Powered By Blogger

Thursday, June 24, 2021

RIP ஓவியரே !

 நண்பர்களே,

வணக்கம். ஒரு வருத்தமான சேதியோடு உபபதிவு ! நமது மூத்த ஓவியர் மாலையப்பன் அவர்கள் கடந்த 5-ம் தேதி (ஜூன் 5) இறைவனிடம் ஐக்கியமாகி விட்டுள்ளார் ! இன்று காலை நண்பர் அனுப்பியதொரு FB தகவலைத் தொடர்ந்து அவரது வீட்டாரிடம் விசாரித்த போது இந்தச் சங்கடச் செய்தியைச் சொன்னார்கள் ! நமது அலுவலகத்திற்கு ஓவியர் கடைசியாய் வந்து நிறைய காலம் ஆகிப்போயிருந்த நிலையில் நமது நம்பர்களை அவரது வீட்டம்மா வைத்திருந்திருக்கவில்லை போலும் ! ஓவியரிடமும் தான் செல்போன் கிடையாதே ! ஆகையால் தகவல் சொல்லாது விட்டு விட்டார்கள் ! கொஞ்ச காலமாகவே low B.P. இருந்து வந்துள்ள நிலையில் அதிகாலை 3 வாக்கில் அசவுகரியமாய் உணர்ந்திருக்கிறார் போலும் ! வீட்டில் ஏதோ கைப்பக்குவங்கள் செய்து தந்துவிட்டு மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வதற்குள்ளாய் காலன் அழைத்துச் சென்று விட்டிருக்கிறார் ! 30 ஆண்டுகளுக்கும் மேலாய் என்னோடு சரளமாய் ; பல சமயங்களில் குழந்தைத்தனமாய் பழகிய மனுஷனை மூப்பு வென்று விட்டுள்ளது ! மரணித்த போது அவரது வயது 69 தான் ....போகும் வயதே அல்ல தான் !! 

1984-ல் ஒரு ஜூலையில் நமது துக்கனூண்டு ஆபீஸ் ரூமில் முதல்முறையாக அவரை சந்தித்தது இன்னமும் எனக்கு மறக்கவில்லை ! பாளையங்கோட்டையிலிருந்து அடிக்கடி தந்தையின் ஆபீசுக்கு நோட்புக் ராப்பர் டிசைன்கள் போட்டுக் கொண்டு வரும் மனுஷனை எனக்கு அப்போதே பழக்கமுண்டு தான் ! ஆரம்ப ஆண்டுகளில் நமக்கு பைண்டிங் செய்து வந்த பெரியவருமே மேலப்பாளையத்திலிருந்து வருபவரே என்பதால், அவரிடம் தகவல் சொல்லி மாலையப்பனை வரவழைத்திருந்தேன் ! முதல் டிசைனாய்  நான் தந்திருந்தது - பின்னாட்களில் "புரட்சித் தலைவன் ஆர்ச்சி"யின் அட்டைப்படமாய் மிளிர்ந்த படத்தினையே ! அது எனக்கு அத்தனை பிடிக்கவில்லை என்பது வேறு கதை ஆனால் அந்த முதல் பணிக்கு அந்நாட்களில் நான் தந்தது ரூ.100 தான் ! திருநெல்வேலியிலிருந்து வந்து போக பஸ் காசுக்கு ரூ.10 தனி ; சாப்பாட்டுக்கென ரூ.5 !! இன்றைய தலைமுறைக்கு இவை எல்லாமே நம்ப இயலா நம்பர்களாகவே இருக்கக்கூடும் ; ஆனால் trust me guys - அந்நாட்களில் நான் 27 நாள் ஐரோப்பா சுற்றி வந்த விமான டிக்கெட்டே ரூ.9000 தான் ! 

தொடர்ந்த காலங்களில்  - எனது எதிர்பார்ப்புகள் என்ன ? என்ன மாதிரியான ஜிங்கு ஜாங் கலர்களை நான் கோருவேன்? என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படி ! அதிலும் ஸ்பைடர் டிசைன் என்றால் மனுஷனுக்கு செம குஷி ஆகிடும் ! இன்னமும் அந்த "கடத்தல் குமிழிகள்" ; சதுரங்க வெறியன் " அட்டைப்படங்களெல்லாம் தெறிக்கும் நினைவுகளாய் என்னுள் உள்ளன ! நடு நடுவே கோவில்களில் சுவர்களில் சித்திரம் போடும் காண்டிராக்டுகளுக்கு கூப்பிடும் போது என்னிடம் தயங்கியவாறே நிற்பார் ; அங்கே கணிசமான சன்மானங்களுக்கு வாய்ப்புண்டு என்பதால் நான் தடுக்க மாட்டேன் ; ஆறேழு மாதங்கள் கழிந்த பின்னே மீண்டும் வந்திடுவார் ! அங்கே கோவில்களில் போட்ட சித்திரங்களை ; அங்கே அணிவித்த பொன்னாடைகளை ; பாராட்டு மடல்களைக் காட்டி விட்டு அந்த டிரேட்மார்க் சிரிப்பைச் சிரித்து வைக்கும் போது அத்தனை பெருமிதம் மிளிரும் அவரிடம் ! 

ஆனால் கோவில்களில் அந்தப் பணிகள் ரொம்பவே பெண்டைக் கழற்றுவதால், அடிக்கடி சுகவீனங்களும் பலனாகிட்டன !  பின்னாட்களில் நமது ஊதியங்களையுமே கணிசமாய்க் கூடுதலாகி இருந்ததால் இயன்ற மட்டுக்கும் அந்தப் பணிகளைத் தவிர்த்து வந்தார் ! ஆனால் அந்த வரதா புயல் ; தொடர் மழைகள் என்ற காலத்தில் ரொம்பவே தளர்ந்து போனதால் சிவகாசிக்கு வந்து செல்லக்கூட தடுமாற ஆரம்பித்தார் ! And அந்தத் தளர்ச்சியின் பிரதிபலிப்பு பணிகளிலும் தென்பட்டது தவிர்க்க இயலாப் பின்விளைவாகிப் போனது ! ஒரு டிசைனைப் பூர்த்தி செய்ய ஒரு வாரமே ஜாஸ்தி என்ற நிலை மாறி, ஒரு மாதம் அவசியமென்றாகிய சூழலில் தான் நாம் வெளியீடுகளின் எண்ணிக்கைகளை திடுமென அதிகரித்திருந்தோம் ! So சிறுகச் சிறுக ஒரிஜினல் டிசைன்கள் ; டிஜிட்டல் ஓவியர்களென்று நாமும் நகர்ந்திட, ஓவியரும் ஒய்வு நாடிட துவங்கினார் ! அவரை கடைசியாய் நான் பார்த்தது 2019-ன் இறுதியில்....! இன்றைக்கு போட்டோக்களில் நினைவுகளாய் மட்டும் தொடர்கிறார் ! விதிகளின் வரிகள்....!!

நமது 50-வது ஆண்டு விழாவின் சமயம் பழைய ஆட்கள் அனைவரையுமே கௌரவிக்க எண்ணியிருந்தேன் ; ஆனால் இறைவனின் சித்தம் வேறாக இருந்துவிட்டுள்ளது ! நம்மால் இயன்றதொரு தொகையினை அவரது குடும்பத்தாரிடம் தந்திட எண்ணியுள்ளேன் ! காலச்சக்கரத்தின் ஓட்டத்தை இது போன்ற தருணங்களில் தான் முழுமையாய்ப் புரிந்து கொள்ள முடிகிறது ! Pheww !!

எண்ணற்ற நமது ஹிட் இதழ்களுக்கு உறுதுணையாய் நின்றிருந்தவருக்கு நமது வணக்கங்கள் & நன்றிகள் !!  ஆண்டவனிடம் அடைக்கலம் கண்டுள்ளவரின் ஆன்மா நிம்மதி காணட்டும் !! RIP ஓவியரே !! 

126 comments:

  1. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. மிகவும் வருத்த மான செய்து. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  3. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  4. ஓவியர் அய்யா அவர்களது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!

    RIP!

    ReplyDelete
  5. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  6. மிகவும் வருத்தமான செயதி அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.!

    ReplyDelete
  7. ஆழ்ந்த இரங்கல்கள்..

    ReplyDelete
  8. ஆழ்ந்த இரங்கல்கள்..

    அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்..

    ReplyDelete
  9. சிறப்பான ஓவியங்களில் அவர் அமரராக என்றும் வாழ்வார்.. வி மிஸ் யூ சார்...😭😭😭😭

    ReplyDelete
  10. ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete
  11. ஓவியக் கலைஞர் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  12. கலைஞரின் ஆன்மா சாந்தியடைய செந்தூரானை வேண்டுகிறேன். பழய ஸ்பைடர் அட்டைப் படங்கள் பெரிதும் இல்லை ...இவர் வரைந்த அட்டைகளை இயன்றால் நினைவு படுத்தலாமா...அந்த அட்டைகளை இங்கே அஞ்சலியாய் காணிக்கையாகச் இல்லாமே இயன்ற நண்பர்கள்...ஆசிரியர்

    ReplyDelete
  13. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  14. நம்மால் இயன்றதொரு தொகையினை அவரது குடும்பத்தாரிடம் தந்திட எண்ணியுள்ளேன்//

    ஒரு சிறு தொகையை அனுப்புகிறேன் சார்.. அதையும் சேத்துக்கங்க...ப்ளீஸ்..

    ReplyDelete
  15. அவர் வரைந்த ஓவியங்கள் மூலம் நிச்சயம் நம் உடன் அவர் காலமெல்லாம் நம்மோடு இருப்பார்.. ஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...

    ReplyDelete
  16. வணக்கம் நண்பர்களே!

    ஆழ்ந்த இரங்கல்கள்!

    ReplyDelete
  17. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  18. மாலையப்பன் அவர்கள் இறந்துவிட்டாரா ?

    ஆழ்ந்த இரங்கல்கள்.


    2012 அல்லது 2013வாக்கில் லயன் அலுவலகம் மாடியில் இயங்கிய போது புத்தகங்கள் வாங்க சிவகாசி வந்திருந்தேன்.அப்போது மாலையப்பன் அவர்கள் ஏதோ படம் ஒன்றை வரைந்து கொண்டிருந்ததை அமைதியாகப் பார்த்து ரசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. காலனை வரையச் சென்றுவிட்டரோ?!

    அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  19. கடைகளில் காமிக்ஸ் அட்டைபடங்களை பார்த்தவுடன் ஏற்படும் சந்தோசம் சொல்லி முடியாது அதற்கெல்லாம் காரணம் இவருடைய உழைப்புதான்.


    அவருக்கு எங்களால் முடித்த உதவியும் செய்ய அனுமதியுங்கள் சார். Gpay இல் எங்களால் முடிந்த பணத்தை அனுப்பிகின்றோம் மாலையப்பன் என்ற மெசேஜ் உடன் அதையும் சேர்த்து அவர் குடும்பத்திடம் சேர்க்க முடியுமா.

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு எங்களால் முடித்த உதவியும் செய்ய அனுமதியுங்கள் சார்.//

      எனது கோரிக்கையும் அதுவே...அவரது குடும்பத்தினருக்கு சற்று ஆறுதலாக இருக்கும்..உங்கள் எண்ணத்திற்கு நன்றி நண்பரே...

      Delete
  20. Dear Editor Sir, எங்களது இளமைப்பருவத்தை வண்ணமயமாக்கிய அந்த ஓவியரின் புகைப்படத்தை பகிர இயலுமா

    ReplyDelete
  21. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  22. My deepest condolences to the breaved family...

    ReplyDelete
  23. கற்பனை கலந்த அவரின் ஓவியங்களை கண்டுள்ளோம். இதனை வரைந்த உண்மைகலைஞனின் ஒளிப்படத்தை
    பகிருங்கள் ஆசிரியரே

    ReplyDelete
  24. அண்ணாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

    ஒவ்வொரு சிறப்பிதழிலும் அட்டையில் ஓவியங்கள் அண்ணாரின் கைவண்ணங்கள்... இன்றும் அந்த ஓவியங்களே அந்த இதழ்களை நினைவூட்டும்...!

    ReplyDelete
  25. அன்னாரின் ஆன்மா இறைவனின் நிழலில் அமைதியடையட்டும்.
    🙏🙏🙏

    ReplyDelete
  26. வருத்தமான செய்தி :(

    அண்ணாருக்கு ஆழ்ந்த இரங்கல்.

    ReplyDelete
  27. Sir அவருடைய புகைப்படம் இருந்தால் பதிவிடவும்.

    ReplyDelete
  28. ஆழ்ந்த இரங்கல்

    ReplyDelete
  29. ஓவியரின் குடும்பத்தாருக்கு மிகவும் ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  30. அவர் மறைந்தாலும், அவரின் கைவண்ணத்தில் மிளிர்ந்த ஓவியங்கள் வாழ்ந்து கொண்டுதானிருக்கும். ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  31. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்

    ReplyDelete
  32. பலமுறை பதிவில் திரு மாலையப்பன் கை வண்ணத்தை சிலாகித்து எழுதி உள்ளீர்கள் ...இந்தப்பதிவின் மூலம் தங்களுடனான அவரின் பிணைப்பு தெரிகிறது. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறையை வேண்டுகிறேன். அவரது புகைப்படம் இருந்தால் நம் Comics ல் வவெளியிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. 1990 களில் அச்சகமே ஜாஸ்தி இடம் பிடித்திருந்த வேளையினில் காமிக்ஸ் செக்ஷனுக்கு ஆபீசில் இடம் பற்றலை ! So எனது தாத்தா வசித்து வந்த பூர்வீக வீட்டின் ஒரு பகுதிக்கு காமிக்ஸ் செக்ஷனும் ; எதிரே இருந்த இன்னொரு குட்டியான கட்டிடத்திற்கு ஆர்ட்டிஸ்ட் செக்ஷனும் இடமாற்றம் கண்டன ! அது ஊருக்குள் நட்ட நடுவே இருந்தது என்பதால் ஹோட்டல்கள் ; டீக்கடைகள் - என சகலமும் நடக்கும் அண்மை தான் ! So அவசரப்பணிகளெனில் சிவகாசியிலேயே தங்கி இருந்து படம் வரையும் மாலையப்பனுக்கு அது ரொம்பவே சவுகரியம் ! ஜாலியாய் ஒரு வாரம் - பத்து நாட்கள் என்று தங்கியிருப்பார் மனுஷன் ! அங்கே இருந்த நாட்களில், நானும் ; ஓவியரும் ஒரு பிரத்யேக மௌன பாஷையினில் பேசிக் கொள்வது, என் தாத்தாவுக்கு ஒரு தீரா அதிசயமாகவே தோன்றிடுவதுண்டு ! தாளில் எழுதிக் காட்டித் தான் ஒரு விஷயத்தைப் புரிய வைக்க வேண்டுமென்ற நெருக்கடி ஒரு நாளும் எனக்கு எழுந்ததில்லை ! சொல்ல வேண்டியதையும், கேட்டுக் கொள்ள வேண்டியதையும் எப்படியோ சமாளித்துக் கொள்ள முடிந்தது !

      Delete
    2. // ஓவியரும் ஒரு பிரத்யேக மௌன பாஷையினில் பேசிக் கொள்வது, என் தாத்தாவுக்கு ஒரு தீரா அதிசயமாகவே தோன்றிடுவதுண்டு ! //
      அது ஒரு அற்புதமான புரிதல் சார்,அதற்கு வார்த்தைகளே தேவையில்லை...

      Delete
  33. ஆழ்ந்த இரங்கல்கள். அண்ணாரின் ஆன்மா சாந்தியடையட்டும் ! ஓம் ஷாந்தி! ஓம் ஷாந்தி!

    ReplyDelete
  34. அந்த துயரச்செய்தியை முகநூலில் பார்த்ததும் நம்ப முடியாமல் தான் செந்தில் சத்யாவிடம் தகவல் தெரிவித்தேன்.செய்தி உண்மைதான் என்று தெரிந்ததுமே மனது கனத்துப் போனது. ஜூனியரின் திருமணத்தில் அவரோடு இருந்தது சில நிமிடங்கள் தான் என்றாலும் மறக்க முடியாத பிறவிக்கலைஞர் அவர்!

    ReplyDelete
  35. எங்கள் சிறு பராயங்களை அட்டைச் சித்திரங்களால் நிறைத்தவர் இவ்வளவு சீக்கிரம் விடைபெறுவார் என எதிர்பார்க்கவில்லை. ஆன்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த இரங்கல்கள்! அவரது நினைவுகள் லயன், முத்து அட்டைகளாய் எம்மோடு இறுதிவரை இணைந்திருக்கும்.

    அவருக்கென தங்கள் இணையத் தளத்தில் ஒரு பக்கத்தை ஒதுக்கி, ஒரிஜினல் மற்றும் அவை அட்டைப்படங்களான பின் என - காட்சிப்படுத்திட வேண்டுகிறேன் சார். இளைய தலைமுறையினருக்கு அவை வரலாற்றுப் படிவங்களாவதோடு எமக்கு சிறுபராய நினைவுகளை மீட்டிடும் கால எந்திரமாக அவை இருந்திடும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Actually Editor Sir,

      The best tribute to Mr Maalaiyappan would be a medley of his covers as an art paper book - A4 size - our usual 52 pages. Please do it as part of 50th year celebrations sir !

      Delete
    2. We are in fact bringing out a complete collection of MC covers - from 1972 to 2022 as a separate book ! Covers till # 313 have been collected and sent to us already by Mahi ji !

      Delete
    3. Great News, Edi. Looking forward for the collected issue.

      Editor Sir, please don't stop with Muthu comics, rather do the same for Lion, Mini Lion, Thigil and others too.

      Will be a good nostalgia series.

      Delete
  36. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் .

    ReplyDelete
  37. மாலையப்பன் அய்யாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...
    எல்லாம் வல்ல பரபிரம்மத்தின் நிழலில் அமைதியுற பிரார்த்திக்கின்றேன்...

    ReplyDelete
  38. // எண்ணற்ற நமது ஹிட் இதழ்களுக்கு உறுதுணையாய் நின்றிருந்தவருக்கு நமது வணக்கங்கள் & நன்றிகள் !! //
    நம் மனதிற்கு பிரியமான ஓவியங்களை வரைந்தவருக்கு என்றும் மரணமில்லை...
    என்றும் நம் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பார்...
    சில இழப்புகள் நம்மை சற்றே தடுமாறத்தான் வைக்கின்றன...

    ReplyDelete
  39. ஓவியர் மாலையப்பன் ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
    RIP ஓவியரே.

    ஓவியர் ஐயாவை நான் முதல் முதலாக பார்த்தது நமது விக்ரமின் கல்யாணத்தின் போது என நினைக்கிறன்! எளிமையான மனிதர், முகத்தில் குழந்தையின் புன்சிரிப்பை கண்டேன்! முத்து 50 கொண்டாட்டத்தின் போது மீண்டும் சந்திக்கலாம் என இருந்தேன், அது கனவாகி போய் விட்டது.

    // நம்மால் இயன்றதொரு தொகையினை அவரது குடும்பத்தாரிடம் தந்திட எண்ணியுள்ளேன் //

    நல்ல ஐடியா! என்னால் முடிந்த ஒரு சிறிய அளவு பணத்தை நமது PRAKASH PUBLISHERS பேங்க் அக்கௌன்ட்ங்கு அனுப்பியுள்ளேன் சார். நன்றி.

    முடிந்தால் அவரின் குடும்பத்தில் உள்ளவர்களை நமது முத்து 50 விழாவிற்கு அழைக்கலாம் சார்.

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. // அங்கே கோவில்களில் போட்ட சித்திரங்களை ; அங்கே அணிவித்த பொன்னாடைகளை ; பாராட்டு மடல்களைக் காட்டி விட்டு அந்த டிரேட்மார்க் சிரிப்பைச் சிரித்து வைக்கும் போது அத்தனை பெருமிதம் மிளிரும் அவரிடம் ! //

    இந்த வரிகளை படிக்கும் போது ஓவியர் மாலையப்பனின் முகமும் கண்களின் நீரும் வருகிறது. இது போன்ற மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிது.

    ReplyDelete
  42. கண்ணீர் அஞ்சலிகள்!������

    ReplyDelete
  43. எண்ணங்களை வண்ணங்களால்
    எண்ணற்ற ஓவியங்களாய் வரைந்தளித்த
    தூரி'கை', இன்று இங்கே, தானும்
    ஒரு ஓவியமாகி விட்டது.
    இவரது படைப்புகளால் கவர்ந்த இறைவன்
    இவரையும் கவர்ந்து சென்று விட்டான்.
    தானும் ரசிக்க.

    ReplyDelete
  44. ஐயாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  45. திரு. மாலையப்பன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  46. ஆழ்ந்த இரங்கல்கள். அவர் வேண்டுமானால் இறைவனடி சேர்ந்திருக்கலாம்.. அவர் ஓவியங்கள் என்றும் நம்முடன் வாழும்.

    ReplyDelete
  47. மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி.. அவரது ஓவியங்கள் வழியாக என்றும் அவர் நம்முடன் வாழ்ந்திருப்பார்.. RIP மாலையப்பன் Sir 💐😔

    ReplyDelete
  48. திரு. மாலையப்பன் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது.

    ஜூனியரின் திருமணத்தின் போதுதான் அவரை முதன்முறையாகப் பார்த்தேன். எப்படியும் திருமணத்திற்கு வருவார் என்ற கணிப்பில் சேந்தம்பட்டி நண்பர்கள் சார்பாக முன்கூட்டியே அவருக்கொரு நினைவுப் பரிசையும் கையோடு கொண்டு சென்றிருந்தோம். தூரிகையைப் பிடித்து நம்மை வசியப்படுத்திய அந்தக் கரங்களை பற்றிக் குலுக்கியபோது மகிழ்ச்சியும், பெருமையும் ஒரு சேர - அவரிடம், நம்மிடமும்!

    முத்து பொன்விழா நிகழ்வுகளின் போது அவரும் நம்மோடு இணைந்திருப்பார் என்றே எண்ணியிருந்தோம்.. விதி பிரித்துவிட்டது!

    கண்ணீர் அஞ்சலிகள்! உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் மாலையப்பன் சார்!😔🙏

    ReplyDelete
  49. நமது ஓவியர் திரு.மாலையப்பன் அவர்களின் இழப்பு மிகவும் வருத்தத்திற்கு உரியதுதான்.
    அந்நாட்களில் பிரத்தியேகமான ஓவிய பாணியால் - மற்ற காமிக்ஸ்களிலிருந்து நமது காமிக்ஸை தனி அடையாளப் படுத்தி நம்மை குதூக்கலிக்க ைவத்தவர்.
    - அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை ெதரிவித்துக் ெகாள்கிறேன்-
    (பாளையங்ேகாட்டை-காரர்தானா? i)
    உங்கள் ஊர் என்றே எண்ணியிருந்தேன்.

    ReplyDelete
  50. Totally agree with Krishna V V. When so many Tamil Comics were being published in the mid 80s - Lion covers stood attractive and this super artist was the reason for it. Dazzling colors - warm memories - திரு. மாலயப்பன் திருமலையப்பனை வரையச் சென்றுவிட்டாரோ? 

    ReplyDelete
  51. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்....

    ReplyDelete
  52. கலை ஓவியர். காற்றில் கரைந்து விட்டார். அவர் ஓவியங்கள் இன்னும் மறையவில்லை நம்மோடு ஓவியமாய் வாழ்ந்து கொண்டு இருப்பார் காலம் காலமாய். RIP

    ReplyDelete
  53. நிஜமாகவே கண்கலங்குகிறது... என்னைப் பொருத்தவரையில் முத்து காமிக்ஸ் ஒரு காலயந்திரம்... அதற்கு அட்டை படங்கள் நினைவுப் பேழை... அதை விபரமாக எழுதினால் ஒரு நாவலாக மாறும்... So. விட்டுவிடுகிறேன் கண்கலங்க...பாரதி நந்தீஸ்வரன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ...எப்படி இருக்கிறீர்கள்?

      Delete
    2. முத்து காமிக்சில் நான் பொறுப்பேற்றதன் பின்பான இதழ்களில் தான் ஒவியர் மாலையப்பனின் சித்திரங்கள் இடம்பிடிக்க ஆரம்பித்தன சார் ! அதற்கு முன்பானவற்றுள் எதுவுமே மாலையப்பனின் கைவண்ணங்கள் கிடையாது !

      Delete
    3. ஆமாம். இரும்புமனிதன் அட்டைப்பட தயாரிப்பின் போது தானே உங்கள் தந்தை சீனியர் எடிட்டர் இவரை அறிமுகப் படுத்தினார்... என்று சிங்கத்தின் சிறுவயதில் நீங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள் சார்.

      Delete
  54. அன்னாரை சார்ந்தோர் யாவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்... மறக்க இயலா ஓவியர்... மனதை கவரும் இவரின் அட்டைப்பட்ட ஓவியங்களுக்கு என்றும் அழிவில்லை...சிறுவயது முதலே நமது அட்டைகளை உருவாக்குவது யார் தெரிந்து கொள்ள ஆசை... இவரும் முக்கிய அங்கம் தான் அந்த ஓவியர் என சமீபத்திய காலம் தான் தெரிய வந்தது. புகைப்படம் போட்டதற்கு நன்றிகள் சார், இப்போது தான் முதன் முதலாக புகைப்படத்தில் பார்க்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. NBS புக்கின் முதல்பக்கத்தில் இதே படத்தைப் போட்டிருந்தோமே நண்பரே ?

      Delete
    2. Sorry I totally forgot, Sir. Yes. Now I remember.

      Delete
  55. ஒரு பால்ய கால நண்பரை இழந்தது போன்ற உணர்வு. ஓவியர் மாலையப்பன் அவர்களின் புகைப்படத்தை நமது சிறப்பு இதழ் ஒன்றில் வெளியிட்டு அவரை பற்றி எழுதினால் மிகவும் மகிழ்வேன். ஓவியரது குடும்பத்திற்கு பொருளதவி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டால் என்னால் இயன்றதை செய்வேன்.

    ReplyDelete
    Replies
    1. // 9003964584@ybl //

      ஆசிரியரின் பின்னூட்டத்தில் இந்த phonePe எண் கொடுத்துள்ளார். நீங்கள் விரும்பும் உதவியை செய்யலாம்.

      Delete
  56. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
    அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  57. காமிக்ஸின் உயிர் நாடியான ஓவியங்களை பிசகில்லாமல் அட்டைப்படத்தில் ஆண்டாண்டு காலமாக நமக்களித்த அய்யாவின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன். அதிலும்
    அட்டைப்படத்தில் வரும் அந்த எழுத்துருக்க்ள் தனி ரகம்.

    ReplyDelete
    Replies
    1. எழுத்துருக்கள் வேறொரு மூத்த ஒவியர் சார் !

      Delete
  58. ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

    ReplyDelete
  59. மிகவும் வருந்துகிறேன் அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்

    ReplyDelete
  60. துளியும் எதிர்பார்க்கவில்லை ; ஆனால் ரொம்பவே டீசண்டான ஒரு தொகை ஓவியருக்கென இன்று ஒரே நாளில் கிட்டியுள்ளது ! அதனோடு நம் பங்கையும் சேர்த்து, அடுத்த வாரத்தில் ஒவியரின் மனைவி பெயரில் போஸ்டாபீஸில் Fixed டெபாசிட் ஆகப் போட்டு ஒப்படைத்திடவுள்ளோம் !! தேங்க்ஸ் guys !!

    ReplyDelete
    Replies
    1. எங்களுடைய சிறிய பங்களிப்பு சார். அவர் வரைந்த ஸ்பைடர் அட்டைபடங்களை மறக்க முடியுமா??

      Delete
    2. Sent a small token from my side sir - please add to the pool.

      Delete
    3. அருமை சார்!
      🙏🙏🙏

      Delete
  61. ஆழ்ந்த இரங்கல்கள்.

    இங்கே ஓவியர் அவர்கள் வரைந்து கொண்டிருப்பது, 
    NBS-க்கான பின்னட்டைப் படத்தினை!

    தொடர்புடைய பதிவில் அட்டைப் படத்தினை பாராட்டி எழுதப் பட்டிருக்கும் பின்னூட்டங்கள் அவரது திறமைக்குச் சான்று!
    http://lion-muthucomics.blogspot.com/2013/01/blog-post_11.html

    ReplyDelete
  62. பல வருடங்களுக்கு முன் நான் ஒரு முறை லயன் ஆபீஸ் எடி சாரை நேரில் சந்திக்க சென்றிருந்த பொழுது அவர் ஓவியம் வரைவதில் பிஸியாக இருப்பதை பார்த்தேன்.

    அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் RIP

    ReplyDelete
  63. ஆசிரியர் அவர்களுக்கு ஓவியா சாங் மலையப்பன் பெரியவர் அவர்களுக்கு என் கண்ணீர் கலந்த வணக்கங்கள்..
    அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒரு ஸ்பெஷல் இதழ் ஒன்று வெளியிட்டு புத்தகத்தின் லாபங்களை அவர் குடும்பங்களுக்கு கொடுத்தால் எப்படி இருக்கும். அதுபோல் செய்ய வாய்ப்பு உள்ளதா ஆசிரியரே., 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹

    ReplyDelete
  64. கலைஞர் , ஓவியர் மாலையப்பன் ஐயாவின் மறைவு, எமக்கு பேரிழப்பு. ஐயாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  65. ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி..

    ReplyDelete
  66. அவர் வரைந்த ஓவியங்களின் அணிவகுப்பு....பிலீஸ்

    சிறு தொகை அனுப்பி உள்ளேன்..சார்

    ReplyDelete
  67. //அடுத்த வாரத்தில் ஒவியரின் மனைவி பெயரில் போஸ்டாபீஸில் Fixed டெபாசிட் ஆகப் போட்டு ஒப்படைத்திடவுள்ளோம் !! //
    Good initiation, Sir

    ReplyDelete
  68. May his soul rest in peace.

    Sir, Have sent a small contribution to 9003964584@ybl

    -
    Suresh

    ReplyDelete
  69. May his soul rest in peace. I have send small contribution for his family relief

    ReplyDelete
  70. Sir - for Tamil Comics, Mr. Maalaiyappan is a legend in his own right sir. As fans are suggesting may be we can release a compendium of his covers alone covering all our comics brands - in A4 size - whatever covers you have. It can be sold and the proceeds can also be given to the family sir. Chances are that most of us will buy multiple copies and for you it is scan work and art paper buying sir.

    For a legend we are ready to pay a good price for his printed covers collection sir.

    ReplyDelete
  71. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  72. This comment has been removed by the author.

    ReplyDelete
  73. /// நானும் ஓவியரும் ஒரு பிரத்யேக மௌன பாஷையினில் பேசிக் கொள்வது, என் தாத்தாவுக்கு ஒரு தீரா அதிசயமாகவே தோன்றிடுவதுண்டு ! தாளில் எழுதிக் காட்டித் தான் ஒரு விஷயத்தைப் புரிய வைக்க வேண்டுமென்ற நெருக்கடி ஒரு நாளும் எனக்கு எழுந்ததில்லை ! சொல்ல வேண்டியதையும், கேட்டுக் கொள்ள வேண்டியதையும் எப்படியோ சமாளித்துக் கொள்ள முடிந்தது ///

    இதன் அர்த்தம் எனக்கு இன்று தான் புரிந்தது. நண்பர் கரூர் குணா அவர்கள் தன் முகநூல் பக்கத்தில் திரு.மாலையப்பன் அவர்களைப் பற்றி இன்று ஒரு பதிவிட்டுள்ளார். அதனைப் படித்தபின்பே அவரது ஓவியத்திறமையின் உச்சம் புரிந்தது.பாளையங்கோட்டை கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தரீஸ்வரர் ஆலயத்தில் அவரது இறை ஓவியப் படைப்புகள் பற்றிய தகவல் அறிந்து பிரமித்துப் போனேன். இறைவனை தன் ஓவியங்களால் அழகு செய்தவர், இன்று அவரிடமே அடைக்கலமாகியிருக்கிறார்.

    ReplyDelete
  74. 2020/21 காற்றில் மறைந்த கலைஞர்கள் பலர்... ஆழ்ந்த இரங்கல்.

    ReplyDelete
  75. அவரது ஆன்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறேன்

    ReplyDelete
  76. ஆழ்ந்த இரங்கல்கள் அய்யா...

    ReplyDelete
  77. சார் இன்று பதிவுக் கிழமை

    ReplyDelete
  78. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!

    ReplyDelete
  79. My heartfelt condolences. Thanks for giving so many wrappers for us

    ReplyDelete