Powered By Blogger

Saturday, January 19, 2019

ஒரு தட தட வாரம்...!

நண்பர்களே,

வணக்கம். திகட்டத் திகட்ட விடுமுறைகள் ....இன்னமுமே காத்திருக்கும் இன்னொரு நெடும் வாரயிறுதி என்று ஆண்டின் முதல் மாதமே ஒரு festive மூடில் தடதடத்து வருவதில் எனக்கும் குஷியே ! ஆனால் இந்த லீவுகளின் பொருட்டு உதை வாங்கிடும் பணிகளைப் பார்க்கும் போதுதான் உள்ளுக்குள் ஜெர்க் அடிக்கிறது !! மாதத்தின் பாதியைத் தாண்டிய பிற்பாடே தினமும் காலையில் காலண்டரில் தேதியைக் கிழிக்கும் போதெல்லாம் மண்டைக்குள் சைரன் ஒலிக்கத் துவங்கிடும் -  "ஆஹா...இந்நேரத்துக்கெல்லாம் பிரின்டிங் துவங்கியிருக்க வேண்டுமே...." என்று ! இம்முறையோ காத்திருக்கும் அடுத்த மாதத்து அட்டவணையில் சகலமும் முழுவண்ண இதழ்களே எனும்போது அனுதினமும் காலையில் இஞ்சி தின்ன ; பீதி பீடித்த குரங்காகித் தான் ஆபீஸ் போகிட முடிகிறது !!

தோர்கலின் புண்ணியத்திலும், பராகுடாவின் பெயரைச் சொல்லியும், ஒரு ஜாலியான ஜனவரி இந்தப் புத்தாண்டினை அதகளமாய் ஆரம்பித்துத் தந்திருக்க - அந்த tempo-வைத் தக்க வைத்துக் கொள்ளும் பொறுப்பு மிகுந்திடுவது புரிகிறது ! So பிப்ரவரியின் பட்டியலைக் கையிலெடுத்துப் பார்க்கும் போது தான் சில பல சுவாரஸ்யங்கள் காத்திருப்பது தெளிவாகியது !! அதே சமயம் - சென்னைப் புத்தக விழாவின் ஜோரிலும், ராஜஸ்தானுக்குப் பயணமெனும் ஜாலியிலும், பொங்கல் விடுமுறைகளின் ஓய்விலும், சிகரங்களின் சாம்ராட்டின் அலசல்களிலும் எத்தனை பணிநாட்கள் சாத்து வாங்கியுள்ளன என்பதும் ; காத்துக் கிடக்கும் பணிகளின் பரிமாணமும் திகிலூட்டத் துவங்கி விட்டன ! பொதுவாய் black & white இதழ்களென்றால் முந்தைய ராவில் எடிட்டிங் முடித்த கையோடு மறு நாளே அச்சுக்குக் கொண்டு சென்று, சூட்டோடு சூடாய் பைண்டிற்கும் தூக்கிச் செல்ல சாத்தியப்படும் ! ஆனால் வண்ண இதழ்களெனும் போது பிராஸஸிங்கில் அவகாசம் ; அச்சில் அவகாசம்  ; அப்புறம் அந்த மசிகளெல்லாம் காய்ந்திடலுக்கு அவகாசமென்று நிறையவே நேரத்தை விழுங்கிடும் ! And இம்மாதம் தற்செயலாய் சகல இதழ்களும் கலராய் அமைந்திருக்க, காத்திருக்கும் அடுத்த 10 நாட்களுமே எங்களுக்கு சிவராத்திரிகளே for sure !!

For the right reasons ; or for the wrong ones - நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இதழ்களுள்  ஜெரேமியா-2-க்கு ஒரு முக்கிய இடமுண்டு என்பதை நன்கறிவேன் ! இந்தத் தொடரின் ஆல்பங்கள் 4 & 5 & 6 இணைந்ததொரு முப்பாகத் தொகுப்பாய் "பயணங்கள் முடிவதில்லை" பிப்ரவரியில் ஜம்போ காமிக்ஸ் (சீசன் 1) வரிசையின் ஐந்தாவது இதழாய் வெளிவரக் காத்துள்ளது ! வழக்கம் போலவே கதை ; வசனம் ; சித்திரங்கள் ; லெட்டரிங் ; கலரிங் என ஆல் இன் ஆல் ஹெர்மன் அவர்களே !! 1980-களின் துவக்கத்தில் வெளியான இந்த ஆல்பங்களை, இன்றைக்குமே ஐரோப்பாவில் வெவ்வேறு மொழிகளில் மறுபதிப்பிட்டுக் கொண்டே செல்கின்றனர் !! So அவர்கள் ரசித்த சமாச்சாரங்களை நாமும் ரசிக்கத் தான் முயற்சிப்போமே என்ற எண்ணத்தினில் இந்த இரண்டாம் தொகுப்பிற்குள் புகுந்துள்ளோம் ! And இதோ அதன் அட்டைப்பட முதல்பார்வை !  

ஒரிஜினல் ஹெர்மன் சித்திரமே ; பின்னணி வர்ணத்தை மட்டுமே, சற்றே பளிச்சென்று மாற்றிடும் நமது மெனெக்கெடலோடு ! So அந்த டிரேட்மார்க் பரட்டைத் தலையோடும், கவிழ்த்துப் போட்ட கும்பாச் சட்டி ஹெல்மெட்டோடும் நாயகர்கள் இருவருமே அட்டைப்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்கள் !! As usual அந்த வெறிச்சோடிக் கிடக்கும் அமெரிக்காவினில் அரங்கேறும் பயணம் எனும் போது - மனம் போன போக்கினில் சின்னச் சின்னக் கருக்களைக் கையில் எடுத்துக் கொண்டு அவற்றைச் சுற்றி ஒவ்வொரு ஆல்பத்தையும் அமைத்துள்ளார் ஹெர்மன் ! And ஒவ்வொரு ஆல்பத்தின் பின்னணி பற்றியும் இரத்தினச் சுருக்கமாய் மனுஷன் வெளிப்படுத்தியுள்ள தகவல்கள், அந்தந்த ஆல்பத்தின் புதிர்களுக்கு ஏதொவொருவிதத்தில் உதவிடக்கூடிய knots ! So மறவாது அவற்றையும் இணைத்துள்ளோம் !!

சித்திரங்களைப் பொறுத்தவரை ஹெர்மனின் அந்த unique பாணி பற்றி இத்தனை காலத்துக்குப் பின்பாய் சிலாகித்திடப் புதிதாய் என்னதானிருக்க முடியும் ?  கேப்டன் பிரின்ஸ் ; கமான்சே ; இப்போது ஜெரெமியா என ஒவ்வொரு தொடரிலும் நாம் பார்த்துப் பரிச்சயம் வளர்த்துக் கொண்டுள்ள அதே freehand பாணி இங்கேயும் ! கலரிங்குமே கதையின் மூடுக்கேற்ப மெலிதான வர்ணங்களிலும், மிரட்டலான அடர் வர்ணங்களிலும் ரவுண்டு கட்டி அடிக்கின்றன  ! பாருங்களேன் ஒரு சில மாதிரிகளை : 

2 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கிய கதை என்பதால் இடைப்பட்ட நாட்களில் மொழிபெயர்க்கப்பட்டு, டைப்செட்டிங்கும் செய்யப்பட்டு காத்துக் கிடந்தது !! "சிகரங்களின் சாம்ராட்" அனுபவத்துக்குப் பின்பாய் மூத்திரச் சந்து வடிவேல் போல எனக்குள் ஒருவிதத் தெனாவட்டு துளிர்விட்டிருந்தது எனக்கே புரிந்தது !! இடியாப்பத்தையும் ; நூடுல்ஸையும் ; பெவிகாலையும் ஒன்றாய்ச் சேர்த்து வான் ஹாம் உருவாக்கிய அந்த ஆல்பத்தையே எடிட் செய்தான  பின்னே, வேறு எதையும் பந்தாடிடலாமென்ற மாதிரியாயொரு   பீலிங் உள்ளுக்குள் சுற்றி வர, சாவகாசமாய் ஜெரெமியாவினுள் புகுந்தேன் !  வழக்கம் போலவே, அழுத்தம் அவசியமாகிடும் சில பகுதிகளில் ; கர்டியின் நக்கல் தெறிக்க வேண்டிய பக்கங்களில் மெருகூட்டும் விதமாய்க் கைவைத்தால் போதுமென்ற நம்பிக்கையோடே புகுந்தால் - ஒன்றைத் தொட, அடுத்தது தொடர - வேலை இழுத்துக் கொண்டே போனது !! இது பிரெஞ்சு கலாச்சார மையத்தின் மானியத்தில் உருவாகும் இதழ் என்பதால்  - அவர்களும் நமது மொழிபெயர்ப்பை தமிழ் தெரிந்ததொரு  ஆராய்ச்சி மாணவியின் சகாயத்தோடு சரி பார்த்திடுவார்கள் என்பதால் - துளி கூட நெருடல் இருந்திடலாகாது என்ற பயம் ஆட்டிப் படைக்க - திருத்தங்கள் கூடிக் கொண்டே சென்றன ; நாட்களும் ஜவ்வாய் இழுத்துக் கொண்டே ஓடின !! புதிதாய் எழுதுவதை விடவும் சிரமமென்பது - ஏற்கனவே உள்ளதொரு ஸ்கிரிப்ட்டை நோகாது நோண்டிட முயல்வதே !! So பாவப்பட்ட நமது DTP பெண்களிடம் இரத்தக்களரியாய்க் காட்சி தந்த  பக்கங்களை ஒப்படைக்கவே தேதி 17 ஆகிப் போய் விட்டது !! ஒரு மாதிரியாய் அவர்கள் திருத்தங்களை போட்டுத் தந்த பக்கங்களை மறுக்கா சரி பார்த்தது friday !! So திங்கட்கிழமை அச்சுக்குச் செல்லுமென்ற நம்பிக்கையோடு சுற்றி வருகிறேன் ! ஏற்கனவே அறிவித்தது போல இந்த இதழ் ஹார்ட் கவரோடு டாலடிக்கவுள்ளது என்பது கொசுறுச் சேதி !! So மீண்டுமொருமுறை ஜெரெமியா எனும் புதிரை முடிச்சவிழ்க்கத் தயாராகிக் கொள்ளுங்கள் folks !! நம்மிடையே இந்தத் தொடருக்கு make or break சூழலிது என்பதால் கொஞ்சம் பார்த்துச் செய்யுங்கள் guys !! So பிப்ரவரியின் முதல் வாரம் ஒரு சுவாரஸ்ய வாரமாய் அமையும் வாய்ப்புகள் பிரகாசம் என்பேன் !  

பெருமூச்சோடு அடுத்த பணியினைக் கையிலெடுத்தால் "பச்சக்" என்ற முத்தக் காட்சியோடு ஒரு ராப்பர் சகிதம் ஜானி 2 .0 காத்திருப்பது புரிந்தது ! (அது சரி, இதற்கு முன்பாய் நமது அட்டைப்படங்களில்  கிஸ்ஸிங்-கிஸ்ஸிங் ஏதேனும் இருந்ததுண்டா ? Maybe வேதாளரின் பூவிலங்கு ??) "ஹய்யா...ஜானியின் மாமூலான கதைகள் தலையைப் பிய்க்கச் செய்யும் ; நாமோ அதன் புது version -ஐக் கையில் எடுத்துள்ளோம் ; so நிச்சயமாய் அதனில் இருந்த நோவுகள் இந்தப் புது வார்ப்பினில் இராதென்று மனதுக்குள் ஒரு ஜாலியான குரல் கேட்டது ! சித்திரங்களும் சற்றே மாறுபட்ட பாணியில் இருக்க, ஆர்வமாய் உட்புகுந்தேன் !! பரபரப்பாய் ஓடும் கதைக் களம் ; ஏதேனும் பிரெஞ்சு குக்கிராமமாய் அல்லாது - பாரிஸின் நட்ட நடு வீதிகளில் அரங்கேறும் மர்மங்கள் ; மரணங்கள் என வேகத்துக்குப் பஞ்சமே இல்லை தான் ! So நியாயப்படிப் பார்த்தால் நானிருந்த பரபரப்பிற்கு ஓரிரண்டு நாட்களில் எடிட்டிங்கை முடித்து மைதீனிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் !ஆனால், புதியதொரு மொழிபெயர்ப்பாளரின் கைவண்ணத்தில் 2018 -ன் பிற்பகுதியிலேயே தயாரான இந்த ஆல்பத்தினில் ஏகமாய்ப் பிழைகளும், நெருடல்களும் எனக்கு ! வசனங்களில் நிறைய improvisations செய்ய அவர் முனைந்திருப்பதை ரசிக்க முடிந்த போதிலும்,அவை கதையின் ஸ்கிரிப்ட்டோடு துளியும் ஒன்றிடாது, அப்பட்ட நெருடல்களாய் தனித்து நிற்பது தென்பட்டது ! நிறைய இடங்களில் எதிர்மறையான பொருள்படும் விதமாகவும் வரிகள் அமைந்து போயிருக்க, கையைப் பிசையத் தான் முடிந்தது எனக்கு !! பற்றாக்குறைக்கு இது நார்மல் ஜானி கதையினை விடவும் 10 பக்கங்கள் ஜாஸ்தி நீளம் கொண்டது !! திருத்தங்களை போடப் போட - நேரம் தான் ஓடியதே தவிர்த்து - காத்துக்கிடந்த பக்கங்களின் எண்ணிக்கை குறைந்த பாடையே காணோம் ! வேறு வழியே இல்லை ; வெகு சொற்பப் பக்கங்களில் மட்டும் ஒரிஜினல் வரிகளைத் தக்க வைத்துக் கொண்டு, பாக்கி சகலத்திலும் திருத்தம் போடும் நேரத்துக்கு, புதுசாகவே எழுதிடலாமே என்று இறங்கிடத் தான் வேண்டிப் போனது ! இந்தப் பதிவுக்கென சித்தே ஓரம்கட்டும் வரையிலும், 32 பக்கங்களே பூர்த்தி கண்டுள்ளன & இன்னமும் 22 காத்துள்ளன - வண்டி வண்டி வசனங்களோடு !! So பதிவை upload செய்த கையோடு சனியிரவும், ஞாயிறும் தம் பிடித்தால் தான் பிப்ரவரி இதழ்களை காலத்துக்கு உங்கள் கைகளில் ஒப்படைக்க முடியும் ! ஜானி 2.0 பணிகளிலும் 2.0 !!! இதோ அதன் ஈயடிச்சான்   அட்டைப்பட முதல்பார்வை - 

எஞ்சி நிற்கும் அடுத்த 2 இதழ்களிலும் பணிகள் தொக்கி நிற்கன்றன ; அவற்றையெல்லாம் பூர்த்தி செய்த கையோடு அடுத்த ஞாயிறில் அந்த பிட்டை எடுத்து விடுகிறேன் !  

So பதிவினை நீட்டிக் கொண்டே செல்லாது, நான் விடைபெறும் முன்பாய் இதோ ஜம்போவின் சீசன் 2-ல் வரக்காத்திருக்கும் ஜேம்ஸ் பாண்டின் preview !! நேற்றைக்குத் தான் கதை files வந்து சேர்ந்திருக்க, செம மிரட்டலான ஆல்பமாய்த் தென்படுகிறது !! இம்மாதத்து இதழ்களை பூர்த்தி செய்த பிற்பாடு இதனைப் படித்துப் பார்க்க வேண்டும் என்றிருக்கிறேன்  !! ஆக ஜம்போ சீசன் 2 -ன் 4 இதழ்களை  இறுதி செய்துவிட்டிருக்கிறோம் ! தொடரும் வாரங்களில் பாக்கி 2 பற்றியும் சொல்கிறேன் !! So இதுவரையிலும் நமது ரெகுலர் சந்தா எக்ஸ்பிரஸில் ஏறாது இருக்கும் 15 % நண்பர்களும் ; ஜம்போ எக்சிபிரசுக்கு டிக்கெட் எடுத்திருக்கா அணியினரும் - தாமதிக்காது செயலில் இறங்கிடலாமே - ப்ளீஸ் ? எப்போதும் போலவே உங்களை நமது சந்தா குடும்பத்தின் ஒரு அங்கமாய்ப் பார்த்திடவே விரும்புகிறது மனசு !! Bye  folks ; see you around !! Have a warm weekend !!99 comments:

 1. ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறேன்...

  ReplyDelete
 2. எடிட்டர் ஜீ,

  அந்த டெக்ஸ் மெபிஸ்டோ யுமா கதைகளை ஓரே ஸ்பெஷல் புத்தகமாக ஹார்ட் பவுண்டில் போடவும். வாசகர்கள் சார்பில் இந்த கோரிக்கையை எற்று கொண்டு 2019 தீபாவளிக்கு அதிரடி ஸ்பெஷல் புத்தகமாக வெளியீடுமாறு கேட்டு கொள்கிறேன்.

  வி.சுந்தரவரதன்
  சின்ன காஞ்சிபுரம்

  ReplyDelete
 3. சபையோருக்கு
  🙏🙏🙏🙏🙏🙏🙏

  ReplyDelete
 4. இதோ வந்துட்டேன்

  ReplyDelete
 5. டியர் எடி,

  ஜானி 2.0 மட்டுமல்ல, அட்டை மூலம் நமது இதழ்களுக்கும் 2.0 ரீலோடட் ஆகி இருப்பது திண்ணம். நீங்கள் குறிபிட்ட பூவிலங்கில் கூட வேறு ஒரு விதமான நட்பு முத்தம் தான் (பார்க்க, இங்கே), ஆனால் இப்படி'மருத்துவ' முத்தம் நமது அட்டைகளில் இதுவே முதன்முறை. :)

  ஜெரெமியாவின் மறுவருகை மற்றும் ஜானி 2.0 வாசிக்க காத்திருப்போம்.

  ReplyDelete
 6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  ReplyDelete
 7. ஜெரெமியா மற்றும் கர்டிக்காக வெய்ட்டிங்.

  ReplyDelete


 8. சிகரங்களின் சாம்ராட்:


  போன வாரம் தவிர்க்க முடியாத சொந்த வேலைகளால் 13 தேதி விவாதங்களில் பங்கேற்க முடியவில்லை.


  முதலில் பிணத்தின் கை வைத்து தான் நான் கதையை கனிக்க முயன்றேன். 


  ஸேஸ்காட் டாக இருக்கும் வால்னா டோரிக் கொல்வது தான் நிகழ்காலம். கதையின் தொடக்கதில் தெரியும் கை டோரிக் னுடையதுதான். வால்னாவால் கொல்லபட்ட டோரிகின் கை தான்.


  வயதாகி ஸேஸ்காட்டாக இருக்கும் டோரிக்கின் ஆட்கள் தோர்கலை துரத்தி வரும்போது இறந்து விட் டோரிகின்  கை இரண்டாவது முறையாக காட்டபடுகிறது.


  அது வயதான வால்னாவால் கொல்லபட்ட டோரிக் தான்.நிகழ்காலத்தில் மோதிரத்தில் ஏற்படும் நீட்சியினால் அந்த பிணம் அங்கேயே இருக்கிறது. மாறி கொண்டே இருக்கும் நேரத்தில் மாறாமல் இருப்பது டோரிக்தான் பிணம் தான்.


  டோரிக் இறந்து விட்டால், தோர்கல் சந்திக்கும் டோரிக் யார்?


  அதுவும் டோரிக் தான். அது இறந்த காலத்தில்(நிகழ் காலத்தில் டோரிக் இறந்து இறுக்கிறான்.) அவன் உயிரோடு இருப்பது இறந்த காலத்தில். மோதிரத்தால் ஏற்படும் தற்காலிக நிகழ்வு.


  பையாஸ் தியரிபடி கதை சொல்வதால் , காலம் பல்வேறு திசையில் வட்ட வடிவத்தில் பயனிக்கிறது.


  அதில் உள்ள வட்டத்தின் காலநேரப்படி ஸேஸ்காட் டாக இருக்கும் வால்னா, டோரிக்கை கொல்ல வேண்டும்.


  அந்த விதிப்படி நடக்க இருக்கும் மோதிரம் நிகழ்வை மோதிரம்  மாற்ற முயல்கிறது. அதனால் கால வட்டத்தில் தற்காலிக மாற்றம் ஏற்பட்டு விடுகிறது. ஆனால் அந்த மற்றத்தை விதி சரி செய்து வால்ன டோரிக் கொல்லும் இடத்திற்கு மறுபடியும் வர செய்கிறது.


  கால வட்டத்தில் ஏற்படும் மாற்றம் எப்படி என்றால், தூக்கனாம் குருவி குடு போன்று கால வட்டத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது.(மோதிரத்தால் ஏற்படும் கால மாற்றம் தொடங்கிய இடத்திலேயே முடிகிறது). கால வட்டத்தின் மோதிரத்தால் ஏற்படும் காலமாற்றம் தூக்கனாம் குருவி கூடு போல ஓரே ஒரு வடத்தில் ஓரே ஒரு புள்ளியில் மட்டும் சிறிதாக தொங்கி கொண்டு உள்ளது.தூக்கனாம் குருவி கூடு போன்ற காலா நீட்சி அடுத்த கால வட்டத்தை தொட்டுவிட்டு பின்னர் பழைய புள்ளிக்கே திரும்புகிறது.(ஆசிரியர் பதிவில் கொடுத்துள்ள காலபயணம் செய்யும் படத்தை பார்க்கவும்)


  செனாஆனா கூறிய காலக்கணக்கில் எனக்கு உடன்பாடில்லை. பையஸ் தியரி படி காலம் வட்ட வடிவில் செல்கிறது.


  வட்டத்தில் காலக்கணக்கு பைR^2 அல்லது 2பைR என்ற formula அளவில் வரும். காலத்தை ஸ்கொயர் செய்தால் இரண்டு மடங்காக ஆக வாய்ப்பில்லை.


  காலப்பயணம் யாரால் எப்படி நடக்கிறது என்ற குழப்பம் எனக்கு மிகவும் இருந்தது.


  முதல் காலப்பயணம் செய்தது யார்?.

  தோர்கல் முதலில் காலப்பயணம் செய்யவில்லை.


  முதலில் காலபயணம் செய்தது வால்னா வின் தாத்தா. 


  அவர் இறந்த காலத்தில் இருந்து எதிர்காலத்திற்கு வந்தபோது,  அதற்கு எதிர்வினையாக டோரிக் க்கும் தோர்கலும் இறந்த காலமான வால்னா வாழும் இடத்திற்கு செல்கின்றனர்.  இறந்த காலத்தில் டோரிக் வால்னா விடம் இருந்த மோதிரத்தை பிடுங்கிய டோரிகால் மற்றுமொரு கால பயணம் நேரிடும் போது. அப்போது தாத்தா எதிர்காலத்தில் மோதிரத்தை வைத்து விட்டு மறுபடியும் திரும்பி நிகழ்காலதுக்கு கொண்டு செல்ல படுகிறார்.(அப்போது அவரிடம் மோதிரம் இல்லை).


  இறந்த காலத்தில் வால்னா தோர்கலை முத்தமிட்டு மேற்கொள்ளும் எதிர்காலத்திற்கு காலபயனத்தை மேற்கொள்ளும் போது , தோர்கல் வால்னா வை காப்பற்றும் இறந்த கால நேரத்திற்கு அவர் மாற்ற படுகிறார்.


  வால்னா வயதான ஸேஸ்காட்டை இறந்த காலத்திற்கு கொண்டு செல்லும் போது ,தோர்கல் வால்னா மற்றும் டோரிக் கண்முன்னே மறைந்து பழைய(எதிர்காலம்) இடத்திற்கு செல்கிறார்.(மோதிரம் தோர்கல்லிடம் உள்ளது. டோரிக் தோர்கலை தொடாத காரணத்தால் தோர்கல் மட்டும் எதிர்காலத்திற்கு சென்று விடுகிறார்).


  மோதிரத்தால் காலமாற்றம் ஒரு நபரால் நிகழ்த்தபடும் போது,இறந்த காலம் அல்லது நிகழ்காலம்(மோதிரத்தால் ஏற்பட்ட கால நீட்சி) ஏதாவது ஒன்றில் எதிர் எதிர் காலத்திலங்களில் காலப்பயணம் கட்டயமாக ஏற்படுகிறது. 


  ஒருமுறை கூட தோர்கலால் காலபயணம் ஏற்பட வில்லை.


  காலத்தை மாற்ற நினைத்த வால்னாவின் தாத்தா முயற்சியை, காலம் முறியடித்து, காலம் அதன் போக்கிலே செல்வது தான் சிகரங்களின் சாம்ராட்.

  இது என்னலவில் நான் சி.சாம்ராட்டை புரிந்து கொண்ட விதம்.


  ReplyDelete
  Replies
  1. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!! ரசித்துப் படித்தேன்!

   தூக்கானாம் குருவிக்கூடு காலா பயணம், 2பைR ஃபார்மூலா ஆகியவை மூலம் இந்தக் கதைக்கு ஒரு புதிய பறிமானம் கொடுத்திருக்கிறீர்கள் என்றால் அது மிகையல்லா!

   ஆருமையான சிந்தனைகளுக்கு வாழ்த்துகள்!!

   Delete
  2. Ganesh ji Semma Semma . The work put in by our readers have given so many perspectives to this story. I'm still thinking have I understood the story completely ?

   Delete
  3. I'm still thinking have I understood the story completely ?/////

   இதே சந்தேகம் எனக்கும் உள்ளது குமார் சலிம்.

   Delete
  4. தோர்கல் சிலருடைய(வல்னா,வால்னாவின் தாத்தா,பிறகு டோரிக்) பேராசைக்காக உருட்டப்பட்ட பகடை. முக்காலத்தில் எந்த நிகழ்வை மாற்றியமைத்தாலும் அதற்கான எதிர் விளைவாகா காலம் தன்னை புனரமைப்பு செய்து கொண்டு பயணிக்கிறது.அந்த
   பனிமலையிலிருந்து ஐந்தே நாட்கள் பயண தொலைவில் இன்னொரு சேஸக்கர்ட்டையும் எதிர்காலத்தில் தோர்கல் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தினாலும் மிகச் சிறந்த வாசிப்பை ஏற்படுத்திய படைப்பு.

   Delete
  5. ஆருமையான சிந்தனைகளுக்கு வாழ்த்துகள்!!///
   நன்றி ஈ.வி.

   Delete
  6. ///
   இதே சந்தேகம் எனக்கும் உள்ளது குமார் சலிம்.///

   ஹேப்பி மதம் மாறிய டே, குமார் சலிம் சார்! :D

   Delete
  7. ///நன்றி ஈ.வி.///

   யூ ஆர் வேல்காம்!

   Delete
  8. அட்டகாசமான அலசல். வாழ்த்துக்கள் கணேஷ்.

   Delete
 9. ஆசிரியருக்கும் ,அனைவருக்கும் குளிரான காலை வணக்கம்...


  2.0 அட்டைப்படம் ,ஜெராமயா அட்டைப்படம் இரண்டுமே கலக்கல்..


  இன்னும் பத்தே நாள் காத்திருக்கிறேன் ..!

  ReplyDelete
 10. அடுத்த மாத புத்தகங்களில் மிகவும் எதிர்பார்ப்பது ஜெரமையா. ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு வரப்போகும் இவர்களை ஆரவாரத்துடன் வரவேற்கிறேன்.

  ReplyDelete
 11. நானும் ஆவலோடு ஜெரமையாவை எதிர்பார்க்கிறேன்.
  Layout எனப்படும் காட்சி அமைப்பு மற்றும் சித்திரங்கள் அருமையாக இருந்தது ,இதிலும் இருக்கும்.

  ReplyDelete
 12. ஜெரேமியா, ஜானி 2.0, 007 -எல்லாமே சித்திரங்களின் நேர்த்தியில் பிரம்மிக்கவைக்கிறது!

  புத்தகங்களை அனுப்ப ஓரிரு நாட்கள் தாமதமானாலும் பர்ரால்லை... எடிட்டர் சமூகம் எங்களுக்காண்டி இரவுபகலாக கஷ்டப்பட வேண்டாமே ப்ளீஸ்?

  ReplyDelete
  Replies
  1. பையாஸ் தியரிப்படி காலம் வட்டவடிவிலோ, முக்கோண வடிவிலோ - எப்படியோ போகட்டும் சார்.. நாம கொஞ்சம் லேட்டாவே போவோமே?

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. EV your sense of humor is always too good, and it brings a smile for me. Add one more fan in your list 🙋

   Delete
  4. @Kumar Salem

   நன்றிகள் பல! :) _/\_

   Delete
  5. ஆமா ...லேட்டா போனா தான் லேட்டஸ்ட்டா போக முடியும்..:-)

   Delete
 13. ஹலோ சார், வருட ஆரம்பம் 3 புத்தகங்கள் அதில் இரண்டு கலர் புல்லாக, தோர்கல் ஹார்ட் பௌண்ட் அட்டையுடன் வந்திருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும் ... கென்யா ஜம்போவில் வருவதாக சொன்னதாக நியாபகம், Can i get an update on this please.

  ReplyDelete
  Replies
  1. கென்யா ஜம்போ அல்லது ஈரோடு புக் பேர் ஸ்பெஷல்? விஜயன் சார், தெளிவு படுத்துங்கள் ப்ளீஸ்.

   Delete
 14. ////அது சரி, இதற்கு முன்பாய் நமது அட்டைப்படங்களில் கிஸ்ஸிங்-கிஸ்ஸிங் ஏதேனும் இருந்ததுண்டா ?/////

  ஒரு வருடத்திற்கு முன்பு வெளியான 'கொலைகாரக் காதலி' அட்டைப்படத்தில் கிட்ஆர்டினுக்கு அந்த கொ.காதலி கொடுத்த உம்ம்ம்மாவை மறந்துட்டீங்களா எல்லாரும்? இல்லே கிட்ஆர்டின்றதுனால அத்தனை இளப்பமா உங்களுக்கெல்லாம்?

  ReplyDelete
  Replies
  1. அதானே ...!!

   கிட் ஆர்டின்னாவே அல்லாருக்கும் வெலாட்டாப் பூட்ச்சி .. நல்லாக் கேளுங்கோ குருநாயரே ..!:-)

   Delete
  2. என்னை மாதிரி குழந்தைங்க முத்தத்தை எப்பவுமே கணக்குல சேத்தாதீங்க செயலரே..:-(

   Delete
 15. Expecting Johny 2.0 , Jeremiah will exceed expectations this time? Keeping fingers crossed.

  ReplyDelete
 16. As far as January books. I'll give barracuda 9/10, Thorgal my favorite hero 10/10, and for Tex 5/10 . I too join Ganesh Kumar in too much Tex. Now a days I feel that punch is missing in Tex. In a year one or two books of Tex I like rest all, no comments. Instead I like the mini Tex series quite refreshing and interesting.

  ReplyDelete
 17. // ஜானி 2.0 பணிகளிலும் 2.0 !!! இதோ அதன் ஈயடிச்சான் அட்டைப்பட முதல்பார்வை //
  ஜானி டீசர் அசத்துகிறதே,அட்டைப் படமும் கலக்கல்,மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.....

  ReplyDelete
 18. ///ஜம்போவின் சீசன் 2-ல் வரக்காத்திருக்கும் ஜேம்ஸ் பாண்டின் preview !! நேற்றைக்குத் தான் கதை files வந்து சேர்ந்திருக்க, செம மிரட்டலான ஆல்பமாய்த் தென்படுகிறது !///

  ஆமாம் சார்.!

  ஒவ்வொரு ஃப்ரேமின் ஆங்கிள் செட்டிங்களும் செம்ம மெர்சலாய் இருக்கின்றன.!

  பாண்ட் 2.0 வேற லெவல் ..👌👌👌

  ReplyDelete
  Replies
  1. ஆனால் இந்த முறையாவது பூம் ,டூமீல் என்ற சவுண்ட் எபக்ட் மட்டுமாவது இருப்பின் இன்னும் பட்டாசாய் இருக்கும் என்பது ( எனது ) எண்ணம் ..:-)

   Delete
  2. இல்லை எனில் எவ்வளவு அட்டகாசமான ஆக்‌ஷன் காட்சி என்றாலும் ம்யூட் செய்தால் பார்க்கும் சண்டை காட்சி போல சுவை குன்றி விடுகிறது..

   Delete
  3. பாண்ட் 2.0 வேற லெவல் ..👌👌👌 yes abssssolutely

   Delete
 19. ரிப்போர்ட்டர் ஜானியின் இடியாப்பச் சிக்கல் கதை பாணிக்கு மட்டுமல்ல, ஓவியர் Tibetன் சித்திரபாணிக்கும் சேர்த்தே அடியேன் அடிமைப்பட்டு கிடந்ததை வரலாறு அறியும்.!

  இப்போது 2.0 வின் ஒலியர் Van limet, Tibetன் பொறுப்பை எடுத்துக்கொள்வார் போல் தெரிகிறது.!

  காத்திருக்கிறேன் காண ...!

  ReplyDelete
 20. அனைவருக்கும் வணக்கம் . ஜானி 2. 0ஐ ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  ReplyDelete
 21. புதியது
  -------
  Superhero super special:

  மாயாவியின் நீளமான சாகசம். முன்பு வந்த விண்வெளி கொள்ளையரின் தொடர்ச்சி.. கதையை எங்கயோ ஆரம்பித்து எங்கேயோ முடித்து இருக்கிறார்கள். கொஞ்சம் அயர்ச்சியை உண்டு பண்ணிய கதை என்று சொல்லலாம்.

  ஸ்பைடர் - அரக்கன் அர்டினி: அர்டினி இதில் வில்லன் ஆனால் கிளைமாக்ஸ் முன்பாகவே எனக்கு அந்த ட்விஸ்டை எதிர்பார்த்து இருந்தேன். அது போலவே இருந்தது.

  ஆர்ச்சி - ராட்சஸ தேள் மர்மம்: வழக்கமான அக்மார்க் ஆர்ச்சி கதை. புதிதாக எதுவும் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. ஹிக்!!

   இந்த விமர்சனத்தைப் படிச்சுட்டு யாராவது மறுபதிப்பு கிறுபதிப்புன்னு கேட்காதவரைக்கும் சரிதான்!!

   Delete
  2. நான் தீவிரமான மாயாவி மற்றும் ஸ்பைடர் பேன் தான். இந்த கதைகள் கொஞ்சம் கடி போட்டு விட்டது. ஆனால் நானே சொல்கிறேன். இனிமேல் மறுபதிப்பு வேண்டாம்.

   நெறய ஜானர்கள் தொட படாமல் இருக்கிறது. எடிட்டர் எதற்காகவோ பயப்படும் sci - fi ஜானர் உட்பட

   Delete
  3. Editor sir, we want Super Hero Super Special in full color pleech :-)

   Delete
  4. சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் புதியது?!!!!.கொஞ்சம் திரும்பி பாருங்கள் சார் அது 2014 இல் வந்தது.இப்போது 2019.

   Delete
  5. @Padmanaban Ramadurai

   இதுவரை அந்தப் புத்தகம் புரட்டப்படாமலேயே பீரோவுக்குள் வைக்கப்பட்டிருந்ததால் புத்தம்புதிதாய் இருந்திருக்கும் - அதனால் அப்படிச் சொல்லியிருப்பார்! :)

   Delete
 22. ஜெராமையா முதல் பாகம் அவ்வளவாக கவரவில்லை என்று ஞாபகம் .பார்ப்போம் இந்த இதழ் எப்படி என்று...
  ஜானியின் கதைகள் 2.0 newversion என்பதால் வரவேற்கிறேன்.

  ReplyDelete
 23. வரட்டும் mr பாண்ட்

  ReplyDelete
 24. ஜெரமையா எதிர்கால அமெரிக்காவின் செய்யும் அடுத்த சாகசத்திற்காக இப்போதிருந்தே வெயிட்டிங்

  ரிப்போர்ட்டர் ஜானியின் கதைக்கு அழகு, கடைசி பக்கம் வரையில், அந்த இடியாப்ப சிக்கலை கொண்டு செல்வதே... பொறுமை கடலினும் பெரிது

  ஜேம்ஸ்பாண்ட் - மீண்டும் பட்டாசு வெடிக்கட்டும்

  ReplyDelete
 25. Jeremiah is welcome sir but not in Jumbo which is meant for what we can't have in LiON or MUTHU .

  ReplyDelete
 26. புத்தக கண்காட்சி விற்பனை எப்படி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்

  ReplyDelete
 27. டெக்ஸ் வில்லர்..!

  சில மாதங்களுக்கு முன்னே எடிட்டர் டெக்ஸ் வில்லரின் மாறுபட்ட தோற்றங்களைப் பற்றி வாசகர்களின் ரியாக்ஷனை கேட்டிருந்தார்.

  அதற்கு, கதையே முக்கியம் .தோற்றம் இரண்டாம் பட்சம்தான் என்ற ரீதியில் பெரும்பாலோனோர் (என்னையும் சேர்த்துதான் ) விருப்பு தெரிவித்தனர்.

  ஆனால் சாத்தானின் சீடர்களைப் பபடித்த பின்னே கொஞ்சம் அவசரப்பட்டு ஓட்டு போட்ட ஃபீலிங்..!

  கார்சன் மட்டும் கூட இல்லையென்றால், இது டெக்ஸ் வில்லர் கிடையாது என சொல்லிவிடலாம்.அந்த அளவிற்கு வில்லர் ரொம்பவே அந்நியமாகத் தெரிகிறார்.மனசுக்குள் 'இது நம்ம டெக்ஸ் வில்லர் 'என்ற எண்ணம் ஒட்டாத போது ,கதையோடு சுத்தமாக ஐக்கியமாக இயலவில்லை.

  சூப்பரான கதையாக இருந்தாலும், சுமாரான கதையாக இருந்தாலும் அதில் டெக்ஸ் வில்லர் 'தெரிய வேண்டும் '.அவ்வளவுதான்.

  கதையைப் பற்றி..?


  சாரி..! நோ கமெண்ட்ஸ்..!😒😒😒

  ReplyDelete
  Replies
  1. ///கார்சன் மட்டும் கூட இல்லையென்றால், இது டெக்ஸ் வில்லர் கிடையாது என சொல்லிவிடலாம்.அந்த அளவிற்கு வில்லர் ரொம்பவே அந்நியமாகத் தெரிகிறார்///

   கதையில் வரும் வில்லன்கள் நரபலி அப்படி இப்படின்னு அலப்பறை செய்தாலும்கூட, சரியான சோதா பார்ட்டிகள்!! ஆளரவமற்ற ஒரு பழைய தேவாலயத்தை எரிக்க ஒரு பெரும் கூட்டமாக முகமூடியை மாட்டிக்கொண்டு (இதுல வழிநெடுக வண்டி வண்டியாய் வசனங்கள் வேறு!) போனபோதே புரிஞ்சு போச்சு - இதெல்லாம் டெக்ஸுக்கு சரிநிகர் வில்லன்ஸ் ஆகாதுன்னு! சரி அப்படியாவது சரியா எரிச்சாங்களான்னா.. அதுவும் இல்ல! மிக முக்கிய தடயமான நிலவறை சடலங்களை அப்படியே விட்டுட்டுப் போயிடுது - அந்த லூசுக் கும்பல்!
   கிளைமாக்ஸ் இன்னும் காமெடி! டெக்ஸ் துப்பாக்கியை உருவினதுமே "உதவி உதவி"ன்னு கத்திக்கிட்டே சிதறி ஓடுகிறார்கள்.. சிரிச்சு மிடில!

   அதனால, இந்தமாதிரி வில்லன்ஸுக்கு டெக்ஸ் வில்லருக்குப் பதிலாக, அவரின் பெரியப்பா லுக்ஸ் வில்லரே போதும்னு படைப்பாளிக முடிவு பண்ணியிருக்கலாம்..!

   ஓவியரும் மிகத் திறமையாகப் பணியாற்றி டெக்ஸின் பெரியப்பாவை தத்ரூபமாக வடித்திருக்கக் கூடும்!

   என்ன.. கதையின் ஆரம்பத்திலேயே 'டெக்ஸின் பெரியப்பா தோன்றும்'னு போட்டிருந்தா நமக்கு இவ்வளவு குழப்பம் ஏற்பட்டிருக்காது!
   மறந்துட்டாங்க போலிருக்கு! :)

   Delete
  2. ///கார்சன் மட்டும் கூட இல்லையென்றால், இது டெக்ஸ் வில்லர் கிடையாது என சொல்லிவிடலாம்.அந்த அளவிற்கு வில்லர் ரொம்பவே அந்நியமாகத் தெரிகிறார்///
   //என்ன.. கதையின் ஆரம்பத்திலேயே 'டெக்ஸின் பெரியப்பா தோன்றும்'னு போட்டிருந்தா நமக்கு இவ்வளவு குழப்பம் ஏற்பட்டிருக்காது!//
   //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
   போனேல்லி குழுமத்தில் இருந்து இப்படிப்பட்ட பதில்கள் வந்தாலும்
   ஆச்சர்யப்படுவதற்கு இல்லை ...!!!!
   ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
   கதைக்கு சித்திரங்கள் போடப்பட்டபோது இந்தியாவில் இப்போது பிரபலமாயிருக்கும் பத்து வருட சேலஞ்ச் போல இருபது வருட சேலஞ்ச் இத்தாலியில் பிரபலமாக இருந்தது..அப்போது வரையப்பட்டதுதான் டெக்ஸ் படம்
   /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
   படம் வரைந்த ஓவியர் வலது மூக்கில் மூச்சு இழுத்தால் இடது மூக்கு வழியாக காற்று வருகிறது என்பதற்காக இத்தாலிய அப்பலோ கிளையில் ஒரு நாள் தங்கி வைத்தியம் செய்துகொண்டபோது ரைஸ் கேக் இரண்டு சாப்பிட்டார் ...
   இட்லி என்ற பெயரில் அதற்கான பில்லை அவர் பார்த்தபின் வரைந்ததுதான் டெக்ஸ் முகங்கள் ..
   ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

   கதை ஆரம்பித்தபோது டெக்ஸ் –க்கு பல்வலி ...இது படம் வரைந்த
   ஓவியரை தவிர வேறு யாருக்கும் தெரியாது ..
   ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

   தமிழிசை இத்தாலி சென்று இருந்தபோது அளித்த பேட்டியினை தற்செயலாக டிவியில் பார்த்துவிட்ட ஓவியர் –இத்தனைக்கும் அவர் தமிழில்தான் பேட்டியளித்தார் –அதன் பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமடையுமுன்னே வரைந்தவைதான் டெக்ஸ் ஓவியங்கள் ..
   ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


   Delete
  3. @செனாஅனா

   :))))))))))))) செம்ம!

   Delete
  4. // அதனால, இந்தமாதிரி வில்லன்ஸுக்கு டெக்ஸ் வில்லருக்குப் பதிலாக, அவரின் பெரியப்பா லுக்ஸ் வில்லரே போதும்னு படைப்பாளிக முடிவு பண்ணியிருக்கலாம் //

   good one :-)

   Delete
 28. ஜெரமையா...

  இந்தத் தொடர் எனக்குப் பிடித்தே இருந்தது. ஜெரமையாவை விட கர்டி கேரக்டர் தான் எனக்கு பிடிச்சிருக்கு. இரண்டாவது முயற்சில ஜெரமையா பெரும்பான்மை நண்பர்களை கவர்ந்தா தொடர் முழுக்க படிக்க நமக்கு வாய்ப்புக் கிடைக்கும். பார்ப்போம் தோர்கல் மாதிரி அதிசயம் நடக்குதான்னு.

  ReplyDelete
 29. முதல் பாண்டே இன்னும் படிக்கலை. செப்டம்பர் மாத இதழ்கள் கிடைக்காததால் அந்த குழப்பத்தை நிவர்த்தி செய்தவுடன் பிப்ரவரி இதழ்களுடன் சேர்த்து நண்பர் அனுப்பி விடுவார். பிறகு தான் அனைத்தையும் படிக்க வேண்டும்.

  ReplyDelete
 30. ஒரு தேவதையின் கதை:
  தன்னை விட்டுச் சென்ற தாயை தேடித் திரியும் குட்டி ஆரிசியா, அவளை தவறாக வழிநடத்தும் மாய மோகினிகள் அதேநேரம் தளம் அவளைத் தேடித் திரியும் ஒரு கூட்டம் அவர்களுடன் தோர்கல். ஒன்பது பக்கக்கதை என்றாலும் விறுவிறுப்புக்கு கொஞ்சமும் குறைவில்லாத கதை.

  இந்த கதை மூலம் தோர்கல் மற்றும் ஆரிசியா இருவரும் சிறுவயது நண்பர்கள் எனத் தெரிகிறது.

  ஆரிசியாவின் தாயார் ஏன் வால்ஹல்லாவில் வசித்து வருகிறார்? உண்மையில் அவர் யார்?

  தோர்கலுடன் வரும் கும்பல் யார்? தோர்கல் ஆரிசியா சென்ற பாதையை அவர்களிடம் சொல்லாமல் மறைப்பது ஏன்?

  விமர்சனம் தொடரும்...

  ReplyDelete
  Replies
  1. முதல் பனி: முதல் பக்கத்தில் வடதிசை வைக்கிங் தலைவரின் இறுதிச்சடங்கு, அடுத்த சில பக்கங்களில் அவரின் இழப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை சொல்லிய விதம் அருமை.

   அந்த இறுதிச்சடங்கில் இருந்து தனித்து தள்ளி நிற்கும் தோர்கல் வடதிசை வைக்கிங் தலைவரின் வளர்ப்பு மகன். அவர்களிடம் இருந்து விலகிச் செல்லும் தோர்கலை பனிப்பொழிவில் இருந்தும் மற்றும் தனது தந்தை காண்டால்பபிடம் இருந்து உயிருடன் காப்பாற்ற ஆரிசியா கையாலும் உத்தி அருமை; அதேநேரம் அவர்களின் நட்பு எந்த அளவு ஆழமானது என்று வியக்க வைக்கிறது. தோர்கலை உயிருடன் வைத்து பராமரிக்க செய்யும் நீதிமன்ற ஆணை.. அடுத்து என்ன என்ற ஆர்வத்துடன் ஹோல்ம்கங்காவில் நுழைகிறேன்.

   Delete
  2. தோர்கலை காப்பாற்ற ஆரிசியா கையாலுவது உத்தியா அல்லது உண்மையா படிக்கும் போது தெரியும்.

   Delete
  3. //ஆரிசியாவின் தாயார் ஏன் வால்ஹல்லாவில் வசித்து வருகிறார்? உண்மையில் அவர் யார்?//
   5 வயது குழந்தை : அம்மா எங்கேப்பா ??
   அப்பா : அம்மா சாமிகிட்ட போயிருக்காங்க ...அப்புறமா வருவாங்க !!!
   இந்த சோக கதைதான் ஆரிசியாவுக்கும் நிகழ்ந்து இருக்கிறது ..
   நார்வே தொன்மையான புராணங்களில் இறப்புக்கு பின் பாதி பேர் அவர்களின் முதன்மை தெய்வமான ஓடின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓடினின் மலை வாசஸ்தலமான வால்ஹல்லாவுக்கு(VALHALLA) போய் சேருவார்கள்

   மீதி பேர் பெண் தெய்வமான பேயா ( FREYJA ) வின் புல்வெளி வாசஸ்தலமான போல்க்வாங்க்ர் ( FOLKVANGR)-க்கு போய் சேருவார்கள் ..
   ///உண்மையில் அவர் யார்?//
   அவர் உண்மையில் ஆரிசியாவின் அம்மா ..அவ்ளோதான் !!!
   பெயர் போர்கில்ட்( BORGHILDE).
   ஸ்வீடனில் இன்றும் இந்த பெயரில் ஒரு ஆயிரம் பேர் இருப்பார்கள்...


   Delete
  4. //தோர்கலுடன் வரும் கும்பல் யார்?//
   வைகிங்குகள் ...ஆரிசியாவின் தந்தையின் உத்தரவின் பேரில் கொஞ்சம் சலிப்புடன் ஆரிசியாவை தேடி வந்தவர்கள் ...சிறுமியான ஆரிசியா இறந்து போன தன் தாயை தேடி அடிக்கடி இப்படி ‘’ பயணம் ‘’ போவது வாடிக்கை போலும் ...
   // தோர்கல் ஆரிசியா சென்ற பாதையை அவர்களிடம் சொல்லாமல் மறைப்பது ஏன்?//
   கடித்து போட்டு இருக்கும் ஆப்பிளை பார்த்தவுடன் ஆரிசியா அருகில் இருப்பதை உணரும் தோர்கல் அதை மறைக்க காரணம் இப்படி கும்பலாக போனால் ஆரிசியா தன மறைவிடத்தை விட்டு வெளியே வர மாட்டாள் என்பதே...

   Delete
  5. நல்ல கேள்விகளும், அழகான பதில்களும்!!

   Delete
 31. Finally, paid my subscription for 2019 and jumbo season 2.
  I am avoiding reading posts from editor and friends coz i got to get the books. Most probably i will receive them in a day or two and then i will read and comment to avoid spoilers.... :-)

  ReplyDelete
  Replies
  1. //Finally, paid my subscription for 2019 and jumbo season 2. //

   Super.

   சும்மா ஹாய் மட்டுமாவது சொல்லுங்க.

   Delete
 32. Replies
  1. ஹோல்ம்கங்கா:
   மழை பிரதேசத்தை ஒட்டிய ஆறு கரையில் அழகான கிராமம் அதில் குட்டி தோர்கல் மற்றும் ஆரிசியா; ஆகா ஆகா என்ன ஒரு ரம்யமான சூழல்.

   இந்த சூழ்நிலையில் தோர்கலிடம் வம்பு இழுக்கும் ஜோர்ன், சிறுவர்கள் இருவரும் கோதாவில் இறங்க தோர்கலிடம் தோல்வியடையும் ஜோர்ன் தனது தந்தையிடம் சொல்லி ஹோல்ம்கங்கா ஏற்பாடு செய்கிறான். ஹோல்ம்கங்கா என்றால் என்ன என்பதை படித்து தெரிந்து கொள்வது நலம்.

   ஹோல்ம்கங்கா நடக்கும் சூழ்ச்சியை ஆரிசியா மற்றும் தோர்கல் எப்படி வெற்றிகரமாக சமாளிக்கிறார்கள் என்பது ராஜயுக்தி. சபாஷ். தோர்கல் சிறந்த போராளி என்றால் ஆரிசியா ராஜ தந்திரத்தில் சாணக்கி(யர்) எனலாம். இதில் சிறப்பு என்னவென்றால் இந்த குட்டி குழந்தைகளுக்கு எழுதிய வசனங்கள் மிகவும் ரசிக்கும் படி இருந்தது.

   Delete
  2. ///தோர்கல் சிறந்த போராளி என்றால் ஆரிசியா ராஜ தந்திரத்தில் சாணக்கி(யர்) எனலாம். இதில் சிறப்பு என்னவென்றால் இந்த குட்டி குழந்தைகளுக்கு எழுதிய வசனங்கள் மிகவும் ரசிக்கும் படி இருந்தது.//

   +1

   செம & உண்ம!

   Delete
  3. // இதில் சிறப்பு என்னவென்றால் இந்த குட்டி குழந்தைகளுக்கு எழுதிய வசனங்கள் மிகவும் ரசிக்கும் படி இருந்தது. //

   அதே நேரம் சிறு குழந்தைகள் பெரியவர்கள் போல் பேசுகிறார்களே என்ற நெருடல் கொஞ்சம் கூட இல்லை. தமிழில் இதனை அழகாக எழுதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

   Delete
 33. ஒரு தேவதையின் கதை: குட்டி தோர்கல் மற்றும் அரிசியா படங்கள் அவர்கள் பெரியவர்கள் ஆன பிறகு எப்படி இருப்பார்களோ அப்படியே அவர்களின் முகத்தை வரைந்த ஓவியருக்கு எனது பாராட்டுக்கள்.

  ஓநாய் குட்டி: தோர்கல் குடும்பத்தில் ஒரு குட்டி தேவதையின் வருகையின் போது இடைப்படும் வைக்கிங்களின் தலைவனாகத் துடிக்கும் வோர் மூலம் நடக்கும் அசம்பாவிதங்களை தோர்கல் சமாளிப்பது கதை. இதில் ஒரு பழிவாங்கும் படலமும் உண்டு, வித்தியாசகமாக. ஆனால் அதனை சொன்ன விதம் அருமை. விறுவிறுப்பான சம்பவங்கள். கதை தலைப்பு மிகப் பொருத்தம்.

  ஒரு வழியாக லைட் வெயிட் கதைகளை படித்து முடித்து விட்டேன். இனிதான் கடந்த சில வாரங்களாக புலவர்கள் பலர் அலசி ஆராய்ந்து கோனார் நோட்ஸ் போட்ட சிகரங்களில் சாம்ராட்டுக்குள் நுழையப் போகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரமா படிங்க.உங்களுக்கான கேள்வி பின்னாடி வந்துட்டேயிருக்கு.

   Delete
  2. வரட்டும் வரட்டும் வரட்டும் வரட்டும்...

   Delete
 34. Replies
  1. லக்கி லூக் வெற்றியை ஆசிரியர் உடனே உறுதி செய்ய வேண்டும்.

   Delete
  2. 👍👍👍🔫🔫🔫👍👍👍

   Delete
 35. எல்லோரும் பொங்கல் சாப்பிட்டு ஜீரணமாகாமல் இருக்காங்க போல

  ReplyDelete
 36. சிகரங்களின் சாம்ராட். கதை அருமை.
  அதற்கு mr. Games kumar அவர்களின் விளக்கம் அருமை. Jeremiah ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம்

  ReplyDelete