Powered By Blogger

Sunday, January 06, 2019

ஒரு விடுமுறை விண்ணப்பம் !

நண்பர்களே,

வணக்கம். நேற்றைக்கு ஓரிடம் ; இன்றைக்கு இன்னொன்று ; இடைப்பட்ட அவகாசத்தில் 2 மணி நேரத்துக்கு சென்னைப் புத்தக விழாவில் தலை காட்டியது என்று எனது பொழுதுகள் காலில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டே பயணித்து வருகின்றன ! இந்த அழகில் நண்பனொருவனின் பையனுக்குத் திருமணமென்பதால் ஞாயிறு காலை வடக்கே பயணமும் காத்துள்ளது !! So இந்தக் கூத்துக்களுக்கு மத்தியினில் வழக்கமான ஞாயிறு காலைப் பதிவென்பது இந்தமுறை சாத்தியமாகாதென்று தூக்கத்தில் செருகும் இமைகள் கதறலோடு சொல்கின்றன ! So இன்றைய பதிவில்லாத குறையினை ஜனவரியின் இதழ்களின் அலசல்களோடு கொண்டு செல்லப் பார்ப்போமா guys ? தோர்கல் எழுப்பியுள்ள கேள்விகளுள் பராகுடா பக்கமாய் இன்னமும் போதிய கவனம் திரும்பியதாய்த் தோன்றவில்லை ! What say we focus on "அலைக்கடலின் அசுரர்கள்" ?
இயன்ற முதல் தருணத்தில் பதிவோடு ஆஜராகிடுவேன் என்ற வாக்குறுதியோடு விடை பெறுகிறேன் ! Bye all ! இப்போதைக்கு கார்பீல்டு உங்களுக்குத் துணைக்கு !! 

P.S : கடைசியாய் எண்ணிய வரைக்கும் TEX vs LUCKY LUKE என்பது தான் நாயகர்களின் போட்டியாகத் தென்பட்டது !! அதனில் டெக்ஸ் லீடிங் என்றாலுமே, லக்கி லூக்கின் வாக்கு வங்கி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது !  இன்னமும் வோட்டுப் போட்டிருக்கா நண்பர்கள் இம்முறையேனும் கையில் மாய் தடவிடலாமே ? 

221 comments:

  1. என் சார்புல ஒரு ஐம்பது கள்ள வோட்டு லக்கி லூக்குக்கு

    ReplyDelete
    Replies
    1. என் சார்புல ஒரு 51 கள்ள ஓட.டு


      "டெக்ஸ் வில்லருக்கு "...:-)

      Delete
    2. ம்ம்..போன எலெக்ஷன் மாதிரி மேலே ஓட்டுப்பெட்டி வெச்சிருந்தா....
      தளத்திற்கு வருகை 500
      ஓட்டுப் பதிவு 2500ன்னு களைகட்டியிருக்கும்..!:-)

      Delete
  2. சென்னை புத்தக விழாவில் நமது காமிக்ஸ் விற்பனை சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. இரவு வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  4. இனிப்போடு புத்தாண்டை ஆரம்பித்து வைத்த ஆசிரியர்க்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. எனக்கு என்னமோ ஆசிரியர் சொன்னமாதிரி "கிராபிக் நாவல் " கரைச்சு குடிக்குற அளவுக்கு தேறிட்டேன் அப்படின்னு மனப்பிரமையில இருந்தேன் "சிகரங்களின் சாம்ராட்டை " படித்த வரைக்கும் கூட ..

    ஆ...ஆனா...

    நண்பர்களின் கேள்விகனைகளை பார்க்கும் பொழுது தான் தெரிகிறது..நாம அதே பழைய ஆள்தான்னு..


    ஆனாலும் ..

    ஒரு விறுவிறுப்பான கமர்ஷியல் படத்திலோ அல்லது முழுநீள நகைச்சுவை படத்திலோ "லாஜீக் " பார்க்காமல் படத்தை பார்த்து ரசிக்கும் ரசிகனின் மனநிலையிலையிலேயே நான் தோர்கலை ரசித்து கொண்டேன் என்பதை தெரிவித்து கொண்டு...


    இனி "பராகுடாவில்"... நுழைகிறேன்..:-)

    ReplyDelete
    Replies
    1. // ஒரு விறுவிறுப்பான கமர்ஷியல் படத்திலோ அல்லது முழுநீள நகைச்சுவை படத்திலோ "லாஜீக் " பார்க்காமல் படத்தை பார்த்து ரசிக்கும் ரசிகனின் மனநிலையிலையிலேயே நான் தோர்கலை ரசித்து கொண்டேன் என்பதை தெரிவித்து கொண்டு... //

      சூப்பர். நானும் என்றும் இந்த கட்சிதான். மண்டைக்கு தேவையில்லாமல் சிந்திக்கும் வேலை கொடுக்க கூடாது:-)

      Delete
    2. நீர் என் இனமய்யா...:-))

      Delete
  6. என்னிடம் தெரிவிக்காமல் சொல்லாமல் கொள்ளாமல் "சென்னை " சென்ற செயலரையும் ,நிதி அமைச்சரையும் வன்மையாக கண்டிக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. தலீவரே!!! 'ஒரு வாரம் லீவு'ன்னு நீங்கதானே போன பதிவுல லீவு லெட்டர் கொடுத்துருந்தீங்க?!!!

      Delete
    2. அப்புறம் குருநாயரே ..

      இந்தவருசம் என்ன ஷ்பெசல்..? :-)

      Delete
    3. ஹிஹி! இன்னிக்கு ஏதாவது 'ஸ்பெஷல்' ஏற்படலாம்னு நினைக்கிறேன்.. எதிர்பார்க்கிறேன்... காத்துக்கிடக்கிறேன்.. அல்லது தவமிருக்கேன்னு கூட சொல்லலாம்!!

      மறுபடியும் ஹிஹி! :)

      Delete
    4. கவலை படாதீங்க செயலரே..

      இந்த தடவ "ஹீஹீ.." தான்..:-)

      Delete
  7. காலை வணக்கம் 🙏

    ReplyDelete
  8. ///கடைசியாய் எண்ணிய வரைக்கும் TEX vs LUCKY LUKE என்பது தான் நாயகர்களின் போட்டியாகத் தென்பட்டது !! அதனில் டெக்ஸ் லீடிங் என்றாலுமே, ///

    எங்க தொகுதி பெட்டியை உடைச்சபின்னாடி டெக்ஸுக்கு டெபாசிட்டே இருக்காது பாருங்க.!

    லக்கி லூக்

    ReplyDelete
  9. Replies
    1. டெக்ஸ் வாழ்க...அப்டீன்னு முழுசா சொல்லிருங்க ரம்மி..:-)

      Delete
  10. உங்கள் பொன்னான வாக்குகளை காமிக்ஸ் உலகின் ஒரேயொரு தல - டெக்ஸ் வில்லர்க்கே அளித்திடுவீர்! _/\_


    ***** துதிப் பாடல் *****

    காமிக்ஸ் உலகின் ஒரே ஒரு தல
    நெருங்கிப் பாரு அதுவொரு மல
    கயவர்களை சிக்கவைத்திடும் வல
    அவர் துப்பாக்கிய கையாளும் விதமே ஒரு தனிக் கல
    ரவுடிகளை செய்வாரு கொல
    தலக்கி ஈடாகுமா இந்த உலகின் வில

    யே.. தல தல தல
    மல.. மல.. மல!

    ReplyDelete
    Replies
    1. அவர் பேரு லக்கி லூக்..

      இருபது கிலோ ராக் ..

      அவரு வாயால நோ டாக்..

      நிழலைவிட வேகமா வாக் ..

      வில்லனுக ஆவாங்க ஷாக் ..

      எதிரிகளை பண்ணுவாரு லாக் ..

      காதல் சப்ஜெக்ட்ல வீக் ..

      ரின்டின் கேன் ஒரு பேக்..

      ஆதரிப்பீர் .....

      லக்கி லூக்

      Delete
    2. தல போல வருமா (பேக் மியூசிக் போட்டுக்குங்கோ ) டன்ட்டடாய்ன்

      தல போல வருமா டன்ட்டாய்ன்

      தல போல வருமா

      தலமா

      கெத்துமா
      .

      Delete
    3. ///இருபது கிலோ ராக் ..///

      இப்பல்லாம் நிறைய வெயிட் போட்டுட்டாரு போல?!!

      Delete
    4. தலையே உணக்கு ஈடுஇனை யாரும் இல்லையே

      Delete
    5. ///
      இப்பல்லாம் நிறைய வெயிட் போட்டுட்டாரு போல?!!///

      துப்பாக்கி, தோட்டா, பெல்ட்டு பேன்ட்டுன்னு ஒரு அஞ்சாறு கிலோ தேறுமில்ல..!'-)

      Delete
  11. வழக்கம் போல டெக்‌ஸ் வில்லருக்கே அதிகமான உற்சாக வரவேற்பு போல...டைகரை மறக்காம இருந்தால் சரி...!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம். அவ்வப்போது கதைகளை பற்றிய உங்கள் விமர்சனங்களை பதிவிடுங்கள்.

      Delete
  12. காலை வணக்கம் சார்
    நண்பர்களே _/|\_
    .

    ReplyDelete
  13. தல டெக்ஸ் வில்லர்க்கு எனது வாக்கு. ...
    மேலு‌ம் 50 கள்ள வோட்டு. ....

    ReplyDelete
    Replies
    1. உங்க தலைவருக்கு கள்ள ஓட்டு போட்டது தெரிஞ்சா .... டுமீல்

      Delete
  14. அகில உலக தலைவர் டெக்ஸ் வில்லருக்கே என் ஓட்டு. மன்னிச்சு லக்கி லூக். என்னதான் என் அபிமான நபர் எனினும் தல' க்கு போட்டியா வந்தால் எனக்கு தல' தான் முதலில். இரண்டாம் ஓட்டு உண்டா? இருந்தால் அது லக்கிக்கே!!

    ReplyDelete
  15. இஷ்கூல் (School), அரை நிஜார் போட அரம்பிச்ச காலத்திலெந்தெ நீதிக்காக போராடிய ஒரே தலைவன் LUCKY LUKE.

    ReplyDelete
  16. லக்கி லூக்- கா, டெக்ஸ் வில்லரா - என்றால் லக்கி லூக் - கே முண்ணனிக்கு வருவார். - எனது ஓட்டு லக்கி லூக்கிற்கே .

    ReplyDelete
  17. தமிழ் காமிக்ஸ் உலகத்தின் முதல் கரு , காலத்தினால் அழிக்க முடியாத மாய உரு.

    ஈடு இணையில்லா சந்தோஷமான சிறு வயது நினைவுகளை திரும்ப திரும்ப மீட்டு கொண்டு வந்து சேர்க்கும் தி எவெர்க்ரீன் இரும்பு கை மாயாவி.

    இந்த உலகத்தில் நான் பார்த்த (7 அல்லது 8 வயதில்) முதல் தமிழ் காமிக் புக் மாயாவி . என்னுடைய nostalgic மொமெண்ட்ஸ் மாயாவி கூட அதிகம்.

    பழையது:
    ---------
    மரணத்தின் முன்னோடி, காற்றில் கரைந்த கழுகு, எமனின் எல்லையில் - சேர்ந்து ஒரே புத்தகமாக வந்து இருக்க வேண்டிய பொக்கிஷம். தெளிவான சித்திரங்களுடன் வரும் டெக்ஸ் கதைகள் வெகு சில. இதில் சித்திரங்களும் நேர்த்தி, கதையும் பட்டாசு.

    புதியது
    -------
    மரணம் சொல்ல வந்தேன் - வழக்கமான ஜானி ரிப்போர்ட்டர் கதை. இப்பொழுது இது அலுப்பு தட்ட ஆரம்பித்து விட்டது. ரிப்போர்ட்டர் ஜானி வெர்சன் ௨ வித்தியாசமாக இருக்கும் என்று நம்புவோமாக

    ReplyDelete
  18. எனது ஓட்டு லக்கி லூக்கிற்கே

    ReplyDelete
  19. எனது ஓட்டு மாடஸ்டிக்கே.....!!!!!

    ReplyDelete
    Replies
    1. இவர் போட்டியிடவில்லை. எனவே இந்த ஓட்டு லக்கி லூக்கிற்கு செல்கிறது.

      Delete
  20. எனது Vote லக்கி லூக் Only.

    ReplyDelete
  21. "பராகுடா"

    அடேங்கப்பா....இப்படி தான் சொல்ல தோன்றியது..கதையின் முடிவில் தான் திருப்பம் வரும் ..இந்த பராகுடாவிலோ எத்துனை எத்துனை திருப்பங்கள்..பராகுடா என்பது நாயகனின் பெயர் என்றே நினைத்து இருந்தேன்.படித்தவுடன் தான் தெரிந்தது ..அது நாயகனின் பெயர் அல்ல என்று...இந்த கதையில் யார் நாயகன் ,யார் வில்லன் அல்லது வில்லி என்பதை கூட சொல்ல முடிய வில்லை..ஆனாலும் தொடர்ந்து மூன்று பாகங்களையும் ஒரே மூச்சில் படிக்க வைத்தது.வன்முறை ,கவர்ச்சியின் உச்சம் என முதன்முறையாக நமது இதழில் தூக்கலாக தென்பட்டாலும் " ஆபாசம் " என்ற எண்ணம் மனதினிள் தலை தூக்காமல் போனது கதையின் போக்கு மட்டுமின்றி அதன் மொழி ஆக்க தரமும் தான் என்பதையும் அடித்து சொல்லலாம்.கதையில் பலபலர் மடிந்து கொண்டே இருந்து போனாலும் இருப்பவர்களின் நிலை இனி என்னவாயிற்று என்பதை அறிய அத்துனை மிரட்சியான ஆவல்.க்ளை மேக்ஸ் இறுதி அத்தியாயங்களை விரைவில் காண வேண்டும் என்பதை சொல்லாமல் தான் தெரிய வேண்டுமா ..விரைவில் கொண்டு வந்து விடுங்கள் சார்.அட்டைப்படத்தில் குறிப்பிட்டது போல மிரட்டலான கிராபிக் நாவல் அல்ல படுபடு மிரட்டலான க்ராபிக் நாவல்..

    உண்மையிலேயே சிலமணி நேரங்கள் கொடியவர்களின் தேசத்தில் வாழ்ந்தது போலவே ஒரு பிரமை..இம்மாத டெக்ஸ் என்னை பொறுத்தவரை அருமை...தோர்கல் செம..பராகுடா ..திரும்ப சொல்கிறேன்

    "அடேங்கப்பா..."

    ReplyDelete
  22. ஜனவரியின் மூன்று இதழ்களுமே கலக்கல்.பராகுடா கலக்கலோ கலக்கல் .அற்புதமான சித்திரங்கள் ..அதிரடி திருப்பங்களுடன் கூடிய கதை..பலஇடங்களில் கண்ணை குத்தும் கலர் .காத்திருந்தது வீண் போகவில்லை ..சிலபல அடல்ட் படங்கள் ..தவிர்த்திருக்க வாய்ப்பே இல்லைதான் .ரசிக்கத்தகுந்த அருமையான கிராபிக் நாவல்...அவசியம் காமிக்ஸ் பிரியர்கள் படிக்கவேண்டிய கதை.

    ReplyDelete
  23. Still haven't read the January books as they are at home in Salem and I'm in Coimbatore. Will go home and read all the 3 books in a stretch and come back here to say my views. I'm very eager to get back as the reviews of the books are very promising from our friends .

    ReplyDelete
  24. Always top tucker 1 .TEX WILLER,
    2. CAPTAIN TIGER, 3, LUCKY LUCKE

    we are waiting TEX MPHISTO STory COLOUR pages. Kindly publish it.

    ReplyDelete
  25. டெக்ஸ் தான்...ஏற்கனவே போட்ட ஓட்டு தான்

    ReplyDelete
  26. ***** பராகுடா ******

    * சுமார் 5 மணி நேரங்கள் - மூன்று முழூ பாகங்கள் - 170 பக்கங்களைப் படித்த பிறகும் உங்களுக்கு ஒரு கதையில் யார் ஹீரோ, யார் வில்லன் என்று தெரிந்துகொள்ள இயலாமல் போயிருக்கிறதா?

    * யூகிக்க முடியாத திருப்பங்கள் நிறைந்த கதையின் ஆளுமையான வசனங்களைப் படித்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்கள் உங்களையறியாமலேயே சித்திரங்களை மேயக் கிளம்பிவிடுவதையும், அதன்பால் சில வினாடிகள் லயித்துவிட்டு மீண்டும் வசனங்களுக்குத் திரும்புவதும் - ஆகிய அல்லாட்டங்களில் தொடர்ந்து சிக்கித் தவித்திருக்கிறீர்களா?

    உங்களுடைய பதில் 'ஆம்' என்றாலும், 'இல்லை' என்றாலும் - மறக்காமல் 'பராகுடா' படியுங்கள்!

    3 பாகங்களையும் படித்த முடித்த பிறகு மேலும் 3 நிமிடங்கள் யோசித்ததில் - இத்தொடரின் உண்மையான ஹீரோக்கள் - ஓவியர் ஜெரெமியும், கதாசிரியர் ஜீன் டுஃபாக்ஸும் என்பதைத் தெளிவாக உணர்ந்துகொள்ள முடிகிறது! இவர்களெல்லாம் மனிதர்கள்தானா என்ற சந்தேகமே எழுகிறது!!

    'இன்னும் சில வினாடிகளில் உயிர்பெற்று விடுமோ' என நினைக்கும்படியான ஜீவனுள்ள, துல்லியமான முகபாவங்கள் நிறைந்த, நம் கண்களிலுள்ள நிறமி செல்களுக்கு வண்ண விருந்து படைக்கும் ஒரு அற்புதப் படைப்பு இது!!

    முன்/பின் அட்டைப்படங்கள் - 100 மார்க்ஸ்
    புத்தக வடிவமைப்பு - 90 மார்க்ஸ் ( ஹார்டு பைன்டு நஹி ஹை)
    சித்திரங்கள்/வண்ணக்கலவைகள் - 100 மார்க்ஸ்
    வசனங்கள் - 100 மார்க்ஸ்
    கதை - மன்னிச்சுக்கோங்க பாஸ்.. அடுத்த (இறுதி)
    மூன்று பாகங்களையும் படித்துமுடிக்கும்வரை மார்க் போட இயலாது!


    சீக்கிரமே இறுதிப் பாகங்களையும் கண்ணில் காட்டுங்க எடிட்டர் சார்!

    ReplyDelete
    Replies
    1. பராகுடாவில் கொஞ்சம் (கொஞ்சம்னா கொஞ்சம் அதிகமாவே) 'அப்படியாப்பட்ட' காட்சிகளும், வன்முறைக் காட்சிகள் கொஞ்சமும் (கொஞ்சம்னா.. கொஞ்சமாத்தான்) இடம்பெறுகின்றன! கதையின் போக்கு அப்படி!
      அதனால, வீட்டில் சின்னப் பசங்களுக்கு எட்டும் தூரத்தில் பராகுடாவை வைக்காதீங்க!

      இல்லேன்னா பொதுவான குழந்தைகள் சைக்காலஜியைப் பின்பற்றலாம்! அதாவது, புக்கை பசங்ககிட்டே கொடுத்து "இதைப் படி நல்லா இருக்கும். நானெல்லாம் இதைப் படிச்சுத்தான் வாழ்க்கைல பலப்பல விசயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேனாக்கும்"னு சொல்லுங்க - அதுக்கப்புறம் அந்தப் புக்கை நடு வீட்டிலேயே போட்டுவச்சிருந்தாலும் அதை அவங்க சீண்டக்கூட மாட்டாங்க!

      அப்படியில்லாம, "அடேய்.. இந்தப் புக்கை நீ தொடவே கூடாது தெரியுமோ..? இதிலே நீ பாக்கக்கூடாத சமாச்சாரங்கள் நிறைய இருக்கு. என்ன.. சரிதானே?"ன்னு சொன்னீங்களோ... முடிஞ்ச்! :D

      Delete
    2. * சுமார் 5 மணி நேரங்கள் - மூன்று முழூ பாகங்கள் - 170 பக்கங்களைப் படித்த பிறகும் உங்களுக்கு ஒரு கதையில் யார் ஹீரோ, யார் வில்லன் என்று தெரிந்துகொள்ள இயலாமல் போயிருக்கிறதா?

      ஆம்..

      #####

      * யூகிக்க முடியாத திருப்பங்கள் நிறைந்த கதையின் ஆளுமையான வசனங்களைப் படித்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்கள் உங்களையறியாமலேயே சித்திரங்களை மேயக் கிளம்பிவிடுவதையும், அதன்பால் சில வினாடிகள் லயித்துவிட்டு மீண்டும் வசனங்களுக்குத் திரும்புவதும் - ஆகிய அல்லாட்டங்களில் தொடர்ந்து
      சிக்கித் தவித்திருக்கிறீர்களா?


      ஆம்..


      #####

      சீக்கிரமே இறுதிப் பாகங்களையும் கண்ணில் காட்டுங்க எடிட்டர் சார்!


      எஸ் ஸார்....

      ######

      Delete
  27. அலைகடலின் அசுர்ர்கள் making பிரம்மாதம். ஆனால் கேரக்டர்கள்அற்புதமாய் வடிவமைக்கப்பட்டுள்ளது,மைய முடிச்சு இனிவரும் பாகங்களில் உருப்பெறும் என நினைக்கிறேன.தோர்கல் சிகரங்களின் சாம்ராட் ஒருபெரிய சாதனை.classic .incomparable.

    ReplyDelete
  28. இந்த காமிக்ஸில் தோர்கல் ஒரு அட்டகாசமான கற்பனை,காலம்,மனிதனின் தன்முனைப்பு, அறம்,உறவுகளை வைத்து பெரிய வித்தையே காட்டியுள்ளார்கள் ஒரு classic . நாம் காலத்தை இவ்வாறு எதிர்கொள்கிறோமா என்பது முக்கியமான கேள்வி. பகுத்தறிவு, விஞ்ஞானம் ஆகியவற்றை மீறி மரபார்ந்த வாழ்வு விதிக்கப்பட்டது, ஒரு பெரும் தொடர்ச்சியின் கண்ணி , கிரகபலன்,ஊழ்வினை,இறையால் எழுதப்பட்ட தலைவிதி,ஆகியன நம்ஆழ்மனதில் இத்தகைய கற்பனை தோன்ற இடமளிக்காதோ என்ற சந்தேகம்

    ReplyDelete
    Replies
    1. சூப்பர். உங்கள் முதல் பின்னூட்டம் அருமை.

      தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பரே.

      Delete
    2. @செந்தில்வேல் சுப்பிரமணியன்

      13ம் தேதி மறக்காம இங்கே வந்திடுங்க நண்பரே! உங்ககிட்டேர்ந்து தெரிஞ்சுக்கவேண்டிய விசயங்கள் நிறைய இருக்கிறாப்ல இருக்கு!

      Delete
  29. எனது ஓட்டு இளவரசிக்கு

    ReplyDelete
  30. 72வது. எனது ஓட்டு தல டெக்ஸ் க்கே. சென்னை புத்தக விழாவில் விற்பனை சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள். இத்தனை மாதங்களாக பதிவை மேற்கொள்வதற்காக கூகுளாண்டவருடன் போராடுகின்றேன். இதுவாவது நிலைக்க வேண்டுமே கடவுளே!

    ReplyDelete
  31. Friends, can you please give update about chennai book fair and meeting with our editor in our stall on saturday?

    ReplyDelete
  32. சனி மாலை மணி 5 அளவில் அட்டெண்டன்ஸ் போட்டேன். நமது அண்ணாச்சி விறுவிறுப்பாக பில் போட்டுக்கொண்டிருந்தார். கே.வி. கணேஷ் சார் பகலில் வந்துவிட்டு, ஒரு பிரேக் விட்டு மாலை வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றாராம். அதன்பின், நம்ம சின்ன தலீவர் ஈரோடு விஜய், டெக்ஸ் கிட், ப்ளூபெர்ரி நாகராஜன், வி.வி. கிருஷ்ணா, காமிக் லவர் ஆகிய நண்பர்கள் வந்தார்கள்.. எடிட்டர் மாலை 7.40க்கு வந்தார்., அதன்பின் கே.வி. கணேஷ் வந்தார்.

    ஸ்டாலில் பரபரவென விற்பனை நடந்ததை பார்க்க சந்தோஷமாக இருந்தது. பெரும்பாலான நபர்கள் கார்டு பயன்படுத்தி புத்தகங்கள் வாங்குவதால், விலையை பற்றி கவலைப்படாமல் பிடித்த புத்தகங்களை அள்ளினர். ஒருவர் 2018 செட் மற்றும் 2017/16 வெளியீடுகள் என மொத்தம் 8,735க்கு வாங்கினார்.! ஒரு 2019 சந்தாவுக்கு நண்பரொருவர் கட்டியுள்ளார் என அண்ணாச்சி தெரிவித்தார்.

    ஒன்பதேகால் மணிக்கு ஸ்டால் மூடும் போது, கார்ட் மூலம் வந்த பேமெண்ட் மட்டும் ஐந்திலக்கத்தை தொடும் ஒரு டீசென்ட் ஆன நம்பர்.! பிறகு எடிட்டரிடம் விடைபெற்று கொண்டு, காமிக் லவர்-உடன் நானும், விஜய்-யும் டின்னர் முடிக்கும்போது இரவு 11.

    வரும் வாரம் செல்லும்/செல்லவிருக்கும் நண்பர்களுக்கு: எடிட்டர் அடுத்த வாரம் மறுபடியும் வருவதாக சொன்னார்.!

    ReplyDelete
    Replies
    1. அருமை....நண்பரே...

      சின்ன தலீவர்...-))))

      ஹா..ஹா..ஹா...

      Delete
    2. அடுத்த வாரம் எந்த தேதியில் வருகிறார்??? ஸ்டாலில் எப்போது இருப்பார்??? எடியிடம் கேட்டு அப்டேட் செய்யவும்.

      Delete
  33. பராகுடா நமக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம். pirates of carribean போன்ற படங்களில் மட்டுமே கடற்கொள்ளையர்களை கண்டிருக்கிறோம். ஆனால் காமிக்ஸில் இதுவே முதல் தபா. கௌபாய், டிடெக்டிவ், கார்டூன் ஜானர்களுடன் பைரேட்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும். அதிலும் பராகுடா கதையிலும், ஓவியத்திலும் வேற லெவல்

    ReplyDelete
  34. கும்பகோணத்தில் இனி காமிக்ஸ் கிடைக்கக்கூடிய சூழ்நிலை இல்லை போலிருக்கு.

    ReplyDelete
  35. நேற்று 5 மணிக்கு சென்றேன். அதிக கூடடம். 2018 இதழகளை வாங்கிவிட்டு அங்கு நின்ற ஈரோடு விஜய் அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
    அதே நேரம் இயக்குனர் நடிகர் பொன் வண்ணன் வந்தார்.

    புகைப்படம் பேட்டி என்று கூடடம் அதிகமானது.

    சிலர் அட முத்து காமிக்ஸ்
    சிலர் இது தமிழ் காமிக்ஸ்ஸாம்
    சிலர் இங்கிலீஷ் காமிக்ஸ் இல்லையா
    போதும் ஏற்கனவே நிறைய காமிக்ஸ் வாங்கிட்டீங்க வாங்க.

    இப்படி பல குரல்கள்.

    இந்த வருடம் சிறிய ஸ்டால் அதனால் சற்று சிரமமாக இருந்தது.

    வெகுஜனம் கூடடத்தை பாரத்து உள்ளே வராமலேயே சென்றார்கள்.

    ReplyDelete
    Replies
    1. @RAMG75

      உங்களைச் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி நண்பரே! :)

      Delete
  36. சிகரங்களின் சாம்ராட் ..

    சற்றுமுன்னர்தான் படித்து முடித்தேன்.!
    யப்பா ..என்ன ஒரு கற்பனை.!
    தன்னையே விழுங்கத்துடித்து வாலைக் கவ்வியபடி சுத்திவரும் பாம்பு உருவ மோதிரம் கதையின் கருவிற்கு அழகான குறியீடு.!
    எழுதி மாளாது .....
    வான் ஹாமே .... கற்பனைக்கு கடவுள் சார் நீங்க.!

    ReplyDelete
    Replies
    1. மறுக்கா ஒருதபா படிச்சிப்போட்டு வாரனுங்க......!

      Delete
    2. // மறுக்கா ஒருதபா படிச்சிப்போட்டு வாரனுங்க......! //
      atha payam irukattum!!

      Delete
    3. PFB ..

      பயமெல்லாம் ஒண்ணுமில்லீங் ...

      வல்னாவை இன்னொரூக்கா பாக்கலாம்னு தோணுச்சிங்...!:-)

      Delete
  37. கண்டவர் கண் படும் கட்டழகு காரிகை ஒருத்தி
    பெண்ணவள் படைத்த பிரம்மனும் வியப்பான் தூரிகை நிறுத்தி
    ஆனாள் அடிமை இதயம் உடைந்தது சுக்கலாய்
    ஆனால் விதியோ சிரித்தது நக்கலாய்
    அடிமைப்பட்ட இடத்திற்கே ஆனாள் அரசி
    ஆக்கிய கணவன் ஆனான் தூசி
    தாம்பாளத்தில் தலை .தலைவி தந்தது
    தலைவலி தந்தது காரணம் காதல்..காமம்
    அகம் காரமாகி ஆணவமாகி அகங்காரமாக
    அங்கே விளைந்தது பழிவாங்கும் படலம் !
    பெண்ணுடை அணிந்து ஆண் ஒருவன்!
    தன்னுடை உயிர் காக்க போட்ட வேடம்
    தடுமாற்றம் ..விதி கற்றுத்தந்த பாடம் !
    சுட்டது ஒரு பெண் ..சுட்டவளும் சுடப்பட்டவனும் சந்திக்க
    விதி சற்றே சிந்திக்க கட்டுண்டார் காதலில் ..
    கஸார் வைரமும் கலந்துகொள்ள காலமே
    காத்திருக்கிறாய் என் னென்ன செய்வாயோ
    பாருங்கள் பரா குடா !

    ReplyDelete
    Replies
    1. கவிதையிலே ஒரு விமர்சனம்!!
      பராகுடாவின் முக்கியக் கதாபாத்திரங்கள் கவிதை வடிவில்!!

      அருமை!!!

      Delete
    2. வித்தியாசமான விமர்சனம். சூப்பர்

      Delete
    3. அருமை ...

      நன்றி சார்..!

      Delete
  38. கடைசியாய் எண்ணிய வரைக்கும் TEX vs LUCKY LUKE என்பது தான் நாயகர்களின் போட்டியாகத் தென்பட்டது !! அதனில் டெக்ஸ் லீடிங் என்றாலுமே, லக்கி லூக்கின் வாக்கு வங்கி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது ! இன்னமும் வோட்டுப் போட்டிருக்கா நண்பர்கள் இம்முறையேனும் கையில் மாய் தடவிடலாமே ? ///



    தல இருக்கும்போது இந்த வாலுங்களையெல்லாம் ஓரமாக போயி விளையாட சொல்லுங்கள் சார்...என்றைக்குமே தல டெக்ஸ் வில்லர் தான் காமிக்ஸின் சூப்பர் ஸ்டார்...

    ReplyDelete
  39. தல தான் டாப்பு அதனால் என்னுடைய ஓட்டும் தானைத்தலைவருக்கே

    ReplyDelete
  40. லக்கி...லக்கி...லக்கி

    ReplyDelete
  41. எச்சரிக்கை ஒன்று
    சிகரங்களின் சாம்ராட் பின்னே விவரிக்கப்பட்டுள்ளது ..
    கதையை இன்னும் படிக்காதவர்கள் மேற்கொண்டு தொடர வேண்டாம்

    ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    எச்சரிக்கை இரண்டு
    கதையை 13- ம் தேதி விவாதிக்க இருப்போர் தொடர்வதை விரும்பினால் மட்டுமே படிக்கவும் ..
    ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    எச்சரிக்கை மூன்று
    இது பொதுவான பதிவு ...
    ஏற்புடையவர்கள் ஏற்பதும் ஏனையோரால் எள்ளி நகையாடப்படுவதும் ஒரே மனோபாவத்துடன் வரவேற்கப்படுகின்றன...:-)
    /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    எச்சரிக்கை நான்கு
    அற்புதமான கேள்வியை போன பதிவில் எழுப்பிய சிவக்குமார் சிவா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
    //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    ReplyDelete
    Replies
    1. இணை பிரபஞ்சம்
      பிரபஞ்சம் ...
      இதில் நமது ஈவி தகவல் தொடர்பு துறை பொறியாளர் ..அவருக்கு நடிகனாக வேண்டுமென்றுதான் ஆசை ..
      ஈவிக்கான இணை பிரபஞ்சம்
      இதில் அவர் ஒரு உச்சபட்ச நடிகர் ...வில்லன்களை பின்னி பெடல் எடுக்கிறார் ..பல அழகு நடிகைகளுடன் டூயட் பாடுகிறார்
      /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      கதையின் வரிகள் ..
      //காலம் ஒரே திசையில் பாயும் ஆறு போன்றதல்ல ..
      ஒரு தடாகத்தில் கல்லை எறிந்தால் அடுத்தடுத்து எழும்பும் அலைகள் போன்றது ..அவ்வளையங்கள் உள்ளே செல்ல பாதைகள் இருக்கும் ..///
      /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
      வல்னாவின் வார்த்தைகள் ..
      தான் இறப்பதற்கு ஒரு நாள் முன்னால் மோதிரத்தை எதிர்காலத்துக்கு அனுப்பி விட்டதாக தாத்தா சொன்னார் ..கறுப்புமுடி வாலிபன் ஒருவன் உன்னிடம் அதை மறுபடி எடுத்து வருவான் ..

      எதிர்காலத்தில் இருந்து காரிருள் கேசத்துடன் ஒரு வாலிபன் வருவான் ..உன் மேல் மையல் கொள்வான் ..உன்னை காப்பான் ...
      ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      Delete
    2. ஒரு நிகழ்கால பிரபஞ்சம் ...
      உண்மையான சேக்ஸகார்ட்
      அவனிடம் இருந்து தப்பித்த அடிமை
      ஆறாவது நாள்
      சேக்ஸகார்ட் எக்காளம் ஊதுதல்
      பனிச்சரிவு, பனிப்பொழிவு
      அடிமை பனிச்சரிவில் சிக்கி உயிரிழப்பு ..கை மட்டும் வெளியே தெரிகிறது .
      ///////////////////////////////////////////////////////////////////////////

      இணை பிரபஞ்சம் 1

      டோரிக் ... சேக்ஸகார்ட்
      அவனிடம் இருந்து தப்பித்த அடிமை
      ஆறாவது நாள்
      பனிச்சரிவு, பனிப்பொழிவு
      அடிமை பனிச்சரிவில் சிக்கி உயிரிழப்பு ..கை மட்டும் வெளியே தெரிகிறது..





      வல்னா..... சேக்ஸகார்ட்
      அவனிடம் இருந்து தப்பித்த அடிமை ..டோரிக்
      ஆறாவது நாள்
      சேக்ஸகார்ட் எக்காளம் ஊதுதல்
      பனிச்சரிவு, பனிப்பொழிவு
      அடிமை டோரிக் பனிச்சரிவில் சிக்கி உயிரிழப்பு ..கை மட்டும் வெளியே தெரிகிறது...(மோதிரத்துடன் ) இம்மோதிரம் பின்னர் வல்நாவின் கையினை அலங்கரிக்கிறது ...

      ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


      Delete
    3. இக்கதையில் வரும் குடிசை வீட்டை ஒட்டி வரும் சம்பவங்கள் மறுபடி மறுபடி நிகழ்கின்றன ...
      ஒரே நேரத்தில் வெவ்வேறு இணை பிரபஞ்சங்களில்

      ஆனால் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மாறுபடுகிறார்கள் ..சம்பவங்களின் முடிவும் மாறுபடுகிறது ....

      காலம் பலதிசைகளில் பிரிவதாக பையாஸ் கோட்பாடை ஒட்டி கதை நிகழ்கிறது ..
      பல இணை பிரபஞ்சங்களில் நுழைய நுழைவாயில் அக்குடிசை
      அந்த பல்வேறு நுழைவாயில்களை திறக்க மோதிரம் ஒரு திறவுகோல் ..

      கதையின் ஆரம்பத்தில் வரும் தோர்கலும் முடிவில் வரும் தோர்கலும் ஒரே காலக் கோட்டில் வரவில்லை என்பது தெளிவாகிறது..

      முடிவில் வரும் தோர்கல் தீயினால் பாதிக்கப்படாத ,உத்தரம் சரி செய்யப்பட்ட குடிசையில் இருந்து வர
      டோரிக் தீயினால் சேதம் அடைந்த தோர்கலின் கீறல் இல்லாத குடிசையில் இருந்து வருகிறான்
      டோரிக் காணும் குதிரையில் வரும் தோர்கல் அத்தோடு மறைய நாம் காணும் தோர்கல் குதிரை ,வில் ,அம்பு கத்தி ஏதுமின்றி டோரிக் சேக்ஸகார்ட்-ஆக இருந்தபோது குடிசையில் பலவந்தமாக வைத்து இருக்கப்பட்டு தப்பியவன் ....
      ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      Delete
    4. ஒரு கற்பனை சம்பவம் ...

      ஜனவரி மாதம் ..11- ம் தேதி முன்பகல்

      சிவகாசி -----சேர்மன் P.K.S.S.A ரோட்டில் காரை செலுத்தி ஒரு ஓரமாக நிறுத்தினேன் ...
      காரை விட்டு இறங்கி 89 – ம் இலக்கம் நோக்கி நடந்தபோது ஒரு பழக்கடை காரன் நெடிய உயரத்தில் அடுக்கி வைத்து இருந்த ஆரஞ்சு பழங்கள் சரிந்து நடைபாதை எங்கும் சிதறின ...
      கடைக்காரன் அலுத்து கொண்டே அதை பொறுக்க துவங்க பிரகாஷ் பப்ளிஷர்ஸ் அலுவலகத்தில் நுழைந்தேன்....
      இடைப்பட்ட மைதீனிடம் எடிட்டர் அறை எங்கே என கேட்க மைதீன் சுட்டி காட்டிய அறைக்குள் அனுமதி பெற்று நுழைந்தேன் ..
      வழக்கமான அளாவளாவல்கள் முடிந்தபின்
      உங்கள் மறுவருகைக்கு பிறகு கடந்த ஆறு வருடங்களாக உங்களது ஒரு காமிகசையும் தவற விட்டதில்லை என சொன்னேன் ...
      மறுவருகைக்கு பிறகு மூன்று வருடங்களாக மட்டுமே நாங்கள் புஸ்தகம் வெளியிடுகிறோம் என்றார் எடிட்டர் ..
      விளையாடாதீர்கள் !!! உங்களுக்கு மட்டும் ஒரு நாளுக்கு 48 மணி நேரமா என்றேன் ....
      எடிட்டர் பதில் ஏதும் சொல்லவில்லை ...
      எனது எவர்லாஸ்ட்டிங் அழிக்கவே முடியாத கருப்பு மார்க்கர் எடுத்து அவர் மேஜையில் எனது பெயரை சிறிதாக எழுதினேன் ..ஒரு திருப்திக்காக ...
      எடிட்டர் அதை பார்த்தபோதிலும் மேஜையை பாழ்படுத்தியமைக்காக ஒன்றும் சொல்லவில்லை
      விடை பெற்று திரும்ப எத்தனித்தபோது காலண்டர் ஜனவரி 10
      என காட்டியது கண்ணில் பட்டது ..
      சார் !!! தேதி தவறாக கிழிக்கப் பட்டுள்ளது என்றேன் ..
      புருவங்கள் உயர்த்திய அவர் தேதி மிகவும் சரி என்றார் ..

      குழப்பத்துடன் வெளியே வந்தேன்....

      காரை நோக்கி நடந்தபோது எல்லா ஆரஞ்சு பழத்தையும் எடுத்து அடுக்கிவிட்டேன் ..அப்பாடி என்ற பழக்கடைக்காரனின் ஆசுவாசப் பெருமூச்சு கேட்டது .............................................................

      எடிட்டர் பொய் சொல்வதில்லை....
      ஆகவே
      பழங்கள் சரிந்து விழுந்தது ...ஜனவரி 11
      நான் எடிட்டர் மேஜையில் என் பெயரை எழுதியது ஜனவரி 10

      //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      எடிட்டர் அறை அக்குடிசை எனில் சிகரங்களின் சாம்ராட் சொல்லவருவது இந்நேரம் நண்பர்களுக்கு புரிந்துஇருக்கும் ....
      /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      Delete
    5. பருவங்கள் நான்கு
      காலக்கிரமத்தின்படி
      வசந்த காலம்
      வேனிற்காலம்
      இலையுதிர்காலம்
      பனி/ குளிர்காலம்
      கதாசிரியர் காட்டும் அடுத்த சிக்கல் அவிழ்க்கும் குறியீடு
      சேக்ஸகார்ட் –ஆக வரும் டோரிக் 37 ஆண்டுகள் பின்னோக்கி பயணித்ததாக கூறுவதை ஏற்க முடியாது ...
      காரணம் தோர்கல் மற்றும் பின்னோக்கி பயணிக்க துவங்குவது பனிக்காலத்தில் ....
      போய் சேரும் காலமோ வேனிற்காலம் ...
      வருடத்தின் பாதியில்
      எனவே 37 என்ற முழு எண் வர இயலாது ...ஏதேனும் ஒரு முழு எண்ணுடன் கூடிய அரை வருடம் மட்டுமே வர இயலும் ...
      ஏற்கனவே 37 என்ற எண் நமக்கு பரிச்சயமாகி உள்ளதால் அது ஏன் 18 ½ ஆக இருக்க முடியாது ???
      ஆம் ...குடிசையில் இருப்பின் –பயண வாகனம் இருந்தால் மட்டுமே – ஒரு நாளுக்கு 48 மணி நேரங்கள்.....
      குடிசை வளாகத்துக்கு வெளியே சிறிது தூரம் தள்ளி ஒரு நாளுக்கு 24 மணி நேரங்கள் மட்டுமே ..

      பயண வாகனம் குடிசையில் இருப்பின் குடிசை வளாகத்துக்கு வெளியே இன்று என இருப்பின் குடிசையின் உள்ளே நேற்று என இருக்கும்

      /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      Delete
    6. கதையில் பனிச்சரிவு மிக முக்கிய பங்கு வகிக்கிறது ..

      கதையின் துவக்கத்தில் தோர்கல் வரும்போது பனிச்சரிவு நிகழ்கிறது
      அதாவது சேக்ஸகார்ட் என்னும் கதாபாத்திரத்திடம் இருந்து ஒரு அடிமை தப்பித்து ஏழாவது நாள் அப்பனிச்சரிவில் சிக்கி உயிரை விடுகிறான்
      இதில் சேக்ஸகார்ட் ஒரிஜினல் .சேக்ஸகார்ட் டோரிக் ,சேக்ஸகார்ட் வல்னா என சேக்ஸகார்ட் யாராக இருப்பினும் உயிர் விடுவது டோரிக் –தான் ..
      இதில் நிகழ் காலத்தில் டோரிக்கும் கடந்தகாலத்தில் சேக்ஸகார்ட் டோரிக்கும் ஒரே நேரத்தில் உயிரை விடுகின்றனர் ...
      ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
      ///அதாவது சேக்ஸகார்ட் என்னும் கதாபாத்திரத்திடம் இருந்து ஒரு அடிமை தப்பித்து ஏழாவது நாள் அப்பனிச்சரிவில் சிக்கி உயிரை விடுகிறான் ///

      தோர்கல் வருவது அந்த ஏழாம் நாளில் ..
      ஆனால் குடிசையின் உள்ளே டோரிக்கை சந்திப்பது டோரிக் தப்பித்த ஆறாம் நாளில்
      ஏனெனில் வல்னாவின் தாத்தா எதிர்காலத்துக்கு அனுப்பிய மோதிரம் அன்றுதான் வந்துசேர்ந்து இருக்கிறது .....
      அது வந்தவுடன் ஒரு நாளின் மணி கணக்கு 48 ஆக உயர்ந்துவிட்டது ..எனவே வெளியே ஏழாம் நாள் ..உள்ளே ஆறாம் நாள் ...
      இதற்கான ஆதாரங்களை கதையின் வரிகளில் காணலாம்
      டோரிக்கை ஓநாய்கள் கடித்தது அவன் தப்பித்த ஐந்தாம் நாளிரவு ..
      ஆறாம் நாள் கையில் ரத்தம் சொட்ட சேக்ஸகார்ட் ஆட்களிடம் இருந்து தப்பிக்கும் டோரிக் குடிசையில் தஞ்சம் புக தோர்கல் உள்ளே வர நிலைமை மாறுகிறது ...தற்காலிகமாக .. பனிச்சரிவு இன்று நிகழவில்லை ..
      ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      Delete
    7. உத்தரம் விழுவது ...
      முதல்முறை விழுந்த உத்தரம் மறுபடி விழுவதில்லை...

      இலையுதிர்காலத்தில் வல்னாவுடன் டோரிக் வாழ்ந்தபோது உத்தரத்தை சரி செய்ய இறந்தகாலத்தில் செய்யப்படும் மாற்றம் அடுத்துவரும் பனிக்காலத்தில் தோர்கல் வரும்போது எதிரொலிக்கிறது ..
      இது மறுபடி மறுபடி அச்செயல் நிகழாவண்ணம் – அதாவது டைம் லூப்பை –தவிர்க்கிறது ..
      தோர்கல் உத்தரத்தை பார்த்து வியப்பதில் ஆச்சர்யமில்லை
      ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      Delete
    8. தீயால் சேதமடைந்த வீடு ...


      இரண்டுமுறை வீடு தீயால் சேதமடைகிறது ..

      முதல்முறை ஆடு திருடர்களால் சங்கராந்தி தினமன்று ....

      ஆனால்

      இந்நிகழ்வு தோர்கலால் மாற்றியமைக்கப்பட்டு கடந்த காலத்தில் செய்யப்படும் இம்மாற்றம் பின்னாளில் எதிரொலிக்கிறது ..

      சரி செய்யப்பட்ட உத்தரம் ,தீயினால் பாதிக்கப்பட்ட சேதங்கள் இல்லாத வீடாக குடிசை மாறுகிறது ..

      அப்படியானால் கதையின் துவக்கத்திலும் முடிவிலும் குடிசை தீயினால் சேதம் அடைவுற்று இருப்பதாக வருவது ...?????
      வான் ஹாமே யின் அதிபுத்திசாலித்தனம் வெளிப்படுவது இங்குதான் ..


      கதையின் இறுதியில் வல்னாவினால் டோரிக் தப்பித்த ஏழாம் நாளில் கொளுத்தப்பட்ட தீ ....
      இதையே குடிசையின் உள்ளே ஆறாம் நாளில் தீ சேதங்களாக கதையின் ஆரம்பத்தில் தோர்கலும் டோரிக்கும் பின் இறுதியில் டோரிக் –ம் உணர்கின்றனர் .. பயண மோதிரம் ஆரம்பத்தில் தோர்கலிடம் பின்னர் இறுதியில் டோரிக்கிடமும் இருக்கிறது ..

      அதாவது
      கதையின் இறுதியில் நாம் காணும் தீயினால் அழிந்துபட்ட வீட்டின் உள்ளேதான் தோர்கலும் டோரிக்கும் முதன்முதலில் சந்திக்கின்றனர்..
      ஆனால் இம்முறை தோர்கல் வீட்டின் உள்ளே நுழைவதில்லை ..
      மோதிரம் வல்னாவின் கையில் வந்துவிட்டது.....

      வல்னாவின் யுக்தி இதுவே ....

      மோதிர வாகனம் ஏற்படுத்தும் நேர மாற்றங்களை உணரும் வல்னா பொறுமையாக காத்து இருந்து சேக்ஸகார்ட் –ஆக மாறி சுமார் 55 வயது வல்னாவாக இருக்கையில் தோர்கல் பார்வையில் தென்பட்டவுடன் கையில் மோதிரத்துடன் வில்லுடன் டோரிக் வெளிப்பட்டவுடன் டோரிக்கை பனிச்சரிவு மூலம் கொன்று குடிசையை தீயிட்டு கொளுத்துகிறாள் ..
      மறுபடி தோர்கல் இப்போது அக்குடிசையில் நுழையவில்லை ..

      குடிசையின் உள்ளேயும் வெளியேயும் நேர மாறுபாடு இருப்பதை கணக்கில் கொண்டால் இதில் முரண் ஏதுமில்லை ..
      ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      Delete
    9. தோர்கல் ஏற்படுத்தும் கீறல் ...

      இது மட்டும் கதை நெடுக மாறவில்லை

      கதை மாந்தர்கள் சம்பாஷணைகள் நிகழ்த்தும்போது தெளிவாக பின்புலத்திலோ அல்லது கதை மாந்தர்களாலோ அடிக்கடி சுட்டி காட்டப்படுகிறது ...

      பாவம் டோரிக்.....
      கடைசி வரை தோர்கல் வந்தது ஏழாம் நாள் ...தனக்கு மட்டுமே அது ஆறாவது நாள் என அறியாமல் இந்த கீறலை நம்பி மோசம் போகிறான்

      அடுத்த நாள் பனிச்சரிவில் தான் மடிவோம் என அவனுக்கு தெரியவில்லை ..

      சேக்ஸகார்ட்- ஆக வரும்போதும் பிணத்தை புரட்டி அவன் ஆட்கள் பார்த்து இருப்பின் டோரிக்கின் ஆட்கள் உறைந்து போயிருப்பார்கள் ...

      கீறல் தோன்றியது வெளி உலகுக்கு எட்டாம் நாள் தனக்கு ஏழாம் நாள் என கடைசி வரை அறியவில்லை ...
      அடுத்த நாள் அவன் உயிரோடு இருந்து இருந்தால் அக்கீறல் தோன்றுவதை பார்த்து இருப்பான்

      கதையின் இறுதியில் சரியாக தனது ஆறாவது நாளில் வரும் டோரிக் தனது வாழ்வில் ஏழாவது நாளில் வரும் தோர்கலை கண்டவுடன் குடிசையை விட்டு வெளியேறுகிறான் ...
      குடிசை வளாகத்தை தாண்டியமாத்திரத்தில் தனது ஏழாவது நாளில் நுழையும் டோரிக் பனிச்சரிவில் சிக்கி உயிர் இழக்கிறான்....மோதிரம் வல்னாவின் கையை அலங்கரிக்கிறது ..

      கதையின் இறுதியில் தோர்கல் உதிர்க்கும் வார்த்தைகள்

      ///நான் இங்கு வருவதற்கு முன்பே பனிச்சரிவு ஏற்பட்டுவிட்டது///

      ///////////////////////////////////////////////////////////////////////////////////////////

      Delete
    10. அது என்ன 18 ½ ஆண்டுகள் ????
      தாத்தா குடிசையின் வாழ்நாள் வரை எதிர்காலத்துக்கு அனுப்பி இருப்பார் என தோன்றுகிறது ...
      மோதிரம் வல்னாவின் கைகளாலேயே கொளுத்தப்படும் அந்நாள் வரை அம்மோதிரம் பயணிக்கிறது ...
      அது பின்னோக்கி பயணிக்கும் காலம் தாத்தா இறந்த மாதம் வரை ..
      18 ½ ஆண்டுகள்...வெளிஉலகிற்கு 37 ஆண்டுகள் ...

      ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      Delete

    11. சிவகுமார் சிவா போன பதிவில் எழுப்பிய கேள்வி மட்டுமே பின்னோக்கிய பயண நேரம் பற்றியும் பருவ கால மாற்றம் பற்றி எழுந்த சந்தேகங்களுக்கு சிந்தனை அது நோக்கி செலுத்த பேருதவி செய்தது ...

      வல்னா பத்து ஆண்டுகள் என குறிப்பிடுவது வெளி உலகிற்கு இருபது ஆண்டுகள் என அறிக ...
      ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
      வல்னாவின் உடல் வளர்ச்சி இருபது பிராயங்களுக்கு இருப்பது பெருத்த ஆச்சர்யமல்லதானே!!!!!

      Delete
    12. திருத்தம்..

      பிரபஞ்சம் இணை பிரபஞ்சம்1 இணை பிரபஞ்சம் ( வல்னாவுக்கானது)2 பகுதியில் வரும் ஆறாம் நாள் என்பதை ஏழாம் நாள் என படிக்கவும்..மன்னிக்க...

      Delete
    13. போச்சு ..போச்சு ...
      கொஞ்சமா தெளிவா இருந்ததா நினச்சேன்.! நம்ம செனா அனா தெளிவா குழப்பிட்டாரு...!

      18 1/2 -37
      24 - 48

      வல்னாவின் தாத்தா - தோர்கலின் வளர்ப்பு தாத்தா (தந்தையின் தந்தை) இதில் கொஞ்சம் குழப்பம் இருக்கு.!

      மறுக்காப் போய் வல்னாவோடு அந்தக் குடிசையைப் பாத்துட்டு வரேன்.!

      Delete
    14. ///நம்ம செனா அனா தெளிவா குழப்பிட்டாரு...!///

      என்னுடைய பார்வைக் கோணத்தைக் குழப்பிட்டாரு.. கதையை அல்ல..!

      Delete
    15. தோர்கல் நிகழ் கால கணக்கில் பயணிப்பது 37 ஆண்டுகள்..

      வல்னா பத்தாண்டுகள் என கூறுவது நிகழ்காலத்தில் இருபதாண்டுகள்..

      மொத்தம் 57 ஆண்டுகளுக்கு முன்னால்

      வளர்ப்பு தந்தை காப்பாற்றப்படுகிறார்..

      Delete
    16. //என்னுடைய பார்வைக் கோணத்தைக் குழப்பிட்டாரு.. கதையை அல்ல..!//

      இது படித்து எழுதி முடிக்கும் போது எனக்கே ஒன்றரை கண் மாதிரி ஆகிடுச்சு..:-)

      Delete
    17. இரண்டாம் முறை இன்னும் படிக்கவில்லை.!
      இதில் நிகழ்காலம் என்பது வல்னா டோரிக்கை கொல்லும் சம்பவம் நடப்பது என்பது எனது யூகம் (இதுவரை) ..!

      சரியா செனா..?

      Delete
    18. அதாவது கதையின் ஆரம்பமும் முடிவும் ஒரே சம்பவம் என்று யூகித்தேன்..

      Delete
    19. //இதில் நிகழ்காலம் என்பது வல்னா டோரிக்கை கொல்லும் சம்பவம் நடப்பது என்பது எனது யூகம் (இதுவரை) ..!//

      இருக்க முடியாது. கண்ணன்..அது ஒரிஜினல் சேக்ஸகார்ட்..முதலில் வருவது ஒரிஜினல் சேக்ஸகார்டின் டைம்லைன்..

      அதிலும் அடிமை இதுவும் டோரிக்தான் மரணிக்கிறான்..

      இறுதியில் நாம் காண்பது வல்னாவின் இணை பிரபஞ்சத்தில் டோரிக் கொல்லப்படுவதை..

      தோர்கல் குதிரையோடு வருவது இறுதி பக்கங்களில் ஃப்ரீஸ் செய்யப்படுவதை காணலாம்..

      குடிசைக்கு இறுதியில் வரும் தோர்கல் வேறு ஒரு இணைப்பிரபஞ்ச தடத்தில் இருந்து வந்தவன்..

      Delete
    20. //இரண்டாம் முறை இன்னும் படிக்கவில்லை.! //

      முப்பது முறை படித்தும் இதுதான் சரி என

      சொல்ல இயலவில்லை...:-)

      வெறும் இன்பரன்ஸ்தான்...

      Delete
    21. @செனா அனா
      நன்றி அண்ணா தங்கள் விளக்கத்திற்க்கு..
      சந்தேகம் தீர்ந்தது..
      ஆனால் தற்போது குழப்பம் மேலோங்கி நிற்கிறது..
      மறுபடியும் ஒரு இரண்டு முறை படித்து விட்டு வருகிறேன் ..

      Delete
  42. பத்தாண்டு என வல்னா சொல்வது ஏன்?

    விளையாட ,சுள்ளி பொறுக்க ,ஆடு மேய்க்க குடிசையை விட்டு வெளியே செல்லும் வல்னா

    அதற்கு முந்தைய தின இரவில் குடிசையில் உறங்குகிறாள் ..

    அதாவது ஒவ்வொரு நாளும் அவள் உறங்குவது முந்தைய தின தூக்கத்தை..:-)

    ReplyDelete
    Replies
    1. ///
      அதாவது ஒவ்வொரு நாளும் அவள் உறங்குவது முந்தைய தின தூக்கத்தை..:-)///

      ங்ஙே...!

      நான் போய் நாளைக்காலை டிபனை இப்போ சாப்பிட்டு வரேன்.!

      Delete
    2. இரவில் தாத்தா பேத்திக்கு துணையாக இருக்கிறார்..

      மோதிரம் இருக்கிறது..

      நீங்கள் எந்தவொரு பிரபஞ்சத்தின் நாளிலும் மோதிரம் குடிசையில் இருக்கும்போது நுழைந்தால் அதற்கு முந்தைய நாளில்தான் நுழைவீர்கள்..:)

      Delete
    3. Dr செல்வம் :

      கதையில் வரும் வீட்டின் இடத்தில் நம் பூமியும், குடிசைக்கு சற்று வெளியே தள்ளிய இடம், தாய் நம்மை ஈன்றெடுக்கும் கர்பப்பை என்றும் உவமானம் கொள்ளுங்கள் - ஆண்டாளின் "எற்றைக்கும் ஏஏழு பிறவிக்கும் ... " கொஞ்சமே கொஞ்சம் புலனாகிறதல்லவா? :-) :-)

      Delete
    4. சும்மா ஜாலிக்காண்டி..
      இனிமே பிளாக் பக்கம் வந்து கேள்வியே கேக்க கூடாது..
      எனக்கு புரிஞ்சத புரியாத மாதிரி இல்ல விளக்கம் சொல்றாங்க ..
      ஆனா நான் புரிஞ்சத விளக்கம் சொல்லவும் எனக்கு தெரியல..
      இப்ப எனக்கு என்ன புரிஞ்சதுன்னும் தெரியல..
      அதனால நானும் எங்கேயாவது வெளியூர் போய்ட்டு வரேன் ..

      Delete
  43. /// வல்னா டோரிக்கை கொல்லும் சம்பவம் நடப்பது என்பது///

    இதை வன்மையாக நான் கண்டிக்கிறேன். நம்ம பிரபஞ்சம் ,பக்கத்து பிரபஞ்சம், மேலிருக்கிற பிரபஞ்சம் ,கீழிறுக்கிற பிரபஞ்சம்னு எல்லா பிரபஞ்சத்திலேயும் பனிச்சரிவில் மாட்டி டோரிக் இறந்துவிட்டதை கதாசிரியர் தெளிவாகவே பலப்பல ப்ரேம்களில் காட்டியுள்ளார்.

    அப்படியிருக்க வல்னா மேல் குற்றம் சாட்டுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

    ReplyDelete
    Replies
    1. ///பனிச்சரிவில் மாட்டி டோரிக் இறந்துவிட்டதை கதாசிரியர் தெளிவாகவே பலப்பல ப்ரேம்களில் காட்டியுள்ளார்.///

      பனிச்சரிவு எப்படி ஏற்படுகிறது..!?

      Delete
    2. வல்னா இறந்தபின் அவளை காப்பாற்ற தோர்கலை திருப்பி அனுப்பும் சேக்ஸகார்ட் டோரிக்கும் வல்னா தோர்கல் இருவரும் சேர்ந்து வரும்போது அவர்களை விஷம புன்னகையோடு வரவேற்கும் சேக்ஸகார்ட் டோரிக்கும் ஒன்றல்ல..

      வல்னா இல்லாத ப்ரபஞ்ச டோரிக் - கை காட்டும்போதுதான்

      பனியில் புதைந்த பிணம் காட்டப்படுகிறது..

      அப்போது வீடு தீயினால் சேதமடைந்துள்ளது..

      அது ஆடு திருடர்களால் சேதமடைந்த வீடு..

      அது தோர்கலால் சரி செய்யப்படுகிறது...

      மறுபடியும் வல்னா தோர்கல் வரும்போது

      வேறு ஒரு சேக்ஸகார்ட் டோரிக் அவர்களை வரவேற்கிறான்...

      இவன்தான் டோரிக் ஆல் கொல்லப்படுகிறான்..

      ஆக வல்னாவின் ப்ரபஞ்சத்தை சேர்ந்த டோரிக் சேக்ஸகார்ட் தான் டோரிக்கால் கொல்லப்படுகிறான்...

      அதே நேரம் கதையின் இறுதியில் நிஜ டோரிக் கொல்லப்படுகிறான்..

      அப்படியாயின்..????

      முதலிலும் முடிவிலும் வரும் பனிச்சரிவு ஒன்றானால்

      தோர்கல் அந்த வீட்டிற்குள் நுழையவில்லை
      என்றாகிறது...

      ????!!!!!

      Delete
    3. 13ஆம் தேதி வான் ஹாமே அவர்களே இங்கே தளத்திற்கு வந்தால்தான் விமோசனம் கிட்டும்..! :-)

      Delete
    4. கண்ணன்! வல்னாவின் ப்ரபஞ்ச உலகில் உள்ள டோரிக்கை கொல்ல வல்னா பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை ...தனது பணியாட்களை அனைவரையும் அழைத்து அடையாளம் கண்டு டோரிக் தப்புவதற்கு முன்னரே கொன்று விட முடியும்..

      ஆனால் ஒரிஜினல் சேக்ஸகார்ட் டைம்லைனில் மோதிரத்துடன் இருக்கும் டோரிக்கை வல்னா பயன்படுத்திய யுக்தியை பயன்படுத்தியே கொல்லமுடியும்..

      வல்னாவின் ( அவள் உயிரோடு இருக்கும்) இணை ப்ரபஞ்சம் ) தோர்கலின் நிகழ் கால ப்ரபஞ்ச உலகோடு கலந்து அதன் போக்கை மாற்றுகிறது.....

      ஆனால் இரண்டும் ஒன்றல்ல...


      Delete
    5. பனிச்சரிவு எக்காளம் ஊதுவதால் இருமுறை ஏற்படுவதாக வைத்து கொண்டால்

      குதிரை வண்டி வீரர்கள் பள்ளத்தில் பாய்வதாலும் ஏற்படலாம்..:-)

      Delete
  44. @ செ.அ சார்.

    மறுக்கா எட்டாவது தடவையாக படிக்கிறேன்..!ஆனா பாருங்க, மொத தடவை படிக்கிற மாறியே இருக்கு...!
    ,

    ReplyDelete
  45. @ செனாஅனா

    உங்களுடைய விளக்கங்களை இரண்டு முறை படித்தேன்! அந்த '48 மணிநேர குடிசை' உள்ளிட்ட சிலபல விசயங்கள் உங்கள் கோணத்தில் சரி என்றே படுகிறது! இப்படியொரு 'உள்ளே 48 - வெளியே 24' சமாச்சாரத்தை யோசிக்கத் தோன்றியதற்காகவே உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ரவுண்டு பன்னை பரிசளிக்கலாம்! ஆனாலும் இன்னும் குழப்பம் தீர்ந்தபாடில்லை என்பதுதான் உண்மை (நேச்சுரலி)! எனினும் நீங்கள் சொல்லிய கோணத்தில் ஒருமுறை மறுவாசிப்பு (நாலாவது தடவை) செய்துவிட்டு வருகிறேன்!
    (நல்லவேளை இந்தத் தளத்துல ஒரே ஒரு செனாஅனா தான்!) :D

    ReplyDelete
    Replies
    1. குருநாயரே ..

      எனக்காக வேண்டி இன்னொருக்காவும் படிங்கோ..!:-)

      Delete
    2. @ KOK

      ///எனக்காக வேண்டி இன்னொருக்காவும் படிங்கோ.///

      இணை பிரபஞ்சத்துல நானொரு சூப்பர் ஸ்டார்ன்றதை மறந்துட்டீங்களா கிட்? இதுமாதிரி பொம்மை புஸ்தகத்தை படிக்கிறதுக்கெல்லாம் எனக்கேது நேரம்?!! ஐயாம் வெரி பிஷீ!!

      Delete
    3. //இணை பிரபஞ்சத்துல நானொரு சூப்பர் ஸ்டார்ன்றதை மறந்துட்டீங்களா //

      மஞ்சள் சட்டையை விரும்பி அணிபவர்,ஸ்பெஷல் ரவுண்டு பன் சிற்றுண்டி பிரியர் , டைரக்டரிடம் அடம் பிடித்து ஒரே படத்தில் ஒன்பது கதாநாயகிகளோடு நடித்தவர் ,எங்கள் வெட்டி ஸ்டார் விஜய் அவர்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எங்கள் மாகாண முதல்வராக வேண்டுகிறோம் ..

      உயிர் ரசிகன்
      வெட்டி ஸ்டார் விஜய் ரசிகர் மன்றம்
      அதே இணை பிரபஞ்சம் ..

      Delete
    4. ///டைரக்டரிடம் அடம் பிடித்து ஒரே படத்தில் ஒன்பது கதாநாயகிகளோடு நடித்தவர் ,எங்கள் வெட்டி ஸ்டார் விஜய் ///

      நிஜமாகவே ஒன்பது கதாநாயகிகள் தானா... அல்லது ஒரே கதாநாயகிக்குத்தான் அந்த நம்பரா?

      இணை பிரபஞ்சத்துல கூட இம்சிக்காம இருக்க மாட்டீங்க போலிருக்கே?!! :)

      Delete
  46. ////ஈவிக்கான இணை பிரபஞ்சம்
    இதில் அவர் ஒரு உச்சபட்ச நடிகர் ...வில்லன்களை பின்னி பெடல் எடுக்கிறார் ..பல அழகு நடிகைகளுடன் டூயட் பாடுகிறார் ////

    நாலே நாள்னாலும் சரி.. வாழ்ந்தா அப்படியொரு பிரபஞ்சத்துல வாழ்ந்துட்டுப் போயிடணுமுங்க!

    ம்.. அப்புறம்... அந்த இணை பிரபஞ்சத்துக்கு எந்தவழியாப் போகணும்னு யாராவது சொன்னாத் தேவலை!

    ReplyDelete
    Replies
    1. ///
      ம்.. அப்புறம்... அந்த இணை பிரபஞ்சத்துக்கு எந்தவழியாப் போகணும்னு யாராவது சொன்னாத் தேவலை!///

      இந்தியாவுல அதிக வருமானம் அந்தவழியிலதான் கிடைக்குதாம்.!

      Delete
    2. டேமீல் நாட்லே அதுக்கு பாஸ்மாக்குன்னு பேராம் ...! :-)

      Delete
    3. //////இந்தியாவுல அதிக வருமானம் அந்தவழியிலதான் கிடைக்குதாம்.!///

      கிட்!! :)))))

      ///டேமீல் நாட்லே அதுக்கு பாஸ்மாக்குன்னு பேராம் ...!///

      ஹிஹி! முன்னயே புரிஞ்சுடுத்து! கமெண்ட் போட கொஞ்சம் லேட் ஆயி! :)

      Delete
  47. பையாஸ் கோட்பாட்டையும், செனா அனாவின் விளக்கங்களையும் தெளிவாக உள்வாங்கிக் கொண்டு மீண்டும் படித்தபோது சிகரங்களின் சாம்ராட்டை குழப்பங்கள் குறைந்து தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது (அப்படீன்னு நினக்காறேன்.)

    காலம் என்பது குளத்தில் கல் எறிவதால் ஏற்படும் வட்டவடிவ அலைகளின் அடுக்குகள் எனில்

    டோரிக்
    வல்னா
    சேக்ஸகார்ட்
    தோர்கல்

    இவர்கள் அனைவரும் ஒரு அடுக்கிலிருந்து மற்றோர் அடுக்கிற்கு பாம்பு மோதிரத்தின் வழி பயணிக்கின்றனர்.
    ஒவ்வொரு அடுக்கிலும் அதற்கான சம்பவங்கள் ரெகுலராக நடந்துகொண்டேதான் இருக்கும்.. வேறோர் அடுக்கிலிருந்து சம்மந்தப்பட்டவர் வந்து சம்பவத்தை மாற்றும்வரை ..!
    பிரபஞ்சம், இணை பிரபஞ்சம், துணை பிரபஞ்சம் இவற்றினூடே பயணிப்பதே கதை.! ஒவ்வோர் பிரபஞ்சத்திலும் அவர்கள் வெவ்வேறாக இருக்கவே செய்கிறார்கள்.!
    அதாவது ..

    வான்ஹாமே ...சாஷ்டாங்கமா விழறேன் சார்.!

    தென்னகத்து வான்ஹாமே (செனா அனா) நண்பர் என்பதால் காலரை தூக்கிவிட்டுக் கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. இதில் அவரவர் இணை பிரபஞ்சத்தில் அல்லது அடுத்தததோர் அடுக்கில் டோரிக், வல்னா இருவரும் சேக்ஸகார்ட்டாக அவதாரம் எடுக்கின்றனர்.! இதில்லாமால் ஒரிஜினல் சேக்ஸகார்ட்டும் உண்டு.!

      ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....தொம்.!

      Delete
    2. தென்னகத்து ஹாம்மே ????
      ‘’ தம்பி ! நீங்க எம்ஜிஆர் மாதிரியே தகதகன்னு மின்னுரீங்க ! ‘’
      வடிவேலுவிடம் என்னத்தே கண்ணையா சொல்லும் மொமன்ட்
      படைத்ததை புரிந்துகொள்ள முயற்சிக்கவே நாக்கு தள்ளுது !
      முக்கால்வாசி புரிந்துகொண்டதும் சரியா தவறா என எடிட்டரும் மற்ற நண்பர்களும் சொல்ல வேண்டும் ...
      //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
      சில டிட்பிட்ஸ்
      வல்னா இல்லாத சேக்ஸகார்ட் டோரிக் உலகில் தோர்கலின் கத்தி இன்னும்
      டோரிக்கிடமே உள்ளது ...இவன் மரணிப்பதில்லை இவன் உலகில் .
      வல்னா உள்ள பிரபஞ்ச உலகில் டோரிக்கின் சறுக்கு கட்டையை அவனிடம் கொண்டு போய் சேர்ப்பது தோர்கல்...
      /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


      Delete
    3. ///ஒரிஜினல் சேக்ஸகார்ட்டும் உண்டு.!///

      இது அப்பட்டமான உண்மை !!!

      கதையில் வரும் எந்த ஒரு முக்கிய கதாபாத்திரமும் பத்தாண்டு காலம் வாழ்ந்த டோரிக்கின் அடிமை வாழ்வை மாற்ற இயலாது ..
      பத்து வயதில் அடிமை வாழ்வை துவக்கிய டோரிக்கின்

      வயது 2௦... கதை தொடங்கும்போது ..


      Delete
  48. இணை/துணை பிரபஞ்சங்களிலிலாவது இந்த கதையை படித்தால் புரியுமா?.இல்லை அங்கேயும் பொருளாளர் உதவி தேவைப்படுமா?

    ReplyDelete
  49. சிகரங்களின் சாம்ராட்.





    உறுதியாக புரிதலுக்கு சவாலான கதை.முதல்முறை வாசிப்பை கடந்தும் சில குழப்பங்கள் எஞ்சி உள்ளது.மீண்டும் ஒரு முறை மீள் வாசிப்புக்குப் பிறகு இக்கதை குறித்து பதிவிடுவது சிறப்பாக இருக்கும்.ஆனால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அபிப்ராயம் பேதங்களாக உருமாறிவிடும் என்ற அச்சம் உள்ளது.

    13 ம் தேதி மேலும் தொடர்வோம்.

    ReplyDelete
    Replies
    1. @ Sri Ram

      ///ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அபிப்ராயம் பேதங்களாக உருமாறிவிடும் என்ற அச்சம் உள்ளது///

      அச்சங்கள் தேவையில்லை! யார் எத்தனை முறை படித்தாலும் விளங்கிக்கொள்ள இன்னும் ஏதோ மிச்சமிருக்கும் - எனும்படியான கதையம்சம் என்பதால் 13 தேதிகூட யாருமே முழுமையான தெளிவு கொண்டிருப்பது சந்தேகமே! தவிர, நாமெல்லாம் ஒருவருக்கொருவர் சட்டையைக் கிழித்துக்கொள்வது இதுவொன்றும் முதல்முறையல்லவே? ஹிஹி! ;)

      செனாஅனாவின் 37 & 18.5 விளக்கம் போல ஒவ்வொருவருடைய கோணத்திலும் ஆச்சரியப்பட்டுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கலாமில்லையா? எனவே 13ம் தேதியன்று உங்களுடைய விளக்கங்களை தயக்கமின்றி எடுத்துவையுங்கள்! ( இன்னிக்கே விளக்கினாலும் சரிதான்!)

      Delete
  50. என்றும் லக்கி

    ReplyDelete
  51. பராகுடா படிச்சாச்சு. 18+ என்னும்போது சென்சார் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  52. சனிக்கிழமை எத்தனை மணிக்கு வருகிறீர்கள் சார்

    ReplyDelete
  53. வல்னா பற்றிய கதை.தாத்தா சொன்ன கருப்புமுடி ஆளுக்காக காத்திருக்கும் வல்னா சுமார் 18 வயது மங்கை.தோர்கல் மோதிரத்தோடு வர,அவன் மீது மையல் கொள்கிறாள் .கூடவே டோரிக்.இருவருமே அவர்களுடைய காலத்தில் இருந்து 37 வருடங்கள் பின் சென்று valnaa வை சந்திக்கின்றார்கள் தோர்கல் கல்யாணம் ஆனவன் என்பதால் வேறு வழியில்லாமல் டோரிக்கை மணக்கிறாள் வல்னா .ஆறுமாத கால வாழ்வி ல் திருடர்களால் கொலையுண்டு இறக்கிறாள் .மறுபடியும் தோர்கல் காப்பாற்ற ,தோர்கல் மீது நன்றியுடன் காதலும் வளர்கிறது.தோர்கல் தன் மனைவி, குழந்தை இருவரையும் டான் இடம் இருந்து காப்பாற்ற வேண்டிய தேவை சொன்னதும் ,டோரிக்கும் மிரட்டியதும் வல்னா தோர்கலு டன் 37 வருடங்கள் முன் சென்று டானை சந்திக்கிறாள் .டானையும் அழைத்துக்கொண்டு மீண்டும் 37 வருடங்கள் பின் சென்று டோரிக்கை பார்க்கிறாள்.
    டோரிக் அவசரப்பட்டு தன்னையே கொன்றுவிடுகிறான் .பிறகு உணர்ந்து வல்னா கையில் உள்ள கால மோதிரத்தை பிடுங்கிக்கொண்டு 37 வருடங்கள் முன்சென்று தோர்கலை கொல்லப் போவதாக கூறி மறைந்து விடுகிறான்.வல்னா இப்போது யாருமற்ற அநாதை.வெறிகொண்டு கொடூரமான டான் சேக்சகார்ட் ஆக மாறுகிறாள் .37 வருடங்கள் ஓடிமுடிய காத்திருந்த வல்னா தோர்கல் வருகின்ற அந்த நாளில் மிகச்சரியாக குறிவைத்து டோரிக்கை கொன்று தான் மனதார காதலித்த தோர்கலை காப்பாற்றுகிறாள் .அப்போது அவளுக்கு வயது சுமார் 55.

    ReplyDelete
  54. 1.இந்தக்கதையில் மோதிரம் யார் கையில் இருக்கிறதோ அவர்கள் காலத்தில் பயணம் செய்யலாம்.உருவமோ,வயதோ மாறாது.
    2.முதலில் பனி யில் விழுந்து மடியும் அடிமை டோரிக் இல்லை. அது வேறு யாரோ பாவப்பட்ட ஜீவன் .
    3.டோரிக் காலப்பயணம் மேற்கொண்ட கடைசி 37 வருடங்களும் நிகழ்கால உலகில் இருக்க வாய்ப்பு இல்லை .எனவே டான் சேக்சகார்ட் ஆக இருக்கும் வல்னா அவனைப் பார்த்துஇருக்க வாய்ப்பில்லை. மனதில் உள்ள வெறியோடு பொறுமையாக தோர்கல் வரும் நாளுக்காக காத்துக்கொண்டு இருப்பதே அவள் வேலை .
    4.பேரல்லல் யூனிவெர்ஸ் இணை பிரபஞ்சம் இந்தக் கதையில் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை
    5. கடைசி படத்தில் பக்கம் 93 பனிப்பிணத்தின் கையில் மோதிரம் அது டொரிக் .

    ReplyDelete
    Replies
    1. நானும் இப்படித்தான் முதலில் புரிந்துகொண்டேன்..!

      Delete
    2. //இந்தக்கதையில் மோதிரம் யார் கையில் இருக்கிறதோ அவர்கள் காலத்தில் பயணம் செய்யலாம்.உருவமோ,வயதோ மாறாது.//

      அவர்கள் உடன் பயணிப்பவர்க்கும் இது பொருந்தும்...

      மோதிரத்துடன் இருப்பவரோடு உடன் பயணிப்பவர் காலப்பயணம் அவரோடு திரும்பவும் பயணிக்க இயலும்..

      ஆரிசியா பற்றி நினைத்தவுடன் காலப்பயணம் மறுபடி மேற்கொள்ளும் தோர்கலுடன் டோரிக் நினைத்து இருந்தால் திரும்பியிருக்க முடியும்..

      Delete
    3. //2.முதலில் பனியில் விழுந்து மடியும் அடிமை டோரிக் இல்லை. அது வேறு யாரோ பாவப்பட்ட ஜீவன் .////
      ஏன் நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் என பொறுமையாக ஆராய்ந்தபோது
      கண்ணில் பட்ட விஷயங்கள் ..
      கதையின் முதல் பக்கத்தில் காட்டப்படும் பனியில் சறுக்கும் உருவமும்
      அடுத்த பக்கத்தில் ‘’அதே நேரம் பனிச்சறுக்கு கட்டைகளில் இன்னொரு உருவம் விரைந்து கொண்டு இருந்தது ‘’ என காட்டப்படும் உருவமும் ஒன்றுதானா ??
      முதல் பக்கத்தில் காட்டப்பட்ட உருவத்தை ‘’அதே நேரம் இன்னொரு உருவம் ‘’என சொல்ல வேண்டிய அவசியமென்ன ?
      ஏதேனும் வில்லங்கம் உருவாகுமுன் இந்த இடத்தை விட்டு அகல வேண்டும் என அவ்வுருவத்தின் மனக்குரல் என்னை பொறுத்தவரை ஒன்றைத்தான் சுட்டி காட்டுகிறது
      அவ்வுருவம் தாத்தா அனுப்பிய ஆள் குடிசையில் மோதிரத்தை வைத்துவிட்டு
      திரும்பும்போது காட்டப்படும் நபர் ....
      அல்லது ...அல்லது ...அல்லது தாத்தாவாகவே இருக்க கூடும் ..

      இம்மோதிரத்தின் உரிமையாளர் யாராக இருக்ககூடும் ? என தோர்கல் டோரிக்குடன் அக்குடிசையில் இரவை கழிக்கையில் நினைக்கும்போது அக்கை காட்டப்படுகிறது ..
      அதாவது அந்த உடல் அங்கு இருக்கிறது ...
      தான் இறப்பதற்கு ஒருநாள் முன்னர்தான் அம்மோதிரத்தை எதிர்காலத்துக்கு அனுப்பிவிட்டதாக தாத்தா சொன்னதாக வல்னா சொல்கிறாள் என்பதை கவனத்தில் கொள்ளவும் ..
      முதலில் டோரிக்கும் தோர்கலும் கழிக்கும் இரவில் ஓநாய்கள் பின்னணியில் காட்டப்படும் கை இடது கை ...

      அதற்கு விரல்கள் எல்லாம் உள்ளன ..

      கதையின் இறுதியில் காட்டப்படும் டோரிக்கின் கை வலது கை

      மேலும் இந்த உடல் அங்கு இருப்பதில்லை ..சேக்ஸகார்ட் வல்னாவின் ஆட்களால் அப்புறப்படுத்தபடுகிறது .....

      சாம்ராட்டுக்கு எண்ட் கார்ட் இருக்காது போலும் :-)


      Delete
    4. //டோரிக் காலப்பயணம் மேற்கொண்ட கடைசி 37 வருடங்களும் நிகழ்கால உலகில் இருக்க வாய்ப்பு இல்லை .எனவே டான் சேக்சகார்ட் ஆக இருக்கும் வல்னா அவனைப் பார்த்துஇருக்க வாய்ப்பில்லை//

      தவறான பார்வை..

      Delete
    5. //4.பேரல்லல் யூனிவெர்ஸ் இணை பிரபஞ்சம் இந்தக் கதையில் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை //

      வல்னா மாண்டால் மாண்டதுதான்..

      அதே ப்ரபஞ்ச உலகில் அவளால் மீளவே முடியாது...வல்னா இல்லாத ப்ரபஞ்ச உலகில் சேக்ஸகார்ட் டோரிக் அவளை மீண்டும் பார்க்க முடியாமல் போய்விட்டது
      பற்றி நாம் பார்த்து விட்டோம் ..

      வல்னா தோர்கலால் காப்பாற்றபட்டபின் அறை வாங்கி அதனை நினைவில் வைத்து அதன்பின் சேக்ஸகார்ட் டோரிக் 2 மட்டுமே அவளை சந்திக்கிறான்....

      இணை ப்ரபஞ்சம் அன்றி இக்கதையை அறிய முடியாது...

      Delete
    6. //கடைசி படத்தில் பக்கம் 93 பனிப்பிணத்தின் கையில் மோதிரம் அது டொரிக் .//

      மோதிரம்...ம்ம்ம்...

      பாம்பின் வாய் எதிர்காலம் எனில்

      அதன் வால் கடந்தகாலம் எனில்


      எதிர்காலத்தில் கடந்தகாலத்தை மாற்ற முயன்றால் பலியாக வேண்டியதுதான் ..


      நினைப்பது சரியென்றால்

      முதல் பலி வல்னாவின் தாத்தா ???

      மற்றமொரு பலி டோரிக்..

      Delete
    7. சரியோ தவறோ ஒரு வாசகர் தனது கருத்தை பதிவிடும்போது மற்றொரு வாசகருக்கு முகிழ்க்கும் சிந்தனை ப்ரவாகங்கள் இணை ப்ரபஞ்சங்களை காட்டிலும் அதிகம் கிளை விடுகின்றன.. ( இவையும் சரியோ தவறோ)

      அதற்காகவே கதை சார்ந்த கருத்துகள் பதிவிடப்படுவது அவசியமாகிறது..

      பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடிசையில் பத்தாண்டுகளுக்கு முன் குடியேறி இருபது பிராயம் நிரம்பும் வல்னாக்களை எப்போதும் ஒருமுறைதான் சந்திக்க முடியும்..:-)

      Delete
    8. @ VV : //இணை பிரபஞ்சம் இந்தக் கதையில் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை //

      இணைதடப் பிரபஞ்சம் என்றொன்று இல்லாது இந்தக் கதையின் இறுதியினில் நாம் சந்தித்திடும் 2 வேறு தோர்கல்களை விளக்கிட மார்க்கங்கள் ஏது சார் ?

      Delete
    9. காலப்பயணம் என்பதே சுவாரஸ்யமான கற்பனைதான்.அதுபோலவே இணைப்பிரபஞ்சம் என்பதும் மற்றொரு கற்பனைதான்.எப்படியோ நமக்கு ஒரு இன்டெரெஸ்ட்டிங் ஆன கதை கிடைத்துள்ளது.அவரவர் அனுமானங்களை வெளியிடுவதில் தவறில்லையே ..எது சரி எது தவறு என்பதும் வெறும் கற்பனை கதையில் முடிச்சுகளை அவிழ்ப்பதும் அவரவர் எண்ணங்கள் சார்ந்தது.இந்தப்பிரபஞ்சத்தையே எடுத்துக்கொண்டாலும் காலம் ஒரே நிலையிலா இருக்கிறது?குழந்தையாக இருந்தோம்..படித்தோம்..நான் படித்த பள்ளிக்கூடமே இன்று இல்லை.அந்த இடத்தில் ஒரு வணிக வளாகம் வந்திருக்கிறது.நான் பிறந்து வளர்ந்த என்னுடைய வீடு வெறும் ஓட்டுவீடு..இன்று அங்கே நான்கு மாடி கட்டிடம் எனக்கு சொந்தமில்லை.அவ்வப்போது வந்துபோகும் நினைவுகள் மட்டுமே சொந்தம்.ஆக ,நான் இருந்தால் மட்டுமே உலகம் இருக்கும் .நான் இல்லையேல் உலகம் இல்லை என்று சொல்ல முடியுமா?அனுமனின் ஆணவத்தை அழி க்க குங்குமச்சிமிழ் ஒன்றை கிணற்றில் போட்டுவிட்டு வரச்சொல்ல,அங்கே ஆயிரக்கணக்கில் குங்குமச்சிமிழ் இருப்பது கண்டு அதிசயப்பட்டு வினவ
      காலம் காலமாய் ராமாயணம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.நீ எத்தனையாவது அனுமன் தெரியுமா என்று
      பதில் சொல்லி சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும் ..நிகழ்ச்சிகள் ஒரு குறிப்பிட்ட கால் இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடக்கும் ஆணவம் தேவையில்லை என அறிவுறுத்திய கதை உண்டுதானே !அப்படி பார்த்தால் நாம் இறந்து மறுபடி பிறந்தால் அதே இருபதாம் நூற்றாண்டு பிற்பகுதியில் ,அதே கிராமத்தில் அதே வீட்டில் பிறப்போமா அதே வாழ்க்கையை மறுபடி வாழ்வோமா அல்லது இதற்கு முன்னாலும் அதே வாழ்க்கையை எப்போதோ வாழ்ந்து முடித்து இருப்போமா ..கேள்விகள் ஆயிரம் கற்பனைக்கு எல்லையேது?

      Delete
  55. இந்த கதையில் இணை பிரபஞ்சம் என்ற ஒன்று இல்லை.காலத்துக்குள் காலம் முன் பின்னாக பயணிப்பதாக கதை யுக்தி கையாள பட்டிருக்கும்.கதையில் மற்றும்
    மிக மிக எளிதான,லாஜிக்கான ஒரு விடயம் ஒளிந்து உள்ளது.அது ஓவியங்களிலோ,வசனத்திலோ இல்லை.வாசகர்களுடைய சிந்தனையில் ஒளிந்து உள்ளது.அது கதையோட்டத்தில் கலந்து விட்டால் "" சிகரங்களின சாம்ராட்""அசாத்திய படைப்பாக இருக்காது.ஒட்டு மொத்த புதிர்களையும் கட்டவிழ்க்க கூடிய அந்த சூட்சுமப் புள்ளி எதுவென்று தெரிந்தால் பிரமித்து விடுவீர்கள்.வான் ஹம் இருக்கும் திசையை வணங்குகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ///கதையில் மற்றும்
      மிக மிக எளிதான,லாஜிக்கான ஒரு விடயம் ஒளிந்து உள்ளது.அது ஓவியங்களிலோ,வசனத்திலோ இல்லை.வாசகர்களுடைய சிந்தனையில் ஒளிந்து உள்ளது.அது கதையோட்டத்தில் கலந்து விட்டால் "" சிகரங்களின சாம்ராட்""அசாத்திய படைப்பாக இருக்காது.ஒட்டு மொத்த புதிர்களையும் கட்டவிழ்க்க கூடிய அந்த சூட்சுமப் புள்ளி எதுவென்று தெரிந்தால் பிரமித்து விடுவீர்கள் ///

      இருக்கு ...13ஆம் தேதி பெரிய பட்டிமன்றம் இருக்கு ..!

      (தவறாம வந்து விளக்கிடுங்க Sri Ram sir.)

      Delete
    2. நான் போய் இன்னொருக்கா சிகரங்களின் சாம்ராட் படிக்கிறேன்.!

      இந்த தோர்கல் பராகுடாவையே மூழ்கடிச்சிப்போட்டாரே..! :-)

      தேவையற்ற பின்குறிப்பு :

      பராகுடாவின் இறுதி பாகங்களும் விரைவிலேயே வரவிருப்பதாக எடிட்டர் சாரின் வாக்குறுதியை மனதில் கொண்டு மொத்தமாக ஒரே மூச்சில் படிக்கலாம் என்ற ஆசையில் பராகுடாவை தற்போதைக்கு நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளேன்.!

      Delete
    3. இந்த வாரயிறுதிக்கு ஜார்கண்ட் பக்கமான ரயில்களில் டிக்கெட் எடுக்க நம்மாட்களின் தலைகள் நிறையவே தென்பட்டதாய் தென்னக ரயில்வே செய்திக் குறிப்பு !!

      Delete
  56. இப்படியாக தோர்கல் கதை குறித்து நிறையவே விவாதங்களும், விவகாரங்களும் இத்தளத்தில் இடம்பெறப்போவது உறுதியாகிவிட்டிருக்கிறபடியால், ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை இழுத்தடிக்காமல் சனிக்கிழமை மாலையே பதிவைப் போட்டு களேபரத்தை ஆரம்பித்து வைக்குமாறு எடிட்டர் சமூகத்தை இணைப் பிரபஞ்சத்தின் ஏழாவது வாசகர் வட்டம் சார்பாக வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. சிவகாசியின் சாலையோரமாய் பாலா பட ஹீரோவைப் போல நிகழ்ப்பிரபஞ்சத்தில் திரிந்து கொண்டிருக்கும் எடிட்டர் சமூகம் நாளையிரவே பதிவைப் போட்ட கையோடு வட காசியின் பக்கமாய் படையெடுக்கத் தயாராய் இருப்பதாய் நிகர்ப்பிரபஞ்சத்திலிருந்து தகவல் !! ஷப்பா....வான் ஹாம்மரே.... பதிவை எழுதி முடிக்க மிடிலே ; நீர் எப்படித்தான் கதையை எழுதினீரோ ?!!

      Delete
    2. மைக் டெஸ்டிங்...1 ..2 ..3 ...

      முதல் வாசிப்பிலேயே கதையினைக் கரை கடந்த தலீவர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரலாமே ?

      Delete
    3. இதுமாதிரி அற்பமான கதைகளுக்கான கலந்துரையாடல்களுக்கெல்லாம் எங்க தலீவர் வரமாட்டார் சார்.. பொருளாளர் செனாஅனாவுக்கு '24-48 மணி நேர தியரி'யை விளக்கிச் சொல்லி அவரை இங்கே அனுப்பிவச்சது யாருன்னு நினைச்சீங்க? எங்க ஒரே ஒரு தலீவர் தான்!

      பலப்பல வருசங்களுக்கு முன்னாடியே எங்க தலீவர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் 'A brief history of time' புத்தகத்தை கரைச்சுக் குடிச்சவர்ன்ற உண்மை தெரியாம அவரை வம்புக்கு இழுத்துக்கிட்டிருக்கீங்க நீங்க! பாவம்!!

      Delete
    4. மோதிரத்தைக் காலத்தில் அனுப்பிய தாத்தாவைப் போல தலீவர் தன்னையே வேறெங்கேயாச்சும் அனுப்பி வைத்திருப்பாரோ ? இப்போ அவரை நிகழ்காலத்தில் தேடுவதா - எதிர்காலத்திலா - வரலாற்றிலா ? எந்த எடிஷனில் "காணவில்லை" என்று விளம்பரப்படுத்துவதோ தெய்வமே ?

      Delete
    5. ஸ்டீபன் ஹாக்கிங்கின் 'A brief history of time' புத்தகத்தை கரைச்சுக் குடிச்சவர்ன்ற உண்மை தெரியாம அவரை வம்புக்கு இழுத்துக்கிட்டிருக்கீங்க நீங்க! பாவம்!!


      ######

      உண்மைதான் செயலரே..

      ஆனா அந்த இஸ்ட்ரி புக் குலியும் எனக்கு ஒரே ஒரு டவுட்டு தான்..அதுல அசோகர் வேப்ப மரத்தை நட்டாரா இல்ல ஆலமரத்தை நட்டாரான்னு தெளிவா இல்ல செயலரே..:-(

      Delete
    6. சார்...

      பொருளாளர் உட்பட நமது அருமை நண்பர்களின் புலமையை திருவிளையாடல் நக்கீரர் போல மெளனமாக வாதங்களை ரசித்து கொண்டு இருக்கிறேன்.
      இறுதியான ,உறுதியான தீர்ப்பை படித்து பிறகு எனது கருத்து என்பதில் "தருமியை " விட உறுதியாக இருக்கிறேன்.:-)

      Delete
  57. ஆச்சர்யங்களுக்கு அளவேயில்லை...

    வல்னா இல்லாத சேக்ஸகார்ட் டோரிக் 1 வரும்போது காட்டப்படும் பிணத்தின் கை வலது கை.....

    இக்கதையின் சித்திரங்களிலும் கதாபாத்திரங்கள் உதிர்க்கும் வார்த்தைகளிலும் பொதிந்திருக்கும் அர்த்தங்களும் மர்மங்களும்தான் எத்தனை...எத்தனை!!!

    வெறும் 60 பக்கங்களில் இத்தனை ஜாலங்களா??

    ReplyDelete
    Replies
    1. ///வெறும் 60 பக்கங்களில் இத்தனை ஜாலங்களா??///

      உண்மைதான் செனா..!

      ஒவ்வொருமுறை படிக்கும்போதும் புதிது புதிதாய் விடைகள் கிடைக்கின்றன...கூடவே சில புதிய வினாக்களும் ....!

      Delete
    2. திருத்தம் சார் ; 60 பக்கங்கள் நஹி ; வெறும் 44 தான் !! அதனுள்ளேயே இத்தகையதொரு சுனாமி !!

      Delete
    3. ///திருத்தம் சார் ; 60 பக்கங்கள் நஹி ; வெறும் 44 தான் ////

      அதை அவ்வளவு உறுதியாகச் சொல்லிவிட முடியாது சார்.. ஏதாவதொரு காலகட்டத்திலான இணைப் பிரபஞ்சத்தில் இந்தக் கதை 60 பக்கங்களாக இருந்திருக்கலாமில்லையா? ( அதுக்கப்புறம் அது எத்தனை எடிட்டர்களால் கத்தரி போடப்பட்டு 44 பக்கங்கள் ஆச்சோ?!! ஹிஹி!!)

      Delete
    4. ///வல்னா இல்லாத சேக்ஸகார்ட் டோரிக் 1 வரும்போது காட்டப்படும் பிணத்தின் கை வலது கை.....///

      அதுவும் இடது கையாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது! நிழலுருவாய் வரையப்பட்டிருக்கும்போது இடதா, வலதா என்ற குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது! அந்தக் கையை இடது கையாக கற்பனை பண்ணிப் பார்த்தால் இடதுகையாகவும், வலது கையாகக் கற்பனை பண்ணிப் பார்த்தால் வலது கையாகவும் தெரியும்!

      நாஞ்சொல்றது சரிதானுங்களா செனாஅனா?!

      Delete
    5. இணை பிரபஞ்சங்களோ ; மாற்றம் கண்ட பிரபஞ்சங்களோ - செயல்களும் ; அவை நடந்தேறும் இடங்களும் மாற்றமில்லாதவைகளே ! மாறிடுவது சூத்திரதாரிகளும் ; பலிகடாக்களும் மட்டுமே !!

      So அப்பாலிக்கா பிரபஞ்சம் போனாலும் சரி ; பீச்சாங்கைப் பிரபஞ்சம் போனாலும் சரி - கதையின் நீளம் அதே 44 தான் !! ஆனால் அதனோடு மொக்கை போடும் எடிட்டர் மாறிடலாம் ; மண்டையைப் பிறாண்டும் வாசகர்கள் மாறிடலாம் !!

      Delete
    6. ஒரு கையை புறங்கை பக்கம் பார்க்கும்போது கட்டை விரல் பார்ப்பவரின் இடது புறம் இருப்பின் அது வலது கையாகத்தான் இருக்கும் ஈவி !! உங்கள் கையை புறங்கையாக வைத்துத்தான் பாருங்களேன் ....

      அது கஷ்டமாக இருப்பின் வல்னா கையை காட்டுவதாக நினைத்து பார்க்கலாம் !!

      பக்கம் எழுபதில் நிழலுரு அல்லாது தெளிவாகவே உள்ளது ...

      Delete
    7. @ செனாஅனா

      மன்னிச்சூ!! நான் பக்கம் 59ல் காட்டப்பட்டிருக்கும் நிழலுருவக் கையை வைத்து அப்படி வாதாடிவிட்டேன்! பக்கம் 70ஐ பார்த்தபோதுதான் நீங்கள் ஆச்சரியப்பட்டதில் தவறில்லை எனப் புரிந்தது!

      நான் இக்கதையை இன்னும் ஒரு நாற்பது நாற்பத்தஞ்சு தடவைகள் படிக்கவேண்டியிருக்கிறது என்பதும் புரிகிறது! :)

      Delete
    8. //மன்னிச்சூ//

      அட..என்ன இது ஈவி...


      அப்பறமேட்டு இந்த கதையை படம் போட்ட ஓவியர் ஹாம்மே தன்னை படுத்திய பாட்டுக்கு பின்னாடி அட்ரஸ வேற துணை ப்ரபஞ்சத்துக்கு மாத்திகிட்டாராமே...:)

      Delete
  58. சில கிளுகிளுப்பான கோரிக்கைகள்:

    * வல்னாவுக்கென ஏதேனும் spin-off கதைகளிருந்தால் உடனே வெளியிடவும்! ராயல்ட்டி தொகை பற்றிய கவலை வேண்டாம் - தலீவரை அடமானம் வைத்தாவது சங்கம் உதவி செய்யும்!

    * வல்னா பற்றி உடனே ஒருபக்க கவிதை எழுதும்படி நச்சினார்க்கினியரிடம் நச்சப்படுகிறது! :)

    ReplyDelete
    Replies
    1. தலீவருக்கு எடைக்கு எடை 2000 ரூபாய் காந்தி தாத்தா நோட்டுக்கள் என்று நேர்ந்து கொள்ளுங்கள் சாமி ; நானே ஒரு Valna spin-off கதை எழுதி - நம்ம அஜய் சாமியைக் கொண்டோ, சாரதியைக் கொண்டோ படம் போட்டுத் தாக்கிடுகிறேன் !!

      Delete
    2. :-))))

      எனது வெயிட்டிற்கு இவ்வளவு வெயிட்டா...

      செயலரே நோட் திஸ் பாயிண்ட்..:-))

      Delete
  59. கதையினுடைய அடிப்படையை முதலில் தெளிவாக புரிந்து கொண்டால் மட்டுமே இந்த கதையில் வான் ஹாம் சொல்வது புரியும்.



    1. இதில் இணைபிரபஞ்சத்துக்கு பயணிப்பது சாத்தியம் இல்லை.


    2.அந்த மோதிரம் மற்றவர்கள் பயணிக்க வேண்டும் என்றால் விரலில் அணியப்படும் வேண்டும்.தோர்கலுக்கு அது அவசியம் இல்லை. அந்த மோதிரம் தோழர்களிடம் இருந்தால் மட்டுமே போதும்.

    காலம் பயணம் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளின் எந்த ஆண்டுக்கும் சாத்தியமே.ஒருவருடைய ஆயுள் என்பது ஆண்டுகள் என்றால் உயிர் பிரியும் கடைசி நாளுக்கு முன் ஒருநாள் வரையிலும் பயணிக்க முடியும். முன்கூட்டியே இறந்து விட்ட ஒருவரது எதிர்காலத்திலோ,நிகழ்காலத்திலோ அது சாத்தியம் இல்லை.ஆனால் நோய்களுக்கு அது முடியும். ஒரு இளைஞன் இறந்திருந்தால் தோர்கலால் மட்டும் அவனுடைய கடந்த காலத்துக்கு சென்று அந்த நிகழ்வை மாற்ற முடியும்.இறந்த இளைஞருடைய எதிர்காலத்துக்கும் பயணித்து அடுத்து என்ன நடக்கும் என்பதை காணவும் முடியும் . ஏனென்றால் தோர்கல் அதி அற்புத ஆற்றல்களை உள்ளடக்கிய வேற்று கிரகத்தில் இருந்து வந்த வேறொரு மானிடன்.



    ReplyDelete
    Replies
    1. .//// இதில் இணைபிரபஞ்சத்துக்கு பயணிப்பது சாத்தியம் இல்லை.//

      @ sriram ..
      OUROBOROS – வான் ஹாம்மே –யின் கற்பனை அல்ல ..அதை தனது கதையின் முக்கிய அம்சமாக வைத்துள்ளார் ..
      கதையின் முக்கிய அம்சம் சில சம்பவங்கள் மறுபடி மறுபடி நிகழ்வதே
      நடத்துபவர்கள் ,விளைவுகளுக்கு உள்ளாகுவோர் மாறினாலும் சம்பவங்களின் தன்மை ஒன்றே ...
      OUROBOROS – I EAT MY TAIL என்பதே பொருள் ..
      REPEAT IN CYCLES , SOULS IN ETERNITY என்பது இது சொல்ல வரும் பல கருத்துகளில் தலையாயது ..
      இந்தியாவில் ஆத்ரேய பிராமணீய வேத உபநிஷத்துகளில் சொல்லப்பட்டு இருப்பதும் , குண்டலினியின் அடிப்படையும் இதுவே ...

      https://youtu.be/6taFUVSIQdc

      ஒரு எளிமையான வீடியோ மேலே

      Delete
    2. @ செனான் அனா ஜி




      கிறிஸ்டோபர் நோலனின் இன்டர்ஸ்டெல்லர் திரைப்படத்தில் ஹோலுக்குள்ள ஹோல் எனும் மாதிரியான வகையில் திரைக்கதை வடிவம் அமைக்கப்பட்டிருக்கும்.

      அதே கிறிஸ்டோபர் நோலன் இன்செப்ஸன் திரைப்படத்தில் கனவுக்குள் கனவு,அந்த கனவுக்குள் மீண்டுமொரு கனவு என்பதுபோல் திரைக்கதையை வடிவமைத்து பார்வையாளர்களை தடுமாற செய்திருப்பார்.


      இந்த வகையான கதை யுக்திகளின் பிதாமகன் வான்ஹாம் ""சிகரங்களின் சாம்ராட்""ல் காலத்துக்குள் காலம் முன் பின்னாக பயணிப்பது போல் கதையை வடிவமைத்திருக்கிறார்.இக்கதையில் இணைபிரபஞ்சம் குறித்து எந்த இடத்திலும் குறிப்பிட வில்லை.


      இந்த வகையான கதை யுக்தி எனக்கு பரிந்துரைக்கப்பட்டது மூன்று ஆண்டுகளுக்கு முன்.ஆங்கிலத்தில் புலமை இல்லாத காரணத்தால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இன்செப்சன் திரைப்படத்தை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

      ஆனால் காமிக்ஸ் கதையில் இந்த வகையான கதை யுக்தி ""இரவே இருளே கொல்லாதே "" கதையிலேயே நமக்கு அறிமுகம் இருக்கும்.அதில் கதைக்குள் கதை என்பதால் பயன்படுத்தப் பட்டிருக்கும்.

      எப்படி இருந்தாலும் இந்த வகையான கதை யுக்தியை முதன்முறையாக படைப்புலகில் அறிமுகம் செய்தது பெரிய தல வான்ஹாம்மாகத்தான் இருக்கும்.

      Delete
    3. Interstellar..sci-fi ..all the laws of physics and spacetime after Einstein are respected in this flick..

      Inception..fantasci- fi..here sci- fi fantasy elements both are here...

      ( கனவே கொல்லாதே..நினைவில் வரும்)

      சிகரங்களின் சாம்ராட்..fantasy alone..

      More philosophical..

      Spacetime is flat..by Einstein's theory

      Parralel universe is possible by Einstein's theory but lmpractical ..

      Parallel universe is possible by

      Quantum theory but alas it cannot explain ஒளிச்சிதறல்..

      கதையில் இணை ப்ரபஞ்சம் தத்துவம் உண்டு என்பதை இணை ப்ரபஞ்சம் என்றால் என்ன என பின்னர் நான் விளக்கமளித்தபின் ஏற்று கொள்வீர்கள் என நம்புகிறேன்..

      ஒருவேளை எடிட்டர் பதிவிலேயே இது குறித்து விளக்கமளித்து இருப்பார் என நம்புகிறேன்..

      Delete
    4. இன்னமும் தெறித்து ஒடத் திட்டமிட்டிரா நண்பர்கள் ஓரளவுக்கேனும் மிச்சம் மீதியிருப்பின், நாளைய விவாதங்களில் இணைப் பிரபஞ்சத்தையும் கொத்து பரோட்டா போட்டுப் பார்த்திடலாம் !

      Delete
  60. நம்ம மக்கள் அனைவரும் தோர்கலை படித்து மாறி மாறி குழப்பிட்டு இருக்கிறதை நினைச்சு பெருமை அடைகிறேன்.இப்படி பல ,பல முறை படித்து பல பலமுறை குழம்பி போவதை விட ஒரு முறை படித்து கடைசி இருபக்கங்களில் மட்டும் கொஞ்சம் தெளிவின்மை கொண்ட நான் திரும்ப படிப்பது தெளிவான ,சாத்தியமான ,உண்மையை அறிந்தே பிறகே .

    இதுவே எனது உடல்நலத்திற்கு மிகுந்த நலமானது என்பதால் ஆசிரியரின் பதிவிற்காக ஐயம் நிகழ்காலத்திலியே வெயிட்டிங்..:-)

    ReplyDelete
  61. தோர்கல் பஞ்சாயத்தால் பராகுடாவை தள்ளி வச்சிராதீங்க சார்..அது மாஸ் ஹிட் ..

    சீக்கிரமா க்ளைமேக்ஸை கண்ணுல காட்டிருங்க..

    ReplyDelete
  62. வல்னா
    ------------------
    ஏகாந்த ராஜ்ஜியத்தின் ராணியே
    எந்தப்பிரபஞ்சத்தில் இருக்கின்றாய்
    எனக்கந்த மோதிரம் கைக்கிடைத்தால்
    எப்போதோ தட்டியிருப்பேன் உன் வீட்டுக்கதவை
    மறக்காமல் மசிபூசிக்கொண்டோ அல்லது
    கருப்புமுடி விக்கை மாட்டிக்கொண்டோ ..
    ரெண்டுபிள்ளை பெற்றவன் தோர்கல்
    ரெண்டு விரல் அற்றவன் டோரிக்
    உன்னழகில் மயங்கி விழுந்தேன் தள்ளாடி நான் -என்
    ஊரில் கேட்டுப்பார் காதலில் கில்லாடி நான்
    பனியில் முகிழ்த்த பாரிஜாதமே இனியும்
    நீ தனி நான் தனி என்றால் தவறு என் ஜாதகமே
    முகத்திலே இறுக்கம் ..முதுமையின் சுருக்கம்
    இருப்பினும் தேவை நமக்குள் நெருக்கம்
    புரவியில் ஒரு அரிமா உன்போல் வருமா
    பார்வையில் தீக்கணை பக்கத்தில் வீரர் துணை
    பாவையே போதும் சண்டை வா என் அண்டை
    முற்றிய கரும்பே முழு நிலவே வற்றாது உன் இளமை -பாட
    பற்றாது என் கவிதை (சாரி விஜய் அவசரத்தில் 97ம் பக்க valnaa வை பாடி விட்டேன் )


    ReplyDelete
    Replies
    1. ஐயோடா!!!செமயா இருக்குது சார் உங்களது கவிதை.

      Delete
    2. //சாரி விஜய் அவசரத்தில் 97ம் பக்க valnaa வை பாடி விட்டேன் )//
      ஹா ..ஹா .. ஹா ...amazing sense of humour ...!!!

      கவிதை செம !!!

      Delete
    3. @ நச்சி

      கவிதை 'நச்'சி!!

      நீர் புலவரைய்யா!!

      வயோதிக வல்னாவையே இம்புட்டு வர்ணிச்சு எழுதறீங்கன்னா... வாலிப வல்னாவைப் பற்றி எழுதினால்?!!

      பை த பை, கவிதையைப் பாராட்டி பத்து ரவுண்டு வர்க்கிகள் பரிசளிக்கப்படும்! (வர்க்கி = வயதான பன்னு) ஹிஹி!!

      Delete
    4. //உன்னழகில் மயங்கி விழுந்தேன் தள்ளாடி நான் -என்
      ஊரில் கேட்டுப்பார் காதலில் கில்லாடி நான் //

      எந்த ஊர் சார் அது ? ஈரோடா ?

      Delete
  63. கொஞ்சம் நஞ்சம் புரிந்தது சுத்தமா புரியாம போச்சு.
    எல்லா கோட்டையும் அழிச்சுட்டு திரும்பவும் பரோட்டா சாப்பிட போறேன்.

    ReplyDelete
    Replies
    1. நிறையவே பரோட்டா சாப்பிட வேண்டியிருக்கலாம் சார் நாளைக்கு ; எதற்கும் கொஞ்சம் ஜெலுசில் வாங்கி வைத்துக் கொள்ளுங்களேன் !!

      Delete
  64. சிகரங்களின் சாம்ராட்ல் இணைபிரபஞ்சம் குறித்து எங்கு குறிப்பிடப்பட்டு உள்ளது.அது எந்த விதத்தில் கதையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை யாராவது தெளிவாக ,எளிமையாக விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.அதைப்பற்றி ஓரளவாவது தெரிந்த பின் இந்த கதையை விமர்சிப்பதுதான் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete