Powered By Blogger

Sunday, November 07, 2021

வாரம் ஒன்று....பாணிகள் மூன்று...!

 நண்பர்களே,

வணக்கம். சமீப காலமாகவே எனக்கொரு ஆதங்கமுண்டு ! வேறொன்றுமில்லை - இப்போதெல்லாம் நான் வாசிப்பதையும், மனப்பாடம் செய்வதையும் ஒரு நாற்பது, நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னே பள்ளிக்கூடத்தில் இருந்த நாட்களிலும் செய்திருப்பின், ஏதாச்சும் மாவட்ட first ; மாவாட்டும் first என்று சாத்தித்திருப்பேனோ - என்னவோ ?! அன்றைக்கு ஜாலியாய் சுற்றித் திரிந்தவன், இன்றைக்கு இந்த வயசில் ராப்பகலாய் மாங்கு மாங்கென்று படித்துத் திரிவது காலக்கொடுமை அன்றி வேறென்ன என்பது ? அதிலும் நம் மறதிக்கார நண்பர் XIII-ன் லேட்டஸ்ட் ஆல்பத்துக்குப் பேனா பிடிக்க வேண்டிப் போகும் போது - அசோக சக்கரவர்த்தி சாலையோரம் மரம் நட்டின புள்ளியிலிருந்தே சகலத்தையும் நினைவூட்டிக் கொள்ள வேண்டிப் போகிறது ! 

"இந்தப் பெருசு யாரு ? இந்த ஆபரேஷனுக்கு போன ஆல்பத்தில் என்ன பெயர் தந்திருந்தோம் ? இந்த பூச்சாண்டிகள் நம்மாளுக்கு எதிரிகளா ? வேண்டப்பட்டவர்களா ? "மேடையை நாறடிச்சிப்புடுவேன் ; இங்கேர்ந்து என்னை அப்புறப்படுத்திடுங்க !" என்று கதறும் சோன்பப்டி மண்டையர் நல்லவரா / வல்லவரா / டூபாக்கூரா ? " என்று ஒருவண்டிச் சந்தேகங்கள் பக்கத்துக்குப் பக்கம் தோன்ற - முந்தையது ; அதற்கு முந்தையது ; ஆறு வருஷங்களுக்கு முந்தையது - என்று எதையெதையோ அள்ளி வைத்துக் கொண்டு எழுத வேண்டியிருக்கிறது ! பற்றக்குறைக்கு இந்த ஆல்பம் இன்னமும் சினிபுக் ஆங்கிலப்பதிப்பில் வெளிவந்திருக்கவில்லை எனும் போது மொழிபெயர்ப்பினில் பஞ்சாயத்துச் சங்கிலி முருகன் போல நொடிக்கொரு சந்தேகம் எழவும் தவறவில்லை  ! ஏற்கனவே இதற்கான பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழிபெயர்ப்பினை ஒரு பிரெஞ்சு பிரஜையே செய்திருந்தார் என்றாலும், எனக்கு அதனில் முழுமையாய் திருப்தியில்லை ! So  மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்து முடித்து ஓய்வில் இருக்கும் நமது வழக்கமான மொழிபெயர்ப்பாள மேடமையும் குடலை உருவி அவரையுமே இக்கதைக்கொரு மொழிபெயர்ப்பினைச் செய்து வாங்கியிருந்தேன் ! அதன் பலனாய் எனது மேஜையில் இப்போது இறைந்து கிடப்பது தலீவரின் கதறல் கடுதாசிகளுக்குப் போட்டி தரவல்லவொரு காகிதக் குவியல் !  படங்களுடனான பிரெஞ்சுப் பக்கங்கள் ஒரு பக்கம் ; ஒன்றுக்கு இரண்டாய் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு ஸ்கிரிப்ட்ஸ் ; கடைசி மூன்றோ-நான்கோ இ.ப. இரண்டாம் சுற்றின் புக்ஸ் என்று சூழ்ந்து நிற்கின்றன ! இவற்றினூடே செய்யும் பயணம் என்பதால் எதிர்பார்த்த வேகம் இங்கே சாத்தியமாகவில்லை ; பாதிக் கிணற்றினையே இது வரைக்கும் கடந்துள்ளேன் ! அடுத்த 2 நாட்களுக்குள் ஒரு மாதிரியாய் ஜேசன் மக்லேனுக்கு விடை தந்துவிட்டேனெனில் - கொஞ்ச காலத்துக்காவது இந்த மறதிக்கார நண்பரின் பஞ்சாயத்துக்களிராது ! Becos இவரது புது ஆல்பமானது பிரெஞ்சில் வெளிவந்திடவே இன்னும் ஓராண்டு  அவகாசமுள்ளது & அதனை சினிபுக் ஆங்கிலத்தில் வெளியிட நிச்சயமாய் 2023-ன் இறுதிக்கு முன்னே சாத்தியங்கள் இராதென்று சொல்வேன் ! So அதுவரையிலும் அசோக சக்கரவர்த்தியின் revision மறுக்கா அவசியமாகிடாது !

கதையைப் பொறுத்தவரையிலும் - பட்டாசாய் ஆக்ஷன் பொரிந்து தள்ளுகிறது ! "மேபிளவர் சுற்று" என்று நிறுத்தி, நிதானித்து சாவகாசமாய் (புதுக்) கதாசிரியர் செய்திருந்த பில்டப்கள் இரண்டாம் சுற்றின் துவக்க ஆல்பங்களில் பொறுமையை ரொம்பவே சோதித்திருந்த நிலையில் - இதற்கு முன்பான ஆல்பமான "2132 மீட்டர்கள்" செமையாய் வேகமெடுத்திருந்தது ! வாஷிங்டனில் போப்பாண்டவரை நோக்கிச் சீறிப் பாயும் தோட்டாவோடு 'தொடரும்' என்ற போர்டை அங்கே மாட்டியிருக்க - அதன் தொடர்ச்சியான இந்த ஆல்பம் அதே வேகத்தில் பிய்த்துப் பிடுங்கிப் பயணிக்கிறது ! இன்னும் ஒன்றோ, இரண்டோ ஆல்பங்களோடு இந்த இரண்டாம் சுற்றுக்கு "சுபம்" போடுவதே படைப்பாளிகளின் திட்டமிடலாம் ; ஆனால் அது எப்படிச் சாத்தியமாகிடக்கூடுமென்று எனக்குப் புரிஞ்சில்லா ! Anyways புரியாத புதிர்கள் தான் இந்த மொத்தத் தொடரின் template எனும் போது படைப்பாளிகளின் கைவசம் ஏதாச்சுமொரு யுக்தி இல்லாது போகாதென்பது உறுதி !  

Moving on, டிசம்பரின் கி.நா.வான "காட்டான் கூட்டம்" பணிகள் நிறைவுற்று அச்சுக்குத் தயாராகி நிற்கிறது ! And 74 பக்கங்கள் கொண்ட இந்த ஆல்பம் நிச்சயமாய் mixed reactions கொணரக்கூடுமென்பதை இப்போதே யூகிக்க முடிகிறது ! கதை ; க்ளைமாக்ஸ் ; இத்யாதி என்ற நார்மல் இலக்கணங்களுக்குட்பட்ட வாசிப்பை எதிர்பார்த்து இங்கே புகுந்தீர்களெனில் - யூடியூபைப் பார்த்து இல்லாள் செய்த அல்வாவினை விழுங்க முனையும் பீலிங்கே மேலோங்கும் ! ஆனால் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றிப் புகுந்தால், கண்ணுக்கு இதமான சித்திரங்களும், வர்ணங்களும், ஒரு நேர்கோட்டுக் கதையோடு நம்மைக் கட்டுண்டு கைபிடித்துச் செல்லும் ! And இங்குமே லோக்கல் மொழிநடைக்கு அவசியம் இருப்பதாய் எனக்குத் தோன்றிட, அதற்கேற்பவே பேனா பிடித்துள்ளேன் ! கதையின் நாயகன் ஸ்டெர்ன் ஒரு வெட்டியானாய் இருக்கும் போதிலும், அவனொரு இலக்கிய ரசிகன் ; பண்பட்ட வாசிப்பாளன் and therefore அவனுக்கு டீசெண்டான வரிகளில் வண்டி ஓடி விடுகிறது ! ஆனால் அவன் எதிர்கொள்ளும் இதர கதைமாந்தர்களோ வன்மேற்கின் கரடுமுரடு பார்ட்டீஸ் எனும் போது அவர்களுக்கு தன்மையான வரிகளை பொருத்திப் பார்க்கவே இயலவில்லை ! So டெட்வுட் டிக்கில் ஆரம்பித்த கச்சடா பாணியானது - அதே வீச்சில் இங்கில்லை என்றாலும் தொடர்கதையாகிடுகிறது  ! இதே போக்கில் போனால், ஆபீஸிலும் போய் "இன்னாமே ...டெசுபாட்சுக்கு ரெடியா கீதா - இல்லியா ?" என்று பேச ஆரம்பித்து விடுவேனோ - என்னவோ தெரியலை !! Anyways காமிக்ஸ் வாசிப்புகளின் பன்முகங்களை தரிசிக்க இந்த ஆல்பமொரு வாய்ப்பாகிடக்கூடும் என்பேன் ! Definitely not for the traditional comics reader !!

ஒன்றுக்கொன்று துளியும் சம்பந்தமே இல்லாப் பாணியிலான பணிகளின் பட்டியல்  கடந்த ஒரு வாரத்தில் மேற்கொண்டும் நீண்டது - நமது டுபாக்கூர் டிடெக்டிவ் "ஹெர்லக் ஷோம்சின் புண்ணியத்தில் !  இரத்தப் படலம் - சீரியஸான ; நயமான மொழிநடையினைக் கோரிடுகிறதெனில் ; ஸ்டெர்ன் லோக்கலாய் பயணிக்கச் சொல்லுகிறதெனில் ; இந்த ஷோம்ஸ் + வேஷ்ட்சன் கூட்டணியானதோ - ஜாலியாய் , சகஜமாய் கதை நகர்த்தக் கோருகிறது ! ஒரே வாரத்தில் மூன்றுக்குள்ளும் தலைநுழைத்து குட்டிக்கரணங்கள் போட்டுப் பார்க்கும் இந்த நடப்பாண்டின் இறுதி மாதத்துப் பணிகளின் முயற்சிகள் in some ways எனக்கு ஸ்பெஷலாய்த் தென்படுகின்றன ! ஏனென்கிறீர்களா ? Simply becos - காத்துள்ள 2022 & maybe தொடரக்கூடிய அதற்குப் பின்னான பொழுதுகளிலும், கமெர்ஷியல் கதைகளுக்கே ரெகுலர் தடங்களில் முன்னுரிமை தந்திடவுள்ளோம் ! So இந்த மாதிரியான அதிரி புதிரி offbeat கதைகள் - இடையிடையே கிட்டும் ஸ்பெஷல் வாய்ப்புகளில் மட்டும் தானே இனி தலை காட்டிட இயலும் ? 2022-ன் அட்டவணையினைப் பார்த்தீர்களென்றாலே no more விஷப் பரீட்சைஸ் & no more விளிம்புநிலை நாயகர்கள் என்பது புரிந்திடும் ! So in many ways - காத்துள்ள இந்த டிசம்பரின் இதழ்கள் 2012 முதலானதொரு 120 மாதங்களில், வளைந்து, நெளிந்து, படர்ந்து ஓடிய சிற்றோடையின் இறுதி stretch என்பேன் ! Of course கமர்ஷியல் கதைகளாய் மட்டுமே நம் பயணம் காலத்துக்கும் இருந்திடாது & ஏதோவொரு புள்ளியில் திரும்பவும் குரங்குச் சேட்டைகள் அரங்கேறாது போகாது தான் ; but இந்த நொடியில் அந்தப் புள்ளி பற்றி ஆரூடம் சொல்லத் தெரியலை ! இதோ என்வசம் இருக்கும் ஹெர்லக் ஷோம்சின் இறுதிக்கு முன்பான version அட்டைப்படத்தின் பிரிவியூ !  திருத்தங்கள் போட்ட version-ஐ நாளைக்குப் பகலில் இங்கே replace செய்திடுகிறேன் ; so அதுவரைக்கும் இதனில் இருக்கக்கூடிய குறைகள் சார்ந்த அலசல்கள் வேணாமே, ப்ளீஸ் !

அடுத்த சில நாட்களுக்குள் "இரத்தப் படலம்" மொழிபெயர்ப்புக்கு மங்களம் பாடிவிட்டால் - அப்புறமாய் FFS-ன் புக் # 1 -ன் எடிட்டிங் பணிகளே காத்திருக்கும் ! ஏற்கனவே ALPHA முதல் பாகத்தினைத் திருத்தம் போட்டு முடித்து விட்டேன் ; so மீத 2 பாகங்கள் + ஏஜெண்ட் சிஸ்கோவின் 2 பாகங்கள் + 1 பாக TANGO இவ்வாரத்து பணி லிஸ்டில் இடம்பிடித்திடும் ! அதற்கெல்லாம் மத்தியிலோ இன்னொரு செம முக்கியமான பணி வெயிட்டிங் ! 

அது தான் சீனியர் எடிட்டரின் "அந்தியும் அழகே" flashback-ஐ உருப்படியாய் அமைக்கும் பணியானது ! ரெகுலராய் எழுதும் touch இல்லாது போகும் பட்சங்களில் எண்ணங்களை எழுத்தாக்குவது சுலபமே அல்ல என்பது சீனியர் எனக்கு எழுதி அனுப்பி வரும் மின்னஞ்சல் பக்கங்களில் புரிகிறது ! இது வரைக்கும் அவர் எழுதி அனுப்பியுள்ள நினைவுகள் எல்லாமே தந்தி பாணியில் 'லொஜக்-மொஜக்-பச்சக்' என்றே நிறைவுறுகின்றன !  

  • உங்களுக்கு எவை சுவாரஸ்யமான விஷயங்களாகிடக்கூடும் ? 
  • எங்கே சற்றே விலாவரியாய் எழுதிட வேண்டி வரும் ? 
  • எங்கே சுருக்கமாய்த் தாண்டிச் செல்ல வேண்டி வரும் ? 
  • "கோபால் பற்பொடி" விளம்பர பாணிகள் எழுத்துகளுக்குள் எட்டிப் பார்த்திடாது தொடரை முன்னெடுத்துச் செல்ல என்ன செய்யலாம் ?  
  • ஒரு அத்தியாயமானது ஒன்றிரண்டு பக்கங்களுக்குப் பயணிக்க வேண்டுமெனில், எவ்வளவு எழுத வேண்டி வரும் ? 

என்ற ரீதியில் கோச்சிங் க்ளாஸ் நடத்திட ஏதாச்சுமொரு  செண்டரை  அவசரமாய்த் தேடி வருகிறேன் !  In any case - சீனியரின் நினைவலைகளுக்கு அகவை 50 and அவரது இன்றைய அகவை 80 என்பதால் - "பொட்டுக்கடலை சாப்பிட்டேன் ; புதினா துவையல் ஆட்டினேன் !" என்ற ரீதியிலான எனது நினைவுகூரல்களின் detail-களை இங்கு எதிர்பார்த்திட வேண்டாமே ப்ளீஸ் ?! 

Before I sign out - சில updates :

1.FFS புக் # 2 ஆன "ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள்" காத்திருக்கும் வாரத்தில் அச்சுக்குச் செல்கிறது ! And "வாசக நினைவலைகள்" இடம்பிடிப்பது இந்த புக்கில் தான் எனும் போது - உங்களின் பின்னூட்டங்களை மின்னஞ்சல்களில் அனுப்பிட இன்னும் ஓரிரு நாட்களே அவகாசம் ! "இங்கே பதிஞ்சாச்சு ; வாட்சப்பில் அனுப்பியாச்சு" - என்று லூசில் விட்டு விடாதீர்கள் ப்ளீஸ் ; மின்னஞ்சல்களை நம்மாட்களுக்கு forward செய்வதைத் தாண்டி வேறெந்த வேலைகளையும் செய்யுமளவிற்கு எனக்கு இந்தத் தருணத்தில் நேரமில்லை guys ! So அப்புறமாய் - "நான் எழுதினது வரலே ?!" என்ற விசனங்கள் வேணாமே - ப்ளீஸ் !! மின்னஞ்சல்கள் ...மின்னஞ்சல்கள் மட்டுமே இந்த நொடியில் கைகொடுக்கும் ! 

2.FFS புக் # 1 - இம்மாதத்தின் நான்காம் வாரமே அச்சுக்குத் தயாராகி விடும். இதனில் தான் உங்களின் போட்டோக்களை இடம்பிடிக்கச் செய்யத் திட்டமிட்டுள்ளேன் ! So முன்னர் சொன்னது போல டிசம்பர் 5 வரைக் காத்திருக்க அவகாசமிராது folks ! நவம்பர் 30 தான் இதற்கான இறுதிப் பொழுதாக இருந்திடும் !! ஓயாமல் பெய்து வரும் மழைகள்  மதியங்களுக்குப் பின்னான பொழுதுகளை தினமுமே வேலைக்கு ஆகாதவைகளாக்கி வருகின்றன ! So இயன்றமட்டுக்கு முன்கூட்டியே நமது வேலைகளை முடித்துத் தந்தால் தான் பைண்டிங்கில் சொதப்பிடாது தலைதப்பிக்கும் ! அது மட்டுமன்றி, தலையில் சுமந்து திரியும் இந்த பாரத்தை இறக்கி வைக்க எனக்கும் ஒரு துரித வாய்ப்பு கிட்டினால் தான் ; தொடரக்கூடிய பணிகளுக்குள் கவனம் செலுத்த எனக்கு சாத்தியப்படும் ! So போட்டோக்களை நவம்பர் 30-க்கு முன்பாய் ப்ளீஸ் !

Before I sign out - உங்களிடம் கேட்க எனக்கொரு கேள்வி ! முத்து பொன்விழா logo தேர்வினில் நிறைய டிசைன்களை நம்மாட்கள் போட்டுத்தந்திருந்தனர் & அவற்றுள் எனக்கு ஒரு டிசைன் ஓ.கே.வென்று பட்டது ! ஆனால் சீனியருக்கோ இன்னொன்று ரசித்தது ! And ரைட்டு - சீனியரின் தேர்வே இதனில் முன்னுரிமை பெறட்டும் என்று தீர்மானித்து கேட்லாக் அச்சுக்குப் புறப்படவிருந்த நேரத்தில் நண்பர் உதய் சில டிசைன்களை அனுப்பியிருந்தார் ! அவற்றுள் ஒன்று பளிச்சென்று இருப்பதாய்பட்டது ; அதனை நீங்களும் FB க்ரூப்களில் ஏற்கனவே பார்த்திருப்பீர்களென்று நினைக்கிறேன் ! இடைப்பட்ட நேரத்தில் ஏதேதோ பணிகளுக்குள் நான் புகுந்து, மண்டை சாம்பாராய் குழம்பிக்கிடக்கும் நிலையினில் - 'எங்கே ஆரம்பித்தோம் ? எங்கே நிற்கிறோம் ?' என்பது கூட நினைவுகூர்ந்திட முடியலை !! So இந்நேரம் நான் முடிவெடுக்கிறேன் ; முடியெடுக்கிறேன் என்று மொக்கை போடுவதற்குப் பதிலாய் பந்தை உங்களிடமே toss பண்ணி விடுகிறேன் ! 

இங்குள்ள மூன்றில் :

# 1 எனக்கு ஓ.கே. என்றான டிசைன்  !

# 2 சீனியருக்கு ஓ.கே.  !

# 3 நண்பரின் கைவண்ணம் ! 

# 1

# 2 
# 3

இந்த மூன்றுக்குள் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து சொல்லுங்கள் ; 'பச்சக்' என அட்டைப்படத்தில் பதித்து வரும் வாரமே அச்சுக்குப் புறப்பட்டு விடுவோம் ! நானிப்போது இருக்கும் நிலையில் ஆபீசில் கட்டியிருக்கும் நூலான்படையை ஒரு போட்டோ  எடுத்து யாரேனும் காட்டினால் கூட, 'ஏ ..சூப்பரப்பு !!' என்று டிக் அடித்து விடுவேன் என்று பயமாக உள்ளது ! So சிம்பிளாக உங்களின் தீர்ப்பை நடைமுறையாக்கிடுவோம் ! 

"1 or 2 or 3" - என்று பின்னூட்டங்களில் உங்கள் தேர்வுகளைப் பதிவிட்டால் போதும் ! திங்கட்கிழமை காலைக்குள் (8th Nov'21) இதனில் எந்த டிசைனுக்கு கூடுதலாய் ஆதரவுள்ளதோ - அதுவே நமது லோகோவாய் FFS இதழினில் இடம்பிடித்திடும் ! Bye all...see you around !! XIII உடனான பயணத்தைக் தொடரக் கிளம்புகிறேன் ! Have a cool Sunday ! 

P .S : சந்தா 2022 விறுவிறுப்பாய் வேகமெடுத்து வருகின்றது ! நீங்களும் அதனில் பங்கேற்க கொஞ்சம் நேரம் ஒதுக்குங்களேன் - ப்ளீஸ் ?

279 comments:

  1. Edi Sir..நானும் முதல் 10 பேர்ல வந்துட்டேன்..

    ReplyDelete
  2. பதிவு காலையில ன்னு சொல்லிட்டு இப்பவே பதிவு போட்டு போங்காட்டம் ஆடுறிங்க சார்..

    ReplyDelete
  3. சார்.. உண்மையைச் சொல்வதானால் 3 லோகோக்களுமே ஒவ்வொரு விதத்தில் அழகாக, அம்சமாக, அட்டகாசமாக இருக்கிறது!
    மூன்றுமே நம்முடையதுதானே.. பேசாமல் மூன்றையுமே உபயோகப்படுத்துங்களேன்.. ஒவ்வொரு மாதமும் ஒரு லோகோ இடம்பெறட்டுமே - அதில் தவறொன்றும் கிடையாதெனில்?!!

    இல்லாவிட்டால் க்ளாசிக் பாணி கதைகளுக்கு ஒரு லோகோவையும்(2வது லோகோ), தற்போது முத்துவில் சாகஸம் செய்துவரும் நாயகர்களின் கதைகளுக்கு வேறொரு லோகோவையும் (1வது), புதிய அறிமுக நாயகர்களின் கதைகளுக்கு மற்றோரு லோகோவையும் (3வது லோகோ) பயன்படுத்த முடியுமாவென்று பாருங்களேன்?!!

    ReplyDelete
    Replies
    1. இந்த ஐடியா நல்லா இருக்கே ஜி..

      Delete
  4. ஆசிரியருக்கு வணக்கம்...

    3 லோகோவுமே நல்ல தேர்வு.
    இதில் 1 ஓகே.
    மத்த 2 இல்லாத ஒரு "பளிச்" இதில் தெரிகிறது. பின்னணியில் மத்தாப்பு சிதறல்களுடன், இரு பக்கமும் வெளிர் நிறத்தில் அருமை.
    முகப்பில் போட்டால் இன்னமும் அருமையான இருக்கும்.
    மற்ற 2&3 சற்று டல்லிங். நண்பர்கள் தேர்வு எப்படி என பாக்கலாம்.

    #ஓநாய்_ஜாக்கிரதை...
    தீபாவளி மலரில் வந்த, 3 கதைகளில்,
    2 வது கதை.
    31 பக்கம் வசனங்களே இல்லாமல், அருமையான சித்திரங்கள் மூலமே சொல்லப்பட்ட சிறுகதை.

    பாங்க்லிருந்து கொள்ளையடித்த பணத்துடன் தப்பிச்சென்ற திருடனைத் தேடி வருகிறார் டெக்ஸ்.
    திருடனின் இறந்து போன குதிரையையும்,
    அவனின் காலடித்தடங்களை தொடர்ந்து செல்லும் டெக்ஸ் ஒரு பெரிய காட்டில் நுழைகிறார்.

    அங்கு எதிர்பாராத விதமாக,
    நேரேதிரே ஒரு ஓநாயை காண,
    ஆக்ரோஷமாக தாக்க வரும் என நினைத்த ஓநாய்,சற்று பரிதாப பார்வையுடன் பார்க்க,
    அதை தப்பிக்க விட்டுட்டு,
    மீண்டும் திருடனை தொடர்ந்து செல்கிறார்.

    முன்னே சென்ற திருடன்
    ஒரு பெரிய பள்ளத்தாக்கில் உள்ள பாலம் வழியே செல்ல முயற்சிக்க,
    அவன் சற்றும் எதிர்பாராத வகையில் டெக்ஸின் ரைபிளில் இருந்து வந்த புல்லட்
    அவன் காலை உரசி செல்கிறது.

    இந்த துப்பாக்கியின் சத்தத்தை கேட்டு அதிர்ந்தது திருடன் மட்டுமல்ல...
    பெரிய கரடியும்தான்.

    சத்தத்தினால் ஆக்ரோஷம் கொண்ட
    கரடி, டெக்ஸை தூக்கி பள்ளத்தில் வீசி,
    மறுபடியும் தாக்க முயல வேறுவழியின்றி அதை கொல்கிறார் டெக்ஸ்.

    கையில் எந்த ஆயுதமும் இன்றி நிற்கும் டெக்ஸை கொல்ல திருடன்
    துப்பாக்கியை உயர்த்த,
    சட்டென்று திருடனின் மேல் பாய்கிறது
    டெக்ஸ் கொல்லாமல் விட்ட ஓநாய்.

    திருடனும் சுதாரித்து ஓநாயை சுட,
    அதே சமயம் டெக்ஸூம் அவனை சுட,
    மேலிருந்து பள்ளத்தில் விழுந்து இறக்கிறான் திருடன்.

    குண்டு அடிபட்ட ஓநாயை,
    இரவு முழுவதும் கண் விழித்து காப்பாற்றுவதுடன், திருடன் பிணத்தை புதைத்து விட்டு,
    கொள்ளை சென்ற பணத்துடன்
    திரும்பும் டெக்ஸை, தன் கூட்டத்துடன்
    ஏக்கமாக, அன்பு வழிய பாக்கிறது அந்த ஓநாய்.

    இந்த கதையின் தலைப்பு யாரை சொல்கிறது?
    அன்பு கொண்ட மிருகத்தையா?
    பண வெறி கொண்ட மனிதனையா?

    கதையில் வசனமே இல்லாவிடினும்,
    ஓநாயின் பரிதாப பார்வையும்,
    அதை காப்பாற்றிய
    டெக்ஸை நன்றியுடன் பார்க்கும் பார்வையும், கடைசியின் அவர் செல்வதை பார்ப்பதும், ஆயிரம் அர்த்தங்களை சொல்கிறது.

    ஓநாய்க்கு இந்த பண்புகள் இருக்க,
    பணத்தாசையும்,கொலை வெறியும்,ஏமாற்றுதலும்
    குணம் கொண்ட மனிதனே ஓநாய்.
    இது போன்ற மனிதர்களிடமே நாம்
    ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    ஒரு குட்டி கதையில்,
    வசனங்கள் இல்லாமல்,
    மிக அழகான பாச பிணைப்பை சொல்லியிருக்கும் கதாசிரியருக்கும்,
    அந்த பாசத்தை கைவண்ணத்தில் கொண்டு வந்த ஓவியருக்கும் பாராட்டுகள்.

    மீண்டும் அடுத்த பதிவில் 🌹🌹🌹

    ReplyDelete
    Replies
    1. நண்பன் ஸ்ரீ சொன்னது போல்.. ரெண்டு மூன்றை காட்டிலும் நம்பர் ஒன்றில் ஒரு பளிச் தெரிகிறது...
      எனது ஓட்டு நம்பர் 1.

      Delete
    2. ///ஓநாய்க்கு இந்த பண்புகள் இருக்க,
      பணத்தாசையும்,கொலை வெறியும்,ஏமாற்றுதலும்
      குணம் கொண்ட மனிதனே ஓநாய்.
      இது போன்ற மனிதர்களிடமே நாம்
      ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.///

      இக்கதை சொல்லவரும் கருத்தையும், தலைப்புக்கான விளக்கத்தையும் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் சார்! அருமை!!

      Delete
    3. ///3 லோகோவுமே நல்ல தேர்வு.
      இதில் 1 ஓகே.
      மத்த 2 இல்லாத ஒரு "பளிச்" இதில் தெரிகிறது. பின்னணியில் மத்தாப்பு சிதறல்களுடன், இரு பக்கமும் வெளிர் நிறத்தில் அருமை.
      முகப்பில் போட்டால் இன்னமும் அருமையான இருக்கும்.
      மற்ற 2&3 சற்று டல்லிங். நண்பர்கள் தேர்வு எப்படி என பாக்கலாம்.///

      1 சூப்பர்!

      Delete
    4. அருமை நண்பரே...படம் பாத்து கதை சொல்னு ஆசிரியர் விட்டிருந்தா ஏக கதைகள் கிடைச்சிருக்குமே

      Delete
  5. எனக்கு #2 பிடிச்சு இருக்கு

    ReplyDelete
  6. *** *பொக்கிஷம் தேடிய பயணம்* ***
    புதையல் கதைனாலே எதிர்பார்ப்பு ஒரு மிடுறு அதிகம் இருக்கும், புதையல் கிடைக்குமா கிடைக்காதா, புதிர்களை விடுவிப்பது, cluesகளை பின் தொடர்வதாக் இப்படி எதுவுமெ இல்லாதது எனக்கு ஏமாற்றமே. கடைசியாக வந்த இளம் டெக்ஸ் கதைக்கும் இதுக்குமான தொடர்பு பிடித்திருந்தது ஒரு தொடர் படிப்பது போன்று. அதற்க்கும் முன் எப்படி டேஷாவும் டெக்ஸ்ஸும் சந்தித்திக்கொள்கிறார்கள என்ற ப்ளாஷ்பேக் தான் இந்த கதையின் கரு. சிறார் டெக்ஸ் என்று தொடர் வரக்கூடும், யார் கண்டது. மீசை முளைக்காத டெக்ஸ்ஸும்!!! அவரது நண்பர்களும் குட்டி டேஷாவை காப்பாற்றுகிறார்கள். அப்பொது அவர்களுக்கு ஒரு ரகசிய இடத்துக்கு செல்ல நேரிடுகிறது. பின்பு டேஷாவின் கிராமத்திற்க்கு வரும் எதிரிகளையும் விரட்ட உதவி அந்த மக்களின் நம்பிக்கையை பெருகிறார். டெக்ஸின் நண்பர்கள் யாரோ சபலப்பட்டு போக்கிஷத்தை பத்தி தெரிந்துகொள்ள முயல்வார்கள் என்று என்னினேன், அணால் அவர்கள் அனைவரும் ரகசியம் காக்க முடிவு செய்வது, டெக்ஸின் இமேஜை உயர்த்துகிறது. மற்றபடி எந்த டிவிஸ்ட்டும் இல்லாமல் டக்கென்று முடியும் பீலீங்.
    6/10

    ReplyDelete
  7. *** *ஓநாய்கள் ஜாக்கிரதை* ***
    (Repeat, ignore if you already read “my” story)
    மஞ்சள் சட்டை போட்ட ஒருத்தன் குதிரையில் வேகமாக செல்கிறான், எதிர்பார்த்த மாதிரியே அவன் விஷமிட்ட குதிரை இறந்து கிடக்கிறது, இரையை நெரிங்கிய ஓநாயின் சந்தோஷம் அவனுக்கு. தனது விண்செஸ்டரை எடுத்துக்ககொண்டு ஒரு காலடி தடத்தை பின் தொடர்ந்து செல்கிறான், அடுத்த காட்சியில் யரை தேடி செல்கிறான் என்று தெரிகிறது, வங்கியிலிருந்து மலை வாழ் மக்களுக்கு கொடுக்கும் மானியத்தை கொண்டு செல்லும் ஊழியன் அவன். பனியில் தடுக்கி கீழே விழும் காசுகளை பத்திரமாக பொறுக்கி எடுத்தக் கொண்டு மீண்டும் கால் நடையா பயணத்தை தொடர்கிறான், எப்படியாவது தனது கடமையை முடிக்க வேண்டும் என்று.
    பின் தொடர்ந்து வரும் போக்கிரியின் வழியில் ஓநாய் குறுக்கிடுகிறது, சுட்டால் பணம் எடுத்து செல்லும் அதிகாரி சுதாரித்து விடுவான் என்று சுடாமல் விட, பெரிய துப்பாக்கியை கண்ட ஓநாயும் விலகி செல்கிறது. அரசு உழியன் கிரமத்தை நெருங்க அற்றின் மீது இருக்கும் கயிற்று பாலத்தை நோக்கி வலைவு பாதையில செல்ல, போக்கிரியும் வந்து விடுகிறான், தன் விண்செஸ்டரை வைத்து அரசு உழியரின் முதுகை குறிவைத்து சுடுகிறான் ஆணால் குறி தவறிவிடுகிறது. இந்த சத்தத்தை கேட்டு கிராமத்தின் காவல் கரடி அந்த போக்கிரியை தாக்குகிறது. அவன் அதை கழுத்தை அறுத்து கொல்கிறான். காவல் கரடியும் செத்துவிட, தன்னை தற்காத்துக்கொள்ள தன் கைத்துப்பாக்கியை எடுக்கிறான் அரசு ஊழியன், அவன் கவணம் வேற பக்கம் இருக்கிறது என்று தெரிந்த ஓநாய், அவன் மீது பாய்கிறேது. வெறுவழியில்லாமல் அந்த அரசு ஊழியன் ஓநாயை சுடுகிறான், இதான் சான்ஸ் என்று அந்த போக்கிரி அரசு ஊழியனின் நெஞ்சில் குண்டை பாச்ச, அவன் கால் தடுக்கி கிழே விழுந்து மறிக்கிறான். குண்டடி பட்ட அந்து ஓநாய்ககு வைத்தியம் பார்கிறான் போக்கிரி. அப்பொதுதான் தெரிகிறது, அந்த ஓநாயும், அதன் கூட்டத்துக்கும் இவன் தான் தலைவன் என்று. அரசு ஊழியனின் உடலை புதைத்துவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு செல்கிறான். அந்த "ஒநாய்" அவன் "ஜாக்கிரதை".
    7.5/10

    ReplyDelete
    Replies
    1. படம் பார்த்து, இப்படியும் கதை சொல்லலாமோ?

      Delete
    2. ஆஹா அருமை நண்பரே...இதுக்குத் தான் கதய எழுதனும்கிறது...வெளுத்ததெல்லாம் பால் என பொங்கும் ரம்மியப் போல் அதுக்கும் மேல் ஓர் தெய்வம்

      Delete
  8. *** *பருந்துக்கொரு பரலோகம்* ***
    அட்டகாசமான் ஓவியங்கள், அருமையான கதை, தீபாவளி மலரின் பெஸ்ட் கதை மட்டுமல்ல , இந்த ஆண்டின் சிறந்த டெக்ஸ் கதை இதுதான். Interesting charachters, நல்ல ப்ளாட் டிவ்ஸ்ட் & சவாலான வில்லன்.

    10/10

    ReplyDelete
    Replies
    1. // இந்த ஆண்டின் சிறந்த டெக்ஸ் கதை இதுதான். //

      உண்மை

      Delete
    2. ///தீபாவளி மலரின் பெஸ்ட் கதை மட்டுமல்ல , இந்த ஆண்டின் சிறந்த டெக்ஸ் கதை இதுதான். ///

      இப்போதுதான் பாதிக்கதை படித்திருக்கிறேன்.. ஆனாலுமே நீங்கள் சொல்வது உண்மைதான் என இப்போதே உணரமுடிகிறது!!

      கதை நகர்வு - அபாரம்!!

      Delete
  9. *** *ஒருமுறை கொன்றுவிடு* ***
    முதலில் அந்த சித்திரங்களுடன் ஒன்ற கஷ்டமாய் இருப்பதாக தோன்றினாலும் பின்பு மெல்ல நம்மை உள்ளே இழுத்து வசனமே இல்லாமல் கதை சொல்லுவது அருமை. வசனங்களை அதிகம் எதிர்பார்க்கும் ரசிகர்கள் இதை ரசிப்பது கடினம்.
    டியூக் அலட்டல் இல்லாத அருமையான ஹீரோ. ஒரு உயிரை குடிப்பது அவ்வளவு ஈசியான் விஷயம் இல்லை என்று அறிவுரை சொல்லுவது நிதர்சனம். தனி கதைகளாக இருந்தாலும், ஒரு தொடர்பு கதை பின்னே நகர்கிறது, 4-5 கதைகளுக்கு பின் அது முழுமையடைய வாய்ப்புள்ளது. கமாண்சே & ஜெராமியா மாதிரி தொங்களில் விடாமல், தொடர்ந்து வரவேண்டும்
    8.5/10

    ReplyDelete
  10. *** *லக்கி லூக்* ***
    10 க்கு 100 தான் என்னோட மார்க், விமர்சனம்!!! இவர் அதற்கெல்லாம் அப்பார்பட்டவர்

    ReplyDelete
  11. புலர் காலை வணக்கங்கள்

    ReplyDelete
  12. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. #1 அந்த கூடுதல் வெள்ளை நிறம் கவர்ச்சிகரமாக உள்ளது.

      Delete
  13. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  14. என்ற ரீதியில் கோச்சிங் க்ளாஸ் நடத்திட ஏதாச்சுமொரு செண்டரை அவசரமாய்த் தேடி வருகிறேன்// ஐயாவை அவருடைய பாணியிலேயே எழுத விட்டுவிட்டால் என்ன சார்?

    ReplyDelete
  15. 1 will be better for printing i think. so 1 is my choice

    3-great work ji

    ReplyDelete
  16. நண்பர்களூடன் அமைதியான பயணம் அல்லது நண்பர்களின் அறிமுகம் என ஆரம்பிக்கும் கதையில் வில்லனின் அடியாட்களால் ஏற்படும்ஒரு சிக்கல். முதலில்வில்லன் யார் என்று கண்டறியும் சுவாரஸ்யமான வழிமுறைகள். பிறகுபுத்திசாலித்தனமானவழிமுறைகள்மூலம் வில்லனை நெருங்குதல், நேரடிமோதல், பிறகு கிளைமாக்ஸ். இதுவே மாடஸ்ட்டி கதைகளின் டெம்ப்ளேட். பெரும்பாலான கதைகள் இதேபாணியிலேயே அமைந்துள்ளன. சிலகதைகளில் பலிவாங்கத்துடிக்கும் முன்னாள் வில்லன்கள். இருந்தாலும்கிட்டத்தட்ட 50 ஆண்டுளாக நம்முடன் மாஸாக பயணிக்கிறார் இளவரசி. இவரது சம காலத்தவர்களான மும்மூர்த்திகளும் இன்னபிற ஹீரோக்களும் ரிடையர்டுகளாகி நினைவுமலர்கள்(smashing 70)வெளியிடப்படும்நேரத்திலும் புதுக்கதைகளுடன் களமிறங்குகிறார் இளவரசி.மேற்கத்திய கலாச்சாரப்படி, டாக்டர்கள் மற்றும் தொழில் அதிபர்களுடஅவ்வப்போது டேட்டிங்கில் இருந்தாலும் சிறுவயதில்தன்னைப்பாதித்த போதைக்கலாச்சாரத்தை அடியோடு வெறுக்கும் இளவரசியின் சாகஸங்கள் இன்றும் எத்தனைமுறைபடித்தாலும் அலுப்பதே இல்லை. தீபாவளிவிடுமுறையில் பழைய புத்தகங்களின் மறுவாசிப்பில்ரசிக்கமுடிந்தது டெக்ஸ் மற்றும் மாடஸ்டி கதைகளே. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  17. சார் மூன்று லோகாவும் சிறப்பு ..எனினும் முதல் தேர்வு பளீச் என்று இருப்பது மின்னல் போல் ஒளிரீடுகிறது..

    எனவே எனது தேர்வு...ஒன்று...

    ReplyDelete
  18. சீனியரிடம் முக்கியமாய் தெரியக்கூடிய விசயம்..

    பல பத்திரிக்கைகள் அப்பொழுது நடை போட்ட காலத்தில் காமிக்ஸ் க்கு என்று ஒரு பத்திரிக்கை நடத்த தோன்றிய யோசனையும் ,ஆசையும் அவருக்கு எப்படி தோன்றியது..முதல் இதழை வெளியிட்ட பின் அதன் வெற்றியை எவ்வாறு உணர்ந்தீர்கள் ..என கேட்க ஆசை சார்..

    இதனை பற்றி அவரின் கருத்துக்களை அறிய ஆவல்..

    ReplyDelete
    Replies
    1. அருமையான கேள்வி.

      Delete
    2. சீனியரிடம் முக்கியமாய் தெரியக்கூடிய விசயம்..

      சீனியர் சார்,
      உங்கள் குழந்தைகளை நீங்கள் செய்து வந்த அச்சு இயந்திரம் மற்றும் காமிக்ஸ் தொழிலை தாங்களும் செய்ய வேண்டும் என்று அவர்களாக தேர்ந்தெடுத்தார்களா அல்லது நீங்கள் அவர்களை இந்த தொழிலுக்கு வலுக்கட்டாயமாக கொண்டு வந்தீர்களா என சொல்ல முடியுமா.?

      Delete
  19. // சந்தா 2022 விறுவிறுப்பாய் வேகமெடுத்து வருகின்றது ! //

    மகிழ்ச்சியான செய்தி.

    ReplyDelete
  20. ஷெர்லக் அட்டைப்படம் அசத்தலாக அமைந்து உள்ளது சார்..

    மிக சிறப்பாக அமைந்து உள்ளது..

    ReplyDelete
  21. விஜயன் சார், சீனியர் எடிட்டரின் "அந்தியும் அழகே" ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அவர்கள் எப்படி எழுதி இருந்தாலும் படிக்க நன்றாகவே இருக்கும். நீங்கள் அப்படியே கொடுத்தாலும் சந்தோஷம்.

    ReplyDelete
  22. நண்பர் உதய் ஆதியின் லோகோ நன்றாக உள்ளது. பாராட்டுக்கள் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சகோ... நான் போட்டிக்காக டிசைன் செய்யவில்லை... முத்து காமிக்ஸ்க்கான ஒரு சிறு பங்களிப்பு.

      Delete
  23. லக்கி லூக் ஆண்டுமலர்...


    ஒரு புதிதான லக்கி சாகஸம் ஒன்றும் ஓர் மறுபதிப்பு லக்கி சாகஸம் ஒன்றும் என இரு கொண்டாட்ட சாகஸங்களாய் அமைந்து இந்த ஆண்டுமலருக்கும் ..தீபாவளிக்கும் என இரண்டு கொண்டாட்டங்களுக்கும் சிறப்பு சேர்த்து மகிழ்வுறுத்தியது..மறுபதிப்பு லக்கி ஓர் சிறப்பு மலரின் இலவச இணைப்பாக வந்த இதழ் என்பதால் பல நண்பர்கள் அதனை முதன்முறையாக படிக்கும் சூழலும் அமைந்து இருக்கலாம்..அவர்களுக்கு இந்த மலர் டபுள் டமாக்கா சந்தோசமாக அமைந்து இருக்கும்..இந்த முறை இரண்டு கதைகளிலும் நகைச்சுவை பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்தது..மதுபான கடையும் ,நீதிமன்றமும் தகவல் பலகை மாற்றினால் மாறுவதும்..நீதிபதியாகவும் ,குற்றவாளியாகவும் அந்த பாத்திரமே வாதாடுவது என நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாத கதை எனில் இரண்டாம் கதையில் டால்டன் சகோதரர்களில் ஆவ்ரெலுக்கு கிடைக்கும் தாய்ப்பாசமும் அதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் வயிற்று எரிச்சலும் நமக்கு வயிற்றை பதம் பார்ப்பது உண்மை..அழகான ,தெளிவான வண்ண சித்தரங்களும்.அச்சு தரமும் இதழுக்கு மற்றமொரு ப்ளஸ் பாயண்ட்..

    அழகான ஆண்டுமலர் ...

    ReplyDelete
  24. சந்தா 2022 விறுவிறுப்பாய் வேகமெடுத்து வருகின்றது ! நீங்களும் அதனில் பங்கேற்க கொஞ்சம் நேரம் ஒதுக்குங்களேன் - ப்ளீஸ்

    #####

    மகிழ்வான விசயம்...

    எங்கள் சிலரின் சந்தா விரைவில் ஒரே சமயத்தில் மொத்தமாக வந்தடையும் சார்..:-)

    ReplyDelete
  25. போன பதிவில் கேப்ஷன் போட்டியில் கலந்து வெற்றி பெற்ற நண்பர்களுக்கும்..தேர்ந்தெடுத்த நண்பர்களுக்கும்..பரிசளித்த ஆசிரியருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் ,பாராட்டுகளும்..

    ReplyDelete
  26. விஜயன் சார்,

    // வாரம் ஒன்று....பாணிகள் மூன்று...! //

    வரும் காலங்களின் வாரம் ஒன்று பாணிகள் ஏழு என்று நீங்கள் பணியாற்ற ஆசை!

    ReplyDelete
  27. துண்ட லேட்டாha தான் போடா முடிஞ்சுது.

    ReplyDelete
  28. No. 1 logo design superb and my vote is no. 1.

    ReplyDelete
  29. LOGO 1

    லுக்ஸ் ஆஸம்.... மை சாஸ்ய்ஸ் அதுவே!


    ReplyDelete
    Replies
    1. (2&3 ஆல்சோ லுக்கிங் குட், உருவாக்கியவர்களுக்கு பாராட்டுகள்; போட்டியை மிக கடினமான ஒன்றாக ஆக்கி உள்ள சிறப்பான டிஸைன்கள்🌹🌹🌹🌹)

      Delete
  30. Dear Edi,

    #3 my vote (காரணம் : மற்ற இரு லோகோக்களும் கருமை பின்புறத்தில் மட்டுமே அட்டகாசமாக தெரியும்... ஆனால், உதயின் லோகோ எந்த அட்டை வண்ணத்திலும் தனித்து தெரியும் என்பது என் கணிப்பு)

    இன்று FFS 1 & 2 விற்கான மின்னஞ்சல்கள் என் தரப்பிலிருந்து அனுப்பிவிடுகிறேன்... கொஞ்சம் பட்டி-டிங்கரிங் பண்ணணும் அவ்வளவே. :)

    XIII பாகத்திற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டுமா... சினிபுக் 2022 ல் வெளியிடும் வாய்ப்பிருக்கும்போது ? அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைத்திவிட்டால் என்ன ?!

    சீனியர் எடிட்டரின் அந்தியும் அழகே, ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஆசானுக்கே பாடம் எடுக்கும் கொடுப்பினை உங்களுக்கு... யாருக்கும் கிடைக்கா வரம்.

    இன்னமும் அவருக்கான கேள்விகளை அனுப்பி வைக்கலாமா?

    ReplyDelete
  31. Logo 1 looks bright and will look good on books sir.

    ReplyDelete
  32. லோகோ-3 ல் உள்ள m எழுத்தின் நடுவில் முதல் லோகோவில் உள்ளது போல் கறுப்பு நிறத்தில் கோடு m இருந்தால் சிறப்பு.ஏன்எனில் ஆரம்ப கால முத்து காமிக்ஸ் இதழ்களில் அந்த கறுப்பு m எழுத்தே காந்தம் போல் கவர்ந்தது.
    இது சாத்தியம் இல்லை எனில் லோகோ-1 ஓகே

    ReplyDelete
  33. வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  34. # 2 சீனியருக்கு ஓ.கே. ! இந்த இரண்டாவது லோகோவில் மட்டுமே தான் அதனுள்ளே கருப்பு நிறம் அறவே இல்லை என்பதால் எனது சாய்ஸ்... சீனியர் தேர்வுக்கு ஜே👍👍👍

    ReplyDelete
    Replies
    1. முத்து பொன் விழா ஆண்டில் "பொன்னை" போல் தக தக என கூடுதலாக மிளிர்வதும் லோகோ 2 மட்டுமே தான்!!!!!

      Delete
  35. Replies
    1. நிதிக்குத் தலைவணங்கு ..!

      கதையின் தலைப்பு மற்றும் அட்டை படத்தை கொஞ்சம் கவனித்தாலே என்ன கதை என தெரிந்துவிடும்! நீதி என்ற பெயரில் ஊர் மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடிக்கும் ஒரு டுபாக்கூர் பற்றிய கதை! ராய் பீன் நீதி என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கள் சிரிப்பு! அதுவும் ரயில்வே ஸ்டேஷன் வரும் இடத்தில் இவர் சலூனை போட்டுவிட்டு தான்தான் முதலில் வந்ததாக சொல்லும் இடம் இவர் ஒரு பெரிய அப்பாடக்கர் என புரிய வைத்தது! லுக்கியை குற்றவாளியாக்கி நடைபெறும் விசாரணை செம, தனக்கு வக்கீல் வேண்டும் என கேட்கும் லுக்கிக்கு ஊமையன் லௌத்-ஐ நியமித்து, லௌத் சைகை பாஷையின் வாதாடுவதை கண்டிப்பது செம! பெட் கட்ட வராதவர்கள் உள்ளே தள்ளபடுவார்கள் என்று சொல்லி அனைவரிடமும் பணம் வாங்கி விட்டு கொஞ்ச நேரம் கழித்து பந்தய பணம் பறிமுதல் செய்யப்படுகிறது இது சூதாட்ட விடுதி இல்லை என பல்டி அடிப்பது செம செம! ராய் பீன் படிக்கவில்லை என்றாலும் எந்தப்பக்கம் போனாலும் தனக்கு லாபம் வரும் வகையில் அடிக்கும் கூத்துக்கள் கதை நெடுக ரசிக்க செய்கிறது!

      ராய் பீனிடம் இருந்து லக்கி எப்படி தப்பிக்கிறார் ஊர் மக்களை எப்படி காப்பதுகிறார் என்பது சொன்ன விதம் சிரித்து ரசிக்க செய்தது!

      ஐசின்டோ கதாபாத்திரம் செம, சிரிப்புக்கு ஏற்படுத்த கதாபாத்திரம் என்றாலும் பரிதாபம் ஏற்படுத்தியது! கொக்கரக்கோ என சேவலுக்கு பதில் இவர் கூவும் இடம், ராய் பீனிடம் இருந்து தப்பிவிட்டார் என நினைத்தால் ப்ளாக் டிக்கெட்டிடம் மாட்டிக்கொண்டு முழிப்பது இவன் எப்போது தான் இவர்களிடம் இருந்து விடுபடுவான் என ஏக்கத்தை ஏற்படுத்தியது!

      ப்ளாக் டிக்கெட் ஏத்தனுக்கு எத்தன் உலகத்தில் உண்டு என உருவாக்கபட்ட கதாபாத்திரம் செம! இரண்டு டூபாக்கூரில் பெரிய டூபாக்கூர் யார் என நடக்கும் போட்டிக்கு வெளியூரில் இருந்து வரும் மக்கள் கூட்டம் சிரிப்பை வரவளைத்தது.

      ராய் பீன் தனது சலூனையே கோர்ட் ஆகவும் சலூனாகவும் நடத்துவது, அதற்கு ஏற்றாப்போல் போர்டை மாற்றுவது எல்லாம் வேற லெவல் காமெடி!

      ஜோ - எப்படி ஐயா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க, செமயான ரோல் இந்த கரடியாருக்கு, ஜாலி ஜும்பருக்கு இந்த முறை வேலை குறைவுதான் ஆனால் இந்த ஜோ அதனை ஈடு செய்து விடுகிறது!

      கதையின் இறுதியில் நடக்கும் கோர்ட் சீன் செம மனதை தொட்டுவிட்டது! மிகவும் சரியான முடிவு!

      நீண்ட நாட்களுக்கு பிறகு பக்கத்துக்கு பக்கம் விமர்சனம் எழுதும் வகையில் ஒரு லக்கி கதை இது!

      இந்த கதை இப்போது உலகம் முழுவதும் நடக்கும் கூத்துக்களை அருமையாக பகடி செய்து உள்ளார்கள்! ஆசிரியரின் மொழிபெயர்ப்பு கதைக்கு வலு சேர்த்து உள்ளது!

      இந்த ஓவிய பாணி லக்கி-லூக் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது!

      Delete
  36. சார் 3 மே நல்லா இருக்கு பேசாமல் அடுத்த வருடம் வரும் புத்தகங்களில் பிரித்து 3 மே பயன்படுத்திவிடுங்களேன் 3 மே அடுத்த 1 வருடத்திற்கு மட்டும் தான் என்ற பொழுது ஏன் விட வேண்டும். எனக்கு பிடித்திருக்கும் ஆர்டர் 1 2 3

    ReplyDelete
  37. அருமை சார்....இரத்தப்படலம் இந்த சுற்றாவது முதல் போல 18 பாகங்கள் வர புனித நான்கும்...புனித மானிடோவும் அருளட்டும்...முதல் கதை சுத்தமான நினைவிலில்லை...தோட்டா போப்பை நோக்கியா வருது....புரட்டனும்...நிதிக்குத் தலைவணங்கு விறுவிறுப்பாக போய்ட்ருக்கு...
    மூன்று லோகோவும் அழகுன்னாலும் முதல் பளிச்

    ReplyDelete
  38. அந்த லோகோவில் கதிர்மணிகளின் எண்ணிக்கை ஐம்பது வருமாறு அமைக்க முடியுமா

    ReplyDelete
  39. ஷெர்லக் அட்டைப்படம் அழகு....ஒநொஒதோ அச்சில் ஆஹாஹா...காட்டான் ஏக எதிர்பார்ப்பில் இந்த வாரம் அதன் முதல் கதயயும் புரட்டத் தயாராவனும்

    ReplyDelete
  40. Sorry. A revision in voting. My vote goes to logo 1.

    ReplyDelete
  41. எடிட்டர் அவர்களுக்கு,
    வணக்கம்.
    எனக்கான
    FFS புக் # 2 ல் SENIOR EDITOR உடன்,நீங்களும் JUNIOR ம் சேர்ந்த PHOTO PRINT செய்து தர இயலுமா சார் ?
    எனக்கான சந்தாத் தொகையை வரும் வாரத்தில் செலுத்தி விடுகின்றேன்.
    நன்றி.

    தனபாலன்,
    மதுரை.

    ReplyDelete
  42. முதல் லோகோ-வே சிறப்பு.
    ஏனெனில், அந்த கருப்பு M_ அதுவே அழகு.
    இரண்டாவது - லோகோவில்- அந்த கே டயம் டிசைன் நன்றாக இருந்தாலும் - அந்த M தங்கநிறத்தில் இருப்பது எடுபடவில்லை.
    மூன்றாவது லோகோ-வில் வெளி சதுரத்தில் வண்ணமில்லாமல்-இருப்பதால் அட்டையில் பதிவிடும் போது நன்றாக இருக்காது.
    எனவே, எனது ஓட்டு-முதல் லோகோ விற்கே..

    ReplyDelete
  43. எனக்கு பிடித்தது லோகோ 1.

    ReplyDelete
  44. Logo 2. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  45. பருந்துக்கொரு பரலோகம்

    தீபாவளி மலரின் பெஸ்ட் கதை. முதல் கதை நகைச்சுவைக்கு கொஞ்சம் இடம் இருந்தது ஆனால் இது முழுவதும் சீரிஸான கதை.

    முதலில் எனக்கு பிடிக்காத விஷயங்கள் பற்றி சொல்லிவிட்டு கதையின் பிடித்த அம்சங்கள் கீழே.

    1. தொடர்ந்து 2 வது கருப்பு வெள்ளை கதையில் டெக்ஸ் ஒரு வில்லனிடம் உனது சந்ததியினர் அனைவரையும் கொல்வேன் என்று கூறுவது போல இருக்கிறது சார். கண்டிப்பாக டெக்ஸ் அது போல சொல்லமாட்டார். அப்பாவி குடும்பத்தை ஏன் இதற்காக இழுக்க வேண்டும்.

    2. கதை கடைசியில் கொஞ்சம் இழுத்ததாக பட்டது நடுவில் கிட் ஷெரீப் துரத்தும் இடத்தை கொஞ்சம் சுருக்கி இருந்தால் ஷெரிப் மீண்டும் தப்புவது பெரிதாக தெரியாது என்பது எனது கருத்து.

    3. சமீபமாக எனக்கு வரும் கருப்பு வெள்ளை புத்தகங்களில் எழுத்துக்கள் இருமுறை பிரிண்ட் ஆகி படிக்கும் போது மொய் மொய் என்று தெரிகிறது சார். அது படிக்கும் போது flow தடையாகிறது. ஆபிஸ் அழைத்து சொன்னால் உடனே வேறு புத்தகங்கள் அனுப்பிவிடுகிறார்கள் அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை தான் சார் இருந்தும் வாய்பிருந்தால் ஏதாவது செய்யமுடியுமா பாருங்கள்.


    பிடித்த அம்சங்கள்:

    சீரியஸ் கதைக்கு தகுந்தாற் போல வசனங்கள் தெரிகின்றன செம மாஸ்.

    ஒரு 3 சாம்பிள்கள்

    வேடிடம் டெக்ஸ் என் மகனை நீ தொட நினைத்திருந்தால் கூட இந்நேரம் உன்னை புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும்.

    நிழலுக்கே தெரியாத விதமாய் பின் தொடர்ந்த உன்னையுமே ஒரு நவஹோ பின்தொடந்ததை அறிவாயா நீ?

    அடுத்து கார்சன் கொள்ளையர்களை சந்திக்கும் இடம் அப்படியே ஒரு திரைப்படத்தின் மாஸ் காட்சியை எடுத்து வைத்தது போல இருக்கின்றது.

    இது போல மாஸ் காட்சிகள் மற்றும் மாஸ் வசனங்கள் நிறைந்து இருந்தது.

    வில்லனும் கொடூரமாக அமைந்தது கதையின் மிக பெரிய பிளஸ். அப்பொழுது தான் டெக்ஸ் குழுமத்தின் முழு திறமையும் வெளிப்படும்.

    வேட் வில்லன் போல முதலில் தோன்ற செய்து பின்பு வில்லன் மாற்றியது நல்ல யுக்தி. முற்றிலும் எதிர்பாராத வில்லனிடம் மாட்டிக்கொண்டும் கிட் குழுமம் படும் பாடுகள் நன்றாக இருந்தது.

    மொத்தத்தில் தீபாவளி சரவெடிக்கு ஏற்ற கதை.

    ReplyDelete
    Replies
    1. // சமீபமாக எனக்கு வரும் கருப்பு வெள்ளை புத்தகங்களில் எழுத்துக்கள் இருமுறை பிரிண்ட் ஆகி படிக்கும் போது மொய் மொய் என்று தெரிகிறது சார். //
      யெஸ் எனக்குமே இந்த பிரச்சினை அடிக்கடி வருகிறது...

      Delete
    2. அருமையாக எழுதியுள்ளீர்கள் கிரூஷ்ணா.

      Delete
    3. என்னாது ஜியா :-) நான் பக்கா தூத்துக்குடிகாரன் எனவே ஜியை தூக்கி விட்டு மக்கா வாலே போலே என போட்டு கூப்பிட்டுங்கள் கிருஷ்ணா :-)

      Delete
  46. முத்து 50 ஸ்பெஷல் இதழில் முன்பதிவு செய்பவர்களுக்கு சீனியர் எடிட்டர் மற்றும் தங்களின் கையொப்பம் இட்டு அனுப்ப வாய்ப்பிருந்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும்...

    ReplyDelete
  47. முதல் logo எனக்கு பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  48. எடிட்டர் சார்.
    மேலே உள்ள லோகோக்களை ஒரு badge மாதிரி plastic ல் தயார் செய்து வழங்கினால் புத்தக விழா போல நாங்கள் ஒன்றிணையும் தருணங்களில் அதனை அணிந்து கொண்டு வருவோம் முத்து குடும்ப அங்கத்தினர் என்ற பெருமையோடு.

    ReplyDelete
  49. Replies
    1. 2.30pm வரை சார்...


      Logo1: 26வாக்குகள்

      Logo2: 16வாக்குகள்

      Logo3: 16வாக்குகள்


      ஏர்லி ட்ரெண்ட் பார்த்தா 1லீடிங்.....!!!

      Delete
  50. பொக்கிஷம் தேடிய பயணம்

    நவஹோக்கள் மலைப்பகுதியில் உள்ள ஆற்றில் இறங்கும் டெக்ஸ் மற்றும் நண்பர்கள், தொடர்ந்து டெக்ஸ் காண்பிக்கும் புதையல் அந்த புதையல் யாருடையது, டெக்ஸ்க்கும் அதற்கும் என்ன சம்பந்தம், தேஷா யார், தேஷா மற்றும் டெக்ஸ் நட்பு எப்படி ஆரம்பித்தது என பல கேள்விகளுக்கு விடைகளை விறுவிறுப்பான கதையாக 110 பக்கங்களில் வண்ணத்தில் கொடுத்து உள்ளார்கள்!

    பாவ்னீ இனத்தவரின் புதையல் பற்றிய தகவல்கள் சிறப்பு. டெக்ஸ் மற்றும் தேஷா உடன் சினேகம் ஏற்படுவதற்காக உள்ள சம்பவங்கள் சிறப்பு; குறிப்பாக க்ரே பியர் டெக்ஸ் மற்றும் அவரின் நண்பர்களை காப்பாற்ற எடுக்கும் முடிவு அவருக்கு முதல் சந்திப்பிலேயே டெக்ஸ் பற்றி ஏதோ நல்லதாக தோன்றியதால் தான் தங்களின் ரகசிய குகைக்குள் அழைத்து செல்கிறார்!

    இளம் டெக்ஸ் நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு வகையில் சிறந்தவர்கள், நட்பை பெரியதாக நினைப்பவர்கள்! நண்பர்களின் ஒற்றுமை மற்றும் பாவ்னீ மக்களை காப்பாற்ற சியோக்ஸ் உடன் போரிடுவது என மனதை கவர்ந்து விட்டார்கள்!

    தேஷா வீரமும் அறிவும் அன்பும் உடைய பெண்ணாக காண்பித்து உள்ளார்கள்! தேஷாவை வசப்படுத்தி புதையலை எடுக்க அலையும் கும்பல் அதனை எப்படி டெக்ஸ் & கோ மடக்குகிறார்கள் என்று இரண்டாம் பகுதி வேகமாக சென்றாலும் ஜிம்மியின் சஸ்பென்ஸ் எளிதாக யூகிக்க முடிந்த ஒன்று.

    கதைக்கு வண்ணம் மேலும் சிறப்பு சேர்ப்பதாக அமைத்தது! short & ஸ்வீட் அதே நேரம் விரீயமான கதை இது!

    ReplyDelete
  51. முதல் லோகாவில் உள்ள அந்த வெள்ளை நிறம் பிடிக்கவில்லை, பொன் விழா ஆண்டு என்பதால் முழுவதும் கோல்ட் கலரில் இருந்தால் சிறப்பு! மேலும் சில நட்சத்திரங்களை அங்கே போட்டது நன்றாக இல்லை! பொன்விழா ஆண்டுக்கு மகுடம் சூட்டியது போல் கீரிடத்துடன் உள்ள லோகோ - 2 எனது தேர்வு!

    ReplyDelete
    Replies
    1. ///முதல் லோகாவில் உள்ள அந்த வெள்ளை நிறம் பிடிக்கவில்லை, பொன் விழா ஆண்டு என்பதால் முழுவதும் கோல்ட் கலரில் இருந்தால் சிறப்பு! ///

      கோல்டு கலரிலிருந்து வெண்மையாகிப் பிறகு ஜொலிக்கும் பிளாட்டினத்தினாலான ஸ்டார்ஸுக்கு மாறுவது - பொன்விழாவிலிருந்து பிளாட்டினம் விழாவை நோக்கி நகருவதைக் குறிக்கிறது! ஸ்டார்ஸ் - உயரிய அந்தஸ்தைக் குறிப்பிடுவதாக இருக்கலாம்!

      Delete
    2. அட சூப்பர் சிந்தனை விஜய்.

      Delete
    3. எனக்கும் லோகோ.1 தான் பிடித்திருந்தது. அந்த வெண்மை நிறத்திற்கான உங்கள் விளக்கம் அருமை ஈவி. அதுவே உண்மையாகவும் இருக்கலாம்.

      Delete
    4. மற்ற இரண்டுமே நன்றாகத்தான் இருக்கின்றன. இருப்பினும் எனது சாய்ஸ் முதலாவதே. first impression is the best impression.

      Delete
  52. @Udhay Adi

    உங்களுடைய லோகோ டிசைன் நிஜமான அசத்தல் சகோ! முதன்முறையாக ஒரு முகநூல் குழுவில் இதைப் பார்த்தபோதே பிரம்மிப்பாய் உணர்ந்தேன்! சில நண்பர்களிடமும் உங்களுடைய லோகோ குறித்து சிலாகித்துப் பேசினேன்! உங்கள் படைப்புத் திறமை அபாரம் சகோ!!

    ReplyDelete
  53. உதய் ஆதி உங்களோட இமேஜ் பேக்ரவுண்ட் செம சகோ .. சும்மா எடுத்து அடிக்குது

    ஆனாலும் நம்ம எடி சூஸ் பண்ணிணதும் அழகா இருக்கு

    பட் உங்களது முன்னாடி
    நம்ம எடி சொன்னது பின்னாடி .. ❣️❣️❣️

    முதல்ல 3
    பின்னாடி 1

    ReplyDelete
  54. //சீனியருக்கோ இன்னொன்று ரசித்தது ! And ரைட்டு - சீனியரின் தேர்வே இதனில் முன்னுரிமை பெறட்டும் என்று தீர்மானித்து// அவ்வாறு தீர்மானித்தது அப்படியே இருக்கட்டுமே சார். அவரின் தேர்வை அவ்வாறே விடுவது தானே நாம் அந்த பிதாமகரின் ரசனைக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்????

    ReplyDelete
    Replies
    1. அவர் தேர்வு செய்த லோகோவைத்தானே 49 வருடங்களாய் நாம் ரசித்துவருகிறோம்? இந்தவாட்டி நாம் தேர்வு செய்யும் லோகோவை அவர் ரசிக்கட்டுமே? :)

      Delete
    2. இது போன்ற ஒரு மைல்கல் தருணத்திலும் அவ்வாறே இன்னும் ஒரு முறை ரசிப்போமே என்று தான் கூறினேன் ஈ.வி

      Delete
    3. @Puthagapriyan0
      அதானே பார்த்தேன்! அப்படீன்னாச் சரிதான்! :)

      Delete
    4. நண்பே(ன்)ர்டா 🤝🤲🤝

      Delete
  55. அன்பின் ஆசிரியரே, இரத்தப்படலம் ஒரு முகவரிடம் கணிசமாக இருப்பதாக ஒரு பதிவில் தெரியப்படுத்தி இருந்தீர்கள் அது பற்றி ஏதாவது சொல்ல முடியமா?

    ReplyDelete
  56. லக்கியின் சூப்பர் சர்க்கஸ்...புரட்சித் தீ...வரிசையில் மீண்டுமோர் அற்புதம்....நிதிக்குத் தலை வணங்கு....மின்னல் வேகக் கதைக்கு சலிக்கா வசனங்கள் புன்முறுவலையும் சபாசையும் தரத் தவறல...கரடி ...பீன்...வில்லன்...அண்டர் டேக்கர் பாத்திரங்கள் பாங்காய் பொருந்த வசனங்கள் சித்திரங்களோடு பயணிப்பதற்கு....ஆசிரியர் வரிகளால் விளையாடியிருக்கார்...38ம் பக்கம் எல்லா பக்கங்களிலும் டாப்...லக்கியின் இது வரை வந்த பக்கங்களிலேயே டாப் இதான்...ஆவிய பத்தி செய்திகள் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் மாத்தி சொல்ல பீதி விஸ்வரூபம் எடுப்பத காட்டிய விதமழகு...மிஸ் பன்னாம பாருங்க...கடைசில எல்லாமுமாகும் ஜட்ஜ் நேர்மையான தனக்குத் தானே தீர்ப்பெழுத கல்வி கால் பதிப்பதழகு

    ReplyDelete
  57. Replies
    1. முதல் 2 லோகோக்களிலும் M மறைந்து விடுகிறது. 3வது logoவில் 'M'க்கு சேதாரம் இல்லாமல் 50ம் தெரிகிறது

      Delete
    2. பலமுனை கொண்ட கிரீடமும் நடுவில் ஒளிக்கீற்றும் icing on cake...

      Delete
    3. மிக்க நன்றிகள் சகோ...

      Delete
  58. முதல் லோகோ மிக சிறப்பாக உள்ளது. என்னுடைய vote # 1

    ReplyDelete
  59. என் முகநூல் பதிவிலிருந்து - முகநூல் பக்கமே எட்டிப்பார்த்திடாத நண்பர்களின் பார்வைக்கு :

    **** காமிக்ஸும் குழந்தைகளும் *****

    நம்மில் நிறையப் பேருக்கு இருக்கும் ஆசையைப் போலவே எனக்கும் என் குழந்தைகள் காமிக்ஸ் படிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது!

    சும்மா எதாவதுதொரு புத்தகத்தை அவர்கள் கையில் கொடுத்து 'படி' என்றால் படித்துவிட மாட்டார்கள்.. அல்லது படிப்பதுபோல நடிப்பார்கள்!

    முதலில் அவர்களது ஆர்வத்தைத் தூண்டவேண்டும்!
    சரி எப்படித் தூண்டலாம்?!! ஒரு எளிய வழிமுறையை டாம் & ஜெர்ரி நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது! 'Curious mouse' என்றவொரு எபிசோடில், டாம் ஒரு புத்தகத்தைப் (மனதுக்குள்) படித்து கெக்கேபிக்கே என்று சிரிக்கும்.. படித்துப் படித்துச் சிரிக்கும். 'அப்படி எதற்குத்தான் சிரிக்கிறான்' என்ற ஆர்வம் மேலிட ஜெர்ரி தன் பதுங்குதளத்திலிருந்து வெளியே வந்து, டாம் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிட முயற்சிக்கும்! ஜெர்ரியை கண்டும் காணாததுபோல அந்தப் புத்தகத்திலேயே லயித்துச் சிரித்துக் கிடக்கும் டாம்! ஆர்வத்தைக் கட்டுப்படுத்தவே முடியாத ஜெர்ரி ஒரு கட்டத்தில் டாம் மீதே ஏறி, அவனது கை சந்துகளின் வழியாகப் புகுந்து அப்புத்தகத்தின் மீது குதித்து அதைப் படிக்க முயற்சி செய்திடும்!

    என் வீட்டில் குழந்தைகளின் காமிக்ஸ் ஆர்வத்தைத் தூண்டிட கிட்டத்தட்ட டாமின் வழிமுறையையே நானும் கடைபிடிக்கிறேன். தோதான ஒரு நேரம் கிடைக்கும்போது அவர்கள் முன் அமர்ந்து நான் மனதுக்குள் படித்துச் சத்தமாகச் சிரிப்பேன். அடுத்த சில நிமிடங்களிலேயே அவர்கள் ஜெர்ரியாக மாறி என் அருகே வந்து ஒட்டிக்கொள்வார்கள். நான் தொடர்ந்து படிப்பேன்.. சிரிப்பேன். "டாடி, இந்தக் கதையை எனக்கும் சொல்லுங்கள்" என்பார்கள். சிலசமயங்களில் முழுக்கதையையும் அவர்களுக்கு படங்களைக் காட்டி சொல்வேன். சிலசமயங்களில் பாதிக் கதையோடு நிறுத்திவிட்டு 'இனி நீயே படித்துக்கொள்' என்று புத்தகத்தை அவர்களிடம் கொடுத்துவிடுவேன். ' மீதக் கதையையும் நீங்களே சொல்லிடுங்க டாடி' என்பார்கள்.. இங்கே தான் நாம் உஷார் ஆக வேண்டும் "டாடிக்கு நிறைய வேலையிருக்கு.. நீயே படிச்சுக்கோ" என்று சொல்லிவிட்டு மொட்டைமாடிக்கு பராக்குப் பார்க்கச் சென்றுவிடுவேன்!

    இதுபோன்ற சிலபல முயற்சிகளுக்குப் பிறகு இப்போது என் 11வயது மகள் அவ்வப்போது அவளாகவே காமிக்ஸ் புத்தகத்தை எடுத்துப் படிப்பதை கண்குளிரக் கண்டுவருகிறேன்! அவ்வப்போது பழைய புத்தகக் கடைகளில் Tinkle digest வாங்கிக் கொடுக்கிறேன். விரும்பிப் படிக்கிறாள்! நம் காமிக்ஸில் லக்கிலூக், ஆர்ச்சி, ஸ்மர்ஃப் கதைகளை விரும்பிப் படிக்கிறாள்!
    இரண்டாவது மகளுக்கு 5 வயதே என்பதால் நான் முழுக்கதையையும் சொல்வது தொடர்கிறது! சாப்பிடும்போது மொபைல் அல்லது டிவியில் சோட்டாபீம் பார்க்கும் அவளது பழக்கத்தை தற்போது எனக்கு நேரம் கிடைக்கும்போது காமிக்ஸ் கதைகளைப் படித்துக்காட்டி மாற்றிவருகிறேன்! தற்போது அப்படி நான் அவளுக்குக் சொல்லிவரும் கதை 'தாயில்லாமல் டால்டன் இல்லை'! இரவு தூங்கும்போது கண்டிப்பாக அவளுக்கு நான் கதை சொல்லியே ஆகவேண்டும். நினைவிலிருக்கும் கபீஷ் கதைகளை அவளுக்குச் சொல்லித் தூங்க வைப்பேன். சில சமயங்களில் சொந்த புருடாக்களும் உண்டு!

    சில அனுபவ ஆலோசனைகள் :

    * குழந்தைகளை ஆரம்ப கட்டத்தில் 5 அல்லது 6 பக்கக் கதைகளை படிக்க வைப்பது நல்லது! பிற்பாடு முழுநீளக் கதைகளைக் கொடுக்கலாம்!

    * நாம் கதை சொல்ல நேரிடும்போது அதிகபட்சபாக 20 நிமிடங்களுக்குமேல் அந்த கதை நீளாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். பெரிய்ய கதையை சின்னச் சின்ன எபிசோடுகளாகப் பிரித்து வேறு வேறு தருணங்களில் ஒரு தொடர்கதை போல சொல்லலாம்!

    * காமிக்ஸை அறிமுகப்படுத்திடும் ஆரம்பகட்ட நாட்களில் பெரிய்ய படங்களும், குறைவான வசனங்களும், குறைந்த பக்கங்களும் கொண்ட முழுவண்ணக் கதைகளையே தேர்வு செய்து கொடுக்கவேண்டும்! இந்த அளவுகள் அவர்களது படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும்!

    உங்களுக்கும் இதுபோன்ற அனுபவங்கள்/கருத்துக்கள் ஏதேனுமிருப்பின் இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. அருமை ஈவி...நம்மாளு கால்ல மிதிச்சி ஆட்டுத் தொலிய உரிப்பது போல....ஆனா பக்கங்களா குறுகுறுப்பா புரட்டுவார்....உங்க அனுபவத்தை பின்னாளில் முயற்சிக்கிறேன்

      Delete
    2. தங்கள் யோசனையும், முயற்சிகளும் உண்மையில் பாராட்டப்படவேண்டிய ஒன்று ஈ.வி.ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது. காமிக்ஸ வாசிப்பை வளரும் பருவத்திலேயே ஊட்டினால்தான், அதன் மீது அவர்களின் ஆர்வம் அதிகரித்து படிக்க ஆரம்பிப்பார்கள்.
      கடைசியாய் ஒரு கேள்வி மட்டும்..
      நீங்கள் அப்படி சத்தமாக சிரிக்கும் போது, வீட்டம்மாவின் ரியாக்ஷன் என்னவோ?

      Delete
    3. இ. சி. இளவரசர் மாடிக்கு "பராக்குப் பார்க்க போகும்" அந்த வேளையும் , சில பல உப்பரிகைகளில் வடாம் காயப்ப்போடப்படும் வேளைகளும் ஒன்றிப் போவதாய் உளவுத் துறையின் தலீவர் தரும் அறிக்கையில் சாரம் இருக்குமோ ?

      Delete
    4. சத்தமில்லாமல் றெக்கை முளைக்கும் மத்துக் கட்டை தான்...
      ஆசிரியரே இளவரசர் எந்தப்புறம் நோக்கினாலும் அந்தப்புறம்னு நீங்க நினைப்பது தகாது

      Delete
    5. ///நீங்கள் அப்படி சத்தமாக சிரிக்கும் போது, வீட்டம்மாவின் ரியாக்ஷன் என்னவோ?///

      பத்து சார்.. நடத்துவது ஒரு நாடகமே என்பதால் பெரிய பிரச்சினைகள் எதுவும் வந்ததில்லை!
      தவிர, மனசுவிட்டு சிரிப்பதற்கும், நாடகச் சிரிப்புக்கும் உடல்மொழியில் சில அடிப்படை வித்தியாசங்கள் உண்டே! குறிப்பாக, மனசுவிட்டு சிரிக்கும்போது உடல் குலுங்கும்; நாடகச்சிரிப்பில் அது இருக்காது - சத்தம் மட்டும் கொஞ்சம் பெரிதாக வரும்! குழந்தைகளுக்குத்தான் இந்த வித்தியாசத்தை உணரத்தெரியாது - வீட்டம்மாக்களுக்கல்ல!! :)

      @ எடிட்டர் சார்
      ஹிஹி! பழுத்த அனுபவம் கொண்ட ஒருவரால் மட்டுமே இப்படி அடுத்தவரின் சிரமங்களைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியும்!
      ஹோ.. ஹோ..ஹோ!!

      Delete
  60. ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு முதல் லோகோ பிடிக்கும்

    கிளாசிக் ரசிகர்களுக்கு இரண்டாம் லோகோ பிடிக்கும்.

    கிநா ரசிகர்களுக்கு மூன்றாவது லோகா பிடிக்கும்.

    எனது வோட்டு மூன்றாவது லோகோவுக்கு...

    ReplyDelete
  61. Logo 1 நன்றாக இருப்பதாக தோன்றுகின்றது. ்அட்டை படம் நன்று.

    ReplyDelete
  62. லோகோ தேர்வு நிலவரம்....8.00PMக்கு..


    Logo1: 28வாக்குகள்


    Logo3: 20வாக்குகள்


    Logo2: 18வாக்குகள்

    ஏர்லி ட்ரெண்ட்க்கு பிறகு ஒரு சின்ன ஸ்விங் ...லோகோ3 மூன்றாவது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    ஸ்டில் லோகோ 1லீடிங் பை குட் மார்ஜின்.....!!!

    ReplyDelete
    Replies
    1. சகோ உதய்யின் தனிப்பட்ட முயற்சி ஒரு கன்சிடரபிள் பொஷிசன் எடுக்குது என்பது சாதாரண விசயம் அல்லவே!!!

      பாராட்டுகள் உதய் சகோ!🌹

      Delete
    2. தோழருக்கு என்னுடைய வாழ்த்துகளும்.

      Delete
  63. எப்போதும் லக்கி லூக் கதைகளில்துணைப் பாத்திரங்கள்சில ஜொலிக்கும். இம்முறை கரடி ஜோ. 31ம் பக்கத்தில் லக்கியை தூக்குக்கயிற்றிலிருந்து காப்பீற்றிவிட்டு நடந்து செல்லும் ராஔஜநடைஅருமை. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  64. My vote is for #2

    I feel it matches with current Muthu logo and gold colour represents golden jubilee year.

    ReplyDelete
  65. மூன்றாவதில் வெளிப்புறம் வெள்ளைக்கு பதில் கருப்பு இருந்திருந்தால் அதுவே எனது தேர்வு...

    அது இல்லாததால் என் ஒட்டு #2

    ReplyDelete
  66. பருந்துக்கொரு பரலோகம்!

    ஆகா, அட்டகாசம்!! நெடுநாளைக்கு பிறகு சுவாரஸ்யமான, விறுவிறுப்பானதொரு (டைகர் பாணியிலான) டெக்ஸ் கதை!!!

    மார்க் : 9/10

    ReplyDelete
    Replies
    1. அடடே!! மிதுனர்க்கே டெக்ஸ் கதை பிடிச்சுருக்கா?!! அப்படீன்னா கதை 100% சூப்பர் ஹிட் தான்!

      Delete
  67. நிதிக்குத் தலை வணங்கு - குழந்தைகளுக்கு நேற்றிலிருந்து கதை சொல்ல ஆரம்பித்து விட்டேன். 20 பக்கங்கள் ஓடி விட்டது. எனது குழந்தைகளுக்கு கதை பிடித்து விட்டது. ஜட்ஜ் கேரட்டரை மிகவும் ரசித்தார்கள்.

    ReplyDelete
  68. ஜயோ! கடவுளே!! சிரித்து மாளவில்லை!!

    JP மார்கன்யே நடுரோட்டில படுக்க வைச்சுப்புட்டாரே "மோரிஸ்"!

    அம்பேரிக்காவின் நிதி (நீதி) பரிபாலன, பரிணாம வளர்ச்சி வரலாற்றை இதுக்கு மேலேயும் யாரும் நையாண்டி பண்ண முடியாது!

    "நிதிக்கு தலைவணங்கு"

    A1, டாப் க்ளாஸ்!!!

    மோரிஸ் அவர்களின் கதை சொல்லலும் அட்டகாசப் படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது!

    10/10

    ReplyDelete
  69. நமது ஆசிரியர் நம்மை மகிழ்விக்க எப்படி குட்டிக்கரணம் அடித்தாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி முட்டுச்சந்தில் வைத்து பூஜை செய்வதை பார்த்தால் நாம் எல்லோரும் ஒரு வகையில் ராய் பீன் தான் :-) ஆமாம் எந்த பக்கம் போனாலும் ஏதாவது காரணம் சொல்லி கேட் போடும் ராய் பீனாக நம்மை கற்பனை செய்து பாருங்களேன் :-)

    ReplyDelete
  70. பொன்விழா ஆண்டு லோகோவில் கருப்பு கலர் வேண்டாமே. கருப்பு கலருக்கு பதில் வேறு கலர் வந்தால் முதல் லோகோ நன்று.

    ReplyDelete
  71. போட்டோ அனுப்புவதற்கான மின்னஞ்சல் முகவரி தெரிவியுங்கள் பிளீஸ்

    ReplyDelete
  72. My vote for logo #3

    Got clarification on background and happy to vote for it.

    ReplyDelete