Wednesday, November 03, 2021

தீபாவளியின் நிறம் மஞ்சள் !

 நண்பர்களே,

வணக்கம். உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் ! பெரும் தேவன் மனிடோவின் அருளோடு இல்லம்தோறும் மகிழ்வும், ஆரோக்கியமும் , வளமும் நிலைக்கட்டும் !! இங்கே எங்கள் சிறுநகரத்தினில் கண்ணில்படும் கடைசிநிமிட உற்சாகங்கள் - தமிழகமெனும் ஒரு பானைச்சோற்றுக்கான பதமென இருப்பின், ஊரெங்கும் இந்நேரம் தெறிக்க விட்டுக் கொண்டிருப்பீர்களென்பது உறுதி ! கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பின்பாய் ஜனம் இப்படியொரு உத்வேகத்துடன் பொங்கியெழுவதை நிறைய குஷியோடும், கொஞ்சூண்டு கிலியோடும் பார்க்கும் இந்த வேளையினில், இக்கட என்ன எழுதுவதென்ற யோசனை எனக்குள் ! 

ஒரு நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பானதொரு தீபாவளி என்று ஞாபகம் ; அக்கா, தங்கை, தம்பி குடும்பங்களென அத்தினி பேரும் குற்றாலத்திற்கு ஒட்டு மொத்தமாய்ப் போயிருந்தோம் ; ஆனால் என் மண்டையோ - "தீபாவளிப் பதிவு" என்பதிலேயே நிலைகொண்டிருந்தது ! புதுசாய் லவ்ஸ் பண்ணும் விடலையைப் போல, கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பிலும், ரூமுக்கு ஓடிப் போய் மாங்கு மாங்கென்று டைப்படித்துக் கொண்டிருந்தேன் ! நான் அடிக்கும் கூத்துக்கள் ஆத்துக்காரிக்கு நிரம்பவே பரிச்சயம் என்பதால் - "லூசு மாமூலான பிசியில் உள்ளதென்று" கண்டுகொள்ளாது விட்டு விட, பெருசாய் சேதாரங்களின்றி அன்றைய பதிவையும், பொழுதையும் ஒப்பேற்றி முடித்து விட்டேன் ! 'ரைட்டு...பதிவைப் போட்டாச்சு ; இனி மக்களின் பின்னூட்டங்களைப் பார்க்கலாம்னு' பாத்தாக்கா - அன்னிக்குப் பொழுதில் கவிஞரை கூட ஆளைக் காணோம் ! பலமாய் ஈயோட்டிய நாளின் இறுதியில் மொத்தமாய் நாற்பதோ என்னவோ தான் தேறியிருந்தது பின்னூட்ட response ! 'அவசரமா ரூமுக்குத் திரும்புற முனைப்பு இருந்திருக்காங்காட்டி, பார்டர் கடையிலே இன்னும் ரெண்டு புரோட்டா கூடுதலா சாப்ட்ருக்கலாமோ ? ' என்ற ஆதங்கத்தோடு படுக்கையில் விழ ரெடியான போது தான் தெரிந்தது - அன்றைக்கு பகலிலும், மாலையிலும் - தல ; தளபதி ; தலைவர் என அத்தினி பேரது படங்களும் டி-வியில் போட்டுத் தாக்கியுள்ளனவென்று !! "தேவுடா....இது மொதல்லேயே தெரிஞ்சிருந்தா நானே படம் பாக்கக் குந்தியிருப்பேனே ? " என்று மண்டையில் தட்டிக் கொண்டேன் ! So தீபாவளிக்கு தேவை நிதானம் - தொந்தி நிரப்புவதிலும் சரி, பதிவினைத் தாக்குவதிலும் சரி - என்பது அன்றைக்கு புரிந்தது ! 

நாளைக்குக் காத்திருப்பது என்ன படமென்று தெரியில்லா ; ஆனால் OTT தளங்களும் சரி, சேனல்களும் சரி, பொரியோ பொரியென்று பொறித்து விடுவார்கள் எனும் போது - யீ நாயர் டீக்கடையினில் சாயாவை அளவோடு ஆத்துவதே மதியென்று புரிஞ்சூ !! In any case - டிசம்பரின் பணிகள் & FFS இதழின் பணிகள் தலை தெறிக்கும் வேகத்தினில் ஓடி வரும் வேளையினில் இந்த விடுமுறைப் பொழுதுகளை அங்கு செலவிட்டால் - ஆபீசுக்கே அந்த மட்டுக்கு டென்க்ஷன்  குறையும் என்பதும் மண்டையில் உறைக்கிறது ! So சிக்கென்ற ரிஷாப் பண்ட் இன்னிங்க்சைப் போல இந்தப் பதிவினையும் அமைக்க முயற்சிக்கலாமா folks ?

தீபாவளி & TEX !! எப்படியேனும் பண்டிகைக்கு முன்பாக உங்கள் அனைவரிடமும் 'தல' சென்று சேர்ந்திருக்க வேண்டுமென்பதே எனது தலைக்குள் அக்டோபர் முழுமைக்கும் குடியிருந்த வேகம் ! அதிலும் சந்தா நண்பர்களுக்கு மாத்திரமன்றி, கடைகளில் வாங்குவோருக்குமே புக்ஸ் கிட்டிட வேண்டும் என்பதால் - கடைசி 3 நாட்களும் ஆபீசில் நம்மாட்களை நிம்மதியாய் அமரவே விடவில்லை ! பைண்டிங்குக்கு ஒரு ஆள் ; அட்டைப்பெட்டிகளை வாங்கி வர இன்னொரு ஆள் ; ஸ்டிக்கர் ஓட்ட ஒரு ஆள் ; அட்ரஸ் ஓட்ட ஒரு ஆள் ; கூரியர்களுக்கு ஒரு ஆள் ; லாரி ஷெட் போக ஒரு ஆள் - என்று அத்தனை பேருக்கும் கால்களில் சக்கரம் மாட்டி விடாத குறை தான் !! And ஆண்டவன் புண்ணியத்தில் கூரியர்கள் ; டிரான்ஸ்போர்ட் என அத்தனையுமே இம்முறை ஒத்துழைத்திருக்க - தல ஒரு ரவுண்டு அடித்து முடித்து, "மறு ஆர்டர்கள்" ரவுண்டுக்கு ரெடியாகும் சூழல் கூட சாத்தியமாகியுள்ளது !! அது மாத்திரமின்றி, கலர் ; black & white ; மௌன மொழி சாகசம் - என 3 கதைகளுமே களைகட்டியிருக்க, நிம்மதிப் பெருமூச்சு எங்களிடம் ! ஆண்டின் எந்தப் பொழுது லயித்தாலும், லயிக்காது போனாலும் - தீபாவளி மட்டும் சொதப்பிடின் - "வைச்சு செய்வீங்க !!" என்பதை 2014 முதலே அறிவேன் ! (Remember "இரவே..இருளே..கொல்லாதே" ?!!!) So அந்த பயம் ஒவ்வொரு பண்டிகைப் பொழுதுக்கும் தொடர்கதையாவதுண்டு and நீங்கள் தரும் thumbs up அடையாளங்களே - எங்களுக்கு நிஜமான தீபாவளிகள் ! இம்முறையும் தலை தப்பியதற்கு 'தல'யே தலையாய காரணம் எனும் போது தலை வணங்குகிறோம் - நம் தலைமகனுக்கு !! (ஆத்தாடி...ஒரே வரியில் எத்தன தல ?!!) ஆக (நமது) தீபாவளிகளுக்கோர் புது வர்ணம் தருவது மஞ்சசொக்காய் TEX & டீம் தானெனும் போது - இந்த தீபாவளிப் பதிவிலும் அவரைத் தவிர்த்து வேறு யார் பற்றிய சேதியினைப் பகிர்வது பொருத்தமாகிடக்கூடும் ? 

சேதி இது தானுங்க ! 2022 அட்டவணையினை உங்களிடம் ஒப்படைத்தாச்சு ;  பெருசாய் சாத்துக்களின்றி எனது தேர்வுகள் ஒரு மாதிரி ஓ.கே. ஆகி விட்டுள்ளன ! அட்டவணையினில் இரண்டு விஷயங்கள் கவனத்துக்குரியவை :

நம்பர் 1 : ரெகுலர் சந்தா தடத்தினில் மறுபதிப்புகளே லேது !! 

நம்பர் 2 : 'தல' டெக்ஸுக்கு அட்டவணையினில் நாம் ஒதுக்கியிருந்ததோ 9 ஸ்லாட்ஸ் மட்டுமே ! 

ஆனால் "மாதம்தோறும் 'தல' தரிசனமிருக்கும் !" என்று சூடத்தை அணைத்து சத்தியம் செய்யாத குறையாய் சொல்லி வைத்திருந்தேன் !! And இதோ - ஜனவரியிலேயே நான் கொடுத்திருந்த வாக்கை நிறைவேற்றும் அவசியம் எழுந்து நிற்கின்றதே - simply becos ஜனவரி 2022-ன் துவக்கத்தில் வெளிவரக் காத்துள்ளது முத்துவின் பொன்விழா ஆண்டுமலரான FFS மட்டுமே ! And ஜனவரியின் இறுதிக்கு முன்பாய் SMASHING '70s சார்பில் வேதாளன் ஸ்பெஷல்-1 வந்திருக்கும் ! ஆக ஆண்டின் முதல் மாதத்திலேயே TEX-க்கு (அறிவிப்புகளில்) ஸ்லாட்ஸ் நஹி ! என்ன தான் அதிரடியாய் புது நாயகர்கள் ; கிளாசிக் நாயகர் (வேதாளன்) என்றெல்லாம் ஜனவரிக்கு மெருகூட்டினாலும்  TEX இல்லாது போயின் - something lacking என்றே இருக்குமல்லவா ? தவிர, அவ்வித சூழலில்  தலீவருக்கு இடுப்பில் வெறுமனே வேப்பிலை கிளையைக் கட்டி அனுப்பி மறியல் செய்யச் சொல்லி, சிவகாசியையே ஸ்தம்பிக்கச் செய்யும் வாய்ப்புகள் பிரகாசம் என்பதால், அவசரமாய் யோசித்தேன் என்ன செய்வதென்று ?! இருக்கவே இருக்குது நமது புத்தக விழா ஸ்பெஷல் formula ! 

 • ஜனவரியில் சென்னையில் புத்தக விழா இருந்து ; அங்கு நமக்கு ஸ்டால் கிடைக்கவும் செய்தால் ரைட்டு !!
 • Maybe ஒரு துரதிர்ஷ்ட சூழலில் விழா இல்லாது போகும் பட்சத்தில், இருக்கவே இருக்கு நமது மொட்டை மாடி ஆன்லைன் விழா !! 

புத்தகவிழா எதுவாயிருப்பினும் ஜனவரியினில் நம்மவருக்கு களம் காத்துள்ளது - 2 அதிரடி முழுவண்ண கிளாசிக் சாகசங்களின் தொகுப்பாய் !! Here are details :

*The LION LIBRARY - ஜனவரி 2022 முதலாய் ...... !

*நாம் அட்டவணைகளில்  அறிவித்திரா இதழ்களை அவ்வப்போது குறுக்காலே நுழைக்கும் இதழ்களை, தற்சமயமாய் - "சன்ஷைன்  லைப்ரரி" லேபிலில் வெளியிட்டு வருகிறோமல்லவா - இனிமேற்கொண்டு அவையெல்லாமே "லயன் லைப்ரரி" என்ற அடையாளம் தாங்கி வந்திடும் ! 

*லயன் லைப்ரரியின் முதல் இதழாய் வரவுள்ளது - TEX க்ளாசிக்ஸ் - 1 !!

*இதனில் 352 பக்கங்கள் இருந்திடும் ; முழுக்கவே முழுவண்ணம் ; ஹார்ட் கவர் ; 2 க்ளாஸிக் சாகசங்களுடன் !

*இடம் பிடிக்கவுள்ள அதிரடி # 1 - உங்களின் நெடுநாளைய கோரிக்கையான "பழிக்குப் பழி " !! In full color !!

*இடம் பிடிக்கவுள்ள அதிரடி # 2 - "கானகக் கோட்டை !" - லயன் ஜாலி ஸ்பெஷல் இதழில் இடம்பிடித்த டெக்ஸ் & கார்சன் அதிரடி மேளா இது ! இதுவும் in full color !

*எவ்வித முன்பதிவுகளும் இதற்குத் தேவை இராது ; நிதானமாய் ; உங்களுக்கு வசதிப்படும் சமயத்தில், வாங்கிக் கொள்ளும் விதத்தில் கையிருப்புகளைத் திட்டமிட்டுக் கொள்வோம் ! உங்களுக்கு வசதிப்படும் சமயத்தில் நிதானமாய், சாவகாசமாய் வாங்கிக் கொள்ளும் luxury இங்கிருக்கும் ! So "சந்தா கட்டாதீங்க ; முன்பதிவு பண்ணாதீங்க !" என்று மாய்ஞ்சு மாய்ஞ்சு குரல் கொடுத்துக் களப்பணியாற்றும் "நண்பர்களுக்கும்" லைட்டாக ரெஸ்ட் தந்தது போலிருக்கும் தானே ?!

* டெக்ஸ் என்பதால் தயக்கமின்றி முகவர்கள் வாங்குவர் and therefore இவை கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும். So முகவர்களிடம் வாங்கி வரும் நண்பர்கள் அதனையே தொடர்ந்திடலாம் ! 

* லயன் லைப்ரரியில் பழசுகள் மாத்திரமே என்றிராது ; புதுசும் வந்திடும் - சந்தர்ப்பங்களுக்கேற்ப !! 

லயன் லைப்ரரி இதழ் # 2 - "உயிரைத் தேடி" ! In full color !!


So இந்த அறிவிப்போடு அடியேன் இப்போது கிளம்புகிறேன் - "இரத்தப் படலம்" பணிகளில் ஐக்கியமாகிட !! 

அதற்கு முன்பாய் - caption போட்டியின் TOP 3 எவையென்று தேர்வு செய்திட - போன வருஷம் இதே வேளையில் நடுவர்களாய் செயலாற்றிய 2 அசலூர் or rather அசல்நாட்டு ஜட்ஜையாக்களை மேடைக்கு அழைக்கிறேன் ! நண்பர் Radja & மஹிஜி ...நம்ம ஜட்ஜ் ராய் பீன் போலவொரு தீர்ப்பைச் சொல்லிப் போடுங்க ப்ளீஸ்  ! வெற்றி பெறும் 3 நண்பர்களுக்கு - தலா ஒரு TEX க்ளாசிக்ஸ் - 1 , நமது அன்புடன் !!

Bye all....Have a lovely & safe Diwali !! See you around !!

And நவம்பர் இதழ்களின் அலசல் தொடரட்டுமே folks ?!

272 comments:

 1. தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  ReplyDelete
 2. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்💐💐💐💐💐💐

  ReplyDelete
 3. வணக்கம் நண்பர்களே.

  ReplyDelete
 4. ஆசிரியர் அவர்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. பெட்ரோல் விலை 5 குறைந்ததை விட டெக்ஸ் மறுபதிப்பு அறிவிப்பு லயன் லைப்ரரி 1 மனதை பூரிப்படைய வைத்துவிட்டது நன்றிகள் பல.

  சார் அப்படியே அந்த காரசனின் கடந்த காலம் கலரில் ...

  ReplyDelete
  Replies
  1. கா.க.கா எல்லாம் மறுபதிப்பு லிஸ்டில் பின்னாடி இருக்கு சார்...

   Delete
  2. கவலைப் படேல் கிருஷ்ணா !!

   Delete
  3. கவலைப் படேல் கிருஷ்ணா !!

   நன்றிகள் பல சார்

   Delete
  4. சார் மேக்சி சைசுல...ஹார்டு பௌண்ட்ல ...விலய பத்தி கவலைப்படாம...தலையின் மிகச்சிறந்த கதைக்கு சிறப்பு சேக்குறோம் சிறப்பா

   Delete
  5. அன்புள்ளம் கொண்ட ஆசிரியர் சமூகத்திறகு,

   இப்பவும் வரவுள்ள கா.க. காவில முதன்முதலில் வந்த வசனங்கள் மற்றும் பாடல்களுடன் வந்தால் சிறப்பாக இருக்கும் என எங்களின் தானை தலிவர் அபிப்பிரயப்படுகிறார்..

   இப்படிக்கு
   தலிவரின் ஆணைப்படி கருவூர் தொண்டன்..

   Delete
 6. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் !!

  Lion Library announcements are super sir ! I welcome Tex Hardcover Color classics any time !

  ReplyDelete
 7. நண்பர்கள் அனைவருக்கும் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. அனைவுருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. ஆசிரியர் நண்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. What makes this a Smashing Diwali also is that January for the first time has 4 different Hard Bounds for different reasons Sir :-)

  GUNDU BOOK MAADHAM !!!

  ReplyDelete
 11. ஹைய்யா புதிய பதிவு......

  ReplyDelete
 12. இன்னாது ராஜாக்கு ஜி கிடையாது. எனக்கு மட்டும் ஜியா? கோபத்துல போயி நாலு லட்டு தின்னுட்டு வரேன்.

  லயன் லைப்ரரி 1: 😍😍😍😍😍

  லயன் லைப்ரரி 2: 🥰🥰🥰🥰🥰🥰

  ReplyDelete
  Replies
  1. ராஜா"ஜி"யும் ; மஹி தம்பியும் மேடைக்கு வரவும் !! ஆங்...இப்போ கரீட்டா கீதா சார் ?

   Delete
  2. மனசு குளுகுளுன்னு இருக்குதுங்க சார்.

   Delete
  3. :-)))


   சூப்பர் ஷெரீப் அண்ணா..:-)

   Delete
  4. ///இன்னாது ராஜாக்கு ஜி கிடையாது. எனக்கு மட்டும் ஜியா?///

   ஆளு பாக்குறதுக்கு ஒசரமா தாட்டியமா இமயமலை சாமியாரர் கணக்கா இருக்கியளா.. அத பாக்கையில மருவாதி தன்னால வந்துடுதுங் மச்சோ..!

   Delete
 13. // *The LION LIBRARY - ஜனவரி 2022 முதலாய் ...... ! //

  Good news! Unexpected announcement! A Real Surprise to all of us :-)

  ReplyDelete
 14. செம்மையான அறிவிப்புகள்

  ReplyDelete
 15. வந்துட்டேன் !

  ReplyDelete
 16. // * லயன் லைப்ரரி இதழ் # 2 - "உயிரைத் தேடி" ! In full color !! //

  Super duper news! Waiting :-)

  ReplyDelete
 17. அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் சார்

   Delete
 18. // இதனில் 352 பக்கங்கள் இருந்திடும் ; முழுக்கவே முழுவண்ணம் ; ஹார்ட் கவர் ; 2 க்ளாஸிக் சாகசங்களுடன் ! //
  அட்டகாசம்,அருமையான அறிவிப்பு சார்...

  ReplyDelete
 19. // லயன் லைப்ரரி இதழ் # 2 - "உயிரைத் தேடி" ! In full color !! //
  சிறப்பு,சிறப்பு...

  ReplyDelete
 20. ஆசிரியர்-மற்றும்-நண்பர்கள் அனைவருக்கும் தீபஒளித்திருநாள் வாழ்த்துக்கள்-- iii

  ReplyDelete
 21. // புத்தகவிழா எதுவாயிருப்பினும் ஜனவரியினில் நம்மவருக்கு களம் காத்துள்ளது //
  ஜனவரி நடுவாக்கில் பொங்கல் விடுமுறையிலா சார்...!!!

  ReplyDelete
  Replies
  1. சென்னையில் விழா உள்ளதா ? இருப்பின், நமக்கு ஸ்டால் கிடைக்கிறதா ? என்பதைப் பொறுத்துத் திட்டமிட்டுக் கொள்வோம் சார் ! இவை மறுபதிப்புகளே எனும் போது தயாரிப்பில் எனக்குப் பெரிதாய் நேரம் பிடிக்காது !

   Delete
 22. Replies
  1. // அடியேன் இப்போது கிளம்புகிறேன் - "இரத்தப் படலம்" பணிகளில் ஐக்கியமாகிட !! //

   விஜயன் சார், கொஞ்ச நேரத்தில் வயிற்றில் புளியை கரைத்து விட்டீர்கள் :-) தெளிவா நினைவோ ஒரு பறவை கதை பணிகளில் ஐக்கியமாகிட என்று! ;-)

   Delete
  2. பயப்பட ஒன்றுமில்லை சார் ; அங்கே நமத்துப் போன பட்டாசின் நிலை தான் !

   Delete
 23. // உங்களின் நெடுநாளைய கோரிக்கையான "பழிக்குப் பழி " !! In full color !! //
  டாக்டர் சுந்தர் சார் உட்பட பலபேர் இதை ரொம்ப நாள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்,அனைவரும் ஹேப்பி அண்ணாச்சி...

  ReplyDelete
 24. Replies
  1. வேளை வரும் போது அறிவிப்புகளும் வரும் நண்பரே !

   Delete
 25. சார் அந்த லயன் library ஒன்றும், இரண்டும் ஒன்றாகவே வந்து விடுமா? ஜனவரியில்??

  ReplyDelete
  Replies
  1. ஏனுங்க சார் இந்தக் கொலை வெறி ?

   Delete
  2. ஓகே ஓகே சார் கொஞ்சம் குஷி அதிகமாகி விட்டது. கண்ட்ரோல் செய்து கொள்கிறேன்.

   Delete
  3. // கொஞ்சம் குஷி அதிகமாகி விட்டது //
   உங்களை இன்றைக்கு கிச்சன் உள்ளே வரவேண்டாம் என சொல்லிட்டாங்க போல தெரிகிறது குமார் :-)

   Delete
 26. // இடம் பிடிக்கவுள்ள அதிரடி # 2 - "கானகக் கோட்டை !" //
  இது வர்றது மகிழ்ச்சிதான் சார்,அதே நேரத்தில் டெக்ஸ் மறுபதிப்பு லிஸ்டில் இதெல்லாம் பின்னாடி இருந்ததா நினைவு,டாப்பில் இருக்கற கதைகள் பின்னர்தானா,சீனியாரிட்டி லிஸ்டில் கானகக் கோட்டை முந்தி வந்தது வியப்பு...

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே சொன்னது தான் சார் - கிடைக்கச் சிரமமான ஸ்பெஷல் இதழ்களுக்குள் இடம்பிடித்திருக்கும் TEX சாகசங்கள் க்யூவில் முந்திடுகின்றன !

   Delete
  2. ஓகே சார்,மகிழ்ச்சி...

   Delete
  3. வருவதை கொண்டாடுவோமே அறிவரசு :-) கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணம் இருக்கும்!

   Delete
  4. // சரிங்ணா... //

   புரிதலுக்கு நன்றி திரு.அறிவரசு அவர்களே :-)

   Delete
  5. //ஏற்கனவே சொன்னது தான் சார் - கிடைக்கச் சிரமமான ஸ்பெஷல் இதழ்களுக்குள் இடம்பிடித்திருக்கும் TEX சாகசங்கள் க்யூவில் முந்திடுகின்றன !//

   ஓகே சார்...
   மகிழ்ச்சி...

   Delete
  6. // திரு.அறிவரசு :-) //
   அண்ணா ஏனுங்ணா இந்த கொலைவெறிங்ணா...!!!

   Delete
 27. தீபாவளி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 28. // எங்கள் சிறுநகரத்தினில் கண்ணில்படும் கடைசிநிமிட உற்சாகங்கள் - தமிழகமெனும் ஒரு பானைச்சோற்றுக்கான பதமென இருப்பின், ஊரெங்கும் இந்நேரம் தெறிக்க விட்டுக் கொண்டிருப்பீர்களென்பது உறுதி //

  தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் மாவட்டங்களில் தீபாவளி உற்சாகம் எல்லோர் முகத்திலும் தெரிகிறது சார், மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளுக்கு படைஎடுக்க ஆரம்பித்து விட்டார்கள் முகத்தில் மாஸ்க் உடன்!! தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட மீண்டும் மக்கள் தயாராகி விட்டார்கள் என சொல்லலாம்!

  ReplyDelete
 29. ஜனவரி மாதம் அதிரடி மாதம் போல,மூன்று ஹார்ட் பைண்டிங் இதழ்கள்...
  2022 துவக்கமே அசத்தலாய் அமைவது மகிழ்ச்சி...
  இது காமிக்ஸின் பொற்காலமாய் போற்றப்படட்டும்...

  ReplyDelete
  Replies
  1. //மூன்று ஹார்ட் பைண்டிங் இதழ்கள்...//

   மூன்றல்ல....4 சார் !

   Delete
  2. 4 alla 5 sir...
   1. FFS 1
   2. FFS 2
   3. S70
   4. Tex - Lion Library
   5. Uyirai Thedi

   Delete
  3. உயிரை தேடி அந்த மாதம் அல்ல நண்பரே..

   பிறகு...:-)

   Delete
 30. // நண்பர் Radja & மஹிஜி //

  இனிமேல் இப்படி கூட நீங்கள் சொல்லலாம் நண்பர் திரு.Radja & திரு.மஹி...நம்ம ஜட்ஜ்

  ReplyDelete
  Replies
  1. அது சரிதான் பரணி.!
   ஆனா உயர்திரு மஹிஜி மாதிரி வயதும் அனுபவமும் முதிர்ந்த பெரியோரை முழுப்பெயரையும் குறிப்பிட்டு முன்னாடி பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியன்னு போட்டு.. பின்னாடி அவர்கள் னு சேத்தணும்.. முடிஞ்சா முன்னாடி அஞ்சாறு பட்டமும்.. பின்னாடி (படிச்சிருக்குதோ இல்லையோ) அஞ்சாறு டிகிரியும் சேத்தணும்.!

   அதுதான் பெரியவங்களுக்கு குடுக்கிற சரியான மரியாதையாக இருக்கும்.!
   ரட்ஜா நம்ம செட்டுன்றதால நண்பர் ரட்ஜான்னு குறிப்பிடலாம்.. தப்பில்லே.!

   Delete
  2. //அதுதான் பெரியவங்களுக்கு குடுக்கிற சரியான மரியாதையாக இருக்கும்.!
   ரட்ஜா நம்ம செட்டுன்றதால நண்பர் ரட்ஜான்னு குறிப்பிடலாம்.. தப்பில்லே.!//

   அதே அதே :-)))

   Delete
 31. தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 32. எடிட்டர் சார் Tex ன் விற்று தீர்ந்த 3 புக் கிடைக்க வாய்ப்புண்டா.

  ReplyDelete
  Replies
  1. சென்னைப் புத்தக விழாவுக்கு முன்பாய் நெஞ்சே எழு & பிரளயப் பயணம் ரெடியாகிடும் நண்பரே !

   Delete
  2. மிக்க நன்றி சார்.

   Delete
 33. ஆசிரியரே டெக்ஸ் வில்லரின் எமனுடன் ஒரு யுத்தம் வரும் வருடமே களம் காண வாய்ப்புள்ளதா

  ReplyDelete
 34. தல தீபாவளிக்கு அடுத்து தல பொங்கல்..
  அருமை... ����

  ReplyDelete
 35. அன்பு ஆசிரியருக்கு...
  காமிக்ஸ் ஸ்நேகங்களுக்கு...

  புதிதாக உதயமாகும்
  "லயன் லைப்ரரி"க்கு வாழ்த்துக்கள்.

  சத்தியமா முடியல சார்.
  ஆன்லைன் புக் பேர்ல இருந்து பாக்குறேன்,
  லயன் 400, தீபாவளி மலர், முத்து 50,சாமோஷிங் 70, இப்ப க்ளாசிக் டெக்ஸ்.
  கொஞ்சம் மூச்சு விட டைம் குடுங்க சார்.
  5 தீபாவளியை ஒரே நேரத்தில் கொண்டாடிடும் சந்தோஷம்.
  தொடர்ந்து இந்த மாதிரி மறு பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.

  ஆமா சார்...முத்து 50 ல் 4 வதாக ஒரு லட்டுனு, சஸ்பென்ஸ் வைத்திருந்தீங்க,
  அது இன்னும் அறிவிக்கவே இல்லை சார்.
  என்னவா இருக்கும்?.

  சந்தா கட்டுவது வேஸ்ட்ங்கறது மட்டுமில்ல,
  எந்த கதை விமர்சனம் செய்தாலும்,
  அதை "அவர்கள்" விருப்பப்படி தான் போட வேண்டும் என்ற முட்டாள்தனமாக பேசுபவர்கள் அதிகமாகி விட்டது மகிழ்வாக உள்ளது. ஒரு கருத்து சொல்லவேண்டும் என்றால் கூட "இவர்கள்" அனுமதி வாங்க வேண்டும் போல. கர்வத்தின் உச்சகட்டம்.
  இதற்கென ஒரு கூட்டமே உள்ளது.
  அவர்கள் வேலையே யாரும் லயன் காமிக்ஸை பாராட்டி விட கூடாது.
  செய்தால் போச்சு. பல ரூபங்களிலும் ஊளையிட தொடங்கி விடுவார்கள். "இதை எப்படி நல்லாருக்குனு சொல்லலாம்" என.
  இதற்கொரு தலைவன்,அதுக்கொரு கூட்டம்.
  எங்களுக்கு பிடிக்கிறது படிக்கறோம்
  பிடிச்சவங்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கிறார்கள். இவர்களை மரியாதை குறைவாக பேச "இவர்" யார்?
  என்ற வாக்குவாதங்களே சென்ற வாரம்.

  தீபாவளி மலர் வந்துவிட்டது.
  ட்யூக் அட்டைப்படம் மிக அருமை.

  பிறகு அந்த 4 வது லட்டு?....
  லயன் குழுமத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  மீண்டும் அடுத்த பதிவில் 🌹🌹🌹

  ReplyDelete
  Replies
  1. //சத்தியமா முடியல சார்.
   ஆன்லைன் புக் பேர்ல இருந்து பாக்குறேன்,
   லயன் 400, தீபாவளி மலர், முத்து 50,சாமோஷிங் 70, இப்ப க்ளாசிக் டெக்ஸ்.
   கொஞ்சம் மூச்சு விட டைம் குடுங்க சார்.
   5 தீபாவளியை ஒரே நேரத்தில் கொண்டாடிடும் சந்தோஷம்.
   தொடர்ந்து இந்த மாதிரி மறு பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.//
   அருமை நண்பரே...இன்னும் பொங்கல் வேற இருக்கு...என்பதுகள்ல பொங்கல் மலரும் உண்டே

   Delete
  2. அனைவருக்கும் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

   பொன்ராஜ்...
   பொங்கல் மலர் வந்தாலும்,இந்த தீபாவளி மலர் போல மகிழ்ச்சி எந்த இதழிலும் வரவே இல்லை.
   அறிவிப்பு பார்த்தாலே மனசுக்குள்ள மத்தாப்பு.அடுத்த வருடம்
   பொங்கலும், தீபாவளியும் ஒரே மாதத்தில் கொண்டாடுவது நம்ம லயன் குழுமமாகதான் இருக்கும்.
   நாமெல்லாம்.

   Delete
 36. ////
  *லயன் லைப்ரரியின் முதல் இதழாய் வரவுள்ளது - TEX க்ளாசிக்ஸ் - 1 !!///

  ---அந்த 4வது லட்டு தானே சார் இது😍

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. அது வேற...இது வேற...
   மொத்தமா தோர்கள விடறதா சொன்னாரே மறந்திடுச்சா...முன்னால் பதிவ பாக்கலயா

   Delete
 37. This comment has been removed by the author.

  ReplyDelete
 38. >>EDI A : வாசகர்ஸ் , அடுத்த வருஷம் கண்டிப்பா மாதம் ஒரு Tex . என்னை நம்புங்க. என்னப்பா Tex சரிதானே ?

  >>Tex B : ஆமா ஆமா

  >>Tex C : இவரை நம்பி 12 சட்டை வாங்கிட்டோம். மாதம் ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

  சென்ற பதிவில் ��

  Tex க்கு answer இந்த பதிவில் ��


  "ஆனால் "மாதம்தோறும் 'தல' தரிசனமிருக்கும் !" என்று சூடத்தை அணைத்து சத்தியம் செய்யாத குறையாய் சொல்லி வைத்திருந்தேன் !! And இதோ - ஜனவரியிலேயே நான் கொடுத்திருந்த வாக்கை நிறைவேற்றும் அவசியம் எழுந்து நிற்கின்றதே"
  *லயன் லைப்ரரியின் முதல் இதழாய் வரவுள்ளது - TEX க்ளாசிக்ஸ் - 1 !!"

  ReplyDelete
 39. மிகப் பிரமாதமான அறிவிப்பு ஆசிரியரே தீபாவளியை முன்னிட்டு... பாராட்ட வார்த்தைகள் இல்லை மிக்க மகிழ்ச்சி. Teczine லைன் கிளாசிக் விலையை குறிப்பிட்டு இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.👌👌👌👌👌👌

  ReplyDelete
 40. நண்பர்களுக்கும், எடிட்டர் சமூகத்திற்கும், இன்னபிற நாட்டுமக்களுக்கும் இளவரசரின் தீபாவளி நல்வாழ்த்துகள்!

  'லயன்-லைப்ரரி' பற்றிய எதிர்பாரா அறிவிப்பு தீபாவளியின் உற்சாகத்தை மேலும் எகிறச் செய்கிறது!

  ராக் ஜி சொன்னபடி, ஜனவரியில் 4 ஹார்டுபெளன்டு குண்டூஸ் வரயிருப்பது தமிழ்நாட்டில் மறுபடியும் 'காமிக்ஸ் புரட்சி' ஏற்பட்டிருக்கிறதோ என்று நினைக்குமளவுக்கு ஆச்சரியப்பட வைக்கிறது! முத்து-பொன்விழா ஆண்டுன்னா சும்மாவா பின்னே..?!! ஆண்டு முழுவதும் அனல்பறக்கப் போவதை இப்போதே உணரமுடிகிறது!

  'எடுடா மேளம்..
  அடிடா தாளம்..
  இனிதான் கச்சேரி ஆரம்பம்'
  (மீதிப்பாடலை நமது இரும்பு தெய்வம் தொகுத்து வழங்குவார்)

  ReplyDelete
 41. உயிரைத் தேடிக்காக ரொம்ப நாளாக வெயிட்டிங்...பட்டாசு அறிவிப்பு சார்

  ReplyDelete
 42. எடிட்டர் விஜயன் ஸார் மற்றும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 43. சீனயர் எடிட்டர், எடிட்டர், ஜூனியர் எடிட்டர் அவர்தம் குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  🎊🎇🎆🎉🌈💥

  ReplyDelete
 44. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
  இப்படிக்கு
  சதாசிவம்
  வெள்ளியம்பாளையம்
  தாராபுரம்

  ReplyDelete
 45. நான் கேட்டிருந்த மறுபதிப்பு இதழான கானகக் கோட்டையை வெளியிடுவதற்காக ஆசிரியருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 46. ஆசிரியருக்கும் காமிக்ஸ் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 47. வணக்கம் நண்பர்களே....

  ReplyDelete
 48. வாசகப் பெருமக்களுக்கும்....

  ஆசிரியர் மற்றும் அவர் தம் குடும்பத்தினருக்கும்........


  லயன் அலுவலகப் பெருமக்களுக்கும்


  என் உள்ளங்கனிந்த தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் !!!!


  பி.சரவணன் ,
  சின்னமனூர்.
  தேனி மாவட்டம்.

  ReplyDelete
 49. லட்டு லட்டு லட்டு. தினம் ஒவ்வொரு மாதமும் டெக்ஸ் எனும் தீபாவளி லட்டு.வாழ்க லயன் நிறுவனம் அனைத்து நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🌹🌹🙏

  ReplyDelete
 50. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎇🧨🧨🪔🪔🪔

  ReplyDelete
 51. மீண்டும் அருமையான பதிவு சார்...லயன் லைப்ரரி பின்னிட்டீங்க...டெக்ஸ் பழசுன்னதுமே இம்முறை பக்ஷ்சி சரியாகவே கூவிருச்சி...நீண்டநாள் எதிர்பார்ப்பு....வண்ணத்ல...அடடா கானக கோட்டை நினைவே இல்லை...ஜாலி ஸ்பெசல் கைல இருக்கு ...இருப்பினும் புதுசா வந்ததுமே பாப்பமே...உயிர்த் தேடி அருமை..நண்பர்களின் ஏக எதிர்பார்ப்பு...இரத்தப்படலத்த என்ஜாய் பன்னுங்க....மூன்று முத்துக்கள் தீபாவளி செய்தியா...அதகளம் சார்...

  ReplyDelete
 52. இந்த டெக்ஸ் அட்டையை முன்னால் போட்டா நல்லாருக்குமோ...நம்ம வேலைகளோட....கட்டத்துக்குள்ள அடைக்காம...

  ReplyDelete
 53. அன்பு சால் காமிக்ஸ் நண்பர்களே...

  உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  J

  ReplyDelete
 54. ஜனவரியில் ஒரு காமிக்ஸ் தீபாவளி காத்துள்ளது. நன்றி ஆசிரியர் விஜயன் சார் !!!!

  ReplyDelete
 55. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  Lion Library - Nice Name Sir.

  ReplyDelete
 56. Edi Sir..இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். 2022 தெறிக்க விடுறீங்க. Lion library - Tex classic யாருமே எதிர்பார்க்காத சரவெடி அறிவிப்பு Sir. சீனியர் எடிட்டர்,Edi sir, ஜீனியர் எடிட்டர்,எங்களை மகிழ்ச்சியாக வைக்க அயராது உழைக்கும் அலுவலக பணியாளர்கள் மற்றும் என் இனிய காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் இனிய தீபதிருநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 57. Wow... Lion Library!!

  Waiting for Uyirai Thedi... a pleasent surprise it is in colour.

  Happy Deepavali Wishes to all.
  🧨🎇🎆✨🎉🧨

  ReplyDelete
 58. அனைத்து காமிக்ஸ் உறவினர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 59. காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 60. இடம் பிடிக்கவுள்ள அதிரடி # 1 - உங்களின் நெடுநாளைய கோரிக்கையான "பழிக்குப் பழி " !! In full color !!

  *இடம் பிடிக்கவுள்ள அதிரடி # 2 - "கானகக் கோட்டை !" - லயன் ஜாலி ஸ்பெஷல் இதழில் இடம்பிடித்த டெக்ஸ் & கார்சன் அதிரடி மேளா இது ! இதுவும் in full color !


  ######


  வாவ்...வாவ்...செம செம செம சார்...

  அட்டகாசமான மறுபதிப்பு தேர்வுகள் ..பொங்கல் மாதத்திலும் தீபாவளி மாதமாக கொண்டாட வைப்பது தங்களால் தான் முடியும் சார்...

  டாக்டர் சுந்தர் சார் போன்றோர் பழிக்கு பழி மறுபதிப்புக்கு பழியாய் வருடக்கணக்கில் காத்திருந்தனர் ( நானுமே )

  தீபாவளி அன்று செம மகிழ்வான செய்தியை பகிர்ந்துள்ளீர்கள் சார்..நன்றி நன்றி..

  ReplyDelete
 61. ஆசரியர் அவர்களுக்கும் ,அவர்தம் குடும்பத்தினருக்கும் ,பணியாளர்களுக்கும் ,இங்கு கூடும் அனைத்து நண்பர்களுக்கும் ,அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 62. லயன் லைப்ரரி இதழ் # 2 - "உயிரைத் தேடி" ! In full color !!


  ######


  ஆஹா ஆஹா...


  தீபாவளி இப்பொழுதே களை கட்டுகிறதே....!

  ReplyDelete
 63. காமிக்ஸ் அறிந்த கனவான்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!

  ReplyDelete
 64. ///
  *இதனில் 352 பக்கங்கள் இருந்திடும் ; முழுக்கவே முழுவண்ணம் ; ஹார்ட் கவர் ; 2 க்ளாஸிக் சாகசங்களுடன் !

  *இடம் பிடிக்கவுள்ள அதிரடி # 1 - உங்களின் நெடுநாளைய கோரிக்கையான "பழிக்குப் பழி " !! In full color !!

  *இடம் பிடிக்கவுள்ள அதிரடி # 2 - "கானகக் கோட்டை !" - லயன் ஜாலி ஸ்பெஷல் இதழில் இடம்பிடித்த டெக்ஸ் & கார்சன் அதிரடி மேளா இது ! இதுவும் in full color !///

  டபுள் டென்தவுசன்ட் வாலா...!

  ReplyDelete
 65. /// லயன் லைப்ரரியில் பழசுகள் மாத்திரமே என்றிராது ; புதுசும் வந்திடும் - சந்தர்ப்பங்களுக்கேற்ப !!

  * லயன் லைப்ரரி இதழ் # 2 - "உயிரைத் தேடி" ! In full color !!///

  மேல போய் வெடிச்சி பூப்பூவா கொட்டுமே அந்த வெடி.. (பேரு தெரியலீங் பாசு)

  ReplyDelete
 66. ///தவிர, அவ்வித சூழலில் தலீவருக்கு இடுப்பில் வெறுமனே வேப்பிலை கிளையைக் கட்டி அனுப்பி மறியல் செய்யச் சொல்லி, சிவகாசியையே ஸ்தம்பிக்கச் செய்யும் வாய்ப்புகள் பிரகாசம் என்பதால், அவசரமாய் யோசித்தேன் என்ன செய்வதென்று ?! ///

  ஏதாச்சும் ஹாலிவுட் திகில் படம் பாத்த கையோடு பதிவை எழுதுனிங்களா சார்.. கற்பனை பண்ணினாலே காய்ச்சல் வர்ர அளவுக்கு திகிலா யோசிச்சிருக்கிங்களே.!?

  ReplyDelete
 67. டியர் எடி,

  வரிசையில் குழப்பமாகிவிட்ட சன்ஷைன் லைப்ர்ரிக்கு பதில் புதிய லயன் லைப்ரரி அறிவிப்பு சரியான முடிவு. அதுவும் அதன் முதல் இதழ்களாக, டெக்ஸ் ஸ்பெஷலுடன், உயிரை தேடி கலரில் வரும் என்ற அறிவிப்பு டபுள் தூள்.

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நமது அன்பு அலுவலக பணியாளர்களுக்கும். இன்று விடுமுறை நாளை தீபாவளி டெக்ஸூடன் தொடங்குகிறேன்.

  ReplyDelete
 68. இளவரசர்க்காக

  ...
  எடுடா லயனு படிடா டெக்சு
  இனிதான் கச்சேரி ஆரம்பம் ஹான்

  ஹாஹா ஹாஹா ஹோய்
  எடுடா லயனு படிடா டெக்சு
  இனிதான் கச்சேரி ஆரம்பம்
  எடுடா லயனு படிடா டெக்சு
  இனிதான் கச்சேரி ஆரம்பம்
  படிக்கிற மனச டெக்சுல போடு படிச்சாத்தான்டா பயப்படும் நாடு
  நாடு முன்னேற பாடுபடு ஹேய்
  நாடு முன்னேற பாடுபடு

  ஆண் தாம் தைய தக்க
  பெண் தீம் தைய தக்க
  ஆண்தாம் தைய தக்க
  பெண் தானா நனா
  தாம் தைய தக்க
  ஆண் தீம் தைய தக்க
  பெண் தாம் தைய தக்க
  ஆண் தனா நனா
  பெண் தானனே தானனே தானே
  ஆண் தானனே தானனே தானே

  படிச்சு பாரு வேகம் வரும்
  தனனன
  ஓஞ்சு கிடந்தா டைகர் வரும்
  தனனன

  வெளையும் லயனு அதுதான்டா சாமி
  சந்தாவுல படிச்சா வரமே தரும்
  வேகமும் துடிப்பும் இருக்கும் வரைக்கும்
  கவலையில்லை
  டெக்சு ஸ்பைடர் போடும் நம்ப லயனுதான்
  நாட்டுக்குள்ளே ரொம்ப ரொம்ப நல்ல லயனுதான்
  இதுக்கு ஈடாக ஏதுமில்லை
  இதுக்கு ஈடாக ஏதுமில்லை  எடுடா லயனு படிடா டெக்சு
  இனிதான் கச்சேரி ஆரம்பம்
  ஹாஹாஆஅ படிக்கிற மனச டெக்சுல போடு படிச்சாத்தான்டா திருந்திடும் நாடு
  நாடு திருந்திட பாடுபடு ஹேய்
  நாடு திருந்திட பாடுபடு
  நாடு திருந்திட பாடுபடு

  தனன நனன நனன நனன
  தனன நனன நனன நனன
  தனன தனன தனன னனனனனா
  னனனனனா னனனனனா

  திருடிப் போட்டு ஏமாத்த
  அய்யோ
  கள்ளபதிப்ப போட்டு கூட்டம் வரும்
  ஆமா

  கொள்ளை அடிக்க வரும்போதுதான்டா
  ஒன் மேல புதுசாக பாசம் வரும்
  அந்த நேரம் கொஞ்சம் அசந்தா மோசம் வரும்
  கதய நீட்டி ஆசை காட்டி தூண்டி போடுவான்
  வித்த பிறகு மேலே ஏறி பாண்டி ஆடுவான்
  அவங்க பின்னால போகாதே டோய்
  அவங்க பின்னால போகாதே

  எடுடா லயனு படிடா டெக்சு
  இனிதான் கச்சேரி ஆரம்பம்
  படிக்கிற மனச டெக்சுல போடு
  போட்டாத்தான்டா உருப்படும் நாடு
  நாடு முன்னேற பாடுபடு ஹாஹாஆஅ
  நாடு முன்னேற பாடுபடு
  நாடு முன்னேற பாடுபடு
  நம்ம
  நாடு முன்னேற பாடுபடு
  ஆமா
  நாடு முன்னேற பாடுபடு

  ReplyDelete
  Replies
  1. ///திருடிப் போட்டு ஏமாத்த
   அய்யோ
   கள்ளபதிப்ப போட்டு கூட்டம் வரும்
   ஆமா

   கொள்ளை அடிக்க வரும்போதுதான்டா
   ஒன் மேல புதுசாக பாசம் வரும்
   அந்த நேரம் கொஞ்சம் அசந்தா மோசம் வரும்
   கதய நீட்டி ஆசை காட்டி தூண்டி போடுவான்
   வித்த பிறகு மேலே ஏறி பாண்டி ஆடுவான்
   அவங்க பின்னால போகாதே டோய்
   அவங்க பின்னால போகாதே////

   ஹா ஹா!! அட்டகாசம் ஸ்டீல்!! நாட்டுநடப்பை அட்டகாசமா பாட்டு கொண்டுவந்துட்டீங்களே?!!

   :))))

   இளவரசர் மகிழ்ந்தார்! பிடியுங்கள் இரும்புக்கிழியை!!

   Delete
 69. தனன நனன கூட மிஸ் பண்ணாம எழுதியிருக்கிங்களே.. என்ன ஒரு டீடிகாசன்...அருமை ஸ்டீல்.!

  இதே ரீதியில போனா இனிமே... பாடல் வரிகளுக்கு நடுவே இசைக் குறியீடுகளையும் எழுதிடுவிங்க போலயே..!

  ReplyDelete
 70. ஆசிரியர் அவர்களுக்கும், அவரது குடும்பத் தினருக்கும், அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும், சீனியர் எடிட்டர் அவர்களுக்கும், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 71. ஆசிரியர், நண்பர்கள் அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 72. ஆசிரியர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும், சீனியர் எடிட்டர் அவர்களுக்கும், நண்பர்கள் மற்றும் காமிக்ஸ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 73. ஆசிரியர் அவரது குடும்பத்தார் அலுவலக தோழர்கள் மற்றும் நம் தளத்து உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்.

   Delete
  2. 🙏🙏🙏.
   தீபாவளி நல்வாழ்த்துக்கள் குமார்.

   Delete
 74. //லயன் லைப்ரரியின் முதல் இதழாய் வரவுள்ளது - TEX க்ளாசிக்ஸ் - 1 !!

  *இதனில் 352 பக்கங்கள் இருந்திடும் ; முழுக்கவே முழுவண்ணம் ; ஹார்ட் கவர் ; 2 க்ளாஸிக் சாகசங்களுடன் !

  *இடம் பிடிக்கவுள்ள அதிரடி # 1 - உங்களின் நெடுநாளைய கோரிக்கையான "பழிக்குப் பழி " !! In full color !!

  *இடம் பிடிக்கவுள்ள அதிரடி # 2 - "கானகக் கோட்டை !" - லயன் ஜாலி ஸ்பெஷல் இதழில் இடம்பிடித்த டெக்ஸ் & கார்சன் அதிரடி மேளா இது ! இதுவும் in full color !//

  உண்மையான தீபாவளி பரிசு... சூப்பர் சார்...்

  ReplyDelete
  Replies
  1. // உண்மையான தீபாவளி பரிசு... சூப்பர் சார் // ஆமாம் ஆமாம்.

   Delete
 75. //தற்சமயமாய் - "சன்ஷைன் லைப்ரரி" லேபிலில் வெளியிட்டு வருகிறோமல்லவா - இனிமேற்கொண்டு அவையெல்லாமே "லயன் லைப்ரரி" என்ற அடையாளம் தாங்கி வந்திடும் ! //

  மிக்க நன்று விஜயன் சார். சன்ஷைன் என்கிற பேரை விட, லயன் லைப்ரரி, மினிலயன் லைப்ரரி, திகில் லைப்ரரி பேர் நன்றாகவே இசைந்து வருகிறது. டெக்ஸ் வில்லரின் இரண்டு சூப்பர் ஹிட் மறுபதிப்பு கதைகளை வரவேற்கிறேன். விற்பனையில் நிச்சய வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை...

  லயன் முத்து காமிக்ஸ் குழுவினருக்கும், ஊழியர்களுக்கும், ஆசிரியருக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 76. எடிட்டர் மற்றும் லயன் காமிக்ஸ் சொந்த பந்தங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்🎇🎇🎇🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🪔🪔🪔🪔🪔🪔🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🪔🪔🪔🪔🧨🧨🧨🧨

  ReplyDelete
 77. மறுபதிப்பு request: சாத்தான் வேட்டை. Joe Kubert's drawing style and an epic revenge tale makes it one of my favourite Lion books ever.

  ReplyDelete
 78. அடுத்த மறுபதிப்பு பழிக்குப்பழி & இரத்த வெறியர்கள் என்று சொன்னீர்கள் சார்...

  ReplyDelete
 79. /புதுசாய் லவ்ஸ் பண்ணும் விடலையைப் போல, கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பிலும், ரூமுக்கு ஓடிப் போய் மாங்கு மாங்கென்று டைப்படித்துக் கொண்டிருந்தேன் ! நான் அடிக்கும் கூத்துக்கள் ஆத்துக்காரிக்கு நிரம்பவே பரிச்சயம் என்பதால் - "லூசு மாமூலான பிசியில் உள்ளதென்று" கண்டுகொள்ளாது விட்டு விட,/

  🤣🤣

  ReplyDelete
 80. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 81. அட்டகாசமான அறிவிப்புகள் சார்.மறுபதிப்பு தேர்வுகளும் அபாரம்.எல்லாரும் பட்டாசை வெடிக்க வெப்பாங்க.நீங்க படிக்க(டெக்ஸ்) வெக்குறீங்க..

  ReplyDelete
 82. ஓநாய் ஜாக்கிரதை!
  வசனமே இல்லாத காமிக்ஸ். ஈ.வி.யின் ஆசையை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல் எனக்கும் மனநிறைவை அளித்தது. தீபாவளி மலரில் முதலிடம் இதற்கே(என்னளவில்). கதையை நான்கே வரிகளில் சொல்லிவிடலாம்தான். ஆனால் அவை காட்சி படுத்தப்பட்டிருக்கும் விதம் ஒவ்வொன்றையும் சொல்ல ஆரம்பித்தால் நாற்பது வரிகள் போதாது!
  குறிப்பாக ஓநாயின் உடல் மொழி! அதிர்ச்சி, இயலாமை,ஆக்ரோஷம்,அன்பு, பயம், வலி இந்த உணர்ச்சிகளையெல்லாம் அதன் முகம் மற்றும் கண்கள் மூலமும், வாலின் மூலமும் ஓவியர் வெளிப்படுத்தியிருக்கிறார். நடிக்க சிரமப்படும் நம்மூர் நடிகர்கள் ஓநாயை பார்த்தாவது நவரசங்களையும் வெளிப்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்! நடிகர்திலகத்துக்கே 'டஃப்' கொடுக்கும் ஓநாய் இது! கடைசியாக ஓநாய்கள் கூட்டமாக வந்து டெக்ஸை வழியனுப்புகையில் என்னுடைய சிறுவயதில் விடுமுறை நாட்களில் எங்கள் வீட்டுக்கு வந்து செல்லும் உறவினர்களை ரயில் நிலையம் சென்று சோகத்துடன் வழியனுப்பி வைக்கும் நாட்களை நினைவூட்டியது!
  இது ரோஷக்கார ஓநாய் மட்டுமல்ல! பாசக்கார ஓநாயும்கூட!

  ReplyDelete
  Replies
  1. அருமை ஏடிஆர்....நேத்து தா நானும் படிச்சேன்....சாரி சாரி பாத்தேன்....டெக்சயும் அட்டகாசமா வரஞ்சிருக்கார்....கெத்தா....அருமையான விருந்து....வசனம் வளவளன்னு இருந்தாத்தான் பிடிக்கும் என்னையையுமே ஙொய்னு சந்தோசப்படுத்தியது

   Delete
  2. செம விமர்சனம் ATR sir!!

   Delete
  3. ஈ.வி. இதெல்லாம் விமர்சனமென்று சொன்னால் என்னாலேயே நம்ப முடியாது. ஏனென்றால் விமர்சனம் எழுதுவது ஒரு கலை. அது எனக்கு வரவே வராது. படித்தவுடன் என்ன தோன்றியதோ அதை மட்டுமே சொல்லிவிடுவேன். அவ்வளவுதான்.

   Delete
 83. கமலஹாசனின் சில சமய கவிதை, தங்கப் பதக்கத்தில் சோவின் அப்பாயிஸ விளக்கம், ஸ்டீலின் சில பதிவுகள், புது மனைவி ஒரு வஸ்துவை தட்டில் வைத்து " யூட்யூப் பாத்து நானே செஞ்ச பலகாரம் .என்னன்னு கண்டுபிடிங்க"ன்னு சொல்லும்போது புதுக் கணவனின் மனதில் ஓடும் எண்ணங்கள், காது கேளாதவன் கரகரப்ரியா ராகம் பற்றி
  எழுதிய விமர்சனம் இவை எல்லாவற்றையும் சம அளவு கலந்து கொடுக்கும் வல்லமையை ஹெர்மன் பெற்றிருப்பது ஆச்சர்யம்தான் !!

  கள்ளழகர் இறங்கும் மகத்துவம் பெற்ற வைகை நதி தமிழகத்தின் மற்ற எல்லா நதிகளைப் போல் இல்லாமல் சதுப்பு நிலத்தி்ல் சங்கமம் ஆவது போல் ஒரு முறை கொன்றுவிடு வாசகர் இதயம் எனும் பெருங்கடலில் சங்கமிக்காது போன வைகை நதியாய் போனதில் வருத்தமே.

  ReplyDelete
  Replies
  1. ///கள்ளழகர் இறங்கும் மகத்துவம் பெற்ற வைகை நதி தமிழகத்தின் மற்ற எல்லா நதிகளைப் போல் இல்லாமல் சதுப்பு நிலத்தி்ல் சங்கமம் ஆவது போல் ஒரு முறை கொன்றுவிடு வாசகர் இதயம் எனும் பெருங்கடலில் சங்கமிக்காது போன வைகை நதியாய் போனதில் வருத்தமே.///

   ப்பா!! என்னவொரு உவமானம்!! பின்றீங்க செனா அனா!!

   Delete
 84. கங்கை,யமுனா,பிரம்மபுத்ரா,
  அமேஸான்,நைல்,தேம்ஸ், வோல்கா போன்ற எந்த நதிகளும் பக்கத்துல இல்லாததால)

  ஆனைவாரி ஓடைக்கு தெக்கால சொதப்பல் விமர்சன பரிபாலன நீதியரசர் சோயா பீன்

  இங்கு விமர்சன தீர்ப்புகளும் ,சி.கொ.பழக்கம், ஒ.கொ.விடு போன்ற காமிக்ஸ்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சூரணங்கள், லேகியங்களும் சுளுவா கிடைக்கும்.


  சோயா பீன்: இந்தவாட்டி புக்குங்க எல்லாம் முனை மடங்கி வரல..எழுத்து பிழைகளுமில்ல..இப்படியே போய்ட்டிருந்தா குறை சொல்றவங்க கதி என்னாவுறது? அவங்களுக்கு ஒரு நெயாயம் கிடைக்க தேவல? அதனால் சிவகாசிகாரருக்கு அபராதம் புது 30 பக்க கலர் டெக்ஸ் விமர்சன கோர்ட்டுக்கு - கோர்ட்டுக்கு மட்டும் கட்டிப்புடணும்..ஜெலுசிலுண்டோ ! கண்க்கு எழுதி வச்சுக்கோ..

  தண்டர்டாக்கர்: ஆமா..ஆமா...எனக்கும் ஒரு காப்பி..

  ஜெலுசிலுண்டோ:ஒருமுறை கொன்றுவிடு விமர்சனம் நான் எழுதுச்சு.அப்போ இந்த மாத DUKE = PUKE ன்னு எழுதறக்கு பதிலாஇந்த மாத LUKE= PUKE ன்னு தப்பா நான் எழுதிடுச்சு..அதுக்கு கோர்ட் கணக்கு பிள்ளை தண்டனை பாஞ்சு நாள் முடுஞ்சிடுச்சு..நான் கெளம்பிடுச்சு..

  சோ.பீன்: கணக்கு பிள்ளை வேலை பாக்க சொல்லோ வலது பக்க மூக்காலதான் மூச்சு வுடுணும்னு சொல்லியிருருந்தேன்...நேத்து மத்தியானம் ரெண்டு மணி வாக்கிலே இடது பக்க துவாரம் வழியா மூணு நிமிஷம் மூச்சு வுட்டதால இன்னும் பாஞ்சு நாள் தண்டனை உனக்கு..

  போவட்டும்...சிவகாசிகாரரு மொதல்ல பன்னு அனுப்பறதா சொல்லியிருந்தார்.
  ஆனாக்க சாக்லெட் அனுப்பிட்டாரு.இது மூலமா ராஜ வம்சத்தையும் பன்னை உயிர்மூச்சா வச்சிருக்கற சிலபல இளவரசர்களையும் பகைச்சிட்டாரு..
  அதுனால ஒ.நொ.ஒ.தோ
  பர்ஸ்ட் காப்பிய அச்சகத்துலேர்ந்து சுட சுட கோர்ட்டுக்கு - கோர்ட்டுக்கு மட்டும்- அனுப்பிடணும்..


  தண்டர்டாக்கர்: மெய்யாலுமே...எனக்கும் ஒரு காப்பி

  சோ.பீன்: பன்னுக்கு பதில் சாக்லேட் கொடுத்ததால அதை சாப்பிட்ட சில பேருக்கு சக்கரை ஏறிப் போனதா தகவல் வந்துச்சு..அவங்க வைத்திய செலவு ஏறிப்போனதால ஸ்மாஷிங் 70 's மொத காப்பிய இதமான சூட்டில கோர்ட்டுக்கு - கோர்ட்டுக்கு மட்டும்- அபராதமா கட்டிப்புடணும்..

  தண்டர்டாக்கர் : நெசமாலுமே..எனக்கும் ஒரு காப்பி..

  சோ.பீன்: சிரிக்கிற மாரி எழுதலாம்..ஆனாக்க அதுக்கு ஒரு அளவில்ல? தாடை சுளுக்கிக்கற அளவுக்கா? அதுவும் பக்கம் 14 படிச்சப்போ சிரிச்சதுல விலாவும் புடிச்சிகிச்சி...அதுனால டாங்கோவை மொழிபெயர்க்கறப்போ அடிச்சு திருத்தி எழுதுன ஒரிஜனல் காப்பி புத்தகத்தை கோர்ட்டுக்கு - கோர்ட்டுக்கு மட்டும்- அபராதமா கட்டிப்புடணும்...

  தண்டர்டாக்கர் : ஆமா! ஆமா ! எனக்கும் ஒரு காப்பி..

  ReplyDelete
  Replies
  1. ///சிவகாசிகாரரு மொதல்ல பன்னு அனுப்பறதா சொல்லியிருந்தார்.
   ஆனாக்க சாக்லெட் அனுப்பிட்டாரு.இது மூலமா ராஜ வம்சத்தையும் பன்னை உயிர்மூச்சா வச்சிருக்கற சிலபல இளவரசர்களையும் பகைச்சிட்டாரு..///

   யெஸ்!! ஜென்மப் பகை ஆயிடுச்சு! 😁😁😁

   Delete
 85. ஆசிரியர்கள்,பணியாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்.
  🎊🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉🎉✨✨✨✨✨✨✨

  ReplyDelete


 86. காமிக்ஸ் நண்பர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

  வெளிநாட்டில் வாழும் நமது தமிழ் சொந்தங்களுக்கு நம் தமிழ் காமிக்ஸ் இதழ்கள் அனைத்தும் ஒரு அற்புதமான உற்சாகத்தை அளிக்க வல்லவை.

  அவர்கள் குழந்தைகள் படிக்கவும், படித்தபின் சேமிக்கவும் உகந்த வெளியீடுகள்!

  வெளிநாட்டில் இருப்பவர்கள் Courier மூலம் வரவழைப்பது அதீத பணச்செலவை தவிர்க்க முடியாதபடி செய்துவிடும்.

  வெளிநாடு வாழ் தமிழ் சொந்தங்கள் ரெஜிஸ்டர் தபால் மூலம் இந்தியாவில் வாழும் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் முகவரிக்கு ஆண்டுசந்தா Rs. 5,500/- செலுத்திவிட்டு
  பின்னர் இந்தியா வந்து திரும்பும் நண்பர்கள் மூலம் இதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

  இன்றைய கால கட்டத்தில் வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் USD. 75 /- செலவிடுவது ஒரு சுமையல்ல.

  இன்றே வெளிநாடு வாழ் சொந்தங்கள் மற்றும் நண்பர்களுக்கு கிழே கண்ட
  Message ஐ What's app மூலம் அனுப்பி விடுங்கள். உங்கள் குடும்பத்தினர் அனைவரும் படித்தபின் பத்திரமாக சேமித்து வெளி நாட்டுக்கு நண்பர்கள் மூலம் அனுப்பி வைக்கலாம்.

  Please visit the website to know about the Tamil Comics tittles available now and the subscription rates for the year 2022.
  Please remit USD. 75/- and subscribe for the monthly despatch of the comics books to our indian postal address by registered post.
  We will read, store and send them safely to you through our visiting friends.

  www.lion-muthucomics.com

  உங்கள் வெளிநாட்டு தமிழ் சொந்தங்களுக்கு காமிக்ஸ் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு பேருதவி செய்த திருப்தியுடன்
  உங்கள் வீட்டில் அனைவரையும்
  காமிக்ஸ் வாசகர்களாக்கிய பெருமையும், சந்தா எண்ணிக்கைகளை உயர்த்திய மகிழ்ச்சியும் உங்களைச்ச்சேரும் !

  உங்கள் சொந்தங்களுக்கு what's app அனுப்பிவிட்டு மறவாமல் ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்த வீடியோ link அனுப்பி விடுங்கள்.

  Youtube: https://youtu.be/QaRWOUyxUB

  ReplyDelete
  Replies
  1. மௌனப் பார்வையாளர்களே உங்கள் வாட்ஸ் அப் பதிவுகளின் பலன்களை மறவாது ப்ளாக்கில் பதிவிடுங்கள் !

   நானும் எனது வெளிநாட்டு நண்பர்களுக்கு அவர்கள் குடும்பத்தினர் முகவரிக்கு
   சந்தா செலுத்த வேண்டுகோள்களை அனுப்பி விட்டேன். எனது What's app பலன்களை Blog ல் பகிர்ந்து கொள்வேன் !

   Delete
  2. அருமையான முயற்சி... வளரட்டும் இந்த நட்புபாலம்.

   Delete
  3. The link says Video Unavailable doc ! But the attempt is laudable!

   Smile has not left my lips yet post reading about 4 hard-bounds in Jan 22 yesterday :-)

   Delete
  4. https://youtu.be/nGbmJx7B8AQ

   சரி செய்யப்பட்ட வீடியோ லிங்க்

   Delete
  5. தமிழ் காமிக்ஸ் திக்கெட்டும் சென்று சேர நீங்கள் காட்டிடும் முனைப்பு பாராட்டுக்குரியது ஐயா!
   நம்மால் இயன்றதை நிச்சயம் செய்திடுவோம்!

   Delete
 87. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

  அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 88. Warm welcome to LION LIBRARY and TEX CLASSICS.1.

  ReplyDelete
 89. எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !!!

  ReplyDelete
 90. A Warm Welcome to the Lion Library !!!

  ReplyDelete
 91. தித்திக்கும் தீபாவளிக்கு முத்தான ஹார்ட் பவுண்ட் அறிவிப்புகள். அருமை. ஆங்கில ப புத்தாண்டின் (ஐம்பதாம் ஆண்டின்) முதல் மாதமே 4 ஹார்ட் பவுண்டு புத்தகங்களுடன் கலக்க வருகிறது. அற்புதம்.
  டெக்ஸ் கிளாசிக்ஸ் விலை என்னவென்று சொன்னால், தீபாவளியும் அதுவுமா பணம் செலுத்தி கொண்டாடுவோமே..

  ReplyDelete
 92. /* So "சந்தா கட்டாதீங்க ; முன்பதிவு பண்ணாதீங்க !" என்று மாய்ஞ்சு மாய்ஞ்சு குரல் கொடுத்துக் களப்பணியாற்றும் "நண்பர்களுக்கும்" லைட்டாக ரெஸ்ட் தந்தது போலிருக்கும் தானே ?! */

  சார் 

  இவர்களைப் பற்றி இனி இங்கே எழுத வேண்டாம் என்று இந்நன்னாளில் சபதமெடுங்கள். ஜனவரியில் நாலு hardbound என்பது நீங்கள் உட்பட யாருமே எதிர்பார்க்காதது - புனித மானிடோ ஒரு காமிக் காதலரே என்பதை பறைசாற்றும் ஒரு coincidence !

  நாம் நமது இலக்கு நோக்கி நகர்ந்து கொண்டே இருப்போம் - அனைவரையும் சந்தோஷமுறச் செய்வோம். மற்றதை 'பெரிய கடவுள்' பார்த்துக்கொள்வான் !

  நீங்கள் இவ்வளவு careful planning மற்றும் சலுகைகள் அமைத்த பின்னர் அந்தப் பக்கத்திலிருந்து ஒரு மாற்றமானது தெரிந்ததா - இல்லைதானே - அப்புறம் ஏன் சார் நாம் அது பற்றி நினைக்க வேண்டும்?

  நம் இலக்குகள் ஒளி நிறைந்ததாய் இருந்தால் சில விட்டில் பூச்சிகளால் ஆகப்போவதொன்றும் இல்லை என்பதால் முன்னேறிச் செல்வோம்!

  ReplyDelete
  Replies
  1. //ஜனவரியில் நாலு hardbound என்பது நீங்கள் உட்பட யாருமே எதிர்பார்க்காதது - //

   ஆகஸ்ட் வரைக்கும் எனக்குத் தெரியாதென்று வைத்துக் கொள்வோமா சார் ! 😀

   Delete
  2. /* ஆகஸ்ட் வரைக்கும் */

   Fair enough sir - but still looking from March 2020 when you took XIII in hand to revive the sagging spirits, this vantage point is simply unprecedented !

   Delete
  3. அந்த முதல் லாக்டௌன் முற்றிலுமாய் நம்மை மிரட்டியதொன்று சார் !

   அடுத்த 10 நாட்களுக்கான சம்பளம் போடவே கையில் ரொக்கமிருந்திருக்கவில்லை ! அத்தனையுமே பேப்பரில் ; கதைகளில் ; கிட்டங்கிக் கையிருப்பில் ; ஏஜெண்ட் நிலுவைகளில் சிதறிக் கிடந்தது ! And எத்தனை வாரங்களுக்கு / மாதங்களுக்கு அந்த லாக்டௌன் தொடருமென்று யூகிக்கவும் தெரிந்திருக்கவில்லை ! அந்த நொடியில் பித்தம் தெளிய எதற்கும் தயாராக இருந்தோம் ! Phew....

   Delete
  4. ராகவன் @ வரிக்கு வரி உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். எனது எண்ணமும் இதுவே. நமது குறிக்கோள் தெளிவாக இருக்கும் போது அதனை நோக்கி கவலைப்படாமல் செல்வோம்.

   Delete
 93. நம்ம அசல்நாட்டு ஜட்ஜையாக்களின் தீர்ப்பிது :

  1st Place

  Erode Vijay

  A : ஷாட் ரெடி! கேரவன்ல இருக்கற ஹீரோவை வரச்சொல்லுங்கப்பா!
  B : இதோ.. இப்ப வந்திடறேன் டைரக்டர் சார்...
  மைன்டு வாய்ஸ் : ஹூம்... சினிமாவுல ஹீரோ வேஷங்கட்டினா விதவிதமா ட்ரெஸ் போட்டுகிட்டு, கிளுகிளுப்பா ஹீரோயின்களோட டூயட் பாடலாம்னு நினைச்சு இந்தப்படத்துல நடிக்க வந்தேன்.
  யாரோ டெக்ஸு வில்லராம்.. பீரியட் ஃபிலிமாம்.. வெறும் மஞ்ச சொக்காய்களை மட்டும் மாட்டிவிட்டு, ஒரு பிஞ்ச தாடி பெரிசு கூடவே மொத்தப்படத்தையும் எடுத்து முடிச்சுட்டானுக - படுபாவிக!


  2nd Place

  SuryaJeeva

  கிட் வில்லர்: டாடி, கொஞ்சம் சீக்கிரம் வெளிய வாங்க. நானும் ரெடியாகணும்.
  B : தோ வந்துட்டேன்பா.
  C : எனக்கு என்னவோ என் சட்டையை தான் இந்த பயலும் போட்டுக்கிட்டு, மேல ஒரு சிவப்பு துண்டு போட்டு ஒட்டிக்கிறானோன்னு ரொம்ப நாள் டவுட். எப்படி க்ளியர் பண்றது, நம்ம டவுட்டை..

  3rd Place

  Thirunavukkarasu Vazhukkuparai

  A : என்னப்பா டெக்ஸ் யோசனை!
  B : 2022ல் வருசம் முழுசும் மாச மாசம் தவறாம வரேனாம். அத ஞாபகபபடுத்த தான் எடிட்டர் இப்படி முன்னாடி வச்சிருக்கிறாறோ.
  C : அதெல்லாம் இல்ல, என்ன ஒரு குரூப் துவைச்சு தொங்கபோடறதிலேயே குறியா இருக்குது. அதைத்தான் சிம்பாலிக்கா காட்டியிருக்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. மூவருக்கும் ஜனவரியில் டெக்ஸ் க்ளாசிக்ஸ் -1 நம் அன்புடன் !

   Delete
  2. அப்புறம் நமது ராய் பீனார்களுக்குமே நமது நன்றிகளுடன் தலா ஒரு லயன் லைப்ரரி அனுப்பிடுவோம் !

   Delete
  3. சூப்பர் சார் சூப்பர். பரிசு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ஜட்ஜ் ஐய்யாகளுக்கு நன்றிகள்.

   Delete
  4. வாழ்த்துக்கள் நண்பர்களே நல்ல தீர்ப்பு ஜட்ஜ் ஐயாக்களே

   Delete
  5. வெற்றி பெற்ற நண்பர்கள் மூவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

   சபாஷ் சரியான தீர்ப்பு. நீதிபதி நண்பர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

   Delete
  6. ஊஊஊஊய்ய்ய்...

   எனக்கும் டெக்ஸ் கிளாசிக்ஸ்-1 பரிசா!!! அட்டகாசமான, ஸ்பெஷல் தீபாவளி பரிசு எனக்கிது!!
   கேப்ஷனில் நான் 'ச்சும்மா ஜாலிக்காண்டி' என்று குறிப்பிட்டிருந்தாலுமே கூட, அறிவித்திருந்த பரிசு 'லயன் லைப்ரரி' முதல் குண்ண்ண்டு வெளியீடு என்பதால் 'ஒருவேளை பரிசு கிடைச்சாக் கூட வச்சு அனுபவிக்கலாம் தான்' என்று உள்ளூர ஒரு ஆசை தோன்றியதென்னவோ உண்மை தான்! இதோ அந்த ஆசைப்படியே பரிசு கிடைத்திருப்பதால், வைத்து அனுபவிக்கப்போகிறேன்!

   போட்டி நடத்தி பரிசு கொடுக்கயிருக்கும் எடிட்டர் சமூகத்திற்கும், சீக்கிரமே பரிசுகளை அறிவித்த வயதான ஜட்ஜ் அய்யாக்களுக்கும், உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும் என் நன்றிகள் பல! 🙏🙏😇😇

   Delete
 94. இந்த முப்பது வருட லயன் குழுமத்திலோடான பயணத்தில், இது தான் நான் பெரும் முதல் பரிசு. அதுவும் முதல் பரிசு பொன் விழா ஆண்டில் கிடைக்க பெருவது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. இத்தருணத்தை சாத்தியம் ஆக்கிய ஆசிரியருக்கும், ஜூரிகளுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் நன்றிகள் பல.

  கடந்த 10 நாட்களாகவே மழையில் நனைந்த காரணத்தினால் உடம்பு படுத்தி எடுக்க, FFS ல் வாசகர் பக்கத்திற்க்காக நீண்ட நாள் கனவான எனது மெகா பங்களிப்பை நிறைவு செய்து அனுப்ப முடியவில்லை. ஆனால் நாளை டியூக்கை படித்து முடித்து விட்டால் இரண்டொரு நாளில் டைப்படித்து விட அனுப்பிட இயலும். அனுப்பி வைக்கலாமா சார்.

  ReplyDelete