிரியர் விடாமல் பதிவிடுவதும் அதனை நாங்கள் விடாமல் தொடர்வதும் இந்த அவசர உலகில் அதிசயமே.

   Delete
  2. அனைவர் மனதில் உள்ளதை அழகாக சொல்லிவிட்டீர்கள் பத்து. நன்று.

   Delete
  3. அட்டண்டன்ஸ்ல ரெண்டு குழந்தைகள் விட்டுப் போச்சு.
   கணக்குல எனக்கு தெரிஞ்ச ஒரே நம்பர் 13 மட்டுமேன்னு ஒரு குழந்தை.
   அப்புறம்
   தூங்கும்போதும், எழுந்திருக்கும்போதும், மெபிஸ்டோ மந்திரத்தை மறக்காமல் சொல்லும் ஒரு குழந்தை.

   Delete
  4. தி பெஸ்ட் கமெண்ட் ஆஃப் த இயர் பத்து சார்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏.............................
   .....................................................
   2021கைதட்டல்கள்!

   Delete
  5. @ "10" sir : Lovely lines !!

   இது போன்ற பின்னூட்டங்களும், மனதை இலகுவாக்கும் எண்ணப் பகிரல்களும் தானே - இந்தப் பக்கத்தினை இன்னமும் உயிர்ப்போடு தொடரச் செய்கின்றன ! நீங்கள் குறிப்பிட்ட "கொயந்தைஸ்" மாத்திரமன்றி, இங்கு பதிவிட்டு வந்த / பதிவிட்டு வரும் / பதிவிடக்கூடிய அத்தனை கொயந்தைசுக்குமே இந்தப் பயணம் சார்ந்த சந்தோஷங்களில் சம பங்குண்டு ! A huge pat on the back for them all !!

   Delete
  6. நன்றி சார். பின்னூட்டங்கள் தொடரும்.

   Delete
  7. 2021 +++ நன்றிகள் STVR சார்.

   Delete
  8. ஆத்மார்த்மாக எழுதி அசத்தியிருக்கீங்க பத்து சார்! செம்ம்ம!!

   Delete
 56. உண்மை தான் குமார் சார். மூன்று பின்னூட்டங்களை remove செய்து நான்காவது பின்னூட்டம் இட்டேன். இதனை நேற்றே பதிவிட நினைத்தேன். சில சொந்த வேலைகள் காரணமாக இயலவில்லை. இன்று முடித்துவிட்டேன். I feel happy.

  ReplyDelete
 57. வணக்கம் ஆசிரியரே!

  தெறித்தோடும் இந்த வாழ்க்கை ஓட்டத்திலே நமது நேரங்களை பிய்த்து பிடுங்கிச் செல்ல காத்திருக்கும் காரணங்கள் ஒரு கோடி. சில நேரங்களில் உங்கள் பதிவுகளை அவ்வப்போது வாசித்து பின்னூட்டமிடவே நேரம் கிட்டாமல் சேர்த்து வைத்து வாசிக்கும் நிலை நேரிடுவதுண்டு. ஆனால் பத்தாண்டுகளும் தொடர்ச்சியாக எவ்வித சுணக்கமும் அயர்ச்சியும் இன்றி பதிவுகளை இட்டும் பின்னூட்டங்களுக்கு பதில் கூறியும் எங்களுக்கு வழிகாட்டி தாங்கள் பயணித்தது உண்மையிலேயே எங்கள் மீதான தங்களின் அக்கறையையும் அன்பையும் வெளிப்படுத்துகிறது. சிறுவட்டமென்றாலும் மிக நெருக்கமான நட்பினை வளர்த்துக்கொள்ள இந்த தளமும் தங்களின் பதிவுகளுமே எங்களுக்கெல்லாம் அடிப்படை காரணமாக அமைந்திருக்கிறதென்றால் அது மிகையாகாது.

  வாழ்த்துகள் சார்...!

  காமிக்ஸ் நேசத்தோடு உங்கள் கைப்பிடித்து பயணிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். பார்வைகளுக்கெல்லாம் ஸ்பெஷல் வெளியிட்டு பிரமாதப்படுத்திய நீங்கள் அதற்கு மூலகாரணமான பதிவுகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு மெகா ஸ்பெஷலாக வெளியிட்டு அதை இந்த மைல்கல் ஆண்டிலே எங்கள் சார்பில் கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

  நன்றி ஆசிரியரே!

  ReplyDelete
  Replies
  1. மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள் சரவணன்.

   Delete
  2. சார்....சின்னதாயொரு உவமானம் இங்கே பொருந்திடும் என்பேன் !

   சென்னையில் ஜூனியர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம் அது ! 17 வயது வரைக்கும் கைக்குள் இருந்த பிள்ளை, ஒற்றை நாளில் கூட்டை சென்னைக்கு ; அதுவும் ஊரின் ஒரு அத்துவானக் கோடியிலிருக்கும் அந்த I.T. மண்டலத்துக்கு மாற்றிச் சென்றிருக்க, இங்கே சிவகாசியில் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை ! ஜோடா குடிப்பதானாலும் சரி, பீடா போடுவதாக இருந்தாலும் சரி, அதனை சென்னையிலேயே செஞ்சுப்புடுவோம் என்று தோன்ற ஆரம்பித்தது ! சென்னையின் மையத்தில் நான் தங்கும் ஹோட்டலிலிருந்து ஜுனியரின் கல்லூரி சுத்தமாய் 35 கிலோமீட்டர் இருக்கும் & அப்போது ஓடிக் கொண்டிருந்த AC வோல்வோ பஸ்ஸில் ஏறிக் குந்தினால் ஒரு கிராபிக் நாவலுக்கு அர்த்தம் கண்டு பிடிக்கும் அவகாசத்துக்கு பயணம் நீடிக்கும் ! ஆனால் surprise ...surprise ...அந்த அடிக்கடிப் பயணங்களில் ஒருபோதும் அயர்வே தோன்றியதில்லை ! இது பத்தாண்டுகளுக்கு முன்பான flashback !

   இப்போது cut பண்ணி நடப்பு நாட்களுக்கு திரும்பிடுவோமா ?

   அதே சென்னை....அதே OMR ரோடு.... அதே தொலைவு....அங்கே சின்னதாயொரு பணி எழுகிறது ; ஒரு கஸ்டமரைப் பார்க்க வேண்டியிருக்கிறது !

   ஆனால்...ஆனால்...இப்போதோ - reactions முற்றிலும் வேறாய் இருக்கின்றன !! "ஐயோ..அந்தப் பக்கம் மெட்ரோவுக்கு வேலை நடக்குது ; ரோடு சகிக்காது ; மழை பெய்ஞ்சு குளமாகிக் கிடக்குது ; ஆபீஸ் முடியுற நேரம் இது , டிராபிக் பிய்ச்சுக்கும் ; காலேஜ் பஸ்கள் இப்போ சரமாரியா புறப்பட்டிருக்குமே ; பேசாம ZOOM கால் - கீல் ஏதாச்சும் பண்ணி அந்த வேலையை முடிச்சுக்கலாமா ? என்றெல்லாம் புத்தி சண்டித்தனம் செய்கிறது !

   பத்தாண்டுகளுக்கு முன்னே துள்ளிக் குதித்த கால்களுக்கும், மனசுக்கும் - இன்றைக்கு வயசு ஏறி விட்டதென்னவோ உண்மை தான் சார் ; ஆனால் அன்றைக்கு அயர்வைப் பின்தள்ளியது பயணத்தின் முடிவினில் காத்திருந்த பிள்ளை ! So ஒன்றரை மணி நேரப்பயணம் ஒரு சங்கடமாய்த் தெரியக் காணோம் !

   அட்சர சுத்தமாய் அதுவே தான் சார் - எனது இந்தப் பத்தாண்டு காலப் பதிவுப் பயணத்தின் பின்னணியுமே ! ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்கே நான் சந்திக்கவுள்ளது ஆத்மார்த்தமான நண்பர்களையே என்ற எண்ணம் எழுந்திடும் நொடியினில்,பதிவுகளுக்கென அவசியமாகிடும் உழைப்பானது ஒரு சிரமமாக தெரிவதில்லை !

   Maybe இந்த எடிட்டர் குல்லாவையெல்லாம் கழற்றி வைத்த பின்னே, God willing ஒரு ஈஸி சேர் வாழ்க்கைக்குள் புகுந்த பின்னே - இந்த சனிக்கிழமை லூட்டிகளின் பரிமாணங்கள் புரிய ஆரம்பிக்குமோ - என்னவோ ! ஆனால் இந்த நொடியினில், சனிக்கிழமைகள் = ஜாலிடைம்ஸ் !! புனித மனிடோவின் ஆசிகள் தொடரும் வரை வண்டியை ஓட்டிடுவோம் சார் !

   Delete
  3. // பயணத்தின் பின்னணியுமே ! ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்கே நான் சந்திக்கவுள்ளது ஆத்மார்த்தமான நண்பர்களையே என்ற எண்ணம் எழுந்திடும் நொடியினில்,பதிவுகளுக்கென அவசியமாகிடும் உழைப்பானது ஒரு சிரமமாக தெரிவதில்லை ! //

   சார் செம.

   Delete
  4. ஒவ்வொரு வரிக்கும் ஒரு லைக் @சரவணகுமார்

   Delete
  5. எல்லோருக்கும் சனிக்கிழமை வாரக் கடைசி நாள். நமது தளத்திற்கு அதுதான் முதல் நாள்.
   அன்று தொடங்கும் அந்த எதிர்பார்ப்பு கலந்த உற்சாகம், பதிவு வந்த பின்பு வேகமெடுத்து வியாழன் வரை ஓடும்.
   அதன் பின் வெள்ளிக்கிழமை வந்தால் சேலம் குமாரின் நினைவூட்டலுடன், அடுத்த பதிவிற்கான காத்திருப்பு தொடங்கும்.
   கடந்த சில வருடங்களாகவே இது தான் நடைமுறை என ஆகிவிட்டது அனைவருக்கும்.

   Delete
  6. // சிறுவட்டமென்றாலும் மிக நெருக்கமான நட்பினை வளர்த்துக்கொள்ள இந்த தளமும் தங்களின் பதிவுகளுமே எங்களுக்கெல்லாம் அடிப்படை காரணமாக அமைந்திருக்கிறதென்றால் அது மிகையாகாது. // இப்படி எல்லாம் நட்புக்கள் கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. உண்மை வாத்தியாரே.

   Delete
  7. நண்பரே SK@
   ஆசிரியர் சார் @

   நெகிழவைத்து விட்டீர்கள் ஐயா!

   நல்ல வேளை 14வயசிலயாவது காமிக்ஸ் படிக்க வந்தேன்... இல்லையெனில் உங்களை எல்லாம் வாழ்வில் சந்திக்க இயலாது போயிருக்குமே!

   Delete
  8. //ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்கே நான் சந்திக்கவுள்ளது ஆத்மார்த்தமான நண்பர்களையே என்ற எண்ணம் எழுந்திடும் நொடியினில்,பதிவுகளுக்கென அவசியமாகிடும் உழைப்பானது ஒரு சிரமமாக தெரிவதில்லை !//

   பெருமையாக இருக்கிறது சார்! காமிக்ஸ் வாசகராக அதிலும் லயன் முத்து வாசகராக இருப்பதில் இருமாப்பு கொள்கிறேன்.

   நன்றி ஆசிரியரே!
   நன்றி நண்பர்களே!!

   Delete
 58. Super சரவணகுமார் சார். தங்கள் கருத்துக்களை வரிக்கு வரி வழி மொழிகிறேன்.

  ReplyDelete
 59. விஜயன் சார், பத்து வருடங்கள் ஒடியது தெரியவில்லை. வாரத்தில் எனது (எங்கள் அனைவரையும்) மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் நாட்கள் என்றால் உங்கள் பதிவு வரும் நாட்களே. உங்களின் பல சிரமங்கள் பிரச்சனைகளுக்கு இடையில் எங்களுக்காக வாரம் தவறாமல் பதிவிட்டு எங்களை மகிழ்வித்த உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. என்றும் வாழ்கையில் உங்களை மறக்க மாட்டேன் (டோம்). பல புதிய நண்பர்கள் அறிமுகம் கிடைத்தது இந்த தளத்தின் மூலமே அதற்கு ஒரு நன்றி.


  நாளுக்கு நாள் உங்களின் உற்சாகம் செம தெறி. இன்று போல் என்றும் தொடருங்கள்... வாழ்நாள் முழுவதும் உங்களை தொடருவேன் (வோம்) உங்களுடன் உறுதுணையாக இருப்போம்.

  ReplyDelete
  Replies
  1. சூப்பரா சொன்னீங்க PfT! ஞானும் அவ்வண்ணமே!!

   Delete
  2. ///வாழ்நாள் முழுவதும் உங்களை தொடருவேன் (வோம்) உங்களுடன் உறுதுணையாக இருப்போம்///

   ---👌👌👌👌👌 நிச்சயமாக தொடருவோம்...செம PfT

   Delete
  3. நிச்சயம் பரணி சார். தொடர்வோம்.

   Delete
 60. விஜயன் சார், ஜனவரியில் ஆறு புத்தகங்கள் அது போக அந்த மாத இறுதியில் Smashing 70 + ஆன்லைன் புத்தகத் திருவிழா ஸ்பெஷல் புத்தகங்கள். இது தவிர வேறு ஏதாவது சஸ்பென்ஸ் புத்தகங்கள் உண்டா?

  அடுத்த ஆண்டு ஆரம்பம் முதலே வாசிக்க பல புத்தகங்கள். செம சார் அட்டகாசமான ஆரம்பம். நன்றி உங்கள் அர்பணிப்புக்கு.

  நமது காமிக்ஸ் வரலாற்றில் ஒரு மாதத்தில் அதிகமான புத்தகங்கள் வரவுள்ள மாதம் இதுதான் என நினைக்கிறேன்.

  சூப்பர். தொடரட்டும் இந்த காமிக்ஸ் ஆண்டு முழுவதும்.

  ReplyDelete
  Replies
  1. சார்...இப்போதெல்லாம் எனக்கு கணக்கு ஒரே குளறுபடி !! ஜனவரியில் வாசிப்புகளுக்கென ஒரு லோடு காத்துள்ளது என்பது மட்டுமே இப்போதைக்கு நினைவுள்ளது !!

   பிப்ரவரி பிறந்தால் தான் கொஞ்சமாய் கபாலம் க்ளியர் ஆகுமென்று நினைக்கிறேன் !

   Delete
  2. சார்.. உங்களுக்கே இம்புட்டு குழப்பம்னா.. எங்க நிலைமையை யோசிச்சு பாருங்க! ஜனவரி மாதத்தின் இறுதியில் ஒரு செக்-லிஸ்ட் ரெடி பண்ணி எல்லா புக்கும் வந்துடுச்சான்னு பார்க்க வேண்டியிருக்கும் போலிருக்கே?!!

   Delete
  3. "தொடரட்டும் இந்த காமிக்ஸ் கொண்டாட்டம் ஆண்டு முழுவதும்" என படிக்கவும்.

   Delete
  4. // ஜனவரியில் வாசிப்புகளுக்கென ஒரு லோடு காத்துள்ளது என்பது மட்டுமே இப்போதைக்கு நினைவுள்ளது !! //

   அது போதும் சார் :-)

   Delete
 61. லயன் தளம்.....

  லயன் கம்பேக் ஸ்பெசல் கிடைச்சதை தொடர்ந்து அடுத்தடுத்த இதழ்களில் இருந்த இத்தளத்தின் லிங்கை பார்த்து உள்ளேன்,.. ஆனா போன் அப்போது கிடையாது என்பதால் துவக்க நாட்களில் பார்த்தது கிடையாது....

  இரு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை பிரவுசிங் செண்டர்ல போய் தளத்தை பார்வையிட்டு வருவேன்....!!!!

  பின்னர் நான் வேலை செய்யும் காம்ளக்ஸிலயே ஓரு பிரவுசிங் செண்டர் வர வாரம் ஒருமுறை தளத்தை பார்த்து எல்லா கமெண்ட்களையும் பார்ப்பேன்....

  ஈரோடு விஜய்,
  கார்த்திக் சோமலிங்கா,
  கிங் விஷ்வா,
  ரமேஷ்,
  புனித சாத்தான்...&பலரையும் என அப்போதைய பாப்புலர் பெயர்களை பார்த்து இவுங்களாம் மிகப்பெரிய காமிக்ஸ் ரசிகர்கள் என வியந்து போவேன்.....

  விமர்சனங்கள், விவாதங்கள் எல்லாம் பார்க்க ரொம்ப நல்லா இருக்கும்....

  2012கடைசியில ஓரு Nokia second hand phone வாங்கி நானும் கமெண்ட்கள்,பதிவுகளை ரசித்து வந்தேன்!

  2012ல வந்த சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெசலில் இடம்பெற்றிருந்த என் புரோபைலில் இந்த lionblogspotல கமெண்ட போடும் ராசிக் அனைவரையும் சந்திக்கணும் என போட்டு இருந்தேன்... அது ஒரே ஆண்டில் நிறைவேறியது...2013ஈரோடு விழாவில் அனைத்து காமிக்ஸ் ரசிகர்களையும் சந்தித்து மகிழ்ந்தேன்....

  தளத்தில் அப்போது பில்டிங் கட்டிய(பிரமாண்டமான கமெண்ட்கள்) கார்த்திக் சோமலிங்கா ஓரு லிங்கை தந்திருந்தார் இங்கே!அந்த லிங்கை க்ளிக்கினால் லேட்டஸ்ட் ஆக பதிவான 25கமெண்ட்கள் காட்டும்....அதன் வாயிலாக ஒரு கமெண்ட் கூட மிஸ் ஆகாமல் படித்து ரசித்தேன்.

  அப்போது அறிமுகம் ஆகி ரொம்ப நெருங்கிய நண்பராக ஆன ஈரோடு விஜய்க்கு என் எண்ணங்களை ஆங்கிலத்தில் அனுப்புவேன்...அவர் அதை தமிழ்படுத்தி இங்கே பதிந்தார்...என் கமெண்ட்டும் இங்கே பதியப்பட்டதை ரொம்ப நாள் பார்த்து பார்த்து ரசிப்பேன்.....

  இங்கே அறிமுகமான நட்புகள், நெருங்கிய வட்டமாக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது...

  இங்கே இணைந்த நட்புகள் உடன் இணைந்து சேலம் 2014விழாவில் தூள்கிளப்பினோம்....

  2015ஆரம்பத்தில் ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கி நானே நேரடியாக கமெண்ட் போட ஆரம்பித்தேன்.... டெக்ஸை யாராவது ஒரு வார்த்தை சொன்னா அவிங்களோட மல்லுகட்டுவேன்...இப்ப நினைச்சா சிரிப்பா இருக்கும்.... பலமுறை சட்டைகள் கிழிபட்டது.

  பிட் ஓட்டி செமத்தியாக இங்கே அடிவாங்கிய அனுபவமும் உண்டு....இங்கே நடுநிலைக்காக குரல் கொடுத்து அடிவாங்கிய நண்பர்கள் இணைந்து ஒரு குழுவாக ஃபார்ம் ஆனோம்...

  இங்கே டெக்ஸ்க்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து மாதம் ஓரு டெக்ஸ் இதழை பெற்றது ரொம்பவும் ஹேப்பி மொமென்ட்...

  .........

  ReplyDelete
  Replies
  1. 2016ல இங்கே என் முதல் தொடர் கட்டுரையான தீபாவளிமலர் தொடர் பதிவுகளை எழுதி மகிழ்ந்தேன்....
   அதற்காக ஆசிரியர் சார் பாராட்டியது எனக்கு இங்கே ஹைலைட்...

   தொடர்ச்சியாக ஒவ்வொரு புத்தக (சென்னை& ஈரோடு விழாக்கள்)விழா நிகழ்வுகளையும் விரிவாக எழுதி இன்புற்றேன்...

   என் கட்டுரை, பதிவுகளை ரசித்து மகிழ்ந்த அனாமதேய நண்பர் சந்தா பரிசளித்தது ஐசிங் ஆன் த கேக்!

   நிறைய புகழ்பெற்ற விவாதங்கள் இங்கே ஒரு நிமிடமும் அகலாமல் இருக்க வைத்தன பலமுறை... ஒவ்வொரு பெரிய இதழ் வரும்போதும் நடக்கும் எதிர்மறை கருத்துகளும் தவறாமல் இடம்பெற்றன....

   முன்பெலாம் 10நாட்களுக்கு ஒருமுறை எப்பவேணா பதிவு வரும்...

   பின்னர் அது ஞாயிறு காலை என முறைபடுத்தப்பட்டபோது ஒவ்வொரு ஞாயிறு காலையும் இங்கேதான் நம் பொழுதுகள் விடியும்....

   ஞாயிறு காலைப்பதிவும், கறிகடையும் வாழ்க்கையின் அங்கமாகிப்போயின...

   பின்னர் பதிவுகள் சனிக்கிழமை இரவுக்கு மாறிய பின் புதிய உச்சங்களை தொட ஆரம்பித்தது...

   இரு ஆண்டு லாக்டவுன் காலங்களை கடந்தபோக இந்த தளமே அருமருந்தாக விளங்கியது....

   காமிக்ஸ் உலகின் சுஜாதா என நம்மாள் அழைக்கப்படும் மரியாதைக்குரிய செனா அனாவோடு இணைந்து நிறைய விமர்சனங்கள், அது சார்ந்த உரையாடல்களை இங்கே நிகழ்த்தி மகிழ்ந்த கணங்கள் என்றும் பசுமையான நினைவுகள்......


   அப்கோர்ஸ் என் ஷார்ட் டெம்பர் காரணமாக சிலமுறை நண்பர்களோடும் மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களிடமும் முரணான விவாதங்களை செய்தும் உள்ளேன், அவற்றை தவிர்த்து இருக்க வேண்டுமோ என பலமுறை யோசித்ததும் உண்டு....

   பள்ளி நட்புகள், கல்லூரி நட்புகள் கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டாலும் இங்கே கிடைத்த நட்புகள் உயிர் உள்ளவரையும் நீடிக்கும்......😍

   இந்த 10ஆண்டுகளில் நல்ல சில நண்பர்களை, இரத்த உறவுகளை இந்த தளம் பெற்றுத்தந்துள்ளது....

   அடுத்த 10ஆண்டுகளில் நடந்தவற்றை 2031 டிசம்பரில் நினைவுகூற இதே ஆவலோடு காத்திருப்பேன்....!!!!
   Delete
  2. சூப்பர் விஜயராகவன்.

   Delete
  3. இந்த Nostalgia நினைவுகளை நீங்கள் எழுதும் போது எல்லாம் அப்படியே time Machine ஏறி அங்கே சென்று வந்தது போலவே இருக்கும். இந்த முறை ரொம்பவே நெகிழ்ச்சியாக இருக்கிறது.

   // பள்ளி நட்புகள், கல்லூரி நட்புகள் கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டாலும் இங்கே கிடைத்த நட்புகள் உயிர் உள்ளவரையும் நீடிக்கும்......😍 // இது மிகவும் உண்மை. நமது தள நண்பர்கள் 2 அல்லது 3 பேரிடமாவது ஒரு வாரத்தில் பேசிவிடுவேன். இது எல்லாம் சாத்தியமானது இந்த தளத்தின் மூலமாகத்தான். அதற்காக உங்களுக்கு நன்றி சார்.

   Delete
  4. அருமையாக விவரித்துள்ளீர்கள் நண்பரே @STVR.

   Delete
  5. செம கலக்கல் டெக்ஸ் விஜய்.

   Delete
 62. நான் தான் சொன்னேன்லங்க எடிட்டரய்யா...

  ஆபீஸர்'ஸ் கதைன்னு...

  சரிய்யா தான் அடிச்சேன்...

  என் கணிப்பு தவறவில்லைங்க

  J

  ReplyDelete
  Replies
  1. எந்த ஆபீசர் என சொல்லலியே ஜனா :-)

   Delete
  2. ஆபீசர் என்றால் ஆபீசர் தான் பரணி.

   Delete
  3. ஒரு ‌இன்கம்டாக்ஸ் ஆபீசருடைய கதையாம்.

   நான் சொன்னது‌ ஒரு ஆபீசருடைய கதை..

   நான் யூகித்தது எதோ ஒரு ஆபீசருடைய ஆபீஸ்ல நடக்கும் இன்ட்ரஸ்டிங்கான கதையாக இருக்கும் - ஆபீசரின் தயவை நாடி வரும் அயோக்கியர்களின் தகிடு தந்தங்கள் லஞ்சம் மது மாது மிரட்டல்கள் - சம்பந்தபட்ட ஆபீசரின் சமயோசிதம் என்று ஒரு கதையை யூகித்திருந்தேன்...

   சரியாய் தானே பொருந்துகிறது...

   Delete
  4. அதிகாரபலம் மிகுந்த ஆபீசர்களின் தயவுக்காக எதையும் செய்பவர்களை எத்தனை படங்களில் சித்தரிக்கின்றனர்...

   Delete
 63. எடிட்டர் தளம் ஆரம்பித்த முதலே இடை விடாமல் பார்வை இட்டுள்ளேன்
  தற்போது வரை எனக்கு தெரிந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.இடையில் சில காலம் தளம் இயங்காமல் இருந்தது.
  மேற்குறி்பிட்டவை என் நினைவு குறிப்பில் இருந்து. நன்றி.

  ReplyDelete