Powered By Blogger

Saturday, January 26, 2019

தேவை ஒரு பாலைவனச் சோலை !

நண்பர்களே,

வணக்கம். அந்தக்காலத்து கரி எஞ்சின்கள் ஒவ்வொரு ஸ்டேஷனை எட்டியதும் ஒரு வண்டிப் புகையோடு பெருமூச்சைப் போலொரு 'உஷ்ஹ்ஹ்ஹ' சத்தத்தை வெளிப்படுத்திடுவதுண்டு !! கிட்டத்தட்ட அதே நிலவரம் தான் பிப்ரவரியின் பணிகளை முடித்த தருணத்தில் இங்கு எனக்கு !! ஜெரெமியா & ஜானி 2.0 பணிகள் ஒரு மாதிரியாய்ப் போன வாரமே பூர்த்தி கண்டிருக்க, அவற்றின் அச்சுப் பணிகளுமே அழகாய் நிறைவுற்றன ! So எஞ்சியிருப்பது ஒரு வண்ண TEX சாகசமே - அதுவும் மறுபதிப்பே + ஒரு கார்ட்டூன் ஆல்பம் மட்டுமே எனும் போது துக்கனூண்டு சிரமம் கூட இருந்திருக்கக் கூடாது ! ஆனால் நிலவரமோ நேர் தலைகீழ் !! And அதன் உபயமே நமது இரவுக்கழுகார் & டீம் தான் !!

ஒவ்வொரு ஆண்டும் டெக்சின் மறுபதிப்புத் தேர்வுகளை நீங்கள் ஈரோட்டில் செய்திட, அவற்றை நடைமுறைப்படுத்துவது மட்டுமே எனது பொறுப்பாக இருந்து வந்துள்ளது ! அதன்படி, உங்களின் லேட்டஸ்ட் தேர்வான "வைக்கிங் தீவு மர்மம்" தான் 2019-ன் Tex (வண்ண) மறுபதிப்பின் கோட்டா ! பாக்கெட் சைசில் 1990+ தருணங்களில் வெளியாகி, அந்நேரம் செமையான வரவேற்பினைப் பெற்ற இதழிது என்பது மட்டுமே எனக்கு ஞாபகம் இருந்தது ! கதை பற்றியோ - மொழியாக்கம் பற்றியோ துளிகூட நினைவில்லை !! So எப்போதும் போலே நம்மிடமுள்ள முந்தைய பிரதியினை எடுத்து வைத்துக் கொண்டு, சட சடவென டைப்செட்டிங் செய்து மேஜையில் அடுக்கி விட்டார்கள் ! 

பொதுவாய் மறுபதிப்புகளில் ஒற்றை வாசிப்பைப் போட்டுவிட்டு, சிறுசிறு திருத்தங்களை மட்டுமே செய்த கையோடு அவற்றை அச்சுக்கு கொண்டு செல்லப் பணித்து விடுவது வழக்கம் ! அதே நினைப்பில் அந்த 156 பக்கக் கத்தையைக் கையிலெடுத்துக் குந்தினால் சரமாரியான பக்கங்களில் இத்தாலிய வசனங்களே பலூன்களுக்குள் இடம்பிடித்துக் கிடந்தன ! 'இது என்னடா புதுக் கூத்து ?' என்று விசாரித்தால், நமது அந்நாளைய பாக்கெட் சைஸ் பதிப்பினில் நிறையவே frame-களை நாம் வேண்டாமென எடிட் செய்துள்ள விஷயம் புரிந்தது ! So அவற்றிற்கெல்லாம் தமிழ் மொழிபெயர்ப்பில்லை கைவசம் ! டெக்ஸும், கார்சனும் சும்மாக்காச்சும் பேசிக்கொள்ளும் இடங்கள் ; அந்த வழக்கமான "வறுத்த கரி-பீர்" புலம்பல்களெல்லாம் கதையோட்டத்துக்குத் தேவையில்லை என்ற நினைப்பா ? அல்லது பக்க நீளங்களின் கட்டுப்பாடா ? - ஏதோவொரு காரணத்தின் பொருட்டு ஆங்காங்கே சிலபல படங்களை ; கட்டங்களைக் கட்டம் கட்டியிருந்திருக்கிறோம் ! அவை சகலத்தையும் google translator-ல் அடித்து "தீனி வர்றோம் போட குதிரைக்கு !" என்ற ரீதியில் இல்லாத - ஒழுங்கான மொழியாக்கத்தைப் பெற்றிட வேண்டுமாயின் நமது இத்தாலிய எழுத்தாளரையே நாடிட வேண்டியது அவசியமென்று புரிந்தது ! So அவற்றை ஒட்டு மொத்தமாய் ஜூனியர் எடிட்டரிடம் ஒப்படைத்து ; இத்தாலிக்கு அனுப்பி, அவை முறைப்படி மொழிபெயர்க்கப்பட்டு திரும்பக்கிட்டியான பின்னே மறுக்கா DTP செய்து இணைத்து, இன்னொரு குதுப் மினார் கோபுரத்தை என்னிடம் தந்தார்கள் நம்மாட்கள் ! 

சரி, என அதனுள் புகுந்து பக்கங்களைப் புரட்டத் துவங்கினால், ஒரு மின்வெட்டு நாளில் - பிரிட்ஜில் வைத்திருந்த  நேற்றைய சட்னியை  எடுத்துச் சாப்பிடுவது போலவே தோன்றத் தொடங்கியது !!  இது நான் எழுதியதுமல்ல ; கருணையானந்தம் அவர்களின் பணியுமல்ல என்பது துளிச் சந்தேகமுமின்றிப் புலனானது ! அந்நாட்களில் முத்து காமிக்சில் பணியாற்றிய மேனேஜரின் எழுத்துப் பாணியிது என்பதும் புரிந்தது ! அங்கிருந்து வெளியேறியவர் தனியாகத் தொழில் செய்து வந்தார் ; எப்போதாவது இதுபோல் பணிகளை வாங்கிச் செய்ததுண்டு என்பதும் நினைவுக்கு வந்தது ! So அன்றைய காலகட்டத்துக்குச் சுகப்பட்ட வரிகள் இன்றைக்கோ லேசாய்க் கரடு-முரடாய்த் தென்பட - எனக்கு மண்டையைப் பிய்த்துக் கொள்ளத் தான் தோன்றியது ! முழுசாய் மாற்றி நானோ ; கருணையானந்தம் அவர்களோ எழுத அவகாசமில்லை எனும் போது - இருப்பதைச் செப்பனிடலைத் தாண்டி வேறு மார்க்கம் தெரிந்திடவில்லை !! தொடர்ந்த 5 நாட்கள் - பாயைப் பிறாண்டும் சுகத்துக்குத் துளியும் குறையா "இன்பத்தை" திகட்டத் திகட்ட வழங்கியது !! ஏற்கனவே உள்ள வரிகளோடு sync ஆகும்விதமாய் மாற்றங்களையும் செய்து ; பிழைத்திருத்தங்களையும் அதே மூச்சில் பார்க்க முனைவது truly a nightmare !! அதுவும் 156 பக்கங்களுக்கு நீண்டு கொண்டே செல்லும் சாகசமிது எனும் போது - மூச்சு முட்டிப் போய் விட்டது - "முற்றும்" என்று போட்டிருக்கும் பக்கத்தைத் தொட்டுப் பிடிப்பதற்குள் !! ஒரு வழியாய் இயன்ற ரிப்பேர்களைச் செய்து,சகலத்தையும் மைதீனிடம் ஒப்படைத்தது குடியரசு தினப் பகலில் தான் !! அங்கிருந்து நேராய் பதிவினை டைப்படிக்கும் இந்தப் படலத்துக்குள் மூழ்கிடும் வேளையில் எனக்குள் நிறையவே கேள்விகள் !! அந்நாட்களில்  நமது தரங்களில் இத்தனை ஓட்டைகள் இருந்துள்ளனவா ? ; இத்தனை மிதங்களையுமே நாமன்று சந்தோஷமாய்  ரசித்துள்ளது எவ்விதம் ? என்ற சிந்தனைகள் உள்ளுக்குள் ! Of course இன்னொரு 15 ஆண்டுகளுக்குப் பிற்பாடு இன்றைய இதழ்களைப் பரிசீலித்தால் இவற்றிலும் முன்னேற்றங்களுக்கு நிறைய வாய்ப்புகள் தென்படாது போகாது தான் ; ஆனால் at least இத்தகைய wholesale திருத்தங்களுக்கு அவசியப்படாது என்றாவது நம்பிக்கை கொள்ளலாம் என்பேன் ! மெய்யாகவே நீங்கள் ரொம்பவே தாராளமான ஜூரிக்களாய் இருந்துள்ளீர்கள் guys - அன்றும், இன்றும் !! 

இதோ பிப்ரவரியின் ஒரு toughie இதழின் அட்டைப்பட முதல்பார்வையும், உட்பக்கப் preview-ம் :

ஒரிஜினல் அட்டைப்படமே இது - லேசாய் வர்ணங்களை அதிகமாக்கியுள்ளது மாத்திரமே நமது கைவரிசை ! ஒரிஜினலாக இந்த புக்கை பாக்கெட் சைசில் நம் வெளியிட்ட தருணத்தில் 'ஜிகு ஜிகுவென' மிட்டாய் ரோஸ் கலரிலும், பளீர் ஆரஞ் ? பச்சை ? நிறத்திலும், அட்டைப்படத்தில் ஏதோ ஜிகினா வேலை செய்தது நினைவுள்ளது ! சர்க்கஸ் விளம்பரச் சுவரொட்டிகளுக்கு பயன்படுத்தும் ஒருவித மினுமினுக்கும் மசி நிறையவே வாங்கியது கையில் கிடந்து வந்தது ! அவற்றைக் காலி செய்யும் பொருட்டே வம்புக்கு அந்த ராப்பரை டிசைன் செய்தொமென்பது இப்பொது ஞாபகத்துக்கு வருகிறது !! 

டெக்ஸோடு மல்யுத்தமெனில் கார்ட்டூனில் இம்மி கூட சிரமம் நஹி - all the way through !! ஆண்டின் முதல் சிரிப்பு மேளாவான "நடனமாடும் கொரில்லாக்கள்" எங்கேயுமே இடர்களின்றி ஒன்றரை நாட்களில் மொத்த மொழிபெயர்ப்பையும் செய்து முடித்து - அதே வேகத்தில் டைப்செட்டிங்கும் நடந்தேறி அச்சுக்குப் போக சூப்பராய் ஒத்தாசை செய்துள்ளது !! மாதாமாதம் இந்த கார்ட்டூன் கோட்டாக்கள் என்னளவுக்குமே பணிகளில் ஒரு மகா stress buster ஆகச் செயல்பட்டிடுவதை இம்முறை நன்றாகவே உணர முடிந்தது !! ஆண்டவர்களே : உங்களுக்கு ரசிக்காத SMURFS & லியனார்டோ தாத்தாவுக்கு கல்தா தந்தாச்சு ; எஞ்சியிருக்கும் சிரிப்புப் பார்டிகளுக்கேனும் ஒரு சிறப்பான வரவேற்பளித்தால் அடுத்தாண்டிலாவது அவர்களுக்கு ஒரு larger share of the pie தந்திட எனக்கு ஏதுவாக இருக்கும் ! தொடர்ச்சியாய் "சிகரங்களின் சாம்ராட்" ; "பரக்குடா" ; "ஜெரெம்யா" போன்ற heavyweights மோதலாய் அமைந்தால் - எனது நாக்கார் ஸ்வச் பாரத் திட்டச் செயல்பாட்டுக்கே உதவிடுவார் !! So பாலைவனத்தின் மத்தியில் ஒரு சோலையாய்க் காட்சி தரும் கார்ட்டூன்களுக்கே உங்களின் பொன்னான வாக்குகளை வாரி வழங்கி, அடுத்தாண்டாவது அவை ஆட்சியமைக்க உதவிடுங்களேன் folks ? ரவுண்ட் பன் ஒரு லோடு இறக்கிடலாம் - வீடுதோறும் விநியோகிக்க !! 

சென்னைப் புத்தக விழா முடிந்திருக்க, அவற்றின் விற்பனைகளை ; விற்றுள்ள இதழ்களின் விபரங்களை அலசிட முனைந்து வருகிறேன் ! Of course ஒரு காஷுவல் வாசகரின் தேர்வு அந்த நொடியினில் அவர் கவனத்தை ஈர்க்குமொரு அட்டைப்படத்தையோ ; தலைப்பையோ சார்ந்த தேர்வாகவே இருந்திடலாமெனும் போது - reading between the lines சிரமமே ! இருப்பினும், இந்த விற்பனை பாணியில் ஏதேனுமொரு ஒற்றுமை தென்படுகிறதாவென்று ஆராய ஆசை ! சீக்கிரமே அது பற்றி எழுதுவேன் !! And புத்தக விழா கேரவன் அடுத்து திருப்பூரை நோக்கிப் பயணிக்கிறது - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 10 வரை அங்கு நடைபெறவுள்ள விழாவின் பொருட்டு !! 

ஜாலியாய் வாரயிறுதியை தூக்கம் ; டி-வி ; புதுப் படமென்று கொண்டாடி வரும் உங்களுக்கு இதோ நம்மளவுக்கொரு சிறு அறிவிப்பு !! ஜம்போ சீசன் 2 தனில் இன்னமும் 2 ஸ்லாட்கள் காலியிருக்க, ஈரோடு ஸ்பெஷல் சார்பாயும் இரண்டல்லது மூன்று ஸ்லாட்கள் காலியிருக்க, ஏதேனுமொரு இலக்கில் இடம்பிடிக்கவல்ல ஒரு அதிரடி நாயகர் பற்றிய அறிவிப்பிது !!

"தனியொருவன்" என்ற தலைப்போடு முழுவண்ணத்தில், ஒரு அழகான புது சைசில் தெறிக்கச் செய்ய வருகிறார் இன்னமுமொரு புது கவ்பாய் நாயகர் !! ஒரு முகமூடி ; ஒரு வெண்புரவி ; வெள்ளித் தோட்டாக்கள் ; ஒரு செவ்விந்திய சகா !! இவையே இந்த நாயகரின் அடையாளங்கள் ! இது போதாதா - காத்திருப்பது THE LONE RANGER தானென்று யூகம் செய்திட ? Oh yes - அமெரிக்காவில் புத்தம் புதிய creative அணியினைக் கொண்டு இவரது சாகசங்களை மெர்சலூட்டும் தரத்தில் வெளியிட்டு வருகிறது டைனமைட் நிறுவனம் ! அந்தக் கதைவரிசையினை நடப்பாண்டினில் தமிழில் நாம் ரசித்திடவுள்ளோம் - முழுநீளத் தொகுப்பாய் ! எப்போதென்பதை மார்ச்சில் பார்த்துக் கொள்வோமே ! 

பிப்ரவரி இதழ்களைப் பூர்த்தி செய்த கையோடு - ஜேம்ஸ் பாண்ட் 007-ன் இரண்டாவது ஆல்பத்துக்குள் இன்று புகுந்துள்ளேன் - அதனை மார்ச்சில் உங்கள் கைகளில் தந்த தருணத்தில் ஜம்போவின் சீசன் 1 நிறைவுறுமென்ற புரிதலோடு !! Action special ஜெர்க் அடித்திருந்தாலும் ; 'ஜெரெமியா' எவ்விதம் ஸ்கோர் செய்திடவுள்ளதென்பது தெரிந்திருக்காவிட்டாலும் - ஒன்று மட்டும் உறுதியாய்த் தெரிகிறது - 007 இம்முறையும் பின்னிப் பெடலெடுக்கப் போகிறாரென்று !! புரட்டியெடுக்கும் ஆக்ஷன் ; செம strong plot என்று ராக்கெட் வேகம் தான் !! 

Adios for now all !! See you around !! 

240 comments:

  1. Always 007 rocks......add two slots in jumbo 2 special sir....today I have booked my supcription...thank u sir

    ReplyDelete
  2. இரவு 🌃 வணக்கம் 🙏

    ReplyDelete
  3. /// google translator-ல் அடித்து "தீனி வர்றோம் போட குதிரைக்கு !" என்ற ரீதியில் ///

    ஹாஹாஹா..!!

    ReplyDelete
  4. ///ஆண்டவர்களே : உங்களுக்கு ரசிக்காத SMURFS & லியனார்டோ தாத்தாவுக்கு கல்தா தந்தாச்சு ; எஞ்சியிருக்கும் சிரிப்புப் பார்டிகளுக்கேனும் ஒரு சிறப்பான வரவேற்பளித்தால் அடுத்தாண்டிலாவது அவர்களுக்கு ஒரு larger share of the pie தந்திட எனக்கு ஏதுவாக இருக்கும் !//

    Vote to cartoons 👍👍👍

    ReplyDelete
    Replies
    1. ///தேவை ஒரு பாலைவனச் சோலை !///

      +111

      Delete
  5. * டெக்ஸ் அட்டைப்படம் - அருமை! தலைப்பில் புள்ளிகளுக்குப் பதிலாக வைக்கிங்குகளின் தலைக்கவசத்தைப் போட்டிருப்பது - இரசணை இரசணை!!

    * 'வைக்கிங் தீவு மர்மம்' மறுபதிப்பில் நிறையவே மாற்றி எழுதப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! ( பழைய பதிப்பை நான் படிக்க நேர்ந்தபோது 'ய்யே' என்றிருந்ததை உணரமுடிகிறது!)

    * புதிய கெளபாய் லோன் ரேஞ்சருக்கு ஆரவார வரவேற்பளிக்கிறோம்!! (விசில் சத்தம் காதைப் பிளக்கட்டும்!)

    * கார்ட்டூன்கள் மாதம் ஒன்றாவது வேண்டும்! அது இல்லாத கொரியர் டப்பாவைப் பார்க்க நேர்ந்தால் எதுவோ குறைவதுபோலவே ஒரு ப்பீலிங்கு!

    ReplyDelete
    Replies
    1. ///கார்ட்டூன்கள் மாதம் ஒன்றாவது வேண்டும்! அது இல்லாத கொரியர் டப்பாவைப் பார்க்க நேர்ந்தால் எதுவோ குறைவதுபோலவே ஒரு ப்பீலிங்கு!///

      நேக்கும் அதேதான் தோன்றது ..!

      Delete
    2. Yup cartoons were real stress busters. I love cartoons when I was little and till date the same feeling continues

      Delete
    3. நேக்கும் அதேதான் தோன்றது ..!

      Delete
    4. விஜய் @

      // தலைப்பில் புள்ளிகளுக்குப் பதிலாக வைக்கிங்குகளின் தலைக்கவசத்தைப் போட்டிருப்பது - இரசணை இரசணை!!//

      ஷார்ப்பான கண்கள். வர வர சிறு விஷயங்களை கூட கவனிக்கிறீங்க.சூப்பர்

      Delete
    5. ////ஷார்ப்பான கண்கள்///

      போனவாரம் நானும், எனது மாமனாரும்:

      "மாப்ளே.. உங்க இலையில ஒரு நாய் சாப்டுச்சே.. நீங்க ஏன் தடுக்கல?"

      "அ.. ச்சூ"

      "மாப்ள.. என்னை ஏன் அடிச்சீங்க?"

      "பி..பின்னே? நாய் நன்றியுள்ளதுன்றீங்க.. அது சாப்பிட்டா அடிச்சு விரட்டுறீங்க.. என்னய்யா ஒரே கொழப்பமா இருக்கு?"

      Delete
    6. விஜய் @ இன்னுமா உங்கள் மாமா உங்களுக்கு இலையில் சாப்பாடு போடுகிறார்:-)

      Delete
    7. @ PfB

      வாழை இலைல சாப்பாடு போடுற அளவுக்கு தாராள மனசுக்காரர்னு நினைச்சுடாதீங்க! எனக்காகவே வீட்டில் ஒரு வெற்றிலைக் கொடி வளர்த்துவருகிறார்!

      Delete
    8. அட சாப்பிட்டு முடித்ததும் வெற்றிலை வேறயா? கொடுத்து வைத்தவர் நீங்கள் 😎

      Delete
  6. விஜயன் சார், நடனமாடும் கொரில்லாக்களின் டீசர் பக்கங்களை கண்களில் காட்டுங்களேன்.

    ReplyDelete
  7. ///இன்னமுமொரு புது கவ்பாய் நாயகர் !! ஒரு முகமூடி ; ஒரு வெண்புரவி ; வெள்ளித் தோட்டாக்கள் ; ஒரு செவ்விந்திய சகா !! ///

    தந்தையை கொன்றவர்களை தமிழில் அச்சில் சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டிவிட்டு பழியெடுக்கப் புறப்பட இருக்கும் The Lone Rangerஐ தமிழ்கூறும் நல்லுலகிற்கு வரவேற்கிறேன்.!

    அட்டையில் கொடுத்திருக்கும் போஸானாது அன்னாருடைய கெத்துக்கு கட்டியம் கூறுகிறது .!

    ReplyDelete
  8. வைக்கிங் தீவு மர்மம் அட்டைப்படம் மற்றும் உட்பக்கங்கள் வண்ணத்தில் ரசிக்கும்படி அருமையாக உள்ளது.

    ReplyDelete
  9. /// எஞ்சியிருக்கும் சிரிப்புப் பார்டிகளுக்கேனும் ஒரு சிறப்பான வரவேற்பளித்தால் அடுத்தாண்டிலாவது அவர்களுக்கு ஒரு larger share of the pie தந்திட எனக்கு ஏதுவாக இருக்கும் ! ///

    தற்போது களத்தில் நிற்கும் கார்ட்டூன்களோடு கைவிடப்பட்ட ஸ்மர்ஃப், பென்னியும் சேர்ந்துகொண்டு மேலும் பல புதியவர்களையும் இணைத்துக்கொண்டு குறைந்தபட்சம் வருடம் 15 கார்ட்டூன் கதைகளாவது வெளிவரும் காலம் விரைவில் புலரவேண்டுமென பிரார்த்திக்கிறேன்.!

    கார்ட்டூன் மலர்ந்தே தீரும் ..!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. //கார்ட்டூன் மலர்ந்தே தீரும் ..!//
      ஏதாவது கட்சியில் சேர்ந்து இருக்கீறிர்களா?

      Delete
    3. ஆதார் கார்டு ஜெராக்ஸ் வெச்சி அப்ளிகேசன் போட்டிருந்தேன்.! மூஞ்சி சரியில்லைன்னு சொல்லி ரிஜக்ட் பண்ணிட்டாங்க பரணி.!:-)

      Delete
    4. நீங்க எங்க பெரிய ஆளாகி விடுவீங்களோ என்ற பயத்தில் இப்படி சொல்லி இருப்பாங்க. பயல்களுக்கு உங்களைப் பார்த்து பொறாமை வயத்தெரிச்சல். கவலைப்படாதீர்கள். நமக்கு இன்னும் 1000 கட்சிகள் இருக்கு

      Delete
    5. கா.கா.தி.மு.க !!

      Delete
  10. சபையோர்களுக்கு வணக்கம்

    ReplyDelete
  11. Lone Ranger தமிழில் மிஸ்டர் சிலவர் என்ற பெயரில் வந்துள்ளது.. டெக்ஸ் அளவு சோபிக்கவில்லை..இப்பொழுது நன்றாக உள்ளதா சார்?

    ReplyDelete
    Replies
    1. தெறிக்கிறது சார் !

      Delete
  12. THE LONE RANGER படத்தைப் பார்த்தால் இன்கிரிடிபில் (Incredible) கார்டூன் பட கதாநாயகன் முகம் தான் ஞாபகம் வருகிறது. இன்கிரிடிபில் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
  13. அனைவருக்கும் வணக்கம் Tex அட்டை படம் அருமை lone ranger come back சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. பராகுடா ஓவியங்கள் பிரம்மாதம்!!!

    ReplyDelete
  15. ஒவ்வொரு வருடமும் கார்டூன் கதை எண்ணிக்கை சந்தாவில் குறைவது வருத்தமான விஷயம். இப்போது எல்லாம் கார்டூனிஸ்ட் எந்த நாயகர்களின் கதை வந்தாலும் படித்து ரசிக்கிறேன். இதுவாது எனக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும்.

    கார்டூன் கதைகளின் எண்ணிக்கை அடுத்த வருடம் அதிகமாகும் என்ற நம்பிக்கையும் தூங்கச் செல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ///
      கார்டூன் கதைகளின் எண்ணிக்கை அடுத்த வருடம் அதிகமாகும் என்ற நம்பிக்கையும் தூங்கச் செல்கிறேன் ///

      கனவுல ஸ்பைடரும் டயபாலிக்கும் கார்ட்டூன்களாய் வருவாங்க ..என்ஜாய் த ஸ்லீப் பரணி.! :-)

      Delete
    2. ///கனவுல ஸ்பைடரும் டயபாலிக்கும் கார்ட்டூன்களாய் வருவாங்க ///

      அப்ப ஏற்கனவே வந்த ஸ்பைடர் - கார்ட்டூன் இல்லையா?!! :P

      Delete
    3. ///அப்ப ஏற்கனவே வந்த ஸ்பைடர் - கார்ட்டூன் இல்லையா?!! :P ///

      ஊஹூம்...!
      கார்ட்டூன்கள்லே காது மூக்கு எல்லாம் அளவாத்தான் வரைவாங்களாம்.! :-)

      Delete
    4. கனவுலல இந்த முறை கார்டூன் கதையாக ட்ராகன் நகரம் வந்தது செம சிரிப்பு சிரிப்பா வந்தது. ட்ராகனின் கண்ண சுட்டு அடக்குவது எல்லாம் செம... ரொம்ப புதுமை. ஹாலிவுட் இயக்குனர்கள் இனிவரும் காலங்களில் இந்த புத்தகத்தை ரெபர் செய்ய வேண்டும் என ஒரு சட்டம் இயற்றலாம்.

      Delete
    5. ///இந்த முறை கார்டூன் கதையாக ட்ராகன் நகரம் வந்தது செம சிரிப்பு சிரிப்பா வந்தது ///

      அது கார்ட்டூனா வராதப்பவே சிரிப்பு சிரிப்பாதானே இருந்துச்சி ..!:-)

      Delete
    6. ஏனுங்கோ ....டவுன் பஸ்ஸை புடிக்கிற மேரி ஒவ்வொரு தேசத்துக்குள்ளும் புகுந்து ஆ .கொ .தீ.க. ஆட்களை அடிச்சுப் போட்டுட்டு பிளைட் கிளம்பும் 5 நிமிட்ஸ் முன்னாடி தொற்றிக் கொண்ட கதையைப் படிச்சு இன்னா சொல்வீங்கோ ? அப்பாலிக்கா அந்த சிரசாசன SMS ? ஆங்...நியூயார்க்கை கடலுக்குள்ளாற கொக்கி போட்டு இழுத்துப் போறே கதை ?

      Delete
    7. // ஏனுங்கோ ....டவுன் பஸ்ஸை புடிக்கிற மேரி ஒவ்வொரு தேசத்துக்குள்ளும் புகுந்து ஆ .கொ .தீ.க. ஆட்களை அடிச்சுப் போட்டுட்டு பிளைட் கிளம்பும் 5 நிமிட்ஸ் முன்னாடி தொற்றிக் கொண்ட கதையைப் படிச்சு இன்னா சொல்வீங்கோ ? அப்பாலிக்கா அந்த சிரசாசன SMS ? ஆங்...நியூயார்க்கை கடலுக்குள்ளாற கொக்கி போட்டு இழுத்துப் போறே கதை //

      அது எல்லாம் innovative ideasங்கோ

      Delete
    8. ///அப்பாலிக்கா அந்த சிரசாசன SMS ? ஆங்...நியூயார்க்கை கடலுக்குள்ளாற கொக்கி போட்டு இழுத்துப் போறே கதை ?///

      நாமெல்லாம் மாயாபஜார் பார்த்து வளர்ந்தவங்களாச்சே சார்.!


      ///டவுன் பஸ்ஸை புடிக்கிற மேரி ஒவ்வொரு தேசத்துக்குள்ளும் புகுந்து ஆ .கொ .தீ.க. ஆட்களை அடிச்சுப் போட்டுட்டு பிளைட் கிளம்பும் 5 நிமிட்ஸ் முன்னாடி தொற்றிக் கொண்ட கதையைப் படிச்சு இன்னா சொல்வீங்கோ ?///

      எனர்ஜி ட்ரிங் விளம்பரத்துல செல்ஃப் எடுக்காத தள்ளிவிட்டு ஸ்டார்ட் பண்ண கூட்டம் சார் நாம...!
      இதெல்லாம் ஜர்வ ஜாதாரணம்.! :-)

      Delete
    9. செல்ஃப் எடுக்காத "ப்ளைட்டை" ன்னு இடைச்செருகலோட வாசிக்கவும்.!

      பாத்தீங்களா சார்.! ப்ளைட்டை வாக்கியத்துக்குள்ளவே மறைச்சிட்ட ஜகஜ்ஜால கில்லாடி நாங்க! :-)

      Delete
    10. // பாத்தீங்களா சார்.! ப்ளைட்டை வாக்கியத்துக்குள்ளவே மறைச்சிட்ட ஜகஜ்ஜால கில்லாடி நாங்க! :-) //

      இன்னா சமாளிப்பு இன்னா சமாளிப்பு.... தெய்வமே.

      Delete
    11. ///இன்னா சமாளிப்பு இன்னா சமாளிப்பு.... தெய்வமே ///

      குடும்பஸ்தனுக்கான அடிப்படை தகுதியாச்சே பரணி.! :-)

      Delete
    12. // குடும்பஸ்தனுக்கான அடிப்படை தகுதியாச்சே பரணி.! //

      அட கொடுமையே ... இதெல்லாம் வேறயா... சொல்லவே இல்லை:-)

      Delete
  16. டியர் எடிட்டர்.

    - டெக்ஸ் அட்டைப்படம் அட்டகாசம் - இதுவரை படித்திராத கதை - ஆவலுடன் waiting !

    - லோன் ரேஞ்சுருக்கு நல்வரவு. தமிழில் படிக்க ஆவலாய் waiting !

    - லியோனார்டோ, smurfs - வருஷத்துக்கு ஒரு ஆல்பம் போடலாம் தப்பில்ல .. ஹம்ம் .. என்னத்த சொல்லி என்னத்த எதிர்பார்த்து .. ஹ்ம்ம் ..

    - அந்த Jeremiahவ நெனச்சாதான் அடுத்த மாசம் வேற ஏதாவது ஊருக்கு ஓடிடலாமான்னு ஒரு எண்ணம் வருது ;-)

    ReplyDelete
    Replies
    1. /// அந்த Jeremiahவ நெனச்சாதான் அடுத்த மாசம் வேற ஏதாவது ஊருக்கு ஓடிடலாமான்னு ஒரு எண்ணம் வருது ;-)///

      ஜெரெமயாவும் கர்டி மலாயும் கூட ஊர்ஊராத்தான் சுத்திக்கிட்டு இருக்காங்க.! ஏதாவது ஒரு ஊர்ல பதுங்கலாம்னு போய், அவங்க கையில மாட்டிடப் போறீங்க..கவனம்.! :-)

      Delete
    2. ///அந்த Jeremiahவ நெனச்சாதான் அடுத்த மாசம் வேற ஏதாவது ஊருக்கு ஓடிடலாமான்னு ஒரு எண்ணம் வருது ///

      உங்கள் எண்ணமே உங்களை வழிநடாத்தும் ஆசான்! அதன் வழிகாட்டுதல் ஒருபோதும் தவறாகிடாது!

      பி.கு: நான் இப்போது ஒட்டன்சத்திரத்தைத் தாண்டி ஓடிக்கிட்டிருக்கேன்! :D

      Delete
    3. ///பி.கு: நான் இப்போது ஒட்டன்சத்திரத்தைத் தாண்டி ஓடிக்கிட்டிருக்கேன்! :D ///

      உங்க முதுகு மேல உப்புமூட்டை ஏறுரா மாதிரி நெருக்கத்துல ஒருத்தர் பின்னாடியே ஓடியாந்துக்கிட்டு இருப்பாரே .....

      அது நான்தானுங்கோ..!

      Delete
    4. ஓ... அது நீங்கதானா..? அப்பவே நினைச்சேன்!
      நெருக்கமா பின்னாடியே ஓடிவர்ற சாக்குல குருநாயரை அப்பப்போ ரெண்டு உதைவிடற சிஷ்யப்பிள்ளை உலகத்துலயே வேற யாரா இருக்கமுடியும்?

      இதுல ஈனஸ்வரத்துல அப்பப்போ பாட்டுவேற! நின்னுக்கோரி வரணுமாம்!!

      Delete
    5. நிக்காம ஓடிட்டு இருந்தா ..நின்னுக்கோரி வர்ணம்தான் பாடமுடியும். அதானே உலக வழக்கம்.!
      பொறுமையா உக்காந்திங்கன்னா பாலிருக்கீ பழமிருக்கீ பாடலாம்.! :-)

      Delete
    6. சித்தே முன்னாடி பாருங்கோ - இன்னொரு உருவமும் மச மசன்னு தெரியனுமே !!

      Delete
    7. ஆமாங் சார்..! ஆனா அந்த உருவம் ஓடற வேகத்தைப் பார்த்தால் ஜெரமையாவை பலமுறை படிச்ச மாதிரி இருக்கு!! தலையெல்லாம் கலைஞ்சு.. ட்ரெஸெல்லாம் கிழிஞ்சு.. ச்சொ.. ச்சோ...

      Delete
    8. விஜய் @
      // தலையெல்லாம் கலைஞ்சு..//

      உங்கள் பின்னூட்டத்தில் தவறு உள்ளது.😁

      Delete
    9. @PfB

      ஹா ஹா ஹா! உண்மைதான்!! :))))))

      Delete
    10. / தலையெல்லாம் கலைஞ்சு..//

      உங்கள் பின்னூட்டத்தில் தவறு உள்ளது.😁//

      ROFL...

      Delete
    11. அட..ஓட்டப் பந்தயத்தில் கண்ணை மறைக்கக் கூடாதில்லையா ?

      Delete
    12. // லியோனார்டோ, smurfs - வருஷத்துக்கு ஒரு ஆல்பம் போடலாம் தப்பில்ல .. ஹம்ம் .. என்னத்த சொல்லி என்னத்த எதிர்பார்த்து .. ஹ்ம்ம்//


      சித்தே பொறுங்க சார் ; ஒரு ஏற்பாடு பண்ணிடலாம் ! கார்டூனிலா வறட்சி ரொம்பவே சோதிக்கிறது தயாரிப்பினிலும் !

      Delete
    13. // அட..ஓட்டப் பந்தயத்தில் கண்ணை மறைக்கக் கூடாதில்லையா ? //

      அட ஹெட் பான்ட் போட்டுக்கோங்கோ :-)

      Delete
    14. // கார்டூனிலா வறட்சி ரொம்பவே சோதிக்கிறது தயாரிப்பினிலும் //

      அட போங்க சார்... நீங்க எப்படி மாதம் மாதம் வரும் டெக்ஸ்ஸ மறந்தீங்க:-)

      Delete
    15. எடிட்டர் சார்

      நேக்கு ஒரு ரோசன தோணறது .. ஒரு 3 புத்தகம் கொண்ட மினி - கார்ட்டூன் சந்தாவை ரோல் பண்ணினா எப்டீ ? 300 bucks - 3 கார்ட்டூன் புக்ஸ் - 4ம் மாசம் ..8ம் மாசம் .. 12ம் மாசம் ... முன்பணம் செலுத்துவோருக்கு 270 (10% டிச்கவுண்டி ) !

      Delete
    16. நைஸ் ரோசனை!! ஐ லைக் இட்!!

      Delete
    17. // நேக்கு ஒரு ரோசன தோணறது .. ஒரு 3 புத்தகம் கொண்ட மினி - கார்ட்டூன் சந்தாவை ரோல் பண்ணினா எப்டீ ? 300 bucks - 3 கார்ட்டூன் புக்ஸ் - 4ம் மாசம் ..8ம் மாசம் .. 12ம் மாசம் ... முன்பணம் செலுத்துவோருக்கு 270 (10% டிச்கவுண்டி ) !//

      நான் தயார்.

      Delete
  17. லோன் ரேஞ்சர் கொஞ்சகாலம் முன்னர் திரைப்படத்தில் சாகஸம் செய்தவர்..கதை சிறப்பானதாக தெரிகிறது.. காத்திருப்போம்..ஆவலுடன்..

    ReplyDelete
  18. கண்டிப்பாக மாதம் ஒரு கார்ட்டூன் கதை வேண்டும். ஆவன செய்யுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. நானா மாட்டேன் என்கிறேன் சார் ?

      Delete
  19. My suggestions/ comments

    அறிவும்,தேடலும், ரசனையும் எப்போதும் நிகழும் காலத்தையே பிரதிபலிக்கும் . So it reflected that period taste. So that only so many old trends.

    Regarding comedy

    Jack and Mack
    Run Tin Can
    Col Clipton may allowed.

    I am waiting for Jeromiah as he is not a super Hero nor a Cowboy nor a detective. He is the one among us.

    ReplyDelete
    Replies
    1. // I am waiting for Jeromiah as he is not a super Hero nor a Cowboy nor a detective. He is the one among us. //

      +1
      Well said

      Delete
    2. Very true...ஒரு பயணத்தின் கதை மாத்திரமே இது !

      Delete
  20. லோன் ரேஞ்சர்! ஆஹா.. வாங்கோ.. வாங்கோ. இவரைப்பற்றி தாங்கள் ஏற்கனவே மின்னும் மரணம் மெகா ஸ்பெஷலில் காமிக்ஸ் டைமில் சொன்னதாக ஞாபகம். கலக்குங்க சார்.

    ReplyDelete
    Replies
    1. கௌபாய்களை சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் பண்பாளர்கள் அல்லவா நாமெல்லாம் ?

      Delete
  21. Lone Ranger அறிமுகமாக உள்ளாரா ? சித்திரங்கள் அள்ளுகின்றன ."வைகிங் தீவு மர்மம் " இதழினை முன்பு படிக்க கிடைக்கவில்லை . நல்லதொரு சந்தர்ப்பம் . சந்தா கட்ட முடியாமல் உள்ளது . எப்படியாவது கட்ட ஆண்டவன் அருள்பாலிக்க வேண்டும் .

    ReplyDelete
  22. ஏதோதோ தகிடு தத்தம் பண்ணி பதிவிட முடிகிறது . இதுவாவது நிலைக்க வேண்டுமே .

    ReplyDelete
  23. நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீண்டும் களம் காணப்போகும் வைக்கிங் தீவு மர்மத்தைப் பற்றிய உங்களது பதிவை படித்ததுமே எழுந்த எண்ணம். அய்யய்யோ தூக்கியாச்சா இல்ல மீண்டும் தள்ளி போட்டாச்சான்னுதான். முழுவதையும் சடசடவென படித்து கடைசியில் டீசரை பார்த்ததும்தான் மீண்டும் பழைய உற்சாகம் வந்ததது. இந்த கதையை வண்ணத்தில் காண (இது போன்று இன்னும் பல கதைகள் உள்ளது) நீண்ட காத்திருப்பில் உள்ளேன் சார். அட்டை படமும், டீஸரும் குறிப்பாக வண்ணம் அட்டகாசம் 😍

    ReplyDelete
    Replies
    1. கதை நெடுக வர்ணங்கள் செம pleasant !

      Delete
  24. இனி வைகிங் தீவு மர்மம் பழைய புத்தகத்தின் விலை மார்கெட்டில் தாரு மாறாக ஏறாது என நினைக்கிறேன்?

    ReplyDelete
  25. வைகிங் தீவு மர்மம் அட்டைப்படம் செம அசத்தல்....இந்த இதழ் நண்பர்களால் மறுபதிப்பாக தேர்ந்தெடுத்த போது அப்பொழுது அது படிக்காத இதழ் என்ற நினைவு...எனவே செம குஷி...ஆனால் இதழ் கைவசம் கிடைத்து படித்த போது டிராகன் நகரம்...கழுகு வேட்டை போன்றவை போல மிக பெரிய அதிரடியோ்.மிக நீளமான சாகஸமாகவோ இல்லாத போதும் இதழ் தேர்வானது எப்படியோ என்ற எண்ணமே மேலோங்கியது.இப்பொழுது இன்றைய பதிவை படித்தவுடன் அது புரிபடுகிறது.

    இப்பொழுது வெகு ஆவலுடன் வைகிங் தீவு மர்மத்திற்கு வெயிட்டிங்...

    ReplyDelete
  26. வாவ்...மீண்டும் ஒரு புது கெளபாய் நாயகர்..


    பட்டாசு வெடித்து வரவேற்கிறேன்...


    வருக....வெல்க..

    ReplyDelete
    Replies
    1. தலீவரே...அனுமதிக்கப்படாத வேளையிலே பட்டாசு - கிட்டாசு வெடிச்சு வம்பிலே சிக்கிக்காதீங்க !! அண்ணன் எப்போ கிளம்புவான் ? திண்ணை எப்போ காலியாகும்னு நிறைய பேர் வெயிட்டிங்கனு கேள்வி !

      Delete
  27. புத்தக விழா கேரவன் அடுத்து திருப்பூரை நோக்கிப் பயணிக்கிறது - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 10 வரை அங்கு நடைபெறவுள்ள விழாவின் பொருட்டு !!


    #####


    விற்பனை சிறக்க எனது வாழ்த்துகள் சார்..

    ReplyDelete
  28. லோன் ரேஞ்சர்....
    ஜேம்ஸ் பாண்ட் ...

    நாக்கில் எச்சில் ஊருது

    சுவைக்க நான் ரெடி

    ReplyDelete
    Replies
    1. மையில மசாலா தடவி பிரின்ட் பண்ணிடுங்க எடிட்டர் சார்!!

      Delete
    2. எற்கனவே பராகுடாவில் மசாலா கொஞ்சம் தூக்கல்னு பட்டித்து ; இதிலே மசியிலேயும் சேர்க்கவா ?

      Delete
  29. வைகிங் தீவு மர்மம் இதுவரை நான் படித்திராத ஓரிரண்டு டெக்ஸ் கதைகளில் ஒன்று. அதுவும் கலரில் டெக்ஸ்னாவே மிளகு போட்டு வறுத்த சிக்கன் போல.! ஆர்வங்கா உந்தி அண்ணய்யா.!

    இந்த வைகிங் தீவுல, ஆரிசியா, வல்னர், கிறிஸ் எல்லாரும் உண்டுதானே.!?

    ReplyDelete
    Replies
    1. அவங்க மட்டுமில்லாம
      அவங்களோட தங்கை அக்கா சித்தி பொண்ணுங்க எல்லோருமே இருக்காங்களாமாம் 🤷🏻‍♂
      .

      Delete
    2. // கலரில் டெக்ஸ்னாவே மிளகு போட்டு வறுத்த சிக்கன் போல.!//

      அப்ப கருப்பு வெள்ளை டெக்ஸை என்ன சொல்லுவீங்க 🤔

      Delete
    3. ////அப்ப கருப்பு வெள்ளை டெக்ஸை என்ன சொல்லுவீங்க 🤔///

      அப்ப கருப்பு-வெள்ளையில டெக்ஸின் பெரியப்பாவ என்ன சொல்லுவீங்க?

      Delete
    4. //அப்ப கருப்பு-வெள்ளையில டெக்ஸின் பெரியப்பாவ என்ன சொல்லுவீங்க?//

      டெக்ஸ்ஸ பற்றிய நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காது போல் தெரிகிறது 😁

      Delete
    5. // இந்த வைகிங் தீவுல, ஆரிசியா, வல்னர், கிறிஸ் எல்லாரும் உண்டுதானே.!? //

      சமீபத்தில் தம்பிக்கு தலையில் அடி கிடி ஏதும் பட்டதா😎

      Delete
    6. ///சமீபத்தில் தம்பிக்கு தலையில் அடி கிடி ஏதும் பட்டதா😎 ///

      ரொம்ப நாளைக்கு முன்னுக்க..!:-)

      Delete
    7. // ரொம்ப நாளைக்கு முன்னுக்க..!:-) //

      ஓ நெத்தியிலா... அப்பவே சந்தேகப்பட்டேன்

      Delete
  30. இனிய காலை வணக்கம் சார் மற்றும் நண்பர்களே 🙏🏼
    .

    ReplyDelete
  31. // புத்தக விழா கேரவன் அடுத்து திருப்பூரை நோக்கிப் பயணிக்கிறது - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 10 வரை அங்கு நடைபெறவுள்ள விழாவின் பொருட்டு !! //

    வாவ் சூப்பரு சார் 🙏🏼

    உங்களோட வருகை 10ம் தேதி திருப்பூர் புத்தக திருவிழாவுக்கு உண்டுங்களா சார் 🙏🏼
    .

    ReplyDelete
    Replies
    1. நஹி சார் ; பத்தாம் தேதிக்கு அல்லாத வேறொரு நாள் maybe !

      Delete
    2. சார்...பத்தாம் தேதி பலர் குடும்பம் குடும்பமாக திருப்பூர் வருவதாக ஒரு வதந்தி...:-)

      Delete
  32. // THE LONE RANGER தானென்று யூகம் செய்திட ? Oh yes - அமெரிக்காவில் புத்தம் புதிய creative அணியினைக் கொண்டு இவரது சாகசங்களை மெர்சலூட்டும் தரத்தில் //

    ஆவலுடன் வெயிட்டிங்கு சார் 😍
    .

    ReplyDelete
    Replies
    1. வெயிட்டிங் வீண் போகாது சார் !

      Delete
  33. February books. I'm waiting for Jeremiah and Johny 2.0 Mack and Jack and Tex all color books this time. Hope that Jeremiah impresses our friends this time. And I welcome lone ranger one more cowboy Wowow. And bond is gonna replace the gap filled by largo no doubt. I too ask our editor to add one more bond in jumbo season 2

    ReplyDelete
  34. வைகிங் தீவு படித்த கதை ..ஞாபகமில்லை வண்ணத்தில்... காத்திருக்கிறேன்.லோன் ரேஞ்சர் கம்பீர தோற்றம் .. சினிமாவாகவும் பார்த்துவிட்டோம்.ரசிக்கத்தகுந்த படைப்பு.வரவேற்கிறேன்.

    ReplyDelete
  35. காலனின் கானகம் செம விறுவிறுப்பான கதை.
    சாத்தானின் சீடர்கள் சோடை போகவில்லை.டெக்ஸ் என்றும் ஏமாற்றியது இல்லை.

    ReplyDelete
  36. என்னதான் செயலர்ல இருந்து சிலர் டெக்ஸை சீண்டினாலும் ..


    சிங்கம் சிங்கம் தான் என்றும்..


    காமிக்ஸ்க்கு அரசன் டெக்ஸ் தான் என்றும்..


    சொல்லி கொண்டு விடை பெறுவது ..


    திருப்பூர் ப்ளூபெ்ர்ரி..மற்றும் ரம்மி...:-)

    ReplyDelete
  37. //நாக்கார்// //சொச் பாரத்// ன்னு வரிசையா படிச்சுட்டு சிரிச்சுட்டே வைகிங் தீவு மர்மத்துக்கு மொழிபெயர்ப்பு எப்படி மாத்தலாங்கிற போராட்டத்தை எங்கே கொளுத்திப் போடலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்.

    லோன் ரேஞ்சருக்கு நல் வரவு. பல மாதங்களுக்கு முன்னாடி படிச்சது. நல்லாவே இருந்துது. சினிமாவுக்கும் காமிக்ஸுக்கும் நிறைய வேறுபாடு இருக்கும். மார்வல் திரைப்படங்கள் நன்றாக இருக்கும். ஆனால் அவங்க காமிக்ஸ் படிக்க எனக்கு அவ்வளவு ஆர்வம் இருந்தத்தில்லை.

    லோன்ரேஞ்சர் திரைப்படம் மொக்கை. காமிக்ஸ் நன்றாகவே இருந்தது. சாதாரண பழி வாங்குற கதைய நல்லாவே சொல்லி இருப்பாங்க.

    இப்ப படிச்சுட்டு இருக்கிறது டெக்ஸ் வில்லரோட ப்ளாஷ்பேக் கதைகளான ரத்த ஒப்பந்தம், தனியாத தணல் மற்றும் காலன் தீர்த்த கணக்கு. செமக் கதை.

    ReplyDelete
  38. சிகரங்களின் சாம்ராட்டை விட்டு நகர்ந்து அமேஸான் ப்ரைம் ,நெட்ப்ளிக்ஸ் –ன்னு போயாச்சு ..இருப்பினும் ஒரு கடைசி பதிவு ..

    SCIENCE IN FANTASY …
    காட்சி 1
    குப்புசாமி தெருநாய் ஒன்றை பார்க்கிறான் .
    அதன்மேல் கல்லெறிகிறான் .
    நாய் அவனைகடித்து ரத்தம் வருகிறது ..

    காட்சி 2
    குப்புசாமி நாயை பார்ப்பதும் அதன்மேல் கல்லெறிவதும் ரத்தம் வருவதும்
    ஒரே நேரத்தில் நடக்கின்றன ..
    காரணம் நாய் ,கல், குப்புசாமி அனைவரும் ஒளியின் வேகத்தில் பயணிக்கின்றனர் ..

    காட்சி 3
    ரத்தம் வருவது முன்னும் கல்லெறிவதும் நாய் கடிப்பதும் அதற்கு பின்பாக வருமாயின் குப்புசாமி ,நாய் ,கல் மூவரும் ஒளியின் வேகத்தையும் விஞ்சி பயணித்தால் சாத்தியம் ..
    காட்சி 2 ,காட்சி மூன்று இரண்டுமே நமது பிரபஞ்சத்தில் சாத்தியம் அல்ல

    காரணம் ( நாய் மேல் கல்லெறிவது)
    விளைவு ( நாய் கடித்து ரத்தம் வருவது )

    காரணத்துக்கு பின் விளைவு –இயல்பானது
    காரணம் ,விளைவு ஏக காலத்தில் நடப்பின் –ஒளியின் திசை வேகம்
    விளைவுக்கு பின் காரணம் நடந்தால் ...ஒளியின் வேகத்தை மிஞ்சின வேகத்தில் பயணிப்பது ..ஆனால் கற்பனை உலகில்தான் நடக்கும்

    37 ஆண்டுகள் ,18 ஆண்டுகள் 6 மாதங்கள் என்பவை எதனுடன் தொடர்புடையவை ?
    குறிப்பாக 186 ..
    ஒளியின் திசைவேகம் 186௦௦௦ மைல்கள்/ வினாடி
    ஒளித்துகள் –போட்டான் – க்கு காலம் என்ற ஒன்றே கிடையாது ..
    பிரபஞ்சம் தோன்றியபோது தோன்றிய போட்டான் இன்னும் பயணித்து கொண்டே இருக்கிறது ..அதற்கு வயது என்பதே கிடையாது ...
    தோர்கல் அல்லது யார் பயணித்தாலும்அது ஒளியின் திசைவேகமாக இருப்பின் காலம் சுழியாக மாறுகிறது ..
    அவர்களுக்கு வயதாக போவதில்லை ..
    ஒரோபோரஸ் மோதிரத்தின் பயண தூரம் பூமியின் ஒரு நொடிக்கு 18.6 ஒளி ஆண்டுகள் எனில் ( கற்பனை உலகம் ) விளைவுகள் முன்னும் காரணங்கள் பின்னும் நடக்கும் ...
    கதையில் இதுதான் நடக்கிறது
    மாயாஜால புனை கதையில் அறிவியல் !!!!!

    குடிசையின் காலக்கணக்கு 48 மணி நேரங்கள்
    தோர்கல் குடிசையின் உள்ளே நுழைவது குடிசையை பொறுத்தவரை அன்று மதியம் பன்னிரண்டு மணி ..மறுநாள் காலை ஆறுமணி என்பது குடிசையை பொறுத்தவரை முதல் நாள் மாலை ஆறுமணி ..

    குதிரையை குடிசை வளாகத்துக்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே மாலை ஆறு மணிக்கு நுழையும் தோர்கல் பல நிமிடங்கள் கழித்தே குதிரையை ஆட்டு பட்டிக்கு கொணர்கிறான் ..
    குடிசை வளாகத்தின் வெளியே நிற்கும் இக்குதிரையை வயதான வல்னா அப்புறப்படுத்த ( குடிசைக்கு முதல நாள் மாலை ஆறு மணி ,தோர்கல் .தோரிக்கு அடுத்தநாள் காலை ஆறுமணி )
    குடிசைக்கு வெளியே ;உள்ளே என குதிரை ஒரே நேரத்தில் இருக்க குதிரை வெளிவர முயல இந்த முரண் காரணமாக முதல் காலப்பயணம் நிகழ்கிறது
    விளைவுகள் முன்னும் காரணங்கள் பின்னும் நிகழ காரணம் ஒராபோராஸ் ஒளியின் திசை வேகத்தை மிஞ்சி பயணிப்பதே ...
    ஒரோபோராஸ் மோதிரத்தை அணிந்து இருப்பின் வயது மாறுபாடு தோன்றாமல் இருப்பதன் காரணம் இதுவே ...

    குடிசையின் காலம் 48மணி நேரங்கள் என்பது பற்றி குழப்பம் அடைய தேவையில்லை ..
    நாம் பார்க்க கூடிய கிரகங்களில் நேர மாற்றங்கள் இருக்கத்தான் செய்கின்றன .
    வீனஸ் கிரகத்தின் ஒரு நாள் என்பது 234 பூமி நாட்கள் அதன் ஒரு வருடம் 227 நாட்கள்தான் ..
    நமது பிரபஞ்சத்திலேயே இப்படி ...

    விமான பயண டைம் ஜோன்கள் சில விசித்திரமானவையே .
    ஜூன் 25 மதியம் இந்தியாவில் இருந்து கிளம்பி ஜூன் 25 காலை ஆறுமணிக்கு சில நாடுகளை போய் சேர இயலும் ..
    ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    ஜெரெமியா ஓட்டப்பந்தயத்தில் நானும் உண்டு ...
    ஆனால் ஈவி ,ராகவன்ஜி ,கண்ணன் ஓடுவதற்கு எதிர் திசையில் ..
    புக் எப்ப வரும் ?
    லோன் ரேஞ்சர் ..எப்பவும் போல படிச்சிட்டுதான் ...வரட்டும் பாப்போம் !!!!
    ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    ReplyDelete
    Replies
    1. ரசாயனத்தில் ஆர்வம்உள்ளவர்கள் பென்சீன் ரிங்கை பார்க்கவும்.

      அச்சு அசல் ஓரோபோரஸ் வடிவமைப்பு..!!

      Delete
    2. ஜெரெமியா 👏👏👏👍👍👍

      Delete
    3. ///காரணத்துக்கு பின் விளைவு –இயல்பானது ///

      👏👏👏

      Delete
    4. // ஜெரெமியா ஓட்டப்பந்தயத்தில் நானும் உண்டு ...
      ஆனால் ஈவி ,ராகவன்ஜி ,கண்ணன் ஓடுவதற்கு எதிர் திசையில் ..
      புக் எப்ப வரும் ? //

      +1
      புக் எப்ப வரும்?

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. செனாஅனா (என்கிற) எழுத்தாளர் சுஜாதாவின் ஆவி அவர்களே...

      திகைக்கவைக்கிறது உங்களின் தேடலும், ஆர்வமும்!

      இன்னமுமேகூட சிகரங்களின் சாம்ராட்டில் வைக்கப்பட்டுள்ள முடிச்சுகளைப் புரிந்துகொள்ள என்னால் சாத்தியமாகவில்லையெனினும், ஒவ்வொரு முறை நீங்கள் இதுபோல ஏதாவது விளக்கம் கொடுக்கும்போதெல்லாம் வேறு ஏதோ சில சங்கதிகள் புரிவதுபோலிருப்பது உண்மை!!

      இன்றில்லாவிடினும் என்றாவது ஒருநாள் மனிதகுலம் ஒளியை மிஞ்சிய ஆற்றலுடன் கூடிய ராக்கெட் ஒன்றைத் தயாரித்து, அதில் பயணித்து 'காலப்பயணம்' கற்பனையை சாத்தியமாகிடுமா என்று சொல்லுங்களேன்?

      சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய 'ஹிக்ஸ் போசான் துகள்கள்' ஆராய்ச்சி குறித்து உங்கள் பார்வையில் ஏதாவது?



      Delete
  39. பராகுடா ஓவியங்கள் அற்புதம்!

    ReplyDelete
    Replies
    1. ஓவியங்கள் மட்டுமா...?!

      கதையும்...:-)

      Delete
  40. மெபிஸ்டோ எப்ப வரும் சார்?

    ReplyDelete
    Replies
    1. ஆமாங் சார்...வெற்றியோ தோல்ஙியோ நிறைய பேரு கேக்குறாங்க்...

      களம் இறக்கி பாருங்கள் சார்..:-)

      Delete
  41. ஜம்போவில் பாராகுடா வேண்டாம் சார்.

    ReplyDelete
  42. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. சிகரங்களின் சாம்ராட்:

      வல்னா மற்றும் டோரிக் இடையில் காதல், இவர்களின் காதலுக்கு இடையில் மாட்டிக் கொள்ளும் தோர்கல் மற்றும் ஒரு காலப் பயணம் செய்ய உதவும் பாம்பு மோதிரம் இவைகளைக் கொண்டு ரசிக்கும் மற்றும் நம்ப மண்டையை சுறுசுறுப்பாக்கச் செய்யும் அட்டகாசமான கதை. எதிர்காலத்தில் சேக்ஸகார்ட்டாக மாறிய டோரிக் தோர்கலிடம் வல்னாவை தன்னிடம் சேர்த்து வைக்க மிரட்டுவது; இதனை ஒரு அழகான சிறிய திருப்பத்துடன் கூடிய க்ளைமாக்ஸ் மூலம் முடித்து வைப்பது சூப்பர்.

      அப்புறம் ஆனானப்பட்ட தோர்கலுக்கே காலப் பயணம் தலை சுற்ற வைத்து விட்டது என்னைப் போன்ற சாமானியனுக்கு கேட்கவே வேண்டாம்.

      நாளை மீண்டும் ஒரு முறை படிக்க போகிறேன்.

      Delete
    3. ///நாளை மீண்டும் ஒரு முறை படிக்க போகிறேன்.///

      படிங்க படிங்க!
      ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதிதாய் சில விசயங்கள் புரிவதுபோலிருக்கும்.. அதே சமயம் , ஏற்கனவே புரிந்த (அதாவது நாம் புரிந்ததாய் நினைத்திருந்த) சில விசயங்கள் மறுக்கா குழப்புவதைப் போலிருக்கும்! அதாவது, முடிந்தது தொடர்வதுபோலவும் - தொடர்ந்தது முடிவது போலவும்!(அட! ஓரோபோரஸ் தத்துவம்!!)

      நம்முடைய தளவல்லுனர்கள் பலரும் இக்கதையை அலசி ஆராய்ந்திருந்தாலும், யாருடைய கருத்தும் மற்றவர்களுடையதோடு ஒத்துப்போகவில்லை என்பதும் ஆச்சரியப்படுத்தும் மற்றொரு சமாச்சாரம்!!

      கற்பனை, அறிவியல், வரலாறு என்பதையெல்லாம் தாண்டி, இக்கதை ஒரு இனம்காண முடியாத அமானுஷ்யத்தை தன்னகத்தே கொண்டிருப்பதாய் எனக்குத் தோன்றுகிறது!

      ய்யீஈஈஈஈக்க்க்!!!!

      Delete
    4. அ..ஆனா ...என்னை மாதிரி ஒரே தடவைல படிச்சு புரிஞ்சவங்க யாருமே இல்ல போல செயலரே..!

      Delete
    5. உங்களை மாதிரி ஒரு தலீவர் இந்த ஒலகத்துலயே கிடையாதுங்க தலீவர் அவர்களே.. ஊருக்குள்ள பேசிக்கிடறாங்க!

      Delete
  43. 1. லோன் ரேஞ்சரின் செவ்விந்திய Side kick டோன்டோ'வாக ஹாலிவுட் சுப்பர்ஸ்டார் ஜானி டெப் நடித்தும் படம் பல்பு வாங்கியது வருத்தமெ ☹️. ரேஞ்சர் & டோன்டோவின் chemistry நாம் பார்த்த மற்ற ஜோடிகளைவிட சற்று வித்தியாசமானது. எதிர்பார்ப்பு எகிறுகிறது.

    2. கௌ-பாய்ஸ் & லாஜிக் ஜிம்மிக்ஸ்: சிவாஜியும் & ரஜினியுமெ கௌ-பாய் ஸ்டைல் படங்களில் நடித்ததுண்டு, அதை நாம் ரசித்துண்டு. So cowboys are always welcome.
    அதிலும் 007 & கௌ-பாய் இரண்டிலும் கலக்கிய
    ஜெய்சங்கரின் "எங்க பாட்டண் சொத்து" படத்தில் கிராமத்தில் ஆரம்பிக்கும் ஒரு சண்டைகாட்சி, காடு, பனிமலை சறுக்கு, பாலைவனத்தில் ஒட்டகத்தின் மேல் தொடர்ந்து கடற்கரையில் முடியும். லாஜிக் ஓட்டை சுவாரஸ்யமாக இருந்தால் forgiven.

    3. மேரி கிட்ட வல்ணா தாத்தவோட மோதிரம் இருந்திருக்கிறது, அதான் அவளால் ப்ளைட்டை பிடிக்கமுடிந்தது. கதை சொன்னா அனுபவிங்க சார்... ஆராயாதிங்க...

    ReplyDelete
    Replies
    1. சூப்பரா எழுதறீங்க நண்பர்! தொடர்ந்து கலக்குங்க!

      Delete
    2. //கதை சொன்னா அனுபவிங்க சார்... ஆராயாதிங்க..//

      ஹி..ஹி..ஹி..

      Delete
    3. //சிவாஜியும் & ரஜினியுமெ கௌ-பாய் ஸ்டைல் படங்களில் நடித்ததுண்டு,//

      ரஜினி..தாய் மீது சத்தியம்( ஆக்சுவலி goatboy..பரவால்ல)

      சிவாஜி..கௌபாய் ஸ்டைல்??? என்னா படம் ?

      Delete
    4. சிவாஜி - சித்திரா பௌர்ணமி, செவ்விந்திய ஸ்டைல் like Tiger Jack

      Delete
    5. நன்றி Erode Vijay, Paranitharan and Selvam Abirami.
      Selvam சார், கதையை அனுபவிக்க சொன்னது நகைச்சுவைக்கே. உள்குத்து ஏதும் லேது 😁.

      Delete
    6. //ரேஞ்சர் & டோன்டோவின் chemistry நாம் பார்த்த மற்ற ஜோடிகளைவிட சற்று வித்தியாசமானது. எதிர்பார்ப்பு எகிறுகிறது.//

      இம்முறை டைனமைட்டில் இந்தத் தொடரை நகற்றிச் சென்று வரும் பாணி அட்டகாசம் சார் ! அதிலும் லோன் ரேஞ்சருடன் டோண்டோவுடனான உறவை சும்மா செதுக்கியுள்ளார்கள் ஆறு பாக சாகசமொன்றினில

      Delete
    7. பில்ட் அப் பாண்டி ஆஜராகிட்டார் ;-) :-D

      Delete
    8. பில்ட் அப் பாண்டி நல்லா இருக்கு.

      Delete
    9. ஹை ...இந்த பேர் கூட படா ஷோக்கா கீதே !! புதுப் பெயருக்கு நியாயமா நடந்துக்க வேணுமில்லியா - so இதோவொரு கூடுதல் பிட் !!

      நேற்றும் , இன்றைக்கும் 007 உடனான பயணம் !! பிடரியில் அறையும் ஆக்ஷன் ; தெறிக்க வைக்கும் கதை ஸ்பீட் !! மூச்சு வாங்குகிறது பேனா பிடிக்கும் போதே !!

      அப்பாலிக்கா போனவாட்டி போலவே ஆக்க்ஷன் sequences முழு மௌனத்திலேயே !! அப்படியே தொடரட்டுமா ? அல்லாங்காட்டி நம்ம DTS எபெக்ட் சேர்த்திடலாமா ?

      - பி.அ.பா.-

      Delete
    10. ///அப்பாலிக்கா போனவாட்டி போலவே ஆக்க்ஷன் sequences முழு மௌனத்திலேயே !! அப்படியே தொடரட்டுமா ? அல்லாங்காட்டி நம்ம DTS எபெக்ட் சேர்த்திடலாமா ?
      ////

      மெளனமாவே இருந்தாலும் ஓகே தான் சார்!! ஆக்ஷன் sequence பக்கங்களைப் புரட்டும்போது எதையாவது சொல்லி வீட்டுக்காரம்மாவை வம்புக்கிழுத்துக்கிட்டோம்னா போதும் - கதைக்குத் தேவையானதைவிட கூடுதலாகவே கும், ணங், சத், மடேர் சவுண்ட் எபெஃக்ட்டுகள் கிடைக்கும்!!

      Delete
    11. /// அப்பாலிக்கா போனவாட்டி போலவே ஆக்க்ஷன் sequences முழு மௌனத்திலேயே !! அப்படியே தொடரட்டுமா ? //

      Yes. தொடரட்டும்

      Delete
    12. விஜய் @

      // ஆக்ஷன் sequence பக்கங்களைப் புரட்டும்போது எதையாவது சொல்லி வீட்டுக்காரம்மாவை வம்புக்கிழுத்துக்கிட்டோம்னா போதும் - கதைக்குத் தேவையானதைவிட கூடுதலாகவே கும், ணங், சத், மடேர் சவுண்ட் எபெஃக்ட்டுகள் கிடைக்கும்!! //

      ரொம்ப தைரியம் தான் உங்களுக்கு:-)

      Delete
    13. ஆனால் எங்களை போன்ற போர் வீரர்களுக்கு நாங்கள் கொடுக்கும் கும்மாங குத்து சவுண்ட் வந்தால் தான் அந்த குத்துக்கே மரியாதை என்பதை தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களும் வருங கால அமெரிக்க அதிபர் ஷெரீப் மகி ஜீ அவர்களும் ஐநா சபையிலேயே உரையாற்றி உள்ளார்கள் என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்..

      Delete
    14. ///போனவாட்டி போலவே ஆக்க்ஷன் sequences முழு மௌனத்திலேயே !! அப்படியே தொடரட்டுமா ? அல்லாங்காட்டி நம்ம DTS எபெக்ட் சேர்த்திடலாமா ?///

      மௌண ஆக்ஷனிலும் ஒரு வசீகரம் இருக்கவே செய்கிறது.! DTS எபெக்ட் சேர்க்காமலிருப்பதே பாண்ட் 2.0விற்கு அழகு என்பது என்னுடைய கருத்து.!
      ஆனால் பெரும்பான்மை நண்பர்கள் விருபினால் சவுண்ட் எபெக்ட் சேர்த்தாலும் பாதகமில்லை என்பதும் என் கருத்து.!

      அதுவுந்தேன் இதுவுந்தேன் ..(நன்றி -ஆதி)

      Delete
    15. ///ஆக்ஷன் sequence பக்கங்களைப் புரட்டும்போது எதையாவது சொல்லி வீட்டுக்காரம்மாவை வம்புக்கிழுத்துக்கிட்டோம்னா போதும் - கதைக்குத் தேவையானதைவிட கூடுதலாகவே கும், ணங், சத், மடேர் சவுண்ட் எபெஃக்ட்டுகள் கிடைக்கும்!!///

      அப்புறம் .. லேசா கண்ணு தெரியறதுக்கே ஒரு மாசம் ஆயிடும்..! அடுத்தமாசம்தான் கதையை படிக்க முடியும் பர்ர்ரால்லியா ...!:-)

      Delete
    16. DTS சவுண்ட் சேர்த்தால் நலம் ஐயா

      Delete
    17. Dear Editor,

      NOOOOOO .. Please no added sound effects. Please retain original. இப்போ வர்ற புது டுப்பாக்கி மற்றும் ஸ்டண்ட் சவுண்டெல்லாம் தமிழில் நல்லா இருக்காது. கும் சத் ணங் போட்டால் tex பீல் வரும். தயவு செய்து வேண்டாமே ப்ளீச் !

      Delete
  44. சார்...பிப்ரவரி இதழ்கள் பிப்ரவரியில் தான் கிடைக்குமா...என்ன கொடுமை இது..?


    இந்த தாமதத்தை மிக வன்மையாக கண்டிக்கிறேன்..:-(

    ReplyDelete
    Replies
    1. இங்க பார்றா!!! :-)

      Delete
    2. இப்பல்லாம் தில்லா கண்டிக்க ஆரம்பிச்சுட்டீங்க தலீவரே!

      Delete
    3. ஏன்னா நமது தாரை பரணிக்கு இப்போது எல்லாம் வாழைப்பூ வடை பிடிப்பது கிடையாது.

      Delete
    4. ஒரே தபாவில் வான் ஹாம் போட்ட முடிச்சுகளையெல்லாம் பார்த்து 'சவாலங்கடி கிரி கிரி !' என்ற தலீவருக்கு இந்த ஆளுமை கூட இல்லாது போகுமா - என்ன ?

      Delete
    5. வாழைப்பூ....வடையா ?

      அவர் நண்டு ப்ரைக்கு கட்சி மாறி ஒரு யுகமாச்சே !!

      Delete
    6. அவருக்கு நண்டும் போர் அடித்து விட்டதாம்:-)

      Delete
    7. பதுங்குகுழியிலேயே பலகாலம் வாழ்ந்து பழகி, எங்கள் தலீவரே தற்போது ஒரு நண்டுபோல மாறிவிட்டிருக்கிறார் என்பதே உண்மை!

      ரோட்டில் நடந்தால் கூட சைடுவாக்கில்தான் நடக்கிறாராம்!

      Delete
    8. // பதுங்குகுழியிலேயே பலகாலம் வாழ்ந்து பழகி, எங்கள் தலீவரே தற்போது ஒரு நண்டுபோல மாறிவிட்டிருக்கிறார் என்பதே உண்மை! //

      அடக் கொடுமையே... தாரை பரணிக்காக இப்படி ஒரு கொடுமை.

      Delete
  45. 1997 பிப்ரவரி இதழ்களை 1998 பிப்ரவரியில் வாங்கியது மறந்து போச்சா

    ReplyDelete
    Replies
    1. சார்...அது எல்லாம் போன போன வருசம்...நான் கேக்குறது இந்த வருசம்..:-)))

      Delete
  46. சிகரங்களின் சாம்ராட் க்ளைமாக்ஸ்:
    டோரிக் தனது எதிர்காலத்தை (சேக்ஸகார்ட்) கொன்ற பிறகு அவன் வாழ்வது இயற்கைக்கு புறம்பானது. எனவே வல்னா அவனைக் கொன்று அவனது இடத்தில் எதிர்காலத்தில் அவள் இருப்பதாக காண்பிப்பது செம முடிவு.

    அதேநேரம் டோரிக் தனது எதிர்காலத்தை (சேக்ஸகார்ட்) கொன்றதை பாம்பு தன்னைத் தானே விழுங்கும் அந்த மோதிரம் அழகாக வெளிப்படுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. ///டோரிக் தனது எதிர்காலத்தை (சேக்ஸகார்ட்) கொன்றதை பாம்பு தன்னைத் தானே விழுங்கும் அந்த மோதிரம் அழகாக வெளிப்படுத்துகிறது.///

      👏👏👏

      Delete
    2. ///டோரிக் தனது எதிர்காலத்தை (சேக்ஸகார்ட்) கொன்ற பிறகு அவன் வாழ்வது இயற்கைக்கு புறம்பானது. எனவே வல்னா அவனைக் கொன்று அவனது இடத்தில் எதிர்காலத்தில் அவள் இருப்பதாக காண்பிப்பது செம முடிவு.///

      நல்ல சிந்தனை!!👏👏👏

      Delete
  47. அப்பாலிக்கா போனவாட்டி போலவே ஆக்க்ஷன் sequences முழு மௌனத்திலேயே !! அப்படியே தொடரட்டுமா ? அல்லாங்காட்டி நம்ம DTS எபெக்ட் சேர்த்திடலாமா ?

    - பி.அ.பா.-


    ######

    சார்...செயலர் சொன்னபடீ கும்..ணங்..சத்...ஆஆ....போன்ற டிடிஎஸ் சவுண்ட் வேணா மெளனமா இருந்தாலும் துப்பாக்கி ,வெடிகுண்டு ...அதாவது டூமீல்...பூம்..போன்ற டிடிஎஸ் எபக்ட் இருந்தால் தான் ஆக்‌ஷனுக்கே மரியாதை்..அதுவும் 007 க்கு அதுதான் அழகு....



    எனவே மிக பெரும்பான்மையான இந்த முடிவையே தாங்கள் தேர்ந்தெடுக்குமாறு போராட்ட குழு வேண்டி கொள்கிறது..

    ReplyDelete
  48. 007 ல் சத்தம் சேர்க்கலாம். ஊமை படம் போல் உள்ளது

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் நண்பரே..

      நாமளே உணர்ந்து கொள்ளலாம் இது ஒரு பாணி என்றாலும் இந்த பாணியில் கொஞ்சம் கூட சூடும் இல்லை்..சுவையும் இல்லை என்பதே உண்மை.

      ஆக்‌ஷன் பட்டையை கிளப்புவதை கண்ணால் உணர முடிகிறது ...ஆனால் மனதால் உணர முடிவதில்லை என்பதே உண்மை..

      எனவே சவுண்ட் ப்ளீஸ் சார்...

      Delete
  49. ஒரு வெடிகுண்டு வெடிக்கும் பொழுது அதன் வெப்ப சலன காட்சிகள் மிக பிரம்மாண்டமாக ஓவியர்படைத்து இருந்தாலும் அதனை ரசிக்க முடியுமே தவிர...அந்த சவுண்ட் எபக்ட் தான் அந்த வீரியத்தை மனதால் உணர முடியும்..பூம்..டூமீல் போன்ற ஓசைகளை நாமாக யூகிக்க முடியாதா என்று வினவலாம்.எளிதாக ஊகிக்கலாம் தான் ஆனால் விறுவிறுப்பாக படிக்கும் பொழுது இல்லாத வரிகளை நாமாக மனதில் உருவக படுத்துவது எளிது தான் எனினும் அது கொஞ்சம் கூட மனதில் பரபரப்பை பற்ற வைப்பதில்லை என்பதே உண்மை..


    எனவே தான் போன முறை 007 சாகஸம் ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பினும் ஒரு முழுமையான ஆக்‌ஷன் கதையாக மனதில் முழுதாக பதிய வில்லை..

    சிறுவயதில் காமிக்ஸ் பொற்காலத்தில் அறுபது பைசா ,ஐம்பது பைசா லோக்கல் காமிக்ஸ் இதழ்கள் கூட பள்ளி அருகே உள்ள கடைகளில் கிடைக்கும்..அது இல்லாத சமயத்தில் நாம் காமிக்ஸ் கேட்டால் கடைக்கார்ர் அதே விலையில் சித்திரங்கள் அல்லாத மாயாஜால கதையை எடுத்து கொடுப்பார்..அதை பிரித்து பார்த்தவுடன் ஐயே ..இதுல படமே இல்லை..வேண்டாம் என்று திருப்பி கொடுத்தவுடன் கடைக்கார அண்ணார் ஒரு வரியை படித்து காட்டி இந்த வரியை படிக்கும் பொழுதே மனதுக்குள் அந்த காட்சியை நினைத்து படி கண்ணு என்று மீண்டும் கொடுத்தது இன்னும் நினைவில் உள்ளது.உண்மை தான்..ஆனால் அந்த காமிக்ஸ் படங்களுடன் கூடிய இதழை படித்த திருப்தி அதில் கிடைத்ததா எனில் கண்டிப்பாக இல்லை...( ஆனால் அந்த பழக்கம் தான் நாவல்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது என்பதும் மறுக்க முடியாது.)

    அதே போல தான் ஒரு காமிக்ஸ் இதழுக்கு ஒலியும் மிக அவசியம்..இது சிறுபிள்ளைதனமாக இருக்கலாம்..ஆனால் காமிக்ஸ் இதழகளை பொறுத்தவரை நான் சிறுபிள்ளை தனமாகவே கடைசிவரை இருக்க நினைக்கிறேன்..( அப்டீன்னா மத்த விசயத்துல நீ பெரிய மனுசன் ஆயிட்டியா ன்னு கேக்காதீங்க்.அது எனக்கே தெரியாது..:-(

    ReplyDelete
    Replies
    1. சவுண்ட் ப்ளீஸ் சார்...

      சவுண்ட் ப்ளீஸ் சார்...

      சவுண்ட் ப்ளீஸ் சார்...

      Delete
  50. Replies
    1. நோ சவுண்ட் எபக்ட் என்பதை கூட சவுண்டாக சொன்னால் தான் சிறப்பு...



      எனும் போது...:

      Delete
  51. எடிட்டர் சார்...

    பேசாம ஜேம்ஸ் பாண்டு புக்கை இரண்டு எடிஷனாக போட்டுடுங்க! DTS sorround sound editionனும், mute editionனும்!

    இல்லேன்னா எந்த சவுண்டும் இல்லாமயே புக்கை பிரின்ட் பண்ணிட்டு, எங்களுக்கு அனுப்பும்போது சின்னச்சின்ன ஸ்டிக்கர்களில் கும், ணங், சத், க்ராஷ்ஷ்ஷ், ஊஜ்ஜ்ஜ், ஆ, ஐயோ, அடங்கொன்னியா போன்ற சவுண்டுகளை அச்சிட்டு கொரியர் டப்பாவில் போட்டு அனுப்பிட்டீங்கன்னா நாங்க எங்க வசதியப்போல ஒட்டிக்கிடுவோம்!!

    அதுவும் இல்லேன்னா infra-red லைட்டுக்கு மட்டும் புலனாகிற மாதிரி ஸ்பெஷல் மையில் அந்த சவுண்டுகளை பிரின்ட் பண்ணி அனுப்பிட்டீங்கன்னா, 'சவுண்டு வேணும் சவுண்டு வேணும்'னு சவுண்டுவிடும் சவுண்டு பார்ட்டிகள் மட்டும் லைட் அடிச்சுப் பார்த்து வாசிப்பு அனுபவத்தை வசமாக்கிக்கிடுவாங்க!

    இன்னொரு ஐடியாவும் இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. செயலரை சங்கத்தை கூறு போட்றாதீங்க ஆமா...

      சவுண்டே வேணாமின்னா நிநி கிராபிக் நாவலையே திரும்ப திரும்ப படிங்க...அதுவே போதும்.


      இல்லன்னா சவுண்ட் வேணாம்னு சொல்ற பெரியவங்களுக்கு எல்லாம் ஆசிரியர் வசன பலூன்ல இருக்குற எல்லா வசனத்தையும் கட் பண்ணிட்டு மெளனமாவே அனுப்ப சொல்லுங்க...


      முழுமையாக ஒரு " பேசும் காமிக்ஸ் " படிச்சுகலாம்...:+)

      Delete
    2. செயலாளர் சொல்றதும் சரிதான் ..
      தலீவர் சொல்றதும் சரிதான் ...

      அதுவுந்தேன் .. இதுவுந்தேன்..!


      விரைவில் சங்கத்துல தேர்தல் வரப்போகுதுன்னு பேசிக்கிறாங்களே ... அதுவும் சரிதான்..!

      Delete
    3. எதுக்கு வம்பு?

      சோத்தாங்கை பக்கம் பவள சிலை மர்மத்தை பத்து பாஞ்சு பக்கத்துக்கு அப்புறமா திருப்பி வச்சுக்குங்க .



      பீச்சாங்கை பக்கம் 007 ஐ வச்சிகிட்டு கண்ணை சுழட்டி சுழட்டி படிங்க..

      டப்பிங் மாதிரின்னு வச்சுக்கோங்க ..

      பிரச்சினை முடிஞ்ச் போச்..

      Delete
    4. சோத்தாங்கை பக்கம் பவள சிலை மர்மத்தை பத்து பாஞ்சு பக்கத்துக்கு அப்புறமா திருப்பி வச்சுக்குங்க .



      பீச்சாங்கை பக்கம் 007 ஐ வச்சிகிட்டு கண்ணை சுழட்டி சுழட்டி படிங்க..

      டப்பிங் மாதிரின்னு வச்சுக்கோங்க ..

      பிரச்சினை முடிஞ்ச் போச்..


      ₹####


      ;-)))))

      Delete
    5. செயலாளர் சொல்றதும் சரிதான் ..
      தலீவர் சொல்றதும் சரிதான் ...

      அதுவுந்தேன் .. இதுவுந்தேன்..!


      #####


      க்கும்...உங்கிட்ட வாங்குன காசுக்கு ஒரு குத்து...அவங்கிட்ட வாங்குன காசுக்கு ஒரு குத்து...சரியா போச்..

      கிர்ர்ர்...

      Delete
  52. Dear Editor,

    NOOOOOO .. Please no added sound effects. Please retain original. இப்போ வர்ற புது டுப்பாக்கி மற்றும் ஸ்டண்ட் சவுண்டெல்லாம் தமிழில் நல்லா இருக்காது. கும் சத் ணங் போட்டால் tex பீல் வரும். தயவு செய்து வேண்டாமே ப்ளீச்


    ######


    எஸ் அதே தான் நானும் சொல்றேன்..ஆஆ..கும்..ணங் சத்தம் கூட வேண்டாம்...ஆனா டூமீல்..பூம் போன்ற அதிர்வெடிகள் சவுண்டாவது வேண்டும் என்பதே எங்கள் சவுண்ட் அணியினரின் வாதம்..யுவர்..ஆனர்..:-)

    ReplyDelete
  53. செயலரே...இத்தனை வருசமா பல பல போராட்டுத்துக்காக சவுண்ட் மேல சவுண்ட் விட்டு போராடி இப்ப சவுண்ட்க்காக சங்கம் பிரிய வேண்டுமா..யோசீயுங்கள்..சிகரங்களின் சாம்ராட்டை விட ஆழமாக யோசியுங்கள்..


    உண்மை விளங்கும்..


    சவுண்ட் கொடுத்தா சமாதானம்..கொடுக்கலைன்னா போராட்டம்

    சமாதானமா ,போராட்டமா...நீங்களே முடிவு பண்ணிகுங்க..


    கதம்.கதம்..

    ReplyDelete
    Replies
    1. தலீவரே.. வீட்டம்மா இழுத்துப் போட்டு மிதிக்கும்போதெல்லாம் ஒரு முக்கல்-முனகல் கூட இல்லாம மெயின்டெய்ன் பண்றீங்கல்லே? புத்தகத்துல மட்டும் surround sound கேட்குதாக்கும்?

      Delete
    2. ச்சே...செயலரே யோசிக்க சொன்னா ஏதோ பீச்சு பக்க சமாதில தியானம் பண்ணிட்டு வந்த மாதிரி படு பயங்கர ரகசியத்தை எல்லாம் வெளியே விடுறாறே...

      ம்ஹீம்..இது வேலைக்கு ஆவாது போல..:-(

      Delete
  54. அன்பார்ந்த வாக்காள பெருமக்களே...

    சவுண்டுக்கு சவுண்ட் கொடுப்பவர்கள் அனைவரும் வந்து வாக்களிக்கவும்..

    தேர்தல்அதிகாரிகளின் கவனத்திற்கு..

    சவுண்ட் கூடாது என சவுண்ட் விடுபவர்கள் அனைவரும் போலி வாக்காளர்கள் என அறிந்து கொண்டு தேர்தல் முடிவை வெளியிடுங்கள்..

    இப்படிக்கு..


    தங்கள் உண்மையான


    "சவுண்ட்" குடிமகன்..!

    ReplyDelete
  55. ஒரிஜினல் படிதான் சவுண்ட் வருணும்னா

    "எ" ல்லாமே ஒரிஜினலா தான் வரணும்னு எங்கள் ஆருயிர் நண்பர் கிட் ஆர்ட்டின் அவர்கள் அலைபேசி வாயிலாக படுகாட்டமான அறிக்பையை வெளியிட்டுள்ளார் என்பதை நான் சொல்ல விரும்ப வில்லை..

    ReplyDelete
  56. சை! எனக்கு இந்த சவுண்டே புடிக்காது!!

    ReplyDelete