Tuesday, November 30, 2021

ஒரு டிசம்பர் டான்ஸ் !

நண்பர்களே,

வணக்கம். ஊரெல்லாம் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் வேளைகளில் கூட, சும்மா ஜிலோவென்று வெயில் அடிக்கும் ஊர் - எங்களது ! ஆங்காங்கே சாலைகளில் போட்டிங் போகும் கொடுமைகளை ட்விட்டரிலும் ; டி-வியிலும் பார்த்த கையோடு, பிக் பாஸ் பார்க்கக் கிளம்பி விடுவார்கள் எங்கள் ஜனம் ! ஆனால் கடந்த சில நாட்களாய் எங்களுக்கே ரிவிட் அடித்து வருகிறார் வருண பகவான் ! ராத்திரிகளெல்லாம் கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்த மழையில் பைண்டிங் ஆபிஸுக்குப் போகும் சாலையே குளமாகிப் போயிருக்க -  டிசம்பர் புக்ஸ் இன்று காலை தான் டப்பிக்களில் அடைக்கலமாகிப் பயணங்களைத் துவங்கியுள்ளன ! So உங்கள் ஊர்களில் படகு விடும் நிலவரங்கள் இல்லையெனில் - நாளை முதற்கொண்டு பட்டுவாடாக்கள் துவங்கிட வேணும் ! மழை தேவன் மனசு வைப்பாராக !!

So ஒரு ரொம்பவே புதிரான கூட்டணியிலான புக்ஸ் இம்மாதம் உங்கள் இல்லங்களின் கதவுகளைத் தட்டக் காத்துள்ளன !! 

**மறதிக்கார நண்பர் XIII-ன் இந்தப் புது ஆல்பத்தை முழுமையாய் உள்வாங்கிட - இரண்டாம் சுற்றின் முந்தைய இதழ்களையெல்லாம் ஒரு புரட்டாவது புரட்ட அவசியமாகிடலாம் ! வழக்கம் போல் "தொடரும்" என்ற கொக்கியோடு இந்த ஆல்பமுமே நின்றாலும், ஏகப்பட்ட ஆக்ஷன் blocks உண்டென்பதால், அவற்றையும், சித்திர ஜாலங்களையும் ரசிக்கவே பொழுது போறாதென்பேன் !

**"சின்னவர்" சமாச்சாரத்திலுமே கொஞ்சமே கொஞ்சமாய் flashbacks சார்ந்த ஞாபகங்கள் இருந்தால் தேவலாம் என்பேன் - becos "எதிரிகள் ஓராயிரம்" ; "காற்றுக்கென்ன வேலி ?" போன்ற இளம் டெக்ஸ் backissues களோடு இணைந்தே இந்த சாகசத்தின் முடிச்சும் பயணிக்கிறது ! 320 பக்க குண்டு புக் ; so கணிசமாய் நேரமும் ஒதுக்கிக் கொள்ளுங்கோ - ப்ளீஸ் !

**சிறப்பு டிடெக்டிவ் ஷோம்சும், சிரிப்பு டாக்டர் வேஸ்ட்சன்னும் - எப்போதும் போலவே லாஜிக்காவது, ஒண்ணாவது - என்று லூட்டி அடிக்கின்றனர் - ஒத்தாசைக்கு அலாவுதீன் பூதத்தையும் வைத்துக் கொண்டு ! So ஒரு அரை அவருக்காவது அவரவர்களது லாஜிக் லட்சுமணசுந்தரம் அவதார்களுக்கு விடை தந்திடாவிடின், மத்தளம் கொட்டவே அவசியப்படும் - என் சிரத்தில் !

**And "காட்டான் கூட்டம்" !! புது வெட்டியானின் இலக்கியத் தேடலின் பலனான ஒற்றை நாளே இந்த ஆல்பம் ! கரடு முரடான வன்மேற்கு ; அதன் கோக்குமாக்கான மக்கள் - இவர்களின் மத்தியில் ஒரு கலா ரசிக வெட்டியான் என்பதே இங்கு cocktail ! So  "இது தான் கதை ! இது தான் ட்விஸ்ட் ; இது தான் க்ளைமாக்ஸ்" - என எதிர்பார்த்துத் தேடினீர்களெனில் நிச்சயமாய் கிட்டிடாது ! And சித்திர பாணிகள் + கலரிங்குமே இங்கு ரசிக்கப்பட வேண்டிய முக்கிய அங்கங்களே ! பர பரவென வரிகளை மட்டும் வாசித்து விட்டு 'வரட்டா ?' எனக் கிளம்புவதே உங்களின் பாணியெனில், இம்முறை கொஞ்சமே கொஞ்சமாய் மாற்றம் அவசியமாகிடலாம் ! 

So கொஞ்சம் preparations கோரிடும் கூட்டணி இம்முறை ! தேர்ந்த ஜூரிக்களான உங்களுக்கு இதையெல்லாம் நான் சொல்லிட வேண்டிய  அவசியங்கள் இராது தான் ; but என் திருப்திக்காகவாச்சும் சொல்லி வைத்து விடுவோமே என்று தோன்றியது !! நாளை முதல் உங்களின் அலசல்களுக்கு spotlight-ஐ ஒதுக்கிடுவோமா ? Happy reading all !!

அப்புறம் ஆன்லைன் லிஸ்டிங்ஸ் ரெடி :

https://lion-muthucomics.com/latest-releases/890-december-pack-2021.html

https://lioncomics.in/product/december-pack-2021/

Happy shopping too !

மீண்டும் சந்திப்போம் ; நான் அட்டவணையின் 12 மாதங்களுக்குள் எந்தெந்த இதழ்களை எங்கெங்கே புகுத்துவதென்ற சிண்டைப் பிய்க்கும் பணியினைத் தொடரக் கிளம்புகிறேன் ! கதைகளைத் தேர்வு செய்வதை விடவும், அவற்றை slot செய்திடும் பணியானது செம tough என்பதை பத்தாவது தபாவாய் உணர்ந்து வருகிறேன் - கடந்த பத்தாண்டுகளில் !! Bye all...see you around !!

கிளம்பும் முன்பாய் - மறுபடியும் FFS முன்பதிவு / உங்கள் போட்டோக்கள் சார்ந்த நினைவூட்டல் guys ! நிறையப் பேர் அனுப்பி வருகின்றனர் ; ஆனால் இன்னமும் கணிசம் வந்திட வேண்டியுள்ளது ! லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்ட்டாய் வருவது இங்கு சாத்தியமாகாது என்பதை நினைவூட்டுகிறேன் ; so சற்றே வேகம்ஸ் ப்ளீஸ் ! அப்புறம் சில விஷயங்களுமே :

1.நீங்கள் அனுப்பும் போட்டோக்கள் கொஞ்சமேனும் ஷார்ப்பாய் இருந்தால் தேவலாம் ; ரொம்பவே மொசு மொசுவென்ற இமேஜஸ் நிறையவே வந்துள்ளன !  அவை ஒரு முழுப் பக்க சைசுக்குப் பெரிதாய் அச்சாகும் போது - "இந்த அண்ணாச்சி ஆரு ?" என்ற கேள்வியினை உங்களுக்கே எழுப்பிடும் !! 

2 .தவிர, இயன்றமட்டுக்கு நேர்வசமான போட்டோக்களாய் இருந்தால் புக்கிலும் அவை பொருத்தமாய் உட்கார்ந்திடும் ! மாறாய் wide angle-களில் எடுத்து அனுப்பிடும் போட்டோக்களை படுக்கவசமாகவே அச்சிட சுகப்படும் ! அவை புக்கில் பார்க்கும் போது பாந்தமாய் இருக்க கஷ்டப்படும் ! So கவனம் ப்ளீஸ் !! 

3 .உங்களின் போட்டோக்களோடு சந்தா நம்பர்ஸ் ப்ளீஸ் ? மூன்றோ நான்கோ நபர்கள் ஒரே பெயருடனும் உள்ளனர் எனும் போது குளறுபடிகளுக்கு வாய்ப்புகள் ஏகம் ! So ப்ளீஸ் - வெறும் போட்டோக்களை மொட்டையாய் அனுப்பிட வேணாமே ?     

And இந்தக் கோரிக்கைகள், போட்டோக்களை இனி அனுப்பிடவுள்ள நண்பர்களுக்கு மாத்திரமே ; ஏற்கனவே குவிந்து கிடக்கும் மெயில் பாக்சில் மேற்கொண்டும் போட்டோக்களைக் குவித்தால், நம்மாட்களின் கதை கந்தலாகிப் போகும் !

And இதோ - போன பதிவில் நான் பிராமிஸ் செய்த "டேங்கோ" உட்பக்கப் பிரிவியூ :218 comments:

 1. முதல்ல துண்டு போட்டாச்சு

  ReplyDelete
 2. ரெண்டாவது துண்டும் போட்டாச்சு

  ReplyDelete
 3. வணக்கம் நண்பர்களே...

  ReplyDelete
 4. சார் கார லட்டு ப்ராமிஸ் செய்ததை காணவில்லை.

  மற்றபடி நாளைய கொரியருக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. டிசம்பர் பதார்த்தங்களை முதலில் செரித்துக் கொள்வோம் கிருஷ்ணா !

   அப்புறம் பழனியா ? சென்னையா ? என்பதை ஆபீசில் சொல்லியாச்சா ?

   Delete
  2. 😀 சரி சார் இம்மாத புத்தகங்களை பார்த்துவிடுவோம்.

   சொல்லிவிட்டேன் சார் மழை புண்ணியத்தில் பழனி தான். அந்த காரணத்தால் நாளையே புத்தகங்கள் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன்

   Delete
  3. கிருஷ்ணா...
   காரம் கேட்டால்,கேட்ட வாயில் இனிப்பா வெச்சு திணிக்கிறாரே!
   வ்வ்வேவ்வ்வ்வேவ்வ்காஆஆரம்ம்னு என நாக்கு குழறுதே. பேசாம இருப்பதே நலம்.
   🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

   Delete
 5. இனி அடுத்து ஜனவரி இதழ்கள் , அய்யோ M50 அருகில் வந்துடுச்சு

  ReplyDelete
 6. விரைவில்...


  பொட்டிகள் கிளம்பிய பதிவை எதிர்பார்க்கலாம்.

  இந்த வருடத்தின் கடைசி இதழ்கள் கிளம்பிவிட்டன.

  2021 வருடச் சந்தா ரயிலில் எனக்கும் பயணச் சீட்டு வாங்கித் தந்த நண்பர் பரணி சார் அவர்களை இந்த தருணத்தில் நினைந்து அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  இந்த வருடமும் சரியான தேதிகளில் இதழ்களைத் தந்த ஆசிரியர் அவர்களுக்கும் என் பணிவார்ந்த நன்றிகள் & பாராட்டுக்கள் !!!

  ReplyDelete
  Replies
  1. அருமை சரவணன் சார். நண்பர் பரணிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

   Delete
 7. வந்தாச்சு சார்..!

  ReplyDelete
 8. ஆவலுடன் காத்திருக்கிறேன்...:-)

  ReplyDelete
 9. மழை கொடுத்த துக்கத்திலிருந்து வெளியே வர காமிக்ஸே மருந்து

  ReplyDelete
 10. 320 பக்க குண்டு புக் ; so கணிசமாய் நேரமும் ஒதுக்கிக் கொள்ளுங்கோ - ப்ளீஸ்

  #####


  இரண்டு மூணு மணிநேரமாவது அனைத்து கவலைளையும் மறக்க வைக்க வரும் எங்கள் இளம் சிங்கமே

  வருக வருக ...!

  ReplyDelete
 11. டேங்கோ...


  சித்தீரமா ,புகைப்படமா என குழப்பமாக உள்ளது சார்..:-)

  ReplyDelete
 12. விஜயன் சார், // அவை ஒரு முழுப் பக்க சைசுக்குப் பெரிதாய் அச்சாகும் போது - "இந்த அண்ணாச்சி ஆரு ?" என்ற கேள்வியினை உங்களுக்கே எழுப்பிடும் !! //

  வாசகர்கள் ஃபோட்டோ புத்தகத்தில் எந்த சைசில் வரவுள்ளது?

  ReplyDelete
  Replies
  1. அதற்கு ஏற்றார் போல் நண்பர்கள் படம் அனுப்ப உதவும். நான் ஸ்டாம்ப் சைசில் வரும் என நினைத்து பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் அனுப்பி உள்ளேன்.

   Delete
  2. நேர் வசம்
   படுக்கை வசம் என ஃபுல் பேஜ் என கேள்விபட்டோம் .. பெங்களுராரே ..

   Delete
  3. அப்படி என்றால் குடும்ப படத்தை அனுப்பலாம் என சொல்லுங்கோ :-)

   Delete
  4. கழுகு வேட்டையிலும் பெரிய போட்டோ தான் வந்தது...
   நான் குடும்ப புகைபடம் தான் அனுப்பியுள்ளேன்

   Delete
  5. நான் ஆசிரியர் வாசகர்கள் அனைவரது படத்தையும் முத்து 50 இதழ்களில் சில பக்கங்களில் வருவது போல் செய்ய போகிறார் என நினைத்தேன், இது நேரில் பார்த்து பழக முடியாத நண்பர்கள் பிற வாசகர்களை இதன் மூலம் பார்த்து தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என எண்ணினேன் :-)

   Delete
  6. //நான் ஆசிரியர் வாசகர்கள் அனைவரது படத்தையும் முத்து 50 இதழ்களில் சில பக்கங்களில் வருவது போல் செய்ய போகிறார் என நினைத்தேன்,//

   நானும் அப்படியே நினைத்தேன் நண்பரே

   Delete
 13. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 14. டேங்கோ.. திறமைசாலி. ஜெயிப்பார்... புத்தம்புது நாயகர்கள் 2022வை கொண்டாட காத்திருக்கும் வேளையில் ஒரு சிறு ஆலோசனை தோழமை உள்ளங்கள் அனைவருக்கும்.. புதுப்புது வைரஸ்கள் புறப்படும் காலமும் இது. அனைவரும் உடலையும் நோயெதிர்ப்பு சக்தியோடு பாதுகாத்துக் கொள்ளவும் குடும்பத்தாரையும் கவனமாக பாதுகாக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.
  என்றும் அன்புடன் ஜானி

  ReplyDelete
 15. கார லட்டை எதிர்பார்த்திருந்த எங்களுக்கு 'சல்'ன்னு ஆகிருச்சு சார்.

  ReplyDelete
 16. ரத்தப்படலம் எப்பொழுதுமே ஆர்வத்தை தூண்டக்கூடியது. ஆனால் இம்முறை அதையும் விஞ்சி எப்போது ஜனவரி FFS இதழ்களை பார்ப்போம் என்றிருக்கிறது.

  ReplyDelete
 17. ஹைய்யா நாளைக்கு புக்கு வரப் போகுது...

  ReplyDelete
 18. அன்பு ஆசிரியருக்கு 🙏...
  அருமை ஸ்நேகங்களுக்கு 🙏...

  *இந்த வருடத்தின் கடைசி இதழ்கள் கிளம்பி விட்டன*
  ஏனோ இந்த கடைசி என்ற வார்த்தை,
  பலதையும் குறிப்பிடுகிறது.
  3 மாதங்களுக்கு முன் உங்களுடன் இணைந்தாலும்,
  2022 வருடத்தில் அடியெடுத்து
  உங்களுடன் பயணத்தை
  தொடங்குவதை நினைக்கும்போது,
  மனதில் பெரும் மகிழ்ச்சியை தருகிறது.

  எதிரிகள் ஓராயிரமும்,
  காற்றுக்கேது வேலியும் சமீபத்தில் வாங்கியது நல்லதாக போயிற்று.

  2021ன் கடைசி குண்டுபுக்-320 பக்கங்கள்.
  வாழ்த்துக்களுடன் லயன் 2021ஆண்டின் குண்டு புக்குக்கு விடை தருவோம்.


  லட்டே நல்ல சுவைதான்.ஒருமுறை தந்து,
  அந்த சுவை நாக்கிலிருந்து நழுவுவதற்குள்,
  தொடர்ந்து வரும் உங்கள் பதிவுகளில்,
  லட்டுக்குள் திராட்சை வைக்கிற மாதிரி,
  எதோவொரு "இனிப்பான"விசியத்தை தந்து சுவையை கூட்டி விடுகிறீர்கள். கடந்த 3 மாதங்களாக இதன் சுவை குறையவேயில்லை.

  "டேங்கோ" கலர் பளீரென்று,
  "பச்"சென மனதில் உக்கார்ந்து விட்டது.
  இதழை சீக்கிரமாக கொடுங்க சார்.

  வேறு? இந்த மாத இதழ்களுக்கு வெய்ட்டிங்.

  மீண்டும் அடுத்த பதிவில் 🌹🌹🌹

  ReplyDelete
 19. Edi Sir..காட்டான் கூட்டத்துக்காக ஆவலுடன் வெயிட்டிங்..

  ReplyDelete
 20. Just to know what happened to ulagathin kadaisi naal book

  ReplyDelete
 21. /// **மறதிக்கார நண்பர் XIII-ன் இந்தப் புது ஆல்பத்தை முழுமையாய் உள்வாங்கிட - இரண்டாம் சுற்றின் முந்தைய இதழ்களையெல்லாம் ஒரு புரட்டாவது புரட்ட அவசியமாகிடலாம் ! ///

  /// **"சின்னவர்" சமாச்சாரத்திலுமே கொஞ்சமே கொஞ்சமாய் flashbacks சார்ந்த ஞாபகங்கள் இருந்தால் தேவலாம் என்பேன் - becos "எதிரிகள் ஓராயிரம்" ; "காற்றுக்கென்ன வேலி ?" போன்ற இளம் டெக்ஸ் backissues களோடு இணைந்தே இந்த சாகசத்தின் முடிச்சும் பயணிக்கிறது ! ///

  அப்ப டிசம்பர் மாதம் குறைந்தது எட்டு புக்காவது படிக்க வேண்டும் போல... நினைத்தாலே இனிக்குது..

  ReplyDelete
 22. எடிட்டர் சார்,

  ஆளுக்கு ஒரு ஆசை பற்றி ஏதேனும் முடிவு எடுத்து உள்ளீர்களா.
  அதை பற்றிய அறிவிப்பு எப்போது வெளியீடுவீர்கள்.
  ஆவலுடன் வெயிட்டிங்.

  ReplyDelete
 23. டேங்கோ பிண்ணணியில் பெரிய க்ரைமும், துரத்தலும் விறுவிறுப்பாக இருக்கும் என்று புரிகிறது. ஓவியங்களும் இணைந்து ஒரு மாஸ் சாகஸமாக ஜொலிக்கும் என்று எதிர்பார்க்க வைக்கிறது.. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 24. ஜூனியர் எடிட்டருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நமது ஜூனியர் எடிட்டர் அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...

   Delete
  2. வாழ்த்துகளோ வாழ்த்துகள்.

   Delete
 25. இனிய இரவு வணக்கம், ஆசிரியருக்கும் மற்றும் நண்பர்களுக்கும்.

  சரவணன் அவர்களுக்கு வாழ்த்துகளும், பரணி அவர்களுக்கு நன்றிகளும்.

  ReplyDelete
 26. வசனங்கள் ஒவ்வொரு ஃப்ரேமிலும் அதிகமாக இருக்கும் போல சார்!!! ம்ம்ம்ம்ம்ம்ம் பார்ப்போம்...

  ReplyDelete
 27. ///...புது வெட்டியானின் இலக்கியத் தேடலின் பலனான ஒற்றை நாளே இந்த ஆல்பம் ! கரடு முரடான வன்மேற்கு ; அதன் கோக்குமாக்கான மக்கள் - இவர்களின் மத்தியில் ஒரு கலா ரசிக வெட்டியான் என்பதே இங்கு cocktail ! ...///


  காட்டான்கள் தரிசனத்திற்கு வெயிட்டிங்!

  இவ் வருடத்தையும் கடந்த வருடங்களைப் போன்றே மகிழ்வான மாதங்களாக மாற்றியதற்கு ஆத்மார்த்தமான நன்றிகள் சார்!

  ReplyDelete
 28. யாராவது XII SECOND ROUND கதைகளை வரிசைபடுதினால் நல்லது..ப்ளீஸ்

  ReplyDelete
  Replies
  1. சார். அவர்-நம்பர்-X111-
   ஏதோ, 12ம் வகுப்பில Second Round படிப்பது போல ஒரு feeling-யை உருவாக்கிட்டிங்களே..

   Delete
  2. XIII இரண்டாம் சுற்று...

   1.தொடரும் ஒரு தேடல்....2பாகங்கள்

   2.அம்பின் பாதையில்......2பாகங்கள்

   3.The End?.........Single shot

   4.2132மீட்டர்...!....Single shot

   5.நினைவு ஒரு பறவை...!...Single shot

   Delete
 29. சார் Tango பக்கத்தின் முதல் வசனங்கள் ஆங்கில பதிப்பின் படி அதற்கு முந்தைய பக்கத்தில் வருகிறது. காரணம் என்ன சார்.

  ReplyDelete
  Replies
  1. புதுப் பணிப்பெண் செய்த குளறுபடியினை மாலை தான் கவனித்தேன் ; சரி செய்யச் சொல்வதற்குள் கிளம்பிப் போய்விட்டார்கள் ! காலையில் சரி செய்து விடுவார்கள் !

   Delete
  2. நன்றிகள் பல சார் 🙏🏼

   Delete
  3. டீசரை மட்டும் பார்த்து எப்படி கண்டுபிடித்தீர்கள் கிருஷ்ணா? ஆங்கிலத்தில் இந்த கதையை படித்து இருக்கீங்களா?

   Delete
  4. ஆமாங்க பரணி சமீபத்தில் தான் ஆங்கிலத்தில் படித்தேன்

   Delete
 30. டியர் எடி,

  டேங்கோ உள்பக்கம் அதிக எதிர்பார்ப்புகளை கிளறுகிறது. வசனங்கள் அதிகமாக்காமால், படங்கள் ஒரிஜினலை போலவே இருந்துவிட்டால், பேஷ் பேஷ்.

  ReplyDelete
 31. மற்றுமொரு வெற்றிகரமான ஆண்டை எதிர்நோக்கி, இந்த வருடத்தை இனிதே முடித்து வைப்போம்!

  சில பல உறுதிமொழிகளை செவ்வனே நிறைவேற்றியும், வரும் ஆண்டுக்கான எதிர்பார்ப்புகளை எகிறவும் செய்த ஆசிரியருக்கு மிக்க நன்றிகள்! 🙏🏼🙏🏼😍🤝🏼

  ReplyDelete
 32. வன் மேற்கின் இயல்பான, ஆனால் ரசிக்கவைக்கும் ஒருநாள், ஆண்டாண்டுகாலமாக சதிவலையில் சிக்கிச் சுழன்றோடும் ஒருமறதிக்கார நாயகரின் சாகஸம்,சிரிக்க வைக்கும் ஒரு புலனாய்வுப்புலி(பூதம்)ஒரு எவர்கிரீன் நாயகரின் தெறிக்கவிடும் சாகசம். இந்த டிசம்பர் உண்மையாகவே ஒரு மறக்க முடியாத கொண்டாட்டமான மாதம். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 33. இந்த மாத இதழ்களை வெற்றிகரமாக கைப்பற்றியாச்சி...

  ReplyDelete
 34. 2021 இன் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான வெளியீடுகள் மற்றும் ஜம்போ சீஸன்-4 வரவேண்டிய வெளியீடுகள் பற்றிய இரு பக்க விவரங்கள் தெளிவு சார்,நிறைய பேரின் குழப்பங்களை தீர்க்கும்...

  ReplyDelete
  Replies
  1. எனது திருப்திக்காக சார் !! அவ்வளவே !

   Delete
 35. திக்கெட்டும் பகைவர்கள் குண்டுபுக் கணக்கா மிரட்டுது...
  அடுத்த வெளியீட்டில் முத்து 50 மட்டும்தானா ?!
  ஜனவரியில் S 70 முதல் இதழ் வருவதால் மாதம் முழுக்க வாசிப்பு கொண்டாட்டம் தான்...
  லயன் லைப்ரரி அறிவிப்பு செம மிரட்டலா,அசத்தலா இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. //அடுத்த வெளியீட்டில் முத்து 50 மட்டும்தானா ?!//

   ஜனவரியின் துவக்கத்தில் FFS மட்டுமே சார் ; அதுவே 3 + 1 = 4 இதழ்கள் and 12 அத்தியாயங்களை கொண்டவை ! (மாயாவி சிறுகதை & ஸ்பைடர் சிறுகதைகள் சேர்க்காமலே !!) So இதைப் படிக்கவே நேரம் கிட்டிடல் பெரும் பிரயத்தனமாய் இருக்கப் போகிறது !

   Delete
 36. நினைவு ஒரு பறவைக்கு பின் அட்டையில் முதல் சுற்று,இரண்டாம் சுற்றின் வெளியீட்டு விவரங்களை தந்துள்ளது சிறப்பு...
  காட்டான் கூட்டம் அட்டைப்படம் அசத்தல்...
  ஹெர்லக் ஆர்வத்தை கிளப்புகிறார்....

  ReplyDelete
 37. இந்த முறை டெக்ஸும்,XIII வாரக் கடைசியில் தான்,அதன் முந்தைய தொடர்ச்சி இதழ்களுடன் தொடரனும்...

  இப்போதைக்கு ஸ்டெர்னையும்,ஹெர்லக்கையும் நலம் விசாரிப்போம்...

  ReplyDelete
  Replies
  1. காமெடிகாருக்கு முதல் மரியாதை பண்ணுங்க சார் !

   Delete
  2. தற்போது கையில் அதுவே சார்...

   Delete
 38. ஹைய்யா புக்கு வந்துடுச்சாம்! கொரியர் பையன் வாய்ஸ மிமிக்ரி பண்ணி ஆத்தா ஃபோன் பண்ணியிருந்தாங்க! :)

  இன்னிக்கு சாயந்திரமா நேர்ல போய் புத்தகங்களைக் கைப்பற்றணும்!

  ReplyDelete
  Replies
  1. // கொரியர் பையன் வாய்ஸ மிமிக்ரி பண்ணி ஆத்தா ஃபோன் பண்ணியிருந்தாங்க! :) //
   ரொம்ப திறமையான ஆத்தா போல,டப்பிங் டேலண்ட் ஆத்தாவை சென்னை பக்கம் எட்டிப் பார்க்க சொல்லுங்க...

   Delete
  2. ///ஆத்தாவை சென்னை பக்கம் எட்டிப் பார்க்க சொல்லுங்க... ///

   சொன்னேனே! 'நீந்திப் போற அளவுக்கெல்லாம் உடம்பிலே தெம்பில்லைப்பா'ன்னு சொல்லிட்டாங்க!

   Delete
 39. புத்தகத்தை முதன்முதல் கைப்பற்றிய அறிவரசு ரவி சாருக்கு வாழ்த்துக்கள். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 40. ST கொரியர் அலுவலகம் முன்னால் மழை நீர் வடியாததால் வீட்டுக்கு வந்து கொடுக்க முடியாது என கொரியர் நண்பர் சொல்லிவிட்டார்! எனது அண்ணன் ST கொரியர் அலுவலகம் இரண்டு சக்கர வாகனத்தில் சில பல சகாகசங்கள் செய்து புத்தகங்களை கொண்டுவந்து என்னிடம் கொடுத்து விட்டார்! அதாவது புத்தகங்கள் கிடைத்து விட்டது :-)

  வரவும் செலவும் என்ற ஒற்றை பக்க பேலன்ஸ் ஷீட் சூப்பர் ஐடியா!

  ReplyDelete
 41. வரவும் செலவும் பேலன்ஸ் ஷீடை பார்த்தால் நாங்கள் செலுத்திய தொகையை விட நீங்கள் அதிகமாகவே எங்களுக்கு கொடுத்து உள்ளீர்கள் சார். நன்றி.

  ReplyDelete
 42. பார்சலைக் கைப்பற்றியாச்சி...

  நடப்பு ஆண்டின் ஃபேர்வெல் இதழ்கள் எனும்போது சரசரவென ஓடிப்போன 9மாதங்களும் இதழ்களும் ஒரு நொடி நினைவில் வந்து போகின்றன...

  49வது ஆண்டை நிறைவு செய்து 50வது ஆண்டின் நுழைவாயிலில் இருக்கும் தங்களின் நிறுவனத்திற்கு வாழ்த்துகள் சார்...💐💐💐💐


  ReplyDelete
 43. அலாவுதீனும் ஒரு புலனாய்வு பூதமும்.

  மொத்தம் இரண்டு கதைகள். முதல் கதை தான் அலாவுதீன் கதை. சிறிய நேர்கோட்டு கதை. பணம் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபருக்கு அலாவுதீன் பூதத்தின் உதவியுடன் உதவுகிறார்.

  இக்கதையின் மைனஸ் நமது ஹீரோவின் முக்கிய பவர் மாறுவேசம் பயன்படுத்தவே இல்லை.

  மற்றபடி ok. ஒரு முறை படிக்கலாம்.

  இரண்டாவது கதை தான் முக்கிய பெரிய கதை. நமது ஹீரோவின் கண்ணில் விரல் விட்டு ஆட்டும் வில்லன்.

  தனது மந்திர தந்திரங்கள் மூலம் பேங்க் கொள்ளை அடிக்கும் ஒரு இந்தியன் தான் வில்லன்.

  வில்லன் கதாபாத்திரம் அருமை எந்த நிலையிலும் சற்றும் சளைக்காமல் அவன் செய்யும் தந்திரங்கள் அருமை. முதல் பேனலிலே அவன் தான் என தெரிந்தும் கடைசி வரைக்கும் என்ன செய்தும் அவனை ஹர்லாக் அல்லது போலீஸ் பிடிக்கமுடியவில்லை.

  கடைசியில் கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்பது போல முடித்திருந்தாலும் ஹீரோவை மொக்கை ஆக்கியது பிடிக்கவில்லை.

  மொத்தத்தில் இரண்டாம் கதை கண்டிப்பாக படிக்கலாம்.

  ReplyDelete
 44. புத்தகங்கள் கிளம்பி விட்ட செய்தி அருமை. டேங்கோவின் டீசர் இல் முதலிரண்டு கட்டங்களை விஞ்சி கடைசி இரண்டு கட்டங்களும் புகைப்படம் எடுத்து போன்று உள்ளன. டேங்கோவில் நிறைய முடிச்சுகளும் , மர்மங்களும் உள்ளன என்பதால் சுவார்ஷ்யத்திற்கு குறைவிருக்காது. தங்களின் அறிவுரைப்படி, XIII இன் இரண்டாம் சுற்று ஆல்பங்களையும் , சின்னவரின் “எதிரிகள் ஓராயிரம்” “காற்றுக்கென்ன வேலி” ஆல்பங்களையும் மறுவாசிப்புக்கு உட்படுத்த போகின்றேன்.

  ReplyDelete
 45. தீபாவளி புத்தக பார்சலில் வைத்து அனுப்பிய அந்த சாக்லேட் மதிப்பை வரவு செலவு கணக்கில் சேர்க்க மறந்து விட்டீர்கள் போல 😁😁😁

  ReplyDelete
  Replies
  1. பிறகு அந்த தீபாவளி பன் கணக்குமே நிலுவையில் உள்ளதை நினைவில் வைத்திருக்கிறோம் சார்... 😁😁😁

   Delete
  2. "பன்னு" நியூ இயர்ல வாங்கிப்புடலாம்ங்க பிரியன்...😋😋😋

   Delete
  3. ஹா ஹா கண்டிப்பாக கண்டிப்பாக 🤝🤝🤝

   Delete
 46. அலாவுதீனும் ஒரு புலனாய்வு பூதமும் - அலாவுதீன் அற்புத விளக்கு கதையில் வரும் பூதம் ஒரு அப்பாவி மேல் உள்ள திருட்டு பட்டத்தை துடைத்து அவர் நிரபராதி என்பதை நிரூபிக்க உதவுகிறது! இதில் நமது துப்பறிவாளர் இந்த பூதத்தை பயன்படுத்தும் இடங்கள், அப்போது பூதத்தின் பிஸியான தருணங்கள் அந்த தருணங்களை காமெடியாக சொல்லிவுள்ளார்கள்! சிரிக்க வாய்ப்புகள் குறைவான இந்த கதையில், கிடைத்த இடத்தில் நமது ஆசிரியர் நம்மை சிரிக்க வைக்க முயன்று அதில் வெற்றியும் கண்டுள்ளார்; "ச" என்று சொன்னால் சரக்கோடும் "சை" என சொன்னால் சைடிஸ் உடன் வருவேன் என்பது ஒரு உதாரணம்!

  ஹெர்லக் ஷோம்ஸ் கதையில் நான் மிகவும் ரசிப்பது கண்ணுக்கும் மனதிற்கும் இனிமை தரும் வண்ணம் மற்றும் சித்திரம் இந்த முறையும் அருமை! குற்றவாளியை கண்டுபிடிக்கும் அந்த இறுதி பக்க ட்விஸ்ட் சூப்பர்! நிறைவான கதை எளிதான வாசிப்புக்கு ஆங்காங்கே சிரிப்புக்கு உத்தரவாதமான கதை!

  ஐ ஆம் ஹாப்பி அண்ணாச்சி!

  ReplyDelete
 47. ஆண்டின் டிசம்பர் மாத பார்சல் 4 இதழ்களுடன் வந்து கிடைத்தது சார்....

  1 சூப்பர் கெளபாய்

  1 பால்ய நண்பன்

  1 காமெடி வேசக்காரர்

  1 வெட்டியான் கி.நா.

  4வித பாணிகளில் வாரம் 1ஆக படித்து மகிழ அருமையான கூட்டணி!!!

  இத்தனை மழை, வெள்ளம், இயற்கை இடர்பாடுகளுக்கு இடையே குறித்த நேரத்தில் இதழ்களை ஒப்படைக்க மிகுந்த சிரத்தை எடுத்துள்ளீர்கள் என்பது புரிகிறது சார்..

  நெஞ்சார்ந்த நன்றிகள்...🙏

  ReplyDelete
 48. 3வண்ண இதழ்கள்+ கருப்பு வெள்ளை குண்டுபுக்... கண்களுக்கு அட்டகாச விருந்து....

  மிக நீஈஈஈஈண்ட நாட்களுக்கு பிறகு வரவு செலவு பக்கத்தை இணைத்துள்ளீர்கள்...
  (2012ல் தான் இதை கடைசியாக பார்த்த நினைவு)
  சிறப்பு.... ஆண்டின் இறுதி மாதத்தில் இனி இது தொடரட்டும்... பல சந்தேகங்களை எளிதாக தீர்க்கிறது....!!!!

  ReplyDelete
 49. புதையல் வந்து விட்டது. மதியமே அம்மாவிடம் ஃபோன் செய்து அதை உறுதி படுத்தி கொண்ட பிறகு தான் மனது நிம்மதி ஆனது. ஆனால் இன்று வேலை இழுக்க வீட்டுக்கு வரவே 8 மணி ஆகி விட்டது. ஆனால் ஒன்று இந்த புத்தகம் வரும் போது ஏற்படும் சந்தோசம் இன்று வரை இப்போதும் தொடர்கிறது. உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சார். இந்த வருடத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த தற்கு வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 50. Tango சித்திரங்கள் ஆச்சரியப்படுத்துகிறது. குறிப்பாக அந்த bottom படம் வாயை பிளக்க செய்யும் சமகால நேர்த்தியான தொழில்நுட்ப சித்திரம்... கதையும் மிகப்பெரிய pathbreaker அமையும் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 51. அனைத்து அட்டைகளும் அதகளம்....இதுவரை வந்ததுலயே டாப் இந்த டெக்ஸ் அட்டை தான்....முன்னட்டையும் பின்னட்டையும் டாப்பாமைவநும் இம்முறை தான்...விளம்பரங்கள் அள்ளுது

  ReplyDelete
 52. போட்டோவை ஈ-மெயிலில் அனுப்ப வேண்டுமா? அல்லது, கொரியர் தபாலில் அனுப்ப வேண்டுமா சார்?

  ReplyDelete
 53. அடுத்த வாசிப்பு காட்டான் கூட்டம்.

  அவரது முதல் கதை வாசகர்கள் மத்தியில் ஒரு கலவையான விமர்சனதுடன் இருந்தாலும் எனக்கு பிடித்திருந்தது. மேலும் நீங்கள் பதிந்திருந்த அட்டை படமும் ஆர்வத்தை கிளப்பியது.

  நேரில் அட்டைப்படம் இன்னும் சிறப்பாக இருந்தது. எனக்கு பின் அட்டை இன்னும் பிடித்திருந்தது.

  ஒரு இடை சொருகல் எனது நீண்ட நாள் வேண்டுகோள் ஆன ஒரிஜினல் அட்டை படம் எந்த ஒரு கலரிங் அதிக படுத்தாமல் அதே கம்பீரத்துடன் ஒரு டெக்ஸ் புத்தகத்திலாவது முயன்று பார்க்க கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

  விமர்சனம் தொடர்கிறது.
  முதல் கதையை படித்து அதே எதிர்பார்ப்போடு ஆரம்பித்தால் கதை ஆரம்பமே முற்றிலும் வேறுவிதமாக போக ஆரம்பித்தது அட என்று தோன்றியது. நம்மை போல ஒரு புத்தகபுழுவான ஹீரோ இருக்கும் சிறு ஊரில் மேலும் புத்தகங்கள் கிடைக்காமல் ஒரு பெரிய நகரான கான்சஸ் சிட்டிக்கு ஒரு நாள் பயணமாக போகிறார் அங்கு நடக்கும் குழப்பங்களும் கூத்துக்களும் தான் கதை.

  ஒரு சீரிஸான கதை எதிர்பார்த்து போன எனக்கு அங்கு ஒரு ஹாலிவுட் காமெடி கதையை கொடுத்திருக்கிறார்கள்.

  எனக்கு பிடித்திருந்தது ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் நடுவில் எரிச்சலை ஏற்படுத்திவிட்டது. நண்பனின் மூளை குழம்பிய அம்மா தான் அது. அறிமுகம் நன்றாக இருந்தது ஆனால் அது தொடர்ந்த போது கொஞ்சம் எரிச்சல் வந்தது ஆனால் இறுதியில் சரியாக இருந்தது.

  அதுபோல இறுதியில் நல்ல அதிரடிக்கு அடி போட்டுவிட்டு சப்பென்று முடித்து விட்டார்களோ என்று யோசிக்க வைத்து ஒரு சண்டை கொண்டு வந்து பாலை வார்த்தார்கள்.

  மொத்தத்தில் ஒரு ஜாலி வாசிப்பாக இருந்தது.

  ReplyDelete
 54. இன்று புத்தகங்கள் வந்துவிட்டன. பிரித்து பார்த்தாயிற்று. படிக்க இன்று நேரம் கிடைக்குமா என்பது சந்தேகமே. நைட் ஷிஃப்ட் டியூட்டி.
  அந்தக் காலத்திலேயே கொரானா பாதிப்பு இருந்திருக்கும் போல. பின் அட்டையில் இளம் டெக்ஸ் மாஸ்க் போட்டுகொண்டு வருகிறார்.
  லயன லைப்ரரியில் பழிக்குப் பழி, கானக வேட்டை ரூ 450 என விளம்பரமாகி உள்ளது.
  இதற்கு பணம் செலுத்துவது எப்போது என்பது பற்றி ஆசிரியர் இதுவரை சொன்னதாக எனக்கு நினைவு இல்லை. விளக்கம் ப்ளீஸ்.

  ReplyDelete
  Replies
  1. புக் வெளியான பின்னே அனுப்பிக்கலாம் சார் !

   Delete
  2. வந்தப்பறமா ? பொங்கலுக்குன்னு சொன்னாப்டி ! விட்றாதீங்க நண்பர்களே !
   மாசம் மொதல்ல முத்து 50 - நடுவாக்கில லயன் லைப்ரரி - கடைசீல வேதாளர் !

   Delete
  3. // மாசம் மொதல்ல முத்து 50 - நடுவாக்கில லயன் லைப்ரரி - கடைசீல வேதாளர் ! // ஆமா ஆமா எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கு..

   Delete
 55. இன்று காலை தான் பார்சலை கைப்பற்ற முடிந்தது.. பார்சலை கிடைத்ததும் பிரிக்கப்பெற்ற இதழ்கள் ஒவ்வொன்றும் மிக ஆவலை கிளப்பின ..எப்பொழுதும் பக்கம் குறைவான இதழ்களை படித்து விட்டு குண்டான அதுவும் குண்டான டெக்ஸ் இதழ்கள் எனில் கடைசியாகவே படிப்பேன்..ஆனால் இம்முறையோ இளம் டெக்ஸின் திக்கெட்டும் பகைவர்களின் இதழின் அளவும் ,தடிமனும் முதலில் படிக்க ஆவலை கூட்டியது ..இன்று விடுமுறையில் இருந்த காரணத்தால் ஓகே 300 + பக்கத்தையும் ஒரே மூச்சில் படித்து விட வேண்டியது தான் என்ற எண்ணத்தில் இளம் டெக்ஸினுள் புகுந்தேன்...வாவ்..முதல் பக்கத்தில் ஆரம்பித்து இறுதி பக்கத்தில் டெக்ஸ் விடைபெறும் வரை இரண்டரை மணி நேரத்திற்கும் அதிகமாக இளம் டெக்ஸ் உடன் காடு ,மேடு என பயணித்தாலும் ஒரு நிமிடம் கூட ,ஒரு பக்கம் கூட சலிப்பே ஏற்படுத்தாமல் விறுவிறுவென பறந்து கொண்டே இருந்தேன்...என்ன சொல்வது என்றே தெரிய வில்லை டெக்ஸ்க்கு போட்டி யார் எனில் அது அவரின் இளம் வயதே ஆகும் போல...அப்படி ஒரு பரபரப்பு வேகம் கதையில்..பட்டாஸாய் கதை பறந்து சென்றது ..அதுவும் டெக்ஸ் உடனே சுற்றி திரிந்த பெட்ரோ ,மைக்கேலையும் இந்த சாகஸத்தில் மறக்க முடியாத பாத்திரமாகி விட்டார்கள்..ஒவ்வொரு பாகத்திற்கும் அதற்கான அட்டைப்பட போஸ்களை இணைத்து இருந்தது அருமை இளம் டெக்ஸ் எத்தனை பாகங்கள் வந்தாலும் இப்படி ஒரே தொடர்ச்சி கதையை இதுபோல் மொத்தமாக எப்பொழுதும் வெளியிடுங்கள் சார் ..இந்த வருட இறுதி இதழ்களில் இளம் டெக்ஸை கொண்டு வந்து இந்த மாதத்தை மறக்க முடியாத மாதமாக்கி விட்டீர்கள்..

  பகைவர்களை மட்டுமல்ல எத்தனை நாயகர்கள் போட்டிக்கு வந்தாலும் தெறிக்க விடும் இளஞ்சிங்கம் தான் இந்த டெக்ஸ் என்று மீண்டும் நிரூபித்த இதழ்.

  200 ரூபாயக்கு இப்படி ஓரு பொக்கிஷத்தை அளித்த ஆசரியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..


  மீண்டும் இளம் டெக்ஸ் எப்பொழுது துள்ளி வருவார் என மீண்டும் ஆவலுடன் காத்திருக்க வைத்து விட்டார்..

  இந்த இதழுக்கான மதிப்பெண் பத்துக்கு பத்தரை என கொடுத்தாலும் பத்தாது என்பதால் மதிப்பெண்ணை விடுத்து வெற்றி பதக்கத்தையே கொடுத்து விடலாம் ..

  சூப்பர் ...சூப்பர்..சூப்பர்..

  ReplyDelete
 56. வரவு செலவு கணக்கு எல்லாம் போட்டு அசத்தி விட்டீர்களே சார்..சந்தா கட்டினால் அதற்கான பலன் எப்பொழுதும் கூடுதல் தான் என்று நாங்கள் எப்பொழுதும் அறிந்து தான் உள்ளோம் சார்..:)

  ReplyDelete
 57. இன்று இரவு இன்னும் இரு நாயகர்களுடன் உறவாடி கொண்டு நாளை வருகிறேன் ..:-)

  ReplyDelete
 58. சார் சிக்பில் மறுபதிப்பில் நீல பேய் மர்மம் பெண்டிங் சார் கொஞ்சம் சீக்கிரம் பார்த்து செய்யுங்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆஹா....ஆமோதிக்கின்றேன்.

   வரவேற்கின்றேன்.

   Delete

 59. சமீப காலமாக வழக்கமான பார்முலாவை உடைத்து கவனம் ஈர்க்கும் டெக்ஸ் கதைகள் அதிகரிக்கின்றன.அந்த வகையில் பருந்துக்கொரு பரலோகம் இன்னொரு டிபரெண்ட் சாகஸம்.
  டெக்ஸ் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறார்.
  அதை நிவர்த்தி செய்ய கதை முழுக்க ஏறக்குறைய சோலோவாக அதகளம் புரிகிறார் கிட் வில்லர்.இது ஒரு நல்ல மாறுதல்.அவருக்கு ஈடு கொடுத்து அசத்துவது ஃப்ரான்கோ லேன் என்ற சமவயது கௌபாய்.நண்பர்களான இவர்களின் துள்ளலான ஆக்சனில் பக்கங்கள் பொறி பறக்கின்றன .

  வெகுமதி வேட்டையன் கார்லெட்
  அலாய் என்ற நவஹோ..
  ஷெரீப் &வில்லனான லெவிங்டன்
  பாத்திரங்கள் வெகுசிறப்பாக செப்பனிடப்பட்டுள்ளன..

  இவர்களுடன் அவ்வப்போது டெக்ஸும், டைகர் ஜாக்கும் வந்து, வந்து போகிறார்கள்.


  எல்லாவற்றுக்கும் மேலாக..
  காப்பி சாப்பிடும் நேரத்தில் என்ட்ரீ ஆகி ..கண நேரத்தில் ஒளிவட்டத்தை அநாயசமாக தன்பக்கம் திருப்பிவிடுகிறார் கார்சன்.செம என்ட்ரீ.!

  சற்றே நீளமான க்ளைமாக்ஸ் ஒரு குறை.அதை விடுத்துப் பார்த்தால்..குறையொன்றும் இல்லை.

  ReplyDelete
 60. // காப்பி சாப்பிடும் நேரத்தில் என்ட்ரீ ஆகி ..கண நேரத்தில் ஒளிவட்டத்தை அநாயசமாக தன்பக்கம் திருப்பிவிடுகிறார் கார்சன்.செம என்ட்ரீ // தல கார்சன் என்றால் சும்மாவா?

  ReplyDelete
  Replies
  1. யெஸ் பருந்துக்கொரு பரலோகம் நிறைய சம்பவங்களை கோர்வையாகக் கொண்டு அருமையாக தொகுக்கப்பட்ட ஒரு கதைக்களம்,அட்டகாசமான மாஸ் பேக்கேஜ்...

   Delete
 61. அலாவுதீனும் புலனாய்வு பூதமும் :

  வசீகரமான.. வெகு திருத்தமான சித்திரங்களுக்கும் தயாரிப்பு தரத்திற்கும் முதல் பாராட்டுகள்.!

  வட்டிக்கு கடன் வாங்கிட்டு முதலுக்கும் சேர்த்து கல்தா குடுக்க விரும்புற ஒரு கோட்டிஸ்வர முதலாளி... தன்னோட கணக்குபிள்ளை மேல திருட்டு பழியை போட்டு துட்டை அமுக்கிடுறாப்ல.!

  அந்த கணக்குப்பிள்ளையோட காதலிபுள்ள நம்ம ஹெர்லாக் ஷோம்ஸ் கிட்ட ஹெல்ப் கேக்கறாப்ல..!

  இதுக்கு நடுவால.. கணக்குப்பிள்ளை தன்னோட காதலிபுள்ளைக்கு பர்த்டே பரிசா அகஸ்மாத்தா வாங்கிவெச்சிருக்கிற அற்புத விளக்கிலேயிருந்து அலாவுதீனின் பூதம் அப்பியர் ஆகுறாப்ல..! அந்த பூதத்தின் உதவியோடு கணக்குபிள்ளையை காப்பாத்தி காதலிபுள்ளைகிட்ட சேத்தி வெச்சி என்ட்கார்டு போடுறாப்ல ஹெர்லாக்கு..!

  கதைநெடுக சிரிக்க கிடைத்திருக்கும் ஒரே கதாப்பாத்திரம் அலாவுதீன் பூதம்தான்..! சீட்டு விளையாட்டு நடுநடுவே ஸ்கூட்டு விட்டுட்டு ட்யூட்டி பாக்குறது... ஒரு கட்டத்துல தனக்கு பதிலா தன்னோட நண்பனான பேயை சப்ஸ்டியூட்டா அனுப்பி வைக்கிறதுன்னு கலகலப்பு ஊட்டியிருக்காப்ல..!

  கதை 2 :-

  காதலிக்க நேரமில்லை படத்துல நாகேஷ் சொல்லுவாரு..

  "என்னோட ஓஹோ புரொடெக்ஷன்ல இருந்து புதுமையா ஒரு படம் எடுத்து விடப்போறேன்.!"

  "அப்படி என்ன புதுமையோ.?"

  " கடைசிவரைக்கும் படத்துக்கு பேரே வைக்கப் போறதில்லையே.. படம் பாக்குற அத்தனை பேரும் என்ன பேரு என்ன பேருன்னு முடியை பிச்சிக்கப்போறான் பாரு.!"

  கிட்டத்தட்ட அதேமாதிரி ஒரு முயற்சியை நம்ம எடிட்டரும் செய்திருக்கிறார்..(இல்லை டைட்டில் எங்காவது இருந்து என் கண்ணில்தான் படவில்லையா?)

  நானா சாஹிப்னு நம்மூரு மாயாஜால ஆசாமி ஒருத்தரு லண்டன் போலிசோட கண்ணு மூக்கு காதுன்னு சகலத்திலேயும் விரலை விட்டு ஆட்டிட்டு இருக்காப்ல.! வழக்கம்போல அவரை அமுக்க ஹேர்லாக்கின் உதவி நாடப்படுகிறது.!
  இங்கும் நானா சாஹிப்தான் நகைச்சுவைக்கு (கொஞ்சம்) உத்திரவாதம் தராப்ல.!

  துடப்பக்கட்டையை நானா சாஹிப் தன்னைப்போல உருமாற்றி அனுப்ப.. அதே சமயம் ஹெர்லாக்கும் நானா வேசத்தில் வர.. அங்கேயே ஒரிஜினல் நானவும் வர.. அந்த ஒரு இடம் நல்ல கலகலப்பு.!

  சிரிக்க விசயங்கள் குறைவென்றாலும் ரசிக்க ஏராளம் உண்டு.!

  ReplyDelete
  Replies
  1. அருமையான விமர்சனம் கண்ணன். பாராட்டுக்கள்.

   Delete
  2. நன்னி பத்து சார்..😍

   Delete
 62. இரண்டு புத்தகங்களை படித்து முடித்து விட்டேன். முதலில் படித்து XIIi ஆரம்பம் முதல் முடிவு வரை என்ன ஒரு வேகம். Vantage point,Olympus has fallen போல ஒரு அட்டகாசமான ஹாலிவுட் த்ரில்லர் பார்த்தது போல இருந்தது. ஜேசன் அட்டகாசமான ஹீரோ என்பதை மறுபடி ஒரு முறை நிரூபித்து இருக்கும் கதை.

  ஹெர்லக் இரண்டு கதைகளுமே அருமை. எனக்கு பூதத்தை விட அந்த மந்திரவாதியை ரொம்ப பிடித்து இருந்தது. இது தான் இந்த தொடரில் கடைசி கதை என்பது தான் ஒரே வருத்தம்.

  ReplyDelete
  Replies
  1. நறுக் விமர்சனம் குமார். சூப்பர்.

   Delete
  2. உண்மை குமார் ஜேசன் செம சூப்பர்

   Delete
  3. நன்றி நன்றி நண்பர்களே

   Delete
 63. மீண்டும் முழு சந்தாவில் இந்த மௌன பார்வையாளன்

  ReplyDelete
 64. குண்டாக காமிக்ஸ் புக்கைப் பார்த்தவுடன் மனம் இறக்கை கட்டிப் பறப்பது எனக்கு மட்டும் தானா ?

  324 பக்கங்கள் கொண்ட இளம் டெக்ஸை கையில் ஏந்தவே மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது.

  ReplyDelete
 65. *அந்தியும் அழகே*

  மொழிபெயர்ப்பாளர் திரு. விஜயன் அவர்களுக்கு ஸ்பெசல் பாராட்டு.

  ஆசம். ஐ லவ் இட்.

  ReplyDelete
  Replies
  1. அந்த கதையை தேர்ந்தெடுத்து வெளியிட்டதற்க்கும் சேர்த்தே பாராட்டலாம். 👏👏👏👏

   Delete
  2. ஆமா ஆமா இரண்டு பேர் சொன்னதும் சரி தான்

   Delete
  3. "அந்தியும் அழகே" !!

   நடிகர் திலகம் உசிரோடு இருந்த சமயத்து நிகழ்வு என்பது போல் இந்த இதழ் சார்ந்த ஞாபகங்கள் பின்னுக்குப் போயாச்சு சார் ! இப்போதெல்லாம் "இரண்டு மாதங்கள்" என்பது கிட்டத்தட்ட ஏழோ-எட்டோ இதழ்கள் சார்ந்த நாட்களாச்சே ?!

   இன்றைக்கு உங்கள் பின்னூட்டத்தைப் பார்க்கும் நேரம் தான் அடுத்த பாகத்தின் ஒரிஜினல்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன் ! சீக்கிரமே ஆரம்பிக்கணும்....தாத்தாக்களுடனான பயணத்தினை !!

   Delete
 66. ****** காட்டான் கூட்டம் *******

  புத்தகங்கள் படிப்பதில் அதீத ஆர்வம் கொண்ட நம் வெட்டியான் ஸ்டெர்னுக்கு இன்னும் சில மாதங்களுக்கு உள்ளூர் புத்தகக் கடையில் புத்தகங்கள் எதுவும் கிடைக்காது என்ற சூழ்நிலையில், புத்தகங்கள் வாங்கிவர கேன்சஸ் சிட்டி நோக்கித் தன் கழுதையில் பயணமாகிறான். அங்கே தன் பழைய நண்பனைச் சந்திக்க நேரிட, அப்போது ஆரம்பமாகிறது ஸ்டெர்னின் கஷ்டகாலம்! கொண்டு சென்ற பணமும், கழுதையும், ஷூக்களும் களவாடப்பட்டுவிட, நிற்கதியாய் தவிக்கும் ஸ்டெர்ன் அங்கே தன் மனைவியைச் சந்திக்கிறான். அவளது உதவியோடு தன் கழுதையையும், பணத்தையும் மீட்க முயற்சிக்க - ஏராளமான இன்னல்களை அந்நகரத்தின் வித்தியாசமான குணாதிசயம் கொண்ட மனிதர்களின் மூலம் சந்திக்கிறான்! இறுதியில் புத்தகங்களோடு வீடு திரும்பினானா என்பதே மீதக் கதை!

  சிலபல மாதங்களுக்கு முன் வெளியான தன் அறிமுக பாகத்தில் நம்மிடையே ஒரு ஆவரேஜ் வரவேற்பையே பெற்றிருந்த ஸ்டெர்ன், இந்த பாகத்தில் தனக்கான இடத்தை மிக உறுதியாக கைப்பற்றியிருக்கிறான்! கடந்த பாகத்தில் 'யார்யா நீயி?!! இவ்வளவு ரசணையுள்ள ஆளு ஏன்யா வெட்டியானா இந்த கிராமத்துல வந்து கெடக்க? உன் குடும்பம்லாம் என்னாச்சு?' என்று நமக்குத் தோன்றிய சந்தேகங்களுக்கு இந்தப் பாகத்தில் விடை கிடைந்துவிடுவது கூடுதல் சிறப்பு! பக்கத்துக்குப் பக்கம் சின்னச் சின்ன எதிர்பாரா திருப்பங்கள் - நம் மனதின் ஆழத்தில் உறைந்துகிடக்கும் மெல்லிய உணர்வுகளையும் உசுப்பிவிடவல்லதாய் இருக்கிறது - இக்கதையின் இறுதிப்பக்கம் வரையிலுமே!

  ஒற்றைக்காலில் மட்டும் ஷூவுடன் கதை நெடுக ஒரு பரிதாப ஜீவனாக ஸ்டெர்ன் வலம் வந்தாலும், இக்கதையின் உண்மையான அதிரடி ஹீரோக்களான கதாசிரியரும், ஓவியரும் தங்களின் அபாரமான படைப்பாற்றலால் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார்கள்!

  இதில் வரும் கதை மாந்தர்கள் ஒவ்வொருவருக்குமே ஒரு ஸ்பின்-ஆப் போடலாம்! அந்த அளவுக்குத் தங்கள் வித்தியாசமான குணாதிசயங்களால் கவர்கிறார்கள்! சித்திரங்களைக் கவனித்து நிதானமாக உள்வாங்கிப் படித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்படியான நுட்பமான சமாச்சாரங்களும் நிறையவே உண்டு. கதையின் க்ளைமாக்ஸ் கூட அந்த வகையில் சேர்த்திதான்!

  ரிக்டர் அளவுகோலில் 6 மேக்னிட்யூடை நம் மனதுக்குள் கதை நெடுக ஏற்படுத்தும் ஸ்டெர்னுக்கு என்னுடைய மதிப்பெண்கள் 10/10.


  ReplyDelete
  Replies
  1. அட்டகாசமான விமர்சனம்

   Delete
  2. இன்னிக்கு டார்கெட் காட்டான் கூட்டம்தான் குரூநாயரே.!

   Delete
  3. I am reading Stern 1 actually now - stunning to say the least - will latch on to book 2 this weekend !

   Delete
  4. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டமா? EV யிடம் 10/10ஆ????

   Delete
  5. இந்தத் தொடரின் அடுத்த ஆல்பத்தின் பெயர் "THE REAL WEST " ! அதுவே இந்தக் கதைகளுக்கான அடையாளமாகவும் சொல்லிடலாம் போலும் !

   கரடு முரடான பூமியில் குடியேறியோர், கட்டாணியும் புட்டாணியுமாய் (!!) இருந்ததால், கோக்கு மாக்கான நிகழ்வுகள் தானே நிஜத்தில் பலனாகிடக்கூடும் ? கதாசிரியர் அதனையே நூல் பிடித்திருப்பதாய்ப் படுகிறது சார் !

   Delete
 67. மிகவும் சிறப்பான விமர்சனம். கதையை நன்றாக ரசித்திருக்கிறீர்கள் ஈ.வி.பாராட்டுக்கள்.

  ReplyDelete
 68. காட்டான் கூட்டம் ஒரே வரியில் சொல்வதென்றால்
  காட்டான் கூட்டம்
  ரசிக்கும் காமிக்ஸ் கூட்டம்

  ReplyDelete
  Replies
  1. உண்மை சத்யா இன்று காலை தான் படித்தேன் அட்டகாசம். Stern ஒரு அட்டகாசமான ஹீரோ

   Delete
  2. எனக்கு ரொம்ப பிடித்த ஹேர் ஸ்டைல் ஸ்டெர்னுக்கு அதனாலயே இன்னும் சற்று கூடவே ரசித்தேன் குமார்

   Delete
  3. அஸ்கு..அஸ்கு...அது நான் ரசிக்கிற ஹேர்ஸ்டைலாக்கும் !!

   Delete
 69. அலாவுதீனும் ஒரு புலனாய்வு பூதமும்..


  துப்பறியும் புலி ,சிங்கம் ,சிறுத்தை திரு ஷெர்லக் அவர்களின் மற்றுமோர் அதரடி சிரிப்பு வெடி இதழ்...லாஜீக்கை எல்லாம் கழற்றி வைத்து விட்டு படிக்க ஆரம்பித்தால் கண்டிப்பாக வாய் விட்டு சிரிக்கலாம்..முதல் கதை பூதத்தின் உடன் ஷெர்லக் ன் கலாட்டா கலகலக்கிறது எனில் பெயரில்லா இரண்டாம் கதையின் மந்திர வில்லனுடன் ஷெர்லக்ன் கலாட்டா இன்னமும் வயிற்றை பதம் பார்க்கிறது..அட்டகாசமான இரு காமெடி கார்ட்டூன் கதைகளும் அருமை எனில் இந்த கார்ட்டூன் பாணி ஷெர்லக்கின் சித்திரங்கள் தெளிவாக ,அழகாக மனதை கவர்கிறது..எனக்கு என்னமோ இதுவரை வந்த ஷெர்லக் கதைகளில் எது முதலிடம் பெறும் என வாக்கெடுப்பு நடத்தினால் கண்டிப்பாக இந்த மாதம் வந்த ஷெர்லக்கின் சாகஸம் போட்டியே இன்றி முதலிடத்தில் கொண்டு வந்து நிறுத்தலாம்..ஷெர்லக் சாகஸம் இன்னமும் இருப்பின் கண்டிப்பாக தொடருங்கள் சார்...சித்திரபாணியிலும் ,காமெடி கலாட்டா பாணியிலும் தெளிவாக அசரடிக்கும் இந்த ஷெர்லக் தொடர்ந்தால் நலம் நலம் நலமே..

  ReplyDelete
  Replies
  1. அப்படி சொல்லுங்க பரணி

   Delete
  2. கதாசிரியருக்கு அகவை 91 தலீவரே ; இனிமேல் புதுசாய் அவர் ஏதாச்சும் உருவாக்கினால் தான் ! தற்போதைக்கு ஒரேயொரு 20 பக்கக் கதை மிச்சமுள்ளது !

   Delete
 70. இதுவரை ஒரு ஏப்ப சாப்ப ஹீரோஎன்று நாம் நினைத்திருந்த எலீஜா ஸ்டெர்ன் சாதாரண ஆளில்லை பாக்ஸராக முயற்ச்சித்துக் கொண்டிருந்த ஒருமனிதன். நம்மூரப் போலயே கண்ணாலமானவுடன் சகலமும் துறந்து, சாமியாராகரதுக்கு பதிலா வெட்டியானாயிட்டாருங்கிற ப்ளாஷ் பேக் கதைஇது. முதல் பாகத்தைவிட விறுவிறுப்பாக இருக்கிறது. ஆசிரியர்சார்வெட்டியானின் அடுத்தகதை எங்களுக்கு இந்தவருடமே வேண்டும். எப்படியாவது இந்தவருடமே நுழைத்துவிடுங்கள். ப்ளீஸ். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. // ஆசிரியர்சார்வெட்டியானின் அடுத்தகதை எங்களுக்கு இந்தவருடமே வேண்டும். எப்படியாவது இந்தவருடமே நுழைத்துவிடுங்கள் //


   வெட்டியான் உங்களுக்கு ரொம்ப பிடித்து விட்டது சிறப்பு. அதனால் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு எழுதிட்டிங்க என நினைக்கிறேன் ராஜசேகர். இந்த வருடம் இன்னும் 28 நாட்களில் முடிந்து விடும் :-)

   Delete
  2. மிகச் சிறப்பான விமர்சனம் சார். எனக்கும் இதே ஃபீலிங் தான். இந்த சீரிஸ் complete செய்து விடலாம் சார். ரொம்பவே பிடித்திருந்தது. அவன் நம்மை போலவே புத்தகப் பிரியன் என்பதாலா என்று தெரியவில்லை.

   Delete
  3. //நம்மூரப் போலயே கண்ணாலமானவுடன் சகலமும் துறந்து, சாமியாராகரதுக்கு பதிலா வெட்டியானாயிட்டாருங்கிற ப்ளாஷ் பேக் கதைஇது.//

   Maffre சகோதரர்கள் நம்மூர் பக்கமா வந்திருப்பாங்க போல சார் !

   Delete
 71. *காட்டான் கூட்டம்*


  காமிக்ஸ் படிக்குற நாம எப்படி பட்ட புத்தக பிரியர்கள் ன்னு சொல்லி தெரியுனுமா ..நம்ம வாழ்க்கையை தான் இந்த நாயகன் ஸ்டென் வாழ்ந்து இருக்காரு...இப்ப நம்மளை எடுத்துக்குங்க வேண்டாம் என்னையே எடுத்துக்குங்க ..காமிக்ஸ் காமிக்ஸ் ன்னு உள்ளூர் தாரமங்கலத்துல அலைஞ்சு கொஞ்சம் புத்தகம் கிடைத்தது..அப்புறம் உள்ளூர்ல புத்தகமே கிடைக்கல ன்னு சரி சேலம் டவுனுக்கு போய் பழைய புத்தக கடை மாரக்கெட்டே உள்ளதே அங்கே போய் பழைய காமிக்ஸ் புத்தகம் எல்லாம் வாங்கலாம்னு ஒரு நாள் லீவு போட்டுட்டு சாய்ந்தரம் வந்தரலாம்னு சேலம் டவுனுக்கு போய் பழைய புத்தக கடைகளை தேடி கண்டுபிடித்து அண்ணா பழைய காமிக்ஸ் புத்தகம் எல்லாம் வாங்க வந்தேன்னு சொன்னா ம்ஹீம் ன்னு கையை விரிக்கிறார் கடைக்காரர் ..அண்ணா நிறைய புக்கு எல்லாம் வேண்டாம்ன்னா நானே லிஸ்ட் எடுத்துட்டு வந்து இருக்கேன் லயன் கோடைமலர் 86 ,தீபாவளிமலர் 86 ,திகில் கோடைமலர் ,மினிலயன் சம்மர் ஸ்பெஷல் மட்டும் போதுங்ண்ணா என லிஸ்ட்டை நீட்டினால் கடைக்காரர் அடிக்கவே வருவது போலவே வந்து உனக்கு பழைய காமிக்ஸ் கிடைக்குறதே பெருசு இதுல கோடை மலர் 86 ,தீபாவளி மலர் 86 அதில் திகில் கோடைமலர் எல்லாம் வேணுமா ஆளை பாரு ஓடி போயிரு என விரட்ட நான் பாவமாய் மூஞ்சை வைத்து கொண்டு சரி அதெல்லாம் தான் வேண்டாம் வேற பழைய லயன் காமிக்ஸ். ஆவது கொடுங்கண்ணா என பரிதாபமாக கேட்க சரி சரி பாவமா கேக்குற இப்ப நான் கடையை சாத்துற டைமு இப்ப எல்லாம் தேட முடியாது நாளைக்கு வா பாக்கலாம் என சொல்ல சரி நாளைக்கே கண்டிப்பா வரேங்கன்னா ன்னு சொல்லிட்டு இப்ப நாளைக்கு வரை யாரு தாரமங்கலம் போய்ட்டு வரது சேலத்திலியே தங்கிட்டு நாளைக்கு எல்லாம் புக்கையும் வாங்கிட்டு போலாம்ன்னு தங் குனா பல பிரச்சனைகள் ,பஞ்சாயத்துகள் ,நட்புகள் ,காட்டான்கள் என பலரையும் சந்தித்து அடுத்த நாள் அந்த புத்தக கடைகாரரே செம தம்பி பழைய காமிக்ஸ் உனக்கு குறைச்ச விலையிலேயே தரேன் பாரு என சொன்னால் எப்படி இருக்கும்..எதனால் இருக்கும் என யோசிக்கிறீர்களா .?!


  படியுங்கள் காட்டான் கூட்டம் நம்ம நாயகன் ஸ்டென் புக்கு வாங்க போய் காமிக்ஸ் ரசிகர்கள் போல ஏமாந்து ,என்னென்ன அல்லல்பட்டு அந்த புத்தகத்தை வாங்கி வருகிறான் என்பதே கதை...

  படிச்சு பாருங்க நல்லாருக்கு...!

  ReplyDelete
  Replies
  1. எங்கேயோ போய் விட்டீர்கள் தலீவரே

   Delete
  2. கதைக்குள் ஒரு கதை விட்ருக்கீங்கோ தலீவரே !!

   (அப்புறம் , "இனிமேல் "தலீவரே" என்று என்னை அழைக்க வேண்டாம் !! " என்பது மாதிரியான அறிக்கைகளை நீங்க இன்னும் விடலை தானுங்களே ? நான்பாட்டுக்கு கவனிக்காம இருந்திடப்படாதில்லையா ?)

   Delete
  3. தலைவருக்கு தலைவரை பிடிக்குமாதலால் "தலைவர்" பிரச்சினை இல்லை சார்,தல தான் பிரச்சினை...!!!

   Delete
 72. தலீவரே... சூப்பருபா..👌

  ReplyDelete
 73. டியர் எடிட்டர் 

  2021 சந்தா வரவு செலவு கணக்குகளை ஒரு 'நண்பரின்' உதவியோடு காண நேர்ந்தது. 

  Absolutely laudable given the times sir !

  நான் ஒரு தனி நபராக இவ்வளவு புத்தகங்கள் கூரியரில் மாதந்தோறும் அனுப்பிட நேரிடில் - குறைந்த பட்சமாய் 50 ரூபாய் கொண்டாலும் 9 மாதங்களுக்கு 450 மற்றும் 4 இன்னொரு மாதங்களுக்கு 150 என்று 600 ருபாய் + kazugu வேட்டை ஒரு 200 வைத்துக்கொள்ளுங்கள். 
  ஆக மொத்தம் 1000 ருபாய் வரையில் அதிகப்படி என்றாகிறது (counting the deficit in the sheet as well)! 

  மேலும் நீங்கள் ஒரு பதிப்பாளர் என்ற முறையில் புத்தக மாறுதல் உங்கள் வரையறைக்குட்பட்டதே சார். இதுக்கு எதுக்கு sorry? I am stunned.

  2022 சந்தா சிறக்க வாழ்த்துக்கள் சார் !!

  ReplyDelete
  Replies
  1. நல்ல பாயிண்ட்ஸ்...

   Delete
  2. சார்... சின்னதோ, பெரிதோ, ஆண்டின் ஆரம்பத்திலேயே ஒரு தொகையினை நம்மிடம் ஒப்படைக்கும் நடைமுறையினை கடந்த பத்தாண்டுகளாய் நண்பர்கள் பின்பற்றி வருகின்றனர் ! பணம் சார்ந்த நம்பிக்கைகளை மாத்திரமன்றி, எனது கதைத் தேர்வுகள் பற்றிய நம்பிக்கைகளையுமே திடமாய்க் கொண்டுள்ளனர் ! So அவர்களிடம் நான் கால்குலேட்டராய் செயல்பட நினைப்பது முறையே ஆகாது தானே ?

   Delete
 74. Sir,

  The problem with 5 books (Stern 1 included) - I have read 10 pages of everything sir :-)

  ReplyDelete
  Replies
  1. That's how I sometimes write too sir !! ப்ளூகோட்டில் 5 பக்கம் ; லக்கி லுக்கில் 5 பக்கம் ; சோடாவில் 5 பக்கமென்று !!

   Delete
 75. கொரியர் box இன்னும் கொஞ்சம் தரமாக இருந்தால நன்றாக இருக்கும் சார். எனக்கு வந்த புத்தகங்கள் மூன்றுமே மிகவும் மடங்கி வந்தது. டெக்ஸ் புக் சிறிய அளவில் இருந்ததால் தப்பியது.

  ReplyDelete
  Replies
  1. கவனிப்போம் சார் ; வழக்கமாய் செய்து தரும் நிறுவனம் சத்தமின்றி தரத்தில் கை வைக்கின்றது போலும் !

   Delete
 76. Sir,

  One request though it may bump your expenses - may be for the Jan books alone - since all of them are milestones - some kind of keepsake courier box with some Logo and Character prints? Just because it is year 50.

  ReplyDelete
  Replies
  1. சில சனவரிகள் சர்ப்ரைஸ் தரவல்லவை சார் !

   Delete
 77. Stern was absolutely interesting and funny. Amazed by the work of artist too
  Great translation.

  Herlock sholmes both stories are nice and funny.

  XIII - very good. But again memory wipe off? It took more than 10 episodes to know fully about his past. Now getting memory erased so easily? Interesting turn of events. Eager to see next episode

  ReplyDelete
  Replies
  1. ஸ்டெர்ன் ஆல்பத்தின் மெய்யான நாயகர் அதன் ஓவியரே என்பேன் சார் ; என்னை இந்தத் தொடருக்குள் ஈர்த்ததே அந்தச் சித்திரங்கள் தான் !

   Delete
 78. சார் இன்று பதிவுக் கிழமை

  ReplyDelete
  Replies
  1. சார் இன்று புக் படிக்கும் free கிழமை !

   Delete
 79. மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளது .

  ReplyDelete
  Replies
  1. எந்த இதழைக் குறிப்பிடுகிறீர்களென்று தெரியலை ; ஆனால் நான்குமே ஒரே பேனாவினது என்பதால் நன்றி நண்பரே !

   Delete
 80. திக்கெட்டும் பகைவர்களின் திக்கெட்டும் ஆக்சன் மேளா.
  இன்றே வாங்குங்கள்.

  ReplyDelete
 81. வெட்டியான். நம்மைப் போல் ஒருவன். நாம காமிக்ஸ் வாங்க காடு மேடெல்லாம் அலஞ்சதப் போல இவரும் அலையரார் அதனால. இவருக்கும் இவரது மனைவிக்குமான உரையாடல்கள் ரசிக்கும்படிஉள்ளன. மொழிபெயர்ப்பு அருமை. அதனாலேயே மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. அட...வெட்டியானின் வசனங்களுமே மறுவாசிப்புக்கான முகாந்திரமா ? சூப்பர் சார் !

   Delete
 82. திக்கெட்டும் பகைவர்கள் சும்மா ஜெட் வேகத்தில் பறக்குது....
  3 ஆம் பாகத்தில் பயணம்...

  ReplyDelete
  Replies
  1. நிற்காமல் தொடருங்கள் ...:-)

   Delete
 83. DYLON DOG + MARTIN "ULAGATHIN KADAISI NAAL" EPPODHU SIR?

  ReplyDelete
  Replies
  1. உரிய நேரத்தில் ஜெகத் !

   Delete