நண்பர்களே,
வணக்கம். "மனுஷ மனம் ஒரு குரங்கு" என்று வாசித்திருப்போம் ; பேச்சுவாக்கில் எங்கேனும் கேட்டும் இருப்போம் தான் ! அது மட்டும் நிஜமெனில், அடியேனின் மனசு லேசான குரங்கெல்லாம் லேது ; மொக்கையான மலைக்குரங்கின் மனசென்பேன் ! 'அது தெரிஞ்சது தானே ?' என்கிறீர்களா ? அப்படியெனில், அதைத் தெரிந்திருக்கா எனக்கே எனக்காய் இதைச் சொல்லிக் கொள்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன் !! பின்னென்ன சார் - கடந்த 4 மாதங்களாய்த் தூங்கப் போகும் முன்பாயும், விடிந்த முதல் பொழுதினிலும், நிறைந்து கிடக்கும் மேஜையையும் ; குவிந்து கிடக்கும் கதைக்குவியல்களையும் பேஸ்தடித்த முகரையோடு பார்த்து வந்தவனுக்கு - அவை ஒட்டு மொத்தமாய்க் காலியாகி, காற்றாடும் வெற்றிடமாய்க் காட்சி தரும் இன்றைய பொழுதினில் நியாயப்படிப் பார்த்தால் துள்ளிக் குதித்து கொண்டாடத் தோணனுமில்லியா ? பகவான் புண்ணியத்தில், பணிகளின் பெரும்பான்மையை ஒரு before time ரயில் வண்டியைப் போல போட்டுத் தாக்கிடச் சாத்தியப்பட்டுள்ளதற்கு - சுக்காவைக் கண்ட கார்சனாட்டம் வாயெல்லாம், பல்லாகிட வேணாமா ? மாறாக, 'ஹ்ம்ம்ம்' என்றதொரு ஏக்கப் பெருமூச்சோடு மேஜையின் காலியிடத்தை முறைத்து முறைத்துப் பார்த்து வருகிறேன் ! இப்போது சொல்லுங்களேன் - அந்த மலைக்குரங்கு உவமை இன்னாமா பொருந்துது என்று !!
சரியாக 20 நாட்களுக்கு முன்பாய் பெண்டிங் கிடந்த பணிகளையும், அவற்றைப் பூர்த்தி செய்திடத் தோராயமாய்த் தேவைப்படக்கூடுமென எனக்குப்பட்ட கால அவகாசத்தையும் - ஒரு பேப்பரில் எழுதிப் பார்த்த நொடியில் கலங்கிய வயிறானது, இப்போது தான் மெது மெதுவாய் சமனம் கண்டு வருகிறது ! இன்னமும் அட்டைப்படங்கள் மட்டுமே பாக்கி ; பாக்கியினில் எனது பணிகள் 90% ஆச்சு என்பதே நிலவரம் ! So ஜூலை முதலாய், மேஜை முழுக்கக் கதைகளையும், பிரிண்ட் அவுட்களையும் குமித்துப் போட்டுக்கொண்டு, ஒன்றின் பின் இன்னொன்றென, அவற்றினூடே பூந்து பூந்து ஓடியே பழகி விட்டவனுக்கு, "இனி பிப்ரவரியின் ப்ளூகோட் பட்டாளம் தான் அடுத்த பணி !" என்பது புரியும் போது ஒரு இனம்சொல்லத் தெரியா வெறுமை ஆட்கொள்வது போலுள்ளது ! கடந்த 4 மாதங்களின் குட்டிக்கரணங்களும் ; ராக்கூத்துக்களும் ஒருவித வாழ்க்கைமுறையாகவே மாறிப் போயிருக்க, கடந்த சில நாட்களாய் லாத்தலாய்க் கழிந்து வரும் பொழுதுகள் ரொம்பவே விநோதமாய்த் தென்படுகின்றன ! பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மேட்சை முழுசாய்ப் பார்க்க முடிந்தது - "அய்யய்யோ...நேரத்தை வீண் பண்ணுறியே !!" என்ற நெருடலின்றி ! யூடியூபில் கோபி-சுதாகர் பரிதாபங்களை குற்ற உணர்வின்றிப் பார்க்க முடிகின்றது ! ஆபீசுக்கு நடு நடுவே போய் அவரவர் வேலைகளை ஓசையின்றிப் பார்த்து வருவதை ஜாலியாய்ப் பராக்குப் பார்க்க முடிகிறது ! ஆனாலும், எதையோ தொலைத்தது போலவே மண்டைக்குள் ஒரு உணர்வு !!
பணிகளின் அழுத்தம் மிகையாய் இருந்தாலுமே, அது பழகிப் போயிருப்பதும், புது நாயகர்களை, ஒரு புது ஆண்டினில் உங்கள் முன்னே கொண்டு நிறுத்தும் ஆர்வமும் ; இனி என்னதான் குட்டிக் கரணமடித்தாலுமே இது போலானதொரு மெகாப் பணிக்காலம் கொஞ்ச காலங்களுக்காச்சும் துளிர் விட வாய்ப்புகள் லேது என்ற புரிதலும் ஒன்றிணைந்து ஒருவித வெறுமையை உண்டாக்குவது போலொரு பீலிங்கு !! Of course , கால் இருக்கு, கட்டை விரலிருக்கு ; திணிக்க ஒரு வாயும் இருக்கு எனும் போது ஏதாச்சும் செய்து கொள்ளலாம் தான் ; ஆனால் இந்த நொடியின் காலி மேஜை .............!!! Phew !!!
Moving on, டிசம்பரில் காத்துள்ள 4 இதழ்களுள் - மூன்று அச்சுக்கு வரும் வாரத்தினில் ஜாத்தா ஹை & பாக்கி ஒன்றுமே ஏற்கனவே அச்சாகி ஆத்தா ஹை ! So ஒரு "நவம்பரில் டிசம்பர்" சர்வ நிச்சயமாய்ப் போட்டுப்புடலாம் ! And டிசம்பரின் ஹைலைட்டாக இருக்கவுள்ள நமது மறதிக்கார மக்லேனின் லேட்டஸ்ட் ஆல்பத்தின் பிரிவியூ படலம் இதோ :
"2132 மீட்டரில்" இருந்து 'சவ சவ' பாணியிலிருந்து 'விறு விறு' பாணிக்கு மாறிய கதைப் போக்கானது இங்கும் அதே வேகத்தில் ஓட்டமெடுக்கிறது ! நிறைய ஆக்ஷன் ; நிறைய வேகம் & க்ளைமாக்சில் மறுக்காவொரு twist என்ற template இம்முறையும் தொடர்கிறது ! சித்திர ஜாலங்களும், அமரர் வான்சுக்கு சிறிதும் சளைக்கா உச்சத்தில் பயணிக்கிறது ! என்ன ஒரே நெருடல் - ஒரிஜினல் பிதாமகர் வான் ஹாமின் கைவண்ணம் கதையோட்டத்தில் மிஸ்ஸிங் ! ஜேசனின் அடையாளம் தெரிந்திருக்கா நிலையில் - 'நான் கோயிந்தசாமியா ? கொயந்தசாமியா ? குப்புசாமியா ?' என்று முதல் சுற்றில் XIII திணறியது நம்மையெல்லாம் பரவசம் கொள்ளச் செய்ததொரு novelty ! ஆனால் இப்போதோ - "ஜேசன் மக்லேன் தான் ; மேபிளவர் கப்பலில் வந்தோரின் வாரிசு தான் ; அந்த foundation-ன் நிர்வாகிகளுக்கு அமெரிக்க ஆட்சி பீடத்தின் மீதுள்ள வேட்கை தான் சகலத்துக்கும் காரணி !" என தேங்காயைப் போட்டுடைத்திருக்கும் நிலையில் - பழைய அக்னி சற்றே lacking என்று எனக்குப்பட்டது ! ஆனால் அதை நிவர்த்தி செய்யும் விதமாய் க்ளைமாக்சில் நம்மவருக்கு புதியதொரு ட்ரீட்மெண்ட் காத்துள்ளது ! அது முடிந்திடும் பட்சத்தில், அடுத்த ஆல்பத்தில் கோடுகளை அழித்து விட்டு முன்மாதிரியே தேடல்களைத் தொடங்கிடுவாரோ - என்னவோ ; கதாசிரியருக்கே வெளிச்சம் !! "நினைவோ ஒரு பறவை !!" - சிறகை விரிக்க இன்னும் அதிக நாட்களில்லை !
And போன வாரம் அலாவுதீன் பூதத்துடன் ஹெர்லக் ஷோம்ஸ் செய்திடவுள்ள லூட்டிகளின் ஆல்பத்தின் அட்டைப்படத்தைக் கண்ணில் காட்டியிருந்தேன் ! இதோ உட்பக்கங்களின் preview !!
லாஜிக் ; கொஞ்சமேனும் கதைக்கட்டமைப்பு ; கட்டத்துக்குக் கட்டம் கிச்சு கிச்சு மூட்டல் - இவையெல்லாமே இருந்தாலன்றி கார்ட்டூன்கள் ரசிக்காதென்ற எண்ணம் கொண்டோர் - ப்ளீஸ் இந்த இதழுக்கொரு டாட்டா சொல்லிடலில் தப்பில்லை என்பேன் ! Simply becos அந்த "நொடியில் மாறுவேஷம் " template-ல் துவங்கி, கதை நெடுக ஜாலியாய் கதக்கழி ஆடியுள்ளார் கதாசிரியர் ! இதோ இங்குள்ள இந்தப் பிரிவியூ பக்கமே அதைப் பறைசாற்றும் ! So relaxed ஆனதொரு வேளையில், இந்த ஆல்பத்தைக் கையிலேந்தினீர்களெனில் நிச்சயமாய் you will not be disappointed !
- 2022-ன் "லட்டுப் படலங்களில்" இன்னுமொரு இனிப்பு லட்டு காத்துள்ளது என்பது இப்போதைய தகவல் ! அதனை அடுத்த பதிவில் போட்டுத் தாக்கலாமா ? என்ற யோசனை ஓடிக்கொண்டுள்ளது !
- சீனியர் எடிட்டரின் "எழுதிப் பழகும் படலம்" ஒரு மாதிரியாய் துவக்கம் கண்டுள்ளது ! கும்முடிப்பூண்டி போய் ; கொள்ளிடம் போய் ; கூர்க் வழியாய் யூ-டர்ன் அடிக்கும் பக்கங்களை ஒழுங்குபடுத்துவது எப்படி ? என்ற யோசனையுமே தற்சமயம் ரன்னிங் !
- சத்தமின்றி யுத்தம் செய்த நாயகரின் ரசிகர்களுக்கொரு செம நியூஸ் ! ரொம்ப காலமாய் தூண்களில் கிடந்த "ட்யுராங்கோ" தொடரின் அடுத்த ஆல்பம் ரெடியாகி விட்டுள்ளது ! So இந்த ஆல்பத்துக்கு தொடர்ச்சிகள் ஏதுமுண்டா ? அல்லது ஒன்ஷாட்டா ? என்பதை அறிந்தான பின்னே நமது திட்டமிடலைக் கையில் எடுக்கணும் !
- லட்டுக்கள் போதுமா ? அல்லது இன்னமும் கொஞ்சத்தை மொசுக்கலாமா ? என்ற யோசனைகளுமே ஓடிய வண்ணமுள்ளன ! அஜீரணமாகிடாதென்ற நம்பிக்கை பிறப்பின், ஒரு கார லட்டுமே காத்திருக்கும் !! சொல்லுங்களேன் - வயிற்றில் இடமிருக்குமா என்று ?
முதல் தடவையாக முதல் இடம்
ReplyDeleteவாழ்த்துக்கள் பாலாஜி.
Deletegood night sir.
ReplyDelete🥰🥰🥰
ReplyDeleteமுதல் 5
ReplyDeleteவணக்கம் ஆசிரியரே
ReplyDelete7வது பாஸ்
ReplyDelete7th
ReplyDeleteஒரே டைம்ல ரெண்டு என்ட்ரியா
ReplyDeleteHi...
ReplyDeleteXIII அட்டை படம் செம்ம
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகாலி மேஜை எனக்கு நிம்மதி பெருமூச்சு சார். கார லட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்.
ReplyDeleteஇனிப்பு லட்டு கேள்விப்பட்டிருக்கிறோம் அது என்ன சார் கார லட்டு குடுங்க சார் கண்டிப்பா அதையும் சாப்பிட்டு பார்க்கிறோம்
ReplyDelete// 2022-ன் "லட்டுப் படலங்களில்" இன்னுமொரு இனிப்பு லட்டு காத்துள்ளது என்பது இப்போதைய தகவல் ! அதனை அடுத்த பதிவில் போட்டுத் தாக்கலாமா ? என்ற யோசனை ஓடிக்கொண்டுள்ளது ! // அப்போ பதிவு மேல பதிவாக போட்டு 300 ஐ தொட்டு விடலாம் போலவே. போடுங்க சார் போடுங்க
ReplyDeleteSir -
ReplyDeleteWhat was first volume of Stern in Tamil? Do we have it in stock yet?
வழியனுப்ப வந்தவன். கண்டிப்பாக ஸ்டாக் இருக்கும்.
Deletehttps://lioncomics.in/product/graphic-novel-valiannuppa-vanthavan/
DeleteThanks sir - will order on 29th Nov - so that it will be closer to reading the next book.
Deleteசீனியர் எடிட்டரின் அந்தியும் அழகே படிக்க நான் ரெடி சார் இப்போதே...
ReplyDelete//2023 அட்டவணைக்குத் திட்டமிட புறப்படுகிறேன் !! // எதே
Sir - please mail the books on 29th Nov - so that most folks get on 1st Dec. If you mail before that most of us would finish reading that weekend and the whole of december would be empty - unless :-D - you have a special book for December - He he !!
ReplyDeleteஅது சரி, எடிட்டர் நாலு புக்குல,ஒண்ணை மட்டும் பெண்டிங்ல வச்சு, டிசம்பர் முதல் வாரத்துல அனுப்பிட்டார்னா என்ன செய்யறது.
Deleteவந்துட்டேன் !
ReplyDelete/* 2023 அட்டவணைக்குத் திட்டமிட புறப்படுகிறேன் !! */
ReplyDeleteஇப்படீல்லாம் பண்றதா இருந்தால் ஏப்ரல் 14 - சித்திரை முதல் நாள் பதிவுக்கு 2023 அட்டைவணை சொல்லிறணும் சொல்லிப்புட்டோம் ! :-)
ஜனவரி 1 கசக்குமா
Deleteஅருமை சார் மூன்று அட்டைகளும் அருமை....அதுகள்ல டாப் வெட்டியான் தான்....லட்டு கிடக்கட்டும் சார் லட்டு ....ட்யூராங்கோக்கு ஒரு ஷொட்டு...ஒரு அடுத்த வெளியீடு ஸ்பைடர் போல ...லார்கோ போல பதிமூனு போல....சந்தோசத்த அள்ளித் தெளிக்குது ட்யூரோ வரவு...
ReplyDeleteநாலாம் லட்டோ இன்னைக்கே சொன்னா சந்தோசம் கூடுமே
Deleteஅடுத்த வருசம் முக்கிய கதைகள் முடிஞ்சதோன்னி எண்ணுணா....ட்யூராங்கோ உற்ச்சாகத் திகைப்பே
Deleteகாரமா இருந்தான்ன....இனிப்பாருந்தா என்ன...லட்ட அடிச்சு சிதற விடுங்த....நிறுவனர் தயார் என்பது கூடுதல்....மகிழ்ச்சி
DeleteEditor Sir,
ReplyDeleteஹாரர் ஸ்பெஷல் ஏதுனும் உண்டா 2022ல, அந்த 4வது லட்டு இது தானோ????!!!!
all laddus welcome
ReplyDeleteசார் 4வது லைட்டைத் தவிர - முத்து காமிக்ஸ் 50ம் ஆண்டு மற்றும் லக்கி 75க்கு (இதுவரை) அறிவிக்கா இதழ்கள் இருக்கணுமே ;-) அவைகளைக் கோடிட்டு காட்டுறது !
ReplyDeleteலக்கின்னாலே கோடுதான ராகவரே
DeleteXiii wrapper mass...sweet ,kara,salt lattu kuda kedacha happy sir
ReplyDeleteஅன்பு ஆசிரியருக்கு 🙏...
ReplyDeleteகாமிக்ஸ் ஸ்நேகங்களுக்கு 🙏...
அந்த 4 வது லட்டுக்காக வெய்டடிங் சார்.
சொன்னால் தேவலை.
இல்லைனாலும் இருப்பது உறுதியானது மகிழ்ச்சியே.
நினைவோ ஒரு பறவை அட்டைப்படம் சும்மா அள்ளுது சார்.
ட்யுராங்கோ மறுபடியும் வருவது நல்ல தகவல்.
நீங்க எத்தனை லட்டு கொடுத்தாலும் ருசிக்க நாங்க ரெடி சார்.
நீங்க தந்தால் மட்டும் போதும்.
ஐயாவின் நினைவலைகளை முழுவதுமாக போடவும் சார். நீளம் கருதி குறைக்க வேண்டாம்.படிக்க மிக ஆவலாக உள்ளேன்.
ஹெர்லாக் ஷோம்ஸ்சை வரவேற்க காத்திருக்கிறோம்.
மீண்டும் அடுத்த பதிவில் 🌹🌹🌹
//சீனியர் எடிட்டரின் "எழுதிப் பழகும் படலம்" ஒரு மாதிரியாய் துவக்கம் கண்டுள்ளது ! கும்முடிப்பூண்டி போய் ; கொள்ளிடம் போய் ; கூர்க் வழியாய் யூ-டர்ன் அடிக்கும் பக்கங்களை ஒழுங்குபடுத்துவது எப்படி ? என்ற யோசனையுமே தற்சமயம் ரன்னிங் !//
ReplyDeleteஎதுக்கு சார் ஒழுங்கு படுத்தும் எண்ணமெல்லாம். அவர் நடையிலேயே வாட்டுமே
வாட்டுமே = வரட்டுமே
DeleteEdi Sir..
ReplyDeleteநீங்க ஸ்வீட் லட்டு,கார லட்டு எது கொடுத்தாலும் சாப்பிட நாங்க ரெடி..
38வது
ReplyDeleteஆஜர்
ReplyDeleteஎத்தனை லட்டு கிடைச்சாலும் அசால்ட்டா உள்ள தள்ளுவோம் நீங்க கலக்குங்க ஆசிரியரே
ReplyDeleteஆஹா!! ட்யூராங்கோ மீண்டும் (அது சிங்கிள் ஆல்பமே எனினும்) வருகிறது என்ற செய்தியே ஒரு திருப்பதி லட்டு சாப்பிட்ட திருப்தியைத் தருகிறது!
ReplyDeleteஆனாலும் எங்கள் பசி அடங்காது! சீக்கிரமே அந்த 'கார லட்டு' என்னவென்பதையும் அறிவியுங்கள் எடிட்டர் சார்!
அட்டைப்படங்கள் எல்லாமே அருமை! குறிப்பாக XIII - வேற லெவல்! அந்த ஃபான்ட் - மிரட்டுகிறது!!
குறித்த நேரத்துக்குள் அத்தனை பணிகளையும் முடித்து, மேசையைக் காலியாக்கியதற்கு வாழ்த்துகள் சார்!! கொஞ்சமாய் ரிலாக்ஸ் செய்தான பிறகு மீண்டும் மேசையை நிரப்பிடுங்கள்!
சீனியர் எடிட்டரின் கட்டுரையை வாசித்திட இப்பொழுதே செம ஆவல்!! இப்பவே அவருக்கு ஒரு ஃபோன் போட்டு "சார் நான் வேணும்னா உங்க கட்டுரையை புரூப் ரீடிங் செஞ்சு தரவா?"ன்னு கேட்டுடலாமான்னு தோனுது! ஹிஹி!
நம்ம எடி போட்ட பதிவு !!!
ReplyDeleteஇன்னொரு திருப்பதி லட்டு என்னங்க சார் ??
மூன்று அட்டைகளும் அடர் சிவப்பு நிறத்தில் அசத்தலாக இருக்கின்றன.
ReplyDelete4வது லட்டு + கார லட்டு - ok
கார லட்டு? அப்போ நிச்சயமா அது பௌன்ஸராகத் தான் இருக்கும்.
ReplyDeleteஇன்று காலைதான் யோசித்தேன், லட்டு இல்லாமல் போன பதிவு அவ்வளவு ருசியாக(impact) இல்லை என்று தோன்றுகிறதோ.. ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு லட்டு கேட்டுவிடலாம் என்று இருந்தேன்.. ஆனால் தெய்வம் சார் நீங்கள், அந்த லட்டு பிரசாதங்களை அள்ளி வீசூங்கள்
ReplyDeleteடுயுராங்கோ பற்றிய அறிவிப்பு மெய்யாலுமே அதிர்ச்சி கலந்த இன்பம்.பழைய சாகசங்கள் போல அதிக பாகங்கள் இருந்தால் அளவற்ற மகிழ்ச்சி கொள்வோம் ஆசிரியரே.ஒரு முறைக் கொன்று விடு அருமையான கதை.நாயகனும் அதிரடி.விறுவிறுப்பு வேகம் ஆக்ஷன் என மன நிறைவை தந்தது அந்த இதழ்.
ReplyDeleteநிச்சயமா நம்ம கதைகள்ல டாப் டியூரோவும்தானே
Deleteஇன்னுமொரு இனிப்பு லட்டா? சூப்பர் சார். கூடவே கார லட்டும் சேர்ந்தே வரட்டும் சார். ஆஹா! சூப்பர்! 2022 செம ஆண்டுதான்.
ReplyDeleteஅட்டை படங்கள் செம. அதுவும் “நினைவோ ஒரு பறவை” வேற லெவல். சமீபத்தில் மீண்டும் XIII இன் ஆல்பத்தை வாசிப்பின் தாக்கம் தீரவில்லை போலும்.
டியூராங்கோ இன் அடுத்த ஆல்பம் ரெடி என்பது சர்ப்பிரைஷ் ஆனந்தம். வெட்டியான் ஸ்டெர்ன் முகப்பு அட்டையிலுள்ள கதை மாந்தர்களை பல வித கோணங்களில் ரசித்தபடி உள்ளேன்.
49th
ReplyDelete1. மனம் ஒரு குரங்குதான் ஆசிரியரே. அதில் மாற்றுக் கருத்தே வேண்டாம். மேஜையில் இடம் இருக்கிறது என்றால் ஏன் கவலைப்பட வேண்டும். உங்கள் கட்டை விரலை எடுத்து வாயில் வைத்து விடுங்களேன் சுவை உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் சுகமே.... விலை கொடுத்து வாங்கி பரணியில் உறங்கிக் கொண்டிருக்கும் கதைகளைத் தொகுத்து கருப்பு வெள்ளையில் ஒரு குண்டு ஸ்பெஷல் வெளியிடுங்களேன். உங்களுக்கும் மேஜையை நிரப்பியது போலும் இருக்கும் எங்களுக்கும் புத்தகம் கிடைத்தது போன்று இருக்கும்..
ReplyDelete2. மறதி காரரின் அட்டைப்படம் செம தூக்கல்.. அதிலும் மனதை காரரின் கதைகளின் தலைப்பு வேற லெவல்.
3. 2022-ல் லட்டு படலத்தின் அடுத்த லட்டா.... வெகு ஆவலுடன் ❤❤❤
4. எனது 2023 அட்டவணையா ... உங்களின் வேகம் மலைக்க வைக்கிறது ❤❤❤❤❤❤.
சூப்பர்....பரண் தூ!தாங்கும் ஸ்பெசல்
Deleteவந்தால் நன்றாகத்தான் இருக்கும் ஆசிரியர் மனசு வைக்க வேண்டுமே.
Deleteஇதற்கு நம்மாட்கள் ஓட்டு போட்டால் நன்றாகத்தான் இருக்கும். எல்லோரும் பேசாமடந்தை ஆக இருக்கிறார்கள்.. என்ன செய்ய கனவுகள் கனவாகவே இருக்கட்டும்.
Delete:
ReplyDelete2022-ன் "லட்டுப் படலங்களில்" இன்னுமொரு இனிப்பு லட்டு காத்துள்ளது என்பது இப்போதைய தகவல் ! அதனை அடுத்த பதிவில் போட்டுத் தாக்கலாமா ? என்ற யோசனை ஓடிக்கொண்டுள்ளது /////
இன்னொரு இனிப்பு லட்டா ?!!!
லட்டுக்களைச் சுவைக்க நாங்கள் ரெடி.
சும்மா போட்டுத் தாக்குங்கள் சார்.
4 லட்டுக்களை எடு. கொண்டாடு.
கார லட்டு என்றால் கிராபிக் நாவலா சார்.??
ReplyDeleteகிராபிக் நாவல் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
ஒரு மைல்கல் தருணத்தில் அழுவாச்சி இருண்ட களங்கள் வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.
அதுவும் ஓர் சுவைதான நண்பரே...கடவுளின் படைப்பில் எல்லாச் சுவையையும் அனுபவிச்சே ஆகனுமே
Deleteஎனக்கு எத்தனை லட்டுக்கள் இருந்தாலும் கொண்டாட்டம் தான்.
ReplyDeleteதொடர்கள் வருடத்திற்கு ஒரு முறை தான் வருகிறது என்ற நிலையில் மீண்டும் பழைய புத்தகத்தை புரட்டும் சோம்பேறித்தனத்தில் படிக்காமல் சேர்ந்துவிடுகின்றன. இந்த புத்தகத்தோடு இந்த சுற்று முடிவதால் அனைத்தையும் எடுத்து படிக்க ஆரம்பிக்க வேண்டும்.
அப்படித்தான் டூரங்கோ படுத்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது மீண்டும் அவர் வருவது மகிழ்வை தருகிறது.
மினி லயனில் வந்த இருகதைகள் எனது Favourite ஆனால் மற்ற கதைகள் அவை அளவிற்கு இல்லாவிட்டாலும் ஒரு light ரீடிங்கிற்கு உகந்தது. மேலும் இது தான் கடைசி கதை என்று நீங்கள் சொல்லிய நினைவு. ஆகையால் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.
விரைவில் அடுத்த லட்டுக்கான பதிவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
கிருஷ்ணா அதும் அந்த மேஃபிளவர பொறுமையா படிங்க...இரண்டாம் சுற்றத் தூக்கி..வேறலெவலாத் தெரியும்
Deleteகண்டிப்பாக ஸ்டீல் 🙏🏼
Deleteவாசகர்கள் பகாசுரன் போன்றவர்கள். நீங்கள் எவ்வளவு லட்டு கொடுத்தாலும் ஏஏஏஏஏஏவ்வ்வ்வ்வ்!!!!
ReplyDeleteநாங்க ரெடி!!!!
நீங்க ரெடியா எடி?
☺☺☺
அப்படி போடுங்க...உயிரத்தேடி அடுத்த வாரம் ரெடியா
Delete"உலகத்தின் கடைசி நாள்" புத்தகம் எப்போது வரும் ஐயா?
ReplyDeleteஎடிட்டர் சார்?
Deleteமார்ட்டின் & Co எப்போது?
This comment has been removed by the author.
ReplyDelete// "ட்யுராங்கோ" தொடரின் அடுத்த ஆல்பம் ரெடியாகி விட்டுள்ளது //
Deleteஅப்படி சொல்லுங்க சார். இது சூப்பர் நியூஸ். ஜ ஆம் happy.
// லட்டுக்கள் போதுமா ? //
ReplyDeleteஸ்வீட் வகையில் எனக்கு மிகவும் பிடித்தது லட்டு. அதுவும் வேலாயுதம் ஸ்வீட் கடை இருக்கும் சிவகாசியில் இருந்து என்றால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன். தாராளமாக அடுத்த லட்டைப் பற்றி சொல்லுங்கள். நிதானமாக ரசித்து சாப்பிடலாம் ;-)
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete// ஏக்கப் பெருமூச்சோடு மேஜையின் காலியிடத்தை முறைத்து முறைத்துப் பார்த்து வருகிறேன் //
Deleteஇது இது தான். செம. உங்களின் இந்த தீராத காமிக்ஸ் காதல்தான் எனக்கு பிடித்தது.
// கார லட்டுமே காத்திருக்கும் //
ReplyDeleteலட்டு என்றால் அது இனிப்பு மட்டும் தான் சார்.
காரபூந்தி என்றால் ஓகே. பட் நாட் கார லட்டு :-)
எல் வித்தியாசமா இரூக்கும் போல...வாய் தொறந்துட்டு சாப்டு
Deleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteஉள் ஏன் அய்யா
Deleteமூன்று அட்டைப் படங்களும் நன்றாக உள்ளது. அதே போல் உட்பக்க டீசர் கதையை படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.
ReplyDeleteநவம்பரில் டிசம்பர் என சொல்வது சந்தோஷமாக உள்ளது. அடுத்து காத்திருக்கும் பணி பிப்ரவரி இதழ்கள் என்றால் டிசம்பரில் ஜனவரி உறுதி என சொல்லுங்கள். :-))
அடுத்து காத்திருக்கும் பணி பிப்ரவரி இதழ்கள் என்றால் -
சூப்பர் சார். உங்கள் உழைப்பு வியக்க வைக்கிறது. பாராட்டுக்கள் சார்.
நீங்க 2023 அட்டவணையை இப்போது இருந்தே ரெடி செய்ய ஆரம்பிக்கலாம் சார்.
This comment has been removed by the author.
ReplyDelete// 2022 சந்தா எக்ஸ்பிரஸுக்கு டிக்கெட் போட்டாச்சுங்களா ? //
ReplyDeleteஇந்த மாத கடைசியில் சந்தா எக்ஸ்பிரஸுக்கு டிக்கெட் போடப் போகிறேன் சார். :-)
நானுந்தாம்ல
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteகார லட்டை போட்டுதாக்குங்கள் சார்
ReplyDeleteசார் இன்னைக்கு குழந்தைகள் தினமாச்சே....இன்னா பன்றீங்கன்னா...நேரா போய் தொட்டில்ல படுக்குறீங்க கிருஷ்ணர் வேடமணிந்து...தலைல மயிலிறக மறந்துடாதீய....அப்படியே கட்ட விரல வாய்க்கு கொண்டு போறீய...அட்டகாசமா குழந்தைகளுக்கான கதை அறிவிப்பு தொடங்கி ஓர் புத்தம் புது பதிவ தாக்கல் செய்றீங்க
ReplyDeleteஸ்டீல்.. :))))))
Delete:-)))
Deleteஏலே மங்கா பின்னுறீக :-)
Deleteஎல்லாம் குழந்தைகளான நமக்காகத்தான நண்பர்களே...சுஸ்கி விஸ்கி...யகாரி
Deleteவெளி வரும் மூன்று இதழ்களின் அட்டைப்படமும் செம கலக்கலாக அமைந்து உள்ளது சார்...இங்கேயே இப்படி எனில் புத்தகத்தில் இன்னும் பட்டையை கிளப்புவது உறுதி ..அட்டைப்பட ஓவியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteகண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா...ன்னு கேக்கலாமா...
ReplyDeleteகொடுங்க சார் திருப்பதி லட்டு மாதிரி சுவைக்க காத்து கொண்டே இருக்கிறோம்...
இதல் இன்னும் ஓர் கார லட்டா.
?!
வயித்துல இடம் இருக்குன்னு மட்டும் சொல்லிக்கிறேன் சார்..:-)
இங்கு கூடும் என்னை போன்ற குழத்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்கள்...!
ReplyDeleteட்யூராங்கோ மீண்டும் தொடர்கிறாரா..
ReplyDeleteசெம சுவையான தகவல் சார்...
காத்திருக்கிறோம்...:-)
பால்யங்களை திரும்பத் தரும் காமிக்ஸிற்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்
ReplyDeleteஅடேடே...கருத்தா
Deleteமறதிக்காரரின் அட்டைப்படம் அட்டகாசம்..
ReplyDeleteமற்ற இரண்டு அட்டைப்படங்களும் மாஸாக இருக்கு..
ட்யூராங்கோ மீண்டும் வருவது மகிழ்ச்சி
நண்பர் X111-ன் அட்டைபடம் முன்னும், பின்னும்-அட்டகாசம். எளிமையான கதைக்களங்களை விடுத்து, வேற லெவலில் கதை படிக்கப் போகிறோம் என்பது பரபரப்பை ஏற்படுத்துகிறது.
ReplyDeleteஇதில் முக்கியமான விசயம் இதே ஓவியரின்ை கைவண்ணத்தில்-ஜனவரியில் ஆல்பா-கதை..
அடுத்த அடுத்த மாதங்களில் வருவதால் எது முண்ணனி வகிக்கப் போகிறதோ - என்று ஒரே
டென்ஷன் - ஆக உள்ளது..
X 111-தனி இதழ்களாக வரும்போது அழகான அட்டைப்படங்கள் கிடைத்தாலும்.
அடுத்து என்ன என்ற பரபரப்பை ஒருவருடத்திற்கும் மேல் நீடிக்கும் போது கஷ்டமாத்தான் உள்ளது.சார்.
அனைவரும் நம் பிள்ளைகளிடம் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வோம். iii.
ReplyDelete// அஜீரணமாகிடாதென்ற நம்பிக்கை பிறப்பின், ஒரு கார லட்டுமே காத்திருக்கும் !! //
ReplyDeleteஅஜீரணத்துக்கு லேகியம் கொஞ்சம் சாப்பிட்டுக்குவோம் சார்,அப்புறமா எத்தனை லட்டு வேணா உள்ளே போய்கிட்டே இருக்கும்...
// 2022-ன் "லட்டுப் படலங்களில்" இன்னுமொரு இனிப்பு லட்டு காத்துள்ளது என்பது இப்போதைய தகவல் ! //
ReplyDeleteஅடடே,ஆவலுடன் காத்திருக்கிறோம் சார்...!!!
// சத்தமின்றி யுத்தம் செய்த நாயகரின் ரசிகர்களுக்கொரு செம நியூஸ் ! ரொம்ப காலமாய் தூண்களில் கிடந்த "ட்யுராங்கோ" தொடரின் அடுத்த ஆல்பம் ரெடியாகி விட்டுள்ளது ! //
ReplyDeleteஅடடே,சூப்பரு...!!!
இன்றே 3 அட்டைப் படங்கள் பிரிவியூ,ஞாயிறு ஸ்பெஷல்...!!!
ReplyDelete// So ஒரு "நவம்பரில் டிசம்பர்" சர்வ நிச்சயமாய்ப் போட்டுப்புடலாம் ! //
ReplyDeleteஇன்றைய இனிமையான செய்தி...!!!
// 2023 அட்டவணைக்குத் திட்டமிட புறப்படுகிறேன் !! //
ReplyDeleteசார் நெசமாலுமா,அசத்தறிங்களே...!!!
உங்கள் செயல்வேகம் மிக்க மகிழ்ச்சியையும்,உற்சாகத்தையும் அளிக்கிறது சார்...!!!
டியர எடி,
ReplyDeleteகொரோனா உருவாக்கி வைத்த வாழ்வியல் மாற்றங்களில், அரிதாக கிடைக்கும் ஓய்வுகள் போற்றி கொண்டாடபட வேண்டியது... சந்தோஷமாக அனுபவியுங்கள். 2023 திட்டமிடலுக்கு நேரம் அதிகமாக இருப்பதால், உங்கள் உடல்நிலையையும் பேணும் வாய்ப்பாக கருத வேண்டிகொள்கிறேன்.
என்ன, வாயில் கட்டைவிரல், என்ற அறிவிப்புதான், வயிற்றில் புளியை கரைக்கிறது. தட்டு தடுமாறி இப்பதான் சந்தா கட்டியிருக்கிறேன்...இன்னொறு அறிவிப்புக்கு பட்ஜெட் திண்டாடிடும் :D
மற்றபடி, XIII, Stern, Sholmes க்கு ஆவலுடன் வெயிட்டிங்.... முன்னோட்டங்கள் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது கூடவே அட்டைபட அணிவகுப்பும்.
ஆபீசர்
Deleteநீங்களே பட்ஜெட் திண்டாட்டம்னு சொன்னீங்கன்னா அப்போ நாங்க எங்க போறது ஆபீசர் ?
நானெல்லாம் மாச சம்பளகாரன், பட்ஜெட் போட்டா தான் இங்கே மாசம் நகரும்.
Deleteநீங்க பெரிய கம்பெனி டைரக்டர், ஒன்றுக்கு பல புத்தகங்கள் வாங்கி பரிசளிப்பவர், பல நல்காரியங்களுக்காக பெயர் சொல்லாமல் உதவுபவர்... நான் எல்லாம் உங்க பக்கம் நிக்க முடியுமா, ஆபீசர்.... :D
/* மாச சம்பளகாரன் */
Deleteஒங்க மாச சம்பளத்துல நம்மூர்ல ... சரி வேணாம் ;-)
டியுராங்கோ மீண்டுமா?
ReplyDeleteசூப்பர்! சூப்பர்!!
எதிரிகள் ஓராயிரம் :
ReplyDeleteஅட்டகாசமான கதை.! டேகுஷா.. சாரி சாரி.. தேஷா செம்ம அழகு..! இதையும் கலர்ல போட்டிருந்திருக்கலாம்.. ஹூம்..!
லக்னர் அளவுக்கு இல்லேன்னாலும் காஃபினும் ஓரளவுக்கு மனசுல இடம்புடிக்கிற தங்க வெறியன் ஆயிடுறாப்ல.! அந்த செவ்விந்தியன் உல்ஃப் டூத்தும் சரியான வில்லன்தான்.. ஆனா காஃபினால் அல்வா குடுக்கப்பட்டு.. டெக்ஸை காப்பாற்றி கடைசியில தியாகி ஆயிடுறாப்ல.!
எதிரிகள் ஓராயிரத்தை படிச்சிட்டு அப்புறம் பொக்கிசம் தேடிய பயணம் படிச்சிருக்கணும்.. ஹூம்.. தீபாவளி மலரை பாத்ததும் ஈன்னு போய் அதைத்தான் முதல்ல படிக்க தோணுச்சி.. இந்த கண்ணும் மனசும் சொன்னா கேக்குதுகளா..!? டேகுஷா.. மறுபடியும் சாரி... தேஷாவை கலர்ல பாக்கணும்னு கடைவாயில காவ்வாயோட தீபாவளி மலரைத்தான் முதல்ல போய் பாக்குதுங்க..!
அப்புறம் ஒரு முக்கியமான விசயம்.. தேஷா டெக்ஸ்க்கு தங்கச்சின்னா... டெக்ஸ் எனக்கு மச்சான் முறை ஆகுதுன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.. (யாராச்சும் குறுக்க வந்திங்கன்னா... செலம்ப போட்டி.. கயிறு இழுக்கற போட்டி.. மாட்டுவண்டி ரேசுன்னு எங்கிட்ட மோதியாகணும்.. கபர்தார்)
இளம் தேஷா.. ச்சே அதே நினைப்பா இருக்கு.. இளம் டெக்ஸ் எல்லாத்தையும் படிச்சிட்டேன்.. இனி திக்கெட்டும் பகைவர்களுக்காக எட்டுத்திக்கும் பாத்துக்கிட்டு தேஷான்னு .. ச்சே.. தேமேன்னு குந்திக்கிட்டு இருக்கேன்..!
நாங்க உஷாரா மறுவாசிப்பு செஞ்சாச்சு...அந்தத் தங்கக் குட்டிய சாரி...கட்டிய கலர்ல பொறட்டப் போறேன்
Delete
Delete//அப்புறம் ஒரு முக்கியமான விசயம்.. தேஷா டெக்ஸ்க்கு தங்கச்சின்னா... டெக்ஸ் எனக்கு மச்சான் முறை ஆகுதுன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.. (யாராச்சும் குறுக்க வந்திங்கன்னா... செலம்ப போட்டி.. கயிறு இழுக்கற போட்டி.. மாட்டுவண்டி ரேசுன்னு எங்கிட்ட மோதியாகணும்.. கபர்தார்)
இல்லியே நீங்க பிரியாணி சாப்பிடுற போட்டி மற்றும் ரோஸ்மில்க் பருகும் போட்டி பஞ்சுமிட்டாய் லபக்கும் போட்டி இவைகளில் தான் சாம்பியன் என்று உங்க ஊருக்குள் பேசிகிட்டாங்க கண்ணன்
///இல்லியே நீங்க பிரியாணி சாப்பிடுற போட்டி மற்றும் ரோஸ்மில்க் பருகும் போட்டி பஞ்சுமிட்டாய் லபக்கும் போட்டி இவைகளில் தான் சாம்பியன் என்று உங்க ஊருக்குள் பேசிகிட்டாங்க கண்ணன் ///
Deleteசெந்தில் சத்யா..!
அதுவுந்தே இதுவுந்தே..
அப்போ அதுல இலலியா மாப்ள
Deleteஅதுவந்தே மாப்புள..!
Delete// சித்திர பாணியிலும், கலரிங்கிலும் இந்தப் படைப்பாளி உடன்பிறப்புகள் மிரட்டியிருப்பதை "காட்டான் கூட்டம்" வெளிச்சம் போட்டுக் காட்டிடும் ! //
ReplyDeleteமுந்தைய முறை போல அதே பாணியிலான வசனங்களா சார்...!!!
என்னா வேகம் ....
ReplyDeleteஎன்னா வேகம் !!!!
2023 அட்டவணையை தயார் செய்யப் போகின்றாராம் ஆசிரியர் !!!
2023லும் S70s இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் சார்.
நிச்சயமா ஆர்ப்பரிக்கும் வெற்றி பெற்று தொடரும்
DeleteEdi Sir...
DeleteSmashing 70- 2023,2024 -னு தொடர்ந்துகிட்டே இருக்கணும்னு வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்..
கார லட்டா...
ReplyDeleteஏதோ நம்மளால முடிஞ்சது சாப்ட்டு சொல்லீடுவோம்...
நல்லா வரட்டுமே...
welcome Durango....🥳
ReplyDeleteலட்டு தின்ன ஆசைதான்...
ReplyDeleteNo reprint Laddus please...
ReplyDeleteமூன்று அட்டைப் படங்களில் டாப் எதுவென்றால் நினைவோ ஒரு பறவை தான்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteலட்டு வந்தாலும் ok. வேறு எந்த இனிப்பு, எந்த பெயரில் வந்தாலும் ok தான்.
ReplyDeleteலட்டு அது இதுன்னு எதுக்கு பீடிகை போட்ட்டுட்டு.. தங்க தலைவன் வர்றார்ன்னு ஒடைச்சு பேச வேண்டியது தானே..
ReplyDeleteஅதைத்தான்யா கார லட்டுன்னு சூசகமா சொல்லியிருக்காங்க..!
Deleteஒடச்சு தனித்தனியா போட்டா என்னைக்கு விக்க
Deleteஆனா தங்கத்தலைவனை 'எள்ளுருண்டை'ன்னு சொல்றதுதானே பொருத்தமா இருக்கும்? :D
Delete'காரம்'ன்றதை இங்கிலீஸ்ல 'Hot'னு கூட சொல்றாய்ங்க. எனக்கென்னவோ எடிட்டரும் அதைத்தான் மீன் பண்றாருன்னு நினைக்கிறேன்!
எசகுபிசகா யாரோ ஒரு அம்மிணி வந்து நிக்கப்போறாய்ங்கன்னு தோனுது!
அம்மணிக்கு வயசு 45+க்கு பக்கமோன்னு தோணுது :-) - டாக்டர்கள் சிலபேரு இங்கன சிலிர்த்து போயிருப்பாக ;-)
Deleteமேகி காரிசன் கதை வெளிவந்துவிட்டதா?
ReplyDeleteஇல்லை நண்பரே. அவருக்கு பதில் தான் புதிய வெட்டியானின் முதல் பாகம் வந்தது என நினைக்கிறேன்.
Deleteகதை வரவில்லை நண்பரே. அதற்கு பதிலாக தான் லக்கி 75 வந்தது. (மேகி, டெட் வுட் டிக் மீதம் உள்ள இரு பாகங்களுக்கு பதில்).
Deleteபரணி புது வெட்டியான் வந்தது போன வருட சந்தாவில்.
சரி குமார்.
Deleteலட்டு ன்னா நாங்க சோட்டா பீமாகவே மாறிடுவோம்.
ReplyDelete:-)
லட்டையும் குழந்தைகள் தினத்தையும் எப்படியோ மேட்ச் பண்ணிட்டேன்.!
இன்னும் 170 கமெண்ட் டோய் - கோவை கவிஞர் மற்றும் ஈரோடு அதிரடிப்படை மேடைக்கு வரவும் - 40 * 4 + சில உதிரி பூந்திகள் இரண்டு லட்டுக்களை வெளியிடச் செய்யுமே :-)
ReplyDelete:-)))
Deleteஆஹா .....நான் ரோபோட்லன்னு நிரூபிக்க போராடுறேன்
DeleteXIII அட்டைப்படம் பிரமாதம்
ReplyDeleteXIII அட்டைப்படம் பிரமாதம்
ReplyDeleteHerlcok Sholmes அட்டைப்படம் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது
ReplyDeleteStern cover super !
ReplyDeleteஆட்டத்தை ஆரம்பிச்சாச்சா :-)
Deleteஇருங்க கார்த்திக் சோமலிங்காவை வர சொல்கிறேன் இப்படி ஒரு ஒரு கமெண்ட்டா போடுவதற்கு :-)
அடுத்த கமெண்ட் வெட்டியான் தொடரில் இன்னும் எத்தனை கதைகள் இருக்குது என்பதுதானே :-)
Deleteஇல்லை - வெட்டியான் உட்பக்க பிரிவியூ சூப்பர் என்பதே :-) :-)
DeleteThis comment has been removed by the author.
DeleteDurango looks dashing !
ReplyDeleteபோ
ReplyDeleteஸ்
ReplyDeleteட்
ReplyDeleteஅட நீங்களுமா :-)
Deleteமெ
ReplyDeleteண்
ReplyDeleteஇந்த "1 போஸ்ட் 9 கமெண்ட்" ஒவ்வொரு எழுத்தாக போடுவதற்கே கூகுளிடம் "I'm not a robot" என நிரூபிக்க வேண்டியிருந்தது! இந்த 90 கமெண்டு போடுபவர்கள் எல்லாம் அநேகமாக ரோபோவாகத் தான் இருக்க வேண்டும்! :)
ReplyDelete:-))
Deleteகார்த் திக்கா
DeleteDurango திரும்பவும் வருவதில் மகிழ்ச்சி.
ReplyDeleteவிஜயன் சார் அந்தகார லட்டை ஜீரணம் செய்ய ஒரு ஜிஞ்சர் லட்டை இறக்கி விட்டால் சரியா போயிடும்ங்க
Durango திரும்பவும் வருவதில் மகிழ்ச்சி.
ReplyDelete150 up !
ReplyDeleteட்யூராங்கோ !!!!!
ReplyDeleteவரவேற்கின்றேன்.
This comment has been removed by the author.
ReplyDeleteபருந்துக்கொரு பரலோகம் :
ReplyDeleteதீபாவளிக்கு வந்த தேஷாவை எல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு நிற்கும் சூப்பரான கதை !
கிட் வில்லர் அறிமுகமாகும் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை ஒரே தடதட விறுவிறுப்பு தான்.
என்னதான் கிட் வில்லர் கடைசியில் காப்பாற்றப்படுவார் என்று தெரிந்திருந்தாலும் கதையில் வரும் அந்த பதைபதைப்பு திக் திக் ரகம்.
நானும் கிட் வில்லர் குழுவுடன் பாலைவனத்திலும் பள்ளத்தாக்கிலும் பயணித்தது போன்ற ஒரு உணர்வைத் தந்தது.
என்னதான் கதை சூப்பராக இருந்தாலும் ஒரு விஷயம் மட்டும் என்னை நெருடிக்கொண்டே இருக்கிறது. அது அந்த ஷெரிஃப் லேங்டன் கதாபாத்திரம்தான். மோசடி கும்பல் கூட தொடர்புடையவர் என்று காட்டவில்லை, ஒரு நேர்மையான அதிகாரியை தான் சித்தரிக்கப்பட்டுள்ளார். இருந்தாலும் கொள்ளையர் என நினைத்து பிடிக்கும் நபர்களை எந்த ஒரு விசாரணையும் செய்யாமல் தூக்கிலிடுவது என்பது நம்ப முடியாததாகவே இருக்கிறது. டெக்ஸ் வில்லர் வந்து எப்போது இவர் முகரையை பெயர்ப்பார் என்று நினைக்க வைத்துவிட்டது. இப்படி கூடவா ஷெரிஃப் இருப்பார்கள்? செனா ஆனா ஜி, வரலாற்றில் இப்படி பட்ட ஆட்கள் இருந்திருக்கீறார்களா?
செம செம விமர்சனம்.
Deleteஆம் நண்பரே நானுமே ஷெரீப் வில்லனின் ஆளாகவோ ,அல்லது வில்லியம் கூட்டத்தின் தலைவனாகவோ இருப்பானோ என நினைத்தேன்..ஆனால் கடைசி வரை அப்படி இல்லாமலே நம்மை வெறுக்க வைத்த வில்லனாக இந்த ஷெரீப் இருக்கிறார்...
Delete*வில்லனின் கூட்டத்தின்*
Deleteஷெரீப் லேங்டன் கேரக்டரை 3 வகையாகப் பார்க்கலாம்.
Delete1. யாருக்கும் அடங்காத, அநீதிக்காரனாக, கல்நெஞ்சனாக, மாபாதகனாக, கொடூரக் கொலைக்காரனாக.
2. ஒரு மாதிரியான சைக்கோ. குற்றவாளியாக யாரை நினைத்தாலும் துப்பாக்கியால டப் டப்னு ஒன்னு சுடணும் அல்லது தூக்கில் போடனும்.
3. இவரு ஷெரீப்பா... இல்ல லூஸா...கொள்ளையர் என நினைத்து பிடிக்கும் நபர்களின் எந்த பின்னணியைப் பற்றி ஆராயாமல், எந்த ஒரு விசாரணையும் செய்யாமல் தூக்கிலிடுவதே போதும், இவர் யாரென்று முடிவு செய்ய...?
தீபாவளி மலர் மற்றும் கண்ணே கொலை மானே முடிச்சாச்சு. இரண்டுமே அட்டகாசம். குறைன்னு சொல்லனும்டா தீபாவளி மலர் பக்கங்கள் சரி வர இல்லை. 20 பக்கங்கள் அப்படி ரிபீட் ஆகியிருந்தது. நல்ல வேளை ஏதும் மிஸ்ஸாகலை. கண்ணே கொலை(யான) மானே அட்டைப்படம் செமயா இருக்கு.
ReplyDeleteடெட்மேன் டிக் அடுத்த பாகங்கள் வந்ததான் தொடர் பற்றி சொல்ல முடியும். கதை ஓகே. ஓஹோ அல்ல.
நிதிக்கு தலைவணங்கு அட்டகாசமா இருக்கு. இனி அடுத்த தாயில்லாமல் டால்டனில்லை படிக்கனும்.
நறுக் சுருக் விமர்சனம்.
Delete// தீபாவளி மலர் பக்கங்கள் சரி வர இல்லை. 20 பக்கங்கள் அப்படி ரிபீட் ஆகியிருந்தது. //
Deleteஎனக்கும் இதே சிக்கல்தான்...
*ஒரு முறை கொன்று விடு*
ReplyDeleteஇலக்கின்றி பயணிக்கும் கதை. ட்யூக்கின் நடவடிக்கைகளுக்கு அழுத்தமான காரணமோ பிண்ணனியோ தெளிவாக் குறிப்பிடப்படலை. ஏனோதானோன்னு ட்யூக் மாதிரியே சரியாத் திட்டமிடாமலே கதாசிரியர் கதை சொல்ல ட்ரை பண்ணிருக்கார்.
எனக்கு சுகிக்கலை.
யதேச்சையா இன்னைக்கு பாரதி பாஸ்கர் பேசியநிகழ்ச்சி ஒன்று பார்த்தேன். கிட் ஆர்டின் கண்ணணாரின் ஞாபகம் வந்தது //ஒரு நண்பன் மற்றவனை மச்சான் என்று கூப்பிடுவது ஏன்மற்றவனது சகோதரி இவனது காதலி என்ற அர்த்தத்தில் அல்ல. மற்றவன்எந்தபெ பெண்ணை மணந்தாலும் அந்தப்பெண் இவனது சகோதரி //என்ற அர்த்தத்துலேயே என்பதாக பேசியிருந்தார். அதுபோல் யோசித்தால் லிலித்தின் அண்ணன் என்ற வகையில் கண்ணணார் டெக்ஸ் வில்லரின் மச்சான் என்பது சரியே. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteராஜசேகர் @ என்னா ஒரு ஆராய்ச்சி :-)
Deleteஅடப்பாவமே ...:-)
Deleteநல்ல வேளை....கண்ணங்கூட இனி சண்டை வராது
Deleteஅடேங்கப்பா என்ன ஒரு ஆராய்ச்சி சரியான விளக்கம் செம ராஜசேகர் ஜி
Delete//ஏனோதானான்னு ட்யூக் மாதிரியே சரியாத்திட்டமிடாமலே கதாசிரியர் கதை சொல்ல திட்டமிட்டிருக்கிறார் எனக்கு சுகிக்கலை// எனக்கும்தான். கரூர் ராஜ சேகரன்
ReplyDelete//டிசம்பரில் ஜனவரி உறுதி//சகோ. ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு, எனக்க்கும் ஆசையைக் காட்டறீங்களே. இப்பவே நவம்பர் புத்தகங்கள் இன்னும் வராத மாதிரியே feeling..// Over to அறிவரசு ரவி சார்//.. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஆமா....நவம்பர் புத்தகங்க வரல
Deleteஅதே,அதே இராஜசேகர்...!!!
Deleteபடிச்சுட்டு, பொங்கல் லீவ்ல பொழுது போகாம, சார், சில மாதங்களாக புத்தகமே வரலியே நவம்பர் புத்தகங்கள் எப்ப அனுப்புவீங்கன்னு தலீவர் லெட்டர் போடச் சொன்னார்னு பதிவு போடும் நிலை வந்துருமோன்னு பயமாயிருக்கு.இனிமேல்டிசம்பரில் டிசம்பர், ஜனவரியில் ஜனவரிஎன்பதே ரொட்டீன் என்பதாகப் பார்த்துக் கொள்ளுங்கள் சார். ரின் டின்கேனாகிடுவோமோன்னு பயமாயிருக்குது. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteராஜசேகரன் சார் பயப்பட வேண்டாம். பொங்கல் லீவுக்கு டெக்ஸ் வருகிறார். லயன் லைப்ரரி. ஜனவரி முழுதும் புத்தகங்கள் உண்டு
Delete:-)))
Deleteசர்ப்ரைசா கூடுதலாக ஒரு புக்குண்டாம்....அத என் வாயால் சொல்ல மாட்டேன்
Deleteஎன்னுடைய பெயர் புரைபலில் புகைப்படத்தை காணாமல் போக செயலர் செய்வினை செய்தாரா..
ReplyDeleteஎன ஷெர்லக் விசாரிக்க நடவடிக்கை..?!
இளவரசரயே காணமே
Deleteடிசம்பர் இதழ்களுக்காகக் காத்திருக்கின்றோம்.
ReplyDeleteஇன்றோடு S70s முன்பதிவு முடியுது நண்பர்களே. முன்பதிவு செய்யாத நண்பர்கள் விரைந்து முன்பதிவு செய்திட வேண்டுகின்றேன்.
ReplyDeleteமுன்பதிவு சரியான இலக்கைத் தொட்டுவிட்டதா என்று தெரியவில்லை.
2023லும் S70s தொடருமா என்று அறிய மனது பதைபதைக்கிறது.
// முன்பதிவு சரியான இலக்கைத் தொட்டுவிட்டதா என்று தெரியவில்லை. //
Deleteவெற்றிகரமாக இலக்கை நெருங்கி விட்டோம்...
// 2023லும் S70s தொடருமா என்று அறிய மனது பதைபதைக்கிறது. //
Deleteகண்டிப்பாக வரும்...
புத்தக வடிவமைப்பும்...அந்த பிரம்மாண்டமும் வந்த பின்னர் நம்ம குழுவே அலரும்...வெற்றி நிச்சயம்....சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெசல் போல பிரம்மாண்ட வெற்றி நிச்சயம்
Deleteசார் ஸ்மாஷிங் 70's பதிவுத் தேதி நீட்டிக்கப் படுமா?
ReplyDeleteEdi Sir..
ReplyDeleteSmashing 70 - 2023 லயும் வந்தே ஆகணும். ஆமா..சொல்லிப்புட்டேன். ..
ஹ்ம்ம் இன்னும் லோட் மோர் கூட வரவில்லை எப்பொழுது அடுத்த பதிவு வந்து நாம் லட்டு பற்றி தெரிந்து கொள்வதோ
ReplyDeleteஹிஹிஹி அதே அதே
Deleteசார் 70 பற்றிய சந்தேகங்கள்.
ReplyDeleteஇதற்கு முன்பு பதில் சொல்லிவிட்டீர்களா என்றும் தெரியவில்லை. அப்படி கூறி இருந்தால் நண்பர்கள் கூறவும்.
70 கண்டிப்பாக முன்பதிவுக்கு மட்டும் தானா?
முன் பதிவு முடிந்ததும் வாங்கவே முடியாதா?
வாங்கினால் கண்டிப்பாக 4 புத்தகமும் சேர்த்து தான் வாங்க வேண்டுமா?
மாயாவி மட்டும் அல்லது காரிகன் மட்டும் என்று தனியாக வாங்க முடியாதா?
புத்தகவிழாக்களில் தனியாக விற்பனைக்கு வருமா?
முன் கூட்டிய நன்றிகள்.
மாயாவி?? Are you referring வேதாளர்?
Deleteமன்னிக்க பரணி. ஆம் வேதாளர் தான்
Deleteஎன்ன கிருஷ்ணா இதுக்கு எல்லாம் மன்னிப்பு :-)
DeleteMe 199
ReplyDeleteஎப்பூடி நம்ப கமெண்ட் தான் 200 வது :-)
DeleteAnd...
ReplyDeleteme also 200..
நான்தான் 200 கமெண்ட் போட்டேன். - நேரம் 17:57 :-)
Delete