Powered By Blogger

Wednesday, January 13, 2021

விடிந்தால் பொங்கல் !!

 நண்பர்களே,

வணக்கம். ஈரமான போகி தின வாழ்த்துக்கள் ! வர்ண பகவான் அதிசயமாய் எங்கள் ஊரின் மீது பாசப்பார்வையை படர விட்டிருக்க, நேற்று பின்னிரவு முதலே மழையோ மழை ! காய்ந்த பூமிக்கு இதொரு வரமே என்றாலும், சகலத்தையும் கடைசி நிமிஷம் வரைக்கும் ஜவ்வு இழுத்தே பழகிப் போன நமக்கு - எதிர்பாரா இந்த விண்ணின் H2O கொடையானது, கொஞ்சம் திக்-திக் தான் ! இன்றைக்கு காலை வரையிலும் ஆன்லைன் புத்தக விழாவின் ஸ்பெஷல் இதழ்களின் அச்சுப் பணிகள் நீண்டிட, ஆளுக்கொரு மழைக்கோட்டை மாட்டிக் கொண்டே பைண்டிங்குக்கு காவடி எடுத்து வருகின்றனர் - நாளை காலைக்குள் அந்த 3 இதழ்களையும் பைண்ட் செய்து வாங்கிடும் முனைப்பில் ! So மப்பும் மந்தாரமுமாய் நாள் முழுக்க காட்சி தரும் வானத்தை - மறைந்த டைரக்டர் விசு சாரின் சகோதரர் கிஷ்முவைப் போலவே நோட்டமிட்டு வருகிறேன் !  சர்க்கஸ் செய்தேனும் - நாளைக் காலைக்கு மூன்று இதழ்களும் நமது ரேக்கில் அமர்ந்திருக்குமென்ற நம்பிக்கை இருப்பதால், அந்த மூன்றும் என்னவென்று பார்க்க இனி முனைந்திடுவோமா ? 

To start with - நம்ம கோவை ஸ்டீல் அள்ளி விட்டுக்கொண்டிருந்த ஆரூடங்களின்படி கென்யா ; உகாண்டா ; கவுந்தம்பாடி என்றெல்லாம் ஏதும் கிடையாது - இந்த புக்பேர் ஸ்பெஷல்களுள் ! அதற்குக் காரணங்கள் கணிசம் :

1.பத்தே நாட்களுக்கு முன்பாய் ரூ.450-க்கு தோர்கல் ; அடுத்த இரண்டே வாரங்களுக்குள் ரூ.300 விலையில் அர்ஸ் மேக்னா & தொடரும் மாதத்தில் "பிரளயம்" என சரமாரியாக biggies உள்ள பொழுதினில் உங்கள் வாங்கும் திறன்களையும், எங்களின் பணியாற்றும் ஆற்றல்களையும் ஏக நேரத்தில் படுத்திப் பார்க்க இஷ்டமிருக்கவில்லை ! And இன்னமும் சகஜ நிலை திரும்பியிருக்கா மார்க்கெட்டில் - நமது விற்பனையாளர்களும் சிரமங்களுக்கு ஆளாகிட  கூடாதன்றோ ?!  So பெருசாய், அதிரடியாய் எதையும் கையிலெடுக்க இது வேளையாகாது என்பது தெளிவாய்ப் புரிந்தது ! 

2. ரொம்பவே முக்கியமாய் - வலைக்கு அப்பாலுள்ள நண்பர்கள் ; அயல்நாட்டுச் சந்தாதாரர்கள் போன்றோர் - இந்த 'லெப்டுக்கா போயி ; ரைட்டுக்கா கை காட்டி, குப்புறக்கா பல்டியடிக்கும்' நமது  'திடீர் வெளியீடுகளை' கடுப்போடே பார்த்திடுகின்றனர் ! "உங்க எடிட்டர் கிட்டே வருஷத்துக்கு இன்ன இன்ன ஸ்பெஷல் இதழ்கள் ; என்னென்ன விலைகளில்னு கேட்டுச் சொல்லுங்களேன் ! மிடிலே !!" என்று சந்தா செலுத்தும் வேளைகளில் வரும் போன்கள் கணிசமே ! இங்கேயோ - "பீச்சாங்கை பக்கமா படுக்கையிலிருந்து எழுந்தா இன்னாரு ; சோத்தாங்கைப் பக்கமா எழுந்தாக்கா அன்னாரு !!" என்பதே நமது தேர்வுகளின் பின்னணிகள் எனும் போது - முன்கூட்டிய பெரும் திட்டமிடல்கள் எப்போதுமே சிரமமே ! 

3. And சகலத்தையும் விட முக்கிய காரணம் - எந்தவொரு இதழும் சந்தாவோடு இணைந்திருக்கா பட்சங்களில், அதனில் கையில் ஸ்டாக் தங்கி விடுகிறது ! சாகச வீரர் ரோஜரின் "நேற்றைய நகரம்" not bad at all என்ற மார்க்குகள் வாங்கியது தான் ; அறுபது ரூபாய் விலை தான் ; ஆனால் சந்தாவில் சேர்ந்திரா இதழ் எனும் போது - இதர books ஸ்டாக் நிலவரத்தை விடவும், இதனில் இருப்பு ஜாஸ்தி உள்ளது ! ஆகையால் இயன்றமட்டிலும் சந்தாவோடு link ஆகிடல் நம் தலைதப்பிக்க அத்தியாவசியமாகிறது ! அதே சமயம் ஒரு அசாதாரண பேரிடரின் தொடர்ச்சியால் ரெகுலர் புத்தக விழாக்கள் நடக்கத் துவங்கியிரா சூழலில், ஏதேனும் குட்டிக் குட்டிக் குட்டிக்கரங்களுமே அவசியமாகிப் போகின்றன - ஆர்வங்களைத் தக்க வைத்திடும் பொருட்டு ! So "சந்தாவினில் இடம் பெறாது போனாலும் - எப்படியும் விற்பனையில் சோடை போகாது " என்ற ரீதியிலான உத்திரவாதம் தரவல்ல இதழ்களை மட்டுமே தேர்வு செய்தாக வேண்டிப் போகிறது !

And மேற்படி உத்திரவாதம் தரக்கூடியோர் மூன்றே பேர் தான் - இன்றைய நிலவரப்படி ! அவர்கள் :

  • இரும்புக்கை மாயாவியார்
  • மஞ்சச் சட்டை டெக்ஸ் வில்லனார் 
  • இன்னொரு மஞ்சச் சட்டை லக்கி லூக்கியார் 
And பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளோர் ஆட்டோமேட்டிக் தேர்வுகளாகிப் போகின்றனர் ! இரும்புக்கை மாயாவியின் black & white தொகுப்பானது அடுத்த மாதம் இங்கிலாந்தில் மறுபதிப்பு காண்கிறது என்பதை ஏற்கனவே சொல்லிய ஞாபகம் உள்ளது ! அவற்றை நாமும் போட்டுத் தாக்கிடத் தீர்மானித்து ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்ததால் - அந்தத் தொகுப்பின் முதல் கதையான "நியூயார்க்கில் மாயாவி" பெரிய சைசில் (NOT Maxi) மறுபதிப்பாகிறது ! இதோ - அதன் அட்டைப்பட & உட்பக்க preview : 



மாயாவி தொடரினில் பெரும்பான்மையை நாம் வெளியிட்டு முடித்திருக்கும் நிலையில், மறுபதிப்புகள் தவிர்க்க இயலாது போகின்றன ! And நம்மிடம் கைவசமுள்ள மாயாவி titles சொற்பமே எனும் போது இந்தத் தேர்வுக்கு யோசிக்க அவசியங்கள் எழவில்லை ! இக்கதைகள் Fleetway-ன் பெரிய சைஸ்களில் ஒரிஜினலாய் வெளியானவை என்பதால் - இன்றைக்கு வெட்டி, ஒட்டி, பிளாஸ்திரி போடும் ஆர்டிஸ்டுகள் இல்லா நிலையில் ஒரிஜினலின் சைஸிலேயே நாமும் வெளியிட்டுள்ளோம் ! அட்டைப்படம் - புது சென்னை டிசைனர் + நமது கோகிலா கூட்டணி ! இதோ - ஒரிஜினலாய் இந்தக் கதை ஸ்பெயினில் வெளியான சமயம் அவர்கள் வரைந்த டிசைனை reference கொண்டு சென்னை டிஜிட்டல் ஓவியர் தயாரித்துத் தந்த படமும், அப்பாலிக்கா நம்ம கலைக்கண்ணை முழுமூச்சில் ஈடுபடுத்தி கோகிலாவைக் கொண்டு மெருகூட்டித் தயாரித்த variants : 






இருக்கும் அத்தனை பேரையும் குடலை உருவி, இறுதியாய்த் தயாரித்த ராப்பரை - ஐந்தே நிமிடங்களில் படைப்பாளிகள் அங்கீகரித்த போது - "ஹை !!" என்றிருந்தது ! And ஏற்கனவே இந்தக் கதையானது எனக்குள் ஏகமாய் ஞாபகங்களை வரவழைத்த கதையும் எனும் போது கூடுதலாய் ஒரு மிடறு உற்சாகம் இருந்தது ! "சிங்கத்தின் சிறுவயதில்" தொடரினை நீங்கள் வாசித்திருக்கும் பட்சத்தில், 1985-ல் லண்டனில் நான் அடித்த கூத்துக்கள் ; அங்கே வாங்க சாத்தியமான Fleetway முந்தைய இதழ்கள் பற்றி ; அவற்றை ஒட்டு மொத்தமாய் ஊருக்குச் சுமந்து வருவது இயலாதெனும் போது - தேவையான பக்கங்களை மட்டுமே கத்திரித்துத் தொகுப்பாக்கியது பற்றி ; நான் தங்கியிருந்த ஹாஸ்டலில் இந்த வேலைகள் சாத்தியமாகாதென்பதால், இதற்கென இலண்டனில் விட்ட்டோரிய ஸ்டேஷனுக்கு அருகே ஒரு ரூம் போட்டு கத்திரி போட்டது - என சகலத்தைப் பற்றியும் எழுதியிருந்தேன் ! அந்தத் தொகுப்பினைப் பார்த்து ஆர்டர் போட்டு அந்நாட்களில் வந்து சேர்ந்ததே "நியூயார்க்கில் மாயாவி !" So இந்த இதழின் மறுபதிப்பு கொஞ்சமாய் ஆட்டோகிராப் சேரன் பாணிக்கு என்னை இட்டுச் சென்றது தான் ! ஆனால் வாசக ஜுரிக்களான உங்களைக் கவர்ந்தாலன்றி, எதுவும் பெரிதாய் பிரயோஜனம் இராதென்பதால் - தீர்மானம் உங்கள் கைகளில் ! 

புக் # 2-ன் தேர்வை சுலபமாக்கித் தந்தது நீங்களே ! இரவுக் கழுகார் தோன்றும் "மரண முள்" இதழினை சந்தாவிலான MAXI லயனில் இணைப்பது பற்றி ஓரிரு பதிவுகளுக்கு முன்பாய்க் கேட்டிருந்தேன் ! ஆனால் கொஞ்சமாய் ; ரொம்பக் கொஞ்சமாய் mixed reactions என்ற போதே லைட்டாகப் பின்வாங்குவதே தேவலாமென்று பட்டது ! So காலியான அந்த சந்தா MAXI லயனின் இறுதி ஸ்லாட்டில் "லக்கி லூக்கின் - கௌபாய் எக்ஸ்பிரஸ்" இதழை வெளியிடுவதே நலமென்று தீர்மானித்தேன் ! 'இஷ்டப்பட்டால் மாத்திரம் வாங்கிக்கலாம் ; no சந்தா சார்ந்த தலையில் திணித்தல்" என்ற பட்டியலுக்கு மரண முள் - வண்ண மறுப்பதிப்பை நகற்றத் தீர்மானித்தது இப்படித் தான் ! தீர்மானித்த நொடியே, மறுக்கா சென்னை டிசைனர் & மறுக்கா கோகிலாவின் குடல் உருவல்கள் துவங்கின !! இதோ அவற்றின் பலன் : 
முன்னட்டை - சென்னையார் + கோகிலா கூட்டணியின் தயாரிப்பு & பின்னட்டை போனெல்லியின் டெக்ஸ் போஸ்டரிலிருந்து சுட்ட வடை ! ஒரு லைட்டான திகில் feel இருக்கும் பொருட்டு பளீர் வர்ணங்களை பின்னணிக்கு வழங்கிடாது grey கலந்து வழங்கிட தீர்மானித்தேன் & அதன் பலனாய் அந்த "மரண முள்" சிகப்பு பளிச்சென்று கண்ணில் பட்டதாய் நினைத்தேன் ! தொடர்வது உட்பக்க வண்ண preview : 

கதையைப் பொறுத்தவரை - எனக்கு ரொம்பவே சுமாரான நினைவுகள் மட்டுமே தலையில் தங்கியிருக்க - புதிதாய்ப் படிப்பது போலவே இதனூடே பணியாற்றினேன் ! And ரொம்பவே crisp வாசிப்புக்கு அழகான இதழாய் எனக்குப் பட்டது ! கருணையானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பு ; கதையோட்டம் ; கலரிங் - என எதிலுமே புராதனம் தட்டுப்படவில்லை எனும் போது நிஜமாகவே ரசிக்க முடிந்தது எனக்கு ! நீங்களும் ரசித்திட்டால் ஜூப்பர் தான் !

இதழ் # 3 - லக்கி லூக்காய் இருக்குமென்கின்ற யூகம் உங்களிடையே இருக்கும் போதிலும் நிஜம் அதுவுள்ள folks ! "கௌபாய் எக்ஸ்பிரஸ்' சந்தாவில் இடம்பிடிக்கவுள்ள இதழ் என்பதால், அதனை மாதத்தின் நடுவாக்கில் வெளியிடுவது நிச்சயமாய் சுகப்படாது ! So "கௌ.எ." மார்ச் முதல் தேதிக்கு கூரியர்களில் உங்கள் இல்லம் தேடி வந்திடும் ! தற்போதைய ஸ்லாட் # 3-ஐ தொட்டு நிற்பது light reading-க்கென கைவசமுள்ள நமது சட்டித்தலையன் ஆர்ச்சியே ! அந்நாட்களில் இந்த இரும்பு மனிதனை சிலாகித்த நண்பர்களில் ஒரு பகுதியினர்  இன்றைக்கு தெறித்து ஓட்டம்பிடிப்பது  நிஜமென்பதை நானறிவேன் ; ஆனால் இதனை ஒரு "வாண்டு ஸ்பெஷல்" இதழாய் ஒரு கணம் உருவகப்படுத்திப் பாருங்களேன் - நிச்சயமாய் உங்களின் குட்டீஸ்களுக்குக் கதை சொல்ல செம சாய்சாக இருந்திடக்கூடும் ! "ஆழ்கடலில் ஆர்ச்சி" - இது வரைக்குமான காதுல பூக்கடையாய் இல்லாது - ஒரு ஜாலியான   adventure கதை போல் பயணிக்கின்றது ! ஆர்ச்சிக்கு வசனங்கள் (!!!!) மட்டுமே அடியேனின் உபயம் ; பாக்கி எல்லாமே கருணையானந்தம் அவர்களின் கைவண்ணம் ! இதோ - மறுக்கா நமது சென்னை டிசைனரின் கைவண்ணத்தில் உருவான அட்டைப்பட முதல்பார்வை :



சாப்பாட்டுக் கூடையைத் தூக்கிப் போகும் பாணியில் போட்டை சுமந்து செல்லும் ஆர்ச்சியின் ராப்பரையும், துரிதமாய் படைப்பாளிகள் ஓ.கே. சொல்லி விட்டனர் ! So நமது சென்னை டிசைனர் + கோகிலா கூட்டணியின் இவ்வாரத்து ஹாட்ரிக் இது ! Crisp-ஆன இந்தக் கதையையும் தைரியமாய் வாங்கிப் படித்திட்டால், நிச்சயமாய் அறுபது ரூபாய் தண்டமென்ற எண்ணம் தோன்றிடாதென்பேன் ! Give it a try guys ? 

ஆக இவையே நாளை பகலில் நமது புத்தக ரேக்குகளில் புதுவரவுகளாய் இணைந்து கொள்ளவுள்ள இதழ்கள் ! Light reading என்பதோடு - இவற்றை எப்போது சுகப்பட்டாலும் வாங்கிக்கொள்ளலாம் ; வாசித்தும் கொள்ளலாம் என்ற advantage இருப்பதாய் நான் நினைத்தேன் ! Of course - "இதுக்கு தானாக்கும்  உன் பில்டப் ?" என்று முகத்தை வெட்ட நண்பர்கள் இல்லாது போக மாட்டார்கள் என்பதை யூகிப்பது சுலபமே ! ஆனால் பொறுமையாய் இத்தேர்வுகளின் பின்னணிகளை அலசினால் யதார்த்தம் புரியும் ! விண்ணில் கோட்டைகள் கட்டுவதெல்லாம் ஜாலங்களே ; மறுக்க மாட்டேன் தான் ! ஆனால் அததுக்கென ஒரு தருணம் அவசியமன்றோ ? So இதுவே நமது தற்போதைய திட்டமிடல் ! 

அப்புறம் இந்த 4 நாள் விழாவினில் பங்கேற்கும் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு குட்டியான லக்கி லூக் போஸ்டர் நம் அன்புடன் உண்டு ! உங்களின் work stations ; கம்பியூட்டர் டேபிள் ; பசங்களின் அறைச் சுவற்றில் - என எங்கேனும் ஒட்டிக் கொள்ளும் விதமிருக்கும் ! 

Bye all ....பொங்கல் நல்வாழ்த்துக்கள் !! தைத் திருநாள் சகல சதோஷங்களையும் நம் இல்லங்கள் தேடி வரச் செய்யட்டும் !! நான் பிப்ரவரியின் எடிட்டிங்குக்குள் குதிக்கக் கிளம்புகிறேன் ! See you around folks !! 

206 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. கரண்டுல கை படுறதுக்குள்ளயே சார்ஜ் ஏறிட்டாப்போல மின்னலடிக்குதுங்க இரும்புக்கை.. அதான் வித்தியாசம்.. நல்ல டிசைனிங்... கலக்கல் கதை. திக் திக் திக் வெடிகுண்டு நிமிடங்கள்.. மறக்கவியலாத கதை..

    ReplyDelete
  4. Replies
    1. 6 கமெண்ட் இருக்கும்போது படிக்க ஆரம்பிச்சு, 13ல வந்து முடிச்சிருக்கேன்...

      Delete
  5. // ரொம்பவே crisp வாசிப்புக்கு அழகான இதழாய் எனக்குப் பட்டது ! //
    முரண முள் அட்டைப்படமும்,உட்பக்க டீஸரும் வண்ணத்தில் டாலடிக்குது சார்...
    எனக்கென்னமோ இது மரண ஹிட் அடிக்கும்னு தோணுது,பாருங்க சார் சில மாதங்களில் காலியாகி விடும் இதழ்கள்...

    ReplyDelete
    Replies
    1. மல்லூருக்கு ஒரு ஜாங்கிரி டப்பி பார்சல்லல்ல !

      Delete
  6. சார் நியூயார்க்கில் மாயாவி மேக்ஸி சைஸா?

    ReplyDelete
  7. நம்ம முடியாத கதை தேர்வு அதுவும் இரும்பு கையார் வாரார் என்றது அளவிடமுடியாத சந்தோஷம்,மூன்று கதைகள் தேர்வும் மிக்க மகிழ்ச்சி வாழ்க லயன் காமிக்ஸ் குழுவினர், இந்த சந்தோஷமே உண்மையான சந்தோஷம், இந்த புத்தகங்களை தேர்வுசெய்த உங்களுக்கு மனநிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் சாரே🙋🙋

    ReplyDelete
  8. ✌��பொங்கல் நல்வாழ்த்துக்கள்.��
    -த.குனசங்கரன்(நஞ்சை இடையார்)

    ReplyDelete
  9. கழுகு வேட்டையா?

    பழிக்குப்பழியா?

    மரணமுள்ளா?

    என்ற போட்டியில் மரணமுள் முந்திட்டது. மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. அதிகாரி... மாஸ்டர்க்கெல்லாம் மேல

      Delete
  10. Thanks for heeding to a relatively early blog post sir ! Have a 11 am slot tomorrow - a dozen books to buy including this special !!

    ReplyDelete
  11. மரண முள் மிரட்டலான முள்ளாக வந்துள்ளது பார்க்கும் போதே இப்படி என்றால் படிக்கும் போது அந்த நாளில் படித்த போது இருந்த பயம் மீண்டும் நமக்குள்ள வரும் உண்மையில் மிரட்டலாக வந்திருக்கு நன்றி ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. சில்லுமூக்குகள் சிதறாவிடினும், எனக்கு இந்த இதழ் ரொம்பவே புடித்திருந்தது சார் ; பார்க்கலாம் உங்கள் ஆரூடம் பலிக்கின்றதாவென்று !

      Delete
  12. மரண முள் & கௌபாய் எக்ஸ்பிரஸ் எதிர்பார்த்ததுதான், எதிர்பாராதது நியுயார்க்கில் மாயாவி மூன்றுமே நல்ல தேர்வு சார், அதுவும் மரண முள் முன் அட்டை கலக்கலாக உள்ளது! பல வருடங்களுக்குப் பிறகு வண்ணத்தில் கலக்கல் 😍

    ReplyDelete
    Replies
    1. Not Cowboy Express Kaleel. That is in Santhaa.

      This is a new lucky album.

      Delete
    2. ஐரோப்பிய பணிநிலவரங்கள் இன்னமும் நார்மலாகிய பாட்டைக் காணோம் சார் ; டிஜிட்டல் கோப்புகளை வரவழைக்க ஏகமாய் lead time இப்போதெல்லாம் அவசியமாகிறது ! கௌபாய் எக்ஸ்பிரஸுக்கே - கதையின் உருவாக்கம் பற்றிய additional pages கோரி தேவுடு காத்து வருகிறோம் ! So லக்கியின் புதுக் கதையே எனது முதல் தேர்வாய் இருப்பினும் files இன்னும் கிட்டில்லா ! ஆகையால் சட்டிதலையர் அந்த ஸ்லாட்டினில் !

      Delete
    3. அருமை....
      லக்கிலூக் மறுபதிப்புகள் வாங்கியதும் முதலில் புரட்டி மூளையில் பதிப்பது கதை தொடர்பான வரலாற்று சம்பவங்களை தான்.
      இதற்காக காத்திருக்கலாம்ணே....
      தப்பேயில்லை....

      Delete
  13. கலக்கலான இதழ்கள்

    ReplyDelete
  14. I was expecting some new title - your reasons to push sales are valid given these are extra to regular issues and at the end of the day we need to break even and make a tidy profit.

    Given this reason I like the releases.

    ReplyDelete
  15. நியூயார்க்கில் மாயாவி - அடடே!!!

    மரண முள் - வாவ்!! சூப்பர்!! அந்த அட்டைப்படம் - அட்ட்ட்டகாசம்!!

    ReplyDelete
  16. மரண முள் ஓசையின்றி முழு வண்ணத்தில் வந்தது எதிர்பாராத வரவு தான், ஆன்லைன் புத்தக விழாவில் இந்தப் புத்தகத்தை எதிர்பார்த்திரவில்லை, thank you, மாயாவி பெரிய சைஸில் வருவது மகிழ்ச்சி, ஹேப்பி பொங்கல்

    ReplyDelete
  17. மூன்றாவது வரவு என்ன என்பதே எனது இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி

    ReplyDelete
    Replies
    1. மில்லியன்லாம் வேணாம் சார் ; அதிலே ஒண்ணோ, ரெண்டோ சைபர்களை அழித்து விட்டுக் கொடுத்தாலும் சந்தோஷமாய் வாங்கிப்போம் - ஆர்ச்சியையே அனுப்பி !

      Delete
  18. நம்ம கோவை ஸ்டீல் அள்ளி விட்டுக்கொண்டிருந்த ஆரூடங்களின்படி கென்யா ; உகாண்டா ; கவுந்தம்பாடி என்றெல்லாம் ஏதும் கிடையாது//
    🤣🤣🤣

    ReplyDelete
    Replies
    1. கென்யாவ விட நியூயார்க்குத்தான மதிப்பு....எப்படியும் வந்ரும்னு பட்சி சந்தோசமா பறக்குதே...வாக்கு பொய்த்தாலும் அத விட கூடுதல் சந்தோசமாம் பட்சிக்கு

      Delete
  19. Indeed my kids find Archie entertaining sir - that way both a light reading and a family entertainer + medium budget books. Overall is fine.

    ReplyDelete
    Replies
    1. The budget was a prominent criterion for me to adhere to Sir ! சுலப வாசிப்புகள் - சுலப விலைகளும் கொண்டிருக்க வேண்டியது அவசியமென்று நினைத்தேன் !

      Delete
  20. எடி,
    ரூ.260+ courier charge எவ்வளவு சார்?

    ReplyDelete
  21. மீண்டும் மறுபதிப்புகள் மற்றும் classic நாயகர்களின் படையெடுப்பு. எடிட்டர் சார் போதிய விளக்கங்கள்/காரணங்களை விளக்கி கூறினாலும் மனம் ஏற்க மறுக்கிறது. ஒரு அற்புதமான (தோர்கல் + graphic novel + ஹெர்லக் ஷோம்ஸ்) வாசிப்பு மாதத்தின் தொடர்ச்சி இவ்வாறாக இருப்பது சற்று ஏமாற்றமே. மரண முள் தவிர்த்து மற்ற இரண்டிலும் சற்று நெளியப்போவது உறுதி என்னளவில். இதில் ஆர்ச்சி எனது ஆதர்ஷ நாயகன் சிறுவயதில், ஆனால் இப்பொழுது யதார்த்தத்தின் பக்கம் ரொம்பவே சாய்ந்து விட்டோம் சார். உலகளாவிய படைப்புகளை காலத்தின் போக்கில் அளித்து எங்களை/என்னை மாற்றிய பெருமை தங்களையே சாரும்.

    ReplyDelete
    Replies
    1. இவையும் காமிக்ஸ் வாசிப்பின் ஒரு முக்கிய ஜானர் தானே சார் ; X Men ; Y Men - என்று போட்டுத் தாக்கும் அமெரிக்க சூப்பர் ஹீரோக்களை ரசிக்க இயலா நமக்கு அந்த பிரிட்டிஷ் சூ.ஹி. ஒரு நெருடா நாயகர் தானே ?!

      Delete
  22. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. ஆசிரியர், நமது காமிக்ஸ் அலுவலக நண்பர்கள் மற்றும் நமது காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    மூன்று புத்தகங்கள் தேர்வும் அருமை, எளிதான வாசிப்பு மற்றும் விடுமுறை கால கொண்டாட்டத்திற்கு மிகவும் சரியான இதழ்கள்.

    நன்றி. மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. ஆர்ச்சியின் கடந்த கதையை எனது குழந்தைகள் மிகவும் ரசித்தார்கள்.

      ஆர்ச்சி மூலம் மீண்டும் அவர்களுக்கு கதை சொல்லி அவர்களை மகிழ்வுட்டி அவர்களுடன் கொண்டாட கும்மாளம் போட ஒரு நல்ல சந்தர்ப்பம்.

      Delete
    2. என்ஜாய்ல மக்கா...அதுக்குதான் போராடும்...இம்ம ஸ்பைடர் கலர்ல வரும் பாரு

      Delete
  24. மூன்று புத்தகங்களின் அட்டைப்படம் நன்றாக இருக்கிறது.‌இந்த மூன்றில் முதலிடம் பிடிப்பது ஆர்ச்சியின் அட்டைப்படம், அதன் முக்கிய காரணம் படகை அலேக்காக தூக்கி கொண்டு நடந்து வரும் ஆர்ச்சி. குழந்தைகளை மட்டும் அல்ல பெரியவர்களையும் கவரும் ஆர்ச்சியின் இந்த அட்டைப்படம்.

    ReplyDelete
  25. மூன்று இதழ்களும் சிறப்பான தேர்வு.மிக்க மகிழ்ச்சி ஆசானே.

    ReplyDelete
  26. டெக்ஸ் வில்லர் ,மாயாவி , ஆர்ச்சி வெற்றிக் கூட்டணி.விற்பனையில் சாதிக்கப் போகும் கூட்டணி.

    ReplyDelete
  27. அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. ஆன்லைன் புத்தகத் திருவிழா வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.நிறைய புத்தகங்கள் விற்று குடோன் காலியாகும் நிலை வரட்டும்.

    ReplyDelete
  29. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். அருமையான புத்தக விழா வெளியீடுகள் சார்.

    ReplyDelete
  30. குட்டீஸுக்கு கதை சொல்ல ஆர்ச்சி சரி தான்; ஆனா க. வெ.யில்இருந்தா குட்டீஸ் புத்தகங்களை கண்டுக்கவே மாட்டேங்கறாங்க.

    ReplyDelete
    Replies
    1. உண்மை உண்மை உண்மை!!

      மெய்யாலுமே குட்டீஸ் ஸ்பெஷலைக் கொடுக்க நினைத்திருந்தால் அது வண்ணத்தில் இருந்திருக்க வேண்டும் எடிட்டர் சார்!
      கி.நா'வை படித்துவிட்டு 'ஐயோ சாமீ.. முடியல.. நான் இன்னும் வளரல"ன்னு கூவிக்கிட்டிருக்கும் 50+ அகவையிலுள்ள குழந்தைகளுக்கு வேண்டுமானால் இந்தக் க&வெ ஆர்ச்சி இதழ் சரியாக இருக்கலாம்!

      Delete
    2. அப்டின்னா "பாண்டூஸ் ஸ்பெஷல்" என்று வைத்துக் கொள்வோமா ? ஆங்க்க்க் ! 👻

      Delete
  31. அனைவருக்கும் இனியபொங்கல் நல்வாழ்த்துக்கள். சூப்பர் ஹீரோ வுடன் ஒரு ஜாலியான அட்வெஞ்சர் ஹைஜாலி. மாயாவி ஒரு புதிய சைஸில். ப்ளஸ் அதிகாரியின் மரணமுள் ஒரு வித்யாசமான ரீடிங் அனுபவம். ஹாப்பி. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  32. Irumbukkai Mayavi,. Archie! Adakkadavule nesandhaanaa?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  33. Rasanayil mudhirndhavargal ellam andha boatil iruppadhaaga karpanai seidhaal sirippu sirippaa varudhu.....(Just for joke friends!)

    ReplyDelete
  34. அட்டைப் படத்திலிருக்கும் 'மரண முள்' எழுத்துரு - 25 வருடங்களுக்கு முன்பு வெளியான அதே எழுத்துருவை ஒத்திருப்பது செம ஐடியா எடிட்டர் சார்! அன்றைய காலகட்டத்தில் ரொம்பவே ரசித்த எழுத்துரு என்பதால், இன்றைக்கும் அதே நாஸ்டால்ஜிக் ஃபீலிங்!

    இந்த அட்டகாசமான அட்டைப்படம் + டெக்ஸ் + வண்ணம் : இவை போதாதா விற்பனையில் ஒரு சரித்திரம் படைத்திட!!

    ReplyDelete
    Replies
    1. //25 வருடங்களுக்கு முன்பு வெளியான அதே எழுத்துருவை ஒத்திருப்பது செம ஐடியா//

      அதுவே தான் இதுங்கோ ; இதுவே தான் அதுங்கோ ! சிகாமணியின் கைவண்ணத்தை அங்கிருந்து அப்படியே இறக்குமதி செஞ்சூ !

      Delete
  35. மூன்றாவது ஆர்ச்சியா,முதலவனில் சொல்ற மாதிரி அட இது நம்ம லிஸ்டலயே இல்லையே...
    வியப்பான வரவுதான்...
    வண்ணத்தில் முயற்சித்திருந்தால் நிறைய பேருக்கு இன்னும் கூடுதல் நிறைவை அளித்திருக்கும் சார்...

    ReplyDelete
    Replies
    1. நேரமோ ; பட்ஜெட்டோ இல்லை சார் !

      Delete
    2. புரிகிறது சார்,எப்படியென்றாலும் இரும்புக்கையாரும்,சட்டித் தலையனும் ஆவரேஜ் ஹிட் அடிச்சிருவாங்க சார்.....

      Delete
    3. மாயாவி சிக்ஸர் அடிப்பார் சார் ; அது உறுதி !

      Delete
    4. தோர்கலும்,கி.நா வும் அடிச்ச பிரம்மாண்ட சிக்ஸரை விடவா சார்...!!!

      Delete
    5. இந்த IPL யுகத்துப் புள்ளீங்கோ சார் ; but இவர் அவர்கள் அனைவருக்குமே வாத்தி !

      Delete
  36. என்னதான் புதுப்படகுன்னாலும், அது நனைஞ்சுடக் கூடாதேன்னு தலைக்கு மேலே தூக்கிக்கிட்டு தண்ணியில இறங்கி நடக்கதெல்லாம் ரொம்ப ஓவர் ஆர்ச்சி!

    ReplyDelete
  37. ஆர்ச்சீ வரவு இன்ப அதிர்ச்சி,260 விலையில்,மூன்று அற்புதமான கதைகளை கொடுத்த உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்

    ReplyDelete
  38. மாயாவி: எவ்ளோ கிண்டல் அடிச்சாலும் செம ஓட்டு ஓட்டினாலும் மனசுக்கு ரொம்ப நெருங்கியவர்...வாங்கி கிளுகிளுப்போடு படிக்கறதுக்கு உத்தரவாதமானவர்..

    இவர் வண்ணத்தில் எப்படி இருப்பார் என்ற கேள்வி எப்போதும் உண்டு....

    மரணமுள்...டிஷ்யூ பேப்பர் ரேஞ்சில் க& வெ யில் வந்தபோதே திக் திக் உணர்வை ஏற்படுத்திய இதழ்.

    வண்ணத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது..


    மூணாவது இதழ்...முடியல...எங்கே செல்லும் இந்த பாதை?? :-)

    ReplyDelete
    Replies
    1. ஆழ்கடலுக்குத் தான் சார் ; சட்டித் தலையன் தான் கிளம்பிட்டானே !

      Delete
    2. எடிட்டர் சார்.. 😂😂😂😂

      Delete
    3. நம்ம சிறுவயதுக்குத்தான் ...முத்தெடுத்து மீட்டுத்தர கெளம்பிட்டான் ....கெளம்பிட்டான் செநா

      Delete
  39. அதென்ன சார் லக்கி போஸ்டர் புத்தக திருவவிழாவில் பங்கேற்பவர்களுக்கு மட்டும். ஏற்கனவே வந்த புத்தகங்களைத்தானே வாங்க போகிறார்கள் ?..இத்தனை வருடம் சந்தாவில் இருக்கும் எல்லோரையும் ஏமாற்றும் விதமாக இருக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. ஏழு ரூபாய்க்கு ஒரு டிஜிட்டல் பிரிண்ட் அவுட்டை தருவது "ஏமாற்றின் அடையாளமாக்கும்" சார் ? சில நேரங்களில் வார்த்தைகளின் வீரியங்களை உணர்ந்து தான் வெளிப்படுத்துகிறோமா ? என்ற ஐயங்கள் எழாதில்லை ! அந்த ஏழு ரூபாய் தான் எங்களது யோக்கியதையின் அளவுகோலாகிடுகின்றதல்லவா ?

      Delete
    2. அப்போ அந்த 7 ரூபாயை எல்லோருக்கும் கொடுங்கள் சார். புத்தக திருவிழாவில் மட்டும் என்பது doesn't look fair . இதில் வார்த்தை வீரியங்களுக்கு எல்லாம் இடம் இல்லை அப்படி எடுத்து கொண்டால் அது உங்கள் தவறு.

      Delete
    3. ஆகட்டுங்க சார் ; அடுத்தவாட்டிக்கு
      fairplay பத்தி நான் கலந்து ஆலோசிச்சிட்டு ஏழு ரூபாயை மணியார்டர் பண்ணிட்றேன் ! இந்தவாட்டி ஏமாத்தினது ஏமாத்தினதாவே இருக்கட்டும் !

      உங்க அனுமானத்தை நிஜமாக்குற புண்ணியமாச்சும் சேரும் இல்லீங்களா ?

      Delete
  40. சார் இது வர வந்த சில அட்டைகளையும் தூக்கிச் சாப்பிட்டு தலையிலேற்றிச் செல்லுது ஆர்ச்சி அட்டைப்படம்....மரணமுள் அட்டைப்படம் அதகளமாய் சிவப்புருண்டையுடன் தூள் கிளப்ப....மாயாவியின் அட்டை பரவால்லை....மாயாவியின் கதைகளில் மிகச்சிறந்த கதை மட்டுமல்ல நமது வெளியீடுகளில் பத்தில் சிறந்த ஒன்றில் நிச்சயம் தேர்வாகும் அற்புதக்கதை...அசத்தலான மூன்று கதைகள்..‌.ஆர்ச்சி வண்ணம் தாங்கி வந்திருக்கலாம்....அசத்தல் போகி.... பொங்கல்... மாட்டு பொங்கல் ஹஜ்..சிறப்பிதழ்...முப்பெரும் விழாக்களுக்கு முப்பரும் இதழ்கள்...விலை...

    ReplyDelete
  41. அட்டகாசமான பொங்கல் இந்த வருடம் சார்..கம்மி பட்ஜெட்டில் சூப்பர்ஸ்டார் புத்தகங்கள் அருமை சார்.... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் புத்தகதிருவிழா நிச்சயமான வெற்றிக்கு வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  42. காரணம் புரிந்தாலும் ஆர்ச்சி கலரில் வந்து இருக்கலாம் என்ற எண்ணத்தை போன ஆர்ச்சி கலர் புக் ஏற்படுத்தி விட்டது...

    ReplyDelete
  43. ஆசிரியர் மற்றும் இல்லத்தார் பணியாளத் தோழர்கள் மற்றும் அன்பு நண்பர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  44. முள்ளுருண்டை பச்சை நிறம் தானே. அந்த பூ மட்டுமே இரத்தச் சிவப்பு

    ReplyDelete
    Replies
    1. ஒரு இரவு 12மணிக்கு படிக்க நண்பரே புரியும்...

      Delete
  45. 11 00 மணிக்கு first slot என்று பெயர். 10 20க்கே நம்மவர்கள் படை எடுக்க ஆரம்பித்து விட்டதாய்க் கேள்விப்பட்டேன். வசூலும் பொங்கல் போன்று ஓங்கிப் பொங்குக !!

    ReplyDelete
    Replies
    1. அதே அதே எனக்கும் 10.30க்கே கால் வந்து விட்டது. அருமையான மகிழ்ச்சியூட்டும் நிகழ்வு. 3 புத்தகங்களும் காண்பிக்கப்பட்டது. பணம் அனுப்பி வரவும் வைக்கப்பட்டு விட்டது. இனி புத்தகங்களுக்கு வெயிட்டிங். இரண்டு புத்தக விழாக்களும் நைஸ்.

      Delete
  46. உண்மையில் புத்தகத் திருவிழாவுக்கான மூன்று புத்தகங்களில் ஆர்ச்சிதான் உண்மையான இன்ப அதிர்ச்சி, Super selection sir, ஆர்ச்சி கலரில் வந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்போம்

    ReplyDelete
  47. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

    ஸ்பெஷல் இதழ்களின் அட்டைப்படம் அனைத்துமே அட்டகாசமாய் அமைந்துள்ளது சார்..

    செம கலக்கல்..

    ReplyDelete
  48. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    பழகுவதில் மென்மையானவர்,
    முதன் முதலில் கெடா வெட்டி சிறப்பித்தவர்,
    இன்சொல் மட்டுமே உதிர்ப்பவர்,
    காமிக்ஸ் நேசர்,
    அருமை நண்பர்...

    ஹசன் முகமது அவர்களுக்கு

    இனிய இனிப்பான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
    💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂🎂🍰🍰🍰🍰🍰🍰

    ReplyDelete
    Replies
    1. நன்றி டெக்ஸ் 🙏🙏🙏

      Delete
    2. Happy birthday ஹசன் முகமது.

      Delete
    3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹசன்ஜீ...

      Delete
    4. நன்றி @Psaravananpsaravanan 🙏,
      நன்றி தல 🙏..
      நன்றி ஸ்டீல்... 🙏

      Delete
    5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹசன் ஜி

      Delete
    6. ஆம் படித்து பல வருடங்கள் ஆனதால் வருடம் மறந்துவிட்டது. நீங்கள் சொல்லியது சரிதான் பாலைவன பரலோகம்
      மரண முள்
      நள்ளிரவு வேட்டை இது மூன்றும் டெக்ஸ்ட் கதை வரிசையில் என் நினைவில் நிற்கும் இதழ்கள். அதற்கடுத்து கானலாய் ஒரு காதல். இது மூன்று பாரதக் கதையில் இரண்டாம் பாகம். ஏனோ முதல் பாகமும் மூன்றாம் பாகமும் கொஞ்சம் சுமாராக எனக்குத் தோன்றியது. அதிலும் முதலில் குறிப்பிட்ட அந்த மூன்று கதைகளும் தான் என்னை டெக்சின் ரசிகனாக மாற்றியது. பின்னர்டெக்சின் பல டாப் கதைகள் வந்தாலும் இந்த அளவுக்கு என் மனதில் நிற்கவில்லை. அதற்கான கதையை குறை கூறவில்லை என் மனதில் நிற்கவில்லை என்று மட்டும் தான் சொல்கிறேன். இன்று எவ்வளவுதான் விஞ்ஞானம் முன்னேறி விட்டாலும் பழைய கிளாசிக் மொழிபெயர்ப்பு போல் இப்பொழுது வருவதில்லை. இது எனக்கு மட்டும் தானா உங்களுக்கும் இந்தக் கருத்து இருக்கிறதா

      Delete
    7. மாற்றங்கள் - காலங்களில் ; வயதுகளில் ; ரசனைகளில் ; நம் சூழல்களில் !

      இவை சகலமும் உங்கள் தரப்புக்கும் பொருந்தும் நண்பரே ; எங்கள் தரப்புக்கும் ; படைப்பாளிகளின் தரப்புக்கும் தான் ! So கால்நூற்றாண்டை அப்படியே காலத்தில் உறையச் செய்தாலன்றி, 'அன்னிக்குப் பாத்தா மாதிரியே' இன்னிக்கும் படைப்புகளைக் காண்பது நிரம்ப சிரமமே !

      Delete
  49. வணக்கம் நண்பர்களே! அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ஆன்லைன் புத்தகத் திருவிழாவில் பங்கேற்று புத்தகங்களை ஆர்டர் செய்தாயிற்று!

      Delete
  50. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

    பொங்கலோ பொங்கல்...

    பொங்குக மங்களம்

    ReplyDelete
  51. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

    பொங்கலோ பொங்கல்...

    பொங்குக மங்களம்

    ReplyDelete
  52. அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  53. சிவகாசியில் வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது.:-)

    ReplyDelete
  54. மரணமுள்ளை அப்பொழுது படித்தபோது ஸ்ஸ்.... என்ற சத்தம் காதில் கேட்டது இன்னும் ஞாபகம் இருக்கிறது. நான் அப்பொழுதுதான் லைனில் புதிய வாசகன். அப்போது டெக்ஸ் இதழ்களான லயன் டாப் 10 ஸ்பெஷல் இடம்பெற்ற (கதை பெயர் ஞாபகம் இல்லை).
    அடுத்து மரணமுள்.
    அதற்கடுத்தது 1995 இன் தீபாவளி மலர். இம்மூன்றும் என் நினைவில் நின்ற இதழ்கள். இந்த கதையின் பெயர்கள் தெரிந்தால் யாராவது பதிவிடுங்கள் ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. மரண முள்-1996ல கோடைமலராக வெளியானது,
      டாப் 10ஸ்பெசல் டெக்ஸ் கதை---பாலைவனப் பரலோகம்.

      1995ல தான் இது வெளியானது சதா!

      அந்த ஆண்டில் தீபாவளிமலர் வர்ல. நீங்கள் சொல்லும் தீபாவளிமலர் 1996ல வந்திருந்த "நள்ளிரவு வேட்டை"- யாக இருக்கும்.

      குக்ளஸ் குலான் போர்வையில் தனித்திருக்கும் பண்ணைகளை மிரட்டியோ கொலை செய்தோ புடுங்கும் கொள்ளையர்கள் கதை....

      அசத்தலான கதை!

      Delete
    2. நான் நள்ளிரவு வேட்டை தான் படிச்சிருக்கேன். மரண முள், நான் வாங்க ஆரம்பித்து வரலை. இது தங்க கல்லறைக்கு முன்னார் வந்ததா?

      Delete
    3. இரண்டு கதைகளும் ஒரே ஆண்டு தான் சகோ. எப்படியோ மிஸ் ஆகிட்டது போல...!!!

      Delete
    4. நானும் மரண முள் பல வருடங்கள் கழித்தே படித்தேன்.

      Delete
    5. நான் இனி தான் மரண முள் படிக்கனும். கூரியர் வரட்டும்.

      Delete
  55. சார்,நான் பணம் அனுப்ப வேண்டும்,எப்படி அனுப்புவது

    ReplyDelete
    Replies
    1. https://lioncomics.in/product/pongal-online-book-fair-specials/

      இந்த லிங்கில் சென்று செலுத்தி புக்கிங் செய்யலாம்.

      அல்லது கூகுள்பே நெ.9003964584 செலுத்திட்டு , போனில் தகவல் தெரிவித்து புக்கிங் செய்யலாம்.

      Delete
  56. அன்புள்ள ஆசிரியர் மற்றும் காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்..iii

    ReplyDelete
  57. ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  58. யாராவது இன்னிக்கு ஆன்லைன் புத்தகத் திருவிழாவுல பங்கேற்றீங்களா?
    ஏதாச்சும் சமாச்சாரம்?

    ReplyDelete
    Replies
    1. @ Raghavan ji

      பார்த்தேனுங்க. ஆனா யானைப் பசிக்கு சோளப்பொரி கணக்கா உங்க கமெண்ட் இருந்ததால, மத்த நண்பர்களின் வாயைக் கிளறலாமேன்னுதான்.. ஹிஹி!

      Delete
    2. ஆரவாரங்களின்றி அழகான விற்பனையைக் கொணர்ந்துள்ள முதல் நாள் ! தொடர்ந்திடவுள்ள 3 நாட்களும் இதே உத்வேகத்துடன் தொடர்ந்திட்டால் - ஜனவரியின் யானைப்பசிகளுக்கு சுவையான கரும்புகளாகிடும் !

      Delete
    3. ///யாராவது இன்னிக்கு ஆன்லைன் புத்தகத் திருவிழாவுல பங்கேற்றீங்களா?
      ஏதாச்சும் சமாச்சாரம்?///

      உள்ளேன் ஐயா..!!

      Delete
  59. நோ ஐடியா. நான் whatsapp மூலம் 3 புத்தகங்களை ஆர்டர் செய்துட்டேன்.

    ReplyDelete
  60. தகவலுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  61. ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  62. மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பர்களே..!!

    ReplyDelete
  63. today is மாட்டுப் பொங்கல் !!

    So, மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள் to

    the great Tex Willer ji and கார்சன் uncle !!!

    ReplyDelete
  64. நான் 2020 இல் இருந்து தான் சந்தா கட்டுவதால் 2019ல் விடுபட்ட பல இதழ்களை இந்தப் புத்தக விழாவில் வாங்கிவிட்டேன். அத்துடன் இப்பொழுது வெளியான அந்த மூன்று புத்தகங்களால் சேர்த்து ஆர்டர் பண்ணி விட்டேன். ஆக 17 இதழ்கள் என்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. எப்படியோ மூன்று மாதத்திற்கு நல்ல ட்ரீட் தான் எனக்கு.

    ReplyDelete
  65. சார் கவ்பாய் பொங்கல் அன்று தலைவாங்கிக் குரங்கு கலரில் படித்துக் கொண்டிருக்கிறேன். எனது முடிவை மாற்றிக்கொள்கிறேன். இது வண்ணத்துக்கு உகந்த கதையே - மற்றும் மாக்ஸி சைசுக்குரிய கதையும் கூட. 

    TEX மாக்ஸி சைஸ் பற்றியம் எனது opinionஐ மாற்றிக்கொண்டு விட்டேன். வாசிப்பு அனுபவம் சூப்பர் (எல்லாருக்கும் பிடித்த தமிழ் வார்த்தை - சூப்பர்)

    ReplyDelete
    Replies
    1. "அதுக்கு நீ சரிப்பட மாட்டே !!" என்று டெக்சிடம் MAXI சைசோடு காய் விட்ட கதையைச் சொல்லியாச்சு என்பதால் கொஞ்சம் தாமதமான முடிவு சார் !

      Delete
  66. தோர்கல்!

    பிரபு நடிச்ச ஒரு படத்துல சிவாஜி போட்டோவை ஒரு செகண்ட் காமிச்சிட்டு சிவாஜி நடிச்ச படம்னு சொல்ற மாதிரி இருந்துச்சி நான்காவது கதை..:-)

    எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுத்த கதை தொகுப்பு...

    9/10


    ஹெர்லக் : பரவாயில்லை ரகம்...8/10

    கோழைகளின் பூமி: மற்றுமொரு ப.ரகம் 8/10

    ReplyDelete
    Replies
    1. தொடரின் நடுவினில் நிற்கிறோம் சார் தற்சமயம் ! கதாசிரியர் பயணிக்க நினைக்கும் திக்குக்கொரு கோடி காட்டுவதாய் அந்த நான்காம் அத்தியாயத்தை எடுத்துக் கொள்ளலாமோ - என்னவோ ?!

      Delete
    2. // கதாசிரியர் பயணிக்க நினைக்கும் திக்குக்கொரு கோடி காட்டுவதாய் //
      எனது எண்ணமும் அதுவாகவே இருந்தது சார்...

      Delete
    3. ஒருவேளை..
      கதாசிரியர் ஊருக்குள்ள(கதைக்குள்ள) வராம பைபாஸ்ல போயிடுவாரோன்னு பயந்துட்டாரு போல.. நம்ம செனா அனா.!

      Delete
  67. @ ALL : இன்னொரு ஒரு மணி நேரத்தில் இன்றைக்கான பணிமுடித்து நம்மவர்கள் கிளம்பி விடுவார்கள் ! இதுவரைக்குமான விற்பனையை கொண்டு பார்த்தால் - கௌபாய்ப் பொங்கல் has been a smashing day !! கரம் கூப்பிய நன்றிகள் all !!

    ReplyDelete
    Replies
    1. ஆன்லைன் விழா விற்பனை சிறப்பாக நடந்தேறி வருவது பார்க்கையில் நம்பிக்கை வருகிறது.
      தை பிறந்தால் வழி பிறக்கும்!

      Delete
    2. விற்பனை பற்றிய தகவல்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சார். தொடரட்டும் இதுபோன்ற விற்பனை சாதனைகள்.

      Delete
    3. ஆன்லைன் திருவிழா சிறப்பாக செல்வது மகிழ்ச்சி,மகிழ்ச்சி,மகிழ்ச்சி...

      Delete
  68. எச்சூஸ் மீ ; வாட் இஸ் தி ப்ரொசீஜர் டு நீட்டிப்பையிங் தி பொங்கல் விடுமுறைஸ் ?

    ReplyDelete
    Replies
    1. First step is to publish three more books :-D

      Delete
    2. February இல் சென்னை புத்தக விழா இருக்கவேண்டும். அப்போது பார்ப்போம் சார் sales எங்கே போகுது என்று

      Delete
    3. Kumar Salem,

      சென்னைப் புத்தக விழா பற்றிய எனது கருத்து வேறானது நண்பரே. சேல்ஸ் நன்றாக இருக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை தான்.ஆனால் சென்னையில் social distancing என்பது மருந்து அளவிற்கு கூட இல்லை. Mask அணிவோரும் பச்சை கலர் தாடி போன்று அதனை அணிந்து செல்கின்றனர். 
      28-32 வயதில் நமக்கு பணியாட்கள் கிடைக்காது போயின் புத்தக விழா முயற்சிகள் வேண்டாமெனும் கட்சி நான் (4 தலைமுறை மருத்துவக் குடும்பமாதலால் ..).

      முன்பே சொன்னது போல என்று பள்ளிகளில் 100% சதவிகிதம் மாணக்கர் அனுமதி பெறுகிறார்களோ அன்றே சகஜ நிலமை திரும்பும் என்று கொள்ளுதலே சிறந்தது !

      Delete
    4. // சொன்னது போல என்று பள்ளிகளில் 100% சதவிகிதம் மாணக்கர் அனுமதி பெறுகிறார்களோ அன்றே சகஜ நிலமை திரும்பும் //
      இந்த நிலை ஜூனில்தான் சாத்தியமாக வாய்ப்புண்டு....

      Delete
  69. நான் நேற்றே மூன்று புத்தகங்களுக்கும் ரூ.300 GPay மூலம் பணம் செலுத்திவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சார் நானும்

      Delete
  70. ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் மிக மிக தாமதமான பொங்கல் வாழ்த்துக்கள். மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து வாழ்த்து சொல்லலாம் சார். ஒரு நாள் தானே சார் லேட்.

      Delete
  71. கைவசம் ஸ்டாக் உள்ள அனைத்து புத்தகங்கள் லிஸ்டை அப்டேட் பண்ணி இங்கு பதிவிட்டால் முன்கூட்டியே யோசித்து வாங்க ஈஸியாக இருக்கும் அல்லவா சார்???

    ReplyDelete
    Replies
    1. They have a catalog - if you ask they whatsapp it. I got it last time for online fair.

      Delete
    2. I also got it from office sir. If it is posted here many can plan accordingly, also updated list will be better to choose the available books la sir.

      Delete
    3. Yes agreed.

      @ Editor sir,

      Please provide a link to your comics catalog on this page so that folks can plan and buy.

      Delete
    4. (பட்டியல் இங்கே கொடுக்கப்படும்வரை) - அண்மைய புத்தகங்களின் பின் - உள் மட்டையில் அநேகமாக பட்டியல்தான் இடம்பிடிக்கிறது என்ற தகவல் உங்களுக்கு பயன்படக்கூடும்.

      Delete
    5. உண்மை தான் சார், ஆனால் பெரும்பாலும் அவை அப்டேடட்‌ லிஸ்ட் ஆக இருப்பதில்லை என்பது தான் நிலை... சமீபத்திய புது புத்தகங்களில் ஜம்போ விளம்பரங்கள் வந்த கதை தலைப்புகளை/விலைகளை கூட படிக்க கஷ்டமாக இருந்தது... Antha ad pages la the images/text were blurred.

      Delete
  72. // லண்டனில் நான் அடித்த கூத்துக்கள் ; அங்கே வாங்க சாத்தியமான Fleetway முந்தைய இதழ்கள் பற்றி ; அவற்றை ஒட்டு மொத்தமாய் ஊருக்குச் சுமந்து வருவது இயலாதெனும் போது - தேவையான பக்கங்களை மட்டுமே கத்திரித்துத் தொகுப்பாக்கியது பற்றி ; நான் தங்கியிருந்த ஹாஸ்டலில் இந்த வேலைகள் சாத்தியமாகாதென்பதால், இதற்கென இலண்டனில் விட்ட்டோரிய ஸ்டேஷனுக்கு அருகே ஒரு ரூம் போட்டு கத்திரி போட்டது - என சகலத்தைப் பற்றியும் எழுதியிருந்தேன் ! //

    எனக்கு படித்தது மறந்து விட்டது என நினைக்கிறேன். வெண்டைக்காய் கொஞ்சம் அதிகம் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். :-)
    உங்கள் அனுபவங்களை படிக்கும் போது காமிக்ஸை எங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு பின்னால் நடந்த பல புதிய விஷயங்களை அறியமுடியும். இம்முறையும் புதிய தகவல்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ///வெண்டைக்காய் கொஞ்சம் அதிகம் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். :-)///

      அளவா சாப்பிடுங்க பரணி.! இல்லேன்னா போனஜென்மம்லாம் ஞாபகத்துக்கு வந்திடப்போகுது.! :-)

      Delete
    2. // அளவா சாப்பிடுங்க பரணி //

      இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள இன்னும் கொஞ்சம் வெண்டைக்காய் சாப்பிடனும் போல :-)

      Delete
  73. ஹி.. ஹி.. வாட் ஈஸ் தி ப்ரொஸீஜர். பார் மணி ஆர்டர் சார்...ஒண்ணுமில்லே எல்லாப்ரௌஸிங் செண்டர்லயும் ஸாரி மணி ட்ரான்ஸ்பர் நோ அப்படிங்கராங்க... கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  74. காணும் பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பர்களே.!
    (சனிக்கிழமையா போயிடுத்து.. ஆகையினால நாளைக்குதான்.. ஆங்..அதேதான்.!)

    ReplyDelete
  75. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஹசன் ஜி. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  76. ஆன்லைன் திருவிழா சிறப்பாக செல்வது மகிழ்ச்சி,மகிழ்ச்சி,மகிழ்ச்சி...

    ReplyDelete
  77. ஞாயிறு பதிவு ஆன்லைன் விற்பனையின் மகிழ்ச்சியான நிகழ்வுகள் குறித்து இருக்குமோ...!!!

    ReplyDelete
  78. So 200th comment here I write :-D ;-) :-p

    ReplyDelete
    Replies
    1. குறும்புகள் ஏகத்தும் எகிறிட்டிருக்கே..!!
      உங்களையெல்லாம் 'நிஜங்களின் நிசப்தம்' கி.நா/ஃபோட்டோ ஆல்பத்தை ஒரு ஏழெட்டுவாட்டி படிக்கவச்சத்தான் சரிப்படுவீங்க!

      Delete